template_id
int64
1
2
template_lang
stringclasses
1 value
inputs
stringlengths
132
27.8k
targets
stringlengths
63
27.6k
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார். ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார். மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான். ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது. அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான். குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான். அதனைக் கேட்ட குரு, “நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறிவிட்டு அமர்ந்தார். சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். “மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா” என்று கூறினார். உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான். “குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது” என்று கூறினான். “அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்” என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர். தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, “சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?” என்று கூறினார். அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, “குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்” என்ற கூறினான். ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, “குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான். இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர். குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார். குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். “அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்” என்று, குரு நெகிழ்ந்து கூறினார். வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, “இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று’ என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்” என்று கூறினான். வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், “ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு” என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு’ என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் “ஆறு, என் பெயர் மூடம்” என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர். தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர். அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் போக்கன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காணாமல் போனது யார்?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பெரியசாமி, செல்வந்தர், மகன், கல்யாணம், ஊர்வலம், யானை, நைனா முகமது, வழக்கு, சபை, பழம்பானை, உபாயம், மரியாதை இராமன் தலைப்பு: யானைக்கும் பானைக்கும் சரி
பெரியசாமி என்பவர் ஒரு பெரிய செல்வந்தர், அவருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமண வயது வந்துவிட்டது. திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டுமென்று நினைத்தார் பெரியசாமி. கல்யாண ஊர்வலதில் யானைமீது தன் மகன் ஊர்வலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்தார். பக்கத்து ஊரில் நைனா முகமது என்றொருவர் இருந்தார். அவர் காட்டில் இருக்கும் மரங்களை வெட்டி எடுத்து வந்து வியாபாரம் செய்வார். வெட்டிய மரங்களைக் காட்டிவிருந்து எடுத்துவர ஒரு யானையை வைத்துக் கொண்டிருந்தார். அவர் யானையைக் கல்யாண ஊர்வலத்திற்குக் கேட்கலாம் என்ற எண்ணத்துடன் பெரியசாமி நைனா முகமதுவின் வீட்டிற்குச் சென்றார். "என்ன பெரியசாமி, ஏது இவ்வளவு தூரம்?" என்றார் நைனா முகமது. "என் மகன் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கிறேன். கல்யாண ஊர்வலத்திற்கு ஒரு யானை வேண்டும், அதற்காகத் தான் உன்னிடம் வந்தேன்" என்றார் பெரியசாமி. ஓ. அதற்கென்ன? கல்யாண ஊர்வலம் இரவில் தானே நடக்கும். அப்போது யானைக்கு இங்கு வேலை கிடையாது. நீ தாராளமாக யானையைக் கொண்டு செல்லலாம். ஊர்வலம் முடிந்ததும் யானையை திருப்பி அனுப்பிவிடு" என்றார் நைனா முகமது. நைனா முகமது தாம் சொன்னவாறே கல்யாண ஊர்வலத்திற்குத் தம்முடைய யானையை அனுப்பி வைத்தார். ஊர்வலம் பாதி தூரம் வத்து கொண்டிருக்கும் போது யானை மயக்கம்போட்டுக் கீழே விழுந்தது. விழுந்த பின்னர் பரிசோதித்ததில் அது இறந்து விட்டது தெரிந்தது. கல்யாண ஊர்வலத்தில் யானை இறந்து போனதற்காகப் பெரியசாமி மிகவும் வருந்தினார். நைனா முகமதுவிடம் வேறு யானை வாங்கிக் கொடுத்து விடுவதாகக் கூறினார். இல்லாவிட்டால் அவர் எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுத்து விடுவதாகக் கூறினார். நைனா முகமதுவோ, "அதெல்லாம் முடியாது. என்னுடைய யானைதான் எனக்கு வேண்டும்" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். பெரியசாமிக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. மரியாதை இராமனிடம் சென்று தம் வழக்கைக் கூறினார். பெரியசாமியின் வழக்கைக் கேட்ட மரியாதை இராமன் நைனா முகமதுவைக் கூட்டி வரச் சொன்னார். நைனா முகமது வழக்கு மன்றத்திற்கு வந்ததும், "ஏதோ எதிர்பாராத விதமாக உங்கள் யானை இறந்து போய்விட்டது. அந்த யானைக்காக நீங்கள் எவ்வளவு நஷ்ட ஈடு கேட்டாலும் பெரியசாமி கொடுக்கத் தயாராக இருக்கிறார். அல்லது வேறு ஒரு யானை வாங்கித் தரச் சொன்னாலும் வாங்கித் தரச்சம்மதிக்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று நைனா முகம்மதுவிடம் கேட்டான் மரியாதை இராமன். என்னுடைய யானைதான் எனக்கு வேண்டும் என்று மீண்டும் பிடிவாதமாகக் கூறினார் நைனா முகமது. "சரி, நீங்கள் இருவரும் நாளைய தினம் இத்த சபைக்கு வாருங்கள், என்னுடைய தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்றான் மரியாதை இராமன். நைனா முகமது சென்றவுடன் பெரியசாமியை மட்டும் தம்மிடம் அழைத்து வரச் சொன்னான் மரியாதை இராமன். அவர் வந்ததும் அவரிடம் "நாளைய தினம் குறித்த நேரத்திற்கு நீங்கள் சபைக்கு வராதீர்கள். நான் நைனா முகமதுவையே உங்கள் வீட்டுக்கு அனுப்பி உங்களைக் கூட்டி வரச் சொல்கிறேன். அவர் வரும் போது நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள பழம் பானைகளைக் கதவின் பின்னால் அடுக்கி வைத்துவிட்டுக் கதவை மூடி வைத்திருங்கள். நைனா முகம்மது கதவைத் திறந்து கொண்டு வந்ததும் பானைகள் எல்லாம் உடைத்து நொறுங்கி விடும். நீங்கள் சபைக்கு வந்து என்னுடைய பழம் பானைகள் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று உபாயம் சொல்லி அனுப்பி வைத்தான் மரியாதை இராமன். மறுநாள் பெரியசாமி குறித்த நேரத்திற்கு வழக்கு மன்றத்திற்கு வரவில்லை. மரியாதை இராமன் நைனா முகமதுவைப் பார்த்து, "நீங்களே பெரியசாமி விட்டுக்குப் போய் அவரைக் கையுடன் கூட்டி வாருங்கள்" என்று அனுப்பினான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால். என்ன பீர்பால்…. நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்! என்றார்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கே மூன்று மாதம் ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும் என்றார் பீர்பால்.தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர். பீர்பால் கூறியபடியே மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக் கொடுத்து விட்டுச் சென்றான்.வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால். மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார் பீர்பால்.அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம்! என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர் மகிழ்ச்சியடைந்தார். ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர்.கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர்.அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது. அரசருக்கு ஆச்சர்யமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன். மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும் ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! கையினால் தான் இவைகள் பேசுகின்றன. இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். ஆதலால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால். பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. ஆகாயத்தில் அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் மன்னர்.கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆகாயத்தில் அழகிய மாளிகை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: “குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள். “அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார். “பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன். “அப்படியே செய்வோம்” என்றார் குரு. “மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு. “மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான். “அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர். “அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள். “இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு. உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள். நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள். “இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள். கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள். சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான். “சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர். முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர். கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான். அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான். வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான். “பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார் “வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர். சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்! “இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர் சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான். “உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர் யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான். “ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார். குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி. “என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார். “வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன். கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள். அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன். பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மருத்துவத் தொழில்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதுதான் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் அழகிய உடை ஒன்றை தைத்து கொடுக்க வேண்டும் என்று. இன்னைக்கு இந்த பொருட்களை தானம் பண்ணுனா.. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்… புட்பதத்தன் தான் நினைத்தது போலவே அழகிய ஆடைகளை தயாரித்து அதனை ஈசனுக்கு வழங்க கைலாயத்திற்கு சென்றான். அங்கு சென்று ஈசனை பார்த்த மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்து விட்டு ஈசனை வணங்கியே நேரத்தை கழித்தி விட்டான். ஈசனிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் திரும்பிய போது இருள் சூழ்ந்துவிட்டது. பிறகுதான் அவனுக்கு ஆடையை ஈசனுக்கும், பார்வதிக்கும் தராமல் வந்துவிட்டது நியாபகம் வந்தது. இருட்டியும் விட்டதால் கைலாயத்தின் வாசலிலேயே படுக்க முடிவெடுத்தான். அன்று இரவு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அது கைலாயத்தின் வாசலில் படுத்திருந்த புட்பதத்தன் காதுகளில் விழுந்துவிட்டது. மறுநாள் ஈசனிடம் சென்று தான் கொண்டுவந்த ஆடைகளை கொடுத்துவிட்டு ஆசிபெற்ற புட்பதத்தன், நேற்று இரவு தான் கைலாய வாசலில் படுத்திருந்ததையும், சிவன் கூறிய தேவ ரகசியத்தை கேட்டு விட்டதையும், அப்போதிருந்தே தன் மனம் படாதபாடு படுவதையும் கூறினான். தேவ ரகசியத்தை கேட்டு விட்டதால் கோபமுற்றார் சிவபெருமான், இருப்பினும் அவன் உண்மையை கூறியதால் அதனை எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் கூறக்கூடாது என்று அவனை எச்சரித்து அனுப்பினார். சனி பகவானின் அருளைப் பெற சொல்ல வேண்டிய சனி மந்திரங்கள்! சிவனின் சாபம் கைலாயத்திலிருந்து திரும்பி வந்த புட்பதத்தன் பல நாட்கள் நிம்மதியின்றி தவித்து வந்தான். அவன் மனைவி பல முறை கேட்டும் காரணம் என்னவென்று சொல்லாத புட்பதத்தன் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் அந்த தேவ ரகசியத்தை தன் மனைவியிடம் கூறிவிட்டான். இது உடனே ஈசனுக்கு தெரிந்துவிட்டது. தன் பேச்சை மதிக்காத புட்பதத்தனை வேதாளமாக மாறி பூமியில் முருங்கை மரத்தில் தொங்கும்படியும், ரகசியத்தை காக்க முடியாத நீ இனி கேள்விகள் கேட்டுக்கொண்டே உன் வாழ்நாளை கழிப்பாய் என்றும், ரகசியத்தை கேட்ட தேவதத்தை வனத்தில் இரவு முழுவதும் வீணை வாசித்து மற்றவர் உறக்கத்தை கெடுத்து கொண்டே இருப்பாய் என்றும் சாபமளித்தார். பல ஆண்டுகளாக வேதாளமாக புட்பதத்தன் சுடுகாட்டில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் முனிவன் ஒருவன் வேதாளத்தை தன் அடிமையாக்கி அதன் சக்திகள் மூலம் உலகத்தை ஆள நினைத்தான்.அதற்காக தவமிருந்த போது காளி தேவி 1000 அரசர்களின் தலையை தனக்கு காணிக்கையாக அளித்தால் உன் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். அந்த கொடூர முனிவனும் பல அரசர்களை ஏமாற்றி காளி கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களை பலிகொடுக்க தொடங்கினான். இப்படியே 999 அரசர்களின் தலையை காளிக்கு பலிகொடுத்தான். விக்கிரமாதித்தன் ஆயிரமாவது பலியாக விக்கிரமதித்தனை பலி கொடுக்க நினைத்த முனிவன் விக்கிரமாதித்தனின் அரசவைக்கு சென்று காட்டுக்குள் ஒரு காளி கோவில் இருப்பதாகவும், அங்கு வேண்டினால் உங்கள் நாடு வளம்பெறும் எனவும் கூறினான். விக்கிரமாதித்தனும் முனிவனின் பேச்சை நம்பி அவனுடன் செல்ல சம்மதித்தான். வீணை இசை முனிவனுடன் காளி கோவிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அன்று இரவு அந்த கோவில் மண்டபத்தில் தங்க முடிவெடுத்தான். முனிவனும் பூஜை முடிந்தவுடன் விக்கிரமாதித்தனை பலியிட முடிவெடுத்தான். அப்பொழுது தூரத்திலிருந்து கேட்ட மனதை மயக்கும் வீணை இசை அவனை ஈர்த்தது. இசை வந்த திசைநோக்கி நடந்தான். அங்கே ஒரு அழகிய பெண் இருட்டில் அமர்ந்துகொண்டு வீணை வாசித்து கொண்டிருந்தாள். அவளிடம் நீ யார் ஏன் வனத்திற்குள் அமர்ந்து வீணை வாசித்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் விக்கிரமாதித்தன். அந்த பெண் வேறு யாருமல்ல தேவ ரகசியத்தை கேட்ட புட்பதத்தனின் மனைவி தேவதத்தை. அவள் தன் கதையை விக்கிரமதித்தனிடம் கூற அவள் மேல் இரக்கம் கொண்டான் விக்கிரமாதித்தன். தங்களுடைய சாபம் தீர என்ன செய்ய வேண்டுமென்று தேவதத்தையிடம் விரும்பினான். அதற்கு தேவதத்தை நானும் வேதாளமாக தொங்கிகொண்டிக்ருக்கும் என் கணவரும் காட்டிற்குள் இருக்கும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டால் எங்கள் சாபம் நீங்கும். ஆனால் என் கணவரை அந்த முருங்கை மரத்தில் இருந்து இறக்கி காளி கோவிலுக்கு அழைத்து வருவது இயலாத ஒன்று என்றுகூறி அழுதாள். அது எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் நான் அதனை செய்கிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றான் விக்கிரமாதித்தன். சுடுகாட்டிற்கு சென்ற விக்கிரமாதித்தன் அங்கு தலைகீழாக தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை கட்டி முதுகில் போட்டுக்கொண்டான். அதுவரை அமைதியாக இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச தொடங்கியது. ” நாம் கோவிலுக்கு செல்லும் வரை நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது, அதேநேரம் நான் ஒரு கதை சொல்லி அதிலிருந்து கேள்வி கேட்பேன். அதற்கு பதில் தெரிந்தும் நீ கூறவில்லை என்றால் உன் தலை வெடித்து சிதறிவிடும் ” என்று கூறியது. விக்கிரமாதித்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க அவர்களின் பயணம் தொடங்கியது. விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் அவனிடம் கதை சொல்ல தொடங்கியது. விக்கிரமாதித்தனும் கதை கேட்க தொடங்கினான். இறுதியாக வேதாளம் கதையிலிருந்து ஒரு கேள்வி கேட்டது. அதற்கான விடை விக்கிரமாதித்தனுக்கு தெரிந்தே இருந்தது. பதில் கூறினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றுவிடும். பதில் கூறவில்லை என்றால் தலை வெடித்து சிதறிவிடும், என்ன செய்யலாம் என்று யோசித்த விக்கிரமாதித்தன் பதிலே கூறிவிடலாம் என்று வாய்திறந்து பதில் கூறிவிட்டான். தான் இட்ட நிபந்தனையை விக்கிரமாதித்தன் மீறிவிட்டதால் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். இதேபோல 24 முறை கதை சொல்லி மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். மீண்டும் வேதாளத்தை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் விக்கிரமாதித்தன். இம்முறையும் வேதாளம் கதை சொல்ல தொடங்கியது. ஆனால் விக்கிரமாதித்தன் வாயை திறந்து பேசவில்லை. கேள்விக்கு பதில் கூறுவது போலவே பாசாங்கு செய்துகொண்டு கோவில் வரை வந்துவிட்டான். விக்கிரமதித்தனையே கவனித்து வந்த வேதாளம் கோவில் வந்துவிட்டதை உணரவில்லை. சிவன் கூறியபடி கோவிலுக்கு புட்பதத்தனும், தேவதத்தையும் சேர்ந்து வந்தததால் அவர்களின் சாபம் நீங்கியது. சாபம் நீங்கிய புட்பதத்தன் விக்கிரமாதித்தனுக்கு நன்றி கூறியதோடு முனிவனின் உண்மையான எண்ணத்தை பற்றியும் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் அந்த முனிவரின் தலையை காளி தேவி முன் வெட்டி வீழ்த்தினான். அப்போது அங்கு தோன்றிய காளி தேவி ” விக்கிரமாதித்தா நீ கொடுத்த பலியில் என் மனம் குளிர்ந்தது உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள் ” என்று கூறினார். அதற்கு விக்கிரமாதித்தன் முனிவனால் கொல்லப்பட்ட அணைத்து அரசர்களும் உயிர்பெற வேண்டும் என்று வரம் கேட்டார். காளி தேவியும் விக்கிரமாதித்தன் கேட்ட வரத்தை தந்ததோடு அவனையும், அவன் நாட்டு மக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வேதாளத்தின் வரலாறு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான். பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள். அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன. ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள். சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள். நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது. இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள். குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது. ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது. தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள். பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது. நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி. இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது. அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி. இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது. அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது. உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி. வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இரண்டு புலிக்கு எங்கே போவேன்?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, திருமணம், மனைவி, கத்தி, சூறாவளி தலைப்பு: நம்பிக்கை
முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.அவரது மனைவி,"கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்" என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,"அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!! ந்ம்பிக்கையே வாழ்க்கை!
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: நரி, இரண்டு கழுகுகள், பன்றி, பன்றிக்குட்டிகள் தலைப்பு: நயவஞ்சக நரி
ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது. மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி. அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன. "நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?" என்று கேட்டது ஆண் கழுகு. "கழுகாரா… வாங்க… கூட யாரு? மன்னியா?" என்று கேட்டது. "ஆமாம்!", "நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!" என்று கேட்டது. "ஆமாம்…! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்…! ஏன் கேட்கிறீர்?" என்று கேட்டது நரி. "என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!" என்றது ஆண் கழுகு. "ரொம்ப ராசியான மரம் இது… முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!" என்றது நரி. "ஆபத்து ஏதாவது உண்டாகுமா?" என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு. "நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!" என்றது நரி. பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, "அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!" என்றது. ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, "என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை… இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்… கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!" என்றது. "கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!" என்றது நரி. நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு. பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது. பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்… பேஷ் பேஷ்… "நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?" என்று கேட்டது அம்மா பன்றி. "பேஷாக தங்கலாம்!" என்றது நரி. "எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?" என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி. "நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே… கவலையே படாதே…! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்…! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்…! நானிருக்க பயமேன்?" என்றது நரி. பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்" என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன. வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது. "இதோ பாருங்கள்…! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்… உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!" என்றது. இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன. மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி. "பன்றியே…! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!" என்றது நரி. பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது. கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி. ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின. நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன. யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அழகாபுரி ஊர் மக்கள், பரமார்த்தகுரு, சீடர்கள், மண்டு, அரசர், தடித்த அம்மாள் தலைப்பு: மாடு பிடிப்போம், நாடு ஆள்வோம்
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே…குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!""பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு.இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது."சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை"குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்."குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!" என்று முட்டாள் சொன்னான்."நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!" என்று கனவு கண்டான் மூடன்."அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!" என்று சிரித்தான், மட்டி."ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!" என்றார் பரமார்த்தர்."குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். "இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்" என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்."சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…" என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்."குருவுக்கு ஜே" என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது."ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் "போக்கு" காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது."இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!" என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்."விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!" என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்."இது மாடா? அல்லது கழுதையா?" என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து "பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!" என்று பதறியவாறே சொன்னார்.முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது."ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!" என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்."ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்."கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!" என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை. உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!” என்று கதை சொல்லலாயிற்று. ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான். ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான். அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், “மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது. அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார். அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், “மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை” என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. “இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!” என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, “மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!” என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, “மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக?” என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்.“நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா? அது என்ன?” என்று மன்னன் கேட்டான். “மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?” என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்.“என்ன?” என்று துள்ளிக்குதித்த மன்னன் “என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!” என்று அதிர்ச்சி யுடன் கூறினான். “மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!” என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, “இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!” என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா!ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.அதற்கு விக்கிரமன், “முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நம்பமுடியாத உண்மை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விசுவாமித்திர முனிவர், இந்திரன், ரம்பை, ஊர்வசி, நாரதர், விக்கிரமாதித்தன், மாதிரி தலைப்பு: விக்கிரமாதித்தனும் இந்திரனும்
ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான். இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான். இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர். ""ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்," என்றான் இந்திரன். ""நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்," என்று ரம்பை கூறினாள். ""ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்," என்றாள் ஊர்வசி. இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை. இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். ""இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?" என்று கேட்டார் நாரதர். ""ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…" என்றான் இந்திரன். ""இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…" என்றார் நாரத முனிவர். மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர். நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர். இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, ""இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்," என்றார். உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, ""மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!" என்றான். மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. "ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?" என்று நினைத்தான். இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், ""மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா," என்றார். மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான். விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான். இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, "இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?" என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான். இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை. உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான். ""விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்," என்றான் இந்திரன். போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை. போட்டி முடிவுற்ற பிறகு, ""தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்," என்றான் விக்கிரமாதித்தன். மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான். இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், ""வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்," என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான். ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள். ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள். இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான். விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான். அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன. ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும். இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், ""இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக," என்று வரமும் அளித்தான். ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி. சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார். அவர்கள் வந்ததும், ” இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான். அவனது நண்பர்கள், “ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.” என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான். அதற்கு மற்ற சிறுவர்கள், ” அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்?” என்று கேட்டதற்கு, “எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்”. குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?….. எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'துணிச்சலான சிறுவன்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: செங்கல் சுமந்து சாலையைக் கடந்தான் சிறுவன் சுவற்றைப் பார்த்து சிரித்தான் - சுவற்றில் "இளமையில் கல்" வாசகம். - கபிலன் வைரமுத்து சிவந்த வானம் விடியலை கரைத்துக் கொண்டிருந்தது. பசுமை மறந்து போன கிராமத்தில் கழுவிய நீரில் முளைத்துப் போன புற்களின் பனித்துளிகள் லேசாய் சினுங்கி மறைந்தன. பரபரப்பில் ஆட்பட்டு கிடந்தது கிராமம். தினமும் உண்டாகிற பரபரப்புகள். வேலைக்குப் போகிற அவசரம். ஏழு மணிக்கெல்லாம் பட்டாசுத் தொழிற்சாலை பஸ் வந்துடுமாம். சுந்தரம் டேய்! சுந்தரம் எழுந்திருடா! மணி ஆறரை ஆகப்போகுது இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு. பாயில் புரண்டவனுக்கு போகிற போக்கில் ஒரு உதை விழுந்தது. அரக்கப் பரக்கப் எழுந்தவன் எப்போதும் போல முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு சாப்பாட்டுத் தட்டில் கண் விழித்தான். அரைகுறை கஞ்சியோடு, ஏழு மணி பஸ் வந்து நின்றதில் ஓடிப்போய் பஸ் பிடித்தான். இங்கிருந்து நாலு மைலாம் பட்டாசுத் தொழிற்சாலை, ஏழரை மணிக்கெல்லாம் பட்டாசு வாசனையை நுகர ஆரம்பித்தது பஸ். எப்போதும் சோர்வாய் இருப்பவனுக்குள் அன்று மட்டும் என்னவோ வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்பு. மனம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஒன்றும் தெரியாத வயசாக இருந்தாலும் ஏதோ தெரிந்து கொண்டது போல் சந்தோஷத்தால் திக்கு முக்காடியது. அன்று மட்டும் அரை நேரம் லீவு போட்டுவிட்டு ஜாலியாய் ஊர் சுற்றினான். பஸ்ஸிற்கு கூட காத்திருக்க மறுத்தவனுக்குள் புது வேகம். வீட்டிற்கு வர ஓட்டமும் நடையும் தான். கண்மாய் மேட்டுல மீன் பிடிச்சுகிட்டு இருந்த சக நண்பர்களோடு கொஞ்ச நேரம் கொண்டாட்டம். மகிழ்ச்சி தலைகால் புரியாமல் திரிஞ்சான் சுந்தரம். என்னடா! திடீர்னு இவ்வளவு கொண்டாட்டம். நண்பர்கள் சூழ்ந்து கொண்டு கேட்க. "அது ஒன்றுமில்லை போனவாரம் வந்து நம் ஊருக்கு "சிறுவர் சீர்திருத்த பள்ளி" கட்டிக் கொடுக்க வந்தாங்கல்ல அவுங்க இன்னிக்கு வந்து ஏதோ கம்பியெல்லாம் ஊனி அளவெடுத்துக்கிட்டு போனாங்க. நாளைல இருந்து வேலை ஆரம்பமாம். இன்னும் மூணு மாசத்துல வேலை முடிஞ்சிடும்னாங்க. க்கூம்.... இதுதானா என்கிற முனுமுனுப்பும் சலிப்புமாய் எல்லோரும் திக்கு கண்ட பக்கம் ஓடினார்கள். ஒருவன் ஒளிந்து கொள்ள ஐஸ்1, ஐஸ்2 விளையாட தொடங்கினார்கள். சுந்தரம் நீ வரல? சுந்தரத்திற்கு மனம் லேசாய் கனத்தது. நான் விளையாட வரல. நீங்க வேணா விளையாடிட்டு வாங்க. மேட்டுலேயே உட்கார்ந்திருந்தான். தண்ணீர் என்னவோ வித்தியாசமாய் இருப்பதை போல அதையே உற்றுப் பார்த்தான். ஏன் இவங்களெல்லாம் ஆர்வமில்லாம இருக்காங்க என்பது போல மனம் கேள்வி கேட்க தோணியது. நல்லா வயசுக்கேத்த உயரம். பன்னிரெண்டு வயசு. ஆறு வயசுல வேலைக்குப் போனவன் பனங்கொட்டை சூப்பிய தலை. எண்ணெய் செக்குல தலையை விட்டா எண்ணெய் மிச்சம் இருக்காது. வறண்ட முடி, பக்கத்து வீட்டு கோபியோட டவுசர், அரணாக் கயித்துல நிக்காம அடிக்கடி மீனைப்போல நழுவிக் கொண்டே இருக்கும். டவுசரில் தபால் பெட்டி வேற, நண்பர்களின் கேலிப் பேச்சுக்கு எப்போதும் தயாராய் காத்திருக்கும் டவுசர், சட்டை பட்டம் பார்த்து பல வருஷம் இருக்கும். உண்மை நிறமுன்னு எதையும் பார்க்க முடியாது. ஆறு வயசுல இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் அம்மா சேர்த்து விட்டா, இன்னிக்கு வரைக்கும் அதே வேலைதான். வேலை மேல அவ்வளவு வெறுப்பு இருந்தாலும் விட முடியலையேங்கிற தவிப்பு. அம்மாவிடம் அடிக்கடி சொல்லி இருப்பான். அடி மட்டும் தான் மிஞ்சும். கை ஒருநாள் கூட வெள்ளையா இருந்ததே இல்ல. தினமும் ஜெலட்டினால் கருகிப் போன கை. கைல ஏதோ சின்ன காயம், போன வாரம் ஏதோ பெரிய பட்டாசு கட்டுறப்போ வெடிச்சதாம். இதெல்லாம் சகஜமா நடக்கும் வழக்கம் போல. இந்த முறை உறுதியான தீர்மானம், எப்படியும் வேலைய விட்டுட்டு பள்ளிக்கூடம் போகப் போறோம்ங்கிற எண்ணம். அதுதான் பட்டாசுத் தொழிற்சாலையையே எடுக்கப் போறாங்கல்ல அப்புறம் எங்க வேலை இருக்கும் என்கிற நினைப்பு, மேலோங்கிய உயர்வோடு மனசுக்குள் என்னவோ புதுசு புதுசா கனவுக் கோட்டை. இதுவரைக்கும் ஜெலட்டின் குச்சி புடிச்ச கை இனி சிலேட்டுப் பென்சில பிடிக்கப் போகுதுங்கற சந்தோஷம். அப்பா விட்ட வேலையாம் ஐந்து வயசு இருக்கறப்போ ஒருநாள் இரத்தங் கக்கிக்கிட்டே வீட்டுக்கு வந்தாரு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாங்க. ஏதோ டி.பி. நோயாம். அடிக்கடி இருமுவாரு. பார்க்கவே பாவமா இருக்கும். சிலசமயம் நான்கூட கைத்தாங்கலா புடிச்சிருக்கேன். ஒருவாரம் ஆஸ்பத்திரி போனாரு சரியாய்ப் போச்சுனு சொல்லிட்டு மறுபடியும் வேலைக்குப் போனாரு வேலை நேரத்துல அடிக்கடி பீடி குடிப்பாறாம். இது வேற சைடுல பீடி தயாரிக்கிற தொழிற்சாலை. இலவசமா பீடி கிடைக்கும். மதியத்துக்கு சாப்பாடே கொண்டு போகமாட்டடாரு. ஒருநாள் திடீர்னு மறுபடியும் இரத்தம் கக்கினாராம். அப்படியே கண் சொருகி கீழே விழுந்தவரு "என் மகனை காப்பாத்தீருங்கன்னு" சொல்லிக்கிட்டே செத்துப் போயிட்டாராம். அம்மா அழுது புலம்பினா, பிஞ்ச கைல கொடுத்துட்டு மகராசனா போயிட்டியே! அடப்பாவி! மனசுக்குள்ள சோகம். அதைவிட அம்மா அழறதப் பார்க்கறப்போ அழனும்போல தோணிச்சு. லேசா ஊளை மூக்கை ஒழுக்கிக்கிட்டே அழுதவன். அப்பா செத்ததுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு என்னை அனுப்பிச்சா இந்த வேலைக்கு. இன்னிக்கு வரைக்கும் வேலை பிடிச்சுப் போகல. எப்படா விடுவோம்னு ஆகிப்போச்சு அப்பாடா! விட்டுடோம்குற அளவுக்கு நிம்மதி. குடும்ப வறுமைன்னு வேற வேலை பார்க்க வேண்டியதா இருந்தது. இனிமே நல்லா படிக்கலாம். நல்ல உத்தியோகத்துக்கும் போலாங்கிற கனவு. ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்த இந்த நிறைவேறா கனவு நிறைவேறுதேங்கிற சந்தோஷம். யார்க்கிட்டயும் சொல்லவே இல்லை. எழுந்து வேகமாய் ஓடினான் வீட்டிற்கு. ஓடினவன் வீட்டிற்குள் கேரளத்திலிருக்கும் மாமா வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாய் துள்ளினான். மாமா கொண்டு வந்த புதுச் சட்டையை மாட்டி மாட்டிப்பார்த்தான். மிட்டாய், கேக் எல்லாம் ஆவலாய் ஒரு பிடி பிடித்தான். எலே! சுந்தரம் நல்லா குளிச்சுக்கிட்டு ரெடியா இரு. இன்னிக்கு நைட்டு நீ கேரளாப் போற. அங்க ஒரு நாயர் கடையில் டீ டம்ளரு கழுவுற வேலையாம். மாசம் சாப்பாட்டோட ஆயிரம் ரூபா சம்பளமாம். போனவாரமே நம்ம பட்டாசு தொழிற்சாலைய எடுக்கறதா பேசிக்கிட்டாங்கல்ல இன்னும் மூணு மாசத்துல காலியாம். மனம் வெயில் பட்ட புழுபோல் துடித்தது. முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஏதோ! இடிவந்து விழுந்ததுபோல் சலனமில்லாமல் நிசப்தமானான். இதயம் சுக்கு நூறாய் சிதைந்தது. ஏலேய்! என்று அம்மா அதட்ட அவ்வளவுதான் சீக்கிரமாய் ஓடி புறப்பட்டான் கண்களில் கண்ணீரோடு. இனி, இந்த பிஞ்சுக் கண்கள் வெளிச்சத்தை தேடிக் கொண்டே இருக்கும். அது என்றுமே எட்டாத தூரத்தில்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இனி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும். அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான். அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான். சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்… வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான். இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார். வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான். சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை. அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும். அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார். காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை. எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான். சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது— நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார். காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார். காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆணவத்தின் ஏமாற்றம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது. ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு. யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது. யோகி பாம்பைப் பார்த்து “அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே” என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: வானம் நீலமாய் தெளிந்திருக்க, திருதிருவென கீழ் இறங்கிய சித்திரை மாத வெயில் பூமியை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அகன்றதொரு அத்தி மரத்தின் நிழலில் அந்த 'அன்னை தெரஸா' என்கிற முதியோர்களுக்கான இல்லம் சற்றே குளிர்ந்திருந்தது. மரத்தடியிலிருந்த நீண்ட சிமெண்ட் இருக்கையில் சுந்தரமூர்த்தி உட்கார்ந்திருந்தார். மெலிந்த தேகம். நிறைய நரைத்திருந்தார். குறுக்கும், நெடுக்குமாக கீறல்கள் விழுந்த மூக்கு கண்ணாடிக்குள் அவருடைய பார்வை அமைதியாய் விழித்திருந்தது. அருகாமையில் 'தெரஸா' இல்லத்தின் மானேஜரான ஜோசப், கருணையோடு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். "என்னோட மனைவி இருந்திருந்தா, நான் இங்க வந்திருக்கவே மாட்டேன். ஆச்சு... அவ செத்துப் போயி மூணு வருஷமாச்சு, ஆனா நான் துளிகூட நினைச்சே பார்க்கலே. எனக்கு இந்தகதி வரும்னு. அவ இறந்த அடுத்த வருஷமே என்னோட மூத்த பையன் சண்டை போட்டுக்கிட்டு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான். கடைசி காலத்தில் என்னோட அவன் இருப்பான்னு ரொம்பவே எதிர்பார்த்தேன். சுந்தரமூர்த்தியின் கண்களில் நீர் கசிந்தது. "ஏதோ எனக்கு கிடைச்சிட்டிருந்த பென்ஷன் பணத்தை வெச்சுகிட்டு இரண்டாவது பையனோட இருந்திட்டுருந்தேன். காலேஜ்ல படிச்சிட்டிருந்தான். அவனும் இப்ப என்னோட இல்ல." "ஏன் சார்!" ஆதங்கத்தோடு ஜோசப் கேட்டார். "அவன் இப்ப இருக்கிற இடமே தெரியல. போதை பொருளுக்கு அடிமையாகி, புத்தி பேதலிச்சுப் போச்சு, ஆஸ்பிடல்ல சேர்த்து பார்த்தேன். எல்லா ட்ரீட்மென்ட்டும் கொடுத்தாங்க. திடீரென்று ஒரு நாள் அவன காணல. எங்க போனான்னு தெரியல. எல்லாமே திசை மாறிப்போச்சு. அதுக்கப்புறம், என்னால - தனியா..." சுந்தரமூர்த்தியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார். "சார், உங்களோட கவல எனக்கு புரியறது. கடவுள் உங்கள கை விடமாட்டார் சார். காட் இஸ் கிரேட்." ஜோசப் ஆறுதல் அளித்தார். சுந்தரமூர்த்தி கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன் பேச்சை தொடர்ந்தார். "ஆனா... ரொம்பப் பெரிய அதிசயம் என்னன்னா, நான் இங்க உள்ள நுழைஞ்ச உடனே கவனிச்சிட்டேன். என்னோட உயிர் நண்பன் பக்கத்தில இருக்கானேன்னு ரொம்ப சந்தோஷமா போச்சு. ஆச்சரியமாக் கூட இருந்துச்சி." ஜோசப்பிற்கு ஒன்றும் புரியவில்லை. "சார். நீங்க யாரை சொல்றீங்க?" "வாங்க காட்றேன்." சுந்தரமூர்த்தி இருக்கையை விட்டு எழுந்தார். கூடவே ஜோசப்பும் எழுந்தார். நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவர் ஒன்று இல்லத்தைச் சுற்றி வளைத்திருந்தது. சுந்தரமூர்த்தி மெல்ல நடந்து அந்த சுவரருகே சென்றார். மதிலின் மறுபக்கம் ரயில் தண்டவாளங்கள் இருந்தன. தெற்கே செல்லும் டீசல் ரயில் ஒன்று பெருத்த இரைச்சலோடு வேகமாக கடந்துபோனது. சற்று தொலைவில் உபயோகத்தில் இல்லாத நீராவி ரயில் இன்ஜின்கள் ஐந்தாறு ஓரங்கட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்தப் பழைய நீராவி ரயில் கூட்டத்தின் மீது சுந்தரமூர்த்தியின் பார்வை விழுந்தது. "அதோ நிக்கறானே அவன்தான்!" சுந்தரமூர்த்தி கைநீட்டி குறிப்பிட்ட இடத்தில் ரயில் இன்ஜின்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதையறிந்த ஜோசப், குழப்பத்தில், "யாருமே அங்க இல்லையே சார்" என்றார். "அதோ அங்கே நான்காவதா நிக்கறானே, அவன்தான், ரைட் சைட்ல பாருங்க" ஜோசப்பில் கண்கள் சற்று சுருங்கி விரிந்தது. "நான் சதர்ன் இரயில்வேயில் லோகோமோடிவ் டிரைவராயிருந்து ரிடயர்ட் ஆயிட்டேன். நாலு வருஷமாச்சு." சுந்தரமூர்த்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கூறியது ஜோசப்பின் நினைவுக்கு வந்தது. அவர் அங்கே நின்று கொண்டிருந்த ரயில் இன்ஜின்களில் ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார் என்பதும் புரிந்தது. "அந்த லோகோதானா சார் நீங்க ஓட்டிட்டிருந்தது!" மிகுந்த ஆச்சரியத்தோடு ஜோசப்பின் கேள்வி எழுந்தது. "ஆமாம். அவனேதான்". "நீங்க ஓட்டின லோகோ அதுதான்னு எப்படி உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது?" ஜோசப்பை மெல்ல ஏறிட்டு பார்த்தார் சுந்தரமூர்த்தி. "ஒரு வருஷம், ரெண்டு வருஷமில்ல. முப்பத்தி நாலு வருஷம் அவனோட நான் பழகியிருக்கேன். அவன நீங்க ஒரு இயந்திரமா பாக்காதீங்க. அவனுக்கும் உணர்வுகள் இருக்கு. இன்ச் பை இன்ச் அவன எனக்கு தெரியும்" ஆத்மார்த்த நட்பின் புரிதலோடு சுந்தரமூர்த்தி தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார். "அவனோட உழைப்பு ரொம்பப் பெரிசுங்க ஜோசப். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உழைப்பு. அவன் கடுமையா உழைச்சான். கூலியேயில்லாம!" ஒரு பழைய நீராவி ரயிலை... இத்துப்போன இரும்பு மிஷினை.... வெறும் இயந்திரமாக மட்டுமே பாராமல், உயிருள்ள மனிதனாகவே மனதிற்குள் பாவித்து நேசம் கொண்டிருக்கும் சுந்தரமூத்தியை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசப். "நான் ரிடயர்ட் ஆன இரண்டு மாசத்துல, அவனையும் டிபார்ட்மெண்ட் வயசாயிடுச்சுன்னு சொல்லி ஓய்வு கொடுத்துடுச்சி, டீசல், எலக்டிரிக் ட்ரெய்னெல்லாம் வந்திடுச்சில்ல. அதான் அவன ஒதுக்கிட்டாங்க. முதல்ல யார்டுக்குத்தான் அனுப்பிச்சாங்க. நானும் அப்பப்ப போயி பார்த்துட்டு வருவேன். தனியா... ஒரு மூலையில அனாதையா நின்னுட்டிருந்தான்." சுந்தரமூத்தியின் குரல் கம்மியது. ஜோசப்பின் முகத்தில் இறுக்கம். "அப்புறம் என்னாச்சு சார்!" என்றார். "அவனையும் ஒரு நாள் அங்க காணல. இட நெருக்கடியால யார்ட்ல இருந்து வேற எங்கேயோ கொண்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நெஞ்சு பதறிப்போச்சு. எல்லாமே என்னவிட்டு போன மாதிரி ஒரு வேதனை. அவன தேடி அலைஞ்சேன். எங்கேயும் காணல. இரண்டரை வருஷமா அவன பார்க்கவே முடியாமப் போச்சு." சுந்தரமூர்த்தியின் தொண்டைக்குழி, விம்மி அடங்கியது. "அதுக்குப்பிறகு இப்பதான் அவன பார்க்கறேன். இங்க அவன சந்திப்பேன்னு நினைக்கவேயில்ல." எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடிய அரியதொரு புதையல் கிடைத்துவிட்டது போல் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. மழை வருவதையுணர்ந்த மயில் குதூகுலத்தோடு தோகை விரித்தாடுவதைப்போல் அவர் நெஞ்சு ஆனந்தக் கூத்தாடியது. தரை தவழ்ந்து, தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுவிட்ட குழந்தையின் தெம்பில் அவர் திளைத்திருந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அவன்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ராமு, சிங்கம், சிலை, வீரம் தலைப்பு: சிங்கமும் சிலையும்
ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது. "அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது." என்றான் ராமு. "ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்." என்று சொல்லியது சிங்கம். தனக்கென்றால் தனி வழக்குதான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன், குதிரைப் படைத்தலைவர், மந்திரிகள், அரண்மனை, உணவு, வீடு, குதிரை, தாடி தலைப்பு: அதிசயக்குதிரை
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான். "குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான். இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான். தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான். மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர். நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை. அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான். வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள். அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான். மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான். அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான். முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள். அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை. மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது. பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வழுக்கைக்கு மருந்து' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: வியாபாரி, கன்று குட்டி, பசு, பால், வாக்குவாதம், தீவனம், சொந்தம், மரியாதை இராமன், விசாரணை, நியாயம் தலைப்பு: கன்று குட்டி
ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார், அவர் ஒரு கன்று குட்டியை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார், திடீரென வியாபாரி வெளியூர்க்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார், கன்று குட்டியை தன்னுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது வியாபாரிக்கு, அதனால் கன்று குட்டியை தன் பக்கத்து வீட்டு காரரிடம் கொடுத்துவிட்டு விட்டு, நான் விரைவாக வந்து விடுவேன், நான் எனது கன்று குட்டியை எப்படி விட்டு செல்கிறேனோ நான் கேட்கும் போது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும், எவ்வித மாற்றமும் சேதமுமின்றி என்று கூறி,கன்றை பக்கத்து வீட்டு காரரிடம் விட்டு சென்றார், நாட்கள் பல கழிந்தது, மாதங்கள் பல கழிந்தது, வருடங்கள் பல கழிந்தது . கன்று வளர்ந்து பசுவானது பால் கொடுக்க ஆரம்பித்தது, பக்கத்து வீட்டு காரரும் தினந்தோறும் பசுவிடம் பால் கறந்து விற்று வந்தார் சிறிது காலம் கழித்து பசு கன்று ஒன்றை ஈன்றது, திடீரென வியாபாரி பக்கத்து வீட்டு காரரிடம் வந்து தனது கன்று வளர்ந்து பசுவாகியிருக்கும் எனது பசுவை தருமாறு கேட்டார், அதற்கு பக்கத்து வீட்டு காரர் மறுப்பு சொல்லவே இருவருக்கும் வாக்குவாதம் முட்டியது மரியாதை இராமனை பற்றி கேள்விபட்டு இருவரும் அவரிடம் சென்று முறையிடுவோம் என்று முடிவு செய்து மரியாதை இராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர் மரியாதை இராமன் இருவரையும் விசாரித்தார் வியாபாரியோ இது என்னுடைய பசு நான் தான் சிறிது காலத்திற்கு முன்பு இது கன்றாக இருந்த போது இவரிடம் ஒப்படைத்து விட்டு நான் கேட்கும் போது அப்படியே கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றேன் என்றார், பக்கத்து வீட்டு காரரோ இவர் பல காலத்திற்கு முன்பே என்னிடத்தில் கன்றை விட்டு சென்றார், இப்பொழுது வரை நான் தான் எனது கை செலவில் இதற்கு தீவனம் வாங்கி போட்டு வருகிறேன், அதனால் இந்த பசு எனக்கே சொந்தம் என்றார், மரியாதை இராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார், பிறகு பசுவையும் அது ஈன்ற கன்றையும் நாளை கொண்டு வருமாறு கூறி தீர்ப்பை நாளை கூறுகிறேன் என்றார் இரவு கழிந்தது, சூரியன் உதித்தது, ஊர் மக்களும் தீர்ப்பை கேட்க அவையில் கூடினர், பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம் என்றார் மரியாதை இராமன், அதற்கு வியாபாரியோ இது எப்படி நியாயம் என்று உரத்த குரலில் கேட்டார், அதற்கு மரியாதை இராமன் நீங்கள் தானே பக்கத்து வீட்டு காரரிடம் நான் எப்படி என் கன்றை விட்டு செல்கிறேனோ, நான் திருப்பி கேட்கும் போது எவ்வித பாதிப்பும், மாற்றமுமின்றி அப்படியே கொடுக்க வேண்டும் என்றீரே, அந்த பசுவின் கன்று நீங்கள் எப்படி விட்டு சென்றீரோ அப்படியே தானே உள்ளது என்றார் மரியாதையும் ராமன் பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம், அது ஈன்ற கன்று வியாபாரிக்கு சொந்தம், மேலும் கன்று வளரும் வரை பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டாம் என்று கூறி தீர்ப்பை முடித்து வைத்தார்..
