text
stringlengths
1
17.4k
டெட்டனேட்டர் வெடித்து மாணவன் கை துண்டிப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த எம்.புத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் முருகன் (20). அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் முருகன்,  மாலையில் காவிரியாற்றுக்கு மீன் பிடிக்க சென்றார்.  டெட்டனேட்டரில் நெருப்பு பற்றவைத்து ஆற்றில் வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு டெட்டனேட்டர் திரியில் நெருப்பு வைத்தார். அது சரியாக பற்றவில்லை என்பதால் வலது கையில் டெட்டனேட்டரை பிடித்துக்கொண்டு வாய் அருகில் வைத்து ஊதி நெருப்பு மூட்டினார். திடீரென டெட்டனேட்டர் வெடித்தது. இதனால் வலது கையின் விரல்கள் சிதறியது.  உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தகவல் அறிந்ததும் திருச்சி ஏடிஎஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் எம்.புதூர் சென்று விசாரணை நடத்தினர். முருகன் மீன்பிடித்த பகுதியையும் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணரும் அந்த இடத்தை ஆய்வு செய்தார்.முருகனுக்கு டெட்டனேட்டர் கொடுத்தது யார், இன்னும் அந்த பகுதியில் யார் யாரெல்லாம் டெட்டனேட்டர் மூலம் மீன்பிடிக்கிறார்கள் என விடிய விடிய விசாரணை நடந்தது. இந்த டெட்டனேட்டர்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் வாங்கியதா, அல்லது திருட்டு தனமாக தயாரிக்கப்படுகிறதா என காட்டுப்புத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துபாய் கம்பெனி ரூ.17 கோடி பங்களா பரிசு ஷாருக்கானுக்கு வருமான வரி துறை நோட்டீஸ்
துபாய் கம்பெனி பரிசாக கொடுத்த ரூ.17 கோடி பங்களாவுக்கு உடனடியாக வரி கட்ட வேண்டும் என்று கூறி நடிகர் ஷாருக்கானுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. துபாயில் உள்ளது நகீல் பப்ளிக் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி. இந்நிறுவனம் தங்களது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவை பரிசாக அளித்தது. அதன் மதிப்பு ரூ.17.84கோடி. இதுபற்றி வருமான வரி துறைக்கு ஷாருக் தெரிவிக்கவில்லை.இதை கண்டுபிடித்த வருமான வரித்துறை ஷாருக்கானுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ரூ.17.84 கோடி மதிப்புள்ள பங்களாவுக்கு உடனடியாக வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், ‘இந்த பங்களாவை வர்த்தகம் மூலமோ, தொழில் மூலமோ சம்பாதிக்கவில்லை. முழுக்க பரிசாக வந்தது. இதற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை நகீல் நிறுவனமும் உறுதி செய்து வருமான வரி துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில் திருப்தி அடையாத வருமான வரித்துறை டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘நகீல் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு முதல் ஷாருக்கானின் பெயரை தங்கள் நிறுவன தயாரிப்பை விளம்பரப்படுத்த பயன்படுத்தி வருகிறது. அதற்கு பணம்பெற்றதாக இதுவரை ஷாருக் எந்த ரசீதும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பங்களா வருமானமாகவே கருதப்படும். எனவே ரூ.17.84 கோடிக்கான வரியை உடனடியாக அவர் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்தவர் அய்யா வைகுண்டசாமி: ஜெயலலிதா பேச்சு
குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வந்த ஜெயலலிதா அங்கு கோசாலையை துவக்கி வைத்து பசு மற்றும் கன்றை தானமாக வழங்கினார். பின்னர் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளை இழந்த மக்கள் விடுதலை பெற வேண்டி தன்னையே அர்ப்பணித்த அய்யா வைகுண்ட சாமி பதியில் உங்களோடு சேர்ந்து வழிபடுவதை நான் பெருமை கொள்கிறேன். அய்யா வைகுண்டருடைய போதனைகளை கேட்ட மக்கள் மூட நம்பிக்கை மற்றும் தீண்டாமை என்னும் தீயப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க முற்பட்டனர். அய்யா வழிபாட்டில் உருவம் கிடையாது. கருவறையில் கண்ணாடிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடியை போல் மனத்தையும் சுத்தமாக வைத்துக்கொள் என்பதை அறிவிக்கும் செயலே அதுவாகும்.உலகில் ஒவ்வொரு யுகத்திலும் தர்மம் மறைந்து அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் ஒரு அவதார புருஷனாக இறைவன் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியுள்ளார். அதுபோல் இந்த கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். வாழும்போதே பிறருக்கு உதவும் மனித பண்பை மக்கள் மனதில் பதித்தவர் அய்யா வைகுண்டர்.  செய்கின்ற தர்மத்தை உயிருடன் இருக்கும்போதே செய்திட வேண்டும். உங்களிடம் சிறந்ததை நாட்டிற்கு கொடுங்கள், நாடு சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிரச்னை அனைத்தும் தீர்ந்து விடும்.  இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 137 இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 137 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 காலியிடங்கள் இருந்தன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. இதில், 1,053 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 41 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 321 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 67 இடங்களுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. 319 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மீதியுள்ள 137 காலி இடங்களில் மொத்தம் 372 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டு 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
ஹாலிவுட் பாடகியின் குரலில் ரகுமானின் ‘ஜெய் ஹோ’ ரீமிக்ஸ்
ஆஸ்கர் விருது வென்ற ‘ஜெய் ஹோ’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் ரீமிக்ஸ் செய்கிறார். உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் பாடகி நிகோல் ஷெர்சிங்கர் இதை பாடுகிறார். சிறந்த இசை, சிறந்த பாட்டு (ஜெய்ஹோ) என இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. அரசு நிகழ்ச்சிகள், பொது விழாக்கள், ரிங்டோன், காலர் டோன் என்று மூலைமுடுக்கெல்லாம் பரவியது அவரது ‘ஜெய் ஹோ’ பாடல். இப்பாடலை புகழ்பெற்ற பாடகர் சுக்விந்தர் சிங் பாடியிருந்தார்.இதை ரகுமான் ரீமிக்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் பாடகி, நடிகை, பாடல் ஆசிரியர், நடன அழகி என பல்வேறு முகங்கள் கொண்ட நிகோல் ஷெர்சிங்கர் (32) இப்பாடலை பாட உள்ளார். ஒரு இசை ஆல்பம் வெளியிடுவதற்காக இருவரும் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ரகுமான் அளிக்கும் இந்த விருந்தில் நிகோல் ஷெர்சிங்கருடன் அவரது காதலர் இங்கிலாந்தை சேர்ந்த கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டனும் பங்கேற்கிறார்.இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கடந்த 6&ம் தேதி 45&வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்கு, பறவை, மீன்கள் கூட்டம் கூட்டமாக சாகிறதே.. சுற்றுச்சூழல் தரும் எச்சரிக்கை...
