template_id
int64
1
2
template_lang
stringclasses
1 value
inputs
stringlengths
132
27.8k
targets
stringlengths
63
27.6k
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், தவளை, ஓணான், நூறு பொற்காசு தலைப்பு: தவளைக் குட்டிச் சீடன்
முட்டாளும் மூடனும் தவிர பரமார்த்த குருவும் மற்ற சீடர்களும் ராஜ வீதியில் காத்திருந்தனர். அந்த நாட்டு மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தான். தங்கள் அருகே தேர் வந்ததும், கையில் தயாராக வைத்திருந்த செத்துப் போன தவளையையும், ஓணானையும் தேரின் சக்கத்தில் போட்டான், மட்டி. அதன் மீது சக்கரம் ஏறி நகர்ந்ததும், நசுங்கிப் போன தவளையையும் ஓணானையும் தூக்கி வந்தான், மடையன். பரமார்த்தர், தேருக்கு முன்னால் சென்று, ஐயோ! என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ குடிமக்களைக் காப்பாற்றும் முறையா? என்று கூச்சலிட்டார். மட்டியும் மடையனும் சேர்ந்து கொண்டு, ஐயோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அதற்குள் இப்படி நசுங்கிக் கூழ் கூழாக ஆகிவிட்டீர்களே! என்று ஒப்பாரி வைத்தனர். அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரைக் கொன்றேன்? எனக் கேட்டான், மன்னன். என் அருமையான சீடர்களான முட்டாளையும், மூடனையும் நீதான் தேர் ஏற்றிக் கொன்று விட்டாய்! என்று குற்றம் சாட்டினார், குரு. அப்படியானால் எங்கே அவர்கள் உடல்கள்? என்று மந்திரி கேட்டார். இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார், பரமார்த்தர்! எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. இது தவளை அல்லவா? இந்தக் தவளையா உன் சீடன்? எனக் கேட்டான், மன்னன். இது ஓணான்! இதுவா உன் சீடன்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார், ஓர் அமைச்சர். அரசே! நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்? உண்மையாகவே இந்தத் தவளையும் ஓணானும் என் சீடர்கள்தாம். நம்மைப் போல மனிதர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்! என்று பொய் கூறினார், பரமார்த்தர். தவளைதான் என்றாலும் மனிதர்களைப் போலவே பேசுவான்! ஓணான்தான் என்றாலும் தினம் நூறு பொற்காசு சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுப்பான்! என்று புளுகினான் மண்டு. இதைக் கேட்டு, அரசனுக்கும் மந்திரிகளுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது. சரி... நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார், அமைச்சர். என்ன செய்வதா? இவர்களை வைத்துத்தானே எங்கள் பிழைப்பே நடந்தது. அதனால், மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நூறு பொற்காசுகளை நீங்கள் தான் தர வேண்டும், என்றார் பரமார்த்தர். வேறு வழி தெரியாத மன்னன், மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது. அதனால் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன், என்று ஒப்புக் கொண்டான். மடத்துக்கு வந்ததும், செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனிமேல் தினமும் நூறு பொற்காசு கிடைக்கப் போகிறது, என்று குதித்தார்கள். முட்டாளையும் மூடனையும் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் செத்து விட்டதாகக் கூறி விட்டோம். ஆகையால் இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகவே கூடாது. தப்பித் தவறி வெளியே போனீர்களானால் மாட்டிக் கொள்வோம். ஜாக்கிரதை! என்று எச்சரிக்கை செய்தார், குரு. ஒரே வாரம் கழிந்தது. இரவு நேரத்தில் எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர். முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டனர். சோ! ஊர் சுற்றி ஒரு வாரம் ஆகிறது! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்! என்று ஆசைப்பட்டனர். கையில் கொள்ளிக் கட்டையுடன் இருவரும் வெளியே புறப்பட்டனர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்! உடனே இருவரையும் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்ததும், மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர். ஆளை உயிரோடு வைத்துக் கொண்டே செத்து விட்டதாக ஏமாற்றினீர்கள். அதனால், இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்! என்றான், மன்னன். அதைக் கேட்ட குருவும் சீடர்களும், அலறினார்கள். ஐயோ, மன்னா! தெரியாமல் செய்து விட்டோம். உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மன்னித்து விட்டு விடுங்கள், என்று அரசனின் கால்களில் விழுந்தார். சீடர்களும் கீழே விழுந்து வேண்டினார்கள். மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தான்!
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும் இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும். மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும். இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு. வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன. ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது. அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின. “நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வேஷங்கள் நிலைப்பதில்லை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஏரித் தவளை, கிணற்றுத் தவளை, கிணற்றிலிருந்து நீர் எடுக்கவந்த பெண், மற்ற தவளைகள் தலைப்பு: முட்டாளும் புத்திசாலியும்
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி" எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு" எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன. இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?" எனக் கேட்டது. ‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்" என்றது ஏரித் தவளை. ‘ஏரியா? அப்படியென்றால் என்ன?" எனக் கேட்டது கிணற்றுத் தவளை. ‘இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு" என்றது ஏரித் தவளை. ‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?" என்று கேட்டது கிணற்றுத் தவளை. ‘இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி" என்றது ஏரித் தவளை. கிணற்றுத் தவளை நம்பவில்லை. ‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது" என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை. எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ‘நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து" என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது. முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஐந்தாம் திருவிழாவும் ஏழாம் திருவிழாவும் அங்கு விமரிசை. காளை வாகனத்தில் - கைலாச பர்வதத்தில் - சாமி பவனி வருவதும் விமரிசை. இதில் விசேடம் என்னவென்றால், அது பொருமாள் கோவில். ஆழ்வார்களால் பாடப்பெற்றது. தலைமையான ஆழ்வார் அங்கேதான் பிறந்தார் என்ற விசேடமும் உண்டு. இருந்தாலும் சிவன்தான் அங்கு கோலோச்சினார் - அந்தப் பிரதேசம் முழுவதிலும். மேலே சொன்ன இரண்டு உற்சவ நாள்களும் திருவிழாவில் முக்கிய தினங்களாகும். வாகனங்கள் நாலு தெருவையும் சுற்றி இறங்குவதற்குள் விடிந்து விடும். பிரபல வித்வான்கள் வரவழைக்கப்படுவர். குண்டலக் கம்பர், சுடலையாண்டிக் கம்பர் போன்றோரெல்லாம் அந்த வட்டார வாசிகளாதலால் வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை உண்டு. ராசரத்தினம் பிள்ளை வரும் அளவிற்கு இன்னும் பிரபலமாக வில்லையே என்ற குறையும் ஊர்வாசிகட்கு இருந்தது. முதல் மூன்று நாள் விழாவும் சாதாரணமாக நடந்த பின்னர் சிறு கடைகள் தோன்ற ஆரம்பிக்கும். ரிப்பன் - பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் வந்து போவார்கள். உள்ளூர்வாசிகள் இரண்டொரு பேர் ''வை - ராசா - வை'' போட்டியைத் துவக்குவார்கள். கம்பராமயணச் சொற்பொழிவு, திருவிழா முடிந்த பின்னருங்கூட கோவில் அருகே தொடர்ந்து நடக்கும் ஏழாம் திருவிழாவின் போது சர்க்கஸ். எட்டாம் நாள் நடராசர் தில்லையம்பல வாகனத்தில் வருகை. அன்று ஊர் முழுவதும் எலுமிச்ச பழமும் வெல்லமும் கலந்த பானகத்தில் மிதக்கும் அடுத்த நாள் தேரோட்டம். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த சமயமெல்லாம் ''பெட்ரோ மாக்ஸ்'' விளக்கு அந்தக் கிராமத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் வாகனம் நாலு தெருக்களிலும் ஊர்வலம் வரும்போது பெரும் பாலும் தீவட்டிதான். இந்தத் தீவட்டி விஷயத்தில் ஒரு சிறு சங்கடம் உண்டு. வாகனம் தூக்குவதற்கு ஆட்கள் உள்ளூரிலேயே கிடைப்பார்கள். அதில் கஷ்டமில்லை. இந்தத் தீவட்டி அப்படியல்ல. நாலு தெருக்களிலும் சுற்றி வருகிற வாகனத்திற்கு முன்னால் செல்ல வேண்டிய தீவட்டிகளைத் தூக்கிப் பிடிக்க உள்ளூர் ஆட்கள் கிடைப்பதரிது. காரணம் வெளிப்படை. இரவெல்லாம் தீவட்டி தூக்கிவிட்டு, காலையில் பல் தேய்க்க குளத்திற்கு சென்றால் தெருவில் விளையாடும் குழந்தைகள் ''ஏய் - தீவட்டி '' என்று கூப்பிடும். ஒன்னும் சொல்லாவிட்டாலும் பெண்களும் சிரிப்பதுண்டு. எனவே உள்ளூர் பையன்கள் தீவட்டி உத்யோகத்திற்கு முழுக்குப் போட்டு விட பெரும்பாலும் வெளியூர் பையன்கள் அந்த வேலையை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் அப்படித்தானிருந்தது. பொன்னையா பிள்ளை உள்ளூர்வாசி. கோவில் வேலை, வாகனங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு. திருவிழா காலத்தில் தீவட்டி. எண்ணெய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் யாவும் அவர் கையில் தான். தீவட்டிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். அத்துடன் வாகனம் புறப்பட்டு விட்டால் கூடவே சென்று அவற்றை எண்ணெயுடன் கண் காணிக்கவும் வேண்டும். தேவைப்படும் போதெல்லம் ஊற்றிக் கொண்டிருப்பது அவசியம். அவருக்கு வயிற்று வலி நிரந்தரமாக உண்டு. வைத்தியர் தருகிற லேகியத்தை எப்போதும் மடியிலேயே வைத்திருப்பார். மருத்துவத்திற்கு காசு செலவழிக்கிற அளவு சம்பளம் கிடையாது. பிள்ளைகள் ஆறு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டிச் சோறு கோவிலில் தருவார்கள். பெரும்பாலும் அதைச் சாப்பிட்டுத்தான் குடும்பம் நடந்தது. இந்த நிலையில் மருத்துவச் செலவுக்கு ஒரு வகையில் தீவட்டி உதவிற்று. அது விசேடமான கதை. கீழ்த் தெரு குளத்தங்கரைப் பக்கம். தெரு பரந்து கிடக்கும். ஐந்து, ஏழு திருவிழா வாகனங்கள் வந்து நின்றால், கிட்டதட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடும். நாதசுர வித்வான்களின் திறமை வெளிப்பட வேண்டிய இடம். ஊரின் இளைஞர் சிலர் நேரடியாகவே சொல்லி விடுவார்கள். ''அண்ணன் வாசிப்பை இந்தத் தெருவில் தான் பாக்கணும்.'' அப்படின்னு. பொன்னையா பிள்ளையின் திறமையையும் அந்த நிமிடத்தில்தான் பார்க்க வேண்டும். கீழத் தெருவில் முடுக்குகள் அதிகம். பொன்னையா பிள்ளையின் வீடும், நடுமுடுக்கில் தான் இருக்கிறது. அங்குள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் சாமி தரிசனத்திற்காக கீழத்தெரு சந்திக்கும் இடத்தில் கூட நிற்பார்கள். அந்த இடத்தில் தீவட்டி அவசியம் என்று ஒருவனை எப்போதும் நிறுத்தி வைப்பர். புதிய ராக ஆலாபனை ஒன்றை நாதசுரக்காரர் ஆரம்பிக்க, வாகனம் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால், நிறைய தடவை தீவட்டிக்கு எண்ணெய் ஊற்ற வேண்டியது அவசியம். அப்படி ஊற்றும் போது, தீவட்டிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் பெண்மணிகளை ''பேத்தி'' என்றோ, ''மருமகளே'' என்றோ, ''அக்கா'' என்றோ அழைத்து அவர்கள் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தில், இரண்டு மூன்று கரண்டி ''தேவஸ்தான எண்ணெயை ஊற்றுவார் அப்போதே அந்தப் பெண்களில் சிலர் சில்லறையை அவர் கையில் தந்து விடுவதுண்டு. இல்லை யென்றால் அடுத்த நாள் காலை முதல் வேலையாக அவர்கள் வீடு சென்று அதைப் பெற்று, ஒரு செம்பு கருப்பட்டிக் காபியையும் பருகி வருவார். இதை யெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ளும் மனோபவத்தில் ஊர் மக்கள் எல்லாரும் இருக்கவில்லை. அந்த ஆண்டு திருவிழாவிலும் கீழத் தெருவில் கைலாச பர்வத வாகனம் வந்து நிற்கிறது. நாதசுரக்காரர்கள் திறமையைக் காட்ட முனைகின்றனர். நடு முடுக்கின் பகுதிக்கு பெண்கள் வரத் தொடங்கவே, பிள்ளைவாள் அந்தப்பக்கம் நிறுத்தப்பட்டிருக்கிற தீவட்டி யாரெனப் பார்க்கிறார். அடையாளம் தெரியாத பையனாக அவன் இருந்தான். அருகில் சென்று பார்த்தால் புதுப்பையன். ''யார்லே நீ?" எனக்கு வெள்ள மடம் அண்ணாச்சி - பேரு முத்துக் கறுப்பன். ''எங்கலே அந்தப் பய வேலப்பன்'' ''சீக்கிரமா சோத்தைத் திண்ணுகிட்டு வந்துருதேன் அப்படின்னு போயிருக்கான் அண்ணாச்சி. வாகனம் இன்றைக்கு இறங்க நேரமாகும். தீவட்டியைக் கொஞ்சம் பிடிச்சுக்கோ வந்துருதேன் அப்படின்னு இப்பத்தான் போனான்'' தெளிவாகப் பதில் சொன்னான் அந்த பையன். ''அதுதானே பார்த்தேன். சரி, இறக்கிப் பிடி'' என்று எண்ணெய் ஊற்றத் தயாரானார் பிள்ளை. ''இல்லை அண்ணாச்சி - இப்பத்தான் அவரு வந்து எண்ணெய் ஊத்திப் போனாரு'' பிள்ளைவாளின் உதவியாளன் ஏற்கெனவே ஒரு சுற்று வந்து எண்ணெய் ஊற்றி விட்டு போய் விட்டதைக் கூறினான் பையன். நாதசுர ராக ஆலாபனை ஒரு நிசப்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பையனுடன் சப்தமிட்டுப் பேசினால், அது நல்லதல்ல. அவர் பேசாது வேறொரு பக்கம் சென்றார். நடுமுடுக்கு வாசிகளும் அன்று நாதசுர இசையை மட்டுமே கேட்டுச் சென்றனர், காலிப்பாத்திரங்களோடு. பொன்னையா பிள்ளை ஓய்வு பெற்றபோது, கீழூருக்கு மின்சாரம் வந்து விட்டது. இப்போது எதிலும் ஓர் அசிரத்தை, வீட்டு விஷயங்கள் எப்படியெல்லாமோ ஆகி விட்டது. முத்தமகள் அறுத்துக் கொண்டு அப்பா வீட்டிற்கு வந்து விட்டாள். அடுத்த இரண்டு பெண்களும் உள்ளூரிலேயே கட்டிக் கொடுக்கப் பட்டாலும், கிட்டத்தட்ட அப்பா வீட்டிலேயே இருந்தனர். அதில் ஒருத்திக்கு புருஷன் முகமே மறந்து விட்டது. பையன்களில் ஒருவனுக்கு சுசியந்திரம் கோவிலில் வேலை. இன்னொருவன் உழவுக்குப் போய் வருகிறான். கடைசிப் பையன் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்கப் போகிறேன் என்று சோறு கட்டிக் கொண்டு அதை ஆற்றங்கரையில் சாப்பிட்டு, மாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். விஷயம் வெளியாகி அப்பாவிடம் வாங்கிய அடியில் ஊரை விட்டுப் போனவன்தான். மனைவிக்கு இடைவிடாத இருமல்; சற்றேறக் குறைய எல்லா நோய்களும் உண்டு. மனிதர் மிகவும் நொந்து போயிருந்தார். ''யத்தான்'' என்று அழைத்தபடி வந்தார் மாடசாமி-எதிர் வீட்டுக்காரர். ''யாரோ வெள்ளைக்கார தொரை அத்தான் - ஒங்களைப் பாக்கணுமாம்'' ''என்னைப் பாக்கணுமா! மாடசாமி கொஞ்சம் விவரமா சொல்லுடே எனக்கு ஒடம்பெல்லாம் படபடக்குது பாத்துக்கோ.'' ''கூட வந்திருக்கறது தேரூர் மூத்த பிள்ளை மகளைக் கட்டியிருக்கறவன். அவனும் வெளிநாட்டிலே வேலையிலே இருக்கிறானாம். திருவிழாப் பத்தி ஏதோ கேக்கணுமாம். பொன்னையா பிள்ளையின் மனைவி இருமலுடன் ''ஏட்டி இந்தப் பிள்ளையைக் கொஞ்சம் உள்ளே எடுத்துக்கிட்டு போ மூக்கைச் சிந்து'' என்று மகளைக் கூப்பிட்டாள். வந்தவரில் வெளிநாட்டுக்காரர் உயரமாக இருந்தார். போலந்து நாட்டுக்காரர். தெளிவான உச்சரிப்புடன் வணக்கம் சொன்னார். உடன் வந்த உள்நாட்டுக்காரர் அறிமுகம் செய்து வைத்தார். ''அண்ணாச்சி, இருபத்தஞ்சு வருசம் முன்னே இங்கு வந்திருக்கேன். அடிக்கடி கோவிலுக்கும் வருவேன். ''அப்படியா இருங்கோ. ஏட்டி, ஒரு பாய் எடுத்து இப்படி போடு.'' வெளிநாட்டுக்காரர் தூய தமிழில் பேச, உள்நாட்டு அதை நாஞ்சில் நாட்டு வழக்கில் மொழி பெயர்த்தது. ''அண்ணாச்சி, இவாள் வந்து நம்ம தமிழ்நாட்டுத் திருவிழா பத்தி புத்தகம் எழுதறாரு. அதுக்கு சில விவரமெல்லாம் வேணும். நான் இப்ப இவாள் கூட அங்க காலேஜ்லேதான் வேலை பாக்கறேன். மாடசாமி மாமாகிட்டே கேட்டேன்; ஒங்களைப் பத்திச் சொன்னாரு திருவிழா சம்பந்தமா நிறைய விஷயம் கேட்டுத் தெரிஞ்சாச்சு. அதுலே இந்த தீவட்டி இருக்குது பாருங்க, அது சம்பந்தமா ஒங்ககிட்ட கேக்கணுமாம்.'' பொன்னையா பிள்ளை முதலில் வெலவலத்துப் போனார். அப்போது போலந்தின் குரல் ஒலித்தது. ''ஐயா தாங்கள் தீவர்த்தியைப் பயன்படுத்தும் முன்னர், அவற்றிற்கு பூசனை செய்வதுண்டா? தீவர்த்தி திரிசூல அடையாளம், தீபம் சிவலிங்கம் அல்லவா?'' பொன்னையாய் பிள்ளை சமாதானமடைந்தார். தீவட்டியில் இவ்வளவு விஷயம் உள்ளதா என்று ஒரு பெருமிதமும் கொண்டார். பிறகு தைரியமாகப் பேசினார். ''ஆமாமா. கும்பிடு போட்டு விட்டுத்தான் வேலையை ஆரம்பிப்போம். ஒரு வாரத்துக்கு முன்னமேயே பழந்துணி எல்லாத்தையும் வாங்கி வைச்சுடுவோம். அது நாலு தெரு வீடுகள்லேயே கிடைக்கும். போதாதுன்னா காசு குடுத்து வாங்குவோம். மீதி வந்தா, அப்படியே கட்டி வைச்சுடுவோம். அடுத்த வருசம் உதவும் வீணாக்கப்படாது.'' மொழிபெயர்ப்பு எதுவும் தேவைப்படவில்லை. ''எண்ணெய்'' என்று ஆரம்பித்தார் போலந்து. ''அது நிறைய வீணாகும் அல்லவா?'' என்றும் கேட்டார். ''சேச்சே பேசப்படாது. ஒரு சொட்டுக்கூட வீணாப் போகாது. தீவட்டிக்கு எண்ணெய் ஊத்தற சமயம் நீங்க பாருங்களேன். சட்டியைக் கீழே கவனமா வைச்சு ஊத்துவோம். தரையிலே ஒரு சொட்டுக் கூட சிந்தாம கவனிக்கணும். கோவில்லே எந்தப் பொருளும் வீணாகாது; வீணாக்கக் கூடாது.'' ''நன்றாகச் சொன்னீர்கள். ''சிவன் சொத்து குல நாசம்'' என்று பழமொழியே இருக்கிறதல்லவா.'' ''ஆமாம்'' என்றார் பொன்னையா பிள்ளை. உள்நாட்டுக்காரரை ஏறிட்டுப் பார்த்தார். ''தேரூர் மூத்தபிள்ளை மருமகனா நீ... நீங்க'' என்று கேட்டார். ''எந்த ஊரு'' என்றும் விசாரித்தார். ''எனக்கு வெள்ளமடம் அண்ணாச்சி. ஒரு தடவை இங்க தீவட்டிக் கூட பிடிச்சிருக்கேன்.'' போலந்துக்காரர் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். நன்றி - தீராநதி.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தீவட்டி' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், மன்னன் ரவிவர்மன், இளைஞன் சிவதாஸ், கோபி, வியாபாரி ரத்னாகரன், பண்டிதர் கோபால் சர்மா தலைப்பு: நம்பமுடியாத உண்மை
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், "மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை. உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!" என்று கதை சொல்லலாயிற்று. ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான். ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான். அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், "மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது. அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!" என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது "ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை" என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார். அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், "மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை" என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. "இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!" என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, "மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!" என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, "மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?" என்று மன்னரையே கேள்வி கேட்டான். "எந்த வாயில் வழியாக?" என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்."நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!" என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். "லஞ்ச வாயிலா? அது என்ன?" என்று மன்னன் கேட்டான். "மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?" என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்."என்ன?" என்று துள்ளிக்குதித்த மன்னன் "என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!" என்று அதிர்ச்சி யுடன் கூறினான். "மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!" என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, "இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!" என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, "உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!" என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா!ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!" என்றது.அதற்கு விக்கிரமன், "முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்" என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒவ்வொரு ஸென் மாணவர்களும் தங்களுடைய குருவிடம் குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது பயிற்சி பெறுவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் ஸென் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித் தர அனுமதிக்கப் பட்டார்கள். டென்னோ என்ற மாணவன் ஸென்னை முறையாக கற்று ஸென் பட்டம் பெற்று சமிபத்தில் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். அடை மழை பெய்யும் ஒரு நாள் டென்னோ தன்னுடைய மரத்தினால் ஆன பாதுகைகளை (செருப்புக்களை) போட்டுக் கொண்டு குடையை விரித்து பிடித்துக் கொண்டு நா-நினைச் சந்திப்பதற்காக அவருடைய மடத்திற்கு சென்றான். டென்னோவினை முக மலர்ச்சியுடன் வரவேற்ற நா-நின் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "நீங்கள் வரும் போது போட்டுக் கொண்டு வந்திருந்த மரப்பாதுகைகளை நடையில் உள்ள வராண்டாவின் ஒரத்தில் விட்டு விட்டு வந்திருப்பீர்கள். உங்களுடைய குடையானது மரப்பாதுகைகளுக்கு வலப் பக்கத்தில் உள்ளதா அல்லது இடப் பக்கத்திலா?" என்ற கேள்வியினைக் கேட்டார். குழப்பம் அடைந்த டென்னோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்தான். அப்பொழுதான் அவனுக்கு தன்னால் ஸென்னினை ஒவ்வொரு நிமிடமும் கடைபிடிக்க முடியவில்லை என்பதினை உணர்ந்தான். உடனே ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமே மாணவனாகச் சேர்ந்தான். ஒவ்வொரு நிமிடமும் ஸென்னைக் கடைபிடிப்பதற்கு டென்னோவிற்கு ஆறு வருடங்கள் பிடித்தது. ஆறு வருடங்கள் முடிவில் டென்னோவினால் நா-நின் சொன்ன ஸென்னின் அனைத்துப் பரினாமங்களையும் உணர்ந்து தெளிந்து கொள்ள முடிந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒவ்வொரு நிமிடமும் ஸென்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மணிவண்ணன், வியாபாரி, இலாபம், கடுக்கன்கள், வெளியூர், இடது காது, வலது காது, வழிப் போக்கன் தலைப்பு: காதுக் கட்டுக்கனைத் திருடியவன்
மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள் செய்து இரண்டு காதுகளிலும் போட்டுக் கொண்டார். ஒகு நாள் வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் செல்ல வேண்டி நேரிட்டது. இர்வு வெகு நேரமாகி விட்டதால் அங்குள்ள சத்திரத்தின் திண்ணையில் படுத்துக் கொண்டார். அவ்வாறு படுக்கும்போது அவர் ஒருக்களித்தவாறு படுத்திருந்தார். அவருடைய இடது காது தனரயிலும், வலது காது மேற்புறமாகவும் இருந்தது. மணிவண்ணனுக்கு எதிரே ஒரு வழிப் போக்கன் படுத்திருந்தான். அவன் மணிவண்ணனின் வலது காதில் மின்னும் வைரக் கடுக்கனைப் பார்த்து விட்டான். அவன் மிகவும் பொல்லாதவன்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: விஷேசத்திற்கு முந்தின நாளே அந்த வீட்டில் ஒலிபெருக்கியின் சத்தம் ஒலித்தது. மாலை நேரமாகையால் சோகப்பாடலை போட்டிருந்தார்கள். தூங்கப்போன மூர்த்திக்கு 'பேன்' காற்று வீசியதுபோல் இதமாயிருந்தது. 'என்ன இனிமையான குரல் வளம்; அதற்கேற்ற இசை மெட்டு'. "அம்மா ஊருக்குள்ளே என்ன விஷேசம். ரேடியாப் படிக்கிது". "டேலே, ஊர்ப்பய புள்ளையெல்லாம் எலும்புக் கறியும், சோத்துக்கும் ஏமாந்து போயி எப்ப பந்தி வப்பானுகண்ணு ஏங்கிப் போய்க் கிடக்குது. ஊரே அந்தச்சாமி வீட்டுக் கல்யாணத்தப்பத்திதான். இந்த ஒரு மாசமா பேசிக்கிட்டிருக்கு. படிச்சும் வௌரம் தெரியாத மாதிரி பேசுறியே. நாளைக்கு காலைல கல்யாணம். ஆத்திலேயே குளிச்சிட்டு வந்திரு. எல்லாரும் கல்யாணத்திற்கு போயிட்டு வந்துருவம்". "ஏம்மா இந்தக் காலத்திலே போயி, சாமி வீடு சும்மா வீடுன்னு. அவுகளும் நம்மள மாதிரி மனுஷதானம்மா. அவுக மட்டும் எப்படி சாமி ஆவாக". "நீ எப்பவுமே தலைகீழாத்தாண்டா பேசுவே". "அப்புறம் என்னம்மா. நம்ம மட்டும் கல்யாணத்துக்குப் போயி சாப்புட்டு வர்றோமே, அவங்க என்னிக்காவது வந்து, நம்ம வீட்டுக் கல்யாணத்திலே சாப்பிட்டுருக்காகளா. நம்ம மட்டும் போயி அங்க சாப்பிடணும். கிடக்கிற வேலையெல்லாம் நம்ம வூட்டு வேலை மாதிரி இழுத்துப் போட்டுச் செய்யணும். அவங்க மட்டும் காசு கொடுத்து, கலர் குடித்துவிட்டு, வெத்தலை, பாக்குகூடப் போடாமல் போயிறாங்க! நம்ம மேல நெசமாவே பாசம் இருந்தா பந்தியிலே வந்து சாப்பிடலாம்ல. எல்லாமே நடிப்பும்மா. அவனவன் இந்த ரேஞ்சோட இருந்துக்கிறான். நாம் தான் நாய் மாதிரி அவன் வாசப்படியிலேயே இன்னும் போய்கெடக்கிறோம். "உனக்கு என்னடா விவரம் தெரியாத பய. அந்தக் காலத்திலே அவுகளெல்லாம் எப்பிடி இருந்தாக தெரியுமா. கல்யாணப் பொண்ணையே வருஷக் கணக்காப் பார்க்க முடியாது. அவுகளும் பார்க்கவிடமாட்டாக. அவுங்க வூட்ல எல்லாம் நிறைஞ்சு கிடக்கும். அவ்வளவு வசதி அவுங்களுக்குன்னு தனியா எடம் ஒதுக்கி, எல்லா வசதியும் செஞ்சவச்சிருக்காங்க பாத்தியா. அந்தக் காலம் தொட்டு இப்ப வரைக்கும் அவங்க வச்சது தான் வேதமா இருக்கு. இப்பவும் பார்த்தியா ஏதாவது ஒண்ணுனா நானூறு வீடு இருக்கிற நம்மலெல்லாம் அந்த நாலு வீட்டுக்காரனத்தானே தேடிப்போறோம்". "அம்மா அந்த நாலு வீட்டுக்காரனைத் தேடிப்போனது நம்ம தப்பு. நம்ம நானூறு வீட்ல இல்லாத கூட்டு அந்த நாலு வீட்ல இருக்கு. அப்பவே வசதியாயிருந்தாங்கன்னு சொல்றியே. நீங்க கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும். அவன் அப்பவே விவரமா இருந்து, நம்மளத் தொட்டா தோஷம்ன்னு சொல்லி, தனியாய்ப் போயி அவனுக்குத் தேவையானதை செஞ்சுக்கிட்டான். இப்ப அவன் நல்லாயிருக்காண்ணா இருக்கத்தான் செய்வான். தலையை விட்டுபுட்டு வாலைப் புடிச்சா வழுக்கத்தான் செய்யும்." "அடப்போடா நீயும், உம் பேச்சும். அவங்க என்னமோ நம்ம வூட்ல சாப்புடலேங்கிறியே சாப்புடாட்டா போயிட்டுப் போறாக. அவுங்க வந்துட்டுப் போனா நம்ம வீட்டுக்கு ஒரு மரியாதைடா. உனக்கு அதெல்லாம் எங்க புரியப்போகுது". "எதும்மா மரியாதைங்கிற. சாப்பிடாமப்போனா போயிட்டுப் போறாகங்கிறியே. கல்யாணம்னா என்னம்மா. அதுக்கு எதுக்குமா நாலுபேர் நாலு திசையிலிருந்து வர்றாக. வாழ்த்துறதுக்குத்தானே. வர்றவகள உபசரிக்கிறது தாம்மா கல்யாணம். அவுங்க நல்லா சாப்புட்றாங்க பாரு அதுதான் திருப்தி. அத விட்டுட்டு, வருவாங்களாம். மொய் செய்வாங்களாம். உட்காரக்கூட செய்யாம போயிருவாகளாம். இதுக்கு எதுக்கு வரணும்". "உனக்கு என்னடா என்னயென்னத்தையோ பேசுற. போயி பேசாமத் தூங்கு" என்று கோபமாய்ச் சொன்னாள். "நமக்குன்னு சுய மரியாதை கூட வேணாமா" ன்னு அண்ணனிடம் கூடக் கேட்டுப் பார்த்திட்டான். "நமக்குன்னு என்ன சுயமரியாதை வேண்டிக் கெடக்குது. நம்ம என்னதான் கூட்டமாயிருந்தாலும் அவனுக்கு இருக்கும் அடிமையாக்குற புத்தி நமக்கு இருக்காதுடா. நம்ம பயலுகளெல்லாம் முரட்டுக்காரங்க. எல்லாம் நாலு காசப் பாத்துட்டா கறித்துண்டமுனு சோயா மாவதின்னுற பயலுக. நம்ம சாதி எப்பவும் அடிமைதாண்டா. சாதிங்கறது அழிக்க முடியாத ஒண்ணா ஆகிப்போச்சு. உன்னாலேயோ என்னாலயோ மட்டும் அழிக்க முடியுமா? ஆனா, அது அதுக்குன்னு ஒரு நெறிமுறை வச்சுக்கணும். அவனவன் மனசாட்சிதான்டா அவனவன் ஜாதி". முன்னாடி ஒருமுறை சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. பாயை விரித்துப் படுத்தான். ராத்திரியில் பாதி நேரம் வரை தூங்காததால், காலை நேரத்தில் தூக்கம் அசத்தியது. அப்படியே தூங்கிப் போனான். கண் திறந்தபோது, சாமி வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் விட்டு, வீடு திரும்பியிருந்தாள் அவன் அம்மா. "என்னம்மா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து பழைய சோத்தை ஊத்திச் சாப்பிடுறே" சிரித்துக் கொண்டே கேட்டான். "அதுக்கு என்னடா இப்போ. சாமி வீட்டுச் சொந்தக்காரங்க எவ்வளவு பேரு வந்திருக்காங்க. அவங்களெல்லாம் முதல்ல சாப்புடட்டும். நம்ம போயி அவங்க மத்தியிலே சகுணம் புடிச்சாப்ல உக்கார முடியுமா. நாளைக்குப் போனா ஏதோ பழக பட்டை கெடந்தா ஊத்துவாக. சாவகாசமா உக்காந்து சாப்புட்டு வரலாம்" - சொல்லிக் கொண்டிருந்தவள், வீட்டிற்குள் நுழையும் இளைய மகன் பாண்டியைப் பார்த்து "என்னடாக் கண்ணு" என்றாள். "அம்மா நீ வந்தப்புறம் அங்க நடந்துச்சுல்ல பந்தி அதிலே சாப்பிடப்போனேம்மா. அப்போ அந்தச் சாமிவுக வந்து என்னைய எந்திரிக்கச் சொல்லி, போகச் சொல்லிட்டாரும்மா. ஆட்டுக்கறி ஒண்ணுகூட திங்கலமா". ஒழுகிய ஊழை மூக்கை "ம்ஹ்" என்ற உறிஞ்சிக் கொண்ட வண்ணம் ஏங்கி ஏங்கி அழுதான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கல்யாணச் சோறு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், பிச்சைக்காரன், காயத்திரி ஜபம் தலைப்பு: காயத்ரி மந்திரம்
சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான். மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரியப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்.. சுருங்க கூறின், காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும், தரித்திரனும் தனிகனாவான். வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும், மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்தருக்கள் நாசமடைவார்கள், பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதஸாரமான் இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம்
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார். இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள். வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தூங்குமூஞ்சி வாத்தியார்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான். பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர். அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், “ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போல இருக்கும். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான். “உறவினர்கள் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும். பிறகு பணம் தராமல் இவனை ஏமாற்றலாம்’ என்று நினைத்தான் ராஜன். “நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,” என்றான். “உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன். குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,” என்றான் ஓவியன். ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன். “இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே… நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,” என்றான். அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சில மாற்றங்கள் செய்தான். அந்த ஓவியத்தை மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான். “என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே… இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?” என்று கேட்டான். அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்தான் கபிலன். “இந்த ஓவிய மும் என்னைப் போல இல்லை. வேறு ஓவியம் வரைந்து கொண்டு வா,” என்றான் ராஜன். “எப்படி வரைந்தாலும் இவன் ஓவியத்தை வாங்கப் போவது இல்லை. ஏதேனும் குறை சொல்லித் திருப்பி அனுப்பப் போகிறான். என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் கபிலன். பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், “அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்,” என்று வேண்டினான். ராஜனை வரவழைத்தார் பீர்பால். “ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?” என்று கேட்டார். “அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,” என்றான் ராஜன். “ஓவியம் என்றாலே சிறு சிறு குறைகள் இருக்கத்தானே செய்யும். இது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார் பீர்பால். “அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். இரண்டு பங்கு பணம் தருகிறேன். குறை இருந்தால் ஒரு பணமும் தரமாட்டேன்,” என்று அடாவடியாகப் பேசினான் அவன். “ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்,” என்றார் பீர்பால். “அந்த ஓவியத்திலும் எப்படியும் குறை கண்டுபிடித்து பணம் தராமல் தப்பிக்கலாம்’ என்று புறப்பட்டான் ராஜன். “நீ ஓவியம் ஏதும் வரைய வேண்டாம். அடுத்த வாரம் இங்கு வா. பணத்துடன் செல்லலாம்,” என்றார். ஒரு வாரம் சென்றது. பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான். “உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்றார். “எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்’ என்று திரையை விலக்கினான் அவன். அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது. “அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது’ என்பது அவனுக்குப் புரிந்தது. “அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி,” என்றான் அவன். “கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,” என்றார் பீர்பால். “அமைச்சரே! இது நியாயம் அல்ல!” என்றான் அவன். “நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள். குறையே இல்லாமல் யாராலும் ஓவியம் வரைய முடியாது. இதை அறிந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஓவியங்களை எத்தனை முறை வரையச் சொன்னீர்கள்? “நம் வடிவம் கண்ணாடியில்தான் குறை இன்றித் தெரியும். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்,” என்றார் பீர்பால். “ஆயிரம் பணம் கொடுத்து அந்த ஓவியத்தையே வாங்கி இருக்கலாம். வீட்டில் அழகாக மாட்டி வைத்து இருக்கலாம். எல்லாரும் பார்த்து மகிழ்ந்து இருப்பர். பத்துப் பணம் பெறாத கண்ணாடி இது. இதற்கு இரண்டாயிரம் பணம் தர வேண்டி வந்ததே’ என்று தன்னையே நொந்து கொண்டான் அவன். ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் தந்தான். அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஏமாற்றாதே, ஏமாறாதே' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், அரண்மனை வைத்தியர், ஹகீம் ஜாலிம்கான், விஷக்காய்ச்சல், காளை மாடு, பால், பொற்காசுகள், பிரசவம் தலைப்பு: காளை மாட்டின் பால்
சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். "வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்" என்றார் ஜாலிம்கான். "நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்" என்ற அவர்கள், "பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது" என்றனர். "பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!" என்றார் ஜாலிம்கான். வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார். ‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், "பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்" என்றார் "காளை மாட்டின் பாலா?" என்று வியப்புடன் கேட்டார் அக்பர். "பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்" என்றார் ஜாலிம்கான். "யார் அதைக் கண்டு பிடிப்பது?" என்று அக்பர் கவலையுடன் கேட்க, "ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை"என்றார் ஜாலிம்கான். "பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?" என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். "அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!" என்று கூறிய வைத்தியர், "பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்" என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான். உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். "எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?" என்று பீர்பால் கேட்க, "நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்," என்றார் அக்பர். "காளை மாட்டின் பாலா?" என்று வியப்புடன் கேட்ட பீர்பால், "காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?" என்று கேட்டார். "ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்" என்றார் அக்பர். "அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?" என்று பீர்பால் கேட்டார். "ஆம்!" என்றார் அக்பர். தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார். அதைக் கேட்ட அவரது மகள் "கட்டாயம் செய்கிறேன் அப்பா!" என்றவள் "அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?" என்று கேட்க, "அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!" என்றார் பிர்பால். நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள். அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான். அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, "முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?" என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான். "ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?" என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். "உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு" என்றான் காவலன். ‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?" என்றாள் அவள். காவலன் கோபத்துடன், "அதிகப்பிரசங்கி! யார் நீ?" என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே "நான் ஒரு பெண்!" என்றாள். "திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?" என்றான் காவலன். "நான் என் அப்பாவுடைய பெண்!" என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான். "உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்" என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் "என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். "ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்" என்றாள் அவள். "என்ன உளறுகிறாய்?" என்றார் அக்பர் கோபத்துடன். "நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது" என்றாள் அவள். "முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!" என்று சீறினார் அக்பர். "இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது" என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். "உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?" என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார். "இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?" என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்" என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது. "பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?" என்று அக்பர் கேட்டார். "ஆம், பிரபு!" என்றாள். "பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!" என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள். அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். "சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்" ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்" என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லாவுக்கு மிகுந்த பண நெருக்கடியாக இருந்தபோது ஒரு செல்வந்தனிடம் ஆயிரம் காசுகள் கடன் வாங்கி விட்டார். முல்லாவின் பொருளாதார நிலை அவர் எதிர் பார்த்த அளவுக்கு முன்னேறாததால் சொன்ன கெடுவுக்குள் பணத்தைத் திருப்பித்தர முடியவில்லை. கடன் கொடுத்தவர் பல தடவை கடனைக் கேட்டும் இதோ தருகிறேன் அதோ தருகிறனே; என முல்லா சாக்குபோக்கு சொல்லிக் காலம் தள்ளினார். முல்லாவிடமிருந்து பணம் வாங்குவது கஷ்டம் என்று தெரிந்தவுடன் கடன் கொடுத்தவன் நீதிபதியிடம் முறையிட்டான். அந்தக் காலத்தில் நீதிமன்றத்துக்கு வாதியே தன் பொறுப்பில் பிரதிவாதியை அழைத்துவர வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான் கடன் கொடுத்தவர் முல்லாவின் வீட்டுக்கு வந்து நீதிமன்றத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். முல்லா கடன் கொடுத்தவரிடம் தந்திரமாகப் பேசத் தொடங்கினார். " ஐயா நீதிமன்றத்துக்கு வரும் அளவுக்கு என்னிடம் கண்ணியமான உடை இல்லை, என்னுடைய இப்போதைய பிச்சைக்காரக் கோலத்துடன் நீதிமன்றத்துக்குச் சென்றால் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளவனுக்கு ஏன் கடன் கொடுத்தாய் என்று நீதிபதி கேட்பார். உனக்கு எதிராகத்தான் தீர்ப்பு ஆகும். " " அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்?" என்று கடன் கொடுத்தவர் கேட்டார். " உம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடைகள் தலைப்பாகை, வைர மோதிரம் எல்லாவற்றையும் இரவலாகக் கொடும் இவற்றை அணிந்து கொண்டு நீதிமன்றம் வருகிறேன். நீதிமன்றத்திலிருந்து திரும்பிய உடனே உங்கள் துணிமணிகளைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார் முல்லா. கடன் கொடுத்தவர் அவ்வாறே தம்முடைய ஆடை அணிகளில் மிகவும் விலை உயர்ந்தவைகளை எல்லாம் கொடுத்தார். அணிகளை அணிந்து கொண்டு முல்லா நீதி மன்றம் சென்றார். " நீதிமன்றத்தில் நீதிபதி முல்லாவை நோக்கி இந்த மனிதரிடம் நீ ஆயிரம் பொற்காசுகள் கடனாகப் பெற்றீரா?" என்று கேட்டார். " மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே நான் இவரிடம் கடனாக எதையும் பெறவே இல்லை" என்றார் முல்லா. " அப்படியானால் இவர் தாம் உமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கொடுத்ததாகக் கூறுவது பொய்யா?" என்று நீதிபதி கேட்டார். " தர்ம பிரபு, இந்த மனிதருக்கு ஒரு மாதிரியான வியாதி உண்டு. தெருவில் செல்லும் யாரைக் கண்டாலும் அவருக்குத் தாம் கடன் கொடுத்திருப்பதாகக் கூறுவார். சிலரைப் பார்த்தால் அவர் அணிந்திருக்கிற ஆடை அணிகள் எல்லாம் தம்முடையவை என்று சொல்வார் இப்படி ஒரு மோசமான மனநோய் இவருக்கு" என்றார் முல்லா. " நீர் சொல்வதை எவ்வாறு நிரூபிக்க முடியும்?" என்று நீதிபதி வினவினார். " நான் நிரூபிக்கிறேன் தாங்கள் அருள் கூர்ந்து நான் அணிந்திருக்கிற ஆடை அணிகளை ஒவ்வொன்றாகக் கழட்டிக் காண்பித்து அது யாருடையது என வினவுங்கள் " என்று முல்லா கேட்டுக் கொண்டார். அதன் படியே நீதிபதி கேட்டார். " இவர் அணிந்திருக்கும் சட்டை யாருடையது" என்று நீதிபதியின் வினாவுக்கு " என்னுடைய சட்டை தான் என கடன் கொடுத்தவர் " சொன்னார். " இவருடைய தலைப்பாகை?" என நீதிபதி வினா எழுப்பினார். " என்னுடையதே" என்றார் கடன் கொடுத்தவர். " இவர் விரலில் இருக்கும் மோதிரம் கூட உம்முடையததானா?" என நீதிபதி கேட்டார். " ஆமாம் " என்றார் கடன் கொடுத்தவர். இந்த மனிதருக்கு சரியாகப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என்ற நீதிபதி தீர்மானித்துக் கொண்டார். " உமக்கு ஏதோ மூளைக் கோளாறு இருக்கிறது. இந்த மனிதருடைய ஆடை அணிகள் எல்லாம் உம்முடையது என்கிறீர் நீர் உண்மையாகவே இவருக்குக் கடன் கொடுத்திருப்பீர் என்று தோன்றவில்லை. நீர் இவர் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டேன் " என்று நீதிபதி தீர்ப்பளித்தார். வீட்டுக்கு வந்ததும் முல்லா கடன் கொடுத்தவரின் ஆடை அணிகளைத் திருப்பித் கொடுத்து விட்டார். பிறகு கடன் கொடுத்தவரை " நோக்கி ஐயா உம்மை நான் ஏமாற்றிவிட மாட்டேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் உங்கள் கடனை நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் " என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூளைக் கோளாறு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, பெண்மணி, சமையல், கோழிக்குஞ்சு சூப், மனைவி, சிறுமி, மோப்பம் தலைப்பு: பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்
முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப் " தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. " சூப்" தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. " சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்." சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் " ஒஹோஹோ" என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து " உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள். " இந்த வினோதத்தைப் பார்?" இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அதிசயக்குதிரை கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான். “குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அதிசயக்குதிரை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: வியாபாரி, கழுதை, கடற்பஞ்சு தலைப்பு: கழுதையின் தந்திரம்
ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது. திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பண்ணையார் பரந்தாமன், கொக்கு, சமையல்காரர், பண்ணையாரின் நண்பர்கள் தலைப்பு: கொக்குவுக்கு எத்தனை கால்
பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார். "இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்," என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான். "முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்" என்று நினைத்தான் அவன். சாப்பாட்டு நேரம்— முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், ""மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா," என்று கேட்டார். திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. "கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?" என்று கேட்டான். நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, "ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்," என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. "கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்," என்று கேட்டார் முதலாளி. "ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி," என்றான் சமையல்காரன். முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து "ச்சூ" என்று கூச்சல் போட்டு விரட்டினார். ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன. "இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?" என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார். "ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் "ச்சூ" என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!" என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன். அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், "இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு," என்றார் முதலாளி. "என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!" என்றான் சமையல்காரன்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: காலையில் ஆடு செத்துப் போச்சு. ஒரு வேளை ராத்திரி செத்தாலும், பூச்சுப்பட்டைக் கடிச்சு இருக்கும்னு நினைக்கலாம். அதுவுமில்லாமல், இப்பத்தான் செத்திருக்கு. செந்தில் ''ஷிப்டு'' முடிஞ்சு வரும்போது நல்லாத்தான் நின்றது. பக்கத்தில் நின்று பார்த்தார். ஆடு ''மே'' ன்னு கூப்பிட்டது. மூத்திரம் பேஞ்சது. புளுக்கை போட்டது. ரெண்டு குட்டிகளுக்கு பால் கொடுத்தது. எப்படி செத்திருக்கும்? ரெண்டு கால்களும் விரைச்சு, வயிறு வீங்கி, வாய் பிழந்து செத்துக் கிடக்கு. ஆட்டைச் சுத்திப் பார்த்தார். கொஞ்ச நேரம் நின்னு யோசித்தார். பக்கத்துல பழைய பொங்கச் சோறு, அங்ஙன இங்ஙன சிதறிக் கிடந்தது. ஆஹா! புளிச்ச சக்கரைப் பொங்கலு. அதை தின்னுருக்கு. அதுதான் செத்திருக்கு. எந்த அறிவு கெட்ட ஜென்மம் இதை வச்சது? செந்திலுக்கு கோபம் வந்தது. ஆட்டைக் கள்ள விலைக்கு விற்றாலும், எவனும் கண்ண மூடிக்கிட்டு 1000 ரூபாய் கொடுப்பான். இப்படி அனாமத்தாப் போயிடுச்சேன்னு கவலையாக இருந்தது. ஆறு மாசத்துக்கு முன்னே, குட்டியாகக் கொண்டு வந்து மாமா கொடுத்தார். மாமாவுக்கு இப்ப சுகமில்லை அப்பாவைப் பார்க்க, ராசாத்தி ஊருக்குப் போயிருந்தாள். இப்ப வந்திடுவாள். தண்ணீர் வேற வரும். இன்னைக்கி புடிக்கலைன்னா, பிறகு 3 நாள் கழிச்சுத்தான் பைப்ல தண்ணியைப் பார்க்கலாம். அதுக்காகவே மனைவி வந்தாகணும். அவள் வந்து என்ன சொல்லப் போறாளோ? அந்த கவலை வேறு செந்திலை வாட்டியது. அவளும் முதல்ல அவுங்க அப்பா வந்து ஆட்டைக் கொடுக்கும்போது, வேண்டாம்னு தான் சொன்னாள். இருக்கிற வேலை காணாதுன்னு இந்த ஆட்டையும் கெட்டி எப்படி பாடு பார்ப்பேன்னு சொல்லும்போது அப்பா ''சும்மா, முக்குலக் கட்டிப் போடம்மா. துன்னுட்டு மிச்சம் மீதியிருக்கிறத அதுக்கு போடு. நாளப் பின்ன அது வளர்ந்தால், ஒரு செலவுக்கு ஆகும்'' என்றார். பிறகு அவருடைய மகளும் ஆட்டோடு பழகிவிட்டாள். அது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதுதான் ஆடு ரெட்டை குட்டி போட்டிருக்கு. அந்த சந்தோஷம் கை கூடி வரல. அதுக்குள்ள ஆடு செத்துப் போச்சு. செந்தில் மகளை அதட்டியபடியே கேட்டார். ''இந்த பொங்கச் சோற நீ தானே வச்ச?'' சுப்புக்கு நடுக்கம் எடுத்தது. குளித்து சுத்தமாக இருந்த இளம் முகம் வெட வெடத்தது. குரல் தள தளத்தது. ''ஆமப்பா நான்தான் வச்சேன்'' என்றாள். உடனே தடுமாறினார். மகளை ரொம்பவும் கண்டிக்கவா? ன்னு குழம்பினார். இருந்தாலும் ஆட்டைப் பார்த்த உடனே வயித்தெரிச்சல் தாங்க முடியல. அதை வச்சுத்தான் அவரும் கோபப்பட்டார் ''கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு பிளஸ்டூ படிக்கிறபுள்ள எவ்வளவு சுதாரிப்பா இருக்கணும். பொங்கச் சோத்தை ஆட்டுக்கு வைத்தோமே. அதுவும் சர்க்கரைப் பொங்கல். குட்டிபோட்ட ஆட்டுக்கு அது செமிக்குமா? கொஞ்சமாவது யோசிச்சிப்பார்த்தியா. இப்ப பாரு ஆடு செத்துக் கிடக்கு!'' என்றார். அப்பா அதட்டும்போது, கண் இமைகள் துடித்தன. அந்த துக்கத்தில் நீர் கட்டி நின்றது. இருந்தாலும் தன் மீது தவறிருப்பதை உணர்ந்தாள். அவள் ஆடாமல் அசையாமல் நின்னுக்கிட்டிருக்கும்போதே ஸ்கூலுக்கு போக நேரமாகுதே. அப்பாகிட்ட என்ன சொல்ல? எப்படி பேசன்னு ஒரே குழப்பம். சுப்பு குனிந்தே நின்றாள். செந்தில் மகளைப் பார்த்துப் பேசினார். அப்போது '' வெளிகேட்'' திறக்கிற சத்தம் கேட்டது. ''இப்பத்தான் வாரீங்களா அக்கா, அப்பாவுக்கு எப்படி இருக்கு?'' பக்கத்து வீட்டு லலிதா கேட்கிறாள். பிறகு அம்மாவும், அவுங்க அப்பா உடல் நிலையைப் பத்தி சொல்லிட்டு வாராள். அவளுக்கு கணவனின் அதட்டல். அதுல இருக்கிற கோபம், பதற்றம், பரபரப்பு எல்லாம் கேட்டு, கைப்பையை திண்டில் வச்சிட்டு பின்னால் தான் வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் சுப்புக்கு அழுகையே வந்துவிட்டது. ''செஞ்சதையும் செஞ்சுட்டு உங்கம்மையை கண்டதும் நல்லா அழு புள்ளைக்கு பொறுப்பு வேணும். இப்படியா இருக்கிறது'' என்றார். அப்பத்தான் ராசாத்தி ஆட்டைப் பார்த்தால் அவளுக்கு திக்கென்றிருந்தது. அவள் விசயத்தைக் கேட்டறிந்தாள். அந்த சூரிய வெளிச்சத்தில் சுப்பு கன்னங்களில் வழிகிற நீர் பளபளத்தது. ராசாத்தி அழுகிற பிள்ளையை அணைத்துக் கொண்டாள். ''சுப்பு என்ன, தெரிஞ்சா செஞ்சி இருப்பா. ஏதோ நடந்து போச்ச. அவளை அதட்டிக் கிட்டிருந்தா, அவள் பள்ளிக் கூடம் போக வேண்டாமா? நீ போம்மா. ரெண்டு பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். ஒன்னத் தின்னுட்டு ஒன்னக் கொண்டு போ'' என்றாள். ஒரு நொடியில் குழப்பம் ஓய்ந்தது. ''என்னப் பார்த்துக்கிட்டிருக்கீங்க. போனது திரும்பி வாராது. நட்டம் நட்டந்தான். போய் கறிக்கடைக்காரை கூட்டிக்கிட்டு வாங்க. அவர் கொடுக்கிறது வாங்கிட்டு ஆட்டைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க.'' செந்திலுக்கு இதுவும் சரி என்று பட்டது. உடனே சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போனார். கையோடு கசாப்புக் கடைக்காரரைக் கூட்டிக் கொண்டு வந்தார். ரெண்டு பேருக்கும் பேரம் நடந்தது. கசாப்புக் கடைகாரனும் அங்கேயே கிரயத்தை முடித்துக் கொண்டான். பணத்தை சாயந்திரம் தருவதாகச் சொல்லி ஆட்டை தூக்கிக் கொண்டு போனான். ராசாத்தி ''அந்த ஆடு கொடுத்த பணம் வந்தா, இந்த மாசம் வீட்டுத் தவணை அடக்காம இருக்கு குடுத்திருங்க'' என்றாள். அதைக் கேட்டதும் செந்திலுக்கு கோபம் வந்தது. ''ஆமா. செத்த ஆட்டுக்கு அள்ளித்தருவாங்க. நான் அப்படியே கொண்டு வந்து கொட்டணும்'' என்றான். ''ஏங்க கோவப்படுறீங்க. கொறைஞ்சத போட்டுக் கெட்டுவோம்'' என்று புருஷனைச் சமாதானப்படுத்தினாள். அப்போது தான் செந்திலுக்கு பைப்பில் தண்ணீர் பிடிக்காதது ஞாபகத்திற்கு வந்தது. மனைவியிடம் தண்ணீர் பிடிக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் பின்புறம் உள்ள கொடுக்காப்புளி மரத்தை பார்த்தார். போன வருஷம்தான் மரம் காய்ப்புக்கு வந்தது. காய்ப்புன்னா அப்படிக் காய்ப்பு. கொத்துக் கொத்தாய் பூவும் பிஞ்சுமாய் காயும் பழமுமாய் கொடுக்காப்புளி மரக்கிளைகள் பூராவும் பொதுச் சுவருக்கு இந்தக் பக்கம்தான் விரிந்து கிடந்தன. சரவணனும் சுப்புவும் தொரட்டிக் கம்பை வைத்து பழமாகப் பறித்துத் தின்றார்கள். செந்திலும் ஆளில்லாத நேரம் பார்த்து ரெண்டை பறிச்சி வாயில் போட்டுக் கொள்வார். இப்போது மரம் காய்க்கத் தொடங்கி இருக்கு. அதுக்குள்ள சுவர் பக்கம் வருகிற கொப்பை பூராவும் வெட்டி எடுத்தாச்சு. ஒரு காய் கூட இனிமேல் பறிக்க முடியாது. செந்திலுக்கு அதைப் பார்த்ததும் கோபமாக இருந்தது. மரத்தை, தூரோடு வெட்டிச் சாய்த்தால் கூட அவனுக்கு இப்படிக் கோபம் வந்திருக்காது. வருத்தப்பட்டிருக்க மாட்டான். மனைவியிடம் சொன்னான். அதைக் கேட்டு ராசாத்திக்கு கோபம் வரவில்லை. புருஷனைத்தான் அமைதிப்படுத்தினாள். ''அவுங்க மரம். அவுங்க வெட்றாங்க. நம்ம என்ன சொல்ல முடியும்? வேணும்னா நம்மளும் அதே மாதிரி ஒரு மரம் வளர்ப்போம்'' என்றாள். அவளுக்கும் பின் வீட்டுக்காரர்களைப் பற்றி தெரியும். பக்கத்து வீட்டு வனஜா அக்கா புருஷன் நல்ல குடிகாரன். ஒரு நாள் மில்லுக்குப் போனால். ஒன்பது நாட்கள் போக மாட்டான். அவனை ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் செந்தில் ஒரு நாள் லீவு எடுத்தால் கூட அபராதம். ஒவ்வொருவருக்கும் மில்காரன் நிலம் கொடுக்கும் போது செந்திலுக்கு நிலம் கிடைக்கவில்லை. ராசாத்தி தான் நச்சரித்தாள். ''திரும்ப கேட்டுப்பாருங்க நம்ம எத்தனை நாளைக்கு தான் வாடகை வீட்டுல இருந்து காலம் தள்ள முடியும்'' என்றாள். செந்தில் அலைந்து திரிந்து, சங்கத்துக்காரன்களுக்கு லஞ்சம் கொடுத்து, பிறகு அவனுக மில்காரன் கிட்ட சொல்லித்தான் அவனுக்கு நிலம் கிடைத்தது. ஆனால் வனஜா புருஷனுக்கோ எந்தச் சிரமமுமில்லாம நிலம் கிடைத்தது. மில் அதிகாரி, வனஜா புருஷனைக் கூப்பிட்டு, அவன் ''வேண்டாம் வேண்டாம்'' ன்னாலும் ''வச்சுக்கா வச்சுக்க'' ங்கிற மாதிரி நிலத்தைக் கொடுத்தான். அது தான் ராசாத்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செந்தில் சொன்னார். நாயக்கமாரு மில்லுல, நாயக்கமாருக்குதான் முன் உரிமை என்னமோ எங்கம்மா ஒரு நாயக்கர் விட்டுல வேலைக்கு இருந்தாங்க. அவுங்க கெஞ்சிக் கூத்தாடி என்னையும் மில்லுல சேர்த்தாங்க. இப்ப நிலம் கொடுத்திருக்காங்க.'' வனஜா புருஷனும் எங்கப்பா ராமசாமி நாயக்கரு வந்தாருன்னா, உங்க ஊரு பள்ளப்பய, பறைப்பய எல்லாம் குனிஞ்சு நின்னு கும்பிடணும். என்னமோ நான் எங்க நாயக்கர் மில்லாக இருக்கப்போய் வேலை பார்த்துக் கிட்டிருக்கேன் என்பான். ''ராசாத்தி அக்கா தண்ணி வருது''- எதிர்வீட்டு லலிதா குரல் கொடுத்தாள். அவள் புதுசா கல்யாணம் முடிஞ்சு வாடகை வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கும், ''நாங்க தான் உசந்த சாதி'' ன்னு நினைப்பு வந்து பேசாமப் போனால் போறான்னு தான் ராசாத்தியும், அவளுடன் பழகிக் கொண்டிருந்தால். அந்த பழக்கமான குரல் பின் வாசல் வரை கேட்டது. அந்த அவசரம் பரபரப்பானது. இருந்தாலும் ராசாத்தி பதற்றப்படாமல் புருஷனைப் பார்த்து. ''ரெண்டு கொடத்த தூக்கிட்டுப் போங்க. ஜெயலட்சுமி அக்கா பிடிச்ச பின்னாடி நம்ம பிடிக்கணும். அந்த அக்கா ஒரு மாதிரி. தள்ளியே நின்னுக்கங்க. யாரும் எது சொன்னாலும் கோவப்படாதீங்க. இட்லி அவுச்சாச்சு சட்னி தான் வைக்கணும். வச்சுட்டுட்டு வந்துட்றேன் என்றாள். செந்தில் எதுவும் பேசாமல் பிளாஸ்டிக் குடங்களை தூக்கிக் கொண்டு போனார். பைப்பை சுற்றிலும் பொம்பளையாட்கள் நின்றார்கள். ஜெயலட்சுமி அக்காள் ரெண்டு குடம் பிடிக்கணும். அதன் பிறகு தான் நமக்கு. செந்தில் பைப்பை விட்டு தள்ளியே நின்றார். அவருக்கு இப்ப ஒரு வேலையும் இல்லை. சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சால் போதும். ராத்திரி பத்தேகாலுக்கு சைக்கிள் எடுத்தாலும் போதும். பதினொரு மணி ஷிப்டுக்கு போகச் சரியாக இருக்கும். அக்காவின் ரெண்டாவது குடம் நிறையும் போது, பைப்படிக்கு போய் குடத்தை வைத்தார். ரெண்டு குடம் பிடித்து ஒன்னை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இவ்வளவு தண்ணீர் கஷ்டத்துக்கு இடையில். அப்பத்தான் பிடிச்சு வச்ச தண்ணியை ஒரு தெரு நாய் வாய் வைத்து விட்டது. அங்கே தான் லலிதா நின்னாள். ஆனால் அவள் கவனிக்கலை. நாய் குடிச்சுருச்சுனு அவளுக்கு கோபம். கிட்டத்துல கெடந்த கருங்கல்லை எடுத்து விட்டெறிந்தாள். அது நாய் காலுலேயே போய் விழுந்தது. நாய் வலி தாங்க முடியாமல் கத்திக்கிட்டு ஓடிப்போனது. நாய் அலறும் சத்தம் கேட்டு ராசாத்தி வெளியே வந்தாள். நாய் ஒரு சந்துக்குள் நுழைவதைப் பார்த்தாள் லலிதா, அவளிடம் சோகமாய் நடந்ததைச் சொன்னாள். பிறகு ஒரு குடம் தண்ணீர் வீணாகிப் போச்சேன்னு கவலைப்பட்டாள். ராசாத்தி கோபமேபடவில்லை. அவள் பதற்றமில்லாமல் நாய்க்காக பரிந்து பேசினாள். ''அதுக்காகவா நாய அடிச்ச. அது என்ன செய்யும். பாவம் வாயில்லாத ஜீவன்'' என்றாள். ''என்ன இருந்தாலும் தண்ணிக்குப் படுற பாடு...'' என்றாள் லலிதா. ''அதுக்கென்ன செடிகளெல்லாம் தண்ணியில்லாம காயுது. அதுகளுக்கு ஊத்துனா சரியா போகும்?'' என்றாள். குடத்தை தூக்கி வந்து செடிகளுக்கு ஊற்றினாள். முதல் வரிசை முடிந்து அடுத்த வரிசையும் வந்தது. தண்ணீர்க் குடத்தை தூக்கி இடுப்புல வச்ச லலிதா, ''இன்னைக்கு தண்ணீர் கொஞ்சம் பாஸ்டா வருது'' என்றாள். பின் அவள் போய் விட்டாள். பைப்படியில் கூட்டமில்லை. எல்லோருக்குமே காலைப் பொழுதில் அடுப்படிகளில் வேலைகள் இருந்தன. வரிசை வரும்போது வந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு போனார்கள். ஜெயலட்சுமி, ராசாத்தியும் மட்டும் பைப்பில் நின்றார்கள். ஜெயலட்சுமி முதல்குடத்தைப் பிடித்துவிட்டு, அடுத்த குடத்தை வைக்கிறாள். அடுத்து ராசாத்தி வைக்கணும். அவள் குடம் நிறைவதைக் கண்டு, ''அக்கா உங்க குடம் நிறையுது'' என்றாள். ஜெயலெட்சுமி அக்காள் முணுமுணுத்தாள். அந்த குரல் உள் வாங்கி வெளியில் வந்தது. அதுவும் ராசாத்தி கிட்டத்தில் நின்னதினால் கேட்டது. அவ்வளவு சின்னக்குரல். ஆனாலும் ராசாத்திக்கு கொமட்டுல குத்தினது மாதிரி வலித்தது. மனசைப் பிழிந்து ரணமாக்கியது. அப்படி ஜெயலட்சுமி அக்காள் என்னதான் கேட்டு விட்டாள்? நாயே, பேயே, பிசாசேன்னாலும் கூட மனசு ஆறும். சனியன் போகுதுன்னு விட்டிடலாம். ஒன்னுமில்லாத விசயம். ஒரு காத்துட்டுக்கு பெறாது. அப்படியும் ராசாத்தி என்ன சொல்லிவிட்டாள்? ''அக்கா உங்க குடம் நிறையுது''ன்ன சொன்னது என்ன தப்பா? அதுக்கு ஜெயலெட்சுமி அக்காள், ''என்ன. என்னை அக்கா நொக்காங்கிற. மருவாதையாக அம்மான்னுச் சொல்லு'' என்றாள். ''ஆமா....ஆமா... நீ ரொம்பவும் கிழவியாயிட்ட உன்னை அம்மான்னுக் கூப்புடுறதுக்கு. பார்த்தா என்னைய விட ரெண்டு வயசுக் குறையாகத்தான் இருப்ப. உன்னை அம்மான்னு கூப்பிடணுமாக்கும்? கூப்பிடுறேன். எங்கப்பா சாவக் கெடக்காரு நீ அவரக் கெட்டிக்க. நான் உன்னை அம்மான்னு கூப்பிடுறேன்'' ராசாத்தியின் குரல் கோபத்தில பலமாக ஒலித்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ராசாத்தியின் கோபம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சந்தனமா சவுக்கா ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான். “”தாகத்துக்கு நீர் கிடைக்குமா?” என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் கொணர்ந்திருந்த கம்பங்கூழையும் தந்தான். வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருந்த அவனுக்கு ஏதாவது உபயோகமான பரிசை அளிக்க விரும்பினான் அரசன். தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைக் காண்பித்து, “”வேண்டிய மரங்களை வெட்டிக்கொள்!” என்று அனுமதிச் சீட்டும் வழங்கினான். அதற்குள், அவனது பரிவாரங்களும் அவனைப் பார்த்துவிட்டன. அரசன் அவர்களோடு சென்றான். ஆறு மாதம் கழித்து மீண்டும் வேட்டையாட வந்தான். காட்டானை அவன் கண்கள் தேடின. அவனும் அரசனைப் பார்த்ததும் ஓடிவந்து, “”நல்லாயிருக்கீங்களா? உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க!” என்றான். “”இப்போ வசதியாயிருக்கியா?” என்று விசாரித்தான் அரசன். “”ரொம்ப சவுகர்யமா இருக்கேங்க. ஒருவேளை அரிசிச்சோறு சாப்பிடுகிறேன். முதல் நாள் மரத்தை வெட்டினப்போ அதிகாரிங்க வந்துட்டாங்க! அனுமதிச்சீட்டைக் காண்பிச்சதும், “நீ சிரமப்படாதே நாங்களே வெட்டிக்கறோம்’ன்னுட்டாங்க. முந்தி தினம் கால்ரூவா கிடைக்கும். இப்ப ஒரு ரூபாய் தராங்களே! அதோட வேலை செய்த கை சும்மா இருக்குமா? கூடமாட வெட்டறதுதான்!” என்றான் அப்பாவியாக. அரசன், “ஏமாற்றுப்பேர்விழிகள் இல்லாத இடமே இல்லையா?’ என்று அயர்ந்துபோனான். சந்தனமரத்துக்கும் சவுக்குமரத்துக்கும் வித்தியாசம் காணாதவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். இதனால் உலக அறிவும் அதிர்ஷ்டத்தைப் புரிந்து பயன்படுத்திக்கொள்வதும் முன்னேற்றத்துக்கு முக்கியம் என்பது புரியுதா …
