text
stringlengths
4
969
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம்,—
1994ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் 2(7) ஆம் பிரிவின் பிரகாரம் அக் குழுவின் தவிசாளரினதும் அதன் அங்கத்தவர்களினதும் எரிபொருள் கொடுப்பனவுகள் 2012.05.01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு பின்வருமாறானதாக அமைதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது .
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு மாதாந்தம் பெற்றோல் அல்லது டீசல் 225 லீற்றரையும் அதன் அங்கத்தவர்களுக்கு மாதாந்தம் பெற்றோல் அல்லது டீசல் 170 லீற்றரையும் வழங்க அல்லது அதற்குச் சமமான சந்தை விலைகளுக்கேற்ப கொடுப்பனவொன்றைச் செலுத்த வேண்டுமென்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய எரிபொருள் கொடுப்பனவுகள் தொடர்பில் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளினால் தீர்மானிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவுகளுக்குப் பதிலாக இந்தப் பிரேரணையினால் தீர்மானிக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள் பதிலீடு செய்யப்படல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் மேலும் தீர்மானிக்கின்றது.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் .
குழு
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்.
குழு
காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்,
உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்,
1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, உரித்துப் பதிவுச் சட்டத்தின் 60 ஆம் 62 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2009 ஓகத்து மாதம் 24 ஆந் திகதிய 1616/23 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,
மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை,
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் அனுமதி பெற்ற ஹோட்டல்களுக்குள் மதுபானம் பரிமாறுவது தொடர்பில் விதிக்கப்பட்டு, 2011, சனவரி மாதம் 21 ஆம் திகதிய 1689/20 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.02.10ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட துமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.
மதுவரி அறிவித்தல் இலக்கம் 935.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சர்,
தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை,
தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 திசெம்பர் மாதம் 06 ஆந் திகதிய 1735/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.12.13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.
ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்.
அரச ஊழியர் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் .
தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்.
எழுத்துமூல விடைக்கான வினாக்கள்.
கெளரவ தயாசிறி ஜயசேகர,
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு,
2011 ஆம் ஆண்டுக்காக லக் சதொச நிறுவனத்துக்கு பருப்பு வழங்கிய வழங்குநர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் யாவை;
மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா;
ஆமெனில், குறித்த கேள்விப் பத்திரத்துக்காக விலைமனுக்களைச் சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
மேற்படி கேள்விப் பத்திரத்துக்கமைய வழங்குநர்களினால் பருப்பு வழங்கப்பட வேண்டிய கால எல்லை யாது
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
இன்றேல், ஏன்?
கெளரவ தயாசிறி ஜயசேகர,
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு,
2011 ஆம் ஆண்டில் லக் சதொச நிறுவனத்திற்கு சீனி வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குனர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை;
மேற்படி வழங்குனர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா;
ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை;
மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குனர்களால் சீனி வழங்கப்பட வேண்டிய கால வரையறை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
இன்றேல், ஏன்?
கெளரவ தயாசிறி ஜயசேகர,
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு,—
2011 ஆம் ஆண்டில் லக் சதொச நிறுவனத்திற்கு முட்டை வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை;
மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா;
ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை;
மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குநர்களால் முட்டை வழங்கப்பட வேண்டிய கால வரையறை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
இன்றேல், ஏன்?
கௌரவ தயாசிறி ஜயசேகர,
கூட்டுறவு,உள்நாட்டுவர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,
இலங்கையில் லக் சதொச நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
2011 ஆம் ஆண்டில் லக் சதொச நிறுவனத்திற்கு கோழி இறைச்சி வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குனர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை;
மேற்படி வழங்குனர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா;
ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை;
மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குனர்களால் கோழி இறைச்சி வழங்கப்பட வேண்டிய கால எல்லை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
இன்றேல், ஏன்?
கௌரவ அகில விராஜ் கரரியவசம்,
கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,
1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் கல்வி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நியமனங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பதவிப் பெயர் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தனித்தனியே யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் சம்பளத் திருத்தத்திற்கு ஏற்ப ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்தி்ற்கும் உரித்தாகும் அடிப்படை மாதாந்தச் சம்பளம் தனித்தனியே யாவை;
அரசாங்க ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மாதாந்த சம்பளத்திற்கு மேலதிகமாக உரித்தாகும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்திற்கு ஏற்ப தனித்தனியே யாவை
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
இன்றேல், ஏன்?
கௌரவ அகில விராஜ் கரரியவசம்,
கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,
1990ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் டெங்கு நோய் தொற்று, வாகன விபத்துகள், தற்கொலை, உணவு நஞ்சாகுதல், உடல் அல்லது உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகுதல் ஆகிய காரணங்களால் வருடாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் கல்வி பயின்ற பாடசாலைகளும் தனித்தனியே யாவை;
கடந்த வருடத்தில் பல்வேறு தவறுகளுக்காக குற்றஞ்சுமத்தப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, பிள்ளையின் வயதெல்லை மற்றும் பாடசாலைக்கு ஏற்ப தனித்தனியே யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
இன்றேல், ஏன்?