sent_token
stringlengths
1
79k
300சரப மூர்த்தியின் ஓவியம் சரபேசுவரர் எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் மிகக்கூரிய நகங்களும் உடலின் இருபுறங்களில் இறக்கைகளும் சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும் கருடனைப் போன்ற மூக்கும் யானையைப் போன்ற கண்களும் கோரப் பற்களும் யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.சிவபெருமானின் சரப வடிவினை சரபேஸ்வரர் என வழிபடுகின்றனர்.
சைவ வைணவ தர்க்க மோதல்களால் சரபேஸ்வரை அழிக்க திருமால் இருதலை புள்ளாக வடிவெடுத்து சரபேஸ்வரருடன் சண்டையிட்டு வென்றதாக நூல்களில் எழுதப்பட்டன.
இருதலை புள்ளானது கரிய உடலும் இரண்டு தலைகளும் அலகுகளில் பற்கள் கொண்ட பெரிய பறவையாக சித்தரிக்கப்படுகிறது.
யானையையே அலகால் தூக்கிச் சென்று உண்ணும் அளவிற்கு பெரிய அளவிலான பறவையாகவும் வலிமையான பறவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் உலா நாட்கள் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசாமி பங்குனி திருவிழா ஆறாம் நாள் திருவிழாவில் கண்ட பேரண்ட பட்சி வாகனத்தில் உலா வருகிறார்.
மேற்கோள்கள் இவற்றையும் காண்க அதிகார நந்தி வாகனம் படக்காட்சியகம் வெளி இணைப்புகள் பகுப்புஇந்துக் கடவுள் வாகனங்கள்
மடிக்கேரி தசரா என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள மடிக்கேரி நகரில் கொண்டாடப்படுகிறது.
இதற்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.
மடிகேரி தசரா என்பது பத்து நாள் கொண்டாட்டமாகும் இது 4 கரகங்கள் மற்றும் 10 மண்டபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது சூரர்களால் தெய்வம் அசுரர்களை கொன்றதை சித்தரிக்கிறது.
மடிகேரி தசராவுக்கான ஏற்பாடுகள் 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.
இந்த கொண்டாட்டத்திற்கான பெரும்பகுதி தொகை குடகு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது .
இந்த 10 மண்டப அமைப்பாளார்களின் குழுவிலும் 50 முதல் 100 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு மண்டபமும் 8 முதல் 15 அடி உயரமுள்ள சிலைகளைக் கொண்டுள்ளது.
இது ஒரு விளக்குப் பலகையின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபம் கட்டுவதற்கு 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.
வரலாறு மடிகேரி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.
அப்போது மடிகேரி மன்னர் மாரியம்மன் திருவிழாவை தொடங்க முடிவு செய்தார்.
அப்போதிலிருந்து மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
மகாளய அமாவாசைக்கு மறுநாள் திருவிழா தொடங்குகிறது.
எனவே தசரா நான்கு கரகங்களுடன் தொடங்குகிறது.
மைசூரு தசராவுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மிகப் பிரபலமான தசரா விழா இதுவாகும்.
மடிக்கேரி தசராவில் கரகா இந்த ஊரில் 4 மாரியம்மன் கோவில்கள் உள்ளன அவை முறையே தண்டின மாரியம்மன் காஞ்சி காமாட்சியம்மன் குண்டூருமோட்டே ஸ்ரீ சவுட்டி மாரியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் ஆகும்.
இந்த மாரியம்மன் கோயில்கள் ஒவ்வொன்றிலும் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கும் கரகம் உள்ளது.
இந்த நான்கு கரகங்களும் நகரத்தின் "சக்தி தேவதைகளை" குறிக்கின்றன.
அனைத்து கோவில்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த 10 நாட்களில் மடிகேரி முழுவதும் அழகாக காட்சியளிக்கும்.
கரகம் என்றால் குடம் போன்ற ஒரு பாத்திரத்தில் அரிசி 9 வகையான நவ தானியங்கள் புனித நீர் நிரப்பப்படுகிறது.
இதை விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் தலைமேல் வைக்கப்ப்ட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த கரகங்கள் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டுகின்றது.
இந்த கரகங்கள் தசராவின் 5 நாட்களுக்கு மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வலம் வரும் .
மேலும் இவை மடிகேரியில் வாழும் பக்தர்களால் அர்ப்பணிக்கப்படுகின்றன.
சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புகருநாடக விழாக்கள் பகுப்புஇந்து சமய விழாக்கள்
ஹேமா சீனிவாசன் பிறப்பு 1959 இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றவருமாவார்.
