[ { "aadhikaramNo": 1, "adhikaramName": "கடவுள் வாழ்த்து", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1, "kural": "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை" } ] }, { "kuralNo": 2, "kural": "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை" } ] }, { "kuralNo": 3, "kural": "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nநிலமிசை நீடுவாழ் வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்" } ] }, { "kuralNo": 4, "kural": "வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nயாண்டும் இடும்பை இல", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை" } ] }, { "kuralNo": 5, "kural": "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nபொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 6, "kural": "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடுவாழ் வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்" } ] }, { "kuralNo": 7, "kural": "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nமனக்கவலை மாற்றல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை" } ] }, { "kuralNo": 8, "kural": "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nபிறவாழி நீந்தல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல" } ] }, { "kuralNo": 9, "kural": "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nதாளை வணங்காத் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்" } ] }, { "kuralNo": 10, "kural": "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவன் அடிசேரா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 2, "adhikaramName": "வான்சிறப்பு", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 11, "kural": "வானின் றுலகம் வழங்கி வருதலால்\nதானமிழ்தம் என்றுணரற் பாற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது" } ] }, { "kuralNo": 12, "kural": "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉ மழை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது" } ] }, { "kuralNo": 13, "kural": "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஉள்நின் றுடற்றும் பசி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்" } ] }, { "kuralNo": 14, "kural": "ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nவாரி வளங்குன்றிக் கால்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்" } ] }, { "kuralNo": 15, "kural": "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்" } ] }, { "kuralNo": 16, "kural": "விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nபசும்புல் தலைகாண் பரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்" } ] }, { "kuralNo": 17, "kural": "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nதான்நல்கா தாகி விடின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்" } ] }, { "kuralNo": 18, "kural": "சிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nவறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?" } ] }, { "kuralNo": 19, "kural": "தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nவானம் வழங்கா தெனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்" } ] }, { "kuralNo": 20, "kural": "நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்\nவானின் றமையா தொழுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 3, "adhikaramName": "நீத்தார் பெருமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 21, "kural": "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nவேண்டும் பனுவல் துணிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்" } ] }, { "kuralNo": 22, "kural": "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது" } ] }, { "kuralNo": 23, "kural": "இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்\nபெருமை பிறங்கிற் றுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்" } ] }, { "kuralNo": 24, "kural": "உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nவரனென்னும் வைப்பிற்கோர் வித்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி," }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்" } ] }, { "kuralNo": 25, "kural": "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஇந்திரனே சாலுங் கரி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்" } ] }, { "kuralNo": 26, "kural": "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்" } ] }, { "kuralNo": 27, "kural": "சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்\nவகைதெரிவான் கட்டே உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்" } ] }, { "kuralNo": 28, "kural": "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nமறைமொழி காட்டி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்" } ] }, { "kuralNo": 29, "kural": "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி\nகணமேயுங் காத்தல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது" } ] }, { "kuralNo": 30, "kural": "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசெந்தண்மை பூண்டொழுக லான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்" } ] } ] }, { "aadhikaramNo": 4, "adhikaramName": "அறன் வலியுறுத்தல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 31, "kural": "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஆக்கம் எவனோ உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?" } ] }, { "kuralNo": 32, "kural": "அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை\nமறத்தலின் ஊங்கில்லை கேடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை" } ] }, { "kuralNo": 33, "kural": "ஒல்லும் வகையான அறவினை ஓவாதே\nசெல்லும்வாய் எல்லாஞ் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்" } ] }, { "kuralNo": 34, "kural": "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஆகுல நீர பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை" } ] }, { "kuralNo": 35, "kural": "அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇழுக்கா இயன்ற தறம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்" } ] }, { "kuralNo": 36, "kural": "அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது\nபொன்றுங்கால் பொன்றாத் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்" } ] }, { "kuralNo": 37, "kural": "அறத்தா றிதுவென வேண்டா சிவிகை\nபொறுத்தானோ டூர்ந்தான் இடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்" } ] }, { "kuralNo": 38, "kural": "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nவாழ்நாள் வழியடைக்கும் கல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்" } ] }, { "kuralNo": 39, "kural": "அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்\nபுறத்த புகழும் இல", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது" } ] }, { "kuralNo": 40, "kural": "செயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nஉயற்பால தோரும் பழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்" } ] } ] }, { "aadhikaramNo": 5, "adhikaramName": "இல்வாழ்க்கை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 41, "kural": "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்" } ] }, { "kuralNo": 42, "kural": "துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nஇல்வாழ்வான் என்பான் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்" } ] }, { "kuralNo": 43, "kural": "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஐம்புலத்தா றோம்பல் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்" } ] }, { "kuralNo": 44, "kural": "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது" } ] }, { "kuralNo": 45, "kural": "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை" } ] }, { "kuralNo": 46, "kural": "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nபோஒய்ப் பெறுவ தெவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது" } ] }, { "kuralNo": 47, "kural": "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லாம் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்" } ] }, { "kuralNo": 48, "kural": "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்" } ] }, { "kuralNo": 49, "kural": "அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன்பழிப்ப தில்லாயின் நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்" } ] }, { "kuralNo": 50, "kural": "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nதெய்வத்துள் வைக்கப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்" } ] } ] }, { "aadhikaramNo": 6, "adhikaramName": "வாழ்க்கைத் துணைநலம்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 51, "kural": "மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்" } ] }, { "kuralNo": 52, "kural": "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஎனைமாட்சித் தாயினும் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது" } ] }, { "kuralNo": 53, "kural": "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nஇல்லவள் மாணாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது" } ] }, { "kuralNo": 54, "kural": "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதிண்மைஉண் டாகப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?" } ] }, { "kuralNo": 55, "kural": "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்" } ] }, { "kuralNo": 56, "kural": "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்" } ] }, { "kuralNo": 57, "kural": "சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nநிறைகாக்கும் காப்பே தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்" } ] }, { "kuralNo": 58, "kural": "பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்" } ] }, { "kuralNo": 59, "kural": "புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்\nஏறுபோல் பீடு நடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்" } ] }, { "kuralNo": 60, "kural": "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nநன்கலம் நன்மக்கட் பேறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது" } ] } ] }, { "aadhikaramNo": 7, "adhikaramName": "மக்கட்பேறு", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 61, "kural": "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த\nமக்கட்பே றல்ல பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 62, "kural": "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nபண்புடை மக்கட் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது" } ] }, { "kuralNo": 63, "kural": "தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nதந்தம் வினையான் வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை" } ] }, { "kuralNo": 64, "kural": "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nசிறுகை அளாவிய கூழ்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது" } ] }, { "kuralNo": 65, "kural": "மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்\nசொற்கேட்டல் இன்பம் செவிக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்" } ] }, { "kuralNo": 66, "kural": "குழலினி தியாழினி தென்பதம் மக்கள்\nமழலைச்சொல் கேளா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்" } ] }, { "kuralNo": 67, "kural": "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து\nமுந்தி இருப்பச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்" } ] }, { "kuralNo": 68, "kural": "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிர்க் கெல்லாம் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்" } ] }, { "kuralNo": 69, "kural": "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nசான்றோன் எனக்கேட்ட தாய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்" } ] }, { "kuralNo": 70, "kural": "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல்லெனும் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்" } ] } ] }, { "aadhikaramNo": 8, "adhikaramName": "அன்புடைமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 71, "kural": "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுண்கணீர் பூசல் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்" } ] }, { "kuralNo": 72, "kural": "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்" } ] }, { "kuralNo": 73, "kural": "அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஎன்போ டியைந்த தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்" } ] }, { "kuralNo": 74, "kural": "அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பென்னும் நாடாச் சிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்" } ] }, { "kuralNo": 75, "kural": "அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஇன்புற்றார் எய்தும் சிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்" } ] }, { "kuralNo": 76, "kural": "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nமறத்திற்கும் அஃதே துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்" } ] }, { "kuralNo": 77, "kural": "என்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பி லதனை அறம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்" } ] }, { "kuralNo": 78, "kural": "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவற்றல் மரந்தளிர்த் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது" } ] }, { "kuralNo": 79, "kural": "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை\nஅகத்துறுப் பன்பி லவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?" } ] }, { "kuralNo": 80, "kural": "அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு\nஎன்புதோல் போர்த்த உடம்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 9, "adhikaramName": "விருந்தோம்பல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 81, "kural": "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவேளாண்மை செய்தற் பொருட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே" } ] }, { "kuralNo": 82, "kural": "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல" } ] }, { "kuralNo": 83, "kural": "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nபருவந்து பாழ்படுதல் இன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை" } ] }, { "kuralNo": 84, "kural": "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்விருந் தோம்புவான் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்" } ] }, { "kuralNo": 85, "kural": "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nமிச்சில் மிசைவான் புலம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?" } ] }, { "kuralNo": 86, "kural": "செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nநல்விருந்து வானத் தவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்" } ] }, { "kuralNo": 87, "kural": "இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\nதுணைத்துணை வேள்விப் பயன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்" } ] }, { "kuralNo": 88, "kural": "பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nவேள்வி தலைப்படா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்" } ] }, { "kuralNo": 89, "kural": "உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nமடமை மடவார்கண் உண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 90, "kural": "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்" } ] } ] }, { "aadhikaramNo": 10, "adhikaramName": "இனியவை கூறல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 91, "kural": "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்" } ] }, { "kuralNo": 92, "kural": "அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்" } ] }, { "kuralNo": 93, "kural": "முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்\nஇன்சொ லினதே அறம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்" } ] }, { "kuralNo": 94, "kural": "துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nஇன்புறூஉம் இன்சொ லவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை" } ] }, { "kuralNo": 95, "kural": "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅணியல்ல மற்றுப் பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது" } ] }, { "kuralNo": 96, "kural": "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநாடி இனிய சொலின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்" } ] }, { "kuralNo": 97, "kural": "நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபண்பின் தலைப்பிரியாச் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்" } ] }, { "kuralNo": 98, "kural": "சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇம்மையும் இன்பம் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்" } ] }, { "kuralNo": 99, "kural": "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nவன்சொல் வழங்கு வது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?" } ] }, { "kuralNo": 100, "kural": "இனிய உளவாக இன்னாத கூறல்\nகனிஇருப்பக் காய்கவர்ந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 11, "adhikaramName": "செய்ந்நன்றியறிதல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 101, "kural": "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா" } ] }, { "kuralNo": 102, "kural": "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஞாலத்தின் மாணப் பெரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்" } ] }, { "kuralNo": 103, "kural": "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nநன்மை கடலின் பெரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது" } ] }, { "kuralNo": 104, "kural": "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nகொள்வர் பயன்தெரி வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்" } ] }, { "kuralNo": 105, "kural": "உதவி வரைத்தன் றுதவி உதவி\nசெயப்பட்டார் சால்பின் வரைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்" } ] }, { "kuralNo": 106, "kural": "மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nதுன்பத்துள் துப்பாயார் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது" } ] }, { "kuralNo": 107, "kural": "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nவிழுமந் துடைத்தவர் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது" } ] }, { "kuralNo": 108, "kural": "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஅன்றே மறப்பது நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது" } ] }, { "kuralNo": 109, "kural": "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஒன்றுநன் றுள்ளக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது" } ] }, { "kuralNo": 110, "kural": "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nசெய்ந்நன்றி கொன்ற மகற்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை" } ] } ] }, { "aadhikaramNo": 12, "adhikaramName": "நடுவு நிலைமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 111, "kural": "தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்\nபாற்பட் டொழுகப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்" } ] }, { "kuralNo": 112, "kural": "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nஎச்சத்திற் கேமாப் புடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்" } ] }, { "kuralNo": 113, "kural": "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nஅன்றே யொழிய விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 114, "kural": "தக்கார் தகவிலர் என்ப தவரவர்\nஎச்சத்தாற் காணப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்" } ] }, { "kuralNo": 115, "kural": "கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nகோடாமை சான்றோர்க் கணி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்" } ] }, { "kuralNo": 116, "kural": "கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்\nநடுவொரீஇ அல்ல செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்" } ] }, { "kuralNo": 117, "kural": "கெடுவாக வையா துலகம் நடுவாக\nநன்றிக்கண் தங்கியான் தாழ்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது" } ] }, { "kuralNo": 118, "kural": "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்\nகோடாமை சான்றோர்க் கணி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்" } ] }, { "kuralNo": 119, "kural": "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉட்கோட்டம் இன்மை பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை" } ] }, { "kuralNo": 120, "kural": "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறவும் தமபோல் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்" } ] } ] }, { "aadhikaramNo": 13, "adhikaramName": "அடக்கம் உடைமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 121, "kural": "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஆரிருள் உய்த்து விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்" } ] }, { "kuralNo": 122, "kural": "காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅதனினூஉங் கில்லை உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை" } ] }, { "kuralNo": 123, "kural": "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்\nதாற்றின் அடங்கப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்" } ] }, { "kuralNo": 124, "kural": "நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்\nமலையினும் மாணப் பெரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்" } ] }, { "kuralNo": 125, "kural": "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nசெல்வர்க்கே செல்வம் தகைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்" } ] }, { "kuralNo": 126, "kural": "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஎழுமையும் ஏமாப் புடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் – அரணாக இருந்து உதவும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்" } ] }, { "kuralNo": 127, "kural": "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்" } ] }, { "kuralNo": 128, "kural": "ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nநன்றாகா தாகி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்" } ] }, { "kuralNo": 129, "kural": "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநாவினாற் சுட்ட வடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது" } ] }, { "kuralNo": 130, "kural": "கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்" } ] } ] }, { "aadhikaramNo": 14, "adhikaramName": "ஒழுக்கம் உடைமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 131, "kural": "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஉயிரினும் ஓம்பப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது" } ] }, { "kuralNo": 132, "kural": "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்\nதேரினும் அஃதே துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 133, "kural": "ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்\nஇழிந்த பிறப்பாய் விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்" } ] }, { "kuralNo": 134, "kural": "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nபிறப்பொழுக்கங் குன்றக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்" } ] }, { "kuralNo": 135, "kural": "அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை\nஒழுக்க மிலான்கண் உயர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது" } ] }, { "kuralNo": 136, "kural": "ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஏதம் படுபாக் கறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 137, "kural": "ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஎய்துவ ரெய்தாப் பழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்" } ] }, { "kuralNo": 138, "kural": "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்\nஎன்றும் இடும்பை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்" } ] }, { "kuralNo": 139, "kural": "ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\nவழுக்கியும் வாயாற் சொலல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்" } ] }, { "kuralNo": 140, "kural": "உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்\nகல்லா ரறிவிலா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 15, "adhikaramName": "பிறனில் விழையாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 141, "kural": "பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்\nதறம்பொருள் கண்டார்க ணில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை" } ] }, { "kuralNo": 142, "kural": "அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை\nநின்றாரிற் பேதையா ரில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்" } ] }, { "kuralNo": 143, "kural": "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nதீமை புரிந்தொழுகு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்" } ] }, { "kuralNo": 144, "kural": "எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்\nதேரான் பிறனில் புகல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்" } ] }, { "kuralNo": 145, "kural": "எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்\nவிளியாது நிற்கும் பழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்" } ] }, { "kuralNo": 146, "kural": "பகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nஇகவாவாம் இல்லிறப்பான் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை" } ] }, { "kuralNo": 147, "kural": "அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்\nபெண்மை நயவா தவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்" } ] }, { "kuralNo": 148, "kural": "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்\nகறனென்றோ ஆன்ற வொழுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்" } ] }, { "kuralNo": 149, "kural": "நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்\nபிறற்குரியாள் தோள்தோயா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்" } ] }, { "kuralNo": 150, "kural": "அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்\nபெண்மை நயவாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 16, "adhikaramName": "பொறையுடைமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 151, "kural": "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஇகழ்வார்ப் பொறுத்தல் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்" } ] }, { "kuralNo": 152, "kural": "பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை\nமறத்த லதனினும் நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்" } ] }, { "kuralNo": 153, "kural": "இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்\nவன்மை மடவார்ப் பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது" } ] }, { "kuralNo": 154, "kural": "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\nபோற்றி யொழுகப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்" } ] }, { "kuralNo": 155, "kural": "ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்\nபொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 156, "kural": "ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nபொன்றுந் துணையும் புகழ்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்" } ] }, { "kuralNo": 157, "kural": "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்\nதறனல்ல செய்யாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்" } ] }, { "kuralNo": 158, "kural": "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்\nதகுதியான் வென்று விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்" } ] }, { "kuralNo": 159, "kural": "துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்\nஇன்னாச்சொல் நோற்கிற் பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்" } ] }, { "kuralNo": 160, "kural": "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஇன்னாச்சொ னோற்பாரிற் பின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 17, "adhikaramName": "அழுக்காறாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 161, "kural": "ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்\nதழுக்கா றிலாத இயல்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்" } ] }, { "kuralNo": 162, "kural": "விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்\nஅழுக்காற்றின் அன்மை பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 163, "kural": "அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nபேணா தழுக்கறுப் பான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்" } ] }, { "kuralNo": 164, "kural": "அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nஏதம் படுபாக் கறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 165, "kural": "அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்\nவழுக்கியுங் கேடீன் பது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்" } ] }, { "kuralNo": 166, "kural": "கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nஉண்பதூஉ மின்றிக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்" } ] }, { "kuralNo": 167, "kural": "அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்\nதவ்வையைக் காட்டி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்" } ] }, { "kuralNo": 168, "kural": "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்\nதீயுழி உய்த்து விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்" } ] }, { "kuralNo": 169, "kural": "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nகேடும் நினைக்கப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்" } ] }, { "kuralNo": 170, "kural": "அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்\nபெருக்கத்தில் தீர்ந்தாரு மில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை" } ] } ] }, { "aadhikaramNo": 18, "adhikaramName": "வெஃகாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 171, "kural": "நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்\nகுற்றமும் ஆங்கே தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்" } ] }, { "kuralNo": 172, "kural": "படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவன்மை நாணு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்" } ] }, { "kuralNo": 173, "kural": "சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே\nமற்றின்பம் வேண்டு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்" } ] }, { "kuralNo": 174, "kural": "இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nபுன்மையில் காட்சி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்" } ] }, { "kuralNo": 175, "kural": "அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nவெஃகி வெறிய செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?" } ] }, { "kuralNo": 176, "kural": "அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nபொல்லாத