Search is not available for this dataset
செல்வம் நிலையாமை
[செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது]
பாடல்:
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.
கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று.
விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths 16
7.39k
|
---|
ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தானந்த மாமுயிர் தானே சமாதிசெய்து
ஊனந்த மாயுணர் வாயுள் ளுணர்வுறிற்
கோனந்தம் வாய்க்க மகாவாக் கியமாமே.
பொருளுரை: பேரின்பப் பெருவாழ்வாம் ஆனந்தமாவது அரனருள் ஆற்றல் என்ப. அவ் வின்பம் எய்திய ஆருயிர் தானே செயலற்றிருக்கும் சமாதி எய்தும். ஊன் எனப்படும் உடலின் முடிவு தோன்றி யொடுங்கும் ஆக்கப் பொருள் அறிவில்லது, அதன் முதல் அழிவில்லது என வுணர்த்தும் அருள்வழி உயிர் உணரும். உணர்ந்து உணர்த்துகின்ற அறிவையும் உணரும். உணர்ந்தால் கோனாகிய சிவபெருமானின் திருவடிப்பேரின்பம் வாய்க்கும். இவ் வுண்மையனைத்தும் பெரும் பொருட்கிளவியாகிய திருவைந்தெழுத்தால் உண்டாம். பெரும்பொருட்கிளவி - மகாவாக்கியம்.
குறிப்புரை: கோனந்தம் - சிவத்தின் தன்மை. மகாவாக்கியம் - பெரும் பெயர்.
|
அறிவிக்க வேண்டாம் அறிவற் றயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற் றறியாமை யெய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்மறி வாரறி வோரே.
பொருளுரை: அறிவு ஒருசறிதும் இன்றிக் கண்டதே காட்சி கொண்டதே கோலமாய் வந்த வரவையும், தந்த உறவையும், முந்தப்போம் நெறியையும் முற்றாக மறந்து மாவெனத் திரியும் கயவர்க்கும், சிறந்த திருமுறை நூற்களால் உண்மை உணர்த்தல் வேண்டுவதின்று. பேரறிவுப் பெரும் பொருளாம் சிவபெருமானுடன் ஓரறிவாய்த் திகழும் நிறைவினையுடைய ஒண்மை யோர்க்கும் மெய்யுணர்வு நூல்கள் வேண்டுவதில்லை. அறிவினைப் பொருந்தி அறியாமை வயப்பட்டிருக்கின்றோமே என்று பெருங்கவலை கொண்டு ஒருங்கிய மனத்தராய் உயர்வழி நாடுவார்க்கே மெய்யுணர்வு நூல்கள் வேண்டும் என்க. உயர்வழியாவது யாண்டும் எத்தகைய உருவுடனும் கூடும் பிறப்பு எஞ்ஞான்றும் துன்பம் என்பதும், நத்தும் சிவபெருமான் திருவுடன் கூடும் சிறப்பு எஞ்ஞான்றும் பொன்றா இன்பம் என்பதும் அருளால் அறிதல். அறிந்து அதனை எய்துதற்கு நன்னெறி நான்மை நற்றவம்புரிதல். இத்தகைய வேட்கையுடையோர்க்கு மெய்கண்ட நூல்களை அறிவித்தல்வேண்டும். அவர்கள் தம்மறிவால் அறியும் அறிவுடையோராவர். இவ் வுண்மை சிவஞானசித்தியார் பரபக்கத்தின்கண் காணப்படும் "போதமிகுத் தோர்" என்னும் திருப்பாட்டானும் உணரலாம். மேலும், "எமக்கென் எவனுக் கெவை தெரியும் அவ்வத் தமக்கவனை வேண்டத் தவிர்" என்னும் திருவருட் பயனாலும் இவ்வுண்மை உணரலாம்.
சிவம் என்னும். சிவஞானபோதம், . - .
" போதமிகுத். சிவஞானசித்தியார், நூல்.
|
சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கூடிச்
சித்தும் அசித்துஞ் சிவசித்த தாய்நிற்குஞ்
சுத்தம் அசுத்தந் தொடங்காத் துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.
பொருளுரை: ஆருயிர்க்கு நிலைப்பு நிலையாமை என்னும் இருபெயர் உண்டு. இதனைச் சதசத்து என்ப. இதனைச் சார்பி எனலும் ஒன்று. சத்தாகிய திரிபில் மெய்பொருளாம் சிவத்துடன் கூடுதற்கு உரிமையுடையதாதலால் சத்தென்னும் பெயர் உயிர்க்கு உண்டு. அதுபோல் திரிபினை எய்தும் மெய்ப்பொருளாம் மாயையுடன் கூடுதலால் அசத்தென்னும் பெயரும் உயிர்க்கு உண்டு. அசத்து: சத்தின் - உண்மையின் எதிர்மறையன்று. சத்துப்போன்று என்றும் திரிபின்றி ஒன்றுபோலிருக்கும் தன்மை அல்லாதது என்பது பொருள். கூட்டுப் பெயரியாகிய தான் சத்துடன் கூடிச் சத்தாகநிற்கும் அசத்துடன் கூடி அசத்தாக நிற்கும். அதுபோல் அவ் ஆருயிர் முற்றுணர்வாகிய சிவத்துடனும் நிற்கும். சற்றும் உணர்வில்லாத மாயை ஆக்கத்துடனும் மாயையுடனும் வினைமலங்களுடனும் நலம்பெற முயலக் கூடிநிற்கும். அதனால் சிவசித்தென்னும் பெயரும் உண்டாயிற்று. அறிவு அறியாமையாகிய இரண்டும் தொடங்காத பேருறக்கத்தும், ஆருயிர் தூயதாய் இருக்கும். அதுபோல் உறக்கம் கனவு நனவு என்ன மூன்றிலும் தூயதாகவே இருக்கும்.
சத்தசத். சிவஞானசித்தியார், . - .
|
தானே யறியான் அறிவிலோன் தானல்லன்
தானே யறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.
பொருளுரை: ஆருயிர்கள் தாமாக அறியமாட்டா. அறிவில்லாத தன்மையுடையனவல்ல. அறிவித்தால் அறியும் தன்மையுடையன. அதனால் தானே யறியான் அறிவில்லோனும் தானல்லன் என்றருளினர். அவ் வுயிரின் அறிவு சதசத்தென்னும் உண்மையை அருளால் அறிந்தால் அவ் வுயிரி தானே அறிவான். இவ் விருநிலையும் சிவபெருமான் திருவருளால் எய்தும். அதனால் அவ் வருளில் கலந்து அருளாய் நிற்பன். நிற்கவே தானே யறிந்து சிவத்துடன் புணர்ந்த அவன் திருவடியில் ஒருவாதுறைந்து பெருவாழ்வுற்றுப் பேரின்பம் துய்ப்பன். உயிரி - உயிர்க்கிழவன்; ஆன்மா.
|
தத்துவ ஞானந் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானந் தலைப்பட லாய்நிற்குந்
தத்துவ ஞானத்துத் தானவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.
பொருளுரை: முப்பத்தாறு மெய்களின் உண்மை உணரும் உணர்வுதலைப் பட்டவர்கட்கே திருவடியுணர்வாகிய அழியாத் தத்துவஞானம் கைகூடும். அத் திருவடியுணர்வு கைவந்தால் சிவனருளால் உயிரி சிவனாவன். சிவனாகவே திருவடிக்கீழ் அமர்ந்து திருவடியின்பந் துய்ப்பன்.
கண்டவிவை. சிவஞானசித்தியார், . - .
|
தன்னை யறிந்து சிவனுடன் தானாக
மன்ன மலங்குணம் மாளும் பிறப்பறும்
பின்னது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.
பொருளுரை: திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து அச் சிவபெருமான் திருவடிக்கீழ்த் தங்கி நிலைப்பன். தங்கவே மலம் முதலியவற்றின் பிணிப்பு மறைப்பு துய்ப்பு முதலிய பண்புகள் அறும். அறவே பிறப்பும் அறும். அற்றபின் கைகூடுவது உண்மைத் திருவடிப் பேறாகும். அப் பேற்றால் நன்னெறிப்பேரொளி நண்ணும். நண்ணவே என்றும் நன்மை பயப்பதாகிய திருவடியுணர்வுப்பொறி பெற்ற திருவினராவர். அத் திருவினையே 'வாராத செல்வ' மெனவும், 'செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே' எனவும் செந்தமிழ்த் திருமறை அருள்வதாகும். பொறி - முத்திரை.
|
ஞானந்தன் மேனி கிரியை நடுவங்கந்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண் டைங்கரு மத்துவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.
பொருளுரை: சிவபெருமான் ஆருயிர்களை ஆட்கொள்ளவேண்டித் திருவருளாகிய பேரறிவே திருமேனியாகக் கொண்டருள்வன். இவ் வுண்மை 'சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்' என்பதனால் பெறப்படும். திருமேனியிற் காணும் திருவுறுப்புக்கள் திருவருளாற்றலாகும். உயிர்ப்புத் திருவருள் விழைவாகும். இவற்றால் தானே முழுமுதலாம் சிவபெருமான் திருவுருக்கொண்டருளினன். அதனால் படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் அருளல் என்னும் திருத்தொழில் ஐந்தும் புரிவானாயினன். அவனே ஐந்தொழிலுக்கும் முழுமுதல்வனாவன் மோனமாகிய முதன்மை நிலையிலுள்ள நல்லார் திருவடிப்பொறியாம் சிறப்புப் பெற்றுய்ந்தார்.
குறிப்புரை: ஐங்கருமம் - பூத சுத்தி முதலிய ஐந்து சுத்தி, இது விசேட தீக்கை பெற்றுச் சிவபூசை கைக்கொண்டவர் செய்யும் சுத்திகள். ஞானத்து முத்திரை - சின் முத்திரை.
கந்தமலர். சிவப்பிரகாசம், .
|
உயிர்க்கறி வுண்மை யுயிரிச்சை மானம்
உயிர்க்குக் கிரியை யுயிர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றியவ் வுள்ளத்து ளானே.
பொருளுரை: ஆருயிர்க்கு அன்பு அறிவு ஆற்றல் மூன்றும் என்றுமுள்ள உண்மையாகும். சிவபெருமான் ஆருயிர்க்கு இவற்றை விளக்குவித்தற் பொருட்டு மாயையினின்று நுண்ணுடல் பருவுடல்களைப் படைத்தளித் தருளினன். இவற்றால் வரும் பயனை அவ் வுயிர்கட்குச் சிவபெருமான் ஊட்டியருள்கின்றனன். அங்ஙனம் ஊட்டியருளுங்கால் அச் சிவபெருமான் தோன்றாத் துணையாக நின்றருள்கின்றனன். இவ்வுடல் கலன்களில் பற்றுவரச் செய்கின்றனன். பற்று - அபமானம். இவை யனைத்தும் உயிரை நன்னெறிப்படுத்த உயிர்க்குயிராகிய சிவபெருமான் செய்விக்கும் செயலென்க. எனவே ஆருயிரின் முன்மைச்செயலாகா. எனவே அடிமைச்செயலாகும் என்பது குறிப்பெச்சம். நுண்ணுடல்: கருவுருப் பிறப்புடல். பருவுடல்: கருவுறும் சிறப்புடல்.
|
தொழிலிச்சை ஞானங்கள் தொல்சிவ சீவர்
கழிவற்ற மாமாயை மாயையி னாகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.
பொருளுரை: தொழில் விழைவு அறிவாகிய மூன்றும் தொன்மையாகவுள்ள பேருயிராகிய சிவபெருமானுக்கும் ஆருயிராகிய சீவர்களுக்கும் உள்ளன. சிவபெருமானுக்கு அவை மூன்றும் தாமே விளங்குவன. ஆருயிர்க்குச் சிவபெருமான் விளக்க விளங்குந்தகையன. சிவபெருமானுக்குத் தாமே விளங்குங்கால் தன்னின் வேறல்லாத் திருவருள் துணையால் விளங்கும் ஆருயிர்க்கு அவை மூன்றும் பிறப்பாகிய கட்டின்கண் திருவருள் இயைந்தியக்க மாயாகாரியக் கருவியும் ஒளியும் உறுதுணையாக கொண்டு விளங்குகின்றன. சிறப்பாகிய ஒட்டின்கண் திருவருளைக் கருவித் துணையாக் கொண்டு விளங்குகின்றன. அழிதல் இல்லாத மாமாயை மாயைகள் கருவியாக அன்பறிவு ஆற்றல்கள் நிகழ்வன. குற்றமற்ற காரணகாரியம் ஆகிய அருவநிலைப் பாழினையும் விட்டு மேலாகிய அழிதலில்லாத அப்பால் அமைதியானவன் சிவபெருமான்.
குறிப்புரை: மாமாயை - சுத்த மாயை. மாயை - அசுத்த மாயை. சாந்தாதீதன் - ஆனந்த அதீதன்.
|
இல்லதும் உள்ளதும் யாவையுந் தானாகி
இல்லதும் உள்ளது மாயன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்று
ஒல்லை யுணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.
பொருளுரை: நிலைபேறில்லாத காரியத்தினும், நிலைபேறுள்ள காரணத்தினும் கலப்பால் சிவன் ஒன்றாய் நின்றருள்கின்றனன். இந் நிலை அவனுக்கும் நமக்கும் தொன்றுதொட்டே உள்ளது. அம் முறையால் சிவன் யாவையும் தானாகி நிற்கின்றனன். பொருள் தன்மையில் அவன் வேறாக நின்றருள்கின்றனன். அம் முறையால் அவன் யாவையும் அல்லனாகின்றனன். அத்தகைய விழுமிய முழுமுதல் அண்ணலைச் சொல்லால் சொல்லத் தொடங்கினால் 'சொற்கழிவு பாதமல' ராதலின் மிகவும் எட்டாத் தொலைவினனாவன் திருவருளால் அவனை உள்ளவாறுணர்ந்தால் அவன் உயிர்க்கு உயிராய் உடனாக நின்றருள்கின்றனன். இல்லது - அசத்து. உள்ளதன் மறுதலையன்று அசத்து; தோன்றி யொடுங்கும் திரிபுடையது அசத்து. ஒல்லை - ஒல்லும் வகை; உள்ளவாறு.
குறிப்புரை: இல்லதும் உள்ளதும் - அசத்தும், சத்தும், சொல்லது - சொல்லினால்.
|
உயிரிச்சை யூட்டி யுழிதருஞ் சத்தி
உயிரிச்சை வாட்டி யொழித்திடு ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுற லாலே
உயிரிச்சை வாட்டி யுயர்பதஞ் சேருமே.
பொருளுரை: ஆருயிர்க்கு அளவிறந்த பற்றினை உலகிடையூட்டி அலைதருமாறு செய்யும்அருள் நடப்பாற்றல். அவ் வுயிர்க்குச் செவ்வி வாய்ந்ததும் அப் பற்றினை வாட்டி ஒழித்திடுமாறு செய்யும்அருள் வனப்பாற்றல். நடப்பாற்றல் - ஆதிசத்தி; கிரியாசத்தி. வனப்பாற்றல் - பராசத்தி; ஞானசத்தி. அவ் வுயிர்க்கு வனப்பாற்றல் மெய்யுணர்வுப் பொருளாம் சிவபெருமான்பால் அன்பினையூட்டும். அச் சிவபெருமானும் ஆங்கு உடனாயுறைகின்றனன். ஆதலால் அவ் வுயிர்கள் உலகப்பற்றினை வாட்டி உயர்வற உயர்ந்த ஒரு பெரும் நிலையாம் சிவபெருமான் திருவடி நிலையினை அப்பொழுதே எய்தும்.
குறிப்புரை: உயிரிச்சை - உயிருக்கு இச்சை. உழிதரும் - அலையச் செய்யும். உடனுறலால் - சிவன் உயிருடன் இருத்தலால்.
மருத்துவ. சிவஞானசித்தியார், . - .
|
சேருஞ் சிவமானார் ஐம்மலந் தீர்ந்தவர்
ஓரொன்றி லாரைம் மலவிருள் உற்றவர்
பாரின்கண் விண்ண ரகம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றன்றே.
பொருளுரை: அருளால் ஐம்மலம் தீர்ந்து தெருளுற்றவர் திருவடி சேர்ந்து சிவமானார். மெய்யுணர்வு ஒருசிறிதும் இல்லாதவர் ஐம்மல இருளுற்று மம்மர் கொண்டனர். அத்தகையோர் இருள்சேர் இருவினைப் பயனும் ஒருங்கு நுகர்தற்கு இடனாம் நிலவுலகிடைப் பிறப்பார். இருள்சேர் இருவினையுள் நல்வினைப்பயனைத் துய்த்தற்கு விண்ணிடைச் சேர்வர். தீவினைப்பயனைத் துய்த்தற்கு நரகிடைச் சேர்வர். இவையே அவர்தம் பான்மை ஆகும். இவற்றைக் கண்டும் கேட்டும் இவையனைத்தும் திருவருளியக்க இயங்குகின்றன என்னும் மெய்ம்மையை ஒருசிறிதும் உணரார் உண்மையறிவில்லார்.
குறிப்புரை: ஓர் ஒன்றிலார் - தத்துவ ஞானம் இல்லாதவர்.
|
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.
பொருளுரை: ஆருயிர்கள் தூமாயை தூவாமாயை என்னும் இருமாயைகளிலும் அருளால் பொருந்திச் செய்வன செய்யும் அதுபோல் பெரிய ஞானசத்தியினைப் பொருந்தி அறிவிளங்கப் பெரும். பெரிய நிலவுலகமுதலாம் மூலப்பகுதியினைப் பொருந்திக் துய்ப்பன துய்க்கும். இவையனைத்தும் திருவருளால் நிகழ்வனவாகும். எய்தினர்: முற்றெச்சம்.
குறிப்புரை: இரு மாயா சத்தி - சுத்த மாயை. அசுத்த மாயை. ஞால சத்தி - பிரகிருதி மாயை.
|
திருந்தனர் விட்டார் திருவி னரகந்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கந்
திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டந்
திருந்தனர் விட்டார் சிவமா யவமே.