தற்போது மிசோரி பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஹேமா 1975 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் தேசிய அறிவியல் திறமையாளராக இருந்துள்ளார்.
முன்னதாக பம்பாய் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றுள்ள இவர் 1978 ஆம் ஆண்டு கணிதத்திற்கான கியா பரிசையும் 1982 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக்கழகம் ப்ளூமிங்டனில் இருந்து முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
1986 ஆம் ஆண்டுபிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் ஆய்வையும் முடித்துள்ளார்.
சில நியமனத் தீர்மானங்களில் பெருக்கல் கட்டமைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரது முனைவர் ஆய்வு கட்டுரையானது டேவிட் புக்ஸ்பாம் ஆல் கவனிக்கப்பட்டு மேற்பார்வையிட்டுள்ளது.
1986 ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வருகை பேராசிரியராகவும் 1988 ஆண்டு முதல் 1989 ஆண்டு வரை பர்டூ பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்த பிறகு 1989 ஆண்டில் மிசோரி பல்கலைக்கழகத்தில் கணித பாடப்பிரிவில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
மேலும் தற்போது கணித மாணவர் பிரிவில் பெண்களுக்கான சங்கத்தின் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
"இயற்கணித மற்றும் இயற்கணித வடிவவியலுக்கான பங்களிப்புகள் வழிகாட்டுதல் மற்றும் கணித சமூகத்திற்கான சேவைக்காக" தேர்ந்தெடுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் உறுப்பினராகவும் ஹேமா இருந்து வருகிறார்.
மேற்கோள்கள் பகுப்புஅமெரிக்க இந்தியர்கள் பகுப்புஇந்தியப் பெண் கணிதவியலாளர்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1959 பிறப்புகள்
மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்25 மே 1868 9 ஏப்ரல் 1941 இந்திய பார்சி மருத்துவரும் ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் ஆசிய பெண்ணுமாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல் 25 மே 1868 ஆண்டில் தற்போது மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் பார்சி வழக்கறிஞரான அர்தேசிர் ஃப்ரம்ஜி வக்கீலின் மகளாகப பிறந்தவர் பம்பாய் வில்சன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியையும் வில்சன் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் பயின்று 1888 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார் அக்காலத்தில் இத்தகைய படிப்பு முறையில் பயின்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் இவரே.
மருத்துவக் கல்வி பம்பாயில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் படித்த பிறகு ஆர்தேசிர் பெண்களுக்கான லண்டன் மருத்துவப் பள்ளியில் மருத்துவ கல்வி பயில்வதற்காக சேர்ந்துள்ளார் 1893 ஆம் ஆண்டில் அவர் கிளாஸ்கோவிலுள்ள குயின் மார்கரெட் கல்லூரியில் சேர்ந்து பயின்றுள்ளார் 1897 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மருத்துவ அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார் இதன் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொடர்ந்து கிளாஸ்கோவில் இரண்டு வருட முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார்.
மருத்துவ பயிற்சி ஆர்தேசிர் பம்பாயில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காமா மருத்துவமனை பம்பாயின் பைகுல்லாவில் உள்ள பிளேக் மருத்துவமனை குமு ஜாஃபர் சுலேமான் மருந்தகம் கபடோயாஸ் அத்துடன் பிற மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் போன்றவைகளில் மருத்துவ பணியாற்றியுள்ளார்.. மார்ச் 1927 ஆம் ஆண்டில் ஏடனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தில் மருத்துவராக பணியாற்ற சென்ற அவர் பின்னர் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
இறப்பு உடல்நலக் குறைவால் ஆர்தேசிர் 1941 ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய்க்குத் திரும்பினார்.
ஆனால் ஏப்ரல் 9 1941 அன்று உடல்நலம் சரியாகமலே மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு1941 இறப்புகள் பகுப்பு1868 பிறப்புகள் பகுப்புமருத்துவர்கள் பகுப்புஇந்தியப் பெண் மருத்துவர்கள் பகுப்புஇந்திய மருத்துவர்கள்
பாலித் தீவில் இந்து சமயம் இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பெரும்பான்மையான பாலி மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.
பாலி மக்களின் நம்பிக்கைகளில் உள்ளூர் ஆன்மிகம் பித்ருபோஜனம் அல்லது பித்ருபட்சம் என்று அழைக்கப்படும் அவர்களின் இறந்த மூதாதையர்களின் வழிபாடு மற்றும் புத்த போதிசத்வர்கள் வழிபாடுகளும அடங்கும்.
