news_id
int64
6
128k
news_date
stringlengths
19
22
news_category
stringclasses
15 values
news_title
stringlengths
1
226
news_article
stringlengths
7
17.4k
221
1/10/2011 3:50:01 PM
தமிழகம்
டெட்டனேட்டர் வெடித்து மாணவன் கை துண்டிப்பு
தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த எம்.புத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் முருகன் (20). அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் முருகன்,  மாலையில் காவிரியாற்றுக்கு மீன் பிடிக்க சென்றார்.  டெட்டனேட்டரில் நெருப்பு பற்றவைத்து ஆற்றில் வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு டெட்டனேட்டர் திரியில் நெருப்பு வைத்தார். அது சரியாக பற்றவில்லை என்பதால் வலது கையில் டெட்டனேட்டரை பிடித்துக்கொண்டு வாய் அருகில் வைத்து ஊதி நெருப்பு மூட்டினார். திடீரென டெட்டனேட்டர் வெடித்தது. இதனால் வலது கையின் விரல்கள் சிதறியது.  உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தகவல் அறிந்ததும் திருச்சி ஏடிஎஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் எம்.புதூர் சென்று விசாரணை நடத்தினர். முருகன் மீன்பிடித்த பகுதியையும் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணரும் அந்த இடத்தை ஆய்வு செய்தார்.முருகனுக்கு டெட்டனேட்டர் கொடுத்தது யார், இன்னும் அந்த பகுதியில் யார் யாரெல்லாம் டெட்டனேட்டர் மூலம் மீன்பிடிக்கிறார்கள் என விடிய விடிய விசாரணை நடந்தது. இந்த டெட்டனேட்டர்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் வாங்கியதா, அல்லது திருட்டு தனமாக தயாரிக்கப்படுகிறதா என காட்டுப்புத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
222
1/10/2011 3:50:21 PM
சினிமா(ரீல்மா)
துபாய் கம்பெனி ரூ.17 கோடி பங்களா பரிசு ஷாருக்கானுக்கு வருமான வரி துறை நோட்டீஸ்
மும்பை: துபாய் கம்பெனி பரிசாக கொடுத்த ரூ.17 கோடி பங்களாவுக்கு உடனடியாக வரி கட்ட வேண்டும் என்று கூறி நடிகர் ஷாருக்கானுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. துபாயில் உள்ளது நகீல் பப்ளிக் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி. இந்நிறுவனம் தங்களது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவை பரிசாக அளித்தது. அதன் மதிப்பு ரூ.17.84கோடி. இதுபற்றி வருமான வரி துறைக்கு ஷாருக் தெரிவிக்கவில்லை.இதை கண்டுபிடித்த வருமான வரித்துறை ஷாருக்கானுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ரூ.17.84 கோடி மதிப்புள்ள பங்களாவுக்கு உடனடியாக வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், ‘இந்த பங்களாவை வர்த்தகம் மூலமோ, தொழில் மூலமோ சம்பாதிக்கவில்லை. முழுக்க பரிசாக வந்தது. இதற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை நகீல் நிறுவனமும் உறுதி செய்து வருமான வரி துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில் திருப்தி அடையாத வருமான வரித்துறை டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘நகீல் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு முதல் ஷாருக்கானின் பெயரை தங்கள் நிறுவன தயாரிப்பை விளம்பரப்படுத்த பயன்படுத்தி வருகிறது. அதற்கு பணம்பெற்றதாக இதுவரை ஷாருக் எந்த ரசீதும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பங்களா வருமானமாகவே கருதப்படும். எனவே ரூ.17.84 கோடிக்கான வரியை உடனடியாக அவர் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
223
1/10/2011 3:50:41 PM
தமிழகம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்தவர் அய்யா வைகுண்டசாமி: ஜெயலலிதா பேச்சு
நாகர்கோவில்: குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வந்த ஜெயலலிதா அங்கு கோசாலையை துவக்கி வைத்து பசு மற்றும் கன்றை தானமாக வழங்கினார். பின்னர் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளை இழந்த மக்கள் விடுதலை பெற வேண்டி தன்னையே அர்ப்பணித்த அய்யா வைகுண்ட சாமி பதியில் உங்களோடு சேர்ந்து வழிபடுவதை நான் பெருமை கொள்கிறேன். அய்யா வைகுண்டருடைய போதனைகளை கேட்ட மக்கள் மூட நம்பிக்கை மற்றும் தீண்டாமை என்னும் தீயப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க முற்பட்டனர். அய்யா வழிபாட்டில் உருவம் கிடையாது. கருவறையில் கண்ணாடிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடியை போல் மனத்தையும் சுத்தமாக வைத்துக்கொள் என்பதை அறிவிக்கும் செயலே அதுவாகும்.உலகில் ஒவ்வொரு யுகத்திலும் தர்மம் மறைந்து அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் ஒரு அவதார புருஷனாக இறைவன் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியுள்ளார். அதுபோல் இந்த கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். வாழும்போதே பிறருக்கு உதவும் மனித பண்பை மக்கள் மனதில் பதித்தவர் அய்யா வைகுண்டர்.  செய்கின்ற தர்மத்தை உயிருடன் இருக்கும்போதே செய்திட வேண்டும். உங்களிடம் சிறந்ததை நாட்டிற்கு கொடுங்கள், நாடு சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிரச்னை அனைத்தும் தீர்ந்து விடும்.  இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
224
1/10/2011 3:51:32 PM
தமிழகம்
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 137 இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 137 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 காலியிடங்கள் இருந்தன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. இதில், 1,053 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 41 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 321 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 67 இடங்களுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. 319 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மீதியுள்ள 137 காலி இடங்களில் மொத்தம் 372 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டு 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
225
1/10/2011 3:55:28 PM
சினிமா(ரீல்மா)
ஹாலிவுட் பாடகியின் குரலில் ரகுமானின் ‘ஜெய் ஹோ’ ரீமிக்ஸ்
நியூயார்க்: ஆஸ்கர் விருது வென்ற ‘ஜெய் ஹோ’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் ரீமிக்ஸ் செய்கிறார். உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் பாடகி நிகோல் ஷெர்சிங்கர் இதை பாடுகிறார். சிறந்த இசை, சிறந்த பாட்டு (ஜெய்ஹோ) என இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. அரசு நிகழ்ச்சிகள், பொது விழாக்கள், ரிங்டோன், காலர் டோன் என்று மூலைமுடுக்கெல்லாம் பரவியது அவரது ‘ஜெய் ஹோ’ பாடல். இப்பாடலை புகழ்பெற்ற பாடகர் சுக்விந்தர் சிங் பாடியிருந்தார்.இதை ரகுமான் ரீமிக்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் பாடகி, நடிகை, பாடல் ஆசிரியர், நடன அழகி என பல்வேறு முகங்கள் கொண்ட நிகோல் ஷெர்சிங்கர் (32) இப்பாடலை பாட உள்ளார். ஒரு இசை ஆல்பம் வெளியிடுவதற்காக இருவரும் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ரகுமான் அளிக்கும் இந்த விருந்தில் நிகோல் ஷெர்சிங்கருடன் அவரது காதலர் இங்கிலாந்தை சேர்ந்த கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டனும் பங்கேற்கிறார்.இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கடந்த 6&ம் தேதி 45&வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
226
1/10/2011 4:00:42 PM
உலகம்
விலங்கு, பறவை, மீன்கள் கூட்டம் கூட்டமாக சாகிறதே.. சுற்றுச்சூழல் தரும் எச்சரிக்கை...
வாஷிங்டன்: உலகம் முழுவதும் சமீபகாலமாக பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடியும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியில் சுமார் 3000 பறவைகள் வானில் இருந்து கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. அமெரிக்காவின் செசாபிக் வளைகுடா பகுதியில் 20 லட்சம் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. வியட்நாமில் சுமார் 150 டன் எடை உள்ள சிகப்பு திலாபியா என்ற கடல்வாழ் உயிரினமும், இங்கிலாந்தில் சுமார் 40 ஆயிரம் நண்டுகளும் இறந்துள்ளன.இதற்கான காரணங்கள் குறித்து விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விலங்கியல் ஆராய்ச்சி வல்லுனர்கள், சர்வதேச விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஜான்வியன்ஸ் என்ற நிபுணர் தலைமையில் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய்த்தாக்குதல் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான காரணம் கேள்விக் குறியாகவே உள்ளது.காற்று உள்ளிட்ட இதர இயற்கைக் காரணிகளின் மாசுபாடு, கடல் நீர், சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் அமிலத்தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணம். கடந்த 8 மாதங்களில் அமெரிக்காவில் 95 அரிய வன விலங்குகள் மற்றும் 900 பருந்துகள், மின்னசோட்டாவில் 4300 வாத்துகள், பல்லி வகையை சேர்ந்த 1500 சாலமண்டர்கள் எதிர்பாராமல் தொற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இறந்துவிட்டன.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களால் காற்றில் மின்காந்த கதிர்வீச்சுகள் தற்போது முன்பைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன. அதுகூட காரணமாக இருக்கலாம். இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி வருகிறோம். இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே இதுபோன்ற தொடர் மரணங்களை தடுக்க முடியும். அலட்சியமாக இருந்தால் வருங்காலத்தில் மனித குலத்துக்கும் ஆபத்துகள் நேரலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
227
1/10/2011 4:02:50 PM
தமிழகம்
ரயில்வே பூங்காவில் சமூக விரோத செயல்கள்
திருத்தணி: திருத்தணி ரயில்வே நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதால் கூட்டம் நிரம்பி வழியும். பயணிகள் வசதிக்காக திருத்தணி ரயில் நிலையம் சுமார் ஒரு கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. பயணிகள் ஓய்வெடுக்க ரயில்வே வளாகத்தில் பல லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. முதலில் களைகட்டிய பூங்கா பின்னர் கவனிப்பாரற்று விடப்பட்டது. இப்போது, பூங்காவில் விளக்கு எரியவில்லை. பாழடைந்து கிடப்பதால் பயணிகள் அனைவரும் அங்கு சிறுநீர், மலம் கழிக்கின்றனர். துர்நாற்றம் அடிப்பதால் அந்த வழியாக பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர்.இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிலர் மது அருந்தி அட்டகாசம் செய்கின்றனர். ஜோடிகளும் தங்கள் இஷ்டத்துக்கு  இருக்கின்றனர். இதனால் அந்த வழியாக நடமாட பெண்கள் அச்சப்படுகின்றனர். பூங்காவை பராமரிக்க வேண்டும். சமூக விரோத செயலை தடுக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
228
1/10/2011 4:04:13 PM
தமிழகம்
வேட்டி, சேலை வழங்காததால் ஊழியர்களுடன் மக்கள் தகராறு
புழல்: மாதவரம் நகராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்க வருவாய்த்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் போதுமான வேட்டி, சேலை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் வேட்டி, சேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கும் மக்களுக்கும் தகராறு நடக்கிறது.மாதவரம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், “மொத்த கார்டுகள் 1250, கிராம நிர்வாக அதிகாரி வழங்கிய வேட்டி சேலைகள் 700, வரவேண்டியது 550, மீதி வந்ததும் வழங்கப்படும்“ என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளனர்.இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறுகையில், “விஏஓவிடம் கேட்டால், சரியான பதில் சொல்வதில்லை. மக்கள் எங்களிடம்தான் கேட்டு தகராறு செய்கிறார்கள். அதனால்தான் இப்படி போர்டு எழுதி வைத்துள்ளோம்” என்றனர்.
229
1/10/2011 4:05:43 PM
தமிழகம்
லாரி மீது வேன் மோதி 3 பக்தர்கள் பரிதாப சாவு
ராமநாதபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டச்சேரி அருகே உள்ளது கல்லங்காடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30 கூலித்தொழிலாளர்கள், சண்முகம் (55) என்ற குருசாமி தலைமையில் நேற்று முன்தினம் வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு, நேற்றிரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் கிளம்பினர். வேனை, டிரைவர் சுனில் (33) என்பவர் ஓட்டினார்.இவர்களது வேன் இன்று அதிகாலை 6 மணியளவில், ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் பழுதாகி நின்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியது. மோதிய வேகத்தில் வேனின் இடதுபக்கம் அமர்ந்திருந்த குருசாமி சண்முகம் உடல் நசுங்கி இறந்தார்.  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐயப்ப பக்தர்கள், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி (35), அனில்குமார் (10) ஆகியோர் இறந்தனர்.ராஜேஷ் (23) சாமிக்குட்டி (46) சுப்புண்ணி (42) மனோஜ் (23) உள்பட 15 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
230
1/10/2011 4:08:02 PM
தமிழகம்
சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்: 234 தொகுதிகளிலும் வெளியீடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 234 தொகுதிகளிலும் இன்று காலை வெளியிடப்பட்டது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதியினை அடிப்படை நாளாக கொண்டு, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றத்திற்காக நவம்பர் 13ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.இதற்காக, தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். இந்த விண்ணப்பங்களை தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, வாக்காளர்களின் முழு விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும். அந்தந்த தொகுதிக்குட்பட்ட ‘பூத்’களில் வாக்காளர் அட்டையை பொதுமக்கள் பெற்று கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறினார். கட்சியினரிடையே ஆர்வம் அதிகரிப்பு தமிழக சட்டசபைக்கு மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியிடம் அனைத்து கட்சியினரும் மே முதல் வாரத்திற்குள் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினர். அவரும் பரிசீலிப்பதாக அறிவித்தார்.அதைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். சென்னை உள்பட பல இடங்களில் போட்டி போட்டு சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போது வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டதால் கட்சியினரிடையே தேர்தல் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதை காண முடிந்தது.
231
1/10/2011 4:15:48 PM
தமிழகம்
எண்ணூரில் வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு
திருவொற்றியூர்: எண்ணூரில் மின் ரயிலுக்கான வயர் அறுந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் ரயில் போக்குவரத்து 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. எண்ணூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 7.45 மணியளவில் திடீரென மின்சார ரயிலின் வயர் அறுந்து கீழே விழுந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் வந்த மின்சார ரயில்கள் திடீரென நின்றன. இதையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அறுந்த மின் வயரை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்தது. சுமார் 45 நிமிடத்துக்கு பின் வயர் சரி செய்யப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.பரபரப்பான காலை நேரத்தில் மின் வயர் அறுந்ததால் அந்த மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. ரயில் போக்குவரத்து பாதித்ததால் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
232
1/10/2011 4:31:35 PM
இந்தியா
தேர்தலில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் செலவிட்டதில்லை: மம்தா பானர்ஜி
கொல்கத்தா: தேர்தல் சீர்திருத்தம் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது: எந்த தேர்தலிலும் நான் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் செலவிட்டதில்லை. பொதுவாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு மிகவும் குறைவு. சட்டமன்ற தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும்.இதனால் பணமும் நேரமும் மிச்சப்படும். தேர்தல் ஆணையத்துக்கு சுதந்திரமான உள்கட்டமைப்பும், நிதி சுதந்திரமும் வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் வகை செய்ய வேண்டும்.இவ்வாறு மம்தா பேசினார்.