பொருளுரை: திருவடியுணர்வால் திருத்தமுற்றவர் இன்பமில்லாத துன்ப நிறைந்த இருளுலகம் புகார். திருவடியுணர்வு - மெய்யுணர்வு; சிவஞானம். அத்தகைய உணர்வுடையார் நிலையிலா இன்பம் எய்தும் துறக்க வுலகத்தையும் கான்றசோறென ஒதுக்கித் தள்ளினர். அவர்கள் ஐம்மலக் கூட்டத்தையும் அறவேவிட்டனர். மேலும் சிவமாய்த் திகழ்ந்தனர். அதனால் அவமாய பிறப்பினை விட்டனர். இவர்களே தங்கருமம் செய்யும் தவத் தோராவர். ஏனையார் சிறப்பில்லாத பிறப்புவினை செய்யும் அவத்தராவர்.
குறிப்புரை: திருந்தனர் - தத்துவ ஞானம் கை வந்தவர்.
அண்டர். அப்பர், . - .
|
அவமுஞ் சிவமம் அறியார் அறியார்
அவமுஞ் சிவமும் அறிவார் அறிவார்
அவமுஞ் சிவமும் அருளால் அறிந்தால்
அவமுஞ் சிவமும் அவனரு ளாமே.
பொருளுரை: அவமாகிய பிறப்பினுக்கு ஏதுவாம் யான் எனது என்னும் செருக்குடன் செய்யும் பிணிச்செயலையும், சிவமாகிய சிறப்பினுக்கு ஏதுவாம் உருக்கமுடன் செய்யும் பணிச்செயலையும் அருளால் அறியாரே அறியாதவராவர். அவம் - பிறப்பு. சிவம் - சிறப்பு. இவ் வுண்மை வரும் திருவள்ளுவ நாயனார் திருமாமறையா னுணரலாம்:
"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். "பிறப்புச் சிறப்பாகிய அவம் சிவம் என்னும் இரண்டினையும் அருளால் அறிவாரே அறிவுடையராவார். அவ் விரண்டினையும் அருளால் அறிந்தால் அவ் விரண்டினையும் சிவபெருமான் நமக்குக் கூட்டுவிப்பதும் நாம் புரியும் பிணிச்செயல் பணிச்செயல்களின் பயனால் ஆகும் அவையும் அவன் திருவருளேயாம். அருளாலறிவதென்பது அருளை அறிவிக்கவேண்டி விண்ணப்பிக்கும் அடிமை அன்பால் அறிவதென்பதாம். கூட்டுவிப்பதும் அருளே என்பது உடனுக்குடன் இருவினைப் பயன்களைக் கூட்டு வியாதொழிந்தால் அவை மிகவும் முதிர்ந்து பின்னர்ப் பதமாக்கும் புதுச் செயலையும் கொண்டுவந்து தரும். இதற்கு ஒப்பு உலர்ந்த விறகை நிலத்தில் தொகுத்துவைத்துப் பின் எடுத்து அடுப்பில் வைத்து எரிப்பது எளிது. அதனை நீரில் தொகுத்துவைத்தோ மழையில் நனையவிட்டோ எடுத்து அடுப்பில் வைத்தால் எரியுமோ? எரியாதல்லவா? பின் என்ன செய்தல்வேண்டும். அவற்றை வெயிலில் சுமந்து உலரவைப்பதாகிய புதுச் செயலையும் செய்தல்வேண்டும். அங்ஙனம் செய்ய இடந்தராமல் ஆருயிர் மனம்போல் விடாமல் ஆண்டவன் வினைப்பயனை முனிவுடன் அவ்வப்போது தந்துவிடுகின்றனன். அங்ஙனம் செய்வது எத்துணைப் பேரருள் என்று எண்ணுமின். இதனைத் திருவள்ளுவநாயனார் 'இளைதாக முள்மரம் கொல்க களையுநர், கைகொல்லும் காழ்த்த இடத்து' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையால் குறித்தருளுதல் காண்க. பிணிச்செயல் - தொழில். பணிச்செயல் - தொண்டு. தொழிலுக்குப் பயன் பிறப்பு. தொண்டுக்குப் பயன் சிறப்பு. கூலியால் செய்வது தொழில். குணத்தால் செய்வது தொண்டு.
குறிப்புரை: அவம் - பிறப்புக்கு ஏதுவாய செயல்.
|
அருளான சத்தி யனல்வெம்மை போலப்
பொருளவ னாகத்தான் போதம் புணரும்
இருளொளி யாய்மீண்டு மும்மல மாகுந்
திருவரு ளானந்தி செம்பொரு ளாமே.
பொருளுரை: அனலும் அதன் வெம்மையும் பொருளால் ஒன்றாய்ப் பண்பால் இரண்டாய் விளங்கும். அப் பண்பிரண்டும் ஒளியும் சூடும் என்ப. அதுபோல் திருவருளும் சிவபெருமானும் ஒருவனேயாம். அத் திருவருளே ஆற்றலாகிய சத்தியாகும். அவ் வருள் மெய்ப்பொருளோ டொன்றாகும். அவ்வருளின் வடிவு தடையிலா ஞானமாகும், ஆணவம் 'இருளொளிர இருண்ட' இருளாகும். அவ் வானவத்தோடு மீண்டும் மாயை, கன்மம், மாயையின் விரிவாகிய மாயேயம் என்னும் மும்மலமும் கூடும். அங்ஙனம் கூடியவற்றை அகற்றுவதன் பொருட்டுத் திருவருள் வண்பேரருளின்ப நடப்பாற்றலாகக் கூடும். கூடி ஐம்மலமாகும். அந் நடப்பாற்றல் உடனாக இருந்து இம் மலங்களை அகற்றுவிக்கும். 'மும்மலம் ஆகும்' என்பதனை மாறுதல் ஆகும் என ஒருசொல் வருவித்துப் பொருள் கொள்க. அத் திருவருள் நந்தாச் செம்பொருளாம் சிவபெருமானைக் காட்டியருளும். காட்டவே ஆருயிர்கள் சிவபெருமானின் திருவடியுணர்வினைப் பெறும். பெறவே பேரின்பப் பெருவாழ்வு எய்தும்.
குறிப்புரை: அருளான சத்தி - அருள் சத்தி. போதம் புணரும் - ஞானம் ஆகும்.
|
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் றன்கதி ராலவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறருட் பேதமே.
பொருளுரை: ஞாயிறு கீழ்பால் தோன்றத் தாமரை முதலிய நீர்ப் பூக்கள் ஒன்று மலரும்; மற்றொன்று மலர்தற்குத் தகுதியாம் முகையாகும்; வேறொன்று உலரும் இச் செயல்கள் பூக்களின்கண் காணப்படினும் அப் பூக்கள் தம்மால்மட்டும் நிகழ்வனவல்ல. ஞாயிற்றின் கதிர்க்் கலப்பும் இயைந்துள்ளதாற்றான் நிகழ்கின்றன. அதுபோல் திருவருட் கலப்பால் அவன் அவள் அது என்னும் மூவகை யுலகமும் தோன்றிநின்று அழிகின்றன. இதுபோல் நிலைபேறாகத் தோன்றும் உலகங்களும் அழியும். இவற்றை வேறுபடச் செய்வதற்கு வேண்டிய காரணங்கள் இவற்றின்கண் உண்டெனினும் இவற்றையியக்கும் திருவருள் வேறுபாட்டானாம் என்பதே துணிபு. அழியும் - ஒடுங்கும்.
குறிப்புரை: பதுமாதி - தாமரை நீலோற்பலம் முதலியன. பேதித்தது - மலர்தல். குவிதல். சேட்டிப்ப - இயங்க. அருள் பேதம் - திருவருளின் வேற்றுமைத் திறம்.
நெல்லிற். சிவஞானபோதம், . - .
" தோற்றுவித். சிவஞானசித்தியார். . - .
|
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடனாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருளிச்சை யாமே.
பொருளுரை: ஆருயிர்கட்கு உடல் உலகுகளுடன் ஏற்படும் ஒற்றுமை, வேற்றுமை, பிறழ்வு எனப்படும் பேதம், அபேதம், பேதாபேதம் ஆகிய வேறுபாடுகளும் திருவருளின் திருவுள்ளத்தான் ஆவன. அதுபோல் அவ்வுயிர்களுக்குரிய இயற்கையறிவும், அவ் வறிவின் விளக்கத் துணையாம் கல்வி முதலிய செயற்கையறிவும், இவற்றான் ஏற்படும் அறிவின் வளர்ச்சியும், அவ் வறிவிற்குத் துணையாம் ஓசையாகிய நாதமும், இந் நாதத்தைத் தொழிற்படுத்தும் அருளொலியாம் பரநாதமும் திருவருளின் திருவுள்ளத்தான் ஆவனவே. திருவுள்ளம் - திருவருள் இச்சை. இவையெல்லாம் ஆதன் என்று சொல்லப்படும் ஆருயிரின் பொருட்டேயாம். பிறழ்வு - பேதாபேதம்.
குறிப்புரை: ஆதன் - ஆன்மா.
|
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தாற் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரனரு ளாமே.
பொருளுரை: செயற்கைப்பொருள்களால் யானை முதலியவற்றைச் செய்து அவை இயங்குமாறு பொறிகளை அமைத்து இயக்கப்படுவது பொய்க்கரியாகும் அக் கரி இயங்கும் தொழிலை ஒப்ப யாண்டும் பரந்துள்ள நிலம் முதலிய ஐம்பூதங்களால் ஆக்கப்படும் இவ் வுடலும் ஆடுகின்றது. உடல் உலகுகளுக்குரிய படைப்பு முதலிய தொழில்களும் அயன் அரி அரன் முதலியவர்களால் நிகழ்வனவும் இத்தகையவே. ஆருயிர்க்கு உடல் கலன் உலகுகளை உள்ளத்தால் படைத்து. அவற்றுடன் ஆருயிர்களை இயைத்து இயக்குவது திருவருள். இவற்றின் சேர்க்கையால் ஆருயிர்கட்கு அறிவை விளக்குவிப்பதும் திருவருள். அவற்றினின்றும் செவ்வி வருவித்துப் பிரிவிப்பதும் திருவருள். பிரித்துச் சிவபெருமான் திருவடியில் சேர்ப்பிப்பதும் திருவருள். எல்லாம் ஆற்றுவித்து இணையில் இன்பம் துய்ப்பிப்பதூஉம் திருவருளேயாம். கரி - யானை; கரத்தையுடையது. கரம் கருமம் என்னும் அடியாகத் தோன்றிய தமிழ்ச்சொல். விலங்கினங்களுள் யானை ஒன்றினுக்கு மட்டுமே மூக்குக் கைபோன்று நீண்டு அமைந்ததுமட்டுமன்றிக் கைபோன்று வேலைக்கும் பயன்படுகிறது. அதனால் யானை 'கிரி' என்னும் சிறப்புப் பெயரான் வழங்கப்படலாயிற்று.
குறிப்புரை: பொய்க்கரி - மரயானை. பாவிய பூதம் - மண் முதலிய பூதங்கள். பூவியில் - உலக இயல்.
|
ஆறா றகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினு மியாவுந் தனிலெய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றா னம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.
பொருளுரை: மண் முதல் ஒலி ஈறாகச் சொல்லப்படும் முப்பத்தாறு மெய்களின் உண்மைகளை அருளால் அருள் நூற்களின் வாயிலாக உணர்ந்து அவற்றினிடத்துக்கொள்ளும் பற்றை விடுதல்வேண்டும். விடுதல் என்பது அம் மெய்கள் நாமல்ல என்றும், நமக்கு ஆண்டவனால் தரப்பட்ட இரவற்கருவியே என்றும், நமக்கு அவை என்றும் இரவலே என்றும், அவற்றால் ஆண்டவன் திருப்பணியைப் புரிதல் வேண்டும் என்றும், அவை நிலை இல்லன என்றும் கொண்டு பற்றின்றி நல்லன புரிந்தொழுகுதல். அங்ஙனம் ஒழுகிவரும் உரவோன், தன்னை அடிமை என்று அறிந்தவனாகின்றான். அடிமை என்றறிந்த மெய்யறிவினால் அவன் சிவத்தொடுங்கிச் சிவனாகின்றான். ஒடுங்கிச் சிவமாவதென்பது நிழலுருவில் ஒடுங்கியும் பெயரில் ஒடுங்கியும் பொருள் தோன்றுவது போன்றதாகும் இவனையே சிறப்பினன் எனக் கூறுவர். எல்லாவற்றுடனும் தான் விரவிநிற்பதால் தான் ஈறாவதும், தன்னில் எல்லாப் பொருள்களும் அடங்கி நிற்பதால் அவை தன்னிலெய்தி நிற்கும் தன்மையும் தோன்றும். தோன்றவே அவன் அவற்றிற்கு வேறாவன். வேறாகவே அருள்வெளியில் புகுவன். புகுந்தால் முற்றும் விடுதலை உற்றவனாவன். வனப்பாற்றலாகிய சிறந்த திருவருளைத் தெளிவன். தெளிந்தால் சிவகுரு எழுந்தருள்வன். சிவதீக்கை செய்தருள்வன். சிவதீக்கை பெற்ற வுயிர் சிவமாம் பெருவாழ்வு எய்தும்.
குறிப்புரை: ஆனவன் - சிவமயம் ஆனவன். யாவும் தனில் எய்த - எல்லாப் பொருளும் தன்னிடத்தில் தோன்ற வேறாய் - அப்பொருள் கட்கு வேறாய். வெளிபுக்கு - ஆகாயத்திடை போய். வீடு உற்றான் - சீவன் முத்தி அடைந்தான். அம் அருள் - சிறந்த திருவருள். தேறா - தேறி.
|
தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலு மாமே.
பொருளுரை: திருவருளானன்றிப் பிறவாற்றான் எய்தற்கரிய இறவாத இன்ப அன்பாகிய திருவடிநேயத்தை அருளால் மீண்டும் ஆருயிர் எய்தும். எய்தவே சிவகுரு அருளிய செவியறிவுறூஉவின்வழி அவ் வுயிர் ஒழுகும். இவ் வாற்றால் ஒருவர்க்குச் சீலம் நோன்பு என்னும் இருபெருந்தன்மையும் கைகூடும். கூடவே சிவஞானம் எய்துதற்குரிய செறிவுநெறி கைகூடும். அவ்வகைக் குறிப்பே மா என்று ஓதப்பெற்றது. மா - குதிரை. குதிரை எனக் குறிப்பது யோக வழியை யாகும். யானை எனக் குறிப்பது ஞானவழியையாகும். இக் குறிப்பே 'தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறி' என்று ஓதியவற்றான் உணரலாம். இச் செறிவு நெறியினையுங் கடந்து அறிவு நெறியிற் புகுந்து அந் நெறியின் எல்லையாம் சிவபெருமானின் திருவடியைச் சார்வர். சார்ந்து என்றும் இன்புறுவர்.
குறிப்புரை: விதிவழி - குரு உபதேசப்படி. மா - பரி.
விட்டவெம்பளிச். . வெள்ளானை - .
|
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருட்டன்மை யாரே.
பொருளுரை: நன்னெறி நான்மையினர் சீலத்தர், நோன்பினர். செறிவினர், அறிவினர் என்று அழைக்கப்படுவர். அவர்களே இங்குச சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர் என அழைக்கப்பெற்றனர். இவர்கள் நால்வரும் சிவபெருமான் திருவடியிணையினை முறை முறையாகச் சார்ந்தவராவர். சாத்தியராகிய அறிவினர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியரென்றோதப் பெற்றனர். இந் நான்கு நெறியினும் ஒழுகப் பெற்றவர் எண்ணரும் அன்புசேர் பண்பமர் கண்ணப்பர்போன்று காதல் அன்பு நெறியினைத் தலைப்படுவர். இவர் நேயத்தர் என ஓதப்பெற்றனர். இவரே இறவா இன்பம் தலைப்பட்டவராவர். இவர் ஆனந்தர். இவர்கள் நிலைபெற்ற திருவருட்டன்மையராவர். இவர்கள், சாரணர் சித்தர் சமாதியர் சாத்தியர், பூரண வானந்தரருளார் எனப் போற்றுப்பெறுவர்.
குறிப்புரை: சார்ந்தவர் - சிவனைச் சார்ந்தவர். சத்த அருள் - நாத சத்தி.
தொண்டர்காள். . திருப்படை எழுச்சி, .
|
தானென் றவனென் றிரண்டென்பர் தத்துவந்
தானென் றவனென் றிரண்டற்ற தன்மையைத்
தானென் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தானின்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
பொருளுரை: ஆருயிராகிய தானென்றும் பேருயிராகிய சிவனென்றும் பொருள் தன்மையில் அழியாமெய்ம்மை அறிவுப்பொருள் இருவேறு வகைய சிவன் ஒருவன். ஆருயிர்கள் அளவில. சிவன் - அவன். கலப்புத் தன்மையில தானென்றும் அவனென்றும் வேறுபடுத்திக் கூறாது நீற்றடியார் என்னும் நீர்மைபோல் சிவத்தர் என ஒற்றுமையாக ஓதுவர். எனவே இந்நிலையினுள்ளார் இருவேறுவகையாக உன்னார். இது கற்றார் கல்வியும் தாமும் வேறென உன்னாமையை ஒக்கும் இவர்கள் அருள் தனிமையராவர். கேவலம் - தனிமை. தன்னையிழந்து தலைவன் தானாக நிற்கும்நிலை பொருள் உண்மை ஏய்ந்தநிலையாம். பொருளுண்மை - தத்துவ சுத்தம்.
குறிப்புரை: அவன் - சிவன். தானாக - சிவமாக.
|
தன்னினில் தன்னை யறியுந் தலைமகன்
தன்னினில் தன்னை யறியத் தலைப்படுந்
தன்னினில் தன்னையும் சார்கில னாயிடில்
தன்னினில் தன்னையுஞ் சார்தற் கரியவே.