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சந்தனமா சவுக்கா' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஜென் குரு, சீடன், அற்புதங்கள் தலைப்பு: எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாது
ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். "சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?" என்று கேட்டான். இன்னொரு சீடன் சொன்னான் எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்"
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். 'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான். இன்னொரு சீடன் சொன்னான் எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாது' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, இரண்டு திருடர்கள், அரசன் தலைப்பு: வாழ்க இராமர் வாழ்க சீதை
ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்."ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?" என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர். குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, "நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்" என்றனர்."வெளியூருக்கா? ஏன்?" என்று கேட்டான், மட்டி. "இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்" என்றான், திருடரில் ஒருவன்."ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்" என்று பாராட்டினார், பரமார்த்தர்.ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. "இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்" என்றான்.அதைக் கேட்ட திருடர்கள், "சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?" என்று கேட்டனர்."ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!" என்று ஒப்புக் கொண்டான் மட்டி.மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் "குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே" என்று கேட்டான்."ஓ! தாராளமாக உதவி செய்வோம்" என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்."குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்" என்றான், முட்டாள்."யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், "சீக்கிரம் செய்யுங்கள்" என்று அவசரப்படுத்தினர்.பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று."சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!" என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது."அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே" என்று திட்டினார்கள்."சத்தம் போட்டால் என்ன தப்பு?" என்று கேட்டான் மடையன்.குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, "முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!" என்று உண்மையைக் கூறினர்.அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது."என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?" என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்."ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!" என்று கத்தினான், மட்டி.அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்."அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்" என்று கட்டளை இட்டனர்.அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்."சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மண்டு."நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், "சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்" என்றான்.குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்” என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள். அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பால் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பாலை கேலி செய்தவாறு சென்றனர். அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பால் வீட்டுக்குச் சென்றார். கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை. தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே விரமாக ஆழ்ந்து இருந்தது. திடீரென பீர்பாலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து “ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள். “உஷ்” என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பால், “இந்த படுக்கை விரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?” என்று கேட்க அவன், “ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்” என்றான். உடனே அவனிடம் பீர்பால் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தை பீர்பாலினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான். “ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, பீர்பால் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார். “அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!” என்று மன்சூர் அலி ஓடி வந்தான். “மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும்என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்” என்றார் பீர்பால். உங்கள் பாதம் என் கடையில் பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!” என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான். “இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!” என்று பீர்பால் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார். “இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்” என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பால் அவனைத் தடுத்தப்படி “அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார். “மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?” என்று பீர்பால் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான். “ஆம், பிரபு!” என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்” என்றான். பீர்பாலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பால் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அக்பர் பீர்பாலை நோக்கி, “இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?” என்று கேட்டார். “கிழவி கூறியதுதான் உண்மை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய பீர்பால் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார். அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், “குல்ஷா! பீர்பால் கூறுவது உண்மைதானா மோசடி செய்தது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்” என்று சீற, குல்ஷா, “பிரபு! பீர்பால் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது” என்று அழுதான். கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது. பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் கண்ட அக்பர், அவருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அனைவரும் வியந்து பாராட்டினர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கதைகள் பொற்காசுகளை திருடிய செல்வந்தர்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிரிசந்தமம், பிரபு, ஜப்பான், ஸென்காய், ஸென் ஆசிரியர் தலைப்பு: கிரிசந்தமம் காதல்
கிரிசந்தமம் என்பது ஒரு பூவகையின் பெயர். இன்று ஏறக்குறைய 650 வகைகள் இந்தப் பூக்களில் உள்ளன. சைனாவில் தான் முதன் முதலில் இந்தப் பூக்கள் வளர்க்கப் பட்டது. இந்தப் பூவைப் பற்றி கி.மு 15"ந்தாம் நூற்றாட்டிலிருந்தே பணைத் தாள்களில் எழுதப் பட்டுள்ள சான்றுகள் உள்ளது. இந்தச் செடியின் வேர்களை போட்டு கொதிக்க வைத்து தலைவலிக்கு நிவாரணியாக பயன் படுத்தி இருக்கிறார்கள். பச்சையிலை தேனீர் போல கிரிசந்தமம் தேனீரும் பருகி இருக்கிறார்கள். விழாக் காலங்களில் மலர்ந்த கிரிசந்தமம் பூக்களின் இதழ்களை சாப்பிட்டும், பச்சடியாக மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்டு இருக்கிறார்கள். கிரிசந்தமம் பூவிற்கு "சூ " என்று சைனிஷ் மொழியில் கூறுவார்கள். ஒரு நகரத்தின் பெயரே "சூ-ஸைன் - கிரிசந்தமம் நகரம்" என்று பெயர் வைத்து கௌரப் படுத்தி இருந்தார்கள். கி.பி 8"ஆம் நூற்றாண்டில் ஜப்பானிற்கு கொண்டு செல்லப் பட்டது. கிரிசந்தமம் பூவானது வெகு விரைவிலேயே ஜப்பானில் மிகவும் புகழ் பெற்று விட்டது. ஜப்பான் அரசரின் முத்திரையில் கிரிசந்தமம் பூவை அடையாளமாக உபயோகப் படுத்தி கௌரப் படுத்தி இருக்கிறார்கள். புனிதத் தன்மை வாய்ந்த விழாக்களில் ஒன்றாக "தேசிய கிரிசந்தமம் நாள்" என்று ஒரு நாளை மகிழ்ச்சி திருநாளாக ஒவ்வொரு வருடமும் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை வைத்திருக்கிறார்கள். இன்று இந்தப் பூ உலகம் முழுவதும் காணப்படுகிறது. இந்தப் பூவைப் பற்றி ஜப்பானில் பல கதைகளிலும், ஹைக்கு கவிதையிலும் முதன்மையாக வைத்து எழுதி இருக்கிறார்கள். இன்றைய தினம் ஒரு ஸென் கதையில் கிரிசந்தமம் பூவின் மீது காதல்வெறி கொண்ட பரான் (பிரபு) (ஜப்பானின் உயர்குடி பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்) ஒருவனைப் பற்றிய கதையைப் பார்ப்போம். ஒரு சமயம் ஜப்பானில் வாழ்ந்த பிரபு ஒருவன் கிரிசந்தமம் பூக்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். தன்னுடைய மனைவி குழந்தைகளை விட அவனுக்கு பூக்களின் மீது மிகுந்த பற்றும், காதலும் வைத்திருந்ததான். தன்னுடைய பண்ணை வீட்டின் பின்புறம் முழுவதும் கிரிசந்தமம் பூக்களை வைத்து வளர்த்து வந்தான். ஆனால் அந்த அன்பு ஒரு எல்லைக்குள் நில்லாமல் அளவு கடந்து மற்றவர்களை இம்சிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. வேலை ஆட்களோ (அ) மற்றவர்களோ தெரியாமல் அந்தப் பூக்களை பறித்து விட்டாலோ, அல்லது செடியின் கிளைகளை உடைத்து விட்டாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் வேலையாள் ஒருவன் கவனம் இல்லாமல் மலர்ந்த செடியின் கிளையினை உடைத்து விட்டதை அறிந்த பிரபு அவனை சிறையிலிட உத்தரவிட்டான். அதனைக் கேள்வி பட்ட வேலைக்காரன் மனம் உடைந்து ஜப்பான் போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையான தன்னைத் தானே வாளை தலைக்கு மேலே வீசி தற்கொலை செய்து கொள்ளும் முறையில் உயிர் விட்டாலும் விடுவேனே தவிர சிறைக்கு செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தான். இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட ஸென் ஆசிரியர் ஸென்காய், பிரபுவின் கிரிசந்தமம் பூவின் மேல் உள்ள வெறிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டார். மழைப் பெய்ந்த ஒரு நாள், பூக்கள் நன்றாக மலர்ந்திருந்த தோட்டத்திற்கு சென்ற ஸென்காய் அரிவாளால் அனைத்து செடிகளையும் ஒன்று விடாமல் வெட்ட ஆரம்பித்தார். தோட்டத்தில் புதிய சத்தம் கேட்பதை அறிந்த பிரபு, யாரென எட்டிப் பார்க்க ஏதோ ஒரு உருவம் கையில் அரிவாளுடன் தெரியவே, தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு ஆசிரியரை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் தன்னுடைய வாளை கவனமாக பிடித்துக் கொண்டு, ஆசிரியர் ஸென்காயைப் பார்த்து "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று பதில் சொல்லுமாறு கட்டாயப் படுத்தினான். ஸென் ஆசிரியர் அமைதியாக, "களையான இந்தச் செடியை இப்பொழுது களை எடுக்காவிட்டால் நாளடைவில் அதற்கும் அந்தஸ்தும் கௌரமும் கிடைத்து முதன்மை பெற்று விடும்" என்று இரண்டு அர்த்தத்தில் (செடிகளில் களையானது கிரிசந்தமம், மக்களில் களையானவன் பிரபு) அந்தப் பிரபுவைப் பார்த்து பதில் கூறினார். அப்பொழுதுதான் பிரபு தான் எந்த மாதிரியான தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்தான். கனவிலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தவனைப் போல் உணர்ந்தான். அது முதல் கிரிசந்தமம் பூக்களை வளர்ப்பதை விட்டு விட்டான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சீடன், அரசன், குருவி, துறவி, நாடு, நரகம், மாலை, பெண், பரீட்சை, அரசர், ராஜாங்கம், இலங்கை, ஜீஸஸ், தையல், சீருடை, துறவி தலைப்பு: சாட்சிபாவம்
ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார். இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். இந்த அரசர் மிகப் பெரும் துறவியாக இருக்கலாம், அவர் என்னுடைய குருவை விட மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும் இல்லாவிடில் எப்படி என் குரு தன்னுடைய ஒவ்வொரு சீடனையும் கடைசி தேர்வுக்கு, கடைசி பாடத்திற்கு அங்கே அனுப்புவார் என்று எண்ணினான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான். அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது. இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான். அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள். இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம். அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை. இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன். இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்…..அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்…. அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள். ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது. இந்தியாவில் அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும். அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான். பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும். அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள். இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன். அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்….. இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான். பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான். அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர். குடி, திருப்தியாகும் வரை குடி. ஏனெனில் திரும்பவும் உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நான் உனக்கு சொல்லுகிறேன். குடிப்பதற்க்கும் சுயஉணர்விழப்பதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் உன்னுடன் குடிக்கிறேன். உண்மையில் மாலையில் இருந்து நான் குடித்துக் கொண்டேதான் இருக்கிறேன். நான் சுயஉணர்வை இழந்து விட்டேன் என்று உன்னால் சொல்ல முடியுமா அதனால் குடி. அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும். அதனால்தான் எல்லா மதங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில் மது உனது சொர்க்க ஆசையை பூர்த்தி செய்துவிடும்போது யார் சர்ச், கோவில், ஆசிரமம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவார்கள் மதுவை குடித்தால் போதும் சொர்க்க ஆசை நிவர்த்தி ஆகும் எனும்போது யார் வேறு எதையும் செய்வார்கள் அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்… யாரையும் எங்கிருந்தாலும் – சாவு – உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும். அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார். அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான். அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார். இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான். அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய். அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார். இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கோவணம் என்பது ஒரு சிறிய துண்டு துணியைத்தவிர வேறெதுவும் இல்லை. தையல் ஏதுமற்ற மிகச் சிறிய உள்ளாடை. உன்னுடைய இடுப்பைச் சுற்றி ஒரு நூலை கட்டிக் கொண்டு அதில் முன்னால் ஒரு முனையையும் பின்னால் ஒரு முனையையும் கட்டிக் கொண்டால் முடிந்தது. தையல் ஏதும் தேவையில்லை. அதை எங்கேயும் எப்போதும் செய்யலாம். இதைத்தான் இந்து துறவிகள் அணிவர். ஏனெனில் தையல் சிக்கலான விஷயம். அதில் மற்றவர்கள் உதவி தேவை. பணம் தேவை. அவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இந்து துறவி எல்லாவற்றையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க வேண்டும். ஒரு பிச்சை பாத்திரம் அதுவும் உலோகத்தால் ஆனது அல்ல. தேங்காய் மூடி அதுதான் பிச்சை பாத்திரம். அதை உன் கையோடு கட்டிக் கொண்டால் முடிந்தது. பிச்சை பாத்திரம் போலவே உன் கோவணமும். ஒரு குச்சி – எதற்காக குச்சி என்று வியப்படைவாய். அது இந்திய நாய்களுக்காக. அவை சீருடைகளுக்கு எதிரானவை. துறவியின் சீருடை பெரிதாக இல்லையென்றாலும் சீருடை சீருடைதானே. பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான். அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான். அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார். துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்…….. எத்தனை நஷ்டம் என்றான். ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார். அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான். அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும் ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம் நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும். அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான். அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார். மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக – சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது. அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்….. ஒரே ஒரு கணம் கவனமில்லாமை…… பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது. கவனித்தல் ஒரு சிறிய விஷயம். ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான். பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான் நீ – செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய். செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும். மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை. எதையும் செய்யாதே. நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது பசிக்கும்போது சாப்பிடு. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி தூக்கம் வரும்போது தூங்கு விழிப்பு வரும்போது எழுந்து கொள். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு. தேவையான சிறிய விஷயங்களை செய். சாதாரண வாழ்க்கையை வாழ். நீ கண்டுபிடிப்பாய். ஜீஸஸ் தேடு, கண்டடைவாய் என்றார். நான் தேடினால் கிடைக்காது என்கிறேன். ஜீஸஸ் கேளு அது உனக்கு கொடுக்கப்படும் என்றார். நான் கேட்டால் அது உனக்கு கொடுக்கப்படாது என்கிறேன். ஜீஸஸ் கதவை தட்டு திறக்கும் என்றார் . நான் கதவை தட்டினால் அது ஒருபோதும் உனக்கு திறக்காது என்கிறேன். உண்மையில் தட்ட வேண்டிய அவசியமே இல்லை. கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே நுழை.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சூஃபி, அரசன், குதிரை, ராஜா, நூல்கள், ஜோதிடர், அமைச்சர் பூசாரி தலைப்பு: மரணத்தின் கதை
மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர், "நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த உருவம், "நான் தான் உன் மரணம். நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். நீ வேறு எங்காவது சந்திப்பில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் நினைவில் கொள்." என்று சொல்லியது. அரசர், "எது சரியான இடம்?" என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது தூக்கம் கலைந்துவிட்டது. நிழல் உருவம் மறைந்துவிட்டது. நேரம் தெரிந்துவிட்டது, சரியான காலம் – நாளை சூரிய அஸ்தமனம் – ஆனால் இடம் எது நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்க்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை பார்க்க முயற்சித்தார். இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதல்ல. அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த முழு உலகத்தில் அந்த இடம் எதுஆனால் உன்னால் கனவை தொடர முடியாது – அது மிகவும் கடினம். ஒரு முறை கனவுகலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அதுவராது. அரசர் மிகவும் பயந்து போய் தனதுஅரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள்,பூசாரிகள்,ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து, "அந்த சரியான இடம் எது என்றுஎனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்குசெல்லாமல் அதை தவிர்க்க முடியும்" என கூறினார். உடனே அவர்கள் அனைவரும் தங்களதுபழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். காலை வந்து சூரியன் எழுந்தது. காலைமுழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். ஏனெனில் பொழுது விடிந்தால்முடியுமே! முடிவின் ஆரம்பம் தானே விடியல். சூரியன்விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே. சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டான். இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அதற்குபதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். அரசர், "உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும்" என்றார். அவர்கள், "இருங்கள். இது ஒரு எளிமையான கேள்வி அல்ல. நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஜோதிடர்ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார். நாங்கள் உங்களுக்கு பதினைந்துபதில்கள் கொடுத்தால் அதனால்என்ன பயன் ? ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்கிறோம்" என்றனர், அரசரின் வயதான வேலையாள் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அரசரது காதில் மெதுவாக, "நான் கிழவன். நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. நான் ஒரு வேலையாள். ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை வளர்த்திருக்கிறேன். நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். அதனால் காத்திருக்காதீர்கள். காலம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள். ஒரு விஷயம் நிச்சயம். நீங்கள் இந்த இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடாது. எங்காவது தப்பிச் சென்று விடுங்கள்" என்று கூறினான். அரசருக்கு இது சரியென்று பட்டது. அரசர், "நீ சொல்வது சரிதான். ஏனெனில் இவர்கள் இதை சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது." என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார். அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது இவர் எங்கிருக்கிறார் என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு சோலையினுள் நுழைந்தார். அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். ஏனெனில் இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. நாள் முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது. அது அப்படி ஓடி அரசர் கூட இது வரை பார்த்ததேயில்லை. அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. அது ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து கொண்டது. அரசர் அதற்கு நன்றி கூறினார். அவர் அதனிடம், "நீ என்னை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன். நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய்" என்றார். அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம்ஆனது, அப்போது ஒரு கரம்……. அரசர் தனது தோள் மீது ஒரு கரம் படிவதை உணர்ந்தார்.அவர் திரும்பி பார்த்தார். அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே இருந்தது. அந்த நிழல் உருவம் சிரித்தபடி, "நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது. நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுதான் நான் காத்துக் கொண்டிருக்கும் இடம். உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்தஉலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. நீ சரியான நேரத்திற்கு சரியானஇடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்." என்றது. நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “”அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,” என்று ஆணையிட்டார். “”முட்டாள்களின் முகவரி எதற்கு?” என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி. “”வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!” என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார். அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது? அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார். அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான். “”ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார் அப்பாஜி. “”உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,” என்றான். அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி, “”ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,” என்றார். “”ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,” என்றான். “”சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…” என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார். “”பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, “”அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,” என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி. அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது. அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம், “”தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?” என்று விசாரித்தார். அவன், “”ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,” என்று கவலையுடன் கூறினான். “”ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?” “”ஆமாம், அடையாளத்தையும் காணோம்.” “”என்ன அடையாளம்?” “”வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.” அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார். மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார். கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், “”அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?” என்று கேட்டார். அப்பாஜி, “”அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,” என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார். பிறகு, “”அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?” என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார். “”அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!” என்று உருக்கமாகக் கூறினார். அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆறாவது முட்டாள்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: துணி வெளுக்கும் தொழிலைச் சையும் பெண், முதல் மகள், இரண்டாம் மகள், மூன்றாம் மகள், பக்கத்து ஊர் இளைஞன் தலைப்பு: மூட்டையை வைத்தால்
ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூவருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான். இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள். அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள். இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன். நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள். தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான். நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன. எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள். பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள். சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின. தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள். எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான். என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன். நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள். உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள். அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான். இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான். துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய். கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர். வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள். வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது. அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது. தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள். மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள்.கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள். இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன. இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள். நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன். பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள். நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள். பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள். இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன். இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள். சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன். தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான். அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான். ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள். வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன். இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மாளிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள். நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது. சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான். சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான். உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள். மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள். அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான். படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை. மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, முதலாளி, கடை, மதகுரு, மருத்துவர், சமாதிக் குழி தோண்டுபவர், நோய் தலைப்பு: முல்லாவின் புத்திசாலித்தனம்!
ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். " நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?" என்று கேட்டார் அவர். " கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் " என்றார் முல்லா. அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். " கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே" என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார். ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார். முல்லா விரைந்து சென்றார். சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர். " இவர்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்?" என முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார். " இதோ இவர் மருத்துவர் அதோ அந்த மனிதர் மதகுரு - அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி தோண்டுபவர் " என்றார் முல்லா. " நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் " என்றார் முதலாளி. " நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும் என்று சொன்னீர்களே" என்று கேட்டார் முல்லா. " ஆமாம், அப்படித்தான் சொன்னேன் " . அதற்கும் இதற்கு என்ன தொடர்பு? என்று ஆச்சரியம் தோன்ற கேட்டார் முதலாளி. " ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப் போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனை அழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன்" என்றார் முல்லா. முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: இராசதுரை, பாக்கியம், வசந்தி, பொன்னுத்துரை, விதானையார், பிரதேசச் செயலாளர், சமூக சேவை அதிகாரி, வெள்ளைக்காரர் தலைப்பு: குந்தியிருக்க ஒரு குடிநிலம்
வானம் கருமை பெறத் தொடங்கியதும் இராசதுரை துடித்துப் போனான். நிச்சயமாக இன்று வானத்தில் பரவிய கருமுகில் நேற்றுப் போல வாடைக்காற்றுடன் அள்ளுண்டு செல்ல வாய்ப்பில்லை. மூன்று நான்கு நாட்களாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த வானம் இன்று அவன் பிரார்த்தனைக்கு இரங்கும் என்ற நம்பிக்கையைச் சீர்குலைத்தபடி குளிர்காற்றுடன் இறங்கிய துமிகள் மழைத்துளிகளாகி வானத்திலிருந்து கோடானுகோடி நீர்விழுதுகளை மண்ணில் அழுத்தின. "ஐயோ... பிள்ளைகள் என்ன பாடோ?" மழைத்துளிகள் பெருந்தாரைகளாகி முகத்தில் ஊசிகளாகக் குத்தின. இராசதுரை கரத்தில் காவிய பாண் சரையுடன் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். நிலவொளியும் சூரிய ஒளியும் மண்தரையில பொட்டுக்கள் இட இடமளிக்கும் குடிசைக்கூரை, சென்ற வருடமே கூரை வேய்ந்திருக்க வேண்டும். அதற்கான பணத்தைத் திரட்ட அவனால் முடியவில்லை. அரசு தருகின்ற உலர் உணவு எத்தனை நாட்களுக்குப் போதும்? தாயில்லாத ஐந்து பிள்ளைகளையும் படித்து ஆளாக்கிவிட வேண்டுமென்ற ஆவேசம், அவன் உழைப்பினைப் படிப்புத் தேவைகளுக்காக விழுங்கிக் கொண்டிருந்தது. கூரை வேயவென பணத்தினை ஒதுக்க முடியவில்லை. கரையான் தின்று ஈக்குகளாக எஞ்சியிருக்கும் கூரை யூடாக வானம் தெரியும். "பாக்கியத்தின் ஆத்மா அங்கு திரியுமா?" மாவிட்டபுரத்தில் அவன் வாழ்ந்த வாழ்கை என்ன? அப்பு கட்டிவிட்ட இரண்டறைகள் விறாந்தை, தலைவாசல் கொண்ட கல்வீட்டில் வெற்றிலைத் தோட்டத்தின் சூழலில் வாழ்ந்தவன். பாயில் படுத்துக்கிடந்தபடி எத்தனை இரவுகள் அவன் வானத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களைத் துயரத்துடன் வெறித்துப் பார்த்தபடி கிடந்திருக்கிறான். மாவிட்டபுரம் கோயில் வீதியில் அமைந்திருந்த அவன் தகப்பனாரின் கல்வீட்டில் வெளித் திண்ணையின் வெறும் சீமேந்துத்தரையில் வானத்தையும் நிலவையும் பார்த்தபடி படுத்துக் கிடப்பதில் அவனுக்குப் பெரு விருப்பம். சிலவேளைகளில் அவன் அருகில் வந்து பாக்கியம் அமர்ந்து கொள்வாள். "என்னப்பா...ஆகாயத்தில் தேடுறியள்?" என்று கேட்டுவிட்டு ஒரு நாள் சிரித்தாள். அவள் சிரிப்பில் அவன் கரைந்து போனான். அவனைத் தான் கலியாணம் செய்தால் கட்டுவேனெனப் பிடிவாதமாக நின்று அவனுக்கு வாழ்க்கைப்பட்ட அம்மான் மகள் அவள். அவன் மெதுவாகத் தன் தலையைத் தூக்கி அவள் மடியில் சாய்த்துக் கொண்டான். "உள்ளை அம்மான்... இன்னமும் நித்திரைக்குப் போகவில்லை.", "அதிலை என்ன? அவர் செய்யாததே?" தன்மடியில் அவன் தலைவைத்துப் படுத்திருப்பதில் அவளுக்கும் சம்மதந்தான். மகிழ்ச்சிதான். அவன் தலைமயிரைக் கோதிவிட்டாள். "வானத்தில் இந்த மண்ணில் உடலைக் கழற்றிவிட்ட ஆத்மாக்கள் உலவுவினமாம். அவர்களில் என் அம்மாவும் இருப்பா. குருக்கள் சொன்னார்" என்றான் அவன். "விசர்... இப்ப மாமி எங்கை பிறந்திருக்கிறாவோ?" எங்கையும் பிறக்கமாட்டா. உன் வயிற்றில தங்கி எங்களுக்கு மகளாகப் பிறப்பதற்குக் காத்திருக்கிறா..." அவன் இவ்வாறு கூறியபடி அவள் மணி வயிற்றினைப் பாசத்தோடு தடவிவிட்டான். அவள் அவன் தலையைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள். "மெய்யாகவா அப்பா... அப்படி ஒருபேறு எனக்குக் கிடைத்தால் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவருமில்லை" பாக்கியம் விரும்பியபடி அவர்களுக்கு முதலில் பிறந்தது பெண் தான். மாவிட்டபுரத்திலிருந்து இராணுவத்தால் திடீரெனத் துரத்தப்பட்டு அனைத்தையும் இழந்து உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி அளவெட்டியில் முதலில் குடியேறி பின்னர் வலி காமத்தின் பெரிய இடப்பெயர்வின் போது சாவகச் சேரிக்கு ஓடினார்கள். அங்கு தான் மூத்தவள் பிறந்தாள். துயரத்திலும் வாழவேண்டுமென்ற பிடிப்பை வசந்தி ஏற்படுத்தினாள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இராணுவம் தென்மராட்சியை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டதும் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிழவரையும் அழைத்துக்கொண்டு வன்னிக்கு ஓடினார்கள். அங்கு அவர்கள் கிழவரை மலேரியாவுக்குத் தொலைத்துவிட்டனர். ஆனால் சத்தியன் அங்குதான் பிறந்தான். "அம்மானும் வந்திட்டார்" என்று பாக்கியம் பூரித்துப்போனாள். அவன் சிரித்தான். அவன் நடேஸ் வராக்கல்லூரியில் கல்வி கற்றவன். பகுத்தறிவால் ஏற்கக்கூடியவை எவை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை எவை என்பது அவனுக்குத் தெரியாதவையல்ல. ஆனால் பாரம்பரியமாக நிலவுகின்ற பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கைத் துன்பங்களை மறக்கவும் வாழ்வின் திருப்திக்கும் உதவுமாயின் அவற்றினால் பாதகமில்லை என்பது அவனின் வாதம். நிறைய நூல்கள் வாசிப்பான். பாரதியார் கவிதைகள் மீது அளப்பரிய பிரேமை. அடிக்கடி பாரதியின் வரிகளைப் பாக்கியத்திற்குப் பாடிக்காட்டுவான். "தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.", "ஒருவனுக்காக உலகத்தை அழிக்கிறதே" என்று பாக்கியம் சிரிப்பாள். "அப்படியல்ல பாக்கியம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேணும் என்று அவாப்பட்டார்." சத்தியனுக்குப் பிறகு வசந்தன், மாலினி, ரூபி மூவரும் வன்னியில் பிறந்தவர்கள். குடும்பத்தில் எண்ணிக்கை அதிகரித்ததும் பிரச்னைகளும் தோன்றத் தொடங்கின. வன்னியின் காட்டுச் சூழலின் காங்கைவெக்கையில் அவன் குடும்பத்திற்காக ஓயாது உழைக்க நேர்ந்தது. வேளாண்மைக்காலத்தில் தொழில் கிடைத்தது. ஏனைய நாட்களில் கனகசபையோடு பட்டவிறகு தேடி சேகரிக்கக் காட்டிற்குள் அலைந்தான். பாக்கியம் மெலிந்து உருக்குலைந்து போனாள். அடிக்கடி கடும் காய்ச்சலில் படுத்துக் கொள்வாள். அந்நேரங்களில் குடிசையில் தங்கி அவளையும் பிள்ளைகளையும் பராமரித்துக் கொள்வது அவன் பணியாகிறது. எப்படி வாழ்ந்தவர்கள்? மாவிட்டபுரத்தில் வெற்றிலைத் தோட்டத்துடன் கூடிய விட்டார்தியான காணியில் அப்பு கட்டிய வீட்டில் அமிர்தம் போன்ற கிணற்றுத் தண்ணீருடன் வாழ்ந்து சுகித்த குடும்பம், இன்று வன்னிக்காட்டிற்குள் பத்தடிக்கு பத்தடிக் குடிசைக்குள் மண் தரையில் பாய்களில் கிடக்க நேர்ந்து விட்டது. "எங்கட ஊருக்கு எப்படியாவது திரும்பிப்போய்விடணும், அப்பா. பிள்ளையளைப் படிப்பித்து ஆளாக்கிவிட வேணும். பாவம் செய்ததுகள். இங்கை வந்து எங்களுக்குப் பிறந்திருக்குதுகள்." பாக்கியத்தின் ஏக்கம் மாவிட்டபுரமாகத் தான் இருந்தது. பிறந்த மண்ணைவிட்டு அகதிகளாக ஓடி வந்து எத்தனை வருடங்களாகிவிட்டன? மண் மீட்பிற்கான யுத்தம் நாலரை இலட்சம் மக்களை சொத்துச் சுகமிழக்க வைத்துவிட்டது. அறுபதினாயிரம் மக்களைக் காவுகொண்டுவிட்டது என்பதை எண்ண மனம் வலித்தது. "கெதியல போவம் பாக்கியம். சமாதானப் பேச்சு வார்த்தை நடக்குது. எங்களைப் பழைய விடங்களில் இருக்க விடுவினமாம்" என்றான் நம்பிக்கையோடு இராசதுரை, அந்த நம்பிக்கையோடுதான் கண்டிவீதி திறக்கப்பட்டதும் யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்தார்கள் பூனை குட்டிகளைக் காவுவதைப் போல பிள்ளைகளைக் காவிக்கொண்டு ஓராயிரம் ஆசைக் கனவுகளோடு ஓடிவந்து ஏமாந்தார்கள் இருக்க இடமின்றி நடுத்தெருவில் நின்றார்கள். "இனி சண்டையில்லை. சமாதானமாம். அவையவை அவையினர் வீடுகளில் இருக்கலாம் என்றினமே?" பெரும் ஏமாற்றம் அவர்களைத் தாக்கியது. இராணுவத்தினரின் முகாமுள்ள விடங்களிலும் உயர் பாதுகாப்பு வளையங்களுள்ளும் எவருக்கும் மீளக் குடியமர அனுமதியில்லையாம். யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடபெரும்பகுதி. அவர்களின் மாவிட்டபுரம் உட்பட இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வளையத்தினுள் அடங்கிக்கிடந்தது. "வன்னியிலேயே இருந்திருக்கலாம்" என பாக்கியம் விம்மினாள். "கெதியில விடுவினமாம். இங்கினேக்க இருப்பம்." மாவிட்டபுரத்தினை இராணுவம் ஆக்கிரமித்ததும், அவர்கள் அடைக்கலம் தேடி அளவெட்டிக்குச் சென்றார்கள். அவர்களை முதலில் ஆதரித்த வெளிநாட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் அவனைப் போல ஆறுகுடும்பங்கள் இப்பொழுது குடியேறியிருந்தன. அங்கும் இருக்க இடம் கிடைக்கவில்லை. பரிதவித்து நின்றபோது, பழைய தோழன் பொன்னுத் தரை உதவ முன் வந்தான். "கவலைப்படாதை இராசதுரை. நாங்கள் களமேடு அகதி முகாமில் இருக்கிறம். எங்களுக்கு அங்க ஒரு நிறுவனம் சின்ன ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்குது. நான் முதலில் இருந்த குடிசையைப் பிரிக்காமல் வைச்சிருக்கிறன். அதில் வந்து இப்போது பிள்ளையோடு இரு. பிறகு பார்ப்பம்." மீண்டும் குடிசைக்குள் முடங்கிக்கொள்ள நேர்ந்தது. எட்டுப்பரப்புக் காணிக்குள் முப்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் முடங்கிக்கிடந்தன. அசைய இடமில்லை. ஒரு குழாய்க்கிணறு நூற்றியிருபது பேருக்கு நாள் முழுவதும் நீரிறைத்து சிலவேளைகளில் காற்றினைக் குழாய் வழி கக்கியது. நான்கு மலசல கூடங்கள் காலை வேளைகளில் திணறின. மலக்குழிகள் வேறு அடிக்கடி நிரம்பிப் பிரச்னை தந்தன. சிறிது நேர மழைப் பொழிவில் நிரம்பிய வீதி வெள்ளம் பாதங்களை மூடிவிட்டது. இராசதுரை வேகமாக ஓடிவந்தான். ஈர்க்கும் கூரைக்குடிசைக்குள் பிள்ளைகள் என்ன பாடோ? இப்படி மழைபொழிந்த ஒரு மாரிப் பொழுதில் தான் நெஞ்சு வலிக்கிறதென்று மார்பினைப் பற்றியபடி சரிந்த பாக்கியம் மீண்டும் எழுந்தமரவில்லை. மாவிட்டபுரத்தில் மீளக்குடியேறும் கனவு நிறைவேறாமலே மண்ணில் எரிந்து சாம்பலாகிப் போனாள். எப்படி வாழ்ந்தவள்? ஐந்து பிள்ளைகளையும் அவன் பொறுப்பில் கொடுத்துவிட்டு மறைந்து போனாள். முழுப்பொறுப்பும் மூத்தவள் வசந்தி தலையில் விழுந்ததும் அவள் பாடசாலைக்குச் செல்லல் முற்றுப் பெற்றது. மாதாமாதம் கிடைக்காமல் உலர் உணவுப் பொருட்கள் அவர்களுக்குப் போதுமானதாகவில்லை. அவன் நேர காலம் பார்க்காமல் உழைக்க நேர்ந்தது. மாரி மழை இரைசலுடன் மீண்டும் பாட்டம்பாட்டமாகப் பொழியத் தொடங்கியது. தூரத்தில் அவன் வாழ்கின்ற அகதி முகாம் வெள்ளத்துள் மூழ்கிக்கிடப்பது தெரிகிறது. கூரையை மழைக்கு முன்னர் வேய்ந்துவிட அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தான். அவை பலிதமாகவில்லை. கிராம சேவகர் மூலம் ஏதாவது உதவிகள் கிடைக்குமா என்று பலதடவைகள் ஓடியலைந்தான். "இதோ பார் இராசதுரை. நீ உரியமுறையில் பதிந்து இந்த முகாமிற்கு வரவில்லை. அடாத்தாகத் குடியேறியிருக்கிறாய். அதனால அரசு சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகள் உனக்குக் கிடையாது. பாய், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், செமிபேமனன்ற வீட்டிற்கான பணம். எதுவும் கிடையாது" என்றார் விதானையார். எனக்கு அலையள் கிள்ளிக்கொடுத்துவிட்டு அள்ளிக் கொண்டு போகிற சங்கதிகள் பிரச்னையில்லை. எங்கட துயரத்தை அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரமாக்கிவிட்டன. மீளக்குடியேற வருபவர்களுக்கு இருபத்தையாயிரம் அரசு கொடுக்குது. அதுதான் எனக்கு வேணும். தந்தியள் எண்டால் குடிசையைத் திருத்தி கிடுகு வாங்கிக் கூரையை வேய்ந்திடுவேன்.", "நீ உன்ர சொந்தவிடத்தில் குடியேறினால் தான் அது உனக்குக் கிடைக்கும்". அவன் விக்கித்துப்போய் அவரைப் பார்த்தான். "குடியேற விடுங்களேன்? நாங்களா வேணாமென்றம்?" இவன் பாதிக்கப்பட்டவன். அவன் ஆவேசத்தின் காரணம் கிராமசேவையாளருக்குப் புரியாமலில்லை. அவனைப்போல எத்தனை மனிதர்கள் அங்குள்ளனர்? பார்த்துப்பார்த்து அவர்களின் துயரங்களைக் கேட்டுக்கேட்டு நெஞ்சமும் அவருக்கு மரத்துவிட்டது. இராசதுரையை வியப்புடன் கிராம சேவையாளர் ஏறிட்டார். எவ்வளவு அற்புதமாக வெளிநாட்டு நிறுவனங்களை அவன் கணித்திருக்கிறான். "இராசதுரை, அப்படி முற்று முழுதாகச் சொல்லிவிடாதை. அந்த நிறுவனங்கள் இல்லாவிட்டால் இருக்கவும் இடமில்லாமல் எத்தனை குடும்பங்கள் தவித்திருக்கும் தெரியுமா?", "விதானையார் இப்ப இருக்கவிடமில்லாமல் தவிக்கிறது. வலிகாமம் வடக்கு மக்கள் தான். நீங்கள் அல்ல. யாழ்ப்பாணத்தவரல்ல வன்னி மக்கள் இல்லை. நீங்க எல்லாரும் உங்கட உங்கட வளவுகளில் வீடுகளில் இருக்கிறியள். நாங்க... இருபது வரியமாக அலையிறம். உயர் பாதுகாப்பு வளையம் என்று ஒரு எல்லையை வகுத்து எங்கட வளவுகளையும் வீடுகளையும் அநியாயக்காரர் ஆக்கிரமித்ததால் அகதிகளாகியது நாங்கதான். வலி உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். எங்களது போராட்ட உணர்வை மழுங்கடிக்க அகதி முகாம். உலர் உணவு, பிளாஸ்ரிக் பாத்திரங்கள், கூரை விரிப்புகள் என்று பிச்சை தந்து உணர்ச்சியை அடக்கிவிட்டினம். எங்களைத் தவிக்க விட்டிருந்தால் தெரிந்திருக்கும் எங்கட ஊருக்கு புகுந்திருப்பம்." என்றான் இராசதுரை ஆவேசமாக. "ஆமி சுட்டுத் தள்ளியிருக்கும்.", "எத்தனை பேரை? ஒரு நூறு பேரை? ஆயிரம் பேரை? அதுக்கும் கூட? நாங்க அறுபதினாயிரம் பேர் எங்கட குடிநிலத்தை இழந்து தவிக்கிறம் விதானையார். நான் வாறன் விதானையார்." அவனைப்பார்த்தபடி அவர் நின்றிருந்தார். மழைவிடுவதாகவில்லை. பொழிந்து கொட்டியது. அவன் வீட்டை அடைந்தபோது குடிசை வெறிச்சிட்டுக்கிடந்தது. "ஐயோ" என இதயம் பதறியது பிள்ளைகளின் பெயர் சொல்லி கூச்சலிட்டான். எவரையும் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். வெள்ளக்காடாக எங்கும் விரிந்து கிடந்தது எவரையும் காணோம். "தம்பி இராசதுரை... எல்லாரும் பள்ளிக்கூடத்தில். ஒதுங்கிவிட்டனம் ஆங்க போ..", "நீயும் வானை ஆச்சி...", "நான் வாறன் நீ போ," மனம் அமைதி கண்டது. இரவு முழுவதும் விறைக்கும் குளிரில் நடுங்கியபடி அவர்கள் அப்பாடசாலைக் கட்டடத்தில் அமர்ந்திருந்தனர். இராசதுரை நனைந்திருந்த பாணைப் பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். நாளை காலை பாடசாலை அதிபர் பிரதேசச் செயலரிடம் ஓடிப்போகப் போகிறார். "சேர் வந்து ஒருக்காப் பாருங்கோ.... பள்ளிக் கூடமிருக்கிற நிலையை. அதுகள் அதுக்குள்ள வந்து தங்கி நாறிப்போய் கிடக்குது. இனித் துப்பரவாக்கிறதென்ன? பள்ளிக்கூடம் நடத்துறதென்ன? "அப்படிச் சொல்லிப் போட்டு வரட்டும். நாயை அடிக்கிற மாதிரி உதைக்கிறன். சொந்த வீட்டில் சொகுசாக இருந்துகொண்டு...." அடுத்தநாள் பலர் வாகனங்களில் பாட சாலைக்கு வந்திறங்கினர். பிரதேசக் செயலாளர், கிராம சேவகர், சமூகசேவை அதிகாரி... இன்னும் ஒரு வெள்ளைக்காரர்... அரசு சார்பற்ற நிறுவனத்தின் ஒரு லொறி நிறைந்த பொருட்களுடன் வந்திறங்கினர். பிரதேசச் செயலரின் விழிகளில் பரிவு தெரிந்தது. "எங்கட சொந்தவிடங்களில் போய் இருக்க அனுமதி பெற்றுத் தாருங்க சேர்" என்று வேண்டினான். பொன்னுத்துரை. "நாங்க இருபது வரியமாக அனுபவிக்கிற வேதனை காணும். ஏங்களுக்கு ஒன்றும் வேண்டாம் சேர்... எங்கட இடம் தான் வேணும். "இப்ப சமாதானம் வந்திட்டுதானே?", "ஆருக்கு சேர் வந்திருக்குது?" என இராசதுரை சத்தமிட்டான். "உங்களுக்குத் தான் வந்திருக்குது. யாழ்ப்பாணத்தின் வாழுகிறவைக்கு வந்திருக்குது... வன்னியில இருக்கறவைக்கும் வந்திருக்குது... எங்களுக்கல்ல. வலிகாமம் வடக்குக்காரருக்கல்ல. அகதி முகாம்களில் வாழுகிற எங்களைப் போன்ற பரதேசிகளுக்கல்ல. யுத்தமில்லாத இந்தக் காலத்தில் உங்களுக்குத் தான் கொண்டாட்டம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. அவனை எல்லாரும் வியப்புடன் பார்த்தனர். "ஓலைக்கூரை வீட்டுக்காரர் வாருங்கோ... தறப்பாள் கொண்டு வந்திருக்கிறம். கூரைக்குப் போட்டு ஒழுகாமல் செய்திட்டு இருங்கோ. ஏல்லாரும் வரிசையாக வந்து வாங்கிக் கொண்டனர். இராசதுரை எழுந்து வந்தான். "இராசதுரைக்கு இரண்டு தறப்பாள் வேணும் சேர். குடிசை அப்படிக் கூரையில..." என்ற விதானையார் பரிந்துரைத்தார். "எனக்கெதுவும் வேணாம் சேர்." என்றான் இராசதுரை. "தம்பி... கெதியில் பேச்சு வார்த்தை புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மீண்டும் தொடங்க இருக்குது. சரியாக வந்திடும். எல்லாரும் அவரவர் இடங்களுக்குப் போகலாம். இராசதுரை பிரதேசச் செயலாளரை ஏளனமாகப் பார்த்தான். "நம்பச் சொல்லுறியளா சேர். எத்தனை வரியமாகச் சொல்லிறியள். எந்தச் சிங்கள அரசாவது நீங்க கேட்கிறதைத் தூக்கிக் கொடுத்து விடப் போவதில்லை. சமாதானம் வந்திட்டுது எல்லாரும் அவரவர் இடத்திற்குப் போகலாம் எண்டியவள். நம்பி ஓடிவந்தம். இப்ப பேச்சு வார்த்தை... முடியட்டும் என்கிறியள்.... இந்தச் சமாதானம் பேச்சுவார்த்தை எதுவும் எங்களுக்கு வேணாம். எனக்கு என்ற மாவிட்டபுரம் வேணும்... அங்க என்ற வளவு வேணும். இவங்க ஒரு போதும் தரப்போவதில்லை. நாங்களாத்தான் எடுத்துக் கொள்ள வேணும். என்னைப் பொறுத்தவரையில் இன்னமும் சண்டை முடியவில்லை. சேர். சமாதான சுகத்தையும் போரில்லா இனிமையும் நாங்க அனுபவிக்கவில்லை. தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தையே அழித்திடச் சொன்ன பாரதியைத் தெரியுமா சேர்? நீங்க எழுத்தாளர் உங்களுக்குத் தெரியும். நாங்க ஒருவரல்ல அறுபதினாயிரம் பேர்... எங்க பிரதேசத்தை மீட்டுத்தாருங்க. உங்களோட சேர்ந்து நாங்களும் சுகத்தை அனுபவிக்கிறம். இல்லாட்டில் எங்களோட சேர்ந்து நீங்களும் அழியத் தயாராகுங்க. போங்க சேர். நாங்க இப்பவும் அடிமைச் சாதியள்.", "அதுகளைவிடு... இந்தா இந்தத் தறப்பாளை வாங்கிக் கொள் தம்பி" நீட்டிய தறப்பாளை வாங்கிய இராசதுரை அவற்றினை அப்படியே முற்றத்தில் தேங்கிக்கிடந்த வெள்ளத்தில் வீசிவிட்டு.... "வாருங்கோ பிள்ளையள்" என்றபடி மழையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்...
