"மொழி, மொழியின் கட்டமைப்புக்கள் உலகை பிரதிபலிக்கின்றது "மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளை பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றது; ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கூட கட்டுப்படுத்தலாம் விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள் தனியாளாக நின்று கலக்குறீங்க நாங்களும் வந்து சேர்ந்துட்டம் :D ==இப்பொழுது எழுத்துகளின் அளவுகள் சரியா உள்ளன பிற செய்திகள்== தட்டச்சுக்கருவியை இணைக்க ஐந்து கோப்புகளில் மாற்றம் தேவை: புதிதாக மூன்று மீடியாவிக்கி பக்கங்கள் உருவாக்க வேண்டும். விக்கிப்பீடியாவில் உள்ள மூலங்கள்: பின்வரும் இரு பக்கங்களில் ஏற்கனவே விக்கி செய்திகளில் இருந்தால் கூடுதல் உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டும். இல்லையெனின் உருவாக்க வேண்டும். தவறுதலாக இர்பான் பதான் பக்கத்தை விக்கி செய்தியில் பதிவேற்றம் செய்துவிட்டேன். தயவுசெய்து நீக்கிவிடவும் புன்னியாமீன் தம்பி, சில வேலைகள் காரணமாகவும், இந்தியா செல்லவுள்ளமையினாலும் 16 ஜூலை 2011 வரை செய்திகள் தரமுடியாதிருக்கும் புன்னியாமீன் 2 ஜூலை 2011 நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா-மெக்சிகோ மின்தடை, எகிப்தில் இஸ்ரேல் தூதரக தாக்குதல் மற்றும் சில செய்திகளை எழுதலாம் என்றால் அவற்றை இன்றைய தேதி உள்ள பகுப்பில் இடுவதா அல்ல செய்தி நிகழ்ந்த அன்றைய தேதி பகுப்பில் இடுவதா? அறிவியலும் தொழில்நுட்பமும் என்று வலைவாசலை நகர்த்தி விடவும் நான் இன்று செய்திகளில் பங்களிக்கலாம் என்று வந்து பலவற்றில் தேடி கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கிய ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார் இவ்வாறு உருவாக்கலாம் என ஆரம்பித்தேன் ஆனால் ஆரம்பிக்கும்போதே வணக்கம் kanags Editor, Auto review அனுமதி வழங்கியமைக்கு மிக்க நன்றி மற்றொரு வேண்டுகோள்.. பிரேசில் விபத்துக் குறித்த செய்திக் கட்டுரையில் இற்றை செய்தேன். அதன் பிறகு புதிய மூலத்தை சேர்க்கும்போது முதலில் செய்யப்பட்ட இற்றை, திறனாய்வு செய்யப்படவேண்டியது இருப்பதால் புதிய இற்றை எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்ன செய்வது எடிட்டர்' அணுக்கம் பெறுவது ஒன்றுதான் வழியா? விளக்கவும் மா. செல்வசிவகுருநாதன் 13:54, 28 ஜனவரி 2013 (UTC) # ஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்கும் இடையே இரண்டு 'வெற்று வரி'களை விடுவதன் நோக்கம் என்ன? # “ ” எனும் குறிக்குப் பதிலாக எனும் குறியினை நீங்கள் பயன்படுத்தியதன் காரணம் என்ன மா. செல்வசிவகுருநாதன் 15:00, 31 ஜனவரி 2013 (UTC) 'பிரேரணை' எனும் சொல்லை இலங்கைத் தமிழ் வழக்கில் பயன்படுத்தி வருவதனை மிக அண்மையில் கவனித்தேன் resolution தீர்மானம்) என்பதனைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுதலைப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் தரும் பொருளினை அறிந்து கொள்ள விரும்புகிறேன். விளக்குவீர்களா? விக்கிசெய்திகள் தானியங்கி மூலமாக விக்கிப்பீடியாவின் வலைவாசல் பக்கங்களில் இற்றையாதல் [[2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி எனும் கட்டுரை, முதற்பக்கத்தில்-அண்மைய செய்திகளில் மே 30, 2013 என்பதன்கீழ் பதிப்பாகியிருந்தது. அதிகாரம் அதிகாரி போன்ற சொற்களைப் போலவே அதிகாரப்பூர்வம் என்பதும் வடமொழியிலிருந்து வந்தது என்பதனை நினைவூட்டியதற்கு நன்றி! *தமிழ்ச் சொல்லாக இல்லாததால் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை எனும் தங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன். *தகவல் பரிமாற்றத்திற்காக இத்தகவல்களை இங்கு தந்துள்ளேன்! அண்மைய செய்திகளில் செய்த திருத்தம் குறித்து செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை * அங்கீகாரத்துக்கும், உதவிக்கும் நன்றி! வார இறுதியில் இன்னொரு கட்டுரையை படைக்க முயற்சி செய்கிறேன். கீழ்க்காணும் தேவையற்ற தலைப்புகளை நீக்கி உதவுங்கள்: டிசம்பர் இசை விழா சென்னையில் இன்று தொடங்குகிறது]] டிசம்பர் இசை விழா 2014: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது]] முதற் பக்கத்தில் "செய்திச் சுருக்கம்" அல்லது "தலைப்புச் செய்திகள்" எனும் பகுதியை ஆரம்பிக்கலாமா? இந்தப் பகுதியை தினந்தோறும் ஒருமுறையாவது என்னால் இற்றை செய்ய இயலும். கட்டுரை எழுத எனக்கு நிறைய நேரம் தேவைப்படும்; ஆனால் செய்திச் சுருக்கங்களை தருவது எளிது. அன்பு தோழமைக்கு அடியேன் வணக்கம் விக்கிசெய்திகள் பக்கத்திற்கு வழிகாட்டியமைக்கும், அறிமுகப்படுத்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வணக்கம் தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது கருத்துக் கணிப்பில் தகவல் எனும் கட்டுரையில், யூடியூப் நிகழ்படங்களின் இணைப்புகளையும் மூலத்தில் குறிப்பிட்டுள்ளேன். விக்கி நடைமுறைகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? நீங்கள் மேலே குறிப்பிட்ட விக்கியில் செயற்பாடற்றோர் தொகுதியில் உள்ளடங்குகிறீர். அந்த விக்கியிடம் தனக்குச் சொந்தமான உரிமை மீள்நோக்கு இல்லாததால், உலகளாவிய விக்கிக்கு இது பொருத்தமானது. திருத்தம் இருந்தால் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும். இன்று முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் என்னும் பண்டிகை நாளாகும். சதாம் உசேன் தூக்கிலிட்ட நாளும் நேரமும் முஸ்லிம்களை அதிர்ச்சியடையவைத்தது. அதாவது முஸ்லிம்கள் பெருநாள் காலை தொழுகைக்கு செல்லும் நேரத்தில் இது நடத்தப்பட்டது. பொதுவாக இராக்கின் சட்டப்படி பண்டிகை நாட்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதில்லை. உலகில் அதிகாரப்பூர்வமாக ஒரு நாட்டின் முன்னைய தலைவர் ஒருவரைத் தூக்கிலிடுவதை முதன்முறையாக வீடியோ மூலம் பதிவு செய்து ஒளிபரப்பட்டது இஸ்லாமிய சமூகங்களை அதிர்சியடையவும் ஆத்திரமூட்டவும் செய்தது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் "சதாம் உசேன் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே தூக்கிலிடப்பட்டதாகக்" கூறினார். சதாம் உசேனை தூக்கிலிடும்பொழுது செல்பேசி வழியாக வீடியோ எடுத்தது தொடர்பாக ரானுவ அதிகாரி ஒருவர் பின்னர் கைது செய்யப்பட்டார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் (கிளிக் பண்ணுங்க உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி செய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இலங்கையில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 6 ஜனவரி 2007 காலை அன்று கன்ரோர் ரக வாகனத்தில் பயணித்த ஐக்கிய நாடுகளில் குடியகல்விற்கான அலுவலகத்தில் (International Organization for Migration) பணிபுரியும் திரு சர்மிலன் அகால மரணமடைந்தார். தமிழ் விக்கிசெய்தி திசம்பர் 1, 2006 முதல் விக்கிமீடியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்புகளை வழங்கலாம். "நாம் ஏன் விக்கி செய்திகள் நிறுத்தப்படக்கூடாது என்று கூறுவதுடன் நிறுத்திவிடவேண்டும்? செய்திகளிலும் journalismஇலும் ஆர்வமுடைய பயனர்கள் செய்திகளை விக்கி செய்திகளில் தோற்றுவித்தால் அது மறுபரிசீலனைக்கு உதவியாக இருக்கும் அல்லவா? நாம் செய்ய வேண்டியதை செய்வோம். நம்மால் இயன்ற மட்டும் கட்டுரைகளை எழுதுவோம். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான் என்பதே என்னுடைய கருத்து. தமிழ் விக்கிகளின் செய்திகள் என்ற உபப்பிரிவொன்று இம்முதற் பக்கத்தில் இருத்தல் நலம். காண்பவர் தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கி மூலம், விக்கி நூல்கள் போன்றவற்றின் நடப்புகளை, இந்த ஒரு இடத்திலே அறிய முடியும். அங்ஙனம் செய்வதால், இங்கு வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகமாகும். மற்ற தமிழ் விக்கிகளையும் ஒருங்கிணைக்க ஏதுவாகும். தமிழ் விக்கிசெய்திகள் செய்தியோடை ஆங்கில விக்கிசெய்திகளுக்குச் செல்கின்றதே நோண்டியதில் கிடைத்த இரண்டு இணைப்புகள். தொழில்நுட்ப அறிவுடை சுந்தர் போன்றோரை நாடினால் மீதியை நாங்களே செய்யலாம் என்று நினைக்கின்றேன். நன்றி மாகிர், பயனுள்ள புள்ளிவிபரங்கள். views/hr கணக்கில் 22வது நிலையில் உள்ளோம். இவற்றியும் பாருங்கள்: "விக்கிசெய்தி பற்றி" என்னும் தலைப்பில் உள்ள பின்வரும் பனுவலில், கடைசி சொல்லான விளைகிறோம் என்பதை விழைகிறோம் என மெய்ப்புத்திருத்த விழைகின்றேன். **சித்தர்கள், தோல் நோய், பக்க விளைவு மருந்தால் உண்டாகும் பாதிப்பு தீர மருத்துவம் பக்க விளைவுகள் குணமாக மூலிகை மருத்துவம். அலோபதி மாத்திரை பக்க விளைவுகள், பஷாண மருத்துகளினால் உண்டாகும் பக்க விளைவுகள் குணமாக மருத்தும், பக்க விளைவுகளை குணாமாக்கும் மூலிகைகள், பஷாணங்களை முறிக்கும் மூலிகைகள், பசான மருந்து, ரசாயான உணவு மற்றும் அலோபதி மருத்துவத்தால் உண்டாகும் பாதிப்புகள் சரியாக மருத்துவம். மேற்க்கூறியவற்றில் வகைக்கு 10 கிராம் எடுத்து 200 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை 3 நாள் குடிக்க அரிப்பு தடிப்பு கை கால் முகம் வீக்கம் தீரும்.இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசாயணங்களை சிறு நீர் மூலமாக வெளியேற்றும். நாம் உண்ணும் உணவுகளில் கூட இன்று இரசாயனங்கள் அதிகபடியாக கலந்துள்ளன இவைகளினால் சிலருக்கு உடலில் ஒவ்வாமை ஏற்படும். இதனை தவிர்க்க மேற்கூறிய முறையில் கசாயம் செய்து 3 மாதத்திற்க்கு ஒரு முறை சாப்பிட்டு வர பக்க விளைவுகள் இன்றி வாழ வழி செய்யும். இன்னும் இருவாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், 10 மில்லியன் கள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இருவேறு முக்கிய அரசியல் கட்சிகளிடையே நடக்கும் பிரச்சினைகளை காரணம் காட்டி ஜனாதிபதி இன்று அவசர நிலை பிரகடனம் செய்தார். 18 ஜனவரி 2007 மாலை 5:30 மணியளவில், இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரப்பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டு அவரது உடல் கழிவுநீர் போகும் கானில் வீசப்பட்டுள்ளது. ==செய்திகள் எழுதும் போது கவனிக்க வேண்டியவை== * date வார்ப்புருவை கட்டுரையில் ஆரம்பத்தில் மட்டும் தரவும். வேறு இடங்களில் தர வேண்டாம். இந்த வார்ப்புரு எந்த நாளில் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க மட்டுமே உள்ளது. அத்துடன் அதனுடன் இணைந்து அத்தேதியின் பகுப்புக்குள்ளும் அது தானியங்கியாக இடும். * சில நாடுகளுக்கு தகவல் வார்ப்புருக்களை உருவாக்கியிருக்கிறேன். அதனையும் தேதி வார்ப்புருவுக்குக் கீழ் சேர்த்து விடுங்கள். * மூலச் செய்திகளுக்கான இணைப்பு கட்டாயம் தரப்பட வேண்டும். செய்தி வெளி வந்த தேதி, செய்திப்பத்திரிகையின் பெயர் போன்றவை தரப்படுதல் வேண்டும். இலங்கையின் மிகப்பெரிய அமைச்சரவையில் இருந்து மூன்று மூத்த அமைச்சர்களான மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்க, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்சவால் தனக்குரிய அதிகாரத்தைப்பயன்படுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் வகித்துவந்த அமைச்சர் பதவிகள் அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையே அதிபரின் நடவடிக்கைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். 25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா. கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியில் சிலர், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர். உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19 ஹேமலதா (19 காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்) ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார். சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா. 25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தவிர சொத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும். (ஆக மொத்தம் மரணதண்டனையோடு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் 59 ஆயிரம் அபராதமும்) டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத்துடன் சட்டவிரோத கும்பலுடன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 'சிவாஜி' படம் மே 8-ல் ரிலீஸ்: பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியீடு ரஜினியின் `சிவாஜி' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி யுள்ளது. படப்பிடிப்பு 2005 டிசம்பர் 13-ந்தேதி தொடங் கியது. இறுதி கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள் பலர் ரஜினியுடன் நடித்தனர். படப் பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சிவாஜி படம் தமிழ் புத் தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது. உலக கோப்பை கிரிக்கெட் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல் 28-ல் முடிகிறது. பள்ளி தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு `சிவாஜி'யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். `சிவாஜி' பாடல் கேசட் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படுகிறது. `சிவாஜி' படம் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் என்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற தவிப்பு பட அதிபர்களுக்கு இருக்கிறது. எனவே சிவாஜி ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவோ அல்லது ரிலீசாகி சில மாதங் கள் கழித்தோ இதர படங்களை ரிலீஸ் செய்ய சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட் டுள்ளனர். `சிவாஜி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் ரிசீலாகிறது. இதற் காக 500 பிரிண்ட்கள் போடப் படுகின்றன. அம்மாநில சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி, மோகன் லால், படங்கள் விலைபோகும் தொகையை விட இது அதிகம். இத்தாக்குதல் பற்றி இலங்கை தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையம் வெளியிட்ட அறிக்கையில் "நிலமை முழுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.விடுதலைப்புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் அடைந்து வரும் தோல்விகளை மறைக்கவே இப்படியான கோழைத்தன்மான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.இதனை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம் புலிகளின் இராணுவ பேச்சாளரின் கருத்து வெளியிடும்போது "தமிழ் சிவிலியன்களை இலங்கை அரசின் வான் குண்டுதாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே,இதே பாணியிலான தக்குதல் மேலும் தொடவே செய்யும்" கூறினார். மேற்படி தக்குதலில் அருகே அமைந்துள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எந்த வோரு சேதமும் ஏற்படவில்லை என தெரியவரிகின்றது. இதற்கு முன்னரும் 2001 மாண்டிலும் கட்டுநாயக்க விமான படைத்தளமும்,விமான நிலயமும் தரைவழியான ஊடறுப்புத் தாக்குதலில் மோசமான அழிவிற்கு உள்ளானது. உலகிலே சொந்தமாக விமானப்படையினை வைத்திருக்கும் ஒரே ஒரு கெரில்லா அமைப்பாக தற்போது விடுதலைப்புலிகள் இருக்கின்றனர். விக்கிசெய்திக்கு உங்களை வரவேற்கிறோம் விக்கிசெய்தி உங்களால் நீங்களே கண்டு தொகுத்து எழுதும் செய்திக்கட்டுரைகள் அடங்கிய செய்தியூடகம். இங்கு, நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவர் எழுதியதே. இங்குள்ள எந்த ஒரு கட்டுரையையும் நீங்கள் திருத்த முடியும், அல்லது விரிவாக்க முடியும் ஒரு செய்தியில் நீங்களே சம்பந்தப்பட்டு இருந்தால், நடுநிலைமை கருதிப் புறவய நோக்கில் எழுதுவதற்கு, வேறு ஒரு விக்கிப்பயனரை நாடவும் முதலில் சொல்ல வேண்டியது, விக்கிசெய்தியானது ஒரு நடுநிலைத்தன்மையுடன் எழுதப்படுவதாகும். தங்கள் சொந்தக் கருத்துகளை தொகுக்க வேண்டாம். ஒரு செய்தி தொடர்பாகப் பல்வேறு நம்பத் தகுந்த ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்து, ஒரு தொகுப்புச் செய்திக் கட்டுரையை எழுதலாம் ஊடகங்களை மேற்கோளாகக் காட்டுவது மிகவும் தேவையானது ஒரு செய்தி நிகழ்வைப் பற்றி நீங்கள் நேரடியாகப் பதிவு செய்யலாம் இயன்றவரை தகுந்த ஆதாரங்களை வழங்கவும் மேலும், உங்களின் 'மூலச் செய்தி' என்றும் குறிப்பிடவும் அனைத்து செய்திகளும் ஒரு கூட்டுமுயற்சியாகும். எந்த செய்தியை ஒருவர் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்பதில்லை. எல்லோரும் எல்லாச் செய்திகளையும் தொகுக்கலாம். தங்களிடம் விக்கிசெய்தி பின்வரும் அறிவுரையின்படி கட்டுரைகளை எழுத வேண்டுகிறது. நீங்கள் விரும்புவதாக இருப்பதை தங்களுக்கு விருப்பம் உண்டென்றால் அதேப் போன்று பிறருக்கும் விருப்பமுள்ளதாக இருக்கும் என்பதால் அவ்வகையானவற்றை எழுதுங்கள். சரிவர தகவல்கள் எழுதப்படாமல் இருப்பதை ஒரு சர்ச்சையைப் பற்றிய சரியாக எழுதப்படாமல் இருப்பதை நீங்கள் எழுதுங்கள். தங்களுக்கு முக்கியமென தோன்றுவதை நீங்கள் எழுதும் செய்திகள் தங்கள் நகரத்தில் மட்டும் உள்ளதோ, அல்லது உலகளாவிய செய்தியோ எதுவானாலும் தங்களுக்கு முக்கியமென தோன்றினால் அதனை எழுதலாம். இங்கு எழுதப்பட்டிருக்கும் செய்திகளையும் மேலும் வளர்த்து எடுக்க தங்களை வேண்டுகிறோம். இங்கு எழுதப்பட்டிருக்கும் செய்திகளில் ஏதேனும் தவறான செய்திகள் உண்டென்றாலும் அதனை திருத்த வேண்டுகிறோம். முழு அறிமுக தளமான விக்கிசெய்தி:அறிமுகம் என்பதைப் படிக்கவும். விக்கிசெய்தி கட்டுரைகள் எப்படி எழுதப்படுகிறது என்பதை அறிய விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும். ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலையில் நடைப்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 33 பேர் இறந்தும் 15 பேர் வரையில் படுகாயமும் அடைந்தனர். காவல்துறையினரின் அறிக்கையின்படி கொலையாளி தற்கொலை புரிந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லோகநாதன் என்ற பேராசிரியரும் இறந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டதாகவும் 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்]] பலாலி இராணுவ தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்]] இந்தியாவின் முதல் வணிகரீதியான செயற்கைக்கோள் ஏவல்]] புவியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு]] வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு, 33 பேர் படுகொலை]] ''இக்கட்டுரை விக்கிசெய்திகளின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. கருத்துக்களை இதன் பேச்சு PAGENAME உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும் [[Category:தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகள் PAGENAME *உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம். *உங்களுக்கென பிரத்யேக பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுக்கு மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது. *உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி *பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இற்றைப்படுத்துதற்கும், ஓரவஞ்சனையற்ற தொடர்புள்ள தரமான பொழுதுபோக்குடைதான அடைவிற்கும் விக்கிசெய்திகள் குடிமக்களே செய்தியைப்பற்றி நன்கு அறிவார்கள் என்ற நம்புதலினால் பகிர்ந்த இதழியல் என்ற திட்டத்தை பரப்புகிறது. தங்களை அன்புடன் விக்கிசெய்திகள் வரவேற்கவும், தங்கள் விருப்பத்தினடிப்படையில் இங்கு பங்களிக்க அழைக்கவும் செய்கிறது. விக்கிசெய்திகள் திட்டம் என்பது எவரும் சொந்த அனுபவத்திலோ அல்லது வேறு மூலங்களிலிருந்து தொகுக்கவோ கூடிய சிறிய அல்லது பெரிய செய்தி அறிக்கைகளைக் கொடுக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இலவச அடைவுச் செய்திகளின் மூலம் ஆகும். விக்கிசெய்திகள் செய்திகளின் சூழல் ஊடகப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு நிறுவப்பட்டது. விக்கிசெய்திகள் மூலச்செய்திகளையும் தாண்டி பலதரப்பட்ட செய்திகளையும் நடுநிலைமையுடன் இலவசமாக விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. செய்திகள் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்காவிடிலும், இது ஏற்கனவே பயனுள்ளதாகவே இருக்கிறது ஏனெனிலில் நாம் கூட்டுமுயற்சியினால் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி கண்டுள்ளோம். இது மேலும் படிப்படியாக வளருக்கூடியது. பல சவால்கள் உள்ளன. இன்று விக்கிபீடியா மற்றும் பிற விக்கியூடகங்கள் என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளதோ அதனையே விக்கிசெய்திகளும் கொண்டதாகும்:நடுநிலைமை, இலவச அடைவு, வெளிப்படையான முடிவெடுக்கும் செயற்பாடுகள். கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்]] இலங்கையில் மூன்று அமைச்சர்களின் பதவி பறிப்பு]] * இணைய ஆர்வம்: தமிழில் உள்ளடக்க உருவாக்கம் நற்கீரன், உங்கள் அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். மேலும் சில கருத்துகள்: *விக்கியில் எழுதுவது போல மேற்கோள் காட்டி செய்தி எழுதுவதில்லை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செய்தி ஊடகங்களில் இரு செய்திகளைத் திரட்டி அவற்றின் சாராம்சத்தைத் தரலாம். மேற்கோள்களைக் கட்டுரைக்குள் தராமல் மூலம் என்ற உப பகுப்பில் தர வேண்டும். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் இடம்பெற்ற மோதல்களில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். மோதல்களின் போது 45 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 30 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர்ந்து இடம்பெற்ற இம்மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் முன்னரங்கு நிலைகள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தாக்குதல்களை நடத்தியவாறு புலிகளின் முன்னரங்கு நிலைகளை நோக்கி படையினர் முன்னகற முயற்சித்த போது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர். பதில் தாக்குதல்களை அடுத்தே இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் ஆரம்பித்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இம்மோதல்களை அடுத்து அப் பகுதிகளில் படையிடினரால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் மோதல்; 10 படையினர் பலி]] கிழக்கிலங்கை மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களையும் ஐக்கிய விடுதலை முன்னணி 4 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: பல வருடங்களாக புலிகளின் அச்சுறுத்தலுக்கு சிறிலங்கா உள்ளாகியுள்ளது. இந்த நீண்டகால அச்சுறுத்தலை முழுமையாகத் துடைத்தெறியும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. புலிகள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அனைத்துலக சக்திகள் மூலமும் உள்நாட்டிலுள்ள சில சக்திகள் மூலமும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தற்காலிக போர் நிறுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பாதுகாப்புப் பெற முயற்சிக்கின்றனர். எத்தகைய அழுத்தங்கள் வந்த போதிலும் புலிகளுடன் இன்னொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மகிந்த அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கு இருந்தாலும் போதிலும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் உதவியுடன் அவரைத் தேடியழிக்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இந்தப் பணியை எமது படையினர் விரைவில் செய்து முடிப்பார்கள் என்றார் அவர். திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்த சகல வீதிச் சோதனைச்சாவடிகளும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்பு அகற்றப்பட்டிருநதது, திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது]] உலகம் தோன்றியது எப்படி என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வெடிப்பு, பின் அணுக்கள் உருவாகி அவற்றை சேர்த்த பொருள் எது என்பதை அறியும் ஆராய்ச்சியில் 85 நாடுகளை சேர்ந்த 8500 விஞ்ஞானிகள் சுவிற்சர்ந்லாந்தின் ஜெனிவா அருகில் இருக்கும் பிரம்மாண்ட "செர்ன்" எனும் ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர். இதற்கு பல எதிர்புக்கள் கிழம்பிய போதும், பரிசோதனையின் முதல் படி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆயினும் இரண்டு பிரிவுகளாகச் செயற்படும் விஞ்ஞானிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூமிக்கடியில் நடந்த அணு சோதனையில் பதிவான தகவல்கள் சிலரால் அழிப்பு]] s:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில் 3மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பு நிகழ்வுகள் தவறாமல் இற்றைப்படுத்தப்படுகின்றன. அவற்றையும் பார்க்கவும்: தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயற்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம் இந்தச் செயற்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது * முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும் குறிப்பாக தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து * மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயற்திடமாக அமையும். அவர்கள் எல்லா போக்குவரத்தையும் இரண்டாம் நிலை தரவு மையத்திற்கு செவ்வாய், செப்டம்பர் 1st 2020 அன்று மாற்றுவர். நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர் இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும் அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும் இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். *செப்டம்பர் 1, 2020 வாரத்தில் மூல முடக்கம் இருக்கும் அத்தியாவசியமற்ற மூல பயன்கொள் நடக்காது. அனைவருக்கும் வணக்கம். அனைத்தும் தழுவிய நடத்தை நெறியின் (Universal Code of Conduct) வரைவு ஒன்றை உங்கள் பரிசீலனைக்காகவும் பின்னூட்டத்திற்காகவும் பகிர்வதில் பரவசமடைகிறோம். முன்னதாக இந்த ஆண்டில் Wikimedia அறக்கட்டளை அறங்காவலர் குழு (Wikimedia Foundation Board of Trustees) இதைக் கட்டாயமாக்கியது. வரைவின் எந்தப் பகுதிகள் உங்களுக்கு அல்லது உங்கள் பணிக்குச் சவால்களை விடுக்கும் என்று UCoC வரைவாக்கக் குழு அறிய விரும்புகிறது. இந்த வரைவில் இடம்பெறத் தவறியது என்ன? தயவுசெய்து உரையாடலில் சேர்ந்துகொள்ளுங்கள், சேர ஆர்வம் இருக்கக்கூடிய மற்றவர்களையும் அழையுங்கள். அவர்கள் எல்லா போக்குவரத்தையும் முதல் நிலை தரவு மையத்திற்கு செவ்வாய், அக்டோபர் 27 2020 அன்று மறு-மாற்றம் செய்வர். நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர் இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும் அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும் இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். *அக்டோபர் 26, 2020 வாரத்தில் மூல முடக்கம் இருக்கும் அத்தியாவசியமற்ற மூல பயன்கொள் நடக்காது. சமூக தொழில்நுட்ப குழு அனுபவம் வாய்ந்த விக்கிமீடியா தொகுப்பாளர்களுக்கான கருவிகளில் கவனம் செலுத்துகிறது. நீங்கள் எந்த மொழியிலும் செயற்குறிப்புகளை எழுதலாம், அவற்றை நாங்கள் உங்களுக்காக மொழிபெயர்ப்போம். உங்கள் செயற்குறிப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம், நன்றி! ஆய்வில், அனுபவமிக்க தொகுப்பாளர்களுக்கான புதிய மற்றும் மேம்பட்ட கருவிகளுக்கான விருப்பங்கள் சேகரிக்கப்படுகின்றன. வாக்களிப்புக்கு பின்னர், உங்கள் விருப்பங்களை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நாங்கள் மிகவும் பிரபலமானவற்றிலிருந்து தொடங்குவோம். உங்கள் வாக்குகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நன்றி! இந்த முடிவுகள் தொகுக்கும் குழுவிற்கு இந்த கருவி பயனுள்ளதுதான் என்கிற நம்பிக்கையை தரும் நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர் இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும் அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும் இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். *ஜூன் 28 வாரத்தில் மூல முடக்கம் இருக்கும் அத்தியாவசியமற்ற மூல பயன்கொள் நடக்காது. அவர்கள் எல்லா போக்குவரத்தையும் முதல் நிலை தரவு மையத்திற்கு செவ்வாய், செப்டம்பர் 14 2021 அன்று மறு-மாற்றம் செய்வர். நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். 2021 அக்டோபர் 12 முதல் 2021 அக்டோபர் 24 வரை வாக்களிக்கலாம் இந்தக் குழுவில் மொத்தம் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள்: ஆன்லைன் சமூகத்தினர் 7 உறுப்பினர்களையும் 6 உறுப்பினர்களை விக்கிமீடியாவின் மற்ற நிறுவனங்களில் இருந்து இதேபோன்றதொரு செயல்முறை மூலமாகவும் தேர்ந்தெடுப்பர்.விக்கிமீடியா நிறுவனம் 2 உறுப்பினர்களை நியமிக்கும்.2021 நவம்பர் முதல் திகதிக்குள் குழுவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். தேர்தல் குழுவின் புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிவிப்பு பரிசீலனைக்காக பெயர்களை சமர்ப்பித்த சமூக உறுப்பினர்களுக்கு நன்றி. தேர்தல் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஜானகபெரேராவின் மனைவி, வைத்தியகாலாநிதி ஜோன்புள்ளே, அவரது மனைவி, உள்ளிட்ட ஐக்கியதேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் 80 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது மாகாணத்தின் அதி கூடிய விருப்பு வாக்குகளை ஜானக பெரேரா பெற்றுக் கொண்டிருந்தார். அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஜானக பெரேரா அண்மைக்காலமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வேழவேந்தன் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட உத்தரவு அறிவியல் தமிழ் மன்றம், தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மணவை முஸ்தபா இருந்து வந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து தாமாக முன்வந்து விலகிக் கொள்ள விரும்புவதாக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அந்தக் கடிதத்தை ஏற்று, அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மணவை முஸ்தபா விடுவிக்கப்பட்டு அவரது இடத்தில் புதிய தலைவராக கவிஞர் கா.வேழவேந்தனை நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் "கப்டன் அலி" என்ற வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கப்பலில் உள்ள பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு "கொலராடோ" என்ற சரக்குக் கப்பலில் ஜூலை 6 ம் நாள் இலங்கைக்கு அனுப்பப்படும். கப்பலில் வந்த பொருட்களை இலங்கையில் கையேற்கவிருந்த தமிழ் வர்த்தகரை தடுத்துவைத்திருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு]] சென்னையில் செம்மொழித் தமிழாய்வு கலந்தாய்வுக் கூட்டம்]] ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது]] சவுதியில் வறுமையில் தவிக்கும் 400 இந்தியர்கள்]] மைக்ரோசாப்ட், யாகூ! ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு]] பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு]] கரிபியன் பகுதியில் படகு மூழ்கியதில் பலர் இறப்பு]] வெள்ளை மாளிகையில் ஒபாமா அளித்த விருந்தில் சமோசா]] பெரியார் நூல்களை வெளியிடத் தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு]] தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு விலை போகிறது]] இந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது]] நைஜீரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் பலர் இறப்பு]] 2009 டூர் டி பிரான்சில் லான்சு ஆம்சுடிராங் மூன்றாமிடம்]] தென்னிலங்கையில் இரு முஸ்லிம் மதக்குழுக்கள் மோதல், 3 பேர் இறப்பு]] லொத்தரில் வெற்றி பெற்ற திருடர், காவல்துறை கைது]] உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டது]] இந்தியாவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது]] ஷங்காயில் பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க சீனா முடிவு]] இலங்கையில் உள்ள சுவீடன் தூதரகம் மூடப்படுகிறது]] வொக்ஸ்வாகன், போர்ஷ் கார் நிறுவனங்கள் இணைவு]] டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு சூடானின் எபியாய் பிராந்தியத்தின் எல்லைத் தகராறு முடிவுக்கு வந்தது]] நிலநடுக்கம் நியூசிலாந்தை ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்த்தியது]] வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது]] மாலத்தீவு முதியவர்கள் வலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள்]] தாய்லாந்தில் ஆசியான் பாதுகாப்பு மாநாடு தொடங்கியது]] பழனியில் சூரியகிரகணத்தைக் குறிக்கும் அரிய கல்வெட்டு கிடைத்துள்ளது]] மும்பை தாக்குதலின் முக்கிய எதிரி குற்றங்களை ஒப்புக் கொண்டார்]] விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு]] சமிந்த வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு]] கிழக்கிலங்கையில் செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளை முடித்துக் கொண்டது]] அமெரிக்க செய்தியாளர் வால்ட்டர் குரோங்க்கைட் 92 அகவையில் இறந்தார்]] ஜகார்த்தாவில் குண்டுத் தாக்குதல்: 9 பேர் இறப்பு]] அணிசேரா இயக்கத்தின் 15வது உச்சி மாநாடு நிறைவடைந்தது]] செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆரம்பக்கட்ட பரிசோதனை நிறைவு]] இந்திய இராணுவத்தினர் 500 பேர் இலங்கை வருகின்றனர்]] ஈரானில் பயணிகள் விமானம் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்]] சிங்கப்பூர் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீளூகிறது]] ரஷ்ய மனித உரிமைச் செயற்பாட்டாளர் கடத்தப்பட்டுப் படுகொலை]] தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ தமிழகத்தில் நிதி நகரம், வானூர்தி பூங்கா திட்டம்]] போர்க் குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் அதிபர் மீது விசாரணைகள் ஆரம்பம்]] மூதூர் படுகொலைகளில் இலங்கை இராணுவம் சம்பந்தப்படவில்லை ஜனாதிபதி ஆணைக்குழு]] படகில் சென்ற இலங்கை அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக் கடலில் கைது]] இந்தியாவின் சத்தீசுக்கரில் மாவோயிசத் தீவிரவாதிகள் தாக்குதல்]] மலேசியாவில் கணித அறிவியல் பாடங்கள் மலே மொழியில் கற்பிக்கப்படும்]] குஜராத்தில் நச்சு சாராயம் குடித்து 127 பேர் இறப்பு]] நீரிழிவு நோயை உண்டாக்கும் உடல் எடை தெற்காசியர்களுக்கு 'மாறுபடுகிறது ஸ்பெயினில் இறைச்சி மீது லட்சுமி விளம்பரம்]] இலங்கை வவுனியா வடக்கில் மூன்றாம் கட்ட மீள்குடியேற்றம்]] ரேபீஸ் நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு]] ஈரானில் மேற்குலகத் தலையீடு குறித்து கொமெய்னி எச்சரிக்கை]] அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஒப்புதல்]] ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்-மகிந்த]] போர்க் குற்றங்களுக்காக சூடான் அதிபரைக் கைது செய்ய ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு]] வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்]] புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு]] title= இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது link= இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது synopsis= இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது. இலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னரே வரும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சமஷ்டி தீர்வுக்கு இலங்கையில் இடம் கிடையாது என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தனது அரசியல் தீர்வுத்திட்டமான, ‘’13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தை சற்று மேம்படுத்திய திட்டம்’’ குறித்து பேசியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், தனது மனதில் ஒரு தீர்வுத்திட்டம் இருப்பதாகவும், ஆயினும், அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை விவாதித்து பெற வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். தான் இவற்றுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, இருந்தபோதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்வு செய்யப்பட்ட பின்னரே அது வரும் என்றும் கூறியுள்ளார். அதேவேளை, எதனை கொடுக்க வேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மக்கள் தனக்கு அதற்கான ஆணையை தந்திருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை தான் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உடன்பாட்டுக்காக காத்திருப்பதாக, கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு எது கிடைக்கக் கூடியதாக இருக்கும், எது கிடைக்காது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இலங்கையில் சமஸ்டி முறைமைக்கு இடமில்லை, அனைத்து சமூகமும் ஒன்றித்த வகையில் வாழக்கூடிய ஒரு தீர்வு முறைமையே முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பெருமளவில் குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் ஆகியோருக்கு இடையில் மாஸ்கோவில் நடந்த சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஏழு ஆண்டு காலத்திற்குள், இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒவ்வொருநாடும் 1700க்கும் குறைவான அளவுக்கு கொண்டுவருவதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. 1991 ஆண்டு ஏற்பட்ட ஸ்டார்ட் ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தபிறகு இந்த புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட பாதிப்புக்களை சரிசெய்வதற்கான நோக்கில் இன்றைய மாஸ்கோ சந்திப்பு நடத்தப்பட்டது. title=உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலி link=உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர் synopsis=சிரியாவுக்கு வந்துகொண்டிருந்த உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் உருசிய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது. title= கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது link= கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது synopsis= கத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறையை ஒழித்துள்ளது. சீனாவின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சின்சியாங்க் பிராந்தியத்தில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156-ஆக உயர்ந்துள்ளது. அந்தக் கலவரத்தில் 1,000 பேர் வரை காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது நாளாக இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டது. சின்சியாங் தலைநகரான உரம்கியில் ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை இனக் கலவரம் மூண்டது. உள்ளூர் உய்குரி பழங்குடி இனத்தவர்களுக்கும் ஹான் சீன சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் இப்போது உரம்கி நகருக்கு அப்பாலும் பரவத் தொடங்கியிருப்பதாக சீனத் தகவல்கள் கூறின. இனக் குழுக்களுக்கு இடையிலும் காவல்துறையினருக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரம்கி நகரில் நேற்று ஹான் சீன சமூகத்தினர் கைகளில் ஆயுதங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். உய்குர் பழங்குடியினரின் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊர்வலத்தை நடத்துவதாக சீனர்கள் கூறினர். கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அந்த நகரின் இணைய தொடர்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக உரம்கி நகரில் நேற்று புதிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வயதான பெண்களும் சிறார்களுமாக 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட தங்கள் உறவினர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தின் தொடர்பில் 1434 பேரை போலிசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய ஆர்ப்பாட்டங்கள் நடந்தததாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் உய்குர் இனத்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சின்ஜியாங்கில் மற்ற இடங்களிலும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் அதனைத் தடுப்பதற்காக ஆயுதம் ஏந்திய போலிசார் தெருக்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். குவான்டோங் மாகாணத்திலிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலை ஒன்றில் உய்கர் மற்றும் ஹான் சீனர்களிடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே இவ் வன்முறைச் சம்பவங்கள் தீவிரம் அடைந்தன. சின்சியாங் பகுதியில் கடந்த சில வருடங்களில் குடியேறிய ஹான் சீன சமூகத்ததுக்கு எதிராக, அப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தவர்களான உய்குர் பழங்குடியினர் வன்முறை செயல்களைத் தூண்டியதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. எனினும் அந்தப் பகுதியில் ஹான் சீன சமூகத்தின் அதிகாரத்தால் ஏற்பட்ட விரக்தியே இந்தக் கலவரங்களுக்குக் காரணம் என்று உய்குர் பழங்குடியினர் கூறுகின்றனர். வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களை தாக்கும் ரேபீசு நோய்க்கு அமெரிக்காவின் பிலடெல்பியாவின் தாமஸ் ஜாபர்சன் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர். வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களை தாக்கும் ரேபீசு நோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 55,000க்கும் அதிகமானவர்கள் இறக்கிறார்கள். இந்தியா இலங்கை போன்ற வளரும் நாடுகளிலேயே இத்தகைய உயிர்பலிகள் அதிகம் நடக்கின்றன. ரேபீஸ் நோய் நாய்களை தாக்காமல் இருக்க வேண்டுமானால், அவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசிகள் போடப்படவேண்டும். இத்தகைய தடுப்பூசிகள் அமெரிக்காவில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறையும் போடப்படுகிறது. ஆனால் பெல்வேறு காரணங்களால் இந்த தடுப்பூசிகள் முறையாக போடப்படாததால், ரேபீஸ் நோய் நாய்கள் மூலம் தொடர்ந்து மனிதர்களுக்கு பரவுவதோடு, ஆயிரக்கணக்கானவர்களை கொல்லவும் செய்கிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிலடெல்பியாவின் தாமஸ் ஜேபர்சன் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த புதிய தடுப்பூசியை, நாய்கள் உள்ளிட்ட ரேபீஸ் நோயை மனிதர்களுக்கு பரப்பும் விலங்குகளுக்கு ஒரே ஒரு முறை போட்டால் அந்த விலங்குகளின் வாழ்நாள் முழுவதும் அந்த ரேபீஸ் நோய் அவற்றுக்கு தாக்காமல் இருக்கும் என்பதால் அவை மூலம் இந்த ரேபீஸ் மனிதர்களுக்கு பரவாமலும் தடுக்க முடியும் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக (முதற்கட்டமாக மன்னார் சிலாவத்துறையிலும், இரண்டாம் கட்டமாக மன்னார் முசலியிலும் இடம்பெற்றிருந்தது வடக்கு மாகாணத்தின் வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள எட்டு கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் சூலை மாதம் இரண்டாம் வாரம் தொடங்கவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். போரின் போது புலிகளின் பிடியிலிருந்த வவுனியா வடக்கு பிரதேசத்தின் நெடுங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள மருதன்குளம், புளியங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கலீமடு, புலியன் குளம், கனக ராயன் குளம், குஞ்சுகுளம், பரந்தன், நெடுஞ்கேணி, மன்னார் குளம் ஆகிய எட்டு கிராமங்களிலுள்ள மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். ஆய்வு கூடத்தில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மனித விந்தைத் தாம் உருவாக்கியுள்ளதாக இங்கிலாந்து, நியூகாசில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்டெம் செல் நிறுவனமும் அறிவித்துள்ளனர். ஆண்களிலுள்ள கருவளமற்ற தன்மை குறித்து சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள இது உதவும் என்று நியூகாசில் பல்கலைக்கழக பேராசிரியர் கரீம் நயர்னியா கூறியுள்ளார். இந்தப்புரிந்துணர்வானது கருவளமின்றி துன்பப்படும் தம்பதிகளுக்கு உதவுவதற்கான புதிய வழிகளை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு உதவும். பிறப்புரிமை அடிப்படையில் அவர்கள் பிள்ளையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மீள் உற்பத்தியில் கலங்கள் எவ்விதம் சம்பந்தப்படுகின்றன மற்றும் இயற்கையாக நஞ்சாவதால் எவ்விதம் பாதிப்படைகின்றன என்பதை அறிவியலாளர்கள் கற்றுக் கொள்ளவும் இது இடமளிக்கிறது. எடுத்துக்காட்டாக, குருதிச் சோகையுடன் உள்ள இளம் பிள்ளைகள் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் கருவளம் குறைந்த வாழ்வை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? என்பது பற்றியும் அதற்கு தீர்வுகாணும் சாத்தியத்தை கண்டறியவும் இது தீர்வை வழங்கக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், விந்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கற்றுக் கொள்வதானது பிறப்பு ரீதியான நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பது தொடர்பாக சிறப்பான முறையில் விளங்கிக் கொள்வதற்கு இட்டுச் செல்லுமென இக்குழுவினர் நம்புகின்றனர். ஸ்பெயினில் தயாரிக்கப்படும் இறைச்சி உணவு வகைகளில் லட்சுமி படம் போன்று விளம்பரம் செய்து இருந்தமையால் அங்குள்ள இந்து அமைப்புக்கள் போர்க் கொடி தூக்குகின்றன. அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளன. வெளிநாடுகளுக்கும் துரித உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது. பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் ஸ்பெயினில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்ந்திருப்பது போல அச்சிடப்பட்டிருந்தது. சாண்ட்விச் என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வெண்ணை இறைச்சி போன்றவற்றை வைத்து சுற்றப்பட்ட கலவை ஆகும். இறைச்சி உணவு மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தைப் பார்த்ததும் ஸ்பெயினில் உள்ள இந்துக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள இந்து அமைப்புகள் பர்கர்கிங் உணவு நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறைச்சி மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தை இனி வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளன. மேலும் இந்துக் கடவுளை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து உடனடியாக இந்த விளம்பரத்தை வெளியிட்டதற்காக பர்கர் நிறுவனம் மன்னிப்பு கோரியதோடு, அந்த விளம்பரம் தடைசெய்யப்படும் என உறுதியும் அளித்தது. இது தொடர்பாக பர்கர் கிங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டென்சி வில்சன் கூறுகையில், பர்கர் கிங் நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவர்களையும் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த விளம்பரம் ஸ்பெயினில் உள்ள தங்கள் 3 கிளைகளிலும் வியாபரத்தை பெருக்கும் நோக்கத்துடன், உள் விளம்பரம்தான் செய்யப்பட்டிருந்ததாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த விளம்பரம் செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். தொழில் புரட்சிக்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க 2 பாகை செல்சியஸ் மாத்திரமே வெப்பத்தை அதிகரிக்க அனுமதிப்பது என்ற இலக்கு வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். இதற்கு காலந்தாழ்த்தாத பெரிய வெட்டு அவசியம் என்று கூறியுள்ள அவர், ஜி-8 நாடுகள் 2020 ஆம் ஆண்டை கால அளவாகக் கொண்ட இடைக்காலத்துக்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகின் முக்கிய 5 வளர்ந்துவரும் பொருளாதாரங்களும் தமது புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்ததுவதற்கு இணங்கச் செய்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையிலேயே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடனான சந்திப்பு ஒபாமா தலைமையில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் ஜி8 உறுப்பு நாடுகளான பிரித்தானியா, கனடா, பிரான்சு, செருமனி, இத்தாலி, சப்பான், இரசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களும் பிரேசில், சீனா, இந்தியா, மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா மற்றும் எகிப்து ஆகிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். 2050 ஆம் ஆண்டுக்கான இலக்கு மிகவும் காலதாமதமானதென இந்தியா ஏற்கனவே விமர்சித்துள்ளது. இதனால் டிசம்பரில் கோபன்ஹெகனில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டிலேயே உண்மையான இலக்குகள் நிர்ணயிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. புதுகை மாவட்டம், தேனிப்பட்டி அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலில் எஞ்சி இருக்கும் சிவலிங்கத்தை புதுக்கோட்டையைச் சேர்ந்த வரலாற்றுப் பேரவையினர் கண்டுடெடுத்துள்ளனர். மறைந்து போன ஊர்: 700 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாகுறிச்சி என்ற ஊருக்கு இடைப்பட்ட பகுதியில் இக்கோயில் இருந்திருக்கலாம். காலப் போக்கில் அந்த ஊர் இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.படைப்பு விழா: இந்தக் கோயிலுக்கு அருகில் முத்தரையர் குடும்பக் கோயிலான அடைக்கலங்காத்தார் கோயில் உள்ளது. இந்தக் கோயில்களை 12 கரை நாட்டுக் கோயில்கள் எனக் கூறுகின்றனர். ஒருவருடைய உயரம் மற்றும் பருமனை கணக்கில் கொண்டு அவருடைய உடல் திண்மக் குறியீடு (Body mass index, BMI) என்ற ஒரு எண்ணை மருத்துவர்கள் கணக்கிடுவார்கள். அந்த எண் இருபத்து ஐந்தைத் தாண்டினால் அது அவருடைய உயரத்துக்கு அதிக எடை என்றும், அதே குறியீடு முப்பதைத் தாண்டுகிறது என்றால், அது நோயாபத்துகளை உண்டாக்கும் அளவுக்கதிகமான உடற்பருமன் என்றும் மருத்துவர்கள் சாதாரணமாக கருதிவருகின்றனர். ஆனால் தெற்காசியப் பூர்வீகம் கொண்ட மக்களைப் பொறுத்தவரையில் உடல் திண்மக் குறியீடு 23ஐத் தாண்டினாலே அது அதிக எடை என்றும் 25ஐத் தாண்டினால் அது நோயாபத்துகளை உண்டாக்கும் அளவுக்கதிகமான உடற்பருமன் என்றும் கொள்ள வேண்டும் என புதிய வரையறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி மேலும் 70 மில்லியன் மக்கள் அளவுக்கதிகமான உடற்பருமனைக் கொண்டிருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 126 ஐத் தாண்டிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்றது தொடர்பில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் விஷத்தன்மை கொண்ட கள்ளச்சாராயம் இன்னமும் விற்பனையில் இருக்கலாம் என்ற அச்சம் இன்னும் இருக்கிறது. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆனால், கள்ளச் சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்த பலர் பலியாயினர். இதை தொடர்ந்து பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 5 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகி இருப்பதாக அகமதாபாத் நகராட்சி துணை கமிஷ்னர் திலீப் மகாஜன் தெரிவித்துள்ளார். தில்லியில் மெட்ரோ ரயில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பொறியியலாளர் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். தெற்கு தில்லி லஜ்பத் நகரிலுள்ள தருத்பூர் என்ற இடத்தில் லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. பாலத்துக்கான தூண்கள் நிறுவப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு வேலை செய்துகொண்டிருந்த 3 தொழிலாளர் உள்பட 5 பேர் இறந்தனர். தூண் வடிவமைப்பில் இருந்த கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பாரிய சீமெந்து சிலப்பிற்குள் கீழ் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து சிலப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அறிவியல், கணித பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கை அதன் நோக்கங்களை அடையத் தவறி விட்டது என்பதை மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே அந்தக் கொள்கை கைவிடப்பட்டு 2012 ம் ஆண்டு தொடக்கம் தேசியப் பள்ளிகளில் அவ்விரு பாடங்களும் பாஹாசா மலேசியாவில் போதிக்கப்படும் என்று துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் அறிவித்தார். பல மாதங்கள், மையநீரோட்ட ஊடகங்களிலும் மாற்று ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்ட பின்னர், அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது .இனி, பகாசா மலேசியாவிலும் மாணவர்களின் தாய்மொழிகளிலும் அப்பாடங்கள் கற்பிக்கப்படும். இவ்விவகாரத்தில் மக்களின் கருத்தை அறிய டாக்டர் மகாதிர் அவரது வலைப்பதிவில் ஒரு கணிப்பை நடத்தினார். அதில் கலந்துகொண்டவர்களில் 72 விழுக்காட்டினர் அரசாங்க முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த முன்னாள் பிரதமர்தான் அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையைக் கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2009, ஜூலை 11 சனிக்கிழமை படகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் விமானம் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் 80 கடல் மைல் தூரத்தில் மீன்பிடிப்படகில் வந்த இவர்களை அவதானித்தது. இந்தத் தகவல் அவுஸ்திரேலியக் கடற்படைக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கடற்படையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் படகில் 73 பேர் இருந்தனர் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ'கோனர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களை அடையாளம் காணும் பணியும் உடல் நிலையை சோதனை செய்யும் பணியும் ஆரம்பிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் வழியில் கடந்த வாரம் மூழ்கியதாக கூறப்பட்ட படகே இப்போது பாதுகாப்பாக வந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெப்பின் சிமித் தெரிவித்தார். படகில் இருந்த இருவருடன் அவுஸ்திரேலிய பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர். எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை தாங்கள் அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்கள் என்றும் படகில் இருந்த இருவர் தொலைபேசியில் பொலிஸாருக்குத் தெரிவித்தனர். தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 90 கிமீ தூரத்தில் ராஜ்நந்த்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு தாக்குதல் நிகழ்வுகளில் இவர்கள் கொல்லப்பட்டதாக மாவோயிசத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பவன் தேவ் தெரிவித்துள்ளார். முதலில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் மீது 200 முதல் 300 வரையான தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு துணை புரிவதற்காக வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவரும் கொல்லப்பட்டுள்ளார். நைஜீரியாவில் பிரதான ஆயுதக் குழுத்தலைவர் ஹென்றி ஒக்காவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை அந்நாட்டு அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எண்ணெய் வள வருவாயில் நியாயமான பங்கீட்டைக் கோரி போராடிவரும் நிஜர் டெல்ட்டாவின் விடுதலைக்கான இயக்கத்தின் தலைவரான இவர் ஓராண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தார். இதேவேளை தலைநகர் லாகோசில் உள்ள எண்ணெய் வள நிலையமொன்றின் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லாகோஸுக்கு எண்ணெய் வழங்கும் பிரதான விநியோகக் குழாய்கள் தாக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவி்த்தார். ஆயுதக் குழுத் தலைவர் ஹென்றி ஒக்காவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான உடன்பாட்டின் ஓர் அங்கமாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விலக்கிக் கொள்ளப்படுவதற்கு சில மணி நேரம் இருந்த நிலையில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒக்கா 2007 ஆம் ஆண்டில் அங்கோலாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இந்த தீயில் சிக்கி அரிய வகை மரங்களும், மூலிகைச் செடிகளும் கருகிப் போய் வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் அரியவகை மூலிகைச் செடிகளும் ஏராளமாக உள்ளன. மேலும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, பன்றி, கரடி, முயல் போன்ற வன விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் நுழைந்த ஒரு கும்பல் மரம் வெட்டி கடத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு வசதியாக மரங்களுக்கு தீ வைத்து விடுகிறது. எரிந்த நிலையில் இருக்கும் மரங்களை எளிதாக வெட்டி கடத்தி விடுகிறார்கள். நேற்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மரங்களுக்கு தீ வைத்தனர். இதனால் வன விலங்குகள் அழிந்து வருவதுடன் அவை உயிர் தப்பிப்பதற்காக அங்கிருந்து இடம் பெயர்ந்து அருகில் உள்ள மலைக் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக தீ விபத்து ஏற்பட்டுள்ள வனப்பகுதிக்கு அருகிலுள்ள மல்லையாபுரம், பாறைப்பட்டி, ஆத்தூர் போன்ற கிராமங்களுக்கு சென்று விடுகின்றன. நேற்றிரவு காட்டுப் பன்றிகளும், காட்டு மாடுகளும் பழனி-செம்பட்டி சாலையில் உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தைக் கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் பெரும் பீதியிலும், அச்சத்திலும் உள்ளனர். தொடர்ந்து எரிந்து வரும் தீயால் வனப்பகுதியில் வளர்ந்துள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் அழிந்து வருகின்றன. மரம் கடத்தும் கும்பலால் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார் கூறப்படுகின்றது. திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் கொளுந்து விட்டு எரிந்த தீயை அவர்களால் நெருங்க கூட முடியவில்லை. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ எரிவதால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அருகே "நிதிநகரம்" ஒன்றும், வானூர்தி தயாரிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வானூர்தி பூங்காத் திட்டம் ஒன்றும் தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு: வாகன உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மின்னணு வன்பொருள், மென்பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. வானூர்தி தயாரிப்பு தொடர்புடைய நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடியாக வருவதற்கேற்ப தமிழ்நாட்டில் ‘வானூர்தி பூங்கா திட்டம்’ (ஏரோஸ்பேஸ் பார்க் புராஜக்ட்) என்ற ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வானூர்தி பூங்கா திட்டத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான ஓடுதளம், வானூர்தி பொருட்களின் உற்பத்தி மற்றும் சோதனை செய்தல், வானூர்தி பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் அலகுகள், விமான பயிற்சி கூடங்கள் போன்ற பலவற்றை இத்திட்டம் கொண்டிருக்கும். இத்திட்டம் பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் செயற்படுத்தப்படும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்கள், பங்குச் சந்தை வர்த்தகர்கள் ஆகியோரை ஈர்க்கும் வகையில், சென்னை அருகே நிதிநகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார் இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கான சாட்சிகள் பலர் இடம்பெயர்ந்து வெளிநாடு சென்று விட்டதால், அவர்களிடம் இருந்து வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினைகளும், இலங்கையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் அமலில் இல்லாததாலும், தம்மால் பல விசாரணைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அந்த ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிசங்க உதலாகம தெரிவித்துள்ளார். மூதூரில் அக்சன் பெயிம் ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை படையினருக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதனை விசாரணைகள் கூறுவதாக தெரிவித்த உதலாகம, ஆயினும், அந்த சம்பவத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினருக்கு அல்லது விடுதலைப்புலிகளுக்கு சம்பந்தம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை நகர மாணவர்கள் கொலை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை ஆகியவை தொடர்பில் சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதுடன், அவர்கள் சாட்சி சொல்லத் தயாராக இருக்கின்ற போதிலும், வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள தடைகளால் அவற்றை பெறமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இன்னமும் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படாத காரணத்தினால், அதுவும் விசாரணையை பூர்த்தி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு தொண்டு நிறுவனம் இலங்கையில் 1996 ஆம் ஆண்டு முதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்கிவருகின்றது. இச்சேவையில் ஈடுபட்டவர்களில் திருகோணமலை மூதூர் பகுதியில் அலுவலகத்தில் வைத்து அலுவலகச் சீருடையில் இருந்த 15 பணியாளர்களும் ஆகஸ்டு 5, 2006 இல் ஆரம்பப் படுகொலையில் தப்பிய 2 ஊழியர்களையும் தேடிக் கண்டுபிடித்து மொத்தமாகப் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 168 பேருடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 153 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன் சென்ற அந்த விமானம் ஈரானின் வடமேற்கு பகுதியிலுள்ள கஸ்வின் மாகாணத்தில் ஜனாட்டாபாத் என்ற கிராமத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானம் முற்றிலும் நொறுங்கி தீப்பிழம்புடன் கீழே விழுந்ததாகவும், இதனால் அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கஸ்வின் அவசரகால சேவை துறை இயக்குனர் ஹோசீன் என்பவர் தெரிவித்தார். விமானம் விபத்துக்குள்ளான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், விமானம் நொருங்கி விழுந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் பயங்கரவாதம் உட்பட அண்டை நாடான சியாரோலியோனின் உள்நாட்டுப் போருடன் சம்பந்தப்பட்ட தனக்கெதிரான 11 குற்றச்சாட்டுக்களை சார்ள்ஸ் டெய்லர் மறுத்துள்ளார். போர் குற்றம் குறித்த விசாரணைகளில் கலந்துகொள்ளும் முதலாவது ஆப்பிரிக்கத் தலைவர் இவராவார். சியேராலியோனில் உள்ள வைரங்கள் மூலமான சொத்துக்களை அபகரிப்பதற்காக, டெய்லர் ஆயுதங்களைத் தரித்த கிளர்ச்சிக்குழுவை வழி நடத்தினார் என்ற சட்டவாதிகள் அவர் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். தனது நடத்தை பற்றி தவறு கற்பிக்கப்பட்டிருப்பதாகவும், தான் சியாரோலியோனில் அமைதியை ஏற்படுத்த மாத்திரமே விளைந்ததாகவும் சார்ல்ஸ் டெய்லர் கூறினார். ஜூலை 15, புதனன்று காலை செச்சினியத் தலைநகர் குரொஸ்னியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நான்கு ஆயுதபாணிகளால் வான் ஒன்றில் அவர் கடத்தப்பட்டபோது, அவர் அலறியதை பலர் கேட்டிருக்கிறார்கள். இப்படுகொலைக்கு ரஷ்ய அதிபர் திமீத்ரி மெத்வேதொவ் தனது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன் உயர்மட்ட விசாரணைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். எஸ்டிமிரோவா "மெமோரியல்" என்ற மனித உரிமை அமைப்புக்காக செச்சினியாவில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆவணங்களைச் சேகரித்து வந்திருந்தார். பழைய சோவியத் காலத்தில் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இக்குழு ஆராய்ந்தூ வருகிறது. எஸ்டிமிரோவா, 2006 ஆம் ஆண்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரஷ்ய செய்தியாளரான அனா பொலிட்கோவஸ்காயா அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். அண்மைக்காலங்களில் எஸ்டிமிரோவா அரச சார்பு ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப் பிரிவினரும் வெளி நாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன் இராணுவத்தில் புதிதாக தமிழ் றெஜிமென்ட் உருவாக்கப்பட மாட்டாது. ஆனால் 800 துணை இராணுவக் குழுவினர் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார். சந்திரயானில் இடம்பெற்றுள்ள ஸ்டார் சென்சார் கருவியானது செயல்படாமல் போனதால், இத்திட்டம் முன் கூட்டியே முடிவுக்கு வரும் என்று சந்திரனை ஆய்வு செய்வதில் உணர்வீ மிக முக்கியப் பங்காற்றக்கூடியவை. இந்த பிரச்சனையை சமாளிக்க அண்டெனா தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆயினும் இதனை எவ்வளவு நாட்களுக்கு நீடித்து வைத்திருக்க முடியும் என்பதில் இஸ்ரோ உறுதியாக இல்லை. ‘இதனை எவ்வளவு நாள் நீடித்து வைத்திருக்க முடியும் என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியாது. 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்ட விண்கலத்தின் ஆயுட்காலம் குறையக்கூடும்’ என்று பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் எஸ். சதீஷ் தெரிவித்துள்ளார். என்றாலும் தற்போது வரை சந்திரயான் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று சந்திரயான்-1 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அணிசாரா இயக்கத்தின் 15வது உச்சி மாநாடு, ஜூலை 16ம் நாள், எகிப்தின் ஷார்ம் ஏல் ஷெய்க் நகரில் நிறைவடைந்தது. புதிய நிலைமையில் இந்த இயக்கம் பல்வேறு வளரும் நாடுகளின் நலன்களைத் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தி, பன்னாட்டு சமூகத்தில் தனிச்சிறந்த பங்காற்ற வேண்டும் என்று வளரும் நாடுகள் விரும்புவதை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள், கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் ஆகியவை காட்டுகின்றன. 2 நாட்கள் நீடித்த இம்மாநாட்டில் கலந்து கொண்ட 100க்கு மேலான நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள், உலக ஒற்றுமை, அமைதியான வளர்ச்சி என்ற தலைப்பில், கருத்துக்களை முழுமையாகப் பரிமாறிக் கொண்டனர். அணிசாரா இயக்கத்தின் வளர்ச்சித் திசை, எதிர்கால வாய்ப்பு ஆகியவை பற்றியும், மத்திய கிழக்கு, சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச புதிய சிக்கலான பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் முக்கியமாக விவாதித்தனர். கடைசியில் பொது கருத்தை எட்டி, பல ஆக்கப்பூர்வ சாதனைகளைப் பெற்றனர். அணிசாரா நாடுகள் இயக்கத்தின் உயிராற்றல், சர்வதேசத்தில் அதன் முக்கிய தகுநிலை, அது கடைப்பிடிக்கும் கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை, இம்மாநாடு மீண்டும் கோடிட்டுக்காட்டியது. மேலும் இன்பமான மற்றும் மேலும் பாதுகாப்பான, நியாயமான உலகத்தைத் தேடும் அணி சாரா நாடுகளிலுள்ள அனைத்து மக்களின் விருப்பத்தையும் இது வெளிப்படுத்தியது என்று அணி சாரா நாடுகள் இயக்கத்தின் நடப்புத் தலைவரும், எகிப்து அரசுத் தலைவருமான மொஹம்மெத் முபாரக்கும் சுட்டிக்காட்டினார். நான்கு காலாண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த பொருளியல் இப்போது முதல் முறையாக வளர்ச்சி இலக்கை எட்டியுள்ளது. உயிரியல் மருத்துவத் துறை, மின்னியல் துறைகளின் வளர்ச்சியினால் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீளத் தொடங்கியுள்ளது. இதனால் இவ்வாண்டின் பொருளியல் முன்னுரைப்பை வரத்தக தொழில் அமைச்சு மாற்றியமைத்துள்ளது. “புள்ளிவிவரக் கணக்குப்படி பார்த்தால் மந்த நிலையில் இருந்து பொருளியல் மீண்டுள்ளது. சிங்கப்பூர் பொருளியல் மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது,” என்று ஆக்ஷன் இக்னாமிக்ஸ் என்ற ஆய்வு மையத்தின் பொருளியல் வல்லுநர் திரு டேவிட் கோஹென் கூறியுள்ளார். “வளர்ச்சி வலுவாக இருக்காது. எனினும் ஏறுமுகமாகவே இருக்கும்,” என்று ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்தபடியே சிங்கப்பூர் பொருளியல் அதிரடி வளர்ச்சி கண்டுள்ளது என்று டிபிஎஸ் குழுமம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காலாண்டு அடிப்படையில் தற்போது வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இவ்வாண்டுக்கான பொருளியல் முன்னுரைப்பில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என வர்த்தக தொழில் அமைச்சு கூறியது. மெது வளர்ச்சி, எந்நேரத்திலும் மந்தநிலைக்குச் செல்லும் அபாயம் இருக்கிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டது. அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விகிதமும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களின் செலவினக் குறைப்பும் உலகப் பொருளியலின் பலவீனமான நிலையைப் பிரதிபலிக்கின்றன. அமெரிக்கத் தொலைக்காட்சி செய்தியாளர் வால்ட்டர் குரோங்க்கைட் (Walter Cronkite தமது 92 அகவையில் இறந்துவிட்டார். இவர் நெடுநாட்களாக மூளை-இரத்தக்குழாய் நோய் வாய்ப்பட்டு போராடிக்கொண்டிருந்தார். இவர் 1962 முதல் 1981 வரை CBS எனப்படும் தொலைக்காட்சி நிறுவன மாலைச் செய்திகள் Evening News வாசிப்பவராக இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது சான் எஃவ். கென்னடி சுட்டுக்கொலை செய்த செய்தியை 1963 இல் அறிவித்தார், 1969 இல் விண்வெளிக் கலம் அப்போலோ நிலாவில் இறங்கியதையும் அறிவித்தார். 1974 இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் வாட்டர் கேட் நிகழ்வால் பதவி விலக் நேர்ந்தபொழுது அதனை அறிவித்தார். தொகுப்பாசியாராக இருந்தபொழுது வியட்நாம் போரைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்தார். குரோங்க்கைட்டின் செய்தியாளர் வாழ்க்கை 1930களில் டெக்சாசில் உள்ள உஃகூசுட்டனில் வானொலி நிலையத்தில் தொடங்கியது. 