உலகம் முழுவதும் சமீபகாலமாக பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடியும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியில் சுமார் 3000 பறவைகள் வானில் இருந்து கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. அமெரிக்காவின் செசாபிக் வளைகுடா பகுதியில் 20 லட்சம் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. வியட்நாமில் சுமார் 150 டன் எடை உள்ள சிகப்பு திலாபியா என்ற கடல்வாழ் உயிரினமும், இங்கிலாந்தில் சுமார் 40 ஆயிரம் நண்டுகளும் இறந்துள்ளன.இதற்கான காரணங்கள் குறித்து விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விலங்கியல் ஆராய்ச்சி வல்லுனர்கள், சர்வதேச விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஜான்வியன்ஸ் என்ற நிபுணர் தலைமையில் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய்த்தாக்குதல் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான காரணம் கேள்விக் குறியாகவே உள்ளது.காற்று உள்ளிட்ட இதர இயற்கைக் காரணிகளின் மாசுபாடு, கடல் நீர், சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் அமிலத்தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணம். கடந்த 8 மாதங்களில் அமெரிக்காவில் 95 அரிய வன விலங்குகள் மற்றும் 900 பருந்துகள், மின்னசோட்டாவில் 4300 வாத்துகள், பல்லி வகையை சேர்ந்த 1500 சாலமண்டர்கள் எதிர்பாராமல் தொற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இறந்துவிட்டன.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களால் காற்றில் மின்காந்த கதிர்வீச்சுகள் தற்போது முன்பைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன. அதுகூட காரணமாக இருக்கலாம். இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி வருகிறோம். இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே இதுபோன்ற தொடர் மரணங்களை தடுக்க முடியும். அலட்சியமாக இருந்தால் வருங்காலத்தில் மனித குலத்துக்கும் ஆபத்துகள் நேரலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ரயில்வே பூங்காவில் சமூக விரோத செயல்கள்
திருத்தணி ரயில்வே நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதால் கூட்டம் நிரம்பி வழியும். பயணிகள் வசதிக்காக திருத்தணி ரயில் நிலையம் சுமார் ஒரு கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. பயணிகள் ஓய்வெடுக்க ரயில்வே வளாகத்தில் பல லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. முதலில் களைகட்டிய பூங்கா பின்னர் கவனிப்பாரற்று விடப்பட்டது. இப்போது, பூங்காவில் விளக்கு எரியவில்லை. பாழடைந்து கிடப்பதால் பயணிகள் அனைவரும் அங்கு சிறுநீர், மலம் கழிக்கின்றனர். துர்நாற்றம் அடிப்பதால் அந்த வழியாக பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர்.இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிலர் மது அருந்தி அட்டகாசம் செய்கின்றனர். ஜோடிகளும் தங்கள் இஷ்டத்துக்கு  இருக்கின்றனர். இதனால் அந்த வழியாக நடமாட பெண்கள் அச்சப்படுகின்றனர். பூங்காவை பராமரிக்க வேண்டும். சமூக விரோத செயலை தடுக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேட்டி, சேலை வழங்காததால் ஊழியர்களுடன் மக்கள் தகராறு
மாதவரம் நகராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்க வருவாய்த்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் போதுமான வேட்டி, சேலை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் வேட்டி, சேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கும் மக்களுக்கும் தகராறு நடக்கிறது.மாதவரம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், “மொத்த கார்டுகள் 1250, கிராம நிர்வாக அதிகாரி வழங்கிய வேட்டி சேலைகள் 700, வரவேண்டியது 550, மீதி வந்ததும் வழங்கப்படும்“ என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளனர்.இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறுகையில், “விஏஓவிடம் கேட்டால், சரியான பதில் சொல்வதில்லை. மக்கள் எங்களிடம்தான் கேட்டு தகராறு செய்கிறார்கள். அதனால்தான் இப்படி போர்டு எழுதி வைத்துள்ளோம்” என்றனர்.
லாரி மீது வேன் மோதி 3 பக்தர்கள் பரிதாப சாவு
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டச்சேரி அருகே உள்ளது கல்லங்காடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30 கூலித்தொழிலாளர்கள், சண்முகம் (55) என்ற குருசாமி தலைமையில் நேற்று முன்தினம் வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு, நேற்றிரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் கிளம்பினர். வேனை, டிரைவர் சுனில் (33) என்பவர் ஓட்டினார்.இவர்களது வேன் இன்று அதிகாலை 6 மணியளவில், ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் பழுதாகி நின்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியது. மோதிய வேகத்தில் வேனின் இடதுபக்கம் அமர்ந்திருந்த குருசாமி சண்முகம் உடல் நசுங்கி இறந்தார்.  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐயப்ப பக்தர்கள், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி (35), அனில்குமார் (10) ஆகியோர் இறந்தனர்.ராஜேஷ் (23) சாமிக்குட்டி (46) சுப்புண்ணி (42) மனோஜ் (23) உள்பட 15 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்: 234 தொகுதிகளிலும் வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 234 தொகுதிகளிலும் இன்று காலை வெளியிடப்பட்டது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதியினை அடிப்படை நாளாக கொண்டு, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றத்திற்காக நவம்பர் 13ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.இதற்காக, தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். இந்த விண்ணப்பங்களை தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, வாக்காளர்களின் முழு விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும். அந்தந்த தொகுதிக்குட்பட்ட ‘பூத்’களில் வாக்காளர் அட்டையை பொதுமக்கள் பெற்று கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறினார். கட்சியினரிடையே ஆர்வம் அதிகரிப்பு தமிழக சட்டசபைக்கு மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியிடம் அனைத்து கட்சியினரும் மே முதல் வாரத்திற்குள் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினர். அவரும் பரிசீலிப்பதாக அறிவித்தார்.அதைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். சென்னை உள்பட பல இடங்களில் போட்டி போட்டு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போது வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டதால் கட்சியினரிடையே தேர்தல் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதை காண முடிந்தது.
எண்ணூரில் வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு
எண்ணூரில் மின் ரயிலுக்கான வயர் அறுந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் ரயில் போக்குவரத்து 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. எண்ணூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 7.45 மணியளவில் திடீரென மின்சார ரயிலின் வயர் அறுந்து கீழே விழுந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் வந்த மின்சார ரயில்கள் திடீரென நின்றன. இதையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அறுந்த மின் வயரை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்தது. சுமார் 45 நிமிடத்துக்கு பின் வயர் சரி செய்யப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.பரபரப்பான காலை நேரத்தில் மின் வயர் அறுந்ததால் அந்த மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. ரயில் போக்குவரத்து பாதித்ததால் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தேர்தலில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் செலவிட்டதில்லை: மம்தா பானர்ஜி
தேர்தல் சீர்திருத்தம் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது: எந்த தேர்தலிலும் நான் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் செலவிட்டதில்லை. பொதுவாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு மிகவும் குறைவு. சட்டமன்ற தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும்.இதனால் பணமும் நேரமும் மிச்சப்படும். தேர்தல் ஆணையத்துக்கு சுதந்திரமான உள்கட்டமைப்பும், நிதி சுதந்திரமும் வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் வகை செய்ய வேண்டும்.இவ்வாறு மம்தா பேசினார்.