சூழக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்" } ] }, { "kuralNo": 177, "kural": "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nமாண்டற் கரிதாம் பயன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது" } ] }, { "kuralNo": 178, "kural": "அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை\nவேண்டும் பிறன்கைப் பொருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 179, "kural": "அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்\nதிறனறிந் தாங்கே திரு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்" } ] }, { "kuralNo": 180, "kural": "இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்\nவேண்டாமை யென்னுஞ் செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 19, "adhikaramName": "புறங்கூறாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 181, "kural": "அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்\nபுறங்கூறா னென்றல் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது" } ] }, { "kuralNo": 182, "kural": "அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே\nபுறனழீஇப் பொய்த்து நகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது" } ] }, { "kuralNo": 183, "kural": "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்\nஅறங்கூறும் ஆக்கந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று" } ] }, { "kuralNo": 184, "kural": "கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க\nமுன்னின்று பின்னோக்காச் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு" } ] }, { "kuralNo": 185, "kural": "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nபுன்மையாற் காணப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்" } ] }, { "kuralNo": 186, "kural": "பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்\nதிறன்தெரிந்து கூறப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்" } ] }, { "kuralNo": 187, "kural": "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nநட்பாடல் தேற்றா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்" } ] }, { "kuralNo": 188, "kural": "துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்\nஎன்னைகொல் ஏதிலார் மாட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?" } ] }, { "kuralNo": 189, "kural": "அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்\nபுன்சொ லுரைப்பான் பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது" } ] }, { "kuralNo": 190, "kural": "ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nதீதுண்டோ மன்னு முயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்" } ] } ] }, { "aadhikaramNo": 20, "adhikaramName": "பயனில சொல்லாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 191, "kural": "பல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nஎல்லாரும் எள்ளப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்" } ] }, { "kuralNo": 192, "kural": "பயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nநட்டார்கட் செய்தலிற் றீது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்" } ] }, { "kuralNo": 193, "kural": "நயனில னென்பது சொல்லும் பயனில\nபாரித் துரைக்கும் உரை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்" } ] }, { "kuralNo": 194, "kural": "நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nபண்பில்சொல் பல்லா ரகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்" } ] }, { "kuralNo": 195, "kural": "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nநீர்மை யுடையார் சொலின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்" } ] }, { "kuralNo": 196, "kural": "பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்\nமக்கட் பதடி யெனல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்" } ] }, { "kuralNo": 197, "kural": "நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nபயனில சொல்லாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது" } ] }, { "kuralNo": 198, "kural": "அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்\nபெரும்பய னில்லாத சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்" } ] }, { "kuralNo": 199, "kural": "பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nமாசறு காட்சி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்" } ] }, { "kuralNo": 200, "kural": "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசொல்லிற் பயனிலாச் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 21, "adhikaramName": "தீவினையச்சம்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 201, "kural": "தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீவினை யென்னுஞ் செறுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்" } ] }, { "kuralNo": 202, "kural": "தீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்" } ] }, { "kuralNo": 203, "kural": "அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய\nசெறுவார்க்குஞ் செய்யா விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்" } ] }, { "kuralNo": 204, "kural": "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nஅறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்" } ] }, { "kuralNo": 205, "kural": "இலனென்று தீயவை செய்யற்க செய்யின்\nஇலனாகும் மற்றுப் பெயர்த்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்" } ] }, { "kuralNo": 206, "kural": "தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nதன்னை அடல்வேண்டா தான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 207, "kural": "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nவீயாது பின்சென் றடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்" } ] }, { "kuralNo": 208, "kural": "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nவீயா தடியுறைந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்" } ] }, { "kuralNo": 209, "kural": "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்\nதுன்னற்க தீவினைப் பால்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது" } ] }, { "kuralNo": 210, "kural": "அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்\nதீவினை செய்யான் எனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க" } ] } ] }, { "aadhikaramNo": 22, "adhikaramName": "ஒப்புரவறிதல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 211, "kural": "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்\nடென்னாற்றுங் கொல்லோ உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்" } ] }, { "kuralNo": 212, "kural": "தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு\nவேளாண்மை செய்தற் பொருட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்" } ] }, { "kuralNo": 213, "kural": "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nஒப்புரவின் நல்ல பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது" } ] }, { "kuralNo": 214, "kural": "ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்\nசெத்தாருள் வைக்கப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்" } ] }, { "kuralNo": 215, "kural": "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபேரறி வாளன் திரு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்" } ] }, { "kuralNo": 216, "kural": "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nநயனுடை யான்கண் படின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்" } ] }, { "kuralNo": 217, "kural": "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nபெருந்தகை யான்கண் படின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 218, "kural": "இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்\nகடனறி காட்சி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்" } ] }, { "kuralNo": 219, "kural": "நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nசெய்யா தமைகலா வாறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்" } ] }, { "kuralNo": 220, "kural": "ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்\nவிற்றுக்கோள் தக்க துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 23, "adhikaramName": "ஈ.கை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 221, "kural": "வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்\nகுறியெதிர்ப்பை நீர துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்" } ] }, { "kuralNo": 222, "kural": "நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்\nஇல்லெனினும் ஈதலே நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்" } ] }, { "kuralNo": 223, "kural": "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nகுலனுடையான் கண்ணே யுள", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்" } ] }, { "kuralNo": 224, "kural": "இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்\nஇன்முகங் காணு மளவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்" } ] }, { "kuralNo": 225, "kural": "ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை\nமாற்றுவா ராற்றலிற் பின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்" } ] }, { "kuralNo": 226, "kural": "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்" } ] }, { "kuralNo": 227, "kural": "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்\nதீப்பிணி தீண்ட லரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை" } ] }, { "kuralNo": 228, "kural": "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nவைத்திழக்கும் வன்க ணவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?" } ] }, { "kuralNo": 229, "kural": "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nதாமே தமிய ருணல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது" } ] }, { "kuralNo": 230, "kural": "சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nஈத லியையாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது" } ] } ] }, { "aadhikaramNo": 24, "adhikaramName": "புகழ்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 231, "kural": "ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல\nதூதிய மில்லை உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை" } ] }, { "kuralNo": 232, "kural": "உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்\nறீவார்மேல் நிற்கும் புகழ்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்" } ] }, { "kuralNo": 233, "kural": "ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்\nபொன்றாது நிற்பதொன் றில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை" } ] }, { "kuralNo": 234, "kural": "நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nபோற்றாது புத்தே ளுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது" } ] }, { "kuralNo": 235, "kural": "நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்\nவித்தகர்க் கல்லால் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்" } ] }, { "kuralNo": 236, "kural": "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலின் தோன்றாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது" } ] }, { "kuralNo": 237, "kural": "புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nஇகழ்வாரை நோவ தெவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?" } ] }, { "kuralNo": 238, "kural": "வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\nஎச்சம் பெறாஅ விடின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்" } ] }, { "kuralNo": 239, "kural": "வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nயாக்கை பொறுத்த நிலம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்" } ] }, { "kuralNo": 240, "kural": "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nவாழ்வாரே வாழா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்" } ] } ] }, { "aadhikaramNo": 25, "adhikaramName": "அருளுடைமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 241, "kural": "அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nபூரியார் கண்ணு முள", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது" } ] }, { "kuralNo": 242, "kural": "நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்\nதேரினும் அஃதே துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்" } ] }, { "kuralNo": 243, "kural": "அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த\nஇன்னா உலகம் புகல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்" } ] }, { "kuralNo": 244, "kural": "மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப\nதன்னுயி ரஞ்சும் வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 245, "kural": "அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு\nமல்லன்மா ஞாலங் கரி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று" } ] }, { "kuralNo": 246, "kural": "பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி\nஅல்லவை செய்தொழுகு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்" } ] }, { "kuralNo": 247, "kural": "அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்\nகிவ்வுலகம் இல்லாகி யாங்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது" } ] }, { "kuralNo": 248, "kural": "பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்\nஅற்றார்மற் றாதல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது" } ] }, { "kuralNo": 249, "kural": "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nஅருளாதான் செய்யும் அறம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்" } ] }, { "kuralNo": 250, "kural": "வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nமெலியார்மேற் செல்லு மிடத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது" } ] } ] }, { "aadhikaramNo": 26, "adhikaramName": "புலால் மறுத்தல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 251, "kural": "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்\nஎங்ஙனம் ஆளும் அருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்" } ] }, { "kuralNo": 252, "kural": "பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி\nஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை" } ] }, { "kuralNo": 253, "kural": "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்\nஉடல்சுவை யுண்டார் மனம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல" } ] }, { "kuralNo": 254, "kural": "அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்\nபொருளல்ல தவ்வூன் தினல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது" } ] }, { "kuralNo": 255, "kural": "உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண\nஅண்ணாத்தல் செய்யா தளறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன" } ] }, { "kuralNo": 256, "kural": "தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்\nவிலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்" } ] }, { "kuralNo": 257, "kural": "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nபுண்ண துணர்வார்ப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்" } ] }, { "kuralNo": 258, "kural": "செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்\nஉயிரின் தலைப்பிரிந்த ஊன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 259, "kural": "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர்செகுத் துண்ணாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது" } ] }, { "kuralNo": 260, "kural": "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nஎல்லா உயிருந் தொழும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்" } ] } ] }, { "aadhikaramNo": 27, "adhikaramName": "தவம்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 261, "kural": "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nஅற்றே தவத்திற் குரு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும்" } ] }, { "kuralNo": 262, "kural": "தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை\nஅஃதிலார் மேற்கொள் வது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்" } ] }, { "kuralNo": 263, "kural": "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்\nமற்றை யவர்கள் தவம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது" } ] }, { "kuralNo": 264, "kural": "ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்\nஎண்ணின் தவத்தான் வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்" } ] }, { "kuralNo": 265, "kural": "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்\nஈண்டு முயலப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்" } ] }, { "kuralNo": 266, "kural": "தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்\nஅவஞ்செய்வார் ஆசையுட் பட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்" } ] }, { "kuralNo": 267, "kural": "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்\nசுடச்சுட நோற்கிற் பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்" } ] }, { "kuralNo": 268, "kural": "தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய\nமன்னுயி ரெல்லாந் தொழும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்" } ] }, { "kuralNo": 269, "kural": "கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்\nஆற்றல் தலைப்பட் டவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்" } ] }, { "kuralNo": 270, "kural": "இலர்பல ராகிய காரணம் நோற்பார்\nசிலர்பலர் நோலா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்" } ] } ] }, { "aadhikaramNo": 28, "adhikaramName": "கூடா ஒழுக்கம்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 271, "kural": "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\nஐந்தும் அகத்தே நகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்" } ] }, { "kuralNo": 272, "kural": "வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்\nதானறி குற்றப் படின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை" } ] }, { "kuralNo": 273, "kural": "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nபுலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 274, "kural": "தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து\nவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை" } ] }, { "kuralNo": 275, "kural": "பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்\nறேதம் பலவுந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்" } ] }, { "kuralNo": 276, "kural": "நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து\nவாழ்வாரின் வன்கணா ரில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை" } ] }, { "kuralNo": 277, "kural": "புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி\nமூக்கிற் கரியா ருடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு" } ] }, { "kuralNo": 278, "kural": "மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி\nமறைந்தொழுகு மாந்தர் பலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் – இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்" } ] }, { "kuralNo": 279, "kural": "கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை\nவினைபடு பாலாற் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 280, "kural": "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nபழித்த தொழித்து விடின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்" } ] } ] }, { "aadhikaramNo": 29, "adhikaramName": "கள்ளாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 281, "kural": "எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்\nகள்ளாமை காக்கதன் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்" } ] }, { "kuralNo": 282, "kural": "உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்\nகள்ளத்தால் கள்வே மெனல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்" } ] }, { "kuralNo": 283, "kural": "களவினா லாகிய ஆக்கம் அளவிறந்\nதாவது போலக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்" } ] }, { "kuralNo": 284, "kural": "களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nவீயா விழுமந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்" } ] }, { "kuralNo": 285, "kural": "அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்\nபொச்சாப்புப் பார்ப்பார்க ணில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது" } ] }, { "kuralNo": 286, "kural": "அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்\nகன்றிய காத லவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்" } ] }, { "kuralNo": 287, "kural": "களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்\nஆற்றல் புரிந்தார்க ணில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது" } ] }, { "kuralNo": 288, "kural": "அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்\nகளவறிந்தார் நெஞ்சில் கரவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்" } ] }, { "kuralNo": 289, "kural": "அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல\nமற்றைய தேற்றா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்" } ] }, { "kuralNo": 290, "kural": "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்\nதள்ளாது புத்தே ளுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது" } ] } ] }, { "aadhikaramNo": 30, "adhikaramName": "வாய்மை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 291, "kural": "வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்\nதீமை யிலாத சொலல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்" } ] }, { "kuralNo": 292, "kural": "பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nநன்மை பயக்கு மெனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்" } ] }, { "kuralNo": 293, "kural": "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nதன்நெஞ்சே தன்னைச் சுடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்" } ] }, { "kuralNo": 294, "kural": "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்\nஉள்ளத்து ளெல்லாம் உளன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்" } ] }, { "kuralNo": 295, "kural": "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nதானஞ்செய் வாரின் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்" } ] }, { "kuralNo": 296, "kural": "பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை\nஎல்லா அறமுந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்" } ] }, { "kuralNo": 297, "kural": "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற\nசெய்யாமை செய்யாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்" } ] }, { "kuralNo": 298, "kural": "புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை\nவாய்மையால் காணப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்" } ] }, { "kuralNo": 299, "kural": "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\nபொய்யா விளக்கே விளக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்" } ] }, { "kuralNo": 300, "kural": "யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்\nவாய்மையின் நல்ல பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 31, "adhikaramName": "வெகுளாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 301, "kural": "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nகாக்கினென் காவாக்கா லென்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?" } ] }, { "kuralNo": 302, "kural": "செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nஇல்லதனின் தீய பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை" } ] }, { "kuralNo": 303, "kural": "மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய\nபிறத்தல் அதனான் வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்" } ] }, { "kuralNo": 304, "kural": "நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்\nபகையும் உளவோ பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்" } ] }, { "kuralNo": 305, "kural": "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nதன்னையே கொல்லுஞ் சினம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்" } ] }, { "kuralNo": 306, "kural": "சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nஏமப் புணையைச் சுடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்" } ] }, { "kuralNo": 307, "kural": "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\nநிலத்தறைந்தான் கைபிழையா தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்" } ] }, { "kuralNo": 308, "kural": "இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்\nபுணரின் வெகுளாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது" } ] }, { "kuralNo": 309, "kural": "உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஉள்ளான் வெகுளி யெனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்" } ] }, { "kuralNo": 310, "kural": "இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்\nதுறந்தார் துறந்தார் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்" } ] } ] }, { "aadhikaramNo": 32, "adhikaramName": "இன்னா செய்யாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 311, "kural": "சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா\nசெய்யாமை மாசற்றார் கோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்" } ] }, { "kuralNo": 312, "kural": "கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா\nசெய்யாமை மாசற்றார் கோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்" } ] }, { "kuralNo": 313, "kural": "செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nஉய்யா விழுமந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்" } ] }, { "kuralNo": 314, "kural": "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயஞ் செய்து விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்" } ] }, { "kuralNo": 315, "kural": "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nதந்நோய்போற் போற்றாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை" } ] }, { "kuralNo": 316, "kural": "இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை\nவேண்டும் பிறன்கட் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 317, "kural": "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nமாணாசெய் யாமை தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்" } ] }, { "kuralNo": 318, "kural": "தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ\nமன்னுயிர்க் கின்னா செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?" } ] }, { "kuralNo": 319, "kural": "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா\nபிற்பகல் தாமே வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்" } ] }, { "kuralNo": 320, "kural": "நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்\nநோயின்மை வேண்டு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது" } ] } ] }, { "aadhikaramNo": 33, "adhikaramName": "கொல்லாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 321, "kural": "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nபிறவினை எல்லாந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்" } ] }, { "kuralNo": 322, "kural": "பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்\nதொகுத்தவற்று ளெல்லாந் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை" } ] }, { "kuralNo": 323, "kural": "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்\nபின்சாரப் பொய்யாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன" } ] }, { "kuralNo": 324, "kural": "நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்\nகொல்லாமை சூழும் நெறி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்" } ] }, { "kuralNo": 325, "kural": "நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்\nகொல்லாமை சூழ்வான் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்" } ] }, { "kuralNo": 326, "kural": "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்\nசெல்லா துயிருண்ணுங் கூற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்" } ] }, { "kuralNo": 327, "kural": "தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி\nதின்னுயிர் நீக்கும் வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது" } ] }, { "kuralNo": 328, "kural": "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்\nகொன்றாகும் ஆக்கங் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்" } ] }, { "kuralNo": 329, "kural": "கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்\nபுன்மை தெரிவா ரகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்" } ] }, { "kuralNo": 330, "kural": "உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்\nசெல்லாத்தீ வாழ்க்கை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்" } ] } ] }, { "aadhikaramNo": 34, "adhikaramName": "நிலையாமை", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 331, "kural": "நில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nபுல்லறி வாண்மை கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்" } ] }, { "kuralNo": 332, "kural": "கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்\nபோக்கும் அருவிளிந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்" } ] }, { "kuralNo": 333, "kural": "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்\nஅற்குப ஆங்கே செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்" } ] }, { "kuralNo": 334, "kural": "நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்\nவாள துணர்வார்ப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்" } ] }, { "kuralNo": 335, "kural": "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nமேற்சென்று செய்யாப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்" } ] }, { "kuralNo": 336, "kural": "நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை யுடைத்திவ் வுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்" } ] }, { "kuralNo": 337, "kural": "ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப\nகோடியு மல்ல பல", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்" } ] }, { "kuralNo": 338, "kural": "குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே\nஉடம்போ டுயிரிடை நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்" } ] }, { "kuralNo": 339, "kural": "உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி\nவிழிப்பது போலும் பிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு" } ] }, { "kuralNo": 340, "kural": "புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\nதுச்சி லிருந்த உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது" } ] } ] }, { "aadhikaramNo": 35, "adhikaramName": "துறவு", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 341, "kural": "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் அலன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை" } ] }, { "kuralNo": 342, "kural": "வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்\nஈண்டியற் பால