வெளியிட்ட தேதி
stringclasses 70
values | தலைப்பு
stringlengths 9
141
| செய்தி-வகை
stringclasses 30
values | எழுத்தாளர்
stringclasses 1
value | இணைப்பு
stringlengths 61
178
| மொழி
stringclasses 1
value | குறிமுறைத் தரநிலை
stringclasses 1
value | உள்ளடக்கம்
stringlengths 0
14.7k
⌀ | சேகரிக்கப்பட்ட தேதி
stringlengths 26
26
|
---|---|---|---|---|---|---|---|---|
ஜனவரி 1, 2025 | தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவானதில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு - அ.அன்வர் உசேன் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/infrastructure-projects-in-tamil-nadu--the-communist-party's-role-in-formation | தமிழ் | UTF-8 | தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்களை உருவாக்கிட வலுவான முயற்சிகள் செய்தது போலவே பல உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஈடுபட்டனர். மின் திட்டங்கள், அணைகள், நீர் நிலைகள், புதிய மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், ரயில்கள் என பல திட்டங்கள் உருவாக கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி இயக்கங்களை நடத்தியது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும் மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்ததன் மூலம் இந்த திட்டங்கள் சாத்தியமாயின. அவற்றில் சில முக்கிய திட்டங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன.முல்லை பெரியாறு மின் திட்டம்முல்லை பெரியாறு அணையின் தனித்துவம் என்பது அதன் பாசன பகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும் அணை கேரளாவில் இருக்கிறது. பாசன நீர் தேவைக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில் அணையின் நீரை பயன்படுத்தி ஒரு புனல் மின் நிலையம் உருவாக்க தமிழ்நாடு விரும்பியது. அதற்கு கேரளா அரசாங்கத்தின் உதவி தேவைப்பட்டது. அப்பொழுது கேரளாவின் திருவாங்கூர் - கொச்சி பகுதிக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி- காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையின் முதல்வராக பட்டம் ஏ. தாணுப் பிள்ளையும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இராஜாஜியும் ஆட்சியில் இருந்தனர். எனினும் உடன்பாடு எட்ட முடியவில்லை. இந்த சூழலில் தோழர் பி.ராமமூர்த்தி தமிழ்நாட்டுக்கு தேவையான புனல் மின்சாரம் குறித்து தாணுப்பிள்ளையிடம் பேசினார். ஆனால் தாணுப்பிள்ளை மறுத்தார். மறுப்புக்கு காரணம் கூறும்படி பி.ஆர். வற்புறுத்தினார். முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரும் தமிழகத்திற்கு செல்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு அணா மட்டுமே கேரளா பெறுகிறது. இப்பொழுது மின்சாரமும் தமிழகத்திற்கு எனில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என தாணுப்பிள்ளை கேட்டார். அப்படியானால் மின்சாரத்திற்கு நியாயமான விலை கொடுத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என பி.ஆர். கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. பி.ஆர். தமிழக முதல்வர் ராஜாஜியிடம் இந்த விவாதங்களை கூறினார். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2 பைசா எனில் ஏற்றுக் கொள்ளலாம் என ராஜாஜி கூறினார். அதன் அடிப்படையில் பி.ஆர். அவர்கள் மீண்டும் தாணுப்பிள்ளையிடம் பேசினார். அவர் 4 பைசா என்று கூற பி.ஆர். ஒரு பைசா என முன்வைக்க இறுதியில் இரண்டு பைசா என தாணுப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். அதனை பி.ஆர். அவர்கள் ராஜாஜியிடம் தெரிவிக்க பின்னர் இரண்டு அரசாங்கங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் 140 மெ.வா. மின்சாரம் தமிழ்நாடு பெறுவதற்கு வழி உருவானது. இதன் மூலம் தென் மாவட்டங்கள் இன்றும் பலன் அடைகின்றன. இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் பங்கு இன்றியமையாதது.பரம்பிக் குளம்- ஆழியாறு திட்டம்1947 முதல் 1957 வரை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தாலும் இந்த முக்கியமான திட்டம் உருவாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கேரளா மக்களிடம் செய்த பிரச்சாரம்தான். இந்த சூழலில்தான் 1957ம் ஆண்டு தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது. அப்பொழுது கேரளா கட்சி பணிகளுக்கு தோழர் பி.ஆர். பொறுப்பாளராக இருந்தார். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களின் பாசன தேவை குறித்து பி.ஆர். அவர்கள் இ.எம்.எஸ். அவர்களிடமும் பாசனத்துறை அமைச்சர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களிடமும் பேசினார். கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் இதனை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. அப்பொழுது தமிழகத்திற்கு காமராஜர் முதல்வராகவும் சி. சுப்பிரமணியம் நிதி அமைச்சராகவும் இருந்தனர். எனினும் ஒரு பிரச்சனை இருந்தது. இ.எம்.எஸ். ஆட்சியை கலைக்க காங்கிரஸ் நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பரம்பிகுளம் - ஆழியாறு திட்டத்தை தனது அரசியலுக்கு காங்கிரஸ் பயன்படுத்தாமல் இருக்க உத்தரவாதம் தேவைப்பட்டது. பி.ஆர். அவர்கள் காமராஜரிடமும் சி. சுப்பிரமணியம் அவர்களுடனும் இது குறித்து பேசினார். அவர்களும் காங்கிரசின் அகில இந்திய தலைமையிடம் பேசுவதாகக் கூறினர். அப்பொழுது உள்துறை அமைச்சராக கோவிந்த வல்லபபந்த் இருந்தார். அவரிடம் பி.ஆர். அவர்களும் பேசினார். ஆனால் கேரளாவில் உள்ள காங்கிரசாரை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமாறு கூற முடியாது என அவர் கை விரித்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் இந்த திட்டம் குறித்து இ.எம்.எஸ். அவர்களிடம் பி.ஆர். பேசினார். அப்பொழுது கேரளா மற்றும் தமிழகம் இரண்டும் பயன்பெறும் வகையில் ஒரு திட்ட வரைவு அறிக்கை தயார்படுத்தப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு எடுபடாமல் போனது. இந்த திட்டம் குறித்து காமராஜரும் இ.எம்.எஸ். அவர்களும் நேரடியாக பேசினர். இந்த தொடர் முயற்சிகள் காரணமாக இரு மாநிலங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் பரம்பிகுளம் ஆழியாறு நீர் பாசனத் திட்டம் உருவானது. இந்த திட்டத்திற்கான பணி தொடங்கிய சில மாதங்களில் இ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. ஒரு வேளை இ.எம்.எஸ். ஆட்சியில் இந்த ஒப்பந்தம் உருவாகாமல் இருந்திருந்தால் பின்னர் இந்த திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். மேற்கு மாவட்டங்களுக்கு பலனளிக்கும் இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் தொடர் முயற்சியும் இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் கேரளாவில் இருந்ததும் மிக முக்கிய காரணங்கள் ஆகும்.நிறைவேறாத திட்டங்கள்அவினாசி மற்றும் பல்லடம் பகுதிகள் பலன் அடையும் வகையில் குந்தா நீர்ப்பாசன திட்டத்தை அமலாக்க கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே. ரமணி பல முயற்சிகள் எடுத்தார். அதற்காக அவரும் தோழர் அனந்தன் நம்பியார் அவர்களும் அன்றைய பாசன அமைச்சர் திரு. கே.எல்.ராவ் அவர்களை சந்தித்து பேசினர். கே.எல்.ராவ் ஒரு சிறந்த இஞ்ஜினியரும் ஆவார். பில்லூர் அணையின் கொள்ளளவை அதிகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியம் என ராவ் கூறியது மட்டுமல்லாது கே.ரமணியின் வேண்டுகோளுக்கிணங்க அதனை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். அவரது கடிதத்தை ரமணி அவர்கள் முதல்வர் அண்ணாவிடம் சமர்ப்பித்தார். சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை வலியுறுத்தினர். தமிழக அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு திட்ட ஆய்வுக்காக காரமடையில் அலுவலகம் திறந்தது. இந்த திட்டம் தேவை என கோவில்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு நடந்தது. எனினும் சுமார் இரு வருட ஆய்வுகளுக்கு பின்னர் சில சுயநல சக்திகள் காரணமாக இந்த திட்டம் நிறைவேறவில்லை. இதே போல பாண்டியாறு-புன்னம்புழா நீர் மின்திட்டம் மூலம் 100 மெ.வா. நீர் மின்நிலையத்தை உருவாக்க தோழர் ரமணி முன்முயற்சி எடுத்தார். இந்த திட்டம் ஐந்தாண்டு திட்டத்திலும் இணைக்கப்பட்டது. எனினும் இந்த திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறியிருந்தால் மேற்கு மாவட்டங்கள் கூடுதலாக பலன் அடைந்திருக்கும்.புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் உதயம்திருச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த புதுக்கோட்டை சமூக பொருளாதார அம்சங்களில் திருச்சியின் இதர பகுதிகளை ஒப்பிடும்பொழுது பின் தங்கியிருந்தது. 1962ஆம் ஆண்டு புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் உமாநாத் தேர்வாகியிருந்தார். புதுக்கோட்டை முன்னேற்றத்திற்காக உமாநாத் அவர்களும் அனந்தன் நம்பியார் அவர்களும் விவாதித்து ஒரு நீண்ட மனுவை தயாரித்து அன்றைய பிரதமர் நேருவிடம் நேரில் தந்தனர். இந்த மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாத அதே நேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு கமிட்டியை நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற உமாநாத் புதுக்கோட்டைக்கு மட்டும் ஏன் வஞ்சனை என நேருவை கேள்வி கேட்டார். “நேருஜி பிறந்த மாநிலத்தில் புதுக்கோட்டை மக்கள் பிறக்காததுதான் அவர்கள் குற்றமா?” என கர்ஜித்தார். இதன் பின்னர் புதுக்கோட்டையில் மக்களை திரட்டி தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நடந்த மறியல் போராட்டங்களில் உமாநாத் உட்பட பலர் கைதாகினர். இத்தகைய நீண்ட போராட்டங்களின் விளைவாகவே 1974ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவானது. எனினும் ஆட்சியாளர்களால் இந்த நிகழ்ச்சிக்கு உமாநாத் அழைக்கப்படவுமில்லை; சிபிஐ(எம்)மின் பங்கு அங்கீகரிக்கப்படவுமில்லை. பெரிய மாவட்டமாக இருந்த தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனும் மக்களின் கோரிக்கையை நாகை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் உமாநாத் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார். தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகை மாவட்டத்தை பிரித்து திருவாரூர் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நாகை மக்கள் அதிருப்தியுற்றனர். இது இரண்டு மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் சூழலை உருவாக்கியது. நாகை, திருவாரூர் இரு தொகுதிகளிலும் சிபி(ஐ)எம் சட்டமன்ற உறுப்பினர்கள். இரு மாவட்ட மக்களிடையே மோதலை உருவாக்காமல் இந்த பிரச்சனையை தீர்க்க கட்சி முயன்றது. இதன் விளைவாக தஞ்சை, திருவாரூர், நாகை என மூன்று மாவட்டங்கள் என எம்.ஜி.ஆர். அறிவித்தார். எனினும் நாகை மாவட்டம் 1991ஆம் ஆண்டும் திருவாரூர் மாவட்டம் 1997ஆம் ஆண்டில்தான் உருவாயின.கம்யூனிஸ்ட் கட்சியால் உருவான கிராமம்திண்டுக்கல் மாவட்டத்தில் வடகாடு மலைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை வனத்துறையினர் தமது நிலம் எனக் கூறி சாதாரண மக்களை துன்புறுத்தி வந்தனர். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது அல்ல என ஆதாரங்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி நிரூபித்தது. தோழர் வி.கே. கருப்பசாமி, எம்.ஏ. வெங்கடாசலம் போன்ற தலைவர்கள் மக்களை திரட்டி போராடினர். கைது, சிறை, மறியல், பாதயாத்திரை என பல போராட்டங்கள் நடத்தியதன் பலனாக தமிழ்நாடு அரசாங்கம் சர்வே நடத்தி 600 குடும்பங்களுக்கு பட்டா தரப்பட்டது. இன்று வடகாடு 7000 மக்களை கொண்ட ஒரு ஊராட்சியாக திகழ்கிறது. வடகாடு கிராமம் முற்றிலும் மக்கள் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் உருவானது ஆகும். திருவாரூர், கீழ்வேளூர், நாகை பகுதிகளில் மக்கள் இயக்கம் மூலமும் நம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்லமுத்து, வே.மாரிமுத்து, நாகை மாலி ஆகியோரின் முயற்சிகள் மூலம் புதிய பேருந்து நிலையங்கள், ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம மாணவர்கள் பயில பள்ளிகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாயின. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜி.எஸ்.மணி, டி.மணி, லீமா றோஸ் ஆகியோரின் முயற்சியால் 15க்கும் அதிகமான முக்கிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.மருத்துவக் கல்லூரிகள், ரயில்கள், நீர் நிலைகள்:கீழ்கண்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு நமது தோழர்கள் முன்முயற்சி கொடுத்தனர்:
• மதுரை எய்ம்ஸ் - பி.மோகன், சு.வெங்கடேசன்
• நாகர்கோவில் - ஏ.வி.பெல்லார்மின்
• திண்டுக்கல் - கே.பாலபாரதி
• கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி-
பி.ஆர்.நடராஜன்
• குமரி மாவட்ட சித்த மருத்துவமனை -
ஜான் ஜோசப்
• திருவட்டார் அரசு மருத்துவமனை -
ஜே. ஹேமச்சந்திரன்
• குழித்துறை அரசு மருத்துவமனை - டி.மணிரயில்கள்:• கோவை எக்ஸ்பிரஸ் – கே. ரமணி
• மதுரை-பெங்களூர் வந்தேபாரத்- எக்ஸ்பிரஸ் சு.வெங்கடேசன்
• கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் நிரந்தரம் மற்றும் 11 ரயில்கள் கோவை வந்து செல்வது, மோனோ ரயில் திட்டம் முதல் கட்ட ஆய்வு - பி.ஆர்.நடராஜன்.பேருந்து நிலையங்கள்:• நாகை, நாகூர் - ஆர்.உமாநாத்
• குலசேகரம்- ஜே.ஹேமச்சந்திரன்
• தக்கலை - எஸ்.நூர் முகமதுகுடிநீர் திட்டங்கள்:• சின்னவேடம்பட்டி நீர் நிலை- கே. ரமணி
• கொள்ளிடம் திட்டம்- கே.பாலகிருஷ்ணன்
• திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - கே.பாலபாரதி
• பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம் -
எஸ்.நூர் முகம்மது
• திருவெறும்பூர் கூட்டு நீர் திட்டம் - பாப்பா உமாநாத்இவ்வாறாக ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக இருந்துள்ளது. சில பதிவு செய்யப்பட்டுள்ளன. பல பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. தற்பொழுது ஒவ்வொரு இடைக்குழு,மாவட்ட குழு மாநாட்டிலும் பல திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த திட்டங்களுக்காக கட்சி வலுவான மக்கள் இயக்கங்களை நடத்தும். | 2025-01-02 02:02:04.578769 |
ஜனவரி 1, 2025 | வன்மத்தின் உச்சம்! | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/senior-bjp-leader-and-maharashtra-minister-nitesh-rane | தமிழ் | UTF-8 | பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதேஷ் ரானே கேரளாவை ஒரு ‘மினி பாகிஸ்தான்’ எனக் கூறியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உரியது.“கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் குறிவைக்கப்படுகின்ற னர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலத்தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர். தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான் போன்றது. அதனால்தான் ராகுல் காந்தியும், பிரியங்காவும் அங்கு வெற்றிபெற்ற னர். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரி விப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்க ளித்துள்ளனர்” என நிதேஷ் ரானே வாய் கூசாமல் விஷத்தைக் கக்கியிருக்கிறார்.கேரளம் மீது சங்பரிவார் அமைப்புகளுக்கு இருக்கும் வன்மத்தின் உச்சம்தான் அமைச்சர் ரானே பேச்சின் வெளிப்பாடு. அதனால்தான் தற்போது வரை இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வில்லை. இது நிதேஷ் ரானேவின் பேச்சா அல்லது கேரளம் மீதான பாஜகவின் கொள்கை நிலையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். இது கேரள மாநிலத்தை இழிவுபடுத்துவது மட்டு மல்ல, இந்தியாவையே அவமானப்படுத்தும் செயல் ஆகும். பாஜக மற்ற மாநிலங்களைப்போல் கேரளத்திலும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட நீண்ட காலமாக முயன்று வருகிறது. ஆனால் கேரள மக்கள் அதனை முறியடித்து வருகின்றனர்.இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றி ருக்கும் சங்பரிவார் கூட்டம் கேரள மக்கள் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி வீசுகிறது. ராகுல் காந்திக்கும், பிரியங்காவிற்கும் வாக்களிப்பவர்கள் அனைவரையும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என நிதேஷ் ரானே கூறியிருக் கிறார். அப்படியென்றால் அயோத்தி தொகுதியில் கூட பாஜகவை மக்கள் தோற்கடித்துள்ளனர். அங்கிருப்பவர்கள் அனைவரும் தீவிரவாத ஆதர வாளர்களா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. பாஜகவை நிராகரித்து 64 சதவிகிதம் பேர் வாக்க ளித்துள்ளனர். அப்படியென்றால் அந்த 64 சதவிகி தம் பேரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களா?கேரளம் இன்றளவும் மதநல்லிணக்கத் திற்கு மகுடமாக விளங்குகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர்தான் நிதேஷ் ரானே. ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு மாநிலத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கடும் கண்டனத்திற்குரி யது. இனியும் நிதேஷ் ரானே அமைச்சர் பதவியில் நீட்டிக்க எந்த தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை. உடனே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். | 2025-01-02 02:02:07.185380 |
ஜனவரி 1, 2025 | தீக்கதிர் உலக செய்திகள் | உலகம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/india/cyril-ramaphosa-calls-for-an-end-to-the-war-in-gaza | தமிழ் | UTF-8 | காசாவில் போரை நிறுத்த சிரில் ரமபோசா அழைப்புதென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் மூலம் நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அடைந்தோம். அது போல் உலகின் பிற பகுதிகளில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் நிற்கிறோம் எனவும் ரமபோசா தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுக்கு 50,000 டன் ஆயுதங்கள்2023 அக்டோபர் 7 முதல் காசா, லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவத்திற்கு சுமார் 22 பில்லியன் டாலர்களுக்கு மேல் அமெரிக்கா செலவிட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி 2019 முதல் 2023 வரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்து வந்த ஆயுதங்களின் அளவு போருக்குப் பிறகு 78 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் வரை 50,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை கொடுத்துள்ளது.மக்கள் தொகை 7.1 கோடி உயர்வுஉலக மக்கள் தொகை உயர்வு குறித்து அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் மதிப்பீடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஜனவரி 1 அன்று உலக மக்கள் தொகை சுமார் 809 கோடியாக (8,092,034,511) உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 இல் மட்டும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி உயர்ந்துள்ளது.2023 இல் உயர்ந்த 7.5 கோடி யை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினரானது பாகிஸ்தான்ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் (UNSC) இரண்டு ஆண்டுகால தற்காலிக உறுப்பின ராக 2025 ஜனவரி 1 அன்று பாகிஸ்தான் பதவியேற்றுள்ளது. இந்த பதவி 2027 ஜனவரி 1 வரை நீடிக்கும். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த ஐ.நா., அவைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், மிக முக்கியமான பிரச்சனைகளில் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்வார்கள். பாது காப்பு கவுன்சிலில் எங்கள் இருப்பு உணரப்படும் வகையில் எங்கள் செயல்பாடு அமையும் என்றார்.உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல்உக்ரைன் நாட்டு தலைநகர் மீது ஜனவரி 1 புத்தாண்டன்று அதிகாலை ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மட்டுமின்றி அதன் அருகிலுள்ள ஒரு மாவட்டத்திலும் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன் ராணுவம் அமெரிக்கா கொடுத்த ‘தாட்’ என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்த துவங்கியுள்ளது. எனினும் ரஷ்யா அந்நாட்டு தலைநகரில் துல்லிமயமான தாக்குதலை நடத்தியுள்ளது.புத்தாண்டன்றும் தொடர்ந்த இஸ்ரேல் குண்டுவீச்சு : குளிரில் விறைத்து பலியாகும் காசா குழந்தைகள்காசா,ஜன.1- 2025 வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1 அன்றும் இஸ்ரேல் ராணுவம் காசாவில் குண்டு வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 17 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2025 இல் இஸ்ரேல் தாக்குதலால் முதலில் படுகொலை செய்யப்பட்டது 8 வயதுள்ள ஒரு சிறுவன் ஆகும். காசாவில் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம் துவங்கி விட்டது. மிக அதிகளவிலான குளிரை தாக்குப்பிடிக்க போதிய பாதுகாப்பான தங்குமிடங்கள் காசாவில் இல்லை. ஐ.நா., வின் அகதிகள்முகாம், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டது. குளிர்காலத்தில் தங்கள் உடலையோ, இருப்பிடத்தையோ வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள போதிய எரிபொருட்களோ மின்சாரமோ இல்லாமல் பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர். மேலும் உடலை சுத்தம் செய்வதற்கு போதிய தண்ணீரும் இல்லை உடைகளும் இல்லை. அதனால் சுகாதாரமற்ற நிலைக்கு பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் தள்ளி யுள்ளது. இதனால் காசாவில் கொடிய சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகி ஆயிரக்கணக்கான மக்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடுமையான குளிரை எதிர் கொள்ள போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகள் பலியாகிவரும் கொடுமையும் நடத்துள்ளது. கடுங்குளிரால் உடைகள் ஈரப்பதமாகி உடல் வெப்பநிலை வேகமாக குறைந்து ஹைப்போதெர்மியாவால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. குளிர் தாங்கும் உடைகள் இல்லாததால் லேசான தோல் கொண்ட குழந்தைகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கியமான உடல் பாகங்கள் 2-4 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்த வெப்பநிலையில் 10-20 நிமிடங்களில் செயல் இழந்து மரணித்து விடுகின்றன. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காசாவில் பலியாகியுள்ளன. | 2025-01-02 02:02:07.691856 |
ஜனவரி 1, 2025 | 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1.77 கோடி ஜிஎஸ்டி வசூல்! | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/india/delhi/gst-collection-of-rs-1.77-crore-in-december-2024 | தமிழ் | UTF-8 | 2024 ஆண்டில் டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈட்டப்பட்ட ஜிஎஸ்டி வசூலில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ. 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ. 1.65 லட்சம் கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டு ரூ. 1.77 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் வருவாய் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.82 லட்சம் கோடியாக (8.5% உயர்வு) இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 2024 ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. | 2025-01-02 02:02:08.241788 |
ஜனவரி 1, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/bjp-minister-we-are-not-a-small-pakistan | தமிழ் | UTF-8 | பாஜக அமைச்சரே நாங்கள் ஒன்றும் குட்டி பாகிஸ்தான் அல்ல. கேரளா படித்த மதச்சார்பற்ற, தீண்டாமைகளை கட்டுப்படுத்தியுள்ள மற்றும் ஆரோக்கியமான மாநிலம் என்பதை பெருமையுடன் சொல்கிறேன். எங்கள் தனிநபர் வருமானம் தேசிய வருமானத்தை விட 60 சதவீதம் அதிகம். இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றி பாகிஸ்தானை போல பிரதிபலிக்க வைக்க விரும்புவது நீங்கள் தான்.தேசிய ஊரக வளர்ச்சி வேலைத் திட்டத்தில் மக்கள் இணைவதை கடினமாக்குவதற்காக இந்த அரசு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் அந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ஊதியத்தை பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அது உண்மையான பாதிப்பைக் காட்டியிருக்கும்.பைரேன் சிங் மன்னிப்பு கேட்டால் போதாது, பதவி விலக வேண்டும். அவரது மன்னிப்பு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததை ஒப்புக்கொள்ளும் செயல். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது.பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? பிரதமர் மணிப்பூருக்குச் சென்று பைரேன் சிங் சொன்னதை ஏன் சொல்ல முடியாது? அவர் உலகம் முழுவதும் சென்றுள்ளார்.ஆனால் மணிப்பூருக்கு செல்வதை அவர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார்.டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1.77 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய அரசின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தொகை யானது நவம்பர் மாதம் வசூல் செய்யப்பட்டதை விட 7.3 சதவீதம் அதிகமாகும்.மத்தியப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 28 வயதான வியாபாரி சுரேந்திர பார்வல் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் அவரது விருப்பத்தின்படி தானம் செய்யப்பட்டது. சிறப்பு விமானத்தில் அவரது உடல் உறுப்புகள் மும்பை கொண்டு செல்லப்பட்டு உறுப்பு தேவைப்படும் நபர்களுக்கு பொருத்தப்பட்டன.ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கு கள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டு களுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.சிபிஐ அமைப்பின் ஆய்வாளர் ரகுல் ராஜ் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2023 இல் சிறப்பு புலனாய்வு பிரிவில் பதக்கம் பெற்றார். இந்நிலையில், மலாய் செவிலியர் கல்லூரியின் உரிமையாளரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெற்றபோது அவர் பிடிபட்டார். இத னைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு அவருக்கு வழங்கப்பட்ட பதக்கமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பதக்கத்தை ரத்து செய்யுயக் கோரும் சிபிஐ இயக்குநர் பிரவீன் சூத் பரிந்துரை யினை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண் டுள்ளது. | 2025-01-02 02:02:11.880940 |
ஜனவரி 1, 2025 | மன்னிப்பு கேட்க தகுதியற்றவர் பைரேன் சிங் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/biren-singh-does-not-deserve-an-apology | தமிழ் | UTF-8 | மணிப்பூர் பாஜக அரசாங்கத்தின் முதல்வர் பைரேன் சிங் மன்னிப்பு கேட்க தகுதியற்றவர் என அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசின் பெரும்பான்மைவாத / பிரிவினைவாத அரசியலால் 2023 மே மாதம் இனக்கல வரம் வெடித்தது. இந்த இனக்கலவரத்தால் 200 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய் யப்பட்டனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் அதி கமான மக்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்து அகதிகள் முகா மில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 60 ஆயி ரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டும் பாஜக அரசால் அம்மாநி லத்தில் அமைதியை நிலைநாட்ட முடிய வில்லை. இத்தகைய கொடூரத்திற்குப் பிறகும் பைரேன் சிங் எப்படி முதல்வராக நீடிக்கி றார்? அவர் பதவி விலக வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 31 அன்று மணிப்பூ ரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்க ளிடம் முதல்வர் பைரேன் சிங் மன்னிப்புக் கேட்கும் நாடகத்தை அரங்கேற்றினார்.இரண்டு சமூக மக்களும் ஒருவரை ஒரு வர் மன்னித்து கடந்தகால தவறுகளை மறந்து புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என பேசினார். இந்நிலையில் பைரேன் சிங் மன்னிப்பு கேட்பதற்கே தகுதியற்றவர் என ராஜஸ் தான் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். | 2025-01-02 02:02:11.881892 |
ஜனவரி 1, 2025 | நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மூடல் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/university-of-cologne-tamil-department-closure | தமிழ் | UTF-8 | பெர்லின்/புதுதில்லி ஜெர்மன் நாட்டின் கொலோன் நகரில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழ்த்துறை மூடப் பட்டுள்ளது. கொலோன் பல்கலைக்கழ கத்தில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் பிரிவின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்வி துறை செயல்பட்டது. 1963 முதல் இயங் கிய இந்த தமிழ்த்துறை கடந்த அக்டோபர் மாதம் 30 க்குப் பிறகு மூடப்பட்டதாகத் தகவல் வெளி யாகி உள்ளது. கொலோன் பல்கலைக்கழகம் 2014 முதல் நிதிப் பற்றாக்குறையை சந் தித்து வந்ததாகவும் இதன் விளை வாக தற்போது தமிழ்த் துறை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதிப் பற்றாக் குறையின் காரணமாக அப்பல்க லைக்கழகத்தில் தமிழ்த் துறை 2 முறை மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு 1.25 கோடிரூபாயும், அமெ ரிக்க வாழ் இந்தியர்கள் 1.5 கோடி ரூபாயும், ஐரோப்பிய தமிழர் கூட்ட மைப்பின் சார்பில் 23 லட்சம் ரூபா யும் நன்கொடையாக வழங்கப்பட் டது. இதனால் 2021 இல் அத்துறை மூடப்படுவதில் இருந்து பாதுகாக் கப்பட்டது. இந்த நிதி உதவியை வைத்து தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, சமஸ்கிருதம், இந்தி, பாலி உள் ளிட்ட மொழிகளை கற்றிருந்த ஸ்வென் வொர்ட்மான் உதவிப் பேராசிரியராக ஒப்பந்த முறை யில் நியமிக்கப்பட்டார்.அவரு டைய பணிக்காலம் 2024 அக்டோப ருடன் முடிவடைந்தது. அதன்பிறகு நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி வேறு பேராசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கவில்லை. இதனை காரண மாக வைத்து 60 ஆண்டுகளாக இயங்கி வந்த தமிழ் துறையை கொலோன் பல்கலைக்கழகம் மூடியுள்ளது. கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு நிரந்தரப் பேராசி ரியராக இருந்த உல்ரிக் நிக்லாஸ் 2022 இல் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் ஸ்வெ ர்ன் வொர்ட்மான் ஒப்பந்த முறை யில் உதவிப் பேராசிரியராக நிய மிக்கப்பட்டார். அவரை நியமித்த பிறகும் பல்கலைக்கழகம் அத்துறையில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என கூறப்படு கிறது. மாணவர் சேர்க்கை நடை பெறாதது குறித்தும், பேராசிரியர் நியமனம் குறித்தும் நிதி உதவி செய்தவர்கள் தரப்பு உட்பட யாரும் பல்கலைக்கழகத்தை நோக்கி முறையான கேள்விகளை முன் வைக்கவில்லை. இந்திய அரசு சிங்கப்பூரில் திருவள்ளுவர் மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித் துள்ளது. இது போன்று கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைத்திருந்தால் கூட அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை மூடப்படாமல் தப்பியிருக் கும் என கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழக நூலகத் தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், தமிழ் இதழ்கள், ஓலைச் சுவடிகள் உள் ளன எனவும் இந்த முக்கியமான வர லாற்று ஆவணங்களை காப்பாற்ற வேண்டும். எனவும் இவற்றை யாரா வது பாதுகாத்து ஆய்வுகள் செய்ய முன்வந்தால் அவர்களிடம் அவற் றைக் கொடுக்க அப்பல்கலைக்கழ கம் முன்வரலாம் என கூறப்படுகிறது. | 2025-01-02 02:02:11.882545 |
ஜனவரி 1, 2025 | சிபிஎம் அந்தமான் - நிகோபர் மாநிலச் செயலாளராக டி.அய்யப்பன் தேர்வு! | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/port-blair-marxist-communist-party | தமிழ் | UTF-8 | போர்ட் பிளேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் நிகோபர் மாநில 12-ஆவது மாநாடு 2024 டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் போர்ட் பிளே ரில் மிகுந்த உற்சாகத்து டன் நடைபெற் றது. செந்தொண்டர் பேரணி மாநாட்டின் துவக்கமாக மாநி லச் செயலாளர் டி. அய்யப்பன் மற்றும் செயலக உறுப்பினர்கள் தலைமையில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இதில், நூற்றுக்க ணக்கான கட்சித் தோழர்கள் - ஆத ரவாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சிவப்புப் புடவை அணி ந்த பெண் தோழர்கள், சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த இளந்தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலத்தில் கலந்து கொண்டது போர்ட் பிளேர் மக்களின் கவனத்தை ஈர்த்தது.மாபெரும் பொதுக்கூட்டம்இந்த மக்கள் திரள் ஊர்வலம் திரங்கா பூங்காவில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டமாக மாறி யது. கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் துவக்கவுரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கிளை அளவில் துவங்கி மத்தியக்குழு வரை ஜன நாயக முறையில் மாநாடுகளை நடத்தி புதிய குழுக்களைத் தேர்ந் தெடுக்கிறது என்று அவர் தெரி வித்தார். மோடி அரசின் கொள்கை கள் மேலும் மேலும் மக்களை வறு மையின் விளிம்புக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் அதேவேளை யில், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வரிச் சலுகைகள் வழங்கப்படுவதை ஜி. ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி, ஆங்கிலேயர் களுக்கு எதிராகப் போராடிய நூற் றுக்கணக்கான புரட்சியாளர்கள் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு, செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டதை நினைவுகூர்ந்தார். இன்றைய மோடி அரசோ, நாட்டு மக்களை மறந்து விட்டு, கார்ப்ப ரேட் முதலாளிகளின் நலன்களுக் காக மட்டுமே செயல்படுவதாக குறிப்பிட்டார். மாநிலச் செயலாளர் தோழர் டி.அய்யப்பனும் சிறப் பான உரையை வழங்கினார். பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 29 அன்று, போர்ட் பிளே ரில் உள்ள அதுல் ஸ்மிருதி சமிதி மண்டபத்தில் (வங்காளி கிளப்) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற் றது. 6 பெண்கள் உட்பட 73 பிரதி நிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மூத்த தலை வர் பி.சந்திரசூடன் கட்சிக் கொடி யை ஏற்றினார். அந்தமான் தீவுகளில் கட்சியின் நோக்கங்களையும், அதனை செயல்படுத்துவதற்கான வழி முறைகளையும், கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை உள்ளடக்கிய “அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான பணி கள்” என்ற ஆவணத்தை மாநிலச் செயலாளர் தோழர் டி. அய்யப்பன் சமர்ப்பித்தார். இந்த ஆவணம் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப் பட்டது.ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரைபிரதிநிதிகள் மாநாட்டில் உரை யாற்றிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், அந்தமான் தீவுகளில் கட்சியின் செயல்பாடு குறித்து திருப்தி தெரி வித்தார். கடந்த மூன்று ஆண்டு களில் கட்சி நடத்திய போராட்டங் கள், தீவு மக்களிடையே நல்ல தாக் கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி னார். 2022 ஏப்ரலில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற அகில இந்திய 23-ஆவது மாநாடு வகுத்த ளித்த கட்சியின் சுயபலத்தை அதி கரிக்கும் பணியின் ஒருபகுதியாக இது அமைந்திருப்பதாக கூறிய ஜி. ராமகிருஷ்ணன், யூனியன் பிர தேசத்தில் கட்சியின் தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து கடினமாக உழைக்குமாறு கட்சித் தலைவர் களையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார். தீவுகளில் அனைத்து மட்டங்களிலும் கட்சிக் குழுக்களை வலுப்படுத்த வேண்டி யதன் அவசியத்தை அவர் வலியு றுத்தினார். புதிய மாநிலக்குழு தேர்வு இம்மாநாட்டில் 19 பேர் கொண்ட மாநில அமைப்புக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது. டி. அய்யப்பனை மீண்டும் செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்த மாநாடு, அந்தமான் நிகோ பர் தீவுகளில் கட்சியின் வளர்ச்சி யையும், ஜனநாயக செயல்பாட்டை யும் எடுத்துக்காட்டுவதாக அமைந் தது. | 2025-01-02 02:02:11.883173 |
ஜனவரி 1, 2025 | தூய்மைக்காவலர்களை கசக்கி பிழியும் மகாராஷ்டிரா அரசு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/maharashtra-govt-is-squeezing-the-cleaners | தமிழ் | UTF-8 | மும்பை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சதாப்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர்கள் இசிஜி எடுக்கும் காணொலி ஒன்று வெளி யானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுப்பதற்காக பிரத் யேக துறையில் படித்து பயிற்சி பெற்ற நபர்களே எடுக்க வேண்டும். ஆனால் மகா ராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை குறைந்த அளவிற்கு கூட நிரப்பவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக மாநில மற்றும் ஒன்றிய அரசுத் துறைகளில் உள்ள சேவைத் துறை களை பாஜக கைவிட்டுவிட்டது. இதனால் தான் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் செய்யவேண்டிய பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர்கள் மருத்துவ மனைப் பணிகளில் வைத்து கசக்கிப் பிழியப்படுகின்றனர். இதற்கு அர சாங்கமே முழு பொறுப்பேற்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ள னர். சதாப்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களே மருத்துவத்துறையில் புதிதாக ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். இசிஜி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்துமாறு பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியுள்ளது. எனவே, சிறிய பயிற்சி யுடன் யார் வேண்டுமானாலும் அதனை இயக்க முடியும். எங்களிடம் உள்ள மனித வளங்களைக் கொண்டு முடிந்த வரை யில் வேலை செய்கிறோம். அனைத்து பிரிவுகளிலும் 35 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன என கருத்து தெரி வித்துள்ளனர். | 2025-01-02 02:02:11.883786 |
ஜனவரி 1, 2025 | ராணுவ மேம்பாட்டிற்கான சீர்திருத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/defense-minister's-announcement-of-reform-year-for-military-development | தமிழ் | UTF-8 | இந்திய ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள ராணுவமாக மற் றும் நோக்கத்துடன் 2025 ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ளது பாதுகாப்புத் துறை அமைச்சகம். இந்த அறிவிப்பை ஜனவரி 1 அன்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறி வித்துள்ளார். ஜனவரி 1 அன்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச் சகத்தின் அனைத்து செயலாளர்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள், வழிமுறைகள் உள்ளிட் டவை குறித்து ஆய்வு செய்ததாக கூறப் பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் 2025 வரு டத்தை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர் திருத்த ஆண்டாக’ கடைப்பிடிக்க ஒருமன தாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பிரிவுகளாய் நவீனமயமாக்கும் பயணத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கான ஆண்டு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். | 2025-01-02 02:02:11.884378 |
ஜனவரி 1, 2025 | தீக்கதிர் விரைவு செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/students-union-urges-school-education-minister-to-withdraw-his-opinion | தமிழ் | UTF-8 | எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெறுக! தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் மனுசென்னை,ஜன.1- அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். அதிமுக முதன்மை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்ததே சட்டப்பூர்வமானது. எடப்பாடி தலைமையில் தற்போதுள்ள கட்சி நிர்வாகம் சட்டவிரோதமானது. சட்டவிரோதமாக செயல்படும் தலைமை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரமில்லை. அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது. தன்னிடம் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒப்படைக்க வேண்டும். தற்போதைய அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும். அதிமுக தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை : அமைச்சர்சென்னை,ஜன.1- தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக 2024-2025-இல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின்படி நலச்சங்கத்தின் கோரிக்கையின் படியும், மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசு அறிவித்த லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் இந்த பணி ஜனவரி 2025 முதல் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தை திரும்பப்பெற மாணவர் சங்கம் வலியுறுத்தல்சென்னை,ஜன.1- தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளி களை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் தீர்மானத்திற்கு வர வேற்று நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அக மது, மாநிலச் செயலாளர் கோ.அர விந்தசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளி சங்கம் இயங்கி வந்த நிலை யில் அது அனைத்தையும் ஒருங்கி ணைத்து தமிழ்நாடு தனியார் பள்ளி கள் சங்கம் என உருவாக்கப்பட்டு மாநாடு நடைபெற்றது, இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அதற்குத் தேவையான கட்டமைப்பு கள் அருகில் உள்ள தனியார் பள்ளி களின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மா னத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வரவேற்று பாராட்டுத் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் முழுவதும் பணம் வசூலிக்கும் நோக்கில் செயல் படும் திட்டத்தை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன.மேலும் தனியார் பள்ளிகளின் உள்கட்ட மைப்பு என்ன சிறந்ததா? அடிப்படை யான விளையாட்டு மைதானமே இன்றி தான் 90 சதவீத தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சி யை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே முன்னின்று அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். கல்வி யை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கைய மறைமுகமாக திணிப்பதை நிறுத்த வேண்டும். மாநில கல்வி கொள்கையை முழு மையாக பொது வெளியில் தமிழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெ டுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதி களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறை வேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து வரவேற்றுப் பேசியதை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. | 2025-01-02 02:02:11.885004 |
ஜனவரி 1, 2025 | உரக்கப் பேசிய சப்தர் ஹஷ்மி! | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/sabdar-hashmi-was-born-in-april-1954 | தமிழ் | UTF-8 | சப்தர் ஹஷ்மி 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். அவரது தந்தை இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். சப்தர் ஹஷ்மி தில்லி தூய ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்று முதுகலைக் கல்வியைத் தில்லிப் பல்கலைக் கழகத்தில் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே இந்திய மாணவர் சங்கத்தில் முனைப்பாக ஈடுபட்டார். மாணவப் பருவத்தில் நாடகக் கலையின் மீது ஆர்வம் கொண்டார். கல்வியை முடித்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழு நேரம் கட்சிப் பிரச்சாரம் செய்தார். சப்தர் ஹஷ்மி தில்லி, ஸ்ரீநகர், கார்வால் போன்ற ஊர்களில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணி செய்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்ய நாடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நெருக்கடி காலம் முடிந்ததும் அரசுப் பணியிலிருந்து விலகி வீதி நாடகங்கள் அரங்கேற்றுவதில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் நிலவிய மக்கள் பிரச்சனைகளை நாடகங்கள் மூலம் பேசிய சப்தர் ஹஷ்மி ஜன நாட்டிய மஞ்ச் என்னும் வீதி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். குறுகிய காலத்தில் 24 நாடகங்களை 4000 முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1989 ஜனவரி முதல் நாளில் உத்தரப்பிரதேசம் சந்தாபூரில் ‘ஹல்லா போல்’ (உரக்கப் பேசு) என்ற பெயரில் வீதி நாடகத்தை நடத்தினார் சப்தர் ஹஷ்மி. அந்நாடகத்தை விரும்பாத குண்டர்கள் அங்கு நடித்துக் கொண்டு இருந்த கலைஞர்களைத் தாக்கினர். சப்தர் ஹஷ்மிக்குத் தலையில் பலத்த அடி விழுந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் இறந்து போனார். சப்தரின் படுகொலை இந்தியா முழுவதும் பெரிய அதிர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. சப்தர் ஹஷ்மியின் படுகொலையை நினைவு கூர்ந்து புகழ் பெற்ற ஓவியர் எம்.எப் உசேன் தம்முடைய ஓர் ஓவியத்தை சப்தருக்குக் காணிக்கை ஆக்கினார். சப்தர் ஹஷ்மி மறைந்த சில நாட்களிலேயே அவர் மனைவி மாலா ஸ்ரீ அதே ஜனநாட்டிய மன்ச் நாடகக் குழுவின் மூலம் மீண்டும் ‘ஹல்லாபோல்’ எனும் வீதிநாடகத்தை சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் நடத்திக் காட்டினார். நாடு முழுவதும் சப்தர் ஹஷ்மி பெயரில் வீதி நாடகக் குழுக்கள் மற்றும் கலைக்குழுக்கள் பல ஏற்படுத்தப்பட்டு மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்றளவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. - பெரணமல்லூர் சேகரன் | 2025-01-02 02:02:11.885601 |
ஜனவரி 1, 2025 | பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்! | மாநிலம் - கேரளா | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/kerala/kerala-cm-condemns-bjp-minister-nitesh-rane | தமிழ் | UTF-8 | கேரளாவை “மினி பாகிஸ்தான்” என இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதேஷ் ரானே பேசுகையில், “கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆகும். மக்களவைத் தேர்த லில் தீவிரவாதிகளின் வாக்குகளால்தான் ராகுல் காந்தியும், பிரி யங்காவும் அங்கு வெற்றி பெற்றனர்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நிதேஷின் பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து அவர் அளித்த விளக்கமும் கேரளாவை மீண்டும் அவமதிப்பதாகவே உள்ளது. இந்த நிலையில், நிதேஷ் ரானேவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே, கேரளாவை “மினி பாகிஸ்தான்” என இழிவுபடுத்தும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீய நோக்கம் கொண்டது.