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், குணவர்மன், குணவர்மனின் குரு புஜங்கர், மன்னர், மன்னரின் தாய், மன்னரின் சபையில் இருந்த கவிஞர், மன்னரின் ஆட்கள் தலைப்பு: புரிந்து கொள்ளாத மக்கள்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், ""மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய ஆவேசம் தணிந்து போய் விடுகிறது. குணவீரமன் என்ற இளைஞன் தனது சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாத கிராமத்தினரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன் இறுதியில் அவர்களிடமே மீண்டும் திரும்பி வந்தான். அவனுடைய கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்!" என்றது. அன்னாவரம் என்ற கிராமம் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் நறைந்த கிராமம். அங்கிருந்த விவசாயிகள் பல நூதனமான பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். பலவிதமான கிழங்குகளையும், பழமரங்களையும் மூலிகைகளையும் பயிர்செய்து, அவற்றையே தங்கள் முக்கிய உணவாகவும் கொண்டு இருந்தனர். அந்த கிராமத்தில் குணவர்மன் என்ற இளைஞன் வசித்து வந்தான். சிறுவயது முதலே, அவன் தீவிர சிந்தனையாளனாக இருந்தான். எப்போதும், எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருந்தவனை, கிராமத்தினர் சோம்பேறி என்று இளக்காரம் செய்தனர். அவனுடைய வாழ்க்கையின் கண்ணோட்டமே வேறுவிதமாக இருந்தது. கிராமத்து மனிதர்களுடைய வாழ்க்கைமுறை அவனுக்குப் பிடிக்கவில்லை. "கடவுள் கொடுத்த பகுத்தறிவை நன்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன" என்பது போன்ற அவனுடைய புதுமையான சிந்தனைகள் கிராமத்தினரின் மூளையில் நுழையவில்லை. தன்னுடைய புதிய கருத்துகளை யாரும் ஏற்காததால் சலிப்படைந்த குணவர்மன் ஒருநாள் தன் தந்தையிடம், "அப்பா! இங்குள்ள மக்கள் இயந்திரம்போல் இயங்குகின்றனர். இங்கிருந்தால் என் வாழ்க்கை வீணாகிவிடும்! தண்டகாரண்யக் காட்டில் புஜங்கர் என்பவர் நடத்தும் குருகுலத்தில் சேர்ந்து, என் கல்வி அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து, எந்த கிராமத்தினர் என்னை ஏளனம் செய்கின்றனரோ, அவர்கள் எனக்கு மரியாதை செலுத்துமாறு செய்வேன்!" என்று கூறி விட்டு, தண்டகாரண்யத்தை நோக்கிச் சென்றான். புஜங்கரின் ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டுஇருக்கையில், ஒரு தேர் அவன் பின்னால் வந்தது. அவனிடம் வந்து தேரை நிறுத்திய தேரோட்டி, "தம்பி! நீ எங்கு செல்கிறாய்?" என்று கேட்க, குணவர்மன் பதில் சொல்லவும், அவன், "நானும் அங்குதான் செல்கிறேன்! நீயும் தேரில் ஏறிக்கொள்! மன்னரின் தாய்க்கு உடல் நலை சரியில்லாததால், புஜங்கரை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன்!" என்று கூறிவிட்டு குணவர்மனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். குருகுலத்தை அடைந்ததும், குணவர்மன் புஜங்கரை கால்களில் விழுந்து வணங்கித் தன் விருப்பத்தை வெளியிட்டான். அதற்கு அவர், "மகனே! என்னிடம் சீடனாகச் சேர வேண்டுமெனில், அதற்குமுன் ஜம்புகாரண்யத்தில் என் பழைய மாணவர் வினயர் ஒரு குருகுலம் நடத்தி வருகிறார். அங்கு சென்று இரண்டு ஆண்டுகள் பயின்ற பிறகு நீ இங்கு வா!" என்றார். "குருவே! உங்களுக்கு என் அறிவுத் திறமையில் சந்தேகம் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், நீங்கள் என் அறிவை சோதித்துப் பாருங்கள்!" என்றான். "மகனே! இப்போது நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டிஇருக்கிறது. திரும்பி வர எனக்கு ஒரு வாரம் ஆகும்! அதுவரை இந்த இரண்டு கிரந்தங்களை உன்னிடம் தருகிறேன். இவற்றை கவனமாகப் படி! இவற்றினுடைய கருத்தை நீ நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, நீ என் சீடனாக அமையத் தகுதியுள்ளவன்!" என்று கூறிவிட்டு அரண்மனை தேரில் ஏறிச் சென்று விட்டார். உடனே, மற்ற சீடர்கள் அவனிடம், "இரண்டு ஆண்டுகளாக இவற்றைப் புரிந்து கொள்ள நாங்கள் படாதபாடு படுகிறோம். அப்படி இருக்க, உன்னால் ஒரு வாரத்தில் புரிந்து கொள்ள முடியுமா?" என்று அவனை பயமுறுத்தினர். ஆனால் குணவர்மணா, "இதை நான் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, கிரந்தங்கள் இயற்றப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். நான்கே நாள்களில், அவற்றின் சாரத்தை குணவர்மன் நன்றாக கிரகித்துக் கொண்டான். மற்ற சீடர்களை அழைத்துத் தான் புரிந்து கொண்ட விஷயங்களை அவர்களுக்கு விளக்கினான். ஆனால் அவர்கள் அவனுடைய அறிவுத்திறமையை தாழ்வாக மதிப்பிட்டு எள்ளி நகையாடினர். கோபங்கொண்ட, குணவர்மன், "உங்களுக்கும் என் கிராமத்து மக்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. அவர்கள் படிக்காத முட்டாள்கள்! நீங்கள் படித்த முட்டாள்கள்!" என்று சினந்தான். அரண்மனையிலிருந்து திரும்பிய புஜங்கர், வந்ததும் உடனே குணவர்மனை கிரந்தங்களின் விளக்கம் கேட்டார். குணவர்மன் கூறிய விளக்கங்களைக் கேட்டு அவர் வியந்து போனார். "மகனே! உன்னைப் போல் ஒரு புத்திசாலி எனக்கு சீடனாகக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!" என்று மனமாரப் புகழ்ந்தார். அதன்பின் அவர் அரண்மனையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார். மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது. அதைப் படித்துக் காட்டிய கவிஞர், "மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!" என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை. "மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!" என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. "குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். "ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!" என்றார் புஜங்கர். "அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!" என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார். மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது. அதைப் படித்துக் காட்டிய கவிஞர், "மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!" என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை. "மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!" என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. "குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். "ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!" என்றார் புஜங்கர். "அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!" என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார். மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ. மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”. மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நேர்மை கொண்ட உள்ளம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, சிறுவன், பையன், புதுப்பானை, கிணறு தலைப்பு: புதுப்பானை
முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார். " பையா! இந்தப் பானையை எடுத்து கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா"  எனக் கூறினார். பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான். முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார். பையன் திரும்பி வந்து, " என்ன எஜமானே" என்று கேட்டான். இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார். பையன் திடுக்கிட்டுத் திரும்பி, " எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?" என்று கேட்டான். அதற்கு முல்லா, " பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்தக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய் அல்லவா?" என்று பதிலளித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார். ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார். " கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர். ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள். தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. "அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான். "யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான். இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன். "அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான். கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான். யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கூனனை ஏமாற்றிய கதை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நிரந்தரத்திற்காக படும் இந்த ஆசை எப்படியும் ஆரோக்கியமானதல்ல. ஆனால் அது உள்ளது. எனவேதான் ஆன்மீக நிறுவனங்கள் – ஆம், நான் அவற்றை நிறுவனங்கள் என்றே அழைக்கிறேன். – கிறிஸ்துவ, இந்து, முகம்மதிய நிறுவனங்கள் நூற்றாணடுகளாக மிகப் பெரிய வியாபாரத்தை நடத்தி வந்திருக்கின்றன. இன்னும் செய்கின்றன……. அவர்களது வியாபாரத்திற்கு முடிவே கிடையாது, ஏனெனில் அவர்களது வியாபாரப் பொருள் பார்க்கக்கூடிய விஷயமல்ல என்பதுதான் ஒரே காரணம். அவர்கள் உங்களிடமிருந்து பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீ நம்ப மட்டுமே கூடிய விஷயத்தை உனக்கு கொடுக்கின்றனர். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜா முழு உலகத்தையே ஜெயித்துவிட்டான். ஆனாலும் அவன் அமைதியின்றி இருந்தான் – இப்போது, என்ன செய்வது உலகத்தையே ஜெயித்தபின் நிம்மதியாக ஓய்வாக இருக்கலாம் என அவன் நினைத்திருந்தான். தான் அமைதியின்றி இருப்போம் என அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. அவன் அமைதியின்றி இருந்ததே இல்லை. போரிடும்போது, தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்போது – ஏனெனில் எப்போதும் ஜெயிக்க வேண்டிய எதிரி, பிடிக்க வேண்டிய தேசம், போக வேண்டிய இடம் இருந்து கொண்டே இருந்தது – சிந்திக்க காலமோ, நேரமோ அவனுக்கு இருந்ததேயில்லை. அவன் எப்போதும் ஆக்ரமிக்கப் பட்டு இருந்தான். ஆனால் இப்போது அவன் இந்த முழு உலகத்தையும் ஜெயித்து விட்டான் – ஆனாலும் அமைதியின்றி இருக்கிறான் – என்ன செய்வது இப்போது. ஒரு ஏமாற்றுக்காரன் இதைக் கேள்விப் பட்டான். அவன் அரணமனைக்கு வந்து, அமைதியின்றி இருப்பவர்களுக்காக தேவையான மருந்து என்னிடம் இருக்கிறது எனக் கூறி அரசனை சந்திக்க அனுமதி கேட்டான். உடனடியாக அவன் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டான். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போய்விட்டனர். அரசனால் உட்கார முடியவில்லை, தூங்க முடியவில்லை, அமைதியின்றி கவலையோடு அலைந்துகொண்டே இருந்தான். அவன், “இனி என்ன செய்வது? வேறு ஏதாவது உலகம் இருக்கிறதா? கண்டுபிடியுங்கள், அதையும் நாம் ஜெயிப்போம்.” எனக் கேட்டான். இந்த ஏமாற்றுக்காரன் அரசவைக்கு வந்து, “கவலைப்படாதீர்கள் அரசே, இந்த உலகையே ஜெயித்த முதல் மனிதர் நீங்கள்தான் – கடவுள் தானே அணியும் ஆடைகளை பெற தகுதியுடையவர் தாங்கள்தான். என்னால் இதை பெற்றுத்தர முடியும்” என்றான். இது ஒரு சிறப்பான யோசனையாக இருந்தது. அரசன் உடனடியாக ஆர்வம் கொண்டான். அவன், “நீ இந்த வேலையை செய்ய ஆரம்பித்து விடு. கடவுளின் சொந்த ஆடைகள்……… அவை ஏற்கனவே இந்த பூமிக்கு வந்திருக்கின்றனவா?” எனக் கேட்டான். அந்த மனிதன், “இல்லை, ஏனெனில் அவைகளை பெறகூடிய தகுதியை யாரும் இதுவரை பெறவில்லை. நீங்கள்தான் முதல் மனிதர். அதனால் முதல்தடவையாக, சொர்க்கத்திலிருந்து நான் உங்களுக்காக அந்த உடைகளை தருவிக்கிறேன்.” என்றான். அரசன், “எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடு……. எவ்வளவு செலவாகும்?” எனக் கேட்டான். அந்த மனிதன், “அவை விலைமதிப்பற்றவை. ஆனாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் – ஆனால் அதன் மதிப்பிற்கு முன் இந்த செலவு ஒன்றுமேயில்லை.” என்றான். அரசன், “கவலைப்படாதே. பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் என்னை ஏமாற்ற முயற்சி செய்யக் கூடாது.” என்றான். அந்த மனிதன், “ஏமாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அரண்மனையிலேயே தங்குவேன். நீங்கள் உங்கள் படையை அரண்மனையை சுற்றி நிறுத்தி வைத்து விடுங்கள். நான் இங்கேயேதான் வேலை செய்வேன். ஆனால் நான் உள்ளிருந்து தட்டும்வரை எனது அறை திறக்கப்படக் கூடாது. நீங்கள் அந்த அறையை வெளியே பூட்டிவிடலாம், அப்போதுதான் நான் தப்ப முடியாது என்று நீங்கள் திருப்தியோடு இருக்கலாம். ஆனால் நான் கேட்கும் பணத்தை நான் கூறும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பி விடவேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த வேலை முடிந்து விடும்.” என்று கூறினான். மூன்று வாரங்களுக்குள் அவன் கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி விட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு பெயர் – காலை, மாலை, மதியம், இரவு – உடனடியாக அவசரம். இந்த வேலை அப்படிப் பட்டது என்பதை அரசன் அறிவான். … இந்த மனிதன் அரசனை ஏமாற்ற முடியாது. அவன் எங்கே போக முடியும்? ஏனெனில் அவன் உள்ளே பூட்டப் பட்டிருக்கிறான். உறுதியாக அவன் தப்பிப் போக முடியாது. மூன்று வாரங்களுக்குப் பின் அவன் உள்ளிருந்து கதவை தட்டினான். கதவு திறக்கப் பட்டது. அவன் ஒரு அழகான மிகப் பெரிய பெட்டியுடன் உள்ளிருந்து வந்தான். அவன் உள்ளே போகும்போது, “நான் உங்களுக்காக தருவிக்கப் போகும் ஆடைகளுக்காக இந்த பெட்டியை உள்ளே என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.” எனக் கூறி அந்த பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றிருந்தான். ஏமாறாமல் இருப்பதற்க்காக அரசன் அந்த பெட்டியினுள் ஏதாவது ஆடை இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை, அது காலியாக இருந்தது, அதில் ஏமாற்ற எதுவும் இல்லை. அந்த பெட்டி அவனிடம் கொடுக்கப் பட்டது. இப்போது அந்த ஏமாற்றுக் காரன் வெளியே வந்து, “இந்த பெட்டி அனைவரின் – கற்றவர்கள், பண்டிதர்கள், அறிவாளிகள், ராணி, ராஜா, இளவரசன், இளவரசி – முன்னிலையிலும் திறக்கப்பட வேண்டும். இது ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகையால் அனைவரும் வர வேண்டும்.” என்றான். அந்த மனிதன் உண்மையிலேயே மிகவும் தைரியசாலி. ஏமாற்றுக் காரர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவன் அரசரிடம், “அருகில் நெருங்கி வாருங்கள். நான் இந்தப் பெட்டியை திறக்கப் போகிறேன். உங்களுடைய தலைப்பாகையை கொடுங்கள். அதை நான் இந்த பெட்டியினுள் போட வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என எனக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் உங்களுடைய இந்த தலைப்பாகையை உள்ளே போட்டு விட்டு, கடவுள் அளித்திருக்கும் தலைப்பாகையை வெளியே எடுத்து உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் அணிந்து கொள்ளலாம்.” என்றவன், ராஜசபையிடம் திரும்பி, “ஒரே ஒரு நிபந்தனை. இந்த உடைகள் தெய்வீகமானவை, அதனால் யார் தங்களது சொந்த தகப்பனுக்கு பிறந்தவர்களோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே இந்த உடை தெரியும். யார் அப்படி இல்லையோ, அவர்கள் கண்களுக்குத் தெரியாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறினான். ஆனால் ஒவ்வொருவரும், “இதில் பிரச்னை எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்கள்தான்”. என்றனர். அரசரின் தலைப்பாகை உள்ளே சென்றது, ஏமாற்றுக்காரனின் வெறுமையான கை வெளியே வந்தது, அவன் அரசரிடம், “தலைப்பாகையின் அழகைப் பாருங்கள்” என்றான். அவனது கைகளில் ஏதுமில்லை. ஆனால் ராஜசபை முழுவதும் கைதட்டியது. ஒவ்வொருவரும் இதுபோன்ற அழகான ஒன்றை இதுவரை பார்த்ததேயில்லை என மற்றவரை மிஞ்சும் வண்ணம் சத்தமிட்டனர். இப்போது அரசன், நான் இவனது கைகளில் ஏதுமில்லை என்று சொன்னால் நான் மட்டுமே வேசி மகன் என ஆகி விடுவேன். இந்த வேசி மகன்கள் அனைவரும் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களாகி விடுவர். அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது என நினைத்தான். உண்மையில் இதுதான் ஒவ்வொருவரின் நிலையும். எல்லோரும் அந்த மனிதனின் கைகளில் ஏதுமில்லை எனக் கண்டனர். ஆனால் யார் இதை வெளியே சொல்வது? எல்லோரும் எதையோ பார்ப்பது போல நடிக்கும்போது யார் அங்கு ஒன்றுமில்லை என்பதை சொல்வது? ஒவ்வொருவரும், “நான் வேசி மகனாக இருக்கக்கூடுமோ, அதனால் பேசாமலிருப்பதே சிறந்தது. தேவையில்லாமல் ஏன் இவர்களால் இகழப் பட வேண்டும்?” என சந்தேகப் பட்டனர். அதனால் அவர்கள் அதனுடைய அழகைப் பற்றி அதிக சத்தமாக கூற ஆரம்பித்தனர். அரசன் இல்லாத தலைப்பாகையை தனது தலையில் அணிந்தான். ஆனால் தலைப்பாகை மட்டுமல்ல, மற்ற உடைகளும் மறைய ஆரம்பித்தன. கடைசியில் அவனது உள்ளாடை மட்டுமே எஞ்சியது. அரசன் ஒரு விநாடி, “என்ன செய்வது இப்போது” என யோசித்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. “தலைப்பாகையை பார்த்தாயிற்று, மேலாடையை பார்த்தாயிற்று, சட்டையை பார்த்தாயிற்று, பின் எப்படி உள்ளாடையை பார்க்க முடியாது இப்போது பார்க்கத்தான் வேண்டும். திரும்பி போக முடியாது. இந்த மனிதன்……….” அந்த மனிதன் இல்லாத உள்ளாடையை அவனது கைகளில் ஏந்தி, எல்லோரிடமும் காட்டினான். “பாருங்கள், எத்தனை வைரங்கள் இந்த உள்ளாடையில் என்று பாருங்கள்”. என்றான். முழு அரசவையும் கைதட்டி பாராட்டி, “மனித வரலாற்றிலேயே இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததேயில்லை.” என்றது. அரசனின் உள்ளாடையும் உள்ளே சென்றது. ஆனால் அந்த ஏமாற்றுக்காரன் வித்தியாசமானவன். அவன், “நான் இதை பெறும்போது, கடவுள் என்னிடம், ‘இந்த உடைகள் முதன்முறையாக உலகத்திற்கு வருகின்றன, அதனால் அரசர் இந்த உடைகளை போட்டுக் கொண்ட பின் இந்த தலைநகரத்தை ஒருமுறை சுற்றி வரச் சொல்லி நான் சொன்னதாக அவரிடம் சொல். அப்போதுதான் எல்லா மக்களும் இந்த உடைகளை பார்க்க முடியும். இல்லாவிடில் ஏழை மக்களால் இந்த உடைகளை ஒருபோதும் பார்க்கவே முடியாது’ என கூற சொன்னார். அதனால் ரதம் தயாராக இருக்கிறது வாருங்கள்.” என்றான். இப்போது முடியாது என மறுப்பது சாத்தியமில்லை. அரசன் “இந்த விஷயத்தை தலைப்பாகையோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பதை நான் கூறினால்…..முழு அரசவையும் சிரிக்குமே.” என நினைத்தான். மற்றவர்கள், “ஆமாம், அரசே அதுதான் சரி. கடவுள் கூறியிருந்தால் அப்படியே நடந்தாக வேண்டும். அதுவே இந்த உடைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சரியான வரவேற்பாகும்.” என்றனர். பாதை நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியது. கடவுளின் ஆடைகளை பற்றிய செய்தி நாடு முழுக்க பரவியிருந்தது. அரசன் சம்மதித்தான். அவன் நிர்வாணமாக தனது தேரில் ஏறி நின்றான். தேருக்கு முன் சென்ற இந்த மனிதன் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இந்த கடவுளின் உடைகள் யார் தங்களது சொந்த தகப்பனாருக்கு பிறந்தவர்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்”. என அறிவித்தான். அதனால் பார்த்த அனைவரும் எதுவுமே கூறவில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்திருந்த அது, “அப்பா, அரசர் அம்மணமாக இருக்கிறார்” என்றது. அந்த தந்தை, “முட்டாளே, வாயை மூடு நீ வளர்ந்த பிறகு உன்னால் அந்த உடைகளை பார்க்க முடியும். அதற்கு ஒருவிதமான பக்குவம் தேவைப் படுகிறது. உன்னைப் போன்ற குழந்தையால் அதைப் பார்க்க முடியாது. நீ அதை பார்க்க விரும்பினால் சும்மாயிரு. ஆரம்பத்திலிருந்தே உன்னை கூட்டிக் கொண்டு வருவதில் எனக்கு விருப்பமில்லை”. என்றார். ஆனால் அந்த குழந்தையால் சும்மாயிருக்க முடியவில்லை. திரும்ப திரும்ப அது, “நான் அவர் அம்மணமாக நிற்பதை தெளிவாக பார்த்தேன்”. என்றது. அந்த தந்தை அந்த குழந்தையுடன் கூட்டத்திலிருந்து விலகி சென்றார். ஏனெனில் அந்த குழந்தை சொல்வது மற்றவர்கள் காதில் விழுந்துவிட்டால் அந்த குழந்தை அவனுடையது அல்ல, வேறு யாருக்கோ பிறந்தது என அர்த்தமாகி விடுமே. பார்க்க முடியாத பொருட்களை விற்பனை செய்யும்போது மிக சுலபமாக மக்களை ஏமாற்றலாம், அவர்களுக்கு எதிரான விஷயங்களை அவர்களையே செய்ய கட்டாயப் படுத்தலாம். – அதுதான் துறவறம். கடவுளின், உண்மையின், மோட்சத்தின், நிர்வாணாவின் பெயரால் போலி பூசாரிகளால் செய்யப் படுவது மனித தன்மையுடையதே அல்ல. அவர்களது பெயர்கள் மாறுபடலாம். ஆனால் இந்த உலகத்தில் பூசார்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்கள். மற்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லோரும் திருடர்கள், அவ்வளவுதான். அவர்கள் வேறு என்ன உன்னை ஏமாற்ற முடியும் ஆனால் பூசாரிகள், குறி சொல்பவர், மத போதகர், குருக்கள், தீர்த்தங்கரர்கள் – இவர்கள்தான் மிகப் பெரிய ஏமாற்றுக் காரர்கள். அவர்கள் இதுவரை யாரும் பார்த்திராத, யாரும் பார்க்கவே முடியாத விஷயங்களை விற்பனை செய்கின்றனர். இதுவரை பார்த்த சாட்சி ஒன்று கூட இல்லை. மரணத்திலிருந்து திரும்பி வந்து யாரும், “ஆம், இது அழிவற்ற அழகு, அழிவற்ற சந்தோஷம், முடிவற்ற அமைதி, அழியாத மெளனம்”. எனக் கூறியதில்லை. அந்த வியாபாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் யாரும் இதுவரை அதற்கு மாற்றுக் கூறியதில்லை – நீ அதை மறுத்து கூறினால் நீதான் தவறானவன். ஏனெனில் இந்த முழு உலகமும் அதை நம்புகிறது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆன்மீக வியாபாரம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியின் சக்கரம் நகர நகர, ஆறு புரண்டு கொண்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக ஆற்றுக்கு நடுவில் உறை இறக்கி, யாராவது இரண்டு பேர் வெளியில் மொண்டு குளித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு ரிப்பன் போல தண்ணீர் நெளிந்து கொண்டு கிடக்கும். தலை சிதைந்த பாம்புபோல அந்த இடத்திலேயே ஈரம் கிடந்து தத்தளிப்பது இவ்வளவு அகலமும் நீளமுமான பாலத்தில் இருந்து பார்க்க கஷ்டமாக இருக்கும். இன்னொரு பக்கம் பூராவும் சலவைத் துறை. ஆற்றின் நடுப்படுகையிலேயே துணி உலர்ந்து கொண்டிருக்கும். காற்றின் விசிறலில் துணிகளின் நீள அகலங்களில் அலை எழும்பிப் படபடக்கும் போது மடியிலிருந்து தடவி எடுத்துக் கொண்டது போல இருக்கும். யாராவது இதுதான் பாடல்பெற்ற அந்த ஆறு என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் இன்று நம்பும்படியாக இருக்கிறது. அந்தப் பழைய பெயரைப் புதுப்பித்துக் கொண்டதுபோல கரையற்றுச் சீறிக்கொண்டிருந்தது. தன்னுடைய பெயரைத் தானே சொல்லிக் கொண்டு, நான்தான் நான்தான் என்று நிரூபிப்பதுபோல, புத்தம்புதிதாக நுரை தெறித்துக் கொண்டிருந்தது. வெள்ளம் அப்படி உரக்கக் கத்தக் கத்த, கத்தலின் எதிரொலி மீண்டும் வெள்ளத்தில் கனத்து வந்து விழுந்து, விழுந்த இடத்திலிருந்து நீர் சுழன்று சுழன்று நாலாபுறமும் தெறித்தது. செம்மண்ணும் செங்காவியுமாக நிறத்தைக் கரைத்துக்கொண்டு அப்படியே வானத்தோடு போய் அப்பிக் கொள்வதுபோல தண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. கருத்த மேகங்கள் வெள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்ததா அல்லது தண்ணீர் சுருண்டு மேலே ஏறிக் கொண்டிருந்ததா தெரியவில்லை. ''அம்மாவைக் கொண்டுவந்து காட்டுங்க ''ப்பா'' - தினகரி பின்னால் இருந்து கொண்டே சொன்னாள். ''காலேஜூக்கு லீவ் போட்டிடுறியா'' - நிஜமாகவே கேட்டேன். ''பரீட்சை இல்லாவிட்டால் இங்கேயே நின்றுவிடலாம்'' தினகரி சொல்லும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. இது போன்ற நேரத்தில் அலுவலகம் போகக் கூடாது. கல்லூரி போகக்கூடாது. சமைக்கக்கூடாது துவைக்கக் கூடாது. வெள்ளம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். வெள்ளம் மட்டும் தானா. மழை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் இருக்கிற நாட்களில் தட்டான்கள் பறப்பதை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கடற்கரையில் அலை நனைத்துக் கொண்டு நிற்கவேண்டும். தம்பி கையை தினகரி பிடித்துக்கொள்ள தினகரி விரல்கள் அம்மா கையை கவ்வி இருக்க கவ்வின கையில் என்கை புதைத்துக்கொண்டு, மலையின் சரிவுகளில், சருகுகுளை மிதித்துக் கொண்டு நடந்து கொண்டே இருக்கவேண்டும். கல்தூண்கள் நிரம்பிய கோவில் பிரகாரங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும். நிலாச்சாப்பாடு சாப்பிட என்று மொட்டை மாடிக்குப் போய், அப்புறம் நிலாவைப் பார்க்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தம்ளர்கள், தண்ணீர்ச் செம்பு, சாப்பிட்ட தட்டுகள் போல வேறு சிலசில பாத்திரங்களாக மாறி அவரவர் நினைவில் வேர்விட்டு இருட்டில் முளைக்க வேண்டும். இப்படி நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ தோன்றுகிறது. ஆனால் அது எல்லாம் நடக்கக்கூடியதா என்ன. அலுவலகக் கதவும் பள்ளிக்கூடத் கதவும், சமையல் கட்டுக் கதவும் அகலமாகத் திறந்து கொண்டிருக்கையில் இதையெல்லாம் அவ்வப்போது இப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தான். ''என்னைக் கொண்டுபோய்க் காலேஜில் விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பியுங்க அப்பா'' தினகரி வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டேதான் சொல்லியிருக்கவேண்டும். எல்லோரும் வெள்ளத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் நிற்கிறவரை யாரும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. தனித்தனியாக வெள்ளம் ஒவ்வொருவரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடும் போல. சில்லென்ற குளிருக்குச் சேலையைப் போர்த்திக் பல்லில் கடித்துக் கொண்டிருந்த முகத்தில் வெள்ளம் தளும்பிக் கொண்டிருந்தது. புத்தகப் பையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பையனை சைக்கிள் காரியரில் வைத்துக் கொண்டு காலை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர் முகத்தில் தளதளவென்று ஈரம் சிலுப்பி அலையடித்தது. வடக்கு வளவுத் தாத்தா உன்னைத் தூக்கிட்டுப் போய் நம்ம ஊரிலே வெள்ளம் காண்பிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கா? - இன்றைக்கு மட்டுமல்ல. தினகரியை இதற்கு முன்பு எத்தனையோ தடவை கேட்டாயிற்று. ஒவ்வொரு தடவையும் சிரிக்க மட்டும் செய்திருக்கிறாள். பார்த்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். பார்க்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சிரிப்பு. அவள் ஒன்றரை வயதுக் கைப்பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது என்ன ஞாபகம் இருக்க முடியும்? ஆனால் அரசரடிப்பாலம் முங்க முங்க, பேட்டை ரோடு வரை தண்ணீர் வந்த அந்த வெள்ளம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தினகரியின் விவரிக்க முடியாத ஞாபகங்களின் மடிப்புகளில் கண்டிப்பாக அந்த வெள்ளம் எங்கேனும் ஈரமாக ஒளிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எப்போதாவது சொல்வாள். சொல்லாவிட்டாலும் ஒரு ஈரம் இன்னொரு ஈரத்தையும், ஒரு தீ இன்னொரு தீயையும் உடனடியாகத் தொட்டுவிடும்படியாக ஏதேனும் சங்கிலிகளை அவளுக்குள் வைத்திருக்கும். ''அம்மாவைக் கூட்டிக் கொண்டாந்து காட்டுங்க ''ப்பா'' என்று சொல்வது கூட அப்படி ஒரு ஈரம் அல்லாமல் வேறு என்ன. காட்டணும் தான். காட்ட வேண்டும் கூட சதா வீட்டுவேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும், பணியிலும், மலையடிவாரத்திலும், அருவிக் கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும் தினகரி அம்மா மட்டுமல்ல. எல்லோருடைய முகமும் அப்படி இருக்கும்போது கொள்கிற தோற்றமும் வேறு. குறுக்குத்துறை முன்னடித்துறையில் பித்தளைக் குடத்துடன் படியேறுகிற முகம், குடையும் வைத்துக்கொண்டு நனைந்தும் வந்துகொண்டிருந்த முகம், கட்டுமானம் ஆகிக்கொண்டிருக்கிற கட்டிடத்துக்குள்ளேயே தலையில் வைத்த துணிச்சுருளையும் பாண்டுச் சட்டியும், சிமெட்டிப் பாலுமாக நிற்கிற முகம், கரியும் கலர் சாக்பீஸ் கட்டியுமாக இரண்டு மணி நேரமாக நடுரோட்டில் வரைந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக மழையில் கரைவதையும், ஈயத்தகடு போல வீசப்பட்டிருந்த நாணயங்களின் மேல் மழைத் தண்ணீர் விழுவதையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிருக்கிற, இடுப்பில் பிள்ளை வைத்திருக்கிற நைந்த முகம், ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டுக்குள் வருவதற்குள் நனைந்துவிட்ட சிரிப்பு முகம், மேலே ஒரு பாறை விளிம்பில் இருந்து, கீழே புரள்கிற கடலையே பார்த்துக் கொண்டிருக்கிற சிவப்புப் புடவை கட்டின கருகமணிப் பாசிமுகம். இப்படியெல்லாம், எல்லோரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். தினகரி அம்மாவும் அப்படித்தான் இருப்பாள். இப்போது மறுபடியும் வீட்டுக்குப்போய், அவளை இவ்வளவு தூரம் கூப்பிட்டுக் கொண்டுவந்து காண்பித்து, மறுபடியும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அலுவலகம் போக முடியாது. நேரமாகிவிடும். ஏற்கனவே இன்று தாமதம். இன்னும் கொஞ்சம் நின்று பார்க்கலாம் என்று தோன்றுகிற நாட்களில் தான் இதைவிடச் சீக்கிரமாய் போகவேண்டும்படி ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது. ஏற்கனவே நிர்ணயித்து வைத்திருந்த வேலைகள் அலுவலகத்தில் இப்போது காத்திருக்கும். சாயந்திரம் கண்டிப்பாகக் கூப்பிட்டுக்கொண்டு வரவேண்டும். மறுபடியும் தினகரி, தினகரி அம்மா என்று இந்த இடத்தில் நிற்க வேண்டும். கங்கையும், யமுனையும் ருத்ரப் பிரயாகையும் திரிவேணி சங்கமும் இதுதான். பெயர் இழந்து, பெயர் அழிந்து, பெயர் புனைந்து ஓடுகிற மகாநதியின் ஏதாவது ஒரு கரையில் நிற்கவேண்டும் இதுதான் அந்த நதி. அந்தக் கரை. யோசித்துக்கொண்டே ஓட்டும்போது, பாலம் பின்னால் போயிற்று. ''ஹோ'' என்கிற காவிச்சுழிப்பு எட்டுத்திசையிலும் கைபரப்பிக் கொண்டிருந்தது. பார்வையில் விழுந்தது ஒரு பகுதியின் ஏதோ ஒரு தெறிப்பு, ஏதோ ஒரு நுரை எனினும் என்கூடவே ஆறு வந்தது. இரண்டு சக்கரங்களுக்கு அடியில் வெள்ளம் கீறிப்பிளந்து வகிடு எடுத்து உறுமுவதுபோல இருந்தது. குனிந்தால் கையில் அள்ளிவிடுகிற அண்மையில் தண்ணீர்த் தகடு அலைந்தது அன்றைக்கு முழுவதும் அலைச்சலாகத்தான் போயிற்று. அலுவலகத்தில் நுழைந்ததுதான் தெரியும். வேலை ஆளை உள்ளே இழுத்தது. அது இன்னொரு மாதிரி வெள்ளம். இன்னொரு மாதிரிக் கசம்.. வெறும் மணல்திட்டு மாதிரிக்கிடக்கிறதே சற்று உட்காரலாம் என்று நினைத்தால் திடீரென்று ஆளை முக்குகிறமாதிரி அடித்துப் புரண்டு கொண்டு வரும், வேலை இருக்கிறது என்று தயாராகி நின்றால், மருத மரத்தையும், பாசஞ்சர் ரயிலையும் பார்த்துக் கொண்டு நிற்கவைத்து, கரண்டையை நனைக்கிற அளவு நகர்ந்துகொண்டுபோகும். ஒன்று மாற்றி ஒரு சிக்கல், ஒரு சிக்கலை எடுப்பதற்குள் இன்னொரு முடிச்சின் இறுகல் என்று தொட்டுக் கொண்டேபோய், பழைய புள்ளி விபரங்கள், கணக்கெடுப்புக்கள், விவாதங்கள், தட்டச்சுக்கள், ஒப்புதல்கள், மீண்டும் விவாதங்கள், தொலைபேச்சுக்கள், மறு ஆலோசனைகள், கையெழுத்துக்கள், இடையில் தேநீர், மறுபடி தேநீர் என்ற இரவு பத்தாகி விட்டது. எப்போது இருட்டு விழுந்தது என்று தெரியவில்லை. இரண்டாவது ''ஷிப்ட்'' காவலர்கள் "பஞ்ச்'' செய்துகொண்டிருந்தார்கள். எல்லா மேஜைகளிலும் ஃபைல்கள், மின்விளக்கு விசிறிக் சுழற்சி. வண்டியை ஷெட்டிலிருந்து எடுக்கும்போது மழைபெய்து கொண்டுதான் இருந்தது. வாட்ச்மேன் குனிந்து பிளாஸ்டிக் குவளையில் பாலூற்றிக் கொண்டிருந்தார். பிறந்து இரண்டு நாள் இருக்குமா தெரியவில்லை. நாய்க்குட்டிகள் ஐந்தாறு முட்டிக் கொண்டு இருந்தன. ஒரு சமயம் எல்லாம் அழகாக இருப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல் இருந்தது. வாட்ச்மேனைத் தொந்தரவு செய்ய மனமில்லை. இறங்கிப் போய் கதவை திறந்து, மறுபடி சாத்தி வெளியேறுகையில் மழை மீண்டும் வலுக்க ஆரம்பித்திருந்தது. நிற்கத் தோன்றவில்லை நனைய நனைய மேலும் விரைவு கொள்கையில் நடமாட்டம் குறைவான பாதையின் சரிவுகளில் தண்ணீர் ஓட ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய்ப் பெய்கிற மழையில் ஒரு குளிரின் கனத்த திரை இறங்கியிருந்தது. வெள்ளம் இன்னும் அதிகரித்துவிட்டிருக்கும் என்று தோன்றியது. இன்றைக்கு முடியவில்லை. நாளைக்குக் காலையாவது தினகரி அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டுப் போய்க்காட்ட வேண்டும். ஒரு வேலை தினகரியே இதற்குள் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போயிருப்பாளோ. தினகரியும் அம்மாவும் குடையில் போவது மாதிரி, ஒரு குடைக்குள் இரண்டு பேரும் ஒடுங்கிக் கொண்டு பாலத்தின் மேல் நிற்கிற மாதிரி, அவர்களைத் தவிர யாருமற்ற பாலத்தில், அடர்ந்து இறங்குகிற மழையில் காணாமல் போன, தென்னை அசைவுகளும், கரையோரத் தோப்புகளுமாக அவர்கள் வந்து கொண்டிருக்கிற மாதிரி.... வீடு அதற்குள் வந்துவிட்டிருந்தது. மின்சாரம் இல்லைபோல. எங்கும் இருட்டாக இருக்கையில், வண்டியின் முன்விளக்கு வெளிச்சம் கற்றையாக அலைந்து எங்கெங்கு எல்லாமோ ஈரத்தில் விழுந்தது. ஹார்ன் அடிக்காமலேயே நான் வந்துகொண்டுவிட்டதைத் தெரிந்து, கதவைத் திறக்கும் போதே.... ''நனைஞ்சுக்கிட்டா வாரீங்க'' - என்று சத்தம் வந்தது. ''துண்டை எடுத்துகிட்டு வாம்மா. அப்பா தலையை துவட்டிகிடட்டும்'' என்று தினகரி பெயரைச் சொல்லி உத்தரவு போட்டது. பார்த்து வாங்க. இருட்டா இருக்கு என்று பத்திரப்படுத்தியது. ''பார்த்து வீட்டுக்குள்ளே வாங்க. ஆட்கள் இருக்கு'' நான் வீட்டுக்குள் நுழையும்போது ஹாலின் மத்தியில் ஒரு அரிக்கேன் லைட் பொருத்திவைக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் யாரோ இரண்டு பேர் எழுந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். சுவரோரமாக ஒரு பெண் குழந்தை சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது என்னைப் பார்த்ததும் எழுந்திருந்து நின்றவர்களின் காலடியில் பதுங்கியிருந்த இருட்டுக்குள் அந்தக் குழந்தை படுத்திருப்பது போல இருந்தது. தலையை துவட்டுவதற்குத் துண்டை என் கையில் கொடுத்தவாறு சொல்ல ஆரம்பித்தாள். ''பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படித்தெரு பூராவும் ஒரே வெள்ளக்காடாம். வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணியாம். தறிக்குழி எல்லாம் தெப்பத்திலே நிற்குதாம். பாவு மட்டத்துக்கு முங்கிப்போச்சாம். நெசவு செஞ்சது பாதி நின்னது பாதியிண்ணு அப்படி அப்படியே விட்டுவிட்டு, எல்லா ஜனமும் தெருவுல நிக்கிதாம். பத்து அறுபது வருஷத்துல இவங்க கண்காண இப்படி ஒரு கஷ்டம் வந்தது இல்லையாம்.'' இதை இவள் சொல்லும்போதே இருட்டுக்குள் நின்றவர்கள் திடீரென்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தார்கள். முக அடையாளமே தெரியாமல் நிற்கிற அவர்களின் குரல் மட்டும் விக்கித்து ஒரு கூரான ஆயுதம்போல நெஞ்சில் செருகியது. ''நாங்க இனிமே என்னம்மா ஐயா எந்திரிக்க போறோம்'' என்று வாய்விட்டு அதே குரலில், நிர்ணயிக்க முடியாத வயது நடுங்கியது. எனக்கு அவர்கள் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ''தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ, நம்மளால் வேறு என்ன பண்ணமுடியப்போகுது. அந்தப் பச்சைப் பிள்ளையாவது படுத்துகிடட்டும்னு நான்தான் இவங்களை கூட்டியாந்தேன். பள்ளிக்கூடம் ரெம்பிக் கிடக்கு. கல்யாண மண்டபம் ரெம்பிக் கிடக்கு. நம்ம வீடும் ரெண்டு நாளைக்கு ரெம்பிக் கிடக்கட்டுமே'' இதை சொல்லும் போது அவள் தினகரியைத் தன்னோடு அனைத்துக் கொண்டு நின்றாள். கை தினகரியின் தலையை வருடிக் கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஹரிக்கேன் லைட் வெளிச்சத்தில் அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. வயிறு இறங்கி ஏறியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்கவேண்டுமா என்ன?..
