செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
பொடிநாறு மேனியர் பூதிப் பையர்புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர் அடிநூறு கமலத்தர் ஆரூ ராதிஆனஞ்சு மாடும் ஆதிரையி னார்தாம் கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்கழிப்பாலை மேய கபாலப் பனார் மடிநாறு மேனியிம் மாயம் நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : திருநீறு விளங்கும் திருமேனியை உடைய பெருமானார் திருநீற்றுப்பையையும் வைத்துள்ளார். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை உடுத்துப் பாம்புகளை அணிகலனாகப் பூண்டவர். ஆதிரை நட்சத்திரத்தை உகந்து கொண்டு திருவாரூரில் உள்ள அவ்வாதி மூர்த்தி பஞ்சகவ்விய அபிடேகத்தை ஏற்றுத் தம் திருவடிகளில் அடியவர்கள் இட்ட பல தாமரைப் பூக்களை உடையவர். சோலைகள் நறுமணம் வீசும் கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார், இறந்து போகும் இப்பொய்யாய உடல் நீங்க உயிர் நிலையாகத் தங்குதற்குரிய இடத்தை அடைவதற்கு உரிய வழியை வகுத்துக் கொடுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம். குறிப்புரை : 'பூதிப் பையர்' என ஈண்டு அருளியவாறே திருமுறைகளுள் பிற இடங்களிலும் சிவபிரான் விபூதிப் பை உடையனாய் இருத்தல் குறிக்கப்படுகின்றது. கமலம், வழிபடுவோர் இட்டவை. ஆதி - முதல்வன். கடி - நறுமணம். 'கமழ்ந்து நாறும்' என்றது. 'மிகுதியாக நறுமணம் பெற்று வீசும்' என்றபடி. மடி நாறும் - இறப்புத் தோன்றும். மேனியாகிய இம்மாயம் என்க. மாயம் - பொய்ம்மை; நிலையாமை; அஃது அதனை உடைய பொருள்மேல் நின்றது.
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்துவேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும் எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்இறையானாய் எம்மிறையே யென்று நிற்கும் கண்ணானாய் காரானாய் பாரு மானாய்கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார் மண்ணாய மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை: தேவர்கள் விரும்பி வந்து 'தேவருலகம் ஆகியவனே! எல்லா இடங்களிலும் பரவி வேதம் ஓதி, கீதம்பாடி, எண் ஆனவனே! எழுத்தானவனே! ஏழ்கடலும் ஆனவனே! எல்லாப் பொருள்களுக்கும் தலைவனே! எங்கள் தலைவனே! எங்கள் பற்றுக் கோடே! மேகங்களும் உலகப் பொருள்களும் ஆயவனே!' என்று போற்றி நிற்கும் கழிப்பாலை மேவிய கபாலப்பனார் இவ்வுலகில் தோன்றிய நிலையாமையை உடைய உடல் நீங்க வழி வைத்தார். அவ்வழி நாம் செல்வோம். குறிப்புரை :விண்ணவர்கள் விரும்பிவந்து, விண்ணானாய் வேதத்தாய் கடல் ஏழானாய் கண்ணானாய் காரானாய் மண்ணானாய் இறையானாய் எம் இறையே என்று நிற்கும் கழிப்பாலைமேய கபாலப்பனார்' என்றியைத்துக்கொள்க. இறை - எப்பொருட்கும் தலைவன். தமக்கு இறைவனாதலை வேறெடுத்துக் கூறினார் என்க. கண், அறிவு. 'தேவர்கள் பலவாறாக ஏத்திப் பணியும் பெருமான்' என்றவாறு.
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்தவிரிகதிரான் எரிசுடரான் விண்ணு மாகிப் பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்கழிப்பாலை மேய கபாலப் பனார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : கழிப்பாலை மேவிய கபாலப்பனார், வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க, சூரியன், அக்கினி, விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார். அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர். பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர். கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர். அவர் பலவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.குறிப்புரை: விண்ணப்பம் - வேண்டுகோள். விச்சாதரர் - வித்தியாதரர். விண்ணப்ப விச்சாதரர்கள் - வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள். இவர்கள் இசைபாடுபவர் ஆதலின், அவர்களையே ஏத்து வோராகவும், விண்ணப்பத்தை உடையவராகவும் அருளினார். விரி கதிரான் - சூரியன். எரிசுடரான் - அக்கினி, பண் அப்பன் - எல்லாப் பொருள்களையும் ஆக்குகின்ற தந்தை; 'கதிரோன் முதலிய எல்லாப் பொருள்களுமாய் இருந்து, அவற்றை முதலாகக்கொண்டு தோன்றும் பொருள்களைத் தோற்றுவிப்பவன்' என்றருளியவாறு. ஏயும் - பொருந்துகின்ற. பசுபதி - உயிர்கட்குத் தலைவன். பாசுபதன் - பாசுபத வேடத்தை உடையவன். தேச மூர்த்தி - ஒளி உடைய வடிவத்தை உடையவன். காளத்தி, கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடமாதலை நினைந்து உருகி அருளிச்செய்தவாறு. வண்ணம் - பல வகை.
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்பேதப் படுகின்ற பேதை மீர்காள் நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார் கழிப்பாலை மேய கபாலப் பனார் மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : பிணமாதலைப் பொருந்தும் ஓட்டைக் குடிசையை நிலைபேறுடையதாகத் தவறாக எண்ணும் அறிவிலிகளே! கழிப்பாலை மேவிய கபாலப்பனார், கொழுப்புத் தங்கும் சூலத்தவராய், நீல கண்டராய், எண்தோளினராய் எண்ணற்ற குணத்தினாலே கணம்புல்ல நாயனாரின் கருத்தை விரும்பி ஏற்றவராய்க் காஞ்சிமாநகரில் உகந்தருளியிருப்பவர். நறுமணப் பொருளால் நாற்றம் மறைக்கப்பட்ட நிலையில்லாத இவ்வுடல் தொடர்பு நீங்குதற்கு வழிவகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம். குறிப்புரை : பிணம் புல்கு - பிணமாதல் பொருந்தும். பீறற் குரம்பை - ஒழுகுமாடம்.
இயல்பாய ஈசனை எந்தை தந்தைஎன்சிந்தை மேவி யுறைகின் றானை முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மானதியம்பகன் திரிசூலத் தன்ன கையன் கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்கழிப்பாலை மேய கபாலப் பனார் மயலாய மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : கயல்மீன்கள் தம் மீது பாயப்பெற்ற தாழை மரங்களை எல்லையாகக் கொண்டு அவற்றால் சூழப்பட்ட கழிப்பாலை மேவிய கபால அப்பன் செயற்கையான் அன்றி இயற்கையாகவே எல்லோருக்கும் தலைவன். எம் குலத்தலைவன். என் சிந்தையில் விரும்பித் தங்கியிருக்கின்றவன். இடையறாது தொழில் செய்பவன். அவ்வத்தொழில்களுக்கு ஏற்ற திருமேனிகளை உடையவன். தூயவன், முக்கண்ணன், முத்தலைச் சூலத்தினன். தீயை வெளிப்படுத்தும் சிரிப்பினன். அப்பெருமான் மயக்கத்தைத் தரும் நிலையில்லாத இவ்வுடல் நீங்க வழிவைக்க, அவ்வழியே நாம் செல்வோம். குறிப்புரை : ஈசன் - ஆள்பவன்; தலைவன். 'ஒருவரது ஆணையால் தலைவனாகாது, தானே தலைவனாய் நிற்பவன்' என்பார், 'இயல்பாய ஈசன்' என்றருளிச்செய்தார். ஐகாரங்கள் சாரியை. எந்தை - என்தந்தை, தந்தை -தந்தை, சிந்தை' என்பது, 'எந்தை' தந்தை' என்பவற்றோடும் இயையும். மேவி - விரும்பி. தம் குடிமுழுதாண்டமை அருளிச்செய்தவாறு. முயல்வான் - இடையறாது தொழில்செய்து நிற்பவன். தொழில், ஐந்தொழில். மூர்த்தி - மூர்த்தம் உடையவன். தொழில் - தொழிற்கேற்ற திருமேனிகளை யுடையவன். தீர்த்தன் - தீர்த்தவடிவினன்; பரிசுத்தன் எனலுமாம். திரியம்பகன் என்பது, 'தியம்பகன்' என வந்தது. அம்பகம் - கண். திரியம்பகன் - முக்கண்ணன். 'திரிசூலத்தன், நகையன்' எனப் பிரிக்க. நகை, புன்முறுவல், 'கயல்பாயுங் கண்டல்' என்றது மருதமும் நெய்தலும் மயங்கி நிற்றல் குறித்தவாறு. சூழ்வுண்ட - சூழ்தல் பொருந்திய. 'கண்டலால் சூழ்வுண்ட' என்க. மயல் - மயக்கம்.
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்துசிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால் உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாம் கற்றதோர் நூலினன் களிறு செற்றான்கழிப்பாலை மேய கபாலப் பனார் மற்றிதோர் மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : கழிப்பாலை மேவிய கபால அப்பன், மனத்தில் பகை எண்ணத்தை நீக்கிச் சிவபெருமான் என்று தன்னை அன்போடு தியானிப்பவர்களின் உள்ளத்தில் உள்ள நோய்களைப் போக்கி அவர்களை இவவுலகத்தார் போற்றச் செய்யும் உத்தமனாய் எல்லாவற்றையும் ஓதாதே உணர்ந்தவனாய் இயல்பாகவே எல்லாப் பாசங்களையும் நீங்கியவன். அப்பெருமான் இந்த நிலையற்ற உடல் நீங்க வைத்த வழியிலே நாம் போவோம். குறிப்புரை : செற்றது - பகைத்தது; முரணியது. 'சிந்தை உள்ளால், என்புழி, ஆல் அசைநிலை. சிந்தையுள் உறும் நோய், கவலை. காட்டுவான் - காணச்செய்வான்; என்றது, 'உலக முழுதும் அவரைப் போற்றச்செய்வான்' என்றதாம். கற்றது ஓர் நூலினன் - பிறர் கற்ற ஒப்பற்ற நூலினது உணர்வினன்; இயல்பாகவே, எல்லா ஞானங்களையும் உடையவன் என்றபடி. கயிறு - பாசம். செற்றான் - அறுத்தான். 'நூலினன், செற்றான்' என்பன பன்மை யொருமை மயக்கம்.
பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக் கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடுகால்விரலா லூன்று கழிப்பா லையார் வருதலங்க மாயக் குரம்பை நீங்கவழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : போரில் வல்ல அரக்கனாகிய இராவணனுடைய புட்பக விமானம் வெற்றிமாலை சூடிய சிவபெருமானுடைய மலையின் மீது செல்லாதாகக் கீழ் நிலம் அசையுமாறு அவன் மலையைப் பெயர்த்த அளவில் உமாதேவி அஞ்ச அப்பெருமான் மனத்தால் நோக்கி அவன் இருபது கரங்களையும் பத்துத் தலைகளையும் தன் கால் விரலை ஊன்றி நசுக்கியவன். அப்பெருமான் திருக்கழிப்பாலையை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு பிறத்தலை உடைய நிலையாமையை உடைய இவ்வுடம்பின் தொடர்பு உயிருக்கு என்றும் நீங்குமாறு செய்யும் வழியை அறிவித்துள்ளான். அவ்வழியிலேயே நாம் செல்வோம். குறிப்புரை :'பொருத அலங்கல்' என்பதில் அகரம் தொகுத்தல். அலங்கல், வெற்றிமாலை. 'இறைவன்' என்பது, 'தான்' என்னும் பொருட்டாய் நின்றது. வருதல் அங்கம் - வருதலைஉடைய உடம்பு' அங்கமாகிய குரம்பை' என்க.
திருப்புறம்பயம் பதிக வரலாறு: சுவாமிகள் பழையாறையில் சமணரால் மறைக்கப் பட்டிருந்த வடதளியை அரசனைக்கொண்டு வெளிப்படுத்திப் புதுக்கச்செய்து வணங்கிய பின்னர், காவிரியின் இருகரையிலும் உள்ள தலங்களை இறைஞ்சிச் சாத்திய தமிழ் மாலைகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இது, பிச்சைக்கு வந்த பெருமானது காட்சியாலும், நோக்கு உரைகளாலும் நிறையழிந்தாளொருத்தி, நாள்தோறும் வரும் அவரது வருகையால் ஆற்றியிருந்து, பின்னர் அவர் வாரா தொழிய ஆற்றாளாய் அவர்பால் தூதுவிடக் கருதித் தோழிக்குக் கூறியவாறாக அருளிச்செய்யப்பட்டது. நாள்தோறும் கண்டு உரையாடுங்கால் அவர் தம் ஊரை வேறு வேறாகக் கூற, அவர் உலகமுழுதுடையராத லுணர்ந்த அவள், 'அஃது ஒக்கும்' என்றிருப்ப, இறுதியில் அவர் தம் ஊர் புறம்பயமாகக் கூறிச் சென்றமையை ஈண்டுக் கூறுகின்றாள் என்க. இறைவன் வெளிநின்றருளப் பெற்றார், அதன் பின்னர் அவனை அடைய விரையும் நிலை, இதன் உண்மைப் பொருள். திருத்தாண்டகம் கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும் நடமாடு நன்மருகல் வைகி நாளும்நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப் படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள் பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை : கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், வளவி, கண்டியூர், கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கி சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம், பாசூர், பழையாறு, பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார். குறிப்புரை : கூடல் - மதுரை. இதுமுதலாகப்பலதலங்கள் இதன்கண் அருளிச்செய்யப்பட்டன. அவற்றுள், கொடுங்கோளூர், வளவி, பாற்குளம் என்பன வைப்புத்தலங்கள். வைகி - தங்கியபின், ஒற்றியாக - ஒற்றியாகையால். இங்கு, 'நீங்கி' என ஒரு சொல் வருவிக்க. 'வைகி, கைவிட்டு' என்பன, அவர் அன்றன்று கூறியதனைக் கூறிய வாறே தெளிந்து கூறியன. 'இந்நாள்', 'நம் ஊர் புறம்பயம்' என்றுஅறிந்து தோழி தூது விடுவாளாதல் பயன் என்க. இறைவனை அடையப் பெறாது வருந்துவார்க்கு அவரது ஆற்றாமையை அறிந்து இறைவன் திருப்புறம்பயத்தில் வெளிநின்றருளல் இதன் உண்மைப்பயன்; ஆகவே, அதன்பொருட்டு இத்திருப்பதிகம் வெளியாயிற்றென்க.
முற்றொருவர் போல முழுநீ றாடிமுளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு ஒற்றொருவர் போல உறங்கு வேன்கைஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார் மற்றொருவ ரில்லைத் துணையெ னக்குமால்கொண்டாற் போல மயங்கு வேற்குப் புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை : தவம் முற்றிய ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி, பிறைசூடி, முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர் போலப் பொய் உறக்கம் கொண்ட என்கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக எண்ணுகின்றார். எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை. இவருடைய செயலைக் கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் 'எங்களுடைய ஊர் திருப்புறம்பயம்' என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார். குறிப்புரை : முற்று ஒருவர் -முற்றிய ஒருவர். முழுநீறு - நீற்றுக்குரிய தன்மை நிறைந்த நீறு; அது, மிக வெள்ளியதாதல் - ஒற்று ஒருவர்போல உறங்குதலாவது, மறைந்துநின்று உண்மையை, கண்டும் கேட்டும் உணர்கின்ற ஒற்றர் ஒருவர், அதன்பொருட்டுப் பொய்யாக உறங்குதல்போல உறங்குதல். 'ஒற்று ஒருவர்' என்பதும், 'முற்றொருவர்' என்றதுபோல வினைத்தொகை. இறைவரது கருத்தினையறிதற் பொருட்டு அவ்வாறுறங்கினாள் என்க. வளையை ஒன்றொன்றா எண்ணியது நலம்பாராட்டி. 'எண்ணுகின்றார்' என்றது, இறப்பில் நிகழ்வு. 'மற்றொருவர் இல்லைத் துணை எனக்கு' என்பதனை இறுதிக்கண் கூட்டுக. மால் - பித்து. 'உறங்குவேன், மயங்குவேன் என்பன, இறப்பின்கண், முந்நிலைக்காலமுந் தோன்றும் இயற்கை உணர நின்றன. (தொல் - சொல்.
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல் ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன் பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப் போகாத வேடத்தர் பூதஞ் சூழப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை :தீங்கு தருகின்ற விடத்தை நுகர்ந்த, மாலையின் செந்நிறத்தை உடைய பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து, ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்து வந்து 'திருவே! உணவு இடு' என்று கூற, உணவு கொண்டுவர உள்ளே சென்றேன். உணவுகளோடு யான் மீண்டு வரக்குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூதங்கள் சூழப் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார். குறிப்புரை :ஆகாத - தீங்கு தருகின்ற. ஏகாசம் - மேலாடை. 'ஏந்திவந்த' தென, அளபெடையாகவும் பாடம் ஓதுப. 'திருவேபலி இடு' என்றியைக்க. திரு - திருமகள். பிச்சை ஏற்போர் அதனை இடுவாளை, 'திருமகளே' என்றழைத்தல் வழக்கு. பாகு - குழம்பு, பலி - சோறு. கண் உள்ளே - கண்ணினது உள்ளிடத்தையே. 'பற்றி' என்றது, 'கண்ணிற் கருமணியினுள்ள பாவையே யாகி' என்றதாம். 'கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம்வீழும் - திருநுதற் கில்லை இடம்' (குறள் என்பதனை நோக்குக. 'கண்ணுளே' என்பதும் பாடம். 'போகாத வேடத்தார்' என்றது. 'அவரது வேடம் என் கண்ணி னின்றும் நீங்காத இயல்பினது' என்றதாம். 'வேடத்தராய்ப் போயினார்' என்க.
பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப்பன்முகில்போல் மேனிப்ப வந்த நாதர் நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறைநியமந் துருத்தியும் நீடூர் பாச்சில் கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை : பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர், நெல் மிக விளையும் நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தி, நீடூர், பாச்சிலாச் சிராமம், கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம், கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து, இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடியதாம் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார். குறிப்புரை : பல் மலிந்த - பற்கள் நிறைந்த. பனி முகில் - பனியைப் பெய்யும் மேகம்; இது வெள்ளிதாய் இருக்கும். இனி, 'குளிர்ந்த முகில்' எனக்கொண்டு, 'அம்மை திருமேனியைக் குறித்தது' என்றலுமாம். 'பிரபந்தம் என்பது, 'பவந்தம்' என்றாயிற்று 'பிரபஞ்சம்' என்பது, (திருவிளை. மண்சு. "பவஞ்சம்" என வந்ததுபோல. 'உரையும் பாட்டும் ஆகிய செய்யுள்களுக்கெல்லாம் உண்மையில் உரிய பொருள்சேர் புகழையுடைய தலைவர்' என்றவாறு 'பவந்தர் - வஞ்சர்; கள்வர்' என்றுங் கூறுவர். நியமம், 'பரிதிநியமம்' என்னுந் தலம்.பாச்சில் - பாச்சிலாச்சிராமம். 'நீர்க்கழுக்குன்றம்' எனமாற்றுக. பொன் அழகு; கோதையர்; தேவியார்.
செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்சிரமாலை சூடிச் சிவந்த மேனி மத்தகத்த யானை யுரிவை மூடிமடவா ளவளோடு மானொன் றேந்தி அத்தவத்த தேவர் அறுப தின்மர்ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப் புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை :இறந்தார் தலைமாலையைக் கையிலெடுத்துத் தலையில் சூடிச் சிவந்த மேனியில் பெரிய தலையை உடைய யானைத் தோலைப் போர்த்துப் பார்வதி பாகராய், மானைக் கையில் ஏந்தி, ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்து, புலித்தோலை இடையில் கட்டிக் கையில் புத்தகம் ஒன்றனை ஏற்றுப் புறம்பயம் நம் ஊர் என்று எம்பெருமான் போயினார். குறிப்புரை : சிவபிரான், கையிலும் தலைமாலை ஏந்திநிற்றல், இத்திருப்பாடலாற் பெறப்படும். அத் தவத்த தேவர் - அந்தத் தவம் உடைய தேவர். தேவர் அறுபதின்மருக்கும். ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்டினமை இத்தலத்துள் நிகழ்ந்தது போலும். புத்தகம் கைக்கொள்ளல், ஆசிரியக்கோலம். 'புறம்பய மதனில் அறம்பல அருளியும்'
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடிநல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப் பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர் துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத் துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன் புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை : விடம் அடைந்த கழுத்தினராய், நீறு பூசி, பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டு, செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து 'யான் பராய்த்துறை ஊரினேன்' என்றார்'. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன். பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால் எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன். தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார். குறிப்புரை : 'பராய்த்துறையேன்' என்றது வேறு முடிபாகலின், பால்வழுவின்மை யுணர்க. இது, வருகின்ற பாடல்களிலும் ஒக்கும். 'ஓர் பவள வண்ணர்' என்றது, முன்னர் அறிந்திலாமை குறித்தது. துஞ்சிடை - உறங்குமிடத்து. 'அதன்பின் நிகழ்ந்தது உனக்குச் சொல்ல மாட்டேன்' என்க. நிகழ்ந்தது, குறிப்பறிந்து மெய்தீண்டியது. மாட்டாமை, நாணத்தால் ஆயதென்க. இனி, 'சொல்லமாட்டேன்' என்றதற்கு. 'காதலும் நாணமும் ஒருநிலையே நின்றமையால், கடிந்தாயினும் நயந்தாயினும் ஒன்றும் சொல்ல இயலாதேனாயினேன்' என்றுரைத்தலுமாம்.
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்திமறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச் செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டுதிருமுண்ட மாஇட்ட திலக நெற்றி நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்றுநெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப் பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை : ஒருகையில் மான் குட்டியை ஏந்தி, மற்றொரு கையில் மழுப்படையை ஏந்தி, 'யான் மறைக்காட்டில் உள்ளேன்' என்று இனிய சொற்களைப்பேசி, விளங்கிய திண்ணிய தோள்கள் மீது திருநீற்றைப் பூசி, நெற்றியில் திரிபுண்டரமாகத் திருநீறணிந்து, சுருண்ட கூந்தலை உடைய மகளிர்பின் சென்று, தம் கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி, புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக் கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார். குறிப்புரை : மறி - மான் கன்று, மழலை - இனிய மொழி. செறி - செறிதல்; நெருங்குதல்; கிளைத்தல். 'நீறு கொண்டு சென்று' என இயையும். திருமுண்டமா இட்ட திலக நெற்றி - மங்கல முகமாமாறு இட்ட திலகத்தை உடைய நெற்றியை உடையநீண்ட கண்கள் நீர்த்துளிகளைச் சொரியுமாறு. நோக்கி - காதல் நோக்கு நோக்கி. பொறி - புள்ளி; இது படத்தின்கண் உள்ளது.
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டிநிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட்டியுங்குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை நல்லாளை நல்லூரே தவிரே னென்றுநறையூரில் தாமும் தவிர்வார் போலப் பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை : ஓரிடத்தில் தங்காமல் பல ஊர்களும் பிச்சை ஏற்றலைக் கருதிச் சென்று, வளையலை வரிசையாக அணிந்த மகளிர் பிச்சை வழங்க, அதனோடு அவர்களுடைய அடக்கம் என்ற பண்பினையும் கைக்கொண்டு, தம் வாகனமாகக் கொலைத் தொழில் செய்யும் காளையையும், வாச்சியங்களான கொக்கரையையும் கொடுகொட்டியையும் குடமூக்கு என்னும் தலத்தில் விடுத்து, நல்லாளை, நல்லூர், நறையூர் இவற்றில் தங்குபவரைப் போலக் கூறிக் கொண்டு, மகளிரை நிறையழிக்கும் கோலமுடைய நம் பெருமானார் பூதம் சூழப் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார். குறிப்புரை : நில்லாது - ஓர் இடத்தில் நிலையாக இராமல், ஏகாரம் தேற்றம், 'பலியுங்கொண்டு' என்பதனைத் தழுவி நிற்றலின் 'நிறையுங் கொண்டு' என்னும் உம்மை இறந்தது தழீஇயது. 'கொல்ஏறு'என்பதில் 'கொல்லுதல்' என்பது இன அடை. கொக்கரை -சங்கு. 'ஒழிய' என்பதனை, 'வந்து' என்பதொரு சொல்வருவித்து முடிக்க. 'குளிர்தண் பொய்கையையும்' நல்லஆட்களையும்உடைய நல்லூர்' என்க.'ஆளை' என்னும் ஐகாரம், சாரியை. 'நறையூரிற் றாமுந்தவிர்வார்போல' என்பதனை, 'ஒழிய' என்பதன் பின்னர்க்கூட்டுக. 'தாமும்' என்னும் உம்மை அசைநிலை. எல்லாஊரும் தம்முடையனவே ஆக, சில ஊரைத் தவிர்வார்போல,'நல்லூரே தவிரேன்' என்று கூறினார் என்றாள்.பொல்லாத வேடம் - மகளிரை நிறையழிக்கும் கோலம்.
விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டுவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித் திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர் அரையேறு மேகலையாள் பாக மாகஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன் புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை: நறுமணம் கமழும்திருநீற்றைப் பூசி ஓர் ஆமையோட்டினை அணிகலனாகப்பூண்டு, காதில் சங்கத் தோட்டினை அணிந்து, இடக்கையிலேவீணையை ஏந்திக் கங்கை தங்கும்சடை மீது பிறையைநாற்றிசையும் அதன் ஒளிபரவுமாறு வைத்து, மகிழ்ந்த,செந்தீ நிறத்துப் பெருமானார், மேகலையை இடையில்அணிந்த உமைபாகராய், பிறர் அணுகுதற்கரியசுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய தலைவராய், மேம்பட்டகாளையை இவர்ந்து, பூதம் சூழப் 'புறம்பயம் நம் ஊர்'என்று போயினார். குறிப்புரை: விரை ஏறு - 'மிக்கநறுமணப் பொருளாகப் பொருந்திய 'வெந்த சாம்பல்விரையெனப் பூசியே'என்றருளிச்செய்ததும்உணர்க. வெண்தோடு - சங்குத் தோடு. 'இடக்கை' என்பது.'இடங்கை' என மெலித்தலாயிற்று. ஆரிடம் - அணுகுதற்கரியஇடம்; சுடலை. 'எல்லாம் ஒடுங்கிய இடம்' என்னும்குறிப்பும் ஓர்க. 'ஐயன்' என்றது. பன்மையொருமை மயக்கம்.புரை - உயர்வு; தூய்மை.
கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்குமரனும் விக்கினவி நாய கன்னும் பூவாய பீடத்து மேல யன்னும்பூமி யளந்தானும் போற்றி சைப்பப் பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப் பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. பொருளுரை: தேவர் தலைவனானஇந்திரன் உள்ளிட்டவரும், முருகனும், இடர்களையும்விநாயகனும், தாமரையின் மேல் உள்ள பிரமனும்,உலகங்களை அளந்த திருமாலும் வணங்கி வாழ்த்துச்சொல்லுமாறு இனிய பாடல்களைப் பாடி, அவற்றிற்கு ஏற்பஆடி, வண்டு ஒலிக்கும் கொன்றைப் பூவினை அணிந்ததாமும் தம் பூதங்களுமாய்ப் 'புறம்பயம் நம் ஊர்' என்றுபெருமான் போயினார். குறிப்புரை: இத்திருப்பாடல்,இறைவன் வெளிநின்று அருளுங் காட்சியை வகுத்தருளிச்செய்தது. 'இந்திரனை உள்ளிட்ட தேவர் பொருந். குமரன் முதலாயினார்அருகிருந்து போற்ற' என்க. பாவாய - பாட்டாகி நின்ற. பாரிடம்- பூதம். 'தாமுமாய்' என ஆக்கம் வருவிக்க. பரந்து -பரவி வந்து. பற்றி - என்னைத் தம் வயமாக்கி. பூவார்ந்த - பூவாகி நிறைந்த; 'அழகுமிக்க' எனினுமாம். கொன்றை - கொன்றைக்கண்.
திருநல்லூர் பதிக வரலாறு: வாகீசர் திருச்சத்திமுற்றத்திருந்த சிவக்கொழுந்தைஇறைஞ்சி, 'கூற்றம் வந்து குமைப்பதன்முன் பூவாரடிகள்என் தலைமேல் பொறித்து வைப்பாய்' என வேண்ட,சிவபெருமான் 'நல்லூரில் வா வா' என்றருளிய அருள்நெறியின்படியே,சுவாமிகள் இத்தலத்தில் வந்தணைந்து வணங்கியெழும்பொழுதில், பெருமான் 'உன்னுடைய நினைப்பதனைமுடிக்கின்றோம்' என்று சென்னி மிசைப் பாத மலர்சூட்ட, மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம்.(தி.திருநாவு. புரா. திருத்தாண்டகம் ப. தொ. எண்: பதிக எண்: நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்றஇனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூரிலுள்ள எம்பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களைமேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம்போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப்போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர்கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி,அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில்செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தனபோலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார்.இஃது அவர் பேரருளின் தன்மையாம். குறிப்புரை: நைய - மேலும் மனம் இளக;'தற்போதங் கெடும்படி என்பது கருத்து. இத்திருப்பதிகத்துள், 'வைத்தார்' என்பது சொற்பொருட்பின் வருநிலையாய், கருத்து வகையால், செய்தார், அணிந்தார், உடையார், வைத்தார் என. ஏற்ற பெற்றியால் பொருள் தந்துநிற்றல் அறிக.'நையவைத்தார்' என்பதன்பின், 'அவரிடத்து' என்பது வருவிக்க. திருகு - முறுகுகின்ற; வலுப்படுகின்ற.சிறந்து - மிகுந்து. துருவி - தேடி; என்றது, 'அரிதிற்கிட்டி' என்றவாறு. ஏற - முழுதுமாக. துற்ற - நெருங்கியபோது, போதாயிருந்து, மதுவாய் - தேனே வடிவாய்.பில்கி - ஒழுகியதனால். 'நனைந்த' என்பதன் ஈற்றுஅகரம் தொகுத்தலாயிற்று. 'அனைய' என்பது சுட்டு; அது திருவடியின் சிறப்புணர நின்றது. "என் தலை மேல்"என்பது இசையெச்சத்தால், 'ஒன்றற்கும் பற்றாத சிறியேனாகிய எனது புல்லிய தலையின்மேல்' எனப்பொருள்படுமாற்றினை' எடுத்தலோசையாற் கூறிக் காண்க. 'நல்லூர் எம்பெருமானார்' என்பதனை முதற்கண் கொண்டு உரைக்க. 'ஆறு' என்றது, செய்கையை. 'நல்லூர் எம்பெருமானார், நைய வைத்தார்; நீங்க வைத்தார்;போர்வை வைத்தார்; தளிர் வைத்தார்; அவைபோலத்திருவடி என் தலைமேல் வைத்தார்; இது, நல்ல செய்கையே'என்க. 'இது' என்பது, தமக்குத் திருவடி சூட்டினமையை, 'நல்லூர் எம்பெருமானார் என்பதற்கேற்ப, நல்ல செய்கையே செய்தார்'என்பது நயம். 'வைத்தனபல; அவைபோலத் திருவடியையும் வைத்தார்' என்றது, 'இஃது அவரது பேரருளின் றன்மை' என வியந்தருளியவாறு. வருகின்ற திருப்பாடல்களினும் இவ்வாறே உரைக்க.
பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்புலியுரியின் னதள்வைத்தார் புனலும் வைத்தார் மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார்வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார் மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார் நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார்சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை,பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து,மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத்தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திருவடிகளை, என்தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: பொன் நலத்த -பொன்னினது அழகை உடைய. புலி உரி - புலியை உரித்த.இன் அதள் - இனிய தோல்; இனிமை, மெத்தென்றிருத்தல். மன் நலத்த - நிலைபெற்ற அழகினையுடைய. மின் நலத்த- மின்னலினது அழகினையுடைய. நன்னலம் - மிக்க நன்மை.
தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப் பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார். சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார் நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: இதழ்கள் மிக்ககொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு,தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக்கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக் கொண்டு,கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: தோடு ஏறு - இதழ் நிறைந்த.'சடைமேல்' என்பதனை முதற்கண் வைக்க. துவலை - துளி.பாடு ஏறு - பக்கங்களில் ஏறுகின்ற. படு திரைகள் - ஒலிக்கின்ற அலைகள். எறிய - வீச, பனி மத்த மலர் - குளிர்ந்த ஊமத்தம்பூ. சேடு ஏறு - அழகு மிகுந்த. நாட்டம் - கண். சிலை -வில்; பினாகம். நாடுஏறு - யாவரும் விரும்புதல் பொருந்திய.
வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார் கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார் சொல்லருளி அறம்நால்வர்க் கறிய வைத்தார்சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார் நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார்,வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக் கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம்திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: வில் அருளி வரு புருவம் -வில்லுக்கு அருள்புரிந்துமலைக்கு அருள்புரிந்து. 'ஊராகக் கயிலாயமலையை வைத்தார்' என்க. சொல் அருளி - சொற்களை வழங்கி;'சொல்' என்றது ஆகுபெயராய், அதனால் ஆகிய நூலைஎன சுவாமிகள் அருளிச்செய்தல் காண்க. 'சிவபிரான், ஆலமர நீழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு வேதத்தைச் சொல்லி அருளினார்' என்பது மிகப் பழையதொரு வரலாறாகும்.சனகாதி நான்கு முனிவர்கட்கு மோன நிலையிலிருந்து வேதப்பொருளின் அநுபவத்தைக் காட்டிய வரலாறன்று இது. துறவி - துறவு; இச்சொல், 'பிறவி' என்னும் சொல் போன்றது. தகுதி யெய்திய உயிர்கட்கு 'துறவு' என்கின்ற ஒருவழியை வைத்தார் என்க.
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்வினைதொழுவார்க் கறவைத்தார் துறவிவைத்தார் கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார் திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினையும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளைஎன் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.குறிப்புரை: விண் இரியும் - தேவர்கள் அஞ்சி நீங்குவதற்குக் காரணமாய் நின்ற. விண்,ஆகுபெயர்; 'திசை' என்றதும் அது. 'தொழுவார்க்கு வினைஅற வைத்தார்' என்க. கமல மலர் வைத்தது ஆசனமாக என்க;'எரியாய தாமரைமேல் இயங்கினாரும்'நெருப்பு. 'உடனே' என்றது, ஒரு திருமேனியிலே என்றவாறு. 'தொழுது' என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது.
உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார் மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணாமறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார் செற்றமலி யார்வமொடு காம லோபஞ்சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார் நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்தபாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்லதவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: 'பிணி உலவுஉலகம்' என்க.உற்று உலவுதல் - மிகுந்து பரவுதல். எழுமை - எழுவகைப்பட்ட பிறவி. 'உயிரை அப்பிறவிகளில் வைத்தார்' என்க.கதிகள் - துறக்க நிரயங்கள். மற்று, அசைநிலை.'காணாது' என்பது ஈறுகெட்டு நின்றது. மறை - மறைவு 'குறை மதியம் வளர வைத்தார்' என்றது. 'தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு முடியில் அணிந்து, பின் வளர வைத்தார்' என்றவாறு. செற்றம் -சினம்; பகையுமாம். ஆர்வம் - மோகம். 'மலி' என்றது,ஆர்வத்திற்கு அடை; காமம், குரோதம், உலோபம்,மோகம், மதம், மாற்சரியம்' என அகப்பகை ஆறென்பர்.அவை சிறவாதநெறி - நன்னெறி.
மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்மணிமுடிமேல் அரவைத்தார் அணிகொள் மேனி நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார் ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார் நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர்.அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர்.நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர்.தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: மாறு - பகை. மலைந்தார்-போர் செய்தவர். 'மாறாய் மலைந்தார்' என்க. அரணம் - மதில்.'அரா' என்பதிற் குறிற்கீழ் அகரம், செய்யுளாதலின் குறுகிநின்றது. நிலவ - நிலைத்து நிற்க. நிலையம் -திருக்கோயில்கள். மலைந்து - முடியில் அணிந்து. அறுதிரைகள் - கரையை மோதிஉடைகின்ற அலைகள்.
குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார்குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார் உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்உண்டருளிவிடம்வைத்தார் எண்டோள் வைத்தார் நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள் நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர்.இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்தவிடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர்.எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: குலங்கள் - கூட்டங்கள்.'குலங்கள் மிகு மலைகள்' எனவும், 'ஞாலத்தில் வைத்தார்' எனவும் கொள்க. குருமணி - நிறம் வாய்ந்த மாணிக்கம்.கோலம் - வேடம். உலம் கிளரும் - திரண்ட கல்போல உயர்கின்ற; இது வடிவுவமை. 'உச்சி' என்றது, படத்தை, 'விடம் உண்டருளி வைத்தார்' என மாற்றி, 'வைத்தார்' என்பதற்கு, 'கண்டத்தில் வைத்தார்' என உரைக்க. 'உள்' என்பதனை, ஒடுவாகத் திரிக்க. அனிலம் - காற்று .'விசும்பின்' என்பதில் உள்ள இன், வேண்டாவழிச் சாரியை. மிசை - மேல் இடம். 'விசும்பாகிய மேலிடம்' என்க. 'நினைந்தாராய்' என எச்சப்படுத்துக. நினைந்தது சுவாமிகளது வேண்டுகோளை. 'உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்'எனக் கூறியதுகொண்டு இவ்வாறு அருளிச் செய்தார்.
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார் நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார் கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார் நன்றருளுந் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம்,மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர்.தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன்புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர்.வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர். குறிப்புரை: ஞாயிறும், திங்களும் வட்ட வடிவினவாதல் பற்றி. அவற்றின் இயக்கத்தை உருள்வதாக அருளிச்செய்தார். 'சென்று உருளும்' என்றருளினாராயினும் 'உருண்டு செல்லும்' என்றலே கருத்து. நின்று - வெளி நின்று;அருளி என்றது துணை வினை. 'கொன்றருளி' என வருவதும் அது. மறைபொருள் - இரகசியப் பொருள்; நல்லாசிரியர்பாற் கேட்டன்றித் தாமே உணரலாகாத பொருள். 'சேவடியை,கூற்றம் நடுங்கியோடவைத்துக் கொன்றருளினார்' என்பது கருத்து. இங்கு, 'வைத்தார்' என்பது, 'உதைத்தார்' என்னும் பொருளது. நன்று - நன்மை. திருவடிகளே, கூற்றைக் கொன்றதுபோலும் தீமையாகிய மறக்கருணையையும்,மார்க்கண்டேயருக்கு உலவா வாழ்நாள் அளித்ததுபோலும் நன்மையாகிய அறக்கருணையையும் செய்யுமாகலின் ஈண்டு அறக்கருணையே செய்தன என்பார்,'நன்றருளும் திருவடி' என்றருளிச்செய்தார்.
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர் ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார் ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர் நாம்பரவும் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார்,பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க,கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர்.சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்டவர்.நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும்திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர். குறிப்புரை: உரிஞ்சி - உராய்ந்து, 'உரிஞ்சி,கிடந்து, என்னும் எச்சங்கள் எண்ணுப்பொருளில் வந்தன.ஆம் பரிசு - ஏற்றவகையில். 'தமக்கு' என்புழித் 'தாம்'என்றது, உயிர்களை. ஓம்பரிய - நீக்குதற்கு அரிய.'வானோரும் நாமும் பரவும்' என்க. 'நாம்' என்றது மக்களை.
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால் உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவஒருவிரலா லுறவைத்தார் இறைவா என்று புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார் நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. பொருளுரை: நல்லூர் எம்பெருமானார்,கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளையும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர்.இராவணன் 'தலைவனே' என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர். குறிப்புரை: குலம் - கூட்டம். 'வருதிரைகள்' என்னும் அன்மொழித்தொகை, 'கடல்' என்னும் ஒரு சொற்றன்மையாய், 'கிளரும்' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. குரு - நிறம். மலை, கயிலாயம். உலம்- திரண்டகல்; அஃது உவமையாகு பெயராய், தோள்களை யுணர்த்திற்று. 'உற' 'துன்பம்உற' என்க. புகழ், இராவணனை அடர்த்தும். அருளியும் இறைவர் அடைந்தவை. புரிந்து ஆளாக - மக்கள் இடைவிடாது சொல்லித் தமக்கு ஆளாகுமாற்றால். கொள்ள -. 'இருள்சேர் இருவினையும் சேராஇறைவன் - பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (குறள்- என்றருளியது காண்க.
திருக்கருகாவூர் பதிக வரலாறு: நாவரசர் திருநல்லூரில் இறைவன் திருவடி சூட்டப் பெற்றபின் பலநாள் அங்குத் தங்கித் தொழுது தமிழ் மாலை பல பாடித் திருத்தொண்டு செய்து, பின்பு திருக்கருகாவூர் சென்று அங்குக் கண்ணுதலைக் தொழுது கசிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இத்திருப்பதிகம் முழுவதும் இறைவனை, 'அடியவர்க்குக் 'கண்' என்று அருளிச்செய்கின்றார். திருத்தாண்டகம் ப.தொ.எண்: திக எண்: குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்;கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்; பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்;பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்; ஒரு கால் உமையாள் ஓர்பாகனும ஆம்; கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும்கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. பொருளுரை: இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய்,ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய்,விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய்,மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய்,ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய்,நறுமணம் குறிப்புரை: குருகாம் - நிறத்தைத் தாங்குகின்ற; 'காவும்' என்னும் பெயரெச்சத்து ஈற்று உயிர்மெய் கெட்டது.எதுகை நோக்கிக் ககர ஒற்று மிகாதாயிற்று. அன்றி,குருகு, வெண்மை என்றலும் ஒன்று. இனி, 'குருகு ஆம் வயிரம்' எனக்கொண்டு 'கைவளையாதற்குரிய வயிரம்' என்றுரைத்தலும் ஆம். 'வயிரம் ஆம்' முதலியவற்றில் 'ஆம்' 'ஆவான்' என்னும்பொருட்டு. நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம்.'கோளே' என்னும் ஏகாரம் தேற்றம். தான், அசைநிலை.பருகா அமுதம்' விலக்குருவகம். பருகிய பின்னர் மிருத்யுவைஉள் - வாயினுள். 'உரையாடி' என்பது, 'நா உரையாடுதற்கு ஏதுவாய் உள்ள முதல்வன்' என்னும் பொருள தாய், கிழமைப்பொருளில் வந்த, 'நாவிற்கு' என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று. கரு - முதல். 'உலகுக்கு' என்பது, தாப்பிசையாய், முன்னருஞ் சென்று இயைந்தது. 'கண்' என்றது, நடாத்துவோனாதல் பற்றி. 'முன்னே தோன்றி நின்று நடாத்துவான்' என்பது பொருளாகலின், 'முன்னே தோன்றும்' என்றது, உடம்பொடு புணர்த்தல். இத்திருப் பாட்டுள், 'வயிரம்' என்றதனால்,இறைவனது சிறப்பினையும், 'நாள், கிழமை, கோள்' என்றவற்றால், அவன் காலமாய் நின்று அதனை நடாத்தி, உலகினைத் தொழிற்படுத்துதலையும்,'அமுதம்' என்றதனால், அவனது இன்பம், அருள், ஆற்றல் என்பவற்றையும், 'பாலின் நெய்' முதலிய மூன்றாலும், அவன், உடலில் உயிர்போல உலகத்தோடு ஒன்றாய் நிற்றலையும், 'உமைபாகனும்' என்றதனால், அவனது, 'தடத்தநிலை, சொரூபநிலை' என்னும் இருநிலைகளையும், 'நாவிற்கு உரையாடி' என்றதனால்,எல்லாப் பொருள்களையும் இயக்குதலையும் அருளிச் செய்தவாறாம்.
வித்தாம் முளையாகும் வேரே தானாம்வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம் தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: வித்து, முளை, வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன். தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன். செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன். தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன். குறிப்புரை: 'வித்து, முளை, வேர்போல்வான்' என்றது, முறையே, உலகிற்கு 'முதற்காரணப் பொருளாயும், உலகமாகிய காரியப் பொருளாயும், அக்காரியப் பொருள் நிலைத்து நிற்றற்கு ஏதுவாயும் நிற்பவன்' என்பதை விளக்கிநின்றன. இறைவன் உலகிற்கு முதற்காரணப் பொருளாய் நிற்றலாவது, வித்திற்கு நிலம்போல மாயைக்குச் சிறந்த நிலைக்களமாய் நிற்றல். 'தாரகமாம் அத்தன் தாள்'என்றருளிச் செய்தார், மெய்கண்ட தேவ நாயனார். எனவே, நிலம் ஈரமாகிப் பதப்பட்ட பின்பே விதை அதனுள் அடங்கிப் பக்குவப்பட்டு முளையைத் தோற்றுவித்தல் போல, இறைவன் எண்ணங்கொண்ட பின்பே, மாயை பக்குவப்பட்டு உலகத்தைத் தோற்றுவிக்கும் என்க. உண்மையில் மாயையே முதற் காரணமாயினும், அதற்கு இன்றியமையாத நிலைக்களமாய் நிற்றல் பற்றி, பான்மை வழக்கால் இறைவனை முதற்காரணமாகக் கூறுவர். இறைவன் உலகமாகிய காரியப் பொருளாய் நிற்றலாவது உடல் உயிர் போல உலகிற் கலந்து நிற்றல். உலகம் நிற்றற்கு இறைவன் ஏதுவாதலாவது, அத்தன்மைத் தாய ஊழினை அவன் இயக்கிநிற்றல்.எனவே, அவ்வூழே இங்கு வேரோடு உவமிக்கப்பட்டதென்க.ஊழ் உலகத்தைப் பற்றி வேறாகாது கிடத்தலின், அதற்கு முளையின் வேறாகாதவேர் உவமையாயிற்று. 'வேண்டும் உருவம்' என்பதில், 'உருவம்' என்பது, 'உருவினன்' என அவற்றை உடையவன்மேல்
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்கொண்ட சமயத்தார் தேவ னாகி ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று காத்தானாங் காலன் அடையா வண்ணங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: பூவும், பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதிபாகன். ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன்.தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழாவண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான். குறிப்புரை: 'பூத்தானாம், கோத் தானாம் 'என்பவற்றில் உள்ள 'தான்' அசைநிலை. நிறத்தான் -நிறமாய் நிற்பவன். 'பூக்குளால்' என்பதில், 'ஆல்' அசைநிலை. வாசம் - மணம். கோ - தலைவன். 'சமயத்தார் கொண்ட தேவனாகி' என மாற்றுக. 'யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்' என்றது (சிவஞான சித்தி சூ. காண்க. 'இடரே' என்னும் எண்ணேகாரம், 'துன்பம்' என்பதனோடும் இயையும். இடர் - இடையூறு. துன்பம் - மனக்கவலை. 'ஏத்தாதார்க்கு இடரையும் துன்பத்தையும் ஈவான்' என்றதனால், ஏத்துவார்க்கு அவை இரண்டையும் நீக்கியருளுவானாதல் பெறப்படும். 'காலன் அடையாவண்ணம் காத்தான்' என்க. 'கண்ணாம்' என்பதற்கு, 'எனக்கு' எனவும், 'உலகுக்கு' எனவும் ஆங்காங்கு ஏற்குமாற்றாற் கூறுக.
இரவனாம் எல்லி நடமாடியாம்எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம் அரவனாம் அல்ல லறுப்பானுமாம்ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும் குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங்கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: கருகாவூர் எந்தை, இராப்பொழுதாகவும், இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும், என் உள்ளத்தில் உறைபவனாகவும், பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும், ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும், இடபத்தை இவரும் தலைவனாகவும், கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும், அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான். குறிப்புரை: இரவன் - இராப்பொழுதாய் இருப்பவன். எல்லி - இரவு. என் உள்ளான் - எனது உள்ளத்திருப்பவன். அரவன் - பாம்பை அணிந்தவன். 'எண்டிசைக்கும் தேவனாம், ஆகாசமூர்த்தியாம்' என்பன, முறையே, 'மண்ணிற்கும் விண்ணிற்கும் முதல்வனாய் நிற்பவன்' என்றருளியவாறு. 'ஆகாச மூர்த்தியாம்' என்பதற்கு, 'ஆகாயத்தையே வடிவாக உடையவன்' என்றுரைப்பினும் அமையும்; 'ஆகாய வண்ண முடையாய் போற்றி' (ப. பா.என்று அருளிச் செய்தல் அறிக. குரவன் - குரு. "ஆனேறுஏறும் குரவன்" என்றது, உடம்பொடு புணர்த்தலாகலின், 'ஆனேறு ஏறுவானாம்; குரவனாம் எனக்கொள்க. குயலர் -வஞ்சகர். 'குய்யம்' என்பது ஈறுதிரிந்து, இடைக்குறைந்து, 'குயல்' என நின்றது. அதனடியாய்ப் பிறந்த 'குயலர்' என்பது வாளா பெயராய் நின்றது. 'குயலர் - தேர்ந்தவர்'என்பது தமிழ்ப் பேரகராதி. காட்சிக்கு எளியனாதல், வஞ்சம் இல்லாத மெய்யன்பர்க்கு என்க.
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்பரிசொன் றறியாமை நின்றான் தானாம் உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகமசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும் கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: உலகைப்படைத்த பிரமனும், அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்றகருகாவூர் எந்தை, பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன். சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக்காளை மீது இவர்ந்தவன். வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கித் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன். குறிப்புரை: 'பாரை' என்பது தாப்பிசை, இடத்தல் - பெயர்த்தல்; படைத்தவனாகிய பிரமனாகியும், இடந்தவனாகிய திருமாலாகியும் நிற்பான்' என்றதாம். பரிசு -என்றருளிச் செய்தல் காண்க. 'ஆனேற்றாற் பயன்கொள்வோர், இரண்டு ஆனேறு உடையராதல் வேண்டும்;அவ்வாறன்றி, ஓர் ஆனேற்றினாலே பயன்கொள்கின்றான்' என்றபடி. 'கடைந்தானாம்' என்பது, வலித்தலாயிற்று. கடைந்தான் - கலக்கினான்; 'கடைதான்' என்பது விரித்தலாயிற்று எனக்கொண்டு, 'விரும்பாத பொருளாய் இகழ நிற்பவன்' என, உரைத்தலுமாம். கள்ளம் வல்லாரை, 'அறிவார்' என்றது, புகழ்தல்போல இகழ்ந்தது.
மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்மூவாத மேனிமுக் கண்ணி னானாம் சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம் மாலனாம் மங்கையோர் பங்க னாகும்மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம் காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய், எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய், என்றும் மூப்படையாத மேனியனாய், முக்கண்ணினனாய், நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய், கருகாவூர் எந்தை, சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொருபாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய், மன்றங்களில் கூத்தாடுபவனாய், தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய், அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன். குறிப்புரை: மூலன் - முதற் பொருளாய் உள்ளவன். இது மூர்த்திமானாதலையும் குறித்தல் காண்க. மூர்த்தி - வடிவமாய் நிற்பவன், முன் - காலவயப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன். சீலன் -ஒழுக்கமுடையவன்; தவவேடம் உடையவன். செஞ்சுடர் - சூரியன்; 'அவனுடைய ஒளிக்கும் காரணமாய் உள்ளவன்' என்றபடி. 'ஓர்பங்கு மாலனும்' என்பது கருத்தாகக் கொள்க. 'ஓர்பங்குமாயோனை உடையவனுமாவான்; மங்கையை உடையவனுமாவான்' என்றபடி, 'எல்லாம்' என்பதில், எச்சத்தோடு உயர்வு சிறப்பாய்நின்ற உம்மை விரிக்க. 'காலனாங்காலன்' இறுதிக் காலமாய் நிற்கும் கூற்றுவன்.
அரைசே ரரவனாம் ஆலத் தானாம்ஆதிரை நாளானாம் அண்ட வானோர் திரைசேர் திருமுடித் திங்க ளானாந்தீவினை நாசனென் சிந்தை யானாம் உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டுஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு, ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறைசூடி, தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான். அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய், பார்வதிபாகனாய், உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன். குறிப்புரை: ஆலத்தான் - ஆல் நிழலில் இருப்பவன். விடம் உண்டவனும் ஆம். அண்டம் - விண்ணுலகம்.'வானோர்' என்றது, வாளா, 'தேவர்' என்னும் பொருட்டாய்நின்றது. திங்களான் - சந்திரனை யணிந்தவன். 'நாசன்' என்புழி 'ஆம்' என்பது தொகுத்தலாயிற்று. உரைசேர் உலகத்தார் - நாத்திகம் முதலான பலவற்றையும் நாத்தழும் பேறப் பேசும் உலகத்தார். 'என் உள்ளத்தினும் உள்ளான்; அவர் உள்ளத்தினும் உள்ளான்' என்றபடி.
துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம் படிதானாம் பாவ மறுப்பா னாகும்பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம் கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கடியானாங் காட்சிக் கரியா னாகுங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும், அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும், நன்னெறியாகவும், பாவத்தைப் போக்குபவனாகவும், வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும்,உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய், அவர்களை ஒறுப்பவனாகவும், அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான்.குறிப்புரை: துடி - 'உடுக்கை' என்னும் பறை. இதனை, படைத்தற்றொழிலுக்கு அடையாளமாக இறைவன் ஏந்தி நிற்றலின், சிறந்தெடுத்து அருளிச்செய்தார். 'தோற்றம் துடியதனில்'என அருளிச்செய்தல் காண்க. சொற்களைச் சோதித்தலாவது, அவை வாய்மையாதலையும், பொய்ம்மையாதலையும் உணர்தல். படி - நெறி. 'கொடியானாம் கூற்று' என்க. கடியான் - ஒறுப்பவன். காட்சிக்கு அரியனாதலும் குயலர்க்கே.
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம் பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்பலபலவும் பாணி பயின்றான் தானாம் எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம் கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய், தேவர்களும் அறியாத நிலையினனாய், தன்னால் கொல்லப்பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய், பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய், அட்டமூர்த்தியாய், எண்தோளனாய், என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய், இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய், அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான். குறிப்புரை: உருவம் - நிறம், சூழல் -நிலை. 'யானையினது பட்டுப் போன்ற மெல்லிய தோலை உரித்தவன்' என்க; 'நகம் பட்டு உருவுமாறு உரித்தவன்' எனினுமாம். பாணி - தாளம்; 'பல பல தாளத்தில் நடிப்பவன்' என்பதாம். எட்டு உருவம் - அட்ட மூர்த்தம்; அவை ஐம்பூதங்கள், சூரியசந்திரர், ஆன்மா என்பன. மூர்த்தி - தலைவன்.கட்டு உருவம் - இளமையானஉருவம்; இது கூறவே, 'கடியான்' என்றது, மன்மதனை விளக்கி நின்றது. 'கடியானைக் கட்டுருவங்காய்ந்தானாகும்' என்க.
பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகிஉள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய் செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம் அறுத்திருந்த கையானா மந்தா ரல்லியிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக் கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: தன்னை இடபமாய்த்தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை, தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன். தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான். நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான். குறிப்புரை: பொறுத்திருந்த - இடபமாய்ச் சுமந்திருந்த. சிவபிரான் மாயோனது உள்ளத்தில் வீற்றிருந்து அவனது மனக்கவலையை மாற்றியருளுதலை. 'பையஞ் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தான்'என அருளிச் செய்தமையான் அறிக. திருவாரூர்த் தியாகேசரது வரலாறு இதனை இனிது விளக்கும். செறுத்திருந்த- சினந்திருந்த. 'மதில்கள்' என்புழி உம்மைவிரிக்க. 'மூன்று' என்றது அம்மதில்களால் சூழப்பட்ட ஊர்களை, 'வேவ மூட்டும்' என இயையும். குனிய - வளைந்து நிற்க.' ஒரு தலையை தெரிய நோக்கி, அறுத்திருந்த கையான்'என இயைக்க. தெரிய நோக்கி -விளங்க உணர்ந்து. 'ஆம், ஆகும்' என்பவற்றிடையே, 'போலும்' என்றருளினார். அவற்றிற்கு ஈடாக இஃது இயையினும் பொருந்தும் என்றற்கு.
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும் அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கேஆகாய மந்திரமு மானா னாகும் கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொருளுரை: கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன்.தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக் கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன். பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான், பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன். கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன். அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான். குறிப்புரை: 'மூன்றும், பத்தும், அஞ்சும் 'என்பவற்றில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது. 'மாட்டி''அடக்கி' என்னும் எச்சங்களுக்கும் பயனிலைகள் முன்னே நின்றன. உடனே - கயிலையை எடுத்த உடனே. வைத்து- கால்விரலை வைத்து. எண்ணான் - மதியாதவன்; இராவணன் .இசைந்தான் - அவனுக்கு அருள்புரிய நேர்ந்தான்; அதனால் கேட்டான் என்க. அஞ்சு - ஐம்புலன். ஆகாய மந்திரம்- ஆகாயமாகிய கோயில்; வீட்டுலகம், ஆனான் -பொருந்தினான், கறுத்தான் - வெகுண்டான்.
திருஇடைமருதூர் பதிக வரலாறு: நாவரசர் ஆவடுதண்டுறையீசரைப் பணிந்து பாமாலைகள் பல சாத்தித் திருஇடைமருதூர் அடைந்து வணங்கி, அங்குத்தங்கி அன்பினால் சாத்தியருளிய வண்டமிழ்ப் பாமாலைகள் பலவற்றுள் அமைந்தவை, இத் திருப்பதிகமும் அடுத்து வரும் திருப்பதிகமும். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இத்திருப்பதிகத்துள் வரும், 'போலும்' என்பன உரை அசைகள். எனவே, இது, 'போலும்' என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் இறைவனைப் பரவியதாம். வடமொழி மந்திரங்கள் 'நம' முதலிய ஏழுமுடிபுகளை உடையனவாய் வருதல்போல, இத் தமிழ் மந்திரங்கள்,'போற்றி, காண், தாமே, கண்டாய், போலும் முதலிய முடிபுகளை உடையனவாய் வந்துள்ளன என்க. திருத்தாண்டகம் ப.தொ.எண்: திக எண்: சூலப் படையுடையார் தாமே போலுஞ்சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும் மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்மந்திரமுந் தந்திரமு மானார் போலும் வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய், விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய், மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய், ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.குறிப்புரை: கண்ணி - முடியிலணியும் மாலை; இஃது ஆகுபெயராய், அதனை உடையவரைக்குறித்தது. மாலை - திருமாலை; விட்டுணுவை. 'தந்திரகலை' மந்திரகலை, உபதேசகலை' என, இறைநூல் மூன்று பகுதியாய் நிகழும். அவை முறையே 'கரும காண்டம்' உபாசனா காண்டம், ஞானகாண்டம்' எனப்படும். உபாசனா காண்டத்தைக் கருமகாண்டத்துள் அடக்கி, இருபகுதியாக வழங்குதல்பெரும் பான்மை. உபாசனா காண்டத்தை, 'பத்தி' காண்டம் என்றும் கூறுவர். முப்பகுதிகளுள் மந்திரகலையையும், தந்திர கலையையும் அருளவே, இனம் பற்றி உபதேசகலையும், கொள்ளப்படும். தந்திரகலை அல்லது கருமகாண்டமாவது, நாள்தொறும் செய்யப்படுவன வும், எவையேனும் சிறப்புப்பற்றி அவ்வந்நாள்களில் செய்யப்படுவன வும், எவையேனும் பயன்கருதி அவற்றின் பொருட்டுச் செய்யப் படுவனவுமாகிய கடமைகளை வகுப்பது; இக்கடமைகள் முறையே, நித்திய கன்மம், நைமித்திக கன்மம், காமியகன்மம் எனப்படும். மந்திரகலை அல்லது உபாசனா காண்டமாவது,கருமகாண்டத்துட் சொல்லப்பட்ட கடமைகளை மேற்கொண்டு செய்யும் செயல் முறைகளைக் கூறுவது. உபதேசகலை அல்லது ஞானகாண்டமாவது, தலைவனாகிய இறைவனது இயல்புகளையும்,அவனது அடிமைகளாகிய உயிர்களது இயல்புகளையும், அவனது உடைமைகளாகிய உலகு, உடல், உள்ளம் முதலியவற்றின் இயல்புகளையும் தெரித்துணர்த்துவது. வேலைக் கடல்,ஒரு பொருட் பன்மொழி, கடல் நஞ்சினால் தேவர்கட்கு இறுதி வந்த ஞான்று அதனை உண்டு காத்துக் காலத்தால் உதவினார்' என்றுரைத்தலுமாம். 'தொல்வினை, ஊழ்வினை, மேல்வினை' என வினைகள் மூன்று வகைப்படும்; அவை முறையே, சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம்,ஆகாமிய கன்மம் எனப் படும். முன்னைய பிறப்புக்களில் எல்லாம் செய்யப்பட்டு நுகரப்படாது கிடப்பன தொல்வினை அல்லது சஞ்சிதகன்மம்; அவ்வாறு கிடப்பனவற்றுள் பக்குவமாகி வந்து நுகர்ச்சியாவன ஊழ்வினை அல்லது பிராரத்தகன்மம்; ஊழ்வினையை நுகரும்பொழுதே உடன் ஈட்டிக் கொள்ளப்படுவன மேல்வினை அல்லது ஆகாமியகன்மம். அவற்றுள், மேல்வினைகளைத் தீர்த்தலை ஈண்டு அருளிச் செய்தார் என்க.விகிர்தர் - வேறுபட்டவர்; உலகியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதாம், ஏலம் - கூந்தலிற்பூசும் சாந்து. கமழ் குழலாள் - இயற்கை யாகவே மணங்கமழ்கின்ற கூந்தலை உடையவள் 'ஏலக்குழலாள், கமழ் குழலாள்' எனத் தனித்தனி முடிக்க.
காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்காரானை யீருரிவை போர்த்தார் போலும் பாரார் பரவப் படுவார் போலும்பத்துப் பல்லூழி பரந்தார் போலும் சீரால் வணங்கப் படுவார் போலும்திசையனைத்து மாய்மற்று மானார் போலும் ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் கார்காலத்தில் பூக்கும் நறுமணக்கொன்றைப் பூவினை முடிமாலையாக உடையவராய், கரிய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் திருமேனியின் மீது போர்த்தியவராய், உலகத்தாரால் முன் நின்று துதிக்கப்படுபவராய்ப் பல ஊழிக்காலங்களையும் அடக்கி நிற்கும் காலமாய் நிற்பவராய், பலரும் தம்முடைய பொருள்சேர் புகழைச் சொல்லி வணங்க நிற்பவராய், பத்துத் திசைகளிலும் உள்ள நிலப் பகுதிகளும் மற்றும் பரவி நிற்பவராய், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.குறிப்புரை: கார் ஆர் கொன்றை என்புழிப்போல மிகுதி குறித்துநின்று, பல்லூழிக்கு அடையாயிற்று, பல்லூழி பரந்தார்; என்றது, 'பலபொருள்களின் தோற்ற ஒடுக்கங்கட்கும் பற்றுக்கோடாய் நின்று அவற்றை அடக்கி நிற்கும் காலமாகிய ஊழிகளின் தோற்ற ஒடுக்கங்கட்கும் தாம் பற்றுக் கோடாய் நின்று அவற்றை அடக்கி நிற்கும் காலமாய் நின்றார்' என்றதாம். 'சீரால்', 'சீரோடு' என்க. சீர் - புகழ், தமது பொருள்சேர் புகழைப் பலரும் சொல்லி வணங்க நிற்பவர் என்பதாம். 'திசை' என்றது, நிலப்பகுதிகளை. ஏர் -எழுச்சி. ஈண்டும் 'ஏர் ஆர் குழல், கமழ்குழல்' எனத் தனித்தனி முடிக்க.
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்விண்ணுலகும் மண்ணுலகு மானார் போலும் பூதங்க ளாய புராணர் போலும்புகழ வளரொளியாய் நின்றார் போலும் பாதம் பரவப் படுவார் போலும்பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும் ஏதங்க ளான கடிவார் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் வேதங்களோடு வேள்விகளைப் படைத்தவராய், விண்ணுலகும் மண்ணுலகும் ஐம்பூதங்களும் தாமேயாகிய பழையவராய்த் தம்மைப் புகழ்வார் உள்ளத்தில் ஞானஒளியாய் நிற்பவராய்த் தம் திருவடிகள் எல்லோராலும் முன்நின்று துதிக்கப்படுவனவாய், அடியார்களுக்கு இன்பம் பயப்பவராய், அவர்களுடைய துன்பங்களையெல்லாம் துடைப்பவராய் அமைந்துள்ளார். குறிப்புரை: 'வேதங்கள்' என்புழி, ஆல்உருபு விரிக்க. 'வேதங்களோடு பொருந்திய வேள்வி; வைதிக கன்மங்கள்' என்றுரைத்தலுமாம். பயந்தார் - படைத்தார். பூதங்கள், ஐம்பூதங்கள். இவற்றை அருளவே, ஏனைய தத்துவங்களும் கொள்ளப்படும். புராணர் - பழையவர்; யாவருக்கும் முன்னவர், புகழ வளர் ஒளியாய் நின்றார் - தம்மை ஏத்த ஏத்த, ஏத்துவார் உள்ளத்தில் மிகுகின்ற ஞானமே வடிவாய் நின்றவர். 'பாதம் பரவப் படுவார்' என்றருளியது. 'தியானிக்கப்படுதற்கு உரியவர்' என்றவாறு. 'பொதுநீக்கித் தனை நினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையை'எனவும், 'உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே' (தி.திருவாசகம், திருச்சதகம். எனவும் அருளாசிரியர் அனைவரும் இதனை ஒருபடித்தாக அருளிச்செய்தமை காண்க. ஏதங்கள் - துன்பங்கள், துன்பங்களைக் கடிதலும் பத்தர்களுக்கே என்க.
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும் விண்குணத்தார் வேள்வி சிதைய நூறிவியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும் பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்பரங்குன்றம் மேய பரமர் போலும் எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிமைப்படுத்தி ஆளும் ஆற்றலை உடைய, தேவகணங்கள் தம் திருவடிகளைத் துதித்துத் திசைநோக்கி வணங்குமாறு செய்த இடைமருது மேவிய ஈசர், இந்திரன் செய்த வேள்வியை அழியுமாறு கெடுத்து, மேகவடிவில் வந்த திருமாலை வாகனமாகக் கொண்டு செலுத்திய வேறுபட்ட இயல்பினர். யாழைப் பண்ணும்இயல்பினராகிய மகளிரின் ஆடல் பாடல்கள் நீங்காத பரங்குன்றை விரும்பித் தங்கிய பரம்பொருள் ஆவார். எண்ணாயிரவர் என்ற தொகுதியைச் சார்ந்த அந்தணர்கள் வேற்றுத் தெய்வங்களை விடுத்துத் தம்மையே பரம்பொருளாகத் தியானிக்கும் இயல்பினராவர். குறிப்புரை: திண்குணம் - வலிமைக் குணம்; அஃதாவது, பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிப்படுத்து ஆளும் ஆற்றல். 'திண்குணத்தாராகிய தேவர்' என்க. திசைவணங்க - திசை நோக்கி வணங்குமாறு. 'வைத்தார்' என்பது. 'உடையராயினார்' என்னும் பொருட்டு. 'விண் குணத்தார் வேள்வி' என்றது. இந்திரன் செய்த வேள்வியை. விண்குணம், ஆகாயத்தின் பரப்பு. நூறி - அழித்து. கொண்டல் மேற்செல்- மேகத்தின் மேல் ஏறிச்சென்ற. 'ஒரு காலத்தில் திருமால் மேகமாய் நின்று சிவபிரானைச் சுமந்தார்' என்பதும், அதனால், அக்காலம். 'மேக வாகன கற்பம்' எனப் பெயர் பெற்றது என்பதும் புராண வரலாறுகள். பண்குணத்தார் -யாழைப் பண்ணும்இயல்பினர்; ஆடல் மகளிருடையது. எண்குணம், 'தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு. இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம், என்பன. எண் ஆயிரவர் - ஆயிரம் என்னும் எண்ணினை உடையவர். 'ஆயிரம்' என்பது, ஈண்டு அளவின்மை குறித்தது; எண்ணில் அடங்காதவர் என்பதாம்.
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்தஉயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும் பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்படுவெண் தலையிற் பலிகொள் வாரும் மாகமடை மும்மதிலு மெய்தார் தாமுமணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும் ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர்.எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர். குறிப்புரை: ஊகம் - குரங்கு, 'ஊகச்சோலை, முகில் உரிஞ்சு சோலை' என்க. 'அண்ணா' என்பதுஅண்ணாமலையைக் குறித்த முதற் குறிப்பு. 'அண்ணாவும்ஆரூரும் மேயார் போலும்'என்பன காண்க. பாகு அம் - பாகுபோலும் இனிய அழகிய.பணிமொழி - பணிந்த சொல். மாகம் அடை - விண்ணில்திரிகின்ற.
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும் செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும் கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்கூத்தாட வல்ல குழகர் போலும் எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும்,பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர். குறிப்புரை: ஐயிரண்டு - பத்துத் திசைகள். ஆறொன்று - ஏழு இசைகள். அறுமூன்று - பதினெட்டு வித்தைகள். அவை: வேதம் நான்கு அங்கம் ஆறு, புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி, என்னும் உபாங்கம் நான்கு, ஆயுள்வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் உபவேதம் நான்கு. நான்மூன்று - பன்னிரண்டு சூரியர்கள், இறைவனை வழிபடும் இடங்களில் சூரியன் பலருக்கும் பொதுவாய்ப் பெரும்பான்மையதாதல் அறிக. 'நல்வினை'எனப் பின்னர் விகந்தருளினமையின், முன்னர்,'வினை' என்றது தீவினை என்பது பெறப்படும். 'திசை' என்றது, அவற்றில் உள்ள பொருள்களை.
பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய் விரியாத குணமொருகால் நான்கே யென்பர்விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர் தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும் எரியாய தாமரைமே லியங்கி னாரும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார். குறிப்புரை: 'உயிர்கட்குப் பிரியாஎன்று அருளிச் செய்தமை காண்க. 'எரியையே தாமரைமலராகிய இருக்கையாக உருவகித்தருளினார்' என்றலுமாம்.
தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்சுடர்வா யரவசைத்த சோதி போலும் ஆலம் அமுதாக வுண்டார் போலும்அடியார்கட் காரமுத மானார் போலும் காலனையுங் காய்ந்த கழலார் போலுங்கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும் ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர். குறிப்புரை: சுடர் வாய் - ஒளி வாய்ந்த; மணியை உடைய. "ஆலம் அமுதாக உண்டார்" என்பதனை, 'அமுது ஆக ஆலம் உண்டார்' என மாற்றி, 'தேவர்கட்கு அமுதம்கிடைத்தற் பொருட்டுத் தாம் நஞ்சு உண்டார்' என உரைக்க. "ஆலம் தான்உகந்து அமுது செய்தானை"எனவும், "விண்ணாள்வார் அமுதுண்ண மிக்க பெரு விடம் உண்ட - கண்ணாளா" (தி.பெ. புரா. ஏயர்கோன். எனவும் அருளினமை காண்க. இனி, 'விடத்தையே அமுதமாக உண்டார்' எனக் கிடந்தவாறே உரைத்தலுமாம். 'ஆரமுதம்' என்றது, பேரின்பப் பொருளாதலைக் குறித்தருளியவாறு.
பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்படைக்கணாள் பாக முடையார் போலும் அந்திவாய் வண்ணத் தழகர் போலும்அணிநீல கண்ட முடையார் போலும் வந்த வரவுஞ் செலவு மாகிமாறாதென் னுள்ளத் திருந்தார் போலும் எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூமாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்றசெந்நிற அழகர். அழகிய நீலகண்டர் உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர். குறிப்புரை: "அந்திவாய்" என்பதில் உள்ள "வாய்" என்பது, 'அந்திக்கண்' என ஏழாம் வேற்றுமை உருபு. வண்ணம் - நிறம். அந்திக் காலத்தில் தோன்றும் நிறம், செவ்வானத்தின் நிறம் என்க. வரவு - பிறப்பு. செலவு - இறப்பு. இடர் -மேற்குறித்த வரவு செலவுகள்.
கொன்றையங் கூவிள மாலை தன்னைக்குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும் நின்ற அனங்கனை நீறா நோக்கிநெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும் அன்றவ் வரக்கன் அலறி வீழஅருவரையைக் காலா லழுத்தி னாரும் என்று மிடுபிச்சை யேற்றுண் பாரும்இடைமருது மேவிய ஈச னாரே. பொருளுரை: இடைமருது மேவிய ஈசனார் கொன்றை மலரோடு வில்வமாலையைக் குளிர்ந்த சடைமீது வைத்து மகிழ்ந்த இயல்பினர். தம்மீது அம்பு எய்ய இருந்தமன்மதனைச் சாம்பலாக்கி நெருப்பு வடிவாய் நின்ற தூயவர். இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அன்று அவன் அலறி விழுமாறு அம்மலையைக் காலால் அழுத்தியவர். என்றும் மற்றவர் இடும் பிச்சையை வாங்கி உண்பவர். குறிப்புரை: கூவிளை - வில்வம். 'அவ்வரக்கன்' என்னும் வகரம் தொகுத்தல்.
திருஇடைமருதூர் பதிக வரலாறு: இத்திருப்பதிக வரலாற்றினை ஆம் திருப்பதிகத்திற் காண்க. திருத்தாண்டகம் ஆறுசடைக் கணிவர் அங்கைத் தீயர்அழகர் படையுடைய ரம்பொற் றோள்மேல் நீறு தடவந் திடப மேறிநித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதம் கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்கோடால வேடத்தர் கொள்கை சொல்லின் ஈறும் நடுவும் முதலு மாவார்இடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து உள்ளங்கையில் தீயினை ஏற்றவர் அழகர். படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது, நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர். தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர். கோவணம் ஒன்றே உடையவர். கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர். இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர். குறிப்புரை: படை - மழு, சூலம் முதலிய படைக்கலங்கள். தடவந்து - தடவி; பூசி. வகரமெய் உகரத்தொடுகூடி ஈறாதல் பண்டைக் காலத்தின்மையின் 'தட' என்பதே முதனிலை: அதனோடு வரல் என்பதனைத் துணைவினையாகக் கூட்டி. 'தைவால் என்பதுபோல, 'தடவரல்' என்றல் பழைய வழக்குப்போலும். கூறும் - புகழ்கின்ற. கோவணத்தர் -கோவணம் ஒன்றே உடையவர். கோள் தால வேடத்தர் - கையிலே கொண்ட உண்கலத்தை உடைய கோலம் உடையவர்; 'கோடரவ வேடத்தர்' என்பதே பாடம் எனினுமாம்; கோடாலம் - கோடு ஆரம்; 'வளைந்த மாலை' என்பாரும் உளர், 'கொள்கை' என்றது, தன்மையை. ஈறு - அழிவு; நடுவு - நிலை; முதல் - தோற்றம்; இம்மூன்றும் உலகிற்கு என்க; இவற்றைச் செய்பவர் என்றவாறு.
மங்குல் மதிவைப்பர் வான நாடர்மடமா னிடமுடையர் மாத ராளைப் பங்கின் மிகவைப்பர் பால்போல் நீற்றர்பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர் சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்சரிதை பலவுடையர் தன்மை சொல்லின் எங்கும் பலிதிரிவ ரென்னுள் நீங்கார்இடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர். தேவருலகிற்கும் உரியவர். பார்வதியை இடப்பாகமாக உடையவர். மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர். பால்போன்ற திருநீற்றை அணிந்து, படிக மணிமாலை பூண்டு, அடியார் பாவங்களைப் போக்குபவர். சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர். பல அரியசெயல்களை உடையவர். எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர். என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர். குறிப்புரை: மங்குல் - ஆகாயம்; மேகமுமாம். மடமான் - இளமையான மான்; 'மான் கன்று' என்றபடி. இடம், இடக்கை. பளிக்குவடம் - படிகமணி மாலை. உகளும் - பிறழ்கின்ற. 'சாயக்காடு' என்னும் தலம் நெய்தல் நிலத்தது; அதனால் சங்குகள் திரையில உரியதாயிற்று. சரிதை - செயல்.
ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர் காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக் கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர் ஏல மணநாறும் ஈஞ்கோய் நீங்கார்இடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர். ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர். காலங்களுக்கு அப்பாற்பட்டவர் நீலகண்டர். தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர். பல வேடங்களை உடையவர். முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளை வாகனமாக உடையவர். கொடிய மழுப்படை ஏந்தியவர். கோழம்பம், ஏலக்காய் மணம்கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர். குறிப்புரை: ஆணர் - ஆணாய் இருப்பவர். பெண்ணர் - பெண்ணாய் இருப்பவர். 'காலம் பலகழித்தார்' என்றது, 'காலத்தால் தாக்குண்ணாது அதனைக் கண்டுகொண்டிருப்பவர் என்றருளியவாறு. அஃதாவது, காலவயத்தால் 'பிறப்பு, குழவிநிலை, இளமை, முதுமை, இறப்பு' என்னும் இவைகள் இன்றி, என்றும் ஒரு தன்மையராயே நின்று, பிறர்க்கு அவை உளவாதலைக் கண்டு கொண்டிருப்பவர் என்பதாம். 'காணாதார்க்கு அவர் கருத்துக்குத்தாம் சேயார்' என இயைத்துரைக்க. காணாதார் - அறியாதார்.சேயார் - தொலைவில் உள்ளவர். கொல்லேறு' என்பது ஐகாரச் சாரியை பெற்று,'கொல்லை ஏறு' என நின்றது. திருமாலாகிய ஏறுமாம். கோழம்பம், ஈங்கோய் சோழநாட்டுத் தலங்கள், ஏலம் - ஏலக்காய்.
தேசர் திறம்நினைவார் சிந்தை சேரும்செல்வர் திருவாரூ ரென்று முள்ளார் வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர் நேச ரடைந்தார்க் கடையா தார்க்குநிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும் ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்தஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர், தம் அருள்திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர்.திருவாரூரில் என்றும் இருப்பவர். பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர். மான் தோலைப் போர்த்தியவர். யானைத் தோலையும் உடையவர். எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர். அடியார்களுக்கு அன்பர். தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர். கட்டங்கப் படையுடையவர். தம்மைவிருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர். காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர். குறிப்புரை: தேசர் - ஒளியுடையவர். திறம் நினைவார் - தமது அருட்டிறங்களை நினைப்பவர். 'மலரின்கண் வாசம்' என மாறுக. 'வாசம் என்பது வாசமாயுள்ளவர்' என்னும்பொருளது. 'வஞ்சக் கள்வர்' என்றது, அகப்படாமை பற்றி, 'ஒளிக்கும் சோரனைக் கண்டனம்'என்றருளினமை காண்க. நிட்டுரவர் - கொடியவர். ஈசர் - தலைவர்; தாங்குபவர். பொன்னி - காவிரியாறு; 'பொன்னியாகிய தீர்த்தத்தை உடையவர்' என்க. வாய்த்த - பொருந்திய.
கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்கரவாதே தம்நினைய கிற்பார் பாவம் துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்தூய மறைமொழியர் தீயா லொட்டி நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம் இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்இடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர். உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப்பவருடைய பாவங்களை விரட்டுபவர். கடல் விடத்தை உண்டவர். தூய வேதங்களை ஓதுபவர். அறிவில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர். நீண்ட சடை முடியர். விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர். எங்களை ஆள்பவர். என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர். குறிப்புரை: கரத்தல், தம்மையும் மறைத்து, தம்மால் அருளப்படும் நலங்களையும் அருளாதொழிதல், கரியமனம் - வஞ்சனை பொருந்திய மனம். 'அகங்குன்றி - மூக்கிற் கரியா ருடைத்து'என்றற் றொடக்கத்தனவற்றால், குற்றம் பொருந்திய மனத்தை, 'கரியமனம்' என்றல் வழக்கு என்பது அறியப்படும். துரப்பர் - வறியவர்; அறிவில்லாதவர்; என்றது அசுரரை. சிவவழிபாடு சிறந்த தென்றுணர்ந்து மேற்கொண்டு, பின்னர் புத்தர் கூற்றைக் கேட்டு அதனை விட்டமைபற்றி இவ்வாறருளிச் செய்தார். 'நிரப்பர்புரம் மூன்றும் ஓட்டித் தீயால் நீறுசெய்வர்' என இயையும்.
கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த பொடியாரு மேனியர் பூதிப் பையர்புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர் அடியார் குடியாவர் அந்த ணாளர்ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற இடியார் களிற்றுரியர் எவரும் போற்றஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடு பவராய்க் கொன்றை சூடியவராய். அழகிய நீறுபூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய், வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர். குறிப்புரை: அடியார் குடி ஆவர் - அடியவரது குடியினராவர்; என்றது, 'மிக அணுகிய உறவினராவர்' என்றவாறு. அடியவர்க்கு வேண்டும் நலங்களை எளிவந்து செய்தல் பற்றி, இவ்வாறு அருளிச் செய்தார். 'மந்திரத்தாராகிய அமரர்' என்க. இடியார் குரல் - இடிபோலும் குரல். 'அமரர் போற்ற' என்னும் எச்சம், 'உரியர்' என்னும் வினைக் குறிப்புக் கொண்டது.
பச்சை நிறமுடையர் பாலர் சாலப்பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர் கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்கலனொன்று கையேந்தி யில்லந் தோறும் பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர் இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்இடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங் கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய். மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி, அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர். கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர். கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர்.ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர். விளங்குகின்ற சடைமுடியை உடையவர். தம்மை விரும்பும் அடியார்களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர். குறிப்புரை: பச்சை நிறம், அம்மையுடையது. 'கச்சையாக' என்க. கதம் - கோபம். கலன் -பாத்திரம்; கபாலம். 'கொள' என்றதனை, 'கொண்டு' எனத் திரிக்க. இச்சை -விருப்பம். மிக அறிவர் - நன்கு அறிவர்; அறிந்து முற்றுவித்தருளுவார். என்றும் உள்ளார் - தோற்றமும் ஈறும் இல்லாதவர். இத்தன்மையே, 'மெய்ம்மை' என்றும், 'சத்து' என்றும் சொல்லப்படுகின்றது. 'பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே' (தி. திருப்பல்லாண்டு - என்றதுங் காண்க.
காவார் சடைமுடியர் காரோ ணத்தர்கயிலாயம் மன்னினார் பன்னு மின்சொல் பாவார் பொருளாளர் வாளார் கண்ணி பயிலுந் திருவுருவம் பாகம் மேயார் பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்புரமூன்றும் ஒள்ளழலாக் காயத் தொட்ட ஏவார் சிலைமலைய ரெங்கும் தாமேஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார், சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும், கயிலாயத்திலும், தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய், இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகியவில்லை உடையவராய் விளங்குகின்றார். குறிப்புரை: கா. ஆர் - சோலைபோலப் பொருந்திய. இன்சொற் பாவார் - இனிய சொல்லால் ஆகிய பாக்களில் உள்ளவர். பொருளாளர் - அப்பாக்களின் பொருளை ஆளுதலுடையவர். அணவு - பொருந்திய. திருப்புன்கூர், சோழநாட்டுத்தலம். ஏ ஆர் - அம்பு பொருந்திய. சிலை - வில். 'மலைச்சிலையர்' எனமாற்றி யுரைக்க. 'எங்கும் பிறிது பொருள் இன்றித் தாமே உள்ளார்' என்க.
புரிந்தார் நடத்தின்கட் பூத நாதர்பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மில் பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்பிரியா ரொருநாளும் பேணு காட்டில் எரிந்தா ரனலுகப்பர் ஏழி லோசையெவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால் இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்இடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர். பூதங்களின் தலைவர். தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர். அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர். எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர். குறிப்புரை: புரிந்தார் - விருப்பம்கொண்டார். 'நடத்தின்கண் புரிந்தார்' என மாற்றுக. தம் இல் - பரலோகம். 'தம் இல் பிரிந்தாராய்ப் போந்து ஆரூர் புக்குஉறைவர்' எனக் கூட்டுக. அகல்வாய - அகன்ற வாயினையுடைய. எரிந்துஆர் - எரியாநின்று நிறைந்த.'பேயும் தாமும் பிரியாராய்க் காட்டில் அனல் உகப்பர்' என இயையும். 'ஏழில்ஓசை - ஏழுவகையில் அமைந்த இசையால்என்றருளியதில், 'இயம்ப' என்றதனால், 'இயம்' என்பது சொல்லெச்சமாய் வந்தியையும்; இயையவே, 'இயங்கள் ஏழு வகையான இசையில் இயம்ப' என்பது பொருளாதல் அறிக. என்று ஏத்துவார் - என்று உணர்ந்துபோற்றுவார்.
விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார் மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர் சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்றுசெழுமுடியுந் தோளைஞ்ஞான் கடரக் காலால் இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றிஇடைமருது மேவி யிடங்கொண் டாரே. பொருளுரை: இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர். கடல் நஞ்சுண்டவர். அழகர் நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர். தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர். மழபாடியிலும் இரும்பை, அம்பர், உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர். பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப்பல வெற்றிகளையும் வழங்கியவர். குறிப்புரை: விட்டு இலங்குதல் - மின்னுதல், விடங்கர் - அழகர், மட்டு - தேன். தார் - இன்பமாலை. மாலை, போர்க்கு உரியது; 'தாரும் மாலையும் அணிந்த மார்பு' என்க 'தார்மாலை மார்ப'' என்றது, ஆணையை. 'வென்றியீந்தார்' என மாற்றியுரைக்க.திருநாவுக்கரசர் புராணம் எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னிஇடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகிவண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப் பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்போற்றிஅருந் தமிழ்மாலை புனைந்து போந்து செறிவிரைநன் மலர்ச்சோலை பழையா றெய்தித்திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார். -தி.சேக்கிழார். பேரூர்ப் புராணம் விஞ்சை கற்பன வேறிலை விடையவன் பதங்கள்அஞ்சு மேயென வறியவெவ் வுலகுங்கற் புணையாநெஞ்சு துட்கெனு நெடும்புனல் வேலையும் பிறவிவஞ்ச வேலையும் நீந்திய மன்னனைப் பணிவாம்.- கச்சியப்ப முனிவர்.
திருப்பூவணம் பதிக வரலாறு: ஆளுடைய அரசர், திருவாலவாயினின்றும் போந்து திருப்பூவணத்தையடைந்து திருக்கோயிலினுட் சென்றபொழுது. நெடியவனுக்கும் அறிவரியவராகிய இறைவர் நேரே தோன்றக் கண்டு இறைஞ்சி, அததோற்றத்தை யெல்லாம் தோன்ற விரித்துப் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இத்திருப்பதிகம் சிவபிரானை உள்ளத்துள் நன்கு உள்கி உய்தற்கு, அவனது திருவுருவத்தின் இயல்பினைப் பலபட வகுத்து அருளிச்செய்யப்பட்டது. 'ஆருருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும், தோன்றும்' என்று இறுதித் திருப்பாடலில் அருளிச்செய்த திருக்குறிப்பு ஓர்ந்துணரத்தக்கது. இறைவன், தன்னை உள்குவார் உள்ளத்துள் விளங்கி நின்று பயன் தருதற்கு ஏற்ப, இதன்கண் உள்ள தொடர்கள் எல்லாம், 'தோன்றும்' என்னும் முடிபுடையனவாகவே அருளிச் செய்யப்பட்டன. சிவவழி பாட்டில் இத்திருத்தாண்டகங்கள் கலாநியாசத்திற்கு உரியதாதல் உணர்க. இவ்வருமை நோக்கி, இத்திருப்பதிகம், அகத்தியர் தேவாரத் திரட்டுள், 'சிவனது திருவுருவம்' என்னும் பொருட்டுச் சிறந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளது. திருத்தாண்டகம் வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: சோலைகள் விளங்கும் திருப்பூவணத்தை உகந்தருளியிருக்கும் புனிதராகிய சிவபெருமான் பக்கல், அடியார்களுடைய மனக்கண்முன் கூர்மை பொருந்திய மூவிலைச் சூலமும், நீண்ட சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய முடி மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் குழையும், தோடும், இடிபோல ஒலித்து வந்தயானையின் தோலாகிய போர்வையும், அழகு விளங்கும் முடியும், திருநீறணிந்த அப்பெருமானுடைய திருமேனியும் காட்சி வழங்குகின்றன. குறிப்புரை: வடி ஏறு - கூர்மை பொருந்திய, 'வடிவு ஏறு' எனவும் பாடம் ஓதுவர். திரிசூலம் - இலைமூன்றாகிய வேல். கடி ஏறு - புதுமை பொருந்திய. 'குழையுந் தோடும் கலந்து தோன்றும்' என்பது, தானும் தன் தேவியுமாய் நிற்றல் குறித்தது. 'குழையும் சுருள்தோடும்'உணர்த்தும்.
ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும் ஊணாகி யூர்திரிவா னாகித் தோன்றும்ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல் சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் ஆணும் பெண்ணுமாகிய வடிவும், அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதம் போன்று இனிமை தரும் செயல்களும்,உணவுக்காக ஊர்களில் திரியும் காட்சியும், ஒற்றை வெண்பிறையும், பகைவருடையமும் மதில்களையும் நீண்ட பாம்பினை மலையாகிய வில்லில் நாணாகப் பூட்டிஎரித்த செயலும், இறந்தவருடைய எலும்புகளால் உடம்பில் பொருந்துமாறு பூண்டமாலையும் அரைஞாணும் அடியவர் மனக்கண்களுக்கு விளக்கமாகக் காட்சிவழங்கும். குறிப்புரை: 'அமுதமாகித் தோன்றும்' திரிவானாகித் தோன்றும். என்பவற்றிற்கு 'அவ்வடிவு' என்னும் எழுவாய் வருவிக்க. 'ஊணாகி' என்பதில் உள்ள 'ஆகி' என்பதனை, 'ஆக' எனத்திரிக்க, ஊண் ஆக - உணவு உண்டாதற் பொருட்டு. 'திரிவான்' என்புழி, 'ஆதல்' என்பது எஞ்சி நின்றது. பற்றார் - பகைவர்; திரிபுரத்து அசுரர். 'மேல்' என்பது, ஆகுபெயராய், மேலிடத்துத்திரியும் மதில்களை யுணர்த்தும். சேண் நாகம் - நீண்ட பாம்பு, 'நாகவில்' என இயைத்து, 'நாகத்தை உடைய வில்' என உரைக்க. 'வாசுகியென்னும் பாம்பாகிய நாணையுடைய மலையாகிய வில்' என்றதாம். பூண் நாண் வினைத் தொகை. இதன்கண், 'நாண்' என்றது, மாலையை. 'செய்த' என்னும் அடை, 'பூண்நாண்' என்பதை மட்டுமே சிறப்பித்து நின்றது
கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும் அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுக்கு மனக்கண் முன்னர், அவர் கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும், மேம்பட்ட மறைகளை ஓதும்சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கும் வேத நெறிகளைச் சொற்களால் விளக்கியமை போல மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும்,அவர் உடலைச் சுற்றுமாறு அணிந்த பாம்புகளும் ஏந்திய மான் குட்டியும், அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத காலனை ஒறுத்த காட்சியும், தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும், யாவரும் அருவருக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும். குறிப்புரை: ஆல் நிழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு நான்கு வேதங்களை அருளினார் என்பதில் நால்வராவார் பெயர் திருமுறைகளில் எங்கும் சொல்லப்படவில்லை. சனகர் முதலிய நால்வர்கட்குக் கல்லால் நிழலிலிருந்து அருள்புரிந்ததாகக் கந்த புராணம் கூறும் வரலாற்றில் வேதத்தை ஓதிய பின்னர் உண்டாகிய ஐயத்தை நீக்கியருளியது சொல்லப்படுகின்றதேயன்றி, வேதத்தை அருளியது சொல்லப்படவில்லை. ஆகவே, அந்நால்வரை இவ் வரலாற்றிற்கொள்ளுதல் பொருந்து மாறில்லை. அன்றியும் சனகர் முதலிய நால்வர்க்கு இறைவன் மோன நிலையில் இருந்து அருளியதே சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றது; இங்கு அவ்வாறின்றி, 'சொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்' எனப்பட்டது. 'விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் என்றாற்போலப் பிற இடங்களிலும் இவ்வாறே ஓதியருளினமை காண்க. நெறிகள் - அறம் முதலிய நான்கையும் அடையும் வழிகள். அல்லாத காலன் - அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத இயமன், அறத்தின் உண்மையாவது, உலகர்க்கு விதிக்கப்பட்ட விதி, இறைவன் அடியார்க்குப் பொருந்தாது என்பது. ஐவகை - ஐந்து நிறம். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்களைக் குறிக்கும். இவ்வைவகை ஆற்றல்களே ஒருங்கு நிற்குமிடத்து, 'ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம்' என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும். தனித்தனிபிரிந்து நிற்குமிடத்து, 'மனோன்மனி, மகேசுவரி, உமை, இலக்குமி, வாணி' என்னும் தேவியராய் நிற்ப, இறைவனும் அவர்களையுடைய, 'சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்' என்னும் தேவர்களாய் நிற்பன். அமர்தல் -விரும்புதல்; மேற்கூறிய உண்மையையெல்லாம் உணர்பவரே, மெய்யுணர்வுடையோராகலின் அவரிடம் இறைவன் அருளைமிகச் செய்வான் என்றருளியபடி. பொல்லாத எலும்பு - யாவருக்கும் அருவருப்பாய் உள்ள எலும்பு.
படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும் நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும் உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும் புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்ப் படைக்கலமாம் நன்மை நிறைந்த மழுவும், அவர் ஏந்தியமானும், அருகில் இருக்கும் பன்னிரண்டு கைகளை உடைய முருகப்பெருமான் வடிவும், விரைந்து செல்லும் காளையும், அக்காளை வடிவம் எழுதிய கொடியும், நான்மறையின் ஒலியும், முக்கண்களும், உடையாக அமைந்த கீளும் கோவணமும், பற்களை உடைய வெள்ளிய மண்டை ஓட்டு மாலையும், அவரைச் சுற்றிக் காணப்படும் பூதங்களின் மகிழ்வும் காட்சி வழங்கும். குறிப்புரை: படை மலிந்த - படைக்கலமாம் தன்மை நிறைந்த, 'பன்னிரண்டு கண்ணுடையபிள்ளை' என்பதும் பாடம், 'மலிந்த விடை' என்பது, 'கொடி' என்பதனோடும் இயையும். ஊர்தி வால் வெள் ளேறே சிறந்த - 'சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப'என்றதுங்காண்க. நயனம் - கண்; இதனை எடுத்தோதினமையால், ஏனையோரது கண்களின் வேறுபட்டதென்பது பெறப்படும்.'ஊர்த்வரேதம் விரூபாக்ஷம்' என்னும் உபநிடதம். வேறுபடுதலாவது, நெற்றியில் மேல்நோக்கி இருத்தல். உடை - உடுத்தல், 'உடையாய் மலிந்த' எனலுமாம். 'கீள்' என்பது, கோவணத்தோடு இணைத்துத் தைத்து அரைநாணாகக் கட்டுவது, மூரல் - நகைப்பு; தசைமுதலிய நீங்கிக் கிடக்கின்ற தலை பற்களோடு தோன்றுதல், நகைப்பது போல்வதாயிற்று. புடை - பக்கம்.
மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும் இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும் கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கைஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும் புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்த்தம்மிடம் பேரன்பு கொள்ளும் அடியவர்களுக்கு அவர் அருள் செய்யும்செயலும், அழுக்கற்ற சிவந்த சடையின் மேல் அணிந்த பிறையும், பிச்சை ஏற்கும் அவருக்கு அடியவர்கள் வழக்கமாக இடும் பிச்சையை அவர் ஏற்கும் காட்சியும், பெரிய கடலில் நஞ்சினை உண்டதனால் இருண்ட கழுத்தும், கயல்கள் பாயுமாறு விரைவான கலங்கள் வெள்ளமாக ஆயிரமுகத்தோடு வானிலிருந்து இறங்கிய கங்கை தன்னுள் அடங்குமாறு சிவபெருமான் விரித்த சடையின் அழகும் காட்சி வழங்கும். குறிப்புரை: மயல் - காதல்; பேரன்பு. 'ஏற்றல் இயல்பாகத் தோன்றும்' என இயைக்க. கலுழி - பெருக்கம். 'கலுழியை உடைய கங்கை' என்க. 'வானில்தோன்றும்' என்பதில் உள்ள, 'தோன்றும்' என்பது எச்சம். அது, 'புயல்' என்னும் பெயரொடு முடிந்தது. 'புயல்' என்றது, கருத்தா ஆகுபெயராய் மழையைக் குறித்தது. 'புயல்போலப்பாய' என உவம உருபு விரிக்க. பாய - பாய்ந்து ஒழுகுமாறு.
பாராழி வட்டத்தார் பரவி யிட்டபன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும் சீராழித் தாமரையின் மலர்க ளன்னதிருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும் ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண்களின் முன்னர் அழகுக் கடலாய் உள்ள தாமரை மலர் போன்ற அழகிய நிறத்தை உடைய திருவடிகளும், அத்திருவடிகளின் மீது பூமண்டலத்திலுள்ளவர்கள் துதித்து அருச்சித்த பல மலர்களும், காட்டிய புகைகளும், ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரை உடைய இராவணனுடைய உடலை அழித்த திருமாலுடைய துன்பம் தரும் தீவினையைப் போக்கி அவருக்குச் சக்கரம் வழங்கிய அழகிய செயலும் காட்சி வழங்கும். குறிப்புரை: 'பாராகிய ஆழி வட்டத்தார்' என்க; 'பூமண்டலத்தில் உள்ளவர்' என்பது பொருள். ஆழி வட்டம் - கடலாற் சூழப்பட்ட வளையம். பரவி - துதித்து. சீர் ஆழித்தாமரை - அழகென்னுங் கடலாய் உள்ள தாமரை மலர். திருந்திய -செம்மையான. ஓர் - ஒப்பற்ற. 'இலங்கை வேந்தனை அழித்தவன் திருமால்' என்பது வெளிப்படையாதலின், அப்பாவத்தைக் கெடுப்பித்து, ஆழ ஈந்தமை 'இன்னார்க்கு' என்பது சொல்ல வேண்டாதாயிற்று.
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர் தம் அடியவர்களுக்கு அருள்புரிந்த மேம்பட்ட செயலும், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிய செயலும், மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட வடிவும், யானைத்தோலை விரும்பிப் போர்த்திய வனப்பும், செறிந்த சடைமீது கங்கை, பாம்பு, பிறை போன்ற இவற்றை வைத்துப் பொன்போன்ற திருமேனி பொலிந்து தோன்றும் வனப்பும் தோற்றம் வழங்கும்.குறிப்புரை: தகவு - தகுதி; அவை வரலாறுகளும், அவற்றிற்கேற்ற வடிவு நிலைகளுமாம். காலசங்காரர், சண்டேசானுக்கிரகர் முதலிய வடிவுநிலைகளை நோக்குக.
செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும் நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும் மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும் பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக் கண்முன்னர் அப்பெருமானுடைய செறிந்த வீரக்கழலும், திருவடிகளும், முப்புரங்களை அழித்த வில்லும், நால்வருக்கு உண்மை நெறியை மோனநிலையில் விரித்துரைத்த நுண்மையும், நெற்றிக்கண்ணும், வாகனமாம் காளையும், அடியார்களுடைய மறுபிறவியை நீக்கி அருள் செய்கின்ற கூறுபாடும், பார்வதியின் வடிவும், கங்கையும், புள்ளிகளை உடைய பாம்பும், பிறைச் சந்திரனும் காட்சி வழஙகும். குறிப்புரை: 'கழலும் அவற்றையணிந்த திருவடியும்' என்க. நால்வர்க்கு நெறி காட்டினமை மேலும் குறித்தருளப்பட்டது.நேர்மை - நுண்மை. மறுபிறவி அறுத்தருளல்,ஆகாமியத்தைத் தடுத்தல், 'மலிந்தது' என்னும் தொழிற்பெயர் குறைந்து நின்றது.
அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல் மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்க் கோங்கு அரும்பினை ஒத்த முலையை உடைய பார்வதிக்கு வழங்கிய இடப்பாகமும், இடியைப் போல அழிக்கும் ஆற்றலுடைய மகாவராகத்தினுடைய மணிவயிரக் கோவையைத் தோற்கச் செய்யும் ஒளியை உடைய மருப்பும், வையை நதிக்கரையில் நிற்கும் காட்சியும், உமாதேவி மகிழ்தற்குக் காரணமாக அவர் ஆடிய அழகிய கூத்தும், சிவந்த வானத்தினும் ஒளிமிக்கு விளங்கும், மலைகளைத் தம் திண்மையால் தோற்கடிக்கும் வலிய புயங்களும் காட்சி வழங்கும். குறிப்புரை: 'அரும்பு' என்பது, 'அருப்பு' என வலித்தலாயிற்று. ஓட்டும் - தோற்றோடச்செய்யும். 'அணிகிளரும் மணி' என இயைத் துரைக்க. உரும் - இடி. அடர்க்கும் கேழல்- கொல்லும் பன்றி. உருமு, அழித்தற் பண்பு பற்றிய உவமை. மருப்பு - கொம்பு.' அதனை மறைக்கின்ற வயிரக்கோவை' என்க. 'மணம்' என்பது மணாட்டியை உணர்த்திற்று. மலிந்த - மகிழ்ந்த, அம்மை மகிழ ஆடும் நடனம் என்றவாறு. 'வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம்' மண் சுமந்த திருவிளையாடல். அது தோன்றுதல், உளத்திற்கு என்க. இவ்வாறுரைக்கற் பாலனவும் சில உளவாதலறிக. இதற்கு வேறுபொருள் கற்பிப்பார், பிறிதோர் எண்ணம் உடையர் என்க. திகழ்ந்த - திகழ்ந்தது போன்ற. 'சோதிப் புயம்' என இயையும். பொருப்பு ஓட்டி - மலையை வென்று.
ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்றுதன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும் பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்றுபலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும் கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும் பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்த் தம்மைச் சரணமாக அடைந்து சண்டேச நாயனாருக்கு அருள் செய்து தாம் முடிமேல் சூடிய மாலையை அவருக்கு வழங்கிய காட்சியும், தம்பக்கல் அடைந்துதொண்டு செய்யும் அடியவர்களுக்கு அருள் செய்து அவர்களுடைய பல பிறவிகளையும் போக்கும் தன்மையும், கோங்கு வில்வம் ஊமத்தம் மலர் என்பவற்றை அணிந்த அழகும், பூக்களை அம்புகளாக உடைய மன்மதனுடைய உருவத்தை அழித்த வனப்பும் காட்சி வழங்கும். குறிப்புரை: சண்டேசுர நாயனார்க்குத் தனது முடியிலிருந்த கொன்றை மாலையைச் சிவபிரான் அணிவித்தமையைப் பெரிய புராணத்துட் காண்க. பல பிறவி அறுத்தருளல், சஞ்சிதத்தை அழித்தல், கோங்கமலரும் இறைவற்கு உரியதென்க. கூவிளை - வில்வம், மத்தம் - ஊமத்தை, இது மயக்கத்தை உண்டாக்கும் என்பது பற்றி, 'மதமத்தம்' எனப்படும். 'குழல்' என்றது சடையை; ஆடவர் தலை மயிர்க்கும் 'குழல்' என்பது பெயராகும். கொள்கை - விருப்பம்.
ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளேஅவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும் வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னைமகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும் நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனைநெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும் போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. பொருளுரை: பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக்கண் முன்னர்த் தம்மை ஒன்றிய உள்ளத்தோடுதியானிப்பவர் உள்ளத்தில் அவர்கள் தியானித்த அதே வடிவில் இருக்கின்ற காட்சியும், கச்சின்மேல் அணிகலன்களை அணிந்த தனங்களை உடைய பார்வதியை ஒருபாகமாக வைத்து மகிழ்ந்த வடிவமும், நீர் நிறைந்த வடிவுடைய கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னனான இராவணன் உடம்பினை நெறு நெறு என்னும் ஓசை ஏற்படுமாறு நசுக்கிய நிலையும், போரிடும் வடிவத்தை உடைய கூற்றுவனை உதைத்த அழகிய செயலும் காட்சி வழங்கும். குறிப்புரை: உருவ - ஊடுருவ; ஊன்ற. உள்குவார் - நினைப்பார். 'அவர் உள்ளத்துள்ளே' எனச் சுட்டுப்பெயர் வருவிக்க. 'ஆரொருவர்' என்பதும் பாடம். 'அவ்வுரு' என்றது, அவர் உள்கிய உருவத்தை; இதனானே அன்பர் நினைத்த வடிவாதலன்றித் தனக்கென ஒருவடிவம் இலனாதல் விளங்கும். 'மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே'என்றார் சான்றோரும். வார் - கச்சு. 'கச்சினை ஊடுருவுகின்ற அத்தன்மையையுடைய பூண் அணிந்த முலை' என்க. இனி, 'உருவம், அழகு' எனக்கொண்டு, 'கச்சினையுடைய அழகிய, பூண்அணிந்த முலை' என்று உரைத்தலும் ஆம். 'நன்மங்கை' என்று அருளிச்செய்தார்,அவரது அருளே அவளாகலின். நீர் உருவக் கடல் - நீர் மயமான கடல். போர்உருவக்கூற்று - போர்க் கோலத்துடன் வந்த இயமன். 'போர்' என்றதுமார்க்கண்டேயர்மேற் சினந்து எழுந்தமையை.
