text
stringlengths
4
969
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தரரிசு சேவை காலங்கடந்த சட்டங்களைக் கொண்டுள்ளதால் அது தொடர்பாக மீள பரிசீலனை செய்து தற்காலத்திற்குப் பொருத்தமானவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
உலர் வலய சேனைப் பயிர்செய்கையாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுதல்,
உலர் வலயங்களில் சேனைப் பயிர்செய்கையாளர் களால் பயிரிடப்படுகின்ற நெல், குரக்கன், பயறு, எள்ளு ஆகிய பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை பதனிடுவதற்கும் ஏதுவான வகையில் புதிய தொழிட்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரச்சிறப்புவாய்ந்த வகையில் உற்பத்திகளை பதனிடுவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை வலுவூட்டுவதற்கும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு கம்பனிகள் தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பதிரண,
ஆசிரியர் ஆலோசனை சேவையை உருவாக்குதல்,
இலங்கையில் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இற்றைக்கு சுமார் இருபது (20) வருடங்களுக்கு முன்னர் தொட்டு ஆரம்பமாகி நடைமுறையிலிருக்கும் ஆசிரியர் ஆலேசானை சேவையை தனியானதொரு சேவை அலகாக தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ ருவண் ரணதுங்க,
உப பிரிவாக்கல் தடை செய்யப்பட்டுள்ள அரசாங்க அளிப்பு பத்திர காணிகளின் உப பிரிவாக்கல் அதிகாரத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்தல்,—
ஜய பூமி, சுவர்ண பூமி,ரத்ன பூமி ஆகிய அரசாங்கக் காணி அளிப்புப் பத்திரங்களைக் கொண்டுள்ளவர்களின் காணிகளில் உப பிரிவாக்கல் தடை செய்யப்பட்டுள்ளதெனினும், ஆரம்பக் காணி பெற்றவர்களின் இரண்டாம் பரம்பரையின் உரிமையை உறுதி செய்வதற்கும் அவர்களின் வீடு, தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் உப பிரிவாக்கலுக்கான தேவை தோன்றும் போது மாகாண ஆணையாளர், காணி ஆணையாளர் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடனான தற்போது நடைமுறையில் உள்ள நீண்ட செயன்முறையை குறுகியதாக்கி உப பிரிவாக்க அதிகாரத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்,—
கோதுமை மாவிற்காக வெளிநாடுகளுக்கு வெளிப் பாய்ச்சப்படும் பெருமளவு செலாவணியை நிறுத்தும் நோக்கத்துடன், மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய அரிசி மாவினால் தயரரிக்கப்படும் உணவை பிரபல்யப்படுத்துவதற்கும், நார்த்தன்மை கொண்ட தானிய வகையான அரிசியை மிகவும் மென்மையானதாக கோதுமை மாவைப் போன்று அரைப்பதற்கும், கோதுமை மா அரைப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற இயந்திர உபகரணங்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
யுத்தத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்,
ஏறக்குறைய 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்து வாழ்ந்த மக்கள் மற்றும் நிரந்தர தொழில் புரிந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்க்கைச் சுமையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதியான நிலையில் வாழ்வதால், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
உயர் பிரமுகர்களின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குதல்,—
ஜனாதிபதி பாதுகாப்புச் சேவை மற்றும் பிரதம அமைச்சர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைப் போன்று ஏனைய உயர் பிரமுகர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சமமான பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது.