பொருளுரை: திருவருளால் தன்னை யுணரும் முறைமையிலேயே தன்ஐ ஆம் சிவபெருமானையும் உணர்தல்வேண்டும். அவனே சிறந்த தலைமகன் ஆவன். தலைமகன் - சிறந்தோன். அங்ஙனம் தன்னையும் தன் தலைவனையும் அறிந்த நிலைமையால் சிவபெருமான் மிக்கெழுந்து தோன்றியருள்வன். இதுவே தலைப்படும் என்பதன் மெய்ம்மைப்பொருளாகும். உயிர்க்கிழவன் திருவருளால் தலைவனைச் சார்தல்வேண்டும். அங்ஙனஞ் சாரா தொழிந்தால் அத் தலைவனும் சார்தற்கரிய நிலைமையை உடையவனாவன். இத் திருமுறை தமிழாகமம் என்று ஓதப்பெறும். நால்வர் தமிழ் திருமறையாகும். முறையினை மறையினுள் அப்படியே காண்பது அருமையினும் அருமையாகு மல்லவா? அங்ஙனம் காணப்பட்டாலஃதருளியல்பல்லவா? அங்ஙனம் காணப்பட்ட உண்மை வரும் அப்பர் பெருமானின் அருண்மொழியான் உணரலாம். உயிர்க்கிழவன் - ஆன்மா.
"தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
"இத் திருப்பாட்டு முப்பது திருப்பாட்டுக்களுள் இருபத்தொன்பதாவதாகும். இத் திருப்பதிகம் உயிரெழுத்துப் பன்னிரண்டு, ஆய்தவெழுத்து ஒன்று, மெய்யெழுத்துக்களுள் வகர றகரங்களாகிய இரண்டும் ஒழித்து ஒழிந்த பதினாறும், காப்பு ஒன்றுமாகத் திருப்பாட்டு முப்பதாகும். இவற்றை முறையே நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக ஒருதிங்களுக்கும், நாழிகை ஒன்றுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனிப் பகல் இரவுகட்கும் ஓதியுய்யத் திருவுள்ளங் கொண்டமை உய்த்துணர்வார்க்கு நன்கு புலனாகும். இதனை வருமாறு நினைவுகூர்க. நாழிகையே நாள்வழிபாடுகள் நாம் செய்துய்ய, வாழிமுப்பதப்பரருள் வாழ்த்து. இத் திருப்பாட்டின்கண் முதற்சீர் நான்கின்மட்டும் ஒவ்வோர் எழுத்துக்கள் குறைந்துள்ளன. அதற்குக் காரணம் திருக்குறுந்தொகை பதினொரு எழுத்துக்களானமைந்த வரியேயாம் என்க. திருமந்திரம் பன்னிரண்டெழுத்துக்கள் அமைந்தது. மேலும் வெண்டளை பிழையாதன.
குறிப்புரை: தன்னினில் - தன் உடலில். தன்னை - ஆன்மாவை.
நானவனென். சிவஞானபோதம்,
|
அறியகி லேனென் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்தென் உள்ளத்துள் ளாமே.
பொருளுரை: மேலோதியவாறு திருவருளால் யான் அறியகில்லேன் என்று நீயும் கவன்று அரற்றுதல் செய்யவேண்டா. நன்னெறிநான்மை வழியே சென்றால் திருவருளால் சிவன் உனக்கும் நேர்படுவன். அவன் பின்பு அடியேனுக்கும் ஆருயிர் பேருயிர் என்ற இருசுடராய் இயைந்து இயக்கும் உண்மையினையும் புலப்படுத்துவன். அத்தகைய வல்லானாகிய சிவன் அடியேனை அவன் திருவடிக்கீழ் அடக்கி அடியேன் உள்ளத்துள்ளாவன். ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா; சிவன்.
குறிப்புரை: இருசுடர் - சிவன், சீவன். ஒருசுடர் - சிவன்.
|
ஓம்புகின் றானுல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூறுவர்
தேம்புகின் றார்சிவஞ் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலு மாமே.
பொருளுரை: சிவபெருமான் உயிர்க்கு உயிராய், உலகுக்கும் உயிராய் உள்நின்று உலகு ஏழினையும் ஒம்பியருள்கின்றனன். அச் சிவபெருமான் திருவடிக்கண் ஒருங்கிய மனத்தார் கூம்புகின்றாராவர். அத்தகையாரை மெய்யடியார் எட்டுவான்குணத்து எம்மான் எனக் கூறுவர். சிவபெருமானின் திருவடியிணையினை நினையாதவர் தேம்புகின்றாராவர். உள்ளத்தளர்ச்சியில்லாதவர் இடையறாது நினனத்து சிவன் திருவடியைக் கொள்ளத் தளரார்.
குறிப்புரை: கூம்புகின்றார் - மனங்குவிந்தவர். கூம்பகில்லார் - தளர்ச்சி அடையாதவர்.
|
குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடங் கூடல் பெரிது
குறியறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாவிருந் தன்னமு மாமே.
பொருளுரை: ஈண்டுக் குறிக்கப்படும் உடம்பகத்து வாழும் உயிராகிய தம்மை அறியமாட்டாதவர்கள் குறிக்கொண்டு ஆட்கொள்ளும் சிவபெருமானாகிய குறியினை அவனருளாலே காணமாட்டார்கள். தம்மையும் தலைவனையும் அறியும் தவப்பேறு இல்லாதவர், கடமாகிய உடம்பில் மிகுதியும் கூடிப் பிறப்பர். திருவடிக் கலப்பினால் தம்மையறியா வகையாக இன்பில் திளைத்து திருவடியில் கூடுங்கள். கூடினால் அன்னமாகிய சிவபெருமானை அறிந்து வேறொன்றும் அறிதல் செல்லாது. நாளும் சிவமாம் நிலைஎய்தி இன்புறுநிலையில் இந்நாள்காறும் அறிவிறந்து நின்ற சிவத்துடன் கூடி யின்புறுவர்.
குறிப்புரை: கடம் - உடம்பு. குறி - உயிர். குறிகாண - சிவத்தைக் காண. அன்னம் - சிவம்.
|
ஊனோ வுயிரோ வுறகின்ற தேதின்பம்
வானோர் தலைவி மயக்கத் துறநிற்கத்
தானோ பெரிதறி வோமென்னு மானுடர்
தானே பிறப்போ டிறப்பறி யாரன்றே.
பொருளுரை: உடம்புடன் கூடி வாழும் உயிர்கள் ஏதோ இன்பம் அடைகின்றதாகக் கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறு அடையும் இன்பமொன்று உண்டா? உண்டாயின் அவ் வின்பத்தினையடைவது உயிரா? உடம்பா? வானவர்களாலும் ஓர்த்து உணர ஒண்ணாப் பெருநிலையின்கண் உள்ளவள் வனப்பாற்றலாகிய பேரறிவுப் பெருந்திரு. அத்தகைய வனப்பாற்றலாம் வண்மைத் திருவின் கலப்பினால் உண்மை உணர்வு தோன்றும். அத் தோற்றத்தின் வழியே அழுந்த நிற்பவாகிய பணிகளைப் பிணியில்லாமல் புரிவாயாக. தாமாகவே மிகுதியும் அறிவோமென்று பிழைபடச் சொல்லும் மானிடர் தானே எய்தும் பிறப்பு இறப்பினை மாற்றும் இயல்பறியாதவராவர். வானோர் தலைவி - பராசத்தி. மயக்கத்து - வசத்து. உறநிற்க - பிறழாது நிற்க.
|
எட்டாம் தந்திரம். அறிவுதயம்
தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை யறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே.
பொருளுரை: திருவருளால் தனக்குத் தலைவனாகிய சிவபெருமானை அறியத் தன்னை அறியும் ஆவியாகிய தனக்கு எஞ்ஞான்றும் பிறப்பு இறப்புக்களாகிய கெடுதல் உண்டாகமாட்டாது. அங்ஙனம் தனக்குரிய தலைவனையறியாது தானாகவே பிறந்து இறந்து துன்புறும் தீவினைகளைச் செய்து கெடுகின்றான். தன் தலைவனையறியும் தனியறிவை அறிந்தபின் அத் தலைவனாகிய சிவபெருமானை அருச்சிப்பார்கள். அங்ஙனம் அருச்சிப்பதால் அச் சிவபெருமான் அவர்கள் நல்லுள்ளத்தில் வல்லே புக்கு உறைகின்றனன். தனி அறிவு - சிவபெருமானை அறியும் ஒப்பிலா அறிவு; சிவபெருமானால் தவப்பயனாகக் கொடுக்கப்படும் அறிவு.
|
அங்கே யடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா சனத்தே சிவனிருந் தானென்று
சங்கார் வளையுஞ் சிலம்புஞ் சரேலெனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளன்றே.
பொருளுரை: ஆருயிர் உள்ளங்கள்தோறும் எழுந்தருளும் வள்ளற்பிரானாகிய சிவபெருமான் புறத்துத் திருவெள்ளிமலையில் வீற்றிருந்தருள்கின்றனன். அங்கு வலிமைமிக்க தேவர்களெல்லாம் சென்று திருவடி பணிந்து தொழுதனர். அரியணைமீது அரியயற்கும் அறிதற்கு அரியான் வீற்றிருந்தனன் என்று தொழுதனர். விட்டு நீங்காத் திருவருளம்மை சங்க வளையும், அரிமணிச் சிலம்பும், விளக்கமிக்க திருக்கூந்தலும் உடையவள். அவள் சிவபெருமான்பால் வணங்கும் தேவர்கட்கும் பிறர்க்கும் அருள்வாயாக என்று சிவன்பால் விண்ணப்பித்தருளினள். போற்றி - காத்தருள்வாயாக: இகரஈற்று வியங்கோள்.
|
அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தே
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.
பொருளுரை: தொன்மை மலத்தாலும், பன்மை மருளாலும் ஆருயிர் தன்னைச் செறியும் அறிவு வடிவென்று அறியாதிருந்தது. சிவபெருமான் அவ்வுயிர்கள்மாட்டுப் பேரருள்பூண்டு அவ் வுயிர்களை விளித்து நீவிர் தொன்மைமலச் சார்பால் அறிவு விளங்காதிருந்தீர். பின் மாயைச் சார்பால் மருள்கொண்டு தெருளாதிருந்தீர். உண்மையான் நோக்கின் நீவிர் அறிவே வடிவமாகவுடையீர் என்று அறிவுறுத்தருள்வன். அந்த முறையில் அடியேனையும் யான் அறிவுவடிவென்று உணர்த்தியருளினன். அதற்குமுன் யானும் என்னை அறிவு வடிவென்று அறியாதிருந்தேன். அவனருளால் யான் அறிவுவடிவென்ற உணர்ந்தேன். உணர்ந்ததும், அங்ஙனம் உணர்த்திய சிவபெருமான் திருவடியுணர்வில் அவனருளால் கலந்து அதனையே அறிந்து என்றும் இறவா இன்புற்றிருந்தேன்.
|
அறிவுக் கழிவில்லை யாக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல தாதாரம் இல்லை
அறிவே யறிவை யறிகின்ற தென்றிட்டு
அறைகின் றனமறை யீறுகள் தாமே.
பொருளுரை: ஆருயிர்களின் அறிவுக்குக் கேடாகிற அழிவும், தோற்றமாகிய ஆக்கமும் இல்லை. சிற்றறிவுள்ள உயிர்களுக்கு முற்றறிவுள்ள சிவபெருமானே நிலைத்த சார்பாகும். வேறுசார்பில்லை. சார்பு - ஆதாரம். ஆருயிரறிவே பேருயிரின் அறிவுத்துணையால் தன்னையும் தலைவனையும் முறையே சார்வதும் சாரப்படுவதும் என அறிகின்றதென்று திருமறையும் திருமுறையுமாகிய செந்தமிழ் இறைநூல்கள் சிறந்து போதிக்கின்றன. மறை - நால்வர் நல்லருள். முறை - நம்பிரான் திருமூலர் நல்லருள். இவற்றையே தமிழ் வேதாகமங்கள் என்ப.
குறிப்புரை: மறை ஈறுகள் - ஆகமங்கள்.
அருவுருவம். " . - .
" எண்ணரிதாய். சிவப்பிரகாசம், பொது - .
|
மன்னிநின் றாரிடை வந்தருண் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேனீ பெரியையென் றானன்றே.
பொருளுரை: தன் திருவடியில் பெருங்காதலுடன் சார்ந்து நின்றவரிடத்து வலியவள்ளலாகிய சிவபெருமான் வந்தருள்வன். அங்ஙனம் வருவது மாயாகாரிய உடம்பினைப்பெற்ற இடையறாச் சிவநினைவுடன் வாழும் நல்லாரை நிலைக்களமாகக் கொண்டென்ப. ஆதலால் அம் மாயாகாரிய உடம்பினைப்பெற்று வாழும் ஆருயிர் நிலையினை முன் ஓதினேன். முழுமுதல்வனாகிய சிவபெருமானும் திருவருளால் கொள்கின்றனன் திருமேனி ஆதலால் அத் திருமேனி பொன்போல் மிளிர்வதாகும். அத் திருமேனியை அனைத்துலகத்தாரும் புகழாநிற்பர். திருவருளால் அப் புகழ்த் திருமேனியைப் பின்னுதலாகிய புணர்ப்பு முறையில் பொருந்தி நின்றேன். அக்காலத்து அச் சிவபெருமான் தன் அடிமையாகிய என்னை நோக்கி 'நீ பெரியை' என்றருளினன். புணர்ப்பு - அத்துவிதம். இதன்கண் நம் மூலர் தம்பின் நிலை யருளுகின்றனர்.
குறிப்புரை: மாயத்து - மாயாமய தேகத்தில். பொன்னின் - பொன்னைப் போல. பின்னி - கலந்து.
|
அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியுமிவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.
பொருளுரை: சிற்றறிவு முற்றறிவாம் நிலை எய்துதலை அறிவு அறிவாக என ஓதியருளினர். அஃதாவது ஆருயிர் சிவபெருமானின் பெரு நிறைவில் ஒடுங்கிச் சிவமாக விளங்குவது. இது 'முழுநீறு பூசியவர் முனிவ'ராய்த் திகழ்வதையொக்கும். அறிவாக அறிந்தபின் பின்னை மறத்தல் பெரும் பிழையாகலின் மறவாது பெருங்காதல் செய்மின். பெருங்காதல் செய்வதாவது செயலற்று நிற்றலாகிய நிட்டையினைப் புரிதல். சிவமாம் பெருவாழ்வுபெற்ற அறிவு தாம்பெற்ற பேற்றினை இம் முறையாக நினைக்கும். அந் நிலையில் அணிமாதி சித்திகள் தாமே வந்து பொருந்தும். இவ் வண்ணம் சிவபெருமான் அறியும்படி அருள்புரிந்தனன்.
குறிப்புரை: அறிவு அறிவாக - சீவன் சிவனாக.
|
அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே.
பொருளுரை: உலகோர் திருவருள் நாட்டமின்றி அறிவு அறிவென்று அரற்றுவர். எது அறிவு எது அறியாமை என மெய்ம்மையினைப் பகுத்து உணரார். திருவருளால் உணரும் உயிர், அறிவு, அறியாமை என்னும் இரண்டினையும் அருளால் கடந்து முற்றறிவுபெற்றுச் சிவமாம் பெருவாழ்வு எய்தும். அங்ஙனம் எய்தினால் அவ் வறிவறியாமை கடந்து சிவமாம் பெருவாழ்வு எய்திய அடைதற்கரிய திருவாம் பேரழகு புலனாம் என்க.
அறியாமை. சிவஞானசித்தியார், . - .
|
அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவா யொழிந்தெங்குந் தானான போது
அறிவா யவற்றினுள் தானா யறிவின்
செறிவாகி நின்றவன் சீவனு மாமே.
பொருளுரை: மாயாகாரியக் கருவிகளைக்கொண்டு அறியும் அறிவு சுட்டறிவு. அறிந்ததைக் குறித்தலும் அறிந்தேன் என்றலும் சிற்றறிவு. இவ் விரண்டும் புல்லறிவு. இருட்சார்பால் ஏதும் அறியாநிலைமை அறியாமை இது பேதைமை. எனவே பேதைமையும் புல்லறிவாண்மையும் ஆகிய அறியாமை அறிவென்னும் இரண்டினையும் கடந்து நீங்கினவன் மேலோனாவன். அவனே பொறிவழிச்செல்லா நெறிநிற்பவன். பொறிவழி நீங்கினவன் சிவனருளால் எங்குந் தானாக விளங்குவன். தானானபோது நல்லறிவாகிய சிவவுணர்வாய் அவற்றினுள் தான் ஒடுங்கிநிற்பவன் ஆதலின் அறிவின் செறிவாகி நின்றவன் ஆவன். அவனே உயிர்க்கிழவனாகிய சீவனுமாவன். பேதைமையை அல்லறிவெனவும் கூறுப. அந்தமுறையில் அறியாமை, சிற்றறிவு, முற்றறிவு மூன்றனையும் அல்லோடு புல்நல் அறியாமை சிற்றறிவு, சொல்முற்றறிவெனவாம் தூக்கு எனக்கூறலாம்.
குறிப்புரை: நீவி - ஒழித்து. பொறிவாய் ஒழிந்து - புலன்களைக் கடந்து.
|
அறிவுடை யார்நெஞ் சகலிட மாவது
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவது
அறிவுடை யார்நெஞ்சொ டாதி பகவனும்
அறிவுடை யார்நெஞ்சத் தங்குநின் றானே.