1939 இல் இரண்டாவது உலகப்போர் செய்தியாளராக இருந்தார். நூரெம்பர்க் போர்க்குற்றங்கள் தீர்ப்பாயத்தின் நிகழ்வுகளை செய்தியாளர்ராக அறிவித்தார். CBS நிறுவனத்தின் நிலைத்த மாலைச் செய்தியாளராக இருந்ததால் ஆங்கிலத்தில் "news anchor நங்கூரச் செய்தியாளர் என்னும் சொல்லாட்சி த்ஹோன்றியதாகக் கூட கூறுவர். குரோங்க்கைட் தனி வாழ்வில் பாய்மரப் படகு ஒட்டும் ஆர்வலர். இவருக்கு மகள்கள் நான்சி (Nancy) கேத்தி (Kathy) ஆகிய இருவரும் மகன் வால்ட்டர் III என்பவரும் உள்ளனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிசெய்திகளில் எழுதுவது குறித்த உங்கள் கேள்விகள், ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள். மற்ற பயனர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உதவுவார்கள். இந்த மணல்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள முன்தோற்றம் காட்டவும் அல்லது பக்கத்தை சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும். இந்த மணல்தொட்டி தொகுத்தல் சோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே கட்டுப்பாடுகளின்றி நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிலையானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும். {{வார்ப்புரு:தயவுசெய்து இந்த வரியை ஒன்றும் செய்யாதீர் (மணல்தொட்டி எழுத்தாணி தமிழில் தச்சு செய்ய பயன்படுத்த மிக எளிதானவை அலைப்பேசிகள் மற்றும் கணினிகளில் பயன்படுத்தலாம் தமிழக அரசின் ஏற்பாட்டில் இடம் பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதன்கிழமை கோவையில் தொடங்கியது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் தலைமையில் இன்று தொடங்கி இம்மாதம் 27 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, மூதூர், மற்றும் அக்கரைப்பற்று பணிமனைகளே இவ்வாறு தமது சேவையினை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் 1991ம் ஆண்டு முதல் திருகோணமலை மாவட்டத்தில் தமது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். செஞ்சிலுவைச் சங்கம் தமது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருக்கின்ற போதிலும், போர் முடிவடைந்தாலும் மனிதாபிமானப் பணிகள் பெருமளவுக்கு உள்ளன எனவும், அதனால் சிறிலங்கா அரசு தமது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதித்தானிய உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சிறிலங்கா அரசு அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இரு நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 வெளிநாட்டவர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர். ஜகார்த்தாவின் மிகப் பிரபலமான ரிட்ஸ்-கார்ல்டன், மேரியட் ஆகிய ஹோட்டல்களிலேயே இன்று இந்தக் குண்டுகள் வெடித்தன. இரண்டுமே அருகருகே அமைந்துள்ள ஹோட்டல்களாகும். முதலில் மேரியட் ஹோட்டலிலும் அடுத்த 5 நிமிடத்தில் ரிட்ஸ் ஹோட்டலிலும் இந்த குண்டுகள் வெடித்தன. மேரியட் ஹோட்டல் மீது 2003ஆம் ஆண்டிலும் குண்டுத் தாக்குதல் நடந்தது. அதில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த இரு ஹோட்டல்களிலும் பெரும்பாலும் வெளிநாட்டினரே தங்குவது வழக்கம். எனவே அவர்களைக் குறி வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜெமா இஸ்லாமியா என்ற தீவிரவாத அமைப்பே இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 2002இல் இந்தேனேஷியாவின் பாலி தீவில் இந்த அமைப்பு நடத்திய பயங்கர மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 88 ஆஸ்திரேலியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஜகார்த்தாவில் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரித்து வரும் இந்தோனேசிய பொலிஸார் தாக்குதல்களுக்கு ஜெமா இஸ்லாமையா என்ற இஸ்லாமிய தீவிரவாத குழுவுக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளனர். மலேசிய தீவிரவாதி நூர்தின் டாப்பிற்கு இதில் தொடர்பிருப்பதற்கான வலுவான காரணங்கள் இருப்பதாக மூத்த தீவிரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த தீவிரவாதி ஜெமா இஸ்லாமையாவில் பிரிந்து சென்ற குழு ஒன்றை நடத்தி வருகின்றார். சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகளும் எரிசக்தி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிசக்தி பற்றாக்குறைக்கு தீர்வாக சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிய சூரிய கலங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் பாரிய திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி நூற்றுக்கணக்கான வெப்ப ஆலைகள் வட ஆப்பிரிக்க பாலைவனப் பகுதிகளில் நிறுவப்பட்டு அதன் மூலம் பெறப்படும் ஆற்றல் கடலடி கேபிள்கள் மூலம் ஐரோப்பாவிற்கு எடுத்துவரப்படும். இத்திட்டம் முடிவடைவதற்கு 40 ஆண்டுகள் செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் எரிசக்தி தேவையின் 15 விழுக்காடு இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் எனவும் வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் பயனடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுமார் 555 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், முன்னணி நிறுவனங்களுக்கு இடையே ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஒருநாள், மற்றும் இருபது20 போட்டிகளில் தாம் தொடர்ந்து விளையாடவிருப்பதாக வாஸ் தெரிவித்தார். பாகிஸ்தானுடனான தற்போதைய தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாட வாஸ் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலொன்றினை இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியில் வைத்து கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். மூன்று பேர் பயணிக்கக் கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்நீர்மூழ்கிக் கப்பல் சனிக்கிழமை இரவு முல்லைத்தீவின் வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன் போன்ற தோற்றத்தினையுடைய இந்நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 25 அடி நீளமும் 4 அடி அகலமும் 41/2 அடி உயரத்தையும் கொண்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார். வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் கடலுக்குள் 40 அடி ஆழத்தில் இந்நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி வாகனம் பாவனைக்குகந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தேடுதல்களை இராணுவத்தினர் நடத்தி வரும் அதேநேரம் இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியிலும் தேடுதல்களை நடத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். புலிகளின் மேற்படி நீர்மூழ்கிக் கப்பலுக்குள்லிருந்து டீசல் என்ஜிகள், சமநிலை தாங்கி, சுழியோடிகளுக்கான அங்கிகள், தமது இருப்பிடத்தைக் காட்டும் கருவி ஆகியன மீட்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார். இராணுவத்தின் 56 ஆம் படைப் பிரிவு மற்றும் எட்டாம் படையணியினைச் சேர்ந்த சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாகவே புலிகளின் இத்நீர்மூழ்கிக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் புலிகளால் பயன்படுத்தி வந்த பல நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மும்பையில் நட்சத்திர ஹோட்டல்கள், சிஎஸ்டி தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 180 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். ஏனைய 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மீதான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனக்கு இருந்த தொடர்புகளை கசாப், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகிலியானியிடம் இன்று ஒப்புக் கொண்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது திடீரென கசாப் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டமை அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. சி.எஸ்.டி ரயில் நிலையம், தெற்கு மும்பையில் காமா மருத்துவமனைக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக கசாப் கூறினார். தாஜ், ஓபராய் ஹோட்டல்கள் உட்பட 4 இடங்களில் தாக்குதலில் ஈடுபடும் நோக்கத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் தாமும், வேறு 9 பயங்கரவாதிகளும் மும்பைக்கு வந்ததாக கஸாப் குறிப்பிட்டுள்ளார். பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சூரிய கிரகணம் குறித்த, பழங்காலத்தைய அரிய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலாகும். இக்கோயிலில்தான் தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. கி.பி. 14-ம் நூற்றாண்டுக்கு முன், பாண்டிய மன்னர்களால் சிவன் கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயில், மாலிக்காபூரின் தாக்குதலுக்குப் பின் 17-ம் நூற்றாண்டில், திருமலைநாயக்கர் காலத்தில் அம்மன் கோயிலாக உருமாற்றம் பெற்றது. இக்கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் மற்றும் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, கோயிலின் யாகசாலை அறை சுவற்றில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. முன், பின் எழுத்துக்கள் அழிந்த நிலையில் 4 வரிகள் மட்டுமே இதில் உள்ளன. ''பலவைய பேர்களுக்கு சூரிய கிராணப் புண்ணிய காலத்தில் நீராகத் தாரை வாத்து கல்வெட்டிக் கொள்ள என உள்ள இந்த எழுத்துகள் 17-ம் நூற்றாண்டின்போது சூரியகிரகணத்தன்று, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்துக்கு நிலம் தானமாக நீர்வார்த்துக் கொடுக்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், கல்வெட்டு மூலம் பல அரிய தகவல்கள் தெரிய வருகின்றன. பண்டைய காலத்தில் நவீன கருவிகள் இல்லாமலேயே, சூரிய கிரகணத்தை தமிழர்கள் அறிந்துள்ளதும், அது நடக்கும் காலத்தில், இறைவனுக்கு நிவந்தங்கள் அளித்ததும், பழங்காலத்தில் சூரியகிரகண நேரத்தில் கோயில்களுக்குத் தானம் வழங்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது. பழனி மலைக்கோயில் கருவறை வடக்குப் பகுதியில், மல்லிகார்ச்சுனராயர் பொறித்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டிலும், இதேபோல, சூரியகிரகண காலத்தை புண்ணியகாலம் என்றே தானத்துக்கு சிறந்த நேரமாகக் குறித்துள்ளனர். தற்போது சூரியகிரகண நேரத்தை பேரழிவு ஏற்படும் காலமாக எண்ணி, அச்சப்பட்டு வருகிறோம். 22-ம் தேதி காலை நடைபெறவுள்ள சூரியகிரகணம் 360 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், மிக நீண்ட அரிய சூரியகிரகணமாகும். 360 ஆண்டுகளுக்கு முன் என அறிவியலாளர்கள் கூறும் காலமும், பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள 17-ம் நூற்றாண்டு காலக் கல்வெட்டும் சமகாலத்தவையாக உள்ளன. ஆகவே அந்தக் கல்வெட்டு அரிய சூரிய கிரகணத்தை முன்னிட்டு பொறிக்கப்பட்டது உறுதியாகிறது என, ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இருபத்தேழு நாடுகளைக் கொண்ட ஆசியான் வட்டார அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. நேற்றுத் தொடங்கிய இந்த மாநாட்டில் பத்து ஆசியான் நாடுகள் ஜகார்த்தா குண்டுவெடிப்புகள், வட கொரிய அணுவாயுதத் திட்டம், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே பண்டைக்கால கோவில் காரணமாக ஏற்பட்டுள்ள மோதல் போக்கு ஆகிய பிரச்சினைகளை விவாதிக்கும். எனினும், கடந்த வெள்ளிக்கிழமை ஜகார்த்தாவின் இரு பெரிய ஹோட்டல்களில் நிகழ்ந்த மோசமான குண்டுவெடிப்புகளால் ஆசியாவில் பயங்கரவாத அமைப்பான ஜமா இஸ்லாமியா பரவி வருவதும் முக்கியப் பிரச்சினையாக விவாதிக்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பிரச்சினைகள் குறித்து பத்து ஆசியான் நாடுகள் முதலில் விவாதிக்கும். பின்னர் வியாழக்கிழமை தொடங்கி இந்த மாநாட்டில் ஆசியான் வட்டார அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவை பங்கேற்கும் என ஏஎப்பி செய்தி நிறுவனத் தகவல் தெரிவிக்கிறது. இதற்கிடையில் தென்கிழக்காசிய வெளிநாட்டமைச்சர்கள் தங்கள் நாடுகளுக்கிடையிலான மனித உரிமைகளைப் பேணும் பொருட்டு மனித உரிமைகள் அமைப்பு என்ற பொது அமைப்பை நிறுவ முன்வந்துள்ளனர். தாய்லாந்தில் ஒன்றுகூடிய தென்கிழக்காசிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளபோதும் மியன்மாரில் இடம்பெறும் இராணுவ அடக்கு முறை களால் மக்களின் துயரங்களைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் இந்த வாரத்தின் கடைசிப் பகுதியில் தாய்லாந்தில் கூடவுள்ளனர். இதில் மியன்மார், வடகொரியா விடயங்கள் பற்றிப் பேசப்படவுள்ளன. இதற்கிடையில் வெளிநாட்டமைச்சர்கள் இந்த மனித உரிமைகள் தாபனம் பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டியுள்ளனர். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும் மனித உரிமைகளை மீறும் நாடுகளைத் தண்டிக்கும் வல்லமையும் அதிகாரமும் இந்த அமைப்பிடம் இருக்குமா என்பதைக் கூற முடியாதுள்ளது. அத்துடன் இதன் நிர்வாகச் செலவினங்களைப் பொறுப்பேற்பது யார் என்ற சிக்கல்களும் எழுந்துள்ளன. மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் நிலவும் மனித உரிமை மீறல் தொடர்பான சரியான தகவல்களைத் திரட்டுவதிலும் சிக்கல்கள் தோன்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பணக்காரர் போல் வேடமிட்டு இந்தியா வரும் மாலத்தீவு ஆண்கள் கேரள, தமிழக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு மாலத்தீவு. இந்த நாட்டைச் சேர்ந்த பலரும் கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவது வழக்கம். இதற்காக அவர்கள் வருவது கேரளாவுக்குதான். இவர்களில் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்வதற்காகவே இங்கு வருகின்றனர். ஏற்கனவே மாலத்தீவு பெண்ணை திருமணம் செய்துள்ள இவர்கள் 2வது திருமணத்துக்காக இந்தியா வருகிறார்கள். இதற்காக இல்லாத ஒரு நோய்க்கு சிகிச்சை பெறுவதாக கூறி விசா வாங்கிவிடுகின்றனர். இங்கு வந்ததும் பெயருக்கு எதாவது ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள புரோக்கர்கள், இந்த தாத்தாக்களுக்கு இளம்பெண்களை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவ ட்டத்தைச் சேர்ந்த பல இளம் பெண்களை இப்படி மாலத்தீவு தாத்தாக்கள் திருமணம் செய்துள்ளனர். இந்த தாத்தாக்கள் குறிவைப்பது ஏழை குடும்பத்தை தான். தங்களை பெரும் பணக்காரர்கள் என்று கூறி அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். திருமணம் முடிந்து மாலத்தீவு செல்லும்போதுதான், தாத்தாவின் சுயரூபம் தெரியும். கோடீஸ்வரர் என்று கூறியவர் அங்கு ஓட்டாண்டியாக இருப்பார். இதுதவிர அவருக்கு ஏற்கனவே பெரிய குடும்பமும் இருக்கும். இதனால், அதிர்ச்சி அடைந்த பல பெண்கள் ஒரு சில மாதங்களிலேயே இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். இப்படிதான் மாலத்தீவை சேர்ந்த காது கேட்காத, கால்கள் ஊனமுற்ற 55 வயது ஆசாமி ஒருவர் தனக்கு சொந்தமாக 2 கப்பல்கள் இருப்பதாக புருடாவிட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். அங்கே போனதும்தான் அவர் சாதாரண மீனவர் என்று அந்த சிறுமிக்கு தெரிந்தது. குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அந்த மீனவருடன் குடும்பம் நடத்திய அந்த பெண் சில ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிவிட்டார். பெண் குழந்தை பிறந்தால் குழந்தையோடு மனைவியையும் இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இந்த மோசடியை தடுக்க நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரத்தில் உள்ள மாலத்தீவு துணை தூதரகத்துக்கு கேரள கிராம பஞ்சாயத்து ஒன்று முறையிட்டுள்ளது வியாழனின் தென்முனைக்குக் கிட்டவாகத் தோன்றியுள்ள இக்கரும்புள்ளி பற்றி முதன் முதலாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சைச் சேர்ந்த வானியலாளர் அந்தனி வெஸ்லி என்பவர் அறிவித்தார். இவர் ஜூலை 19 இல் இதனைக் கண்டுபிடித்து அச்செய்தியை நாசாவுக்கு அறிவித்தார். இதனை அடுத்து நாசாவின் அவதான நிலையம் வியாழனை ஆராயத் தொடங்கியது. கிளென் ஓர்ட்டன் தலைமையிலான குழு வெஸ்லியின் கூற்றை உறுதிப்படுத்தியதுடன், 1994 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஜூலை 22 வரையான காலப்பகுதியில் ஷூமேக்கர் லெவி-9 Comet Shoemaker-Levy 9 என்ற வால்வெள்ளி வெடித்துச் சிதறியதால் வியாழனில் இதேமாதிரியான கருப்புப் பகுதி ஏற்பட்டிருந்ததையும் குறிப்பிட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான சூடானில் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையில், எல்லைத் தகராற்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் முதற்தடவையாக சர்வதேச நீதிமன்றமொன்றின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். சர்ச்சைக்குரிய எண்ணெய்வள பிராந்தியமொன்றை வடக்கு சூடானுக்கு கைமாற்றியதன் மூலம், இந்தத் தீர்ப்பு அப்பிராந்தியத்திலிருந்த தெற்கு சுடானின் நிலப்பரப்பினை சுருக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பினை தமது வெற்றியாக வடக்கு சுடான் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதனை நடுநிலையான தீர்ப்பாக வர்ணித்துள்ள தெற்கு சுடானை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஆயுதக் குழுவான சுடான் மக்கள் விடுதலை இயக்கம் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. போர்சின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து வெண்டலின் வீடக்கிங் என்பவர் புதன்கிழமையன்று விலகியமை தொடர்பில் தமது பதில் நடவடிக்கையை தீர்மானிக்கும் பொருட்டு அதன்போட்டி நிறுவனமான வொக்ஸ்வாகனின் நிர்வாகக்குழு இன்று கூடி ஆராய்ந்தது. வெண்டலின் பதவி விலகல் நிகழ்வு இரண்டு முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களினதும் ஒன்றிணைப்புக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமாக போர்ஷ் மாறும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வொக்ஸ்வாகன் நிறுவனத்தை கையேற்கும் போர்ஷ் நிறுவனத்தின் முன்னைய தோல்விகரமான முயற்சிக்கு வெண்டலின் வீடக்கிங்கே பொறுப்பு எனக் கூறப்பட்டது. போர்ஷ் நிறுவனத்தை 9 பில்லியன் யூரோக்கள் கடன் பெறும் நிலைக்கு தள்ளிய இந்த திட்டம் இந்த வருட ஆரம்பத்தில் கைவிடப்பட்டது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதன் தெற்குத் தீவு 30 சமீ (12 அங்) மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா பக்கமாக நகர்ந்துள்ளது நியூசிலாந்து. தெற்குத் தீவின் தென்மேற்குப் பகுதியே 30 சமீ நகர்துள்ளதெனின்ய்ம் அதன் கிழக்குக் கரை மேற்குப்பக்கமாக 1 செமீ தூரமே நகர்ந்துள்ளது. ”ஜிஎன்எஸ் அறிவியல்” என்ற நியூசிலாந்தின் அரச ஆய்வு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதிக அதிர்வு கொண்ட அலைகள் ஏற்படாமல் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டதாகவும் இதனால் கட்டடங்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிரகத்துக்கான நீண்ட தனிமையான விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளிவீரர்களின் உடல்நிலை மற்றும் மனோநிலை எவ்வாறு அமையும் என்பதை கண்டறியும் முகமாகவே இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தில் 4 ரஷ்யர்கள், ஒரு ஜேர்மனியர், ஒரு பிரெஞ்சு நாட்டவர் ஆகியோர் பங்கேற்றனர். மேற்படி அறுவரின் உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதுவித ஜன்னலும் அற்ற மேற்படி விண்கல அமைப்பானது தரையிலேயே நிலை நிறுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. நேரடி வெளியுலக தொடர்பு எதுவும் அற்ற நிலையில் வானொலி சமிக்ஞைகள் மூலம் அறுவரும் மேற்படி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஏற்பாட்டாளர்களுடன் உரையாட வசதி செய்து தரப்பட்டிருந்தது. செவ்வாய்க் கோளுக்கான நீண்ட விண்வெளிப் பயணத்தின் போது வானொலி சமிக்கைகள் பரிமாற்றத்தில் ஏற்படக்கூடிய காலதாமதத்தை கணிப்பிட்டு, சமிக்ஞைகள் 20 நிமிடத்துக்கும் அதிக நேரம் தாமதித்தே பரிமாறப்பட்டன. இந்த அறுவரும் மூடிய விண்கல அமைப்பில் கழித்த 105 நாட்களானது செவ்வாய்க்கிரக பயணத்துக்கான காலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான காலமாகும். செவ்வாய்க் கிரகத்துக்கு பயணத்தை மேற்கொண்டு திரும்ப 520 நாட்களாகும் (சுமார் ஒன்றரை வருடங்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக விண்கலத்தில் ஒன்றரை வருட காலத்திற்கு பிறிதொரு குழுவை தங்க வைத்து பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இலங்கையுடனான இருதரப்பு அபிவிருத்தி உதவிகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் 2007 இல் செய்யப்பட்ட அபிவிருத்தி கூட்டுறவின் மதிப்பாய்வினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கலினிங்கிராட், கன்ரன், லொஸ் ஏஞ்சலஸ், நியூ யோர்க் ஆகிய இடங்களிலுள்ள தமது பிரதிநிதிகள் அலுவலகங்களையும் மூடுவதற்கு சுவீடன் அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிதித்திட்டங்களை சமநிலைப்படுத்துவதற்காகவே இவ்வாறான முடிவினை சுவீடன் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. புதுடில்லியிலுள்ள தூதரகத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டுப்பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறக்கக் கூடியதாக இருப்பது, சுவீடன் மக்களுக்கும், கம்பனிகளுக்கும் தமது சேவையைக் கொடுக்கும் நோக்குடனாகும் எனக் கூறும் அந்த அறிக்கை செஞ்சென் கூட்டுறவு கட்டமைப்புக்கு அமைய விசா சேவைகள் நிர்வகிக்கப்படும் என்றும் தொடர்ந்து கூறுகிறது. மக்கள் சீனக் குடியரசில் நீண்டகாலமாக அமுலில் இருந்துவரும் அரசாங்க கொள்கையொன்றை பின்னோக்கித் தள்ளும் விதமாக, அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷங்காய், தமது மக்கள் பெரிய குடும்பங்களை கொண்டிருப்பதை ஊக்குவிக்க தீர்மானித்துள்ளது. 1979 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் சீன அதிகாரிகள் பெரிய குடும்பங்களை ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்க்கும் பொருட்டு, ஒரு குழந்தை கொண்ட குடும்பங்களில் இருந்து வந்த தம்பதியர் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நகரத்தின் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்ட ஆணையத்தின் தலைமை அதிகாரி கூறுகிறார். இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பல்லியினங்கள் Hemidactlyus sataraensis மற்றும் Hemidactylus aaronbaueri ஆகும். லொத்தர் சீட்டிழுப்பில் 4,4 மில்லியன் பரிசை வென்ற ஒருவர், அப்பணத்தை எடுக்கப்போன இடத்தில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று கனடாவில் நிகழ்ந்துள்ளது. 45 வயதான இந்த நபர் கடந்த 2003 ம் ஆண்டு, திருட்டுச்சம்பவம் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர். இந்த வழக்கில் இவர் நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்கத்திருக்கவில்லை. அந்த லொத்தர் சபையின் ஊழியர் ஒருவரே இவர், நீதிமன்றத்தால் பிடியாணை விதிக்கப்பட்டவர் எனும் விபரத்தினைக் கணனியில் கண்டறிந்து காவற்றுறைக்குத் தகவல் வழங்கியிருந்தார். இந்தநபர் பரிசுத்தொகைக்கான காசோலைப் பெற்றுக்கொண்டதும், அங்கு தயாராகக் காத்திருந்த காவற்றுறை உத்தியோகத்தரால் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார். ஓரிரவு முழுவதும் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், ஒருமாதம் கழித்து அவரது பழைய திருட்டுவழக்கு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சமரசம் செய்துவைக்கப்பட்டது. பேருவளைப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இரு முஸ்லிம் மதக்குழுக்களிடையேயும் நீண்ட காலமாக பகைமை நிலவி வந்துள்ளது. இந்தப் பகைமை நேற்று வெள்ளிக்கிழம இரவு மோதலாக வெடித்து பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் மற்றைய மதப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர். பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரகுமான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேருவளைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலவரையறையற்ற ஊரடங்கும் இப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி ஸ்பெயினின் கனாரி தீவுகளில் மன்னர் முதலாம் ஹுவான் கார்லோசுவினால் திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காக்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான வானியலாளர்கள், அரசப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்தத்திட்டத்தை ஸ்பெயின், மெக்சிக்கோ, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல தொழில்நுட்பக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுத்தின. 1987 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட 100 நிறுவனக்களின் ஆயிரத்திற்கும் அதிகமானோரால் இத்தொலைநோக்கி கட்டி முடிக்கப்பட்டது. புளோரிடா பல்கலைக்கழகம் மட்டும் இத்திட்டத்திற்கு 5 மில்லியன் டாலர்களை முதலிட்டது. முதல் தவணையாக 320 மில்லியன் டாலர்களை இலங்கை உடனடியாகப் பெற முடியும் என்றும், அடுத்த கட்ட கொடுப்பனவுகள், ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. விடுதலைப்புலிகளை தோற்கடித்த அரசாங்கப் படைகளின் அண்மைய தாக்குதல்களின் போது எழுந்துள்ள மனிதாபிமான அதிருப்திகளை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் இந்த முடிவை ஆதரிக்க பிரிட்டனும், அமெரிக்காவும் மறுத்து விட்டன. அதிகளவுக்கு இலங்கைக்கு தேவைப்படும் மோதலிற்கு பின்னரான மீள்கட்டுமான நிவாரண முயற்சிகளுக்கான வளங்களின் கிடைப்பனவை உறுதிப்படுத்தும் அதேசமயம் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்காக நாணய நிதியம் இக்கடனை வழங்குவதாகவும் இதுவே முக்கியமான நோக்கம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நிதிநெருக்கடியானது இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று சபையின் பதில் தலைவருமான தகாட்டோசி காட்லோ கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஆர்வமான திட்டத்திற்கு நாணய நிதியம் ஆதரவளித்துள்ளது. நிதிநிலைமை. அந்நிய செலாவணி என்பனவற்றை மீளக்கட்டியெழுப்பவும் மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க புனர் நிர்மாணப் பணிகளுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் உயர்ந்த மட்ட பொருளாதார வளர்ச்சிக்கான அத்திபாரத்தை இடமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் யுத்தம் முடிவடைந்ததால் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அனுகூலமாக பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி பரும்படியாக்க பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுவான பொருளாதார வளர்ச்சியையும் அரசு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ;நாணய நிதிய வாக்கெடுப்பில் பிரிட்டன் உட்பட 5 நாடுகள் கலந்துகொள்ளவில்லை நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டம் வெற்றியடைவதற்கு இலங்கையின் அரசியல் சூழ்நிலை நெருக்கடியானதாக இருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன், முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தி இருந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தது. சமூக மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக அனுசரணையான இந்தக்கடன் வழங்கும் திட்டமானது இராணுவ பலவீன ஒதுக்கீட்டிற்கு உள்ளடக்கப்படுகின்றதா என்பதை பிரிட்டன் கவனிக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்துடன் அகதிமுகாம்களுக்கு இந்த நிதியை செலவிடுமாறும் பிரிட்டன் அழைப்பு விடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் 5 சதவீத வாக்களிக்கும் உரிமையை பிரிட்டன் கொண்டுள்ளது. 51 சதவீதமான வாக்குகள் கிடைத்தால் பிரேரணையை நிறைவேற்று சபை நிறைவேற்ற முடியும். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ளதால் சமாதானத்தை இலங்கை எட்டமுடியுமென்று சர்வதேச நாணய நிதியமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்புகின்றனர். இதன் அடிப்படையில் இலங்கை தற்போதைய அரசியல் நிலைவரம் கடினமானதாக இருப்பதாக நாம் நம்புகிறோம். நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிலைமை கடினமானதாக உள்ளது. மனிதாபிமான நிலைவரம் கரிசனைக்குரியதாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. 180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார். மற்றப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை விடப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக் காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்துவரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக, முன்னரே நீக்கிவிடலாம், எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிபீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும். உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும் வாக்களிக்கும்போது தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும் வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு. # நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதுக்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா எனபதை உறுதி செய்யவும். # நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும். # இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும் # இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும் அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும் # குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக்கொண்டால் இப் பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளவும். # திகதியை (00:00:00) இடவும் குறைந்தது ஏழுநாட்களுக்கு வாக்கு நடக்கும் # விக்கி பயனர்கள் ஆதரவு/எதிப்பு/கருத்து எனது தமது நிலைப்பாடுகளை முன்வைக்க அழைக்கப்படுவார்கள் # குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிராவாகியாக இருப்பார். என்னுடைய விக்கிசெய்தி அனுபவத்தின்படி, மூன்று வகையான பராமரிப்புப் பணிகளுக்காக நிருவாக அணுக்கம் தேவைப்படும் 1) தீக்குறும்பு எண்ணத்துடனோ அல்லது சோதனை முயற்சியாலோ எழுதப்பட்ட தேவையற்ற கட்டுரைகளை நீக்க 2 தீக்குறும்பு எண்ணத்துடன் ஆரம்பிக்கப்படும் பயனர் பக்கங்களை அகற்ற 3) பொருத்தமான தலைப்பிற்கு கட்டுரையினை நகர்த்தியபிறகு, தேவையற்று இருக்கும் வழிமாற்றினை நீக்க. நிர்வாகிகள் sysop உரிமை யுள்ள விக்கிசெய்தியாளர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் முறைமைச் செயற்படுத்துநர்கள் என்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிசெய்திகளில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிசெய்திகளின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் நியமங்கள் (standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர். தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும் மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு. நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதான தீர்மானங்களின் அடிப்படையில் கட்டுரைகளை நீக்குதல் அல்லது அவற்றை வைத்திருத்தல், புதிய மற்றும் மாற்றப்படுகின்ற கட்டுரைகளைக் கவனித்து வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும். நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம் உள்ள உறுப்பினர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒரு நிர்வாகியையே பொதுவாக நாடுவர். விக்கி மென்பொருள் சில முக்கிய கட்டுப்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறான அம்சங்களுள் பின்வருவனவற்றை நிர்வாகிகள் அணுக முடியும். * காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல். இணக்கக் (Arbitration) குழு முடிவுகளை நிறைவேற்றல் நாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைத்தல் * ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்தல். * ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றின் தடை நீக்குதல். நீங்கள் sysop அணுக்கம் பெற்றுக்கொள்வதை விரும்பினால் உங்கள் பெயரை விக்கிபீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் அங்குள்ள வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நிர்வாகியாக வேண்டுமா என்பது தொடர்பாக ஏனைய தொகுப்பாளர் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெறும். ஏனைய பயனர்கள் உங்களை அடையாளம் கண்டு உங்கள் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டியிருப்பதால், நிர்வாகி தரத்தைக் கோரமுன், சிறிது காலம் விக்கிப்பீடியாவுக்கு எழுதுமாறு உங்களுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது. நிர்வாகிகளுக்குப் புறம்பாக, வேறு வகைப் பயனர்களும் உள்ளனர். இவற்றின் பட்டியல் அண்ணளவான அதிகார ஏறுவரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன. ஆனால் புகுபதிகை செய்து கொண்ட பயனர் மட்டுமே கோப்புகளை பதிவேற்றுதல், கோப்புகளை இடம்பெயர்த்தல், கோப்புகளின் பெயர்களை மாற்றுதல் போன்றவற்றை செய்யமுடியும். புதிய புகுபதிகை கணக்கு துவங்க இங்கே செல்லவும் Special:Userlogin பண்பாடு அல்லது பண்பாடும் பொழுதுபோக்கும் ! இந்தக் குழுவிலிருந்து ஆயுதம் ஏந்திய சிலர், பௌச்சி மாநிலத்திலுள்ள உள்ளூர் காவல் நிலையமொன்றைத் தாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆயுதக் குழுவினரின் சந்தேகத்திடமான மறைவிடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். யோபே மாநிலத்தில் போடிஸ்கம் என்ற நகரில் காவல் நிலையம் ஒன்று தீக்கிரையானதாக பிபிசி தெரிவிக்கிறது. அயம் மாநிலமான போர்னோவிலும் காவல்துறை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பௌச்சி நகரில் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. வடக்கு நைஜீரியாவில் சரியாச் சட்டம் அமுலில் இருந்தாலும் அல்கைடாவுடன் நேரடித் தொடர்புகள் இருந்ததற்கான வரலாறுகள் இல்லை. நைஜீரியாவின் 140 மில்லியன் மக்களில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ளது 'அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பல், 112 மீட்டர் நீளமும் 6 ஆயிரம் டன் எடையும் கொண்டது. அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், நிலம், வான் மற்றும் கடல் ஆகிய மூன்று மார்க்கங்களிலும் தனது அணுசக்தித் திறனை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய ஐந்து கப்பலைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்ற நாடுகள் வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை என்றும், அதே நேரத்தில் தனது நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். கடல் மார்க்கமான பாதுகாப்பு மிகுந்த அவசியமாக மாறிவரும் தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவும் அதற்கு ஏற்றபடி தனது பாதுகாப்பு தயார் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம் என மன்மோகன் சிங் தெரிவித்தார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்துள்ள இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பல தடைகளைக் கடந்து, இந்தியா இந்த தொழில்நுட்பத்தைப் பெற்று சாதனை படைக்க உதவிகரமாக இருந்திருக்கிறார்கள் என்று பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். முக்கியமாக, அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்தார். ரஷ்யாவின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவர்களின் உறுதியான ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு வலுவாக இருப்பதை கோடிட்டுக் காட்டுவதாகத் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அதே நேரத்தில், அவர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு அரசு உரிய ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜோகான்னஸ்பர்கின் வடக்கே இருக்கும் புறநகரான ஆர்ச்சர்ட்ஸ் பகுதியில் இருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது இவ்வீடு. இவ்வீட்டை சட்டபூர்வமாக நிருவகிப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வராத காரணத்தினால் இதனைத் தாம் விற்கவிருப்பதாக இதன் உரிமையாளரான அமெரிக்க ஓவியர் நான்சி பெல் கூறினார். இவர் 25 ஆண்டுகாலமாக இவ்வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த வீட்டை விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும், இதை வாங்க எவரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே ஓரளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். 1893 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த காந்தி 1907 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மகாத்மா காந்தி அந்த வீட்டில் வாழ்ந்தார். அந்த நேரத்தில்தான் அவர் தனது சிந்தாந்தங்களான உண்மை மற்றும் வன்முறையற்ற அறவழிப் போராட்டம் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுத்தார். ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு, மரங்கள் சூழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் அவர் மொத்தம் 21 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது அவர் வழக்கறிஞராகவும் செயற்பாட்டாளராகவும் பணியாற்றினார். 1914 ஆம் ஆண்டில் அவர் நாடு திரும்பினார். 1800 மற்றும் 1900ஆம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவுகூரப்படுகிறது. பல நிறுவனங்களும், தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன. மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டன. அவற்றை இநதியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார். திராவிடர் கழக நிறுவனர் பெரியார் தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்ட கருத்துக்களைத் தொகுத்து வெளியிடுவதென்ற பெரியார் திராவிடர் கழகத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்கள் நிறுவனத்திற்கே சொந்தமானவை, அவற்றிற்கான காப்புரிமை தங்களுக்கே இருக்கிறது என வாதிட்டு மனுச்செய்தார் அவர். நீதிமன்றமும் அவரது வாதங்களை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். பிறகு வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு,பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கியும், வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் இன்று தீர்ப்பளித்தார் மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு: பெரியார் "குடியரசு' இதழில் மதம் மற்றும் சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். இந்தப் படைப்புகளுக்கு பெரியார்தான் உரிமையாளர் ஆவார். எனவே, இந்த எழுத்துகளை மீண்டும் பதிப்பிப்பதற்கான உரிமை முழுவதும் பெரியாரிடமே உள்ளது. எழுத்துகளுக்கான உரிமை அறிவுசார் சொத்துரிமையின்கீழ் வருகிறது. எனவே, இந்த உரிமையை மனுதாரரிடம் பெரியார் அளித்ததற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். பெரியார் தன் படைப்புகளுக்கான பதிப்புரிமையை கி. வீரமணியிடம் அளித்ததாக எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக, பெரியாரின் உயிலிலோ அல்லது வேறு ஆவணங்களிலோ எந்தக் குறிப்பும் இல்லை. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தன்னிடம் உள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறியதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பெரியாரின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைய குடியரசு' வின் பல இதழ்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது பெரியாரின் 130-வது ஆண்டு ஆகும். இந்நிலையில், அவரது எழுத்துக்கான பதிப்புரிமை தொடர்பான சட்ட விவாதம் வேதனையைத் தருகிறது என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இடவரிசைப் பட்டியல் (முதல் ஐந்து இடங்கள் இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 120 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கரையோரப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணற்திட்டிகளிலும் கற்பாறைகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த 120 பேர் அமெரிக்க கரையோரக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடந்தது. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே (பிரவீண்ஷெட்டி பிரிவு மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய நகரங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப் பெரிய திட்டம் உள்ளது. சர்வக்ஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்னை ஏற்படும்போது அச்சிலையை தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். இவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்? சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் நிறுவட்டுமே? என்றார். அமெரிக்காவுக்கான வெளிநாட்டு தூதர்களுக்கு அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் விருந்தளித்தனர். அந்த விருந்தில் விதவிதமான உணவு வகைகள் இருந்தாலும் இந்தியாவின் பிரபல உணவான "சமோசா' முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இந்தியாவில் சமோசா சைவ வகை உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளில் சமோசா அசைவ வகை உணவாகக் கருதப்படுகிறது, காரணம், அங்கு கோழி இறைச்சி கலந்துதான் சமோசா தயாரிக்கப்படுகிறது. ஒபாமாவும், அவரது மனைவியும் அளித்த விருந்தில் இந்திய தூதரும் கலந்து கொண்டார். விருந்தில் இடம்பிடித்திருந்த "சிக்கன் சமோசா' தூதரை மட்டுமல்லாது அனைத்து வெளிநாட்டு தூதர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அவர்கள் பிற உணவு வகைகளைவிட சிக்கன் சமோசாவை விரும்பி சாப்பிட்டார்கள். இதைப் பார்த்து ஒபாமாவும், மிசேலும் மகிழ்ச்சி அடைந்தனர். விருந்து முடிந்த பின்னர் தூதர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, ராசதந்திரம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. 21-ம் நூற்றாண்டில் நாம் ஏராளமான பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்நோக்கியுள்ளோம். இவை அனைத்தையும் நாம் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளாதவரை அதற்குத் தீர்வு காண்பதென்பது சாத்தியமல்ல என்றார். பிற நாடுகளுடனான அமெரிக்காவின் ராசதந்திர உறவில் மாற்றத்தைக் கொண்டுவந்து புதிய சகாப்தம் படைக்க வேண்டும் என்ற உறுதியுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளேன் என்றும் ஒபாமா கூறினார். உலக அமைதிக்காக அமெரிக்காவின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல் நாம் அனைவரும் உலக அமைதிக்காகவும், செழுமைக்காகவும் ஒருங்கிணைந்து பாடுபடுவது அவசியம் என்று மிசேல் ஒபாமா தெரிவித்தார். இந்த உடன்படிக்கையின்படி, யாகூ தளங்களில் மைக்ரோசாப்டின் பிங் தேடல் இயந்திரம் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்டின் கம்யூட்டர் தொழில்நுட்பத்தை தனது விளம்பர வருவாயை கையாள யாகூ பயன்டுத்தும். இந்த உடன்படிக்கை காரணமாக ஆண்டுதோரும் தனக்கு ஐநூறு மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று யாகூ கூறியுள்ளது. கடந்த ஆண்டு பல பில்லியன் டாலர்கள் கொடுத்து யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முன்வந்தது. ஆனால் மைக்ரோசாப்டின் இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 400 இந்திய தொழிலாளர்கள் வாழ வழி தெரியாது தவித்து வருகின்றனர். அவர்கள் தங்க இடமின்றி கடந்த ஒரு மாதமாக ஒரு பாலத்தின் அடியில் பசியும் பட்டினியுமாக பரிதாபகரமான வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவ அங்குள்ள இந்திய தூதரகம் இதுவரை முன் வரவில்லை. அவர்களுக்கு உதவ இந்திய தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு ஆதரவாக பல உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அதற்கு பதில் அளித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது, “உறுப்பினர் கனிமொழி எழுப்பிய பிரச்னையின் ஆழத்தை புரிந்து கொண்டேன். சவுதி அரேபியாலில் தவிக்கும் 400 இந்தியர்களின் நிலை பற்றி என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சவுதியில் உள்ள இந்திய தூதருடன் தொடர்பு கொண்டு அந்த இந்தியர்களின் துயரை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார். புவியிலிருந்து 680 கிமீ உயரத்தில் மணிக்கு 27,000 கிமீ சுற்று வேகத்தில் இயங்கவிருக்கும் துபாய்சட்-1, ஐக்கிய அரபு அமீர்ரகத்தின் செய்மதித் தொழில்நுட்பத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இது நாட்டுக்குத் தேவையான விண்வெளி சார்ந்த தகவல்களையும் புவிக் கவனிப்புத் தகவல்களையும் வழங்கும் எனச் சொல்லப்படுகிறது. இத் தரவுகள், நகர வளர்ச்சி, அறிவியல் ஆய்வு, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, கட்டுமானம், நிலப்பட உருவாக்கம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக உயர் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான அமீரக நிறுவனம் அறிவித்துள்ளது. மூடுபனி, மணற்புயல் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கும், நீரின் தரம் பற்றிய ஆய்வு, பொறியியல் சார்ந்த சோதனைகள் போன்றவற்றுக்கு துபாய்சட்-1 இன் தகவல்கள் பெரிதும் பயன்படும் எனத் தெரிகிறது. முன்னைய திட்டப்படி இது கடந்த சனிக்கிழமையே ஏவப்பட இருந்ததாயினும், மேலதிகமான பாதுகாப்புச் சோதனைகள் செய்யவேண்டி இருந்ததனால் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர்க்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர், ஐம்பெருங்குழு, எண்பேராய உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகிய எல்லோருடைய சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, பேராசிரியர் கமில் சுவெலபில் அவர்களுக்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில், “பேராசிரியர் கமில் சுவெலபில் (1927-2009 செக்கோஸ்லொவாகிய நாட்டில் பிறந்தவர். சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வடமொழி, தத்துவம், இந்திய இயல், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றைப் பயின்றவர். வடமொழியிலும் திராவிட மொழியியலிலும் முனைவர் பட்டங்கள் பெற்றுக் கீழைக்கல்வித் துறையில் ஆய்வாளராகப் பணி செய்தவர். தமிழ் மொழிக்கு இலக்கியத் திறனாய்வு, மொழியியல், நாட்டார் வழக்காறு, பண்பாட்டு மானுடவியல், மொழி பெயர்ப்பு ஆகிய துறைகளிலெல்லாம் அருந்தொண்டு ஆற்றிய பேரறிஞர். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், இதாலியன் போன்ற மேலை மொழிகளையும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகளையும் பயின்றிருந்தும் தமிழ் மொழியாலும், இலக்கியத்தாலும் பெரிதும் கவரப்பட்டுத் தமிழ்ப் பணிக்கே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒப்புநோக்கில் திராவிட ஒலியனியல், திராவிட மொழியியல், தமிழ் இலக்கிய வரலாறு, அகப்பாடல்களில் இலக்கிய மரபுகள், செவ்வியல் தமிழ் யாப்பிலக்கணம் ஆகியவை பற்றிய அவருடைய நூல்கள் தமிழுக்கு நிலைத்த பங்களிப்பு ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி இருக்கக்கூடும் என்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுவதாக, ஆஸ்திரேலிய உயர் கல்வி அதிகாரிகள் கூறுகிறார்கள். மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட இனரீதியான தாக்குதல்கள், சில கல்லூரிகள் மூடப்பட்டது, குடியேற்ற விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முகவர்கள் விஷயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டது போன்றவை உருவாக்கிய மோசமான விளம்பரம் ஆகியவைகளை அடுத்து இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய அரசாங்கம் குடிநுழைவு தொடர்பான நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான புதிய விதிமுறைகளை சமாளிக்க முடியாத சில தனியார் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய கல்விக் குழுவினர் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் குடியேற்றம் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜூலியா ஜிலர்டு கூறினார். புதிய விதிமுறைகளைச் சமாளிக்க முடியாத பல தனியார் கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டதால் அந்த கல்லூரிகளில் படித்த வெளிநாட்டு மாணவர்கள் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இந்த எண்ணிக்கை 5,000 ஐ எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாணவர்களைக் குறிவைத்து தாக்கப்படுவது போன்ற நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியதை யடுத்து முறைகேடாக நடந்து கொள்ளும் சில குடிநுழைவு முகவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர்- வாசுகி கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாததால், பொலிவை இழந்து வருகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிறந்த இடம் மயிலாப்பூர். அவர் அவதரித்த இடத்திலேயே வள்ளுவருக்கு தனிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. எம்.கே. கன்னியப்பநாயகர், டி. சுப்பிரமணிய செட்டியார் ஆகியோர் இந்த மேடையை அமைத்ததாக தெரியவந்துள்ளது. அப்போதைய அறநிலையத் துறை அமைச்சர் மு. கண்ணப்பன், கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இவ் விழாவில் பங்கேற்றனர். மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக உள்ள வள்ளுவர் கோயில் தற்போது அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக் கோயிலின் உள்ளே உள்ள கருவறையில் வள்ளுவர் எழுந்தருளியுள்ளார். அருகில் வள்ளுவரின் மனைவி வாசுகிக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் நாய்களின் கூடாரமாகவே இக் கோயில் வளாகம் மாறிவிட்டது. வள்ளுவர் அவதரித்த புன்னை மரத்தடி மேடையில் தனது பெற்றோரான ஆதி-பகவனின் திருக்கரங்களில் மழலையாக உள்ளது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இச்சிலைகள் மீது பறவைகளின் எச்சமே பரவிக் காணப்படுகிறது. புண்ணிய தீர்த்தம் வழங்கிய கிணறு தற்போது "நல்லதங்காள் கிணறு' போல பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. கோயிலின் வெளிப்புறத்தில் 2 தோரண வாயில்கள் வள்ளுவர்-வாசுகியின் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டிருந்தும், சுண்ணாம்புப் பூச்சு கண்டு ஆண்டுக் கணக்கில் ஆனது போல பொலிவிழந்துள்ளது. இக் கோயில் வளாகத்தில் தீவைத்து எரிக்கப்பட்ட அட்டைகளின் சாம்பல் குவியல்களாக எஞ்சியுள்ளன. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளும் சேதமுற்றுள்ளன. சுற்றுச் சுவர்களில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவில் இக் கோயில் இருளில் மூழ்கியுள்ளது. கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது என இப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். பராமரிக்கப்படாததால் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்குறளும், குறள் நெறி விளக்கும் அரிய ஆய்வு நூல்களும் தூசு படிந்து, செல்லரித்து சேதமுற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கோயிலின் அருகில் கட்டப்பட்டுள்ள வள்ளுவர்-வாசுகி திருமண மண்டபம் அரசுக்கு தொடர்ந்து வருவாய் ஈட்டித் தருகிறது. ஆனால், அதைப் பராமரிக்கும் அளவு கூட வள்ளுவர் கோயில் பராமரிக்கப்படாமல் உள்ளது. கோயிலின் பிரதான வாயிலின் இருகே பிரம்மாண்ட குடிநீர்த் தொட்டி நிறுவப்பட்டிருந்தது. தற்போது, இது பயன்படுத்தப்படததால் "துவார பாலகர்' போல் நிற்கிறது. இதன் அருகே குப்பைக் குவியல்கள் கொட்டப்பட்டு, துப்புரவு வாகனங்கள் மொத்தமாக சேகரித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொது சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் குறித்து இளைய தலைமுறையினருக்கு எவ்வித தகவலும் கிடைக்க இயலாத நிலை உள்ளது. அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இக் கோயிலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை இல்லை. அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் வரைபடங்கள், விளக்கக் கையேடுகள் மற்றும் இணையதளங்களில் கூட, வள்ளுவர் திருக்கோயில் பற்றிய விவரங்கள், படங்கள் எதிலும் இடம் பெறவில்லை. கோயில்களின் தல வரலாற்றிலும் முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்களும் இக் கோயிலுக்கு, கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாத் துறை இப்போது தினமும் இயக்கும் சிற்றுந்துகள் இக் கோயிலுக்கும் பயணிகளை அழைத்து வர வேண்டும். பள்ளிகளில் பாடநூல்களிலும் இக் கோயிலைப் பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற வேண்டும். தமிழக மக்கள், தமிழறிஞர்கள், இசை, நடனக் கலைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் வள்ளுவருக்கு பிரம்மாண்ட விழா நடத்த அரசு நடவடிக்கை என்பதே மக்களின் விருப்பம். சென்னை மயிலையில் பிறந்த வள்ளுவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், இதை அரசு நிறைவேற்றுமா? இத்திட்டத்தின் மூலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் அதிகூடிய எண்ணிக்கையான விண்வெளிவீரர்கள் (13 பேர்) ஒரே நேரத்தில் தங்கியிருந்த சாதனை படைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டுக்குள் இவ்வெண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பதற்கு இன்னும் 7 விண்ணோடப் பயணங்களை மேற்கொள்ளுவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இப்போது 4 படுக்கையறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் அளவைக் கொண்டுள்ள விண்வெளி நிலையம் பத்தாண்டுகளுகளுக்கு முன்னர் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஜெருசலேமின் பழைய நகரில் ஒரு புதர் பகுதியில் அகழ்வாய்வு நடத்திய போது சுட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட ஒரு தட்டு கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சிப் பணியின் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏசுநாதர் காலத்து பொருட்களை கண்டு பிடித்து, அதன் மூலம் பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். நீண்ட நாள் ஆய்வுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. அந்த தட்டில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் ஹிப்ரு அல்லது அரபிக் மொழியின் தொடக்கக்கால வடிவங்களாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இந்த மண் தட்டு எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற ஆய்வும் உடனடியாக நடந்தது. சாப்பிடுவதற்கு முன்பு கை கழுவுவதற்கு இத்தகைய தட்டு பயன்படுத்தப்பட்டது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். ஏசுநாதரும் தினமும் உணவு சாப்பிடும் முன்பு இது போன்ற ஒரு மண் தட்டில்தான் கை கழுவி இருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் சிமோன் கிப்சன் என்பவர் எழுதிய "த பைனல் டேய்ஸ் ஆப் ஜீசஸ்" என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது]] நேபாள துணை ஜனாதிபதி இந்தி மொழியில் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பு]] இசுரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்]] வன்னி அகதி முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர்]] சந்திரயான்-1 விண்கலத்தின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தது]] பிரெஞ்சு பயணிகள் விமானம் இந்திய வான்படை ஜெட் விமானத்தினால் வழிமறிக்கப்பட்டது]] தென்-வட கொரியாவில் பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திப்பது பற்றி உடன்பாடு]] வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன]] சூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள் உருவாக்கப்படும்]] இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] தார்பூர் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஐநா அறிவிப்பு]] தமது தலைவர் மெசூது இறந்து விட்டதை பாகிஸ்தான் தலிபான்கள் ஒப்புக்கொண்டனர்]] அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்]] செயற்கை உயிரியை உருவாக்க ஆய்வாளர்கள் தயார்]] மலையக சிறுமிகளின் சடலங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு]] வன்னியில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுதலை]] ஆஷஸ் கிரிக்கெட் கோப்பையை இங்கிலாந்து மீண்டும் வென்றது]] தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை உருவாக்குபவருக்கு கேரள அரசு பரிசு அறிவிப்பு]] கிரேக்கத்தில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்]] வணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்]] இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உசைன் போல்ட் உலக சாதனை]] ஐந்து சட்டசபை இடைத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி]] பட்டினி இருந்து இறக்க நோயாளிக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி]] லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை]] வட கொரியா தனது எல்லைப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது]] ஈராக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் இறப்பு]] ரஷ்யாவின் நீர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்தில் 76 பேர் இறப்பு]] நோபல் பரிசு பெற்ற தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கிம் டாய் ஜுங் காலமானார்]] ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அருட்பா மருட்பா பற்றிய செய்தி]] நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை]] அமெரிக்க செனட்டர் பர்மியச் சிறையிலிருந்து அமெரிக்கக் கைதியை விடுவித்தார்]] ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன]] இரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்]] போலந்தில் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 2,000 பேரின் உடல்கள் மீளடக்கம்]] கொங்கோவின் முன்னாள் துணை அதிபருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை]] நீர்நாரைகள் ஏன் ஒரு காலில் நிற்க விரும்புகின்றன இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் பாதிப்படையலாம்]] இந்தியாவின் செவ்வாய்க் கோள் ஆய்வுக் கலம்]] பப்புவா நியூகினியில் சுற்றுலா விமானம் வீழ்ந்ததில் 13 பேர் இறப்பு]] கிழக்காசியாவைத் தாக்கிய இரண்டு சூறாவளிகள், நூற்றுக்கணக்கானோர் இறப்பு]] ஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார்]] சென்னையில் ஒரு சிறுவன் உட்பட இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் நால்வர் உயிரிழப்பு]] கொலம்பிய ராணுவம் வெனிசுவேலாவுக்குள் நுழைந்ததால் அந்நாடு கடும் சீற்றம்]] அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகொப்டர் விமானம் மோதல்]] இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியும், யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியும் வெற்றி]] தென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா]] இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இறப்பு]] மகாத்மா காந்தியின் ஆப்பிரிக்க வீட்டை வாங்க இந்தியா ஆர்வம்]] ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்]] தொங்கா நாட்டில் பயணிகள் படகு மூழ்கியதில் 50 பேருக்கு மேல் இறப்பு]] 2003 மும்பை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத் தண்டனை]] நேபாள அரசு பதவி விலகுவதற்கு மாவோயிஸ்ட்டுகள் 3 நாள் காலக்கெடு]] பென்சில்வேனியாவில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறப்பு, 15 பேர் காயம்]] மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] இந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு]] தாய்லாந்தில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் விமானி உயிரிழப்பு]] சிங்கப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் இறப்பு]] வளைகுடாப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது]] புதுப்புது சாகசம் செய்யும் உருசியப் பிரதமர் பூட்டின்]] கிழக்கு ஜெருசலத்தில் இருந்து பாலஸ்தீனக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்]] முதலாளித்துவக் கொள்கையை அனுமதிக்க முடியாது காஸ்ட்ரோ அறிவிப்பு]] உலக நாகரிகத்துக்கு காந்தியின் பங்களிப்பு பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண்]] லாஸ்வேகாஸ் நகரில் தெருக்களில் உலாவிய புலி]] மலேசியாவில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்]] இலங்கை பயங்கரவாத தடைப் பிரிவினால் கிளிநொச்சி அரச அதிபர் கைது]] பிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு]] ஏசுநாதர் காலத்து சுட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட தட்டு கண்டுபிடிப்பு]] அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர்பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் நிலைகுலைந்ததையடுத்து அந்த மாவட்டங்களின் சிவில் நிர்வாக அதிகாரிகள் வவுனியாவில் தமது இணைப்பு அலுவலகங்களில் இருந்து பணியாற்றினார்கள். யுத்தத்தின் உச்சகட்டத்தின்போது மக்கள் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்ததையடுத்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் வவுனியாவில் இருந்து முழுமையாகச் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் இவரது இல்லத்துக்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், அரச அதிபருடன் சில நிமிட நேரம் பேசியதாகவும் அதனையடுத்து அவரைத் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினர் இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது இவர் தமது விடுதியில் தனிமையில் இருந்ததாகவும் இவரது பொறுப்பில் இருந்த இவரது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அரச அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்பன இவரது அலுவலகத்தில் அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருககின்றது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இவரை அதிகாரிகள் கொழும்புக்கு மேல் விசாரணைக்காகக் கொண்டு சென்றிருப்பதாகவும் தவகல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவர் ஏன் கைது செய்யபட்டிருக்கின்றார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தின் தலைமை சிவில் நிர்வாக அதிகாரியாகிய நாகலிங்கம் வேதநாயகன் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கடமைகளும் அலுவலகங்களும் வழமைபோல செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஏனைய சிவில்அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக இலங்கை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறும்போது, விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது எவ்வித கருத்துக்களையும் கூற முடியாது என தெரிவித்தார். மலேசியாவில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றும்படி அரசாங்கத்தை கோரி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தெருக்களில் கூடி மாபெரும் பேரணியை நடத்தினர். அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நீர்க் குழாய்களால் நீரைப் பீய்ச்சி அடித்தனர். இன்று கோலாலம்பூர் மாநகர் மையத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) எதிர்ப்புப் பேரணி மீது போலீசார் மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மொத்தம் 438 பேர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 435 பேர் மலாய்க்காரர்கள், அதே வேளை 37 பேர் பெண்கள் என கோலாலம்பூர் போலீஸ் தலைமை அதிகாரி முகமட் சப்து ஒஸ்மான் தெரிவித்தார். மேலும் 38 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்களாவர். இன்று காலை முன்னேரம் ஏழு மணிவாக்கில் தொடங்கிய கைது நடவடிக்கை, “சட்டவிரோத நடவடிக்கைகளைத்” தடுப்பதற்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 105ன் கீழ், மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் விசாரிக்கப்படுவதற்காக செராஸ் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த கைதிகளைச் சந்திப்பதற்கு வழக்குரைஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிகேஆர் நடைமுறைத் தலைவர் அன்வார் இப்ராகிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், இசா ஒழிப்பு இயக்கத்தின்(GMI) தலைவர் சையட் இப்ராகிம் சைய்ட் நோ ஆகியோர் உட்பட மேலும் 11 பேரையும் போலீசார் விசாரிப்பதாக முகமட் சப்து கூறினார். புதிய பாதுகாப்புச் சட்டத்தின்படி எவரையும் விசாரணயின்றித் தடுப்புக் காவலில் வைப்பதற்கு காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்பட மாட்டாது. அதற்கு பதில் அது திருத்தப்படும் அல்லது நடப்பு சூழலுக்கு ஏற்ப புதிய பெயரைப் பெறுவதற்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். அவரது சாகச பட்டியலில் இதுவரை, சூப்பர்சானிக் போர் விமானத்தில் பயணம் செய்தது, காட்டுக்குள் சென்று சைபீரிய புலியை வேட்டையாடியது என்பவைதான் இருந்து வந்தன. நேற்று பூட்டின், உலகின் மிகவும் ஆழமான ஏரியான பைக்கால் ஏரியில் மிர்-2 என்ற சிறிய நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து 4 ஆயிரத்து 600 அடி ஆழம் வரை சென்றார். அங்கிருந்த அற்புதமான வாயு படிகங்களையும், இயற்கை வளங்களையும் பார்த்து பிரமித்தார். 41/2 மணி நேரம் ஏரியின் அடியில் அவர் தங்கியிருந்தார். இதேபோல் வானவெளிக்கு பயணம் செய்வீர்களா, என்று அவரிடம் கேட்டபோது, சிரித்துக் கொண்டே `எனக்கு பூமியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றன` என்றார். அமெரிக்காவில் சூதாட்ட விடுதிகள் மலிந்த நகரம் லாஸ்வேகாஸ். இந்த நகரத்தில் ஒரு மாஜிக் ஷோ நடந்து வந்தது. மாஜிக் ஷோ நடத்தும் குழுவினர் பாதுகாப்பில் இருந்து வந்த ஒரு புலி அங்கு இருந்து தப்பி, தெருக்களில் சுற்றி கொண்டு இருந்தது. இரவு 9 மணிக்கு இந்த புலியை சாலையில் பார்த்து விட்டு ஒருவர் போலீசுக்கு டெலிபோன் செய்து தகவல் கொடுத்தார். புலியை பிடிக்க போலீசார் மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் உதவியை நாடினார்கள். பிறகு அந்த புலி பிடிபட்டது. புலி சாலைகளில் சுற்றியபோது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் மாஜிக் நடத்தும் குழுவினரை அழைத்து இனிமேலும் புலி தப்பித்து போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரித்தனர். இங்கிலாந்து வல்லாதிக்கத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கி தந்தவர் மகாத்மா காந்தி. இவரை பற்றி புத்தகம் எழுதப்போவதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறி இருக்கிறார் உலக நாகரிகத்துக்கு காந்தியின் பங்களிப்பு பற்றி எழுதப்போகிறேன்' என்று கார்டன் பிரவுன் கூறினார். அவர் மேலும் கூறுகையில் காந்தி 20-ம் நூற்றாண்டின் மகத்தான தலைவர்களில் ஒருவர் என்றும், அவர் பதவி ஆசை இல்லாதவர் என்றும் மக்களின் மனதை மாற்றி வெற்றி பெற விரும்பினார் என்றும் குறிப்பிட்டார். "காந்தி தான் எனக்கு மானசீக குரு. எனக்கு மட்டும் அல்லாமல் உலகில் பல தலைவர்களுக்கும் காந்தி தான் உற்சாக ஊற்றாக விளங்கினார். அஹிம்சாவாதியாக அவர் எப்படி மாறினார் என்பதையும் ஒத்துழையாமை போராட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதையும் நான் நிறைய படித்து இருக்கிறேன் என்றும் கார்டன் கூறினார். மத்திய கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இரண்டு வீடுகளில் குடியிருந்த ஒன்பது பாலஸ்தீனக் குடும்பங்களை இசுரேலியப் போலீஸ் இரவோடு இரவாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அதிகாலை பொழுது புலர்வதற்கு முன்னால் பெருந்தொகையான போலீஸார் நடத்திய இந்த நடவடிக்கை முடிந்த உடனயே யூதக் குடியேறிகள் அந்த வீடுகளுக்குள் குடியேறி விட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த வீடுகள் இருக்கும் நிலம் யூதக் குடும்பங்களுக்கே முதலில் உரித்தாக இருந்தது என்று இசுரேலிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே இந்தப் போலீஸ் நடவடிக்கை வந்துள்ளது. இசுரேல் கிழக்கு ஜெருசலேமை 1967 இல் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்வாக்கிரமிப்பை இதுவரை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை. கியூபாவின் நாடாளுமன்றத்தின் ஆண்டு அமர்வு நேற்று இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரவூல் காஸ்ட்ரோ அந்நாட்டின் சமூக அரசியல் கொள்கையை இவ்வாறு நியாயப்படுத்தியுள்ளார். கியூபா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கருப்பொருளாகக் கொண்டு காஸ்ட்ரோவின் உரை அமைந்திருந்தது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: கியூபாவின் அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகள் தவிர்ந்த ஏனைய எவருடனும் கலந்துரையாடப்படும். கியூபாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டனின் அறிக்கைக்குப் பதிலளிக்க வேண்டும். ஹிலாரி கிளின்டனுக்கும் அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் நான் கூறுவது கியூபாவின் ஜனாதிபதியாக அந்நாட்டில் முதலாளித்துவத்தையோ புரட்சியையோ அனுமதிக்கப் போவதில்லை. தொடர்ந்தும் எமது நாட்டிற்குரிய பொருத்தமான சமூகக் கொள்கையை தக்க வைத்துக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். அதனை அழிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், ஏனைய விடயங்களில் அமெரிக்காவுடன் நட்புறவுகளையும் பேச்சுகளையும் தொடர்வோம். எந்த விடயத்தையும் அமெரிக்காவுடன் பேசத்தயார். ஆனால், எமது அரசியலில் சமூகக் கொள்கைகளில் பேச்சுக்கு இடமில்லை. எமது பாரம்பரியங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். காஸ்ட்ரோவின் இந்த உரைக்கு இடையிடையே நாடாளுமன்றத்தில் பலத்த கைதட்டல் நிறைந்திருந்தது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 29 அகவையுடைய இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர் சிங்கப்பூரில் மரணமடைந்தார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியர் ஒருவர் பலியாவது இதுவே முதல் முறையாகும். இறந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஜூலை 25ம் தேதி சிங்கப்பூரில் உள்ள சாங்கி பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த நான்கு நாட்களாக அவரது நிலை மோசமானது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். நேற்று அவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே உடல் பருமன் பிரச்சினையும் இருந்து வந்தது. உடல் பருமன் உடையவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தை விரைவாக கொண்டு வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 1991 ஆம் ஆண்டில் வளைகுடாப் போரின் போது அமெரிக்கத் தரப்பில் கொல்லப்பட்ட முதலாவது போர் வீரரான மைக்கல் ஸ்கொட் ஸ்பெய்ச்சர் என்பவரின் உடல் 18 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்டனான ஸ்பெய்ச்சர் 1991 ஜனவரி 17 ஆம் நாள் ஈராக்கின் மேலாக விமானத்தில் பறந்த போது விமானம் தாக்கப்பட்டு காணாமல் போனது. விமானி கப்டன் மைக்கேல் ஸ்காட் ஸ்பெய்ச்சரின் உடல் இதுவரை மீட்கப்பட்டாமல் இருந்தது. இவரை போரின் போது காணாமல் போனவர்களின் பட்டியலில் அமெரிக்கப் படைத்துறை சேர்த்திருந்தது. இவரைக் கண்டுபிடிக்க அமெரிக்கத் தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. 