கடும் பனி காரணமாக சண்டிகர் ஏர்போர்ட் மூடல்
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுங்குளிர் நிலவி வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. கடும் பனி மூட்டம் காரணமாக  சண்டிகர் விமான நிலையம் கடந்த 5 நாட்களாக மூடிக் கிடக்கிறது. இன்று காலையும் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் விமான சேவை தொடங்குவது சந்தேகம் என ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன. பனிமூட்டத்தில் ஓடுபாதையை அடையாளம் காட்டும் மின்விளக்குகள் அரியானா ஏர்போர்ட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அது இன்னும் செயல்பட தொடங்காததால் விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக ஏர்போர்ட் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் ஜெகன் உண்ணாவிரதம் காங். எம்எல்ஏக்கள் 8 பேர் ஆதரவு
கிருஷ்ணா நதி நீர் பிரச்னையில் ஆந்திர விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் டெல்லியில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஜெகன் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்கு மேலிட எதிர்ப்பை மீறி 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வலியுறுத்தி கடந்த மாதம் விஜயவாடாவில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஜெகன் நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 33 பேரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் ஸ்ரீகிருஷ்ணா நதி நீரை கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம் தனது பரிந்துரையை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆந்திர மக்களுக்கு அதிக உரிமை இருந்தாலும், கர்நாடகாவிற்கும் உரிய பங்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் தெரிவித்தது. இது ஆந்திர மக்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்கிறது என்று ஜெகன்மோகன்ரெட்டி கருத்து தெரிவித்தார். கிருஷ்ணா நதிநீர் பிரச்னையில் ஆந்திர விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் டெல்லியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜெகன் அறிவித்தார். இதன்படி நேற்று மதியம் ஜெகன் ஐதராபாத்திலிருந்து ரயிலில் டெல்லி புறப்பட்டார். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காந்தாராவ், சத்யாவதி, சிவபிரசாதரெட்டி, பலராஜூ, குருநாதரெட்டி, ஸ்ரீனிவாசலு, அமர்நாதரெட்டி, ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் சென்றனர். இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் கட்டளையையும் மீறி ஜெகனுடன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி புறப்படும் முன்பு பல எம்எல்ஏக்களுக்கு ஜெகன் போன் செய்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. இதனால் இன்று மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விமானம் மூலம் டெல்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 1,295 கோடி செலவில் வேலூரில் கூட்டுக் குடிநீர் திட்டம்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கேள்விக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்: சேண்பாக்கம் பேரூராட்சி குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. அல்லாபுரம், தொரப்பாடி பேரூராட்சிகளுக்கு தனிக்குடிநீர் திட்டம் அமைக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் ஆதாரம் இறுதி செய்தவுடன் விரிவான மதிப்பீடுகள் தயாரித்து நிதி ஆதாரம் மற்றும் நிர்வாக ஒப்புதலுக்கு பின்னர் திட்டம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் சத்துவாச்சேரி, தாராபடவேடு உள்ளிட்ட 6 பேரூராட்சிகள், 11 நகராட்சிகள் மற்றும் 944 ஊராட்சி குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசாணை பிறக்கப்பட்டு 3 பகுதிகளாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி வரும் பிப்ரவரி 3ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் பிறகு திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
ஐபிஎல் அனுபவம் கை கொடுத்தது டோனி உற்சாகம்
டாசில் வெற்றி பெற்றதுமே அதிக ரன் குவிக்க நினைத்தோம். ரோகித்சர்மா அதற்கு உதவினார். பந்து பழையதாக மாறியதால் கடைசி கட்டத்தில் ரன்குவிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஐபிஎல்லில் இங்கு வந்து விளையாடியது நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றார்.தென் ஆப்ரிக்க கேப்டன் போத்தா கூறும்போது, இந்தியா நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் போதுமான அளவுக்கு பேட் செய்யவில்லை. எங்களில் பலர் அனுபவமில்லாத வீரர்கள் என்றார். ஆட்டநாயகன் ரோகித்சர்மா கூறுகையில், நல்ல தொடக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டேன் என்றார். விருதுபெற்ற டெண்டுல்கர் கூறுகையில், எனக்கும் சிறப்பு செய்து விருது வழங்கியதற்கு நன்றி. உங்களது பாராட்டு, ரசிகர்களின் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று ஓய்வுபெறுகிற நிதினி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொருவருக்கும் அவர் ரோல்மாடல் என்றார். நிதினி கூறுகையில், ஒவ்வொரு வீரருக்கும் நன்றி சொல்கிறேன். கடந்த 12 வருடங்களாக விளையாடிய எனக்கு சச்சினுடன் இணைந்து பாராட்டுவிழா நடத்தியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
டோனிக்கு பிப்.12ல் பாராட்டுவிழா
தேசிய விளையாட்டு போட்டிகள் வரும்  பிப்ரவரி 12 முதல் 26-ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கின்றன. இதன் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு பாராட்டுவிழா நடக்கிறது. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாக். கேப்டன் ஜன. 19ல் நியமனம்
உலககோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜனவரி 19-ம் தேதிக்கு முன் நியமனம் செய்யப்படுவார் என பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ்பட் அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலேயே அந்த கேப்டன் நியமிக்கப்படுவார் என இஜாஸ்பட் அறிவித்தார்.
கங்குலி இல்லாமல் கொல்கத்தா இல்லை ஷாருக் திடீர் பல்டி
கங்குலி இல்லாத கொல்கத்தா ஐபிஎல் அணியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அங்கு எந்த அணியும் விளையாட முடியாது. நான் மிக விரைவில் கங்குலியிடம் பேசுவேன். அவர் மீண்டும் கொல்கத்தா அணியில் இடம்பெறுவது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.சென்னை அணி வீரர்கள்டோனி (8.16 கோடி), ரெய்னா (5.89 கோடி), முரளி விஜய் ( 4.08 கோடி), ஆல்பி மார்கல் ( 2.26 கோடி), அஷ்வின் (3.86 கோடி), பத்ரிநாத் (3.63 கோடி), போலிஞ்சர் (3.17 கோடி), மைக்கேல் ஹசி (1.93 கோடி), சுதீப் தியாகி (1.01 கோடி), பிராவோ (91 லட்சம்), ஸ்டைரிஸ் (91 லட்சம்), ஜோகிந்தர் சர்மா (68 லட்சம்), டு பிளசிஸ் (54 லட்சம்), குலசேகரா (45 லட்சம்), ஹில்பெனாஸ் (45 லட்சம்), சகா (45 லட்சம்), ரந்திவ் (36 லட்சம்), ஜார்ஜ் பெய்லி (23 லட்சம்).
இயக்குனர் மீது பார்வதி பாய்ச்சல்
‘பூ' பட ஹீரோயின் பார்வதி. இப்படத்துக்கு பிறகு தமிழில் நடிக்க கேட்டு பல இயக்குனர்கள் அணுகினார்கள். கதை பிடிக்கவில்லை என்று நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வந்தார். கன்னடத்தில் ‘நிம்ஹான்ஸ்Õ என்ற படத்தை புதுமுக இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார். கடந்த வாரம் இவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘நிம்ஹான்ஸ் ரொமான்டிக்கான கதை. இதில் இரண்டு ஹீரோயின்கள். அவர்களில் ஒரு ஹீரோயினாக பார்வதி நடிக்கிறார்Õ என்றார். இது பற்றி பார்வதியிடம் கேட்டபோது கோபம் அடைந்தார். ‘எந்த இயக்குனரும் என்னிடம் பேசவில்லை. கதையும் சொல்லவில்லை. ஜனவரி முதல் வாரம் வரை நான் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் கூட சொல்லாமல் Ôநிம்ஹான்ஸ்Õ படத்தில் நான் நடிப்பதாக எப்படி அறிவிக்கலாம். இப்போதைக்கு நான் மலையாள படத்தில் பிஸியாக இருக்கிறேன். அப்படம் முடிந்தபிறகே அடுத்த படம் ஒப்புக்கொள்வேன்Õ என்றார். ஏற்கனவே மற்றொரு கன்னட படத்தில் கால்ஷீட் பெறாமலே நடிப்பதாக அறிவித்ததற்கு ‘அப்படத்தில் நடிக்கவில்லைÕ என்று பார்வதி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல் இப்படி இயக்குனர்கள் மீது பார்வதி பாய்வது வருத்தம் அளிக்கிறதுÕ என்று கன்னட இயக்குனர்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மோனிகா பேடி நடித்த தமிழ் படம்
அபுசலீம் சம்பந்தப்பட்ட வழக்கில் இரண்டரை வருடம் சிறையில் இருந்தார் மோனிகா பேடி. விடுதலைக்கு பிறகு நடித்த முதல் படம் இது. கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்காக 25 கிலோ உடல் எடையை குறைத்தார். பெத்தாபுரம் என்ற ஊருக்கு சென்று 100 தேவதாசி பெண்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் இக்கதையை உருவாக்கினேன். ரேணுகாதேவி என்ற வேடத்தில் மோனிகா பேடி நடித்துள்ளார். இவர் நடித்த ஷூட்டிங் மட்டும் மும்பையில் படமானது. மற்ற காட்சிகள் சென்னை, ஐதராபாத்தில் படமானது. மற்றொரு தேவதாசி பாத்திரத்தில் சுவாதி வர்மா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் முதலில் திரைக்கு வரும் இப்படம் பின்னர் இந்தியில் ரிலீஸ் ஆகிறது.