பொருளுரை: திருவருளால் நல்லறிவுடையார் நெஞ்சம் அருள்வெளியாகும். அந் நெஞ்சமே சிவபுண்ணிய அருந்தவ நிலைக்களமாகும். அவ்வறிவுடையார் நெஞ்சத்து மும்மையுலகத்துக்கும் அம்மையாகிய திருவருள் எனப்படும் ஆதி எழுந்தருள்வள். பகவனாகிய சிவபெருமானும் அந் நல்லார் நெஞ்சத்தின்கண் தங்கியருள்கின்றனன். மும்மை யுலகம் 'அவன், அவள், அது என்னும் அவை'.
|
மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியன் தித்திக்குந் தீங்கரும்பு
ஆயமு தாகிநின் றண்ணிக்கின் றானே.
பொருளுரை: காத்தற்குரிய மாயனும், படைத்தற்குரிய மலரோனும், துடைத்தற்குரிய இறையும் ஆக விளங்குபவன் சிவபெருமான் ஒருவனே. இறை - அரன். ஆருயிர்கட்கு உடம்புகளைப் படைத்தளிக்கும் வினைமுதற் காரணனும் அவனே. அவன் அன்பரல்லாதார்க்குச் சேயனாக நிற்கின்றான். அன்பர்நல்லார்க்கு அண்ணியனாகவிருக்கின்றான். சேயன் - தொலைவிலுள்ளவன். அண்ணியன் - அருகிலுள்ளவன். மிகஇனிக்கும் கரும்பாவானும் அவனே. அமுதாகத் திகழ்பவனும் அவனே. உயிர் தொறும் ஓவாது அண்ணிக்கும் நுண்ணியானும் அவனே.
குறிப்புரை: காயநன்னாடு - உடல். கரு - பிள்ளைக்கரு. அண்ணிக்கின்றான - சேர்ந்து இருக்கின்றான்.
ஆலைப் அப்பர், . - .
|
என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருந்தலுங் கைவிடாது
என்னைவிட் டென்னை உசாவுகின் றானன்றே.
பொருளுரை: ஒருவன் விளக்கில்லாத இருட்டு வீட்டில் பொருளேயன்றித் தன்னையும் காணமாட்டாத் தன்மைபோல், சிவபெருமானின் நல்லுணர்வாம் முற்றுணர்வு விளக்கு ஏற்றப்படாமையால் ஆருயிர்க்கிழவன் தன்னை அறியும் தன்மையிலாதவனாகின்றனன். அதனால் வருந்தி இத்தனை காலமும் என்னை அறிந்திலேன் என ஓதப் பெற்றது. கருவிகளுடன் கூடி உயிர் தானுண்டென அறிவது அவ் வுயிரின் பொது நிலையும் நிலையில் நிலையுமாகும். கருத்தாவாகிய சிவபெருமான் உடன் கூடி உடனாய் நின்று உணர்வது சிறப்பு நிலையும் மாறா நிலையுமாகும். திருவருளால் என்னை யறிந்தபின் உலகியலில் யான் நிற்பினும் உலகியற் பொருள்கள் ஒன்றும் அறிந்திலேன். ஆருயிரின் தன்மை ஒன்றில் அழுந்தி அதுவதுவாய் நிற்குங்கால் வேறொன்றும் அறியாமையாகும். அது, சார்ந்தொன்றில் தானழுந்த வேறறியாத் தன்மையுயிர், ஆர்ந்த சிவத்தாரறியார் வேறு என்பதனால் உணர்க. என்னை யறிந்திட்டுச் சிவனிறைவில் அடங்கியுள்ளேன். சிவனும் என்னைக் கைவிடாது ஆண்டு கொண்டனன். சிவன் என்னைத் திருவருளிலிட்டு என்னையே உசாவுகின்றனன். உசாவுதல் - புலன்வினாதல். மாறாநிலை - நினைப்புள்நிலை. இதன்கண் நம் மூலர் தம்முன்நிலையருள்கின்றனர்.
|
மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.
பொருளுரை: மாயாதனு விளக்காதலின் மாய விளக்கது என்றார். அஃதாவது மாயாகாரியமாகிய உடல் கலன் உலகு ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாகவும், அதன்கண் காணப்படும் எண்ணெய் அகல் திரி தீ முதலியன போல நுகர்வாகவும் இருக்கின்றன. ஆனால் அது காலவரையறைக்கு உட்பட்டு மாயும். அதனால் அதனை நின்று மறைந்திடும் என்றனர். என்றும் ஒன்றுபோல் நின்று ஒளிரும். தூய விளக்காகிய சிவன் திருவடி விளக்கு ஆருயிர்களுக்கு முற்றுணர்வினை உற்றுவிளக்கி முற்றுவிக்கும். உடம்பாகிய விளக்கு அடம்பண்ணி 'உன்னோடு வாழ்தல் அரிதென்று' அலறி அழும்படி வருத்தும். இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட திருவடிப் பேரின்பப் பெருவாழ்வென்னும் செம்மையான விளக்கு அம்மையினை அருள்வதாகும். அம்மை - திருவடிப்பேறு. அத் திருவிளக்கினை அருளால் நாடுகின்றேன். சேய - செம்மையான.
குறிப்புரை: மாயவிளக்கு - மாயையாகிய விளக்கு. தூய விளக்கு - ஞான விளக்கு. காய விளக்கு - உடலாகிய விளக்கு. சேய விளக்கு - செம்மையாகிய விளக்கைப் போன்ற சிவன்.
மாயாதனு. சிவஞானபோதம், . - .
|
தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டையும்
நாடுகின் றெனல மேயுடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.
பொருளுரை: பத்துத் திசையின்கண்ணும் பரம் பொருளைப் பரிந்து தேடுகின்றேன். பொலம் ஒரு சிறிதும் இல்லா நலமே நிறைந்த சிவபெருமானைக் குறித்து அவன் திருவடியை நாடுகின்றேன். சிவபெருமானே நமக்கு வழித்துணையும் விழுத்துணையும் என்று பழுதில் செந்தமிழால் பாடிப் பரவுகின்றேன். அச் சிவபெருமானே பரம்பொருள்; அவனே ஆருயிர்த்துணை என்னும் உண்மை கண்டு அவன் திருவடியிற் கூடுகின்றேன். அதுவே நிறைமன வழிபாடாகும். அத் திருக்குறிப்புக் 'குறையாமனம்' என்பதனால் பெறப்படும். திசை - புலம். பொலம் - தீமை.
|
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பன்றே.
பொருளுரை: முன்னை என்று ஓதப்படும் அனாதியின்கண் முதல் விளையாட்டாகிய பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் நுண்ணுடம்புப் பிறப்பில் பிறந்தோர், பின்பு ஐம் மலமும் அகலும் நிலையில் செவ்வி வாய்ந்தோர் ஆவர். அவர் திருவருளால் தம்மைத் தெரிவர். தெரிந்த தமக்குரிய பண்டைத் தலைவனாம் சிவபெருமானின் தாளிணையைச் சார்ந்த ஆளினராவர். இவர்கள் என்றும் பொன்றாது நின்று சிவமாக மன்னி வாழ்வர். அதனால் மீண்டும் பிறப்பினுக்கு வாரார்.
குறிப்புரை: முன்னை முதல் - அநாதி முதல். விளையாட்டத்து - பிறப்பினுள். மலம் வந்தவர் - மல பரிபாகம் வந்தவர். பேர்த்திட்டு - சமாதியால் மலத்தைக் கெடுத்து.
|
எட்டாம் தந்திரம். ஆறந்தம்
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகுமெட் டியோகாந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்த மாகுமே.
பொருளுரை: அறுவகை ஈறும் ஒருவகை முடிபாம் பெறுமுடிபென்ப, அவற்றைக் கூறுங்கால் முறையே. . மறைமுடிபு, . முறைமுடிபு. . ஒலி முடிபு. . அறிவின் முடிபு, . செறிவின்முடிபு, . உணர்த்துவதன் முடிபு எனக் கூறுப. இவற்றை முறையே 'வேதத்தினந்த' முதலாக ஓதியருளினர். ஈண்டுக் குறிக்கப்படும் மறைமுடிபு செந்தமிழ் மறைபடிபே. மிக்கசித்தாந்தமென்பது தமிழாகமப் பிழிவாம் மெய்கண்ட அமிழ்தே. நாதாந்தம் முப்பத்தாறாம் மெய்யாம் ஓசைமுடிபே. போதாந்தம் நாதத்துணையாக அறியும் அறிவின் முடிபே. யோகாந்த மென்பது நிலைக்களத் திருவுருவச் சேர்க்கை முடிபே. கலாந்தமென்பது இவற்றைத் தொழிற்படுத்தும் திருவருள் ஆற்றலின் செயன் முடிபே என்க. கலா: கலை; ஐங்கலை. அவை நீக்கல் முதலைவகை ஆற்றல்.
குறிப்புரை: வேதத்தின் அந்தம் - ஆகமம். சித்தாந்தம் - ஆகமசாரமாய்ச் சீவன் முத்தர்களால் இயற்றப்பட்ட முடிந்த முடிவான சித்தாந்த நூல்கள். ஆறந்தம் - வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்.
|
அந்தமோ ராறும் அறிவார் அதிசுத்தர்
அந்தமோ ராறும் அறிவார் அமலத்தர்
அந்தமோ ராறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோ டாதி அறியவொண் ணாதன்றே.
பொருளுரை: மேலோதிய ஆறந்தங்களும் திருவருளால் அறிபவர் எல்லையில்லாத தூயராவர். அதுபோல் ஆறந்தமும் அறிவார் மலமற்றவராவர். இவற்றின் உண்மைகளைச் சிவகுரு வாயிலாக அறியாதவர் இறப்புப்பிறப்பினையும், உலக ஒடுக்கத் தோற்றங்களையும் ஒரு சிறிதும் உணராதவராவர்.
குறிப்புரை: அந்தமோடு ஆதி - உலகத்தின் ஒடுக்கமும் தோற்றமும்.
|
தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்தம்
ஆனாத் துரியத் தணுவன் றனைக்கண்டு
தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற் றருஞ்சித்தி யாதலே.
பொருளுரை: தானான வேதாந்தம் என்பது நினைப்பாகிய பாவனைப் பயிற்சியான் யான் அதுவானேன் என்னும் முறைமையாகும். தான் என்னும் சித்தாந்தம் என்பது திருவருளால் பாவனைப் பயிற்சியுங் கடந்து தன்னாமங் கெடும் நிலைமை நேர்ந்து தானே எனச் சாற்றும் தனி மறையாகும். இவ்வுண்மை 'வினைக்கண் வினையுடையான் கேண்மை' என்னும் திருவள்ளுவ நாயனாரருளிய செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க. கேண்மை - வேறாக நில்லாமை அதற்கு ஒப்பு முழுநீற்றோடு தோன்றிய விழுமிய திருமேனியாகும். திருமேனி திருநீற்றினுள் அடங்கத் திருநீறே தோன்றும் சிறப்பினதாகும் மெய்கண்ட நாயனாரும் 'தானே எனுமவரை' என அருளினர். நீங்குதலில்லாத சிவ நினைவுடன் கூடிய பேருறக்க நிலையாகிய ஆனாத்துரியத்து அணுவனாகிய ஆருயிர்க்கிழவன் திருவடி யுணர்வால் சிவனைக் காணுமுறையினால் தன்னையுங் காண்பன். கண்ணாடியில் தன்னைக் காண்பவன் கண்ணாடியைக் காணுமுறையால் தன்னைக் காண்பது இதற்கொப்பாகும். பொறிகள் அத்தனையும் புலன்களைக் கலந்து வேறன்மையாக் காணுங்காலத்து அதன் வாயிலாகவே தம் இருப்பினையும் துய்ப்பினையும் தாம் உணர்கின்றன; அதுவே ஈண்டு ஒப்பாகும். தேன்போலும் மிக்க இனிமையையுடைய 'மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய்' நிற்கும் சிவபெருமானுடன் பிரிவின்றிச் சேரும் சிவயோகத்தை எய்துவர். எவற்றாலும் நீக்கமுடியாத மலமறும் பெறுதற்கரிய பேறு கைகூடும்.
குறிப்புரை: தானான வேதாந்தம் - ஆன்மாவே பிரமம் என்று கூறும் வேதாந்தம். தான் என்னும் சித்தாந்தம் - சிவமே ஆன்மா என்னும் சித்தாந்தம். ஆனா - கெடாத. அணு - ஆன்மா.
நானவ. சிவஞானபோதம், . - .
" கண்டவிவை. சிவஞானசித்தியார், . - .
|
நித்தம் பரனோ டுயிருற்று நீள்மனஞ்
சத்த முதல்ஐந்துந் தத்துவத் தால்நீங்கிச்
சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.
பொருளுரை: என்றும் பொன்றா இயற்கை வாய்ந்தவன் சிவன். அவனே பரன் எனப்படுவன் : அவனுடன் ஆருயிர் அருளால் ஒன்று சேரும். சேர்ந்தபொழுது மனம், ஓசை முதலிய ஐந்து பொறிகளும் மெய்களாகும். மெய்கள் - தத்துவம். மெய்கண்ட நூற்பயிற்சியான் தத்துவ உண்மைகளை உணர்வர். உணரவே அவற்றின்கண் பற்று நீங்கும். தூமாயை, தூவாமாயை ஆகிய சுத்தம் அசுத்தங்கள் தொடரா முறைமையினை நன்கு நினைவர். நினையவே யாவர்க்கும் அத்தனாய் விளங்கும் சிவபெருமான் திருவடியை அடைந்து பேரின்பம் எய்துவர். இவ் வுண்மையினை விளக்குவது சித்தாந்தமாகும்.
குறிப்புரை: நித்தம் - எப்போதும். தத்துவத்தால் - உண்மை தேர்தலால்.
|
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாவாறாறு
ஓவும் பொழுதணு வொன்றுள தாகுமே.
பொருளுரை: பொருந்திய அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அதற்கப்பால் பொருந்திய பரவிந்து. பரநாதமும் விட்டு முப்பத்தாறு மெய்களும் கருத்தின்கண் நீங்கியபொழுது நிலைத்த ஆருயிரின் உண்மை நன்கு புலனாகும்.
குறிப்புரை: விடா - விட்டு. ஓவும் - நீங்கும்.
|
உள்ள வுயிராறாற தாகும் உபாதியைத்
தெள்ளி யகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க வோருணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத் தெய்திடும் போதமே.
பொருளுரை: மெய்களின் ஆய்வுமுறைமையால் உண்மை கண்டுள்ள ஆருயிர் முப்பத்தாறு மெய்களின் பிணிப்பினின்றும் விடுபடும். பிணிப்பு - உபாதி. விடுபட்ட தெளிவினால் நாதாந்தத்தைக் கடக்கும். அகவிருள் அகல அருளணர்வு தோன்றும். தோன்றவே குறைபாடில்லாத நாத முடிவில் எய்தும் நல்லறிவு கைவந்து பொருந்தும். மெய்கள் - தத்துவங்கள்.
குறிப்புரை: செற்று - கடந்து.
|
தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடுஞ் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சிவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
பொருளுரை: ஆருயிர்க்கு நீங்கா உறுதிதரும் செயல் வகைகளை ஆராய்ந்து அல்லவற்றை அடக்குவதாகிய இயமமும் நல்லவற்றில் நடக்குவதாகிய நியமமும் கைக்கொண்டார் பின்பு அவற்றையுங் கடந்து செயலறுதலாகிய சமாதியை அடைவர். அம் முறையால் சிவபெருமானின் அருகு பொருந்துவர். ஆருயிர் சிவபெருமான் நிலையை எய்தப் பற்றற்ற நிலையிற் சாரும். அதுவே வேண்டுதல் வேண்டாமை இன்மை தலைப்படுதலாகும். தலைப்படுதல் - உபசாந்தம். இத் தலைப்பாடே யோகாந்தக் கொள்கையாகும். அடக்கலும் நடக்கலுமாகிய இயம நியமம் வருமாறு:
"பொய்கொலை களவே காமம் பொருணசை
"
"பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு
"குறிப்புரை: பாடுற - அருகிற் சேர.
|
கொள்கையி லான கலாந்தங் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து வுள்ளே யொடுங்கலுந்
தெள்ளி யதனைத் தெளிதலு மாமே.
பொருளுரை: குறிக்கொள்ளத்தக்கதான கலாந்தத்தைச் சொல்லுமிடத்து நீக்கல் முதலிய ஐந்து கலைகளும், கொழுப்பு முதலிய எழுவகைப் பொருள்களும் மாயையின்கண் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கு முறைமையினை ஆய்தலும், ஆய்ந்து தெளிதலும் கலாந்தமாகும். கலைகள் ஐந்து: நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்ப. பொருள்கள் ஏழு: சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ப. ஏழு பொருள்கள் - சப்ததாதுக்கள்.
குறிப்புரை: நிவிர்த்தாதி - நிவிர்த்திகலை முதலிய ஐந்து கலைகள். மேதை - மூளைச்சத்து, இது எழுவகைத் தாதுவில் ஒன்று.
|
தெளியு மிவையன்றித் தேரைங் கலைவேறு
ஒளியுள் அமைத்துள்ள தோரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரந் தந்திரந்
தெளிவுப தேச ஞானத்தொ டைந்தாமே.
பொருளுரை: மேலோதியவாறு கலாந்தம் தெளிவதல்லாமல் வேறுமொரு வகையாற் குறிப்பதுமுண்டு. அந்தம் நீக்கல் முதலிய கலைகளைந்தினையும் சிறப்பாகிய திருவருள் ஒளியுள் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்து ஓரவல்லார்கட்குச் சிவபெருமான் அளவில் பேரருள்புரிகின்றனன். அவை: மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என ஐந்தாகும். இவ் வைந்தினையும் அருளே மறைமுறை ஆசான்சொல் மெய்ம்மை, தருமுணர்விவ் வைங்கலையந்தம் என்ப.
குறிப்புரை: ஐந்து - கலை, மந்திரம், தந்திரம், உபதேசம், ஞானம்.
|
ஆகும் அனாதி கலையா கமவேதம்
ஆகுமத் தந்திர மந்நூல் வழிநிற்றல்
ஆகு மனாதி யுடலல்லா மந்திரம்
ஆகுஞ் சிவபோ தகம்உப தேசமே.