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நீண்ட செவ்வகக் கண்ணாடித் துண்டம்போல அசைவற்றிருக்கும் அந்த நீர்த்தொட்டி அடிக்கடி உயிர்பெற்று, ஒளியலைகளைச் சுவரெங்கும் விசிறும். அதன் எண்ணற்ற கண்களென அசையும் நிறம் நிறமான மீன்கள். ஆளற்ற வீட்டின் தரையிலும், சுவரிலும் ஆடும் கண்ணாடி நிழல்கள், கூடத்தில் யாரோ அமைதியாக அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உறுத்தலையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். அலுவலகத்திலிருந்து திரும்பும் ராதா கதவைத் திறந்ததுமே நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கும் அதனுள்ளிருந்து துருவும் பார்வைகள் தன்மீது மோதுவதை வெறுத்து, கைப்பையை விட்டெறிந்து, வாஷ்பேஸினுக்கு ஓடி முகத்தைக் கவிழ்த்துக்கொள்கையில், இறைஞ்சிக் குவிந்த உள்ளங்கைகளில் தடைகளற்றுப் பொழியும் நீரின் ஆறுதல். தொட்டி நீருள் ஆழத் துள்ளும் மீன்கள் குழந்தை நவீனாவிற்கு மிகவும் ப்ரியமானவை. பள்ளி விட்டதும் அதன் முன்பு உட்கார்ந்து கொள்வாள் மணிக்கணக்காக. ''அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு இதை வாங்கவென்று, மீன்பண்ணைக்குப் போன நாளை ஞாபகம் கொண்டாள். தான் கழற்றியிருந்த ஹெல்மட்டை மகளின் தலையில் மாட்டிச் சிரித்தார் அப்பா. பெரிய கவசத்திற்குள் சின்னஞ்சிறிய தலை. ''விண்வெளி வீராங்கனை மாதிரியே இருக்கிறாள்'' என்றார். வரிசையாக மீன்தொட்டிகள் அடுக்கிய நீள் அறையைச் சுற்றி நடந்தார்கள். விரிந்த கண்களைக் கொட்டாமல், விடுபட்ட அப்பாவின் கைகளை மறந்து மீன்களைக் கவனித்தாள்; நீலத்தில் வெண் கோடிட்ட சிவப்பில் கரும்புள்ளியுள்ள கத்தியாக நீண்ட, நெல்மணிகளைப் போல் பொடிப் பொடியான மீன்கள். பழுப்பு நிறத்தில் படுத்துக் கிடக்கும் ஒரு தூங்குமூச்சி, இன்னொன்று செயற்கைப் பாறைகளில் முகத்தை முட்டி முட்டிக் குமறும் அழுகுணி. சாம்பல் நிறத்திலிருக்கும் மற்றொன்று சிறு கற்களின் மீது, சிந்தனையே உருவாகக் குந்தியிருக்கும். நவீனாவின் தொட்டியில் தங்கம் தடவிய, சாம்பல் வரிகளோடிய சிறு மீன் ஒன்றும் சிறு மயிர்கள் போன்ற கருஞ்செதிள்களோடு இருந்தது. அது அம்மாவின் மூடிய இமைகளைப் போலிருக்கிறதென்று நினைத்தாள்; அவர்கள் வீடு சேர்ந்தபோது வியர்த்த முகத்தோடு அடுப்படியிலிருந்து வெளிவந்த ராதா மீன்தொட்டியை வெறித்தாள். அவள் முகத்திலொரு அசாதாரணமான திகில் படர்ந்தது. ''உள்ள வேலையே பார்க்கத் தீரல. இதில் இது வேற எதுக்கு இப்ப? உங்க ஆபீஸ் பெங்களூரில். நீங்க போயிடுவீங்க நாளைக்கே. நானும் ஆபீஸ•க்கு. இவ ஸ்கூலுக்கு. யார் இதைக் கட்டிச் சேவிக்கிறதாம்?'' வழக்கத்துக்கு மாறான உரத்த குரலில் சிடுசிடுத்தாள் ராதா. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த முத்தம்மா, ''பிள்ளை ஆசை ஆசையா வாங்கியாந்திருக்கு. இருந்துட்டுப் போகட்டுமேம்மா. நான் பாத்துக்கிறேனே'' என்றாள் தயங்கியபடியே. ரகு - எத்தனை நாளைக்கொருதரம் எப்படித் தண்ணீர் மாற்ற வேண்டும் என்ற விவரமும், உணவளிக்கும் விதமும் சொல்லச் சொல்ல, அப்பவையே ஆர்வத்தோடு பார்த்தாள் நவீனா. மறுபடி சலிப்போடு அடுப்படிக்குள் நுழையப்போன அம்மாவிடம் மகள் பாரும்மா, ''இதன் நீ'' என்றால் தங்கமீனைச் சுட்டி. நெருப்புத் தீண்டிய துணியாகச் சுருங்கியது ராதாவின் முகம். ''இல்லை; அது நானில்லை என்னால் எந்தத் தொட்டியிலும் அடைந்து கிடக்க முடியாது '' முணுமுணுத்தாள் சோர்வாக. வெளியூர் வேலையில் அப்பா. வீட்டிலில்லாத அம்மா. பள்ளி முடிந்ததும், எதிர் வீட்டில் சாவி வாங்கித் திறந்து யாருமற்ற வீட்டிற்குள் மீன்களோடிருப்பாள் நவீனா. அவற்றிற்குப் பெயரிடுவாள் யோசித்து, யோசித்து, ''ஜிட்டு, பட்டு, ஜில்லு, குலு, ஜங்லி'' என்று என்னென்னவோ பெயர்கள். ''சாப்பிட்டாயிற்றா'' என்று விசாரிப்பில் துவங்கி அவற்றோடு சளசளவென்று பேசுவாள். பள்ளிக் கதைகள், அப்பா-அம்மாவின் சம்பள நாள் சண்டைகள், பாதையோரச் செடியிலிருந்த மஞ்சள் வயிறுள்ள பறவை. ஏதேதோ கேள்விகளோடு, மீன்களின் பதில்களுக்கான இடைவெளியைக் கவனமாக விடுவாள். ''ம்ம்ம்'' என்று தலையாட்டிக் கொள்வாள். வாயைத் திறந்து திறந்து மூடும் மீன்களை வெளிக் கண்ணாடியில், முகம் பதித்து முத்தமிடுவாள் செல்லமாக. இன்றென்னவோ அவள் கூம்பிய முகம்; சிவந்த கண்கள்; இறுகிய உதடுகள். கவனித்து மிரண்ட இரட்டை வால் மீன் ஓடிப்போய் சண்டைக்காரனிடம் சொன்னது. நட்சத்திர மீன்கள் சுழன்றுகொண்டே கேட்க, முதிர்ந்து பழுத்த பஞ்சாயத்துக்கார மீனும் நீண்ட தாடியைத் தடவியபடியே யோசித்து தீவிரமாக நவீனா தன் குட்டை ஜடையில் பட்டாம்பூச்சிக் க்ளிப்பைப் பிடுங்கித் தரையில் விட்டெறிந்தாள். அந்தச் சத்தத்திற்குப் பதிலாக அம்மாவின் அறையிலிருந்து, ஒரு அசைவோ, அதட்டலோ எழும்பாததில் எரிச்சலாகி இன்னும் சிவந்தது அவள் முகம். அவள் தன் சிறிய நாற்காலியை மீன்தொட்டிக்கு அருகில் இழுத்துப்போட்டு, ஏறிநின்று நீண்ட கைப்பிடியுள்ள பிளாஸ்டிக் வலையால் தண்ணீரைத் துழாவத் தொடங்கினாள். வெறிகொண்ட சிறு கைகள் நீரைப் புரட்டின. மிரண்ட மீன்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் சிதறி, தொட்டியிலிருந்த சிறுகற்களூடேயும், தாவரங்களுக்கிடையேயும் ஒண்டின. தங்கமீன் மட்டும் தன்னந்தனியே மிதந்து கொண்டிருந்தது அலட்சியமாக. பிளந்த வால் நொடிக்கொரு தரம் சிமிட்டியது. அணைந்து கிடந்த தொலைக்காட்சித்திரை நீர் நிழல்களாடத் தன்னைத் தந்திருந்தது. குரோதம் பெருகும் விழிகளால் தங்கமீனைக் குத்தினாள் நவீனா. வலையை அதன் மீது வைத்து அழுத்தினாள். அவசரமாக அது அடித்தளத்திற்கு நழுவப் பார்க்கையில் தன் கையைத் தோள் வரையிலும் தொட்டிக்குள் விட்டு, ஒரு சிறுமிக்குச் சாத்தியமேயற்ற பலத்துடன் அதை நசுக்கித் தீர்த்தாள். வலையைத் தொட்டிக்குள்ளேயே எறிந்துவிட்டு ஸோபா மூலையில் சுருண்டு கொண்டாள். சென்ற வாரத்தின் அந்த இரவு. அரை உறக்கத்தில் முதுகை வருடிய அம்மாவின் விரல்கள். அம்மா அவள் கருவிழிகள் அசையவில்லையெனத் தன் சுண்டுவிரலை மிக மென்னையாக மூடிய இமை மீது வைத்துச் சோதித்தாள். மகளின் கையிலிருந்த தன் முந்தானையை விடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். ஆனால் அவளுக்குக் குழந்தை ஏன் இவ்வளவு சீக்கிரமே தூங்க வேண்டும் என்றிருந்தது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவ மீன்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். தனது அறைக்குள் ராதா நுழைந்தபோது காற்றிலாடிக் கொண்டிருந்தன ஜன்னல்கள். சற்றுத் தொலைவில் புரண்டு கொண்டிருந்தது கடல் ரகசியமாகக் காமமுற்ற பெண்ணைப் போல. மங்கலான நிலவொளியில் அதன் கருநீல அலைகள் நிலைகொள்ளாமல் நெளிந்தன. பொங்கி எழும்பின. தயங்கித் தணிந்தன. ராதா கட்டில் விளிம்பிலிருந்த தன் கல்யாணப் புகைப்படத்தைத் திருப்பி வைத்தாள். மறுபடி அதை எடுத்து ரகுவை ஒரு தரம் பார்த்துவிட்டுக் கவிழ்த்துக் போட்டாள். கலைந்த புடவை கொடியிலாடித் துடித்துக் கொண்டிருந்தது. தானுமொரு கருங்கடலாய் உருக்கொண்ட இரவு அலையோசையை அதிரவிட்டது அவள் உடலெங்கும். படுக்கையருகே துழாவி, அந்தப் புத்தகத்தை எடுத்துத் திறந்தும் அரை இருளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தன விஷ்ணுவின் விழிகள். மென்நீல விளக்கொளியை அமைத்துக் கட்டிலில் சரிந்து அவன் புகைப்பட முகத்தை உற்றுக்கொண்டிருந்தாள் நெடுநேரம், கடுமையும், எச்சரிக்கையும் தொனிக்கும் கண்கள். சட்டென ஒற்றை விரல் அவற்றை மறைத்ததும், அந்த உதடுகள் குவிந்த நெசிழ்ந்து அழைப்பதாக உணர்ந்தாள். ஒருவருமற்ற அறையின் தனிமையை மறுதரமும் உறுதிப்படுத்திக்கொண்டு, நா நுனியால் அந்த உதடுகளைத் தீண்டினாள். ஒரு நாள் எதிர்பாராமல் வீட்டினுள் நுழைந்த அவன் இதே செயலில் இருந்த அவளைக்கண்டு சிரித்தான். களவில் பிடிபட்டதைத் தாளமுடியாமல், சமையலறைக்கு ஓடியவளைத் துரத்திச் சொன்னான்: ''முத்தம் மட்டும் இடாதே'' காதோரம் கிசுகிசத்த அவன் வார்த்தைகள் முதலில் புரிபடவில்லை. புரிந்ததும் அடுப்பின் ஆரஞ்சுத் தழல் அவள் கன்னங்களிலாடியது. அவன் எப்போதோ போய்விட்டிருந்தான். இன்னொருமுறை புகைப்படத்தில் குவியும் அவள் இதுழ்கள், அறைக்குள் ததும்பும் கருமையின் தாபம், மார்பில் கவிழ்ந்திருந்த புகைப்படம். பாதிமயக்கத்தில் விழி மூடிப் புரண்டதில் இடுப்புக்குக் கீழே நழுவியதும் திடுக்கிட்டு அதை மறுபடி புத்தகத்துக்குள்ளேயே ஒளித்தாள். தான் வெளிச் சொல்லாத வெற்றுக் கனாக்களில் ஒன்றினைப் போல. அலுவலகத்தில் விஷ்ணு தன்னைச் சுற்றிலும் எழுப்பியிருப்பவை அச்சமூட்டும் வலுவான அரண்கள்: ''என் அறைக்குள் உத்தரவின்றி நுழையாதே - முன் அனுமதியின்றி தொலைபேசாதே, பேசுமுன் யோசித்துப் பேசு. உன் வேலையைப் பாரு'' என்று எரிந்து விழுவான்; விரட்டித் தள்ளுவான். அவள் தொடவே கூடாத ஏதோ ஒன்றைப் பதுக்குவான் மன ஆழத்திற்குள். உரையாடல்களில் அவன் உருவாக்கியபடியே இருக்கும் விடுவிக்க முடியாத சிடுக்குகள், புதிர்கள். திரைகள் மௌனம் காக்க, கடல் நிம்மதியற்றுப் புரள நினைவில் இறைந்த சொற்களை மீண்டும் மீண்டும் மனநுனியால் தீண்டி ஒலியெழச் செய்துகொண்டிருப்பாள் இரவெல்லாம். ''என்ன செய்கிறீர்கள்?'' எனும் அவளதுதொலைபேசிக் கேள்விக்கு. ''என் தோழியோடு படுக்கையில் காதல் செய்கிறேன். இப்போது அவள் தூங்குகிறாள். போதுமா?'' என்பான் மர்மமான தொனியில். பிறகொரு நாள் ''அதெல்லாம் சும்மா. உன்னைச் சீண்ட'' என்றொரு முடிச்சிடுவான். பேச்சேயற்ற சில நாட்களுக்குப் பின்னதான தனிமையில், தன்னையறியாமல் அனிச்சையாக அவன் எண்களை ஒற்றுவாள் தொலைபேசியில். ஒரு ''ஹலோ''வில் நிரம்பி விடும் கண்களை, நல்லவேளை, அவன் பார்க்கவே முடியாது என நிம்மதியுறுவாள். ''பிடிக்கலைன்னு சொன்னேனா என்ன? என்ன பிரச்னை, அடிகிடி விழுந்ததா வீட்டில்?'' அதிசயமாய்க் கனியும் அவன் குரல் மறுநாளே '' பிடிக்குதுன்னு சொல்லலியே?'' என்று அகப்படாமல் நழுவும். ''உன் அழுகுணிக் கதைகள் எனக்கு வேண்டாம்'' என்பான் முறைப்பாக. குழம்பிச் சரிவாள் தலையணையில். உள்ளங்கைக்குள் இருக்கும் அவன் நிழற்படத்திடம் ரகசியமாகக் கத்துவள். ''முரண்பாடுகளின் மூட்டை''. கடலின் விடாத கூப்பிடுதல் சபலமூட்டும்; சுவர்களை மீறி வந்து அவளுடலை மோதும். விறைத்த முலைகளில் கிளைத்த பச்சை நரம்புகள் விரிந்து வெடித்துத் தேகமெங்கும் வலையாகப் படரும். அடி வயிற்றை உள்ளங்கை அழுத்தும். மனம் முணுமுணுக்கும். ''இது தான் காமம். இது ரஜோ குணத்திலிருந்து உண்டானது. பெருந்தீனி தின்பது மஹாபாவம் இது. இவ்வுலகில் காமமே பெரும் பகைவனென்று அறிவாயாக!'' தூங்கிவிட்ட மகளிடம் ஓடி சிறு கட்டிலுக்கு வெளியே நீண்டு தொங்கும் குட்டிக் கையைத் தொட்டுக் கொண்டு, குளிர் பரவிய வெற்றுத் தரையில் குப்புறக் கிடப்பாள். உடலுள் அலைகளாட, உள்ளங்காலைச் சிறு மீன்கள் சீண்டக் கண்கள் கரித்து வழியும். எதுவோ கீறலுறும் ஒலியில் பதறியெழுந்து மீன்தொட்டியைக் கவனமாகச் சோதிப்பாள். ஒற்றை விரலால் அணுஅணுவாக வருடுவாள். அவள் தொடுகையை ஏற்று மீன்கள் துள்ளும். தொட்டி இருக்கும் அசையாத திடத்தோடு நெருடலேயற்று. மீன்கள் நெருங்கி, உரசி முத்தமிட்டன. உடனடியாக விலகின. தொட்டியின் சுவர்களோடு சமரசமாக உலவின. விரிந்து, விரிந்து வீடளவு விஸ்தாரம் கொண்டது தொட்டி. அலைகளின் தன்மையை நிராகரிக்க இயலாதது அறைச்சுவர்களின் உறுதியின்மை. படுக்கையிலேயே காத்துக்கிடந்தது அந்தப் புகைப்படம். இறுகக் கடித்த உதடுகளோடு அதைப் புத்தகமடிப்பில் செருகினாள்; காற்றில் கலைந்து, மறுபடி வெளிவந்து படபடத்தது கேலியாக. உடைகள் உடலை விலக்கித் துடிக்க, காற்றில் கூந்தல் உளைய தன்னையறியாமல் நகர்ந்து கொண்டிருந்தாள். கோடி நாகங்களின் விரிபடங்கள் ஜொலிக்கும் அலைகளை நோக்கி. பாதங்களை வருடி மீட்டும் அலைகள் கணுக்காலைக் கடந்து முழுங்காலுக்கு மேல் தொடைகளைத் தொட்டதும் திகிலுற்றுக் கட்டிலுக்கு ஒடிக் கனமான போர்வைக்குள் தன்னைப் பொதிந்தாள். அவன் விரல்கள் பிடரியை நெருடின. திகைத்து எழுந்ததும் போர்வைகள் சரிந்தன. அவன்தான். அஞ்சி நடுங்கும் குரலில், ''எப்படி வர முடிந்தது?'' என்றவாறே மேற்கூரைத் தளத்தை ஆராய்ந்தாள், சந்தேகமாக. ''சொன்னேனே, வருவேனென்று'' குறும்பாக நிசப்தங்களை ஊடுருவும் சிரிப்பு. ''ஆனால் எப்படி?'' ''வாசல் வழியாகத்தான்'' ''நான் கதவை இறுக்கமாகப் பூட்டியிருந்தேனே'' குழம்பினாள். ''உனது பூட்டுகள் மிகவும் பலவீனமானவை. நீ எப்போதும் எல்லைகளை மீற விரும்புபவளாகவே இருக்கிறாய்'' அவள் மறுத்தாள் அவசரமாக. ''இல்லை நான்...'' குறுக்கிட்டான்'' ஆமாம் நீ!'' படுக்கையில் கிடந்த அவன் படம் கசங்கி விடக்கூடாதேயென்று பயந்தாள். மனத்தடைகள் நெகிழ, பொங்கும் கடலின் போக்கில் சுழன்றன உடல்கள். மதில்கள் விலகி நடந்தன. முத்தங்களில் அகலமாயின ஜன்னல்கள். இடையில் அழுந்தும் அவன் முகம். அவளுடலின் பிரியமான பகுதிகளைத் தொட்டுச் சுட்டி நகரும் விரல். ஈர மணலில் குறுகுறுக்கும் பாதம். கடலைக் குடித்துப் போதையுற்ற அரையில், அணைப்பில் கிறங்கிய அவள் கண்ணில் பதியவே பதியாமல் கடந்தது ஒருக்களித்திருந்த ஜன்னலில் - ஒரேயொரு நொறுங்கிய நொடி மட்டும் தெரிந்த மகளின் நுனி விழி, பளபளவென்ற கத்தி முனைபோல, சிறு திமிறலும் சாத்தியமின்றி அவனோடு ஒன்றிவிட்ட உடலை மீட்க முடியவில்லை புரிந்தவனாக, ''சும்மாயிரு அவள் நன்றாகத் தூங்குகிறாள்'' என்றான். கடல் முடிவேயற்றுப் பெருகியது. காலையில் தன் குற்றவுணர்வின்மையே ஒரு குற்றமெனத் திரட்ட முயற்சித்தாள். வழக்கமான அடங்கள் இல்லாமல் மௌனமாகச் சாப்பிடும் மகளின் சலனமற்ற முகம் எதுவுமே சொல்லவில்லை. செத்து மிதந்த தங்கமீன் குப்பைவாளியில் கிடந்தது விறைத்த விழிகளோடு. பிறகு வந்த நாட்களில் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கின மீன்கள். ரகு ஊரிலிருந்து வந்த நாளில் துடித்துக் கொண்டிருந்த கடைசி மீனும் செத்ததை அவன் கவலையோடு கவனித்தான். அவன் கொண்டு வந்திருந்த கண்ணாடி ஜாடியில் புதிய மீன்களிருந்தன. சிறியதொரு தங்கமீனும் கூட. மீன்களில் சாவுதான் மகளின் உற்சாகமின்மைக்குக் காரணமென்றெண்ணினான். இந்தப் புதிய மீன்களால் அவள் பழைய குதூகலத்திற்குத் திரும்புவாள் என நம்பினான். சாப்பாட்டு மேஜையில் மூவரும் உட்காருகையில் மின்சாரம் அறுந்தது. காத்திருந்தாற் போல் இருள் வீட்டிற்குள் நுழைந்தது பரபரவென்று. தயாராக இருந்த மெழுகுவர்த்திகளை ராதா ஏற்றினாள். சுடர்கள் எதற்கோ பதறி நடுங்கின. ஜாடி மீன்கள் ஒளியேற்றி நீந்தின. எதிர்எதிராக அவளும், கணவனும். தனி மூலையொன்றில் குழந்தை. ''இருட்டில் சாப்பிட்டால் பேய்களும் நம்மோட சாப்பிடுமாம் சேர்ந்து'' என்றால் ராதா சகஜமான புன்னகையோடு. குழந்தையின் உதடுகள் அழுகைக்கு ஆயத்தமாவது போல் குவிகையில் அவள் ஒரு விதமான நிம்மதியையும் விடுவிடுப்பையும்'' உணர்ந்தாள். '' சொல்லட்டும், சொல்லிவிடட்டும் '' ராதா காத்திருந்தாள். குழந்தை கண்ணாடிஜாடியின் வளைவுகளோடு மன்றாடிக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்தபடியே சொன்னாள். அவள் குரல் அபூர்வமான ஈரமும், சாந்தமும் நிறைந்ததாயிருந்தது. ''இனிமேல் இந்த மீனையெல்லாம் கடலிலேயே விட்டுடுங்க அப்பா, தயவு செய்து'' -பிறகு அவள் வேகவேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்.. நன்றி - புதிய பார்வை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தொலை கடல்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. ஒருமுறை ஒரு நிறை கர்ப்பிணியான பெண் சிங்கம் ஒரு மலை உச்சியிலிருந்து மற்றொரு மலை உச்சிக்கு தாவும்போது அதன் வயிற்றிலிருந்த குட்டி கீழே விழுந்து விட்டது. அந்த குட்டி அந்த சமயத்தில் அந்த இடத்தில் போய்கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் போய் விழுந்துவிட்டது. அதனால் அது ஆடுகளுடன் கலந்து, ஆடுகளுடன் வாழ்ந்து, ஆடுகளைப் போலவே இருந்து கொண்டிருந்தது. தான் ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற ஒரு நினைப்பு அதன் கனவில் கூட இல்லை. எப்படி இருக்க முடியும்? அதைச் சுற்றி இருந்த அனைத்தும் ஆடுகளே. அது ஒரு சிங்கம் போல ஒருபோதும் கர்ஜித்ததே இல்லை. ஒரு ஆடு கர்ஜிப்பது இல்லை. அது ஒரு சிங்கம் போல தனித்து இருந்ததே இல்லை. ஒரு ஆடு ஒருபோதும் தனித்து இருக்காது. அது எப்போதும் கூட்டத்தில்தான் இருக்கும். – கூட்டம் கதகதப்பானது, உத்தரவாதமானது, பாதுகாப்பானது. ஆடுகள் நடப்பதை நீ கவனித்து பார்த்தால் அவை ஒன்றையொன்று உரசிக்கொண்டு நெருக்கமாகத்தான் நடக்கும். அவை தனித்திருக்க மிகவும் பயப்படும். இந்த சிங்கம் வளர்ந்தது. இது மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்வு. அது மனதளவில் தன்னை ஒரு சிங்கமாக நினைக்கவில்லை என்றாலும் கூட உடலியல் அதனுடன் ஒத்துப் போகவில்லை. இயற்கை உன்னை பொருட்படுத்துவது இல்லை. அது மிகவும் அழகான இளைய சிங்கமாக உருவெடுத்தது. ஆனால் வளர்ச்சி மிகவும் மெதுவானதாக இருந்ததால் சிங்கம் ஆடுகளுடன் ஒத்து போனதைப் போலவே ஆடுகளும் இந்த சிங்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. ஆடுகள் இது ஒரு சிறிதளவு வளர்ச்சியில் வேறு பட்டது என நினைத்தன. அது வேறுபட்டு நடந்து கொள்ளவில்லையே – ஒரு சிறு உடலியல் மாறுதல் தானே – சிங்கம் வளர்ந்து கொண்டே வந்தது. அப்படி வளரக் கூடாது. சிங்கத்தைப் போல தோற்றமளிக்கக் கூடாது…….. ஆனால் இது சிங்கமல்ல. இது பிறந்ததிலிருந்தே அவை பார்த்துக் கொண்டிருக்கின்றன, அவை தான் இதை வளர்த்தன, அவைதான் இதற்கு பால் கொடுத்தன. இந்த சூழ்நிலையில் வளர்ந்த இது சைவமாகதான் இருந்தது. எந்த சிங்கமும் சைவமல்ல. ஆனால் இந்த சிங்கம் சைவமாக இருந்தது, ஏனெனில் ஆடுகள் சைவமே. இது புல்லை மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. ஆடுகள் இது மிகவும் பெரிதாகவும் சிங்கத்தை போல இருப்பதையும் ஏற்றுக் கொண்டன. ஒரு அனுபவசாலியான ஆடு, இது இயற்கையின் தவறு. எப்போதாவது ஒருமுறை இப்படி நடப்பது இயல்புதான். என்றது. அதுவே அதுதான் உண்மை என நினைத்துக் கொண்டது. சிங்கத்தின் நிறம், உடல் எல்லாமே வேறுபட்டுள்ளது – சாதாரணமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக – ஆனால் இது ஒரு சிங்கமாக இருக்கக் கூடும் என்ற நினைப்பே சாத்தியமில்லை. அது எப்போதும் ஆடுகளால் சூழப் பட்டிருந்தது. அவை இதனிடம், கவலைப்படாதே, நீ ஒரு சிறிதளவு வித்தியாசமானவனாக இருக்கிறாய் அவ்வளவே. நாங்கள் உன்னை பார்த்துக் கொள்கிறோம். என்றன. ஆனால் ஒருநாள் ஒரு வயதான சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இந்த இளைய சிங்கம் இருப்பதை பார்த்தது. அதனால் அதன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு சிங்கம் ஆட்டுமந்தைகளுக்கிடையில் இருப்பதையோ, அதை பார்த்து எந்த ஆடும் பயப்படாததையோ சரித்திரத்திலேயே கேள்வி பட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சிங்கம் ஆட்டைபோலவே நடந்தது, புற்களை கொறித்தது. வயதான சிங்கத்தால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. தன்னுடைய காலை உணவாக ஒரு ஆட்டை பிடிக்கவேண்டும் என்பதையே முற்றிலுமாக மறந்து அது அந்த சிங்கத்தை பிடிக்க பாய்ந்தது. ஆனால் இதற்கு வயதாகிவிட்டது. அதற்கோ சிறு வயது. – அதனால் வேகமாக ஓடியது. அது தான் ஒரு ஆடு என நினைத்தாலும் கூட, ஆபத்து வரும்போது மனதின் அடையாளம் மறந்துபோய் விடுகிறது. அது ஒரு சிங்கம் போல ஓடியது. வயதான சிங்கத்திற்கு அதை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இறுதியில் அதை பிடித்தபோது அது அழுதுகொண்டே என்னை மன்னித்து விட்டுவிடு, நான் ஒரு ஆடு என்றது. வயதான சிங்கம், முட்டாளே, அழுவதை நிறுத்து, என்னுடன் குளக்கரைக்கு வா என்றது. அருகிலேயே ஒரு குளம் ஒன்று இருந்தது. இது அதை அங்கே கூட்டி சென்றது. இளைய சிங்கத்திற்கு போக விருப்பமேயில்லை விருப்பமேயில்லாமல்தான் சென்றது. நீ ஒரு ஆடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும். நீ அதன் பேச்சை கேட்காவிட்டால் அது உன்னை கொன்றுவிடும். அதனால் இது அதனுடன் சென்றது. குளம் மிகவும் சலனமின்றி, அலைகளில்லாமல், ஒரு கண்ணாடி போல இருந்தது. வயதான சிங்கம் இதனிடம், பார், என் முகத்தை பார், உன் முகத்தையும் பார். என் உடல் பார், உன் உடலையும் பார். தண்ணீரில் பார். என்றது. ஒரு விநாடியில் அங்கே ஒரு கர்ஜனை எழுந்தது. அது எல்லா மலைகளிலும் எதிரொலித்தது. ஆடு மறைந்து அங்கே சிங்கம் எழுந்தது. அவன் வேறுபட்டவன். அவன் தன்னை அறிந்து கொண்டான். தான் ஒரு ஆடு என்று கொண்ட அடையாளம் உண்மையல்ல, அது ஒரு கருத்து மட்டுமே. அவன் இப்போது உண்மையை கண்டுகொண்டான். வயதான சிங்கம், இப்போது நான் எதுவும் கூற வேண்டியதில்லை, நீ புரிந்து கொண்டு விட்டாய். என்றது. இளைய சிங்கம் இதுவரை அறிந்திராத வேறுபட்ட வலிமையை உணர்ந்தது…… அந்த வலிமை இதுவரை தடைபட்டிருந்தது. அது இப்போது அளவற்ற சக்தியை உணர்ந்தது. அது இதுவரை ஒரு வலிமையற்ற, பணிவான ஆடாக இருந்தது. அந்த பலமற்ற, வலிமையற்ற தன்மை காற்றில் கரைந்துவிட்டது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குரு செய்யும் வேலை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: வானம் குமுறிக் கொண்டிருந்தது...... ஜானகியின் மனசைப் போல.... இந்தப் பதினாறு நாட்களாக அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. ஆனால் கண்கள், இன்னும் வற்றி விடவில்லை. ஒரு காலத்தில் வேல்விழி, மீன்விழி, மான்விழி என்றெல்லாம் அவன் கணவனால் வர்ணிக்கப்பட்ட அந்தக் கண்களிலிருந்து புது மரத்தில் கீறல் விழுந்ததும் பிதுங்கிக்கொண்டு வரும் பாலைப் போல வெதுவெதுப்பான நீர் சுரந்தவண்ணமாக இருந்தது. வீட்டுக்கு முன்பாக தற்காலிகமாக சீனன் போட்டுவிட்டுப் போன தகரக் கூரையின் கீழாக உற்றத்தார் சுற்றத்தார் என்று பலரும் கூடியிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகள் ஒரு சீராக இல்லை. அவர்களின் எண்ணங்களைப் போல தாறுமாறாக இருந்தன. சிலர் வட்டமான மேசையிட்டு ஆறு ஆறு பேராகத் துருப்புச்சீட்டுப் போட்டுக் கொண்டிருந்தனர். உலகமென்னும் வட்ட மேசையில் இறைவன் மனிதர்களைத் துருப்புச் சீட்டாகப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்தே விட்டவர்கள் போல் அவர்களுக்கு அதிலே சுவாரஸ்யம்! சில பெரியவர்கள் வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டு ஜெயராமனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடுவாக, நட்டுவைக்கப்பட்ட ஒரு கல்லின் அருகில் பலகாரப் படையலும் பூ மனமும் சூழ்ந்த இடத்தில் ஜானகியின் கணவன் ஜெயராமன் விற்றிருந்தார். உயிரோடு அல்ல படமாக! ஜெயராமன் தெய்வமாகிவிட்டார். இன்றோடு பதினாறு நாட்கள் ஓடிவிட்டன. எப்படிப்பட்ட தவறு செய்தவனாக இருக்கட்டும் செத்த பிறகு உடனே அவன் தெய்வ ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறானே! ஜெயராமனின் படத்தையே கூர்ந்து பார்த்து விம்மினாள் ஜானகி. அவரோடு வாழ்ந்த காலத்தில் உண்டான அனுபவங்கள், இடையிலே ஏற்பட்ட கசப்புக்கள், திடீரென்று உண்டான திருப்பங்கள் யாவும் திரும்பத் திரும்ப அவள் நினைவுக் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. ஜானகிக்கு ஐம்பத்திரண்டு வயது. ஆனால் இந்தப் பதினாறு நாட்களுக்கு முன்பு அவளைப் பார்த்த எவரும் நாற்பது வயதுக்கு மேல் நிச்சயம் மதிக்க மாட்டர்கள். அப்படி ஓர் உடற்கட்டு அவளுக்கு. ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான பின்னரும்கூட அவளுடைய மேனிச் செறிவைக் கலைக்க முடியாமல் இயற்கை அவளிடம் களைத்துப் போயிருந்தது. ஆனால், அந்த இயற்கை இப்போது கர்வம் கொண்டிருந்தது. ஆம். ஜானகி இந்த பதினாறு நாட்களில் மிகவும் நொய்த்துப் போயிருந்தாள். எவ்வளவு பெரிய காற்றாக இருந்தாலும் தாக்குப் பிடித்து நடமாடிக் கொண்டிருக்கும் விளக்குச் சுடர் எண்ணெய் தீர்ந்ததும் தானாகவே அடங்கிவிடுவதில்லையா! கையில் தேங்காய் எண்ணெயுடன் அங்கே நுழைந்த விமலா, அங்கிருந்த விளக்கிற்குத்தாராளமாக எண்ணெய் ஊற்றினாள். அவள்தான் ஜானகியின் மூத்த பெண். அவளுக்கும் கண்கள் சிவந்து போயிருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றும் போது அந்தச் சிவந்த விழிகள் ஒரு சில கணங்கள் தாயின் முகத்தின் மேல் படிந்து திரும்பின. அம்மாவைப் பார்க்க அவள் விழி மடைகள் மேலும் திறந்தன. விளக்கில் ஊற்றிய எண்ணெயோடு அவள் விழி நீரும் விழுந்து கலந்தது. விமலாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகின்றன. இரண்டு விசுக்கட்டான் குழந்தைகளையும் அவள் கணவன் ராகவன் வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். எண்ணெய் ஊற்றிவிட்டுத் திரும்பிய விமலாவை நிமிர்ந்து பார்த்த ஜானகி துக்கத்தை அடக்க முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு ''ஓ'' வென்று அழுதாள். அந்தக் காட்சியைக் காணப் பொறுக்காமல் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அழுதனர். வெளியில் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த சில கிழடுகள் கண்களில் மல்கிய நீரை ஆள்காட்டி விரலால் வழித்துச் சுண்டியும், கட்டை விரலால் தேய்த்தும் விட்டுக் கொண்டன. தன்னுடைய இறப்புக்காக அழ முடியாத மனிதப் பிறவி, பிறருக்காகவாவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடவேண்டாமா? ''யாராவது அழுகையை அடக்குங்க'' என்று வெளியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார். கூடத்திலிருந்த பெண்கள் சிலர் அந்த முயற்சியில் இறங்கினர். சற்று நேரத்தில்அமைதி நிலவியது. கொஞ்ச நேரம் அரற்றி அழுததால் சற்றே கலைந்த ஜானகியின் அலங்காரத்தை மீண்டும் சரி செய்வதில் இரண்டொரு பெண்கள் முனைந்தனர். தலை நிறைய பூவும், நெற்றி கொள்ளாத குங்குமத் திலகமும், கழுத்து நிறைந்த நகைகளும், இரு கை தொய்ந்து விழும்படியாக வளையலுமாக ஜானகி சர்வஅலங்கார பூஜிதையாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள்.... கணவனை இழந்த கைம்ப்பெண்ணை இப்படி அலங்காரம் செய்து வைத்து பதினாறாம் நாள் கிரியையின் போது ஆவேசம் வந்தவர்களைப் போல் அவளுடைய அணிகலன்களை ஒவ்வொன்றாகப் பறித்து சுமங்கலியைப் பலபேர் நடுவே அமங்கலியாக்கிப் பார்க்கும் அந்த நமது மரபு வரிசை இன்று ஜானகிக்கும் நடக்கப் போகிறதோ! அதற்காக அவளுக்கு இத்தனை அலங்காரமோ! ஜானகி மூக்கும் முழியுமாக ஒரு கணம் நிதானித்துப் பார்க்கும் அழகியாக அந்த லாயர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த போது ஜெயராமன் அங்கே டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். யாருமில்லாத அனாதையாக இனிமேலும் சொந்தக்காரர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்ற முடிவோடு ஜானகி அங்கே வேலைக்கு வந்த சமயம் வாலிப முறுக்கோடு இருந்த ஜெயராமன் சும்மா அவளைச் சீண்டவும் அது அவளுக்கு ஒத்துப் போகவும் வெகு சீக்கிரம் அவர்களுக்குத் திருமணம் நடந்தது! அதைவிட வெகு சீக்கிரம் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. விமலாவை அடுத்தடுத்து கோகிலாவும் யசோதாவுமாக இரண்டு பெண்கள். மூன்று பெண்ணாக பிறந்துவிட்ட ஏமாற்றமோ அல்லது டிரைவர் வேலை என்றாலே ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாது; ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் ஜெயராமன் காணாமற் போய்விட்டார். அப்போது கடைசிப் பெண் யசோதாவுக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. ஜானகி, சிறகில் அடிபட்ட பறவைபோல் தவித்தாள். எங்கெல்லாமோ ஓடினாள்... யார் யாரிடமோ விசாரித்தாள்... விசாரிக்கச் சொன்னாள்.... ஆனால், ஜெயராமனின் மறைவு, மெய்வழிச்சாலை சாமியாரின் மறைவு மாதிரி மர்மமாகவே போய்விட்டது. மூன்று பிள்ளைகளையும் தெரிந்தவர்கள் வீட்டில் விட்டு வேலைக்குப் போவதும், மாலையில் பிள்ளைகளை வீட்டுக்கு இட்டு வந்து சோற்றுக் கஞ்சி ஊற்றுவதுமாக இரண்டு வருடங்களை ஒட்டினாய் ஜானகி. அந்தச் சிரமமான நேரத்தில்தான், அவளுடைய வாழ்க்கையில் சுந்தரம் வந்து கலந்துகொண்டான். கட்டையில் செய்து கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்ட கனிகள் வேண்டுமானால் அப்படியே இருக்கலாம். செடியில், கொடியில், மரத்தில் இருக்கும் கனிகளால் அப்படியே இருந்துவிட முடியுமா? நொந்து போன ஜானகிக்குச் சுந்தரத்தின் துணை அப்போது இதமாகவும் இன்றியமையாததாகவும் இருந்தது. சுந்தரமும் அவளிடம் ஒரு பண்புள்ள மனிதனாகவும் பொறுப்புள்ள கணவனாகவும், கடமையுள்ள தந்தையாகவுமே நடந்து கொண்டான். அவனுக்குப் பிறந்த இரண்டும் ஆண் பிள்ளைகள். ஆனால், ஒரு நாள் கூட அவன் தனக்கு இரண்டு பிள்ளைகள் தாம் என்று எண்ணியதே இல்லை. ஏதோ ஒரு விடுபட்ட தொடர்பு மீண்டும் ஒட்டிக் கொண்டதைப் போல் அவர்களுடைய வாழ்க்கை நடந்தது. என்றாவது ஒரு நாள் ஜெயராமன் வருவானோ என்ற உறுத்தல் ஜானகிக்கு இருந்ததுண்டு. ஆனால் அந்த உறுத்தலே மக்கிப் போகும் அளவுக்குக் காலம் ஜெயராமன் என்ற நினைவையே தேய்த்துவிட்டிருந்தது. மூத்தவள் விமலா, அடுத்தவள் கோகிலா. இருவரின் திருமணத்தையும் எந்தக் குறையுமில்லாமல் சுந்தரமே செய்து வைத்தான். அடுத்து இருபத்திரண்டு வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் யசோதாவுக்கும் அவன் நிச்சயம் நல்லது செய்து வைக்கத்தான் போகிறான். சுந்திரத்திடம் இருக்கும் இந்த நல்ல குணத்தை அவன் தன்னிடம் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே தெரிந்துகொண்டுதானோ என்னவோ ஜானகி அன்றொரு நாள் அவனிடம் அப்படிச் செய்யச் சொன்னாள்! ''இந்தாங்க, தன் கையால் கட்டின தாலிக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் பண்ணிட்டு அவரு போயிட்டாரு. அந்தத் தாலியை நானும் எந்த அர்த்தமும் இல்லாமப் போட்டுக்கிட்டிருக்கேன். இப்பவே இதைக் கழற்றி உங்க கையில தர்றேன். இந்த சாமி படத்துக்கு முன்னாடி நீங்களே இதை எனக்கு மாட்டிவிடுங்க'' என்று சொல்லி உடனே அந்தத் தாலியைக் கழற்றவும் போன ஜானகியை சுந்தரம் தடுத்துவிட்டான். ''ஜானகி புருசன் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரிஞ்சுக்காம ஒரு பொண்ணு தன்னுடைய தாலியைக் கழட்டுறது ரொம்பப் பாவம், அதனால என்ன, தாலியைக் கழற்ற வேணாம். நீ இதுல இருக்கிற முடிச்சை என்கிட்ட காட்டு, அதை அவிழ்த்துவிட்டு புதுசா நானே மூணு முடிச்சு போட்டுடுறேன்''. என்று மூன்று முடிச்சையும் அவிழ்த்துப் போட்டுவிட்டான் சுந்தரம். இது நடந்து எத்தனையோ ஆண்டுகள்.... யசோதாவுக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்தது இது. அதே யாசோதாவுக்கு இருபத்தொரு வயதாகும்போதும் ஒன்று நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. சுந்தரம் வீட்டில் இருந்தான். கதவைத் தட்டியது யாரென்று பார்க்க ஜானகி கதவைத் திறந்த போது அறுபது வயதை எட்டிப்பிடித்தபடி ஒரு கையால் வாசல் தூனைப் பிடித்தபடி நின்ற அந்த உருவத்தைப் பார்த்து ஜானகி கையும் ஓடாமல் காலும் ஓடாமல் கண் பிதுங்கிப் பேதலித்து நின்றபோது நிலைமையை உணர்ந்து கொண்ட சுந்தரம் ''வாங்கண்ணே'' என்று முகமலர்ச்சியோடு சொல்லியும் அதைத் தாங்கிக்கொள்ளத் திராணியில்லாமல் அந்த வீட்டு அஞ்சடியிலேயே படுத்தவர்தான் ஜெயராமன். அதன் பிறகு அங்கே அவர் இருந்த ஒரு வாரத்தில் இல்லறத்தில் ஏற்பட்ட விரக்தியால் ஓடிப்போனதாகவும், தங்கா மலையில் ஒரு சாமியாரிடம் அடைக்கலமாக இருந்ததாகவும் திடீரென்று குடும்பத்தின்பால் நினைவு வந்ததாகவும் அதனால் ஓடி வந்ததாகவும் புலம்பிக் கொண்டிருந்தார். ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலி வலி என்று கத்த, சுந்தரமும் ஜானகியும் பிள்ளைகளுமாக அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே உயிர் போய்விட்டது. அப்போதே ஜெயராமன் தெய்வமாகிவிட்டார். இன்று பதினாறாம் நாள் கருமக்கிரியை செய்வதற்கு உற்றத்தாரும் சுற்றத்தாரும் வந்திருக்கிறார்கள். சற்று முன்புவரை இவர்களுக்குள் ஒரு பெரிய பிரச்சனை. விவாதித்துத் தீர்ப்புக்காண முடியாத பிரச்சனை. ஜானகியின் கணவன் ஜெயராமன் இறந்துவிட்டான். அதனால் ஜானகி தாலி அறுத்துத்தான் ஆகவேண்டும்! இப்படிச் சொன்னவர்கள் ஜெயராமனின் சொந்தக்காரர்கள். ''இத்தனை வருசமா உண்மையான கணவனா இருந்து, கஞ்சி தண்ணி ஊத்தி காப்பாத்துற சுந்தரம் உயிரோடதானே இருக்கான்! ஜானகி ஏன் தாலி அறுக்கணும்?'' இப்படிக் கேட்டவர்கள் சுந்தரத்தின் சொந்தக்காரர்கள். ஜானகி ஜெயராமனின் படத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்! சுந்தரம் வந்திருந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தான். விடிவதற்குள் முடிவு தெரிய வேண்டுமே! யார் முடிவு சொல்வது?