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வெள்ளம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார். இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் “தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!” என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார். காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். “என்ன விஷயம் ஐயா?” என்று நடுங்கும் குரலில் கேட்க, “தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!” என்றார் அதிகாரி. இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். “கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?” என்றாள். “எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது” என்ற அதிகாரி சற்று யோசித்தபின், “தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்” என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர். உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் “கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்” என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார். சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் “ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே” என்று அலற, “நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது” என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார். மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான். அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், “மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்” என்றான். உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது. “இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. “பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி” என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தண்டனைக்குத் தகுந்த குற்றம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக் கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம்பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார்.அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து ” அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?” என்று கேட்டார். ” வேறு யாருமில்லை, நான்தான் ” என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் அதே பணக்காரரிடம் வந்தார்.;” யாரோ ஒருவர் கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறாராக்கும். அவருக்கு உதவ என்னிடம் கடன் வாங்;க வந்திருக்கிறீர் போலிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் செல்வந்தர்.” ஆமாம் ” என்று முல்லா பதில் சொன்னார்.” அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே” என்று செல்வந்தர் கேட்டார்.” இல்லை , உண்மையாகவே ஒர் ஏழை தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் ” என்றார் முல்லா.” உம்மை எவ்வாறு நம்ப முடியும்? பணத்தை வாங்;கிக் கொண்ட பிறகு நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பது என்ன நிச்சயம்?” என்று செல்வந்தர் கேட்டார்.” நீங்கள் இவ்வாறு சந்தேகப்படுவீர் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறனே” என்றார் முல்லா.பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார்.” நீர்தான் கடன் வாங்கிக் கஷ்டப்படும் ஏழையா?” என்று செல்வந்தர் கேட்டார்.” ஆமாம் ” என்ற அந்த ஏழை பதில் சொன்னான்.செல்வந்தர் முல்லா சொன்ன தொகையை ஏழையிடம் நீட்டினார்.அதனை முல்லா கைநீட்டி வாங்கிக் கொண்டார்.” என்ன பணத்தை நீர் வாங்கிக் கொண்டிர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா?” என செல்வந்தர் கேட்டார்.” நான் பொய் சொல்லவில்லையே கடன் வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் அவனுக்குக் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடன் இப்போது வசூல் செய்கிறேன் ” என்று கூறியவாறு ஏழையை அழைத்துக் கொண்டு முல்லா நடந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லா வசூலிக்கும் கடன்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்த்தில்லை. இது நம்மை பற்றிய நமது கருத்து எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை. இதில் படிப்படியாக நாம் உள்ளே நுழையலாம். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜூஸஸூக்கும் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில் இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால் நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய். ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன்………………… நாம் கடலின் அலைகள்தான். நாம் மறந்துவிட்டோம். ஆனால் கடல் நம்மை எப்போதும் மறப்பதில்லை. கடல் என்றால் என்ன என்று கேட்குமளவு நாம் அதை மறந்து விட்டோம். ஆனாலும் நாம் கடலில்தான் இருக்கிறோம். அலை தன்னை மறந்து கடலை மறந்து விடலாம். ஆயினும் அது கடலில்தான் இருக்கிறது. ஏனெனில் கடலில்லாவிட்டால் அலை இல்லை. அலையில்லாவிட்டாலும் கடல் இருக்கும். அலையில்லாமல் கடல் உண்டு. ஆனால் கடலில்லாவிட்டால் அலை கிடையாது. அலை கடலின் அலைதான். அது தனியானதல்ல. கடலின் நிகழ்வுதான். அது கடல் தன் இருப்பைக் கொண்டாருதல்தான். கடவுளின் கொண்டாட்டம் மக்கள். கடவுளின் கொண்டாட்டம் பிரபஞ்சம். இது கடலே கடலைத் தேடும் விளையாட்டுதான். அதற்கு அளவு கடந்த சக்தி இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்னசெய்வது. ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன்.. . . . . ஆனால் ஒரு அலை, தான் ஒரு அளவற்ற கடலின் பாகம் என்று அறிந்துகொள்ளும்போதுதான் இந்த பலம் சாத்தியப்படும். அந்த அலை இதை மறந்துவிட்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கும். நமது மறக்கும் திறன் அளவற்றது. நமது நினைவு கொள்ளும் திறன் சிறியது, மிகச் சிறியது. ஆனால் மறக்கும் திறன் அளவற்றது. நாம் மறந்துகொண்டே போகிறோம். அதுதான் மிகவும் எளிதானதாகத் தோன்றுகிறது. மிகவும் சுலபமாக மறந்துவிடுகிறோம். இது எப்போதும் நிகழ்கிறது, சுலபமாக மறக்கிறோம். நீ உனது சுவாசத்தை நினைவில் வைத்திருக்கிறாயா. அதில் ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் அது உன் நினைவுக்கு வருகிறது. சளி, பின் மூச்சுத்திணறல் என ஏதாவது வந்தால்தான், இல்லாவிடில் யார் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் தங்களுக்கு பிரச்சனை வரும்போதுதான் கடவுளை நினைவு கூறுகிறார்கள். இல்லாவிடில் யார் நினைவு வைத்திருக்கிறார்கள். மேலும் கடவுள் உன்னுடைய மூச்சை விட, உன்னை விட உனக்கு நெருக்கமானவர். அவர் உன்னிடத்தில் உன்னைவிட நெருக்கமாக இருக்கிறார். ஆகவே மறப்பது இயல்பே. நீ அதை கவனித்திருக்கிறாயா. உன்னிடம் எது இல்லையோ அதை நீ நினைவு வைத்திருப்பாய். உன்னிடம் உள்ளதை மறந்து விடுவாய். நீ அதை சாதகமாக எடுத்துக் கொள்வாய். ஏனெனில் கடவுளை இழக்க முடியாது. ஆகவே நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினம். மிக அரிதான மக்கள் மட்டுமே கடவுளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். உன்னை எப்போதுமே விட்டு விலகாத ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமான செயல். கடலில் உள்ள மீன் கடலை மறந்துவிடும். அதைத் தூக்கி கரையில் சுடுமணலில் வீசினால் அப்போது அதற்கு தெரியும். அதன் நினைவுக்கு வரும். ஆனால் உன்னைக் கடவுளிலிருந்து பிரித்து வெளியே வீச வழியே இல்லை. அவருக்கு கரை.யே இல்லை. கடவுள் கரைகளற்ற கடல். நீ ஒரு மீன் போன்றவன் அல்ல. நீ ஒரு அலை போன்றவன். நீ கடவுளைப் போன்றவன். உனது இயல்பும் கடவுளின் இயல்பும் ஒன்றேதான். இந்தக் கதைக்கு இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான். குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். தனிப்பட்ட முறையில்…………ஏனெனில் தனியாய் இருக்கையில் அவன் தன் அகங்காரத்தை மறந்து விடுகிறான். இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர். தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம். அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்……………….. ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார். இதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு பெயரைக் கொடுத்து அதன் மூலம் உனக்கு ஒரு வழிமுறையை உருவாக்கித் தருகிறேன். நீ உன் பெயர் மூலமாக உனது வழிமுறையை நினைவில் கொள்ளலாம். உனது யுக்தியை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதனால் அது தொடர்ந்து உனக்கு நினைவில் இருக்கும். உனது பாதையை சுட்டிக் கொண்டிருக்கும் ஒரு குறி போல அது செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவனது பெயர் ஓ-நமி – மாபெரும் அலைகள் – எனக் கேள்விப்பட்ட குரு கூறினார். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது. கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய். கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக்கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்…….அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மைதன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ – இன் – என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய். பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய். அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய். ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன. அதனால்தான் பல மதஙகளும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும். மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்………………… வெறும் காதுகளாக மாறிவிடு – என்ற ஜென் குரு – வெறுமனே கவனி – வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏன் என்றோ என்ன நடக்கிறது என்றோ எந்த கருத்தும் இன்றி கவனித்துக் கொண்டிரு. எந்த இடையூறும் இல்லாமல், உன்னுடைய பங்கிலிருந்து எந்த செயலும் இல்லாமல் கவனித்துக் கொண்டிரு. – என்றார். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். முதலில் கவனி. பின் அந்த அலைகளுடன் இணைந்து விடு. நீ முழுக்க முழுக்க உள் வாங்குபவனாகவும் மௌனமாகவும் இருப்பதை உணரும் நேரத்தில் உன்னை அந்த அலைகளாக கற்பனை செய்து கொள். இது இரணடாவது படி. முதலில் ஆக்ரோஷமானவனாக இருக்காதே. ஏற்றக் கொள்பவனாக இரு. உள் வாங்குபவனாக மாறும் நேரத்தில் அந்த அலைகளுடன் ஒன்றி விடு. நீ தான் அந்த அலை என கற்பனை செய்துகொள். அவன் தன்னை, தன் ஆணவத்தை மறக்கக்கூடிய ஒரு யுக்தியை அவனுக்கு கொடுத்தார். முதல்படி ஏற்றுக்கொள்பவனாக இருத்தல். ஏனெனில் ஏற்றுக்கொள்ளும் போது ஆணவம் அங்கிருக்க முடியாது. பிரிவினை இருக்கும்போதுதான் ஆணவம் அங்கிருக்க முடியும். நீ உள் வாங்குபவனாக இருக்கும்போது உனது கற்பனைத்திறன் பன்மடங்கு அதிகரிக்கும். ஏற்றுக்கொள்ளும் மக்கள், உணர்ச்சிகரமான மக்கள் கற்பனைத்திறன் உடையவர்கள். தஙகளது பாகத்திலிருந்து எந்த வித ஆக்கிரமிப்பும் இல்லாமல், ஒரு சிறிதளவு ஆக்கிரமிப்பு கூட இல்லாமல் மரத்தின் பசுமையை பார்க்கும் மக்கள். மரத்தின் பசுமையை பருகும் மக்கள். அந்த ஒரு நீருறிஞ்சி போல உறிஞ்சும் மக்கள் யாரோ அவர்கள் படைப்பவர்களாகின்றனர். மிகவும் கற்பனை செய்பவர்களாகின்றனர். அவர்கள்தான் கவிஞர்கள், ஓவியர்கள், நடன கலைஞர்கள், இசையை உருவாக்குபவர்கள். அவர்கள் இந்த பிரபஞ்சத்தை உல் வாங்குதலோடு ஏற்றுக் கொண்டு அவர்கள் எதை உள் வாங்கினார்களோ அதை அப்படியே தருகின்றனர். நீ கடவுளுக்கு அருகில் வர உதவக்கூடிய ஒரு சாதனம் கற்பனை. கடவுள் ஒரு சிறந்த கற்பனைவாதி – ம்ம் – அவருடைய உலகத்தை பார். சிந்தனை செய்து பார். இத்தனை மலர்களுடனும், இத்தனை பட்டாம்பூச்சிகளுடனும், இத்தனை மரங்களுடனும், இத்தனை நதிகளுடனும், இத்தனைவிதமான மக்களுடனும் உலகத்தை கற்பனை செய்துள்ளார். அவருடைய கற்பனைத்திறனை எண்ணிப்பார். இத்தனை நட்ஷத்திரஙகள், இத்தனை உலகங்கள், உலகத்திற்கப்பால் உலகம், முடிவில்லாதது…. அவர் ஒரு சிறந்த கனவு காண்பவராக இருக்க வேண்டும். கிழக்கில் இந்துக்கள் இந்த உலகம் கடவுளின் கனவு என்று கூறுவர். இந்த உலகம் அவரது கண்கட்டிவித்தை. அவரது கற்பனை. அவர் இப்படி கற்பனை செய்துள்ளார். நாம் அவரது கனவின் பாகம்தான். ஜென் குரு ஓ-நமியிடம் உன்னை அந்த அலைகள் போல கற்பனை செய்து கொள் – என்று கூறினார். மேலும் அவர் நீ உருவாக்க முடியும், முதலில் உள் வாங்குபவனாக இருந்தால் பின் உன்னால் உருவாக்கமுடியும். நீ உனது ஆணவத்தை விட்டு விட்டால் பின் நீ வளைந்துகொடுப்பவனாக மாறி விடுவாய். பின் நீ கற்பனை செய்வது நடக்கும். உனது கற்பனை நிஜமாகிவிடும். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலைகளை நினைக்க முயன்றான். முதலில் அது கடினமாகத்தான் இருக்கும். அவன் பல விஷயங்களை நினைத்தான். அது இயற்கைதான். – ஆனால் அவன் தங்கினான். அவன் மிகவும் பொறுமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பின் மெதுமெதுவாக அவன் அலைகளை மட்டுமே நினைக்க ஆரம்பித்தான். பின் அந்த கணம் வந்த்து………. நீ பொறுமையாக பின் தொடர்ந்தால், பிடிவாதமாக இருநாதால், இந்தக் கணம் வந்தே தீரும். பல பிறவிகளாக நீ ஏங்கிக்கொண்டிருக்கும் அந்த விஷயம் நடக்கும் – ஆனால் பொறுமை தேவை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. இப்போது இவை உண்மையான கடலின் அலைகள் பெரியதாகி வருவதல்ல. இப்போது இவனது கற்பனை அலைகளுக்கும் உண்மையான அலைகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அந்த வேற்றுமை மறைந்துவிட்டது. இப்போது அவனுக்கு எது எதுவென்று தெரியாது. எது உண்மை எது கற்பனை என்று தெரியாது. அவன் ஒரு சிறு குழந்தை போலாகிவிட்டான். குழந்தைகளுக்கு மட்டும்தான் அந்தத்திறன் இருக்கிறது. ஒரு குழந்தை தான் கனவில் கண்ட பொம்மை எங்கே என்று காலையில் எழுந்தவுடன் அழும் காட்சியை பார்க்கலாம். அது அந்த பொம்மை வேண்டுமென்று அழும். அது கண்டது கனவென்று சொன்னால் அதற்கு புரியாது. அது பொம்மை எங்கே என்றே அழும். அவனது கனவிற்கும் விழித்திருத்தலுக்கும் வேறுபாடு இருப்பது அவனுக்கு தெரியாது. அவனுக்கு எல்லாமும் ஒன்றுதான். நீ உள் வாங்குபவனாக மாறும்போது நீ ஒரு குழந்தை போலாகிவிடுகிறாய். இப்போது இந்த அலைகள் முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அது அழகு. ஒரு புத்ததுறவிக்கு புத்தரே அடித்துச்செல்லப்பட்டு விட்டார் என்பது கஷ்டமானதாகத்தான் இருக்கும். அவர் தனது மதத்துடன் மிகவும் ஒன்றிவிட்டிருந்தால் இந்த இடத்தில் அவர் தனது கற்பனையிலிருந்து பிரிந்திருப்பார். அவர் – போதும், போதும். புத்தரின் சிலையே அடித்து செல்லப்பட்டு விட்டதா, நான் என்ன செய்வது, இல்லை, நான் அந்த அலை அல்ல. – என்று கூறியிருப்பார். அவர் புத்தர் சிலையின் காலடியில் நின்றிருப்பார். அவர் காலடியில் விழுந்திருப்பார். ஆனால் அதற்கு மேல் எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனால் நினைவில் கொள். ஒரு நாள் இந்தப் பாதையில் நீ செல்ல உனக்கு உதவிய அந்த பாதங்களையும் விட்டாக வேண்டும். புத்தர்களும் அடித்து செல்லப்பட்டாக வேண்டும். ஏனெனில் நீ பிடித்துகொண்டிருந்தால் நீ செல்வதற்கு கதவுகளே தடையாக இருக்கும். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. அது நிஜமாக நிகழ்ந்தது அல்ல. அது ஓ-நமிக்கு நிகழ்ந்தது. நினைவில் கொள். நீ அந்த சமயத்தில் அந்த கோவிலில் இருந்திருந்தால் அந்த கோவிலை நீர் சூழ்ந்ததை உன்னால் பார்த்திருக்க முடியாது. அது ஓ-நமிக்கு மட்டுமே நிகழ்ந்தது. அது அவனது இருப்பின் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் நிகழ்ந்தது. கவிதை தளத்தில், கனவு தளத்தில், கற்பனை தளத்தில் நிகழ்ந்தது. வெகுளித்தனமான, குழந்தை போன்ற, பெண்மைதனமான, உள்ளுணர்வில்………………………… அவன் தனது கறபனை யுக்தியின் கதவுகளை திறந்து விட்டான். அலையோசையை கேட்டதன் மூலம், உள் வாங்கிகொள்பவனாய் இருத்தல் மூலம், அவன் கற்பனையியல் சேர்ந்தவனாகிவிட்டான். அவனது கற்பனை ஆயிரம் இதழ் தாமரையாய் மலர்ந்தது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்த்து. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அவன் புத்தனாகி விட்டான். புத்தருக்கு ஒருநாள் போதிமரத்தடியில் அமர்ந்திருந்தபோது வந்த அதே புன்னகை ஓ-நமிக்கு வந்திருக்க வேண்டும். திடீரென அவன் அங்கே இல்லை. அந்த புன்னகை, திரும்ப வீடு வந்து சேர்ந்துவிட்ட அந்த புன்னகை, வந்து சேர்ந்துவிட்டவரின் புன்னகை, இனி எங்கும் போக வேண்டியதில்லை என்ற புன்னகை, ஆதார மையத்தை வந்தடைந்த புன்னகை, ஒருவர் இறந்து மறுபடி பிறந்த புன்னகை. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான். அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை. ஏனெனில் அப்போது அது அவனது சக்தியல்ல. அவன் வெறும் ஓ-நமி மட்டுமல்ல, அவன் வெறும் அலையல்ல, அவன் இப்போது கடல். உன்னால் எப்படி கடலை தோற்கடிக்க முடியும். உன்னால் அலைகளை வேண்டுமானால் தோற்கடிக்க முடியும். நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய். எல்லா வாழ்வும் முழுமைதான். நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வந்து சேர ஒரே வழி சரணடைதல்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சரணாகதியின் கதை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், மல்லிகை, பேகம், பழச்சாறு தலைப்பு: விலைமதிப்புள்ள பொருள்
சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்! ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. "ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?" என்று வாயைக் கிண்டினாள். "ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!" என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். "என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?" என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள். "ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?" என்றார் மேலும் கோபமுற்ற அக்பர். "மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!" என்று பதிலளித்தார் பேகம். "அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!" என்று உரக்க முழங்கினார் அக்பர். "என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?" என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன. "அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!" என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், "என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்" என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார். தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!" என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் "நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்" என்று கடிதம் எழுதிஅனுப்பினாள். ஆனால், அக்பர் "உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!" என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள். உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் "நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!" என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார். உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, "பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்" என்று செய்தி அனுப்பினாள். அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் "நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!" என்றார். "இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்" என்று பேகம் உருகினாள். "சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?" என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், "தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்" என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், "இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!" என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார். குடித்த பிறகு பேகத்தை நோக்கி, "உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்" என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, "எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது" என்று தள்ளாடினார். உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், "ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்" என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார். தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன. தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள் அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள். "ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?" என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, "ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்" என்று பேகம் பதிலளித்தாள். ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, "நான் எங்கிருக்கிறேன்?" என்று கேட்டார். "நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்" என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது. "நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?" என்று அவர் சீறினார். "நீங்கள் தான் பிரபு!" என்று அவர் சீறினார். "என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?" என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், "உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?" என்று சாமர்த்தியமாக மடக்கினாள். "ஓ!" என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். "நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!" என்ற அக்பர், தொடர்ந்து, "அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?" என்று கேட்டார். அதற்கு பேகம் "நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!" என்றாள் . "அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்" என்றார் அக்பர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர். “”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர். இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார். மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார். மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன். பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: திருமலாம்பாள், கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன், பரிசுகள், கொட்டாவி, பயிர் தலைப்பு: அரசியின் கொட்டாவி
திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார். அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார். அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள். தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான். ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான். மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார். "வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன். மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும் எண்ணி மகிழ்ந்தார். பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அயோவா சிடி, பெஞ்சு மனிதன், நூலகர், கிறிஸ்துமஸ், காபி தலைப்பு: அழிவற்றது
முப்பது வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தபோது அயோவா சிடி மிகச் சின்ன ஊர். ஆனால், அது அந்த மாநிலத்தின் தலைநகராக இருந்திருக்கிறது. ஆனால் நான் போயிருந்த போது அது தலைநகர் அந்தஸ்தை இழந்ததோடு அதன் விமான தளமும் பயனற்றுப் போய் விட்டது என்று அறிந்தேன். ஊர் சின்னதாக இருந்தாலும் நகரங்களின் வசதிகள் பல இருந்தன. இரண்டு வங்கிகள் சாதாரணத் தேவைகளுக்கேற்ப டவுண்ட்டவுன் என்ற கடைத் தெரு. ஐந்தாறு சிற்றுண்டிச் சாலைகள். இரண்டு டிஸ்கவுண்ட் கடைகள். அதாவது தள்ளுபடிக் கடைகள். ஒரு நாள் நானாக வழி தெரியாமல் ஒரு சிறிய தெருவில் நுழைய அங்கும் ஒரு கடை இருந்தது. அங்கு விலைகள் மிகவும் குறைவாக இருந்தன. எனக்குக் கிடைத்த அமெரிக்க நண்பர்களிடம் இதைச் சொன்னேன். "அப்படி எல்லாம் இருக்காதே. இங்கே கடைக்காரர்கள் எல்லாரும் நாணயமானவர்கள்." அந்தக் கடையில் பாத்திரங்கள், துணிமணி, சூட்கேஸ், குடை, காலணி முதலின கூட இருந்தன. ஒருவனுக்குப் புரிந்து விட்டது. "நண்பரே, அவை எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவை. நீங்கள் மாதக் கணக்கில் இங்கு வசிக்கப் போகிறீர்கள். இருக்கும் வரை நல்ல, புதிய பொருள்களையே பயன்படுத்துங்கள். நான் அங்கு பொருள் கொடுத்துவிடத்தான் போவேன். வாங்க அல்ல.", "இந்தக் கம்பளிக் கோட்டை ஐம்பது டாலருக்கு நீ வாங்கிக் கொடுத்தாய். அங்கே இதே போலக் கோட்டு பத்து டாலருக்கு இருக்கிறது." இந்தக் கம்பளிக் கோட்டுகள் முழுங்கால் வரை நீண்டிருக்கும். "சரி, சரி," அவன் பேச்சை மேற் கொண்டு வளர்த்தாமல் போய் விட்டான். "நீ எதைக் கற்பனை செய்து கொண்டாலும் குளிரைக் கற்பனை செய்து கொள்ள முடியாது" என்று அவனே ஒருமுறை சொல்லியிருந்தான். நான் கற்பனை செய்து பார்க்க முடியாத குளிரை அனுபவிக்க வேண்டியிருந்ததால் எனக்குத் திரும்பத் திரும்பக் கம்பளிக் கோட்டுகள்தான் கவனத்தில் வந்தன. ஒருவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவர் அணிந்திருக்கும் கோட்டுதான் என் கண்ணில் தெரிந்தது. அயோவா ஸ்டேட் பாங்க் அண்ட்டிரஸ்ட் கம்பெனி பல பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். எனக்கு அங்குதான் வங்கிக் கணக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்னை அழைத்துப் போன இளைஞனின் பேச்சு, அந்த மானேஜர் பேச்சு எதுவும் எனக்குப் புரியவில்லை. திடீரென்று அந்த மானேஜர் பக்கத்திலிருந்த இயந்திரத்திலிருந்து ஒரு அட்டை மேஜை மிது விழுந்தது. அதில் என் புகைப்படம்! என் மற்ற புகைப்படங்கள் விசேஷமானவை என்று சொல்லமாட்டேன். ஆனால், அந்த வங்கி அடையாள அட்டையில் இருந்த புகைப்படம் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. நான் எங்கு காசோலை கொடுத்தாலும் கூடவே அந்த அடையாள அட்டையையும் காட்ட வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை என் முகத்தையும் அந்த அட்டைப் புகைப்படத்தையும் உற்றுப் பார்க்காமல் யாரும் என் காசோலையை ஏற்றுக் கொண்டதில்லை. என்னைப் புகைப்படம் எடுக்கப் போவதாக அந்த மானேஜர் சொல்லியிருந்தால் நான் என் குல்லாவையும் கம்பளிக் கோட்டையும் கழட்டியிருப்பேன் வாயைப் பிளந்தபடி வைத்திருக்கமாட்டேன். வங்கி வாஷிங்டன் தெருவில் இருந்தது. விசாலமான தெரு, தெருவின் முழு நீளத்திற்கும் நடுவில் தீவு போல ஏற்பாடு செய்து அதில் சில பெஞ்சுகளும் போடப்பட்டிருந்தன. நன்றாகச் சாய்ந்து கொள்ளக்கூடியவை. ஒரு குறை, அவை வங்கியின் எதிர்சாரியைப் பார்த்துப் போடப்பட்டிருந்தன. எதிர்சாரி முழு நீளமும் ஒரு மிகப் பெரிய கட்டடத்தின் பின் பக்கம். ஜன்னல்கள் தான் உண்டு. ஒரு வாசற்படி கிடையாது. அந்தப் பக்கத்து நடைபாதையில் நடமாட்டமே இருக்காது. நான் வங்கிக்கு அழைத்துச் செல்லப் பட்ட முதல் நாளே வங்கிக்கு நேர் எதிரே இருந்த பெஞ்சில் ஒரு மனிதனின் முதுகு தெரிந்தது. கருநீல நிறக் கம்பளிக் கோட்டு அணிந்திருந்தான். காலர் மடிப்புக்கடியில் சிறிது முயற்சி எடுத்தால் படிக்கும் படியாகக் கென்வுட் என்ற முத்திரை தெரிந்தது. அடுத்தமுறை நான் வங்கிக்குப் போன போது அந்த மனிதனின் முதுகு தெரிந்தது. அதே கோட்டு. அடுத்த முறையும் அவன் உட்கார்ந்திருந்தான். அப்படி என்றால் அவன் தினமும் அங்கு உட்கார்ந்து வெறும் சுவரைப் பார்த்தபடி இருக்கிறான். நான் வங்கி ஜன்னலுக்குப் போனபோது என் பின்னால் யாரும் இல்லை. அந்தப் பெண் பணத்தை எண்ணிக் கையில் கொடுத்தாள். "அங்கே பெஞ்சில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் என்று தெரியுமா?" என்று அவளைக் கேட்டேன். அவள் கலவரமடைந்தாள், "என்ன கேட்கிறீர்கள்?" என்று கேட்டாள். நான் கையைக் காட்டி, "அந்த மனிதன்?"என்றேன். அவளுடைய கலவரம் நீங்கிவிட்டது. "தெரியாது" என்றாள். அவளுக்கு நிஜமாகவே தெரியாமல் இருக்கலாம். வெளியூர்க்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் உள்ளூர்வாசிகளுக்குத் தெரிவதில்லை. தனக்குச் சம்பந்தமற்றது என்றும் இருக்கலாம். எனக்கு மட்டும் அந்த மனிதனைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது. ஆனால் திரும்பத் திரும்ப ஒருவனை ஒரே இடத்தில் பார்க்க நேர்ந்தால் சம்பந்தமில்லை என்று விட்டுவிட முடியவில்லை. உறைபனி விழுந்து கொண்டிருந்த நாட்களில் கூட அவன் உட்கார்ந்திருந்தான். அவனைப் பற்றிப் பலரிடம் விசாரித்தேன். அவன் தனியாகப் பல நாட்களாக அந்த ஊரில் வசிப்பதாகச் சொன்னார்கள். அந்த ஊரில் எவ்வளவோ பேர் தனியாக வசித்து வந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லா நேரமும் ஏதோ ஒரு சுவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்ததில்லை. அவரவர்களுடைய வசிப்பிடங்களில் தான் தனி. வெளியே வந்து விட்டால் அவர்கள் தான் அதிகம் கும்மாளம் போடுவார்கள். கிரிஸ்துமஸ•க்கு இன்னும் நான்கு நாட்கள். அசாத்தியக் குளிர். ஆனால் அதையும் மீறி கடைகளில் கூட்டம். அந்தச் சிறிய ஊரிலிருந்து வேறெங்கோ இருக்கும் தாய், தந்தை, சகோதரன், சகோதரி என யாருக்காவது கிறிஸ்துமஸ•க்கு ஒரு பரிசாவது அனுப்ப வேண்டும், குறைந்தது இருபது வாழ்த்துக் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்ற இலக்கோடு மக்கள் கடைகளில் குவிய, அயோவாசிடி தபாலாபீஸில் இரு தனி ஜன்னல்கள் பரிசுப் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. என் வங்கியில் இருக்கும் துளியிடத்தை அடைத்துக் கொண்டு ஒரு கிறிஸ்துமஸ் மரம். வங்கியிலும் கூட்டம். என் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். குல்லாவைக் காது மூட இழுத்துவிட்டுக் கொண்டேன். கையுறைகள் அணிந்திருந்தும் கைகளைக் கம்பளிக் கோட்டின் பைகளில் நுழைத்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஒரு பொட்டு மேகம் கூட இல்லாது வானம் தெளிவாக இருந்தது. ஆனால் குளிர் சாலையில் விழுந்திருந்த உறைபனியை ஜ்ஸ் பாளங்களாக மாற்றியிருந்தது. அந்தக் குளிரிலும் அந்த மனிதன் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். ஒரே ஒரு மாற்றம். அவன் தொப்பி அணிந்து கொண்டிருந்தான். என் உடல் குளிரில் நடுங்குவதையும் பொருட்படுத்தாது நான் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் மறு கோடியில் உட்கார்ந்தேன் அவனை வெகு நாட்கள் தெரிந்தது போல, "கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வாங்கியாயிற்றா?" என்று கேட்டேன். அவன் திடுக்கிட்டான். "என்னிடமா பேசுகிறீர்கள்? என்று கேட்டான். நான் புன்னகை புரிந்தேன். "ரொம்பக் குளிராக இல்லை? நான் உறைந்து போய் கொண்டிருக்கிறேன்" என்றேன். "அப்போது வீட்டுக்குப் போக வேண்டும்" என்று அவன் சொன்னான். என் உற்சாகம் முற்றிலும் வற்றி விட்டது. "நீ சொல்வது ரொம்பச் சரி" என்றேன். எழுந்து நின்றேன். அவனைக் கடந்து செல்லும்போது, "ஊருக்குப் புதிதா?" என்று கேட்டான். "அதனாலென்ன?", "இந்த ஊரில் நான் யாருடனும் பேசுவதில்லை." நான் பதில் சொல்லாமல் நின்றேன். "விசேஷமான காரணங்கள் இல்லை, எனக்கு யாருடனும் பேச விஷயம் இல்லை". நான் அப்படியே நின்றேன். "கோபித்துக் கொள்ளாதே, இளைஞனே. நான் கடைக்குப் போனால் கூடப் பேசுவதில்லை. ஒரு முறை பால் திரிந்து போய் விட்டது. நான் கீழே கொட்டி விட்டேன். "பேசாமலே இருப்பது சாதனைதான்.", "நான் சொல்ல வேண்டியதெல்லாம் எழுதி விட்டேன்.", "நீங்கள் எழுத்தாளரா?" அந்த மனிதன் நிராசை தெரியப் புன்னகை செய்தான். "தங்கள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?", "அங்கே இருக்கிறது" அவன் எதிரில் இருக்கும் கட்டிடத்தைக் காட்டினான். "அங்கே கடை இருக்கிறதா?", "அது நூலகம். இந்த ஊர் நூலகம். நான் அந்த நூலகத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் அது வாஷிங்டன் தெரு வரை இருந்தது தெரியாது. நூலகம் என்பதால்தான் ஒரு பக்கம் முழுதும் வெறும் ஜன்னல்கள் மட்டும் அமைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். "உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு ரொம்பக் குளிருகிறது. வெட்ஸ்டனில் போய் காபி குடிக்கலாமா?" அவன் முடியாது என்று சொல்வான் என்று நினைத்தேன். அவன் முகம் அப்படித்தான் நினைக்க வைத்தது. ஆனால் மெதுவாக எழுந்தான். என்னை விட ஓரடியாவது உயரமாயிருப்பான். "வெட்ஸ்டன் வேண்டாம். ரிவர்வ்யூ போவோம்," என்றான். ரிவர்வ்யூ சிற்றுண்டிக் கடைக்குச் செல்லச் சாலையைக் கடந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது. குளிர் தாங்க முடியாது போலிருந்தது. "எனக்குக் குளிர் தாங்க முடியவில்லை." அவன் என்னைத் திரும்பிப் பாராமலே, "நீ போட்டிருக்கும் கோட்டு இந்தக் குளிருக்குப் போதாது. ஒரு கடை இருக்கிறது. அங்கே போ. மிகக் குறைந்த விலையில் நீ ஒரு கோட்டு வாங்கிக் கொள்ளலாம்", "எங்கே இருக்கிறது?", "வாஷிங்டன் தெரு முனைக்குச் சென்று இடது புறம் திரும்ப வேண்டும்.", "அந்த தெரு குறுகலாக இருக்குமோ?" அப்படி என்றால் நீ அங்கே போயிருக்கிறாய்.", "அங்கே எல்லாம் பழையது என்கிறார்களே?", "இருக்கலாம்." ரிவர்வ்யூயில் காசு கொடுத்துவிட்டுக் காபி எடுத்துவர வேண்டும். அந்த மனிதன் அவனுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டுக் காபி எடுத்துக் கொண்டான். அப்புறம் நானும் ஒரு தட்டு கோப்பை எடுத்துக் கொண்டு ஜாடியிலிருந்து காபி டிகாஷன் விட்டுக்கொண்டு மேஜைக்குப் போனேன். அங்கு பாலுக்குப் பதில் பால் பவுடர். காபி காபியாகவே இருக்காது. வெட்ஸ்டனில் பால் இருக்கும். அந்த மனிதன் காபியை மிகவும் மெதுவாகக் குடித்தான். அவன் குடித்து முடிக்கப் போகும் நேரத்தில் நான் எழுந்திருந்து, "நான் போக வேண்டும் என்றேன். "சரி.", "பெயர் சொன்னால் நூலகத்தில் தங்கள் நூல்களைப் படிப்பேன்.", "வேண்டாம்.", "என்ன!", "வேண்டாம், போய் வா." எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது மற்றவர்களும் அவனால் சங்கடத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள். அவனைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளாததற்கு அவனே காரணமாயிருக்கலாம். அந்த நூலகத்தில் பட்டியலைப் பார்த்துத்தான் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நூலகப் பெண்களை விசாரித்தேன். அவளுக்குத் தெரியவில்லை. "அவன் இந்த ஊர்க்காரனாகத்தான் இருக்க வேண்டும்," என்றேன். "நான் கூட இந்த ஊர்க்காரிதான். என் பக்கத்து வீட்டில் காலியாயிருக்கும் அறைக்கு என்ன வாடகை என்று கேட்டால் எனக்குத் தெரியாது." அவனை மீண்டும் ஒரே முறை அந்த நாற்காலியில் பார்த்தேன். நான் அவன் கண்ணில் பட வாய்ப்பில்லை. அப்படி என்னைப் பார்த்தால் கூட அவன் யாரோ அயலானைப் பார்த்தது போலத்தான் இருப்பான். அவன் என்ன புத்தகங்கள் எழுதியிருப்பான்? விஞ்ஞானம், வரலாறு, பொருளாதாரம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு எதுவும் இருக்காது. இந்தத் துறைகளுக்கு மற்றவர்களுடன் விவாதமும் பரிமாற்றமும் தேவை. அவன் படைப்பிலக்கியக் காரனாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன் என்ற பெயரில் அவர்கள் தான் எங்கோ உச்சாணிக் கொம்பில் தனியாக இருப்பார்கள். உச்சாணிக் கொம்புக்காரன் ஏன் பிறர் பார்க்க வெட்ட வெளியில் நாளெல்லாம் உட்கார்ந்திருக்க வேண்டும்? அவனைப் பற்றி எல்லாரிடமும் விசாரிக்கவும் முடியாது. அப்படி விசாரிப்பது ஓட்டுக் கேட்பதற்கு இணை என்று நினைக்கும் சமூகம் இது. அதன் பிறகு மதிக்கவே மாட்டார்கள். பெரிய மதிப்பு என்று வேண்டாம். சிறு சிறு உதவி கூடச் செய்ய மாட்டார்கள். அவன் உயரமாக இருந்தாலும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தான். ஆனால் பட்டினி கிடப்பவன் அல்ல. குடிகாரனும் அல்ல. அவன் சிகரெட் குடித்துக் கூடப் பார்த்ததில்லை. (முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புகையிலைக்குத் தடையேதும் கிடையாது.) அதுவே கூட அவன் தனியனாகப் போனதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். சில பழக்கங்கள் தவிர்க்க முடியாதவை என்று கருதுவோம் அல்லது கருதுவதாகத் தோற்றம் தருவோர் எப்போதும் நண்பர் குழாம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரசிகர் சங்கங்களின் ஆதாரமே ஏதோ ஒரு மனிதர் தவிர்க்க முடியாதவர் என்ற நம்பிக்கை. இந்த பெஞ்சு மனிதன் தவிர்க்க முடியாதவன் அல்ல என்று அந்த ஊர் தீர்மானித்து விட்டது. தீர்மானித்து விட்டது என்று சொல்வது கூடச் சரியல்ல. இது யாரோ நான்கு பேர் கூடி விவாதித்து எடுத்த முடிவல்ல. யாருமே நேரடியாகக் காரணமில்லாமல் எல்லாருமே அந்த முடிவுக்கு நகர்ந்து சென்றார்கள் என்றே கூற வேண்டும். அவனுக்கு யாருடனும் எழுத்து மூலமாகக் கூடத் தொடர்பு வேண்டாமென்று தோன்றிவிட்டது. கிறிஸ்துமஸ் போய்ப் புது வருடம் வந்தது. நான் பதினைந்து நாட்கள் கழித்துத்தான் வங்கிப் பக்கம் போக நேர்ந்தது. அன்று அவன் இல்லை. அவனுக்காக அடுத்த நாள் சென்றேன். அன்றும் இல்லை. அவனை அப்புறம் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். அந்த ஊர் தபாலாபீசில் விசாரித்தேன். அந்த ஊருக்கான காவல் நிலையம் கிடையாது. இன்னும் நான்கு மாதங்கள் கழித்து நானே அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு எனக்கு அறிமுகமானவர்களிடம் என் அறையில் இருந்த சிலவற்றைத்தான் தர முடிந்தது. "ஸால்வேஷன் ஆர்மி கடையில் கொடு, தேவைப்படுகிறவர்கள் வாங்கிக் கொள்வார்கள்" என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் இரண்டு பெரிய காகிதப் பைகளில் போட்டு அந்தச் சந்துக் கடைக்குச் சென்றேன். "மிக்க நன்றி" என்றார்கள். அப்போது எனக்கு அந்த பெஞ்சு மனிதன் சொன்னது நினைவுக்கு வந்தது, எனக்கு இனி கம்பளிக் கோட்டு தேவைப்படாது. "கடையைச் சுற்றிப் பார்க்கலாமா?" என்று கேட்டேன். "இதற்கென்ன அனுமதி? தாராளமாகப் பாருங்கள்." நான் துணிமணிகள் வைத்திருக்கும் இடத்திற்குப் போனேன். அவை பழைய உடைகள் தான். சலவை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஒரு கம்பியில் கம்பளிக் கோட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன. என் புறங்கையை நகர்த்த அவை செங்குத்தான அலைகள் போல அசைந்தன. ஒரு கோட்டருகில் என் கை நின்றது. கருநீல நிறக்கோட்டு. கழுத்துப் பட்டையடியில் "கென்வுட்" என்று எழுதியிருந்தது. கடையைக் கவனித்துக் கொண்டிருந்த அம்மாளிடம் அந்த கோட்டைக் காண்பித்தேன். "இது யாருடையது என்று தெரியுமா?", "தெரியும்.", "யார்?", "யார் என்று தெரியாது. கிறிஸ்துமஸ•க்கு முந்தின தினம் இறந்துவிட்டான். அவன் குடியிருந்த வீட்டுக்காரர் அவனுடைய பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக் கூடியவையை இங்கு கொண்டு வந்து கொடுத்தார்." இங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் இறந்தவர்களுடையதா?", "இப்போது நீங்கள் கொண்டுவந்திருக்கிறீர்களே, அப்படியும் இருக்கலாம் அல்லவா? ஆனால் எந்தப் பொருளானாலும் நாங்கள் தீவிர சுத்திகரிப்புக்குப் பிறகுதான் விற்பனைக்கு வைக்கிறோம். நீங்கள் பௌதிக மாணவரா என்று தெரியாது. ஒரு அடிப்படை உண்மை, பொருள் அழிவற்றது.", "என்ன?", "பொருள் அழிவற்றது, பொருளை அழித்து விட முடியாது.", "இந்த மனிதர் பொருளில்லையோ?" அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். உயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்குனை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும். ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதை செல்வந்தர் கண்டார். " இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?" என்று செல்வந்தர் கேட்டார். " என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் தயாரித்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறது. ஒரே குழப்பம் சிக்கல் " என்றார் முல்லா. " நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார். " சொத்தோ செல்வமோ இல்லாததனால்தானே உயில் எழுதுவதில் சிக்கல் இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு விளங்கவில்லை" என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார். தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லாவின் உயில்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது. ''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு. ''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம். தனக்கென்றால் தனி வழக்குதான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிங்கமும் சிலையும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது. அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது. கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை. நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது. கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது . கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது. செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது. நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது. அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது. அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது. கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை. குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது. அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது. அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நரியும் கொக்கும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், சுல்தான், ஜோதிடர், ராமன், பீஜப்பூர், சோதிடம், சூழ்ச்சி, பலன்கள், தண்டனை தலைப்பு: சோதிடனைக் கொன்ற கதை
ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான். பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான். ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார். தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. "அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார். மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக. "அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்." தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக. சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான். "அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?", "ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான். "உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன். அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஆந்திர மாநிலம், தெனாலிராமன், தாயார், பள்ளி, முனிவர், மந்திரம், காளி கோயில், கல்வி, செல்வம், பால் தலைப்பு: காளியிடம் வரம் பெற்ற கதை
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது. ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான். இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள். "என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான். "தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள். " உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?", "ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்." என்றான் இராமன். காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி. "இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி" என்றாள் புன்னகையுடன். இராமன் " என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே" என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள். "நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!", "ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்." என்றான். "ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?", "கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!" காளி புன்னகை புரிந்தாள். "இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்." என்று வரம் தந்து விட்டு மறைந்தாள். இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ராஜா, நகர்வலம், மரத்தடி, தியானம், அரசன், துறவி, குதிரை, அரண்மனை, சூழ்நிலை, நதிகரை, மனைவி, குழந்தை தலைப்பு: பந்தமின்றி இருத்தல்
ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன் அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, "இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்." என்றான். அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான். அரசன், "நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்." என்றான். இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான். ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, "போகலாம்" எனக் கூறுகிறான். இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், "நான் இப்போது என்ன செய்வது? அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல." என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்…….. அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது. ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார். அரசன், "கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்." என்று நினைத்தான். ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்? ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான். இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான். நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன். அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை. அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள். என்றார். இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார். இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார். அரசன், "என்னால் எப்படி வர முடியும்? என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?" என்றான். இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார். தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான். இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார். ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான். அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: திருடர்கள், தோண்டி, பாட்டி, மோர் தலைப்பு: மரியாதை இராமன் நீதிபதியாகிறான்!
நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், "நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்" என்றான். மற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். நால்வரும் பாட்டியிடம் போனார்கள். "பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்" என்றார்கள். பாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும் போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள். சில நாட்கள் சென்றன. ஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், "அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டான். மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர். "அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்" என்றான் ஒருவன். "அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே!" என்றான் ஒரு திருடன். "ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்" என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கதில் இருந்த திருடனிடம், "நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா" என்றான். அந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டியிடம், "பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்" என்றான். "உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே!" என்றாள் பாட்டி. "என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்." என்றான் அந்தத் திருடன். பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள். திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, "பாட்டி தரமாட்டேனென்கிறாள்" என்று உரக்கக் கத்தினான். மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் "அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றார்கள். பாட்டி "தோண்டியா?" என்று கேட்டாள். "ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுட்தனுப்பு" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள். பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள். தோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான். வெகுநேரமாகியும் அனுப்பிய ஆள் வராததால் சந்தேகமடைந்த மற்ற மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். "எங்கே அவன்"? என்று பாட்டியிடம் கேட்டார்கள். "அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!" என்றாள் பாட்டி. "எந்தத் தோண்டி?" என்றான் மூவரில் ஒருவன். "ஏன்? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்" என்றாள் பாட்டி. இதைக் கேட்டதும் திருடர்கள் மூவரும் பாட்டியை கோபத்துடன் "அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம்? நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே! அதனால் இந்த நஷ்டத்தை நீதான் ஈடு செய்ய வேண்டும்" என்று கூச்சல் போட்டனர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ரவீந்திரநாத் தாகூரின் மிக அழகான கவிதைகளில் ஒன்று ‘இரவு அரசன்’. மிகப் பெரிய பழமை வாய்ந்த இரவு அரசனின் கோவில் ஒன்று இருந்தது. அதில் ஆயிரம் மதகுருக்கள் இருந்தனர். ஒருநாள் தலைமை பூசாரியின் கனவில் இரவு அரசன் தோன்றி, “நாளை நான் கோவிலுக்கு விஜயம் செய்யப் போகிறேன். சுத்தப் படுத்தி தயாராக வைத்திருங்கள். நான் அங்கு பல நூற்றாண்டுகளாக வரவில்லை. நான் வேறு பல கோவில்களுக்கும் போக வேண்டும்” என்று கூறினார். தலைமை பூசாரி வேர்த்துக் கொட்டியபடி விழித்து எழுந்தார், ‘நீங்கள் வர வேண்டும், தரிசனம் தர வேண்டும், உங்களுடைய ஒளி பொருந்திய தரிசனத்தை நாங்கள் பெற வேண்டும்.’ என்றுதான் தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். இப்போது இந்த மாதிரி கனவு வந்துள்ளது. ஆனால் இந்த கனவு- – --. நடு இரவில் அவர் மற்ற அனைத்து மதகுருக்களையும் எழுப்பி அழைத்து, “உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த பிரச்னை உண்மையிலேயே சிக்கலானது. என் கனவில் இரவு அரசன் தோன்றி கோவிலை சுத்தம் செய்து தயார் படுத்துங்கள் நாளை நான் கோவிலுக்கு வரப் போகிறேன் என்றார்.” என்று கூறினார். மற்ற குருக்கள் அனைவரும் சிரித்தனர். “உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது என்பது தெரிகிறது. ஒரு கனவிற்காக அனாவசியமாக எங்கள் எல்லோரையும் தொல்லைப் படுத்தி விட்டீர்கள்”. என்றனர். அதற்கு அவர், “நீங்கள் எதனால் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள் என எனக்குப் புரிகிறது. நீங்கள் சிரிக்கிறீர்கள். எல்லோரையும் எழுப்புவதற்கு முன்னால் நான் இதைப் பற்றி யோசித்தேன். ஆனால் தயாராக வைப்பதில் தப்பில்லையே. எப்படியும் இந்த கோவிலுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்தாக வேண்டும். நீண்ட நாட்களாக எதுவுமே செய்யவில்லை”. என்றார். இந்த கோவிலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். இது அடர்த்தியான வனத்திற்கு நடுவில், மக்கள் நடமாட்டத்திற்கு வெகு தொலைவில் தள்ளி இருக்கிறது. மதகுருக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப் பட ஆரம்பித்துவிட்டனர். பலர் பிரார்த்தனை செய்வதைக் கூட நிறுத்தி விட்டனர். பலர் நாத்திகர்களாகி விட்டனர். “இரவு அரசன் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? நாம் இங்கேயேதான் இருக்கிறோம். நாம் அவரை பார்த்ததேயில்லை. நமது பெற்றோர்களும் இங்கேயேதான் இருந்தனர். அவர்களும் அவரைப் பார்த்ததேயில்லை. அவர்களது பெற்றோர்களும் இங்கேயேதான் இருந்தனர். அவர்கள் கூட அவரை பார்க்க முடிந்தது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து விட்டன. நாம் இந்த சிலைகளுக்கு சேவை செய்துகொண்டே இருக்கிறோம், இப்போது திடீரென நீங்கள் உங்கள் கனவை நம்ப சொல்லி சொல்கிறீர்கள்.” என்றனர். தலைமை குரு, “நானே அந்த கனவை நம்பவில்லை, ஆனால் அதில் தவறேதும் இல்லையே! ஒருகால் இது உண்மையாக இருந்து அவர் வந்து விட்டால்……… என்று நினைத்துப் பாருங்கள். அதற்கு வாய்ப்பில்லை என எனக்குத் தெரியும், ஆனால் ஒரே ஒரு சதவிகிதம் சாத்தியக் கூறு உள்ளது. அவர் வருவதற்கான வாய்ப்பு 99 சதவிகிதம் இல்லை. அது ஒரு கனவு! ஆனால் அப்படி நடந்துவிட்டால்…. அவர் வந்து, அவரை வரவேற்க இனிப்புகள் இன்றி மலர்கள் இல்லாமல் இசையோ, நடனமோ, தீபமோ இல்லாமல், நாம் தயாராக இல்லாமல் மோசமாக இருப்பதை பார்த்தால் என்ன நினைப்பார்? ஆயிரம் பேர்! எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கமாட்டாரா? நாம் கோவிலை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்றி வைத்திருந்தால் அவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதனால் ஒன்றும் தப்பில்லை. இது நமது கோவில், நாம் இங்கே வாழ்கிறோம், நாம் இதை கொண்டாடுவோம். விருந்தாளி வருகிறேன் எனக்கூறி வராமல் போய்விடலாம், அலங்கரிப்பதில் எதுவும் தப்பில்லையே! ஆனால் தயார் படுத்தாமல் இருந்தால் மிகப் பெரிய இழப்பாகிவிடும். அதற்கு நான் தயாரில்லை.” என்றார். இந்த கூட்டம் முடியும்போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது. தலைமைகுரு சொல்வது சரி என எல்லோரும் நினைத்தனர். கோவில் சுத்தப்படுத்தப் பட்டது. நூற்றுக்கணக்கான சிலைகள் பல ஆண்டுகளாக கவனிக்கப் படாமல் அழுக்கோடும் தூசியோடும் இருந்தன. கோவிலை சுத்தப்படுத்தி மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரித்து, வாசனை திரவியம் உபயோகப்படுத்தி மணம் வீசுமாறு செய்து சிறப்பான உணவும் இனிப்பும் தயாரித்து காத்திருந்தனர். பாதிநாள் கடந்தது. உடனே சந்தேகம் எழுந்தது. நண்பகலாகி விட்டது, அவர் இதுவரை வரவில்லை. ‘நாம் இந்த கிழவனின் கனவால் தேவையில்லாமல் அல்லல் படுகிறோம். எந்த கோவிலுக்காவது எந்த கடவுளாவது வந்ததாக யாராவது கேள்வி பட்டதுண்டா? நடைமுறையிலேயோ, சரித்திரித்திலேயோ அப்படிக் கிடையாது. நாம் கனவை நம்பி வீணாக அவதிப் படுகிறோம். விருந்தாளி வராமல் நாம் சாப்பிடவும் முடியாது’ என எல்லோரும் பொருமினர். இது அந்த கோவிலில் உள்ள விதி. முதலில் கடவுளுக்கு படைக்கப் பட வேண்டும். பின் அந்த குருவினர் அந்த உணவை பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை அது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கடவுள்கள் அனைத்தும் கல்சிலைதான். இன்று அது கடினமான ஒன்றாகி விட்டது. மிகவும் நேரமாகி விட்டது. சூரியன் இறங்க துவங்கிவிட்டான். ஒவ்வொருவரும் அந்த வயதான குரு மீது கோபப்பட்டனர். ‘இது மிகவும் பெரிய கோவிலாகையால் சுத்தப்படுத்த நிறைய ஆட்களை வைத்தும் சுத்தப்படுத்தவும் மலர்களுக்காகவும் ஏகப்பட்ட பணத்தை வீண் செலவு செய்துவிட்டோம்.’ வயதான குரு, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேறு என்ன சொல்வது? இனிமேலும் அவர் வரக்கூடும்.” என்றார். இரவாகி விட்டது. வயதான குருவின் பேச்சை கேட்பதில்லை என அவர்கள் முடிவெடுத்தனர். “இனிமேலும் காத்திருப்பது வீண்! சூரியன் மறைந்து விட்டது. நாள் முழுவதும் வேலை செய்து பட்டினி கிடந்திருக்கிறோம். அதனால் சோர்வாக இருக்கிறது சாப்பிட்டு படுக்கப் போகலாம்!”. என்றனர். அந்த வயதான குரு, “ஒரு இரவு காத்திருக்கலாம். ஏனெனில் அவர் இரவு அரசர் – நாம் அதை முற்றிலுமாக மறந்து விட்டோம். அவர் பகலில் வரமாட்டார். வருவதாக இருந்தால் இரவில்தான் வருவார்”. என்றார். அதற்கு அவர்கள், “உங்களுடைய கனவை நம்பி பசியுடன் முழு இரவும் காத்திருப்பது முட்டாள்தனம். நாங்கள் அப்படி நம்ப தயாரில்லை”. என்றனர். அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு அந்த வயதான குரு, “கலகம் செய்ய தேவையில்லை. நானும் பசியோடு சோர்வாக இருக்கிறேன், நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். அது ஒரு கனவாக மட்டுமே கூட இருக்கலாம்”. என்றார். அவர்கள் அந்த கோவிலின் இறைவனுக்காக தயார் செய்து வைத்திருந்த சுவையான உணவுகளை சாப்பிட்டுவிட்டு சோர்வாக இருந்ததால் முன் இரவிலேயே தூங்க சென்று விட்டனர். நடு இரவில் அந்த கோவிலின் இறைவனான இரவு அரசர் தங்க ரதம் அங்கு வந்தது. ரதம் மண் பாதையில் வந்ததால் அதன் சுவடுகள் கோவிலின் முகப்பில் பதிந்தன. அந்த கோவிலின் கதவை அடைய ஆயிரம் படிகள் ஏறி வர வேண்டும். இறைவன் ஆயிரம் படிகளையும் கடந்து கதவருகில் வந்து நின்றார். ரதம் மண் பாதையில் வந்த சத்தம் கேட்ட போது, பாதி தூக்கத்தில் இருந்த ஒருவர், “எனக்கு மிகப் பெரிய ரதம் வரும் சத்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போல இருக்கிறது”. என்றார். அதற்கு வேறொருவர், “தொந்தரவு செய்யாதே, ரதமும் கிடையாது, ஒன்றும் கிடையாது! ஒரு மேகம் இடிக்கிறது, அவ்வளவுதான்! போதும் கற்பனை”. என்றார். கடவுள் கதவருகில் வந்து நின்ற போது மற்றொருவர், “ஆனால் நான் காலடி சத்தத்தை கேட்டேன், யாரோ கதவருகில் வந்திருக்கிறார்”. என்றார். பலர் ஒன்று சேர்ந்து, “சத்தம் போடாமல் அமைதியாக இரு, அது பலமான காற்றடிக்கிறது. அதனால் கதவு சத்தமிடுகிறது. ஏமாந்து போகாதே! கடவுள் கதவை தட்டுவார் என நினைக்காதே”. என்றனர். காலையில் மண்பாதையில் ரதம் வந்துபோன தடயத்தையும் ஆயிரம் படிகளில் யாரோ ஏறி வந்த காலடி சுவடையும் பார்த்துவிட்டு அவர்கள் கதறினர். “கடவுள் வந்திருக்கிறார் – ஆனால் நாம் தூங்கி விட்டோமே”! உன்னை தட்டி எழுப்பக்கூடிய குருவை கண்டுபிடிப்பது சாத்தியம்தான், ஆனால் நீ தூங்கிக் கொண்டிருந்தால் அந்த தூக்கத்தில் ஆயிரத்தோரு காரணங்களை தூங்கிகொண்டே இருப்பதற்கு கண்டு பிடிப்பாய். தவிர்ப்பதற்க்காக ‘அது காற்றாக இருக்கும், மேகமாக இருக்கும்’ என ஏதாவது ஒரு காரணத்தை கண்டு பிடிப்பாய். யாரும் வரவில்லை என கூறிக் கொண்டு திரும்பி படுத்து மறுபடியும் தூங்க ஆரம்பித்து விடுவாய். விருந்தாளி வருவதற்காக கதவருகில் முழு விழிப்போடு ஆழமான நம்பிக்கை உணர்வோடும் அளப்பரிய அன்போடும் காத்திருக்கும் உனது உள்ளுணர்வை பொறுத்தது அது. உண்மையில் உனது நேசிப்பும் நம்பிக்கை உணர்வும்தான் உருவாக்குகிறது – யாரும் வருவதில்லை. உனது நேசம் உருவாக்குகிறது, உனது நம்பிக்கையுணர்வு உருவாக்குகிறது – வேறு யாரும் வரப் போவதில்லை உனது நேசமும் நம்பிக்கையுணர்வும் மலர்ந்து உன்னைச் சுற்றி மணம் வீசும். உன்னைச் சுற்றி ஆயிரத்தோரு தீபங்கள் ஒளி வீசும்! அது உனது சக்திதான்! உனது அளப்பரிய சக்திதான்! அதைத் தவிர வேறு கடவுள் என எதுவுமில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இரவு அரசன்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், சௌகத் அலி, மகேஷ், பீடா, சுண்ணாம்பு, பை, நெய், கவளம், தண்டனை தலைப்பு: சிறிய தவறும் பெரிய தண்டனையும்!
அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, "பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்" என்றான். அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன! ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, "முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?" என்று சீறினார். அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, "உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!" என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் "அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?" என்று கேட்டான். "இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றான் அலி. "தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?" என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான். சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், "வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!" என்றான். "என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!" என்றான் அலி! "இன்று ஒருநாள் மட்டும் செய்" என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான். மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான். சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, "ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?" என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி "இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!" என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது. கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, "நீ இன்னும் சாகவில்லையா?" என்று கேட்டார். "இல்லை, பிரபு!" என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, "வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!" என்றான். "உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?" என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், "பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?" என்று அக்பர் கேட்டார். "பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்" என்றான் பீர்பல். "அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?" என்று அக்பர் கேட்க, "அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?" என்று கேட்டான் பீர்பல். அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், "நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்" என்றவர் அலியைப் பார்த்து, "பிழைத்துப் போ" என்றார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். விருந்துண்ணுவோர் கூட்டத்திலே முல்லாவும் இருந்தார். பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பொய்யும் புனை சுருட்டுமான நிகழ்ச்சிகளை தங்களுக்கு ஆதாரமாகக் கூறி தாங்கள் ஏதோ பெரிய சாகசக்காரர்கள் என்பது போல் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தற்பெருமைத் தம்பட்டம் முல்லாவுக்கு விரசமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது. அவர்களுக்குத் தக்க பாடம் ஒன்று கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். உடனே அவர் அங்கிருந்த பிரமுகர்களை நோக்கி " உங்களுக்கு நான் செய்த வீரசாகசம் ஒன்றைச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். " முல்லாவினால் கூட வீரசாகசங்கள் செய்ய முடியுமா?" என்று கூறி கலகலவென ஏளனமாகச் சிரித்த பிரமுகர்கள் " எங்கே உமது வீரசாகசத்தை கூறும் பார்ப்போம் " என்று கேட்டனர். " ஒரு தடவை ஒரு நடுக்காட்டில் பத்துப் பதினைந்து கொள்ளைக்காரர்களை என் விருப்பம் போல் ஆட்டிப் படைத்தேன். நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவர்கள் நாய்களைப் போல என்னைப் பின்தொடர்ந்து ஒடிவந்தார்கள்" என்றார் முல்லா. " அப்படியா? இது உண்மையிலேயே பெரிய விஷயந்தான். உம்பின்னால் அவர்கள் ஒடி வருவதற்கு அப்படி என்ன மந்திர மாயம் செய்தீர்?" என்று பிரமுகர்கள் வியப்போடு வினவினர். " அது அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் அவர்களைக் கண்டதும் பயந்து ஒடினேன். அவர்கள் என்னைப் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டு வந்தார்கள் " என்றார் முல்லா.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள் யார்?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு வாலிபன் பல வில்வித்தைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய வில்லாண்மையை காட்டி பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருந்தான். ஆனால் அந்த பாராட்டுகளும், பரிசும் பண்பினை உருவாக்காமல் அவனுக்கு கர்வமும், தலைக்கணமும் ஏறுவதற்கு காரணமாக அமைந்தது. தற்பெருமை கொண்ட அவன் அந்த ஊரில் வில்வித்தையில் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஸென் ஆசிரியரிடம் சென்று தானே வில்வித்தையில் சிறந்தவன் என்று கூறி தன்னுடன் போட்டியிட வருமாறு அழைத்தான். வாலிபனுக்கு நிஜமாகவே அருமையான வில்வித்தை தெரிந்திருந்தது. வில்லிலே அம்பினை பூட்டியவன் முதல் முறையிலேயே தூரத்தில் இருந்த ஒரு பொம்மை மாட்டின் கண்களை சரியாக குறிபார்த்து நேர்த்தியாக அம்பு எய்தினான். தன்னுடைய இரண்டாவது அம்பானது, முதல் அம்பினை இரண்டாக பிளக்குமாறு செலுத்தினான். "ஆ, அதைப் பார்" என்று சுட்டிக் காட்டியவன், "உன்னால் எனக்கு நிகராக குறிபார்த்து வில்லாள் அடிக்க முடியுமா? எங்கே உன் திறமையைக் காட்டு" என்று ஆசிரியரைப் பார்த்து ஆனவத்துடன் கேட்டான். வாலிபனுடைய பேச்சினைக் கேட்டு கொஞ்சமும் தடுமாறாமல், தன்னுடைய அம்பினை உறியிலிருந்து எடுக்காமல், இளைஞனைப் பார்த்து கைகளால் சாடையாக தன்னை பின்பற்றி வருமாறு கூறிவிட்டு முன்னோக்கி நடக்கலானார். ஆசிரியரினுடைய விருப்பம் என்னவாக இருக்கும் என்று நினைத்தவாறே, வாலிபன் அவரை பின் தொடர்ந்து ஒரு மலையின் மீது ஏறினான். மலையின் மீது ஒரு கிடுகிடு ஆழமான பள்ளம் இருந்த இடத்திற்கு வந்தார்கள். செங்குத்தான பாறைகளில் இரண்டாக பிளவு பட்டு இருந்த இடத்தில் எந்த விதமான பிடிமானமும் இல்லாமல் அதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்திருந்த ஒரு மரமானது பட்டுப் போயிருந்தது. தன்னுடைய பாதையிலிருந்து விலகி அந்த பட்டுப் போன மரத்தின் மீது அமைதியாக ஏறியவர் தூரத்தில் தெரிந்த மற்றொரு மரத்தினை நேராக குறிபார்த்து ஒரே தடவையில் சரியாக அம்பினை எய்தினார். "இப்பொழுது உன்னுடைய முறை" என்று கூறியவர் கவனமாகவும் நேர்த்தியாகவும் அந்த மரத்திலிருந்து அமைதியாக இறங்கி அவனுக்கு வழிவிட்டார். கிழே ஆழங்கான முடியாத கிடுகிடு பாதளம். வளர்ந்திருந்த மரமோ பட்டுப் போனது எப்பொழுது முறியலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது. நடந்து அந்த மரத்தில் ஏற முயற்சித்தவனுடைய கால்களோ சரசரவென வழுக்கியது. அவனால் பயத்தில் அந்த பட்டுப் போன மரத்தில் ஏறவே முடியவில்லை, எங்கே வில்லை எடுத்து, நாணினை முடுக்கி அம்பினை எய்தப் போகிறான். தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தலையை தொங்கப் போட்டான். வாலிபனின் இக்கட்டான நிலையைப் பார்த்த ஸென் ஆசிரியர், "உனக்கு அம்பு எய்துவதில் சிறந்த திறமை இருக்கிறது, ஆனால் அதனை ஒரு முகப்படுத்தி குறிபார்த்து எய்யக் கூடிய மனதினைக் கட்டுப் படுத்துவதில் இன்னும் உனக்கு திறமை போதவில்லை" என்றுக் கூறினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வில்லாண்மைத் திறன் போட்டி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உழைப்பே அதிர்ஷ்டம் தரும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது நிலைமையை புலம்பிக் கொண்டன. இறுதியாக இரண்டும் சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது. அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல வேண்டும். இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் வேகமாக ஓடின. அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது. ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான் இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது. சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது. அதற்கு சிங்கம்.. ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன் என்று பாராட்டியது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிங்கமும் நரியும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, துணிக் கடை, தலைப்பாகை, சால்வை, பணம் தலைப்பு: பதிலுக்குப் பதில்
ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார். பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார். அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகைகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார். உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா. அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார். கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது. அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன. தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான். நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன. சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன. இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒருநாள் இரவு நேரத்தில் முட்டாள்களும் கோழைகளுமான பத்துப்பேர் கரைபுரண்டு ஒடும் ஒர் ஆற்றின் ஒரு கரையிலே குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் வந்த முல்லா " என்ன சமாச்சாரம், ஏன் தயக்கத்தோடு நிற்கிறீர்கள்" என வினவினார். " ஆற்று நீரில் இறங்கி அக்கரைக்குச் செல்ல பயமாக இருக்கிறது. எங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில் விடுகிறீர்களா?" என்று முட்டாள்கள் கேட்டார்கள். " உங்கள் விருப்பத்தை நிறைவேற்றினால் என்ன கொடுப்பீர்கள்?" என்று முல்லா கேட்டார். " ஆளுக்குப் பத்துக் காசு கொடுக்கிறோம்" என்றனர் முட்டாள்கள். முல்லா அவர்களை ஒவ்வொருவராக கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில் விட்டுக் கொண்டிருந்தார். கடைசி மனிதனை அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஆற்று நீரில் இறங்கினார். பாதி தூரம் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென வெள்ளம் அதிகமாகப் பெருக்கெடுத்து விட்டது. முல்லா கையைப் பிடித்து அழைத்து வந்த முட்டாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்ற முல்லா படாதபாடுபட்டார், முடியவில்லை. அவர் வருத்தத்தோடு அக்கரையை அடைந்தார். அங்கே காத்துக் கொண்டிருந்த ஒன்பது முட்டாள்களும் வருத்தம் ததும்பிய முகத்தினராக வந்து சேர்ந்த முல்லாவை நோக்கி " ஐயா, தாங்கள் ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டனர். " உங்களிடமிருந்து எனக்கு வரவேண்டிய வருமானத்தில் பத்துக்காசு குறைந்துவிட்டதே என்பதை எண்ணித்தான் வருந்துகிறேன் " என்றார். அவர் சொன்னதன் உட்பொருளை உணராத முட்டாள்கள் " கவலைப்படாதீர்கள். ஒரு பத்துக் காசு சேர்த்துத் தருகிறோம் " என்று கூறினார். அவர்களுடைய முட்டாள்தனத்தை எண்ணி முல்லா மனத்திற்குள் மிகவும் வேதனைப்பட்டார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள் யார்?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: எறும்பு, பூரான் தலைப்பு: எறும்பு, பூரான் வல்லவர் யார் ?
தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. "நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?" என்று எறும்பிடம் கேட்டது. எறும்பு "பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே" என்று ஊர்ந்து கொண்டே சொன்னது. "அப்படியென்ன முக்கியமான கடமை?" என்று பூரான் கேட்டது. எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் "மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்று விட்டது. பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது. அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. "எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்" என்று கேட்டது. அதற்கு எறும்பு "வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்" என்று பணிவாகக் கேட்டது. பூரான் "தப்பித்து ஓடப் பார்க்காதே!" என்று கேலி செய்தது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் "பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம்" என்று திரும்பவும் கூறியது. பூரானோ "அப்படி என்ன சாகசத்தை நீ கிழித்து விடப் போகிறாய். சாதூரியமாகப் பேசக் கற்று வைத்திருக்கிறாய்" என்று கூறியது. எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து "உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?" என்று கேட்டது. பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது. அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: காக்கை, பெண் காக்கை, கருநாகம், காக்கையின் ஆலோசகர் நரி, அரசுகுமாரியின் செடிகள், சேவகர்கள் தலைப்பு: காக்கை, பாம்பைக் கொன்ற கதை
ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது. ஒருநாளா… இரண்டு நாளா பலநாள்! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்? அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா? ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது. நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது. "அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் போனதில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும். "போட்டால்…?", "போடு முதலில். அப்புறம் பார்". என்றது. காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை. ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது. இருந்த அரசகுமாரியின் செடிகள் - ‘ஆ" காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது" என்று கத்தினர். உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள். காக்கை மெதுவாக - அவர்களின் கண்ணில் படும்படி பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இரும்க்கும் பொந்தில் போட்டது. உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் போந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள். ‘அப்புறம் பார்" என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர். சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அரசன், சிலந்தி, வீரர்கள் தலைப்பு: சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது. இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் "இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்" என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான். தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.”என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,”என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார். பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார். மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!. நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்!
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மாற்றும் மனிதன்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ரமேஷ், ரமேஷின் மனைவி நந்தினி, ரமேஷின் மூத்த மகள் ஸ்ருதி, ரமேஷின் இளைய மகள் சுவாதி, யாசகர், பத்து வயது சிறுவன் தலைப்பு: திரும்பி வந்த அம்பு
இயற்கை பச்சைப் பாய் விரித்து அழைக்க காலைக்கதிரவன் விளக்காக இயற்கை மகள் இருகை நீட்டி அழைக்கிறாள். டிங்டாங்... டிங்டாங்... என கடிகாரம் ஏழு முறை அடித்து ஓய துயில் கலைந்தான் ரமேஷ். எழுந்து கண்களைக்கசக்கி அறையைப் பார்த்தான். நந்தினியும், குழந்தைகளும் அங்கு இல்லை. படுக்கையை உதறி வெளியில் பால்கணியை நோக்கினான். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. "அம்மா பால்" என பால்காரன் ஒருபுறம் கூவினான். "கத்தரி... முருங்கை... கீரை... அம்மா" ... என காய்கறி விற்பவள் கூவினாள். கனவில் வந்த இயற்கை காட்சியை மனதில் ஒரு முறை நினைத்து உவகை கொண்டான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். குழந்தைகள் ஸ்ருதியும், சுவாதியும் படித்துக் கொண்டிருந்தனர். நந்தினி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு செய்தித்தாளைப் புரட்டினான். "சே! வர வர மனிதத் தன்மையே செத்துப் போயிடும் போலிருக்கு" - ரமேஷ் "எதைக் கண்டு இப்படிக் காலைலயே இப்படி அலுத்துக்கிறீங்க". "இங்க பார் நந்தினி ஒரு யானை பாகனை அந்த யானை துவம்சம் செய்றதை ஒருத்தன் புகைப்படம் எடுத்து பேப்பர்ல போட்டிருக்கிறான். இதை செய்ற நேரம் அவனைக் காப்பாத்தி இருக்கலாம் அல்லவா", "மனுஷத் தன்மைனா என்னப்பா" அப்பாவியாய் கேட்டாள் மூன்றாவது படிக்கும் மூத்தமகள் ஸ்ருதி. "சொல்றேண்டா செல்லம்" என குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, "மனுஷத் தன்மைன்னா யாராவது ஆபத்திலே உதவியில்லாம இருந்தா உதவி செய்யனும். பசின்னு யாராவது கேட்டா சோறு போடனும். மொத்தத்துல இல்லாதவங்களுக்கு உதவி செய்யனும். "ஆமா டாடி நேத்து எங்க க்ளாஸ் லில்லி மயங்கி விழுந்துட்டா டீச்சர் எங்கிட்டதான் தண்ணி வாங்கி கொடுத்தாங்க" என்று உற்சாகமாக சொன்னாள் இளையவள் ஸ்வாதி. "வெரி குட் அப்படித்தான் எல்லாருக்கும் உதவனும்". "சரி... சரி... ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க" என்று குரல் கொடுத்தாள் நந்தினி. அடுத்த அரைமணி நேரம் வரை எல்லோரும் சாவி கொடுத்த இயந்திரமாக சுழலத் தொடங்கினர். "எங்க என் ஸ்கூட்டர் சாவி சீக்கிரம் கொண்டு வா", "நான் இங்க குழந்தைகள கவனிக்கிறதா உங்கள கவனிக்கிறதா நீங்களே வந்து எடுங்க தினமும் இது ஒரு வேலையாப் போச்சு. பல்லைக் கடித்துக் கொண்டு வந்து ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு அதை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினாள். பல முறை முயன்றும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. சிறிது நேரம் நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்தான். அப்போது - எதிரில் ஒரு சிறுவன் மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவன் அழுக்கு படிந்த கந்தல் ஆடையும், மழையில் நனைந்த சணல் போல் திரிந்து கிடந்த அவன் தலைகேசமும் கையில் நெளிந்து இருந்த ஈயத்தட்டும் அவன் யாசகன் என்று கூறாதே விளங்கிற்று. "ஐயா... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு பசிக்குது... ஏதாவது போடுங்க சாமி... " ஆமா வர்ற ஆத்திரத்துல ரெண்டு போடத்தான் போறேன். காலங்கார்த்தாலேயே உன் முன்னாடி முழிச்சிட்டு போனா விளங்குன மாதிரி தான்". "ஐயா... ரொம்ப பசிக்குதுய்யா" என்றான் கொஞ்சம் கிட்ட நெருங்கி. "விட்டா தலைமேலேயே ஏறுவ போலிருக்கே ச்சீ.. போடா" என்று அவனை தள்ள பக்கத்தில் இருந்த கதவில் பட்டு அவன் கந்தல் சட்டை மேலும் கிழிந்தது. அவன் சட்டையின் கிழிசல் அளவை ஒரு முறை வெறுமையாகப் பார்த்தான் பின் பேசாமல் போய்விட்டான். ரமேஷ் அதைக் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டான். "என்ன ரெடியா..." உள்நோக்கி குரல் கொடுத்தான். "இதோ வந்திட்டோம் டாடி..." குழந்தைகள் ஓடி வந்தன. ஏற்கனவே இருந்த கோபத்தில் வண்டியை தன் மனைவியாக பாவித்து ஒரு உதைவிட்டான். உடனே ஸ்டார்ட் ஆகியது. டாட்டா... மம்மி என குழந்தைகள் கை அசைக்க கிளம்பினான். டாடி எல்லோருக்கும் உதவி செய்றது தான் மனித நேயம்ன்னு சொன்னீங்க நீங்க மட்டும் ஏன் அந்த பையனுக்கு சோறு குடுக்கல... அப்ப நீங்க மனுஷன் இல்லையா... " என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாள் ஸ்வாதி. "ஷட்-அப்" என்று பொரிந்தான். ஸ்கூலில் குழந்தைகளை விட்டு விட்டு அலுவலகம் வந்து வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் யூனியன் லீடர் வந்தார். "ரமேஷ் சார்... தீபாவளி போனஸ் இந்த வருஷம் கிடையாதுன்னு எம்.டி சொல்றாரு நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க", "அப்படியா... சரி என்னன்னு கேட்டு நான் போனஸ் கிடைக்க ஏற்பாடு செய்றேன். நீங்க நிம்மதியாப் போங்க. நாளைக்கு நல்ல பதிலா சொல்றேன்" மாலை 5 மணிக்கு எம்.டி அறைக்குள் நுழைந்தான். "சார் ... போனஸ் ... இல்லைன்னு சொன்னீங்களாமே", "வேற என்ன மிஸ்டர் சொல்றது. போன தடவை லாபம் இரட்டிப்பு மடங்கு வந்ததால் இரண்டு பங்கு போனஸ் கொடுத்தேன். இப்ப முதலுக்கே மோசம்" என்றார். அவருடன் அரை மணி நேரம் வாதாடியும் பயனற்றுப் போகவே கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சே... போனஸ் வாங்கி கொஞ்சம் கடன் அடைக்கலாம் என்று இருந்தேனே என்று யோசனை பண்ணியபடி வரும் வேளையில்... "க்ரீச்" என சத்தம் கேட்டது அடுத்த நிமிடம் சாலையில் உருண்டான் ரமேஷ். அவன் கண் விழித்தான். இருட்டி இருந்தது தான் ஏதோ மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான். பக்கத்தில் நந்தினியும், குழந்தைகளும், கூடவே... அவன். அவன்... அவன் ஏதோ முனகினான். "ஆமாங்க காலைல அடிச்சு வெரட்டினீங்களே அந்த பையன் தான்", "சார்... நீங்க அந்த மோட்டார் பைக்கில வந்திட்டு இருந்தீங்களா அப்படி அந்த கடை வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து இருந்தாங்க. நீங்க தெரியாம வண்டிய அதில விட்டவுடனே வழுக்கிடுச்சு" என்றான் அந்த சிறுவன். அவன் வெற்று உடம்பை கைகளால் மறைத்த படி நின்றான். "நீங்க விழுந்ததைப் பார்த்துட்டு இவன் ஓடி வந்து பார்த்தப்ப உங்க தலைல இரத்தம் வழிஞ்சுகிட்டு இருந்திருக்கு. அப்புறம் தன் சட்டையை கழற்றி உங்க தலைக்கு கட்டுப் போட்டு உங்கள இங்க சேர்த்துட்டு எனக்கு வந்து சொன்னான். அப்புறம் தான் நான் வந்தேன்." என்றாள் நந்தினி. சிறுவனின் கிழிசல் சட்டையைப் போலவே தன் மனதும் கிழிந்ததை உணர்ந்தான். அப் பத்து வயது பாலகனின் குழந்தைத் தனமான பண்புகளில் தனக்கு இல்லாத மனிதப் பண்பைக் கண்டு, கண்ணீர் மல்க அவன் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான். குழந்தைகள் புரியாமல் விழித்தனர். நந்தினி மட்டும் பொருள் பொதிந்த பார்வையை அவன் மேல் நாட்டி புன்னகைத்தாள்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மாக்கினாம்பட்டி என்னும் கிராமத்தில், சசிதரன் என்ற வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்ய திட்டமிட்டார். அவருக்கு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அதிகம். திருமணத்தின் போது, அதிகம் பேருக்கு சாப்பாடு போட வேண்டி வருமாதலால், மொத்தமாக நெல்லை வாங்கி அரிசியாக்கிப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார் வியாபாரி. அதே ஊரில் நிலம் வைத்து விவசாயம் செய்யும் பண்ணைக்காரர் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்ற வியாபாரி, ''ஐயா! என் மகன் திருமணத்திற்காக ஒரு மூட்டை நெல் வேண்டும். நல்ல நெல்லாகக் கொஞ்சம் மலிவான விலையில் கொடுங்கள்,'' எனக் கேட்டார். ''நல்ல நெல்லாக தருகிறேன்,'' என்று கூறிய பண்ணைக்காரர், வீட்டுக்குள் சென்று, ஒரு கூடையில் கொஞ்சம் நெல்லை எடுத்து வந்து காண்பித்து, ''இந்த நெல் மிகவும் உயர்ந்த ரகம். இதையே வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றார். அது நல்ல நெல்லாகவே இருந்தது. ஆகவே வியாபாரி அதையே வாங்கிக் கொள்வது என தீர்மானித்து விலையைக் கேட்டார். பண்ணைக்காரர் கூடையிலிருந்த நெல்லைக் காண்பித்து, ''இந்த நெல்லின் விலை ஆயிரம் ரூபாய்,'' என்றார். வியாபாரி! உடனே ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, ''பண்ணையாரே! நெல் மூட்டையை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்,'' என்று கூறி வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரம் சென்றபின் பண்ணையார் அனுப்பிய ஆள், விவசாயியின் வீட்டுக்கு வந்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நெல் மோசடி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மரக்காணம் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது வானம் லேசாக இருண்டிருந்தது. காற்று இறுகி உறைந்துவிட்டது போலிருந்தது. பகல் மூன்று மணிக்குரிய வெயில் இல்லை என்றபோது முழுக்கை சட்டைக்குள் புழுக்கத்தை உணரமுடிந்தது. கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடல் எப்போதுமில்லாத மௌனத்தில் இருந்தது. அதன் அலைகள் சோம்பலாகப் புரண்டுகொண்டிருந்தன. எதுவோ விரும்பத்தகதாது நடக்கப்போகிறது என்றது உள்மனம். premonition. அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது. ஏதோ மாயக் குரலொன்றுக்குப் பணிந்து அச்சமூட்டும் இருண்ட குகையினுள் நுழைகிறேன். கால்பட்டு உருளும் சிறு கல்லும் சொல்லொண்ணாத பீதியைத் தருகிறது. எதிர்பாராத கணத்தில் குறுக்காகப் பறக்கும் வெளவால் இதயத்தை உலுக்கிவிடுகிறது. இருள் பூசிய குகைச் சுவர்களிலிருந்து அச்சம் வழிந்த படியிருக்கிறது. தைரியமனைத்தையும் திரட்டி சட்டெனத் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிடுகிறேன். எவ்வளவு நிம்மதி. ஒத்திகை கச்சிதம். ஆசுவாசமாகவும் இருக்கிறது. செயல்படுத்த நினைக்கும் தருணத்தில் சுற்றிலுமுள்ள காற்று திண்மமாகிவிடுகிறது. அடிவயிறு குழைந்து கால்கள் தள்ளாட்டம் கொள்கின்றன. கண்களில் நீர் முட்டுகிறது. குகை வழி முடிவற்றுப்போய்க் கொண்டேயிருக்கிறது. ராஜேஷிடம் சொன்னால் மிகத் தயாராக வைத்திருக்கும் பதிலை, அதைக்காட்டிலும் சரியான பதில் வேறொன்று இருக்கமுடியாது என்பது போன்ற தோரணையில் சொல்வான். எல்லாம் உளவியல் சிக்கல் என்பான். நிச்சயம் ப்ராய்டோ, யுங்கோ அவன் உதவிக்கு வருவார்கள். ''தட்ஸ் நத்திங்.'' முன்கூட்டியே உலகின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் முடிவில்லாத எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு சுவிட்ச்சுகள் போன்ற பொத்தான்களை அழுத்தியதும் தடையில்லாது கொட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதென அவன் உறுதியாக நம்புபவனாக இருக்கவேண்டும்; அதுமட்டுமில்லாமல் எந்தச் சிக்கலுக்கு எந்தப்பொத்தானை அழுத்த வேண்டுமென்பதை அறிந்த திறமைசாலியாகவும் அவன் தன்னை எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். வெளிர்பச்சை உடம்பில் மங்கிய வெள்ளை எழுத்துகளோடு கிழக்குக் கடற்கரைச் சாலை பேருந்து வந்தது. அதில் ஏறுவதன் மூலம் இந்த மன உளைச்சல் அகன்று போகலாம் என்ற நினைப்பு நிம்மதி தருவதாக இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலைப் போருந்துகள் என்ற ஈ.சி.ஆர். பேருந்துகள் மரக்காணத்திலிருந்து பாண்டிச்சேரி போகும் வழியிலுள்ள கணக்கிட முடியாத நிறுத்தங்களில் குறிப்பிட்ட சிலவற்றில் மட்டுமே நிற்கும். நின்று நின்று போகும் பஸ்ஸில் பயணிப்பது மாதிரியான அவஸ்தை வேறெதுவுமில்லை. பயணம் என்றாலே வேகம் என்றுதான் மனதில் பதிந்திருக்கிறது. இந்த பஸ் வந்தது அதிர்ஷ்டம் தான். அன்று வெள்ளிக்கிழமை. வாரக்கடைசி என்பதால் சென்னையிலிருந்தே மிகுதியான கூட்டத்துடன் வந்துகொண்டிருந்தது பஸ். தோளில் மாட்டிய பையுடன் நிற்பது அசௌகரியமாக இருந்தது. இரு மருங்கிலும் யூகலிப்டஸ் மரங்கள் நகர கருவாழைப் பட்டையென மின்னிய சாலையில் பேருந்து வேகமெடுத்தது ஓட ஆரம்பித்தது. சாலையை நிர்மாணிக்கும் பொறுப்பையேற்றிருந்த ''அஃப்கான்ஸ்'' நிறுவனம் தனது ரத, கஜ, துருக, பதாதிகளுடன் முகாமிட்டிருந்தது. தற்போது புழுதி மண்டிய பொட்டல் வெளியாக கிடக்கும் மைதானத்தைக் கடக்கும்போது மரக்காணம் எல்லை முடிகிறது. பேருந்து மண்டவாயைத் தாண்டும்போது மறுபடி அந்த எண்ணம் மனதைக் கவ்விப் பிடித்தது. சாலையோர பென்சில் மரங்களிலும் அவ்வப்போது தென்படும் சிறு தாமரைக்குளங்களிலும் கவனத்தைக் குவித்து இந்த அவஸ்தையினின்றும் விடுபடலாமென்றால் முடியவில்லை. இப்போது ராஜேஷ் அருகில் இருந்து அவனிடம் இதைச் சொன்னால் கன்னக் கதுப்புகள் அதிரச் சிரித்து '' போடா முட்டாள்!'' என்பான். ''உனக்கு மனப்புழுக்கம் ஜாஸ்தி. சதா கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய். உட்புழுங்கி உட்புழுங்கி மனம் நைந்து போய் விட்டது. எதையெடுத்தாலும் பதற்றம். ஜன்னலைத் திற. கொஞ்சம் காற்றாவது வெளிச்சமாவது உள்ளே வரட்டும். நன்றாக மூச்சை இழுத்து விடு. சோம்பல் முறித்துவிட்டு இப்படியே கொஞ்சதூரம் ஓடிவிட்டு வா. முடிந்தால் என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு. பிறகு உலகமே ஒரு பூந்தோட்டமாகி அதில் நீயொரு பட்டாம்பூச்சியாகி விடுவாய்.'' அவனது பேச்சுகளில் ''என்னை நினைத்தபடி ஒரு பீர் சாப்பிடு'' என்பதை சாமர்த்தியாகப் புகுத்திவிடுவான் ராஜேஷ். ''கவ்விப் பிடிக்கறா மாதிரி முதுக வலிக்குதுடா'' என்று புகழேந்தி சொன்னால் ''மெத்தையை விட்டு வெறுந்தரையில் தலைகாணி இல்லாமல் படு. சரியாகப்போகும். இல்லையானால் என்னை நினைத்து ஒரு பீர் சாப்பிடு'' என்பான். அவன் அடிக்கடி பயன்படுத்தும் இந்த சொற்றொடர் அவன் பேச்சுக்கு ஒருவித அமானுஷ்யத் தன்மையையும் கவர்ச்சியையும் அளிப்பதாகத் தோன்றியது. இதை அவன் படித்த புத்தகங்கள் ஏதேனும் ஒன்றிலிருந்து பிடித்தானா, இல்லை அவனே உருவாக்கினானா தெரிய வில்லை. அவனை நினைத்தபடி சாப்பிடும் பீர் ஒரு சர்வரோக நிவாரணி அல்லது கவலை துக்கம் இவற்றை அகற்றிவிடும் ஓர் அற்புத மருந்து என்ற வகையிலேயே அவன் அந்த சொற்றொடரைப் பயன்படுத்தினான். ஆனால், எங்களை பீர் சாப்பிடச் சொல்லும் ராஜேஷ் ஒருபோதும் பீர் சாப்பிடமாட்டான். நான், குமரவேல், புகழேந்தி, தயாளன் எல்லோரும் சேர்ந்து பீர் சாப்பிடுவோம். ஆனால் ராஜேஷை நினைத்தபடி சாப்பிட்டது எத்தனை தடவையிருக்குமென்று தெரியவில்லை. நாங்கள் பீர் சாப்பிடும் போதெல்லாம் எங்கள் எதிரே எதையாவது கொறித்தபடி அவனும்தான் அமர்ந்திருப்பான். என்னை நினைத்தபடி சாப்பிடுகிறீர்களா என அவனும் கேட்டதில்லை. பஸ் அனுமந்தையில் நின்றபோது ஒரு வயதானவரும் அவர் மகள் போலத் தோன்றிய ஒரு பெண்ணும் இறங்கினார்கள். கொஞ்சமும் லஜ்ஜையின்றி பாய்ந்து சென்று தனக்கும் தன் புது மனைவிக்குமாக காலியான இருக்கைகளைப் பிடித்தான் ஒருவன். மீன் கூடையுடன் ஏற முயன்ற பெண்ணை ஏறக்கூடாதென்று தடுத்து விசிலை ஊதினார் கண்டக்டர். அந்தப் பெண்ணின் முகபாவத்தைப் பார்த்தால் பஸ் கிளம்பியபின் நிச்சயம் மோசமாகத் திட்டித் தீர்ப்பாள் என்று தோன்றியது. அடித்துப் பிடித்து இருக்கையைக் கைப்பற்றி அமர்ந்தவனும் அவன் புதுமனைவியும் நான் நின்றிருந்த இடத்திலிருந்து பார்வைக்கு நன்றாகத் தெரிந்தனர். பளிச்சென்ற ஆடையும் தங்க ஆபரணங்களும் அவர்கள் இருவரும் புதுமணத் தம்பதிகள் என்பதைப் பறைசாற்றின. சாலையின் இடதுபுறத்தில் சிறு கற்களை வைத்து எல்லை வரைந்து இடத்தை ஆக்ரமித்து தானியம் காய வைத்திருந்த பகுதிக்கும் எதிரே வந்த வேனுக்கும் நடுவே கிடைத்த குறுகிய இடைவெளியில் வேகமாக ஒடித்துத் திருப்பினார் டிரைவர். ஒரு கணம் நிலை குலைந்தாற் போலிருந்தாலும் சுதாரித்து சாமர்த்தியமாகச் செலுத்திவிட்டார். பயணிகளில் சிலர் ஒரு நொடி கலவரமடைந்து பிறகு சகஜ நிலையை அடைந்தனர். எனக்கு தாமஸின் ஞாபகம் வந்தது. இது போன்ற எதிர்பாராத தருணங்களில் அவன் அவனையுமறியாமலே ''இயேசுவே ரட்சியும் என்றுவிடுவான். இதை நினைக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. அந்த புதுமணப்பெண் என்னை முறைப்பது போலப் பார்த்தாள். அவளைப் பார்த்து நான் சிரித்ததாக நினைத்திருப்பாளோ? நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். பேருந்திலிருந்த சிலர் எதுவுமே நடவாதது போல் பராக்கு பார்த்தவாறும் புத்தகம் படித்தவாறும் வந்தனர். நின்று கொண்டு வந்தவர்கள் மட்டும் பஸ் குலுங்கியதில் தங்கள் நிலைதடுமாறியவர்களாய் சிறிது பிரயாசையுடன் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கவுண்ட்டரில் நிற்பவன் அலுமினியத் தகடு அடித்த பெரிய ரெப்ரிஜிரேட்டரின் மூடியைத் திறந்து குனிந்து உள்ளேயிருக்கும் பீர் பாட்டிலை எடுக்கிறான். பாட்டில் லேபிள் நனைந்து சொதசொதவென்றிருக்கிறது. கவுண்ட்டரில் வைத்து பாட்டிலைத் திறக்கையில் மெதுவே நுரை பொங்கி பாட்டிலின் கழுத்தைத் தாண்டி ஒரு சின்ன காலிபிளவர் போல வெளியே பிதுங்கி நிற்கிறது. கையில் பாட்டிலைப் பிடிக்கும்போதே அதன் குளிர்ச்சி கிளர்ச்சியூட்டுகிறது. குமரவேல் சொல்வான் '' நல்ல பீர் சிறு கசப்புடன் கரகரவென்று தொண்டையை அறுத்த மாதிரி உள்ளே இறங்க வேண்டும்.'' பீர் சாப்பிடும் எண்ணம் வந்ததும் பிற எண்ணங்கள் கலையத் துவங்கின. காலாப்பட்டைத் தாண்டும் போது சாலையின் இடதுபுறமாக நுரைத்துப் பொங்கியபடி தோன்றிய கடலே ஒரு ராட்டச பீர் கோப்பை போலத்தான் தெரிந்தது. பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலேயே பார். பாரை அடைந்த போது தாகம் கூடிவிட்டிருந்தது. பணத்தைக் கொடுத்து பீர் ஒன்றை வாங்கி கவுண்ட்டருக்கு அருகில் நின்றபடியே குடித்தேன். யதேச்சையாக அப்போது ராஜேஷின் நினைவு வந்தது சிரித்துக்கொண்டேன். விழுப்புரம் பேருந்து புறப்பட்டு நகரத்தைக் கடந்து வேகமெடுத்த போது மனம் ஒருவித மோனத்துள் அமிழ ஆரம்பித்தது. எந்தப் பதற்றமும் இல்லை. மனதைப் பிடுங்கிய எண்ணங்கள் காணாத தொலைவு சென்றுவிட்டிருந்தன. சுத்தமாகத் துடைத்துவிட்டது போன்று சலனமற்றிருந்து மனம். இது போன்ற ஒரு அமைதியை இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. மெல்ல சிந்தனைகள் ஆரோகணித்து வந்தன, ஆனாலும் அமைதி குலையவில்லை. ''அமைதியின் சத்தத்தைக் கேட்டிருக்கிறாயா?'' ஒரு முறை ராஜேஷ் கேட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மெதுவான வேகம், அழகான அசிங்கம் மாதிரி அமைதியின் சத்தம் என்பது எதாவது பாரடாக்ஸா? ''பி.பி.சி.ரேடியோ, அமைதியின் சத்தத்தை வெளியிட்டிருக்கிறது. பி.பி.சி ரேடியோ நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் ஓசைகளுக்கு இடையே உள்ள அதாவது வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனத்தை மட்டும் கம்ப்யூட்டர் உதவியுடன் எடிட் செய்து இதுதான் அமைதியின் சத்தம் என்று வெளியிட்டிருக்கிறார்கள்.'' ராஜேஷ் சொல்லும் சில விஷயங்களை நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது. இப்போது என்னால் அமைதியின் சத்தத்தை உணர முடிந்தது. பஸ்ஸின் அதிர்வுகளுக்கேற்ற ஒரு லயத்தில் மனம் புரண்டு கொண்டிருந்த போதும் அமைதி மாறாமலே இருந்தது. பீர் தந்த கிறக்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த அமைதி பின்னணியில் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓட ஆரம்பித்தன. தெளிவில்லாத நினைவோட்டங்கள். ஸ்தூலமற்ற மனச் சித்திரங்கள். எல்லாம் கலந்த என் எண்ணங்களின் கலைடாஸ்கோப்பை வேறு யாரோ குலுக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. பஸ் மாறாத ஒரு தாளகதியில் விரைந்து கொண்டிருந்தது. திடீரென கலைடாஸ்கோப் ஸ்திரமான ஒரு சித்திரத்தைக் காட்டியது. அச்சித்திரம் அப்படியே நிலையாக நின்றது. எப்படிக் குலுக்கினாலும் மறையவில்லை. மாறவுமில்லை. எல்லா தற்காலிகச் சித்திரங்களும் சேர்ந்து நிலைத்த அந்தச் சித்திரத்தை சிருஷ்டித்திருந்தன. அச்சித்திரம் என்னை நிலைகுலையச் செய்தது. திடுக்கிட்டு விழித்தேன். என் மனம் கொண்ட காட்சி நிஜம்தான் என்று உள்ளுக்குள் எதுவோ அடித்துச் சொன்னது. அசைவற்று அப்படியே இருந்தேன். என்ன சிந்திப்பதென்ற பிரக்ஞை கூட இல்லை. கண்டமங்கலம் லெவல் கிராஸிங்கில் பஸ் நின்ற போது சாலையோரக் கடை ஒன்றிலிருந்து ஏதோ பதார்த்தம் எண்ணெயில் வறுபடும் ரம்மியமான வாசனை எழுந்தது. ஒவ்வொரு வாசனையும் ஒவ்வொரு விதமான மன உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த வறுபடும் வாசனை எப்போதுமே எனக்குள் ஒரு புத்துணர்வைத் தருவது. இப்போது அந்த வாசனை எனக்குள் ஏனோ சஞ்சலத்தை உண்டாக்கியது. மெல்லப் பதற்றம் ஆரம்பித்தது. மனம் ஒரு வெற்று வெளியாகி அங்கு காற்று ஓலமிட ஆரம்பித்தது. ஊருக்குப் போகும் டவுன் பஸ்ஸ•க்காக விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, நீர்த்திரைக்குப் பின்னால் இயக்கங்கள் மசங்கலாகத் தோன்றின. காற்று வீச்சுக்கு ஏறியும் தாழ்ந்தும் வளைந்தும் நிமிர்ந்தும் பாலீதீன் பைகளென நகர்ந்தனர் மனிதர்கள். பீர் தந்த கிறக்கம் மெதுவாக விலகத் தொடங்கியது. பதற்றம் கூட ஆரம்பித்தது. டவுன் பஸ்ஸிருந்து நான் மட்டுமே இறங்கினேன். கிராமத்தின் இரவு எட்டரை மணி அமானுஷ்யத்தை பஸ் ஸ்டாண்டிலிருந்த சோடியம் வேப்பர் விளக்கு மிகைப்படுத்திக் காட்டிக்கொண்டிருந்தது. சாலையோரம் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து யாரோ என்னை நோக்கி வந்தார்கள். தயாளன் அவன் முகத்தில் பதற்றம். நான் என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ''மூணு மணிக்கா உங்க வீட்டுக்குப் போலீஸ்காரங்க வந்திருந்தாங்க'' தயாளன் சொன்னான். மனம் அதிர்ந்தது. ஆனால் பார்வையில் படாமல் எங்கோ ஒரு மூலையில் இருக்கம் லிவரை அழுத்தியதும் பெரிய இயந்திரம் ஓய்ந்து சகஜநிலைக்கு வருவது போல உடனே அது சமநிலையும் அடைந்தது. உடல் வியர்த்துக் குளிர்ந்துவிட்டிருந்தது. வியர்வை படிந்த என் உள்ளங்கையால் தயாளனின் மணிக்கட்டை அழுந்தப் பற்றினேன். 'ஏன்?'' என்று நான் கேட்கப்போகும் கேள்விக்கு அவன் சொல்லவிருக்கும் பதிலைத் தாங்கிக் கொள்ள என்னையே தயார்படுத்திக் கொள்ளும் விதமாக எனக்குச் சில வினாடிகள் அவகாசம் தேவைப்பட்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஓசை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கருப்புசாமி, செல்லம்மாள், முருகன், ராஜீ, மனைவி, பன்றிகள் தலைப்பு: அம்மா
திண்ணையில் உட்கார்ந்திருந்த கருப்புசாமி, பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது போல முகம் வாடிப் போய் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தரையையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு மூன்றடி தூரம் தள்ளி அருகாலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த செல்லம்மாள் கருப்புசாமியையே பார்த்தவாறு இருந்தாள். அவன் வாயைத் திறப்பது மாதிரியோ இவளைப் பார்ப்பது மாதிரியோ தெரியவில்லை. கடைசியில் செல்லம்மாள்தான் பேசினாள். "பெரிய பயலெ செத்தே கொண்டாந்து காட்டிட்டுப் போயன்; புள்ளெ கண்ணுலியே நிக்குறாப்லெ இருக்கு. ஒம் பொண்டாட்டி புள்ளிவுளெ ஆயிச்சிக்கிட்டுவந்து இங்க ரெண்டுநாள் இருக்கச் சொல்லென். புள்ளுவுளுக்குக் கூப்புடுற மாரியா பேரூ வச்சியிருக்கிற, சுரேஷ் மகேஷ்ன்னுகிட்டு.", "அனுப்புறன்", "என்னாத்தெ அனுப்புன? புள்ளிவோ இங்க வந்து வல்லிசா ஒரு வருசம் ஆவப்போவுது. இந்த வருசப் பொங்கத் தீவாளிக்குக்கூடவல்லெ.", "லீவ் இருந்தாத்தான அனுப்புறதுக்கு?", "ஒனக்குத்தான் வருசம் முன்னூத்தி அறுவது நாளும் மூச்சுவுட முடியாத அளவுக்கு வேலெ. புள்ளிவுளுக்குமா லீவ் இல்லெ" என்று கேட்ட செல்லமாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. திடீரென்று அவளுடைய முகம் சிவந்தது. "நீ இந்த ஊட்டுலெதான் பொறந்தங்கிறத மறந்துப்புடாத ஒம் புள்ளிவுளுக்கு இந்த ஊரு தண்ணீய குடிச்சா சளி புடிச்சிக்கும். இந்த ஊட்டுலெ படுத்தா கொசி கடிச்சி ஒம் புள்ளிவோ செத்துப்போயிடும். இல்லியா? எனக்கு என்னா ஆனாலும் ஒனக்கு சம்மதம். அப்படித்தான. நானும் ரெண்டு புள்ளெய பெத்து வளத்தவதாண்டா." கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்துப் பார்த்தான். லேசாகப் பல்லைக் கடித்தான். பிறகு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் செல்லம்மாள். அப்போது வாசலில் கூட்டமாக நான்கு ஐந்து பன்றிகள் வந்து தலையை முகர்ந்து பார்க்க ஆரம்பித்தன. "சு..சூ" என்று சொல்லி சத்தம் போட்டுப் பன்றிகளை விரட்டினாள். பன்றிகள் செல்லம்மாள் போட்ட சத்தத்திற்கு அசைந்து கொடுக்காததால், "இந்த சாண்டெ குடிச்சவன் ஊருலெ இதுவோ தொல்லதான் பெரும் தொல்லெ கொள்ளெ நோவு வந்து ஒண்ணும் சாவ மாட்டேங்குது பாரன்" என்று சொல்லி திட்டிக் கொண்டே எழுந்து வந்து பன்றிகளை விரட்டிவிட்டாள். கொஞ்சம் நேரம் வாசலில் நின்று தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். "என்னா வெயிலு அடிக்குது" என்று சொல்லிக்கொண்டே வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். "நம்ப எதில் ஊட்டுக்காரனோட புள்ளெ செத்தப்ப எயவு வச்சியும் நீ வந்து தலெய காட்டுலன்னு மனக்கொறப் பட்டுக்கிட்டான். எதிரு ஊட்டுலெ நடக்குற நல்லது கெட்டதுக்கே போவலன்னா, அப்புறம் எப்படி ஒருத்தர் மூஞ்சியிலெ ஒருத்தர் மூச்சிக்கிறது? காசி பணம் "வா"ன்னா வரும், "போ"ன்னா போவும். மக்க மனுச அப்பிடியா? இந்தூர்ல நம்பளுக்குன்னு நாலு பேரு வாணாமா?" என்று சொன்னவள் கடுப்புடன் "ஒம் மாமியா ஊட்டு சனங்களே போதுமின்னு இருக்கியா? ஆனவங்களோ, ஆவாதவங்களோ சொன்ன மொறமக்கிப் போயி தலெய காட்டுறதுதானெ மருவாத கோடி கோடியா பணமிருந்தாலும்கூட வராது தம்பி" என்று அவள் சொன்னதைக் காதில் வாங்கதவன் மாதிரி கைக்குட்டையால் புறக்கழுத்தைத் துடைக்க ஆரம்பித்தான். வலது காலின் பெருவிரல் நகத்திலிருந்த அழுக்கை எடுத்தவாறே விசும்பலான குரலில், "ஒங்கப்பனாலயும் சரி, ஒங்கப்பன் ஊட்டுச் சனங்களாலயும் சரி, எந்தக் காலத்திலியும் வா, வாத்த ஆதரவு கூட எனக்கு இருந்தது இல்லெ. இப்ப பெத்த புள்ளெயாலயும் இல்லன்னு ஆயிப்போச்சி. நடக்க முடியாத காலத்திலியும் நானே ஒயச்சி நானே திங்குறன்" என்று சொன்ன செல்லம்மாளுக்குக் கண்கள் கலங்கின. முந்தாணையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினாள். "பேசாம அங்க வந்து இரு" என்றான் கருப்புசாமி. என்னாத்தெ வந்து இருக்கிறது? என்ற ஒறவுலெ இருக்கிறது? விடிஞ்சதும் பல்லெ விளக்கிக்கிட்டுப்போனா வெளக்கு வச்ச பெறவு தான் நீ வருவ. நேரா நேரத்துக்கு ஒம் பொண்டாட்டி சோத்தக் கொண்டாந்து எங்கிட்டெ நாயிக்கி வைக்கிறாப்ல வச்சிட்டுப் போயி மொடங்கிக்குவா. எங்கிட்டெ பேசுனா அவளோட அந்துசி கொறஞ்சிடும் பாரு. நாள் முயிக்க தனியா காட்டுல குந்தி கெடக்குறாப்ல கெடக்கணும். இங்க இருந்தாலும் நாலு எடத்துக்குப் போனமா, நாலு பேர பாத்தமா, நாலு வாத்தெ வடிச்சமான்னு பொயிது போவும்.", "நான் அவளெ கேக்குறன்.", "என்னாத்தெ கேட்டெ? உள்பாவாடெ ஒண்ணு வாங்கியான்னு ஒங்கிட்டெ சொல்லி வருசம் ஒண்ணாச்சு. உடுத்துன துணிக்கி மாத்துத் துணி இல்லாம கெடக்குறன். பள்ளிக் கூடத்திலெ பொட்டெ புள்ளிவுளுக்குக் கொடுத்த பாவாடெயில் ஒண்ணு வாங்கித்தான் கட்டிக்கிட்டு கெடக்குறன். "நேரமாச்சு நாள் கௌம்பட்டுமா?", "நீ ஏயாவது படிக்கிறப்ப மரத்திலிருந்து கீய வியிந்து பீச்ச கையி ஒடஞ்சிப்போச்சி. ஒன்னெத் தூக்கிகிட்டு நான் ஊர் ஊரா அலஞ்ச அலச்ச இருக்கே. அது அந்த ஆண்டவனுக்குக் கூட பொறுக்காதுடா. கை கூடி வராணுமேன்னு ராத்தூக்கமில்லாம, பவ தூக்கமில்லாம ஆறு மாசம் கெடந்தான் தம்பி" என்று சொல்லும்போதே செல்லம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழ ஆரம்பித்ததும் கருப்புசாமிக்கு அந்த இடத்தில் உட்கார முடியாமல் போய் விட்டது. சங்கடமாக உணர்ந்தவன் மாதிரி கிளம்பிவிடலாம் என்று நினைத்தாள். ஏதோ சொல்ல வாய் எடுத்தவன், ஒன்றும் சொல்லாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உள்ளங்கைகளில் இருந்த ரேகைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அழுகையினூடே. "இந்த வருச திருநாவுக்குக்கூட நீவல்லெ. இன்னிக்குக்கூட ஒம் பொண்டாட்டி ஊட்டு சொந்தக்காரங்க சாவுங்கிறதாலெ வந்த" என்று சொன்னாள். "எங்க முடியுது", "இப்ப எப்பிடி முடியும்? நான் சாவுற அன்னிக்காச்சும் வர முடியுமான்னு பாரு. "கருப்புசாமி வெடுக்கென்று தலையைத் தூக்கிக் கோபமாக செல்லம்மாளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காமல் சளியைச் சிந்தித் தரையில் தேய்த்தாள். அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த மூக்கன், கருப்புசாமியைப் பார்த்ததும் விசாரிக்க ஆரம்பித்தான். "எப்ப கருப்புசாமி வந்த? சாவுக்கு வந்தியா? ஒம் பொண்டாட்டி புள்ளெயெல்லாம் எப்பிடி இருக்கு? வயசான காலத்திலெ ஒங்கம்மாவ தனியாவுட்டு வச்சியிருக்கியே. அது இன்னம் எம்மாம் காலத்துக்குத் தான் பாடுபட்டு சாப்புடும்? என்று மூக்கன் தொணதொணவென்று பேச ஆரம்பித்ததும், செல்வம்மாள் தான் இடைமறித்து, "அவன் பாக்காம வேற யாரு பாக்கப்போறா? வெயிலுல நிக்குறியே மாமா? வெயில் தார வாயன் பேசிக்கிட்டிருக்கலாம். தம்பி இன்னிக்கி ஊர்லதான் இருக்கப் போறான்" என்று சொல்லி மூக்கனைத் தொடர்ந்து பேசவிடாமல் அனுப்பிவைத்தவள் "உள்ளார வந்து குந்துடா தம்பி. தெருவுலெ போறவங்க வற்வங்களுக்கெல்லாம் பதிலு சொல்லி மாளாது. ஒருத்தங்க கண்ணு மாரி இருக்காது. அப்பறம் காச்ச தலவலின்னு வந்துடும். அந்தக் காலத்திலிருந்தே ஒனக்கு நோவு தாங்காத ஒடம்பு" என்று சொல்லி, அவள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், கருப்புசாமி உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. "நான் போறன்" என்று சொன்னான் கருப்புசாமி. "புளி ரெண்டு உருண்ட தரன் எடுத்துகிட்டு போ" என்று சொன்ன செல்லம்மாள் எழுந்து வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்திருந்த புளியை எடுத்துவந்து ஒரு பையிக்குள் போட்டு அவனிடம் கொடுத்தாள். உட்காரப்போனவள், "மொச்ச பயிறு ஒர படி ஆவும். இங்க யாரு இருக்கா திங்க. எடுத்துக்கிட்டுப்போயி புள்ளிவோகிட்டெ கொடுக்குறியா?" என்று கேட்டவள், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கூடக் கேட்காமல் மீண்டும் வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி, மொச்சைப் பயிரை கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். முன்பு போலவே உட்கார்ந்து அவனிடம் பேச ஆரம்பித்தவள், சட்டென்று நினைவுக்கு வந்தது மாதிரி, "நம்ப ஊரு ஏரியிலெ மீனு புடிக்கப் போனப்ப ரெண்டு கொயம்புக்கு ஆவுறாப்லெ மீனு ஆப்புட்டுது. ஒருத்திக்காகப் போயி மீனுகொயம்பு வைக்கிறதான்னு காயப் போட்டுட்டன். கருவாடுன்னா புளிச்சிப்போன சோத்துலெ உப்புப்போடாமகூட திங்கறவனாச்சே நீ! ஒனக்குன்னு வத்த போட்டு வச்சியிருக்கன் எடுத்தாரட்டுமா?" என்றாள். "சரி" சின்னப்பிள்ளை மாதிரி வேகமாக எழுந்து வீட்டுக்குள் போனவள், அடுக்குப்பானைகளை இறக்கி சவ்வுத்தாள் காகிதத்தில் முட்டணமாகக் கட்டி வைத்திருந்த கருவாட்டை எடுத்துவந்து கருப்புசாமி வைத்திருந்த பைக்குள் செருகிவைத்தாள். "விசியமிருந்தா ஆள் வுடு, வரென்" என்று சொல்லிவிட்டு எழுந்த கருப்புசாமியிடம், "அக்காவ ஒரு எட்டுப்போயி பாத்துட்டு வாடா தம்பி" என்று சொன்ன செல்லம்மாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. "பாக்குறன்", "படிச்சன் படிச்சன்"னு சொல்லிக்கிட்டு திரியிற பயலுக்கு எம் பொண்ணெ கொடுக்கமாட்டன்னு சொன்ன ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்க இப்ப ஒனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களாயிட்டாங்க! யாரப் பார்த்துப் பொறுக்கிப் பயன்னு சொன்ன? என்னிக்கிருந்தாலும் எந் தம்பி கவுருமண்டு வேலெக்கிப் போவத் தான் போறான். ராசாமாரி கால ஆட்டிக்கிட்ட சாப்புடத்தான் போறான், அதெப் பாத்துட்டு இந்த ஊரு பயலுவோ மூக்குமேல வெரல வக்கிறத நான் பாக்கத்தான் போறன்னு சொல்லி ஊடேறிப் போயி சண்டெப் போட்ட ஒத்தெ அக்காக்காரிய பாக்கெ ஒனக்கு மனமில்லெ. கோயி குஞ்சிய தூக்கிப் பறாந்துக்கு எற கொடுத்துட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு அவ படுற தவுசியப் பாத்து ஊரு சனங்களே வாயுருவிப்போவுது. எங்கிட்டெ என்னா இருக்கு கொடுக்கிறதுக்கு?" என்று சொன்னவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டாள். இடையில் "கால கள, அந்திக் களன்னு வெட்டி அவதான் ஒன்னெ படிக்கவச்சது" என்று சொன்னாள். "போயிப் பாக்குறன்", "செடிய வச்சி தண்ணீ ஊத்துனவங்களெ மறந்துப்புட்டு, பூத்தத பறிக்க வந்தவங்களெ நல்லவங்கின்னு நெனக்கிறது, செய்யுறதுதான ஒலக நடொமொற.", "போறன், போறன்.", "என்னாத் போனெ? மூணு வருசமாத்தான் போற? கண்ணாலம் கட்டிப் போனாலும் புருசங்காரன் கண்ண மறச்சி, வருவாத் தோறும் ஒனக்கு அவ கையிலெ உள்ளத, "இந்தாடா தம்பின்னு" ஒனக்குக் கொடுக்கலெ? இன்னிக்கு அவ பீத்த மொறமாப் போயிட்டா இல்லெ. நம்ப ஊட்டுக்கு அவ ஒரு பொண்ணு. அவ கண்ணுத்தண்ணீ வுட்டா ஒன்னெ அப்பிடியே கேட்டுடும்" என்று சொன்னவளுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையினூடே, "ஒனக்கு ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்களெ பாக்குறதுக்கேதான் நேரம் பத்தாது" என்று சொன்னாள். "செத்தெ பேசாம இருக்கியா? இந்தச் சனியனுக்குத்தான் இங்க வரதில்லெ" என்று சொல்லி கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்தான். அதே அளவுக்கு அவளும் திரும்பி முறைத்தாள். "நீ வேலெக்கிப் போறதுக்கு மின்னாடி, இன்ட்ரிக்கிப் போவணுமின்னு சொன்னப்ப, இந்த ஊருல நம்பள நம்பி நூறு ரூவா கொடுக்க ஆளு இருந்துச்சா? கடன் கேட்டு நான் யாருயாரு காலு எல்லாம் வியிந்தன்னு ஒனக்குத் தெரியுமில்லெ. நைய்யா பைசா பெரலை. வேற வய்யி இல்லாத, "புள்ளெயோட வேலெயவிட செத்துப் போனவன் கட்டுன தாலி பெருசா"ன்னு சொல்லித் தாலிய அடவு வச்சித்தான் அன்னிக்கி ஒன்னெ அனுப்புனன். ஒங்கப்பன் ஊட்டுப் பொருளுன்னு அது ஒண்ணுதான் எங்கிட்டெ இருந்துச்சி". "இதயே எத்தினி தடவ சொல்லுவ? இந்தச் சனியனுக்குத்தான் ஊருக்கு வரதே இல்ல.", "எல்லாம் நடந்த கதெதானே! பொய்யாச் சொல்லுறன். பெத்தவ ஒணணு நெனச்சா புள்ளெ ஒண்ணு நெனக்கிதுன்னு சும்மா சொல்லுல தம்பி. எனக்கு எயிவது வயசாச்சி. இன்னம் களவெட்டித்தான் சோறுதிங்கிறன்.", "என்னா மசுருல நடந்த கதெ" என்று சொல்லி கருப்புசாமி கத்த ஆரம்பிக்கும்போத ராஜீ வந்தான். நீ வந்தன்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டுப் போவலா மின்னுதான் வந்தன்." என்று சொன்னவனை முகத்திலடிப்பது மாதிரி "நீ போயி ரோட்டுல நில்லு ராஜீ. நான் வரன், அங்கப் பேசிக்கலாம்" என்று சொல்லி ராஜீயைப் போகச் சொன்னான். திகைத்துப்போன ராஜீ மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போனான். "அவனும்தான் புள்ளென்னு இருக்கான். ஒத்தயா மூணு அக்கா தங்கச்சிவுள ஒரு கொற இல்லாம சீர் செனத்தின்னு செஞ்சி கட்டிக் கொடுத்தான். மூணு பேரும் வந்தா இன்னிக்கும் நல்லத கெட்டத பாக்குறான். பெத்தத் தாயி தவப்பன குந்தவச்சி சோறபோடுறான்" என்று ராஜீயைப் பற்றி செல்லம்மாள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விர்ரென்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் கருப்புசாமி. "காரு வர நேரம் இருக்கும்போதே யாண்டா தம்பி பறக்குறவன்?" என்று கேட்டவள் "இரு வரன்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். பழைய பெட்டியில் எதையோ தேடி எடுத்துக் கொண்டு வந்தவள். நூறு ரூபாய் நோட்டு இரண்டை அவனிடம் கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொள்ளாமல் வீறாப்பாக அவளிடமே திரிப்புத்தர முயன்றான். கட்டாயப்படுத்தி அவனுடைய கையில் பணத்தைத் திணித்து விட்டவள், சாதாரணமாக, ஒருகோண மூஞ்சிக் குட்டியவித்தன். "இந்தா தரன், அந்தா தரன்" ன்னு சொல்லி ஒரு மாசம் இயிக்கப்போட்டு நேத்துத்தான் பணத்தெ கொண்டாந்து கொடுத்தானுவோ. பணத்தெ வச்சிக்கிட்டு நான் என்னாப் பண்ணப் போறன்? இத வச்சி ஒம்மவளுக்கு என் நெனவா ஒரு காலு கொலுசி எடுத்துப்போடு" என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து கைப்பையைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு வீட்டைச் சாத்திவிட்டு "வாடா தம்பி, காரு ஓடிப்போயிடும்" என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தாள். ஏதோ சொல்ல வாயெடுத்த செல்லம்மாளிடம், "பேசாமவாம்மா" என்று கருப்புசாமி சொன்னதைக் காதில் வாங்காதவள் மாதிரி சொன்னாள்: "பொண்டாட்டின்னு ஒங்கப்பங்காரன்கிட்டெ தாலி கட்டிக்க வந்த நாளுல இருந்து ஒங்கக் கூட்டத்திலெ இந்த வாத்தத்தான் நான் கண்டன். என்னோட ஆவி போனாத்தான் ஒனக்கு நல்லது கெட்டது தெரியும் தம்பி. எனக்கு நீ முந்தியா, ஒனக்கு நான் முந்தியா? ஒன்னெ நம்பியாடா நான் பொறந்தென். போடா."
