வெளியிட்ட தேதி
stringclasses
70 values
தலைப்பு
stringlengths
9
141
செய்தி-வகை
stringclasses
30 values
எழுத்தாளர்
stringclasses
1 value
இணைப்பு
stringlengths
61
178
மொழி
stringclasses
1 value
குறிமுறைத் தரநிலை
stringclasses
1 value
உள்ளடக்கம்
stringlengths
0
14.7k
சேகரிக்கப்பட்ட தேதி
stringlengths
26
26
ஜனவரி 16, 2025
தீக்கதிர் உலக செய்திகள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/meta-company-to-lay-off-3,600-employees
தமிழ்
UTF-8
3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்.கலிபோர்னியா, ஜன. 16 - மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் சுமார் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் 5 சதவீத தொழிலாளர் சக்தியாகும். செயல்திறன் அடிப்படையில் இந்த பணி நீக்கம் நடைபெறுகின்றது என இந்த பணிநீக்கத்திற்கு மிக மோசமான காரணத்தையும் அது தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்ட  செயல்திறன் அடிப்படை பணி நீக்கம் என்ற தொழிலாளர் விரோத நடைமுறையை பின்பற்றுகின்றன. அதாவது தொழிலாளியின் உழைப்பு போதவில்லை அல்லது உற்பத்தி செய்யும் திறன் அவரிடம் இல்லை என தொழிலாளர்களை குற்றம்சாட்டி அவர்களை பணி  நீக்கம் செய்து விடுகின்றன.  இதன் பிறகு மீதமுள்ள தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை மூலம் ஒரு பயத்தை உருவாக்கி நிர்வாகத்தின் குற்றங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கேள்வி கேட்டு விடாமலும் சங்கமாக ஒன்றிணையாமலும் பிரிக்கும் வேலையையும் செய்கின்றன.  வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் பணிகள் பல இடங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு தான் மெட்டா நிறுவனமும் 3,600 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு அங்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்  திட்டத்திற்கு சென்றுள்ளது என கூறப்படுகின்றது. தற்போது 3,600 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம் புதிதாக தகுதியுள்ள நபர்களை பணியமர்த்துவோம் என தெரிவித்துள்ளது. எனினும் மெட்டா நிறுவனம் வாக்குறுதியை நிறைவேற்றாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.. கலிதா ஜியா தேர்தலில் போட்டியிட  இருந்த தடையை நீக்கியது யூனுஸ் அரசுடாக்கா,ஜன.16- வங்கதேச உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா  ஜியாவுக்கு எதிரான கடைசி  ஊழல் வழக்கில் இருந்தும்  அவரை விடு வித்துள்ளது. இதன்  மூலம் அந்நாட்டு  தேர்தலில் போட்டியிட அவருக்கு இருந்த சட்டப்பூர்வ தடை நீங்கி யுள்ளது.  கலிதா ஜியா மொத்தம் 17 ஆண்டு கள் சிறைத்தண்டனையை அனு பவித்து வந்தார். அனாதை இல்லம் தொடர்பான  வழக்கில் 10 ஆண்டு களும், பிற ஊழல் வழக்குகளில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவர் அனுபவித்து வந்தார்.  ஹசீனா ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு 2024 நவம்பர் மாதமே இந்த வழக்கு களில் இருந்து ஜியா  விடுவிக்கப் பட்டார். மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்து  விட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.  வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால அரசு அமைதியை கொண்டுவரவும் ஜனநாயகப்பூர்வமான தேர்தலை நடத்தவும் முயற்சி எடுப்பதற்கு மாறாக  அவாமி கட்சி தலைவர்களின் மீது  பழிவாங்கும் வேலையில் ஈடு பட்டுள்ளது.  மேலும் கலிதா ஜியா மீதான வழக்கு களை முடித்து வைத்து அவரை சிறையில் இருந்து  வெளியே  கொண்டு வரும் வேலையையும் செய்துள்ளது.இலங்கை ஜனாதிபதிக்கு சீனாவில் வரவேற்புகொழும்பு / பெய்ஜிங், ஜன.16 -  இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நான்கு நாள் அரசுமுறை பயணமாக செவ்வாயன்று சீனா சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அவரை சீன வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  சென் சியாடோங்  வரவேற்றார். அதன் பிறகு திஸாநாயக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நான்கு நாள் பயணத்தில் சீனாவுக்கும் - இலங்கைக்கும் இடையேயான பொருளாதாரம், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுலா துறை, உள்கட்டமைப்புகள்  என பல துறைகளில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப்பை மறைமுகமாக விமர்சித்த ஜோ பைடன்நியூயார்க்,ஜன.16- மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி செல்லவுள்ளது. எனவே அமெரிக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்  என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி யாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க மக்களுக்கு நிகழ்த்திய தனது  இறுதி உரையில் ஜோ பைடன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த உரையில் டிரம்ப் மிகப்பெரிய பணக்காரர். அவர் தற்போது தேர்வு செய்துள்ள அமைச்சர்கள் குழுவும் மிகப்பெரும் பணக்காரர்கள் நிறைந்த குழுவாக உள்ளது எனவும் மறைமுகமாக விமர்சித்தார். (அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயகக்கட்சி இரண்டிலும் பெருமுதலாளிகளே தலைவர்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ) பைடன் மேலும் பேசியதாவது : இன்று அமெரிக்காவில்  அதிகளவில் செல்வம், அதிகாரம்  மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு சுயநலமான குழு உருவாகி வருகிறது. இது நமது முழு ஜனநாயகத்தை யும், நமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்  களையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாய மான வாய்ப்பையும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. ஒரு சில பெரும் செல்வந்தர்களின் கைகளில் அதிகாரம் ஆபத்தான முறையில் குவிகிறது. அவர்கள்  அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார்.
2025-01-17 01:55:38.738481
ஜனவரி 16, 2025
முல்லை பெரியாறு அணை: புதிய குழு அமைப்பு!
தேசியம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/india/delhi/mullaperiyar-dam-new-committee-formation
தமிழ்
UTF-8
முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 7 பேர் கொண்ட புதிய குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் குழுவில் இடம்பெற்றுள்ளார்.கண்காணிப்புக் குழு தலைவராக தேசிய அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இனி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையமே, அணையின் அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய நீர் ஆணையம், அணையின் பொறுப்புகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைப்பதாக உறுதிமொழி அளித்திருந்தது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் பழைய கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டு, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில், கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலர்களும் இடம்பெற்றுள்ளனர்.
2025-01-17 01:55:38.936718
ஜனவரி 16, 2025
விவசாயக் கல்லூரி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/cbcid-orders-inquiry-into-suspicious-death-of-agriculture-college-student
தமிழ்
UTF-8
சென்னை, ஜன.16- விவசாயக் கல்லூரி மாணவி பிரித்திதேவி சந்தேக மரணம் குறித்து சிபிசிஐடி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்தி ருக்கும் அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் 1வது தெருவில் வசிக்கும் செல்வகுமாரின் மகள் பிரித்திதேவி. இவர், சிவகங்கை மாவட்டம்  விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி மூன்றாமாண்டு படித்து வந்தார். ஜன.7 அன்று காலை 9.15 மணியளவில் கல்லூரி விடுதி வார்டன் கோகிலா என்பவர், பிரித்திதேவியின் தந்தை செல்வகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பிரித்தி தேவி கல்லூரி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து சுய நினைவு இல்லாமல் கிடந்ததாக ஆயா சந்திரா என்பவரும், மாணவி தாட்சாயினி என்பவரும் பார்த்து தகவல் தெரிவித்தனர். பின்னர், அவரை காரைக்குடி குளோ பல் மருத்துவமனையில் சேர்த்து, அங்கி ருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்வ தாகவும், மீனாட்சி மருத்துவமனைக்கு வந்து விடுமாறு  தகவல் தெரிவித்துள்ளார். பிரித்திதேவியின் தந்தை செல்வகுமார் பதறி அடித்து, மதுரை மீனாட்சி மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அங்கு பிரித்திதேவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மறுநாள் ஜன.8 அன்று பிற்பகல் 2.45 மணிக்கு பிரித்திதேவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் செல்வகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் சொன்னதன் அடிப்படையில் செல்வகுமார் புகார் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். இதன்பேரில் சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் நிலையத்தில் வழக்கு எண் 04/2025 வழக்கு, 194 பிஎன்எஸ் பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோரும், ஊர்மக்களும் கீழ்க்கண்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 1. மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் ஏன் புகார் கொடுக்கவில்லை ? 2. மொட்டை மாடிக்கு செல்லும் கதவு  எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். பிரித்திதேவி மாடி செல்லும் கதவை எப்படி திறந்தார். அவருக்கு சாவி எப்படி கிடைத்தது. 3. விடுதியில் ஏன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. 4. கீழே விழுந்த மாணவியை கல்லூரி வாகனத்தில் காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? ஆம்புலன்சுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை. 5. மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏன் யாரும் வரவில்லை,  பெற்றோரை ஏன் சந்திக்க வில்லை. 6.விசாரணை முடியும் முன்னரே, பிரித்திதேவியின் அம்மா திட்டினார். அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியது ஏன் ? 7. பிரித்தியின் தந்தை செல்வக்குமாரிடம் ஏன் போலீசார் கட்டாயப்படுத்தி புகாரை எழுதி வாங்கினர். இந்த சூழலில் மாணவி பிரித்தி தேவியின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. மேலும், காவல்துறையின் அணுகுமுறையும் பார பட்சமானதாக உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
2025-01-17 01:55:42.645608
ஜனவரி 16, 2025
ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர் ரவுடி சரவணன் துப்பாக்கி முனையில் கைது
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/armstrong's-close-friend-rowdy-saravanan-arrested-at-gunpoint
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.16- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பிரபல ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரின் தீவிர ஆதரவாளரான ஏ பிளஸ் ரவுடியான சரவணன் காத்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்தது. இதையடுத்து, ரவுடி சரவணனை சென்னை மாநகர காவல்துறையினர் தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதற்கிடையில் சரவணன் மீதான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது.  அதனால், சென்னைப் போலீஸார் வடமாநிலங்களில் அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் சரவணன் சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அங்குச் சென்ற போலீஸார் அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.  போலீசாரை கண்டதும் சரவணன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீஸார் சரவணனின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். இதையடுத்து சரவணனை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ மணி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள், பட்டன் கத்தி ஒன்று, கஞ்சா பொட்டலம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். ரவுடி சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் இதர வழக்குகள் 16 ஆகியவை உள்ளன. 5 தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சரவணன், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.  சரவணன் கைதான தகவலையடுத்து அவரின் மனைவி மகாலட்சுமி, சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன்பிறகே பாம் சரவணன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரியவந்தது.
2025-01-17 01:55:42.646601
ஜனவரி 16, 2025
செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சி வெற்றி : இஸ்ரோவுக்கு குவியும் பாராட்டுகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/successful-attempt-to-link-satellites
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.16- விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ அறி வித்துள்ளது. தலா 220 கிலோ எடையுள்ள இரு செயற்கைக்கோள்களை பரி சோதனை முயற்சியாக இணைக்கும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் மேற்கொண்டிருந்தது. அது வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டதாக இஸ்ரோ தெரி வித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திர யான்-4 திட்டங்களுக்கு டாக்கிங் முறை முக்கியமானது என்ப தால், அது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண் கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.இதைத்தொடர்ந்து, விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. முதலில் இரு செயற்கை கோள்க ளுக்கு இடையிலான தூரத்தை படிப்படியாக குறைத்து இரண்டை யும் ஒன்றோடு ஒன்றாக இணைத்த னர். இதன் மூலம் விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விண்ணில் செயற்  கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூ பித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும்  வாழ்த்து தெரி வித்துள்ளனர். அதில், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும் கூறியுள்ளனர்.
2025-01-17 01:55:42.647144
ஜனவரி 16, 2025
பிப்.9 அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/on-february-9,-there-is-a-plan-to-conduct-jallikattu-on-behalf-of-the-government
தமிழ்
UTF-8
சென்னை, ஜன.16- மதுரை மாவட்டம், அலங்கா நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், வரும் பிப்.9 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்ட மிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.16) தொடங்கி வைத்தார். மேலும், பார்வையாளர்கள் மாடத்தில் அவரது மகன் இன்ப நிதியுடன் அமர்ந்து அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி களை கண்டு ரசித்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதை யடுத்து மதுரையில் இருந்து விமானம் மூலம் உதயநிதி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலை யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி பார்த்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “அலங்காநல்லூரில் நடை பெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக இருந்தது. எல்லா வருடமும் அங்கு சென்று பார்த்திருக்கிறேன். இந்தாண்டும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்த்தது நன்றாக இருந்தது.” என்றார். அரசு அமைத்துள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் எப்போது போட்டிகள் நடத்தப்படும் என்ற கேள்விக்கு, “தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக் கட்டு அரங்கில் நடைபெறும் போட்டி குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். பிப்.9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்.” என்று அவர் கூறினார்.
2025-01-17 01:55:42.647663
ஜனவரி 16, 2025
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது?
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/expectation-of-transport-staff
தமிழ்
UTF-8
சென்னை, ஜன.16- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. அந்தவகையில் 13-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31ம் தேதியுடன் காலாவதியானது. பல்வேறு காரணங்களால் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாகிய நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இறுதி செய்யப்பட்டது. அப்போது பேச்சு வார்த்தைக்கான அவகாசமும், 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 14-வது ஊதிய ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதி யானது. இதையடுத்து 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைந்து நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன. ஆனால் ஓராண்டு தாமதமாகவே பேச்சுவார்த்தையை அரசு தொடங்கியது. அதன்படி 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் கடந்த ஆக.27-ம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 80-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் கடந்த காலங்களை விட சங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிட்டு, கடந்த டிச.27, 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி, முதல் நாளில் தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், அடுத்த நாளில் இதர சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்குமாறு பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டுநர் சார்பில் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த காரணத்தால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையிலும் பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவித்து, விரைந்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம், இரண்டு நாட்களாக அல்லாமல் ஒரே நாளில் அனைத்து சங்கங்களும் இடம்பெறும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2025-01-17 01:55:42.648170
ஜனவரி 16, 2025
சுருங்கி வரும் தமிழக கடற்கரை: ஓர் அவசர எச்சரிக்கை - ஆரூரான்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/tamil-nadu's-shrinking-coastline-is-an-urgent-warning
தமிழ்
UTF-8
இந்திய கடற்கரைப் பகுதிகள் ஆபத்திற்குள்ளாகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகாலமாக எச்சரித்து வருகின்றனர். இந்த எச்சரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக, இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்சிசிஆர்) முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.கடல் அரிப்பின் தற்போதைய நிலைஇந்திய கடற்கரையின் மொத்த நீளத்தில் 34 சதவீதம் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடற்கரை அரிப்பால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் நிலை: - மேற்கு வங்கம்: 60.5% - புதுச்சேரி: 56.2% - கேரளா: 46.4% - தமிழ்நாடு: 42.7%  தமிழகத்தின் 991.47 கி.மீ கடற்கரைப் பகுதியில் 422.94 கி.மீ தூரம் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.கடற்கரை மாற்றங்களுக்கான காரணிகள்இயற்கை காரணிகள்- அலைகள் - கடல் ஓதம் - கடல் நீரோட்டங்கள் - புயல் மற்றும் சுனாமி - கடல் மட்ட உயர்வுமனித செயல்பாடுகளால் ஏற்படும் காரணிகள்- கடல் சுவர் அமைத்தல்; -பிரேக்வாட்டர்கள் நிர்மாணம்; - கரையோர காடழிப்பு; - துறைமுக முகத்துவார தூர்வாரும் பணிகள்; - கடற்கரை மணல் எடுத்தல்; - ஆறுகளில் அணை கட்டுதல்.விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்கடலோரப் பகுதியில் அமைக்கப்படும் கடல் அரிப்பு தடுப்பான்கள் இயற்கையான மணல் நகர்வைப் பாதிக்கின்றன. இதன் விளைவாக, தடுப்பான்கள் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு அதிகரிக்கிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.தற்போதைய முன்னெடுப்புகள்1990-2022 காலகட்டத்தில் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களின் கடற்கரை மாற்ற அட்லஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. -    தமிழக கடலோர மேலாண்மை வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. -    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கடற்கரை மாற்ற அட்லஸ் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, கடல் அரிப்பின் காரணமாக சுருங்கி வரும் கடற்கரைப் பகுதிகளைக் காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நமது கடலோரப் பகுதிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு மிக முக்கியமானதாகும்.
2025-01-17 01:55:42.648674
ஜனவரி 16, 2025
காரணமின்றி சிறையில் வைப்பதை ஏற்க முடியாது
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/supreme-court-condemns-the-enforcement-department
தமிழ்
UTF-8
புதுதில்லி, ஜன. 16 - பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் வைத்திருக்கவே அமலாக்கத்துறை விரும்புவதாகவும், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் சாடி யுள்ளது. பண மோசடி வழக்கு ஒன்றில் தொடர்புடைய பெண்ணின் ஜாமீன்  மனு மீது, கடந்த டிசம்பர் 19 அன்று விசாரணை நடைபெற்றது.  அப்போது, ஆஜரான அம லாக்கத்துறை சட்ட அதிகாரி ஒருவர்,  பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 45 துணைப்பிரிவு 1-இன் கீழ் உள்ள கடுமையான நிபந்தனைகள் பெண் களுக்கும் பொருந்தும் என கூறி ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், புதனன்று இந்த வழக்கு மீது மீண்டும் விசாரணை நடை பெற்றது. அப்போது, “உண்மையில் பிஎம்எல்ஏ பிரிவு 45 துணைப்பிரிவு 1-ல் உள்ள ஒரு விதி, சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டால், மேற்கண்ட பிரிவுகளின் கீழ் வரும் ஒரு நபரை விடுவிக்கலாம்” என்று கூறுவதை  குறிப்பிட்டு, அதற்கு மாறாக, அமலாக்கத்துறை அதிகாரி கூறி யிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி னர். இது முற்றிலும் அபத்தமானது என்றும் விமர்சித்தனர். உடனே, இது தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக ஏற்பட்ட கவனக் குறைவு என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சமாளித்தார். அதற்காக மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நோக்கத்தையே அமலாக்கத்துறை யின் நடவடிக்கைகள் பிரதிபலிப்பதாக சாடியதுடன், சட்டத்திற்கு முரணான அமலாக்கத்துறையின் இத்தகைய வாதங்களை பொறுத்து கொள்ள முடியாது என்றும் எச்சரித்தனர். “ஒன்றிய அரசுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு சட்டத்தின் அடிப்படை விதிகள் தெரியாவிட்டால் அவர்கள் ஏன் வழக்கில் ஆஜராக வேண்டும்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணிற்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.
2025-01-17 01:55:42.649206
ஜனவரி 16, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/israel-hamas-ceasefire-agreement
தமிழ்
UTF-8
இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்காசா, ஜன. 16 - இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ்  அமைப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை முதல்  அமலாகும் என கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி அறிவித்துள்ளார்.  போர்நிறுத்த ஒப்பந்தம் முறையாக அமலாகின்றதா என்பதை கண் காணிக்கவும், விதி மீறல்கள் ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காணவும் வழிமுறை கள் இருக்கும் என்றும் அல் தானி தெரிவித்துள்ளார். காசாவில் மக்கள் தொகை அதிகம்  உள்ள பகுதிகளிலிருந்து கிழக்குப் பகுதி வரை இஸ்ரேல் ராணுவத்தை திரும்பப் பெற வேண்டுமே எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு  ஈடாக நோய்வாய்ப்பட்ட 9  பேர்  உட்பட 33 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும் என கூறப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதிய திட்டம்தான் தேவை ஆய்வுக்குழு அமைப்பதை கைவிட வலியுறுத்தல்சென்னை, ஜன. 16 - தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது. ஓய்வூதியம் குறித்து ஜன.11 அன்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர், குழு அமைப்பதாக செய்துள்ள அறிவிப்பு வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசின் அடாவடித்தனமான ஓய்வூதிய அறிவிப்பை தமிழக அரசும் பின்பற்ற நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு அரசும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குழு அமைப்பது காலதாமதம் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஒன்றிய அரசின் ஓய்வூதிய நிலைப்பாடுதான் சரியென்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. முதலமைச்சரின் வாக்குறுதியை மீறிய செயலாகும். குழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ மறைவு  முதல்வர் இரங்கல்சென்னை,ஜன.16- ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர். சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (ஜன.16) காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில், “ராசிபுரம் சட்ட மன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மறைந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்பு களில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வந்தவர் ஆவார். 2021-ஆம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் இயக்க நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.திருவள்ளுவர் மீது காவி ஸ்டிக்கர்;  ஆளுநருக்கு கண்டனம்சென்னை,ஜன.16- தமிழ் சமூகத்தின் முதுபெரும் அடையாளமான திருவள்ளுவர் மீது காவி ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் ரவிக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‘சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. அய்யா வைகுண்டர், வள்ளலார் தொடங்கி இன்று திருவள்ளுவர் வரை யில் திருட்டு தொடர்கிறது. ஆர்.எஸ்.எஸ், ஆளுநர் ரவி, அண்ணாமலை இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழ கத்தின் ஆன்மீக மரபு, தமிழ் தமிழகத்தின் சமத்துவ மரபு நிராகரிக்கிறது. ஆளு நரின் செயலை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை மொத்தமாக முறியடிப்  போம். திருவள்ளுவர் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற தோற்றத்தை உருவாக்க அவருடைய உருவத்தில் காவி சாயம் பூசி வருகிறார் ஆளுநர் ரவி என்றும் தெரிவித்திருக்கிறார்.ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர் ரவுடி  சரவணன் துப்பாக்கி முனையில் கைதுசென்னை,ஜன.16- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பிரபல ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரின் தீவிர ஆதரவாளரான ஏ பிளஸ் ரவுடியான சரவணன் காத்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்தது. இதையடுத்து, ரவுடி சரவணனை சென்னை மாநகர காவல்துறையினர் தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதற்கிடையில் சரவணன் மீதான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது.  அதனால், சென்னைப் போலீஸார் வடமாநிலங்களில் அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் சரவணன் சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அங்குச் சென்ற போலீஸார் அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.  போலீசாரை கண்டதும் சரவணன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீஸார் சரவணனின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். இதையடுத்து சரவணனை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ மணி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள், பட்டன் கத்தி ஒன்று, கஞ்சா பொட்டலம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். ரவுடி சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் இதர வழக்குகள் 16 ஆகியவை உள்ளன. 5 தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சரவணன், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.  சரவணன் கைதான தகவலையடுத்து அவரின் மனைவி மகாலட்சுமி, சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன்பிறகே பாம் சரவணன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரியவந்தது.போலீஸ் பக்ருதீனை மதுரைக்கு  மாற்றக்கோரும் வழக்கு அதிகாரிகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுசென்னை,ஜன.16- விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை சென்னை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப் பாலத்தில் பைப் வெடி குண்டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் செய்யது மீரா தாக்கல் செய்த மனுவில், “புழல் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனை சிறைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். சிறைக்குள் முறையாக அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. எனவே, தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் வகையில் புழல் சிறையில் இருந்து அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘சிறை மாற்றம் தொடர்பான அவரது மனு பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘புழல் சிறையில் இருந்து மதுரைக்கு போலீஸ் பக்ருதீனை மாற்றுவது தொடர்பாக அளி்க்கப்பட்ட மனுவை சிறைத் துறை அதிகாரிகள் 4 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
2025-01-17 01:55:42.649693
ஜனவரி 16, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/in-9-years,-modi-government-has-created-only-fake-startups
தமிழ்
UTF-8
இந்தியர்கள் 90 மணி நேரம்  கடினமாக உழைக்க வேண்டும் என பேசும்  பணக்காரர்களே, மக்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் வகையில் அவர்களுக்குக் கல்வி கொடுத்து அதிகமாக ஒழுக்கமான வேலைகளை உருவாக்குங்கள். கடினமாகவும் நீண்ட காலமாகவும் உழைக்க வேண்டும் என்று பேசுவதை நிறுத்துங்கள்.9 ஆண்டுகளில், மோடி அரசு போலி ஸ்டார்ட் அப்களை மட்டுமே உருவாக்கியுள்ளது. உண்மை என்னவென்றால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மோடி அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இந்த துறையில் என்ன வளர்ச்சி ஏற்பட்டாலும், அதற்கான பாராட்டு ஒன்றிய அரசுக்கு அல்ல,  தொழில்முனைவோரின் மனப்பான்மை மற்றும் புத்திசாலித்தனத்திற்கே சேர வேண்டும்.இந்தியா கூட்டணியை வாழ வைக்காவிட்டால், எதிர்க்கட்சிகள் பிழைக்காது. அவர்கள் எதிர்க்கட்சிகளைக் கொன்று விடுவார்கள். நாடாளுமன்ற  தேர்தலுக்கு  மட்டுமே இந்தியா கூட்டணி என்பது உண்மைதான். ஆனால் அதை தக்கவைக்க வேண்டியது நாட்டின் தேவை.இந்த வலதுசாரிகளுக்கு உண்மை சரிபார்ப்பு கட்டுரைகளும் பிரச்சனையாக தெரிகின்றது. தவறான தகவல்களை மறுப்பதற்காக அவர்கள் ஆல்ட் செய்தி நிறுவனத்தை இந்து எதிர்ப்பு நிறுவனம் என கூறி வருகின்றனர்.
2025-01-17 01:55:42.650198
ஜனவரி 16, 2025
8 ஆவது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/approval-to-set-up-8th-pay-commission
தமிழ்
UTF-8
ஒன்றிய  அரசு ஊழியர்களின் சம்ப ளத்தில் திருத்தம் செய்வதற் கான  8 ஆவது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்பு தல் அளித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பல்வேறு பணப்  பலன்களை  திருத்தியமைக்க 8 ஆவது  ஊதியக் குழுவை அமைக்க ஒன்றிய  அமைச்சரவை வியாழனன்று (ஜன.16) ஒப்புதல் கொடுத்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட் டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குழு வின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பி னர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்  என அவர் தெரிவித்தார். ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பள  அளவை பணவீக்கம் மற்றும் பொருளா தாரச் சூழலுக்கு ஏற்ப  மாற்றியமைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஆணையத்தை ஒன்றிய அரசு  அமைக்கிறது. சம்பள அமைப்பை திருத்  துவதோடு மட்டுமல்லாமல், அவை ஓய்வூதியதாரர்களுக்கான பல்வேறு பணப்பலன்களையும் தீர்மானிக்கின்றன.
2025-01-17 01:55:42.650799
ஜனவரி 16, 2025
பாஜக சார்பை வெளிப்படுத்திய தில்லி தேர்தல் ஆணையம்?
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/election-commission-of-delhi-expressed-its-support-for-bjp
தமிழ்
UTF-8
தில்லி தேர்தல் அலுவலரின் அதிகா ரப்பூர்வ அரசு எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜகவின் செய்தி மறு பகிர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சை யை கிளப்பியுள்ளது.  தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வ மாகவே பாஜகவை ஆதரிக்கின்றதா என  கேள்விகள் எழுப்பப்பட்டது. பாஜக தில்லி மாநிலக்குழுவின் அதி காரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அக்கட்சி யின் சில தலைவர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சந்தித்தது குறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டது.  அப்பதிவை தேர்தல் அலுவலரின் அதிகாரப்பூர்வ கணக்கு மறுபகிர்வு ( Retweet ) செய்துள்ளது. இதனை  ஸ்கிரீன் ஷாட் எடுத்து தேர்தல் ஆணை யத்தின் இந்த பாஜக ஆதரவு செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இத னைத் தொடர்ந்து  பாஜக செய்தி தவறுத லாக பகிரப்பட்டதாகவும்,இந்த சம்பவம்  தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் சமா ளித்துள்ளனர்.
2025-01-17 01:55:43.947984
ஜனவரி 16, 2025
ஜோதிபாசு சமூக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/jyotibasu-center-for-social-studies-and-research
தமிழ்
UTF-8
பொதுவுடமை இயக்கத்தின் பெருமைமிகு தலைவர்களில் ஒருவரான  தோழர் ஜோதிபாசு நினைவு தினமான இன்று (ஜனவரி 17 ) மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு  சமூக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான முதல் சொந்தக் கட்டடம் திறக்கப்படுகிறது.
2025-01-17 01:55:43.949134
ஜனவரி 16, 2025
ஹிண்டன்பர்க் நிறுவனம் கலைப்பு ‘அழுத்தம் காரணமில்லை’
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/hindenburg's-liquidation-was-not-due-to-pressure'
தமிழ்
UTF-8
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மூடப்படுவதாக அதன் நிறு வனர் நடே ஆண்டர்சன் தெரி வித்துள்ளார். இந்நிறுவனம் அதானி குழுமத்தின் ஊழல் மற்றும் பங்கு முறை கேட்டை உலகிற்கு அம்பலப்படுத்தியது  குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் கார்ப்பரேட்டுகளுக் கான நிர்வாக விதிமுறைகளை மீறி, தனது பங்குகளை கையாளுவதற்காக முறைகேடுகள் செய்ததை ஹிண்டன் பர்க் நிறுவனம்  கடந்த 2022 இல்  வெளிக்  கொண்டு வந்தது. இதுகுறித்து நடே ஆண்டர்சன் கூறு கையில், நாங்கள் மேற்கொண்டுவந்த பணிகள்  நிறைவடைந்துவிட்டது. இந்  நிலையில் எங்கள் நிறுவனத்தை கலைக்க  முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும்  அவர்களுடைய கடைசி ஆய்வான போன்ஸி வழக்கை முடித்து விட்டதாக வும், அதன் முடிவுகளை முறையாக அதற்  குரிய அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாக வும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எங்கள் நிறுவனத்  தின் பணிகள் இன்று முடிந்துள்ளது. இது தான் எங்கள் நிறுவனத்திற்கு கடைசி நாள்  என்றும்  தெரிவித்துள்ளார். இந்த முடிவு நிறுவனத்தின் செயல்  திட்டம் மற்றும் நோக்கத்தின் அடிப்படை யிலான முடிவு என கூறப்படுகின்றது. எந்த  வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக வும் நாங்கள் நிறுவனத்தை மூடத் திட்ட மிடவில்லை எனவும், உடல்நலப் பாதிப்போ அல்லது  தூண்டுதலின் காரணமாகவோ இம்முடிவிற்கு நாங்கள் செல்லவில்லை எனவும், இந்த அத்தியாயம் இயல்பாக அதன் முடிவுக்கு வந்துள்ளது எனவும் நடே ஆண்டர்சன் பேசியுள்ளார். ஆய்வு முடிவுகளை  வெளியிடத் திட்டம் மேலும் மற்றவர்களையும் இது போன்ற ஆய்வுப்பணிகளை செய்யத் தூண்ட வேண்டும் என்பதற்காக  இன்னும்  ஆறு மாதத்தில் அந்நிறுவனம் மேற்  கொண்ட ஆய்வு முறைகளை வெளியிடப் போவதாகவும், இதற்கான ஆவணங் கள் மற்றும் காணொலிகளை பொதுவெளி யில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.   அவரின் இந்த ஆய்வுப்பணிகளின் காரணமாக  பெரும் பணக்காரர்கள் , நிறுவ னங்கள்  என  100 தனிநபர்கள், ஒழுங்கு முறை அதிகாரிகளால் சிவில் மற்றும்  கிரிமினல் வழக்குகளை சந்தித்துள்ளனர்.  இதனை குறிப்பிட்ட அவர் ‘நாங்கள் அசைத்துப் பார்க்க நினைத்த நிறுவனங் களை அசைத்துப் பார்த்தோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
2025-01-17 01:55:43.949638
ஜனவரி 17, 2025
“வெண்கலப் பாத்திரக் கடைக்குள் புகுந்த மதயானை!” - சா.பீட்டர் அல்போன்ஸ், மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/madayana-entered-the-bronze-vessel-shop
தமிழ்
UTF-8
அடுத்த வாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி யாக டொனால்டு டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். அமெரிக்க ஜனநாயகத்தின் வரலாற்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு “குற்றவாளி” தண்டனையைத் தலையில் சுமந்து கொண்டு ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல்முறை.ஆணவமும் அதிகாரமும்ஜனநாயக விழுமியங்கள், நாடாளுமன்ற மரபுகள்,  காலம்காலமாக பின்பற்றி வருகின்ற நடைமுறைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் என்ற ஆணவத்தோடு, தன்னை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் டிரம்ப், தனது நடவடிக்கைகள், செயல்முறைகள், அணுகுமுறை என எதையும் மாற்றிக்கொள்ளாமல் அமெரிக்க நாட்டை மீண்டும் ஆட்சி செய்ய இருக்கிறார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய ராணுவம், உலகின் மிகப்பெரிய சந்தை, அறிவியல்-தொழில் நுட்ப ஆற்றலின் சிகரம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றெல் லாம் அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெற்றி ருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்பது அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை. “தான்” என்ற ஆங்காரத்தையும், தங்களிடம் இல்லா தது  எதுவும் இல்லை என்ற தற்பெருமையும், உலக நாடுகள் அனைத்தையும் மேலாண்மை செய்து உலகை ஒழுங்குபடுத்தும் தகுதி தங்களிடம் மட்டுமே இருக்கிறது என்ற அகம்பாவமும் சராசரி அமெரிக்கரின் மரபணுக் குணங்கள். மேனாள் அமெரிக்க உள்துறை செயலர் சொன்னது போல அவர்க ளைப் பொறுத்தவரை “அமெரிக்கா உலகின் எந்த நாட்டாலும், யாராலும் தவிர்க்கமுடியாத ஒரே நாடு” (world’s only indispensable nation). தங்களது நாட்டைப் பற்றிய பெருமிதமும், தங்க ளது தகுதிகளின் மீது தன்னம்பிக்கையும், தாய்நாட்டுப் பற்றும்  அனைவருக்கும் இயற்கையானதே!  தன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்! இந்த ஆணவமே ஒரு நாட்டின் தலைவரை வழிநடத்தும் கொள்கையாக இருந்தால் அந்த நாட்டின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்  என்பதை பதவியேற்பதற்கு முன்னரே டிரம்ப் வெளிப்படுத்த துவங்கிவிட்டார்.இறுமாப்புடையவனின்  முதல் நோக்கம்அமெரிக்க குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவல கத்தில் அமர இருக்கும் டிரம்ப்பின் கைகளில் இருக்கும் அதிகாரங்கள் சாதாரணமானவையல்ல. கடந்த முறை அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன் றத்தில் அவரது கட்சிக்கு போதுமான பெரும்பான்மை  இருக்கவில்லை. இந்த முறை அவருக்கு நாடாளு மன்றத்திலும் பெரும்பான்மை உள்ளது. நமது நாட்டைப்போல நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமும் அங்கே இல்லை. அவருக்குப் பிடித்த மான யாரையும் அவர் அமைச்சராக வைத்துக் கொள்ள லாம். நமது வீட்டு குழந்தைகளுக்கு பீசா ஆர்டர் செய்து அனுப்புவதைவிட  வேகமாக அவரால் உலகம் முழுமையும் கண்ணிமைக்கும் நேரத்தில் இருபது முறை எரித்துச் சாம்பலாகும் சக்திவாய்ந்த அணு ஆயு தங்களை தாங்கிய 5044 அதிவேக ஏவுகணைகளை எந்த நாட்டை நோக்கியும் ஏவமுடியும். இறுமாப்பு உடையவன் கைகளில் அதிகாரமும் ஆயுதமும் கிடைத்தால்  எப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதை உலக வரலாற்றின் பல பக்கங்களில் பார்த்துள்ளோம். தங்கள் கரங்களில் இருக்கும் அதிகாரத்தை வைத்து அடுத்த நாட்ட வர்களது நிலங்களையும், வளங்களையும் கைப்பற்று வதுதான் அவர்களது முதல் நோக்கமாக இருக்கும்.கிரீன்லாந்தை  கைப்பற்ற சதித்திட்டம்ஆட்சியில் அமர்ந்தவுடன் அண்டைநாடான கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளி யிட்டதோடு மட்டுமில்லாமல் அப்படி இணைத்துக் கொள்ள கனடா உடன்படவில்லையென்றால் அந்நாட்டின்மீது பல பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாகவும்  மிரட்டுகிறார். டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிரீன்லாந்து தீவினை தங்களுக்கு  விற்றுவிடவேண்டும்  என்று கேட்கிறார். ஆர்க்டிக் துருவப்பிரதேசமான இந்த தீவு அமெரிக்காவுக்கு அருகில் உள்ளது. அமெரிக்கா வுக்கு இங்கே ஒரு விமானத்தளம் இருக்கிறது. 57000 மக்கள் மட்டுமே வாழும் இந்த தீவில் சமீபத்தில் நடத்தப்பட்ட  புவியியல் ஆய்வு, மின்சார வாகனங் கள் மற்றும் அதற்கான பேட்டரிகள் செய்ய அவசிய மான 34 மூலப்பொருட்களில் 25 பொருட்கள் ஏராள மாக இந்த தீவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தீவைச் சுற்றி 28,000 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பில் பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன.  அதற்கு கீழே ஏராளமான பெட்ரோலிய கச்சா எண்ணெய்யும் எரிவாயுவும் மண்டிக்கிடப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. “அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும், உலக நாடுகளின் நன்மைக்கா கவும் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமான தாகவும் அதன் ஆட்சியிலும் இருக்கவேண்டும் என்று  அமெரிக்கா கருதுகிறது” என டிரம்ப் அறிவித்த சில நாட்களில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர், கிரீன்லாந்துக்கு சென்று சில ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். குடியரசுக் கட்சியைச் சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரீன்லாந்தை அமெ ரிக்கா கையகப்படுத்தும் அதிகாரத்தை டிரம்புக்கு வழங்க ஒரு சட்ட முன்வடிவை தயார் செய்து, சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி யுள்ளனர். தற்போது  டிரம்ப் பனாமா கால்வாயின் நிர்வாகத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்  என்றும், ஒப்படைக்கத் தவறினால் ராணுவ நட வடிக்கை மூலம் கைப்பற்ற நேரிடும் என எச்ச ரித்துள்ளார்.மெக்சிகோ  வளைகுடாவை வளைக்க...“மெக்சிகோ வளைகுடாவை” இனிமேல் “அமெ ரிக்க வளைகுடா” என்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும்  டெக்ஸாஸ், கலிபோர்னியா, நேவடா, ஊட்டா, கொலராடோவின் பெரும்பகுதி, நியூ மெக்சி கோ, அரிசோனா ஆகிய நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில்  மெக்சிகோ நாடாகவே இருந்தன. அந்நாட்டின்மீது யுத்தம் நடத்தி அந்நாட்டின் பரப்பள வில் 55% பகுதிகளை சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் அமெரிக்கா தன்னோடு இணைத்துக் கொண்டது. அதற்காக அமெரிக்கா மெக்சிகோவுக்கு 15 மில்லியன் டாலர்களை வழங்கியது. ஒரு ஏக்க ருக்கு  5 சென்ட் என்ற ஈனக்கிரையத்தில் லட்சக்கணக் கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றிக் கொண்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளை யெல்லாம் சேர்த்து “அகண்ட பாரதம்” அமைக்க வேண்டும் என்று சில சங்கிகள் நம் நாட்டில் பேசி வருவது போல, கனடா, மெக்சிகோ, கிரீன்லாந்து போன்ற பகுதிகளைச் சேர்த்து “அகண்ட அமெ ரிக்கா” அமைத்திடவேண்டும் என்பது டிரம்பின் பேராசை.வரிவசூல் நெருக்கடி ஆயுதம்அந்நிய நாடுகளின் நிலங்களின் மீதும் வளங்க ளின் மீதும் கண் வைத்துவிட்ட டிரம்ப்  அவைகளை வளைத்துப்போட தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரி வசூலுக்காக ஐஆர்எஸ் -IRS (Internal revenue service) என்ற அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரவேண்டிய வரிகள், கட்டணங்கள், ஈவுத் தொகை கள் ஆகியவற்றை வசூலிக்க தனியார் நிறுவனங்க ளால் நிர்வகிக்கப்படும் இஆர்எஸ் - ERS (External revenue  service) என்ற அமைப்பை உடனடியாக துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளோடு கடந்த காலங்களில் போடப்பட்ட  வணிக ஒப்பந்தங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு சாதக மாகவும் அமெரிக்க நலனுக்கு பாதகமாகவும் இருக்கி றதாம். இதனால் அமெரிக்க மக்கள் மிகவும் அதிகமான வரிகளை கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்ப தாகவும் அதனை குறைப்பதற்காக அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களிடம் இருந்து அதிக கட்டணங்களையும், வரிகளையும் வசூலிப்பதே டிரம்பின் திட்டம். இதனால் கனடாவும், மெக்சிகோவும் மிக அதிகமாகப் பாதிக்கப்படும். கனடாவின் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்று விடும். ஏற்கனவே பல பொருளாதாரச் சிக்கல்களில் மூழ்கித் தவிக்கும் மெக்சிகோ திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை.டிரம்ப் தாக்குதலை  இந்தியா சமாளிக்குமாசீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான்  மற்றும் இந்தியாவும் இந்த நடவடிக்கையால் வெகு வாகப் பாதிக்கப்படும். இந்தியாவைப் பொறுத்த வரை ஏற்கனவே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் டிரம்பின் இந்த தாக்குதலை சமாளிப்பது இந்தியாவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அமெரிக்க ஏற்றுமதியை அதிகரித்தும், அமெரிக்க இறக்குமதிகளுக்கு மிக அதிகமாக வரி விதித்தும் தங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் “வணிக உபரி தொகையினை” (trade surplus) குறைக்க டிரம்ப் திட்டமிடுகிறார். இத்தகைய நடவடிக்கைகள் உலக பொருளாதார விநியோகச்  சங்கிலியில் (world economic supply chain) பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதனால் உலகம் தழுவிய பொருளா தார மந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அநேகம். “மீண்டும் அமெரிக்காவை பிரம்மாண்டமாக கட்டமைப்போம் (Make America great again) என்ற டிரம்பின் திட்டத்தை செயல்படுத்த அவர் எடுக்க இருக்கும் பல முன்னெடுப்புகளால் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் வெகுவாக மாறும்.  அமெரிக்க உற் பத்திகளை பாதுகாக்க அதனைச் சுற்றி அவர் அமைக்க உத்தேசித்துள்ள “பாதுகாப்பு வளையம்” உலக ளாவிய வணிக சுதந்திரத்துக்கு பெரும் நெருக்கடி தரும். புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் நிரந்தரமற்றதாக மாறிவிடும். புவி வெப்பமயமாக்கு தலை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போகும் அபாயத்தை தவிர்க்க முடியாது. டிரம்பைப் பொறுத்தவரை “புவிவெப்பமயமாதல் என்பது  ஒரு அறிவியல் மோசடி. அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து  பணம் கறக்க விஞ்ஞானிகள் சிலர் தயாரித்துள்ள கட்டுக்கதை”. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேசச் சட்டம்  போன்ற அனைத்து நாடுகளின் உறவுகளைப் பேணி வளர்க்கின்ற எந்த அமைப்புகளிலும் அவருக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்க நலன் மட்டுமே முக்கி யம். உலக நன்மைகளைப் பற்றி சிந்திக்கவும், அதற் காக பணம் செலவழிக்கவும் அமெரிக்கா இனிமேல் முன்வராது என்பதே அவரது நிலைப்பாடு.நட்பால் நன்மையில்லைஇந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் தனிப்பட்ட நட்பு இருப்ப தால் டிரம்பின் பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்காவில் இருக்கும் சங்கிகள் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அவரது நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவழி அமெரிக்கர்களைக் காண்பித்து இந்தியர்களை டிரம்ப் மிகவும் நம்பி நேசிப்பவர் என்று சொல்கிறார்கள். ஆனால் இது வரை பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு பெரும் நன்மைகள் நடப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தெரிய வில்லை. கடந்த முறைகூட அமெரிக்க ஆப்பிள் பழம் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியப் பொருட்க ளுக்கு உதவும் வகையில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டபோது இந்திய அரசை மிரட்டி அந்த வரி விதிப்பை நமது அரசு திரும்பப் பெற்றதை நினை வில் கொள்ள வேண்டும்.டாலருக்கு சளி பிடித்தால் ரூபாய்க்கு ஜன்னிடிரம்ப் அரசு பின்பற்ற இருக்கும் பி-1 விசா நடை முறைகளை காரணம் காட்டி  பல இந்தியத் தொழில் விற்பனர்களை, பல நிறுவனங்கள் வேலைகளிலி ருந்து நீக்கத்துவங்கிவிட்டன. பல பெரிய அமெ ரிக்கக் கம்பெனிகள் இந்தியத் தொழில் நுட்பவியலா ளர்களை வேலைகளில் அமர்த்தி அதற்கான உத்தர வாதக் கடிதங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்ததால் அவர்களும் அமெரிக்க வேலை வாய்ப்பினை நம்பி ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைகளில் இருந்து விலகிவிட்டனர். இப்போது அவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்டிருந்த வேலை வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  டிரம்ப் நிர்வாகம் எடுக்க இருக்கின்ற கொள்கை முடிவுகளை சுட்டிக்காட்டி திரும்பப் பெறுவதாக தெரிவித்து விட்டனர். “அமெரிக்க டாலருக்கு சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்கு காய்ச்சல் வரும் என்பார்கள்! இப்போது ஜன்னியே வந்துவிடும்” என்று பயமாக இருக்கிறது என இந்திய ஏற்றுமதியாளர் ஒருவர் அச்சப்பட்டார்.இடதுசாரி, ஜனநாயக அரசுகளுக்கு குறி...ஒன்று மட்டும் நிச்சயம்! ஜனவரி இருபதுக்குப் பின்னர் உலகம் நிச்சயமாக வழக்கமான உலகமாக இருக்காது. மதம் பிடித்த யானை வெண்கலப் பாத்தி ரக் கடைக்குள் புகுந்த கதைதான் நினைவுக்கு வரு கிறது, எலான் மஸ்க், விவேக் ராமசாமி போன்ற இதய மற்ற “உலக கோடீஸ்வரர்களின் கூட்டு முயற்சியே” டிரம்பின் வெற்றி. நவீனத் தொழில் நுட்பங்களும், பெரும் பணமும், கலப்படமற்ற சுயநலமும் ஒன்று சேர்ந்து பொய்யான தகவல்களையும் தவறான பிரச்சா ரங்களையும் பயன்படுத்தி பொது மக்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் தங்களுடைய விருப்பத்திற்கிணங்க வளைக்க முடியும் என்பதற்கு நடந்து முடிந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. உலகப் பணக்காரர்களின் பெரும் செல்வத்தை யும், வரைமுறையில்லாத பொருளாதாரச் சுரண்டல்க ளையும் பாதுகாப்பது மட்டுமே டிரம்ப் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். தங்களது இந்த முயற்சி யில் வெற்றியை ருசித்துவிட்ட இவர்கள், தற்போது  உலகம் முழுவதும் இருக்கின்ற இடதுசாரி, ஜனநாயக அரசுகளைக் குறிவைக்க துவங்கிவிட்டனர்.  இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் அடுத்த ஆட்சி மாற்றம் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்கிறார் எலான் மஸ்க். ஜெர்மனியில் மீண்டும் நாஜிக்களின் ஆட்சி வந்தால் மட்டுமே அந்த நாடு வளம் பெறும் என்ற பிரச்சாரத்தை தனது “டிவிட்டர்” நிறுவனம் மூலம் துவங்கிவிட்டார். உலகெங்கிலும் வலதுசாரி, பாசிச அரசுகளை ஜனநாயகத்தின் முகமூடியில் அமைப் பதே டிரம்ப் & எலான் மஸ்க் பாவக்கூட்டங்களின் நோக்கம். ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் ஆகிய வற்றில் நம்பிக்கை கொடை அரசியல் சக்திகள், உலகம் முழுவதும் கவனமாக இருக்கவேண்டும்.