பல", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்" } ] }, { "kuralNo": 343, "kural": "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nவேண்டிய வெல்லாம் ஒருங்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்" } ] }, { "kuralNo": 344, "kural": "இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை\nமயலாகும் மற்றும் பெயர்த்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்" } ] }, { "kuralNo": 345, "kural": "மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்\nஉற்றார்க் குடம்பும் மிகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?" } ] }, { "kuralNo": 346, "kural": "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்\nகுயர்ந்த உலகம் புகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்" } ] }, { "kuralNo": 347, "kural": "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்\nபற்றி விடாஅ தவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன" } ] }, { "kuralNo": 348, "kural": "தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி\nவலைப்பட்டார் மற்றை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்" } ] }, { "kuralNo": 349, "kural": "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nநிலையாமை காணப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்" } ] }, { "kuralNo": 350, "kural": "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றுக பற்று விடற்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்" } ] } ] }, { "aadhikaramNo": 36, "adhikaramName": "மெய்யுணர்தல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 351, "kural": "பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது" } ] }, { "kuralNo": 352, "kural": "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nமாசறு காட்சி யவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்" } ] }, { "kuralNo": 353, "kural": "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nவான நணிய துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்" } ] }, { "kuralNo": 354, "kural": "ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே\nமெய்யுணர் வில்லா தவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை" } ] }, { "kuralNo": 355, "kural": "எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்" } ] }, { "kuralNo": 356, "kural": "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nமற்றீண்டு வாரா நெறி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 357, "kural": "ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்\nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 358, "kural": "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்\nசெம்பொருள் காண்ப தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்" } ] }, { "kuralNo": 359, "kural": "சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்\nசார்தரா சார்தரு நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 360, "kural": "காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்\nநாமங் கெடக்கெடு நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 37, "adhikaramName": "அவா அறுத்தல்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 361, "kural": "அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்\nதவாஅப் பிறப்பீனும் வித்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்" } ] }, { "kuralNo": 362, "kural": "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nவேண்டாமை வேண்ட வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்" } ] }, { "kuralNo": 363, "kural": "வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nஆண்டும் அஃதொப்ப தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்" } ] }, { "kuralNo": 364, "kural": "தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது\nவாஅய்மை வேண்ட வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்" } ] }, { "kuralNo": 365, "kural": "அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்\nஅற்றாக அற்ற திலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்" } ] }, { "kuralNo": 366, "kural": "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை\nவஞ்சிப்ப தோரும் அவா", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்" } ] }, { "kuralNo": 367, "kural": "அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nதான்வேண்டு மாற்றான் வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 368, "kural": "அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்\nதவாஅது மேன்மேல் வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்" } ] }, { "kuralNo": 369, "kural": "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்\nதுன்பத்துள் துன்பங் கெடின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்" } ] }, { "kuralNo": 370, "kural": "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே\nபேரா இயற்கை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 38, "adhikaramName": "ஊழ்", "paal": "அறத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 371, "kural": "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்\nபோகூழால் தோன்று மடி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்" } ] }, { "kuralNo": 372, "kural": "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nஆகலூ ழுற்றக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்" } ] }, { "kuralNo": 373, "kural": "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஉண்மை யறிவே மிகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்" } ] }, { "kuralNo": 374, "kural": "இருவே றுலகத் தியற்கை திருவேறு\nதெள்ளிய ராதலும் வேறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்" } ] }, { "kuralNo": 375, "kural": "நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்\nநல்லவாஞ் செல்வஞ் செயற்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்" } ] }, { "kuralNo": 376, "kural": "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nசொரியினும் போகா தம", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா" } ] }, { "kuralNo": 377, "kural": "வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி\nதொகுத்தார்க்குந் துய்த்த லரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்" } ] }, { "kuralNo": 378, "kural": "துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால\nஊட்டா கழியு மெனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்" } ] }, { "kuralNo": 379, "kural": "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்\nஅல்லற் படுவ தெவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?" } ] }, { "kuralNo": 380, "kural": "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?" } ] } ] }, { "aadhikaramNo": 39, "adhikaramName": "இறைமாட்சி", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 381, "kural": "படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்\nஉடையான் அரசரு ளேறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்" } ] }, { "kuralNo": 382, "kural": "அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nஎஞ்சாமை வேந்தற் கியல்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் – இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்" } ] }, { "kuralNo": 383, "kural": "தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்\nநீங்கா நிலனாள் பவற்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்" } ] }, { "kuralNo": 384, "kural": "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா\nமான முடைய தரசு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்" } ] }, { "kuralNo": 385, "kural": "இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த\nவகுத்தலும் வல்ல தரசு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்" } ] }, { "kuralNo": 386, "kural": "காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nமீக்கூறும் மன்னன் நிலம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்" } ] }, { "kuralNo": 387, "kural": "இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்\nதான்கண் டனைத்திவ் வுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்" } ] }, { "kuralNo": 388, "kural": "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்\nகிறையென்று வைக்கப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்" } ] }, { "kuralNo": 389, "kural": "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகவிகைக்கீழ்த் தங்கு முலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்" } ] }, { "kuralNo": 390, "kural": "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்\nஉடையானாம் வேந்தர்க் கொளி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 40, "adhikaramName": "கல்வி", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 391, "kural": "கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்" } ] }, { "kuralNo": 392, "kural": "எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்\nகண்ணென்ப வாழும் உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 393, "kural": "கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு\nபுண்ணுடையர் கல்லா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்" } ] }, { "kuralNo": 394, "kural": "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஅனைத்தே புலவர் தொழில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்" } ] }, { "kuralNo": 395, "kural": "உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்\nகடையரே கல்லா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 396, "kural": "தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்" } ] }, { "kuralNo": 397, "kural": "யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்\nசாந்துணையுங் கல்லாத வாறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?" } ] }, { "kuralNo": 398, "kural": "ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்\nகெழுமையும் ஏமாப் புடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்" } ] }, { "kuralNo": 399, "kural": "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு\nகாமுறுவர் கற்றறிந் தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்" } ] }, { "kuralNo": 400, "kural": "கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு\nமாடல்ல மற்றை யவை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை" } ] } ] }, { "aadhikaramNo": 41, "adhikaramName": "கல்லாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 401, "kural": "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nநூலின்றிக் கோட்டி கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்" } ] }, { "kuralNo": 402, "kural": "கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்\nஇல்லாதாள் பெண்காமுற் றற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது" } ] }, { "kuralNo": 403, "kural": "கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nசொல்லா திருக்கப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 404, "kural": "கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்\nகொள்ளார் அறிவுடை யார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 405, "kural": "கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nசொல்லாடச் சோர்வு படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்" } ] }, { "kuralNo": 406, "kural": "உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்\nகளரனையர் கல்லா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 407, "kural": "நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்\nமண்மாண் புனைபாவை யற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 408, "kural": "நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nகல்லார்கண் பட்ட திரு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்" } ] }, { "kuralNo": 409, "kural": "மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்\nகற்றா ரனைத்திலர் பாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்" } ] }, { "kuralNo": 410, "kural": "விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்\nகற்றாரோ டேனை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு" } ] } ] }, { "aadhikaramNo": 42, "adhikaramName": "கேள்வி", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 411, "kural": "செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்\nசெல்வத்து ளெல்லாந் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்" } ] }, { "kuralNo": 412, "kural": "செவிக்குண வில்லாத போழ்து சிறிது\nவயிற்றுக்கும் ஈயப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்" } ] }, { "kuralNo": 413, "kural": "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\nஆன்றாரோ டொப்பர் நிலத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்" } ] }, { "kuralNo": 414, "kural": "கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்\nகொற்கத்தின் ஊற்றாந் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்" } ] }, { "kuralNo": 415, "kural": "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே\nஒழுக்க முடையார்வாய்ச் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்" } ] }, { "kuralNo": 416, "kural": "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nஆன்ற பெருமை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 417, "kural": "பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்\nதீண்டிய கேள்வி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 418, "kural": "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்\nதோட்கப் படாத செவி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்" } ] }, { "kuralNo": 419, "kural": "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய\nவாயின ராத லரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது" } ] }, { "kuralNo": 420, "kural": "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nஅவியினும் வாழினு மென்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்" } ] } ] }, { "aadhikaramNo": 43, "adhikaramName": "அறிவுடைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 421, "kural": "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்க லாகா அரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்" } ] }, { "kuralNo": 422, "kural": "சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ\nநன்றின்பா லுய்ப்ப தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்" } ] }, { "kuralNo": 423, "kural": "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்" } ] }, { "kuralNo": 424, "kural": "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநுண்பொருள் காண்ப தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்" } ] }, { "kuralNo": 425, "kural": "உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்\nகூம்பலு மில்ல தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்" } ] }, { "kuralNo": 426, "kural": "எவ்வ துறைவ துலக முலகத்தோ\nடவ்வ துறைவ தறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்" } ] }, { "kuralNo": 427, "kural": "அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nஅஃதறி கல்லா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 428, "kural": "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ\nதஞ்சல் அறிவார் தொழில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்" } ] }, { "kuralNo": 429, "kural": "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை\nஅதிர வருவதோர் நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது" } ] }, { "kuralNo": 430, "kural": "அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\nஎன்னுடைய ரேனு மிலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை" } ] } ] }, { "aadhikaramNo": 44, "adhikaramName": "குற்றங்கடிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 431, "kural": "செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர்த்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்" } ] }, { "kuralNo": 432, "kural": "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nஉவகையும் ஏதம் இறைக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது – இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்" } ] }, { "kuralNo": 433, "kural": "தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 434, "kural": "குற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nஅற்றந் தரூஉம் பகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 435, "kural": "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nவைத்தூறு போலக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்" } ] }, { "kuralNo": 436, "kural": "தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nஎன்குற்ற மாகும் இறைக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?" } ] }, { "kuralNo": 437, "kural": "செயற்பால செய்யா திவறியான் செல்வம்\nஉயற்பால தன்றிக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்" } ] }, { "kuralNo": 438, "kural": "பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்\nஎண்ணப் படுவதொன் றன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்" } ] }, { "kuralNo": 439, "kural": "வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது" } ] }, { "kuralNo": 440, "kural": "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nஏதில ஏதிலார் நூல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்" } ] } ] }, { "aadhikaramNo": 45, "adhikaramName": "பெரியாரைத் துணைக்கோடல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 441, "kural": "அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nதிறனறிந்து தேர்ந்து கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 442, "kural": "உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nபெற்றியார்ப் பேணிக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 443, "kural": "அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்\nபேணித் தமராக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்" } ] }, { "kuralNo": 444, "kural": "தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nவன்மையு ளெல்லாந் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்" } ] }, { "kuralNo": 445, "kural": "சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nசூழ்வாரைச் சூழ்ந்து கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்" } ] }, { "kuralNo": 446, "kural": "தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nசெற்றார் செயக்கிடந்த தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது" } ] }, { "kuralNo": 447, "kural": "இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே\nகெடுக்குந் தகைமை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?" } ] }, { "kuralNo": 448, "kural": "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பா ரிலானுங் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்" } ] }, { "kuralNo": 449, "kural": "முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்\nசார்பிலார்க் கில்லை நிலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்" } ] }, { "kuralNo": 450, "kural": "பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nநல்லார் தொடர்கை விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 46, "adhikaramName": "சிற்றினம் சேராமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 451, "kural": "சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nசுற்றமாச் சூழ்ந்து விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 452, "kural": "நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்\nகினத்தியல்ப தாகும் அறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்" } ] }, { "kuralNo": 453, "kural": "மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்\nஇன்னா னெனப்படுஞ் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்" } ] }, { "kuralNo": 454, "kural": "மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்\nகினத்துள தாகும் அறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்" } ] }, { "kuralNo": 455, "kural": "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nஇனந்தூய்மை தூவா வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்" } ] }, { "kuralNo": 456, "kural": "மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்\nகில்லைநன் றாகா வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்" } ] }, { "kuralNo": 457, "kural": "மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nஎல்லாப் புகழுந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்" } ] }, { "kuralNo": 458, "kural": "மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்\nகினநலம் ஏமாப் புடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்" } ] }, { "kuralNo": 459, "kural": "மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்\nஇனநலத்தி னேமாப் புடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்" } ] }, { "kuralNo": 460, "kural": "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nஅல்லற் படுப்பதூஉ மில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை" } ] } ] }, { "aadhikaramNo": 47, "adhikaramName": "தெரிந்து செயல்வகை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 461, "kural": "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஊதியமுஞ் சூழ்ந்து செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்" } ] }, { "kuralNo": 462, "kural": "தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்\nகரும்பொருள் யாதொன்று மில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை" } ] }, { "kuralNo": 463, "kural": "ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை\nஊக்கா ரறிவுடை யார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 464, "kural": "தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nஏதப்பா டஞ்சு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்" } ] }, { "kuralNo": 465, "kural": "வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்\nபாத்திப் படுப்பதோ ராறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்" } ] }, { "kuralNo": 466, "kural": "செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க\nசெய்யாமை யானுங் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்" } ] }, { "kuralNo": 467, "kural": "எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்\nஎண்ணுவ மென்ப திழுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு" } ] }, { "kuralNo": 468, "kural": "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nபோற்றினும் பொத்துப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்" } ] }, { "kuralNo": 469, "kural": "நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்\nபண்பறிந் தாற்றாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்" } ] }, { "kuralNo": 470, "kural": "எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு\nகொள்ளாத கொள்ளா துலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 48, "adhikaramName": "வலியறிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 471, "kural": "வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்\nதுணைவலியுந் தூக்கிச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்" } ] }, { "kuralNo": 472, "kural": "ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்\nசெல்வார்க்குச் செல்லாத தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 473, "kural": "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nஇடைக்கண் முரிந்தார் பலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு" } ] }, { "kuralNo": 474, "kural": "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nவியந்தான் விரைந்து கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்" } ] }, { "kuralNo": 475, "kural": "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nசால மிகுத்துப் பெயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்" } ] }, { "kuralNo": 476, "kural": "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nஉயிர்க்கிறுதி ஆகி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்" } ] }, { "kuralNo": 477, "kural": "ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்\nபோற்றி வழங்கு நெறி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்" } ] }, { "kuralNo": 478, "kural": "ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை\nபோகா றகலாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை" } ] }, { "kuralNo": 479, "kural": "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nஇல்லாகித் தோன்றாக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்" } ] }, { "kuralNo": 480, "kural": "உளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nவளவரை வல்லைக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்" } ] } ] }, { "aadhikaramNo": 49, "adhikaramName": "காலமறிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 481, "kural": "பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nவேந்தர்க்கு வேண்டும் பொழுது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 482, "kural": "பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்\nதீராமை ஆர்க்குங் கயிறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்" } ] }, { "kuralNo": 483, "kural": "அருவினை யென்ப உளவோ கருவியாற்\nகால மறிந்து செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை" } ] }, { "kuralNo": 484, "kural": "ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்\nகருதி இடத்தாற் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்" } ] }, { "kuralNo": 485, "kural": "காலங் கருதி இருப்பர் கலங்காது\nஞாலங் கருது பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்" } ] }, { "kuralNo": 486, "kural": "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nதாக்கற்குப் பேருந் தகைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்" } ] }, { "kuralNo": 487, "kural": "பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்\nதுள்வேர்ப்பர் ஒள்ளி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்" } ] }, { "kuralNo": 488, "kural": "செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை\nகாணிற் கிழக்காந் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 489, "kural": "எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே\nசெய்தற் கரிய செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 490, "kural": "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகுத்தொக்க சீர்த்த இடத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 50, "adhikaramName": "இடனறிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 491, "kural": "தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்\nஇடங்கண்ட பின்னல் லது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்" } ] }, { "kuralNo": 492, "kural": "முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்\nஆக்கம் பலவுந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்" } ] }, { "kuralNo": 493, "kural": "ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து\nபோற்றார்கண் போற்றிச் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்," }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்" } ] }, { "kuralNo": 494, "kural": "எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து\nதுன்னியார் துன்னிச் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 495, "kural": "நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்\nநீங்கின் அதனைப் பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்" } ] }, { "kuralNo": 496, "kural": "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்\nநாவாயும் ஓடா நிலத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது’ `கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 497, "kural": "அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை\nஎண்ணி யிடத்தாற் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை" } ] }, { "kuralNo": 498, "kural": "சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்\nஊக்கம் அழிந்து விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்" } ] }, { "kuralNo": 499, "kural": "சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்\nஉறைநிலத்தோ டொட்ட லரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல" } ] }, { "kuralNo": 500, "kural": "காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா\nவேலாள் முகத்த களிறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்" } ] } ] }, { "aadhikaramNo": 51, "adhikaramName": "தெரிந்து தெளிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 501, "kural": "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nதிறந்தெரிந்து தேறப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்" } ] }, { "kuralNo": 502, "kural": "குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nநாணுடையான் கட்டே தெளிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 503, "kural": "அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்\nஇன்மை அரிதே வெளிறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது" } ] }, { "kuralNo": 504, "kural": "குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்\nமிகைநாடி மிக்க கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து," }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்" } ] }, { "kuralNo": 505, "kural": "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்\nகருமமே கட்டளைக் கல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்" } ] }, { "kuralNo": 506, "kural": "அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்\nபற்றிலர் நாணார் பழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்" } ] }, { "kuralNo": 507, "kural": "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்\nபேதைமை எல்லாந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்" } ] }, { "kuralNo": 508, "kural": "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nதீரா இடும்பை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்" } ] }, { "kuralNo": 509, "kural": "தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்\nதேறுக தேறும் பொருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது" } ] }, { "kuralNo": 510, "kural": "தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்\nதீரா இடும்பை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்" } ] } ] }, { "aadhikaramNo": 52, "adhikaramName": "தெரிந்து வினையாடல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 511, "kural": "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nதன்மையான் ஆளப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்" } ] }, { "kuralNo": 512, "kural": "வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை\nஆராய்வான் செய்க வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்" } ] }, { "kuralNo": 513, "kural": "அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nநன்குடையான் கட்டே தெளிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்" } ] }, { "kuralNo": 514, "kural": "எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nவேறாகும் மாந்தர் பலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்" } ] }, { "kuralNo": 515, "kural": "அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்\nசிறந்தானென் றேவற்பாற் றன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது" } ] }, { "kuralNo": 516, "kural": "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ\nடெய்த உணர்ந்து செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்" } ] }, { "kuralNo": 517, "kural": "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்\nததனை அவன்கண் விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 518, "kural": "வினைக்குரிமை நாடிய பின்றை அவனை\nஅதற்குரிய னாகச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்" } ] }, { "kuralNo": 519, "kural": "வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nநினைப்பானை நீங்குந் திரு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்" } ] }, { "kuralNo": 520, "kural": "நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்\nகோடாமை கோடா துலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 53, "adhikaramName": "சுற்றந் தழால்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 521, "kural": "பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nசுற்றத்தார் கண்ணே உள", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்" } ] }, { "kuralNo": 522, "kural": "விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஆக்கம் பலவுந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்" } ] }, { "kuralNo": 523, "kural": "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nகோடின்றி நீர்நிறைந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை," }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்" } ] }, { "kuralNo": 524, "kural": "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்\nபெற்றத்தாற் பெற்ற பயன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்" } ] }, { "kuralNo": 525, "kural": "கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய\nசுற்றத்தாற் சுற்றப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்" } ] }, { "kuralNo": 526, "kural": "பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nமருங்குடையார் மாநிலத் தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்" } ] }, { "kuralNo": 527, "kural": "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nஅன்னநீ ரார்க்கே உள", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு" } ] }, { "kuralNo": 528, "kural": "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅதுநோக்கி வாழ்வார் பலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்" } ] }, { "kuralNo": 529, "kural": "தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nகாரண மின்றி வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்" } ] }, { "kuralNo": 530, "kural": "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nஇழைத்திருந் தெண்ணிக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 54, "adhikaramName": "பொச்சாவாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 531, "kural": "இறந்த வெகுளியின் தீதே சிறந்த\nஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது" } ] }, { "kuralNo": 532, "kural": "பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nநிச்ச நிரப்புக்கொன் றாங்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்" } ] }, { "kuralNo": 533, "kural": "பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்\nதெப்பானூ லோர்க்குந் துணிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்" } ] }, { "kuralNo": 534, "kural": "அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை\nபொச்சாப் புடையார்க்கு நன்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை" } ] }, { "kuralNo": 535, "kural": "முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை\nபின்னூ றிரங்கி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்" } ] }, { "kuralNo": 536, "kural": "இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nவாயின் அதுவொப்ப தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது" } ] }, { "kuralNo": 537, "kural": "அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்\nகருவியாற் போற்றிச் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை" } ] }, { "kuralNo": 538, "kural": "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா\nதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை" } ] }, { "kuralNo": 539, "kural": "இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்\nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 540, "kural": "உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nஉள்ளிய துள்ளப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 55, "adhikaramName": "செங்கோன்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 541, "kural": "ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்\nதேர்ந்துசெய் வஃதே முறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்" } ] }, { "kuralNo": 542, "kural": "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nகோனோக்கி வாழுங் குடி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது" } ] }, { "kuralNo": 543, "kural": "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nநின்றது மன்னவன் கோல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்" } ] }, { "kuralNo": 544, "kural": "குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்\nஅடிதழீஇ நிற்கும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்" } ] }, { "kuralNo": 545, "kural": "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட\nபெயலும் விளையுளுந் தொக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்" } ] }, { "kuralNo": 546, "kural": "வேலன்று வென்றி தருவது மன்னவன்\nகோலதூஉங் கோடா தெனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்" } ] }, { "kuralNo": 547, "kural": "இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nமுறைகாக்கும் முட்டாச் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்" } ] }, { "kuralNo": 548, "kural": "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்\nதண்பதத்தான் தானே கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்" } ] }, { "kuralNo": 549, "kural": "குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்\nவடுவன்று வேந்தன் தொழில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்" } ] }, { "kuralNo": 550, "kural": "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகளைகட் டதனொடு நேர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 56, "adhikaramName": "கொடுங்கோன்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 551, "kural": "கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்\nடல்லவை செய்தொழுகும் வேந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்" } ] }, { "kuralNo": 552, "kural": "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nகோலொடு நின்றான் இரவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது" } ] }, { "kuralNo": 553, "kural": "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாடொறும் நாடு கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்" } ] }, { "kuralNo": 554, "kural": "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nசூழாது செய்யும் அரசு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்" } ] }, { "kuralNo": 555, "kural": "அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்" } ] }, { "kuralNo": 556, "kural": "மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nமன்னாவாம் மன்னர்க் கொளி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்" } ] }, { "kuralNo": 557, "kural": "துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்\nஅளியின்மை வாழும் உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 558, "kural": "இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா\nமன்னவன் கோற்கீழ்ப் படின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது" } ] }, { "kuralNo": 559, "kural": "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஒல்லாது வானம் பெயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது" } ] }, { "kuralNo": 560, "kural": "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nகாவலன் காவான் எனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்" } ] } ] }, { "aadhikaramNo": 57, "adhikaramName": "வெருவந்த செய்யாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 561, "kural": "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nஒத்தாங் கொறுப்பது வேந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்" } ] }, { "kuralNo": 562, "kural": "கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்\nநீங்காமை வேண்டு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்" } ] }, { "kuralNo": 563, "kural": "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nஒருவந்தம் ஒல்லைக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்" } ] }, { "kuralNo": 564, "kural": "இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nஉறைகடுகி ஒல்லைக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்" } ] }, { "kuralNo": 565, "kural": "அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nபேஎய்கண் டன்ன துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்" } ] }, { "kuralNo": 566, "kural": "கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nநீடின்றி ஆங்கே கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்" } ] }, { "kuralNo": 567, "kural": "கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்\nஅடுமுரண் தேய்க்கும் அரம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்" } ] }, { "kuralNo": 568, "kural": "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்\nசீறிற் சிறுகுந் திரு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்" } ] }, { "kuralNo": 569, "kural": "செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்\nவெருவந்து வெய்து கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்" } ] }, { "kuralNo": 570, "kural": "கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல\nதில்லை நிலக்குப் பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை" } ] } ] }, { "aadhikaramNo": 58, "adhikaramName": "கண்ணோட்டம்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 571, "kural": "கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை\nஉண்மையான் உண்டிவ் வுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது" } ] }, { "kuralNo": 572, "kural": "கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்\nஉண்மை நிலக்குப் பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்" } ] }, { "kuralNo": 573, "kural": "பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்\nகண்ணோட்டம் இல்லாத கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்" } ] }, { "kuralNo": 574, "kural": "உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்\nகண்ணோட்டம் இல்லாத கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்" } ] }, { "kuralNo": 575, "kural": "கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்\nபுண்ணென் றுணரப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்" } ] }, { "kuralNo": 576, "kural": "மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ\nடியைடந்துகண் ணோடா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்" } ] }, { "kuralNo": 577, "kural": "கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்\nகண்ணோட்டம் இன்மையும் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 578, "kural": "கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்\nகுரிமை உடைத்திவ் வுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்" } ] }, { "kuralNo": 579, "kural": "ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்\nபொறுத்தாற்றும் பண்பே தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்" } ] }, { "kuralNo": 580, "kural": "பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க\nநாகரிகம் வேண்டு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 59, "adhikaramName": "ஒற்றாடல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 581, "kural": "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nதெற்றென்க மன்னவன் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்" } ] }, { "kuralNo": 582, "kural": "எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nவல்லறிதல் வேந்தன் தொழில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்" } ] }, { "kuralNo": 583, "kural": "ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்\nகொற்றங் கொளக்கிடந்த தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை" } ] }, { "kuralNo": 584, "kural": "வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்\nகனைவரையும் ஆராய்வ தொற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்" } ] }, { "kuralNo": 585, "kural": "கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்\nஉகாஅமை வல்லதே ஒற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்" } ] }, { "kuralNo": 586, "kural": "துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்\nதென்செயினுஞ் சோர்வில தொற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்" } ] }, { "kuralNo": 587, "kural": "மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை\nஐயப்பா டில்லதே ஒற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்" } ] }, { "kuralNo": 588, "kural": "ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஒற்றினால் ஒற்றிக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்" } ] }, { "kuralNo": 589, "kural": "ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்\nசொற்றொக்க தேறப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்" } ] }, { "kuralNo": 590, "kural": "சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்\nபுறப்படுத்தான் ஆகும் மறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 60, "adhikaramName": "ஊக்கம் உடைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 591, "kural": "உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்\nஉடைய துடையரோ மற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்" } ] }, { "kuralNo": 592, "kural": "உள்ள முடைமை உடைமை பொருளுடைமை\nநில்லாது நீங்கி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது" } ] }, { "kuralNo": 593, "kural": "ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்\nஒருவந்தங் கைத்துடை யார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 594, "kural": "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஊக்க முடையா னுழை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்" } ] }, { "kuralNo": 595, "kural": "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஉள்ளத் தனைய துயர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்" } ] }, { "kuralNo": 596, "kural": "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினுந் தள்ளாமை நீர்த்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது" } ] }, { "kuralNo": 597, "kural": "சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்\nபட்டுப்பா டூன்றுங் களிறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 598, "kural": "உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\nவள்ளியம் என்னுஞ் செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை" } ] }, { "kuralNo": 599, "kural": "பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை\nவெரூஉம் புலிதாக் குறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்" } ] }, { "kuralNo": 600, "kural": "உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்\nமரமக்க ளாதலே வேறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை" } ] } ] }, { "aadhikaramNo": 61, "adhikaramName": "மடி இன்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 601, "kural": "குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்\nமாசூர மாய்ந்து கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்" } ] }, { "kuralNo": 602, "kural": "மடியை மடியா ஒழுகல் குடியைக்\nகுடியாக வேண்டு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 603, "kural": "மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nகுடிமடியுந் தன்னினு முந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்" } ] }, { "kuralNo": 604, "kural": "குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து\nமாண்ட உஞற்றி லவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்" } ] }, { "kuralNo": 605, "kural": "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nகெடுநீரார் காமக் கலன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!" } ] }, { "kuralNo": 606, "kural": "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nமாண்பயன் எய்தல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்" } ] }, { "kuralNo": 607, "kural": "இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து\nமாண்ட உஞற்றி லவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்" } ] }, { "kuralNo": 608, "kural": "மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்\nகடிமை புகுத்தி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்" } ] }, { "kuralNo": 609, "kural": "குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nமடியாண்மை மாற்றக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்" } ] }, { "kuralNo": 610, "kural": "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nதாஅய தெல்லாம் ஒருங்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 62, "adhikaramName": "ஆள்வினை உடைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 611, "kural": "அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்\nபெருமை முயற்சி தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்," }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்" } ] }, { "kuralNo": 612, "kural": "வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nதீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்" } ] }, { "kuralNo": 613, "kural": "தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே\nவேளாண்மை என்னுஞ் செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்" } ] }, { "kuralNo": 614, "kural": "தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nவாளாண்மை போலக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை" } ] }, { "kuralNo": 615, "kural": "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதுன்பம் துடைத்தூன்றும் தூண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்" } ] }, { "kuralNo": 616, "kural": "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\nஇன்மை புகுத்தி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்" } ] }, { "kuralNo": 617, "kural": "மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்\nதாளுளாள் தாமரையி னாள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்" } ] }, { "kuralNo": 618, "kural": "பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்\nதாள்வினை இன்மை பழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்" } ] }, { "kuralNo": 619, "kural": "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்\nமெய்வருத்தக் கூலி தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்" } ] }, { "kuralNo": 620, "kural": "ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்\nதாழா துஞற்று பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 63, "adhikaramName": "இடுக்கண் அழியாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 621, "kural": "இடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வ தஃதொப்ப தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்" } ] }, { "kuralNo": 622, "kural": "வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nஉள்ளத்தின் உள்ளக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்" } ] }, { "kuralNo": 623, "kural": "இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்\nகிடும்பை படாஅ தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்" } ] }, { "kuralNo": 624, "kural": "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற\nஇடுக்கண் இடர்ப்பா டுடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்" } ] }, { "kuralNo": 625, "kural": "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nஇடுக்கண் இடுக்கட் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்" } ] }, { "kuralNo": 626, "kural": "அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்\nறோம்புதல் தேற்றா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?" } ] }, { "kuralNo": 627, "kural": "இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nகையாறாக் கொள்ளாதா மேல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 628, "kural": "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nதுன்ப முறுதல் இலன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை" } ] }, { "kuralNo": 629, "kural": "இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nதுன்ப முறுதல் இலன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு" } ] }, { "kuralNo": 630, "kural": "இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்\nஒன்னார் விழையுஞ் சிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்" } ] } ] }, { "aadhikaramNo": 64, "adhikaramName": "அமைச்சு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 631, "kural": "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nஅருவினையும் மாண்ட தமைச்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்" } ] }, { "kuralNo": 632, "kural": "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ\nடைந்துடன் மாண்ட தமைச்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்" } ] }, { "kuralNo": 633, "kural": "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nபொருத்தலும் வல்ல தமைச்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்" } ] }, { "kuralNo": 634, "kural": "தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nசொல்லலும் வல்ல தமைச்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்" } ] }, { "kuralNo": 635, "kural": "அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்\nதிறனறிந்தான் தேர்ச்சித் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்" } ] }, { "kuralNo": 636, "kural": "மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்\nயாவுள முன்னிற் பவை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது" } ] }, { "kuralNo": 637, "kural": "செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்\nதியற்கை அறிந்து செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்" } ] }, { "kuralNo": 638, "kural": "அறிகொன் றறியான் எனினும் உறுதி\nஉழையிருந்தான் கூறல் கடன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்" } ] }, { "kuralNo": 639, "kural": "பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்\nஎழுபது கோடி உறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்" } ] }, { "kuralNo": 640, "kural": "முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்\nதிறப்பா டிலாஅ தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்" } ] } ] }, { "aadhikaramNo": 65, "adhikaramName": "சொல்வன்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 641, "kural": "நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்\nயாநலத் துள்ளதூஉம் அன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்" } ] }, { "kuralNo": 642, "kural": "ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்\nகாத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 643, "kural": "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nவேட்ப மொழிவதாம் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்" } ] }, { "kuralNo": 644, "kural": "திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nபொருளும் அதனினூஉங் கில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை" } ] }, { "kuralNo": 645, "kural": "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்" } ] }, { "kuralNo": 646, "kural": "வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்\nமாட்சியின் மாசற்றார் கோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்" } ] }, { "kuralNo": 647, "kural": "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை\nஇகல்வெல்லல் யார்க்கும் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது" } ] }, { "kuralNo": 648, "kural": "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nசொல்லுதல் வல்லார்ப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்" } ] }, { "kuralNo": 649, "kural": "பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nசிலசொல்லல் தேற்றா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்" } ] }, { "kuralNo": 650, "kural": "இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற\nதுணர விரிந்துரையா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்" } ] } ] }, { "aadhikaramNo": 66, "adhikaramName": "வினைத் தூய்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 651, "kural": "துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்\nவேண்டிய எல்லாந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்" } ] }, { "kuralNo": 652, "kural": "என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nநன்றி பயவா வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 653, "kural": "ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை\nஆஅது மென்னு மவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்" } ] }, { "kuralNo": 654, "kural": "இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்\nநடுக்கற்ற காட்சி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 655, "kural": "எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்\nமற்றன்ன செய்யாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "`என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று" } ] }, { "kuralNo": 656, "kural": "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க\nசான்றோர் பழிக்கும் வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது" } ] }, { "kuralNo": 657, "kural": "பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்\nகழிநல் குரவே தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்" } ] }, { "kuralNo": 658, "kural": "கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்\nமுடிந்தாலும் பீழை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்" } ] }, { "kuralNo": 659, "kural": "அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nபிற்பயக்கும் நற்பா லவை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்" } ] }, { "kuralNo": 660, "kural": "சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nகலத்துணீர் பெய்திரீஇ யற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்" } ] } ] }, { "aadhikaramNo": 67, "adhikaramName": "வினைத்திட்பம்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 661, "kural": "வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்\nமற்றைய எல்லாம் பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது" } ] }, { "kuralNo": 662, "kural": "ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nஆறென்பர் ஆய்ந்தவர் கோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்" } ] }, { "kuralNo": 663, "kural": "கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nஎற்றா விழுமந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்" } ] }, { "kuralNo": 664, "kural": "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nசொல்லிய வண்ணம் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்" } ] }, { "kuralNo": 665, "kural": "வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nஊறெய்தி உள்ளப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்" } ] }, { "kuralNo": 666, "kural": "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்\nதிண்ணியர் ஆகப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்" } ] }, { "kuralNo": 667, "kural": "உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்\nகச்சாணி யன்னார் உடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்" } ] }, { "kuralNo": 668, "kural": "கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nதூக்கங் கடிந்து செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்" } ] }, { "kuralNo": 669, "kural": "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\nஇன்பம் பயக்கும் வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்" } ] }, { "kuralNo": 670, "kural": "எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\nவேண்டாரை வேண்டா துலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது" } ] } ] }, { "aadhikaramNo": 68, "adhikaramName": "வினை செயல்வகை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 671, "kural": "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\nதாழ்ச்சியுள் தங்குதல் தீது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்" } ] }, { "kuralNo": 672, "kural": "தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க\nதூங்காது செய்யும் வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது" } ] }, { "kuralNo": 673, "kural": "ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nசெல்லும்வாய் நோக்கிச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 674, "kural": "வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்\nதீயெச்சம் போலத் தெறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்" } ] }, { "kuralNo": 675, "kural": "பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்\nஇருள்தீர எண்ணிச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 676, "kural": "முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்\nபடுபயனும் பார்த்துச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 677, "kural": "செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை\nஉள்ளறிவான் உள்ளங் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 678, "kural": "வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 679, "kural": "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nஒட்டாரை ஒட்டிக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்" } ] }, { "kuralNo": 