சம்பளம் கேட்க முடியாத நடிகை
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...ஸ்ருதியான நடிகையும் சித்த நடிகரும் நட்பா பழகுறது ஊருக்கே தெரியுமாம்... தெரியுமாம்... இப்போ அந்த நெருக்கம் அதிகமாயிடுச்சாம். ஃபங்ஷன், பார்ட்டின்னா ஜோடியா வர்றாங்களாம்... வர்றாங்களாம்... சேர்ந்து நடிச்ச படத்துக்காக இப்படி பப்ளிசிட்டி பண்றாங்கன்னு படக்குழு சொல்லுதாம். ஆனா, அவங்களுக்கு இடையே ஏதோ இருக்குன்னு டோலிவுட் வட்டாரம் பேசிக்குதாம்... பேசிக்குதாம்...கவுதம இயக்குனரோட த்ரில் படத்துல சில காட்சிகள்ல மட்டும் சமந்த நடிகை நடிச்சிருக்கிறாராம்... நடிச்சிருக்கிறாராம்... இதுல நடிக்க இயக்குனரு சம்பளம¢ எதுவும¢ தரலையாம்... தரலையாம்... அடுத்த படத்துல ஹீரோயின் வாய்ப்பு கொடுத்ததால, நடிகையும் எதுவும் கேட்க முடியாம கப்சிப் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...சங்கீத நடிகைக்கு வாய்ப்புகள் இல்லாததால, வேற மொழிகள் பக்கமா போயிருக்கிறாராம். அங்கே அக்கா, அண்ணி ரோல் கிடைச்சாலும் ஓகே சொல்றாராம்... சொல்றாராம்... இங்கே மட்டும் ஏன் மறுக்கிறாருன்னு நம்மூர் டைரக்டருங்க கேட்கிறாங்களாம்... கேட்கிறாங்களாம்...
கிளிப்பிங்ஸ்
தமிழில் 2, மலையாளத்தில் 4, இந்தியில் 1 என 7 படங்களில் நடிக்கிறாராம் லட்சுமிராய்.நடன அமைப்புகளில் புதுமைகளை செய்ய விரும்புகிறேன் என்கிறார் சிம்பு.Ôபிறந்த நாள் பரிசாக என் அப்பா, அம்மா வாங்கிக்கொடுத்த கார்தான் மிகவும் பிடித்த பரிசுÕ என்கிறார் த்ரிஷா.‘நானே வருவேன்Õ பேய் படம் திரையில் ஓடும்போது தியேட்டரில் ஒரு வித வாசம் வருமாறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.அடுத்த படத்துக்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு உருவாக்கி இருக்கிறார் அருண் விஜய்.‘பவானிÕ படத்தை விஜயசாந்திக்கு திரையிட்டு காட்ட விருப்பம் தெரிவித்திருக்கிறார் அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சினேகா.தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரோஜா.நீண்ட நாள் அவுட்டோர் ஷூட்டிங் என்றால் நடிக்க மறுத்துவிடுகிறாராம் குஷ்பு.
பட்டம் பிடிக்க சென்ற 4 சிறுவர்கள் ரயில் மோதி பலி
பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல வடமாநிலங்களிலும் இந்த பண்டிகையின் போது காற்றாடி சீசன் களை கட்டும். ஜெய்ப்பூரில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ள மால்வியா நகரைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேர், நேற்று மொட்டை மாடியில் காற்றாடி விட்டுக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் பறக்கவிட்ட காற்றாடி அறுந்தது. அதைப் பிடிப்பதற்காக 4 பேரும் மாடியிலிருந்து இறங்கி ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடினர். முதல் பாதையில் சரக்கு ரயில் சென்றது. அதுபோகும் வரை காத்திருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அடுத்த பாதையில் எதிர்திசையில் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 4 சிறுவர்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பட்டம் பிடிக்க சென்ற 4 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவாவில் ரஷ்ய பெண் மானபங்கம் ஆந்திர இளைஞர் கைது
அதிகளவில் வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் மாநிலங்களில் கோவா முதல் இடத்தில் இருந்தது. இந்த இடத்தை தற்போது பீகார் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதாக இந்திய சுற்றுலா துறை அண்மையில் புள்ளிவிவரம் வெளியிட்டது. கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண்கள் அடிக்கடி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதை தொடர்ந்து இந்த மாநிலத்துக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வடக்கு கோவாவில் உள்ள அரம்பால் கடற்கரையில் 20 வயது ரஷ்ய பெண் ஒருவர் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த 4 இளைஞர்கள் அவரை பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த பெண் கூச்சல் போட்டதை தொடர்ந்து 4 பேரும் தப்பியோடினர். பொதுமக்கள் அவர்களை பிடிக்க ஓடினர். இதில் சாய்கிரண் என்ற இளைஞர் மட்டும் பிடிபட்டார். அவரை அடித்து, உதைத்த பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரான் விமான விபத்தில் 32 பேர் உயிர் பிழைப்பு
ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 102 பயணிகளுடன் உருமியே என்ற நகருக்கு நேற்று சென்றது. தரையிறங்கும் முன்பு விமானம் தரையில் விழுந்து துண்டு துண்டாக நொறுங்கியது. ஆனால் விமானம் தீப்பிடிக்கவில்லை. இந்த விபத்தில் 70 பயணிகள் பலியாயினர். 32 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் பனிமூட்டம் அதிகம் இருந்ததால் மீட்பு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஈரானில் உள்ள பெரும்பாலான விமானங்கள் 1979&ம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டவை. போயிங், ஏர்பஸ் விமானங்களுடன் ரஷ்யாவின் டுபோலேவ்&145 விமானங்களும் பயணிகள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பழைய விமானங்கள், மோசமான பராமரிப்பு காரணமாக ஈரானில் விமான விபத்து அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஈரானில் கடந்தாண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 168 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 படமாவது நடிப்பேனா? கார்த்திகா ஆதங்கம்
எனது அம்மா பிரபல நடிகையாக இருந்தவர். நான் சினிமா வாசனையே படாமல் மும்பையில் வளர்ந்தேன். மேனேஜ்மென்ட் டிகிரி முடிப்பதில்தான் கவனமாக இருந்தேன். திடீரென்று நடிக்க வந்துவிட்டதால் படிப்பெல்லாம் அப்படியே நின்றுவிட்டது. நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறேன். ‘கோÕ படத்தில் கே.வி.ஆனந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. துப்பறியும் பத்திரிகை நிருபர் ரேணுகா என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். போட்டோகிராபராக ஜீவா நடிக்கிறார். இதன் பாடல் காட்சி ஒன்று நார்வேயில் படமானது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்Õ பட இயக்குனர் டேனி பாயல் தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் என தகவல் வருகிறது. அது வெறும் புரளிதான். மலையாளத்தில் நான் நடித்த ‘மகரமஞ்சுÕ படத்தை பார்த்த டேனி பாயல், எனது நடிப்பை பாராட்டியதாக இயக்குனர் சந்தோஷ் சிவன் என்னிடம் தெரிவித்தார். எனது புதிய படங்கள் பற்றிய முடிவை அம்மாவிடமே விட்டிருக்கிறேன். அவர் 200 படங்கள் நடித்திருக்கிறார். இப்போதுள்ள போட்டியில் நான் 20 படம் கூட நடிப்பேனா என்பது தெரியாது. எனவே அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்.