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விடிவதற்குள் முடிவு வேண்டும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ராமகிருஷ்ணர், கேசவ் சந்திரா, கொல்கத்தா, கங்கை நதிகரை, தக்ஷிணேஷ்வரி கோவில், பூசாரி, புத்திசாலி, விவேகம், வேதநூல்கள், செல்வம், காரணம், சமாதி, சீடர்கள், விஷப்பரீட்சை, பக்தர்கள் தலைப்பு: கடவுளுக்கான சான்று
ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர், பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார். கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர். இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது. என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார் கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது. ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார். அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர் கண்களில் கண்ணீருடன், "ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்". என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!. இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்? இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, "நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்." என்று செய்தி அனுப்பினார். ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். "கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்." என்றார். அவரது சீடர்கள், "இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை". என்றனர். ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர், "நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்." என்று கூறினார். கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார் என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. "நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள் இரவு பகல் எந்த நேரமும் வரலாம்". என்றார் ராமகிருஷ்ணர். கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், "முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன் உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்". என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார். கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும் அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார். நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் "இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்" என்று கூறினார். கேசவ் சந்திரா, "நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்" என்றார். ராமகிருஷ்ணர் சிரித்தார். "கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம். எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி இருப்பதில்லை. என்றார். கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், "அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே, எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்" என்று பேசிக் கொண்டனர். ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை. சீடர்கள், "நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்" என கூறிக் கொண்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில் ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, "இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்" என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன. கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து "என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்" என்றார். ராமகிருஷ்ணர், "என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன். படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை" என்றார். கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அன்றைய பொழுது இயல்பாகத்தான் விடிந்தது. பெரும் மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதும் வானத்தில் தென்படவில்லை. முந்தைய மாலைச் செய்திகளிலோ வானிலை அறிக்கைகளிலோ எந்த அதிகப்படி தகவலுமில்லை. ஆனால் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை மக்கள் அறியத் துவங்கியபோது பெருத்த ஆச்சரியமடைந்தனர். அந்த நாளின் துவக்கத்திலிருந்தே அதுவும் தொடங்கிவிட்டிருந்தது. முதலில் அதை யாரும் உணரவில்லை. அதை அறியத் துவங்கியபோது அது ஏதோ தற்செயலான ஒன்றுதான் என எண்ணினர். ஆனால் அந்த நாள் நீளத் தொடங்கியபோதும் அது தொடர்ந்தது. யாராலும் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. காலைச் செய்தி அறிக்கைகளில்தான் அது வெளிப்படையாகத் தெரிந்தது. அலுவலகம் கிளம்பும் அவசரத்துடன் சிற்றுண்டியை உண்டபடியே டி.வியில் காலைச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் கனகலிங்கம். வானிலை அறிக்கை முடிந்து மீண்டும் தலைப்புச் செய்திகள் துவங்கிய போதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். நாசூக்காக அவர் வாய்க்குள் திணித்த ஆஃப் - பாயிலில் இருந்து ஒரு சொட்டு மஞ்சள் கூழ் அலுவலகத்துக்கென அணிந்திருந்த உடையில் விழுந்ததைக்கூட லட்சியம் செய்ய முடியாத அளவுக்கு அந்த மாற்றம் அவருக்கு பெரு வியப்பைத் தருவதாக இருந்தது. ''மைதிலி பார்த்தாயா இன்றைய டி.வி நியூஸில் ஒரு விளம்பரம் கூட வரவில்லை.'' அவர் உள்ளறையை நோக்கி ஆச்சரியத்துடன் குரல் கொடுத்தார். உள்பாவாடை முடிச்சை அப்போதுதான் முடிந்திருந்த மைதிலி எந்த அவசரமும் காட்டாமல் டர்க்கி துண்டு ஒன்றை மேலே போட்டுக் கொண்டு வரவேற்பரைக்கு வந்தார். செய்தி அறிக்கை முடிந்து தொலைக்காட்சி அறிவிப்பாளர் வியாபார உலகம் நிகழ்ச்சியில் அன்று இடம்பெறப் போகும் பிரிவுகளை முன்னறிவித்துக் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் முடித்ததும் ஒரு இன்ஜின் ஆயில் விளம்பரமோ, டயர் கம்பெனி விளம்பரமோ வரும். டயர் கம்பெனியின் ''உங்கள் கார்களுக்கு சிறகு பொருந்துங்கள்'' என்ற படி கிராபிக்ஸில் சிறகாக இருந்து வட்டவடிவ டயராக மாறும் விளம்பரம்கூட அவர்களது மனத்திரையில் அனிச்சையாக ஓடியது. ஆனால் விளம்பரம் ஏதுமின்றி நிகழ்ச்சி தொடர்ந்தது. மைதிலியும் ஆச்சரியமடைந்தாள். கனகலிங்கம் மஞ்சள் கரு கறையுடனே அலுவலகம் கிளம்பினார். ''என்னவாயிற்று இந்த விளம்பரங்களுக்கு? கார்ப்பரேட்டுகள் இனி வியாபாரத்தைத் தொடரப்போவதில்லை என முடிவெடுத்தாயிற்றா?'' மக்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் மிக்கவர்களாகப் பேசிக் கொண்டனர். அன்று எந்தத் தொலைக்காட்சியும் விளம்பரங்களை ஒளிபரப்பவில்லை. நீண்ட விளம்பரங்கள், ஒரு வரி விளம்பரங்கள், மின்னல் நேர விளம்பரங்கள். திரையினடியில் நகரும் சிறு விளம்பர வரிகள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. வழக்கமான ஸ்பான்ஸர்ஷிப் நிகழ்ச்சிகள் கூட விளம்பரங்கள் இல்லாமலே ஒளிபரப்பாயின. ''எய்ட்ஸை தடுக்க ஆணுறை உபயோகியுங்கள்,'' ''இன்னின்ன தேதியில் போலியோ சொட்டு மருந்து போடுங்கள்'' போன்ற அரசு சார் விளம்பரங்கள் கூட ஒளிபரப்பாகாததுதான் இன்னும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விளம்பரங்கள் இல்லாத காரணத்தால் தொலைக்காட்சிகள் ஒரு வினோத, ஆனால் தவிர்க்க முடியாத பிரச்சினையைச் சந்தித்தன. விளம்பரங்கள் இன்மையால் நிகழ்ச்சிகள் சீக்கிரமே முடிந்தன. அடுத்த நிகழ்ச்சியை முன்னறிவிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே ஒளிபரப்ப வேண்டியிருந்தது. நேரத்தை இட்டு நிரப்ப சில நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. செய்தி அறிக்கைகள் தவிர்த்து ஏனைய நிகழ்ச்சிகள் எல்லாமே நேரப்படி ஒளிபரப்ப இயலாத நிலைக்கு ஆளாயின. விளம்பரங்களையே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய சில தொலைக்காட்சிகள் தங்களது முழு ஒளிபரப்பையுமே ரத்து செய்திருந்தன. சில புகழ்பெற்ற தொடர்களும், நிகழ்ச்சிகளும் விளம்பரங்கள் இன்றி ஒளிபரப்பானபோது அவை எடுத்துக்கொண்ட நேரம் வெகு சொற்பமாக இருந்தது. இப்படியொரு அபத்த நிலையைத் தவிர்க்க ஒரு தொலைக்காட்சி, தான் ஒளிபரப்பும் தொடர்களின் இரண்டிரண்டு பாகங்களை ஒன்றாகச் சேர்த்து ஒளிபரப்பியது. விளம்பரங்கள் இல்லாததால். ரிமோட் கண்ட்ரோல்கள் கிட்டத்தட்ட தேவையற்றனவாகி விட்டிருந்தன.. அன்று மாலையான போது தொலைக்காட்சிகள் விளம்பரங்கள் இன்றி ஒளிபரப்பாகும் செய்தி பெரும்பாலான மக்களை எட்டி விட்டிருந்தது. மக்கள் இதை அக்கம்பக்கத்தாரிடம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டனர். சென்னை தீவுத் திடலில் குழுமிய ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் ''வெகுஜன ஊடகங்கள் மக்கள் நல நோக்கிற்கு திரும்பிவிட்டமைக்காக'' நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் நிறைவடையத் துவங்கியபோது உலகெங்கும் எல்லாத் தொலைக்காட்சியிலும் இதே நிலை தான் என்ற செய்தி தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், பேக்ஸ் வழியாகக் கிடைத்தன. ஆனால் தாங்கள் விளம்பரங்களைத் தவிர்ப்பது குறித்த செய்திகளை எல்லாத் தொலைக்காட்சிகளுமே திட்டமிட்டுத் தவிர்த்தன. மறுநாள் பத்திரிகைகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அடுத்த நாள், நல்லவேளை பத்திரிகைகள் விளம்பரங்களைத் தவிர்த்திருக்கவில்லை. அதோடு அவை தொலைக்காட்சிகளின் இந்த விளம்பரத் தவிர்ப்பை தலைப்புச் செய்திகளாக வெளியிட்டிருந்தன. தில்லியிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த சாஃப்ட்வேர் கம்பெனி விளம்பரத்திற்கு அருகிலேயே இவ்வாறு தலைப்பை அமைத்திருந்தது. ''தொலைக்காட்சிகளின் இன்னுமொரு பம்மாத்துதான் இந்த விளம்பரத் தவிர்ப்பு.'' ''இதே போல இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடர முடியுமா இவர்களால்? என ஒரு இந்திப் பத்திரிக்கை தனது தலையங்கத்தில் கேட்டிருந்தது. அதே பத்திரிக்கை தனது கடைசிப் பக்கத்திற்கு முந்தைய பக்கத்தில் ஏழாவது பத்தியில் சிறு அளவில் வெளியிட்டிருந்த செய்தியை மிகக் குறைவானவர்களே வாசித்தனர். அந்தச் செய்தி இதுதான். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் வீட்டிலிருந்தபடி நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க மார்ட்டின் ரூஸ் என்பவர் திடீரென தன் மண்டையால் தொலைக்காட்சிப் பெட்டியை மோதி உடைத்தார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை உளவியல் மருத்துவர் ஒருவர் பரிசோதித்தார். திடீரென விளம்பரங்கள் இல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்ததே அவரது இந்த மனப் பிறழ்ச்சிக்குக் காரணம் என்று பிறகு அவர் தெரிவித்தார். தமிழ் தினசரி ஒன்றில் வெளியாகியிருந்த ஒரு செய்தியும் மிகுந்த சுவாரஸ்யமூட்டுவதாக இருந்தது. சேலம் மாவட்டத்தில் சின்னராயன் பட்டி எனும் கிராமத்தில் தாய்மார்களிடையே மாலை ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியைப் பார்த்தபடியே குழந்தைகள் சாப்பிடத் தொடங்கி நிகழ்ச்சி முடியும்போது நன்றாகச் சாப்பிட்டு விடுவார்களென்றும் கூறப்படுகிறது. ஆனால் நேற்று ஒரு குழந்தைகூட சரியாகச் சாப்பிடவில்லை. காரணம் வழக்கமாக அந்நிகழ்ச்சியின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகாததுதான் என்றும் அச்செய்தி தெரிவித்தது. தொலைக்காட்சி உலகின் பெரும்புள்ளிகள் தொடர்ந்து மௌனம் சாதித்தனர். அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு இதில் எங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என்றோ இதுபற்றி கருத்து தெரிவிக்க இயலாது என்றோ கூறியிருந்தனர். இரண்டாவது நாளும் தொலைக்காட்சிகள் விளம்பரங்கள் இன்றியே ஒளிபரப்பைத் தொடர்ந்தன. மூன்றாவது நாளும் இது தொடர்ந்தபோது மக்களிடையே ஒருவித அசௌகரிய உணர்வு உண்டாகிவிட்டிருந்ததை கவனிக்க முடிந்தது. சென்னை வடபழனியில் மொட்டைமாடியில் வடாம் காயவைத்த படியே இரண்டு பெண்கள் பேசிக்கொண்டனர். ''என்ன கண்றாவிடி இது, ஒரு அட்வர்ட்டைஸ்மண்ட் கூட பார்க்க முடியல'' ''ஆமான் மாமி. இரண்டு நாளா கோக் விளம்பரத்துல அமீர்கான பார்க்காம எனக்குக் கூட என்னமோ மாதிரி இருக்கு.'' அன்றைய பி.பி.சி செய்தி அறிக்கைகள் ஒன்றில் தொலைக்காட்சிகளின் விளம்பரத் தவிர்ப்பு பற்றிய செய்தி ஒன்று இடம் பெற்றது. ஏன், எதற்காக இந்த விளம்பரத் தவிர்ப்பு என காரணங்கள் எதையும் குறிப்பிடாமல் மேலோட்டமாக ஒரு விஷயம் மட்டும் சொல்லப்பட்டது. விளம்பரங்கள் இன்றி தொலைக்காட்சியைப் பார்ப்பது சகிக்க முடியாததாக இருக்கிறது, உடன் விளம்பரங்களை ஒளிபரப்புங்கள் எனத் தங்களது லண்டன் தலைமை அலுவலகத்துக்கு இரண்டாயிரத்து அறுநூற்று இருபது தொலைபேசி அழைப்புகளும், ஆயிரத்துப் பன்னிரண்டு மின்னஞ்சல்களும். பேக்ஸ் செய்திகள் இருநூறும், நூற்றுப் பதினான்கு பேர் நேரில் வந்தும் தெரிவித்தனர் என்பதே அச்செய்தி தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் காட்சித் தொடர்பு ஊடகவியல் பேராசிரியர் ஹர்வீந்தர் சௌராஷ்ரா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ''தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் வேறு வேறு அல்ல. இரண்டுமே மற்ற ஒன்றின் பிரிக்க முடியாத பகுதி.'' அம்மூன்று நாள் நிலவரப்படி ஒட்டுமொத்த தொலைக்காட்சி பார்க்கும் வீதம் குறைந்திருந்ததாகப் புள்ளி விவரங்கள் கூறின. தரப் பட்டியலில் நிகழ்ச்சிகள் எல்லாமே மிகக் குறைந்த பார்வையாளர் வீதத்தைக் கொண்டிருந்தன. நான்காம் நாள் பத்திரிகைகளில் இந்த விளம்பரத் தவிர்ப்புச் செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வழக்கமான செய்திகள் முக்கிய இடம் பிடித்திருந்தன. இந்திய மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு தினப் போட்டி கட்டக்கிலிருந்து அன்று நேரடி ஒளிபரப்பானது. சில தனியார் தொலைக்காட்சிகளும் தூர்தர்ஷனும் ஆட்டத்தை ஒளிபரப்பின. எதிர்பார்த்தபடியே ஆட்டத்தினிடையே விளம்பரங்கள் இடம் பெறவில்லை. ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்குமான இடைவெளிகளில் காமிராக்கள், பேட்ஸ்மேன்கள் கையுறைகளைக் கழற்றுவதையும் மீண்டும் அணிவதையும், மீண்டும் கழற்றி மீண்டும் அணிவதையும், ஹெல்மெட்டை சரி செய்வதையும் ஃபீல்டர்கள் சோம்பலுடன் தொப்பியைக் கழற்றி நடு மண்டையைச் சொறிந்து கொள்வதையும், மென்று கொண்டிருக்கும் பபுள்கம்மை நாக்கு நுனிக்குக் கொண்டுவந்து பார்த்துவிட்டு மறுபடி மெல்லுவதையும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தன.. விக்கெட் விழுந்த மறு வினாடி ரீப்ளே கூட இல்லாமல் உடன் விளம்பரங்களைப் பார்த்துப் பழகிவிட்டிருந்தமையால் விக்கெட் விழுந்த பிறகும் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மேட்ச் பார்க்க வேண்டியிருந்தது. ''நான் பார்த்துக் கொண்டிருப்பது கிரிக்கெட் மேட்ச்தானா என எனக்கே சந்தேகம் வந்து விட்டது'' என்றார் மேட்ச் பார்க்கவென்று சிக்லீவ் போட்டிருந்தும் விளம்பரமற்ற மேட்ச்சைப் பார்க்கச் சகியாமல் மதியமே அலுவலகம் திரும்பி விட்டிருந்த கார்ப்பரேஷன் ஆபீஸ் கிளார்க் நாராயணன். உலகம் முழுவதும் மூன்றிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளின் நடத்தையில் கடந்து மூன்று நாட்களாக ஒருவித மாற்றம் காணப்படுவதாக ''நியூ சயின்டிஸ்ட் பத்திரிகை தான் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தது. உலகமெங்கும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அது தன் கட்டுரையை அமைத்திருந்தது. கட்டுரையின் சாராம்சம் இதுதான். ''மூன்று முதல் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் டி.வி விளம்பரங்களால் பெரிதும் ஈர்க்கப்படுபவர்கள். டி.வி.யில் இவர்கள் நிழ்ச்சிகளை விட விளம்பரங்களையே அதிகம் ரசிப்பவர்கள். மூன்று நாட்களாக விளம்பரங்களைப் பார்க்காத காரணத்தால் இவர்களிடையே ஒருவித மனச்சோர்வு உண்டாகியுள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் அது அவர்களது மனநிலையை தீவிரமாக பாதிக்கக் கூடும்.'' விளம்பரங்கள் ஒளிபரப்பாகாததால் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த கட்டாயம் தொலைக்காட்சிகள் விளம்பரங்களை ஒளிபரப்பியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய நாடாளு மன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏகமனதாக முடிவெடுத்தன. அன்று காலை பாரீஸ் நகர உயர் போலீஸ் அதிகாரிக்க ஒரு அனாமதேயக் கடிதம் வந்திருந்தது. பெயர் அறியாத நபர் ஒருவர் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் விளம்பரங்கள் ஒளிபரப்பாக வில்லையெனில் ஈஃபில் டவரை வெடி வைத்துக் தகர்க்கப் போவதாக மிரட்டியிருந்தார். விளம்பரங்களைத் தொலைக்காட்சிகள் தவிர்ப்பதற்கு எதிரான குரல்கள் மெதுவாகத் தொடங்கி உலகின் எல்லாத் திசைகளிலும் இருந்து வலுவாக ஒலிக்கஆரம்பித்தன. வாடிகன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து தேசங்களின் தலைவர்களும், தொலைக்காட்சிகள் உடன் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டனர். ''மக்கள் வெகுகாலம் பழகிவிட்ட ஒன்றிடமிருந்து, ஒருவேளை அது மிகுந்த சங்கடம் தரும் ஒன்றாக இருந்தாலும் கூட, அவர்களை முற்றிலுமாகப் பிரிக்க நினைப்பது தாங்கிக் கொள்ள முடியாதது.'' கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் தலைவர் தனது வேண்டுகோளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த விளம்பரப் பிரச்சினையைத் தொடர்ந்து என்னென்ன விளைவுகள் எழக்கூடும், அதை சமாளிப்பது எப்படி என்பன போன்ற முக்கிய விஷயங்களை விவாதிக்க ஐ.நா சபை தனது அவசரக் கூட்டத்தை மறுநாள் கூட்ட விருப்பதாக அறிவித்தது. உலகின் அனைத்து முக்கிய தொலைக்காட்சி நிறுவனத் தலைமையிடங்கள் முன்பும் தர்ணாக்களும் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்றதாக மாலைச் செய்திகள் தெரிவித்தன. நாளை என்ன நடைபெறுமோ என்ற பதற்றத்துடன் நான்காவது நாள் முடிந்தது. ஐந்தாவது நாள் சூரியன் கிழக்கிலிருந்தே உதித்தது. தொலைக்காட்சிகள் எதுவுமே நடவாதது போல, அலட்டிக் கொள்ளாமல் விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். எந்த அசௌகரியமும் இன்றி டி.வி. பார்த்தனர். ரிமோட் கண்ட்ரோல்கள் மீண்டும் அவர்கள் கைகளில் தவழ ஆரம்பித்தன.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூரியன் உதிக்காத கிழக்கு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பேருரை, பூதம், பாத்திரம், நீர், கிணற்று, மரம், சோதனை, கஞ்சி, கட்டில், பை, பூசனி, சாக்கு தலைப்பு: ஒரே அடியில் இருநூறு பேர்
முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் செருப்புத் தைப்பவன் ஒருவன் இருந்தான். இங்கு யார் என்னை மதிக்கிறார்கள்? நமக்கு நல்வாய்ப்பு தலைநகரத்தில் காத்திருந்தாலும் காத்திருக்கலாம். இளவரசியைக் கூட நான் மணந்தாலும் மணக்கலாம், என்று நினைத்தான் அவன். அறிவு நிரம்பிய அவன் கடைக்குச் சென்று கட்டி வெண்ணெய் வாங்கினான். அதைத் தன் மேசையின் மேல் வைத்தான். நான்கு நாட்கள் சென்றன. அந்த வெண்ணெயைப் பார்த்தான் அவன். அது நிறைய ஈக்கள் இருந்தன. தான் செய்து வைத்திருந்த செருப்பு ஒன்றை எடுத்தான். அந்த வெண்ணெயில் ஓங்கி அடித்தான். நிறைய ஈக்கள் செத்தன. ஏராளமான ஈக்கள் துடிதுடித்தன. அவற்ளை எண்ணினான் அவன். இறந்த ஈக்களின் எண்ணிக்கை இருநூறாக இருந்தது. அடிபட்டவற்றின் எண்ணிக்கை முந்நூறாக இருந்தது. அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடைத் தெருவிற்குச் சென்ற அவன் வீரர்கள் அணியும் சீருடை வாங்கினான். அதை அணிந்து கொண்டு கம்பீரமாகத் தலை நகரத்துக்குச் சென்றான். அரசவைக்குள் நுழைந்த அவன், அரசர் பெருமானே! என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் சிறந்த வீரன். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த போரில் நான் ஒருவனே இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன், என்றான். அவனை மேலும் கீழும் பார்த்தான் அரசன். உன்னைப் பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லை. தோற்றத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது. உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், என்றான். கட்டளை இடுங்கள் அரசே! இந்த வாளும் என் உயிரும் இனி உங்களுடையது, என்று வீரமாகப் பேசினான் அவன். வீரனே! தலைநகரை அடுத்து உள்ள காட்டில் ஒரு பூதம் உள்ளது அது அவ்வப்பொழுது நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களைத் தூக்கிச் சென்று சாப்பிடுகிறது. எத்தனையோவீரர்கள் அதைக் கொல்லப் புறப்பட்டார்கள். யாருமே உயிருடன் திரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள், என்றான் அரசன். அரசே என் வீரத்திற்கு இதைப் போன்ற பெரிய வேலையைத்தான் எதிர்பார்த்தேன். நான் அந்தப் பூதத்தின் தலையைக் கொண்டு வருகிறேன். எனக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கேட்டான் அவன். யாராலும் செய்ய இயலாத செயல் இது. நீ சொன்னபடி செய்து முடித்தால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், என்றான் அரசன். நான் அந்தப் பூதத்தைக் கொன்றுவிட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டுக் கையில் பிடித்த வாளுடன் காட்டிற்குள் நுழைந்தான் அவன். எவ்வளவு பெரிய கூர்மையான வாளும் பூதத்தை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக வலிமையாக வெட்டினாலும் அதற்குச் சிறு காயம்தான் ஏற்படும், என்பதும் அவனுக்குப் புரிந்தது. தன் கையில் இருந்த வெண்ணெயை மாவில் உருட்டிப் பந்து போலச் செய்து கொண்டான் அவன். பார்ப்பதற்கு அது உருண்டையான கூழாங்கல் போல இருந்தது. அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். குருவி ஒன்றைப் பிடித்த அவன் அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். அருகே இருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் பெரிய பூதம் ஒன்று அங்கே வந்தது. மூக்கை உறிஞ்சிய அது, இன்று எனக்கு நல்ல வேட்டை, மனித வாடை வீசுகிறதே! எங்கே இருக்கிறாய்? என்னிடம் இருந்து தப்ப முடியாது, என்று மகிழ்ச்சியுடன் கத்தியது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், ஏ! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான் இந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகத்திலேயே நான் தான் வலிமையானவன். சென்ற வாரம் கூட ஒரே அடியில் இருநூறு பேரை கொன்று முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன். உன்னைவிட நான் வலிமையானவன். என் ஒரு அடியைக் கூட நீ தாங்க மாட்டாய், என்று பெருமை பேசினான் அவன். நீ வலிமையானவன் என்றால் நிரூபித்துக் காட்டு, என்றது பூதம். அப்படியா? என்ற அவன் தன் சட்டைப் பையிலிருந்த கூழாங்கல் உருண்டையை எடுத்தான். அந்த உருண்டையை வானத்தில் தூக்கிக் போட்டுப் போட்டுப் பிடித்தான். இது என்ன சொல் பார்ப்போம், என்று கேட்டான், அவன். உருண்டையான கூழாங்கல், என்றது பூதம். என் வலிமையைப் பார், என்ற அவன் அந்த வெண்ணெய் உருண்டையைக் கைக்குள் வைத்து அழுத்தினான். அது பொலபொலவென்று தூள் தூளாகிக் கீழே விழுந்தது. உண்மையை உணராத அந்த முட்டாள் பூதம் அவனை மிகுந்த வலிமையானவன் என்று நினைத்தது. கீழே வா. உனக்கு இன்னும் ஒரு சோதனை, என்றது அது. எப்படியும் பூதத்தை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கீழே குதித்தான் அவன். தரையில் கிடந்த சிறு கல்லை எடுத்தது அது. என் வலிமையைப் பார், என்று சொல்லி அந்தக் கல்லை உயரே வானத்தை நோக்கி வீசியது. அரை மணி நேரம் கழித்து அந்தக் கல் கீழே விழுந்தது. எங்கே இதைப் போலச் செய்து உன் வலிமையைக் காட்டு, என்றது பூதம். நான் கல்லை மேலே வீசினால் கீழே விழவே விழாது. வான் உலகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று விடும். என்று பெருமையுடன் சொன்ன அவன் தன் பைக்குள் இருந்த சிட்டுக் குருவியை எடுத்தான். அதை மேலே தூக்கி எறிந்தான். அப்படியே பறந்து சென்றது அது. பூதம் நீண்ட நேரம் காத்திருந்தது. மேலே எறிந்த கல் கீழே விழவே இல்லையே. இவனிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் என்னைக் கொன்று விடுவான், என்று நினைத்தது அது. நீ என் விருந்தினன். என் மாளிகைக்கு வா. விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், என்று அன்புடன் அழைத்தது அது. இருவரும் பூதத்தின் மாளிகையை அடைந்தனர். அந்த மாளிகைகளைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது. சமையல் செய்ய விறகு இல்லை. காட்டிற்குச் சென்று சிறிது விறகு கொண்டு வா, என்று அவனைப் பார்த்துச் சொன்னது பூதம். உடனே அவன், எதற்காக விறகு? நான் அந்தப் பெரிய மரத்தை அப்படியே இழுத்து வருகிறேன், என்றான். அந்தப் பெரிய மரத்தைப் பார்த்தது பூதம். அது கீழே விழுந்தால் தன் தோட்டம் பாழாகி விடும். மாளிகைச் சுவரும் இடிந்து விடும் என்று நினைத்தது அது. பயந்து போன அது நானே, சென்று விறகு கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் விறகுடன் அங்கே வந்தது அது. இன்னும் எப்படி எல்லாம் அதை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். பூதம் அவனைப் பார்த்து. சமைப்பதற்கு நீர் வேண்டுமே. கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில் நீர் கொண்டு வா, என்றது- பாத்திரத்தில் நீர் கொண்டு வருவதா? எனக்கு எவ்வளவு கேவலம், வலிமை உடைய நான் அந்தக் கிணற்றையே இங்கே இழுத்து வந்து விடுகிறேன். அதைக் கட்டி இழுக்க உறுதியான கயிறு ஒன்றைக் கொடு, என்று கேட்டான் அவன். இதைக் கேட்ட பூதம் மேலும் பயந்தது. நீ நீர் கொண்டு வர வேண்டாம். நானே கொண்டு வருகிறேன், என்றது அது. இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அங்கிருந்த கட்டிலில் அவன் படுத்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த இன்னொரு கட்டிலில் பூதம் படுத்துக் கொண்டது. தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்த அவன் தூங்காமலே இருந்தான். பூதம் தூங்கி விட்டதை அறிந்த அவன் கட்டிலிலிருந்து மெல்ல இறங்கினான். ஒரு பூசனிக் காயைத் தன் கட்டிலில் வைத்தான். அதன் மீது போர்வையைப் போட்டு மூடினான். பார்ப்பதற்குக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது. பிறகு கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டான் அவன். நள்ளிரவு நேரம், பூதம் கட்டிலை விட்டு எழுந்தது. பக்கத்தில் இருந்த பெரிய இரும்புத் தடியைத் தூக்கியது. கட்டிலில் படுத்திருந்த அவன் மண்டையில் தன் வலிமை கொண்ட மட்டும் அந்தத் தடியால் அடித்தது. போர்வைக்குள் இருந்த பூசனிக் காய் உடைந்து சிதறியது. அவன் இறந்து விட்டான் என்று மகிழ்ந்தது அது. தன் கட்டிலில் படுத்த அது குறட்டை விடத் தொடங்கியது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த அவன் எழுந்தான். பூசனிக் காய்த் துண்டுகளை எடுத்து வெளியே வீசினான். மீண்டும் அந்தக் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான். பொழுது விடிந்தது. விழித்த பூதம் கட்டிலில் அவன் உயிருடன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அவன். இரவு நன்றாகத் தூங்கினாயா? உன் தூக்கத்திற்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று கேட்டது அது. நள்ளிரவிலே ஏதோ கொசு ஒன்று என் காதில் கடித்தது போல இருந்தது. புரண்டு படுத்தேன். இங்கே கொசு அதிகமா? என்று கேட்டான் அவன். என் வலிமை எல்லாம் பயன்படுத்தி இருமூபுத் தடியால் இவன் மண்டையில் ஓங்கி அடித்தேன். யாராக இருந்தாலும் இறந்திருக்க வேண்டும். இவனோ கொசு கடித்தது போல இருந்தது என்கிறான். இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டோமே. எப்படித் தப்பிப்பது? என்று பயந்து நடுங்கியது அது. நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால் என்ன? என்று கேட்டான் அவன். என்ன போட்டி? என்று கேட்டது அது. ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி வைப்போம். அதில் பாதியை நான் சிறிது கூட மென்று தின்னாமல் அப்படியே குடித்து விடுகிறேன், என்றான் அவன். நான் நம்ப மாட்டேன். நீ மென்றுதான் தின்றிருப்பாய். நீ மெல்லாமல் விழுங்கி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அதை நான் என் வயிற்றுக்குள் இறங்கியா பார்க்க முடியும்? என்று கேட்டது அது. உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் வயிற்றில் ஒரு பகுதியைக் கிழித்துக் காட்டுகிறேன். பிறகு உனக்கே நான் மென்று தின்றேனா இல்லையா என்பது விளங்கும், என்றான் அவன். சரி என்ற பூதம் கஞ்சி சமைக்கத் தொடங்கியது. வேறு அறைக்குச் சென்ற அவன் சாக்குப் பையை எடுத்துத் தன் வயிற்றில் கட்டிக் கொண்டான். அதன் வாய்ப்பகுதி தன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே பை இருப்பது தெரியாத வண்ணம் மேலே சட்டையை போட்டுக் கொண்டான். பூதம் கஞ்சி வைத்திருந்தது. அதைப் பாத்திரத்தோடு எடுத்தான் அவன். தன் தொண்டைக்கு அருகே இருந்த பைக்குள் அதைச் சிறிது சிறிதாக ஊற்றினான். குடிப்பது போல நடித்தான். சூழ்ச்சியை அறியாத பூதம் அவன் குடிப்பதாகவே நினைத்தது. பூதத்தைப் பார்த்து அவன், நான் கஞ்சியை எப்படிக் குடித்து இருகூகிறேன் என்று பார். சிறிது கூட மெல்ல வில்லை. அப்படியே அரிசிச் சோறு இருக்கும். என்று சொல்லி கொண்டே கத்தியால் தன் வயிற்றைக் கிழித்தான். உண்மையில் அவன் கிழித்தது வயிற்றுக்குள் கட்டப்பட்டிருந்த சாக்கையே. அவன் வயிற்றிலிருந்து கொண்டிய கஞ்சியைப் பூதம் பார்த்தது. உன்னைப் போல நானும் செய்கிறேன், என்ற அது. இன்னொரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அப்படியே குடித்தது. நான் எதையும் மெல்லவில்லை. அப்படியே குடித்து இருக்கிறேன் பார், என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தது அது. குருதீ கொட்ட குடல் வெளியே வந்து துடிதுடித்து அங்கேயே இறந்தது அது. வெற்றி வீரனாகத் திரும்பிய அவனுக்கும் இளவரசிக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் நடந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ் அந்த ஒற்றை மாட்டு வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டதற்கு அடையாளமாக சில மனிதர்களையும், கட்டடங்களையும் கடந்து போனது. கவலையுடன் அமர்ந்திருக்கும் தன் கணவன் லட்சுமணராவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரத்னாபாய். வினாடிக்கு வினாடி பல அவதாரமெடுத்து ஜொலிக்கும், அழும், கர்ஜிக்கும், ஆனந்திக்கும், சவால்விடும், ஏமாற்றம் அந்த முகம் குராவிப்போய் வண்டியின் அசைவிற்கு தக்கபடி ஆடிக் கொண்டிருந்தது. பத்து இருபது வருடங்களுக்கு முன்னர் ரத்னாபாய் பல தடவை இதே ஊருக்கு தன் கணவருடன் வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் வண்டி ஊருக்குள் நுழைந்த உடனேயே ஊரே திரண்டு நின்று வரவேற்கும். ஊர் நாட்டாண்மையும், முக்கியஸ்தர்களும், வண்டியைச் சுற்றி நிற்க இளவட்டங்கள் ஒவ்வொரு பெட்டியாக போட்டி போட்டுக் கொண்டு இறக்கி வைப்பார்கள். அந்த பெட்டிகளுக்குள் லட்சுமணராவ் இந்த உலகத்தை அடக்கி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், ராவணன், மாரீசன், ஜடாயு, வாலி அப்புறம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், குந்தி, பாஞ்சாலி, துரியோதனன், கர்ணன், ஏகலைவன், கிருஷ்ணர், பீஷ்மர், துரோணாச் சாரியார், அரவான், அரக்கன், கீசகன், தாடகை, சூர்ப்பனகை அனைவரும் பெட்டிக்குள்தான் உறங்குகிறார்கள், நல்லதங்காளும், அவளுடைய பிள்ளைகளின் உயிர்குடித்த அந்தக் கிணறும் கூட பெட்டிக்குள் தான். வண்டி மேலக்களத்தில் வந்து நின்றது. சோகத்துடன் மெதுவாக இறங்கும் தன் கணவன் லட்சுமணராவை உற்றுப்பார்த்துக் கொண்டே வண்டிக்குள் தூங்கும் தன் மகன்களையும், மருமகளையும் தட்டி எழுப்பினாள் ரத்னாபாய். மாட்டைக் கொண்டுபோய் கட்டுவதற்காக இடம் தேடியலைந்த தன் மகன் கோபால்ராவை பார்த்துக் கொண்டே நின்றார் லட்சுமணராவ், வண்டியின் பக்கத்திற்கு யாருமே வராதது ரத்ணாபாய்க்கும் லட்சுமணராவுக்கும் வருத்தமளித்திருக்க வேண்டும், வண்டிக்குள்ளிருந்து இறங்கிய தன் மருமகளையும் மகள்களையும் கண்டவுடன் சில இளவட்டங்கள் நெருங்கி வந்து வேடிக்கை பார்த்தனர். கூடார வண்டியின் முதுகில் காளான்களைப் போல் தொங்கிக் கொண்டிருந்த நாலைந்து ஸ்பீக்கர் குழாய்களையும், இளம் பெண்களையும் மட்டுமே இளவட்டங்கள் உற்றப்பார்த்துக் கொண்டு நின்றனர். கூட்டத்தில் மெதுவாய் தலைகாட்டிய முத்துவீரன் தாத்தாவை அடையாளங்கண்டு கொண்டதில் லட்சுமணராவுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை. நடமாடும், பறக்கும், நீந்தும் அத்தனை ஜீவராசிகளையும் தன் கண்கள் வழியே கிரகித்து விரல் வழியே மலரச் செய்யும் சூட்சும கலை கற்ற கலைஞனல்லவா லட்சுமணராவ், அன்றாடம் தான் பார்க்கும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கவனித்து, சூர்ப்பனகைக்கு ஏற்ற நடையை உள் வாங்கிக் கொண்டு தன் விரலசைவில் சுழலும் நிழலுருவப் பாவைக்கு ஏற்றி திரையில் பரவசப்படுத்தும் நவீன கம்பன் லட்சுமணராவ், பீமன் நடையும், அர்ச்சுனனின் ஆர்ப்பரிப்பும், கிருஷ்ணனின் சாந்தமும், பாஞ்சாலியின் ஆவேசமும், கர்ணனின் கர்ஜனையும், குந்தியின் வருத்தம் கலந்த பதட்டமும் லட்சுமணராவின் விரல் வழியே திரையில் அசையும் ரசனை அற்புதத்திலும் அற்புதம். ஊரைச் சுற்றிலும் மலைமலையாய் நிற்கும் படப்புகளையும், மரத்தடியில் கழுத்து மணியோசை எழும்ப அசைபோட்டுக் கொண்டு நிற்கும் மாடுகளையும் காணவில்லை. முத்துவீரன் தாத்தா தொழுவத்தில் எருமைகளுக்காக வைத்திருந்த இரண்டு கட்டு நாற்றுக்கூளத்தை கொண்டு வந்து கொடுத்தார். கூடார வண்டிக்கு அடியிலேயும், மரநிழல்களிலும் ஜாமன்களை இறக்கி வைத்துவிட்டு, தன்னுடைய பேத்திற்காக தொட்டில் கட்டிக் கொண்டிருந்தாள் ரத்னாபாய். இன்னும் இரண்டு மூன்று சிறுசுகள் வண்டிப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. கால மாற்றங்கள் பற்றியும், ஊர்களின் இன்றைய நிலவரம் பற்றியும், தங்களுடைய நிராதரவான நிலை பற்றியும் பேசிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தனர். முத்துவீரன் தாத்தாவும் லட்சுமணராவும், தன் மனசை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை சமயம் பார்த்து கேட்டார் தாத்தா. ''ராவ், இன்னிக்கி என்ன கத நடத்தப் போறீரு'' ''கதையா? கதையெல்லாம் மலையேறி எத்தனையே வருஷமாச்சு'' ''அப்புறம்...'' ஆச்சரியமாய் கேட்டார் வருஷமாச்சு'' ''ஆடலும், பாடலும்.'' சிரித்துக் கொண்டே சொன்னார் ராவ். ''அப்படின்னா'' ''சினிமாப்பாட்ட பாடவிட்டு, அதுக்கேத்தமாதிரி ஆம்பளையும், பொம்பளையும் சேர்ந்து ஆடுறது.'' துண்டால் தன் முதுகில் அழுக்கு உருட்டிக் கொண்டிருந்த முத்துவீரன் தாத்தாவின் மேலெல்லாம் ஒரே நேரத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டியதைப்போல் சுரீரென்று தைத்தது ராவ் சொன்ன வார்த்தைகள். தாத்தா ராவ் முகத்தையே உற்றப் பார்த்தார். ஒரே நேரத்தில் போர் வீரனாக, மானம் காக்கப் போராடும் பெண்ணாக, வஞ்சிக்கப்பட்ட ஏகலைவனாக, தன் குருதி வடிய கவசக் குண்டலம் அறுக்கும் கர்ணனாக, போர் செய்ய உபதேசிக்கும் கிருஷ்ணராக, பறவையாக, குரங்காக, யானையாக, குதிரையாக, அரக்கனாக, ரதமாக, நளின நடைப்பெண்ணாக பல்லுருக் கொள்ளும் லட்சுமணராவின் வார்த்தைகளா இது? முத்துவீரன் தாத்தா ஆச்சரியமாய் பார்த்தபடி பெருமூச்சுவிட்டார். சில வருஷங்களுக்கு முன்னால் ரத்னாபாயும், லட்சுமணராவும் தெய்வங்களைப் போல் வலம்வந்த ஊர்களில் இன்று ஏறிட்டுக் கூட பார்க்காமல் எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். இதே பாவைக்கூத்து வண்டி ஊருக்குள் நுழைகிறது. வண்டியைச் சுற்றிலும் ஊரே கூடி நிற்கிறது. முக்கியஸ்தர்களின் அறிமுகம். இரவு ஊர்க்கூட்டம் என்ன கதை படிக்க வைக்கலாம் என்ற விவாதம். வீட்டுக்கு இவ்வளவு வரிப்பணம் நிர்ணயம். கேலியோ கிண்டலோ செய்தால் தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம், எட்டு நாளோ பத்து நாளோ ராமாயணம் என்றால் ராமர் பட்டாபிஷேகம், மகாபாரதம் என்றால் வனவாசம் முடிய அன்று ஊரே திருவிழாக்கோலம். பக்கத்து ஊர்களிலிருந்து வந்து நிறைந்துகிடக்கும் வண்டிகள். ஊர்ப்பொதுவில் கொடுக்கும் வரிப்பணம் போக கோடி வேஷ்டி, சேலைகள், தானியங்கள், பயறுவகைகள், வத்தல், மல்லி என்று வண்டி நிறைந்துவிடும். பட்டாபிஷேகம் முடித்த மறுநாளே தன் விரலுக்குள் ஒளித்து கொண்டு வந்திருக்கும் மழையை பெய்ய வைப்பார் லட்சுமணராவ். பதினெட்டு நாள் குருசேக்ஷத்திரப் போரையே தன் விரலுக்குள் ஒளித்து வைத்திருக்கும் ராவால் காற்றையும், மேகத்தையும் ஒளித்து வைத்திருக்க முடியாதா? மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, சம்சாரிகள் சந்தோஷத்துடன் கும்பிட்டு வழியனுப்பி வைப்பார்கள். கடந்த காலத்தையெல்லாம் ஒன்று கூட்டி தன் நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு தொழுவத்தின் மூலையில் உட்கார்ந்து முகட்டு வளையையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் முத்துவீரன் தாத்தா. இந்த பாவைக் கூத்தைப் போல் எத்தனை கூத்துக்கள் வந்தன ஊர்தேடி. அவர்களெல்லாம் எங்கே எப்படி ஏன் தொலைந்து போனார்கள். சாமக்கோடாங்கி ராப்பிச்சை, பச்சை குத்துபவர்கள், காவடிப் பாட்டுக்காரர்கள், கிண்ணட்டிக்காரன், மரக்கால் ஆட்டம் மணியாட்டிக்காரன், பொழிப்பாட்டுக்காரன், அடக் கடவுளே இவர்களையெல்லாம் கால வெள்ளம் எங்கே கொண்டுபோய், எந்தக் கரையில் ஒதுக்கியது. எந்த நாகரீக சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டார்கள், கால இழுவைக்குள் மறைந்து தன் சுயமுகம் இழந்து உருத்தெரியாமல் மாறிப் போனார்களா என்ன? முத்துவீரன் தாத்தா துள்ளும் இளவட்டமாய், பொழிகளம் சுற்றி வரும் இருபது மாடுகள். பொழிப்பாட்டுக்காரன் வந்து களத்தில் நிற்கிறான். முத்துவீரன் தாத்தாவின் அப்பா கும்பிட்டு வரவேற்கிறார். தன் இஷ்ட தெய்வங்களை வணங்கிப் பாடிவிட்டு மாடுகளைப் பற்றி பாடுகிறான் பொழிப்பாட்டுக்காரன். கூட்டம் திரண்டு கூடி நிற்கிறது. பிணையலடிக்கும் ஒவ்வொரு மாட்டையும் பற்றி அதன் நிறம் சுழி, கள்ளப்பாய்ச்சல், சண்டி, ரத்தக்கண், சுண்டுவாதம், மொட்டைவால், ஒட்டுவால், மூழி, போர், மயிலை, செவலை, கழிச்சான், கடகாபல் ஓட்டை, குறுங்கால், என்று பலவித மாடுகள் - அதன் குணங்கள் சரம்சரமாக ராகம் தாளம் தவறாமல் வந்து கொண்டேயிருக்கிறது. கடேசியில் பாட்டை நிறுத்தியவன் இருபது மாடுகளில் முதன் முதலில் பிணையல் கண்ணியில் பூட்டியமாடு இந்த மாடுதான் என்று அடையாளம் காட்ட கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தப்பாத குறி. மாடுகளின் கால்களுக்குள் என்ன மகசூல் பிணையாக மிதிபடுகிறதோ அதில் மூன்று தரம் தன் இருகைகளாலும் அள்ளிக் கொள்ளலாம் இதுதான் பாட்டுக்கான கூலி. இதற்காகவே தைத்துக் கொண்டு வந்திருக்கும் அகன்ற நீண்ட சாக்குப்படுதாவை களத்தை ஒட்டி விரிக்கிறான். நீச்சலடிப்பவனைப் போல் பொழியின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு தன் நெஞ்சுக்கு முன்னால் தவசங்களை கூட்டி வைத்துக் கொண்டு மலையைத் தூக்கிக் கொண்டு பறந்து செல்லும் அனுமனைப் போல் பாடிக் கொண்டே, ஆயிரம் கண்கள் பார்த்திருக்க அப்படியே துள்ளிப் போய் அவன் விரித்த சாக்கில் உட்கார்கிறது தானியம். மூன்று தரம் அள்ளி அம்பாரமாய் மூட்டை கட்டியவுடன் அடுத்த களம் போகிறான். மேளக் களத்திலிருந்து மிதந்து வந்த சினிமா பாட்டின் ஒலி முத்துவீரன் தாத்தாவை இந்த உலகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. மெதுவாக நடந்த தெருவில் நின்று மேற்காமல் எட்டிப்பார்த்தார். நிறைய டியூப் லைட்டுகள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தன. மேடையைச் சுற்றிலும் ரொம்ப தூரத்திற்கு துணியால் கோட்டைச் சுவர் மாதிரி தடுப்பு எழுப்பியிருந்தார்கள். எட்டி நின்று பார்த்தாலும் உள்ளே பார்க்க முடியாதபடி உயரமாய் இருந்து தடுப்பு சினிமாப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இடையிடையே அறிவிப்பு செய்தான் கோபால்ராவ். ''அன்பார்ந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், தனுஷ் ரசிகர்களே... உங்களின் ரசனைக்கேற்ற பழைய புதிய பாடல்களைக் கொண்டு உங்களை கிறங்க வைக்கும், அழகிகளின் ஆட்டம் காணத் தவறாதீர்கள். சரியாக எட்டு மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். முதல் வகுப்பு இருபது ரூபா, இரண்டாம் வகுப்பு 10 ரூபா, மூன்றாம் வகுப்பு ஐந்தே ரூபாதான். இடையழகி, தொடையழகி, இடுப்பழகி, சிரிப்பழகி, என்று அத்தனை அழகிகளும் உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறார்கள், இளஞ்சிட்டுக்கள் இன்பமொட்டுக்கள், உங்களை மகிழ்விக்க இன்னும் சற்று நேரத்தில்...'' முத்துவீரன் தாத்தாவும் முண்டியடித்துக் கொண்டு செல்லும் கூட்டத்துடன் நின்றார். லட்சுமணராவும், ரத்னாபாயும் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து பெருமூச்சு விட்டார். திரைக்குப்பின்னால் லட்சுமணராவ் பக்கத்தில் ரத்னாபாய். மலை போல் குவிந்து கிடக்கும் தோல் பாவைகள், கால்விரல்களிலும், கை விரல்களிலும் பல முனைகளிலிருந்தும் கயிறுகளால் இணைக்கப்பட்டிருக்கும் பாவைகள். கைகளைச் சுண்டி பாவைப் பொம்மைகளை திரையில் காட்டிக் கொண்டிருக்கும் போதே வசனம் பேசும் வாய். வாயசைவில் உதிர்த்து வரும் வசனத்திற்கேற்ப பாவைகளின் உறுப்புகளை சுண்டியிழுத்து அசையச் செய்யும் ஆடச் செய்யும் கால் விரல்களின் லாவகம், ஒரே நேரத்தல் உடலின் அனைத்து உறுப்புகளும் லயத் தவறாமல் இயங்கி கத்தி, கதறி, ஆடி, பாடி, பறந்து, மறைந்து, அந்த மாயஜால நிழலுருவப் பாவைகளின் குவியல்களின் தங்களை மறந்து ரசித்து கைதட்டி, ஆரவாரித்து, ஆர்ப்பரித்து. குறிப்பிட்ட மணித்துளிக்குள் முடிக்க வேண்டிய இதய அறுவைசிகிச்கையில் அடுத்ததாக மருத்துவரின் கையில் என்ன ஆயுதம் இருக்க வேண்டுமா அதை யூகித்துணர்ந்து எடுத்துக் கொடுக்கும் நிபுணனைப் போல் ரத்னாபாய், கதையோட்டத்தின் அடுத்தவரிக்கு என்ன பாவை வேண்டுமோ தயாராக ராவின் கைகளில் திணிக்க வேண்டும். வினாடி பிசகினாலும் கதையோட்டம் மாறி, உருவங்கள் பொருந்தாது. கர்ணனுடன் போர் செய்ய அர்ச்சுனன் ஆய்த்தமானான் என்றவுடன், அர்ச்சுனனுக்குப் பதில் கிருஷ்னன் போய்விட்டால், யுத்தம் கிருஷ்ணனுக்கும் கர்ணனுக்கும் நடந்தேறி விடுகிற அபாயமுண்டு. லட்சுமணராவின் கண்கள் வழியே செல்லும் தேவலோக பாஷைகள்தான். ரத்னாபாயை கச்சிதமாக பாவைகளை எடுத்துக் கொடுக்க உதவுகின்றன போலும். கொச்சைத்தனமான இரட்டை அர்த்த காம ரசப் பாடல்களுக்கு கோபால்ராவும், அவனுடன் பிறந்த சகோதரிகளும் அரைகுறை ஆடைகளுடன் சேர்ந்து ஆடியதைப் பார்க்க சகிக்காதவராய் முத்துவீரன் தாத்தா வெளியே வந்தார். திரையுலக நிழலுருவப் பதுமைகளை தன் அந்தரங்க நாயகிகளாக வரித்துக் கொண்டு அமர்ந்திருக்க இளவட்டங்கள் உற்சாக மிகுதியால், ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் கைதட்டி, விசிலடித்து, ஆர்ப்பரித்ததோடு மேடையேறி அன்பளிப்பாக ரூபாய் நோட்டுக்களை பெண்களின் மேலெல்லாம் குத்தி நிரப்பினர். அன்னிய ஆடவரின் கை ஸ்பரிசம் பழகிப் போய்விட்டதோ என்னவோ, எந்த இடத்தில் தொட்டாலும் முகம் சுளிக்காமல் ரூபாய் நோட்டுக்கள் குத்துவதற்கு தங்கள் உடலைக் காட்டிக் கொண்டு சிரித்தபடியே நின்று போஸ் கொடுத்தனர் பெண்கள். ஒவ்வொரு பாடலுக்கும் ஆடி முடிந்ததும் வியர்வை வழிய ஓடிவரும் தன் மகள்களுக்கும், மருமகளுக்கும் ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள் ரத்னாபாய் திடீரென்று இன்னொரு அறிவிப்பை வெளியிட்டான் கோபால்ராவ். ''டான்ஸ் ஆடத்தெரிந்த இளவட்டங்கள் மேடைக்கு வரலாமென்றும், ஒரு பாடலுக்கு பெண்களுடன் சேர்ந்து ஆட இருபது ரூபாய் கட்டணமென்றும், அதே போல் நல்ல சேலைகள் இருந்தால் பெண்கள் கொடுத்து உதவும்படியும் காலையில் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் வேண்டுகோள் விட்டான்.'' இளைஞர் பணம் கொடுத்து பெண்களுடன் ஆடுவதற்கு போட்டி போட்டனர். புதுப்புது டிசைனில் சேலைகள் குவிந்து விட்டன. தன் சேலையைக் கட்டிக் கொண்டு ஆடிய பெண்கள் தனக்குப்பிடித்தவன் தொட்டு ஆடியதைத் தானே ஆடியதாக ரசித்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள். ஆடத் தெரியாமல் ஆசையில் மட்டும் மேடையேறிய உள்ளூர் இளைஞர்களை, வலுக்கட்டாயமாக பெண்கள் இழுத்து இழுத்து அணைத்து நெருங்கி ஆடியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. தொழுவத்தில் வந்து படுத்த முத்துவீரன் தாத்தாவுக்கு உறக்கம் வரவில்லை. தொடர்ந்து கொச்சைத்தனமான பாடல்களும் கூச்சலும் கும்மாளமும், விசில் சத்தங்களும் மிதந்து வந்து அவரை அலைக்கழிக்க எப்போது ஆட்டம் முடிந்தது... எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கினார். காலையில் அவருக்கு லட்சுமணராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக வந்த கூடாரத்தை எட்டிப் பார்த்தார். வேஷம் கலைக்காத பவுடர் பூச்சுக்கள் அழியாத அரங்கோலத்துடன் பெண்கள் தாறுமாறாகப் படுத்துக்கிடந்தனர். வெளியே பந்தலுக்குள் சத்தங்கேட்கவே உற்றுப்பார்த்தார். லட்சுமணராவ் தன்னுடையப் பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். முத்துவீரன் தாத்தா மறைந்து நின்று கவனமாய் கேட்டார். ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தா, அந்த பாட்டி மரத்தடியில் உட்கார்ந்து வடை வித்துக்கிட்டிருந்தா, ஒரு காக்கா வேகமா வந்து பாட்டியோட வடைய தூக்கிட்டு பறந்து போயி மரத்து மேல உட்கார்ந்திருக்கிக்சி. பாட்டி கூப்பாடு போட்டு அழுதா. அப்போ அந்த வழியா ஒரு போலீஸ்காரர் வந்தாரு. பாட்டி அழுதுக்கிட்டே போயி போலீஸ்காரர் கிட்ட சொன்னா. போலீஸ்காரர் வேகமாயப் போயி மரத்தடியில் நின்று காக்காயப்பாத்து, ''ஏய் காக்கா! ஒழுங்கா மரியாதையா பாட்டியோட வடையைக் குடுத்துரு. இல்ல ஒன்னய இந்த துப்பாக்கியால சுட்டுப் பொசுக்கிடுவேன்''னு சொன்னாரு அப்போ காக்கா சொல்லுச்சு, ''ஒம்ம சோலியப் பாத்துட்டு பேசாம போரும், இது எனக்கும் பாட்டிக்கும் உள்ள விவகாரம்'' அப்படின்னு சொல்லிட்டு வடையத் திங்கப் பார்த்துச்சு. ஒடனே போலீஸ்காரருக்கு கோபம் வந்து ''ஒழுங்கா குடுக்கப் போறயா இல்ல சுடவா?''னு கேட்கவும், காக்கா சொல்லிச்சு, ''நம்ம ரெண்டு பேரும் ஆளுக்குப் பாதியா பங்கு வச்சிக்கிருவம்'' அப்படின்னு சொல்லி பாதி வடைய பிச்சு கீழ போட்டுருச்சு. ஒடனே போலீஸ்காரர் துப்பாக்கிய கீழவச்சுட்டு குனிஞ்சு வடைய எடுக்கப் போனாரு. அப்ப காக்கா விருட்னு பறந்துவந்து துப்பாக்கிய தூக்கிட்டுப் போயி உச்சி மரத்துல உக்கார்ந்துக்கிருச்சு. ஒடனே போலீஸ்காரர் ''காக்கா.... காக்கா நாளைக்கு ஒனக்கு அஞ்சு வட வாங்கித் தாரன், என்னோட துப்பாக்கிய குடுத்திரு காக்கா''ன்னு கெஞ்சினாரு. காக்கா சொல்லிச்சு ''நீ என்ன பெரிய அரிச்சந்திரனா ஒன்னய நம்பமாட்டேன்போ''னு சொல்லிருச்சு. ''சத்தியமா என்னய நம்பு காக்கா''ன்னு போலீஸ் சொன்னாரு. ''சத்தியத்த நாம் நம்பவே மாட்டேன். அதெல்லாம் அந்தக் காலம் ஒன்னோட துப்பாக்கி வேணும்னா; அஞ்சு வடைய ஒடனே இப்பவே வாங்கிட்டு வா. இல்லனா நடையக்கட்டு, டயத்த வேஸ்ட் பண்ணாத எனக்கு நெறய்ய வேல இருக்கு எடத்த காலி பண்ணு'' அப்பிடினு சொல்லிட்டு அடுத்த மரத்துல போயி ஜம்னு உக்கார்ந்துக்கிருச்சு. முத்துவீரன் தாத்தா லட்சுமணராவையே பார்த்துக் கொண்டு நின்றார். மரத்தடியில் வடை விற்கும் பாட்டியாக பாஞ்சாலியை உட்கார வைத்திருந்தார். கீசகனைக் கொல்வதற்காக பீமன் பிடுங்கிய மரமே இப்போது வடைவிற்கும் பாஞ்சாலிக்கு நிழல் தந்து கொண்டிருந்தது. வடையைத் திருடிக் கொண்டு ஓடிய காக்கையாக மரக்கொப்பில் ஜடாயு உட்கார்ந்திருந்தது. துப்பாக்கியைப் பறி கொடுத்த போலீஸ்காரனாக கிருஷ்ண பரமாத்மா வடைகள் அடுக்கிய கூடையாக ஜடாயுவின் வெட்டுப்பட்டு வீழ்ந்த ஒற்றை இறக்கை. ஒரு துயரப் பெருமூச்சுடன் முத்துவீரன் தாத்தா லட்சுமணராவைப் பார்க்கமலேயே திரும்பி நடந்தார். தூரத்தில் சீதையைத் தூக்கிச் சென்ற ராவணனின் தேரும், மாய மானும் தரையில் கிடந்தன. மூலைக் கொன்றாய் சிதறிக்கிடக்கும் தோல் பாவைகள் உபயோகமற்று விளையாட்டுப் பொருட்களாக சிதறிக் கிடந்த பாவை ஒன்று அவர்காலில் இடற குனிந்து எடுத்தார். முள் படுக்கையில் பீஷ்மர். திடுக்கிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கிய முத்துவீரன் தாத்தாவின் விரல்களில் முள்குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தாத்தா லட்சுமணராவின் விரல்களை நினைத்தபடியே மெதுவாக நடந்தார். அவருக்கு பாஞ்சாலி கதறுவது போலவும், ராவணனின் தேருக்குள்ளிருந்து சீதை கத்துவது போலவும், கட்டைவிரல் இழந்த ஏகலைவன் கதறியழுவது போலவும் பல சத்தங்கள் கேட்டன. நேற்று இரவு கட்டி ஆடுவதற்காக இரவல் கொடுத்த தங்கள் சேலைகளை குமரிப் பெண்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். முகர்ந்து கொண்டும், மார்போடு அனைத்துக் கொண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நிழல் பாவைகள்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குமரேசன் என்ற குல்லா வியாபாரி, வெயில் காலம், குல்லா, பக்கத்து ஊர், ஆலமரம், மூட்டை, குரங்குகள், கிழட்டு குரங்கு தலைப்பு: குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்