2025-01-18 01:53:03.203857
ஜனவரி 17, 2025
மோடியின் 3வது ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் - பேரா. பிரபாத் பட்நாயக்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/modern-liberalism-and-hinduism
தமிழ்
UTF-8
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது.  ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான இந்துத்துவா - கார்ப்பரேட் கூட்டணி ஆட்சியின் கொடிய பொருளாதார தாக்குதலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டங்களின் புதிய வடிவங்களை - வியூகங்களை மதுரையில் நடைபெற உள்ள 24வது அகில இந்திய மாநாட்டில் வகுக்க உள்ளது. உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞரும் மார்க்சிய பொருளாதார வல்லுநருமான பேரா. பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள இக்கட்டுரை(The Economy and the New NDA Government, The Marxist XXXX, 1–2 January-June 2024)நவீன தாராளமயமும், இந்துத்துவாவும் எப்படி ஒன்றுக்கொன்று உதவி செய்து வருகின்றன என்பதை விளக்குகிறார்.2008ல் அமெரிக்க வீட்டுவசதித் துறையில் ஏற்பட்ட  சரிவு முதலாளித்துவ உலகின்  நெருக்கடியை ஆழப்படுத்தியது. நவீன தாராளமயப்  பொருளாதாரக் கொள்கை களுக்கும் ஜனநாயக  அரசியல் முறைக்கும் இடையேயான முரண்பாடுகள்  வெளிப்படையாயின. இந்த நெருக்கடியைச்  சமாளிக்க  ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (யுபிஏ-2) அரசு  நிதிப் பற்றாக்குறையை அதிகரித்தது. இது சர்வதேச நிதி  மூலதனத்தின் எதிர்ப்பையும், உள்நாட்டு பெருநிறுவன-நிதி மேல்தட்டின் கோபத்தையும் சம்பாதித்தது.இந்துத்துவா-பெரு முதலாளித்துவ கூட்டணியின் தோற்றம்இந்த சூழலில்தான் பெருமுதலாளித்துவ சக்திகள் இந்துத்துவா சக்திகளுடன் கைகோர்த்தன. நரேந்திர மோடி இந்த கூட்டணிக்கு  ஏற்ற நபராக செயல்பட்டார். குஜராத் முதல்வராக இருந்தபோது நடத்திய முதலீட்டாளர் மாநாடுகளில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல், ஜாம்ஷெட் கோத்ரேஜ் போன்ற தொழிலதிபர்கள் மோடியை ‘நாட்டின் தலைமை நிர்வாகி’ ஆக்க வேண்டும் என ஆதரவு அளித்தனர்.பெருமுதலாளிகளுக்கான சலுகைகள்இவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் பெருமுதலாளிகளுக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் வரி 30%லிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டது. 2014 முதல் 2023 வரை ரூ.17.46 லட்சம் கோடி  வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பொதுத்துறை நிறு வனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் விற்கப்பட்டன.தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகள்29 தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களாக கொண்டுவரப்பட்டன. குறைந்தபட்ச ஊதியத்துக்கும் குறைவான ஊதியம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. புதிய தொழிற்சங்கங்களை பதிவு செய்வது கடினமாக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தொழிற்சங்கங்களை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஒப்பந்த முறை தொழிலாளர் நியமனம் எளிதாக்கப்பட்டது.விவசாயிகள் மீதான தாக்குதல்விவசாயிகளுக்கான நிறுவன கடன்கள் குறைக்கப்பட்டன. உள்ளீட்டு மானியங்கள் வெட்டப்பட்டன. பணப்பயிர்களுக்கான விலை ஆதரவு நீக்கப்பட்டது. மூன்று விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஓராண்டு போராட்டத்துக்குப் பிறகே அவை திரும்பப் பெறப்பட்டன.சிறு வணிகர்கள் மீதான நெருக்கடிபணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவை இரண்டுமே பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களின் பரிந்துரைகள். சிறு வணிகர்களின் கடன் சுமை அதிகரித்தது. வரி விதிப்பு கூடியது. கணக்கு வைப்பதற்கான செலவுகள் அதிகரித்தன.வேலையின்மை நெருக்கடிநான்கு காரணங்களால் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது: 1. நவீனதாராளமய கொள்கைகளால் வேலை உருவாக்கம் குறைந்தது. 2. அதிகரித்த ஏற்றத்தாழ்வுகளால் உற்பத்தி நெருக்கடி. 3.பணக்காரர்களின் நுகர்வு முறை வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. 4.சிறு தொழில்கள் மீதான தாக்குதல்கள் வேலை இழப்புக்கு காரணமாகின்றன.தீர்வுக்கான வழிபொருளாதார மாற்றங்கள் அவசியம்: uமூலதன வெளியேற்றத்தை  கட்டுப்படுத்த வேண்டும் uவர்த்தகக் கட்டுப்பாடுகள்  கொண்டு வர வேண்டும் uஅரசின் பங்கை அதிகரிக்க வேண்டும் u சிறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும் u விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் u உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும் u உரிமை அடிப்படையிலான நல அரசை உருவாக்க வேண்டும்“வளர்ச்சியின் பலன்கள் சொட்டுச் சொட்டாக கீழே கசியும் (Trickle down) என்ற நவீன தாராளமயத்தின் வாக்குறுதி முற்றிலும் பொய்யானது என்பது நெருக்கடியால் அம்பலமானது.” “நவீன தாராளமய கொள்கைகளைத் தொடர் வதற்கு ஒரு புதிய கதையாடலும், புதிய ஒற்றை அணிதிரட்டலும் தேவைப்பட்டது. அதற்காகவே பெருமுதலாளித்துவ-நிதி மூலதன முதலாளித்துவம் பாசிச இந்துத்துவா சக்திகளை நோக்கித் திரும்பியது. ஜனநாயகத்தின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு, உள்ளே நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர இது உதவியது.” “தலைவரை தெய்வமாக்குவதே இத்தகைய கார்ப்பரேட் - மதவெறி கூட்டணி ஆட்சியின் முக்கிய குணாம்சம். உண்மைகளை ஏற்றுக்கொள்வது இதற்கு அந்நியமானது. தலைவர் சொல்வதே உண்மையாக இருக்க வேண்டும்.தலைவரின் கொள்கைகளே சரியான கொள்கைகளாக இருக்க வேண்டும்.” “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேலையின்மையை அதிகரிக்கும் நவீன தாராளமயக் கொள்கையின் முட்டாள்தனத்தை ஒரு உதாரணத்தின்மூலம் விளக்கலாம். சில பொருட்களின் விலையேற்றத்தை அரசு தலையீட்டால்கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதற்கு பதிலாக வேலையின்மையை அதிகரிப்பது கொடூரமானது.1930களில் தேசிய மூலதனம் இருந்தது. அதனால் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை  அதிகரிக்க முடிந்தது. இன்றோ சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே தேசிய அரசுகள் அதன் விருப்பத்துக்கு எதிராக செயல்பட முடிவதில்லை. “கடந்த காலங்களில் தொழிற்சங்கங்களின் போராட்டங்களால் நான்கு தொழிலாளர் சட்ட திருத்தங்களை அமல்படுத்த முடியவில்லை. விவசாயிகளின் ஒரு ஆண்டு போராட்டம் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவைத்தது. இது மக்கள் ஒற்றுமையின் வெற்றி.” “வெங்காயம், உருளை, தக்காளி போன்ற காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்கிறது. இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி  வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இது வேலையின்மையை அதிகரிக்கிறதே தவிர விலைவாசியைக் குறைப்பதில்லை.” “பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் சிறு உற்பத்தியாளர்களை அழிக்கும் கருவிகளாக மாறின. இவை இரண்டுமே பன்னாட்டு நிதி நிறுவனங்களின் பரிந்துரைகள். இவற்றால் சிறு வணிகர்கள் கடன் சுமையில் மூழ்கினர்.” “இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதே நிலையில் உள்ளது. ஆனால் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.இது வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரிப்பதைக் காட்டுகிறது.” “நல அரசு என்பது வெறும் வார்த்தையாக இருக்கக்கூடாது. அது உரிமை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அதற்கான நிதி பணக்காரர்கள் மீதான வரி மூலமும், சொத்து வரி மூலமும் திரட்டப்பட வேண்டும்.” “பணக்காரர்களின் நலனுக்காக இயங்கும் இந்த பொருளாதார முறையை மாற்றாமல் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. நமக்குத் தேவை பொருளாதார மாற்றமும் சமூக மாற்றமும்தான்.”
2025-01-18 01:53:03.204783
ஜனவரி 17, 2025
கம்யூனிஸ்ட் எப்படியிருப்பார்? எப்படியிருக்க வேண்டும்? - ஆர்.ஹரிஹரன், கோவை
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/what-should-a-communist-be-like
தமிழ்
UTF-8
கம்யூனிஸ்ட் எப்படியிருக்க வேண்டும்? சிவப்பாக இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை!. கம்யூனிஸ்டுகளுக்கு நிறமில்லை, சாதியில்லை, இனமில்லை, மதமில்லை. வேறென்ன? மனிதநேயம் மட்டுமே! உலக மக்கள் அனைவரும் பிறந்தது நல்ல வாழ்க்கைக்காக! அது இந்த பூமியில் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். மனித சமுதாயம் மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து அவை அனைத்தையும் மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவனே கம்யூனிஸ்ட்! இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஊனமில்லாத பிறப்பு, நோயில்லாத உடம்பு. நிறைவான வாழ்க்கை, வயோதிகத்தில் மட்டுமே சாவு, சமாதானமான உலகம் இப்படியமையவுள்ள சமுதாயத்தை படைப்பவனே கம்யூனிஸ்ட்! மேலும் தெளிவு வேண்டுமா? ஒரு மனிதன் வாழ்வதற்கு உணவு - உடை - உறைவிடம் அவசியம். இவைகள் பல வண்ணங்களில் கிடைக்காவிட்டாலும், அவன் நடமாட, அன்றாடத் தேவைகளை மேற்கொள்ள இம் மூன்றும் அவனுக்கு தேவையான அளவு பூர்த்தி செய்யும் சமுதாயமே கம்யூனிச சமுதாயம்! இவ்வுன்னதமான சமுதாயத்திற்கு மக்களை அழைத்துச் செல்பவனே உண்மையான கம்யூனிஸ்ட்!!அவர்கள் என்ன செய்தார்கள்?சமுதாய மாற்றத்தின் சிற்பிகளான இந்த கம்யூனிஸ்டுகள், எப்படியிருக்க வேண்டும்? கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், ஹோசிமின், காஸ்ட்ரோ, சே-குவேரா போன்ற பிதாமகன்கள் போல உருவத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் பின்பற்றிய, உருவாக்கிய தத்துவங்களை நடைமுறையில் கையாளும் மதிநுட்பம் கொண்டவர்களாக இருந்தாலே போதும்! அப்படியென்ன இத்தலைவர்கள் செய்தார்கள்? மார்க்சும், ஏங்கல்சும் 1848ஆம் ஆண்டு “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்ற நூலை வெளியிட்டு ‘கம்யூனிசம்’ என்ற மக்களுக்குரிய புதிய தத்துவத்தை இந்த முதலாளித்துவ உலகில் உலவச் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தை ரத்தினச்சுருக்கமாக கூறுவதென்றால், “தனிச் சொத்துடைமையை ஒழித்தல்” என்பதாகும். அதாவது, நாட்டிலுள்ள அனைத்துச் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டு, அரசே முன் நின்று மக்களின் நலனுக்காக அச்சொத்துக்களை முறை யாகப் பயன்படுத்தும் என்று பொருள். தனிச் சொத்து டைமை என்ற  முதலாளித் துவத்தை எப்படி வீழ்த்துவது? பாட்டாளிகள் ஒரே வர்க்கமாக ஓர் அணியில் பிணைய வேண்டும். பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்! அரசியல் அதிகாரத்தை, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் கைப்பற்றினால் தான் நாட்டின் சொத்துக்கள் பொதுவுடைமையாகும். பொருட்களை பதுக்குகிற வேலை இச்சமுதாயத்தில் இருக்காது! உழைக்கிற நோக்கம் உறுதியாக்கப்படும்! ஒருவரையொருவர் கெடுக்கிற கேடு எண்ணம் தவிர்க்கப்படும்! மக்கள் ஜனநாயகப் புரட்சி, சோசலிசம் படிக்கட்டுகளை தாண்டி கம்யூனிசம் என்னும் உன்னதமான சமூகத்திற்குச் சென்றால் தான் மனிதர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆகவே அச்சமுதாயத்தை படைக்க வழிவிடுங்கள் என்று தற்போதைய ஆளும் வர்க்கத்திடம் கம்யூனிஸ்ட் விண்ணப்பிக்க மாட்டான்!யாசகம் கேட்கமாட்டார்கள்...புரட்சியை நடத்த ஆளும் வர்க்கத்திடம் யாசகம் கேட்க முடியாது!. முதலாளித்துவம், நிலப் பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் என்றுமே சோசலிச சமூகம் அமைய புரட்சியை அனுமதிக்காது. இருப்பவன் - இல்லாதவன், ஏழை - பணக்காரன், உழைப்பவன் உழைப்பைத் திருடுபவன் என்ற இழிவான சமுதாயக் கட்டமைப்பு தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் இம்மூன்று சக்திகளும் சிரத்தையோடு எப்போதும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். ஏனெனில், சோசலிசம் மலர்ந்து விட்டால் தகுதிக் கேற்ப வேலை, வேலைக்கேற்ற ஊதியம் அமலாகும். எனவே ஒவ்வொரு மனிதனும் அவரவர் தகுதிக்கு பணியாற்றியே ஆக வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அமர்ந்தே உணவருந்திய, ஆதிக்கம் செலுத்தியே பழக்கப்பட்ட முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவவாதிகள் எப்பாடுபட்டேனும் புரட்சியை நடத்த விட மாட்டார்கள்! ஆனால் பாட்டாளி வர்க்கம் விவசாயிகளை நேசப்படையாக இணைத்துக் கொண்டு மக்கள் ஜனநாயகப் புரட்சியை கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடத்தியே தீரும்! சகலவிதமான அதிகாரம், படை பலங்களைக் கொண்ட முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளை வீழ்த்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியை தலைமை தாங்கி நடத்தும் கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்ட மனவலிமையுடன், வர்க்க உணர்வுடன் மக்கள் தலைவனாக இருக்க வேண்டும் தெரியுமா?தொழிலாளி வர்க்க குணம்...ஏற்கனவே கூறிய மாதிரி சிவப்பாகவோ அல்லது ஹெர்குலஸ் போல கட்டுடல் கொண்ட பலசாலியாகவோ ஒரு கம்யூனிஸ்ட் இருக்க வேண்டியதில்லை. எதார்த்தவாதியாக, தொழிலாளி வர்க்க குணத்தோடு இருந்தாலே போதும். எதார்த்தம் என்றால் வெகுளி என்று அர்த்தம் அல்ல! உண்மை பேசுபவர்களாக, மக்களிடம் சகஜமாகப் பழகுகின்ற தன்மைதான் எதார்த்தம். தொழிலாளி வர்க்க குணம் என்றால், ஏதாவது ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அநியாயம் எங்கு நடந்தாலும், அப்போதே அதற்கு நியாயம் கேட்கும் பாங்கு வேண்டும்! அநீதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி, போராட்டக்களத்தில் இறங்கி வெற்றி காணும் தளபதிகளாக விளங்க வேண்டும்! அதுதான் தொழிலாளி வர்க்க குணம். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவங்களை மனதிற்குள் நிலை நிறுத்த வேண்டும். ஸ்தாபன கோட்பாடுகளை கட்சித்தலைமை வழிகாட்டுதலோடு கடைப்பிடிக்க வேண்டும். தத்துவம், நடைமுறை இவ்விரு வீரியமான விசயங்களை இரட்டை மாட்டு வண்டி போல சீராக இயக்க வேண்டும். தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத்தனம் போன்றது, நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம் போன்றது என்று புரட்சியாளர் ஸ்டாலின் கூறியுள்ளதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் நினைவு கூர்ந்து செயலாற்ற வேண்டும். காற்றும், நீரும் மனிதனுக்கு உயிர் வாழ எப்படி அவசியமோ, அதுபோல கம்யூனிஸ்டுகளுக்கு தத்துவமும், நடைமுறையும் சமுதாய மாற்றத்திற்கான ஜீவனான கண்கள் என்று உணர வேண்டும்.எளிமையே வலிமை!கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுதான் உண்மையான அழகு! மக்களுக்கு ஒத்துவராத அந்நிய வர்க்கப் பண்புகளான டாம்பீகம், லஞ்சம், ஊழல், மது அருந்துதல், வரதட்சணை வாங்குதல், மனைவிகளை அடித்தல், ஒழுக்கக்கேடு போன்றவற்றிற்கு வெகு தொலைவாக இருப்பவர்களே கம்யூனிஸ்ட்! எளிமையான வாழ்க்கையை கடைப் பிடிப்பவன் கம்யூனிஸ்ட்! எளிமை என்றால், எலும்பும் தோலுமாக, அழுக்குச் சட்டையோடு சொன்ன வேலைகளை செய்யும் அப்பாவி என்று அர்த்தமல்ல!  பல நவீன வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அரசு அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும், அவைகளை தவிர்த்து குடும்ப நிகழ்ச்சிகளை பழமை யான சடங்குகளை சங்கட மில்லாமல் கடந்து ஆடம்பர மில்லாமல் நடத்துவது, மக்க ளோடு, தொழிலாளர்களோடு சகஜமாகப் பழகி அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளை போக்கி நன்மதிப்பை பெறுவது தான் எளிமை! பதவிகளுக்காக நாடி ஓடிச் செல்லாமல், பதவி வரும் போது மட்டுமே அதை ஏற்று, பணிவோடு நடந்து துணிவோடு செயல்படுவதும் எளிமையான வாழ்க்கையே! அது மட்டுமல்ல, நாட்டு ஒற்றுமை, மக்கள் நலனுக்கான போராட்டங்களின் போது மரணத்தை புன்னகையோடு வரவேற்பவன் கம்யூனிஸ்ட்! கம்யூனிஸ்ட் என்றுமே புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறான்.!மக்கள் ஊழியர்கள்!தன்னலம் பெரிதா, கட்சிநலன் பெரிதா என்றால் கட்சி நலன்தான் பெரிது என்பவன் கம்யூனிஸ்ட் ! கட்சிநலன் பெரிதா நாட்டுநலன் பெரிதா என்றால் நாட்டுநலனே என்று உடன் சொல்பவனும் கம்யூனிஸ்ட்! உலகிலேயே உயர்ந்த சிறந்த பதவி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பதவி மட்டுமே என்று உரத்த குரலில் சொல்பவனும் கம்யூனிஸ்டே!! மேற்குவங்கத்தில் ஜோதிபாசு, புத்ததேவ் மாநில முதல்வராக இருந்த போதும் சரி! திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தி, தசரத்தேவ், மாணிக்சர்க்கார் முதல்வராக இருந்த போதும் சரி! கேரளாவில் இஎம்எஸ், இ.கே.நாயனார், அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோதும் சரி! தற்போது பினராயி விஜயன் தலைமையில் மாநில அரசு இயங்குகிற போதும்சரி, முதல்வர் உள்பட அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மாத ஊதியம் பெற்றாலும், அவைகளை கட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, கட்சி தரும் மாத அலவன்ஸான ரூ. 13,000 முதல் ரூ. 15,000 வரை மட்டும் பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே உள்ளனர்! மேலும் கம்யூனிஸ்டுகளின் வீடுகளிலிருந்தது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்கள், தங்க ஆபரணங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற செய்தி இதுவரை எந்த நாளிதழிலும் வரவில்லை என்ற செய்திக்கு சொந்தக்காரர்கள் கம்யூனிஸ்டுகளே! ஏனென்றால் அவர்கள் என்றும் மக்கள் ஊழியர்களே! இத்தகைய உன்னதமான உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் 2025 ஏப்ரல் 2-6 வரை நடைபெற உள்ளது. பொதுமக்களே, பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் ஏனைய முதலாளித்துவ, சாதியக் கட்சிகளுக்கும் மாற்று சக்தி கம்யூனிச இயக்கமே! திரும்பிப் பாருங்கள் - யோசியுங்கள்! வாழுகிற போதே சொர்க்கத்தை உணர்வோம்! அனுபவிப்போம்! கம்யூனிச சமுதாயத்தை படைப்போம்!
2025-01-18 01:53:03.205301
ஜனவரி 17, 2025
பொய்யே மூலதனம்
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/bjp-leaders-and-ministers-are-lying
தமிழ்
UTF-8
பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் பொய் பேசுவதையே வழக்கமான ஒன்றாக மாற்றிக்கொண்டுள்ளனர். யார் கேட்கப்போகி றார்கள் என்று வரலாற்றை திரித்துக் கூறுவது, அரசின் சாதனை என்ற பெயரில் பொய்யான புள்ளி விவரங்களை அவிழ்த்து விடுவது அவர்க ளின் வாடிக்கையாக உள்ளது. இப்படித்தான்  அருப்புக்கோட்டை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரி வித்ததால்,  அத்திட்டம்  கைவிடப்பட்டது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உண்மைக்கு மாறான தகவலை கூறினார்.ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டுதான் பேசுவார்கள். ஆனால் பாஜக அமைச்சர்கள் தெரிந்தும் உண்மையை பேச மறுக்கிறார்கள்.  அருப்புக்கோட்டை -தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் ரூ.18 கோடியும் ஒதுக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும்  நிலையில் ரயில்வே அமைச்சரின்  அபாண்டமான குற்றச்சாட்டு கடும் கண்ட னத்திற்கு உரியது.தாம் பேசியது தவறானது எனத் தெரிந்த பின்னரும் ஒன்றிய அமைச்சர் வருத்தம் தெரி விக்கவில்லை. மாறாக தனுஷ்கோடி என்று ஏதோ ஒன்றை கூறி மழுப்புகிறார். இது மட்டுமல்ல, ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழகத்தை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஏற்கனவே கடந்த பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு குறை வான நிதியே ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் 11- புதிய பாதைகளுக்கு 976.1  கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வழக்கமான பட்ஜெட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. மேலும் புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ. 674.8 கோடி வெட்டப்பட்டது. பொதுபட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை -கடலூர் - மகாபலி புரம்,  ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி - இருங் காட்டுக் கோட்டை - ஆவடி - ஸ்ரீபெரும் புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்களில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அதேபோல், தமிழ கத்திற்கான இரட்டைப் பாதைத் திட்டங்க ளுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64  கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய அரசு குறைத்தது.  இப்படி யாக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு இழைத்த துரோகத்தை எடுத்துக்கூற வேண்டும் என்றால் ஒருநாள் போதாது.
2025-01-18 01:53:07.337226
ஜனவரி 17, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/australian-open-tennis-2025---juvarev-aba
தமிழ்
UTF-8
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - ஜுவரேவ் அபாரம்2025ஆம் ஆண்டின் முதல் மற்றும்  113 ஆண்டுகால பழமையான ஆஸ்தி ரேலிய ஒபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில்  நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றா வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனி யின் ஜுவரேவ், தரவரிசையில் இல்லாத பிரிட்டனின் ஜேக்கப்பை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜுவரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அல்காரஸ் 2:55 மணிநேர போராட்டம் இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத் தில், தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தர வரிசையில் இல்லாத போர்ச்சுக்கலின் நுனோவை எதிர்கொண்டார். அல்கா ரஸுக்கு எதிராக சரிசமமான அளவில் அதிரடியாக விளையாடியதால் இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்றது. இறுதியில் 6-2, 6-4, 6-7(3-7), 6-2 என்ற செட் கணக்கில் 2:55 மணிநேர போராட்டத்துடன் அல்காரஸ் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் :  பவுல் (அமெரிக்கா), டேவிட் நோவிச் (ஸ்பெயின்)காயம் காரணமாக ஒசாகா விலகல்2 முறை (2019, 2021) ஆஸ்திரேலிய சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் ஒசாகா, தனது மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் பென்கிச்சை எதிர்கொண்டார். இருவரும் தரவரிசையில் இல்லாதவர்கள். இத்தகைய சூழலில் பென்கிச் அதிரடியாக விளையாடி 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த சில நிமிடங்களில்  ஜப்பானின் ஒசாகா காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அதிர்ஷ்ட வாய்ப்புடன் சுவிட்சர்லாந்தின் பென்கிச் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள்: சபலென்கா (பெலாரஸ்), கவுப் (அமெரிக்கா), படோசா (ஸ்பெயின்), வெக்கிச் (செக் குடியரசு).பதவியை காப்பாற்ற தேவையில்லாத வேலை: 27 வயது வீரர் மீது பழி சுமத்தி தப்பிக்கும் கம்பீர்பாஜக முன்னாள் எம்.பி., கவுதம் கம்பீர் சமீபத்தில்  இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளராக நியமிக்கப்பட்டார். அவரது மோசமான பயிற்சி மற்றும் ஆடும் லெவன் தேர்வு காரணமாக நியூசி லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது.  இத்தகைய சூழலில் கம்பீர் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது பத வியை காப்பாற்றிக் கொள்ள கம்பீர் தேவையில்லாத கருத்துக்கள் மூலம்  கிரிக்கெட் விளையாட்டில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆய்வுக் குழு கூட்டத்தில், “இந்திய அணி ஏன் சரியாக செயல்பட வில்லை?” என்று கேள்வி கேட்டதற்கு தனது கையாளாகாத தனத்தை ஒப்புக் கொள்ளாத கம்பீர், வீரர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது பிசிசிஐ-யிடம் புகார் தெரிவித்தார். இதன் காரணமாகவே பிசிசிஐ வீரர் களின் குடும்பத்தினர் வந்து செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும் அணியில் நடக்கும் விஷயத்தை இந்திய அணியின் இளம்  நட்சத்திர வீரர் சர்பிராஸ் கான் பத்திரிகையாளர்களிடம் சொல்வ தாக கம்பீர் பிசிசிஐயிடம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய அணி ஏன் சரியாக செயல்படவில்லை என்று காரணம் கேட்டால், சம்மந்தம் இல்லாமல் அணியில் நடப்பதை சர்பிராஸ்கான் வெளியே சொல்கிறார் என்று கம்பீர் ஒரு இளம் வீரர் மீது பழியை சுமத்தி அவருடைய வாழ்க்கையே முடிக்க பார்ப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2025-01-18 01:53:07.951842
ஜனவரி 17, 2025
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அடாவடி: கேள்வி கேட்ட பத்திரிகையாளர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/the-journalist-who-asked-the-question-was-kicked-out
தமிழ்
UTF-8
வாஷிங்டன்,ஜன.17- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது இஸ்ரேல்-காசா போரில் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை குறித்து கேள்வி எழுப்பிய  பத்தி ரிகையாளர் சாம் ஹுசைனியை அமை ச்சரின் பாதுகாவலர் கள் அடாவடியான முறையில் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளி யேற்றியுள்ளனர். பிளிங்கன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பைடன் தலைமை யிலான அமெரிக்க அரசு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு குறித்து பத்திரிகையாளர் சாம் ஹூசைனி கேள்வி எழுப்பினார்.  இதற்கு அரசின் செயலை மதிக்க வேண்டும் என பிளிங் கன் பதில் கூறினார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பேசிய ஹுசைனி, சர்வதேச பொது மன்னிப்பு ஸ்தாபனம் (அம் னஸ்டி இன்டர்நேஷனல்) உள்ளிட்ட அமைப்புகள் முதல் சர்வ தேச குற்றவியல் நீதிமன்றம் வரை அனைவரும் இஸ்ரேல் காசாவில் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்கின் றது என கூறுகின்றனர். இதனை தான், நீங்கள் மதிக்கச் சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.  உடனடியாக அவரை அமைச்சரின் பாதுகாவலர்கள், குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது அமெ ரிக்காவில் பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி புகழ்ந்து பேசி வரும் நீங்கள்  இவ்வாறு செய்வது நம்நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தின் வீழ்ச்சியை தான் எடுத்துக்காட்டுகிறது என சத்தமிட்டார் சாம். மேலும் பிளிங்கன் ஒரு “குற்றவாளி” என்று கோஷமிட்டார்.  மேலும் சர்வதேச  குற்றவியல் நீதி மன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நீங்கள் ஏன் ஏறவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
2025-01-18 01:53:08.133588
ஜனவரி 17, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/union-government's-budget-presentation-on-february-1
தமிழ்
UTF-8
பிப்.1-இல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்!புதுதில்லி, ஜன. 17 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என  எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில், முதல் கட்ட கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் என்றும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 அன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 31 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவதன் மூலம் கூட்டத் தொடர் தொடங்கும். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.ஆளுநர் ரவிக்கு எதிரான கூடுதல் மனு விசாரணைக்கு ஏற்பு!புதுதில்லி, ஜன. 17 - தமிழ்நாடு சட்டமன்றத் தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்துவதாக ஏற் கெனவே குற்றம் சாட்டப் பட்டது. இதுதொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ரிட்  மனுக்  கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவையும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.  தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன் ஆகி யோர் தாக்கல் செய்த இந்த மனுக்களை   நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மகா தேவன் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு  சுற்றுச்சூழல் அனுமதிசென்னை,ஜன.17- சென்னை ஈசிஆர் சாலை யில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. வளர்ந்து வரும் தேவை, எதிர் காலத் தேவைகளை கருத்தில் கொண்டு சுமார் 25 ஏக்கர் பரப்ப ளவில் உலகத் தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப் படும் என கடந்தாண்டு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருந்தார். இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல  ஒழுங்குமுறை ஆணைய அனு மதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை; த.வெ.க.சென்னை,ஜன.17- த.வெ.க பொதுச் செய லாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் புறக்க ணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று முடிகிறதுசென்னை,ஜன.17- நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு சனிக்கிழமை (ஜன.18)  வரை வழங்க பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் விதமாக, ஜனவரி 18 வரை பொங்கல் தொகுப்பை வழங்க நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அதி காரிகள் உத்தரவிட்டுள்ளனர்.டெல்டா மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்புசென்னை,ஜன.17-  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 18 அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜனவரி 18 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை செவிலியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்சென்னை, ஜன. 17 - புதுக்கோட்டையில் செவிலியர் மீது நடைபெற்றுள்ள தாக்குதலுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 16 அன்று நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடிபோதையில் இருந்த நோயாளியின் உறவினர்கள் செவிலியரை தாக்கியுள்ளது கண்டனத்துக்குரியது. செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ  ஊழியர்கள் அரசு மருத்துவமனைகளில் தாக்கப்பட்டு வருவது தொடர்கிறது. இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் குற்றவாளி மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக அமல்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஜன.21,22 சிவகங்கையில்  முதலமைச்சர் கள ஆய்வுசென்னை,ஜன.17- அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகிற 21 மற்றும்  22 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்கிறார். ஜனவரி 21 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 22 ஆம் தேதி சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.நான்குநேரி அருகே  500 ஆண்டுகளுக்கு முந்தைய 4 கல்வெட்டுகள் கண்டுபிடிப்புதிருநெல்வேலி, ஜன.17 - நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே செண்பகராமநல்லூரில் 500  ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கள் கண்டறியப்பட்டன. நெல்லை வரலாற்று பண்பாட்டு கள  ஆய்வு மைய இயக்குநர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகளுக்கு, நான்குநேரி அருகேயுள்ள செண்பக ராமநல்லூரில் பழங்கால கல்வெட்டு கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.  இதுகுறித்து செண்பகராமன் நல்லூர் ராமலிங்கசுவாமி கோயிலில் கல்வெட்டு ஆய்வு நடத்தினர். இந்த  கோயிலில் இருந்த 500 ஆண்டு களுக்கு முற்பட்ட திருவிதாங்கூர் கல்வெட்டுகள் உட்பட மொத்தம் 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.  இதுகுறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வுமைய இயக்கு நர் மாரியப்பன் இசக்கி கூறுகையில், “கோயிலில் வேண்டாட்டு (திரு விதாங்கூர்) அரசரை வென்று மண்கொண்ட பூதல வீர உதய மார்த்தாண்டன் (1516-1535) 11 ஆவது ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 703 புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி வெட்டு விக்கப்பட்டது. இதன்படி, இது  கி.பி.1527 ஆம் ஆண்டு கல்வெட்டாகும். இந்த கல்வெட்டில் செண்பக ராமநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்ட ராமலிங்கசுவாமி, ஜெகநாதபெருமாள் கோயில்களை மறுகட்டமைப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காலத்தில்தான் இவ்வூருக்கு ‘செண்பகராமநல்லூர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூதள வீர உதய  மார்த்தாண்டன், தனது மகன் செண்பகராமன் என்ற மூத்த சிறைவாய்  பெயரில் இவ்வூரை நிர்மானித் துள்ளார். ஆய்வின் போது உள்ளூர் பிர முகர்கள் கடற்கரை, கோயில் அறங்கா வலர் குமார் பண்ணையார், கோபி ஆகி யோர் உடனிருந்தனர்.விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டம்தமிழக அரசு தலையிட கோரிக்கைஅவிநாசி, ஜன.17 - தேனி மாவட்ட விசைத்தறி தொழிலா ளர்கள் நடத்தி வரும் கூலி உயர்வு போராட்டத்திற்கு சுமூக தீர்வு எட்டிட, தமிழக அரசு தலையிட வேண்டும் என  சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்  செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுப்பலாபுரம், ஜக்கம்மாபட்டி உள்ளிட்ட  பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு இரண்டு வரு டத்திற்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படும். கடந்த டிசம்பர் மாதமே ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை.  விசைத்தறி உரிமையாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் அனுப்பி யும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத  நிலை உள்ளது. மேலும், மாவட்டத் தொழிலாளர் அதிகாரிக்கு தெரியப்படுத்தி யும் அவர் தலையிடாத நிலையில், கடந்த 16 நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில்  ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.  திண்டுக்கல் டிசிஎல் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்; ஆனால்  ஊதிய உயர்வு வழங்க உரிமையா ளர்கள் மறுத்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இப்பிரச்ச னையை கொண்டு சென்றும், தலையி டாமல் அலட்சியப்படுத்தி வருகிறார். இதனால் தொழிலாளர்கள் சொல் லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். குறைந்த வருமானம், சமூக பாதுகாப்பு எதுவும் இல்லாமல்,  சமாளிக்க முடியாத வகையில் விலை வாசி உயர்ந்துள்ள இந்நிலையில், கூலி  உயர்வு வழங்க மறுப்பதை எந்த வகை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் மற்றும் தொழிலாளர் துறை உடனடியாக தலையிட்டு, நியாய மான கூலி உயர்வு வழங்கவும், 500-க்கும்  மேற்பட்ட குடும்பங்களை பாதுகாக்க வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2025-01-18 01:53:12.128366
ஜனவரி 17, 2025
கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பங்கைப் பெறத் துவங்கிய அருந்ததியர் மக்கள்!
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/a-historic-struggle-by-the-cpm-and-the-change-brought-about-by-the-artist's-act
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 17 - அருந்ததியர் மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த மிகப்பெரிய அள விற்கான போராட்டங்களாலும் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட சிறப்பு உள்இடஒதுக்கீட்டுச் சட்டம், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தகவல் உரிமைச் சட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் (ஜனவரி 17- 2025) தி. ராமகிருஷ்ணன் செய்திக்கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இதுதொடர்பாக பல்வேறு விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். பட்டியல் சாதியினருக்கான (SC)  18 சதவிகித இடஒதுக்கீட்டில் அருந்ததி யர்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு (SC-A) அளிக்கும் சிறப்பு இடஒதுக்கீட்டுச் சட்டம், குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DTE) மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DMRE) ஆகியவை தெரிவித்துள்ளன.82 சதவிகிதம் அதிகரித்த மருத்துவ இடங்கள்“எம்பிபிஎஸ் (MBBS) மருத்துவப் பட்டப்படிப்பில் மொத்த இடங்கள் 2018-19-ல் 3,600 ஆக இருந்தது. 2023-24-ல் 6,553 ஆக உயர்ந்துள்ளது. இது  82 சதவிகித அதிகரிப்பாகும். இடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப, அருந்ததியர் (SC-A) பிரிவினருக்கான இடங்களும் 107-லிருந்து 193 ஆக - 80 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது” என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதேபோல பல் மருத்துவப் படிப்பிலும் (BDS) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. 2018-19-ல் SC(A) மாண வர்கள் 1.5 சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2018-19 இல் மொத்த இடங்கள் 1080-இல் அருந்ததியர் மாண வர்கள் 16 பேருக்கு இடங்கள் கிடைத்தன. தற்போது 2023-24இல் மொத்த இடங்கள் 1,737 ஆக அதிகரித்துள்ள நிலையில், அருந்ததியர் மாணவர்கள் 54 பேருக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 15 சதவிகித ஆண்டு வளர்ச்சி பொறியியல் கல்வியில் SC(A) மாணவர்களின் எண்ணிக்கை 2009-10-ல் 1,193-லிருந்து 2023-24-ல்  3,944 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு  சராசரியாக 15 சதவிகிதம் வளர்ச்சி இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நீட் தேர்வால் (NEET) பாதிப்புநீட் (NEET) தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய 2021-இல் அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழு, தனது அறிக்கை யில் சில கவலை தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் SC(A) ஒதுக்கீடு 2010-11-ல் 3.26 சதவிகிதமாக இருந்தது.  இது 2015-16இல் 2.85 சதவிகிதமாக குறைந்துள்ளது. சுயநிதிக் கல்லூரி களில் 2011-12இல் 2.98 சதவிகிதத்தி லிருந்து 2016-17இல் 2.66 சதவிகிதமாக குறைந்துள்ளதாக குழு சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வழங்கிய தகவலின்படி, துணை ஆய்வாளர் (எஸ்.ஐ - தாலுகா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்) பணியிடங்களில் அருந்ததியர் பிரதிநிதித்துவம் 2010-இல் அதிகபட்சமே 38 பேர் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் 2018-இல் தடயவியல் துறை எஸ்.ஐ பணியில் மட்டும் 10 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.ஏழு சாதிகளுக்கு பலன்தமிழ்நாடு அருந்ததியர் சிறப்பு இடஒதுக்கீட்டுச் சட்டம் 2009, அர சியலமைப்பின் 341-ஆவது பிரிவின் கீழ் வரும் ஏழு சாதிகளான - அருந்த தியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை,  தோட்டி மற்றும் ஆதி ஆந்திரர் - ஆகி யோருக்கு சிறப்பு உரிமை அளிக்கிறது. பொதுப்பிரிவு இடங்களுக்கும் இந்த சமூகத்தினர் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு இடங் களுக்கு போதிய அருந்ததியர் விண்ணப்ப தாரர்கள் இல்லாதபட்சத்தில், அந்த இடங்களுக்கு எஸ்.சி. பட்டியலில் உள்ள சாதியினரும் போட்டியிட முடியும். கால் நூற்றாண்டு போராட்டம் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை என்பது அருந்ததியர் இயக்கங்கள் கால் நூற்றாண்டு கோரிக்கையாகும். இதுதொடர்பாக விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கள ஆய்வு நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் அருந்ததியர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்த போதிலும் இவர்களில் ஒருவர் கூட மாவட்ட ஆட்சியராக இல்லை; ஒரு சிலரே மருத்து வராக உள்ளனர்; அரசு ஊழியர்களை யும் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம்; இவர்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக உள்ளது; என்ற தரவுகளின் அடிப்படையில், அருந்ததியர் மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை முன்வைத்து, 2007-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான போராட்டக் களத்தில் இறங்கியது.கோரிக்கை மாநாடு - பேரணி2007-ஆம் ஆண்டு விருதுநகர் துவங்கி திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி என பல மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு களை நடத்தியது. அருந்ததியர் அமைப்புக் களையும் இணைத்துக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாடுகளின் முத்தாய்ப்பு நிகழ்வாக 2007-ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணியும் நடைபெற்றது.  கலைஞரின் கனிவு இந்த நீண்ட நெடிய போராட்டங்களின் பின்னணியில், அருந்ததியர் கோரிக்கைகளை கனிவுடன் பரி சீலித்த அன்றைய முதல்வர் கலைஞர், நீதிபதி ஜனார்த்தனன்  குழு பரிந்துரை அடிப்படையில் அருந்ததியருக்கு 3சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை  கொண்டு  வந்தார்.