இந்தோனேசியாவில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருப்பினும் அதன் பாலித் தீவில் வாழும் பாலி மக்களில் 83 பாலி இந்துக்கள் ஆவார்.
வரலாறு கிபி 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து பாலிக்கு இந்து சமயம் வந்தது.
பாலி சுமத்திரா மற்றும் ஜாவாவில் புழங்கிய பௌத்த சமயத்தை இந்து சமயம் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டது.
14ம் நூற்றாண்டில் இஸ்லாம் சுமத்திரா மற்றும் ஜாவா தீவுகளில் பரவிய போது இந்து சமயத்தினர் இசுலாமிற்கு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்.
இருப்பினும் பாலியின் தனித்துவமான இந்துப் பண்பாட்டின் அடையாளத்தின் காரணமாக பாலித் தீவில் இந்து சமயம் ஆதிக்கம் செலுத்தியது.
மேலும் பாலிக்கு அருகிலுள்ள சிறிய தீவுகளிலும் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது.
மேலும் இந்துக்கள் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் இன்றளவும் ஜாவாவில் காணப்படுகிறது.
அடிப்படை நம்பிக்கைகள் பாலித் தீவு இந்து சமயத்தின் அடிப்படை நம்பிக்கை தருமம் எனப்படும் உலகில் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கையாகும்.
இந்த ஒழுங்கை அழிக்கும் சக்தியே அதர்மம்.
இந்த இரண்டு சக்திகளையும் ஒன்றோடொன்று ஒத்திசைத்து மறுபிறப்பு என்ற முடிவில்லாத சுழற்சியிலிருந்து முக்தி நிலைக்கு பரமபதம் தப்பிப்பதுதான் குறிக்கோள்.
பாலித் தீவு இந்து சமயம் பிரபஞ்சத்தை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறது.
உயர்ந்த இடம் சொர்க்கம்.
இங்குதான் தேவர்கள் வசிக்கிறார்கள்.
அடுத்தது மனிதர்கள் வாழும் பூமி.
இதற்குக் கீழே நரகம் என்ற இடம் உள்ளது.
அரக்கர்கள் இங்கு வாழ்கின்றனர்.
பூமியில் உள்ள மக்களின் தவறுகளுக்கு பாவங்களுக்கு அவர்களின் ஆன்மா தண்டிக்கப்படுகிறது.
இந்த மூன்று நிலைகளை மனித உடலிலும் பாலியில் காணப்படும் கோயில்களிலும் காணலாம்.
தலை உடல் கால்கள்.
கடவுள்கள் இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் பிரம்மாவைத் தவிர பாலி இந்துக்களுக்கு தனித்துவமான பல உள்ளூர் தெய்வங்களை வணங்குகின்றனர்.
சங் ஹியாங் விதி பாலி இந்துக்களால் மட்டுமே வழிபடப்படும் தெய்வம்.
பாரம்பரிய பாலி இந்து சமயத்தின்படி அச்சந்தியா அல்லது சங் ஹியாங் விதி பிரம்மாவின் கருத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.
பாலி இந்து மதத்தின் ஏகத்துவம் இந்தோனேசிய அரசின் முதல் கொள்கையான பஞ்சசீலத்துடன் தொடர்புடையது.
கோவில்கள் மற்றும் வீடுகளுக்கு முன்னால் காணப்படும் பத்மாசன கூடாரத்தின் மேல் உள்ள காலி இருக்கை சங் ஹியாங் விதி வாசாவுக்கானது.
பாலி இந்து சமயத்தின்படி சங் ஹியாங் வாசா விதி பல வடிவங்களைக் கொண்டுள்ளது.
தேவிஸ்ரீ போன்ற தானியங்களின் அரிசி தெய்வங்கள் மலை தெய்வங்கள் மற்றும் கடல் ஏரி போன்றவற்றின் தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.
பூசாரிகள் பாலி இந்து சமயத்தில் பூசாரிகள் மூன்று நிலைகளில் உள்ளனர்பிராமண உயர் பூசாரிகள் மற்றும் பூசாரிகள் பெமங்கு மற்றும் விளக்கு பூசாரிகள் பலியான்.
சமயச் சடங்குகள் பாலி இந்து சமயத்தில் பஞ்ச மகாயக்ஞம் எனும் ஐந்து முக்கியச் சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாலி இந்து சமயத்தினர் ஆகம இந்து தர்மம் ஆகம தீர்த்தம்.