அந்த ஊரில் குமரேசன் என்ற குல்லா வியாபாரி ஒருவர் இருந்தார்.டவுனுக்கு சென்று வித,விதமான தலைக்குல்லாய்களை வாங்கி அவற்றை எல்லாம் ஒரு பெரிய மூட்டையாக கட்டி தலை சுமையாக நடந்து சென்றுபக்கத்து ஊர்களிலும், சந்தைகூடும் இடங்களிலும் விற்பனை செய்துவந்தார். அவரும் தனது தலையில் எப்போதும் குல்லா அணிந்து இருப்பார். வெயில் காலம் தொடங்கியது.மக்கள் வெயிலுக்கு பயந்து குல்லா வாங்கி அணிய ஆரம்பித்தனர்.வாங்கி வந்த குல்லாக்கள் அனைத்தும் உடனே விற்று தீர்ந்துவிட்டதால், குமரேசன் டவுனுக்கு சென்று விதவிதமான குல்லாக்களை வாங்கி பெரிய மூட்டையாக கட்டி பஸ்சில் ஏற்றி தன் ஊருக்கு கொண்டு வந்தார். அடுத்தநாள் காலை அந்த மூட்டையைதன் தலைமீது வைத்து சுமந்து கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றார். முதலில் போன ஊரில் சில குல்லாக்கள் மட்டுமே விற்பனையானது. குல்லாவியா பாரி வெயிலையும் பொருட்படுத்தாமல் பக் கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்தின் கீழேசற்று நேரம் ஓய்வு எடுக்கநினைத்து குல்லா மூட்டையை இறக்கி வைத்துவிட்டு சற்று நேரம் தூங்கிவிட்டார். குல்லாவியாபாரி குல்லாமூட்டையுடன் தூங்குவதை அந்தமரத்தில் தங்கி இருந்த குரங்குகள் கண்டன. அவர் அணிந்து இருந்த குல்லாவை ரசித்தன.பின்னர் மரத்தில் இருந்து இறங்கிவந்து, குல்லா மூட்டையை பிரித்தன. இதைக்கண்ட வயதான குரங்கு ஒன்று"குரங்கு நண்பர்களே…மூட்டையை அவிழ்க்காதீர்கள். அந்தமனிதர் மிகவும் ஏழ்மையானவர். இந்தக் குல்லாக்களை விற்று தான் அவர் பிழைத்து வருகிறார்.தயவு செய்து மூட்டையை பிரிக்காதீர்கள்"என்றது. மற்ற குரங்குகளோ "போ… போ…கிழட்டுக்குரங்கே உனக்கு ஒன்றும் தெரியாது, அவர் தலையை பார்…அந்தகுல்லா எப்படி கச்சிதமாக இருக்கிறது பார்…நாங்களும் அவரை போல குல்லா அணியப்போகிறோம்நீ பேசாமல் வேடிக்கை பார்" என்றுகூறிவிட்டு குல்லாக்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்து குரங்குகள் தலையில் அணிந்து கொண்டன. தூக்கம் கலைந்து எழுந்த குல்லா வியாபாரி குல்லா மூட்டை அவிழ்ந்து கிடப்பதைக்கண்டு திடுக்கிட்டார்.அப்போது கிழட்டுக்குரங்கு,"குல்லா வியாபாரியே, உம்முடைய குல்லாக்களை குரங்குகள் எடுத்து தலையில் அணிந்து கொண்டன.நான் எவ்வளவோகூறியும் அவை எனது பேச்சை கேட்கவில்லை" என்று கூறியது. குல்லாவியாபாரி ஆலமரத்தை ஏறிட்டார்.மரத்தில் இருந்த குரங்குகள் ஒவ் வொன்றும் குல்லாக்களை அணிந்து இருந்தன. உடனே குல்லாவியாபாரி, "குரங்குகளே எனதுகுல்லாக்களை கொடுத்துவிடுங்கள்,நான் அவற்றை விற்பனைக்காக வைத்து இருக்கிறேன்"என்றார். குரங்குகள் அவரின் பேச்சை காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. உடனே குல்லா வியாபாரி கோபத்துடன் தான் அணிந்து இருந்த குல்லாவை தூக்கி வீசினார். உடனே குரங்குகளும் குல்லாவை கழற்றி வீச முயன்றன.ஆனால் அவைகளால் குல்லாவை கழற்றமுடியவில்லை. குல்லாதலையில் இருந்து கீழே இறங்கி அவற்றின் கண்களை மறைத்தன. இதனால் குரங்குகள் பயந்து நடுங்கின. உடனே குமரேசன்,"குரங்குகளே அந்தக் குல்லாக்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்பட் டவை. உங்கள் தலைக்கு ஒத்து வராது. இந்தபுதுக்குல்லாவை தலையில் மாட்டுவது சுலபம், ஆனால் கழட்டுவது மிகவும் கடினம். எனவே அதைகழற்றும் விதமாகத்தான் கழட்ட வேண்டும். ஒவ்வொருவராக வாருங்கள், நான் கழற்றிக் கொள்கிறேன், இல்லைஎன்றால் அந் தக் குல்லாக்கள் உங்கள் கண்களை மறைத்து… நீங்கள் கிளைகளை விட்டு கிளைக்கு தாவ முடியாமலும், உணவை அடை யாளம் காண முடியாமலும் தவியாய் தவிக்க நேரிடும்" என்று கூறினார். உடனே குரங்குகள் குல்லா வேண்டாம், தலை தப்பினால் போதும் என்று குல்லாவியாபாரி முன்பு வரிசையில் வந்து நின்றன. வியாபாரியும் குல்லாக்களை குரங்கின் தலையில் இருந்து கழட்டி எடுத்துக் கொண்டார். "பிறர் பொருட்களைஅவரின் அனுமதி இன்றி அபகரிப்பது அடி முட்டாள் தனமான காரியம்,அது அநாகரீகமும் கூட. அந்த செயலைத்தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.உங்கள் செயலுக்கு துணை போகாத வயதான குரங்கு மட்டும் தான் நாகரீகம் பேணிய நல்ல குரங்கு. அந்த வயதான குரங்குக்கு நான் ஒரு பரிசு கொடுக்க போகிறேன்"என்று கூறிய குல்லா வியாபாரி தான் தலையில் அணிந்து இருந்தவிலை உயர்ந்த ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய குல்லாவை எடுத்து அந்த வயதான குரங்கின் தலையில் அணிவித்தார். வயதான குரங்கும் அந்தகுல்லாவை மகிழ்ச்சியுடன் தலையில் அணிந்து கொண்டது. மற்ற குரங்குகள் அந்த வயதான குரங்கை ஏக்கத்துடன் பார்த்தன. இனிமேல் பிறர் பொருட்கள் மீது ஆசை வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தன. குல்லாவியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கோமோரா மற்றும் சோடாம் நகரங்களை பற்றிய ஒரு அழகிய கதை ஹசிடீஸ் மக்களிடம் உண்டு. அதற்கு பழைய ஏற்பாட்டிலோ வேறு எந்த பழைமையானவற்றிலோ எந்த ஆதாரமும் கிடையாது. அதனால் நிச்சயமாக அது ஒரு ஹசிடீஸ் மக்களின் கண்டுபிடிப்பு, கற்பனை, ஒரு உருவாக்கம்தான். ஆனால் எனக்கு அந்த கதையை மிகவும் பிடிக்கும். அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடவுள் - யூத மக்களின் கடவுள் மிகவும் கோபக்காரர். – ஒருநாள் அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார். அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை அணுகி, சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா, எனக் கேட்டார். கடவுள் யோசித்தார். நான் இப்படி சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும். என்றார். ஞானி, பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம், ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே என்று கேட்டார். கடவுள் நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும். ஞானி, சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின் நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா, கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு மதிப்பு கிடையாது, ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா, நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட முடியாது என்றார். கடவுள், உன்னுடைய தர்க்கம் சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும். என்றார். ஞானி, இதோ நானிருக்கிறேன், நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். எப்படி அடையாளம் காண்பது. நான் நல்லவனான கணத்திலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் எனப்பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம், ஆனால் அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது. இருப்பு தனது செயல்களிலிருந்து வெளியே வர முடியும். அது தனது செயல்களை விட்டு விட முடியும். அது தனது கடந்த காலத்தை உதறி விட முடியும். அப்போது அந்த வினாடியிலிருந்து அந்த மனிதன் புனிதன் ஆகிறான். யாரும் அவனை தடுக்க முடியாது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும், தீர்மானிக்க வழியே இல்லை. அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். அந்த நகரங்களில் நல்லவர்களே இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில் நான் இரண்டு நகரங்களிலும் இருந்திருக்கிறேன், நான் நல்லவர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்றார். நீ நல்லவனாகும்போது, நீ தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில் எடை போடுவது செயல்கள் மூலம்தான். ஆனால் செயல் என்பது வெளி விஷயம்தான். நீர்குமிழ் மூலம் கடலை எடை போட முடியுமா, அது மடத்தனம். நீர்குமிழ் என்பது கடலின் மேல் பரப்பில் உருவாவது. செயல்கள் நீர்மேல் வரையும் கோலம் போன்றது, அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது. அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி. ஹசிடீஸ் ஞானி, நான் மக்களின் இருப்பை மட்டுமே பார்க்கிறேன். சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக, புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க முடியாத விஷயமாக ஆகிறது. ஆனால் அந்த செயல் மூலம் அவர்களை மதிப்பிடமுடியாதல்லவா, அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன், என்றார். இதோ நானிருக்கிறேன். நான் இரண்டு நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா எனக் கேட்டார். இதன்பின் கடவுள் அந்த இரண்டு நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இருப்பின் புனிதம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார். அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். ” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா விசாரித்தார். ” நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். ” உங்கள் சந்தேகம் என்ன?” என்று முல்லா கேட்டார். ” உண்மை .. .. .. உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார். முல்லா பெரிதாகச் சிரித்தார், ” இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ - பேசவோ - செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை” என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உண்மை என்பது என்ன?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான். இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர்.இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர். சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன்.நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள்.ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன்.முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன்.அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பெரிய சோம்பேறி யார் ?' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ராஜகுருவின் நட்பு விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை. தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான். பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார். ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா…… மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ராஜகுருவின் நட்பு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை கடனாக வாங்கி அவரை ஏமாற்ற அந்த டம்பன் தீர்மானித்தான். நிச்சயம் முல்லாவை ஏமாற்றி பெரும் பொருளைக் கடனாகக வாங்கி வருவதாக பலரிடம் சபதம் போட்டு மார்தட்டிக் கொண்டான். அந்த டம்பன் சாமர்த்தியமாக செயல்பட திட்;டமிட்டான். முல்லா தன்னை நம்பிப் பெருந் தொகை கொடுக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும், அதனால் தன் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட ஒரு நாடகம் நடித்த எண்ணினான். ஓரு நாள் அவன் முல்லாவிடம் சென்றான். " முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?" என்று கேட்டான். " நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுக்கத் தயங்க மாட்டேன். நீ ஒரு காசுதானே கேட்கிறாய். இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யாமல் இருந்தால் பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்" என்று கூறி டம்பனுக்கு ஒரு காசு கடனாகக் கொடுத்தான். டம்பன் நாலைந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசு எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தான். " முல்லா அவர்களே தாங்கள் கடனாகக் கொடுத்தத அற்பப் பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்தடன் பொறுப்புடன் திரும்பிக் கொடுத்து விடுவது என்று வந்திருக்கிறேன். பணவிஷயத்திலே நான் மிகவும் நேர்மையானவன் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று கூறிவாறு டம்பன் ஒரு காசை முல்லாவிடம் திரும்பிக் கொடுத்தான். முகத்திலே மலர்ச்சியில்லாமல், ஏதோ உபாதைப் படுபவர் போல ஒரு காசை வாங்கிக் கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்ட அகலாமல் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். " என்ன சமாச்சாரம்?" என்று முல்லா கேட்டார். " ஐயாயிரம் பொற்காசுகள் கடனாகத் தரவேண்டும். நாணயமாக ஒரு காசைப் திருப்பிக் கொடுத்தது போல ஐயாயிரம் பொற்காசுகளையும் திரும்பித் தந்த விடுவேன் " என்றான் டம்பன். " உனக்கு இனி நான் ஒரு காசு கூடக் கடனாகக் கொடுக்க முடியாது" என்று முல்லா கோபமாகச் சொன்னார். " முதலில் நான் வாங்கிய ஒரு காசைத்தான் திரும்பத் தந்தவிட்டேனே" என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்பன். " நீ ஒரு காசு கடன் வாங்கிய விஷத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய் " என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான். " முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையை திரும்பிக் கொடுத்திருக்கும் போது நம்பிக்கை துரோகம் செய்ததாக எவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று திகைப்போடு கேட்டான் " நம்பிக்கை மோசந்தான் செய்து விட்டாய் நான் கொடுத்த ஒரு காசை நீ திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி விடுவாய் என்று நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்து விட்டாய். அதவாது நான் என்ன நம்பினேனோ அதற்கு மாறாக நடந்த விட்டாய் ஆகவே இதுவும் நம்பிக்கை மோசந்தான். அதனால் ஒரு காசு கூட உனக்குக் கடன் தரமாட்டேன் " என்று கூறியவாறே முல்லா வீட்டுக்குள் எழுந்து சென்று விட்டார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நம்பிக்கை மோசம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஸென் ஆசிரியர், ஸென் கோயில், பூக்கள், ஸென் குருக்கள், பூங்கா தலைப்பு: இயற்கையின் அழகு
ஒரு புகழ்வாய்ந்த ஸென் கோயிலில் புதிதாக ஒரு குருக்கள் நியமிக்கப் பட்டார். இந்த குருக்கள் மரங்கள், செடி கொடிகள், பூக்களை மிகவும் விரும்பி இரசிக்கக் கூடியவராக இருந்ததால் தான் அந்த உயரிய பதவி அவருக்கு கொடுக்கப் பட்டது. அந்த புகழ் வாய்ந்த கோயிலின் அருகிலேயே மற்றொரு சிறிய ஸென் கோயில் அமைந்திருந்தது. அந்த சிறிய ஸென் கோயிலில் மிகவும் வயதான ஸென் ஆசிரியர் ஒருவர் வசித்து வந்தார். ஒரு நாள் புகழ் வாய்ந்த அந்த கோயிலிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதாக இருந்தது. ஸென் குருக்கள் சாதரண நாட்களிலேயே கோயிலை மிகவும் தூய்மையாகவும் சிறப்பான பூக்கள் அலங்காரத்துடன் வைத்திருப்பார். வருவது மிகவும் முக்கியமான பிரமுகர்களானதால், விடியற் காலையிலேயே எழுந்து சுற்றி இருந்த செடிகளுக்கு செல்லும் பாத்தியை நேர்த்தியாக வெட்டி விட்டு, தேவையான பூக்களை பரித்து புத்த விக்கிரத்தினை அலங்கரித்து வைத்தார். ஒழுங்கு இல்லாமல் வளர்ந்திருந்த செடிகளை கத்தரிக் கோலால் வெட்டியும், பெரிய மரங்களின் கிளைகளை நேர்படுத்தியும், சுற்றி வளர்ந்திருந்த புதர்ச் செடிகளை நெறிப் படுத்தியும் அந்த இடத்தினை மிகவும் அழகான பூங்காவாக மாற்றி அமைத்தார். இலையூதிர்க் காலமாக இருந்ததால், மரங்களில் இருந்து விழுந்த கிளைகளின் சருகுகளை பொருக்கி ஒரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்தார். சுற்றி விழுந்திருந்த இலைகளின் சருகுகளை அழகாக கூட்டி எடுத்து ஒரிடத்தில் அழகுபட முறைப் படுத்தி வைத்தார். இப்படியாக எல்லா வேலைகளையும் முடித்த ஸென் குருக்கள் தான் அழுகுபடுத்திய பூங்காவினை தானே பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மேலும் ஏதேனும் செய்து இன்னும் ஒழுங்கு படுத்த முடியுமா, அல்லது தன்னுடைய அலங்கரிப்பில் ஏதேனும் குறையிருக்குமோ என்று எண்ணி ஒரு முறைக்கு பல முறை எல்லாவற்றையும் சரியாக அதனதன் இடத்தில் இருக்குமாறு அமைத்தார். குருக்கள் காலையில் எழுந்ததிலிருந்து செய்த வேலைகள் அனைத்தையும் பக்கத்திலிருந்த முதிய ஸென் குருக்கள் கவனித்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பலமுறை சரிபார்த்து தனக்குள் திருப்தி அடைந்த ஸென் குருக்கள், அடுத்த பக்கத்து சுவரிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் முதியவரைப் பார்த்தார். "ஆகா, என்ன அழகாக தோட்டமாக இன்றைக்கு இருக்கிறது, நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?" என்று முதியவரான ஸென் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். முதியவர், "ஆமாம், எல்லாம் அழகான நேர்த்தியுடன் உள்ளது, ஆனால் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுகிறது, என்னை இந்த சுவரின் மேலே தூக்கி அடுத்தப் பக்கத்தில் விடு, அதனை நான் சரி செய்கிறேன்" என்றார். முதலில் தயங்கிய ஸென் குருக்கள் பின்பு ஸென் ஆசிரியரை கவனமாக அடுத்த பக்கத்து சுவற்றிலிருந்து இந்தப் பக்கம் இறங்கி வருவதற்கு உதவி செய்தார். மிகவும் மேதுவாக நடந்து சென்ற முதிய ஸென் ஆசிரியர் அந்த பூங்காவின் நடு மத்தியில் நின்றிருந்த ஒரு மரத்திற்கு சென்று அதனை வேகமாக பலங்கொண்ட மட்டும் ஆட்டி விட்டார். இலையூதிர்க் காலமானதால், இலைச் சருகுகள் அந்த மரத்திலிருந்து எங்கும் விழுந்து பரவி முன்போல விழுந்தது. பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இப்பொழுது காய்ந்த இலைகளின் சருகுகள் காற்றில் பறந்து ஆக்கிரமித்தன. "ஆ!! அங்கே பார்" என்று திருப்தி பட்டுக் கொண்ட ஸென் ஆசிரியர், ஸென் குருக்களை நோக்கி "என்னை இப்பொழுது அடுத்த பக்கதிற்கு செல்வதற்கு சுவரில் ஏற்றி விடு" என்றார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கைஸன், மாணவன், டேகிசுய், நீர் தலைப்பு: ஒரு துளி நீர்
ஒரு முறை ஸென் ஆசிரியர் கைஸன் குளிக்கும் சுடுநீரில் கலப்பதற்காக தன்னுடைய மாணவன் ஒருவனிடம் வாளியில் குளிர்ந்த நீரினைக் கொண்டு வரச் சொன்னார். தண்ணீரினைக் கொண்டு வந்த மாணவன், வெந்நீரில் தேவையான அளவிற்கு குளிர்ந்த நீரினைக் கலந்து விட்டு, மீதியிருந்த கொஞ்சம் நீரினை கட்டாந் தரையில் ஊற்றினான். "மடையா" என்று கடிந்து கொண்ட ஆசிரியர், "ஏன் மீதியிருந்த தண்ணீரினை நீ செடிகளுக்கு ஊற்றாமல் கீழே ஊற்றினாய்? இந்த மடத்தில் உள்ள ஒரு சொட்டு நீரினை வீணடிப்பதற்கும் உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று கோபத்துடன் கேட்டார். அதைக் கேட்ட அந்த மாணவன் உடனடியாக ஸென்னின் தன்னொளியினைப் பெற்றான். பெற்றவன் தன்னுடைய பெயரினை டேகிசுய் என மாற்றிக் கொண்டான். "ஒரு துளி நீர்" என்பதே டேகிசுயின் அர்த்தம்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர். அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும். ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது, ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது. அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது. அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முயலும் சிங்கமும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஒரு இளைஞன், அம்மா, பள்ளி, அலமாரி, புத்தகம், பேப்பர் தலைப்பு: நான்
நான் யார்? இந்தப் பேரண்டத்திற்குள் நான் எங்கோ ஓரிடத்தில், சிறு உயிரியாக, வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தெரிகின்ற போதிலும், சில நாட்களாக இப்படி ஒரு எண்ணவோட்டம்: அண்டத்தினுள் நான் இல்லை. வேறெங்கோ இருக்கிறேன். ஒரு சிறு உயிரியாக பேரண்டத்திற்குள் நான் வாழ்வதாக எனக்குத் தோன்றுவதெல்லாம், வேறொன்றுமல்ல, நான் காணும் கனவு. இந்தக் கனவுதான் வாழ்க்கையென்று நம்பிக் கொண்டு இதுநாள் வரை இருந்துவிட்டேன். இந்தக் கனவை உருவாக்கியவை என் ஆறு அறிவுகள். நான் யார் என்பது கனவைத் துறக்கும்போதுதான் தெரியும். கண்களைத் திறக்கும் போதல்ல; ஐம்புலன்களையும் மூடும்போதுதான் அந்தக் கனவு போகும். இது சுலபமில்லை. ஆனாலும்கூட அந்த நிலையை கற்பனை செய்து கொள்வது சுலபம். கற்பனையில் நான் செய்து கொள்ளும் இந்தப் பரிசோதனைகள், நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும்.. கண்திறந்து அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னால் அண்டத்தின் பல்வேறு உருவங்கள். குழந்தை ஒன்றின் மனோபாவத்துடன் பார்க்கிறேன் அவற்றை. பல்வேறு வடிவங்களில், நிறங்களில், சிறியதாகவும், பெரியதாகவும் உருவங்கள் தெரிகின்றன. நான் நினைக்கும்போது நினைத்தபடி நகரக்கூடிய, எனக்குக் கீழேயுள்ள உருவம் ஒன்றை மட்டும் என்னுடையதென கருதி வருகிறேன். கைகளை தட்டி விளையாடப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு கைத்தட்டலையும் நான்கு விதமாக உணர்கிறேன். கைகள் இணையும் காட்சியாகவும், தட்டிக் கொள்ளும் சப்தமாகவும், கைகள் தொட்டுக் கொள்ளும் உணர்ச்சியாகவும், கைதட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியாகவும் என நான்கு விதமாக. முதல் பரிசோதனையை மேற்கொள்ளப் போகிறேன். என் கண்களை மூடிக் கொள்கிறேன். உருவங்கள் மறைந்துவிட்டன என நான் நினைத்தாலும் இல்லையென்கின்றன விழிதிரவத்திலுள்ள தூசிகள். அங்குமிங்கும் அசைந்தும், பல வண்ணங்களை உமிழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இதைவிட பெரிய காட்சியாக, அவற்றிற்கு அப்பால் பிரம்மாண்டமான இருட்டொன்று பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது, தியானங்கள், தவங்கள் மூலம் ஞானிகள் பெறும் சக்தியை நான் பெற்றுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதாவது என் பார்வை என்கிற அறிவை இழந்து விடுகிறேன். இப்போது இருட்டு கூட எனக்குத் தெரிவதில்லை. இருப்பினும் என் மூளையில் கண்கள் மூலம் நான் கண்ட பழைய நினைவுகளின் காட்சிகள் அனைத்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ, என் நினைவுகளிலிருந்து காட்சிகளை மட்டும் அழித்துவிடுகிறேன். ஒரு பிறவிக்குருடன் மூலையிலிருப்பது போன்று என் நினைவுகள் இப்போது காட்சிகளற்றுக் கிடக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பு நான் கைத்தட்டிய நிகழ்ச்சியும் கூட. பார்வையை இழந்த கையோடு அடுத்த பரிசோதனைக்கு உட்படுகிறேன். என் காதுகளால் இனி எந்த சப்தத்தையும் கேட்கப் போவதும் கிடையாது. கேட்டல் அறிவையும் இழந்து விடுவதாய் என் கற்பனைப் பரிசோதனை நீள்கிறது. இருப்பினும், ஒலியலைகளால் ஆகாத சப்தங்கள் என் மூளையில் ஒலிக்கிறது. நான் கற்ற மொழியால் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டிருந்தன என் நினைவுகள். என் தாய்மொழி வடிவில்தான் நான் இதுவரை சிந்தித்து வந்திருக்கின்றேன். இப்போது என் நினைவுகளிலிருந்து மொழியை நீக்கிவிடும் அதிசயத்தையும் செய்கிறேன். இப்போது பிறந்ததிலிருந்து உள்ள என் நினைவுகள் அனைத்தும், மொழி அறியாத ஆதிவாசி மனிதனின் வார்த்தைகளற்ற மன பதிவுகள் போன்று இருக்கின்றன. நான் கைதட்டியது கூட அவ்வாறே பதிந்திருக்கிறது. என் நுகர்தல், சுவைத்தல் அறிவுகளை அகற்றிவிட்டு, அடுத்த பரிசோதனைக்கு வரும்போது நான் நான்கு அறிவுகளற்று இருக்கிறேன். நான் எங்கோ அமர்ந்திருப்பதாக மட்டும் என்னால் உணரமுடிகிறது. அமர்ந்தபடியே இருக்கிறேனென்பதால் என் முட்டிகள் வலிக்கின்றன. இரத்த ஓட்டம் செல்லாத பாதப் பகுதி சோகை பிடித்து மந்தமாக இருக்கிறது. இதோ இப்போது உடலால் நான் உணரக்கூடிய தொடு உணர்வு, வலி, கூச்சம், சுகம் போன்ற அனைத்தையும் இழக்கிறேன். அதோடு, தொடு உணர்வு, சம்பந்தப்பட்ட என் மூளைப் பதிவுகளையும் கூட. இந்த வினாடி முதல் உடல் என்னுடையதல்லாததாக மாறுகிறது. ஆனாலும் நான் இருக்கிறேன். "ஏன் கைத்தட்டினேன்" என்பது உள்ளிட்ட பல வருட நினைவுகளோடு மட்டும். ஐம்புலன் அற்றவனாக இன்னும் "நான்" இருக்கிறேன். ஆனால் என் ஐந்து தூரிகைகளால் வரையப்பட்ட பிரபஞ்சம் என்ற ஓவியத்தின் அழகிற்குள் மயங்கிக் கிடக்கும் வேடிக்கை மனிதனாய் அன்று. இத்தனை பரிசோதனைக்குப் பின்பும், மனநிறைவில்லை. கேள்விகள் நச்சரித்துக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்கமுடியும். பல கேள்விகள். ஏன் இந்த பேரண்டம் இருந்தது? ஏன் இதை இல்லாமல் செய்ய வேண்டும்? ஏன் நான்? ஏன் பிறப்பு? ஏன் வாழ்க்கை? ஏன் இறப்பு? என்று நீண்டு கொண்டே வந்த பட்டியல் ஒரு கேள்வியோடு முற்றுப் பெற்றது. "ஏன்" ஏன்? ஏன் என்று நான் காரணங்களைத் தேடுவது ஏன்? என் ஆறாவது அறிவுதான் அதன் காரணம். இப்போது அதையும் நீக்க நான் முற்படுகிறேன். நீக்கினேன். கடைசிப் பரிசோதனையும் முற்றுப் பெற்றது- ஆறாவது அறிவை பயன்படுத்திதான் நான் இந்தக் கற்பனைப் பரிசோதனையை மேற்கொள்கிறேன். அதனால்தான், கடைசி நிலையை என்னால் முழுமையாக உணரமுடியவில்லை. ஆனால் இதுதான் அது ... "புத்தர், மாவீரர், இயேசு, நம் மண்ணில் சித்தர்கள் என அனைவரும் சொன்ன "அது" இதுதான். இதை நோக்கிதான் மனிதனின் பயணம் தொடங்க வேண்டும். இதுதான்.... யாரோ என் தோளைப் பிடித்து ஆட்டியதால் ஒரு பள்ளத்திற்குள் விழுந்துவிட்ட நினைப்பு. கண்விழித்துப் பார்த்தபோது கட்டிலின் ஓரத்தில் அம்மா அமர்ந்திருக்கிறாள். மல்லாக்கில் படுத்திருந்த என் நெஞ்சில் கவிழ்த்தப்பட்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்த அம்மா முன் பக்கத்தைப் பார்க்கிறாள். "ஏண்டா... இதுல இருந்துதான் இன்னக்கி கேள்வி கேக்கப் போறாங்களா... பாடுபட்டு இரத்தஞ் சொட்டிச் சம்பாதிச்சு உன்னப் படிக்க வக்கிறோம்... சும்மால்ல.... நீ... பெயிலாப்போயி... அரியர் வக்கிறப்ப எங்க மனசு எவ்வளவு கஷ்டப்படுது" அம்மாவின் குரல், "மனவலியை" தழுதழுத்தது வெளிக் காட்டியது. நான் எழுந்து அமர்கிறேன் படுக்கையில். "நானும் ரெண்டு நாளாப் பாக்குறேன்... இதே புத்தகத்தத்தான் படிச்சிக்கிட்டிருக்க. இன்னக்கி மதியம் பரிச்சைய வைச்சுக்கிட்டு. இந்தத்தடவயாவது அந்தப் பேப்பர எழுதி முடிப்பேன்னு நெனச்சேன்" அம்மா அழுதே விட்டாள். " அம்மா.... சரி..... படிக்கிறேன்... அழுகாத... ஈஸிதான்... ஏற்கனவே படிச்சுட்டேன்... சரி... இப்ப என்ன... இந்தாப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்." எழுந்து செல்கிறேன் என் அலமாரியை நோக்கி. பாடப்புத்தகங்கள், கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியின் நடு அரையில் தியானத்தின் முறைகள் பற்றிய அந்தப் புத்தகத்தை வைக்க மனம் ஒப்பவில்லை. காலியாக இருந்த மேல் அறையில் அதை வைத்து, அழகு பார்த்துவிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் அம்மா இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், காட்டுசாதி வீரபாகு, காட்டுசாதி இளம் நீலிமா, நீலிமாவின் காதலன் பிரதாப், வீரபாகுவின் தோழி கங்கா, பஞ்சாயத்துத் தலைவர் தலைப்பு: வீரபாகுவின் பெருந்தன்மை
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், "மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!" என்றது. தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர். ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, "மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?" என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், "முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது" என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது.அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து "நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!" என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது.உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான்."ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!" என்றான். அதற்கு நீலிமா, "திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை" என்றாள்."இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!" என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். "முடியவே முடியாது!" என்று நீலிமா கூச்சலிட, "நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!" என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான்.ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான்.அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், "வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!" என்றான்.நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். "உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!" என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர்.அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர். கடைசியில் சென்று கொண்டிருந்த நீலிமா கால் தடுக்கிக் கீழே விழ, புலி அவள் மீது பாய இருந்தது. அதைப் பார்த்த வீரபாகு அங்கிருந்த ஒரு சிறிய பாறையைத் தூக்கி புலி மீது வீச, அடிபட்ட புலி சுருண்டது. வீரபாகு நீலிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, அடிபட்ட புலி மீண்டும் எழுந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் வீரபாகுவும், நீலிமாவும் குன்றிலிருந்து கீழே குதித்தனர். அதற்குள் அடிபட்ட புலி கீழே விழுந்து இறந்தது.கீழே விழுந்த அதிர்ச்சியில், நீலிமா மயக்க மடைந்தாள். அவள் இடது முழங்கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மயக்கத்தைத் தெளிவிப்பதற்காக வீரபாகு அருகில் உள்ள குளத்திற்கு நீர் எடுத்துவரச் சென்றான்.அப்போது வீரபாகுவின் நேருங்கிய நண்பன் கங்கா குன்றின் மீது இருந்தபடியே வீரபாகுவிடம், "நண்பா! நீலிமாவின் இடது கையில் இரத்தம் கசிவதைப் பார். நீயும் உன் இடது கையில் கத்தியால் கீறி, இரத்தம் சொட்டச் செய்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து விடு. நம் இன வழக்கப்படி, ஓர் ஆண், ஒரு பெண் இருவரின் ரத்தமும் கலந்தால் அவர்கள் தம்பதி ஆவர்!இந்த வாய்ப்பை நழுவ விடாதே!" விட்டு என்று சொல்லி ஓடிப் போனான். கங்கா மூலம் நடந்ததைக் கேள்விப் பட்ட பிரதாப் பேயறைந்தவன் போல் ஆனான். பிறகு, அவள் வீரபாகு நீலிமாவைக் கட்டாயத் திருமணம் புரிந்து கொண்டான் என்று வழக்குத் தொடுத்தான்.பஞ்சாயத்தும் கூடியது! நீலிமா, வீரபாகு இருவரும் முன்னணியில் நிற்க, பஞ்சாயத்துத் தலைவர் அவளை நோக்கி, "பெண்ணே! உன் சம்மதத்துடன் உனது திருமணம் நடக்கவில்லையென்றும், உன்னை பலவந்தப்படுத்தி வீரபாகு அவ்வாறு செய்துள்ளான் என்றும் பிரதாப் வழக்குத் தொடுத்திருக்கிறான். அவன் சொல்வது உண்மையா என்று சொல்! அப்படியானால், வீரபாகு இந்த இடத்திலேயே கொல்லப் படுவான்! அதன் பிறகு, உனக்கு உண்மையிலேயே யார் மேல் பிரியமோ, அவனை நீ மணம் புரியலாம்!" என்றார்.உடனே, அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சற்று நேரம் யோசித்த நீலிமா, "என்னுடைய முழு சம்மதத்துடன் தான் வீரபாகு அவ்வாறு செய்தார்" என்றாள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு முன் வந்து, "இல்லை! நான் உண்மையைக் கூறுகிறேன்.கங்கா கூறியதும் எனக்கும் அவ்வாறு நீலிமா மயக்கமாக இருக்கும் போதே காரியத்தை முடித்துவிட ஆசை ஏற்பட்டது உண்மை! அதற்காக என் கையையும் கீறிக் கொண்டேன். ஆனால் நீலிமாவின் ரத்தத்துடன் கலக்க அவள் அருகே சென்ற போது, அவளுடைய முகத்தைப் பார்த்து என் மனம் மாறி விட்டது. ஆகவே நாங்கள் தம்பதி ஆகவில்லை. என்னுடைய குற்றத்திற்காக நான் என்னையே தண்டித்துக் கொள்கிறேன். நான் இந்த காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்" என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்." இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா, வீரபாகுவும் நீலிமாவும் ஏன் சம்மந்தமில்லாமல் நடந்து கொண்டார்கள்? தலைவரிடம் நீலிமா, உண்மையைக் கூறி இருந்தால் அவள் விரும்பிய பிரதாபனையே திருமணம் செய்து இருந்திருக்கலாம்.தவிர யாரை முதலிலிருந்து வெறுத்தாளோ அவனுடன் மனப்பூர்வமாகத் திருமணம் நடந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள். இவ்வாறு பொய் சொல்வதன் அவசியம் என்ன? அதே போல் வீரபாகு முன்பு, உன்னை என்றாவது ஒருநாள் திருமணம் செய்தே தீருவேன் என்று கூறினான்.அப்படி இருக்கையில் நீலிமா ஒப்புக் கொண்டபிறகும், எங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டே சென்று விட்டான். இருவரது செயல்களும் எனக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.அதற்கு விக்கிரமன், நீலிமா சுய நினைவில்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தாள். அதேபோல் வீரபாகுவுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டது என்று அவள் கூறியது அவளது இனத்திற்கே உரிய நன்றி உணர்வைத்தான் காட்டுகிறது. அதாவது அவர்கள் இன வழக்கின்படி எவனொருவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறதோ அவனை எவ்வித பாகுபாடும் இல்லாமல் காப்பாற்றுவார்கள்.அவள் தனது விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்தது என்று கூறினாள். வீரபாகுவைக் கொன்று விடுவார்கள். தன்னைக் காப்பாற்றிய ஒருவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவள் பொய் கூறினாள்.ஆனால் வீரபாகு, நீலிமாவை நேசித்தானே தவிர மீறி கட்டாயத் திருமணம் புரிய நினைக்கவில்லை என்று உண்மையைக் கூறினான். இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீல்குலைந்து விடும். ஆகையால் அவன் அங்கிருந்து சென்று விட்டான்" என்றான்.விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கலங்கரை விளக்கு, காப்பாளன், முதியவர், வழிப்போக்கன், மூதாட்டி தலைப்பு: முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்
கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம். பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது. கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன. காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார். "தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கெஞ்சினார். மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான். அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்… டக்". கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இளக்கமாகப் பேசினான். காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான். மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள். அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான். வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது. இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள். வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன. மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு. பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு. அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு. பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு. நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு. அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பீர்பாலின் புத்திசாலித்தனம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், மன்னன் யசோதரன், கந்தர்வன், கந்தர்வப் பெண், இளவரசி ராகலதா, தோழிகள் தலைப்பு: கந்தர்வனின் சாபம்
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம், விக்கிரமனை நோக்கி, "மன்னா! இந்த நள்ளிரவில், இந்த பயங்கரக் காட்டில் நீ எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் என்பது புரியவில்லை. யசோதரன் எனும் மன்னன் தனக்கு சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு கந்தர்வன் தனக்குக் கொடுத்த சாபத்தினால் மிகவும் துன்புற்றான். அந்த யசோதரனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்" என்று கதை சொல்லத் தொடங்கியது. நிஷாதபுரியின் மன்னன் யாசோதரன் தன் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். ராஜ்யத்தின் எல்லையிலிருந்த காடுகளிலிருந்து கொடிய மிருகங்கள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால், அவற்றை வேட்டையாடத் திட்டமிட்டு ஒருநாள் அவன் தன் பரிவாரங்களுடன் எல்லையோரக் காடுகளுக்குள் புகுந்தான். யசோதரன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், வானிலிருந்து ஒரு கந்தர்வனும் ஒரு கந்தர்வப் பெண்ணும் மலையுச்சியில் இறங்கி சற்றே இளைப்பாற அமர்ந்தனர். அமரன் என்ற அந்த கந்தர்வன், கந்தர்வப் பெண்ணான சர்மிளா மீது மிகவும் அன்பு கொண்டிருந்தான். மலை உச்சியில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, அவன் அவளை நோக்கி, "சர்மிளா! இந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள காட்சிகளைப்பார்! ஒவ்வொன்றும் இயற்கையின் எழிலைப் பறைசாற்றுகின்றன. ஆனால் அவை ஒன்றுகூட உன் அழகுக்கு இணையாகாது" என்று கூறினான். ஆனால் அவள் அவன் சொல்வதைச் சிறிதும் கவனிக்கவில்லை. காட்டில் தன் புரவியில் அமர்ந்து காட்டு விலங்குளைத் துரத்தும் யசோதரனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதைக் கண்டதும், பொறாமையினால் அவன் இதயம் பற்றி எரிந்தது. "நான் உன் அழகில் மயங்கி உன்னை வர்ணித்துக் கொண்டு இருக்கும்போது, நீ ஒரு மனிதனின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாய். பார், இப்போது அவனை என்ன செய்கிறேன் என்று!" என்று சீறிக்கொண்டே யசோதரனுக்கு சாபம் கொடுத்தான். திடீரென யசோதரன் ஒரு சித்திரக் குள்ளனாக மாறிவிட்டான். தன் உருவம் மாறிப் போனதைக் கண்ட யசோதரன் பலத்த அதிர்ச்சியடைந்தான். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு முயல் அவனை மோதித் தள்ளிக் குட்டிக்கரணமடிக்கச் செய்தது. அதைக் கண்டு அமரன் விழுந்து விழுந்து சிரித்தான். "சர்மிளா! பார்த்தாயா அந்த மனிதனின் கதியை?" என்று பரிகாசம் செய்தான். "அடப்பாவி! என்ன காரியம் செய்து விட்டாய்?" என்று அலறினாள் சர்மிளா. "அவன் குதிரை மீது வாயுவேகமாச் செல்லும் காட்சியைத்தான் ரசித்தேனே தவிர, அவன் அழகில் மயங்கி விடவில்லை. இத்தனை பொறாமை பிடித்தவனா நீ?" என்று சொல்லிவிட்டு வானில் பறந்து விட, திடுக்கிட்டு போன அமர அவளை சமாதானப்படுத்தியவாறே வானில் அவளைப் பின் தொடர்ந்தான். அதற்குள் காட்டில் ஒரு சூறாவளிக் காற்றுவீச, சாண் உயரமேயான யசோதரனைக் காற்று மேலே தூக்கிச் சென்றது. பயந்து நடுங்கிப் போன யசோதரன், அந்த சமயம் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு கிளியின் வாலினைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கிளி அண்டை ராஜ்யமான அனந்தபுரியின் இளவரசி ராகலதாவின் வளர்ப்புக்கிளி. தன் தோழிகளுடன் அந்தப்புரத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்த ராகலதா தன் வளர்ப்புக்கிளியின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்த உருவத்தைப் பார்த்து வியப்பு அடைந்தாள். சாண் உயரமேயான உருவம், தலையில் சுண்டைக்காய் போல் ஒரு கிரீடம், கடுகுகள் போன்ற விழிகளைக் கொண்ட அந்த விசித்திரமான மனித உருவத்தை அவள் அதுவரை பார்த்ததேயில்லை. அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அதற்குள் அவளது தோழிகள், "ஆகா! இது என்ன அதிசயம்?" என்று கூச்சலிட, ராகலதா யசோதரனைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். அந்த உருவம் அசைவதைக் கண்டு இளவரசி, "ஆகா! இது உயிருள்ள பொம்மை போலிருக்கிறது" என்றாள். மிக அருகில் ராகலதாவைப் பார்த்த யசோதரன் அவளுடைய அழகில் மதிமயங்கிப் போனான். மணந்தால் அவளையே மணப்பது என்ற தீர்மானித்தான். "ராஜகுமாரி! நான் நிஷாதபுரி மன்னன்! நான் எப்படி இத்தகைய உருவத்தைப் பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் வீராதி வீரன்தான்! என்றாவது ஒருநாள் நான் சுயஉருவம் பெறுவேன்" என்றான் யசோதரன். "சாண் உயரத்தில் இருந்து கொண்டு பேச்சைப்பார்!" என்று தோழிகள் கேலி செய்ய, ராகலதா அவர்களை அடக்கினாள். இளவரசி அவனைத் தன்னுடன் அந்தப்புரத்தில் வைத்துக்கொள்ளத் தீர்மானித்தாள். தினமும் அவனுடன் இரகசியமாகப் பொழுதுபோக்கினாள். ராகலதா நன்றாக ஓவியம் வரையக் கூடியவள்! யசோதரன் எல்லாரையும் போல் சராசரி உயரத்தில் இருந்தால் எப்படியிருப்பான் என்று கற்பனை செய்து, அவனுடைய ஓவியத்தைத் தீட்டினாள். ஓவியத்தை அவள் பூர்த்தி செய்தபோது, பின்னாலிருந்து அதை கவனித்த யசோதரன், "ராகலதா! நீ ஓவியத்தில் வரைந்துள்ளதை போல் ஒரு நாள் கட்டாயம் மாறுவேன். அன்று என் மனத்தைத் திறந்து சொல்வதாக இருந்தேன். ஆனால் இப்போதே அதைச் சொல்கிறேன். நான் உன்னிடம் அன்பு கொண்டு உள்ளேன். சுயஉருவம் பெற்றபின் உன்னையே மணப்பேன்" என்றான். ராகலதா அதைக் கேட்டு நாணத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு சமயம் பெரிய பதவியில் இருந்த அதிகாரி லூ கென், சா'ன் ஆசிரியர் நான் சூவானைச் சந்திப்பதற்காக சென்றான். ஆசிரியரைப் பார்த்ததும் லூ கென், "முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்து வாழ்ந்த ஒருவர் வாத்து குஞ்சு ஒன்றினை ஜாடிக்குள் வளர்த்தார். அந்த குஞ்சும் நன்றாக வளர்ந்து பெரிதானது. ஆனால் பெரிதாக வளர்ந்த வாத்தினை அவரால் ஜாடிக்குளிருந்து எப்படி வெளியே எடுப்பது என்று தெரியவில்லை" என்று கூறி நிறுத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி புன்முறுவலுடன் "ஜாடியினை உடைக்காமலும், வாத்திற்கு காயம் படாமலும் எப்படி வாத்தினை ஜாடிக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். "ஓ! தலைவரே!" என்று கூறிய ஆசிரியர் நான் சூவான் திடிரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார். அதனைப் பார்த்த லூ கென் "இங்கே இருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சமும் தாமதிக்காமல் துள்ளி குதித்தார். துள்ளிக் குதித்த லூ கென்னை ஆச்சரியத்துடன் பார்த்து "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்றார் ஆசிரியர் நான் சூவான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஜாடிக்குள் வாத்து' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான். அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான். இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான். இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான். இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான். "சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம். ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான். அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா.........பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான். இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான். "என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான். எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர். தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பாத்திரங்கள் குட்டி போட்ட கதை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், தாத்தாச்சாரியார், விகடகவி தலைப்பு: ராஜகுருவின் நட்பு
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை. தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான். பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார். ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: இரண்டு பூனைகள், குரங்கும், அப்பம் தலைப்பு: குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்
ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன. அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது. அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன. குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், டில்லி, மன்னர், மவுனம், முட்டாள்கள் தலைப்பு: முட்டாள்களிடம் எப்படி பேசுவது?