மதச்சார்பின்மை, மத ஒற்றுமையின் வலுவான தளமாக விளங்கும் கேரளாவுக்கு எதிராக இத்தகைய வாய்ச்சவடால்கள் சங் பரிவாரத்தின் கேடுகெட்ட பிரச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அனைத்து ஜனநாயக மதச்சார்பின்மை சக்திகளும் சங் பரிவாரத்தின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். | 2025-01-02 02:02:11.886204 |
ஜனவரி 2, 2025 | சாவித்திரிபாய் பூலே ஒடுக்கப்பட்டோர்களின் வழிகாட்டி - சுடர் ஒளி, புதுச்சேரி | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/savitribai-phule-is-the-guide-of-the-oppressed | தமிழ் | UTF-8 | நடுநிசியில், கும்மிருட்டில், போகும் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறி நடப்பவருக்குத் தொலைதூரத்தில் சிறு ஒளி ஒன்று தோன்றியது. கல்வியின்மை, சாதிக் கொடுமை, பெண் அடிமை, கடன் சுமை, சமூகச் சீர்கேடுகள் என திரும்பும் பக்கம் எல்லாம் தென்பட்ட இருளை விரட்டிய ஒளி அது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக கல்விப் பணியாற்றி, கணவரால் கைவிடப்பட்ட பெண்க ளுக்கும், விதவைத் தாய்மார்களுக்கும் தங்கும் விடுதி அமைத்து, தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து, வட்டிக்கு வட்டி போடும் கந்துவட்டிக்காரர்களைச் சாடி, போய் கல்வி கல் என்று பெண் குழந்தைகளை கல்வியின் பக்கம் திருப்பி, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் சாவித்திரிபாய். 13 வயதான ஜோதிராவ் பூலே தான் பெற்ற கல்வியை தனது 9 வயது மனைவி சாவித்திரிபாய் பெற வேண்டும் என்று விரும்பினார். படிப்பித்தார்.முதல் பெண்கள் பள்ளிபூலே தம்பதியினர், பெண் குழந்தைகளுக்கு என்று 1848 ஆம் ஆண்டில், பிதேவாடா என்னும் இடத்தில் பெண்களுக்கான தனிப் பள்ளி துவங்கினர். ஊராரின் எதிர்ப்புகளைத் தாண்டி அப்பள்ளியின் ஆசிரியராக களம் இறங்கினார் சாவித்திரிபாய். சும்மா விடுமா சமூகம்! சாணம், சேறு, மலம் என நாற்றமெடுக்கும் அத்தனையும் வாரி சாவித்திரியின் மீது வீசினர். சேறால் அடி வாங்கிய பின், பள்ளிக்குச் சென்று குளித்துவிட்டு, உடைமாற்றி குழந்தைகளுக்கு பாடம் எடுத்தார். பள்ளியில் சாவித்திரியோடு சேர்ந்து பயணித்தவர் பாத்திமா ஷேக். இவர் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.பெண்கள் அடிமைத்தனமும் பார்ப்பனிய ஆணாதிக்கமும்இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டிற்கும் பார்ப்ப னிய மதத்திற்கும் எதிராக முதன்முதலில் போர் தொ டுத்தவர்கள் பூலே தம்பதியினர். பெண்கள், சூத்திரர் கள், ஆதி சூத்திரர்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள் என அனைவரையும் ஒடுக்கப்பட்டோர் என்றே பேசினர். இந்தியாவில் தோன்றிய அனைத்து சமூக இயக்கங்களின் கண்ணோட்டங்களோடு ஒப்பிடுகை யில் ஆணாதிக்கத்தை சாதியோடு இணைத்துப் பார்த்த வர் இவர் ஒருவர் மட்டுமே என்று கூறுகின்றனர் பிரஜ் ரஞ்சன் மணி மற்றும் பமிலா சர்தார். (மறக்கப்பட்ட விடுதலைப் போராளி நூல் தொகுப்பு ஆசிரியர்கள்) 1852 ஆம் ஆண்டிலேயே ‘மகிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சங்கத்தையும் சாவித்திரிபாய் தொடங்கினார். பெண்களின் பிரச்சனைகளையும் அவர்களின் மீது செலுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் பற்றி இச்சங்கம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பெண்கள் அப்போது இரட்டை அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தனர். ஒன்று பாலின அடக்குமுறை; மற்றொன்று பார்ப்பனிய ஆணாதிக்க அடக்குமுறை. இதை எளிதாக அடையாளம் கண்டவர் சாவித்திரிபாய். கணவனை இழந்த பெண்களின் தலையை மொட்டை போடும் வழக்கத்தை எதிர்த்து நாவீதர்க ளை ஒன்று திரட்டி 1860 இல் பெரும் பேரணி நடத்தி ‘இனி விதவைப் பெண்களுக்கு நாங்கள் மொட்டை போட மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுக்கச் செய் தார். திருமணம் ஆகாமல் கருவுற்ற பெண்கள், திருமண உறவை தாண்டி கருவுற்ற விதவைகள் போன்றோர் கௌரவமான வாழ்க்கை கிடைக்கப்பெறா மல் தற்கொலைக்கு முயலும் அவலத்தை தடுக்கும் விதமாக அவர்கள் கௌரவமாக குழந்தைகளை பெற் றெடுக்கத் ‘தாய் சேய் நலவிடுதி’ அமைத்து தந்தார். அவர்களை தற்கொலைகளில் இருந்து காப்பாற்றி னார். தனது சொந்த வீட்டையே கைவிடப்பட்டப் பெண் கள் மற்றும் குழந்தைகளின் புகலிடமாக மாற்றினார்.முன்னோடிக் கவிஞராக...நவீன மராத்தியில் முன்னோடி கவிஞராக சாவித்திரி பாய் திகழ்ந்தார். அவரது கவிதைகள் சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, மனுதர்ம எதிர்ப்பு, கல்வியின் முக்கி யத்துவம், ஆங்கிலக் கல்வியின் மகத்துவம் ஆகிய வற்றை கருப்பொருளாகக் கொண்டிருந்தன. பார்ப்பனம் தான் அடிமைத்தனத்தின் வேர் என்று அவர் நம்பினார். எனவே தான் ‘பார்ப்பன வேதங்களை தூர வீசு’ என்று கவிதை முழக்கம் செய்தார். ‘மனு காட்டிய வழியில் தீமைகளும் இழிவுகளும் நிறைந்தி ருந்தன’, ‘நம்மை கல்வி கற்காமல் தடுத்தவர் மனு’ என்று மனுவின் விஷத்தன்மையை மக்களுக்கு எடுத்தி யம்பினார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் சுயமரியாதை, சுதந்திரம், சமத்துவம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத் தும் விதமாக அவரது கவிதைகள் அமைந்தன. 1854 ஆம் ஆண்டில் ‘காவிய பூலே’ என்ற தலைப்பில் வெளி யிடப்பட்ட இவரது கவிதை தொகுப்பே அனேகமாக பிரிட்டிஷ் இந்தியாவில் வெளியான முதல் இந்திய கவிஞரின் நூலாக இருக்கும்.சீர்திருத்தப் பணிகள்1873 ஆம் ஆண்டு ஜோதிபா ‘சத்திய சோதக் சமாஜம்’ எனும் அமைப்பை தோற்றுவித்தார். அதன் பெண்கள் பிரிவு தலைவராக சாவித்திரிபாய் விளங்கினார். பார்ப்ப னிய ஆதிக்கத்தில் இருந்து சூத்திரர்களையும், ஆதி சூத்திரர்களையும் விடுவிப்பதும்; மனித உரிமைகளை அவர்களுக்கு கற்றுத் தருவதும்; மத அடிப்படைவா தத்தில் இருந்து மக்களை விடுவிப்பதுமே இச்சங்கத் தின் நோக்கங்களாகும். சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள், புரோகிதர்களை புறந்தள்ளு கின்ற திருமணங்களை சாவித்திரியும் அவரது கண வரும் முன் நின்று நடத்தி வைத்தனர். சமாஜத்தின் வேலைகள் புரோகிதர் மறுப்பு திரு மணங்களோடு நின்றுவிடவில்லை. 1877 கடுமையான பஞ்சம் நிலவியது. இப்பஞ்சத்தின்போது உண்ண உணவின்றி, குடிக்க நீர் இன்றி மக்கள் மடிந்தனர். இதையடுத்து சுமார் 52 உறைவிடப் பள்ளிகள் தொ டங்கப்பட்டன. இவ்விடங்களில் தாழ்த்தப்பட்ட மாண வர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டனர். 25 முதல் 30 மாணவர்களுக்காக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட விடுதி பின் தேவைக்கு ஏற்ப 52 இடங்களில் துவங்கப் பட்டது. இவ்விடத்தில் தங்கி இருந்த மாணவர்களை சாவித்திரிபாய் கனிவோடு பார்த்துக் கொண்டார். மேலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முகாம் அமைத்தார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2000 குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் மகத்தான சேவையை செய்தார் சாவித்திரிபாய்.கடனுக்கு எதிரான பிரச்சாரம்கர்ஸ் (கடன்) என்ற தன்னுடைய கட்டுரையில் பணத்தை கடன் வாங்கி பண்டிகை கொண்டாடுவதை யும், அதன் மூலமாக கடன் சுமையை அதிகரித்துக் கொள்வதையும் அவர் கண்டனம் செய்தார். மதுப்பழக் கம் குடிகாரர்களையும் அவர்களுடைய குடும்பங்களை யும் எப்படி அழிக்கின்றன என்பது குறித்தும் அவர் கட்டுரையை எழுதினார். பஞ்சத்தால் இன்னலுறும் மக்களின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில கந்துவட்டிக்காரர்கள் இப்பஞ்சத்தை பயன்படுத்தி பணம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நேர்மைக் கேடா கவும் நடந்து கொண்டனர். சமாஜத்தின் ஊழியர்க ளின் துணையோடு கந்துவட்டிக்காரர்களின் கொட் டத்தை அடக்கினார் சாவித்திரிபாய். அதோடு மட்டு மல்லாமல் பஞ்ச நிவாரண பணிகள் குறித்தும், எடுக்கப் பட வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார் சாவித்திரிபாய். இவ்வாறாக சமாஜப் பணிகள் முற்றிலும் தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காகவும் சமத்துவத்தை நிறுவுவ தற்காகவும் நடந்து கொண்டிருந்தது. 15 நாட்களுக்கு ஒரு முறை சமாஜின் கூட்டம் நடைபெறும். கிருஷ்ணா ராவ் பாலேக்கர் என்பவரால் துவங்கப்பட்ட தீனபந்து சத்திய சோதக் சமாஜின் பணிகளை வெளிச்சம் போட்டு சமூகத்திற்கு காட்டியது. சாவித்திரிபாய் ஜோதிராவின் மறைவுக்கு பின் சத்திய சோதக் சமாஜத்தின் தலைமை பொறுப்பை தானே ஏற்றார். 1890களின் மத்தியில் பிளேக் நோயால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக முகாம்களை ஏற்பாடு செய்தார். ஊருக்கு வெளியே ஒரு மருத்துவமனையை நிறுவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் வளர்ப்பு மகனான யஷ்வந்தைக் கொண்டு மருத்துவ உதவி வழங்கினார். அந்தத் தொற்று நோயின் போது தினந்தோறும் 2000 குழந்தைகளுக்கு அவர் உணவ ளித்தார். நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்குப் பராமரிப்புப் பணிகள் செய்த போது சாவித்திரிபாயை யும் பிளேக் நோய் தாக்கியது. அதனால் 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் அவர் மரணமடைந்தார்.என்றும் மறையாத புகழ்!‘கிரந்தி ஜோதி’ அதாவது ‘புரட்சி விளக்கு’ என்று புகழ்பெற்றார் சாவித்திரிபாய் பூலே. பூலே தம்பதி யினர் ஆற்றிய கல்விப் பணிகளுக்காக 1852 ஆம் ஆண்டு சாவித்திரி பாயும் ஜோதிராவும், பிரிட்டிஷ் அர சாங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். இந்திய அரசு 1998 ஆம் ஆண்டு சாவித்திரிபாய் பூலேவின் தபால் தலையை வெளியிட்டது. 2014 ஆம் ஆண்டு புனே பல் கலைக்கழகம் சாவித்திரிபாய் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்பட்டது. தம் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டோர்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் தனது கணவரோடு தோளோடு தோள் நின்று பாரங்களை சுமந்தவர் சாவித்திரிபாய் பூலே. தன்னலமற்ற போராளி சாவித்திரிபாய் ஒடுக்கப்பட்டோரின் வழிகாட்டியாக இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார். | 2025-01-03 02:04:19.194803 |
ஜனவரி 2, 2025 | விளையாட்டு... | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/cricket/khel-ratna-for-gukesh,-manu-bhakar,-arjuna-award-for-32-people | தமிழ் | UTF-8 | தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று கடைசி டெஸ்ட் போட்டி5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்தி ரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் (அடிலெய்டு) ஆஸ்தி ரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலை யில், மூன்றாவது டெஸ்ட் போட்டி (பிரிஸ்பேன்) டிராவில் நிறை வடைந்தது. தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கு கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற் றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. அதே போல பதிலடி வெற்றியுடன் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் நீக்கம்? ; பும்ரா கேப்டன் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் இரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ ருக்கு பதிலாக சப்மன் கில் சேர்க்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆடும் லெவன் தொடர்பாக வியாழக் கிழமை மாலை வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா 32 பேருக்கு அர்ஜுனா விருதுஆண்டுதோறும் விளை யாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டிற்கான கேல் ரத்னா விருதின் முழுப்பட்டியலை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங் கனை மனு பாக்கர், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமார், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளிட்ட 4 பேரும் கேல் ரத்னா விருது பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அர்ஜுனா இதே போல 17 பாரா தடகள வீரர்- வீராங்கனைகள் உட்பட 32 வீரர்-வீராங் கனைகள் அர்ஜுனா விருது பெறு கின்றனர். துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ, சுமதி சிவன் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 3 பாரா பேட்மிண்டன் வீராங் கனைகளுக்கு அர்ஜூனா விருது அறி விக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜன வரி 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.எதிர்ப்பிற்கு பணிந்த மோடி அரசுகடந்த வாரமே கேல் ரத்னா விருது பட்டியல் வெளியானது. அதில் பிரவீன்குமார், ஹர்மன்பிரீத் சிங் பெயர் மட்டுமே இருந்தது. மனுபாக்கர் பெயர் இல்லை. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றும் அவர் பெயர் இல்லாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விண்ணப்பிக்காததால் மனுபாக்கர் பெயரை சேர்க்கவில்லை என ஒன்றிய அரசு கூறியது. விண்ணப்பித்தும் விருது பட்டியலில் இருந்து புறக்கணித்ததாக மனுபாக்கரின் தந்தை கிஷான் பாக்கர் குற்றம் சாட்டினார். மேலும் ஒன்றிய அரசின் செயல்பாடு சரியில்லை ; உங்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என கிஷான் அறிக்கை வெளியிட்டார். மனு பாக்கருக்கு கேல் ரத்னா வழங்காமல் புறக்கணித்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்தது. இத்தகைய சூழலில் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மோடி அரசு மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. | 2025-01-03 02:04:21.227402 |
ஜனவரி 2, 2025 | தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு! | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/arjuna-award/arjuna-award-announcement-for-tamil-nadu-female-players | தமிழ் | UTF-8 | புதுதில்லி,ஜனவரி.02- தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் துளசி மதி முருகேசன் வெள்ளி பதக்கமும், நித்யஸ்ரீ சுமதி வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 34 பேருக்கு ஆர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 17ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்குக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார். | 2025-01-03 02:04:21.227972 |
ஜனவரி 2, 2025 | குகேஷ், மனுபாகருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு! | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/arjuna-award/manu-bhaker-gukesh-among-4-athletes-to-receive-khel-ratna-award | தமிழ் | UTF-8 | செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகியோருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருது 4 விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நடந்த செஸ் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரீஸ் பாரா-ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்ற ப்ரவீன் குமார் மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நான்கு பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 17 பாரா தடகள வீரர்கள் உட்பட 32 வீரர்கள் அர்ஜுனா விருது பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. | 2025-01-03 02:04:21.228566 |
ஜனவரி 2, 2025 | மன்னிக்க முடியாது | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/some-people-have-a-sudden-epiphany-in-the-last-days-of-the-year | தமிழ் | UTF-8 | ஆண்டின் இறுதி நாட்களில் சிலருக்கு திடீர் ஞானோதயம் உருவாவது உண்டு. அதுபோல மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் அந்த மாநிலத்தில் நிகழ்ந்து வரும் தொடர் வன்முறை க்கு மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ளார்.மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளு க்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி நடந்தால்தான் மாநில வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என பிரதமர் மோடி அவ்வப்போது தேர்தல் பிரச்சாரத் தின் போது கூறுவார். ஆனால் மத்தியிலும் மணிப் பூரிலும் நடந்து வரும் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி வன்முறையை முடிவுக்கு கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிட இவர்களுடைய அதிகார ஆதிக்க வெறியின் காரணமாகவே மணிப்பூரில் பற்றிய தீ விடாமல் மக்களை கொன்று குவித்துக் கொண்டி ருக்கிறது.உலக நாடுகளுக்கெல்லாம் உலா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தில் காலடி கூட எடுத்து வைக்கவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருமுறை எட்டிப்பார்த்ததோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதிவிட்டார்.மணிப்பூரில் கலவரத் தீயை பற்ற வைத்ததே பாஜகவின் பிளவுவாத அரசியல்தான். அனைத் தையுமே மதவாத கண்ணோட்டத்துடன் அணு கும் அந்தக் கட்சி திட்டமிட்டு இரு பிரிவு மக்களி டையே பகைத் தீயை பற்ற வைத்தது. எரியும் வரை லாபமென்று அமைதியை திரும்பச் செய்வதற்கு உருப்படியான முயற்சி எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.பொறுப்புணர்ச்சியோ, நாண உணர்ச்சியோ சற்றும் இல்லாத மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் ஒருவரையொருவர் மன்னித்து கடந்த கால தவறுகளை மறந்து புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என இலவச ஆலோசனை வழங்கி யுள்ளார். இருபிரிவு மக்களிடையே அன்பும், சமா தானமும் நிலவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டாலும் மன்னிக்கப்படக் கூடாதவர் மணிப்பூர் முதல்வர். அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்காக எதையும் செய்யும் பாஜக பரிவாரத்தை சேர்ந்தவரிடம் அத்தகைய தார் மீக உணர்வு எதையும் எதிர்பார்க்க முடியாது.மணிப்பூர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை யை தொலைத்து இன்னலில் உழல்கின்றனர். வன்முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். வாழ்க்கைக் காக போராடுவதைவிட உயிர்பிழைக்க ஓடி ஒளி வதே மணிப்பூர் மக்களின் அன்றாட அலுவலாகி விட்டது. புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல ஒவ்வொரு ஆண்டும் மன்னிப்புக் கேட்பதால் மட்டும் தனது கரங்களின் ரத்தக் கறையை பாஜக முதல்வரால் கழுவிக்கொள்ள முடியாது. மணிப்பூர் மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் முழுமையும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். | 2025-01-03 02:04:21.322446 |
ஜனவரி 2, 2025 | வெளிநாட்டு நிறுவனங்கள் ஹாங்காங்கில் முதலீடு சீனா வரவேற்பு | உலகம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/india/china-welcomes-foreign-companies-to-invest-in-hong-kong | தமிழ் | UTF-8 | சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் ஜனவரி 2ஆம் நாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 2024ஆம் ஆண்டு இறுதி வரை, ஹாங்காங்கிலுள்ள பெருநிலப்பகுதி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்க ளின் மொத்த எண்ணிக் கையும், புதிதாக நிறுவப் பட்ட ஹாங்காங் உள்ளூர் நிறுவனங்களின் எண் ணிக்கையும் புதிய சாதனையைப் பெற்றன. பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஹாங்காங்கில் முதலீடு செய்து தொழில் புரிவதையும், ஹாங்காங் வளர்ச்சி மற்றும் “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை விளைவிக்கும் நலன்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதையும் வரவேற்கிறோம் என்றார். 2024ஆம் ஆண்டு, ஒன்றிய அரசின் பெரும் ஆதரவுடன், ஹாங்காங் சிறப்பு நிர்வாக அரசு பயன் தரும் முறையில் முயற்சிகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை நாடி, வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை அதிகரித்து, ஹாங்காங்கின் நிதானமான வளர்ச்சியை வலுப்படுத்தி வருகிறது. ஆண்டு முழுவதிலும் ஹாங்காங்கில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை எட்டியது. இது 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார். | 2025-01-03 02:04:21.750373 |
ஜனவரி 2, 2025 | இந்தியாவில் பள்ளி மாணவர் சேர்க்கையில் சரிவு! | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/india/new-delhi/decline-in-school-enrollment-in-india | தமிழ் | UTF-8 | புதுதில்லி,ஜனவரி.02- இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 1.55 கோடி வரை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018-19 ஆண்டில் 26.03 கோடி மாணவர்கள் சேர்ந்த நிலையில், 2023-24 ஆண்டில் இது 24.80 கோடியாக குறைந்துள்ளது. பீகாரில் 35.65 லட்சம், உத்தரப் பிரதேசத்தில் 28.26 லட்சம், மகாராஷ்டிராவில் 18.55 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர்.
2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 0 மற்றும் 9-10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 7.68 ஆக உள்ளது என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல். | 2025-01-03 02:04:21.849704 |
ஜனவரி 2, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/supreme-court-union-govt-to-expedite-statehood-to-jammu-and-kashmir | தமிழ் | UTF-8 | உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை விரைந்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டு போதுமானது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.நான் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறி தென் மாநிலங்களுக்கு செல்ல இருக்கிறேன். பாலிவுட்டை (இந்தி திரையுலகம்) சேர்ந்தவர்களால் நான் மிகவும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் அடைந்துள்ளேன். அவர்களின் மனநிலை என்னை வெறுப்படையச் செய்துள்ளது.மோடியின் ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.தனது அமைச்சரவையின் சக பணியாளரை அமெரிக்காவுக்கு அனுப்பி, தனக்கான அழைப்பிதழை (அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்கும் விழா) கொண்டு வரவேண்டும்; இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் என மிரட்டியுள்ளார் மோடி. ஆனால் மோடியை தற்போது அழைக்கும் மனநிலையில் டொனால்டு டிரம்ப் இல்லை என்பதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024ஆம் ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ள னர். உண்டியலில் 1,365 கோடி ரூபாய் காணிக்கை யாக செலுத்தியுள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் 3,805 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக டிசம்பர் 23 முதல் 31 வரை 1,700 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் குடும்பப் பிரச்சனை காரணமாக சுந்தர் கர்மாலி (27) என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை க்கு முயன்றார். சுந்தர் மற்றும் அவரைக் காப்பாற்றச் சென்ற 4 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். | 2025-01-03 02:04:26.099167 |
ஜனவரி 2, 2025 | மக்களை பிரிக்கும் சாதியமைப்பே சனாதனதர்மம் எம்.வி.கோவிந்தன் தாக்கு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/sanatanadharma-mv-govindan-attacks-casteism-which-divides-people | தமிழ் | UTF-8 | மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட நால்வர்ண அமைப்பின் இந்துத்துவ பெயர்தான் சனா தனதர்மம் என்று மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மலப்புரம் மாவட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக தானூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறிய தாவது: முதல்வர் பினராயி விஜயனின் சிவகிரி உரையை கேரளாவும் இந்தியா வும் ஏற்றுக்கொண்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்துத்துவ மயமாக்கலை மூடிமறைக்கப் பார்க்கி றார். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல், சனாதனதர்மம் என்பது வேதம், உபநிடதங்கள், தத்வமசி ஆகியவற்றின் கலவை அல்ல. இதெல்லாம் வெறும் தூசு. சங்பரிவாரம் நால்வர்ண அமைப் பின் அடிப்படையிலான அரசியல மைப்பை விரும்புகிறது. இதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய 430 தொகுதிகளையா வது வெல்ல வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. சனாதனதர்மம் என்ற பெயரில் இந்தியாவை மதவாத நாடாக ஆக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முயற்சி. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்ப வேண்டும். வகுப்புவாதம் தங்க ளுக்குள் நடத்தும் மோதல்களில் யாரும் வெற்றி பெறுவதும் இல்லை அல்லது தோற்பதும் இல்லை. இரு தரப்பும் வலு வடையவே செய்யும். இரண்டு வகுப்பு வாதமும் மக்களை பிரிக்க முயல்கின் றன. ஜமாத்-இ-இஸ்லாமி, எஸ்.டி.பி.ஐ-யை எதிர்க்காமல் சங் பரிவாரை எதிர்த்துப் போராடுவதும், சங் பரிவா ரை எதிர்க்காமல் சிறுபான்மை வகுப்பு வாதத்தை எதிர்ப்பதும் பலனளிக்காது. சூரல்மலை பேரழிவு (நிலச்சரிவு) மிகவும் கடுமையானது என்பதை ஒன்றிய அரசு வாய்மொழியாக ஏற்றுக்கொண்டா லும், உதவிகள் ஏதும் வழங்கவில்லை. கேரள அரசு அந்த மக்களின் முழு வாழ்க்கையையும் கைதூக்கிவிடத் தேவையான மறுவாழ்வு அளிக்க முயற்சிக்கிறது. இதற்காக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு உள்ளது என்றார் எம்.வி.கோவிந்தன். | 2025-01-03 02:04:26.100297 |
ஜனவரி 2, 2025 | உ.பி.,யில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/atrocity-by-hindutva-thugs-in-u.p | தமிழ் | UTF-8 | லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே அஸ்லத்புரா வைச் சேர்ந்தவர் ஷாஹிதீன் குரேஷி (37). வேலைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது 4 பேர் கொண்ட பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் குரேஷியை வழிமறித்து விசாரித்துள்ளனர். குரேஷி முஸ்லிம் என்பது தெரிந்தவுடன்,”பசுவை கடத்தி விற்பனை செய்வது நீ தானா?” என கேள்வி எழுப்பி கற்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலில் குரேஷி பலத்த காயம டைந்தார். தகவலறிந்த காவல்துறை குரேஷியை மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். குரேஷியின் சகோதரர் ஷாஜாத்தின் புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றது. இந்துத்துவா குண்டர்களின் தாக்குதலில் உயிரிழந்த ஷாஹிதீன் குரேஷிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. குரேஷியை படுகொலை செய்த இந்துத்துவா குண்டர்கள் அஸ்லத்புராவைச் சேர்ந்தவர்கள் என் றாலும், இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை. காவல்துறையினர் இந்துத்துவா குண் டர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மொரா தாபாத் முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். | 2025-01-03 02:04:26.100944 |
ஜனவரி 2, 2025 | கேரளம், பீகார் ஆளுநர்கள் பதவியேற்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/governors-of-kerala-and-bihar-sworn-in | தமிழ் | UTF-8 | திருவனந்தபுரம் கேரளம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப் பட்ட ஆளுநர்கள் வியாழக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். கேரளம், மணிப்பூர், பீகார், மிசோரம், ஒடிசா உள்பட 5 மாநி லங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு கடந்த டிச., 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகார் ஆளுநராக வும், பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லே கர் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டனர். அதே போல அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சாரியா மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலை யில், மணிப்பூர் மாநில ஆளுந ராக அஜய் பல்லா நியமிக்கப் பட்டார். மிசோரம் ஆளுநராக இருந்த ஹரி பாபு கம்பம்பாடி, ஒடிசா மாநில ஆளுநராகவும், மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் நியமிக்கப் பட்டனர். கேரளம் இந்நிலையில், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் வியாழக்கிழமை காலை பதவியேற்றுக் கொண் டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர். பீகார் பீகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை அன்று பதவியேற்றார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன், ஆரிப் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். | 2025-01-03 02:04:26.101569 |
ஜனவரி 2, 2025 | அமித் ஷாவுக்கு நெருக்கமான அஜய் பல்லா ஆளுநராக நியமனம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/conflict-likely-to-intensify-in-manipur | தமிழ் | UTF-8 | இம்பால் குக்கி - மெய்டெய் இனக் குழுவுக்கு இடையேயான மோதல் சம்பவங்கள் கார ணமாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 20 மாதங்களாக வன்முறை சம்பவங்க ளால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு 260 பேர் பலியாகி யுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து உள்ளனர். குக்கி, நாகா, ஸோ உள்ளிட்ட பழங்குடி மக்களை மலைப் பகுதி யில் இருந்து துரத்த, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கு தல் நடத்தும் பணி தீவிரமடைந்துள் ளது. இத்தகைய சூழலில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் பல்லா மூலம் மணிப்பூர் மாநி லத்தின் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான நிலைக்குச் செல் லும் என அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அமித் ஷா - அஜய் பல்லா அசாம் ஆளுநர் லஷ்மண் பிர சாத் ஆச்சாரியா மணிப்பூர் ஆளு நராகவும் (கூடுதல் பொறுப்பாக) பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அஜய் பல்லா நிய மிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டிசம்பர் 24ஆம் தேதி அறிவித்தார். 1984 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி யான அஜய் பல்லா 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை செயலாளராக பணியாற்றி வந்தார். அதாவது இந்திய நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பொறுப்புக ளை அமித் ஷாவின் உத்தரவின் பேரில் அஜய் பல்லா செயல்படுத்தி வந்தவர். துறை சார்ந்த பணிகளை தாண்டி அமித் ஷாவிற்கு அஜய் பல்லா மிக நெருக்கமானவர் என்ற நிலையில், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜய் பல்லா தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற 5 மாதங்களிலேயே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் அஜய் பல்லா. அமித் ஷாவிற்கு மிக நெருக்க மானவர் என்பதால் இனி மணிப்பூ ரில் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரிக்கும் என்றும், மலைப் பகுதியில் வாழும் குக்கி, நாகா, ஸோ உள் ளிட்ட பழங்குடி மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் கொடூரத் தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.பைரேன் சிங்கிற்கும் அஜய் பல்லாவிற்கும் மோதல் வெடிக்க வாய்ப்புமணிப்பூரில் உள்ள மலைப் பகுதிகள் வளமிக்கவை. நிலக்கரி சுரங்கத்திற்காக மலைப்பகுதியை அதானிக்கு தாரை வார்க்க மோடி அரசு குறியாக உள்ளது. ஆனால் மலைப்பகுதிகளில் பழங்குடி யின மக்கள் தவிர வேறு யாரும் நிலங்கள் வாங்க முடியாது என்ற பாரம்பரியம் உள்ளது. பழங்குடி மக்களை துரத்திவிட்டால் மலைப் பகுதி நிலத்தை அதானிக்கு கொடுத்து விடலாம் என கணக்குப் போட்டு மோடி மற்றும் மணிப்பூர் பாஜக அரசுகள் மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களை தூண்டி வருகின்றன. மலைப்பகுதிகளில் பழங்குடி யின மக்களை விரட்டும் பணியை சரியாக மேற்கொள்ளாததால் மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங்கை ஓரங்கட்டவே தனக்கு நெருக்கமான அஜய் பல்லாவை ஆளுநராக கள மிறக்கியுள்ளார் அமித் ஷா. பாது காப்புப் படையினருக்கு வியூக மான உத்தரவுகளை பிறப்பித்து மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலை தீவிரப் படுத்தி, அவர்களை அங்கு இருந்து துரத்துவது தான் அஜய் பல்லா வின் வேலை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜய் பல்லா பொறுப்பேற்றவுடன் முதல்வர் பைரேன் சிங்கின் அதி காரங்கள் குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பைரேன் சிங்கிற்கும் அஜய் பல்லாவிற்கும் மோதல் வெடிக்க வாய்ப்பு உள்ளது என வடகிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பழங்குடியின மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் “கோடி மீடியா”மணிப்பூரில் குக்கி - மெய்டெய் இனக்குழுவுக்கு இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் குக்கி மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். பாஜகவின் கைப்பாவை யான “கோடி மீடியா” ஊடகங்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்து குக்கி பழங்குடியின மக்கள் எனக் கூறுவதை தவிர்த்து, மலைப்பகுதி தீவிரவாதி கள் என செய்தி வெளியிட்டு வருகின்றன. பழங்குடியின மக்களை தீவிரவா திகளாக சித்தரிக்கும் “கோடி மீடியாக்களின்” செயல்பாட்டிற்கு நாடு முழு வதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. | 2025-01-03 02:04:26.102186 |
ஜனவரி 2, 2025 | பீகாரில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/left-parties-struggle-in-bihar | தமிழ் | UTF-8 | அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இழிவான கருத்துக்களை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் பீகார் மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்தின. 38 மாவட்டத் தலைமையகங்கள் உட்பட 57 க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் ஊழியர்கள், பொதுமக்கள் என 24,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். | 2025-01-03 02:04:26.102793 |
ஜனவரி 2, 2025 | 2026-க்கு பிறகு மோடி அரசு நீடிக்காது சஞ்சய் ராவத் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/modi-government-won't-last-after-2026 | தமிழ் | UTF-8 | 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி அரசு நீடிக்க வாய்ப் பில்லை என சிவசேனா (உத்தவ்) கட்சி கூறி யுள்ளது. இதுதொ டர்பாக அக்கட்சி யின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறு கையில், “ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நீடிக்குமா என்ற சந் தேகம் உள்ளது. தனது ஆட்சிக் காலத்தை மோடி ஒருபோதும் நிறைவு செய்யமாட்டார். மத்தியில் ஆட்சி கலைந்தால், அது மகாராஷ்டிர அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் (சந் தோஷ்) மாநில அமைச்சருக்கு தொடர் புண்டு. சிறப்பு புலனாய்வு விசாரணை க்கு குழு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என அவர் கூறினார். | 2025-01-03 02:04:26.103408 |
ஜனவரி 2, 2025 | கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு காங்கிரஸ் விமர்சனம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/congress-criticizes-kejriwal's-connection-with-rss-organization | தமிழ் | UTF-8 | ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணை ப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் பாஜக செய்யும் தவறான செயல்களுக்கு ஆர் எஸ்எஸ் அமைப்பும் உடந்தையாக இருக் கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது என காங்கிரஸ் மூத்த தலை வர் சந்தீப் தீட்சித் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கடிதம் எழுதுவது கெஜ்ரி வாலுக்கும் சங்பரிவாருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இப்போது மட்டுமல்ல கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு, நாங்கள் காலங் காலமாக கூறி வருகிறோம். அதனால் தான் கெஜ்ரிவாலை “சங்கி” என்று அழைக்கிறோம். எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் எந்த அரசியல்வாதியும் இதுபோன்ற கடிதம் எழுத மாட்டார்கள். கெஜ்ரி வாலுக்கு பாஜகவுடன் பிரச்சனைகள் இருந்தால் அவர் நேரடியாக பாஜக விடம் பேச வேண்டும். ஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்புடன் பேசுவது தவறானது. ஆர்எஸ்எஸ்-க்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியது, அவர் அவர்களை கூட்டாளி களாக பார்க்கிறார் என்பதைக் குறிக்கி றது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் போது, ஆர்எஸ்எஸ் அவருக்கு ஆதர வளித்தது. அவரது உண்மையான விசு வாசம் தெளிவாக உள்ளது” என அவர் கூறினார். | 2025-01-03 02:04:26.104057 |
ஜனவரி 2, 2025 | தீக்கதிர் விரைவு செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/distribution-of-third-term-textbooks-on-the-first-day-of-opening-of-schools-after-half-year-vacation | தமிழ் | UTF-8 | அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு முதல் நாளே மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் விநியோகம்!சென்னை, ஜன.2- தமிழகத்தில் அரை யாண்டுத் தேர்வு விடு முறைக்குப் பிறகு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு வியாழ னன்று பள்ளிகள் திறக்கப் பட்டன. புத்தாண்டின் முதல் பள்ளி நாளாக அமைந்திருந் ததால், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தேர்வு கள் கடந்த டிசம்பர் 9 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப் பட்டன. தொடர்ந்து, டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி 1 வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து, வியாழனன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் களும் மிகுந்த உற்சாகத்து டன் பள்ளிக்கு வருகை தந்த னர். இந்நிலையில், மாண வர்களுக்குத் தேவையான 3-ஆம் பருவத்துக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்விப் பொருட்களும் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர் களுக்கு வழங்கப்பட்டன.ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள்சென்னை, ஜன.2- பதவிக் காலம் முடிய வுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நிய மிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அவசர சட்டத்துக்கான கோப்பு கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரக உள் ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றது. 9 மாவட்டங்கள் தவி ர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதன் பதவிக் காலம் ஜனவரி 5 ஆம் தேதி யுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட் டங்களில் உள்ள ஊராட்சி களுக்கு சிறப்பு அதிகாரி கள் நியமிக்கப்பட உள்ள னர். இதற்கான அவசர சட் டத்துக்கான கோப்புகளை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்சென்னை, ஜன.2- கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தேசிய மக ளிர் ஆணையத்தின் உறுப்பி னர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறி த்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத் தின் உறுப்பினர் பிரவீன் தீட்சித் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் கடந்த கால செயல் பாடுகள் என்னென்ன, அவ ருடன் தொடர்பில் இருந்த வர்கள் யார் என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கும் என்பது தெரிய வரும். அந்த நபர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அனு மதியின்றி வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமிராக்களை பாதுகாப்பு ஊழியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ் தில் உள்ள காவல்துறை அதி காரிகள் விசாரிக்க வேண் டும். பெண்களிடையே ‘112 இந்தியா’ என்ற அவசர கால உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் புகாரை உறுதிப்படுத்த பெண் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். வழக்கு விசாரணையின் போது அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது
முறைப்படி துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார்தஞ்சாவூர், ஜன.2– தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ராராமுத்திரைக் கோட்டை யில், வியாழக்கிழமை புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: தமிழகத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், ஆளு நரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியாவே உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில ஆளுநருக்கும் உள்ள உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் உள்ள தமிழ்நாடு ஆளுநரின் செயல் பாட்டினால், துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில், மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை, நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்பட விடாமல் தடுப்பது தான் ஆளுநரின் நோக்க மாக உள்ளது. அவரது நோக்கம் நிறை வேறாது. முறைப்படி எல்லா நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு துணை வேந்தர் பதவி நியமனம் செய்யப் படும். மாணவர்களின் நலனில் எதிர்க் கட்சிகள், அரசியல் செய்ய வேண் டாம். மாணவர்கள் நலன் கருதி சிந் திக்கின்ற, செயல்படுகின்ற முதல்வ ராக நமது முதல்வர் உள்ளார். இவ் வாறு அவர் கூறினார்.அரசு ஊழியர்க்கு பொங்கல் போனஸ்! முதலமைச்சர் அறிவிப்புசென்னை, ஜன.2- தமிழக அரசு ஊழியர்க ளுக்கு மிகை ஊதியம் மற் றும் பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார். இதன்படி 2023-2024ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர் களுக்கு மற்றும் ஆசிரியர் களுக்கு ரூ. 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியமும், ‘சி’, ‘டி’ பிரி வைச் சேர்ந்த ஓய்வூதி யதாரர்கள், குடும்ப ஓய்வூதி யதாரர்களுக்கு ரூ.500 பொங் கல் பரிசாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள் ளது.நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைசென்னை,ஜன.2- நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை யை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்க ளில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டது தொடர்பாக நடி கர் எஸ்.வி.சேகருக்கு எதி ராக வழக்கு தொடரப்பட்டி ருந்தது. இவ்வழக்கின் மீதான மேல்முறையீட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு வழங்கிய ஒரு மாத கால சிறை தண்டனை யை ரத்து செய்ய முடியாது, மேல்முறையீட்டை தள்ளு படி செய்ததோடு சிறை தண் டனையை உறுதி செய்தார்.திருமாவளவனுக்கு எதிரான வழக்கு ரத்துசென்னை, ஜன.2- கடந்த 2020 ஆம் ஆண் டில், இந்து பெண்கள் குறித் துப் பேசியதற்காக விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திரு மாவளவன் மீது 6 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் , இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி திருமாவளவன் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.25 போதை மறுவாழ்வு மையங்கள் திறக்க திட்டம்சென்னை, ஜன.2- அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையங் கள் ஓரிரு மாதங்களில் பயன் பாட்டுக்கு வரவுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மருத்து வக் கல்லூரி மருத்துவமனை களிலும் 20 படுக்கைகள் கொண்ட போதை மறு வாழ்வு மையங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சுகா தாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் அமையும் மையங்களில் போதை பழக்கத்துக்கு பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டு மின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உள வியல் சிகிச்சை அளிக்கப் படும். இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் பயன் பாட்டுக்கு வரவுள்ளது” என்று தெரிவித்தனர். | 2025-01-03 02:04:26.104671 |
ஜனவரி 2, 2025 | கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு! | மாநிலம் - கேரளா | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/kerala/rajendra-vishwanath-arlekar-takes-oath-as-kerala-governor | தமிழ் | UTF-8 | கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
கேரளம், பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் ஆளுநராக ஆரிஃப் முகமது கான், மணிப்பூர் ஆளுநராக அஜய் பல்லா, ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் நிமியக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துக்கொண்டார். | 2025-01-03 02:04:26.105272 |
ஜனவரி 3, 2025 | மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம்!! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/let's-defeat-bigotry-and-promote-progressive-values | தமிழ் | UTF-8 | வளங்கள் - வாழ்வாதாரங்களை பாதுகாப்போம்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 ஆவது மாநில மாநாடு அறைகூவல்க.கனகராஜ், அ.ராதிகாஒன்றிய பாஜக ஆட்சியாளர்களால் சூறையா டப்படும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படும் நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் மத வெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுக்கவும் தமிழக மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. நம் நாடு ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியி ருக்கிறது. விடுதலைப் போராட்டத்தின் ஊடாக இந்தியாவில் சமூக, பொருளாதார, அரசமைப்பு, கலாச்சார விழுமியங்கள் குறித்த விவாதங்களும் போராட்டங்களும் சேர்ந்தே எழுந்தன. மதச்சார் பின்மை, ஜனநாயகம், சோசலிசம், கூட்டாட்சி, பொ துத்துறை, இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தம், நிலச்சீர் திருத்தம், பெண் விடுதலை, குழந்தைத் திருமணம் தடுப்பு, உடன்கட்டை ஏறுவதற்கு தடை, கைம்பெண் மறுமணம், தீண்டாமை ஒழிப்பு, கோவில் நுழைவுப் போராட்டங்கள், மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு என்று பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சார விவாதங் கள் நடைபெற்றன. அதன் விளைவாகவே 1949ஆம் ஆண்டு நவம்பர் 26இல் இந்திய அரசியல் நிர்ணய சபை யால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.முன்னேற்றத்தைச் சிதைத்து நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சி...விடுதலைப் போராட்டக் காலம் முழுவதும் இந்தியர்கள் தூக்குமேடை, துப்பாக்கிக் குண்டு, நாடு கடத்தல், சொத்துக்கள் பறிமுதல், சிறைவாசம் என சொல்லொணா துயரங்களை ஏற்று போராடிக் கொண்டி ருந்தபோது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மேலும் இத்தகைய போராட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட அரச மைப்புச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்த தோடு, பெண்ணடிமைத்தனத்தையும் சாதிய ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தும் மனுஸ்மிருதியே இந்திய அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். தற்போது இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பு அவர்கள் கையில் கிடைத்த பிறகு அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை சிதைத்து நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள்.பசித்தவர்களின் மூளைகளை வெறுப்பால் நிரப்புகிறார்கள்அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைத்தவர்கள் அண்ணல் அம்பேத்கரையும் இப்போது இழிவு படுத்த துவங்கியிருப்பதோடு அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிதைக்க ஆரம்பித்திருக்கி றார்கள். அரசின் மதச்சார்பற்ற தன்மையை ஒவ்வொரு கணமும் சிதைப்பதோடு, இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று வெறுப்பை விதைக்கிறார்கள். லவ் ஜிகாத் உள்ளிட்ட மதவெறி கோஷங்களை கிளப்பி பசித்த வயிறுகளின் மூளைகளை வெறுப்பால் நிரப்பி உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறார்கள். இதை எதிர்த்துப் போராடும் ஜன நாயக அமைப்புகளையும் இஸ்லாமியர்களையும் தனி மைப்படுத்தி அவர்களின் சொத்துக்கள் மீது புல்டோசரை ஏவி இடிக்கிறார்கள். போலீசை ஏவி சிறைக்குள் அடைக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி என்பதை அவர்கள் சட்டை செய்வதில்லை.கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்புமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் பொதுச்சொத்துக்க ளையும் அந்நிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். துறை முகங்கள், விமான நிலையங்கள், விமானப்போக்கு வரத்து, நிலக்கரி உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள் ஆகியவற்றை அதானி, அம்பானி, டாடா கார்ப்பரேட் வகையறாக்களுக்கு அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போரை சிறையில் தள்ளுகிறார்கள். லாப வேட்டைக்கு தொழி லாளர்களின் சம்பளத்தையும், உரிமைகளையும் பலிகடா ஆக்குகிறார்கள். தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து நான்கு தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப் பட்டிருக்கின்றன. முத்தரப்பு அமைப்புகள் சீர்குலைக் கப்பட்டிருக்கின்றன. அரசு ஊழியர்களுக்கான 8ஆவது சம்பளக்கமிஷன் இன்னும் அமைக்கப் படாமலேயே இருக்கிறது.கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு; உணவுப் பொருட்களுக்கு வரிவிதிப்புபொருளாதார சமத்துவமின்மையை மேலும் தீவிரப்படுத்தும் முறையில் வரிக்கொள்கையை வடி வமைக்கிறார்கள். ஆண்டுக்கு 2 லட்சம் கோடி அளவுக்கு சலுகை அளித்து, கார்ப்பரேட் வரியை 30 சத விகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைத்தி ருக்கிறார்கள். அதே சமயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரிசி, கோதுமை உள்ளிட்டு ஏழைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப்பொ ருளின் மீதும் அநியாய வரியை விதித்திருக்கிறார்கள். கிராமப்புற மக்களின் வருவாயில் உணவுப்பொருள் பணவீக்கத்தின் காரணமாக அவர்களின் மாதாந்திரச் செலவில் 50 சதவிகிதம் உணவுப் பொருட்களுக்கே செலவழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நகர்ப் புறங்களில் இது 40 சதவிகிதத்தை தொட்டு நிற்கிறது. இதனால் வயிற்றை நிரப்பக் கூட மக்கள் திண்டா டும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சர்வதேசச் சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று சொல்லிவிட்டு கச்சா எண்ணெய் விலை 18 டாலர் குறைந்த பிறகும் சல்லிக்காசு கூட குறைக்கா மல் சண்டித்தனம் செய்து வருகிறார்கள். சமையல் எரிவாயு உருளைக்கு மானியத்தை வங்கியில் தரு வோம் என்று ஆசைகாட்டி விட்டு மூன்று மடங்காக விலையை உயர்த்தி விட்டு மானியம் தராமல் ஏழைகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.வேலைவாய்ப்பு ஒழிப்பு விவசாயம் சீரழிப்புஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்ற ஆசை வார்த்தை காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 10 ஆண்டு காலம் முழுமைக்கும் கூட 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. மாறாக, ஒன்றிய அரசுத் துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளும், பொதுத் துறைகளில் அதே அள வுக்கான வேலை வாய்ப்புகளும் வெட்டிச் சுருக்கப் பட்டுள்ளன. ரயில்வே துறையில் மட்டும் அனுமதிக்கப் பட்ட 14 லட்சம் பணியிடங்களில் 3 லட்சம் பணி யிடங்கள் காலியாக உள்ளன. நிரப்பப்பட்ட பணியி டங்கள் பலவும் ஒப்பந்தம், தினக்கூலி, வெளிமுகமை என பாதுகாப்பற்ற வேலைகளாகவும், சம்பளம் குறைந்த வேலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. விவசாயத்தை சீரழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை விவசாயி களின் 385 நாள் போராட்டத்தால் ஒன்றிய அரசு கைவிட்டது. ஆனால், நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக விவசாயத்தில் விவசாயிகளின் வருமா னத்தையும் உரிமைகளையும் நாட்டின் நலனையும் பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். விவசாய விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை, 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்குதல் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டே விவசாயிகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கி றார்கள். அதேசமயம் விதை, உரம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.தினம் 30 விவசாயிகள் தற்கொலைபாஜக அரசு பதவியேற்ற நாளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் 30 விவசாயிகள் சராசரி யாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை நம்பி வாழ்க்கையை நடத்தும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலை கள் கிடைக்காமலும் வேறு வழியில்லாமலும் இடம் பெயர்கிறார்கள். விவசாயக் கூலிகளின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக இடதுசாரிகளின் வலியுறுத்தலால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- 1 ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட்டம் சீர் குலைக்கப்படுகிறது. ஊதியத்திற்கான பங்கு குறைக் கப்பட்டு பொருட்களின் பங்கு அதிகரிக்கப்படுகிறது. உரிய காலத்தில் நிதியை கொடுப்பதில்லை. எல்லா வற்றிற்கும் மேலாக பண வீக்கத்திற்கு தகுந்தவாறு கூட ஒதுக்கீடுகள் இல்லாத நிலை இருக்கிறது.கூட்டாட்சி சிதைப்புஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிக்க முடியாத அம்சமான கூட்டாட்சி ஒவ்வொரு கணமும் சிதைக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே கல்வி உள்ளிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரிப்பங்கீட்டில் மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நிதிக் குழுக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து மாநிலங்களின் நிதி வாய்ப்பு கள் சுருக்கப்படுகின்றன. பேரிடர், சிறப்புத் திட்டங்கள், கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை ஓர வஞ்சனையோடு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்க ளுக்கு எள்முனையளவு நிதி ஒதுக்கீடு செய்யும் ஒன்றிய அரசு, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு இமயமலை அளவுக்கும் இடை வெளியிருக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்டுள்ள ராணுவம் பேரிடர் காலங்களில் உதவியதற்கு கூட மாநிலங்களிடம் கந்துவட்டிக்காரர்கள் போல் வாடகை வசூலிப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஆளு நர்கள் இணை அரசாங்கம் நடத்துவது போல இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடனேயே நியமிக்கப் படுகிறார்கள். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தில் அன்றாடம் தலையிடுவதை ஆளுநர்கள் வாடிக்கையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.ஊடகங்கள் மீது தாக்குதல்ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் அவற்றின் கடமையைச் செய்யும் போது அரசுக்கு எதிரான கருத்துக்களாக இருந்தால் ஊடக வியலாளர்களை சிறையில் அடைப்பது, சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிணை யில் வர முடியாமல் சிறையில் அடைப்பது, ஊடகங்க ளை தடை செய்வது, நிர்வாகங்களை மிரட்டி நிறுவ னங்களிலிருந்து வெளியேற்றச் செய்வது என்பது பாஜக ஆட்சியின் தொடர் தாக்குதலாக இருக்கிறது.ஊழலின் மொத்த உருவம்தேர்தல் பத்திரம், பிஎம்கேர்ஸ், பல்லாயிரம் கோடி ராமர் கோவில் ஊழல், புதிய நாடாளுமன்ற கட்டுமான முறைகேடு, நெடுஞ்சாலை அமைக்க ஒரு.கி.மீ.க்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு என்று ஊழலின் மொத்த உருவமாய் மாறி நிற்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு. தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் (ஒரு பகுதி) உள்ளிட்ட சுயேச்சையான அமைப்புகளை, அரசியல் எதிரிகளை பழிவாங்கு வதற்காக பயன்படுத்துகிறார்கள்.ரகசிய அமைப்பாகும் தேர்தல் ஆணையம்டிஜிட்டல் யுகத்தில் 7 கட்ட வாக்குப்பதிவு, பதிவான வாக்குகளைச் சொல்ல 11 நாட்கள், பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குக ளுக்கும் இடைவெளி, தேர்தல் விதிமுறை மீறல்கள் ஆளும் கட்சிக்கான உரிமை என்பது போல நடந்து கொள்வது, தேர்தல் தொடர்பான ஆவணங்களையும், வீடியோக்களையும் வெளிப்படையாகப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையமே ஒரு ரகசிய அமைப்பு போல மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளால் மக்களின் ஒற்றுமை, நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நாடுமுழுவதும் மக்களை ஏமாற்றியது போல தமிழகத்திலும் மதவெறி மற்றும் திசைதிருப்பல் நடவடிக்கைகள் மூலம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள்.ஒற்றுமையை சிதைக்கும் பாஜகபன்மைத்துவம் என்பதே இந்தியாவின் அடையாள மாகும். உணவு, உடை, மொழி, வழிபாட்டுமுறை, இனம், திருமண உறவுகள் என்று பல்வேறு வகையிலும் வேறுபாடுகளுடன் வாழும் மக்கள் இந்தி யர்களாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆனால் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு முயற்சியின் மூலம் இந்த ஒற்றுமையை பாஜக சிதைத்து வருகிறது. இந்தப் பின்னணியில் தேசத்தின் ஒற்றுமை யையும், ஒருமைப்பாட்டையும், பொதுச் சொத்துக்க ளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசிய மானதாகும். இதற்கு பெரும் இடையூறாகவும் பேரிட ராகவும் வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் பாசிச அரசியல் ஆகியவற்றை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது முக்கிய அரசியல் கடமையாகும். அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூகத் தளத்தி லும் விஷமாக வளர்ந்து வரும் இத்தகைய மதவெறி சக்திகளை முற்றிலுமாக முறியடித்து, நம் நாட்டின் அரசியல், சமூகப் பண்பாட்டு விழுமியங்களை பாது காக்க வேண்டும் எனவும் அத்தகைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டுமெனவும் தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு அறைகூவி அழைக்கிறது. இந்த தீர்மானத்தை மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் முன்மொழிந்தார். மாநிலக் குழு உறுப்பினர் அ.ராதிகா வழிமொழிந்தார். | 2025-01-04 01:57:25.617953 |
ஜனவரி 3, 2025 | நம்பிக்கை அளிக்கும் தமிழ்நாடு, புரட்சிகர இலக்கில் முன்னேறட்டும் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/let-tamil-nadu,-which-gives-hope,-advance-in-the-revolutionary-goal | தமிழ் | UTF-8 | சிபிஎம் மாநில மாநாட்டை துவக்கி வைத்து எம்.ஏ.பேபி உரைவிழுப்புரம், ஜன. 3 - ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக வுக்கு எதிராக உண்மையான மாற்றை உருவாக்க முடியும் என்றும் பாஜக தோற்கடிக்கக் கூடிய சக்தி தான் என்பதை கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி கூறினார். கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டை விழுப்புரத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கில் வெள்ளியன்று (ஜன. 3) துவக்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் செங்கொடி இயக்கத்திற்கு செழுமையான வரலாறு உண்டு. இந்தியாவில் 1923-ம் ஆண்டு மே 1 அன்று அன்றைய மதராஸ் மாநகரில், செங்கொடி ஏற்றப்பட்டு முதல் முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. அன்றைக்கு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மறைந்த தோழர் சிங்காரவேலர் முக்கியப் பங்காற்றினார்.அய்யா வைகுண்டரின் சமத்துவப் பார்வைசமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு சமு தாயத்தை உருவாக்கும் சிந்தனைக்கு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக இந்தப் பகுதியிலும் குறிப்பிடத் தக்க பங்களிப்புகள் இருந்திருக்கின்றன என்பதை வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் உழைப்பாளி மக்களுக்கான அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை வரையறுத்த அதே காலகட்டத்தில், நாகர்கோவில் அருகில் இருக்கக் கூடிய சாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டர் சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குவதற்கான ஒரு இயக்கத்தை ஏற்படுத்தினார். அங்கு செல்லக்கூடி யவர்களுக்கு, அது புரட்சிகர ஸ்தலம் ஆகும். நான் உண்மையாகவே அப்படி உணர்கிறேன். அங்கு தான், அய்யா வைகுண்டர், சமத்துவ சங்கத்தை துவங்கினார்.விஞ்ஞான சோசலிசம்கம்யூனிஸ்ட் இயக்கத்தை காரல் மார்க்சும் ஏங்கெல்சும் தோற்றுவித்ததற்கு முன்பாகவே அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், அய்யா வைகுண்டர் காரல் மார்க்ஸைவிட 9 ஆண்டுகள் மூத்தவர். காரல் மார்க்ஸ் பிறந்த ஆண்டு 1818. உலகம் முழுவதும் தீவிரமான சமத்துவவாதச் சிந்தனை கள் உருவாகின. கற்பனாவாத சோசலிஸ்டுகள் அன்றைய தினம் சோசலிச சமுதாயத்தை உருவாக்கு வதற்கான பல்வேறு கருத்துக்களை முன்மொழிந்த காலத்தில், கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் விஞ்ஞான சோசலிசம் என்ற மிக அற்புதமான சித்தாந்தத்தை, அதற்கு அறிவியல் அடிப்படையிலான, தீர்வை வழங்கினார்கள்.உண்மையான ஜனநாயக இயக்கம்சிபிஎம் கட்சி மாநாடுகளில் நாம் கடந்த காலங்களில் நடத்திய இயக்கங்களை பரிசீலிக்கிறோம். கட்சி எந்தளவுக்கு விரிவடைந்திருக்கிறது, மக்களிடம் நாம் எந்தளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறோம், நமது கட்சியின் கொள்கைகள் சமூக மாற்றத்திற்கான ஜனநாயக இயக்கங்களை வலுப்படுத்துவதில் எந்த ளவுக்கு உதவியிருக்கிறது என்பதை மாநாட்டில் பரிசீலிக்கிறோம். போராட்டங்களில் கட்சி மற்றும் கட்சி ஊழியர்களின் பங்களிப்பு குறித்தும் மாநாடு விவாதிக்க உள்ளது. நமது கட்சியினுடைய அமைப்புச் சட்டத்தின்படி கட்சியின் மாநாடுகள் மூன்றாண்டு களுக்கு ஒரு முறை கிளை மட்டத்தில் இருந்து துவங்கி அகில இந்திய மாநாடு வரையிலும் நடை பெறும். இந்த மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவா தங்களின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் நமது கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அர சியல் நடைமுறை உத்தியைத் தீர்மானிக்கிறோம். அந்த உத்தியை தீர்மானிக்கக்கூடிய பங்களிப்பை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் அளித்திருக்கிற ஒரே கட்சி இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான். அதுமட்டுமல்ல, நாம் நமது கட்சியின் தலைவர்களையும், அரசியல் தலைமைக் குழுவையும் ஜனநாயக முறைப்படி மாநாட்டில் தேர்ந்தெடுக் கிறோம். இந்தப் பின்னணியில் தான் நமது கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டை நடத்திக் கொண்டி ருக்கிறோம். கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறவுள்ளது.உற்சாகம் தரும் நிலைமைகள்நாம் நம்முடைய நாட்டிலும் உலகிலும் நம் நிலைமையை மதிப்பீடு செய்யும் போது, ஒரு கலவை யான நிலைமையைக் காண்கிறோம். உற்சாகம் தரும் நிலைமைகளும் உள்ளன, சில எதிர்மறை அம்சங் களும் உள்ளன. சிபிஎம் 23-ஆவது அகில இந்திய மாநாட்டில் ஒரு அரசியல் தந்திர உத்தி முன்வைக்கப் பட்டது. மக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த, நாட்டின் அரசியல் சக்திகளை ஒன்று திரட்டி ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இயங்கும் பாஜகவையும் அதன் கூட்டாளி களையும் வீழ்த்த வேண்டும் என்பது 23-ஆவது கட்சி மாநாட்டில் வகுக்கப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியாகும். மூன்று எதிரிகளை வரையறுத்த ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் என்பது பாசிசக் கூறுகளைக் கொண்ட ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அந்த விபரங்களை நான் மேலும் கூடுதலாக விவரிக்கவில்லை. ஆனால் அந்த அமைப்பின் செயல்திட்டம் என்ன என்பதை அந்த அமைப்பின் முக்கியமான கோட்பாட்டாளர் கோல்வால்கர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இது குறித்து பெரிதும் விவாதிக்கப்படும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், அந்த விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், பெரும்பான்மை மக்கள் அடிப்படையிலான - அதாவது இந்து மத அடிப்படை யிலான சமூகத்தை நிறுவ அந்த அமைப்பு திட்ட மிட்டுள்ளது. எனவே, அவர்கள் மிகத் தெளிவாகவே மூன்று எதிரிகளை உள்நாட்டில் வரையறுத்திருக் கிறார்கள். அதில் முதல் இரண்டு எதிரிகள், நம் நாட்டின் சிறுபான்மை மக்களான முஸ்லீம்களும், கிறிஸ்த வர்களும் என்று கூறியுள்ளனர். மூன்றாவது எதிரி கம்யூ னிஸ்ட்டுகள் என்பதையும் அறிவித்துள்ளனர். அவர்கள் வெளிப்படையாகவே இந்த முறையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக அறிவிக்கின்றனர். இந்து மதத்தின் மீது பற்றுக்கொண்ட மதச்சார்பற்ற தன்மை கொண்ட - ஜனநாயகத் தன்மை கொண்ட மக்களை அவர்கள் சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எங்களுக்கில்லை. நுட்பமாகப் பார்த்தால், இந்து மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள். மகாத்மா காந்தியை அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்) படுகொலை செய்தார்கள். கல்புர்கி, கவுரி லங்கேஷ், தபோல்கர் என பலரையும் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) கொன்றார்கள். மதவெறியூட்டப்பட்ட சில நபர்கள் அந்த படுகொலைகளை செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பாசிச அமைப்பு, மோடி அரசை அது கட்டுப்படுத்துகிறது.நமது கடமை என்ன?மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களில் ஒருவரான சாவர்க்கரை, நரேந்திர மோடியுடன் எளிதில் தொடர்புபடுத்தலாம். ஏனென் றால் பிரதமரான பின் மோடி வெட்கமில்லாமல் சாவர்க்கரைத் தான் தனது அரசியல் ஆசான் என்று அறிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை. எனவே, நாட்டில் உள்ள இடதுசாரிகள், முற்போக்காளர்களை மட்டுமல்லாமல் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தையும் திரட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக நிறுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அத்தகைய அணிச் சேர்க்கை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னர் நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் என அனைத்து அரசு அமைப்புகளையும் கட்டுப் படுத்தும் இடத்தில் இருக்கிறார்கள். எனவே அவர் களை வீழ்த்த வேண்டும் என்பது சிபிஎம் 23-ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தியாகும்.நாசகர சக்திகளை வெல்லமுடியும்கடந்த நாடாளுமன்றத் தேர்தலை நாம் கருத்தில் கொண்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.62 விழுக்காடு அல்லது 2 விழுக்காட்டிற்கு குறைவாகவே இருந்தது. எனவே, பாஜகவும் அதன் கூட்டாளிகளும் தோற்கடிக்க முடிந்த சக்திகளே என்பதை கடந்த தேர்த லில் நிரூபித்துவிட்டோம். மக்களவையில் அவர்கள் நினைத்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை. 2014-ஆம் ஆண்டிலும் 2019-ஆம் ஆண்டிலும் நடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. இதனால், கடந்த தேர்தலில் அவர்கள் 400 எண்ணிக்கையில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தார்கள். ஆனால் அதை எட்ட முடியாமல் தடுத்து நிறுத்தினோம்.முன்னேற்றத்தைக் கொடுத்த அரசியல் உத்திஉத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ராமர் கோவி லை கட்டிமுடிக்காத நிலையில் பிரதமர் தலைமையில் கோவிலைத் திறந்தார்கள். தேர்தலுக்கு முன்பு இப்படி திறப்பு விழாவை ஏற்பாடு செய்து, சமூகத்தை பிளவு படுத்தலாம் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்கள். இந்திய மக்கள் ஸ்ரீராமர் மீது கொண்டுள்ள மரியாதை யை வாக்குகளாக மாற்ற முடியும் என்று கருதினார் கள். அரசியல் நெறிமுறைகளை பொருட்படுத்தாமல், பிரதமர் கண்மூடியபடி சென்று ராமர் கோவிலை திறந்து வைத்தார். ஆனால், அது பாஜகவிற்கு உதவி செய்யவில்லை. ராமர் கோவிலுக்கு உட்பட்ட மக்க ளவைத் தொகுதியில் பாஜக படுதோல்வியை சந்தித் தது. சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அந்தத் தொகுதி யில் வெற்றி பெற்றார். எனவே, நாம் கூட்டாக எடுத்த அரசியல் உத்தி முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. வெற்றிக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் சென்றுள்ளது. ஆனாலும் நாம் இப்போது அந்த உத்தி யைப் பரிசீலனை செய்யும் இடத்தில் இருக்கிறோம். நம்மால் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்ட முடிந்தது எப்படி? நாம் ஒரு பரந்த மேடையை அமைத்து அந்த இலக்கை நோக்கி நகர்ந்தோம். பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, அதிகாரத்தில் இருந்து நாம் அவர்களை அகற்ற முயற்சித்தோம். மக்களவைத் தேர்தல் தீர்ப்பின் மூலம் இந்திய மக்கள், ‘இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நாங்கள் விரும்ப வில்லை’ என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் தேர்த லின் போது பாஜகவினர் வெட்கமின்றி பிளவுவாதத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் குறிப்பிட்ட சமுதாயத் தினரை இழிவாகப் பேசினர். பிரதமர் பேசிய நூற்றுக் கணக்கான உரைகளில் வெட்கமே இல்லாத வகையில் பிளவுவாதக் கருத்துக்கள் அதிகமாக இடம் பெற்றி ருந்தன. உண்மையான ஊடக சுதந்திரத்திற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சில ஊடகவியலாளர்கள் அந்தப் பேச்சுக்களை அடையாளம் காட்டினார்கள். ஆனால் சில ஊடகங்களோ அந்த நிகழ்ச்சி நிரலில் கரைந்து போனார்கள். மேலும் பாஜக சாதியவாதத்தை பயன்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி உணர்வை பயன்படுத்த திட்டமிட்டுச்செயல்பட்டது.பணபலத்தால் கட்சிகளை பிளவுபடுத்திய பாஜகபணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தவும், தலைவர்கள் சிலரை நேரடியாக குறி வைத்திடவும், தலைவர்களை விலைக்கு வாங்கவும் செய்தார்கள். அதற்கு முன்பு, சிபிஐ, அமலாக்க இயக்கு நரகம், வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்பு கள், ‘நீங்கள் சிறைக்குப் போக விரும்புகிறீர்களா அல்லது, பாஜகவில் சேருகிறீர்களா’ என்று கேட்டா கள். ‘பாஜகவில் சேர்ந்தால், சிறைக்குச் செல்ல வேண்டிய தில்லை, முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும், மேலும் பெரிய தொகையும் வழங்கப்படும்’ என்று சொன்னார்கள். மகாராஷ்டிராவில் முக்கியமான அரசியல் கட்சிகளில் பிளவை ஏற்படுத்தினார்கள்.தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு அமைப்புகள்மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமை யிலான அணி எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை நாம் அறிவோம். வெட்கமே இல்லாத வகையில் அரசு இயந்திரம் குறுகிய நோக்கத்திற்காக பயன்படுத்தப் பட்டது. முன்பு பெரிதும் மதிக்கப்பட்ட அமலாக்கத் துறை இப்போது தேர்தல் பணியை பார்க்கத் தொடங்கியது. இ.டி. (Enforcement Department) என்று சொன்னால் அதன் பொருள் தேர்தல் பணி என்றானது. அதாவது எலக்சன் டியூட்டி (Election Duty) என பாஜக-வால் மாற்றப்பட்டது. இவ்வாறு தான் அவர்கள் மாநில சுயாட்சியை சீர்குலைத்து வருகின்றனர். நீதித்துறையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மோசமாக பேசியதைக் கேள்விப்பட் டோம். பிறகு, உச்சநீதிமன்றம், தாங்கள் பார்வை யாளர்கள் அல்ல என்பதை மக்களுக்கு நம்ப வைக்க முயற்சி செய்தது. ஆனால், அதில் முன்னேற்றம் இல்லை. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் 60 சதவிகிதம் வரை பலமாக உள்ள சில தொகுதிகளில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக வெற்றிபெற்றுள்ளது. அதற்காக என்ன வெல்லாம் செய்தார்கள் தெரியுமா? பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று நினைக்கப்பட்ட வர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள். இது தேர்தல் செயல்முறை மற்றும் ஜனநாயக செயல்முறை மீதான வெளிப்படை யான அழிப்பு நடவடிக்கையாகும். எனவே, இதைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.தமிழக மக்களுக்கு பாராட்டுஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியதற்காக தமிழ்நாட்டு மக்களும், நண்பர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர். மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்காற்றியதுடன், இடதுசாரி அல்லாத ஜனநாயகக் கட்சிகளும் அந்தக் கூட்டணியில் சேர்க்கப்பட்டன. இத்தகைய அரசியல் அணி சேர்க்கை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அரசியல் செல்வாக்கு பெற முடியாமல் தடுத்து நிறுத்த உதவியுள்ளது. இந்த வெற்றிக்காக உங்களையும், மக்களையும் வாழ்த்துகிறபோது, சமுதாயத்தை பாதிக்கும் பல சக்திகள் இன்னமும் வலுவாக உள்ளன என்பதை எச்சரிப்பதும் அவசியம். பாஜகவையும் அதன் கூட்டாளி களையும் தோற்கடித்த தமிழக அரசு, மக்களின் உரிமை களை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒரு புரட்சிகர இயக்கம் என்ற முறையில் நாம் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க தொடர்ந்து உறுதியோடு போராடுவோம்.இடது ஜனநாயக முன்னணி அரசை வீழ்த்த முயலும் தீயசக்திகள்கேரள மாநிலத்தை சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி செய்கிறது. அந்த அரசு இடதுசாரிகளையும், இடதுசாரி அல்லாத கட்சி களையும் உள்ளடக்கியதாகும். இந்தியாவில் இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் தலைமை தாங்குகிற ஒரே அரசாகவும் அது உள்ளது. நாம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளோம். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசு மீது தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், பிற சக்திகளும் நம் நாட்டிலுள்ள ஒரே இடதுசாரி அரசை தாக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக திட்டத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன. இதுதான் 1957 ஆம் ஆண்டு அமைந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பு கேரளாவில் பிற்போக்கு சக்திகளுக்கு உதவி செய்தது. அவர்கள் முன்னெடுத்த இழிவான இயக்கம் இஎம்எஸ் அரசை சீர்குலைத்தன. இப்போதும் பிற்போக்கு சக்திகள் கேரள மாநிலத்தில் ஒரு கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள். நாம் இவர்களை எதிர்கொண்டுதான் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்தில் நாம் ஒரு அரிய சாதனையைப் படைக்கவும் முயற்சி செய்கிறோம். அது என்ன?வறுமையை முற்றாக ஒழிக்க முயற்சிஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் தீவிரமான வறுமையை எதிர்கொள்கிறோம். ஆனால், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு வறுமையை அகற்றுவதற்காக செயல்திற னுடன் பணியாற்றி வருகிறது. வறுமையை முழுமை யாக அகற்ற முயல்கிறது. மேலும், அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை எட்ட முயற்சிக் கிறது. நிச்சயமாக மாநிலத்தில் கடுமையான வறுமையை ஒழித்த அரசு, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு என்ற அங்கீகாரத்தைப் பெறும். இந்த எதார்த்த நிலையையும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசின் வரலாற்றுப் பணிகள் மற்றும் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் கேரள எல்டிஎப் அரசுக்கு தங்கள் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வழங்க வேண்டும். இடதுசாரிகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றி ணைத்து பாஜகவுக்கு எதிரான ஒரு உண்மையான மாற்றை உருவாக்க முடியும். பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடவும், அந்த சக்திகளை தனிமைப் படுத்தவும், அந்த சக்திகளின் தீய திட்டங்களையும் மக்களிடம் அம்பலப்படுத்தவும் நாம் இன்னும் தீவிர மாகச் செயல்பட வேண்டியுள்ளது. இதற்கான தெளி வான செயல் திட்டங்களை நமது மாநாடு உருவாக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு எம்.ஏ. பேபி பேசினார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தமிழாக்கம் செய்தார். | 2025-01-04 01:57:25.618894 |
ஜனவரி 3, 2025 | கல்வித்துறையில் சாதனை படைத்த தென்மாநிலங்கள் | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/southern-states-with-achievements-in-education-sector | தமிழ் | UTF-8 | இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலை பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் கேரளம் முதல் இடத்தையும் தமிழ்நாடு 3ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளன. ஒன்றிய அரசின் கல்வி அமைச்ச கம் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவில் 5 ஆம் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ந்தபோது அவர்களில் 99.6 விழுக்காட்டினர் தொடர்ந்து படித்து 8 ஆம்வகுப்பை அதாவது நடுநிலைப் பள்ளியை முடித்தார்கள். அந்த விழுக்காடு 2024 ஆம் ஆண்டு 100 விழுக்காடாக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2019இல் 99 விழுக்காடாக இருந்தது. கடந்தாண்டு இது100 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல, மாணவியர் எண்ணிக்கையிலும் இந்த இரு மாநிலங்களும் பெரும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியுள்ளன. இதனால் கேரளாவிலும் தமிழ கத்திலும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடு வோர் எண்ணிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள் ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.அதேபோல, கேரளாவில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019-இல் 88.3 விழுக் காடாக இருந்தது. இது கடந்தாண்டு 95.7 விழுக்கா டாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த விழுக் காடு 2019இல் 81.3 என இருந்தது 2024-இல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்த வரை கேரளாவில் 2019இல் 93.2 விழுக்காடாக இருந்த உயர்நிலை பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவிகளின் விழுக்காடு 2024இல் 97.5 ஆக உயர்ந்துள்ளது. அதாவது வெறும் 2.5 விழுக் காட்டினரே படிப்பை பாதியில் கைவிடுகிறார்கள். இந்த இரண்டு மாநிலங்களும் பள்ளி கல்வித் துறையில் வீறு நடைபோடும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது.பீகாரில் 2019இல் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் விழுக்காடு 78.6 ஆக இருந்தது. இது 2024-இல் 65 விழுக்காடாக வீழ்ச்சியடைந்து விட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-இல் 81.1 விழுக்காடாக இருந்தது 2024-இல் 65.4 விழுக் காடாக குறைந்து மோசமான நிலைக்குச் சென்றுள் ளது. பீகாரில் உயர்நிலைப் பள்ளியிலும் மாணவர்க ளின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அசாமில் மிக மோசமான நிலையே காணப்படுகிறது. குஜராத் மாநிலத்திலோ எந்த முன்னேற்றமும் இல்லை.தமிழகத்தில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந் தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆகியவை இடை நிற்றலை குறைத்துள்ளன. இப்படி பல துறைகளில் சாதனை படைக்கும் தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்குதான் ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. | 2025-01-04 01:57:29.329778 |
ஜனவரி 3, 2025 | போக்குவரத்து நெரிசலில் மோசமான நகரங்கள் பட்டியல் வெளியீடு! | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/india/bangalore/the-list-of-worst-cities-in-traffic-congestion-is-published | தமிழ் | UTF-8 | ஆசியாவிலேயே மிகவும் மோசமான நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது இதில் பெங்களூரு முதலிடத்திலும் புனே, தில்லி, மும்பை ஆகியவை அடுத்த மூன்று இடங்களில் உள்ளது.