திருஆலவாய் பதிக வரலாறு: ஆண்டவரசு திருப்புத்தூர் பணிந்து திருஆலவாய் சேர்ந்து மதுரைத் தமிழ்ச் சங்கத்திருந்து தமிழாராய்ந்த முக்கட் பெருமானை வணங்கி எய்திய பேரானந்தத்தினிடை மூழ்கி அருளிச் செய்த திருப்பதிகம் இது. (தி.ிருநாவு. புரா. திருத்தாண்டகம் முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றிமுதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய், செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய், அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய், தூயமுத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான்பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம். குறிப்புரை: 'தோன்றி முளைத்தானை' என முன்னே கூட்டுக. "எல்லார்க்கும்" எனச்சிறப்புடைய உயர்திணைமேல் வைத்து அருளிச்செய்தாராயினும், 'எல்லாப் பொருட்கும்' என்பதே திருக்குறிப்பாகக் கொள்க. எல்லாப் பொருட்கும் முன்னே தோன்றி முளைத்தமையாவது, அவற்றின் தோற்றத்திற்கெல்லாம் தானே நிமித்த காரணனாய் முதற்கண் நின்றமை. இனி இதற்கு, 'ஏனைய தலங்களில் உள்ள இலிங்க மூர்த்திகட்கெல்லாம் முன்னே தோன்றி முளைத்த, தான்றோன்றியாகியஎன்னும் விதியானே அமையும்.'சிவனை அடிசிந்தித்தல்' என்பது, 'அரசனை அடி பணிதல்' என்பது போலக் கொள்க. "பெற்றேன்" என்றது, அப்பேற்றின் அருமை உணர நின்றது. எனவே, "முளைத்தானை" என்பது முதலாக வகுத்துக் கூறிய பலவற்றிற்கும் அவனது அருமையை உணர்த்துதலே கருத்தாயிற்று.
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னைமேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப் பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்கரந்துமையோ டுடனாகி யிருந்தான் தன்னைத் தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய், வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய், வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய், பசும் பொன்நிறத்தனாய்,வெண்ணீறு அணிந்தவனாய், சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய், உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென்கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: விண்ணுலகின் மேலோர்கள்- தேவர்கள். பண்நிலவு நிலைபெற்ற; கூடல்மாநகர், சங்கம் முதலியவற்றை யுடையதாய் இருந்தமையும், திருஞானசம்பந்தரால் திருப்பாசுரம் அருளி உண்மையை விளக்கியருளப் பெற்றமையும் ஓர்க.
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானைநிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப் பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக் காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்றுகடுங்குரலா யிடிப்பானைக் கண்ணோர் நெற்றித் தீத்திரளைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய், பின் பகீரதன் பொருட்டாகஅதன் ஒரு பகுதயை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய், பால், தயிர், நெய்என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய், பகை கொண்டு வந்தகொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய், காற்றின் திரட்சியாய் மேகத்தின்உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய், நெற்றியின் கண்தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச்சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: 'அந்நீர்' என எடுத்துக் கொண்டு, 'நிலம் மருவி ஓடக் கண்டான்' என இயைக்க.கண்டான் - ஆக்கினான். பகீரதன் பொருட்டு, முதற்கண் கங்கையைச் சடையில் தாங்கி. பின்னர் நிலத்தின்கண் பெருகியோட விட்ட வரலாறுண்மை அறிக. பயின்று-மிகுதியாக.கால் திரள் - காற்றின் திரட்சி. ஆகாயத்தின் ஓசை காற்றினால் வெளிப்படுமாகலின், "கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானை" என்றருளிச் செய்தார். 'நெற்றி ஓர் கண்' என மாற்றி, 'நெற்றியில் உள்ள ஒரு கண்ணாகிய தீத் திரளை' என உரைக்க. கண்ணையே தீத்திரள் என்றருளிச்செய்தமையால், "திரள்" என்பது, சினையிற் கூறும் முதலறி கிளவியாம்.
வானமிது வெல்லா முடையான் தன்னைவரியரவக் கச்சானை வன்பேய் சூழக் கானமதில் நடமாட வல்லான் தன்னைக்கடைக்கண்ணால் மங்கையையு நோக்கா வென்மேல் ஊனமது வெல்லா மொழித்தான் தன்னையுணர்வாகி யடியேன துள்ளே நின்ற தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய், தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய், அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே. குறிப்புரை: இது - இவ்வுலகம், "ஊனமது" எல்லாம் என்பதில் 'எல்லாம்' என்பது 'முழுதும்' என்னும் பொருளதாய் நின்றது. வரி - கீற்று; 'வரியும்கச்சு' எனக்கச்சிற்கு அடையாக்கலும் ஆம். 'வல்லான்' என்றது, பிறர் அது மாட்டாமையுணர்த்தி நின்றது. "மங்கையையும் நோக்கி" என்றதனால், 'என்னையும் நோக்கி' என்பது பெறப்பட்டது. 'மங்கையை நோக்கி ஊனம் ஒழித்தான்' என்றதனால் பாசம் அறுதல் அவன் அருளாலே என்பது பெறப்பட்டது. 'மங்கையுமை' என்பதும் பாடம். தேனமுது-தேனாகிய அமுது. சுவையாலும் பயனாலும் சிறந்ததாகிய உணவை, 'அமுதம' என்றல் வழக்கு. இறைவனைத் தேனமுதாக அருளிச்செய்தது உருவகம்.
ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னையொற்றைவெண் பிறையானை யுமையோ டென்றும் பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப்பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும் ஆரானை அமரர்களுக் கமுதீந் தானைஅருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: கயிலை மலையை இருப்பிடமாக உடைய வனாய், ஏழுலகமும் பரந்து இருப்பவனாய், ஒற்றைப்பிறையை அணிந்தவனாய், உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய், அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய், பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய், தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.குறிப்புரை: 'உலகு' எனப் பின்வருகின்றமையின் "ஊர்" என்றது, கோநகரங்களை; அவைதேவர் உலகங்கட்குமாம். ஒற்றைப் பிறை-ஒரு கலையை உடைய பிறை; "உமையோடு" என்புழி, 'இருத்தல்' என ஒருசொல் வருவிக்க. அன்றி, ஓடுஉருபை இன்னுருபாகத் திரிப்பினும் ஆம். பேரான்-நீங்காதவன். 'பேயோடு ஆடல்' எனஇயைக்க. ஆரான்-நிரம்பான்; முடித்திடாதவன். சீர்-புகழ்.
மூவனை மூர்த்தியை மூவா மேனியுடையானை மூவுலகுந் தானே யெங்கும் பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப்படியெழுத லாகாத மங்கை யோடு மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டுவிரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: யாவரினும் முற்பட்டவனாய், அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய், என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய், தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய், அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய், ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பியிருப்பவனாய், தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்ததேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: மூவன்-மூத்தல்உடையவன்; இது 'மூ' என்னும் முதனிலைத் தொழிற்பெயரடியாகப் பிறந்த பெயர். 'பாவன், மேவன்' என்பனவும் அவை; தமிழகத்துள் பண்டைக்காலத்தில், 'மூவன்' என்னும் பெயர் வழக்கில் இருந்தமை பழந்தமிழ்ச் செய்யுள்களால் அறியப்படுகின்றது. 'அம்மூவனார்' (அகம்- 'மூவன்' (புறம் - முதலியன காண்க. மூவா - மூப்பு அடையாத; அழியாத. பாவன் - பரத்தலுடையவன். மேவன்-விரும்பியிருத்தலுடையவன்.
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்துன்பந் துடைத்தாள வல்லான் தன்னை இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னையெல்லி நடமாட வல்லான் தன்னை மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னைமற்றொருபற் றில்லா அடியேற் கென்றும் சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய், அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ள வல்லவனாய், இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய், இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய், வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: துறத்தல் பிறப்பிற்கு அஞ்சியாகலின், அதனை அறுப்பவன், பிறப்பில் பெருமானாகிய சிவபிரான் ஒருவனேயாதல் உணர்த்துவார், 'துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான்' என்றும், அவ்வாறு தன்பற்றினையே தூநெறியாக அறிந்து பற்றுவார்க்கு அவர் விரும்பியவாறே பிறவித்துன்பத்தினை அடியோடு அவன் அகற்றியருளுதல் உணர்த்துவார், "துன்பந் துடைத்தருள வல்லான்" என்றும் அருளிச்செய்தார். எல்லி-இரவு. திரிபுரத்து அசுரர்கள், முன்பு சிவபிரானை வழிபட்டிருந்து, பின்னர் புத்தனது போதனையால் அதனை விட்டொழித்தாராதலின், அவர்களை, 'மறந்தார்' எனக் குறித்தருளினார். சிறந்தான் - தாங்கிநிற்கும் தலைவன். 'மற்றொரு பற்றில்லா அடியேற்கு' என எடுத்தோதியருளியது, ஏனையோர்க்கும் அஃது இன்றியமையாததாதல் உணர்த்துதற்கு; இதனை, "மற்றுப் பற்றெனக்கின்றி நின்றிருப் பாதமேமனம் பாவித்தேன்"என வன்றொண்டப் பெருமான் வலியுறுத்தருளியது காண்க. 'அடியார்க்கு' என்பதும் பாடம்.
வாயானை மனத்தானை மனத்துள் நின்றகருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மை யானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய், பிறையைச்சடையில் சூடியவனாய், தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய், மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும்தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: வாயான், மனத்தான், என்பன இறைவன், சொல்லுதற்கும், நினைத்தற்கும் உரிய கருவிகளாகிய அவற்றிற் கலந்து நின்று தொழிற்படுத்துதலைக் குறித்தன. 'கருத்தான்' என்றது மனத்தின் தொழிற்பாடாகிய எண்ணத்தில், அவன் கலந்துநிற்றலை உணர்த்திற்று. 'கருத்து' என்றது, விருப்பத்தையே. அதனை அறிந்து முடித்தலாவது, வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல். கருதப்பட்டதே சொல்லப்படுதலின்,'வாயுள் நின்ற சொல்லானை' என்று அருளிச் செய்யாராயினார். தூயான் - இயல்பாகவே பாசம் இல்லாதவன்; அஃது அவன் ஊர்தியாலும் கொடியாலுமே அறியப்படும் என்பது அருளுவார், 'தூவெள்ளை ஏற்றான்றன்னை' என்றருளிச் செய்தார். தொடர்ந்து நிற்றல் - உடனிருந்து புரத்தல். 'நின்ற' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'நின்ற தாயானை' என்பதும் பாடம். தவத்தவர் செய்யும் தவமேயாய் நிற்பவன் இறைவன் என்க. எனவே, அவனை நோக்கிச் செய்யப்படுவதே தவம் எனப்படுவது என்பதாம். இனி, தவத்தின் பயனாய் உள்ளவன் என்பதும், அதன் பொருளாகும். தலையாய தேவராவார். திசைக்காவலர், அயன், மால் முதலியோர். இவர்கள் தேவர்கட்குத் தலைமை பூண்டு நிற்றலின், 'தேவாதிதேவர்' என வழங்கப்படுவர். அவ்வழக்கின் பொருளை நன்குணர்த்தத் திருவுளம் பற்றி, 'தலையாய தேவாதி தேவர்' என்றருளினார். 'தேவர்க்கும்' என்னும் சிறப்பும்மை தொக்கது. இறைவன் அவர்கட்குச் சேயன்ஆதல், அதிகாரச் செருக்கினால் அவனை, எண்ணாதொழிதலால் என்க. இறைவன், தன் அடியார்கட்குத் தொடர்ந்து நின்ற தாயாகி நிற்றலும், செருக்குடையார்கட்குச் சேயனாகி நிற்றலும் ஒருங்கு அருளிச்செய்யப்பட்டன.
பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் தன்னைப்பழியிலியாய் நஞ்சுண் டமுதீந் தானை வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானைவளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலைமேலாய தேவாதி தேவர்க் கென்றும் திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய், அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டுதேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடையமும் மதில்களையும் அழித்தவனாய், நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய், மேலான ஒளிவடிவினனாய், விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய், மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: பகையாவது இருளேயாம், ஒளிக்குப் பகையாவது அதுவேயாகலின், 'பகைக்குச் சுடராய்' என நான்காவது விரிக்க. சுடராவது ஞானம். புண்ணியமும் வினையேயாயினும் கொடுமை மிகுதிபற்றி பாவத்தைக் களைதலையே எடுத்தோதியருளினார். இருளாவது, மூலமலமாகிய அறியாமை. அதனாலேயே வினை வருதலின், அதனை நீக்கவே வினையொழியும் என்றதாயிற்று. 'பழியிலி' என்றது, 'தான் அமுதத்தை உண்டு பிறர்க்கு நஞ்சைக் கொடுத்தான் என்ற பழி இல்லாதவன்' என்றருளிய படி; இது. தேவர்கள் இப்பழியுடைமையை உட்கொண்டு அருளிச்செய்தது. வகைச் சுடர் - கிளைத்தெழுகின்ற தீ. 'தீயாக' என்க. வளைவிலி-கோட்டம்"தலையாய" என்றதற்கு உரைத்தது உரைக்க. திகை - திசை. திகைச்சுடர் - திசை காட்டும் ஒளி; கலங்கரை விளக்கு. தேவர்கட்கும் உண்மைநெறி உணர்த்துவோன் என்றபடி.
மலையானை மாமேரு மன்னி னானைவளர்புன் சடையானை வானோர் தங்கள் தலையானை யென்தலையி னுச்சி யென்றுந்தாபித் திருந்தானைத் தானே யெங்கும் துலையாக வொருவரையு மில்லா தானைத்தோன்றாதார் மதில்மூன்றுந் துவள எய்த சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: கயிலை மலையை உடையவனாய், மேரு மலையில் தங்கியிருப்பவனாய், வளர்ந்த செஞ்சடையினனாய், வானோருள் மேம்பட்டவனாய், என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய், எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: மலையான் - மலைபோன்றவன்; பெருமையுடையவன். தாபித்து - நிறுவி; 'தன்னைநிறுவி' என்க; 'நிலையாய் இருந்தான்' என்றபடி. 'தானேயாய்' என ஆக்கம் வருவிக்க. 'எங்கும் ஒருவரையும் துலையாக இல்லாதான' என இயையும். துலை - ஒப்பு. தோன்றாதார்-அருகில் வாராதவர்; பகைவர். துவள - மெலிய. 'தூளா' என்பதும் பாடம். 'துகளா' என்பதே பாடம் எனலுமாம்.
தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத்தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப் பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னையளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச்சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. பொருளுரை: பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய், அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய், நம்பத்தகுந்தவனாய், அடியேன் மாட்டு அன்பு உடையவனாய், அளவற்றபல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. குறிப்புரை: தூர்த்தன்-பிறன்மனை விழைந்தவன்; இராவணன். பார்த்தன்-அருச்சுனன். பணி-தொண்டு; தவம். பரிந்து-இரங்கி. ஆத்தன்-நம்பத்தக்கவன். தீர்த்தன்-பரிசுத்தன்.
திருநள்ளாறு பதிக வரலாறு: சுவாமிகள் திருப்புகலூரில் முதற்கண் எழுந்தருளியிருந்தநாள்களில், இடையே திருச்செங்காட்டங்குடி சென்று பணிந்து திருநள்ளாற்றைஅடைந்து வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. திருத்தாண்டகம் ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்றுஅல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்லசிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதொருகூ றாயி னானைமாமலர்மே லயனோடு மாலுங் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய், விரும்பத்தக்க பார்வதி பாகனாய், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந்தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம்செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும். குறிப்புரை: ஆதி - பழங்காலம். நான்முகத்தில் ஒன்று சென்று - ஏனைய நான்கு முகங்களினும்ஒருமுகம் முற்பட்டு. அல்லாத சொல் - உண்மையல்லாத சொல்; அது, 'என் மகனே, வா' என்று அழைத்தது. 'வாள்' என்றது, நகத்தை. சேதித்த - அறுத்த. 'திருவடி' என்றது, வயிரவரை. செல்ல - விலகிச் செல்லும்படி. நல்கி - அருள்புரிந்து. 'சிவலோகநெறி' என்றது உண்மையை; அஃதாவது தானே முதல்வன் என உணர்த்தினமையை; அவ்வாறுணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறியாகலின், அதனை, 'சிவலோகநெறி' என்றருளிச் செய்தார். காட்டியது, பிரமதேவனுக்கு, 'பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது, தானே முதல்வன் எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன்கலாம் விளைத்தனன். அதுபோது சிவபிரான் வயிரவரை அனுப்ப, அவரைக்கண்டு, 'வா,என் மகனே' எனப் பிரமன், அகங்காரத்துடன் அழைத்தலும் அவர் அவ்வாறு அழைத்த அவனது தலையைக் கிள்ளினார்; பின்பு அவனது செருக்கு நீங்கியபொழுது, சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார்' என்னும் வரலாறு இங்குக் குறிக்கப்பட்டது. அவ்வரலாறு இஞ்ஞான்று வழங்குதற்கேற்ப இதற்குப் பொருள் உரைக்கப்பட்டது. ஆயினும், சுவாமிகள் காலத்தில் அது வேறுபட வழங்கிற்று எனக் கொள்ளின், பிறவாறு உரைத்தலுங் கூடும். இதனை மேற்காட்டிய வகையில், காஞ்சிப்புராணம் வயிரவேசப்படலத்துட் காண்க. மாதிமைய - பெருமையுடைய, 'அழகிய இமயமாது' என்றலுமாம். நாதி - நாதன், நான் அடியேன் - நானாகிய அடியேன்; சிறப்புப் பெயர் பின் வந்தது; 'அடியேனாய்' என எச்சப்படுத்தலுமாம். 'நினைக்கப் பெற்று' என்பதற்கு, மேலைப் பதிகத்துள் உரைத்தவாறே உரைக்க. 'உய்ந்தவாறு' எனபதன் இறுதியில், 'நன்று' என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
படையானைப் பாசுபத வேடத் தானைப்பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம் அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச் சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின் நடையானை நம்பியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய், முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய், அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்க ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய்,காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: படையான் - பல படைகளை உடையவன். பாசுபத வேடம் - பாசுபத மதத்திற் கொள்ளப்படும் வேடம். அனங்கன்-மன்மதன். பார்த்தான் - விழித்து எரித்தான். 'ஆவா' என்பது, இரக்கக் குறிப்பிடைச்சொல். 'என்று' என்பதனை' என்ன' எனத் திரித்தலுமாம். சங்கத்த - சங்கின்கண் உள்ள. 'ஏற்றின் கண்' என உருபுவிரிக்க. நடை - நடத்தல்; செல்லுதல் உடையவன்.
படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்தபராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சையமுதாக வுண்டானை ஆதி யானை மடலரவம் மன்னுபூங் கொன்றை யானைமாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: படமெடுக்கு பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய, மேலும் கீழுமாய் நிற்பவனை, பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை, வலிய பாம்பினைக்கொண்டு கடைந்தபோது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை, எல்லோருக்கும் முற்பட்டவனை, இதழ்களிலே வண்டுகளின் ஒலிநிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை, சிறந்த இரத்தினம் போன்றுகண்ணுக்கு இனியவனை. மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை, நள்ளாற்றில் உகந்தருளியிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: பராபரன் - மேலும் கீழுமாய் நிற்பவன்.'மேல், கீழ்' என்பன, அத்தன்மையுடைய பொருளை உணர்த்தின. பைஞ்ஞீலி, சோழநாட்டுத்தலம். 'கடைந்த நஞ்சு' என்பது, 'ஆறு சென்ற வெயர்' என்பது போல நின்றது. 'அரவம் பற்றிக் கடைந்த' என்றது, கடைந்தாரது அறியாமையைத் தோற்றுவித்தற்கு. நஞ்சின் தோற்றத்திற்குரிய காரணத்தை விதந்தருளியவாறு. ஆதியான் - முதல்வன். மடல் அரவம் - இதழ்களின் பக்கலில் முரலும் வண்டுகளின் ஓசை. மாமணி - உயர்ந்த ரத்தினம். மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர். ஆய் - துணையாகி 'நடலை, என்பதன் ஈற்று ஐகாரம் தொகுத்தலாயிற்று. நடலை அரவம் - ஒடுங்குதற்கு ஏதுவாகிய ஒலி; அதுசிலம்பினால் ஆயதென்க; 'சிலம்பை ஒலிப்பித்தான்' என்றது, காலால் உதைத்தமையைச் சிறப்பித்தருளியவாறு.
கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச் சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப் பட்டங்க மாலை நிறையச் சூடிப்பல்கணமுந் தாமும் பரந்த காட்டில் நட்டங்க மாடியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து, காதில்தோடு அணிந்து, உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: விடு-ஒளிவிடுகின்ற 'அங்கம் சுட்டு' என மாறுக. 'அங்கம்' என்றது உடம்புகளனைத்தையும். 'சுட்டு' எனவே, 'சாம்பல்' என்பது தானே வந்தியையும். 'சுந்தரன்' என்றது, 'சாம்பல் பூசி இருப்பினும், அழகனே' என்றவாறு. 'பட்ட'என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அங்கம் - எலும்பு. கணம் - பூதம். கம்- ஆகாயம்; வெளி. வெளியாகிய காட்டில் என்பது கருத்து.
உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம் சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்திருச்சிராப் பள்ளி யெஞ்சிவ லோகனைக் கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய், அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப்பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய், நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: உலந்தார் - இறந்தார். உலப்பு - குறைதல். சிலந்தியை அரசனாக்கிய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் கோச்செங்கட் சோழநாயனார் புராணத்துட் காண்க. 'நலம்' என்றது, செயற்கை நலத்தை; மாலை என்றவாறு.
குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்டமறையவனைப் பிறைதவழ் செஞ்சடையி னானைச் சலங்கெடுத்துத் தாயமூல தன்ம மென்னுந்தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய், பார்வதியை இடப்பாகனாய், உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளை நீக்கித்தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய், வேதத்தை ஓதுபவனாய், பிறை சூடிய சடையினனாய், நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப் பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.  குறிப்புரை: குலம் - குடிப்பிறப்பு 'குலங்கெடுத்து' எனவும் பாடம் ஓதுவர். கோள் - துன்பம். குல வரை - உயர்ந்த மலை. மலம் -அழுக்கு. அவை, 'ஆணவம், கன்மம், மாயை' என மூன்று. மா தீர்த்தம் - உயர்ந்த புனித நீர்; என்றது, தனது திருவருளை, ஆட்டுதல் - மூழ்குவித்தல். மறையவன் - வேதத்தை ஓதியவன். 'புனிதநீராட்டுவோன் மறையவனே' என்னும் நயங் காண்க. சலம் - பொய்; நடுக்கமுமாம். தயா மூல தன்மம் என்னும் தத்துவம் 'இரக்கமே அடிநிலை அறம்' என்னும் உண்மை. 'அஃது இறைவனை உணர்ந்தார்க்கே கைகூடும் என்றவாறு. இத்தொடரினைப் புத்தர் முதலியோர் வாளாவாய்ப்பறையாகச் சாற்றுதல் பயனுடையத்தாகாது என்றபடி. தாழ்ந்தோர் - வணங்கினோர். 'நின்றுதாழ்ந்தோர்' என இயையும்.
பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னைமறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத் தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண்டானை நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.பொருளுரை: பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம், புகலூர், மறைக்காடு, வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய், மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய், ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய், அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய், நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: 'பூவாய் விரிகின்ற' என ஆக்கம் விரிக்க. 'கொன்றை மலர்' என மாற்றுக. புறம்பயம், புகலூர், மறைக்காடு, வலிவலம் சோழநாட்டுத் தலங்கள். மாஇரிஅக்களிறு - மற்றைய விலங்குகள்அஞ்சி நீங்குகின்ற அத்தன்மையுடைய யானை; கயாசுரன். தே இரிய - எல்லாத் தேவரும் அஞ்சி ஓடும்படி. 'உதைத்து' என்றது. 'தண்டித்து' என்னும் பொருளது. 'அவன்' என்றது, தக்கனை. நாவிரிய - நாவினின்றும் தோன்றுமாறு.
சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற வில்லானை யெல்லார்க்கும் மேலா னானைமெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்காளத்தி யானைக் கயிலை மேய நல்லானை நம்பியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: வேதங்களை ஓதுபவனாய், ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய், எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்தேவதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும், கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: சொல்லான் - சொல்லின்கண் உள்ளவன். சுடர்ப் பவளச் சோதியான் -ஒளியையுடைய பவளம் போலும் ஒளியினையுடையவன். 'தொல் புரம்' என இயையும், 'நான்கின் கண்ணும்' என உருபு விரிக்க. கண்டான் - வகுத்தான். 'காளத்திமலையானை' என்பதே பாடமாதல் வேண்டும்.
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச் சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும் நன்றாகும் நம்பியை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.பொருளுரை: மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை, வன்னி, ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே. குறிப்புரை: மிக்க-செருக்கிய. மிகுதி செருக்காதலை, 'மிகுதியான் மிக்கவை செய்தாரை' (குறள். என்பதனால் உணர்க. 'உறவாகி' எனப் பின்னர் அருளிச்செய்தமையால் 'இராவணனை' என்புழி, 'பகையாகி' என்பது பெறப்படும். 'மீண்டு - மறித்து; இது வினைமாற்றுப் பொருள் குறித்து நின்றது. 'மீண்டு உறவாகி' என இயைக்க. நறவு - தேன்; மேற்சொல்லப்பட்ட மலர்களினின்றும் சொரியப்படுவது.
இறவாமே வரம்பெற்றே னென்று மிக்கஇராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை மறவாதார் மனத்தென்றும் மன்னி னானைமாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம் நறவார்நெஞ் சடையானை நள்ளாற் றானைநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. பொருளுரை: தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் 'சிவபெருமானே எம் இறைவன்' என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.குறிப்புரை: முனிவன் - மார்க்கண்டேயர். அவருக்கிருந்த சாபம் ஆவது, 'பதினாறு ஆண்டோடுவாழ்நாள் முடிக' என்பது; இஃது இறைவன் இட்டதே. அது, அவரது முன்னை வினைபற்றியேஇடப்பட்டதென்க. 'ஆக வேவ' என இயையும். ஆக-மிக; ஆக்கச் சொல் மிகுதிகுறித்தலும் உண்டு. இனி, 'அன்றுதல்ஆயினமையால்' என்று உரைப்பினும் அமையும். அழல் வாய்-தீயாகிய வாயையுடைய அம்பு; அன்மொழித்தொகை. திரிபுரம் எரித்த ஞான்று, தீக்கடவுளே அம்பின் முனையாக நின்றனன் என்க. இனி, 'அழலது வாயினைச் செலுத்தி' எனலுமாம். திரிபுரங்கள், தம்மியல்பால் தாம் அழிந்தன என்பார், அடர்ப்பித்தான் என்னாது' அடர்வித்தான்' என்றருளிச்செய்தார். 'சென்றியாது' என்பது, 'சென்றாது என நின்றது. 'சென்றியாது என்பதே பாடம்' எனலுமாம். எம்பெருமான் சிவனேயென்றிருத்தலாவது, பிறர் ஒருவரையும் முதற் கடவுளாக மயங்காது அவன் ஒருவனையே தெளிந்து வழிபடுதல்; அவர்க்கு எல்லா நலங்களுமாய் இருப்பான் என்க. அமைதியாய் அடங்கியிருப்பாரை, 'சிவனே என்றிருப்பார்' என்னும் வழக்குநயமும் தோற்றுவித்தவாறு. 'நன்று' என்றது, தொகுத்தருளிச்செய்தது. திருநாவுக்கரசர் புராணம் சீர்தரு செங்காட் டங்குடி நீடுந் திருநள்ளஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்திவார்திகழ் மென்முலை யாளொரு பாகன் திருமருகல்ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.-தி.சேக்கிழார்.
திருஆக்கூர் பதிக வரலாறு: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தருடன் திருப்புகலூரிலிருந்து புறப்பட்டுத் திருக்கடவூர் வீரட்டம், திருக்கடவூர்மயானம் பணிந்து, திருஆக்கூரில் தான்றோன்றியப்பரை ஆர்வமுறத்தொழுது பாடியருளியது, இத்திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. திருத்தாண்டகம் முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்மூவுலகுந் தாமாகி நின்றார் போலும் கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்கல்லலகு பாணி பயின்றார் போலும் கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும் அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய், தாமரைக் கண்ணராய், கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய், தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய், தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய், ஆக்கூரிலேதான்தோன்றியப்பர் உள்ளார். குறிப்புரை: முடி - முடியின்கண். கடி - நறுமணம். கல்அலகு - கற்கப்படும் மாத்திரை அளவு.எழுந்தருளியிருத்தல் அறியத்தக்கது.
ஓதிற் றொருநூலு மில்லை போலும்உணரப் படாததொன் றில்லை போலும் காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும் வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும் ஆதிக் களவாகி நின்றார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்த வராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய், வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய், விடத்தால் சூழப்பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளியுள்ளார். குறிப்புரை: ஓதிற்று - படிக்கப்பட்டது. 'எம்பெருமான் ஒரு நூலும் ஓதியது இல்லை; அவனால் உணரப்படாத பொருளும் ஒன்றும் இல்லை' என உலகில் வைத்து அறியப்படாததோர் அதிசய நிலையை உணர்த்தியருளியவாறு; 'இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்பவன்' என்பதாம், 'கவல இடும்பை' என இயையும். 'காத்தல்', ஈண்டு, வாராது தடுத்தல். வேதத்திற்குரிய ஆறு அங்கங்களாவன: சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி. சிட்சை - வேதத்தை ஓதும் ஒலிவகையை விளக்கும். வியாகரணம் - இலக்கணம், நிருத்தம்,மொழிநூல், சோதிடம்,பஞ்சாங்கம் பற்றிக் காலநிலை கூறுவது. கற்பம் - சடங்கு முறை வகுப்பது, சந்தோவிசிதி - இசையமைப்பைக் கூறுவது. அளவு - எல்லை. ஆதிக்கு எல்லையாதலாவது, தானே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தனக்கு ஓர் ஆதியின்றி இருத்தல்.
மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்மணிநீல கண்ட முடையார் போலும் நெய்யார் திரிசூலங் கையார் போலும்நீறேறு தோளெட் டுடையார் போலும் வையார் மழுவாட் படையார் போலும்வளர்ஞாயி றன்ன வொளியார் போலும் ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், நீலகண்டராய், நெய் அணிந்த முத்தலைச்சூலக் கையராய். திருநீறுபூசிய எண் தோளராய், கூரிய மழுப்படையினராய், காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய், ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார்.குறிப்புரை: "நெய் ஆர்" என்றது இன அடை. வை - கூர்மை. வாள் - ஒளி. வளர் ஞாயிறு -வளர்வதற்குரிய ஞாயிறு; காலையில் தோற்றஞ் செய்யும் கதிரவன்.
வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும் பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும் கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்கட்டங்கம் ஏந்திய கையார் போலும் அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்.ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய், அழகிய கங்கை தோய்ந்த சடையினராய், மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சிவழங்குகிறார். குறிப்புரை: வடி - வடித்தல்; கூர்மையுமாத். வெண்மை, வாயிடத்துத் தோன்றுவது, 'வஞ்ச நஞ்சு'என இயையும். நஞ்சுக்கு உள்ள வஞ்சமாவது, குளிர்ச்சியுடையதாய் இருந்தே கொல்லுதல்; "சிங்கி குளிர்ந்துங் கொலும்" (நீதி நெறி விளக்கம். என்றது காண்க. பூ - அழகு. கடி - நறுமணம்.
ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழஇடுவெண் தலைகலனா ஏந்தி நாளும் மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலைபுனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும் மாகாச மாயவெண் ணீருந் தீயும்மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும் ஆகாச மென்றிவையு மானார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல்மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகம் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: ஏகாசம் - மேலாடை; அஃது இங்கு உடையைக் குறித்தது. 'புலித்தோலின்கண் பாம்புதாழ' என்க. கலன் - அணிகலம். ஏந்தி - தாங்கி; பூண்டு. மேக ஆசம் - மேகத்தினது நகைப்பு; மின்னல். ஆசம் - நகைப்பு; ஹாசம்' என்பதன் திரிபு; மின்னலை வென்றசடை என்க. அதனை முடிமேல். மாகம் -ஆகாயம். 'நீரினை' ஆகாயத்தின் நகைப்பு' என்றது, மேலிருந்து மழையாய் ஒழுகுதல் குறித்து; 'மாகாசம்-மிக்க ஒளி' எனினுமாம்.
மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்மலைமகளை மார்பத் தணைத்தார் போலும் மூதூர் முதுதிரைக ளானார் போலும்முதலும் இறுதியு மில்லார் போலும் தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும் ஆதிரை நாளா வமர்ந்தார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள், சிவந்த வாய், மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய், ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல்வினை வடிவினராய், எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய், ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார். குறிப்புரை: மாது ஊரும்-காதல் மிகுகின்ற, "ஊர்" என்றதும், 'திரைகள்' என்றதும் முறையே அவற்றை உடைய நிலத்தையும் கடலையும் குறித்து நின்றன. தீது ஊர-தீவினையை வெல்ல; ஊர்தல் வெல்லுதலாதல். "அடுத்தூர்வது அஃதொப்பது இல்"என்புழியுங் காண்க. அமர்ந்தார் - விரும்பினார்; 'திருவாதிரையைத் தமக்குரிய நாளாகவிரும்பிக்கொண்டார்' என்பதாம். திருவாதிரை நாளைச் சிவபிரான் தனக்குரியதாகக் கொண்டமையானே அந்நாளில் மதிநிறையப் பெறும் மார்கழித் திங்கள் தேவர் எல்லார்க்கும் சிறப்புடைத் திங்களாயிற்று என்க.
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும் கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும்குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும் காலனைக் காலாற் கடந்தார் போலுங்கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும் ஆலானைந் தாடல் உகப்பார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று, அம்பினை உடைய மன்மதனைத் தம் கண் நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக்கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: கோலான் -அம்பினை உடையவன்; மன்மதன். கோ -கண். கடந்தார் - வென்றார். ஆல் - நிறைந்த. மால், 'மான்று' என வருதல்போல,'ஆல், 'ஆன்று' என வருதலின், 'ஆன்றோர்' என்பதற்கு இதுவே முதனிலையாதலறிக. இதுதானே சகரமூர்ந்து, 'சால்' என நிற்கும் என்க. இனி, இதனை, 'அகல் என்பதன்மரூஉ 'எனக் கூறுவாரும் உளர்.
கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும் உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்ஊழித்தீ யன்ன வொளியார் போலும் எண்ணா யிரங்கோடி பேரார் போலும்ஏறேறிச் செல்லும் இறைவர் போலும் அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய், ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய், காளையை இவர்ந்து செல்லும் தலைவராய், அண்ணாமலையையும், ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: "எண்ணாயிரங் கோடி" என்றது, அளவின்மை கூறியவாறு, 'அண்ணாமலை' என்பது, 'அண்ணா' எனக் குறைக்கப்பட்டது.
கடியார் தளிர்கலந்த கொன்றை மாலைகதிர்போது தாதணிந்த கண்ணி போலும் நெடியான் சதுர்முகனு நேட நின்றநீலநற் கண்டத் திறையார் போலும் படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனிமணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும் அடியார் புகலிடம தானார் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை, விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன்வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ளதான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: கடி ஆர் - புதுமை நிறைந்த. 'கொன்றைமலராகிய மாலையும், போதும். கண்ணியும்' என்க. கதிர் போது - கதிர்க்கின்றயின் வண்ணத்தைத் தேவியின் கூற்றிலும் உடையவர் என்க. மோனை நயம் இன்மையின், 'பணி வண்ணம்' என்பதேபாடம் எனக்கொண்டு; 'பாம்பை அணிந்த வடிவம்' என்று உரைத்தலுமாம்.