அக்பர் ஒரு நாஷ் பீர்பாலிடம் பேசித் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது.உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது? என்று அக்பர் கேட்டார். திடீரென்று அக்பர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பாராமையால், மன்னர் பெருமானே இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார் பீர்பால். மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போன்று செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.அவனும் பீர்பால் சொல்வது போன்று செய்வதாகக் கூறினான்.உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் படுத்தி வைப்பேன். அச்சமயம் மன்னர் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ வாய் திறந்து பதில் பேசாது மவுனமாக நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார். பீர்பால் கிராமத்தானை அரசவைக்கு அழைத்துச் சென்றார்.மன்னர் பெருமானே! இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன், தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும் இவனால் உடனடியாகப் பதில் கூற முடியும்! என்று அவனை மன்னரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் பீர்பால். மன்னர் அவனை நோக்கி, பீர்பாலிடம் கேட்ட அதே கேள்வியை, முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார்.கிராமத்துக்காரன் பீர்பாலிடம் சொல்லியபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது மவுனமாக நின்றிருந்தான்.மன்னர் பலமுறை இதுபோன்று கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனம் சாதித்தான். இதனால் அக்பர், பீர்பாலை நோக்கி, என்ன? உங்கள் உறவினரிடம் பலமுறை கேட்டும் இதற்குப் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.பீர்பால், மன்னர் பெருமானே! தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார். நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான் மவுனமாக நின்று கொண்டிருக்கிறானே! என்றார் அக்பர்.மன்னர் பெருமானே! நேற்றைய தினம் முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்டீர்கள். அதற்கான விடையைத் தான் தன்னுடைய மவுனத்தின் மூலம் விடை கூறியுள்ளான். அதாவது முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதை தான் பேசாது வாய்மூடி மவுனமாக இருந்தான் என்றார் பீர்பால். முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைக் குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் நுண் அறிவைப் பாராட்டினார் அக்பர்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது. அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்… பேய்… என்று அலறினான். “”தம்பி பயப்படாதே… நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்.” மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். “”உன் பெயரென்ன தம்பி?” “”மதின்!” “”எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?” “”வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.” “”நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார். “”பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன். “”ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?” என்று கேட்டான். “”சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்…” என்றார். “”பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்” என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை “”எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்,” என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது. மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது. புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான். “”உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்,” என்றான். சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான். அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின். அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது “கிர்ர்…’ என்ற சப்தம் கேட்டது. அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான். கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன. துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்… இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின். அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன். பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான். இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான். இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான். பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர். குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பேயால் வந்த வாழ்வு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கபீரைப் பற்றிய ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. கபீர் ஒரு ஞானி, ஆனால் ஏழை. அவரது வேறுபட்ட நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் அவரது மனைவியும் மகனும் சங்கடத்துள்ளானார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாள் காலையும் நூற்றுக்கணக்கான சீடர்கள் வருவார்கள். கபீர் ஆடுவார், தானே எழுதிய பாடலை பாடுவார். அவர் படித்தவரல்ல. அவர் எந்த சொற்பொழிவும் தருவதில்லை. ஆனால் அவர் பாடுவார், ஆடுவார். அவரது பாடல்கள் மிக ஆழ்ந்ததாக, அற்புதமானதாக, எளிமையான பாடல்களாக இருக்கும். பாடிக் கொண்டே அவர் ஆடுவார். கூட்டம் முழுவதும் அவருடன் சேர்ந்து ஆடும், பாடும். இது மணிக்கணக்கில் தொடரும். பின் மதிய உணவு நேரம் வந்துவிடும். பின் கபீர் ஒவ்வொருவரிடமும் “போய் விடாதீர்கள், இந்த ஏழையின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்” என்று கூறுவார். மனைவியும் மகனும் சங்கடத்துள்ளாவார்கள். ஒவ்வொருநாளும் அத்தனை பேருக்கான உணவுக்கு எங்கே போவது ? இவர்கள் மூவருக்கான உணவுக்கு சமாளிப்பதே பெரும்பாடு. அவரது மகனும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மனிதன். அவன் அவன் வழியில் ஒரு குருவாகக் கூடியவன். ஆனால் அவன் கபீரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் கூட ஒத்துப் போனதேயில்லை. கபீர் கமால் மூலமாக மிகவும் சோர்ந்து போய்விட்டார். அவர், கமால் எனக்கு வந்து பிறந்ததால் எனது பாரம்பரியம் முடிந்தது. இவன் நான் அவனுக்கு கொடுக்கும் செல்வங்களை எடுத்துச் செல்ல மாட்டான் என்று எழுதினார். ஏனெனில் கமாலுக்கு என்று ஒரு தனி வழி இருந்தது. அவர்கள் ஒத்துப் போனதேயில்லை. கமால் இந்த பாடலையும் நடனத்தையும் மடத்தனம் என்பான். அவன், மௌனமாக அமர்ந்து இருந்தால் ஏதாவது நிகழலாம் – எதற்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட சத்தம் போட்டு அக்கம் பக்கத்தாரை தொந்தரவு செய்ய வேண்டும் வயதான காலத்தில் சும்மாயிருக்காமல்……… உங்களால் மற்றவர்களும் அவர்கள் வயதானவர்களாக இருந்தால் கூட ஆட வேண்டி வருகிறது, அவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்று கூறுவான். அவன் ஒரு போதும் ஆடலிலும் பாடலிலும் பங்கெடுத்துக் கொண்டதேயில்லை. அவன், “மௌனமாக இருப்பது பாடுவதை விட சிறந்தது. இது தேவையேயில்லை. அமைதியாக உட்கார்ந்து இருக்கும்போது இதைவிட அழகான நடனத்தை நான் உணர்கிறேன்.” என்பான். ஒரு கட்டத்தில் மகனும் மனைவியும் கபீரிடம் “நீங்கள் மற்றவர்களை இங்கே சாப்பிட்டுவிட்டு போங்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள். நாங்கள் இந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் கடன் வாங்கியாகிவிட்டது. இப்போது யாரும் நமக்கு எதுவும் கடன்தர தயாராக இல்லை. அவர்கள் எப்படி திருப்பித் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நம்மிடம் இப்போது வீட்டில் எதுவும் இல்லை. நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் “என்று கூறினார்கள். கபீர், “அது இயலாத காரியம். ஆடி பாடி கொண்டாடிய பிறகு எனது வீட்டிற்கு வந்த மக்களுக்கு சாப்பாடு போடாமல் இருக்க முடியாது. என்னால் அப்படி செய்ய முடியாது. வழி கண்டு பிடியுங்கள். என்னடா பையன் ! நீ ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க முடியாதா ? என்று கேட்டார். கமால் “ நான் திருடனாவது ஒன்றுதான் வழி!” என்றான். கபீர், “அற்புதம்! நீ ஏன் இதை முன்பே யோசிக்கவில்லை.? என்றார். இதுதான் பிரபஞ்ச தன்னுணர்வு. திருடுவது கூட தவறில்லை. இந்தியாவில் கபீரை பின்பற்றும் மக்கள் – அவர்கள் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள். – இந்த கதையைப் பற்றி குறிப்பிடுவதில்லை. நான் அவரை பின்பற்றும் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த கதையை குறிப்பிட்டேன். உடனே தலைமை குரு என் காதில், தயவுசெய்து இந்த கதையை சொல்லாதீர்கள். ஏனெனில் இது எங்களை பிரச்னையில் கொண்டு போய்விடும். கபீர் இதில் திருடுவது சிறந்த ஐடியா என்று சொல்கிறார். என்று கிசுகிசுத்தார். ஆனால் கமால் உண்மையிலேயே ஒரு தனித்துவமான மனிதன். அதுதான் கமால் என்ற வார்த்தையின் பொருள். கமால் என்றால் அசாதாரணமான, தனித்துவமான என்று அர்த்தம். அவன் கபீர் அற்புதம் என்று சொன்னதால் அசந்து போய்விடவில்லை. அவன், “சரி, இன்றிரவு நான் போய் திருடுகிறேன். ஆனால் நீங்களும் என்னுடன் வரவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு முயற்ச்சிக்கிறேன். எனக்கு உதவுங்கள். நான் திருடி தரும் பொருட்களை வெளியே நின்றவாறே வாங்கி கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுங்கள். இந்த அளவு நீங்கள் செய்தால் போதும்” என்றான். கபீர் “மிகவும் நல்லது” என்றார். அதன்படி அவர்கள் இரவு ஒரு பணக்காரனின் வீட்டிற்கு திருட சென்றனர். பின்புறத்தில் கமால் உள்ளே நுழைவதற்க்காக சுவரில் ஓட்டை போட்டான். கபீர் வெளியே உட்கார்ந்து மெதுவாக அவரது பாடலை பாடிக் கொண்டிருந்தார். கமால், “பாடுவதை நிறுத்துங்கள், மடத்தனமாக இருக்காதீர்கள். நாம் இங்கே துறவிகளல்ல. நாம் திருட வந்துள்ளோம்” என்றான். கபீர், “நாம் எங்கே இருந்தாலும் நாம் எப்படியோ அப்படிதான். நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. நீ உன் வேலையை செய்கிறாய். நான் என் வேலையை செய்கிறேன். நீ பொருட்களை கொண்டு வந்து கொடு, நான் எடுத்துச் செல்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. இல்லாவிடில் நானும் உன்னுடன் வருவேன். “என்றார். கமால் உள்ளே சென்றான். அவன் இந்த விஷயத்தை கடைசி வரை பார்த்துவிடலாம் என முடிவு செய்தான். அவன் பொருட்களை திருடி கொண்டு வந்து துவாரத்தின் வழியே வெளியே போட்டுவிட்டு இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என கபீரிடம் கூறிவிட்டு அவனும் அந்த துவாரத்தின் வழியே வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டிலுள்ள வேலையாட்கள் விழித்துக் கொண்டனர். சுவரை உடைக்கும் சத்தம், யாரோ பாடுவது போன்ற சத்தங்கள் மெலிதாக கேட்டன. மேலும் கமால் உள்ளே போனபின் கபீர், தான் எங்கே இருக்கிறோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார். அவர் சத்தமாக பாடி ஆட ஆரம்பித்துவிட்டார். எனவே எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். அவர்கள் தேடியபடி வந்து உள்ளே பாதி வழியில் இருந்த கமாலின் கால்களை பிடித்துக் கொண்டனர். இந்த கதை மிகவும் வித்தியாசமானது. இது கற்பனையாக இருக்க முடியாது. கமால், “அப்பா,! என்னை பிடித்து விட்டார்கள். இந்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உள்ளே என் கால்களை பிடித்துக் கொண்டு விட்டனர். போதுமான அளவு சிக்கலில் என்னை சிக்க வைத்து விட்டீர்கள். இதுவே கடைசி – வணக்கம். நான் சிறைக்குப் போகப் போகிறேன்.” என்றான். கபீர், “சிறைக்கா? தேவையில்லை. நான் ஒரு கத்தி வைத்திருக்கிறேன்” என்றார். கமால் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். கபீர், “நான் உனது தலையை வெட்டி என்னுடன் எடுத்து சென்று விடுகிறேன். திருடன் யார் என்று யாருக்கும் தெரியாது.” என்று கூறினார். கமாலால் நம்பவே முடியவில்லை. அவன் இந்த விளையாட்டை கடைசி வரை விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தான். – ஆனால் இந்த கிழவன் அதை முடிவு வரை கொண்டு செல்கிறானே என்று யோசித்தான். ஆனாலும் கமால் ஒரு தீரமுள்ள மனிதன். எனவே அவன் “சரி.!எனது தலையை வெட்டி எடுத்து சென்று விடுங்கள் “என்றான். அவன் இது போல நடக்காது என்று நினைத்தான். ஆனால் கபீர் கமாலின் தலையை வெட்டி அவன் கொண்டு வந்து தந்த பொருட்களுடன் சேர்த்து வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். உள்ளே இருந்தவர்கள் கமாலை உள்ளே இழுத்தனர். தலையில்லா முண்டத்தைக் கண்டு, இப்போது இது ஒரு பிரச்னை. யார் இவன் என்று ஆலோசித்தனர். ஒரு வேலையாள், “எனக்குத் தெரிந்த வரை இது கபீரின் மகன் கமால். என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய குரல் கபீரினுடையது. அவர் வெளியே இருந்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டிருப்பது மிகவும் விசித்திரமானது. அவர் ஒரு ஞானி. அவரது சொந்த மகன் இது….. அவர் இவனது தலையை வெட்டி எடுத்து சென்று விட்டார் போல தெரிகிறது.” என்றான். அந்த வேலையாள் கபீரின் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையிலும் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்திற்கு சில நாட்கள் போவான். அவன் அந்த செல்வந்தரிடம், “ஒரு வேலை செய்யலாம். கபீரும் அவரது சீடர்களும் பிரார்த்தனை கூட்டத்திற்கு முன் குளிப்பதற்காக கங்கை கரைக்கு வரும் வழியில் உள்ள நால்ரோட்டில் இந்த உடலை தொங்க விடலாம்” என்று கூறினான். அந்த வீட்டின் சொந்தக்காரனான அந்த செல்வந்தன், “அதனால் என்ன நடக்கும்?” என்று கேட்டான். வேலையாள் “இதை மட்டும் செய்யுங்கள் அதில் ஒன்றும் தவறில்லை “ என்றான். உடல் நால்ரோட்டில் தொங்க விடப்பட்டது. கபீர் குளித்துவிட்டு ஆடி பாடியபடி வரும்போது கமால் உடனடியாக தனது கரத்தை உயர்த்தி “இந்த மடத்தனத்தை நிறுத்துங்கள்!” என்றான். இப்படித்தான் அது கமால் என அடையாளம் காணப்பட்டது. நிச்சயமாக அது கமால்தான். அவர்கள் கபீரிடம் உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா என்று கேட்டனர். அவர் “தெரியுமே! ஏனெனில் அவனது தலை எனது வீட்டில் உள்ளது. நான் தான் வெட்டினேன்.” என்றார். அநத பணக்காரனால் அதை நம்பவே முடியவில்லை. அவன் “ஆனால் நீங்கள் ஒரு ஞானியாயிற்றே?” என்று கேட்டான். கபீர், “நான் ஒரு ஞானிதான். நான் ஞானி போல என்று இருந்திருந்தால் அந்த திருடும் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டேன். நான் ஒரு ஞானி போல என்று இருந்திருந்தால் நானே எனது மகனை கொன்றிருக்கமாட்டேன். நான் ஒரு ஞானிதான். எனது தன்னுணர்வின் உயர்வுக்கு முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உனது பணம் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய பணமல்ல. அப்படி இருக்கும்போது அதை எடுத்துச் செல்வதில் என்ன தவறு? எதுவுமே யாருடையதுமல்ல எனும்போது திருடுவதில் என்ன தவறு? மகன் எப்படியும் என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறான். எனவே அவனது தலையை வெட்டியதில் தப்பென்ன? மரணம் நிச்சியம் நிகழத்தான் போகிறது. என்னுடைய தன்னுணர்வின் முன் எதுவுமே தவறல்ல, எதுவுமே சரியல்ல. “ என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிரபஞ்ச தன்னுணர்வு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும்.; ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெயிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது. மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான். அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன. அவன் உரக்கச் சிரித்தான். முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு " என்ன சிரிக்கிறீர்?" என்று கேட்டார். " கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் " என்றான் அந்த வழிப்போக்கன். " கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் " என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார். " இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறவதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்றான் வழிப்போக்கன். முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார். சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்னஞ்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின. சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன. முல்லா அவனைப் பார்த்து " நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே!" என்று கேட்டார். " ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன" என்றான் வழிப்போக்கன். " கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா?" என்று கேட்டார் முல்லா. வழிப்போக்கன் யோசித்தான். " நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர். " " இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் " என்றார் முல்லா. " ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே" என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன். " கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் " என்றார் முல்லா.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தலையில் விழுந்த பழம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான். இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர். கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா? நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான். அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான். ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி. வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான். வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது. “”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும் கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான். பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது. குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடவுளின் கருணை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், செல்வர் திவாகர், திவாகரின் மனைவி பிரபா, திவாகரின் ஒரே மகள் கலா, திவாகரின் மைத்துனர் கோபி, சோதிடர் கௌசிகன், வாலிபன் வீரபத்திரன், வீரபத்திரனின் தந்தை சிவராமன், வீரபத்திரனின் தாய் காமினி, ராட்சசன், சோதிடர் சீதாராமன் தலைப்பு: சாப விமோசனம்
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், "மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!" என்று சொல்லிவிட்டுக் கதை சொல்திவாகர் என்ற பெரும் செல்வர் மகாதானபுரத்தில் வசித்து வந்தார். அவருடைய ஒரே மகளான கலா திருமணப் பருவத்தை அடைந்தவுடன், அவர் மும்முரமாக வரன் தேடத் தொடங்கினார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தின் பேரில், திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைப் பட்டுப் போயின. தன் மகளின் திருமணம் தள்ளிக் கொண்டே செல்வதைக் கண்டு திவாகர் கவலையில் ஆழ்ந்தார். அவருடைய மனைவி பிரபா தன் சகோதரன் கோபியின் உதவியை நாடினான். அவன்கலாவின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோதிடத்தில் புகழ்பெற்ற தனது நண்பன் கௌசிகனிடம் அவளது ஜாதகத்தை காட்டினான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின், சோதிடன் கௌசிகன், "கலாவின் ஜாதகம் சாட்சாத் சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது. தேவிக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட்டது போல் கலாவிற்கும் பல சோதனைகள் ஏற்படவுள்ளன.ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். நீ ஒரு காரியம் செய்! உன் சகோதரி குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் செல்! அங்குள்ள ராமர் கோயிலில் தேவியையும் ராமரையும் கலா தரிசிக்க வேண்டும். அங்கு தரப்படும் பிரசாதத்தை அந்த ஊரிலுள்ள ஒரு புண்ணியவானுக்கு அதை கலா வழங்கினால் விரைவில் அவள் திருமணம் நடைபெறும்!" என்றான்."சரிதான்! ஆனால் ஜெயபுரியில் புண்ணியவான் யார் என்று நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? நீயும் எங்களுடன் வந்து, அந்தப் புண்ணியவானை எங்களுக்கு அடையாளம் காட்டு!" என்றான் கோபி. அதற்கு கௌசிகன் சம்மதித்தான். பிறகு, கோபி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் சென்றான். அங்குள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, ராமரையும் சீதையையும் அனைவரும் வழிபட்டனர்.லத் தொடங்கியது. பிறகு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தைக் கலா எடுத்துக் கொள்ள, அனைவரும் ஒரு குதிரை வண்டியில் ஜெயபுரியின் தெருக்களை வலம் வந்தனர். ஒரு பெரிய வீட்டின் வாயிலில் கௌசிகன் வண்டியை நிறுத்தச் சொன்னான். பிறகு கலாவிடம் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பிரசாதத்தை அளிக்குமாறு கூறினான். கலாவும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள். அவள் நுழையும்போது, வீட்டுக்குள்இருந்து ஓர் அழகான வாலிபன் வெளியே வந்தான். கலாவைப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்துப் போய் நின்று அவளைக் கண்இமைக்காமல் பார்த்தபடியே நின்றான். அதனால் வெட்கமடைந்த கலா தலையைக் குனிந்து கொண்டு, "நாங்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். பிரசாதம் கொடுக்க வந்தேன். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்றாள்.அவள் மீது செலுத்திய பார்வையை அகற்றாமல் அந்த வாலிபன், "என் பெற்றோரிடம் இதைக் கொடு!" என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பெற்றோரை அழைத்தான். அவர்களும் வெளியே வந்தனர். கலாவைக் கண்டு ஆச்சரியமுற்ற அவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர்.பிறகு அவளுடைய நோக்கமறிந்து, வண்டியிலிருந்த அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தனர். கலாவை மிகவும் பிடித்து விட்டதால், அவர்கள் தாங்களாகவே திருமணப் பேச்சைத் தொடங்க, கௌசிகன் அந்த வாலிபனது ஜாதகத்தைப் பரிசீலனை செய்து, பெண்ணின் ஜாதகம் அவனுடன் பொருந்துவதாக அறிவித்தான். அந்த வாலிபனும் சம்மதிக்க, திருமணம் உடனே நிச்சயிக்கப் பட்டது.வாலிபன் பெயர் வீரபத்திரன் என்றும், தந்தை பெயர் சிவராமன் என்றும் தாயின் பெயர் காமினி என்றும் அறிந்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மறுநாள் ஊர் திரும்புகையில் இரவில் ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் காலை கௌசிகன் அருகிலிருந்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது, திடீரென ஒரு ராட்சசன் மரத்திலிருந்து குதித்து, கௌசிகனிடம், "என் கேள்விகளுக்கு பதில் சொல்! இல்லைஎன்றால் கொன்று விடுவேன்!" என்றான்.கௌசிகன் சோதிடர் மட்டுமன்றி, உலக ஞானமும், துணிச்சலும் உடையவன். அதனால் அவன் சற்றும் பயப்படாமல் ராட்சசனை நோக்கி, "நீ ஏதோ ஒரு சாபத்தினால் இவ்வாறு ராட்சசனாக உலவுகிறாய்! உனக்கு சாப விமோசனம் தான் தேவை! அதற்கான வழியைச் சொல்லுகிறேன். வீணாகக் கேள்வி கேட்காதே!" என்றவுடன் ராட்சசன் அவனை வணங்கி, "நான் மீண்டும் மனிதனாக மாற என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.அதற்கு கௌசிகன், "உனக்கு அபூர்வ சக்தி உள்ளது. அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால், சாப விமோசனம் கிட்டும்!" என்றான். "ஆம்! எனக்கு ஒரு அபூர்வ மந்திரம் தெரியும். ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை உச்சரித்தால், அந்தப் பழம் சக்தி வாய்ந்ததாகி விடும். அதை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்!" என்றான். "அந்த சக்தியை குழந்தை பாக்கியம்அற்ற ஒரு புண்ணியவதியான பெண்ணுக்குக் கொடு!" என்று கௌசிகன் சொல்ல, "எனக்குப் புண்ணியவதி யார், பாவி யார் என்று தெரியாது. நீங்கள் தான் கூற வேண்டும்" என்றான்.சற்று நேரம் தீவிர சிந்தனையில்ஆழ்ந்த கௌசிகன், "அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. நீ இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!" என்று கூறிவிட்டுச் சென்றான். பிறகு அனைவரும் ஊர் திரும்பினர். சில நாள்களுக்குப் பிறகு கலா-வீரபத்திரன் விவாகம் இனிதாக நடந்தது. கலா கணவன் வீடு சென்று தன் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினாள்.ஆனால், அவளது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. மணமாகி ஓராண்டு முடிந்தும் அவளுக்குக் குழந்தைப் பேறு உண்டாகாததால் அவளுடைய மாமியார் அவளை மிகவும் கடுமையான சொற்களால் வாட்டி வதைத்தாள். மாமனாரும் அவளுடைய உதவிக்கு வரவில்லை. கணவனும் அவளை உதாசீனம் செய்தான். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் கழிந்தன. வீரபத்திரனின் தூரத்து உறவினரான ராமநாதன் என்பவர் தன் பெண்ணை அவனுக்கு இரண்டாம் தாரமாகத் தர விரும்பினார். ஆகையால் அவர், சீதாராமன் என்ற சோதிடரை அணுகி, "நீ சிவராமன் வீட்டிற்குச் சென்று அவருடைய மருமகள் கலாவின் ஜாதகத்தைக் கேட்டு வாங்கு! அதை ஆராய்வது போல் பாசாங்கு செய்தபின் ஜாதகப்படி கலாவிற்குக் குழந்தையே பிறக்காது என்று அடித்துச் சொல்! என் பெண் சுபத்ராவை வீரபத்திரன் மணந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்! இதை நீ ஒழுங்காக செய்தால், உனக்கு நிறையப் பணம் தருவேன்!" என்று ஆசை காட்டினார்.அவர் கூறியதுபோலவே சீதாராமன் வீரபத்திரனிடம் சென்று கூற, ஏற்கெனவே கலாவை விஷமாக வெறுத்த வீரபத்திரன் பெற்றோர் அவனுக்கு இரண்டாம் தாரமாக சுபத்ராவை மணம் முடிப்பதற்குத் தீர்மானித்தனர்.விஷயமறிந்த கலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கௌசிகனை அணுக, அவர் வீரபத்திரனின் வீட்டை அடைந்தார். கலாவின் ஜாதகப்படி அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து "அது தாமதமானதற்குக் காரணம் நீங்கள் இருவரும் புரிந்திருக்கும் பாவங்களே! ஆனால், கலாவிற்குக் குழந்தை பிறக்கும் நல்ல வேளை பிறந்து விட்டது" என்றார்.உடனே சிவராமன் சோதிடர் சீதாராமனின் சோதிடக்கணிப்பை பற்றிக்கூற, கௌசிகன் உடனே சீதாராமனை வரவழைத்தார். அவர் வந்ததும் அவரை நோக்கி, "நாம் இருவரும் பந்தயம் கட்டுவோம். நான் கூறும் சோதிடம் கட்டாயம் பலிக்கும் என்கிறேன். இரண்டு மாதத்தில் அது பலிக்காவிட்டால் நான் தோல்வியை ஏற்பேன். ஆனால் கலா கருவுற்றால், உங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வேன்! சம்மதமா?" என்று சவால் விட, பயந்து போன சீதாராமன் ஊரை விட்டே ஓடிப்போனார்.உடனே கௌசிகன் ராட்சசனை சந்தித்து, "உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த மகிமை வாய்ந்த பழத்தை இப்போது தா!" என்று கேட்க, அவனும் ஒரு பழத்தை மந்திரம் உச்சரித்துக் கொடுத்தான். கொடுத்த மறுகணமே அவன் கீழே விழுந்து உயிர் நீத்தான். அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்த கௌசிகன் கலாவிடம் அதைத் தந்து உண்ணச் சொன்னார்.இரண்டே மாதத்தில் கருத்தரித்த கலா, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! கலாவிற்கு திருமணம் நடந்தவுடனே மகிமைவாய்ந்த பழத்தை கௌசிகன் கொடுத்து இருந்தால் அவள் துன்பப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா? அவளை மட்டுமா தவிக்கவிட்டான்?அந்த ராட்சசனையும் மூன்று ஆண்டுகள் காக்க வைத்தான். அவனை சந்தித்த போதே அந்தப் பழத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருந்தால் கலாவும் உடனே கருத்தரித்திருப்பாள். ராட்சசனுக்கும் சாப விமோசனம் கிட்டியிருக்கும். கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.அதற்கு விக்கிரமன், "கௌசிகன் சோதிடர் மட்டுமே! கடவுள் அல்ல! அவனால் விதியைப் பற்றிக் கூற முடியுமே தவிர விதியை மாற்ற முடியாது. ஒருவருடைய ஜாதக ராசிப்படி, சில நல்ல காரியங்கள் குறிப்பிட்ட நல்ல காலம் வரும் போதுதான் நடக்கும். கலாவின் ஜாதகப்படி அவளுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் என்றும், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்று முன்னமே கௌசிகன் கணித்துக் கூறினான்.அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால், அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது. எனவே, அவன் உரிய நல்ல காலம் வரும் வரைக் காத்திருந்து, பிறகே பழத்தை அவளுக்கு அளித்தான். அதேபோல், ராட்சசனுக்கும் அவன் விதிப்படி மூன்று ஆண்டுகள் மேலும் காக்க நேரிட்டது.ஆகவே கௌசிகன் தாமதம் செய்தான் என்பது தவறு. அவன் நல்ல வேளை கூடி வரும் வரை காத்திருந்தான் என்பதே சரி" என்றான். விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா, சிகா என்று சொல்லவேண்டியதுதான். தாமதம், சிகாமணி உடனே புறப்பட்டு விடுவாள். நான் அவளை எங்கே கூப்பிட்டுக்கொண்டு போவேன் என்றும் அவளுக்குத் தெரியும். ''வரும்போது காய்கறி வாங்கிக்கொள்ளலாமா'' என்ற கேட்பாள். சட்டைப் பையைத் துளாவிக்கொண்டு பணம் இருக்கிறதா என்று பார்ப்பேன். ''பர்ஸ் எடுத்துக்கிட்டேன்'' என்று சிரிப்பாள். எத்தனை வருஷமாகச் சிகா இப்படியே சிரித்துக் கொண்டிருக்கிறாள். ஓரு கீரைத் தண்டைப் போலக் கணுக்கணுவாக முற்றி, கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் அப்படியே இருப்பது இவளாகத்தான் இருக்கும். கனகராஜ் நல்ல குண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அம்பலவாணபுரத்திலிருந்து அம்பை ஆர்.எஸ் வரமிஞ்சிப் போனால், பஸ்ஸில் பதினைந்து நிமிஷம் ஆகும். அகஸ்தியர்பட்டி தாண்டி கோடரம்குளம்விலக்கு வருகிறவரை, ஒவ்வொரு தடவையும் எப்படிச் சொல்ல முடியாத ஒரு அமைதி வந்து நம்மிடம் சேர்கிறது என்று தெரியவில்லை. சிகாவும் இதை எத்தனையோ தடவை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி எல்லாம் தோன்றச் செய்தது எது. தூரத்தில் தெரிகிற மலைகளா, எங்கோ ஓடிக்கொண்டிருக்கிற ஆறா. இரண்டு பக்கமும் திறப்பாகக் கிடக்கிற வெளியா. ''அழக் கூடாது மணி, பச்சை பிள்ளையா நீ '' என்று பின் சீட்டில் இருந்து சிகாமணியின் அம்மா சொல்லிக் கொண்டே வந்தார்கள். சிகாவின் தங்கை பொன்னுக்குட்டியும் அழுது கொண்டிருந்தாள். இத்தனையிக்கும் பஸ் ஏறுகிற வரை அத்தானைக் கிண்டல் செய்து கொண்டு இருந்தவள் தான் அவள். கனகராஜ் இது எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்பதுபோலக் கைக்குட்டையால், முகத்தைக் துடைத்துக்கொண்டு, ''ரவி அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமல்லவா'' என்று கேட்டார். ஆமாம் என்ற சூட்கேஸ்களை எல்லாம் நகர்த்திக் கொண்டே சிகாவைப் பார்த்தேன். முன் பக்கத்துக் கம்பியில் குப்புறச் சாய்ந்து ரிஸ்ட்வாட்ச் கட்டின இடதுகையில் முகத்தை அழுத்தி சிகா அழுதுகொண்டிருந்தாள். பிச்சிப்பூ ஒரு ஒருமாகச் சரிந்து கிடந்தது. கனகராஜ் வீட்டில் எடுத்திருந்த கல்யாணச் சேலையைத்தான் கட்டியிருந்தாள். எனக்கு அந்தக் கலர் என்னவோ பிடிக்கவில்லை. சிகாவுக்குப் பிடித்ததோ என்னவோ, ஒரு பேச்சுப் பேசாமல் கட்டிக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தாள். சந்தோஷமில்லாமலா நலுங்கில உருட்டின தேங்காயை கனகராஜ் பிடுங்க முடியாமல் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அப்படி ஒரு சிரிப்புச் சிரிக்க முடியும், ஈறு தெரியச் சிரித்தால், சிகா மனதாரச் சந்தோஷமாக இருக்கிறதாகத்தானே அர்த்தம். ஆலமரத்தடியில் இருந்து அம்பாசமுத்திரம் ஸ்டேஷன் வரை சொல்லிவைத்தது போல சருகுகளாக உதிர்ந்து கிடந்தது. கனகராஜ் பூட்ஸ் சரக்சரக்கென்று மிதித்து நடக்க, சிகா ஒரு ஒல்லிப் பாச்சா போலக் கூடவே போய்க்கொண்டிருந்தாள். சிவப்புக் கலர் வெல்வெட் செருப்பு பளிச்பளிச்சென்ற மாறிக் கொண்டிருந்தது. பொன்னுக்குட்டி சேலைகட்டி அக்காவையிடப் பெரிய மனுஷி மாதிரி இருந்தாள். ''ஏ'' இந்தப் பையை வாங்கு'' என்று பொன்னுக்குட்டியை சிகாவின் அம்மா தன்பக்கம் கூப்பிட்டுக் கொண்டதற்குக் காரணம் இருந்தது. கல்யாணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வருவதற்குள்ளேயே தனத்துச்சித்தி, ''பேசாமல் பொன்னுக்குட்டியை கட்டி வச்சிருங்க. அவதான் பொருத்தமா இருக்கா வளர்த்தியும் சதையுமா'' என்று, சொல்லிவிட்டாள். கைக்கு ஏழெட்டுத் தங்க வளையல் போட்டிருக்கிறவள். சொன்னால் எல்லோரும் சும்மா இருப்பார்களா? நிசந்தான் என்று சொன்னார்கள். சிகா கனகராஜைவிட ரொம்ப மெலிவுதான். ஆனால் சிகாவின் அழகு வேறுயாருக்கும் வராது. கீற்றுப்போல ஒரு தடவையும் ஈறு எல்லாம் தெரிகிறதுபோல இன்னொரு தடவையிம் சிரிக்கிறது. எல்லாவற்றையும் விட, சிகாவின் முகத்தில் இருக்கும் ஈரம் முக்கியமானது. அது லேசில் அமையாது. சிலேட்டைத் தொடுகிற மாதிரி ஒரு குளிர்ச்சி, சதா அவளுடைய பார்வையில் இருக்கும். ரயில் இதையெல்லாம் சொல்வது மாதிரி ''கூ'' என்று ஊதியது. தண்டவாளங்கள் தாண்டி பிரம்மதேசம் அம்மை முத்து முதலியார் ஜவுளிப் பொட்டலத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தார். கார்டு பச்சைக்கொடி அவருக்காகவே காத்திருந்தது. ரெயில்வே ரெஸ்டாரண்ட் நாயனா ஏதோ கிண்டலாகத் சொன்னார். சிகா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரயில் புறப்படும்போது நானும் ஏறினேன். ''என்ன ரவி'' என்றுக் கேட்டுக் கொண்டே ''வண்டி நகர்ந்துட்டுது, இறங்கு என்றாள். பொன்னுக்குட்டியைப் போல எனக்கு அழ முடியவில்லை. ''ஜங்ஷன் வரைக்கும் வாரேன்'' என்று சொன்ன என்னைப் பார்த்த கனகராஜ் ''உட்காருங்க ரவி'' என்றார். ஆற்றப் பாலத்தைத் தாண்டும் போது சிகாமணியைப் பார்த்தேன். சிகா ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள், ஆறு சற்று உள் ஒடுங்கி பாறைகள் முளைக்க ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓட்டம் எங்கே நின்றது. நிற்கிற ஓட்டமா அது. அப்படி எல்லாம் இருந்தால், கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு சிகா இருக்கிற இடம் பார்க்க ஓடிவரத் தோன்றுமா? ''ஏன் ரவி வேலையை விட்டே? மில்லூல பெர்மனண்ட் ஆச்சுண்ணா நல்ல சம்பளம்லா'' சிகா ரொம்ப அக்கறையோடுதான் கேட்டாள். பாலிடெக்னிக் படித்துவிட்டு ஒரு வருஷம் சும்மா இருந்தபின், ஒர்க்கராகச் சேர்ந்து சைக்கிளும் தூக்குச்சட்டியுமாக வந்து கொண்டிருக்கும்போது, சிகா, சிகாவின் அம்மா, லீவுக்கு வந்திருந்த அக்கா பிள்ளைகள் எல்லாம் தாய்சீனிஸில் சினிமா பார்த்துவிட்டு நடந்து வருகிறார்கள். சிகாவிடம் என்ன மாயமிருந்தது. அக்காவுடைய இரண்டு பையன்களும் சிகாவின் கையைப் பிடித்து என்னென்னவோ பேசிக் கொண்டு வருகிறார்கள். அவள் பக்கத்தில் போனாலே இப்படி ஆகிவிடும். இத்தனைக்கும் சில பேரைப் போல, கையைப் பிடித்துக் கொண்டோ, தோளைத் தொட்டுக் கொண்டோ எல்லாம் பேசுவதே இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. பொன்னக்குட்டியைப் பார்த்து சிகா சத்தம் கூடப் போடுவாள். ''அதென்ன பழக்கம். எப்ப பார்த்தாலும் தொட்டுத் தொட்டு பேசிக்கிட்டு'' என்று. பின் எப்படி சூரிய வெளிச்சம் மாதிரி ஒவ்வொருத்தரையும் அவளால் பளிச்சென்று ஆக்கிவிட முடிகிறது. ''உன்னை மாதிரிக் கிறுக்கன் உண்டா, உள்ளூர்ல கிடைச்ச வேலையை விட்டுட்டு, மெட்ராஸ்லே வேலை கிடைக்குமென்று ஓடிவார புத்திசாலி நீதான்'' - சிகா தட்டில் சாதத்தைப் போட்டுக்கொண்டே சொன்னாள். சிகாவின் கைகள் எந்த மாறுதலும் இன்றி அப்படியே மெலிவாக இருந்தன. இரண்டு வெள்ளைக் கல்லும் ஒரு நீலக்கல்லும் வைத்த மோதிரம் எண்ணெய் இறங்காமல் அதே மினுமினுப்புடன் இருந்தது. குனிந்து பரிமாறும்போது காரை எலும்பு இன்னும் தென்னிக்கொண்டுதான் இருந்தது. ''ட்ரை பண்ணும்வோம் ரவி'' என்று கனகராஜ் சொன்னார், ஒரு டர்க்கி டவலை உடம்பு முழுவதும் மறைக்கிற மாதிரி அவர் போட்டிருந்ததை எடுத்து, ''துடைச்சுக்கோ'' என்று, கைகழுவிவிட்டு வந்த எனக்குச் சிகா கொடுத்தாள். கையைத் துடைத்த பிறகு அந்தக் துண்டை இன்னும் முகர்ந்து பார்க்கத் தோன்றியது. ஒருவித கிளர்ச்சியுடன் அதைச் சிகா தோளில் போட்டேன். சிகாமணியின் தோளில் அந்தத் துண்டுக் கனம் இறங்கும்போது பளிச்சென்று ஒரு விநாடி பார்த்துவிட்டு, கனகராஜ் பிசைந்து கொண்டிருக்கிற தட்டில் மோர் ஊற்றினாள். அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து மறுபடி அவள்மேல் வீச வேண்டும்போல இருந்தது. சிகா அவ்வளவு அழகாக இருந்தாள். ''நம்ம ஊர் துரைப்பாண்டி ஸார்வா இங்கேதான் இருக்காங்க'' சிகா என்னிடம் சொன்னாள். ''யாரு நம்ம கணக்கு ஸார்வாளா'' - எனக்கு நம்ப முடியவில்லை. சிகா தலையை அசைத்தாள். ''டிரில் வாத்தியாரா இருந்தானே அவரு பையன், அவரு கூட இருக்கிறதாக அல்லவா சொன்னாங்க'' ''ஆமா மயில்சாமி கூடத்தான். இங்கே தானே, இருக்கான் அவன்'' ''மயில்சாமி எனக்கு ஒரு வருஷம் சீனியர். நான் எட்டுப் படிக்கும் போது அவன் ஒன்பது படிச்சான். ஸ்போர்ட்ஸ்ல வருஷா வருஷம் ப்ரைஸ் வாங்குவான் அப்பவே'' ''தெரியும் தெரியும்'' சிகா ஒரு மாதிரியாகச் சிரித்தாள். சிகாமணி போகிற இடமெல்லாம் மயில்சாமி கொஞ்சநாள் அலைந்து கொண்டு இருந்தான். டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போகிற நேரம் பார்த்துச் சரியாக மூணுலாம்பிற்கு நேர் எதிரே ஒரு லாலாக்கடை இருக்குமே அதற்குப் பக்கத்தில் நிற்பான். தினசரி விடியற்காலம் ஆறுமணிக்கு என்ன அல்வாவா சாப்பிடமுடியும். அது எல்லாம் காய்ச்சல் அடித்துக் குணமாகிற மாதிரி தன்னாற் போல சரியாகிவிட்டது. காரைக்குடிக்குப் போய் டிரில் வாத்தியார் வேலைக்குப் படித்து விட்டு வந்து சமயம் ஆளே மாறிப் போய்விட்டான். வெள்ளை அரைக்கால் சட்டையும் கான்வாஸ் காலணியுமாக சைக்கிளில் பந்து விளையாட போகும்போது சிகா வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தால். வீட்டுச் சுவரில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. மயில்சாமி பேசுவான் என்றுதான் சிகாமணி நினைத்தாள். கிணிங் என்று அவள் பக்கத்தில் வரும்போது ஒரு பெல் கூட அடிக்கவில்லை. சிலபேர் எப்படி இப்படி மாறிவிடுகிறார்கள். பாபநாசம் ரோட்டு மருதமரம், அதில் ஒட்டப்படுகிற கலைக்கோவில் சினிமா போஸ்டரும் பொந்தில் இருக்கிற கிளிகளும் மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றன. இவ்வளவு தெரிந்தபிறகு துரைப்பாண்டி ஸாரை பார்க்காமல் இருக்கமுடியுமா. மயில்சாமி வீட்டை சிகாவும் நானும்தான் நடந்து போய்க் கண்டுபிடித்தோம். கொஞ்சம் தூரம்தான். போகவரவே அரைமணிநேரம் கிட்டதட்ட ஆகிவிடும். மயில்சாமி சம்சாரம் அருமையான மனுஷி. பேச ஆரம்பித்தால் மடியில் தூக்கிவைத்துக் கொள்கிறமாதிரித்தான் இருந்தது. முதல் தடவையாக மயில்சாமி வீட்டிற்குப் போயிருக்கும்போது மயில்சாமியும் இல்லை. துரைப்பாண்டி ஸாரும் இல்லை. ''இவ்வோ இன்னும் வரலை. மாமா ட்யூஷன் எடுக்காஹ. வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்காஹ. பொழுது போகணும்லா, எம்புட்டு நேரம் சும்மாவே ஈஸிசேரிலே பேப்பர் படிச்சுட்டுக் கெடக்கிறதுங்காஹ, இதை சொல்லும்போது ஒரு தட்டில் கொழுக்கட்டையும் தண்ணீரும் வந்தது. ''நமக்கே குத்த வச்சு ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியலே. இதிலே அந்தக் காலத்து ஆட்கள் எப்படி இருப்பாஹ? - மயில்சாமி சம்சாரம் பேச்சை நிறுத்துகிறதாக இல்லை. ஆவுடையானூர்க்காரி என்பது சரியாகத்தான் இருந்தது. என்ன பிரியம். என்ன திருத்தம் ஒவ்வொண்ணிலும். என்றைக்கு வெளியே போகவேண்டும் என்று தோன்றினாலும் எனக்கும் சிகாவுக்கும் துரைப்பாண்டி ஸார் வீட்டிற்குத்தான் போகத் தோன்றும். இப்போதாவது என்னென்னவோ பேச்சு வந்துவிட்டது. ரேஷன் கடையில் கூட நான் கனகராஜ் இல்லை என்று தெரிந்து கொண்டே, ''கனகராஜ் ஸாருக்கு கோதுமைக்கு பில் போட்டாச்சா'' என்று கேட்டபடி என்பையில் கோதுமையை அளந்து போட்டிருக்கிறார்கள். ''மண்ணெண்ணெய் கேன் டீச்சர்கிட்டே இருக்கா ஸார் என்று தள்ளி நிற்கிற சிகாமணியை காட்டிக் கேட்டிருக்கிறார்கள். சிகா டீச்சர் இல்லை. வேலைக்கு போகவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்ததைத் தெரியாது போலப் பேசுகிற கெட்டிக்காரத்தனம்தானே இப்போது செல்லுபடி ஆகிறது இதற்கு எல்லாம் முந்தி நாங்கள் மூன்று பேருமே நடந்து, பெருமாள் கோவில் தாண்டி, போலீஸ் ஸ்டேஷன் பக்கமாய்ப் போய், ஏரிக்கரையில் நடந்து, நடுவில் பட்டம் விடுகிறவர்களைச் சற்றுப் பார்த்து, சர்வ சாதாரணமாக நடக்கிற சாராய வியாபாரத்தைக் கண்டுகொள்ளாமல் விலகி, ஒரு நீண்ட விசில் சத்தத்தின் கேலி ஒலிக்க - ( இப்போது நான் சற்றுக் கோபமாக நின்று திரும்பிப் பார்க்க, ''போவோம்'' என்று கனகராஜ் தோளில் கைவைப்பார். சிகா மடங்கிக் கீழே குனிந்து ஒரு நத்தைக் கூட்டைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பாள்) வேலிக்காத்தான் செடிகளுக்கு அப்புறமாகப் போய் ஸார் வீட்டை அடைந்தபோது, அன்றைக்கு கணக்கு ஸார் வீட்டில் இருந்தார்கள். கணக்கு ஸார் எவ்வளவு அருமையான மனிதர். எங்கள் பள்ளிக் கூடத்தின் சொத்தே அவர் அல்லவா. உலகம் என்ன என்ன முடிச்சை எல்லாம் எங்கெங்கு போடுகிறது. என்னுடைய தாத்தாவும் அவருடைய அப்பாவும் எஸ்டேட்டில் ஸ்டோர் கீப்பராக இருந்தார்களாம். ஏதோ ஒரு முக்கியமான சிறு உதவியை எங்கள் தாத்தா செய்திருப்பார் போல. '' அவர் பொருத்திவச்ச விளக்கு அல்லவா எங்க வீட்டில் இன்றைக்கும் எரியுது'' என்று என்னுடைய அப்பாவிடம் ஸார் சொலலிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா போனபிறகு அன்றைக்கு ஸார் எனக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்டங்கள் பற்றியும் அட்டைக்கடி பற்றியும், பள்ளிக்கூடம் போகிற வழியில் வேல்கம்பால் குத்தித் தூக்கி மரத்தில் உயிரோடு இருப்பதுபோல் கட்டி வைத்திருந்த சிறுத்தைப் புலி பற்றியும் சொன்னார். அந்தப் பக்கத்தில் இருந்த சர்ச்சின் மணி சப்தம் எப்படி இருக்கும் என்று ஸா‘ சொல்லும்போது மனி சப்தம் கேட்டது. குளிர்ந்த ஓடைகளும் பெரணிச் செடிகளுமாக இருக்கிற அவருக்குப் பிடித்த ஒரு பாறையைப் பற்றிச் சொல்கையில், நான் அந்த ஓடையில் இருந்து கூழாங்கற்கள் பொறுக்கினதுண்டு. ஒரு சமயம் இங்கிலீஷ் பீரியட் ஸார்வா வராதபோது துரைப்பாண்டி ஸார் வந்து ''இங்கிலீஷ் பொயட்ரி'' எடுத்தார். ஒரு படுகை பூராவும் மலர்ந்திருக்கிற ஒரு மலரைப் பற்றிய அந்தக் கவிதையைச் சொல்லிக் கொடுப்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பது அவர் பேசின மற்றப் பேச்சிலிருந்தே எனக்குதெரிந்தது. எனக்கும் கூட சமபங்கு கணிதமும் வேண்டியிருந்தது. இதுபோல சொல்லிக் கொடுக்கப்படுகிற கவிதையும் வேண்டியிருந்தது. நான் பாலிடெக்னிக்கில் சேருவதற்குப் போதுமான கணக்கையும், சிகாமணியைக் கண்டடைவதற்கான மெல்லுணர்வையும் அவரிடமிருந்துதானே பெற்றுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் மூன்று பேரும் போன தினத்தில் சிகாவிடமும், என்னிடமும், ஊருக்குப் போனீர்களா, சமீபத்தில் மழை உண்டா, பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் எப்படி, மில்லில் ஆள் எடுக்கிறார்களா, எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஹைஸ்கூலில் போனவருஷம் எத்தனை சதம் தேறினார்கள். கணக்கில் சென்ட்டம் எத்தனைபேர், சொரி முத்தையன் கோவிலுக்கு இப்போது ஆடி அமாவாசைக்கு முன்னைப் போலக் கூட்டம் வருகிறதா. காணிக்குடியிருப்பில் ஸ்கூல் ஒண்ணு உண்டே. அது நல்ல பெருசா வளர்ந்துட்டுதா, இப்போ ஸ்ட்ரெங்த் எவ்வளவு இருக்கும் என்று எல்லாம் சற்று நேரம் கேட்டவர், ஒரு கேவலைப்போல நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, இதுவரை பேசாமல் கவனித்து கொண்டிருந்த கனகராஜைப் பார்த்து. ''உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று கேள்விப்பட்டேன்'' என்று அவருடனான தன் முதல் உரையாடலைத் துவக்கினார். அவர்கள் பியானோ இசையைப் பற்றி அப்புறம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கனகராஜ் ஒரு கட்டத்தில் பியானோ வாசிப்பதையே போன்று தன் பத்து விரல்களையும் ஒரு இசைவுடன் அசைத்துக் கொண்டு, காற்றில் சில நிமிடங்கள் அந்தரத்தில் கைகளை நிறுத்திக் கண்களை, மூடிக்கொண்டபோது, துரைப்பாண்டி ஸார் தன் பக்கத்தில் இருந்த சிகாமணியின் கைகளில் ஒன்றை எடுத்துத் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டார். சிகாவின் மெலிந்த கையின் மேல், வழுவழுப்பு நிறைந்த சேலை நினைத்து நினைத்துச் சரிந்து இறங்கியது. அப்புறம் நாங்கள் எத்தனையோ தடவை போயிருப்போம். ஒரு சில நெகிழ்வில் உள்ளங்கைக்குள் புரண்டு கொடுக்கிற கற்பனையான வைரக்கற்களைப் போல, மனிதர்களுக்குள்ளும் நிகழ்ந்து விடத்தானே செய்கின்றன. எல்லாம் காதுக்கு வந்த பிறகு மயில்சாமியின் மனைவி ஒரு சிறு வித்யாசம் கூடப் பாராட்டாதது எப்படி என்று இன்னும் புரியவில்லை. நானும் சிகாவும் போயிருக்கும் போது, இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு மயில்சாமி ஒரு தடவை சொன்னான். ''உங்க ரெண்டு பேரையும் கண்டிச்சுக் சொல்லணும் போலவும் இருக்கு. சொல்லவும் முடியலை''. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் எப்படி அவனால் நிறுத்திக் கொள்ள முடிந்தது. அவன் வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோம். ''சிகா, உனக்குக் கார்ட்டுன்ஸ் பிடிக்கும் என்று சொன்னாயே'' என்று சொல்லி காஸெட்டைப் போடுகிறான். ''ரவி மீன் சாப்பிடுவியா நீ'' என்று அவன் மனைவி வந்து கேட்டுவிட்டுப் போன சிறிது நேரத்தில் அம்மி தட்டுகிற சத்தம் கேட்டது. ''அம்மி தட்டுகிற சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு'' சிகாமணி உட்பக்கம் எழுந்து போகிறாள். திரையில் பூனை எலியிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்க மயில்சாமி அப்படிச் சிரிக்கிறான். சின்னப்பிள்ளை மாதிரி. சொல்ல முடியாத ஒரு கணத்தில் எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டும் எங்கேயாவது போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது. ''மயில் அப்ப நான் வர்ரேன்'' ''ச்சூ. இருந்து சாப்பிட்டுப் போகலாம் ரவி'' இல்லை போறேன்'' - எனக்கு என்னைத் தூக்கி யாராவது எறிந்து நொறுக்கிவிட மாட்டார்களா, சுக்கல் சுக்கலாகி, யார் காலிலும் குத்தாமல், மண்ணோடு மண்ணாகிவிட மாட்டேனா என்று இருக்கிறது. கனகராஜ் எதிரே வந்து விடக்கூடாது. துரைப்பாண்டி ஸார் வந்துவிடக்கூடாது. வெயிலின் கீற்றில் கரைந்து அரூபமாகி, ஏரிக்குள் பறக்க விடுகிற பட்டம் மாதிரி உச்சிக்கு எவ்வி எவ்வி உயிர் அறுந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும். ''சிகா சாப்பிட்டுட்டு வரட்டும். நான் போறேன்'' எழுந்திருந்தேன். ''இந்த பாரும்மா. ரவி போறானாம்'' - அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் வெளியே வந்தேன். ஹ’ண்டு பேப்பர் தரையில் சருகியது. நாய் கட்டிப் போட்டிருந்த இடத்தில் சூட்டு வாடை அடித்தது. தபால் பெட்டில் யாரோ டூத் பிரஷ் காலி டப்பாவைச் செருகியிருந்தார்கள். கருநீலமாகப் பூக்கள் அசைந்தன. மரக்கதவில் கனத்து விழுகிற இரும்புப்பட்டை நாதாங்கி. சிந்திக்கொண்டே போகிற தண்ணீர் லாரி. சைக்கிள் ரிக்ஷாவின் ஓரத்தில் இருந்த நீல பீக் ஷாப்பர் பையில் பசேல் என்று காராமணிக் கொத்து. ''என்ன ஆச்சு ரவி'' - சிகா வந்து கையைப் பிடித்தாள். மேலும் பிடித்தபடியே என்னுடனே நடக்க ஆரம்பித்தாள். மெலிந்த அவளுடைய கைகள் எனக்கு நிரம்பவும் வேண்டியிருந்தது. சேலையின் விசிறல் பக்கவாட்டில் நகர்ந்தபடி வந்தது. சிகாமணி சேலைத்தலைப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். ''நல்ல வெயில்'' என்றாள். எதிரே துரைப்பாண்டி ஸார் வந்து கொண்டிருந்தார். முழுக்கைச் சட்டையுடன் ஒரு கை உயர்ந்து குடையைப் பிடித்திருந்தது. தோளில் சாய்ந்த குடையில் அவருக்குப் பின்னால் உள்ள பாதை மறைந்து மறைந்து விலகியது. முக்கியமாக, ஒரு வீட்டுக்குள்ளிருந்து தெருப்பக்கம் சரிந்திருந்த செவ்வரளிப் பூக்கள் பார்வையிலிருந்து விலகுவதும் தெரிவதுமாக இருந்தது. தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விட்டார். துரைப்பாண்டி ஸாருக்கு எல்லாம் தெரியும். ''என்ன இந்த வேனா வெயிலில?'' ''நம்ம வீட்டுக்குத்தான் ஸார்'' - சிகா சொன்னாள் ''சாப்பிட்டீங்களா'' - மரத்தடிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. அவர் ஒரு மரத்தடிக்கு நகர்வது மூலம் எங்களையும் நிழலுக்கு உட்படுத்திக் கொண்டார். வெயிலை விட்டு எப்படி எல்லாம் நகர்த்திக் கொள்ள முடிகிறது. மணி ஒண்ணரைதானே ஆகுது'' ''ஒண்ணரை மணிக்குச் சாப்பிடக் கூடாதுன்னு என்ன எழுதியா வச்சிருக்கு?'' -ஸார் எங்களைப் பார்த்தார். நாங்கள் நின்றிருந்த வேலிக்கருவை மரம் நிறையக் காய்த்திருந்தது. குஞ்சம் குஞ்சமாகப் பூத்திருந்தது. ஊதினால் மகரந்தம் பறக்கும்போல. ஏற்கெனவே ஒடிந்த கிளை காய்ந்து முட்கள் துருத்திக் கொண்டு இருந்தன. நிழல் இருந்தது போதுமான அளவு. சிகாவும் நானும் பேசாமல் ஸாருடன் நின்றோம். ஸார் குடையை வலது தோளிலிருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டார். மறுபடியும் கேட்டார் - ''எழுதியா வச்சிருக்கு'' சிகா தலையை ஆட்டினாள் ''எழுதி வைக்கலையில்லா?'' - இப்போது என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இல்லை என்று தலையை ஆட்டினேன். ''பின்னே?'' - இதைச் சொல்லிவிட்டு துரைப்பாண்டி ஸார் முன்னால் நடந்தார். நாங்கள் பின்னால் வருவோம் என்று அவருக்குத் தெரியும்போல.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எழுதி வைக்காதவை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. “குருவே…குருவே..” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. “இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!”“பந்தயமா? என்ன அது?” என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். “காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்” என்று சொன்னான் மண்டு.இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது.“சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை”குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்.“குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!” என்று முட்டாள் சொன்னான்.“நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!” என்று கனவு கண்டான் மூடன்.“அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!” என்று சிரித்தான், மட்டி.“ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.“குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். “இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்” என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்.“சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…” என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்.“குருவுக்கு ஜே” என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.“ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் “போக்கு” காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது.“இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!” என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்.“விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!” என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்.“இது மாடா? அல்லது கழுதையா?” என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து “பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!” என்று பதறியவாறே சொன்னார்.முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது.“ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!” என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்.“ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்.“கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!” என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மாடு பிடிப்போம், நாடு ஆள்வோம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, பக்கத்து வீட்டுக்காரர், பாத்திரங்கள், நையாண்டி, விசேஷம், கர்பம் தலைப்பு: முல்லாவின் திருமண ஆசை