2003, 2005 இல் ஈராக்கில் உள்ள சிறைகள், சுடுகாடுகள் அனைத்திலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் ஈராக்கிய பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஈராக்கில் அன்பார் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமெரிக்க இராணுவ உளவுப் படையினர் இவரது உடலைக் கண்டுபிடித்தனர். இவர் இறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் எலும்பு கூடு மட்டும் மீட்கப்பட்டது. வணிகம் தொடர்பான செய்திகளை அனைத்துச் செய்திகளையும் பகுப்பு:வணிகம் என்ற பகுப்புக்குள் சேர்க்கவும். பொருளாதாரம் என்ற இப்பகுப்பினுள் எந்தச் செய்தியையும் இணைக்க வேண்டாம். மெல்பேர்ணில் நிலைகொண்டிருந்த இத்தீவிரவாதிகள் சோமாலியாவில் இடம்பெற்ற தாக்குதல்கள் சிலவற்றிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைதானவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் பின்னர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டோர் அலி-சகாப் என்ற சோமாலியத் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சோமாலிய அரசைக் கவிழ்ப்பது இவ்வமைப்பின் குறிக்கோள் ஆகும். அத்துடன் இதற்கு அல்-கைடா அமைப்புடனும் தொடர்புகள் உண்டென காவல்துறையினர் தெரிவித்தனர். இன்றைய நடவடிக்கையில் நானூறுக்கும் அதிகமான காவல்துறையினர் கலந்து கொண்டனர். இத்தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கடந்த ஜனவரி மாதம் முதல் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், இது ஆஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய காவல்துறை நடவடிக்கை எனத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தாய்லாந்து விமானம் ஒன்று கோ சாமுய் என்ற தீவில் தரையிறங்கும் போது சறுக்கி அருகில் இருந்த கோபுரம் ஒன்றில் மோதியதில் விமானி உயிரிழந்தார். 10 பயணிகள் காயமடைந்தனர். பாங்கொக் ஏர்வெய்ஸ் விமானம் 70 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிராபி என்ற சுற்றுலா நகரில் இருந்து புறப்பட்டு கோ சாமுய் தீவுக்குச் சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டது. அந்நேரம் பெருமழை பெய்து கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. காயமடைந்தோரில் நால்வர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தனர். "விமானம் ஆட்களில்லாக் கோபுரத்தை முட்டியது எனவும் ஆனாலும் தீப்பற்றவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 1400 மணிக்கு (0800 GMT) இடம்பெற்றது. கோ சாமுய் என்ற சுற்றுலாத் தீவு பாங்கொக் நகரின் தெற்கே 300 மைல்கள் (480 கிமீ) தூரத்தில் அமைந்துள்ளது. குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் பொலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய காவல்துறையினர் பிரித்தானியக் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஓராண்டு காலமாக இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்திய விசாரணைகளை அடுத்து 118-பக்க ஆவணம் ஒன்றை "Broken System: Dysfunction, Abuse and Impunity in the Indian Police" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் ஏசிஎஃப் எனப்படும் வறுமைக்கு எதிரான அமைப்பின் உள்ளூர் ஊழியர்கள் கொல்லப்பட்டமை பற்றிய விசாரணையை அரசாங்கம் கையாண்ட விதமே, ஒட்டுமொத்தமாக தவறானது என்று குறிப்பிட்டுள்ள அந்த மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச விசாரணை ஒன்று அத்தியாவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இந்த கொலைச் சம்பவங்கள் நடந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த சமாதான கண்காணிப்பாளர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது "இக்கொலைகளில் அரசாங்க இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்ததாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்கள்". ஆனாலும் அரசாங்க நடத்திய விசாரணையோ இக்கொலைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல என்று கூறியுள்ளது. "படுகொலைகள் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில், ராசபக்சே அரசாங்கம் தாம் நீதியாக நடந்துள்ளது என வெளியுலகை நம்பவைக்க தமக்குள் நீதிவிசாரணையை நடத்தியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் திட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக 2009 ஜூலைக்குப் பின்னரான அரசின் நடவடிக்கைகள் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருந்த விசாரணைகள் தொடர்பில் மேலும் கரிசனையை அதிகரிப்பதாக அமைந்திருக்கின்றது எனவும் மனித உரிமைகள் காப்பகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக் கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மூதூர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் போர் மூண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதன் உள்ளூர்ப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 16 பேர் தமிழர்கள். ஒருவர் முஸ்லிம். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு இதில் சிறிலங்காப் படையினர் சம்பந்தப்படவில்லை எனவும், அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் ஜூலை நடுப்பகுதியில் தெரிவித்தது. அத்துடன், படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பத்தவர்கள் பாரிசை தலைமையகமாகக் கொண்ட குறிப்பிட்ட மனிதாபிமான அமைப்பிடமிருந்து நட்ட ஈட்டைக் கோருமாறும் சிறிலங்கா அரசு வலியுறுத்தி வருகின்றது. மூதூர் படுகொலைகளில் இலங்கை இராணுவம் சம்பந்தப்படவில்லை ஜனாதிபதி ஆணைக்குழு]] சிட்னியில் தெற்கு பசிபிக் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். பிரின்சஸ் அசிக்கா என்ற கப்பல் தொங்காவின் தலைநகர் நுக்கு'அலோஃபா மற்றும் அதன் அயல் தீவுகளுக்கிடையில் பயணிக்கையிலேயே கடலில் கவிழ்ந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவரின் உடலே இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இப்படகில் 96 பேர் பயணித்ததாகவும், 23 பயணிகள் உட்பட 50 பேர் வரை காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களே காப்பாற்றப்பட்டவர்களில் அதிகம் என்றும் பெண்கள் குழந்தைகள் பலரைக் காப்பாற்றாமல் போய்விட்டது எனவும் தப்பிவந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இருந்து கடல் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் படகுகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. கடல் வேப்பநிலை 25செ ஆக இருந்தமையால் மூழ்கியவர்கள் பலர் அதிக நேரம் கடலீல் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு தலைநகருக்கு வட-கிழக்கே 55 மைல் தூரத்தில் பிரின்சஸ் அஷிக்கா என்ற இக்கப்பல் மூழ்கியுள்ளது. நேபாளத்தில் பிரதமர் மாதவ் குமார் நேபாள தலைமையிலான 23 கட்சிகளின் கூட்டணி அரசு பதவி விலகுவதற்கு மாவோயிஸ்ட்டுகள் 72 மணிநேர காலக்கெடு விதித்துள்ளனர். ஆட்சியை கலைத்துவிட்டுப் புதிய அரசை அமைத்துவிட்டால் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவோம் என்றும் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தக் கெடு நேற்று முன்தினம் விதிக்கப்பட்டதால் இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகளின் இந்தக் கெடுவைத் தொடர்ந்து பிரதமர் மாதவ் குமார் ஜனாதிபதி ராம் பரனை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே, அரசு கலைக்கப்படாவிட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவெடுப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் பாபுராம் பட்டாராய் தலைமையில் மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே கருத்துடைய சக்திகளை ஒன்று திரட்டி எதிர்கால போராட்டத்தை இக்குழு வழிநடத்திச் செல்லும் என்றும் மாவோயிஸ்ட் பேச்சாளர் தினாத் ஷர்மா தெரிவித்துள்ளார். அவன் எதுவும் பேசாமல் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டான். அவன் சுட்ட போது அந்த இடத்தில் 60 முதல் 70 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு தம்பதி கூறுகையில், அவன் தலை வழுக்கையாக இருந்தது. முகமூடி அணிந்து இருந்தான். அவன் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். கிட்டத்தட்ட 10 வினாடிகள் சுட்டான். அதன் பிறகு அவன் தன் தலை யில் சுட்டுக்கொண்டு இறந்துபோனான் என்று தெரிவித்தனர். இங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த எவரையாவது இலக்குவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. துப்பாக்கிதாரி எதனையும் கூறவில்லையெனவும் அவரது இலக்கு சரியாகத் தெரிந்திருக்கும் பட்சத்திலேயே அந்த வகுப்புக்குள் அவர் நேராகச் சென்றிருக்க முடியுமெனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மும்பையில் ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு நடந்த இரட்டை கார்க் குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு மும்பை சிறப்பு பொடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. 2003ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா என்ற புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு அருகிலும் நகைகள் விற்கும் சந்தை ஒன்றிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை மும்பை சிறப்பு பொடா நீதிமன்றம் விசாரித்து வந்தது. பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தக் குண்டு வெடிப்புகளை திட்டமிட்டதாக ஒரு தம்பதியர் உட்பட மூவர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு கொடிய தாக்குதல்களை நடத்தியதும் இதே லஸ்கர்- இ-தொய்பா இயக்கம் தான் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. இன்று இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, மகள் அஷ்ரத் சபியுக் அன்சாரி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு இது மரண அடியாகும்" என்றார். ஒரு தீவிரவாத செயலில் கணவர், மனைவி, மகள் என ஒரு குடும்பமே ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் குண்டு வைக்கப்பட்டிருந்த டாக்சியின் டிரைவராவார். இந்த வழக்கை மொத்தாம் பங்க்ளே, எஸ்.எஸ்.ஜோஷி ஆகிய இரு நீதிபதிகள் விசாரித்தனர். கடைசியாக நீதிபதி புரானிக் விசாரித்து, தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். இன்று தண்டனை வழங்கப்பட்ட மூவர் மீதும் முன்னர் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் ஒன்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் இப்போது ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. மரண தண்டனையை எதிர்த்து மேன் முறையீடு செய்யவுள்ளதாக தண்டனையளிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். இதே வேளையில், இந்தியாவின் மும்பை நகரில் 2008 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தேடப்படும் 13 பேரைக் கண்டுபிடித்துத் தருமாறு அனைத்துலக அவசர உசார் அறிக்கையொன்றை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளதாக அனைத்துலக பொலிஸ் அமைப்பான இன்டர்போல் அறிவித்துள்ளது. இவர் இப்போது கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என தேசியப் பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதிலும் நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டு வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கைது குறித்து புதினம் இணையத்தளம், செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்தினம் புத்ன்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் நெருங்கிய வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: "நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன் Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறை அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகவே குறிப்புகள் உணர்த்துகின்றன இவ்வாறு புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், தாய்லாந்துப் பிரதமர் அபிசித் வெச்சஜீவா பத்மநாதனின் கைது பற்றிய செய்தி குறித்து தமக்கு முழுமையான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும்படி நாட்டின் பாதுகாப்பு அமைச்சுக்க்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இக்கைது பற்றிய தகவல் தமக்கு வியாழன் இரவே தமக்குத் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். தாய்லாந்தின் தலைமைக் காவல்துறை அதிகாரி தீரதேஜ் ரொட்ஃபோதொங், பத்மநாதன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாகவும், தாய்லாதில் அல்லவென்றும் தெரிவித்தார். பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில், மலைகளால் சூழப்பட்ட மாகாணம் வச்சிரிஸ்தான். இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பழங்குடியின இளைஞர்களுக்கு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்குப் பயிற்சி அளித்து, தனது தலைமையில் தெஹ்ரீக் இ-தலிபான் இயக்கத்தை தொடங்கினார் பைதுல்லா. பாகிஸ்தானில் அல்-கைதா அமைப்பின் செயல்பாடுகளுக்கு வழிவகை செய்து கொடுத்தவர்களில் பைதுல்லா முக்கியமானவர். 35 வயதான பைதுல்லாவைப் பிடிக்க உதவுபவருக்கு ரூ.25 கோடி வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதேபோல, பைதுல்லாவைப் பிடித்துக் கொடுத்தால் ரூ.3 கோடி வெகுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தெற்கு வச்சிரிஸ்தான் பகுதியில் உள்ள தனது மாமனார் மாலிக் இக்ராமுதீன் வீட்டில் பைதுல்லா பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தையடுத்து, கடந்த புதன்கிழமை அதிகாலை அந்த வீட்டின் மீது அமெரிக்கப் படையினர் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பைதுல்லா, அவரது இரண்டாவது மனைவி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பைதுல்லா கொல்லப்பட்டது தொடர்பான செய்தியை, அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பைதுல்லா கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், ஆனால், இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியதாக வேறு சில தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பின. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி மசூது கொல்லப்பட்டதை உறுதி செய்தார். பைதுல்லா கொல்லப்பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், உண்மை நிலையை உறுதிப்படுத்த ராணுவம் புலனாய்வு செய்து வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார். தெஹ்ரீக் இ- தலிபான் இயக்கத்தின் துணைத் தளபதியான ஹக்கிமுல்லா மசூத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், பைதுல்லாவும், அவருடைய மனைவியும் நலமுடன் உள்ளதாக முதலில் தெரிவித்தனர். ஆனால், இந்த ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பைதுல்லாவின் மனைவி பின்னர் இறந்துவிட்டதாக தெஹ்ரீக் இ-தலிபான் இயக்கம் வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது. இதற்கு முன்னர் நடந்த பல தாக்குதல்களில் பைதுல்லா உயிர் தப்பியுள்ளார். கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பைதுல்லா கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது. இதையடுத்து, பைதுல்லாவே செய்தியாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தான் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், தற்போதைய ஏவுகணைத் தாக்குதலில் பைதுல்லா கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகி பல மணி நேரமாகியும், கடந்த முறையைப் போல பைதுல்லா செய்தியாளர்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. எனவே, அவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் நம்புகின்றனர். தென் ஆபிரிக்காவில் ஜொகான்னஸ்பர்க் நகரில் மகாத்மா காந்தி வாழ்ந்த வீட்டை வாங்க இந்திய நடுவண் அரசு நிறுவனமான "கோல் இந்தியா" விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கான்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் என்ன விலையாக இருந்தாலும் சரி, வீட்டை வாங்குமாறு நிலக்கரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் இந்த வீட்டை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஜொகான்னஸ்பர்க் சென்று அந்த வீட்டைப் பார்வையிடவுள்ளனர். அவர்களுடன் நானும் செல்லவுள்ளேன். ஒருவேளை இந்த வீட்டை இந்திய வம்சாவளியினர் அல்லது வேறு இந்திய நிறுவனம் வாங்க முடிவு செய்திருந்தால், இந்த வீட்டை வாங்கும் முடிவிலிருந்து கோல் இந்தியா பின்வாங்கும். தேசத் தந்தை வசித்த வீட்டை நினைவகமாக காக்க வேண்டியது நமது கடமை. இதனால் இத்தகைய முயற்சியை கோல் இந்தியா மேற்கொண்டுள்ளது" என்றார். அதிக விலை என்று கூறியே இதுவரை எவரும் வீட்டை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டை வாங்க காந்தியின் கொள்ளுப்பேத்தியான கீர்த்தி மேனனும் ஆர்வம் தெரிவித்திருந்தார். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு விலை போகிறது]] மொத்தம் 24,626 வாக்காளர்கள் உள்ள வவுனியா நகரசபை வட்டாரத்தில், 12,850 பேர் (52 மட்டுமே வாக்களித்திருந்தனர். யாழ்ப்பாண மாநரகசபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இறுதி முடிவுகள் வருமாறு: மொத்தம் 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரத்தில், 22,280 பேர் (20 மட்டுமே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊவா மாகாணசபை தேர்தலின் இறுதி முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 418,906 வாக்குகளை பெற்று 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 129,144 வாக்குகளை பெற்று 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.வி.பி பெற்ற 14,639 வாக்குகளைப் பெற்று இடத்தைப் பெற்றது. மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகளுடன் 1 இடத்தைப் பெற்றுள்ளது. இவன் இந்தியாவின் மீது படையெடுத்து பியஸ் நதிக்கரை அருகே ஆட்சி செய்து வந்த போரஸ் மன்னனை வெற்றிக் கொண்டான். கிரேக்கத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து இந்தியா மீது போர் தொடுத்த கிரேக்க வீரர்கள் பலர் சோர்வடைந்தனர். சிலர் இந்தியாவிலேயே தங்கி விட்டனர். கிரேக்க சாம்ராச்சியம் அழிந்து பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், தாங்கள் அலெக்சாண்டரின் வாரிசுகள் என கூறிக்கொண்டு இமாசல பிரதேச மாநிலம் மலானா என்ற பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி மற்றவர்களுக்கு புரிவதில்லை. இது குறித்து இமாசல பிரதேச பல்கலைக்கழகத்தின் பழங்குடியினர் பற்றிய பாடத்தின் துறை தலைவர் பி.கே.வைத் கூறியதாவது:- இமாசல பிரதேசத்தில் மலானா கிராமம் 8,600 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் ரோமானியர்களை போன்ற முகம் மற்றும் உடலமைப்பை கொண்டவர்களாக உள்ளனர். மலானா கிராம எங்களுடன் சேர்ந்து அவர்களும் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிவின் பேரில் மலானா மக்கள் அலெக்சாண்டரின் வம்சத்தவர்களா என்பது தெரிந்து விடும் என்றார். 1940களில் கட்டப்பட்ட மேற்படி கோவிலில் இறுதியாக 1972 ஆம் ஆண்டே தேர்த்திருவிழா நடைபெற்றது. நியூயோர்க்கில் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்தனர். அதே நேரத்தில் ஒரு குட்டி விமானத்தில் 3 பேரும், ஒரு குழந்தையும் பயணம் செய்தனர். இவை இரண்டும் நியூயோர்க் நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது குட்டி விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விமானம், ஹெலிகொப்டரின் பின்பகுதியில் மோதியது. எனவே, நிலை தடுமாறிய ஹெலிகொப்டரும், விமானமும் நியூயோர்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் விழுந்து மூழ்கியது. இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த இத்தாலிய சுற்றுலா பயணிகள் 5 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, விமானி மற்றும் 2 பயணிகள் உள்ளிட்ட 4 பேரும் ஆக மொத்தம் 9 பேர் பலியானார்கள். தகவல் அறிந்ததும் அதிகாரிகளும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். இவ்விபத்து தொடர்பாக நியூயோர்க் மேயர் மைக்கேல் புளும்பெர்க் தெரிவிக்கையில்; இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எவராவது உயிருடன் இருப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. சுழியோடி உடல்களைத் தேடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவசர நடவடிக்கைகள் மீட்புப் பணிகளாக மாற்றப்பட்டுள்ளன. காரணம் இதன் முடிவுகள் சந்தோசகரமானதாக அமையப்போவதில்லை. ஹெலிகொப்டரின் பின்பக்கத்திலேயே விமானம் வந்து மோதியுள்ளது. இந்நிலையில் இவ் விபத்து தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விமானத்தின் சிறகொன்று உடைந்து வீழ்ந்ததை சிலர் கண்டுள்ளனர். ஹெலிகொப்டரின் சில உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, 30 அடி ஆழத்திற்கு மேலுள்ள பகுதிகளை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளதெனத் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஏர்வேஸ் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி ஹட்சன் ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பயணம் செய்த 150 பேரும் உயிர் தப்பினார்கள். அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் நடுவானில் 70 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 140 விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இந்த சிலை திறப்புக்கு கடந்த காலங்களில் கன்னட அமைப்புகள் சிலவற்றினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 13 ம் தேதி சென்னையில் கன்னட கவிஞர் சர்வஞ்னர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் பெரிய அளவில் சமூக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஒய்வுப்பெற்ற சமூகவியல் பேராரசிரியர் ஜிஎஸ்ஆர் கிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களில் இரண்டு மூன்றுமுறை சிலையை நிறுவ வேண்டும் என்று விரும்பி அது நடைபெற முடியாமல் அதற்கு பெங்களூருவில் எதிர்ப்பு எழுந்ததால் தற்போதைய சிலை திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். கர்நாடகத்தில் திருவள்ளுவரை தெரிந்த அளவுக்கு தமிழகத்தில் சர்வஞ்னரை பற்றி தெரிந்து இருக்காது என்று கூறும் அவர் சர்வஞ்னரும் திருவள்ளுவரை ஒத்த ஒரு சிந்தனையாளர் தான் என்றும் வாழ்க்கை நெறிகளை வள்ளுவரை போலவே இரண்டு அடிகளில் பாடியவர் என்றும் அவர் கூறினார். "பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்தது. இந்தச் சமயத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பலர் என்னைச் சந்தித்தனர். அப்போது பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். ஆனால் மூடியிருக்கும் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட பிறகுதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று சபதம் செய்திருந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த எனது சபதத்தை இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிறைவேற்றிவிட்டார். இதற்காக எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கப்படுகிறது. இந்த 2 நிகழ்ச்சிகளும் இரு மாநில மக்களின் இதயங்களைத் திறக்கும் விழா. திருவள்ளுவர் சிலை இங்கு திறக்கப்படும் நேரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் போதனைகள் அடங்கிய "உரைப்பா' என்ற புத்தகம் தமிழில் இறையடியான் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அப் புத்தகம் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட உள்ளது. சென்னையில் சர்வக்ஞர் சிலையைத் திறக்க எந்தத் தமிழனும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கன்னடக் கவிஞரின் புத்தகத்தைத் தமிழில் வெளியிடக்கூடாது என்றும் கூறவில்லை. சர்வக்ஞர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று எந்தத் தமிழனும் கூறவில்லை. சர்வக்ஞரின் கருத்துகளை நான் படித்துள்ளேன் ஆடு முட்டாத சொப்பு இல்லை ஆடு தின்னாத கீரை இல்லை அதுபோல் சர்வக்ஞர் சொல்லாத போதனைகள் இல்லை. புரட்சிகரமான, முற்போக்கான கருத்துகளை சர்வக்ஞர் சொல்லியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக கர்நாடக தமிழ்ச் சங்கத்தார் பல முதல்வர்கள் முதல் பிரதமர், குடியரசுத் தலைவர் வரை சந்தித்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க மனு கொடுத்தும் திறக்க முடியவில்லை. திருவள்ளுவர் சிலை திறப்புக்கு என்னையும் எடியூரப்பாவையும் சேர்த்துவைத்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. மருத்துவப் பரிசோதனைக்காக அண்மையில் எடியூரப்பா சென்னை வந்திருப்பதாக அறிந்தேன். இதையடுத்து அவரைப் பார்க்க நான் விரும்பினேன். ஆனால் நான் மூத்தவர் என்பதால் என்னைப் பார்க்க எடியூரப்பாவே வீட்டுக்கு வந்தார். இது சகோதரப் பாசம். மக்கள் ஆதரவு பெற்றோர் யாராக இருந்தாலும், சமுதாயப் பணியில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கு நண்பர். எடியூரப்பா எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நானும் அவரும் இந்தியர் என்ற உணர்வு, இதற்கும் மேலாக மனிதர்கள் என்ற உணர்வு" என்றார் கருணாநிதி. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு]] இமயமலையின் அடிவாரத்தில் இருக்கின்ற பிதோராகார்த் மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று ஊர்களில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு பொலிஸார் உட்பட பல நிவாரண பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதுவரையில் குறைந்தப்பட்சம் 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. **தென்னிலங்கையின் பேருவளையில் இரண்டு முஸ்லிம் மதக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களில் மூவர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டது. **யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 நெடுஞ்சாலை பொதுமக்களின் பாவிப்பிற்கு திறக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு அறிவித்தது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சிறுவன் சஞ்சய் திங்கட்கிழமை காலை உயிரிழந்தான். பரோடா, பூணே, மற்றும் மும்பாயில் மேலும் மூவர் இன்று செவ்வாய்க்கிழமை இறந்தனர். இதன் மூலம் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்திருப்பதாக இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தென் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள முதல் இறப்பு இது. குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்றக் கூடும் எனும் அச்சத்தில் நாடெங்கிலும் உள்ள பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் இறப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் எண்ணூற்றுக்கும் அதிகமானோர் எச்1என்1 கிருமியினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகளும், சோதனை செய்ய போதுமான வசதிகளும் கையிருப்பில் உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறையின் செயலர் வி கே சுப்புராஜ் பிபிசியிடம் தெரிவித்தார். சிங்கப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் இறப்பு]] இதையடுத்து வெனிசுவேலாவின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள கொலம்பிய ராணுவத் தளங்களில் பயிற்சிகள் ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு கொலம்பிய ராணுவம் படகுகளில் வெனிசுவேலாவுக்குள் நுழைந்தது. அமெரிக்காவுக்கு இராணுவத்தளங்களை வழங்கும் விடயத்தில் வெனிசுவேலா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தென்னமெரிக்காவுக்குள் காலடி எடுத்து வைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு துணைபோகவேண்டாமென வெனிசுவேலா கேட்டுக்கொண்டபோதும் கொலம்பியா இதை நிராகரித்துவிட்டது. தனது நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் கடத்தல், மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா உதவி தேவை என கொலம்பியா தெரிவித்துள்ளது. கொலம்பிய முகாம்களில் அமெரிக்கப் படையினரின் பிரசன்னத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான தென் அமெரிக்க தலைவர்களின் மாநாடு ஆரம்பமாகவிருப்பதற்கு சிறிது முன்பே சாவேஷ் இக் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அமெரிக்க பிரசன்னத்தை நீடிப்பது தொடர்பான செய்திகள் வெளியானதிலிருந்தே கொலம்பியாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையில் இராஜதந்திர சர்ச்சைகள் ஆரம்பமாகியிருந்தன. கொலம்பிய ராணுவம் தனது நாட்டு எல்லைக்குள் நுழைந்தது அங்கு பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பாரிய குற்றம். திடீர் தாக்குதல் என ஜனாதிபதி சாவெய்ஸ் விபரித்தார். 1989ம் ஆண்டுக்கு முன்னர் பனாமாவை அமெரிக்கா ஆக்கிரமிக்க முன்னர் இருந்தது போன்ற நிலையை தனது நாட்டின் தற்போதைய நிலை வரத்திற்கு சாவெய்ஸ் ஒப்பீடு செய்துள்ளார். கொலம்பியாவின் அமெரிக்க சார்புப் போக்கைக் கண்டிக்கும் பொருட்டு அந்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுமதி செய்யும் எண்ணெய். எரிவாயு என்பவற்றை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளார். சர்வதேச சந்தையின் விலைக்கு மாத்திரமே இனிமேல் கொலம்பியாவுக்கு எண்ணெய் எரிவாயுக்கள் வழங்கப்படுமென சாவெய்ஸ் கூறினார். ஏழு ராணுவத் தளங்களைப் பாவிப்பதற்கு கொலம்பியா அமெரிக்காவுக்கு அனுமதியளித்தால் வெனிசுவேலா கொலம்பியாவிடையே முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வெனிசுவேலாவின் இராணுவம் உரிய இடத்தை நோக்கி வந்ததும் கொலம்பியப் படைகள் திரும்பிச் சென்றதாகவும் தெரியவருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது. ஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல், கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூ கீ, வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாகக் குறைத்த்தோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங் சான் சூ கீ அம்மையாருக்கு எதிரான தீர்ப்பு பற்றி அனைத்துலக மட்ட த்தில் கண்டங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சூகீ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஆதரித்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இந்தத் தண்டனையை தாம் வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் கருத்து வெளியிடும் போது, பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள தடைகள் மேலும் கடுமையாக்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், வரும் 2010ல் மியான்மரில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார். தைவானில் மட்டும் அந்த சூறாவளிக்கு 62 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 58 பேரைக் காணவில்லை. அந்தக் கணக்கில் நிலச் சரிவுகளில் புதையுண்டவர்கள் சேர்க்கப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் கடுமையான சூறாவளியினால் நிலச் சரிவுகள் மட்டுமின்றி வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. அந்தச் சூறாவளிக்கு "மொராக்கோட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து நகரும் மொராகட் சூறாவளியைத் தொடர்ந்து சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பிஎன்ஜி ஏர்லைன்சு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இவ்விமானத்தில் இரண்டு விமானிகளுடன் 9 ஆஸ்திரேலியர்களும் ஒரு ஜப்பானியரும் ஒரு உள்ளூர்ப் பயணியும் பயணித்திருந்தனர். அவ்விமானம் தரையிறங்கவில்லை என அறிந்த உடனும் மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இரு ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானம் எனபன தேடுதலில் ஈடுபட்டிருந்தாலும், மேகக் கூட்டம் மற்றும் குறைந்த தெளிவற்ற நிலை காரணமாக இப்பணி தாமதமானது. விமானம் வீழ்ந்த இடம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவ்விடத்துக்குச் செல்லுவதற்கு சிரமமாக இருந்ததால் இரண்டு படைவீரர்கள் உயிர்தப்பியவர்களைக் கண்டறியும் நோக்கில் அங்கு தரையிறக்கப்பட்டார்கள். திட்டப்படி, 2013-2015ம் ஆண்டுகளில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுவின் கலத்தை செலுத்தும் என்று இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பாளர் மாதவன் நாயர் கூறினார். தற்போது, செவ்வாய்க் கிரக ஆய்வு திட்டம் பற்றிய ஆய்வுப் பணிகள் நிறைவேறியுள்ளன. இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் நாயர் கூறினார். செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆரம்பக்கட்ட பரிசோதனை நிறைவு]] நிலத்தடி நீர் என்பது மழை நீரால் நிலத்திற்குள் ஊடுருவும் நீரையும் ஏனைய மூலங்களிலிருந்து நிலத்துக்கடியில் சுரக்கும் நீரையும் குறிக்கின்றது. இந்த ஆய்வின்படி, வடக்கு இந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி தண்ணீரின் மட்டம் நான்கு சென்ட்டி மீட்டர் அளவால் குறைந்து வருகின்றது. நேச்சர் Nature ஆய்விதழில் கிறேஸ் Gravity Recovery And Climate Experiment மிசன் இது குறித்து தனது ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. கிரேஸ் மிசன் தனது இரண்டு விண் செய்மதிகளினூடாக அறிந்த தகவல்களை அடிப்படையாக வைத்ஹ்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட நிலத்தடி நீரின் இழப்பு இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தின் நீர்க்கொள்ளவைப் போல இரண்டு மடங்கு அதிகமானது. மனிதனின் நடவடிக்கைகள், குறிப்பாக விளைநிலங்களுக்கான நீர்ப்பாசன வழிமுறைகளே இதற்கான முக்கிய காரணியாகவுள்ளது. இந்திய அரசாங்கம் நிலத்தடி நீரின் இழப்பு பிரச்சனை குறித்து கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் இந்த இழப்பின் அளவு அவர்கள் ஏற்கனவே கணித்ததைவிட அதிகமானது என்றே இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. ஆறுகளிலும் குளங்களிலும் மழைவீழ்ச்சிக்கு ஏற்றாப்போல் நீரின் மட்டம் கூடிக்குறைவது போல் நிலத்தடி நீரின் அளவில் அது தாக்கம் செலுத்துவது இல்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயம். நிலத்தடி தண்ணீர் நிலத்தில் படிந்து நிலைகொள்ள பல ஆண்டுகள் தேவை என்பதே சிக்கலுக்குரிய உண்மை என்றும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். நீர் நாரை Flamingo என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை? விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை. நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவைர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக, மனிதர்கள் இடக்கை, வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல, நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்கள். நீர்நாரைகள் தமது தலைப்பகுதியை ஒரே பக்கத்தில் அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை அவதானித்தார்கள். அத்துடன், தலைப்பகுதியின் எப்பக்கத்தை அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை வைத்து அவை தமது கூட்டத்தில் ஏனைய பறவைகளுடன் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது. வலப்பக்கத்தில் தலைப்பகுதியை அதிகநேரம் ஓய்வாக வைத்திருக்க விரும்பும் நீர்நாரைகள் அதிக முரட்டுத்தனத்துடன் தென்படுவதாக மத்தியூ அண்டர்சன் தெரிவித்தார். இதனை அடிப்படையாக வைத்து நீர்நாரைகள் ஒரு காலில் நிற்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தார்கள். இதற்காக அவர்கள் கரிபியன் நீர்நாரைகளை Phoenicopterus ruber பிலடெல்பியா விலங்குக்காட்சிச் சாலையில் பல மாதங்களாக அவதானித்தார்கள். எந்தக்காலில் அவை நிற்க விரும்புகின்றன என்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவை குளிர் நீரில் நிற்கும் போது நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பதையே விரும்புகின்றன. இரண்டு கால்களையும் நீரில் வைப்பதன் மூலம் அவை அதிகளவு வெப்பத்தை இழக்க வேண்டி வரலாம். ஆனாலும் இவை தவிர ஒரு காலில் நிற்பதன் மூலம் வேறு பயன்களையும் நீர்நாரைகள் பெறலாம் என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கவில்லை. பெரும்புகழ்பெற்ற செல்வந்தர் ஒருவரின் வாரிசான சான் பியர் பெம்பா, முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர் மொபுட்டு செசேய் செக்கோவின் உதவியாளராகவும், கொங்கோவின் மிகப் பிரபலமான பெரும்புள்ளிகளில் ஒருவரும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டுள்ள கொங்கோவின் முன்னாள் இராணுவ அதிகாரமிக்க நபர்கள் நால்வரில் முக்கியமானவருமாவார். விமானங்கள் மற்றும், வானொலிக் கருவிகள் மற்றும் தொலைக்காட்சி சேவை நிலையங்களுடன் தொடர்புடைய வர்த்தகங்களில் ஈடுபட்டதன் மூலம் சம்பாதித்த பல நூறு மில்லியன் டொலர்கள் செல்வத்தின் மூலம் கொங்கோவின் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பிடித்தார். எனினும், அமைதி உடன்படிக்கையொன்றையடுத்து இவர் 2003ம் ஆண்டில் துணை அதிபராகவும் பதவியேற்றார். ஆனால் மூன்று ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யோசப் கபிலாவிடம் ஆட்சியை இழந்த பெம்பா தற்போது ஐந்து வகையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார். போர்க் குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் அதிபர் மீது விசாரணைகள் ஆரம்பம்]] போர்க் குற்றங்களுக்காக சூடான் அதிபரைக் கைது செய்ய ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு]] ஜெர்மனி-போலந்து எல்லையில் வட-மேற்குப் போலந்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போலந்து மற்றும் ஜெர்மனிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 1945 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகப்போரின் முடிவின் போது இறந்த ஜெர்மனியக் குடிமக்களின் உடல்கள் இவை என நம்பப்படுகின்றது. வீட்டு நாயாக பழக்கப்படுத்தாமல், உலகில் பல்வேறு சிற்றூர்களில் திரியும் பல நாய்களின் மரபணுக்களை அலசியபொழுது புதிதாக நுழைந்த மரபணுக்களும், இயற்கையாக இருந்த மரபணுக்களும் கலந்து இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இக்கண்டுபிடிப்பை ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள இத்தாக்காவில் உள்ள கார்ணெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆடம் பாய்க்கோ Adam Boyko என்பவர் செய்தார். கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரஷ்யா கார் பார்க்கிற்கு பின்புறமாகவிருக்கும் கழிவு நீர் வாய்க்கால் ஒன்றில் இரு தமிழ் யுவதிகளின் சடலங்கள் சனிக்கிழமை முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள் இருவரும் சடலமாகக் கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டு கறுவாதோட்டம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இலங்கையின் மலையகத்தில் மஸ்கெலியா, லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த ஜீவராணி, சுமதி எனும் சுமார் 16, 17 வயது மதிக்கத் தக்கவர்கள் பெண்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இவர்கள் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இரு வீடுகளிலேயே இந்த இரு யுவதிகளும் பணிப் பெண்களாகத் தொழில் புரிந்து வந்துள்ளனர். இவ்விருவரும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு வந்து போடப்பட்டார்களா, அல்லது வாகனத் தரிப்பிடப் பகுதியில் கொல்லப்பட்டார்களா என்பதைப்பற்றித் தகவல் வெளியாகவில்லை. இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும் கறுவாத்தோட்ட பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் அமெரிக்க செனட்டர் ரங்கூனுக்குத் திரும்பி சூ கீ யைச் சந்தித்தார். இவ்வாரத் தொடக்கத்தில் சூ கீ யின் வீட்டுக் காவல் மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட பின்னர் அந்நிய அதிகாரி ஒருவரை அவர் சந்தித்திருப்பதும் இது தான் முதன் முறையாகும். அதைத் தொடர்ந்து ஜான் யெத்தாவ் என்னும் அந்த அமெரிக்கரின் விடுதலையை பெறுவதில் அவர் வெற்றி அடைந்ததாக வாஷிங்டனில் உள்ள வெப் பின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது. சூ கீ யின் இல்லத்திற்கு நீந்திச் சென்றதற்காக யெத்தாவுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. யெத்தாவை விடுவித்த பர்மிய அரசாங்கத்திற்கு வெப் நன்றி தெரிவித்துக் கொண்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. “அந்த நடவடிக்கை எதிர்காலத்தில் இரு தரப்புக்கும் இடையில் நம்பிக்கையை வளர்ப்பதற்குத் துணை புரியும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் யெத்தாவ், செனட்டர் வெப் பாங்காக் திரும்பும் அதே விமானத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. இதற்கிடையில் சூ கீயை விடுதலை செய்யுமாறும் வெப் பர்மிய இராணுவ ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொண்டார். கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பகுதியைஅவர் வீட்டுக் காவலில் கழித்துள்ளார். அமெரிக்க செனட்டரைச் சந்திப்பதற்காக அவர் தமது இல்லத்திலிருந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ரங்கூனில் உள்ள விருந்தினர் மாளிகையில் வெப் பும் சூ கீ யும் சந்தித்தனர். 45 நிமிடங்களுக்குப் பின்னர் சூ கீ அங்கிருந்து புறப்பட்டார். சூ கீ மீண்டும் காவலில் வைக்கப்பட்டதற்கு ஒர் அங்கீகாரமாக இராணுவ ஆட்சியாளர்கள் வெப் பின் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்று பர்மிய கிளர்ச்சித் தரப்புக்கள் எச்சரித்துள்ளன. 1962 ம் ஆண்டு தொடக்கம் பர்மாவை இராணுவம் இரும்புக்கரத்துடன் ஆட்சி செய்து வருகிறது. பெர்லினில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் நேற்று ஞாயிறன்று நடந்த ஆண்களுக்கான நூறு மீட்டர் ஓட்டம் இறுதிப் போட்டியில் 22 வயதான உசைன் போல்ட் மகத்தான வெற்றி பெற்றார். ரஷ்யாவின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தில் திங்களன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 76 பேர் வரை கொல்லப்பட்டதாக நம்புவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விபத்து காரணமாக பல நகரங்களும் ஆலைகளும் மின்சாரத்தை இழந்துள்ளன. இராட்சச மின் உற்பத்தி விசிறிகளுக்கான மண்டபம் முற்றாக நிர்மூலமான இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உடைந்துபோன ஒரு விசிறியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கிம், இருதயம் செயலிழந்ததைத் தொடர்ந்து மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படுகொலை முயற்சிகளிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்த கிம், சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவித்தவர். அத்துடன், இரு தடவைகள் நாடு கடத்தப்பட்ட கிம், பல தடவைகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1997 இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கிம் 2003 வரை பதவி வகித்தார். 1948 இல் தென்கொரியா ஸ்தாபிக்கப்பட்டது முதல் ஆளுங்கட்சி வசமிருந்த அதிகாரத்தை 1997 இல் கிம் ஜனாதிபதியாகத் தெரிவானதன் மூலம் எதிர்க்கட்சி வசமாகியது. இதனால் புதிய வரலாறொன்றை ஏற்படுத்திய பெருமையையும் கிம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் கிம் ஜோங்கல்லுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடொன்றில் கலந்துகொண்டதே தனது தலைமைத்துவத்தின் மிகப்பெரிய சாதனையென செய்திச் சேவையொன்றுக்கு தெரிவித்திருந்த கிம், தனது கொள்கைகளிலிருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லையென்றும் அநீதியுடன் ஒருபோதும் இணக்கப்பாட்டை மேற்கொள்ளப் போவதில்லையெனவும் கூறி வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் குவெட்டா பிரிவினைவாதப் போராளிகளால் சென்ற மாதம் பிணை பிடிக்கப்பட்ட ஒன்பது காவல்துறையினரின் சடலங்கள், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி கலீம் உல்லா தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகள் நான்கு நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஜூலை மாதக் கடைசியில், 24 போலிஸ் அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் போராளிகள் பிணை பிடித்தனர். மூன்று போலிஸ் அதிகாரிகள் அவர்களிடமிருந்து தப்பித்தனர். ஏற்கனவே 12 பிணையாளிகளின் சடலங்கள் கிடைத்துவிட்டன இப்போது ஒன்பது போலிஸ் அதிகாரிகளின் சடலங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தனர்" என்றார் உல்லா. பிரிவினைவாதப் போராளிகளின் பேச்சாளரான சர்பஸ் பலோச், கடத்தலுக்கும் கொலைகளுக்கும் தாங்களே பொறுப்பு என்று இம்மாதத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் தொலைபேசி வழி கூறினார். பாதுகாப்புப் படையினர் அந்நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்பது போராளிகளின் கோரிக்கை. பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வந்ததால், பாதுகாப்பைப் பலப்படுத்த பாகிஸ்தானிய ராணுவத் துருப்புகள் சென்ற மாதம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொலைகளுக்குப் போராளிகளே காரணம் என்று நம்பப்பட்டது. இதற்கிடையே, குவெட்டாவில் திங்கட்கிழமை நடந்த வன்செயலில் மூன்று சியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு ஒருவர் காயமடைந்தார். இத்தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் குவெட்டாவில் சியா முஸ்லிம்களுக்கும் சுணி முஸ்லிம்களுக்கும் இடையில் பல காலமாக வன்செயல் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் வாழும் 160 மில்லியன் மக்களில் சுமார் 20 விழுக்காட்டினர் சியா முஸ்லிம்கள். இந்நிலையில், பாகிஸ்தானிய தலிபான் படையின் தலைமைப் பேச்சாளர் என நம்பப்படும் ஆடவரைப் பாகிஸ்தானிய ராணுவம் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பேச்சாளரான மௌலவி ஒமர், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மொஹ்மந்த் பழங்குடி வட்டாரத்தில் பிடிபட்டார். அண்மையில் கொல்லப்பட்ட தலிபான் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் முக்கிய ஆதரவாளர் இவர் என்று கூறப்படுகிறது. “மிக மிக முக்கியமான ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்று மேஜர் ஃபசால் உர் ரஹ்மான் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பட்டினி இருந்து இறப்பதற்கு அனுமதிக்கக் கோரி நோயாளியொருவர் கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய நீதிமன்றம் முதன் முறையாக பட்டினி கிடந்து சாவதற்கு அனுமதியளித்துள்ளது. சமீபத்தில் இவர் திடீரென தனக்கு எந்த உணவும் தண்ணீரும் தர வேண்டாம் என்று மருத்துவமனை டாக்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. நோயாளியை பட்டினி கிடந்து சாக அனுமதித்தால் அது பெரும் குற்றம். அதற்காக ஆயுள் தண்டனை அளிக்க சட்டம் உள்ளது என்பதால் டாக்டர்கள் நோயாளியின் கோரிக்கையை நிராகரித்தனர். இந்த நிலையில், தன்னை பட்டினி கிடந்து சாக அனுமதிக்கும்படி நீதிமன்றில் ரோசிட்டர் மனு செய்தார். அவர் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரித்தது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் மார்ட்டின்; "நோயாளி ரோசிட்டர் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவர் பட்டினி கிடந்து சாவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்பதை உணர்ந்து இதற்கு அனுமதி அளிக்கிறது என்று தெரிவித்தார். நீதிபதியின் இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இதுவரை இப்படி ஒரு தீர்ப்புக் கிடைத்ததில்லை. அதனால், இந்தத் தீர்ப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது." "ஒருவரின் உரிமையில் தலையிட மற்றவர்களுக்கு உரிமையில்லை. அப்படித்தான் ரோசிட்டரும் தனது உரிமையை அறிந்துள்ளார். அவர் உரிமையில் டாக்டர்கள் தலையிட உரிமையில்லை. தனக்கு எப்படிப்பட்ட சிகிச்சையளிக்க வேண்டுமென்பதை அவர் சொல்லலாம். அதை டாக்டர்கள் ஏற்க வேண்டும். இந்த நிலையில், அவர் பட்டினி கிடந்து சாக அனுமதி அளிக்கப்படுகிறது" என்றும் விளக்கம் தெரிவித்தார். ரோசிட்டர் வழக்கால் அவரைப் போன்ற மனநிலையுள்ள மற்ற நோயாளிகளுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது. அவரைப் போல சாக விரும்புவோருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு திருப்பு முனையாகும் என்று ரோசிட்டரின் வக்கீல் ஜான் ஹாமண்ட் கூறியுள்ளார். ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் நடுப்பகுதியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாத்தில் இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான வன்செயல் இதுவேயாகும். ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆறு குண்டு வெடிப்புகள் ஈராக்கின் அரசு அமைச்சுகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே நடந்துள்ளது. தலைநகரின் பாதுகாப்பு வலயமான கீரி்ன் சோன் என்ற பகுதிக்கு சற்று வெளியேயுள்ள வெளிநாட்டு அமைச்சுக்கு அருகேதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. பாதுகாப்புச் சூழல் குறித்து ஈராக்கிய அரசு சமீபத்தில் வெளியிட்டு வரும் நம்பிக்கை அறிக்கைகளை இது கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு முந்தைய தாக்குதல்கள் நகரின் வறுமை மிக்க, பாதுகாப்பு குறைவான பகுதிகளில் நடைபெற்றதாகவும், இந்த வகையில் தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் அசாதாரணமானவை என்றும் பாக்தாத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர். குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது. 1988, டிசம்பர் 21 ஆம் நாள் பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது. பதற்றம் அதிகரித்த சூழ்நிலையில், வடகொரியாவின் தொழிற்துறை வலயங்களுக்குள் செல்லும் தென்கொரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டில் இந்த போக்குவரத்து இறுக்கம் கொண்டுவரப்பட்டது. தென்கொரியாவில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இந்த வார ஆரம்பத்தில் வடகொரியா கூறியிருந்தது. ஏற்கனவே இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் புதிய உலக சாதனை ஏற்படுத்தியிருந்தார். கடந்த ஞாயிறன்று நடந்திருந்த 100 மீட்டர் இறுதிப்போட்டியிலும் பெய்ஜிங்கில் தான் ஏற்படுத்திய உலக சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்திருந்தார் அவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களையும் உலகப் சாம்பியன் பட்டங்களையும் பெற்ற தடகள வீரர் என்ற பெருமையை சரித்திரத்தில் இதற்கு முன்னர் எவரும் பெற்றதில்லை. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை]] தலைநகர் காபூலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. புதன்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு சமீபமாகவுள்ள வங்கியொன்றை தாக்க முயன்ற போராளிகளுக்கும் துருப்புகளுக்குமிடையேயான மோதலில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத் தேர்தலில் ஜனாதிபதி அமீட் கார்சாய் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் இதில் போட்டியிடும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவிடமிருந்து கார்சாய் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இத் தேர்தலில் சுமார் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத் தேர்தலில் 34 மாகாணங்களுக்கான 420 மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள 8 மாகாணங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை. இதேவேளை, இத் தேர்தலின் மூலம் தெரிவாகும் புதிய அரசாங்கம் ஆட்சியிலும் உதவி நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதென எச்சரித்துள்ள உதவி அமைப்பான ஒக்ஸ்பாம் பாரிய முதலீடுகளுக்கு மத்தியிலும் ஆப்கான் மக்களில் மூன்றிலொருவர் கடும் வலுமையையும் பட்டினியையும் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார். அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார். மேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார். தமிழ்நாடு சட்டசபைக்காக ஐந்து தொகுதிகளில் கடந்த 18ம் தேதி நடந்த இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் அமோகமாக வென்றுள்ளதன் மூலம் திமுக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது. திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள் இருந்தனர். கம்பம், பர்கூர், இளையான்குடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூரில் வென்றதன் மூலம் காங்கிரஸ் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது. 61 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவின் பலம் 58 ஆகக் குறைந்துள்ளது. மதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டு குறைந்து 3 ஆகிவிட்டது. திமுக கூட்டணியின் பலம் 131 என்பதிலிருந்து 136 ஆக உயர்ந்துள்ளது. 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியும் தேமுதிகவும் {வைகுண்டத்தில் இப்போது முறையே 15,639 வாக்குகளும் 19,302 வாக்குகளும் அதிகமாகப் பெற்றுள்ளன. பர்கூரில் இந்த அதிகரிப்பு முறையே 30,228 வாக்குகள் மற்றும் 21,131 வாக்குகள். கம்பத்தில் திமுகவுக்கு 32,712 வாக்குகள் அதிகம். தேமுதிகவுக்கு 11,782 வாககுகள் அதிகம். தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் 1,246 வாக்குகள் குறைவாகப் பெற்று இருக்கிறார். அதேவேளையில் தேமுதிக 2,962 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இளையான்குடியில் திமுகவுக்கு 12,000 வாக்குகள் அதிகம் கிடைத்தது. தேமுதிகவுக்கு 19,628 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்டுகள், பாஜக இரண்டும் ஐந்து தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்துவிட்டன. வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. 660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் மற்றும் பாவனைக்கு உகந்த நிலை என்பன குறித்து பரிசோதித்து ஆவணங்களை வழங்க வேண்டிய அரச நிறுவனங்கள் இன்னும் அவற்றை வழங்காததே தாமத்துக்கு காரணம் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்கள் துறைமுகத்திலேயே கிடப்பதால் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய வாடகை 15 லட்சமாக உயர்ந்துவிட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் நாயகம் சுரேன் ஜே.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்வரும் புதன்கிழமை சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என செஞ்சிலுவைச் சங்கம் எதிர்பார்க்கிறது. பால் சார்ந்த பொருட்களை சோதிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக தகவல் வட்டாரங்கள் கூறின கப்டன் அலி' கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருட்களை ஏற்க முடியாது என சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பி இருந்தது. அதன் பின்னர் இந்தியா தலையிட்டு அந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக வேறு கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தது. புலம்பெயர் தமிழர்களின் பொருட்கள் இடம்பெயர்ந்த பின் வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சென்று சேரக்கூடாது என்ற அரசின் பிடிவாதத்தின் காரணமாகவே பொருட்களை துறைமுகத்தை விட்டு நகர்த்துவதற்கான அனுமதி தாமதப்படுத்தப்படுகின்றது என தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மொத்தத்தில் முடிந்தவரைக்கும் காலத்தை இழுத்தடித்து பின்னர் பாவனைக்கு உதவாத பொருட்கள் என்று கூறி அவற்றை கடலில் கொட்டிவிடுவதற்கே சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது எனவும் தமிழர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்படுகின்றது. சென்னையில் வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்]] அமினோ அமிலங்கள் உயிரினங்களை ஆக்கியுள்ள பெரிய இரசாயன மூலக்கூறுகளில் புரத மூலக் கூறுகளை ஆக்குவதில் பங்களிக்கும் ஒரு வகை எளிமையான உயிர் இரசாயனக் கூறுகள் ஆகும். மனிதன் போன்ற உயிரினங்களில் மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. அதில் கிளைசினும் அடங்குகிறது. வைல்ட்-2 Wild-2 என்ற வால்வெள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தூசுகள் நாசாவின் ஸ்டார்டஸ்ட் Stardust என்ற விண்கலம் மூலமாகச் சேகரிக்கப்பட்டன. இவ்விண்கலம் 5-கிமீ அகலமுள்ள பனிக்கட்டி-வால்வெள்ளியான வைல்ட்-2 ஐ ஜனவரி 2004 இல் அண்மித்திருந்தது. வால்வெள்ளியின் மையத்தில் இருந்து 240 கிமீ தூரத்தில் வைத்து அது வெளியேற்றிய தூசுகளை இவ்விண்கலம் சேகரித்து 2006 ஆம் ஆண்டு பூமிக்குக் கொண்டு வந்தது. இவற்றில் காணப்பட்ட கிளைசினின் கட்டமைப்பில் உள்ள காபன் மூலக்கூறு பூமியில் உள்ள கிளைசின் கொண்டுள்ள காபனை விட கனதியானது என்றும் நாசா அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பூமியில் உயிரின் உற்பத்தி என்பது பூமியோடு வால்வெள்ளிகளின் மோதலால் கூட ஏற்பட்டிருக்கலாம் என்பது போன்ற விஞ்ஞான கோட்பாடுகள் முன்னைய காலங்களில் வெளி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தக் கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் பூமியில் நிகழ்ந்த இரசாயன கூர்ப்பின் மூலமான உயிரின் உற்பத்தியை நிராகரிக்கப் போதுமானது அல்ல என்றே கணிக்கப்படுகிறது. அதற்கு இன்னும் நிறைய ஆதாரங்களை அறிவியல் உலகம் திரட்ட வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், ஏதென்சு நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு 23-08-2009 ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதற்கு 80 இற்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கை உள்ள பதிவர்களோடு பகிர்ந்து கொண்டருந்தார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடியாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்த்து இரசிப்பதற்கும் தமது கருத்துக்களை இலங்கையில் உள்ளவர்களுடன் உடனுக்குடன் பதிர்ந்து கொள்வதற்குமாக நேரலையில் இணயத்தில் ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. நேற்று ஞாயிறன்று லண்டனில் இடம்பெற்ற கடைசி தேர்வுத் துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அ‌ணியை தோற்கடித்து மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது. இங்கிலாந்து-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க "ஆஷஸ்" டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்தன. இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்திரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 546 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டத்தில் முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கட்டிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்கள். இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பொண்டிங்கும், மைக் ஹசியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய துணைத் தலைவ‌ர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து விக்கெட்டுக்கள் மளமளவென்று சரிந்தன. கடைசி விக்கெட்டாக மைக் ஹசி (121 ஓட்டம், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 348 ரன்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையும் இழ‌ந்தது. இதன் மூலம் 197 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் பிளின்டாப் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. முன்பெல்லாம் இடுப்பில் கயிற்றை கொண்டு தேங்காய் மரத்தில் ஏறுபவர்களை சர்வசாதாரணமாக பார்க்க கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது மாறி வரும் சமுதாய மற்றும் பொருளாதார நிலைகளால் தேங்காய் பறிக்கும் ஆட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேங்காய் பறிப்பது சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் பணியாக இருந்தது, தற்போது சமுதாய ஜாதி விலங்குகளை உடைத்து கொண்டு இவர்கள் வெளி வருகின்றனர். இவர்களின் இளைய தலைமுறையினர் பள்ளிக்கூடத்திற்கு செல்கின்றனர். வயதானவர்கள் வேறு வேலைக்கு செல்கின்றனர். இத்தகைய காரணங்களால் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் இல்லை. இதனால் முன்பு ஒரு முறை சிறப்பாக இருந்த தேங்காய் தொழில் இப்போது நசிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை உருவாக்குபவருக்கு பரிசு என்று அறிவித்துள்ளது அரசு. இந்த இயந்திரத்தை எந்த நாட்டை சேர்ந்தவரும் உருவாக்கலாம், ஒரே ஒரு விதிமுறை தான், தரையில் இருந்து இயந்திரம் சுமார் முப்பது மீட்டர் உயரத்திற்கு சென்று தேங்காயை பறிக்க வேண்டும். மற்றுமொரு விஷயம், இயந்திரம் எளிதில் தூக்கி செல்ல கூடியதாகவும், விலை மலிவாகவும் இருக்க வேண்டும். இயந்திரத்தை உருவாக்குபவருக்கு தொழிற்சாலையை ஆரம்பிக்க அனைத்து உதவிகளையும் செய்யப் போவதாகவும், ஏற்றுமதி செய்வதற்கு உதவப் போவதாகவும் கூட கேரள அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது. சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய இம்மருத்துவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் காலகட்டத்தில் போர்ப்பிரதேசங்களில் பணியாற்றிவந்தனர். அங்கிருந்து தப்பிவந்த இவர்கள் பின்னர் அரச படைகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். வவுனியாவில் மட்டும் தங்கியிருக்க வேண்டும், அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரகசியக் காவல்துறையினரிடம் சென்று கையெழுத்திட வேண்டும், என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் இழப்புகள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தனர் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்டிந்த குற்றச்சாட்டாகும். எனினும் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலப்பகுதியில் இவர்கள் தாம் வன்னிப் பகுதியிருந்து கொடுத்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்திகளை வெளியிட்டதாகவும் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அந்த கருத்து அழுத்தம் காரணமாக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்டமையால் அதன் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. பத்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை முற்றிலும், வணிக நோக்கிலானது என்றும் தென்கொரிய அரசாங்கம் கூறுகின்றது. மில்லியன் தென்கொரிய மக்கள் இந்தக் காட்சியைக் கண்டு களித்தனர். ஆனாலும் வடகொரியா இந்நடவடிக்கை குறித்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரலில் ராக்கட்டை ஏவியதை அடுத்து ஐ. நா தடைக்கு உள்ளான வடகொரியா, ”தென்கொரியாவின் இந்த நடவடிக்கையை உலகம் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறது” என்பதை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக கூறியிருக்கிறது. இந்த செய்மதி பூமியின் சுற்றுப்பாதையில் இடப்பட்டிருந்தாலும், அதற்கென உரிய சுற்றுப்பாதைக்கு வரமுடியவில்லை என தென்கொரிய அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் ஆன் பியோங்-மான் தெரிவித்தார். செய்மதி 360கிமீ (225 மைல்கள்) உயரத்தை அடைந்தது, ஆனால் 302 கிமீ உயரத்திலேயே பிரிக்கப்பட அனுப்பப்பட்டிருந்தது எனவும், ரஷ்ய, கொரிய விஞ்ஞானிகள் இது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். நாரோ-1 (Naro-1, அல்லது கே.எஸ்.எல்.வீ.-01) என அழைக்கப்படும் ரொக்கட் 33 மீட்டர் நீளமுடை யது. தென் கொரியாவின் முதலாவது ரொக்கட்டின் இயந்திரம் ரஷ்யாவில் வாங்கப்ப ட்டது. ஆனால் நேற்று ஏவப்பட்ட ரொக்கட்டின் இயந்திரம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். இந்த ரொக்கட் வெற்றிகரமாக இயக்கப்பட்டிருந்தால் உலகின் ரொக்கட் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தென்கொரியா பத்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். 419 மில்லியன் டொலர் பணத்தை தென் கொரியா இதற்கென முதலீடு செய்துள்ளது. தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டு அண்மையில் புதைக்கப்பட்ட இலங்கை, மலையகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் சிறுமிகளின் சடலங்களை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைகளை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மஸ்கெலிய பகுதியில் புதைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் தோண்டியெடுக்கப்பட்டு கண்டி பிரதம சட்ட அதிகாரியின் மூலமாக பிரத்தியேகமாக பிரேதப் பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நிஷ்ஷங்க ஹப்பு ஆரச்சி கருவாத்தோட்டப் பொலிசாருக்கு உத்தரவிட்டார். கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. மஸ்கெலியா லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் சுமதி மதுரைவீரன் ஜீவ ராணி ஆகிய சிறுமிகளின் மரணங்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமி ன்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். கொழும்பு கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில் இந்த இரண்டு சிறுமிகளும் பணிபுரிந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 இல் பெளத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிரு ந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.சிறுமிகளின் மரணங்கள் தற்கொலை என பொலிசாரின் விசாரனையை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் முன்னர் தீர்மானம் வழங்கியிருந்தது. எனினும் மரணங்கள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் காரணமாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைவாக சடலங்கள் குறித்த புதிய விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கருவாத்தோட்டப் பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நாளை (27) வியாழக்கிழமை காலை சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு,மேலதிக பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சடலங்கள் தோண்டியெடுக்கப்படும்போது ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பிரசன்னமாகியிருப்பார். இரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்]] செயற்கையான முறையில் மனிதன் தான் விரும்பிய வடிவில் பரம்பரை அலகுகளை வடிவமைத்து அதன் படி செயற்படக் கூடிய தானே, இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினங்களை அல்லது உயிர்க் கலங்களை தயாரிக்கும் நிலையை மனிதன் எட்டிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள். ஒரு பக்டீரியாவின் பரம்பரை அலகுத் தொகுதியை genome மதுவம் yeast எனப்படும் ஒரு கல பங்கசுவில் செலுத்தி குறிப்பிட்ட பரம்பரை அலகுத் தொகுதியில் தேவையான மாற்றங்களைச் செய்த பின் அதனை மீண்டும் பிறிதொரு வகை பக்டீரியாவினுள் செலுத்தி அந்த பக்டீரியா பல்கிப் பெருகும் வகையில் தயாரித்து வெற்றி கண்ட பின் இந்தத் தகவலை உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் மனிதன் தனக்கு விரும்பிய பொருளாதார உபயோகமுள்ள பரம்பரை அலகுகளை கொண்ட பக்டீரியா வகை அல்லது உயிர்க்கலங்களை உருவாக்கி உயிர் எரிபொருட்கள் biofuel போன்ற அவசியமான உபபொருட்களை கழிவு சேதன பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் இந்த ஆராய்ச்சி வழிமுறைகள் தவறானவர்களின் கைகளுக்குப் போயின், மனித இனத்தையே அழிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கி மனிதனின் இருப்பையே இந்த உலகில் இருந்து நிரந்தரமாகவும் அழித்து விட முடியும் என்ற பயங்கரமும் இதில் அடங்கி இருப்பதை விஞ்ஞானிகள் உணரத்தான் செய்திருக்கின்றனர். அதனால் எச்சரிக்கையோடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர். அவருக்கு மூளையில் புற்று நோய் இருப்பது மே 20, 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டது. பெப்ரவரி 22, 1932 இல் பிறந்த கென்னடியின் இயற்பெயர் எட்வர்ட் மூர் கென்னடி. மேலவை உறுப்பினராக 1962 ஆம் ஆண்டில் இருந்து இறக்கும் வரை இருந்து வந்தவர். அமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு. கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றைய சகோதரர் ஜோசப் கென்னடி இரண்டாம் உலகப் போரின் போது விமானவிபத்தில் இறந்தார். கென்னடிக்கு விக்டோரியா ரெஜி கென்னடி என்ற மனைவியும், 5 பிள்ளைகளும், ஜீன் கென்னடி சிமித் என்ற சகோதரியும் உள்ளனர். பல வாரங்களாக மறுத்து வந்தபின் பாகிஸ்தானின் தலிபான் போராளிகள் தற்பொழுது தங்கள் தலைவர் பைத்துல்லா மெசூது இறந்து விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஏபி செய்தி நிறுவனத்துக்கு ஹக்கிமுல்லா மெசூது, வாலியுர் ரஹ்மான் ஆகிய இரு போராளித் தலைவர்கள் வழங்கிய தொலைபேசி பேட்டியில் இதைத் தெரிவித்தனர். மேலும், தலிபான் போராளிகளின் தற்போதைய தலைவர் ஹக்கிமுல்லா மெசூது என இருவரும் கூறியதாக ஏபி செய்தித் தகவல் தெரிவிக்கிறது. பைத்துல்லா மெசூது அமெரிக்க உளவுப் படையினரின் தாக்குதலில் இம் மாதம் 5ம் தேதி மரணமடைந்ததாக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இதை இதுநாள் வரை தலிபான் போராளிகள் மறுத்து வந்தனர். அது மட்டுமல்லாது, பைத்துல்லாவுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்பதில் நடந்த போராட்டத் தில் இரு முக்கிய பேராளித் தவைர்களான ஹக்கிமுல்லா மெசூதும் வாலியுர் ரஹ்மானும் இறந்து விட்டதாக இதற்கு முன் கூறப்பட்டது. தற்போது அங்கு கொள்ளைக் கூட்டத்தினரின் நடமாட்டமே இருப்பதாக, ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப் படைகளின் அப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பிலிருந்த தளபதி ஜெனரல் மார்ட்டின் அக்வாய் அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் டார்ஃபூர் பகுதியில் மோதல் தொடங்கியதை அடுத்து அங்கிருந்து இரண்டரை லட்சம் மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்; மேலும் மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தார்பூரில் தற்போது நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம் (ஜெம்) என்ற தீவிரவாதக் குழு மட்டுமே இயங்குகிறது என்று மார்ட்டின் அக்வாய் தெரிவித்தார். அதுவும் இப்போது மிகவும் பலமிழ்ந்துள்ளது என்றும், இவ்வியக்கத்தினால் தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அங்கு கிளர்ச்சியாளர்களையும் அரசாங்கத்தையும் மீண்டும் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4 நிறுவனத்துக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்போவதாக கூறியுள்ளது. இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ விவகாரம் குறித்து லண்டன் பிபிசி தொலைக்காட்சி இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு கருத்துகேட்டதாக இந்திய தகவல் சாதனங்கள் தெரிவித்துள்ளன. "ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தொலைக் காட்சி ஒளிபரப்பு குறித்து இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி உள்ளது. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். மத்திய வெளியுறவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப் பட்டுள்ளது என்று இந்திய அமைச்சர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமிழர் களைக் கொடூரமான முறையில் ராணுவ வீரர்கள் கொல்கிறார்கள் என்று சொல்லி இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காணொளி 2009 ஜனவரியில் இலங்கை படைவீரர் ஒருவரால் தமது கையடக்க தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுகொல்லப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய சில யோசனைகளைவிட செலவு குறைவானதாகவும் செயல்பாட்டுச் சாத்தியம் அதிகம் கொண்டதாகவும் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. சூரிய ஒளியை திசை திருப்புவதற்கான பிரம்மாண்ட கண்ணாடிகளை விண்வெளியில் நிறுவுவது போன்ற யோசனைகளை யதார்த்தத்துக்கு ஒத்துவராதவை என்று கூறி பிரித்தானியாவின் இயந்திரப் பொறியியல் வல்லுநர்களின் அமைப்பு நிராகரித்துள்ளது. ஆனால் இருபதாயிரம் டாலர்கள் செலவில் உருவாக்கப்படக்கூடிய இந்த செயற்கை மரம் ஒன்று, இருபது கார்கள் வெளியேற்றக்கூடிய அளவிலான கரியமிலவாயுவை காற்றுமண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் பெற்றிருக்கும் என்று தெரிகிறது. தனது தவறை உணர்ந்த விமானி சரியான குறியீட்டைக் காட்டியவுடன், போர் விமானம் தரைக்குத் திரும்புவதற்கு உத்தரவிடப்பட்டதாக வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். w 1 2 1 பற்றிய கட்டுரை விக்கிப்பீடியாவில் உள்ளது. இக்கோளின் வயது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகள் ஆகும். கோளுக்கும் அதன் சூரியனுக்கும் இடையில் உள்ள ஈர்ப்புப் பேரலைத் தாக்கம் காரணமாக இரண்டும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் கிட்டத்தட்ட இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் இக்கோள் இதன் சூரியனை மோதும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ கமெரோன் இக்கோள் பற்றிக் கருத்துக் கூறுகையில் தெரிவித்ததாவது வாஸ்ப்-18பி கோள் பெரும் பருமனாக இருப்பதும் அது அதன் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதுவுமே இதன் பிரச்சினையாகும். அது தனது சூரியனை சுருளி போன்று சுற்றி வருவதால் அதனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் அதிகம்." இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொயெல் ஹெலியர் தலைமையிலான வானியலாளர்களே இக்கோளைக் கண்டுபிடித்தனர். அவர்களது ஆய்வுக் கட்டுரை 2009, ஆகஸ்ட் 27 நேச்சர் Nature இதழில் வெளிவந்துள்ளது. எமது சூரியனை விட கிட்டத்தட்ட 300 கோள்கள் விண்மீன்களைச் சுற்றி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இரு கொரியாக்களும் 2007 ஆம் ஆண்டில் உறவினர்கள் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தன. ஆனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிறுத்தப்பட்டது. இப்போது இரு நாட்டு உறவு மேம்பட வட கொரியத் தலைவர் கிம் ஜோங் இல் தீர்மானித்ததைத் தொடர்ந்து இரு நாட்டுப் பேராளர்களின் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. உடன்படிக்கையின் படி, பிரிந்து வாழும் குடும்பத்தினரை சேர்ந்த 100பேர் இடம்பெறும் பிரதிநிதிக் குழுவை இரு தரப்பும் முறையே உருவாக்கும். செப்டம்பர் 26முதல் 28ம் நாள் வரை, தென்கொரிய பிரதிநிதிக்குழுவினர் கும்காங் மலை பிரதேசத்துக்குச் சென்று, வடகொரியாவின் 200க்கு அதிகமான உறவினர்களை சந்திப்பர். செப்டம்பர் 29முதல் அக்டோபர் முதல் நாள் வரை, வடகொரிய பிரதிநிதிக் குழுவினர் தென்கொரியாவின் சுமார் 450 உறவினர்களைச் சந்திப்பர். கும்காங் மலை பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திக்கும் வகையில், கடந்த ஆண்டின் ஜுலையில் கட்டியமைக்கப்பட்ட இடம், இந்த முறையும் சந்திக்கும் இடமாக அமையும். கடந்த ஆண்டு 2008, அக்டோபர் 22ஆம் தேதியன்று சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் கடந்த நவம்பர் மாதத்திலும் பின்னர் இவ்வாண்டு ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களை சந்தித்திருந்தது. சந்திரயான் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சூடு ஆகிய பிரச்சினைகளைச் சந்தித்தது. சந்திரயான் பயணத்தின் அறிவியல் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும், தாங்கள் பெற எண்ணிய தரவுகளில் 95 சதவீதம் வரையிலானவை கிடைத்துவிட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை பிபிசியிடம் கூறினார். நிலவை அடைவது மற்றும் நிலவு குறித்த புகைப்படங்களை அனுப்புவது ஆகிய முக்கியப் பணிகளை சந்திரயான் ஏற்கனவே முடித்து விட்டதாக இஸ்ரோ கூறுகிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வையும் சந்திரயான் மேற்கொண்டது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளனர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். "வட பகுதி அகதி முகாம்களிலிருந்து பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும். மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திணைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வுகளின் இறுதி அறிக்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுக்களில் முதல் இரண்டுக்கு தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட சிறைத்தண்டனையும் இந்த தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 2006, 2007 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது படையினரால் குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தமது நோத்ஈஸ்ட் மன்த்லி என்ற இதழில் செய்தி எழுதியிருந்தமை தொடர்பில் சட்டமா அதிபர், திசைநாயகத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். இதன் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிரதிவாதியான திசநாயகத்தை குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார். இதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக திசநாயகத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திசநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விடுவிக்கும்படி அனைத்துலக ஊடக அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அமெரிக்க வியாபாரி ஒருவரிடம் இருந்து பணம் நிரப்பப்பட்ட அஞ்சல் உறைகளை பெற்றது, பிரயாண செலவுகளை அதிகமாக கணக்கு காண்பித்து இஸ்ரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் எகுத் ஒல்மர்ட் மீது பதிவு செய்துள்ளார். ஜெருசலேத்தின் மேயராக இருந்த போதும், பின்னர் காபினட் அமைச்சராக இருந்த போதும் இவர் இந்த தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என எகுத் ஒல்மர்ட் கூறி வருகின்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் இந்தி மொழியில் பதவி ஏற்றது செல்லாது என்றும், 7 நாட்களுக்குள் நேபாளி மொழியில் பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நேபாள அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ளும்படி பரமானந்த ஜாவை கேட்டுக்கொண்டது. ஆனால் பரமானந்த ஜாவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நடந்துகொள்ள விரும்பாததால், அவர் நீண்ட கால விடுமுறையில் செல்ல இருப்பதாக அவரின் உதவி யாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய பரமானந்த ஜா, நேபாளத்தில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நான் மீண்டும் பதவி ஏற்பது பற்றி பரிசீலிப்பேன் என்று கூறினார். நீதிமன்ற உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நான் ஏற்கனவே ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார். ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் (45) தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதிப்படுத்தப்பட்டதால் 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-ல் திசநாயகம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், துணிச்சலுடன் உண்மைகளை எழுதியதற்காக "பீட்டர் மெக்லர்' விருதுக்கு திசநாயகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக "ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்) என்ற அமைப்பு திங்கட்கிழமை அறிவித்தது. அதேபோன்று கமிட்டி டு புரொடெக்ட் ஜர்னலிஸ்ட் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு) என்ற அமைப்பும் திசநாயகத்துக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையின் திசைநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு வருந்தத்தக்க உதாரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா உலக பத்திரிகைச் சுதந்திர நாளான மே 3-ம் தேதி உரையாற்றுகையில் கூறியது குறிப்பிடத்தக்கது. கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது]] பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐநா தீர்மானம்]] சமோவாவில் ஆழிப்பேரலை நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு]] பிலிப்பைன்சில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு]] அழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை]] பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்களில் 16 பேர் இறப்பு]] யுரேனியம் உலையை பன்னாட்டு அணுஆற்றல் முகமை பார்வையிட ஈரான் அனுமதி]] இந்தியர்கள் இரண்டு பழமையான மரபணுக் குழுக்களைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பு]] 25 ஆண்டுகளுக்கு பின் கார்ப்போவை வென்றார் காஸ்பரோவ்]] ஒட்டோமான் பேரரசின் கடைசி வாரிசு மரணம்]] நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது சந்திரயான்-1]] இந்தியா ஒரே தடவையில் ஏழு செயற்கைக்கோள்களை ஏவியது]] ஆத்திரேலியாவின் சிட்னி நகரை புழுதிப் புயல் மூடியது]] துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு]] பிரான்சின் முன்னாள் பிரதமருக்கு எதிராக வழக்கு]] ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி விடுதலை கோரி உண்ணாநிலைப் போராட்டம்]] ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது]] ஐவரி கோஸ்டில் இரசாயனக் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு]] ஏமனில் அரசு அறிவித்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை]] உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வந்தது]] ஐரோப்பாவில் நிறுவப்படவிருந்த ஏவுகணைத் தற்காப்புத் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது]] வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 33 பேர் இறப்பு]] புவியை ஒத்த கோள் கொரொட்-7பி பாறைகளைக் கொண்டுள்ளது]] கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு]] சீனாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிப்பு]] இசுரேல் போர்க்குற்றங்கள் இழைத்ததாக ஐநா குற்றச்சாட்டு]] நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு]] கராச்சியில் உணவுப் பொருட்களைப் பெறுவதில் உண்டான நெரிசலில் 20 பேர் இறப்பு]] விமான குண்டுத்தாக்குதல் சதி வழக்கில் மூன்று பிரித்தானியர்களுக்கு ஆயுட்தண்டனை]] இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு போராட்டம் முடிவு]] பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்]] கசக்ஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் இறப்பு]] 130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின]] மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு]] உகாண்டாவில் பழங்குடியினருடன் இடம்பெற்ற கலவரங்களில் பலர் இறப்பு]] தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை]] ஏமனில் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை]] தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்]] தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு]] மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு]] கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை]] இலங்கையில் இன அடிப்படையிலான கட்சிப் பெயர்களை நீக்க முனையும் சட்டத்திருத்தம் நிராகரிப்பு]] இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி]] ஆயுதங்களுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக விமானம் கொல்கொத்தாவில் தடுத்துவைக்கப்பட்டது]] உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு]] பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை]] தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்]] நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்]] மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு]] காபொனில் அதிபர் தேர்தலை அடுத்து கலவரம் மூண்டது]] கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது]] ஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்]] திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்]] ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது]] ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இசுரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு முகம்மது கடாபி கோரிக்கை]] சிலோவாக்கியாவில் புதிய மொழிச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்]] சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்]] செவ்வாய், செப்டம்பர் 1, 2009 சிலோவாக்கியா: இந்தப் புதிய மொழிச் சட்டத்தின் மூலம் அங்கு பொது நிர்வாகத்திலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளிலும் ஸ்லோவாக் மொழியை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் சிறுபான்மையினர் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே மற்ற மொழிகளை பயன்படுத்த முடியும் என்றும் அந்த சட்டம் கூறுகிறது. சிலோவாக்கியாவில் சுமார் பத்து சதவீதம் அளவுக்கு பூர்வகுடி ஹங்கேரியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சட்டமானது சர்வதேச உடன்பாடுகளுக்கு விரோதமானது என்றும் இது அச்ச உணர்வை தூண்டும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும் ஹங்கேரிய அரசாங்கம் தெரிவிக்கிறது. புதன், செப்டம்பர் 2, 2009 திரிப்பொலி, லிபியா: இரண்டு நாள் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய லிபிய ஜனாதிபதி முகம்மத் கடாபி ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தினார். பொதுவான நாணயம், வங்கி முறை, இராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசியம். இந்நாடுகளுக்கு எல்லைகள் தேவையில்லை. எல்லைகளை நிர்ணயித்து எம்மை வேறாக்கியது சர்வதேசம், இந்த சதி வலையில் தொடர்ந்தும் நாம் சிக்க முடியாதென்றும் லிபிய ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 53 நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற போது இம்மாநாட்டில் முப்பது நாடுகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீரும் இம்மாநாட்டில் பங்கேற்றார். இவர் மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் எழுந்த நெருக்கடியான சூழலை ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் எதிர்நோக்கின. தார்புர் பிரச்சினைக்கான தீர்வு சூடான் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது என்பதை மாநாடு அழுத்திக் கூறியது. லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இடம் பெறும் வேளையில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரிக்க நாடுகள் மாநாடு நேற்று செவ்வாய்க் கிழமை முடிவடைந்தது. லொக்கர்பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளியான லிபிய நபர் விடுதலையானமையால் மேற்குலக நாடுகளுடனான உறவை விஸ்தரிக்க லிபியா எண்ணியுள்ளது. இசுரேலை நேரடியாகத் தாக்கிப் பேசியமையால் மேற்குலக நாடுகள் சில அதிருப்தி தெரிவித்துள்ளன. புதன், செப்டம்பர் 2, 2009 ஐதராபாத், இந்தியா: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், வான்படை ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. ஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்]] வியாழன், செப்டெம்பர் 3, 2009 இந்தியா: ராஜசேகர ரெட்டி பயணம் செய்த உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் மோதி, தீப் பிடித்ததில், அவரும், பைலட் உள்ளிட்ட மற்ற நான்கு பேரும் அதே இடத்தில் கருகி உயிரிழந்திருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை சுமார் எட்டரை மணியளவில், ஒரு மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பல பாகங்களாக உடைந்து கருகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் அதைக் கண்டுபிடித்ததாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். கர்னூலில் இருந்து சித்தூருக்கு தெற்குத் திசையில் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர், கிழக்குத் திசையில் சென்று மலைப்பகுதியில் மோதியிருப்பதாக சிதம்பரம் தெரிவித்தார். கமாண்டோக்கள் அந்தப் பகுதியில் இறக்கப்பட்டு, சடலங்களைத் தேடியபோது, ஐந்து சடலங்கள் கருகிய நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டதாக சிதம்பரம் தெரிவித்தார். முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன், அவரது தனிச் செயலர் சுப்ரமணியம், பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரு பைலட்டுகள் ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக சிதம்பரம் தெரிவித்தார். சடலங்கள் இன்னும் விபத்து நடந்த இடத்தில் இருப்பதாகவும், விரைவில் அவை ஐதராபாத் கொண்டுவரப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது]] புதன், செப்டெம்பர் 2, 2009 லண்டன்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த திங்கட்கிழமை அன்று திசைநாயகத்திற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை இலங்கை மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் கண்டித்திருந்தன. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாய் மீது கறுப்புத்துணியை கட்டியிருந்தனர். சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்]] கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது]] வியாழன், செப்டம்பர் 3, 2009 இந்தியா: இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும் மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக் கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர் தெரிவித்துள்ளார். 12 செமீ (5 அங்) நீளமுள்ள இந்த சிறிய தவளைகள் இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று, பட்டுப்பூச்சிக் கூடு போன்ற கூடுகளை அமைக்கின்றன. அத்துடன் கூடுகளின் முனைகளை இறுக்கக் கட்டுவதற்காக ஒரு திரவப் பொருளை வெளிவிடுகின்றன. "இவ்வகை மிகவும் அரிதான தவளைகள் ஆசியாவிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று முனைவர் பிஜு பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில இலைகளில் கூடு கட்டும் தவளைகள் முட்டைகளை இடும் போதே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன என்றும் கூடு கட்டும் வேலையில் ஆண் தவளைகளும் பெண் தவளைகளும் இணைந்தே பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த இந்தியத் தவளைகள் முட்டைகளை இட்ட பின்னரே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன. வியாழன், செப்டம்பர் 3, 2009 காபொன்: இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த எதிர்க் கட்சித்தலைவர் பியர் மம்பௌண்டவ் அவர்கள் இந்த மோதல்களில் காயமடைந்தார். அவர் தலையிலும் தோள்பட்டையிலும் கடுமையாக காயமடைந்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் சிறையின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பல நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்ததோடு, அந்த பகுதியில் இருந்த பிரெஞ்சு தூதரகம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்கும் தீயிட்டனர். போர்ட் கெண்டில் என்ற இடத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தனது 10,000 பிரெஞ்சு குடிமக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு காபொனின் முன்னாள் ஆட்சியாளரான பிரான்ஸ் அறிவித்துள்ளது. வெள்ளி, செப்டம்பர் 4, 2009 பினாங்கு, மலேசியா: அங்குள்ள வீடுகளை தகர்க்கும் பணியை மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ தொடங்கியது. வீடுகளை இடித்துத் தள்ளுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த தகர்ப்புக் குழுவினர் போலிசாரின் உதவியுடன் நேற்று அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். வீடுகளை இடிப்பதற்கு ஏற்கனவே சம்மதித்த சில குடியிருப்பாளர்களின் வீடுகளை ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். மூன்று வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அப்பணியைத் தொடர விடாமல் தடுத்தனர். கிராம மக்களுக்கு ஆதரவாக மஇகா இளையர் பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் இறங்கினர். மஇகா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கிராம மக்கள், வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க முயன்றனர். தகர்ப்பு இயந்திரங்களையும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் குடியிருப்பாளர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக என்எஸ்டி தகவல் கூறியது. அப்போது நிகழ்ந்த சலசலப்பில் 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். கம்போங் புவா பாலா கிராமப் பிரச்சினை பல மாதங்களாக நீடிக்கிறது. அங்குள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் குடியிருப்பாளர்கள் அதற்கு மறுத்து வருகின்றனர். அந்த இடத்தை பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மேம்பாட்டு நிறுவனம் அங்கு கண்டோமினிய வீடுகளைக் கட்டவுள்ளது. குடியிருப்பாளர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும் குடியிருப்பாளர்கள் அதற்கு இணங்கவில்லை. கிராம மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் முடிவடைந்தது. சனி, செப்டம்பர் 5, 2009 நேபாளம்: நேற்றுக் காலை 40க்கும் மேற்பட்ட மாவோயிசப் போராளிகள், பக்தர்கள் வேடத்தில் கோயிலுக்குள் நுழைந்தனர். அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்த கிரிஷ், ராகவேந்திராவை அவர்கள் திடீரென சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். அவர்களின் வேட்டிகளை கிழித்து, பூ நூலை அறுத்து வீசினர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் நக்சலைட்டுகள் ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கிரஷ்சும் ராகவேந்திராவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் நேபாள அரசைத் தொடர்புகொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளளார். குருக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நேபாள கலாச்சார அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. பசுபதி நாதர் கோயிலில் நேபாளர்களே குருக்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவோயியவாதிகளின் ஆதரவு பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சனி, செப்டம்பர் 5, 2009 சூடான்: தலைநகர் மலக்காலுக்கு வடக்கே, டிங்க்கா இன மக்கள் வாழும் கிராமம் ஒன்றுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் 20 பேரை சுட்டுக் கொன்றுள்ளதுடன் குடியிருப்புக்களை எரித்துவிட்டு கால்நடைகளையும் திருடிச்சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டிங்க்கா இன மக்கள் குழுக்கள், அருகிலுள்ள ஷில்லுக் இன மக்களின் கிராமத்தில் ஜந்து பேரைக்கொன்று பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போது தனியாகப் பிரிந்து சென்றுள்ள அரசியல் கட்சியின் தலைவருமான லாம் அக்கோல் என்பவரே ஷில்லுக் ஆயுததாரிகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டுகின்றார். ஆனால் குறித்த அமைச்சர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். ஞாயிறு, செப்டெம்பர் 6, 2009 மணிலா: 950க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு போன படகு தென்பகுதி நகரான சம்போங்காவுக்கு அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த நூற்றுக்கணக்கான பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரையில் ஐவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காலநிலை சாதகமாக இருந்தமை மீட்புப் பணிகளுக்கு உதவியாக அமைந்தது என்று பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கில்பேர்ட்டோ தியோடோரோ அவர்கள் பி.பி.சி.யிடம் தெரிவித்தார். அமிழ்ந்து கொண்டிருக்கும் படகை விட்டு வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்ட சமயம் நல்ல வேளையாக அருகே வேறு படகுகளும் இருந்தமையும் பலரை மீட்க உதவியது என்று அவர் கூறினார். இந்தப் படகு அமிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெளிவாகவில்லை. திங்கள், செப்டம்பர் 7, 2009 கொல்கத்தா, இந்தியா: கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஐக்கிய அரபு அமீரக நாட்டு விமானப் படை விமானத்தில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விமானம் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலிருந்து சீனா செல்லும் வழியில் கொல்கத்தாவில் அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருப்பது குறித்து அதன் விமானிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இது பன்னாட்டு சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் அதைச் சுங்க இலாகா அதிகாரிகள் சிறை பிடித்தனர். அதிலிருந்த விமானிகள் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஹன்யாங் நகருக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தாவில் தரையிறக்க அனுமதி கோரியது. இதை ஏற்று இந்திய விமானப் படையின் கிழக்கு மண்டல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். விமானம் தரையிறங்கியதும் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அதில் ஏறியபோது ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருந்ததைத் கண்டு அதிர்ந்தனர். விமானத்தில் இந்த ஆயுதங்கள் இருப்பதை விமானிகள் மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திய வான் பரப்பில் பறக்க அந்த விமானத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் விமானப் படை ரத்து செய்தது. விமானிகள் உள்ளிட்ட 9 பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போது விமானம் சீல் இடப்பட்டு விமான நிலையத்தின் தனிப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சீனாவின் ஹன்யாங் பகுதி ஆயுத உற்பத்திக்குப் பேர் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு செப்டம்பர் 6, 2009 பப்புவா நியூ கினி: தற்போதைக்கு இந்த எலி பொசாவி கம்பளி எலி எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் அறிவியல் பெயர் சூட்டப்படவில்லை. திங்கள், செப்டம்பர் 7, 2009 கொழும்பு: இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், தாம் தற்போது நடத்திவரும் ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரமாக்குவதுடன், மேலும் வேறு வழிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன. இது தொடர்பாக பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஆயினும் அவை இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. அந்த நிலையில் இன்றும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடந்தன. ஆனால், தொழிலாளர்களுக்கு 360 ரூபா மாத்திரம் தினசரி சம்பளமாகத்தரவே முதலாளிமார் உடன்பட்டதால், அவர்களுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு தாம் வெளியேறியதாக, இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் பிபிசியிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாக எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். புதன், செப்டம்பர் 9, 2009 மலேசியா: மெக்கறி உணவகம் “மெக்” என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி மெக்டோனல்டு நிறுவனம் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தது. ஆனால் மெக்கறி உணவகம் அச்சொல்லைப் பயன் படுத்தலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாகத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டிலும் மெக்டோனல்டு நிறுவனம் தோல்வியடைந்து விட்டது. "மலேசிய கோழிக்கறி" என்பதைச் சுருக்கி "மெக்கறி" எனப் பெயரிடப்பட்ட அந்த உணவகத்தில் மீன்தலைக் கறி உள்ளிட்ட மலேசிய உணவு வகைகள் விற்கப்படுகின்றன. ''எட்டாண்டு கால சட்ட நடவடிக்கை இறுதியில் முடிவுக்கு வந்துவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம் இனி நாங்கள் முன்னதாகத் திட்டமிட்டபடி புதிய கிளைகளும் திறக்கலாம் என்று மெக்கறி உணவகத்தின் உரிமையாளர் பி.சுப்பையா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். மலேசியாவில் 185 கிளைகள் நடத்தும் மெக்டோனல்டு, முதலில் 2001ம் ஆண்டு மெக்கறி உணவகத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தது. உயர்நீதிமன்றம் 2006ம் ஆண்டு மெக்டோனல்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மெக்கறி உணவகம் மேல்முறையீடு செய்திருந்தது. செவ்வாய், செப்டம்பர் 8, 2009 கொழும்பு: இலங்கையில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளதை நீக்கக் கோரும் தேர்தல் சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்று இலங்கை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் டபிள்யு. ஜே.எம்.லொக்குபண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும் என்றும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அதற்கு ஆணை பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவிப்பதிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். 1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்ற பெயரில் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மேற்படி திருத்த சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், லங்கா சம சமாஜ கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் உயர்நீதிமன்றத்தில், இந்த சட்டமூலம் அரசமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணானது என தெரிவித்து அந்த சட்டமூலத்தை ஆட்சேபித்து தனித்தனியாக வழக்குகள் தொடுத்திருந்தனர். புதன், செப்டம்பர் 9, 2009 ஆப்கானிஸ்தான்: ஆனால், இந்த நடவடிக்கையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், இவரது சகாவான ஆப்கானியர் ஒருவரும், பிரித்தானியப் போர்வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் வேறு இரு ஆப்கானிய பொதுமக்களும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளரான ஸ்டீபன் ஃபரலும், சுல்தான் முனாடியும் பிடித்து வைக்கப்பட்டிருந்த தலிபான்களின் வளாகம் ஒன்றினுள் நேட்டோ படையினர் தரையிறங்கினார்கள். படையினர் மேலும் கவனமாக இருந்திருந்தால், செய்தியாளர் முனாடி காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆப்கான் செய்தியாளர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. புதன், செப்டம்பர் 9, 2009 ஆஸ்திரேலியா: அந்தப் பிராந்தியத்தை இந்தோனேசியப் படைகள் ஆக்கிரமிக்கவிருந்தது குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காக பலிபோ நகரில் இந்த செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக 2007 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி கண்டுபிடித்தார். இச்சம்பவத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரெக் ஷாக்கில்ட்டன், யொனி ஸ்டுவர்ட், பிரித்தானியாவைச் சேர்ந்த பிரையன் பீட்டர்ஸ், மால்க்கம் ரெனி, மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த கரி கனிங்கம் ஆகிய செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தச்சம்பவம் திமோரிய போராளிகளுடனான சண்டையின் போது செய்தியாளர்கள் இடையில் அகப்பட்டதனால் இடம்பெற்றது என்று இந்தோனேசியா எப்போதும் மறுத்து வந்தது. அத்துடன் இந்த விடயம் முடிந்துபோன ஒன்று என்றும் இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். வியாழன், செப்டம்பர் 10, 2009 ஆஸ்திரேலியா: சீனாவுக்கு எரிவாயு வழங்குவதற்காக 500 கோடி டாலர் பெறுமதியுள்ள ஒரு ஒப்பந்தத்திலும் ஆஸ்திரேலியா கடந்த மாதம் கையொப்பமிட்டிருந்தது. 250 கோடி டாலர் பெறுமதி கொண்ட ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடனும் அது செய்துகொண்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பரோ தீவில் அமைக்கப்படவிருக்கும் எரிவளிமக் கிணறுகளின் மூலம் 6,000 பேருக்கு வேலை வாய்ப்புத் தரமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த 50 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் திட்டத்துக்கு பல இயற்கை ஆர்வலைர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பரோ தீவில் பல அரிதான விலங்கினங்கள் வாழ்ந்து வருவதே இவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். வியாழன், செப்டம்பர் 10, 2009 ஏடென், யேமன்: ஏமன் மலைப்பகுதிகளில் வலுவோடு இயங்கி வரும் ஷியா போராளிகளுக்கு எதிராக இராணுவம் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பதால் அந்தப் பகுதியில் மிக பெரிய அளவிலான சண்டை மூண் டுள்ளது. போராளிகள் தமது முன்னைய நிலைகளுக்கு திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாடா எனும் பழைமை வாய்ந்த நகரில் ஔத்தி Houthis போராளிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. அந்தப் பகுதியில் பின்பற்றப்பட்ட போர் நிறுத்தம் சில மணி நேரத்திற்கே நீடித்தது. இந்த போர் நிறுத்தம் அரசாங்க தரப்பில் பின்பற்றப்பட்டது. ஆனால் சில மணி நேரத்திற்கு பின்பு கடந்த இரண்டு நாட்களாக அங்கு இராணுவத்தில் கவச வாகனங்கள் தங்களின் தீவிர தாக்குதலை கிளர்ச்சிக்காரர் களுக்கு எதிராக தொடக்கி உள்ளனர். ஷியா முஸ்லிம் சிறுபான்மை சமுகத்தினர் இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சாடா நகரில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். வட ஏமனில் இந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டு விட்டனர். பலர் காயமுற்றுள்ளனர் என்று இராணுவ அதிகாரிகள் கூறினர். கடந்த 3 வாரங்களாக அங்கு நடந்து வரும் சண்டையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கின்றனர் என்று ஐநா கூறியுள்ளது. சாடா நகர மக்களுக்கு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோடு உணவு பற்றாக்குறையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளதாக ஐநாவின் பேச்சாளர் ஹிச்சாம் ஹசன் கூறினார். வெள்ளி, செப்டம்பர் 11, 2009 தைவான்: அவருடன் கூட அவரது மனைவியும் அவர் பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 15 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தைவானில் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சீனாவோடு தைவான் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் தற்போதைய தைவானின் ஆளும் தரப்பினர், சீனாவின் பிடியிலி ருந்து விலகி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறிவரும் சென் அவர்களை அவரது அரசியல் கருத்துக்களுக்காக பழிதீர்க்கும் நோக்கத்துடன் தண்டித்திருப்பதாக, சென்னின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இதே போன்ற அறிக்கை மற்ற தமிழ் சகோதரத்திட்டங்களில் தரப்பட்டால், அனைத்துத் திட்டங்களிலும் பலரது கவனம் குறைந்த நேரத்தில் கிடைக்கும். பலரும் பலத் திட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பை இதன் மூலம் அதிகரிக்கலாம். மாதம் ஒரு முறையேனும், இத்தகைய அறிக்கைகளை அனைத்து சகோதரத்திட்டங்களில் திரட்டினால் அது பல பலன்களை அளிக்கும் வாய்ப்பு உள்ளதென எண்ணுகிறேன். முடிந்தவரை தமிழகச் செய்திகளிலும், இனி கவனம் செலுத்துவேன். மேலும், பல நாட்டுத் தமிழர் பற்றியும், தமிழ் தளங்கள் பற்றியும் பலரை பங்களிக்கத் தூண்டலாம். இவைகளுக்குரிய தொடுப்புகளை, முதற்பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். வெள்ளி, செப்டம்பர் 11, 2009 கோலாலம்பூர்: த ஸ்டார், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா ஆகியவையே அந்த பத்திரிகைகளாகும். அந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்ட இந்துராப் தலைவர்கள் ஐந்து பேருக்கும் இலங்கை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறைத் தலைவர் மூசா ஹசானும் சட்டமா அதிபர் அப்துல் கனி பட்டேலும் கூறினர். மனோகரன் இவ்வாண்டு மே 9 இல் உள்நாட்டு பாதுகாப்பு சட்ட தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு பேசிய திரு மனோகரன், தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்று கூறினார். அமைதியான முறையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதில் ஹிண்ட்ராப் நம்பிக்கை கொண்டிருக்கிறது. தம்மீதும் இந்துராப் மீதும் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்று அவர் தமது ரிட் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளி, செப்டம்பர் 11, 2009 கம்பாலா, உகாண்டா: இரண்டு நாட்களாக மூடப்பட்டிருக்கும் அந்த நகரில் ஒழுங்கை நிலைநாட்ட அங்கு தமது துருப்பினரை நிறுத்தியுள்ளதாக இராணுவம் கூறுகிறது. கம்பாலாவுக்கு அருகே உள்ள ஒரு பிராந்தியத்துக்கு, பகந்தா பழங்குடியினரின் மன்னர் செல்வதை தடுக்க அரசாங்கம் முயன்றதால் வெடித்த மோதல்களில் குறைந்தது வியாழனன்று குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. பழங்குடியின தலைவர்களுடன் தாம் அவசர பேச்சுக்களை நடத்துவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வன்செயல்களுக்கு மத்தியிலும், தனது சர்ச்சைக்குரிய விஜயத்தை நாளை மன்னர் மேற்கொள்ளப்போவதாக, புகந்தா இராட்சியத்துக்கான பிரதமர் ஜே.பி. வலுசிம்பி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். மன்னரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். சனி, செப்டம்பர் 12, 2009 பிஜி: உலகின் மிக அரிதானதும் எளிதில் தப்பித்துக் கொள்ளுவதுமான பறவைகள் கடைசியாக அவற்றின் இயற்கையான இருப்பிடங்களில் பறக்கக் காணப்பட்டன. பன்னாட்டு பறவையின ஆய்வாளர்கள் இப்பறவைகளை குவாவின் தெற்கே 25 கடல்மைல் தூரத்தில் கண்டார்கள். மொத்தம் 8 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டு 11 நாட்களாக அவை படம் பிடிக்கப்பட்டன. இந்த பிஜி பெட்ரெல் Pseudobulweria macgillivrayi எனப்படும் கடல்பறவைகள் 30 செமீ உயரமான கரும்பழுப்பு நிறமானவை. ஆரம்பத்தில் இவ்வினத்தின் வளர்ச்சியுறாப் பறவை ஒன்று 1855 ஆம் ஆண்டில் பிஜியின் காவு (Gau Island) தீவில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 130 ஆண்டுகளாக இவை "காணாமல்" போயிருந்தன. அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டில் இதன் முழுவளர்ச்சி பெற்ற பறவை குவா தீவில் கண்டுபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இவற்றின் சில பறவைகள் ஆங்காங்கே கிராமவீட்டுக் கூரைகளில் காணப்பட்டதாக செய்திகள் வந்தன. அவற்றில் பல இறந்து விட்டிருந்தன. ஞாயிறு, செப்டம்பர் 13, 2009 கசக்ஸ்தான்: புள்ளிவிபரங்களின் படி, தீயிலிருந்து ஊழியர்கள், நோயாளர்கள் உட்பட 40 பேர் காப்பாற்றப்பட்டனர். 650 சதுரமீட்டர் பரப்பளவுக்கு தீ பரவியது. உள்ளூர் நேரப்படி காலை 6:31 மணி வரை, தீ கட்டுப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஞாயிறு, செப்டம்பர் 13, 2009 ஐக்கிய அமெரிக்கா: நோய் தாக்காத அதிக விளைச்சல் தரும் பயிர்களை 1960 ம் ஆண்டுகளின் போது நார்மன் போர்லாக் உருவாக்கினார். இவருடைய கண்டுபிடிப்புகளால் உலகம் முழுவதும் தானிய சாகுபடி அதிகரித்தது, இதற்காக இவருக்கு 1970ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகளாவிய பஞ்சத்தை தவிர்த்த நார்மன் போர்லாக், லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதாக நோபல் அமைப்பு குறிப்பிட்டது. போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர். ஞாயிறு, செப்டம்பர் 13, 2009 கொழும்பு: இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 500 ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி முக்கிய மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தி வந்தன. இந்த சம்பள உயர்வு குறித்து பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை இந்த தொழிற்சங்கங்கள் நடத்தி வந்தபோதிலும், அவை தோல்வியிலேயே முடிந்திருந்தன. இருந்த போதிலும், சனிக்கிழமை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சு ஒன்றில் தாம் 405 ரூபாய் நாளாந்த சம்பளத்துக்கு இணக்கம் கண்டதாக அந்த மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார். ஆனால், இந்த இணக்கத்தை ஏற்க முடியாது என்று ஏனைய இரு சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன கூறியிருக்கின்றன. அடிப்படைச் சம்பளம் 290 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 85 ரூபாவும் மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தம், 2011 மார்ச் மாதம் வரை அமுலில் இருக்கும். 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதோடு ஏப்ரல் மாதம் முதல் சம்பள நிலுவை வழங்கவும் முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒத்துழையாமை போராட்டத்தை கைவிட்டு கடமைக்குத் திரும்புமாறு இ. தொ. கா கோரியுள்ளது. இதன்படி தொழிலாளர்கள் நேற்று முதல் கடமைக்கு திரும்பி வருவதாகவும் இன்று முதல் தோட்டங்களில் பணிகள் வழமைக்கு திரும்பும் எனவும் பிரதி அமைச்சர் மு. சிவலிங்கம் கூறினார். இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி]] **விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. திங்கள், செப்டம்பர் 14, 2009 லண்டன்: இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற நீதிபதி, இவர்களில் ஒருவர் ஆயுட்காலம் முழுமையும் சிறைக்குள்ளேயே கழிக்கவேண்டி நேரலாம் என்று கூறினார். இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் தலைவர் எனக் கருதப்படும் அப்துல்லா அகமது அலி (28) என்பவருக்கு குறைந்தது 40 ஆண்டுகளும், அசாத் சர்வார் (29) என்பவருக்கு 36 ஆண்டுகளும், தன்வீர் உசைன் (28) என்பவருக்கு 32 ஆண்டுகளும் சிறைத்தண்டனையை இங்கிலாந்தின் வோல்விச் நீதிமன்றம் விதித்தது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமமான ஒரு அட்டூழியத்தை நடத்த இவர்கள் சதி செய்ததாக நீதிபதி தெரிவித்தார். இவர்களின் சதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப்பயணிகள் கொண்டு செல்லத்தக்க திரவங்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சதிச்செயல் அல்கயீதாவால் வழி நடத்தப்பட்டதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர். செவ்வாய், செப்டம்பர் 15, 2009 கராச்சி, பாகிஸ்தான்: புனித நோன்பை முன்னிட்டு தர்மஸ் தாபனமொன்று ஏழைகளுக்கு இலவசமாக கோதுமை மா, பேரிச்சம்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கியது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் சிறுவர்கள் இதில் சிக்கிப் பலியாகினர். 18 பெண்களையும் இர ண்டு குழந்தைகளையும் மீட்டெடுத்ததாக தேடும் பணியில் ஈடுபட்டோர் தெரிவித்த னர். முறையான ஒழுங்குபடுத்தலில்லாமல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட தர்ம தாபன பொறுப்பாளர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இசுரேல் பொது்மக்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும், பாலத்தீன ஆயுதக் குழுக்களும் போர் குற்றங்களைப் புரிந்ததாகவும், இந்த விசாரணைக்கு தலைமை வகித்த போர்க் குற்றங்கள் குறித்த முன்னாள் சட்ட நடவடிக்கை அதிகாரி ரிச்சர் கோல்ட்ஸ்டோன் கூறியுள்ளார். இந்த விசாரணையுடன் ஒத்துழைக்க இசூரேல் மறுத்து விட்டது. இதற்கு உத்திரவிட்ட ஐநாவின் மனித உரிமை கவுன்சில் பாரபட்சமாக செயல்பட்டது என்று இசுரேஸ் கூறியது. புதன், செப்டம்பர் 16, 2009 சீனா: இந்நடவடிக்கை பயங்கரவாத தாக்குதல் மேலும் ஏற்படாமல் காலதாமதமின்றி தடுத்துள்ளது என்று சீனா அறிவித்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா கூறியுள்ளது. செயிட்டாமுட் ஓபுல், டாசின் மெகுமுத் ஆகியோரை முக்கியமாகக் கொண்ட 6 குற்றவாளிகள் சின்ச்சியாங் காவற்துறையால் கைது செய்யப்பட்டனர். சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சியில் கடந்த ஜூலையில் இருந்து வீகர் பூர்வகுடியனருக்கும், ஹென் சைனீஸ் இனத்தவருக்கும் இடையே நடந்த மோதல்களில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வன்முறைக் குற்றச் சம்பவம் ஏற்பட்ட பிறகு, அக்சூ நகரில் 20 குண்டுவெடிப்புச் சாதனங்களை இக்குற்றக்குழு உருவாக்கி, பயங்கரச் சீர்குலைவு நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் உலக வீகர் காங்கிரஸ் இது தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. செவ்வாய், செப்டம்பர் 15, 2009 கத்மண்டு, நேபாளம்: நேபாளத்தில் இந்து பண்டிகையில் ஆடு பலி கொடுப்பது வழக்கம். நவராத்திரி பண்டிகையின் போது, சக்திக்கான இந்துக் கடவுள் துர்கையை திருப்தி செய்யும் முகமாக பாரம்பரிய ரீதியில் பலி கொடுக்க, நகரங்களில் போதுமான ஆடுகள் இல்லாத நிலையில் கிராமப்புறங்களில் இருந்து ஆடுகளை வாங்கிவர உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆடு வளர்ப்பவர்கள் தங்களது ஆடுகளை விற்க வலியுறுத்தி வானொலி மூலமாக பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்து நாட்கள் கொண்டாப்படும் நவராத்திரி திருவிழா இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. பண்டிகை காலத்தில் ஆட்டு இறைச்சிக்கு ஏற்படும் பெருமளவிலான தேவையை சமாளிக்கும் வகையிலும், அவற்றின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதை கட்டுபடுத்தவே இவ்வாறான ஒரு பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைப்பினர் கூறுகிறார்கள். எமது சூரியக் குடும்பத்துக்கு அப்பால் அடையாளம் காணப்பட்டுள்ள கோள்கள் பொதுவாக மிகப்பெரியனவாக உள்ளதால் அவை பெரும்பாலும் எமது வியாழன் மற்றும் சனி கோள்கள் போன்று வளிமக் கோள்களாகவே காணப்படுகின்றன. ஆனாலும் கொரொட்-7பி கோளில் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என்பதால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை அரிது. கொரொட்-7பி கோளை 2009 பெப்ரவரியில் கொரொட் என்ற பிரெஞ்சு விண்கலம் கண்டுபிடித்தது. பூமியை ஒத்த பிற கோள்களைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்தை நாம் எட்டுகிறோம் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு காட்டுவதாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வியாழன், செப்டம்பர் 17, 2009 சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சென்னையில் நடந்த மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள், காவ‌ல்துறை அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு மாநாட்டில் பேசிய அவர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள், காவ‌ல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் பொது மக்களிடமும் அலுவலகத்திலும் தமிழில் பேச வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். "ஏற்கனவே அண்ணா இருந்தபோது உலகத்தமிழ் மாநாடு நடந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் போதும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன, எனவே நமது ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், பத்திரிகையாளர்கள், அய‌ல்நாட்டில் உள்ள தமிழ் விற்பன்னர்கள் போன்றோர் வற்புறுத்தி வருவதாகவும் எனவே அடுத்த ஆண்டு மாநாட்டை தமிழகத்தில் நடத்தவிருப்பதாகவும்" அவர் மேலும் கூறினார். இதன்பின், அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் 1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியதும் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு நாடுகளிலும் தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் கோவை நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும். வெள்ளி, செப்டம்பர் 18, 2009 பாகிஸ்தான் உசுத்தர்சாய் என்ற ஊரில், ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பரபரப்பாக கடைத்தெருவில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த வேளையில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிவந்து குண்டுதாரி வெடிக்கச்செய்துள்ளதாகத் தெரிகிறது. சம்பவ இடம் சின்னாபின்னமடைந்து காணப்படுவதாக நேரில் கண்டவர்கள் வருணிக்கின்றனர். சனி, செப்டெம்பர் 19, 2009 ஐக்கிய அமெரிக்கா: உலகிலேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான 'கைடிங் லைட் Guiding Light எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது. 1937ஆம் ஆண்டு என்.பி.சி. வானொலியில் தினந்தோறும் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்த இத்தொடர் மக்களின் பேராதரவுடன் 1952ஆம் வருடம் தொலைக்காட்சித் தொடராக உருமாற்றம் பெற்றிருந்தது. ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனையான நகரத்தில் நடக்கும் காதல், கல்யாணம், கள்ளக் காதல், விவாகரத்து, அவ்வப்போதைய மர்மக் கொலை என்பதாக இந்த தொடர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றது. இத்தொடரின் மூலம் கெவின் பேக்கன், கலிஸ்டா புளொக்கார்ட், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் போன்ற பல நடிகர்கள் நடிக்க ஆரம்பித்துப் பின்னர் புகழ் பெற்றிருந்தனர். இதன் கடைசிப் பகுதி செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை காண்பிக்கப்பட்டது. ஆனால் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவந்தது. வெள்ளி, செப்டம்பர் 18, 2009 ஐக்கிய அமெரிக்கா: முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிமுகப் படுத்திய இத்திட்டத்தைப் பரிசீலிக்குமாறு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார். ஏவுகணைத் தற்காப்பு வசதி 2012ம் ஆண்டுக்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் பட்டிருந்தது. பால்ட்டிக் கடலில் தடுப்புச் சாதனங்களை அமைக்க போலந்துடனும், ரேடார் நிலையம் அமைக்க செக் குடியரசுடனும் அமெரிக்கா சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்தது. ஐரோப்பிய நேச நாடுகளை அல்லது ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கப் படையினரை ஈரான் அல்லது மற்ற நாடுகளிலிருந்து பாதுகாக்க இந்த வசதிகள் தேவை என்று கூறப்பட்டது. ஆனால், ஈரானின் நெடுந்தொலைவு ஏவுகணைத் திட்டம், முன்பு கணித்த அளவுக்குத் துரித முன்னேற்றமடையவில்லை என்பதால், அமெரிக்கா அதன் முடிவை மாற்றுவதாகப் பத்திரிகை குறிப்பிட்டது. சனி, செப்டம்பர் 19, 2009 ஏமன்: தாங்கள் கைப்பற்றியுள்ள நிலப்பகுதிகளை கைவிடுதல், பிடித்துவைத்துள்ள படையினரை விடுவித்தல், மத்திய அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற நிபந்தனைகளை கிளர்ச்சிக்காரர்கள் ஏற்பார்களேயானால் இந்த போர்நிறுத்தம் நிரந்தரமாகும் என்று அரசு கூறியுள்ளது. இந்த நிபந்தனைகள் பற்றிப் பரிசீலிப்பதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளை கடந்த காலங்களில் அவர்கள் நிராகரித்திருந்தனர் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு இடம்பெற்றுவரும் கிளர்ச்சிகளினால் 150,000 பொதுமக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளனர். ஞாயிறு, செப்டம்பர் 20, 2009 ஐவரி கோஸ்ட்: பாதிக்கப்பாட்டவர்கள் ஒவ்வொருவரும் தலா சுமார் 1546 டாலர்களை பெறுவார்கள். 2007 ஆம் ஆண்டில் ஐவரிகோஸ்ட் அரசாங்கத்துக்கு அந்த நிறுவனம் வழங்கிய சுமார் 200 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இந்தத் தொகை வழங்கப்படும். அந்தப் பணத்தில் ஒரு பாதி, இந்தக் கழிவுகளால் உயிரிழந்ததாக கூறப்படும் 16 உள்ளூரவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. ரபிகுரா நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், நட்ட ஈடு கோரியோரின் சட்டத்தரணிகள், அந்த கழிவுகளுக்கும், மரணங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றும், அந்த புதைக்கப்பட்ட கழிவுகள் காய்ச்சலை போன்ற சமிக்ஞைகளை ஏற்படுத்தியது என்றுகூட காண்பிக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவு, இந்த விவகாரத்தில் இருந்து முற்றாக ரபிகுரா நிறுவனத்தை குற்றமற்றதாக ஆக்குகிறது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். ஞாயிறு, செப்டம்பர் 20, 2009 கொங்கோ: ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள தான்சானியாவுக்கு இவர் நாடுகடத்தப்படுள்ளார். இக்கைது மூலம் ருவாண்டாவுக்கும் கொங்கோவுக்கும் இடையில் இருந்து வந்த முறுகல் நிலை தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்தது. திங்கள், செப்டம்பர் 21, 2009 பிரான்ஸ்: நிக்கோலா சர்கோசி முன்பு உள்துறை அமைச்சராக இருந்தபோது அவரை களங்கப்படுத்த டி வில்பா முயன்றதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலா சர்கோசி விரும்பியதனாலேயே இந்த வழக்கின் விசாரணையை தாம் சந்திக்க நேர்ந்திருப்பதாக டி வில்பா நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வழக்கிலிருந்து தாம் முழுமையாக விடுவிக்கப்படுவோம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கு 2004 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் அவர்கள் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு போட்டியிட்ட காலகட்டம் தொடர்பானது. அப்போது சர்கோசிக்கு எதிரான நீதிமன்ற ஊழல் புலனாய்வில் டி வில்பா தலையிட்டு அதன் மூலம் சர்கோசியின் நற்பெயரை கெடுக்க முயன்றதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் 45,000 யூரோக்கள் தண்டமும், கூடியது ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம். திங்கள், செப்டம்பர் 21, 2009 சென்னை: இந்திய நீதிமன்றங்களால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், சிறைக்குள் அவர்கள் நடந்துகொண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப்பிறகு விடுதலை செய்யப்படுவது வழமை. அந்த அளவுகோளின் கீழ் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும், தம்மை விடுதலை செய்யாமல் காலம் கடத்துவதாகவும் கூறும் நளினி, திங்கட்கிழமை முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் துவங்கியிருப்பதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி என்னை சந்தித்து பேசுகையில் மன்னித்துவிட்டதாக கூறினார். உயர்நீதிமன்றமும் என்னுடைய விடுதலை குறித்து கமிட்டி ஒன்றை அமைக்கச் சொல்லி அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அரசு கமிட்டி அமைக்க காலம் கடத்தி வருகிறது. சிறைத் தண்டனை முடிந்தும் எனக்கு அரசு அநீதி இழைத்து வருகிறது. எனவேதான் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளேன்" என நளினி கூறியுள்ளார். செவ்வாய், செப்டம்பர் 22, 2009 கொழும்பு: காவல்துறையினரின் கடும் தாக்குதலை சகிக்க முடியாமலேயே அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களில் கையொப்பமிட நேர்ந்ததாக நோத் ஈஸ்டன் மன்த்லி என்ற இதழின் வெளியீட்டாளரான வெற்றிவேல் யசீகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்தார். யசீகரன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரெ என்பவருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர் சுயேச்சையாக வழங்கியதா என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி தன்னையும் தனது மனைவியையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து தன்னை தாக்கி கடும் இம்சைகளுக்குட்படுத்தி பல்வேறு கடதாசிகளில் தனது கையொப்பத்தை பலவந்தமாக பெற்றதாக யசீகரன் சாட்சியில் தெரிவித்தார். தான் ஒருபோதும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரே என்பவருக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவரை முதற்தடவையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இந்த வழக்கின்போதே கண்டதாகவும் யசீகரன் அரச சட்டவாதியின் குறுக்குகேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது]] உலகின் பெரும்பாலான ஆற்றுப்படுகைகள் நீரில் மூழ்கிவருவதனால், பல கோடிக்கணக்கான மக்கள் வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறார்கள். நதிகளுக்கு குறுக்கே அணைகட்டுதல் மற்றும் அவற்றை திசை திருப்புதல் ஆகிய நடவடிக்கைகளால், இந்த ஆற்றுப்படுகைப் பகுதிகளில் வண்டல் மண் மற்றும் கனிம படிமங்கள் குறைந்து வருகின்றன. நைல் நதி முதல் கொலராடொ நதி வரை பல நதிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட அரை பில்லியன் மக்கள் வாழ்வதாக ஆய்வாளர்கள் இயற்கை நிலவளவியல் குறித்த சஞ்சிகை ஒன்றில் எழுதியிருக்கிறார்கள். அண்மைக் காலங்களில் 85 வீதமான உலகின் முக்கிய பாசனப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கணித்துள்ளனர். நிலம் நீரில் மூழ்குவதாலும், புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரிப்பதாலும், அடுத்துவரும் 40 வருடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய நிலத்தின் அளவு 50 வீதத்தால் அதிகரிக்கும். தாழ்வான படுகைகள் அவற்றுக்கு நீர் வழங்கும் நதிகளினாலோ அல்லது கடல் அலைகளினாலோ வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் கொலராடொ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அல்பேர்ட் கிட்னர் கூறுகிறார். கடல் மட்ட அதிகரிப்பிலும் பார்க்க மனிதனின் செயற்பாட்டால் இந்த பகுதிகள் பல ஏற்கனவே பாதிக்கப்படத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் வாதிடுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஆற்றுப்படுகைகள் ஆசியாவின் வளரும் நாடுகளிலேயே அதிகமாக இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஆனால் செல்வந்த நாடுகளின் ஆற்றுப்படுகைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக பிரான்சின் றூண் மற்றும் இத்தாலியின் போ ஆகிய ஆற்றுப்படுகைகளும் இதில் அடங்குகின்றன. இந்தியாவின் கிருஷ்ணா நதியை ஒட்டியை டெல்டா பகுதியும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. புதன், செப்டம்பர் 23, 2009 சிட்னி: இந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் பலரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர். உலகப் புகழ்பெற்ற சிட்னியின் சின்னங்களான ஒபேரா ஹவுசும், துறைமுகப் பாலமும் புழுதியால் மறைக்கப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். செவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது. புரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது. புழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் முக்கியமாக உள்ள மேல் மட்ட மண்ணையும் இந்த புழுதிப் புயல் அள்ளிப் போய் விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது. ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக இப்படியான ஒரு புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புழுதிப் புயல் காரணமாக சிட்னி நகரில் காற்று மாசின் அளவு 4164 ஆக இருந்தது. வழக்கமாக 200க்கு மேல் போனாலே அது அபாயகரமானது. ஆனால் 4164 என்ற அளவில் காற்று மாசுபட்டுப் போனதால், ஆஸ்துமா உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும் சுகாதாரத் துறையினர் எச்சரித்திருந்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிற பகுதிகளில் கல்மழை பொழிந்ததாகத் தகவல் வந்துள்ளது. இதில் சில கற்கள் கிரிக்கெட் பந்து அளவுக்குப் பெரியதாக இருந்ததாகவும், கார்கள், வீடுகளின் சன்னல்கள் உடைந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. title ஆஸ்திரேலியாவில் பயங்கர புழுதி புயல்! title சிட்னி நகரைச் சூழ்ந்த புழுதிப் புயல்! புதன், செப்டம்பர் 23, 2009 இந்தியா: விண்ணில் பாய்ந்த 20 நிமிடங்களில் ஏழு செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. இது, இந்தியாவின் 46 ஆண்டுகால விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஓசன்சாட்-1 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. இன்று செலுத்தப்பட்ட ஓசன்சாட்-2 செயற்கைக் கோள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் விஞ்ஞானிகளுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஓசன்சாட்-2 செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்படும். இதன் மூலம் மீன்வளம் உள்ள பகுதிகள் குறித்தும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. title பிஎஸ்எல்வி-சி14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. பல பத்தாண்டுகளுக்கு முன்னால் அப்போலோ விண்வெளிப் பயணத்தின் பொழுது நிலாவின் பரப்பில் இருந்து பூமிக்கு எடுத்துவந்த நிலாமண்ணில் நீர் ஏதும் இருப்பதாக உறுதி செய்ய இயலவில்லை ஆனால் இப்பொழுது நிலவின் மேற்பாகத்தில் இருக்கும் பாறைகளிலும், அங்குள்ள தூசுகளிலும் நீர் மூலக்கூறுகள் இருப்பதை இந்திய செயற்கைத் துணைக்கோள் உறுதி செய்துள்ளது. இப்பொழுது "அமெரிக்காவின் ஆழ மோதும் துழாவி US Deep impact probe என்னும் செயற்கைத் துணைக்கோளும், அமெரிக்க-ஐரோப்பிய காசினி விண்கலமும் US-European Cassini spacecraft சந்திரயான் செய்த கண்டுபிடிப்பை உறுதி செய்கின்றது. ஒரு கன மீட்டர் நிலாமண்ணில் ஏறாத்தாழ ஒரு லிட்டர் நீர் இருக்கும் என்று லாரி டெய்லர் என்னும் அமெரிக்க நிலா ஆய்வாளர் கூறுகின்றார். இக்கண்டுபிடிப்பின் விளைவாக விண்வெளிப் பயணிகள் இந்த நீரைப் பிரித்து எறிக்ணை எரிபொருள் (rocket fuel) செய்ய இயலும் என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் நிலவில் வாழ்விடங்களை அமைக்கக் கூடிய சாத்தியக் கூறுக்களை அதிகரிக்கச் செய்யும் என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நிலவின் துருவப் பகுதியில் பனிக்கட்டி இருக்கும் என்று விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் நம்பியிருந்தாலும், நிலவை ஆராய சமீபத்தில் ஏவப்பட்ட மூன்று கோள்கள், இது தொடர்பிலான விபரங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன. நிலாவின் மேற்பரப்பில் நீர் பரவிக் கிடப்பதை இவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப் பரவிக் கிடக்கும் தண்ணீரை, பூமியில் இருப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். title நிலவில் தண்ணீர் கண்டுபிடித்தது சந்திரயான்-1 வியாழன், செப்டம்பர் 24, 2009 இஸ்தான்புல், துருக்கி: ஆனால் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நியூயார்க்கில் உள்ள சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே கழித்திருந்தார். நவீன துருக்கியின் தோற்றுநரான கெமால் அடாதுருக்கினால் ஒட்டோமான் ராஜ குடும்பம் நாட்டை விட்டு துரத்தப்பட்டிருந்தது. உஸ்மானின் மனைவி ஆப்கானிஸ்தானின் கடைசி மன்னரின் உறவினராவார். வெள்ளி, செப்டம்பர் 25, 2009 ஸ்பெயின்: இதன் காரணமாக மொத்தம் 12 போட்டிகளைக் கொண்ட இந்த காட்சிச் சதுரங்கத் தொடரில் 9-3 என்ற புள்ளிக்கணக்கில் காசுப்பரோவ் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காசுப்பரொவ் பேசுகையில், “அனைத்துலகத் தர சதுரங்க விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக பன்னாட்டு சதுரங்கப் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. title செஸ் போட்டி: காஸ்பரோவ் கார்போவ் மீண்டும் பலப்பரீட்சை title 25 ஆண்டுகளுக்கு பின் கார்போவை வீழ்த்தினார் காஸ்பரோவ் வெள்ளி, செப்டம்பர் 25, 2009 இந்தியா: இந்திய மக்களுக்குக்கு மரபணு வழியாக வரும் பாரம்பரிய நோய்கள் அதிகம் வருகின்ற ஆபத்து உள்ளது என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர். பழங்குடியினர், மற்றும் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் ANI) என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் (ASI) என்றும் பெயரிட்ட்டு அழைக்கிறார்கள். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம், என்று கருத்து தெரிவிக்கின்றது இவ்வாய்வு. இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் நோக்கில் 39 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் நோக்கில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே குழுவைச் சேர்ந்த மூதாதையரிடம் இருந்து தொன்முது காலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் முதல்மனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர். அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும் (அகமணம் புரிவதால் தமக்கே உரிய பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் பண்பாட்டு நோக்கில் தனித்தன்மை கொண்டு உள்ளனர். இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் பண்பாட்டுக் கூறுகளாக, வெளிப்பாடுகளாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது. பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் (அகமணம் செய்துகொள்வதால்) ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் கோணத்திலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை எடுத்துரைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு இந்தியர்கள் மரபியல் அடிப்படையிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் அறிவியலாளர்களிடையே முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது. title தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள் சனி, செப்டம்பர் 26, 2009 ஈரான்: ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் உலையை பன்னாட்டு அணுஆற்றல் முகமையின் International Atomic Energy Agency IAEA) ஆய்வாளர்கள் பார்வையிட அந்நாட்டின் அதிபர் முகமத் அகமதுனிசாத் அனுமதியளித்துள்ளார். ஈரானின் அணு திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல் உலக நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், ஈரான் அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார். யுரேனியம் செறிவூட்டல் உலையை சர்வதேச அணு சக்தி முகமை ஆய்வாளர்கள் பார்வையிட தமக்கு ஆடசேபணை ஏதுமில்லை என்று அதிபர் அகமதுனிசாத் கூறிவிட்டதால், தங்களுக்கும் அதில் பிரச்னை ஏதுமில்லை என்று ஈரான் அணுவாற்றல் தலைவர் அலி அக்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐஏஇஏ வுடன் உடன்பாடு ஏற்பட்டவுடன் ஆய்வுக் குழு வரும் தேதியை அறிவிக்க இருப்பதாக அலி அக்பர் மேலும் தெரிவித்தார். ஈரான் முன்னதாக இரண்டாவது அணுச் செறிவூட்டல் ஆலையை கட்டி வருவதாக தெரிவித்திருந்தது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் இன்னும் ஐந்து நாட்களில் அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெறவுள்ள நிலையில், இந்த விடயம் அப்படியான பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதலான ஒரு அவசரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் இரான் தனக்கு அணுஆயுத அபிலாஷைகள் இல்லை என்று கூறிவருகிறது. மேலும் குவாம் பகுதியில் இருக்கும் தனது அணு ஆலைக்கு கண்காணிப்பாளர்கள் வந்து விஜயம் செய்வது குறித்த தேதியை நிர்ணயம் செய்யவுள்ளதாகவும் அந்நாடு தெரிவிக்கிறது. title யுரேனியம் உலையை ஐஏஇஏ பார்வையிட ஈரான் அனுமதி ஞாயிறு, செப்டம்பர் 27, 2009 பாகிஸ்தான்: வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தினரை இலக்கு வைத்து சனிக்கிழமை நடத்தப்பட்ட இருவேறு தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். முதலாவது தாக்குதல் பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்றது. இங்கு இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர். முன்னூறு கிலோ எடையுடைய வெடிகுண்டை தற்கொலைக் குண்டுதாரி காவல் நிலையம் மீது வெடிக்க வைத்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் பொலிஸ் நிலை யம் தரைமட்டமாகியது. இச்சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் இதே மாகாணத்திலுள்ள பெசாவர் நகரில் மற்றொரு குண்டு வெடித்தது. இராணுவத்தினரின் வங்கி ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதலில் பத்துப் பேர் கொல்லப்பட்டதுடன் 88 பேர் காயமடைந்தனர். கட்டடங்கள் வாகனங்கள் என்பன இதில் சேதமடைந்தன. ஞாயிறு, செப்டம்பர் 27, 2009 இந்தியா: அரிய தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் அழிந்து வருவது உலகளாவிய ஒரு பிரச்சினை என்றும், அதை எதிர்கொள்ள உலகளவில் ஒரு செயற்திட்டம் தேவை என்றும் பேராசிரியர் டாண்டன் கூறுகிறார். உலகளவில் தகுதியும் திறமை வாய்ந்தவர்களும் ஒருங்கினைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவிக்கிறார். "நிம்ஃபியா டெட்ரோகொனா Nymphaea tetragona எனும் அந்த அரிய வகை தாமரைச் செடியை பாதுகாக்க இந்திய அரசு ஓரளவு நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார். செவ்வாய், செப்டம்பர் 29, 2009 கினி: நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் இராணுவ ஆட்சியாளர் கேப்டன் மூசா டாடிசு கமரா போட்டியிடுவதற்கு திட்டமிடுவதாகத் தெரிவதையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய எதிரணியினர் முயன்றிருந்தனர். கினியில் சூழல் மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவிக்கிறார். திங்கள், செப்டம்பர் 28, 2009 பிலிப்பைன்சு: மீட்கப்பட்டோரில் அறுபதாயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களே அதிகமாகும். ஹெலிகொப்டர்கள், தோணிகளின் உதவியுடன் வெள்ளத்தில் தத்தளித் தோர் காப்பாற்றப்பட்டனர். வெள்ளம் முற்றாக வடிந்த பின்னரே சேத விபரங்களின் சரியான தகவல்களை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளத்திலிருந்து தப்பும் பொருட்டு மக்கள் வீட்டுக் கூரைகளின் மேலும் உயரமான இடங்களிலும் ஏறிக் கொண்டனர். ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைவிடாது மழை பெய்ததால் இருபது அடி உயரத்தில் வெள்ளம் நின்றது. பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாற்பது ஆண்டுகளின் பின்னர் இப்பெரு வெள்ளம் பிலிப்பைன்சைச் சேதப்படுத்தியது. மக்களைப் பொறுமையாக இருக்கும்படி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளதுடன், வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர். title வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதம் புதன், செப்டம்பர் 30, 2009 சமோவா: ;அமெரிக்க சமோவா தீவில் 25 பேர் இறப்பு சமோவாவின் அமெரிக்க ஆளுகைக்குள்ள அமெரிக்க சமோவா பகுதியில் 25 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ சென்றடைந்துள்ளன. title சோமாவ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியதில் 100 பேர் பலி நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் எனவும் இந்தோனீசிய மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். படாங் நகரில் மருத்துவமனையொன்று அடங்கலாக பல கட்டடங்கள் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றில் சிக்கி 21 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார். படாங் விமான நிலையத்தின் கூரைப்பகுதியொன்று இடிந்துவிழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலியல் வன்முறையை போர் ஆயுதமாக வகைப்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. போர்க்காலங்களில் அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவும் மற்றும் பொதுமக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கவும் பாலியல் வன்செயல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்று கடந்த வருடம் கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது, இந்தத் தீர்மானம் வந்துள்ளது. ஏனைய பல கோரிக்கைகளுடன், இந்த தீர்மானம், உலக நாடுகளை இவை குறித்த சர்வதேச சட்டங்களுக்கு ஒத்த வகையில் தமது சட்டங்களை உருவாக்கவும், பாலியல் வன்செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை புலன்விசாரணை செய்வதற்கான திறமைகளை பெறுவதற்கு ஏற்றவாறு சிப்பாய்களை ஆட்சேர்ப்புச் செய்து, பயிற்றுவிக்க வேண்டும் என்று கோருகிறது. அமெரிக்க, இராஜாங்க செயலாளர் இலரி கிளிண்டன் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது, கடந்த ஜூலை மாதத்தில் தாம் கொங்கோ குடியரசுக்கு சென்றிருந்தபோது, அங்கு மாதம் ஒன்றுக்கு 1100 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக தகவல் வெளியானதாக குறிப்பிட்டுள்ளார். ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகினர். சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஒரு ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். title இலங்கை உட்பட்ட நாடுகளில் போரின்போது பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது ராஜஸ்தான் எண்ணெய்க் கிடங்கில் தீ: 5 பேர் இறப்பு]] ஏரிஸ் I-X விண்கப்பலை நாசா வெற்றிகரமாகச் சோதித்தது]] கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை]] சிறிய ரக அணுமின் உலைகளை ஜப்பானிய நிறுவனம் அமைத்து சாதனை]] மலேசியாவில் தொங்கு பாலம் விழுந்து மாணவி இறப்பு]] பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர்]] வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சியில் வெற்றி]] ஊடகவியலாளர் யசீகரனும் அவரது மனைவியும் விடுதலை]] ஆப்பிரிக்க யானை இனம் 15 ஆண்டுகளுக்குள் அழியும் அபாயம்]] ஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு]] கொலோன் நகரில் 8வது தமிழ் இணைய மாநாடு]] மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு]] ஈராக் குண்டுத் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டனர்]] எகிப்தில் இரு தொடருந்துகள் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்]] கொலம்பிய உதைபந்தாட்ட அணியினர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்]] மதுரை வழியாக செங்கோட்டை கோவை சிறப்பு தொடருந்து சேவை]] வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் கையளித்தது]] 6 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி கோருகிறது எத்தியோப்பியா]] இலங்கையில் மோதல் காலத்தில் போர்க்குற்றங்கள்: அமெரிக்கா அறிக்கை]] சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்]] இசுரேலுக்காக உளவு பார்த்த அமெரிக்க விஞ்ஞானி கைது]] வட இந்தியாவில் இரு தொடருந்துகள் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர்]] உச்ச நீதிமன்றத்தில் அம்பானி சகோதரர்கள் விவகாரம்]] சூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன]] சூடானில் கடத்தப்பட்ட இரு பன்னாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் விடுதலை]] சுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார்]] ஈரானில் இடம்பெற்ற தாக்குதலில் காவல் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்]] வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது]] தாவர விதை வங்கி தனது 10 வீத இலக்கை எட்டியது]] அருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரல்]] 2010 உலகக்கிண்ண கால்பந்து: அர்ஜென்டீனா, சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி]] இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம்]] கோடையில் பனி இல்லாத ஆர்க்டிக் உருவாகலாம்]] இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி]] டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது]] சீனாவில் ஜூலை கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரண தண்டனை]] தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி]] தீவிரவாதிகளுடன் தொடர்பு: பிரெஞ்சு அணு ஆய்வாளர் பாரிசில் கைது]] 2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது]] மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி தாடை எலும்பு உருவாக்கம்]] ஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது]] துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது]] எயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்]] கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் இறப்பு]] பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு]] நாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது]] மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்க வீட்டை பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது]] 2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடைத்தது]] காபூலில் இந்தியத் தூதரகம் முன் தற்கொலைத் தாக்குதல்]] 2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது]] சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது]] 2009 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டது]] ருவாண்டா படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது]] கிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி]] நைஜீரியாவில் பொது மன்னிப்பின் கீழ் போராளிகள் ஆயுதங்களுடன் சரணடைவு]] 2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது]] ஆப்கானிஸ்தானில் போராளிகளுடனான மோதலில் 8 அமெரிக்கப் படையினர் இறப்பு]] திசைநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது வழங்கப்பட்டது]] லிஸ்பன் உடன்படிக்கைக்கு அயர்லாந்து வாக்காளர்கள் ஆதரவு]] எத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது]] தமிழ்நாடு அரியலூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு]] சுமாத்திரா நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியது]] ஐக்கிய இராச்சியத்தில் பெரும்பான்மையான வழக்குகளில் உச்ச மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயல்படும் ஹவுஸ் ஒஃப் லார்ட்ஸ் என்ற பிரபுக்கள் சபையின் நடைமுறை முடிவுக்கு வருகிறது. நாட்டில் புதிதாக அமைக்கப்படுகின்ற உச்சநீதிமன்றத்துக்கான உறுப்பினர்கள் லண்டனில் இன்று பதவிப் பிரமானம் செய்துகொண்டுள்ளனர். கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகளாக பிரிட்டனின் உச்சநீதிமன்றமாக பரிணமித்துவந்த பிரபுக்கள் சபையின் நீதித்துறை செயற்பாடுகளும் அதிகாரங்களும் இனி முற்றுப் பெறும். ஐக்கிய இராச்சியத்தில் நீதிமன்ற நடைமுறைகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் நீதிமன்றம் இந்த புதிய உச்சநீதிமன்றமாகத்தான் இருக்கும். நீதித்துறையானது அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகளைச் சார்ந்தில்லாது சுயாதீனமாக விளங்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை உச்சபட்ச மேன்முறையீட்டு நீதிமன்றமாக இனி இந்த புதிய உச்சநிதிமன்றம் திகழும். ஆனால் கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை ஸ்காட்லாந்தில் வேறொரு மேன்முறையீட்டு கட்டமைப்பு செயல்படும். பிரித்தானியாவில் பிரபுக்கள் சபை 1399ஆம் ஆண்டிலிருந்து ஏதோ ஒரு வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயல்பட்டு வந்துள்ளது. காவிரி வடிநிலப் பகுதியில் கொள்ளிடம்-வெள்ளாற்றுக்கு இடையே ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய முட்டைகள் மண்ணாலான கூடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் புகைப்படங்களும் மாதிரிகளும் உறுதிப்படுத்துவதற்காக பல பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்ட்டன. கல்லாகிய முட்டைகள் பார்ப்பதற்கு டினோசோர் முட்டைகள் போல இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர். பேராசிரியர் மு.ராம்குமார் தலைமையில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் தி.சுகந்தா, கு.சதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆய்வுக் குழுத் தலைவர் பேராசிரியர் ராம்குமார், பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அரியலூர் பகுதியில் சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் முட்டைப் படிவங்கள், முட்டையிட்ட இடங்கள், எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்தில் இருந்த நன்னீர் ஏரி, ஆற்றுப் பாதை ஆகியவற்றை முதன் முறையாகக் கண்டுபிடித்துள்ளோம். டைனசோர் இனம் ஏன் அழிந்தது என்பது பற்றி கூடுதல் விபரம் அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். title அரியலூரில் டைனோசர் முட்டைக் குவியல்! இந்தப் பெண் எலும்புக்கூட்டுக்கு அர்தி ஆர்டிபித்திக்கசு ரமிடசு Ardipithecus ramidus என்று பெயரிடப்பட்டுள்ளது. லூசி என்று பெயரிடப்பட்ட ஓர் எலும்புக்கூடுதான், இதுவரை கிடைத்த ஆகப் பழமையான மனித மூதாதைய எச்சம் என்று கருதப்பட்டுவந்தது. ஆனால் அதனை விட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையானது அர்தி என்பது தற்போதைய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்த ஐரியப் பிரதமர் பிரையன் கவன், மக்கள் மிகத் தெளிவான தொனியில் இந்த சம்மதத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்பட்டு வருகின்றபோதிலும் இதுவரை வெளியான முடிவுகளின்படி மூன்றிலிரண்டு பங்கு வாக்காளர்கள் உடன்படிக்கையை அங்கிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மெனுவல் பெராசோவும், கடந்த வருடம் உடன்படிக்கைக்கு எதிராக அமைந்த மக்கள் தீர்ப்புக்கு மாறாக, இம்முறை சாதகமாக வெளியாகியுள்ள மக்கள் அங்கிகாரத்தைப் பெரிதும் வரவேற்றுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், ஐரோப்பியர்களுக்கு பொதுவான பிரச்சனைகள் குறித்து இனி இணைந்து பணியாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். திசைநாயகம் தற்போது 20 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உட்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது அமெரிக்காவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பிரபல ஊடகவியலாளர் பீட்டர் மெக்லரால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நோக்கம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இலாபத்தைக் கருதாத வகையில் ஊடகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகும். இந்த வைபவத்தில் திசைநாயகத்தின் மனைவி ரொன்னேட் கருத்துத் தெரிவிக்கையில் வருங்காலப் பத்திரிகையாளர்களை உருவாக்குவதில் பீட்டர் மேக்லர் போல எனது கணவர் தீவிரமாகச் செயல்பட்டதில்லை. ஆனால் தனது இலக்குகளை எட்ட கடந்த 20 ஆண்டுகளாக அவர் பரபரப்பாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளார். இக்கட்டான தருணங்களில்கூட எப்படி துணிச்சலுடனும், கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நிமிடம் வரை அவர் எனக்குக் கற்றுக்கொடுக்கிறார்" என்றார். இவ்வைபவத்தின் போது ஆரம்ப உரையில் வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் மார்க்கசு புரோச்லி தெரிவிக்கையில், அடக்கு முறை ஆட்சி நிலவும் பிரதேசங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு தமது மரியாதையைச் செலுத்தினார். இவ்வாறு சிறந்த முறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களின் துணிகர செயற்பாடுகளுக்காக பீட்டர் மெக்லர் விருதினை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார். இதேவேளை, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயலணி, 2009 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதுக்கும் திசைநாயகத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது]] சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்]] title திஸ்ஸாநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டது title இலங்கைப் பத்திரிகையாளர் திசைநாயகத்துக்கு விருது: மனைவி பெற்றுக்கொண்டார் ஒதுக்குப்புறமான பலைப்பகுடி ஒன்றில் காவல் அரண்களுக்கு அருகில் இருந்த மசூதியிலிருந்தும், கிராமத்தில் இருந்தும் இரண்டு சிறிய இராணுவ நிலைகள் மீது தலிபான் தீவிரவாதிகள் 300 பேர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், காம்தேஷ் மாவட்டத்தில் காவல் துறையினர் 19 பேருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின்போது அமெரிக்க இராணுவ விமானங்கள் குண்டுகள் வீசியதாகவும், விமானத் தாக்குதல் விடியற்காலையில் ஆரம்பித்து நெடுநேரம் தொடர்ந்தது எனவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். காவல்துறைத் தலைவர் ஒருவர் உட்பட உள்ளூர் அதிகாரிகள் நிறைய பேரை ஆயுததாரிகள் பிடித்துச் சென்றுள்ளனர். இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தான் மீது 2001ல்அமெரிக்கா படையெடுப்பு மேற்கொண்டதன் பின்னர், அங்கு வெளிநாட்டுப் படையினர் தரப்பில் அதிக சேதங்களை உண்டாக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று. title தலிபான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் பலி புற்றுநோய் மற்றும் மூப்படைதல் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர்களுடைய கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உள்ளூர் போராளிகள் தலைவர் டொம்போலோ பொது மன்னிப்பை அடுத்து நைஜீரிய அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் நைஜீரிய மேற்கு டெல்ட்ட பகுதியில் மற்றும் பல போராளிகளுடன் சேர்ந்து பெரும் தொகையான எண்ணெயைத் தடுத்து வைத்திருந்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆர்ட்டெகெ டொம் என்ற இன்னும் ஒரு குழுவின் தலைவர் தனது ஐயாயிரம் போராளிகளுடன் ஹார்க்கோர்ட் துறையில் ஆயுதங்களுடன் சரணடைந்தார். ஆனாலும், நைஜீரிய அரசு தாம் உறுதியளித்த படி தமது பகுதியில் முதலீடு எதுவும் செய்யவில்லையானால், தாம் மீண்டும் ஆயுதங்களைத் தூக்குவோம் என அவர் எச்சரித்தார். வேறு சில போராளிக் குழுக்கள் இந்தப் பொது மன்னிப்பை நிராகரித்தனர். இந்த சரணடைவை அடுத்து, நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பரல்கள் எண்ணெயை டெல்ட்டா பகுதியில் இருந்து தருவிக்க முடியும் என அரசு எதிர்பார்க்கிறது. கட்சியின் வெற்றிச்செய்தியைக் கேள்வியுற்ற பப்பாண்ட்ரியு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:- கிரேக்கத்தின் வரலாற்றையும், மக்களின் எதிர்காலத்தையும் மாற்றியமைக்கும் வெற்றி இது. இரண்டு ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகள் காணப்படும். பிழையான கொள்கைகளை மக்கள் நிராகரித்துவிட்டனர் எனக் கூறினார். கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேளம் அடித்தவாறு ஊர்வலம் வந்தனர். பச்சைக் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி வெளியிட்டனர். கிரேக்கத்தின் பிரதமர் கர்மான்சிஷ் தனது பழமை பேணும் கட்சியான புதிய மக்காளாட்சிக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து பதவி விலகினார். இவரின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டதால் மக்கள் இவரது ஆட்சியை நிராகரித்தனர். கிரேக்கப் பாராளுமன்றத்தில் உள்ள முன்னூறு ஆசனங்களில் 160 இடங்களை பாசொக் கட்சி பெற்றுள்ளது. ஆளும் கட்சி 91 இடங்களையே பெற்றது. title கிரேக்கப் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி பெருவெற்றி: பிரதமர் பதவி விலகினார் கண்ணாடி இழையின் ஊடான ஒளியின் தொலைதூர பரிமாற்றத்தில் படைத்த புதுமைகளுக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த சார்ல்ஸ் காவோ என்பவருக்கு இந்த பரிசின் அரைவாசியை ஸ்டாக்கோமில் இருக்கின்ற நடுவர்கள் வழங்கியுள்ளனர். அதேவேளை டிஜிட்டல் பிம்ப உணரி CCD Sensor குறித்த கண்டுபிடிப்புக்காக அடுத்த அரைவாசிப் பகுதி கனடாவின் வில்லார்ட் பாயில், அமெரிக்கரான ஜார்ஜ் சிமித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மனித சமுதாயத்தையே தற்போது ஒரு குடைக்குள் கொண்டுவந்துள்ள நவீன தொலைதொடர்பு இணைப்புக்கு முதுகெலும்பாய் அமைந்த இவர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகத்தில் எந்த மூலையில் உள்ளவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதும், தகவல்களை இணையதளம் மூலம் மிகத் துரிதமாகப் பரிமாறிக்கொள்வதும் இவர்களின் கண்டுபிடிப்புகளால்தான் சாத்தியமானது. சீனாவின் ஷங்காயில் 1933-ம் ஆண்டு பிறந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுள்ளார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் 1966-ம் ஆண்டு மின் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி 1999-ல் ஓய்வு பெற்றார். அமெரிக்காவில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் 1986-ல் ஓய்வு பெற்றார். கனடாவில் 1924-ம் ஆண்டு பிறந்தார். இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள மேக்கில் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பெற்றவர். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி 1979-ல் ஓய்வு பெற்றார். title இயற்பியல்: சீனா, அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்த மூவருக்கு நோபல் பரிசு இவரது கைதை வரவேற்றிருக்கும் ருவாண்டா அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரி, இந்த நபர் ருவாண்டாவில் வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். * ஏப்ரல் 6, 1994: அதிபர் ஜுவெனல் ஹபியாரிமானா விமானக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். * ஜூலை: துட்சி-தலைமையிலான போராளிகள் தலைநகர் கிகாலியைக் கைப்பற்றினர். * ஜூலை: 2 மில்லியன் ஹூட்டு இனத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கான புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளை தயாரிப்பதில் இவர்களது கண்டுபிடிப்பு பயன்படுகிறது என பரிசுக்குழு கூறுகின்றது. இவர்கள் மூவரும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இதில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெறும் நான்காவது பெண்மணி அடா யோனாத் ஆவார். கடந்த 40 ஆண்டுகளில் இந்த பரிசை பெறும் முதல் பெண்மணியும் இவர்தான். தங்களது சாதனையை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த அடா யோனாத் அவர்கள் புதிர் நிறைந்த ரைபோசோம்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இன்னமும் ஏராளம் பாக்கியிருப்பதாகவும், அதே சமயம் இதை புரிந்து கொள்வது தொடர்பில் தாங்கள் முக்கிய முன்னேற்றத்திற்கு வழி செய்திருப்பதாகவும்" தெரிவித்தார். இவர்கள் செல்களில் உள்ள ரைபோசோம்களின் பணி மற்றும் கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்துள்ளனர். செல்களில் ரைபோசோம்கள் புரதத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் புரதங்கள்தான் உடல்கூறு வேதியியல் பணியை கட்டுப்படுத்துகின்றன. ரைபோசோமை உருவாக்கும் ஆயிரக்கணக்கான அணுக்கள் ஒவ்வொன்றின் இட அமைப்பையும் படம் பிடிக்க இந்த மூவரும் எக்ஸ் ரே கிரிஸ்டலோகிராபி முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த யோனத், ஜெருசலேமில் 1939ல் பிறந்தார். வைஸ்மான் அறிவியல் கல்லூரியிலிருந்து 1968ல் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் (69) விஸ்கான்சின் மாகாணம் மில்வாகியில் 1940ம் ஆண்டு பிறந்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலிருந்து 1966ல் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார் title நோபல் பரிசு விஞ்ஞானி ராமகிருஷ்ணனின் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி இது தொடர்பான தகவல்கள் "நேச்சர்' இதழில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இந்த வளையம் ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பெரியதாகும். மேற்படி வளையம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சனியைச் சுற்றி "ஏ' முதல் "ஈ' வரை பெயர் சூட்டப்பட்டுள்ள 7 பிரதான வளையங்களும் அநேக மங்கிய வளையங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. "ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக் காட்டியை கொண்டுள்ள விண்கலமானது பூமியிலிருந்து 66 மில்லியன் தொலைவில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. title சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள பாரிய வளையம் முதல் தடவையாக அவதானிப்பு இதில் தூதரகத்தின் கண்காணிப்பு கோபுரம் வெடித்து நொறுங்கியது.அத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன. தமது தூதரக பணியாளர்கள் எவரும் இதில் கொல்லப்படவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் பெரிய வெளிநாட்டு கொடையாளி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சென்ற ஆண்டு, இதே போன்ற தாக்குதல் இந்தியத் தூதரகத்தின் முன்னால் இடம்பெற்ற போது 60 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1901ஆம் ஆண்டு நோபல் பரிசு நிறுவப்பட்டதிலிருந்து இன்று வரை நோபல் பரிசு பெற்ற 12வது பெண் எழுத்தாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் முல்லர். 2007ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு சிம்பாப்வேயில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் டோரிஸ் லெசிங்கிற்கு வழங்கப்பட்டது. ருமேனியாவில் நடந்த கம்யூனிச அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலாக இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளதாக விமர்சகர்களால் புகழப்பட்டுள்ளது. ருமேனியாவில் 1953ஆம் ஆண்டு பிறந்த ஹெர்தா மியுல்லர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு இவரது தாயாரை சோவியத் யூனியன் அரசு கடும் உழைப்பிற்கான முகாமிற்கு கொண்டு சென்றது. இவரது குடும்பம் ருமேனியாவின் ஜெர்மன் சிறுபான்மையினராக இருந்து வந்தனர். "தி லேன்ட் ஆஃப் கிரீன் பிளம்ஸ்" என்ற ‌மியு‌‌ல்ல‌ரி‌ன் நாவல் ருமேனியாவில் சர்வாதிகார ஆட்சியில் ஜெர்மனியினர் கண்ட அடக்குமுறையை சித்தரிப்பதாய் அமைந்து பல பரிசுகளை வென்றது. இந்த பரிசுக்காக இவரை தேர்வு செய்த நீதிபதிகள் "உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்" சித்திரப்படுத்தியுள்ளார் என்று புகழ்ந்தனர். இவர் அடக்குமுறை கம்யூனிச ருமேனியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி ஜெர்மனிக்கு குடி பெயர்ந்தாலும் இவரது கவிதைகளிலும், கதைகளிலும் தொடர்ந்து அடக்குமுறை, சர்வாதிகாரம் போன்ற கதைக்கரு இடம்பெற்று வந்துள்ளதாக விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள் கூறியுள்ளனர். இவரும் தன்னுடைய கடந்த கால ருமேனிய அனுபவத்தை அழிக்க முடியாதது என்று கூறியுள்ளார். title ஜெர்மன் பெண் எழுத்தாள‌ர் ஹெர்தா மியுல்லரு‌க்கு இலக்கிய நோபல் பரிசு வொயேஜர்ஸ் டு மொண்டெ என்ற நிறுவனம் இவ்வீட்டை $377,029 அமெரிக்கா டாலர்களுக்கு வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவ்வீட்டை வாங்குவதற்கு இந்தியர்கள் உட்பட பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். 1907 ஆம் ஆண்டில் இருந்து காந்தி இவ்வீட்டில் மூன்று ஆண்டுகள் குடியிருந்தார். இவ்வீட்டை வாங்கிய பிரெஞ்சு நிறுவனம் இதற்கு "காந்தி அருங்காட்சியகம்" எனப் பெயரிடுவதற்குத் தீர்மானித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு விலை போகிறது]] மகாத்மா காந்தியின் ஆப்பிரிக்க வீட்டை வாங்க இந்தியா ஆர்வம்]] விண்கலம் மோதுவதால் ஏற்படும் புழுதியை அவதானித்து அதிலிருந்து தகவல்களைப் பெறும் எல்கிராஸ் (LCROSS) செயற்கைக்கோள் மூலம் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா திரட்டவுள்ளது. எல்கிராஸ் களத்தில் இருக்கும் ஒளிப்பதிவுக் கருவிகள் மூலம் இந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டு அதேநேரத்தில் ஒளிபரப்பப்படும் என்று நாசா வாக்குறுதி அளித்திருந்தது ஆனால் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை. எதிர்காலத்தில் மனிதனை அனுப்பி நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இது அவசியமான ஓர் ஆய்வு ஆகும் என்று நாசா தெரிவிக்கிறது. `எல்கிராஸ்' என்ற 2,200 கிலோ எடை கொண்ட விண்கலம், இன்று மாலை இந்திய நேரப்படி 5 மணிக்கு நிலவின் தென்துருவம் அருகே உள்ள ஒரு பள்ளத்தில் மணிக்கு 9 ஆயிரம் கி.மீ. வேகத்தில் மோதியது. அப்போது 350 டன் எடையுள்ள துகள் படிமங்கள் தூக்கி வீசப்பட்டன. மோதிய இடத்தில் பெரும் பள்ளம் உருவானது. மோதல் நடந்த 4 நிமிடங்களுக்கு பிறகு, கேமரா உள்ளிட்ட சாதனங்களுடன் கூடிய மற்றொரு விண்கலம், சந்திரன் மீது மோதியது. 2-வது விண்கலம் நிலா மீது மோதுவதற்குமுன், முதல் விண்கலம் மோதியதால் ஏற்பட்ட விளைவுகளை பதிவு செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ராக்கெட் பதிவு செய்த விவரங்களை `நாசா' விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை அவர்கள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. அதை உறுதிப்படுத்த இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று இந்த திட்டத்தின் தலைமை விஞ்ஞானி அந்தோணி கொலப்ரீடி தெரிவித்தார். அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பராக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது. இது குறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும் சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்கப் பாடுபட்டமைக்காகவும் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு கூட பூர்த்தியடையாத ஒபாமாவுக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு நோர்வேயில் தலைநகர் ஒஸ்லோவில் வெளியான போது, கூடியிருந்த பார்வையாளர்கள் பலருக்கு பெரும் ஆச்சரியத்ததை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் நம்பமுடியாத பிரமிப்பில் ஆழ்ந்தனர். இப்படியான ஒரு பரிசை அவருக்கு வழங்குவதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வாசிங்டனில் இருக்கும் பலர் நம்புவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். பதவியில் இருக்கும் போது நோபல் பரிசு பெறும் மூன்றாவது அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். இவருக்கு முன்னால் தியோடர் ரூசுவெல்ட், வூடுரொ வில்சன் ஆகியோர் பெற்றிருந்தனர். நோபல் அமைதிப்பரிசு 1901 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. title பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு விபத்துக் குறித்த விசாரணைகளை ஐக்கிய நாடுகள் ஆரம்பித்துள்ளது. அப்போது நடைபெற்றது இன ஒழிப்பு என்பதை துருக்கி ஒப்பு கொள்ள வேண்டும் என்று ஆர்மீனியா கூறி வருகிறது. ஆனால் துருக்கி ஒரு போதும் இதை ஏற்கவில்லை. இரு நாடுகளும் ஒரு சுமூகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி வந்துள்ளார். ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் சைச்சாத்திடும் வைபவத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் இலறி கிளிண்டன், மற்றும் உருசிய வெளிய்றவு அமைச்சர் செர்கே லாவ்ரொவ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்வொப்பந்தம் இரு நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்தவும், தமது எல்லைகளைத் திறந்து விடவும் வழி வகுக்கும். ராஜாங்க உறவு தொடர்பான ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையொப்பமாகினாலும், அது இருநாட்டு நாடாளுமன்றத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னர் மேலும் சில இந்தோனேசிய போர் கப்பல்களை ஜாவா தீவின் பென்டன் மாகாண கடற்பரப்புக்கு அனுப்பி, அங்கிருந்த அகதிகளை மீட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த குழுவில் ஏராளமான சிறுவர்களும் பெண்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையிலான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. title அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 260 பேர் இந்தோனேசியாவில் கைது பிறப்பில் தாடை எலும்பில் ஏற்படும் குறைபாடுகள், காயங்கள், வலிகள் என்பனவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு வரப்பிரசாதமாக இந்த மருத்துவ தொழில் நுட்பம் பயன்படும் என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய முனைவர் கோர்டானா வுன்சாக்-நொவாகொவிச் தெரிவித்தார். இந்த ஆய்வுக்காக மனித எலும்பு மச்சையிலிருந்து மூலவுயிர்க்கலங்கள் பெறப்பட்டு நோயாளியொருவரின் தாடை தொடர்பான இலத்திரனியல் விம்பங்களுக்கேற்ப தாடை இணைப்புகள் விருத்தி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். title மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி தாடை எலும்பு முதல் தடவையாக உருவாக்கம் -அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை 1968 இல் பொருளாதார நோபல் பரிசு கொண்டுவரப்பட்டதிலிருந்து, இதனைப் பெறுகின்ற முதலாவது பெண், ஒஸ்ட்ரொம் ஆவார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, அறிவியலுக்கான ரோயல் சுவீடிய அக்கடமி அவருக்கு இந்த பரிசை வழங்கியுள்ளது. சந்தைச் செயற்பாடுகளான மூலப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி போன்றவை, ஒற்றை நிறுவனத்தின் உள்ளே மேற்கொள்ளப்படுகின்ற போது எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைகின்றன என்பதை புலனாய்வு செய்ததற்காக வில்லியம்சன் அவர்களுக்கு பொருளியல் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. இவர் அல்-கைடாவின் வட ஆப்பிரிக்கப் பிரிவுடன் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பில் இருந்ததை பிரெஞ்சு உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மேற்கத்திய நாடுகளைத் தாக்குவது, குறிப்பாக பிரித்தானியாவைத் தாக்குவது தொடர்பான அல்-கைடாவின் திட்டங்களுக்கு இவர் பல தகவல்களைத் தந்து வந்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இவர் அல்-கைடாவுடன் இணைந்து திட்டமிட்டு வந்துள்ளார். அடலீன் எசெரின் மின்னஞ்சல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்காணித்து, அவருக்கு அல்-கைடாவுடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்து இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உளவுப் பிரிவினருக்குத் தகவல் தந்துள்ளனர். இவரது செயல்களை இரகசியமாக கண்காணித்து வந்த பிரெஞ்சு மற்றும் இஙகிலாந்தின் உளவுப் பிரிவினர் போதிய ஆதாரங்கள் சிக்கியதையடுத்து இவரைக் கைது செய்தனர். தனது குற்றங்களை இவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவருடன் கைது செய்யப்பட்ட இவரது தம்பி டாக்டர் அலீம் விடுவிக்கப்பட்டுவிட்டார். title அல்-கொய்தாவுடன் தொடர்பு பிரான்ஸ் அணு விஞ்ஞானி கைது கறி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே" எனத் தெரிவித்தார். "இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் அக்கேசியா தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன "அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் கறி. * ஜனவரி: 01 அல்லது 1 * ஜூலை: 07 அல்லது 7 இந்த கலவரம் தொடர்பாக உய்குர் முஸ்லிம்கள் 718 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 21 பேர் மீது உரும்பி நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கலவரம், கொள்ளை, தீவைப்பு, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆறு பேருக்கு மரணதண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் சிறுபான்மையின உய்கூர் இன முஸ்லிம்கள் என சின்ஜியாங் மாநில அரசுப் பேச்சாளரான லி ஜி தெரிவித்தார். இக்கலவரங்கள் ஆரம்பமாவதற்குக் காரணமாக இருந்த ஒரு பெரும்பான்மையின ஹான் சீனர் ஒருவருக்கு சென்ற வாரம் மரணதண்டனை வழங்கப்பட்டு, வேறொருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஜூன் மாதத்தில் சீனாவின் குவாஅங்டொங் மாகாணத்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இரண்டு உய்கூர் இன முஸ்லிம்களைக் கொலை செய்ததாக இவ்விருவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இக்கொலைச்சம்பவத்திற்குப் பின்னரே சின்ஜியாங்கில் கலவரம் வெடித்தது. title கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு சீனாவில் மரண தண்டனை ஆண்டிக்ஸ் டிரேட் கசெட் என்ற நிறுவனம் முன்னர் இந்த ஓவியத்தை "செருமன், 19ம் நூற்றாண்டின் முற்பகுதி" எனக் குறிப்பிட்டிருந்தது. இது இப்போது பல மில்லியன் பெறுமதியாக உள்ளது. இது முன்னர் $19,000 டாலர்களுக்கு கைமாறியது. ஒக்சுபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்ட்டின் கெம்ப் கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஓவியத்தில் உள்ள பெண் மிலானின் இளவரசர் லுடோவிக்கோ சுபோர்சா (1452-1508) என்பவரின் மகள் பியான்க்காவினூடையதாக இருக்கலாம் என்றார். அடுத்த ஆண்டு சுவீடனில் இடம்பெற்றவிருக்கும் ஓவியக் கண்காட்சியில் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளை எதிர்க்கும் குழுக்கள், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பதை எதிர்க்கின்றன. இத்தகைய காய்கறியை உண்ணுவதால் ஏற்படக்கூடிய மோசமான உடல் நலப் பிரச்சினைகளுக்கு போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த வகை கத்தரிக்காயை உற்பத்தி செய்வது சுற்றுச் சூழல் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், இந்த கத்தரிக்காய்களை சாப்பிட்டால் காலப் போக்கில் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் சில அறிவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மராட்டியத்தில் மரபணு மாற்றியமைத்த பருத்தி விதைகளை பயன்படுத்தியதால் முதலில் விளைச்சல் அதிகமாகி சில ஆண்டுகளுக்கு பின் மிகவும் குறைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் பணமுதலீட்டை இழந்து ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. எனவே, மரபணு மாற்றியமைத்த கத்தரிக்காய்களை வியாபார நோக்குடன் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளும், கிரீன் பீஸ் முதலிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனாலும் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலும் இந்தத் தாவரத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மரபணு மாற்றியமைத்த கத்திரிக்காய்களை உற்பத்தி செய்ய அனுமதி பெற்றிருக்கும் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த அனுமதியின் மூலம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றியமைத்த கத்தரிக்காய்களை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மரபணு கத்தரிக்காயை உற்பத்தி செய்யும்போது 60 சதவீதம் வரை பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவது குறைகிறது. மேலும் இது பாதுகாப்பானது என்றார். இந்தியாவில் ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திச் செடி வணிக ரீதியில் பயிராகிறது. title மரபணு மாற்றிய கத்தரிக்காய்க்கு மத்திய ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி ஏற்கனவே கணித்திருந்த காலத்தைவிட மிகவும் முன்கூட்டியே இந்த நிலை ஏற்படலாம் என்பதை புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு வருடத்தில் பல மாத காலம் புவியின் வடதுருவத்தில் உறைபனியே இல்லாத நிலை உருவாகும். பிரித்தானியாவின் முன்னணி துருவ ஆராய்ச்சி நிபுணரான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் வாதம்ஸ் இந்தக் கணிப்பைச் செய்துள்ளார். இந்த ஆண்டில் முன்னதாக ஆர்க்டிக் உறைகடல் மீது கிட்டத்தட்ட முன்நூறு மைல்கள் நடந்து சென்ற வழியெல்லாம் பனிப்படலத்தின் ஆழத்தை அளந்து திரும்பிய பென் ஹேடோ மற்றும் அவருடைய சகாக்கள் சேகரித்து வந்த தகவல்களை வாதம்ஸ் ஆராய்ந்துள்ளார். எதிர்பார்த்த அளவை விட ஆழம் குறைவாய் இருப்பதாகவும் பழைய பனிக்கட்டிகளைவிட அடர்த்தி குறைவாக இருப்பதாகவும் பனிப் படலம் இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கப்பலில் உள்ள சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேடுத்துள்ளதாக பிபிசிக்கு தெரிவித்த கப்பலில் உள்ள அகதிகளில் ஒருவர், உடனடியாக ஏதாவது ஒரு நாடு தமக்கு அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக குறிப்பிட்டார். கப்பலில் உள்ளவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர்களில் சிலர் முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதே வேளையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் பிருந்தா என்ற 9 வயது தமிழ்ச் சிறுமி "எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்" என உருக்கமுடன் கோரியுள்ளார். இதனை ஆஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. சட்ட விரோத குடியேறிகள் இந்தோனேசியா வழியாக தமது நாட்டுக்கு வருவதை இந்தோனேசியா தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் சில தினங்களுக்கு முன்பாகத்தான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது]] title இலங்கையை தவிர வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்புங்கள்: இந்தோனேசியாவில் உள்ள தமிழ் சிறுமி கோரிக்கை தென்ஆப்பிரிக்காவில் வரும் 2010ஆம் ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் போட்டியில் உருகுவே அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா வெற்றி பெற்றது. தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா-உருகுவே அணிகள் மோதின. இதில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய அர்ஜென்டீனா 1-0 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. இஸ்ரேல் அணியுடன் நடைபெற்ற தகுதி காண் போட்டியினை சமநிலையில் முடித்துக் கொண்டு புள்ளிகள் அடிப்படையில் சுவிட்சர்லாந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. தாம் கலந்து கொள்ளும் ஐரோப்பிய பிரிவில் 21 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. உலக கால்பந்தாட்ட தர வரிசையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து 15 ஆம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. title 2010 உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டீனா அணி தகுதி title 2010ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தகுதி பெற்றுள்ளது மூசா ஐட்டினெரான்ஸ் Musa itinerans என அழைக்கப்படும் இவ்வகை வாழை இனம் ஆசிய காட்டு யானைகளின் மிகவும் விருப்பமான உணவாகும். 54 நாடுகளில் இயங்கும் பிரித்தானிய றோயல் தாவரவியல் பூங்காக்கள் என்னும் அமைப்பின் 120 கிளைகள் மூலம் இவற்றை சேகரித்துள்ளனர் தாவரவியலாளர்கள். இத் திட்டம் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் புவியில் வாழும் தாவர இனங்களில் 25 விழுக்காட்டினை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பகுதியை சீனா உரிமைகோருவது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தில் எரிசக்தி வேலைகளில் ஈடுபட ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை, இராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியமை போன்ற சீனாவின் நடத்தைகள் இந்தியாவை ஆத்திரமூட்டியுள்ளது. இது குறித்து இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்திய, சீன நீண்டகால உறவுகளைப் பாதுகாப்பதில் சினா அக்கறையுடன் நடந்து கொள்ளுமென நம்புகின்றோம். அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா புரிந்துள்ளதாகவும் கருதுகிறோம் என இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து நதியைக் குறுக்கிட்டு கட்டப்படும் இந்த அணையிலிருந்து சீனாவுக்கு தேவையான மின்சாரத்தைப் பெறும் உரிமையை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இந்தியா சீனா மீது அதிருப்தியடைந்துள்ளதுடன் இவ்வாறான விடயங்களின் ஆபத்து குறித்து பாகிஸ்தானிடமும் விளக்கியுள்ளது. title அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமைக் கோரிக்கை; இந்தியா அதிருப்தி கினி படையினர் எதிர்க்கட்சிப் பேரணி மீது கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து நைஜீரியாவில் இடம்பெற்ற எக்கோவாஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 157 பொதுமக்கள் இதில் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டின. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட குறைவானது என்று கினி அரசாங்கம் கூறுகிறது. அதிக லாபம் ஈட்டித்தரும் முதலீட்டு வகைகளில் இரகசியத் தகவல்களை சட்டவிரோதமாகக் கசியவிட்டு சந்தை நிலவரத்தை செயற்கையாக மாற்றி இலாபம் தேடியது என்ற குற்றத்தை பங்கு சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாதபடிக்கு மிகப் பெரிய அளவில் இவர்கள் செய்துள்ளார்கள் என்று கருதப்படுகிறது. ராஜ் ராஜரத்தினம் உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவரும் ஆவார். 2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. title இலங்கையரான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வர்த்தகர் கைது title வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது அது பலருக்கு வினோதமாக பட்டாலும் மாலைதீவாரை பொறுத்தவரையில் அது ஒரு வாழ்வாதார மனிதாபிமான பிரச்சினை. மாலைதீவின் சிறிய நாடாளுமன்றின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு சூழல் சம்பந்தப்பட்ட வேண்டுகை ஓப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு தெரிவு செய்துள்ள இடம்தான் பலரை மலைக்க வைத்துள்ளனது. மாலைதீவுகளில் உள்ள கடற்படை படைத்துறைப்பள்ளிகளில் ஒன்றான கிறிபியூசி என்னும் களப்பில் நீருக்கு அடியில் 20 அடி அதாவது 6 மீட்டர் ஆழத்தில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இக்கூட்டம் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது தீவிரவாதிகளுக்கோ அல்ல பிற ஊடுருவல்காரருக்கோ பயந்து அல்ல மீன்களுக்கு பயந்து. 1192 சிறிய தீவுகளை கொண்ட 350,000 மக்கள் தொகை கொண்ட இந்து சமுத்திரத்தின் அழகிய தீவு நாடு மாலைதீவின் அனேகமான பாகங்கள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளதால், கடல் மட்ட அதிகரிப்பு காரணமாக 2100ம் ஆண்டளவில் தீவுக்கூட்டங்கள் வசிப்பதற்கு உகந்ததல்லாதவையாக மாறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாக அறிவியலாளர்க்க்ள் எச்சரித்துள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள ஜனநாயக அரசு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது மட்டுமல்லாமல் மாலை தீவகள் தமது நாடு மூழ்கும் பட்சத்தில் நாடற்றவர்களாகும் 350,000 மக்களை பாதுகாக்க பிற நாடுகளிடம் இருந்து நிலப்பரப்பு ஒன்றை குத்தகைக்குக் கோரவுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இத்தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்கா, இத்தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக கூறும் இரானியத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானிய ஏஜண்டுகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானிய அதிபர் மகுமுட் அகுமடுனெசாட் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராயின் இந்த முடிவு ஏமாற்று வேலை என்றும், இதனால் எவ்வித மாற்றமும் வந்து விட போவதில்லை எனவும் அதிபர் ராபர்ட் முகாபேவின் சார்பில் பேசவல்லவர் கூறினார். அத்தோடு சண்டே எரால்ட் செய்தித்தாளிடம் பேசிய இவர், அதிபர் ராபர்ட் முகாபே நேரம் கிடைக்கும் போது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்றும், தற்சமயம் மாணவர்கள் மற்றும் கால்பந்து விவகாரங்களை தீர்ப்பதில் அதிபர் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார். ஐரோப்பிய தென் கண்காணிப்பு தொலைநோக்கியின் ஊடாக அவதானித்தததில் இவ் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் எவையும் புவியின் அளவிலோ அல்லது உயிர் வாழக்கூடிய நிலையிலோ இருப்பதற்கான சான்றுகளை தொலைக்காட்டி காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இப்புதிய கோள்கள் அவதானிக்கப்பட்டதுடன் சூரிய மண்டலத்துக்கு வெளியே மொத்தமாக 400 இற்கும் மேற்பட்ட கோள்களை அவதானித்துள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இக்கோள்களின் கண்டறிகையானது கோள்கள் தோன்றியுள்ளதாக கருதப்படும் கொள்கையை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் புவி போன்ற பல கோள்கள் அண்டத்தில் பரந்திருப்பதை தம்மை நம்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள் "இயற்கை வெறும் வெற்றிடம் இல்லை, அங்கு அண்டம் இருந்தால் அங்கு கோள்கள் பரந்து கிடக்கின்றன" எனவும் தெரிவித்துள்ளனர். இந்த 32 கோள்கள் கண்டறியப்பட்டது ஒரு சாதனை என்றும் கோள்கள் கண்டறிவதில் ஐரோப்பிய வானியலாளர்கள் முன்னோடிகள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய வானியலாளர்கள் தாம் உயர் துல்லியம் மிக்க ஆரைவேகக் கோள்கள் தேடும் பொறிமுறை கொண்ட சில்லியில் அமைந்துள்ள தொலைநோக்கியால் இவ் கண்காணிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வித நிபந்தனைகளுமின்றி இவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள ஐரிய அரசாங்கம் இவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட சூடான் அரசாங்கத்தையும் பாராட்டியுள்ளது. கடத்தியவர்கள் இவர்களின் விடுதலைக்காக முன்னர் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கப்பமாகக் கேட்டிருந்தனர். எனினும் கப்பம் எதுவும் செலுத்தாமலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சூடானிய அமைச்சர் அல்-கிலானி தெரிவித்தார். சூடானின் தார்பூரில் 2003ம் ஆண்டு போர் மூண்டது. சூடானின் டர்புன் பிராந்தியத்தை தனி இராச்சியமாக்கக் கோரி இப்போராட்டம் வெடித்தது. இதுவரைக்கும் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பல்லாயிரம் பேர் தார்பூரை விட்டு வெளியேறியுள்ளனர். தார்பூர் பிரச்சினையை சூடான் அரசாங்கம் கையாண்ட விதத்தை உலக நாடுகள் பல கண்டித்திருந்தன. இந்தியாவின் இயற்கைவாயுப்படுகைகளில் இருந்து பெறப்படும் எரிவாயுவுக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் 'இயற்கை எரிவாயு அரசின் சொத்து. அதை எடுத்துத் தரும் ஒப்பந்தக்காரர் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம். இதற்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது' என மத்திய அரசு கூறிவிட்டது. இதையே முகேஷ் அம்பானியும் கூறிவருகிறார். இந்தியாவில் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மோதல் மூலம் இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் நிலவும் குறைபாடுகள் வெளியில் வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கிருஷ்ணா கோதாவரிப் படுகை இயற்கை எரிவாயுவுக்காக இரு நிறுவனங்கள் மோதிக் கொள்வது, இரண்டு நாடுகளுக்கான சண்டை போல மாறிவருகிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. title அம்பானிகள் மோதல் இரு நாடுகளுக்கிடையிலான சண்டை போலாகிவிட்டது உச்ச நீதிமன்றம் title அம்பானிகள் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மதுரா-விருந்தாவன் இடையே இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் மேவார் எக்ஸ்பிரஸின் பதிவுசெய்யப்படாத பெட்டி சேதமடைந்தது. கோவா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் செய்த தவறு காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என ஆக்ரா மண்டல ரயில்வே மேலாளர் திரிபாதி தெரிவித்தார். சில பயணிகள் ரயிலுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே வாரியத்தின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இவ்விபத்தில் மேலும் சிலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான இந்திய ரெயில்வே நாடு முழுவதும் கிட்டத்தட்ட 9,000 பயணிகள் தொடருந்துகளை இயக்கி வருகிறது.இவற்றில் நாள்தோறும் 188 மில்லியன் மக்கள் பயணித்து வருகிறார்கள். title கோவா-மேவார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 12 பேர் பலி முன்னதாக புஷ் ஜனாதிபதியாக இருந்த போது 1989 மற்றும் 1990ம் ஆண்டுகள் வெள்ளைமாளிகையில் புஷ் தலைமையில் இயங்கிய தேசிய விண்வெளி கவுன்சிலில் பணியாற்றினார். கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசியவர் தான் இஸ்ரேல் உளவுத் துறை அதிகாரி என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆவார். நொசட்டே மீது எழுந்த சந்தேகத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அவர் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி போல நடித்தார். இதை அறியாமல் நொசெட்டே, அவரை இஸ்ரேலிய உளவு அதிகாரி என்றே நம்பினார். அவரை சந்தித்து பேசினார். தான் பல உயர் பதவிகளில் இருந்ததால், தனக்கு எல்லா ரகசியங்களையும் அறிந்து கொள்ளக் கூடிய சக்தி உண்டு என்று அவர் கூறினார். செய்மதி தொழில் நுட்பங்கள் பற்றிய ரகசியங்களை பணத்துக்கு விற்க அவர் முன்வந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் நொசட்டே பொலிஸ் அதிகாரியிடம் $11,000 அமெரிக்க டாலர்களைபெற்றுக் கொண்டு பல ரகசியங்களை விற்றார். அவர் அணு ஆயுதங்கள், இராணுவ செய்மதிகள் ஆகியவை குறித்த ரகசியங்களையும் விற்க முன்வந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு அதிகப்பட்சம் ஆயுள்தண்டனை கிடைக்கும். இது பற்றி பிபிசியிடம் பேசிய, இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர் சதிஷ், ஏற்கனவே பல பாதுகாப்பு நடைமுறைகள் இஸ்ரோவில் அமலில் இருப்பதாகவும் ரகசிய விடயங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இவருக்கு கிடைக்க வாய்பில்லை என்றும் தெரிவித்தார். நோசட் மேற்கொண்ட ஆய்வு குறித்த முழு விபரங்கள் இஸ்ரோவுக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சந்திரயான் தொடர்பான திட்டங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் கூறினார். title இஸ்ரேலுக்காக உளவு பார்த்த அமெரிக்க முன்னாள் விஞ்ஞானி கைது சோமாலியாவின் அதிபர் சேக் சரிவ் சேக் அகமட் விமானம் மூலம் பயணிக்க தயாராகிக் கொண்டு இருந்த வேளையில் போராளிகள் அவ் விமான நிலையத்தை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் ஆனால் அதிபர் பயணிக்க இருந்த விமானம் எவ்வித பாதிப்புகளும் இன்றி புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் மொகடிஸ்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அதை நோக்கியும் போராளிகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் காவல்துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் என்பதுடன் எறிகணைகள் விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சோமாலிய செய்திகள் தெரிவிக்கின்றன. 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் பொது மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பீரங்கித் தாக்குதல்களையும் அந்தப் போரில் சண்டையிடுவதற்கு சிறார்களை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்த அறிக்கை குறிப்பிட்டது. அமெரிக்க நாடாளுமன்றம் விடுத்த வேண்டுகோளத் தொடர்ந்து அந்த அறிக்கையை அது தயாரித்தது. "வடக்கில் உள்ள மக்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பணியைத் தொடங்குவதற்குத் தான் உறுதி பூண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. ஆனால் எந்த ஒரு சமரச முயற்சியிலும் பொறுப்பும் வெளிப்படையான போக்கும் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் இயான் கெல்லி கூறினார். “இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து நாங்கள் அடைந்துள்ள கவலையை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.” தான் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள கொடூரங்கள் போர்க் குற்றங்களாகுமா அல்லது அனைத்துலக மனித உரிமை மீறல்களாகுமா என்பதற்கு சட்டப்பூர்வ அடிப்படை ஏதும் இல்லை என்றும் வெளியுறவுத் துறை வலியுறுத்தியது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் “ஆதாரமற்றவை” என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஆயுதப் படையினர் மனசாட்சியுடன் செயல்பட்டனர் என்று கூறுகிறது. போரில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் என்று வருணிக்கப்படுகின்ற சம்பவங்களில் பெரும்பான்மையானவை மோதலற்ற பிரதேசம் என்று அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருந்த இடங்களில் நடந்திருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சண்டை நிகழ்ந்த நாட்டின் வட பகுதிகளை திறந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அனைத்துலக அமைப்புக்கள் மேலும் முழுமையாக விசாரிப்பதற்கு அது உதவும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. “சாத்தியமான போர்க் குற்றங்களை விசாரிக்க இலங்கை முழுமையாகத் தவறுமானால் சுயேச்சையான அனைத்துலக விசாரணையை நடத்துவது தான் ஒரே நம்பிக்கை”, என்று அந்த அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார். title அமெரிக்கா, இலங்கை உள்நாட்டுப் போரில் நிகழ்ந்துள்ள சாத்தியமான கொடுமைகளைப் பட்டியலிடுகிறது title அமெரிக்காவின் அறிக்கை இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தொடரும் வறட்சி காரணமாக 60 வீதமான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பல விளை நிலங்கள் கைவிடப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. போசாக்கு இன்மை காரணமாக சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அவர்களின் அவயவங்கள் மெலிந்து ஒட்டிய நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஏனைய விடயங்களும் காரணம் என பிபிசியின் ஆப்பிரிக்காவுக்கான செய்தி ஆசிரியர் கூறுகிறார். இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் கடந்த மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு தற்போது வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இருந்தபோதிலும் சில மாதங்கள் வரை அந்தப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திலேயே தேங்கிக்கிடந்தன. ஆனால், தற்போது இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார். இதன் படி 27 கொள்கலன்களை ஏற்றிய பாரவூர்திகளின் மூலம், 680 மெற்றிக் தொன் பெறுமதியான பொருட்கள் இன்று வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் இந்த பொருட்கள் தேங்கி கிடந்தமைக்காக, அரசாங்கம் 20 லட்சம் ரூபாவையும், இலங்கை செஞ்சிலுவை சங்கம் 6 லட்சம் ரூபாவையும் தாமதக்கட்டணங்களாக செலுத்தியுள்ளன. இதற்கிடையில் இந்த பொருட்கள் மெனிக்பார்ம் தடுப்பு முகாம் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பதால், அவை கெடாமல் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாகவும் அமீர் அலி தெரிவித்தார். இது குறித்து மனிதம்' தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது. நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும் இவ்வாறு சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்]] வணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்]] title வணங்கா மண்" நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிப்பு title வணங்காமண்' நிவாரண பொருள்கள் சென்று சேர்வதில் தொடர்கிறது சிக்கல் செஞ்சிலுவை சங்கம் 'திடீர்' பல்டி தென் மாவட்ட மக்களின் வசதிக்காக செங்கோட்டையிலிருந்து கோவைக்கு வாராந்திர தொடருந்து இயக்கப்படுக்கிறது. title செங்கோட்டை-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் மதுரை வழியாக விடப்படுகிறது இந்நிலநடுக்கத்தினால் உயிரிழப்புக்கள், மற்றும் சேத விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளரின் தகவலின் படி, நிலநடுக்கம் தொடக்கத்தில் பல செக்கன்கள் நீடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பலத்த பின்தாக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். நிலநடுக்கத்தின் போது பெஷாவர், இஸ்லாமாபாத் லாகூர் ஆகிய நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். ஏதோ நடந்துவிட்டது என பயந்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்து இரவு நேரத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இந்த உடல்கள் டச்சிரா என்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. உதைப்பந்தாட்ட அணியின் ஒருவர் தப்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "ஈஎல்என் ELN) என அழைக்கப்படும் இடதுசாரி கெரில்லா அமைப்பினரே இக்கொலைகளைச் செய்திருக்க்கலாம் என கொலம்பிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் கடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர்களுடையது தானா என அறிய கொலம்பிய அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறனர். ஆனாலும், டச்சீராவின் உள்ளூர் அதிகாரிகளும், உள்ளூர் பத்திரிகைகளும் உதப்பந்தாட்ட வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அறிவித்து வருகின்றனர். நாட்டில் இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு எதிராகவே கிளர்ச்சியாளரின் அண்மைக்கால வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அசூட் நகரில் இருந்து புறப்பட்ட தொடருந்து பாயூம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேறொரு தொடருந்தை பின்பக்கமாகச் சென்று மோதியதில் பல பெட்டிகள் நொறுங்கிச் சேதமடைந்தன. பல பயணிகள் தலைகீழாகக் கவிழ்ந்த பெட்டிகளின் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது. எகிப்தில் இதற்கு முன்னரும் தொடருந்து விபத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன. 2002 ஆம் ஆண்டில் எகிப்தில் இடம்பெற்ற மோசமான தொடருந்து விபத்தில் தொடருந்து திப்பிடித்து எரிந்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 2006 இல் கைரோவில் இடம்பெற்ற மற்றும் ஒரு விபத்தில் 50 பயணிகள் வரையில் கொல்லப்பட்டனர். இக்கண்டுபிடிப்பு தற்போது உள்ள ஆப்பிரிக்காவின் ”பெரும் றிவ்ட் பள்ளத்தாக்கு” Great Rift Valley மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மனித இனம் தோன்றியதற்கான இடம் என்னும் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் அத்துடன் இப்பரப்பில் மலாவியை இனி இணைக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் டைனோசர்கள் போன்ற 100 தொடக்கம் 140 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்த அங்கிகளின் எச்சங்களை கொண்டு இருந்துள்ளதாகவும் அதேபோல் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித மற்றும் மரவாழ் மூதாதைகளையும் கொண்டிருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஈராக் தலைநகர் பக்தாத்தின் நடுப்பகுதியில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு நிகழ்வில் பலர் பலியாகியுள்ளதுடன் இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பக்தாத்தின் அரச உயர் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் தலைமைக் காரியாலயங்கள் கொண்டுள்ள பச்சை வலயம் எனப்படு்ம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ஆகக்குறைந்தது 132 பேர் இறந்துள்ளதாகவும் 180 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கின் நீதி அமைச்சின் கட்டிடமும் பிறிதொரு அரச அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்கள் ஈராக் நீதி அமைச்சின் கட்டிடத்தில் மோதி தாக்குதலை நடத்தியதாகவும் இதை தொடர்ந்து அங்கு பெரும் தீ பரவியதாகவும் உயர் பாதுகாப்பு வலயமான பச்சை வலயத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியதாகவும் மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள நிலைமையில் காயமடைந்த மற்றும் இறந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதிக பாதுகாப்பு கொண்ட இப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு தாக்குதல் இடம் பெற்றுள்ளது ஈராக்கின் பாதுகாப்பு நிலைமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் நிகழ்ந்த மிகப்பொரும் தாக்குதல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக இவ் தாக்குதலுக்கு காரணம் யார் என தெரியவராத போதும் வரும் தை மாதம் நடைபெறவுள்ள ஈராக் பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இதை கருதுவதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஐரோப்பாவில் முதன் முறையாக நடைபெறும் இத்தகைய மாநாடு, கொலோன பல்கலைக்கழகத் தத்துவ இயல் துறையின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் பொன்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாட்டுக் குழுவின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பேராசிரியர் எம் அனந்தகிருஷ்ணனின் முன்னிலையில் தொடக்கிவைக்கப்பட்டது. இந்த மூன்றுநாள் மாநாடு கொலோன் பல்கலைகழத்தின் இந்தியப் பண்பாடு, வரலாறு, இலத்தியத்துறை மற்றும் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழ் பேசும் அனைத்துலப் பேராளர்களை வரவேற்ற பேராசிரியர் டாக்டர் பொன்கார்ட்ஸ், ஐரோப்பாவின் மையமாக விளங்கும் கொலோனில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்கள் செயல்பட ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிவித்தார். விப்ரோ, மைன்ட்ரீ போன்ற நிறுவனங்கள் அங்கு செயல்படத் தொடங்கிவிட்டன. மாநாட்டின் துணைத்தலைவரான பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், தமிழ்நாட்டிற்கு வெளியே இயங்கும் பல்கலைக்ழகங்களில், கொலோன் பல்லைக்கழகம் 60,000க்கும் மேற்பட்ட தமிழ் நூல் தொகுப்பைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். தமிழ் நாட்டின் வாழ்த்தைத் தெரிவித்த பேராசிரியர் அனந்தகிருஷ்ணன், அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடர்பில் அப்போது தமிழ் இணைய மாநாடு 2010-யும் நடத்துமாறு உத்தமம் அமைப்பைக் கேட்டுக்கொண்டார், தமிழ் இணைய மாநாடு 2010 நடைபெறுவதற்கான எல்லா வசதிகளையும் தமிழ் நாடு அரசு வழங்கும் என அவர் தெரிவித்தார். மற்றவர்கள் செய்ததைப் பின்பற்றித் தமிழிலும் அவ்வாறே செய்யாமல் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கத்தைப் புகுத்திப் புதியனவற்றைத் தோற்றுவித்து மற்றவர்கள் பின்பற்றுமளவுக்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் மேலும் தமது தொடக்க உரையில் கேட்டுக்கொண்டார். 100,000- க்கும் மேற்பட்ட பொறியியல்துறை சர்ந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்பங்கள் 100க்கும் குறைவாகவே திட்டமிடப்படுவதாக அவர் சொன்னார். தமிழ் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிபுணர்கள் எதிர்கொள்ளும் நடப்புப் பிரச்னைகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் பல தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவற்றிலிருந்து தகுந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது தமது குழுவிற்குப் பெரும் சிரமமாக இருந்ததாகவும் மாநாட்டு நிகழ்சிக் குழுவின் தலைவரும் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் வாசு ரங்கநாதன் தெரிவித்தார். பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் பேராளர்களாக வருகையளித்தவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்றார். ஆய்வரங்கில் பேசிய மலேசிய நாட்டு திரு முத்து நெடுமாறன் மூன்றாம் தலைமுறை கையடக்கக் கருவிகளில் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் என்பதை விளக்கிக் காட்டினார், ஐபோன், அன்ட்ரோய்ட், நோக்கியா போன்ற கைத்தொலைபேசிகளில் தமிழ் பென்பொருளைக் கையாளமுடியும் என்பதை விளக்கிய போது குழுமியிருந்தோர் மகிழ்ச்சியுற்றனர். பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வுக்கழகப் பேராசிரியர் தகவல் தொழில்நுட்பம் வழி படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் ஆகியவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க தொழில்நுட்பத்தை விளக்கிக் காட்டினார். தமிழ் நூல் வாசகத்தை ஒலி வடிவமாக மாற்றிப் பிழையறப் படிக்கும் கணினியை அவர் காட்டினார். மேலும் அக்கணினி ஒருவரின் கையெழுத்தையும் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது. கொலோன் பல்கலைக்கழகம் இணையம் வழி சமஸ்கிருத, தமிழ் அகராதிகளை உருவாக்கியுள்ளதைப் பேராசிரியர் தோமஸ் மால்ட்டன் எடுத்துரைத்தார் . 200ம் ஆண்டில் தொடஙகப்பட்ட உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்ற (உத்தமம்) அமைப்பின் கீழ் நடைபெறும் தமிழ் இணைய மாநாடு தமிழ்க் கணினி, தகவல் தொழில்நுட்பம், பல துறைகளில் தமிழ் இணைய வளர்ச்சி ஆகியவை குறித்து கணினித்துறை சார்ந்த நிபுணர்கள் ஒன்று கூடி விவாதிக்கும் அரங்காக இடம்பெற்று வருகின்றது. புலம்பெய்ர்ந்த தமிழர்களும் மாநாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலிருந்து 100க்கும் மேலான தமிழ் பேசும் பேராளர்கள் இந்த ஆண்டு மாநாட்டில் (செருமனியின் கொலோன் நகரில் இருந்து ஆல்பர்ட் பெர்னாண்டோ, தமிழில் சிங்கை பழனி) மனித உரிமைகள் தொடர்பாக எவ்வித முயற்சியையும் எடுப்பதற்கு சக்தியற்ற அமைப்பாக அது விளங்கும் என்ற பலமான விமர்சனங்களுக்கு இடையே அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் மனித உரிமைகளை வலுப்படுத்த முக்கிய முதல்படியாக இந்த அமைப்பு அமையும் என்றார் தற்போது ஆசியான் தலைவரான தாய்லாந்து பிரதமர் அபிசித் வெஜஜீவா. 