சுமார் 10 கி.மீ. தூரத்தைக் கடக்க எடுக்கும் நேரம் கணக்கிடப்பட்டதில் பெங்களூருவில் 28 நிமிடம் 20 வினாடிகள் ஆகிறது. புனேவில் 27 நிமிடம் 3 வினாடிகளும், தில்லியில் 19 நிமிடம் 42 வினாடிகளும், மும்பையில் 27 நிமிடம் 18 வினாடிகளும் ஆகிறது. | 2025-01-04 01:57:30.718108 |
ஜனவரி 3, 2025 | வர்க்க நலனுக்காக சமரசமற்ற போராட்டம்! -- தலைமையுரையில் பெ. சண்முகம் உறுதி | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/uncompromising-struggle-for-class-welfare | தமிழ் | UTF-8 | விழுப்புரம், ஜன. 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் (தோழர்கள் என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கம்) மத் தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆற்றிய தலைமையுரையில், அரசிய லமைப்பு உரிமைகளைப் பாது காக்கும் போராட்டத்தைத் தீவிரப் படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து ரிமை, போராட்ட உரிமை, கூடும் உரிமை ஆகியவற்றை மத்தியில் ஆட்சியி லுள்ள பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டம் பறிக்க முயல்கிறது” என்று சண்முகம் எச்சரித்தார். “போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, தடை விதிப்பு, காவல்துறை மூலம் கைது என அடக்குமுறைகள் தீவிரமடைந்துள்ளன. அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டியுள்ளது” என்றார். “மக்கள் நலனுக்காகவும், ஏற் கனவே பெற்ற உரிமைகளைப் பாது காக்கவும், புதிய உரிமைகளை வென் றெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும். இதில் எந்தவிதமான சம ரசத்திற்கும் இடமில்லை. வர்க்க நலன் களைப் பாதுகாக்க சமரசமற்ற போரா ட்டத்தை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்” என்று உறுதிபட தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்காலம் குறித்து பேசிய பெ. சண்முகம், “அரசியலில் தீர் மானிக்கும் சக்தியாக இடதுசாரிகள் வளர வேண்டும். இடதுசாரிகள் இல்லையென்றால் தமிழகத்தின் எதிர் காலமும் இல்லை என்ற நிலையை உரு வாக்க வேண்டும். ‘சுரண்டல் ஒடுக்கு முறை தகர்க - சமத்துவ தமிழ்நாடு மலர்க’ என்ற மாநாட்டு முழக்கத்தை சாத்தியமாக்க அனைவரும் இணை ந்து போராடுவோம்” என அறைகூவல் விடுத்தார். | 2025-01-04 01:57:34.472070 |
ஜனவரி 3, 2025 | மணிப்பூர், ஒடிசா ஆளுநர்கள் பதவியேற்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/governors-of-manipur-and-odisha-were-sworn-in-on-friday | தமிழ் | UTF-8 | மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆளு நர்கள் வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றனர். அசாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா மணிப்பூரின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளு நராக முன்னாள் ஒன்றிய உள்துறைச் செயலாளரும் அமித் ஷாவிற்கு மிக நெருக்கமானவருமான அஜய் பல்லா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணிப்பூரின் 19ஆவது ஆளுநராக அஜய் பல்லா பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ண குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் பைரேன் சிங் மற்றும் மாநில அமைச் சர்கள் பங்கேற்றனர். | 2025-01-04 01:57:34.473136 |
ஜனவரி 3, 2025 | தீக்கதிர் விரைவு செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/violent-tension-again-in-manipur-due-to-bjp-chief-minister's-speech-army-concentration-in-the-hills | தமிழ் | UTF-8 | பாஜக முதல்வர் பேச்சால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை பதற்றம் மலைப்பகுதிகளில் படைகள் குவிப்புமணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மன்னிப்பு கோரினார். பைரேன் சிங் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் காங்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை யில் பலர் படுகாயமடைந்தனர். பைரேன் சிங் குதர்க்கம் இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “மணிப்பூர் இனக்கலவரம் விஷயத்தில் நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்கு பவர்கள், மணிப்பூரின் அமைதியை விரும்பாதவர்கள்” என பேசினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “மணிப்பூர் மாநிலம் அமைதியின்றி இருக்க வேண்டும் என்று நினைப்ப வர்களே நான் மன்னிப்புக் கோரியதை அரசியலாக்கி வருகின்றனர். வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் ஆகியோரிடமே நான் மன்னிப்புக் கோரினேன். பயங்கரவாதிகளிடம் நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? “மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் என பயங்கரவாதிகள் எனக் கூறியது எங்களைத் தான்” என குக்கி பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனால் காங்போக்பி மற்றும் மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.சபரிமலையில் ரூ.297 கோடி வருமானம்சபரிமலை ஐயப்பன் கோவிலில் 48 நாள் கொண்ட மண்டல பூஜை காலத்தில் ரூ.297 கோடி வரு மானம் கிடைத்துள்ள தாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் இந்த கால கட்டத்தில் சபரிமலை கோவிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.214.82 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், இவ்வாண்டு கூடுதலாக ரூ.82.23 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரவண பிரசாத விற் பனை மூலம்தான் அதிகமாக ரூ.124 கோடி கிடைத்துள்ளது. காணிக்கை மூலம் ரூ.80.25 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13.24 கோடி அதிகமாகும்” என அவர் கூறியுள்ளார்.உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்புவது நிறுத்தம் ரஷ்யா அறிவிப்புமாஸ்கோ நேரப்படி ஜனவரி முதல் நாள் காலை 8 மணி முதல் உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை அனுப்புவதை நிறுத்துவதாக ரஷ்ய இயற்கை எரிவாயு தொழில் துறை நிறுவனம் அன்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனின் வழியாக ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை அனுப்புவது பற்றிய உடன்படிக்கையை நீட்டிப் பதை உக்ரைன் பலமுறை தெளிவாக மறுத்ததால், சட்டம் மற்றும் தொழில் நுட்பம் ரீதியில் உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை அனுப்ப முடியாது என்று இவ்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ரஷ்ய இயற்கை எரிவாயு தொழில் துறை நிறுவனம், உர்பைன் பெட்ரோலியா மற்றும் இயற்கை எரிவாயு கூட்டு நிறுவனத்துடன் இணைந்து, உக்ரை னின் உரிமைப் பிரதேசத்தின் வழியாக இயற்கை எரிவாயு அனுப் புவது பற்றிய உடன்படிக்கையை கையொப்பமிட்டது. இவ்வுடன்ப டிக்கை அமலாக்கப்படும் காலம் 5 ஆண்டுகளாகும். 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள் இது காலாவதியானது. ரஷ்யாவுடன் இந்த உடன்படிக்கையை நீட்டிக்காது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கீ அண்மையில் தெரிவித்தார். எரியாற்றல் வினியோகத்தின் மீதான, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி முதலிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கவலையை இது எழுப்பியுள்ளது. | 2025-01-04 01:57:34.473775 |
ஜனவரி 3, 2025 | தனியார் மருத்துவமனைகளின் பகற் கொள்ளை தடுத்திட உரிய நடவடிக்கைகள் தேவை | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/adequate-measures-are-needed-to-prevent-daylight-robbery-of-private-hospitals | தமிழ் | UTF-8 | புதுதில்லி தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் அதீதமாக கட்ட ணங்களை வசூலிப்பதைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜன் ஸ்வத்யா அபியான் (Jan Swasthya Abhiyan) என்னும் மக்கள் சுகாதார இயக்கம் அறை கூவல் விடுத்துள்ளது. வறுமை நிலையில் 13 கோடி பேர் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, இந்தியாவில் 12 கோடியே 90 லட்சம் மக்கள் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கிறார்கள் என்று கூறுகிறது. இதன் பொருள் இக்குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு 180 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் வரு கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நிதி ஆயோக் அமைப் பும்கூட இந்தியாவில் சுமார் பத்து கோடி மக்கள் அல்லது இந்தியா வின் மக்கள் தொகையில் 7 விழுக் காட்டினர் மருத்துவச் செலவினங்க ளின் காரணமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்போது உள்ள நிலைமை யின்படி இந்தியாவில் இயங்கி டும் பெரும்பாலான தனியார் மருத்து வமனைகளில் நோயாளிகளிடம் பல்வேறு வடிவங்களில் பணம் பறிக்கப்படுகிறது. இவற்றை முறைப் படுத்துவதற்கான அரசு அமைப்பு எதுவும் இல்லை என்றே கூறலாம். தனியார் மருத்துவமனைகள் நோயா ளிகளிடம் அதீதமாக பல்வேறு பெயர்களில் கட்டணங்கள் வசூலிப்ப தன் காரணமாக லட்சக்கணக் கான குடும்பங்கள் பொருளா தார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டி ருக்கின்றன என்று மேற்படி மக்கள் சுகாதார இயக்கம் தெரிவிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் தி கிளினிக்கல் எஸ்டபிள்ஸ் மெண்ட் ஆக்ட் என்று 2010இல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்டத்தின் கீழ் நாட்டில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இதன்கீழ் முறையாக கொண்டு வரப் பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. இந்த நிலைமையை மாற்றிய மைப்பதற்காக மக்கள் சுகாதார இயக்கம் சார்பாக பொதுநல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் நாட்டில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் அனை த்தும் 20 அம்சங்கள் கொண்ட நோயாளிகளின் உரிமைகள் சாச னத்தை அமல்படுத்திட உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்திட வேண்டும் என்று கோரியிருக்கிறது. மருத்துவமனைகள் வசூலித்திடும் கட்டணங்கள் அனைவரும் அறியும் வண்ணம் பொது இடத்தில் விளம் பரப்படுத்த வேண்டும் என்றும் கோரி யிருக்கிறது. (ந.நி.) | 2025-01-04 01:57:34.474409 |
ஜனவரி 3, 2025 | அனைத்துத் துறைகளிலும் திறமை படைத்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி - முகமது சலீம் புகழாரம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/comrade-sitaram-yechury-is-talented-in-all-fields | தமிழ் | UTF-8 | தோழர் சீத்தாராம் யெச்சூரி பல துறைகளிலும் திறமை படைத்தவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநில செயலாளருமான முகமது சலீம் கூறினார். “டெய்லி தேஷ் சேவக்” என்னும் பஞ்சாபி நாளிதழ் 29 ஆண்டுக ளாக வெளிவந்து கொண்டிருக்கி றது. அதனைக் கொண்டாடும் விழா 2025 ஜனவரி 1 அன்று செக்டார்-டி-இல் அமைந்துள்ள பாக்னா பவன் அரங்கத்தில் நடை பெற்றது. அந்த விழா தோழர் சீத்தா ராம் யெச்சூரிக்கு அர்ப்பணம் செய்து கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரும், மேற்கு வங்க மாநில செய லாளருமான முகமது சலீம் பேசியதாவது: “தோழர் சீத்தாராம் யெச்சூரி அனைத்துத் துறைகளின் மீதும் ஆளுமை மிக்கவராவார். அவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, மிகச் சிறந்த பொருளாதார மேதை, கலாச்சாரத்துறையிலும் அபரிமிதமான அறிவினைப் பெற்ற வர். சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் மீது மிகச் சிறந்த கட்டுரைகளைத் தீட்டி இருக்கிறார். தோழர் சீத்தா ராம் யெச்சூரி, ‘இந்தியா’ கூட்டணி அமைவதற்கு மிக முக்கிய பங்கினை வகித்தார். இக்கூட்ட ணியில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளுடன் பேசி இன்றைய கால கட்டத்தில் பாசிச ஆர்எஸ்எஸ்/ பாஜக-விற்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட மதச் சார்பற்ற கட்சிகளின் கூட்டணி யின் அவசியத்தை அவர்களுடன் பேசி, அவர்களை இணக்கத்துடன் கூட்டணிக்குள் கொண்டு வருவ தற்கு மிகச் சிறந்த முறையில் பங்க ளிப்பினைச் செய்தவராவார். தோழர் யெச்சூரி இந்துத்துவா மத வெறி சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து முனைகளிலும் விடாப் பிடியாகத் தொடர்ந்து போராடி னார். ஆர்எஸ்எஸ்-இன் பாசிச சித்தாந்தத்தின் ஆபத்துகள் குறித்து எண்ணற்ற கட்டுரைக ளும், புத்தகங்களும் எழுதியிருக்கி றார். மிகவும் சிக்கலான பிரச்சனை களைக் கூட தோழர் யெச்சூரி சாதாரண மக்களும் புரிந்துகொள் ளக்கூடிய விதத்தில் புன்னகை யுடன் எளிமையாக முன்வைத்திடு வார். அவர் உயர்த்திப்பிடித்த சித்தாணந்தத்தை முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்கு செய்திடும் உண்மையான அஞ்சலி யாக இருக்கும்” என்று முகமது சலீம் கூறினார்.நிலோத்பால் பாசுவிழாவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு பேசியதா வது, “தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு மாபெரும் மார்க்சிய சிந்த னையாளர். ஆர்எஸ்எஸ்-இன் அமைப்புகளால் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தி லேயே நாடு எந்தத் திசைவழியில் சென்றுகொண்டிருக்கிறது என் பதை அவரால் உய்த்துணர முடிந்தது. ஆர்எஸ்எஸ்-க்கு எதி ரான போராட்டமும், அவர்களிட மிருந்து ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்ப தற்கு நாட்டு மக்கள் மிகப்பெரிய அளவில் போராட வேண்டியி ருக்கும்” என்றும் அவர் கூறினார்.பஞ்சாப் அமைச்சர் லால் சந்த்விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சர் லால்சந்த் கட்டாருசக் தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இருந்தபோது ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். சிரோன்மணி அகாலி தளத்தின் பொறுப்பு தலைவரும், மாநிலங்க ளவையின் முன்னாள் உறுப்பின ருமான சர்தார் பல்வீந்தர் சிங் பந்தர், மாநிலங்களவையில் எந்த அளவிற்கு சிறப்பாக சீத்தாராம் யெச்சூரி பணியாற்றினார் என் ்பதை நினைவுகூர்ந்தார். மதவெறி க்கு எதிராகவும் சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்காகவும் உழைத்த மாபெரும் தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்று அவர் புகழ்ந்துரைத்தார். இடதுசாரிகளின் மாபெரும் தலைவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த தோழர் பாந்த் பிரார், தோழர் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இடதுசாரி இயக் கத்திற்கே மாபெரும் தலைவர் என்று கூறினார். சுர்ஜித்தின் பங்களிப்பு தேஷ் சேவக் இதழ் சார்பில் பேசிய சிபிஎம் பஞ்சாப் மாநிலச் செயலாளரும், தேஷ் சேவாக் நாளி தழ் மேலாண் இயக்குனருமான சுக்விந்தர் சிங் சவுகான் பேசு கையில்,“தேஷ் சேவக் இதழ் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் மற்றும் சாமானிய மக்களின் பிரச்ச னைகளை உயர்த்திப்பிடிப்பதில் முக்கிய பங்காற்றி வருவதைக் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைவ தற்கு முன்பே வெளிவந்த தேஷ் சேவக் இதழை மீண்டும் கொண்டு வருவதில் தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் பங்களிப்பை விளக்கினார். தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அர்ப்பணம் செய்து ஒரு காலண்ட ரும் விழாவில் வெளியிடப்பட்டது. (ந.நி.) | 2025-01-04 01:57:34.475022 |
ஜனவரி 3, 2025 | ராஜஸ்தானில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவசர ஆலோசனை | மாநிலம் - ராஜஸ்தான் | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/rajasthan/india-allies-urgent-consultation-in-rajasthan | தமிழ் | UTF-8 | காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை ராஜஸ்தான் பாஜக அரசு கலைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்எல்பி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் மாவட்டங்கள் கலைத்தது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தின. பாஜக அரசின் முடிவுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கம் தொடங்கி மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. | 2025-01-04 01:57:34.475635 |
ஜனவரி 3, 2025 | வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/the-winter-season-is-raging-in-the-country-as-usual-in-southern-states | தமிழ் | UTF-8 | நாட்டில் குளிர்கால சீசன் ஆரம் பித்துள்ளது. தென் மாநிலங்க ளில் வழக்கம் போல மிதமாக உள்ள குளிர் வட மாநிலங்களில் பனிப் பொழிவு நிகராக வாட்டி வருகிறது. ஹிமாச்சல், உத்தரகண்ட், ஹரியானா, தில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் இயல்புநிலையை பாதிக்கும் அளவிற்கு உள்ளது. விமானங்கள் தாமதம் தலைநகர் தில்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வெள்ளிக்கிழமை காலை சுமார் 100 விமானங்கள் புறப் படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல விமானங்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் விமான சேவை சீரானதாக செய்திகள் வெளியா கின. விமான பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் தங்களின் பயணம் குறித்துத் தெளிவு பெற தில்லி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். 12 மணிக்கு மேல் வாகனங்களை இயக்க முடியவில்லை வடமாநிலங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனிமூட்டம் நிலவுவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்க ளை இயக்க முடியாமல் வாகன ஓட்டி கள் கடுமையாக திணறி வருகின்றனர். பனிமூட்டத்தால் அதிகாலை நேரங்களில் அதிகமாக விபத்து நிகழ்வதால் வாகன ஓட்டிகள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்க ளை இயக்க அஞ்சி வருகின்றனர். இத னால் வடமாநிலங்களில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன. | 2025-01-04 01:57:34.476316 |
ஜனவரி 3, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/savarkar-did-nothing-for-delhi | தமிழ் | UTF-8 | பீகாரில் அரசாங்கம் என்ற ஒன்று செயல்படுவதாகத் தெரியவில்லை. மாணவர்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் ஆகியோரின் குறைகளை கேட்க ஆளில்லை. அதனால் தான் வினாத்தாள் கசிவு போன்ற விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள்.தில்லிக்கு சாவர்க்கர் ஏதும் செய்யவில்லை. தில்லியிலும் அதைச் சுற்றியும் பல போராட்ட வீரர்களும் புரட்சியாளர்களும் இருந்திருக்கின்றனர். தில்லியில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, பிரிவினை அரசியலை முன்னெடுக்க பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.ரூபாயின் மதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறது. இன்று 3 பைசா குறைந்து, அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்திய ரூபாய் மதிப்பு 85.78 ஆக வீழ்ந்திருக்கிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்து விடும் என கடந்த 3 மாதங்களாக ஒன்றிய அரசு சொல்லி வந்தும் எதுவும் நடக்கவில்லை.மோடி பதவி ஏற்ற 2014 முதல் இரண்டு முறை இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தை இழந்தது ஏன்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? | 2025-01-04 01:57:34.476916 |
ஜனவரி 4, 2025 | கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபு இடங்களில் வசிப்போரின் உரிமைகளை காக்க வேண்டும் - | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/protect-the-rights-of-residents-of-temples,-monasteries,-trusts-and-waqfs | தமிழ் | UTF-8 | தமிழகத்தில் கோவில், மடம், வக்ஃபு வாரிய சொத்துக்களில் பல தலைமுறை களாக வசிக்கும் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி சிபிஐ (எம்) 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நிலங்களின் நிலவரம்தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44627 கோவில்களுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் 1.26 லட்சத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறை களாக குத்தகை விவசாயிகளாகவும், குடி யிருப்புக்கான அடிமனைகளில் 56 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் குடும்பங் கள் வீடு கட்டி அடிமனை வாடகைதாரர்களா கவும் வாழ்ந்து வருகின்றனர்.கோவில் நிலங்களின் நிலைமைகோவில்களுக்கு சொந்தமான கோவில்க ளை சுற்றியுள்ள 22 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கட்டடங்களில் குறு,சிறு வணிகர்கள் கட்டட வாடகையாளர்களாக பயன்படுத்தி வரு கின்றனர். இதேபோன்று இஸ்லாமியர்களுக் கான வக்ஃபு போர்டு கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பயனா ளிகள் உள்ளனர்.பயனாளிகளின் நிலைமேற்கண்ட 3 பிரிவினர்களில் 90 விழுக்கா ட்டிற்கு மேலானவர்கள் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பிரிவினைச் சார்ந்தவர்களே. பழைய வாடகை முறை 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகமும் பயனாளிகளும் இணைந்து தீர்மானித்துக் கொண்ட அளவிலேயே விவசா யிகளுக்கு குத்தகைத்தொகை தானியமா கவும், பகுதி தொகையாகவும், அடிமனைப் பயனாளிகளுக்கும், கட்டடப் பயனாளி களுக்கும் மாத வாடகையாகவும் தீர்மானிக்கப் பட்டு பயனாளிகளால் செலுத்தப்பட்டு வந்தது. 2004க்குப் பின் மாற்றங்கள் இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அரசாணை 353 இன்படி நியாய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் வாடகை நிர்ணயக் குழுவால் தீர்மானிக்கப்பட்ட அடிமனை வாடகையும், கட்டட வாடகையும் பல நூறு மடங்கு உயர்த்தியும், உயர்த்தப்பட்ட வாடகையின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையாக பல லட்சங்கள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.போராட்டமும் அரசாணைகளும்இந்த அறிவிப்பை எதிர்த்து அடிமனைப் பயனாளிகளும் கட்டடப் பயனாளிகளும் மேற்கொண்ட அமைப்பு ரீதியான பல்வேறு தொடர் போராட்ட நடவடிக்கைகளின் விளை வாக தமிழ்நாடு அரசு 2007 ஆம் ஆண்டு அரசாணை 456-ஐயும், 2010 ஆம் ஆண்டு அரசாணை 298- ஐயும் வெளியிட்டது. அரசாணைகளின் விளைவு இந்த அரசாணைகள் அடிப்படையில் மாத வாடகைத் தொகை மறுசீரமைக்கப்பட்டு பய னாளிகளுக்கு அறிவிக்க செய்து வசூலிக்கப் பட்டு வந்தது.2016க்குப் பின் புதிய நெருக்கடிஇந்த நிலையில், மீண்டும் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு முதல் அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34ஏ, அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கின்றோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை உயர்த்தப் பட்டு, நிலுவைத் தொகையாக பல லட்சங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வாடகை உயர்வின் அளவு உதாரணமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள பயனாளிகளுக்கு 2016 ஆம் ஆண்டு வரை மாத வாடகையாக ரூபாய் 4000 செலுத்திய பயனாளி, 2016 ஆண்டு முதல் மாத வாடகையாக ரூபாய் 40,000 செலுத்த வேண்டும் என்றும், நிலுவைத் தொகையாக ரூ.6 லட்சங்கள் முதல் ரூ.60 லட்சங்களுக்கு மேல் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்த தவறினால் அவர் கள் வெளியேற்றப்பட்டு அறநிலையத்துறை சட்டத் பிரிவு 78 மற்றும் 79 படி சீல் வைக்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.விவசாய நிலங்களின் நிலைமைஅதே போல் கோவில்களுக்கும், மடங்க ளுக்கும் சொந்தமான விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக குத்தகை விவசாயம் செய்து வரும் பயனாளிகளுக்கு எந்த அரசா ணையின் வழிகாட்டுதலும் இன்றி மேலெ ழுந்த வாரியாக குத்தகை தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு வருகின்றது.விவசாயிகள் மீதான நடவடிக்கைகள்குத்தகைத் தொகையை மறுப்பவர்களு க்கு மறு ஏலம் என்ற பெயரில் குத்தகை மாற்றம் செய்வதற்கும், நிலத்தை விட்டு வெளி யேற்றுகின்ற நடவடிக்கையும் சட்டப்பிரிவு 78-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாகுபடியில் ஈடுபட்டு வரும் குறு-சிறு விவசாய மக்களின் வாழ்வாதாரத்தையே இந்த நடவ டிக்கைகள் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.வணிகர்களின் நிலைமைஅது மட்டுமன்றி கோவில்களை சுற்றி உள்ள கோவில்கள் சொந்தமான கட்டடங்க ளில் வணிகம் செய்து வரும் குறு சிறு வணி கர்களுக்கும் புதிய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டு அவர்களும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.மாநாட்டின் கோரிக்கைகள்எனவே மாநில அரசு கீழ்க்கண்ட கோரிக் கைகளை நிறைவேற்றிட இம்மாநாடு கோருகிறது:நில உரிமை தொடர்பானவை:V பல தலைமுறைகளாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கான அடிமனைகளைப் பயன்படுத்தி வரும்பயனாளிகளில் பொருளாதார ரீதியில்மேம்பட்டவர்களுக்கு சாத்தியமான விலையிலும், பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் அறநிலையத் துறைச் சட்டம் 34இன் படி கிரையப்பட்டா வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.
வாடகை தொடர்பானவை:V கிரையப் பட்டா நடைமுறைக்கு வரும் காலம் வரை புதிய வாடகை நிர்ணயக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் 2016 க்கு பின்பான வாடகை உயர்வு மற்றும் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட வேண்டும்.V இந்து அறநிலையத்துறை, அடிமனைப் பயனாளிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது என்பது “சந்தையில் நிலவும்நிலத்தின் விற்பனை மதிப்பு” என்ற அடிப்படையில் இல்லாமல் அறநிலையத்துறைச் சட்டம் 34 ஏ - படி “சந்தையில் நிலவும் நிலத்திற்கான வாடகை மதிப்பு” என்ற அடிப்படையில் வாடகையை தீர்மானிக்க வேண்டும்.விவசாயிகள் தொடர்பானவை:V விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் சிறு,குறு விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குத்தகைத் தொகை நிர்ணயித்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வணிகர்கள் தொடர்பானவை:V கோவில்களுக்கு சொந்தமான கட்டடங்களில் வணிகம் செய்து வரும் பயனாளிகளுக்கு மேலெழுந்த வாரியாக வாடகை நிர்ணயிக்காமல் குறு சிறு நடுத்தரப் பிரிவுகளாக வகைப்படுத்தி வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கைகள்:V தன்னிச்சையாக உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் குத்தகையை செலுத்தாத பயனாளிகள் மீது அறநிலையத்துறைச் சட்டம் 78, 79 முதலானவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.V கோவில் இடங்களில் தொடர்ந்து ஐந்தாண்டுகாலம் குடியிருப்பவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை 318ஐ செயல்படுத்திட மாநில அரசு உடன் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இனாம் நிலங்கள்:V மாநிலம் முழுவதும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இனாம் ஒழிப்பு சட்டப்படி பட்டா வழங்கப்பட்ட நிலங்களை தற்போது பட்டாவை ரத்து செய்து அறநிலையத்துறை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை கைவிட வேண்டும்.வக்ஃபு நிலங்கள்:V வக்ஃபோர்டு இடங்களில் உள்ள அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகளை வெளியேற்றிட மேற்கொள்ளப்படும், நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.இந்த தீர்மானத்தை மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் முன்மொழிய, மாநிலக் குழு உறுப்பினர் எம். மகாலெட்சுமி வழிமொழிந்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஐ(எம்) மாநில மாநாடு இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. | 2025-01-05 02:11:06.759356 |
ஜனவரி 4, 2025 | சிறு, குறு தொழில் காப்பதே தமிழக வளர்ச்சி! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/cpi(m)-state-conference-resolution | தமிழ் | UTF-8 | சிபிஐ(எம்) 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை குறித்த தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. சிறு, குறு தொழில் துறை தேசிய மொத்த உற்பத்தி யில் 8 சதவீதம், உற்பத்தித் திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்களிப்பு செலுத்து கின்றனர். சிறு, குறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சியில் 15 சத வீதம் என்னும் அளவில் தமிழகம் முன்னணி பங்கு வகிக்கிறது. இதன் மூலம் 32 ஆயிரம் கோடி முதலீட்டில் 8 ஆயிரம் வகையான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயம், கட்டுமானத்திற்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டில் அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.தமிழகத்தின் பன்முகத் தொழில் வளர்ச்சிதமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், உணவு பதப்படுத்துதல், தோல் தொழிற்சாலை, நூற்பாலை, விசைத்தறி, பின்னலாடை, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை, காகித உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், மின்சார உற்பத்தி, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி என பல்வேறு வகைப்பட்ட தொழில்கள் நடை பெற்று வருகின்றன. சற்றேறக்குறைய பல லட்சம் சிறு, குறு தொழில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் நேர டியாகவும், மறைமுகமாகவும் 2 கோடி பேர் வரை வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.நெருக்கடியில் சிறு தொழில்கள்ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்கம், அவசரக் கோலத்தில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஜாப் ஒர்க்குக்கு அநீதியாக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. கொரோனா பொது முடக்கம் ஆகியவற்றால் சிறு, குறு நடுத்தரத் தொழில் துறையும் நிலைகுலைந்து உள்ளது. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கை யால், பணவீக்கம் அதிகரித்து, தொழில் துறைக்கு தேவை யான மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் கடு மையான விலை உயர்வு, சிறு, குறு தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வுஒன்றிய அரசின் இறக்குமதிக் கொள்கையாலும், இறக்குமதி வரி அதிகரிப்பாலும் மூலப்பொருட்களின் விலை நிலையற்றதாக ஆகிவிட்டது. ஒன்றிய அரசி னுடைய நிதி ஆயோக்கின் தொடர்ச்சியான நிர்ப்பந்தத் தின் காரணமாக தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது தொழில் துறையினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய கார ணங்களால் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு குறைந்து போய், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் குறைந்து சிறுதொழிலே முடங்கக்கூடிய நிலைமை இருந்து வருகிறது.முக்கிய கோரிக்கைகள்V தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சிக்காக நேரடி அந்நிய முதலீடுகளை வரவேற்கும் அதேசமயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரின் கோரிக்கைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றித் தர வேண்டும். V தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும் நிலைக்கட்ட ணத்தையும் கைவிட வேண்டும். V ஒன்றிய அரசு தொழில் அபிவிருத்திக்காக கடன் கோருப வர்களுக்கு தற்போது விதிக்கப்படும் கடுமையான கட்டுப் பாடுகளை முற்றாகக் கைவிடுவதோடு, சிறு, குறு உற்பத்தியா ளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். V ஜிஎஸ்டி வரி வசூல் என்ற பெயரில் அந்தத் துறையினர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரிடம் மேற்கொள்ளும் அப ராதம், அதீத வசூல் உள்ளிட்ட அத்துமீறல்களை கைவிட வேண்டும். V ஒன்றிய அரசு சிறு, குறு தொழில் சார்ந்த ஜாப்ஒர்க்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது. இத்தீர்மானத்தை மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் முன்மொழிய, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.ராஜா வழிமொழிந்தார். | 2025-01-05 02:11:06.760273 |
ஜனவரி 4, 2025 | மக்கள் கருத்தறியாமல் கிராம ஊராட்சிகளை இணைக்கக் கூடாது! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/village-panchayats-should-not-be-merged-without-people-thinking | தமிழ் | UTF-8 | சிபிஐ(எம்) மாநில மாநாடு வலியுறுத்தல்விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில், தமிழக அரசின் நகர்ப்புற உள்ளாட்சி விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் கருத்தறியாமல் கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மாநாடு வலியுறுத்தியுள்ளது.அரசின் புதிய உள்ளாட்சி விரிவாக்கத் திட்டம்தமிழ்நாடு அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களை விரிவாக்கம் செய்வதன் மூலமாகத்தான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத் துகளை இணைப்பதும், மாநகராட்சியுடன் பேரூராட்சி, நகராட்சி, கிராமப்புற ஊராட்சிகளை இணைப்பதும், கிராமப்புற ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றுவ தும் இதில் அடங்கும்.கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கைகள்ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட் சிப் பிரதிநிதிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரி டம் மனு அளித்தனர். மக்களின் கருத்தறிய கிராம சபை கூட்டங்கள் நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கு பின்பு தான் இணைப்பு நடவடிக்கை கள் குறித்த முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். அப்போது உள்ளாட்சித் துறை செயலாளர் மக்கள் கருத்தறியாமல் இணைக்க மாட்டோம் என உறுதிய ளித்திருந்தார்.கிராம ஊராட்சிகளின் அடிப்படைப் பிரச்சனைகள்கிராமப்புற ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைக ளை நிறைவேற்றுவதற்கான பணியாளர்கள் நிய மனம் கடந்த 25 வருட காலமாக நிலுவையில் உள்ளது. குறிப்பாக தூய்மைப் பணியாளர் நியமனம் கிராமப் புற ஊராட்சிகளில் மிகக் குறைவு. பத்தாயிரம் வாக்கா ளர்களைக் கொண்ட கிராமப்புற ஊராட்சியில் 10க்கும் குறைவான தூய்மைப் பணியாளர்களே பணியாற்று கிறார்கள்.இணைப்பால் ஏற்படும் பாதிப்புகள்:V 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் அபாயம்
V இலவச வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பாதிப்பு
V அரசாணை 152, 139 மூலம் தூய்மைப் பணியாளர் அவுட்சோர்சிங் செய்யப்படுவது சுரண்டலை அதி
கரிக்கும்
V குடியிருப்புகளின் சொத்து வரி கடுமையாக உயரும்
வார்டு மறுசீரமைப்பு கோரிக்கை
தமிழ்நாடு அரசு உள்ளாட்சி மன்றங்களை வார்டு
மறுவரை செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த அதிமுக
ஆட்சிக் காலத்தில் அலுவலர்கள் மூலமே இது செய்யப்
பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களை அமைத்து வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள்
V மக்கள் கருத்தறியாமல் கிராம ஊராட்சிகளை நகர்ப்
புற உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கூடாது.
V அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு மூலம் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும்.
V கிராம ஊராட்சிகளில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இத்தீர்மானத்தை பழநி நகர்மன்ற துணைத் தலை
வர் கே.கந்தசாமி முன்மொழிய, கோவை மாநகராட்சி உறுப்பினர் கண்ணகி வழிமொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. | 2025-01-05 02:11:06.760806 |
ஜனவரி 4, 2025 | தற்போதைக்கு ஓய்வு இல்லை - ரோகித் சர்மா | விளையாட்டு | நமது நிருபர் | https://theekkathir.in/News/games/cricket/no-retirement-for-now---rohit-sharma | தமிழ் | UTF-8 | புதுதில்லி,ஜனவரி.04- தற்போதைக்கு ஓய்வு இல்லை என இந்திய கிடிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடப்புத் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போதைக்கு ஓய்வு இல்லை என ரோகித் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது; “நான் பேட்டிங்கில் தொடர்ந்து ரன் எடுக்காததால் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எங்களுக்கு இது முக்கியமான போட்டி என்பதால் அணிக்கு என்ன தேவை என்பதுதான் எனது முன்னுரிமையாக இருந்தது. நான் எங்கும் செல்லவில்லை, இது ஓய்வு பெறுவதற்கான முடிவு அல்ல என தந்து ஓய்வு குறித்து ரோஹித் சர்மா கூறியுள்ளார். | 2025-01-05 02:11:10.125046 |
ஜனவரி 4, 2025 | ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகி கைது! | அரசியல் | நமது நிருபர் | https://theekkathir.in/News/politics/bjp/bjp-executive-arrested-in-ramanathapuram | தமிழ் | UTF-8 | ராமநாதபுரம்,ஜனவரி.04- பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக நிர்வாகி சண்முகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று பாஜக சார்பில் மதுரையில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதியின்றி பேரணி நடத்தப்பட்டு, போராட்டமும் நடத்தப்பட்டது.
அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜகவினரைக் கைது செய்தபோது பாஜக நிர்வாகி சண்முகம் என்பவர் பெண் உதவி ஆய்வாளரைக் கையாள் தள்ளிய சம்பவம் தாக்கியுள்ளார். இந்நிலையில் சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். | 2025-01-05 02:11:10.298918 |
ஜனவரி 4, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/bjp-has-some-vested-interests-and-that's-why-violence-in-manipur | தமிழ் | UTF-8 | பாஜக சில சுயநலங்களைக் கொண்டுள்ளது. அதனால் தான் மணிப்பூரை வன்முறை கொதிநிலையில் வைத்திருக்கவே ஆர்வமாக உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ஒருபோதும் தப்ப முடியாது. மணிப்பூரை எரிக்கும் தீக்குச்சி பாஜக தான். வேறு யாரும் இல்லை.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடன் மனைவிக்கு மோடி பரிசளித்த வைர மோதிரத்தின் விலையை ஆர்டிஐயின் கீழ் வெளியிட மோடி அரசு மறுத்துவிட்டது. அமெரிக்காவுக்கு தங்களின் பொய்களை ஒத்துழைக்கச் சொல்ல மறந்துவிட்டது. பரிதாபம் வைர மோதிரத்தின் விலையை (ரூ.17 லட்சம்) அமெரிக்கா வெளியிட்டு விட்டது.அரசியல் சாசனத்தின் பாதுகாவலன் நீதித்துறை என்று நாம் சொல்கிறோம். அப்படி என்றால் நீதித்துறையின் பாதுகாவலன் யார்? என்ற கேள்வி எழுகிறது. நீதித்துறையின் பாதுகாவலன் நாட்டு மக்கள் தான்.13.8 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமும் மிக வேகமான வளர்ச்சி கண்டது உண்மை தான். | 2025-01-05 02:11:14.322846 |
ஜனவரி 4, 2025 | 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி : ஒருவர் படுகாயம் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/explosion-in-firecracker-factory-near-virudhunagar | தமிழ் | UTF-8 | தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் : முதல்வர் அறிவிப்புவிருதுநகர் விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 6 தொழி லாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். நாக்பூர் உரிமம் விருதுநகர் அருகே உள்ளது பொம்மையாபுரம். இங்கு சிவகாசி ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வரு கிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலை 84 அறைகள் கொண்ட தாகும். இந்த ஆலையை நடத்தி வந்த சிவகாசியைச் சேர்ந்த வனிதா, பின்னர் அதனை மீனாட்சிசுந்தரம் என்ற மற்றொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது வரை பட்டாசு தயார் செய்யப்படுவதற்கான உரிமம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.திடீர் வெடிவிபத்துஇந்நிலையில், சனிக்கிழமை காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்தனர். அப்போது, பட்டாசுக்கான வேதிப் பொருட்கள் தயாரிக்கும் அறையில் திடீரென வெடிவிபத்து ஏற் பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடிச் சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள், அலறி அடித்துக் கொண்டு ஆலையை விட்டு தப்பியோ டினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆலையின் பிற அறைகளுக்கு தீ பரவிவிடாமல் கட்டுப்படுத்தினர். மேலும், இடிபாடுக ளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை, சக தொழிலாளர்களின் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.6 பேர் பலிஇந்த வெடிவிபத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணி யன் மகன் சிவகுமார் (56), குருந்த மடத்தைச் சேர்ந்த கோபால் மகன் வேல் முருகன் (54), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பு என்பவரது மகன் காமராஜ் (54), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த இராம சாமி மகன் கண்ணன் (54), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் மகன் மீனாட்சிசுந்தரம் (46), செட்டிக் குறிச்சியைச் சேர்ந்த இராஜாமணி மகன் நாகராஜ் (37) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயம் மேலும் இந்த விபத்தில் ஆவுடையா புரத்தைச் சேர்ந்த முகமது சுதீன்(21) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட காவல்துறையினர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவ ருக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வச்சக்கா ரப்பட்டி காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிஐடியு தலைவர்கள் ஆறுதல் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி யான தொழிலாளர்களின் குடும்பத்தி னரை சிஐடியு பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சி. பாண்டியன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி. ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். முருகன், தெற்கு ஒன்றியச் செயலா ளர் பி. நேரு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.ஆட்சியர் ஆய்வுஆட்சியர் ஆய்வு இந்நிலையில், விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், உயிரிழந்த தொழிலாளர்க ளின் உடல்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், “விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. முறையான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பட்டாசு ஆலையில் வேலைக்கு பயன்படுத்த வேண்டும். பயிற்சி இல்லாதவர்களை வேலைக்கு பயன்படுத்தியதாக தக வல்கள் வருகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் இதனிடையே, பொம்மையாபுரம் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும் பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவார ணம் அறிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சி.பாண்டியன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு 16 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். சனிக்கிழமை வெடி விபத்து நடந்த சாய்நாத் பட்டாசு ஆலையை, வனிதா என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அதன் உரிமம் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இருந்த போதும் தொடர்ச்சியாக பட்டாசு ஆலையில் உற்பத்தி நடைபெற்றுள்ளது. எனவே, அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஆலை இயங்குவதற்கு வாய்ப்பில்லை. விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு விதிமீறல்களே காரணமாகும். எனவே, பட்டாசு ஆலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்வாகமோ, ‘கண்காணிப்புக் குழு’ என்ற பெயரில் லஞ்ச வேட்டையில் இறங்கி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதமே இந்த வெடி விபத்து நடந்திருப்பது மிகவும் சோகமான நிகழ்வாகும். 6 தொழிலாளர்கள் உடல் கருகி இறந்துள்ளனர். இதுபோன்று விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அரசு நிர்வாகம் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு எம்.சி. பாண்டியன் தெரிவித்துள்ளார்.சிபிஎம் மாநில மாநாடு இரங்கல் விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியான துயரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு அதிர்ச்சியும், வேதனையும் தெரி வித்துள்ளது. உயிரிழந்த தொழிலா ளர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. | 2025-01-05 02:11:14.323865 |
ஜனவரி 4, 2025 | பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கொடூரம் சாலை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/the-dead-body-of-the-journalist-who-raised-questions-about-the-road-contract-malpractice-was-recovered | தமிழ் | UTF-8 | ராய்ப்பூர் பாஜக ஆளும் சத்தீஸ் கர் மாநிலத்தின் பீஜப் பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர். பத்திரிகையாளரான இவரை ஜனவரி 1ஆம் தேதி முதல் காணவில்லை. நீண்ட நேரமாகி யும் முகேஷ் வீடு திரும்பாத தால், அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப் படையில் முகேஷ், கடைசியாக ஒப்பந்ததாரர் சுரேஷின் குடி யிருப்புப் பகுதிக்குச் சென்ற பின் வீடு திரும்பாதது தெரிய வந்தது. சுரேஷின் குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் முகேஷ் சடலமாக கிடந்தார். சுரேஷின் சகோதரர் ரித்தே ஷிடம் நடைபெற்ற விசாரணை க்குப் பிறகு தான் பல்வேறு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதாவது செய்தி யாளர்கள் சந்திப்பின் பொ ழுது ஒப்பந்த முறைகேடு தொ டர்பாக தங்களை கேள்வி கேட் டதற்காக பத்திரிகையாளர் முகேஷ் கொல்லப்பட்டதாக ரித்தேஷ் வாக்குமூலம் அளித்தார். என்ன நடந்தது? டிசம்பர் கடைசி வாரத்தில் பத்திரிகையாளர் முகேஷ் ரூ.120 கோடி மதிப்பிலான பஸ் தார் சாலை கட்டுமானத் திட்டத் தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக ஒப்பந்ததாரரான சுரேஷுடனான பேட்டியில் கேள்வி எழுப்பினார். அதன் பிறகு புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் ஒப்பந்த செய்தி விவ காரம் தொடர்பாக தனது குடியிருப்புப் பகுதிக்கு வரு மாறு அழைத்துள்ளார். இதைய டுத்து குடியிருப்புப் பகுதிக்கு வந்த சுரேஷ் படுகொலை செய் யப்பட்டு தண்ணீர்த் தொட்டி யில் தூக்கி எறியப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த படுகொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் மட்டும் கைது செய்யப் பட்டுள்ளார். முக்கிய குற்ற வாளி சுரேஷ் இன்னும் கைது செய்யப்படவில்லை. சுரேஷூம் அவரது குடும்பத்தினரும் தலை மறைவாக இருப்பதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையா ளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | 2025-01-05 02:11:14.324532 |
ஜனவரி 4, 2025 | துரைமுருகன் மகன் கல்லூரியில் 2-ஆவது நாளாக சோதனை! | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/2nd-day-of-testing-at-duraimurugan-magan-college! | தமிழ் | UTF-8 | வேலூர் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி யில் 24 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாவது நாளாக அம லாக்கத்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட் பாடி அடுத்த கிருஸ்டியான் பேட்டையில் கதிர் ஆனந்து க்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஜனவரி 3 அன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கினர். இந்தச் சோதனை 24 மணி நேரத் தைக் கடந்து 2-ஆவது நாளாக தொ டர்ந்தது. இதில் 18-க்கும் மேற்பட்ட அமலாக் கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கல்லூரி லாக்கரில் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டு எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மூலம் வாகனத் தில் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியா னது. முன்னதாக அமைச்சர் துரைமுருகன், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர் புரத்தில் வசித்து வருகிறார். அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூரில் வசித்து வருகிறார். அவர் தற் போது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இந்நிலையில், கதிர் ஆனந்த் இல்லாத நிலை யிலேயே அவரது வீடு மற்றும் கல்லூரியில் அம லாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரு கின்றனர். | 2025-01-05 02:11:14.325180 |
ஜனவரி 4, 2025 | ஈசாவில் பயின்ற சிறுவனுக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/a-boy-studying-in-isa-has-been-sexually-harassed-for-3-years | தமிழ் | UTF-8 | கோவை ஈசாவிலுள்ள பள்ளியில் கல்வி பயின்ற தனது மகனுக்கு 3 ஆண்டுகளாக பாலி யல் தொல்லை அளிக்கப்பட்ட சம்ப வம் குறித்து, பாதிக்கப்பட்டவரின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண், கோவையிலுள்ள ஈசா யோகா மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், அவரது கணவர் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ளார். ஜக்கி வாசுதேவின் உரைகளை கேட்டு ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அந்த பெண், கடந்த 2013 ஆம் ஆண்டு ஈஷா யோகா மையத்துடன் நேரடியாக பல்வேறு களப்பணி யில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் தன் மகனை ஈசா யோகா மையத்தில் இயங்கும் பள்ளியில் சேர்த்துவிட்டுள்ளார். அங்கு அவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், தனது மகன் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, மாணவர் ஒரு வரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய தாக, அவரது தாயார் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளாதாரத்தில் வலிமையான குடும்ப பின்னணியில் உள்ள ஒரு சிறுவன், தன் மகனை 3 வருடங்களாக நள்ளிர வில் துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அப்பள்ளி நிர்வாகத்திடம் சிறுவன் தெரி வித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல், சிறு வனை ஈசா யோகா மையத்தினர் ஒரு வாரம் தங்கள் கஸ்டடியில் வைத்துள்ளனர். இக்கால கட்டத்தில் தன் மகன் கடும் மன உளைச்ச லாலும், உடல் ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளார். இதனிடையே ஈசா யோகா மையத்தில் தன் மகனுக்கு நேர்ந்த அவலம் தெரியவந்த பொழுது, பள்ளி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஈஷா யோகா பள்ளி நிர்வாகத் தரப்பு, நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட போலீசில் ஆன்லைன் மூலமாக ஹைதராபாத்தில் இருந்து அப்பெண் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலையம், பேரூர் காவல் துறையினர் அப்பெண்ணுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்பேரில், சனியன்று அவர் தன் மகனுடன் போத்தனூர் பகுதியில் உள்ள அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.ஜக்கி வாசுதேவ் உடந்தை?இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், தன் மகன் மட்டும் இன்றி, தன் மகனைப் போன்று பலருக்கும் ஈசா யோகா மைய வளாகத்தில் இயங்கும் பள்ளியில், அத்துமீறல்கள் நடந்திருக்கிறது. நானும், என் கணவரும் ஈசா யோகா மைய வளாகத்தி ற்குள் சென்ற பிறகு, அங்கு இதுபோன்ற அத்து மீறல்கள் நடந்திருப்பது, பெரிய குற்றங்கள் நாள்தோறும் நடப்பது தெரியவந்தது. குழந்தை களுக்கு ஏற்ற சரியான இடம் ஈஷா யோகா மைய வளாகத்திலே இயங்கும் பள்ளி அல்ல. ஜக்கி வாசுதேவுக்கு என் மகனுக்கு நடந்த அத்து மீறல்கள் குறித்து தெரிய வந்த பிறகும், நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பதால், அவர் இதனை மறைமுகமாக ஊக்குவிக்கி றாரா? என்று கேள்வி எழுகிறது. பெண்கள் பாலி யல் அத்துமீறலுக்கு எதிராக கொல்கத்தாவில் பேசும் ஜக்கி வாசுதேவ், தனது ஈசா யோகா மைய வளாகத்தில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் உள்ளிட்டவை குறித்து வாய் திறக்கா மல் இருப்பதற்கு காரணம், இதற்கெல்லாம் அவர் உடன்படுகிறாரா? தனது மகனுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொதுவெளி யில் பேசியபோது, கொலை மற்றும் பாலியல் மிரட்டல் பகிரங்கமாக வந்தது.எங்கே போனார் அண்ணாமலை?அண்ணா பல்கலைக்கழகத்தில் மாண விக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் குறித்து பேசும் மற்றும் கோவையை சொந்த பகுதியாக நினைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையிலுள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் நடக்கும் அத்து மீறல்கள் குறித்தும் பேச வேண்டும். பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் களை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை சட்ட விதி மட்டுமின்றி, சட்டங்கள் எதையும் அவர்கள் மதிக்கவில்லை என்றார். | 2025-01-05 02:11:14.325779 |
ஜனவரி 4, 2025 | பட்டாசு ஆலை விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும்! | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/cracker-factory-accidents-should-be-stopped | தமிழ் | UTF-8 | விழுப்புரம், ஜன.4- விருதுநகர் மாவட்டம் பொம்மையாபுரம் பட்டாசு விபத்தில் பலியான 6 தொழி லாளர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அப்பையநாயக்கன் பட்டி அருகேயுள்ள பொம் மையாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் தனியார் பட்டாசு ஆலை யில் இன்று (04.01.2025) காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை யைத் துவங்கும் போது ஏற் பட்ட வெடிவிபத்தில் 6 தொழி லாளர்கள் உடல் சிதறி சம் பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். 2 பேர் காயம்பட்டு சிகிச் சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஆறு தொழிலாளர்களுக்கு சிபிஐ(எம்) 24-ஆவது மாநில மாநாடு ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கி றது. உயிரிழந்த தொழிலா ளர்கள் குடும்பத்திற்கு தமி ழக அரசு இழப்பீடாக ரூபாய் நான்கு லட்சம் அறிவித்துள் ளது. பட்டாசு ஆலை நிர்வாகம் முறையாக விதிமுறைகளை பின்பற்றாததால் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வரு கின்றன. தமிழக அரசும் மத் திய வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறையும் விருது நகர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பட்டாசு ஆலை களில் உரிய பாதுகாப்பு விதி முறைகளை முறையாகப் பின்பற்றுவதை கண்கா ணிப்பு செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்துபோன தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் 10 லட்சம், தமிழக அரசு 20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். காய மடைந்த தொழிலா ளர்களுக்கு உரிய சிகிச்சை, காயத்தின் தன்மைக்கு ஏற்ப வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் விபத்தில் உயிரிழந்த தொழி லாளர்களின் குடும்ப வாரிசு கள் இஎஸ்ஐ-பிஎப் (ESI, PF) மூலம் பென்சன் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண் டும். விபத்தில்லா பட்டாசு உற் பத்தி செய்ய தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ள டக்கிய முத்தரப்புக் குழு அமைத்து பட்டாசு ஆலை களை ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க இம்மாநாடு கேட் டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. | 2025-01-05 02:11:14.326395 |
ஜனவரி 4, 2025 | சத்தீஸ்கரில் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு! | மாநிலம் - சண்டிகர் | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/chandigarh/rescued-journalist-dead-in-chhattisgarh | தமிழ் | UTF-8 | சத்தீஸ்கர்,ஜனவரி.04- பத்திரிக்கையாளர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்சி ஊடகத்தில் பத்திரிக்கையாளராக இருப்பவர் முகேஷ் சந்திரகர். இவர் சில சமீபத்தில் பஸ்தாரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
இந்நிலையில் புத்தாண்டு அன்று காணாமல் போன முகேஷ் ஊழலில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர் சுரேஷ் சந்திரிகளுக்குச் சொந்தமான வளாகத்தில் கழிவுநீர்தொட்டியில் நேற்று இரவு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். | 2025-01-05 02:11:14.327017 |
ஜனவரி 5, 2025 | தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/cpm-tamil-nadu-state-24th-conference-convocation | தமிழ் | UTF-8 | விழுப்புரம், ஜன. 5 - தமிழகத்தில் தொழிலாளர்கள், விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தமிழகத்தில் இடது ஜனநாயக மாற்று அரசியலை முன்னெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு அறை கூவல் விடுத்துள்ளது.பேரணி - பொதுக்கூட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு விழுப்புரம் ஆனந்தா மஹாலில், ஜனவரி 3 அன்று துவங்கி ஜனவரி 5 வரை நடை பெற்றது. மாநாட்டின் துவக்கமாக செந் தொண்டர் அணிவகுப்பு - பேரணியும், பல்லா யிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு நடை பெற்றது.தலைவர்கள் பங்கேற்புஇந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே. பத்மநாபன், உ. வாசுகி, பி. சம்பத், பெ. சண்முகம், ஆர். கருமலை யான், மூத்த தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஏற்றத் தாழ்வுகளுக்கு இடதுசாரி மாற்றே தீர்வுஇந்நிலையில், 3 நாள் மாநாட்டின் முடிவில், ஞாயிறன்று மாநாட்டு அறைகூவல் வெளியிடப்பட்டது. அதில், “தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூ கத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கிற கொள்கைகளை அகற்றி உழைக்கும் மக்க ளின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில் வலுப்பெற வேண்டும். நவீன தாராளமய பொருளாதாரப் பாதை உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரிசெய்வதற்கான வல்லமை இடது மாற்றுக்கே உண்டு. இடது ஜனநாயக மாற்று மட்டுமே தமிழக மக்களுக்கான உண்மையான விடியலாக அமைந்திடும். இந்த வரலாற்று மாற்றத்தை சாதிக்க ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள், அனைத்துத்தரப்பு உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் மனிதநேய சமூக ஆர்வலர்கள், அறிவுத்துறையினர் என அனை வரும் முன்வர வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது” என்று அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.உழைக்கும் மக்களின் நலன்கள் புறக்கணிப்புஅறைகூவலில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: இதுகாறும் ஒன்றிய அரசு பின்பற்றி வந்த கொள்கைகள் தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வந்துள்ளன. அனைத்து அதி காரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள ஒன்றிய அரசின் மக்களுக்கு விரோதமான கொள்கைகள் தமிழகத்திலும் அமலாக்கப் பட்டு வந்துள்ளன. அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கி வரும் பாதையில் தான் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்களும் பயணித்து வந்துள்ளன. தமிழக வரலாற்றில் மக்களிடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்துள்ள திராவிட இயக்கம் மற்றும் அதன் கட்சிகள் சமூகத் தளத்தில் சீர்திருத்தங் களையும் சில முன்னேற்றங்களையும் சாதித்துள்ளது உண்மையே!. எனினும், பிரதேச முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாத்து வந்துள்ள இந்தக் கட்சிகள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி கொண்டிருக்கிற உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை உறுதிப்படுத்த தவறிவிட்டன. இத்தகைய சூழலில் மாற்றுக் கொள்கைகள் இன்றியமை யாத தேவையாக உள்ளது.தமிழகத்திற்கு தீங்கு பயக்கும் நவ தாராளமய கொள்கைதற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமானது, தமிழ்நாட்டுக்கு உரிய நிதி அளிக்காதது; மாநில உரிமைகள் பறிப்பு, இந்தித் திணிப்பு என ஒன்றிய அரசு கூட்டாட்சி முறைக்கு எதி ராக பல நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது அவற்றை வலுவாக எதிர்க்கிறது. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வகுப்புவாத நடவடிக்கைகளையும் திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திமுகவின் இத்தகைய நிலைபாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அதேநேரத்தில், நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் திமுக அரசு பயணித்து வருகிறது. குறிப்பாக, தொழி லாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பல முக்கியத் துறைகளில் வெளிமுகமை நிறுவனங்கள் வழியாக பணியமர்த்துவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி வழங்காதது, சொத்துவரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியது போன்ற தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்வது தவறானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.குழந்தைகள், பெண்கள், தலித்துக்கள் மீதான வன்முறை அதிகரிப்புவேலையின்மை, நிரந்தர பணியிடங்கள் ஒழிப்பு, பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறை, பட்டியல் பழங்குடியின மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், சாதி ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. மேலும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது, காவல்துறை அத்துமீறல்கள், ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அனைத்தும் மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, இவற்றிற்கு எதிராக மக்கள் வலுவான ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும். மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக குரலெழுப்பி போராடும். கட்சி நடத்தும் போராட்டங் களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் பேரா தரவு அளிக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.உறுதிமிக்கப் போராட்டத்தை சிபிஎம் முன்னெடுக்கும்!ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து உறுதியான மக்கள் இயக்கம் கட்டுகிற பணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். மாநி லத்திற்குரிய நிதிப் பங்கீட்டை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் பாது காப்பதற்கும் வலுவான குரலை எழுப்பிடும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.தமிழகத்தில் கீழ்க்கண்ட மக்கள் நலன் காக்கும் பிரச்சனைகளில் மாற்று நடவடிக்கைகளுக்காக குரலெழுப்பும்மாநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்* தொழிலாளர் நலன் பாதுகாப்பு, முறைசாராத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவது, சமூக பாதுகாப் போடு கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவது.
* விவசாய விளைபொருட்களுக்கு நியாய விலையை உறுதி செய்வது, 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூலி உயர்வு வேலை நாட்களை அதிகரிக்கச் செய்வது, நகர்ப்புறங் களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது, விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தலை எதிர்ப்பதோடு, கிராமப்புறங்களில் நில மறு விநியோகத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது.
* அரசுத்துறை மற்றும் பொதுத்துறையில்- ஒப்பந்தம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது, அரசு மற்றும்கலைக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, வெளிமுகமை என்கிற அடிப்படையில் பணியமர்த்தப்படும் அரசாணைகளை ரத்து செய்யக் கோருவது.
* இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக சூறையாடுவதை கைவிடக் கோருவது, தமிழ கத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் வலியுறுத்துவது.
* மாநில நலன்களுக்கு விரோதமாக அந்நிய மூலதனத்தை வரன் முறையற்ற ஏராளமான சலுகைகளை அளித்து கொண்டு வருகிற அரசின் கொள்கைகளை எதிர்ப்பதோடு, உள்நாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
* கடந்த காலங்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை அளித்து வந்திருக்கக் கூடிய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், சிமெண்ட் ஆலைகள் பல நலிவடைந்து உரிய கவனம் செலுத்தப்படாமல் உள்ளன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனங்களை புனரமைக்க கூடுதலான நிதி ஒதுக்கி செயல்படுத்துவது, இந்நிறு
வனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பை விரிவுபடுத்துகிற வகையில் சிறு, குறு நடுத்தர தொழில்களை பாதுகாத்து, அந்தத் துறை வளர்ச்சிக்கான கொள்கைகளை பின்பற்ற அரசுகளை வலி யுறுத்துவது.
* பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமை களுக்கு எதிராக போராடுவது, மதச்சார்பற்ற, அறிவியல் பூர்வமான, தரமான கல்வி அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவது.
* அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கும் வகையிலும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சுகாதாரக் கட்டமைப்பை பரவலாக்குவது.
* மக்கள் மத்தியில் வகுப்புவாத மதவெறி பிரச்சாரம் மேற்கொள்ளுகிற சக்திகள், சாதிய சமூக ஒடுக்குமுறைகள், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து கருத்தியல் போராட்டத்தை வலுவாக முன்னெடுப்பது, கருத்துரிமையைப் பாதுகாப்பது, மதச்சார்பற்ற மாண்புகளை போற்றிப் பாதுகாப்பது.
* தமிழ்மொழி வளர்ச்சியை முன்னெடுப்பது, தமிழக பண்பாட்டின் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடித்து மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பது.
* இவ்வாறான இடதுசாரி ஜனநாயக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து கட்சி தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயக சக்திகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான அளவில் திரட்டும். இடது மாற்றினை உருவாக்கிட நவதாராளமய கொள்கைகளுக்கு எதிராகவும் மக்களை பிளவுப் படுத்தும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வலுமிக்க வர்க்கப் போராட்டங்களை இதர ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்போடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.
* அகில இந்திய அளவில் மாற்றாக உருவாகும் இடதுஜனநாயக அணியின் பகுதியாக தமிழகத்தில் வலுவான ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றினை கட்டமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக பாடுபடும்.
* “ஒரு கருத்து மக்களை கவ்விப் பிடித்துவிட்டால் அது பௌதீக சக்தியாக மாறும்’ என்பது பேராசான் காரல் மார்க்சின் கூற்று. இதற்கேற்ப தமிழகத்தில் இடதுமாற்றுக் கொள்கைகளை தமிழக
மக்கள் ஆதரித்து இடதுசாரி இயக்கத்தை வலுப்பெறச் செய்திடுவார்கள்.
* இதற்காக தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படவும். மக்கள் ஆதரவை உறுதியாக திரட்டிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது முயற்சிகளை மேற்கொள்ளும் இந்த மேலான லட்சியத்தை அடைய தமிழக மக்கள் பேராதரவு நல்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டி கேட்டுக் கொள்கிறது. | 2025-01-06 02:08:56.468042 |
ஜனவரி 5, 2025 | ஒன்றிய அரசே... ஊரக வேலையுறுதித் திட்டத்தை அதன் நோக்கத்தை குலைக்காமல் செயல்படுத்து! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/resolution-in-cpm-24th-state-conference | தமிழ் | UTF-8 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது ஜன. 3 துவங்கி 5 வரை விழுப் புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற் குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலுமிருந்து 550-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மக்கள் நலனுக்கான கோரிக்கை களை முன்வைத்து பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டத்தின் நோக்கங்களை குலைக்காமல் செம்மையாக செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மா னத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ. அமிர்த லிங்கம் முன்மொழிய, தமிழ்ச்செல்வி (தஞ்சாவூர்) வழிமொழிந்தார். அந்த தீர்மானம் வருமாறு:நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கிய ஒன்றிய அரசுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புத் திட்டமானது, 2005-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது இடதுசாரிகளின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுக ளாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் தொடக்ககாலம் வரை ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் இரண்டு சதவீதத்திற்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக் காலத்தில் திட்டத்தைப் படிப்படியாக சிதைத்து, நிதி ஒதுக்கீடு வெட்டிச் சுருக்கி 1.64 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.வஞ்சகத்துடன் பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைப்புமேலும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்துடன், ஆதார் எண் இணைப்பு இல்லாத தொழிலாளர்களை செயல்படாதவர்கள் என பட்டியல் தயாரித்து, வேலை அட்டை பெற்ற 25 கோடி பயனாளிகளின் எண்ணிக்கை யை ஏறக்குறைய சரிபாதியாக (13 கோடியாக) பாஜக அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 93 லட்சத்தி லிருந்து சுமார் 80 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியான வேலை, சாதி ரீதியான சம்பளம் என ஊரக வேலைத் திட்டத்தின் பயனாளிகளான உழைக் கும் மக்களை மோதவிடும் முயற்சியையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளுக்குத் தடைஅதுமட்டுமல்லாமல், அதிகமான தொழிலாளர்க ளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய- நீர் நிலைகள் தூர் வாரும் பணிகளை தடை செய்யப் பட்ட பணிகளாகவும், இதனையும் மீறி வேலை வழங்கும் பட்சத்தில் அதற்குரிய கூலித் தொகை யினை கண்டிப்பாக வழங்க இயலாது எனவும் மாநில அரசுகளை ஒன்றிய அரசு மிரட்டுகிறது. இதனால் நாடு முழுவதும் வேலை குறைக்கப் பட்டு, ஒவ்வொரு பணிகளும் 5 முதல் 10 தொழி லாளர்களுக்கு மட்டுமே வேலை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டு வருவதால், இத்திட்டம் பின்னடைவை யும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரக வேலையுறுதித் திட்டத்தை பல்வேறு வகைகளில் சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை 24-ஆவது மாநில மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.மாநில அரசின் முயற்சி பாராட்டத்தக்கதுதமிழ்நாட்டில், ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்புத் தொகையை தொ டர்ச்சியாக உயர்த்தும் மாநில அரசின் முயற்சி பாராட் டத்தக்கது. இருப்பினும் திட்டத்தை செயல்படுத்தும் முழுமையான பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்ற அடிப்படையில், இன்னும் கூடுதலான, ஆக்கப் பூர்வமான தலையீட்டை மாநில மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக முழுமையாக வேலை, கூலி கிடைக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம், வேலை அளவு தீர்மானிக்க வேண்டும். ஜியோ டெக் காலவரம்பை 8 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு களாக அதிகரிக்க வேண்டும். வேலையில்லாக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தொலைதூரப் பகுதிக்கு வேலைக்குச் செல்லும் பயனாளிகளுக்கு பயணப்படியை உத்தரவாதப்படுத்த வேண்டும்.கட்டுமானப் பணிகளைத் தவிர்க்க வேண்டும்சட்டத்திற்குப் புறம்பாக இயந்திரப் பயன்பாட் டிற்கும், ஒப்பந்தக்காரர்களின் தலையீட்டிற்கும் வழி வகுக்கும் கட்டுமானப் பணிகளை தேர்வு செய்து செயல் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். செலவிடும் தொகையில் 60 சதவிகிதம் ஊதியத்திற்கும், 40 சதவிகிதம் பொருட்களுக்கும் என்ற விகிதாச்சாரம் கறாராக கடைப்பிடிக்கப்பட வேண்டும். விவசாயம் முழுமையாக இயந்திரமயம் ஆக்கப் பட்டுள்ளதால் கிராமப்புற விவசாயத் தொழிலாளர் கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் வேலையின்மைக்கும், பெரும் வருமான இழப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். பல மடங்கு உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை நசுக்குகிறது.நிதி ஒதுக்கீட்டை ரூ.4 லட்சம் கோடியாக உயர்த்துக!கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை களை கடைப்பிடித்து அவர்களுக்கு பல லட்சம் கோடியைத் தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வறுமை மற்றும் நுண் நிறுவனக் கடன் பிடியிலும் தவிக்கும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலை அளிக்கும் ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு குறைந்தபட்சம் 4 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திட வேண்டும். தினக்கூலியை 600 ரூபாயாக வும், வேலை நாட்களை 200 நாட்களாகவும் உயர்த்திட வேண்டும். கிராமப்புற தன்மை கொண்ட பேரூ ராட்சி பகுதிகளுக்கும் வேலையுறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென ஒன்றிய அரசை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. | 2025-01-06 02:08:56.469101 |
ஜனவரி 5, 2025 | பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/urge-the-conference-to-appoint-a-chairman-to-the-commission | தமிழ் | UTF-8 | பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறைகளை தடுத்து நிறுத்துவதுடன், தமிழக குழந்தைகள் நல ஆணை யத்திற்குத் தலைவரையும் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநிலக்குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா முன்மொழிய, கோ. அரவிந்தசாமி வழிமொழிந்தார். அந்த தீர்மானம் வருமாறு:வன்முறையே வாழ்வாக மாறிவிட்ட மோசமான நிலைஇந்தியாவில் வன்முறையே வாழ்வாக மாறிவிட்ட மோசமான நிலையில் பெண்கள் உள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்களின் பாது காப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. 18 வயதிற்கு முன்பு திருமணம் கூடாது என்ற சட்டம் இருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் அன்றா டம் நடந்து கொண்டே உள்ளன. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் உண்டு. ஆனால் வரதட்சணைக் கொடுமை நின்றபாடில்லை.கொஞ்சமும் குறையாத பெண்கள் மீதான வன்முறைஒரு பெண் வீட்டிற்குள் இருந்தாலும் வன்முறை. பொது வெளிக்கு சென்றாலும் வன்முறை. காத லித்தால் படுகொலை. காதலிக்க மறுத்தால் அமில வீச்சு. விஞ்ஞானம் வளர்ந்தாலும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பஞ்சமே இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் 90 சதவிகிதம் தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப் படுகின்றன. இந்தியாவில் 2023-இல் மட்டும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் 3 லட்சத்து 65 ஆயி ரத்து 100 என்ற எண்ணிக்கையிலும், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகள் 63 ஆயிரத்து 414 என்ற எண்ணிக்கையிலும் பதிவாகியுள்ளன.குழந்தைகள் மீதான வன்முறை 93 சதவிகிதம் அதிகரிப்புகுழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் 93 சதவிகிதம் அதிகரித்துள் ளன. உதாரணமாக 2021-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கை 12 ஆயி ரத்து 653. ஆனால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் 635 பேர் மட்டுமே. இது பெரும்பா லான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுவதையே காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மூன்றில் ஒன்று குழந்தை திருமணம். கடந்த ஆண்டை விட குழந்தைத் திருமணங்கள் 50 சதவிகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு 1054 குழந்தை திருமணங்களும் 2024-ஆம் ஆண்டு 1640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சிறு வயது பிரசவங்கள் குழந்தை களின் ஆயுட்காலத்தை குறைக்கின்றன. கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிக்கின்றன. ஆட்சியாளர்கள், காவல்துறை அலட்சியம் இத்தகைய குற்றங்கள் காவல்துறை மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது, அவற்றை அலட்சியமாகப் பார்க்கும் போக்கும், குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதும் ஆட்சியா ளர்களின் வாடிக்கையாகி விட்டன. பல வழக்குகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் மர்மமான முறையில் காணாமல் போகும் பெண்கள், சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலைக்கு சென்ற 15 வயது குழந்தை கொடூரமான முறையில் படுகொலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத் காரம் என தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.பாலின சமத்துவம் குறித்து பயிற்சியளிக்க வேண்டும்பண்பாட்டுத்தளத்திலும் பெண்ணடிமைத்தனம் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. பெண்களைப் பாது காக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத் தப்படுவது இல்லை. மறுபுறம் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தியாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டி ருக்கும் இத்தகைய குற்றங்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தமிழக குழந்தை கள் நல ஆணையத்திற்கு உடனடியாகத் தலைவரை நியமிக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்ற வழி காட்டுதல் படி கையாளுவதற்கான வகுப்புகளை காவல் துறை அதிகாரிகளுக்கு அரசு நடத்திட வேண்டும், அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த வகுப்புகளை அரசே நடத்திட வேண்டும். பாலியல் கல்வி குறித்தும்பாடத்திட்டங் களில் இடம்பெற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. | 2025-01-06 02:08:56.469678 |
ஜனவரி 5, 2025 | சமூக நீதி, மாநில உரிமைகள், உழைப்பாளர் நலனுக்காக உறுதியுடன் போராடுவோம்! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/let's-fight-for-social-justice,-state-rights-and-workers'-welfare! | தமிழ் | UTF-8 | விழுப்புரம், ஜன. 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் எழுச்சி யுடன் நடைபெற்றது. ஜி. ராமகிருஷ்ணன் இதில் கட்சியின் தலைவர்கள் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை, மாநில உரி மைகள் பறிப்பு, தொழிலாளர் பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினர்.நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜககட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 12 நாட்கள் நடைபெற்றது. ஆனால் உருப்படியாக 2 முதல் 4 நாட்களே விவாதம் நடந்தது. அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் கோரியபோது நான்கு நாட்கள் கூட்டத்தை ஒத்திவைத்தனர். அண்ணல் அம் பேத்கர் குறித்த விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இழி கருத்துக்களால் இரண்டு நாட்கள் கூட்டம் முடங்கியது. அரசிய லமைப்புச் சட்டம் 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வில்லை” என்றார். “2014-இல் ஆட்சிக்கு வந்த பின், பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, மோச மான சட்டங்களைக் கொண்டுவந்து மனித உரிமைகளைப் பறிக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, நிதிப் பகிர்வு, கல்வி உரிமை, நீட் தேர்வு திணிப்பு போன்ற பிரச்சனைகளில் திமுக வுடன் இணைந்து போராடியுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளில் அரசின் கொள்கைகளை எதிர்த்தும் உறுதியாகப் போராடுகிறோம்” என்றார்.பாஜக மகளிர் அணியின் போராட்டம் சுயநலமானதுமாநில செயற்குழு உறுப்பினர் கே. பால பாரதி பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலில் போராடியது அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கமே. இப்போது பாஜக மகளிர் அணி கால் சிலம்பு டன் நாடகமாடுகிறது. குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை யாகும்போது இவர்கள் ஏன் போராடவில்லை? பாஜக ஆளும் 16 மாநிலங்களில் பெண் களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். “கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை போட்டும் குற்றவாளி களை கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக, அதிமுக சுயநல அரசியலுக்கு பயன்படுத்து கின்றன. அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் யார் அந்த ‘சார்’ என்ற கேள்விக்கு தமிழக அரசு விடை சொல்ல வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறை தவறி வருகிறது” என்று சாடினார்.விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் பேசுகையில், “சமீபத்திய புயல், வெள்ளத்தால் தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மண் மூடி நாச மானது. ஒரு லட்சம் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. தமிழக பாஜக தலைவர்கள் நிவாரணம் கேட்டு குரல் கொடுக்கவில்லை” என்றார். “விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை வழங்க மறுக்கும் மோடி அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை ஏற்க மறுக்கிறது. கடன் தள்ளுபடி கோரிக்கையை யும் நிராகரிக்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்தனர். இப்போது கொல்லைப்புற வழியாக அதே சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிபிஎம் தொடர்ந்து போராடும்” என்று ரவீந்திரன் அறி வித்தார். | 2025-01-06 02:08:56.470249 |