233
1/10/2011 4:37:37 PM
இந்தியா
கடும் பனி காரணமாக சண்டிகர் ஏர்போர்ட் மூடல்
சண்டிகர்: வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுங்குளிர் நிலவி வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. கடும் பனி மூட்டம் காரணமாக  சண்டிகர் விமான நிலையம் கடந்த 5 நாட்களாக மூடிக் கிடக்கிறது. இன்று காலையும் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் விமான சேவை தொடங்குவது சந்தேகம் என ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன. பனிமூட்டத்தில் ஓடுபாதையை அடையாளம் காட்டும் மின்விளக்குகள் அரியானா ஏர்போர்ட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அது இன்னும் செயல்பட தொடங்காததால் விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக ஏர்போர்ட் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
234
1/10/2011 4:40:00 PM
இந்தியா
டெல்லியில் ஜெகன் உண்ணாவிரதம் காங். எம்எல்ஏக்கள் 8 பேர் ஆதரவு
புதுடெல்லி: கிருஷ்ணா நதி நீர் பிரச்னையில் ஆந்திர விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் டெல்லியில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஜெகன் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்கு மேலிட எதிர்ப்பை மீறி 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வலியுறுத்தி கடந்த மாதம் விஜயவாடாவில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஜெகன் நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 33 பேரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் ஸ்ரீகிருஷ்ணா நதி நீரை கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம் தனது பரிந்துரையை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆந்திர மக்களுக்கு அதிக உரிமை இருந்தாலும், கர்நாடகாவிற்கும் உரிய பங்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் தெரிவித்தது. இது ஆந்திர மக்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்கிறது என்று ஜெகன்மோகன்ரெட்டி கருத்து தெரிவித்தார். கிருஷ்ணா நதிநீர் பிரச்னையில் ஆந்திர விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் டெல்லியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜெகன் அறிவித்தார். இதன்படி நேற்று மதியம் ஜெகன் ஐதராபாத்திலிருந்து ரயிலில் டெல்லி புறப்பட்டார். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காந்தாராவ், சத்யாவதி, சிவபிரசாதரெட்டி, பலராஜூ, குருநாதரெட்டி, ஸ்ரீனிவாசலு, அமர்நாதரெட்டி, ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் சென்றனர். இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் கட்டளையையும் மீறி ஜெகனுடன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி புறப்படும் முன்பு பல எம்எல்ஏக்களுக்கு ஜெகன் போன் செய்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. இதனால் இன்று மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விமானம் மூலம் டெல்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
235
1/10/2011 4:48:18 PM
தமிழகம்
ரூ. 1,295 கோடி செலவில் வேலூரில் கூட்டுக் குடிநீர் திட்டம்
சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கேள்விக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்: சேண்பாக்கம் பேரூராட்சி குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. அல்லாபுரம், தொரப்பாடி பேரூராட்சிகளுக்கு தனிக்குடிநீர் திட்டம் அமைக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் ஆதாரம் இறுதி செய்தவுடன் விரிவான மதிப்பீடுகள் தயாரித்து நிதி ஆதாரம் மற்றும் நிர்வாக ஒப்புதலுக்கு பின்னர் திட்டம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் சத்துவாச்சேரி, தாராபடவேடு உள்ளிட்ட 6 பேரூராட்சிகள், 11 நகராட்சிகள் மற்றும் 944 ஊராட்சி குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசாணை பிறக்கப்பட்டு 3 பகுதிகளாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி வரும் பிப்ரவரி 3ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் பிறகு திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
236
1/10/2011 4:59:40 PM
விளையாட்டு
ஐபிஎல் அனுபவம் கை கொடுத்தது டோனி உற்சாகம்
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய 20-20 போட்டி டர்பன் நகரில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. ரோகித்சர்மா 53 (34 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ்ரெய்னா 41 (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), விராத் கோஹ்லி 28 (19 பந்து, 5 பவுண்டரி) ரன் எடுத்தனர்.அதன்பிறகு விளையாடிய தென் ஆப்ரிக்க அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் வான்விக் அதிகபட்சமாக 39 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானதால் 21 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ரோகித்சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தோடு தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிதினி ஓய்வு பெற்றார். அவருக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கும் பாராட்டுவிழா நடத்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டன. இந்த வெற்றி குறித்து டோனி கூறியதாவது:டாசில் வெற்றி பெற்றதுமே அதிக ரன் குவிக்க நினைத்தோம். ரோகித்சர்மா அதற்கு உதவினார். பந்து பழையதாக மாறியதால் கடைசி கட்டத்தில் ரன்குவிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஐபிஎல்லில் இங்கு வந்து விளையாடியது நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றார்.தென் ஆப்ரிக்க கேப்டன் போத்தா கூறும்போது, இந்தியா நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் போதுமான அளவுக்கு பேட் செய்யவில்லை. எங்களில் பலர் அனுபவமில்லாத வீரர்கள் என்றார். ஆட்டநாயகன் ரோகித்சர்மா கூறுகையில், நல்ல தொடக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டேன் என்றார். விருதுபெற்ற டெண்டுல்கர் கூறுகையில், எனக்கும் சிறப்பு செய்து விருது வழங்கியதற்கு நன்றி. உங்களது பாராட்டு, ரசிகர்களின் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று ஓய்வுபெறுகிற நிதினி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொருவருக்கும் அவர் ரோல்மாடல் என்றார். நிதினி கூறுகையில், ஒவ்வொரு வீரருக்கும் நன்றி சொல்கிறேன். கடந்த 12 வருடங்களாக விளையாடிய எனக்கு சச்சினுடன் இணைந்து பாராட்டுவிழா நடத்தியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
237
1/10/2011 5:03:12 PM
விளையாட்டு
டோனிக்கு பிப்.12ல் பாராட்டுவிழா
தேசிய விளையாட்டு போட்டிகள் வரும்  பிப்ரவரி 12 முதல் 26-ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கின்றன. இதன் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு பாராட்டுவிழா நடக்கிறது. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
238
1/10/2011 5:05:51 PM
விளையாட்டு
பாக். கேப்டன் ஜன. 19ல் நியமனம்
உலககோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜனவரி 19-ம் தேதிக்கு முன் நியமனம் செய்யப்படுவார் என பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ்பட் அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலேயே அந்த கேப்டன் நியமிக்கப்படுவார் என இஜாஸ்பட் அறிவித்தார்.
239
1/10/2011 5:10:11 PM
விளையாட்டு
கங்குலி இல்லாமல் கொல்கத்தா இல்லை ஷாருக் திடீர் பல்டி
கங்குலி இல்லாமல் கொல்கத்தா இல்லை ஷாருக் திடீர் பல்டிஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கங்குலி, கிறிஸ்கெய்ல் மற்றும் பவுச்சர், பிரையன் லாரா, ஜெயசூர்யா உள்ளிட்ட 85 வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ஐபிஎல் தொடர் 4வது சீசனில் கங்குலி விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் பழைய வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. கொல்கத்தா அணி ரூ.38.7 கோடி கொடுத்து வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது. அதிகபட்சமாக காம்பீர் ரூ.11.04 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.கங்குலி இல்லாமல் கொல்கத்தா இல்லை ஷாருக் திடீர் பல்டிகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறியதாவது:கங்குலி இல்லாத கொல்கத்தா ஐபிஎல் அணியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அங்கு எந்த அணியும் விளையாட முடியாது. நான் மிக விரைவில் கங்குலியிடம் பேசுவேன். அவர் மீண்டும் கொல்கத்தா அணியில் இடம்பெறுவது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.சென்னை அணி வீரர்கள்டோனி (8.16 கோடி), ரெய்னா (5.89 கோடி), முரளி விஜய் ( 4.08 கோடி), ஆல்பி மார்கல் ( 2.26 கோடி), அஷ்வின் (3.86 கோடி), பத்ரிநாத் (3.63 கோடி), போலிஞ்சர் (3.17 கோடி), மைக்கேல் ஹசி (1.93 கோடி), சுதீப் தியாகி (1.01 கோடி), பிராவோ (91 லட்சம்), ஸ்டைரிஸ் (91 லட்சம்), ஜோகிந்தர் சர்மா (68 லட்சம்), டு பிளசிஸ் (54 லட்சம்), குலசேகரா (45 லட்சம்), ஹில்பெனாஸ் (45 லட்சம்), சகா (45 லட்சம்), ரந்திவ் (36 லட்சம்), ஜார்ஜ் பெய்லி (23 லட்சம்).
240
1/10/2011 5:18:04 PM
சினிமா(ரீல்மா)
இயக்குனர் மீது பார்வதி பாய்ச்சல்
‘பூ' பட ஹீரோயின் பார்வதி. இப்படத்துக்கு பிறகு தமிழில் நடிக்க கேட்டு பல இயக்குனர்கள் அணுகினார்கள். கதை பிடிக்கவில்லை என்று நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வந்தார். கன்னடத்தில் ‘நிம்ஹான்ஸ்Õ என்ற படத்தை புதுமுக இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார். கடந்த வாரம் இவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘நிம்ஹான்ஸ் ரொமான்டிக்கான கதை. இதில் இரண்டு ஹீரோயின்கள். அவர்களில் ஒரு ஹீரோயினாக பார்வதி நடிக்கிறார்Õ என்றார். இது பற்றி பார்வதியிடம் கேட்டபோது கோபம் அடைந்தார். ‘எந்த இயக்குனரும் என்னிடம் பேசவில்லை. கதையும் சொல்லவில்லை. ஜனவரி முதல் வாரம் வரை நான் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் கூட சொல்லாமல் Ôநிம்ஹான்ஸ்Õ படத்தில் நான் நடிப்பதாக எப்படி அறிவிக்கலாம். இப்போதைக்கு நான் மலையாள படத்தில் பிஸியாக இருக்கிறேன். அப்படம் முடிந்தபிறகே அடுத்த படம் ஒப்புக்கொள்வேன்Õ என்றார். ஏற்கனவே மற்றொரு கன்னட படத்தில் கால்ஷீட் பெறாமலே நடிப்பதாக அறிவித்ததற்கு ‘அப்படத்தில் நடிக்கவில்லைÕ என்று பார்வதி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல் இப்படி இயக்குனர்கள் மீது பார்வதி பாய்வது வருத்தம் அளிக்கிறதுÕ என்று கன்னட இயக்குனர்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
241
1/10/2011 5:21:15 PM
சினிமா(ரீல்மா)
மோனிகா பேடி நடித்த தமிழ் படம்
மோனிகா பேடி நடித்துள்ள படம் ‘தேவதாசியின் கதைÕ. இது பற்றி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கவுதம் கூறியது: அபுசலீம் சம்பந்தப்பட்ட வழக்கில் இரண்டரை வருடம் சிறையில் இருந்தார் மோனிகா பேடி. விடுதலைக்கு பிறகு நடித்த முதல் படம் இது. கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்காக 25 கிலோ உடல் எடையை குறைத்தார். பெத்தாபுரம் என்ற ஊருக்கு சென்று 100 தேவதாசி பெண்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் இக்கதையை உருவாக்கினேன். ரேணுகாதேவி என்ற வேடத்தில் மோனிகா பேடி நடித்துள்ளார். இவர் நடித்த ஷூட்டிங் மட்டும் மும்பையில் படமானது. மற்ற காட்சிகள் சென்னை, ஐதராபாத்தில் படமானது. மற்றொரு தேவதாசி பாத்திரத்தில் சுவாதி வர்மா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் முதலில் திரைக்கு வரும் இப்படம் பின்னர் இந்தியில் ரிலீஸ் ஆகிறது.
242
1/10/2011 5:23:50 PM
சினிமா(ரீல்மா)
சம்பளம் கேட்க முடியாத நடிகை
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...ஸ்ருதியான நடிகையும் சித்த நடிகரும் நட்பா பழகுறது ஊருக்கே தெரியுமாம்... தெரியுமாம்... இப்போ அந்த நெருக்கம் அதிகமாயிடுச்சாம். ஃபங்ஷன், பார்ட்டின்னா ஜோடியா வர்றாங்களாம்... வர்றாங்களாம்... சேர்ந்து நடிச்ச படத்துக்காக இப்படி பப்ளிசிட்டி பண்றாங்கன்னு படக்குழு சொல்லுதாம். ஆனா, அவங்களுக்கு இடையே ஏதோ இருக்குன்னு டோலிவுட் வட்டாரம் பேசிக்குதாம்... பேசிக்குதாம்...கவுதம இயக்குனரோட த்ரில் படத்துல சில காட்சிகள்ல மட்டும் சமந்த நடிகை நடிச்சிருக்கிறாராம்... நடிச்சிருக்கிறாராம்... இதுல நடிக்க இயக்குனரு சம்பளம¢ எதுவும¢ தரலையாம்... தரலையாம்... அடுத்த படத்துல ஹீரோயின் வாய்ப்பு கொடுத்ததால, நடிகையும் எதுவும் கேட்க முடியாம கப்சிப் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...சங்கீத நடிகைக்கு வாய்ப்புகள் இல்லாததால, வேற மொழிகள் பக்கமா போயிருக்கிறாராம். அங்கே அக்கா, அண்ணி ரோல் கிடைச்சாலும் ஓகே சொல்றாராம்... சொல்றாராம்... இங்கே மட்டும் ஏன் மறுக்கிறாருன்னு நம்மூர் டைரக்டருங்க கேட்கிறாங்களாம்... கேட்கிறாங்களாம்...
243
1/10/2011 5:28:00 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
தமிழில் 2, மலையாளத்தில் 4, இந்தியில் 1 என 7 படங்களில் நடிக்கிறாராம் லட்சுமிராய்.நடன அமைப்புகளில் புதுமைகளை செய்ய விரும்புகிறேன் என்கிறார் சிம்பு.Ôபிறந்த நாள் பரிசாக என் அப்பா, அம்மா வாங்கிக்கொடுத்த கார்தான் மிகவும் பிடித்த பரிசுÕ என்கிறார் த்ரிஷா.‘நானே வருவேன்Õ பேய் படம் திரையில் ஓடும்போது தியேட்டரில் ஒரு வித வாசம் வருமாறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.அடுத்த படத்துக்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு உருவாக்கி இருக்கிறார் அருண் விஜய்.‘பவானிÕ படத்தை விஜயசாந்திக்கு திரையிட்டு காட்ட விருப்பம் தெரிவித்திருக்கிறார் அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சினேகா.தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரோஜா.நீண்ட நாள் அவுட்டோர் ஷூட்டிங் என்றால் நடிக்க மறுத்துவிடுகிறாராம் குஷ்பு.
244
1/10/2011 5:31:05 PM
இந்தியா
பட்டம் பிடிக்க சென்ற 4 சிறுவர்கள் ரயில் மோதி பலி
ஜெய்ப்பூர்: பொங்கல் பண்டிகை வடமாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல வடமாநிலங்களிலும் இந்த பண்டிகையின் போது காற்றாடி சீசன் களை கட்டும். ஜெய்ப்பூரில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ள மால்வியா நகரைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேர், நேற்று மொட்டை மாடியில் காற்றாடி விட்டுக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் பறக்கவிட்ட காற்றாடி அறுந்தது. அதைப் பிடிப்பதற்காக 4 பேரும் மாடியிலிருந்து இறங்கி ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடினர். முதல் பாதையில் சரக்கு ரயில் சென்றது. அதுபோகும் வரை காத்திருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அடுத்த பாதையில் எதிர்திசையில் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 4 சிறுவர்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பட்டம் பிடிக்க சென்ற 4 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
245
1/10/2011 5:32:41 PM
குற்றம்
கோவாவில் ரஷ்ய பெண் மானபங்கம் ஆந்திர இளைஞர் கைது
பனாஜி: அதிகளவில் வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் மாநிலங்களில் கோவா முதல் இடத்தில் இருந்தது. இந்த இடத்தை தற்போது பீகார் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதாக இந்திய சுற்றுலா துறை அண்மையில் புள்ளிவிவரம் வெளியிட்டது. கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண்கள் அடிக்கடி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதை தொடர்ந்து இந்த மாநிலத்துக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வடக்கு கோவாவில் உள்ள அரம்பால் கடற்கரையில் 20 வயது ரஷ்ய பெண் ஒருவர் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த 4 இளைஞர்கள் அவரை பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த பெண் கூச்சல் போட்டதை தொடர்ந்து 4 பேரும் தப்பியோடினர். பொதுமக்கள் அவர்களை பிடிக்க ஓடினர். இதில் சாய்கிரண் என்ற இளைஞர் மட்டும் பிடிபட்டார். அவரை அடித்து, உதைத்த பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
248
1/10/2011 5:48:19 PM
உலகம்
ஈரான் விமான விபத்தில் 32 பேர் உயிர் பிழைப்பு
டெஹ்ரான்: ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 102 பயணிகளுடன் உருமியே என்ற நகருக்கு நேற்று சென்றது. தரையிறங்கும் முன்பு விமானம் தரையில் விழுந்து துண்டு துண்டாக நொறுங்கியது. ஆனால் விமானம் தீப்பிடிக்கவில்லை. இந்த விபத்தில் 70 பயணிகள் பலியாயினர். 32 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் பனிமூட்டம் அதிகம் இருந்ததால் மீட்பு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஈரானில் உள்ள பெரும்பாலான விமானங்கள் 1979&ம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டவை. போயிங், ஏர்பஸ் விமானங்களுடன் ரஷ்யாவின் டுபோலேவ்&145 விமானங்களும் பயணிகள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பழைய விமானங்கள், மோசமான பராமரிப்பு காரணமாக ஈரானில் விமான விபத்து அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஈரானில் கடந்தாண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 168 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
249
1/11/2011 12:28:23 PM
சினிமா(ரீல்மா)
20 படமாவது நடிப்பேனா? கார்த்திகா ஆதங்கம்
ராதாவின் மகள் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இயக்கும் ‘கோÕ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறியது: எனது அம்மா பிரபல நடிகையாக இருந்தவர். நான் சினிமா வாசனையே படாமல் மும்பையில் வளர்ந்தேன். மேனேஜ்மென்ட் டிகிரி முடிப்பதில்தான் கவனமாக இருந்தேன். திடீரென்று நடிக்க வந்துவிட்டதால் படிப்பெல்லாம் அப்படியே நின்றுவிட்டது. நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறேன். ‘கோÕ படத்தில் கே.வி.ஆனந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. துப்பறியும் பத்திரிகை நிருபர் ரேணுகா என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். போட்டோகிராபராக ஜீவா நடிக்கிறார். இதன் பாடல் காட்சி ஒன்று நார்வேயில் படமானது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்Õ பட இயக்குனர் டேனி பாயல் தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் என தகவல் வருகிறது. அது வெறும் புரளிதான். மலையாளத்தில் நான் நடித்த ‘மகரமஞ்சுÕ படத்தை பார்த்த டேனி பாயல், எனது நடிப்பை பாராட்டியதாக இயக்குனர் சந்தோஷ் சிவன் என்னிடம் தெரிவித்தார். எனது புதிய படங்கள் பற்றிய முடிவை அம்மாவிடமே விட்டிருக்கிறேன். அவர் 200 படங்கள் நடித்திருக்கிறார். இப்போதுள்ள போட்டியில் நான் 20 படம் கூட நடிப்பேனா என்பது தெரியாது. எனவே அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்.