கெளரவ ருவன் ரணதுங்க,
அரசாங்க வங்கிகளின் வட்டி செலுத்துதலுக்கும் வட்டி அறவிடலுக்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசத்தைக் குறைத்தல்,—
அரசாங்க வங்கிகளில் சாதாரண வைப்புகளுக்கு செலுத்தப்படுகின்ற வட்டி விகிதம் 4 % முதல் 4.5 % வரையிலும் நிலையான வைப்புகளுக்கு செலுத்தப்படுகின்ற வட்டி விகிதம் சுமார் 8 % ஆகவும், வங்கிகளால் வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் விவசாயக் கடன்களுக்கு அறவிடப்படுகின்ற வட்டி விகிதம் சுமார் 12% முதல் 13% வரையிலும் உள்ளதால், மக்களுக்கும் சிறிய அளவிலான வர்த்தகர்களுக்கும் கைகொடுப்பதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்குமாக, இவ்வாறு அறவிடப்படுகின்ற வட்டிக்கும் செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ ருவன் ரணதுங்க,
பட்டதரரி கிராம உத்தியோகத்தர்களை கெளரவிப்பதற்கான ஒரு கொடுப்பனவைச் செலுத்துதல்,
அரசாங்க சேவையை கிராமிய மட்டத்தில் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக சேவையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர்கள் க.பொ.த. (உ/த) பரீட்சையின் பின்னர் போட்டிப் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது சேவையாற்றி வருகின்ற கிராம அலுவலர்களில் சுமார் 30 % முதல் 40 % வரையிலானோர் பட்டத் தகைமைகளைப் பெற்றுள்ளனராதலாலும், இதற்கென எவ்வித விசேட கவனமும் இதுவரை செலுத்தப்படாதுள்ளதனாலும், பட்டத் தகைமையை கெளரவிக்கு முகமாக பட்டதரரி கிராம அலுவலர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ ருவன் ரணதுங்க,
கல்விசார் நூல்கள் தவிர்ந்த தினசரி பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகைகளிலும் புத்தர் பெருமானின் உருவப் படங்கள் பிரசுரிக்கப்படுவதை தடைசெய்தல்,-
தினசரி பத்திரிகைகள் மற்றும் வார சஞசிகைகளில் புத்தர் பெருமானின் உருவப் படங்களும் சிலைகளின் படங்களும் எதுவித கட்டுப்பாடுமின்றி எல்லையற்ற வகையில் அச்சிடப்படுவதோடு அந்த அட்டைகள் பல்வேறுபட்ட பொருட்ளின் உறைகளாகவும் வேறு பொருத்தமற்ற அலுவல்களுக்காகவும் பயன்படுத்தப்படுவது புத்தர் பெருமானுக்குச் செய்கின்ற அவமரியாதையாகுமென்பதால் 2600 ஆம் புத்தர் ஜெயந்தி கொண்டாட்டத்தையும் கருத்திற்கொண்டு இதன் பின்னர் கல்விசார் ᾓல்கள் தவிர்ந்த தினசரி பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகைகளிலும் புத்தர் பெருமானின் உருவப் படங்கள் பிரசுரிக்கப்படுவதை தடைசெய்வதற்குத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
மும்மொழி பேசப்படும் இலங்கைக்காக சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம் ஒன்றைத் தாபித்தல்,
மும்மொழி பேசப்படும் இலங்கைக்கான பத்தாண்டு தேசிய மூலோபாயச் சட்டகம் ஒன்றை வகுத்தலானது, தேசிய ஒருங்கிணைப்புக்கும் சமூக ஒற்றுமைக்குமான ஒரு திருப்புமுனை நடவடிக்கையாக அமையுமெனவும் எனவே சிங்கள மொழிபேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் குறுகிய கால வளமளித்தல் நிழ்ச்சித்திட்டங்களின் வாயிலாக தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுடன் “சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பறிமாறிக்கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு மீள் பெயரிடுதல்,
இலவசக் கல்வியின் தந்தை காலஞ்சென்ற கெளரவ (கலாநிதி) சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு அவரின் பெயரை சூட்டவேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ அஜித் குமார,
முன் பிள்ளைப் பருவக் கல்வி தொடர்பில் தேசிய திட்டமொன்றை உருவாக்குதல்,
எமது நாட்டில், பிள்ளைகளின் கல்வியில் முக்கிய இடம் வகிக்கும் முன் பிள்ளைப் பருவக் கல்வியை (முன்பள்ளிக் கல்வி) வழங்குவது தொடர்பில் தேசிய திட்டமொன்றை தயரரிக்கவேண்டியுள்ளதுடன், முன் பள்ளி நிர்வாகிகளுக்கு முறையான பயிற்சியும், ஆட்சேர்ப்பு முறைமையுடன் சம்பள முறையொன்றும் தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ அஜித் குமார,
காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றிய ஆய்வு ᾓலொன்றைத் தயரரித்தல்,—
காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, தொல்பொருளியல் மற்றும் கலாசார ரீதியில் பெறுமதி வாய்ந்த இடங்கள் பற்றிய பரந்த ஆய்வினை மேற்கொண்டு, அது தொடர்பில் அறிவியல் பெறுமதிமிக்க ஆய்வு ᾓலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துதல் பற்றிய பாராளுமன்றத் தெரி குழுவொன்றை நியமித்தல்,—
தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துதல் பற்றிய பாராளுமன்றத் தெரிகுழுவொன்று நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகிய நிதியங்களிலிருந்து பணம் உடனடியாக செலுத்துதல்,—