பொருளுரை: கலை என்னும் திருவருளாற்றல் தொன்மையதாகும். இக் கலையே முறையும் மறையும் எனப்படும் ஆகம வேதங்களாகும். அம் முறை மறைவழியின் நிறையின் நீங்காதொழுகுதல் தந்திரமாகும். மனம் முதலிய கருவிகள் நீங்கி உணர்விற்கணிக்கும் ஒண்மையவாம் 'சிவசிவ' மந்திரமாகும். சிவபெருமானைத் தெளிவிக்கும் சிவ குருவின் திருவார்த்தை உபதேசமாகும். உபதேசம் - குருமொழி.
குறிப்புரை: மனாதி உடலல்லா மந்திரம் - மனம் முதலிய கருவிகளும் சரீரமும் அல்லாது தனித்து நிற்கும் மந்திரம், அஃதாவது காரண பஞ்சாக்கரம்.
|
தேசார் சிவமாகுந் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையுங் கலாந்தத்துப்
பேசா வுரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானன்றே.
பொருளுரை: ஞானக்கலை என்பது அளவில் பேரொளிப் பகவனாகிய சிவபெருமானாகும். ஆன்றோரைப் பின்படர்ந்து ஒழுகுவது ஆசாரம் என்ப. அவ்வொழுக்கத்துத் தலைநிற்கும் பேரன்பு நேயம் என்ப. இவ்விரண்டும் சொல்லப்படும் கலாந்தமாகும். இவ் வழி ஒழுகி வாய் வாளாமையாகிய உரையுணர்வற்ற பெருநிலையுற்றோன் பெருந்தகையாவன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமானாவன்.
|
தானவ னாகுஞ் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.
பொருளுரை: ஆருயிர் பேருயிர்க்கண் ஒடுங்குதலேதானவனாகும் சமாதி நிலை என்ப. இந்நிலையினைத் தலைப்படுதலே கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் என்ப. சிறந்த சித்தாந்தம் எனப்படுவது காட்சி, காணப்படும் பொருள், காண்போன் என்னும் முத்திற முடிபும் எத்திறமும் நீங்காது கொள்ளும் நிலைமைத்தாகும். ஞானம் - காட்சி. ஞேயம் - காணப்படும் பொருள். ஞாதுரு - காண்போன்.
குறிப்புரை: ஞேயம் - காணப்படு பொருள். ஞாதுரு - காண்பவன்.
|
ஆறந்த முஞ்சென் றடங்குமந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனஞ் சிவானந்த வுண்மையே.
பொருளுரை: மேலோதிய அறுவகை அந்தமும் நேயமாகிய பேரன்புப் பொருளாம். சிவபெருமான்கண் ஒடுங்கும் ஞாதுரு என்று சொல்லப்படும் காண்போனும், காண்டற்குரிய ஞானமாகிய அறிவும் சிவன் திருவடிக்கீழ் ஒருங்கு ஒடுங்கும். ஒடுங்கவே தெளிந்த முன்மை யுணர்வாம் மோனம் கைகூடும். இதுவே சிவானந்த வுண்மையாகும். ஆனந்தம். ஆதற்குப் பொருந்தும் பேரின்பம். நீருள் மூழ்குவோனுக்கு வேறாக இருக்குங்கால் அந் நீரைப் பற்றிய நினைப்பும் உணர்வும் முனைப்பது போன்று நீருள் மூழ்குங்கால் தோன்றாமைபோல் மெய்யடியார்களுக்கும் சிவத்துடன் நிற்குங்கால் காட்சி காண்போன் முதலியன தோன்றா தடங்கும்.
|
உண்மைக் கலையாறோ ரைந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலையொன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல வோரந்த மாகுமே.
பொருளுரை: மெய்ம்மைக் கலை பதினொன்று ஆகும். கலாந்தம் பதினேழாகும். உண்மையான கலையின்கண் முற்றுற நிற்பது நாதாந்தமாகும். இத் திருவருட் கலைகளைச் சிவகுரு அருளிச் செய்ய ஒப்பில் ஒரு முடிபாகும்.
|
ஆவுடை யாளை யரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாடந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைக் கருதுமே.
பொருளுரை: ஆவாகிய ஆருயிர்களை உடைமைப் பொருளாக் கொள்ளுங்கால் அவ் வுயிர் அருளுயிராகும். இதனால் திருவருளம்மை ஆவுடையாள் எனப்படுவள். சிவபெருமானாகிய அரன் எழுந்தருளி வந்து ஆவுடையாளைத் தன்னகத்து அடக்கிக்கொள்ளுவன். அங்ஙனம் கொண்ட பின், தேவர்களையும் உடைமைப் பொருள்களாகக் கொண்டருள்பவன் சிவன். அவன் எங்கள் சீர்நந்தி ஆவன். அதன்பின் சிவகுருவாக எழுந்தருளிவந்து திருவடி சூட்டியருளினன். என்றும் பொன்றா நிலைபேறுடைய வேதாந்த சித்தாந்த மேன்மையினை வலிய வந்து ஆண்ட வள்ளல் கூவியழைத்துக் கூறியருளினன். அத்தகைய முழுமுதல்வனை இடையறாது எழிலுள்ளத்து எண்ணுவோமாக. சிவபெருமான் வந்து ஆட்கொண்டபின் ஆவுடையாளைக் கூவி வேதாந்த சித்தாந்த உண்மைகளை அருளிச் செய்யும் பொருட்டு அருளினன் என்றலும் ஒன்று. அருளிய - அருளிச் செய்யும் பொருட்டு; செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினைஎச்சம்.
|
கருது மவர்தங் கருத்தினுக் கொப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசம யப்புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த வுண்மையே.
பொருளுரை: கருதுவார் கருத்துக்கு ஒவ்வுமாறு பள்ளி வகுப்புப்போல் படிப்படியாக முப்பொருள் உண்மை வகுத்துரைத்தருளினன் அவ் வுரைகள் அரனுரை ஆகமம் என்று பெயர்பெறும் அவ்வாகமத்துள் கூறப்படும் சமய வுண்மைகள் அகச் சமயம், அகப்புறச் சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என நான்காகவும், ஒவ்வொன்றும் அவ்வாறாக இருபத்துநான்காகவும் பெறப்படும். இவைகளெல்லாம் சமயப்புறம் என்றதனால் பெறப்பட்டன. இவையனைத்தும் மாயை மாமாயை என்னும் மாயாகாரியப் பகுப்பினுள் அடங்குவன ஆகும். இம் முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பாற்பட்டது வேதாந்தசித்தாந்த மெய்ம்மை என்ப. உருவிய - நீங்கிய.
|
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண் டின்புறு வோர்களே.
பொருளுரை: திருவருளால் ஆராயின் வேதாந்தம் என்பது விருப்புடன் கேட்கத்தக்க மூன்று பதங்களையுடையன. அவ்வுயிரினும் சிறந்த பதங்கள் அகரம் உகரம் மகரமாகும். இம் மூன்றும் முறையே அருவும் உருவும் மருவும் அகும். அருவால் சிவபெருமானும், உருவால் சிவபெருமானுக்கு உருவாம் வனப்பாற்றலாகிய அம்மையும், ஆருயிர்களுக்கு உருவைப் படைத்தளித்து நடத்தும் ஆதியும், மருவும் என்றதனால் பண்டே புல்லிய மலநோயும், அம் மலநோயாற் பிணிப்புண்ட ஆருயிர்களும், அப்பிணிப்பினைக் கண்டிரங்கி விடுவிக்கக் கூட்டிய வினைமாயைகளும் பெறப்படும். அகர உகர மகரங்கள் ஓங்காரம் எனப்படும். இம் மூன்றும் அறிவு விளங்குதற்குரிய ஓசைத் துணைக்கருவியாகும். இந்த அறிவின் முடிபாகிய பிரணவம் என்று சொல்லப்படும் ஓங்காரத்தினுட்புகுந்து நாதாந்தம் வேதாந்தம்போதாந்தங்கட்கு முதல்வனாகிய சிவபெருமானை இஃதென்று சுட்டியறியப்படாது ஒட்டியறிந்து ஓவா இன்பம் உறுவார்கள். போதாந்தம் - முடிந்த முடிபாகிய திருவடியுணர்வு.
குறிப்புரை: முப்பதம் - அகாரம், உகாரம், மகாரம்.
|
வேதாந்தஞ் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தஞ் சீரோ தயமாகும்.
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.வேதாந்த சித்தாந்த முப்பொருள் முடிபுகள் வேற்றுமையில்லாத ஒற்றுமையுள்ள அடையாளக் குறிப்பாகும். அறிவின் முடிவே அருள் ஞானம். செறிவின் முடிவாகிய யோகாந்தம் பொதுவாக அறியப்படும் பொருளாகிய ஞேயம் ஆகும். ஓசைமுடிவாகிய நாதாந்தம் இன்பமாகும். அம்மட்டோ அவ்வின்பவடிவாய்த் திகழ்ந்து இன்பத்தைத் தந்தருளும் சீர்த்தோற்றமுமாகும். முடிந்த முடிவாகிய திருவடிப் பேருணர்வின் முத்திரை மோனமாகிய மேன்மைத் திருவடி ஞானத்துள் மூழ்குதலாகும்.
குறிப்புரை: மூதாந்தம் - பழைமையான அந்தம்.
|
வேதாந்தந் தன்னில் உபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.
பொருளுரை: வேதாந்த நிலைக்கண் உயிர் நுகர்வு நிலை ஏழு. இவ்வேழும் விட்டகல் நாதாந்தமாகிய ஓசைப் பிணிப்பின்கண்ணுள்ள பற்றறும் நன்மை பயப்பதாகிய தொம்பதமாகும். தொம்பதமென்பது ஆருயிரைக் குறிக்கும் நீ என்பதாகும். உபாதி நுகர்வுநிலை. மீதாந்தமாகிய அப்பால் முடிவு காரணோபாதியாகிய இறைநுகர்வுநிலை ஏழாகும். மெய்ப் பொருளாம் சிவன் அறிவின் முடிவாம் தற்பதமாகும். தன் - தலைவன்; இறை. ஆருயிரும் இறையும் ஒன்று கூடும்நிலை அசி என்பதாகும். அசி - ஆகிறாய்.
குறிப்புரை: உபாதி ஏழ் - சீவ உபாதி ஏழ். காரணோபாதி ஏழ் ஈசுர உபாதி ஏழ். அசி - சிவ சீவர் ஒன்றாம்நிலை.
|
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.
பொருளுரை: செந்தமிழ்த் திருநான்மறையினைத் திருவருள் நினைவுடன் கற்று அவற்றால் எய்தும் திருவடியுணர்வு கைவரப்பெறாத சில்லோர் பெயர் மாத்திரையானே வடமொழி வேதத்தையும் வேதமெனத் தப்பாகக்கொண்டு அழிந்துபட்டுப்போகும். வேள்வி முதலாயினவற்றையே புரிந்து அவஞ்செய்கின்றனர். இதனையே மெய்கண்ட நாயனார் 'பசித்துண்டு பின்னும் பசிப்பானையொக்கும்' என்னும் திருவெண்பாவால் அவ்வேத வேள்வி தாழ்வானவை மட்டுமன்றிப் பயனும் நிலையில்லன; துன்ப விளைவின என்றும் அருளினர். பின்பு நாதத்தையே தெய்வமாகக் கொள்வோர் நாதாந்தபோதம் எய்துவர். அவர்கள் வழிப்பேறாகிய பதமுத்தி எய்துவர். அறிவார்கள் அனைவர்க்கும் அறிவை விளக்கும் சிவபெருமான் எல்லையில்லாத பேரறிவினன். அவ்வறிவினைத் திருவருள் துணையால் வணங்குவர். வணங்கவே சிவபெருமான் பக்கத்துச் செறியும் சீர்மை எய்துவர். இவர்கட்கு நாதாந்த முத்தியும் சித்தியும் எளிதின் எய்தும். நண்ணும் - எய்தும்.
குறிப்புரை: வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் - உண்மை வேதாந்த ஞானம் அடைய ஊழ் இன்றி, வடமொழி வேதங்களை ஓதியாகாதிகளை இயற்றுவோர். நாதாந்த போதம் - நாத தத்துவத்தை உணரும் ஞானம் நாதாந்த முத்தி - நாத தத்துவத்திலுள்ள பதமுத்தி. சித்தி - எண் சித்தி.
|
அண்டங்கள் ஏழுங் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளவொளி
பண்டுறு நின்ற பராசத்தி யென்னவே
கொண்டவ னன்றிநின் றான்எங்கள் கோவே.
பொருளுரை: எழுவகையாகக் கூறப்படும் அண்டங்கள் அனைத்தையும் கடந்து நீங்கி அப்பாலும் அருளால் நோக்கினால் அங்கு என்றும் நிலைப்பாக உண்டென்று சொல்லப்பெறும் அருள் ஒளியாகிய பேரொளி ஒன்று உண்டாம். அப் பேரொளிக்கும் உள்ளாக ஓர் அறிவுப் பேரொளியுண்டாம். அவ்வொளியே திருச்சிற்றம்பலமாகும். இத் திருச்சிற்றம்பலம் பண்டே பொருந்தியுள்ள பேரறிவுப் பெருந்திருவாகிய பராசத்தி எனப்படும். அப் பராசத்தியாகிய வனப்பாற்றலைத் திருமேனியாகக் கொண்டுள்ளவன் சிவபெருமான். அவன் எல்லாவற்றுடனும் கலப்புத் தன்மையால் விரவி நின்றான். எனினும் பொருள் தன்மையால் வேறுபட்டும் நின்றருள்கின்றனன். அத்தகைய விழுமிய முழுமுதற் சிவபெருமானே எங்கள் முதல்வன் ஆவன். கோ - முதல்வன்; வேந்தன். பரம்: மேல். இப்பரம் என்னும் தமிழ்ச் சொல் 'புரை' என்னும் உரிச்சொல்லடியினின்றும் தோன்றியது. 'உருவுட்காகும் புரை உயர்வாகும்.'குறிப்புரை: முளவொளி - சிற்றம்பலம். அன்றி நின்றான் - மற்றொன்றோடு சம்பந்தம் இல்லாது நின்றான்.
|
.கோவுணர்த் துஞ்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.
பொருளுரை: சிவபெருமான் சிவகுருவாய் எழுந்தருளிவந்து திருவருளாலே அனைத்துண்மைகளையும் உணர்த்தியருள்வன். அவன் உணர்த்திய குறிவழிநின்று சிவவழிபாட்டுச் செய்தியைச் செய்தல்வேண்டும். அதன் பொருட்டுச் செந்தமிழ்த் திருமறை திருமுறை முதலியவற்றில் காணப்படும் மந்திரத் திருப்பாட்டுக்களை மனந்தூயராய் இனத்துடன் சேர்ந்து ஓதி எப்போதும் வழிபடுதல்வேண்டும். சிவபெருமான் தங்கும் கோயில் ஆருயிர்களின் கள்ளமிலா வெள்ளையுள்ளமே. திருக்கோயிலும் ஆங்குக் காணப்படும் குறிகளும் அடையாளமுமாகவுள்ள திருவுருவங்களும் பிறவும் அச் சிவபெருமான் அன்பர் உள்ளத்துக்கு எழுந்தருளி வரும் வாயில்களே. உள்ளம் சிவபெருமான் உற்றுறைஇல் கோயிலுரு, கொள்ள வருவழியாங்கூறு என்பதை நினைவுகூரின் மேலது விளங்கும். அங்ஙனம் வழிபாடு செய்யவே உண்டொழியாத எஞ்சுவினை யனைத்தும் ஒப்பில் ஒருவனாம் அச் சிவபெருமானால் நீங்கும்படி ஏற்படும். ஓவ: என்பது ஓ என நின்றது. ஓவ - நீங்க. ஒருவன் - ஒப்பில் சிவபெருமான்.
குறிப்புரை: கோ - ஆன்மா. சத்தி - திருவருட் சத்தி. தேவுணர்த்துங் கருமம் - சிவத்தை யறியும் செயல். பா - தோத்திரப் பாட்டு. பாரிப்ப - நிரம்பச் செய்ய. ஓவ - ஒழிய.
செந்தமிழர். சம்பந்தர், . - .
|
ஒருவனை யுன்னார் உயிர்தனை யுன்னார்
இருவினை யுன்னார் இருமாயை யுன்னார்
ஒருவனு மேயுள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.
பொருளுரை: ஒப்பில் ஒருவனாம் சிவபெருமானை உள்ளன்புடன் நாடார். அவனை நாடாமையால் ஆருயிரின் உண்மையினையும் நாடார். இது மணத்தையறியும் வாயிலாகவே மறைந்துள்ள மலரை அறிதல்கூடும். மணத்தையே அறியாரெனின் மலரை எங்ஙனம் அறிவர்? அறியார் என்னும் ஒப்பினை இஃது ஒக்கும். இருள்சேர்முனைப்பாற் செய்யப்படும் நல்வினை தீவினை என்னும் இருவினையையும் நாடார். தூமாயை தூவாமாயை என்னும் இருமாயையினையும் நாடார். ஒருவனாகிய சிவபெருமான் ஒருவனுமே இவையனைத்தையும் உள்நின்று உணர்த்தியருளுகின்றனன். இருவினைப்பயனை ஊட்டியருள்கின்றனன். அவன் 'மாற்றம் மனம்கழிய நின்ற மறையோன்' ஆதலின் அருவன் என்றனர். அவனே யாவர்க்கும் யாவைக்கும் மேலாம் அளவிலாச் சீருடைய சிவனாவன். அச் சிவனே அனைத்தையும் தாங்கும் நிலைக்களனாவன். ஆதாரம் என்பது ஆதரம் எனக் குறுகி நின்றது. ஆதாரம் - நிலைக்களம்.
குறிப்புரை: ஒருவன் - சிவன் vide "ஒன்றவன் தானே இரண்டு அவன் இன்னருள்". இருமாயை - மாயை, மாமாயை. ஊட்டி - இருவினைகளைப் புசிப்பித்து.