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள். வீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர். இரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். முடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை. வழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள். சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை. அரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது. அரசே! உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். புலவரே! உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்? அரசே! வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா? மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா? புலவரே! மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது. அரசே! ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே? புலவரே! வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ? மக்கள் துன்பம் அடைவார்களோ? இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது. அரசே! வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்? எனக்கு வியப்பாக உள்ளது. புலவரே! சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம். மக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன். அரசே! வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்? புலவரே! சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது. சோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை? இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன? இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன? இதை அவர் அறிய வில்லையா? புலவரே! புகழ் வெறி யாரை விட்டது? பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது. அமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது. நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை. இருவரும் அங்கிருந்து சென்றார்கள். சோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார். அமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். அவையினரே! என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர். படைத் தலைவர் எழுந்து, அரசே! கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார். படைத் தலைவரே! என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி. அரசே! நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள். சேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி. அமைச்சர் எழுந்து அரசே! என் கருத்தை இங்கே சொல்லலாமா? என்று கேட்டார். அமைச்சரே! எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள். அரசே! நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா? சிந்தியுங்கள். அமைச்சரே! வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும். அரசே! அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர். படைத் தலைவரே! ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள். அரசே! கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர். என் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். அவையினர் உணர்ச்சிப் பெருக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். கருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது. அரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார். படைத் தலைவரே! என்ன செய்தி? அரசே! சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம்? இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். நாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா? அரசே! நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும். படைத் தலைவரே! கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத் தலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன். தங்கள் கட்டளை அரசே! என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார். முடமாசியாரே! போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா? ஆம் அரசே! நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். புலவரே! சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை. அரசே! நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார். கருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது. காலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். சோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார். குன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். எதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களால் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர். அங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர். பாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான். பாகனே! பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன். தயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே! பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது. பட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான். பாகனே! மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார். அரசே! வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன். யானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது. பாகன் திகைத்து நின்றான். பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது. வீரர்கள் ஓடி வந்தார்கள். ஐயோ! பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள். வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை. யானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது. கருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர். கோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர். புலவரே! கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க! வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா? அரசே! சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள். புலவரே! நாங்கள் போரையா விரும்பினோம்? சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும். அரசே! அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன் துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான். ஆம் புலவரே! அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு? அரசே! நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது. புலவர் தனக்குள் ஆ! யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா? எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்? மதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்? என்று நினைத்தார். புலவரே! ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்? அரசே! அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர். புலவரே! நீங்கள் சொல்வது உண்மையா? யானையின் மேல் இருப்பது சோழ அரசனா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள். அரசே! அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன். அவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்? அரசே! யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும். புலவரே! நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள். அரசே! யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும்? தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும். புலவரே! என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்? அருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார். அரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான். சிறிது நேரத்தில் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார். முகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர். வாருங்கள்! சோழ அரசரே! எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார். ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர். இங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள். இங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம். போர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை. நற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார். நண்பரே! மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன். உங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார். இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். நண்பரே! நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை. அப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர். அருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார். அணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். இரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள். இவனியா ரென்குவை யாயி னிவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலி யன்ன களிற்று மிசையோனே களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும் பன்மீ னாப்பட் டிங்கள் போலவும் சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே (புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'போர்க்களத்தில் எதிரி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: இது ஒரு மிகவும் அழகான கதையாகும். ஆன்மீகத்தின் முழு வரலாற்றிலும் இதற்கு இணையான கதையே கிடையாது. ஆகவே இதை புரிந்து கொள்ள வேண்டும். நீ இதை தவறாக புரிந்து கொள்வாய். இதை தவறாக புரிந்து கொள்வது மிகவும் எளிது. இதை படிக்கும் யாரும் எப்படி புரிந்து கொள்வார்களோ அப்படித்தான் நீயும் புரிந்து கொள்வாய். கேள்வி எழும் : இரண்டு ஞானமடைந்த மனிதர்கள் ஏன் தங்களது குரு இறந்ததால் பாதிக்கப்பட்டனர் ? அவர்கள் பாதிக்கப்படவேயில்லை. அது துயரத்தினால் நிகழ்ந்ததல்ல. அது முற்றிலும் வேறுபட்ட பரிமாணம். ரஜப் திரும்பவும் தனது கண்களை திறக்கவேயில்லை. அவரிடம் ஒருமுறை ஏன் அவர் தனது கண்களை திறப்பதேயில்லை என்று கேட்கப்பட்டது. அவர், “நான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயத்தை பார்த்து விட்டேன். இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறினார். டாடூ ஒரு மிக அழகான மலர். இப்போது உனது கண்களை திறந்து வைப்பதால் என்ன பயன் ? உன்னிடம் கோஹினூர் வைரம் இருக்கும்போது நீ எதற்காக கடற்கரை கூழாங்கற்களை சேகரிக்கிறாய் ? – சேகரிப்பாயா ? ரஜப் பாதிக்கப்படவில்லை. சோகத்தினால் அவர் தனது கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. அவர் அழவில்லை, அவர் தேம்பவில்லை. மூடிய கண்களுடன் அவர் டாடூவின் பாடல்களை பாடி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர், “ஒருமுறை கடவுளை மனித உருவில் பார்த்துவிட்டால் பின் வேறு என்ன இருக்கிறது பார்ப்பதற்கு ? வேறு எதுவும் பார்ப்பதற்கு இல்லை ! நான் எனது கண்களில் பதிந்துள்ள எனது குருவின் உருவத்தை எனது இறுதி பதிவாக வைத்திருக்க விரும்புகிறேன். அதைத் தவிர வேறு எதையும் அதில் படியவைக்க விரும்பவில்லை. அது தூசியால் மூடப்படவும் விரும்பவில்லை. “ என்றார். அம்புபாய், இப்போது இந்த முழு கதையும் வேறுவிதமாக தோன்றுகிறது. இது மிக அபிரிதமான அன்பு. இது குருவின் உடலோடு கொண்டுள்ள ஈடுபாடு அல்ல. இது மிகப் பெரிய புரிதலாகும். நீ ஒரு முறை குருவை பார்த்துவிட்டால் !! ரஜப் தனது குருவோடு நெருக்கமாக வாழ்ந்துவந்தார். அவர் தீட்சை பெற்றபோது அவருக்கு வயது ஏழு. மிகச்சிறிய பையன். ஒரு திருவிழாவில் கலந்துகொள்ள தனது பெற்றோர்களுடன் அவர் வந்திருந்தார். அவருக்கு டாடூவைப் பற்றி எதுவுமே தெரியாது. டாடூவும் அப்போது அங்கிருந்தார். டாடூ ஞானமடைந்தவர் என்பது நாடெங்கும் அறிந்த செய்தியாதலால் ரஜப்பின் பெற்றோர் அவரை வணங்கி செல்ல போனார்கள். அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, எனினும் அந்த நாடு பாரம்பரியமும் பழமையும் வாய்ந்தது. யாராவது ஞானமடைந்தவர்கள் என்று கேள்விப்பட்டால் அது உண்மையோ, பொய்யோ, போய் அவர்கள் காலை தொட்டு வணங்கி விட்டு வருவார்கள். உண்மையிலேயே அவர் அடைந்திருந்தால் ஏன் வாய்ப்பை தவற விட வேண்டும் ? அவர் உண்மையிலேயே அடையவில்லை யென்றாலும் உனக்கு ஒன்றும் இழப்பில்லையே.! இது தந்திரமானது, வியாபாரத்தனமானது. பெற்றோர் சென்றனர். ரஜப் தொடர்ந்தார். பெற்றோர் அவரது காலை தொட்டு வணங்கினர், ஆனால் ரஜப் நிலைமாற்றமடைந்துவிட்டார். அவர் டாடூவை பார்த்த கணமே தனது சென்ற பிறவிகளிலிருந்து ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுவிட்டார். இந்த மனிதன் புதிதல்ல. இந்த குணங்களும் புதிதல்ல. அவரை முன்பே தனக்குத் தெரியும் என்பதை உணர்ந்து கொண்டார். நீ ஒரு குருவுடன் வாழ்ந்திருந்தால் உடனடியாக அவரை அடையாளம் கண்டு கொள்வது எப்போதும் நிகழ்வதுதான். அவர் அவரது காலடியில் விழுந்துவிட்டார். பெற்றோர் ரஜப்பை தங்களோடு அழைத்து செல்ல மிகவும் முயற்சித்தனர். ஆனால் ரஜப், “ நான் எனது உண்மையான பெற்றோரை கண்டுவிட்டேன். நீங்கள் போகலாம் “ என்றார். “ நீங்கள் டாடூவின் காலை தொட்டு வணங்கியது போல நானும் உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன், சென்று வாருங்கள் “ என்று கூறி விட்டார், ஏழு வயது பையன். பல முற் பிறவிகளில் இந்த பக்குவம் வந்திருக்க வேண்டும். பெற்றோர் கதறி அழுதனர், ஆனால் ரஜப், “சாத்தியமேயில்லை, நான் அவரை கண்டுவிட்டேன், இனி ஒரு கணம் கூட அவரை விட்டு விலக என்னால் முடியாது.” என்று கூறி விட்டார். அப்போதிலிருந்து இருபது வருடங்கள் அவர் தனது குருவின் அருகிலேயேதான் இருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டு, அதே அறையில் தூங்கிக் கொண்டு, அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். டாடூ இறந்த அன்று ரஜப் வெறுமனே தனது கண்களை மூடிக் கொண்டுவிட்டார். அது இந்த உலகுக்கு தனது கண்களை மூடிக் கொண்டுவிடுவது. அவர், “ இப்போது பார்ப்பதற்கு எதுவும் இல்லை, எதை பார்க்கவேண்டுமோ அதை நான் பார்த்துவிட்டேன். இப்போது ஏன் அனாவசியமாக கண்களை வீணடித்து குப்பையை சேகரித்துக் கொள்ள வேண்டும் ? நீ ஒரு முறை கடவுளை பார்த்து விட்டாலே போதும் ! அங்கு வேறு எதையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை. நீ இறுதியானதை பார்த்துவிட்டாய் “ என்று கூறியிருக்கிறார். அம்புபாய், ரஜப் தனது கண்களை மூடிக் கொண்டது பந்தத்தினால் அல்ல. அது மிகப் பெரிய புரிதலில் இருந்து வந்தது. அவர் துக்கப்படவில்லை. அவர் நடனமாடிக் கொண்டிருந்தார், அவர் வாழும்வரை மூடியகண்களுடன் பாடியபடி ஆடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் தனது குருவை உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தார். இருபது வருடங்கள் தொடர்ந்து தனது குருவுடன் தொடர்பு கொண்டிருந்தார் அவரது குரு கிட்டத்தட்ட அவரது உயிர் போலாகி விட்டார். கண்களை மூடியதன் மூலம் அவர் தனது குருவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அவரை தவறாக புரிந்து கொள்ளாதே. ரஜப் இது வரை இருந்த மிக அழகான சீடர்களில் ஒருவர். மற்றொரு சீடரான சுந்தரோ-வுக்கு நடந்தது என்ன? டாடூ இறந்தவுடன் அவர் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் அந்த படுக்கையிலேயே சாகும்வரை இருந்தார். அந்த படுக்கையை விட்டு அவர் நகரவே இல்லை. குரு அவரது வாழ்நாள் முழுவதும் அந்த படுக்கையில தான் படுத்திருந்தார், அதில் அவரது அதிர்வு இருந்தது, அவரது இருப்பு இருந்தது, அது அதில் முழுமையாக நனைந்திருந்தது. அவர் படுக்கையை விட்டு நகரவேயில்லை. ஏன் என்று மக்கள் கேட்டனர். அதற்கு சுந்தரோ “ போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. நான் வந்தடைந்துவிட்டேன். இதுதான் என் வீடு. இதுதான் என் சொர்க்கம், இதுதான் என் மோட்சம். இந்த படுக்கையில் என் குரு உருவாக்கியுள்ள இந்த அற்புதமான இடத்தில்தான் நான் இருக்க விரும்புகிறேன், இறக்க விரும்புகிறேன். “ என்றார். நீ உனது வாழ்வையும் சாவையும் தனியாக பார்க்காமல் உன்னுடைய குருவுடன் ஒன்றிப் போய் விடுகிறாய். இதுதான் அதன் பொருள். சுந்தரோ சில சமயங்களில் டாடூவைப் போல பேசும் அளவு தன் குருவுடன் ஒன்றி போய் விட்டார். மக்கள் அவரிடம், “ நீங்கள் டாடூ அல்ல! “ என்று கூறுவர். பின் அவர், “ஆம், என்னை மன்னித்து விடுங்கள். நான் மறந்து விட்டேன். ஆனால் உண்மையில் என்னை கேட்டால் நான் டாடூதான். நான் என் குருவுடன் ஒன்றி விட்டேன் “ என்று கூறுவார். இதுதான் சீடனாக இருப்பதன் இறுதி நிலை. சீடன் குருவுடன் ஒன்றி போய் விடுதல். அவர், தான் டாடூ என்று கூறுவார். அவர் பாடல்கள் எழுதுவார், ஆனால் அதில் அவரது பெயர் இருக்காது, டாடூவின் பெயர்தான் இருக்கும். மக்கள் இது தவறு என்று நினைப்பர். பண்டிதர்கள் சுந்தரோ எழுதிய பாடல்களை இடம் மாற்றியமைத்து விட்டனர். அவர்கள் அது டாடூவின் பாடல் அல்ல என்று நினைத்தனர். ஆனால் நான் சொல்கிறேன் அது டாடூவிடமிருந்துதான் வந்தது. சுந்தரோ டாடூவின் வாயில் இருக்கும் ஒரு புல்லாங்குழல் தான். சுந்தரோ ஒரு தனிபட்ட நபராக அங்கு இருக்கவில்லை. இதுதான் ஒரு சீடனின் மிக அதிகபட்ச உயர்நிலை. சீடனும் குருவும் சந்தித்து, இணைந்து ஒன்றாகி விட்டனர். சுந்தரோ தனது குருவுடன் ஒன்றாகி விட்டதால் அவருக்கு டாடூ என்று கையெழுத்திட எல்லா உரிமையும் உண்டு. அவர் தனது கவிதைகளில் டாடூ என்றுதான் கையெழுத்திடுவார். சுந்தரோ என்று கையெழுத்திட மாட்டார். மேலும் நான் முழுமையாக அவருடன் ஒத்துப் போகிறேன். மேலும் இந்த பண்டிதர்கள் இன்னும் சிறிதளவு உணர்வோடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இவை கல்வியறிவுக்கானவை இல்ல. இவை கற்கும் மனிதர்களுக்கானவை அல்ல. இவை நேசிப்பவர்களுக்கானவை. நேசிப்பவர்களால் மட்டும்தான் இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். என்ன ஒரு அழகான விஷயம்.! ஒரு சீடன் தனது பெயரை கையெழுத்திட மறந்து குருவின் பெயரை எழுதுவது என்பது என்ன ஒரு அற்புதமான விஷயம். சில சமயங்களில் மக்கள் டாடூவை அழைக்க வருவார்கள், அப்போது சுந்தரோ, “ சரி, நான் வருகிறேன்.” என்பார். அப்போது அவர்கள், “ நாங்கள் உங்களை அழைத்துப் போக வரவில்லை, நாங்கள் டாடூவை அழைத்துப் போக வந்தோம்” என்பர். சுந்தரோ, “நான் யார் ? ஏன் அனாவசியமாக அந்த வயதான மனிதனை தொந்தரவு படுத்துகிறீர்கள் ? நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். என்னால் வெகுதூரம் பயணம் செய்ய முடியும். என்னால் வர முடியும். ஏன் அவரை தொல்லை செய்ய வேண்டும் ? என்று சொல்வார். மேலும் டாடூ சில சமயங்களில் சுந்தரோவை அனுப்புவார். மக்கள் டாடூவை அழைப்பார்கள், அவர் சுந்தரோவை அனுப்புவார். நாம் குருவை தானே அழைத்தோம், சீடரை அழைக்க வில்லையே என்று மக்கள் குழம்பி போய் விடுவார்கள். ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. குருவும் சீடனும் நேசிப்பின் உச்சத்தில் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போய் விட்டனர். ஆகவே டாடூ இறந்த அன்று சுந்தரோ அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தகனத்திற்கு கூட செல்ல வில்லை. எல்லோரும் தகனத்திற்கு சென்று விட்டனர். ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடி விட்டனர், எல்லோரும் அழுது கொண்டும் கதறிக் கொண்டும் இருக்கின்றனர். எல்லோரும் துயரத்தில் இருந்தனர். ஆனால் சுந்தரோ என்ன செய்தார். அவர் தனது குருவின் படுக்கையறைக்குள் நுழைந்து அவரது படுக்கையில் படுத்துக் கொண்டு, அவரது போர்வையை போர்த்திக் கொண்டு தானே டாடூவாகி விட்டார். போன மக்கள் திரும்பி வந்து பார்த்தவுடன், இது கிறுக்குத்தனம் என்று நினைத்தனர். அவர்கள் சுந்தரோவிடம், இது சரியல்ல, நீ பைத்தியமாகி விட்டாய் உனக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதா என்ன ? இது குருவின் படுக்கை ! எழுந்திரு! என்றனர். ஆனால் சுந்தரோ, “ நான் இனிமேல் இல்லை. சுந்தரோ இறந்து விட்டான். நீங்கள் அவனது தகனத்திற்கா சென்றிருந்தீர்கள்? நீங்கள் சென்று அவனை எரித்து விட்டு வந்திருக்கிறீர்கள். நான் டாடூ. இனி என்னில் டாடூதான் செயல்படுவார் என்றார். அதனால்தான் அம்புபாய், அவர் படுக்கையை விட்டு எழவேயில்லை. ஒரு கணம் கூட எழவில்லை. அவர் அந்த படுக்கையிலேயே வாழ்ந்து அந்த படுக்கையிலேயே இறந்துபோனார். ஏனெனில் இவர் தனது குருவுடன் ஒன்றி குருவாகவே மாறிவிட்டார். நான் இந்த விளையாட்டை MAD விளையாட்டு எனறழைக்கிறேன். MAD என்றால் M என்பது MASTER என்ற குருவையும் D என்பது DISCIPLE என்ற சீடனையும் குறிக்கும். குரு – சீடன் விளையாட்டு அதுதான் கிறுக்கு – MAD – விளையாட்டு. நீ கிறுக்கனானால் ஒழிய உன்னால் இதை புரிந்து கொள்ள முடியாது. மேலும் அம்புபாய், சிறிது கிறுக்குத்தனம் உன்னுள் நுழைந்திருப்பதை பார்க்கிறேன், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீ வந்துகொண்டேயிருக்கிறாய். நீ புத்ததளத்திலிருந்து வெகுநாள் தள்ளி இருக்க முடியாது. நீ நெருங்கி வருவதை நான் பார்க்கிறேன். கூடிய விரைவில் ஆரஞ்சு வண்ணம் உன் வண்ணமாகப் போகிறது. நீ உனது உடலை விட்டு நீங்கும் முன் இது நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நானிருக்கிறேன். ரஜப் போல மாறு, சுந்தரோ போல மாறு அவர்களை பற்றி நினைத்துப் பார்க்காதே. அவர்கள் கண்டனம் செய்வதற்கானவர்கள் அல்ல. அவர்கள் வாழ்ந்து பார்ப்பதற்கானவர்கள். வாழ்வதன் மூலம் மட்டுமே அது போன்ற அற்புதமான ஒரு விஷயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சீடனின் தன்மை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், வைத்தியர், தெனாலிராமன், அரண்மனை, வீடு, மாம்பழம், 108, சூடு, தாயாரின் மரணம், புரோகிதர்கள் தலைப்பு: சூடு பட்ட புரோகிதர்கள்
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார். அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர். மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார். மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர். மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான். புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான். புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான். புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர். இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார். பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார். "மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன். இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார். இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான். முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................" அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மிக மிக அழகான விஷயங்கள் இருக்கின்றன. அதில் பல்வேறு விதங்கள் உண்டு. இசையும் நடனமும் மிகவும் உடல் சார்ந்த விஷயங்கள். அவற்றோடு செல்லும்போது அவை அழகானவை, ஆனால் ஒருவர் அதோடு நின்று விடக் கூடாது, அவற்றால் தடை பட்டுவிடக் கூடாது. அவை மேலும் உயர்ந்த நிலை செல்லும் வாயிலை திறந்து விடும். உதாரணமாக, நீ இசையை நேசித்தால் விரைவில் இசை கரைந்து நீ மௌனத்தில் ஆழ்ந்து விடுவாய். நீ நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தால் விரைவில் நடனம் மறைய வேண்டும், அப்போதுதான் உன்னால் இருப்பு நிலையின் அசையாத தன்மையினுள் இருக்க முடியும். சைனாவில் ஒரு பழமையான கதை ஒன்று உண்டு. ஒருவன் தன்னைத் தானே மிகவும் சிறந்த வில்வீரனாக கூறிக் கொண்டான். அவன் அரசரிடம் சென்று, “நான் யாருடைய சவாலையும் ஏற்கத் தயார். நான் வில்வித்தையை முப்பது வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். இந்த ராஜ்ஜியம் முழுவதிலும் எனக்கு இணையாக போட்டியிடக்கூடிய யாரும் இல்லை எனபது எனக்குத் தெரியும். ஆனால் இது அறிவிக்கப்பட வேண்டும்……. ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அதற்க்குள் யாராவது என்னுடன் போட்டியிட வந்தால் நான் தயார். அப்படி யாரும் வராவிடில் அல்லது வந்து என்னால் தோற்கடிக்கப்பட்டுவிட்டால், இந்த ராஜ்ஜியத்தின் பிரதான வில்லாளனாக, சிறந்த வில் வித்தையாளனாக என்னை நீங்கள் அறிவிக்க வேண்டும்” என்று கேட்டான். அவன் கூறுவது யாவும் உண்மையே, எதுவும் மிகையாக கூறப்பட்டதல்ல என்று அரசருக்குத் தெரியும். அவர் பார்த்ததிலேயே மிகவும் சிறப்பான வில்வித்தையாளன் அவன். அந்த அரசிலேயே அவனுக்கு நெருக்கமாக வரக்கூடிய அளவில் கூட யாரும் இல்லை. அவன் அந்த கலையை மிகவும் ஆழமாக பயின்றிருந்தான். அரசரிடம் ஒரு வயதான வேலைக்காரன் இருந்தான். அவன் எப்போதும் அரசருடன் இருப்பான். ஏனெனில் அரசரின் தந்தை அரசரின் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் இவன்தான் தந்தை போல கூடவே இருந்து அவரை கவனித்து வளர்த்து ஆளாக்கி பயிற்சி கொடுத்து பாதுகாத்து அவரை அரியணையில் அமர்த்தி அரசராக்கினான். ஆகவே அரசர் எப்போதும் அவனுக்கு தந்தை போல மரியாதை கொடுப்பார். இப்போது அரியணையின் கீழே அமர்ந்திருந்த அவன் சிரித்தான். அரசர், “ஏன் சிரிக்கிறாய்? அவன் கூறியது உண்மைதானே. எனக்கு இவரையும் இவரது வில்வித்தையையும் தெரியும். கண்களை கட்டிக் கொண்டு கூட இவர் குறி பார்த்து அம்பு விடுவார். கண்களை கட்டிக் கொண்டு பறக்கும் ஒரு பறவையைக் கூட இவர் வீழ்த்திவிடுவார். இவர்க்கு எந்த வகையிலும் ஈடு இணையே கிடையாது.” என்றார். அதற்கு அந்த வேலைக்காரன், “நீங்கள் வயதில் இளையவர். எனக்கு தெரிந்த ஒருவர் முன் இவர் ஒரு கத்துக்குட்டி. அவர் மிகவும் வயதானவர். கிழவர். என்னைவிடவும் வயதானவர். அவர் மலை பள்ளத்தாக்கில் வசிக்கிறார். இவரை நீங்கள் சிறப்பானவன் என்று அறிவிப்பதற்கு முன்னால் இவர் போய் அவரை சந்தித்துவிட்டு வரட்டும். அவரை பார்ப்பது மட்டுமே போதும். போட்டி என்பது தேவையேயில்லை.” என்றான். இது ஒரு மிகபெரிய சவால். ‘அவரை பார்ப்பது மட்டுமே போதுமா? போட்டி எதுவும் தேவையில்லையா’ என்ற போது “அவர் ஒரு குரு, அவருடன் போட்டியிட முடியாது” என்று கூறிய வயதானவன் அந்த கிழவர் இருக்கும் குகைக்கு செல்லும் வழியை கூறினான். இதைக்கேட்டு அந்த வில்வீரன் மலையில் மைல்கணக்கில் சென்று இறுதியில் அந்த குகையை கண்டு பிடித்தான். அங்கே பார்த்தவுடன் அவன் சிரித்தான். ஏனெனில் ஒரு கிழவன் மட்டுமே அங்கிருந்தான். அந்த குகையில் அம்பும் இல்லை, வில்லும் இல்லை. ‘என்ன விதமான வில்லாளன் இவர்.?’ மிகவும் வயதாகி விட்டிருந்தது. தொண்ணுறு, தொண்ணுறு ஐந்து, அதற்கு மேலும் இருக்கக் கூடும். அவரால் குறி பார்த்து அம்பு எய்ய முடியாது, அவரது கைகள் நடுங்கும். அவர் மிகவும் வயதானவர். “அரசர் உங்களை சந்திக்க என்னை அனுப்பினார்” என்று கூறினான். அந்த கிழவன், “அரசரிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. ஆனால் உனக்கு ஒரு சிறிய பரிசோதனை செய்த பின் தான் எதையும் முடிவு செய்ய முடியும். நான் எல்லோரையும் சந்திப்பதில்லை. குறைந்த பட்சம் நீ வில்லாளனாக இருக்கிறாய். அதனால் ஒரு சிறிய பரீட்சை வைக்க வேண்டும். ‘சிறந்த வில்லாளனாக இருப்பது அப்புறம். முதலில் அவர் இவனுக்கு வில்வித்தையில் ஏதாவது திறமை இருக்கிறதா, ஏதாவது ஆற்றல் இருக்கிறதா, ஏதாவது கூர்மை இருக்கிறதா’ என்று பரிசோதிக்க விரும்புகிறார். கிழவன் அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துக் கொண்டு குகையை விட்டு வெளியே வந்தார். “நீ உன்னுடைய அம்பையும் வில்லையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வரும்போதே நீ கத்துக்குட்டி என்று கண்டேன். ஏனெனில் சிறந்த வில்லாளனுக்கு எதுவும் தேவையில்லை. ஒருவர் தனது திறமையின் இறுதி நிலையை எட்டும்போது அவர் வில்லாளனாக இருந்தால் தனது வில்லையும் அம்பையும் வீசி விடுவார், அவர் இசைக் கலைஞனாக இருந்தால் தனது இசைக் கருவியை வீசியெறிந்து விடுவார். அவர் ஓவியராக இருந்தால் தனது பிரஷ்ஷையும் பலகையையும் வீசி விடுவார் என்ற மூதுரையை கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார். அதற்கு இவன், “கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புரிந்ததில்லை.” என்றான். “இப்போது நீ புரிந்து கொள்ளக் கூடிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். என்னுடன் வா.” என்றான் கிழவன். அங்கே ஒரு பாறை ஒரு இடத்தில் மிகவும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதன் கீழே ஆயிரக்கணக்கான அடிகள் ஆழமான கிடுகிடு பள்ளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த அளவு அபாயகரமான பள்ளத்தாக்கு. அந்த பாறைக்குச் சென்றான் அந்த கிழவன். இளைஞன் நடுங்கிக் கொண்டு இருந்தான். அவன் அந்த பாறைக்கு கூட செல்லவில்லை. கிழவன் சென்றான், ஆனால் இவன் செல்லவில்லை. நடுங்கிகொண்டே நின்று கொண்டிருந்தான். கிழவன், “நடுக்கத்தை நிறுத்து. இது வில்லாளனுக்கு அழகல்ல.” என்றான். மேலும் அந்த கிழவன் அந்த பாறையின் முனைக்கு சென்றான். பாறையின் நுனியில் பாதி பாதம் வெளியே இருக்குமாறு நின்றான். அங்கே இருந்தவாறே இளைஞனை அழைத்து, “வந்து என் அருகில் நில்” என்று அழைத்தான். இளைஞன் ஒரு அடி எடுத்து வைத்தான், இரண்டாவது அடி எடுத்து வைத்தான். பின் கீழே படுத்து விட்டான். நடுங்கி வியர்த்து விருவிருத்து வெலவெலத்து போனான். “என்னை மன்னித்து விடுங்கள். என்னால் நீங்கள் நிற்க்கும் இடத்திற்கு வர முடியாது. ஒரு சிறிது தப்படி எடுத்து வைத்தாலும், ஒரு காற்று பலமாக அடித்தாலும், ஒரு வினாடி மறந்து விட்டாலும் போதும் நாம் முடிந்தோம். நான் உங்களை இங்கே பார்க்கத்தான் வந்தேனே தவிர தற்கொலை செய்து கொள்ள வரவில்லை. நீங்கள் அங்கு நிற்கிறீர்கள் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை.” என்றான். கிழவன், “வில்வித்தை ஒரு மனிதனுக்கு தருவது அசையாத உள்ளம், நடுங்காத இதயம். இப்போது எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. நீ என் குகையை சுற்றி பார்த்ததையும் வில்லும் அம்பும் அங்கில்லாததால் இவர் எப்படி ஒரு வில்லாளனாக இருக்க முடியும் என்று நினைத்து புன்னகை செய்ததையும் நான் அறிவேன். இப்போது நான் என் வில்திறமையை உனக்கு காட்டப் போகிறேன்.” என்றார். அவர் மேலே பார்த்தார். மேலே ஒன்பது பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவர் அந்த ஒன்பது பறவைகளையும் கூர்ந்து பார்த்தார். அந்த ஒன்பது பறவைகளும் கீழே இறந்து விழுந்தன. அவர், “நீ உள்ளே அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்புகள் தேவையில்லை. ஆகவே திரும்பி சென்று வில்வித்தையை பயிற்சி செய். பட்டம் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் உயிரோடு இருக்கும்வரை பட்டம் என்பதை நினைத்துக் கூட பார்க்காதே. நான் போட்டியாளன் அல்ல தான். நீ உன்னை சிறப்பானவன் என்று அறிவித்துக் கொண்டால்கூட நான் கவலைப்பட போவதில்லை. யாருக்கு வேண்டும்? உங்களுடைய பட்டம், பதவி, சிறப்பானவன் என்ற பாராட்டு என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் விளையாட்டு. ஆனால் அரண்மனையில் இருக்கும் அவனுக்கு என்னைத் தெரியும். அதனால் நான் இருக்கும் வரை உன்னை வெற்றியாளன் என்று அறிவிப்பது நடக்காது. நீ உண்மையாக வில்வித்தையில் ஆழ்ந்து சென்று பயிற்சி செய்தால் நீ வெற்றியாளன் ஆகலாம். மேலும் நான்தான் உன்னை வெற்றியாளன் ஆக்க முடியும். அரசர் அல்ல. அவருக்கு வில்வித்தையைப் பற்றி என்ன தெரியும். அதனால் அவரிடம் சொல்லிவிடு. ‘உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறி விடு. சரியான சமயத்தில் நான் உயிரோடு இருந்தால் நானே வருவேன். நான் இறந்துவிட்டால் வேறு யாரையாவது அனுப்புவேன், அல்லது வேறு ஏதாவது ஏற்பாடு செய்வேன். என்றார். பத்து வருடங்கள் கடந்து விட்டன. அந்த கிழவன் இறந்து கொண்டிருந்தார். அவர் சமவெளியில் வசித்து வந்த தனது மகனை அழைத்து – அவருக்கும் வயதாகியிருந்தது – அவரிடம் அந்த வில்லாளனைப் பற்றிக் கூறி, “சென்று அவரைப் பார்த்து நிலைமை என்னவென்று வந்து கூறு” என்றார். மகன் அங்கே சென்றார். அந்த வில்லாளன் கிழவர் இன்னும் தன்னை நினைவில் வைத்திருந்து மகனை அனுப்பியதைக் குறித்து மிகவும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார். மகன் ஒரு பெரிய வில் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு வில்லாளன் “அது எனக்குத் தெரிந்த ஏதோவொன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்குத் தெரியாது. நான் கேட்க வேண்டும், யாருக்காவது தெரிந்திருக்கலாம்” என்றார். அதற்கு மகன், “நீங்கள் ஒரு வில்லாளன் என்று கேள்விப்பட்டேன்.” என்றார். அவர், “என் இள வயதில் இருந்தேன், ஆனால் எல்லோரும் இளவயதில் முட்டாளாக இருப்பது இயல்புதானே. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் உன் தந்தைதான் என்னை எனக்கு புரிய வைத்தார்.” என்றார். அந்த வில்லாளன் வில் என்ற பெயரையே மறந்து விட்டார் என்பது அந்த கிழவனிடம் கூறப்பட்டது. அதற்கு அந்த கிழவர், “அவன் தான் யார் என்று நிரூபித்து விட்டான் என்பது தெரிகிறது. நான் இறப்பதற்கு முன் கீழே சென்று அவன் வெற்றியாளன், வில்வித்தையில் நிபுணன் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றார். இப்போது அவனும் பார்த்த மாத்திரத்திலேயே பறவையை வீழ்த்தும் திறன் கொண்டவனாகிவிட்டான். அவனது இருப்பு அசையாத தன்மை கொண்டு விட்ட படியால் அவனது இரண்டு கண்களில் இருந்து புறப்படும் பார்வையே போதும், அவையே அம்புகளாகி விடும். அவன், “ஒரு இசைக்கலைஞன் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டால் அவன் தனது இசைக் கருவியை உடைத்துவிடுவான் என்று சொல்லப்படும் பழமொழியின் பொருள் எனக்கு இப்போது புரிகிறது. அப்போது கருவியால் என்ன பயன் ஏனெனில் அவை இன்னும் இந்த சத்தம் சார்ந்த உலகின் பாகம்தான். உண்மையான இசை மௌனம்தான்” என்றான். நீ இசையை கேட்கும்போது கூட உண்மையிலேயே உனது இதயத்தை தொடுவது அந்த ஒலி அல்ல, அந்த இரண்டு ஒலிகளுக்கு இடையே இருக்கும் மௌனம்தான், இடைவெளிதான். அந்த மௌனத்தை உனது இதயத்துக்கு கொண்டு வருவது எப்படி என்பதுதான் இசையெனும் கலையே. ஆனால் ஒரு மனிதன் அந்த மௌனத்தை தன்னுடைய இருப்பில் கொண்டு வர முடிந்தால், அப்போது நீ ஆழமான மௌனத்தில் ஆழ்கிறாய், அப்போது உனக்கு உண்மையான இசை என்பது என்னவென்று தெரியும். அப்போது இசை என்று நாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தது ஆரம்ப பாடம் என்பது உனக்குப் புரியும். இதுவே நடனத்திற்க்கும் பொருந்தும், மற்றும் எல்லா படைப்பு திறன் கொண்ட கலைகளுக்கும் பொருந்தும். தோன்றும் எதுவும் உண்மையல்ல. அது ஒரு கருவி. அதன்மூலம் நீ மறைந்திருக்கும், கடந்த, அறியாத ஒன்றைப் பற்றி விழிப்பு கொள்வாய். ஆகவே இசையை ரசிப்பது நல்லது, நடனத்தை ரசிப்பது நல்லது, இசையை வாசிப்பது நல்லது, நடனமாடுவது நல்லது – நினைவில் கொள் – அது இறுதியல்ல. நீ இன்னும் தூரம் சென்றாக வேண்டும் – இசையிலிருந்து, நடனத்திலிருந்து – அந்த கலையைப் பற்றி புரிய நீ அதில் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்புக் கலையும் உன்னை உன் உள் மையத்திற்கு – எங்கே அமைதியும் மௌனமும் சாந்தமும் உள்ளதோ அங்கே – கொண்டு சேர்க்கும். பின் உன்னால் “நான் கேட்க இயலாததை கேட்டேன், பார்க்க இயலாததை பார்த்தேன்” என்று சொல்ல முடியும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'செயலும் அதைக்கடந்த நிலையும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், "அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்...'' என்றார். மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்'' என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, "விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா...'' என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, "சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்'' என்றார். மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு. அவர் அரசரிடம், "என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை'' என்றார். தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, "அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது'' என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? "காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது?'' என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், "தெனாலியின் சாதுரியம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்...'' என்று புகழ்ந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தங்க மஞ்சள் குருவி!' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். " நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?" என்று கேட்டார் அவர். " கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் " என்றார் முல்லா. அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். " கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே" என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார். ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார். முல்லா விரைந்து சென்றார். சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர். " இவர்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்?" என முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார். " இதோ இவர் மருத்துவர் அதோ அந்த மனிதர் மதகுரு - அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி தோண்டுபவர் " என்றார் முல்லா. " நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் " என்றார் முதலாளி. " நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும் என்று சொன்னீர்களே" என்று கேட்டார் முல்லா. " ஆமாம், அப்படித்தான் சொன்னேன் " . அதற்கும் இதற்கு என்ன தொடர்பு? என்று ஆச்சரியம் தோன்ற கேட்டார் முதலாளி. " ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப் போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனை அழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன்" என்றார் முல்லா. முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லாவின் புத்திசாலித்தனம்!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: செருப்பு, முல்லா, துணி, காகிதப் பொட்டலம், வேதாந்த நூல், திருமண வீட்டுக்காரன் தலைப்பு: வேதாந்த நூல்
ஓரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார். இரண்டொரு தடவை அவர் திருமணத்திற்கு சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால் அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை. அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டார். முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண வீட்டுக்காரர், " முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது ? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா?" என்று கேட்டார். அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார். " வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்? " என திருமண வீட்டுக்காரன் வினவினான். செருப்புக் கடையில் வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார். அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் திருமண வீட்டுக்காரர் தத்தளித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான். "இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருத்திகா, சந்திரசேகர், ரகு, கஸ்தூரி, ஜெயா, வைசாலி, மனோகர் தலைப்பு: ஸ்ரீமான் கணவருக்கு ஒரு கடிதம்
திரு. சந்திரசேகர் அவர்களுக்கு, கிருத்திகா எழுதுகிறேன். இது போன்றதொரு கடிதத்தை அநேகமாக என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இங்கே நான், அம்மா, அப்பா, அனைவரும் நலம். அங்கே நீங்கள் நலமா?" என்பது போன்ற சம்பிரதாயமான விசாரிப்புகளை உள்ளடக்கிய கடிதம் அல்ல இது என்பதை இப்போதே தெரிவித்துக் கொண்டு விடுகிறேன். இந்தக் கடிதத்தை என்னுடைய அறையில் என்னுடைய டேபிளில் வைத்து எழுகிறேன். இந்த என்னுடைய என்ற உணர்ச்சி எத்தனை சுகமானது என்பது அனுபவித்தால்தான் புரியும். உங்களுக்குப் புரிய நியாயமில்லை. என்னுடைய அறையில் அதிக மாற்றங்களில்லை. ரகு கொஞ்ச நாள் உபயோகப் படுத்தியிருக்கிறான். அப்புறம் சரிப்படவில்லை என்று மாடியறைக்கே போய்விட்டான். ஜன்னலோரமாய் நிற்கும் மாமரத்தின் நிழலையும் அதன் குளிர்ச்சியையும் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுபவிப்பதில்... மனசு நிஜமாகவே சாந்தமடைந்திருக்கிறது. நீங்கள் என்னைப் பார்த்துவிட்டுப் போன அன்று இதே ஜன்னலோரமாய், இதே மாமரத்தின் பின்னணியில், லேசாக இருள் மூடத் தொடங்கின மாலையில், "மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி" என்று அதிகம் குரலெழுப்பாமல் ரகசியமாய்ப் பாடிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது. இங்கு வந்து பத்து நாட்களில் நேற்றுவரை சுதந்திரமாய் இருந்த மனசு இன்றைக்குத் திடீரென்று கொதிக்கத் தொடங்கிவிட்டது. உங்களுக்குக் கடிதம் எழுதினால்தான் ஆறும் போலத் தெரிந்ததால் எழுதத் தொடங்கி விட்டேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் இங்கே வந்த காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. செல்ல மகள் வந்திருக்கிறாள். கொஞ்சம் சீராடி விட்டுப் போகட்டுமே என்று மேலே விழுந்து உபசாரம் செய்கிறார்கள். விருந்தாளியைப் போலத்தான் இருக்கிறது. "அம்மா, இதெல்லாம் வேண்டாம், என்னை கொஞ்சம் ப்ரீயாக இருக்க விடு" என்று கேட்டுக் கொண்டேன். காலம் இரண்டு வருஷம் பின்னோக்கிப் போய்விடக் கூடாதா என்று இருக்கிறது. அதே கிருத்திகாவாய், வயலினும், வாசிப்புமாய், இதே மாமர நிழலில் மதியம் தி. ஜானகிராமனை வாசித்துக் கொண்டே உறங்கிப் போய்... நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது! சில நிகழ்ச்சிகளெல்லாம் என் வாழ்வில் இன்னும் நடக்கவேயில்லை என்று திரும்பத்திரும்பக் கட்டாயமாக நினைத்துக் கொள்கிறேன். சந்திரசேகர் என்று யாரையும் எனக்குக் கொஞ்சம்கூட அறிமுகமே இல்லை என்றாகி விட வேண்டும். எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லை? நானும்தான் பி.ஏ. இலக்கியம் படித்தேன். இலக்கியம் படிப்பவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதிகளாய் இருப்பதில்லை. அதனால் தான் என் பிள்ளைகளுக்கு இலக்கியத்தைத் தவிர்த்து விட்டேன் என்று அப்பாவின் நண்பர் சொன்ன போது ஏன் சிலபேர் இப்படியிருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரும் கீட்சும் படித்துப் படித்து மனசு கனவில் மிதக்கத் தொடங்கிவிடும், யதார்த்தம் புரியாது என்றார். எதை யதார்த்தம் என்கிறார்கள்? புருஷன் நல்லவனாய், மனைவியை நம்புபவனாய், பெண்களை மதிப்பவனாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை யதார்த்தமில்லை என்கிறார்களா? ஷேக்ஸ்பியர் படித்தால்தான் நல்ல கணவன் வேண்டும் என்று கனவு காண முடியுமா? அதுதான்.... நீ இப்படித்தான் இருக்க வேண்டும், ஆம்பிளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ரொம்ப காலமாய் சொல்லிச் சொல்லி, கடைசியில் நிஜம் மறந்து போய் இதுவே வேதமாய் நிலைத்து விட்டது. பெண்களும் இந்த அடிமைத்தனத்தில் கொஞ்சம் குளிர் காய்கிறாற் போலத்தான் தெரிகிறது. சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய அதிகார வித்தியாசத்தை மறந்து போய் ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிற மரபுகளில் திளைத்துப் போய் விட்டார்கள். இங்கே புருஷன் ஊருக்குப் போய்விட்டால் பெண்களுக்குத்தான் பசலை காண்கிறது. பெண்களுக்குத்தான் வளையல் கழன்று விழுகிறது, இடுப்பு மெலிகிறது. ஏன் இது போன்ற எந்த அடையாளமும் ஆண்களுக்குக் குறிப்பிடப்படவில்லை? ஊருக்குப் போனவன் ஒழுக்கமாய் இருக்க வேண்டியதில்லை. பெண்டாட்டியை நினைத்து உருக வேண்டியதில்லை என்பது மறைமுகமாகப் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதா? "பெண்ணே! நீ பெண். அதனால் உருகு, பசலைப்படு, இடைதுவண்டு விழு! அவன் ஆண்! அதனாலேயே அதிகாரமிக்கவன். அவன் உன்னை நினைக்க வேண்டியதில்லை. அவன் திரும்பிவர வேண்டும் என்பது மட்டுமே உன் எண்ணமாய் இருக்கவேண்டும். ஒழுக்கமாய்த்தானா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் நீ செய்யக்கூடாது என்று காலங்காலமாய் இருந்து வருகின்ற சமூகக் கட்டளைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் பெண், நீ ஆண், இது இயற்கை. இது நேர்ந்து விட்டது - it just happened! அவ்வளவு தான். மற்றபடி உணர்விலோ செயலிலோ வித்தியாசம் இல்லை. அப்புறம் எங்கே இருந்து வந்தது நான் பெரியவன், நீ சின்னவள் என்ற சித்தாந்தம்? நீ கற்பு என்றால் நானும் கற்பு. நீ ஊர் மேய்ந்து விட்டு வரும் போது நான் மட்டும் போர்த்திக் கொண்டு படுத்திருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்? இதில் இன்னொரு வேடிக்கை, குனிந்த தலை நிமிராமல், கண்மறைப்புப் போட்ட குதிரையாய் நேரே போய், நேரே வருகிறவன் பெண்டாட்டியைப் பார்த்து ஜன்னலைத் திறக்காதே, வாசல் படியில் நிற்காதே என்று அதட்டினால், அட, கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம். பெண்டாட்டியின் சிநேகிதி கொஞ்சம் பகட்டாய் உடுத்தி சிரிப்பாய்ப் பேசுகிறாள் என்பதற்காக, "நாளைக்கு ஆறுமணிக்கு அருள்ஜோதிக்கு வா, காத்திருப்பேன்" என்று கடிதம் எழுதுகிறவன் "ஆபீஸ் விட்டவுடன் நேராய் வீட்டுக்கு வா" என்று மனைவியை எப்படி அதட்ட முடியும்? நான் வேலைக்கு போகிறேன், நீயும் வேலைக்குப் போகிறாய். நான் நாலு பெண்களுடன் பேசுகிறேன், உனக்கும் அலுவலகத்தில் நாலு ஆண்களுடன் பேச வேண்டியிருக்கிறது, தவிர்க்க முடியாது. அதனாலென்ன என்று சொல்கிறவன்தான் அபூர்வமாகி விட்டான். சரி, காணாத இடத்தில் என்ன நடக்கிறதோ என்று சந்தேகம் வந்து தொலையட்டும். பரவாயில்லை, அதையாவது எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். நீ ஹாலில் இருக்கும் போது, சமையலறை ஜன்னல் வழியாக மனைவி அடுத்த வீட்டுக்காரனோடு ஓடிப்போய் விடுவாள் என்று இரண்டு நிமிஷத்துக்கொரு தரம் சமையலறைக்கும் வாசலுக்கும் நடக்கிறவன் எப்பேர்ப்பட்ட புருஷன்! அப்பேர்ப்பட்ட மகா புருஷனைத்தான் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நல்ல சுபதினத்தில் கல்யாணம் செய்து கொண்டேன். அப்பேர்ப்பட்டவனுக்காகத்தான் ஒரு மாலைப் பொழுதில் மயங்கி மயங்கிக் கனவு கண்டேன். தோழி கேளடி என்று பாட்டுப் பாடினேன் என்றால் சிரிப்பு வராதா? யோசித்துப் பார்க்கிறேன் இதன் பின்னாலிருக்கும் மனோதத்துவம்தான் என்ன என்று. பெண் பார்க்க அழகாயிருக்கிறாள். நாகரீகமாய்ப் பழகுகிறாள். கை நிறைய சம்பாதிக்கிறாள் என்றால், உடனே தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை. சொந்தமாக்கிக் கொண்ட பின்பு, இப்படித்தானே அடுத்தவனும் நினைப்பான் என்ற ஆற்றாமை, எப்படிப் தடுப்பது - இயலாமை... கடைசியில் அகப்படுவது அவள்தான். பார்க்கின்ற பெண்கள் மேலெல்லாம் ஆசைப்படுவதை நீ முதலில் நிறுத்து, சந்தேகம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கலாம். அழகாயிருப்பது தப்பா? நீ ஆசைப்பட்ட மாதிரிதானே அடுத்தவனும் படுவான்? நீ ரசித்ததை என்னால் தடுக்க முடிந்ததா? அடுத்தவனை மட்டும் நான் எப்படி நிறுத்த முடியும்? நீ ஒரு படி மேலே போய்க் கல்யாணம் செய்து மனைவியாக்கிக் கொண்டாய். அடுத்தவன் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறான். இதில் நான் என்ன செய்ய முடியும்? நான் அப்படியில்லை என்று சொல்லத்தான் முடியும் அனுமாரைப் போல நெஞ்சைப் பிளந்தா காட்ட முடியும்? இல்லை, பர்தா போட்டுக் கொண்டு ஜன்னல், கதவு எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு அறைக்குள் மூச்சுத் திணறி சாகவா முடியும்? சாகலாம், மனசு எதிர்பார்த்த விதமாய் நடந்து கொள்கிற கணவனுக்காக உயிரை விடுவதுகூட சுகம்தான். சதா வேவு பார்க்கிற, நடுராத்திரி எழுந்து கைப்பையைச் சோதனையிடுகிறவனுக்காக சாக முடியுமா? அது இந்தப் பிறப்பையே அவமானப் படுத்துவதாகாது? உனக்காக நான் சாவதற்கு நீ தகுதியுடையவனாக இருக்க வேண்டாமா? இதையெல்லாம் வாயால் பேசி, கூட்டம் போட்டு கோஷமிட்டு திருத்த முடியாது. என்னைக் கேட்டால் இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் சரியான தண்டனை அவர்கள் செய்வதையே திருப்பிச் செய்வதுதான். நீ என் மேல் சந்தேகப்பட்டால் நான் உன் மேல் சந்தேகப்படுகிறேன். நீ என் அலுவலகத்துக்கு போன் செய்து நான் இருப்பதை உறுதி செய்தால், நான் அரை நாள் லீவு போட்டு உன் அலுவலகத்திற்க வந்து நீ இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். நீ வீட்டுக்கு வந்த மச்சினி மேல் வாஞ்கையாய்க் கையைப் போட்டுக் குசலம் விசாரித்தால், நான் விடுமுறையைக் கழிக்க வந்த சின்ன மைத்துனனுக்குத் தலைவலித் தைலம் தேய்த்து விட்டு அன்பைக் காட்டிக் கொள்கிறேன். இந்த Tit for Tat கொஞ்சம் பயனுள்ள மருந்ததாகத் தெரிகிறது. இப்படிச் சுகமாய் உட்கார்ந்து பொறுமையாய் எழுதுகிற போது இதெல்லாம் தோன்றுகிறதே, ஏன் நிஜத்தில் அப்படிச் செய்யாமல் போய் விட்டேன்? நீ பன்றி சேற்றில் புரள்கிறாய் என்பதற்காக, நானும் அதிலே உருள முடியுமா என்ற, இலக்கியம் படித்ததினால் உண்டான இயல்பான நாசூக்கா அல்லது தமிழ்நாட்டிலே பிறந்து பண்பாடு நெறிமுறை போன்ற ஒன்றிரண்டு கலைக்குதவாத வார்த்தைகளைக் கற்றுக் கொண்ட மனப்பாங்கா? ஏதோ ஒன்று.... செய்து காட்டு, நான் சூடுபட்டேன் என்று வாயால் சொன்னால் எதிராளிக்குப் புரியாது. நீ சூடு வைத்துக் காட்டு என்று அறிவு, இப்போது ஆயிரம் தரம் சொன்னாலும் மனசு ஏனோ அதை ஒத்துக் கொள்ள மாட்டேனென்கிறது. மணி மூன்றாகி விட்டது. அம்மா இத்தோடு இரண்டு தடவை எட்டிப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே போய்விட்டாள். மகள் மாப்பிள்ளைக்கு ஏதோ அந்தரங்கமாய் எழுதுகிறாள் போலிருக்கிறது என்று நினைத்திருப்பாள். "சாப்பிடக்கூட வராமல் அப்படியென்ன மாஞ்சு மாஞ்சு லெட்டர் வேண்டிக் கிடக்கு" என்று ரகு கூட சத்தம் போட்ட விட்டு போய்விட்டான். அதெல்லாம் போகட்டும்.... இப்படி மனசிலிருக்கிற ஆங்காரத்தையெல்லாம் அப்பட்டமாய் லெட்டரில் எழுதி விட்டேனே, காரணம் தெரியுமா? எல்லாம் அந்த மனோகர் சொல்லிக் கொடுத்திருப்பான் என்று தத்துப்பித்தென்று நீங்கள் யூகிக்கப் போகிறதை நினைத்தால் எனக்கு இப்போதே சிரிப்பு வருகிறது. காரணத்தை கடிதத்தின் கடைசியில், பின் குறிப்பில் சொல்கிறேன். அப்புறம்.... அப்புறம் என்ன? பிரமாதமான விசேஷம் ஏதும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ரகுவுடன் (இனிமேல் இங்கே வராதே என்று அல்பத்தனமாய் விரட்னீர்களே அந்த ரகுபதி இல்லை, என் சொந்தக் தம்பி "ரகு" என்கிற ரகுராமன்) ஜெயா அத்தை வீட்டுக்குப் போய் வந்தேன். நான் வந்திருக்கிறதைக் கேள்விப்பட்டு கஸ்தூரி வந்திருந்தாள். இரண்டு பேருமாய் என்னுடைய அறையில், இருக்றி கேசட்டுக€யெல்லாம் போட்டுப் பாட்டாய்க் கேட்டுத் தீர்த்தோம். வணங்காமுடி, தமிழில் இராமாயணம் என்று இரண்டு வீடியோ கேசட்டுகள் அப்பா எடுத்து வந்தார். என்ன பிரமாத இராமாயணம்? அத்தனை கஷ்டப்பட்டு, யுத்தம் செய்த, ஆயிரக்கணக்கில் பலி கொடுத்து கடைசியில் எவனோ சொன்னான் என்று மனைவியைக் காட்டுக்கு அனுப்புன புண்ணியவானைத்தானே புராணமாய்க் காட்டுகிறார்கள்? இதை என்ன சினிமாவில் பார்க்கிறது? என்று திருப்பி அனுப்பி விட்டேன். நேற்றிரவு வெளிவாசல் படியில் உட்கார்ந்து மனசுக்குத் தோன்றின படியெல்லாம் வயலின் வாசித்துக் கையைப் புண்ணாக்கிக் கொண்டேன். அப்புறம் அம்மா திட்டிக் கொண்டே தேங்காய் எண்ணெய்த் தடவி விட்டாள். சொல்ல மறந்து விட்டேனே. லைப்ரரிக்குப் போயிருந்தேன். உங்கள் பாஷையில் ஆறு "குப்பைகள்" எடுத்து வந்தேன். அதில் ஜெயகாந்தனின் "பாரிசுக்குப் போ" என்ற குப்பை நன்றாக இருந்தது. இன்னொரு தடவை படிக்கலாம் என்று வைத்திருக்கிறேன். அப்புறம் வைசாலி அத்தை வந்திருந்தார். "என்னடி, ஏதாவது விசேஷமா? என்று குடைந்தார். "நீங்கள் வேறு, எனக்குக் குழந்தை பிறந்தால் அதற்கு அப்பா யாராக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொள்வதிலேயே என் வீட்டுக்காரர் ஆயுசை முடித்துக் கொள்வார்" என்று மனசில் நினைத்துக் கொண்டேன், சொல்லவில்லை. நேற்று சாப்பாட்டு நேரத்தில் கடலையும் விரல் நகங்களையும் இணைத்து ஒரு கவிதை தோன்றியது, எழுதினேன். சுமாராய் வந்தது. யோசிக்காமல், பத்திரிகைக்கு அனுப்பி விட்டேன். வேறு.... வேறு என்ன? எனக்குப் பசிக்கிறது. சாப்பிடப் போகலாம். என்று நினைக்கிறேன். இன்னொரு விஷயம். ஊருக்குப் போன முட்டாள் எப்படியும் காய்ந்து போய்த் திரும்பி வருவாள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நாளைக்கு மனோகரிடம் சொல்லி எம்.ஏ. (இலக்கியம் தான்) அப்ளிகேசன் ஃபாரம் வாங்கி வரச் சொல்லப் போகிறேன். அதாவது மேலே படிக்கலாம் என்று உத்தேசப்படுகிறேன். காற்றை உண்டு, கனவைச் சுவாசித்துக் கொண்டிருக்கலாம் பாருங்கள்! நானில்லா விட்டாலும் உங்களால் உயிர்வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் சந்தேகப்படாவிட்டால் செத்துப் போய் விடுவீர்களே! ஆகவே ஸ்ரீமான் சந்திரசேகர் அவர்களே! எங்கேயாவது பார்க்கிலோ, பீச்சிலோ ஓர் ஓரமாய் உட்கார்ந்து என்னைத் தொந்தரவு செய்யாமல், எதையாவது சந்தேகப்பட்டுக் கொண்டிருங்கள். வந்தனம். - கிருத்திகா பி.ஏ. ஆத்திரத்தையெல்லாம் கொட்டி எழுதி விட்டேன். ஆனால் இதைப் போஸ்ட் செய்வதா வேண்டாமா என்று இதை எழுதும் இந்த நிமிடம் வரை தீர்மானிக்கவில்லை. "எல்லாவற்றையும் மறந்து விட்டேன். திருந்தி, புதுசாய் வந்திருக்கிறேன், நீயும் வா" என்று நீங்கள் வந்து அழைத்தால் எல்லாப் பெண்களையும் போல நானும் கரைந்து போய் "போனால் போகட்டும் விடுங்க" என்று உங்களுடன் வந்த விடுவேன் என்றுதான் தோன்றுகிது. உள்ளூர அப்படி நடக்கக் கூடாதா என்கிற நப்பாசை இருப்பதை உணர முடிகிறது. எப்படியாயினும், தன்மானத்தை விடாமல், திடமாய் யோசித்து நல்ல முடிவாய் எடுப்பேன் என்று நம்பிக்கைப்படுகிறேன். நன்றி: சந்திரக்கற்கள்
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: தெனாலிராமன், வைத்தியர், குதிரை, பூனை, பணம், பவுன், 500 தலைப்பு: தெனாலிராமன் விற்ற குதிரை
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலி ராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலி ராமனை சந்திக்கப் புறப்பட்டான். தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு" என்றான். தெனாலி ராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். "சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான். அதற்கு தெனாலி ராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான். தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான். அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே! இது என்ன நியாயம்" என்றான். சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், உப்பரிகை, நந்தவனம், கல், கால் கட்டைவிரல், தோட்டக்காரன், விலங்கு, சிறைச்சாலை, காவலர்கள் தலைப்பு: தண்டனைக்குத் தகுந்த குற்றம்
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார். இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் "தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!" என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார். காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். "என்ன விஷயம் ஐயா?" என்று நடுங்கும் குரலில் கேட்க, "தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!" என்றார் அதிகாரி. இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். "கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?" என்றாள். "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது" என்ற அதிகாரி சற்று யோசித்தபின், "தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்" என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர். உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் "கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்" என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார். சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் "ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே" என்று அலற, "நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது" என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார். மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான். அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், "மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்" என்றான். உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது. "இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?" என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. "பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி" என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: திண்ணையில் உட்கார்ந்திருந்த கருப்புசாமி, பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது போல முகம் வாடிப் போய் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தரையையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு மூன்றடி தூரம் தள்ளி அருகாலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த செல்லம்மாள் கருப்புசாமியையே பார்த்தவாறு இருந்தாள். அவன் வாயைத் திறப்பது மாதிரியோ இவளைப் பார்ப்பது மாதிரியோ தெரியவில்லை. கடைசியில் செல்லம்மாள்தான் பேசினாள். ''பெரிய பயலெ செத்தே கொண்டாந்து காட்டிட்டுப் போயன்; புள்ளெ கண்ணுலியே நிக்குறாப்லெ இருக்கு. ஒம் பொண்டாட்டி புள்ளிவுளெ ஆயிச்சிக்கிட்டுவந்து இங்க ரெண்டுநாள் இருக்கச் சொல்லென். புள்ளுவுளுக்குக் கூப்புடுற மாரியா பேரூ வச்சியிருக்கிற, சுரேஷ் மகேஷ்ன்னுகிட்டு.'' ''அனுப்புறன்'' ''என்னாத்தெ அனுப்புன? புள்ளிவோ இங்க வந்து வல்லிசா ஒரு வருசம் ஆவப்போவுது. இந்த வருசப் பொங்கத் தீவாளிக்குக்கூடவல்லெ.'' ''லீவ் இருந்தாத்தான அனுப்புறதுக்கு?'' ''ஒனக்குத்தான் வருசம் முன்னூத்தி அறுவது நாளும் மூச்சுவுட முடியாத அளவுக்கு வேலெ. புள்ளிவுளுக்குமா லீவ் இல்லெ'' என்று கேட்ட செல்லமாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. திடீரென்று அவளுடைய முகம் சிவந்தது. ''நீ இந்த ஊட்டுலெதான் பொறந்தங்கிறத மறந்துப்புடாத ஒம் புள்ளிவுளுக்கு இந்த ஊரு தண்ணீய குடிச்சா சளி புடிச்சிக்கும். இந்த ஊட்டுலெ படுத்தா கொசி கடிச்சி ஒம் புள்ளிவோ செத்துப்போயிடும். இல்லியா? எனக்கு என்னா ஆனாலும் ஒனக்கு சம்மதம். அப்படித்தான. நானும் ரெண்டு புள்ளெய பெத்து வளத்தவதாண்டா.'' கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்துப் பார்த்தான். லேசாகப் பல்லைக் கடித்தான். பிறகு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் செல்லம்மாள். அப்போது வாசலில் கூட்டமாக நான்கு ஐந்து பன்றிகள் வந்து தலையை முகர்ந்து பார்க்க ஆரம்பித்தன. ''சு..சூ'' என்று சொல்லி சத்தம் போட்டுப் பன்றிகளை விரட்டினாள். பன்றிகள் செல்லம்மாள் போட்ட சத்தத்திற்கு அசைந்து கொடுக்காததால், ''இந்த சாண்டெ குடிச்சவன் ஊருலெ இதுவோ தொல்லதான் பெரும் தொல்லெ கொள்ளெ நோவு வந்து ஒண்ணும் சாவ மாட்டேங்குது பாரன்'' என்று சொல்லி திட்டிக் கொண்டே எழுந்து வந்து பன்றிகளை விரட்டிவிட்டாள். கொஞ்சம் நேரம் வாசலில் நின்று தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். ''என்னா வெயிலு அடிக்குது'' என்று சொல்லிக்கொண்டே வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். ''நம்ப எதில் ஊட்டுக்காரனோட புள்ளெ செத்தப்ப எயவு வச்சியும் நீ வந்து தலெய காட்டுலன்னு மனக்கொறப் பட்டுக்கிட்டான். எதிரு ஊட்டுலெ நடக்குற நல்லது கெட்டதுக்கே போவலன்னா, அப்புறம் எப்படி ஒருத்தர் மூஞ்சியிலெ ஒருத்தர் மூச்சிக்கிறது? காசி பணம் ''வா''ன்னா வரும், ''போ''ன்னா போவும். மக்க மனுச அப்பிடியா? இந்தூர்ல நம்பளுக்குன்னு நாலு பேரு வாணாமா?'' என்று சொன்னவள் கடுப்புடன் ''ஒம் மாமியா ஊட்டு சனங்களே போதுமின்னு இருக்கியா? ஆனவங்களோ, ஆவாதவங்களோ சொன்ன மொறமக்கிப் போயி தலெய காட்டுறதுதானெ மருவாத கோடி கோடியா பணமிருந்தாலும்கூட வராது தம்பி'' என்று அவள் சொன்னதைக் காதில் வாங்கதவன் மாதிரி கைக்குட்டையால் புறக்கழுத்தைத் துடைக்க ஆரம்பித்தான். வலது காலின் பெருவிரல் நகத்திலிருந்த அழுக்கை எடுத்தவாறே விசும்பலான குரலில், ''ஒங்கப்பனாலயும் சரி, ஒங்கப்பன் ஊட்டுச் சனங்களாலயும் சரி, எந்தக் காலத்திலியும் வா, வாத்த ஆதரவு கூட எனக்கு இருந்தது இல்லெ. இப்ப பெத்த புள்ளெயாலயும் இல்லன்னு ஆயிப்போச்சி. நடக்க முடியாத காலத்திலியும் நானே ஒயச்சி நானே திங்குறன்'' என்று சொன்ன செல்லம்மாளுக்குக் கண்கள் கலங்கின. முந்தாணையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினாள். ''பேசாம அங்க வந்து இரு'' என்றான் கருப்புசாமி. என்னாத்தெ வந்து இருக்கிறது? என்ற ஒறவுலெ இருக்கிறது? விடிஞ்சதும் பல்லெ விளக்கிக்கிட்டுப்போனா வெளக்கு வச்ச பெறவு தான் நீ வருவ. நேரா நேரத்துக்கு ஒம் பொண்டாட்டி சோத்தக் கொண்டாந்து எங்கிட்டெ நாயிக்கி வைக்கிறாப்ல வச்சிட்டுப் போயி மொடங்கிக்குவா. எங்கிட்டெ பேசுனா அவளோட அந்துசி கொறஞ்சிடும் பாரு. நாள் முயிக்க தனியா காட்டுல குந்தி கெடக்குறாப்ல கெடக்கணும். இங்க இருந்தாலும் நாலு எடத்துக்குப் போனமா, நாலு பேர பாத்தமா, நாலு வாத்தெ வடிச்சமான்னு பொயிது போவும்.'' ''நான் அவளெ கேக்குறன்.'' ''என்னாத்தெ கேட்டெ? உள்பாவாடெ ஒண்ணு வாங்கியான்னு ஒங்கிட்டெ சொல்லி வருசம் ஒண்ணாச்சு. உடுத்துன துணிக்கி மாத்துத் துணி இல்லாம கெடக்குறன். பள்ளிக் கூடத்திலெ பொட்டெ புள்ளிவுளுக்குக் கொடுத்த பாவாடெயில் ஒண்ணு வாங்கித்தான் கட்டிக்கிட்டு கெடக்குறன். ''நேரமாச்சு நாள் கௌம்பட்டுமா?'' ''நீ ஏயாவது படிக்கிறப்ப மரத்திலிருந்து கீய வியிந்து பீச்ச கையி ஒடஞ்சிப்போச்சி. ஒன்னெத் தூக்கிகிட்டு நான் ஊர் ஊரா அலஞ்ச அலச்ச இருக்கே. அது அந்த ஆண்டவனுக்குக் கூட பொறுக்காதுடா. கை கூடி வராணுமேன்னு ராத்தூக்கமில்லாம, பவ தூக்கமில்லாம ஆறு மாசம் கெடந்தான் தம்பி'' என்று சொல்லும்போதே செல்லம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழ ஆரம்பித்ததும் கருப்புசாமிக்கு அந்த இடத்தில் உட்கார முடியாமல் போய் விட்டது. சங்கடமாக உணர்ந்தவன் மாதிரி கிளம்பிவிடலாம் என்று நினைத்தாள். ஏதோ சொல்ல வாய் எடுத்தவன், ஒன்றும் சொல்லாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உள்ளங்கைகளில் இருந்த ரேகைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அழுகையினூடே. ''இந்த வருச திருநாவுக்குக்கூட நீவல்லெ. இன்னிக்குக்கூட ஒம் பொண்டாட்டி ஊட்டு சொந்தக்காரங்க சாவுங்கிறதாலெ வந்த'' என்று சொன்னாள். ''எங்க முடியுது'' ''இப்ப எப்பிடி முடியும்? நான் சாவுற அன்னிக்காச்சும் வர முடியுமான்னு பாரு. ''கருப்புசாமி வெடுக்கென்று தலையைத் தூக்கிக் கோபமாக செல்லம்மாளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காமல் சளியைச் சிந்தித் தரையில் தேய்த்தாள். அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த மூக்கன், கருப்புசாமியைப் பார்த்ததும் விசாரிக்க ஆரம்பித்தான். ''எப்ப கருப்புசாமி வந்த? சாவுக்கு வந்தியா? ஒம் பொண்டாட்டி புள்ளெயெல்லாம் எப்பிடி இருக்கு? வயசான காலத்திலெ ஒங்கம்மாவ தனியாவுட்டு வச்சியிருக்கியே. அது இன்னம் எம்மாம் காலத்துக்குத் தான் பாடுபட்டு சாப்புடும்? என்று மூக்கன் தொணதொணவென்று பேச ஆரம்பித்ததும், செல்வம்மாள் தான் இடைமறித்து, ''அவன் பாக்காம வேற யாரு பாக்கப்போறா? வெயிலுல நிக்குறியே மாமா? வெயில் தார வாயன் பேசிக்கிட்டிருக்கலாம். தம்பி இன்னிக்கி ஊர்லதான் இருக்கப் போறான்'' என்று சொல்லி மூக்கனைத் தொடர்ந்து பேசவிடாமல் அனுப்பிவைத்தவள் ''உள்ளார வந்து குந்துடா தம்பி. தெருவுலெ போறவங்க வற்வங்களுக்கெல்லாம் பதிலு சொல்லி மாளாது. ஒருத்தங்க கண்ணு மாரி இருக்காது. அப்பறம் காச்ச தலவலின்னு வந்துடும். அந்தக் காலத்திலிருந்தே ஒனக்கு நோவு தாங்காத ஒடம்பு'' என்று சொல்லி, அவள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், கருப்புசாமி உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. ''நான் போறன்'' என்று சொன்னான் கருப்புசாமி. ''புளி ரெண்டு உருண்ட தரன் எடுத்துகிட்டு போ'' என்று சொன்ன செல்லம்மாள் எழுந்து வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்திருந்த புளியை எடுத்துவந்து ஒரு பையிக்குள் போட்டு அவனிடம் கொடுத்தாள். உட்காரப்போனவள், ''மொச்ச பயிறு ஒர படி ஆவும். இங்க யாரு இருக்கா திங்க. எடுத்துக்கிட்டுப்போயி புள்ளிவோகிட்டெ கொடுக்குறியா?'' என்று கேட்டவள், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கூடக் கேட்காமல் மீண்டும் வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி, மொச்சைப் பயிரை கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். முன்பு போலவே உட்கார்ந்து அவனிடம் பேச ஆரம்பித்தவள், சட்டென்று நினைவுக்கு வந்தது மாதிரி, ''நம்ப ஊரு ஏரியிலெ மீனு புடிக்கப் போனப்ப ரெண்டு கொயம்புக்கு ஆவுறாப்லெ மீனு ஆப்புட்டுது. ஒருத்திக்காகப் போயி மீனுகொயம்பு வைக்கிறதான்னு காயப் போட்டுட்டன். கருவாடுன்னா புளிச்சிப்போன சோத்துலெ உப்புப்போடாமகூட திங்கறவனாச்சே நீ! ஒனக்குன்னு வத்த போட்டு வச்சியிருக்கன் எடுத்தாரட்டுமா?'' என்றாள். ''சரி'' சின்னப்பிள்ளை மாதிரி வேகமாக எழுந்து வீட்டுக்குள் போனவள், அடுக்குப்பானைகளை இறக்கி சவ்வுத்தாள் காகிதத்தில் முட்டணமாகக் கட்டி வைத்திருந்த கருவாட்டை எடுத்துவந்து கருப்புசாமி வைத்திருந்த பைக்குள் செருகிவைத்தாள். ''விசியமிருந்தா ஆள் வுடு, வரென்'' என்று சொல்லிவிட்டு எழுந்த கருப்புசாமியிடம், ''அக்காவ ஒரு எட்டுப்போயி பாத்துட்டு வாடா தம்பி'' என்று சொன்ன செல்லம்மாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. ''பாக்குறன்'' ''படிச்சன் படிச்சன்'னு சொல்லிக்கிட்டு திரியிற பயலுக்கு எம் பொண்ணெ கொடுக்கமாட்டன்னு சொன்ன ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்க இப்ப ஒனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களாயிட்டாங்க! யாரப் பார்த்துப் பொறுக்கிப் பயன்னு சொன்ன? என்னிக்கிருந்தாலும் எந் தம்பி கவுருமண்டு வேலெக்கிப் போவத் தான் போறான். ராசாமாரி கால ஆட்டிக்கிட்ட சாப்புடத்தான் போறான், அதெப் பாத்துட்டு இந்த ஊரு பயலுவோ மூக்குமேல வெரல வக்கிறத நான் பாக்கத்தான் போறன்னு சொல்லி ஊடேறிப் போயி சண்டெப் போட்ட ஒத்தெ அக்காக்காரிய பாக்கெ ஒனக்கு மனமில்லெ. கோயி குஞ்சிய தூக்கிப் பறாந்துக்கு எற கொடுத்துட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு அவ படுற தவுசியப் பாத்து ஊரு சனங்களே வாயுருவிப்போவுது. எங்கிட்டெ என்னா இருக்கு கொடுக்கிறதுக்கு?'' என்று சொன்னவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டாள். இடையில் ''கால கள, அந்திக் களன்னு வெட்டி அவதான் ஒன்னெ படிக்கவச்சது'' என்று சொன்னாள். ''போயிப் பாக்குறன்'' ''செடிய வச்சி தண்ணீ ஊத்துனவங்களெ மறந்துப்புட்டு, பூத்தத பறிக்க வந்தவங்களெ நல்லவங்கின்னு நெனக்கிறது, செய்யுறதுதான ஒலக நடொமொற.'' ''போறன், போறன்.'' ''என்னாத் போனெ? மூணு வருசமாத்தான் போற? கண்ணாலம் கட்டிப் போனாலும் புருசங்காரன் கண்ண மறச்சி, வருவாத் தோறும் ஒனக்கு அவ கையிலெ உள்ளத, ''இந்தாடா தம்பின்னு'' ஒனக்குக் கொடுக்கலெ? இன்னிக்கு அவ பீத்த மொறமாப் போயிட்டா இல்லெ. நம்ப ஊட்டுக்கு அவ ஒரு பொண்ணு. அவ கண்ணுத்தண்ணீ வுட்டா ஒன்னெ அப்பிடியே கேட்டுடும்'' என்று சொன்னவளுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையினூடே, ''ஒனக்கு ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்களெ பாக்குறதுக்கேதான் நேரம் பத்தாது'' என்று சொன்னாள். ''செத்தெ பேசாம இருக்கியா? இந்தச் சனியனுக்குத்தான் இங்க வரதில்லெ'' என்று சொல்லி கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்தான். அதே அளவுக்கு அவளும் திரும்பி முறைத்தாள். ''நீ வேலெக்கிப் போறதுக்கு மின்னாடி, இன்ட்ரிக்கிப் போவணுமின்னு சொன்னப்ப, இந்த ஊருல நம்பள நம்பி நூறு ரூவா கொடுக்க ஆளு இருந்துச்சா? கடன் கேட்டு நான் யாருயாரு காலு எல்லாம் வியிந்தன்னு ஒனக்குத் தெரியுமில்லெ. நைய்யா பைசா பெரலை. வேற வய்யி இல்லாத, ''புள்ளெயோட வேலெயவிட செத்துப் போனவன் கட்டுன தாலி பெருசா''ன்னு சொல்லித் தாலிய அடவு வச்சித்தான் அன்னிக்கி ஒன்னெ அனுப்புனன். ஒங்கப்பன் ஊட்டுப் பொருளுன்னு அது ஒண்ணுதான் எங்கிட்டெ இருந்துச்சி''. ''இதயே எத்தினி தடவ சொல்லுவ? இந்தச் சனியனுக்குத்தான் ஊருக்கு வரதே இல்ல.'' ''எல்லாம் நடந்த கதெதானே! பொய்யாச் சொல்லுறன். பெத்தவ ஒணணு நெனச்சா புள்ளெ ஒண்ணு நெனக்கிதுன்னு சும்மா சொல்லுல தம்பி. எனக்கு எயிவது வயசாச்சி. இன்னம் களவெட்டித்தான் சோறுதிங்கிறன்.'' ''என்னா மசுருல நடந்த கதெ'' என்று சொல்லி கருப்புசாமி கத்த ஆரம்பிக்கும்போத ராஜீ வந்தான். நீ வந்தன்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டுப் போவலா மின்னுதான் வந்தன்.'' என்று சொன்னவனை முகத்திலடிப்பது மாதிரி ''நீ போயி ரோட்டுல நில்லு ராஜீ. நான் வரன், அங்கப் பேசிக்கலாம்'' என்று சொல்லி ராஜீயைப் போகச் சொன்னான். திகைத்துப்போன ராஜீ மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போனான். ''அவனும்தான் புள்ளென்னு இருக்கான். ஒத்தயா மூணு அக்கா தங்கச்சிவுள ஒரு கொற இல்லாம சீர் செனத்தின்னு செஞ்சி கட்டிக் கொடுத்தான். மூணு பேரும் வந்தா இன்னிக்கும் நல்லத கெட்டத பாக்குறான். பெத்தத் தாயி தவப்பன குந்தவச்சி சோறபோடுறான்'' என்று ராஜீயைப் பற்றி செல்லம்மாள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விர்ரென்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் கருப்புசாமி. ''காரு வர நேரம் இருக்கும்போதே யாண்டா தம்பி பறக்குறவன்?'' என்று கேட்டவள் ''இரு வரன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். பழைய பெட்டியில் எதையோ தேடி எடுத்துக் கொண்டு வந்தவள். நூறு ரூபாய் நோட்டு இரண்டை அவனிடம் கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொள்ளாமல் வீறாப்பாக அவளிடமே திரிப்புத்தர முயன்றான். கட்டாயப்படுத்தி அவனுடைய கையில் பணத்தைத் திணித்து விட்டவள், சாதாரணமாக, ஒருகோண மூஞ்சிக் குட்டியவித்தன். ''இந்தா தரன், அந்தா தரன்'' ன்னு சொல்லி ஒரு மாசம் இயிக்கப்போட்டு நேத்துத்தான் பணத்தெ கொண்டாந்து கொடுத்தானுவோ. பணத்தெ வச்சிக்கிட்டு நான் என்னாப் பண்ணப் போறன்? இத வச்சி ஒம்மவளுக்கு என் நெனவா ஒரு காலு கொலுசி எடுத்துப்போடு'' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து கைப்பையைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு வீட்டைச் சாத்திவிட்டு ''வாடா தம்பி, காரு ஓடிப்போயிடும்'' என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தாள். ஏதோ சொல்ல வாயெடுத்த செல்லம்மாளிடம், ''பேசாமவாம்மா'' என்று கருப்புசாமி சொன்னதைக் காதில் வாங்காதவள் மாதிரி சொன்னாள்: ''பொண்டாட்டின்னு ஒங்கப்பங்காரன்கிட்டெ தாலி கட்டிக்க வந்த நாளுல இருந்து ஒங்கக் கூட்டத்திலெ இந்த வாத்தத்தான் நான் கண்டன். என்னோட ஆவி போனாத்தான் ஒனக்கு நல்லது கெட்டது தெரியும் தம்பி. எனக்கு நீ முந்தியா, ஒனக்கு நான் முந்தியா? ஒன்னெ நம்பியாடா நான் பொறந்தென். போடா.''