2025-01-18 01:53:12.129350
ஜனவரி 17, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/gandhi-fought-non-violently-for-ten-years-of-nehru's-youth
தமிழ்
UTF-8
அகிம்சை வழியில் காந்தி போராடினார். நேரு தனது இளமைக்காலத்தின் பத்து ஆண்டுகளை தேசத்துக்காக சிறையில் கழித்தார். காங்கிரஸ் கட்சியின் அகமது  படேல் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை விட்டு தேசத்துக்காக போராடினார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் யாராவது சுதந்திரத்துக்காக போராடினார்களா?மோகன் பகவத் அவர்களே! நான் கேட்கும் ஒரு கேள்விக்கு உங்களால் பதில் கூற முடியுமா? ஏன் இதுவரை தலித் அல்லது பிற்படுத்தப்பட்டவர் யாரும் ஆர்எஸ்எஸ் தலைவராக வரவில்லை? இதற்கு உங்கள் பதில் என்ன?தில்லி தேர்தல் அறிக்கையில் பாஜக புதிதாக எதையும் அறிவிக்கவில்லை. தற்போதுள்ள இலவச மின்சாரம், இலவச தண்ணீர் மாதிரி தொடரும் என்று மட்டுமே அறிவித்துள்ளது. பாஜகவின் உத்தரவாதம் மக்களுக்கு ஒருபோதும் பயன் அளித்தது கிடையாது. அதே போல இதுவும்.மோடி அரசு பொய்யானது. மோடி அரசின் ஒவ்வொரு தகவல்களும் போலியானவை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஊழல் ஒழிந்துவிடும், கருப்புப் பணம் திரும்ப வரும் என கூறப்பட்டது. ஆனால் ஊழல் ஒழியவில்லை, கருப்புப் பணம் திரும்ப வரவில்லை. பணமதிப்பிழப்புக்குப் பிறகு, ஜிஎஸ்டியை அரசாங்கம் கொண்டு வந்தது, இதன்காரணமாக வணிகர்கள் அழிந்தனர்.ச 2025ஆம் ஆண்டில் இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என இந்திய இணையதளம் செல்போன் சங்கம் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எஸ்பிஐ வங்கியில் ரிவார்டு தருவதாகக் கூறி புதிய மோசடி நடப்பதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது. எஸ்பிஐ பரிசை பெற விரும்பினால் ஏபிகே (APK) எனும் பைலை பதிவிறக்கம் செய்யுங்கள் என குறுந்தகவல் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மோசடி பேர்வழிகள் வங்கியிலிருந்து பணத்தை திருட அனுப்பும் செய்தி அது என இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது.தில்லி மெட்ரோ ரயில்களில் மாணவர்களுக்கு சலுகை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். கெஜ்ரிவால் தனது கடிதத்தில்,”தில்லி மெட்ரோவின் பங்குதாரர்களாக இருப்பதால், மாணவர்களுக்கான சலுகையை ஒன்றிய அரசும், தில்லி அரசாங்கமும் சமமாக ஏற்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.தில்லி சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார். அதில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிக்கு போட்டியாக “லாட்லி பஹேன் யோஜ னா” திட்டத்தின் மூலம்  பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் கருவுற்ற பெண் களுக்கு 6 ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் ரூ.21,000 வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் தரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியவரை காவல்துறை வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை  மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
2025-01-18 01:53:12.129979
ஜனவரி 17, 2025
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிஜு ஜனதா தளமும் வலியுறுத்தல்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/biju-janata-dal-also-insisted-on-conducting-caste-wise-census
தமிழ்
UTF-8
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குழு, ஓபிசி நலனுக் கான நாடாளுமன்ற குழு தலைவர் கணேஷ் சிங்கை சந்தித்தது. இந்த சந்திப்பின் பொழுது கணேஷ் சிங்கிடம் நவீன் பட்நாயக், “2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிராம மற்றும் நக ரங்களில் வாழும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலைமையை கண்ட றிந்தோம். ஆனால் தற்போது எதையும் கண்டறிய முடியாது. காரணம் வளங் களை சரிசமமாக பிரித்து திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான சாதி அடிப்படையிலான தரவுகள் இல்லை. சாதிய ரீதியிலான தரவுகள் மூலம் குடும்பத் தின் நிலை, வருமானத்திற்கான ஆதாரம்,  கல்வித் தகுதி மற்றும் வேலை ஆகிய வற்றை அறிய முடியும். ஒடிசா மாநி லத்தில் சமூக மற்றும் கல்வியில் பின்தங் கிய வகுப்புகளை தேசிய அளவிலான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அட்ட வணையில் இணைக்க வேண்டும். இதன் மூலம் வரலாற்று ரீதியாக சமூக, பொரு ளாதாரத் தளத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள சாதிகள் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
2025-01-18 01:53:12.130626
ஜனவரி 17, 2025
14 மணி நேர வேலையால் மகளின் குழந்தை பருவத்தை இழந்தேன்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/video-of-female-accountant-is-top-trending-across-the-country
தமிழ்
UTF-8
நாடு முழுவதும் டாப் டிரெண்ட் ஆகும்  பெண் கணக்கு தணிக்கையாளரின் வீடியோபெங்களூரு இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் வாரத்திற்கு 70 மணிநேர வேலை வலி யுறுத்தலுக்குப் பின், கடந்த வாரம் எல் அண்ட்  டி நிறுவனர் எஸ்.என்.சுப்பிரமணியன், “மனைவி யுடன் பொழுதை கழிக்காமல் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்” என கூறினார். எஸ்.என்.சுப்பிரமணியனின் பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், நீது மொஹாங்கா என்ற பெண் கணக்கு தணிக்கையாளர் (சிஏ) 14 மணி நேர வேலையால் மகளின் குழந்தை பருவத்தை  இழந்தேன் என வீடியோ வெளியிட்டு எஸ்.என்.சுப்பிரமணியனின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  தொடக்கக் காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் நீது மொஹாங்கா வெளி யிட்டுள்ள வீடியோவில், “வாரத்துக்கு 90 மணி  நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி தலைவர் கூறியதைக் கேட்டேன். வீட்டில் என்னதான் செய்யப் போகிறீர்கள் என்று தனது ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி னார். 10 ஆண்டுக்கு முன்பு நானும் அப்படித்தான் இருந்தேன். தினமும் 14 மணி நேரம் வேலை  செய்தேன். இப்படி வேலை செய்வது கவுரவ மாகவும் இருந்தது. அதிகாலை 3 மணிக்கு மின்னஞ்சலுக்கு பதில் அளித்திருக்கிறேன். ஆனால் என் மகள் முதல் காலடி எடுத்து வைத்தது முதல் அவளுடைய குழந்தைப் பருவத்தை அனுபவிக்க தவறிவிட்டேன். என்  மகள் 5 வயதில் என் குடும்ப உறுப்பினர்களை ஓவியமாக வரைந்தாள். அதில் நான் இல்லை. இதுகுறித்து அவளுடைய ஆசிரியர் கேட்டபோது, ‘என் அம்மா எப்போதும் அலு வலகத்தில்தான் இருப்பார்’ என கூறி யிருக்கிறாள். அந்தப் படத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நினைவுப் பொருளாக அதை வைத்திருக்கவில்லை. வெற்றிக்கு பதில் அதன் தாக்கத்தை அளவிட வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக அதை வைத்திருக்கிறேன். ஒரு வாரத்தில் 55 மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும்போது செயல் திறன் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், உடல்நிலை பாதிக்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும் படைப்பாற்ற லையும் இழக்க நேரிடுகிறது” என அவர் கூறினார். தனியார் நிறுவனங்கள் அதிர்ச்சி நீது மொஹாங்காவின் வீடியோ நாடு முழுவதும் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. இந்த டிரெண்டிங்கில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, எல் அண்ட் டி நிறுவனர் எஸ்.என்.சுப்பிரமணியனை நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பு கருத்துக்கள் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் வேலைநேரம் மற்றும் வேலைப்பளு தொடர்பாகவும் வீடியோ  வெளியிட்டு வருகின்றனர். இதனால் தங்களது  நிறுவனங்களின் லாப நோக்கம் உடைந்து விடுமோ? என்ற அச்சத்தில்  தனியார் நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
2025-01-18 01:53:12.131243
ஜனவரி 17, 2025
சிபிஎம் குஜராத் மாநிலச் செயலாளராக ஹிதேந்திரா ஐ.பட் தேர்வு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/hidendra-i.-bhatt-selected-as-cpm-gujarat-state-secretary
தமிழ்
UTF-8
அகமதாபாத் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குஜராத் மாநில 24ஆவது மாநாடு ராஜ்கோட் மாவட்டம் உப்லேடா வின் தோழர் சீத்தாராம் யெச்சூரி நகரில் ஜனவரி 11ஆம் தேதி நடை பெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 10 மாவட்டங் களில் இருந்து 192 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 56 பேர் பெண்கள் ஆவர். இளை ஞர்களும் அதிகளவில் பங்கேற்றனர். மகான்பாய் ஜிவானி கொடி யேற்றி வைத்தார். தியாகி களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின் தொடக்க நிகழ்வுக்கு முன்னாள் மாநிலச் செயலாளர் பிரஜிபாய் பாம்பி  தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் கிரண்பென் கலா வாடியா அனைவரையும் வர வேற்றார். தொடர்ந்து அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே மாநாட்டை தொடங்கி வைத்து, சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்தின் ஆபத்து மற்றும் தேசிய அளவில் நியோ-பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக தாக்குதலின் ஆபத்து குறித்தும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையின் அவசியத்தையும் விளக்கினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த பலத்தையும், செல்வாக்கையும் விரைவாக அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் அசோக் தாவ்லே எடுத்துரைத்தார். இரண்டு பகுதிகளாக மாநாட்டு அறிக்கை வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஹிதேந்திரா ஐ.பட் அரசியல் பகுதியையும், மத்தியக் குழு உறுப்பினர் அருண் மேத்தா அமைப்புப் பகுதியையும் வைத்தனர். 24 பிரதிநிதிகள் முதல் விவாதத்தில் பங்கேற்றனர். 17 பிரதிநிதிகள் இரண்டாம் பகுதி விவாதத்தில்  பேசினர். குறிப்பாக முக்கிய பிரச்சனைகள் குறித்த 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தொகுப்புரைக் குப் பின் அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.“கம்யூனிஸ்ட் சித்தாந்தம்” நூல்மாநாட்டின் முதல் நாளன்று உப்லேட்டாவில் உள்ள டவுன்ஹாலில் விவசாயிகள் பிரச்ச னைகளும் அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் டாக்டர் அசோக்  தாவ்லே, முரளிதரன், தயாபாய்  கஜேரா ஆகியோர் உரையாற்றி னர். தொடர்ந்து முன்னாள் மாநிலச் செயலாளர் சுபோத் மேத்தா  குஜ ராத்தி மொழியில் எழுதிய “கம்யூ னிஸ்ட் சித்தாந்தம்” என்ற நூலின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. உதய் ஜோஷி தகுதி ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநாட்டில் 30 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும், நிரந்தர அழைப்பாளர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 9 பேர் மாநிலச் செயற்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர். மீண்டும் மாநிலச் செயலாளராக ஹிதேந்திரா ஐ.பட் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டிற்கு 6 பிரதிநிதிகள், 2 மாற்று பிரதிநிதிகள், 2 பார்வையாளர்கள் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக் குழு உறுப்பினர் முரளிதரன் நிறைவுரையாற்றினார். நிறைவுரை யில் அவர் அமைப்பு தொடர்பான முக்கிய விஷயங்களை வலி யுறுத்தினார்.
2025-01-18 01:53:12.131845
ஜனவரி 17, 2025
தில்லியில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/campaigning-in-favor-of-cpm-candidate-in-delhi
தமிழ்
UTF-8
தில்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கர்வால் நகர் தொகுதியின் வேட்பாளராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  அசோக் அகர்வால் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடும் குளிருக்கு இடையே சிபிஎம் ஊழியர்கள் எளிய முறையில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
2025-01-18 01:53:12.132494
ஜனவரி 17, 2025
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அட்டை கட்டாயம்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/abar-card-is-mandatory-for-neet-candidates
தமிழ்
UTF-8
அபார் (APAAR) என்பது தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதி வேடு ஆகும். இது  நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்காக வடிவமை க்கப்பட்ட ஒரு சிறப்பு அடையாள அமை ப்பாகும். 2020ஆம் ஆண்டின் புதிய தேசிய கல்விக் கொள் கையுடன் இணைந்து  ஒன்றிய அரசாங்கத் தால் தொடங்கப்பட்ட “ஒரே நாடு, ஒரு மாண வர் ஐடி” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்க ளுக்கும் அபார் அடையாள அட்டை வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பாதுகாப்பு அம்சங் களை கருத்தில் கொண்டு கூடுதல் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆதார் எண்களோடு இந்த அபார் அட்டை  எண்களும் ஒப்பீடு செய்து சரிபார்க்கப் படும் என்றும், நீட் தேர்வுக்கு விண்ணப் பம் செய்வது முதல், கலந்தாய்வுக்கு செல்வது வரை அனைத்து நடவடிக்கை களிலும் அபார் அட்டை முக்கியம் என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
2025-01-18 01:53:12.133116
ஜனவரி 17, 2025
மோடி அரசுடன் ஒருபோதும் பணிந்து போகமாட்டேன் “கோடி மீடியா” ஊடகங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிலடி
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/jammu-and-kashmir-chief-minister-omar-abdullah's-response-to-the-media
தமிழ்
UTF-8
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீ ரின் சோன்மார்க் பகுதியில் பிரத மர் மோடி சுரங்கப் பாதையை திறந்து  வைத்தார். மோடி ஒரு பிரதமர் என்ற  அடிப்படையில் அவருக்கான மரியாதை யை அளித்தது மட்டுமல்லாமல் அர சியலற்ற பொது மேடை என்ற நடை முறையின்படி பிரத மர் மோடியை விமர்சி க்காமல் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சாந்தமாக பேசினார். உடனே “கோடி மீடியா” ஊடகங்கள் ஜம்மு-காஷ்மீர் முதல்வரின் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி பாஜக உடன்  கூட்டணி வைத்துக்கொள்ள முயன்று  வருவதாகவும், ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி எப்பொழுது வேண்டுமானா லும் உடையலாம் என செய்திகளை வெளியிட்டது. இந்நிலையில், மோடி அரசுடன் ஒரு போதும் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க மாட்டேன் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா “கோடி மீடியா” ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் தள்ளுமுள்ளு என்பது தவிர்க்க முடியா மல் நிகழும். அது போல தான் சில விஷ யங்களும்.  காலப்போக்கில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து பார்க்க லாம். ஆனால் அந்தச் சூழல் இன்னும் ஏற்பட வில்லை. இது பிரச்சனை இல்லை.  நான் ஒன்றிய அரசுடன் மென்மை யான போக்கினை கடைப்பிடிக்க வில்லை. தயவுசெய்து புரிந்துகொள்ளுங் கள். ஒன்றிய அரசுடன் இணைந்து பணி யாற்றுவது அவர்கள்செய்வதை, பாஜக செய்யும் அத்தனை யையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமில்லை. ஜம்மு-காஷ்மீர் முன்னேற வேண்டும், வளர்ச்சி ஏற்படவேண்டும், மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்க, மோதல் போக்குக்கு  அவசியம் இல்லாத இடத்தில் நான் அதனை கடைப்பிடிக்க வேண்டுமா?” என “கோடி மீடியா” ஊடகங்களுக்கு கேள்வி எழுப்பினார்.
2025-01-18 01:53:12.133692
ஜனவரி 17, 2025
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/mgr-birthday-courtesy-of-tamil-nadu-govt
தமிழ்
UTF-8
மறைந்த  முன்னாள்  முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில்  மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி,  தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
2025-01-18 01:53:12.134305
ஜனவரி 17, 2025
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/the-high-court-dismissed-the-bjp's-plea
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.17- பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்தது. பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 ரொக்கமும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடு மாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் பொதுநல மனு அளித்திருந்தார். இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறுகையில், பொங்கல் திருநாளுக்கு பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்கினால், மகிழ்ச்சிதான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு, ரொக்கப்பணம் ரூ. 2000 வழங்கும் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர். தமிழக அரசின் நிதி நிலைமையில் நெருக்கடி என்று கூறிய அரசு, இந்தாண்டில் பொங்கல் திருநாளில் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க முடியவில்லை என்று தெரிவித்தது.
2025-01-18 01:53:13.110123
ஜனவரி 17, 2025
எழுத்தாளர் ஜனநேசன் காலமானார்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/writer-jananesan-passed-away
தமிழ்
UTF-8
சிவகங்கை,ஜன.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜனநேசன் என்ற வீரராகவன் (வயது  70) திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.  ஜனவரி 18 பகல் 12 மணிக்கு சிவகங்கை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானம் செய்யப்பட உள்ளது. எழுத்தாளர் ஜன நேசன் பல்வேறு புத்தகங்கள், தீக்கதிர் வண்ணக்கதிர், செம்மலர் மாத இதழ், விகடன் வார இதழ் ஆகிய வற்றில் ஏராளமான கதைகள், கட்டுரைகள் எழுதியுள் ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் அவருடைய புத்தகம் வெளி யிடப்பட்டது. இவருடைய புத்தகங்கள் தெலுங்கு மொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனநேசன், காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் காரைக்குடி வட்டார பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.  தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அவரது மகனுடன் வசித்து வந்த அவர்,  உடல் நலம் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையன்று காலை 7 மணியளவில் காலமானார். அவரது உடல் காரைக்குடி ஸ்ரீராம் நகருக்கு  வெள்ளியன்று இரவு 7 மணிக்கு தெலுங்கானாவில் இருந்து   கொண்டு வரப்பட்டது. ஜனவரி 18 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானம் செய்யப்படுகிறது. இரங்கல் ஜனநேசன் மறைவுக்கு தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் தெரிவித் துள்ளனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2025-01-18 01:53:13.110693
ஜனவரி 17, 2025
மருத்துவம், பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/adi-dravidar-welfare-minister-mathiventhan's-statement
தமிழ்
UTF-8
சென்னை, ஜன.17-  தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும்  பொறியியல் படிப்புகளில் அருந்ததி யர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது; சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவேண்டும் எனும் சமத்துவ நோக்கோடு பட்டியலின மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சி யில் இருந்த போது வழங்கினார் டாக்டர் கலைஞர். கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத  அருந்ததியர் சமூக மக்கள்,  இன்றைக்கு உரிய பிரதிநிதித்து வத்தைப் பெற்று வருகிறார்கள் என்ப தை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மருத்துவக் கல்வியில் அருந்ததி யர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி 2018-19-ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. திமுக ஆட்சியில் 2023-2024-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ்  மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததியர் சமூக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள். பல் மருத்துவப் படிப்பை பொறுத்தவரை 2018-2019-ம் ஆண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் அருந்ததியர் சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 16 இடங்களே! அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை கூட முழுமையாக பூர்த்தி செய்ய இய லாமல், 1.5 விழுக்காடு அருந்ததியர் சமூக மாணவர்கள் மட்டுமே பல்  மருத்துவம் பயின்றார்கள். இந்த  அவல நிலை 2023-24-ஆம் ஆண்டு  திமுக ஆட்சியில் மாற்றமடைந்தது. 1,737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாண வர்கள் 54 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான 3 விழுக்காடு பிரதி நிதித்துவம் முழுமையாக கிடைத்தது. பொறியியல் படிப்புகளைப் பொறுத்த வரை 2009-10 ஆம் ஆண்டில் 1,193 இடங்களை பெற்றிருந்த அருந்ததியர் நிலை, 2023-24 ஆம் ஆண்டில் 3,944 இடங்களை பெற்று உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-17 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர பட்டியலின சமூக மக்கள் 84 விழுக் காட்டினர் பயனடைந்து வருகின்றனர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அரசு எடுத்த முன்னெடுப்பு களால்தான், அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின்  சட்டம் செல்லும் என்று உச்ச நீதி மன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட  அரசியல் சாசன அமர்வு உத்தர விட்டது. இதன்மூலம், பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு செயல்படுகிறது திமுக அரசு. சமூக நீதிக்கான லட்சியப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
2025-01-18 01:53:13.111276
ஜனவரி 17, 2025
மாநில தேர்தல் ஆணைய பதவிகளுக்கு கல்வித் தகுதி நிர்ணயம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/promulgation-of-rural-development-ordinance
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.17- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி -உள்ளாட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கும் அவற்றுக்கான பதவி உயர்வுக்கும் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச பொது கல்வித் தகுதி (எஸ்எஸ்எல்சி தேர்ச்சி) அவசியம். பதிவுரு எழுத்தர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் இளநிலை உதவியாளர் வேலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இந்த தகுதி, அலுவலக உதவியாளர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கும் பொருந்தும். டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப்படும் உதவியாளர் பதவிக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்து உரிய துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் உதவியாளராக பதவி உயர்வு பெற தகுதியுடையவர் ஆவர். டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் நேர்முக எழுத்தர் (பி.சி) பதவிக்கு பட்டப்படிப்பும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் ஹையர் கிரேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சியும் அவசியம்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
2025-01-18 01:53:13.111763
ஜனவரி 17, 2025
சித்தூர் அருகே பேருந்து விபத்து - 4 தமிழர்கள் உயிரிழப்பு
மாநிலம் - ஆந்திரப் பிரதேசம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/andhra-pradesh/chittoor-bus-accident-4-dead
தமிழ்
UTF-8
சித்தூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருச்சிக்கு பக்தர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பேருந்து, ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் கங்கவரம் அருகே லாரி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  படுகாயமடைந்த 15 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2025-01-18 01:53:13.112258
ஜனவரி 18, 2025
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்குமா? - அ.அன்வர் உசேன்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/it-has-been-announced-that-the-united-states-has-signed
தமிழ்
UTF-8
காசா போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் ஹமாஸ்/ இஸ்ரேல்/ கத்தார்/ அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெ ழுத்திட்டுள்ளன என அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் அமைச்ச ரவை இந்த ஒப்பந்தத்தை இன்னும் அங்கீ கரிக்கவில்லை என கூறப்படுகிறது. நேதன்யாகு கூட்டணி அமைச்சரவையில் உள்ள அதி தீவிர வலதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?  ஒப்பந்தம் நிராகரிக்கப்படுமா?அல்லது கூட்டணி மாறுவதன் மூலம் ஒப்பந்தம் அமலுக்கு வருமா என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும். எனினும் தான் செய்து கொண்ட எந்த ஒப்பந்தத்தையும்  இஸ் ரேல் மதிப்பதில்லை என்பது கடந்த  கால அனுபவம். சமீபத்திய லெபனான் போர் நிறுத்த மீறல்கள் சிறந்த உதாரணம்.  இதற்கிடையே இந்த ஒப்பந்தம் யாரு டைய சாதனை என ஜோபைடனுக்கும் டொனால்டு டிரம்ப்புக்கும் இடையே பட்டி மன்றம் நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தைகளில் பைடனின் பிரதிநிதி பிரெட் மெகுர்க் டிரம்பின் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகிய இருவரும் பங்கேற்ற னர். போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் இல்லையெனில் அமெரிக்காவின் உதவி கிடைக்காது என டிரம்ப்பின் பிரதிநிதி கிட்டத்தட்ட மிரட்டியதன் காரணமாகவே நேதன்யாகு அடிபணிந்தார் என பரவ லாக செய்திகள் உள்ளன. பைடன் ஒரு ஆண்டில் செய்ய தவறியதை டிரம்ப் ஒரே நாளில் செய்தார் என இஸ்ரேலிய பத்திரிகைகள் கூறுகின்றன. எனினும் பைடனுக்கு இணையாக டிரம்பும் இஸ்ரே லின் தீவிர ஆதரவாளர் என்பதை புறம் தள்ள முடியாது. போரை நிறுத்த வேண்டும் என தனக்கு வாக்களித்த ஒருபிரிவினரின் எதிர்பார்ப்பை இப்பொழுது டிரம்ப் நிறை வேற்றினாலும் பின்னர் என்ன நடக்கும் எனும் கவலை இல்லாமல் இல்லை.யாருக்கு வெற்றி?கிட்டத்தட்ட 450 நாட்களுக்கும் அதிக மாக நடந்த இஸ்ரேலின் இனப்படு கொலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டா லும் யாருக்கு வெற்றி எனும் கேள்வி முன்னுக்கு வருகிறது. ஹமாசை முற்றி லும் அழிப்பதுதான் இந்த போரின் இலக்கு என நெதன்யாகு கூறினார். இதுவே இஸ்ரேல் சமூகத்தின் கருத்தாகவும் இருந் தது. 47,000 பாலஸ்தீன மக்கள் படு கொலை செய்யப்பட்டனர். 1,10,000 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 70%  பெண்களும் குழந்தைகளும். எனினும் லான்செட் எனும் இதழ் 41% கூடுதலாக மரணம் நடந்துள்ளது என மதிப்பிடு கிறது. 90% வீடுகளும் அனைத்து கல்வி நிலையங்களும்  அழிக்கப்பட்டன. 800 மசூதிகளும் 4 பழமையான தேவாலயங்க ளும் தரைமட்டமாகின. பாதிக்கும் அதிக மான மருத்துவமனைகளும் 1050 மருத்து வர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்க ளும் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிக மான பத்திரிகையாளர்கள் பலியாயினர். 2024 கிறிஸ்துமசுக்கு பின்னர் மட்டும் குளிர் காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் மரணித்தனர். விவசாய நிலத்தில் 60% அழிந்தது.  இத்தனைக்கு பின்னரும் ஹமாசை முழுமையாக இஸ்ரேல் ராணுவம் அழிக்க இயலவில்லை. சுமார் 4000 முதல் 5000 வீரர்கள் கொல்லப்பட்டாலும் அதைவிட கூடுதலாக புதிதாக ஹமாசில் வீரர்கள் இணைந்துள்ளனர். ஹமாசின் எண் ணிக்கை அதிகமாகியுள்ளது என அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் கூறியுள்ளார். ஹமாசின் தாக்கு தலில் சுமார் 900 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். 10,000 பேர் கை அல்லது காலை இழந்துள்ளனர். ஆயிரக்க ணக்கானவர்கள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உலகின் முதல் ராணுவமான அமெரிக்காவின் அனைத்து  ஆயுத உதவியுடனும் வளைகுடா பகுதி யில் மிக வலுவான ராணுவத்தையும் கொண்டுள்ள இஸ்ரேல் ஒரு பீரங்கி கூட இல்லாத ஹமாசை அழிக்க முடிய வில்லை என்பது அதன் பெரிய தோல்வி எனில் மிகை அல்ல.காசா பகுதியிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றிலும் அகற்றுவது என இஸ்ரேலின் நோக்கமும் நிறைவேற வில்லை. மேலும் சர்வதேச கிரிமினல் நீதி மன்றத்தின் கைது வாரண்ட் உள்ளதால் நேதன்யாகுவும் வேறு சில இஸ்ரேல் தலை வர்களும் பல நாடுகளுக்கு செல்ல இய லாது. சர்வதேச நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கும் இஸ்ரேலின் தலையில் தொங்கும் கத்தியாக உள்ளது. சர்வதேச சமூகத்திடம் இஸ்ரேல் தனிமைப் பட்டுள்ளது. பொருளாதாரம் சரிந்துள் ளது. பாதிக்கும் அதிகமான தொழில்கள் மூடப்பட்டுள்ளன. இவையெல்லாம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.  மறுபுறத்தில் ஹமாசின் இலக்கு நிறைவேறவில்லை என்பதும் உண்மை. 2023ஆம் ஆண்டு தனது தாக்குதலின் இலக்கு இஸ்ரேலில் உள்ள அனைத்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது தான் என ஹமாஸ் கூறியது. ஆனால் இப்பொழுது அமலாகும் ஒப்பந்தத்தின் படி அதிகபட்சம் 20% கைதிகள்தான் விடுதலை செய்யப்படுவர். இன்னும் 80% பேர் அதாவது இன்னும் 7000 முதல் 8000 பேர் இஸ்ரேலிய சிறைகளில் நீடிப்பர். மேலும் சின்வர் மற்றும் ஹனியே உட்பட ஹமாசின் பல தலைவர்கள் கொல்லப் பட்டனர். ஹிஸ்புல்லாவின் தலைவரும் இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வருமான நஷ்ரல்லா கொல்லப்பட்டார். லெபனான் மூர்க்கத்தனமாக தாக்கப் பட்டது. ஹமாசுக்கு ஆதரவாகச் செயல் பட்டதால் ஈரானும் ஏமனும் பல தாக்குதல்க ளுக்கு ஆளாயின. இந்த நிகழ்வுகளின் ஒரு விளைவாக சிரியாவின் அசாத் ஆட்சி கவிழ்ந்தது. இது ஹிஸ்புல்லாவுக்கும் ஹமாசுக்கும் பாதகமாக அமைந்தன. எனவே ஹமாசின் நோக்கமும் முழுமை யாக நிறைவேறவில்லை. எனினும் மிகப்பெரிய தோல்வி இஸ்ரேலுக்குதான் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.ஒப்பந்தத்தின்  முக்கிய அம்சங்கள்இந்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக அமலாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் கட்டம் வெற்றிகரமாக அமலானால் அடுத்த இரு கட்டங்களும் இறுதி செய்யப் படும். முதல் கட்டம் ஏழு வாரங்களுக்கு அமலில் இருக்கும். முதல் கட்டத்தில் கீழ்க் கண்ட அம்சங்கள் அமலாக்கப்படும்: H இஸ்ரேல் ராணுவம் மத்திய காசா பகுதியிலிருந்து படிப்படியாக வெளியே றும். காசா மக்கள் மீண்டும் வடக்கு காசா வில் குடியேறலாம்.  H காசா பகுதிக்கு ஒரு நாளைக்கு 600 டிரக்குகள் மூலம் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உதவிப் பொருட்களும் அனுமதிக்கப்படும். Hஇதில் 300 டிரக்குகள் கடுமையாக பாதிக் கப்பட்ட  வடக்கு காசா பகுதிக்கு செல்லும். H 50 டிரக்குகள் தினமும் பெட்ரோல்/ டீசல் உட்பட எரிசக்தியை கொண்டு செல்லும்.  Hஹமாஸ் 33 பணயக்கைதிகளை இரண்டு கட்டமாக விடுவிக்கும்.  Hமுதலில் 9 கடும் காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் விடு விக்கப்படுவர். பதிலுக்கு பாலஸ்தீன ஆயுள் தண்டனை கைதிகள்  110 பேரை இஸ்ரேல் விடுவிக்கும்.  H2023 அக்டோபர் தாக்குதலில் ஈடுபடாத 1000 காசா பகுதி மக்களை இஸ்ரேல் விடுவிக்கும். H50 வயதுக்கு மேல் உள்ள ஹமாஸ் விடுவிக்கும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 3 பாலஸ்தீன ஆயுள் தண்டனை சிறைவாசியும் இதர 27 சிறை வாசிகளையும் இஸ்ரேல் விடுவிக்கும். Hசில முக்கிய ஹமாஸ் தலைவர்கள் விடு விக்கப்படுவர்.  Hரஃபா எல்லை பகுதி வழியாக காயம டைந்த பாலஸ்தீனர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் அந்த பட்டியலை இஸ்ரேலும் எகிப்தும் அங்கீகரிக்க வேண்டும்.  Hஒவ்வொரு இஸ்ரேலிய சிவில் பணயக் கைதிக்கு 30 பாலஸ்தீன சிறைவாசி களும் ஒவ்வொரு இஸ்ரேலிய பெண் ராணுவ பணயக்கைதிக்கு 50 பாலஸ் தீன சிறைவாசிகளையும் இஸ்ரேல் விடு விக்கும்.  H2023 அக்டோபர் 7க்கு பின்னர் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனப் பெண்களும் 19 வயதுக்கு குறைவான குழந்தைகளை யும் இஸ்ரேல் விடுதலை செய்யும். இதன் மூலம் அதிகபட்சம் 1650 பாலஸ்தீன சிறைவாசிகள் விடுதலை பெறுவர்.  Hஉயிருடன் இருக்கும் அனைத்து பண யக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்களின் உடல்கள் பரிமாறிக் கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். Hஒப்பந்தம் அமலாகிறதா என்பதை கத்தாரும் அமெரிக்காவும் மேற்பார்வை செய்யும்.  இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக அமலா னால் ஹமாஸ் குறிப்பிடத்தக்க வெற்றி பெறும். அதே சமயம் பணயக்கைதிகள் விடுதலை மூலம் நேதன்யாகு தனக்கு எதிரான கணிசமான அதிருப்தியை அகற்ற இயலும்.இனி என்ன?ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வெற்றி பெற்றால் இரண்டாவது கட்டம் அமலா வதில் பெரிய சிக்கல் ஏற்படாது. ஆனால் மூன்றாவது கட்டம் மிக சிக்கலானது. காசா பகுதியை நிர்வாகம் செய்வது யார் என்பது மூன்றாவது கட்டத்தில் விவாதிக் கப்படும். ஹமாசை நிர்வாகம் செய்ய  இஸ்ரேல் அனுமதிக்காது. தனக்கு அடி பணியும் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன நிர்வாகம் தேவை என அமெ ரிக்கா அல்லது இஸ்ரேல் வலியுறுத்த வாய்ப்பு உண்டு. காசா பகுதியை நிர்வா கம் செய்வது என்பது அப்பாஸின் நீண்ட நாள் கனவு. தனது விசுவாசத்தை நிரூபிக்க சமீபத்தில் மேற்கு கரையில் பல தனது சொந்த இனத்தை சார்ந்த பாலஸ்தீன போராளிகளை அப்பாஸ் நிர்வாகம் கைது செய்தது. சிலர் கொலையும் செய்யப் பட்டனர். ஆனால் காசா மக்கள் அப்பாஸ் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே! மறுபுறத்தில் ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிந்தவுடன் போரை மீண்டும் தொடங்க வேண்டும் என இஸ்ரேலிய வலதுசாரிகள் கோருகின்றனர். இதனை பெரும்பான்மையான இஸ்ரேலிய சமூகம் அங்கீகரிக்கிறது. இன்று போர் நிறுத் தத்தை ஆதரிக்கும் டிரம்ப் பின்னர் என்ன நிலைபாடு எடுப்பார் என்பது எவரும் கணிக்க இயலாது. லெபனானில் போர் நிறுத்தத்துக்கு பின்னர் குறைந்த பட்சம் 100 முறை இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறி யுள்ளது. காசாவிலும் இஸ்ரேல் ஒப்பந் தத்தை மீறாது என உத்தரவாதம் இல்லை.  இந்த ஒப்பந்தத்துக்கு அப்பால் சுதந்திர பாலஸ்தீனம் எனும் அடிப்படை கோ ரிக்கை உள்ளது. உலக தேசங்கள் இஸ்ரே லுக்கு எதிராக நேரடியாக தலையிடாமல் அல்லது குறைந்தபட்சம் இஸ்லாமிய தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக களத்து க்கு வராமல் சுதந்திர பாலஸ்தீனம் ஏற்ப டப்போவது இல்லை. சுதந்திர பாலஸ் தீனம் இல்லாமல் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை.
2025-01-19 02:07:16.147172
ஜனவரி 18, 2025
மிக மோசமடைந்திருக்கும் பொருளாதார மந்த நிலைமை
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/a-worsening-economic-situation
தமிழ்
UTF-8
அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்கள் சந்தேகத்திற்குரியனவாகும். ஏனெனில், இந்தக் கணக்கீடு நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்(CPI)ணிலிருந்து வெளி வரும் பணவீக்க விகிதத்தில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத மறைமுக பணவீக்க விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆயினும் இந்த தவறாக வடிவமைக்கப்பட்ட புள்ளி விவரத்தால் கூட நாட்டிலுள்ள பொருளாதார மந்த நிலைமையை மறைக்க முடியவில்லை. 2024-25க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளும் இதனை வெளிப் படுத்தியுள்ளன.திவால் நிலையின் அறிகுறிகள்2025 நிதியாண்டிற்கான முன்கூட்டிய மதிப்பீடுகள், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 6.4 விழுக்காடாகக் கணித்துள்ளது. முந்தைய ஆண்டு இது 8.2 விழுக்காடாக இருந்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முன்னதாக, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் 5.4 விழுக்காடாக இருந்தது. இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்றும், 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரம் உள்ள நாடாக மாறும் என்று பேசப்பட்டாலும், களத்தில் உள்ள எதார்த்த நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். வேலையின்மை, அதிக உணவுப் பணவீக்கம், குறைந்த தனியார் முதலீடு, தேக்கமடைந்த நுகர்வோர் செலவு, அதிகரித்து வரும் சிறு சில்லரைக் கடன் தவணைகள் மற்றும் உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் திவால் நிலையின் அறிகுறிகளாகும்.வாங்கும் சக்தி இல்லாததேபொருளாதார மந்தநிலை தொடர்வதற்கு முக்கியக் காரணம், பொரு ளாதாரத்தில் தேவை இல்லாததுதான். மிகக் குறைந்த வருவாய் காரணமாக மக்களுக்கு போதுமான வாங்கும் சக்தி இல்லாததே இதற்குக் காரணம். சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வோர் செலவினத் தரவு, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் சராசரி மாதச் செலவு கிராமப்புறங்களில் ரூ.8,079ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.14,528 ஆகவும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. அதிகரித்து வரும் வேலை யின்மை மற்றும் பண வீக்கத்தால் இது அதிகரிக்கிறது. இவை இரண்டும் வருவாயை மேலும் அரிக்கின்றன. பலவீனமான தேவை உற்பத்தியைப் பாதிக்கிறது. புதிய முதலீடுகள் மூலம் உற்பத்தித் திறன்களை விரிவு படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் செய்துவிடுகிறது.ரூபாய் மதிப்பு சரிவும் அதிகரிக்கும் சிக்கலும்மறுபுறம், இந்த நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் நாட்டிற்குள் நிகர அந்நிய நேரடி முதலீடு (FDI) 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. வெளியேறும் நிதியைப் பொறுத்தவரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியே எடுக்கும் நிதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய நிறுவனங்கள் வெளிநாடுக ளில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதன் காரணத்தால் அதிகரித்தி ருக்கிறது. இந்திய நிறுவனங்கள் உள்நாட்டை விட வெளிநாட்டில் முதலீடு செய்வதையே மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86 ரூபாயாக சரிந்திருப்ப தும், இறக்குமதிகளை அதிகப்படுத்துவதும் பணவீக்கத்தை அதிகரித்து, ஏற்கனவே உள்ள சிக்கல்களை மேலும் அதிகரிக்கப் போகிறது.ஏற்றத்தாழ்வு அதிகரிப்புபெரு வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களின் கொள்கைகள் மக்கள் மத்தியிலான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தி ருக்கின்றன. இது தனியார் துறை முதலீட்டையும் வளர்ச்சியையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. நாட்டில் 2023ஆம் ஆண்டில் 157 பில்லி யனர்கள் இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த செல்வத்தின் மதிப்பு முதன்முறையாக 1 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியிருக்கிறது. மக்கள் மத்தியில் குறைந்த வருமானம், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருப்பது என மக்கள் மத்தி யில் சுமைகள் தொடர்ந்து அதிகரித்து, இவ்வாறு பொருளாதார நெருக்கடி விரிவடைந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் அதனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் ஆட்சியாளர்கள் தத்தளித்துக் கொண்டி ருக்கிறார்கள்.மங்கலான வாய்ப்புகள்மோடி அரசாங்கத்தின் கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தோமானால், வரவிருக்கும் 2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டிலும் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் அதே பரிந்துரை கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகளை உயர்த்தவும், உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்தில் பொது முதலீட்டை விரிவுபடுத்தவும், நுண்ணிய சிறு நடுத்தரத் தொழில்களை (MSMEகளை) ஊக்குவிக்கவும், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள சமூகத் துறைக்கான அரசு செலவினங்களை அதிகரிக்கவும் அரசாங்கம் தயாராக இல்லாவிட்டால், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மங்கலாகவே இருந்திடும். ஜனவரி 15, 2025  தமிழில் : ச.வீரமணி
2025-01-19 02:07:16.148149
ஜனவரி 18, 2025
தளர்வோ குழப்பமோ இன்றி முன்னேறும் இந்தியப் புரட்சி - ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/the-indian-revolution-is-progressing-without-slackness-or-confusion
தமிழ்
UTF-8
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST  (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது.இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும், வளர்ச்சியும், அதன் கோட்பாட்டு அடித்தளங்களும் மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து முற்றிலும் தனித்துவமானது என்று இந்த கட்டுரையில் (The Marxist Vol. XII, No. 3, July to September 1995/ 75th Anniversary of the Formation of the Communist Party of India / Harkishan Singh Surjeet) விளக்குகிறார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் துப்பாக்கிக் குண்டுகளை தன் உடலில் ஏந்திக் கொண்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளருமான - பாஞ்சாலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்.1: தோற்றமும் கோட்பாட்டு அடித்தளங்களும்அக்டோபர் 17, 1920 அன்று தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. சமூகத்தில் உள்ள பல்வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி தனித்துவமான அமைப்பாக விளங்குகிறது. சமூக வளர்ச்சியில் வர்க்க முரண்பாடுகளும் மோதல்களும் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கின்றன என்ற மார்க்ஸ், ஏங்கெல்ஸின் அறிவியல்பூர்வ புரிதலில் இது வேரூன்றியுள்ளது.கோட்பாட்டு அடித்தளங்கள்“இதுவரை இருந்த அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்ற அடிப்படை புரிதலை கம்யூனிஸ்ட் அறிக்கை முன்வைத்தது. இது வெறும் கருத்தல்ல; சமூக வளர்ச்சியின் அறிவியல்பூர்வ பகுப்பாய்வாகும். வரலாறு முழுவதும் - அடிமைச் சமூகத்தில் உடைமையாளர்-அடிமை, நிலப்பிரபுத்துவ காலத்தில் பிரபு-குடியானவர், தொழிற்புரட்சி காலத்தில் முதலாளி-தொழிலாளி என “ஒடுக்குபவர்-ஒடுக்கப்படுபவர்” என்ற முரண்பாடு தொடர்ந்தது. இந்த முரண்பாடுகள் ஒவ்வொரு முறையும் சமூகத்தின் புரட்சிகர மறுகட்ட மைப்பிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோ முடிந்தன.கோட்பாட்டு வளர்ச்சிமுதலாளித்துவம் எப்படி தனது சொந்த சவக்குழியைத் தோண்டுகிறது என்பதை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் விரிவாக விளக்கினர். முந்தைய சமூக அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்க ளுக்கு புதிய சமூகத்தை உருவாக்கும் அமைப்பு மற்றும் உற்பத்தி திறன் இல்லாதிருந்தது. ஆனால் முதலாளித்துவமோ தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்கி, ஒருங்கிணைத்து, அந்த அமைப்பையே தூக்கி எறியும் ஆற்றலையும் தேவையையும் வழங்குகிறது.  இங்கிலாந்தை மையமாகக் கொண்ட தொழிற்புரட்சி இந்த செயல்முறையை எடுத்துக்காட்டி யது. தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அதே வேளையில், முதலாளித்துவம் சக்திவாய்ந்த முதலாளிகள் வர்க்கத்தையும், சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரும் திறன்கொண்ட புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தையும் ஒரேசமயத்தில் உருவாக்கியது.அறிவியல்பூர்வ சோசலிசத்தின் வளர்ச்சிகம்யூனிஸ்ட் அறிக்கைக்கு முன்பு, சோசலிச இயக்கம் கற்பனை கனவுகளாலும் தெளிவற்ற வழிமுறைகளாலும் வழிநடத்தப்பட்டது. லெனின் குறிப்பிட்டது போல, மார்க்ஸின் மேதமை மூன்று முக்கிய அறிவுத் தடங்களை ஒருங்கிணைத்ததில் உள்ளது: இயக்கவியல் பற்றிய நுட்பமான புரிதலுடன் கூடிய ஜெர்மன் தத்து வம், முதலாளித்துவ உற்பத்தியின் விதிகளை வெளிப்படுத்திய பிரிட்டனின் அரசியல் பொருளாதாரம் மற்றும் புரட்சிகர மரபுகளுடன் கூடிய பிரெஞ்சு சோசலிசம்.2: கட்சியின் தோற்றமும் ஆரம்பகால வளர்ச்சியும்உருவாக்கமும் ஆரம்பகால அமைப்பும்தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். எம்.என்.ராய் முதன்மைப் பங்கு வகித்த போதிலும், இயக்கம் பல்வேறு மூலங்களில் இருந்து வலிமை பெற்றது. 1920 அக்டோபர் 17 அன்று ஏழு உறுப்பினர்களுடன் முகமது ஷபீக் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக் கூட்டத்தின் நடவடிக்கைகள், ஒரு முறையான புரட்சிகர இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தன. 1920 டிசம்பர் 15 அன்று அடுத்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆரம்பகால பதிவுகளை சிலர் கேள்வி எழுப்பினாலும், தாஷ்கண்ட் ஆவணக் காப்பகங்கள் இந்த அடிப்படை நிகழ்வுகளை உறுதிப்படுத்துகின்றன.ஹிஜ்ரத் இயக்கமும் அதன் தாக்கமும்கிலாபத் இயக்கத்தின் தாக்கத்தால் உருவான ஹிஜ்ரத் இயக்கம் கட்சிக்கு குறிப்பிடத்தக்க உறுப்பினர்களை வழங்கியது. இக்கால கட்டத்தில் சுமார் 18,000 முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். துருக்கியை அடைய முடியாத பல முஹாஜிர்கள், தாஷ்கண்ட் மற்றும் மாஸ்கோவை அடைந்தனர், அங்கு பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கிழக்கத்திய உழைப்பாளர்களின் பல்கலைக்கழகத்தில் படித்த பின், இந்த கம்யூனிஸ்டுகள் இயக்கமாக செயல்பட இந்தியா திரும்ப முயன்றனர். இவர்களின் கைதுதான், முதல் மற்றும் இரண்டாம் பெஷாவர் சதி வழக்குகளுக்கு வழிவகுத்தது, இது கம்யூனிசத்தை ஒரு தீவிர அச்சுறுத்தலாக பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்ததை குறிக்கிறது.ஆரம்பகால மக்கள் பணியும் பிரச்சாரமும்கட்சியின் முதல் குறிப்பிடத்தக்க பொது தலையீடு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வுகளில் - அகமதாபாத் (1921) கயா (1922) மற்றும் அடுத்தடுத்த கூட்டங்களில் - தனது அறிக்கையை விநியோகித்ததன் மூலம் துவங்கி, வலுப்பெற்றது. இந்த அறிக்கைகள் முழு விடுதலைக்கான அறைகூவலை முன்வைத்தன, இந்த கோரிக்கையை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களுடன் இணைத்தன. தோழர் முசாபர் அகமது தனது “நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” என்ற நூலில் கூறுகிறார்: “எம்.என். ராய்தான்... தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதில் உண்மையான முன்முயற்சியை எடுத்தார்.” “1921 டிசம்பரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஒரு சிறப்பு நிகழ்வு நடந்தது. கட்சியின் முதல் அச்சிடப்பட்ட அறிக்கை அப்போது விநியோகிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் அப்போது குஜராத்தின் அகமதாபாத்தில் தனது முப்பத்தாறாவது அமர்வை நடத்திக் கொண்டிருந்தது. நமது கட்சியின் முதல் அறிக்கை காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு அனுப்பப்பட்டு, அவர்களிடையே விநியோகிக்கப்பட்டது.” “இந்த அறிக்கை மாஸ்கோவில் எழுதப்பட்டு அச்சிடப்பட்டது. மனவேந்திரநாத் ராய் (எம்.என்.ராய்) இதை வரைந்தார்.” தோழர் முசாபர் அகமது ஆவணப்படுத்தியபடி, மாஸ்கோவில் எம்.என்.ராய் வரைந்த கட்சியின் முதல் அச்சிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு அறிவித்தது: “இந்தியாவில் அடித்தளம் வரை அசைக்கும் புரட்சியை காங்கிரஸ் வழிநடத்த விரும்பினால், வெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தற்காலிக உற்சாகத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம். தொழிற்சங்கங்களின் உடனடி கோரிக்கைகளை தனது கோரிக்கைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்; கிசான் சபாக்களின் (விவசாய சங்கங்களின்) திட்டத்தை தனது திட்டமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.”3: பிற்கால வளர்ச்சியும்  கருத்தியல் சவால்களும்இயக்கத்தின் வளர்ச்சியும் சவால்களும்சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், தேசிய இயக்கத்துடனான உறவுகளில் கட்சி சிக்கலான உத்திசார் கேள்விகளை எதிர்கொண் டது. தனது தொழிலாளர் வர்க்கத் தன்மையை தக்க வைத்துக்கொண்டே, பிற காலனிய எதிர்ப்பு சக்திகளுடன் உறவுகளை கையாள வேண்டியி ருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஒரு சக்தி வாய்ந்த மக்கள் எழுச்சி உருவானது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ.என்.ஏ) கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்களும், கடற்படை எழுச்சியும்,தொழிலாளர்களின் ஆதரவு நடவடிக்கைகளும் காங்கிரஸ் தலைமையை அச்சுறுத்தின. மக்கள் போராட்டங்களின்  வளர்ச்சி புரட்சிகர முன்முயற்சியை தொழிலாளர் வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றிவிடும் என முதலாளித்துவ வர்க்கம் அஞ்சியது.சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சிகள்சுதந்திரத்திற்குப் பின், கட்சி இந்திய ஆளும் வர்க்கங்களிடமிருந்து புதிய சவால்களை எதிர்கொண்டது. தேசிய விடுதலைப் போராட்டங்களின் போது தலைமைப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கப்படாத கம்யூனிஸ்ட் கட்சி கள், முதலாளித்துவ ஆட்சியின் கீழ் சோசலிசத்தை நோக்கி முன்னேற கடினமான சூழலை எதிர்கொண்ட பிற காலனி நாடுகளின் அனுபவம் இங்கும் தொடர்ந்தது. புதிய நாடாளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் செயல்படும் அதேவேளை, கட்சி தனது புரட்சிகர குணாம்சத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது.கருத்தியல் போராட்டங்களும் பிளவும்இயக்கம் தீவிர கருத்தியல் விவாதங்களையும் சவால்களையும் சந்தித்தது. இரண்டாவது கட்சி மாநாட்டிற்குப் பின், “இடது” விலகல் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதை சரிசெய்யும் போது, வலதுசாரி ஆபத்து எழுந்தது. வலதுசாரி தலைமையின் கொள்கைக்கு எதிரான போராட்டம் கட்சிக்குள் பத்து ஆண்டுகள் தொடர்ந்து, இறுதியில் பிளவு க்கும் சி.பி.ஐ(எம்) உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது. அடுத்தடுத்த நிகழ்வு கள் சிபிஐ(எம்) நிலைப்பாட்டின் சரியான தன்மையை உறுதிப்படுத்தின.சர்வதேச பரிமாணங்கள்சி.பி.ஐ(எம்) சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொ ண்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.எஸ்.யு) சீன கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.சி) வெவ்வேறு காலங்களில் கட்சியை விமர்சித்தன. ஆனால், சி.பி.ஐ(எம்) வேறு எந்த கட்சியின் ஆணைகளையும் ஏற்கா மல், இந்திய சூழ்நிலைகளின் அடிப்படையில் தனது சொந்த புரிதலை வளர்த்துக் கொள்ளும் கோட்பாட்டு நிலைப்பாட்டை பாதுகாத்தது. உள்நாட்டு வர்க்கப் போராட்டங்களுடன் இணைந்த இந்த சுயேச்சையான நிலைப்பாடு, கட்சியை கருத்தியல் ரீதியாக வலுப்படுத்தியது.புரட்சிகர தொடர்ச்சியும் எதிர்காலமும்தனிநபர் பயங்கரவாத இயக்கங்களில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்த புரட்சியாளர்கள் கட்சிக்கு குறிப்பிடத்தக்க பலத்தை அளித்த னர். அனுசீலன் சமீதி, யுகாந்தர், ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சி போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் தனிநபர் பயங்கரவாதத்தின் வரம்புகளை உணர்ந்து, மார்க்சிய வழிமுறைகளை ஏற்றனர். இது கம்யூ னிஸ்ட் கட்சி இந்திய விடுதலைப் போராட்டத்தின் சிறந்த புரட்சிகர மரபு ளை உள்வாங்கி முன்னெடுக்க உதவியது.சர்வதேச ஆதரவின் பங்குபிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த வரம்புகளுக்குள் இருந்த போதிலும் முக்கியமான ஆதரவு பங்கை வகித்தது. ரஜனி பாமி தத் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியல் பொருளா தாரத்தை புரிந்துகொள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தனர். பல பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் மாற்றுபெயரில் இந்தியாவில் நேரடியாக பணி யாற்றி, தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளை கட்டமைக்க உதவி னர். சிலர் கைது செய்யப்பட்டு மீரட் சதி வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டனர். 75 ஆண்டுகால பயணத்தில், (1995) (தற்போது 105 ஆண்டுகள்) ஒரு சிறிய குழுவிலிருந்து குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக கட்சி வளர்ந்துள் ளது. சர்வதேச அளவில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் நெருக்கடியை எதிர் கொண்டபோதும், சி.பி.ஐ(எம்) அமைப்பு மற்றும் கருத்தியல் தெளிவை பராமரிக்கும் திறன், புரட்சிகரக் கொள்கைகளை உறுதியான பகுப்பாய்வு டன் இணைப்பதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.  தொடர்ந்த கருத்தியல் போராட்டங்கள், 1960களில் அகில இந்திய அளவி லான தலைமையுடனான மோதல்கள், சர்வதேச அளவில் தனிமைப்படுத் தப்பட்ட காலகட்டம் ஆகியவை நாட்டின் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைந்து கட்சியை வலுப்படுத்தின. இதனால்தான் உலகெங்கும் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் சரிந்து, பல ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டபோதும், சி.பி.ஐ(எம்) உறுப்பினர்கள் தளர்வோ குழப்பமோ இன்றி, இந்தியப் புரட்சியை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.“வர்க்க முரண்பாடுகளும் மோதல்களுமே சமூக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கின்றன.” “கம்யூனிஸ்ட் கட்சி என்பது வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படையாகும்.” “வெறும் ஆர்ப்பாட்டங்களும் தற்காலிக உற்சாகத்திலும் அல்ல, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களில்தான் புரட்சியின் வெற்றி அடங்கியுள்ளது.” “கட்சியின் சுயேச்சையான கொள்கை நிலைப்பாடும், வர்க்கப் போராட்டங்களும் இணைந்து கட்சியை வலுப்படுத்துகின்றன.” “தனிநபர் பயங்கரவாதம் தீர்வல்ல, மக்கள் திரள் போராட்டமே புரட்சிக்கான பாதை.” “வரலாறு முழுவதும் - ஒடுக் குபவர்-ஒடுக்கப்படுபவர் என்ற முரண்பாடு தொடர்கிறது.” “மனிதனால் மனிதன் சுரண்டப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதே கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை நோக்கம்.” “ஒரு நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் அனைத்துலக தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.” “தொழிற்சங்கங்களின் உட னடிக் கோரிக்கைகளை மட்டுமல்ல, நீண்டகால புரட்சிகர இலக்குகளையும் கட்சி முன்னெடுக்க வேண்டும்.” “வெறும் எண்ணிக்கையல்ல, கருத்தியல் தெளிவும் அமைப்பு ஒழுக்கமுமே ஒரு புரட்சிகர கட்சியின் வலிமையை தீர்மானிக்கின்றன.”