அருவுருவம். சிவஞானபோதம், . - .
|
அரனன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றுந்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.
பொருளுரை: பேரொடுக்கப் பெருமானாகிய அரன் தன் அன்பர் தூயவுள்ளத்தையே கோயிலாகக்கொண்டு எழுந்தருளியுள்ளான். அச் சிவபெருமானிடமாகவிருந்து வெளிப்படும் ஆற்றல்கள் சத்திகள் என்று சொல்லப்படும். அவற்றை முதலாக வகுத்தருளினன். அத் திருவருள் ஆற்றல்கள் உள்நின்று உன்னும். அஃதாவது இவ்வாறு உலகம் உருவாகுக என நினைக்கும். அவ்வாறே அவையாகும். அக் குறிப்பே உரனுறு திருமுன் சேட்டிப்ப என்றருளினர். சேட்டித்தல் - தொழிற்படுதல். உரனுறுசந்நிதி - ஆற்றல் திருமுன். ஆருயிர்கள் திருவருளாற்றல்களில் நிலையுறுமாறு தோய்ந்து சிவஇன்பியாகும். தோயா - தோய்ந்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சிவானந்தி - சிவஇன்பி; திருவடி இன்பினைநுகர்வோன்.
ஆருயிர் என்றும் மீளா அடிமையாய்ப் பொன்றாப் பேரின்பம் புசிக்கும் என்னும் பொய்யில் வாய்மை வரும் வெண்பாவால் உணர்க:
"நெட்டுயிரெல் லாம்காவல் நேர்காதல் குற்றுயிராம்
கட்டுமலம் மும்மைமெய் கண்ணுதலோன் - மட்டில்
அகரவுயிர் ஆய்தமும் அம்மைஅடி இன்பம்
"
காவல்: ஆண்மை, காதல்: பெண்மை. மும்மைமெய்: வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து. அம்மை: நடப்பாற்றல்; ஆதிசத்தி. குற்றுகரம்: குற்றியலுகரம். இது 'நுந்தை' என்பதன்கண் முதலாம். 'குற்றியலுகரம்' - தொல். எழுத்து - . நோக்குக.
|
வேதாந்த தொம்பத மேவும் பசுவென்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போயிரண் டயிக்கியஞ்
சாதா ரணஞ்சிவ சாயுச்சிய மாமே.
பொருளுரை: வேதாந்த வாயிலாக முப்பொருளுண்மை நாட்டல் 'தத்துவமசி' என்னும் மறையினால் ஆம். இவை தத், துவம், அசி எனப் பிரிந்து மூன்று சொற்களாக விளங்கும். இம் மூன்றனுள் தொம்பதம் நீ எனப் பொருள் பயந்து முன்னிலைச் சுட்டாய் ஆருயிர்களைக் குறிக்கும். அதனால் 'தொம்பதம் மேவும் பசுவென்ப' என்றருளினர். நாதமுடிவாகிய பாசம் ஆருயிர்களைப் பற்றிநிற்கும். அப் பாசம் அகல நிலைபெற்ற பதி, அறிவின் முடிநிலையாய் இயற்கைப் பேரறிவாய்த் திகழும் தற்பதமாகும். தத்-அது. அஃது என்ற சேய்மைச் சுட்டாகும். சேய்மைச் சுட்டென்பது சுட்டொணாப் பொருளை உளதென்னும் உண்மைக்கு ஊறின்றி உரைக்கும் கட்டுரை. எனவே, அஃது என்பது பதியாகிய சிவபெருமானாகும். ஆருயிரும், பேருயிராகிய பதியும் இரண்டறக் கூடும் கூட்டத்தைக் குறிப்பதாகும். அசி. அசி: ஆகிறாய். இரண்டன் கூட்டமும் அயிக்கியமாகும். ஆருயிர் பேருயிராகிய சிவமாகின்றது என்றமையால் முன் ஆகாமைக்குக்குக் காரணம் மலம் என்பது ஆகும். அம் மலத்தைப் போக்கியது திருவருளாகும். அத் திருவருள் கற்பிப்பார் போன்று ஆருயிரைக்கொண்டே மலத்தை அகற்றுவிக்கும். எனவே முப்பொருள் உண்மையும் அப்பொருள் கூட்டமும் திட்பமுறப் பெறப்படும் என்றும் மாறா இயல்பிற்றாய் இலங்கும் சிவ ஒன்றிப்பு ஆகும். சாதாரணம் - இயல்பு. சிவ ஒன்றிப்பு- சிவசாயுச்சியம்.
குறிப்புரை: தொம்பதம் - வேதாந்தத்திலே தத்துவமசி என்ற தொடரைத் தத்பதம். துவம்பதம், அசிபதம் எனப் பிரித்துக் கூறுகிற வழக்கத்தினால் ஈண்டுத் துவம்பதம் என்றார்.
|
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவமவ மாகு மவ்வவ் விரண்டுஞ்
சிவமாஞ் சதாசிவன் செய்தொன்றா னானால்
நவமான வேதாந்த ஞானசித் தாந்தமே.
பொருளுரை: வேதாந்த சித்தாந்தமாகிய இருபெரும் திருநெறிகளும் சிவமாம் பெருவாழ்வை ஆருயிர்கட்கு வழங்குவனவாகும். ஏனைய நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்று சொல்லப்படும் நான்கும் அத்துணைச் சிறப்பினவல்ல. மேலோதிய வேதாந்த சித்தாந்தம் விடுத்து ஏனைநான்கு அந்தங்களும் பெரும்பயன் விளைப்பன அல்ல. அதனால் அவற்றை அவம் என ஓதினர். எனவே வேதாந்த ஞான சித்தாந்தம் வியத்தகுமொன்று.
குறிப்புரை: அவ்வவ்விரண்டும் - வேதாந்த சித்தாந்தம் ஒழிந்த ஏனைய நான்கு அந்தங்களும், நாதாந்தம் போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்.
|
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற்
சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.
பொருளுரை: செம்பொருட்டுணிவாம் சித்தாந்தத்தின்கண் சீவன் முத்தியாகிய பிணிமையின்மை கைகூடும் பிணிமை இன்மை - பசுத்துவ நீக்கம். ஆதலால் சித்தாந்தச் செந்நெறியின்கண்ணே முத்தியாகிய திருவடிப்பேறு கைகூடும். கூடவே அந்நெறி நிற்பார் முத்தி சித்தித்தவராவர். சித்தாந்த வேதாந்தம் 'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும், செம்பொருள் காண்ப தறிவு' திருக்குறள் என்பதையே ஆருயிர்கட்கு விளக்கிக் காட்டுவதால் அவை செம்பொருளாகும். ஆதலின் சித்தாந்த வேதாந்தம் சிவனையே காட்டும். ஏகாரம் பிரிநிலையும் தேற்றமுமாகும். பிணிமையின்மை - செருக்கின்மை.
குறிப்புரை: சீவன்முத்தி - பசுத்துவ நீக்கம்.
சித்தாந்தத். சிவஞானசித்தியார் . - .
|
சிவனைப் பரமனுட் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்த மானான்
நவமுற் றவத்தையில் ஞானஞ் சிவமாந்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.
பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமானைப் பரமன் என்று சொல்லப்படும் அருட்பெரு வெளியாம் புற அம்பலங்களிலும், சீவன் என்று சொல்லப்படும் ஆருயிர் நெஞ்சமாம் திருச்சிற்றம்பலத்தின் கண்ணும் முறையே வேதாந்தசித்தாந்தச் செந்நெறிகள் காட்டுவனவாகும். அந்நெறியின்கண் உறைத்துநிற்போனுக்கு நவமுற்ற அவத்தையாகிய அப்பால் நிலையில் இயற்கையுணர்வும் முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானின் திருவடியுணர்வுண்டாகும். இத்தகைய நற்றவத்தை அருளால் மிக்குணர்ந்தோர் திருவடிமெய்யுணர்வு பெற்றோராவர். தத்துவத்தார் - திருவடி மெய்யுணர்வு பெற்றார்.
குறிப்புரை: நவமுற்ற - மேம்பட்ட. அவத்தை - துரியாவத்தை. தத்துவத்தார் - மெய் உணர்ந்தவர்.
|
தத்துவ மாகுஞ் சகள வகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதஞ் சதாசிவந்
தத்துவ மாகுஞ் சீவன்றன் தற்பரந்
தத்துவ மாஞ்சிவ சாயுச் சியமாமே.
பொருளுரை: சிவபெருமானின் திருவடிமெய்ம்மையுணர்வையும் நினைவையும் எழுப்பும் திருவுரு சிவமேயாகும். எழுத்தின் வரிவடிவம் ஒலி வடிவத்தினையும் ஒலி வடிவம் பொருளினையும் உணர்த்தும் மெய்ம்மை இதற்கொப்பாகும். அதனால் தத்துவமாகும் சகளமென்றனர். சகளம் - திருவுரு அகளம் - திருவுரு இன்மை. படித்த பாடம் அருவாய் மனத்துத் தோன்றுவது இதற்கு ஒப்பாகும். அதுபோல் ஒளி ஒலி அருளோன் முதலிய நிலைகளும் தத்துவமாகும். ஆருயிரும் பேருயிருமாகிய ஆவியும் சிவனும் தத்துவமாகும். சிவத்துடன் ஆருயிர் ஒன்றிப்பது சிவசாயுச்சியமாகும்.
குறிப்புரை: சகளம் - உருவம். அகளம் - அருவம். தற்பரம் - சிவம்.
|
வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.
பொருளுரை: வேதம் ஆகமம் என்னும் இரண்டும் உண்மையாம் இறைவனை உண்மையாகவுணர்த்தும் வண்மைப் பெருநூல். அந்நூல் இறைவன் உள்நின்றுணர்த்தத் திருவருள் கைவந்த மெய்யடியார்கள் வாயினால் உரைத்தருளப்பட்ட உரைசேர் நூலாகும். இவ் வுண்மை 'எனதுரை தனதுரையாக' என அருளிய ஆளுடைய பிள்ளையார் திருப்பாட்டான் உணரலாம். 'தனதுரை' என்பதற்குச் சிவபெருமானின் திருவடிச் சிறப்பினையே புகழும் உரையாக என்றலும் ஒன்று. அவ் விரண்டும் முறையே திருநெறியினை விளக்கும் பொதுநூலும் சிறப்பு நூலுமாகும். பொதுநூல் என்பது அன்பியலை மிகுதியாகவும் அருளியலைத் தொகுதியாகவும் கூறுவதாகும். சிறப்புநூல் என்பது அருளியலை மிகுதியாகவும் அன்பியலைத் தொகுதியாகவும் கூறுவதாகும். அன்பியல் - உலகியல். அருளியல் - வீட்டியல். இவ்விரு பெரு நூற்களும் இறைவனால் எழுப்பப்பட்டு, மெய்யடியாரால் எழுதப்பட்டு, வழுத்துரையாக வழங்கப்பட்டுத் திருவருளால் நின்று நிலவலின் அவை நாதனாகிய சிவபெருமானின் நற்றாள் சேர நவிலும் நல்லுரையாகும். நாதன் உரையாகிய இவ் விரண்டினையும் அருளால் நாடின் இரண்டினுடைய பொருள் முடிபும் திருவடிசேர் ஒருமுடிபே யாம். அவ் வுண்மையுணராது தம் மனம்போல் உரைக்கும் ஒருசிலர் வெவ்வேறு முடிபு என்பர். உண்மை யுணர்வண்மைப் பெரியோர்க்கு அவ் விரண்டும் ஒரு முடிபேயாம். பெரியோர்: கண்ணுதலோன் கழலிணையைக் கற்றல்கேட்டல் கருதல் கைக்கொள்ளல் கலத்தல் உடையார். பேதம் - வேறு. அபேதம் - வேறன்மை.
குறிப்புரை: வேதம் - தமிழ் நான்மறை. ஆகமம் - தமிழ் ஆகமங்கள். இரண்டந்தம் - வேதாந்தம், சித்தாந்தம், அபேதம் - வேற்றுமை இன்மை.
|
பரானந்தி மன்னுஞ் சிவானந்தம் எல்லாம்
பரானந்த மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்த மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற வுள்ளமே பூரிப்பி யாமே.சிறப்புயிராகிய ஆவி பரானந்தி எனப்படும.் அஃதாவது நந்தியைப் பரவிநந்தியென நாட்டோர் நவில நடப்போர். அத்தகைய பரானந்தி அருளால் அடையும் சிவ இன்பங்களெல்லாம் வருமாறு: ஆருயிர் உறக்கம், அருள்நிலை உறக்கம், சிவநிலை உறக்கம் என மூன்றாம். மாயையால் வரும் இன்பம் முத்திரைகள் பலவற்றானும் முற்றும் பல்வகை இன்பம். மெய்ப்பொருட் கூத்தாம் ஐந்தொழிலமை நடன இன்பம். இவற்றைப் பொருந்திய உள்ளமே பூரிப்புடையதாகும். அதனால் அவ்வுள்ளம் பூரிப்பி என வழங்கப்படும். அதனால் பூரிப்பியாகும். பாழ் - மாயை. பூரிப்பு - பொலிவு. பூரிப்பி - பொலிவுடையது.
குறிப்புரை: பராநந்தி - சீவன் முத்தன். மூன்றும் - சிவசுழுத்தி. சீவசுழுத்தி பரசுழுத்தி. பாழுறானந்தம் - மாயையினாலாகிய இனபம். விரா - விரவிய, பொருந்திய. முத்திரானந்தம் - சாம்பவி முத்திரை முதலியவற்றின் பயிற்சியால் உண்டாகும் இன்பம். பொராநின்ற - அடைந்த. பூரிப்பு - இன்பம்.
|
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலையைந்தா மாதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகு மறையா கமமொழிந் தானன்றே.
பொருளுரை: கலாந்தம் இரண்டாகும். அவ் விரண்டும் நாதாந்தம். கலையந்தம் என்ப. கலையந்தம் நீக்கலாகிய நிவிர்த்தி முதல் ஐந்தாகும். இவ் வைந்திற்கும் அரனே முழுமுதலாவன். அதனால் அரனே பஞ்சாந்தகனாமென்ன அருளினர். இங்ஙனம் மறையாகமம் முறையுற மொழிந்தனவென்க.
குறிப்புரை: பஞ்சாந்தகன் - தனித்தனியே ஐந்து கலைகளின் முடிவிடத்து இருப்பவன்.
|
அன்றாகு மென்னாதை வகையந்தந் தன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றா லியோகாந்த நேர்படு நேர்பட்டான்
மன்றாடி பாத மருவலு மாகுமே.
பொருளுரை: ஐவகையான முடிபாம் அந்தங்களும் மாறுபட்டதன்று. அன்றுதல் - மாறுபடுதல். இவ் வுண்மையினை வேதாந்த சித்தாந்தம் ஒன்றென விளங்கக் கூறும். அத்தகைய வேதாந்த சித்தாந்தத்தை முன்னிட்டு ஒழுகினால் யோகாந்த நேர்படும். அச் செறிவுநிலை ஏற்பட்டால் மன்றாடி பாதம் மருவலுமாம். மன்றம் ஐவகையாகும்:
"மேலாம் சிவயநம மேவுமணி பொன்வெள்ளி
பாலாம்செம் போடுமண் பற்றல்போல் - மேலாம்
அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல்
"
அகம்: ஆருயிர்களின் அகத்துச் 'சிவயநம' என்னும் ஐம்மறைக்களத்து அவ்வுயிர் உய்ய அம்பலவாணன் அருட்கூத்தியற்றுகின்றனன். அக் கூத்தின் நினைப்பே புறத்து ஆலங்காடு, தில்லை, கூடல், நெல்லை, குற்றாலம் என்னும் ஐந்திடங்களிலும் நடிப்பதாகும். ஆல் - ஆலங்காடு. நெல்லை திருநெல்வேலி. மன்றாடியாகிய சிவபெருமான் திருவடியை அருளால் தலைக்கூடி இன்புறுதலாகும். தலைக்கூடுதல் - பொருந்துதல்.
குறிப்புரை: அன்றாகும் என்னாது ஐவ்வகை அந்தம் - வேறுபட்டது என்று கருதாது ஐந்து வகையான அந்தங்களை.
|
அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய்
அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த வுண்மையே.
பொருளுரை: தொன்மையே யுள்ள ஆருயிர்க்குத் திருவருளால் ஆணவம், கன்மம், மாயை, மாயை, யாக்கம், நடப்பாற்றல் ஆகிய ஐம்மலங்களும் அறும். அற்றவிடத்து அப்பால் நிலை எய்தும். அப்பால் நிலை - துரியாதீத நிலை. எய்தவே தொன்மை ஆணவப்பசை அடங்கும். அடங்கவே தன்னையும் அரனையும் தகுமுறையாற் காணும். காணவே தன்னை வந்து பொருந்தும்படி பொத்திய ஆதிமலமாகிய கன்மம் மாயைகளாகிய இடைச் சேர்மலம் எளிதின் நீங்கும். நீங்கவே அருஞ்சைவர் - தத்துவம் முப்பத்தாறுக்கும் அப்பாலாக ஆருயிர் நிற்கும். நீர் பாலுடன் கலந்து பாலின் சுவையும் நிறமும் பெற்று விளங்கும் என விளக்குவது வேதாந்த மெய்ம்மையாகும் பாலோடளாய நீர் பாலாகுமென்பது பயனுடைப் பார்மொழி. ஆருயிரும் மலம் நீங்கிச் சிவனார் எண் குணம் பெற்றுச் சிவனாய்த் திகழும்.
குறிப்புரை: தனாதிமலம் - தன் ஆதிமலம் - மாயை.
|
உயிரைப் பரனை யுயர்சிவன் தன்னை
அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற்
செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே.