680, "kural": "உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்\nகொள்வர் பெரியார்ப் பணிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 69, "adhikaramName": "தூது", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 681, "kural": "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nபண்புடைமை தூதுரைப்பான் பண்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்" } ] }, { "kuralNo": 682, "kural": "அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்\nகின்றி யமையாத மூன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை" } ] }, { "kuralNo": 683, "kural": "நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nவென்றி வினையுரைப்பான் பண்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்" } ] }, { "kuralNo": 684, "kural": "அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்\nசெறிவுடையான் செல்க வினைக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்" } ] }, { "kuralNo": 685, "kural": "தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nநன்றி பயப்பதாந் தூது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்" } ] }, { "kuralNo": 686, "kural": "கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nதக்க தறிவதாந் தூது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்" } ] }, { "kuralNo": 687, "kural": "கடனறிந்து காலங் கருதி இடனறிந்\nதெண்ணி உரைப்பான் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்" } ] }, { "kuralNo": 688, "kural": "தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nவாய்மை வழியுரைப்பான் பண்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்" } ] }, { "kuralNo": 689, "kural": "விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்\nவாய்சோரா வன்க ணவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்" } ] }, { "kuralNo": 690, "kural": "இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்\nகுறுதி பயப்பதாம் தூது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்" } ] } ] }, { "aadhikaramNo": 70, "adhikaramName": "மன்னரைச் சேர்ந்து ஒழுகல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 691, "kural": "அகலா தணுகாது தீக்காய்வார் போல்க\nஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்" } ] }, { "kuralNo": 692, "kural": "மன்னர் விழைப விழையாமை மன்னரான்\nமன்னிய ஆக்கந் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்" } ] }, { "kuralNo": 693, "kural": "போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்\nதேற்றுதல் யார்க்கும் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல" } ] }, { "kuralNo": 694, "kural": "செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்\nஆன்ற பெரியா ரகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்" } ] }, { "kuralNo": 695, "kural": "எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை\nவிட்டக்காற் கேட்க மறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 696, "kural": "குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில\nவேண்டுப வேட்பச் சொலல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்" } ] }, { "kuralNo": 697, "kural": "வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்\nகேட்பினும் சொல்லா விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்" } ] }, { "kuralNo": 698, "kural": "இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற\nஒளியோ டொழுகப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 699, "kural": "கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்\nதுளக்கற்ற காட்சி யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 700, "kural": "பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்\nகெழுதகைமை கேடு தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்" } ] } ] }, { "aadhikaramNo": 71, "adhikaramName": "குறிப்பறிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 701, "kural": "கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக் கணி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்" } ] }, { "kuralNo": 702, "kural": "ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்\nதெய்வத்தோ டொப்பக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்" } ] }, { "kuralNo": 703, "kural": "குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nயாது கொடுத்துங் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்" } ] }, { "kuralNo": 704, "kural": "குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nஉறுப்போ ரனையரால் வேறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்" } ] }, { "kuralNo": 705, "kural": "குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\nஎன்ன பயத்தவோ கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?" } ] }, { "kuralNo": 706, "kural": "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nகடுத்தது காட்டும் முகம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்" } ] }, { "kuralNo": 707, "kural": "முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்\nகாயினும் தான்முந் துறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை" } ] }, { "kuralNo": 708, "kural": "முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி\nஉற்ற துணர்வார்ப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது" } ] }, { "kuralNo": 709, "kural": "பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்\nவகைமை உணர்வார்ப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்" } ] }, { "kuralNo": 710, "kural": "நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்\nகண்ணல்ல தில்லை பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை" } ] } ] }, { "aadhikaramNo": 72, "adhikaramName": "அவை அறிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 711, "kural": "அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்" } ] }, { "kuralNo": 712, "kural": "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்\nநடைதெரிந்த நன்மை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்" } ] }, { "kuralNo": 713, "kural": "அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்\nவகையறியார் வல்லதூஉம் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது" } ] }, { "kuralNo": 714, "kural": "ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்\nவான்சுதை வண்ணங் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 715, "kural": "நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்\nமுந்து கிளவாச் செறிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்" } ] }, { "kuralNo": 716, "kural": "ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்\nஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்" } ] }, { "kuralNo": 717, "kural": "கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்\nசொற்றெரிதல் முன்னர் இழுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்" } ] }, { "kuralNo": 718, "kural": "உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்\nபாத்தியுள் நீர்சொரிந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்" } ] }, { "kuralNo": 719, "kural": "புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்\nநன்கு செலச்சொல்லு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்" } ] }, { "kuralNo": 720, "kural": "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்\nஅல்லார்முன் கோட்டி கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 73, "adhikaramName": "அவை அஞ்சாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 721, "kural": "வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 722, "kural": "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்\nகற்ற செலச்சொல்லு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்" } ] }, { "kuralNo": 723, "kural": "பகையகத்துச் சாவார் எளியர் அரியர்\nஅவையகத் தஞ்சா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்" } ] }, { "kuralNo": 724, "kural": "கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற\nமிக்காருள் மிக்க கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 725, "kural": "ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nமாற்றங் கொடுத்தற் பொருட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 726, "kural": "வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்\nநுண்ணவை அஞ்சு பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை" } ] }, { "kuralNo": 727, "kural": "பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்\nதஞ்சு மவன்கற்ற நூல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்" } ] }, { "kuralNo": 728, "kural": "பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்\nநன்கு செலச்சொல்லா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை" } ] }, { "kuralNo": 729, "kural": "கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்\nநல்லா ரவையஞ்சு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 730, "kural": "உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்\nகற்ற செலச்சொல்லா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 74, "adhikaramName": "நாடு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 731, "kural": "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nசெல்வருஞ் சேர்வது நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்" } ] }, { "kuralNo": 732, "kural": "பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்\nஆற்ற விளைவது நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்" } ] }, { "kuralNo": 733, "kural": "பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்\nகிறையொருங்கு நேர்வது நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்" } ] }, { "kuralNo": 734, "kural": "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்\nசேரா தியல்வது நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்" } ] }, { "kuralNo": 735, "kural": "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்\nகொல்குறும்பும் இல்லது நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்" } ] }, { "kuralNo": 736, "kural": "கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா\nநாடென்ப நாட்டின் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்" } ] }, { "kuralNo": 737, "kural": "இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்\nவல்லரணும் நாட்டிற் குறுப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்" } ] }, { "kuralNo": 738, "kural": "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nஅணியென்ப நாட்டிற்கிவ் வைந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்" } ] }, { "kuralNo": 739, "kural": "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல\nநாட வளந்தரு நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்" } ] }, { "kuralNo": 740, "kural": "ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nவேந்தமை வில்லாத நாடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "" } ] } ] }, { "aadhikaramNo": 75, "adhikaramName": "அரண்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 741, "kural": "ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்\nபோற்று பவர்க்கும் பொருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்" } ] }, { "kuralNo": 742, "kural": "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்\nகாடும் உடைய தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்" } ] }, { "kuralNo": 743, "kural": "உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்\nஅமைவரண் என்றுரைக்கும் நூல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்" } ] }, { "kuralNo": 744, "kural": "சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை\nஊக்கம் அழிப்ப தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்" } ] }, { "kuralNo": 745, "kural": "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்\nநிலைக்கெளிதாம் நீர தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்" } ] }, { "kuralNo": 746, "kural": "எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்\nநல்லா ளுடைய தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்" } ] }, { "kuralNo": 747, "kural": "முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்\nபற்றற் கரிய தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்" } ] }, { "kuralNo": 748, "kural": "முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்\nபற்றியார் வெல்வ தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்" } ] }, { "kuralNo": 749, "kural": "முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து\nவீறெய்தி மாண்ட தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்" } ] }, { "kuralNo": 750, "kural": "எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி\nஇல்லார்கண் இல்ல தரண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது" } ] } ] }, { "aadhikaramNo": 76, "adhikaramName": "பொருள் செயல்வகை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 751, "kural": "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nபொருளல்ல தில்லை பொருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை" } ] }, { "kuralNo": 752, "kural": "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லாரும் செய்வர் சிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது" } ] }, { "kuralNo": 753, "kural": "பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்\nஎண்ணிய தேயத்துச் சென்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது" } ] }, { "kuralNo": 754, "kural": "அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து\nதீதின்றி வந்த பொருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்" } ] }, { "kuralNo": 755, "kural": "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்\nபுல்லார் புரள விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்" } ] }, { "kuralNo": 756, "kural": "உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்\nதெறுபொருளும் வேந்தன் பொருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்" } ] }, { "kuralNo": 757, "kural": "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்\nசெல்வச் செவிலியால் உண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்" } ] }, { "kuralNo": 758, "kural": "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்\nறுண்டாகச் செய்வான் வினை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது" } ] }, { "kuralNo": 759, "kural": "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்\nஎஃதனிற் கூரிய தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது" } ] }, { "kuralNo": 760, "kural": "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்\nஏனை இரண்டும் ஒருங்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்" } ] } ] }, { "aadhikaramNo": 77, "adhikaramName": "படை மாட்சி", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 761, "kural": "உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்\nவெறுக்கையுள் எல்லாம் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்" } ] }, { "kuralNo": 762, "kural": "உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nதொல்படைக் கல்லால் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது" } ] }, { "kuralNo": 763, "kural": "ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nநாகம் உயிர்ப்பக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்" } ] }, { "kuralNo": 764, "kural": "அழிவின் றறைபோகா தாகி வழிவந்த\nவன்க ணதுவே படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்" } ] }, { "kuralNo": 765, "kural": "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஆற்ற லதுவே படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்" } ] }, { "kuralNo": 766, "kural": "மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nஎனநான்கே ஏமம் படைக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்" } ] }, { "kuralNo": 767, "kural": "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nபோர்தாங்கும் தன்மை அறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்" } ] }, { "kuralNo": 768, "kural": "அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nபடைத்தகையால் பாடு பெறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்" } ] }, { "kuralNo": 769, "kural": "சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nஇல்லாயின் வெல்லும் படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்" } ] }, { "kuralNo": 770, "kural": "நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nதலைமக்கள் இல்வழி இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது" } ] } ] }, { "aadhikaramNo": 78, "adhikaramName": "படைச் செருக்கு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 771, "kural": "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\nமுன்னின்று கல்நின் றவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போர்களத்து வீரன் ஒருவன், “பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்" } ] }, { "kuralNo": 772, "kural": "கான முயலெய்த அம்பினில் யானை\nபிழைத்தவேல் ஏந்தல் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது" } ] }, { "kuralNo": 773, "kural": "பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்\nஊராண்மை மற்றதன் எஃகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்" } ] }, { "kuralNo": 774, "kural": "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nமெய்வேல் பறியா நகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்" } ] }, { "kuralNo": 775, "kural": "விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்\nஓட்டன்றோ வன்க ணவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்" } ] }, { "kuralNo": 776, "kural": "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nவைக்குந்தன் நாளை எடுத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்" } ] }, { "kuralNo": 777, "kural": "சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nகழல்யாப்புக் காரிகை நீர்த்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்" } ] }, { "kuralNo": 778, "kural": "உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்\nசெறினுஞ்சீர் குன்றல் இலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்" } ] }, { "kuralNo": 779, "kural": "இழைத்த திகவாமைச் சாவாரை யாரே\nபிழைத்த தொறுக்கிற் பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது" } ] }, { "kuralNo": 780, "kural": "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா\nடிரந்துகோட் டக்க துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு" } ] } ] }, { "aadhikaramNo": 79, "adhikaramName": "நட்பு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 781, "kural": "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்\nவினைக்கரிய யாவுள காப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை" } ] }, { "kuralNo": 782, "kural": "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்\nபின்னீர பேதையார் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்" } ] }, { "kuralNo": 783, "kural": "நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்\nபண்புடை யாளர் தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு" } ] }, { "kuralNo": 784, "kural": "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென் றிடித்தற் பொருட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்" } ] }, { "kuralNo": 785, "kural": "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்\nநட்பாங் கிழமை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது" } ] }, { "kuralNo": 786, "kural": "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்\nதகநக நட்பது நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்" } ] }, { "kuralNo": 787, "kural": "அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்\nஅல்லல் உழப்பதாம் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்" } ] }, { "kuralNo": 788, "kural": "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஇடுக்கண் களைவதாம் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்" } ] }, { "kuralNo": 789, "kural": "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி\nஒல்லும்வாய் ஊன்றும் நிலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்" } ] }, { "kuralNo": 790, "kural": "இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று\nபுனையினும் புல்லென்னும் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 80, "adhikaramName": "நட்பாராய்தல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 791, "kural": "நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்\nவீடில்லை நட்பாள் பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்" } ] }, { "kuralNo": 792, "kural": "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை\nதான்சாம் துயரம் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்" } ] }, { "kuralNo": 793, "kural": "குணனும் குடிமையும் குற்றமும் குன்றா\nஇனனும் அறிந்தியாக்க நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 794, "kural": "குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்\nகொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்" } ] }, { "kuralNo": 795, "kural": "அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய\nவல்லார்நட் பாய்ந்து கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்" } ] }, { "kuralNo": 796, "kural": "கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை\nநீட்டி அளப்பதோர் கோல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது" } ] }, { "kuralNo": 797, "kural": "ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்\nகேண்மை ஒரீஇ விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்" } ] }, { "kuralNo": 798, "kural": "உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க\nஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்" } ] }, { "kuralNo": 799, "kural": "கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை\nஉள்ளினும் உள்ளஞ் சுடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்" } ] }, { "kuralNo": 800, "kural": "மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும\nஒருவுக ஒப்பிலார் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 81, "adhikaramName": "பழைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 801, "kural": "பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்\nகிழமையைக் கீழ்ந்திடா நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்" } ] }, { "kuralNo": 802, "kural": "நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்\nகுப்பாதல் சான்றோர் கடன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்" } ] }, { "kuralNo": 803, "kural": "பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை\nசெய்தாங் கமையாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்" } ] }, { "kuralNo": 804, "kural": "விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்\nகேளாது நட்டார் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்" } ] }, { "kuralNo": 805, "kural": "பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nநோதக்க நட்டார் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 806, "kural": "எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்\nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 807, "kural": "அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்\nவழிவந்த கேண்மை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்" } ] }, { "kuralNo": 808, "kural": "கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nநாளிழுக்கம் நட்டார் செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்" } ] }, { "kuralNo": 809, "kural": "கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nவிடாஅர் விழையும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்" } ] }, { "kuralNo": 810, "kural": "விழையார் விழையப் படுப பழையார்கண்\nபண்பின் தலைப்பிரியா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 82, "adhikaramName": "தீ நட்பு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 811, "kural": "பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை\nபெருகலிற் குன்றல் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது" } ] }, { "kuralNo": 812, "kural": "உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை\nபெறினும் இழப்பினும் என்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?" } ] }, { "kuralNo": 813, "kural": "உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது\nகொள்வாரும் கள்வரும் நேர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்" } ] }, { "kuralNo": 814, "kural": "அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்\nதமரின் தனிமை தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்" } ] }, { "kuralNo": 815, "kural": "செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை\nஎய்தலின் எய்தாமை நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்" } ] }, { "kuralNo": 816, "kural": "பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்\nஏதின்மை கோடி உறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்" } ] }, { "kuralNo": 817, "kural": "நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்\nபத்தடுத்த கோடி உறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்" } ] }, { "kuralNo": 818, "kural": "ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை\nசொல்லாடார் சோர விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்" } ] }, { "kuralNo": 819, "kural": "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு\nசொல்வேறு பட்டார் தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்" } ] }, { "kuralNo": 820, "kural": "எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ\nமன்றிற் பழிப்பார் தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 83, "adhikaramName": "கூடா நட்பு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 821, "kural": "சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை\nநேரா நிரந்தவர் நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்" } ] }, { "kuralNo": 822, "kural": "இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்\nமனம்போல வேறு படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்" } ] }, { "kuralNo": 823, "kural": "பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்\nஆகுதல் மாணார்க் கரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்" } ] }, { "kuralNo": 824, "kural": "முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா\nவஞ்சரை அஞ்சப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்" } ] }, { "kuralNo": 825, "kural": "மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்\nசொல்லினால் தேறற்பாற் றன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது" } ] }, { "kuralNo": 826, "kural": "நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nஒல்லை உணரப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்" } ] }, { "kuralNo": 827, "kural": "சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்\nதீங்கு குறித்தமை யான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது" } ] }, { "kuralNo": 828, "kural": "தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்\nஅழுதகண் ணீரும் அனைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்" } ] }, { "kuralNo": 829, "kural": "மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து\nநட்பினுட் சாப்புல்லற் பாற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 830, "kural": "பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்\nடகநட் பொரீஇ விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 84, "adhikaramName": "பேதைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 831, "kural": "பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்\nடூதியம் போக விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்" } ] }, { "kuralNo": 832, "kural": "பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை\nகையல்ல தன்கண் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்" } ] }, { "kuralNo": 833, "kural": "நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nபேணாமை பேதை தொழில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்" } ] }, { "kuralNo": 834, "kural": "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்\nபேதையிற் பேதையார் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது" } ] }, { "kuralNo": 835, "kural": "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nதான்புக் கழுந்தும் அளறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்" } ] }, { "kuralNo": 836, "kural": "பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்\nபேதை வினைமேற் கொளின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்" } ] }, { "kuralNo": 837, "kural": "ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபெருஞ்செல்வம் உற்றக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது" } ] }, { "kuralNo": 838, "kural": "மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்\nகையொன் றுடைமை பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்" } ] }, { "kuralNo": 839, "kural": "பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்\nபீழை தருவதொன் றில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை" } ] }, { "kuralNo": 840, "kural": "கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்\nகுழாஅத்துப் பேதை புகல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "" } ] } ] }, { "aadhikaramNo": 85, "adhikaramName": "புல்லறிவாண்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 841, "kural": "அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை\nஇன்மையா வையா துலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது" } ] }, { "kuralNo": 842, "kural": "அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்\nஇல்லை பெறுவான் தவம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்" } ] }, { "kuralNo": 843, "kural": "அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை\nசெறுவார்க்கும் செய்தல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 844, "kural": "வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை\nஉடையம்யாம் என்னும் செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்" } ] }, { "kuralNo": 845, "kural": "கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற\nவல்லதூஉம் ஐயம் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்" } ] }, { "kuralNo": 846, "kural": "அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்\nகுற்றம் மறையா வழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்" } ] }, { "kuralNo": 847, "kural": "அருமறை சோரும் அறிவிலான் செய்யும்\nபெருமிறை தானே தனக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 