2025-01-19 02:07:16.148657
ஜனவரி 18, 2025
தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையின் வரலாற்றுப் பாதை
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/the-historical-trajectory-of-worker-peasant-solidarity
தமிழ்
UTF-8
1980 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சுயசார்பும் ஒருமைப் பாடும் கடும் சோதனைக்கு உள்ளாயின. பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (IMF) கட்டளைகளுக்கு இந்திரா காந்தி அரசு தலை வணங்கியது. உலக வங்கி மற்றும் ஐஎம்எப் (IMF) நிபந்த னைகளை ஏற்று கடன்களைப் பெற்றது.  ஒன்றிய-மாநில அரசுகள் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பெயரால் மக்கள் மீது கடும் சுமைகளைத் திணித்தன. ரயில் கட்டணம், பால் விலை, சரக்குக் கட்டணம், பெட்ரோலியப் பொருட்களின் விலை என அனைத்தும் கடுமையாக உயர்ந்தன. மறைமுக வரிகள் பெருகின. ஏற்றுமதியை விட இறக்குமதி 9,000 கோடி ரூபாய் அதிகரித்தது. உள்நாட்டு கனரக தொழில்கள் முடங்கின. உள்நாட்டி லும் வெளிநாட்டிலும் கடன் சுமை பெருகி, அரசின் கருவூலம் காலியானது.தொழிலாளர் ஒற்றுமையின் எழுச்சிஇந்த மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங் கள் வெடித்தன. சிஐடியு உள்ளிட்ட எட்டு மத்திய தொழிற்சங்கங்களும், 40-க்கும் மேற்பட்ட தொழில்வாரியான சம்மேளனங்களும் ஒன்றிணைந்து தேசிய பிரச்சாரக் குழுவை உருவாக்கின. 1981 ஜூன் 4 அன்று மும்பையில் நடந்த சிறப்பு மாநாடு “தில்லியில் அணிவகுப்போம்” என அறைகூவல் விடுத்தது. 1981 நவம்பர் 23 அன்று தில்லியில் நடந்த பேரணி தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் மாபெரும் வெளிப்பாடாக அமைந்தது. பொதுத்துறை, தனியார் துறை, ரயில்வே, பாதுகாப்பு, அரசு ஊழியர்கள், இரும்பு, நிலக்கரி, சுரங்கம், சணல், ஜவுளி, பொறியியல், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துத் துறைகளிலி ருந்தும் தொழிலாளர்கள் அலை அலையாக திரண்டனர். தோட்டம், கைத்தறி, பீடி, கட்டுமானம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்க ளும் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். உழைக்கும் பெண்களின் பெருந்திரள் பங்கேற்பு தொழிற்சங்க இயக்கத்தின் புதிய எழுச்சியைக் காட்டியது.வேலைநிறுத்தமும் தியாகங்களும்பேரணியின் முடிவில் 1982 ஜனவரி 19 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அந்த வரலாற்று நாளில் வெளிப்பட்ட தொழிலாளர் ஒற்றுமை அதுவரை கண்டிராத அளவிற்கு உயர்ந்தது. முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதர வோடு பல இடங்களில் பந்த் ஆக மாறியது. ஆனால் அன்றைய நாள் இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் இரத்தம் சிந்திய நாளாகவும் மாறியது. நாடு முழுவதும் பத்து தோழர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்தனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொழிலாளர்களோடு இணைந்து நின்ற விவசாய இயக்கத் தோழர்கள் மீது துப்பாக்கி முனை நீட்டப்பட்டது. அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய மூன்று தியாகச் செம்மல்கள் வீர மரணம் அடைந்தனர். பெருமாள்நல்லூர், பிச்சங்கட்டளை, சீதை சிந்தாமணி, கண்ணங்குடி-சவுரி யார்புரம், காலமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காவல்துறையினர் வன்முறை யில் இறங்கினர். வீடுகளுக்குள் புகுந்து ஆண், பெண், குழந்தைகள் என அனைவ ரையும் தாக்கினர். குடிசைகளில் இருந்த பாத்திரங்களை நொறுக்கி சூறையாடினர். நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகாயமடைந்தனர்.நீதி மறுக்கப்பட்ட வரலாறுதிருமெய்ஞானம் வழக்கு மயிலாடுதுறை துணை நீதிமன்றத்தில் பல ஆண்டு கள் இழுபறியானது. குற்றத்தை நிரூபிக்க முடியாத நிலையில் 1989 மார்ச் 27 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் மூன்று உயிர்களின் பலிக்கு நீதியும் நியாயமும் மறுக்கப்பட்டது. இது நம் வரலாற்றின் கறுப்புப் பக்கமாக நிற்கிறது. இன்றைய சூழலும் தொடரும் போராட்டங்களும் இன்று மோடி தலைமையிலான பாஜக அரசின் பத்தாண்டு கால படுபிற்போக்கு கொள்கைகள் இந்தியாவின் உழைக்கும் மக்களையும், வேலையில்லா இளைஞர்களையும் வரலாறு காணாத அளவில் பாதித்துள்ளன. அதனால்தான் இந்திய தொழிலாளர் வர்க்கம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1982 ஜனவரி 19 தியாகிகளின் நினைவு நாளில், அவர்களது தியாகப் பாதை யில் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம். ஒற்று மையை குலைக்க முயலும் ஆட்சியாளர்களின் சதிகளை முறியடிப்போம். உழைக்கும் மக்களின் வாழ்வை வளமாக்க இடைவிடாது போராடுவோம். பெரணமல்லூர் சேகரன்
2025-01-19 02:07:16.149117
ஜனவரி 18, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/australian-open-tennis-2025
தமிழ்
UTF-8
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - அமெரிக்க வீரர் பிரிட்ஸ் அவுட்113 ஆண்டுகால பழ மையான ஆஸ்தி ரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடர் மெல் போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை அன்று  நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரிட்ஸ், தரவரிசையில் இல்லாத முன்னணி வீரரான பிரான் சின் மோன்பில்சை எதிர் கொண்டார்.  தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-6, 7-5, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் மோன்பில்ஸ் வெற்றி பெற்று, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். சூப்பர் பார்மில் உள்ள பிரிட்ஸ் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.  மற்றொரு அமெரிக்க இளம் வீரரான செல்டன் (தர வரிசை 21) தனது 3ஆவது சுற்று ஆட்டத்தில் இத்தாலி யின் முன்னணி வீரர்களுள் ஒருவரான முஸ்ஸெட்டியை (தரவரிசை 16) 6-3, 3-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சாநோவ், தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் மிச்செல்சன்னிடம் 3-6, 6-7 (5-7), 2-6 என்ற செட் கணக் கில் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியே றினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள்: லோரன்சோ (இத்தாலி), டியன் (அமெரிக்கா), டி மினார்  (ஆஸ்திரேலியா)4ஆவது சுற்றில் ரைபைகினாமகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபைகினா, தரவரிசையில் 32ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் டையானவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரைபைகினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டையானவை புரட்டியெடுத்து 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் :  ஸ்வியாடெக் (போலந்து), கசட்கினா (ரஷ்யா), லிஸ் (ஜெர்மனி), நவர்ரோ (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்)சாம்பியன்ஸ் டிராபி 2025... இந்திய அணி அறிவிப்புமினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பி யன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது.  ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த தொடரில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்க ளுக்காக துபாயில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 20 அன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர் கொள்ள உள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக் கான இந்திய அணி சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டன. வீரர்கள் விபரம் : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், சப்மன் கில், ஸ்ரே யாஸ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷதீப் சிங்.
2025-01-19 02:07:19.651364
ஜனவரி 18, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/everyone-knows-that-sanjay-roy-is-guilty-in-kolkata-rg-kar-case
தமிழ்
UTF-8
கொல்கத்தா ஆர்.ஜி.கர் வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்குப் பின்னால் உள்ள சக்திகள் யார்? யாரால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. மேற்குவங்க அரசாங்கமும், டீன் மற்றும் மருத்துவமனையின் ஒட்டுமொத்த நிர்வாகமும் குற்றவாளிகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்து, மறுபக்கம் அம்பானி, அதானி, ஆர்எஸ்எஸ்-க்கு மட்டுமே ஒன்றிய பாஜக ஆட்சியில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.22 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. தில்லி ஆம் ஆத்மி அரசை போல குறைந்தபட்சம் 5 மாநிலங்களிலாவது இலவச மின்சாரத்தை பாஜகவால் வழங்க முடியுமா? அதனால்தான் பாஜகவின் பெயரை “பாரதிய ஜூத்தா (அசுத்தமான) கட்சி” என மாற்றியுள்ளேன்.இந்திய நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது. மிகுந்த முயற்சியால் அனைவரும் கடுமையாக போராடி சுதந்திரம் பெற்றோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தவறான தகவல்களை பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
2025-01-19 02:07:24.625686
ஜனவரி 18, 2025
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி தேர்வு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/tejashwi-elected-as-rashtriya-janata-dal-(rjd)-president
தமிழ்
UTF-8
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா  தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பாட்னாவில் சனிக்கிழமை அன்று (ஜன.18) நடை பெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத், பீகார் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி, கட்சியின் மூத்த தலைவர்கள் மனோஜ் ஜா மற்றும் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல் வேறு விவாதம் மற்றும் தீர்மானங்களு க்குப் பிறகு தேஜஸ்வி கட்சியின் தலைவ ராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் தலைவராக அவரது தந்தை லாலு பிரசாத் உள்ளார். தேஜஸ்வியின் செல்வாக்கு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி கட்சியின் செயற்குழு தெரிவித்துள்ளது.
2025-01-19 02:07:24.626669
ஜனவரி 18, 2025
கும்பமேளா கருத்தரங்கா? ஓட்டம் பிடித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/justice-shekhar-of-the-allahabad-high-court,-who-has-won-the-race
தமிழ்
UTF-8
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத் தின் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதி பதியாக இருப்பவர் சேகர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில்,”இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளை சகிப்புத்தன்மை இல்லாமல் வளர்க்கிறார்கள். இஸ்லாமியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள். பெரும் பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப் படியே இந்த நாடு செயல்படும். பொது சிவில் சட்டத்தை ஆர்எஸ்எஸ், விஎச்பி மட்டுமல்லாது உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என வகுப்புவாதத்திற்கு ஆதரவாக வெறுப்புப் பேச்சை கக்கினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த தைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி சேகரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியது.  இந்நிலையில், அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க சர்ச்சைக்குரிய நீதிபதி சேகருக்கு இந்துத்துவா அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் திறக் கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை கொண்டா டும் விதமாக கும்பமேளா விழாவில் “அயோத்தி ராமர்” கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கருத்தரங்கு நிகழ்வில் நீதிபதி சேகரின் பெயர் உள்ளது. இத்தகைய சூழலில்  “அயோத்தி ராமர்” கருத்தரங்கில் இருந்து நீதிபதி சேகர் விலகுவதாக அறிவித்துள்ளார்.  ஜனவரி 22ஆம் தேதி நீதிமன்ற வேலை நாள் என்பதால், தான் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று கூறி நீதிபதி சேகர் கருத்த ரங்கில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.
2025-01-19 02:07:24.627708
ஜனவரி 18, 2025
13 கி.மீ... 13 நிமிடம்... ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பறந்த “இதயம்”
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/successfully-completed-surgery
தமிழ்
UTF-8
ஹைதராபாத் பொதுவாக உயிரிழந்த நபர்களின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலமாக ஒருவரோ, பலரோ உயிர் வாழ்கின்றனர். அந்த வகையில் எதிர்பாரா விதமாக விபத்தில் மூளைச்சாவு அடைந்த வர்களின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மூலம் பலர் வாழ்வு பெறுகின்றனர். மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தில்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது. சிக்கலானது... உடல் உறுப்புகளை தானம் செய்வது மிக சாதாரண விஷயம் அல்ல. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை அகற்றி, குறிப்பிட்ட மணிநேரத்தில் பொருத்த வேண்டி யது மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு உள்ளு றுப்புக்கும் அதன் தன்மைக்கேற்ப, உடனடியாக பொருத்த வேண்டிய இக்கட்டான சூழலும் உள்ளது. ஹைதராபாத்  மெட்ரோ நிர்வாகம் கலக்கல் இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் தானம் பெறப்பட்ட இதயம், மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப் பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக  நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரின் காமினேனி மருத்துவ மனையில் பெறப்பட்ட இதயத்தை, லக்டிகாபு லில் இருக்கும் கிளினிக்கல்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு மருத்துவமனைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 13 கி.மீ ஆகும். தில்லி, சென்னை, பெங்களூருவைப் போல ஹைதராபாத் நகரமும் நெரிசல் மிகுந்த பகுதி ஆகும்.  போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதி என்பதால், ஆம்புலன்ஸ் மூலம் சென்றால் கூட தாமதம் ஆகலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதனால் இதயத்தை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்ல மருத்துவர்கள் திட்ட மிட்டனர். ஹைதராபாத் மெட்ரோ நிர்வா கத்திடம் நிலைமையை கூறி, வெறும் 13  நிமிடத்தில் சென்றடைந்து இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். குவியும் பாராட்டு...  13 கி.மீ., தொலைவை 13 நிமிடங்களில் சென்றடைய மருத்துவ நிபுணர்கள், ஹைதரா பாத் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் பேசி திட்டமிட்டனர். அதன்படி மெட்ரோ நிர்வாகம் பச்சை வண்ண வழித்தடம் (நான்- ஸ்டாப்) பிரத்யேகமாக அமைக்கப்பட்டு மெட்ரோ அதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் உரிய நேரத்தில் இதயம் கிளினிக்கல்ஸ் குளோ பல் மருத்துவமனையைச் சென்றடைந்தது. மெட்ரோ ரயிலில் பலத்த பாதுகாப்போடு, எந்த இடையூறும் இன்றி மருத்துவர்களால் இதயம், திட்டமிடப்பட்டவாறே 13 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடந்து, பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதுதொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இதை யடுத்து, மருத்துவர்களும், பொதுமக்களும், மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூகவலைத்தளங்க ளில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. அதே போல மெட்ரோ ரயில் கொண்டு செல்லலாம் என திட்டம் வகுத்த மருத்துவர்களும் டாப் டிரெண்டிங்கில் சமூகவலைத்தளங்களில் வைர லாகி வருகின்றனர்.
2025-01-19 02:07:24.628193
ஜனவரி 18, 2025
சிபிஎம் ஹரியானா மாநிலச் செயலாளராக பிரேம் சந்த் தேர்வு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/prem-chand-selected-as-cpm-haryana-state-secretary
தமிழ்
UTF-8
சண்டிகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநில 17ஆவது மாநாடு கடுமையான குளிருக்கு இடையே ஜனவரி 11ஆம் தேதி கைத்தல் நகரில் பொதுக்கூட் டத்துடன் தொடங்கியது. இந்திர ஜித் சிங் தலைமை வகித்தார். இந்த பொதுக் கூட்டத்தில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் நிலோத் பல் பாசு, மத்தியக் குழு உறுப்பி னர்கள் டாக்டர் கே.ஹேமலதா, ஏ.ஆர்.சிந்து, மாநிலச் செயலாளர் சுரீந்திர சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநிலச் செயலர் தரியாவ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  வகுப்புவாத மற்றும் சாதியத் தாக்குதல்களுக்கு எதிராகவும், போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், ஊழியர்களின் ஊதி யத்தை உயர்த்துதல் மற்றும் விவ சாயிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வும், தீவிர தேர்தல் சீர்திருத்தங்க ளுக்கு ஆதரவாகவும், ஒரே நாடு  ஒரே தேர்தலுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அட்டூழியங்க ளுக்கு எதிராகவும், மின்சாரம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் தனியார் மயமாக்கலுக்கு எதிராக தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் 30 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. அதில் 9 பேர் மாநிலச் செயற் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலா ளராக பிரேம் சந்த் தேர்வு செய்யப் பட்டார். மேலும் தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ள அகில இந்திய மாநாட் டிற்கான பிரதிநிதிகளும் மாநாட் டில் தேர்வு செய்யப்பட்டனர்.  மேலும் மின்துறை தனியார்மய மாக்கல், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் குறியீடுகள், அதி கரித்து வரும் பணவீக்கம், விவசா யிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றுக்கு எதிராக ஜனவரி 24 முதல் ஜனவரி 31 வரை ஹரியா னா மாநிலம் முழுவதும் பிரச்சார ஆர்ப்பாட்டங்களை நடத்த மாநாட் டில் முடிவு செய்யப்பட்டது. நிலோத்பல் பாசு நிறைவுரையுடன் மாநாடு நிறைவுபெற்றது.
2025-01-19 02:07:24.628693
ஜனவரி 18, 2025
கெஜ்ரிவால் கார் மீது பாஜக குண்டர்கள் கல்வீச்சு தில்லியில் பதற்றம்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/bjp-goons-pelted-stones-on-kejriwal's-car,-tension-in-delhi
தமிழ்
UTF-8
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண் ணப்பட உள்ளது. புதுதில்லி தொகுதியில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் முன் னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மகன் சந்தீப் தீக்சித்தும், பாஜக தரப்பில் முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர். சனிக்கிழமை அன்று புதுதில்லி தொகு தியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென கெஜ்ரிவாலின் கார்  மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் காரில்  ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்த போது, ஒரு கல் காரின் மேற்கூரையில் வந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் அடி யாட்கள் தேர்தல் பரப்புரையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். பாஜக தொண் டர்களே, அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்ற தாக்குதல்களுக்கு அஞ்சுபவர் அல்ல. இதற்கு தில்லி மக்கள் உங்களு க்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரி வால் மீது தாக்குதல் நடந்த வீடியோவில், அவரின் கான்வாய் அருகிலேயே கருப்பு கொடியுடன் சிலர் வேண்டுமென்றே பரப்புரையை கெடுக்க முயற்சித்தது தெரிய வந்துள்ளது. கெஜ்ரிவால் கார்  மீது பாஜக குண்டர்கள் கல்வீச்சு நடத்திய சம்பவத்தால் தில்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
2025-01-19 02:07:24.629181
ஜனவரி 18, 2025
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு விப்ரோ தகவல்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/12,000-employment-wipro-information
தமிழ்
UTF-8
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் கர்நாடக தலைநகர் பெங்களூருவை  தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. விப்ரோ நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் செயல்பட்டு வரு கின்றன. இந்நிலையில், 2025-26ஆம் நிதி யாண்டில் புதிதாக 12,000 பணியாளர்க ளை சேர்க்க உள்ளதாக விப்ரோ நிறு வனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விப்ரோ நிறுவன அதிகாரி சவுரப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த ஓராண்டில் 12,000 புதிய பணி யாளர்களை பணியமர்த்த திட்ட மிட்டுள்ளோம். கேம்பஸ் மூலம் பணிய மர்த்தப்படும் பணியாளர்கள் எண் ணிக்கை 10,000ஐ எட்டும் என எதிர் பார்க்கிறோம். ஏற்கெனவே 3ஆவது காலாண்டில் புதிதாக 7,000 பணியா ளர்கள் பணியமர்த்தி உள்ளோம். அதே போல அடுத்த காலாண்டில் கூடுதலாக 2,500 முதல் 3,000 வரை புதிய பணியா ளர்களை பணியமர்த்துவோம். ஒவ்வொரு காலாண்டிலும் 2,500 முதல் 3000 வரை புதிய பணியாளர்களை பணி யமர்த்த திட்டம் வகுத்துள்ளோம்” என அவர் கூறினார்.
2025-01-19 02:07:24.629671
ஜனவரி 18, 2025
கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை - சஞ்சய ராய் குற்றவாளி என தீர்ப்பு
மாநிலம் - மேற்கு வங்காளம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/west-bengal/kolkata-woman-doctor-case-sanjay-roy-convicted
தமிழ்
UTF-8
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த 8ஆம் தேதி  பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில், மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த சியல்டா மாவட்ட நீதிமன்றம், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிக்கான தண்டனை விபரங்கள் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
2025-01-19 02:07:24.630139
ஜனவரி 19, 2025
நாளை மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம் - ஏன்? - பா.ஜான்சி ராணி
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/the-struggle-to-fill-the-prisons-with-disabled-people-tomorrow
தமிழ்
UTF-8
தமிழக அரசே! மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது நியாயம் தானா? இந்தக் கேள்வியுடன் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம் ஜனவரி 21 அன்று நடைபெற உள்ளது.தமிழக அரசின் நிலைப்பாடுதமிழகத்தில்முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது ஏற்புடையதல்ல. மாற்றுத்திறனாளிகள் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது சமூகநீதி, சமநீதி அடிப்படையில் ஆட்சி நடத்தும் தமிழக அரசின் கடமை யாகும்.அண்டை மாநிலங்களின் முன்னேற்றம்ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூபாய் 4,000 முதல் 10,000 வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசுதான் அனைத்து அம்சங்களிலும் முன்னேறிய முதன்மை மாநிலமாக விளங்குவதாக சொல்லப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை மட்டும் உயர்த்தி கொடுக்காமல் மாற்றுத்திறனாளிகளை மீண்டும், மீண்டும் போராட்டத்திற்கு தள்ளுவது ஏற்கத்தக்கதல்ல.தற்போதைய நெருக்கடிகள்- உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் வேதனையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் - உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்த மாற்றுத்திற னாளிகளுக்கு திடீரென இரண்டு மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது  - கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 100 நாள் வேலை வழங்கப்பட வில்லை  - சட்டப்படி நான்கு மணி நேர வேலைக்கு பதிலாக ஆறு  முதல் எட்டு மணி நேரம் வரை வேலை  வாங்கப்படு கிறது  - வேலை செய்த நாட்களுக்கான கூலி மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறதுபோராட்ட முடிவுக்கான காரணங்கள்பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகும் தமிழக  அரசு தீர்வு காண முன்வராத சூழலில், மாற்றுத்திறனாளி கள் வேறு வழியின்றி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கிறோம்.முக்கிய கோரிக்கைகள்1. உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல  ரூபாய் 6,000 முதல் 10,000 வரை உயர்த்த வேண்டும்  2. நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்  3. காத்திருப்போருக்கு உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும்  4.100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும்  5.சட்டப்படி நான்கு மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும்  6.கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்  போராட்ட விவரம்தமிழகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் சிறை நிரப்பும் போராட்டம் ஜனவரி 21 அன்று நடைபெற உள்ளது.அறைகூவல்தமிழக அரசு இனியும் மாற்றுத்திறனாளிகளை போராட விட்டு வேடிக்கை பார்க்காமல், கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் வெற்றி பெற, தமிழகம் முழுவதும் இருக்கின்ற மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் அனைவரும் சிறை நிரப்பும் போராட்ட களத்திற்கு அலை கடலென திரள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2025-01-20 02:01:17.837155
ஜனவரி 19, 2025
கும்பமேளா - கால்களைக் கழுவிய பிரதமர்; மலத்தை கழுவ திகைத்து நிற்கும் தலித்துகள் - க.சுவாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/kumbh-mela---prime-minister-who-washed-his-feet
தமிழ்
UTF-8
கும்பமேளா துவங்கி விட்டது. பல லட்சக் கணக்கான பேர் கங்கை யமுனை சங்கமத்தில் நீராடும் காட்சிகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.  ஜனவரி 13 துவங்கி பிப்ரவரி 26 வரையிலான 6 வார  காலத்தில் 40 கோடி பேர் கும்பமேளாவில் பங்கேற்க வருவார்கள். ஆயிரம் ஆண்டு திருவிழாவின் பிரம்மாண்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதாகும். உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரம் காணும் காட்சி இது.  ஆனால் உலகத்தின் கவனத்தை ஈர்க்காத, ஊடகங்களின் கேமராக்களில் பெரிதும் சிக்காத ஓர் பேரவலமும் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாவத்தைக் கழுவ பல கோடி பேர் சங்கமமாகும் போது, அவர்கள் கழிக்கும் மலத்தை கழுவுவது யார் என்ற கேள்வியே அது.ஏஎப்பி ஊடகத்தில் அருணாப் சைக்கியா என்பவ ரின் செய்திக் கட்டுரை தரும் தகவல்கள் சாதிய அமைப்பின் குரூரத்தை வெளிக் கொணர்ந்துள்ளது.  1,50,000 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. 5000 பேர் தூய்மை பணியாளர்களாக நிய மனம் பெற்றுள்ளனர். 2000 கால்பந்து மைதானங் களை விட அதிகமான பரப்பில் இவை நிறுவப்பட்டுள் ளன. அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தி கழிப்பறைகளை பயன்படுத்த வைப்பதே பெரும் சவால். 100 பேருக்கு ஒரு கழிப்பறை, 2000 பேர் கழிவை சுத்தம் செய்ய ஒரு தூய்மைப் பணியாளர் எனில் எப்படி சமாளிக்க முடியும்?கழிப்பறை கழுவ நியமிக்கப்பட்டுள்ள பணி யாளர்கள் அனேகமாக தலித்துகளே. அலுவல் ரீதியான தகவல்களே 10 க்கு 9 பேர் தலித்துகள் என்று கூறு கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளாவுக்கு வந்த பிரதமர், 5 தூய்மைப் பணியாளர்களின் கால் களை கழுவி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு சில  மாதங்களுக்கு பின்பு தேர்தல் வந்தது. அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பிரதமர் தூய்மைப் பணியாளர் களின் கால்களை கழுவக்கூடும். ஆனால் தூய்மைப் பணி செய்யும் தலித்துகள், நாங்கள் மலத்தை கழுவி சுத்தம் செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறோம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? வர்ணாசிரம அடுக்குகள் “டர்ன்” போட்டு இந்த வேலைகளைப் பார்க்குமா! ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கானவர்களின் கழிவுகளை தலித்துகள் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவிய பிரதமர், கழிவகற்றும் பணியை முழுமையாக இயந்திர மயமாக்கும் 2020 ஆம் ஆண்டு மசோதாவை [The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation (Amendment) Bill, 2020] கை கழுவி விட்டார் என்பது தனிக் கதை. சட்டத்திற்கு பதிலாக “நமஸ்தே  திட்டம்” என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். தூய்மைப் பணி அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள “தெய்வீகக் கடமை” என்று நினைப்பவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? துப்புரவு பொறியியல் கல்வி, ஆராய்ச்சி என்றெல்லாம் எப்படி யோசித்து முன்னேற முடியும்?“நான் கழுவுகிறேன்... நான் கழுவிக் கொண்டே இருக்கிறேன்... ஆனால் வருகிற கும்பல் 10 நிமிடங்களில் பாழாக்கி விடுகிறது” என்கிறார் சுரேஷ் வால்மீகி. கழிப்பறையில் மிதந்து கொண்டிருக்கும் மலக்குவியல் மீது ஹோஸ் பைப்பை பிடித்து தண்ணீர்  பாய்ச்சிக் கொண்டு இருக்கிறார்.  பக்கத்து கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டி ருக்கிறார் 17 வயது இளைஞர். அவர் சுரேஷ் வால்மீகி யின் மகன் விகாஸ் வால்மீகி.  கும்பமேளாவுக்கு 1000 ஆண்டு கொண்டாட்ட வரலாறு உண்டு எனில்,  அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், 1000 ஆண்டு களாக தலைமுறை தலைமுறையாக  வால்மீகிகள் மீது ஏவப்படும் குரூர வரலாற்றை கங்கையும் யமுனையும் எழுதிக் கொண்டே இருக்கின்றன. சுரேஷ் வால்மீகியும், விகாஸ் வால்மீகியும் கழுவிக் கொண்டே இருக்கிறார்கள்.
2025-01-20 02:01:17.838092
ஜனவரி 19, 2025
ஏழைகளை விழுங்கும் பணவீக்கம்!
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/a-recent-paper-by-deloitte
தமிழ்
UTF-8
டெலாய்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள் அதிர்ச்சி தருகின்றன.கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் உண்மை ஊதிய வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 2019ல் 5.2 சதவீதமாக இருந்த உண்மை ஊதிய வளர்ச்சி, 2020ல் -0.4 சதவீதமாக சரிந்தது.  அதன் பிறகு மெதுவாக உயர்ந்து 2024ல் 3.6 சதவீத மாக உள்ளது. 2025ல் இது 4 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கூட கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் இருந்த வளர்ச்சி விகிதத்தை விட குறைவே.நாட்டின் முக்கிய தொழில்துறைகளான ஐடி, உற்பத்தி, பொறியியல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளில் ஊதிய உயர்வு குறைக்க ப்பட்டுள்ளது. 2024ல் 9 சதவீதமாக இருந்த சராசரி ஊதிய உயர்வு 2025ல் 8.8 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த ஊதிய உயர்வு கூட பணவீக்கத்தால் விழுங்கப்பட்டு விடுகிறது. இதனால் மக்களின் உண்மையான வருமானம் குறைந்து, வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு பண வீக்கத்தை விட சற்றே அதிகமாக மட்டுமே  இருந்துள்ளது என டெலாய்ட்  இந்தியாவின் பங்காளர் ஆனந்தரூப்  கோஷ்  தெரிவிக்கிறார். இந்த இடைவெளி குறையும் போது, உண்மை  வருமானமும், வாங்கும் சக்தியும்  மேலும் குறைகிறது. குறிப்பாக குறைந்த ஊதிய பிரிவினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.டாடா குழுமத்தின் உயர் அதிகாரி பிரதீப் பக் ஷி கூறுவது போல, நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவிட்டுக்கு முன்பு இருந்த - விருப்ப பொருட்கள் வாங்கும் பழக்கம்  முற்றிலும் குறைந்துள்ளது. வி-மார்ட் நிறு வனத்தின் நிர்வாக இயக்குனர் லலித் அகர்வால் கூறுவது போல, நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை குறைத்துக்கொண்டு, கடன்களை வாங்கி, போதுமான ஊதிய உயர்வோ பதவி உயர்வோ இல்லாமல் தவிக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினரின் நிலையே இத்தனை மோசம் என்றால், அன்றாடங்காய்ச்சிகளின் துயரம் எத்தனை கொடியது எனப் புரிந்து கொள்ளலாம்.இந்த நிலைமைக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே முக்கிய காரணம். பெரு நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கை களை வகுத்து, சிறு மற்றும் குறு தொழில்களை புறக்கணித்து வருகிறது. இது வேலைவாய்ப்பு களை பெருமளவில் பாதித்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் அரசு படுதோல்வி அடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமெனில், அரசு தனது கொள்கைகளை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.
2025-01-20 02:01:19.724780
ஜனவரி 19, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/india's-bopanna---china's-jung-pair-in-the-quarter-finals
தமிழ்
UTF-8
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா - சீனாவின் ஜங் ஜோடி113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண் ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல் போர்ன் நகரில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடு முறை நாளான ஞாயிறன்று அன்று நடை பெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு  2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - சீனாவின் ஜங் ஜோடி, மோனோகோவின் ஹுகோ நைஸ் -  அமெரிக்காவின் டவுன்ட்சென்ட் ஜோடி யை எதிர்கொண்டது. ஹுகோ  - டவுன்ட் சென்ட் ஜோடி போட்டி தொடங்கும் முன்பே திடீரென காயம் காரணமாக வெளியேற, அதிஷ்ட வாய்ப்புடன் இந்தியாவின் போபண்ணா - சீனா வின் ஜங் ஜோடி காலிறுதிக்கு முன் னேறியது.  அதிரடியில் மிரட்டும் சபலென்கா மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள பெலாரஸ் வீராங் கனை சபலென்கா, தரவரிசையில் 14 ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆன்டிரிவாவை எதிர்கொண்டார். தனது அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய சப லென்கா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆன்டிரிவாவை புரட்டியெடுத்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா வின் கோகா கவுப், தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பென்கிச்சை எதிர் கொண்டார். 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் கோகா கவுப் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் அல்காரஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனின் டிராப்பரை எதிர் கொண்டார். 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அல்காரஸ் முன்னணியில் இருந்த பொழுது, டிராப்பர் காயம் காரணமாக வெளியேறினார். இதன்மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புடன் அல்காரஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதே போல தரவரிசையில் 14ஆவது இடத்தில் அமெரிக்காவின் பவுல், தரவரிசையில் இல்லாத ஸ்பெயினின் டேவிடோனோவிச்சை  6-1,6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கம்பீரை புறந்தள்ளிய  அஜித் அகார்கர், ரோகித் சர்மாசாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி தேர்வு கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு   துவங்கியது. சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்  தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், தேர்வுக்குழுத் தலை வர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே துணை கேப்டனாக யாரை நியமிப்பது என்பது பற்றி நீண்ட நேர விவாதம் நடந்ததாக தெரிகிறது. அஜித் அகார்கர், ரோகித் சர்மா துணை கேப்டனாக சுப்மன் கில் பெயரை முன் மொழிந்து இருந்தனர். ஆனால் அதை கவுதம் கம்பீர் ஏற்க மறுத்ததாகவும், ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஜித் அகார்கர் மற்றும் ரோகித் சர்மா இதை மறுத்து விட்டனர். அதே போல மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என கவுதம்  கம்பீர் கேட்டு இருக்கிறார். ஆனால், ரிசப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார் என அஜித் அகார்கர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். மொத்தத்தில் அஜித் அகார்கர், ரோகித் சர்மா ஆகிய இருவரும் கம்பீரை புறந்தள்ளியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.டிரெண்டிங் வாய்ஸ்இது கேரளா கிரிக்கெட் சங்கம் மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான வருத்தமான கதை  ஆகும். சையத் முஸ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களுக்கான இடையேயான பயிற்சி கேம்பில் பங்கேற்க மாட்டேன் என்று  முன்கூட்டியே சஞ்சு சாம்சன், கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் விஜய் ஹசாரேவுக்கான கேரள அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதோடு, இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் வெளியேற்றப் பட்டுள்ளார். இந்த பேட்ஸ்மென் ஹசாரேவில் (விஜய் ஹசாரேவில்) 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளை யாடி சராசரியை 56.66 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியின் சதத்தையும் சேர்த்து) என்று வைத்துள்ளார். இப்போது அவரது எதிர்காலத்தை கிரிக்கெட் சங்க  நிர்வாகி களின் ஈகோ சிதைத்துள்ளது. அதோடு இந்த ஈகோ விஜய் ஹசாரேவில் கேரளா அணியை காலிறுதிக்கு கூட தகுதி பெற வைக்கவில்லை. இது கவலையாக இல்லையா?
2025-01-20 02:01:19.806313
ஜனவரி 19, 2025
காஸாவை வந்தடைந்தன முதல் நிவாரணப் பொருட்கள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/israel/first-relief-supplies-arrive-in-gaza
தமிழ்
UTF-8
காஸா, ஜன. 19 - பதினைந்து மாத கால இஸ்ரேலின் - கொடிய தாக்கு தலுக்குப் பிறகு இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) காலை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், காஸாவில் கடுமையான அழிவுகளை சந்தித்த மக்க ளுக்கு நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது.  உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு அம லாக இருந்த போர் நிறுத்தம், ஹமாஸ் இயக்கம் விடுவிக்க இருக்கும் கைதிகளின் பட்டி யலை வழங்காததால் சுமார்  மூன்று மணி நேரம் தாமத மானது. இறுதியாக காலை 11:15 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த காலதாமதத்தின்போது கூட  காஸாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் எட்டு பாலஸ்தீனியர்கள் உயி ரிழந்ததாக காஸா குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தெரி வித்துள்ளது. போர் நிறுத்தம் அமலான சில நிமிடங்களிலேயே, காஸாவுக்கு முதல் மனிதாபி மான உதவிப் பொருட்கள் வந்தடைந்தன. 197 நிவாரணப் பொருட்கள் நிரம்பிய லாரிகளும், 5 எரி பொருள் லாரிகளும் கெரெம் ஷாலோம், அல்-ஓகா மற்றும் நிட்சானா எல்லைப் பகுதிகள் வழியாக காஸாவை சென்றடைந்துள்ளன என எகிப்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக, முதல் கட்டமாக மூன்று இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்களில் ஒருவர் ருமேனிய குடியுரிமையும், மற்றொருவர் பிரிட்டிஷ் குடி யுரிமையும் கொண்டவர்கள் என கத்தார் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மஜெட் அல்-அன்சாரி தெரி வித்தார். பதிலுக்கு இஸ்ரேல் 90 பாலஸ்தீனிய கைதி களை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.  இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ் ரேலின் இனவெறி பிடித்த பாதுகாப்பு அமைச்சர் இட்ட மார் பென்-க்விர் மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இருப்பினும், அவர்கள் நேதன்யாகு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கமாட்  டோம் என தெரிவித்துள்ளனர்.  காஸா மக்கள் போர் நிறுத்தத்தை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்ட னர். பல குடும்பங்கள் தங் களது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். எனி னும், கிழக்கு எல்லைப் பகுதி களில் தொடர்ந்து பீரங்கி சத்தங்கள் கேட்டதாக உள் ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றும், தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்க இஸ்ரே லுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் நேதன் யாகு மிரட்டியுள்ளார். காஸா வில் ஹமாஸ் ஆட்சியில் இருக்கும் வரை மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை தொடரும் என இஸ்ரேல்  மிரட்டியுள்ளது.