250
1/11/2011 12:32:13 PM
சினிமா(ரீல்மா)
இசை சொன்னதை கேட்ட இயக்குனர்
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...மவுன ராக நடிகரு மறுபடியும் நடிக்க வந்ததும் அவரை ஹீரோவா போட்டு படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாம இருந்த தயாரிப்புங்க குஷியானாங்க. எப்படியாவது நடிகரோட ரெண்டு படம் வந்ததுன்னா, அதைக்காட்டி பெட்டில தூங்குற தங்களோட படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு கணக்கு போட்டாங்க... போட்டாங்க... ரிலீசான படங்கள் சரியா போகல. திரும்ப நடிகருக்கும் வாய்ப்பு வரல. இதனால கணக்கு போட்டவங்க கவலைய¤ல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... திருநங்கைகளை பற்றிய நர்த்தகமான படத்துக்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. இதை கேள்விப்பட்டதும் திருநங்கைகள் அமைப்பை சேர்ந்தவங்க உர்ராயிட்டாங்களாம்... உர்ராயிட்டாங்களாம்... இது பற்றி சென்சார் போர்டு அதிகாரியிடம் கேட்க, 10 திருநங்கைங்க கூட்டமா போனாங்களாம். உஷாரான அதிகாரிங்க, உதவியாளரை அனுப்பி ‘அதிகாரி வெளியே போயிருக்காருÕன்னு  சொல்லி வந்தவங்களை திருப்பி அனுப்பிட்டாங்களாம். ஆனா திருநங்கைகளோ ‘மறுபடியும் வருவோம்Õன்னு எச்சரிக்கை பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...செல்வமான இயக்கமும், இளைய இசையும் திரும்ப சேர்ந்து படம் பண்றாங்க.. பண்றாங்க.. அந்த படத்துக்கு ஏற்கனவே இன்ஷியல் இசை போட்ட பாடல் ஒண்ணு பெட்டியில இருக்காம்... இருக்காம்... அதை யூஸ் பண்ணலாம்னு இயக்கம் நினைச்சாராம். ஆனா, அது வேணாம்னு இசை சொன்னதால இயக்கமும் சரின்னு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
251
1/11/2011 12:37:32 PM
சினிமா(ரீல்மா)
படக் குழுவுக்கு மலைவாழ் மக்கள் கண்டிஷன்
‘உயிரின் எடை 21 அயிரிÕ படம் பற்றி இயக்குனரும் ஹீரோவுமான இந்திரஜித் கூறியது: 1907ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி மெக்டெகல் என்பவர், மரண தருவாயிலிருந்த 7 பேர்களின் நிலை பற்றி ஆராய்ச்சி செய்தார். அவர்கள் ஒவ்வொருவர் இறந்தபோதும் அவர்களின் ஒரிஜினல் எடையில் 21 கிராம் குறைந்திருந்தது. அந்த எடைதான் உயிரின் எடை என்று அவர் குறிப்பிட்டார். அதைக் குறிக்கும் வகையில் ‘உயிரின் எடை 21 அயிரிÕ. ரவுடியிஸம் செய்பவர்கள், உயிர் பயம் இல்லாமல் மோதுகிறார்கள். அவர்களுக்கு உயிரின் அருமையை விளக்கும் கதை. இதன் ஷூட்டிங் நாகர்கோவில் பேச்சிப்பாறை அணை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியான மோதிரமலை வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்டது. இங்கு 200 மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். படப்பிடிப்பு குழுவினருடன் அங்கு சென்றதும், அவர்கள் துருவித் துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பிறகு ஷூட்டிங் நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிந்து சமாதானம் அடைந்தனர். மேலும் தங்களில் சிலரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டனர். அதை ஏற்று சிலரை படத்தில் நடிக்க வைத்தோம். மாலை 6 மணிக்கு மேல் அந்த கிராமத்தில் யாரும் தங்கக் கூடாது என்பதால் நாங்கள் வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து தங்கினோம். மறுபடியும் காலையில் ஷூட்டிங்கிற்கு புறப்படுவோம். இதில் ஹீரோயினாக புதுமுகம் வினிதா நடிக்கிறார். இப்படத்தின் ரிலீசுக்கு முன் மோதிரமலை வாழ்மக்களுக்கு அப்பகுதியில் பிரத்யேகமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து படத்தை திரையிட உள்ளோம்.
252
1/11/2011 12:42:41 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
‘களவாணி' சற்குணம் இயக்கும் ‘வாகை சூட வா' படத்தில் 60களில் வாழ்ந்த இளைஞன்போல் நடிக்கிறார் ஹீரோ விமல்.சமீபத்தில் மாதவன், பாலிவுட் ஹீரோ சல்மான் கானை சந்தித்தார். அவருக்கு அன்பு பரிசாக வாட்ச் ஒன்றை வழங்கினார் சல்மான்.அஜீத் நடித்த ‘சிட்டிசன்' படத்தை இயக்கிய சரவண சுப்பையா ‘நெல்லை சம்பவம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.உடலை ஸ்லிம்மாக வைக்க யோகா செய்து வந்த த்ரிஷா, தற்போது ஷூட்டிங் காரணமாக சில மாதங்களாக யோகா செய்யவில்லையாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 7 படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். சில காட்சிகளில் நடிக்க த்ரிஷாவை கேட்டுள்ளனர்.டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர்கள் ஜேடி&ஜெர்ரி தங்கள் அறக்கட்டளை சார்பில் இலக்கியவாதிகளுக்கு சாரல் விருது வழங்குகின்றனர். இந்தாண்டு எழுத்தாளர் அசோகமித்ரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
253
1/11/2011 1:15:23 PM
சினிமா(ரீல்மா)
தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது : டைரக்டருடன் ஷோபனா காதலா? வெண்ணிற ஆடை மூர்த்தி பேட்டி
‘நடிகை ஷோபனாவின் திடீர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவர் டைரக்டரை காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று கூறினார் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ‘ஜெகன்மோகினி’, ‘சுறா’ ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் டி.வி. காமெடி தொடர்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகை ஷோபனா (32). இவர் நேற்று காலை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஷோபனா தற்கொலை பற்றி அவரது அம்மா வைரம் ராணி கூறும்போது,  வங்கிக்கு போய் செக்கை போட்டுவிட்டு வருவதற்குள் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டிருக்கிறாள். சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில்தான் குணம் அடைந்தாள். அதனால் சில நாட்கள் ஷூட்டிங் செல்லவில்லை. அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஷோபனா ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் நிறைவேறவில்லை. இதனால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார்.காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இன்று அளித்த பேட்டியில் கூறியது:நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பது மட்டுமல்ல.. தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர் ஷோபனா. நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் தடங்கலின்றி பேசுவார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விஷயம் நேற்று இரவுதான் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தொலைக்காட்சியில் 11 வருடம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். 9 வருடம் எனது குழுவில் ஷோபனா நடித்திருக்கிறார். சினிமாவிலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்னும் 2 வருடம் அவர் நடித்திருந்தால் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக உயர்ந்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார்.நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
254
1/11/2011 2:04:56 PM
உலகம்
துபாயில் 2 வருஷத்தில் பிளாஸ்டிக் பை.. குட்பை!
துபாய்: மளிகை கடைக்கும் காய்கறி கடைக்கும் வெறுங்கையை வீசிக்கொண்டு போய்விட்டு ‘கேரிபேக்’ உரிமையை நிலைநாட்டுவது பலருக்கும் வழக்கம். வீட்டில் இருக்கும் உருப்படிகள் ஒவ்வொன்றையும் கணக்கெடுத்தால் பெரும்பாலான வீடுகளில் கேரிபேக் எண்ணிக்கைதான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும்.உலகம் முழுக்க 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பை இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 ஆயிரம் கோடி. இந்த நிலையில், பிளாஸ்டிக் பைக்கு இன்னும் 2 ஆண்டில் ‘மங்களம் பாட’ ஐ.அ.எ. அரசு முடிவு செய்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளின் இந்த ஐடியாவுக்கு அரசு ஏக மனதாக ஓகே சொல்லியிருக்கிறது.திட்டமிட்டபடி இலக்கை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரஷீத் அகமது பின் பகாத் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உணர்ந்திருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட உள்ளன. இவற்றை மதித்து நடப்பதாக பெட்ரோகெமிக்கல் கம்பெனிகளும் கூறியுள்ளன. மக்களின் முழு ஒத்துழைப்புடன் 2013&க்குள் பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக ஐ.அ.எ. உருவாகும்’’ என்றார்.தென்மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெர்சியன் வளைகுடா அருகே உள்ளது. அபுதாபி, அஜ்மன், துபாய், புஜைரா, ரஸ்அல்கைமா, ஷார்ஜா, உம்அல்குவைன் ஆகிய 7 எமிரேட்கள் இதில் உள்ளன. 2013 முதல் 7 எமிரேட்களிலும் பிளாஸ்டிக் பைகள் தடை  செய்யப்பட உள்ளன.
255
1/11/2011 2:09:43 PM
உலகம்
வாரிசு வளருமா.. வளராதா? கம்ப்யூட்டர் கிளிக் சொல்லும்
லண்டன்: குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஐவிஎப் (இன்விட்ரோ பெர்டிலைசேஷன்) எனப்படும் செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை. அதிகம் செலவானாலும் சிலருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. சிலர் பல முறை முயற்சித்தும் தோல்வியே தொடர்கிறது. அடுத்த முறையாவது வெற்றிகரமாக முடியுமா? ‘உறுதியாக சொல்ல முடியாது. பார்க்கலாம்’ என்பார் டாக்டர். ஓரளவு வசதியானவர்கள் தாக்குப் பிடிக்கலாம். நடுத்தர, ஏழை மக்களால் முடியுமா. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கின்றனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.கிளாஸ்கோ மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் ஸ்காட் நெல்சன் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். ஐவிஎப் முறையில் குழந்தை பிறக்குமா என்பதை துல்லியமாக கண்டறியும் பார்முலா ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றி நெல்சன் கூறியதாவது:செயற்கை கருவூட்டல் முறையில் வெற்றி கிடைக்குமா என்பதை கண்டறிய ஒரு பார்முலாவையும் ஒரு கருவியையும் உருவாக்கியுள்ளோம். செல்போன், கால்குலேட்டர் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ivfpredict.com என்ற இணையதளத்தில் படிப்படியாக தகவல்களை பூர்த்தி செய்தால் குழந்தை உருவாவதற்கான வெற்றி வாய்ப்பு சதவீதத்தை தெரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட் போன்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடியும்.பெண்ணின் வயது, எத்தனை ஆண்டுகளாக முயற்சிக்கிறீர்கள், சொந்த கருமுட்டையா.. மற்றவரிடம் இருந்து பெற்றதா என்பது உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பதிலை அடுத்தடுத்து கிளிக் செய்தால், செயற்கை கருவூட்டல் வெற்றி வாய்ப்பு சதவீதம் வந்துவிடும்.2003 முதல் 2007 வரை சுமார் 1.44 லட்சம் பேரிடம் கிடைத்த ரிசல்ட்டை வைத்து இந்த பார்முலா உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஸ்காட் நெல்சன் கூறியுள்ளார்.
256
1/11/2011 2:12:25 PM
உலகம்
‘யூ’ டர்ன் ஜுஜூபி.. ‘ஓ’ டர்ன் போடலாம்
நியூயார்க்: சென்னை போன்ற பெரு நகரங்களில் சவாலான விஷயம் வாகனம் ஓட்டுவது. ஓரமாக போனாலும் தட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். சிக்னல், ஒன்வே, நோவே இம்சைகள் தனி. யூ டர்ன் இருப்பதை கவனிக்காமல் வந்துவிட்டால் அடுத்த மாவட்டம் வரை போய் யூ டர்ன் எடுக்க வேண்டிய அளவுக்கு பாடாய் படுத்தும். டிராபிக் ஜாம் அதைவிட கொடுமை. இன்ச்கூட நகர முடியாமல் மணிக்கணக்கில் ‘டயர் கடுக்க’ நிற்க வைத்துவிடும்.இந்த சகல பிரச்னைகளையும் சமாளிக்கிற வகையில் சூப்பர் கார் ஒன்று உருவாக்கியிருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஜெனரல் மோட்டார்ஸ்’. ‘இஎன்வி ஸ்மார்ட் கார்’ & இதுதான் காரின் பெயர். அதாவது, எலக்ட்ரிக் நெட்வொர்க்டு வாகனம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.லித்தியம் பேட்டரியில் இயங்கக் கூடியது. வீட்டில் சார்ஜ் போட்டு புறப்பட்டால் 40 கி.மீ. வரை போக முடியும். அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் போகலாம். இரண்டே சீட். இரண்டே சக்கரங்கள். நின்ற இடத்திலேயே 360 டிகிரி கோணத்துக்கு கார் சுற்றும். பின்னால் உரசுகிற அளவுக்கு வேறொரு வாகனம் வந்து நிற்கிறதா? இறங்கிவர தேவையில்லை. அப்படியே காரை பின்பக்கமா திருப்பி, காரில் இருந்தபடியே அந்த ஆளை எச்சரிக்கலாம்.காரை நாமே ஓட்ட வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ‘ஜிபிஎஸ் உதவியுடன் நீயே ஓட்டிக்கொள்’ என்று கமாண்ட் கொடுத்துவிட்டால் சென்சார், ஜிபிஎஸ் கருவிகள், கேமரா உதவியுடன் கார் தானாகவே ஓடும். பார்க்கிங் காலியாக இருக்கிற இடங்களில் பார்க் செய்யும். மிஸ்டு கால் கொடுத்தால் நாம் இருக்கும் இடம் தேடிவந்து பிக்கப் செய்துகொள்ளும்.சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மே முதல் அக்டோபர் வரை நடந்த உலக கார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. சியாவ் (லாஃப்), ஜியாவ் (பிரைடு), மியாவ் (மேஜிக்) என்று 3 மாடல்களில் அப்போது அறிமுகமானது. அமெரிக்காவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
257
1/11/2011 2:15:22 PM
உலகம்
குழந்தை மண்டை ஓட்டில் 8000 வைரக்கற்கள் பதிப்பு
ஹாங்காங்: வித்தியாசமாக சாதனை படைக்க நினைப்பவர்கள் பலர். அந்த வகையை சேர்ந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த கலை படைப்பாளி டேமியன் ஹர்ஸ்ட் (45). வில்லங்கமாய் சிற்பங்கள் படைப்பதிலும் ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். இறந்த மாடு, ஆடு, சுறா ஆகியவற்றை வைத்து பல சிற்பங்களை படைத்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் இவர் படைத்திருக்கும் படைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டை ஓட்டில் 8 ஆயிரம் வைரக் கற்களை பதித்திருப்பதுதான் அந்த படைப்பு. இது பிறந்து 2 வாரம் ஆவதற்குள் இறந்துபோன குழந்தையின் மண்டை ஓடு. வெள்ளை வைரம், பிங்க் நிற வைரம் என 8 ஆயிரம் கற்களை இதில்தான் பதித்திருக்கிறார் டேமியன். ‘ஃபார் ஹெவன்ஸ் சேக்’ என்று இந்த படைப்புக்கு பெயர் வைத்திருக்கிறார்.மண்டை ஓட்டில் வைரக்கல் பதிப்பது டேமியனுக்கு புதிதல்ல. 2007&ல் பெரிய ஆள் மண்டை ஓட்டில் இவ்வாறு செய்தார். அது ரூ.450 கோடிக்கு ஏலம் போனது. அவரது பழைய படைப்புகளை வரவேற்றவர்கள் இப்போதும் புகழ்ந்திருக்கிறார்கள். 19&ம் நூற்றாண்டை சேர்ந்த பொருட்கள் சேகரித்தபோது இந்த ஓடும் கிடைத்தது. அதை அழகாக மாற்றியது டேமியனின் திறமை என்று பாராட்டுகிறது ஆதரவு வட்டாரம். ஆனால், இங்கிலாந்து மற்றும் சில நாடுகளில் இதற்கு கடும் கண்டனம். ‘‘குழந்தையின் மண்டை ஓடு எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகிய கலையாக தெரியாது. கொடூரமாகத்தான் தெரியும்’’ என்கின்றனர் எதிர்ப்பாளர்கள். ஹாங்காங்கில் விரைவில் இது காட்சிக்கு வைக்கப்படுகிறது.
258
1/11/2011 2:18:36 PM
உலகம்
அமெரிக்க பள்ளியில் கபடி கபடி
ஹூஸ்டன்: இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று கபடி. பொங்கல் திருவிழா என்றால் கிராமங்களில் இப்போதும் கபடி விளையாட்டுகள் களைகட்டும். ஆடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பவர்களுக்கும் உற்சாகம் தரும் இந்த விளையாட்டை அமெரிக்க பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளார் இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர்.கேரளாவை சேர்ந்தவர் அஜய்குமார் நாயர். அமெரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பள்ளியில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆசிரியர். இவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கபடி. ஓய்வு நேரத்தில் தனது மாணவர்களுக்கும் கபடி சொல்லிக் கொடுத்தார். மூச்சு விடாமல் கபடிக் கபடி சொல்லிக் கொண்டே வியர்க்க விறுவிறுவிக்க விளையாடுவது அமெரிக்க பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. பள்ளிக்கூட ஸ்போர்ட்ஸ் லிஸ்ட்டில் கபடியையும் சேர்த்துவிட்டார்கள்.
259
1/11/2011 2:29:04 PM
விளையாட்டு
பயிற்சி ஆட்டத்திலும் இங்கி.வெற்றி
ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு 20-20 மற்றும் 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது. 20-20 ஆட்டம் வருகிற 13-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி பிரதமர் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோதியது. 43 ஓவர்கள் கொண்டதாக இந்த ஆட்டம் நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த பிரதமர் லெவன் அணி 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் 35 ஓவரில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என இங்கிலாந்து அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 33.3 ஓவரில் 225 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இயான்பெல் 102 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 124 ரன்கள் விளாசினார்.
260
1/11/2011 2:34:54 PM
விளையாட்டு
பஞ்சாப் அணிக்கு கில்கிறிஸ்ட் கேப்டன்
ஐபிஎல் 4வது சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆஸி. அணியின் மாஜி வீரர் கில்கிறிஸ்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சீசனில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்தார். 2வது சீசனில் இவர் தலைமையிலான அணி பட்டம் வென்றது. இந்நிலையில் 4வது சீசனில் பஞ்சாப் அணி கேப் டனாக கில்கிறிஸ்ட் இருப் பார் என பயிற்சியாளர் பெவன் தெரிவித்தார்.