ஆகமமம் என்பது பாலியின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் இந்து சமயத்தின் வடிவங்களாகும்.
இது குறிப்பாக பாலித் தீவில் வசிக்கும் பாலி மக்களுடன் தொடர்புடையது.
மேலும் உள்ளூர் மூதாதையர் வழிபாடு மற்றும் போதிசத்துவர்களுக்கான மரியாதை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து வழிபாட்டின் ஒரு தனித்துவமான வடிவத்தை பிரதிபலிக்கிறது.
தொல்லியல் ஜாவா மற்றும் மேற்கு இந்தோனேசிய தீவுகளில் அகழ்வாராய்ச்சியின் போது பழங்கால கோவில்கள் மற்றும் 8ம் நூற்றாண்டின் காங்கல் கல்வெட்டு சிவலிங்கம் பார்வதி விநாயகர் விஷ்ணு மற்றும் பிரம்மா சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
கிபி 414ல் இலங்கையிலிருந்து சீனாவிற்குத் திரும்பிய ஃபா ஹியன் பற்றிய பண்டைய சீனப் பதிவுகள் ஜாவாவில் இந்து சமயத்தின் இரண்டு பிரிவுகளைக் குறிப்பிடுகின்றது.6 அதே சமயம் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆவணங்கள் சைலேந்ந்திர வம்சத்தின் மன்னர் சஞ்சயன் ஆண்ட இந்து இராச்சியத்தை ஹோலிங் என்று குறிப்பிடுகின்றது.
கிபி 1400ல் இந்தோனேசிய தீவுகளில் உள்ள இராஜ்ஜியங்களை வணிக கடலோடிகளான அரபு முஸ்லீம் படைகளால் தாக்கப்பட்டன.
இந்தோனேசியா தீவுகள் 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் அரபு சுல்தான்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.
வடக்கு சுமத்ரா ஆச்சே தெற்கு சுமத்ரா மேற்கு மற்றும் மத்திய ஜாவா மற்றும் தெற்கு போர்னியோவில் கலிமந்தன் நான்கு மாறுபட்ட மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சுல்தான்கள் தோன்றினர்.
தொடர் வன்முறைகளால் இந்தோனேசியாவின் பல தீவுகளில் இந்துபௌத்த இராஜ்ஜியங்கள் மற்றும் சமூகங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
சுல்தான்களிடமிருந்து தப்பிய இந்துக்களும் பௌத்தர்களும் பாதுகாப்பான தீவுகளில் சமூகங்களாக புலம்பெயர்ந்தனர்.
மேற்கு ஜாவாவின் இந்துக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் பாலி தீவு மற்றும் அண்டை சிறிய தீவுகளுக்கு சென்றனர்.
இதனால் பாலி இந்து சமயம் தொடங்கியது.
சமய மோதல்கள் மற்றும் சுல்தான்களுக்கு இடையேயான போரின் இந்த சகாப்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது புதிய அதிகார மையங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த போது ஐரோப்பிய காலனித்துவம் வந்தது.
1602ல் இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்தின் கீழ் சென்றது.
டச்சு காலனித்துவப் பேரரசு மதங்களுக்கு இடையிலான மோதலைத் தடுக்க உதவியது.
மேலும் இந்தோனேசியாவின் பண்டைய இந்துபௌத்த கலாச்சார அடித்தளங்களை குறிப்பாக ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் மேற்குத் தீவுகளில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாக்கும் செயல்முறையை மெதுவாகத் தொடங்கியது.
டச்சு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதும் இந்தோனேசியாவின் 1945 அரசியலமைப்பின் பிரிவு 29 அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்தது.
பாலித் தீவு இந்துக்கள் இந்து மதத்தின் நான்கு வேதம் உபநிடதம் புராணங்கள் இதிகாசம் அடிப்படைக் கொள்கைகளை உருவாக்க உதவுவதற்காக பாலி மற்றும் இந்தியா இடையே மாணவர் மற்றும் கலாச்சார பரிமாற்ற முயற்சிகளைத் தொடங்கினர்.
குறிப்பாக பாலித் தீவில் 1950களின் நடுப்பகுதியில் அரசியல் சுயநிர்ணய இயக்கம் 1958 ஆம் ஆண்டின் கூட்டுக் கோரிக்கைக்கு வழிவகுத்தது.
இது இந்தோனேசிய அரசாங்கம் பாலி இந்து சமயத்தை அங்கீகரிக்கக் கோரியது.