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியனவற்றுக்கு பங்களிப்புச் செய்கின்ற சகல அங்கத்தவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள் செயல்படுநிலைத் தொழிலிருந்து ஓய்வு பெற்று ஒரு மாத காலத்தின் பின்னர் அவர்களுக்கான நிலுவைகள் செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
அரச ஊடகங்களில் பக்கச் சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தல்,
அரச ஊடகங்கள் இலங்கைப் பிரசைகளின் விசேட உரிமையாக இருப்பதாலும், அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக அரசியல்மயப்பட்டு இருப்பதாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சகல அரசியல் கட்சிகளுக்கும் அரச ஊடகங்களில் சமமாக நடதப்பட்டு சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
அரச சேவையில் மொழித் தேர்ச்சியின் தேவைப்பாடுகள்,
2025 ஆம் ஆண்டளவில் சகல அரச சேவை ஊழியர்களும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கருமங்களை ஆற்றக் கூடியவர்களாகவும் கடிதப் பரிமாற்றல் மூலம் பணியாற்றுவதற்கும் பேசுவதற்கும் இயலுமையுடையவர்களாக இருப்பதை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டினை வழங்குதல்,
இப்பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1%ற்கு சமமாகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு வருடாந்த அடிப்படையில் உரித்துடையவர்களாகவேண்டுமென்றும் மேலும் இந்த ஒதுக்கீடானது 50% மூலதனச் செலவின்மீது பயன்படுத்தப்படல் வேண்டுமென்றும் எஞ்சியுள்ளவை தனது வாக்காளர்களின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விரும்புகின்றதும் அரசாங்கத்தின் வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டதுமான எவ்வடிப்படையிலும் செலவழிக்கப்படலாமென்றும் இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரன,
பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கற்கை நெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக ஆக்குதல்,—
நாட்டின் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கலைக் கல்விகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக மாற்றி அதன் மூலமாக உருவாகின்ற பட்டதரரிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களை இணைப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ புத்திக பத்திரண,
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற வான்களுக்கான தரநியமங்களை விதித்தல்,
நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரத்தில் இல்லாமையினாலும், சில பாடசாலை வான்களின் ஊழியர்களது நடத்தை சிறந்ததாக இல்லாமையினாலும், உரிய தரநியமங்களுடன் கூடிய வான் சேவையொன்றை நடாத்துவதற்காகவும், மேற்படி சேவையைப் பெறுகின்ற பாடசாலை மாணவ மாணவிகளது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் வான் சேவைகளுக்கான தரநியமங்களை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும், வான் ஊழியர்களிடையே சிறந்த பழக்க வழக்கங்களைப் பேணிவருவதற்காக ஒழுக்க நெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
தெங்குக் கமத்தொழில், தெங்கு சார் வளங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் ஒழுங்கமைத்தல்,—
வர்த்தக ரீதியான உற்பத்திகளில் தென்னை முக்கிய இடத்தை வகிப்பதால், வளங்களையும், சுற்றாடலையும் நிலைத்து நிற்கச் செய்கின்ற அதேவேளை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடக்கூடியளவு பங்களிப்புச் செய்யக்கூடிய விதத்தில் வளர்ச்சியடையும் அபிவிருத்தியை ஒழுங்கமைத்து தென்னைக் கைத்தொழில் மற்றும் தென்னை சார் வளங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
கித்துள் கைத்தொழிலை மேம்படுத்து முகமாக கித்துள் பயிர்ச்செய்கையை அதிகரித்தல்,
கிராமிய பிரதேசங்களில் கித்துள் பரரியளவு பங்களிப்பை வழங்குவதால், கிராமியக் கைத்தொழிலுக்கும் கிராமிய மக்களுக்கும் ஊக்கமளித்து தாவர உணவிற்காக வளர்க்கப்படும் கித்துள் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்னும் எமது குறிக்கோள் திட்டத்திற்கு அமைவாக புதிய கித்துள் பயிர்ச்செய்கைகளை அதிகரிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,
மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை மற்றும் அதனோடு தொடர்புடைய உற்பத்திகளின் பதனிடல், சந்தைப்படுத்தல் மற்றும் பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்கான உதவிகளை நல்கி அதன்மூலம் தரமான பெறுமதி சேர்க்கப்பட்ட மரமுந்திரிகையை உற்பத்திகளின் முன்னணி ஏற்றுமதி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இலங்கையை திகழச் செய்வதற்கு உதவக்கூடிய விதத்தில் மரமுந்திரிகைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
பாரம்பரிய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல்,