261
1/11/2011 2:38:46 PM
விளையாட்டு
இர்பானை இழந்தது வருத்தம் கில்கிறிஸ்ட் கிடைத்தது மகிழ்ச்சி
பெங்களூர்: ஐ.பி.எல். ஏலத்தில் ஆல்ரவுண்டர் இர்பான் பதானை இழந்தது வருத்தமளிக்கிறது என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். ஐ.பி.எல் டி20 வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் கடந்த சனி, ஞாயிறு நடந்தது. முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் எடுப்பக்கப்பட்டனர். கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் இடம்பெற்றிருந்த இர்பான் பதானை இந்த முறை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது.இதுகுறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது: இர்பான் அருமையான வீரர். பவுலிங், பேட்டிங் இரண்டிலும் கில்லாடி. மிகவும் தைரியசாலி. எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவரை மீண்டும் எங்கள் அணியில் இடம் பெறச்செய்ய கடுமையாக போராடினோம். ரூ.8 கோடியே 28 லட்சம் வரை ஏலம் கேட்டோம். ரூ.9 கோடிக்கு டெல்லி அணி இர்பானை ஏலம் எடுத்துவிட்டது. எங்களுக்கு இது ஏமாற்றம்தான். நாம் வாங்க விரும்பும் வீரர்கள் எல்லோரும் கிடைப்பதில்லை. ஆஸ்திரேலியே விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறிஸ்ட்டை ரூ.4 கோடிக்கு வாங்கியது ஓரளவு ஆறுதலாக உள்ளது.நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்க காரணம் கில்கிறிஸ்ட். அவர் முன்பு டெக்கான் அணியை வெற்றிபெற செய்தவர். உற்சாகமான வீரர். சிக்கலான நேரங்களிலும் நிதானமாக செயல்படுவார். அவரை ஏலம் எடுத்த பின் எஸ்.எம்.எஸ்.சில் தகவல் பரிமாறிக்கொண்டோம். நேரில் இனிதான் சந்திக்க வேண்டும். இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார். ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடும் பஞ்சாப் அணி வீரர்களை கட்டியணைத்து உற்சாகப்படுத்துவது பிரீத்தி ஜிந்தாவின் வழக்கம். இந்த முறை அந்த யோகம் கில்கிறிஸ்ட்டுக்கு அடித்திருக்கிறது.
262
1/11/2011 2:43:29 PM
விளையாட்டு
மெஸிக்கு பிபா விருது
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சுவிஸ் நாட்டின் ஜுரிச் நகரில் நேற்று நடந்தது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லயோனல்மெஸி பிபா விருதை தட்டிச் சென்றார். மெஸி உலககோப்பை போட்டியில் ஜொலிக்காவிட்டாலும் பார்சிலோனா அணிக்காக மட்டும் கிளப் போட்டிகளில் கடந்த ஆண்டில் 58 கோல்கள் அடித்துள்ளார். பிபாவின் இந்த விருதை பெரும்பாலும் பார்சிலோனா அணிக்காக ஆடும் வீரர்களே பெற்று வந்துள்ளனர். மெஸி இந்த விருதை வெல்வது 2வது முறையாகும்.
263
1/11/2011 2:46:46 PM
விளையாட்டு
இந்தியா - தென் ஆப்ரிக்கா ஒன்டே நாளை ஸ்டார்ட்
டர்பன்: தென் ஆப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த 20-20 ஆட்டத்தில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் டர்பனில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் போட்டியை டென் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.அடுத்த மாதம் 19-ம் தேதி உலககோப்பை தொடங்க உள்ளதால் தென் ஆப்ரிக்க போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சச்சின் நீண்ட நாளுக்குப்பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சேவாக், காம்பீர் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சச்சினுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.அனேகமாக சச்சினுடன் கோஹ்லி அல்லது முரளிவிஜய் இணைவார் என தெரிகிறது. இளம் வீரர்களான ரெய்னா, யூசுப்பதான், ரோகித்சர்மா மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர் தங்களது திறமையை காட்ட இந்த தொடர் சிறந்த வாய்ப்பாகும். உலககோப்பைக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் எல்லா வீரர்களுமே ஜொலிக்க முயற்சிப்பார்கள். இதற்கிடையே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசாந்த், பிரவீன்குமார் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர். நாளைய ஆட்டத்தில் இவர்கள் களமிறங்கும் வாய்ப்பு குறைவு. ஜாகீர்கான், நெக்ரா கூட்டணி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும். சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன்சிங்குடன் அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளது.தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும். ஸ்மித் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அந்த அணி கூடுதல் வலுவடையும். காலிஸ் ஆடாதது அந்த அணிக்கு இழப்பாக இருக்கும். டிவிலியர்ஸ், டும்னி, ஆம்லா பேட்டிங்கில் நெருக்கடி கொடுப்பார்கள். ஸ்டெய்ன், சோட்சோபி, மோர்னே மோர்க்கல் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
264
1/11/2011 3:05:22 PM
தமிழகம்
டைரக்டருடன் ஷோபனா காதலா? தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது
சென்னை: ‘நடிகை ஷோபனாவின் திடீர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவர் டைரக்டரை காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று கூறினார் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.  ‘ஜெகன்மோகினி’, ‘சுறா’ ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் டி.வி. காமெடி தொடர்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகை ஷோபனா (32). இவர் நேற்று காலை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஷோபனா தற்கொலை பற்றி அவரது அம்மா வைரம் ராணி கூறும்போது,  வங்கிக்கு போய் செக்கை போட்டுவிட்டு வருவதற்குள் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டிருக்கிறாள். சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில்தான் குணம் அடைந்தாள். அதனால் சில நாட்கள் ஷூட்டிங் செல்லவில்லை. அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஷோபனா ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் நிறைவேறவில்லை. இதனால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார்.காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இன்று அளித்த பேட்டியில் கூறியது: நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பது மட்டுமல்ல.. தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர் ஷோபனா. நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் தடங்கலின்றி பேசுவார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விஷயம் நேற்று இரவுதான் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தொலைக்காட்சியில் 11 வருடம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன்.9 வருடம் எனது குழுவில் ஷோபனா நடித்திருக்கிறார். சினிமாவிலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்னும் 2 வருடம் அவர் நடித்திருந்தால் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக உயர்ந்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார். நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
265
1/11/2011 3:28:55 PM
உலகம்
பூகம்பம் பாதித்த ஹைதியில் அனாதை குழந்தைகள் விற்பனை
லண்டன்: ஹைதி தீவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பூகம்பத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர். இவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களிலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களை கடத்தி விற்கும் செயலில் ஒரு கும்பல் இறங்கியது. ஒரு குழந்தையை 30 பவுண்டுக்கு (ரூ.2,100) விற்றனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போனதால், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கடத்தல் கும்பலை பிடித்தது. பிராஸ்கல் ஆன்ட்ரே(32) என்ற கடத்தல்காரன் கூறுகையில், ÔÔநான் இதுவரை 45 குழந்தைகளை விற்றுள்ளேன். ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை கவனிக்க இங்கு யாரும் இல்லை. டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த மாதம் இங்கு வந்து 500 டாலருக்கு (ரூ.23 ஆயிரம்) இரண்டு பெண் குழந்தைகள் வேண்டும் என கேட்டார். இரண்டு பெண் குழந்தைகளை கடத்தி கொடுத்தேன். சிறுமிகளை எதற்காக அவர் வாங்கிச் சென்றார் என்பது தெரியாதுÕÕ என்றார்.  கடத்தப்பட்ட குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் ஹைதி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
266
1/11/2011 3:34:27 PM
உலகம்
வேலைக்காரிக்கு சூடு : சவுதி பெண்ணுக்கு சிறை
துபாய்: இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் துபாயில் வீட்டு வேலைக்காக செல்கின்றனர். இவர்களில் பலர் எஜமானிகளின் கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. துபாயில் வசிக்கும் சவுதி பெண் ஒருவர் வீட்டில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமியதி என்ற பெண் வேலை செய்தார். அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார் எஜமானி. இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இந்தோனேஷிய தூதரக அதிகாரிகள், சவுதி அரசிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துபாய் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சவுதி பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமியதி, மெதினா கோர்ட்டில் ஆஜராகி தன் உடலில் இருந்த காயங்களை நீதிபதியிடம் காண்பித்தார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
267
1/11/2011 3:37:19 PM
உலகம்
இங்கிலாந்து போர் கப்பலை பள்ளியாக மாற்ற முயற்சி
ஹாங்காங்: இங்கிலாந்து கடற்படையில் இருந்து எச்.எம்.எஸ் இன்வின்சிபிள் போர்க் கப்பல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டது. அந்த கப்பலை ஏலத்தில் எடுத்து பள்ளிக் கூடமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஹாங்காங் தொழிலதிபர் லாம் கின்&பாங். இதற்காக அந்த போர்க் கப்பலை ரூ.35 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளார் லாம். ஏலத்தில் இவர் ஜெயித்தால் 22 ஆயிரன் டன் எடையுள்ள பிரமாண்ட கப்பல் சீனாவின் ஜூகாய் நகருக்கு கொண்டு வரப்பட்டு பள்ளிக்கூடமாக மாற்றப்படும். இந்தக் கப்பல் 1977ம் ஆண்டு இங்கிலாந்து கடற்படையில் சேர்க்கப்பட்டது. கடந்த 1982ம் ஆண்டு அர்ஜென்டினாவுடன் பல்க்லேண்ட் தீவுகள் தொடர்பாக மோதல் ஏற்பட்ட போது, இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து ராணுவ செய்தி தொடர்பாளர், ÔÔவிற்பனை செய்யப்படுவதற்கு முன்பு கப்பலில் உள்ள போர்க் கருவிகள் அனைத்தும் அகற்றப்படும்ÕÕ என தெரிவித்தார்.
268
1/11/2011 3:46:29 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
1 கோடி ஏடிஎம் பணத்துடன் வேன் டிரைவர் ஓட்டம்
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் நகரில் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் வைக்கும் பொறுப்பு சிஎம்எஸ் என்ற செக்யூரிட்டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நேற்று, அஷோக் நகரில் உள்ள ஏடிஎம்களில் பணம் வைப்பதற்காக ஒரு பாதுகாவலர் துணையுடன் 3 ஊழியர்கள் வேனில் புறப்பட்டனர். மோகன்லால் என்பவர் வேனை ஓட்டினார். ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் பணம் வைப்பதற்காக பாதுகாவலரும், 3 ஊழியர்களும் ரூ. 15 லட்சம் பணத்துடன் உள்ளே சென்றனர். வேனில் ரூ. 1 கோடி இருந்தது. பணத்தை ஏடிஎம்மில் வைத்து விட்டு திரும்பி வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேனுடன் டிரைவர் மோகன்லால் காணாமல் போயிருந்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வயர்லெஸ் வாயிலாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர். மகேஷ்நகர் ஏரியாவில் வேன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் பணம் இல்லை. தலைமறைவான வேன் டிரைவரை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டுள்ளது. மோகன்லால் 3 மாதத்துக்கு முன்புதான் வேலையில் சேர்ந்துள்ளார். வேலையில் சேரும்போது அவர் கொடுத்த இரண்டு முகவரிகளும் போலியானவை என்பது தற்போது  தெரியவந்துள்ளது.
269
1/11/2011 3:48:27 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
கொல்லப்பட்டவரின் மரண வாக்குமூலம் : மொபைலில் பதிவு செய்தவருக்கு பாராட்டு
புதுடெல்லி: வடமேற்கு டெல்லி ரானிபாக் பகுதியைச் சேர்ந்த ஷாகில் கத்ரி, மணிஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். சேர்ந்து தொழில் செய்தபோது வாங்கிய நிலத்தை விற்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று ஷாகில் கத்ரி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மணிஷ்யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். அப்போது அந்த வழியாக வந்த குல்பூஷன் என்பவர், ரத்த வெள்ளத்தில் கிடந்த கத்ரியை பார்த்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாகில் கத்ரி தன்னை சுட்டது தனது தொழில் விரோதி மணிஷ்யாதவ் என்ற விவரத்தை குல்பூஷனிடம் தெரிவித்தார். குல்பூஷன் சமயோசிதமாக அதனை தனது செல்போனில் பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் செல்போனை ஒப்படைத்தார். போலீசார் கத்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கத்ரி இறந்தார். செல்போனில் பதிவான வாக்குமூலம் அடிப்படையில் மணிஷ்யாதவை போலீஸ் தேடி வருகின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட குல்பூஷனை போலீசார் பாராட்டினர்.
270
1/11/2011 3:50:12 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
எச்ஐவி சோதனை கட்டாயமாக்க பெண்கள் ஆணையம் வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் இருவரும் கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய அளவில் பல்வேறு பெண் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக கேரள பெண்கள் ஆணையத் தலைவர் டி.ஸ்ரீதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எச்ஐவி பாதித்த பல பெண்கள், தங்கள் கணவர்கள்தான் அதற்கு காரணம் என எங்களிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் எச்ஐவி பாதித்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் கணவருக்கு திருமணத்துக்கு முன்பே எச்ஐவி பாதிப்பு இருந்ததாகவும் அதை மறைத்து தங்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். எச்ஐவி உள்ள பெண்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. எச்ஐவி பாதித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலை செய்யும் இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர். எனவே திருமணத்துக்கு முன்பாக ஆண், பெண் இருவருக்கும் எச்ஐவி சோதனை செய்வதை கட்டாயமாக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
271
1/11/2011 3:53:30 PM
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
உ.பி. எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு சிபிசிஐடி பரிந்துரை
லக்னோ: உ.பி. மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ புருஷோத்தம் மீது 17 வயது தலித் பெண் ஒருவர் கடந்த மாதம் பலாத்கார குற்றச்சாட்டு கூறினார். பதிலுக்கு அந்த சிறுமி மீது எம்எல்ஏ திருட்டு புகார் கூறினார். எம்எல்ஏ கொடுத்த திருட்டு புகாரை பதிவு செய்து சிறுமியை சிறையில் அடைத்தது போலீஸ். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசுக்கு முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். இது தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு பதிவு செய்வதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாகவும், சிறுமி மீது திருட்டு வழக்கு பதிவு செய்ய ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
272
1/11/2011 3:59:46 PM
குற்றம்
கள்ளக்காதலன் திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை
திருவொற்றியூர்: மணலி பலராமன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (38).  திருமணமாகி இரண்டு குழந்தை உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. மது குடிக்கும் பழக்கம் உண்டு. சிவக்குமார் சரக்கு வாங்க டாஸ்மாக் கடைக்கு வரும்போது நாகம்மாளும் வருவார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கணவர், குழந்தைகளை விட்டு விட்டு நாகம்மாள், சிவக்குமாருடன் வந்தார். கணவரின் நடவடிக்கை பிடிக்காததால் சிவக்குமாரின் மனைவி அவரை பிரிந்து போய்விட்டார். சிவக்குமார், நாகம்மாள்  தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று சிவக்குமார் மதுவாங்கி வந்தார். வீட்டில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மது     குடித்தார். இருவருக்கும் போதை அதிகமானது. கடைசியில் கொஞ்சம் மது மீதி இருந்தது. இதை யார் குடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. போதையில் இருந்த நாகம்மாள் டம்ளரில் இருந்த மதுவை எடுத்து குடித்துவிட்டார். இதனால் சிவக்குமார் ஆத்திரம் அடைந்தார். காதலியை திட்டி விட்டு வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த நாகம்மாள் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் சிவக்குமார் வீட்டிற்கு திரும்பி வந்தார். கோபித்துக்கொண்டு நாகம்மாள் கதவை பூட்டியுள்ளார் என்று நினைத்து வீட்டின் கதவை தட்டினார். நீண்டநேரமாக திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தூக்கில் தொங்கிய நாகம்மாளின் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மணலி இன்ஸ்பெக்டர் அரி மற்றும் போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமாரிடம் போலீசார் விசாரிக்கிறார்கள்.
273
1/11/2011 4:03:55 PM
குற்றம்
கம்பெனிக்குள் நுழைந்து ஊழியருக்கு அரிவாள் வெட்டு
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் கம்பெனிக்குள் புகுந்து தொழிலாளியை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவர் நேற்று மாலை அங்குள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு சென்றார். அங்கு வேலையில் இருந்த தொழிலாளி ராமுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு ஆனந்த் ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த ராமுவை தொழிலாளர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கம்பெனி கொடுத்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கன்னிவாக்கத்தில் பதுங்கியிருந்த ஆனந்தை நேற்றிரவு கைது செய்தார். முன்விரோதம் காரணமாக ராமுவை அவர் வெட்டியது தெரிந்தது. கைதான ஆனந்த் மீது அடிதடி உள்ளிட்ட வழக்கு உள்ளது. அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
274
1/11/2011 4:30:51 PM
இந்தியா
பொங்கலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருகிறது
புதுடெல்லி: மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொங்கலுக்குப்பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.  இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஐபிஎல் கொச்சி அணி சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசிதரூர் பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் ராஜினாமாவை தொடர்ந்து, பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்த பிருதிவிராஜ் சவான் மகாராஷ்டிர முதல்வரானார். இந்த துறைக்கும் புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. ஒரு சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் பிரதமருக்கு திருப்தியில்லை. அவர்களது இலாகாக்கள் மாற்றப்படலாம். ராசாவிடம் இருந்த தொலைதொடர்பு துறை தற்போது கபில்சிபல் வசம் உள்ளது. ஏற்கனவே அவர் மனிதவளமேம்பாட்டு துறை, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். பணிச்சுமை அதிகம் இருப்பதால் இவர் வசம் இருக்கும் 3 துறைகளில் ஏதேனும் ஒன்றுக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படலாம். அமைச்சர்களாக இருக்கும் ஏ.கே.அந்தோணி, வீரப்ப மொய்லி மற்றும் நாராயணசாமி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் இவர்களில் சிலர் கட்சிப் பொறுப்பிலிருந்து அல்லது அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படலாம்.அமைச்சரவை மாற்றம் குறித்து இரண்டு முறை காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டபின் புதிய அமைச்சர்கள் குறித்து இறுதி கட்டமாக ஆலோசனை நடத்தப்படும். பொங்கலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
275
1/11/2011 4:32:03 PM
இந்தியா
திருப்பதி லட்டு டோக்கனில் ‘பார் கோடிங்’ பதிப்பு: போலிகளை தடுக்க அதிரடி
திருப்பதி: போலிகளை தடுக்க திருப்பதி லட்டு டோக்கனில் ‘பார் கோடிங்’ பதிய தேவஸ்தானம்  நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே போலி லட்டு டோக்கன் விற்பனை செய்த, திருப்பதியை சேர்ந்த கான்ட்ராக்ட் ஊழியர் நாகராஜ் என்பவரை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். இவ்வாறு போலி லட்டு டோக்கன் விற்பனை தடுப்பது தொடர்பாக தேவஸ்தான துணை தலைமை செயல் அதிகாரி பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது : திருமலை திருப்பதியில் போலி லட்டு டோக்கன் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. எனவே கவுன்டர்களில் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து டோக்கன்களை தீவிரமாக சரிபார்த்த பின்னரே லட்டுகள் வழங்கப்படும். ரூ.20 கட்டணம் மூலம் கவுன்டர்களில் கணினி மூலம் வழங்கப்படும் டோக்கன்களுக்கு ‘பார் கோடிங்‘ வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் போலி லட்டு டோக்கன் என்ற பேச்சுக்கே திருமலையில் இடம் இருக்காது.இவ்வாறு பாஸ்கர் கூறினார்.