848, "kural": "ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nபோஒம் அளவுமோர் நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்" } ] }, { "kuralNo": 849, "kural": "காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்\nகண்டானாம் தான்கண்ட வாறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்" } ] }, { "kuralNo": 850, "kural": "உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்\nதலகையா வைக்கப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்" } ] } ] }, { "aadhikaramNo": 86, "adhikaramName": "இகல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 851, "kural": "இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்\nபண்பின்மை பாரிக்கும் நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்" } ] }, { "kuralNo": 852, "kural": "பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி\nஇன்னாசெய் யாமை தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்" } ] }, { "kuralNo": 853, "kural": "இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்\nதாவில் விளக்கம் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்" } ] }, { "kuralNo": 854, "kural": "இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்\nதுன்பத்துள் துன்பங் கெடின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்" } ] }, { "kuralNo": 855, "kural": "இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nமிகலூக்கும் தன்மை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை" } ] }, { "kuralNo": 856, "kural": "இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை\nதவலும் கெடலும் நணித்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்" } ] }, { "kuralNo": 857, "kural": "மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்\nஇன்னா அறிவி னவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 858, "kural": "இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை\nமிகலூக்கின் ஊக்குமாங் கேடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்" } ] }, { "kuralNo": 859, "kural": "இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nமிகல்காணும் கேடு தரற்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்" } ] }, { "kuralNo": 860, "kural": "இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்\nநன்னயம் என்னும் செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்" } ] } ] }, { "aadhikaramNo": 87, "adhikaramName": "பகை மாட்சி", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 861, "kural": "வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா\nமெலியார்மேல் மேக பகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்" } ] }, { "kuralNo": 862, "kural": "அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்\nஎன்பரியும் ஏதிலான் துப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?" } ] }, { "kuralNo": 863, "kural": "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்\nதஞ்சம் எளியன் பகைக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்" } ] }, { "kuralNo": 864, "kural": "நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்\nயாங்கணும் யார்க்கும் எளிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்" } ] }, { "kuralNo": 865, "kural": "வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்\nபண்பிலன் பற்றார்க் கினிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்" } ] }, { "kuralNo": 866, "kural": "காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்\nபேணாமை பேணப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்" } ] }, { "kuralNo": 867, "kural": "கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து\nமாணாத செய்வான் பகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 868, "kural": "குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்\nகினனிலனாம் ஏமாப் புடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்" } ] }, { "kuralNo": 869, "kural": "செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா\nஅஞ்சும் பகைவர்ப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்" } ] }, { "kuralNo": 870, "kural": "கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்\nஒல்லானை ஒல்லா தொளி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்" } ] } ] }, { "aadhikaramNo": 88, "adhikaramName": "பகைத்திறம் தெரிதல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 871, "kural": "பகையென்னும் பண்பி லதனை ஒருவன்\nநகையேயும் வேண்டற்பாற் றன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது" } ] }, { "kuralNo": 872, "kural": "வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க\nசொல்லேர் உழவர் பகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது" } ] }, { "kuralNo": 873, "kural": "ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்\nபல்லார் பகைகொள் பவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்" } ] }, { "kuralNo": 874, "kural": "பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்\nதகைமைக்கண் தங்கிற் றுலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்" } ] }, { "kuralNo": 875, "kural": "தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்\nஇன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 876, "kural": "தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்\nதேறான் பகாஅன் விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்" } ] }, { "kuralNo": 877, "kural": "நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க\nமென்மை பகைவர் அகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது" } ] }, { "kuralNo": 878, "kural": "வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்\nபகைவர்கண் பட்ட செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்‌." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்" } ] }, { "kuralNo": 879, "kural": "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்\nகைகொல்லும் காழ்த்த இடத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்" } ] }, { "kuralNo": 880, "kural": "உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்\nசெம்மல் சிதைக்கலா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது" } ] } ] }, { "aadhikaramNo": 89, "adhikaramName": "உட்பகை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 881, "kural": "நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்\nஇன்னாவாம் இன்னா செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்" } ] }, { "kuralNo": 882, "kural": "வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nகேள்போல் பகைவர் தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 883, "kural": "உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து\nமட்பகையின் மாணத் தெறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்" } ] }, { "kuralNo": 884, "kural": "மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா\nஏதம் பலவும் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்" } ] }, { "kuralNo": 885, "kural": "உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்\nஏதம் பலவும் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்" } ] }, { "kuralNo": 886, "kural": "ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்\nபொன்றாமை ஒன்றல் அரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்" } ] }, { "kuralNo": 887, "kural": "செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே\nஉட்பகை உற்ற குடி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 888, "kural": "அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு\nதுட்பகை உற்ற குடி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்" } ] }, { "kuralNo": 889, "kural": "எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்\nஉட்பகை உள்ளதாங் கேடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்" } ] }, { "kuralNo": 890, "kural": "உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்\nபாம்போ டுடனுறைந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 90, "adhikaramName": "பெரியாரைப் பிழையாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 891, "kural": "ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nபோற்றலுள் எல்லாம் தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்" } ] }, { "kuralNo": 892, "kural": "பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்\nபேரா இடும்பை தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்" } ] }, { "kuralNo": 893, "kural": "கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்\nஆற்று பவர்கண் இழுக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்" } ] }, { "kuralNo": 894, "kural": "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்\nகாற்றாதார் இன்னா செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்" } ] }, { "kuralNo": 895, "kural": "யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்\nவேந்து செறப்பட் டவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது" } ] }, { "kuralNo": 896, "kural": "எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்\nபெரியார்ப் பிழைத்தொழுகு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது" } ] }, { "kuralNo": 897, "kural": "வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்\nதகைமாண்ட தக்கார் செறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்" } ] }, { "kuralNo": 898, "kural": "குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு\nநின்றன்னார் மாய்வர் நிலத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்" } ] }, { "kuralNo": 899, "kural": "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து\nவேந்தனும் வேந்து கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்" } ] }, { "kuralNo": 900, "kural": "இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\nசிறந்தமைந்த சீரார் செறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது" } ] } ] }, { "aadhikaramNo": 91, "adhikaramName": "பெண்வழிச் சேறல்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 901, "kural": "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்\nவேண்டாப் பொருளும் அது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 902, "kural": "பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்\nநாணாக நாணுத் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்" } ] }, { "kuralNo": 903, "kural": "இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்\nநல்லாருள் நாணுத் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்" } ] }, { "kuralNo": 904, "kural": "மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்\nவினையாண்மை வீறெய்த லின்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை" } ] }, { "kuralNo": 905, "kural": "இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்\nநல்லார்க்கு நல்ல செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்" } ] }, { "kuralNo": 906, "kural": "இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்\nஅமையார்தோ ளஞ்சு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது" } ] }, { "kuralNo": 907, "kural": "பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்\nபெண்ணே பெருமை உடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்" } ] }, { "kuralNo": 908, "kural": "நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nபெட்டாங் கொழுகு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 909, "kural": "அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்\nபெண்ணேவல் செய்வார்கண் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது" } ] }, { "kuralNo": 910, "kural": "எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்\nபெண்சேர்ந்தாம் பேதைமை இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 92, "adhikaramName": "வரைவின் மகளிர்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 911, "kural": "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nஇன்சொல் இழுக்குத் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்" } ] }, { "kuralNo": 912, "kural": "பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்\nநயன்தூக்கி நள்ளா விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது" } ] }, { "kuralNo": 913, "kural": "பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்\nஏதில் பிணந்தழீஇ அற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 914, "kural": "பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்\nஆயும் அறிவி னவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்" } ] }, { "kuralNo": 915, "kural": "பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்\nமாண்ட அறிவி னவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 916, "kural": "தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nபுன்னலம் பாரிப்பார் தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்" } ] }, { "kuralNo": 917, "kural": "நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்\nபேணிப் புணர்பவர் தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்" } ] }, { "kuralNo": 918, "kural": "ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப\nமாய மகளிர் முயக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்" } ] }, { "kuralNo": 919, "kural": "வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்\nபூரியர்கள் ஆழும் அளறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை" } ] }, { "kuralNo": 920, "kural": "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nதிருநீக்கப் பட்டார் தொடர்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 93, "adhikaramName": "கள்ளுண்ணாமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 921, "kural": "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nகட்காதல் கொண்டொழுகு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 922, "kural": "உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்\nஎண்ணப் படவேண்டா தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்" } ] }, { "kuralNo": 923, "kural": "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்\nசான்றோர் முகத்துக் களி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 924, "kural": "நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nபேணாப் பெருங்குற்றத் தார்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்" } ] }, { "kuralNo": 925, "kural": "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து\nமெய்யறி யாமை கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்" } ] }, { "kuralNo": 926, "kural": "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்\nநஞ்சுண்பார் கள்ளுண் பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்" } ] }, { "kuralNo": 927, "kural": "உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளொற்றிக் கண்சாய் பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்" } ] }, { "kuralNo": 928, "kural": "களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்\nதொளித்ததூஉம் ஆங்கே மிகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்" } ] }, { "kuralNo": 929, "kural": "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகுளித்தானைத் தீத்துரீஇ அற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்" } ] }, { "kuralNo": 930, "kural": "கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்\nஉள்ளான்கொல் உண்டதன் சோர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?" } ] } ] }, { "aadhikaramNo": 94, "adhikaramName": "சூது", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 931, "kural": "வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\nதூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்" } ] }, { "kuralNo": 932, "kural": "ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்\nநன்றெய்தி வாழ்வதோர் ஆறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?" } ] }, { "kuralNo": 933, "kural": "உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்\nபோஒய்ப் புறமே படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்" } ] }, { "kuralNo": 934, "kural": "சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்\nவறுமை தருவதொன் றில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை" } ] }, { "kuralNo": 935, "kural": "கவறும் கழகமும் கையும் தருக்கி\nஇவறியார் இல்லாகி யார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்" } ] }, { "kuralNo": 936, "kural": "அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்\nமுகடியான் மூடப்பட் டார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்" } ] }, { "kuralNo": 937, "kural": "பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்\nகழகத்துக் காலை புகின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்" } ] }, { "kuralNo": 938, "kural": "பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்\nதல்லல் உழப்பிக்கும் சூது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது" } ] }, { "kuralNo": 939, "kural": "உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்\nஅடையாவாம் ஆயங் கொளின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்" } ] }, { "kuralNo": 940, "kural": "இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்\nஉழத்தொறூஉம் காதற் றுயிர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்" } ] } ] }, { "aadhikaramNo": 95, "adhikaramName": "மருந்து", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 941, "kural": "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nவளிமுதலா எண்ணிய மூன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்" } ] }, { "kuralNo": 942, "kural": "மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய\nதற்றது போற்றி உணின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை" } ] }, { "kuralNo": 943, "kural": "அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு\nபொற்றான் நெடிதுய்க்கும் ஆறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்" } ] }, { "kuralNo": 944, "kural": "அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nதுய்க்க துவரப் பசித்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்" } ] }, { "kuralNo": 945, "kural": "மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்\nஊறுபா டில்லை உயிர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 946, "kural": "இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nகழிபேர் இரையான்கண் நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை" } ] }, { "kuralNo": 947, "kural": "தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nநோயள வின்றிப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்" } ] }, { "kuralNo": 948, "kural": "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவாய்நாடி வாய்ப்பச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)" } ] }, { "kuralNo": 949, "kural": "உற்றான் அளவும் பிணியளவும் காலமும்\nகற்றான் கருதிச் செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்" } ] }, { "kuralNo": 950, "kural": "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்\nறப்பானாற் கூற்றே மருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது" } ] } ] }, { "aadhikaramNo": 96, "adhikaramName": "குடிமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 951, "kural": "இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்\nசெப்பமும் நாணும் ஒருங்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது" } ] }, { "kuralNo": 952, "kural": "ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்\nஇழுக்கார் குடிப்பிறந் தார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்" } ] }, { "kuralNo": 953, "kural": "நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்\nவகையென்ப வாய்மைக் குடிக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்" } ] }, { "kuralNo": 954, "kural": "அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகுன்றுவ செய்தல் இலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 955, "kural": "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி\nபண்பின் தலைப்பிரிதல் இன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 956, "kural": "சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற\nகுலம்பற்றி வாழ்துமென் பார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 957, "kural": "குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்\nமதிக்கண் மறுப்போல் உயர்ந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்" } ] }, { "kuralNo": 958, "kural": "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nகுலத்தின்கண் ஐயப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்" } ] }, { "kuralNo": 959, "kural": "நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nகுலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்" } ] }, { "kuralNo": 960, "kural": "நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்\nவேண்டுக யார்க்கும் பணிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 97, "adhikaramName": "மானம்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 961, "kural": "இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்\nகுன்ற வருப விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்" } ] }, { "kuralNo": 962, "kural": "சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு\nபேராண்மை வேண்டு பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்" } ] }, { "kuralNo": 963, "kural": "பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய\nசுருக்கத்து வேண்டும் உயர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்" } ] }, { "kuralNo": 964, "kural": "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்\nநிலையின் இழிந்தக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்" } ] }, { "kuralNo": 965, "kural": "குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ\nகுன்றி அனைய செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்" } ] }, { "kuralNo": 966, "kural": "புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்\nறிகழ்வார்பின் சென்று நிலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?" } ] }, { "kuralNo": 967, "kural": "ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nகெட்டான் எனப்படுதல் நன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்" } ] }, { "kuralNo": 968, "kural": "மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை\nபீடழிய வந்த இடத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்" } ] }, { "kuralNo": 969, "kural": "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர்நீப்பர் மானம் வரின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்" } ] }, { "kuralNo": 970, "kural": "இளிவரின் வாழாத மானம் உடையார்\nஒளிதொழு தேத்தும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்" } ] } ] }, { "aadhikaramNo": 98, "adhikaramName": "பெருமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 971, "kural": "ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்\nகஃதிறந்து வாழ்தும் எனல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்" } ] }, { "kuralNo": 972, "kural": "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமை யான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்" } ] }, { "kuralNo": 973, "kural": "மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்\nகீழல்லார் கீழல் லவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்" } ] }, { "kuralNo": 974, "kural": "ஒருமை மகளிரே போலப் பெருமையும்\nதன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்" } ] }, { "kuralNo": 975, "kural": "பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்\nஅருமை யுடைய செயல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்" } ] }, { "kuralNo": 976, "kural": "சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்\nபேணிக்கொள் வேமென்னும் நோக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை" } ] }, { "kuralNo": 977, "kural": "இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்\nசீரல் லவர்கண் படின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை" } ] }, { "kuralNo": 978, "kural": "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்" } ] }, { "kuralNo": 979, "kural": "பெருமை பெருமிதம் இன்மை சிறுமை\nபெருமிதம் ஊர்ந்து விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்" } ] }, { "kuralNo": 980, "kural": "அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்\nகுற்றமே கூறி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 99, "adhikaramName": "சான்றாண்மை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 981, "kural": "கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து\nசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்" } ] }, { "kuralNo": 982, "kural": "குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்\nஎந்நலத் துள்ளதூஉ மன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல" } ] }, { "kuralNo": 983, "kural": "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ\nடைந்துசால் பூன்றிய தூண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்" } ] }, { "kuralNo": 984, "kural": "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை\nசொல்லா நலத்தது சால்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு" } ] }, { "kuralNo": 985, "kural": "ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்\nமாற்றாரை மாற்றும் படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்" } ] }, { "kuralNo": 986, "kural": "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி\nதுலையல்லார் கண்ணும் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்" } ] }, { "kuralNo": 987, "kural": "இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nஎன்ன பயத்ததோ சால்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?" } ] }, { "kuralNo": 988, "kural": "இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்\nதிண்மையுண் டாகப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல" } ] }, { "kuralNo": 989, "kural": "ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்\nகாழி யெனப்படு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்" } ] }, { "kuralNo": 990, "kural": "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்\nதாங்காது மன்னோ பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது" } ] } ] }, { "aadhikaramNo": 100, "adhikaramName": "பண்புடைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 991, "kural": "எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nபண்புடைமை என்னும் வழக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்" } ] }, { "kuralNo": 992, "kural": "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்\nபண்புடைமை என்னும் வழக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்" } ] }, { "kuralNo": 993, "kural": "உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க\nபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்" } ] }, { "kuralNo": 994, "kural": "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்\nபண்புள ராட்டும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்" } ] }, { "kuralNo": 995, "kural": "நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்\nபண்புள பாடறிவார் மாட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 996, "kural": "பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்\nமண்புக்கு மாய்வது மன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்" } ] }, { "kuralNo": 997, "kural": "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\nமக்கட்பண் பில்லா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்" } ] }, { "kuralNo": 998, "kural": "நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்\nபண்பாற்றார் ஆதல் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்" } ] }, { "kuralNo": 999, "kural": "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்\nபகலும்பாற் பட்டன் றிருள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்" } ] }, { "kuralNo": 1000, "kural": "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்\nகலந்தீமை யால்திரிந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்" } ] } ] }, { "aadhikaramNo": 101, "adhikaramName": "நன்றியில் செல்வம்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1001, "kural": "வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nசெத்தான் செயக்கிடந்த தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?" } ] }, { "kuralNo": 1002, "kural": "பொருளானாம் எல்லாமென்றீயா திவறும்\nமருளானாம் மாணாப் பிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்" } ] }, { "kuralNo": 1003, "kural": "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nதோற்றம் நிலக்குப் பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்" } ] }, { "kuralNo": 1004, "kural": "எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்\nநச்சப் படாஅ தவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?" } ] }, { "kuralNo": 1005, "kural": "கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய\nகோடியுண் டாயினும் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 1006, "kural": "ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்\nறீத லியல்பிலா தான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்" } ] }, { "kuralNo": 1007, "kural": "அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்\nபெற்றாள் தமியள்மூத் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது" } ] }, { "kuralNo": 1008, "kural": "நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்\nநச்சு மரம்பழுத் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!" } ] }, { "kuralNo": 1009, "kural": "அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய\nஒண்பொருள் கொள்வார் பிறர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்" } ] }, { "kuralNo": 1010, "kural": "சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nவறங்கூர்ந் தனைய துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 102, "adhikaramName": "நாணுடைமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1011, "kural": "கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்\nநல்லவர் நாணுப் பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு" } ] }, { "kuralNo": 1012, "kural": "ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல\nநாணுடைமை மாந்தர் சிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்" } ] }, { "kuralNo": 1013, "kural": "ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்\nநன்மை குறித்தது சால்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்" } ] }, { "kuralNo": 