2025-01-20 02:01:21.207613
ஜனவரி 19, 2025
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் சிபிஎம் மத்தியக்குழு வரவேற்பு
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/israel/bills-for-holding-simultaneous-elections
தமிழ்
UTF-8
புதுதில்லி, ஜன.19-  பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மிகக்கொடிய யுத்தம் நடத்தி வந்த நிலையில், ஜனவரி 19 ஞாயிறு முதல் இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர்நிறுத்தம் அம லுக்கு வந்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வரவேற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜனவரி 17-19 தேதிகளில் கொல் கத்தாவில் நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து அது வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:   காசாவில் போர்நிறுத்தம்  ஜனவரி 19 முதல் அமலுக்கு வரும் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந் தத்தை மத்தியக்குழு வரவேற்கி றது. பதினைந்து மாதங்களுக்கும் மேலாக அங்கே காசாவில் இருந்த  பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் ஏவப்பட்ட இனப்படு கொலை யுத்தத்தில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டார்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் காயம் அடைந் தார்கள்.  ஆறு வாரங்கள் நீடிக்கவுள்ள முதல் கட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் அரசியல் தீர்வு மீண்டும் ஏற்படும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை உறுதி செய்வது இப்போது முக்கியமாகும். அமைதி நிலை நாட்டப்படுவதையும், சுதந்திர  பாலஸ்தீன அரசை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசாங்கம் இராஜ தந்திர ரீதியாக செயல்பட வேண்டும்.. ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்டமுன்வடிவுகள்நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக இரு சட்ட முன்வடிவுகளை மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருப்பதை மத்தியக் குழு குறித்துக்கொண்டது. முதலாவது, அரசமைப்புச்சட்ட (129ஆவது திருத்த) சட்டமுன்வடிவு ஆகும். இது அரசமைப்புச்சட்டத்தில் தற்போது இருந்துவரும் மூன்று பிரிவுகளில் திருத்தங்களைக் கொண்டுவரவும், புதிதாக ஒரு பிரிவை அறிமுகப்படுத்திடவும் முன் மொழிந்திருக்கிறது. இத்திருத்தங் களில் ஒன்று, மக்களவை அதற்கான காலவரையறை முடி வதற்கு முன்பே அது கலைக்கப் படுமானால், மீதம் இருக்கிற காலத் திற்கு மட்டுமே அடுத்த மக்கள வைக்கான தேர்தல் நடத்தப் படும் என்பதாகும். இதன் பொருள்,  மக்களவை மூன்றாண்டு காலம் கழித்து கலைக்கப்படுமானால், அடுத்த தேர்தல் என்பது இரண்டு  ஆண்டு காலத்திற்கு மட்டுமே யாகும். இதேபோலவே மாநில சட்ட மன்றங்களும் இடையிலேயே கலைக்கப்பட்டால், மீதம் உள்ள  காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். இது, அரசமைப்புச் சட்டத்தில் தற்போது அளிக்கப் பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாய கத்தின் அடிப்படைத் திட்டத்திற்கே  எதிரானதாகும். மாநில சட்டமன்றங் களின் பதவிக்காலத்தை இவ்வாறு குறைப்பது, கூட்டாட்சி தத்துவத் திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மீதும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திடும்.  இந்த இரண்டு சட்டமுன்வடிவு களும் கூட்டு நாடாளுமன்றக் குழு வுக்கு மேலும் நுண்ணாய்வு செய்வ தற்காகவும் பரிசீலனை செய்வதற் காகவும் அனுப்பப்பட்டிருக்கின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  ஏற்கனவே ஒரே தேசம், ஒரே  தேர்தல்-க்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தியிருக்கிறது. புதிதாகக் கொண்டுவரும் இந்த அரசமைப்புச் சட்ட திருத்த சட்டமுன்வடிவுகள் ஜனநாயக விழுமியங்களையும், கூட்டாட்சி தத்துவத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டும்.மசூதி-கோவில் தாவாக்கள்1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள்  சட்டத்தினை மீறி பல்வேறு மசூதிகள் இருந்த  இடங்களில் கோவில்கள் இருந்தன எனக்கூறியும் அவை குறித்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  கோரி பல்வேறு கீழமை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக் கின்றன. மேற்கு உத்தரப் பிரதேசம் சம்பலில்  இவ்வாறு நடந்திருக்கிறது. அங்கேயுள்ள நீதிமன்றம் மனு தாக்கல் செய்த அன்றே ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆணையை யும் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் காரணமாக கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்து அதில் ஐந்து முஸ்லீம் இளைஞர்கள் மரணம் அடைந்திருப்பது, எந்த அளவிற்கு அங்கே ஆட்சி செய்திடும்  மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும் இந்துத்துவா சக்திகளின் நிகழ்ச்சி  நிரலை முன்னெடுத்துச் சென்றுகொண்டி ருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.  இதனைத் தொடர்ந்து ஆஜ்மீரில் உள்ள  நீதிமன்றத்திலும் இதேபோன்று ஆஜ்மீர் ஷெரீப் தர்காவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  இந்து அமைப்புகளின் சில மனுதாரர் களால் 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்திற்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதி மன்றங்களில் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகள் மீதான விசாரணைகளுக்கும் தடை விதித்துள்ளது.  உச்சநீதிமன்றம் 1991ஆம் ஆண்டு வழி பாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லுபடி யாகும் தன்மையை நிலைநிறுத்தவும், மதவழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பும் எவ்விதமான முயற்சிக்கும் இடம் அளிக்காது அந்தச்சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மத்தியக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிமுறைகள்மத்தியக்குழு 2025 பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் வரைவுக்குக் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கிறது. இது, மாநில அரசாங்கங்களால் நடத்தப் படும் பல்கலைக் கழகங்களில் துணை  வேந்தர்களை நியமனம் செய்வதற்கு மாநில அரசாங்கங்களுக்கு இருக்கும் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இப்போது அளிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்கள் மாநிலங்களில் உள்ள ஆளுநர்/வேந்தரே மூன்று நபர்கள் கொண்ட தெரிவுக்குழு நியமனம் செய்வதற்கான அதிகாரத்தைப் பெறுவார் என்றும், அந்த மூவரில் வேந்தரால் பரிந்துரைக்கப்படும் நபர் அந்தக்குழுவின் தலைவராக இருப்பார் என்றும் கூறுகிறது.  தெரிவுக்குழுவில் எவரை  நியமிக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம்  எதுவும்  கூற முடியாது. இவ்வாறு ஒன்றிய அர சாங்கம் இந்தத் திருத்தங்களின் மூலமாக தங்களுக்கு வேண்டிய நபர்களை மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களி லும் ஆளுநர்கள்/வேந்தர்கள் மூலமாக நியமனம் செய்துகொள்ள முடியும். ஆளுநர்கள் தாங்கள் வேந்தர்கள் என்ற முறையில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் நடைமுறையில் இருந்துவரும் அனைத்து நெறிமுறைகளையும் மீறி தான்தோன்றித்தனமாக ஆர்எஸ்எஸ்/பாஜக ஆதரவு துணை வேந்தர்களை நியமனம் செய்ய முயன்றார்கள் என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். இது ஒரு ஆபத்தான சரத்து. இதனை எதிர்த்திட வேண்டும். இந்த வரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுவிடுமானால், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் இந்தத்  திருத்தங்களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டியது அவசியமாகும்.வேளாண் சந்தை தொடர்பான வரைவு தேசியக் கொள்கை கட்டமைப்புஇப்போது ஒன்றிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சந்தை தொடர்பான  வரைவு தேசியக் கொள்கை கட்டமைப்பு (Draft National  Policy Framework on Agricultural Marketing), விவசாயிகள் போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களில் இருந்த  சாராம்சங்களை மீளவும் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியேயாகும். இந்த வரைவு, தனியார் மொத்த சந்தைகளை நிறுவவும், கார்ப்பரேட்டுகள் நேரடி பண்ணை வாயில் திறந்திடவும், தற்போது காலங்காலமாக இருந்துவரும் பாரம்பரிய சந்தைகளை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றியமைத்திடவும், மாநில அளவில் ஒரேவிதமான சந்தை கட்டணம் நிர்ணயம் செய்திடவும், வர்த்தக  உரிமம் அளிக்கும் முறையைக் கொண்டு வரவும் வழிவகுக்கிறது. இந்த வரைவானது பெரும் கார்ப்பரேட்டுகள், தற்போது இயங்கிவரும் வேளாண் சந்தைகளை ஓரங்கட்டிவிட்டு, நேரடியாகவே விவசாயி களிடமிருந்து உற்பத்திப் பொருள்களை வாங்குவதற்கும் வசதி செய்து கொடுக் கிறது. இதற்கு எதிராக விவசாய சங்கங்களும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் மேற்கொள்ள விருக்கும் கிளர்ச்சிப்போராட்டங்களுக்கு மத்தியக்குழு தன் முழு ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்தக் கொள்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிக்கிளைகளும் அணிதிரளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. தேர்தல் ஆணைய விதிகள் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்ச மாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குடிமக்கள் வீடியோ மற்றும் பிற டிஜிட்டல் தடங்கள் உள்ளிட்ட மின்னணு பதிவுகளை அணுகுவதைத் தடுக்கும் விதத்தில் தேர்தல் விதிகளில் மாற்றங்களை அறிவித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் பிற்போக்கு நடவடிக்கை, தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மையின் மீதான மற்றொரு தாக்குதலாகும்.  இது தொடர்பாக விவாதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்தியக்குழு கோருகிறது.  தமிழில்: ச.வீரமணி
2025-01-20 02:01:21.208205
ஜனவரி 19, 2025
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமலானது
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/palestine/israel-hamas-ceasefire-takes-effect
தமிழ்
UTF-8
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று இந்திய நேரப்படி 2.45 மணியளவில் அமலுக்கு வந்தது.பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ளதால், தொடர்ந்து இஸ்ரேலுக்கும் , பால்ஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை ஒரு காரணமாக வைத்து இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது கொடூர தாக்குதலை நடத்த தொடங்கியது.15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 70 % பெண்களும், குழந்தைகளும். எனினும் லான்செட் எனும் இதழ் 41% கூடுதலாக மரணம் நிகழ்ந்துள்ளது என மதிப்பிடுகிறது.ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் போரை நிறுத்த, அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பிணைக் கைதிகள் குறித்த விவரங்களை வெளியிடாவிட்டால், போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.இதற்கிடையே, பிணைக் கைதிகளின் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் வழங்கியது. இதனையடுத்து, இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக முன்னதாக இன்று காலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிந்தவுடம் போரை மீண்டும் தொடங்க வேண்டும் என இஸ்ரேலிய வலதுசாரிகள் கோருகின்றன. இதனை பெரும்பான்மையான இஸ்ரேலிய சமூகம் அங்கீகரிக்கிறது. இன்று போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் டிரம்ப் பின்னர் என்ன நிலைபாடு எடுப்பார் என்பது எவரும் கணிக்க இயலாது. லெபனானில் போர் நிறுத்தத்துக்கு பின்னர் குறைந்தபட்சம் 100 முறை இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. காசாவிலும் இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.இந்த ஒப்பந்தத்துக்கு அப்பால் சுதந்திர பாலஸ்தீனம் எனும் அடிப்படை கோரிக்கை உள்ளது. உலக தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக தலையிடாமல் அல்லது குறைந்தபட்சம் இஸ்லாமிய தேசங்கள் இஸ்ரேலுக்கு எதிராக களத்துக்கு வராமல் சுதந்திர பாலஸ்தீனம் ஏற்படப்போவது இல்லை. சுதந்திர பாலஸ்தீனம் இல்லாமல் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை.
2025-01-20 02:01:21.209983
ஜனவரி 19, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/chance-of-rain-in-tamil-nadu-till-january-23
தமிழ்
UTF-8
டிரம்ப் பதவியேற்பு விழா: ரூ.1,731 கோடி நன்கொடை திரட்டல்நியூயார்க், ஜன., 19- அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வரும்  திங்கள்கிழமை பதவியேற்க உள்ளார். இவரது பதவி யேற்பு விழாவுக்கு 200 மில்லி யன் டாலர் (சுமார் ரூ.1,731.5 கோடி) நன்கொடை திரட்டப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் குளிர் காரணமாக, 40 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக மூடிய அரங்கில் விழா நடைபெற உள்ளது. அமைச்சரவை உறுப்பினர் கள் உட்பட 500 முக்கிய பிர முகர்கள் கலந்து கொள் கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இத்தாலி பிரதமர் ஜியார் ஜியா மெலோனி, தொழில்மு னைவோர்களான எலான் மஸ்க் (டெஸ்லா), ஜெப் பெசோஸ் (அமேசான்), மார்க் ஜூக்கர்பெர்க் (மெட்டா) ஆகி யோர் பங்கேற்க உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், திரட்டப்பட்ட நன்கொடை குறித்த விவரங்கள் - யார்,  எவ்வளவு வழங்கினர் என் பது உள்ளிட்ட தகவல்கள் - வெளியிடப்படவில்லை.ஜன.25 வரை பொங்கல் பரிசு தொகுப்புசென்னை, ஜன.19-  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்  பணி ஜனவரி 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் 34,793 நியாய விலைக் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.மாட்டுக் கோமியம் தீங்கு விளைவிக்கக் கூடியது இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கைபுதுதில்லி  சென்னை மேற்கு மாம்  பாலத்தின் ஒரு கோசா லையில் மாட்டுப் பொங்கலுக்கு நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காம கோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சி யில், “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. பாக்டீ ரியா, பூஞ்சை, செரிமான கோளாறு  உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை  எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள் ளது” எனக் கூறினார். கோமியம் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படும் என அறிவியல் பூர்வ ஆதா ரம் இல்லாத நிலையில், அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற் படுத்தி வருகிறது. இந்நிலையில், கோமியம் குடிப்பது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “பசுக் கள், எருமைகளின் சிறுநீர் (கோமி யம்) மாதிரிகளை இந்திய கால் நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்  வுக்கு உட்படுத்தியது. இதில் எஸ்ச ரிசியா கோலை, சால்மொனெல்லா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. மனி தர்கள் கோமியத்தைக் குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியா மூலம்  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி அறி வியலாளர் போஜ் ராஜ் சிங் கூறு கையில், “எருமைகளின் சிறுநீரை விட பசுக்களின் சிறுநீரில் நோய்த் தடுப்பு சக்தி உள்ளதாக மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் பசுக்க ளின் சிறுநீரில் நோய் எதிர்ப்பு சக்தி  உள்ளதாக நம்பப்படுவதைப் பொது மைப்படுத்த முடியாது. கோமி யத்தை மனிதர்கள் குடிக்கலாம் என எப்போதும் பரிந்துரைக்க முடி யாது” என அவர் கூறினார்.கொல்கத்தா பாலியல் வழக்கில் இன்று தண்டனை விபரம் அறிவிப்பு “மகனை தூக்கிலிட்டாலும் கவலைப்பட மாட்டேன்”கொல்கத்தா மேற்கு வங்கத்தில் முதல் வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரி ணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்  துள்ளது. தலைநகர் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி மாணவி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பாலி யல் பலாத்காரம் செய்து படு கொலை செய்யப்பட்டார். மருத் துவக் கல்லூரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இந்த  சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக் டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் உட்பட நாடு முழு தும் பயிற்சி மருத்துவர்கள் போரா ட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என சனிக்கிழமை அன்று சீல்டா நீதி மன்றம் அறிவித்துள்ளது. அவ ருக்கான தண்டனை விபரம் திங்  கள்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், மகனை தூக்கிலிட்டாலும் கவலைப்பட மாட்டேன் என சஞ்சய் ராயின்  தாய் மாலதி ராய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “நான்  சட்டத்தின் தீர்ப்பை எதிர்கொள் கிறேன். என் மகன் குற்றவாளி என்றால், அவன் தண்டிக்கப்பட வேண்டும். அவனது தலைவிதி என கருதுகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். பெண் பயிற்சி மாணவியின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடி யும். கடும் தண்டனை கிடைக்கட் டும். சஞ்சய் ராயை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறினாலும் அதனையும் ஏற்கி றேன்” என்றார். இது குறித்து சஞ்சய் ராயின் சகோதரி கூறுகையில், “எனது சகோதரர் (தம்பி) செய்தது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பயங்கரமானது. இதைச் சொல்லும்போதே என் இதயம் உடைகிறது. இந்தத் தவறை அவன் செய்திருந்தால் கடும் தண்டனை வழங்க வேண்  டும். பாதிக்கப்பட்டவர் என்னைப்  போன்று ஒரு பெண் டாக்டர்” என்றார்.  சஞ்சய் ராய் நீதிமன்றக் காவ லில் இருந்தபோது, தாயும் சகோ தரியும் நேரில் வந்து பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ராகுல் காந்தி மீது  அசாமில் வழக்குஜனவரி 15ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற னர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்  காந்தி, “நாட்டில் உள்ள அனைத்து நிறு வனங்களையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு  (மோடி அரசுக்கு) எதிராகவும் போராடி வருகிறோம்” எனக் கூறினார். ராகுல் காந்தியின் பேச்சை அப்படியே  திரித்து, “நம் நாட்டில் இருந்து கொண்டே  இந்திய அரசுக்கு எதிராகப் போராடு கிறோம் என ராகுல் காந்தி உள் நோக் கத்துடன் பேசி வருகிறார்” என பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், ஜனவரி 18ஆம் தேதி, ராகுலின் பேச்சு தேசதுரோகத்திற்கு இணையானது எனக் கூறி பாஜக ஆளும்  அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் மோன்ஜித் சேத்தியா என்பவர் பான் பஜார்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். புகாரை உடனடியாக ஏற்றுக் கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191(1) (தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுதல்) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பெரியார் பல்கலை. முறைகேடு   சாட்சிகளிடம்  காவல்துறை விசாரணைசேலம், ஜன.19-  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழக விதிகளை மீறி பூட்டர் என்ற தனியார் அமைப்பை  ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக பல்கலைக்கழக  துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள்  பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த துணைவேந்தர் ஜெகநாதன் நீதிமன்றத்தில் பெற்றிருந்த தடையை நீக்கி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், முறைகேடு தொடர்பான வழக்கை காவல்துறை விசாரிக்கலாம் என்றும் அனுமதி அளித்திருந்தது.  உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ரமலி ராம்லட்சுமி வழக்கு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கி உள்ளார். இந்த வழக்கில் சாட்சியாக கருதப்பட்ட பல்கலைக்கழக தொழிலாளர் சங்க செயலாளர் சக்திவேல், அமைப்பு செயலாளர் கிருஷ்ணவேணி ஆகி யோருக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப் பட்டது. அதன்படி இருவரும் மாலை உதவி ஆணை யாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்களை கூறினர்.  இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்டவர்களை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கனமழையால் 30 ஆயிரம்  ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்புமயிலாடுதுறை,ஜன.19- மயிலாடுதுறையில் கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசமாகின. மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர் நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. பருவ மழையில் தப்பிய பயிர்கள், புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை காப்பாற்றினர்.  இந்நிலையில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர்கள் அடியோடு நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால், தண்ணீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து  முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தி லும் அறுவடைக்கு  தயாராக இருந்த 15ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.ஐஐடி இயக்குநர் தவறான கருத்துக்களை கூறக்கூடாது  அமைச்சர் பொன்முடி கண்டனம்விழுப்புரம்,ஜன.19- விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் துவக்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறுகையில், “நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில், நவீன மருத்துவ வசதிகள் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சரின் நோக்கம். இதுபோன்ற தவறான கருத்துகளை கூறி மக்களை திசை திருப்பக் கூடாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து தெளித்துக் கொள்வதுதான் வழக்கம். அதை ஐஐடி இயக்குநர் குடிக்க கூறுகிறார். ஒரு ஐஐடி இயக்குநர் இது போன்ற கருத்தை கூறுவது ஏற்கக்கூடியதல்ல. இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய செய்திகள் மூலமாக பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் பத்திரிகை மூலமாக வெளிக் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.இரட்டை கொலை சம்பவம்  காவல் ஆய்வாளர்  பணியிடை நீக்கம்சென்னை, ஜன.19-  சென்னை பட்டாபிராமில் நடந்த இரட்டை கொலைச்  சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம்  செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜீவால் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆயல்சேரியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் சனிக்கிழமை அன்று இரவு  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பம் தொடர்பாகவே ஜெகநாதனை காத்திருப்போர் பட்டி யலுக்கு மாற்றியுள்ளார். பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புலி நக சங்கிலி அணிந்தவர் கைதுகோவை,ஜன.19-  கோவையில் புலி நகத்தால் சங்கிலி செய்து அணிந்திருந்த தொழிலதிபரை கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பேசிய தொழிலதிபர் பாலகிருஷ்ணன், ஆந்திராவில் புலி நகத்தாலான செயினை வாங்கியதாக கூறியது வைரலானது.  இதனைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனையிட்ட வனத்துறையினர், மான் கொம்புகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பாலகிருஷ்ணன் வீட்டில் இல்லாத நிலையில் வனத்துறை அலுவலகத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டார். பாலகிருஷ்ணனிடம் இருந்து பறிமுதல் செய்த மான் கொம்பு, புலி நகத்தை வனத்துறை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளது.ஜன.23 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசென்னை,ஜன.19- தமிழகத்தில் ஜனவரி 23 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு  திசைக் காற்றில் நிலவும் வேகமாறு பாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜன.20) தென் மாவட்டங்களில் சில இடங்கள், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். ஜனவரி 21, 22, 23 ஆகிய தேதி களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 24, 25  ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை  ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதி களில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.  எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.பண வீக்கம் :  கிழிந்து போகும் பொய்த் திரைகள்தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள “குடும்ப நுகர்வு செலவின ஆய்வு 2023 -24” இன் படி மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் அதிகரித்து இருப்பது நல்ல அறிகுறி தானே! என்று சிலர் கேட்கலாம். 2011 - 12 ஆம் ஆண்டிற்கு பின்னர் 11 ஆண்டுகள் கழித்து “நுகர்வோர் செலவின ஆய்வு” குறித்த  வெளியிடப்படும் இரண்டாவது ஆண்டறிக்கையாகும் இது.  ஆட்சியாளர் மகிழ்ச்சி இந்த அறிக்கையை இந்த முறை வெளியிடும் போது ஆட்சியாளர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். காரணம், தனிநபர் சராசரி நுகர்வோர் செலவினம் (MPCE) 2022- 23 இல் ரூ 3773 ஆக இருந்தது. 2023 - 24 இல் ரூ 4122 ஆக கிராமப் புறங்களிலும், ரூ 6459 லிருந்து ரூ 6996 ஆக நகர்ப் உயர்ந்திருப்பதே. இதன் பொருள் கிராமப் புறங்களில் 9.25 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8.31 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது.  ஆகவே மக்களின் நுகர்வு அதிகரித்து இருக்கிறது; பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அவர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது என்று சித்தரிக்க ஆட்சியாளர்கள் முனையலாம். ஆனால் இந்த உயர்வுக்குள் ஒளிந்திருக்கிற ஒரு முக்கியமான அம்சத்தை நாம் காண தவறக் கூடாது. அதுவே பணவீக்கம்.  பணவீக்கம் கழித்தால் மேற்கண்ட நுகர்வு உயர்வு சதவீதத்தை பொதுவான நுகர்வோர் செலவின குறியீடு 6 சதவீதத்துடன் இணைத்தும், உணவுப் பொருள் பணவீக்க விகிதமான 9 சதவீதம் + என்பதோடு இணைத்தும் பார்த்தால்தான் உண்மையான நுகர்வில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அனேகமாக உயர்வேதும் இல்லை என்பது அம்பலமாகும்.  அதாவது நுகர்வு அப்படியே இருந்திருக்கிறது அல்லது குறைந்தி ருக்கிறது. ஆனால் நுகர்வுக்கான செலவினம் பண வீக்கத் தால் அதிகரித்து இருக்கிறது. அது தனிநபர் சராசரி மாதாந்திர நுகர்வு செலவினத்திலும் பிரதிபலித்திருக்கிறது.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி - ஜனவரி 6 - 12, 2025 - க.சுவாமிநாதன்
2025-01-20 02:01:25.456671
ஜனவரி 19, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/right-to-information-(rti)-is-currently-the-biggest-threat
தமிழ்
UTF-8
தற்போதைக்கு தகவல் அறியும் உரிமைக்கு (ஆர்டிஐ) மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 ஆகும். இது மூன்றாம் தரப்பினருக்கு நம்பகத்தன்மையை வழங்குவதன் மூலம் தகவல் அறியும் உரிமையை அழிக்கப் போகிறது..பாஜக ஆட்சியில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் மிகுந்த ஆபத்தில் உள்ளது. நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் பிற அமைப்புகள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். தற்போதைய சூழலில் நாட்டில் அனைத்துமே ஆபத்தில் தான் உள்ளன..இடஒதுக்கீடு உச்சவரம்பு 50% என்ற தடையை நீக்கி காட்டுவோம். அரசியல் சாசனத்திற்கும், மனுதர்மத்திற்கும் இடையேயான போரை நாடு பார்த்து வருகிறது. வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பாஜக- ஆர்எஸ்எஸ் கூட்டணிக்கு எதிரான போராட்டம் சித்தாந்த ரீதியானது.எல்லையில் ஊடுருவும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராணுவத்திலும் பிஎஸ்எப்பிலும் நிரந்தரமாக மக்களைச் சேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை நான் வலியுறுத்தி வருகிறேன். நடிகர் சைப் அலி கானைத் தாக்கியவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றாலும், இதனை வைத்து அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.சைப் அலிகானை கத்தியால் குத்திய  வழக்கில் சனிக்கிழமை அன்று சத்தீஸ்  கர் ரயில் நிலையத்தில் ஒருவர் பிடிப்பட்ட நிலை யில், ஞாயிறன்று அதிகாலை மும்பையில்  உண்மை குற்றவாளி முகமது அலியை (வங்க தேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது) மும்பை போலீசார் கைது செய்தனர். இதனை யடுத்து சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார்.“நில ஒதுக்கீடு விவகாரத்தில் எனது தலையீடு எது வும் இல்லை. நான் விதிமீறலில் ஈடுபட வில்லை. என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சி நடக்கிறது” என கர்நாடக முதல்வர் சித்த ராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
2025-01-20 02:01:25.457740
ஜனவரி 19, 2025
கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்த கொலைக் குற்றவாளிகளைக் களமிறக்கும் பாஜக தில்லி முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/bjp-is-fielding-murderers-to-attack-kejriwal
தமிழ்
UTF-8
70 தொகுதிகளை கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி  ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்  நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ஆம் தேதி எண்ணப்பட உள்  ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று  தான் போட்டியிடும் புதுதில்லி தொகுதி யில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென கெஜ்ரிவாலின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் காரில்  ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்த போது,  ஒரு கல் காரின் மேற்கூரையில் வந்து  விழுந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் கெஜ்ரிவால் மீது  தாக்குதல் நடத்த கொலை குற்றவாளி களை பாஜக களமிறக்குகிறது என தில்லி  முதல்வர் அதிஷி குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “புதுதில்லி சட்டமன்ற தொகுதியில் சனிக்கிழமை அன்று கெஜ்ரிவாலின் கார்  தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதல் பாஜக குண்டர்களால் தான் நடத்தப்பட்டது. கெஜ்ரிவாலைத் தாக்கியவர்கள் யார்  எனக் கூர்ந்து கவனித்தால், அதில் ஒரு வரின் பெயர் ஷாங்கி என்று தெரிகிறது.  அவர் பாஜகவில் துணைத் தலைவராக உள்ளார். அவர் தனது பகுதியில் அடிக்கடி  பர்வேஷ் வர்மாவின் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பிரச்சாரங்களின் போது பர்வேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார். அவருக்கு நெருக்கமானவராகவும் உள்  ளார். ஷாங்கி மீது பல்வேறு காவல்  நிலையங்களில் கொள்ளை, தாக்குதல்,  கொலை வழக்குகள் உள்ளன. ஏற்கெ னவே கொள்ளையின் போது கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இவ ரைப் போல கொடுங்குற்றவாளிகள் அர விந்த் கெஜ்ரிவாலை தாக்க அனுப்பப் பட்டுள்ளனர். மற்றொரு குற்றவாளி ரோகித் தியாகி, அவரது சமூக வலை தள பக்கத்தில் பர்வேஷ் வர்மாவுடன் உள்ள படங்கள் உள்ளன. அவரும் பர்வே ஷுடன் பிரச்சாரங்களில் காணப்படு கிறார். தியாகியும் ஒரு கொடுங்குற்ற வாளிதான். அவர் மீதும் பல வழக்குகள் உள்ளன” என அவர் கூறினார்.
2025-01-20 02:01:25.458294
ஜனவரி 19, 2025
சந்திரபாபு மிரட்டலுக்கு அஞ்சிய அமித் ஷா திருப்பதி கோவிலில் விசாரணை செய்யாமல் ஓட்டம் பிடித்த மோடி அரசு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/andhra-state-within-the-bjp-alliance-bustle
தமிழ்
UTF-8
2024ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை வெல்வோம் என்ற முழக்கத்துடன் களமிறங் கிய பாஜக, வெறும் 240 இடங் களை மட்டுமே கைப்பற்றிப் பெரும்  பான்மையை இழந்தது. பெரும் பான்மைக்கு 272 இடங்கள் தேவை  என்ற நிலையில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 எம்.பி.க்கள், சிவசேனா (ஷிண்டே) கட்சியின் 7 எம்.பி.க்கள், லோக்  ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின்  5 எம்.பி.க்கள் என தேசிய ஜன நாயக கூட்டணி கட்சிகளின் தய வால் மோடி மூன்றாவது முறை யாகப் பிரதமர் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதில் தெலுங்கு தேசம், ஐக்கிய  ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சி கள் ஆதரவை வாபஸ் பெற்றாலே மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற சூழல் உள்ளது. இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  சொல்வதை எல்லாம் தலை யாட்டிப் பொம்மையாகக் கேட்டு மோடி அரசும், பாஜகவும் ஆட்சிக் காலத்தை நகர்த்தி வருகிறது.விசாரணை செய்யாமல் ஓட்டம்இந்நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும்  லட்டு கவுண்டரில் ஏற்பட்ட தீ விபத்து விவகாரத்தில் சந்திரபாபு கொடுத்த அழுத்தத்தால் ஒன்றிய  அமைச்சர் அமித் ஷா பின்வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழு மலையான் கோவிலில் சமீபத்தில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அதே போல் 2 வாரத்திற்கு முன்பு திருப்  பதி லட்டு கவுண்டரில் ஏற்பட்ட தீ  விபத்தில் பொருட்கள் சேதம டைந்தன. இந்த இரண்டு சம்பவங்  கள் காரணமாக திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருப்  பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய  உள்துறை அமைச்சகம் உத்தர விட்டு நோட்டீஸ் அனுப்பியிருந் தது. மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் ஞாயிற் றுக்கிழமை அன்று திருமலை -  திருப்பதியில் இரண்டு நாட்க ளுக்குத் தங்கி தேவஸ்தான அதி காரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் நோட்டீஸில் தெரி விக்கப்பட்டிருந்தது.பின்வாங்கிய அமித் ஷாஇந்நிலையில், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆந்திர மாநிலம் விஜயவாடா கன்னாவரத்தில் என்டிஆர்எப் புதிய வளாகத்தை ஞாயிற்று கிழமை  திறந்து வைத்தார். இதற்காக சனிக்கிழமை அன்று விமான நிலை யம் வந்த அவரை முதல்வர் சந்திர பாபு, துணை முதல்வர் பவன்  கல்யாண் ஆகியோர் வரவேற்ற னர். தொடர்ந்து அமித் ஷாவை  முதல்வர் தரப்பினர் சந்தித்துப் பேசி னர். அப்போது, ஏழுமலையான் கோவில் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறித்து அமித் ஷாவிடம் சந்திர பாபு முறையிட்டார். “எங்கள் மாநில  விவகாரம். இதனை ஏன் பெரிது படுத்த வேண்டும்? நாங்கள் விசா ரிக்கிறோம்” என அமித் ஷாவிடம் சந்திரபாபு கூறினார். அதன்பேரில் அடுத்த சில நிமி டங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளரின் வருகையை ரத்து செய்வதாக, ஒன்றிய உள்துறை அலுவலகம் தேவஸ்தானத்திற்குத் தெரி வித்தது.பாஜக அதிர்ச்சிதிருப்பதி கோவிலின் கூட்ட நெரி சல் மற்றும் தீ விபத்து சம்ப வங்களை வைத்து அரசியல் ஆதா யம் காணவே “மோடி அரசின் விசா ரணை” என்ற பெயரில் அமித் ஷா மூலம் காய் நகர்த்தியது ஆந்திர மாநில பாஜக. ஆனால் சந்திரபாபு இதனை முன்கூட்டியே அறிந்து அமித் ஷாவிடம் நேரடியாக அழுத்தம் கொடுத்தார். மத்தியில் பெரும்பான்மை விவகாரம் கார ணமாக சந்திரபாபுவின் அழுத் தத்திற்கு அமித் ஷா அடிபணிந்து திருப்பதி கோவிலில் விசாரணை செய்யும் முடிவை ரத்து செய்துள் ளார். தங்களது அரசியல் ஆதாய நிகழ்வை சந்திரபாபு தகர்த்ததால் ஆந்திர மாநில பாஜக அதிர்ச்சி யில் உறைந்துள்ளது.ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டுதிருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலை வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும், திருப்பதி முன்னாள்  எம்எல்ஏவுமான கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகை யில், “திருப்பதியில் நடந்த கூட்ட நெரிசல், தீ விபத்து குறித்து விசா ரணைக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் வர இருந்த நிலை யில், விஜயவாடாவுக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்  ஷாவிடம், முதல்வர் சந்திரபாபுவும், துணை முதல்வர் பவன் கல்யா ணும் வேண்டுகோள் விடுத்தனர். திருப்பதி தேவஸ்தானத்தில் உள்துறை செயலாளர் வந்து விசாரணை நடத்தினால் மாநில அர சுக்கு அவப்பெயர் ஏற்படும். எனவே இந்தப் பயணத்தை ரத்து  செய்யும்படி கேட்டனர். இதனால்தான் விசாரணையை உள்துறை  அமைச்சகம் உடனடியாக ரத்து செய்துள்ளது. இந்த ஒரு சம்ப வமே திருப்பதி தேவஸ்தானத்தில் என்ன நடந்தது என்பதற்கு உதா ரணம்” என அவர் குற்றம் சாட்டினார்.
2025-01-20 02:01:25.458994
ஜனவரி 19, 2025
தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டையில் சிபிஎம் ஆய்வு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/study-of-cpm-in-ramannapet,-telangana
தமிழ்
UTF-8
தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் ராமண்ணாபேட்டையில் அதானி குழுமம் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் முன்னிலையில் கட்சி ஊழியர்களுடன் சிமெண்ட் தொழிற்சாலைக்கு முன்மொழியப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில்,”சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவுவது குறித்து தெலுங்கானா அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்” என  தம்மினேனி வீரபத்ரம் வலியுறுத்தினார்.
2025-01-20 02:01:25.459677
ஜனவரி 19, 2025
கும்பமேளாவில் தீ விபத்து
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/fire------------------at-kumbh-mela
தமிழ்
UTF-8
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) 12 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்ப மேளா நிகழ்வு ஜனவரி 13ஆம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45  நாட்கள் நடக்கிறது. இந்நிலையில், கும்பமேளா விழா வின் 7ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சாஸ்திரி பாலத்தின் கீழ் உள்ள  பந்தலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத னைப் பார்த்த பக்தர்கள் அங்கிருந்து உட னடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் கூடா ரத்தில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்  கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தக வல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள்  சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக்  கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்து காரணமாக அலகா பாத் ஏ.டி.ஜி., பானு பாஸ்கர் கூறுகை யில், “கும்பமேளாவின் செக்டார் 19இல் 2 சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்  தக் காயமும் ஏற்படவில்லை” என்றார்.