இசை சொன்னதை கேட்ட இயக்குனர்
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...மவுன ராக நடிகரு மறுபடியும் நடிக்க வந்ததும் அவரை ஹீரோவா போட்டு படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாம இருந்த தயாரிப்புங்க குஷியானாங்க. எப்படியாவது நடிகரோட ரெண்டு படம் வந்ததுன்னா, அதைக்காட்டி பெட்டில தூங்குற தங்களோட படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு கணக்கு போட்டாங்க... போட்டாங்க... ரிலீசான படங்கள் சரியா போகல. திரும்ப நடிகருக்கும் வாய்ப்பு வரல. இதனால கணக்கு போட்டவங்க கவலைய¤ல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... திருநங்கைகளை பற்றிய நர்த்தகமான படத்துக்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. இதை கேள்விப்பட்டதும் திருநங்கைகள் அமைப்பை சேர்ந்தவங்க உர்ராயிட்டாங்களாம்... உர்ராயிட்டாங்களாம்... இது பற்றி சென்சார் போர்டு அதிகாரியிடம் கேட்க, 10 திருநங்கைங்க கூட்டமா போனாங்களாம். உஷாரான அதிகாரிங்க, உதவியாளரை அனுப்பி ‘அதிகாரி வெளியே போயிருக்காருÕன்னு  சொல்லி வந்தவங்களை திருப்பி அனுப்பிட்டாங்களாம். ஆனா திருநங்கைகளோ ‘மறுபடியும் வருவோம்Õன்னு எச்சரிக்கை பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...செல்வமான இயக்கமும், இளைய இசையும் திரும்ப சேர்ந்து படம் பண்றாங்க.. பண்றாங்க.. அந்த படத்துக்கு ஏற்கனவே இன்ஷியல் இசை போட்ட பாடல் ஒண்ணு பெட்டியில இருக்காம்... இருக்காம்... அதை யூஸ் பண்ணலாம்னு இயக்கம் நினைச்சாராம். ஆனா, அது வேணாம்னு இசை சொன்னதால இயக்கமும் சரின்னு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
படக் குழுவுக்கு மலைவாழ் மக்கள் கண்டிஷன்
1907ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி மெக்டெகல் என்பவர், மரண தருவாயிலிருந்த 7 பேர்களின் நிலை பற்றி ஆராய்ச்சி செய்தார். அவர்கள் ஒவ்வொருவர் இறந்தபோதும் அவர்களின் ஒரிஜினல் எடையில் 21 கிராம் குறைந்திருந்தது. அந்த எடைதான் உயிரின் எடை என்று அவர் குறிப்பிட்டார். அதைக் குறிக்கும் வகையில் ‘உயிரின் எடை 21 அயிரிÕ. ரவுடியிஸம் செய்பவர்கள், உயிர் பயம் இல்லாமல் மோதுகிறார்கள். அவர்களுக்கு உயிரின் அருமையை விளக்கும் கதை. இதன் ஷூட்டிங் நாகர்கோவில் பேச்சிப்பாறை அணை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியான மோதிரமலை வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்டது. இங்கு 200 மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். படப்பிடிப்பு குழுவினருடன் அங்கு சென்றதும், அவர்கள் துருவித் துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பிறகு ஷூட்டிங் நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிந்து சமாதானம் அடைந்தனர். மேலும் தங்களில் சிலரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டனர். அதை ஏற்று சிலரை படத்தில் நடிக்க வைத்தோம். மாலை 6 மணிக்கு மேல் அந்த கிராமத்தில் யாரும் தங்கக் கூடாது என்பதால் நாங்கள் வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து தங்கினோம். மறுபடியும் காலையில் ஷூட்டிங்கிற்கு புறப்படுவோம். இதில் ஹீரோயினாக புதுமுகம் வினிதா நடிக்கிறார். இப்படத்தின் ரிலீசுக்கு முன் மோதிரமலை வாழ்மக்களுக்கு அப்பகுதியில் பிரத்யேகமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து படத்தை திரையிட உள்ளோம்.
கிளிப்பிங்ஸ்
‘களவாணி' சற்குணம் இயக்கும் ‘வாகை சூட வா' படத்தில் 60களில் வாழ்ந்த இளைஞன்போல் நடிக்கிறார் ஹீரோ விமல்.சமீபத்தில் மாதவன், பாலிவுட் ஹீரோ சல்மான் கானை சந்தித்தார். அவருக்கு அன்பு பரிசாக வாட்ச் ஒன்றை வழங்கினார் சல்மான்.அஜீத் நடித்த ‘சிட்டிசன்' படத்தை இயக்கிய சரவண சுப்பையா ‘நெல்லை சம்பவம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.உடலை ஸ்லிம்மாக வைக்க யோகா செய்து வந்த த்ரிஷா, தற்போது ஷூட்டிங் காரணமாக சில மாதங்களாக யோகா செய்யவில்லையாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 7 படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். சில காட்சிகளில் நடிக்க த்ரிஷாவை கேட்டுள்ளனர்.டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர்கள் ஜேடி&ஜெர்ரி தங்கள் அறக்கட்டளை சார்பில் இலக்கியவாதிகளுக்கு சாரல் விருது வழங்குகின்றனர். இந்தாண்டு எழுத்தாளர் அசோகமித்ரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது : டைரக்டருடன் ஷோபனா காதலா? வெண்ணிற ஆடை மூர்த்தி பேட்டி
நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பது மட்டுமல்ல.. தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர் ஷோபனா. நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் தடங்கலின்றி பேசுவார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விஷயம் நேற்று இரவுதான் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தொலைக்காட்சியில் 11 வருடம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். 9 வருடம் எனது குழுவில் ஷோபனா நடித்திருக்கிறார். சினிமாவிலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்னும் 2 வருடம் அவர் நடித்திருந்தால் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக உயர்ந்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார்.நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
துபாயில் 2 வருஷத்தில் பிளாஸ்டிக் பை.. குட்பை!
மளிகை கடைக்கும் காய்கறி கடைக்கும் வெறுங்கையை வீசிக்கொண்டு போய்விட்டு ‘கேரிபேக்’ உரிமையை நிலைநாட்டுவது பலருக்கும் வழக்கம். வீட்டில் இருக்கும் உருப்படிகள் ஒவ்வொன்றையும் கணக்கெடுத்தால் பெரும்பாலான வீடுகளில் கேரிபேக் எண்ணிக்கைதான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும்.உலகம் முழுக்க 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பை இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 ஆயிரம் கோடி. இந்த நிலையில், பிளாஸ்டிக் பைக்கு இன்னும் 2 ஆண்டில் ‘மங்களம் பாட’ ஐ.அ.எ. அரசு முடிவு செய்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளின் இந்த ஐடியாவுக்கு அரசு ஏக மனதாக ஓகே சொல்லியிருக்கிறது.திட்டமிட்டபடி இலக்கை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரஷீத் அகமது பின் பகாத் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உணர்ந்திருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளன. இவற்றை மதித்து நடப்பதாக பெட்ரோகெமிக்கல் கம்பெனிகளும் கூறியுள்ளன. மக்களின் முழு ஒத்துழைப்புடன் 2013&க்குள் பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக ஐ.அ.எ. உருவாகும்’’ என்றார்.தென்மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெர்சியன் வளைகுடா அருகே உள்ளது. அபுதாபி, அஜ்மன், துபாய், புஜைரா, ரஸ்அல்கைமா, ஷார்ஜா, உம்அல்குவைன் ஆகிய 7 எமிரேட்கள் இதில் உள்ளன. 2013 முதல் 7 எமிரேட்களிலும் பிளாஸ்டிக் பைகள் தடை  செய்யப்பட உள்ளன.