276
1/11/2011 4:32:34 PM
இந்தியா
பட செலவுகளை கட்டுப்படுத்த சம்பளத்தை குறைத்துகொள்ள தெலுங்கு நடிகர்கள் ஒப்புதல்
ஐதராபாத்: பட தயாரிப்பு செலவுகளை குறைக்கும் வகையில் தெலுங்கு நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க முன் வந்துள்ளனர். நடிகர், நடிகைகள் சம்பளம், பிலிம் விலை, தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம், வெளிநாட்டு படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படங்களின் தயாரிப்பு செலவு அதிகரித்துவிட்டது. தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் சம்பளம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் கோரி வந்தனர். கடந்த ஆண்டில் பல படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதையடுத்து நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் முன் வைத்தனர். கடந்த சில மாதமாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. இது பற்றி தயாரிப்பாளர், நடிகர்களுக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. முன்னணி நடிகர்கள் வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜுன், ரவி தேஜா போன்றவர்கள் குறிப்பிட்ட சதவீதம் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளனர். இதையடுத்து சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.40 முதல் 60 லட்சம் வரை மிச்சமாகும். பெரிய பட்ஜெட் படங்களுக்கு ரூ.2 கோடி முதல் 3 கோடி வரை மிச்சமாகும் என கூறப்படுகிறது.இதுகுறித்து சம்பளம் குறைப்பு கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ‘யார், யாருக்கு எவ்வளவு சம்பளம் குறைக்கலாம் என்ற பட்டியல் மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரகாஷ்ராஜ், பிரமானந்தம், வேணுமாதவ் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். போக்குவரத்து செலவுகளை தாங்களே ஏற்க வேண்டும்Õ என்றார்.
277
1/11/2011 4:33:46 PM
இந்தியா
பள்ளிக்கு லேட்டாக வந்ததால் பனிஷ்மென்ட்: மைதானத்தை சுற்றிய மாணவன் பரிதாப சாவு
ஹோன்னாவர்: கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹோன்னாவர் என்ற இடத்தில் உள்ளது நியூ இங்கிலீஷ் ஸ்கூல். இங்கு 8&ம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்சல் அகமது பயஸ் (14). காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. காய்ச்சல் நேற்று ஓரளவு குணம் அடைந்ததால் பள்ளிக்கு வந்தான். வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. மைதானத்தில் 3 ரவுண்ட் ஓட வேண்டும் என உத்தரவிட்டார் ஹெச்.எம். '2 நாட்களாக காய்ச்சல். நான் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. ஓட முடியாது சார்' என்று கூறினான் அப்சல். ஹெச்.எம். மிரட்டியதால் வேறு வழியின்றி மைதானத்தில் ஓடினான். அப்போது மூச்சுத் திணறி மைதானத்தில் சுருண்டு விழுந்தான். அவனை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.பள்ளி மைதானத்தில் மாணவன் சுருண்டு விழுந்து இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் வேகமாக பரவியது. அப்பகுதியினர் மற்றும் பெற்றோர் ஆவேசம் அடைந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு சரமாரியாக கற்களை வீசினர். தண்டனை வழங்கிய ஹெச்.எம். மீது மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.‘மாணவர்களுக்கு தண்டனை அளிக்க கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் விஸ்வேஷ்வரா ஹெக்டே கஹேரி கூறினார்.
278
1/11/2011 4:35:07 PM
இந்தியா
டெல்லியில் ஜெகன் உண்ணாவிரதம் 29 எம்எல்ஏக்கள் பங்கேற்பு
சித்தூர்: கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டில் ஆந்திர மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று உண்ணாவிரதம் தொடங்கினார். 2 எம்.பி.க்கள், 29 எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்றனர். நதிநீர் ஆணைய பங்கீட்டை மறுபரிசீலனை செய்து ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிநீர் மீது முழு உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் 24 மணி நேர உண்ணாவிரதத்தை மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆரின் மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கினார். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் அருகே இப்போராட்டம் காலை 11.30 மணியளவில் தொடங்கியது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுப்பம் ஹரி, ராஜமோகன் ரெட்டி, எம்எல்ஏக்கள் கொண்டாசுரேகா, சீனிவாசலு, அமர்நாத்ரெட்டி, குருநாத்ரெட்டி, ஸ்ரீகாந்த்ரெட்டி, காந்தாராவ், சத்தியவதி, சிவப்பிரகாஷ், பாலராஜு, சீனிவாஸ், ஆதிநாராயணரெட்டி, கமலம்மாள், நடிகை ஜெயசுதா, பாபுராவ், நீரஜ்ரெட்டி உள்பட 24 பேர், பிரஜா ராஜ்யம் கட்சி எம்எல்ஏக்கள் ராமிரெட்டி, ஷோபாநாகி ரெட்டி, தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் பாலநாகிரெட்டி, குமார் ரெட்டி, பிரசன்னா மற்றும்  காங்கிரஸ் எம்எல்சிக்கள் 4பேர் பங்கேற்றனர். மேலும், நடிகை ரோஜா, என்.டி.ஆர். மனைவி லட்சுமி பார்வதி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், 'ஜெகனின் ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் செல்லக்கூடாது, மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்து இருந்தார். இதையும் மீறி 24 எம்எல்ஏக்கள் ஜெகனுடன், உண்ணாவிரதத்தில் பங்கேற்றது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதேபோன்று தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கட்சி மேலிட உத்தரவை மீறி ஜெகனின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.ஜெகன் போராட்டத்திற்கு மாலை 5 மணிவரை மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இருப்பினும் ஜெகன்மோகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும், தான் தொடங்கப்போகும் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை, இன்று மாலை ஜெகன் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
279
1/11/2011 4:39:51 PM
தமிழகம்
9 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை ரத்து சட்டசபையில் தீர்மானம்
சென்னை: ஆளுநர் உரைக்கு இடையூறு செய்த அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை இன்று ரத்து செய்யப்பட்டது.  முதல்வர் பரிந்துரையின்பேரில், சட்டசபையில் இன்று துணை முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் 9 அதிமுக உறுப்பினர்களும் வரும் நாளை முதல் அவை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று சபாநாயகர் அறிவித்தார்.சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம்:ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அதிமுக உறுப்பினர்கள் 9 பேர், அவையில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை பதிவு செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்ய முனைந்தனர். நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அவர்கள் மீண்டும் அவையில் ஜனநாயக கடமையாற்ற, நீங்கள் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுங்கள்.சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.): 9 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவைக்கு திரும்ப அழைக்க வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. மீண்டும் அவர்கள் ஜனநாயக கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாட்களை தண்டனையாக கருதி, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.நன்மாறன் (மா.கம்யூ.): 9 உறுப்பினர்களும் மீண்டும் அவைக்குள் வந்து பணியாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சதன் திருமலைக்குமார் (மதிமுக): அவையில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஜனநாயக கடமையாற்ற ஆவன செய்ய வேண்டும்.அவை முன்னவர் அன்பழகன்: ஆளுநர் உரையின்போது நடந்த காரியம் ஜனநாயக முறைக்கு மாறானது. ஆளுநர் உரையின்போது, குறுக்கிட உரிமை இல்லை என்று விதி கூறுகிறது. ஆனால், ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்தது ஜனநாயக முறை என்பதை ஏற்க இயலாது. செய்த தவறுக்காக அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீண்டும் அலுவல் ஆய்வுக் குழுவை கூட்டி அவர்கள் தங்கள் நிலையை விளக்க வேண்டும். அதுபற்றி இங்கே விவாதிக்க முடியாது.செங்கோட்டையன் (அதிமுக): மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் வலியுறுத்தியும் வாய்ப்பு இல்லை என்று கூறியதால் வெளிநடப்பு செய்கிறோம். (அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எம்எல்ஏக்கள் உரக்க சத்தமிட்டபடி வெளியேறினர்)முதல்வர் கருணாநிதி: இப்போது நடந்த இதே முறையைத்தான் நேற்றும், நேற்று முன்தினமும் கடைபிடித்தனர். இதே அவையில் பேராசிரியர் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்களை ஒருநாள், இரண்டு நாளல்ல, பதவியை பிடுங்கி கொண்டு வெளியேற்றினார்கள். அப்போது நாங்கள் அமைதியாக இருந்தோம். இவர்கள் செய்தது போல வெளியே சென்று கேலி, கிண்டலில் நாங்கள் ஈடுபடவில்லை. இன்று பேசும் தோழமைகட்சிகள் யாரும் இப்படி எங்களுக்காக பரிந்து பேசவில்லை. அதுதான் விசித்திரம். நேற்று பகல் 1.30 மணி வரை கிண்டல், கேலி, நையாண்டி செய்தனர். இதை பெரிய காரியமாக கருதி, மகிழ்ச்சியோடு இருந்தனர். அது நீடிக்கட்டும் என்று விட்டுவிட்டோம். இன்று ஜனநாயக கடமையாற்ற முன்வந்திருக்கிறார்கள். எங்களுக்கு எந்தவித மறுப்பும் இல்லை. இன்று புதிய அணிகள் உருவாகி இருக்கிறது. அதுகூட நிரந்தரம் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட வாதாடுவதும், குரல் கொடுப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. இப்போது உருகிப் பேசுபவர்கள், அன்று நாங்கள் வெளியேற்றப்பட்டபோது ஏன் உருகவில்லை. திமுக எதையும் சமாளிக்கும் என்பதால் விட்டு விட்டார்கள் போலும். அன்று சபாநாயகர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பது அனைவரும் அறிவார்கள். பத்திரிகையாளர்களும் அறிவார்கள். ஆனால் இன்று அமளி, ஆட்சிக்கு எதிரான கூச்சல்தான் பத்திரிகைகளுக்கு தெரிகிறது. சபாநாயகர் அதிகாரம் பற்றி தெரியவில்லை. தெரியும் காலம் விரைவில் வரும். நன்மாறன்: அதிமுக ஆட்சி இருந்தபோதும், திமுகவுக்காக நாங்கள் பேசியிருக்கிறோம். வாதாடி இருக்கிறோம். ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களது அணுகுமுறை இருந்தது. நீக்கப்பட்ட 9 பேரும் மீண்டும் உள்ளே வர பரிசீலித்து உத்தரவிட வேண்டும். (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்)சிவபுண்ணியம்: 9 பேரும் மீண்டும் அவைக்கு வர நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். முதல்வரின் உணர்வை நாங்கள் அறிகிறோம். வழக்கமாக ஒருநாள் தண்டனை.. மறுநாள் பரிசீலனை என்று இருக்கும்.முதல்வர்: கோரிக்கையை கேட்டு அதற்கு என்ன பதில் என்று கவலைப்படாமல் அவர்கள் வெளிநடப்பில்தான் குறியாக இருக்கிறார்கள். மேலிடத்தின் கட்டளை அப்படி. அதன்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநடப்பு செய்வதற்காகவே அவைக்கு வருவது சரியல்ல. அவர்கள் உள்ளே வர தயாராக இருந்தால் இந்த அரசு, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இருக்கிறது. (இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்)துணை முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் பெருந்தன்மையுடன் பரிந்துரைத்த கருத்துக்கு இணங்க, நீக்கப்பட்ட 9 பேரும் வரும் 12&ம் தேதி சட்டசபைக்கு வந்து நடவடிக்கைகளில் பங்கு கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். (பின்னர் அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.)சபாநாயகர் ஆவுடையப்பன்: தீர்மானம் நிறைவேறியது. 10&ம் தேதி வழங்கப்பட்ட தண்டனையை குறைத்து 9 பேரும் 12&ம் தேதி முதல் அவைக்கு வரலாம். இவ்வாறு சபையில் விவாதம் நடந்தது.
280
1/11/2011 4:40:28 PM
இந்தியா
உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை
புதுடெல்லி: உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மழை, வெள்ளம் காரணமாக காய்கறி உள்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 ஐ எட்டியது. இதனால் பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அப்படியிருந்தும் வெங்காயம் விலை குறையவில்லை. காய்கறி கடைகளில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஆனாலும், வெங்காயம் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. உணவு பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய டெல்லியில் இன்று காலை உயர்நிலை குழுவை கூட்டினார் பிரதமர் மன்மோகன் சிங்.இதில் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
281
1/11/2011 4:44:15 PM
மாவட்ட மசாலா
சிறுத்தை தாக்கி ஆடுகள் சாவு சுற்றுலா பயணிகள் பீதி
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே லேம்ஸ்ராக் காட்சி முனை உள்ளது. இயற்கை அழகை ரசிக்க, இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். காட்சிமுனையை ஒட்டியுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 13 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கு வந்த ஒரு சிறுத்தை, ஆக்ரோஷமாக ஆடுகள் மீது பாய்ந்து தாக்கியது. இதில் 3 ஆடுகள் பலியாயின. சிறுத்தைக்கு பயந்து 10 ஆடுகள் பள்ளத்தாக்கில் குதித்து இறந்தன. சிறுத்தை அட்டகாசத்தால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர். வன சரகர் பால்ராஜ் கூறுகையில், ‘சிறுத்தையை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் பயப்பட வேண்டாம்’ என்றார்.
282
1/11/2011 4:46:11 PM
மாவட்ட மசாலா
வாக்குச்சாவடியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
பாபநாசம¢: தஞ்சை மாவட்டம் பண¢டாரவாடை ஊராட¢ச¤ தலைவா¢ பதவ¤க்கு நேற¢று வாக¢குப்பத¤வு நடந்தது. அப்போது காமாட¢ச¤புரத¢தை சோ¢ந¢த முத¢தம¤ழ்ச்செல¢வன¢(35) என¢பவா¢ வாக¢கள¤க¢க வந¢தா£¢.  அவா¤டம¢ வாக¢காளா¢ அடையாள அட¢டை இல¢லை. இதனால¢ அவரை வாக¢குச்சாவடி அத¤கா£¤ வாக¢களிக்க அனுமத¤க¢கவ¤ல¢லை. இதனால¢ முத¢தமிழ்ச்செல¢வன¢ ஏமாற்றத்துடன் திரும்பி சென்றா£¢. இந்நிலையில் மாலையில் வாக¢குச்சாவடிக¢கு மண்ணெண்ணெய் கேனுடன¢ வந¢த முத்தமிழ்ச்செல்வன் தனது உடல¤ல¢ மண்ணெண்ணெய் ஊற¢ற¤ த¦ வைத¢துக¢ கொள¢ள முயற¢ச¤த¢தா£¢. அங¢கு பாதுகாப¢பு பண¤யில் இருந¢த போலீசார், அவரை தடுத¢து ந¤றுத¢த¤ போலீஸ் ந¤லையத¢துக¢கு அழைத¢து சென்று விசாரித்து வருகின்றனர்.
283
1/11/2011 4:48:01 PM
மாவட்ட மசாலா
சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில் நேரம் மாற்றம்
மதுரை: முதுநிலை ரயில்வே பிஆர்ஓ வேணுகோபால் கூறியதாவது: தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் குளிர்கால சிறப்பு ரயில் எண் 06138 இன்று (11ம் தேதி) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.55க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.15க்கு புறப்படும். நாளை காலை 6.05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என்றார்.
284
1/11/2011 4:50:21 PM
மாவட்ட மசாலா
பாஸ்போர்ட், விசா இல்லாத நைஜீரியர்கள் 'பிளாக் லிஸ்ட்'
திருப்பூர்: பாஸ்போர்ட், விசா இல்லாமல், திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த 12 பேரை, கடந்த செப்டம்பர் 27ம் தேதி  போலீசார் கைது செய்தனர்.  புழல் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். இவர்கள் 12 பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பொது (வெளிநாட்டினர்) துறை செயலர் கருப்பையாபாண்டியன் வெளியிட்டுள்ள உத்தரவு: காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுத்து 12 பேரையும், நைஜீரிய நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.  12 பேரின் பெயர்களையும் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
285
1/11/2011 4:54:45 PM
மாவட்ட மசாலா
திண்டிவனம் நகராட்சியில் கவுன்சிலர்கள் போராட்டம்
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் தெருக்கள் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதையடுத்து, அரசு ஒப்புதல் அளித்த 49 பணிகளுக்கு, 13&ம் தேதி டெண்டர் விடப்படுவதாக இருந்தது. ஆனால் டெண்டரை மாத கடைசியில் நடத்த நகரமன்ற தலைவர் பூபாலன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் சேகர், அப்பாஸ் மந்திரி, சுரேஷ் ஆதிலட்சுமி,  விமலா மணிமாறன் ஆகியோர் நேற்று மாலை 6 மணி அளவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், அவர்களை சமாதானப்படுத்தினர்.