2025-01-20 02:01:25.460174
ஜனவரி 19, 2025
அறிவியலுக்கு புறம்பாகப் பேசும் ஐஐடி இயக்குநரை நீக்குக!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/remove-the-iit-director-who-speaks-unscientifically
தமிழ்
UTF-8
சென்னை,ஜன.19- அறிவியலுக்கு புறம்பாக பேசி வரும் மெட்ராஸ்-ஐஐடி இயக்குநர் காமகோடியின் பேச்சுக்கு  இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பொறுப்பிலிருந்து அவரை  நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது. மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெற்ற “கோ” (பசு) பூஜையில் சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்று பேசினார். அதில் கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது என மூடநம்பிக்கைகளை மக்களிடையே புகுத்தும் நவீன அறிவியலுக்கு புறம்பான கருத்தை  பேசியுள்ளார். அறி வியலுக்கு புறம்பான தனது கருத்தி னை திரும்பப்பெற வேண்டும். ஐஐடி நிர்வாகம் காமகோடியை இயக்குநர் பெறுப்பிலிருந்து நீக்க வேண்டும். காமகோடி, மெட்ராஸ் ஐஐடியின் இயக்குனராக பெறுப்பேற்றது முதல்  அறிவியலுக்கு புறம்பான, நடை முறைக்கு ஒவ்வாத விஷயங்களை பொதுவெளியில் பேசுவதோடு, மாணவர்கள் விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். ஐஐடி வளாகத்தில் முற்போக்கு பேசும் மாணவர்களின் குரல் வளையை நசுக்குபவர், காசி  தமிழ்ச்சங்க நிகழ்வுகளை வளாகத் திற்குள் நடத்துவது, அதில் பங்கேற்க மாணவர்களை தயார் செய்வது என பக்திச்சார்புடன் நடந்து கொள்வதும், புராண ரீதியிலான கருத்துகளை அவ்வப்போது பேசி வருவதும் என  ஆர்.எஸ்.எஸ்.சின் பிரச்சார கழகமாக மெட்ராஸ் ஐஐடி-யை மாற்றி வரு கிறார். விஞ்ஞான அறிவியலுக்கு புறம்பான, மதச்சார்புடைய கருத்துகளை தொடர்ந்து பேசிவருவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு முறை யல்ல. இவரைத்தான் ஒன்றிய அரசாங்கம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு சுகாதரத்துறை சார்பில் உறுப்பினராகவும் நியமித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. உயர் தொழில்நுட்ப பயிற்சி கழகத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தொடர்ந்து பேசிவரு வதோடு, அதனை ஊக்குவித்து செயல்படும் காமகோடியை மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கிட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2025-01-20 02:01:25.460705
ஜனவரி 19, 2025
கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவர் லாரி ஏற்றிக் கொலை
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/a-person-who-fought-against-mineral-resource-robbery-was-killed-by-a-truck
தமிழ்
UTF-8
புதுக்கோட்டை, ஜன.19 - திருமயம் அருகே முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர், தொடர்ந்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு  வந்ததால் அவரை லாரி ஏற்றிக் கொன்ற தாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகுபர்அலி (58). இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு, வெங்களூருக்கு தனது இரு  சக்கர வாகனத்தில் திரும்பும்போது லாரி  மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மரியம் திரு மயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார்.  அந்தப் புகாரில், “எனது கணவர் ஜகுபர் அலி, இந்தப் பகுதிகளில் நடைபெறும் கல்குவாரி முறைகேடுகள் குறித்து தொடர்ச்சியாக அரசு அலுவலர்களிடம் புகார் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்றவற்றை செய்து வந்தார். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எங்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு திரும்பிய அவர் மீது லாரி மோதி இறப்பு ஏற்பட்டுள்ளது. ஜகுபர்அலியின் சகோதரர் ராஜாமுகமது மற்றும் அயூப்கான் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர். துளையானூர் வளை யன்வயலைச் சேர்ந்த குவாரி நிறு வனத்தினர் மீது சந்தேகம் உள்ளது. எனவே,  முறையாக விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதுதொடர்பாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் இரா.சா.முகிலன், சட்டவிரோத கல்  குவாரி எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பா ளர் ந.சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தொடர்ச்சியாக கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த ஜகுபர்அலி, கடந்த ஜனவரி 10 அன்று கூட கோட்டாட்சியர் அலுவலகம் சென்று சட்ட விரோத குவாரி குறித்து புகார் அளித்து வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் மீது லாரி ஏறிய விபத்தில், அவர் உடல் தூக்கி எறியப்பட்டுள்ள தூரம், விபத்து நடந்துள்ள விதம் ஆகியவை சந்தேகங்களை ஏற்படுத்து கின்றன. படுகொலை செய்யப்பட்டிருக்க லாம் என சந்தேகிக்கிறோம். இந்த வழக்கை வெறுமனே விபத்து வழக்காக முடித்துவிடாமல், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2025-01-20 02:01:25.461190
ஜனவரி 19, 2025
தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் மோசம் : ஒப்புக்கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/citu-labor-federation-demands-resignation
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 18- தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் மோசம் என்று ஒப்புக்கொண்ட ஒன்றிய சாலைப் போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.  தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சேதமடைந்த சாலைகளை அமைத்து விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் மீது  இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக நிதின் கட்கரி இருப்பதால் அதற்கான தார்மீக பொறுப்பு ஏற்று அவர் பதவி விலக வேண்டும் என்று சிஐடியு அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலை அமைத்தவர்களை ஜாமீனில் விடமுடியாது என்றும், ஒப்பந்த தாரர்கள் மற்றும் பொறியாளர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சாலைப் போக்குவரத்து- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,  கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளி யாகியுள்ளன. 16.1.2025 அன்று தில்லியில் சிஐஐ ஏற்பாடு செய்த சாலைப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடக்கிவைக்கும் போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிடுக!  குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இலாகாவை வைத்திருந்தா லும், உண்மையை உணர்ந்ததற்காக அமைச்சருக்கு சம்மேளனம் நன்றி தெரி விக்கிறது. தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்திருந்தால், யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள். மாறாக அரசை பாராட்டி யிருப்பார்கள். ஆனால் அதை ஏன் இதுவரை  ஒன்றிய அரசு  செய்யவில்லை? இப்போதும்  அமைச்சர் தனது கருத்துகளில் உறுதியுட னும், நேர்மையுடனும் இருந்தால், விபத்துகளையும், பலரின் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் தேசிய நெடுஞ்சாலைகளின் தவறான கட்டுமானம் குறித்து நடுநிலையான,சுதந்திரமான, நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சாலை கட்டுமானத்தில் நிகழும் தவறுகள், தரமின்மை குறித்து அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளம் பலமுறை அரசுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறுதல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் தவறான சாலை கட்டுமானம் குறித்து அமைச்சர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு   புகார் அளித்துள்ளது. இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. மக்களின் உயிரைக் காப்பாற்ற  உண்மையாக செயல்படுக! ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  வாரத்தை  பெயருக்கு நடத்துகிறது. சாலைப் பாதுகாப்புத் திட்டங்களில் பங்குதாரர்களின் கூட்டங்களுக்கு அரசு அழைப்பு விடுத்தபோது, சிஐடியு சம்மேளனம் அத்தகைய கூட்டங்களில் பங்கேற்று, இந்தப்  பிரச்சனைகள் அனைத்தையும் அதிகாரி களின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகும் அரசு  முறையாக கருத்து கேட்டு முடிவு செய்யவில்லை. இனி மேலாவது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான  அமைச்சர்  மக்களின் உயிரைக் காப்பாற்ற உண்மை யான மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2025-01-20 02:01:25.461698
ஜனவரி 20, 2025
வேந்தர்களும் துணைவேந்தர்களும் - பேரா.ஜேம்ஸ் வில்லியம்ஸ்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/chancellors-and-vice-chancellors
தமிழ்
UTF-8
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி மற்றும் நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள வரைவு ஒழுங்கு முறைகள் நாடு தழுவிய விவாதங்களை உருவாக்கி யுள்ளது. இந்திய மாணவர் சங்கம் தேசிய அள விலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. ஆசிரியர் இயக்கங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதற்கெதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  தமிழக சட்டப்பேரவை இதை கைவிட வேண்டுமென ஏகமனதாக தீர்மானம் இயற்றியுள்ளது. பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் இத்தீர்மா னத்திற்கு ஆதரவளித்துள்ளனர். தமிழக அரசு இம்மாற்றங்களை அரசியல் ரீதியாக, சட்டரீதியாக எதிர்க்கும், முற்றிலும் நிராகரிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இது ஒன்றிய அரசின் கல்வி வணிகமய மாக்கல், வகுப்புவாதமயமாக்கல், மையப்படுத்தும் கொள்கையின் -  வெளிப்பாடு, மாநிலங்களின் உரி மைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறினார்.2010இல் வந்த விதிகள்இந்த வரைவு, ஆசிரியர் நியமனம் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தொடர்பான தாயிருந்தாலும், இக்கட்டுரை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டுமே விவாதிக்கிறது. பல்கலைக்கழக மானி யக்குழு 1956ல் உருவாக்கப்பட்டாலும், 2010 வரை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக விதிகள் எதுவும் விதித்ததில்லை. 2010ம் ஆண்டு வெளியிட்ட ஒழுங்குமுறைகளில் துணைவேந்தராக நியமிக்க, 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்கள் அல்லது அதற்கு இணையான பணிகளில் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றியிருக்கவேண்டும் எனக் கூறியது. துணை வேந்தர் நியமனத்திற்கான தேர்வுக் குழுவையும் (Search Committee) அமைக்கக் கோரியது. இத்தேர்வுக்குழுவில் வேந்தரின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர், பல் கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி ஒருவர் என 3 பேர் இருக்கவேண்டும் எனக் கூறியது. பல்கலைக்கழக நியமனங்கள் பல்கலைக்கழகச் சட்டங்கள் வரையறுத்துள்ளபடி நடைபெறுவதாலும், யுஜிசி ஒழுங்குமுறைகள் துணைச்சட்டம்தான் (Subordinate legislation) என்பதாலும், ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசோ அல்லது அதன் பிரதிநிதி களாயிருந்த ஆளுநர்களோ பல்கலைக்கழக விவகா ரங்களில் மோதல் போக்கைக் கையாளாததாலும் மாநில அரசுகள் இந்த விதிமுறைகளைக் கண்டு கொள்ளவில்லை. பல்கலைக்கழக மானியக்குழுவும் இதை அமல்படுத்த பெரிதாக முயற்சிக்கவில்லை.2018 விதிகள்2018ம் ஆண்டு யுஜிசி வெளியிட்ட ஒழுங்கு முறைகள், தேர்வுக்குழுவில் யுஜிசியின் பிரதிநிதியும் இருக்கவேண்டுமென மட்டும் ஆணையிட்டது. சில மாநிலங்கள் தங்கள் மாநில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்களோடு கூடுதலாக யுஜிசி தலைவரின் பிரதிநிதியையும் இணைத்து சட்டத்தைத் திருத்தினர். ஆனால் 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் அதன் ஆளுநர்களும் மாநில அரசுகளின் கல்வி உரிமை யில் தலையிட்டதால் பாஜக அல்லாத மாநில அரசுகள் இவ்வாணையை அமல்படுத்த மறுத்தன. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மோதல் போக்கைக் கையாண்ட மாநில ஆளுநர்கள் யுஜிசி பிரதிநிதிகள் இல்லாத தேர்வுக்குழுக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.பல மாதங்களாக  துணைவேந்தர் இல்லைஇதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பல் கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வி யியல் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் எனும் 5 பல்கலைக்கழகங்களில் பல மாதங்க ளாக துணைவேந்தர்கள் இல்லாமல் ஸ்தம்பித் துள்ளன. இதன் விளைவாக தமிழக, கேரள மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இம்மாநில முதல்வர்களே செயல்படுவர் என்று பல்கலைக்கழக சட்ட விதிகளில் மாற்றம் செய்து சட்டங்களை இயற்றியுள்ளனர். இச்சட்டங்களுக்கும் இம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.மேற்குவங்கத்தில்  நடந்தது என்ன?இதற்கிடையே மேற்கு வங்கத்தில் யுஜிசி பிரதி நிதியை இணைக்காத தேர்வுக்குழு, தெரிவு செய்து பட்டியலிட்டு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் நியமனம் செல்லாது என நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் விளைவாக 32 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பணிக்காலம் முடிவுற்றபோது, தேர்வுக் குழுக்கள் அமைக்கமுடியாததால் அத்துணை வேந்தர்களின் பணிக்காலத்தை நீட்டிக்கக்கோரி, ஆளுநர்/வேந்தருக்கு பரிந்துரைத்தது.  ஆனால் அதை நிராகரித்த ஆளுநர் தன்னிச்சை யாக இப்பல்கலைக்கழகங்களில் இடைக்காலத் துணைவேந்தர்களை நியமித்தார். அவர்களில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உண்டு. இப்படி நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் போன்றவற்றை வழங்க மாநில அரசு மறுத்தது. மாநில அரசின் அறிவுறுத்தல்களை செயல்படுத்தக்கூடாது என பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்/வேந்தர் ஆணையிட்டார்.  இவ்விவகாரம் மிகப்பெரும் மோதலாக அரசுக்கும், ஆளுநருக்குமிடையே நடைபெற்று உச்சநீதி மன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம் 32 பல்கலைக்கழகங்களுக்கும் முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழுவை அமைத்தது. அக் குழுவிற்கான இதர உறுப்பினர்களை லலித் அவர்களே தேர்வு செய்யுமாறு பணித்தது. எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் வெவ்வேறு தேர்வுக்குழு. ஆனால் அவரே அனைத்துக்கும் தலைவர். இத் தேர்வுக்குழு விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து,  ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தேர்வு செய் யப்படுபவர் பட்டியலை மாநில முதல்வரிடம் வழங்க வேண்டுமென்றும், முதல்வர் தன் தேர்வை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தி, அப் பட்டியலை ஆளுநர்/வேந்தருக்கு அனுப்பவேண்டு மென்றும், வேந்தர் அம்முன்னுரிமை அடிப்படையில் துணைவேந்தரை நியமிக்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் 17 மாதங்களுக்குப்பின் 32  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.ஒன்றிய - மாநில அரசுகளின் பட்டியல் - அதிகாரம்இந்தியாவைப்போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில் ஒன்றிய அரசும் மாநிலங்களும் இணைந்து செயல்படவேண்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கும் (Union List), மாநில அரசுக ளுக்கும் (State List) பிரத்தியேகமான அதிகாரங்க ளையும், உரிமைகளையும், கடமைகளையும் வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கும், மாநில அரசுக்கு உட்பட்ட துறைகளில் சட்டமியற்ற மாநில சட்டப்பேரவைக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது அதேபோல் ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்றவேண்டிய பொ துப்பட்டியலை (Concurrent List) தொகுத்துள்ளது. இவை மீது சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டபோது கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் அவசர நிலைக் காலத்தில் அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஆயினும் உயர் கல்வியின் தரம் நிர்ணயிக்கவும், ஒருங்கிணைக்கவும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கும் (Union List- Section 66) பல் கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கும் (State List - Section- 32) அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்குமிடையே பிரச்சனைகள் ஏற்படும்போது பல்கலைக்கழகங்களின் தரத்தை நிர்ணயிக்கவும், ஒருங்கிணைக்கவும் அதிகாரம் படைத்த ஒன்றிய அரசு மாநிலங்களோடு கலந்து பேசி ஒரு சுமூக நிலை யை உருவாக்கியிருக்கவேண்டும். மாறாக ஒன்றிய அரசின் ஆளுகைக்குட்பட்ட யுஜிசி வெளியிட்ட இந்த வரைவு ஒழுங்குமுறைகள் இப்பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.புதிய வரைவு சொல்வது என்ன?இந்த வரைவு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக 4 விஷயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது: 1) குறைந்தபட்ச தகுதி பற்றியது: 10 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியர் பணி அல்லது ஆராய்ச்சி மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் அதற்கு இணையாக பணியாற்றியவர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் தகுதியானவர்கள். 2) துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் அகில இந்திய அளவிலான விளம்பரங்கள் மூலமாக கோரப்படவேண்டும். 3) 3 பேர்கொண்ட தேர்வுக்குழு: பல்கலைக் கழக மானியக்குழுவால் நியமிக்கப்படும் ஒருவர், பல் கலைக்கழக சிண்டிகேட்/செனட் போன்ற அமைப்பு களால் நியமனம் செய்யப்படும் ஒருவர் மற்றும் பல்க லைக்கழக வேந்தரால் நியமனம் செய்யப்படும் ஒருவர். இக்குழுவின் தலைவராக வேந்தரின் பிரதிநிதி செயல்படுவார். 4) இக்குழு 3 முதல் 5 பேர் அடங்கிய பட்டியலை வேந்தரிடம் சமர்ப்பிக்கும். அப்பட்டியலிலிருந்து ஒருவரை வேந்தர் துணைவேந்தராக நியமிப்பார். அவரது பணிக்காலம் 5 ஆண்டுகள். இந்த ஷரத்துக்களைத்தான் மாணவர் சங்கங்க ளும், ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சிகளும், மாநில அர சுகளும் எதிர்க்கின்றனர். இவை எந்த வகையிலும் கல்வித்தரத்தை மேம்படுத்த உதவாது. மாறாக இந்தி யாவிலுள்ள ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.பாஜக ஆட்சியின் அலங்கோலங்கள்பாஜக ஆட்சிக்கு வந்ததுடன் செய்த வேலையே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பொறுப்பிலிருந்த கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை, உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களை நீக்கிவிட்டு தகுதி யில்லாத, திறமையில்லாத, ஆய்வுப் பின்புலமில்லாத, அறிவுக்கொள்கைத் தொடர்பில்லாத தங்கள் ஆதரவாளர்களை நியமித்ததுதான்.  உதாரணத்திற்கு, புனேயிலுள்ள FTII என்று அழைக்கப்படும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பதவி. ஆர்.கே.லக்ஷ்மண், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபால கிருஷ்ணன், மகேஷ் பட், கிரிஷ் கர்னாட் போன்ற தலைசிறந்த திரை வல்லுநர்கள் வகித்த அந்தப் பதவியில் கஜேந்திர சௌகான் என்ற எந்தவித பின்புலமும் இல்லாத நபரை நியமித்தது. அந்த நிறுவனத்தின் மாணவர்கள் அவரை நீக்கக்கோரி பல மாதங்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதேபோல் ICSSR என்ற இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக எஸ்.பிர காஷ் குமார் என்பவரை நியமித்தது. இவர் இளங் கலைப் பட்டப்படிப்புக்கு வேதியியல் கற்பித்த ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர். வேதியியலுக்கும் சமூக அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? இதேபோல் ICCR என்ற இந்திய கலாச்சார ஆய்வுக் கழகத்தின் தலைவராக பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் வினய் சகஸ்ரபுத்தே என்பவரை நிய மித்தனர். இதன் உச்சகட்டமாக ICHR என்ற இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக ஒய்.சுதர்சன் ராவ் என்பவரை நியமித்தனர்.  இப்போது நம் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் குறைந்தபட்சம் 2 ஆய்வுக்கட்டுரைகளை, சம ஆய்வா ளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு இதழ்களில் (Peer reviewed Journals) வெளியிட்டிருக்கவேண்டும் என்பது விதி. சாதாரணமாக நம் கல்லூரி ஆசிரியர்கள் இதுபோன்ற பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டி ருப்பர். ஆனால் அப்படிப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்று கூட சுதர்சன்ராவ் எழுதியதில்லை. அவர் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுப் பேராசிரி யர்களான ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், சரத் சந்திரா போன்ற 22 பேர் கொண்ட இந்திய வரலாற்று ஆய்விதழின் ஆலோசனைக்குழுவைக் கலைத்ததுதான். இதுதான் இவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் லட்சணம்.கல்வியை கார்ப்பரேட்  சரக்காக்கும் சூழ்ச்சிஇதேபோல் தொழில் நிறுவனங்களில் உள்ள வர்களை துணைவேந்தர்களாக்குவதும். கல்வி  ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டுள்ள சூழலில் அபாயகரமானதாகும். கல்வி வளாகக் கலாச்சாரம்  வேறு, தொழில் நிறுவனங்களின் கார்ப்பரேட்  கலாச்சாரம் வேறு. கார்ப்பரேட் கலாச்சாரம் லாபத்தை யும், போட்டியையும் அடிப்படையாகக்கொண்டது. கல்வி வளாகக் கலாச்சாரம் சமூக வாழ்வையும், சமூக முன்னேற்றத்தையும், சமூக நீதியையும் அடிப்ப டையாகக்கொண்டது. கல்வி நிறுவனங்களில் கார்ப்பரேட் கலாச்சா ரத்தைப் புகுத்துவது ஆபத்தானது. ஏற்கனவே நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் அரசுப் பல்கலைக்கழகங்களை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சியாகவே இது அமைகிறது.வெளி மாநில நபர்களை நியமிப்பதால் சிக்கல்துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் அகில இந்திய விளம்பரங்கள் மூலமாக பெறப்பட வேண்டுமென்பது, ஒரு மாநில பல்கலைக்கழகத்தில் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களை நியமிக்கும் முயற்சி தான். ரயில் நிலையங்கள், வங்கிகள், தபால் நிலை யங்கள், இதர ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவர் நியமிக்கப்படும் செய்திகள் இளைஞர்கள் மத்தியில் விமர்சிக்கப்படும் நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக வெளிமாநிலத்தவர் நியமிக்கப்பட்டால் அது சிக்கல்களை உருவாக்கும்.  2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தராக சூரப்பா அவர்கள் நியமிக்கப்பட்ட தும் அதன்பிறகான விவாதங்களும் நினைவுக்கு வரு கிறது. ஆஹா ஓஹோ என்றெல்லாம் சிலாகிக்கப் பட்டது. ஆனால் முடிவென்பதோ சொல்லிக்கொள் ளும்படியாக இல்லை. கல்வி என்பது மொழி, வாழ்வி யல், கலாச்சாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது. மொழிவழி மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத் தின் பிரத்தியேகத் தன்மைகள் உள்ளன. அவற்றை உணர்ந்து கொண்டவர்களால்தான் சிறந்த துணை வேந்தர்களாக செயல்பட முடியும். ஆகவே வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது தேவையற்ற பிரச்சனைகளையே உரு வாக்கும். இதுமட்டுமல்ல; துணைவேந்தர் தேர்வில் மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பது வேடிக்கையானது, விஷமத்தனமானது, விபரீதமா னது. கூட்டாட்சித் தத்துவத்திற்கெதிரானது. அரசியல மைப்புச் சட்டத்திற்கெதிரானது. கல்வி பொதுப்பட்டி யலில் இருந்தாலும், பல்கலைக்கழகங்களை உருவாக் கும் உரிமையை அரசியலமைப்புச்சட்டம் மாநில அரசுக ளுக்குதான் வழங்கியுள்ளது. மாநில அரசு, மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றும் சட்டத்தின் அடிப்படை யில்தான் பல்கலைக்கழகங்களை உருவாக்கும். மாநில அரசு சட்டமியற்றி, நிலம் வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்து உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நாங்கள் சொல்வதுபோல் ஒன்றிய அரசின் பிரதிநிதிதான் நியமனம் செய்வார் என்பது  ஒருவர் பெற்று வளர்த்த குழந்தைக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடுவது போன்றது.  மொத்தத்தில், ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியா ளர்களின் இலக்கு கல்வி மட்டுமல்ல; நீண்ட நெடிய போராட்டங்கள் மூலமாக நாம் பெற்றிருக்கும் சமூக நீதி, மொழி உரிமைகள், பன்முகத் தன்மை உள்ளிட்ட அனைத்துமே தாக்கதலுக்கு உள்ளாகிறது. அனை வரையும் ஒன்றிணைத்து இம்முயற்சிகளை முறி யடிப்போம்!கட்டுரையாளர் : முன்னாள் அகில இந்தியத் தலைவர், அகில இந்திய பல்கலைக்கழக ஆசிரியர் மன்றங்களின் கூட்டமைப்பு (அய்பெக்டோ)
2025-01-21 01:56:19.398651
ஜனவரி 20, 2025
கல்வியும் ஆளும் வர்க்கமும் - சீத்தாராம் யெச்சூரி
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/education-and-the-ruling-class
தமிழ்
UTF-8
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது.இந்தக் கட்டுரை 1985-இல்  எழுதப்பட்டது. இன்று மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் தத்துவார்த்த சாராம்சம் எப்படிப்பட்டது என்பதை விளக்கிட இப்போதும் இக்கட்டுரை (The Marxist Volume: 03, No. 4 October-December, 1985, Education & The Ruling Classes, Sitaram Yechury) பொருந்துகிறது. இந்திய கல்வி வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் விரிவாக ஆய்வு செய்கிறார் மகத்தான மார்க்சிய அறிஞரும், சிபிஐ(எம்) மறைந்த பொதுச் செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி.புதிய கல்விக் கொள்கை (1985) குறித்த விவாதம்  ஒரு முக்கியமான கேள்வியை நம் முன் எழுப்புகிறது. வரலாற்றின் ஒவ்வொரு காலகட் டத்திலும், வெவ்வேறு சமூக அமைப்புகளின் கீழ் வழங்கப்படும் கல்வியின் அளவையும் வகையையும்  தீர்மானிக்கும் காரணிகள் எவை? மனித நாகரிக வர லாறு காட்டுவது என்னவென்றால், எல்லா கால கட்டங்களிலும் எல்லா சமூக அமைப்புகளிலும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளே தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்துள்ளது.வர்க்க சமூகத்தில் கருத்தியல் ஆதிக்கம்மார்க்சும் ஏங்கெல்சும் கூறியது போல: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது, சமூகத்தின் ஆளும் பொருள் சக்தியாக இருக்கும் வர்க்கமே அதன் ஆளும் கருத்தியல் சக்தியாகவும் இருக்கிறது. பொருள் உற்பத்தி சாதனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கம், அதன் விளை வாக மன உற்பத்தி சாதனங்களையும் கட்டுப்படுத்துகிறது.”வரலாற்று வளர்ச்சியில் கல்விமுதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில், கல்வி முற்றிலும் ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதாக இருந்தது. பொருள் உற்பத்தி மற்றும் அறிவு உற்பத்தி பிரிவினையின் காரணமாக, சமூக  விவகாரங்களை நடத்தவும் உற்பத்தி நடவடிக்கை களை திட்டமிடவும் ஓய்வு நேரம் கொண்டவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. கிரேக்க கல்வி நிறு வனங்களும், இந்திய குருகுல முறையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். ஏகலைவன் கதை காட்டுவது என்னவென்றால், கல்வி ஆளும் வர்க்கத்திற்கு சொந்த மானது மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கம் கல்வி பெறுவது தடை செய்யப்பட்டது என்பதும் ஆகும்.முதலாளித்துவ காலத்தில் கல்வியின் விரிவாக்கம்முதலாளித்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியுடன் இந்த கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக, முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களுக்கு எழுத்தறிவு, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவை கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கல்வியின் வர்க்க நோக்கம் நீக்கப்பட வில்லை. வர்க்க சமூகம் உள்ளவரை இது தொடர்கிறது. தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளின் கல்வி வளர்ச்சி ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படும் தேவையான அளவிற்கு மட்டுமே தொழிலாளர் வர்க்கத்திற்கு கல்வி வழங்கப்படுகிறது.பிரிட்டிஷ் காலத்தில் கல்விபிரிட்டனில், 19ஆம் நூற்றாண்டின் திருப்பத்தில் கல்வியின் முக்கிய விவாதம் - ‘கீழ்த்தட்டு மக்க ளுக்கான’ கல்வியின் பரவலாக்கம் பற்றியதாக இருந்தது.  இதில் மதத்தின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியது. கடவுள் பயம் கொண்ட, சட்டத்திற்கு கட்டுப்படும், கடின உழைப்பாளி பணியாளர்களை உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. மேல்தட்டு வர்க்கத்தின் கல்விக்கூடங்களான தனியார் பள்ளிகள் மற்றும் மொழிப்பாடப் பள்ளிகளில் மன பண்பாட்டு வளர்ச்சியும் குணநலன் உருவாக்கமும் முக்கிய நோக்கங்களாக இருந்தன.”சுதந்திர இந்தியாவில்  கல்வி வளர்ச்சிஇந்தியாவில் அதிகார மாற்றத்திற்குப் பின், 1947 ஜனவரியில் மத்திய கல்வி ஆலோசனைக் குழு (CABE) இரண்டு ஆணையங்களை அமைக்க முடிவு செய்தது - ஒன்று பல்கலைக்கழக கல்விக்காக, மற்றொன்று இடைநிலைக் கல்விக்காக. சுதந்திர இந்தியாவின் தேவைகள் வேறுபட்டவை என்பதால் கல்வி அமைப்பு முறையில் மாற்றம் தேவை என உணர்ந்தனர். விடுதலைப் போராட்டத்தின் போது மக்களுக்கு கல்வித்துறையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் இந்த முடிவு வந்தது. 14 வயது வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி குறித்து அரசியல் நிர்ணய சபையில்  விவாதிக்கப்பட்டது. இது பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றது. 1960க்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை வழங்குவது, அதற்கேற்ப உயர்கல்வியில் தேவையான மாற்றங்களை செய்வது என்பதே திட்டமிடப்பட்டிருந்தது.கல்வி ஆணையங்களின் வர்க்க நோக்கம்முதலில் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் (1948) டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் “இந்திய பல்கலைக்கழக கல்வி குறித்து அறிக்கை அளித்து, மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கங்களை பரிந்துரைக்க” அமைக்கப்பட்டது.இந்த ஆணையம் தனது விரிவான அறிக்கையில் பின்வரும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள கல்வி  முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது: - பொருளாதார சுதந்திரத்தை அடைதல்; பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ; சாதி, மத, பணக்கார-ஏழை வேறுபாடுகளை களைந்து உண்மை யான ஜனநாயகத்தை நிலைநாட்டுதல்; பண்பாட்டு மேம்பாடு ஆகியவையே அந்த சவால்கள். வர்க்க அடிப்படையில் பார்க்கும்போது, அரசியல்  சுதந்திரத்தை பொருளாதார சுதந்திரமாக மாற்றுவது என்பது இந்திய ஆளும் வர்க்கம் தேர்ந்தெடுத்த முத லாளித்துவ வளர்ச்சிப் பாதையை துரிதப்படுத்துவ தாகும். பொருளாதார சுதந்திரம் என்பது பிரச்சார ரீதியாக பொது மக்களின் வளத்தை அதிகரிப்பதாக காட்டப்பட்டது. ஆகவே இந்த ஆணையத்தின் அடிப்படைப் பணி ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப: 1. பொருளாதார சுதந்திரத்தை அடைய கல்வி முறையை மாற்றியமைத்தல் 2. பயனுள்ள ஜனநாயகத்தை உருவாக்க கல்வியை பயன்படுத்துதல் - என்பதாக இருந்தது. முதலாளித்துவ வளர்ச்சிக்கான கல்வி ஆணையத்தின் அறிக்கை நமது அரசியல மைப்பின் ஐந்து அடிப்படை கொள்கைகளான ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி உயர்கல்வி யை மறுசீரமைக்க விவாதித்தது.  நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான கருத்தியல் அமைப்பாக கல்வி முறையை மாற்றி யமைப்பதே அறிக்கையின் நோக்கமாக இருந்தது. பொருளாதார சுதந்திரம் குறித்து, “தொழில்நுட்ப வல்லுநர்களின் அவசர தேவை” என அறிக்கை குறிப்பிட்டது. “நாடு முழுவதும் இத்தகைய தொழில்கள் மற்றும் திறன்களுக்கு அவசர தேவை உள்ளது. இது தொழில்நுட்ப பணியாளர்களாக பணியாற்ற பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும். புதிதாக தொடங்கப்படும் பல நவீன தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன்மிக்க தொழிலாளர்களின் தொடர் வரத்தை உறுதி செய்யும்” என அறிக்கை உறுதிப்படுத்தியதுஇடைநிலைக் கல்வி ஆணையம்1952 செப்டம்பரில் டாக்டர் லட்சுமணசாமி முத லியார் தலைமையில் இடைநிலைக் கல்வி ஆணை யம் அமைக்கப்பட்டது. 1953இல் முதல் நாடாளு மன்றத்தில் 1953ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில், “இந்தியாவின் மிக அவசரமான பிரச்சனை களில் ஒன்று - ஒருவேளை மிக அவசரமான பிரச்சனை - உற்பத்தித் திறனை மேம்படுத்தி தேசிய செல்வத்தை அதிகரித்து, அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக உயர்த்துவது” என அறிக்கை குறிப்பிடுகிறது. தொழில்நுட்ப கல்வியின் முக்கியத்துவம் அந்த அறிக்கை மேலும் “முக்கிய தேவைகளை” வரையறுத்தது: - உருவாகி வரும் ஜனநாயக சமூக ஒழுங்கில் படைப்பாற்றலுடன் பங்கேற்க மாணவர்களின் குணநலன்களை வளர்த்தல்;  - நாட்டின் பொருளாதார செழிப்பை உருவாக்க அவர்களின் நடைமுறை மற்றும் தொழில்சார் திறமையை மேம்படுத்துதல்; - கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆர்வங்களை வளர்த்தல். குறிப்பிடத்தக்க விதமாக, பரிந்துரைகள் முதல் இரண்டு தேவைகளையே வலியுறுத்தின. அவற்றிலும் இரண்டாவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது: “இந்த அணுகுமுறையுடன் (உழைப்பின் கண்ணியம்), தொழில்நுட்ப திறன் மற்றும் செயல்திறனை கல்வியின் அனைத்து நிலைகளிலும் மேம்படுத்த வேண்டியது அவசியம். தொழில் மற்றும்  தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்த பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டும். கடந்த காலத்தில் நமது கல்வி கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை வேலைகளில் இருந்து விலகியும் இருந்ததால், படித்த வர்க்கத்தினர் நாட்டின் தேசிய வளங்களை மேம்படுத்துவதிலும், தேசிய செல்வத்தை பெருக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யத் தவறிவிட்டனர். இது இப்போது மாற வேண்டும்...”ஆளும் வர்க்கத்தின் நலன்கள்சுதந்திர நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தேவைகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் அறிக்கை இது. தொழில்நுட்பப் பள்ளிகள், பாலிடெக்னிக்கு கள், பல்நோக்கு கல்வியை வலுப்படுத்துதல், மத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் என பெரும் தொழில்நுட்ப மனித வளத்தை உருவாக்கும் உள்கட்டமைப்பை பரிந்துரைத்தது. உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்து வரும் சூழலில், நமது நாட்டின் ஆளும் வர்க்கம் மூலதன-தீவிர தொழில்நுட்பத்தை அதிகம் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் வெற்றிகரமாக போட்டியிட வேண்டும் என்பதற்காகவும், ஏற்றுமதியே பொருளாதார நடவடிக்கைகளின் அளவை தீர்மானிக்கும் காலத்தில் தங்களது லாப அளவை பராமரிக்கவும் அதிகரிக்கவும் இது தேவைப்பட்டது. உள்நாட்டு சந்தையை ஏற்கனவே குறுக்கிவிட்ட நிலையில், ஏற்றுமதியை நம்பியிருப்பது ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நீடிக்க அவசியமாகிறது. இதற்கு நவீன அந்நிய தொழில்நுட்பத்தை பெருமள வில் கொண்டுவர வேண்டியுள்ளது. இது வெளிநாட்டு கூட்டு முயற்சிகளை அதிகரிக்கவும், பன்னாட்டு நிறு வனங்களின் சுரண்டலுக்கு நமது பொருளாதாரத்தின் கதவுகளை மேலும் திறக்கவும் வழிவகுக்கிறது.இரட்டைக் கல்வி அமைப்புஇந்த சூழலில் மேற்கண்ட ஆணையங்களின் அறிக்கையும், பின்னர்  அரசாங்கம் வெளியிட்ட “கல்வியின் சவால்” என்ற ஆவணமும், ‘அனை வருக்கும் கல்வி’ என்ற அரசியலமைப்பு வழிகாட்டு தலை கைவிடுவதாக அமைந்துள்ளது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பதற்கு மாறாக, முறைசாரா கல்வி திட்டம் முன் வைக்கப்பட்டது. தொலைக்காட்சி மற்றும் இன்சாட் (INSAT) செயற்கைக் கோள் வழியாக கல்வி வழங்குவது முறையான பள்ளிக் கல்விக்கு மாற்றாக முடியாது. இது வசதி  படைத்தோருக்கு முறையான கல்வியும், ஏழை களுக்கு முறைசாரா கல்வியும் என்ற இரட்டைக் கல்வி அமைப்பை உருவாக்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பள்ளி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியில் பள்ளிகளே இல்லை. மற்ற இடங்களிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், சில மாதிரிப் பள்ளிகள் மட்டுமே ஏற்படுத்துவது கல்வியின் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்தது.உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்பஉயர்கல்வியில் புதிய கல்லூரிகள் தொடங்குவதை நிறுத்துதல், தனியார் மயமாக்கல், கல்விக் கட்டணம் உயர்வு போன்றவை மூலம் உயர்கல்வியை சுருக்க முயற்சிக்கப்படுகிறது. பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புடன் இணைக்காமல் இருப்பதன் மூலம் படித்த வேலையில்லா பட்டாளத்தின் பிரச்சனையை சமாளிக்க முயற்சிக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் மாணவர் அரசியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த - பல்கலைக்கழக சுயாட்சி பறிக்கப்படுகிறது. காவல்துறை கட்டுப்பாடு அதிகரிக்கப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உலக வங்கியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, வளரும் நாடுகளில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுகின்றன. 21ஆம் நூற்றாண்டுக்கு நாட்டை இட்டுச் செல்வதாக கூறப்படும் இந்த மாற்றங்கள், உண்மையில் கல்வி வாய்ப்புகளை மறுக்கும் ஆளும் வர்க்க நலன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இலவச கட்டாயக் கல்வி, தாய்மொழிக் கல்வி, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கல்வி நிறுவனங்களை தேசியமயமாக்குதல் போன்ற மக்க ளின் கோரிக்கைகளுக்கு எதிராக இந்த மாற்றங்கள் அமைந்துள்ளன. இதற்கு எதிரான ஜனநாயக சக்தி களின் ஒற்றுமையான போராட்டம் தேவைப்படுகிறது.பட்டங்களை வேலைவாய்ப்புகளில் இருந்து பிரிப்பதன் மூலம், படித்த இளைஞர்களின்  வேலையில்லாத் திண்டாட்டம் என்ற கருத்தாக்கமே இல்லாமல் போகும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.
2025-01-21 01:56:19.399715
ஜனவரி 20, 2025
புரட்சிகர அரசியலின் வித்தகர் தோழர் லெனின்! - வே.தூயவன்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/comrade-lenin-was-the-master-of-revolutionary-politics
தமிழ்
UTF-8
மாமேதை லெனினை கற்றுக் கொள்ளாமல் நாம் இன்றைய சமகாலத்தைப் புரிந்து கொள்ளவோ, அதற்கு ஏற்ற நடைமுறையை செயல்படுத்தவோ முடியாது.  இருபதாம் நூற்றாண்டு புரட்சிகளின் நூற்றாண்டு என்று சொன்னார் லெனின். அவர் சொன்னதற்கு ஏற்ப சோவியத் ரஷ்யாவைத் தொடர்ந்து மக்கள் சீனம், கியூபா, வியட்நாம், வடகொரியா ஆகிய நாடுகள் சோசலிசப் பாதையில் அணி வகுத்தன. அதேபோல் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க காலனி நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன. மாமேதை லெனின் சொன்னது 100 சதவிகிதம் உண்மை என்பதைக் காலம் நிரூபித்தது. எப்படி இது சாத்தியமானது? வல்லமை மிகுந்த மார்க்சியத் தத்துவத்தை உயிர்த்துடிப்புடன் உள்வாங்கி அதை லெனின் தனது சமகாலத்தில் உயிரோட்டமாக நடைமுறைப்படுத்தினார். காரல் மார்க்சின் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு அதை அவர் பிசகாமல் பின்பற்றவில்லை. மாறாக புரட்சிகர நடைமுறைக்கான தத்துவம் என்ற முறையில், மார்க்சியத்தை, அதன் சாரத்தை அன்றாட நடைமுறை அரசியலுடன் உயிரோட்டமாக இணைத்தார் என்பதில் தான் லெனினின் சிறப்பு அடங்கியிருக்கிறது. வெற்றிகரமான சோவியத் ரஷ்யப் புரட்சிக்கு பின்பாக, நிரூபிக்கப்பட்ட, செல்வாக்குப் பெற்ற லெனினை இப்போது  நாம் மணக்கண்ணில் காட்சிப்படுத்திப் பார்க்கிறோம்.விடாப்பிடியான போராட்டம்ஆனால் பல்கலைக்கழக மாணவராக இருந்து புரட்சித் தலைவராக மாறிய லெனினின் வாழ்க்கை வரலாற்றை கற்றுணர்ந்தால், மார்க்சியத்தை, தொழிலாளி வர்க்க அரசியலை அவர் வாழ்ந்த சூழலில் பொருத்தி நடைமுறைப்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்தை அறிந்து கொள்ள முடியும். அந்தக் காலத்தில் எந்த ஏற்ற இறக்கம் இல்லாத, ஒரே மாதிரியான, சமச்சீரான அரசியல் பயணமாக அவரது புரட்சிகர போராட்டப் பயணம் இருக்கவில்லை. அவர் எப்போதும் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி வந்தார்.  ஒட்டுமொத்த அரசியல் சூழலிலும், ஆளும் முதலாளித்துவ மற்றும் மிதவாத ஜனநாயக அரசியல் சக்திகளுடனும், தொழிலாளி வர்க்க மற்றும் பல்வேறு விதமான கண்ணோட்டங்களைக் கொண்ட புரட்சிகர குழுக்களுடனும் அவர் தொடர்ச்சியான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை நடத்தி வந்தார். இந்தப் போராட்டத்தின் ஊடாக அவரது இடம் என்பது ஒரு சமயம் ஒட்டுமொத்த அரசியலின் மையமானதாக இருக்கும், பிரிதொரு சமயம் அவர் அந்த ஒட்டுமொத்த அரசியல் சூழலில் இருந்தும் வெளியேற்றப்பட்டவராக, தனித்த நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருந்தார் என்பதைக் காண முடியும். லெனினுக்கு அரசியலில் அவர் வகித்த இடம் குறித்தோ, அப்போதைக்கு அப்போது அவருக்கு கிடைத்த செல்வாக்கின் எழுச்சி அல்லது வீழ்ச்சி பற்றியோ கவலை இல்லை. ஒரு வர்க்கம் என்ற முறையில் தொழிலாளி வர்க்கம், வர்க்க உணர்வு பெற்று, அமைப்பாக எழுச்சி பெறுவது என்பதற்கு அவர் எடுக்கும் நிலைபாடு பொருத்தமாக இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் லெனினின் அளவுகோலாக இருந்தது. அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக உருவானது தான் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் (போல்ஸ்விக்) கட்சி.சரியான நேரத்தில்  சரியான நிலைபாடுஅதுவே 1917 அக்டோபர் ரஷ்ய சோசலிசப் புரட்சியின் உந்து சக்தியாக இருந்தது. புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை லெனின் பிரதிநிதித்துவப்படுத்திய போல்ஸ்விக் பிரிவு, அன்றைய மைய அரசியலில் தனித்து விடப்பட்டு ஒதுக்கப்பட்டதாகக் காணப்பட்டது. ஆனால் லெனின் தலைமையில் போல்ஸ்விக் கட்சி மேற்கொண்ட அப்போதைய அரசியல் உத்தி, நிலைபாடு, மிக விரைவில் ரஷ்ய மக்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, போல்ஸ்விக் கட்சியை புரட்சி அலையின் தலைமை நிலைக்குக் கொண்டு வந்தது. சரியான நேரத்தில், எடுத்த சரியான நிலைபாடு உலக வரலாற்றில், முதலாவது சோசலிச புரட்சியின் வெற்றியை சாத்தியமாக்கியது. நிறுவனமயம் ஆக்கப்பட்ட முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையில், தொழிலாளி வர்க்கத்தின் நலனை பிரதிபலிப்பதற்கான வேலையைச் செய்து கொண்டிருந்த அதேசமயம், அந்த முதலாளித்துவ அரசியல் நிறுவன முறையைத் தகர்ப்பதற்கான வேலையையும் அவர் செய்தார். தொழிலாளி வர்க்க விடுதலைக்கான சாத்தியங்களை கண்டடைவதே லெனினிற்கு நோக்கமாக இருந்தது. எனவே பழகிய முறைக்குள் மட்டும் அவர் கட்டுண்டு இருக்கவில்லை. புதிய, புதிய சாத்தியங்கள் குறித்து அவர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் அவர் சமகாலத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற மார்க்சிய அறிஞர்கள், தலைவர்களை விமர்சிக்கவும், தேவைப்படும் போது முரண்படவும் செய்தார். நிலவக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப, பழகிய பாதையில் கவனமாக நடக்க வேண்டும், முடிந்த அளவுக்கு மட்டும் செயல்பட வேண்டும் என்று அனுபவ வாதம் பேசியவர்களிடம், மார்க்சியத்தின் உயிராக இருந்த இயங்கியல் அடிப்படையில் புரட்சிகர அரசியலை முன்வைத்து, தொழிலாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ளச் செய்து, புரட்சிகர நடைமுறையைச் செயல்படுத்தியவர் லெனின்.சாத்தியங்களின் வாய்ப்புகள்...லெனின் மறைந்து இன்றுடன் 101 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. உலக வரலாற்றில் வேறு எவரையும் விட மிகத் தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்திய மாமேதை அவர். அவர் காலத்தில் முதலாளித்துவம், நிதி மூலதனத்தின் ஆதிக்கமாக, ஏகாதிபத்தியமாக மாறியதை அவதானித்து, சோசலிசப் புரட்சியை நடத்தினார். நூற்றாண்டு கண்ட ஏகாதிபத்தியம், இன்று வெறிபிடித்த பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஆதிக்கமாக நோய் முற்றிய கிழப்பருவம் எய்தியிருக்கிறது.  உலகெங்கும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வறுமை, பசி, பட்டினி, தொடர்ச்சியான யுத்தங்கள் என சிக்கலில் சிக்கி இருக்கிறது. ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க வக்கற்ற ஆளும் வர்க்கங்கள், மென்மேலும் உலக மக்கள் வாழ்வை நெருக்கடி படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ அமைப்பே உருவாக்கிய ஜனநாயக நிறுவனங்களை, ஜனநாயக உரிமைகளைப் பறித்து கொண்டிருக்கின்றன. போர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. மாற்றம் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதாகத் தோன்றும் இந்தக் காலம், மாற்றத்திற்கான எண்ணற்ற சாத்தியங்களின் வாய்ப்புகளை திறக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மாமேதை லெனினைக் கற்றால், மறுபடி, மறுபடி கற்றுணர்ந்தால் நமக்கு புது சக்தி பிறக்கும். 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை உத்வேகத்துடன் நடத்துவதற்கு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களை அணி திரட்டுவதற்கு, விடுதலைக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புது வழி கிடைக்கும்.  வாழ்க லெனினியம்! ஓங்குக புரட்சி!இன்று (ஜன. 21) மாமேதை லெனின் 101 ஆவது நினைவு தினம்
2025-01-21 01:56:19.400276
ஜனவரி 20, 2025
அறிவியலை அவமதிப்பதா?
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/bjp/fake-advertisements-published-by-divya-pharmacy
தமிழ்
UTF-8
பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவன மான திவ்யா பார்மஸி வெளியிட்ட போலி விளம்பரங்கள் தொடர்பாக போலிச்சாமியார் பாபா ராம்தேவுக்கு பாலக்காடு மாவட்ட நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆயுர் வேத நிறுவனம் என்று பெயர் வைத்துக் கொண்டு மருத்துவ அறிவியலுக்கு புறம்பான பல விளம்ப ரங்களை பதஞ்சலி நிறுவனமும் அதனுடைய துணை நிறுவனமும் வெளியிட்டு வருகிறது.ஏற்கெனவே இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் பதஞ்சலி  போலி விளம்பரங்களுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் செய்தித்தாள்களில் மன்னிப்புக் கோரும் பகிரங்க விளம்பரத்தையும் வெளியிட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி என்பவர் பசுவின் சிறுநீரான கோமி யத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு  என்று பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாட்டு பொங்க லன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய தந்தைக்கு காய்ச்சல் அடித்தபோது மருத்துவரிடம் போக நினைத்ததாகவும், ஆனால் ஒரு சந்நியாசி கோமியத்தை கொடுக்குமாறு கூறியதாகவும் உடனே காய்ச்சல் சரியாகிவிட்டது என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.காய்ச்சலை போக்குவது மட்டுமின்றி பல்வேறு நோய்களை சீர்செய்யும் ஆற்றல் பசுவின் சிறு நீருக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் பசுவின் சிறுநீரை மனிதர்கள் குடித்தால் பல்வேறு நோய்த் தொற்றுகள் உருவாகும், கடுமை யான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல் வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.காமகோடியின் முட்டாள்தனமான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், வழக்கம் போல ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் அவருக்கு முட்டுக் கொடுக்க முன்வந்துள்ளது. அவர் ஒன்றும் வகுப்பறையில் இவ்வாறு கூறவில்லை. வெளியில்தானே சொன்னார் என்று கூறுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.இந்த அவக்கேட்டை வகுப்பறையிலும் அரங் கேற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.  அதற்காகத்தான் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில அரசின் கருத்தை முற்றாக  நிராகரித்து ஆளுநர் மட்டுமே துணைவேந்த ருக்கான தெரிவு குழுவை அமைக்கும் ஆபத்தான யோசனையை யுஜிசி முன்வைத்துள்ளது. இது நடைமுறைக்கு வருமானால், இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர் எஸ்எஸ் ஆசாமிகளே நியமிக்கப்படுவார்கள். இந்த நாட்டின் பிரதமரே அறிவியலுக்கு விரோத மாக பேசி வரும் நிலையில், ஐஐடி இயக்குநர்க ளும் அவரது பாதையில் அணி வகுக்க துவங்கி யிருக்கிறார்கள். ஐஐடி இயக்குநர் பொறுப்பிலி ருந்து காமகோடியை நீக்க வேண்டும்.
2025-01-21 01:56:22.895826
ஜனவரி 20, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/australian-open-tennis-2025---svitolina-in-quarterfinals
தமிழ்
UTF-8
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - காலிறுதியில் சுவிட்டோலினா113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்  மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், திங்களன்று நடைபெற்ற மகளிர்  ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்ட த்தில் தரவரிசையில் 28ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் சுவிட்டோ லினா, தரவரிசையில் இல்லாத ரஷ்யாவின் வெரோனிக்காவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் லைசை எதிர்கொண் டார். அதிரடி ஆட்டத்துடன் ருத்ர தாண்டவம் ஆடிய ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் லைசை புரட்டி யெடுத்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி னார். காலிறுதிக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் :  கீஸ் (அமெரிக்கா), நவர்ரோ (அமெரிக்கா)மோன்பில்ஸ் அவுட்ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத முன்னணி வீரரான பிரான்சின் மோன்பில்ஸ், தரவரிசையில் 21ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செல்டானை எதிர்கொண்டார். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தன. 7-6 (7-3), 6-7 (3-6), 4-6 (7-2), 1-0 என்ற கணக்கில் செல்டான் முன்னணியில் இருந்த பொழுது காயம் காரணமாக மோன்பில்ஸ் வெளியேறினார். இதனால் அதிர்ஷ்ட வாய்ப்புடன் செல்டான் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் :  சின்னர் (இத்தாலி), லோரன்சோ (இத்தாலி)ஐபிஎல் 2025 லக்னோ அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்க உள்ளது.  தற்போது ஐபிஎல் அணிகள், கேப்டன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப் பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் லக்னோ  அணி  ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையும் ரிஷப்  பண்டிடம் உள்ளது. ரிஷப் பண்ட் ஏற்க னவே தில்லி அணியின் கேப்டனாக இருந்ததால் அந்த அனுபவம் லக்னோ அணிக்கு நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 அணிகள் இன்னும் அறிவிக்கவில்லை ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 2022 முதல் விளையாடி வருகிறது. 2022,  2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் தலைமை தாங்கினார். அவரது தலை மையின் கீழ் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் கடந்த சீசனில் லக்னோ அணி மோச மாக விளையாடி லீக் சுற்றிலேயே வெளி யேறியது. பிறகு கே.எல்.ராகுலிடம், அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கோபத்தை காட்டி யது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரண மாகவே 2025 சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை லக்னோ அணி வாங்கவில்லை. எனினும் ரூ.14 கோடிக்கு தில்லி அணியால் கே.எல்.ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மொத்தம் உள்ள 10 அணிகளில் 7 அணிகள் தங்கள் கேப்டன்களை அறிவித்துள்ள நிலையில் பெங்களூரு, கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய அணிகள் தங்கள் கேப்டன்களை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-21 01:56:23.122706
ஜனவரி 20, 2025
இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனியர்கள் விடுதலை
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/israel/israeli-authorities-released-90-palestinians-from-prison
தமிழ்
UTF-8
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான நிலையில், 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுதலை செய்தது; தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.  பதினைந்து மாத கால இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19, 2025) உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், காசாவில் கடுமையான அழிவுகளை சந்தித்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. இதனை தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களில் அரசியல் தலைவர் கலிதா ஜரார் மற்றும் பத்திரிகையாளர் ருலா ஹசனைன் ஆகியோர் அடங்குவர். காசா மீது இஸ்ரேல் கடந்த 15 மாதங்களாக நடத்திய தாக்குதலில், இதுவரை 46,900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2025-01-21 01:56:23.169131
ஜனவரி 20, 2025
காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை!
தேசியம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/india/kerala/kerala-woman-sentenced-to-death-for-poisoning-boyfriend
தமிழ்
UTF-8
காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஷரோன் ராஜ் கொலை நடந்து 73 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிரீஷ்மா, கொலை நடப்பதற்கு 10 மாதங்களுக்கும் மேலாக ஷரோனைக் கொலை செய்ய திட்டம் தீட்டி, கூகுளில் பல விஷயங்களைத் தேடி தனது திட்டத்தை வகுத்துள்ளார். இதில், கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமரன் நாயருக்கும் பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று(ஜன.20) பிறப்பித்துள்ளது. அதில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், உறவினருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுளள்து.