10 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இந்த அமைப்பு உருவாகியுள்ளது. "இந்த அமைப்பு, ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது உரிமைகளைப் பெருக்கவும் ஆசியானில் சமூக வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்தவும், உறுப்பு நாடுகளை கடப்பாடு கொள்ளச் செய்யும் என்றார் ஆசியானின் தலைவர். இதற்கிடையே, ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்த மனித உரிமை செயல்வீரர்களில் பத்தில் ஐவர் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சிங்கப்பூர், மியன்மார், கம்போடியா, லாவோஸ், பிலிப்பீன்சு நாடுகளின் மனித உரிமை செயல்வீரர்கள் ஐவரைச் சந்திக்க ஆசியான் தலைவர்கள் மறுத்துவிட்டனர். மற்ற ஐவரும் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மாநாட்டில் பார்வையாளராக மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் உரையாற்ற முடியாது என்றும் ஆசியான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். title புதிய மனித உரிமைகள் அமைப்பை ஆசியான் தலைவர்கள் நிறுவினர் இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிகைகளுடன் இவை தோற்றமளிக்கும். தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்து விட்டது. ஆப்பிரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக அவற்றை பல சட்டவிரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சட்ட விரோதமான சில பகுதிகளில் ஆபிரிக்க யானைத் தந்தங்கள், அதிக விலைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. இது குறித்து பன்னாட்டு விலங்கு கள் நல நிதியம் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச அளவில் போதைமருந்து, ஆயுத கடத்தல் ஆகிய சட்ட விரோத வியாபாரம் தான் மிக அதிக விலை மதிப்பிற்கு நடக்கிறது. இவற்றுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது யானைத் தந்தம் வியாபாரம், ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இந்த வியாபாரம் சர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கிறது. தினமும் 104 யானைகள் தந்தங்களுக்காக வேட்டை யாடப்படுகின்றன. இந்த போக்கு தொடர்ந்தால் இன்னும் 15 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானை இனமே முழுவதுமாக இல்லாமல் அழிந்து விடும். title ஆபிரிக்க யானை இனம் அழியும் அபாயம் இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொழும்பில் இருந்து வெளிவந்த நோர்த் ஈஸ்டேர்ன் எரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது. இந்த நிலையில் ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதியும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பல சித்திரவதைக்குள் உள்ளாவதாகவும் அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை மீள எடுத்துக் கொள்ளப்பட்டால் இவர்கள் இருவரையும் விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பும் பேசி இணக்கம் காணப்பட்டுள்ளதை அடுத்து இருவரும் விடுதலை அடைந்துள்ளனர். கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது]] தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் carbon nanotubes இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நானோ தொழில்நுட்பம் கொண்ட வேளாண்மைப் பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள், புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடியின் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட கார்பன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி விதைகள் சாதாரண விதைகளை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதில் முளைக்கும் போதான தாவர வித்துக்கள் அகத்துறிஞ்சும் நீரின் அளவை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியான விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது வரை அந்த நுண்குழாய்கள் நீர் உள்ளீட்டை அதிகரிப்பதில் செலுத்தும் சரியான தாக்கம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் விஞ்ஞானிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தாலும் இவ் அறிவியல் அடைவு வெகுவிரைவில் விவசாயத்தில் பெரும் புட்சியை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பிரதான நகர்களில் ஒன்றான பெசாவாரின் தென்மேற்கு பகுதியில் உள்ள சந்தை தொகுதி ஒன்றில் இவ் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் பெண்கள் பல்பொருள் அங்காடி ஒன்று பாரிய வாகனக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் பாகிஸ்தான் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் குறைந்தது 80 பேர் வரையில் கொல்லப்பட்டு இன்னும் 200 வரையானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் வந்த செய்திகளின் படி 91 பேர் உயிரிழந்துள்ளதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு பெரும் அச்சம் நிலவுவதாகவும் நோயாளர் காவு ஊர்திகள் காயமடைந்தவர்களை அப்புறப்படுத்துவதில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள செய்தி ஊடகங்கள் உடனடியாக தாக்குதலுக்கு யார் காரணம் என்பது புலப்படவில்லை என்றும் எவரும் உரிமை கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளன. முன்னர் பாகிஸ்தான் தமக்கு எதிராக நடாத்தும் தாக்குதலுக்கு பெரும் விலைகொடுக்க வேண்டி வரும் என தலிபான்கள் எச்சரித்து இருந்தமையும் அதை தொடந்து வரிகிஸ்தானில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பேராக் மாநிலத்தில் பள்ளி முகாமில் பங்குகொண்ட மாணவர்கள் கம்பாருக்கு அருகில் உள்ள கோலா டிபாங் தேசியப் பள்ளிக் கூடத்திற்கு அந்தப் பாலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயர நிகழ்வு நிகழ்ந்தது. பாலம் சரிந்து விழுந்தபோது அந்த பாலத்தைக் கடந்த 22 மாணவர்களும் ஆற்றில் விழுந்தனர். அவர்களில் பலர் தொங்கு பாலத்தின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினர். சில மாணவர்களை ஓர் ஆசிரியரும் பள்ளிக்கூட காவலாளியும் ஆற்றிலிருந்து மீட்டனர். தேவதர்சினி (11 திவ்யாஸ்ரீ (11) ஆகிய மாணவிகளே காணாமல் போனவர்கள். இந்தச் சம்பவத்தின் போது ஆற்றின் சுழற்சி கடுமையாக இருந்தது. ஆற்று நீரில் மூழ்கி இறந்த மாணவியின் சடலத்தை நேற்று காலை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாக பேராக் போலிஸ் படைத் துணைத் தலைவர் சாக்காரியா யூசோப் கூறினார். ‘ஒரே மலேசியா முகாமில்’ பங்குகொள்ள கம்பார், பத்து காஜா பகுதிகளில் உள்ள 60 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் சென்றிருந்தனர். அந்த முகாமில் 23 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஆற்றில் விழுந்த மாணவர்களில் 8 பேரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக ஆசிரியர் முகம்மது சஃப்ரி அப்துல் ரபார் கூறினார். உலோகக் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருந்த ஒரு மாணவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஆற்று நீரில் அந்த மாணவர் அடித்து செல்லப்பட்டதாகவும் அந்த ஆசிரியர் கூறினார். அந்த புதிய பாலம் இரண்டு வாரத்திற்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டதாக மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. title தொங்கு பாலம் விழுந்து மாணவி மரணம் 10 ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன்கொண்ட இந்த அணு உலைகளை தோஷியா வடிவமைத்துள்ளது. இந்த அணு உலைகளுக்கு அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. "4 எஸ்" என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அணு உலைகளுக்கு கண்காணிப்பு, நிர்வகித்தல் ஆகியவை மிகக் குறைவாகத் தேவைப்படும். இவை தாமாகவே செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளும் திறன் படைத்தவை. மற்ற அணு உலை களைவிட இவற்றில் பாதுகாப்பு அதிகம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அணு உலைகளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய தோஷியா நிறு வனம் திட்டமிட்டுள்ளது. இதன் பின்னர் வரவேற்பைப் பொறுத்து இவற்றைத் தயாரித்து வளரும் நாடுகளுக்கு அளிக்க தோஷியா முடிவு செய்துள்ளது. மற்றொரு ஜப்பானிய நிறுவனமான இட்டாச்சி, நீர் கொதிகலன் உலையை வடிவமைத்துள்ளது. இதில் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என ஹிடாச்சி தெரிவித்துள்ளது. தற்போதைய அணு மின் உலைகளுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது 27 நாடுகளில் 151 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப்பாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுப்பகல் வீதியில் செல்லும் வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார். இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. புகையிரதம் ஒன்றில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த போதும் அதனை தடுத்த சிலர் அவரை கட்டைகளால் தாக்கினர். இந்த சம்பவம் நீடித்துக்கொண்டிருக்க கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதன் போது அவர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டு மரணமானார். இவரது சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்ந்துக்கொண்டிருந்த போதும் பொலிஸார் இதனை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த ஒருவரினால் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. உயிரிழந்த இளைஞன் இரத்மலானையைச் சேர்ந்த சிவகுமார் (26) என அவரது தமையன் அடையாளம் காட்டினார். இவர் மனநோயாளர் என்றும் சொல்லப்படுகிறது. title அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இரத்மலானை சிவகுமார் title மக்களிடமிருந்து தப்பிக்க முயன்றவர் கடலில் மூழ்கி மரணம் பம்பலப்பிட்டியில் சம்பவம் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இந்தக் கிடங்கில் பணியாற்றிவந்த மேலும் ஆறு பேரைக் காணவில்லை என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கூறுகிறது. வியாழன் பின்னிரவு 7:30 மணியளவில் தீப்பிடித்து எண்ணெய்க் கிடங்கு மொத்தத்திலும் அக்கம் பக்கத்து இடங்களிலும் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. 25 கிமீ தூரத்துக்கு தீக்கொழுந்துகளைக் காண முடிவதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் வாழ்ந்த 5 இலட்சம் பேர் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், எண்ணெய் முழுவதும் எரிந்து தானாக தீ அடங்கும் வரை காத்திருக்க வேண்டுமெனத் தெரிவதாக எண்ணெய் வளத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்தினால் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. title ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் கிடங்கில் தீ விபத்து: 5 லட்சம் மக்கள் வெளியேற்றம் நிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான விண்கப்பல் 450 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 100 மீட்டர் உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன. அத்துடன், இந்த உடன்படிக்கையில் அதிகாரப் பகிர்வு அரசாங்கமொன்றை உருவாக்கும் திட்டம் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை இருதரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். title ஷெலயாவை மீண்டும் பதவியில் அமர்த்த ஹொண்டுராஸ் இடைக்கால அரசு இணக்கம் சோவியத் காலத்து புகழ் பெற்ற சிலை மீண்டும் மாஸ்கோ வந்தது]] ஆஸ்திரேலியாவில் 2011 பொதுநலவாய நாடுகளின் மாநாடு, இலங்கை வாய்ப்பை இழந்தது]] ரஷ்யாவில் குண்டுத்தாக்குதலில் சிக்கிய தொடருந்து தடம் புரண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்]] வங்காள தேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்தது]] இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்]] சிரின் எபாடியின் நோபல் பரிசை கைப்பற்றவில்லை என்கிறது ஈரான்]] பனிப்பாறைகள் நியூசிலாந்தை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை]] வெள்ளை மாளிகையில் அழையா விருந்தினர்களாக கலந்துகொண்ட தம்பதியினர் குறித்து சர்ச்சை]] கம்போடியாவின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரிக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக் கோரிக்கை]] நேபாளக் கோவில் திருவிழாவில் 3 இலட்சம் ஆடு மாடுகள் பலியிடப்பட்டன]] பாபர் மசூதி இடிப்பு விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது]] பிலிப்பைன்சில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன]] கிறிஸ்துமஸ் தீவில் இலங்கை ஆப்கான் அகதிகள் மோதல்]] அசாம் மாநிலத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் இறப்பு]] ஊடகவியலாளர் திசைநாயகத்திற்கு பன்னாட்டு ஊடக சுதந்திரத்திற்கான விருது]] மலேசியாவில் எதிர்க்கட்சி ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்]] பெரிய ஆட்ரான் மோதுவி மீண்டும் இயங்க வைக்கப்பட்டது]] கொங்கோவில் மோதல்கள் காரணமாக ஐம்பதாயிரம் பேர் இடம்பெயர்வு]] ஜான்சி ராணி லட்சுமிபாய் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு]] முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு: எதிரிகளின் மேன்முறையீடு நிராகரிப்பு]] ஆறாம் விக்கெட்டுக்கான ஓட்டக் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை]] 1973 மாணவர் படுகொலைகளை நினைவுகூர்ந்து கிரேக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டம்]] ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 1வது இடத்தில் நியூசிலாந்து]] தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு]] ருவாண்டா ஆயுதக்குழுத் தலைவர்கள் ஜெர்மனியில் கைது]] வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவர்களிடம் மன்னிப்புக்கோர கோர்டன் பிறவுண் திட்டம்]] காலநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கும் ஆஸ்திரேலிய வீடுகள்]] மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்]] ரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கேபாப் உணவுசாலைக்கு விற்கப்பட்டது]] தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயம்]] ஜெய்ப்பூரில் தொடருந்து தடம் புரண்டதில் 7 பேர் உயிரிழப்பு]] நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது]] சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு]] ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் தர ஆஸ்திரேலியா இணக்கம்]] வாசிங்டனில் சினைப்பர் தாக்குதலை நடத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்]] வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்]] இந்தியாவின் திரிபுராவில் கிளர்ச்சியாளர்களால் 8 பேர் படுகொலை]] சீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்]] வட, தென் கொரிய கடற்படைகளுக்கிடையில் மோதல்]] யேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை மீட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு]] நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு]] லெபனானில் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சி இணக்கம்]] மடகஸ்காரில் கூட்டரசு அமைக்க தலைவர்கள் இணக்கம்]] நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்]] கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை]] டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்]] சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை]] இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை வைக்கத் தடை]] அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு]] முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது]] இலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு]] கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை]] இலங்கையின் முன்னாள் படைத் தளபதி மீது போர்க்குற்ற விசாரணை]] ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு]] கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு நிலைய வசதிகளை ஆஸ்திரேலியா அதிகரிக்கிறது]] செலாயாவை மீண்டும் அதிபராக்க இடைக்கால அரசு இணக்கம்]] சுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் கப்பலின் பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 78 இலங்கையரையும் வெளியேற்றுவதற்கு அரசு தயாராகும் அறிகுறியாக இது கருதப்படுவதாக குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். title 78 இலங்கையரையும் கிறிஸ்மஸ்தீவுக்கு அவுஸ்திரேலியா கொண்டு செல்லும் சாத்தியம் தடுப்பு நிலைய வசதிகளை அதிகரிக்கிறது இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ஜி.மாதவன் நாயரின் பதவிக் காலம் அக்டோபர் இறுதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள பல்கலைக்கழகத்தில் 1970-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், ஐஐஎம் பெங்களூரில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் ஐஐடி கரக்பூரில் டாக்டர் பட்டம் பெற்றார். 1971-ல் இஸ்ரோவில் வான்பயண மின்னணுவியலில் பொறியாளராக சேர்ந்தார். பின்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய விண்வெளி திட்டங்களில் அவரது பங்கு அளப்பரியது. பிராந்திய ரிமோட் சென்சிங் சேவை மையத்தின் இயக்குநர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடல் மேம்பாட்டுத் துறையில் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் திட்ட இயக்குநரகாவும் பணிபுரிந்துள்ளார். title இஸ்ரோ புதிய தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை இது பற்றி அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ள சரத் பொன்சேகா தனது மருமகனின் தொலைபேசி ஊடாக அமெரிக்க அதிகாரிகள் இவ் கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கவில் வசிக்கும் உரிமை வழங்கும் பச்சை அட்டை பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி சரத் பொன்சேகாவுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறீன்கார்ட் சலுகையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவும், அவரது பாரியார் அனோமாவும் கடந்த 23 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளனர். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கிறீன் கார்ட் மற்றும் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டு சட்டத் திணைக்களங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி, அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கு சரத் பொன்சேகா கட்டுப்பட வேண்டியவர் என்பதுடன் பதிலளிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலி போராளிகள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மோதல் காலத்தில் போர்க்குற்றங்கள்: அமெரிக்கா அறிக்கை]] இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] title மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் பொன்சேகாவை ஆதாரமாக பயன்படுத்த அமெரிக்க அரசு முயற்சி? அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் என்று நம்பப்படும், 17 பேர் அந்த வழியே திரவ வாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டனர். உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான பணியில் ஆஸ்திரேலிய ரோயல் பறக்கும் மருத்துவ சேவையின் ஜெட் ஒன்றும் ஈடுபட்டுள்ளது. இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தப் பிராந்தியத்தில் தற்போது வழமையாகிவருவதாக இந்த இச்சேவையைச் சேர்ந்த ஸ்டீபன் லாங் ஃபோர்ட் கூறியுள்ளார். தாம் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த ஆண்டில் மாத்திரம் இலங்கை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 30 படகுகளில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர். title அவுஸ்திரேலியக் கடலில் படகு மூழ்கி 15 பேர் பலி எந்த நாட்டவர் என்பது இன்னமும் அறியவரவில்லை 39 பேரில் 19 பேர் மீட்பு title அவுஸ்திரேலியாவில் படகு மூழ்கியதில் 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்: ஒருவரின் சடலம் மீட்பு "குரைத்தல் என்பது நாய்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஒரு தகவல் பரிமாற்றம் அல்ல: நாயின் மனப்போராட்டத்தின் வெளிப்பாடுதான் குரைத்தல் என்பது" என்கிறார் இந்த ஆய்வாளர். அதாவது குரைத்தல் என்பது ‘எனக்கு விளையாட விருப்பம்’ அல்லது ‘வீடு எரிகிறது' என்று கூறுவதைப்போல் அல்ல என்பதுதான் இந்த ஆய்வின் சுருக்கம். குரைத்தல் ஒரு கும்பலின் குரல் வெளிப்பாடு. அதை ஒரு கும்பல் நடத்தையாகக் கருதலாம். ஒரு கும்பல் அதனுடைய நடத்தையை குரல் மூலம் வெளிப்படுத்துகிறது என்பதுடன் குரைப்பதை ஒரு கூட்டுறவின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு அந்நியன் அத்துமீறி எதிர்ப்படும்போது ‘அங்கேயே நின்று தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்றுவதா’ அல்லது ‘தப்பித்து ஓடுவதா’ என்ற இரண்டு மனப்போராட்டங்களின் வெளிப்பாடு அது. தன்னுடைய இனத்தவர்கள் தனக்குத்துணையாக சேர்ந்துகொள்ளும்போது குரைத்தல் கும்பல் நடத்தையாகிப்போகிறது. இந்த ஓசை அத்துமீறி வருபவரை திரும்பி ஓட வைக்கிறது. நாய்கள் மனிதர்களை அண்டிவாழும் பழக்கம் 8,000 முதல் 10,000 ஆண்டுகள் பழமையானது. மனிதர்கள் ஒதுக்கித்தள்ளும் உணவுப்பொருட்களுக்காகவே இவை ஆரம்பகாலத்தில் மனிதனை அண்டி வாழத்தொடங்கின. அக்காலத்தில் எதிரி எதிர்ப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு மைல்தூரம் தூரம் ஓடி ஒளிந்துகொள்ளும் இயல்புடன் நாய்கள் இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் எதிராளியை எதிர்த்து நிற்கும் நாய்களுக்கு வெகுமதியாக மனிதர்களிடமிருந்து உணவு கிடைக்கத் தொடங்கியது. அந்த உணவை மற்ற நாய்களுடன் முந்திக்கொண்டு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மனிதர்களை நாய்கள் அண்டி வாழத்தொடங்கின. அச்சத்தினால் ஒதுங்கிய நாய்கள் காலப்போக்கில் அழிந்தொழிந்தன. அச்சம் தவிர்த்த நாய்கள் மனிதர்களை அண்டி, உண்டு வாழ்கின்றன. வேலிக்கு மறுபுறம் நிற்கும் ஒரு மனிதனைப் பார்த்தவுடன், நாயின் மனதில் ஒரு வியப்பும், அச்சமும் ஏற்படுகிறது. மனிதனை நெருங்கவோ, மனிதனைவிட்டு விலகி ஓடவோ முடியாத மனவெழுச்சி தோன்றும்போது அது குரைத்தலாக வெளிப்படுகிறது. குரைத்தல் என்பது செய்திகளின் பரிமாற்றச்செயல் அல்ல. குறைந்த கால அளவிற்கு உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி என்பதுதான் குரைத்தலின் இலக்கணமாகும். இது இரைச்சல், தொனி என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. விலங்குகள் எழுப்பும் பிற ஓசைகளில் இருந்து குரைத்தல் தனித்துவம் வாய்ந்தது. இந்த இலக்கணத்தை விரிவுபடுத்துபோது நாய் இனம் மட்டுமன்றி பறவைகள், பாலூட்டிகள் இனத்தைச் சேர்ந்த குரங்குகள், எலிகள், மான்கள் இவையும் குரைப்பதாக கொள்ளலாம். சிக்கலான மனவெழுச்சிகளில் பிற விலங்குகளும் குரைக்கின்றன என்பதுதான் ஆய்வர்களின் முடிவு. ஆனால் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுடைய செல்லப்பிராணிகள் உணவுகேட்டு குரைப்பதாக நம்மிடம் சொல்லுவார்கள். நாய்கள் அறிவுத்திறன் மிக்கவை. தூண்டல்-துலங்கல், காரண-காரிய விளைவுகளை அவைகள் நன்றாக கற்றுக்கொள்கின்றன. தன்னை வளர்ப்பவர் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பார் என்று தெரிந்துகொண்டால் அவை குரைப்பதில்லை. பிஜியின் உயர் இராணுவ அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளுவதற்கு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வார ஆரம்பத்தில், இலங்கை நீதிபதிகள் ஆஸ்திரேலியாவூடாக பிஜிக்குப் பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்கு விசா தர மறுத்திருந்தது. இக்குற்றச்ச்சாட்டை ஆஸ்திரேலியா மறுத்திருப்பதாக சிட்னியில் உள்ள பிபிசி செய்தியாளர் நிக் பிறயண்ட் தெரிவித்தார். பிஜியில் எவரும் பணிகளைப் பொறுப்பேற்றால், அவர்கள் அனைவரும் ஏனைய பிஜிய இராணுவ அதிகாரிகளைப் போலவே பயணத் தடைகளை எதிர் நோக்க நேரிடும் என ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே இலங்கை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது என்று செய்தியாளர் குறிப்பிடுகிறார். 1987 ஆம் ஆண்டில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றிருந்தன. லார்ட் ஆப் தி ரிங்ஸ், மேட்ரிக்ஸ் போன்ற படங்களை தயாரித்த பேரி ஒஸ்போர்ன், ஆங்கில மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கான கதை 2010 ஆம் ஆண்டு தயாராகும் என்றும் 2011 இல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்யவுள்ள கட்டார் ஊடக நிறுவனம் அல்நூர் ஹோல்டிங்ஸ் கூறுகிறது. நபிகள் நாயகத்தை உருவகப்படுத்திக் காட்டக் கூடாது என்று இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் கூறுவதால் இந்தப் படத்தை தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று இதன் அமெரிக்க தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்ன் கூறியுள்ளார். பல்தேவ் நாயுடு ராகவன் அல்லது பல்ராஜ் நாயுடு ராகவன் (47) என்று அழைக்கப்படும் சிங்கப்பூரர் அமெரிக்காவில் தீவிரவாதம் தொடர்பான வழக்கை எதிர் நோக்குவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதை மாவட்ட நீதிபதி சுட்டிக் காட்டினார். கடந்த செப்டம்பர் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சரண் அடைவது பற்றிய வழக்கில் அவர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறிய திரு நாயுடு, அமெரிக்காவில் முழு விசாரணைக்குக் கோரிக்கை விடுக்கப் போவதாகத் தெரிவித்தார். சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் திரு நாயுடு. அமெரிக்காவில் ஆறு குற்றச் சாட்டுகளை அவர் எதிர் நோக்குகிறார். சதித் திட்டம் தீட்டியது, வெளி நாட்டு தீவிரவாத அமைப்புக்கு பொருட்களை வழங்கியது, பயங்கர ஆயுதத்தை கைவசம் வைத்திருந்தது ஆகியன அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில. கடந்த 2006ம் ஆண்டில் பெப்ரவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில் இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. title அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூரருக்கு உத்தரவு title புலிகளுக்கு ஆயுதம் கடத்தல்: சிங்கப்பூர் வாசி அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பு பொதுப் பள்ளிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலுவைகள் மத மற்றும் கல்வி சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த முடிவை வெட்கக் கேடான ஒன்று என்று வர்ணித்துள்ள இத்தாலி அரசு, சிலுவை இத்தாலிய பாரம்பரியத்தை காட்டுவதாகவும் கத்தோலிக்கத்தை பறைசாற்றவில்லை என்றும் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் ராணுவ வீரர்களுக்கு அங்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மேஜர் நிடால் மாலிக் ஹசன் என்பவர் திடீரென 2 கைகளில் துப்பாக்கிகளை எடுத்து ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 12 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற டாக்டர் மாலிக் ஹசனை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுட்டுக் காயப்படுத்தினர். அமெரிக்காவில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் பணி உலகிலேயே மிகப்பெரிய ராணுவ தளமான ஃபோர்ட் ஹூட் (Fort Hood) தளத்தில் நேற்று நடந்தது. துப்பாக்கிச்சூட்டின் போது மாலிக் ஹசனுக்கு உதவியதாகக் கருதப்படும் மேலும் 2 ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் பாப் கோன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவ்வட்டாரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. இராணுவத்தளமும் உடனடியாக மூடப்பட்டதாக ஃபோர்ட் ஹூட் இணையத்தளம் அறிவித்தது. இவ்வறிவிப்பை அடுத்த சில மணி நேரத்தில் இவ்விணையத்தளமும் மூடப்பட்டது. துப்பாக்கிதாரியின் நோக்கம் எதுவென்று உடனடியாகத் தெரியாவிட்டாலும், அவன் ஈராக்குக்குச் செல்வது குறித்து கவலையடைந்திருந்ததாகப் பலரிடம் தெரிவித்திருந்ததாக டெக்சாஸ் செனட்டர் கேய் அட்சிசன் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெண்டுல்கர் இதுவரை 9 சதங்களை அடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் மிக வேகமாக சதமடித்த இந்தியர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஆனால், இந்த 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அபாரமான 140 பந்து 175 ரன்கள் இன்னிங்ஸ் விரயமானது. இந்தியா 347 ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்களால் தோல்வி தழுவியது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவை கம்போடிய அரசு ஆலோசகராக நியமித்திருப்பதாக கம்போடியா அறிவித்ததிலிருந்து புதிய பிரச்சினை தொடங்கியுள்ளது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து கம்போடியாவுடனான எல்லையை மூடப்போவதாக தாய்லாந்து மிரட்டல் விடுத்துள்ளது. இப்பிரச்சினை காரணமாக முன்னதாக இரு நாடுகளும் அவற்றின் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன. கம்போடியா கடினப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றினால் இருதரப்பு உறவு பாதிக்கப்படும் என்று தய்லாந்துப் துணைப் பிரதமர் சுதெப் தாக்சுபான் கூறினார். அத்துடன் அரசியல் சதியில் பாதிக்கப்பட்டவராக தக்சினைத் தாம் கருதுவதால் அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை கம்போடியா நிராகரிக்குமெனவும் அந்நாட்டின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தக்சினின் தலைமைத்துவ ஆளுமையையும் வியாபார அனுபவத்தையும் கம்போடியா மதிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அரசாங்கப் பேச்சாளர் அவர் நாட்டுக்கு ஒரு சொத்தாக இருப்பாரெனவும் தெரிவித்துள்ளார். கம்போடியத் தூதர் நோம்பென் திரும்பிய பிறகு, தாய்லாந்து அங்குள்ள கம்போடியத் தூதரகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து தக்சின் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, தக்சினின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அங்கு பல எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தக்சின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. title எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து மிரட்டல் title கம்போடியாவுக்கான தனது தூதுவரை திருப்பியழைத்தது தாய்லாந்து அந்த முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையில், பர்மியத் துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அதுபற்றி பர்மிய ராணுவ அதிகாரிகளோ ராஜாங்க அதிகாரிகளோ எந்தத் தகவல்களையும் தர விரும்பவில்லை. ஆனால் நாகா முகாம்கள் மீது பர்மியத் துருப்புக்கள் தாக்குதல் நடத்துவதைக் காணமுடிந்ததாக மனியக்சா கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள். "ஜனாதிபதியை விட இரண்டு பதில்-ஜனாதிபதிகள் பதவியில் இருப்பார்கள் என்று ராசொய்லினா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய அரசு குறித்த அறிவிப்பை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சாட் ஹரிரி விரைவில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஹரிரிக்கு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளன. 30 பேரடங்கிய அமைச்சரவையில் ஹரிரி தலைமையிலான உறுப்பினர்கள் 15 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும். இதேபோல ஹெஸ்புல்லாவுக்கு 10 அமைச்சர்களும் அதிபர் மைக்கேல் சுலேமான் நியமனத்தில் 5 முக்கிய அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவ் ஆய்வில் மொத்தம் 2,034 பூ வகைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வை மேற்கொண்ட உயிரியலாளர் ரத்தீசு நாராயணன் தெரிவித்தார். கேரளாவில் வயநாடு மாவட்டத்திலேயே மிக அதிகமான பூ வகைகள காணப்படுகின்றன. ஒபெரோனொயா சுவாமிநாதனீ Oberonia swaminathanii என்பது புதிய வகை ஆர்க்கிடு ஆகும். இது கால்ப்பெட்டா மலைத்தொடரில் குறிச்சியாறு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். வட யேமனிலுள்ள இலக்குகள் மீது சவுதி விமானங்கள் தொடர்ந்தும் குண்டுவீசிவருவதாக அவர்கள் கூறுகின்றனர். கிளர்ச்சிக்காரர்கள் ஊடுருவியபோது சவுதி அரேபிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து ஒரு வாரத்துக்கு முன்பு தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்ததாகவும், தங்களது நிலப்பரப்புக்குள்ளேயே தாக்குதல் நடத்தியதாகவும் சவுதியரேபியா கூறுகிறது. சவுதி படையினர் சிலரை சிறைபிடித்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுவதையும் சவுதி அதிகாரிகள் மறுக்கின்றனர். ஆனால் சவுதி படையினர் மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் நான்கு பேரைக் காணவில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கிடையில், யேமனிய போர் ஜெட் விமானம் ஒன்றை ஞாயிறன்று தாம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக யேமனியக் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனை மறுத்துள்ள யேமனிய அரசு தமது விமானம் தொழிநுட்பக் கோளாறினாலேயே விபத்துக்குளாகியதாகத் தெரிவித்துள்ளது. நான்கு மாதங்களில் போர் ஆரம்பித்ததில் இருந்து யேமனின் மூன்றாவது போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. வடகொரியாவும் தென்கொரியாவும் உரிமை கோரும் பிரச்சினைக்குரிய மேற்கு கடற் பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் பிரச்சினைக்குரிய அவ் மேற்கு கடற்பரப்பில் வைத்து தொன் கொரிய கடற்படைக்கப்பல் வடகொரிய கப்பல் மீது தாக்குதல் நடாத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தென் கொரிய அதிகாரிகளின் கருத்துக்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கருத்து வெளியிடுகையில், வடகொரிய கப்பல் பலத்த சேதத்துக்கு உள்ளானதாகவும் தென் கொரியக் கடற் படை தரப்பில் எவ்வித சேதமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 1950 முதல் 1953 வரை இரு நாடுகளுக்கு இடையில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னர் இன்றுவரை இவ்விரு நாடுகளும் தமது கடல் எல்லையை தீர்மானிப்பதில் இழுபறிப் பட்டுக் கொண்டுள்ளதும் இவ்வப்போது கடற் பரப்புகளில் மோதிக் கொள்வதும் குறிப்படத்தக்கது. அந்தப் பகுதியில் அப்போது இடம் பெற்ற வன்முறையில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட ஒன்பது ஆண்களுக்கு கடந்த சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசுக்கு சொந்தமான சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியின் மாகாண அரசின் பேச்சாளர், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 5 ஆம் நாள் உருமுச்சியில் உள்ளூர் பழங்குடியினரான உய்கூர் மற்றும் ஆன் சீன சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 21 பேர் இந்தக் கலவரத்துடன் தொடர்புள்ளவர்களாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது கொலை, கொள்ளை, மற்றும் பொருட்சேதம் ஆகுய குற்றங்கள் சுமத்தப்பட்டன. இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இலகுவில் சென்றடைய முடியாத கிராமமான புஸ்ரம்பராவுக்கு அருகே இடம்பெற்ற இந்தக் கொலைகள், கடந்த திங்களன்று 7 பேர் சரணடைந்ததற்கான பழிவாங்கலாகவே நடந்துள்ளன என்று திரிபுராவின் உயர் பொலிஸ் அதிகாரி பரனோய் சஹாய் கூறியுள்ளார். அந்தக் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறிது நேரத்தில், இந்த 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. title திரிபுராவில் சரணடைந்தவர்களின் குடும்பத்தினர் 8 பேர் படுகொலை சுமார் இரண்டு மாதத் தாமதத்தின் பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்தார். விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால் குமார் தெரிவித்துள்ளார். முகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில் இந்தப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் நிமால் குமார் கூறினார். வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் கையளித்தது]] வணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்]] சென்னையில் வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்]] title வணங்கா மண்' கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம் கலாசுனிக்கோவ் 1947ம் ஆண்டு ஏகே47 தானியங்கித் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். இதன் பிறகு ரஷ்யாவில் இவரின் புகழ் உச்சக் கட்டத்தை எட்டியது. உருசியாவின் ஆயுத மேதை என இவருக்குப் புகழ் மாலை சூட்டப்பட்டதுடன் அரசியல்வாதிகளின் ஆதரவையும் பெறலானார். இலக்கியவாதியான கலாசுனிக்கோவ் பின்னர் பிரபல ஆயுத உற்பத்தியாளராக மாறினார். உருசியாவின் ஆயுதங்களுக்கு மிகப் பொருத்தமான உதாரணம் கலாசுனிக்கோவ் என்றும் அதிபர் சொன்னார். இவ்வைபவத்தில் கலந்துகொணடு உரையாற்றிய கலாசுனிக்கோவ், "நான் ஏகே47ஐ தாய்நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் நல்ல நோக்குடனே தயாரித்தேன். அரசியல்வாதிகள் இந்த ஆயுதத்தை மனித அழிவுக்குப் பாவிப்பது வேதனையளிக்கின்றது. இளமையில் இலக்கியவாதியாக, கவிஞராக இருந்த என்னை விதி ஆயுத உற்பத்தியாளராக மாற்றிவிட்ட தென்றார். 1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி வண்டியின் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே டி-34 பீரங்கிப் படைக்கலனின் 24 வது பிரிவுக்கு புரோடித் தாக்குதலில் உருசியப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸ்க் தாக்குதலில் உருசியப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று. பல்கேரியா, சீனா, போலந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது ஏகே47 ஐ உற்பத்தி செய்கின்றன. கெரில்லா அமைப்புகள் இராணுவங்கள் என்பன ஏகே47ஐ பிரதான ஆயுதமாகப் பாவிக்கின்றன. title கலாஷ்நிகோவின் 90வது பிறந்த நாளையிட்டு கிரம்ளினில் அரச வைபவங்கள் மரணதண்டனையை நிறுத்துவதற்கான கோரிக்கையை கடந்த திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. முன்னாள் இராணுவ வீரரான 48 வயதான முகமது மரணத்தை தோற்றுவிக்கும் ஊசி மருந்தின் மூலம் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மொத்தம் 5 நிமிடங்கள் வர நீடித்ததாகவும், முகமது உள்ளுர் நேரப்படி 21:11 மணிக்கு இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தாக்குதலின் போது முகமதுவுக்கு உடந்தையாகவிருந்த லீ போய்ட் மல்வோ (24) வுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெரிலாந்து, வாஷிங்டன் மற்றும் வேர்ஜினியாவில் மூன்று கிழமைகளாக இவர்கள் நடத்திய தாக்குதல்களில் 10 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் இறுதியாக ஏதாவது கூற விரும்புகிறாரா என அவரிடம் கேட்கப்பட்டபோதும் அதற்கு அவர் இணங்கவில்லையெனவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். முன்னாள் படைவீரரான முகமது வளைகுடா போர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கடைகள், பாடசாலைகளின் வெளிப்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய முகமதுவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்ப்பதற்கு இவரது தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பலருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. title அமெரிக்காவில் சினைப்பர் தாக்குதலை நடத்திய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் அரசியற் தஞ்சம் பெற உரித்தானவர்கள் எதிர்வரும் 12 வாரங்களுக்கிடையில் ஆஸ்திரேலியாவில் அரசியற் தஞ்சம் பெறுவர் என்று அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு எழுத்துமூல வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். இவர்களில் அரசியற் தஞ்சம் பெற உரித்தானவர்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் 30 பேருக்கு எதிர்வரும் 4 வாரங்களுக்கிடையில் ஆஸியில் அரசியற் தஞ்சம் கிடைக்கும் என்றும் இவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குறுதியை அடுத்து 20 இற்கும் மேற்பட்டோர் இன்று அக்கப்பலில் இருந்து வெளியேறியுள்ளதாக "தி ஆஸ்திரேலியன்" பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் இந்தோனேசிய அதிகாரிகளினால் "பின்டான்" என்ற இந்தோனேசியத் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ, மற்றும் ஆளடையாளப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். இவர்களில் பலர் ஏற்கனவே அகதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் அடுத்த ஆறு வாரங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் உள்ள ஏனையவர்களின் விண்ணப்பங்கள் 12 வாரங்களில் பரிசீலிக்கப்படும் என, ஆஸ்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் அதிகமானவர்கள் அகதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை வெளியேற்றும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, ஒசியானிக் வைக்கிங் கப்பலில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசாங்கம் உறுதியளித்தால், அவர்களை இந்தோனேசியாவில் இறக்குவதற்கு தாம் உதவி செய்வதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருந்தது. சரத் பொன்சேகா உடனடியாக பணியில் இருந்து விலகிச் செல்லலாம் என்று அரசின் அதிகார பூர்வ இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பிபிசி செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றார். மேலும் தான் இம்மாத இறுதியில்தான் பதவி விலகச் செல்ல விரும்புவதாகவும் அதற்கு முன்பாகவே தான் பதவியில் இருந்து அனுப்பப்ட்டால் அது கட்டாய ஒய்வாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதே வேளை தான் பதவி விலகுவதற்கான 16 காரணங்களை ஜனாதிபதியிடம் பதவி விலகல் கடிதத்துடன் ஜெனரல் பொன்சேகா அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த கடிதம் குறித்து அதிகார பூர்வமாக கருத்து தெரிவிக்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துவிட்டார். வியாழன் அன்று ஜெனரல் பொன்சேகா தனது பதவிவிலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். தமக்கு இந்த அரசாங்கத்தின் மீது தற்போது நம்பிக்கை இல்லை எனக் கூறி வந்திருந்தார். இதேநேரம், சரத்பொன்சேகாவின் பதவிவிலகல் கடிதத்தில் அரசியல் பிரவேசத்திற்கான எதிர்பார்ப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் கூட தனக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருக்குமென்பதால் தனக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கடமையென்று சரத் பொன்சேகா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அரசியல் மற்றும் படைத்தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதேநேரம், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ பதவிக் காலம் முடிவடையும் நாளான எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு மறுதினமான டிசம்பர் 18 ஆம் திகதி முதலே பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கும் அதற்கு முன்னதாக டிசம்பர் முதலாம் திகதி முதல் விடுமுறைக்கான அனுமதி கோரியுமே அவர் இந்த கடிதத்தைச் சமர்ப்பித்திருந்த்தாகவும் தெரியவந்திருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறக் கூடுமென பரவலாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷக்கு எதிராக எதிரணியினரின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டிக்கு நிறுத்தப் படக் கூடுமென அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே அவர் தனது பதவி ஓய்வுக்கான விருப்பத்தை அறிவித்திருந்ததர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, யுத்த வெற்றியின் பின்னர், 2009 ஆண்டின் 35 ஆம் இலக்க கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தின் பிரகாரம் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையின் முதலாவது சட்ட பூர்வமான கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இன்று அதிகாலை 1:30 மணியளவில் ஜோத்பூருக்கும் டெல்லிக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த மண்டோர் கடுகதியின் அனைத்து 15 பெட்டிகளும் பன்ஸ்கோவ் ரெயில் நிலையத்துக்கு அருகே திடீரெனத் தடம் புரண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தொடருந்துப் பெட்டியை வெல்டிங் மூலம் உடைத்து தண்டவாளத்தின் கம்பிகளை அகற்றினார்கள். காயமடைந்தவர்களில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அனா எலிசபத் என்ற பெண் பயணியும் ஒருவராவார். கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தில் பயாணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சென்ற அக்டோபரில் வட இந்தியாவின் மதுராவில் இரு தொடருந்துகள் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர். நிலவின் தென்முனையில் பனிக்கட்டிகளை எடுப்பதற்காக ராக்கெட் ஒன்றை நாசா சென்ற மாதம் மோதவிட்டது. மோதலின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பெருமளவு நீர்-பனிக்காட்டிகளும் நீராவிகளும் அங்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர். "நாம் சிறிதளவை மட்டும் கண்டுபிடிக்கவில்லை; குறிப்பிடத்தக்களவு தண்ணீரைக் கண்டுபிடித்துள்ளோம்" என்று தலைமை அறிவியலாளர் அந்தனி கொலப்பிரெட் தெரிவித்தார். நிலவில் இவற்றைவிடப் பெருமளவு தண்ணீர்ர் இருப்பதற்கான அறிகுறிகள் மேலும் தென்பட்டால், நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளிவீரர்களுக்கு இது பெருமளவு பயனைக் கொடுக்கும். "இதனைக் குடிநீராகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார் நாசாவின் நிலவாய்வுத் திட்டத்தின் தலைமை வானியலாளர் மைக் வார்கோ. நாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது அக்டோபர் 9, 2009 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது சந்திரயான்-1 செப்டம்பர் 24, 2009 இது பற்றி மேலும் தெரியவருவதாவது நியூமகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் (ரிமாண்ட் சிறை ஜே" கட்டிடத்தில் 87 பேர் உள்ளனர். இவர்கள் மிக நீண்ட காலமாக போதிய உணவும் அடிப்படை வசதிகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகக் குறைவாயிருப்பது பற்றி இவர்கள் சிறைச் சாலை அதிகாரிகளுக்கு கூறிவந்த நிலையில் நேற்றுக்காலை வாய்த்தர்க்கமேற்பட்டுள்ளது. தமிழ்க் கைதிகளும் தங்கள் மன உளைச்சலை இதன் போது கொட்டித் தீர்க்கவே இரு தரப்புக்குமிடையிலான வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த சிறைக்காவலர்கள், தடுப்புக்காவல் கைதிகள் ஐவரை பலவந்தமாக வெளியே இழுத்துச் சென்றபோது கைகலப்பு ஏற்படவே தமிழ்க் கைதிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைக் கூடத்திற்கு வெளியே சக கைதிகள் ஐவரை சிறைக் காவலர்களும் சிங்களக் கைதிகளும் பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் மிலேச்சத்தனமாகத் தாக்கியதைப் பார்த்த ஏனைய தமிழ்க் கைதிகள் சிறைக் கூடத்திற்குள்ளிருந்து குரலெழுப்பி சிறைக்காவலர்களை பேசவே, அந்த "ஜே" கட்டிட சிறைக்கூடத்திற்குள் நுழைந்த சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைக்காவலர்களும் சிங்களக் கைதிகளும் தங்களை பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் மிலேச்சத்தனமாகத் தாக்கியதாக இந்தக் கைதிகள் பின்னர் அரசியல் கட்சித் தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர். சிறைக் கூடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நடந்த மிகக் கடுமையான தாக்குதலால் சிறைக் கூடத்திற்கு வெளியே ஐவரும் உள்ளே இருவருமாக ஏழு தமிழ்க் கைதிகள் மிக மோசமாக காயமடைந்து ஆபத்தான நிலையில் பின்னர் சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை விட இங்கு இடம்பெற்ற மோசமான தாக்குதலால் மேலும் 17 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் பலர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகினர். அங்கு காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதி, சட்ட, மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட, பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். எனினும் கைதிகளின் பெற்றோரும் உறவினர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேநேரம், இந்தச் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும் அவசர கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. title தமிழ் அரசியல் கைதிகள் மீது நியூமகஸீன் சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் இந்நிகழ்வு எப்போது நடந்தது என்பது தெரியாவிடினும், மூவருக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மனிதனின் உடல் பேர்ம் நகரில் ஒரு பொது பேருந்து தரிபிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் வெள்ளியன்று அறிவித்தனர். மூவரும் அம்மனிதனை கத்திகளாலும் சுத்தியலாலும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவ்வுடலைப் பிய்த்தெடுத்து அதன் ஒரு பகுதியை அம்மனிதர்கள் உண்டதாகவும், பின்னர் மீதப் பகுதியை உணவுசாலைக்கு விற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வுணவுசாலையில் மனித இறைச்சி வேறு யாருக்கும் பரிமாறப்பட்டதா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தமிழ் நேசன் வெளியிடும் இந்நிகழ்வு பற்றிய செய்திகளால் நாட்டில் இனரீதியான பதற்றம் அதிகரிப்பதாக தன்னிடம் கூறப்பட்டிருந்ததாக பத்திரிகையின் தலைமை அதிகாரி வேல் பாரி தெரிவித்துள்ளார். ஆனால் மலேசிய ஊடகங்கள் பலவற்றைப் போலத்தான் தாங்கள் அச்சம்பவம் பற்றி செய்தி வழங்குவதாகக் கூறும் வேல்பாரி தமது செய்தியில் தவறில்லை என்றும் கூறினார். காவல்துறையினரின் ப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குற்ற சந்தேக நபர்கள் என்றும் அவர்கள் பொலிசார் மீது முதல் சுட்டதால்தான் அவர்களைத் திருப்பிச் சுடவேண்டி வந்தது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். * பிபிசி தமிழோசை, நவம்பர் 15, 2009 title மலேஷிய நாளிதழ் 'தமிழ் நேச'னுக்கு அச்சுறுத்தல் "ஆஸ்திரேலியக் கடலோரப் பகுதிகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள்" பற்றிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்போது 157,000 முதல் 250,000 தற்போதைய குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆஸ்திரேலிய முக்கிய விமான நிலையங்களும் மருத்துவமனைகளும் மின் நிலையங்களும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 32 மில்லியன் மக்கள் பயணிக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் விமான நிலையமான சிட்னி விமான நிலையம் கடலோரப்பகுதியில் அமைந்திருப்பதால் இதன் அமைவிடம் குறிப்பாக ஆபத்தை எதிர்நோக்குவதாக அறிக்கை எச்சரிக்கின்றது. title ஆபத்தை எதிர்நோக்கும் ஆஸ்திரேலிய வீடுகள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த சிறுவர் குடியேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏழைச் சிறுவர்கள் அவர்களின் நல்வாழ்வுக்காக அவுஸ்திரேலியா, கனடா போன்ற காலனித்துவ நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெற்றோர் இறந்து விட்டதாகவும் மிகச் சிறப்பான வாழ்வு அவர்களுக்காகக் காத்திருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பிரிட்டனை விட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மூன்று வயது சிறுவர்கள் கூட அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டமையைப் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்திருக்கவில்லை. சிறுவர் பராமரிப்பு அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து இந் நடவடிக்கையில் ஈடுபட்டன. இச் சிறுவர்களுக்குப் பண்ணை வேலை தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டதுடன் இவர்கள் உடல், உள ரீதியிலும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் பல கொடுமைகளுக்கும் இலக்காகினர். இந்நிலையில் சுகாதார சபைக்கு பிறவுண் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முன்னைய அரசாங்கங்களின் நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டிய சரியான தருணம் இதுவெனக் குறிப்பிட்டுள்ள பிறவுண், தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை செவிமடுக்க வேண்டியது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார். title இருபதாம் நூற்றாண்டில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவர்களிடம் மன்னிப்புக்கோர பிறவுண் திட்டம் அப்போது அவர்கள் பட்ட வேதனைக்காக தான் மிகவும் மனம் வருந்துவதாகத் தெரிவித்த ரட் அப்பிள்ளைகளிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் தாம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார். பெற்றோர் இறந்து விட்டதாகவும் மிகச் சிறப்பான வாழ்வு அவர்களுக்காகக் காத்திருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பிரிட்டனை விட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மூன்று வயது சிறுவர்கள் கூட அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டமையைப் பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்திருக்கவில்லை. சிறுவர் பராமரிப்பு அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து இந் நடவடிக்கையில் ஈடுபட்டன. இச் சிறுவர்களுக்குப் பண்ணை வேலை தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டதுடன் இவர்கள் உடல், உள ரீதியிலும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் பல கொடுமைகளுக்கும் இலக்காகினர். எப்.எல்.டி.ஆர் என்ற ருவாண்டாவின் விடுதலைக்கான மக்களாட்சிப் படைகளின் தலைவரான இக்னஸ் முர்வனாஷ் யாக்கா என்பவரும் அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்டட்டன் முசோனியும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பான சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எப்டிஎல்ஆர் அமைப்பின் ஆயுதக்குழுக்களுடன் கொங்கோ இராணுவம் சண்டையிட்டு வருகிறது. இராணுவத்திற்கு ஆதரவாக ஐநா படைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சனவரி முதல் இந்நடவடிக்கை இடம்பெற்று வந்தாலும், இன்னமும் ஆயுததாரிகளின் நடமாட்டம் அங்கு இருந்து வருகிறது. 16 மருத்துவர்கள், பல தாதியர் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவினர் மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மிகவும் கவனமாக மேற்கொண்டு இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தனியே பிரித்தது மிகவும் சிறப்பானது என்று வைத்தியர் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு பெண் பிள்ளைகளும் "மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்" என சத்திரசிகிச்சைக்குத் தலைமை வகித்த மருத்துவர் லியோ டொனன் தெரிவித்தார் ஒருவராக இருந்தவர்களைப் பிரித்து இரு வேறு மனிதர்களாகப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்க நிகழ்வு" என அவர் கூறினார். ஆயுட்காலத்தில் ஒருமுறை மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை என்று இதனை மருத்துவ உலகம் வர்ணித்துள்ளது. இந்தக் குழந்தைகள் இருவரும் ஒரு வார காலத்துக்கு மயக்க நிலையில் வைத்து கண்காணிக்கப்படவுள்ளனர். அதன் பிறகு பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் அவர்களுடைய மண்டை ஓடு சீரமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிள்ளைகள் வங்காள தேசத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகளின் முதன்மை நிறுவனம் Children First Foundation என்ற அமைப்பின் மூலம் சிகிச்சைக்கெனக் கொண்டு வரப்பட்டார்கள். title ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிரிப்பு; ஆஸ்திரேலிய டாக்டர்கள் சாதனை உலகில் லஞ்ச ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து, டென்மார்க் நாடுகளுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் சிங்கப்பூரும் சுவீடனும் இடம்பெற்றுள்ளன. இந்தியா 84வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. ஊழலுக்கு எதிரான பிரச்சார அமைப்பான டிரான்பரன்சி இன்டர்நேசனல் வளர்ச்சியடைந்த நாடுகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டக் கூடாது என்று கூறியுள்ளது. இந்த நாடுகளில் இருந்து இயங்கும் நிறுவனங்கள் பல சமயங்களில் லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடுவதாகக கூறியுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல், உதவி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஒளிவுமறைவின்றி செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. லஞ்ச ஊழல் மிக அதிகமான நாடுகள் பட்டியலில் முதலிடம் சோமாலியாவுக்கு. அடுத்து ஆப்கானிஸ்தான், மியன்மார், சூடான், ஈராக் நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொலை செய்யப்பட்ட மாணவர்களை நினைவுகூரும் கொடிகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து இடம்பெற்ற கலவரத்தில் 13 காவல்துறையினர் காயமடைந்தனர். கிரேக்கத் தலைநகர் ஏதெனிசிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரே அதிகமாகக் காணப்பட்டனர். மேள தாளங்களுடனும் ஆவேசமான கோசங்களுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைத் தடுக்க முயன்ற பொலிஸாரை நோக்கி கற்கள், போத்தல்களை வீசியதுடன், பெற்றோல் குண்டுகளையும் வீசினர். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டனர். ஒரு மணவன் கைது செய்யப்பட்டார். இருநூறு பேர் தடுத்து வைக்கப்பட்டனர். கிரேக்கத்திலுள்ள பொலிடெக்னிக் பல்கலைக்கழக மாணவர்கள் 1973ம் ஆண்டு கிரேக்க இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் இறங்கினர். அன்றைய ஆர்ப்பாட்டத்தை இராணுவ அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பல்கலைக்கழக வளவிற்குள் நுழைந்த இராணுவ போர் தாங்கிகள் மாணவர்களை நோக்கி குண்டுகளை வீசியது. வீதிகளில் சில மாணவர்கள் கிடத்தப்பட்டு அவர்களுக்கு மேலால் யுத்த தாங்கிகள் சென்றன. இதில் ஏராளமான மாணவர்கள் நசிந்து பலியாகினர். அப்போதைய இராணுவ ஆட்சியாளர்கள் 1967 முதல் 1974 வரை கிரேக்கத்தை ஆண்டனர். மாணவர்களை மிகக் கொடூரமாக அடக்கிய இந்த இராணுவ அரசுக்கு உதவிய அமெரிக்காவுக்கு எதிராக கிரேக்கத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்னால் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள் சஹ்தம் போட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்ற ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு மாணவர் கொல்லப்பட்டார். title மாணவர் படுகொலையை நினைவூட்ட கிரேக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உணர்ச்சி பொங்கக் கண்கலங்கினார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக் கொலையுடன் தொடர்பான முதல் வழக்கு 1996 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த போது எடுத்துக் கொள்ளப்பட்டது. 2001 ம் ஆண்டு 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆறு பேர் வெளிநாடுகளில் தலைமறைவாகினர். ஏனைய ஆறு பேரில் ஒருவர் இயற்கை மரணமடைந்தார். மீதி ஐந்து பேரும் 2001 இல் தங்களுக்கெதிராக வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேன் முறையீடு செய்தனர். வங்காளதேசத்தில் ஆட்சிமாற்ற மேற்பட்டதால் இந்த வழக்கு கிடப்பில் கிடந்தது. மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சியைக் கைப்பற்றியதால் இந்த வழக்கு ஒக்டோபர் 5 இல் விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு நேற்று வெளிவந்த்தது. குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்யாத பட்சத்தில், ஒரு மாதத்துக்குள்ளாகவேகூட இவர்கள் தூக்கிலிடப்படலாம். முஜிபுர் ரகுமான் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது பிரதமராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய முஜிபுரின் மூத்த மகள் சேக் ஹசீனா 1996 2001 காலப்பகுதியில் வங்கதேசத்தின் பிரதமராக இருந்தார். தனது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் வேறு இருபது பேரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டனைக்குள்ளாவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த நாள் முதலே ஷேக் ஹசீனா தீர்மானமாக இருந்துவந்தார். படுகொலைக்குக் காரணமான அப்போது இளம் இராணுவ அதிகாரிகளாக இருந்த நபர்களுக்கு வங்கதேசத்தின் முந்தைய அரசாங்கங்கள் அரண்களாக இருந்து அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாய் இருந்தன. title பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கொலை வழக்கு தீர்ப்பை முன்னிட்டு டாக்காவில் கடும் பாதுகாப்பு மேலும் இலங்கை அணி முதல் இன்னிங்சில் எடுத்துள்ள 7 விக்கெட் இழப்பிற்கு 760 ஓட்டங்கள் இந்திய மண்ணில் நடந்துள்ள அதிகபட்ச இன்னிங்ஸ் ஓட்டக் குவிப்பு ஆகும். இந்த ஆட்டம் அநேகமாக வெற்றி தோல்வியின்றி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதலாம் சுதந்திரப்போர் துவங்குவதற்கு (1857) முன்பாக, கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய் எழுதிய இந்த கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத இராச்சியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த சுவீகாரத்தை டல்ஹவுசி பிரபு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வெள்ளையர்களை எதிர்த்து ஜான்சி ராணி 1857ஆம் ஆண்டு தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு. வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் Lewin Bentham Bowring என்பவர் சேகரித்த ஆவணங்களில் இந்தக் கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார். லட்சுமிபாயின் வரலாறு அதிகமாகப் பதியப்படாத காரணத்தினால் இக்கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான ஆதாரம் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் பலர் பெரியவர்கள் துணையின்றி ஓடிவந்த சிறார்கள் ஆவர். கொங்கோவின் கிழக்கில் நடந்து வரும் நீண்ட நாள் மோதல்களுக்கும் இந்த தற்போதைய மோதல்களுக்கும் தொடர்பு இல்லை. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைகூடங்களில் நிறுவப்பட்டுள்ள இந்தக் கருவியின் ஆரம்ப பரிசோதனைக்காகச் செலவிடப்பட்ட £6 பில்லியன் பவுண்டுகளை விட இதனைத் திருத்துவதற்கு மேலதிகமாக £24 மில்லியன்கள் செலவிடப்பட்டன. வெள்ளியன்று GMT நேரப்படி 1500 மணிக்கு அணுத்துகள்கள் மோதுவியின் வளையத்தினுள் செலுத்தப்பட்டு, 1930 மணிக்கு அவை முழு வளையத்தையும் சுற்றி வந்தன. சனியன்று மேலும் சோதனைகள் நடத்தப்பட விருக்கின்றன. டியோ பெங்ஹொக் என்ற அந்த ஆர்வலர், மலேசிய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலக சாளரங்களின் கீழே மேற்கூரை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார். எதிர்க்கட்சி கட்சித் தலைவர் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்தக் கட்டிடத்தில் வைத்து டியோ விசாரிக்கப்பட்டிருந்தார். டியோ கடந்த ஜூலையில் ஒன்பது மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், குரல்வளை நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டிருக்கலாமென்று அவரது உடலில் காணப்படும் தழும்புகள் காட்டுவதாக பிரபலமான தாய்லாந்து நோய்க்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ராஜானாசுனாந்து கூறியுள்ளார். சிலாங்கூர் செமினியில் உள்ள நிர்வாணா நினைவுப் பூங்காவில் சோகமான சடங்குகளுடன் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. உள்நாட்டில் தமது கடமை காரணமாக அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு விருது வழங்கி கௌரவிக்கும் ஊடகவியலாளர்களில் இம்முறை ஜே.எஸ்.திசைநாயகம் விருதுக்குரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் மாதாந்த சஞ்சிகையொன்றில் செய்திக்கட்டுரைகளை எழுதி வந்த ஊடகவியலாளர் திசைநாயகம் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தலைநகர் குவகாத்தியில் இருந்து 70 கிமீ தூரத்தில் உள்ள நல்பாரி நகரில் ஒரு காவல் நிலையத்தின் வெளியே விடப்பட்டிருந்த சைக்கிள்களில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக பொலிசார் கூறுகின்றனர். உல்ஃபா என்ற அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி பிரிவினைவாத குழுவே இந்தத் தாக்குதலின் காரணம் என்று பழிசுமத்தும் பொலிசார், கடந்த வாரம் இந்தக் குழுவின் இரண்டு தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பதிலடியாக அவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை. அசாமில் கடந்த பத்து வருடங்களில் நடந்துள்ள அரசியல் வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். தமது மாநிலத்தின் வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியின் பூர்வகுடி மக்களுக்கு நன்மை ஒன்றும் செய்யப்படுவதில்லை என பிரிவினைவாதக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. 1979 ஆம் ஆண்டில் இருந்து உல்ஃபா அமைப்பு தனிநாடு கோரிப் போராடி வருகிறது. இலங்கையர்களும் ஆப்கானிஸ்தானியர்களும் மரக்கிளைகள் மற்றும் தும்புதடிகளாலும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கிறிஸ்மஸ் தீவில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களின் பின்னர் 37 பேருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், இதில் 10 பேர் தீவில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலகம் நேற்று இரவு, பச்சை முகாம் பிரிவில் ஆரம்பித்தது. எனினும் அந்த மோதல் 30 நிமிட நேரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கலகத்தின் போது அங்கு பணியாற்றுவோரும் காயமடைந்துள்ளனர் இலங்கையர்களுக்கும் ஆப்கானிஸ்தானியர்களுக்கும், இடையில் கிறிஸ்மஸ் தீவில் கலகம் இடம்பெற்றமை இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறான கலகங்கள் ஏற்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆப்கானிஸ்தானியர்களுக்கே அதிகளவில் இந்த வருடம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது இதன்படி,12,544 ஆப்கானிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 21 இலங்கையர்களுக்கும் பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் 1088 பேருக்கான வசதிகளை கொண்ட முகாமே உள்ளது இதில் 969 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு நிலைய வசதிகளை ஆஸ்திரேலியா அதிகரிக்கிறது]] இதனையடுத்து மிண்டனோவா தீவில் இரண்டு மாகாணங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மகுந்தனாவோ மாகாணத்தில் உள்ள அரசியல் குடும்பங்களுக்கு இடையிலான சாதிச்சண்டையாக இது இருக்கலாம் என்று ஒரு பேச்சாளர் கூறுகிறார். அடுத்த ஆண்டு நடக்கவிருந்த ஆளுநருக்கான தேர்தலில், தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருந்த ஒரு பெண்ணும் அவரது ஏனைய குடும்பத்தினரும், சட்டத்தரணிகளும், செய்தியயாளர்களும் கூட கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை கொடூரமானவை என்று வர்ணித்திருக்கின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கம், இதனால், தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், உரிய நீதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை மறுத்த பாஜக, சங்கபரிவாரங்கள் இந்துக்களின் மனக் குமுறலே மசூதி இடிப்பில் முடிந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், தனது அறிக்கையை கடந்த ஜூன் 30ம் தேதி அரசிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் சில பகுதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ரகசியமாக கசிந்து புயலை கிளப்பிவிட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலர் பலவிதமாக கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரான் கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது. அப்போதைய கல்யாண் சிங் அரசு கோரியபடி மத்திய படைகள் அனுப்பப்பட்டபோதும் அந்த படைகளை சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அப்பால் நிறுத்தியது மாநில அரசு. மேலும் மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்ற பார்வையாளரும் நடுநிலைமையாக செயல்படவில்லை. மசூதி கூரைமுகடுகள் இடிக்கப்பட்டபோது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் துணைத்தலைவர் வேதாந்தம், இவ்வளவு காலம் கடந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, நீதியை மறுக்கும் செயல் என்றார். அதே போல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே ஊடகங்களில் இந்த அறிக்கை கசியவிடப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வாஜ்பாய் போன்ற இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத தலைவர்களை இந்த அறிக்கை குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என்றார் வேதாந்தம். காதிமை என்பது இந்து மதத்தின் பெண் கடவுள். கிட்டத்தட்ட 750,000 பேர் இந்தியாவில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். திருவிழா தொடங்கும் முன்பு காதிமை அம்மனின் புகழ் நீடுழி வாழ்க என பக்தர்கள் உரக்க கூக்குரலிட்டனர். பின்னர் இந்த கோவிலின் தலைமை பூசாரி 2 எலிகள் 2 புறாக்கள் மற்றும் ஆடு பன்றியை பலியிட்டார். பிறகு கோவிலிலுக்கு அருகேயுள்ள வயலுக்கு விலங்குகளை வெட்டி பலியிடும் 250 பேர் ஊர்வலமாக சென்றனர். இங்கு அவர்கள் தங்கள் பலியை தொடந்தனர். பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக காணிக்கையாக வழங்கிய ஆடு மாடுகளை வரிசையாக வெட்டி சாய்ந்தனர். இவற்றில் 20 ஆயிரம் எருமை மாடுகள் மற்றும் 3லட்சம் ஆடுகள் கோழிகள் அடங்கும். இதனையடுத்து விசேட பூஜைகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே மிருகவதை கூடாது என மிருகங்கள் பாதுகாப்பு உரிமை அமைப்பினர் பிரசாரம் செய்தனர். இது போன்று பலி கொடுப்பதால் தங்களின் குறைகளை காதிமை அம்மன் தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே மக்களின் உணர்வை மதிக்கிறோம் என்று கூறி இந்த பலியை தடைசெய்ய அரசு மறுத்து விட்டதுமல்லாமல், இத்திருவிழா நடத்த ரூ.45 லட்சம் ஒதுக்கியுள்ளது. கம்போடியாவில் பொல்பொட் போராளிகளின் ஆட்சி நிலவிய போது 1970 ல் இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். அந்நேரம் டூவொல் சிலெங் சிறைச்சாலையில் பிரதம அதிகாரியாகக் கடமையாற்றிய டுச் 15,000 பேரின் படுகொலைகளை மேற்பார்வையிட்டார். புதன்கிழமை டுச் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரினார். title கம்போடியாவின் முன்னாள் சிறைச்சாலை பிரதம அதிகாரிக்கு 45 வருட சிறைத்தண்டனை? இப்பனிப்பாறைகளின் பெரும்பாலானவை நியூசிலாந்தின் கரையை அடைய முன்னரே உருகிப் பிரிந்துவிடும் என அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதே போன்றதொரு பனிப்பாறை நகர்வு கடைசியாக 2006 ஆம் ஆண்டில் அவதானிக்கப்பட்டது. "இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு இது ஒரு சாதாரண எச்சரிக்கை தான்" என நியூசிலாந்து அரசு கடற்போக்குவரத்தின் பேச்சாளர் ரொஸ் எண்டர்சன் தெரிவித்தார். இந்த பனிப்பாறைகள் கடலில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு 700 கிலோ மீட்டர் பரப்பளவில் மிதந்து வருகின்றன. பனிப்பாறைகள் கடலில் பயணி ப்பது செய்மதி மூலம் தெரியவந்து உள்ளது. title 98 அடி உயர பனிப்பாறை நியூசிலாந்தை நோக்கி நகர்வு title அமெரிக்க அரச விருந்தில் அழையா விருந்தினர்களாக கலந்துகொண்ட தம்பதியினர் இந்த கைப்பற்றலைக் கண்டித்து, நோர்வேயில் இருக்கும் ஈரானிய தூதரை நோர்வே அரசு அழைத்து விசாரித்திருந்தது. இதைக் கண்டித்திருக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சரகம், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு நோர்வேக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது. தற்போது லண்டனில் இருக்கும் எபாடி, தமது வங்கிக் கணக்கும், தமது கணவரின் வங்கிக் கணக்கும் ஈரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். நோபல் பரிசாக தமக்கு அளிக்கப்பட்ட நிதிக்கு ஈரானிய சட்டங்களின் கீழ் வரி விதிக்க முடியாது என்று கூறியுள்ள எபாடி, ஆனால் தமது பரிசுப்பணத்திற்கு வரி கட்டும்படி ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்கான காலகட்டம் டிசம்பர் 17 ஆம் நாள் எனவும் அவர் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதன்படி ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார். title ஜனவரி 26 ஜனாதிபதித் தேர்தல் டிச. 17 வேட்புமனுத் தாக்கல் "எம்வி கொக்கோ-4" என்ற பயணிகள் கப்பல் போலா தீவில் உள்ள லால்மோகன் என்ற நகரின் கரையோரத் துறைமுகத்தை நெருங்கும் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றியதாலும், தரையிறங்கும் பயணிகளின் கனத்தைத் தாங்காமலேயே கப்பலின் ஒரு பகுதி நீரினுள் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 10 பேர் இறந்ததாகவும் பலர் கப்பலின அடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர்களைத் தேடும் பணி ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதுவரையில் 50 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு துவெர் மாநிலத்தில் பலகோயெ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நியெவ்ஸ்கி கடுகதி என்ற இத்தொடருந்தில் கிட்டத்தட்ட 650 பேர் பயணித்திருந்தனர். மோதலுக்கு முன்னர் ஒரு பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர் ரயிலுக்கு அடியில் வெடிப்பொன்று நிகழ்ந்ததாக" ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தண்டவாளத்துக்கு அருகில் பள்ளமும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 7 கிலோ டி.என்.டி. குண்டுக்கு ஒப்பான நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்ய உள்நாட்டு உளவு நிறுவனத் தலைவர் அலெக்ஸாந்தர் போர்ட்னிகோவ் கூறியுள்ளார். அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதேநேரம், பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் 45 நாடுகள் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த ஆதரவு வழங்கின. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இலங்கைக்கு இந்த ஆதரவு கிடைத்தது. எனினும், முக்கிய சில நாடுகளின் கடும் எதிர்ப்பையடுத்து இந்த விடயம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், 2013 இல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இம்முடிவு வரவேற்கத்தக்கது" என மாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியா முன்னர் 1981 இலும் (மெல்பேர்ண் 2002 இலும் உச்சி மாநாடுகளை நடத்தியிருந்தது. title பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பினை இலங்கை இழந்தது அவுஸ்திரேலியாவில் நடக்கிறது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இச்சிலை மாஸ்கோவில் காட்சிப்படுத்தப்படும் என இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் பிரதான யுரேனியம் செறிவூட்டல் உலையான நட்டான்சின் Natanz அளவுக்குப் புதிய ஆலைகள் நிர்மாணிக்கப்படுமெனவும் இதற்கான வேலைகள் இரு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவ் ஊடகம் தெரிவித்துள்ளது. title 10 புதிய யுரேனியம் செறிவூட்டல் உலைகளை அமைக்க ஈரான் திட்டம் பின்னர் ஏனைய வாக்களிப்பு நிலையங்களில் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகள் 51 வீதத்தால் முகிக்கா வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் லாகலே 45வீத வாக்குகளைப் பெற்றார். புதிய ஜனாதிபதியாக முகிக்கா 2010 மார்ச் 1 இல் பதவியேற்கவுள்ளார். இவர் 2005 முதல் 2008 வரை அமைச்சராக இருந்தவர், தற்போது மேலவை உறுப்பினராக இருக்கிறார். முகிக்கா "டுப்பமாரொசு" என்ற பொதுவுடமைக் கட்சியில் இணைந்து 1960களிலும் 70களிலும் ஆட்சியிலிருந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக கெரில்லா போரில் பங்கு கொண்டார். இவர் பின்னர் 1972 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். 1973 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 14 ஆண்டுகள் இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சூழ்நிலைகளில் அடிக்கடி தடுத்து வைக்கப்பட்ட முகிக்கா கிணற்றுக்கு அடியிலும் இரு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார். 1985 மக்களாட்சி ஏற்பட்டவுடன், பொது மன்னிப்பின் கீழ் முகிக்கா விடுதலை ஆனார். முகிக்கா பின்னர் டுப்பமாரொசின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை ஏற்படுத்தி "அகண்ட முன்னணி" என்ற கூட்டமைப்பில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது. title உருகுவேயின் முன்னாள் கெரில்லா தலைவர் தேர்தலில் பெரும் வெற்றி இதனையடுத்து ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இவ்வாறு முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார். ஒரு நாள் முதல் பதினைந்து நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டு வருவதற்கான அனுமதி தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு உட்பட நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்றும் தம்மிடம் முகாம் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறாயினும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென தமிழர்களை அரசாங்கம் கேட்பது தொடர்பாக மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்தும் விமர்சித்துள்ளனர். “அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சென்று வரவேண்டுமென்றால் அதனை எவ்வாறு நடமாடும் சுதந்திரம் என்று வகைப்படுத்த முடியும்" என்று மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையத்தைச் சேர்ந்த சுகாஸ் சக்மா கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய தருணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கூட இலங்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் இது எவ்வாறு பதிலளிக்கும் கடப்பாடுடையதாக இருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேசமயம் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டே இந்த விடுதலை நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கார்டியனுக்கு கூறியுள்ளார்.இதேவேளை, வன்னியிலிருந்து புல்மோட்டையில் முகாமில் தங்கியுள்ள அகதிகளும் நேற்று முகாமிலிருந்து வெளியே சென்றனர். எனினும் புல்மோட்டையில் இவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் இன்மையால் அப்பகுதிகளில் நடமாடினார்கள். புல்மோட்டை மக்களும் இவர்களை ஆதரித்து சில உதவிகள் செய்தனர். முகாம் சிறுவர்கள் புல்மோட்டை கடற்கரையில் விளையாடியதையும் காணமுடிந்தது. கடந்தஆறு மாதங்களுக்கு மேலாக இந்த அகதிகள் முகாம்களுக்குள்ளிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் இருந்தனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு டிசம்பர் முதலாம் திகதி அனுமதியளித்து, இந்த முகாம்கள் திறந்தவெளி முகாம்களாக்கப்படும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. 2008 பெப்ரவரியில் சேர்பியாவிலிருந்து பிரிந்து ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை கொசோவோ மேற்கொண்டது. தமது சட்டரீதியான தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொன்றையும் தாம் செய்யப்போவதாக சேர்பிய ஜனாதிபதி பொறிஸ் ராடிக் தெரிவித்துள்ளார். மேலும் இவ் விசாரணைகள் கொசோவோவுடனான புதிய பேச்சுகளுக்கு வழிவகுக்குமெனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பில் பேசுவதற்கு எதுவுமில்லையென கொசோவோ கருதுவதே பிரச்சினையை உருவாக்குமென செய்தியாளர்கள் கூறுகின்றனர். தமது அதிகார எல்லைகள் தொடர்பில் இதுபோன்ற சவால்களை எதிர்நோக்கும் பல நாடுகள் இவ் வழக்கை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த வழக்கில் எவராலும் வெல்ல முடியாத வாதத்தை கொசோவோ முன்வைக்குமென கொசோவோ ஜனாதிபதி பட்மிர் செஜ்டியு கூறியதாக செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அவர்கள் இரானிய கடற்பரப்பினுள் தவறுதலாக வந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானியர்கள் இப்போது இந்த பாய்மரப்பயணிகள் மற்றும் அவர்களது சேதமடைந்த படகை பன்னாட்டு கடற்பரப்பினுள் இழுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு ஒரு கப்பல் மூலம் துபாய்க்கு கொண்டு செல்லப்படுவார்கள். பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கருத்து வெளியிடுகையில், இந்த பயணிகளின் கஷ்டம் முடிந்துவிட்டது என்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியிருக்கிறார். பப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்]] மேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 40 வீடுகள் தீக்கிரை]] இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்]] ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்]] பிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம்]] இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மன்னனின் கல்லறை கண்டுபிடிப்பு]] தாய்லாந்து 4,000 மொங் இன அகதிகளை லாவோசிற்குத் திருப்பி அனுப்ப ஆரம்பித்தது]] பீகாரில் பள்ளிக்கூடம் வெடி வைத்து தகர்ப்பு]] மலேசியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு]] அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நைஜீரியப் பயணி கைது]] இந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு]] போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்]] அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் அங்கீகாரம்]] ஏமன் வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டனர்]] கொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம்]] இயேசுநாதர் காலத்து வீடு இசுரேலில் கண்டுபிடிப்பு]] கொலம்பியாவில் மாநில ஆளுநர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை]] கினியில் நடந்த படுகொலைகளுக்கு இராணுவ ஆட்சியாளர் பொறுப்பு ஐநா]] திசைநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்]] இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் குயின்ஸ்லாந்தில் கண்டுபிடிப்பு]] போரில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐநா விளக்கம் கோரியுள்ளது]] நைஜீரியாவில் சந்தையில் சுமையுந்து ஒன்று மோதியதில் 100 பேருக்கு மேல் உயிரிழப்பு]] ஈரானில் அயத்தொல்லாவின் மறைவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி]] சனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது]] சூரியனை ஒத்த விண்மீன்களைச் சுற்றி வரும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு]] விண்வெளி ஆய்வுக்காக 'வைஸ்' விண்கலத்தை நாசா ஏவியது]] குவாண்டானாமோ சிறையை மூடி வேறு இடத்தில் அமைக்க முடிவு]] போயிங் டிரிம் லைனர் 787 -ன் முதல் சோதனை ஓட்டம்]] பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகள் சிறை உடைப்பு, 31 கைதிகள் விடுவிப்பு]] ஆயதங்களுடன் வடகொரியா விமானம் தாய்லாந்தில் மறிப்பு]] புதிய தெலுங்கானா மாநிலம் உருவாக்க இந்தியா முயற்சி]] பாக்தாத் தொடர்குண்டு வெடிப்பில் 126 பேர் பலி]] தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் இந்தியா முதலாம் இடத்தில்]] வங்காளதேசத்தில் இரு பேருந்துகள் மோதியதில் 20 பேர் உயிரிழப்பு]] பிலிப்பைன்சில் இராணுவச் சட்டத்தின் கீழ் பலர் கைது]] மட்டக்களப்பு கல்குடாவில் படையினர் சுட்டதில் பொதுமகன் கொல்லப்பட்டார்]] இரசியாவில் இரவு விடுதியில் வெடி விபத்து: 102 பேர் உயிரிழப்பு படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம் பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பாய்மரப்படகுப் பயணிகள் விடுதலை]] வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்]] முன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு]] 10 புதிய யுரேனியம் செறிவூட்டல் உலைகளை அமைக்க ஈரான் திட்டம்]] தற்கொலைக் குண்டுதாரி பெண் வேடத்தில் விழா நடைபெறும் இடத்துக்குள் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சோமாலியாவின் கல்வி, உயர்கல்வி, மற்றும் சுகாதார அமைச்சர்களே கொல்லப்பட்டவர்கள் ஆவர். செப்டம்பரில் இதே போன்றதொரு தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அதிகாரிகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு அல்-சபாப் உரிமை கோரியிருந்தது. தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்கள். வர்கிஸ்த்தான், சுவாட் ஆகிய இடங்களில் ஆனால், கமராவின் உயிருக்கு ஆபத்தில்லையெனத் தெரிவித்துள்ள தொடர்பாடல் அமைச்சர் கிட்ரிசா செரீப் இத் தாக்குதலின் பின்னணியில் அவரது உதவியாளர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மருத்துவ சிகிச்சைக்காக மொரொக்கோ வந்திருப்பதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவரான அபுபக்கர் டியகைட் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர் கூறினார். இராணுவப் புரட்சி மூலம் கமரா கடந்த ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். இத் துப்பாக்கிச் சூட்டுச் நிகழ்வு இடம்பெற்றபோது கமரா இராணுவ முகாமொன்றில் இருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ள போதும் ஜனாதிபதி காவற் பிரிவின் முகாம் மற்றும் வானொலி நிலையத்திலேயே துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தலைநகர் கோனக்ரியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. title உதவியாளரின் துப்பாக்கிச் சூட்டில் கினிய இராணுவ ஆட்சியாளர் படுகாயம் இரசியாவின் அரசு தொலைக்காட்சியான வெஸ்டி டிவி.யில் (VESTI TV) ஒளிபரப்பப்பட்ட செய்தியில் நேற்றிரவு நடந்த வெடி விபத்தில் 135 பேர் காயமடைந்ததாகவும், இதில் 85 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரவு விடுதியின் 8வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பட்டாசு வெடிக்கப்பட்டதாகவும், இதில் வெடி விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் நெரிசலிலும், தீயிலும் சிக்கி பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரைக் கண்டு நாலாபுறமும் தப்பியோடியவேளை துப்பாக்கிச் சூட்டிலும் நீரோடையொன்றில் வீழந்த வேளை முதலைக் கடிக்கும் உள்ளாகிய நிலையில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 பேர் இந்தப் பயணத்தை மேற்கொள்ள படகை எதிர்பார்த்துக் கொண்டு கடற்கரையில் காத்திருந்த வேளை இராணுவத்தினரைக் கண்டு தாங்கள் தப்பியோடியதாக சம்பவத்தில் முதலைக் கடிக்கு இலக்கான கோபாலப்பிள்ளை ஞானசேகரம் கூறுகின்றார். சுமார் மூன்றரை லட்சம் ரூபா வரை இதற்காக தான் செலவு செய்துள்ளதாகவும் இப்படியான பிரச்சினைகள் வரும் என்று தெரிந்திருந்தால் இந்த பயணத்தை தான் நாடியிருக்க மாட்டேன் என்றும் மீனவரான அவர் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். தகவலொன்றின் பேரிலேயே அந்த இடத்திற்கு விரைந்ததாகக் கூறும் இராணுவத்தினர் அங்கு மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது தப்பிச் செல்ல முயன்ற இளைஞரொருவர் தமது துப்பாக்கியை பறித்து சுட முற்பட்டதாகவும் இதனையடுத்து பதில் நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும் கூறுகின்றனர். வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் கல்லடி திருசெந்தூரைச் சேர்ந்த 22 வயதான கிறிஸ்டியன் ரொபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் இந்த படுகொலை சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக 57 பேர் ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நாட்டின் தெற்கிலுள்ள மாகுவிண்டனாவோ பிராந்தியத்தின் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து மணிலாவில் உள்ள மத்திய அரசாங்கம் அதிகாரத்தைப் பிடுங்கியுள்ளது. இந்த ஒட்டுமொத்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அம்படுவா என்ற செல்வாக்குமிக்க உள்ளூர் ஜாதியினரால் ஒரு கிளர்ச்சி உருவாவதைத் தடுப்பதற்காகவே இராணுவச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. 1986 ஆம் ஆண்டில் பெர்டினண்ட் மார்க்கோசின் ஆட்சிக்காலத்தின் பின்னர் முதற்தடவையாக இங்கு இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பலைச் சேர்ந்த 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நிறைய வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்படுவா சாதியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் காவலில் உள்ளனர். பிலிப்பைன்சில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன]] தலைநகர் டாக்காவின் தென்மேற்கேயுள்ளா பரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் 4,000 பேர் வீதி விபத்துக்களில் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீதிகள் சரியாக பராமரிக்கப்படாமை, வாகன ஓட்டிகளின் திறமையின்மை போன்ற்றவை இவ்விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அரசு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மும்பையில் நடந்த மூன்றாவது ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. "நான் விளையாடிய அணிகளில் இந்த அணியே மிகவும் சிறந்தது எனச் சொல்வதில் எனக்கு எப்பிரச்சினையும் இல்லை என சச்சின் டெண்டுல்கார் தெரிவித்தார். "கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி,” என இந்திய அணித் தலைவர் டோனி கூறினார். இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் அனைத்துலக அளவிலான தேர்வுத் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் அனைத்தலுக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. இலங்கைக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி, டோனி தலைமையில் கிடைத்த ஏழாவது வெற்றி. டோனி தலைமையில் இந்திய அணி டெஸ்டில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. மும்பை வெற்றி, டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற 101-வது வெற்றியாகும். இலங்கைக்கு எதிராக 13-வது வெற்றி அது. 1986-87 மற்றும் 1994 தொடர்களில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 3முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. title 20 ஆண்டு சச்சின் கனவு பலித்தது! டோரா பகுதி குண்டுவெடிப்புக்கு பின் சௌர்ஜா சந்தையில் குண்டு வெடித்தது. நல வாழ்வு அமைச்சகம் இச்சந்தைக்கு அருகில் உள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம், முஷ்ட்அன்சாரி பல்கலைக்கழகம் மற்றும் நுண் கலை நிறுவன கட்டடங்களுக்கு அருகிலும் குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்கள் பாக்தாத்தின் இதயப் பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுலுள்ள சிறப்பு அரசு அமைச்சக கட்டடங்கள் அரசு எதிர்ப்பு போராளிகளின் வீச்சிலிருந்து தப்ப முடியவில்லை என்பதை காட்டுகிறது. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து, தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள். இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து, தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள். அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை துறப்பதாக அறிவித்துள்ளனர். இராக்கில் இதுவரை பெற்றோலியம் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாத எண்ணெய் வயல்கள் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. பெரிய விலைக்கு ஏலத்தில் விடப்பட்ட தெற்கு இராக்கின் மஜ்னூண் எண்ணெய் வயலை ஐக்கிய இராச்சியத்தின் ஷெல் நிறுவனமும் மலேசியாவின் பெட்ரோனாஸ் எண்ணெய்க் கம்பனியும் பெற்றிருக்கின்றன. அருகில் உள்ள ஹல்ஃபயா எண்ணெய் வயலின் உரிமைகள் சீன அரச பெற்றோலிய நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பாக்தாதுக்கும் டியாலா மாகாணத்துக்கும் அருகில் உள்ள எண்ணெய் வயல்களை எவரும் ஏலத்தில் எடுக்கவில்லை. உலகில் மூன்றாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள இராக்கிய எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலைகளே தடையாக இருக்கின்றன. இதில் 40 டன்னுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ தளவாடங்கள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 4 ஊழியர்கள் கசக்கசத்தான் மற்றும் ஒருவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தாய்லாந்து துணை பிரதம மந்திரி இந்த வானூர்தியில் எண்ணெய் தோண்டும் கருவிகள் இருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததாகவும் ஆனால் சோதனையில் அனைத்தும் ஆயுதங்கள் என்று தெரியவந்ததாக தெரிவித்தார். மே மாதம் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆயுத விற்பனையை தடுக்கும் விதமாக மேலும் பல தடைகளை விதித்துள்ளது. ஆயுத விற்பனையின் மூலம் வடகொரியா ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இசுலாமியத் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் இன்று தெற்கு பிலிப்பைன்சில் சிறை ஒன்றைத் தாக்கி 31 கைதிகளை விடுவித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறை உடைப்பின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சிறைக் காவலாளி உடப்ட 2 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமது சகாக்களை விடுவிக்கும் பொருட்டே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பசிலான் தீவின் உதவி ஆளுநர் அல் பசீத் சகலாகுல் தெரிவித்தார். ஞாயிறன்று அதிகாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் தப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார். சென்ற ஆண்டில் அபு சயாஃப் தீவிரவாதிகள் மூவர் சிறையில் இருந்து தப்பியிருந்தனர். 2007 இல் இடம்பெற்ற சிறை உடைப்பில் 16 பேர் தப்பியிருந்தனர். போயிங் நிறுவனத்தின் டிரிம் லைனர் 787 முதல் சோதனை ஓட்டம் செவ்வாய் கிழமை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி ஏர் பஸ் நிறுவனத்தின் எ-380 க்கு போட்டியாக போயிங் நிறுவனத்தால் முன்னிருத்தப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் இரண்டரை ஆண்டு காலதாமதுக்குப் பிறகு நடக்கிறது. வடிவமைபு கோளாறு, ஊழியர்களின் வேலை நிறுத்தம், சில பாகங்கள் பற்றாக்குறை போன்றவை இத்தாமதத்துக்கு காரணமாகும். இதன் 840 வானூர்தியை வாங்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தன, எனினும் கால தாமதத்தால் பல நிறுவனங்கள் விலகிக்கிக்கொண்டன. இதன் சிறப்பு குறைவான எடையாகும். இதனால் இது குறைவான எரிபொருளையே செலவழிக்கும். இதன் காரணமாக இது நீண்ட தூரம் எரிபொருள் நிரப்பாமல் பறக்க முடியும். இந்த சோதனை ஓட்டத்துக்கு பின் தொடர்ச்சியாக 9 மாதங்களுக்கு இவ்வானூர்தி சோதனை ஓட்டத்தில் இருக்கும் அதாவது ஆறு வானூர்திகள் தொடர்ந்து பறப்பில் இருந்து இச்சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வானூர்தி திட்டத்துக்கு போயிங் நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. குவாண்டானமோவிலுள்ள கைதிகள் சிலரை விடுதலை செய்த பின்னர் ஏனையோரை அமெரிக்காவின் இலினோயி மாநிலத்திலுள்ள தொம்சன் என்ற இடத்தில் சிறைவைக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இப்புதிய சிறைச்சாலை சிகாகோ நகரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள மிசிசிப்பி நதியின் அருகாமையில் அமைக்கப்படவுள்ளது. இங்கு பாவிக்கப்படாமலுள்ள அரச கட்டடமொன்று சிறைச்சாலையாக மாற்றப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படவுள்ளது. தொம்சன் என்ற இடத்தில் அமையவுள்ள புதிய சிறைச்சாலை போதிய வசதிகளைக் கொண்டுள்ளதாக இலினோயி மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பேச்சுக்கள் அமெரிக்காவின் மத்திய அரசின் அதிகாரிகளுக்கும் மாநில அரசின் அதிகாரிகளுக்குமிடையே நடைபெறவுள்ளன. ஒபாமா பதவியேற்ற போது குவான்தனமோ சிறைச்சாலையை மூடப்போவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். வைஸ் (Wide-field Infrared Survey Explorer Wise) எனப்படும் மேற்படி விண்கலம் "டெல்ட்டா II" ஏவுகணை மூலம் வாண்டென்பேர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து 1409 GMT மணிக்கு ஏவப்பட்டது. 320 அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இவ்விண்கலம் சில குளிர்மையான விண்மீன்கள், பிரகாசமான பால்வெளிகள் உட்பட இதுவரையில் எவரும் அவதானிக்காத விண்பொருட்களைக் கண்டறியும். 25 ஒளியாண்டுகள் தூரத்திற்குள் உள்ள விண்பொருட்களை இது அடையாளம் காணும் எனக் கருதப்படுகிறது. அகச்சிவப்பு ஒளியில் முழு வானத்தையும் ஆராயும் இவ்விண்கலம் முன்னர் அனுப்பப்பட்ட விண்கலங்களை விட பல நூறு மடங்கு உணர்திறன் மிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெற்றுக் கண்களால் அவதானிக்கப்படாத விண்பொருட்களைக் கண்டறிய முடியும். "பூமியை நெருங்கி வரும் இருண்ட விண்கற்கள், வால்வெள்ளிகள் போன்றவற்றை முன்கூட்டியே அடையாளம் கண்டு, இவை பூமியைத் தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை இது கண்டறியும் என நாசாவைச் சேர்ந்ததிட்ட மேலாண்மையளர் வில்லியம் ஐரேசு தெரிவித்தார். எமது சூரியனை ஒத்த இரு விண்மீன்களைச் சுற்றி வரும் குறைந்த திணிவுடைய 6 கோள்களை பன்னாட்டு விண்வெளி ஆய்வுக் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. பிரகாசமான '61 வேர்ஜினிஸ் 61 Virginis விண்மீனைச் சுற்றிவரும் 3 புதிய கோள்களை வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடிந்ததாக தெரிவித்த விஞ்ஞானிகள், மேற்படி நட்சத்திரமானது பூமியிலிருந்து 28 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளதாக தெரிவித்தனர். இந்த விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களும் எமது பூமியை விட 25 மடங்குகள் வரை திணிவுடையவையாகும். 'எச்.டி.1461பி' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கோளை மாலை வேளையில் வானம் தெளிந்த நிலையில் உள்ள போது வெற்றுக்கண்ணால் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 'எச்.டி.1461' நட்சத்திரம் மேலதிகமாக இரு கோள்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மிகவும் வழவழப்பான திரவ மேற்பரப்பொன்றில் தெறித்து வரும் கதிர்களை இவ்விண்கலம் படம் பிடித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு கசினி விண்கலம் இங்கு வந்ததில் இருந்து இவ்விடத்தைப் படம் பிடிக்க முயன்று வந்தது. 2008 ஆம் ஆண்டில் அகச்சிவப்பு infrared தரவுகளைக் கொண்டு திரவ மெத்தேன் ஆறுகள் இங்கு இருப்பதை இது உறுதி செய்தது. டைட்டானின் அநேகமான ஆறுகள் அதன் வடக்கிலேயே உள்ளன. டைட்டானின் காற்று மண்டலம் பூமியைப் போன்றே நைதரசன் அங்கு அதிகமாகக் காணப்படுகிறது. ஆனாலும் டைட்டானின் பனிப்பிரதேசங்களில் வெப்பநிலை -180 °C ஆகும். இது அங்கு உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கிறது. இருந்தாலும், திரவம் அங்கு இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகளை அதிகரிக்கின்றது. படத்தில் காணப்பட்ட ஆறு 400,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. படகு ஒன்றை இந்த ஆற்றில் இறக்குவதற்கு அறிவியலாளர் குழு ஒன்று நாசாவுக்குப் பரிந்துரைத்துள்ளது டைம்" எனப்படும் இப்படகு 2016 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டால், 2023 ஆம் ஆண்டிலேயே டைட்டானைச் சென்றடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளாது. திங்கட்கிழமையன்று அயதுல்லா அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வீதிகள் எங்கும் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சீர்திருத்தவாதிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன. எதிர்கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர். தலைநகர் தெகரான் மற்றும் அயத்தொல்லா பிறந்த இடமான நசாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன. 87 வயதான அயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தலைவர்களில் ஒருவர், ஆனால் பின்னர் அதிபர் அஹமெதிநிஜாத் அவர்களை வெளிப்படையாக இவர் குறை கூறினார். சுமையுந்து மலை ஒன்றில் கட்டுக்கடங்காத வேகத்துடன் கீழிறங்கிய போது தரையில் இருந்த வாகனங்களின் மீது மோதி பின்னர் அருகில் இருந்த சந்தை ஒன்றில் நுழைந்தது. இவ்விபத்தில் மேலும் 40 பேர் படுகாயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். வாகனங்களும், போக்குவரத்துப் பாதைகளும் சீராகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் நைஜீரியாவில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. "55 பேர் மட்டுமே இறந்துள்ளதை இப்போதைக்கு என்னால் உறுதிப்படுத்த முடியும். வாகனச் சாரதி கட்டுப்பாட்டை இழந்து பொது மக்கள் கூடியிருந்த இடத்தில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார் என காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார். பல வாகனக்கள் தீக்கிரையாகியுள்ளன. கோகி மாநிலத்தில் மூன்று நாட்களைத் துக்க நாட்களாக அம்மாநில ஆளுநர் இப்ராகிம் ஐடிரிஸ் அறிவித்துள்ளார். சென்ற வாரம், ஓயோ மாநிலத்தில் பேருந்து ஒன்று சுமையுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார். பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது. தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற்குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன. தான் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தவறாக புரிந்தது கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த செய்தி வெளியான பிறகு ஜெனரல் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப் பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஆஸ்பத்திரி போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் தாதியர் ஆவர். இந்தக் கப்பலில் இருந்து 64 பேரை மட்டுமே உயிருடன் அப்போது மீட்க முடிந்தது. இந்த சோக சம்பவம் ஆஸ்திரேலியாவில் இன்னமும் மறையவில்லை. இந்நிலையில் இந்த கப்பலைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது இக்கப்பல் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்தக் கப்பலை வெளியே எடுக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான பணி அடுத்தமாதம் தொடங்கவுள்ளது. கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த அதிநவீன கேமராவை இறக்கி போட்டோ எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கப்பலை வெளியே எடுக்கும் பணி நடைபெறும். title இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஆஸி. கப்பல் கண்டுபிடிப்பு தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திசைநாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். நோத்ஈஸ்ட் மாதாந்த இதழின் செம்மையாக்கல், பதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் இன நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதத்திற்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திசைநாயகத்திற்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேற்படி சஞ்சிகையை நடத்துவதற்கு நிதி சேகரித்தமை, இதன் மூலம் பயங்கரவாத்தை ஊக்குவித்தமை போன்ற அவசரகாலப் பிரமாணங்களின் கீழ், தண்டனைக்குரிய குற்றச்செயல்களைப் புரிந்த குற்றவாளியாகவும் அவர் இனம் காணப்பட்டார். கைதுசெய்யப்பட்ட தமது நண்பர் யசிகரனையும் அவரது மனைவியையும் பார்ப்பதற்காக திசைநாயகம் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றபோது 2008, மார்ச் 7 ஆம் நாள் கைது செய்யப்பட்டார். கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ஆகஸ்ட் 31, 2009 title ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்-மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு எதிர்க்கட்சிக்காரர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை இராணுவ ஆட்சியாளர்கள் அடக்கியதில், 150 பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் வீதிகளில் வைத்து இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். 687 பேரை நேர்காணல் கண்டு பெறப்பட்ட தகவலை வைத்து ஐ. நா. வின் பாதுகாப்புச் சபை கினியின் வன்முறைகளை ஆராய்ந்தது. இதன்பின்னர் 60 பக்கங்களையுடைய அதன் அறிக்கை வெளியிடப்பட்டது. பொது மக்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் பாலியல் வல்லுறவுகளுக்கு அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் கம்ராவும் அவரது அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டுமென ஐ. நா. வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் மக்கள் கொலை செய்யப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் சர்வதேச நீதிமன்றம் கினி ஆட்சியாளர் கம்ராவை விசாரணை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் டிசம்பர் 3ம் நாள் கம்ரா மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுக் காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். எனவே கம்ரா மீதான விசாரணைகளுக்கு அவரின் நெருங்கிய சகாக்கள் பதிலளிக்க வேண்டிவருமெனக் கருதப்படுகிறது. மொரோகோவில் கம்ரா சிகிச்சை பெற்றுவருவதால் ஐ. நாவின் அறிக்கை குறித்து எதையும் கூற முடியாதுள்ளதென மொரோகோ வெளிநாட்டமைச்சர் சொன்னார். கினி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் செப்டம்பர் 29, 2009 படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம் டிசம்பர் 5, 2009 கெக்குவெட்டா மாகாண ஆளுநரான லூயிஸ் செலுலர் என்பவர் வீட்டிலிருந்த போது போராளிகள் உள்ளே நுழைந்து காவலாளியைச் சுட்டுக் கொன்று, ஆளுநரை பணயக் கைதியாகப் பிடித்துச் சென்றனர். ஃபார்க் என்ற கொலம்பிய புரட்சிகர இராணுவப் படை என்ற போராளிக் குழுவே இவரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஃபார்க் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டுப் பகுமியில் ஆளுநரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆளுநரின் கழுத்து வெட்டப்பட்டு இருந்ததாக கொலம்பிய அதிபர் அல்வாரோ உரிபே தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டில் உரிபே பதவியேற்ற பின்பு இடம்பெறும் மிக முக்கிய அரசியல் கொலை இதுவாகக் கருதப்படுகிறது. இக்கடத்தல் சம்பவம் கொலம்பியாவில் கடந்த கால இருள் நிறைந்த நாட்களை ஞாபகப்படத்துவதாகச் சிலர் கூறினர். கெக்குவெட்டா மாநில உதவி ஆளுநர் இந்நிகழ்வு பற்றிக் கூறுகையில் கடத்தப்பட்ட ஆளுநரைத் தேடி படையினர் காடுகளுக்குள் சென்றபோது அவரின் சடலத்தைப் படையினர் கண்டெடுத்தனர். சம்பவம் கசப்பானதாக இருந்தாலும் ஆளுனர் கொலை செய்யப்பட்டார் என்பதை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்கிறது எனத் தெரிவித்தார். கொலம்பியாவின் காடுகளில் பெரும்பாலான பகுதி ஃபார்க் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது. இவர்களை அடக்க இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதால் குண்டுத்தாக்குதல்களும் கடத்தல் சம்பவங்களும் மிக இலகுவாக இடம்பெறுகின்றன. title கொலம்பியாவில் மாநில ஆளுநர் பார்க் போராளிகளால் கடத்தப்பட்டுக் கொலை "இந்த வீடுகள் உள்ள இடத்தைச் சுற்றிலும் கல்லறைகள் உள்ளன. இப்பகுதியில் யூதர்கள் நிறைந்திருந்தனர்" என்று தொல்பொருள் ஆய்வாளர் யார்தேனா அலெக்சான்ட்ரே கூறியுள்ளார். இங்குள்ள வீடுகள் சுண்ணாம்பு மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளன. ஒரு சாதாரண யூதக் குடும்பம் வசித்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. தற்போது வீட்டின் நுழைவாயில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டின் சுவரை பாதிக்கப்படாத வகையில் தோண்டி எடுக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிய கண்டுபிடிப்பு குறித்து யார்தேனா மேலும் கூறுகையில், இந்த இடம் இயேசுநாதர் நடமாடிய இடமாக இருக்கலாம். அவரும், அவரது நண்பர்களும், உறவினர்களும் ஓடியாடிய விளையாடிய இடமாக இது இருக்கலாம் என்றார். இந்த வீட்டு வளாகப் பகுதியில் ஒரு மறைவிடமும் உள்ளது. இது யூதப் புரட்சியாளர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள கட்டப்பட்ட மறைவிடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மறைவிடத்தில் ஆறு பேர் சில மணி நேரங்களுக்கு பதுங்கிக் கொள்ளலாம். நாசரேத்தில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் மக்கள் தொகை இல்லை. மிக மிக குறைந்த அளவிலான மக்களே இருந்தபடியால் இந்த குடியிருப்பைத் தவிர நகரில் வேறு எந்த இயேசு காலத்து குடியிருப்பும் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த குடியிருப்பில்தான் இயேசுநாதர் வாழ்ந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பப்படுகிறது. இவர்களில் 28 பேர் கல்கமுவ அரசாங்க மருத்துவ மனையிலும் மேலும் எட்டுப் பேர் அநுராதபுரம் அரச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. ஏமன் மற்றும் வெளிநாட்டு எண்ணெய் நிலையங்களைத் தாக்கும் நோக்கில் தொலைதூர மலைப் பகுதி ஒன்றில் கூடி அல் கைதாவினர் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அல் கைதா மூத்த உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அல் கயீதா அமைப்பினரின் பல பதுங்கு இடங்களை தாங்கள் தாக்கியதாகவும், அதில் முப்பத்து நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஏமன் அரசு தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் குறித்த செய்தி வந்துள்ளது. ஏமனின் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலரும் பலியாகியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா ஏமனுக்கான தனது இராணுவ உதவிகளை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாளில், மேலவை உறுப்பினர்கள் (செனட்டர்கள்) வாக்களித்திருப்பது என்பது நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இதுவே முதல் முறை. எதிர்பார்த்தது போல குடியரசுக் கட்சியினர் இம்மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். மக்களாட்சிக் கட்சி செனட்டர்களுடன் இணைந்து இரண்டு சுயேட்சைகள் ஆதவாக வாக்களித்தனர். தற்போது மருத்துவக் காப்பீடு இல்லாத 30 மில்லியன் அமெரிக்கர்கள் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 87 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "1903 க்குப் பிறகு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சமூக சட்டம் இது" என்று இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய அதிபர் ஒபாமா கூறியுள்ளார். எந்த காரணத்துக்காக அரசியல்வாதிகள் வாஷிங்டனுக்குத் தேர்ந்தெடுத்து மக்களால் அனுப்பப்பட்டார்களோ, அந்தக் காரணங்களை அரசியல்வாதிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசியல்வாதிகள் பாடுபட வேண்டும் என்பதே அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பம் என்றும் அதிபர் குறிப்பிட்டார். புனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதினார். அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார். இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது. ஆனா‌ல் அவருட‌ன் வ‌ந்த ‌பிரா‌ன்‌ஸ் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த பா‌தி‌ரியா‌ரு‌க்கு கா‌லி‌ல் எலு‌ம்பு மு‌றிவு ஏ‌ற்ப‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். பாப்பரசர் புனித 16ம் பெனடிக் மீது தாக்குதல் நடத்திய பெண் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டை உடையவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 25 வயதான குறித்த பெண் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டுக்களை உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த பெண் சித்த சுயாதீனமற்றவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெண் பாப்பரசர் மீது நடத்திய தாக்குதலினால் பாரிய பாதுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதலின் காரணமாக பாப்பரசர் சற்று சோர்வடைந்த போதிலும், நத்தார் ஆராதனைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. 17 பேர் உயிரிழந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனோரைத் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.​ மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.​ நீருக்குள் நீந்தி மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான பிரத்யேகப் பயிற்சி பெற்ற வீரர்களும் குஜராத்தில் இருந்து அழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிபிசியில் இவ்விபத்து வியாழக்கிழமை நடந்ததென்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெள்ளிக்கிழமை நடந்ததென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிலையில் வியாழக்கிழமை இந்த பால கட்டுமானப் பணியில் 100-க்கு மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.​ அப்போது பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இப்பாலமானது தென் கொரியாவின் ஹையுண்டாய் இஞ்சினியரிங் மற்றும் இந்தியாவின் காம்மன் இந்தியா நிறுவனங்களால் கூட்டாக கட்டப்படுகிறது. நோர்த்வெஸ்ட் ஏர்லைன்சைச் சேர்ந்த விமானம் வெள்ளியன்று ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கிளம்பி டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் நேரத்தில் 23-வயது அப்துல்முத்தலாக் என்ற இந்த நபர் ஏதோ ஒன்றை வெடிக்க முயற்சி செய்தார் எனவும், சக பயணிகள் இம்முயற்சியைத் தடுத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்நபர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் இலண்டனில் தங்கியிருந்தவர் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து புலன் விசாரணைகளில் பிரித்தானியக் காவல்துறையினர் உதவிவருகின்றனர். நைஜீரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவது தங்களது அரசாங்கத்தை சங்கடப்படுத்தியுள்ளது என நைஜீரிய தகவல்துறை அமைச்சர் கூறியுள்ளார். சனியன்று அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழ்ந்தவர்கள் அனைவரும் பேருந்தின் கீழ்த்தட்டில் பயணித்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்துக்கு சற்று முன்னர் தான் சற்று நேரம் உறங்கியதாக சாரதி காவல்துறையினரிடம் தெரிவித்தார். அண்மைக்காலங்களில் பெராக்கில் இரண்டு சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2007 ஆம் ஆண்டில் பேருந்து விபத்து ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டனர். நாட்டில் நிகழ்ந்த மிகவும் மோசமான சாலை விபத்தாக அப்போது இது சொல்லப்பட்டது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அவுரங்காபாத்தில் உள்ள இந்தப் பள்ளிக்கூடத்தை இறுநூறுக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு, பின்னர் அதனை டைனமைட் வெடிவைத்து தகர்த்துள்ளனர். பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் துருப்பினர் இப்படியான பள்ளிக் கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்படுகிறார்கள் என்று மாவோயியவாதிகள் அரசாங்கத்தினரைக் குற்றம்சாட்டுகின்றனர். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் நாற்பது பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாவோயியப் போராளிகள் கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்த பல வட இந்திய மாநிலங்களில் போராடி வருகின்றனர். 20 ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக இது வரையில் 6,000 பேர் வாரையில் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு பெட்சாபுன் மாகாணத்தில் இருந்த மொங் மக்கள் அகதி முகாமைத் தாம் மூஉடி விட்டதாக தாய் அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்லாந்து இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, மற்றும் ஐக்கிய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. "அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை இன்று அதிகாலை 0530 மணிக்கு ஆரம்பித்தது" என தாய்லாந்தின் இராணுவ அதிகாரி தனா சாருவட் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் கிட்டத்தட்ட 5,000 இராணுவத்தினர் பங்கு பற்றினர் ஒரே நாளில் அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்" என அவர் தெரிவித்தார். அகதிகள் எவரும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தாய் பிரதமர் அபிசித் வெச்சாசிவா தெரிவித்தார். ஊடகவியலாளர்களோ அல்லது வேறு எவரோ முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1975 இல் கம்யூனிச பத்தெட் லாவோ குழு லாவோசைன் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். இவர்களில் பெரும்பான்மையானோர் மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரெஞ்சு கினி, கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். மீதமிருந்தோரில் பலர் ஐநாவின் உதவித்திட்டத்துடன் லாவோசிற்குத் திரும்பினார்கள். கிட்டத்தட்ட 8,000 மொங் மக்கள் இன்னமும் அகதிகளாக தாய்லாந்தில் தங்கியிருக்கிறார்கள். மத்ஹ்திய சீனாவின் எனான் மாகாணத்தில் ஆன்யாங் என்ற பழம்பெரும் தலைநகரத்திகுக் கிட்டவாக சிகாசூ என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கக் கல்லறைக்குச் செல்வதற்கு 130 அடி பாதை ஒன்றும் உள்ளது. கல்லறையில் மூன்று மனிதர்களின் உடல்கள் உள்ளன. 60 அகவை மதிப்புடைய ஆண், 50 மற்றும் 25 அகவை மதிப்புடைய இரு பெண்களுடைய உடல்கள் அங்கு காணப்பட்டுள்ளன. இவை அநேகமாக கிபி 220 ஆம் ஆண்டில் இறந்த சாவோ மன்னனின் உடல் எனவும், 230 ஆம் ஆண்டில் இறந்த அவனுடைய மனைவி, மற்றும் அவர்களின் தாதி ஆகியோருடையதாக இருக்கல்லாம் என தொல்பொருளியலாலர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு டிசம்பரில் இந்த இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தியதில் இருந்து இங்கு 250 இற்கும் மேற்பட்ட புராதனச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொன், மற்றும் வெள்ளியினாலான பாத்திரங்கள், மற்றும் பொருட்களும் அடங்கும். சாவோ காலத்து நிகழ்வுகளைக் குறிக்கும் கல் ஓவியங்களும் சாவோவின் தனிப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. "இதுவரை கிடைக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து இக்கல்லறை சாவோ சாவோவினுடையது என நாம் திட்டவட்டமாகக் கூற முடியும் என சீன அரசின் கலாச்சார மரபுப் பாதுகாப்புக்கான நிறுவனத்தின் பதில் தலைவர் குவான் கியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அக்மலுக்கு மன்னிப்பு வழங்கும்படி அக்மலின் குடும்பமும், பிரித்தானிய அரசும் பலமுறை கேட்டிருந்தும் சீன அரசு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத்" தெரிவித்தார். ஆனாலும் சீனத் தூதுவர் திரு அக்மல் முன்னர் மனநிலை பாதிக்கப்பட்டதாக எங்கும் பதியப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார். செப்டம்பர் 2007 இல் வட-மேற்கு சீனாவின் உருமுச்சி நகரில் 4 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் அடங்கிய பையுடன் அக்மல் கைது செய்யப்பட்டிருந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்பு சீனாவில் மரணதண்டனை பெற்ற முதலாவது ஐரோப்பிய ஒன்றிய நபர் அக்மல் ஆவார். ஒரு தொகுதியாக கொண்டுவரப்பட்ட 78 இலங்கை தமிழர்களில் 47 பேர் இன்று அனுப்பப்பட்டிருப்பதாக, இந்தோனேசியாவின் மேற்குப்பிராந்தியத்தை சேர்ந்த சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் இகெடே வித்தியார்த்த அவர்கள் தெரிவித்திருக்கிறார். செவ்வாய்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு சென்ற இவர்களில் 16 பேர் ருமேனியாவுக்கும், 31 பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர். மீள்குடியேற்றத்திற்காக இவர்கள் அங்கு அனுப்பப்படுவதாக "ஜகார்த்தா குளோப்" பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது இந்த மாத முற்பகுதியில் இக்கப்பலிலிருந்த 15 தமிழர்களை கனடாவும் அவுஸ்திரேலியாவும் ஏற்றிருக்கின்றன. மீதமுள்ள 16 பேரும் விரைவில் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான பயண ஆவனங்கள் தயாரானதும் அவர்களின் பயணம் இருக்கும் என்றும் அவர் கூறினார். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர், ஆப்கானிஸ்தானியர், ஈராக்கியர்களுக்கு கேந்திர இடமாக இந்தோனேசியா உள்ளது. title ஓசனிக் வைக்கிங்கில் இருந்த தமிழர்களில் 16 பேர் ரோமேனியாவுக்கு, 31 பேர் ஆஸி.க்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்களாக இருந்துவந்த இவர்கள் கட்சித் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே விலகியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தலைமைத்துவம் மக்களின் நலன் கருதி செயற்படுவதில்லை என பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை முன்வரவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது சிறுபான்மையினரின் உரிமைகளை பறித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்து கலாசார அமைச்சு, கிறிஸ்தவ அமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு என்பன பறிக்கப்பட்டுள்ளமை இதற்கு உதாரணம் என இது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின், பரிந்துரைகள், யுத்தத்தின் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தநிலையில் அரசாங்கம், வடக்கு கிழக்கு மக்களுக்கு 60 வருட போராட்டத்தின் பின்னரும் எவ்வித தீர்வுகளையும் வழங்குவதற்கு முன்வரவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுமக்கள் முன்கூட்டியே இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேலான தீயணைப் புப் படையினர் தீயைக் கட்டுப் படுத்த கடுமையாக முயற்சித்தனர். இதில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகினர். நிலைமைகள் சீரடையும் வரை பொதுமக்களை அங்கு செல்ல வேண்டாமென அரசாங்கம் அறிவித் துள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பிரதமர் கோலின் பார்னெட் மாநிலத்தை இயற்கைப் பேரி டர் பகுதியாக அறிவித்தார். இதனால் அவசரகால நிதியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்துக்களைப் பாதுகாக்கும் எண்ணத்தில் மக்கள் மீண்டும் இருப்பிடங்களை நோக்கிச் செல்வார்கள் என்பதால் தீயேற்பட்ட பிரதேசத்துக் குள் எவரும் நுழையாமல் கண்காணிக்கப்படுகின்றது. தீப்பிழம்புகள் காற்றினால் தாவப்பட்டு மரங்கள், கட்டடங்களும் எரிகின்றன. எரிந்த நிலையில் மரங்கள், கட்டடங்கள் என்பன வீதிகளில் விழுவதால் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் அடிக்கடி இவ்வாறு காட் டுத் தீயேற்படுகின்றது. title அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள், 1,500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு title இயற்கைப் பேரிடர் பகுதியாக அறிவிப்பு பப்ப்புவா நியூ கினியின் வடமேற்குக் கரையில் மரோபி மாகாணத்தின் மலைப்பகுதியில் நேற்றுப் பறந்து கொண்டிருக்கையில் விமானத்தின் இயந்திரப் பகுதியில் தீப்பிடித்துத் தரையில் மோதியது. கொல்லப்பட்ட அனைத்துப் பயணிகளும் பாப்புவா நியூ கினியைச் சேர்ந்தவர்கள். நான்கு பெரிவர்களும், இரண்டு சிறுவர்களும் அடங்குவர். விபத்து நடந்த இடத்தை அடைந்த மரோபி மாகான காவல்துறை உயரதிகாரி கமாண்டர் பீட்டர் கின்னஸ் விமானம் முற்றாகச் சேதமடைந்துள்ளது, எதுவும் செய்வதற்கில்லை எனத் தெரிவித்ததாஅக உள்ளூர் தேசியத் தினசரி அறிவித்துள்ளது. பப்புவா நியூ கினியில் கோக்கோடா என்ற இடத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற வேறொரு விமானவிபத்தில் 9 ஆஸ்திரேலிய உல்லாசப் பயணிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். கத்தோலிக்க பதிப்பகமான "எரால்டு" தனது வாரப் பத்திரிக்கையில் "அல்லா" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சு தடை விதித்தது. இதனை எதிர்த்து எரால்டு பத்திரிகை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று உயர் நீதிமன்றம் வழங்கியது. அதில் அல்லா என்ற வார்த்தை இஸ்லாமிய சமயத்தினர்க்கு மட்டுமே உரியது அல்ல என நீதிபதி தீர்ப்பு வழங்கினர். இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த இதழின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மலேசியர்களில் ஏறத்தாழ 850,000 பேர் கத்தோலிக்கர்கள் ஆவர். கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார். இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும். இப்பிரச்சினை குறித்து அந்நிறுவனத்தின் அறிவியலாளர் குழு ஓர் அவசரக் கூட்டத்தை நடத்த விருப்பதாக அனத்தோலி பெர்மினோவ் வொய்ஸ் ஒஃப் ரஷ்யா வானொலிச் சேவைக்குத் தெரிவித்தார். எந்தவொரு திட்டமும் பன்னாடுகளின் ஒத்துழைப்புடனேயே இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். முன்னராக இந்த வாய்ப்பு 45,000 இல் ஒன்று எனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் வாய்ப்பு நாசாவின் இந்த அறிவிப்பால் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. 350 மீட்டர் குறுக்களவு உள்ள இச்சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30,000 கிமீ தூரத்தில் பூமியை நெருங்கி வரும். அடுத்த 7 ஆண்டில் மேலும் பூமியை நோக்கி நகர்ந்து 2036-ம் ஆண்டு பூமி சுற்றுப் பாதைக்குள் நுழையும். எப்படி இச்சிறுகோளை அழிக்கவிருக்கிறார்கள் என்பதை திரு பெர்மீனொவ் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என அவர் தெரிவித்தார். "இந்தக் கோள் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். இது பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கோளுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்றார் பெர்மீனோவ். இரு கைப்பந்து அணிகளையும் பார்க்க கூட்டம் கூடியபோது, அந்த தற்கொலையாளி களத்துக்குள்ளே வண்டியை செலுத்திவந்து வெடிக்கச் செய்ததாக செய்திகள் கூறுகின்றன. சுற்றிவரவுள்ள கட்டிடங்களை நிர்மூலம் செய்த குண்டுவெடிப்பு, மக்களை இடிபாடுகளில் சிக்கச் செய்தது. பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 600 பேர் கொல்லப்பட்டனர். கான்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் பிரயாக்ராஜ் கடுகதி நின்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில், பிவானி – கோரக்பூர் இடையே செல்லும் கோரக்தாம் கடுகதி, அதே பாதையில் வந்து, பிரயாக்ராஜ் கடுகதியின் பின்புறம் கடுமையாக மோதியது. மோதிய வேகத்தில, பிரயாக்ராஜ் கடுகதியின் இரண்டு பெட்டிகள் மிக மோசமாக சேதமடைந்தன. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட பத்து பயணிகள் உயிரிழந்ததாக வடக்கு மத்திய ரயில்வேயின் அலகாபாத் மண்டல பொது மேலாளர் ஹரிஷ்சந்திர ஜோசி தெரிவித்தார். இந்த ரயிலின் "கார்டு' சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு ரயில்களும் தில்லியிலிருந்து வந்ததாகவும் அவர் கூறினார். பிரயாக்ராஜ் கடுகதியில் அலகாபாத்துக்கு பயணம் செய்த பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த விபத்தில் காயமின்றி தப்பினார். ;சிதாம்ரி லிச்சாவி எக்ஸ்பிரஸ்-மகத் எக்ஸ்பிரஸ் மோதல் மற்றொரு விபத்து சராய்போபட் பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிகழ்ந்தது. இந்த விபத்தில் லிச்சாவி கடுகதி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று பனி மூட்டம் காரணமாக மட்டுமன்றி, வட இந்திய மின் தொகுப்பில் மின்சாரம் தடைபட்டதாலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. title 3 ரயில் விபத்துகளில் 10 பேர் பலி இப்பகுதியில் சுமார் 40 அரிதான சிம்பன்சிகளும் வேறு மிருகங்களும் வாழ்ந்து வருகின்றன. தேசியப் பூங்காவின் ஊழியர்கள் உள்ளூர் மக்கள் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து தேவையான பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என விருங்காவின் உயரதிகாரி எம்மானுவேல் டி மெரூடே தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் உலங்கு வானூர்தி ஓன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உடனடியாக ஆபத்துக்குள்ளான பகுதிகளில் குறைந்தளவு மக்களே வசிக்கின்றபடியால், அவர்கள் வாழும் குடியேற்றப் பகுதிகளை பாதுகாக்கும் பணி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது. எரிமலைக் குழம்புகள் மக்கள் செறிந்து வாழும் தெற்குப் பகுதி நோக்கிச் செல்வதாக, விருங்காவின் தலைமைக் காவலர் இனசெண்ட் உம்புரனும்வே தெரிவித்தார். "அதிகாலை 0345 மணிக்கு பலத்த இடியோசை கேட்டது. போர் மீண்டும் வெடித்து விட்டதோ என்று பயந்தேன். பின்னர் மலை எரிந்து, குழம்புகள் சீறிப் பாய்ந்தாதைக் கண்டேன் என்றார் இனசெண்ட். நியாமுலாகிரா மலை 3,058 மீட்டர் உயரமானது. இது ஆப்பிரிக்காவில் உள்ள மலைகளில் இன்னமும் உயிருடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று. கோமா நகரில் 200,000 பேர் வசிக்கிறார்கள். அத்துடன் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். மோசன் ஹட்ஸ் அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த விமானத்தின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்காக மூன்று ஆண்டுகள் செலவழித்து, இந்தப் புத்தாண்டு நாளில் அதன் எண்ணம் கைகூடியது. "அதன் சில பாகங்களை இப்போது கண்டுபிடித்திருப்பது ஒரு மிகப் பெரும் செய்தியாகும் என அக்குழுவின் உறுப்பினர் டொனி ஸ்டுவர்ட் அறிவித்திருக்கிறார். கடுமையான குளிர் காரணமாக விமானத்தின் இயந்திரமும் பழுதாகிப் போகவே அதனை அங்கேயே கைவிடவேண்டியதாகிப் போனது. சோமாலியா தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு]] ஆந்திரா கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு]] எயிட்டியில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய இளம் பெண் 15 நாட்களின் பின் மீட்கப்பட்டார்]] மகாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்காவில் கரைக்கப்படுகிறது]] இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச பெரு வெற்றி அரசுத் தொலைக்காட்சி]] பொன்சேகாவின் விடுதியைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு]] வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொன்சேகா வாக்களிக்கவில்லை]] இலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல் ஆரம்பமாகியது]] தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்தில் குண்டுச் சத்தங்கள்]] சோமாலிலாந்து குண்டுவெடிப்பில் நான்கு காவல்துறையினர் இறப்பு]] எத்தியோப்பிய விமானம் பெய்ரூட்டுக்கு அருகே கடலில் 89 பேருடன் வீழ்ந்தது]] இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார்]] மலேசியாவின் முன்னாள் மாமன்னர் ஜோகூர் சுல்தான் இஸ்காண்டர் காலமானார்]] இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் மேலும் தாக்குதல்கள்]] இலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச் சீட்டுகள்]] விண்கற்களின் நிறம் பூமியை அண்மிக்கும் போது மாறுவது ஏன் கொழும்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர் வீட்டில் குண்டுவீச்சு]] 27ம் திகதி காலை இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு]] மாசசூசெட்ஸ் மாநில மேலவைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வி]] நடிகை குஷ்புவின் பாலியல் குறிப்புகளுக்கு எதிராக இந்திய நீதிமன்றம் கருத்து]] இலங்கையின் தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு]] நியூட்டனின் 'ஆப்பிள் கதை'யின் மூலப் பிரதி இணையத்தில் வெளியிடப்பட்டது]] நைஜீரியாவில் முஸ்லிம் கிறிஸ்தவர்களிடையே மோதல், பலர் உயிரிழப்பு]] போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் சென்னையில் கைது]] அவதார் திரைப்படம் கோல்டன் குளோப் விருதைப் பெற்றது]] போப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை]] இலங்கை அதிபர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க அமெரிக்கா தூண்டுதல்]] இந்திய அரசியல் வாதி ஜோதி பாசு காலமானார்]] யாழ்-கொழும்பு பேருந்து வவுனியாவில் விபத்துக்குள்ளாகியதில் 2 பேர் உயிரிழப்பு]] கருங்கல்லில் நாதசுரம் வடிவமைத்து நாமக்கல் சிற்பி சாதனை]] கென்யாவில் மதகுருவின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு]] இந்த மில்லேனியத்தின் மிக நீண்ட சூரிய கிரகணம்]] இலங்கை அதிபர் தன் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக அறிவித்தார்]] இரண்டாவது மிகச் சிறிய புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது]] மேற்கு வங்கக் கங்கைக் கரையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் இறப்பு]] சூடானில் 2005 அகதிகள் கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்]] ஈரானிய இயற்பியலாளர் கொலையில் தமக்குத் தொடர்பு இல்லை: அமெரிக்கா அறிவிப்பு]] இலங்கை தேர்தல் வன்முறையில் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார்]] டாக்காவில் நடைபெற்ற கிரிக்கட் முக்கோணத் தொடரில் இலங்கை வெற்றி]] தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது]] பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு]] இலங்கையில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறை குறித்து அமெரிக்கா விசனம்]] சனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு]] சாரா பாலின் வர்ணனையாளராக பொக்ஸ் செய்திகளில் இணைந்தார்]] சனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இலங்கையில் ஆரம்பம்]] விடுதலைப் புலிகளின் ஆயுத முகவர்கள் அமெரிக்க நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்]] ஆப்கானிஸ்தானில் பன்னாட்டுப் படையினர் ஆறு பேர் கொல்லப்பட்டனர்]] இஸ்ரேல் எகிப்து இடையில் புதிய தடைச் சுவர்]] இந்தோனேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் விசாரணை]] இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம்]] ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்கி ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு]] இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்]] ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்]] அங்கோலாவில் டோகோ கால்பந்தாட்டக் குழு மீது துப்பாக்கிச் சூடு]] மட்டக்களப்பு மாநகரசபை மேயர் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார்]] அல்லா விவகாரம்: மலேசியாவில் கிறித்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்]] இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார்]] எகிப்தில் ஆறு கிறித்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்]] இலங்கை படுகொலை 'சனல் 4' ஒளிநாடா உண்மை ஐநா கருத்து]] இரண்டாம் உலகப்போரின் அணுகுண்டுகளுக்குத் தப்பியவர் காலமானார்]] இலங்கை அதிபர் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐநா அறிவிப்பு]] ரஷ்யாவில் தற்கொலைத்தாக்குதலில் ஆறு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்]] அதிபர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு]] ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது]] உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் திறப்பு]] ஏமனுக்கான தமது தூதுரகங்களை அமெரிக்காவும் பிரித்தானியாவும் மூடின]] கொங்கோவில் எரிமலை சீற்றம் அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்து]] உத்தரப் பிரதேசத்தில் மூன்று தொடருந்து விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு]] 1900களில் தொலைந்த விமானத்தின் பாகங்கள் அண்டார்க்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன]] பாகிஸ்தானில் கைப்பந்தாட்ட மைதான தற்கொலைத் தாக்குதலில் 88 பேர் உயிரிழப்பு]] 2030களில் பூமியை மோதவிருக்கும் சிறுகோளைத் தடுக்கும் முயற்சியில் ரஷ்யா]] கடவுளைக் குறிக்க அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்: மலேசியாவில் தீர்ப்பு]] பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது இளைஞர் நிதின் கார்க் மெல்பேர்ணில் வசித்து வந்தார். ஆஸ்திரேலிய நிரந்தரக் குடியுரிமை பெற்ற இவர், மெல்போர்னில், மேற்கு பூட்ஸ்கிரே என்ற இடத்தில் உள்ள "த ஹங்க்றி ஜாக்ஸ்" உணவகத்தில் அவர் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இரவு 10 மணிக்கு நிதின் கார்க் வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டார். மெல்போர்ன் நகரில் ஆண்டர்சன் தெரு வழியாக அவர் சென்றபோது, ஆஸ்திரேலியர்கள் சிலர் கும்பலாக வந்து, நிதின் கார்க்கை சரமாரியாக தாக்கினார்கள். அவரது விலா பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தினார். நிதின் கார்க் வேலை செய்யும் உணவகம் அருகில்தான் இந்த சம்பவம் நடந்தது. உணவகத்தில் இருந்தவர்களை நோக்கி, என்னை காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பியபடி, தாக்கியவர்களிடம் இருந்து நிதின் தப்பி ஓடத் தொடங்கினார். மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று தாக்கினார்கள். உணவகத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள பூங்காவில் நிதின் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ராயல் மெல்பேர்ண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பதற்றம் காணப்படுகிறது. மாணவர் நிதின் கார்க் படுகொலைக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்தார் மாணவர் நிதின் கார்க் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமான செயல். இதை கண்டித்து ஆஸ்திரேலியா அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ஜூலியா கில்லார்ட், “இந்திய இளைஞர் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். மெல்பேர்ண் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்களும் இதற்கு கண்டனம் தெரிவிப்பார்கள் என நினைக்கிறேன்” 2009 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 70,000 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றனர். இந்திய மாணவர்கள் மீதான அண்மைக்காலத் தாக்குதல்களை அடுத்து, இந்த எண்ணிக்கை 2010 இல் 20% இனால் குறையலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஏமனில் இருக்கின்ற அமெரிக்கக் குடிமக்கள் அனைவரையும் மிகவும் உஷாராக இருக்குமாறு அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கிடையே, பயங்கரவாத எதிர்ப்பில் ஏமனுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் பேச்சுக்கள் நடத்தியுள்ளார். இதன் போது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குச் செல்லவிருந்த விமானத்தைத் தகர்க்க அல் காய்தா பயங்கரவாத அமைப்பு முயன்றது என்ற குற்றச்சாட்டுக்கு இடையே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சென்ற சனிக்கிழமையன்று முதல் முறையாக அல் காய்தா அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் ஏமனில் அமெரிக்க துருப்புகள் தங்குவது என்பதை ஏற்க முடியாது ஒன்று என்று ஏமனின் மூத்த அரசியல் ஆலோசகர் பிபிசியிடம் தெரிவித்தார். title ஏமனுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன் உறுதி விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. புதிய கோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம் தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்குள் இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. இவற்றின் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 1,200C முதல் 1,650C வரை (2,200F 3,000F) ஆகக் காணப்படுகிறது. நாசாவின் பில் போருக்கி என்ற வானியலாளர் "எரிமலைக் குழம்புகளை விட இந்தக் கோள்கள் மிகவும் வெப்பம் கூடியதாக இருக்கிறது எனத் தெரிவித்தார் உண்மையில், முதல் இரண்டு கோள்களும் காய்ச்சிய இரும்பைவிட அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு உயிரினங்கள் வாழமுடியாது". கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49 UTC) விண்ணுக்கு ஏவப்பட்டது. புர்ஜ் துபாய் என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த இக்கட்டிடம், தற்போது இதனை நிர்மாணித்தவரின் பெயரில் அழைக்கப்படுகிறது. 160 மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமைந்துள்ளது. துபாய் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவந்த சமயத்தில் இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அமீரகங்களின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, செல்வச் செழிப்பு மிக்க தனது அண்டை ஊரான அபுதாபியால் மீட்கப்படவேண்டிய நிலைக்கு துபாய் தள்ளப்பட்டுள்ள ஒரு தருணத்ததில் இக்கட்டிடம் திறக்கப்படுகிறது. இருந்த போதிலும் கட்டடத் திறப்பு விழா சிறப்பாக நடந்ததாக கட்டடத்தின் வடிவமைப்பு பொறியாளர் பில் பேக்கர் கூறினார். இக்கட்டடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் என பல வசதிகள் உள்ளன. இக்கட்டடத்தில் மின் தூக்கி வசதிகளுடன் தானியக்க படிக்கட்டுகளும் உள்ளன. உலகின் மிகப்பெரிய மசூதியும், நீச்சல் குளமும் 158வது, 76வது மாடிகளில் அமைந்துள்ளன. title உலகின் ஆக உயர்ந்த கட்டடம் துபாயில் திறப்பு இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார். இந்தநிலையில் மகிந்தவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார். அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அதிபர் ராஜபக்ச்சவும் பொன்சேகாவும் பகீரத முயற்சியில் இறங்கியிருந்தனர். இலங்கையின் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21 நாடாளுமன்ற உறுப் பினர்கள் உள்ளனர். முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பொன்சேகாவும் எதிர்க் கட்சிகளின் சார்பில் ரணில் விக்ரமசிங்கேவும் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழர்களின் நல்வாழ்வுக்கு 10 அம்சத் திட்டங்களை நிறைவேற்று வதாக பொன்சேகா உறுதி அளித்தார். முன்னைய விடுதலைப் புலிகள் உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, அதி உயர் பாது காப்பு வளையங்களை நீக்குதல், உரிய வகையில் மறுகுடியேற்றத்தை மேற்கொள்வது, தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் போன்றவை பத்து அம்சத்திட்டங்களில் அடங்கும். தமிழர்களின் நிலங்களைத் திருப்பித் தருவேன் என்றும் பொன்சேகா சூளுரைத்துள்ளார். [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] எனினும் காவல்துறை வாகனம் ஒன்றின் மீதே சுமையுந்து மோதி வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மேலும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் தாகெஸ்தானில் இப்படியான தாக்குதல்கள் கடந்த ஆண்டு முதல் அதிகரித்திருந்தது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாக்கியில் அணு குண்டு வீசப்பட்டபோது அவர் அங்கிருந்தார். இந்த குண்டு வீச்சில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இரண்டு தாக்குதல்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் உயிர் தப்பியிருந்தனர். ஆனாலும், யமகுச்சி ஒருவரே இரண்டு இடங்களிலும் தாக்குதலுக்கு உள்ளானவர் என்று அதிகாரபூர்வமாக யப்பானிய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர். தமது கடைசிக் காலத்தில், யமகுச்சி அணுகுண்டுத் தாக்குதலில் உயிர்தப்பிய தனது அனுபவங்களைப் பற்றி பல சொற்பொழிவுகளை ஆற்றியிருந்தார். அணுவாயுதங்கள் ஒரு காலத்தில் முற்றாக அழிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஐநா பேச்சாளர் மார்ட்டின் நெசீர்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான தமது குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கான போதிய கால அவகாசம் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். தமது சபையின் சட்டதிட்டத்தின் படி, கண்காணிப்பு குழுவை எந்தவொரு நாட்டுக்கும் அனுப்புவதாயின் சபையின் ஏதாவது அமர்வுகளில் அதற்கான அனுமதியை பெறவேண்டும். இவ்வாறான நிலையில், இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு பணிகளுக்கு தமது குழுவினரை அனுப்புவது தொடர்பில், அமர்வுகளில் அனுமதியை பெறுவதற்கு போதுமான காலஅவகாசம் இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதன் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உள்ளதாக தேர்தல்கள் செயலகம் முன்னர் அறிவித்திருந்தது. [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] சித்திரவதை மற்றும் சட்ட விரோத கொலைகள் குறித்த ஐநா மன்ற சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இது குறித்து ஒரு விசாரணை வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகத்துக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் என்கிற ஒரு அமைப்பு அனுப்பிய அந்த ஒளிநாடாவில், அரச படையினர் போல தோற்றம் அளிப்பவர்கள், நிர்வாணமாக்கப்பட்ட நிராயுதபாணிகள் சிலரை சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் காணப்பட்டன. இந்த ஒளிநாடா போலியானது, திரிபுபடுத்தப்பட்டது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிவந்துள்ளது. இதற்கிடையில், பிலிப் ஆல்ஸ்டனின் அறிக்கை பொது ஊடகங்களுக்குச் செல்லும் முன்னர் இலங்கை அரசிடம் முறையாகக் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து இலங்கை அரசின் கடும் கண்டனத்தை அவர் தெரிவித்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் உதய நானயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பிரபாகரன் அவர்களின் பெற்றோர் பனாகொடையில் இருந்த ராணுவ கண்டோன்மெண்ட் பகுதியில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இலங்கை இராணுவம் கூறுகிறது. மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியின் விருப்பத்தின் பேரில் அவரது இறுதிக் கிரியைகள் இடம் பெறும் என்றும், அவரது இரு மகள்களோ அல்லது மகனோ உடலைக் கோரினால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். 