தனது மனைவி இறந்து போய் விட்டதால் முல்லா மறுமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தார். அப்பொழுது அவர் 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். முதுமைக் காலத்தில் அவருக்குத் திருமண ஆசை ஏற்பட்டது. அவருடைய நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் நண்பர்கள் முல்லாவிடம் உரையாடிக் கொண்டீருந்தபோது தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்." முல்லா இந்த முதுமைப் பிராயத்தில் உங்களுக்குத் திருமணம் அவசியம்தானா? உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டது?" என நண்பர்கள் கேட்டனர். முல்லா வழக்கமான சிரிப்புடன் பேசத் தொடங்கினார்." நண்பர்களே, உங்கள் அன்பான கருத்துக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும். இளமைப் பருவமோ - முதுமைப் பருவமோ ஆணுக்கு ஒரு பெண் துணை தேவை நான் முதுமைக் காலத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு இது ஒரு காரணம் எனக்கு வாய்க்கும் மனைவி நல்லவளாக என்னிடம் அன்பும் ஆதரவும் உள்ளவளாக இருந்தால் முதுமைக் காலத்திலும் நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழி பிறக்கும் அல்லவா?" முல்லாவின் இந்தப் பதிலைப் கேட்ட நண்பர்கள்" முல்லா அவர்களே! நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக முதுமைக் காலத்தில் உங்களுக்கு வந்து வாய்க்கும் மனைவி பொல்லாதவளாக இருந்து விட்டால்?" என்று கேட்டனர்." வயதுதான் ஆகி விட்டதே? இன்னும் கொஞ்ச காலந்தானே அவளுடன் வாழப் போகிறோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வேன்" என்று முல்லா பதிலளித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார். அவருடன் அவருடைய நாயும் இருந்தது. வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார். முல்லா, ”நாய் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,”என்றார். மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,’ ‘முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது. அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்? தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,” என்றார். முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து, ”நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும், யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார். எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது. எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன். ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,” என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நாய் வால்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஸென் ஆசிரியர் இக்கியூ சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது. சிறுவனாக இருந்த இக்கியூ புத்திச்சாலியும் அதே சமயத்தில் துடுக்குத் தனம் கொண்டவனாக இருந்தான். ஜப்பானில் சீனாவில் இருந்து கொண்டு வந்த தேனீர் கோப்பைகள் மிகவும் அரிய கலைப் பொருட்களாக கருதப் பட்டன. ஒருவருடைய மதிப்பு அவருடைய சிறந்த கலைப் பொருட்களின் சேகரிப்பை பொருத்து இருந்தது. தங்கத்தை விடவும் மிக மதிப்புடையவையாக இவை கருதப் பட்டன. இக்கியூவின் ஆசிரியரிடம் விலை மதிப்பில்லாத அரிதில் கிடைக்கக் கூடிய கலைப்பொருளான ஒரு தேனீர்க் கோப்பை இருந்தது. ஆசிரியர் இல்லாத சமயத்தில் ஒரு நாள் அதனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த இக்கியூ கை தவற விட்டு உடைத்து விட்டான். உடைத்தவன் நெஞ்சம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். அசிரியர் அறையினுள் வரும் ஒசையைக் கேட்டதும் உடைந்த கோப்பையை கையில் எடுத்து தன் பின்புறமாக மறைத்துக் கொண்டான். ஆசிரியர் அருகில் வந்ததும், எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு "ஐயா, எதற்காக மனிதர்கள் இறக்கிறார்கள்?" என்று கேட்டான். ஆசிரியர் சிறுவனுக்கு புரியும் படியாக, "எவ்வளவு நாட்கள் தான் வாழ்வது, சாவு என்பது இயற்கையான ஒன்று, உலகத்தில் பிறந்த எது ஒன்றும் இறந்துதான் ஆக வேண்டும்." என்றார். அதற்காகத் தான் காத்திருந்த சிறுவன் "இப்பொழுது உங்கள் தேனீர் கோப்பைக்கு சாகும் நேரம் வந்து விட்டது" என்று கூறி உடைந்த கோப்பையைக் காண்பித்தான். ஆசிரியர் அவனுடைய சமார்த்தியத்தை பார்த்து வியந்து சிரித்துக் கொண்டே சென்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கோப்பை இறந்தது' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சோமன், பூபாலன், மரியாதை ராமன், கடைக்காரர், ஊர் மக்கள் தலைப்பு: நேர்மை உயர்வு தரும்
மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்" என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்." மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், நேர்மை, விருந்து, தண்டோரா, பெரிய பாத்திரம், தண்ணீர் தலைப்பு: மக்கள் நேர்மையானவர்களா?
ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், "எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார் உடனே சபையிலிருந்த அனைவரும் "ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது." என்றனர். ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், "ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று கேட்டார். உடனே பீர்பால், "இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்," என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார். பீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். தண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், "நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு," என்று உரத்த குரலில் அறிவித்தார். இதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், "அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும்," என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், "சரி ஒரு குடம் பால் தானே…கொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், "நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?" என்று கேட்டார். உடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, "பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்" என உத்தரவிட்டார். பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். "பீர்பால்…என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?" என அதிர்ச்சி மாறாமல் கேட்டார். ஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், "மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே.." என்று சிரித்தபடியே கூறினார். பீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சைனாவின் சூஷுவானில் பிறந்த சா'ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா'னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார். ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, "எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா'ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?" என்று கேட்டார். "புத்தாவாக மாறுவதற்கு" என்று பதில் வந்தது. உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார். இளம் துறவியான மாசூ, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். "இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். "செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?" என்றான் மாசூ. "நீ உட்கார்ந்த சா'ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?" என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங். கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, "ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்" என்றான். "நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்" என்ற ஹுவாய் ஜாங், "அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, "உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?" என்ற கேள்வியினைத் தொடுத்தார். மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு "நீ உட்கார்ந்த நிலையில் சா'ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது 'உட்கார்ந்த புத்தா'வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். "நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா'ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது." என்றார். குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கண்ணாடியான செங்கல்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பூனைகள், குரங்கு தலைப்பு: விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது
ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது. குரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது. அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டூம் போட்டது. இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது. அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்" என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன. ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி" என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன. நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பாளையம், நகைக் கடை, வியாபாரிகள், ராமன், ராஜன், கடுக்கன், மரியாதை இராமன், விசாரணை, சூரியன், சவுக்கடி தலைப்பு: பேராசை பெரும் நஷ்டம்
பாளையம் என்னும் ஊரில் அருகருகே இரு நகைக் கடை வியாபாரிகள் வாழ்ந்து வந்தனர், இதில் ஒருவரின் பெயர் ராமன், மற்றொருவரின் பெயர் ராஜன், ராமன் மிகவும் அன்பானவர் யாவருடனும் எளிதாக பழகக் கூடியவர், ராஜனும் அதே போல் தான் என்ன ராஜன் கொஞ்சம் சிடு மூஞ்சி, இருவரும் எப்பொழுதுமே கடுக்கன் அணிந்திருப்பார், இருவருக்கும் இடையே எப்பொழுதும் வியாபார போட்டி இருந்து கொண்டே இருக்கும், ஒருநாள் ராமன் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று வினவி கொண்டிருந்தார்,பிறகு ராஜனும் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று வினவினார், இருவரும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு சண்டை போட்டு கொண்டனர், பிறகு இருவரும் மரியாதை இராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர், மரியாதை இராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார் மேலும் மரியாதை இராமன் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தார், இரவு கழிந்தது சூரியன் உதித்தது , அனைவரும் மரியாதை இராமனின் அவையில் கூடினர், காணாமல் போன உங்கள் இருவரில் ஒருவரின் கடுக்கன் கிடைத்து விட்டது, என்று கூறி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இரு கடுக்கனை மரியாதை இராமன் இருவர் முன் நீட்டி இது உங்களில் யாருடையது என்று கேட்டார், ராமன் அமைதியாக இருந்தார், பேராசை கொண்ட ராஜனோ அந்த கடுக்கன் என்னுடையதே, என்னுடையதே என்று பல முறை கூறினார், உடனே மரியாதை இராமன் ராஜன் தான் கடுக்கன் திருடன், ராஜன் தான் ராமனின் கடுக்கனை திருடி விட்டு, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ராஜனே ராஜனின் கடுக்கனையும் மறைத்து வைத்துள்ளார், ராஜன் ராமனின் கடுக்கனை திருப்பி தருமாறும் மேலும் 500 சவுக்கடி வழங்குமாறும் கூறி தீர்ப்பை முடித்து வைத்தார், ராஜனும் வலி தாங்காமல் உண்மையை ஒப்பு கொண்டார்..
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், நந்தவனம், நதிக்கரை, சபை, ரோஜாப்பூக்கள், வாள், யானை, பூனை தலைப்பு: சிறந்த ஆயுதம்
சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், "ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!" என்றார். "ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!" என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், "பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?" என்று கேட்டார். "பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!" என்றார் பீர்பல். "ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!" என்று பீர்பல் சொல்ல, "அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!" என்றார் பீர்பல். "பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?" என்று சலிப்புடன் அக்பர் கேட்க, "பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை" என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், "திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?" என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். "வாள்!" என்றார் ஒருவர். "இல்லை!" என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!" என்றார். "எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!" என்றார் மற்றொருவர். "பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!" என்றார் பீர்பல். "சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?" என்று அக்பர் கேட்க, "சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!" என்றார் பீர்பல். "வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!" என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். "சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்றார் பீர்பல். மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, "பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது. அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!" என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது. உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார். வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது. வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது. தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர். சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். "பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!" என்று மனதாரப் பாராட்டினார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும். முதலாம் துறவி சா'ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. 'நிலா' என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான். " 'சுட்டு' என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா'ன் குரு. அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் 'நிலா'வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. 'சுட்டு' என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான். "நிலா" என்பதே பதிலாக கிடைத்தது. "நான் உங்களை 'சுட்டு' என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக 'நிலா' என்று பதில் அளித்தீர்கள்?" "ஏனேன்றால் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நிலவைச் சுட்டிக் காட்டு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அமெரிக்கா நாட்டு மக்கள், இங்கிலாந்து நாடு மக்கள்,அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படை, இஸ்ரேல் பொட்னாம், ஆங்கிலேய அதிகாரி தலைப்பு: புத்திசாலி ராணுவவீரர்
அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு. அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர். அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார். "இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?" என்றார். இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார். "அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?" என்று சீண்டினார். "நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும். "ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!", "ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்," என்று குமுறினார் ஆங்கில அதிகாரி. "சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன். "இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன். இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு. "இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?" என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம். "சரி" என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி. பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட "ப்யூஸ்" வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார். நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார். "இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!" என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. "இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று." இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது. இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…? நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது. அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை. பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை. ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். "கோழை யார் என்பது புரிந்ததா?" என்று சப்தமாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது. பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம். "இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!" என்று அமைதியாகக் கூறினார். ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார். புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலுக்கு நன்றி தெரிவித்தான். மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரியப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்.. சுருங்க கூறின், காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும், தரித்திரனும் தனிகனாவான். வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும், மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்தருக்கள் நாசமடைவார்கள், பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதஸாரமான் இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்த அறிய பொக்கிஷம்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காயத்ரி மந்திரம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: உப்பு வியாபாரி, கழுதை, உப்பு மூட்டைகள், ஆறு, பாடம், பஞ்சு தலைப்பு: உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்
முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும். ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது. எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான். மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது. அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான். கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான். அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது. மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது. தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது. நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரம சேனன், சிம்மசேனன், குரு, சிறுத்தை, இளவரசன், யானை, நரி, முனிவர் தலைப்பு: முனிவர் காட்டிய வழி
முன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான். ஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர். அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், "அய்யோ!" என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன். அடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல். சிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான். உடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான். வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான். நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ராசாத்தி மகள், பூங்கோதை, மாடத்தி, சுந்தரி தலைப்பு: பூ
\ "ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்." முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். "நிஜந்தானா", "நிஜந்தானா" என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம். "அப்பவும் இப்படியா. அப்பவும் இப்படியா" என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக் கிளம்பினாள் பூங்கோதை. அவளுடன் வந்து சேர்ந்து கொண்டாள் மாடத்தி. அவளிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள் பூங்கோதை. மாடத்திக்குப் பிடிக்கவில்லை. வெடுக்கென்று மறுத்துப் பேசினாள். "பொம்பளைப்புள்ளே சடங்காகுறது ஒரு அதிசயமா? இதுக்குப்போயா... இப்படி வாயாடிக்கிட்டிருக்கே?", "அப்பவும் இப்படியா பதினோரு வயசுகூட ஆகலே, இன்னும் தாவணியும் போடலை. அதுக்குள்ளேயா? இதெல்லாம் காலக் கூத்துதான். "அதுக்கென்ன. கணக்கா இருக்கு? சில உடம்புவாகு அப்படி அதனாலே இருக்கும்லே?", "என்ன உடம்போ...! நாங்க எல்லாம் சீலை கட்டுன முழுத்த பொம்பளைகளா ஆனப்பெறகுதான், மூலையிலே உக்காந்தோம். இப்ப என்னடான்னா.. பால்குடி மறந்த புள்ளைககூட சமைஞ்சிருதுக.", "அதுக இச்சையிலா நடக்குது? அதுக்கு அந்தப் புள்ளைக என்ன செய்யும்?", "நானும் அதுகளை குத்தம் சொல்லலை", "நீ சொல்றதும் வாஸ்தவம்தான். முந்தி மாதிரி இல்லே இப்ப. ரொம்பச் சின்னஞ் சிறுசுககூட "பொசுக் பொசுக்" குன்னு பூத்துருதுக", "மூலை மூலைக்கு நடக்குற சினிமா. டிவிகளைப் பாத்துப் பாத்து... வர்ற சீரழிவு" காலை வெயில் சுள்ளென்று தைக்கிறது. மாடத்தி நடையை எட்டிப்போட்டாள். இவளும் தொடர்ந்தாள். விலகி எங்கோ ஓடுகிற நினைவுகள்.... பூங்கோதை சின்னப் பிள்ளையாக, பாவடை கட்டியிருந்த சமயம்... சினிமா என்றால் அதிசயம். பார்க்கக் கிடைக்காத அபூர்வம் ஆசைப்பட்டவுடன் பார்த்துவிட முடியாது. சினிமா என்றால், அப்போ திருவேங்கடம் போகணும். கெஞ்சிக் கூத்தாடி. அய்யா - அம்மாவிடம் வசவுகள் வாங்கி, அப்புறம் சம்மதம் வாங்கி.... பெரியாள்களுடன் ஈடுகொடுத்து, நாலரை மைல் நடந்து சாகணும். கண்மாய்க் கரையில் - காய்ந்து பொடிப் பொடியான கரிசல் கட்டிகள் நெரிஞ்சிமுள்ளாய் குத்தும். அதையும் தாங்கிக்கொண்டு "லொக் லொக்" கென்று மூச்சிறைக்க ஓடணும். டூரிங் தியேட்டரில் மணலைக் கூட்டி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு... மையிருட்டில் முள்ளுக் காட்டில் மறுபடியும் நடை. வீடு வந்து சேர்வதற்குள், கோழி கூப்பிட்டு விடும். மறுநாள் எழுந்திருக்க முடியாது. அடித்துப் போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலியெடுக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்கு சினிமா ஆசையே வராது. இப்போது... அப்படியா? வாரம் வாரம் டி.வி.யில் சினிமா. டி.வி. உள்ள புண்ணியவதிகள் வீட்டுக்குள் புளிச்சிப்பமாய் அடைந்து கிடந்து, சிறிசு, பெரிசுகள் எல்லாம் போய்ப் பார்த்து விடுகின்றன. இதுவும் போதாதென்று. ஊர் மைதானத்தில் பத்து நாளைக்கு ஒரு தடவை "டெக்"கும், டிவியும் வந்துவிடும். யாரோ சிலர் ஏற்பாடு செய்திருப்பார்கள். வீடு தேடி வந்து கதவைத் தட்டுகிற சனியன்கள். ஊரே திரண்டு, விடிய விடிய கண் கூசாமல் பார்க்கும். ஒரு ராத்திரிக்கு நாலு படங்கள். இப்போது வருகிற சினிமாக்கள், மனுச மக்கள் உட்கார்ந்து பாக்கிற மாதிரியாகவா இருக்கிறது? ஒரு கதை உண்டா? கருத்து உண்டா? ஒரு இழவும் இல்லை. ஒரே ஆடுகாலித்தனம்தான். காமக்கூத்தும், அசிங்கமும்தான், டவுசர் போட்ட சின்னப் பையனும், பொண்ணும் காதலிக்க தண்ணீரில் நனைய, தாவணியை உருவ...த்தூ! அசிங்கம். இந்தக் கூத்துக்களை மனம் கூசாமல் விடிய விடிய பார்த்து ரசிக்கிற சின்னதுகளும், பெரியதுகளும்..... பெரியதுகளாவது... காடு கரைகளில் இந்த அசிங்கங்களைப் பேசிச் சிரித்து கழித்து விடுவார்கள். பாவம் சின்னதுகள்.... உள்ளுக்குள்ளேயே பொத்தி, பொத்தி அடைகாத்து.. ஒன்றுக்குப் பத்தாக யூகங்கள் பொறித்து... தீயிலே பிடுங்கிப் போட்ட பிஞ்சுக் காய்களாக அதுகளே வெந்து வெடிச்சிருதுக.... இதைக் காலக் கூத்து என்பதா, சினிமா கூத்து என்பதா? ஹூம்... அடக் கூத்துவனே!.... "என்ன பூங்கோதை, சத்தத்தையே காணோம்?", "ஒண்ணுமில்லே" என்றவள். பெருமூச்சுடன் வெளி உலகத்துக்கு வந்தாள். இழுத்துக் கொண்டு ஓடுகிற நினைவுகளை இழுத்துப் பிடித்தாள். "ராசாத்தி மகளைத்தான் நெனச்சுட்டு வாரீயா?", "இல்லே. பொம்பளையா ஜென்மம் எடுக்குறதே ஒரு பாவம்தான்", "ம்ச்சூ", "இதெல்லாம் எங்க ஒழுங்கா நடக்குது? இந்தா, என்னைத்தான் பாரேன். புல்லு மொளைக்காத பொட்டக்காடா.. எம் பொழப்பு" சட்டென்று குலுங்கிப் போய் விட்டாள் பூங்கோதை. பக்க வாட்டில் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள். மாடத்தி முகத்தில் கனத்து நின்ற சோகம். கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை. பார்க்கத் திராணியில்லாமல் பாதையைப் பார்த்தாள் பூங்கோதை. மனசு கிடந்து அடித்துக் கொண்டது. பேச விஷயமே இல்லாமல் போய்விட்ட மாதிரி ஒரு வெறுமை. அவர்களைச் சுமையாக அழுத்துகிற ஒரு மௌனம். ஆழ்ந்த துயரமான மௌனம். நல்ல வார்த்தை ஏதாச்சும் சொல்ல ஆசைப்பட்டாள். என்ன சொல்லித் தேற்றுவது? சொல்லி ஆறுகிற சோகமா... மாடத்தி சோகம்? எல்லாக் குமரிகளையும் போல, மாடத்தியும் நல்லபடியாக வளர்ந்தவள்தான். ஆட்டபாட்டமாய் கும்மாளம் போடுகிற புது வெள்ளமாய்.. கனவுகளோடு பொங்கிச் சிரித்தவள்தான். நல்ல இடத்தில்தான் வாழ்க்கைப்பட்டு வெட்கச் சிரிப்போடு போனாள். இன்பத் ததும்பலில் முதல் வருஷத்திலேயே ஆண் பிள்ளை பிறந்தது. செத்தும்போனது. அப்புறம், அவள் வாழ்க்கையில் ஒரே சூறாவளிமயம்தான். புருஷனுக்கு என்ன கேடு வந்ததோ... அவள் மேல் தீராத சந்தேகம். குற்றம் சொன்னால்... இல்லையென்று நிரூபிக்கலாம் கூறுகெட்ட குருட்டுச் சந்தேகத்திற்கு.. ஏது வெளிச்சம்? சீவி முடித்து பூ வைத்தால்... சந்தேகம். "எந்தப் புருஷனுக்காக?" என்று கத்திக்குத்து. வருத்தத்தில் நொந்துபோய் எண்ணெய் தேயாமல் காய்ந்து கிடந்தால்... அந்நேரமும் ஈட்டிதான் நெஞ்சில் பாயும் "எந்தப் பயலை நினைச்சு?" அனுதினமும் செத்துச் செத்து வாழ்ந்தாள். "அப்பன் சாயலுமில்லாம, ஆத்தா ஜாடையுமில்லாம புள்ளை பொறந்துருக்கு, பாரு எங்க கிடந்து பொறந்துச்சோ... இது" பிறந்து செத்த பிள்ளை பற்றி ஒரு கிழவி வெள்ளைத்தனமாய் சொன்ன இந்த வார்த்தைதான். அவனுக்குள் விஷமா இறங்கி. ரத்தமெல்லாம் பரவி, மூளையின் நிறமே நீலம் பாய்ந்து... வாழ்க்கை செத்தது. அடியும், உதையுமாய் அவள் உடம்பு ரணப்பட கொத்திப் பிடுங்குகிற பாம்புச் சொல்லில் மனசு நரகமாக... அஞ்சு வருஷ இழுபறிக்குப் பிறகு ஒரேயடியாக துரத்தப்பட்டு... வாழாவெட்டியாக இங்கு வந்து விழுந்தவள்தான். ஆதரவாயிருந்த அம்மா என்கிற ஜீவனும் ஒடுங்கிப் போய்ச்சேர.. ஒற்றைப் பனைமரமாய் இவள். காய் காய்க்காத வெற்று மரம். இதோ... சூன்யமே ஒரு விடுதலையாகத் தோன்ற... பாதி ஆயுளைக் கரைத்துவிட்டாள். கோடைப் பருத்திச் செடி. நெஞ்சுப் உயரத்துக்கு இருந்தது. கால்வைத்து விலகிச் செல்ல முடியவில்லை. அத்தனை அடர்த்தி. ஆனால், அவ்வளவாக காய்கள் இல்லை. இருக்கிற காய்களும் பூச்சி விழுந்து.... சூத்தையாகி.... அங்கொன்றும் இங்கொன்றுமாய் பருத்திச் சுளைகள், நோயில் வெம்பி வெடித்ததைப் போல.... குத்தலும், கருகலுமாய்.... ஓடி ஓடி பருத்தி எடுத்தாலும் மடி நிறைய மறுக்கிறது. மடியில் கிடக்கிற பருத்தியும் பங்கப்பட்டு மூளியான பெண் வாழ்க்கையைப் போல.... கொத்தையும், கொதுக்கலுமாய்.... வாய்க்காலில் வரிசை வரிசையாக அகத்திகள் அதன் சிம்புகளில் சோற்றுத் தூக்குச் சட்டிகள். அவளைச் சுற்றிலும் பேச்சுத் சத்தம். ஊர்ப்புரணிகள், கேலி, கிண்டல், சிரிப்புச் சத்தங்கள், பூங்கோதை நிறைபிடித்து பருத்தி பொறுக்கினாள். கட்டை விரல் காந்துகிறது. அவளுக்குப் பக்கத்து நிறையில் பருத்தி எடுத்து வருகிறவள் சுந்தரி, ரொம்பப் பிந்திக் கிடந்தாள். "ஏன் சுந்தரி.... கொமரிப்புள்ளே. இப்படிப் பிந்திக் கிடக்கே? விறுவிறுன்னு எடுத்து வாயேன்...", "வந்துக்கிட்டுத்தான் இருக்கேன். மதினி. நீங்கதான் "பொடு, பொடு"ன்னு போறீக? ...இவள் குமரியாகி ஏழெட்டு வருஷமாகிவிட்டது. கூடுதலாகக் கூட இருக்கும். இன்னும் இவளுக்கு மாலை பூக்கவேயில்லை. இவளுக்குப் பிறகு ஊரில் பூத்த பெண்கள் எல்லாம், மாலை பூத்து, பிரசவம் முடித்து பிள்ளையும் கையுமாக மாறிவிட்டார்கள். இவளைச் சுற்றி கால வெள்ளம் இயல்பாய் கடந்த ஓட. இவள் மட்டும் நாணலாய் நின்று கொண்டே இருக்கிறாள். பார்க்க லட்சணம்தான். மூக்கும் முழியுமாய் சிவந்த திரேகமுமாய் கட்டான அமைப்புதான். பார்த்த எவனும் சொக்கிப் போவான். அப்படியும்.... வந்த வரன்கள் எல்லாம் நகை பிடித்தால் பெண் பிடிக்கலே பெண் பிடித்தால் நகை பத்தாது. ஒவ்வொரு காரணம். வாய்ப்புகள் நழுவி ஓட... இவள் பூத்த பூவாகவே காலமெல்லாம். இவளுக்கும் மனசு இருக்கு. ஆசை இருக்கு. சிலிர்ப்பு இருக்கு. உயிர் இருக்கு. ஆனாலும் மரக்கட்டையாக கிடந்து தீரணும். இது என்ன கொடுமையோ... இப்போதெல்லாம் - ஊர்ப் பெண்கள் முதுகுக்குப் பின்னால் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டனர். "இவா பூத்த நேரம், தோஷமான நேரம்." பாவம், இவள்! உள்ளுக்குள் எம்புட்டுரணப்படுகிறாளோ. சொல்லி அழமுடியாத அவமானத்திலும், அவஸ்தையிலும் தினம் தினம் நொந்து புழுங்கி... வாழும் உயிரே சுமையாகி, வெதும்பி, வெந்து... வறண்டே போய்விடுவாள். இவளைப் பெற்று வளர்த்த வயறு, என்னமாய் கொதிக்கும்? அடப் பாதரவே. இந்தக் கொடுமை எந்தப் பாதகத்திக்கும் வரக்கூடாதடியம்மா.... சயாங்காலம் பூங்கோதை மனசில் பிள்ளைகள், பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். அடைத்த கதவில் வந்து முட்டியிருப்பார்கள். அம்மாவை ஆவலோடு தேடியிருப்பார்கள். மடியில் விழுந்து நடந்த விளையாட்டு சண்டைகள் பற்றியெல்லாம் கெஞ்சல் கெஞ்சலாய் சொல்லி மகிழ ஆசைப்பட்டிருப்பார்கள். பாவம், அம்மாவைப் பார்க்காமல், அடைத்த கதவைப் பார்த்து ஏங்கிப் போயிருப்பார்கள். நினைக்க நினைக்க இவளுக்குள் தவிப்பு. மனசுக்குள் இந்த நினைப்பு பின்னிக்கொள்ள... வேலை, வெறும் பாரமாய்த் தோன்றியது. மனம் பரபரக்கிறது. வீடு நோக்கி ஆலாய்ப் பறக்கிறது. ஆயிற்று விரிந்த சமுக்காளத்தில் கொட்டிய பருத்தியை பெரிய பொட்டலமாகத் கட்ட... மாடத்தியும், பூங்கோதையும் நடையைக் கட்டினர். இப்போது - பூங்கோதை நடையை எட்டிப் போட்டாள். பிள்ளைகள் மனசைச் சுண்டியிழுக்க, கால், தரை பாவாமல் துரிதப்பட்டது. ஊருக்குள் பாய்ந்தாள். தெருவைக் கடந்தாள். வீடு இருக்கும் தெருமுனையைத் தொட்டுவிட்டாள் அதே - பூட்டிக்கிடக்கிற கூரை வீடு. வாசல் படியில் மூன்று பைக்கட்டுகள். மற்ற இரண்டும் விளையாடப் போயிருக்குமோ.... வீட்டு வாசலில் மூத்தவள் மட்டும் சுருண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஏழாம் கிளாஸ் படிக்கிறாள். வெட்டுப்பட்ட கொடியாக வாடியும் போயிருக்கிறாளே, எதுக்கு? முகம் வெளுத்துப் போய் அப்படியென்ன வாட்டம்? அழுது கரைந்த மாதிரி, கண்களில் அப்படியென்ன சோர்வு? சுருண்டு கிடக்கிற அளவுக்கு அந்தச் சின்ன உடம்பில் என்ன தளர்வு? பூங்கோதைக்குள் பகீரென்றது. அடிவயிற்றைக் கலக்கியது. மனசில் நெருடல். ஆழத்தில் ஜில்லிட்டுப் பாய்ந்த பயம், திகில். ஒருவேளை... பூத்து உக்காந்துட்டாளா? ஐயய்யோ... அதுக்குள்ளாகவா?.... அடிப்பாதகத்தி! இன்னும் பத்து எட்டுக்கள்தான். பூங்கோதைக்குள் பயத்தின் நடுக்கம். குப்பென்று உடம்பெல்லாம் வியர்க்கிறது. மனசில் வியர்வைத் துளிகளாக.... சுத்தரி, மாடத்தி.... ஒரு கணம் வந்து மறைய- படபடப்பு. கால்கள் பரபரத்து பின்னலாட- ஓடிப் பாய்ந்தாள். மனசெல்லாம் பதைத்துப் போக..... படபடத்துக் கேட்டாள். "என்னாடி... என்னம்மா செய்யுது... என்னடி, சொல்லித் தொலையேண்டி", "ஒண்ணுமில்லேம்மா...", "பிறகு ஏன்? இப்படி வாடிப் போயிருக்கே?", "மத்தியானத்துலேயிருந்து மண்டையடிக்கு" அம்புட்டுத்தானா?" அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. மனசின் முறுக்கெல்லாம் தளர்ந்தது. கால் தரையில் ஊன்றிவிட்ட மாதிரி ஒரு நிம்மதி. பயத்தில் படபடத்த மனசு சற்று அடங்கியது. வியர்வையில் காற்றுப்பட்ட மாதிரி... மனசுக்குள் ஒரு குளிர்ச்சி. கதவைத் திறந்தாள். மகளை ஆதரவோடு அணைத்துக் கொண்டே, உள்ளே வந்தாள். நடையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்தாள். உஸ்ஸ்ஸென்று விட்ட பெருமூச்சில் உடம்பின் - மனசின் - அயற்சி முழுவதும் கரைய - "குடிக்க கொஞ்சம் தண்ணீ குடு" தண்ணீர்ச் செம்பை நீட்டிய மகளைப் பார்த்தாள். பூங்கோதை உள்ளுக்குள் முள்முள்ளாய் உறுத்தல். மனுஷத்தனமான உறுத்தல். பயந்தது சரிதானா, தெளிந்ததும் சரிதானா? புள்ளை வளர்றதை நெனச்சு சந்தோஷப்பட வேண்டிய பெத்தவள்.... நா எதுக்குப் பயப்படணும். அவளுக்குள் வெட்கமான ஒரு வேதனை உணர்வு மறுபடியும் மனசுக்குள் மாடத்திகள்..... சுந்தரிகள்... "பொண்ணா ஜென்மமெடுத்தவளை கிழிச்சு கேவலப்படுத்துகிற ஊரு உலகத்துக்குப் பயந்து என்ன ஆகப்போறது? துன்பம் வந்தா செத்தா போறோம்? மல்லுக்கட்டிப் புரளலியா? அப்படித்தான் இதுவும்." அந்தப் பெற்ற மனுஷிக்குள் புதிய தெளிவு. துணிச்சலில் வந்த பாசப்பெருக்கேடு. "இப்ப வா... கண்ணு" என்று எல்லை மீறிய கனிவில் கூப்பிட்டாள். புரியாமையில் நெருங்கிய சிறுமியை பற்றி இழுத்து மடியில் போட்டு இறுகத் தழுவிக் கொண்டாள். அவளது பிஞ்சுக் கன்னத்தை வலது கையால் வருடி... நெகிழ்ந்து போன மனசோடு மகளின் நடு நெற்றியில் முத்தமிட்டாள், வாழ்த்துவதைப் போல! குழைந்து மிருதுவாகிப் போயிருக்கும் அம்மாவின் உணர்வுகளை உள்வாங்க முடியாமல், மிரள மிரள விழித்தாள், அந்தச் சிறுமி. பூங்கோதையின் கண்களில் ஏனோ ஈரக் கசிவு.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் செருப்புத் தைப்பவன் ஒருவன் இருந்தான். இங்கு யார் என்னை மதிக்கிறார்கள்? நமக்கு நல்வாய்ப்பு தலைநகரத்தில் காத்திருந்தாலும் காத்திருக்கலாம். இளவரசியைக் கூட நான் மணந்தாலும் மணக்கலாம், என்று நினைத்தான் அவன். அறிவு நிரம்பிய அவன் கடைக்குச் சென்று கட்டி வெண்ணெய் வாங்கினான். அதைத் தன் மேசையின் மேல் வைத்தான். நான்கு நாட்கள் சென்றன. அந்த வெண்ணெயைப் பார்த்தான் அவன். அது நிறைய ஈக்கள் இருந்தன. தான் செய்து வைத்திருந்த செருப்பு ஒன்றை எடுத்தான். அந்த வெண்ணெயில் ஓங்கி அடித்தான். நிறைய ஈக்கள் செத்தன. ஏராளமான ஈக்கள் துடிதுடித்தன. அவற்ளை எண்ணினான் அவன். இறந்த ஈக்களின் எண்ணிக்கை இருநூறாக இருந்தது. அடிபட்டவற்றின் எண்ணிக்கை முந்நூறாக இருந்தது. அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடைத் தெருவிற்குச் சென்ற அவன் வீரர்கள் அணியும் சீருடை வாங்கினான். அதை அணிந்து கொண்டு கம்பீரமாகத் தலை நகரத்துக்குச் சென்றான். அரசவைக்குள் நுழைந்த அவன், அரசர் பெருமானே! என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் சிறந்த வீரன். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த போரில் நான் ஒருவனே இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன், என்றான். அவனை மேலும் கீழும் பார்த்தான் அரசன். உன்னைப் பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லை. தோற்றத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது. உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், என்றான். கட்டளை இடுங்கள் அரசே! இந்த வாளும் என் உயிரும் இனி உங்களுடையது, என்று வீரமாகப் பேசினான் அவன். வீரனே! தலைநகரை அடுத்து உள்ள காட்டில் ஒரு பூதம் உள்ளது அது அவ்வப்பொழுது நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களைத் தூக்கிச் சென்று சாப்பிடுகிறது. எத்தனையோவீரர்கள் அதைக் கொல்லப் புறப்பட்டார்கள். யாருமே உயிருடன் திரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள், என்றான் அரசன். அரசே என் வீரத்திற்கு இதைப் போன்ற பெரிய வேலையைத்தான் எதிர்பார்த்தேன். நான் அந்தப் பூதத்தின் தலையைக் கொண்டு வருகிறேன். எனக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கேட்டான் அவன். யாராலும் செய்ய இயலாத செயல் இது. நீ சொன்னபடி செய்து முடித்தால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், என்றான் அரசன். நான் அந்தப் பூதத்தைக் கொன்றுவிட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டுக் கையில் பிடித்த வாளுடன் காட்டிற்குள் நுழைந்தான் அவன். எவ்வளவு பெரிய கூர்மையான வாளும் பூதத்தை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக வலிமையாக வெட்டினாலும் அதற்குச் சிறு காயம்தான் ஏற்படும், என்பதும் அவனுக்குப் புரிந்தது. தன் கையில் இருந்த வெண்ணெயை மாவில் உருட்டிப் பந்து போலச் செய்து கொண்டான் அவன். பார்ப்பதற்கு அது உருண்டையான கூழாங்கல் போல இருந்தது. அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். குருவி ஒன்றைப் பிடித்த அவன் அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். அருகே இருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் பெரிய பூதம் ஒன்று அங்கே வந்தது. மூக்கை உறிஞ்சிய அது, இன்று எனக்கு நல்ல வேட்டை, மனித வாடை வீசுகிறதே! எங்கே இருக்கிறாய்? என்னிடம் இருந்து தப்ப முடியாது, என்று மகிழ்ச்சியுடன் கத்தியது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், ஏ! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான் இந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகத்திலேயே நான் தான் வலிமையானவன். சென்ற வாரம் கூட ஒரே அடியில் இருநூறு பேரை கொன்று முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன். உன்னைவிட நான் வலிமையானவன். என் ஒரு அடியைக் கூட நீ தாங்க மாட்டாய், என்று பெருமை பேசினான் அவன். நீ வலிமையானவன் என்றால் நிரூபித்துக் காட்டு, என்றது பூதம். அப்படியா? என்ற அவன் தன் சட்டைப் பையிலிருந்த கூழாங்கல் உருண்டையை எடுத்தான். அந்த உருண்டையை வானத்தில் தூக்கிக் போட்டுப் போட்டுப் பிடித்தான். இது என்ன சொல் பார்ப்போம், என்று கேட்டான், அவன். உருண்டையான கூழாங்கல், என்றது பூதம். என் வலிமையைப் பார், என்ற அவன் அந்த வெண்ணெய் உருண்டையைக் கைக்குள் வைத்து அழுத்தினான். அது பொலபொலவென்று தூள் தூளாகிக் கீழே விழுந்தது. உண்மையை உணராத அந்த முட்டாள் பூதம் அவனை மிகுந்த வலிமையானவன் என்று நினைத்தது. கீழே வா. உனக்கு இன்னும் ஒரு சோதனை, என்றது அது. எப்படியும் பூதத்தை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கீழே குதித்தான் அவன். தரையில் கிடந்த சிறு கல்லை எடுத்தது அது. என் வலிமையைப் பார், என்று சொல்லி அந்தக் கல்லை உயரே வானத்தை நோக்கி வீசியது. அரை மணி நேரம் கழித்து அந்தக் கல் கீழே விழுந்தது. எங்கே இதைப் போலச் செய்து உன் வலிமையைக் காட்டு, என்றது பூதம். நான் கல்லை மேலே வீசினால் கீழே விழவே விழாது. வான் உலகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று விடும். என்று பெருமையுடன் சொன்ன அவன் தன் பைக்குள் இருந்த சிட்டுக் குருவியை எடுத்தான். அதை மேலே தூக்கி எறிந்தான். அப்படியே பறந்து சென்றது அது. பூதம் நீண்ட நேரம் காத்திருந்தது. மேலே எறிந்த கல் கீழே விழவே இல்லையே. இவனிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் என்னைக் கொன்று விடுவான், என்று நினைத்தது அது. நீ என் விருந்தினன். என் மாளிகைக்கு வா. விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், என்று அன்புடன் அழைத்தது அது. இருவரும் பூதத்தின் மாளிகையை அடைந்தனர். அந்த மாளிகைகளைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது. சமையல் செய்ய விறகு இல்லை. காட்டிற்குச் சென்று சிறிது விறகு கொண்டு வா, என்று அவனைப் பார்த்துச் சொன்னது பூதம். உடனே அவன், எதற்காக விறகு? நான் அந்தப் பெரிய மரத்தை அப்படியே இழுத்து வருகிறேன், என்றான். அந்தப் பெரிய மரத்தைப் பார்த்தது பூதம். அது கீழே விழுந்தால் தன் தோட்டம் பாழாகி விடும். மாளிகைச் சுவரும் இடிந்து விடும் என்று நினைத்தது அது. பயந்து போன அது நானே, சென்று விறகு கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் விறகுடன் அங்கே வந்தது அது. இன்னும் எப்படி எல்லாம் அதை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். பூதம் அவனைப் பார்த்து. சமைப்பதற்கு நீர் வேண்டுமே. கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில் நீர் கொண்டு வா, என்றது- பாத்திரத்தில் நீர் கொண்டு வருவதா? எனக்கு எவ்வளவு கேவலம், வலிமை உடைய நான் அந்தக் கிணற்றையே இங்கே இழுத்து வந்து விடுகிறேன். அதைக் கட்டி இழுக்க உறுதியான கயிறு ஒன்றைக் கொடு, என்று கேட்டான் அவன். இதைக் கேட்ட பூதம் மேலும் பயந்தது. நீ நீர் கொண்டு வர வேண்டாம். நானே கொண்டு வருகிறேன், என்றது அது. இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அங்கிருந்த கட்டிலில் அவன் படுத்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த இன்னொரு கட்டிலில் பூதம் படுத்துக் கொண்டது. தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்த அவன் தூங்காமலே இருந்தான். பூதம் தூங்கி விட்டதை அறிந்த அவன் கட்டிலிலிருந்து மெல்ல இறங்கினான். ஒரு பூசனிக் காயைத் தன் கட்டிலில் வைத்தான். அதன் மீது போர்வையைப் போட்டு மூடினான். பார்ப்பதற்குக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது. பிறகு கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டான் அவன். நள்ளிரவு நேரம், பூதம் கட்டிலை விட்டு எழுந்தது. பக்கத்தில் இருந்த பெரிய இரும்புத் தடியைத் தூக்கியது. கட்டிலில் படுத்திருந்த அவன் மண்டையில் தன் வலிமை கொண்ட மட்டும் அந்தத் தடியால் அடித்தது. போர்வைக்குள் இருந்த பூசனிக் காய் உடைந்து சிதறியது. அவன் இறந்து விட்டான் என்று மகிழ்ந்தது அது. தன் கட்டிலில் படுத்த அது குறட்டை விடத் தொடங்கியது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த அவன் எழுந்தான். பூசனிக் காய்த் துண்டுகளை எடுத்து வெளியே வீசினான். மீண்டும் அந்தக் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான். பொழுது விடிந்தது. விழித்த பூதம் கட்டிலில் அவன் உயிருடன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அவன். இரவு நன்றாகத் தூங்கினாயா? உன் தூக்கத்திற்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று கேட்டது அது. நள்ளிரவிலே ஏதோ கொசு ஒன்று என் காதில் கடித்தது போல இருந்தது. புரண்டு படுத்தேன். இங்கே கொசு அதிகமா? என்று கேட்டான் அவன். என் வலிமை எல்லாம் பயன்படுத்தி இருமூபுத் தடியால் இவன் மண்டையில் ஓங்கி அடித்தேன். யாராக இருந்தாலும் இறந்திருக்க வேண்டும். இவனோ கொசு கடித்தது போல இருந்தது என்கிறான். இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டோமே. எப்படித் தப்பிப்பது? என்று பயந்து நடுங்கியது அது. நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால் என்ன? என்று கேட்டான் அவன். என்ன போட்டி? என்று கேட்டது அது. ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி வைப்போம். அதில் பாதியை நான் சிறிது கூட மென்று தின்னாமல் அப்படியே குடித்து விடுகிறேன், என்றான் அவன். நான் நம்ப மாட்டேன். நீ மென்றுதான் தின்றிருப்பாய். நீ மெல்லாமல் விழுங்கி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அதை நான் என் வயிற்றுக்குள் இறங்கியா பார்க்க முடியும்? என்று கேட்டது அது. உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் வயிற்றில் ஒரு பகுதியைக் கிழித்துக் காட்டுகிறேன். பிறகு உனக்கே நான் மென்று தின்றேனா இல்லையா என்பது விளங்கும், என்றான் அவன். சரி என்ற பூதம் கஞ்சி சமைக்கத் தொடங்கியது. வேறு அறைக்குச் சென்ற அவன் சாக்குப் பையை எடுத்துத் தன் வயிற்றில் கட்டிக் கொண்டான். அதன் வாய்ப்பகுதி தன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே பை இருப்பது தெரியாத வண்ணம் மேலே சட்டையை போட்டுக் கொண்டான். பூதம் கஞ்சி வைத்திருந்தது. அதைப் பாத்திரத்தோடு எடுத்தான் அவன். தன் தொண்டைக்கு அருகே இருந்த பைக்குள் அதைச் சிறிது சிறிதாக ஊற்றினான். குடிப்பது போல நடித்தான். சூழ்ச்சியை அறியாத பூதம் அவன் குடிப்பதாகவே நினைத்தது. பூதத்தைப் பார்த்து அவன், நான் கஞ்சியை எப்படிக் குடித்து இருகூகிறேன் என்று பார். சிறிது கூட மெல்ல வில்லை. அப்படியே அரிசிச் சோறு இருக்கும். என்று சொல்லி கொண்டே கத்தியால் தன் வயிற்றைக் கிழித்தான். உண்மையில் அவன் கிழித்தது வயிற்றுக்குள் கட்டப்பட்டிருந்த சாக்கையே. அவன் வயிற்றிலிருந்து கொண்டிய கஞ்சியைப் பூதம் பார்த்தது. உன்னைப் போல நானும் செய்கிறேன், என்ற அது. இன்னொரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அப்படியே குடித்தது. நான் எதையும் மெல்லவில்லை. அப்படியே குடித்து இருக்கிறேன் பார், என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தது அது. குருதீ கொட்ட குடல் வெளியே வந்து துடிதுடித்து அங்கேயே இறந்தது அது. வெற்றி வீரனாகத் திரும்பிய அவனுக்கும் இளவரசிக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் நடந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒரே அடியில் இருநூறு பேர்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பங்கி, ஜென் ஞானி, நிச்சேரியன் துறவி, மரியாதை தலைப்பு: கேளும், பிள்ளாய் !