ஜனவரி 5, 2025 | இவர் தான் அமைதித் தூதுவரா? | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/some-are-trying-to-disturb-the-peace-in-the-name-of-caste-politics | தமிழ் | UTF-8 | சாதி அரசியல் என்ற பெயரில் சிலர் அமைதி யைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவரது பேச்சு மிகவும் மோசமானது. பிளவு வாத அரசியலில் மிக நுட்பமான மொழி அவரு டையது. இவர் ஏதோ அமைதியின் தூதுவர் போல இப்படி பேசியிருக்கிறார்.மோடியை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரிவாரத்தினர் இன்றும் சனாதன தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கூறும் சனாதன தர்மம் என்பது வருணாசிரமம் எனும் நால்வருண சாதியக் கட்டமைப்பு தானே. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்த கேடுகெட்ட சாதி முறையை பாதுகாக்கத் தானே இவர்கள் துடிக்கிறார்கள்.சாதிப் பிரிவினைகளையும் சாதியக் கட்ட மைப்பையும் பாதுகாக்கவே பாஜக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வருகிறது. அதன் கல்விக் கொள்கை கூட பழைய குலக் கல்வி திட்டத்தைப் போல பாதி நேரம் படிப்பு மீதி நேரம் தொழில் பழகல் (கற்றுக் கொள்ளல்) என்று கூறுகிறது. கடந்தாண்டு கொண்டு வந்த விஸ்வ கர்மா திட்டம் கூட சாதி அடிப்படையி லேயே தொழிலுக்கு கடனுதவி செய்வதாகவே அமலாகிறது. இன்னும் சொல்லப் போனால் இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களுக்காகத்தானே 10 சத வீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது.இப்படி எல்லாமே சாதியக் கண்ணோட் டத்துடன் செய்து கொண்டு, எதிர்க்கட்சிகள் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறினால் அதை சாதி அரசியல் என்று சாடுவதை என்ன வென்பது? தேர்தல் காலம் வந்தாலே சாதி அடிப்ப டையிலான அணி திரட்டலையும் விருது வழங்க லையும் கலவரத்தைத் தூண்டுவதையும் செய்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து சாதி அரசியல் செய்வதாகக் கூறுவது நகைப்புக்குரியது.பாஜகவின் சாதி அரசியலுக்கு பற்றி எரியும் மணிப்பூர் அண்மைக் கால சாட்சியல்லவா? குக்கி பழங்குடியினருக்கு எதிராக மெய்டெய் மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை மூலம் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் பாஜக, அங்கு சென்று அமைதியை ஏற்படுத்த முடியாத - ராஜதர்மத்தைக் கூட கடைப்பிடிக்காத பிரதமர் மோடி மணிப்பூரில் அமைதியைச் சீர்குலைப்பவர் என்றால் தவறாகுமா? சாதி நூறு சொல்லுகின்ற சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கிறவர்களுக்கு அப்படிக் கூறும் அருகதை உண்டா? பிராமணர்களை பாதுகாக்க சட்டம் வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் பாஜக பரிவாரங்களின் மூலவரான மோடி சாதி அரசியல் என்று பேசலாமா? இவர் என்ன அமைதியின் தூதுவரா? சீர்குலைவு தானே இவர்களின் வேலை! சமூகத்தின் அடித் தட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் எதிரிகள் தானே இவர்கள்! | 2025-01-06 02:09:00.271577 |
ஜனவரி 5, 2025 | சிபிஎம் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/cpm-24th-all-india-conference-delegates | தமிழ் | UTF-8 | 1. எஸ். நூர்முகமது
2. என். குணசேகரன்
3. க. கனகராஜ்
4. க. பாலபாரதி (பெண்)
5. டி. ரவீந்திரன்
6. அ. சவுந்தரராசன்
7. ஆர். சச்சிதானந்தம்
8. எம். சின்னதுரை
9. கே.பி. ஆறுமுகம்
10. கே.ஜி. பாஸ்கரன்
11. சின்னை பாண்டியன்
12. ஜி. சுந்தரமூர்த்தி
13. பி. சீனிவாசன்
14. என். சுப்பிரமணியன்
15. எம். சிவக்குமார்
16. அ. குமார்
17. ஜி.கே. நஞ்சுண்டன்
18. வி. பாஸ்கரன்
19. சி. பத்மநாபன்
20. ஆர். கோமதி (பெண்)
21. பி. ரமேஷ்
22. எம். ராமகிருஷ்ணன்
23. எஸ். குமார்
24. ஜி. செல்வா
25. எம். பாலசுப்பிரமணியம்
26. என். விஜயா (பெண்)
27. கே. ரங்கராஜ்
28. ஜி. வெற்றிச்செல்வன்
29. பி. சுப்பிரமணியன்
30. ஆர். செல்லசுவாமி
31. சுபாஷ் சந்திரபோஸ்
32. இ. முத்துக்குமார்
33. வி. உதயகுமார்
34. மா. ஜோதிபாசு
35. கே. திருச்செல்வன்
36. சாமி. நடராஜன்
37. வீ. அமிர்தலிங்கம்
38. எஸ். கார்த்திக்
39. கோ. அரவிந்தசாமி
40. ஆர். சுதிர்
41. வெ. ராஜசேகரன்
42. எஸ்.பி. ராஜேந்திரன்
43. பிரளயன்
44. அ. ராதிகா (பெண்)
45. பி. சுகந்தி (பெண்)
46. பா.ஜான்சிராணி(பெண்)
47. டி. சங்கரி (பெண்)
48. எஸ்.எம். தேவி (பெண்)
49. ஆர். சரவணன்
50. செ. முத்துக்குமாரசாமி | 2025-01-06 02:09:04.634522 |
ஜனவரி 5, 2025 | தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது! - ஆளுநர் உரையாற்றுகிறார் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/the-first-meeting-of-the-tamil-nadu-legislative-assembly-for-the-year-2025 | தமிழ் | UTF-8 | ஆளுநர் உரையாற்றுகிறார் சென்னை, ஜன. 5 - தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் கூடியது. இதில் பல்வேறு சட்ட மசோதாக் கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கூட்டம் கூடும் தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவையின் 2024ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என். ரவி அண்மையில் முடித்து வைத்தார். இந்நிலையில், 2025-ஆம் ஆண்டுக் கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஜனவரி 6 ஆம் தேதி கூட்டியுள்ளார். அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்ற உள்ளார். ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சி கள் முடிவுபெறும். அன்றே, அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்து வது என்பதை முடிவெடுக்கும். கடந்த முறை உரையின் முதல் பக்கம் மற்றும் கடைசிப் பக்கத்தை மட்டுமே ஆளு நர் ரவி வாசித்தார். இந்த முறை முழுமை யாக வாசிப்பார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், மாநிலத்தின் முதல் குடிமகன் என்பதால் பேரவையில் உரையாற்ற வரு மாறு அவரை அழைக்கலாம். அதைத் தவிர, முழுமையாக பேசுமாறு வலியுறுத்த முடியாது. அதேபோல அரசியலமைப்பு சட்டத்தின் 176-ஆவது பிரிவின்படி, சட்டப்பேரவை யில் உரையாற்ற மட்டுமே ஆளுநருக்கு அனுமதி உள்ளது. கருத்துச் சொல்லும் அதி காரம் அவருக்கு இல்லை. முதல்வர், அமைச்சரவை கூடி எழுதிக் கொடுப்பதை தான், ஆளுநர் வாசிக்க வேண்டும். சொந்தக் கருத்துகளையோ, பிரச்சனை களையோ சொல்ல உரிமை இல்லை. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே சட்டப்பேரவையில் கருத்து சொல்ல அனுமதியுள்ளது. தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தேர்தல் நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 2025-01-06 02:09:04.635588 |
ஜனவரி 5, 2025 | ஐராவதம் மகாதேவன் ஆய்வு இருக்கைக்கு ரூ. 2 கோடி சிந்துவெளி எழுத்து முறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ரூ. 8.57 கோடி பரிசு! | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/if-the-way-to-understand-the-indus-script-is-rs.-8.57-crore-prize! | தமிழ் | UTF-8 | சென்னை, ஜன. 5 - சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையைப் புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவுப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, “அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்” என்று கூறி, “செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். “சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும்; தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்” என்று மேலும் அறிவித்த முதல்வர், “இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார். முன்னதாக, “சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. இன்னும் ஏராளமான ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன என்று முதல்வர் குறிப்பிட்டார். | 2025-01-06 02:09:04.636325 |
ஜனவரி 5, 2025 | சிபிஎம் 24ஆவது மாநில மாநாட்டு காட்சிகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/cpm-24th-state-conference-scenes | தமிழ் | UTF-8 | மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளின் விவாதத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துப் பேசினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டை வாழ்த்தி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் எழுதி, அபிநவ் சூர்யா ல.தி., சித்தார்த் கோ.மு., ஆகியோர் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் ‘ரீட்டாவின் கல்வி – 1975-1985 நினைவலைகள்’ எனும் நூலை பதிப்பித்துள்ளது. இந்த நூலை மாநில மாநாட்டில் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் வெளியிட, ஜி.அரவிந்தசாமி பெற்றுக் கொண்டார். அருகில் நூலாசிரியர் பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.தபோ விஜயகோஷ் எழுதி, ரவிச்சந்திரன் அரவிந்தன் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘சமரம்’ எனும் நாவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் வெளியிட, என்.அமிர்தம் பெற்றுக் கொண்டார். மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் ஆகியோர் உடன் உள்ளனர்.கவிஞர் எஸ்.கவிவர்மன் தொகுப்பில் உருவான ‘செங்கொடி இயக்கத்தின் தன்னிகரில்லாத் தலைவர் தோழர் ஆர்.உமாநாத்’ எனும் நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் வெளியிட, திருச்சிபுறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராஜ் பெற்றுக் கொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம், நூலாசிரியர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.மாநாட்டு அரங்கில் பிரதிநிதிகள் பயன்பாட்டிற்காக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் அரங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 50 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, விழுப்புரத்தில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டிற்கு கணிசமாக பங்களிப்பு செய்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரை பாராட்டி கவுரவித்தார். | 2025-01-06 02:09:04.636850 |
ஜனவரி 5, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/ramesh-bidhuri-who-spoke-against-priyanka-gandhi-is-wrong | தமிழ் | UTF-8 | பிரியங்கா காந்திக்கு எதிராக பேசிய ரமேஷ் பிதுரி, தவறான நடத்தை மற்றும் மலிவான மனிதனின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருடைய உரிமையாளர்களின் யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய கீழ்த்தரமான தலைவர்களின் மூலம் ஆர்எஸ்எஸ் மதிப்பினை நீங்கள் கண்டுகொள்ளலாம்.பிரியங்கா காந்திக்கு எதிரான பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் பேச்சை கேளுங்கள் மக்களே. இதுவே பெண்களுக்கு பாஜக கொடுக்கும் மரியாதை. தில்லி பெண்களின் மரியாதை இதுபோன்றவர்களின் கையில் பாதுகாப்பாக இருக்குமா? எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரமேஷ் பிதுரியின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.பிரியங்கா காந்திக்கு எதிரான பேச்சு மிகவும் தவறானவை. பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயம் அல்ல.உத்தரப்பிரதேச பாஜகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் மாநிலத்தில் பொதுப்பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன. பொதுநலன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பசுவதை பெயரில் பணம் பறிக்கும் பாஜக அரசின் ஊழல் மிக மோசமானது.குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான இலகு ரக ஹெலிகாப்டரான ‘துருவ்’ விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து நடந்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நிகழ்த்தப் பட்ட என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாது காப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவலர் ஒருவரும் உயிரிழந்தார். | 2025-01-06 02:09:04.637392 |
ஜனவரி 5, 2025 | உ.பி.,யில் தினமும் 50,000 பசுக்கள் வெட்டப்படுகின்றன போட்டுடைத்த பாஜக எம்எல்ஏ | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/50,000-cows-are-slaughtered-in-up-every-day | தமிழ் | UTF-8 | மசூதிகளில் சாமி சிலைகளை தேடி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதி யில் வன்முறையை கிளப்புவது, புல்டோசர் நடவடிக்கை, பசுவதை என்று கூறி முஸ்லிம் மக்களை அடித்துக் கொல் வது தான் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் முக்கிய செயல்பாடாக உள்ளது. இந்நிலையில், அரசுக்கு தெரிந்தே உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 50,000 பசுக்கள் வெட்டப்படுவதாக அம் மாநில பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறுகையில், “உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் ஆட்சியில் தினமும் 50,000 பசுக்கள் வெட்டப்படுகின்றன. பசு நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர். இதற்கெல்லாம் உத்தரப்பிரதேச தலை மைச் செயலாளர்தான் மூளையாக உள்ளார். முதல்வர் ஆதித்யநாத்துக்கு தெரிந்தே இந்த மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன” என குற்றம் சாட்டி, இரண்டு தலைமைக் காவலர்கள் பசு வதைக்காக பணம் பறிக்கும் வீடியோ காட்சியையும் எம்எல்ஏ சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ளார்.பசுவதை பெயரில் பணம் பறிக்கும் பாஜக அரசுமோடி பிரதமர் ஆன பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில், பசுவதை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு பெற்ற பசுக்குண்டர்கள் முஸ்லிம் மற்றும் தலித் மக்களை அடித்துக்கொல்வது வழக்கமான விஷயமாக மாறியுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு கூட உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் பகுதியில் பசுவதை செய்ததாக பஜ்ரங் தளம் அமைப்பின் பசுக்குண்டர்கள் முஸ்லிம் இளைஞரை அடித்தே கொன்றனர். பசுவதையை வைத்து ஒரு பக்கம் பாஜக அரசியல் ஆதாயம் தேடினாலும் மறு பக்கம் அதனை வைத்து கல்லா கட்டி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பசுவதை செய்ய வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்ற மிரட்டல் சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்மூலம் பசுவதை பெயரில் பணம் பறிக்கும் வேலையை யும் உத்தரப்பிரதேச பாஜக அரசு மேற் கொண்டு வருவது அம்பலமாகியுள்ளது. | 2025-01-06 02:09:04.637874 |
ஜனவரி 5, 2025 | விவசாயிகள் போராட்டங்களின் தூணாக விளங்கிய தோழர் ஜி.சி.பய்யா ரெட்டி காலமானார் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/all-india-farmers-union-praise | தமிழ் | UTF-8 | அகில இந்திய விவசாயிகள் சங்கம் புகழஞ்சலிபெங்களூரு கர்நாடக மாநில விவசாய சங்க (கேபிஆர்எஸ்) மாநில தலைவரும், அகில இந்திய விவசாய சங்க மத்தியக் குழு உறுப்பினருமான தோழர் ஜி.சி.பய்யா ரெட்டி ஜனவரி 4ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். தோழர் ஜி.சி.பய்யா ரெட்டியின் திடீர் மறைவுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் பிஜு கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கர்நாடகாவில் விவசாயிகளின் நலனுக்கான போராட்டத்தில் உறுதியாக இருந்த தோழர் ஜி.சி.பய்யா ரெட்டியின் திடீர் மறைவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த வருத் தத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் செங்கொடி அரைக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும். டிசம்பர் 27, 2024 அன்று ஜி.சி.பய்யா ரெட்டி தனது உடலில் ஆக்ஸிஜன் குறைந்ததைத் தொடர்ந்து பெங்களூரு சுகுணா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவசர சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகான தொடர் சிகிச்சையில் குணமடைந்த போதி லும், அவர் கடுமையான நுரையீரல் தொற்றுக்கு ஆளானார். கெடு வாய்ப்பாக சனிக்கிழமை (ஜன வரி 4) அதிகாலை 3:30 மணிக்கு மார டைப்பு ஏற்பட்டு ஜி.சி.பய்யா ரெட்டி காலமானார். அவருக்கு வயது 64 ஆகும். ஜி.சி.பய்யா ரெட்டியின் மறைவு விவசாய இயக்கத்திற்கும், கர்நாடகாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத் திற்கான பரந்த போராட்டங்க ளுக்கும் ஒரு மகத்தான இழப்பாகும்.மாணவர் சங்க தலைவர்1960ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலம் சிக்க பல்லாபுரம் மாவட்டம் சிந்தாமணி தாலுகா, கடிகிவரப்பள்ளி கிரா மத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சவுடப்பா மற்றும் பையம்மா ஆகி யோருக்கு மகனாகப் பிறந்தவர் ஜி.சி.பய்யா ரெட்டி. தனது இள மைப் பருவத்திலிருந்தே போராடும் குணத்தை வெளிப்படுத்திய ஜி.சி.பய்யா ரெட்டி, 1980ஆம் ஆண்டு சிந்தாமணி அரசு கல்லூரியில் படிக்கும் போது இந்திய மா ணவர் சங்கத்தில் (எஸ்எப்ஐ) இணைந்து நாளடைவில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தார். காவல்துறையின் கொடு மையை எதிர்த்து நடைபெற்ற பிரபலமான நவல்குண்ட்-நர்குண்ட் விவசாயிகள் போராட்டம் உட்பட பெருந்திரளான போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஜி.சி.பய்யா ரெட்டி முக்கிய பங்கு வகித்தார். இந்த போராட்டத்திற்கு பிறகு மாணவர் செயல்பாட்டிலிருந்து விடுபட்டு முற்றிலும் விவசாயி களின் போராட்டங்களில் பங்கு பெற்று, கோலார் மற்றும் சிக்க பல்லாபுரம் மாவட்டங்களில் கவனம் செலுத்தினார். 2000ஆம் ஆண்டு குல்பர்காவில் நடைபெற்ற 12ஆவது விவசாய சங்க மாநில மாநாட்டின் போது, கர்நாடகா விவசாய சங்க மாநில பொதுச் செயலாளராக ஜி.சி.பய்யா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் பிரச்சா ரங்களை நடத்தி, விவசாயிகளின் நேசத்துக்குரிய தலைவரானார்.போராட்டங்களின் நாயகன்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஹூப்ளியில் நடைபெற்ற 16ஆவது மாநில மாநாட்டில் ஜி.சி.பய்யா ரெட்டி கர்நாடகா விவசாய சங்க மாநில தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். தனது கடைசி மூச்சு வரை அவர் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, மார்க்சிய கொள்கை களை உயர்த்திப்பிடித்தார். தனது பொது வாழ்வில் ஜி.சி. பய்யா ரெட்டி பல முக்கியமான இயக்கங்களை முன்னெடுத்தார். அவற்றில் நிலம் கையகப்படுத்து தல் எதிர்ப்பு போராட்டங்கள், பகைர் ஹூகம் விவசாயிகளின் நில உரிமைக்கான போராட்டங்கள், பட்டு, பால், கரும்பு, பருப்பு போன்ற பயிர்களுக்கு கட்டுப்படி யான விலைக்கான போராட்டங் கள், விவசாய நீர்ப்பாசனப் பம்பு களுக்கு மீட்டர் பொருத்துவதற்கு எதிரான போராட்டங்கள், காடு கள் உரிமை மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கான போராட்டங் கள், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி குறித்த சட்டமியற்றல் பிரச்சா ரங்கள் ஆகியவை அடங்கும். மோடி அரசால் கொண்டு வரப்பட்ட விவசாய சட்டங்களுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க “தில்லி சலோ” விவசாயிகள் இயக்கத்தின் போது விவசாயி களை ஒன்றிணைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். அதே போல “சம்யுக்த ஹோரட்டா கர்நாடகா” மன்றத்தை உருவாக்கி யது, கர்நாடகாவில் பல்வேறு விவசாய அமைப்புகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவது ஆகியவற்றில் ஜி.சி.பய்யா ரெட்டி முக்கிய பங்கு வகித்தார். அனுபவம் வாய்ந்த மற்றும் தொலைநோக்குப் பார்வையுள்ள இத்தகைய விவசாயத் தலைவரை இழந்தது கர்நாடக மாநிலத்தின் ஐக்கிய விவசாய இயக்கத்திற்கும் இடதுசாரி போராட்டங்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடை வாகும். இத்தகைய சூழலில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஜி.சி.பய்யா ரெட்டியின் குடும்பத்தி னர், தோழர்கள் மற்றும் கர்நாடகா வின் விவசாயிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றது. அவரது வாழ்க்கை மற்றும் நினைவுகள் புதிய தலைமுறை புரட்சியாளர்களுக்கு ஊக்கமளிக் கும். செவ்வணக்கம் தோழர் ஜி.சி. பய்யா ரெட்டி” என அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. | 2025-01-06 02:09:04.638857 |
ஜனவரி 5, 2025 | ஹரியானாவில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/maha-panchayat-of-farmers-in-haryana | தமிழ் | UTF-8 | ஹரியானா தொஹானாவில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பாக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இந்த மகா பஞ்சாயத்து ஷம்பு மற்றும் கன்னோரி எல்லை பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் வலுவான ஒற்றுமைக்கு அறைகூவல் விடப்பட்டது. | 2025-01-06 02:09:04.639322 |
ஜனவரி 5, 2025 | “கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்” பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளர் இழி பேச்சு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/bjp-candidate-defames-priyanka-gandhi | தமிழ் | UTF-8 | 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் - பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 28 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை அன்று வெளியிட்டது. அதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதி ஷியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி,”தில்லியின் ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதி களைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரி யங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி யுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாள ரும், மக்களவை எம்.பி.,யுமான பிரி யங்கா காந்திக்கு எதிரான ரமேஷ் பிதுரி யின் இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மகளிர் அமைப்புகள் நாடு தழுவிய போ ராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இது போன்ற பேச்சின் தந்தையே பிரதமர் மோடிதான் ரமேஷ் பிதுரியின் பேச்சிற்கு காங்கி ரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் தளப் பதிவில்,”பிரியங்கா காந்திக்கு எதி ரான ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம். பெண்களுக்கு எதி ரான இதுபோன்ற பேச்சு மற்றும் சிந்தனை யின் தந்தையே பிரதமர் மோடிதான். அவரே பெண்களுக்கு எதிராக “மாங்கல் யம்” மற்றும் “முஜ்ரா” போன்ற வார்த்தை களைப் பயன்படுத்துபவர். இந்த மோச மான பேச்சுக்காக ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்க வேண்டும்” என அதில் குறிப்பி டப்பட்டுள்ளது. | 2025-01-06 02:09:04.639790 |
ஜனவரி 5, 2025 | தீக்கதிர் விரைவு செய்திகள் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/heavy-fog-in-delhi-400-flights-81-trains-delayed | தமிழ் | UTF-8 | தில்லியில் கடும் பனிமூட்டம் 400 விமானங்கள் ; 81 ரயில்கள் தாமதம்தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 9 மணிநேரம் அடர்பனி நீடித்தது. இந்த ஆண்டின் குளிர்காலத்தில் மிக நீண்ட பனிமூட் டம் ஆகும். தில்லி யின் பாலம் பகுதியில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதி காலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம் எதிரில் இருப்பவர் கள் தெரியாதபடி பனிமூட்டம் நீடித்தது. கடுமையான பனி மூட்டம் காரணமாக விமானங் கள், ரயில் சேவைகளில் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டது. 400 விமானங்கள் தாமத்தை எதிர்கொண்டன. 81 ரயில்கள் தாமதமாக சென்றன. சில தொலைதூர ரயில்கள் 8 மணிநேரம் தாமதத்தில் கிளம்பி சென்றன என செய்திகள் வெளி யாகியுள்ளன.அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் மேலும் புதிய கட்டுப்பாடுகள்சென்னை, ஜன. 5 - அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணி யாளர்கள் தவிர வெளிநபர்களுக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. அனைவரும் அடை யாள அட்டைகளைக் கட்டாயம் அணிந் திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. “அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வெளிநபர்கள் நடைப்பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும். பணி முடிந்ததும் கட்டுமான தொழிலாளர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத வாக னங்கள் நிறுத்தப்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும். ஆன்லைன் நிறுவன டெலி வரி ஊழியர்களுக்கு, அண்ணா பல்கலைக் கழக நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் எப்போதும் தங்கள் அடையாள அட்டையை அணிந் திருக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமிரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னை, ஜன. 5 - தமிழக தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட ரூ. 14.60 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடுசென்னை, ஜன. 5 - தமிழக சட்டமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில், மாண வர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இதற்காக, சுமார் ரூ. 15 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திட, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய அறிவுரைகளை பின்பற்றி, பள்ளி ஆண்டுவிழா வை சிறப்பாக கொண்டாட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது! தமிழக அரசு அறிவிப்புசென்னை, ஜன. 5 - நடப்பு 2025ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார். விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விருதுகளின் பட்டியல்: அய்யன் திருவள்ளுவர் விருது - மு. படிக்கராமு. பேரறிஞர் அண்ணா விருது - தஞ்சாவூர் கீழையூரைச் சேர்ந்த எல். கணேசன். பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொ. செல்வகணபதி. ‘மகாகவி பாரதியார் விருது’ - கவிஞர் கபிலன், ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’ - ஜி.ஆர். இரவீந்திரநாத், ‘தந்தை பெரியார் விருது’ - விடுதலை ராஜேந்திரன், ‘அண்ணல் அம்பேத்கர் விருது’ - து. ரவிக்குமார் எம்.பி., ‘முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது’ - பொதியவெற்பன், ‘முத்தமிழறிஞர் கலைஞர் விருது’ - முத்து வாவாசி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது!விருதுநகர், ஜன. 5 - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சனிக்கிழமையன்று (ஜன. 4) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில், ஆலையின் உரிமையாளர் சசிபாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகா் அருகே வீராா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொம்மையாபுரத்தில் சிவகாசியைச் சோ்ந்த பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை அண்மையில் சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலையின் உரிமையாளா் சசிபாலன் விலைக்கு வாங்கியிருந்தார். எனினும், பட்டாசு ஆலையின் பெயா் மாற்றம் செய்யப் படாத நிலையில், இங்கு விபத்து ஏற்பட்டு 6 பேர் உடல் சிதறி பலியான துயரம் நிகழ்ந்தது. இந்நிலையில், விபத்து தொடர்பாக சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலை உரிமையாளா் சசிபாலனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இதுவரை 7 பேர் மீது 5 பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.காசாவிலுள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம்காசாவின் வட பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைக் கடைப்பிடித்து, மருத்துவமனையை போர்க் களமாக மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான சீனத் தூதர் அறிவுறுத்தினார். ஜனவரி 3ஆம் நாளன்று, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய அவசரக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதியான ஃபு சோங் கூறுகையில்,புத்தாண்டை முன்னிட்டு, வட காசாப் பகுதியில் பயங்கர சோகம் நிகழ்ந்தது. வட காசாவிலுள்ள ஒரேயொரு பன்னோக்கு மருத்துவமனை மீது இஸ்ரேல் படை தாக்குதல் தொடுத்து, மருத்துவப் பணியாளர்களை கட்டாயப்படுத்தி காவலில் வைத்து, அப்பாவி நோயாளிகளை கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்ததன் காரணமாக, அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. மருத்துவமனையும் தீயில் சிக்கியது. இஸ்ரேலின் இத்தகைய செயல், சர்வதேச சட்டத்தை, குறிப்பாக சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை கடுமையாக மீறியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார்.பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய ரக சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம்11.93 மீட்டர் விட்டமும் 180 மீட்டர் நீளமும் கொண்ட புதிய ரக சுரங்கப்பாதை துளையிடும் இயந்தி ரம் ஜனவரி 5ஆம் நாள், மத்திய சீனாவிலுள்ள ஹுபெய் மாநி லத்தின் இச்சாங் நகரிலுள்ள நீர்வளத்துறை திட்ட பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சீனா சொந்தமாக தயாரித் துள்ள இந்த இயந்திரமானது, கடினப்பாறைகள் நிறைந்த இடத்திலேயே துளையிடுதல் பணியும் பொருத்துதல் பணி யும் ஒரே நேரத்தில் மேற்கொள் ளும் திறனை கொண்டது குறிப் பிடத்தக்கது. | 2025-01-06 02:09:05.689735 |
ஜனவரி 5, 2025 | குஜராத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 3 பேர் பலி | மாநிலம் - குஜராத் | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/gujarat/3-killed-in-helicopter-crash-in-gujarat | தமிழ் | UTF-8 | குஜராத்,ஜனவரி.05- ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடலோர காவல் படையின் அதிநவீன ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து திடீரென விழுந்து நொறுங்கியதில் பைலட் 2 உட்பட 3 பேர் உயிரிழப்பு
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். | 2025-01-06 02:09:05.690502 |
ஜனவரி 6, 2025 | அரசு ஊழியர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், கல்லூரி- பள்ளி ஆசிரியர்கள் நலனுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/election-promises-for-the-welfare-of-school-teachers-must-be-fulfilled | தமிழ் | UTF-8 | அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன் வாடி ஊழியர், கல்லூரி, பள்ளி ஆசி ரியர்களின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென சிபிஐ(எம்) மாநில மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீர்மானம் வருமாறு: அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஆசிரி யர்களின் நலன்கள், கோரிக்கைகள் கடந்த கால அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டது.நிர்வாகத் தீர்ப்பாயம், காலமுறை ஊதியம்...மிக முக்கியமானதாக வரையறுக்கப்பட்ட பயன்கொண்ட பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு அமைந்தது. மேலும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயம் அமைப்பது, ரூ.8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 பி நடவடிக்கைகளை திரும்பப் பெற்று நிவாரணம் வழங்குவது, சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் எண் 308 லிருந்து 318 வரை இடம் பெற்று இருந்தன.பழைய பென்சன் திட்டம் மீட்காததால் அதிருப்தி01.04.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு எவ்வித வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயனுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவதாக அறி வித்து அமலாக்கத்தை துவங்கியுள்ளன. ஆனால் இந்த மாநிலங்கள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் செலுத்திய தொகையை திரும்பத் தராது என்று ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசோ ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் அங்கமாக மாறாத சூழ லிலும் பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படுவது என்ற கோரிக்கையை ஏற்பது என்பதை நோக்கி நகரவே இல்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை, கோபத்தை உரு வாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 2021 தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியம் ஒழிக்கப் பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் இக்கோரிக்கை கூட ஈடேறாத நிலையில் காலைச் சிற்றுண்டியை தனியார் முக மைக்கு வழங்கப்பட்ட முடிவு எதிர் மாறானதாகும். தமிழ்நாட்டில் ஒன்றிய முன்னுரிமையோடு இருந்த ஆசிரியர்கள் இடமாற்றல்கள் மாநில அள விலான முன்னுரிமை முறைமைக்கு மாறுவதற்கான அரசாணை எண் 243/ 21.12.2023 கடுமையாக ஆசிரியர் நலனையும் குறிப்பாக பெண் ஆசிரி யர்களை பாதித்துள்ளது. கல்வித் தரத்தையும் பாதிப்ப தாக உள்ளது.23 ஆண்டுகளாக பதவி உயர்வில்லா நிலை23 ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரி யர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை நிறை வேற்றப்படவில்லை. பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிக ளாக மாற்ற வேண்டும், எல்லா பல்கலைக்கழகங்களின் சம்பளம் மற்றும் நிர்வாகத்திற்காக நிதியளிப்பு வழங்கப்பட வேண்டும். பல்கலைக் கழகங்களிலும், அதேபோல கல்லூரி கல்வி இயக்குனரகம் போன்ற முகமைகளிலும் காலியாக உள்ள முக்கியமான பதவிகள் விரைந்து நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளிலும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.நிரப்பப்படாத 5 லட்சம் காலிப் பணியிடங்கள்தமிழ்நாட்டில் 64.24 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர் பணிகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2024 இல் 75,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணிகள், பகுதி நேர ஊழியம், வெளி முகமைகளிடம் பணி ஒப்படைப்பு வாயிலாக நிரந்தரப் பணியிடங்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. உழைப்புச் சுரண்டலும் நடத்தப்படுகிறது. வெளி முகமை மூலமாக மருத்துவத்துறை, நில அளவைத்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் அரசாணை எண் 10, 34, 115, 152 போன்றவை மூலமாக நிய மனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் அரசாணை எண் 95-இன் படி 8997 சமையல் உதவி யாளர்களை ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நிய மனம் செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஇ அதிமுக ஆட்சியில் பழி வாங்கப்பட்ட சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரை முறைப்படுத்த வேண்டும்.நிரந்தரப் பணி நியமனம்...தமிழ்நாடு முழுவதும் 4500 க்கு மேற்பட்ட தலை மையாசிரியர் பணியிடங்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. இவற்றை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. பதவி உயர்வுகளுக்கு தகுதித் தேர்வு என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்ற வழக் கினை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து ஆசிரியர்க ளின் பதவி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளது. பள்ளி நிர்வாகக் குழு நியமனங்கள் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் பகுதி நேர ஆசிரியர் நியம னங்கள் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுப்பதை முடிவுக்கு கொண்டு வந்து நிரந்தரப் பணி நியமனங்க ளுக்கு வழிகோல வேண்டும். அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்களின் பணி வரை முறைப்படுத்தப்பட வேண்டும்.தமிழக கல்விக் கொள்கையை அமலாக்க வேண்டும்கல்வித்துறையை பொறுத்தவரையில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ பல்வேறு பெயர்களில் மறை முகமாக செயல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக அரசால் தமிழகத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குழுவின் பரிந்துரை இன்னும் அமலாக் கப்படவில்லை. அதன் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்து ணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு 2021 இல் தந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டிய கடமை உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர், ஆசிரியர்களின், சத்துணவு ஊழியர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்த தீர்மானத்தை க.சுவாமிநாதன் முன்மொ ழிய, ஜெயராமன் (கிருஷ்ணகிரி) வழிமொழிந்தார். | 2025-01-07 02:05:31.090286 |
ஜனவரி 6, 2025 | அடாவடி செய்வது தான் ஆளுநரின் வேலையா? | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/the-first-legislative-session-of-2025-began-on-monday | தமிழ் | UTF-8 | 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் திங்களன்று துவங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரை யுடன் துவங்குவது வழக்கம். வழக்கம் போல ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருக்கிறார். தேசிய கீதம் அவ மதிக்கப்பட்டு விட்டதாக பின்னர் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூட சமூக ஊடகத்தில் பதிவிடப் பட்ட பின்பு அவசரமாக நீக்கப்பட்டு சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது.சட்டப் பேரவைக் கூட்டம் துவங்கும் போது நீராரும் கடலுடுத்த எனத் துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதன் பின் நம்முடைய நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலும் இசைக்கப் படுவது வழக்கம். இது குறித்து ஆளுநர் ஏற்கெனவே விளக்கம் கேட்டிருக்கிறார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என ஆளுநர் கூற, அதற்கு மாநில அரசு தரப்பில் உரிய விளக்க மும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் மாநில அரசின் சார்பில் தயாரிக்கப் பட்ட கொள்கை விளக்க குறிப்பை வாசிக்காமல் இருப்பதற்கு சாக்குத் தேடிய ஆளுநர், தேசிய கீதத்தை அவமதிப்பதாகக் கூறி அலறியடித்து வெளிநடப்பு செய்திருக்கிறார். இதன் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் அவர் ஒருசேர அவமதித்திருக்கிறார். ஏற்கெ னவே ஒரு முறை தேசியகீதம் இசைக்கப்படுவ தற்கு முன்பே ஆர்.என்.ரவி அவசர கதியில் வெளி யேறியது இங்கு நினைவு கூரத்தக்கது.ஆர்.என்.ரவி ஒரு அக்மார்க் ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. ஆர்எஸ்எஸ் இயக்கம் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் ஜன கன மன பாட லையே ஏற்பதில்லை. ஆனால் ஏதோ தேசிய கீதத்தின் மீது அளவற்ற பற்று உள்ளவர் போல ஆர்.என்.ரவி காட்டிக் கொள்வது வெறும் நடிப்பே ஆகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன் றத்தையும், அதன் மரபுகளையும் மதிக்காதவ ராக ஆளுநர் ரவி செயல்படுகிறார். போட்டி அர சாங்கத்தை நடத்த முயல்கிறார். கடந்த ஆண்டு களில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை படிக்க மறுத்தும், சிலவற்றை சேர்த்துப் படித்தும் சர்ச்சையை உருவாக்கினார். பதவிக்காலம் முடிந்தபிறகும், அறிவிப்பின்றி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக தொடர ஒன்றிய அரசு வகை செய்துள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ் நாட்டையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பது இது முதன் முறையல்ல. ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் அலுவலகம் போல மாற்றி அன்றா டம் வம்பு வளர்ப்பதையும், மாநில அரசுக்கு எதி ராக கம்பு சுற்றுவதையும், திருவள்ளுவர், வள்ள லார் போன்ற வரலாற்று ஆளுமைகளுக்கு காவிச் சாயம் பூசுவதையுமே தன்னுடைய அரசியல் சட்டக் கடமைகளாக அவர் கருதுகிறார் போலும். இனியும் ஆளுநர் பொறுப்பில் தொடருவதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை. | 2025-01-07 02:05:34.876885 |
ஜனவரி 6, 2025 | முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பெ. சண்முகம் நன்றி | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/p-to-political-leaders.-thank-you-shanmugam | தமிழ் | UTF-8 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பெ. சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு அவர்களுக்கும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் மாநில செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார். | 2025-01-07 02:05:38.673267 |
ஜனவரி 6, 2025 | தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும்! | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/comment-of-the-marxist-communist-party-with-reference-to-the-governor's-speech | தமிழ் | UTF-8 | சென்னை, ஜன. 6 - தேர்தலின் போது அளித்த வாக்கு றுதிகளை முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிகழ்த்தப் பட்ட ஆளுநர் உரையின் பல்வேறு அம்சங் கள், அறிவிப்புக்களைக் குறிப்பிட்டு, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: பெரும் எதிர்பார்ப்பு உள்ளது தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களும், அதன் செயல் பாடுகளும் ஒருங்கிணைத்து ஆளு நர் உரையில் குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தா லும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டு மென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. மின்கட்டண உயர்வால் பாதிப்பு குறிப்பாக, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வரு கின்றனர். தீர்க்கப்படாத குடிமனை பிரச்சனை நீதிமன்றத் தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடி யிருப்புகளை அப்புறப்படுத்தும் நட வடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். கோவில் நிலங் களில் குடியிருக்கும் மக்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தவிப்பில் அரசுத் துறை ஊழியர்கள் அதுபோல அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கை களை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். கூடுதல் முக்கியத்துவம் அவசியம் இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு கள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். | 2025-01-07 02:05:38.674408 |
