sent_token
stringlengths
1
79k
பாலித் தீவு இந்தோனேசியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே பகுதியாக மாறியது.
முக்கிய நம்பிக்கைகள் பாலி மக்களின் கலைகள் மற்றும் சடங்குகளுடன் இந்து சமயத்தின் பல அடிப்படை நம்பிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.
சமகாலத்தில் பாலியில் உள்ள இந்து சமயம் அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய மத அமைச்சகத்தால் ஆகம இந்து தர்மம் என்று குறிப்பிடப்படுகிறது.
வேதம் உபநிடதம் தீர்த்தம் மற்றும் மும்மூர்த்திகள் பிரம்மா விஷ்ணு மற்றும் சிவன் பாலி இந்து சமயத்தின் ஆணி வேராகும்.
இந்தியாவைப் போலவே பாலியிலும் இந்து சமயம் நெகிழ்வுத்தன்மையுடன் பல்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளது.
இது பல இந்திய ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியது.
இந்திய புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் புனைவுகள் மற்றும் தொன்மங்களை போற்றுகிறது.
மூதாதையர் வழிபாடு போற்றப்படுகிறது.
மிருக பலியில்லாத சமயச் சடங்குகள் கொண்டுள்ளனர்.
இந்தோனேசியப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் இந்து சமயத்தை ஒரு உன்னதமான வாழும் முறையாக விவரிக்கிறது.
பாலித் தீவு இந்துக்கள் நாள்தோறும் மூன்று முறை கட்டாயப் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள்.
மேலும் இந்து மதம் சில பொதுவான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது.
அவை இஸ்லாத்தின் ஒரு பகுதிக்கு இணையானவை.
இந்து தர்மத்தில் காணப்படும் புனித நூல்களான வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் பாலித்தீவு இந்து சமயத்தின் ஆழமான நம்பிக்கை ஆகும்.27 இராமயணம் நடன நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்தியாவைப் போலவே இந்தோனேசியாவின் பாலி இந்து சமயம் ஆன்மீகத்தின் நான்கு பாதைகளான பக்தி யோகம் ஞான யோகம் அறிவின் பாதை கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் தியானத்தின் பாதை.
பக்தி மார்க்கம் பாலியில் பெரும் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
இதேபோல் இந்தியய இந்துக்களைப் போலவே பாலித் தீவு இந்துக்களும் மனித வாழ்க்கையின் நான்கு சரியான இலக்குகளான அறம் பொருள் இன்பம் மற்றும் வீடுபேறு எனும் நான்கு புருஷார்த்தங்களை நம்புகிறார்கள்.. பிறப்பு மற்றும் வாழ்க்கை கருவுற்றது முதல் மரணம் வரை வாழ்க்கை தொடர்பான மொத்தம் பதின்மூன்று சடங்குகள் உள்ளது.
அவை ஒவ்வொன்றிலும் நான்கு கூறுகள் கொண்டது தீய ஆவிகளை விரட்டுவது புனித நீரால் சுத்திகரித்தல் மற்றும் பிரார்த்தனை.
இந்த சடங்குகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பிறப்பு பருவமடைதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கின்றன.
புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மூதாதையரின் ஆன்மாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது மற்றும் அதன் வாழ்க்கையின் முதல் 42 நாட்களுக்கு கடவுளாக கருதப்படுகிறது.
இருப்பினும் மகப்பேறு பெற்ற தாய் தூய்மையற்றவராக கருதப்படுகிறார்.
மேலும் இந்த காலகட்டத்தில் பெண்கள் எந்த சமயச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
மரணம் மற்றும் மறுபிறப்பு மரணச் சடங்குகள் மூலம் இறந்த மனிதனின் ஆன்மா விடுவிக்கப்பட்டு இறுதியில் மறுபிறவி எடுக்கப்படுகிறது.
ஆன்மா அதை முழுவதுமாக விட்டுவிடுவதற்கு முன்பு உடலை எரிக்கப்படுகிறது.
திருவிழாக்கள் கலுங்கனும் குனிங்கனும் மிக முக்கியமான திருவிழா கலுங்கன் தீபாவளி தொடர்பானது இது அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.
இது பாலி பாவுகோன் நாட்காட்டியின்படி 210ம் நாளில் வருகிறது.
பாரம்பரியத்தின்படி இறந்தவர்களின் ஆவிகள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பத்து நாட்களுக்குப் பிறகு குனிங்கனில் திரும்புகின்றது.