1014, "kural": "அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்\nபிணியன்றோ பீடு நடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்" } ] }, { "kuralNo": 1015, "kural": "பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்\nகுறைபதி என்னும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்" } ] }, { "kuralNo": 1016, "kural": "நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்\nபேணலர் மேலா யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 1017, "kural": "நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்\nநாண்துறவார் நாணாள் பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்" } ] }, { "kuralNo": 1018, "kural": "பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்\nஅறநாணத் தக்க துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்" } ] }, { "kuralNo": 1019, "kural": "குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்\nநாணின்மை நின்றக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்" } ] }, { "kuralNo": 1020, "kural": "நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை\nநாணால் உயிர்மருட்டி அற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை" } ] } ] }, { "aadhikaramNo": 103, "adhikaramName": "குடிசெயல் வகை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1021, "kural": "கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்\nபெருமையிற் பீடுடைய தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது" } ] }, { "kuralNo": 1022, "kural": "ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்\nநீள்வினையான் நீளும் குடி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்" } ] }, { "kuralNo": 1023, "kural": "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nமடிதற்றுத் தான்முந் துறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்" } ] }, { "kuralNo": 1024, "kural": "சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்\nதாழா துஞற்று பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்" } ] }, { "kuralNo": 1025, "kural": "குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nசுற்றமாச் சுற்றும் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 1026, "kural": "நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த\nஇல்லாண்மை ஆக்கிக் கொளல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்" } ] }, { "kuralNo": 1027, "kural": "அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்\nஆற்றுவார் மேற்றே பொறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு" } ] }, { "kuralNo": 1028, "kural": "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து\nமானங் கருதக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்" } ] }, { "kuralNo": 1029, "kural": "இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்\nகுற்ற மறைப்பான் உடம்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்" } ] }, { "kuralNo": 1030, "kural": "இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்\nநல்லாள் இலாத குடி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்" } ] } ] }, { "aadhikaramNo": 104, "adhikaramName": "உழவு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1031, "kural": "சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்\nஉழந்தும் உழவே தலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது" } ] }, { "kuralNo": 1032, "kural": "உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா\nதெழுவாரை எல்லாம் பொறுத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்" } ] }, { "kuralNo": 1033, "kural": "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nதொழுதுண்டு பின்செல் பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது" } ] }, { "kuralNo": 1034, "kural": "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்\nஅலகுடை நீழ லவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்" } ] }, { "kuralNo": 1035, "kural": "இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது\nகைசெய்தூண் மாலை யவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்" } ] }, { "kuralNo": 1036, "kural": "உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nவிட்டேமென் பார்க்கும் நிலை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்" } ] }, { "kuralNo": 1037, "kural": "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்\nவேண்டாது சாலப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்" } ] }, { "kuralNo": 1038, "kural": "ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்\nநீரினும் நன்றதன் காப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது" } ] }, { "kuralNo": 1039, "kural": "செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்\nதில்லாளின் ஊடி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்" } ] }, { "kuralNo": 1040, "kural": "இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்\nநிலமென்னும் நல்லாள் நகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்" } ] } ] }, { "aadhikaramNo": 105, "adhikaramName": "நல்குரவு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1041, "kural": "இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்\nஇன்மையே இன்னா தது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 1042, "kural": "இன்மை எனவொரு பாவி மறுமையும்\nஇம்மையும் இன்றி வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது" } ] }, { "kuralNo": 1043, "kural": "தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக\nநல்குர வென்னும் நசை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்" } ] }, { "kuralNo": 1044, "kural": "இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த\nசொற்பிறக்கும் சோர்வு தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்" } ] }, { "kuralNo": 1045, "kural": "நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்\nதுன்பங்கள் சென்று படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்" } ] }, { "kuralNo": 1046, "kural": "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்\nசொற்பொருள் சோர்வு படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்" } ] }, { "kuralNo": 1047, "kural": "அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்\nபிறன்போல நோக்கப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்" } ] }, { "kuralNo": 1048, "kural": "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்\nகொன்றது போலும் நிரப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்)." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்" } ] }, { "kuralNo": 1049, "kural": "நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்\nயாதொன்றும் கண்பா டரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்" } ] }, { "kuralNo": 1050, "kural": "துப்புர வில்லார் துவரத் துறவாமை\nஉப்பிற்கும் காடிக்கும் கூற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு" } ] } ] }, { "aadhikaramNo": 106, "adhikaramName": "இரவு", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1051, "kural": "இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nஅவர்பழி தம்பழி அன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல" } ] }, { "kuralNo": 1052, "kural": "இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை\nதுன்பம் உறாஅ வரின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்" } ] }, { "kuralNo": 1053, "kural": "கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்\nறிரப்புமோர் ஏஎர் உடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்" } ] }, { "kuralNo": 1054, "kural": "இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nகனவிலும் தேற்றாதார் மாட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்" } ] }, { "kuralNo": 1055, "kural": "கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்\nறிரப்பவர் மேற்கொள் வது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்" } ] }, { "kuralNo": 1056, "kural": "கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nயெல்லா மொருங்கு கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்" } ] }, { "kuralNo": 1057, "kural": "இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஉள்ளுள் உவப்ப துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்" } ] }, { "kuralNo": 1058, "kural": "இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nமரப்பாவை சென்றுவந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை" } ] }, { "kuralNo": 1059, "kural": "ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்\nமேவார் இலாஅக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்" } ] }, { "kuralNo": 1060, "kural": "இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nதானேயும் சாலும் கரி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே" } ] } ] }, { "aadhikaramNo": 107, "adhikaramName": "இரவச்சம்", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1061, "kural": "கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nஇரவாமை கோடி உறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்" } ] }, { "kuralNo": 1062, "kural": "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nகெடுக உலகியற்றி யான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்" } ] }, { "kuralNo": 1063, "kural": "இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nவன்மையின் வன்பாட்ட தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை" } ] }, { "kuralNo": 1064, "kural": "இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nகாலும் இரவொல்லாச் சால்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது" } ] }, { "kuralNo": 1065, "kural": "தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த\nதுண்ணலின் ஊங்கினிய தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை" } ] }, { "kuralNo": 1066, "kural": "ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்\nகிரவின் இளிவந்த தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை" } ] }, { "kuralNo": 1067, "kural": "இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்\nகரப்பார் இரவன்மின் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்" } ] }, { "kuralNo": 1068, "kural": "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்\nபார்தாக்கப் பக்கு விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்" } ] }, { "kuralNo": 1069, "kural": "இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள\nஉள்ளதூஉம் இன்றிக் கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது" } ] }, { "kuralNo": 1070, "kural": "கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்\nசொல்லாடப் போஒம் உயிர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை’ என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?" } ] } ] }, { "aadhikaramNo": 108, "adhikaramName": "கயமை", "paal": "பொருட்பால்", "kurals": [ { "kuralNo": 1071, "kural": "மக்களே போல்வர் கயவர் அவரன்ன\nஒப்பாரி யாங்கண்ட தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்" } ] }, { "kuralNo": 1072, "kural": "நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்\nநெஞ்சத் தவலம் இலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!" } ] }, { "kuralNo": 1073, "kural": "தேவ ரனையர் கயவர் அவருந்தாம்\nமேவன செய்தொழுக லான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்" } ] }, { "kuralNo": 1074, "kural": "அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்\nமிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 1075, "kural": "அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்\nஅவாவுண்டேல் உண்டாம் சிறிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்" } ] }, { "kuralNo": 1076, "kural": "அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\nமறைபிறர்க் குய்த்துரைக்க லான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்" } ] }, { "kuralNo": 1077, "kural": "ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்\nகூன்கையர் அல்லா தவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 1078, "kural": "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல\nகொல்லப் பயன்படும் கீழ்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்" } ] }, { "kuralNo": 1079, "kural": "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்\nவடுக்காண வற்றாகும் கீழ்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்" } ] }, { "kuralNo": 1080, "kural": "எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்\nவிற்றற் குரியர் விரைந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 109, "adhikaramName": "தகை அணங்குறுத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1081, "kural": "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலுமென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்" } ] }, { "kuralNo": 1082, "kural": "நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nதானைக்கொண் டன்ன துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது" } ] }, { "kuralNo": 1083, "kural": "பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nபெண்டகையால் பேரமர்க் கட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை" } ] }, { "kuralNo": 1084, "kural": "கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nபேதைக் கமர்த்தன கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?" } ] }, { "kuralNo": 1085, "kural": "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nநோக்கமிம் மூன்றும் உடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே" } ] }, { "kuralNo": 1086, "kural": "கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nசெய்யல மன்னிவள் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா" } ] }, { "kuralNo": 1087, "kural": "கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்\nபடாஅ முலைமேல் துகில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது" } ] }, { "kuralNo": 1088, "kural": "ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nநண்ணாரும் உட்குமென் பீடு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!" } ] }, { "kuralNo": 1089, "kural": "பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்\nகணியெவனோ ஏதில தந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?" } ] }, { "kuralNo": 1090, "kural": "உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்\nகண்டார் மகிழ்செய்தல் இன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்" } ] } ] }, { "aadhikaramNo": 110, "adhikaramName": "குறிப்பறிதல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1091, "kural": "இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு\nநோய்நோக்கொன் றந்நோய் மருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை" } ] }, { "kuralNo": 1092, "kural": "கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்\nசெம்பாகம் அன்று பெரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!" } ] }, { "kuralNo": 1093, "kural": "நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nயாப்பினுள் அட்டிய நீர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது" } ] }, { "kuralNo": 1094, "kural": "யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்\nதானோக்கி மெல்ல நகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?" } ] }, { "kuralNo": 1095, "kural": "குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்\nசிறக்கணித்தாள் போல நகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்" } ] }, { "kuralNo": 1096, "kural": "உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்\nஒல்லை உணரப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்" } ] }, { "kuralNo": 1097, "kural": "செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்\nஉறாஅர்போன் றுற்றார் குறிப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்" } ] }, { "kuralNo": 1098, "kural": "அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்\nபசையினள் பைய நகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்" } ] }, { "kuralNo": 1099, "kural": "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்\nகாதலார் கண்ணே உள", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்" } ] }, { "kuralNo": 1100, "kural": "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்ன பயனும் இல", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன" } ] } ] }, { "aadhikaramNo": 111, "adhikaramName": "புணர்ச்சி மகிழ்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1101, "kural": "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்\nஒண்தொடி கண்ணே உள", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன" } ] }, { "kuralNo": 1102, "kural": "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை\nதன்னோய்க்குத் தானே மருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்" } ] }, { "kuralNo": 1103, "kural": "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்\nதாமரைக் கண்ணான் உலகு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?" } ] }, { "kuralNo": 1104, "kural": "நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்\nதீயாண்டுப் பெற்றாள் இவள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்" } ] }, { "kuralNo": 1105, "kural": "வேட்ட பொழுதின் அவையவை போலுமே\nதோட்டார் கதுப்பினாள் தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன" } ] }, { "kuralNo": 1106, "kural": "உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்\nகமிழ்தின் இயன்றன தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்" } ] }, { "kuralNo": 1107, "kural": "தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்\nஅம்மா அரிவை முயக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது" } ] }, { "kuralNo": 1108, "kural": "வீழும் இருவர்க் கினிதே வளியிடை\nபோழப் படாஅ முயக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்" } ] }, { "kuralNo": 1109, "kural": "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்\nகூடியார் பெற்ற பயன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்" } ] }, { "kuralNo": 1110, "kural": "அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்\nசெறிதோறும் சேயிழை மாட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது" } ] } ] }, { "aadhikaramNo": 112, "adhikaramName": "நலம் புனைந்து உரைத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1111, "kural": "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nமென்னீரள் யாம்வீழ் பவள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி" } ] }, { "kuralNo": 1112, "kural": "மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்\nபலர்காணும் பூவொக்கும் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது" } ] }, { "kuralNo": 1113, "kural": "முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\nவேலுண்கண் வேய்த்தோ ளவட்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!" } ] }, { "kuralNo": 1114, "kural": "காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்\nமாணிழை கண்ணொவ்வேம் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், “இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!” எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்" } ] }, { "kuralNo": 1115, "kural": "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு\nநல்ல படாஅ பறை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்" } ] }, { "kuralNo": 1116, "kural": "மதியும் மடந்தை முகனும் அறியா\nபதியின் கலங்கிய மீன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன" } ] }, { "kuralNo": 1117, "kural": "அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல\nமறுவுண்டோ மாதர் முகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!" } ] }, { "kuralNo": 1118, "kural": "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்\nகாதலை வாழி மதி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக" } ] }, { "kuralNo": 1119, "kural": "மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்\nபலர்காணத் தோன்றல் மதி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்" } ] }, { "kuralNo": 1120, "kural": "அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்\nஅடிக்கு நெருஞ்சிப் பழம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை" } ] } ] }, { "aadhikaramNo": 113, "adhikaramName": "காதற் சிறப்புரைத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1121, "kural": "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலேயி றூறிய நீர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்" } ] }, { "kuralNo": 1122, "kural": "உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன\nமடந்தையொ டெம்மிடை நட்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு" } ] }, { "kuralNo": 1123, "kural": "கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்\nதிருநுதற் கில்லை யிடம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!" } ] }, { "kuralNo": 1124, "kural": "வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்\nஅதற்கன்னள் நீங்கும் இடத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்" } ] }, { "kuralNo": 1125, "kural": "உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்\nஒள்ளமர்க் கண்ணாள் குணம்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு" } ] }, { "kuralNo": 1126, "kural": "கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்\nநுண்ணியர்எம் காத லவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்" } ] }, { "kuralNo": 1127, "kural": "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்\nஎழுதேம் கரப்பாக் கறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்" } ] }, { "kuralNo": 1128, "kural": "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஅஞ்சுதும் வேபாக் கறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்" } ] }, { "kuralNo": 1129, "kural": "இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே\nஏதிலர் என்னுமிவ் வூர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்" } ] }, { "kuralNo": 1130, "kural": "உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்\nஏதிலர் என்னுமிவ் வூர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு" } ] } ] }, { "aadhikaramNo": 114, "adhikaramName": "நாணுத் துறவுரைத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1131, "kural": "காமம் உழந்து வருந்தினார்க் கேம\nமடலல்ல தில்லை வலி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை" } ] }, { "kuralNo": 1132, "kural": "நோனா உடம்பும் உயிரும் மடலேறும்\nநாணினை நீக்கி நிறுத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்" } ] }, { "kuralNo": 1133, "kural": "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nகாமுற்றார் ஏறும் மடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்" } ] }, { "kuralNo": 1134, "kural": "காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு\nநல்லாண்மை என்னும் புணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது" } ] }, { "kuralNo": 1135, "kural": "தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமாலை உழக்கும் துயர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்" } ] }, { "kuralNo": 1136, "kural": "மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nபடலொல்லா பேதைக்கென் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்" } ] }, { "kuralNo": 1137, "kural": "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nபெண்ணிற் பெருந்தக்க தில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை" } ] }, { "kuralNo": 1138, "kural": "நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்\nமறையிறந்து மன்று படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்" } ] }, { "kuralNo": 1139, "kural": "அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்\nமறுகின் மறுகும் மருண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!" } ] }, { "kuralNo": 1140, "kural": "யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்\nயாம்பட்ட தாம்படா ஆறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்" } ] } ] }, { "aadhikaramNo": 115, "adhikaramName": "அலர் அறிவுறுத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1141, "kural": "அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nபலரறியார் பாக்கியத் தால்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்" } ] }, { "kuralNo": 1142, "kural": "மலரன்ன கண்ணாள் அருமை அறியா\nதலரெமக் கீந்ததிவ் வூர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது" } ] }, { "kuralNo": 1143, "kural": "உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்\nபெறாஅது பெற்றன்ன நீர்த்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!" } ] }, { "kuralNo": 1144, "kural": "கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்\nதவ்வென்னும் தன்மை இழந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்" } ] }, { "kuralNo": 1145, "kural": "களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nவெளிப்படுந் தோறும் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 1146, "kural": "கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nதிங்களைப் பாம்புகொண் டற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் “கிரகணம்” எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது" } ] }, { "kuralNo": 1147, "kural": "ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்\nநீராக நீளுமிந் நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது" } ] }, { "kuralNo": 1148, "kural": "நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்\nகாமம் நுதுப்பேம் எனல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்" } ] }, { "kuralNo": 1149, "kural": "அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்\nபலர்நாண நீத்தக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?" } ] }, { "kuralNo": 1150, "kural": "தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்\nகௌவை எடுக்குமிவ் வூர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்" } ] } ] }, { "aadhikaramNo": 116, "adhikaramName": "பிரிவு ஆற்றாமை", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1151, "kural": "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்\nவல்வரவு வாழ்வார்க் குரை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்" } ] }, { "kuralNo": 1152, "kural": "இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்\nபுன்கண் உடைத்தால் புணர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!" } ] }, { "kuralNo": 1153, "kural": "அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்\nபிரிவோ ரிடத்துண்மை யான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது" } ] }, { "kuralNo": 1154, "kural": "அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்\nதேறியார்க் குண்டோ தவறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?" } ] }, { "kuralNo": 1155, "kural": "ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்\nநீங்கின் அரிதால் புணர்வு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்" } ] }, { "kuralNo": 1156, "kural": "பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்\nநல்குவர் என்னும் நசை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்" } ] }, { "kuralNo": 1157, "kural": "துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை\nஇறைஇறவா நின்ற வளை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!" } ] }, { "kuralNo": 1158, "kural": "இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்\nஇன்னா தினியார்ப் பிரிவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது" } ] }, { "kuralNo": 1159, "kural": "தொடிற்சுடின் அல்லது காமநோய் போல\nவிடிற்சுடல் ஆற்றுமோ தீ", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!" } ] }, { "kuralNo": 1160, "kural": "அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்\nபின்இருந்து வாழ்வார் பலர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?" } ] } ] }, { "aadhikaramNo": 117, "adhikaramName": "படர்மெலிந் திரங்கல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1161, "kural": "மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்\nகூற்றுநீர் போல மிகும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்" } ] }, { "kuralNo": 1162, "kural": "கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்\nகுரைத்தலும் நாணுத் தரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை" } ] }, { "kuralNo": 1163, "kural": "காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்\nநோனா உடம்பின் அகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது" } ] }, { "kuralNo": 1164, "kural": "காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்\nஏமப் புணைமன்னும் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை" } ] }, { "kuralNo": 1165, "kural": "துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு\nநட்பினுள் ஆற்று பவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?" } ] }, { "kuralNo": 1166, "kural": "இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்\nதுன்பம் அதனிற் பெரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது" } ] }, { "kuralNo": 1167, "kural": "காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்\nயாமத்தும் யானே உளேன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்" } ] }, { "kuralNo": 1168, "kural": "மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா\nஎன்னல்ல தில்லை துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்." } ] }, { "kuralNo": 1169, "kural": "கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்\nநெடிய கழியும் இரா", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது" } ] }, { "kuralNo": 1170, "kural": "உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nநீந்தல மன்னோவென் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது" } ] } ] }, { "aadhikaramNo": 118, "adhikaramName": "கண் விதுப்பழிதல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1171, "kural": "கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்\nதாங்காட்ட யாங்கண் டது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?" } ] }, { "kuralNo": 1172, "kural": "தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nபைதல் உழப்ப தெவன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?" } ] }, { "kuralNo": 1173, "kural": "கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\nஇதுநகத் தக்க துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்" } ] }, { "kuralNo": 1174, "kural": "பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா\nஉய்வில்நோய் என்கண் நிறுத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன" } ] }, { "kuralNo": 