வாரிசு வளருமா.. வளராதா? கம்ப்யூட்டர் கிளிக் சொல்லும்
குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஐவிஎப் (இன்விட்ரோ பெர்டிலைசேஷன்) எனப்படும் செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை. அதிகம் செலவானாலும் சிலருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. சிலர் பல முறை முயற்சித்தும் தோல்வியே தொடர்கிறது. அடுத்த முறையாவது வெற்றிகரமாக முடியுமா? ‘உறுதியாக சொல்ல முடியாது. பார்க்கலாம்’ என்பார் டாக்டர். ஓரளவு வசதியானவர்கள் தாக்குப் பிடிக்கலாம். நடுத்தர, ஏழை மக்களால் முடியுமா. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கின்றனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.கிளாஸ்கோ மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் ஸ்காட் நெல்சன் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். ஐவிஎப் முறையில் குழந்தை பிறக்குமா என்பதை துல்லியமாக கண்டறியும் பார்முலா ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றி நெல்சன் கூறியதாவது:செயற்கை கருவூட்டல் முறையில் வெற்றி கிடைக்குமா என்பதை கண்டறிய ஒரு பார்முலாவையும் ஒரு கருவியையும் உருவாக்கியுள்ளோம். செல்போன், கால்குலேட்டர் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ivfpredict.com என்ற இணையதளத்தில் படிப்படியாக தகவல்களை பூர்த்தி செய்தால் குழந்தை உருவாவதற்கான வெற்றி வாய்ப்பு சதவீதத்தை தெரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட் போன்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடியும்.பெண்ணின் வயது, எத்தனை ஆண்டுகளாக முயற்சிக்கிறீர்கள், சொந்த கருமுட்டையா.. மற்றவரிடம் இருந்து பெற்றதா என்பது உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பதிலை அடுத்தடுத்து கிளிக் செய்தால், செயற்கை கருவூட்டல் வெற்றி வாய்ப்பு சதவீதம் வந்துவிடும்.2003 முதல் 2007 வரை சுமார் 1.44 லட்சம் பேரிடம் கிடைத்த ரிசல்ட்டை வைத்து இந்த பார்முலா உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஸ்காட் நெல்சன் கூறியுள்ளார்.
‘யூ’ டர்ன் ஜுஜூபி.. ‘ஓ’ டர்ன் போடலாம்
சென்னை போன்ற பெரு நகரங்களில் சவாலான விஷயம் வாகனம் ஓட்டுவது. ஓரமாக போனாலும் தட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். சிக்னல், ஒன்வே, நோவே இம்சைகள் தனி. யூ டர்ன் இருப்பதை கவனிக்காமல் வந்துவிட்டால் அடுத்த மாவட்டம் வரை போய் யூ டர்ன் எடுக்க வேண்டிய அளவுக்கு பாடாய் படுத்தும். டிராபிக் ஜாம் அதைவிட கொடுமை. இன்ச்கூட நகர முடியாமல் மணிக்கணக்கில் ‘டயர் கடுக்க’ நிற்க வைத்துவிடும்.இந்த சகல பிரச்னைகளையும் சமாளிக்கிற வகையில் சூப்பர் கார் ஒன்று உருவாக்கியிருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஜெனரல் மோட்டார்ஸ்’. ‘இஎன்வி ஸ்மார்ட் கார்’ & இதுதான் காரின் பெயர். அதாவது, எலக்ட்ரிக் நெட்வொர்க்டு வாகனம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.லித்தியம் பேட்டரியில் இயங்கக் கூடியது. வீட்டில் சார்ஜ் போட்டு புறப்பட்டால் 40 கி.மீ. வரை போக முடியும். அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் போகலாம். இரண்டே சீட். இரண்டே சக்கரங்கள். நின்ற இடத்திலேயே 360 டிகிரி கோணத்துக்கு கார் சுற்றும். பின்னால் உரசுகிற அளவுக்கு வேறொரு வாகனம் வந்து நிற்கிறதா? இறங்கிவர தேவையில்லை. அப்படியே காரை பின்பக்கமா திருப்பி, காரில் இருந்தபடியே அந்த ஆளை எச்சரிக்கலாம்.காரை நாமே ஓட்ட வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ‘ஜிபிஎஸ் உதவியுடன் நீயே ஓட்டிக்கொள்’ என்று கமாண்ட் கொடுத்துவிட்டால் சென்சார், ஜிபிஎஸ் கருவிகள், கேமரா உதவியுடன் கார் தானாகவே ஓடும். பார்க்கிங் காலியாக இருக்கிற இடங்களில் பார்க் செய்யும். மிஸ்டு கால் கொடுத்தால் நாம் இருக்கும் இடம் தேடிவந்து பிக்கப் செய்துகொள்ளும்.சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மே முதல் அக்டோபர் வரை நடந்த உலக கார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. சியாவ் (லாஃப்), ஜியாவ் (பிரைடு), மியாவ் (மேஜிக்) என்று 3 மாடல்களில் அப்போது அறிமுகமானது. அமெரிக்காவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை மண்டை ஓட்டில் 8000 வைரக்கற்கள் பதிப்பு
வித்தியாசமாக சாதனை படைக்க நினைப்பவர்கள் பலர். அந்த வகையை சேர்ந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த கலை படைப்பாளி டேமியன் ஹர்ஸ்ட் (45). வில்லங்கமாய் சிற்பங்கள் படைப்பதிலும் ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். இறந்த மாடு, ஆடு, சுறா ஆகியவற்றை வைத்து பல சிற்பங்களை படைத்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் இவர் படைத்திருக்கும் படைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டை ஓட்டில் 8 ஆயிரம் வைரக் கற்களை பதித்திருப்பதுதான் அந்த படைப்பு. இது பிறந்து 2 வாரம் ஆவதற்குள் இறந்துபோன குழந்தையின் மண்டை ஓடு. வெள்ளை வைரம், பிங்க் நிற வைரம் என 8 ஆயிரம் கற்களை இதில்தான் பதித்திருக்கிறார் டேமியன். ‘ஃபார் ஹெவன்ஸ் சேக்’ என்று இந்த படைப்புக்கு பெயர் வைத்திருக்கிறார்.மண்டை ஓட்டில் வைரக்கல் பதிப்பது டேமியனுக்கு புதிதல்ல. 2007&ல் பெரிய ஆள் மண்டை ஓட்டில் இவ்வாறு செய்தார். அது ரூ.450 கோடிக்கு ஏலம் போனது. அவரது பழைய படைப்புகளை வரவேற்றவர்கள் இப்போதும் புகழ்ந்திருக்கிறார்கள். 19&ம் நூற்றாண்டை சேர்ந்த பொருட்கள் சேகரித்தபோது இந்த ஓடும் கிடைத்தது. அதை அழகாக மாற்றியது டேமியனின் திறமை என்று பாராட்டுகிறது ஆதரவு வட்டாரம். ஆனால், இங்கிலாந்து மற்றும் சில நாடுகளில் இதற்கு கடும் கண்டனம். ‘‘குழந்தையின் மண்டை ஓடு எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகிய கலையாக தெரியாது. கொடூரமாகத்தான் தெரியும்’’ என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். ஹாங்காங்கில் விரைவில் இது காட்சிக்கு வைக்கப்படுகிறது.
அமெரிக்க பள்ளியில் கபடி கபடி
இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று கபடி. பொங்கல் திருவிழா என்றால் கிராமங்களில் இப்போதும் கபடி விளையாட்டுகள் களைகட்டும். ஆடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பவர்களுக்கும் உற்சாகம் தரும் இந்த விளையாட்டை அமெரிக்க பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளார் இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர்.கேரளாவை சேர்ந்தவர் அஜய்குமார் நாயர். அமெரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பள்ளியில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆசிரியர். இவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கபடி. ஓய்வு நேரத்தில் தனது மாணவர்களுக்கும் கபடி சொல்லிக் கொடுத்தார். மூச்சு விடாமல் கபடிக் கபடி சொல்லிக் கொண்டே வியர்க்க விறுவிறுவிக்க விளையாடுவது அமெரிக்க பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. பள்ளிக்கூட ஸ்போர்ட்ஸ் லிஸ்ட்டில் கபடியையும் சேர்த்துவிட்டார்கள்.
பயிற்சி ஆட்டத்திலும் இங்கி.வெற்றி
ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு 20-20 மற்றும் 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது. 20-20 ஆட்டம் வருகிற 13-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி பிரதமர் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோதியது. 43 ஓவர்கள் கொண்டதாக இந்த ஆட்டம் நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த பிரதமர் லெவன் அணி 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் 35 ஓவரில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என இங்கிலாந்து அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 33.3 ஓவரில் 225 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இயான்பெல் 102 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 124 ரன்கள் விளாசினார்.