நெய்பி நெய்பி அல்லது அமைதி நாள்.
நெய்பி திருவிழா வழக்கமாக மார்ச் மாதத்தில் வருகிறது.
மற்ற பண்டிகைகள் பாவுகோன் நாட்காட்டியின் கடைசி நாளான வடுகுனுங் கற்றலின் தெய்வமான சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இது புத்தகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும் படிக்க அனுமதி இல்லை.
ஆண்டின் நான்காவது நாள் பேகர்வேசி என்று அழைக்கப்படுகிறது.. பாலி கடவுள்கள் கோயில்கள் அசிந்தியன் தனா லாட் கோயில் பெசாகி கோயில் பாலி புரா கோவா லாவா கோயில் இதனையும் காண்க இந்தோனேசியாவில் இந்து சமயம் பாலி மக்கள் பாலி நடனம் தங் அயாங் நிரர்த்தா ஆன்மீகக் கவிஞர் மேற்கோள்கள் மேலும் படிக்க பகுப்புஇந்து சமயம் பகுப்புபாலி பகுப்புஇந்தோனேசியா பகுப்புஇந்தோனேசியாவில் இந்து சமயம்
லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி 192728 10 நவம்பர் 2018 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த குணச்சித்திர நடிகையாவார்.
மலையாளத் திரைப்படத்துறையில் குணசித்திர நடிப்புக்காக பெரிதும் அறியப்பட்ட இவர் ஹரிஹரனின் பஞ்சாக்னி ஜி அரவிந்தனின் வஸ்துஹாரா கமலின் ஈ புழையும் கடன்னு ஷாஜி என் கருணின் பிறவி மற்றும் சத்யன் அந்திகாட்டின் தூவல் கொட்டாரம் போன்ற திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்காக லெட்சுமி பரவலாக அறியப்பட்டுள்ளார்.1996 ஆம் ஆண்டு மஞ்சு வாரியர் நடித்த ஈ புழையும் கடன்னு என்ற பிரபல திரைப்படத்திலும் நடித்துள்ளார் வாழ்க்கை 1986 ஆம் ஆண்டு வெளியான ஹரிஹரனின் பஞ்சாக்னி என்ற திரைப்படம் லெட்சுமியின் மலையாளத் திரைப்படத்துறையில் முதல் அறிமுகப்படமாகும்.
இதில் இவர் சுதந்திரப்போராட்ட வீரராக நடித்துள்ளார்.
அதற்க்கு முன்னதாக 1970 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற கன்னட திரைப்படமான குலிசுரா லட்சுமியின் முதல் படமாகும்.
தொடர்ந்து ஆனந்த பத்ரம் களியூஞ்சல் பொந்தன் மட பட்டாபிஷேகம் விஸ்மயா தும்பது பிறவி தூவல் கொட்டாரம் வஸ்துஹாரா விஸ்மயம் மற்றும் மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்தார்.
அவர் கன்னட திரைப்படமான சன்ஸ்காரா மணிரத்னத்தின் தமிழ் திரைப்படமான கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் சந்தோஷ் சிவனின் மழைக்கு முன் என்ற இந்தி திரைப்படத்திலும் பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
1928 ஆம் ஆண்டு கோழிக்கோடு சாலப்புரத்தில் முல்லசேரி கோவிந்தமேனனுக்கும் செமலத் தேவகியம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் லட்சுமி கிருஷ்ண மூர்த்தி.
நாடகம் கதகளி மற்றும் நடனம் போன்ற கலைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த லட்சுமி சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.
1950 ஆம் ஆண்டு கோழிக்கோடு ஆகாஷ்வானியில் நாடகக்கலைஞர் மற்றும் அறிவிப்பாளராக சேர்ந்து அனைத்திந்திய வானொலியில் அதிகாரியாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை மணந்துள்ளார் திருமணத்திற்கு பிறகுசில காலம் டெல்லி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் செய்தி தொகுப்பாளராகவும் முதல் மலையாள செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் சில காலம் சென்னையிலும் அமெரிக்காவிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.. இவரது தொண்ணூற்றோராவது வயதில் 10 நவம்பர் 2018 அன்று வயது காரணமாக மரணமடைந்துள்ளார்.