286
1/11/2011 4:57:13 PM
தலையங்கம்
விமானத்தை நிறுத்திய எலி
ரயிலிலும், பஸ்சிலும் எலித் தொல்லை பார்த்திருக்கிறோம். பல நேரங்களில் அனுபவித்தும் இருப்போம். இப்போது விமானங்களிலும் எலித் தொல்லை ஆரம்பித்து விட்டது. புறப்படும் நேரத்தில் கேபினுக்குள் எலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், துபாயிலிருந்து டெல்லி வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.எப்போதும் பரபரப்பாக இருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 120 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்து விட்டனர். அப்போது விமானத்துக்குள் எலி ஒன்று இங்கும் அங்கும் சுற்றித் திரிவதை விமான ஊழியர் பார்த்து விட்டார். உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் பரவியதும் விமானம் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். எலியை பிடிக்க ஊழியர்கள் களத்தில் இறங்கினர். எங்கு தேடியும் எலி கிடைக்கவில்லை. இதனால் ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விமானத்துக்குள் எலி இருப்பது தெரிய வந்தால், விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. மின் வயர்களை எலி கடித்து சேதப்படுத்தியுள்ளதா என்பதை டெக்னீசியன்கள் சோதிக்க வேண்டும். எலியை உயிருடன் பிடிக்க முடியவில்லை என்றால், விமானத்துக்குள் மயக்க மருந்து புகை செலுத்தி எலியை பிடிக்க வேண்டும். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருக்கும்போது, முக்கியமான வயரை எலி கடித்துவிட்டால், அனைவரின்  உயிருக்கும் ஆபத்து என்பதால், எலியைப் பொறுத்தவரை கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விமானத்தின் மின் வயர்களை எலி கடித்து சேதப்படுத்தவில்லை என்பதையும், விமானத்தில் எலி இல்லை என்பதையும் 100 சதவீதம் உறுதி செய்தபிறகே விமானம் கிளம்ப அனுமதி அளிக்கப்படும். விமானத்தில் பரிமாறப்படும் சிக்கன், மட்டன் உணவுகளின் வாசனையை முகர்ந்தபடி, உணவு வேன்களில் இருக்கும் எலிகள், அந்த உணவுகள் விமானத்தில் ஏற்றப்படும்போது, விமானத்துக்குள் புகுந்து விடுகின்றன. கண்ணில் பட்ட வயர்களை எல்லாம் கடித்து விடும் என்பதால் எலி புகுந¢தாலே ஊழியர்களுக்கு கிலி பிடித்துவிடும். எலி சின்னதுதான். ஆனால் அதனால் விமானமே விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதால் எலியைக் கொல்லாமல் விமானத்தை எடுக்க மாட்டார்கள்.கடந்தாண்டு பிப்ரவரியில் ரியாத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. எலி சிறியதுதான். ஆனால் பெரிய விமானத்தையே நிறுத்திவிடுகிறது.
287
1/11/2011 5:01:11 PM
தமிழகம்
நீரிழிவு நோய்க்கு மருந்து கருத்தரங்கில் வலியுறுத்தல்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் இயற்கை பொருள்கள் மற்றும் உயிர் மருத்துவ தொழில்நுட்பம் என்ற தலைப்பில் சர்வேதேச கருத்தரங்கு நேற்று நடந்தது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:நமது ஆராய்ச்சிகள் எல்லாம் பரிசோதனை மையங்களிலேயே இருக்கிறது. மக்களிடம் எடுத்து செல்ல நடவடிக்கை தேவை. இந்தியாவை பொறுத்தவரை புற்றுநோய், இதயநோய், நீரிழிவுநோய் ஆகியவைதான் அதிகளவில் மக்களை பாதித்து உள்ளது. குறிப்பாக நீரிழிவு நோய் மக்களிடம் அதிகளவு இருக்கிறது. இது குறித்த உணவு கட்டுப்பாடும், விழிப்புணர்வும் மக்களிடையே இல்லை. இந்த நோய்களை கட்டுப்படுத்த உயிர் வேதியியல் துறையில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். உயிர்வேதியியல் துறைக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு நாராயணசாமி பேசினார். புதுடெல்லி தேசிய மூலிகைக்கழக ஆலோசகர் லவேக்கர், அறிவியியல் புல முதல்வர் பேராசிரியர் சண்முகம், கடல்வாழ் உயிரியியல் புல முதல்வர் பேராசிரியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பேசினர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 25 விஞ்ஞானிகளும், பிற மாநிலங்களில் இருந்து  50க்கு அதிகமான விஞ்ஞானிகளும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
288
1/11/2011 5:04:52 PM
குற்றம்
மில் தொழிலாளி வெட்டிக்கொலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பாளையம்புதூர் வண்டிக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (35). தனியார் மில் தொழிலாளி. வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை பாளையம்புதூர்&குட்டூர் சாலையில் உள்ள அரசு பள்ளி பின்புறம் கோவிந்தசாமி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கோவிந்தசாமி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து வந்து சடலத்தை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இவரை முன்விரோதத்தில் யாரேனும் கொலை செய்தனரா? அல்லது சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
289
1/11/2011 5:11:00 PM
குற்றம்
கழுத்தை அறுத்து பெண் கொலை
கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ளது அய்யனாரூத்து கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுப்பையா(53).  இவரது மனைவி சந்தனம்(47). இவர்களது மகள் பால்மணி (23) மகன் பாண்டி(17). பால்மணிக்கு திருமணம் ஆகி மும்பையில் வசிக்கிறார். பாண்டி மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். பால்மணியின் மகள் ராஜேஸ்வரி (4), பாட்டி வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பால்மணி தனது மற்ற இரண்டு குழந்தைகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு அய்யனாரூத்துக்கு வந்தார். வீட்டிற்குச் சென்றதும் வராண்டாவில் தனது தாய் சந்தனம் கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பக்கத்தில் குழந்தை ராஜேஸ்வரி அழுது கொண்டிருந்தாள். அவளிடம் என்ன நடந்தது என்று பால்மணி கேட்டபோது,  ‘‘பாட்டியை, தாத்தாதான் வெட்டி கொன்றார்‘‘ என்றாள். இதற்குள் அக்கம்பக்கத்தவர் அங்கு கூடினர்.  கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்  விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுப்பையாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. மேலும், மனைவி நடத்தையிலும் சந்தேகப்பட்டு அடித்து உதைத்துள்ளார். இன்று அதிகாலை, பேத்தி ராஜேஸ்வரியுடன் சந்தனம்  வீட்டின் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுப்பையா கத்தியை எடுத்து அவரை குத்த முயன்றுள்ளார்.  சந்தனம் எழுந்து வராண்டாவுக்கு ஓடியுள்ளார். அவரை விரட்டிச் சென்ற சுப்பையா, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து ஓடிவிட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் சுப்பையாவை தேடிவருகின்றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
290
1/11/2011 5:12:45 PM
குற்றம்
நக்சல் வேட்டையில் பகீர் : முன்னாள் எம்எல்ஏ மகன் கைத்துப்பாக்கியுடன் கைது
தேனி: மதுரை மாவட்டம் பேரையூர் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர் (49). சேடப்பட்டி தொகுதி முன்னாள் பார்வர்ட் பிளாக் எம்எல்ஏ தவமணியின் மகன். இவர் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பேச்சியம்மன் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மயிலாடும்பாறை சென்று மது அருந்தி விட்டு தடுமாறியபடி வந்தார். அப்போது அப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஆண்டவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை போலீசார் சோதனை செய்தனர். ஆண்டவரின்  இடுப்பில் லைசென்ஸ் இல்லாத கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் பரபரப்படைந்த மயிலாடும்பாறை போலீசார், கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து ஆண்டவரை கைது செய்தனர். அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
291
1/11/2011 5:15:40 PM
குற்றம்
லஞ்ச வழக்கில் தொடர்பு அரசு ஊழியர் சஸ்பெண்ட் ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
மதுரை: திருச்சி மாநகராட்சியில்,  வருவாய் உதவியாளராக பணி புரிந்தவர் பாலசுப்பிரமணியம். லஞ்ச வழக்கில் சிக்கியதால் இவரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட கோரி பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை, தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து அவர், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இதனால், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்பதற்கு மனுதாரருக்கு உரிமை இல்லை. ஊழல் வழக்குகளை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மனுதாரர் மீதான கிரிமினல் வழக்கை திருச்சி கோர்ட் 2011 ஜூன் மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
292
1/11/2011 5:23:47 PM
தமிழகம்
பொங்கல் விடுமுறை நாட்களில் தியேட்டர்களில் 5 காட்சிகள்
சென்னை: பொங்கல் விடுமுறை நாட்களில் தியேட்டர்களில் கூடுதலாக காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு திரையங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் பொங்கல் விடுமுறையில் கூடுதலாக ஒரு காட்சி நடத்திட தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனவே வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை கூடுதலாக 5வது காட்சியை தியேட்டர்களில் நடத்திக் கொள்ளலாம். நடமாடும் திரையரங்குகளுக்கு 15 முதல் 17ம் தேதி வரை காலை காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதிய காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
293
1/11/2011 5:27:17 PM
தமிழகம்
நந்தம்பாக்கத்தில் வி. சிறுத்தைகள் பொதுக்கூட்டம்
ஆலந்தூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நந்தம்பாக்கம் பேரூர் கிளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன் தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு நிதி செயலாளர் மறைஆதவன், ஒருங்கிணைப்பாளர் முத்துப் பாண்டியன், நகர செயலாளர் ரகுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, 100 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் உதவிகளை வழங்கினார். பர்மா சங்கர் தலைமையில், 400 பேர் பிறகட்சிகளில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவன் முன்னிலையில் இணைந்தனர். மாநில நிர்வாகி தகடூர் தமிழ் செல்வன், வெற்றிச்செல்வன், பாபுவிழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
294
1/11/2011 5:29:28 PM
தமிழகம்
திருப்பதி லட்டு டோக்கனில் ‘பார் கோடிங்’ பதிப்பு
திருப்பதி: போலிகளை தடுக்க திருப்பதி லட்டு டோக்கனில் ‘பார் கோடிங்’ பதிய தேவஸ்தானம்  நடவடிக்கை எடுத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே போலி லட்டு டோக்கன் விற்பனை செய்த, திருப்பதியை சேர்ந்த கான்ட்ராக்ட் ஊழியர் நாகராஜ் என்பவரை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். இவ்வாறு போலி லட்டு டோக்கன் விற்பனை தடுப்பது தொடர்பாக தேவஸ்தான துணை தலைமை செயல் அதிகாரி பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது :திருமலை திருப்பதியில் போலி லட்டு டோக்கன் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. எனவே கவுன்டர்களில் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து டோக்கன்களை தீவிரமாக சரிபார்த்த பின்னரே லட்டுகள் வழங்கப்படும். ரூ.20 கட்டணம் மூலம் கவுன்டர்களில் கணினி மூலம் வழங்கப்படும் டோக்கன்களுக்கு ‘பார் கோடிங்‘ வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் போலி லட்டு டோக்கன் என்ற பேச்சுக்கே திருமலையில் இடம் இருக்காது. இவ்வாறு பாஸ்கர் கூறினார்.
295
1/11/2011 5:32:54 PM
தமிழகம்
எலியால் அலறிய வங்கி அலாரம்
ஆவடி: அம்பத்தூர் சிடிஎச் சாலையில் உள்ள வரதராஜபுரத்தில் கனரா வங்கி உள்ளது. நேற்று மாலை வங்கி பூட்டப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு வங்கியில் உள்ள அலாரம் ஒலித்தது. தொடர்ந்து அலாரம் அலறிக் கொண்டு இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள், சத்தம் கேட்டு எழுந்தனர். உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இரவு ரோந்தில் இருந்த எஸ்ஐ புவனேஸ்வரி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தார். போலீசார் கொடுத்த தகவல்படி, வங்கி மேலாளர் தாமோதரனும் வந்தார். வங்கி திறக்கப்பட்டது.உள்ளே சென்று பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள அலாரத்தின் வயரை எலி கடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வயர் சரிப்படுத்தப்பட்டு, அலாரத்தின் சத்தம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பதற்றம் காணப்பட்டது. சந்தேகத்தின் பேரில் இது குறித்து விசாரணையும் நடத்தப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.
296
1/11/2011 5:34:54 PM
தமிழகம்
சாக்கடை சுத்தம் செய்ய ஆட்களை பயன்படுத்த கூடாது
ஆவடி: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை குழிகளில் ஆட்களை இறங்கி சுத்தம் செய்வதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் அம்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் கேஎன்.சேகர் தலைமை வகித்தார். ஆணையர் மகேஸ்வரி, இன்ஜினியர் ரவி முன்னிலை வகித்தனர். இதில், குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை குழிகளில் ஆட்களை இறங்கி சுத்தம் செய்வதால் அவர்களுக்கு பல வகையில் ஆபத்துகள் ஏற்படுகிறது. மனித உயிரை காக்கும் பொருட்டும் கழிவுநீர் திட்டம் நல்ல முறையில் செயல்படும் வகையிலும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், இதர திடப்பொருட்களை கழிவுநீர் குழாயில் விடாமல் தடுக்க வேண்டும். அம்பத்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், செப்டிக் டேங்க் ஆகியவற்றில் ஆட்களை இறக்கி சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். கழிவுகளை அள்ளுவதற்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். இதற்கான இயந்திரம் நகராட்சியில் கிடைக்கும். எனவே, மனித உயிரை காப்பாற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
297
1/11/2011 5:36:43 PM
தமிழகம்
தாம்பரம் பாலத்தை சீரமைக்க கோரிக்கை
தாம்பரம்: சென்னையில் இருந்து மேற்கு தாம்பரம் காந்தி சாலை வழியாக காஞ்சிபுரம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு வாகனங்கள் சென்று, வருகின்றன. தாம்பரம் பஸ் நிலையம் வரும் மாநகர பஸ்களும் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றன.காந்தி சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. காந்தி சாலை&ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் உள்ள சிறுபாலமும் மிகவும் குறுகலாக உள்ளது. போக்குவரத்து நெரிசலால் பாலத்துக்குள் பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சிறுபாலத்தை சீரமைத்து, சாலையை அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
298
1/11/2011 5:38:56 PM
தமிழகம்
பஸ் வசதி திடீர் குறைப்பு: மக்கள் அவதி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சுற்றி நிறைய கம்பெனிகள் உள்ளது. கிராம மக்கள் தினமும் இங்கு வேலைக்கு செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி, ஆரணி ஆகிய பகுதிகளுக்கு ஊத்துக்கோட்டை, பொன்னேரி பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சில தனியார் பஸ்களும் இந்த வழித்தடத்தில் வந்து செல்லும். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கரடிபுத்தூர், முக்கரம்பாக்கம், எருக்குவாய், ஏடூர், கண்ணம்பாக்கம், உள்பட பல்வேறு கிராம மக்கள் வேலைக்கு செல்லவும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் வசதியாக இருந்தது. கடந்த சில மாதங்களாக திடீரென்று அரசு பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. பல ஆண்டுகளாக இயங்கிவந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம்  தெரியவில்லை.இதனால் பர்மிட் இல்லாத வெளிமாவட்ட ஆட்டோக்கள், வேன்கள், ஷேர் ஆட்டோக்களின் ஆதிக்கம் அதிகமானது. புதுவாயல் முதல் கும்மிடிப்பூண்டி வரை தட்சூர் கூட்டு சாலை முதல் பெரியபாளையம் வரை, பெரியபாளையம் முதல் தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, கும்மிடிப்பூண்டி முதல் ஆரம்பாக்கம் சாலை வரை உள்ள வழித்தடங்களில் பெர்மிட் இல்லாத வாகனங்கள் இயக்கப்படுகிறது.இந்த வாகனங்களில் அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பயணிகளிடம் அளவுக்கு மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவசர கோலத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். கும்மிடிப்பூண்டி ஆரணி பகுதியில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து வந்த தடம் எண் 131பி, 131ஏ ஆகிய பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஷேர் ஆட்டோக்கள், வேன்களை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
299
1/11/2011 5:44:12 PM
தமிழகம்
புறநகர் மின்சார ரயில்களில் சிறு வியாபாரிகள் தொல்லை
ஆவடி: சென்னை சென்ட்ரலில் இருந்து வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் வழியாக அரக்கோணத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.ரயில் பயணத்தில் சுகமான அனுபவங்களை பெற்று வரும் பயணிகளுக்கு, இப்போது சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் சுமையான பயணமாக மாறி வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் மின்சார ரயில்களில் காலை, மாலை வேளைகளில் நிற்க முடியாத அளவுக்கு பெரியவர் முதல் சிறுவர் வரை பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் நிற்க முடியாமல் கஷ்டப்படும் நிலையில் சிறு வியாபாரிகள், பூ, பழம், சம்சா, வேர்க்கடலை போன்ற பல பொருட்களை புகுந்து, புகுந்து விற்பனை செய்கின்றனர்.பயணிகள் அமரவே இடமில்லாத நிலையில் இவர்களின் மூட்டைகள் மற்றும் கூடைகளை வைப்பதற்காக, பயணிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இவர்கள் ஒரு பெட்டியிலிருந்து மறு பெட்டிக்கு மாறிச் சென்று வரும்போதெல்லாம் நெரிசலில் நிற்கும் பயணிகளை வழிவிடச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர்.எனவே ரயில்வே நிர்வாகம் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் ரயில்களை இயக்கவேண்டும், ஓசி பயணம் செய்வதோடு, சிறு வியாபாரிகள் என்ற போர்வையில் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
300
1/12/2011 11:53:42 AM
சினிமா(ரீல்மா)
கவர்ச்சி, ஹோம்லி கவலை இல்லை : தன்ஷிகா பேட்டி!