அம்பாறை மாவட்டத்தில் அருகி வரும் பாரம்பரிய கைத்தொழில்களான கைத்தறித் தொழில், மட்பாண்டம் தயரரித்தல், பனை ஓலை மற்றும் பன்கொண்டு பெட்டி, தண்டு மற்றும் பாய் போன்றவற்றை இழைத்தல், தும்புத் தொழில், பிரம்புத் தொழில் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து அப்பகுதி மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வருவாயைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
கெளரவ திலங்க சுமதிபால,
ஆயுத விற்பனைக்கான முறைசார்ந்த கட்டுப்பாட்டு முறையொன்றைத் தாபித்தல்,
சர்வதேச ரீதியில் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஆயுத விற்பனை நடைமுறையிலுள்ளதன் விளைவாக இலங்கை போன்ற நாடுகளுக்கு ஆயுதங்கள் வந்து குவிதல் மற்றும் அவ்வாறான நாடுகளில் இடம்பெறும் முறைசாராத ஆயுதச் சுற்றோட்டமானது சமூகத்தின் சுதந்திரத்திற்கு பரரிய தடையாகவும் சனநாயக ரீதியில் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் தாக்கம் ஏற்படுத்துவதாகும், அத்துடன் நாட்டில் போதைப்பொருள் மற்றும் விபச்சாரத் தொழில் போன்ற சட்டவிரோதச் செயல்கள் விரிவடைவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
மேற்படி நிலைமைகளைத் தடுத்து ஒழுக்கம் பேணுகின்ற, சட்டத்தை மதிக்கின்ற, விழுமியங்கள் நிறைந்த சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் எதிர்பார்ப்பாக உள்ளதாலும், ஆயுத விற்பனை உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதனூடாக சமூக போராட்டங்களைக் குறைத்து சமூக நலனோம்புகையை உறுதி செய்தல் இன்றைய உலகின் எதிர்பார்ப்பாகவுள்ளதாலும், மேற்குறிப்பிட்ட துர்நடத்தைகளை ஒழிப்பதற்காக சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சமவாயங்களுக்கு ஏற்புடையதாக தேசிய சட்ட முறைமையொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,
பேரிச்சம் பழச் செய்கையை அறிமுகப் படுத்துவற்குரிய வாய்ப்புகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல்,—
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் பரீட்சார்த்தமாகப் பயிர் செய்யப்பட்ட பீனிக்ஸ் டெக்லிபெரா (Phoenix dactylifera) என்ற பேரிச்சம் பழச் செய்கை வெற்றியளித்துள்ளதால், எமது சொந்த மண்ணில் வளர்ந்த நற்சுவைமிக்க இப் பழத்தை சுவைப்பதற்கான வாய்ப்புகள் எமது நாட்டு மக்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு இப் பேரிச்சம் பழச் செய்கையை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இச்சபை கருதுகிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
வானோலி ஒலிபரப்பை ஒழுங்குபடுத்தல்,
வானொலி ஒலிபரப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன அதிகார சபையை கூட்டிணைப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தல்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன அதிகார சபையை கூட்டிணைப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
மாநகர சபைகளில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவை அறிமுகம் செய்தல்,
2013 சனவரி 1 ஆம் திகதியளவில் சகல மாநகர சபைகளிலும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவைத் தாபிப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
உரிமைகள் பிரகடனச் சட்டமூலத்தைச் சட்டமாக்குதல்,
தென்னாபிரிக்காவில் மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தின் ஆதாரமாகத் திகழ்கின்ற உரிமைகள் பிரகடனச் சட்டத்தை அடியொற்றி, சட்டமூலத்தில் விதித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக அரசினால் மதித்து, பாதுகாத்து, மேம்படுத்தி நிறைவேற்றப்பட்ட வேண்டிய நாட்டின் எல்லா மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டமூலம் இலங்கையில் சட்டமாக்கப்பட வேண்டும் இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
கெளரவ ரவி கருணாநாயக்க,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட படிகள் கொடுப்பனவு,
அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் சம்பளங்கள் பதவியணி ஆணைக்குழு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படாதவிடத்து அமைச்சர், பிரதி அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் எந்த வகையான விசேட படிகளும் வழங்கப்படக் கூடாது என இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.
பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,
துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை,
2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2012 மே மாதம் 09ஆம் திகதிய 1757/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2012.06.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,