ஜனவரி 6, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/we-are-actively-monitoring-the-issue-of-hmbv-infection | தமிழ் | UTF-8 | எச்எம்பிவி தொற்று விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஆனால் இந்த தொற்று கடந்த 2001ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் கேரள ஆய்வகங்களில் உள்ளது. இந்த தொற்று குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை.தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக அறிவித்திருக்கும் 29 வேட்பாளர்களில், பெண்களுக்கு 10% தான் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் பெண்கள் விரோத கொள்கைக்கு இது மற்றுமொரு உதாரணம் ஆகும்.வினாத்தாள் கசிவுக்கு ஆதரவாக தனியாக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு திரைக்கதை, இயக்குனர், தயாரிப்பாளர், பைனான்சியர், நடிகர் யாரென்று எனக்கு நன்றாக தெரியும். பாஜகவின் பி-டீம் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியும்.சத்தீஸ்கர் பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் படுகொலை மிகவும் வருத்தமளிக்கிறது. இது பத்திரிகையாளரின் கொலை அல்ல, ஜனநாயகத்தின் படுகொலை. இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட சாதனத்தில் 4 நாட்களில் பயறு வகையை சேர்ந்த விதை முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.மனிதர்களை பாதிக்கும் எச்எம்பிவி வைரஸ், கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்ட சில நிமிடங்களில், இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100 சதவீதத்தை எட்டி இருப்பதாக கூறினார்.ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான 15ஆவது “ஏரோ இந்தியா 2025” கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள “கேட் ஆப் இந்தியா” பெயரை “பாரத மாதா கேட்” என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு கடிதம் எழுதியுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சைக் கேட்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தில்லியில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.இந்தியா கூட்டணி ஆளும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பொது மக்களின் ஆலோசனைகள்/கருத்துக்கள்/ யோசனைகளைப் பெற “அபுவா பட்ஜெட் போர்டல்” மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். | 2025-01-07 02:05:38.675070 |
ஜனவரி 6, 2025 | ரூ.1000 வாக்குறுதி பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பெண்கள் போராட்டம் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/women-protest-against-punjab-aam-aadmi-govt-promise-rs.1000 | தமிழ் | UTF-8 | 2022ஆம் ஆண்டு நடை பெற்ற பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றி யது. முதல்வராக பகவந்த் மான் உள் ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிப்பதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ரூ.1,000 வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். “3 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கெஜ்ரிவால் ஏன் நிறைவேற்றவில்லை? எப்போது நிறைவேற்றுவார்?” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினர். | 2025-01-07 02:05:38.675730 |
ஜனவரி 6, 2025 | இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/5-children-affected-in-karnataka,-gujarat,-tamil-nadu | தமிழ் | UTF-8 | உலகை மறைமுகமாக அச்சுறுத்தி வந்த நியூமோவிரிடே வைரஸின் உருமாற்றமான ஹியூமன் மெடாநிமோ வைரஸை (Human Meta pneumo virus - HMPV) சீன அரசு கண்டறிந்துள்ளது. சீனாவில் குளிர் காலத்தில் சுவாசப்பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பு. ஆனால் சுவாசப்பாதை சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் வித்தியாசமான உடலியல் பிரச்சனை இருந்துள்ளது. இதனை ஆய்வு செய்த சீன அரசு, “மக்களிடையே குளிர்காலத்தில் பரவி வருவது ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (எச்எம்பிவி) ஆகும். ஆனால் இந்த வைரஸ் வீரியமற்றது. பரவலும் மிக மிகக் குறைவு. முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்தால் குணப்படுத்தலாம்” என அறிவித்து சில வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.இந்தியாவில்...இந்நிலையில், எச்எம்பிவி வைரஸ் இந்தியா விலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனை குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதேபோல் பெங்களூரு பகுதி யில் உள்ள மற்றொரு 3 மாத பெண் குழந்தைக் கும் எச்எம்பிவி வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக் கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.குஜராத்தில்...கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத்திலும் 2 வயதுக் குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 2 வயது பெண் குழந்தை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எச்எம்பிவி வைரஸ் தொடர்பாக கவனமான நடவடிக்கையை மேற் கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் 2 பேருக்கு...கர்நாடகா, குஜராத் மாநிலத்தைப் போன்று தமிழ்நாட்டில் 2 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.பதற்றம் தேவையில்லை...இதுதொடர்பாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகை யில், “இதுதான் முதல் பாதிப்பு என்று சொல்ல முடியாது. ஏற்கனவே இந்த வைரஸ் பாதிப்பு நாட்டில் உள்ளது. இந்த குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்தால்தான் உறுதி செய்யப்படும். தற்போது அதுபோன்ற பரிசோதனை நடத்தப்பட்டதால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வ ளவுதான். பதற்றம் தேவையில்லை. கர்நாட கத்தில் எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கும் நிலையில், இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டுப் பயணங் கள் செய்ததற்கான வரலாறு இல்லை” என அவர் கூறினார். எச்எம்பிவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் நிமோனியா காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டவை ஆகும்.புதிய வைரஸ் அல்ல...எச்எம்பிவி முதன்முதலில் 2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுவாசப் பாதைகளில் பிரச்சனையை ஏற்படுத்தும் வைரஸ் (RSV) ஆகும். நியூமோவிரிடே என்ற வைரஸின் உருமாறியதாகும். எச்எம்பிவி பாதித்தவர்களுக்கான அறிகுறிகள் இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் பிரச்னை மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். இந்த உருமாறிய வைரஸை சீன பிரம்மாண்ட ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது. அறிகுறிகள்... சளி, இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை எச்எம்பிவி வைரஸின் அறிகுறிகளாக கருதப்படுகின்றன. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். எச் எம்பிவி வைரஸால் பாதிக்கப்படும் சிலருக்கு மூச்சிறைப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை அறிகுறிகளாக இருக்கும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்எம்பிவி பெரும்பாலும் சிறு குழந்தைகள், வயதில் பெரியவர்களை தாக்குவதாகவும், இது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. கர்நாடகாவில் கட்டுப்பாடு.. இதனிடையே கர்நாடகாவில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவ சம் அணிவது மிக அவசியம் என அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. | 2025-01-07 02:05:38.676359 |
ஜனவரி 6, 2025 | ஆளுநர் உரை, எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/we-hope-the-chief-minister-fulfills-the-promises-made-during-the-grant-request | தமிழ் | UTF-8 | - மானியக் கோரிக்கையின் போது வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்சென்னை, ஜன. 6 - தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலை வர்கள் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த னர். அப்போது அவர்கள் கூறியது வருமாறு: சிபிஎம் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை மதிக்காத, அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர்தான் ஆர்.என்.ரவி. அரசின் திட்டங்கள் என்பதுதான் ஆளுநர் உரை. இதை படிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், கடந்த முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதை படிக்க வில்லை. தனது கடமையிலிருந்து தவறினார். அது என்ன என்பது ஊடக நண்பர்கள் அனை வருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களும் பார்த்தனர். அரசு தயாரித்து அச்சடித்து கொடுத்ததை படிக்காமல் அவருக்கு எது விருப்பமோ அதை படித்தார். தான்தோன்றித்தனமாக, அவரது விருப்பத்திற்கு ஏற்றார் போல் வாசித்து ஆளுநர் உரையை கேலிக்குரியதாக மாற்றிய சம்பவம் நடந்தது. கடந்த முறை அரசின் உரையில் ஒரு வரி கூட படிக்காமல் சென்றுவிட்டார். இந்த முறை யும் அதேபோல் அரசு கொடுத்த உரையை படிக்காமலேயே சென்றுவிட்டார். இது, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செய லாகும். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகவும் நாங்கள் இதை பார்க்கிறோம். ஆளுநர் தனது கடமையில் இருந்து முழுமையாக தவறி விட்டார் என்பதையும் தெரிவிக்கிறோம்.இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?தமிழ்நாடு சட்டமன்றத்தை மதிக்காமல், சட்டமன்ற உறுப்பினர்களை மதிக்காமல், தமிழ்நாடு மக்களை மதிக்காமல் தானடித்த மூப்பாக செயல்படும் இந்த ஆளுநருக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்களுக்கும் அரசுக்கும் எதிராக செயல்படும் இந்த ஆளுநர் தமிழ கத்திற்கு மட்டுமல்ல ஆளுநராகவே இருப்ப தற்கும் தகுதியற்றவர் என்பதை சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகிறோம். எனவே, உட னடியாக இவரை தமிழ்நாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும். எங்களின் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசும் பிரதமரும் செவி கொடுக்க வேண்டும். ஆர்.என். ரவி இனி ஒரு நிமிடம் கூட தமிழ்நாட்டின் ஆளுந ராக தொடரக்கூடாது என்பதை வலியுறுத்து கிறோம்.அண்ணா பல்கலை. விவகாரம்அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. கல்வி நிலையங்களில் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பி யிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் அமைப்பு கள் போராடி வருகிறது. ஆனால், முதன் முத லாக போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருக்கும் மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள் தான். மாநிலம் முழுவதும் கல்வி வளாகங் களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப் படுத்த வேண்டும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று சிபிஎம், சிபிஐ ஆகிய இரண்டு கட்சிகளின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். வழக்கமாக ஆளுநர் உரை என்பது அரசின் திட்டங்களை, அரசின் கொள்கை முடிவுகளை சொல்லக் கூடியதாகும். அந்த அடிப்படையில், ஆளுநரின் உரையில், இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த இன்னமும் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த அரசு சொல்லியதை செய்யாமல் இருப்பதை இந்த கூட்டத் தொடரின் மானிய கோரிக்கையில் நிறைவேற்றி கொடுக்கும் என்று உழைப்பாளி மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். அதை முதல்வர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு நாகை மாலி கூறினார்.சிபிஐ சட்டமன்ற குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன்சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் மரபுபடி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் பின்னர், ஆளுநர் உரையை தொடங்கி நிறைவு செய்ததும் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் தான் பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும். ஆனால், முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று ஆளுநர் சொன்னது மட்டுமல்ல, அவர் ஒப்புதல் கொடுத்த உரையை கூட வாசிக்காமல் மரபுகளையும் மீறி வெளி நடப்பு செய்திருக்கிறார். மேலும் தமிழ்மொழி, பண்பாடுகளுக்கு எதிராகவும் செயல்படு கிறார். மேலும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், அரசியல் அமைப்பு சட்டத்தையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தையும் அவமதிப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கிறோம். ஆளுநர் உரையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். பல வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்தோம். அதில் குறிப்பாக, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளாகும். எனவே, இந்த கூட்டத்தொடரில் இது குறித்து இரண்டு கட்சிகளும் வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்ன துரை உடனிருந்தார். | 2025-01-07 02:05:38.676985 |
ஜனவரி 6, 2025 | சத்தீஸ்கரில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு ஓட்டுநரும் பலி | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/சத்தீஸ்கரில்-8-பாதுகாப்புப்-படை-வீரர்கள்-உயிரிழப்பு-ஓட்டுநரும்-பலி | தமிழ் | UTF-8 | பாஜக ஆளும் சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டம் அதிக மலை வனப்பகுதி கொண்டதாகும். இந்த பகுதியின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு பாது காப்புப் படை வீரர்கள் (சிஆர்பிஎப்) தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்குச் சென்றனர். அம்பேலி கிராமத்திற்கு (குத்ரு காவல்நிலையம் அருகே) அருகே பாதுகாப்புப் படை வீரர்கள் வாகனம் மீது ஐஇடி வெடிகுண்டுகள் மூலம் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவர் என 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் பாது காப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது வாகும். கடந்த 2023இல் அண்டை நாடான தண்டேவாடா மாவட்டத்தில் பாது காப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்களும், ஒரு பாது காப்புப் படை வீரரும், வாகன ஓட்டுநரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. | 2025-01-07 02:05:38.677612 |
ஜனவரி 6, 2025 | கேரளாவில் கோர விபத்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் பலி | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/4-dead-as-bus-overturns-in-ditch-in-kerala | தமிழ் | UTF-8 | கேரளம் மாவேலிக்கரை பகுதி யைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து மூலம் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பினர். தேனி வழியாக இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே சென்று கொண்டு இருந்த பேருந்து பிரேக் பிடிக்காமல் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராம மோகன்(55), அருண் ஹரி (40), சங்கீதா(45), பிந்து (50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் இடுக்கி மாவட்ட மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பேருந்து கேரள அரசுக்கு சொந்தமானது ஆகும். | 2025-01-07 02:05:38.678244 |
ஜனவரி 6, 2025 | ஆளுநர் உரையின்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை என்ன? | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/what-is-the-discipline-to-follow-during-governor's-speech | தமிழ் | UTF-8 | தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சட்ட மன்றப் பேரவையில் ஆளுநர் உரை யாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து பேரவைச் செயலகம் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அணிவகுப்பு அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.15 மணிக்குள் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் அமர வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் காலை 9.20 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்திலுள்ள சட்ட மன்றப் பேரவை மண்டபத்தின் முகப்பில் வருகை தருவார். சட்டமன்றப் பேரவைத் தலை வர் மற்றும் சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் அவரை வரவேற்பார்கள். மாநிலக் காவல் துறை அணிவகுப்பு மரியாதைக்குப் பின்னர், அவரை சட்டமன்றப் பேரவை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். இவ்வாறு அணிவகுத்து அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் இருக்கைக்கு எதிரிலுள்ள வாயில்களை அடைவார்கள். மேடையில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆளுநரின் வலப்புறத்தில் அமர்வார். ஆளுநரின் முதன்மைச் செயலாளரும், மெய்க்காப்பாளர்களும் மேடைக்குப் பின்புறத்தில் அமர்வார்கள். ஆளுநர் இருக்கையில் அமரும் வரையில் உறுப்பினர்கள் அனைவரும் நின்றுகொண்டு இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பின்னர், ஆளுநர் அவர்கள் தமது உரையினை நிகழ்த்துவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 17-ஆவது விதியின்படி, ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, ஒழுங்குப் பிரச்சனையினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய உடனே, அவ்வுரையின் தமிழாக்கம் பேரவைத் தலைவர் அவர்களால் வாசிக்கப்பெறும். பின்னர் ‘நாட்டுப் பண்’ பாடப்படும். அவ்வமயம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பின்னர், ஆளுநர் தமது உரையினை நிகழ்த்துவார்கள். தேசிய கீதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 17-ஆவது விதியின்படி, ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ உறுப்பினர் யாரும் தமது பேச்சினாலோ, ஒழுங்குப் பிரச்சனையினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய உடனே. அவ்வுரையின் தமிழாக்கம் பேரவைத் தலைவர் அவர்களால் வாசிக்கப்பெறும். பின்னர் ‘நாட்டுப் பண்’ பாடப்படும். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். | 2025-01-07 02:05:38.678847 |
ஜனவரி 6, 2025 | தீக்கதிர் விரைவு செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/continuing-governorship-controversies | தமிழ் | UTF-8 | தொடரும் ஆளுநரின் சர்ச்சைகள்தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்ட பிறகு, 2022 ஆம் ஆண்டில் முதன் முறையாக திமுக அரசின் முதல் உரையை முதன் முறையாக படித்தார். அன்றைக்கு அரசின் புதிய அறி விப்புகள், திட்டங்கள் குறித்து தனது உரை யில் விரிவாகவும் விளக்கமாகவும் வாசித்தார். அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசித்தார். அப்போது, அந்த உரை யில் சிலதை வெட்டியும், ஒட்டியும், சில வார்த்தைகளை மாற்றியும் இடை இடையில் சொருகி கொண்டார். இது அவையில் பெரும் புயலை ஏற்படுத்தியது. மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், தமிழ்நாடு, மகளிர் முன்னேற்றம் என்ற வார்த்தைகளை அறவே தவிர்த்தார். மேலும் பெரியார், அம்பேத்கர் பெயரையும் வாசிக்க வில்லை. அத்துடன், அறிக்கையின் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து விட்டார். ஆளுநர் இப்படி அரசின் உரையை வாசிக்காமல் சில மாற்றங்களை செய்வது தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் பதிலடி கொடுக்க, இதனால் அவமானப்பட்ட ஆளு நர் ரவி அடுத்த சில வினாடிகளில் அவை யில் இருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு இயற்றிய பாகங்கள் சில இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிக்க வில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்கா மல் தவிர்த்துவிட்டார். இதனால் அவ ரின் உரையில் சுயமாக பேசிய வார்த்தை களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கி றேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையின் வாசகம் மட்டுமே அவையின் குறிப்பேட்டில் பதியப்பட்டது. அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டிலும் அரசு தயாரித்த அறிக்கையை முன் கூட்டியே அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பிறகு, முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ரவி, உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறியதுடன் உரையில் ஒரு வரிக்கூட படிக்காமல் வெளியேறியது மீண்டும் புயலை கிளப்பியது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ஜன.6 ஆம் தேதி கூடியது. இந்த முறை யும் அரசின் உரையை படிக்காமல் வெளி யேறியதுடன், தேசிய கீதம் பாடவில்லை என கூறியிருப்பது மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.சிறப்பு அலுவலர்கள் நியமனம்சென்னை, ஜன. 6- தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடை பெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று பதவி வகித்த தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமை யுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமித்து தமிழக அரசு திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எச்எம்பிவி வைரஸ் ; அச்சம் தேவையில்லை
பொது சுகாதாரத்துறை அறிவிப்புசென்னை,ஜன.6- தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த எச்எம்பிவி பாதிப்புகள் இல்லை, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை அறி வுறுத்தியுள்ளது. எச்எம்பிவி வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த எச்எம்பிவி வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறுகையில், ”இந்த வைரஸ் பற்றி கவலைப்பட ஏதும் தேவையில்லை. பொதுவாக விண்டர் சீசன், மழைக்காலங்களுக்கு பிறகு வரக்கூடிய வைரஸ் இது. இதனால் அச்சப்படக்கூடிய தேவையில்லை என்று தெரிவித்தார். | 2025-01-07 02:05:38.679457 |
ஜனவரி 6, 2025 | தீக்கதிர் உலக செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/bangladesh-cancels-training-for-judges | தமிழ் | UTF-8 | நீதிபதிகள் மேற்கொள்ள இருந்த பயிற்சியை ரத்து செய்தது வங்கதேசம்வங்கதேச நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை அந்நாட்டு அரசு ரத்து செய்துவிட்டது. ஷேக் ஹசீனா வங்க பிரதமராக இருந்தபோது, அந்நாட்டின் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் படி பிப்ரவரி 10 அன்று பயிற்சி துவங்க இருந்த நிலையில் ஜன.5 அன்று அந்த பயிற்சிக்கான ஒப்பந்தத்தை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது.ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் அமெரிக்க அரசுஇஸ்ரேலுக்கு சுமார் 8 மில்லியன் அளவு மதிப்பு கொண்ட ஆயுதங்களை கொடுப்ப தற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் உத்தர விட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொ னால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பொறுப் பேற்கும் முன் உக்ரைன் மற்றும் இஸ்ரே லுக்கு அதிகளவிலான ஆயுதங்களை கொடுக்க பைடன் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்ப டையில் தான் கடந்த மாதம் அமெரிக்காவின் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்திருந்தது.ஊட்டச்சத்து குறைபாட்டை களைய இந்தோனேசியா இலவச உணவு திட்டம்இந்தோனேசிய மக்களை எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவ தற்காக பிரபோவோ சுபியாண்டோ அரசு இலவச உணவு திட்டத்தை அறிவித்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட 21.5 சதவீத இந்தோனேசியக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது குழந்தைகள், பெண்கள் என சுமார் 9 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 28 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் கொடுக்க திட்டம்பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்கள்) கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுத்து நவதாராளமயக் கொள்கைகளை அமல்படுத்த கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து நாட்டின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் உலகவங்கி மீண்டும் கடன் கொடுக்க முன்வந்துள்ளது.மேற்கு நாடுகள் அமைதிக்கு ஆர்வம் காட்டுவதில்லைமேற்கத்திய நாடுகள் அமைதிக்கு ஆர்வம்காட்டு வதில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். பிற நாடுகள் மீது தன் செல்வாக்கை செலுத்தி அவற்றின் வளங்களின் மிகப்பெரிய பங்கை கைப்பற்ற ஆர்வம் காட்டுவது போல சிரியாவின் ஒற்றுமையில் மேற்கத்திய நாடுகள் அக்கறையை காட்டவில்லை. ரஷ்யாவுடன் இணக் கத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என சிரியாவின் தற்போதைய தலைவரான அஹ்மத் அல்-ஷாரா மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் விமர்சித்துள்ளார். | 2025-01-07 02:05:39.636430 |
ஜனவரி 6, 2025 | ஷேக் ஹசீனா மீது மீண்டும் கைது உத்தரவு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/re-arrest-warrant-for-sheikh-hasina | தமிழ் | UTF-8 | டாக்கா, ஜன.6- முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வங்கதேச நீதிமன்றம் இரண்டாவது முறையாக கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. பலவந்தமாக பலர் காணாமல் ஆக்கப்பட்டதில் ஷேக் ஹசீனாவுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடுதழுவிய போராட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடையவேண்டிய சூழல் உருவானது. போராட்டத்தின் போது நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஹசீனாவை கைது செய்ய அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கைது உத்தரவை பிறப்பித்தது. அது மட்டுமின்றி ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் பலர் மீது தொடர்ந்து வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது என்ற பழிவாங்கும் நடவடிக்கையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஈடுபட்டுள்ளது. மற்றொரு புறம் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்ட வங்கதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தலைவர்களை விடுதலை செய்து வருகிறது. ஆனால் அந்நாட்டில் பல சிறுபான்மை இன மக்களின் மீது நடக்கும் தாக்குதல்களை இடைக்கால அரசு கட்டுப்படுத்தவும், சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும் தவறி வருகிறது. எனினும் ஷேக் ஹசீனாவை கைது செய்து இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என பிடிவாதமாகக் கூறி வருகிறது இடைக்கால அரசு. இந்நிலையில் தான் உள்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT) தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கில் இரண்டாவதாக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். | 2025-01-07 02:05:39.637198 |
ஜனவரி 7, 2025 | மூலதனச் சுரண்டல் அற்ற தொழில் வளர்ச்சியை உறுதி செய்க! | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/ensure-exploitation-free-industrial-development | தமிழ் | UTF-8 | தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நிலை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானம் : தமிழ்நாடு தொழில் வளர்ச்சியாலும், உற்பத்தியா லும் இந்திய அளவில் முதல் வரிசையில் உள்ள மாநிலமாக திகழ்கிறது. தொழில் வளர்ச்சியில் மின்சாரம், பாய்லர், எஃகு ஆகிய துறைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மின்சார உற்பத்தியில் முக்கிய இடம் பெற்றுள்ள நெய்வேலி நிறுவனம் உருவாக்கத் தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி. ராம மூர்த்தி மற்றும் ஏ.கே. கோபாலன் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.கட்சியின் சாதனைகள்F பாய்லர் உற்பத்தி நிறுவனமான திருச்சி பி.எச்.இ.எல்(பெல்) ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸுக்கு விற்கப்பட இருந்ததைத் தடுத்த பெருமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு
F சேலம் எஃகு ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது
F தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் செய்த பெரும் பங்களிப்பு
F தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் அரணாக களத்தில் செயல்பட்டு வருதல்தற்போதைய நிலை1. தாராளமயக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன
2. பாஜக ஆட்சிக்குப் பின் புதிய பொதுத்துறை நிறுவனங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை
3. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது
4. அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசுகளுக்கிடையே போட்டி நிலவுகிறதுமுதலீட்டாளர்களால் ஏற்படும் பிரச்சனைகள்F தமிழக வளங்களையும் வரிச்சலுகைகளையும் முதலீட்டாளர்கள் சுரண்டுகின்றனர்
F நிரந்தரமற்ற வேலைவாய்ப்புகளால் தொழிலாளர் சுரண்டல் அதிகரிக்கிறது
F புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கண்காணிப்பின்றி செயல்படுத்தப்படுகின்றன
F சுற்றுச்சூழல் பாதிப்புகள் கவனிக்கப்படுவதில்லைகோரிக்கைகள்1. புதிய பொதுத்துறை நிறுவனங்களை உற்பத்தித் துறையில் உருவாக்க வேண்டும்
2. அந்நிய நேரடி முதலீடுகள் வேலைவாய்ப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும் உறுதி செய்ய வேண்டும்
3. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வுஒப்பந்தங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும்
4. செயல்படாத கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மாநில அரசு புனரமைக்க வேண்டும்
5.தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
6. மதுரை எய்ம்ஸ், நெய்வேலி போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்\அறைகூவல்
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மேற்குறிப்பிட்ட அடிப்படைக் கட்டமைப்பை உரு வாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றி ணைந்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு அறைகூவல் விடுக்கிறது. | 2025-01-08 02:04:42.161533 |
ஜனவரி 7, 2025 | வழிகாட்டும் சின்னியம்பாளையம் தியாகிகள் - கே.எஸ்.கனகராஜ் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/guiding-chinniyampalayam-martyrs | தமிழ் | UTF-8 | இரண்டாம் உலகப் போரினை ஒட்டி தேவை அதிகரிக்க, கோவை பஞ்சாலைகள் அசுர வேகத்தில் உற்பத்தியை அதிகரித்து பெரும் லாபத்தை அடைந்து கொண்டிருந்த காலம் அது. லாபம் அதிகரிக்க அதிகரிக்க, உழைப்பு சுரண்டலும் தீவிரமானது. அதை எதிர்த்து போராட்டங்களும் தீவிரமடைந்தன. பஞ்சாலைத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களால் கொதிநிலையில் இருந்தது கோவை.கோவை பஞ்சாலைகளின் தோற்றம்1888-ஆம் ஆண்டில் கோவையின் முதல் பஞ்சாலை ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய முதலாளியால் துவங்கப்பட்டது. பஞ்சாலைத் தொழிலுக்கு கோவையில் இருந்த சாதகமான சூழலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உற்பத்தி முதலாளிகளோடு கொண்டிருந்த நெருக்கமும் இணைந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல பஞ்சாலைகள் பெருகின. இதன் காரணமாக கோவை “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்பட்டது.தொழிலாளர் மீதான சுரண்டலும் போராட்டங்களும்துவக்க காலத்தில் கோவை பஞ்சாலைகளில் நிலைமை மோசமாக இருந்தது. 16 மணி நேர வேலையும், மிகக் குறைந்த கூலியுமே நடைமுறையாக இருந்தது. தொழிலாளர்களின் வேலைகளை கண்காணிக்க நிர்வாகத்தின் விசுவாசிகளாக மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பஞ்சாலையிலும் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிந்தனர். குறிப்பாக ‘ரீலிங்’ பிரிவில் அதிகளவில் பெண் தொழிலாளர்கள் பணியாற்றினர்.மில் தொழிலாளர் சங்கம்1936-ஆம் ஆண்டில் கோவையில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் மில் தொழிலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தினர். வேலை நேரம், சட்டப்படியான ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம், பிரசவகால விடுப்பு, பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்றன.ஆங்கில அரசின் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு நடைபெற்ற தீரம் மிக்க போராட்டங்களின் விளைவாக, தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி வெங்கட்ராமய்யா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முன் தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க தலைவர் பி. ராமமூர்த்தி ஆஜராகி திறமையாக வாதாடினார். ஊதிய உயர்வு, பணிச் சூழல் மேம்பாடு ஆகியவற்றை ஆணையம் பரிந்துரைத்தது. இந்த வெற்றி தொழிலாளர்கள் இடையே தொழிற்சங்க இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து எல்லா பஞ்சாலைகளுக்கும் தொழிற்சங்க இயக்கம் பரவியது. பெண் தொழிலாளர்களும் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை செங்கொடி தொழிற்சங்கம் முன்வைத்தது. பிரசவத்திற்கு முன் ஆறு வாரங்களும், பின்னர் ஆறு வாரங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 1935-ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு பிரசவகால உதவிகள் வழங்க சட்டம் கொண்டு வந்த போதும், பஞ்சாலை நிர்வாகிகள் அதனை நடைமுறைப்படுத்த மறுத்தனர். கோவை ராஜலட்சுமி மில் நிர்வாகம் திருமணம் ஆன பெண் தொழிலாளர்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி கேட்கும் அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொண்டது. தொழிற்சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.பெண் தொழிலாளர்களின் உரிமைப்போர்பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் மேஸ்திரிகளால் பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இவற்றுக்கு எதிராக செங்கொடி தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராடின. பெண்கள் அதிகம் பணிபுரியும் பிரிவுகளில் பெண் மேஸ்திரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக சில பஞ்சாலைகளில் பெண் மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் கிடைத்த அபரிமிதமான லாபம் முதலாளிகளை மேலும் உழைப்பு சுரண்டலை அதிகரிக்கத் தூண்டியது. இதன் காரணமாக தொடர் போராட்டங்கள் வெடித்தன. லட்சுமி மில்லில் நடைபெற்ற போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தியும், ஜீவாவும் நேரடியாக வந்து வழிகாட்டினார்கள். இதனால் ஆத்திரமுற்ற பஞ்சாலை நிர்வாகங்கள், ஒவ்வொரு மில்லிலும் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னின்று போராடியவர்களை பழிவாங்கத் துவங்கின. வேலை மறுப்பு, தற்காலிக பணிநீக்கம் என பல்வேறு வகையில் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. பெண் தொழிற்சங்க தலைவர்களும் இந்த பழிவாங்கல்களிலிருந்து தப்பவில்லை.தொழிற்சங்க வீரர்களின் தியாகம்1944-ஆம் ஆண்டு கோவை ரங்கவிலாஸ் மில்லில் நடந்த சம்பவம் இந்த பழிவாங்கல்களின் உச்சகட்டமாக அமைந்தது. பெண் தொழிலாளிகளை அணிதிரட்டுவதில் முன்னின்ற ராஜி என்ற பெண் தொழிற்சங்க தலைவி, நிர்வாக ஆதரவு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்டு, மேஸ்திரி பொன்னான் என்பவரால் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த கொடூரச் செய்தி அறிந்து வந்த தொழிற்சங்க தலைவர்களும் இளம் தோழர்களுமான ராமையன், ரங்கண்ணன், வெங்கடாச்சலம், சின்னையன் ஆகியோரும் பெண் தொழிலாளர்களும் பொன்னானை வழிமறித்து நியாயம் கேட்டனர். அப்போது நடந்த கைகலப்பில் பொன்னன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு இறந்து போனான். அந்த பஞ்சாலையின் தொழிற்சங்கப் பணியில் துடிப்போடு ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு தோழர்களையும் பழிவாங்க காத்திருந்த நிர்வாகம், ஆங்கிலேய அரசின் துணையோடு கொலை வழக்கைப் புனைந்தது. நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு வரும் போதெல்லாம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.தூக்கு தண்டனை!உயர்நீதிமன்றம் நான்கு தோழர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கம் அன்றைய உச்சநீதிமன்றமான லண்டன் பிரிவி கவுன்சில் வரை மேல்முறையீடு செய்தது. தொழிலாளர்களுக்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் டி.என்.பிரிட் ஆஜராகி வாதாடினார். நான்கு தோழர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால் ஒருவருக்கு மட்டுமே தண்டனை என்ற நீதிமன்றத்தின் சலுகையை நால்வரும் ஒரே குரலில் மறுத்தனர். புனைந்தது பொய் வழக்கு என்பதில் உறுதியாக இருந்தனர். நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு கோவை தொழிலாளர்களின் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக, அவர்களை சிறையில் சந்திக்கச் சென்ற தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கே.ரமணி, பூபதி ஆகியோரிடம் கண்ணீர் மல்க நின்று, “சோசலிச லட்சியத்தை வெல்வதற்கான போராட்டத்தை தொடருங்கள்” என்று ஆறுதல் படுத்தி அனுப்பினர் தியாகிகள். “தொழிலாளர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக எங்களை ஒரே குழியில் புதையுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். 1946 ஜனவரி 8 அன்று அதிகாலை 5.00 மணிக்கு கோவை மத்திய சிறைச்சாலை அதிர “புரட்சி ஓங்குக, உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்துடன் தூக்குமேடை ஏறினர் நால்வரும். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது உடல்களை சுமந்து சென்று, அவர்களின் கடைசி விருப்பப்படி சின்னியம்பாளையத்தில் ஒரே குழியில் அடக்கம் செய்தனர். இந்த தியாகம் தொழிற்சங்க இயக்கத்தை பின்னுக்குத் தள்ளும் என்று முதலாளிகள் நினைத்தனர். ஆனால் மாறாக, தியாகிகளின் தியாகத்தால் உத்வேகம் பெற்ற தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. 1946 ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி ஸ்டேன்ஸ் மில்லில் நடைபெற்ற போராட்டத்தில், பெண் தொழிற்சங்க தலைவர்கள் அம்மு, பாப்பம்மாள் உள்ளிட்ட 11 பேர் ஆங்கிலேய காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். அலை அலையாய் பரவிய போராட்டங்களின் விளைவாக ஒவ்வொரு உரிமையாகப் பெற்றனர் தொழிலாளர்கள். அது மரியாதை மிக்க வாழ்வை பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. விடுதலைக்கு முன்பே ஆலைகளில் தொழிற்சங்க உரிமைகளுக்காக மட்டுமல்லாது, பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் செங்கொடி இயக்கம் வீரியமிக்க போராட்டங்களை தமிழக மண்ணில் முன்னெடுத்தது.புதிய சவால்களும் போராட்டப் பாதையும்ஆனால் 1990-களுக்குப் பிறகு பஞ்சாலை முதலாளிகள் புதிய உத்திகளை கையாண்டனர். அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்கள், தங்கள் கொள்ளை லாபக் கனவுக்கு பெரும் தடையாக இருப்பார்கள் என்று கருதினர். புதிய தாராளமயக் கொள்கைகளைப் பயன்படுத்தி பஞ்சாலைகளை மாற்றியமைத்தனர். சிறு சிறு அலகுகளாகப் பிரித்து கிராமங்களுக்கு ஆலைகளை மாற்றினர். இந்த கிராமப்புற ஆலைகளில் மிகக் குறைந்த கூலிக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பெண் உழைப்பாளிகளை கொண்டு வந்து, வளாகத்தில் அடைத்து வைத்து ஒப்பந்த ஊழியர்களாக வேலை வாங்கி வருகின்றனர். தற்போது வெளி மாநில புலம்பெயர் தொழிலாளர்களையும் ஒப்பந்த ஊழியர்களாக்கி உள்ளனர். ஒன்றிய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்தைச் சேர்ந்த பஞ்சாலைகள் நான்கு ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளன. அவற்றை இயக்க எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்க மறுக்கிறது. கடும் உழைப்பு சுரண்டல் நிகழ்ந்து வரும் நிலையிலும் கூட பஞ்சாலைகள் இன்று நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மூலப்பொருளான பருத்தி விலையில் நிலையில்லாத தன்மை, ஒன்றிய அரசின் கடும் வரிகள், அதிகரிக்கும் பணவீக்கம், பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதரவான ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. ரிலையன்ஸ், பிர்லா, டாடா போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் இன்று ஜவுளித் தொழிலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நாடெங்கிலும் சிறு நகரங்களில் கூட இவர்கள் விற்பனை நிலையங்களைத் திறந்து வருகின்றனர். இந்திய பருத்தி கழகத்தின் (சிசிஐ) நிர்வாக குழுவில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் கூட உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கொள்கைகளால் தொழில் நெருக்கடி ஏற்படும் போது, பல்லாயிரக்கணக்கில் திரண்டு அரசுக்கு எதிராக போராடி நிர்பந்தம் தர அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களும் இன்று இல்லை.முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியான நவீன தாராளமயம் அதற்கே உரிய குணங்களோடு சிறு, குறு உற்பத்தியாளர்களை விழுங்க காத்துக் கிடக்கிறது. இதை உணர்ந்து அக்கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய உற்பத்தியாளர்கள் ஒன்றிய அரசு ஏதாவது செய்யும் என்று இலவு காத்த கிளி போல காத்துக் கிடக்கின்றனர். இன்றைய சூழலில் தொழிலாளர்கள் மற்றும் சிறு-குறு உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து சமரசமின்றி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் சின்னியம்பாளையம் தியாகிகளின் தியாகம் நமக்கு என்றென்றும் உத்வேகத்தைத் தந்து கொண்டே இருக்கும். | 2025-01-08 02:04:42.162558 |