நடிகை தன்ஷிகா கூறியது: ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை' படத்தில் போல்டான வேடம். நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘மாஞ்சா வேலு'வில் 'பேராண்மை'யுடன் ஒப்பிடும்போது முற்றிலும் எதிர்மாறான கேரக்டர். ‘நில் கவனி செல்லாதே' படத்தில் மாடர்ன் பெண் வேடம். இப்படத்தை மீண்டும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்கின்றனர். அடுத்து வசந்தபாலன் இயக்கும் ‘அரவான்Õ படத்தில் நடிக்கிறேன். வரலாற்று பின்னணியில் அமைந்த படம். கிராமத்து பெண்ணாக நடிக் கிறேன். அந்த காலத்தில் பெண்கள் ஜாக்கெட் அணிவதில்லை. எனது வேடமும் அப்படித்தான் காட்டப்படுகிறது. படம் முழுக்க ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். ஆனாலும் கவர்ச்சி இருக்காது. வந்தோம், போனோம் என்றில்லாமல் மனதில் பதியும் வேடங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறேன். கவர்ச்சியா, கவர்ச்சி இல்லாத வேடமா என்று பார்ப்பதில்லை. இதுதான் என் பாலிசி.
301
1/12/2011 11:57:23 AM
சினிமா(ரீல்மா)
கேமராவை மறைத்து வைத்து நடந்த ஷூட்டிங்
‘வெப்பம்Õ படம் பற்றி இயக்குனர் அஞ்சனா கூறியது: தாயை இழந்து தந்தையால் வெறுக்கப்பட்ட மகன்கள் வறுமையில் வாடுகின்றனர். சிரமத்திலும் தம்பியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறான் அண்ணன். இவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொல்கிறது படம். நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் அசோசியேட் நான். அவரது படங்கள் எப்படி யதார்த்தமாக இருக்குமோ, அதே யதார்த்தம் இதிலும் இருக்கும். காட்சிகளை சொல்வதைவிட படமாக்கப்பட்ட விதம் வித்தியாசமானது. பல காட்சிகள் இயற்கை ஒளியிலேயே படமாக்கப்பட்டது. சென்னையிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் படக் காட்சிகள் செட் போடாமல் யதார்த்தமான லொகேஷனிலேயே படமானது. மயிலாப்பூர் லஸ் மார்க்கெட், பாண்டி பஜார் போன்ற இடங்களில் கேமராவை மறைத்து வைத்து, ஷூட்டிங் நடக்கிறது என்பது வெளியில் தெரியாமலேயே மக்கள் அதிகமாக கூடிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர்கள் என்று தெரியாமலே அவர்களுடன் மக்கள் பேசிய காட்சிகளும் படமாக்கப்பட்டன. 5 பாடல்கள் உள்பட முழுபடமும் 46 நாட்களில் நடந்து முடிந்தது.
302
1/12/2011 12:00:12 PM
சினிமா(ரீல்மா)
2 ஹீரோயின் கதை நடிகை புது முடிவு
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...சில நாட்களுக்கு முன்பு, இனிஷியலுக்கு பெயர் மாறிய நடிகரு எங்கே இருக்கிறாருன்னு இன்டஸ்ட்ரிகாரங்க தேடினாங்களாம்... தேடினாங்களாம்... நடிகரு பற்றி எந்த தகவலும் இல்லையாம். யாருக்கும் சொல்லாமல் சீனாவுக்கு ரகசிய பயணம் போயிட்டு வந்தாராம்... வந்தாராம்... காரணம் கேட¢டப்போ, அடுத்த படத்துக்கு  லொகேஷனை பார்க்கப் போனேன்னு நடிகரு சொல¢றாராம்... சொல்றாராம்...மில்க் இயக்குனரு பட ஷூட்டிங் முடியாம இழுத்துட்டே போகுதாம்... போகுதாம்... எப்போ முடியும்னு நடிகர், நடிகைங்க ஆவலோடு காத்திருக்காங்களாம். சண்டக்கோழி நடிகரு அடுத்த படத்துக்கு போக முடியாததால வருத்தமாம். அந்த படம் தள்ளிப்போறதால, அதை இயக்கப்போற டான்ஸ் மாஸ்டரான டைரக்டரும் கடுப்பா இருக்கிறாராம்... இருக்கிறாராம்...ஆயுத படத்துல ஹன்சி நடிகைக்கு முக்கியத்துவம்னு வெளியில டாக் பரவியிருக்காம்... பரவியிருக்காம்... இதனால அந்த படத்துல நடிக்கிற ஜெனி நடிகை, அப்செட்டா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... இனிமே ரெண்டு ஹீரோயின் கதை படத்துல நடிக்க மாட்டேன்னு நெருங்கியவங¢ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...
303
1/12/2011 12:11:51 PM
சினிமா(ரீல்மா)
கிளிப்பிங்ஸ்
‘பயணம்’ படத்தின் டிரெய்லர் ஜன.14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.'வீட்டில் புத்தக அலமாரிகள் நிரம்பி வழிகின்றன. விரைவில் புத்தக கண்காட்சிக்கு சென்று மேலும் சில புத்தகங்களை வாங்க உள்ளேன்' என்கிறார் நாசர்.'த்ரி ரோஸஸ்' மலையாள படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் சந்தியா.தெலுங்கில் நானி ஜோடியாக நடிக்கிறார் சினேகா உல்லால். தமிழில் 'வானம்' படத்தில் நடித்து வருகிறார்.'தேவதாசியின் கதை' படத்தில் 'துரோகம் நடந்தது என்ன' ஸ்வேதா கிளாமர் வேடத்தில் நடித்துள்ளார்.சித்தார்த் நடித்துள்ள '180' த்ரில் பட ஷூட்டிங், 80 சதவீதம் முடிந்துவிட்டது.Ôஅரவான்Õ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இந்தி நடிகர் கபீர் பேடி.'அனகனகா ஓ தீருடு' தெலுங்கு பட ரிலீசை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறுகிறார் ஸ்ருதி கமல்ஹாசன். இப்படத்தை தமிழிலும் டப் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
304
1/12/2011 3:42:39 PM
தமிழகம்
இறந்த மாணவருக்கு நஷ்டஈடு கேட்டு செங்கல்பட்டு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு, - லாரி மோதி இறந்த மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஆத்தூர் பட்டம்மாள் அழகேசன் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலையில் இன்று காலை மறியல் செய்தனர். செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் பட்டம்மாள் அழகேசன் கலைக்கல்லூரி உள்ளது. இதில் படிக்கும் மாணவர்கள் சரவணன், நவீன்குமார், நாராயணன் ஆகியோர் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து பைக்கில் வந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் சென்ற லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணன் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற இரண்டு மாணவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்த மாணவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், இன்று காலை மாணவ, மாணவிகள் வந்தனர். வகுப்புகளுக்கு செல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலையில் அமர்ந்தனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்து, தாசில்தார் வில்வம், இன்ஸ்பெக்டர்கள் குமரன், கோகுல்ராஜன் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘கல்லூரி முன்பும் ஆத்தூர் பஸ் ஸ்டாப்பு முன்பும் வேகத்தடை அமைக்கவேண்டும். இறந்த மாணவர் குடும்பத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்’ என்று கூறி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களுடனும் கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
305
1/12/2011 3:43:06 PM
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் அதிக இடங்களை திமுக கைப்பற்றியது
சென்னை, - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 காலியிடங்கள் இருந்தன. இதற்காக 1,053 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 41 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 321 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 67 இடங்களுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 319 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள 137 காலி இடங்களில் மொத்தம் 372 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில், மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஊரக உள்ளாட்சிகளில் 89 மையங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 22 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 10 மணி நிலவரப்படி 52 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 2 மாநகராட்சி வார்டுகளில் திமுகவினரும், ஈரோடு மாநகராட்சி வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். நகராட்சி வார்டில் 2ல் திமுகவினரும், 1 சுயேச்சையும் வெற்றி பெற்றனர். 3ம் நிலை நகராட்சியில் திமுக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும், டவுன் பஞ்சாயத்தில் 18 இடங்களில் திமுகவினரும், 10 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
306
1/12/2011 3:43:34 PM
தமிழகம்
வெடிகுண்டு பீதி மர்ம சூட்கேசால் ஏர்போர்ட்டில் பரபரப்பு
மீனம்பாக்கம், - மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய போர்டிகோவில் நேற்று நள்ளிரவு 11.40 மணிக்கு ஒரு சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சூட்கேஸ் குறித்து ஒலி பெருக்கியில் தகவல் கொடுத்தனர். ஆனால் யாரும் சூட்கேசுக்கு உரிமை கொண்டாடி வரவில்லை. இதனால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அந்த பகுதி, போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. பயணிகள் செல்ல அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டன. பின் சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில், பழைய துணிகள் மட்டுமே இருந்தது. பயணிகளில் ஒருவர், சூட்கேசை தவறவிட்டு சென்றுள்ளது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
307
1/12/2011 3:43:57 PM
தமிழகம்
பரங்கிமலையில் சுகாதாரமற்ற கழிவறையால் நோய் பரவும் அபாயம்
ஆலந்தூர், - பரங்கிமலை நசரத்புரம் லட்சுமியம்மன் கோயில் தெருவில் கன்டோன்மென்ட் போர்டு சார்பில் அமைக்கப்பட்ட கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் சுகாதாரமற்று மோசமான நிலையில் உள்ளது. இங்குள்ள கழிவுநீர்தொட்டி நிரம்பி கால்வாய் வழியாக கழிவுகள் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவறையின் வெளிப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் குப்பை நிரம்பி வழிகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வழியாக செல்பவர்கள் மூக்கைப் பிடித்தபடி ஓடுகின்றனர்.  இதுகுறித்து வார்டு கவுன்சிலர் ரவி கூறுகையில், ‘‘கழிவுநீர் கொண்டு செல்லப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன். இன்னும் 2 நாட்களில் சரி செய்யப்பட்டு விடும்’’ என்றார். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களாகவே இந்த நிலைதான் உள்ளது. மேலும் இந்த கழிவறையை இடித்துவிட்டு புது கழிப்பிடம் கட்டித் தரும்படி கன்டோன்மென்ட் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த கழிவறையை சுத்தப்படுத்தியாவது சுற்றுப்புற சுகாதாரத்தை காக்க வேண்டும்’’ என்றனர்.
308
1/12/2011 3:44:30 PM
தமிழகம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது எம்எல்ஏ புகார்
செங்கல்பட்டு, - செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு வந்தவாசி திமுக எம்எல்ஏ கமலக்கண்ணனின் மைத்துனி கலைவாணியை கடந்த 7ம் தேதி சேர்த்தனர். மறுநாள் குழந்தை பிறந்தது. இதையடுத்து பெட் வசதி இல்லை எனக் கூறி, தாயையும் குழந்தையையும் தரையில் படுக்க வைத்தனர். பெட் வசதி கேட்டதற்கு, கமலக்கண்ணனின் மனைவியை ஊழியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதை அறிந்து கமலக்கண்ணன் மருத்துவமனைக்கு வந்தார். ஊழியர்களிடம் அவர் விசாரித்தபோது, ‘இங்கு இப்படித்தான் இருக்கும். வசதியாக இருக்க வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள். எதற்காக இங்கு வந்தீர்கள்Õ என ஊழியர்கள் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து மைத்துனியையும் குழந்தையையும் தனியார் மருத்துவமனையில் கமலக்கண்ணன் சேர்த்தார். இது பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் ஆகியோரிடம் கமலக்கண்ணன் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. குடும்ப நல துணை இயக்குனர் விசாரித்தார். கண்காணிப்பாளர் ஜெகநாதன், 7ம் தேதி பணியில் இருந்த துறைத்தலைவர் டாக்டர் சந்திரா மற்றும் செவிலியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். கலைவாணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்ப நல துணை இயக்குனர் தெரிவித்தார்.
309
1/12/2011 3:44:53 PM
தமிழகம்
கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் வசதி
கும்மிடிப்பூண்டி, - கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் புனிதவள்ளி வெங்கடாசலபதி தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அண்ணாசிலையை சேதப்படுத்தியதை கண்டித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு செல்ல மக்கள், வியாபாரிகள் பஸ் வசதியின்றி கஷ்டப்படுவதாக கவுன்சிலர்கள் கூறினர். பஸ் வசதி செய்து தர வேண்டும்,  கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவனையில் கூடுதல் டாக்டர் நியமிக்கவேண்டும், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் விடுபட்ட நபர்களுக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் ஒன்றியக்குழு துணைதலைவர் துரை.கருணா நன்றி கூறினார்.
310
1/12/2011 3:45:25 PM
தமிழகம்
ஆவடி மின்வாரிய கோட்டத்தில் உடைந்த மின்கம்பங்களால் மக்கள் பீதி
ஆவடி, - ஆவடி மின்வாரிய கோட்டத்தில் ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், செங்குன்றம், புழல் ஆகிய உபகோட்டங்களும் ஆவடி, பட்டாபிராம் மற்றும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, புழல், செங்குன்றம், திருமுல்லைவாயல், அலமாதி, பாண்டேஸ்வரம், சோத்து பெரும்பேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களும் உள்ளன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சுமார் 20 முதல் 30 ஆண்டு பழமையானது. தற்போது கம்பத்தில் சிமென்ட் கான்கிரீட்  பெயர்ந்து, கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆவடி சிடிஎச் சாலையில் பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. பெரும்பாலான கம்பங்களின் மையப்பகுதி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பல இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மின்கம்பி உரசி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் கம்பியால் மக்கள் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. மேலும் ஆவடி பகுதிகளில் அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம் சப்ளையாகிறது. இதனால் டிவி, ஏசி, வாஷிங்மெஷின் உள்ளிட்டவை பழுதாகின்றன. மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘மின் இணைப்பு வாங்கும்போது குறிப்பிடும் மின்சார அளவை காட்டிலும், சிலர் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் அதிக தூரத்தில் இருக்கின்றன. சிறிய தெருவில் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளதால், அந்த இடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்க முடிவதில்லை. உடைந்த மின்கம்பங்களை மாற்ற புதிய கம்பங்கள் இல்லை. ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது என்றார். ஆவடி மின்வாரிய கோட்டத்தில் உடைந்த, உருக்குலைந்த மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
311
1/12/2011 3:46:08 PM
தமிழகம்
ஊத்துக்கோட்டையில் கூடுதல் பஸ் விட கோரிக்கை
ஊத்துக்கோட்டை, - ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளியும் உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், சூளைமேனி, பணப்பாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம், வேளகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து படிக்கிறார்கள். மேலும் மாணவர்கள் பள்ளி வரவும், பள்ளி முடிந்து வீடு திரும்பவும் கூடுதலாக பஸ் இல்லாததால் சிரமப்படுகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்லும் பஸ்சில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பஸ்சில் ஏற வழியின்றி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். ஊத்துக்கோட்டையில் மாம்பாக்கம், வேளகாபுரம் செல்லும் பஸ்சிலும் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்விடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
312
1/12/2011 3:50:07 PM
இந்தியா
சரக்கு சமாசாரங்கோ.. டாஸ்மாக்குக்கு தாத்தாதி தாத்தா
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் கலிபோர்னியா பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சியாளர் கிரிகோரி அர்ஷியன் தலைமையில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி நடந்தது. இதில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபானக் கிடங்கை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த கிடங்குதான் உலகில் மிகவும் பழமையானது. இந்த கிடங்கில் உயர்வகை மதுபானங்கள் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. இடுகாட்டை ஒட்டிய குகை போன்ற பகுதியில் மறைவான இடத்தில் இக்கிடங்கு செயல்பட்டு வந்துள்ளது. கவலையை மறக்க ஏராளமானோர் இங்கு வந்து சென்றுள்ளதற்கான அடையாளங்களும் உள்ளது. கி.மு.4000&ல் தயாரிக்கப்பட்ட திராட்சை ரசம் இங்கு வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய அகழ்வாராய்ச்சியில் இந்த இடத்தின் அருகில் 5,500 ஆண்டு பழமையான தோல் ஷூக்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
314
1/12/2011 3:52:54 PM
உலகம்
'பிரா' தானம் வாங்குது சிங்கப்பூர் வெப்சைட்
சிங்கப்பூர்: பாலி தீவு மற்றும் கம்போடியாவில் உள்ள ஏழை பெண்களுக்கு வழங்குவதற்காக, சிங்கப்பூர் வெப்சைட் நிறுவனம் ஒன்று பிராக்களை தானமாக பெற்று வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், எதிர்பார்த்ததைவிட அதிகளவில் பிராக்கள் வந்து குவிகிறதாம். பாலி தீவு மற்றும் கம்போடியாவின் குடிசை பகுதிகள் மற்றும் அனாதை இல்லங்களில் வசிக்கும் ஏழை பெண்களுக்கு இலவசமாக சப்ளை செய்ய பிராக்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள் அனுப்பலாம் என காஸிகாட் என்ற வெப்சைட் நிறுவனம் விளம்பரம் செய்தது. இதன் மூலம் ஆயிரம் பிராக்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த விளம்பரத்தை பார்த்து சிங்கப்பூர் பெண்கள் தாராள உதவி செய்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராக்கள் வந்து குவிந்தன. இவற்றில் 400 பிராக்கள் புத்தம் புதியவை.'பெண்களுக்கு உதவும் நோக்கில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது காஸிகாட் வெப்சைட்' என்கிறார் அதன் நிறுவனர் நிகோல் யீ.