2025-01-21 01:56:23.617819
ஜனவரி 20, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/a-single-person-is-a-woman-in-public,-cooperation-with-others
தமிழ்
UTF-8
ஒரு தனி நபர் ஒரு பெண்ணை பொது இடத்தில், பிறர் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முடியும்? சிபிஐ குற்றப்பத்திரிகையில் இதுதொடர்பாக சாதாரண குறிப்புகள் கூட இல்லை. மாநில அரசாங்கத்தின் பாதையிலேயே சிபிஐ விசாரணை மேற்கொண் டுள்ளது. அதனால் தான் கொல்கத்தா மாணவி படுகொலை விவ காரத்தில் வழங்கப்பட்ட தண்டனை திருப்தியற்றதாக உள்ளது.சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. கொல்கத்தா காவல்துறை யினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை கள், சிபிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டன. விசாரணை யில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே, குற்ற வாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் நீதியை வழங்க போதுமான தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால் இந்த தண்டனை போதாது.2014 இல் பிரதமர் மோடி பதவியேற்றபோது பாஜக நிறைய வாக்குறுதிகளை அளித்தது. இதே போல தில்லி தேர்தலுக்காக மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். பாஜக உண்மையில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்பதை கூறும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.தமிழ் நடிகை தேவயானி இயக்கிய “கைக்குட்டை ராணி” எனும் குறும்படம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்போர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.“மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக் கின் தீர்ப்பை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதில் நிலையாக இருந் தோம். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள் ளது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி யுள்ளார்.தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உறுதி யான நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய சுகாதா ரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் தில்லி முதல்வர் அதிஷிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புதுதில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்தி டம் புகார் அளித்துள்ளார். புதுதில்லி தொகுதியில் தான் கெஜ்ரிவாலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பி டத்தக்கது.தமிழ்நாட்டைச் (சென்னை) சேர்ந்த பக்தர் வர்த மான் ஜெயின் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்து க்கு ரூ. 6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
2025-01-21 01:56:27.270511
ஜனவரி 20, 2025
2 ஆராய்ச்சிக் கட்டுரைகள் போதுமாம்! - மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமன விதிகளை தளர்த்திய மோடி அரசு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/modi-govt-relaxes-appointment-rules-for-professors-in-medical-colleges
தமிழ்
UTF-8
புதுதில்லி நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை அதி கரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கை என்ற பெயரில், மருத்துவக் கல்லூரி களின் பேராசிரியர்கள் நியமனத்தில் ஒன்றிய மோடி அரசு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் குறைந்தது 4 ஆண்டுகள் மருத்துவ நிபுணர்களாக இருந்த வர்கள் உதவிப் பேராசிரியராகலாம். குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆலோச கர், நிபுணர் அல்லது மருத்துவ அதிகாரி, மருத்து வக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியராக பதவி ஏற்கலாம். அதே போல உதவிப் பேராசிரி யராக 4 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தி ருந்தால்தான் ஆக முடியும் என்ற விதி காலம் காலமாக உள்ளது. ஆனால் இந்த விதி திருத்தப் பட்டு, தற்போது 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்திருந்தால் உதவிப் பேராசிரியராகலாம் என ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. மோடி அரசின் சூழ்ச்சி முன்னதாக நீட்-பிஜி மூலம் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கட்-ஆப் சதவீதத்தை  தேசிய மருத்துவ ஆணை யம் குறைத்தது. இப்போது மருத்துவக் கல்லூரி கள் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் விதி களும் தளர்த்தப்பட்டுள்ளன. மோடி அரசின் இந்த இழிவான செயல்பாடுகளால் மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ச்சியடையும் என கல்வி யாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசி யல் லாபத்திற்காக மருத்துவத்துறையை சிதைக்கவே புதிய விதிமுறைகளை மோடி அரசு கொண்டு வருகின்றது என நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது.  காங்கிரஸ் கண்டனம் “முன்பு நீட் தேர்வு மூலமாக முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆப் சதவீதத்தை மோடி அரசு குறைத்தது. இப்போது மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்க ளை நியமிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்து கிறது. தரமான மருத்துவக் கல்வி என்ற நோக்கத் துடன் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாடாளுமன் றத்தில் சட்டம் இயற்றப்பட்டு 2020 செப்டம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப் பட்டது. தற்போது தேசிய மருத்துவ ஆணையம் எடுக்கும் சில நடவடிக்கைகள் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன” என காங்கிரஸ் பொ துச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2025-01-21 01:56:27.271520
ஜனவரி 20, 2025
சிறப்பான பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக கேரள அரசுக்கு குவியும் பாராட்டு
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/52-lakh-people-visited-sabarimala-in-3-months
தமிழ்
UTF-8
திருவனந்தபுரம் உலகின் பிரசித்தி பெற்ற கோ வில்களில் ஒன்றான சபரி மலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கிய நிகழ்வான மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 16ஆம் தேதி தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ஆம் தேதி அன்று நிறைவுபெற்றது. அடுத்த 3 நாட்களுக்குப் பிறகு மகரவிளக்கு கால பூஜைக ளுக்காக சபரிமலை கோவில் நடை  டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை யும், மகரஜோதி தரிசனமும் நடை பெற்றன. சனிக்கிழமை மண்டல, மகரவிளக்கு கால நெய் அபிஷே கம் நிறைவடைந்தது.நடை அடைப்புதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனு மதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழ மை இரவு பக்தர்கள் யாரும் சபரி மலையில் தங்க அனுமதிக்கப்பட வில்லை. திங்களன்று  அதிகாலை 6.30 மணியளவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை சாத்தினார். நடை சாத்திய பின்னர் கோவில் சாவி யை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி பந்தளம் மன்னர் பிரதிநிதி யிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்கு சபரி மலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவி யை மேல்சாந்தியிடம் மன்னர் பிரதிநிதி திரும்ப ஒப்படைத்தார். மீண்டும் மாசி மாத பூஜைக ளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்படும் என்பது குறிப் பிடத்தக்கது.10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக...நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சபரி மலை ஐயப்பன் கோவிலில் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர் கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 10 லட்சம் கூடுதலான அளவில்  சபரிமலையில் தரி சனம் செய்துள்ளனர். குறிப்பாக கடந்த சீசன்களை விட அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்தாலும் இடது ஜனநாயக முன் னணி ஆளும் கேரள மாநில அர சின் அசத்தலான செயல்பட்டால் சாதாரண கூட்ட நெரிசல் கூட ஏற் படாமல் மிகுந்த பாதுகாப்பாக சபரி மலையின் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவுபெற்றன. ஆந்திர பாஜக கூட்டணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ஏற்பட்டது போல் அல்லாமல், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பாது காப்பான ஏற்பாடுகளை செய்த கேரள அரசுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் சமூகவலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.திருவிதாங்கூர் தேவசம் போர்டு பாராட்டுஇதுதொடர்பாக சபரிமலை யில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறு கையில்,”சபரிமலையில் எதிர் பார்த்ததை விட அதிகமாக பக்தர் கள் வந்த போதிலும் காவல்துறை யின் சிறப்பான நடவடிக்கைக ளால் நெரிசல் ஏற்படாமலும், நீண்ட  நேரம் காத்திருக்காமலும் பக்தர் கள் மிக எளிதில் தரிசனம் செய்து திரும்பினர். ஜனவரி 18ஆம் தேதி வரை 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட இம்முறை 10 லட்சத்திற்கும் அதிகமான பக் தர்கள் சபரிமலை வந்துள்ளனர். சபரிமலை கோவில் வருமானமும் இந்த வருடம் அதிகரித்துள்ளது” என அவர் கூறினார்.
2025-01-21 01:56:27.272120
ஜனவரி 20, 2025
தில்லியில் சிபிஎம் வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/assembly-elections-will-be-held-in-delhi-state-next-month
தமிழ்
UTF-8
தில்லி மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. காரவால் நகர் (அசோக் அகர்வால்) மற்றும் பதர்பூர் (ஜெகதீஷ் சந்த் சர்மா) சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு தில்லி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மூலம் சிபிஎம் ஊழியர்கள் வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
2025-01-21 01:56:27.272630
ஜனவரி 20, 2025
ஷாரோன் ராஜ் கொலை வழக்கு கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/sharon-raj-murder-case-greeshma-sentenced-to-death
தமிழ்
UTF-8
காதலிப்பதுபோல் நடித்து நண்பனுக்கு விஷம் கலந்த பானம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கிரீஸ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது தாய்மாமன் நிர்மல குமாரன் நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளது. ஷாரோன் ராஜ் அக்டோபர் 14, 2022 அன்று தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பாற சாலாவுக்கு அருகிலுள்ள ஜே.பி.பவ னில் உள்ள கிரீஸ்மாவின் வீட்டிற்கு  வரவழைக்கப்பட்டார். “போதைப்பொ ருள் சவால்” என்ற போர்வையில், அவர் பானத்தில் (மாம்பழக்கூழ்) பூச்சிக் கொல்லியைக் கலந்து அவருக்குக் கொடுத்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 14, 2022 அன்று கிரீஷ்மா கொடுத்த பானத்தை குடித்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஷாரோன், சிகிச்சை பெற்று வந்த நிலை யில் 25 ஆம் தேதி இறந்தார். ஜோதிட கதைகள்... ஷாரோன் கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள நெய்யூரில் உள்ள கல்லூரி யில் பிஎஸ்சி கதிரியக்கவியல் இறுதி யாண்டு மாணவராக இருந்தார். கல்லூரி  மாணவியான கிரீஷ்மாவும் ஷாரோனும் பேருந்து பழக்கத்தில் நண்பர்களாயினர். 2021 இல் வீட்டிலும், தேவாலயத்திலும் வைத்து தாலி கட்டினார். கிரீஷ்மாவின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று ஜோதிடர் கூறியதை நம்பி, ஷாரோனை விலக்க முயன்றார். மற்றொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், ஷாரோன் விலகிச் செல்ல மறுத்ததால் மெதுவாக கொல்லும் விஷம் கொடுத்து இயல்பான மரணம் போல் சித்தரிக்க முயன்றார். நீதிபதி முன் தனது மரண வாக்குமூலத்தை அளிக்கும் போது கிரீஷ்மா கொடுத்த மருந்தைக் குடித்துவிட்டதாக சொன்னவர், கிரீஷ்மா தனக்கு தீங்கு விளைவிப்பாள் என்று நினைக்கவில்லை என்று கூறியிருந்தார். தடயவியல் மருத்துவர்  வழங்கிய அறி வியல் சான்றுகளை மிக முக்கிய ஆதார மாக கொண்டு கிரீஷ்மாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது விஷம் கலந்த பானம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஜனவரி 25, 2023 அன்று போலீ சார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த னர். கடந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம்  தேதி தொடங்கிய விசாரணை இம்மாதம் நிறைவடைந்தது. ஜனவரி 17 வெள்ளி யன்று தீர்ப்பளித்த நீதிபதி கிரீஷ்மாவும், அவரது மாமா நிர்மல குமாரன் நாயரும் குற்றவாளிகள் என அறவித்தார். ஜனவரி 20 திங்களன்று இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.
2025-01-21 01:56:27.273115
ஜனவரி 20, 2025
ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுகிறது’
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/because-bjp-is-afraid-of-rahul-gandhi
தமிழ்
UTF-8
ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுவதன் காரணமாகவே அவர் மீது அசாமில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபய் துபே கூறுகையில்,”ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மிகவும் பயந்து எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் மூலம் பாஜக ஆளும் எந்த மாநிலமும் ராகுல் காந்தியின் உறுதியையும், அவரது இலக்குகளுக்கான அர்ப்பணிப்பையும் குறைக்க முடியாது. அதே போல பாஜக அடிப்படையற்ற வதந்திகளைப் பரப்புகிறது” என அவர் கூறினார்.
2025-01-21 01:56:27.273779
ஜனவரி 20, 2025
முல்லைப் பெரியாறு வழக்கில் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்!
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/must-abide-by-the-verdict-in-the-mullai-periyar-case
தமிழ்
UTF-8
புதுதில்லி, ஜன. 20 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவைக் கலைத்து விட்டு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அணைப் பாதுகாப்பு - 2021 சட்டத்தின்படி, 7 பேர்  கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இதனிடையே, முல்லைப் பெரி யாறு அணையில் பரமாரிப்புப் பணி களை மேற்கொள்வதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை யிலான அமர்வில் திங்களன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல், கேரள அரசு முட்டுக்கட்டைகள் போடுவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அணைப் பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்; அணையை பாதுகாக்க நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என கேரள அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.  இதையடுத்து, “முல்லைப் பெரி யாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதில் எந்த பிரச்சனை யும் இல்லை. எனவே, மீண்டும் மீண்டும் அதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள 2 தீர்ப்புகளை யும் ஆய்வு செய்யத் தேவையே இல்லை” என கேரள அரசுத் தரப்புக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த னர். மேலும், “அணையைப் பலப்படுத்தும் வழக்கை மட்டும் இங்கு  விசாரிக்கலாம். அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “அணை கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா, அல்லது அணைப் பாது காப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா? என்பது குறித்து இரு மாநி லங்களும் கருத்தை தெரிவிக்க வேண்டும்” எனக்கூறி, வழக்கை பிப்ர வரி 3-ஆவது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
2025-01-21 01:56:27.274441
ஜனவரி 20, 2025
ஐஐடி இயக்குநர் காமகோடியை பதவி நீக்குக!
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/communist-party-insists-on-union-government
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 20 - சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பி லிருந்து, காமகோடியை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஐஐடி இயக்குநரா, ஆர்எஸ்எஸ்காரரா? மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்கப் பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.  இது ஐஐடி போன்ற  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐஐடி இயக்குநரா, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக நடக்கும் இந்துத்துவா அரசியல் ஏற்கெனவே, காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெய ரில் பாஜக அரசியலுக்கான செயல்பாட்டு களமாக ஐஐடி நிறு வனத்தை அனுமதித்தார். சென்னை ஐஐடி வளா கத்தில் இந்துமதம் அல்லாத பிற மத அடை யாளம் கொண்டோர்- சமூக நீதி காரணமாக இட ஒதுக்கீடு  அடிப்படையில் சேர்ந்தோர்- பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இயக்குநரின் வெளிப்படையான ஆர்எஸ்எஸ் ஆதரவுப் பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். கால்நடை ஆய்வாளர்களும் கண்டன அறிக்கை பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில், ‘விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங்’ என பேசினார். இது  வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர், தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமி யம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல.  கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடி நீக்கப்பட  வேண்டும். மேலும் இவ ருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் மையமாக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது மேலும் பாஜக ஆட்சியானது, ஆய்வு நிறு வனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐஐடி இயக்குநர் அந்தஸ்த்தை பயன்படுத்தி செய்வது, தமிழ் நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது.  எனவே, சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என  ஒன்றிய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.
2025-01-21 01:56:27.274970
ஜனவரி 20, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/jawahirullah-condemns-jagbar-ali-assassination
தமிழ்
UTF-8
ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்புசென்னை, ஜன. 20 - தமிழ்நாட்டில் ஜனவரி 23 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தில் ஜனவரி 21 முதல் 23 வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.மும்மொழியில் அறிவிப்பா? : அரசு மறுப்புசென்னை, ஜன. 20 - தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் டாஸ்மாக் மதுபான கடைக்கான அறிவிப்பு பலகை மும்மொழியில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ‘ஒரு வழியாக தமிழகம் மும்மொழி கொள்கையை டாஸ்மாக்கில் அறிமுகம் செய்துள்ளதாக’ கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இது பழைய புகைப்படம் மற்றும் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஆண்டு புதிதாக மதுக்கூடம் (பார்) ஆரம்பிக்கப் பட்ட சமயத்தில் அந்த பலகை ‘பார்’ உரிம தாரரால் வைக்கப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் நடவடிக்கை மேற்கொண்டு பலகை அகற்றப்பட்டது. தற்போது எந்த ‘போர்டும்’ அந்த இடத்தில் இல்லை. பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் - மாணவர் விவரங்களை பதிவேற்ற பிப்.17 கடைசி நாள்!சென்னை, ஜன. 20 - ஒன்றிய அரசின் இணையதளத்தில் பள்ளி மாணவர் - ஆசிரியர் விவரங்களை பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  அதில், பள்ளிகள் சார்ந்த தரவும், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை U.D.I.S.E. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், அதற்கேற்ப ஒரு பள்ளியில் இருந்து விலகி, மற்றொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முடித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தேதிகள் அறிவிப்பு!சென்னை, ஜன. 20 - தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ மற்றும் ‘சீட்டா’ நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜன. 24 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘டான்செட்’ தோ்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 22 அன்று தோ்வுகள் நடைபெற உள்ளன. முதுநிலை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் நடத்தப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (சீட்டா) மார்ச் 23 அன்று  நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 24 முதல் தொடங்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 21 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை www.tancet.annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஜகபர் அலி படுகொலைக்கு  ஜவாஹிருல்லா கண்டனம்சென்னை, ஜன. 20 - சமூக ஆர்வலர் ஜகபர் அலி படு கொலை செய்யப்பட்டதற்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹி ருல்லா எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கனிம  வளங்கள் கொள்ளை அடிப்பதை தடுப்பதற்கு பெரும் முயற்சி மேற் கொண்டவர். கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கனிமவளம் கொள்ளை போவ தற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.  இதன் தொடர்ச்சியாக சமூக  விரோதிகள் அவர் மீது லாரியை ஏற்றிப் படுகொலை செய்துள்ளனர். தொடர்ச்சியாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் மெத்தனப் போக்குதான் இந்த படுகொலைக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.“எச்எம்பிவி தொற்றுக்கு சிகிச்சை தேவையில்லை!”சென்னை, ஜன. 20 - எச்எம்பிவி வைரஸ் தொற்று  ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் தானாகவே சரியாகி விடும் என்ப தால், அந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையும், மருத்துவமும் தேவை இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் தானாகவே சரியாகி விடும். அந்த வைரஸ் தொற்றுக்கு என பிரத்யேகமாக மருந்துகள் மற்றும் தனி வார்டுகள் தேவை இல்லை.  மேலும், சிகிச்சையும், மருத்துவம் தேவை இல்லை, அது  மிக கட்டுக்குள் இருக்கிறது.  அதுகுறித்து பதற்றப்படத் தேவையில்லை. இதுபோன்ற வைரஸ்களை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்க உடற்பயிற்சி அவசியம். நல்ல உணவுப் பழக்கங்களை கொண்டு வருவது, தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்பது பொதுவாக எல்லோருக்கும் நல்லது!” என்றார்.‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வுசென்னை, ஜன. 20 - அரசின் சேவைகளை மக்களி டம் கொண்டு சேர்க்கும் ‘மக்களு டன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு கண்டு தமி ழக அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார்.  “அரசின் சேவைகளைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையில் இருந்து அர சின் சேவைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் தொலை நோக்கு திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படை பொதுச் சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்க ளிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கி யச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது. இதுதொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுத் தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஊர கப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12 ஆயி ரத்து 525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
2025-01-21 01:56:27.275451
ஜனவரி 20, 2025
‘இரட்டை இலை’ பற்றி முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை நீடிக்கிறது!
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/election-to-decide-on-'double-leaf'
தமிழ்
UTF-8
புதுதில்லி, ஜன. 20 - இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத் தையே அணுகுமாறும் மனுதாரரை அறிவுறுத்தி உள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்ய மூர்த்தி என்பவர், தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனி சாமி, ஓ. பன்னீர்செல்வம், மனு தாரர், கே.சி. பழனிசாமி, புகழேந்தி  ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருந்தது. அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அதில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது எனத் தெரி வித்தார். அதிமுகவில் உறுப்பின ராக இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர  எந்த வித முகாந்திரமும் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள்  விவகாரங்கள் தொடர்பாக தேர்தல்  ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. எனவே, சூர்யமூர்த்தி யின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்து வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.  ஆனால், சென்னை உயர் நீதி மன்றத் தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்தார்.  இந்த மேல்முறையீட்டு மனுவைத்  தான் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர் மனுவை  திரும்பப் பெறுவதாக தெரிவித்த தால், மனு தள்ளுபடி செய்யப் பட்டது.  இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற தடை தொடர்கிறது.
2025-01-21 01:56:27.275965
ஜனவரி 20, 2025
பெண் மருத்துவர் கொலை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மாநிலம் - மேற்கு வங்காளம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/west-bengal/kolkata-doctor-murder-case-verdict
தமிழ்
UTF-8
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த 8ஆம் தேதி  பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில், மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.  மருத்துவர் கொலை வழக்கை கடந்த நவம்பர் 12-ஆம் தேதி முதல் சியல்டா மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் சஞ்சய் ராய், குற்றவாளி என கடந்த 18-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ளது. மேலும், குற்றவாளிக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.  இந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
2025-01-21 01:56:28.340932
ஜனவரி 21, 2025
‘பேரரசர்’ டிரம்ப் பதவியேற்பு கொடூர காலத்தின் முன்னறிவிப்பு - பேட்ரிக் மார்ட்டின், டேவிட் நார்த்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/trump's-inauguration-is-a-harbinger-of-brutal-times
தமிழ்
UTF-8
டொனால்டு டிரம்ப்பின் பதவியேற்பு விழா வரலாற்றில் ஓர் அருவருப் பான பாசிச நிகழ்வாக நினைவில் கொள்ளப்படும். அதில் புதிய ஜனாதிபதி டிரம்ப், வெளி யேறும் பைடனின் நிர்வாகம், குடியேற்றவாசிகள், எதிரிகளாக அவர் கருதும் அமெரிக்க மக்களின் பரந்த பிரிவினர், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அப்பாற்பட்ட உலக மக்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்பு நிறைந்த உரையை நிகழ்த்தினார்.மாபெரும் எழுத்தாளரின் எச்சரிக்கைமாபெரும் அமெரிக்க எழுத்தாளர் சின்க்ளேர் லூயிஸின் பாசிச எதிர்ப்பு நாவலான “இட் கான்ட் ஹாப்பன் ஹியர்” இல் கற்பனை செய்யப்பட்ட கொடூர மான, ஊடக மோசடி செய்பவரும் பிரச்சார வீரருமான ஜனாதிபதி பஸ் வின்ட்ரிப்பின் அவதாரமாக டிரம்ப்  தோன்றினார். அந்த அரசியல் நாவலின் புனை கதை, இங்கே உண்மையாகி நின்றது. லூயிஸின் டிஸ்டோபியன் நாவல் 1935இல் வெளி யிடப்பட்டது, அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சிக்கு எதிரான எச்சரிக்கையாக இது கருதப்பட்டது. நெருக்க டியில் சிக்கிய முதலாளித்துவத்தைப் பாதுகாப்ப தற்காகவும், இலாபங்கள் மற்றும் வரம்பற்ற செல் வத்தைத் தேடுவதற்காகவும், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஜெர்மனியில் ஹிட்லர் செய்தது போன்ற- ‘தேசிய வாதம்’ என்ற பெயரில் கொடூரத்தை ஆட்சியில் அமர்த்தும் என்று அந்த நாவல் எச்சரித்தது. தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 20,  2025 அன்று நடந்த கோரமான பதவியேற்பு விழா லூயிஸின் எச்சரிக்கையை நிரூபித்துள்ளது.ஹிட்லரின் மறு வடிவமாக...டிரம்ப் தனது பதவியேற்பு உரையின் பாசிச உத்வே கத்தை மறைக்க முயற்சிக்கவில்லை. ஜெர்மன் அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 1933 பிப்ரவரி 1 அன்று ஹிட்லர் ஆற்றிய முதல் வானொலி உரையின் தொனியிலும் உள்ளடக்கத்திலும் தற்போது டிரம்ப்பின் உரை வெளிப்படையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அன்றைக்கு ஹிட்லரின் உரை, புனித மான ஜெர்மன் “வோல்க்” ஐ காட்டிக்கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டிய வைமார் குடியரசு மற்றும் அதன் தலைவர்களை விஷமத்தனமாக கண்டனம் செய்வ தற்கு அர்ப்பணிக்கப்பட்டது. துரோகிகள் அனைவரும் அகற்றப்படுவார்கள், மேலும் ஜெர்மனி மீண்டும் மகத்துவம் பெறும் என்று ஹிட்லர் கூறினார்.யாருக்குப் பொற்காலம்டிரம்ப், ஹிட்லரின் “ஆயிரம் ஆண்டு ரைச்” என்ற கருத்தை எடுத்து, அதை அமெரிக்காவின் “பொற் காலம்” என மறுவடிவமைத்துள்ளார். ஆனால் இந்த “பொற்காலம்” டிரம்ப்பிற்கும், அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பில்லியனர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற பணக்கார முதலாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்களுடன் இத்தாலியின் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜாவியர் மிலே போன்ற சர்வதேச பாசிச நண்பர்களும் இணைந்து கொண்டனர்.அரசியல் துணிவற்ற எதிர்க்கட்சியினர்வெளியேறும் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், ஒபாமா மற்றும் சார்லஸ் ஷூமர், பெர்னி சாண்டர்ஸ், ஹகீம் ஜெஃப்ரிஸ் உட்பட ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய தலை வர்களும் விழாவில் கலந்து கொண்டனர். டிரம்ப், அவர்களை பகிரங்கமாக இழிவுபடுத்தி பேசியபோ தும், அமைதியாக மரியாதையுடன் கேட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களில் எவருக்கும் வரலாற்று உணர்வோ, ஜனநாயக கொள்கைகள் மீதான பற்றோ இல்லை. ஒரு பாசிச ஜனாதிபதியின் பதவியேற்பை பகிரங்கமாக எதிர்த்து விழாவை விட்டு வெளியே றும் அரசியல் துணிவு கூட இல்லை. மாறாக, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்கான அர சாங்கத்திற்கு “அமைதியான அதிகார மாற்றம்” என்று பாராட்டினர்.போர் வெறியின் உச்சம்அமெரிக்க விரிவாக்கத்திற்கான திட்டங்களை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். பனாமா கால்வாயை “திரும்ப கைப்பற்றுவதாக” அறிவித்தார். மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் வெனிசுலாவில் உள்ள குற்றக் கும்பல்களை ஐஎஸ்ஐஎஸ் (ISIS) மற்றும் அல்-கொய்தாவிற்கு இணையான “வெளிநாட்டு பயங்கர வாத அமைப்புகளாக” அறிவிக்கப் போவதாக கூறி னார். இது அந்த நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த சட்டப்பூர்வ சாக்குப்போக்காக அமையும். 1897-1901 காலகட்டத்தில் கியூபா, போர்ட்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு களை ஸ்பானிய-அமெரிக்கப் போரில் கைப்பற்றிய ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லியின் சாதனைகளை டிரம்ப் போற்றினார். வட அமெரிக்காவின் உயர மான மலையான அலாஸ்காவின் தெனாலிக்கு மெக்கின்லியின் பெயரை மீண்டும் சூட்டுவதாக உறுதி யளித்தார். மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று மறுபெயரிடப் போவதாகவும் அறி வித்தார். சமீப வாரங்களில் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்றும், கனடாவை 51வது மாநி லமாக இணைக்க வேண்டும் என்றும் அவர் விடுத்த அழைப்புகள் வெளிப்படையாக பேசப்படவில்லை, ஆனால் அவை மறைமுகமாக புரிந்து கொள்ளப் பட்டன.குடியேற்றவாசிகளுக்கு குறிஅமெரிக்க-மெக்சிகோ எல்லையில் “தேசிய அவசரநிலையை” உடனடியாக அறிவித்து, “வெளி நாட்டு படையெடுப்பை” தடுக்க இராணுவத்தை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்தார். குடியேற்ற எதிர்ப்பு ஆணைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக, தஞ்சம் கோரும் அனைவரையும் சர்வதேச சட்டத்தை மீறி வெளியேற்றி “மெக்சிகோவில் தங்க வைக்கும்” கொள்கையை மீண்டும் டிரம்ப் அமல்படுத்துவார். குடியேற்ற வாசிகள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வேலைத் தளங்களில் சோதனைகளை அதிகரிக்க காவல்-இராணுவ அமைப்பு பலப்படுத்தப்படும். இது நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான, இறுதியில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை கைது செய்ய வழிவகுக்கும். இந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் விரைவில் குடியேற்றவாசிகள் மற்றும் உள்நாட்டு தொழிலாளர் வர்க்கம் முழுவதையும் பாதிக்கும். 2017ஆம் ஆண்டு பணக்காரர்களுக்கான வரிக் குறைப்பை நீட்டிப்பது; அமெரிக்க இராணுவ இயந்திரத்தை மேலும் பெருமளவில் விரிவுபடுத்து வதற்கு நிதியளிக்க சமூக நலத்திட்டங்களை வெட்டு வது என்ற தனது பரந்த திட்டத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும், தடை செய்ய டிரம்ப் முயல்கிறார்.எளிய மக்கள் அந்நிய எதிரிகளாம்!1798ல் இயற்றப்பட்ட கொடூரமான அந்நிய எதிரிகள் சட்டத்தை (Alien Enemies Act) வெகுஜன தடுப்பு மற்றும் நாடு கடத்தல் திட்டங்களுக்கு பயன்படுத்தப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார். போர் மற்றும் வறுமையில் இருந்து தப்பி வரும் லட்சக்கணக்கான குடியேற்றவாசிகளை, ‘படையெடுக்கும் ராணுவமாக’ சித்தரித்தார். இந்த சட்டம் கடைசியாக இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவில் வசித்த ஜெர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய குடியேற்ற வாசிகளின் ஜனநாயக உரிமைகளை பறிக்கப் பயன் படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி, அச்சுறுத்தல் அளவைப் பொறுத்து இந்த நபர்கள் பதிவு செய்யப் பட்டு, கண்காணிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப் பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். குடியேற்ற சமூகங்களை அச்சுறுத்தி, தொழிலா ளர் வர்க்கத்தை பிரித்து, மேலும் அடக்குமுறைக்கான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்.தேவ தூதரின் ‘தெளிவான விதி’கடந்த கோடையில் கொலை முயற்சியில் இருந்து தப்பித்ததை -  “அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்க  கடவுள் என்னை காப்பாற்றினார்” என்று தேவதூதர் தன்மையில் விவரித்தார். பதவியேற்பு விழாவின் ஆடம் பரமும் சடங்குகளும் டிரம்ப்பை கடவுளால் தேர்ந்தெ டுக்கப்பட்ட கிறிஸ்தவ தேசியவாதியாக காட்டும் வகை யில் மத மற்றும் இராணுவவாத சொற்களாலும் சின் னங்களாலும் நிறைந்திருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு முதல் விண்வெளி வீரர் களை அனுப்பி மற்றொரு கிரகத்தில் அமெரிக்க கொடி யை நாட்டுவதே அமெரிக்காவின் “தெளிவான விதி” என்று டிரம்ப் அறிவித்தார்.  பலவீனமான அண்டை நாடுகளின் செலவில் அமெரிக்கா விரிவடைவதற்கான கடவுள் கொடுத்த உரிமையை குறிக்கும் “தெளிவான விதி” முழக்கம் முதன்முதலில் 1844 தேர்தலில் தென் பகுதி அடிமை முத லாளிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஜனநாயக கட்சியால் முன்வைக்கப்பட்டது. பசிபிக் வடமேற்கில் கனடாவுடனான எல்லைப் பிரச்சனையில் ஆக்கிர மிப்பு போக்கை நியாயப்படுத்தவும், 1845இல் டெக்சாசை அடிமை மாநிலமாக இணைப்பதற்கும், இறுதியாக 1846-1848 போரில் மெக்சிகோவின் பாதியை கைப்பற்றி இணைப்பதற்கும் “தெளிவான விதி” பயன்படுத்தப்பட்டது. ஆப்ரஹாம் லிங்கன் இந்த முழக்கத்தை,அடிமைத்தனத்தை விரிவாக்கும் முழக்கம் என்று கண்டித்தார். டிரம்ப் அதை முதலா ளித்துவ பணக்கார வர்க்கத்தின் போர் முழக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.தான் என்ற ஆணவத்தின் உச்சம்“ஃபியூரர்” டிரம்பின்- அதாவது ‘கொடூரர்’ டிரம்ப்பின் பதவியேற்பு உரையில் சுய புகழ்ச்சித் தன்மை தெளிவாக தெரிந்தது. தேசிய அவசரநிலை அறிவிப்புகளின் பெயரில் ஒருதலைபட்சமாக செயல் படுத்தப்பட வேண்டிய பரந்த நடவடிக்கைகளை அறி விக்கும் இயக்கு சக்தியாக தன்னை காட்டிக் கொண்டார். நியூ டீல் என்ற ரூஸ்வெல்ட்டின் “100 நாட்கள்” சட்டமாக்கப்பட்ட முன்மொழிவுகளாக இருந்தது போல அல்லாமல், டிரம்ப் தனது சொந்த அதி காரத்தில் பிறப்பிக்கப்படும் “100 ஆணைகளை” அறி வித்தார். அவரது உரையில் நாடாளுமன்றம் அல்லது தமது குடியரசுக் கட்சி பற்றிய குறிப்பு கூட இல்லை, மாறாக தனது தனித்துவமான மற்றும் தனிப்பட்ட பங்கை மட்டுமே வலியுறுத்தினார்.மாபெரும் மோதல் துவங்குகிறதுஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலிமை யை டிரம்ப் மிகப்பெரிதாக மதிப்பிட்டுள்ளார். டிரம்ப் பும் குடியரசுக் கட்சியினரும் கொண்டு வரப்போகும் பாசிச திட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவிலும், உல களவிலும் எழப்போகும் எதிர்ப்பை அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். டிரம்ப், வில்லியம் மெக்கின்லியை போற்றலாம். ஆனால் மெக்கின்லி 1897 முதல் 1901 வரை, ஏகாதி பத்திய காலகட்டத்தின் தொடக்கத்தில், அமெரிக்கா உலக வல்லரசாக உயர்ந்து வந்த காலத்தில் ஜனாதி பதியாக இருந்தார். டிரம்பின் ஜனாதிபதி பதவி, அமெ ரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவம் முட்டுச்சுவரை எட்டியுள்ள காலகட்டத்தில் வருகிறது. டிரம்ப்பின் பார்வை ஒரு மாயை. ஆனால் அது குறைந்த ஆபத்தானது அல்ல. மற்ற முதலாளித்துவ அரசாங்கங்களிடமிருந்து வரும் தவிர்க்க முடியாத எதிர்ப்புக்கும், முக்கியமாக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்- மக்களின் எதிர்ப்புக்கும் அவரது அரசாங்கம் கொடூர மாகவும் வன்முறையாகவும் பதிலளிக்கும். ஜனநாயக கட்சியினர் இந்த ஆபத்துக்களை நன்கு அறிவர். பதவி விலகும் இறுதி நேரத்தில், ஜனாதி பதி பைடன் தனது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஜெனரல் மார்க் மில்லி, முன்னாள் பொது சுகாதார அதி காரி டாக்டர் அந்தோணி பவுசி மற்றும் ஜனவரி 6,  2021 டிரம்ப்பின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை விசா ரித்த சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். டிரம்ப் நிர்வாகம் தனது அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் வழக்குகளை தொடரும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார்.ஜனநாயகக் கட்சியினர் தங்களை டிரம்ப்பின் கோபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் கவலை கொண்டுள்ளனர். ஆனால் தாக்குதலுக்கு ஆளா கப்போகும் லட்சக்கணக்கான குடியேற்றவாசி களையும், தொழிலாளர் வர்க்கத்தினரையும் பாது காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி எடுக்கவும் மாட்டார்கள். டிரம்ப் தனது உண்மையான சமூக அடித்தளத் துக்கு நேர் எதிர் விகிதத்தில் பணவெறி பிடித்த உலக மகா பணக்காரர்களின் பிரதிநிதியாக வெள்ளை மாளி கைக்குள் நுழைகிறார். பதவியேற்பு விழா, பொது மக்கள் முன்னிலையில் ‘கேபிட்டல்’ கட்டடத்தின் வெளியே நடத்தப்படாமல், ரொட்டண்டா அறைக்குள் நடத்தப் பட்டதே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மை யான தனிமைப்படுத்தப்பட்ட நிலையை காட்டுகிறது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் எலான் மஸ்க் இரண்டு முறை ‘ஹிட்லர் வணக்கம்’ செலுத்தினார். ஆனால் பணக்காரர்களின் சர்வாதிகார ஆர்வத்தை தொழிலாளர் வர்க்கம் ஏற்கவில்லை.  ஜனவரி 20, 2025 அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு வர்க்க மோதலின் காலகட்டத்தை துவக்கி வைத்திருக்கிறது. ‘வேர்ல்டு சோசலிஸ்ட்’ இணைய ஏட்டில் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும்,பத்திரிகையாளர்களுமான பேட்ரிக் மார்ட்டின், டேவிட் நார்த் ஆகியோர்  எழுதியுள்ள கட்டுரையின்  தமிழ் வடிவம் ராஜூ பாய்
2025-01-22 02:03:25.629581
ஜனவரி 21, 2025
ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் தோழர் எல்.கோபாலகிருஷ்ணன் காலமானார்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/comrade-l.-gopalakrishnan,-senior-leader-of-teachers
தமிழ்
UTF-8
திருச்சிராப்பள்ளி, ஜன. 21 - ஆசிரியர் இயக்கங்களின் முதுபெரும் தலைவரும் எல்.ஜி. என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படு பவருமான தோழர் எல்.கோபாலகிருஷ்ணன், தமது 102வது வயதில், ஜனவரி 21 செவ்வாயன்று திருச்சியில் காலமானார்.  ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் முதல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடங்கி மாஸ்டர் வ.ராமுண்ணி மேனன், ஒய்.வி.சுப்பாராவ் முதலான மூத்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் எல்.ஜி.  ஜில்லா போர்டு காலத்தில் ஆசிரியர் நலன்களுக்காகப் போராடிய போது வெகு தூரத்தில் உள்ள கொடைக்கானல் மலை கடைக்கோடி கிராமமான கவுஞ்சிக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் மனந்தளராமல் சங்கப்பணி களைத் தொடர்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பாலசுப்பிரமணியன், என்.வரதராஜன், கே.பி. ஜானகியம்மாள், ஏ.நல்லசிவன், கோ.வீரையன் முதலானவர்களின் உதவியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அமைப்பதிலும், வளர்ப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.மதுரை மேற்கு வட்டாரச் செயலாளராக திறம்பட செயல்பட்டார். கான்பூரில் நடந்த சிஐடியு அகில இந்திய  மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றபோது மதுரை,கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். சங்க ஜனநாயகத்திற்கான போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயமான போது அதில் முன்நின்றார். மாநில அலுவலகச் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழகத்தில் ஜாக்டா, ஜாக்சாட்டோ, ஜாக்டீ, ஜாக்டீ - ஜியோ முதலான கூட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அகில இந்திய அளவில் சிசிஎஸ்டிஓ (CCSTO), இந்திய பள்ளி ஆசிரியர் சம்மேளனம் (STFI) ஆகிய வலிமையான அமைப்புகளை உருவாக்குவதிலும் முன்நின்றார். பல தலைவர்களை உருவாக்கிய தலைவராக விளங்கினார். தான் பணியாற்றிய மதுரை மேற்கு ஒன்றிய ஆசிரியர்களின் குடியிருப்பு ஒன்றிற்கு ‘ராமுண்ணி நகர்’ என்று பெயரிட்டு இயக்க நிறுவனருக்கு மரியாதை செய்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கும் புதிய ஆசிரியன் என்னும் இடதுசாரி, முற்போக்கு பல்சுவை மாத இதழ் மதுரையில் இயங்கியபோது அதன் தொடக்க கால ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் எல்.ஜி. பணியாற்றினார்.   செழுமையான அனுபவங்களைக்கொண்ட தோழர் எல்.ஜி. திருச்சியில் தமது மகள் ஜி.விஜயலட்சுமி இல்லத்தில் வசித்து வந்தார். 2021இல் நூற்றாண்டு கண்ட அவருக்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அகவை 101, 102 எட்டிய டிசம்பர் 15 அன்றும் தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.தலைவர்கள் நேரில் அஞ்சலிஇந்நிலையில், 2025 ஜனவரி 21 செவ்வாயன்று உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, லெனின், மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.இன்று இறுதி நிகழ்ச்சிதோழர் எல்.ஜி. அவர்களது இறுதி நிகழ்வு ஜனவரி 22 (இன்று) திருச்சியில் நடைபெறுகிறது. அஞ்சலி நிகழ்வுகளுக்குப் பிறகு அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது.