திரைப்படவியல் பஞ்சாக்னி 1986 மலையாளத்தில் அறிமுகமான படம் தனியாவர்த்தனம் 1987 பிறவி 1989 அக்ஷரம் 1990 குறும்படம் வஸ்துஹாரா 1991 பொந்தன்மட 1994 சாகரம் சாக்ஷி 1994 விஷ்ணு 1994 சாக்ஷ்யம் 1995 ஈ புழையும் கடன்னு 1996 உத்யானபாலகன் 1996 தூவல்கொட்டாரம் 1996 கலியூஞ்சல் 1997 விஸ்மயம் 1998 இளமுற தம்புரான் 1998 ஆரம் ஜாலகம் 2001 காக்கே காக்கே கூடாதே 2002 கன்னத்தில் முத்தமிட்டல் 2002 தமிழ் சித்திரகூடம் 2003 கதவசேஷன் 2004 விஸ்மயத்தும்பது 2004 மாணிக்யன் 2005 அனந்தபத்ரம் 2005 மழைக்கு முன் 2007 ஆங்கிலம் மழைக்கு முன் 2008 மலையாளம் அந்திபொன்வெட்டம் 2008 கேசு 2009 மல்லு சிங் 2012 ஒலிச் சேர்க்கை பி.எஸ்.சரோஜாவுக்கு அம்மா 1952.
தொலைக்காட்சி தொடர்கள் நாலுகெட்டு மானசி ஆலிப்பழம் பெண்ணுரிமை மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புகேரள நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு2018 இறப்புகள் பகுப்புஇந்திய நடிகைகள்
நிப்பாணி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது.
சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.
சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் பகுப்புகர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புபெளகாவி மாவட்டம்
பர்சா சாட்டர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் இந்தித் திரைப்படத்துறையின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வரும் நடிகையாவார்.
இஷ்க் கா ரங் சஃபேத் ஆப் கே ஆ ஜானே சே கஹானி கர் கர் கி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மேலும் பாரிஸ்டர் பாபு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நடித்துள்ள தொடர் மற்றும் படங்களின் பட்டியல் ரச்னாவாக இஷ்க் கா ரங் சஃபேத் மாயா சீனிவாசனாக ஆப் கே ஆ ஜேன் சே ஷிவாங்கி இஷான் கவுலாக கஹானி கர் கர் கி ஜெயா சர்மாவாக உதான் பாரிஸ்டர் பாபு தேவோலினா ஜாதவ்வாக நீலி சத்ரி வாலே சித்தியா கர் என்ன மக்கள் வசந்த மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள் பகுப்புநடிகைகள்
பி.கே.திரேசியா 12 மார்ச் 1924 18 நவம்பர் 1981 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண் கட்டடப் பொறியாளராவார்.
ஆசியாவிலேயே ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறியியலராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையையும் உடையவராவார்.. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி 1924 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எடத்திருத்தியில் பக்தியுள்ள சிரிய கத்தோலிக்க குடும்பத்தில் காக்கப்பன் குஞ்சாலிச்சி என்ற பெற்றோருக்கு ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் திரேசியா.
காட்டூரில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார்.
தொடர்ந்து தனது மகள் பொறியியல் பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற இவரது தந்தையின் கனவை நிறைவேறும் பொருட்டு கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சக பெண் பொறியாளர்களான அய்யாலசோமயாஜுலா லலிதா மற்றும் லீலாம்மா கோஷி ஆகியோருடன் குடிசார் பொறியியல் படித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக அவரது பட்டப்படிப்பு மூன்றரை ஆண்டுகளாக சுருக்கப்பட்டதைத் தொடர்ந்து 1944 ஆம் ஆண்டில் இம்மூவரும் இந்தியாவின் முதல் மூன்று பெண் பொறியாளர்களாக பட்டம் பெற்றனர் பொறியியலராக வாழ்க்கை பொறியாளர் பட்டம் பெற்ற பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த கொச்சி இராச்சியத்தின் பொதுப்பணி ஆணையத்தில் பிரிவு அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்துள்ள திரேசியா முலகுன்னத்துகாவு டிபி சானடோரியத்தின் உதவிக் கட்டுமானப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
1956 ஆம் ஆண்டில் நிர்வாக பொறியாளரான திரேசியா அதன்பொருட்டு எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்து அங்கே ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பின்னர் 1966 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சாலைகள் மற்றும் கட்டிடங்களின் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
1971 ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமைப் பொறியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்ர்.
எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறியாளராக இருந்து திறம்பட மேலாண்மை செய்து வந்த திரேசியா மொத்தமாக முப்பத்துநான்கு ஆண்டுகள் கேரள பொதுப்பணித்துறையில் பணியாற்றிய பிறகு 1979 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றுள்ளார்.
ஓய்வுக்கு பின்னர் தாஜ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவன ஆலோசகராக பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பொறியியலாளர்கள் பகுப்புகேரள நபர்கள் பகுப்பு1981 இறப்புகள் பகுப்பு1924 பிறப்புகள் பகுப்புபெண் பொறியியலாளர்கள்
மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
பாலினச் சமனிலை குடும்ப மேம்பாடு மற்றும் அக்கறையுள்ள சமுதாயம் ஆகிய இலக்குகளை அடையும் நோக்கத்தில் இந்த அமைச்சு செயல்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை மற்றும் பெய்ஜிங் பிரகடனம் ஆகியவற்றுக்கும் இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.
பொறுப்பு துறைகள் சமூக நலன் குழந்தைகள் பெண்கள் குடும்பம் சமூகம் வயது முதிர்ந்தோர் ஆதரவற்றவர்கள் வீடு இல்லாதவர்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஊறு குறைந்தவர்கள் பின்னணி பெண்களுக்கான நான்காவது உலக மாநாடு 1995ஆம் ஆண்டில் பெய்ஜிங் சீனாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் அவை ஏற்பாடு செய்தது.
உலகளாவிய நிலையில் பெண்களின் தகுதியை உலக நாடுகளில் அமைச்சரவை அளவில் உயர்த்த வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் அவையின் விருப்பமாகும்.
அந்த வகையில் மலேசியாவிலும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டது.
அப்போது அந்த அமைச்சு மலேசியப் பிரதமரின் அமைச்சகத்தில் ஒரு துறையாக இருந்தது.
மகளிர் விவகார அமைச்சு பெண்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு 17 சனவரி 2001இல் மகளிர் விவகார அமைச்சு எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
சரிசாத் அப்துல் சலீல் என்பவர் அமைச்சராகப் பதவி ஏற்றார்.
பெண்களின் வளர்ச்சியில் மட்டுமே அந்த அமைச்சு கவனம் செலுத்தியது.
15 பிப்ரவரி 2001 அன்று அமைச்சின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது.
குடும்ப மேம்பாட்டுத் துறை எனும் புதிய துறை சேர்க்கப்பட்டது மேலும் அமைச்சகத்தின் பெயர் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு என்றும் மாற்றப்பட்டது.
வான் அசிசா வான் இசுமாயில் 2004ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
சமூக நலன் எனும் புதிய திணைக்களம் சேர்க்கப்பட்டது.
இந்த அமைச்சின் தற்போதைய பெயரான மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எனும் பெயர் 27 மார்ச் 2004இல் வைக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் 14வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் பாக்காத்தான் ராக்யாட் மே 21 2018இல் மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
திணைக்களங்கள் சமூக நலத்துறை 1946 தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் 1966 மகளிர் மேம்பாட்டுத் துறை 1975 மலேசிய சமூக கழகம் 2001 ஆலோசகர்கள் குழு 2004 அமைப்பு அமைச்சர் துணை அமைச்சர் இரண்டாவது துணை அமைச்சர் பொது செயலாளர் பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் தேசிய முக்கிய முடிவு பகுதி பிரிவு நிறுமத் தொடர்பு பிரிவு சட்டப் பிரிவு ஆலோசகர்கள் வாரியச் செயலகம் உள் தணிக்கை பிரிவு ஒழுங்கமைவு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் செயல்பாடுகள் தகவல் மேலாண்மை பிரிவு அபிவிருத்தி பிரிவு மேலாண்மை சேவைகள் பிரிவு கணக்கு பிரிவு மனித வள மேலாண்மை பிரிவு கணக்கு பிரிவு துணைப் பொதுச் செயலாளர் உத்திசார் கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு பன்னாட்டு உறவுகள் பிரிவு உத்திசார் ஒத்துழைப்பு பிரிவு கூட்டரசு துறைகள் சமூக நலத்துறை மகளிர் மேம்பாட்டுத் துறை கூட்டரசு நிறுவனங்கள் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் மகளிர் அணிசேரா அதிகாரமளிப்பு இயக்க நிறுவனம் மலேசிய சமூக நிறுவனம் மலேசிய தேசிய நல அறக்கட்டளை ஆலோசகர்கள் வாரியம் அமைச்சு சார்ந்த சட்டங்கள் மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் துறைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் உள்ளது.