பஞ்சாப் அணிக்கு கில்கிறிஸ்ட் கேப்டன்
ஐபிஎல் 4வது சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆஸி. அணியின் மாஜி வீரர் கில்கிறிஸ்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசனில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்தார். 2வது சீசனில் இவர் தலைமையிலான அணி பட்டம் வென்றது. இந்நிலையில் 4வது சீசனில் பஞ்சாப் அணி கேப் டனாக கில்கிறிஸ்ட் இருப் பார் என பயிற்சியாளர் பெவன் தெரிவித்தார்.
இர்பானை இழந்தது வருத்தம் கில்கிறிஸ்ட் கிடைத்தது மகிழ்ச்சி
ஐ.பி.எல். ஏலத்தில் ஆல்ரவுண்டர் இர்பான் பதானை இழந்தது வருத்தமளிக்கிறது என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். ஐ.பி.எல் டி20 வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் கடந்த சனி, ஞாயிறு நடந்தது. முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் எடுப்பக்கப்பட்டனர். கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் இடம்பெற்றிருந்த இர்பான் பதானை இந்த முறை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது.இதுகுறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது: இர்பான் அருமையான வீரர். பவுலிங், பேட்டிங் இரண்டிலும் கில்லாடி. மிகவும் தைரியசாலி. எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவரை மீண்டும் எங்கள் அணியில் இடம் பெறச்செய்ய கடுமையாக போராடினோம். ரூ.8 கோடியே 28 லட்சம் வரை ஏலம் கேட்டோம். ரூ.9 கோடிக்கு டெல்லி அணி இர்பானை ஏலம் எடுத்துவிட்டது. எங்களுக்கு இது ஏமாற்றம்தான். நாம் வாங்க விரும்பும் வீரர்கள் எல்லோரும் கிடைப்பதில்லை. ஆஸ்திரேலியே விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறிஸ்ட்டை ரூ.4 கோடிக்கு வாங்கியது ஓரளவு ஆறுதலாக உள்ளது.நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்க காரணம் கில்கிறிஸ்ட். அவர் முன்பு டெக்கான் அணியை வெற்றிபெற செய்தவர். உற்சாகமான வீரர். சிக்கலான நேரங்களிலும் நிதானமாக செயல்படுவார். அவரை ஏலம் எடுத்த பின் எஸ்.எம்.எஸ்.சில் தகவல் பரிமாறிக்கொண்டோம். நேரில் இனிதான் சந்திக்க வேண்டும். இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார். ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடும் பஞ்சாப் அணி வீரர்களை கட்டியணைத்து உற்சாகப்படுத்துவது பிரீத்தி ஜிந்தாவின் வழக்கம். இந்த முறை அந்த யோகம் கில்கிறிஸ்ட்டுக்கு அடித்திருக்கிறது.
மெஸிக்கு பிபா விருது
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சுவிஸ் நாட்டின் ஜுரிச் நகரில் நேற்று நடந்தது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லயோனல்மெஸி பிபா விருதை தட்டிச் சென்றார். மெஸி உலககோப்பை போட்டியில் ஜொலிக்காவிட்டாலும் பார்சிலோனா அணிக்காக மட்டும் கிளப் போட்டிகளில் கடந்த ஆண்டில் 58 கோல்கள் அடித்துள்ளார். பிபாவின் இந்த விருதை பெரும்பாலும் பார்சிலோனா அணிக்காக ஆடும் வீரர்களே பெற்று வந்துள்ளனர். மெஸி இந்த விருதை வெல்வது 2வது முறையாகும்.
இந்தியா - தென் ஆப்ரிக்கா ஒன்டே நாளை ஸ்டார்ட்
தென் ஆப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த 20-20 ஆட்டத்தில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் டர்பனில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் போட்டியை டென் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.அடுத்த மாதம் 19-ம் தேதி உலககோப்பை தொடங்க உள்ளதால் தென் ஆப்ரிக்க போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சச்சின் நீண்ட நாளுக்குப்பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சேவாக், காம்பீர் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சச்சினுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.அனேகமாக சச்சினுடன் கோஹ்லி அல்லது முரளிவிஜய் இணைவார் என தெரிகிறது. இளம் வீரர்களான ரெய்னா, யூசுப்பதான், ரோகித்சர்மா மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர் தங்களது திறமையை காட்ட இந்த தொடர் சிறந்த வாய்ப்பாகும். உலககோப்பைக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் எல்லா வீரர்களுமே ஜொலிக்க முயற்சிப்பார்கள். இதற்கிடையே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசாந்த், பிரவீன்குமார் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர். நாளைய ஆட்டத்தில் இவர்கள் களமிறங்கும் வாய்ப்பு குறைவு. ஜாகீர்கான், நெக்ரா கூட்டணி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும். சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன்சிங்குடன் அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளது.தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும். ஸ்மித் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அந்த அணி கூடுதல் வலுவடையும். காலிஸ் ஆடாதது அந்த அணிக்கு இழப்பாக இருக்கும். டிவிலியர்ஸ், டும்னி, ஆம்லா பேட்டிங்கில் நெருக்கடி கொடுப்பார்கள். ஸ்டெய்ன், சோட்சோபி, மோர்னே மோர்க்கல் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
டைரக்டருடன் ஷோபனா காதலா? தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது
‘நடிகை ஷோபனாவின் திடீர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவர் டைரக்டரை காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று கூறினார் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.  ‘ஜெகன்மோகினி’, ‘சுறா’ ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் டி.வி. காமெடி தொடர்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகை ஷோபனா (32). இவர் நேற்று காலை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஷோபனா தற்கொலை பற்றி அவரது அம்மா வைரம் ராணி கூறும்போது,  வங்கிக்கு போய் செக்கை போட்டுவிட்டு வருவதற்குள் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டிருக்கிறாள். சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில்தான் குணம் அடைந்தாள். அதனால் சில நாட்கள் ஷூட்டிங் செல்லவில்லை. அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஷோபனா ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் நிறைவேறவில்லை. இதனால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார்.காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இன்று அளித்த பேட்டியில் கூறியது: நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பது மட்டுமல்ல.. தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர் ஷோபனா. நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் தடங்கலின்றி பேசுவார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விஷயம் நேற்று இரவுதான் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தொலைக்காட்சியில் 11 வருடம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன்.9 வருடம் எனது குழுவில் ஷோபனா நடித்திருக்கிறார். சினிமாவிலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்னும் 2 வருடம் அவர் நடித்திருந்தால் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக உயர்ந்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார். நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பூகம்பம் பாதித்த ஹைதியில் அனாதை குழந்தைகள் விற்பனை
ஹைதி தீவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பூகம்பத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர். இவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களிலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களை கடத்தி விற்கும் செயலில் ஒரு கும்பல் இறங்கியது. ஒரு குழந்தையை 30 பவுண்டுக்கு (ரூ.2,100) விற்றனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போனதால், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கடத்தல் கும்பலை பிடித்தது. பிராஸ்கல் ஆன்ட்ரே(32) என்ற கடத்தல்காரன் கூறுகையில், ÔÔநான் இதுவரை 45 குழந்தைகளை விற்றுள்ளேன். ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை கவனிக்க இங்கு யாரும் இல்லை. டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த மாதம் இங்கு வந்து 500 டாலருக்கு (ரூ.23 ஆயிரம்) இரண்டு பெண் குழந்தைகள் வேண்டும் என கேட்டார். இரண்டு பெண் குழந்தைகளை கடத்தி கொடுத்தேன். சிறுமிகளை எதற்காக அவர் வாங்கிச் சென்றார் என்பது தெரியாதுÕÕ என்றார்.  கடத்தப்பட்ட குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் ஹைதி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலைக்காரிக்கு சூடு : சவுதி பெண்ணுக்கு சிறை
இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் துபாயில் வீட்டு வேலைக்காக செல்கின்றனர். இவர்களில் பலர் எஜமானிகளின் கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. துபாயில் வசிக்கும் சவுதி பெண் ஒருவர் வீட்டில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமியதி என்ற பெண் வேலை செய்தார். அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார் எஜமானி. இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இந்தோனேஷிய தூதரக அதிகாரிகள், சவுதி அரசிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துபாய் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சவுதி பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமியதி, மெதினா கோர்ட்டில் ஆஜராகி தன் உடலில் இருந்த காயங்களை நீதிபதியிடம் காண்பித்தார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து போர் கப்பலை பள்ளியாக மாற்ற முயற்சி
இங்கிலாந்து கடற்படையில் இருந்து எச்.எம்.எஸ் இன்வின்சிபிள் போர்க் கப்பல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டது. அந்த கப்பலை ஏலத்தில் எடுத்து பள்ளிக் கூடமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஹாங்காங் தொழிலதிபர் லாம் கின்&பாங். இதற்காக அந்த போர்க் கப்பலை ரூ.35 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளார் லாம். ஏலத்தில் இவர் ஜெயித்தால் 22 ஆயிரன் டன் எடையுள்ள பிரமாண்ட கப்பல் சீனாவின் ஜூகாய் நகருக்கு கொண்டு வரப்பட்டு பள்ளிக்கூடமாக மாற்றப்படும். இந்தக் கப்பல் 1977ம் ஆண்டு இங்கிலாந்து கடற்படையில் சேர்க்கப்பட்டது. கடந்த 1982ம் ஆண்டு அர்ஜென்டினாவுடன் பல்க்லேண்ட் தீவுகள் தொடர்பாக மோதல் ஏற்பட்ட போது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து ராணுவ செய்தி தொடர்பாளர், ÔÔவிற்பனை செய்யப்படுவதற்கு முன்பு கப்பலில் உள்ள போர்க் கருவிகள் அனைத்தும் அகற்றப்படும்ÕÕ என தெரிவித்தார்.