2025-01-22 02:03:25.630576
ஜனவரி 21, 2025
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்களும் - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
கட்டுரை
நமது நிருபர்
https://theekkathir.in/News/articles/world/communist-party-of-india-(marxist)-24th-all-india-conference
தமிழ்
UTF-8
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது.இந்தக் கட்டுரை, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டான 1984-இல் எழுதப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த பின்னணியில் அதன் மகத்தான தலைவர்கள் பலர்,  காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து செயல்பட்டார்கள். அந்த அனுபவங்களுடன் இக்கட்டுரையை  (The Marxist Volume: 03, No. 4 October-December, 1985 The Congress Socialist Party & The Communists E M S Namboordiripad) எழுதியுள்ளார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.1 இந்திய சோசலிச இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள (1984)இத்தருணத்தில், அக்கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்துடனான உறவுகள் குறித்த ஒரு விரிவான பார்வை அவசியமாகிறது. 1934 மே மாதம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஆலோச னைக் கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து அக்டோபரில் பம்பாயில் நடந்த முதல் அகில இந்திய மாநாட்டிலும் நானும் பங்கேற்றிருந்தேன். அந்த அமைப்பின் மூலம் காங்கிரஸ் உறுப்பினர்களை தீவிர மயமாக்குவதிலும், 1930களில் ஒரு வலு வான ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்ன ணியை உருவாக்குவதிலும் ஆற்றிய பங் களிப்பை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் இந்திய சோசலிச இயக்கத்தின் தோற்றம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் தொடங்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1912ல் லாலா ஹர்தயாள் எழுதிய இந்தி  மொழி நூலும், ராமகிருஷ்ண பிள்ளை  எழுதிய மலையாள மொழி நூலும் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறாக வெளி வந்தன. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, 1908ல் லோகமான்ய திலகரின் கைது மற்றும் தண்டனைக்கு எதிராக பம்பாய் தொழிலாளர்களின் முதல் அரசியல் வேலைநிறுத்தம் நடந்தது. அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கமும், மார்க்சியத்தின் பர வலும் - ஆகிய இரண்டு முக்கிய அம்சங் கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP) உருவாவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்தன. முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட புரட்சிகர எழுச்சி, தேசிய இயக்கத்தை பல படிகள் முன்னேற்றியது. இந்தியாவின் விடுதலை இயக்க வரலாற்றில் முதல்முறையாக, தொழிலாளர்கள், விவ சாயிகள் மற்றும் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் மகாத்மா காந்தியின் தலைமையிலான ஒத்துழையாமை-கிலா பத் இயக்கத்தின் பின்னால் அணிதிரண்ட னர். தொழிற்சாலை வேலைநிறுத்தங்கள், நகர அளவிலான ஹர்த்தால்கள்(முழு அடைப்பு), பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஆகி யவை நமது அரசியல் வாழ்வின் பொது வான அம்சங்களாயின.2கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றமும் வளர்ச்சியும்இந்தியாவின் சோசலிச இயக்கத்தின் பிறப்பை 1920களின் ஆரம்பத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்தன - அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் பிறப்பும், ஆரம்பகால கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றமும். எந்த நாட்டிலும் முன்னோடிகள் எதிர் கொள்வதைப் போல, இவர்களும் பல தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது. பின்னாளில் வந்த சோசலிஸ்டுகளால் கற்பனை கூட செய்ய முடியாத கடுமை யான சூழ்நிலையில் முதல் தலைமுறை கம்யூனிஸ்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்திய மண்ணில் கம்யூனிசம் வளர்வதைத் தடுக்க பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் திட்டமிட்ட முறையில் மூன்று சதி வழக்குகளை - பெஷாவர், கான்பூர் மற்றும் மீரட் - ஒரு தசாப்தத்திற்குள் தொடுத்த னர். நூற்றுக்கணக்கான போராளி தொழிற்சங்கவாதிகளும், தீவிர காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்டுகள் என்ற முத்திரையில் வேட்டையாடப்ப ட்டனர். நாட்டின் எந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்ட் குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.3 காங்., சோசலிஸ்ட் கட்சியின் தோற்றமும் அதன் பணிகளும்காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரசுக்குள் நடந்த மேற்கண்ட வளர்ச்சிகளின் நேரடி விளைவாக உருவானது. கட்சியை உருவாக்க முதல் முயற்சி 1934 மே மாதம் பாட்னாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் நடந்தது. அதே ஆண்டு அக்டோபரில் பம்பாயில் நடந்த முதல் அகில இந்திய மாநாடும் காங்கிரஸ் அமர்வுக்கு முன்ன தாகவே நடந்தது. இந்த இரு கூட்டங்களும் காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ்  மாநாட்டில் எதிர்கொள்ள இருந்த  போராட்டங்களுக்கான  தயார்படுத்தல் களாக இருந்தன. காங்கிரஸ் மாநாட்டில் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளில் இடது சாரிகளின் நிலைப்பாட்டை தெளிவாக வரையறுக்கும் முயற்சியாக இது அமைந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “ஏன் சோசலிசம்?” என்ற நூல், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்த ஏராளமான ஆவணங்களில் முக்கியமான இடம் பெறு கிறது. வலதுசாரி காங்கிரஸ் தலைவர் களின் திட்டங்கள் மற்றும் நடைமுறை களால் ஏமாற்றமடைந்த இளம் காங்கிரஸ்காரர்களின் கண்களைத் திறந்தது அந்த நூல். காந்தியம், நாடாளு மன்ற பாதை மற்றும் தனிநபர் பயங்கர வாதம் ஆகிய மூன்று கருத்தியல் அணுகு முறைகளை விட மேலானது சோசலி சத்தின் பாதை என்பதை இளம் காங்கிரஸ் காரர்களுக்கு காட்டியது “ஏன் சோசலிசம்?”  என்ற நூல்.4 கம்யூனிஸ்ட் கட்சி- சோசலிஸ்ட் கட்சி உறவுகள் - ஒற்றுமையும் வேறுபாடுகளும்காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே ஏற்பட்ட உறவுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த ஆய்வு முக்கியமானது. 1936 ஜனவரியில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீரட் தீர்மானம் இந்த உறவின் முக்கிய மைல்கல். இரு கட்சிகளுக்கும் இடையிலான தீவிர விவாதங்களின் விளைவாக இந்த ஆவணம் உருவானது. கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு இரண்டாம் உலகப்போர் தொடங்கும் வரை தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஒருமைப்பாடு, விவசாயிகள் மற்றும் மாணவர் இயக்கங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. அதே நேரத்தில், காங்கிரசில் தீவிர பிரிவினரின் வளர்ச்சிக்கும், வலதுசாரி தலைமையின் பிடி தளர்வதற்கும் இது உதவியது. 5சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் - கம்யூனிஸ்ட் எழுச்சி 1947க்குப் பின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி “காங்கிரஸ்” என்ற முன்னொட்டை நீக்கி சோசலிஸ்ட் கட்சியாக மாறியது. அதன் தலைவர்கள் நாடு முழுவதும் முக்கிய எதிர்க்கட்சியாகவும், சில மாநி லங்களில் ஆளும் கட்சியாகவும் மாறும் கனவு கண்டனர். 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இந்த கனவுகளுடன் களமிறங்கினர். ஆனால் தேர்தல் முடிவுகள் அவர் களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக அமைந்தன. சோசலிஸ்ட் கட்சி  படுதோல்வி அடைந்ததோடு மட்டு மல்லாமல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய இடதுசாரி எதிர்க்கட்சியாக உரு வெடுத்தது. திருவாங்கூர்-கொச்சி மற்றும் மதராஸ் ஆகிய இரு தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை அமைக்கும் நிலையை எட்டியது. மேற்கு வங்கம் மற்றும் ஹைதரா பாத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.6கருத்தியல் வேறுபாடுகளும் தொடர் போராட்டங்களும்இந்த தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து சோசலிஸ்ட் கட்சியின் அணி களில் தீவிர கருத்தியல் மற்றும் அரசியல் குழப்பங்கள் தோன்றின. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பல முக்கிய கம்யூனிச எதிர்ப்பு தலைவர்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றனர் - ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதயா இயக்கத்திற்கும்; மசானி, காங்கிரஸ் மற்றும் பின்னர் சுதந்திரா கட்சிக்கும்; பட்வர்தன், சந்நியாச வாழ்க்கைக்கும் சென்றனர். மீதமுள்ளவர்கள் சிக்கலான பாதை யை பின்பற்றினர் - முதலில் சோசலிஸ்ட் கட்சி பிரஜா கட்சியுடன் இணைந்து பிரஜா  சோசலிஸ்ட் கட்சி (PSP) ஆனது, பின்னர் பிஎஸ்பி (PSP) மற்றும் சோசலிஸ்ட் (SP) என உடைந்தது, பின் இரண்டும் SSP ஆக இணைந்தன, அதுவும் உடைந்தது, இறுதியாக 1977ல் அனைத்து சோசலிஸ்ட் குழுக்களும் ஜனதாவில் இணைந்தன, பின்னர் பழைய ஜனதாவிலிருந்து பல குழுக்கள் உருவாயின. கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) என பிளவுபட்டது என்பது உண்மையே. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிலிருந்து நக்சலைட் குழுக்களும், சிபிஐ-யிலிருந்து டாங்கே குழுவும் பிரிந்தன. மேலோட்டமாக பார்க்கும்போது இதை சோசலிஸ்ட் கட்சியின் சிதைவுடன் ஒப்பிடலாம் போல் தோன்றினாலும், உண்மையில் அப்படி இல்லை. சோசலிஸ்ட்களைப் போல் அல்லாமல் கம்யூனிஸ்டுகள் கருத்தியல் மற்றும் அரசியல் கேள்விகளில் போரா டினர். அதனால்தான் சிறிது காலத்திற்குப் பின் இரு முக்கிய கம்யூனிஸ்ட் அமைப்பு களான சிபிஎம் மற்றும் சிபிஐஅனுபவங் களிலிருந்து கற்றுக்கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது.7 வரலாற்றுப் பாடங்கள்இரு கட்சிகள் பின்பற்றிய பாதைகளில் உள்ள இந்த வேறுபாடு, கம்யூனிஸ்டுகள் சர்வதேச மற்றும் தேசிய பிரச்சனைகளில் தொழிலாளி வர்க்கப் பார்வையின் உறுதி யான அடித்தளத்தில் நின்றதால் ஏற்பட்டது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தொடக்கம் முதலே முதலாளித்துவ கொள்கைகளில் ஊன்றி நின்றது. கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணை ந்து காங்கிரசுக்குள் பணியாற்றி அதை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக மாற்ற முயன்ற போதும் இந்த அடிப்படை வேறுபாடு தொடர்ந்தது. ஆக, 1952 முதல் கடந்த 32 ஆண்டு களின் அனுபவங்கள் சிபிஎம், சிபிஐ  மற்றும் பல்வேறு சோசலிஸ்ட் குழுக் களுக்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளன. ஆளும் கட்சியின் அதிகாரத்துவ போக்குக்கு எதிராகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் போராடும் அனை த்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அந்த பாடம்.  முதலாளித்துவத்திலிருந்து, சுயேச்சை யாக உழைக்கும் மக்களை அணிதிரட்டு வதே இதன் அடிப்படை. ஆயினும் கம்யூனிச இயக்கத்திற்கும் சோசலிச இயக்கத்திற்கும் இடையேயான கருத்தியல் வேறுபாடுகளை மறந்துவிட முடியாது. இந்திய கம்யூனிச இயக்கம் ஆறு  தசாப்தங்களுக்கு முன்பு (தற்போது 10 தசாப்தங்கள்) சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாக தோன்றி, ஏற்ற இறக்கங்களுக்கிடையேயும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. தவறு களும் விலகல்களும் ஏற்பட்டாலும், அதன் அடிப்படை குணாம்சமான தொழிலாளி  வர்க்க பார்வையால் அவற்றை சரிசெய்ய முடிந்தது. ஆனால் மாறாக, சர்வதேச தொழி லாளி வர்க்க இயக்கத்தால் பெரிதும் தாக்கம் பெற்றிருந்தாலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தோற்றத்திலிருந்து வந்த பல்வேறு சோசலிச கட்சிகள் பெரும்பாலும் தொழிலாளி வர்க்கம் அல்லாத ஜனநாயக கட்சிகளாகவே இருந்தன, இருக்கின்றன. இரண்டாம் உல கப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இரு போக்குகளும் இணைந்து பெரும் பங்களிப்பை ஆற்றின. ஆனால் போரின் போதும் அதற்குப் பின்னும் பிரிந்து  சென்றன. தற்போது மீண்டும் வளர்ந்து வரும் செயல்பாட்டு ஒற்றுமை நேர்மறை யான வளர்ச்சியே. ஆனால் இரு போக்கு களுக்கும் (தொழிலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் அல்லாதவை) இடை யேயான இடைவெளியை மறந்துவிட முடியாது. இறுதியாக, தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பேரியக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து கருத்தியல் போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்கிறது. அதனால்தான் “வலது” மற்றும் “இடது” விலகல்களுக்கு எதிரான தொடர் கருத்தியல் போராட்டத்திற்கும், விமர்சனம் - சுய விமர்சன முறைக்கும் கட்சி ஆவணங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
2025-01-22 02:03:25.631113
ஜனவரி 21, 2025
டொனால்டு டிரம்ப் 2.0 உலகின் அச்சுறுத்தல்!
தலையங்கம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/headlines/tamil-nadu/donald-trump-2.0-is-a-threat-to-the-world
தமிழ்
UTF-8
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் தனது பதவி யேற்பு உரையில் ‘அமெரிக்காவின் பொற்காலம் துவங்கிவிட்டது’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரது அறிவிப்புகள் உலகின் ‘கஷ்ட காலம்’ துவங்கி விட்டதாகவே உணர்த்துகிறது. அத்துடன் அமெரிக்காவை சிறந்த நாடாக்கவே கடவுள் தன்னைக் காப்பாற்றினார் என்றும் கூறியிருக்கி றார். நம் பிரதமர் மோடி ‘நான் மனிதக் குழந்தையல்ல’ என்று கூறியது நினைவுக்கு வருகிறது.வலதுசாரிகளின் வார்ப்புகளும் வார்த்தைக ளும் செயல்பாடுகளும் முதலாளிகளுக்கானதா கவே அமைகின்றன என்பதை ஹிட்லர் முதலி யோரின் நடவடிக்கைகள் வரலாற்றில் ஏற்கெ னவே நமக்கு தெளிவாக்கியிருக்கின்றன. ஆக்கிர மிப்புச் செயல்பாடுகளுக்கு ஏதாவது ஒரு காரணம் கூறுவது இப்போது டிரம்ப்புக்கும் பொருந்துகிறது.ஏற்கெனவே உலக போலீஸ்காரனாக நடந்து கொள்ளும் அமெரிக்கா, போர் தொடுப்பதையும் மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதையும் செய்து கொண்டிருப்பதை இன்னும் அதிகரிக் கவே ‘உலகின் சக்தி வாய்ந்த ராணுவம் உடைய நாடாக அமெரிக்கா உருவெடுக்கும்’ என்று கூறியி ருக்கிறார் டிரம்ப். ஆனாலும் கூட அவர் தன்னை அமைதியின் தூதுவன் போல் காட்டிக் கொள்ள முயற்சிப்பது நகைப்புக்கு உரியது.உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா, அதற்கு நேர்மாறா கவே செயல்படுகிறது. பாலின சுதந்திரத்தை மறுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அரசின், பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்குதல் (டிஇஐ) திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்து உத்த ரவு பிறப்பித்துள்ளார். ராணுவம் தவிர்த்த மற்ற ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் செயல் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அவரது முத லாவது ஆட்சிக் காலத்தில் (கோவிட்-19 தாக்கு தல் போதே) இத்தகைய மோசமான முடிவை எடுத்தார். தற்போது மீண்டும் அதைத் தொடங்கி யுள்ளார். அதுபோலவே பாரீஸ் ஒப்பந்தத்திலி ருந்தும் முன்போலவே வெறியேறுவதையும் செய் துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே தேசிய ஆற்றல் அவசர நிலை என்ற பெயரில் கச்சா எண் ணெய், எரிவாயு, இயற்கை வளங்களை எடுப்பதை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளார். இவை யாவும் பசுமைக்கு  எதிரான நடவடிக்கை என்பதுடன் முத லாளிகளுக்கான லாப வேட்டைக்கு வழி ஏற்படுத் துகின்றன. மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டதும் அதன் மற்றொரு முடிவுதான்.ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டி யிருக்கும் டிரம்ப் மக்களால் மக்களுக்காக அல்ல, முதலாளிகளுக்காக முதலாளிகளால் செய்யப் படும் ஆட்சி என்பதையே தனது நடவடிக்கைகள் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.
2025-01-22 02:03:27.527088
ஜனவரி 21, 2025
தீக்கதிர் உலக செய்திகள்
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/india/criticism-of-elon-musk's-nazi-salute
தமிழ்
UTF-8
நாஜிக்களின் சைகையில் வணக்கம்  எலான் மஸ்க் மீது விமர்சனம்டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் நாஜிக்கள் பாணி சல்யூட்  செய்துள்ளார்.எலான் மஸ்க் தீவிர வலதுசாரியாகவும் வலதுசாரி கட்சிகளின் ஆதரவாளராகவும் உள் ளார். ஆதரவாளர்கள் மத்தியில் பேசி நன்றி தெரி வித்த மஸ்க் மக்களை நோக்கி நாஜி பாணி சல்யூட்  அடித்தார். இதற்கு கடுமை யான எதிர்ப்புகளும் விமர்ச னங்களும் எழுந்தது. இந்நிலையில் தன்னை விமர்சித்தவர்களை மஸ்க் விமர்சித்துள்ளார். ஹிட்லர் ஆதரவாளர் என நீங்கள் விமர்சிப்பதில் சுவாரஸ்யமே இல்லை. இன்னும் மோசமாக விமர்சிக்க முயற்சி செய்யுங்கள் என  தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு  வரி விதிக்க வேண்டும்உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடக்கும் கட்டிடத்திற்கு வெளியே பெரும் பணக்காரர்களுக்கு/கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதிக்கவேண்டும் என கிரீன்பீஸ் என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவி னர் சுவரொட்டி ஒட்டி பிரச்சா ரம் செய்துள்ளனர்.இயற் கையை பாதுகாக்கவும், காலநிலைமாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகவும், பெரும் பணக்காரர்களுக்கு அரசுகள் வரி விதிக்க வேண்டும், பசுமையான எதிர்காலத்திற்காக நிதி கொடுங்கள் என அந்த சுவரொட்டிகளில் வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன.உலகில் உள்ள முதல் 1 சதவீத கோடீஸ்வரர்கள் தான் பெரும்பகுதியான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-22 02:03:27.555045
ஜனவரி 21, 2025
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்!
உலகம்
நமது நிருபர்
https://theekkathir.in/News/world/america/united-states-is-out-of-paris-treaty-who
தமிழ்
UTF-8
அமெரிக்கா, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும், உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேறுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதை அடுத்து, சில முக்கிய அறிவிப்புகளும், உத்தரவுகளும் வெளியானது. அதன்படி, கடந்த 2021-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் சுமார் 1,600 ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், அது தொடர்பாக தேசிய அவசர நிலையாக அறிவித்து, அந்த உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்கா, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும், உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேறுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்; ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கு தடை; சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும் எனவும் அரிவித்துள்ளார்.
2025-01-22 02:03:27.557300
ஜனவரி 21, 2025
விளையாட்டு...
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/cricket/america's-coop's-shock-failure
தமிழ்
UTF-8
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - அமெரிக்காவின் கவுப் அதிர்ச்சி தோல்வி113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகி றது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற மகளிர்  ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள  முன்னணி அதிரடி வீராங்கனையான அ மெரிக்காவின் கோகா கவுப், தரவரிசை யில் 11ஆவது இடத்தில் உள்ள ஸ்பெ யினின் படோசாவை எதிர்கொண்டார். படோசாவை விட கவுப் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்ற நிலை யில், யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அதிரடியுடன் ஆதிக்கம் செலுத்திய படோசா 7-5,  6-4  என்ற செட் கணக்கில் அபார  வெற்றி  பெற்று அரையிறுதிக்கு முன்னேறி னார். 2023ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான கோகா கவுப் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். ஜுவரேவ் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவ ரேவ்,  தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பவுலை எதிர் கொண்டார். ஆரம்ப செட் பாயிண்ட் முதலே வலுவான ஆட்டத்தை வெளிப் டுத்திய ஜுவரேவ் 7-6 (7-1), 7-6 (7-0), 2-6, 6-1 என்ற செட் கணக்கில் பவுலை  வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற் றார்.இனி மழை விளையாடும்ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களாக மெல்போர்னில் வெயில் கொளுத்தியது. இதனால் போட்டி சிக்கலின்றி நடைபெற்றது. இத்தகைய சூழலில் புதன்கிழமை முதல் மெல்போர்ன் நகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியா கியுள்ளன. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டினாலும், அரையிறுதி ஆட்டங்கள், இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி  நடைபெறும் மைதானங்கள் உள்ளரங்க வசதி இல்லாதவை (2024இன் கணக்குப் படி) ஆகும். இந்த ஆண்டு  உள்ளரங்க வசதி செய்துள்ளதா என்பது குறித்து திடமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் மிகச் சிறந்த வீரர் விராட் கோலிசவுரவ் கங்குலி ஆதரவுஉலகின் மிகச்சிறந்த கிரிக் கெட் வீரர் விராட் கோலி என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.  மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிசிசிஐ முன்னாள் தலை வரும், இந்திய அணியின் முன்னாள்  கேப்டனுமான கங்குலி பேசுகையில், விராட் கோலி வாழ்நாள் சாதனை படைத்த சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக் கெட் விளையாட்டில் 81 சதங்களை அடிப்பது என்பது நம்பமுடியாத ஒன்று. அவர் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து (ஒருநாள்) வீரர். ஒவ்வொரு வீரருக்கும் பலமும் பலவீனமும் இருக்கும். இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி பற்றி எந்த கவலையும் இல்லை. இந்திய அணியில் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து  வீர ராக கோலி இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்று தெரியும். ஆனால் டி-20 உலகக்கோப்பையில் தோல்வியே பெறாமல்  வென்றது. அதேபோல ஒரு நாள்  கோப்பையில் இறுதிப் போட்டியில்  மட்டுமே இந்தியா தோற்றது.  தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி சிறந்த வெள்ளைப் பந்து  அணியாக இருக்கின்றது. என்னைப்  பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி யின் சிறந்த அணி இந்தியாதான். கோலியை போன்று ரோகித் சர்மா  அற்புதமான வெள்ளை பந்து வீரர்  ஆவார். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி யதும் நீங்கள் வித்தியாசமான ரோகித்தை பார்ப்பீர்கள்” என அவர் கூறினார். ரசிகர்கள் மகிழ்ச்சி பிசிசிஐ தலைவராக இருந்த போது  கங்குலிக்கும் - விராட் கோலிக்கும் ஆகவே ஆகாது. தற்போதைய சூழ்நிலையில் விராட் கோலியை கங்குலி பாராட்டி இருப்பது ரசிகர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
2025-01-22 02:03:27.790551
ஜனவரி 21, 2025
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி!
விளையாட்டு
நமது நிருபர்
https://theekkathir.in/News/games/tennis/australian-open-tennis-series-rohan-bopanna-pair-loses
தமிழ்
UTF-8
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தனர்.‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடியுடன் மோதியது.இந்த போட்டியின் முதல் செட்டை 6க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களையும் 4 க்கு 6, 9 க்கு 11 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இறுதியில் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
2025-01-22 02:03:27.791048
ஜனவரி 21, 2025
யுஜிசி வரைவு விதிகளைத் திரும்பப் பெற வேண்டும்! கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேறியது
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/we-cannot-accept-the-attempt-to-introduce-religious,-capitalists-into-higher-education
தமிழ்
UTF-8
திருவனந்தபுரம், ஜன. 21 - 2025 ஆம் ஆண்டிற்கான யுஜிசி-யின் வரைவு வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. முன்னதாக, இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “யுஜிசி வரைவு விதிகள், கூட்டாட்சிக் கோட்பாட்டி ற்கு புறம்பாக உள்ளது; அரசியலமைப்பின் உணர்வை அது பிரதிபலிக்கவில்லை என கேரள சட்டப்பேரவை மிகத்தெளிவாக கருதுகிறது” என்று குறிப்பிட்டார். ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை! “பல்வேறு மாநிலங்களில் உள்ள பல் கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி செயல்படுகின்றன. அரசியலமைப்பின் ஏழாவது அட்ட வணையானது, பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் மேற்பார்வையிடு வதற்குமான அதிகாரத்தை மாநில அரசாங்கங்களிடமே வழங்கியுள்ளது. 1977-ஆம் ஆண்டின் 42-ஆவது அரசிய லமைப்புத் திருத்தம், உயர்கல்வி உள்ளிட்ட கல்வியை ஒத்திசைவுப் (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியலுக்கு மாற்றினாலும், உயர் கல்விக்கான தரங்களை ஒருங்கிணைத்து நிர்ணயிப்பதில் மட்டுமே ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டி னார்.மாநிலங்களை கேட்காமலேயே விதிகளை வகுப்பதா?ஆனால், இந்த உண்மைகளைப் புறக்கணித்து, மாநில அரசாங்கங்களுடன் விவாதிக்காமல், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசுகளின் கருத்துகளை முற்றிலும் விலக்கிவிட்டு, வரைவு வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், பல்கலைக்கழ கங்களின் ஜனநாயக செயல்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்கு தேவை யற்ற அதிகாரத்தைக் கொடுக்கின்றன; உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதியில் 80 சதவிகிதத்தைப் பங்களிக்கும் மாநிலங்களின் உரிமையை முற்றிலுமாக ஓரங்கட்டுகிறது.உயர்கல்வியை  வணிகமயமாக்கும் திட்டம்அதேபோல கல்வித்துறை வல்லுநர்களையும் கருத்தில் கொள்ளாமல், தனியார் துறையைச் சேர்ந்தவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கும் யுஜிசி வழிகாட்டுதலானது, ‘உயர்கல்வித் துறை யை வணிகமயமாக்கும் நடவடிக்கையாகும்’ என்று பினராயி விஜயன் விமர்சித்தார். மேலும், “உயர்கல்வித் துறையில் ஜனநா யக விழுமியங்களை அழித்து, உயர்கல்வி  நிலையங்களை ‘மத மற்றும் வகுப்பு வாதக் கருத்துக்களைப் பரப்புபவர்களின் கட்டுப்பாட்டிற்குள்’ கொண்டு வருவ தற்கான நகர்வுகளின் ஒரு பகுதியாகவே 2025-ஆம் ஆண்டிற்கான யுஜிசி வரைவு விதிமுறைகளைப் பார்க்க முடிகிறது” என்று குற்றம் சாட்டினார். விதிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும், யுஜிசியும் எடுத்துள்ள நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது; அது திருத்தப்பட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவை கருதுகிறது என்ற முதல்வர் பினராயி விஜயன், “2025-ஆம் ஆண்டுக்கான யுஜிசி வரைவு விதிகளை உடனடியாக திரும்பப் பெறவும், மாநில அரசுகள் மற்றும் கல்வித்து றை நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கவலைகளை பரிசீலித்து, அனைத்துத் தரப்பினருடனும் விரிவான விவாதங்களை நடத்தி அவர்களின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொண்ட பின்னரே, புதிய விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவை ஒருமனதாக ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறது” என்றும் தெரிவித்தார்.
2025-01-22 02:03:32.442117
ஜனவரி 21, 2025
தீக்கதிர் முக்கிய செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/rss-leader-mohan-bhagwat-is-the-history-of-india
தமிழ்
UTF-8
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய நாட்டின் வரலாற்றை கொச்சைப்படுத்துகிறார். அவர் தனது பொய்யான கூற்றுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதையும், சுதந்திரத்துக்கான தியாகத்தை இழிவுபடுத்துவதையும் நாங்கள் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவசக் கல்வி, இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விடுவார்கள். தில்லி மக்களுக்காக பாஜக அறிவித்துள்ள 2 வாக்குறுதி அறிவிப்புகளை நம்புவது தில்லிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆபத்தானது.டிரம்பின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தனக்கு “முதல் வரிசை” கிடைத்ததாக முட்டாள்தனமான கூற்றை முன்வைப்பது ஏன்?பாஜக இன்னும் 2024 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் செலவு அறிக்கையை இன்னும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.த குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி போராட்டம் நடத்தப்படும் என்று பஞ்சாப் - ஹரியானா மாநில விவசாயிகள் அறிவித்துள்ளனர்.மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தனது கோரிக்கையை அதிகாரிகள் கேட்கவில்லை எனக் கூறி ஒருவர் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே தனது வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தினார்.கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைப் அலிகான் செவ்வாயன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் செவ்வாயன்று பாஜகவில் இணைந்தனர்.
2025-01-22 02:03:32.443143
ஜனவரி 21, 2025
பெங்களூரில் கொடூரம் பேருந்துக்கு காத்திருந்த பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/a-girl-who-was-waiting-for-a-bus-was-sexually-assaulted-by-a-gang
தமிழ்
UTF-8
பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூரின் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் ஜனவரி 19ஆம் தேதி இரவு 11 மணியள வில் யேலஹங்கா செல்லும் பேருந்துக் காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கிருந்த நபரிடம் பேருந்து வருகின்ற நேரம் குறித்து விசாரித்துள்ளார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் பேருந்து நிற்கும் வேறு நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு குடோனிற்கு பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். குடோனில் உள்ள தனது ஆட்களுடன் பெண்ணை 3க்கும் மேற்பட்டவர்கள் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பெண்ணிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டப் பொருட்களை அந்த கும்பல் திருடியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார ளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம்  குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஜனவரி 19ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. எனினும் 2 நாட்களுக்குப் பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை எத்தனை பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025-01-22 02:03:32.443801
ஜனவரி 21, 2025
பாஜக ஆளும் உ.பி.,யில் முஸ்லிம் அமைப்பினரை குறிவைத்து போலி என்கவுண்ட்டர்?
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/tension-in-shamli-after-4-people-were-shot-dead
தமிழ்
UTF-8
உத்தரப்பிரதேச மாநி லத்தில் கோரக்பூர் மடத்தின் சாமியாரான ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு  கடந்த 7 ஆண்டுகளில் அம்மாநில காவல்துறையின் போலி என்கவுண்டர்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. அதில் பலியானவர் களின் எண்ணிக்கை 600க்கும் மேல்  இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. குறிப்பாக ஏதேனும் குற்ற வழக்கில் முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் சிக்கினால், அவர்களை விசாரணையின்றி என்கவுண்டர் செய்யும் அராஜகப் போக்கை உத்தரப்பிரதேச பாஜக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், ஷாம்லி மாவட்டத்தின் ஜின்ஜானா பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த அர்ஷத்தை பற்றி  துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச காவல்துறை சமீ பத்தில் அறிவித்து இருந்தது. திடீ ரென அர்ஷத்தை செவ்வாய்க்கிழ மை அன்று சுட்டுப்பிடிக்க முற்பட்ட போது காவல்துறைக்கும் - அர்ஷத் ஆதரவு தரப்பிற்கும் இடையே  துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக வும், இதில் அர்ஷத், மஞ்சீத், சதீஷ் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.போலி என்கவுண்டர்“முஸ்தஃபா காகா” என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் மீதான குற்ற வழக்கு தொடர்பாக இதுவரை காவல்துறை எவ்வித தகவலையும் வெளியிட வில்லை. ஆனால் ஜின்ஜானா பகுதி கொள்ளைச் சம்பவத்தில் அர்ஷத்திற்கு தொடர்பு இருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை கூறி, சன்மான அறிவிப்பை வெளியிட்டு, அர்ஷத் மட்டுமின்றி “முஸ்தஃபா காகா” என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 3 பேரையும் என்கவுண்டர் செய்துள்ளது. முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த வர்கள் என்பதன் காரணமாகவே உத்தரப்பிரதேச காவல்துறை மத பாகுபாட்டுடன் என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்துள்ள தாக சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  குறிப்பாக இந்த விவகாரத்தை மறைக்க “முஸ்தஃபா காகா” முஸ்லிம் அமைப்பினர் நடத்திய தாக்குதலில்  ஜின்ஜானா காவல்துறை ஆய்வாளர் சுனில் துப்பாக்கிச்சூட்டில் படுகாய மடைந்ததாகவும், அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் உத்தரப்பிரதேச காவல்துறை கூறியுள்ளது. ஆனால் அவர் எந்த மருத்துவமனையில் உள்ளார், துப்பாக்கிக் குண்டு காயம் மற்றும் சிகிச்சையின் தன்மை குறித்த விவரங்களை உத்தரப்பிரதேச காவல்துறை மறைத்து வருகிறது. இதன்மூலம் ஜின்ஜானாவில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் முஸ்லிம் அமைப்பின ரை குறிவைத்து நடத்திய போலி என்கவுண்டர் என்பது நிரூபண மாகியுள்ளது. இதனால் ஷாம்லி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
2025-01-22 02:03:32.444435
ஜனவரி 21, 2025
பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கள்ளக் கூட்டணி அம்பலமாகிறது?
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/mamata-banerjee-started-the-appeal-drama
தமிழ்
UTF-8
மேல்முறையீட்டு நாடகத்தை துவங்கிய மம்தா பானர்ஜிகொல்கத்தா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரிய வந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக மேற்குவங்க காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். மருத்துவ மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக கொல்கத்தாவில் சுமார் 50 நாட்கள் தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. நாடு  முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆர்.ஜி.கர்  மருத்துவமனை தலைவர் (டீன்) சந்தீப் கோஷ் பதவி விலகினார்.சிபிஐ விசாரணைமருத்துவ மாணவி கொலை வழக்கை மேற்குவங்க காவல்துறை விசாரித்து வந்தது.  ஆனால் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 2024  அக்டோபர் 7ஆம் தேதி கொல்கத்தா விசா ரணை நீதிமன்றத்தில் (சீல்டா) சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடு பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2025 ஜனவரி 18ஆம் தேதி சீல்டா நீதிமன்ற நீதிபதி அனிபர் தாஸ்,”சஞ்சய் ராய் குற்றவாளி” என தீர்ப்பளித்து, ஜனவரி 20ஆம் தேதி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பிருந்தா காரத் கண்டனம் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கப் படும் என நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவி யது. ஆனால் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படு த்தியது. “இந்தியா” கூட்டணிக் கட்சிகள், அர சியல் விமர்சகர்கள், மகளிர் அமைப்புகள் என நாடு முழுவதும் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது அல்ல என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், “ஒரு தனி நபர் ஒரு பெண்ணை பொது இடத்தில், பிறரது ஒத்து ழைப்பு இல்லாமல் எப்படி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முடியும்? சிபிஐ குற்றப் பத்திரிகையில் இதுதொடர்பாக சாதாரண குறிப்புகள் கூட இல்லை. மாநில அரசாங்கத் தின் பாதையிலேயே சிபிஐ விசாரணை மேற் கொண்டுள்ளது. அதனால் தான் கொல்கத்தா மாணவி படுகொலை விவகாரத்தில் வழங்கப் பட்ட தண்டனை திருப்தியற்றதாக உள்ளது” என கண்டனம் தெரிவித்தார்.மேற்கு வங்க காவல்துறை -  சிபிஐ மறைமுக கூட்டணிபிருந்தா காரத் கூறியதன் பின்னணியில் ஒரு முக்கிய சந்தேகம் வலுத்தது. அதாவது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில் மேற்கு வங்க காவல்துறை - சிபிஐ மறைமுக கூட்டணி வைத்து இருப்பதாக சந்தேகம் வலுவாக கிளம்பியுள்ளது. சஞ்சய் ராயிடம் மேற்குவங்க காவல்துறை எப்படி விசாரணை நடத்தியதோ, அதே முறையில் தான் சிபிஐ அமைப்பும் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிதாக எவ்வித விசாரணை தகவலையும் சிபிஐ வெளியிடவில்லை.  குறிப்பாக பிருந்தா காரத் எழுப்பும் முக்கிய கேள்வியான,”ஒரு தனி நபர் ஒரு பெண்ணை பொது இடத்தில், பிற எந்த ஒத்து ழைப்பும் இல்லாமல் எப்படி பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்ய முடியும்?” என்பது தொடர்பாக சிபிஐக்கு ஏன் சந்தேகம் எழவில்லை? என்ற கேள்வியும் பரவலாக கிளம்பின. அதே போல சஞ்சய் ராய், “நான்  பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட வில்லை. என்னை வழக்கில் சிக்க வைத்துள்ள னர். சிறையில் அடித்து துன்புறுத்தினர். பல் வேறு ஆவணங்களில் என்னிடம் வலுக்கட்டாய மாக கையெழுத்து பெற்றனர்” என சிபிஐ விசாரணை வாக்கு மூலத்திலும், நீதிமன்றத்தி லும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் சஞ்சய் ராய் நீதி மன்றத்தில் கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி  நிறுவனம் கூறியது. சிபிஐ விசாரணையில் ஐபி எஸ் அதிகாரி தொடர்பு குறித்து சஞ்சய் ராய் கூறாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதையெல்லாம் விசாரணையில் எடுத்துக் கொள்ளாததும், குற்றப்பத்திரிகையில் இணைக்காததும் மேற்குவங்க காவல்துறை - சிபிஐ மறைமுக கூட்டணி எனும் தோற்றத்தை வலுவாக உருவாக்கியுள்ளது.யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி?இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக சஞ்சய் ராய் நீதி மன்றத்தில் கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியது. அந்த  ஐபிஎஸ் அதிகாரி யார் என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தக வலும் வெளியாகவில்லை. ஆனால் திரிணா முல் காங்கிரஸ், பாஜக என ஏதாவது ஒரு கட்சிக்கு சஞ்சய் ராய் கூறும் ஐபிஎஸ் அதிகாரி நெருக்கமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.பாஜக மவுனம் - கள்ளக் கூட்டணிதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி “இந்தியா” கூட்டணியில் இருந்தாலும் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்டுள்ள  தண்டனை பாரபட்சமானது என்றும், மேற்குவங்க காவல்துறை - சிபிஐ சரி யாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்ப தால் சீல்டா நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகை யில் தீர்ப்பு வழங்கியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மேற்குவங்க எதிர்க்கட்சியான பாஜகவோ பெரி யளவில் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. பாஜகவிற்கு நெருக்கமான தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவரான ரேகா சர்மா  மூலம் கண்டனம் தெரிவித்து ஓடி ஒளியும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின்  இந்த மவுனம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருப்பதான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.மம்தா அரசு பல்டிமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதில் நிலையாக இருந் தோம். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை.  வழக்கு மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை” என  பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தி லும், தங்கள் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை மறைக்க மழுப்பலாக பேசினார். தொடர்ந்து சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மேற்கு வங்க அரசு கொல்கத்தா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க விடாமல் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கள்ளக் கூட்டணி தடுத்துள்ளது. வரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் பாலி யல் வன்முறை கூடாரங்களாக உள்ள பாஜக ஆளும் மாநிலங்களின் வரிசையில் மேற்கு வங்கமும் இணையும். தற்போதைய சூழ்நிலையில் மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களின் அட்டூழியத்தால் பெண்களுக்கு பாது காப்பற்ற மாநிலமாக உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
2025-01-22 02:03:32.445080
ஜனவரி 21, 2025
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் என 14 பேர் சுட்டுக்கொலை
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/14-people-shot-dead-as-maoists-in-chhattisgarh
தமிழ்
UTF-8
சத்தீஸ்கர் மாநிலத்தின் காரியா பந்த் மாவட்டம் மெயின்பூர் வனப்பகுதி ஒடிசா மாநில எல்லையில் உள்ளது. இந்த வனப் பகுதியில் மாவோ யிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உள வுத்துறை தகவல் கிடைத்ததாக  கூறப்படுகிறது.  திங்களன்று மாலை சிஆர்​பிஎப் வீரர்கள் மெயின்பூர் வனப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது மறைந்​திருந்த மாவோயிஸ்ட்​கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனவும் சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் மாவோயிஸ்ட்கள் 14 பேர் உயிரிழந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த தாக்குதலில் ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்த மாவோ யிஸ்ட் குழுவின் முக்கியப்புள்ளி  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தாக சிஆர்பிஎப் கூறியுள்ளது. 14 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறினாலும் அவர்களின் விபரம், உடல் எங்கே இருக்கிறது என்ற தகவலை சிஆர்பிஎப் வெளியிடவில்லை. இத னால் சத்தீஸ்கரில் சுட்டுக்கொல்லப்பட்ட வர்கள் மாவோயிஸ்ட்கள் அல்ல என்ற செய்திகளும்  வெளியாகியுள்ளன.
2025-01-22 02:03:32.445697
ஜனவரி 21, 2025
தீக்கதிர் விரைவு செய்திகள்
மாநிலம் - தில்லி
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/delhi/a-case-against-the-film-crew-including-azhippu-rishabh-shetty
தமிழ்
UTF-8
“காந்தாரா - 2” திரைப்படத்திற்காக வனப்பகுதி அழிப்பு ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் “காந்தாரா: சாப்டர் 1” என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவின் கவுகுடா வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தியதாகவும், வனப்பகுதிக்கு தீ வைத்து சுற்றுச்சூழ லை மாசுபடுத்தியதாகவும்  கவுகுடா வனப் பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ள னர். மேலும் வனப்பகுதியில் தீ வைப்ப தன் காரணமாக அங்குள்ள விலங்கு கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரு வதாகவும், படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, போராட்ட எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மோதல் இதனிடையே படக்குழுவுக்கும், கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் கவுகுடா கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இதையடுத்து படக்குழு மீது எசலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படை யில் படப்பிடிப்பின்போது வெடிப்பொருட் கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவ தாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தில்லி சட்டமன்ற தேர்தல் 699 வேட்பாளர்கள் போட்டி70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் தில்லி சட்டமன்ற தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ள தாக மாநில தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டதே அதிக பட்ச எண்ணிக்கையாக இருந்தது. கெஜ்ரிவால் தொகுதியில் அதிகம் தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி யின் கூற்றுப்படி, தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணை ப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் உள்ள னர். புதுதில்லியைத் தொடர்ந்து ஜனக்புரி 16 வேட்பாளர்களுடன், ரோஹ்தாஸ் நகர் கார்வால் நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் உள்ளனர். அதே போல படேல் நகர், கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா 5 பேர் வீதம் குறைந்த எண்ணிக்கை யிலான வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரோடு கிழக்கு:  பிப். 5-இல் பொது விடுமுறை!சென்னை, ஜன. 21 - ஈரோடு கிழக்கு சட்டப்பே ரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடரந்து, வேட்புமனுத் தாக்கல் நடந்து முடிந்து, மொத்தம் 47 பேர் வேட்பா ளர்களாக களத்தில் உள்ள னர். பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகு திக்கு உட்பட்ட பள்ளிகள்,  கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங் களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகு திக்குட்பட்ட பகுதியில் வாக் காளராக இருப்பவர்கள் மாநி லத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர் களுக்கும் இந்த விடு முறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களின் கல்வி மீதான யுத்தமே யுஜிசி-யின் புதிய விதிகள்!சென்னை, ஜன. 21 - “ஒன்றிய பாஜக அரசின் யுஜிசி விதி களை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய பட்டங் கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது. பல்கலைக்கழ கங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார். மேலும், “இந்த செயல் தமிழ கத்தின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் சர்வாதிகாரம் மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமை யும் கிடையாது’ எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டி பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது. ஒன்றிய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப் பட்டு படித்து வாங்கிய பட்டங்கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங் கேற்க முடியாது. பல்கலைக்கழ கங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர். அஞ்சமாட்டோம் மோடி அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என மிரட்டியபோது முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டது. அதன்  விளைவுகளை இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திடா விட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள். இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திமுக அரசு அஞ்சாது. பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும். இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார்.136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் தீவிரம்தமிழக பாடநூல் கழகம் தகவல்சென்னை, ஜன.21- தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் 136 தமிழ்  நூல்கள் பிற மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலன் கருதியும், தமிழ் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நூல்கள் வெளி யிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றுள் ளன. அந்த வகையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சி-2025 நிறைவு விழாவில் தமிழக பாடநூல்  கழகம் தயாரித்த 75 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டார். திசைதோறும் திராவிடம் திட்டத்தில் 15 நூல்கள், முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டத்தில் 32, நாளைய தலைமுறைக்கு நாட்டுடமை நூல்கள் பிரிவு மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தில் தலா 3, நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பிரிவில் 2, சிறார் களுக்கு உலக இலக்கியங்கள் பிரிவில்  8, செவ்வியல் இலக்கியங்கள் எளிய உரைகள், அரிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் தொகுதியில் தலா 1, உலக மொழிகளில் பெரியார் சிந்தனை கள் மொழிகள் 10 என மொத்தம் 75 புத்த கங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல், தமிழக அரசின் மானி யத்தின் வாயிலாக முதல்கட்டமாக மொழிப் பெயர்க்கப்பட்ட 30 நூல்களும் வெளியிடப்பட்டன. அதன்படி பத்துப் பாட்டு நூல்கள், ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி மலாய் மொழியிலும், பாரதிதாசனின் கவிதைகள், எஸ்.ராம கிருஷ்ணனின் இரண்டு குமிழிகள் அரபி மொழியிலும், பெரியார் தன் காலத்தை தாண்டி சிந்தித்த முன்னோடி, ஜெய காந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம், பூமணியின் பிறகு, ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் ஆகி யவை கொரிய மொழியிலும் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பெருமாள் முருகனின் பூனாச்சி ஆர்மீனிய மொழியிலும், ‘இந்து தமிழ்திசை’ நாளிதழுடன் இணைந்து வெளியிட்ட மாபெரும் தமிழ்  கனவு குஜராத்தி, பெங்காலி மற்றும் இந்தியிலும், யதுகிரி அம்மாள் எழுதிய  பாரதி நினைவுகள், கவிஞர் வைரமுத் துவின் கருவாச்சி காவியம், சு.தமிழ்ச் செல்வியின் அளம் மலையாளத்திலும், மலாய் மொழியில் 3 நூல்களும், சுவா ஹிலி, கன்னடம், மராத்தி மொழிகளில் தலா 1 நூலும் வெளியிடப்பட்டது என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக் கிறார்.
2025-01-22 02:03:32.446320
ஜனவரி 21, 2025
ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுப்பதா?
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/in-the-speakers'-conference,-mr.-dad-walks-out
தமிழ்
UTF-8
சென்னை, ஜன. 21 - பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப் பேரவை தலைவர்கள் (சபாநாய கர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு. பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். அப்பாவு பேசியபோது, தமிழ கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார்.  தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் கவலை அளிக்கின்றன. அவர் அர சியலமைப்புச் சட்ட விதிகளை கேலிக்கூத்து ஆக்கி வருகிறார். தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தொடர்ந்து அவமதிக்கிறார். எதிர்க் கட்சிகள் ஆளும் ஏனைய மாநி லங்களிலும் ஆளுநர்களால் இது போன்ற செயல்கள் நடக்கின்றன. ஆரோக்கியமான ஜனநாயகம் செழிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தை பொருத்தமான முறை யில் திருத்துவதற்கான எனது கருத்துகளை இந்த மாநாடு அங்கீ கரிக்க வேண்டும். ஒன்றிய - மாநில அர சுகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுவதற்கு பதில் ஆளுநர்கள் தங்களது அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை. இந்த காரணத்துக்காக ஆளுந ரின் பங்கு குறித்து பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆளுந ரின் அரசமைப்புச் சட்ட மீறல்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் தனது சமூக நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. எனவே, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரை ‘நீக்க’ மாநில சட்ட மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 156-வது பிரிவிலிருந்து குடியரசுத் தலை வர் ஒப்புதல் பேரில் ஆளுநர் பத வியில் இருப்பார் என்ற வார்த்தை யை நீக்க வேண்டும். இவ்வாறு அப்பாவு பேசினார். இருப்பினும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசிய கருத்துகளுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்  ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசி யது அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது என்று கூறினார். ஆளுநர் குறித்து கருத்து தெரி விப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மு. அப்பாவு, “இந்த மாநாட்டில் இதைப் பற்றிப் பேச முடியாவிட்டால், வேறு எங்கு பேச முடியும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
2025-01-22 02:03:32.446965
ஜனவரி 21, 2025
22 சதவிகித ஈரப்பதத்துடன் கூடிய நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு
மாநிலம் - தமிழ்நாடு
நமது நிருபர்
https://theekkathir.in/News/states/tamil-nadu/study-on-procurement-of-paddy-with-22-percent-moisture-content
தமிழ்
UTF-8
சென்னை, ஜன.21- டெல்டா மாவட்டங்களில் 17 விழுக்காடு ஈரப்பதத்துடன் நெல் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தொடர் மழை மற்றும் பனி மூட்டத்தைக் கணக்கில் கொண்டு 22 சதவிகித ஈரப்பதத்துடன் கூடிய நெல்லையும் கொள்முதல் செய்திட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கியதாலும் இப்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. வானம் மேகமூட்டத்துடன், தொடர்ந்து பனிப்பொழிவுடன் உள்ளதால் விவசாயிகள் நெல்லை உலரவைக்க சிரமப்படுகின்றனர்.  இதனால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  எனவே, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 விழுக்காடு ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து, 22 விழுக்காடு ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், ஒன்றிய அரசின் உணவுத்துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று ஆய்வுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஒன்றிய அரசின் உணவுத்துறையின் கீழ் செயல்படும் சேமிப்பு, ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த 2 உதவி இயக்குநர்கள், 2 தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட குழு தமிழகம் வர உள்ளது. தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசின் உணவு அமைச்சகத்திற்கு அவர்கள் சமர்ப்பிக்க உள்ளனர்.
2025-01-22 02:03:32.447575