பங்கி என்னும் ஜென் ஞானிக்கு நல்ல புகழ். அவரிடம் நிறைய மாணவர்கள். பொறாமைக்காரரான நிச்சேரியன் துறவிக்கு இது பிடிக்கவில்லை. பங்கியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்தார். ""பங்கி ! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் ; இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா ?" என்று கேட்டார். "" என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்"என்றார் பங்கி. உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கி வந்தார். ""இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள்". துறவி அவ்வாறே சென்றார். ""ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள்!" - போனார். பங்கி அமைதியாக, ""சரி! நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி !" என்றார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், காளைமாடு, வெயில், மணல், துணி, பண்ணையார், வாடகை தலைப்பு: வாடகை மாட்டுக்கா? மாட்டின் நிழலுக்கா?
ஒரு சமயம் பரமார்த்த குருவும் – சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் குருவிற்கு வயதாகி விட்டதால் அவரால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று எண்ணிய சீடர்கள் அவர் பயணம் செய்வதற்கு மட்டும் ஒரு பொதியை காளை மாட்டை வாடகைக்கு அமர்த்தினர். மாட்டுக்காரன் கேட்ட தினக் கூலியாக மாட்டு வாடகை ஐந்து காசுகள் தருவதாக ஒப்புக் கொண்டு அதன்படி பரமார்த்த குருவை மாட்டின் மேல் அமர வைத்து சீடர்கள் பயணத்தைத் பரமார்த்த குருகதைதொடர்ந்தனர். அப்போது கோடைக் காலமாதலால் வெயில் வெகு கடுமையாக இருந்தது. அவர்களின் பயணத்தின் போது வழியில் ஒரு மணற்பரப்பான மரங்கள் எதுவும் இல்லாத வெட்ட வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியாக இருந்தமையால் வெயிலும் தாங்க முடியாத வெப்பமாக இருந்தது. வெப்பத்தின் கடுமையை தாங்க முடியாத பரமார்த்த குருவுக்கு நாக்கு வரண்டு தாகம் அதிகமாகி கண்கள் பஞ்சடைந்து மயக்கமடைந்து கீழே விழுகின்ற நிலையை அடைந்தார். அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சீடர்கள், குருவை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்து கீழே மணல் சுடாதபடி துணிகளை பரப்பி மாட்டின் நிழலிலேயே படுக்க வைத்தனர். குருவின் மயக்கத்தை தெளிவிக்க சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் குருவுக்கு மயக்கம் தெளிந்ததும் பழையபடி மாட்டின் மேல் உட்கார வைத்துப் பயணத்தை தொடர்ந்தனர். வெட்டவெளியைக் கடந்ததும் ஒரு இடத்தில் தங்கி உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அதன் பின்னர் பயணத்தை மேற்கொண்டு ஓர் ஊரை சென்றடைந்தனர். அவர்கள் அவ்வூரை சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டமையால், அவ்வூரிலேயே தங்கி மறுநாள் காலை பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள், பண்ணையாரிடம் பரமார்த்த குருவும் – சீடர்களும் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். பண்ணையார், தங்கியுள்ள அவர்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார். சாப்பாடு முடிந்த பின்பு – சீடர்கள், மாட்டின் சொந்தக் காரனுக்கு அன்றைய மாட்டு வாடகையாக ஐந்து காசுகளைக் கொடுத்தனர். மாட்டுக்காரன் அவர்கள் கொடுத்த ஐந்து காசுகளை வாங்க மறுத்தான். மாட்டின் மேல் சவாரி செய்வதற்காக ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் குரு ஓய்வெடுத்தற்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் வாடகையாகத் தந்தால் தான் வாங்குவேன் என்றான் மாட்டுக்குச் சொந்தகாரன். இது என்ன அநியாயமாக இருக்கிறதே, மாட்டைத் தான் வாடகைக்கு எடுத்தோம். அதெப்படி மாட்டின் நிழலுக்கு வாடகைக் கொடுக்க முடியும். ஆதலின் மாட்டின் வாடகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். இவர்களுடைய காரசார விவாதத்திறிகுப் பிறகு இந்த விஷயம் அந்த ஊர் பண்ணையாரிடம் சென்றது. பண்ணையார் மாட்டுகாரனை அழைத்து, ஐயா, தாங்கள் பேசியபடியே ஒருநாள் வாடகை ஐந்து காசுகள் அதன்படி பெற்றுக் கொள்வதுத தான் நியாயம் என்றார். அதற்கு மாட்டுக்காரன். ஐயா நான் ஐந்து காசு பேசியது மாட்டின் மேல் சவாரி செய்வதற்கு மாட்டும்தான். ஆனால் மாட்டின் நிழலில் தங்குவதற்காக அல்ல. ஆகையால், மாட்டின் வாடகை ஐந்து காசுகளும், நிழலுக்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் தரவேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் செய்தான். இது மிகவும் அநியாயமாக இருக்கிறது? என்றார் பண்ணையார். இது ஒன்றும் அநியாயம் இல்லை. நியாயமாகத் தான் கேட்கிறேன் என்றான் மாட்டுக்காரன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர். தீர்வே இல்லாமல் இந்தப் பிரச்சனை நீண்டு செல்வதால், மாட்டுக்காரனையும், குருவையும் சீடர்களையும் நோக்கி, நான் ஒரு தீர்ப்பு சொல்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் கட்டுப்படுவீர்களா? என்றார் பண்ணையார். அதற்கு மாட்டுக்காரனும், குருவும், சீடர்களும் கட்டுப்படுவதாக ஒட்டு மொத்தமாக கூறினார்கள். இதற்கு இதுதான் மிகச் சிறந்த தீர்ப்பாகும் என்று மனதில் நினைத்து கொண்டு பண்ணையார் மாட்டின் சொந்தக்காரனை தன் அருகில் அழைத்து, மாட்டின் மீது குரு ஏறி வந்தற்காக வாடகை ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் தங்கியதற்காக மூன்று காசுகளின் நிழலையும் பெற்றுக்கொள் என்றார். மாட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான் எவ்வளவு யோசனை செய்தும் இதன் முடிவு தெரியவில்லை. இப்போது இரவு நேரம். காலையில் தான் நிழலுக்கான பணத்தைப் பார்க்க முடியும் என்று கூறி மறுநாள் காலை சூரியன் உதயமானதும் மாட்டுக்காரனை அருகில் அழைத்து மாட்டின் நிழலுக்கான மூன்று காசுகளை வெயிலில் பிடித்தார்
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு காட்டில் ஓர் ஆலமரம் இருந்தது. அதன் கிளைகளில் ஒரு வாத்துக் கூட்டம் தங்கி இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்தக் கொடி இலேசாகப் படரத் தொடங்கியது. அதைக் கண்ட ஒரு கிழட்டு வாத்து மற்ற வாத்துகளைப் பார்த்து, இந்தக் கொடி, மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றிப் படருமானால் நமக்கு ஆபத்து ஏற்படும். யாராவது இதைப் பிடித் துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து, நம்மைப் பிடித்துக் கொன்றுவிடக் கூடும். இப்பொழுதே நாம் இந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும்” என்று சொன்னது. ஆனால் மற்ற வாத்துக்கள் அந்தக் கிழட்டு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை. இது என்ன வேலையற்ற வேலை’ என்று அலட்சியமாகப் பேசி விட்டு அதைப் பற்றிக் கவலைப் படாமலேயே இருந்து விட்டன. அந்தக் கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்டு மரத்தைச் சுற்றிப் படர்ந்தது. “ஒரு நாள் எல்லா வாத்துக்களும் இரை தேடப் போயிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேடன் அந்த வாத்துக்களைப் பிடிக்க நினைத்தான். மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக அதன் மேல் ஏறினான். ஏறிக் கண்ணி வைத்து விட்டு இறங்கிச் சென்று விட்டான். இரை உண்டும், விளையாடியும், திரும்பிய வாத்துக்கள் எதிர்பாராமல் அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டன. கிழட்டு வாத்து மற்ற வாத்துக்களைப் பார்த்து நான் சொன்னதைக் கேட்காததால் இவ்வாறு அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. இனி எல்லோரும் சாக வேண்டியதுதான்’ என்று சொன்னது. மற்ற வாத்துக்க ளெல்லாம் அந்தக் கிழட்டு வாத்தை நோக்கி, ஐயா, பெரியவரே ஆபத்துக்கு நீங்கள் தான் அடைக்கலம். இனி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எப்படியும் நம் உயிர் தப்பினால் போதும் என்று கூறின. அறிவும் நல்லெண்ணமும் கொண்ட அந்தக் கிழட்டு வாத்துக்குத் தன் இனத்தினர் அழிந்து போகக் கூடாது என்று தோன்றியது. அத்தோடு மற்ற வாத்துக்களைப் பார்க்க இரக்கமாகவும் இருந் தது. சரி, நான் சொல்வதைக் கேளுங்கள், வேடன் வரும்போது எல்லாரும் செத்த பிணம் மாதிரிச் சாய்ந்து விடுங்கள். செத்த வாத்துக்கள்தானே என்று அவன் எச்சரிக்கையற்று இருக்கும் போது தப்பி விடலாம் என்று வழி கூறியது. விடிகாலையில் வேடன் வந்தான். வேடன் தலையைச் சிறிது தொலைவில் கண்டதுமே எல்லா வாத்துக்களும் செத்ததுபோல் சாய்ந்து விட்டன. மரத்தின் மேல் ஏறிப்பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன என்றே எண்ணி னான். உயிருள்ள வாத்துக்களாயிருந்தால் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டிருப்பான். ஆனால், அவை செத்த வாத்துக்கள் தானே என்று கால்களைக் கட்டாமலே, கண்ணியிலிருந்து எடுத்துத் தரையில் போட்டான். ஒவ்வொன்றாக மரத்தின் மேலேயிருந்து தரையில் வீழ்ந்ததும் அவை வலியைப் பொறுத்துக் கொண்டு செத்த மாதிரியே கிடந்தன. எல்லா வாத் துக்களையும் அவன் கண்ணியிலிருந்து எடுத்துக் கீழே போட்டு முடித்தவுடன், கீழே இறங்கினான். அவன் பாதி வழி இறங்கும்போது, கிழட்டு வாத்து குறிப்புக் காட்டியது. உடனே எல்லா வாத்துக்களும் படபட வென்று அடித்துக் கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக் கொண்டன. வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான். அனுபவமும், நல்லறிவும், நல்லெண்ணமும் உள்ள பெரியோர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் எப்போதும் நன்மையுண்டு.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாழ்வு தந்த கிழட்டு வாத்து' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், சந்தை, குதிரை, பந்தயம், சுழல் தலைப்பு: நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை
தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார். தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது." என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?", " வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.""அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்."என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை "தொபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? "" அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்." ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?" என்றார் அரசர் வருத்தத்தோடு. "அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள். இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அப்பு , அம்மா, ஆசிரியர், அப்புவின் நண்பர்கள் தலைப்பு: யானை பல் விளக்குமா?
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்."ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா."நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். "ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்."மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர்.அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்."டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா."குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு.பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது."பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர்.அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்."தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர்.அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்."சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்" என்று வந்தான்."அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன் "கொல்" லென்று சிரித்தனர்.அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியது. இல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் துங்குவதற்கு முன்னாலேயே நீ கடித்து விடுவாய். உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்’ என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது. “நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி. “சரி, அப்படியானால் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்’ என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன்.இடம் கொடுத்தது. கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது. ஏதோ என்னைக் கடித்து விட்டது’ என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள். அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது. உடனே அவர்கள், ! நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?’ என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது. ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, நண்பர், மெழுகுவர்த்தி தலைப்பு: இருட்டிலும் ஒலி கேட்கும்
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். " என்ன சமாச்சாரம் " என்று கேட்டார் முல்லா. " மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?" என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார். " இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?" என்றார். முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: . மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் - பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடிரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில் தான் திடீரென்று நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான். ''ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!'' அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன, கன்னங்கள் கருங்குழம்பு. ''நான் எதிரே பார்த்துண்டு வரல்லே '' அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது. ''எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன், அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது? இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing இலே புது டெக்னிக்கா?'' ''இல்லேம்மா, நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிரே வரவா நினைப்பேயில்லே!'' ''உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும். ''அது ஸ்கூல் நான் படிச்ச ஸ்கூல்'' ''இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து. ''ஓ Quite possible. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க. L..K.G. யிலிருந்து,'' ''ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால், அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே'' ''எனக்கு கோபம் வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போஇருக்காங்ளோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!'' அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?'' ''டீச்சர் சுமதி. நான் தான் டீச்சர் சுமதி'' அவன் திக்கெனப் பின்னடைந்தான். ''நான் விளையாடல்லேம்மா'' ''ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வருஷம் ரிடையர்மெண்ட்'' அதன் Problem அதுக்கு மேலே இருக்கு அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?'' அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம், இருக்கக் கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். Yes, அவளேதான். அந்த அடையாளம் நிச்சமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான். ''என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா?'' '''இந்த சர்விஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள் கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது!'' ''நான் ஸ்பெஷல் துஷ்டை'' ''சர்க்கரை போட்டிருக்குமா, இல்லே ஸ்பெஷல் மாசலா சேர்த்திருக்குமா?'' '' அப்படித்தான் வெச்சக்கோங்களேன்'. பையன் படு உற்சாகமாகிவிட்டான். ''பக்கத்துப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன், பின்பெஞ்சைக் கூட விடமோட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்குட்டியாட்டம் நக்கறது, கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்'' ''எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?'' ''இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார், அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போது Principal உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு, நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க'' ''எல்லாம் வானரங்கள்னா வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L..K.G. லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. சே! என்ன பிழைப்போ?'' அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை. அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி ''என் தாத்தா இது வேறே சொன்னார்: இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான். மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியே அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குதான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன். பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி ''சிஸ்டர் என்ன சொல்றீங்க?'' நீங்கள்: ''இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம் பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே.'' I wish him all luck in his next school- அங்கேபோய் சரியாக மாறலாம். இங்கே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. we have given him all chances'' பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தார். ''நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும் and we have to live know. I am sorry, next year வாங்க, பார்க்கலாம்.'' தாத்தா சிரித்தார். ''Next year நான் இருக்கேனோ இல்லேயோ?'' பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுத்தார். '' நாம் டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு டயம் வீணாவுது.'' நீங்களும் எழுந்தீங்க. ''வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்.'' ஆகவே நீங்க ''Out'' முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு.'' ''ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தோங்காய் மாதி ரி உருண்டையாய் இருக்கும். Special feature'' ''Correct'' பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். ''பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலாக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் - குறைமாஸம் அதனால் hyperactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு ஆக்ஸிடென்ட் அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே.'' ''இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் ''நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே.'' ''ம்ம்.......'' அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று. ''ஆமாம் கண்ணன், உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?'' ''தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர் சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்.'' அவள் முகம் லேசாக வெளிறிற்று. ''அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!'' ''எல்லாம் பெரியவர் ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க.'' ''என்னை என்னப்பா பண்ணச் சொல்றே அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?'' ''வஞ்சம் தீர்ப்பதா?'' அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் - அவள் வழக்கை மன்றாட அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக்கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடிவிட்டது. உடம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் - அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டாள். ''O.K.?'' அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே? மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவாள், பையன்கள் சத்தம் போடாதிருக்க. அது நடக்கிற காரியமா? ''தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு.'' மூட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உரைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்.....ஏதோ பெருமையாயிருக்கும். அவள் சொல்லும் பாடங்களைக் கோட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி.. அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ, அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்? Why not? இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சப்போச்சு?. குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கைதான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன் மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். ''திக்கென ஆகிவிட்டது. ''அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்.'' பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள். ''அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே! அம்மா இல்லே!'' அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது. அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அகு இருக்கமோ? Damn It, எனக்கு பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா? மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை, அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து, விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு...... அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒரு நாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது ''இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப்போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைதகள் புழங்குற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்கள் வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க.'' அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும். அவளுக்க ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு. இப்போது அவர் இருக்கிறாரோ? பாரதியைக் காட்டி ''இவள் யார்?'' ''இவள் என் பெண்?'' சுமதி டீச்சர மாதிரி இவள் இல்லை; சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்'' ''அதுசரி உன் சுவிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே, சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?'' ''டீச்சர், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்க முடியல்லே. I was in love with you.'' ''so you have come to declare your love?''கை கொட்டிச் சிரித்தாள். ''நீங்கள் சிரிக்கிறமாதிரி இல்லை. இருவத்தி மூன்ற வருஷங்கள் டீச்சர்.'' சட்டெனத் தெளிந்தாள். '' That happens sometimes; that is called puppylove'' - ஒரு disease, வந்து இருந்துவிட்டுப் போயிரும்,'' ''அது மாதிரி டீச்சருக்கு studendt மேல் நேர்வதில்லையா?'' அவன் பரிதாபமாயிருந்தான். Oh, Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்கு தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!'' ''நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை'' ''புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப் பிரேமி ஆகிவிடுகிறாள், ஹே ராதா கிருஷ்ணா. பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே. ஒழிய அப்படி நிகழ்வது ரொமப அபூர்வம். யைன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர், எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறு வதில்லை. ''கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர் விட்டு நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக் கொண்டு விடுகிறோமே!'' அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர். ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு ''சுறீல்''. அன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக - பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானனோ இருவரும் மோதிக்கொண்டனர். அவன் மார்பின் விம்மலின் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது. அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு..... ''என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?'' குரல் உயரக்கூட இல்லை. Soft and melodious. அவனுக்குக் கேட்டதோ இல்லையே? மூர்ச்சையாகிவிட்டான். ஜன்மம், ஜீவராசி யாவதுக்கும் பொதுவாய் ஆண், பெண் எனும் அடித்தளம் தான் உண்மைநிலை. தன் முகம்,இனம் இழந்த ஆதிவேட்கை அவன் பச்சைப் பாலகன் அவள் முதிர்ந்த மாது பகலிலிருந்து இரவா? இரவிலிருந்து. எது முன்? எது பின்? விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி எதைத்தான் யார் அறிவார், ஆனால் Ecstasy அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று பாவம் அதையும் அறியான். திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான் அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள். Yes, that is as it should be. We Forget because we must. such is the cavalcade of life. முதலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் ''சரி, உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?'' ''என்ன உளறல்?'' ''இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சும் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா. அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழநீர் பானையில் கைவிடாமல் இருந்தார் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?'' பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, அவள் தடுத்தாள் ''நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும் இவளுக்கு அப்பா இல்லை.'' ''அப்படின்ன அன்னிக்கு அவரைப் பார்த்தேனே'' குழம்பினான். ''இவளுக்கு அப்பா இல்லை நான் ஏமாந்து போனேன் கண்ணா, இவள்தான் அவர் தந்த பரிசு!'' ''So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா? A Simple Affair'' ''கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?'' ''அட தெரிந்தால்தான் தெரியட்டுமே'' அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பாத்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள். அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ! வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள் பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக்கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள் இனிமேல் வரமாட்டாள். அழியவும் மாட்டாள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிம்பம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தன் முன்னால் தரையில் அமர்ந்து, கதறியழும் வயதானப் பெண்ணை, மாவட்ட ஆட்சியாளர் இந்துவால், தேற்ற முடியவில்லை. பக்கத்தில் உள்ள, ஒரு சிறு கிராமத்திற்கு நிதியுதவி செய்யச் சென்றபோதுதான், அந்தப் பெண்மணி, அவளது காலில் விழுந்து அழுதாள். ஏன் அழுகிறாள்? தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு, பல நாட்களாய் சிறுகச், சிறுகச், சேர்த்த காசைக் கொண்டு, தன் மகளுக்கு நகை வாங்க நகருக்குச் செல்லும்போது, எவனோ ஒரு பிட்பாக்கெட்காரன் இரக்கமின்றி எடுத்துவிட்டான். இந்த சம்பவத்தைக், கேட்டுக் கொண்டிருக்கும் இந்துமதியின் மனம் பதினைந்து ஆண்டுகளுக்கு, முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்றது. எல்லா மரங்கள், செடிகளும், கொடிகளும், முதுமைக்கு விடைகொடுத்து, இளமையைச் சந்திக்கக் காத்திருக்கும், மார்கழி மாதம் அது. மருதாணியின் வெளுப்பைப் போல், இன்றும் வழக்கமாக சூரியன் வெளுத்தான் சற்று தாமதமாக... பட்டனை அழுத்தியவுடன் இயங்குகின்ற இயந்திரமாய், மணி அடித்தவுடன், மாணவர்களின் சலசலப்போடு புது கிளுகிளுப்போடு, வகுப்பறை ஆரம்பித்தது. அது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அன்று ஆறாம் வகுப்பு ஆசிரியர் கார்த்திகேயன், வரவில்லை. ஆசிரியர் வரவில்லையென்றால் சொல்லவேண்டுமா? அவ்வளவு தான் ஒருவர். ஒருவரின் குடுமியைப் பிடித்தும், அடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஏ குண்டு, கொழுக்கட்டை, கருவாச்சி என ஒருவர், மற்றவரை அவர்களது பட்டப் பெயர்களால் அழைக்கலாயினர். ராஜேஸ்வரியின் தந்தை, சிங்கப்பூரில் இருக்கிறார். தினமும் விதவிதமான, உடையுடன், பள்ளிக்கு வருவாள். இவளது அருகில் பள்ளியில், அமர்ந்து இருப்பவள் இந்துமதி. அவளது தந்தை சிறு வயதில் இறந்துவிட்டார். எனவே அவளது அம்மாவும், இரண்டு தங்கச்சிகளும், தான் இவளுக்குப் பெரிய சொத்து. இவளது அம்மாவினுடைய உழைப்பில் தான், குடும்பம் நடக்கிறது. இவளது அம்மா இலட்சுமியம்மாள் பஞ்சு ஆலையில் வேலைப் பார்க்கிறாள். வழக்கம் போல், ராஜேஸ்வரி தனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்த, பேனாவை வைத்துப் பெருமையடிக்கத் துவங்கினாள். ஐயா! எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டுவந்த சிங்கப்பூர் பேனா, சிவப்பு மை பேனா, பார்த்தியா? எவ்வளவு அழகா, இருக்குன்னு. வறுமை இந்துவின் வார்த்தைகளுக்குத் தாழிட்டது, இருப்பினும். ஏப்பா! ஏப்பா! இதை எனக்குத் தர்றியா? என ராஜியிடம் கேட்கிறாள். ராஜி... ம்ம் அசுக்குப், பிசுக்குப், போடி உனக்குத் தரமாட்டேன், என்று சொல்லி அவளைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. "பணக்கார வர்க்கத்தை வேடிக்கைப் பார்த்து, ஆசையை அடக்கிக் கொள்வதை, வாடிக்கையாக்க வேண்டும்." என்பது, அந்தப் பிஞ்சு நெஞ்சத்திற்குத் தெரியவில்லை. ரொம்பப் பீத்திக்காதடி, நானும் எங்கம்மாக்கிட்ட இந்த மாதிரி பேனா, வாங்கிக் கேப்பேன்னு தேம்பித் தேம்பி சொல்லிக் கொண்டே அழுகிறாள். இந்துவின் வீடு, பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. மாலையில் பள்ளி முடிந்ததும், வீட்டிற்குச் செல்லும்போது, வழியோரம் காணப்படும் கருவை மரங்களின் இலைகளையும், மஞ்சள் பூக்களையும், உதிர்த்து, உதிர்த்து, அவைகளிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொண்டே போனாள். வீட்டை அடைந்ததும், அவள் தனது பையை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு, பக்கத்து வீட்டுக்குத் தொலைக்காட்சிப் பார்க்கச் சென்று விட்டாள். இந்துமதியின் தாய் ஆலையை விட்டு வந்ததும், "இந்து, இந்து", என அழைக்கவே அவளைக் காணவில்லை மறுமுறை "இந்து, இந்து" என அழைக்க... "அம்மாக் கத்துறது ஊருக்கேக் கேட்கும் போல, ச்சே செத்த நேரம் கூட நிம்மதியாப் படம் பார்க்க முடியல, என முனங்கியவாறே", வீட்டிற்குள் நுழைந்தாள். "நானே ஒத்தக் கையாளு, பொம்பளப் பிள்ளை கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக் கூடாது", எனக் கூறிவிட்டு சமைக்கத் துவங்குகிறாள். இந்துமதி அம்மாவிடம் தயங்கிக் கொண்டே, " அம்மா, அம்மா இந்த இராஜிப் பிள்ளை வச்சிருக்கிற பேனா மாதிரி எனக்கு வாங்கித்தர்றியாம்மா?" "யாருடி இவ, வேற வேலையில்லை பெரிய இடத்துப் பிள்ளைங்க அப்படி, இப்படின்னு, வச்சிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துட்டுக் கேட்கக் கூடாது", தலையில் ஒரு கொட்டு வைக்கிறாள் அம்மா. இந்துமதி கலங்கிய கண்களோடும், வீங்கிய முகத்தோடும், பள்ளிக்குச் சென்றாள். இடைவேளையில் ராஜி இல்லாதநேரம், அவளது பேனாவைத் திருடுகிறாள். இராஜி அழுதுகொண்டே "சார், சார் என் பேனாவைக் காணோம் சார்! எங்கம்மா அடிப்பாங்க சார்" என்றாள். தன் ஆசிரியரிடம் புகார் செய்தாள். இந்துமதியின் விழிகள் அங்கும், இங்கும் உருண்டோடின. அச்சம் அவளை, ஆட்கொண்டது. வாத்தியார் கார்த்திக் மிகவும் பண்பானவர். அவர் தனது மாணவர்களை விட்டு அனைத்துப் பைகளையும், சோதனையிடச் சொல்கிறார். இந்துவின் பையில் பேனா, இருப்பது தெரியவருகிறது. ஆசிரியர் இந்துவைத் தனியாக அழைத்து, "இந்து இங்க வாப்பா, நீ நல்லப்பிள்ளையாச்சே ஏன் இந்தத் தப்புப் பண்ணுன?" இந்து அழுகிறாள். "சார், இந்த மாதிரி பேனா எங்கம்மாக்கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், சார். அம்மா, அதுக்கு இதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க வச்சிருக்கது, நம்மெல்லாம் அதுக்கு ஆசைப் படக் கூடாதுன்னு, சொல்லுச்சு சார். ஏன் சார் நான் ஆசைப்படக் கூடாதா?" எனக் கேட்கும் அவள் கண்களில் ஏக்கம் தெரிகிறது. ஆசிரியர் கார்த்திக், "ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்மாலயும் வாங்க முடியும். ஆனா பிறர் பொருளுக்கு, ஆசைப் படக் கூடாது. ஆனா உண்மையா இருக்கணும். இல்லைன்னா, சாமி நம்மளத் தண்டிக்கும் திருடுனாப் படிப்பு வராது! நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்க முடியும் எப்போ தெரியுமா? நீ நல்லாப் படிச்சு, வேலைக்கு வந்தா, நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்கலாம்" என்னும் ஆசிரியரின் வார்த்தைகள் இந்துவின் காதில் எதிரொளிக்கின்றன... கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்மணியைத் தேற்றத் துவங்கினாள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மாற்றம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஜானகி ஆன்ட்டி, ப்ளம்ஸ் பழம், கோபு, பாபு, சிட்டு, பட்டு தலைப்பு: மறைக்க முடியாத பொய்
ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது. "மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்."நான் இல்லை", "நான் இல்லை" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து "நான் தின்னவில்லை" என்று சொன்னாள். "ஓகே……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் ஜானகி ஆன்ட்டி.பட்டுக்குட்டி பயந்துபோய், "இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்."பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது……….என்ன?" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான தண்டனை வழங்கினார். பணியாளன் தானே கடைக்குப் போய் கால் படி சுண்ணாம்பு வாங்கி, அதை நீரில் கரைத்து முழுவதையும் அவன் குடிக்க வேண்டும் என்பதே அவனுக்கிடப்பட்ட ஆணை. மன்னரின் உத்தரவை மறுக்க வழியின்றி கண் கலங்கி, நொந்து போய் கடைக்குச் சென்று சுண்ணாம்பு வாங்கிக் கொண்டிருந்த பணியாளை அவ்வழியாக வந்த பீர்பால் கண்டார். அவனுடைய வருத்தமுற்ற முகத்தைக் கண்ட பீர்பால் அதற்கான காரணத்தை விசாரித்தார். அவனும் விபரம் கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி அவனைத் தேற்றிய பீர்பால், மன்னரின் தண்டனை மிகக் கொடுமையானது என்றாலும் அதிலிருந்து மீண்டு விடுவதற்கான வழி ஒன்று இருக்கிறது என்று கூறி, அரசரின் எதிரில் சுண்ணாம்பு நீரைக் குடித்த பிறகு வெளியே வந்து, குடித்த நீரின் அளவுக்கு நெய்யைக் குடித்து விடும்படி யோசனை கூறி அனுப்பினார். பீர்பாலின் யோசனைப்படியே நடந்து கொண்டான் பணியாள். காரமான சுண்ணாம்பு நீரைக் குடித்த பின், அம்மா, அப்பா என்று அலறுவான். தன் நாக்கை வேக வைத்ததற்கு அதுவே தண்டனை என்றும் எண்ணிய அக்பருக்கு அவன் சிரித்த முகத்துடன் உலாவியதைக் கண்டு திகைப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அவனைக் கூப்பிட்டு, அவனுக்குச் சுண்ணாம்பு நீர் தீங்கு விளைவிக்காததன் காரணத்தைக் கேட்டார் அக்பர். அவனும் அரசர் முன் மண்டியிட்டு வணங்கி, பீர்பாலின் மதிநுட்பத்தால் தான் பெருந்துன்பத்திலிருந்து தப்பியதாகக் கூறினான். பீர்பாலின் மதிநுட்பத்தை உணர்ந்த அக்பர் அப்பணியாளை விட்டு பீர்பாலை அழைத்து வரச் செய்து, அவருக்குப் பாராட்டும் பரிசும் கொடுத்து, அவர் தன் அவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அது முதல் பீர்பால் அக்பரின் அரசவையில் பணியாற்றியதுடன் அக்பரின் உற்ற நண்பராகவும்விளங்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பீர்பாலும் அக்பரும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது. அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது. மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?…. இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது. பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று. துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'துஷ்ட்டருக்கு அறிவுரை கூறாக் கூடாது' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சேகர், சேகரின் தந்தை ராஜலிங்கம், சேகரின் தாயார் தாயம்மாள், நிறுவனத்தின் மேலாளர், விதி தலைப்பு: வேலை வா(ஏ)ய்ப்பு
மழை அரிசியை, விதி, அவன் வீட்டுக் குடிசைச் சல்லடையில் சலித்துக் கொண்டிருந்தது. மழை காலங்களில் அவன் வீடுமட்டுமல்ல, அவன் கண்களும் குளமாகித்தான் போகும். ஓட்டைக் குடிசையோடு சேகரும் சேர்ந்து அழுவான். ஏதோ கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார் ராஜலிங்கம் அவர் இறந்ததிலிருந்தே, அவரது குடும்பமும் நொடித்துப் போனது. குடும்பத்தை நடத்தும் பணி சேகர் கையில் ரொம்பவே சுமையாக கனக்கிறது. வீட்டில் பார்த்த பொருளையெல்லாம், தாயம்மாள் விற்றுத் தான் சேகரைப் படிக்க வைத்தாள். பாவம் அவள். படிக்க ஆர்வமாயிருக்கும் மகன், மனநிலை சரியில்லாத மகள், நிறைய வறுமை இந்தச் சொத்துக்களைத் தான் ராஜலிங்கம் தாயம்மாளுக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார். வறுமையில் படித்தாலும் நல்ல மதிப்பெண்களோடு தான் சேகர் பட்டம் பெற்றான். ஆனால் என்ன செய்வது, "தெரிந்த முகம் பார்த்துத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை விட மந்திரிகளின் எழுத்துக்களுக்குத் தான் மதிப்பு அதிகம்." சேகரும் விடுவதாய் இல்லை. அவன் கால்களுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால், அவன் நடந்து சென்ற இண்டர்வியூகளின் மரண வாக்கு மூலங்களைச் சொல்லும். ஒவ்வொரு இண்டர்வியூவிற்கு அவன் செல்லும் போதும் மனநிலை சரியில்லாத தன் தங்கையின் பஞ்சுமிட்டாய் சிரிப்புத் தான் அவனைப் பயமுறுத்தும். அன்றும் அப்படித்தான் வேலை காலி இல்லை என்ற வாசகங்களை மட்டும் பார்த்துப் பார்த்து விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருந்த அவன் கண்கள், அந்தக் கம்பெனியின் முகப்புப் பலகையை மேய்ந்தன. அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது. "ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை" சேகர் ஊனமுற்றவன் அல்ல. விதி அவனுக்குப் பாதகமாவே இருந்தது. இதைப் படித்தும் அவன் அந்த இண்டர்வியூவை சந்தித்தான். அவன் கண்களில் ஏதோ நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தது. தனக்கு இந்த வேலை கிடைத்தால்... சராசரி மனிதனைப் போல் அவன் கற்பனைகளில் மூழ்கிப் போனான். வழக்கம் போலவே இதுவும் தோல்வியாகும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். ரொம்பவே உடைந்து போனான் சேகர். இந்த வேலையும் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கூட இல்லை. ஊனமுற்று இருக்கும் ஒருவருக்குத் தான் வேலை என்று கூறி இவன் சான்றிதழ்களை அந்தக் கம்பெனியின் M.D. தூக்கியெறிந்த பிறகு அவன் கண்கள், குளமானது. இதே விரக்தியோடு வீட்டுக்குக் கூடச் செல்லாமல் அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்துக்குச் சென்றான். அந்த அறிவிப்புப் பலகையும், M.D யின் வார்த்தைகளும் அவன் காதில் மங்கலாய் விழுந்து கொண்டே இருந்தது. அவனுக்குள் அது ஏதோ செய்வதாய் இருந்தது. உடனே அவன் சற்றும் யோசிக்காமல், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, வெறி பிடித்தவனைப் போல் தனது இடக்கையை வெட்டிக் கொண்டு கத்தினான். இனி நானும் ஊனமுற்றவன், இனி நானும் ஊனமுற்றவன். ஆறாய்ப் பெருக்கெடுத்த இரத்தத்தோடு மயங்கி விழுந்தான். அவன் வாழ்ந்தானா? செத்தானா? தெரியாது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கந்தசாமி, கந்தசாமியின் மனைவி, தலைப்பு: பேராசை பெரும் நஷ்டம்
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …"இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை" என வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர். ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது. உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். "ஆ" என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர். ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கடற்கரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தது ஓர் ஆண் சிட்டு. அந்தச் சிட்டுக்கு ஒரு மனைவிச் சிட்டு இருந்தது. இரண்டும் கடற்கரையில் இருந்த ஒரு செடியின் கீழ் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. பெண் சிட்டுக்குச் சினை ஏற்பட்டவுடன் அது ஆண் சிட்டைப் பார்த்து நான் எங்கே முட்டையிடுவது?” என்று கேட்டது. “எங்கே இடுவது? இங்கேயே இட வேண்டியது தான்! இதைவிட வேறு இடம் நமக்கு எங்கேயிருக்கிறது?’ என்று பதில் சொல்லியது ஆண் சிட்டு. கடற்கரையில் முட்டையிட்டு வைத்தால் அலையடித்து கடல் எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது?’ என்று பெண் சிட்டுக் கலங்கியது. போடி, போ! பெண் புத்தி என்பது சரியாக இருக்கிறது. நாம் இன்னார் என்று நினைத்துப் பார்க்காமல் அந்தக் கடல் நம் முட்டைகளை எடுத் துக் கொண்டு போனால், அது படும்பாடு நாயும் படாது!’ என்று அந்த ஆண் சிட்டுக்குருவி வீராப்புப் பேசியது. என்ன புத்தியோடு இப்படிப் பேசுகிறாய்? வாயடக்கமில்லாத ஆமை இறந்த கதை உனக்குத் தெரியாதா? அந்த ஆமையின் கதையும் மூன்று மீன்களுடைய கதையும் தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்! என்று பெண் சிட்டுக் கூறி அந்தக் கதைகளையும் விளக்கமாகச் சொல்லியது. “அது கிடக்கட்டும், நமக்குள்ள இடம் இதுதான்! இங்கேதானே நீ உன் முட்டைகளை யிடு என்று கட்டாயமாகக் கூறியது ஆண் சிட்டு. இதைக் கேட்டுக் கொண்டிருந்த கடலரசன் ‘ஒகோ! இவற்றின் சமர்த்தைப் பார்க்கலாம்!’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டது. பெண் குருவி யிட்டு வைத்த முட்டையை அலை யடித்துக் கொண்டு போய் விட்டது. இதைக் கண்ட ஆண் சிட்டுக்குருவி கடலைப் பார்த்து, ஏ, கடலே, இப்போதே என் முட்டையைத் திருப்பிக் கொண்டு வந்தால் சும்மா விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் உனக்குத் துன்பம் ஏற்படச் செய்வேன்’ என்று கூறியது. - கடல் அதற்குப் பதில் ஒன்றும் பேசவில்லை. சிட்டுக்குருவி, உடனே பறந்து சென்று எல்லாச் சிட்டுக்களையும் அழைத்தது. சிட்டுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின் மற்ற பறவைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு பறவை அரசனை நோக்கிப் பறந்தது அந்த ஆண் சிட்டு. பறவையரசன் கருடன் முன் போய், கருடதேவா, பறவைக் குலங்களுக்கே பெரிய பழி ஏற்பட்டு விட்டது. கடலரசன் எங்கள் முட்டைகளை யடித்துக் கொண்டு போய் விட்டான். இக்கணமே அதைத் திரும்பப் பெறாவிட்டால், யாரும் நம் குலத்தை மதிக்க மாட்டார்கள்’ என்று வருத்தத்துடன் கூறியது. கருடன் உடனே திருமாலிடம் பறந்து சென்று முறையிட்டது. திருமால் உடனே கடலரசனை அழைத்து, ஏன் முட்டையை எடுத்துச் சென்றாய்? இப்பொழுதே கொண்டு வந்து அந்தச் சிட்டுக் குருவி யிடம் கொடுத்துவிடு. இல்லை என்றால் என் கோபத் துக்கு ஆளாவாய்’ என்று கட்டளை யிட்டார். கடவுளின் கட்டளையைக் கேட்ட கடலரசன் பயந்து நடுங்கி உடனே முட்டைகளைக் கொண்டு வந்து சிட்டுக் குருவிகளிடம் கொடுத்து விட்டான். கூட்டு முயற்சியால் ஆகாத காரியம் உலகத்தில் என்ன இருக்கிறது? எதுவுமே இல்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடலை வென்ற சிட்டுக்குருவி' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: தெனாலிராமன், திருடர்கள், விஜயநகர ராஜ்யம், வீடு, கிணறு, தோட்டம், குளம், குட்டை, ஏரி, நீர், பெட்டி, கல், மண், பழைய பொருட்கள் தலைப்பு: நீர் இறைத்த திருடர்கள்
ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான். "அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள். "வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர். அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் "தொப்"பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன். திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர். பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான். இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான். திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பாண்டவர்கள், தர்மர், கிருஷ்ணன், கர்ணன், நகர மக்கள், தங்கமலை, வெள்ளி மலை தலைப்பு: தானத்தில் சிறந்தவர் கர்ணனே
ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்," என்று கூறினார். பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன. மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!" என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார். "கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்," என்று கூறினார். உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்," என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்," என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான். பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பயிர், மன்னர், யானை, முல்லா, தொல்லை, தண்டனை, மக்கள், துணிச்சல், திருமணம், அதிகாரி, அரண்மனை தலைப்பு: யானைக்கு வந்த திருமண ஆசை
மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார். " ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள். நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர். செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார். முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார். " என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார். " என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார். மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார். மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார். மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: போதிதர்மர், கௌதமபுத்தர், பிரயக்தாரா, சீனா, பேரரசர் வூ, ஞானம், மக்கள், குரு, கோவில், மடாலயங்கள், புத்த பிட்சுக்கள், புண்ணியம், மலை, கையெழுத்து, ஹூய்கோவ், இமயமலை, கோமா, காலடி, இருப்பு தலைப்பு: போதிதர்மரின் வழிகள்
புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும் 2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதம். பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான். நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது. முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது – சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர். எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, "நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?" என்பதாக இருந்தது. போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார். மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர், "எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு" என்று கூறினார். பேரரசர், "நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே" என்று கேட்டார். அதற்கு போதிதர்மர், "நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய். கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார். பேரரசர் வூ, "என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. "என்று கூறினார். போதிதர்மர், "அப்படியென்றால் நாளை அதிகாலை 4 மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்"என்று கூறினார். பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் 4 மணிக்கு அவரிடம் செல்வது என்பது…………… மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. "போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார்" மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்…… பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் "இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும்" என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் ‘அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன்" என்று வாக்களித்துள்ளார். பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர், "இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ? நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன். "என்று கூறினார். பேரரசர், "கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம்" என எண்ணினார். போதிதர்மர், "இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்" என்று கூறினார். உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது. முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும் …… நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்…. அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது……. பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல. பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது. மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?" என்று கேட்டார். பேரரசர் வூ, "உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது." என்று கூறினார். போதிதர்மர், "நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல." என்று கூறினார். வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், "அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு." என்று கூறினார். இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது. போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன. கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது. மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான். போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார். முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார். இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான். போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார். மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார் நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார். ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான். எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார். அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார். சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார். நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார். அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, நகரம், மக்கள், விடுதி, சந்தேகப் பிராாணி, கருப்புத் துணி தலைப்பு: சந்தேகப்பிராணி
வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்கத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது. அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான். அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார். அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள். " காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் " சந்தேகப் பிராணி. முல்லா சிரித்துக் கொண்டே " நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் " என்றார். சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவனுக்கு அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார். " ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. என் காலில் இருந்த துணியைக் காணோமே" என்று கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு " நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் " என்று சத்தம் போட்டான். அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர். நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார். சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய் விட்டுச் சிரித்தனர். பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: ஓபாகு ஸென், ஏன்சூ, முகவுரை, மாணவர்கள் தலைப்பு: விசித்திரமான துறவி
ஓபாகு ஸென் பிரிவினைச் சேர்ந்தவர் ஸென் துறவி ஏன்சூ. மரபுகளை ஏற்றுக் கொள்ளாத விசித்திரமான துறவி. தனியாக வசித்தார். ஒரிடத்தில் தங்கியிருக்க மாட்டார். எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு செல்வார். என்ன செய்ய வேண்டும் என்று பிரியப் படுகிறாரோ அதைச் செய்வார். ஒரு சமயம் ஏன்சூ ஜப்பானின் பழைய தலை நகரான கியோடோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினைச் சந்திக்கச் சென்றார். ஏதோ ஆரவரத்தில் சிந்தனை வயப்பட்டவராக தான் எங்கு செல்கிறோம் என்பதினையே மறந்து விட்டார் ஏன்சூ. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவர், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, "இந்த வீட்டிற்கு தான் ஏன்சூ வருவதாக கூறியிருந்தாரா?" என்று ஒவ்வொருவரையும் கேட்கலானார். மற்றொரு சமயம், ஒரு புத்தகத்திற்கு முகவுரை எழுதச் சொல்லி ஏன்சுவிடம் ஒருவர் கேட்டுக் கொண்டார். ஏன்சூவும் அவருடைய கோரிக்கையினை ஏற்று முகவுரையினை எழுதிக் கொடுத்தார். அந்த முகவுரைத் தாளில் இருந்த மோசமான தெளிவில்லாத கிறுக்கல் கையெழுத்தினைப் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தெளிவில்லாத கையெழுத்தினைக் ஏன்சூவிடம் காட்டி அது என்ன என்று கூறுமாறு எழுதச் சொன்னவர் கேட்டார். ஸென் துறவியான ஏன்சூ மறுபடி மறுபடியும் தான் எழுதியதைப் படித்துப் பார்த்தார். ஏதோ கண்டு பிடித்தவராக முடிவில் "என்னாலும் இதனை படிக்க முடியவில்லை. என்னுடைய மாணவர்களில் ஒருவன் என்னுடையக் கையெழுத்தினைப் படிப்பதில் கெட்டிக்காரன் - ஏன் நீங்கள் அவனிடம் காட்டி என்ன எழுதியிருக்கிறேன் என்றுக் கேட்கக் கூடாது" என்றார்.