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அம்மா' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஜெயந்தி, சுமித்ரா, சிவராமன், வாணி, பார்வதி, டாக்டர், ஆஸ்பத்திரி, குழந்தை தலைப்பு: சில பதற்றங்களும் பாறாங்கற்களும்
"ஜெயந்தி.... உனக்கு ஃபோன்" ராம்மோகன் சொன்ன போது ஜெயந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறாள். ஆடிட்டிங் என்று ஒரே பரபரப்பு! யாராக இருக்கும்? "ஹலோ நான் ஜெயந்தி பேசறேன்.", "நான் பார்வதி பேசறேங்க... உங்க சுமித்ரா வீட்டுக்குப் பக்கத்து வீடு... அவங்களுக்கு வலி வந்திருக்கு. துடிக்கிறாங்க. அவங்க வீட்டில யாரும் கவனிக்க மாட்டேங்கறாங்க. நான்தான் இத்தனை நேரம் கூட இருந்தேன். என்ன பண்றதுன்னு தெரியலை. உங்களுக்கு ஃபோன் பண்றதுக்காக அவங்களைத் தனியா விட்டுட்டு வந்திருக்கேன். உடனே வர்றீங்களா?", "அப்படியா... கொஞ்சம் கவனிச்சுக்கங்க.... இதோ வந்திடறேன்" - பதற்றமாய் ஃபோனை வைத்த ஜெயந்திக்கு என்றுமில்லாத படபடப்பு நெஞ்சில். கைகள் வியர்த்தன. எல்லோரும் இருந்தும் எங்கோ தன் சகோதரி அனாதையாய்த் துடிக்கும் காட்சி நெஞ்சைக் குமுற வைத்தது. என்ன செய்வது இப்போது? அலுவலகத்தில் அத்தனை பேரும் கருமமே கண்ணாக, வரப்போகும் ஆடிட்டருக்காய் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இப்போது விடுப்பு கேட்பதென்பது மிகப் பெரிய பொறுப்பின்மை! கதவைத் தட்டி அனுமதி பெற்று, உள்ளே சென்று மேனேஜரிடம் லேசான அவமானத்தில் குனிந்த தலையாய், "சார்... அக்கா வீட்டில இருந்து ஃபோன் வந்தது. அவங்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணனும். உடனே நான் போகணும்... - நிலைமையை சரியான பரிமாணத்தில் விளக்க முடியாத இயலாமையில் வரப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள். "மேடம், உங்களுக்கே நல்லாயிருக்கா? வேற ஏதாவது ஆல்டர்னேட்டிவ் அரேன்ஜ்மெண்ட் செய்துட்டு வந்திருக்கணும். இப்ப வந்து லீவு கேட்கிறீங்களே! கொஞ்சம் பொறுப்பா இருந்து என்கூட ஒத்துழைங்க ப்ளீஸ்..." மேனேஜர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் ஜெயந்திக்கு அவ்வார்த்தைகள் நெருப்புக் கங்குகளாய்ச் சுட்டன. "சார்... அக்கா வீட்டில கொஞ்சம் பிரச்சினை. நான் இப்ப போகாட்டி அவங்க உயிருக்கே ஆபத்து நேரிடலாம். போயிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன், ப்ளீஸ் சார்..." பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்து கைப்பையை எடுத்துக் கொண்டு வாணியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு ஓட்டமாய்க் கீழே வந்து ஆட்டோவில் ஏறி, "ராம்நகர் ராமர் கோயில் வீதிக்குப் போங்க" என்றாள். "சுமிக்கா, உனக்கு ஏன் இத்தனைப் பாடு? எத்தனை அருமையாக வளர்ந்த பெண் நீ! வீட்டில் முதல் கல்யாணம். எத்தனை ஆடம்பரமாய்ச் செய்து கொடுத்தோம்! ஏன் இப்படி அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது உனக்கு. எப்படி மாறி விட்டாய்! பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வர அனுமதியில்லை என்று வருவதேயில்லை. வந்த சில தடவைகளிலும் விவரமாய் எதுவும் பேசவில்லை. மௌனமாகிப் போனாய்! பாழுங் கிணற்றில் தள்ளி விட்டோம் என்று எங்கள் மேல் கோபமா சுமிக்கா? ஜெயந்திக்கு உடனே தன் சகோதரியைப் பார்த்து, கைகளை இறுகப் பற்றி, அவள் தலையைத் தன் நெஞ்சில் சாய்த்து, நான் வந்துட்டேன் சுமிக்கா! இனி எதுக்கும் கவலையில்லை" என்று சொல்ல வேண்டுமாய் இருந்தது. வீட்டை அடைந்து உள்ளே ஓடிய போது அங்கு நிலவியிருந்த நிசப்தத்தில் வாசலிலேயே சுமித்ராவின் முனகல் கேட்டது. சுமியின் மாமனார் மாமியார் கணவன் மூவரும் முகத்தில் பாவம் ஏதும் காட்டாதிருக்க சபதம் செய்தவர்கள் போல ஹாலில் சோஃபா, தரை, சேர் என்று முறையே அமர்ந்திருந்தார்கள். ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. ஜெயந்தியும் எதுவும் பேசாமல் உள்ளறைக்கு ஓடினாள். சுமித்ரா! இருபத்திரண்டு வருடங்கள் உடனிருந்து களித்து, ஒரே மலரின் இன்னொரு இதழாய்ச் சிரித்த சகோதரி... பூரண கர்ப்பிணி கட்டிலில் இடமும் வலமுமாய் அசைந்து வலுக்கட்டாயமாகத் தணித்துக் கொண்ட குரலில் "அம்மா அம்மா" என்று அனத்தியதை ஜெயந்தியால் சகிக்க முடியவில்லை. "சுமிக்கா, ஜெயந்தி....! வந்துட்டேன் பாரு....ஒண்ணுமில்லை. இப்பவே போயிடலாம்..." அருகிலிருந்த பார்வதியிடம் "கொஞ்சம் பார்த்துக்கங்க, இதே போய் ஆட்டோவைக் கூட்டிக்கிட்டு வந்திடறேன்" என்றவாறு வெளியே ஓடி வந்தாள். ஹாலுக்கு வந்த போது தன் ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப் படுகிறது என்ற எண்ணம், சட்டென்று தன் கண்களைத் தாழ்த்திக் கொண்ட சிவராமனின் செய்கையிலிருந்து புரிந்தும், "இல்ல இதுவல்ல நேரம்.... சுமித்ரா, ஆட்டோ, ஆஸ்பத்திரி - இவை மட்டுமே இப்போதைய பிரதான எண்ணங்கள்." காலை பத்தரை மணிக்கு ஒரு அலுவலக நாளில் ஒரு முக்கியமான சாலை இப்படியா வெறிச்சென்றிருக்கும்? ஒரு ஆட்டோ கூட கண்ணில் படவில்லை. இந்த சாலைகள் சேரும் பிரதான சாலைக்குத்தான் போக வேண்டும். கஞ்சி போட்ட காட்டன் சேலையும், கவனித்து வாரப்பட்ட கூந்தலுமாய் ஒரு இளம் பெண்ணின் ஓட்டம் அந்த நேரத்திற்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. ஓடினாள், சட்... கால் செருப்பு அறுந்து குப்புற விழ இருந்தவள் சமாளித்துக் கொண்டாள். அழகான ராஜஸ்தான் செருப்பு! "உன் பிறந்த நாளின் போது எதுவும் கொடுக்க முடியவில்லை. உனக்காகவே காத்திருந்து வாங்கிய செருப்பு இது." பிறந்த நாள் பரிசாக செருப்பா? "இது பரிசு அல்ல.... உன் பாதையில் உன்னுடன் எப்போதும் வரத் தயாராக இருக்கும், உன்னைத் தாங்கக் காத்திருக்கும் என்கிற என் மனத்தின் அடையாளம்... ஆல்வேஸ் வித் யூ!" - சின்னத்துண்டுப் பேப்பருடன் போன மாதம் பிறந்த நாள் முடிந்து ஒரு வாரம் கழித்து வாணி கொடுத்த கலைவேலைப்பாடுகள் அமைந்த செருப்பு! என்ன செய்வது? செருப்புத் தைப்பவரைத் தேடியலைய நேரமில்லை. எடுத்துப் போட்டுக் கொள்ளக் கைப்பை இல்லை. சமாளித்து, அறுந்து போன வாருடனேயே காலைச் சிறிது இழுத்து நடந்ததில், நடையை மாத்து உன் நடையை மாத்து" சாலைத் திருப்பத்தில் வேலையற்ற இளைஞர்களின் பாட்டு! நகக்கண்ணில் ஊசி ஏற்றிய வேதனையாக செருப்புகளை சாலையோரத்தில் "சாரி வாணி" என்றபடி எறிந்து விட்டு வெற்றுக் கால்களில் ஆட்டோ பிடித்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது சுத்தமாய்ப் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்ததுடன் சேலை கசங்கி, தலை கலைந்து, வியர்வையில் ப்ளவுஸ் முதுகுடன் ஒட்டி யாரோ ஒரு ஜெயந்தி போல் இருந்தாள். சுமித்ராவால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. பார்வதி மட்டும் இல்லாதிருந்தால் ஜெயந்தி மயக்கமடைந்திருப்பாள். சுமிக்கா... கொஞ்சம் முயற்சி பண்ணு. என் தோளைப் பிடிச்சுக்கோ... வா. வெளியே ஆட்டோ காத்திருக்கு... இதோ ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம், கொஞ்சம் தெம்பா இரு..." பார்வதியும் அவளுமாய் சுமித்ராவை நடத்தி வெளியே அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றினார்கள். மாமியார்காரி சமையலறைக்குள் இருந்தாள். மாமனார் பேப்பர் படிக்க, சிவராமன் சட்டைகளை உதறி லாண்டரிக்கு அனுப்ப ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். சுமித்ராவை ஆட்டோவில் அமர்த்திவிட்டு, விட்டுச் சென்ற கைப்பையை உள்ளறையிலிருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜெயந்தி அப்போதும் ஏதும் பேசும் உத்தேசம் இல்லாதவளாகத்தான் இருந்தாள். ஆனால் மாமியார்க்காரி தொண்டையை செருமிக் கொண்டு "நல்லாத்தான் இருக்கு நாடகம்... ஓட்டமும் ஆட்டமும்! மகாராணிக்கு இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்லை" என்றதில் ஜெயந்தி கடினமாய்ப் போட்டு வைத்திருந்த சங்கிலி அறுத்துக் கொண்டது. இத்தனை நேரம் நெஞ்சை அழுத்தியிருந்த வேதனை பட்டென்று வெடித்து லாவாக் குழம்பாய்க் கொந்தளித்தது. "ஏன் அத்தை.. நீங்க எல்லாம் மனுஷங்கதானா? ஒரு பொண்ணு, யாரோ இல்லை... உங்க மருமக, நிறைமாதமாய் வயித்தில குழந்தையை வைச்சுக்கிட்டுத் துடிக்கிறாளே ஏதாவது கொஞ்சம் கொஞ்சம் இரக்கம் காட்டினீங்களா? உங்க காசு, பணம், விருப்பு, வெறுப்புக்கெல்லாம் இதுதானா நேரம்? நீங்களும் ஒரு பொம்பளைதானே? நீங்க மட்டும் என்ன உங்க மகனை சுகமா நிண்ணுகிட்டேவா பெத்தீங்க? என் ஜென்மத்தில் இந்த மாதிரி ஒரு குடும்பத்தைப் பார்த்ததில்லேப்பா... அன்போ, பாசமோ, கேவலம் கொஞ்சம் மனிதாபிமானம் கூட இல்லாத நீங்கள்லாம் மனுஷங்களே இல்லை... எங்கேயோ மலை மேலே பாறாங்கல்லா கிடக்க வேண்டியவங்க... தப்பிப் போய் இங்க பிறந்ததுமில்லாம ஒண்ணும் தெரியாத வெகுளிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி சித்திரவதை வேற செய்திருக்கீங்க! உங்களையெல்லாம்... ஏன் மாமா, வெளிய உங்க பொண்டாட்டி துடிச்சுக்கிட்டிருக்கா நீங்க சட்டையை உதறிகிட்ட இருக்கீங்க... உங்களுக்கெல்லாம் எதுக்கு சட்டையும் வேட்டியும்? போயி..." என்றவளை "ஜெயந்தீ..." என்ற சுமித்ராவின் அலறல் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. வலுக்கட்டாயமாக நிறத்தப்பட்ட குமுறல் பௌதிக நிலைம விதிக்குட்பட்டது போல, த்தூ.... பாறாங்கள் ஜென்மங்க" என்ற நிச்சயமான, நிதர்சனமான துப்பலுடன் முடிவு பெற்றது. ஆட்டோவில் சுமித்ராவை சமாதானப்படுத்திக் கொண்டே, "ரிலாக்ஸ் ஜெயந்தி... அவசரப் படாதே" என்று தனக்குத்தானே தலையில் தட்டி ஆசுவாசப் படுத்திக் கொள்ள செய்த முயற்சி பாதி வெற்றியும் பாதி தோல்வியுமாய் இருந்தது. ஜெயந்தி என்ற 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் அருகாமையும் அவஸ்தையும் மிகவும் புதிது! பொய் வலி, பனிக்குடம் உடைதல், லேபர் பெய்ன் போன்ற வார்த்தைகளைப் பிறர் பேசக் கேட்டிருக்கிறாள். இப்போது சுமித்ராவுக்கு என்ன என்பதை அவளால் நிச்சயமாகத் தீர்மானிக்க முடியவில்லை. இதற்கு என்ன முதலுதவி, உடைகளைத் தளர்த்த வேண்டுமா? பாம்புக்கடிக்கு வாழைப்பட்டை வைத்தியத்தைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வரவில்லை ஜெயந்திக்கு. ஆஸ்பத்திரிக்குச் சென்று சுமித்ராவை அட்மிட் செய்யும் வரை ஜெயந்திக்கு சுயநினைவே இருக்கவில்லை. ஒருவேலை ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தால் குழந்தையைத் தாங்குவதா சுமித்ராவைக் கவனிப்பதா போன்ற அபத்தமான சிந்தனைகள் கூட வந்தன. ஆஸ்பத்திரி வாசலில் சுமித்ராவை அழைத்து வந்த கோலத்தைப் பார்த்து ஆஸ்பத்திரி நர்ஸ் ஓர் அலறலுடன் "மை காட்... ஏம்மா நீங்கள்லாம் படிச்சவங்கதானே? அறிவிருக்கா? கொஞ்சம் முன்னாடியே கூட்டிகிட்டு வர வேண்டியது தானே?" என்ற போது ஜெயந்தி எதுவும் உறைக்கும் மனநிலையில் இல்லை. சுமித்ராவை அட்மிட் செய்து, அப்பாவுக்கு ஃபோன் செய்து ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து, வீட்டிற்குப் போய் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி வேண்டிய பொருட்களுடன் அனுப்பி வைத்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த முரளிக்கு விஷயத்தைச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்த போது மணி ஒன்றரை ஆகியிருந்தது. லேசான ஆசுவாசத்துடன் சகோதரனின் அண்மையும் கிடைக்க, மகா ஆத்திரத்துடனும், பொருமலுடனும் நடந்ததைச் சொல்லி முடித்த போது அழுகையில் கண்களும் கன்னமும் நனைந்தன. சகோதரியின் கண்களில் நீர், இயல்பாக அந்த இள ரத்தத்தைத் தூண்டி விட "பிடிச்சு எகிற வேண்டியதுதானே ஜெயந்திக்கா? அந்த ராஜஸ்தான் செருப்பிலேயே நாலு அறை குடுத்திருக்க வேண்டியதுதானே? பாவம், வாணியக்காவுக்குத் தெரிஞ்சா எவ்வளவு சங்கடப்படுவாங்க?" என்ற முரளிக்கு, "நிறைய கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லித் திட்டணும் போல இருந்து முரளி... ஆனா சொல்லத் தெரியலை. பாறாங்கல் ஜென்மங்கள்னு திட்டினேன். லிட்ரலா துப்பினேன். இவங்க கேட்டவுடனே வைர மோதிரம் தர்றதுக்கு நாம என்ன கோலாரையா குத்தகைக்கு விட்டிருக்கோம்?" என்றாள். "கேட்க வேண்டியதுதானே? ஏன்யா வைரமில்லாத பொண்டாட்டி வேண்டாம்... ஆனா அவகூட " நாக்கைக் கடித்து அடக்கிக் கொண்டான். பேசிப்பேசி பொருமலைத் தீர்த்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. கொஞ்சம் நிம்மதியுடன் வாசலுக்கு வந்த ஜெயந்தியின் பார்வையில் ஒரு வயதான பெண்மணி ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்து வரும் காட்சி தென்பட, "இதே இன்னொரு பாறாங்கல் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள்" என்று நினைத்துக் கொண்டாள். குழந்தை பிறந்த சேதியை முரளி மூலம் ("உள்ளே போக மாட்டேன். வெளியவே நிண்ணுதான் சொல்லிட்டு வருவேன். ஏதாவது ஏடாகூடமா பேச்சு வந்தது, அந்தாளு தீர்ந்தான் ஆமா...") சொல்லியனுப்பியும் யாரும் வரவில்லை. இரண்டு மாதங்கள் சுமித்ரா குழந்தைக்குப் பாலோடு கண்ணீரையும் கலந்துதான் தந்தாள். அவள் பேசுவதே அபூர்வமாய் இருந்தது. கருவுற்ற ஏழாம் மாதம், மெல்லிய கதம்பப் பூக்கள் சூட்டி, சீர்வரிசைகள் நிரம்பத் தந்து பட்டுப் புடவையில் தேவதைப் பெண்ணாய்ப் பார்த்து, கண்ணாடி வளையோசைகளே சின்னக் கண்ணனின் மழலையாய்க் கொண்டு, அடியொற்றி வைக்க ஆயிரம் பேர் அருகாமையில் பணிவிடை செய்ய லாலி பாடி, ஆரத்தி எடுத்திருந்தால் சுமித்ராவும் சிரித்திருப்பாள். சுமித்ராவின் புகுந்த வீட்டு வக்கிரம் வீட்டில் எல்லோரையும் தாக்க, இனி சுமித்ராவை அனுப்பவே வேண்டியதில்லை என்று முடிவு செய்தனர். தாய்மை நிலையில் ஓருயிர் இன்னோர் உயிரை வெளிப்படுத்தத் தயாராய் நின்ற நிலையை நாடகம் என்று வர்ணித்தவர்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்பது புரிந்து போக சுமித்ராவை மீண்டும் அங்கே அனுப்பி முழுசாய்ப் பலி கொடுக்கத் தயாராயில்லை. ஒரு நாள் காலை அலுவலகத்திற்குக் கிளம்பிய போது, சுமித்ரா, "ஜெயந்தி, நான் எங்க வீட்டுக்குப் போகறதா முடிவு பண்ணிட்டேன்" என்ற போது, ஜெயந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. "என்னது, உங்க வீடா? அப்படி ஒண்ணு இருக்கா சுமிக்கா உனக்கு?", "இல்லை ஜெயந்தி... நான் இப்படியே இருந்துட முடியுமா? எப்ப இருந்தாலும் நான் அங்க போக வேண்டியவதான். எத்தனை நாள் இங்க பாரமா இருக்க முடியும்? நீ வேற கல்யாணம் ஆகி போக வேண்டிய பொண்ணு. உனக்கு எதுவும் தெரியாது.", "சுமிக்கா... ப்ளீஸ். யோசி.. நீ என் கூடப் பிறந்தவ. பாரம் இல்லை. அப்படியே உனக்குக் கஷ்டமா இருந்தா இங்கேயிருந்தே ஒரு வேலைக்குப் போய்கிட்டு வந்துகிட்டு இரு உன்னை இழக்கிற அளவுக்கு எங்களுக்கு நெஞ்சுரம் இல்லை." யார் வார்த்தையும் சுமித்ராவிடம் செல்லுபடி ஆகவில்லை. ஒரு நாள் காலையில் பிடிவாதமாய் குழந்தையுடன் டாக்ஸியில் ஏறிக்கொள்ள, முணுமுணுத்துக் கொண்டே முரளியும் கலவரமாய் அப்பாவும் கூடப் போனார்கள். வாசலில் அழுகையில் அம்மா. நிலைப்படியில் சாய்ந்து நின்றிருந்த ஜெயந்தி டாக்சி கண்மறையும் வரை பார்த்திருந்தாள். "நோ கெல்பெர்னியா, சீசர் ஷல் கோ" - எத்தனை பய ஊசிகளுடன் கெல்பெர்னியா சீசரைப் போக வேண்டாமென்று தடுத்திருப்பாள்... சீசர் வீரன். ஆண்மகன். அதிகாரமாய் "போவேன்" என்றான். சுமித்ரா பெண், சாதாரணப் பெண். அடக்கமாய், ஆனால் பிடிவாதமாய் "போவேன்" என்றாள். ஜெயந்திக்கு அந்த ஒரு நாள் நினைவுக்கு வந்தது. எத்தனை ஓட்டம், எத்தனை உணர்ச்சிகள், எத்தனை பதட்டங்கள்! ஒரு ஆயுசுக்குப் போதுமான அலைச்சல்! அத்தனையும், ஒரு "ஷல்கோ"வில் அர்த்தமற்றதாய்ப் போய் விட்டன. "மனிதாபிமானம், இரக்கம், பாசம் இல்லாத அவர்களைப் பாறாங்கல் ஜென்மங்கள் என்றேன். இதோ மானம், ரோஷம் இல்லாமல் அவர்களைத் தேடிப் போகும் சுமிக்கா கூட ஒரு பாறாங்கல் ஜென்மம்தான்." புதிதாய் ஒன்று புரிந்து கொண்ட மாதிரி, ஜெயந்தி கண்களை மூடிக் கொண்டாள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சிங்கராஜா தலைப்பு: நடப்பது எல்லாம் நன்மைக்கே!
காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன. "ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்" என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக "நொண்டி ராஜா" என அழைத்தன.இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், "நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்", என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.இதைக்கண்டு வருந்திய அவர்கள், "இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. "எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது" என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது."நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். "நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது" என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, "சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்" என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, "அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, பக்கத்து வீட்டுக்காரர், பாத்திரங்கள், நையாண்டி, விசேஷம், கர்பம் தலைப்பு: குட்டி போட்ட பாத்திரம்
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து" என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன்" என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்." நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?" என வியப்புடன் கேட்டார் முல்லா." முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன்" என்றார் அண்டை வீட்டுக்காரர். சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்." ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன்" என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா. சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார். இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காாரிடம் சென்றார்." உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள" ் என்றார்." நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ?" என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க" நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன்" என்றார். முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்." இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார். பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை. தூங்கி எழுந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் பிரத்யட்சமாய் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான். "என்ன நடந்தது...?" என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. "இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார். முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். "காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி அழுதனர். "என்ன நடந்தது......" என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னதுடன், 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான். தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர். பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். "உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர். "கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம். "நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள். கடவுளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. "நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள். "சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக. "கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர். இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான். வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம். யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சாகாத வரம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பெண், குழந்தைகள், கணவன், ஊர், வெளியூர், கடிதம், வண்டி,மாடு, புலி, நரி தலைப்பு: இரண்டு புலிக்கு எங்கே போவேன்?
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான். பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள். அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன. ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள். சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள். நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது. இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள். குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது. ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது. தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள். பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது. நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி. இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது. அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி. இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது. அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது. நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது. உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி. வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குரங்கு, முதலை, நாவல் மரம் தலைப்பு: முதலையும் குரங்கும்
ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது. அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது. ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?" எனக் கேட்டது. குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது. அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது. அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது. வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது. தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது. அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது. முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு.."முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது. முதலையும் ஏமாந்து திரும்பியது. நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று கூறினார். பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன. மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், “எங்களால் முடியாது கண்ணா!” என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார். “கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,” என்று கூறினார். உடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான். பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தானத்தில் சிறந்தவர் கர்ணனே' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, “ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அரசவை விகடகவியாக்குதல்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: (இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை) ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான். விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான். விற்றவன் “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான். விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான். நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு” என்று தீர்ப்புக் கூறினார். விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிணற்றைத்தானே விற்றேன்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, மீனவர்கள் தலைப்பு: கால் முளைத்த மீன்கள்
கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான்.அதைக் கேட்ட மடையன், "குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்" என்றான்."ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!" என்றான், மண்டு "ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மூடன்"என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!" என்றான், முட்டாள். கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தார்.சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆளுக்கு ஒரு தூண்டில் தயார் செய்தனர்.இரவு வந்தது. குருவும் சீடர்களும் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் மீன் பிடிக்கப் புறப்பட்டார்கள்.கடற்கரை ஓரத்தில் படகு ஒன்று இருந்தது. அதில் பரமார்த்தரும், அவரது ஐந்து சீடர்களும் ஏறிக் கொண்டனர். மட்டியும், மடையனும் கண்டப துடுப்புப் போட்டனர்.மூடன் தூண்டிலைப் போட்டான். அவன் போட்ட தூண்டிலில் தவளை ஒன்று மாட்டியது.அதைக் கண்ட சீடர்கள், "இதென்ன? விசித்திரமாக இருக்கிறதே!" என்று கேட்டனர்.அது தவளை என்பதை மறந்த பரமார்த்தர் "இதுவும் ஒரு வகை மீன்தான் அதிகமாக தின்று கொழுத்து விட்டால் இப்படிக் கால்கள் முளைத்து விடும்" என்று விளக்கம் கூறினார்."அப்படியானால் கால் முளைத்த மீன்களைக் கட்டிப் போட்டு, வீட்டிலேயே வளர்க்கலாம்!" என்றான் மட்டிஅதற்குப் பிறகு, மண்டு போட்ட தூண்டிலில் ஒரு சிறிய மீன் மட்டுமே மாட்டியது."குருநாதா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. படகுக்கு வெளியே நிறைய மீன்கள் இருந்தாலும் கொஞ்சம் தான் நமக்குக் கிடைக்கின்றன. அதனால் படகில் சில ஓட்டைகளைப் போட்டு, பக்கத்தில் கொஞ்சம் பூச்சிகளை வைத்து விடுவோம்! அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக, மீன்கள் ஓட்டை வழியாகப் படகுக்குள் வரும். உடனே லபக் என்று பிடித்துக் கொள்ளலாம்!" என்றான் முட்டாள்."சபாஷ்! சரியான யோசனை!" என்று முட்டாளைப் பாராட்டினார், பரமார்த்தர்.அவன் யோசனைப்படி படகிலிருந்த ஆணிகளால், ஆளுக்கு ஒரு ஓட்டை போட்டனர்.அவ்வளவு தான்! அப்போதே கடல் நீர் குபுகுபு என்று படகுக்குள் பாய்ந்து வந்தது.அதைக் கண்ட சீடர்கள் "ஐயோ" என்று கத்திக் கொண்டு எகிறிக் குதித்தனர். அதனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் கண்டது படகுஅதற்குள் படகு முழுவதும் நீர் நிரம்பி விடவே, படகு கடலுக்குள் மூழ்கியது. குருவும் சீடர்களும் லபோ திபோ என்று அலறியபடி நீருக்குள் தத்தளித்தனர்.அவர்கள் போட்ட சப்தத்தைக் கேட்டு, அங்கு வந்த சில மீனவர்கள் நீந்திச் சென்று அனைவரையும் காப்பாற்றினர்.மடத்துக்கு வந்து சேர்ந்த சீடர்கள், "நம் படகு எப்படிக் கவிழ்ந்தது?" என்று கேட்டனர்."கடலும், மீன்களும் சேர்ந்து சதித் திட்டம் செய்து தான் நம் படகைக் கவிழ்த்து விட்டன! என்றார் பரமார்த்தர்."அப்படியானால், எப்படியாவது கடலின் திமிரையும் மீன்களின் கொட்டத்தையும அடக்க வேண்டும்" என்றான் மட்டிகுருவே! முடிந்தவரை மீன்களைப் பிடித்துக் கொன்று விடுவோம்" என்றான் மடையன்."ஆமாம்! சும்மா விடக்கூடாது. மறுபடியும் மீன் பிடிப்போம், வாருங்கள்" என்றான் முட்டாள்.மறுநாளும் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.கடலுக்குள் சென்றதும், "குருவே! எங்களை விட உங்கள் மீது தான் மீன்களுக்குக் கோபம் அதிகமாக இருக்கும். அதனால், தூண்டில் போடுவதற்குப் பதில், உங்களையே கயிற்றில் கட்டி கடலுக்குள் இறக்கி விடுகிறோம்" என்றான் மட்டி."உங்களைக் கடிப்பதற்காகக் கடலில் உள்ள எல்லா மீன்களும் வரும். உடனே நாங்கள் எல்லா மீன்களையும் பிடித்து விடுகிறோம்" என்றான் மடையன்.குரு சற்று நேரம் யோசித்தார். "நீங்கள் சொல்வதும் சரியே" என்றார்.உடனே சீடர்கள் அவரைக் கயிற்றில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டனர். நீச்சல் தெரியாத பரமார்த்தர், நீருக்குள் மூழ்கியதும் மூச்சுவிட முடியாமல் துடித்தார்.நீரின் மேல் பரப்பில் காற்றுக் குமிழிகள் வருவதைக் கண்ட சீடர்கள், "அடேயப்பா! நம் குரு நிறைய மீன்களைப் பிடிக்கிறார் போலிருக்கிறது" என்றனர்.பரமார்த்தரின் வயிறு முழுவதும் நீர் நிரம்பியதால் குமிழிகள் வருவது நின்றன.எல்லா மீன்களையும் பிடித்து விட்டார் என்று நினைத்த சீடர்கள், நீரிலிருந்து குருவைத் தூக்கினர்.ஆனால் பரமார்த்தரோ மயங்கிக் கிடந்தார்."மீன்களோடு நீண்ட நேரம் சண்டை போட்டதால் களைத்து விட்டார்!" என்றான் மட்டி.கண் விழித்த பரமார்த்தர், "சீடர்களே! இன்னும் நம் மீது, கடலுக்கு இருக்கும் கோபம் தீரவில்லை. எப்படியோ இந்தத் தடவை தப்பித்துக் கொண்டோம். இனிமேல், கடல் பக்கமே போகவேண்டாம்!" என்றார்.கடைசியில் கடலையும் மீன்களையும் திட்டிய படி அனைவரும் கரை சேர்ந்தனர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். ” இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?” இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.” அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது.” என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது.” என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” ”வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.””அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்.”என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை “தொபுகடீர்” என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்.”இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? “” அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்.” ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்.”இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?” என்றார் அரசர் வருத்தத்தோடு. “அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. ” என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒருநாள், சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் அக்பரை பணிவுடன் வணங்கியபோது, அக்பர் அவனை நோக்கி, “நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?” என்று அக்பர் கேட்டார். “என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்” என்றான் மகேஷ். “எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!” என்றார் அக்பர். “பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!” என்று மகேஷ் பெருமையுடன் கூறினான். “அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!” என்றார் அக்பர். “பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?” என்று மகேஷ் கேட்டான். “முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!” என்றார் அக்பர். “நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!” என்றான் மகேஷ். “அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?” என்றார் அக்பர். “முப்பது சவுக்கடி கொடுங்கள்!” என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். “உனக்கென்ன பைத்தியமா?” என்று அக்பர் கோபத்துடன் கேட்டார். “அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!” என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் “அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!” என்றார். மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை “நீ அடிக்கத் தொடங்கு!” என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் “நிறுத்து!” என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, “பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!” என்றான். அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், “என்ன உளறுகிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார். அவர்களையே் கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, “தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்” என்றான். இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டைஅடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி, “இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!” என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், “நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்” என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காவல்காரர்கள் பெற்ற பரிசு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டார். தடால் என்ற சப்தத்துடன் எதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சப்தம் என்று கேட்டாள். கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒள்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார். ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள். சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா சமாளித்தார். அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கீழே விழுந்த சட்டை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, மாடி, மனைவி, சமையல், சப்தம், சட்டை தலைப்பு: கீழே விழுந்த சட்டை
ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டார். தடால் என்ற சப்தத்துடன் எதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சப்தம் என்று கேட்டாள். கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒள்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார். ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள். சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா சமாளித்தார். அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன. இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம். இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது. ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது. சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.‌
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிங்கமும் நரியும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: செல்லி, வேலாயி, ஏஜெண்ட், கண்டக்டர், முத்துலட்சுமி, பஸ், வேலை, தாவணி தலைப்பு: அரும்பு
சாரல் காற்று குளிர்ச்சியை வாரியிறைத்தது. கூதலடிக்கிறது. அப்படியே மூடிக்கொண்டு முடங்கிக் கொள்ள ஆசைப்படுகிற குழந்தை மனசு. "நிமாண்ட் நாழியிலே ரெடியாகு." சாட்டைக் குச்சியாக மனசுக்குள் குத்துகிற ஏஜெண்டின் குரல். உறக்கத்திற்கு ஏங்கித் தவித்த மனசை, அம்மாவின் இருமல் சத்தம் திசை திருப்பி வழி நடத்தியது. அடுப்புச் சாம்பலில் பல்லைத் தேய்த்தாள். கஞ்சியைக் குடித்தாள். தலையில் எண்ணெய் வைத்து, பின்னிக் கொண்டாள். கணக்குச் சிட்டையையும், சில்லறை டப்பாவையும் எடுத்துக்கொண்டாள். சோறுவைத்த தூக்குச் சட்டியை நீட்டினாள் வேலாயி. பாவம். அம்மா! நோய் அவளைத் துளைத்துத் துவட்டியெடுத்து விட்டது. தசையையெல்லாம் கரைத்துக்குடித்துவிட்டு, எலும்பும் தோலுமாக்கி விட்டது. நிற்கக்கூடத் தெம்பில்லாமல் இடது கையால் சுவரைப்பிடித்துக் கொள்கிறாள். "நேத்து எம்புட்டுக் கட்டை அடுக்கினே, செல்லம்?", "இருவத்தி ஒண்ணுமா", "இன்னிக்கு சனிக்கிழமை. நாளை லீவ். திங்கட்கிழமை என்ன செய்யப்போறே?" அடிபட்டவளாய்த் திகைத்து நிமிர்ந்தாள், செல்லி. சட்டென்று வாடிக்கறுக்கிற பிஞ்சு முகம். சிறு கண்களில் கலக்கம். இமைகளில் ஈர மினுமினுப்பு. எதுவும் சொல்லத் திசையற்றுப் போய், மௌனத்தில் உறைந்தாள். வேலாயியின்குலை பதறியது. பெற்ற மனது பதைத்தது. மகளின் தலையை அன்புடன் தடவினாள். அவள் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர். "ஏஜெண்டுத் தம்பி கண்டிசனா சொல்லிருச்சே" மனசைப் பிசைகிற வேதனையோடும் புலம்பினாள் வேலாயி. தாயைப் பார்த்து மனம் கலங்கி, பீதியுடன் நிற்கிற எட்டுவயதுச் சிறுமி செல்லி. "செடிக்குச் செடியா உக்காந்து பறக்கிற தட்டானைப்போல... தெருவிலே ஓடி விளையாட வேண்டிய சின்ன அரும்பு. விடியுறதுக்கு முந்திப்போய், பாடுபட்டு, பொழுதடைஞ்சு இருட்டுனப் பிறகு வீடு வந்து சேருகிற கொடுமை!" மனக்குமுறல் தாளாமல், மார்பில் மடேரென்று அடித்துக் கொண்டாள் வேலாயி. "அடப் பாதரவே, கூத்துவன் என்னை ஒடிச்சுப்போட்டுட்டு, இப்படிக் கூத்துப்பார்க்கானே! கண்ணு முழியாத இந்தக் குஞ்சு ஒழைச்சுக்காலம் ஓட வேண்டியதாயிடுச்சே. அந்த "ஒழக்கரிசிச் சீவன்" இருந்திருந்தா. நமக்கு இந்தக் கதி வந்திருக்குமா? வேட்டு வெடித்த கிணற்றுப்பாறையில், நசுக்குண்டு இறந்து போன புருசனை நினைத்தாள். அந்த இழப்பின் கனபரிமாணம் நொந்துபோன இந்த நேரத்தில் முழுசாகத் தாக்கியது. விசும்பினாள். அழுது கதறுகிற அம்மாவைப் பார்க்கச் செல்லியின் மனம் சகிக்கவில்லை. முட்டுகிற விம்மலை அடக்கிக் கொண்டாள். "நேரமாச்சும்மா... நா போகட்டா?", "போறீயா? போய்ட்டு வா. கண்ணு, யார் கூடயும் சண்டை கிண்டை போடாம, கருத்தா வேலையைப் பாரம்மா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீயா?" தலையசைத்து விட்டு வாசல்படியைத் தாண்டிய செல்லியை இருட்டு அப்பிக் கொண்டது. நாய் குரைக்குமோ" பயத்தில் திகைத்துப் போய்த் தேங்கி நின்றாள். நல்லவேளை மேலத்தெரு முத்துலட்சுமி வந்துவிட்டாள். "வர்ரீயா?" துணை கிடைத்துவிட்டது. "திங்கட்கிழமைக்கு ஒண்ணும் பதில் சொல்லாமப்போகுது. புள்ளை, என்ன செய்யப் போறாளோ..."அம்மாவின் புலம்பல் சத்தம், காலை நேர அமைதியில் துல்லியமாகத் துரத்துகிறது. தெருவில் ஒரு சுடு குஞ்சுகூட விழித்திருக்கவில்லை. நாய்கள் கூட கூதலடிக்காத இடம் பார்த்துப் போய் முடங்கிக் கொண்டன. அத்துவானக் காட்டில், ஒத்தையில் நடப்பது போலிருந்தது. செல்லிக்கு. கீழடி வானம் முகம் சிவக்க தொடங்கியது. விடிவெள்ளியைச் சாரல் மேகம் ஒளித்துக் கொண்டது. கிராமத்தையே கதிகலங்கடிக்கிற மாதிரி.. விடாத ஓங்காரமாய் ஹாரன் சத்தம். பஸ் வந்தவிட்டது. செல்லி நடையை எட்டிப் போட்டாள். முத்துலெட்சுமி நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சிறுமி குட்டோட்டமாய் ஓடினாள். ஏற்கெனவே வந்திருந்த பிள்ளைகள் பஸ்ஸ•க்குள் ஏறிப்படுத்திருந்தன. ஓட்டமும் நடையுமாக ஓடி வருகிற இவர்களைப் பார்த்து கண்டக்டர் கோபமாய் அதட்டினார். "என்ன, தேரு மாதிரி ஆடியசைஞ்சி வாரீக? விருட்டுன்னு வாங்க. இன்னும் ஏழு ஊர்கள்ளே புள்ளைகளை ஏத்திக்கிட்டு, ஆறு மணிக்குத் தீப்பெட்டியாபீஸ் போய்ச்சேர்ந்தாகணும்." அந்த அதட்டல் உரட்டலெல்லாம் செல்லி மாதிரியான சிறுமிகளிடம்தான். தாவணி போட்ட முற்றிய சிறுமிகளிடம் பூப்பெய்திய இளம் பெண்களிடம் தொனியே மாறிவிடும். அவர்களிடம் பேசும்போது, எத்தனை நெளிவு, என்னமாயச் சிரிப்பு... எவ்வளவு குழைவு! அதைப்பார்த்தாலே.... செல்லிக்குப் பற்றிக்கொண்டு வரும். கண்டக்டர் கழுத்துக்கு மேல் ஓநாய் மூஞ்சி இருப்பதுபோல் மனசுக்குள் பயமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். காறித்துப்பணும்போல மனசில் தோன்றும். தீப்பெட்டி யாபீஸக்குள் போய்விட்டால் இது போல நிறைய ஓநாள் மூஞ்சிகள்... எச்சில் வடிகிற நாக்குகளோடு ஓநாய்கள். செல்லி பஸ்ஸ•க்குள் ஏறி உட்கார்ந்தாள். தாராளமாய் இடம் கிடந்தது. அடுத்த ஊரிலேயே சீட்டுகளெல்லாம் நிரம்பிவிடும். அப்புறம் உள்ள ஊர்களில் ஏறுகிற பிள்ளைகளெல்லாம் ஓவர்லோடுதான்! மாதாங் கோவில்பட்டியைத் தாண்டுகிற போது, பஸ்ஸ•க்குள் மூச்சுப்போக இடமிருக்காது, புளிச்சிப்பமாகப் பிள்ளைகள் திணிக்கப்பட்டு, கிட்டிக்கப்பட்டு, வியர்த்து, கசங்கி, திணறி... சில சமயங்களில் ஒன்றிரண்டு பிள்ளைகள் மயக்கமே போட்டுத் துவண்டுவிடும். மந்தையாடுகளைப் பற்றிக்கொண்டு வருவதைப் போல... குழந்தைகளை நகர்த்திக்கொண்டு பஸ்ஸ•க்குள் அடைத்தார். ஏஜெண்ட் தலைகளை எண்ணிப் பார்த்தார். "ஒண்ணு குறையுமே, யாரு?", "ஆவுடைச்சி", "அவதான் சடங்காகிட்டாளே, இன்னும் பானைஞ்சு நாளுக்கு வரமாட்டாளே...." சொல்லிவிட்டுக் கண்டக்டர் அசிங்கமாகக் குறுநகை செய்தான். "ஆமா.... நாந்தான் அயந்துட்டேன், அப்பச் சரி.. வண்டி போகலாம், ரைட் "ஏஜெண்ட் இறங்கிக்கொண்டார். டிரைவர், சாமி படங்களை - ஸ்டிரிங்கை - எல்லாம் கும்பிட்டு விட்டு ஸ்டார்ட் பண்ணினார். கிடங்கும் மேடுமான சாலையில் இடமும் வலமுமாய்ப் பஸ் ஆடியசைந்து குலுங்கும்போதெல்லாம்... சிறுபிள்ளைகள் குதூகலமாகச் சிரித்தனர். கை தட்டினர். "ஹோ.....ஹோ" வென்ற மழலைக் கூச்சல்கள். எரிச்சலில் நெருப்பாகச் சீறினார், டிரைவர். "ஏங் குட்டிப் பிசாசுகளா! என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு? வாயைப் பொத்திக்கிட்டுச் சும்மா கிடங்க" சட்டென்று பஸ்ஸ•க்குள் ஏறிக்கொண்ட மௌனத்தின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல்... டிரைவர் கண்டக்டருடன் பேச்சுக்கொடுத்தார். ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த செல்லி, வெளியே இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை "திங்கட்கிழமை" மிரட்டிக் கொண்டிருந்தது. விலகிச் செல்லப் பாதையில்லை. வழிமறித்துக் கொண்டு நிற்கிறது. மென்னியைப் பற்றிக்கொண்டு இறுக்குகிறது. முந்தா நாள். ராத்திரி எட்டுமணி. இலேசாகச் சாரல் தூறியது பஸ்ஸிலிருந்து இறங்கிய செல்லி, ஓட்டமும் நடையுமாய் ஓடி வீட்டுக்குள் வந்து விழுந்தாள். பேயின் இறுகலான பிடியிலிருந்து விடுபட்டுத்தாயின் மடியில் வந்து விழுந்த ஆறுதல், மனசுக்குள் சுகமான ஆசுவாசம். என்னமோ விசாரித்த அம்மாவுக்குக் கூடப் பதில் சொல்லாமல் மூலையில் சரிந்து உட்கார்ந்துகொண்டு விரலைச் சூப்பினாள். அதட்ட ஆளில்லாத இடம். "நாய்களா, குச்சியடுக்காம என்ன செய்றீக? என்று கடித்துக்குதறுகிற நாய்கள் இல்லை. வீடு, தாய் மடி போன்ற வீடு. சுதந்திரமாகச் சுகமாக விரலைச் சூப்பினாள். அம்மாவைத் தேடிக்கொண்டு ஏஜென்ட் வந்தார். "யக்கா....", "என்னய்யா. தம்பி" தள்ளாடித் தவித்து எழுந்தாள். அம்மா. "செல்லி ஏதாச்சும் சொன்னாளா?", "இல்லியே... என்னமும் நடந்துபோச்சா?" பதறிப்பதைக்கிற அம்மா ஆறுதல்படுத்துகிற ஏஜெண்ட், விரலைச் சூப்புகிற இன்பமயக்கத்தோடு பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தாள் செல்லி மனசுக்குள் பூரான் ஊர்கிற மாதிரி.... மெல்லிய திகில். "யக்கா இப்போ... குளோரைடு கிடைக்க மாட்டேங்குது. ஏகத் தட்டுப்பாடு. நிறையத் தீப்பெட்டியாபீஸ்க மூடிக்கிடக்கு. ஒண்ணு ரெண்டு ஆபீஸ்கள்லேதான் வேலை நடக்குது. வேலைக்கு வர்ற புள்ளைகளைக் குறைக்கச் சொல்லி எங்க மொதலாளி நச்சரிக்காரு. வேலாயி திகிலோடு பார்த்தாள். இருமல் வரப்போவதை உணர்கிற போது மனசில் ஏற்படுமே. அதே படபடப்பும் பீதியும்! "ஆனா.... நம்ம கிராமங்கள்லே மழை தண்ணியில்லே, வறட்சி, வெள்ளாமை வெளைச்சல் இல்லை, கூலிச் சனங்களுக்குக் காட்டுவேலை ஒண்ணுகூடக் கிடைக்கல்லே. ஆபிஸ் வேலைக்கு நாவாரேன். நீ வாரேன்னு இவுக அலைமோதுறாக.", "நிலைமை அப்படித்தானே இருக்கு தம்பி", "இதுலே இன்னொரு சிக்கல், "சின்னப்புள்ளைகளை வைச்சு" வேலை வாங்ககூடாதுன்னு ஏதோ சட்டம் இருக்காம். அப்பப்ப அதிகாரிமார்க் வந்து, புள்ளைக வேலை செய்றதைப் பாத்துட்டு, ஆயிரக்கணக்குலே அவராதம் போட்டுடுறாங்க. "அடக் கொடுமையே! பெத்தவுகளைக் காப்பாத்தாத சட்டம், புளளைக மேலே இரக்கப்பட்டு, திங்குற சோத்துலே மண்ணைப் போடுதாக்கும்? புள்ளைகளைக் கொடுமைப்படுத்த பெத்த தாய்க்கு ஆசையாகவா இருக்கும்? வவுத்துக் கொடுமை... வறுமைப் பொழைப்பு.. வேற புகல் இல்லியே!இதையும் மறிக்கிறாகளாக்கும். பாவிப் பயக?" ஆமாக்கா. மொதலாளி கண்டிசனாச் சொல்லிட்டாரு இந்த வாரத்தோடி. நம்ம செல்லி மாதிரியான சின்னப் புள்ளைகளையெல்லாம் நிறுத்தியாகணுமாம்." எதிர்பார்த்த இடி வேலாயிக்குள் இறங்கியே விட்டது. உள் மனசின் ஆழம்வரை பரவிப் பாய்கிற நடுக்கம். வயிற்றுக்குள் தீக்கோலைச் சொருகுவது போலிருந்தது. மாடு வைத்து விவசாயம் பார்த்த புருஷன். மாட்டுக்கும் மேலாக ராவும் பகலுமாக உழைத்த புருஷன், எத்தனை விளைய வைத்தாலும், வருஷா வருஷம் மிஞ்சி நின்ற கடன். நிலத்தை விற்றுவிட்டுக் கூலி வேலைக்குப் போன புருஷன் கிணறு வெட்டிக் கொண்டிருந்தபோது வேட்டியில், கருங்கல்லை ரத்தமாக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்த புருஷன். நாதியற்றுப்போன குடும்பம். ஓடிவந்து பற்றிக்கொண்ட நோய், உடம்பை ஒடித்துக் கட்டிலில் துடிக்கப்போட்டுவிட்ட நோய். செல்லியும் வேலை பார்க்கப்போக முடியாமல் போனால் வீட்டில் எப்படி அடுப்பு புகையும்? நெஞ்சை முட்டிப் பிளக்கிற சோகம். தாட்சண்யம் பாராமல் சப்பென்று அறைகிற அவலம். கண்ணுக்குள் குத்தலெடுக்க, மாலை மாலையாகக் கண்ணீர், உதடுகள் நடுங்கித் துடித்தன. "தம்பி வாரத்துக்குத் தொண்ணூறு ரூவா இந்தப் புள்ளை கொண்டுவருது. இதுலேதா ரெண்டு ஜீவனோட ஜீவனம் நடக்குது. இதுக்கு ஒரு மாத்து யோசனை இல்லியா... ய்யா? "இருக்கு... ஆனா, நீங்க செய்யணுமே?", "சொல்லுய்யா....", "நம்ம செல்லி சின்னப் புள்ளைதா, இருந்தாலும் சும்மாவாச்சும் தாவணியைச் சுத்தி அனுப்புங்க. மத்ததை நா பாத்துக்கிடுதேன்யக்கா. மனசிலே ஞாபகம் வச்சுக்கங்க. தாவணி போட்டா, திங்கட்கிழமை வரலாம் இல்லேன்ன.... நின்னுக்கிட வேண்டியதுதான்." ஏஜெண்ட் போய்விட்டார். வேலாயி வேரறுந்தவளாக அப்படியே சுவரில் சாய்ந்தாள். குத்துக்கால் வைத்துச் சரிந்து உட்கார்ந்துவிட்டால், குமுறிக்குமுறிச் சத்தமில்லாமல் அழுதாள் உடம்பெல்லாம் நடுங்கிக் குலுங்குகிற கோரம். "இப்படியும் ஒரு வங்கொடுமையா? அததுக்குரிய வயசு வராமெ. விரைச் சூப்புற புள்ளைக்கு எப்படித் தாவணி போடுறது? ஊரையழைச்சு, உறவைக் கூப்பிட்டு, விருந்து வைச்சு, தாய்மாமன் சீர் வரிசையோட கூடுன கூட்டத்துலே போட வேண்டிய தாவணியை சட்டத்தை ஏமாத்துறதுக்காக எப்படிப்போட? ஐயோ... எம்புள்ளைக்குமா. இந்தக் கதி? அடக்கடவுளே, எளியவங்க பொழைப்பை எதுக்கு விதி, இப்படி பிய்ச்சுப் பிடுங்கிப் போடணும். உள் மனசைச் சுட்டுப்பொசுக்கிற அக்கினிக் கொழுந்துகளாக நினைவுகள், நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குகிறது... கோவென்று வெடித்து அழத் துவங்கியபோது, இருமலும் ஆரம்பித்துவிட்டது. வாடிப்போன மரத்தை ஆட்டிப்பிடுங்குகிற புயலாக, இருமல். இருமல்...இருமல்கள்.... அம்மாவின் அழுகையையும் இருமலையும் பார்க்கப் பார்க்கச் செல்லிக்குள் அழுகை, விம்மிக்கொண்டு பீறிடுகிறது. நாசி நுனி துடிக்கிறது. காந்தலெடுக்கிறது. கண்களில் ததும்பி திரைபோடுகிற கண்ணீர்.... அந்தப் பிஞ்சை, தாவணி அச்சுறுத்தியது. உள் மனசின் மெல்லிய ஜவ்வுகளைப் பற்றி இழுத்தது. நினைத்தாலே திகிலில் மனசு துடிக்கிறது. பூப்பெய்தாத பெண்ணைக் கல்யாணத்திற்கும் உடலுறவுக்கும் நிர்ப்பந்தப்படுத்துகிறபோது ஏற்படுவதைப் போல வினோதமான அவமான உணர்ச்சி, செல்லியைக் கசக்கியது. இயல்பாக நிகழ வேண்டிய மலர்ச்சியை. ஊர் வேஷத்திற்காகக் கசக்கிப்பிழிந்து மலர வைக்கிற வேதனை. தாயிடம் கூடச் சொல்லியழ முடியாத ரகசிய உணர்ச்சி யவஸ்தை. அவளைத் திக்குமுக்காட வைக்கிற கொடிய அவஸ்தை. ஊஹூம்...ம் செத்தாலும் சரி... இப்ப நா தாவணி போடவே மாட்டேன். சம்மதிக்கவே மாட்டேன். என்னாலே முடியாது... முடியவே முடியாது... அதைவிட உசுரை வுட்டுருவேன். ஞாயிற்றுக் கிழமை கனமாய் நகர்கிறது. அந்த இரண்டு ஜீவன்களையும் மௌனச் சோகத்தில் அரைத்துக்கொண்டு நத்தையாக ஊர்கிறது. திகிலும் பீதியுமாய்... வேதனையும் விசும்பலுமாய் வீடு. மூன்றாவது ஆளாய் வந்து உட்கார்ந்துகொண்டு போயாட்டம் போடுகிறது அவலம். முகம் செத்துக்கிடக்கிற மகளைப் பார்த்தாள் வேலாயி. சிறிய கண்களில் பீதி. வெட்டுண்ட பல்லிவாலாகத் துடிக்கிற இமைகள். பார்க்கவே பாவமாக இருந்தது. "இந்த அரும்பை அடகுவைச்சா... நாம் உசுர்வாழணும்?" செல்லியும் அம்மாவையே பார்த்தால் அம்மா, தாவ போடச் சொல்லி வற்புறுத்தினால்.. மறுத்துவிடத் தயாராக இருந்தாள். பணிந்துவிடக்கூடாது என்ற வீறாப்பு மனசுக்குள் ஒரு விறைப்பு. "செல்லி...", "என்னம்மா?", "நாளை நீ வேலைக்கு போகவேண்டாம்மா...", "...?", "ஒன்னைக் கேவலப்படுத்தி அடகுவைக்க. மூளியலங்காரம் பண்ணி... நா கஞ்சி குடிக்க வேண்டாம். நாம உசுரு வைச்சு இருக்கவும் வேண்டாம்மா...", "ஏம்மா?", "பூக்க வேண்டிய அரும்பைப் புடிச்சு நசுக்கி மோந்து பாக்குற பாவத்தைச் செய்றதுக்கு, இந்தத்தாய் மனசுலே தைரியமில்லேம்மா.", ".....", "விதி நம்மளை எப்படி விட்டிருக்கோ... அப்படியே நடக்கட்டும். கண்ணு. நீ நாளையிலேருந்து வேலைக்குப் போக வேண்டாம்." தாயின் முகம் முன்னைவிடப் பிரகாசிப்பது போலிருந்தது செல்லிக்கு அந்தக் கண்களில் பொங்கித் ததும்பிய பரிவு... வறுமையில் நீர்த்துப்போகாத தன்மானம்... வாழ்க்கைக்குப் பணிந்துபோய்விடாத பாச வைராக்கியம்..... செல்லி துவண்டு விட்டாள். மனசுக்குள்ளிருந்த விடைப்பு விறைப்பு, விறாப்பு எல்லாம் தாயின் பாசக்கண்ணீரில் நனைந்து... மனசே தளர்ந்துபோய்.... அடிபட்டவளைப் போல கோவென்று அழுதாள். புறக்கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டு விம்மி விம்மியழுத அந்தக் கண்ணு முழியாத பச்சை மண்ணை. மடியில் இழுத்துப்போட்டுக்கொண்டு கதறியழுதான் வேலாயி. முத்துலட்சும் இருட்டில் வந்து கொண்டிருந்தாள். வாசலில் திகைத்துப்போய் செல்லி. "என்ன செல்லி, வேலைக்கு வரலியா?", "வாரேன்" உயிரில்லாமல் முனங்கினாள். "தாவணி?", "மடிச்சு கையிலே வைச்சிருக்கேன். பஸ்கிட்டே போய் போட்டுக்கணும் "சத்தமில்லாத தெருவில், சத்தமில்லாமல் நடந்தனர். இழவு வீட்டுச் சங்காக அலறுகிறது தீப்பெட்டியாபீஸ் பஸ்சின்ஹாரன். ஒரு பிரேதத்தைப் போல... அடங்கிப் போன சலனங்களுடன் நடந்தது அந்த அரும்பு.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: உழவர், வெள்ளாடும், செம்மறி ஆடும், இறந்து போன ஓநாய், மூன்று ஓநாய்கள் தலைப்பு: விவேகமான வெள்ளாடு
உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன. உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக "நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்" என்று விரட்டினார். இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன. செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது. மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது. அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு. என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு. இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன. சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன. அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு. இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன. அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன. ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள். நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு. அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின. நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய். இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு. செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது. செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது. ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு. அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது. அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு. இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின. இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன. ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது. பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது. செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு. இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன. ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய். நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய். மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன. புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்? உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான். மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரியப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்.. சுருங்க கூறின், காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும், தரித்திரனும் தனிகனாவான். வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும், மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்தருக்கள் நாசமடைவார்கள், பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதஸாரமான் இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காயத்ரி மந்திரம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள். யார் பேசினாலும் தன் அறிவு கூர்மையால் அவர்களை மடக்கி விடுவாள் அவள். இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். தன் மகளுக்கு யாரைத் திருமணம் செய்து வைப்பது என்று சிந்தித்தான் அரசன். தந்தையே! இளவரசனாக இருந்தாலும் சரி, ஏழைப் பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி. பேச்சாற்றலில் யார் என்னை வெற்றி கொள்கின்றாரோ அவரையே மணப்பேன் என்றாள் அவள். இந்தச் செய்தி பல நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும் போட்டியில் கலந்து கொள்ள அரண்மனைக்கு வந்தனர். வந்த ஒவ்வொருவரையும், சிறிது நேரத்திற்குள் தோற்கடித்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தாள் இளவரசி. நாள் தோறும் ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வந்த வண்ணம் இருந்தது. இப்படியே சென்றால் நாட்டில் உள்ள எல்லோருடனும் இளவரசி பேச வேண்டி இருக்கும். வருகின்ற கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? பொழுது போக்குவதற்காக இங்கு வருபவர்களை எப்படித் தடை செய்வது என்று குழம்பினான் அரசன். போட்டியில் வென்றால் திருமணம், தோற்றால் நூறு கசையடி, என்று நாடெங்கும் முரசறைந்து தெரிவிக்கச் சொன்னான் அவன். இதனால் இளவரசியுடன் போட்டியிட வருகின்றவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. வந்தவர்களும் தோற்றுக் கசையடி வாங்கிக் கொண்டு சென்றனர். அந்த நாட்டில் பிச்சைக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். இளவரசியை மணப்பதற்காக நிகழும் போட்டியைப் பற்றி அறிந்தான் அவன். முயற்சி செய்து பார்ப்போம். நல்ல வாய்ப்பு இருந்தால் இளவரசியை மணப்போம். இல்லையேல் கசையடி வாங்கி இறந்து விடுவோம் என்று நினைத்தான் அவன். தன் ஊரில் இருந்து தலைநகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். நீண்ட தூரம் நடந்தான் அவன். இறந்து போன கோழி ஒன்று வழியில் கிடந்தது. இது எதற்காவது பயன்படும் என்று நினைத்தான் அவன், தன் தோளில் கிடந்த சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான். இன்னும் சிறிது தூரம் நடந்தான். வழியில் கிடந்த சிறு தொட்டியில் அவன் கால் இடறியது. அந்தத் தொட்டியையும் எடுத்துசூ சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டான். வழியில் மாடு ஆடுகளைக் கட்டும் தடி ஒன்று கிடந்தது. குதிரையின் கால் குளம்பு கிடந்தது. பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டான். சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து அரண்மனையை அடைந்தான் அவன். காவலுக்கு இருந்த வீரர்கள் கந்தல் ஆடையுடன் காட்சி அளித்த அவனைக் கண்டு சிரித்தனர். இளவரசியுடன் போட்டியிட வந்துள்ளேன். என்னை உள்ளே விடுங்கள், என்றான் அவன். பிச்சைக்காரனாகிய உனக்கு என்ன தெரியும்? நீயா இளவரசியுடன் போட்டியிடப் போகிறாய் என்று கேலியாகக் கேட்டான் வீரன் ஒருவன். என் மூக்குக்குக் கீழே வாய் உள்ளது. வாய்க்கு உள்ளே நாக்கு உள்ளது. என் திறமையான பேச்சினால் இளவரசியை வெல்வேன், என்றான் அவன். உம்மைப் போன்ற முட்டாளிடம் இளவரசி பேச மாட்டார். நீ திரும்பிச் சென்று நல்ல அறிவு பெற்று மீண்டும் இங்கே வா, என்றான் இன்னொரு வீரன். நான் இங்கிருந்து நகர மாட்டேன், போட்டியிட வந்திருக்கிறேன். இளவரசியிடம் சொல் என்று உறுதியுடன் சொன்னான் அவன். வீரர்கள் இளவரசியிடம் சென்றார்கள். பிச்சைக்கார இளைஞன் ஒருவன் போட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். விளையாடுவதற்காக அந்த முட்டாள் இங்கு வந்திருக்கிறான். நன்கு அவமானப்படப் போகிறான். அவனை இங்கு அனுப்பி வையுங்கள், என்றாள் கோபத்துடன் அவள். பிச்சைக்காரன் உள்ளே நுழைந்தான். இளவரசியைப் பணிவாக வணங்கினான். பனிக்கட்டியை விட குளிர்ந்த கைகளை உடைய இளவரசியாரே வணக்கம், என்றான் அவன். என் கைகள் குளிர்ச்சியாக இல்லை. சூடாக உள்ளது. இந்தச் சூட்டில் ஒரு கோழியை வறுபட்டு விடும். இது உனக்குத் தெரியுமா? என்று வெடுக்கெனப் பதில் தந்தாள் அவள். அப்படியா? கோழி வறுபடுமா என்று பார்க்கிறேன், என்ற அவன் சாக்குப் பைக்குள் கையை விட்டான். செத்த கோழியை வெளியே எடுத்தான். எதிர்பாராதது நடந்ததைக் கண்ட அவள் திகைத்தாள், தன் திகைப்பை மறைத்து கொண்டு சூடு பட்டால் கோழியின் கொழுப்பு ஒழுகுமே, என்றாள். பைக்குள் கைவிட்டுத் தொட்டியை எடுத்தான் அவன் ஒழுகுவதை இதற்குள் பிடித்துக் கொள்ளலாம், என்றான். தொட்டி விரிசல் விட்டிருந்தால் ஒழுகுமே என்றாள் அவள். குதிரைக் குளம்பை எடுத்த அவன், விரிசல் உள்ள பகுதியில் கீழே இதை வைத்து அடைத்து விடலாம், என்றான். எப்படி எதிர்க் கேள்வி கேட்டாலும், பதில் வைத்திருக்கிறானே என்று நினைத்தாள் அவள். தொட்டியை விட குளம்பு பெரிதாக இருக்கிறது. எப்படித் தொட்டியை அதனால் நெருக்க முடியும்? என்று கேட்டாள் அவள். தடியை வெளியே எடுத்தான் அவன். இதைப் பயன்படுத்திக் குளம்பிற்குள் தொட்டியை இறுக்கமாகப் பொருத்த முடியும், என்றான் அவன். ஏறுமாறான கேள்விகளுக்குத் தக்க பதில் தருகிறானே. அவன் கை ஓங்கி வருகிறதே, என்று திகைத்தாள் அவள். அவனை மடக்க நினைத்த அவள், இளைஞனே! நான் என்ன சொன்னாலும் அதை வேறொன்றாகத் திருப்பி விடுகிறாய். நாக்கு பல திருப்பங்கள் இருப்பது போல நீ நடந்து கொள்கிறாய், என்றாள் அவள். தன் பைக்குள் கையை விட்ட அவன் ஆட்டுக் கொம்பை எடுத்தான். அதை அவளிடம் காட்டி, இதைவிட அதிக திருகுகள் உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான். அவள் என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தாள். நீண்ட நேரம் ஆயிற்று. அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. பிறகென்ன, இளவரசிக்கும் அவனுக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாளை மணந்த இளவரசி' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பாத்திபன், மதி, மகன், மருமகள், வேன் ஓட்டுநர், ஆசிரியை, மூதாட்டி, ஆயா, மாணவர்கள், தாயம்மா, ஆசிரியை தலைப்பு: தாத்தா எப்ப வருவார்?
