sentence
stringlengths
1
79k
பைரவி இராய்ச்சுரா என்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார்.
சுசுமிதா முகர்ஜி என்பவர் இந்திய நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார்.
ஈ.
சகீன் கான் என்பவர் சந்தியா என்றும் அழைக்கப்படுகிறார்.
வலது ஆர்கண்டி ஆடையில் சிறுமி.
நந்தினி ஸ்ரீகர் பிறப்பு 10 ஆகஸ்ட் 1969 ஒரு இந்தியப் பாடகியும் கலைஞரும் ஆவார்.
ராஜேஷ் நந்தினி சிங் 23 மார்ச் 1957 8 மே 2016 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
பி.
சவுரியா சவுகான் பிறப்பு ஆகஸ்ட் 7 இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் திரைப்பட நடிகையுமாவார்.
அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.
மைசூர் தசரா ஊர்வலம் தசராவின் போது முன்னணி யானையின் மேல் தங்க அம்பாரி தசரா யானைகள் மைசூரு தசரா திருவிழாவில் யானைகள் ஒரு அங்கம்.
தமிழ்நாடு பர்வதராஜகுல பட்டங்கட்டியர் பேரவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்பு ஆகும்.இந்த அமைப்பானது சமுதாய இளைஞர்களால் 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
சோகராபென் அக்பர்பாய் சாவ்தா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1923 முதல் 1997 ஆண்டு வரை வாழ்ந்த காந்திய சமூக சீர்திருத்தவாதியும் மருத்துவச்சியும் சமூக சேவகரும் அரசியல்வாதியுமாவார்.
புந்தேலி உற்சவம் என்பது புந்தேல்கண்டி நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார விழாவாகும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டலுள்ள ராஜ்நகர் வட்டத்திலுள்ள பசரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமியில் தொடங்கி ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது.
நந்தா தேவி ராஜ் ஜாத் என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் கொண்டாடப்படும் மூன்று வார கால புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும்.
பீயா ராய் சவுத்ரி பியா ராய் சவுத்ரி இந்தியாவின் பெங்களுருவில் பிறந்த திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் தொழிலதிபருமாவார்.
சலாமி வெட்டும் உத்திகள் அல்லது சலாமி தந்திரங்கள் அல்லது சலாமி தாக்குதல்கள் என்பது பல சின்னச் சின்ன செயல்கள் செய்வதன் மூலம் முடிவில் ஒரு பெரிய வெற்றியை பெரும் உத்தி ஆகும்.
கீதா ஜோஹ்ரி இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் இந்தியக் காவல் அதிகாரியாவார்.
அலினா சல்தான்கா என்பவர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
எடுகுரி சண்டிந்தி ஷர்மிளா ரெட்டி என்பவர் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.
பிலிசு பரியா 19242018 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
யசதாமினி விருது என்பது இந்தியாவில் கோவா மாநில அரசால் வழங்கப்படுகிறது.
வந்தனா ஜெயின் ஒரு இந்திய வெண்படல கண்புரை மற்றும் சீரொளி கண் நிபுண மருத்துவராவார்.
மலேசிய போக்குவரத்து அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
குடோபு அல்லது போடோ கடபா மொழி என்பது இந்தியாவின் ஆசுத்ரோஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென் முண்டா மொழியாகும் ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இம்மொழி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஜோசப் ஆர்னால்ட் 28 திசம்பர் 1782 26 சூலை 1818 நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகள் படாங் சுமாத்திரா என்பவர் ஒரு கடற்படை மருத்துவர் இயற்கை ஆர்வலர் ஆவார்.
பூக்குழி என்பது பெருமாள் முருகன் எழுதிய புதினமாகும் இது சமூகம் சாதியால் தூண்டப்பட்ட வெறுப்புக்குள் ஆட்பட்ட ஒரு காதல் கதையை விவரிக்கிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார்.
அன்னி திவ்யா பிறப்பு 1987 இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார்.
சந்திரபிரபா அர்சு 19462016 என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
சகுந்தலா திம்மப்பா செட்டி .
அப்பாசியா பேகம் மெச்சி 19221970 என்பவர் 1960களில் இந்திய மாநிலமான மைசூர் தற்போது கர்நாடகா சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
நந்தினி நாயர் ஒரு இந்திய தொலைக்காட்சி ஆளுமையும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரும் கலைஞரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் "டிஜே என்வி" என்ற மேடைப் பெயரில் அறியப்படும் ஒரு தொழில்முறை வட்டு ஜாக்கியும் வானொலி ஜாக்கியுமாவார்.
நஃபிஸ் பாத்திமா நபிசு பாத்திமா பிறப்பு 6 ஏப்ரல் 1963 என்பவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செப்டம்பர் 2015 முதல் சூலை 2018 வரையும் கர்நாடக மாநில காங்கிரசு செயலாளராக 2009 முதல் சூலை 2017 வரை பதவி வகித்த கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி.
