text
stringlengths
11
513
பகைவர்க்கு அடிமையாகி விடுவோம். 9. குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள் சோம்பலை ஒழிக்கவே நீங்கிப்போம். சோம்பலிற் பட்டுச் சுறுசுறுப்பு இல்லாதவர்க்குக் குடும்பமும் அழியும் , குற்றமும் பெருகும். 10. திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பல் இல்லா மன்னவன் அடைவான். 63. இடுக்கண் அழியாமை எளிய உரை 1. துன்பம் வரும்போது கேலிசெய்க ; அதுவே துன்பத்தைக் கடக்க வழி. வெள்ளம் போன்ற நெருக்கடியும் அறிஞன் ஊக்கத்தினால் நினைக்கவே ஓடிப்போம். 7. காலத்தாழ்வு , மறதி , சோம்பல் , உறக்கம் இவை கெடுவார் ஆசைப்படும் நகைகள். 8. நாடு ஆள்பவரின்
நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்பயன் அடையான். துன்பங் கண்டு துன்பப் படாதவர் துன்பத்தைத் துன்பப் படுத்துவர். கடினப்பாதை செல்லும் காளைபோன்றவனுக்கு வந்த துன்பமன்றோ துன்பப்படும். அடுக்கடுக்காக வரினும் அசையாதவனுக்கு வந்த துயரமன்றோ துயரப்படும் ! செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ ? இவ்வுடம்பு நோய்களுக்கு இலக்கு என்று இயல்பறிந்த மேலோர் கலக்கம் கொள்ளார். இன்பத்ன விரும்பாது இடையூற்றை இயல்பு என்று கருதுபவன் வருத்தம் அடையான். 9. மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன் கவலையில் கவலை அடையான். 10.
துன்பத்தை இன்பமாகக் கருதுபவனுக்கு எதிரியின் மதிப்பும் கிடைக்கும். . 3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒவ்வாக்கால் செல்லும்வாாய் நோக்கிச் செயல் 5. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருஸ்தீர எண்ணிச் செயல். முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 68. வினைசெயல்வகை சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. r தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். செய்வினை செய்வான் செயன்முறை
அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைவென் கொள்வர் பெரியார்ப் பணிந்து. 73. அவை அஞ்சாமை வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகை அறிந்த தூய்மை யவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். 5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். கற்றார்முன் கற்ற செலச்சொல்லித்
தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும். நல்லார் அவைஅஞ்சு வார். உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 68. வினைசெயல்வகை 1. ஆராய்ந்து ஒரு துணிவுக்கு வரவேண்டும் ; அத்துணிவைச் செய்யாது தாழ்த்தல் தீதாகும். 2. தாழ்த்துச்செய்யும் வினையைத் தாழ்த்துச்செய்க ; உடனே செய்ய
வேண்டியதைக் கடத்தாதே. 3. முடிந்தவரை தூதால் முடித்துக்கொள்ளல் நன்று ; முடியாக்கால் பலிக்குமுறை பார்த்துச் செய்க. காரியக்குறை பகைக்குறை என்ற இரண்டும் நெருப்புக்குறை போல வளர்ந்து அழிக்கும். 10. சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு தூதுவரின் பேரரசரைப் பணிந்து கொள்வர். 73. அவை அஞ்சாமை - எளிய உரை 1. சொற்பொழிவை அறிந்தவர் பாகுபாடு தெரிந்து இன்னாதவற்றைத் தவறியும் சொல்லார். பொருள் , கருவி , காலம் , செயல் , இடம் என்ற ஐந்தினையும் மயக்கமற ஆராய்ந்து செய்க. 10. முடிவும் இடையூறுகளும் முடிந்த பின்னர் வரும் பயனும் பார்த்துச்
செய்க. ஒருசெயலைச் செய்பவன் செய்யும்முறை அதனை நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல். யானையைக் கொண்டு யானை பிடிப்பதுபோல ஒருசெயலால் இன்னொன்றையும் செய்துகொள். நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டிலும் விரைவாகப் பகைவரை அணைத்தல் வேண்டும். கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார் ? கற்றவர்முன் எடுத்துச் சொல்ல வல்லவரே. போரில் சாக அஞ்சாதவர் மிகப்பலர் ; அவையில் பேச அஞ்சாதவரோ மிகச் சிலர். கற்றவர்முன் கற்றதை எடுத்துச் சொல்லுக ; மிகக் கற்றவரிடம் மிகுதியைத் தெரிந்துகொள்க. அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல முறையாகத் தருக்கநூல் அறிந்து கற்க ,
வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு ? மேடைஅஞ்சுவார்க்கு நூலோடு என்ன உறவு ? 8. நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர் பல படித்தும் பயனில்லை. மேடையில் அஞ்சுபவன் கற்ற நூற்படிப்பு போரில் பேடி பிடித்த கூரியவாள் போலும். 9. படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரினும் கீழ் என்பார்கள். மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர் வாழ்ந்தாலும் மாண்டவருக்கு ஒப்பாவர். உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு , கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 75. அரண் ஆற்று பவர்க்கும் அரண்வொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண். உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுரைக்கும் நூல். சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். 7. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். கொளற்குஅறிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்குஎளிதாம் நீரது அரண். எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்லாள் உடையது அரண். முற்றாற்றி முற்றி யவரையும்
பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண். எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். 74. நாடு எளிய உரை 1. குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நாடு. 2 பொருட் பெருக்கத்தால் விரும்பத் தக்கதும் கேடின்றி மிக விளைவதும் நாடு. வரும் சுமையெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியெல்லாம் கொடுப்பதுவே நாடு. தீராப்பசியும் தீராநோயும் தீராப்பகையும் இல்லாது நடப்பதுவே நாடு. 8. நோயின்மை , செல்வம் , விளைச்சல் , இன்பம் , காவல் ஐந்தும்
நாட்டிற்கு அணி என்பர். 9. தன்னிறைவுடைய வளநாடே உரிமை நாடு ; பிறநாட்டை எதிர் நோக்கும் நாடு நாடன்று. 10. மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை நல்லாட்சி இல்லாத நாடு. 75. அரண் எளிய உரை போர்மேற் செல்வார்க்கும் மதில்வேண்டும் ; அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது வேண்டும். உயரம் அகலம் உறுதி அருமை நான்கும் அமைந்ததே அரண் என்று நூல்கூறும். காக்கும் அளவு சிறிதாய் இடம்பெரிதாய்ப் பகைவரின் எழுச்சியை மழுக்குவதே அரண். பிடிப்பதற்கு அரியதாய் உணவு நிறைந்ததாய் உள்ளிருப்பவர் செயலுக்கு எளியதே அரண். எல்லாப்பொருளும் இடத்துக்குக்
கொண்டுபோய் உதவும் நல்லாளும் உடையதே அரண். 8. வலுவாகச் சூழ்ந்து வளைத் வளைந்தோ திடீரெனத் தாக்கியோ வஞ்சித்தோ பிடிக்க முடியாதது அரண். ரயும் நிலைதளராது நின்று வெல்வதே அரண் , 9. போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில் பெருமிதச் சிறப்புடையதே அரண். அரண் எவ்வாற்றல் உடையதாக இருந்தாலும் பேராற்றல் இல்லாதார்க்குப் பயன் இல்லை. 98. பெருமை 1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல். 2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. 5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். 6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின். 8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. 9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். 30 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். 5. பெருமையைக் காத்துக் கொண்டவர் முறையாக அருமையான காரியங்களைச்
செய்து முடிப்பர். 6. பெரியவர்களைப் போற்றிக் கொள்ளும் கருத்து சிறியவர்கள் அறிவிற் படுவதில்லை. சிறப்புக்கள் இழிந்தவர்களைச் சேருமாயின் தாறுமாறான காரியங்களே நடக்கும்.. பெருமை எளிய உரை ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும் ; அதனை விட்டு வாழ்தல் என்பது குறைவாகும். ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும். மேலிருந்தும் மேலான செய்யாதார் சிறியவர் ; கீழிருந்தும் கீழான செய்யாதார் பெரியவர். மகளிர் கற்பைத் தாமே காத்தல் போலப் பெருமையும் அவரவர் காத்தால் உண்டு. என்றும் பணிதல் பெருமையின் இயல்பு
: தற்புகழ்ச்சி பாடுதல் சிறுமையின் இயல்பு. தற்செருக்கு இன்மை பெருமையின் குணம் ; தற்செருக்கின் வடிவு சிறுமையின் குணம். 10. பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு ; குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு. வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும் ; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 150 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம். நாள்தோறும் ஒரு திருக்குறளைப் பொருளுடன்
பள்ளியின் தகவல்பலகையில் காட்சிப்படுத்தலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை வகுப்புவாரியாக நடத்தலாம். திருக்குறள் கலைவிழாக்கள் , ஓவியக் கண்காட்சிகள் , நாடக விழாக்கள் , குறளின் பொருளை வாழ்வியல் அனுபவங்களோடு பொருத்துதல் , குறளை இசையமைத்துப் பாடுதல் போன்ற நிகழ்வுகளைப் பள்ளிகளில் ஒருங்கிணைக்கலாம். இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகள் சொல்லலாம் ; நாடகங்களை நடத்தலாம். குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து " வினாடி வினா " நடத்தலாம். சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம்
திருக்குறள் கருத்துகளை விளக்கலாம். பள்ளி சார்ந்த அழைப்பிதழ்கள் , பரிசுச் சான்றிதழ்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்கலாம். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள் , இசைப்பாடல்கள் , சித்திரக் கதைகள் , அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். குறிப்பு : மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன ; அலகிடுவதற்கு அன்று. 221