பொருளுரை: ஆருயிரைப் பரனாகிய திருவருளை எவர்க்கும் மேலாம் பரசிவனை மருளற்றுத் தெருளுற்றுத் திருவருளால் செறிந்து காண்பாயாக. நீ அதுவாகின்றாய் என்று கூறும் 'தொந்தத்தசிப்' பெருங் கிளவியால் உன் செயலற்று அறிவாகியிருப்பாயாக. அறிவாகியும் திருவடிக் கீழ் அடங்கி நிற்பாயாக. இந் நிலையே மருளற்ற வேதாந்த சித்தாந்த அருள் மாண்பாகும். இவ் வுண்மை வரும் செந்தமிழ் மறை முடிபாம் திருவாசகச் செழுந்தேனால் உணரலாம். அத் திருப்பாட்டு வருமாறு:
"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல் வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
"
- . அச்சோப்பத்து, .
குறிப்புரை: அயர்வற்றறி - மயக்கமற்றுக் காண்பாய். தொந்தத் தசி - துவம் + தத் + அசி - நீ சிவமாயிருக்கிறாய்.
|
மன்னிய சோகமா மாமறை யாளர்தஞ்
சென்னிய தான சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.
பொருளுரை: நிலைபெற்ற அது நான் என்னும் ஆழ்ந்த நினைவினால் அவனே தானாகி நிற்கும் நிலை சோகம் எனக் கூறப்படும். ஆழ்ந்த நினைவு - பாவனை. இக் குறிக்கோள் மாமறையாளர்க்கு ஏற்படுவதாகும். அம் மறையாளர் முடியணியாத் திகழும் அருண்மறை 'சிவோகம்' எனப்படும். சிவோகம், சிவனுடன் கூடுதல். சிவோகம் இஃது என்று கூறத்தகும். இத்தகைய அரும்பொருள் சித்தாந்த மாமறையால் ஆராயப்படும் பொருளாகும். இப் பொருளை ஆராயும் எழில் நூல் ஆகமம் எனப்படும். சோகம்: ச + அகம் = அது நான். சிவோகம் - சிவத்துடன் கூடுதல்.
குறிப்புரை: சோகமாய் - சோகம்பாவனையினால் அவனே தானாகி. சென்னியதான - தலையான் சிறந்த.
|
முதலாகும் வேத முழுதா கமமப்
பதியான ஈசன் பகர்ந்த திரண்டும்
முதிதான வேத முறைமுறை யாலமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்த மாமே.
பொருளுரை: முதல் நூலாகிய வேதமும் முழுமுதல் நூலாகிய ஆகமமும் நல்லடியார் வாயிலாக முதல்வனாம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டனவாகும். இவ்விரண்டனுள் முதன்மையான வேதமும் முறைமுறையாலமர்ந்த வேதாந்தமாகும். ஆகமம் நனிமிகச் சிறந்த சித்தாந்தமாகும்.
குறிப்புரை: முதலாகும் - முதலில் உண்டான. அதிகாதி - நனி மேம்பட்ட.
|
எட்டாம் தந்திரம். பதிபசு பாசம் வேறின்மை
அறிவறி வென்ற அறிவு மனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியிற் பிறப்பறுந் தானே.
பொருளுரை: ஆருயிரை அறிவென்றும், பேருயிரை அறிவுக்கு அறிவென்றும் கூறுப. ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா. இவ்விரண்டும் தொன்மையே உள்ளன. தொன்மை - அனாதி. அனாதி - ஆதியில்லாதது. அறிவு அறிவு என்ற அறிவாகிய ஆருயிரும் தொன்மையே. அறிவுக்கு அறிவாய் விளங்கும் இயற்கை அறிவாம் பதியும் தொன்மையே. அறிவினை விளங்கவொட்டாது தடை செய்து ஒட்டி நிற்கும் பாசமும் தொன்மையே. அறிவாகிய ஆருயிர்க்குப் பாச நீக்கத்தின் பொருட்டு அருளால் பிறப்பு உண்டாகும் அருளோனாகிய அறிவுக்கறிவு அவ்வறிவிற் பதியுங் காலத்துப் பிறப்பறும். தானே என்பதை எளிதாகப் பிறப்பறும் எனக் கூறுக. ஈற்றசை எனலும் ஒன்று.
குறிப்புரை: அறிவு - ஆன்மா. அறிவு பதியில் - சிவத்துவம் உண்டாயின்.
|
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பொருளுரை: பாசத்தால் கட்டுண்ட உயிரைப் பசு எனக் கூறுப. நீர் நிலைகளில் அந் நீரின் தூய்மையினையும் தெளிவையும் மறைத்து மேல் படர்ந்து நிற்கும் அழுக்கைப் பாசம் என்ப. இது போல் ஆருயிரின் அன்பு அறிவாற்றல்களை மறைத்து நிற்கும் ஆணவம் பாசம் எனப்படும். அப் பாசத்தால் மூடப்பட்ட வுயிர் பசு எனப்படும். அப் பசுக்கள் பிரமன் முதலாகச் சொல்லப்படும் எண்ணில்லாத பல கோடி உயிர்களாகும். அப் பசுக்களைக்கட்டிய பாசமும் மூன்றென்ப. அம்மூன்றும் ஆணவம் கன்மம் மாயை என்ப. சிவபெருமான் திருவருளால் பசுத்தன்மை நீங்கினால் அப் பாசமும் அறும். அறுக்கப்பட்ட ஆருயிராகிய பசுக்கள் பதியாகிய தலைவனைப்பற்றி விட்டுவிடா என்க.
குறிப்புரை: பசு - ஆன்மா. பசக்கள் தலைவன் - சிவன்.
பற்றுக. திருக்குறள், .
" பாய்த்தியபின். . திருமூலர், .
|
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறு நோக்கித்
தொடக்கொன்றும் இன்றித் தொழுமின் தொழுதாற்
குடக்குன்றி லிட்ட விளக்கது வாமே.
பொருளுரை: ஆருயிர்கள் பாசப் பிணிப்புண்டு கிடக்கின்ற முறையில் அப் பாசப்பிணிப்பினின்றும் விடுபடக் கைக்கொள்ளவேண்டிய பொருள்கள் மூன்று. அவை இன்பமும் பொருளும் அறனும் என்ப. இம் மூன்றின் வழியொழுகினார் திருவடி எய்தற்குரிய நானெறியில் நடப்பர். அந்நானெறியுள் சீலத்தின் பயனாக நோன்பும், நோன்பின் பயனாகச் செறிவும் கைகூடும். இம் மூன்றன் வழி முடிந்த பயனாகிய அறிவு கைவரும். அவ்வறிவாகிய திருவடியுணர்வை நாடொறும் நோக்கல் நோக்கமாகக் கருதி ஒழுகிவருதல் வேண்டும். அப்படி யொழுகி வந்தால் தொடக்காகிய பாசப்பிணிப்பு ஒன்றும் இன்றாகும். அதன் பொருட்டு முழுமுதற் சிவபெருமானைச் செந்தமிழ்த் திருமுறை ஓதி இடையறாது தொழுங்கள். தொழுதால் குடத்துள் மறைந்திருந்த விளக்க குன்றின் விளக்காகச் சிறந்து உறைந்திருக்கக் காணலாம். குடவிளக்கென்பது ஆருயிர் பாசப்பிணிப்புண்டு மறைந்திருப்பதை யுணர்த்துவதாகும். அவ்வுயிர் பாசப்பிணிப்பு விண்டு சிவபெருமான் திருவடியினைத் திருவருளால் கண்டு சிறந்து உறைந்திருப்பதைக் குன்றின் விளக்கு உணர்த்துவதாகும்.
குறிப்புரை: கிளீர்பயன் மூன்று - அறம், பொருள், இன்பம். 'நான்கு' என்ற பாடமும் உண்டு. அப்பொழுது வீடு ஒன்றைச் சேர்த்த நான்கு ஆகும். நடக்கின்ற ஞானம் - சரியையாதியின் பலனாக நிகழும் ஞானம். தொடக்கு - ஆசாபாசங்கள். குடக்குன்றில் இட்ட விளக்கு - குடவிளக்கு. குன்றில் இட்ட விளக்கு எனப் பிரிக்க. குடத்தில் இட்ட விளக்காயிருந்த ஆன்மா குன்றில் இட்ட விளக்காய் மிளிரும்.
|
பாசஞ்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசஞ்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலுங்
கூசஞ்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
பொருளுரை: குற்ற இயல்பாக ஒட்டியுள்ள ஆணவ மலத்தை யகற்றுதற் பொருட்டுக் கன்மம் மாயைகளாகிய பாசங்களைக் கூட்டியருளிப் பிறப்பித்த சிவபெருமானை, மாலையில் தாங்குருப் போன்று விளங்கும் படர்சடை நந்தியை இடையறா உள்ளன்பு பூண்டு தொழுங்கள். தொழுது நினைப்பவர் நினைத்தலும் பேரருட் பெரும் பொருளாகிய சிவபெருமான் நினைப்பதற்கும் குறிக்கொள்வதற்கும் கூசுவதெவ்வண்ணம்? மேலும் பாசத்துள் நிலை பெறுத்துவதெவ்வண்ணம்? செய்யாரென்க. மருத்துவன் நோயாளியைக் கண்டு கூசமுடியாதவாறும், நோய் நீங்கியபின் மேலும் அவனை நோய் மனையில் நிலைபெறச் செய்ய முடியாதவாறும் இதற்கு ஒப்பாகும். மேலும் கற்பிப்போன் கற்கவரும் மாணவனைக் கல்லாதவனென்று கூசமுடியாதவாறும் கற்றுத் தேறியபின் அவனை நிலைநிறுத்த முடியாதவாறும் ஒப்பாகும். எவ்வண்ணம் என்பது இடைநிலை விளக்காய் நின்று வைக்கின்றவாறு எவ்வண்ணம் என்று இயைக்க. எவ்வண்ணம்: வினாவினைக் குறிப்பு; எதிர்மறைப் பொருள் தந்தது.
குறிப்புரை: பாசஞ் செய்தானை - ஆன்மாக்களின் ஆணவமலம் நீங்குதற் பொருட்டு மாயா மலத்தைக் கூட்டி, உடல், கருவி, உலக இன்பங்களைக் கொடுத்தானை. கூசம் - கூசி. வாசம் செய் - நிலைபெற்ற.
|
விட்ட விடமேறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாச மெய்கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலங் காணுஞ் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
பொருளுரை: மெய்ப்பாவகனால் விடம் ஏறாவாறு போன்று திருவருளால் ஆருயிர்களை விட்டு வேறாகி அகன்ற பசுபாசங்களை மெய்கண்டோனாகிய சிறப்புயிர்க் கிழவன் மேவுதலைச் செய்யான். மேவுதல் - பொருந்துதல். தொன்மையிலே பிணித்த மலத்தனிமையாகிய புலம்பு சகலமாகிய புணர்ப்பினை எய்துவிக்கும். குறிக்கப்படும் நனவின்கண் அப்பால் நிலைக்கண்ணும் இப் புலம்பு நிலையாகிய தனிமை தோன்றும். புலம்பு - கேவலம். அப்பால்நிலைத்தனிமை ஆணவத்துடன் பிணிப்பின்றி அருளுடன் பிணிப்பூன்றி அறிவு மறைப்பின்றி அனைத்துலகும் கருவியும் மறைப்புற்று நிற்கும் நிலைமை. மெய்கண்டோன் - சீவன் முத்தன்.
குறிப்புரை: விடம் - நஞ்சு. சுட்டும் - குறித்தறியும்.
|
நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்தன் நிலையறி வாரில்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.
பொருளுரை: ஆராயப்படும் பதி பசு பாசம் பலவாக விரியும். நீடும் - விரியும். என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவும் சிவபெருமானாகிய நித்தன் நிலையினை உள்ளவாறு அறிவாரில்லை. தொன்று தொட்டுத் தென்பட்டும் படாதும் வருகின்ற முப்பொருள்களும் என்றும் ஒன்றுபோல் நிலைப்பதாகிய பதியினிலைமையும், சார்பியாகிய பசுவுக்கு நேர்ந்த பசு பாச நீக்கமும் திருவருளால் ஆராயத் தொடங்கிய சைவ நற்சீலர்க்கு நந்தியாகிய சிவபெருமான் விளங்குமாறு அளித்தருளினன்.
குறிப்புரை: நீடும் - விரியும். நித்தன் - சிவன். நாடிய - விரும்பிய.
|
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே.
பொருளுரை: கலப்பினால் எல்லாமாய் பொருட்டன்மையால் அல்லவுமாய் உள்ள பதியாகிய சிவபெருமான் அருட்சிவலிங்கமாகும். என்றும் பொன்றாகச் சார்பினவாய் நிற்கும் சார்பியாகிய பசுவும் அருட் சிவக்கொழுந்தின் திருமுன் ஒருங்கியவுளத்தோடுற்று ஒரு நோக்காய் வலிமை மிக்க ஆனேறு என அசைவின்றி நிற்கும். அவ் வானேற்றின் பின் காணப்படும் பலிபீடம் ஆருயிர்களினின்றும் அருளால் விடுபட்ட 'யான் எனது செருக்காகிய' பசு பாசங்கள் தங்கி மங்குமிட மாகும். அரனிலையாகிய படமாடுந் திருக்கோவிலை ஆராய்வார்க்கு அருளால் இவ்வுண்மைகள் புலனாகும். எனவே திருக்கோவில் திருவுருவங்கள் மூவா முப்பொருள் உண்மை செப்பும் உருவெழுத் தோவியத்தவாத் திரு நூலாகும். ஆனேற்றின் முன்பின் பலிபீடம் அமையும் குறிப்பு வருமாறு: பாசமுன்னாகில் பலிபீடம் முன்னாம்பின், நேசமுதல் முன்னொளியால் நேர்:
குறிப்புரை: இம் மந்திரம் "பிண்டத்தின் அமைப்பே கோவில்" எனக் காட்டுகின்றது. இந்தக் கருத்தையே "படம் மாடக்கோயில்" என்று வேறோர் இடத்தில் கூறியுள்ளார். கோயிலில் சிவ சந்நிதியில் இரண்டு நந்திகள் உண்டு. ஒன்றுகோயில் முகப்பில் உள்ளது. இன்னொன்று சிவலிங்கத்தின் அணித்தாய் உள்ளது. முகப்பில் உள்ள நந்திக்குப் பலிபீடம் முகத்தின் பக்கம் உள்ளது. இலிங்கத்துக்கு அணித்தாயுள்ள நந்திக்குப் பலிபீடம் வாலின் பக்கம் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால் சிவன் ஆன்மாவுக்குத் தூரமாய் இருக்கும்பொழுது பாசம் ஆன்மாவின் முன்னால் இருக்கும். சிவத்தைக் கிட்டினால் பாசம் பின்னால் மறைந்துவிடும் என்பதே. அஃதாவது தற்போதம் உள்ளவர்க்குப் பாசம் முந்தியும், தற்போதம் இழந்தவர்க்குப் பிந்தியும் இருக்கும் என்பதே.
|
பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க் காறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.
பொருளுரை: பதி பசு பாசம் என்னும் முப்பொருளையும் நிலை வேறுபாட்டால் விரித்தும் தொழில் ஒற்றுமையால் தொகுத்தும் ஐம்பொருள்களாக அமைத்தனர் அருஞ்சைவர். அவையே 'சிவய நம' என்ப. பதியாகிய சிகரத்தின் நிலைவேறுபாட்டால் வகரமும் நகரமும் என விரிந்து மூன்றாயின. மலகன்ம மாயைகளின் தொழில் பெரும்பான்மையும் மறைத்தலும் மறைத்தற்குத் துணைபுரிதலும் ஆம். அதனால் அம் மூன்றையும் மகரம் என ஒன்றாயடக்கியும், யகரமாகிய ஆருயிர் என்றும் சார்ந்து நின்றதே உயிர்நிலை என வழங்கும் இயல்பிற்றாதலின் வகர நகரங்கட்கு நடுவாய் ஒன்றாயின. வகரம் நற்றாயாகவும் நகரம் செவிலித்தாயாகவும் பெரும்பாலும் கொள்ளற்கியையும். செவிலிக்கு உடலுயிர் ஓம்பற்காம் பொருள் கூட்டும் பணியும், நற்றாய்க்கு உணர்வுயிர் ஓம்பற்காம் அருள் கூட்டும் பணியும் இயல்பாக அமைந்துள்ளன. பதி பசு பாசம் மூன்றும் மீநிறைவு வீழ்நிறைவு மிடைநிறைவு என்ற முறையில் ஒன்றனுள் ஒன்று அடங்கி விளங்கும். இவற்றை முறையே வியாபகம் வியாப்பியம் வியாத்தி என்ப. பதி மீநிறைவாகும். பசு வீழ்நிறைவாகும், பாசம் மிடைநிறைவாகும். இம் முப்பொருள் உண்மை விரிக்கும் திருவைந்தெழுத்தை நாளும் இடையறாது பொருட் குறிப்புடன் ஓதி வருதல் வேண்டும். அங்ஙனம் பயின்று வருவார்க்கு நன்னெறி நான்மையின் வழியினை அருளிச்செய்வாராய் வழியமைத்தனர். அந் நெறி நிற்பார்தம் பசு பாசப்பற்றை அறவே நீக்கியருள்வன். அத் திருவருள் கிட்டியபின் பசு பாசம் ஒளிமுன் இருள் போன்று அவ்வாருயிர்க்கண் நில்லாவென்க.
குறிப்புரை: பயில்வியா நித்தம் - நாள்தோறும் செய்யும் அஞ்செழுத்து எண்ணும் முறை. ஆறாக்கி - வழியை உண்டாக்கி.
|
பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமுங் காட்டி
மதிதந்த வானந்த மாநந்தி காணுந்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்தே.