முயற்சிகள் உத்திகள் பாலினம் குடும்பம் மற்றும் சமூகங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் செயல்படுத்துதல் அரசு நிறுவனங்கள் தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மக்களிடையே நேர்மறையான குடும்ப விழுமியங்களை ஏற்படுத்துதல் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய சட்டங்களைப் பரிந்துரைத்தல் பாலினம் மக்கள் தொகை குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய ஆய்வு மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வது திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துதல் இலக்குத் திட்டங்களைத் திட்டமிடுதல் கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஒருங்கிணைந்த சமூக தரவுத் தளத்தை உருவாக்கி வலுப்படுத்துதல் திறன் மற்றும் அறிவின் அளவை அதிகரிப்பது இலக்குக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பது அவர்களின் பங்கேற்பதைச் செயல்படுத்துதல் இலக்கு குழுக்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் பன்முகப்படுத்தல் தகவல் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிர்வதற்கு வசதியாக தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்புகளை வலுப்படுத்துதல் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்கு பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பொறிமுறையை நிறுவுதல் பெண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அதிகரித்தல் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல்.
கொள்கைகள் தேசிய சமூகக் கொள்கை பெண்கள் மீதான தேசியக் கொள்கை தேசிய சமூக நலக் கொள்கை முதியோருக்கான தேசியக் கொள்கை சான்றுகள் மேலும் காண்க குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை வெளி இணைப்புகள் பகுப்புமலேசிய அமைச்சுகள் பகுப்புபுத்ராஜெயா
மேக்னா வெங்கட் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளரும் நடன ஆசிரியையுமாவார்.
தற்போது பெங்களுருவில் நிருத்ய நாதம் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த ஸ்ரீ அடையார் கே லக்ஷ்மணிடம் சிஷ்யையாக இருந்து சென்னையில் பதினோரு ஆண்டுகள் நடன பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும் இந்தியாவின் பல இடங்களில் மேக்னா நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
அவர் நட நீரஜனத்தின் வழக்கமான நடன கலைஞராவர்.
சாய் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய உலக நடன தின கொண்டாட்டங்களில் பங்கேற்று பரதநாட்டியம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் குழுமப்பட்ட நடனக் கலைஞரும் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞருமாவார்.
இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவினால் பாடத்திட்டங்களை தயாரிக்க உதவும் பேராசிரியர் குழுவின் பட்டியளிப்பட்டுள்ள நடன விரிவுரையாராகவும் உள்ளார் சுயசரிதை மேக்னா ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார் ஆனால் அவரது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக அவரது குடும்பம் இருபது ஆண்டுகளாக தமிழகத்தின் ராணிப்பேட்டையில் வசித்து வந்துள்ளனர்.
பதினோராவது வயதிலேயே இவரது நடன வாழ்க்கை தொடங்கியுள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் சில வருடங்கள் பெருநிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர் பின்னர் அதை துறந்துவிட்டு முழு நேரமாக நடனத் துறைக்கு வந்துள்ளார்.
"தி தியரி ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் ஜூனியர் சீனியர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இப்புத்தகம் கர்நாடக மாநில தேர்வு வாரியத்தினால் அரசு நாட்டியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடபுத்தகமாக பரிந்துரைக்கப்படுகிறது.
நார்வேயில் நடந்த 70வது இந்திய சுதந்திர தின கொண்டாடத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாடியதை தனது பெருமையாக நினைக்கும் இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று பாரத நாட்டியமாடி வந்துள்ளார்.
மேலும் அரசு கலைவிழாக்கள் இந்து மத விழாக்களிலும் நடனமாடி வருகிறார்.
விருதுகள் "நிருத்ய சிரோமணி" கொலகட்டா "நாட்டிய செம்மல்" டிரினிட்டி கலை விழா சென்னை "நிருத்ய கௌமுதி" எலுரு "மயூர ரத்னா" பெங்களூரு "நாட்ய பாரதி" விசாகப்பட்டினம் "நிருத்ய பிரியே" விஜயவாடா போன்ற பல விருதுகளை இவரது நாட்டிய திறமையின் காரணமாக பெற்றுள்ளார் மேக்னா.
மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்