1 கோடி ஏடிஎம் பணத்துடன் வேன் டிரைவர் ஓட்டம்
ஜெய்ப்பூர் நகரில் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் வைக்கும் பொறுப்பு சிஎம்எஸ் என்ற செக்யூரிட்டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நேற்று, அஷோக் நகரில் உள்ள ஏடிஎம்களில் பணம் வைப்பதற்காக ஒரு பாதுகாவலர் துணையுடன் 3 ஊழியர்கள் வேனில் புறப்பட்டனர். மோகன்லால் என்பவர் வேனை ஓட்டினார். ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் பணம் வைப்பதற்காக பாதுகாவலரும், 3 ஊழியர்களும் ரூ. 15 லட்சம் பணத்துடன் உள்ளே சென்றனர். வேனில் ரூ. 1 கோடி இருந்தது. பணத்தை ஏடிஎம்மில் வைத்து விட்டு திரும்பி வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேனுடன் டிரைவர் மோகன்லால் காணாமல் போயிருந்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வயர்லெஸ் வாயிலாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர். மகேஷ்நகர் ஏரியாவில் வேன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் பணம் இல்லை. தலைமறைவான வேன் டிரைவரை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டுள்ளது. மோகன்லால் 3 மாதத்துக்கு முன்புதான் வேலையில் சேர்ந்துள்ளார். வேலையில் சேரும்போது அவர் கொடுத்த இரண்டு முகவரிகளும் போலியானவை என்பது தற்போது  தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவரின் மரண வாக்குமூலம் : மொபைலில் பதிவு செய்தவருக்கு பாராட்டு
வடமேற்கு டெல்லி ரானிபாக் பகுதியைச் சேர்ந்த ஷாகில் கத்ரி, மணிஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். சேர்ந்து தொழில் செய்தபோது வாங்கிய நிலத்தை விற்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ஷாகில் கத்ரி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மணிஷ்யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். அப்போது அந்த வழியாக வந்த குல்பூஷன் என்பவர், ரத்த வெள்ளத்தில் கிடந்த கத்ரியை பார்த்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாகில் கத்ரி தன்னை சுட்டது தனது தொழில் விரோதி மணிஷ்யாதவ் என்ற விவரத்தை குல்பூஷனிடம் தெரிவித்தார். குல்பூஷன் சமயோசிதமாக அதனை தனது செல்போனில் பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் செல்போனை ஒப்படைத்தார். போலீசார் கத்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கத்ரி இறந்தார். செல்போனில் பதிவான வாக்குமூலம் அடிப்படையில் மணிஷ்யாதவை போலீஸ் தேடி வருகின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட குல்பூஷனை போலீசார் பாராட்டினர்.
எச்ஐவி சோதனை கட்டாயமாக்க பெண்கள் ஆணையம் வலியுறுத்தல்
திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் இருவரும் கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய அளவில் பல்வேறு பெண் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக கேரள பெண்கள் ஆணையத் தலைவர் டி.ஸ்ரீதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எச்ஐவி பாதித்த பல பெண்கள், தங்கள் கணவர்கள்தான் அதற்கு காரணம் என எங்களிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் எச்ஐவி பாதித்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் கணவருக்கு திருமணத்துக்கு முன்பே எச்ஐவி பாதிப்பு இருந்ததாகவும் அதை மறைத்து தங்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். எச்ஐவி உள்ள பெண்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. எச்ஐவி பாதித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலை செய்யும் இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர். எனவே திருமணத்துக்கு முன்பாக ஆண், பெண் இருவருக்கும் எச்ஐவி சோதனை செய்வதை கட்டாயமாக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி. எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு சிபிசிஐடி பரிந்துரை
உ.பி. மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ புருஷோத்தம் மீது 17 வயது தலித் பெண் ஒருவர் கடந்த மாதம் பலாத்கார குற்றச்சாட்டு கூறினார். பதிலுக்கு அந்த சிறுமி மீது எம்எல்ஏ திருட்டு புகார் கூறினார். எம்எல்ஏ கொடுத்த திருட்டு புகாரை பதிவு செய்து சிறுமியை சிறையில் அடைத்தது போலீஸ். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசுக்கு முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். இது தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு பதிவு செய்வதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாகவும், சிறுமி மீது திருட்டு வழக்கு பதிவு செய்ய ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்காதலன் திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை
மணலி பலராமன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (38).  திருமணமாகி இரண்டு குழந்தை உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. மது குடிக்கும் பழக்கம் உண்டு. சிவக்குமார் சரக்கு வாங்க டாஸ்மாக் கடைக்கு வரும்போது நாகம்மாளும் வருவார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கணவர், குழந்தைகளை விட்டு விட்டு நாகம்மாள், சிவக்குமாருடன் வந்தார். கணவரின் நடவடிக்கை பிடிக்காததால் சிவக்குமாரின் மனைவி அவரை பிரிந்து போய்விட்டார். சிவக்குமார், நாகம்மாள்  தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று சிவக்குமார் மதுவாங்கி வந்தார். வீட்டில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மது     குடித்தார். இருவருக்கும் போதை அதிகமானது. கடைசியில் கொஞ்சம் மது மீதி இருந்தது. இதை யார் குடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. போதையில் இருந்த நாகம்மாள் டம்ளரில் இருந்த மதுவை எடுத்து குடித்துவிட்டார். இதனால் சிவக்குமார் ஆத்திரம் அடைந்தார். காதலியை திட்டி விட்டு வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த நாகம்மாள் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் சிவக்குமார் வீட்டிற்கு திரும்பி வந்தார். கோபித்துக்கொண்டு நாகம்மாள் கதவை பூட்டியுள்ளார் என்று நினைத்து வீட்டின் கதவை தட்டினார். நீண்டநேரமாக திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தூக்கில் தொங்கிய நாகம்மாளின் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மணலி இன்ஸ்பெக்டர் அரி மற்றும் போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமாரிடம் போலீசார் விசாரிக்கிறார்கள்.