தொலைபேசி ஒலித்தது பாத்திபன் கனவு படித்துக் கொண்டிருந்தேன். யார் இந்த நேரத்தில்? என்று எண்ணியபடி தொலைபேசியை எடுத்தேன். மகன்தான் பேசினான். "அப்பா மதியை பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை ரயிலுக்கு புறப்பட்டு வண்டலூர் இறங்கி கொளப்பாக்கம் வந்துருங்க... என்றான். "மதிக்கு இன்னும் நாலு வயது கூட ஆகலேயே இதற்குள்ளாகவா சேர்க்க வேண்டும்" என்றேன். "சரி வரேன்பா" என்று தொலைபேசியை வைத்தேன். மீண்டும் பாத்திபன் கனவில் மூழ்கினேன். மனைவி வந்தாள்... "எங்கிருந்து போன் என்றாள்", "மகன்தான் பேசினான். மதியை பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்.", "இதற்குள்ளாகவா.. மூணரை வயசுதானே ஆகிறது.", "அங்கு மூணு வயது பிள்ளைகளே பள்ளிக்குப் போறாங்களாம் நான் காலை ரயிலுக்குப் போகிறேன்..." என்றேன். "மதிக்கு ஏதாவது செய்து தருகிறேன் எடுத்துக்கொண்டு போங்க..." என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் மனைவி. காலை ரயிலில் கிளம்பி வண்டலூரில் இறங்கி கொளப்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி கொளப்பாக்கத்தில் இறங்கினேன். மகன் வந்திருந்தான். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வீடு இருந்தது. மோட்டர் பைக்கில் சென்றோம் பேரன் வீட்டு வாயிற்படியிலேயே கூடையோடு பள்ளிக்குச் செல்லத் தயாராக உட்கார்ந்திருந்தான். தாத்தா எப்ப வருவார்னு? காத்திருப்பது போல உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும்.... "தாத்தா வந்துட்டாங்க..."ன்னு குதித்து கும்மாளம் போட்டான் அருகில் சென்று தூக்கிக் கொண்டேன். "ஸ்கூல் போவலாம் தாத்தா" என்றான் மழலை மொழியில். அவனது ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன். வாங்கிச் சென்ற ஆப்பிள் பழங்களில் ஒன்று எடுத்து நறுக்கிக் கொடுத்தேன்... மதிக்கு ஆப்பிள் தின்பதில் கவனம் சென்றது. மருமகள் கொடுத்த குளிர்ந்த பழச்சாற்றை குடித்தேன். இங்கே நிறைய கான்வென்ட் பள்ளிக்கூடம் இருக்குதுப்பா... நீங்க போய் பார்த்துவிட்டு எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்... என்று மகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே "போகலாமா தாத்தா" என்றான் மதி. "இன்னிக்கு லீவுடா... தாத்தா நாளைக்கு அழைச்சிட்டு போவார்டா" என்றான் மகன் மதி அமைதியானான். மகன் அலுவலகம் சென்றுவிட்டான். பட அட்டைகள் வாங்கிப் போயிருந்தேன்... அதைப்பார்த்து பெயர்களைச் சொன்னான். தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த பட அட்டைகளை அவன் ஒவ்வொன்றாக எடுத்து படம் பார்த்து சொன்னான். மதிய உணவு இருவரும் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வுக்குப் பின் எழுந்தேன். மதி தூங்கிக் கொண்டிருந்தான். ஓசை படாமல் எழுந்து பள்ளிகளைப் பார்த்து வரக் கிளம்பினேன். வீட்டு அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி இருந்தது. வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. கட்டிடத்தின் உள்ளே மூன்று வகுப்புகளும் வேப்பமரத்து நிழலின் இரண்டு வகுப்புகளும் இயங்கி வந்ததைப் பார்த்தேன். பள்ளிக்கு எதிரில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. சிறிது தூரம் சென்றேன். JAMES CONVENT SCHOOL என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. உள்ளே சென்றேன். ஒருவர் வரவேற்று உட்கார வைத்தார். "இங்கு என்னென்ன வகுப்பு உள்ளது என்று கேட்டேன்." பிரிக்கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி., மூன்று நிலை வகுப்புகள் என்றார் அவர் வகுப்புகள் குறைவாக உள்ளதே என்றேன். சென்ற ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதன் பிரதானப் பள்ளி தாம்பரத்தில் உள்ளது. அதில் இதுவும் ஒன்று என்றார். அவரைச் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். மாணவ - மாணவியர் கீழே சிப்பு டிராயரும் மேலே மஞ்சள் சட்டையும் போட்டிருந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் முப்பது முப்பத்தைந்து பேர்கள் இருந்தனர். கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். மயக்கமே வந்துவிட்டது. அதை நடத்துபவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரும் அல்ல. மின்சார இலாக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதில் வேலை செய்யும் மூன்று பெண்களில் இருவர் அவரது மகள்கள். ஒருவர் வெளியூர் பெண். அனைவருமே மேனிலைப்பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். வியாபார நோக்கில் இயங்கும் பள்ளி என்று உணர்ந்தேன். அந்தப் பள்ளிக்கு ஒரு வேனும் நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தமாக வாங்கியதாக இருக்காது. மாணவ - மாணவிகளின் மாதாந்திர வசூலில் தவணை முறையில் வாங்கியது என வேனில் இருந்த டிரைவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். பிரதான சாலையைக் கடந்துசென்றேன். அங்கே John kennedy matriculation school என்ற பெயர்பலகை கண்ணில் பட்டது. கூரைக் கொட்டகை அங்கும் இங்கும் தனித்தனியே இருந்தன. ஒரு புதிய கட்டிடம் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. சில ஆசிரியைகள் நின்றிருந்தனர். ஓடு போட்ட சில கொட்டகைகளிலும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன விசாரித்தேன். எல்.கே.ஜி படிப்புக்கட்டணம், கட்டிடநிதி, சிறப்புக் கட்டணம், வேன் கட்டணம் என்று பெருந் தொகையும். சீருடையும் பள்ளியிலேயே வாங்க வேண்டும் என்ற கண்டிப்பும் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. இந்த பள்ளியை நடத்தும் ஒரு அம்மையார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றவர். குழந்தைகள் மண் தரையில்தான் உட்கார்ந்திருந்தனர். ஆசிரியை ஒருவரை விசாரித்ததில் ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ஐநூறு மட்டுமே என்பதும் இரண்டு பேர்கள் மட்டுமே பட்டப்படிப்பு மற்றவர்களில் ஒருவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவர் மற்றவர்கள் அனைவருமே மேனிலைப் பள்ளிக்கல்வி முடித்தவர்கள். ஆங்கிலக்கல்வியை பயன்படுத்திக் கொண்டு அவரவர்கள் விருப்பதிற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கிறார்கள். அரசு இதை முறைப்படுத்தவும் மனமில்லை. வேதனையோடு சாலையிலேயே மற்றொரு பள்ளி இருப்பதாக கேள்விப்பட்டுச் சென்றேன். அது ஒரு கிறிஸ்த்துவப்பள்ளி. ஊரில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் அது பற்றி விசாரிக்காமலேயே திரும்பினேன். பேருந்துக்குக் காத்திருந்த ஒருவரை இது பற்றி விசாரித்தேன். வண்டலூர் பகுதியில் நல்ல பள்ளிகள் இருப்பதாகவும். வேன் வசதி இருப்பதாகவும் கூறினார். மறுநாள் சென்று பார்க்கலாம் என்று வீட்டிற்குச் சென்றேன். மகனிடம் சொன்னேன். நாளை வண்டலூர் சென்று பார்த்து விட்டு வரச்சொன்னான். வண்டலூர் சென்றேன். பெயர்பலகை காணவில்லை, சுவற்றில் எழுதி இருந்தார்கள். உள்ளே சென்று விசாரித்தேன். பிறந்த சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பத்திற்கு தனி கட்டணம் பெற்றோர் படித்தவர்களாக இருக்க வேண்டும், பட்டம் பெற்றிருந்தால் முதல் சலுகை, பருவக் கட்டணம் மிகவும் கணிசமான தொகை தெரிவிக்கப்பட்டது. புத்தகங்கள், நோட்டுகள் தனி கட்டணம், வேனுக்குத்தனி கட்டணம், எல்லாம் கூட்டிப்பார்த்தேன் பள்ளியில் சேர்க்கும் போது ஆயிரத்தி நானூறு ரூபாய் ஆயிற்று; வேன் கட்டணம் தனி. இந்தப் பள்ளியை நிர்வகித்தவர்கள் ஒய்வு பெற்ற கல்வி இலாகா எழுத்தர் என்று கேள்விப்பட்டேன். அங்கு வேலை செய்பவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆனால் சிலர் மட்டுமே பி.எட்., படித்தவர்கள். மற்றவர்கள் அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இப்பள்ளியின் சீருடை கோடு போட்டிருந்தது... படிப்புக் கட்டணம் மிகமிக அதிகம். விடைபெற்று வெளியே வந்தேன். மனம் மிகவும் அழுத்தமாக இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும்போது குருதட்சணை என்ற பண்பாட்டுடன் வெற்றிலை பாக்கு, மிட்டாயுடன் தட்சணையாக ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வைத்து உயிர் எழுத்துக்களைச் சொல்லச் செய்து கலைமகள் படத்திற்கு முன்பு வணங்கி பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இலவச சீருடை, இலவச சத்துணவு, புத்தகங்கள் எல்லாம் அரசுப்பள்ளிகளில் இலவசமாகவே கிடைக்கும். மாவட்டத் தொடக்ககல்வித் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பள்ளிகள் அனைத்தும் இன்று மிகவும் சிறப்பாக நடைபெறுவதைக் காண முடிந்தது. அரசின் இலவசக் கல்வி என்பது நடுத்தரக் குடும்பத்திற்கு "முகச்சுளிப்பை" ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டணம் வசூலித்தால் கூட நல்லது என்று எண்ணவேண்டியுள்ளது. அதன் பிறகு இரயில்வே பாதையைத் தாண்டி ஒரு பள்ளி இருப்பதாக அங்கு சென்றேன். கட்டணம் குறைவாகவே இருந்தது. பள்ளியும் எனக்கு பிடித்திருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் பட்டம் பெற்றவர்கள். அதை நிர்வகிக்கும் ஒரு அம்மையாரை சந்தித்தேன். அவர் அனைத்து விபரமும் கூறினார். வேன் உண்டு. வேலை கிடைக்காத பட்டதாரி ஆசிரியைகள், ஆசிரியர் பயிற்சி பெற்ற வேலை கிடைக்காதவர்கள் பணியாற்றுவதாகவும், அவரும் சகோதரர்களும் கூட அங்கே பணியாற்றுகின்றார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். பள்ளித் தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது. பேரன் மதிநிலவனுக்கு விண்ணப்பப் படிவம் வாங்கிக் கொண்டு வந்தேன் மகனிடம் சொன்னேன். "அங்கேயே சேர்த்துவிடலாம் அப்பா" என்றான். மறுநாள் மதியை சேர்க்க பேருந்தில் சென்றோம். மதிய உணவு கையிலேயே எடுத்துக் கொண்டு போனோம். பேருந்தில் போகும் போது வேறு பள்ளியில் படிக்கும் தன் மகனை அழைத்துக் கொண்டு அவன் தாயும் பேருந்தில் வந்தாள். வண்டலூர் மிருகக் காட்சிசாலை ஒட்டி குருவிகள் மற்றும் பறவைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைபார்த்த யு.கே.ஜி. மாணவன். "அம்மா, அம்மா அதோ பாருங்கள் பறவைகள்" என்றான். உடனே அந்தத் தாய் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு "ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்து கான்வென்டில் படிக்க வைக்கிறேன் மம்மின்று சொல்லாமே அம்மாவாம் அம்மா... சொல்லு Mummy, There are Birds" என்றாள்". குழந்தை தேம்பிக் கொண்டே தாய் சொன்னதைத் திருப்பிச் சொன்னான். மிகவும் வேதனைப்பட்டேன்... ஆங்கில மோகம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே சான்று, தாயை "அம்மா" என்று கூப்பிடுவது கூட அந்தத் தாய்க்கு விருப்பமில்லை... ஆங்கிலத்திலேயே கூப்பிட வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு கொடுமை! பேருந்தில் உள்ளவர்களுக்கும் அந்தத் தாயின் மேல் கோபமே ஏற்பட்டது... அந்தக் குழந்தையின் கன்னத்தில் கைவிரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மன வேதனையுடன் வண்டலூரில் இறங்கினேன். வண்டலூரில் இறங்கி, இரயில்வே தண்டவாளங்களை கடந்து சென்றோம். நாங்கள் சென்றபோது பள்ளியில் இறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாடலும் சில சமஸ்கிருத சுலோகங்களும் மாணவிகள் சொல்ல மற்றவர்களும் சொன்னர்கள். மாணவர்கள் மத்தியில் இதை ஏன் திணிக்கிறார்கள் என்று எண்ணினேன். முடிந்ததும் பள்ளி நிர்வாக அறைக்குக் சென்றோம். உரிய கட்டணங்களைக் கட்டி விட்டு விண்ணப்பத்துடன் கொடுத்தோம். LKG வகுப்பில் மதியை அழைத்துப் போய் உட்காரவைத்து விட்டு திரும்பியதும் "தாத்தா" என்று அழுதுகொண்டே என்னை நோக்கி ஓடி வந்தான். அவனை மீண்டும் அழைத்துச் சென்று உட்கார வைத்தேன், அழுகை நிற்கவில்லை. ஆசிரியை வந்து அவனை தூக்கிக் கொண்டார்.... என்னைப் போகச் சொன்னார்... நான் வந்துவிட்டேன். மகனுக்கு அலுவலக நேரமானதால் சென்று விட்டான். முப்பது நிமிடங்கள் கழித்து வகுப்பறை பக்கம் இருந்த சன்னல் வழியே பார்த்தேன். ஆசிரியை ஏதோ வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார். மாணவ-மாணவிகள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மதியின் சிரிப்பை பார்த்து மனம் அமைதி அடைந்தது. மதிய உணவுக் கூடையை எடுத்துக்கொண்டு நின்றிருந்த வேனில் போய் உட்கார்ந்தேன். ஓட்டுநர் என்னிடம் சிநேகமாகப் பேசினார். மதியை தினமும் கொளப்பாக்கம் அழைத்து கொண்டு வந்து, திரும்பவும் கொண்டுவந்து விடுவதாகவும் கூறினார். மகன் குடியிருக்கும் வீட்டுப் பையன்களும் அந்த வேனில் வருவதாகக் கூறினார். மகிழ்ந்தேன். பள்ளியிலேயே நின்றிருந்த வேனில் காலைப்பிரிவு வேளை பள்ளி முடியும் வரை ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மணி அடித்ததும் எழுந்து போனேன். மாணவ-மாணவிகளோடு ஒரு கையில் பையை குடுவையை இழுத்துக் கொண்டு மதி வந்த காட்சி சிரிப்பூட்டியது. பையையும் குடுவையையும் வாங்கிக் கொண்டு பள்ளி எதிரில் இருந்த மரத்தடி நிழலுக்குச் சென்றோம். துண்டு ஒன்றை விரித்து நானும் அவனும் உட்கார்ந்தோம். உணவை ஊட்டினேன். பிறகு அவனே சாப்பிட்டான். "மதி... என்ன படிச்சியா?" என்று கேட்டேன். "தாத்தா... பாட்டு சொன்னேன்...", "சொல் பார்க்கலாம்" என்றேன். அவன் மழலை மொழியில் ஏதோ சொன்னான், ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பள்ளியில் LKG முழு வேலையும் நடந்ததால் மதிய வேளை பள்ளித்துவங்கும் வரை அங்கேயே இருந்தோம். வேனுக்கு அவனை அழைத்துச் சென்று ஓட்டுநரிடம் மதியை அறிமுகப்படுத்தினேன். சிறிது நேரத்திலேயே ஓட்டுநருடன் நட்பாகப் பழகினான் மணி அடித்தது. வகுப்புக்கு அழைத்துச் சென்றேன். மீண்டும் அழுதான் சமாதானப்படுத்தி உட்காரவைத்தேன்... பையையும் தண்ணீர் குடுவையையும் வைத்துவிட்டு எழுந்து ஓடி வந்தான். ஆசிரியை வகுப்பில் நுழைந்ததும். "மதி வா... நல்ல பிள்ளையாச்சே... வா." என்று கனிவுடன் கூப்பிட முரண்டு பிடித்தான். அதே போல சில குழந்தைகளும் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்து மதியும் அழுதான். ஆசிரியை என்னைப் பார்த்து போகும்படி சைகைக் காட்டினார். நான் அங்கிருந்து நழுவினேன். ஆனால் அவன் "தாத்தா... தாத்தா...." என்று அழுதது என் காதில் ஒலித்தது. மாலை 3-45 அளவில் பள்ளி முடிவுற்றது. மதி மற்றொரு கையில் தண்ணீர் குடுவையுடன் சிரித்துக் கொண்டே வந்தான். வந்தவன் என்னிடம் வராமல் ஆசிரியை உட்கார வைத்த வரிசையில் உட்கார்ந்தான். என்னைப் போலவே பல தாய்மார்களும், தாத்தாமார்களும் பிள்ளைகளை அழைத்துப் போக காத்திருந்தனர். வேனில் போக வேண்டியவர்களின் பெயர்களை ஆசிரியை படிக்க அங்கிருந்த பணியாளர் அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார். மதியும் அவர்களுடன் வந்தான். என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தான். குடுவையைத் திறந்து தண்ணீர் கொடுத்தேன். குடித்தான். வேனில் தூக்கி உட்காரவைத்தேன். மகன் குடி இருக்கும் வீட்டுப்பிள்ளைகள் இருவரும் வேனில் உட்கார்ந்தனர். மதி அவர்களுடன் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வேன் ஓட்டுநர் அவனை அவர் அருகில் உட்கார வைத்துக்கொண்டார். மற்ற குழந்தைகள் ஏறி உட்கார்ந்தனர். "தாத்தா ஏரிக்கோ..." என்றான் மழலை மொழியில், ஓட்டுநர் அவனிடம் ஏதோ சொன்னார். வேன் புறப்பட்டது நான் கையை அசைத்தேன். அவனும் அவ்விதமே அசைத்தபடி சென்றான். நான் அவ்வூரைத்தாண்டி, இரயில்வே தண்டவாளங்களை கடந்து, சென்னைக்குச் செல்லும் சாலையைக் கடந்து பேருந்துக்காக நின்றிருந்தேன். பேருந்து வர காலதாமதம் ஆனதால் தனியார் வேனில் ஏறி கொளப்பாக்கம் சென்று மகன் குடியிருந்த சந்திரபுரத்துக்குச் சென்றேன். மருமகள் மதியைப்பற்றி, கேட்க நடந்தவைகளைச் சொன்னேன் அதற்குள் மகனும் அலுவலகத்தில் இருந்து வந்தான். மதியின் முதல்நாள் பள்ளி வாழ்க்கை பற்றி அவனும் ஆர்வத்துடன் கேட்டான். சொன்னேன். அதற்குள் வேன் வரும் ஒலி கேட்கவே நாங்கள் மூவரும் மதியை வரவேற்க இறங்கிபோனோம். மதி சிரித்துக்கொண்டே புத்தகப்பையுடன் தண்ணீர் குடுவையுடனும் இறங்கி வந்தான். அவனுடன் இந்த வீட்டு பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள். "ஏன் இவ்வளவு நேரம் ஆயிற்று என்று ஓட்டுநரைக் கேட்டேன்". ஊராப்பாக்கம், வண்டலூர், கொளப்பாக்கம் பிள்ளைகளை இறக்கி விட்டுவிட்டு சந்திரபுரம் வரவேண்டும். அதனால்தான் லேட் என்றார் ஓட்டுநர். மறுநாள் காலை எட்டரை மணிக்கெல்லாம் வேன் வந்துவிட்டது. அவசர அவசரமாக அவனை எழுப்பி குளிப்பாட்டி, சாமி கும்பிடவைத்து, இரண்டு இட்லி ஊட்டி விட்டு பள்ளிச்சீருடை போடும் போது அழத்தொடங்கி வெளியே பையோடு அழைத்து வர மருமகள் பாடு திண்டாட்டம் தான். வீட்டைவிட்டு வெளியே வந்ததும். விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கும் போது வேன் வந்துவிட்டது. உடனே துள்ளிக் குதித்தான். ஓட்டுநர் அவனை சிநேகமாக அழைக்க மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். வேன் புறப்பட்டதும் கை அசைத்தபடி சென்றான் மதி. நான் பதினோரு மணியளவில் அவனுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு வழக்கம் போல் கொளப்பாக்கத்தில் இருந்து பேருந்தில் வந்து இரயில்வே தண்டவாளம் தாண்டி பள்ளிக்குச் சென்று காத்திருந்தேன். காலைப் பள்ளி வேளை முடிந்து மணி அடித்ததும் மதி வந்தான். உடனே என்னிடம் வராமல் மாணவ - மாணவியுடன் அமர்ந்தான். ஆசிரியை போகச் சொன்னதும். தண்ணீர் குடுவையை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். வழக்கம்போல் மரத்தடியில் சாப்பிட்டுவிட்டு, விளையாடி விட்டு மதியம் பள்ளித் தொடங்கியதும் அழத்தொடங்கினான். சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு வந்தேன். பின்னாலேயே தாத்தா... தாத்தா... என்று அழு குரல் கேட்டது. ஆசிரியை அவன் கைகையப்பற்றி அழைத்துப் போவதைக் கண்டேன். சிறு பிள்ளைதானே அப்படித்தான் இருப்பான் என்று எண்ணியபடி வீடு வந்தேன். இந்த நடைமுறை வழக்கம்போல் இருபது நாட்கள் நீடித்தது. சில நாட்கள் அழுவான், சிலநாட்கள் பள்ளிக்கு போக முரண்டு பிடிப்பான், சில நாட்கள் உற்சாகமாகப் போவதும் உண்டு. ஒருநாள் வேன் ஓட்டுநர் ஒரு தமிழ் வழிப் பள்ளியைப் பற்றிக்கூறினார். அங்கு போய் பார்த்துவரச் சென்றேன். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதி. ஒரு வீட்டின் மொட்டை மாடி, கீற்று வேயப்பட்ட கொட்டகை. செங்குத்தான படிகளில் ஏறிப்போய் பார்த்தேன். மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. அத்தனையும் சின்னஞ்சிறு அரும்புகள். இளஞ்சிவப்பு வண்ணச் சீருடையில் ஆயிரம் பூக்கள் மலர்ந்தது போல் இருந்தது. பெயர்பலகையில் "தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி" என எழுதப்பட்டிருந்தது உள்ளம் மகிழ்ந்தது. ப்ரிகேஜியை-அரும்புகள் என்றும் எல்.கே.ஜி.யை மொட்டுக்கள் என்றும் யூ.கே.ஜி.யை மலர்கள் என்றும் அழகு தமிழால் பெயரிட்டு அழைப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். கட்டணம் அரும்புகளுக்கு மாதம் ரூ.25, மொட்டுகளுக்கும் ரூ.25, மலர்களுக்கு ரூ.30, முதல் வகுப்பு மாதம் ரூ.40, சேர்க்கைக் கட்டணம் ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுவதையும் அறிந்து வியப்படைந்தேன். மற்றபடி எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. மாணவ, மாணவியரை அழைத்து வரும் மூதாட்டியை ஆயா என்று அழைக்காமல் "தாயம்மா" என்று அழைக்கிறார்கள். அதேபோல "மிஸ்" என்றோ "மேடம்" என்றோ அழைக்காமல் "ஆசிரியை" என்றே மாணவ, மாணவிகள் அழைப்பது வித்தியாசமாக இருந்தது. ஐந்தாம் வகுப்புவரை நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். வாழ்க தமிழ் வழிப்பள்ளி என்றும் மனம் வாழ்த்தியது. திடீரென்று மகனுக்கு அரசு குடியிருப்பிலேயே வீடு கிடைத்ததால் பேரன் மதியின் படிப்பு அப்பள்ளியில் நின்றது. பள்ளி, அலுவலகம், வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்ததால் மத்திய அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய சீருடை தைத்து புதிய புத்தகங்கள் வாங்கி மதியை மீண்டும் L.K.G. யில் சேர்க்கப்பட்டான். வகுப்பில் உட்கார முரண்டு பிடித்தான். அழுதான்.... வழக்கமான விசும்பல் நீடித்தது. இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குப் போவதும் அவனே கூட நடந்தே வீட்டுக்கு வந்து விடுவதும் கண்டேன். நான் ஊருக்கு வந்துவிட்டு ஒரு மாதம் கழித்துச் சென்றேன். நான் வருவதை அறிந்து குட்டி சைக்கிளில் என்னை வரவேற்று அழைத்துப் போக அந்த வளாகத்தின் வாயிற்படியிலேயே காத்திருந்து அழைத்துச் செல்ல வந்தவன் "தாத்தா எப்ப வருவார்" என்று வாயிற்படி காவலரைக் கேட்டபடி இருந்தானாம். நான் சென்றதும் சைகிளை விட்டு விட்டு ஓடி வந்து கட்டி கொண்டான். "ஸ்கூல் போறேன் தாத்தா" என்றான் தங்கப் பேரன். .
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார். பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார். அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகைகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார். உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா. அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார். கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பதிலுக்குப் பதில்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முன்யோசனை மீன், பின்யோசனை மீன், யோசனையில்ல மீன், மீன் பிடிப்பவர்கள் தலைப்பு: மூன்று மீன்கள்
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன. அவற்றின் பெயர் வருமுன்காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின்காப்போன் என்பனவாகும். அவை மூன்றும் ஒரு கவலையும் இல்லாமல் பல நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன். ஒரு நாள், வலைஞர்கள் வந்து நாளை இந்தக் குளத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டவுடன் வருமுன்காப்போன் என்ற மீன், மற்ற மீன்களைப் பார்த்து, இப்பொழுதே நாம் மற்றோர் இடத்திற்குப் போய்விட வேண்டும்" என்று சொல்வியது. அதற்கு வருங்கால்காப்போன் என்ற மீன் என்ன அவசரம்? அந்தச் சமயத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். சமயத்திற்குத் தகுந்தாற் போல் தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியது. வருமுன்காப்போன் என்ற மீன், இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளாமல் அப்பொழுதே அந்தக் குளத்தைவிட்டு மற்றொரு குளத்திற்குப் போய் விட்டது. வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன் முதலிய மீன்களெல்லாம் அந்தக் குளத்திலேயே இருந்தன. பேசிச் சென்றபடி மறுநாள் வலைஞர்கள் மீன் பிடிக்க வந்தார்கள். எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்தார்கள். அப்போது வலையில் அகப் பட்டுக் கொண்ட வருங்கால்காப்போன் செத்த மீன் போல், விரைத்துக் கிடந்தது. அதைக் கண்டு ஒரு செம்படவன் கரையில் தூக்கி எறிந்தான். அது யாரும் காணாமல் தண்ணிருக்குள் புகுந்து மறைந்து கொண்டது. வந்தபின் காப்போனும், மற்ற மீன்களும் வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்டு செம்படவர்கள் கையிலே சிக்கி மடிந்து போயின. முன்னாலேயே எதையும் நினைத்துப் பார்த்து முடிவு செய்பவன் உறுதியாகப் பிழைத்துக் கொள் வான். அவ்வப்போது சிந்தித்து வேலை செய்யும் அறிவுடையவனும் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். எதையும் எப்போதும் சிந்திக்காதவன் பிழைக்கவே மாட்டான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சக்ரவர்த்தி, மலை, இமயமலை, காவலன், அமைச்சர், தளபதி, தனிப்பிறவி, காவலாளி, தாத்தா, மனைவி, நண்பர்கள், புத்திசாலி தலைப்பு: ஆணவத்தின் ஏமாற்றம்
ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும். அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான். அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான். சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்… வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான். இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார். வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான். சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை. அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும். அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார். காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை. எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான். சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது— நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார். காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார். காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில் தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர் தான் காலமான 120ம் வயது வரை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த துறவியிடம் மாணவன் ஒருவன்… ஒரு மாணவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?’ என்றான். குரு, ‘அதைத் தூக்கி எறிந்து விடு’, என்றார். மீண்டும் அவன், ‘என்னிடம் தான் எதுவுமே இல்லையே? எப்படித் தூக்கி எறிவது?’ என்றான். குரு மீண்டும், ‘சரி, அப்படியானால் நீயே வைத்துக் கொள்’ என்றார்!
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அப்படியானால் நீயே வைத்துக் கொள்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கந்தன், நல்முத்து, மதிப்பு, வெளியூர், திருடர், நண்பன், வழக்கு, தீர்ப்பு, கேசவன், உபாயம், மரியாதை இராமன், பேழை, பூனை, பால் தலைப்பு: முத்துக்களை மோசடி செய்த வழக்கு
கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார். ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார். கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் கேசவனோ "நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கனவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?" என்று கேட்டுவிட்டான். தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டான். வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை இராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார். "அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்" என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை இராமன். மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை இராமன். கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன. "என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்" என்றான் மரியாதை இராமன். கேசவன் மரியாதை இராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான். திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான். உடனே கீழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். "அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்" என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான். அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன். எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு “மகாவீரன்’ என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர். இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன். பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான். பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது. ஒரு நாள்— அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது. இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர். அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர். உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர். அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான். பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ். இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர். பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான். பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புத்திசாலி பெலிக்ஸ்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து வந்திருந்து ஒன்றாக கூடியிருந்த துறவியர்களுக்குள் தீடிரென விவாதம் ஒன்று அங்கிருந்த பூனையைப் பற்றி ஆரம்பித்தது. அவர்களுடைய விவாதத்திற்கு எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலையை அடைந்த போது சா'ன் ஆசிரியர் நான்சூ'வான் அங்கிருந்த பூனையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டு "நீங்கள் உங்கள் விவாதத்திற்கு ஒழுங்காக முற்றுப் புள்ளி வைத்தால் இந்தப் பூனையின் உயிர் தப்பித்தது, இல்லையேல் பிணம் தான்" என்று எச்சரிக்கை விடுத்தார். வந்திருந்த துறவிகள் ஒருவரும் பதில் கூறாமல் அமைதி காத்தனர். கொஞ்ச நேரம் காத்திருந்த நான்சூ'வான் யாரும் பதில் கூறாததால் கையில் வைத்திருந்த அரிவாளால் பூனையை இரண்டாக வெட்டினார். அந்த சமயத்தில் யாத்திரைக்காக சென்றிருந்த ஆசிரியர் சாவோ சாவ் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் நான்சூ'வான் என்ன நடந்தது என்பதனை விளக்கினார். அதனைக் கேட்ட சாவோ சாவ் எந்த பதிலும் கூறாமல் தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து தலையில் தொப்பி மாதிரி வைத்து பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். "நீங்கள் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்திருந்தால், இந்தப் பூனையை காப்பாற்றி இருக்கலாம்" என்று நான்சூ'வான் போகின்ற சாவோ சாவிடம் அவர் காதில் விழுமாறு கூறினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பூனையை வெட்டுதல்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் – முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்ப்பமில்லாத சோம்பேறிகள். இவர்களது பெயருக்கு ஏற்றாற் போன்றுதான் செய்கின்ற செயல்களும் இருக்கும்.பொதுவாக இவர்களுக்கு அறிவும் கிடையாது. உலக அனுபவமும் கிடையாது. வேலை செய்து பிழைக்க வகையும் தெரியாது. இவர்களுக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது என்பதால் வயிறு சும்மா இருக்குமா?வயிறு பசியினால் வாடும் போதெல்லாம் கைநீட்டி ஏதாவது கேட்டு சாப்பிட முடிந்ததே தவிர வயிறார சாப்பிட முடியாமல் வாடினார்கள். எவருடைய வீட்டில் போய். உணவுக் கேட்டால் உடம்பை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்களே? எங்காவது கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்ள கூடாதா? என ஏளனத்துடன் கூறுவார்கள்.ஊரிலுள்ள எல்லோரும் இவர்களை ஏளனமாகவும், கின்டலாகவும் பேசியதினால் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றால் பிழைத்து கொள்ளலாம் என்று தீர்மானித்து கால்போன படி சென்று கொண்டிருந்தனர்.வெளியூருக்கு சென்று கொண்டிருந்தனர். முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. நாம் ஐந்து பேர்களும் ஒரே இடத்திற்குப் போனால் வேலையும் கிடைக்காது, உணவும் கிடைக்காது. நாம் எல்லோரும் ஒரு குருநாதரைத் தேடி கண்டு பிடித்து சீடர்களாகி விட்டால் நமக்கு எந்த கஷ்டமும் வராது என்றான். நண்பர் நால்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மூடன் அதனால் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றான். நாம் எல்லோரும் ஒரு வீட்டில் போய் உணவு கேட்டால் சோம்பேறி என்பார்கள். ஆனால் நாம் எல்லோரும் ஒரு குரு தேவருடன் சாமியார்கள் போன்று சென்றால் நம் காலில் விழுந்து கும்பிட்டு மரியாதையோடு நடந்து வயிராற உணவும் அளிப்பார்கள் என்றான் முட்டாள். இது சரியான யோசனைதான் என்று மட்டி, மடையன், மூர்க்கன், பேயன் ஆகிய நான்கு பேர்களும் சந்தோஷ மடைந்தனர். அயலூரை அடைந்தாலும் ஒரு சாமியாரின் மடம் இருந்தது. அது பரமார்த்த குருவின் மடமாகும். அங்கு சென்ற ஐவரும் தங்களின் நிலையைக் கூறி சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.பரமார்த்த குரு தன்னை நாடி வந்த மூடர்களுக்கு சற்றும் சளைக்காத முட்டாள் குருவாகும். தனது முட்டாள் தனம் ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக ஊரின் எல்லையில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். இந்த வயதான காலத்தில் தனியாக வீடு வீடாகச் சென்று சாப்பிடுவது முடியாத காரியமாக இருக்கிறது. இவர்களை சீடர்களாக ஏற்றுக் கொண்டால் இவர்களை அனுப்பி விட்டால். அவர்கள் கொண்டு வரும் உணவை நிம்மதியாக உண்டு உறங்கி காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைத்து மூடர்களான ஐந்து சீடர்களுக்கு முட்டாளான வயதான இவர் பரமார்த்த குருவானார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூடர்களுக்கு முட்டாள் குரு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, நண்பர், ரகசியம், வெற்றி, பொன் தலைப்பு: வெற்றியின் ரகசியம்
முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி " முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?" என்று கேட்டார். " உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது, ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே" என்று முல்லா சொன்னார். " முல்லா அவர்களே, என்னிடம் எந்த ரசகசியத்தைச் சொன்னாலும் உண்மையிலே அது என்னை விட்டுத் தாண்டாது தயவு செய்து அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள் " என்று நண்பர் வேண்டிக் கொண்டார். " நான் என் வெற்றியின் ரகசியத்தை உங்களிடம் கூறினால் யாரிடமும் கூற மாட்டீர்களே"  என்றார் முல்லா. " என்னை நம்பலாம் என்னிடமிருந்து ரகசியம் ஒரு போதும் வெளியே போகாது" என்று உறுதியாகக் கூறினார் நண்பர். " யாராவது உம்மிடம் வந்து ஏராளமான பணம் தருகிறேன் என்று ஆசை காட்டினால்?" என்று கேட்டார் முல்லா. " கோடிப் பொன் தருவதாக ஆசை காட்டினால் கூட யாரிடமும் கூற மாட்டேன்" என்று திடமாகக் கூறினார் நண்பர். " அப்படியானால் நம்பி உங்களிடம் ரகசியத்தைக் கூறலாம். மறந்துகூட இதைப் பிறரிடம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பலாம் இல்லையா?" என்று முல்லா கேட்டார். " என்னை முழு அளவுக்கு நம்பலாம்" என்று வாக்குறுதி கொடுக்கும் விதத்தில் நண்பர் சொன்னார். " உண்மையிலேயே நீர் ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான், என் வெற்றிக்கான ரகசியத்தைக் கூறினால் நான் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் ஆகிவிடுவேன். அதனால் அன்பு நண்பரே என் ரகசியத்தை உமக்குக் கூறத் தயாராக இல்லை. நானும் என் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?" எனக் கூறியவாறு முல்லா அந்த இடத்தை விட்டு அகன்றார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஹசிடீஸ் மக்கள், கோமோரா நகரம், சோடாம் நகரம், ஞானி, கடவுள், மக்கள், தன்மை, அழிவு, நல்லவர்கள், கெட்டவர்கள், புனிதம் தலைப்பு: இருப்பின் புனிதம்
கோமோரா மற்றும் சோடாம் நகரங்களை பற்றிய ஒரு அழகிய கதை ஹசிடீஸ் மக்களிடம் உண்டு. அதற்கு பழைய ஏற்பாட்டிலோ வேறு எந்த பழைமையானவற்றிலோ எந்த ஆதாரமும் கிடையாது. அதனால் நிச்சயமாக அது ஒரு ஹசிடீஸ் மக்களின் கண்டுபிடிப்பு, கற்பனை, ஒரு உருவாக்கம்தான். ஆனால் எனக்கு அந்த கதையை மிகவும் பிடிக்கும். அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடவுள் - யூத மக்களின் கடவுள் மிகவும் கோபக்காரர். – ஒருநாள் அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார். அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை அணுகி, சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா, எனக் கேட்டார். கடவுள் யோசித்தார். நான் இப்படி சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும். என்றார். ஞானி, பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம், ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே என்று கேட்டார். கடவுள் நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும். ஞானி, சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின் நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா, கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு மதிப்பு கிடையாது, ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா, நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட முடியாது என்றார். கடவுள், உன்னுடைய தர்க்கம் சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும். என்றார். ஞானி, இதோ நானிருக்கிறேன், நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். எப்படி அடையாளம் காண்பது. நான் நல்லவனான கணத்திலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் எனப்பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம், ஆனால் அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது. இருப்பு தனது செயல்களிலிருந்து வெளியே வர முடியும். அது தனது செயல்களை விட்டு விட முடியும். அது தனது கடந்த காலத்தை உதறி விட முடியும். அப்போது அந்த வினாடியிலிருந்து அந்த மனிதன் புனிதன் ஆகிறான். யாரும் அவனை தடுக்க முடியாது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும், தீர்மானிக்க வழியே இல்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். அந்த நகரங்களில் நல்லவர்களே இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில் நான் இரண்டு நகரங்களிலும் இருந்திருக்கிறேன், நான் நல்லவர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்றார். நீ நல்லவனாகும்போது, நீ தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில் எடை போடுவது செயல்கள் மூலம்தான். ஆனால் செயல் என்பது வெளி விஷயம்தான். நீர்குமிழ் மூலம் கடலை எடை போட முடியுமா, அது மடத்தனம். நீர்குமிழ் என்பது கடலின் மேல் பரப்பில் உருவாவது. செயல்கள் நீர்மேல் வரையும் கோலம் போன்றது, அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது. அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி. ஹசிடீஸ் ஞானி, நான் மக்களின் இருப்பை மட்டுமே பார்க்கிறேன். சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக, புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க முடியாத விஷயமாக ஆகிறது. ஆனால் அந்த செயல் மூலம் அவர்களை மதிப்பிடமுடியாதல்லவா, அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன், என்றார். இதோ நானிருக்கிறேன். நான் இரண்டு நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா எனக் கேட்டார். இதன்பின் கடவுள் அந்த இரண்டு நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விவசாயி, விவசாயியின் மூன்று பிள்ளைகள் தலைப்பு: உழைப்பே அதிர்ஷ்டம் தரும்
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்" என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்" என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.