315
1/12/2011 3:56:03 PM
உலகம்
பணவீக்கத்தால் உடம்பும் வீங்கும் 10 ஆண்டு சர்வே புது தகவல்
ஆக்ஸ்போர்டு: நாடு, மொழி, எல்லை வித்தியாசம் இன்றி உலகம் முழுவதும் இம்சை கொடுத்து வரும் பிரச்னை ‘உடல் பருமன்’. டயட், வாக்கிங், ஜிம், யோகா பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். பருமன் ஆகாமல் தடுக்கவும் வந்தால் கட்டுப்படுத்தவும் புதிதுபுதிதாக மருந்து, மாத்திரைகள், பெல்ட், கருவிகளும் பஞ்சமில்லாமல் வருகின்றன. ஆராய்ச்சிகளும் தாராளமாக நடக்கின்றன. தாறுமாறான உணவு, வாழ்க்கைமுறை, ஹார்மோன் குறைபாடுகள், உடற்பயிற்சி இல்லாமைதான் உடல் பருமனுக்கு முக்கிய காரணங் களாக கூறப்படுகின்றன.இந்நிலையில், வித்தியாசமாக புது காரணம் கண்டுபிடித்திருக்கின்றனர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். சும்மா வாய்க்கு வந்தபடி கூறவில்லை. 1994 முதல் 2004 வரை 11 நாடுகளில் கிடைத்த உடல் பருமன் தகவல்களை அலசி ஆராய்ந்து இத்தகவலை வெளியிட்டிருக்கின்றனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: உணவு, வாழ்க்கைமுறை மாறினாலும் உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் ஊளைச் சதை போடும் என்று காலம்காலமாக கூறுகிறார்கள். இதைவிட முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அது நாட்டின் பொருளாதாரம்.நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கின்றனர். ஏற்ற, இறக்கங்களை சந்திக்கிற பொருளாதாரமாக இருந்தால் மக்கள் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்களும் தாறுமாறாக மாறுகிறது. இது மறைமுகமாக உடல்நலனை பாதித்து உடம்பை குண்டாக்குகிறது. உலகம் முழுக்க 3ல் ஒருவர் என்ற சதவீதத்தில் இத்தகைய காரணங்களால் பருமனாக இருக்கின்றனர். பொருளாதார பிரச்னையால் விலைவாசி உயர்வு, மன அழுத்தம் ஆகியவை சேர்ந்து உடல் பருமனை ஏற்படுத்திவிடுகின்றன.
316
1/12/2011 3:57:34 PM
உலகம்
துறுதுறு, சுறுசுறு நாய் விலை ரூ. 3.25 லட்சம்
மொகாலி: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த நாய் கண்காட்சியில் உலா வந்த ஒரு நாயின் விலையை கேட்டால் சற்று அதிர்ந்து போவீர்கள்.  ரூ. 3.25 லட்ச ரூபாய். இந்த நாயுடன், உங்கள் நாயை ஜோடி சேர்க்க, எஜமானர் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 50 ஆயிரம் ரூபாய் தான்.பிட்புல் வகை நாயான ‘ஜோரோ‘வை, சண்டிகாரை சேர்ந்த அதன் எஜமானர் சிவ்கவுசல், தாய்லாந்திலிருந்து வாங்கி வந்திருக்கிறார். மொகாலி நாய்க்கண்காட்சியில், கம்பீரமாக நடை போட்ட ஜோரோ, கலப்பின நாய்களிலேயே பெஸ்ட் என்ற பட்டத்தோடு பரிசையும் தட்டிச் சென்றது. இந்திய பிட்புல் கலப்பின நாய்கள்  ரூ. 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையிலான விலையில் கிடைக்கின்றன. அதிகபட்சமாக  ரூ. 1.5 லட்சம் வரை ரேட் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கனடாவில் பிறந்து, தாய்லாந்தில் வளர்ந்த ஜோரோவின் ரேட்  ரூ. 3.25 லட்சம். துறுதுறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால் காவல் நாய்களாக பயன்படுத்த இவ்வகை நாய்கள் மிகவும் ஏற்றவை என்பதால்தான் இவ்வளவு விலையாம். ஜோரோவை பராமரிக்க, மாதம்  ரூ. 3000 செலவழிக்கிறார் சிவ் கவுசல். அதோடு அதன் உடற்பயிற்சிக்காக ஒரு பயிற்சியாளரையும் நியமித்துள்ளார். இதுபோல பல வகை நாய்களை வளர்த்து வரும் சிவ்வுக்கு, ஜோரோவை விற்பதில் எள்ளளவும் விருப்பமில்லை. ரேஸ்களிலும், சண்டைக்கும் பயன்படுத்திவிடுவார்கள் என்று எண்ணுகிறார். ஆனால் பிட்புல் வகை பெண் நாய்களுடன், ஜோரோவை ‘ஜோடி‘ சேர்க்க அனுமதிக்கிறார். இதற்காக  வசூலிக்கும் தொகை, ரூ. 50 ஆயிரம்.
317
1/12/2011 3:58:52 PM
இந்தியா
நாடாளுமன்ற கமிட்டி முன்பு முப்படை தளபதிகள் ஆஜர்
புதுடெல்லி: ராணுவ வீரர்களுக்கான ரேஷன் பொருட்கள், கேன்டீன்களில் வினியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முப்படை தளபதிகள் இன்று நாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், கேன்டீன்களில் வழங்கப்படும் உணவு ஆகியவை கான்ட்ராக்டர்கள் மூலம் ராணுவத்துக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதில் பெரும் முறைகேடு நடப்பதாக கடந்த 2009ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு அதிகாரி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். வழக்கம்போல், இந்த அறிக்கை நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு முப்படை தளபதிகளுக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ‘பொது கணக்கு குழு முன்பு ஆஜராவதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என நேற்று முன்தினம் ராணுவ தளபதி வி.கே.சிங் பேட்டியளித்தார். இதன்படி இன்று ராணுவ தளபதி வி.கே.சிங், விமானப்படை தளபதி பி.வி.நாயக் ஆகியோர் நேரில் ஆஜராகிறார்கள். கடற்படை தளபதி நிர்மல் வர்மா இந்தோனேஷியா சென்றிருப்பதால் அவருக்கு பதிலாக துணை தளபதி டி.கே.தீவான் நேரில் ஆஜராகிறார். இதற்கு முன்பு எந்தவொரு நாடாளுமன்ற கமிட்டி விசாரணைக்கும் முப்படை தளபதிகள் ஆஜரானதில்லை. அவர்களுக்கு பதிலாக துணை தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சக செயலரும்தான் ஆஜராவார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பீடு குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குளிர்கால கூட்டத்தொடரை முடக்கியது போல் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்தவிட மாட்டோம் என எச்சரித்துள்ளன. பொது கணக்கு குழுவிற்கும் ஏராளமான அதிகாரங்கள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் முப்படை தளபதிகளை நேரில் ஆஜராக மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
318
1/12/2011 4:00:43 PM
இந்தியா
110 ஆண்டுக்கு பிறகு அதிசயம் தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு
கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது.‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேரள மாநிலம் கொச்சி அருகே வங்கக்கடலில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அழிந்து விட்டதாக கருதப்படும் ஒருவகை வவ்வால் மீன், கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை தற்போதும் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த உயிரினங்கள் ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை. 116 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது: உலகின் பல பகுதிகளிலும் வவ்வால் மீன்களில் 9 வகைகள் இருக்கின்றன. இதில் 4 வகை இந்தியாவில் உள்ளவை. இவை கடல் பாசி, நுண்ணிய கடல்வாழ் புழுக்கள், மிகச்சிறிய மீன்களை உணவாக கொள்பவை. இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், செங்கடல் மற்றும் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தைவான், சீனாவை ஒட்டி அதிகம் காணப்படுகின்றன.மன்னார் வளைகுடாவில் அதிகம் இருப்பவை கத்தி மீன். வெள்ளி நிறத்தில் தட்டையாக இருக்கும். பெரும்பாலும் பவளப்பாறை, அதிக சேற்றுப்பகுதியில் உயிர் வாழும். மீன்களைப் போல் நீந்தாமல், செங்குத்தாக நீந்தும். இவற்றை சாப்பிட முடியாது. அழகுக்காக வளர்க்கப்படுபவை. கடைசியாக 1898-ல் அந்தமான் கடல் பகுதியில் பிடிக்கப்ட்டது. இன்னொரு அரிய உயிரினம் தவளை நண்டு. தவளை மற்றும் நண்டின் கலப்புத் தோற்றம் கொண்டது. இதில் 11 வகைகள் உள்ளன. அவற்றில் 3  வகை இந்தியாவில் காணப்பட்டவை. தொடர்ந்து நடந்து வரும் ஆராய்ச்சியில் மேலும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
319
1/12/2011 4:01:51 PM
தமிழகம்
பாதுகாப்பு படை போலீசுக்கு எதிராக சென்னை விமானநிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மீனம்பாக்கம். - சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் ரீட்டா (28)  பணியில் இருந்தார். அப்போது விமான நிலைய ஊழியர் மல்லிகா (35), விமான நிலையத்துக்கு உள்ளே போக வந்தார். நுழைவாயிலில் பணியில் இருந்த ரீட்டா, மல்லிகாவிடம் பாஸ் எங்கே? என கேட்டாராம். கோபம் அடைந்த மல்லிகா, “நான் இங்கு பல ஆண்டுகளாக பணியில் இருக்கிறேன். தினமும் என்னை நீங்கள் பார்க்கிறீர்கள். பாஸ் கேட்டு என் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் என சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மல்லிகாவுக்கு ஆதரவாக விமான நிலைய ஊழியர்கள் திரண்டனர். ரீட்டாவுக்கு ஆதரவாக மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்களுக்கு எதிராக விமான நிலைய ஊழியர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே விமான நிலைய மேலாளரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின் இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனர். விமான நிலைய ஊழியர்களின் திடீர் ஆர்ப்பாட்டத்தால் இன்று அதிகாலை அங்கு பரபரப்பு நிலவியது.
320
1/12/2011 4:05:23 PM
இந்தியா
‘ராஜினாமா செய்யத் தயார்’ ஜெகன் ஆதரவு எம்எல்ஏக்கள் அறிவிப்பு
சித்தூர்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டால், உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 பேர் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆந்திர அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டால் ஆந்திர மாநில விவசாயிகள் மற்றும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி டெல்லியில், மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பிக்கள், 21 எம்எல்ஏக்கள், பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள், தெலுங்கு தேசம் ஒரு எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தின்போது ஜெகன்மோகன் பேசுகையில், ‘கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டில் ஆந்திர விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவே டெல்லியில் போராட்டம் நடத்தினோம். வரும் 2014ம் ஆண்டு வரை ஆந்திர அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படுத்த விரும்பவில்லை‘ என்றார். இரவு 9 மணிக்கு பிறகும் உண்ணாவிரதம் தொடர்ந்ததால், அனுமதித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் உண்ணாவிரதம் இருந்ததாக ஜெகன்மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நள்ளிரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஜெகன்மோகனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரும் கூட்டாக டெல்லியில் நேற்று நள்ளிரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நாங்கள் அனைவரும் மக்கள் பிரச்னைக்காகத்தான் போராட வந்தோம். எங்களை போன்று பிற கட்சி எம்எல்ஏக்களும்  கலந்துகொண்டனர். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எங்கள் மீது வீண்பழி சுமத்த காங்கிரசார் சிலர் முயற்சிக்கின்றனர். எனவே, காங்கிரஸ் மேலிடம் எங்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். இதற்காக கவலைப்படமாட்டோம். ராஜினாமா செய்யும்படி ஜெகன் எங்களிடம் கூறினால் அடுத்த நிமிடமே நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனால் ஜெகன் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அரசை கவிழ்த்து விடுவார்களோ என ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜெகனின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட 2 எம்பிக்கள், 21 எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.     ஜெகனின் உண்ணாவிரத போராட்டம் குறித்து ஐதராபாத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரவீந்திரா ரெட்டி கூறுகையில், ‘யாருடைய தயவை நம்பியும் ஆந்திர அரசு இல்லை. சோனியாகாந்தி மற்றும் காங்கிரசாரின் தயவால்தான் ஜெகன் எம்பியானார் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. ஜெகனுக்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கட்டும். எம்எல்ஏக்களை மிரட்டி தன்பக்கம் இழுத்துகொண்டு ஜெகன் செய்துவரும்  பிளாக்மெயில் அரசியல், பல நாட்களுக்கு நீடிக்காது' என்றார்.
321
1/12/2011 4:06:18 PM
தமிழகம்
பஸ் வராததால் ஆத்திரம் திருவள்ளூர் பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல்
திருவள்ளூர், - பஸ் வராததை கண்டித்து, திருவள்ளூர் பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் பஸ்நிலையத்தில் இருந்து பட்டரைபெரும்புதூர், திருவாலங்காடு கூட்டு சாலை, திருவாலங்காடு வழியாக அரக்கோணத்துக்கு அரசு பஸ் (எண் 105) இயக்கப்படுகிறது. நேற்று மாலை திருவாலங்காடு, அரக்கோணம் செல்லும் பயணிகள் திருவள்ளூர் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர். மாலை 4.15 மணிக்கு வரவேண்டிய பஸ் வரவில்லை. இதைத்தொடர்ந்து மாலை 5.20 மற்றும் 6.15 மற்றும் இரவு 7.30 மணிக்கு வரவேண்டிய பஸ்களும் வராததால் பயணிகள் கால்கடுக்க காத்திருந்தனர். நேரக் காப்பாளரிடம் சென்று கேட்ட போது, அவர் சரியான பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் இரவு 8 மணியளவில் திருவள்ளூர் பஸ்நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். பஸ்நிலையம் நுழைவு வாயில் முன்பு  உள்ள சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திருவள்ளூர் வந்த பஸ்கள் பஸ்நிலையத்திற்குள் செல்ல வழியின்றி நிறுத்தப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டிஎஸ்பி பாரதி, இன்ஸ்பெக்டர்கள் தயாளன், மைக்கேல் இருதயராஜ்  சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். திருவள்ளூர் பணிமனை கிளை மேலாளரிடம் பேசி மாற்று பஸ் ஏற்பாடு செய்தனர். பின்னர் பயணிகள் மறியலை கைவிட்டனர். பயணிகளின் திடீர் போராட்டத்தால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது.
322
1/12/2011 4:06:59 PM
தமிழகம்
காஞ்சி, திருவள்ளூர் மாவட்டம் உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக அபாரம்
காஞ்சிபுரம், - காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்தது. பெரும்பலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்கு 4 பேர் போட்டியிட்டனர். சரண்யா (திமுக) 494 வாக்குகள் பெற்று, தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பூங்குழலி 279 ஓட்டுகள் வாங்கினார். 3வதாக வந்த நீலாவதி (அதிமுக) 180 ஓட்டுகள் வாங்கியுள்ளார். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோலியாளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேர் களத்தில் இருந்தனர். சுயேச்சை வேட்பாளர் ஏழுமலை வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் நகராட்சி 10வது வார்டில் காங்கிரசை சேர்ந்த பானுப்பிரியா 730 ஓட்டுக்கள் வாங்கி வென்றார். அவருக்கு அடுத்தபடியாக தமிழ்ச்செல்வி 721 வாக்குகள் பெற்றார். மதுராந்தகம் ஒன்றியம் சிலாவட்டம் 1வது வார்டில் எத்திராஜ் (திமுக) வெற்றி பெற்றார். அவர் 168 ஓட்டுகள் வாங்கியுள்ளார். சித்தாமூர் ஒன்றியம் இரும்புலியூர் 1வது வார்டில் 172 ஓட்டுகள் பெற்று சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றார். போரூர் ஊராட்சி தலைவராக குமரப்பா (திமுக)594 பெற்று வென்றார். அவரை அடுத்து ஷீலா (சுயே.) 132 ஓட்டுக்கள் வாங்கினார். திருவள்ளூர்: பூந்தமல்லி நகராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் பாத்திமா 796 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக சுயேச்சையாக போட்டியிட்ட காயத்ரி 420, சுசீலா 122, மகேஸ்வரி 23 ஓட்டுகள் வாங்கியுள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியம் 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சை வேட்பாளர் அரிதாஸ் 1,434 வாக்குகள் பெற்றார். அடுத்தபடியாக திமுக வேட்பாளர் அண்ணாமலை 1,307 ஓட்டு வாங்கினார். சோழவரம் ஒன்றியம் 6வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் திருஞானம் வெற்றி பெற்றார். கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓமசமுத்திரத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர்கள் காளத்தி, ஒ.என்.சக்கரை போட்டியிட்டனர். இதில் 966 ஓட்டுகள் வாங்கி சக்கரை வெற்றி பெற்றார்.
323
1/12/2011 4:07:34 PM
தமிழகம்
நெல்லை - சென்னை வழித்தடத்தில் பொங்கல் சிறப்பு ரயில்களின் நேரம் அடியோடு மாற்றம்
நெல்லை, - நெல்லை - சென்னை வழித்தடத்தில் இன்று, நாளை இயக்கப்படவுள்ள பொங்கல் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் தெரிவித்ததாவது: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு விருத்தாசலம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06012) இன்று (12.1.2011) மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.40 மணியளவில் புறப்படும். இதனால் இந்த ரயில் மதுரைக்கு 9 மணிக்கு செல்லும். சென்னை சென்ட்ரலுக்கு காலை 7 மணியளவில் வந்து சேரும். இதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லை வரும் ஏழைகள் ரதம் சிறப்பு ரயில் (வ.எண்.06009) இன்று (12.1.2011) இரவு 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.55க்கு வரும். இதே போல் நெல்லையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை (13.1.2011) இயக்கப்படவுள்ள ஏழைகள் ரதம் சிறப்பு ரயில் (வ.எண். 06010) மதியம் 2.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்படும். இதனால் இந்த ரயில் மதுரைக்கு அன்று இரவு 8.10க்கு சென்று சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 7.15க்கு வந்து சேரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.