நீலம் கௌரானி தொழில் ரீதியாக நந்தினி ராய் என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியுமாவார்.
நந்தினி நிம்ப்கர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேளாண்மை விஞ்ஞானியாவார்.
கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் 19 மார்ச் 19437 அக்டோபர் 2020 மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார்.
மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.
பாவனா கவுர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
கமலிகா குகா தாகுர்தா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
வட இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கீதா சிங் இளம்வயதிலேயே தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் குடியேறியுள்ளார்.
இரவதி அர்சே என்பவர் இந்திய நடிகையும் மற்றும் பின்னணி ஒலிக் கலைஞரும் ஆவார்.
ப்ரோனீதா சுவர்கியாரி இந்தியாவின் அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் இணையதள காணொளி கலைஞருமாவார்.
திவ்யா ராணா ஒரு முன்னாள் இந்தித் திரைப்படத்துறையின் நடிகையும் புகைப்படக்கலைஞரும் தொழிலதிபருமாவார்.
கிலெம்சுங்லா இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமாவைச் சேர்ந்த கல்வியாளரும் பேராசிரியையுமாவார்.
அபிலாஷா பராக் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியாவார்.
அனுஷ்கா சிங் பிறப்பு 9 நவம்பர் 1964 இந்தியாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார்.
கல்லாரல் சேற்றாரல் பேராரல் என்பது மாஸ்டசெம்பெலிடே குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்டசெம்பெலஸ் ஸ்கோபோலி 1777 பேரினத்தைச் சேர்ந்த ரேஃபின்ட் ஸ்பைனி ஈல்ஸ் இனமாகும் .
பெண்ணிய பெரும்பான்மை அறக்கட்டளை என்பது வர்ஜீனியாவின் ஆர்லிங்டன் கவுண்டியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
தேயுடா அல்லது தேயுடா கேல் என்பது நேபாள நாட்டுப்புற நடனத்தின் ஒரு வகையாகும்.
கண்ட பேரண்ட பட்சி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.
மடிக்கேரி தசரா என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள மடிக்கேரி நகரில் கொண்டாடப்படுகிறது.
ஹேமா சீனிவாசன் பிறப்பு 1959 இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றவருமாவார்.
மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்25 மே 1868 9 ஏப்ரல் 1941 இந்திய பார்சி மருத்துவரும் ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் ஆசிய பெண்ணுமாவார்.
பாலித் தீவில் இந்து சமயம் இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பெரும்பான்மையான பாலி மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.
லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி 192728 10 நவம்பர் 2018 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த குணச்சித்திர நடிகையாவார்.
நிப்பாணி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
பர்சா சாட்டர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் இந்தித் திரைப்படத்துறையின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வரும் நடிகையாவார்.
பி.கே.திரேசியா 12 மார்ச் 1924 18 நவம்பர் 1981 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண் கட்டடப் பொறியாளராவார்.
மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
மேக்னா வெங்கட் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளரும் நடன ஆசிரியையுமாவார்.
பிளெஸ்ஸி குரியன் இந்தியாவின் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர்நடிகையும் தொலைக்காட்சி நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் விளம்பர நடிகையுமாவார்.
கீதாஞ்சலி குல்கர்னி இந்தியாவின் மகாராட்டிரத்தின் மும்பையைச்சேர்ந்த திரைப்பட நடிகையும் நாடக நடிகையும் சமூக ஆர்வலருமாவார்.
அல்லரி சுபாஷினி இயற்பெயர்திருமலா சுபாஷினி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நடிகையாவார்.
சரிதா சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
சாந்தா வசிஷ்டர் பிறப்பு 1926 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
பிரீத்தி தோமர் பிறப்பு 1970 என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவரும் ஆவார்.
ஆராக்கேரியா என்பது அரௌகாரியாசியே குடும்பத்தைச் சேர்ந்த மாறாப் பசுமையான ஊசியிலை மரங்களில் ஒரு பேரினமாகும் .
வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ஊதா மற்றும் தங்க நிறத்திலான நிறங்களைக் காட்டுகிறது பள்ளி நிறம் அல்லது நிறங்கள் பல்கலைக்கழக வண்ணங்கள் அல்லது கல்லூரி வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஒரு பள்ளியின் வகைக்குறி அடையாளத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் ஆகும்.
குஞ்சன் சக்சேனா பிறப்பு 1975 இந்திய விமானப்படை அதிகாரியம் முன்னாள் உலங்கு வானூர்தி விமானியுமாவார்.
மின்டி அகர்வால் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலாவைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் பிரிவு தலைவரும் இந்திய விமானப் படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருமாவார்.
ஜஸ்விந்தர் கவுர் இந்தியாவின் பஞ்சாப்பின் கரார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த பயணிகள் விமானஓட்டியாவார்.
சிக்கோடிசதலகா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
பிரேம் மாத்தூர் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த பெண் விமானியாவார்.