பொருளுரை: பேருயிராகிய பதியும், ஆருயிராகிய பசுவும், அப் பசுவினைப் பிணித்த பாசமும், அருளால் பாசம் நீங்கிய இடத்துப் பெறும் திருவடிப்பேறாகிய மேலைக்கதியும், சிவகுருவாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்து பசு பாசத்தை நீக்கியருளும் நீக்கமும் மெய்ம்மையாக் காட்டி யருள்வது தனிப்பெரும் சைவமாம் சுத்த சைவத் தென்க. இத்தகைய தத்துவஞானமாகிய மெய்யுணர்வைத் தந்தருளியவன் இயற்கை உண்மை அறிவு இன்பமா நந்தியாகிய சிவபெருமானாவன்; அவன் திருவடியிணையினைச் செந்தமிழ்த் திருமுறை வழியாக வழிபட்டு உய்யும்படியாகவும் வைத்தருளினன்.
|
அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகும்
அறிந்தணு மூன்றமே யாங்கணு மாக
அறிந்த அனாதி வியாத்தனு மாவன்
அறிந்த பதிபடைப் பானங் கவற்றையே.
பொருளுரை: யாங்கணும் அறியும் தன்மைவாய்ந்த அணுவாகிய ஆருயிர் மூவகைப்படும். அவை ஒருமலம் இருமலம் மும்மலம் என்னும் பிணிப்பால் ஆவன. அம் மூன்றுமே யாங்கணுமாக நீக்கமற நிற்கும் நிலைமையினை அறிந்த பெரும்பொருள் சிவபெருமானாவன். அவன் தொன்மையிலுள்ளவன். எங்கும் நிறைந்தவன். ஆருயிர்களின் பிணித் துன்பத்தினின்றும் விடுவிக்கத் துணிந்தனன், அவற்றிற்கு வேண்டிய உடல்கலன் உலகு உணா முதலியவற்றை மாயாகாரியமாகப் படைத்தளித்தருளினன். அவற்றை: அவற்றிற்கு - உருபு மயக்கம். ஒருபுடை யொப்பாக ஒரு மலத்தார் இடையின மெய்யையும், இருமலத்தார் மெல்லின மெய்யையும், மும்மலத்தார் வல்லின மெய்யையும் ஒத்தவரெனக் கூறலாம். வல்லினமெய் மொழிக்கிறுதியில் நில்லாமை மிக்க செருக்குடைய மும்மலக் கட்டினை யொக்கும். மெல்லினமெய் மொழிக்கிறுதியில் வருதலானும் மெல்லென்று ஒலித்தலானும் மாயை அடங்கிய இருமலக் கட்டினை யொக்கும். இடையினமெய் லகர ழகர ளகரங்கள் பயின்று குழைந்திருப்பதால் வினை மாயை அடங்கிய ஒரு மலக்கட்டினையொக்கும். ஆய்தம் திருவருளம்மை யொக்கும் ஐம்மலம் அகன்று செம்பொருட்டந்தையின் தாள்சேர் உயிர் குற்றுகரமாகும். அதுவே, "குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்"என்னும் நூற்பாவின் கருத்தாகும். 'நுந்தை' என்னும் முறைப்பெயர் மெய்ம்முதலே ஆயினும் ஒற்றுமை நயத்தான் குற்றியலுகர முதலாயிற்று. அதுபோல் திருவடிப்பேறு பெற்ற அடிமையுயிரும் எண்குணமும் பதியப்பெற்று இரண்டறவிரவி நிற்பதால் முதலெனவுங் கூறப்படும். அக்குறிப்பு நுந்தை என்னும் பெயரில் தந்தை என்னும் பொருள் காணப்படுவதால் ஆருயிர்கள் அடிசேர் மகவெனக் கொள்க. இது 'மன்னவன்றன் மகன்' என்பதனாற் காண்க.
|
படைப்பாதி யாவது பரஞ்சிவஞ் சத்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரஞ் செய்யப்
படைப்பாதி தூய மலமப் பரத்தே.
பொருளுரை: ஆருயிர்கட்கு உடல் கலன் உலகு ஊண் முதலியவற்றைப் படைத்தருள வேண்டுமென்று தொன்மைக்கண் திருவுள்ளங்கொண்டது முழுமுதற் பெரும்பொருளாம் சிவம் ஆகும். அச் சிவன் வைப்பாற்றலாகிய மாயையினின்று இவற்றைப் படைத்து உயிர்கட்கு அளித்துக் காத்தருள்கின்றனன். சத்தி - வைப்பாற்றல். தூங்கல் - நிகழ்தல். படைப்பு முதலாகிய ஐந்தொழிலும் மிக நுண்தன்மை வாய்ந்ததாகும். நுண்மை: கருவியின்றிக் கருத்தாலியற்றுவிக்கும் கடவுட்செயல். நுண்மை - சூக்கம். அந் நுண்டொழிலைச் சிவபெருமான் செய்தருளுவதனால் ஆருயிர்கள் மலப்பிணிப்பினின்றும் விடுபடுகின்றன. விடுபடவே தூய்மை எய்துகின்றன. தூய்மை எய்துவதால் அச் சிவபெருமான் திருவடிநீழலை அவ் வுயிர்கள் எய்துகின்றன. தூயமலமப்பரத்தே: மலநீங்கிய ஆருயிர் தூயவாய் அப் பரத்தேயாம் எனக்கொள்க.
குறிப்புரை: இடைப்பால் - திதி காலத்தில், அஃதாவது காத்தற் காலத்தில். தூங்கல் - நிகழுதல்.
|
ஆகிய சூக்கத்தை யவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேலைந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மஞ்செய்வோன்
ஆகிய தூயவீ சானனு மாகுமே.
பொருளுரை: நுண்ணிய ஐந்தொழிலை விந்து, நாதம், சத்தி, சிவம், பரம் என்னும் மேல் ஐந்து நிலைகளாலும் ஆக்குவிப்பன். அந் நுண்ணிய ஐந்தொழிலை அருளால் ஆக்குவிப்போன் தூய இயக்க முதலாகிய ஈசானன் ஆவன்.
குறிப்புரை: மேலைந்து - விந்து, நாதம், சத்தி, சிவம், பரம்.
|
மேவும் பரசிவ மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறீசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போனர னாகுமே.
பொருளுரை: இப் படைப்பாதி ஐந்தொழிலையும் சிவபெருமான் அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, உருவம் நான்கு ஆக ஒன்பான் நிலைகளின் நின்று உன்முகமாகிய கருத்தால் இயற்றியருளுகின்றனன் அந் நிலைகள் முறையே பரசிவம், பராசத்தி, பரநாதம், பரவிந்து எனவும்; ஐம்முகன் எனவும்; ஈசன், உருத்திரன், மால், அயன் எனவும் கூறப்படும். மாயாகாரியமாகிய உலகினைப் படைத்தருளுபவன் அரனாகிய சிவபெருமானாவன்.
குறிப்புரை: ஐம்முகன் - சதாசிவன்.
|
படைப்பு மளிப்பும் பயிலிளைப் பாற்றுந்
துடைப்பு மறைப்புமுன் தோன்ற அருளுஞ்
சடத்தை விடுத்த அருளுஞ் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.
பொருளுரை: படைத்தல், காத்தல் இளைப்பாற்றுதலாகிய துடைத்தல், வினைநுகர்வாகிய மறைத்தல் இந் நான்கும் இயல்பாகச் சிவபெருமானிடத்தில் முன்தோன்றிய திருவருள் வாயிலாகத் தோன்றுவன. அத் திருவருள் ஆருயிர்களை மலப்பிணிப்பினின்றும் விடுவித்துச் சிவப்பிணிப்பில் இடுவித்து வாழ்விக்கும். பேரறிவுப் பேராற்றல் திருவினால் தொன்மையிலேயே ஆருயிர்களைப் பிணிப்பினின்றும் விடுவிப்பவனும் சிவனே. விடுவித்தற்பொருட்டு அவ்வுயிர்களுக்குப் புணர்ப்பு நிலையை முதற்கண் அவனருளினன். முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம் பொருளாகிய அத்தொன்மைப் பெரும்பொருளே நுண்ணிய ஐந்தொழிலும் செய்தருளும் என்க. சகலத்தடைத்த அனாதியை - புணர்ப்பிற் புணர்த்த தொன்மையை.
குறிப்புரை: சடத்தை விடுத்த - உடற்பற்றை ஒழித்த. ஐந்து - அஞ்சு தொழில், படைப்பாதி முதலியன.
|
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையின் முப்பான் மிகுத்திட்டங்கு
ஈறாங் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.
பொருளுரை: குண்டலியாகிய மாமாயையினின்று முப்பத்தாறு மெய்கள் சிவபெருமான் திருவுள்ளத்தால் தோன்றி விரியும். இம் முப்பத்தாறினையும் பகுக்குங்கால் உணர்த்துமெய் ஐந்து, உணர்வுமெய் ஏழு, உடல்மெய் இருபத்துநான்கு என்பனவாகும். இவை முறையே தூமாயை, தூவாமாயை, பகுதி மாயை எனக் கூறுவர். ஆருயிர்கட்கு முடிந்த முடிபாக வேண்டிய கருவிகளையும் இவற்றாலேயே வகுத்தருளினன். பதி பசு பாசம் என்னும் உண்மைகளையும் தொடர்புகளையும் அருளால் உணருங் காலத்துப் பாசத்தினின்றும் பசு வேறாகும். வேறாகவே பதியினைச் சென்றெய்தும். எய்துவதே வீடுபேறாகும்.
குறிப்புரை: மாயையின் முப்பால் - சுத்தம், அசுத்தம், சுத்தாசுத்தம், அஃதாவது மாமாயை, மாயை, மூலம் என்பன.
|
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை யாங்கவற் றாலுணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்திற் றானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாச நண்ணுமே.
பொருளுரை: பதியானது பசுவினை மலநீக்கத்தின்பொருட்டு மாயா காரியமாகிய பாசத்தின்கண் விருப்பம் உண்டாகச் செய்யும். அவ்வுயிர் உலகுடல்கலன்களில் விருப்பம் மீதூர இருவினை புரியும்படி ஆழ்த்தும். அதன்வாயிலாக ஆருயிர்கள் இருவினைகளைப் புரியும். அவற்றின்பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகர்விப்பதன்பொருட்டு அவ்வுயிர்களை முறையே துறக்கநிரயங்களிலிட்டு ஆழச் செய்யும். இவ் வகையாகப் பயன்துய்க்கும் காலங்கழியப் பிறப்பிற்கு ஏதுவாகிய நான் என்னும் முனைப்புத் தங்கும்படி நற்பாசமாகிய மறைப்பாற்றல் வந்து பொருந்தும் என்க. மறைப்பாற்றல் - நடப்பாற்றல்; திரோதானசக்தி.
|
நண்ணிய பாசத்தில் நானெனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டற் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயம தாகுமே.
பொருளுரை: மாயாகாரியவுடம்புடன் கூடி நான் என்று முனைத்து நிற்றல் ஆணவப் பண்பாகும். அவ் வாணவம் நீங்குதற்பொருட்டு மாயையின்கண் செலுத்தி இருவினைப்பயன்களையும் நடப்பாற்றல் ஊட்டுவதாகும். ஊட்டுவதனால் ஆணவமலம் அகலும் அகலவே கருதப்படும் அறிவிக்க அறியும் தன்மைவாய்ந்த சேதனனாகிய ஆருயிர்கள்மாட்டு வைத்தபேரருளினால் அவ்வுயிர்க்கு அண்ணலாகிய சிவபெருமானின் திருவடிசேரும் வழிவகைகளையும் அவ்வாற்றல் தோற்றுவித்தருளும். இதனையே உபாயமதாகும் என்றனர். ஆணவம்: வழக்குச் சொல்; ஆண்மை.
குறிப்புரை: ஊட்டல் - ஊட்டலால். பரிந்தனன் - நீங்கினான்.
|
ஆகும் உபாயமே யன்றி யழுக்கற்று
மோக மறச்சுத்த னாதற்கு மூலமே
ஆகு மறுவை யழுக்கேற்றி யேற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.
பொருளுரை: நடப்பாற்றல் ஆருயிர்க்கிழவற்கு வினைமாயைகளைக் கூட்டல் வழிவகைகள் மட்டுமன்றி ஆணவ அழுக்கு நீங்கித் தூயனாதற் பொருட்டுக் கடும்பற்றாகிய மருள் நீங்குதற்கும் தூயனாதற்கும் இதுவே மூலமாகும். இதற்கு ஒப்பு அழுக்காக்கிய அறுவை என்னும் ஆடையினை மேலும் சாணி உவர் முதலிய அழுக்கினை ஏற்றி அவ்வழுக்கினை அகற்றுவதாகும். இவ்வனைத்தும் அருட்பாசமாகிய நடப்பாற்றலால் நிகழ்வனவேயாகும்.
குறிப்புரை: அறுவை - வேட்டி; தறியினின்றும் அறுத்து எடுப்பது அறுவை. ஏற்றி - கலந்து. ஏற்றல்போல் - அடித்துப் போக்குதல் போல்.
|
பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலாற்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.
பொருளுரை: பாசத்துடன் பயின்றுவரும் ஆருயிர் முதல் பரமாகும். பரம் - சுவை. இயற்கையிலேயே சுமையுடையதாகுமென்ப. அப் பாசப்பிணிப்புச் சுமையுடைமையால் அவ்வுயிர் பசுவெனப்பட்டது. ஆருயிர் பாசம் பயின்று தூயனாதற்பொருட்டுப் பதியும் அப்பசுவுடன் கலத்தலால் பதியும் பசுவாகும் என்ப. இது நோயாளிக்கு மருந்து கூட்டிக்கொடுப்போன் அம்மருந்துடனும் நோயாளியுடனும் தொடர்பு கொண்டிருப்பதை யொக்கும். ஆருயிர்க்குப் பாசத்தினைப் பயிற்றுவித்தற்பொருட்டுப் பதியும் பரமாக விளங்கும். பரம் - முதன்மை.
|
அத்தத்தில் உத்தரங் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே யணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை யடைந்துநின் றாரே.
பொருளுரை: அருந்தவர்கள் மறை முதலியவற்றைப் பயின்று பொருள் முடிபின்கண் மயங்கியிருந்தனர். அவர்கள் ஆலமர் கடவுளிடம் அருளால் வந்தனர். வந்து அத்தமாகிய பொருளின்கண் தெளிவாகிய அறிவு பெறுதற்பொருட்டு உத்தரம் வினவினர். அவ்வாலமர் செல்வன் சீர்மிகு சிறப்பினோன் ஆதலின் அத்தமாகிய கைவிரல்களினால் மாற்றமிலா மாறிலாப் பொருந்தும் விடை திருந்த அளித்தருளினன். மேலும் தன் அருள்மேனித் திருக்கையினால் தலையினைத் தொட்டுச் சிவதீக்கையும் செய்தருளினன். அங்ஙனம் தலையினைத் தொட்டபொழுதில் அவர்கள் தம்மை அவர்தம் திருவடிக்கு ஆளாக்கி அடைந்துநின்றனர். அத்தம் - பொழுது கைவிரல்களாற் காட்டும் உண்மை வருமாறு: பெருவிரல் பதியாகும். ஆட்காட்டி விரல் பசுவாகும். நடுவிரல் கன்மமாகும். அணி விரல் மாயையாகும். சிறுவிரல் ஆணவமாகும். பதியினைக் குறிக்கும் விரலுக்குப் பெருமைமிக்க விரல் என்று கூறதலும், ஆளாம் உயிரினைக் குறிக்கும் விரலுக்கு ஆட்காட்டி விரலெனக் கூறுதலும் சாலப் பொருந்தும் இயற்கையவாதல் காண்க. இருவினையைக் குறிக்கும் விரலை நீண்ட நடுவெனலும் மாயையைக் குறிப்பதை அணியெனலும் ஆணவத்தைக் குறிப்பதைச் சிறுமை எனலும் அங்ஙனமே பொருத்தமாதலறிக. பெருவிரல்நின்ற நிலையிலேயே நிற்பின் ஏனைய விரல்களுக்கு எவ்வகைச் செயல்களும் யாண்டும் எளிதின் நிகழ்வனவாகா. அஃது 'அவனசையாமல் அணுவசையா' தென்பதனை உணர்த்தும். எனவே ஆருயிரும் பேருயிரும் ஒன்றாய்ப் புணர்ப்பதற்கு இரண்டன்காதல் இணக்கமும் இன்றியமையாதென்க.இவற்றை வரும் வெண்பாவால் நினைவுகூர்க:
"முன்னோன் பெருவிரலாம் மூவா உயிர்சுட்டாம்
பின்மூன்றும் நீள்வினையே மாயைமலம் - உன்னுங்கால்
ஆளும் பெருவிரலும் ஆட்காட்டி யும்புணர்ப்பக்
கேளுறுமால் ஒட்டாவம் மூன்று.
குறிப்புரை: அத்தத்தில் - சின்முத்திரையினால், உத்தரம் கேட்ட - தம் கேள்விகளுக்கு விடைகேட்ட, அருந்தவர் - தவசிகள், பிடித்தல் - தொட்டுத் தீக்கை செய்தல்.
|
எட்டாம் தந்திரம். அடித்தலை அறியும் திறம் கூறல்
.காலுந் தலையும் அறியார் கலதிகள்
காலந்தச் சத்தி யருளென்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர்
காலந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.
" என்றும், "உரையிறந்த சுகமதுவே முடியாகு" மென்றும் தமிழாகமம் ஓதியருள்வதால் இவையிரண்டும் முறையே வழியும் சிறப்புப்பேறும் ஆகும். இவற்றை யுணராதாரையே தலைகால் தெரியாதலையும் தடுமாற்றத்தவராவர் என்ப.
குறிப்புரை: கால் - தமிழ்மொழியில் கால் என்ற இலக்கத்தைக் குறிப்பது வ என்ற குறி. அஞ்செழுத்தில் வ அருளைக் குறிக்கும். தலை - ஞானம். இது "கால் அந்தச் சத்தி அருள் ஞானமே பண்பார் தலை" என்று இம் மந்திரத்திலேயே கூறப்பட்டிருப்பது காண்க.
|