en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
kuRumbaa! en udhiram needhaan taa
குறும்பா! என் உதிரம் நீதான் டா
kuRumbaa! en uyirae needhaan taa
குறும்பா! என் உயிரே நீதான் டா
viNveLi meengaLil ellaam
விண்வெளி மீன்களில் எல்லாம்
un vizhidhaanae paarppaen
உன் விழிதானே பார்ப்பேன்
veNNilaa undhan kaalil chaerppaen!
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்!
vetRigaL aayiram vandhaal
வெற்றிகள் ஆயிரம் வந்தால்
punnagaiyoadae aeRpaen
புன்னகையோடே ஏற்பேன்
unnidam mattumdhaanae thoaRpaen!
உன்னிடம் மட்டும்தானே தோற்பேன்!
aattam poadum poadhellaam
ஆட்டம் போடும் போதெல்லாம்
ulagae azhagaay maaRum
உலகே அழகாய் மாறும்
veettup paadam cheydhaaloa
வீட்டுப் பாடம் செய்தாலோ
ratha azhutham aeRum
ரத்த அழுத்தம் ஏறும்
un kuRumbu marabaNu evvazhi koNdaay?
உன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய்?
enakkuth theriyaadhaa?
எனக்குத் தெரியாதா?
kuRumbaa! en ulagam needhaan taa
குறும்பா! என் உலகம் நீதான் டா
kuRumbaa! en vidiyal needhaan taa
குறும்பா! என் விடியல் நீதான் டா
kuRumbaa! en udhiram needhaan taa
குறும்பா! என் உதிரம் நீதான் டா
kuRumbaa! en uyirae needhaan taa
குறும்பா! என் உயிரே நீதான் டா
uLaRal mozhigaL unnaal
உளறல் மொழிகள் உன்னால்
kaarttoon kanavum unnaal
கார்ட்டூன் கனவும் உன்னால்
kiRukkaay aanaen unnaalae
கிறுக்காய் ஆனேன் உன்னாலே
eRumboadeRumbaay chila naaL
எறும்போடெறும்பாய் சில நாள்
poonai naayaay chila naaL
பூனை நாயாய் சில நாள்
manidhan aanaen unnaalae
மனிதன் ஆனேன் உன்னாலே
vindhai enRu kaiyil vandhaayae
விந்தை என்று கையில் வந்தாயே
en manam kuLira
என் மனம் குளிர
thandhai enRu pattam thandhaayae
தந்தை என்று பட்டம் தந்தாயே
naan thalai nimira
நான் தலை நிமிர
thalai nimira...
தலை நிமிர...
kuRumbaa! en ulagam needhaan taa
குறும்பா! என் உலகம் நீதான் டா
kuRumbaa! en vidiyal needhaan taa
குறும்பா! என் விடியல் நீதான் டா
kuRumbaa! en udhiram needhaan taa
குறும்பா! என் உதிரம் நீதான் டா
kuRumbaa! en uyirae needhaan taa
குறும்பா! என் உயிரே நீதான் டா
muRaidhaanaa mugundhaa?
முறைதானா முகுந்தா?
charidhaanaa chanandhaa?
சரிதானா சனந்தா?
poovaiyar meedhu kaN maeyvadhu muRaiyaa?
பூவையர் மீது கண் மேய்வது முறையா?
paavai en nenjam thinam thaeyginRa piRaiyaa?
பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா?
poadhumae nee konjam thuyil koLLadaa!
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா!
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
un viralinil
உன் விரலினில்
malai chumandhadhu poadhum
மலை சுமந்தது போதும்
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
un idhazhinil
உன் இதழினில்
kuzhal isaithadhu poadhum
குழல் இசைத்தது போதும்
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
choalaiyin naduvinilae nuzhaindhaen alaindhaen tholaindhaen
சோலையின் நடுவினிலே நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன்
naan undhan aruginilae
நான் உந்தன் அருகினிலே
kaanagam naduvinilae mayangik kirangi kidandhaen
கானகம் நடுவினிலே மயங்கிக் கிரங்கி கிடந்தேன்
naan unadhazhaginilae
நான் உனதழகினிலே
maadhavaa...
மாதவா...
yaadhavaa...
யாதவா...
leelai cheydhae ennai nee kavizhkka
லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க
kaaLai moadhi unnaiyum kavizhkka
காளை மோதி உன்னையும் கவிழ்க்க
kaayam ennaal koNdaayadaa
காயம் என்னால் கொண்டாயடா
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
madhanaa... madhusoodhanaa
மதனா... மதுசூதனா
manoagaraa... manmoaganaa
மனோகரா... மன்மோகனா
muRaidhaanaa mugundhaa?
முறைதானா முகுந்தா?
charidhaanaa chanandhaa?
சரிதானா சனந்தா?
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
kaNNaa nee thoongadaa!
கண்ணா நீ தூங்கடா!
pachaith thee neeyadaa!
பச்சைத் தீ நீயடா!
kachup poo naanadaa!
கச்சுப் பூ நானடா!
otRaip paarvai koNdae
ஒற்றைப் பார்வை கொண்டே
patRik koNdaayadaa!
பற்றிக் கொண்டாயடா!
vetRuk kal naanadaa!
வெற்றுக் கல் நானடா!
vettum uLi neeyadaa!
வெட்டும் உளி நீயடா!
aRpap paaRai ennil
அற்பப் பாறை என்னில்
chiRpam cheydhaayadaa
சிற்பம் செய்தாயடா
neeyae maN minnum veNdhaaragai
நீயே மண் மின்னும் வெண்தாரகை
uLLangai chaerndhap poongaarigai
உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
kaigaL naam koarkkach chiRagaagumae!
கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே!
pudhu vaanangaL uruvaagumae!
புது வானங்கள் உருவாகுமே!
maan vizhikkuL endhan
மான் விழிக்குள் எந்தன்
vaazhvonRaik kaaNa
வாழ்வொன்றைக் காண
maamalai onRaeRi vandhaenadi!
மாமலை ஒன்றேறி வந்தேனடி!
idhayam onRu uLLadhenRu
இதயம் ஒன்று உள்ளதென்று
un aNaippaalae kaNdaenae!
உன் அணைப்பாலே கண்டேனே!
inum enai iRukkiyae
இனும் எனை இறுக்கியே
aNaithidath thudithaenae!
அணைத்திடத் துடித்தேனே!
neeyae maN minnum veNdhaaragai
நீயே மண் மின்னும் வெண்தாரகை
thoaLil veezhginRa poongaarigai
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
undhan thoaLoadu thoaL chaerkkiRaen
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
ennil thoagaigaL naan paarkkiRaen!
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்!
keeRalil uNdaagum
கீறலில் உண்டாகும்
keedhangaL kaettaay
கீதங்கள் கேட்டாய்
moadhalin moagangaL kaettaayadi!
மோதலின் மோகங்கள் கேட்டாயடி!
piRavi pala eduthaalum
பிறவி பல எடுத்தாலும்
nigazhum kaNam naan maRavaenae
நிகழும் கணம் நான் மறவேனே
valigaLai varamena thandhidak kaettaenae!
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே!
neeyae maN minnum veNdhaaragai
நீயே மண் மின்னும் வெண்தாரகை
kaNNil thaen chindhum poongaarigai
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
undhan nenjukkuL naan neendhinaen
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
kaadhal aazhathai naan kaaNgiRaen!
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்!
Hoanana Hoanana Hoanana
ஹோனன ஹோனன ஹோனன
Hoa naan chendhaenaa?
ஹோ நான் செந்தேனா?