1175, "kural": "படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்\nகாமநோய் செய்தவென் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன" } ] }, { "kuralNo": 1176, "kural": "ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்\nதாஅம் இதற்பட் டது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!" } ] }, { "kuralNo": 1177, "kural": "உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து\nவேண்டி அவர்க்கண்ட கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்" } ] }, { "kuralNo": 1178, "kural": "பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\nகாணா தமைவில கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!" } ] }, { "kuralNo": 1179, "kural": "வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை\nஆரஞர் உற்றன கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்" } ] }, { "kuralNo": 1180, "kural": "மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்\nஅறைபறை கண்ணார் அகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல" } ] } ] }, { "aadhikaramNo": 119, "adhikaramName": "பசப்புறு பருவரல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1181, "kural": "நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்\nபண்பியார்க் குரைக்கோ பிற", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?" } ] }, { "kuralNo": 1182, "kural": "அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்\nமேனிமேல் ஊரும் பசப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!" } ] }, { "kuralNo": 1183, "kural": "சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nநோயும் பசலையும் தந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்" } ] }, { "kuralNo": 1184, "kural": "உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்\nகள்ளம் பிறவோ பசப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?" } ] }, { "kuralNo": 1185, "kural": "உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்\nமேனி பசப்பூர் வது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்" } ] }, { "kuralNo": 1186, "kural": "விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்\nமுயக்கற்றம் பார்க்கும் பசப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது" } ] }, { "kuralNo": 1187, "kural": "புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்\nஅள்ளிக்கொள் வற்றே பசப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!" } ] }, { "kuralNo": 1188, "kural": "பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்\nதுறந்தார் அவரென்பார் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே" } ] }, { "kuralNo": 1189, "kural": "பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்\nநன்னிலையர் ஆவர் எனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!" } ] }, { "kuralNo": 1190, "kural": "பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்\nநல்காமை தூற்றார் எனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!" } ] } ] }, { "aadhikaramNo": 120, "adhikaramName": "தனிப்படர் மிகுதி", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1191, "kural": "தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே\nகாமத்துக் காழில் கனி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்" } ] }, { "kuralNo": 1192, "kural": "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு\nவீழ்வார் அளிக்கும் அளி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 1193, "kural": "வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே\nவாழுநம் என்னும் செருக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்" } ] }, { "kuralNo": 1194, "kural": "வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்\nவீழப் படாஅர் எனின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்" } ] }, { "kuralNo": 1195, "kural": "நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ\nதாம்காதல் கொள்ளாக் கடை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?" } ] }, { "kuralNo": 1196, "kural": "ஒருதலையான் இன்னாது காமங்காப் போல\nஇருதலை யானும் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்" } ] }, { "kuralNo": 1197, "kural": "பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்\nஒருவர்கண் நின்றொழுகு வான்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!" } ] }, { "kuralNo": 1198, "kural": "வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து\nவாழ்வாரின் வன்கணார் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது" } ] }, { "kuralNo": 1199, "kural": "நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்\nடிசையும் இனிய செவிக்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்" } ] }, { "kuralNo": 1200, "kural": "உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்\nசெறாஅஅய் வாழிய நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 121, "adhikaramName": "நினைந்தவர் புலம்பல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1201, "kural": "உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்\nகள்ளினும் காமம் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்" } ] }, { "kuralNo": 1202, "kural": "எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்\nநினைப்ப வருவதொன் றில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்" } ] }, { "kuralNo": 1203, "kural": "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்\nசினைப்பது போன்று கெடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?" } ] }, { "kuralNo": 1204, "kural": "யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்\nதோஒ உளரே அவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?" } ] }, { "kuralNo": 1205, "kural": "தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்\nஎம்நெஞ்சத் தோவா வரல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்" } ] }, { "kuralNo": 1206, "kural": "மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்\nஉற்றநாள் உள்ள உளேன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?" } ] }, { "kuralNo": 1207, "kural": "மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்\nஉள்ளினும் உள்ளம் சுடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?" } ] }, { "kuralNo": 1208, "kural": "எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ\nகாதலர் செய்யும் சிறப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?" } ] }, { "kuralNo": 1209, "kural": "விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்\nஅளியின்மை ஆற்ற நினைந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது" } ] }, { "kuralNo": 1210, "kural": "விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்\nபடாஅதி வாழி மதி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக" } ] } ] }, { "aadhikaramNo": 122, "adhikaramName": "கனவுநிலை உரைத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1211, "kural": "காதலர் தூதொடு வந்த கனவினுக்\nகியாதுசெய் வேன்கொல் விருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?" } ] }, { "kuralNo": 1212, "kural": "கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்\nகுயலுண்மை சாற்றுவேன் மன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்" } ] }, { "kuralNo": 1213, "kural": "நனவினான் நல்கா தவரைக் கனவினால்\nகாண்டலின் உண்டென் உயிர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது" } ] }, { "kuralNo": 1214, "kural": "கனவினான் உண்டாகும் காமம் நனவினான்\nநல்காரை நாடித் தரற்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது" } ] }, { "kuralNo": 1215, "kural": "நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nகண்ட பொழுதே இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!" } ] }, { "kuralNo": 1216, "kural": "நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்\nகாதலர் நீங்கலர் மன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே" } ] }, { "kuralNo": 1217, "kural": "நனவினான் நல்காக் கொடியார் கனவினான்\nஎன்னெம்மைப் பீழிப் பது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?" } ] }, { "kuralNo": 1218, "kural": "துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்\nநெஞ்சத்தார் ஆவர் விரைந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்" } ] }, { "kuralNo": 1219, "kural": "நனவினான் நல்காரை நோவர் கனவினான்\nகாதலர்க் காணா தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்" } ] }, { "kuralNo": 1220, "kural": "நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்\nகாணார்கொல் இவ்வூ ரவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?" } ] } ] }, { "aadhikaramNo": 123, "adhikaramName": "பொழுதுகண்டு இரங்கல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1221, "kural": "மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்\nவேலைநீ வாழி பொழுது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!" } ] }, { "kuralNo": 1222, "kural": "புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்\nவன்கண்ண தோநின் துணை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?" } ] }, { "kuralNo": 1223, "kural": "பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்\nதுன்பம் வளர வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது" } ] }, { "kuralNo": 1224, "kural": "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்\nதேதிலர் போல வரும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது" } ] }, { "kuralNo": 1225, "kural": "காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்\nமாலைக்குச் செய்த பகை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் “காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது" } ] }, { "kuralNo": 1226, "kural": "மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத\nகாலை அறிந்த திலேன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை" } ] }, { "kuralNo": 1227, "kural": "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி\nமாலை மலருமிந் நோய்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்" } ] }, { "kuralNo": 1228, "kural": "அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்\nகுழல்போலும் கொல்லும் படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது" } ] }, { "kuralNo": 1229, "kural": "பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமாலை படர்தரும் போழ்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது" } ] }, { "kuralNo": 1230, "kural": "பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை\nமாயுமென் மாயா உயிர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது" } ] } ] }, { "aadhikaramNo": 124, "adhikaramName": "உறுப்புநலன் அழிதல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1231, "kural": "சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி\nநறுமலர் நாணின கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன" } ] }, { "kuralNo": 1232, "kural": "நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்\nபசந்து பனிவாரும் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன" } ] }, { "kuralNo": 1233, "kural": "தணந்தமை சால அறிவிப்ப போலும்\nமணந்தநாள் வீங்கிய தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்" } ] }, { "kuralNo": 1234, "kural": "பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்\nதொல்கவின் வாடிய தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக" } ] }, { "kuralNo": 1235, "kural": "கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு\nதொல்கவின் வாடிய தோள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன" } ] }, { "kuralNo": 1236, "kural": "தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்\nகொடியார் எனக்கூறல் நொந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்" } ] }, { "kuralNo": 1237, "kural": "பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்\nவாடுதோட் பூசல் உரைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?" } ] }, { "kuralNo": 1238, "kural": "முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது\nபைந்தொடிப் பேதை நுதல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது" } ] }, { "kuralNo": 1239, "kural": "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற\nபேதை பெருமழைக் கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன" } ] }, { "kuralNo": 1240, "kural": "கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே\nஒண்ணுதல் செய்தது கண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது" } ] } ] }, { "aadhikaramNo": 125, "adhikaramName": "நெஞ்சொடு கிளத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1241, "kural": "நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்\nஎவ்வநோய் தீர்க்கு மருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?" } ] }, { "kuralNo": 1242, "kural": "காத லவரிலர் ஆகநீ நோவது\nபேதமை வாழியென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க" } ] }, { "kuralNo": 1243, "kural": "இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்\nபைதல்நோய் செய்தார்கண் இல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?" } ] }, { "kuralNo": 1244, "kural": "கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்\nதின்னும் அவர்க்காணல் உற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன" } ] }, { "kuralNo": 1245, "kural": "செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்\nஉற்றால் உறாஅ தவர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?" } ] }, { "kuralNo": 1246, "kural": "கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்\nபொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?" } ] }, { "kuralNo": 1247, "kural": "காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே\nயானோ பொறேனிவ் விரண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது" } ] }, { "kuralNo": 1248, "kural": "பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்\nபின்செல்வாய் பேதையென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்" } ] }, { "kuralNo": 1249, "kural": "உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ\nயாருழைச் சேறியென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?" } ] }, { "kuralNo": 1250, "kural": "துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா\nஇன்னும் இழத்தும் கவின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது" } ] } ] }, { "aadhikaramNo": 126, "adhikaramName": "நிறையழிதல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1251, "kural": "காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்\nநாணுத்தாழ் வீழ்த்த கதவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது" } ] }, { "kuralNo": 1252, "kural": "காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை\nயாமத்தும் ஆளும் தொழில்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது" } ] }, { "kuralNo": 1253, "kural": "மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்\nதும்மல்போல் தோன்றி விடும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்" } ] }, { "kuralNo": 1254, "kural": "நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்\nமறையிறந்து மன்று படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே" } ] }, { "kuralNo": 1255, "kural": "செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்\nஉற்றார் அறிவதொன் றன்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை" } ] }, { "kuralNo": 1256, "kural": "செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ\nஎற்றென்னை உற்ற துயர்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே" } ] }, { "kuralNo": 1257, "kural": "நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்\nபேணியார் பெட்ப செயின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை" } ] }, { "kuralNo": 1258, "kural": "பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்\nபெண்மை உடைக்கும் படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?" } ] }, { "kuralNo": 1259, "kural": "புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்\nகலத்தல் உறுவது கண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்" } ] }, { "kuralNo": 1260, "kural": "நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ\nபுணர்ந்தூடி நிற்பேம் எனல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?" } ] } ] }, { "aadhikaramNo": 127, "adhikaramName": "அவர்வயின் விதும்பல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1261, "kural": "வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nநாளொற்றித் தேய்ந்த விரல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன" } ] }, { "kuralNo": 1262, "kural": "இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்\nகலங்கழியும் காரிகை நீத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி" } ] }, { "kuralNo": 1263, "kural": "உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்\nவரல்நசைஇ இன்னும் உளேன்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்" } ] }, { "kuralNo": 1264, "kural": "கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nகோடுகொ டேறுமென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது" } ] }, { "kuralNo": 1265, "kural": "காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்\nநீங்குமென் மென்தோள் பசப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்" } ] }, { "kuralNo": 1266, "kural": "வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்\nபைதல்நோய் எல்லாம் கெட", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்" } ] }, { "kuralNo": 1267, "kural": "புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்\nகண்ணன்ன கேளிர் வரின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது" } ] }, { "kuralNo": 1268, "kural": "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து\nமாலை அயர்கம் விருந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்" } ] }, { "kuralNo": 1269, "kural": "ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்\nவருநாள்வைத் தேங்கு பவர்க்கு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்" } ] }, { "kuralNo": 1270, "kural": "பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்\nஉள்ளம் உடைந்துக்கக் கால்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?" } ] } ] }, { "aadhikaramNo": 128, "adhikaramName": "குறிப்பறிவுறுத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1271, "kural": "கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்\nஉரைக்கல் உறுவதொன் றுண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்" } ] }, { "kuralNo": 1272, "kural": "கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்\nபெண்நிறைந்த நீர்மை பெரிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்" } ] }, { "kuralNo": 1273, "kural": "மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை\nஅணியில் திகழ்வதொன் றுண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது" } ] }, { "kuralNo": 1274, "kural": "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை\nநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது" } ] }, { "kuralNo": 1275, "kural": "செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்\nதீர்க்கும் மருந்தொன் றுடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது" } ] }, { "kuralNo": 1276, "kural": "பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி\nஅன்பின்மை சூழ்வ துடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே" } ] }, { "kuralNo": 1277, "kural": "தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்\nமுன்னம் உணர்ந்த வளை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!" } ] }, { "kuralNo": 1278, "kural": "நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்\nஎழுநாளேம் மேனி பசந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே" } ] }, { "kuralNo": 1279, "kural": "தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி\nஅஃதாண் டவள்செய் தது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்" } ] }, { "kuralNo": 1280, "kural": "பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்\nகாமநோய் சொல்லி இரவு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது" } ] } ] }, { "aadhikaramNo": 129, "adhikaramName": "புணர்ச்சி விதும்பல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1281, "kural": "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்\nகள்ளுக்கில் காமத்திற் குண்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்" } ] }, { "kuralNo": 1282, "kural": "தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்\nகாமம் நிறைய வரின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்" } ] }, { "kuralNo": 1283, "kural": "பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்\nகாணா தமையல கண்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை" } ] }, { "kuralNo": 1284, "kural": "ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து\nகூடற்கண் சென்றதென் னெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு" } ] }, { "kuralNo": 1285, "kural": "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்\nபழிகாணேன் கண்ட இடத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்" } ] }, { "kuralNo": 1286, "kural": "காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்\nகாணேன் தவறல் லவை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை" } ] }, { "kuralNo": 1287, "kural": "உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்\nபொய்த்தல் அறிந்தென் புலந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?" } ] }, { "kuralNo": 1288, "kural": "இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்\nகள்ளற்றே கள்வநின் மார்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு" } ] }, { "kuralNo": 1289, "kural": "மலரினும் மெல்லிது காமம் சிலரதன்\nசெவ்வி தலைப்படு வார்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்" } ] }, { "kuralNo": 1290, "kural": "கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்\nஎன்னினும் தான்விதுப் புற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்" } ] } ] }, { "aadhikaramNo": 130, "adhikaramName": "நெஞ்சொடு புலத்தல்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1291, "kural": "அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே\nநீயெமக் காகா தது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?" } ] }, { "kuralNo": 1292, "kural": "உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்\nசெறாஅரெனச் சேறியென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே" } ] }, { "kuralNo": 1293, "kural": "கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ\nபெட்டாங் கவர்பின் செலல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?" } ] }, { "kuralNo": 1294, "kural": "இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே\nதுனிசெய்து துவ்வாய்காண் மற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை" } ] }, { "kuralNo": 1295, "kural": "பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்\nஅறாஅ இடும்பைத்தென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்" } ] }, { "kuralNo": 1296, "kural": "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்\nதினிய இருந்ததென் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது" } ] }, { "kuralNo": 1297, "kural": "நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்\nமாணா மடநெஞ்சிற் பட்டு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்" } ] }, { "kuralNo": 1298, "kural": "எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்\nஉள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்" } ] }, { "kuralNo": 1299, "kural": "துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய\nநெஞ்சந் துணையல் வழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?" } ] }, { "kuralNo": 1300, "kural": "தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய\nநெஞ்சம் தமரல் வழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்" } ] } ] }, { "aadhikaramNo": 131, "adhikaramName": "புலவி", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1301, "kural": "புல்லா திராஅப் புலத்தை அவருறும்\nஅல்லல்நோய் காண்கம் சிறிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக" } ] }, { "kuralNo": 1302, "kural": "உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது\nமிக்கற்றால் நீள விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்" } ] }, { "kuralNo": 1303, "kural": "அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்\nபுலந்தாரைப் புல்லா விடல்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்" } ] }, { "kuralNo": 1304, "kural": "ஊடி யவரை உணராமை வாடிய\nவள்ளி முதலரிந் தற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்" } ] }, { "kuralNo": 1305, "kural": "நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை\nபூவன்ன கண்ணார் அகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்" } ] }, { "kuralNo": 1306, "kural": "துனியும் புலவியும் இல்லாயின் காமம்\nகனியும் கருக்காயும் அற்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்" } ] }, { "kuralNo": 1307, "kural": "ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது\nநீடுவ தன்றுகொல் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு" } ] }, { "kuralNo": 1308, "kural": "நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்\nகாதலர் இல்லா வழி", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?" } ] }, { "kuralNo": 1309, "kural": "நீரும் நிழல தினிதே புலவியும்\nவீழுநர் கண்ணே இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்" } ] }, { "kuralNo": 1310, "kural": "ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்\nகூடுவேம் என்ப தவா", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்" } ] } ] }, { "aadhikaramNo": 132, "adhikaramName": "புலவி நுணுக்கம்", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1311, "kural": "பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்\nநண்ணேன் பரத்தநின் மார்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்" } ] }, { "kuralNo": 1312, "kural": "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை\nநீடுவாழ் கென்பாக் கறிந்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து" } ] }, { "kuralNo": 1313, "kural": "கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்\nகாட்டிய சூடினீர் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்" } ] }, { "kuralNo": 1314, "kural": "யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்\nயாரினும் யாரினும் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்" } ] }, { "kuralNo": 1315, "kural": "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்\nகண்நிறை நீர்கொண் டனள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று நான் சொன்னவுடன் “அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?” எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி" } ] }, { "kuralNo": 1316, "kural": "உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்\nபுல்லாள் புலத்தக் கனள்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "“உன்னை நினைத்தேன்” என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;” அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?” எனக்கேட்டு “ஏன் மறந்தீர்?” என்று அவள் ஊடல் கொண்டாள்" } ] }, { "kuralNo": 1317, "kural": "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்\nயாருள்ளித் தும்மினீர் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?" }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ “யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்” என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்" } ] }, { "kuralNo": 1318, "kural": "தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்\nஎம்மை மறைத்திரோ என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் “ஓ” உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?” எனக் கேட்டு அழுதாள்" } ] }, { "kuralNo": 1319, "kural": "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்\nஇந்நீரர் ஆகுதிர் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் “ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?” என்று சினந்தெழுவாள்" } ] }, { "kuralNo": 1320, "kural": "நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்\nயாருள்ளி நோக்கினீர் என்று", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்" } ] } ] }, { "aadhikaramNo": 133, "adhikaramName": "ஊடலுவகை", "paal": "காமத்துப்பால்", "kurals": [ { "kuralNo": 1321, "kural": "இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்\nவல்ல தவரளிக்கும் ஆறு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது" } ] }, { "kuralNo": 1322, "kural": "ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி\nவாடினும் பாடு பெறும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்" } ] }, { "kuralNo": 1323, "kural": "புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு\nநீரியைந் தன்னார் அகத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?" } ] }, { "kuralNo": 1324, "kural": "புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்\nஉள்ளம் உடைக்கும் படை", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது" } ] }, { "kuralNo": 1325, "kural": "தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்\nஅகறலின் ஆங்கொன் றுடைத்து", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது" } ] }, { "kuralNo": 1326, "kural": "உணலினும் உண்ட தறலினிது காமம்\nபுணர்தலின் ஊடல் இனிது", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்" } ] }, { "kuralNo": 1327, "kural": "ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\nகூடலிற் காணப் படும்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்" } ] }, { "kuralNo": 1328, "kural": "ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\nகூடலில் தோன்றிய உப்பு", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?" }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?" } ] }, { "kuralNo": 1329, "kural": "ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப\nநீடுக மன்னோ இரா", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக" } ] }, { "kuralNo": 1330, "kural": "ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்\nகூடி முயங்கப் பெறின்", "explanations": [ { "author": "மு.வரதராசன்", "explanation": "காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்." }, { "author": "சாலமன் பாப்பையா", "explanation": "காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே." }, { "author": "மு.கருணாநிதி", "explanation": "ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்" } ] } ] } ]