ஜனவரி 7, 2025 | இவர் எங்கள் முன்னுதாரணத் தலைவர்! - எஸ்.பி.ராஜேந்திரன் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/he-is-our-exemplary-leader! | தமிழ் | UTF-8 | தமிழக உழைப்பாளி மக்களின் நம்பிக் கைப் பேரொளியாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3, 4, 5 தேதிகளில் பேரெழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டின் நிறைவாக தமிழ்நாட்டில் உழைப்பாளி மக்களுக்கான கொள்கை மாற்றங்களை முன்னிறுத்துகிற - மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்டகால இலக் கான - இடது ஜனநாயக மாற்றை உரு வாக்கும் பயணத்தை மேற்கொள்வோம் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை ஊடகங்களின் கவனம்மாநாடு குறித்து ஊடகங்களில் பரவலாக செய்திகள் இடம் பெற்றி ருந்தன. தமிழ்நாட்டு ஊடகங்களில் மட்டுமின்றி இலங்கை ஊடகங்களிலும் முன்னெப்போதையும் விட இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு குறித்து பரவலாக செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன. குறிப்பாக தமிழ் மக்களிடையே பரவலாக வாசிக்கப்படும் பெரிய ஊடகங்களில் ஒன்றான வீரகேசரி மற்றும் ஈழ நாடு, தமிழன், தினக்குரல் உள்ளிட்ட ஏடுகளில், “இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தி தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவ லாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை பிரதானப்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.அவதூறு பரப்பிய சில ஊடகங்கள்தமிழ்நாட்டில் மாநாட்டிற்கும் முன்பும், மாநாட்டின்போதும் வெளியிடப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் திட்டமிட்ட அவதூறாகவும், திரித்தும் வெளியிட்டுள் ளன. அப்படியான செய்திகளில் ஒன்று தான் “திமுக அரசை விமர்சித்த கே.பால கிருஷ்ணன் மாற்றம்” என்ற தி இந்து தமிழ் திசை ஏட்டின் செய்தியாகும். ஊடகங்களில் செய்தித்துறையில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச அரசியல் ஞானம் அவசியம். ஒவ்வொரு கட்சியிலும் என்ன நடைமுறை, அக்கட்சி யின் விதிகள் என்ன, கொள்கை என்ன - உள்ளிட்டவற்றைப் பற்றி அறியாமல், கற்றுக் கொள்ளாமல் வாய்க்கு வந்ததை யெல்லாம் எழுதுவது, எவ்விதமான ஊடக நெறியும் அல்ல.மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில், தோழர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை முக்கியமானது. இந்திய அரசியல் அரங்கில் கடந்த 11 ஆண்டுகளாக பாசிசத் தன்மை கொண்ட கொடூரமான எதேச்சதி கார ஆட்சியை நடத்தி வருகிற ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்காக காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் வலுவாக ஒன்றிணைந்து போராடி வருகின்றன; அதேவேளையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக திமுகவின் ஆட்சி நடை பெறும் நிலையில், இந்த ஆட்சி எந்த வகை யிலும், மக்களுக்கு விரோதமான, ஜன நாயக உரிமைகள் பறிக்கப்படுகிற கொள்கைகளையோ, அணுகுமுறை யையோ மேற்கொண்டு விடக்கூடாது என்ற - தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் மீதான பெரும் அக்கறையின்பால் வலுவான கருத்துக்களை உறுதிபட மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்து வருகிறது; பல தரு ணங்களில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்துகிறது. இது தோழர் கே.பால கிருஷ்ணனின் தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.கே.பாலகிருஷ்ணன் பேசியது என்ன?இப்போதும் கூட, மதவெறி மாய்ப்பதில் திமுகவோடு உறுதியாக நிற்போம்; அதே வேளையில் உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் சமரசமில்லை என்பதுதான் கட்சியின் மாநாடு எடுத்திருக் கும் நிலை. இதைத்தான் தோழர் கே.பால கிருஷ்ணன் விழுப்புரம் பொதுக்கூட்டத் தில், “தமிழ்நாட்டின் அரசியல் நிலையைப் பொறுத்தவரை, பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில் திமுகவோடு உறுதியாக நிற்கின்றோம். இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை வீழ்த்துவதற்கு எதிரான போராட்டம்; ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும் நடத்துகின்ற போராட்டத்திலும் இணைந்து கைகோர்ப்போம். ஒன்றிய அரசை எதிர்த்து நடத்துகின்ற போராட்டத் தில் எல்லாம் உங்களோடு இணைந்து களம் காணுகின்ற நாங்கள், திமுக அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற திட்டங்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” என்று குறிப்பிட்டார். மேலும், “...எனவே பாஜகவை வீழ்த்து கின்ற பாதையில் தமிழகமே திரண்டு நிற்கின்ற மகத்தான போராட்டத்தை நடத்துவோம். மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்துவோம். அதே நேரத்தில் வாழ்வின்றி தவிக்கின்ற, வசதி யிழந்து தவிக்கின்ற, வீடில்லாத மக்கள், பட்டா இல்லாத புறம்போக்கில் குடி யிருக்கும் மக்களுக்கான - அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் மாற்று சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திகழும்” என்று தோழர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.இது ரகசியமல்ல!இந்த உரை திமுக அரசின் குறைபாடு களை விமர்சிக்கும் உரைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக அரசின் பல்வேறு சாதனைகளை மகிழ்ச்சியுடன் வர வேற்றுப் பாராட்டுகின்ற அதே வேளை யில், அந்த அரசு அமலாக்குகின்ற நவீன தாராளமய கொள்கைகள் அடிப்படை யிலான பல செயல்பாடுகளை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை; விமர்சிக்கிறது. இது ஒன்றும் ரகசியமல்ல. தொழிலாளர் வர்க்க கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளில் இப்படிப்பட்ட நிலைபாட்டைத்தான் மேற்கொள்ளும்; அதற்காகப் போராடும்; அதில் அதன் தலைவர்கள் உறுதியாக நிற்பார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். திமுகவுக்கும் தெரியும். எனவே அரசை விமர்சித்த காரணத்திற் காக கே.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு விட்டார் என்று தி இந்து தமிழ் திசை போன்ற ஓரிரு ஊடகங்கள் திரிப்பது முற்றிலும் அவ தூறானது மட்டுமல்ல, ஊடக நெறிக்கு எதிரானது.முன்னுதாரணத் தலைவர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளின்படி நாடு முழு வதும் நடைபெறும் மாநாடுகளில் இடைக்கமிட்டி செயலாளர் முதல் அகில இந்திய பொதுச் செயலாளர் வரை பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால், கம்யூ னிஸ்ட் தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அடுத்த தலைவர்களுக்கு, தலை முறைகளுக்கு வழிவிட்டு கட்சிக்கு வழி காட்டும் மகத்தான முன்னுதாரணங்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட முன்னுதாரணமாக கட்சி அமைப்பில் தோழர் கே.பாலகிருஷ்ணன் இந்த மாநாட்டில் செயல்பட்டிருக்கிறார் என்பது தான் மாநாட்டுப் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கட்சித் தோழர்கள் அனைவருக்கும் ஓர் உணர்ச்சிகரமான செய்தியாக அமைந்தது என்றால் மிகையல்ல. மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பு விதிகளின்படி மாநிலக்குழுவில் 72 வயது முடியும் வரை நீடிக்கலாம். பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட லாம். ஆனால் தோழர் கே.பாலகிருஷ்ண னுக்கு 72 வயது இன்னும் முடியவில்லை. எனினும் அவர் தாமாகவே முன்வந்து மாநி லக்குழு பொறுப்புகளிலிருந்து விலகி, புதிய தலைமை தேர்வு செய்யப்படும் வித மாக வழிகாட்டியுள்ளார். ஏற்கெனவே மத்தி யக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பில் இருப்பதால், அதனடிப்படையில் தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளில் அவர் தொடர்ந்து செயல்படுவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இது ஒரு இயல்பான நிகழ்வு; நடைமுறை. இதற்கும் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரைக்கும் முடிச்சுப் போட்டு தங்கள் அறி யாமையை வெளிப்படுத்தியுள்ளன சில ஊடகங்கள். இதைத் தெளிவுபடுத்தும் வித மாகவே விழுப்புரம் மாநாட்டில் நிறைவு நிகழ்வின் போது உரையாற்றிய தோழர் கே.பாலகிருஷ்ணன், “பொதுக்கூட்டத்தில் பேசுகிற உரையை மையப்படுத்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளரை தேர்வு செய்வார்கள்? இது அப்படி எழுதுகிறவர்களின் அறியாமை யை காட்டுகிறது” என்று கூறினார். “கட்சி யின் மாநிலச் செயலாளராக தோழர் பெ.சண்முகம் அவர்களை ஏகமனதாக தேர்வு செய்துள்ளோம். நான் மாநிலக்குழு வில் தொடர்வதற்கும், மீண்டும் செயலாள ராக தேர்வு செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட, வாய்ப்பு இருக்கிறவரை பொறுப்பில் இருந்துவிட்டு, அதற்குப்பிறகு புதியவர்கள் வரும்போது, அவர்களுக்கும் வயதாகி - இப்படி வயது கடந்தவர்கள் மீண்டும் மீண்டும் பொறுப்புக்கு வரக் கூடாது என்பதால் தான், என்னை விடு வித்துக் கொண்டு தோழர் பெ.சண் முகத்தை ஏகமனதாக தேர்வுசெய்துள் ளோம். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை எங்கள் தோழர்கள் யாரும் பொறுப்பு களுக்காக, பதவிகளுக்காக அலைகிற வர்கள் அல்ல. கட்சியின் ஜனநாயக மாண்புகள் மிகவும் உயர்ந்தவை. அடுத்தடுத்த தலைமுறையை வளர்த் தெடுப்பதும், புதிய தலைமையை உரு வாக்குவதும் கம்யூனிஸ்ட்டுகளின் சிறந்த பண்பு. அந்த அடிப்படையிலேயே மாற்றம் நடந்துள்ளது” என்றும் தெளிவுபட விளக்கினார். மேலும் “இந்த மாநாட்டின் முடிவின்படி தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலுவான இயக்கமாக மாற்று வதை நோக்கியும், இடதுசாரிகளின் ஒற்றுமை, இடது - ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை மற்றும் அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையை மேலும் வலுவாக கட்டுவோம்; மத்தியில் மதவெறி ஆட்சியாளர்களை மாய்ப்போம்; மாநிலத்தில் உழைப்பாளி மக்களின் நலன்களைக் காப்போம்” என்றும் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டின் நிறைவில் முழக்கமிட்டார். இந்த முழக்கமே மார்க்சிஸ்ட் கட்சியின் முழக்கம்! | 2025-01-08 02:04:42.163135 |
ஜனவரி 7, 2025 | உழைக்கும் மக்களுக்காக சமரசமற்ற போராட்டங்கள் தொடரும் | கட்டுரை | நமது நிருபர் | https://theekkathir.in/News/articles/world/uncompromising-struggles-for-working-people-will-continue | தமிழ் | UTF-8 | சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டிசென்னை, ஜன. 7 - மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் சமரசமற்ற போராட்டத்தை தொடருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செவ்வாயன்று (ஜன.7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பெ. சண்முகம் கூறியதாவது: அதிகரிக்கும் வேலையின்மை ஒன்றிய பாஜக அரசின் நவ தாராளமயக் கொள்கையால் வேலையின்மை கடும் பிரச்சனையாக மாறியுள்ளது. நிரந்தர வேலை, அரசு வேலை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற வகையில் பாஜக அரசின் கொள்கை உள்ளது. கல்வித்துறையில், இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.பாஜக அராஜகத்தின் உச்சம்யுஜிசி விவாதத்திற்கு விட்டுள்ள அறிக்கை யில், பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பதில் மாநில அரசுக்கு உள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆளுநர், யுசிஜி, பல்கலைக்கழகம் என 3 நபர்களை நியமித்து தேடுதல் குழுவை அமைப்பார்கள் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு பல்கலைக் கழக சட்டத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழ கத்திற்கும் இது பொருந்தும் என்ற வகையில் தன்னிச்சையாக அறிவிப்பு செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அல்லாத பட்டம் நாட்டில் எங்கும் செல்லாது என்று அறிவித்திருப்பது அராஜகத்தின் உச்சம். எனவே, இந்த நகலை யுஜிசி உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். இதில் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம். ஒத்தக்கருத்துடைய பிற அமைப்புகளோடு பேசி, மாநில அதிகாரத்தை பறிக்கும், மாநில உரிமை மீது தாக்குதல் நடத்தும் அறிவிப்பை எதிர்த்து கூட்டுப்போராட்டத்திற்கு செல்வோம்.வெளியேற வேண்டும் ஆளுநர்ஆளுநர் மூலம், மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ஏராளமான குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சட்டமன்றத்தில், ஆளுநர் உரையாற்றாமல் சென்றதும், தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற ஒற்றைப் பிரச்சனையை எழுப்பி வெளிநடப்பு செய்வதை யும் வாடிக்கையாக ஆளுநர் வைத்துள்ளார். இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். போட்டி அரசாங்கத்தில் ஈடுபடும் ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுக! திமுக அரசு அளித்த பல வாக்குறுதிகளை யும், சொல்லாத பல திட்டங்களையும் நிறை வேற்றி உள்ளது. அதே நேரத்தில் முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபா யும், கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாயும் தருவதாக கூறினார்கள். இதுபோன்ற திமுக அளித்த வாக்கு றுதிகளையே நிறைவேற்றக் கோருகிறோம். போராட்டங்களைத் தடுக்கும் காவல்துறை மக்கள் நலன் சார்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதை தமிழக காவல்துறை வாடிக்கையாக வைத்துள்ளது. ஜனநாயக ரீதியான போராட்டங் களை தடுக்கும் நோக்கில் காவல்துறை செயல் படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு ஊர்வலம், செந்தொண்டர் அணிவகுப்புக்குக் கூட அனுமதி மறுத்துவிட்டது. இதை எவ்வாறு ஏற்க முடியும். அதையும் மீறித் தான் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற் றது. இதுபோன்று நடத்தும்போது வழக்கு போடுவது, நீதிமன்றத்திற்கு இழுத்தடிப்பது போன்றவை நடக்கிறது. போராடுகிற உரிமை யை மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கி யுள்ளது. எனவே, போராடக் கூடாது என்ற காவல்துறையின் அணுகுமுறையை மாற்ற வேண்டும். ஜனநாயக உரிமையைப் பாது காக்க முதலமைச்சர் தலையிட வேண்டும். இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்தும் வலியுறுத்த உள்ளோம்.குடிமனை வழங்க விரிவான திட்டம்1949-ஆம் ஆண்டிலிருந்து இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. ஆனால், 75 ஆண்டுகளைக் கடந்தும் குடிமனைப்பட்டா பிரச்சனை தீரவில்லை. குடிமனைப்பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும். ஏராளமான தரிசு நிலம் தமிழகத்தில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த குடிமனை வழங்குவது என்பதை அரசு நினைத்தால் சாத்தியமாக்கலாம். நீர்நிலை, அரசுப் புறம்போக்கு நிலங்களில் வாசிப்போரை நீதிமன்றத் தீர்ப்புகளை காட்டி வெளியேற்றுவ தால், அது அரசுக்கும் மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் பெல்ட் ஏரியா என்ற பெயரில் பட்டா தருவதை முற்றிலும் தடை செய்து வந்துள்ள னர். கிராமப்புறங்களில் தான் பட்டா வழங்கப் படுகிறது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குடிமனைப்பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண விரிவான திட்டத்தை (மாஸ்டர் பிளான்) அரசு உருவாக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்போம் பட்டியலின மக்களுக்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் அந்த மக்களிடம் இல்லை. அரசுக்கு தேவை என்றால் சட்டத்தை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்துகிறது. ஆனால், மக்களுக்கு நிலம், பட்டா தர உருப்படியான எந்த நட வடிக்கையும் எடுக்காத போக்கு உள்ளது. நீதி மன்ற உத்தரவு, அரசாணையை நடைமுறைப் படுத்த அந்த நிலங்களை மீட்க வேண்டும். இதனை செய்யாவிடில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே நேரடியாக பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தை நடத்தும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.மக்கள் நலனில் சமரசம் இல்லைதொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பெ. சண்முகம் பதிலளித்தார். அதில் மேலும் அவர் கூறியதாவது: மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் அரசு எதிர் நிலை எடுக்கிறபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரி வித்து வருகிறது. வேலை நேரத்தை உயர்த்திய போது சிபிஎம் எடுத்த கடும் எதிர்ப்பின் விளை வாக அது திரும்பப் பெறப்பட்டது. சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யாத போது வலுவான போராட்டத்தை நடத்தினோம். மக்களைப் பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் சமர சத்திற்கு இடமில்லை. குறிப்பாக, உழைப்பாளி மக்களின் நலனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கும். மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை வரவேற்கும். கடுகளவும் உண்மையில்லை திமுக அரசை விமர்சித்துப் பேசியதன் காரண மாக செயலாளர் மாற்றப்பட்டார் என்பதில் கடு களவு கூட உண்மை இல்லை. கட்சியின் அமைப்பு நடைமுறை தெரியாமல் தவறாக சிலர் இவ்வாறு கூறுகின்றனர். காவல்துறை அனுமதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து, முதலமைச்சரை சந்திக்கும் போது எடுத்துக் கூறுவோம். இதில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்துவோம். சாம்சங் தொழிற்சங்க பதிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாமல் இருப்பது தொழிலாளர் விரோத போக்குதான். இதை ஏற்க முடியாது. இதையும் முதலமைச்சரிடம் தெரிவிப்போம். சாம்சங் பிரச்சனையில் திமுகவின் அணுகு முறையை முற்றிலும் ஏற்கவில்லை. அதே நேரம், முதலமைச்சரின் தலையீடு காரணமாக சாம்சங் பிரச்சனையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பொருட்டு அவரை சந்தித்துப் பேசினோம்.சிறப்புச் சட்டம் அவசியம்சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை முதலமைச்சர் நிராகரித்து விட்டார். தற்போதுள்ள சட்டங்களே போதும் என்றார். அதன்பிறகும் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே, சிறப்புச் சட்டம் கேட்டு அழுத்தம் கொடுத்து போராடிவருகிறோம். திமுகவுடன் உறவு தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, மதச் சார்பற்ற சக்திகளை ஒற்றுமைப்படுத்துவதில் திமுக முழுமையான பங்கு வகிக்கிறது. திமுக ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தமிழ கத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலை எதிர்த்த போராட்டத்தை வலிமையாக முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை. இந்த அரசியல் அம்சத்தை விட்டுவிட்டு, கோரிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை மட்டும் வைத்து அர சியல் உறவைத் தீர்மானிக்க முடியாது. மாநில உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களில் திமுகவுடனான உறவு தொடரும். வாக்குவங்கியை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தவில்லை. மக்கள் நலன், உழைப்பாளி மக்கள் நலன் சார்ந்து தான் போராடுகிறது.ஈரோடு இடைத்தேர்தல்திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும்.இவ்வாறு பெ. சண்முகம் பதிலளித்தார். பேட்டியின் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகி யோர் உடனிருந்தனர். | 2025-01-08 02:04:42.163717 |
ஜனவரி 7, 2025 | மனித மாண்புக்கு இழுக்கு: துப்புரவுப் பணியாளர்களின் தொடர் உயிர்ப்பலி | தலையங்கம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/headlines/bjp/in-a-country-that-has-completed-75-years-of-independence,-it-is-still-human | தமிழ் | UTF-8 | 75 ஆண்டுகள் சுதந்திரம் நிறைவு பெற்ற நாட்டில், இன்னும் மனிதர்கள் மற்றொரு மனித ரின் மலக்கழிவுகளை கையால் அகற்ற வேண்டிய நிலை தொடர்வது நமது ஜனநாயகத்தின் மிகப் பெரும் தோல்வியாகும். தேசிய மனித உரிமை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை வெளிப் படுத்தும் உண்மைகள் அதிர்ச்சியளிப்பவை. 2019 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மட்டும் 377 துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்துள் ளனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு வாரமும் இரண்டு உயிர்கள் பலியாகின்றன என்பது நம் மனசாட்சியை உலுக்கும் செய்தி.2013-ல் கொண்டுவரப்பட்ட மானுடக் கழிவு களை கையால் அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டமும், 1993-ல் இயற்றப்பட்ட துப்புரவுத் தொழி லாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறை கட்டுமானத் தடைச் சட்டமும் வெறும் காகிதங்க ளாகவே உள்ளன. இந்த சட்டங்களை மீறுபவர்க ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக் கப்படுவதில்லை. ஒன்றிய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கும், கண்காணிப்பு முறை களின் தோல்வியும் இந்த அவலம் தொடர காரணமாகின்றன.மனித உரிமை ஆணைய செயலாளர் பரத் லால் சுட்டிக்காட்டியபடி, குறிப்பிட்ட சாதி சமூ கங்களைச் சேர்ந்தவர்களே இந்த ஆபத்தான வேலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது வெறும் தொழில் பிரச்சனை அல்ல - ஆயிரம் ஆண்டுகால சாதிய ஒடுக்குமுறையின் நவீன வடிவமாகும். பெரும்பாலான பாதிக்கப்பட்ட வர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. சுவச் பாரத் மிஷன் (SBM) மற்றும் நமஸ்தே (NAMASTE) போன்ற அரசின் திட்டங்கள் இருந்தும் இந்த சமூக அவலம் தொடர்வது வேதனையளிக்கிறது.நாட்டில் சந்திரயான், மங்கள்யான் போன்ற விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தும் நாம், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோக்களையும், தானியங்கி இயந்தி ரங்களையும் உருவாக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமை ஆணையம் பரிந்து ரைத்தபடி, ஒரு மாநிலத்தில் முன்னோடித் திட்ட மாக தொடங்கி, படிப்படியாக அனைத்து மாநிலங்க ளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாநி லமும் குறைந்தபட்சம் ஆயிரம் ரோபோக்களை யாவது வாங்குவதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து புதிய தீர்வுகளை உருவாக்குவதோடு, அவற்றை பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விக்கு முழு உதவித்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.வெறும் சட்டங்களும், திட்டங்களும் மட்டும் போதாது. அரசியல் உறுதிப்பாடும், சமூக விழிப்பு ணர்வும் தேவை. | 2025-01-08 02:04:45.876891 |
ஜனவரி 7, 2025 | தீக்கதிர் உலக செய்திகள் | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/india/bird-flu-kills-one-in-america | தமிழ் | UTF-8 | பறவைக்காய்ச்சல் பாதிப்பு : அமெ.வில் ஒருவர் பலிஅமெ.வில் பறவைக் காய்ச்சலால் (H5N1) பாதிக்கப்பட்ட நபர் பலியாகியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் 65 வயதானவராக இருந்ததுடன் பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர். இதனால் யாரும் பயப்பட வேண்டாம். பறவைக் காய்ச்சலால் ஏற்படும் சுகாதார ஆபத்து கட்டுப்படுத்தும் அளவில் தான் உள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உதவிப் பொருட்களை கொள்ளையடிக்கும் இஸ்ரேல்காசாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது என ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சனிக் கிழமை (ஜன.4) முதல் மூன்று நாட்கள் ஐ.நா அவை உதவிகள் செய்ய முயன்ற போது இஸ் ரேல் ராணுவம் தடுத்துவிட்டது. அதுமட்டுமின்றி பாலஸ்தீனர்களுக்கு கொண்டு செல்லும் பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து திருடி வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.காலநிலை மாற்றத்தின் விளைவு: மெக்காவில் அதிகன மழைகாலநிலை மாற்றத்தின் காரணமாக சவூதி அதிகனமழையை சந்தித்துள்ளது. மெக்கா, ரியாத், அல்-பஹா, தபு உள்ளிட்ட முக்கிய நகரங்களும் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளன. அதிகளவிலான வெள்ள நீர் வடிகால் வாய்க்கால் வாயிலாக வெளியேற முடி யாமல் வாகனங்களைஅடித்துச் சென்ற காணொ லிகள் வெளியாகின. காலநிலை மாற்ற பாதிப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகள் மிக அதிக கன மழையையும் பனிப்பொ ழிவையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.மாலத்தீவு ஜனாதிபதியுடன் இந்தியத் தூதர் சந்திப்புமாலத்தீவுக்கான இந்திய தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜி. பாலசுப்பிரமணியன் அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்சுவை சந்தித்து பேசியுள்ளார். முகமது முய்சுவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து தனது நியமன சான்றுகளை வழங்கிய பிறகு இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது பற்றி பாலசுப்ரமணியன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் சிறையில் ஆப்கன் அகதிகள் அடைப்புபாகிஸ்தான் தலைநகரில் வசிக்கும் சுமார் 800 ஆப்கன் மக்களை அந்நாட்டு அதிகாரிகள் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக ஆப்கன் தூதரகம் தெரிவித்துள்ளது. அடைத்து வைக்கப்பட்டுள்ள 800 பேரில் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட சிலரும் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் தங்க முடியாது என்ற சட்டம் உள்ள நிலையில் விசா எடுக்கும் நடைமுறையும் கடுமையாக உள்ளது.‘அமெரிக்காவின் மாகாணமாக இணையலாம்’ : கனடாவை மீண்டும் அவமதிக்கும் டிரம்ப்ஒட்டாவா, ஜன.7- அமெரிக்காவின் புதிய மாகாணமாக கனடா இணையலாம் என அந்நாட்டின் இறை யாண்மையை அவமதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும் பேசி யுள்ளார். கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ பதவி ராஜினாமா அறிவிப்பு செய்த பிறகு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் இதே போல டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஒரு மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என பேசி சர்ச்சையை உருவாக்கினார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு கனடா, மெக்சிகோ,சீனா ஆகிய நாடுகளின் மீது 25 சதவீதம் வரை வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். மேலும் தொடர்ந்து கனடாவின் இறையாண்மையை மதிக்காமல் விமர்சித்து வந்தார். கனடா பெருமளவு அமெரிக்கா நலன் சார்ந்த பொருளாதார நாடாக மட்டுமே உள்ளது.இந்நிலையில் அமெரிக்கா கனடா மீது அதிக வரி விதித்தாலோ, தடை விதித்தாலோ அந்நாடு பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சென்று விடும் அபாயம் உள்ளது. இதற்கிடையில் ட்ரூடோவிற்கு எதிராக அவரது கட்சி எம்.பி.,க்கள் கடுமையான அதிருப்தியையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்ததுடன் அதன் வெளிப்பாடாக துணை பிரதமர் பதவி விலகினார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கனடாவின் இறையாண்மையை அவ மதிக்கும் வகையில் தனது ஆதிக்க பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைவதை கன டாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீனாவின் போர்க் கப்பல்களின் அச்சுறுத்தல் இல்லாமல் அவர்கள் வாழலாம். உங்களுக்கு தொந்த ரவுகளே இருக்காது. இதற்காக நாம் ஒன்றி ணைவோம். அதன் பிறகு கனடாவும் பெரிய நாடாக மாறிவிடும் என டிரம்ப் தற்போது கூறி யுள்ளார். டிரம்ப் இரண்டு முறை இவ்வாறு பேசி யும் கனடா பிரதமர் ட்ரூடோ கனடாவின் இறை யாண்மையை பாதுகாக்கும் வகையிலோ, டிரம்ப் இன் ஆதிக்கப் பேச்சுக்கு எதிராகவோ எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. | 2025-01-08 02:04:46.056651 |
ஜனவரி 7, 2025 | ஆளுநருக்கு அதிக அதிகாரம் - யுஜிசி விதிகள் திருத்தம்! | தேசியம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/india/new-delhi/ugc-proposes-major-overhaul-in-recruitment-of-vice-chancellors | தமிழ் | UTF-8 | பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் புதிய விதிகளின் வரைவை யுஜிசி வெளியிட்டுள்ளது.
யுஜிசி-யின் 2025 வரைவு அறிக்கையை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இந்த புதிய விதிகளின் வரைவின் படி,
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்யும் தேடுதல் குழுவை, பல்கலைக்கழக வேந்தராக பதவி வகிக்கும் ஆளுநரே முடிவு செய்யலாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பேராசிரியர், ஆராய்ச்சி அல்லது கல்வி நிர்வாக பணிகளில் 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்களே துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என இருந்த விதிகளை தற்போது தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள தனிநபர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், தங்கள் உயிர்கல்வியில் தேர்வு செய்த பாடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களாக கருதப்படுவர். உதாரணமாக, வேதியியலில் பிஎச்டி, கணிதத்தில் இளங்கலை மற்றும் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், வேதியியலில் நிபுணத்துவம் கொண்டவர்களாக கருதப்படும். அவர் வேதியியலில் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க தகுதி பெறுகின்றனர்.
அதேபோல், தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்கள், தாங்கள் பட்டம் பெற்ற பாடத்திலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் தேர்வு எழுதியிருந்து அதில் தேர்ச்சி பெற்றால், அந்த பாடத்தையே கற்பிக்க தகுதி பெறுகின்றனர்.
ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்படும் விவுரையாளர்கள் (Lecturers) அதிகபடியாக 6 மாத காலத்திற்கு பணியமர்த்தப்படலாம்.
இவ்வாறு முக்கிய மாற்றங்களை வரைவு அறிக்கையில் யுஜிசி செய்துள்ளது. | 2025-01-08 02:04:46.057147 |
ஜனவரி 7, 2025 | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா! | உலகம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/canada/canadian-prime-minister-justin-trudeau-resigns | தமிழ் | UTF-8 | கனடா,ஜனவரி.07- கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 3வது முறையாக பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் அதிகரித்துள்ளது. அவர் மீண்டும் தேர்தலில் நிற்கக் கூடாது என சொந்த கட்சியான லிபரல் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ராஜினாமா. | 2025-01-08 02:04:46.105733 |
ஜனவரி 7, 2025 | திபெத் - நேபாளம் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! | உலகம் | நமது நிருபர் | https://theekkathir.in/News/world/china/earthquakes-hit-tibet-nepal-border-53-dead-in-tibet | தமிழ் | UTF-8 | திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தில்லி என்.சி.ஆர், பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. | 2025-01-08 02:04:46.106229 |
ஜனவரி 7, 2025 | தீக்கதிர் முக்கிய செய்திகள் | மாநிலம் - தமிழ்நாடு | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/tamil-nadu/an-award-that-has-garnered-the-highest-praise-internationally | தமிழ் | UTF-8 | சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுகளையும் உயரிய விருதுகளையும் வென்ற எண்ணற்ற தலைசிறந்த இந்திய பத்திரிகையாளர்களில் முகேஷ் சந்திராகரும் ஒருவர். உயிருடன் இருக்கும்போது உரிய மரியாதை அளிக்காமல் கொல்லப்பட்ட பின் இதயப்பூர்வமான அஞ்சலிகளை செலுத்தி என்ன பயன்?மோடியின் ஆட்சியில் இந்தியாவில் முதலீட்டு சூழல் மந்தமாகவே உள்ளது. தனியார் துறையினர் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். மொத்த அந்நிய நேரடி முதலீடுகளும் தேக்கமடைந்துள்ளது. இது மோடி அரசின் மீது கார்ப்பரேட்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகும்.பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 3 மாதங்களில் இரண்டாவது முறையாக என்னை முதல்வர் இல்லத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டது. வீடுகளை அபகரிப்பதன் மூலமும், அசிங்கப்படுத்துவதன் மூலமும், என் குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவதன் மூலமும் எங்களது வேலையை பாஜக நிறுத்தலாம். ஆனால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம். 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதிமொழி அளிப்போம். பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவதை தடுக்க முடியாது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் காப்பதால் இது போலியானது என மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான 86 வயதாகும் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் 31ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி யிருப்பவர்களை மீட்க ராணுவம் களமிறக்கப் பட்டுள்ளது.“இன்டர்போல்” போலீஸ் போல் இந்தியாவில் “பாரத் போல்” அமைப்பை ஒன்றிய அமைச் சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். சிபிஐ அமைப் பின் கீழ் செயல்படும் இந்த “பாரத் போல்” அமைப்பு சர்வதேச வழக்குகளில் விசாரணை அமைப்பு களுக்கு உதவும் என அமித் ஷா கூறியுள்ளார்.அனுமதி இன்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை கைது செய்யப் பட்ட நிலையில், அவரது உடல்நிலை பாதிப்பு அடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதம் இருந்தார். | 2025-01-08 02:04:49.803017 |
ஜனவரி 7, 2025 | அசாம் நிலக்கரிச் சுரங்க விபத்து : 3 உடல்கள் மீட்பு | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/assam-coal-mine-accident | தமிழ் | UTF-8 | அசாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தின் உம்ரங்சோ பகு தியில் நிலக்கரிச் சுரங்கம்உள்ளது. இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் திங்க ளன்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக தண்ணீர் வேறு புகுந்ததால் சுரங்கத்திற்குள் 9 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நிலக்கரி சுரங்கத்திற்குள் மீட்புப் பணியை தொடங்கினர். இந்நிலையில், செவ்வாயன்று காலை சுரங்கத்தில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அசாம் அரசு கூறியுள்ளது. 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளதால், 6 பேரின் குடும் பத்தினர் கண்ணீருடன் சுரங்கத்திற்கு வெளியே நின்று கதறி அழுது காத்துக் கிடக்கின்றனர். | 2025-01-08 02:04:49.803995 |
ஜனவரி 7, 2025 | குற்றங்களின் கூடாரம் குஜராத் : பாஜக அரசை கண்டித்து பெல்ட்டால் அடித்துக்கொண்ட ஆம் ஆத்மி தலைவர் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/aam-aadmi-leader-who-condemned-the-bjp-government-and-beat-him-with-a-belt | தமிழ் | UTF-8 | சூரத் குஜராத் மாநிலம் அம்ரெலி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், பாஜக எம்எல்ஏ கெளஷிக் என்பவரையும், மாநில பாஜக அரசையும் சமூகவலைத்தளத்தில் விமர்சித்துள்ளார். மக்கள் நலன் பிரச்சனை தொடர்பாகவே அந்த இளம்பெண் விமர்சனம் செய்தார். உடனே குஜராத் காவல்துறை எம்எல்ஏ கெளஷிக்கை அவமதித்ததாகக் கூறி 2024 டிசம்பர் 29ஆம் தேதி இளம்பெண்ணை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றது. நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஜாமீன் வழங்கி விடுவித்தது. இந்நிலையில், இளம்பெண்ணை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதை கண்டித்து சூரத் நகரில் ஆம் ஆத்மி சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குஜராத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான கோபால் இத்தாலியா, “அப்பாவி பெண்ணிற்கு எங்க ளால் நீதி வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள். இதே போன்று மோர்பியில் பாலம் இடிந்து விழுந்தது, வதோதரா படகு விபத்து, கள்ளச்சாராய சாவு, தீ விபத்து, அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவது என்று எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக் கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் நீதி பெற்றுக்கொடுக்க முடிய வில்லை” என்று பேசிக் கொண்டிருந்த போது திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி தன்னை தானே ஆக்ரோசமாக அடித்துக் கொண்டார். உடனே அருகிலிருந்த ஆம் ஆத்மி நிர்வாகிகள் கோபாலை தடுத்து நிறுத்தினர். பாவம் தமிழ்நாடு அண்ணாமலை... கோபால் இத்தாலியா உண்மையாகவே பெல்ட்டால் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டார். உடனே நெட்டிசன்கள் “இதுதான் உண்மையான சாட்டை அடி” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் “பஞ்சு சாட்டை அடி” வீடியோவை ட்ரோல் செய்தும், கோபால் இத்தாலியாவின் வீடியோவை சேர்த்தும் சமூக வலைத்தளங்களில் அண்ணா மலையை வறுத்தெடுத்து வருகின்றனர். | 2025-01-08 02:04:49.804510 |
ஜனவரி 7, 2025 | பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூரம் - அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/a-student-was-sexually-assaulted-in-a-government-medical-college-hostel | தமிழ் | UTF-8 | குவாலியர் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன் முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகிறது. அதாவது நாட்டின் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஹாட் ஸ்பாட்டாக உள்ளது. இதனை தேசிய மகளிர் ஆணையமே தனது அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தி யுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் மத்தியப்பிர தேச மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான குவாலியரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்று வரும் மருத்துவ மாணவி (25) விடுதி வளாகத்திலேயே சக மருத்துவ மாணவ ரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) அன்று மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அப்போது மாணவியை சந்திக்க வரும்படி பாலியல் வன்கொடுமை செய்த மாணவர் மிரட்டி யுள்ளார். மிரட்டலுக்கு அஞ்சிய மாணவி, ஆண்கள் விடுதி வளாகத்திற்கு சென்றுள்ளார். அப் போது மாணவர் வலுக்கட்டாயமாக மாண வியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் மாணவி புகார் அளிக்க, மாணவர் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அடுத்தகட்ட விசார ணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. | 2025-01-08 02:04:49.805019 |
ஜனவரி 7, 2025 | பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/domestic-violence-against-women-on-the-rise-in-bjp-ruled-states | தமிழ் | UTF-8 | புதுதில்லி 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பான ஆய்வ றிக்கையை தேசிய மகளிர் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் பெண்களுக்கு எதி ரான குடும்ப வன்முறையில் முத லிடத்தில் இருப்பதும், பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடை பெறும் மாநிலங்களில் பெண் களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிக மோசமான அளவில் நிகழ்ந்து வருவது அம்பலமாகியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் வெளியான தகவலின் அடிப் படையில், 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக குடும்பப் பிரச்சனை காரணமாக வீடுகளுக் குள் நிகழும் வன்முறையால் 25,743 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த குடும்ப வன்முறையில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அங்கு 13,868 புகார்கள் பதிவாகியுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 54% ஆகும். பாஜக மாநிலங்களில் மிக மோசம் அடுத்து மோடி அரசின் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ள தில்லி 2,245 புகார்களுடன் இரண்டா வது இடத்தில் உள்ளது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா 1,317 புகார்களுடன் 3ஆவது இடத்திலும், பீகார் 1,233 புகார்களுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. அதே போன்று பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம் 1,070 புகார்களுடன் 5ஆவது இடத்திலும், ஹரியானா 1,048 புகார்களுடன் 6ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 847 புகார்களுடன் 7ஆவது இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில் மேற்கு வங்கம் 563 புகார்களுடன் 8ஆவது இடத்திலும், தமிழ்நாடு 513 புகார்களுடன் 9ஆவது இடத்திலும், கர்நாடகா 481 புகார் களுடன் 10ஆவது இடத்திலும் உள்ளன. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் 400க்கும் குறை வான அளவிலேயே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வரதட்சணைக் கொடுமை அதிகம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை புகார்களில் வரதட்ச ணைக் கொடுமையே முன்னணி யில் உள்ளது. அதாவது மொத்த புகார்களில் 17% (4,383 புகார்கள்) வரதட்சணைக் கொடுமை தொடர்பானவை ஆகும். இதில் 292 வரதட்சணை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தொடர்பாக 1,422 புகார்களும், பாலி யல் துன்புறுத்தல் தொடர்பாக 1,015 புகார்களும், பெண்களுக்கு எதி ரான சைபர் கிரைம் தொடர்பாக 523 புகார்களும், பணியிடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் 205 புகார்களும் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. | 2025-01-08 02:04:49.805524 |
ஜனவரி 7, 2025 | பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் அசாம் மாநில மாநாடு துவங்கியது | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/the-assam-state-conference-opened-with-a-grand-public-meeting | தமிழ் | UTF-8 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநில 24ஆவது மாநாடு கவுகாத்தியில் ஜனவரி 5 அன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. மத்தியக்குழு உறுப்பினர் இஸ்பக்குர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மாணிக் சர்க்கார், நிலோத்பால் பாசு, மூத்த தலைவர்கள் ஹேமன் தாஸ், உத்தப் பர்மன் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். | 2025-01-08 02:04:49.806033 |
ஜனவரி 7, 2025 | அம்பேத்கர் பாடலை ஒலிபரப்பியதற்காக தலித் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் | மாநிலம் - தில்லி | நமது நிருபர் | https://theekkathir.in/News/states/delhi/dalit-youth-brutally-attacked-for-broadcasting-ambedkar-song | தமிழ் | UTF-8 | காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தின் தும்கூரு அருகே ஸ்ரீவாரா பகுதியைச் சேர்ந்தவர் தீபு (19). இவர் விவசாயிகளிடம் பால் சேகரிப்பதற்காக, தும்கூருவில் உள்ள முத்தனஹள்ளி கிராமம் வழியாக வேனில் சென்று கொண்டு இருந்தார். தீபுவுடன் வேன் டிரைவர் நரசிம்மமூர்த்தி இருந்தார். திங்களன்று மாலை 6 மணியளவில் தும்கூரு ரயில்வே கிராஸிங் அருகே ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர், அவரது நண்பர் நரசிம்மராஜ் ஆகிய இருவரும் ரயில்வே பாதுகாப்புப் படை எனக்கூறி வேனை வழிமறித்து, “அம்பேத்கர் பாடலை ஏன் வேனில் ஒலிபரப்புகிறாய்? நீ எந்த சாதி?” என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு தீபு,”நான் தலித் மதத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கர் பாடலை ஒலி பரப்புவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என கூறினார். “ரயில்வே பாதுகாப்புப் படையையே கேள்வி கேட்கி றாயா?” எனக் கூறி, தீபுவை கையில் இருந்த தண்டவாள பராமரிப்பு சாதன கம்பியை வைத்து தாக்கியுள்ளனர். தீபுவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வர சந்திரசேகர், நரசிம்மராஜ் ஆகிய இருவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அப்பகுதி மக்களே தீபுவை மீட்டு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீபுவின் உடலில் மொத்தம் 9 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தலித் அமைப்பு கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீபுவை தாக்கியவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. | 2025-01-08 02:04:49.806663 |