1924, ஜனவரி 10ஆம் நாள் பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தராவார். 1943 ம் ஆண்டு தொடக்கம் 1982 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச காணி உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவரரின் இளைய மகனே பிரபாகரனாவார். கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமய வழிபாட்டுக் கட்டிடங்களுக்கு நெருப்பு வைக்கப்படாலம் என்ற அச்சத்தைத் தொடர்ந்து எல்லா தீயணைப்பு நிலையங்களும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மீட்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார். கோலாலம்பூர் தேசா மெலாவத்தியில் அமைந்துள்ள மூன்று மாடி மெட்ரோ டாபெர்னக்கல் தேவாலயத்தின் கீழ்தளம் நேற்று நள்ளிரவில் தீக்கிரையானதாக தேவாலயத் தலைவர் பீட்டர் இயாவ் கூறினார். நான்கு பேர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தேவாலயக் கட்டிடத்திற்குள் தீக்குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அந்தச் சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் இல்லை. இதனிடையே அந்தச் சம்பவத்தை விசாரிப்பதில் தடயவியல் நிபுணர்கள் போலீசாருடனும் மோப்ப நாய் பிரிவுடனும் இணைந்து செயல்படுவதாக தீயணைப்பு பணிகளுக்கு பொறுபேற்றிருந்த அனுவார் ஹரூன் கூறினார். மலேசியாவில் கத்தோலிக்க வார இதழான தி ஹெரால்ட் அல்லா" என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று சென்ற வாரம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. கடவுளைக் குறிக்க அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்: மலேசியாவில் தீர்ப்பு]] title மலேசியா: ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி எகிப்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு கிறித்தவ தேவாலயத்தில் ஜனவரி 7 ஆம் நாள் இடம்பெறும் கொப்ட்டிக் கிறிஸ்மஸ் முன்தினப் பிரார்த்தனை முடித்து விட்டுத் திரும்பிய கிறித்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர் நடத்திய ஆறுபேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குழுமிய ஆர்பாட்டக்காரர்கள் கல்லெறிதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மோதல்கள் உருவாயின. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபையின் தலைவியான சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாக கொழும்பில் சற்று முன் நடந்த ஒரு ஊடகவியளாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். எது எவ்வாறாகினும் தான் தொடர்ந்து சுதந்திர கட்சியின் அங்கத்தவராக இருப்பதாகவும் கூறினார். தான் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயம் வெளியாகியதும் தனது பாதுகாப்பு பல்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் அங்கே அறிவித்தார். [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] எசெண்டன் என்ற புறநகர்ப் பகுதியில் 29-வயது இந்தியர் உடம்பில் 15% தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இரவு விருந்து ஒன்றுக்குச் சென்றுவிட்டு இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மனைவியை வீட்டில் இறக்கி விட்டு தானது வாகனத்தை நிறுத்துவதற்காகச் சென்ற வேளையிலேயே இத்தாக்குதல் நடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கும் போது நான்கு இனந்தெரியாதோர் அவரைத் தாக்கி அவர் மீது திரவப் பொருள் ஒன்றை வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் கும்பலில் ஒருவர் அவரின் மீது தீக்குச்சியைப் பற்றை எறிந்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது கைகள், முகம் மற்றும் மார்புப்பகுதியில் பலத்த எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன. சென்ற வாரம் இந்திய மாணவர் ஒருவர் மெல்பேர்ணில் இனந்தெரியாதோரினால் தாகுதலுக்குள்ளாகி இறந்த நிகழ்வை அடுத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு இந்திய அரசு சென்ற வாரம் எச்சரித்திருந்தது. நேற்றிரவுத் தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை ஜனவரி 4, 2010 கபிண்டா பிரதேசாத்திற்கு சுயாட்சி கோரி 1963 ஆம் ஆண்டில் இருந்து போராடி வரும் பிளெக் என்ற கபிண்டா விடுதலை முன்னணி என்ற போராளிகள் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. ஞாயிறன்று ஆரம்பமாகவிருக்கும் ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டி திட்டமிட்டவாறு இடம்பெறும் என அதன் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர். "இது ஒரு பயங்கரவாதச் செயல்" என இத்தாக்குதலை அங்கோலா அரசு வர்ணித்திருக்கிறது. பல தசாப்தங்களாக தனிநாடு கோரிப் போராடி வரும் பிளெக் அமைப்பு 2006 ஆம் ஆண்டில் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு வந்திருந்தது. "இது ஒரு ஆரம்பத்தாக்குதலே. இது போன்ற தாக்குதல்கள் கபிண்ட்டாவின் அனைத்துப் பகுதிகளிலும் தொடரும்" என பிளெக் அமைப்பினர் போர்த்துக்கலின் லூசா செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர். டோகோ தனது முதலாவது போட்டியை திங்கட்கிழமை அன்று ஆடவிருக்கிறது. இத்தாக்குதலை அடுத்து அங்கோலாவில் பாதுகாப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கோலாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் முவாண்டும்பா தெரிவித்தார். பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் போது மரணம் அடைந்தார் எனபதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மறைந்த வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறை தீருவில்லில் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட மூன்று பிரமுகர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார் ஜனவரி 8, 2010 கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 380 பேரும் புதிய மகசீன் சிறைசாலையில் 98 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 24 பேரும், மட்டக்களப்பில் 17 பேரும், வெலிக்கடையில், கண்டியில் 24 பேரும், 6 பேருமென 577 பேர் இந்த சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முற்பகல் புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.டி.சில்வா கைதிகளின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. மிக நீண்ட நேரம் தமிழ்க் கைதிகளுடன் உரையாடிய அவர், சட்டமா அதிபருடன் ஆலோசித்து விசாரணை அல்லது விடுதலைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் ஜனவரி இறுதியில் நடைபெறும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் தங்கள் போராட்டம் தொடருமெனத் தமிழ்க் கைதிகள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்கள் உறுதியளித்து பத்து நாட்களாகியும் எதுவித நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படாததால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாங்கள் குதித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் தாம் இக்கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சும் அதிகாரிகளும் கூறியதால் தாங்கள் போராட்டங்களைக் கைவிட்டதாகவும் எனினும் எதுவுமே நடைபெறவில்லையெனவும் தெரிவித்தனர். நேற்று ஆரம்பித்த இந்த உண்ணாவிதரப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் இவர்களின் உறுதி மொழிகளைக் கேட்டு இனியும் தாங்கள் ஏமாறப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 8 மலையேறிகளும் அவர்களது பயிற்சியாளரும் 3,700 மீ (12,140 அடி) உயரமான கெடன்-டாவு என்ற மலைஉச்சியை அடையும் போது பனிச்சரிவு Avanlanche ஏற்பட்டது. உலங்குவானூர்தி மூலம் தேடிய உள்ளூர் தேடுதல் பிரிவினர் பனியில் சிக்கிக் கிடந்த ஐவரினது இறந்த உடல்களைக் கண்டுபிடித்தனர். நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 20 வயதுடையவர்கள் என்றும் பயிற்சியாளர் 40 வயதுடையவரென்றும் காவல்துறை பேச்சாளர் அலெக் உக்னிவென்கோ தெரிவித்தார். அனைவரும் இரசியர்கள் ஆவர். விசாரணையில் ஈடுபட்டவர்களுள் ஒருவர் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்த கப்டன் கபில் என ஆஸ்திரேலிய வழக்கறிஞர் சாரதா நாதன் தெரிவித்தார். இந்த 8 பேரும் தமது அகதி விண்ணப்பம் ஆஸ்திரேலிய அரசினால் பரிசீலிக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் கீழ் படகில் இருந்து தாமாகவே முகாமுக்குப் போனவர்கள். ஏனைய 244 பேரும் கடந்த மூன்றரை மாத காலமாக படகிலேயே தங்கியுள்ளனர். 1951 ஐக்கிய நாடுகள் ஜெனீவா உடன்பாட்டின் படி தமது நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை மூன்றாவது நாடொன்று பாதுகாக்க வேண்டும். அத்துடன், அகதிகளின் சொந்த நாட்டு அதிகாரிகள் அவர்களை விசாரிக்கும் உரிமையும் கிடையாது. ஆனாலும், இந்தோனேசியா இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிகாரிகள் அந்த 8 அகதிகளையும் இலங்கைக்குத் திரும்புமாறு வற்புறுத்தியதாகவும், படகில் இருக்கும் ஏனையோர் கட்டாயமாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு பூசா முகாமில் விசாரிக்கப்படுவார்கள் என்று பயமுறுத்தியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார் டிசம்பர் மாத முற்பகுதியில் கப்பல் அகதி ஒருவர் தமது சுகவீனமடைந்த தாயாரைப் பராமரிப்பதற்காக இலங்கைக்குச் சென்ற வேளை அங்கு அவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்." "ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் இந்தக் கப்பலைத் திருப்பி இந்தோனேசியாவுக்கு அனுப்புவதற்குக் காரணமாக இருந்தால், ஆஸ்திரேலியாவே இவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என திருமதி நாதன் தெரிவித்தார். இலங்கையின் சனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். முதலில் பலாலி விமானப்படைத்தளம் சென்ற அதிபர் அங்கே இராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார் பின்னர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சென்று பொதுமக்களுக்கு உரையாற்றினார். தனது உரையின் போது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு முழு சதந்திரத்தோடு வாழும் உரிமை உள்ளது என்று கூறினார். அதைவிட வடக்கின் நீர்ப்பாசனம் விருத்திசெய்யப்படும் என்றும் அதற்கு மகாவலி கங்கையின் நீர் வடக்கு நோக்கி திருப்பப்படும் என்றும் உறுதி வழங்கினார். [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] 266கிமீ நீளமான இந்த சுவரை நிர்மாணிக்க உத்தரவிட்டதுடன் அதில் அதி நவீன கண்காணிப்புக் கருவிகளையும் நிர்மாணிக்க நெத்தன்யாகு பணித்துள்ளார். இந்த செயற்றிட்டம் சுமார் இரண்டு ஆண்டுகளில் $270 மில்லியன் செலவில் முடிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. இவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செவ்வாயன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் பிணையில் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தவிர 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. திசைநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில மாதங்களாக உள்ளூரிலும், சர்வதேச ரீதியிலும் இலங்கை அரசு மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ஆகஸ்ட் 31, 2009 ஊடகவியலாளர் திசைநாயகத்திற்கு பன்னாட்டு ஊடக சுதந்திரத்திற்கான விருது நவம்பர் 22, 2009 ஜனவரி 11 இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக இருந்தாலும் யோகராசா மட்டுமே நீதி மன்றத்தில் இன்று ஆஜரானார். ஏனையவர்களை ஜனவரி 22 இல் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்திற்கு வெள்ளை உடை அணிந்து வந்த யோகராசா ஏனைய ஆயுத முகவர்களின் குடும்பங்களை நோக்கி சிரித்து கையசைத்ததுடன் ஊடகங்களுக்கு எவ்வித கருத்தையும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தார். நீதி மன்றத்தினால் இவர்களுக்கு தலா 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 4000 நிலையங்களில் ஆரம்பமாகியது. வரும் புதன் கிழமை வரை தபால் மூல வாக்கெடுப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 401,119 வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக இம்முறை தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர். தேர்தல் செயலகம் கருத்து தெரிவிக்கையில் சுமார் 458,154 விண்ணப்பங்கள் கிடைத்த போதும் 57,036 விண்ணப்பங்களை நிராகரித்ததாகவும் அறிவித்தார். நிராகரித்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப படிவங்கள் சரியாக நிரப்பபடாமையே இதற்கு காரணமாகும். தேர்தல் ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்களிப்பு சுமூகமாக நடைபெற வழி சமைத்துள்ளதாகத் தெரிவித்தார். பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் ஆகியவற்றிற்கு தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் உறுதிப் படுத்தினார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டைகளை முன்னெடுக்க கூடுதல் துருப்புக்களை அனுப்ப நேட்டோ நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், பன்னாட்டு படையின் இராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையில், அண்மையில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஒரு கருத்துக் கணிப்பில், பெரும்பான்மையானோர் தமது நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட 1500 இற்கும் அதிகமான ஆப்கானிஸ்தர்கள் பங்கு பற்றிய இக்கருத்துக் கணிப்பில், 70 விழுக்காட்டினர் தமது நாடு சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இது சென்ற ஆண்டு நடத்தப்பட்ட கணிப்பிலும் 40% அதிகமாகும். category=இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 noinclude> பொக்ஸ் தொலைக்காட்சி கருத்து தெரிவிக்கையில் பாலின் தனக்கென தனியான ஒரு நிகழ்ச்சியைக் கொண்டிருக்க மாட்டார் ஆயினும் தொலைக்காட்சியில் எழுமாற்றாகத் தோன்றி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவார் என தெரிவித்தனர். இந்த உடன்படிக்கையின் பின் உள்ள சம்பளம் போன்ற நிதி விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பொக்ஸ் செய்தி நிறுவனத்தில் இணைவதையிட்டுத் தான் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாக பாலின் அவர்களின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொக்ஸ் தொலைக்காட்சியும் சாரா பாலின் தம்முடன் இணைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக அறிவித்துள்ளது. {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} துப்பாக்கிச் சூட்டை உறுதிப்படுத்திய பொலீசார் உந்துருளியில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நோக்கம் தமக்கும் தெளிவில்லாமல் உள்ளதாகத் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச திசமகராமையில் நடத்திய தேர்தல் ஊர்வலத்தில் கலந்து கொள்ளச் சென்ற நபர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} பல தசாப்தங்களின் பின்னர் முழு இலங்கைக்குமாக நடக்கும் இந்த தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் வன்முறைகள் அற்றதாகவும் நடைபெற தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு]] இந்த நிலநடுக்கம் கடற்கரையோரமாக அல்லாமல் நிலத்துக்கு அடியில் நிகழ்ந்துள்ளதால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மியான் சன்னு என்ற நகரில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் 12 சிறுவர்கள் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேருந்து சாரதியும் உயிரிழந்தார். பயணிகள் தொடருந்தில் பயணம் செய்தவர்கள் எவரும் காயமடையவில்லை. பாகிஸ்தானில் ரெயில்வே கடவைகள் பொதுவாக ஆளற்றவை, மற்றும் பாதுகாப்பற்றவை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விபத்துக்கள் இங்கு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. இன்று புதன்கிழமை காலையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பனிப்புகார் அவ்வழியில் நிறைந்திருந்ததால் இதனால் பேருந்து குவெட்டாவில் இருந்து லாகூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்துடன் மோதியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் புத்திசுவாதீனம் அற்றவர் என்று தென் மாகாண பொலீஸ் டி.ஐ.ஜி கிங்ஸ்லி எக்கநாயக தெரிவித்தார். சனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு]] 71 ஓட்டங்களை இலங்கை அணிக்காகப் பெற்றுக்கொடுத்த மகேல ஜயவர்த்தன ஆட்ட வீரனாகத் தெரிவு செய்யப்படார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} இந்த நிகழ்வு குறித்து செய்தியை சேகரித்துவிட்டு வெளியேறும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களால் தக்சிலா தாக்கப்பட்டு, அவரது செய்தி சேகரிக்கும் கருவி மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் பிடுங்கப்பட்டதாக செய்திகள் கூறின. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு போலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின. இவ்வன்முறையின் போது பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறையாளர்களை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை காவல்துறையினர் வீசீனர். வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் அதிபருக்கு ஆதரவான பிரச்சாரங்களில் கலந்து கொள்ளவென இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் அனவும் அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்; அதிபரின் உத்தரவிற்கிணங்க தனியார் செல் தொலைபேசி நிறுவனங்கள் அதிபருக்கு ஆதரவாக குறுஞ்செய்திகளை தமது வாடிக்கையாளருக்கு அனுப்பி வருகின்றனர். வடக்கில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட தமிழர்கள் வாக்களிக்க முடியாதுள்ளதாகவும் கண்காணிப்பாளர்கள் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர். ஈரானின் அணுவியல் விஞ்ஞானி மெளசூத் அலி மொகம்மதி என்பவர் கார்க் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். தெகரான் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரான இவர் ஈரானின் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பவர். கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதற்காகப் புறப்பட்ட வேளை அருகிலிருந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு தானியங்கி மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. ஈரானின் அணுவாயுதத் திட்டத்தில் இவருக்குத் தொடர்பிருக்கவில்லை என இப்போது தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் இவர். இக்கொலைக்குப் பின்னால் இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளதாக ஈரான் ஜனாதிபதி அகமெதிநெசாத் குற்றம்சாட்டினார். இது போன்ற தாக்குதலை இசுரேலின் மொசாட் அமைப்பே வெளிநாடுகளில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்பேராசிரியர் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் சில தகவல்கள தெரிவிக்கின்றன. ஆனாலும் 2009 ஆம் ஆண்டில் அரசூத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் வேட்பாளரை ஆதரிப்பவர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கலவரத்தின் போது 13 காவல்துறையினரின் இறப்புக்கும், மேலும் 5 அகதிகளின் இறப்புக்கும் இவர்கள் காரணமாக இருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இரண்டு தசாப்த காலமாக அங்கு இயங்கிவந்த சோபா அராடி அகதி முகாமை மூடுவதற்கு காவல்துறையினர் எத்தனித்த வேளையிலேயே அங்கு கலவரம் வெடித்தது. இந்த மரணதண்டனைகள் வடக்கு மற்றும் தெற்கு அரசியல்வாதிகளின் அமைதிப் பேச்சுக்களுக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மரணதண்டனைக்குட்படுத்தப் பட்டவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய டார்பூர் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மூன்று மாதகாலம் நீடிக்கும். கங்காசாகர் பகுதியில்தான் கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதனால் இந்த இடம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் மகர சங்கராந்தி அன்று இங்கு ஸ்னானம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கங்கை நதியில் குளித்தால் தங்களின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படும் என்று இந்துக்கள் நம்புகின்றனர். "மிகத் திறமையான சுற்றுவட்ட-வேகக் கருவி ஒன்றை நாளையே உருவாக்கினால், இன்னும் மூன்றாண்டுகளில் இதற்கான விடை கிடைக்கும். இன்னும் பத்தாண்டுகளில் பூமியை ஒத்த கோள்களின் மொத்தத் தொகையையும் நாம் அறியக்கூடியதாக இருக்கும்." கெக் I Keck I தொலைக்காட்டி கெக் அவதானநிலையத்தின் ஒரு பகுதியாகும். இது கால்டெக் மற்றும் கலிபோர்னியா ப்ல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஓரு கூட்டுத் தயாரிப்பாகும். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை தொடர்பில் இங்கு தெரிவித்த ஜனாதிபதி, இம்முறை நான் ஜனாதிபதியானவுடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குள்ள அநாவசியமான அதிகாரங்களை நீக்குவேனெனவும் கூறியுள்ளார். இந்நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுகளை விக்கிசெய்திகளின் சிறப்புப் படங்கள் காட்டுகின்றன: அப்துல்லா அல்-பைசல் என்ற மதகுருவை விடுதலை செய்யக்கோரி அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறையினரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளினால் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கென்யாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 5 பேர் இறந்ததாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் 7 பேர் வரையில் இறந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் தெரிவித்தார். முஸ்லிம் இளைஞர்கள் ஜமீயா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்தவுடன் தமது தலைநகர் நைரோபியின் மையப் பகுதியில் தமது ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களில் சிலர் அல்-சபாப் என்ற சோமாலிய இஸ்லாமியக் குழுவின் கொடிகளைத் தாங்கியிருந்ததாக சில பத்திரிகையாளர்கள் கூறினர். ஜமெய்க்காவில் பிறந்த பைசல் 26 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி, ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்தார். கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த இவர் கிறித்தவராகவே வளர்ந்தார். 16 வயதில் சவுதி அரேபியாவுக்குச் சென்றவர் அங்கு 8 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அவர் இசுலாம் மதத்தைத் தழுவினார். ரியாத் நகரில் இசுலாமியக் கல்வியில் பட்டப படிப்பை முடித்து ஐக்கிய இராச்சியம் திரும்பினார். அங்கு பல இடங்களுக்கும் சென்று இனவன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். யூதர்கள், இந்துக்கள், மற்றும் மேலைநாட்டவர்களைக் கொலை செய்வதற்குத் தூண்டினார். 2007 ஆம் ஆண்டில் இவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு, தென்னாப்பிரிக்கா வந்தார். இதன் பின்னர் 2009 டிசம்பர் 24 ஆம் நாள் அவர் நைஜீரியா, அங்கோலா, மொசாம்பிக், சுவாசிலாந்து, மாலாவி, தன்சானியா ஊடாக கென்யா வந்ததாக கென்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் டிசம்பர் 31 இல் கைது செய்யப்பட்டார். காம்பியா இவரை ஏற்றுக் கொள்ள உடன்பட்டிருந்ததெனினும், அவரை அங்கு ஏற்றி செல்ல எந்த விமான நிறுவனமும் முன்வரவில்லை. தான்சானியாவும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூரிய கிரகணம் மத்திய ஆப்பிரிக்க பகுதியில் முதலில் தெரிய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக இந்தக் கிரகணம் கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் சீனா என்று நகர்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 11 நிமிடம் அது நீடித்து காணப்பட்டது. இத்தகையதொரு மிக நீண்ட சூரியகிரகணம் 3043 ஆம் ஆண்டு வரை மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். அடுத்த கங்கண சூரியகிரகணம் 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து வவுனியாவில் பாதைஅயை விட்டு விலகியதில் மரம் ஒன்றுடன் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதன் போது அதன் சாரதியும் பயணி ஒருவரும் உயிரிழந்ததாக இவ்விபத்து குறித்து வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர். சாரதியின் கவனயீனமான ஓட்டமே இவ்விபத்துக்குக் காரணம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். நாதசுரத்தில் 12 துளைகளையிட்டு, அனைத்து தாளங்களையும் தப்பாமல் இசைப்பது என்பது சாதனைக்குரியது. இரண்டரை அடி உயரமுள்ள இந்த நாதசுரம் இரு துண்டுகளாக செதுக்கப்பட்டது. முன் பகுதி குழாய் போன்ற வடிவமைப்பிலும் பின் பகுதி நாதசுரத்தின் துளைகள் அடங்கிய குழல் பகுதியாகவும் செதுக்கப்பட்டுள்ளது. இது வேறு எங்கும் நிகழ்த்தப்படாத சாதனை. "சில மாதங்களாக சிந்தித்து, சரியான கற்களைத் தேர்வு செய்ய, பல இடங்களுக்குச் சென்று ஒரே கல்லைத் தெரிவு செய்து, அதில் நாதசுரத்தை வடிவமைத்துள்ளேன். நாதசுரக் கலைஞரை அழைத்து வந்து, அனைத்து இராகங்களையும் அதில் இசைக்கச் செய்துள்ளேன். ஒலி, ஒளி நாடாக்களில், பதிவு செய்து, இந்த இசைக்கும் வழக்கமான நாதசுர இசைக்கும் எந்த வித வேறுபாடும் இல்லாதிருப்பதை உறுதி செய்தேன் என்றார் சின்னக்கண்ணு. சிற்பக் கலையில் பல்வேறு சாதனைகளைப படைத்துள்ளார் சின்னக்கண்ணு. மூன்றரை அடி உயர லலிதாம்பிகை சிலையில், தலை, கை, கால் பகுதியில் தட்டினால், சப்த சுவரங்கள் ஒலிக்கும் வகையில் அமைத்துள்ளார்; தமிழகத்தில், ஏழு கன்னிகள் கொண்டு, நான்கடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட, இரண்டு கற்சங்கிலிகளை உருவாக்கியுள்ளார். இந்திய அரசியலில் முக்கியமான பங்கு வகித்துவந்தவரும் முன்னாள் வங்க தேச முதல் அமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஜோதி பாசு காலமானார். 1914 இல் வங்க தேசத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோதி பாசுவின் தந்தை ஒரு வைத்தியர் என்பதுடன் அவரின் சொந்தப் பிரதேசம் தற்போதய வங்கதேசமாகும். இவர் மூலம் ஏழை விவசாயிகள் பலர் நிலங்களைப் பெற்றதுடன் வங்க தேசத்தில் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தினார் என்று கூறப்படுகின்றது. ஆயினும் தொழிற் சங்கங்களின் அழுத்தங்களிற்கு அடி பணிந்து வேளிநாட்டு முதலீடுகள் மூலம் உள்நாட்டு கைத்தொழிலை புத்துயிரூட்டத் தவறினார் என்றும் இவர் மேல் குற்றங்கள் உள்ளது.. 1996 இல் இந்திய பிரதம மந்திரியாக பொறுப் பேற்கும் வாய்ப்பு இருந்த போதும் இவரது கட்சி கூட்டமைப்பிற்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குவதாக முடிவெடுத்த காரணத்தால் இந்தப் பதவியை பெறும் வாய்ப்பை ஜோதி பாசு இழந்தார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் பற்றி அவர் கவலை தெரிவித்ததுடன் அவை இலங்கையின் மக்கள் ஆட்சி முறைமைக்கும், பாரம்பரியத்திற்கும் பாரிய சேதம் விளைவிக்ககூடியவை என்றும் தெரிவித்தார். இலங்கைத் தேர்தலில் அமெரிக்கா எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்றும், தமது கருத்துக்கள் அவ்வாறு எவரையும் ஆதரிக்காமல் இருக்கவேண்டும் எனபதில் தாம் மிக கவனமாக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார். இலங்கையில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறை குறித்து அமெரிக்கா விசனம்]] போப்பாண்டவரைக் கொலை செய்வதற்கு அவரைத் தூண்டியது எது என்பது புரியாத இரகசியமாக இருந்தாலும், இவ்விஷயத்தில் தான் தனித்தே செயல்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார். சிறையில் இருந்த இவரை 1983-ம் ஆண்டு போப்பாண்டவர் அருளப்பர் சின்னப்பர் நேரில் சென்று பார்த்தார். அப்போது, தன்னை கொலை செய்ய முயன்ற இவரின் தவறுகளை மறந்துவிட்டதாக தெரிவித்தார். இவர் ஒரு மன நோயாளியா என்பது குறித்தும் இப்போது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அண்மையில் தான் ஒரு இறைதூதர் என்று பல முறை கூறியிருக்கிறார். இவர் சிரையில் இருந்து வெளியேற முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த உலகம் ஒரு முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த நூற்றாண்டில் இவ்வுலகம் முழுதும் அழிந்து விடும். அனைவரும் இறந்து விடுவர் நான் ஒரு நித்திய கிறிஸ்து என்று கூறியிருக்கிறார். ஆக்கா இராணுவத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவார் என துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இவரது சொந்த வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் தயாரிக்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. title போப்பாண்டவரை கொல்ல முயன்றவர் விடுதலை இந்த திரைப்படத்தில் சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் கமரோனுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளை ஜேம்ஸ் கமரோனின் அவதார் திரைப்படம் பெற்றுக்கொள்கின்றுது. இவர்களை NCB South Zonal Unit இன் அதிகாரிகள் கிடைக்கப்பெற்ற ஒரு தகவல்கள் மூலம் கைதுசெய்துள்ளனர். இவர்களைக் கைது செய்யும் போது இவர்களிடம் இருந்து குற்றத்தை நிரூபிக்க கூடிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இம்மோதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆனாலும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. வீடுகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவற்றுக்கு தீவைக்கப்பட்டிருந்தன. இரவுநேர ஊரடங்கு உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தது மூவாயிரம் பேர் இந்த மோதல்கள் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேற நேர்ந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. இவர்களில் பலர் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. இப்பகுதியில் வரலாற்றுரீதியாக இன மற்றும் மத மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2008 ஆம் ஆண்டில் 200 பேரும் 2001 ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கும் அதிகாமானோரும் இறந்துள்ளனர். ஞாயிறன்று இடம்பெற்ற வன்முறைக்கு காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றார் அரசு உயர் அதிகாரி டான் மான்ஜாங் தெரிவித்தார். அன்று இடம்பெற்ற ஒரு உதைப்பந்தாட்டப் போட்டி முடிவில் இக்கலவரம் வெடித்திருக்கலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது. "35 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5 பேர் இராணுவ உடை அணிந்திருந்தார்கள்" என மான்ஜாங் தெரிவித்தார். இம்மாதிரியான கலவரங்களுக்கு காரணம் மதவாதம்தான் என்று அடிக்கடி கூறப்பட்டாலும், யதார்த்தத்தில் நில உரிமை தொடர்பான சொத்துத் தகராறும் பகைமையும்தான் இக்கலவரங்களின் அடிப்படைக் காரணம் என நைஜீரியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். நியூட்டனின் நண்பரூம் அறிவியலாளருமான வில்லியம் ஸ்டூக்லீ நியூட்டனின் அனுபவத்தை அவரிடமே நேரடியாகக் கேட்டு குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். 1752 ஆம் ஆண்டில் ஸ்டூக்லி தனது வரலாற்றுக் குறிப்பிலும், ஐசாக் நியூட்டனின் வாழ்க்கைக் குறிப்பிலும் இவற்றைப் பதித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் "ரோயல் சபை Royal Society இப்போது இந்தக் குறிப்புகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலத்திரனியல் புத்தகமாக மாற்றி இணைய இணைப்பு உள்ளவர்கள் எவரும் படிக்கு படி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுவதைக் கண்டபோது, அந்நிகழ்வு மூலம் ஈர்க்கப்பட்ட நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையை ஆராய ஆரம்பித்தார் என்று கூறுகிறது கதை. "மூலக் கையெழுத்துப் பிரதியைப் பார்ப்பது வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்" என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் வரலாற்றாய்வாளருமான மார்ட்டின் கெம்ப் கருத்துத் தெரிவித்தார். "ஆப்பிள் நியூட்டனின் தலையில் வீழ்ந்தது என்பதை நாம் நம்பத் தேவையில்லை, ஆனாலும் மரத்தின் கீழ் இருந்து ஆப்பிள் விழுவதை அவதானித்து அதன் மூலம் அவர் ஈர்க்கப்பட்டு தனது ஆய்வைத் தொடங்கினார்". ரோயல் சபையின் தலைவர் ரீஸ் பிரபு கருத்துத் தெரிவிக்கையில் இணையப் பாவனையாளர்கள் தமது கைகளில் மூலப் பிரதியை வைத்து வாசிப்பது போலப் பிரமையை இத்தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது" என்றார். நியூட்டன் பேசிய வார்த்தைகள் எவ்வித வரலாற்றுத் திரிபுகள், சிதைவுகள், ஏற்ற-இறக்கங்கள், இகழ்ச்சி-புகழ்ச்சி போன்றவை இல்லாமல் உள்ளபடியே இதில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பு என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} இன்று நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மத்தியில் இந்த தகவலை திசாநாயக அறிவித்தார். அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் தன்னால் பரிந்துரை செய்யப்பட்ட எந்த நடைமுறைகளையும் அரசியல் கட்சிகள் பின்பற்றவில்லை என அவர் தெரிவித்தார். இலங்கை அரசு ஊடகங்களை மேற்பார்வைசெய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு செயற்பட முடியாமல் போன காரணத்தால் அதனைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். அதில், பெண்கள் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அவ்வாறு உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், படிப்பறிவுள்ள ஓர் ஆண்மகன், தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும் கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். குறறச்சாட்டுக்களுக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி, குஷ்புவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து நடிகை குஷ்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அத்தகைய கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் குஷ்பு தனது மனுவில் தெரிவித்திருந்த கருத்துக்களை நீதிமன்றம் ஏற்கவில்லை. தனது குறிப்புகள் தன்னுடைய தனிப்பட்ட கருத்தே என்றும், சமூகத்தில் பொதுவாகப் பெண்களின் நிலைமையையே எடுத்துரைத்ததாகவும் குஷ்பு வாதிட்டார். குஷ்புவுக்கு எதிரான வழக்குகள் அவரது தனி மனித உரிமையை மீறுவதாகவும், அவரது பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் உள்ளதாக பெண்ணியவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வாதிடுகின்றனர். எந்தச் சூழ்நிலையில், எத்தகைய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்புவுக்கு தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டார். குஷ்புவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அவருக்கு விதிக்கப்படலாம். குடியரசுக் கட்சியின் ஸ்கோட் பிரவுண், மக்களாட்சிக் கட்சியின் மார்த்தா கோக்லியைத் தோற்கடித்துள்ளார். 1972ம் ஆண்டுக்குப் பின் இந்த மாநிலத்திலிருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆகியுள்ளார் இவர். உள்நாட்டு கொள்கை திட்டங்கள் மீது இத்தேர்தல் முடிவின் தாக்கம் பற்றி ஒபாமாவின் அலுவலகம் ஆராயத் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றியானது செனட்டில் 60 ஆசனங்களைக் கொண்ட மக்களாட்சிக் கட்சியின் பெரும்பான்மை பலத்திற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரான கொக்லியின் தோல்வியானது அவரின் கட்சிக்கும் அதன் நிகழ்ச்சி நிரலுக்கும் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி மூலம் ஒபாமாவின் முக்கிய கொள்கையான சுகாதாரத்துறை சீர்திருத்தம் குறித்த திட்டங்களுக்கு இடைஞ்சல் தர செனட்டில் குடியரசுக் கட்சியினருக்கு போதிய வாக்குகள் கிடைத்துள்ளது. அத்துடன் ஒபாமா பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடையவுள்ள நிலையில் அவரது கொள்கைகள் மக்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை என்பதற்கான தெரிவான சமிக்ஞையாகவும் இது கருதப்படுகிறது. மேலும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கென்னடி குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்த இவ் ஆசனத்தை ஜனநாயகக் கட்சி இழந்திருப்பதும் அக் கட்சிக்கு அரசியல் ரீதியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்ற பின்னர் ஸ்கொட் பிரவுண் ஆற்றிய உரையில், அதிபர் ஒபாமாவின் திட்டங்களை விமர்சித்தார். அத்திட்டங்கள் வரிகள் அதிகரிக்கச் செய்யும், வேலையிடங்களை அழிக்கும், கடன்கள் அதிகரிக்கச் செய்யும் என்றார் அவர். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறைந்தது நான்கு பேர் கடந்த வாரங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் அரசு ஆதரவாளர்கள் என்றும் ஏனையோர் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் இம்முறையே வன்முறைகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விண்வெளியில் சூரியக் கதிர்வீச்சு சிறுகோள்களின் மேற்பரப்பைச் சிவப்பாக்குகின்றது என முன்னர் நடத்தாப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தன. பூமியை அண்மிக்கும் போது அவை எப்படி தமது மேற்பரப்பை மாற்றியமைக்கின்றன என்பதை "நேச்சர் Nature அறிவியல் இதழ் தற்போது வெளியிட்டுள்ளது. தனது குழுவினர் விண்வெளியில் சிறுகோள்களின் நிறத்தையும், அச்சிறுகோள்களில் இருந்து பூமியில் விழும் விண்கற்களின் நிறங்களையும் ஒப்பிட்டு இவ்வாய்வை மேற்கொண்டிருந்தனர் என அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். "அநேகமான சிறுகோள்கள் இளம் சிவப்பு நிறம் கொண்டவை என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார். சூரியக் காற்று அவற்றின் தாதுக்களைச் சேதப்படுத்தி அவற்றைச் சிவப்பாக மாற்றுகின்றன. ஆனால், சில சிறுகோள்கள் பூமிய நெருங்கும் போது அவற்றின் நிறம் இளம் சிவப்பாக இருப்பதில்லை. இவற்றின் நிறம் பூமியில் அறிவியலாளர்களால் சேர்க்கப்பட்ட விண்கற்களின் நிறங்களுடன் ஒத்துப் போகின்றன, என்கிறார் பேராசிரியர் பின்செல். "பூமியை அவை நெருங்கும் போது பூமி அவற்றிற்கு ஒரு "நிலநடுக்கத்தை" எற்படுத்துகின்றது. இந்த நிலநடுக்கம் அவற்றின் மேற்பரப்பை மாற்றியமைக்கின்றது". இந்த நிற மாற்றங்களில் இருந்து, சிறுகோள் ஒன்று பூமியை அண்மித்ததா இல்லையா என்பதைக் கண்டு கொள்ளலாம் என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} வரும் சனவரி 26ம் திகதி இலங்கையில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலிற்கான தேர்தல் முடிவுகள் மறுநாள் (27 சனவரி, 2010) வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார். இடந்த பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக வாக்களிப்பு அடையாள அட்டைகள் 207,120 விநியோகிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆயினும் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பகுதியினர் வாக்களிக்க ஆர்வமாக வருவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற, செய்தியாளர் சந்திப்பில், உரையாற்றிய அவர் இந்தமுறை வாக்கு மோசடிகளை கட்டுப்படுத்த விசேட குறியீடுகளை பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} எதிர்வரும் சனவரி 26ம் திகதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச்சீட்டுகளைப் சிலர் பாவிக்க முயல்வதாக தமக்குச் செய்தி கிடைத்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த போலி வாக்குச் சீட்டுகளைக் கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியையும் இலங்கை பொலீசார் நாடியுள்ளனர். கடந்த வியாழன் அன்று இரவு 25 வயது இளைஞர் ஒருவர் கரிண்டேல் என்ற இடத்தில் தாக்கப்பட்டார். தனது வீட்டுக்கு அருகே உள்ள தொலைபேசி சாவடியில் தாக்கப்பட்டதாகவும் தாக்குதலின்போது அவர் தலையில் பலத்த்ஹ அடிபட்டதாகவும் ஆஸ்திரேலியக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பணப்பையும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்திய டாக்சி ஓட்டுநர் நேற்றுக் காலை தாக்கப்பட்டார். பிரிஸ்பனின் தென் கிழக்குப் பகுதியில் மாக்கிரெகர் என்ற இடத்தில் அந்த டாக்சி ஓட்டுநருக்கும் அவரது டாக்சியில் சென்ற இரு பயணிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். டாக்சி ஓட்டுநர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஸ்பேன் காவல்துறையினர் தெரிவித்தனர். இதாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள கெவின் ரட், இந்தியர்கள் மீதான தாக்குதல் இனவெறி தொடர்பானதல்ல என மீண்டும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை சனவரி 4, 2010 ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் சனவரி 9, 2010 title ஆஸ்திரேலியாவில் மேலும் இரு இந்தியர்கள் தாக்கப்பட்டனர் title இன்றும் இந்தியர் ஒருவர் மீது ஆஸியில் தாக்குதல் 2006 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வாங்க முயற்சித்த போது அமெரிக்காவின் எஃப் பி ஐ புலனாய்வு அமைப்பு வைத்த பொறியில் நான்கு பேர் சிக்கி கைதானார்கள். இதேவேளை இந்த தண்டனையின் மூலம் தீவிரவாத அமைப்புகளையும் அதன் ஆதரவாளர்களையும் முழு சட்டத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத்தரணியான பென்டன் கெம்பல் தெரிவித்துள்ளார். இவர்களுடன் கைதான மேலும் இருவருக்கும் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறைந்த சுல்தானுக்கு இறுதி மரியாதை செலுத்த எல்லா நிலைகளையும் சேர்ந்த மக்கள் நேற்று காலை 9 மணியிலிருந்து இஸ்தானா புசார் வளாகத்தில் ஒன்றுகூடத் தொடங்கினர். ஜோகூர் சுல்தான் இஸ்காண்டர் காலமானதைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தமது இந்தியப் பயணத்தை குறைத்துக் கொண்டு நேற்று அதிகாலை மலேசியா திரும்பினார். மறைந்த சுல்தானின் மூத்த மகன் துங்கு இப்ராகிம் இசுமாயில் சுல்தான் இஸ்காண்டார் இன்று ஜோகூரின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார். title மறைந்த ஜோகூர் சுல்தானுக்கு மக்கள் இறுதி மரியாதை {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} இன்று காலையில் சந்திரிக்காவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்ற சரத் பொன்சேகாவிடம் அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார் என டெய்லிமிரர் செய்தியாளர் தெரிவிக்கிறார். இது பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருந்த போதும் சந்திப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களை காவல்துறையினர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. பெரும் காற்றுடன் கூடிய காலநிலையில் அடிஸ் அபாபா நோக்கிச் சென்ற ஈடி409 விமானம் பெரும் தீக்குழம்புடன் கடலில் வீழ்ந்ததைத் தாம் பார்த்ததாக பலர் தெரிவித்தனர். 21 பேருடைய உடல்கள் இது வரையில் மீட்கப்பட்டதாகவும், எவரும் உயிர் தப்பியிருப்பதாகக் கருதவில்லை எனவும் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார். இவ்விமானத்தில் சிறு குழந்தைகள் பலரும் பயணம் செய்திருக்கிறார்கள். 9 பேர் விமானப் பணியாளர்கள். பயணம் செய்தோர் பெரும்பாலானோர் லெபனான், மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள். இருவர் பிரித்தானியர்கள். ஏனையோர் துருக்கி, பிரான்ஸ், இரசியா, கனடா, சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்தவர்கள். உள்ளூர் நேரப்படி இன்றூ அதிகாலை 0200 மணியளவில் ராடார் திர்ரையில் இருந்து இவ்விமானம் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. லெபனானின் உலங்கு வானூர்திகளும், கடற்படைக் கப்பல்களும் விமானம் தொலைந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக எத்தியோப்பிய விமானம் ஒன்று 1996 ஆம் ஆண்டில் வீழ்ந்து நொறுங்கியது. அப்போது நைரோபியில் இருந்து 175 பேருடன் அடிஸ் அபாபா நோக்கிச் சென்ற விமானம் கடத்தப்பட்டு கொமரோசுத் தீவுல் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர். காவல் நிலையம் ஒன்றுக்கு அருகில் உள்ள உள்ளூர் மசூதி ஒன்றின் முன்னால் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். காவல்நிலையத்தில் இருந்த 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இக்குண்ட்வெடிப்புக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. இரு வாரங்களுக்கு முன்னர் ஜனவரி 12 ஆம் நாள் லாஸ் ஆனோட் காவல் நிலையம் மீது கிரனேட் வீசப்பட்டதில் 2 காவல்துறையினர் காயமடைந்தனர். ஞாயிறன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வழிமறிகப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் லாஸ் அனோட் மருத்துவமனையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அல் சபாப் என்ற தீவிரவாதக் குழுவினர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துகின்றனர் என மசூதியின் இமாம் கருத்துத் தெரிவித்தார். பொதுத்தேர்தல்களைத் தாமதிப்பது குறித்து சோமாலிலாந்தின் அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல்நிலை காரணமாக அங்கு மேலும் பல வன்முறைகள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது. {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} யாழ்ப்பாணத்தில் ஓரிடத்தில் பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டாதாகவும் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேர்தலைப் புறக்கணிக்கும்படி கேடுக் கொள்ளும் துண்டுப்பிரசுரங்கள் அங்கு விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, யாழ்ப்பாணம், நவாலி, மானிப்பாய், நல்லூர் மற்றும் கோண்டாவில் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 14 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளார்கள். 11,000 வாக்களிக்கும் மையங்கள் உள்ளூர் நேரம் 0700 மணிக்கு (0130 ஜிஎம்டி) திறக்கப்பட்டன. வாக்களிப்பு நிலையங்கள் மாலை 1600 மணிக்கு மூடப்படும். 1900 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுதல் ஆரம்பமாகும். புதன்கிழமை காலையில் முடிவுகள் வெளிவரும் என தேர்தல் ஆணையாளர் முன்னர் தெரிவித்திருந்தார். 22 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் எந்த வாக்காளரும் 50% வாக்குகள் பெறாவிட்டால், விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, ஆகக்கூடிய வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்தில் குண்டுச் சத்தங்கள்]] சதாம் உசேனின் நெருங்கிய உறவினரான 68 வயது அல்-மஜீத் நேற்று தூக்கிலப்பட்டதாக இராக்கிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 2010, ஜனவரி 17 இல் இவருக்கு அளிக்கப்பட்ட நான்காவது மரண தண்டனை, 1988ம் ஆண்டில் வடக்கு ஈராக்கில் ஹலாப்ஜா என்ற கிராமத்தில் குர்திய இன மக்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைக்கு உத்தரவிட்ட குற்றம் தொடர்பில் அளிக்கப்பட்டது. ஐயாயிரம் பேர் வரையில், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் இந்த படுகொலையின் போது கொல்லப்பட்டனர். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொண்ட போதும் தனக்குரிய வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அப்போது அவர் இராணுவத் தளபதியாக இருந்ததால், இராணுவத் தலைமையகத்தில் தனது வாக்கைப் பதிந்திருந்தார். தான் சிறிலங்காவின் பிரஜை என்றும் அதனால்தான் தான் சிறிலங்காவின் இராணுவ தளபதியாகவும் படைகளின் பிரதானியாகவும் பதவி வகித்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சகல தகுதியும் உடையவர் என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரசமைப்பின் 31 ஆவது சரத்தின் பிரகாரம் தனக்கு அந்த உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் இன்றைய தேர்தலில் வாக்களிக்காததை கூறி தனக்கெதிராக அரசுத்தரப்பு மேற்கொள்ளும் பிரசாரத்தை நம்பாமல் அனைத்து மக்களும் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதே வேளையில், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டியதில்லை எனவும், அவர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். பொன்சேகா அமெரிக்கப் பிரசையாக இருப்பதால் அவருக்கு இங்கு வாக்களிக்கும் தகுதி இல்லை எனவும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாதெனவும் அரசு ஊடகங்கள் முன்னதாக அறிவித்திருந்தன. {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} மகிந்த ராஜபக்ச 16 மாவட்டங்களிலும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா தமிழர் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 6 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். தேர்தல் முடிவு நிலவரங்களைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது என கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹவிலண்ட் கூறுகிறார். இரு பிரதான போட்டியாளர்களும் மாவட்ட மட்டத்தில் பெற்றுள்ள மொத்தவாக்குகள்: {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} "தன்னைக் கைது செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்" என்று பிபிசி நிருபரிடம் சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்தார். பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது பொன்சேகாவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை" என்று தெரிவித்தார். ராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் பொன்சேகா அந்த ஹோட்டலில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கொழும்பின் லேக் வீவ் ஓட்டலில் தங்கி இருக்கும் சரத் பொன்சேகாவுடன் தங்கியிருந்த இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் எனப்படும் ஒன்பது பேர் இன்று இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனிடையே, சற்று நேரத்துக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பொன்சேகா கைது செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார். ஹோட்டலுக்கு வெளியே ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும், அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாக அன்பரசன் கூறுகிறார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா கொழும்பில் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் தங்கி இருக்கும் போது இராணுவத்தால் சூழப்பட்டிருந்தார். இதேவேளை இன்று விடுதியில் இருந்து பொன்சேகா வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. விடுதியில் இருந்து வெளியேறிய பொன்சேகா தனது வீடு நோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்சேகா வெளியேறும் போது அவரது வாகனத்தை இராணுவத்தினர் முதலில் சோதிக்க முயன்றதாகவும் பின்னர் சோதிக்காமல் வெளியேற அனுமதி வழங்கியதாகவும் தெரியவருகின்றது. பொன்சேகாவின் விடுதியைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு]] விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இராணுவப் புரட்சி ஒன்றில் சேக் முஜிபுர் ரகுமான், அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்மார் மேலும் அவர்களது குடும்பத்தவர்கள் 20 பேர் ஒட்டு மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர். முஜிபூர் ரஹ்மானின் புதல்வியும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்ததால் உயிர் பிழைத்தனர். சில மணி நேரத்துக்கு முன்னதாகவே இவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் தூக்கிலிடப்படுவார்கள் என வங்காளதேச சட்டத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனாலும் எந்த நேரத்திலும் அது நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் ஐவரும் டாக்கா சிறைச்சாலையில் புதன்கிழமையன்று தூக்கிலிடப்பட்டார்கள். ரகுமானின் கொலையில் தாம் சம்பந்தப்பட்டிருந்ததை ஐவரும் ஒத்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் தம்மீதான விசாரணைகள் இராணுவ நீதிமன்றத்திலேயே நடத்தப்பட வேண்டும் என அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தார்கள். உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்திருந்தது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் முஜிபூர் ரஹ்மான். இந்த இராணுவ புரட்சி மேற்கொண்டவர்கள் மீது 21 ஆண்டுகளுக்குப் பின், அதுவும் ஷேக் ஹசீனா பிரதமராகப் பொறுப்பேற்றதன் பிறகுதான் அதாவது 1996-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. 1975ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசு தடை விதித்தது. இதை பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஷேக் ஹசீனா ரத்து செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பேர் தலைமறைவாக உள்ளனர். ஒருவர் சிம்பாப்வேயில் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 3 பேர் 2001ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். சிறையில் உள்ள 5 பேர் மட்டும் மேல் முறையீட்டுக்காக விண்ணப்பித்தனர். சம்பவம் நடந்து ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு: எதிரிகளின் மேன்முறையீடு நிராகரிப்பு நவம்பர் 20, 2009 வீலாஸ் மேஹ்டா என்ற காந்தியின் குடும்ப நண்பர் ஒருவர் பல ஆண்டுகாலமாக இந்த அஸ்தியைப் பாதுகாத்து வைத்திருந்ததாக காந்தியின் பேத்தி எலா காந்தி பிபிசி செய்தியாளருக்குக் கூறினார். சென்ற ஆண்டு இது காந்தியின் குடும்பத்துக்கு இது கையளிக்கப்பட்டது. 62 ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது அஸ்தியின் பகுதிகள் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது ஆதர்வாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. குடும்ப அங்கத்தவர்களும் நண்பர்களுமாக 200 பேர் தென்னாப்பிரிக்கக் கடற்படையினருடன் இணைந்து டேர்பன் நகரில் உள்ள கடற்கரையில் இவ்வஸ்தியைக் கரைப்பார்கள் என டேர்பன் நகரில் வசிக்கும் எலா காந்தி தெரிவித்தார். 1948 ஆம் ஆண்டில் காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தியின் ஒரு பகுதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன. இருப்பினும் சில அஸ்திக் கலசங்களை கரைக்காமல் அவரது தீவிர ஆதரவாளர்கள், நண்பர்கள் தங்களுடன் வைத்துக் கொண்டனர். இவ்வாறு எத்தனை பேர் அஸ்தியைப் பெற்றார்கள் என அறிவது கடினம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி ஒரு அஸ்திக் கலசம் 1997ம் ஆண்டு புவனேஸ்வர் வங்கி ஒன்றின் லாக்கரில் இருந்தது. பின்னர் அது அலகாபாத்தில் கரைக்கப்பட்டது. இன்னொரு கலசம் மணி பவனில் இருந்தது. இதை பிரபல தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜின் பேரன் பரத் நாராயணன் என்பவர் மணி பவனில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2008 ஆம் ஆண்டில் காந்தியின் மகன் ஒருவரால் மும்பை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட அஸ்திக் கலசம் ஒன்று அரபிக் கடலில் கரைக்கப்பட்டது. மகாத்மா காந்தி 1948, ஜனவரி 30ஆம் நாள் இந்து தீவிரவாதி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். 21 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவில் தங்கி வழக்கறிஞராகப் பணியாற்றியிருந்தார். மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்க வீட்டை பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது]] {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} கொழும்பில் இருந்து வெளியாகும் "லங்கா" என்ற சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த என்பவர் நேற்றுக் காலை இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். அத்துடன் அப்பத்திரிகையின் நுகேகொடை காரியாலயமும் காவல்துறையினரால் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. இந்தக்கட்டுரை தொடர்பாக நேற்றுக் காலை சிறிமல்வத்தவிடம், குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றிருந்தனர் என்றும் இந்த நிலையிலேயே இன்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜேவிபி கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்து, அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. கடந்த புதனன்று மகிந்த ராஜபக்ச அரசுத் தலைவராக இரண்டாம் முறையாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது ஊடக அடக்குமுறை இதுவாகும் என ஊடகத்தரப்புகள் தெரிவித்துள்ளன. [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] பிரெஞ்சு மற்றும் எயிட்டி மீட்புக் குழுவினரால் இவர் வெளியில் கொண்டுவரப்பட்டபோது காலில் காயத்துடன் மிகவும் வாடிய நிலையில், இருந்த போதும் இவருக்குச் சுய நினைவு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளுக்குள்ளிருந்து இச் சிறுமியின் குரலைக் கேட்ட சிலர் அப்பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பத்தால் இடியுண்ட அவரது வீட்டின் சுவர் மற்றும் கதவுக்கிடையில் இச் சிறுமி சிக்குண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மேலும், பல புதிய பகுதிகளில் தேடுதலை முன்னெடுக்குமாறு ஹெய்டியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹெய்ட்டி தலைநகர் மற்றும் பல்வேறு நகரங்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 135 பேரை பன்னாட்டு மீட்புக் குழுவினர் இதுவரை உயிருடன் மீட்டுள்ளனர். இதுவரையில் சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் சடலங்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் மூலம் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீதிகளை சரிசெய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெனி பிரிவெல் தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை 07:00 மணியளவில் விஜயவாடாவில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ள பிய்யபுத்தெப்பா என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 80 பேரை ஏற்றிக் கொண்டு அந்தர்வேடி என்னுமிடத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்ற படகே கோதாவரி ஆற்றின் உப்படெரு கால்வாய் அருகே திடீரென மூழ்கியது. அந்த ஊர் மக்கள் 44 பேரைக் காப்பாற்றினர். இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன எனக் காவ்ல்துறையினர் தெரிவித்தனர். மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இப்படகில் சென்றவர்களில் பெரும்பான்மையானோர் கோயில் தெருவிழாவுக்குச் சென்ற மீனவர்கள் ஆவர். அளவுக்கு அதிகமான பேர் பயணம் செய்ததால் தான் படகு கவிழ்ந்துள்ளது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மூழ்குவதற்கு முன்னர் இப்படகு வேறொரு வெற்றுப் படகில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் பொது மக்கள் எனவும், மேலும் 25 பேர் வரையில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறட்து. மோட்டார் குண்டுகள் வீடுகளின் மீது வீழ்ந்ததாலேயே பொதுமக்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பிடம் இருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தில் தாயும் இரு பிள்ளைகளும் இறந்தவர்களில் அடங்குவர். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். 2007 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தாக்குதல்களில் 20,000 சோமாலியர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். 1,5 மில்லியம் மக்கள் வரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அல்-சபாப் போராளிக் குழு ஐக்கிய அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் எத்தியோப்பியா, ஜிபூட்டி, கென்யா, எரித்திரியா, கானா, சூடான், உகாண்டா உட்படப் பல ஆப்பிரிக்க நாடுகளில் இவ்வமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது. விருதுகளைப் பெற்றுக்கொண்டு ரகுமான் பேசும்போது ஆண்டவர் மிகப்பெரியவர். அவருக்கு நன்றி" என்றார். சென்ற மாதம் Couples Retreat என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற ரகுமானின் நானா என்ற தமிழ்ப் பாடல் ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் மேலும் 62 பாடல்களுடன் ஆஸ்கார் விருதுக்காகப் போட்டியிடுகிறது. இந்த கிராமி விருதுகள் ரகுமானின் திறமைக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடத்துள்ளது என பிபிசியின் தில்லி செய்தியாளர் சௌத்திக் பிஸ்வாஸ் தெரிவித்தார். ரவிசங்கர், சாகிர் உசைன், விஷ்வமோகன் பட் ஆகிய இந்தியர்கள் இதற்கு முன்பு கிராம்மி விருதுகளைப் பெற்றிருக்கின்றனர். போராளிகளில் போர் நிறுத்த அறிவிப்பு ஏற்பட்டு ஒரு சில மணி நேரத்தில் அங்கு மோதல் வெடித்தது. இம்மோதலில் இருபது சியா கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹவுத்தி என்று அழைக்கப்படும் இந்த கிளர்ச்சியாளர்கள் தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் எவ்விதமான உபயோகமான அரசியல் தீர்வையும் பெற முடியாது என்று கூறியிருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 250,000 யேமனியர்கள் அங்கு இடம்பெற்றுவரும் சண்டையை அடுத்து இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநாவின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மை சியா முஸ்லிம் குழுவைச் சேர்ந்த ஹவுத்தி போராளிகள் 2004 ஆம் ஆண்டில் இருந்து ஏமனிய அரசுடன் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேண்டுகோளின்படி வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அக்கட்சிகள், அடுத்து வரவரவிருக்கின்ற பொதுத் தேர்தலிலும் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன. இந்தத் தகவலை கொழும்பில் ரேணுகா ஓட்டலில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்கள். மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இதனோடு இணைத்துக் கொண்டு எமது ஒற்றுமைப் பலத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். நாம் எப்போதும் சிங்கள மக்களோடு ஒன்றுபட்டு வாழவே விரும்புகின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் வேறுபட்டு இந்த நாட்டில் வாழக்கூடாது. பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கிருக்கும் உரிமைகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும். இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் சகல சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கியதால் அந்த நாடுகள் இன்று நல்லமுன்னேற்றம் கண்டுள்ளன. அபிவிருத்தியில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு வழியை நாமும் பின்பற்றினால் அடுத்த 10 வருடங்களில் எமது நாட்டையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும். இந்தச் செய்தியையே தென்னிலங்கை சிங்கள மக்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்" என்றார் திரு சம்பந்தன். "இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நிராகரித்து வாக்களித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்துடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக" சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்பும் தமது கட்சிக்காரர்கள் மீது வன்முறைகள் தொடர்வதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் அரசுக்கு எதிராக வாக்களித்தமைக்காக திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் பாஸ் நடைமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். {{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010}} தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மிஞ்சி இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே மீண்டும் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதியாக தான் எப்போது பதவி ஏற்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆலோசனை கேட்டிருந்தார். இதனையடுத்து, நாட்டின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா அவர்களின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் கூடி ஆராய்ந்ததன் பின்னர் தமது முடிவை ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்திருந்தார்கள். இதனடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்திருக்கின்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தெர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள், அந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டசுமார் 5,000 பேர் கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டிருந்தன. முன்னராக, தேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த கூறியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய 37 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்குகள், இராணுவ உயரதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் இக்குற்றச்சாட்டுக்களி மறுத்திருக்கின்றனர். அண்மைக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிகளில் இம்முறை மிகப்பெரும் தொகையானவர்கள் கலந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். தமது பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினருக்கு பயிற்சி அளித்து வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள். அமெரிக்கர்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம் குறிப்பாக திட்டமிட்டு குண்டுதாரியால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வாகனத்தின் பயணம் குறித்த தகவல்கள் முன்னரே கசிந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் Boa Sr என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்தார். அந்தமான் மொழிகள்ள் ஆப்பிரிக்காவில் இருந்து தோற்றம் பெற்ற்றதாகக் கருதப்படுகிறது. இவற்றில் சில சுமார் 70,000 ஆண்டுகள் பழமையானதாகும். "போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" என பேராசிரியர் அபி தெரிவித்தார். இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்தார். கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன எனப் பேராசிரியை தெரிவித்தார். தற்கொலை நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் வந்தார் என அறியப்படுகிறது. சிலர் இது தற்கொலை தாக்குதல் அல்ல என்றும் வெடிகுண்டு பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை அடுத்து மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பகுதிக்கருகில் இரண்டாவது குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 40 நாட்களுக்கு முன் கடந்த டிசம்பர் மாதத்தில் கராச்சியில் சியா பிரிவு முசுலிம்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் பலியாயினர். இத்தாக்குதலை அடுத்து அப்பகுதியில் இரு இசுலாமியப் பிரிவுகளுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை காணப்படுகிறது. வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டை காப்பாற்றும் விதமாக ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தினை பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் பிரதமர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உடன்பாடு வட அயர்லாந்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளான சின் ஃபெயின் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து முழுமையாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பது சின் ஃபெயின் கட்சியின் நிலைப்பாடு, ஆனால் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியோ பிரிட்டனுடன் உறவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளது. குறைந்தது ஆறு டைனசோர் இனங்களின் காலடிகள் என நம்பப்படும் இச்சுவடுகள் சீனாவின் கிழக்கு சாண்டோங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனாவின் அரசுச் செய்தி நிறுவனம் சின்குவா தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் இவை பெரும் இடப்பெயார்வு ஒன்றின் போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேறு மிருகங்களின் தாக்குதல்களினாலும் இவ்விடப்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சூச்செங் பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் டைனசோர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக சூச்செங் நகரம் "டைனசோர் நகரம்" என உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படுகிறது. 10 சமீ முதல் 80 சமீ வரை நீளமான இக்காலடிச் சுவடுகள் 2,600 சதுர மீட்டர் பரப்பளவு பிரதேசத்தில் மூன்று மாத கால ஆய்வின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக சின்குவா அறிவித்துள்ளது. வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் பகுதிகளில் சூறாவளி காற்றால் பனி எங்கும் கொட்டியுள்ளது, இதனால் மரங்கள் கார்கள் மற்றும் கட்டிடங்கள் மீது விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது. இது மிக மிக ஆபத்தான பனிப்புயலின் தொடக்கம் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். பனிப் புயலால் பல மில்லியன் மக்கள் நாள் கணக்கில் வீடுகளுக்குள்ளே சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. இருவர் உயிரிழந்தனர். இந்தியானா மாநிலத்திலிருந்து பென்சில்வேனியா வரையிலும், நியூயார்க், வட கரோலைனா மாநிலங்களின் சில பகுதிகளிலும் வீசிய பனிப்புயலால், வாஷிங்டன் வட்டாரத்திலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. அதோடு, வாஷிங்டன் டிசி, மேரிலாந்து, வேர்ஜீனியா மாநிலங்களில் நெருக்கடி நிலையும் அறிவிக்கப்பட்டது. தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு 76 சதமமீட்டர் (30 அங்குலம்) உயரத்திற்குப் பனி கொட்டும் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமை வரை 60 சமீ வரை பனிக்கொட்டியது. கடைசியாக, 1922ம் ஆண்டு ஜனவரி மாதம் வாஷிங்டனில் கடுமையான பனிப்புயல் வீசி, கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப் பட்டதோடு, 28 அங்குலம் உயரத்திற்குப் பனி கொட்டியது. title பனிப்புயலால் அமெரிக்கத் தலைநகர் முடங்கியது வாயுக்கலன் வெடிப்பே இதற்குக் காரணம் என மிடில்டவுன் நகர மேயர் செபஸ்டியான் கிலியானோ தெரிவித்தார். 50 கிமீ தூரத்துக்கு இவ்வெடிப்பின் சத்தம் கேட்டதாகவும் வீடுகள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தவிர்த்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவாயிற்று என்பது குறித்து இன்னமும் தகவல்கள் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பயங்கரவாதச் செயல் இதற்குக் காரணமில்லை என மேயர் தெரிவித்தார். இந்த மின்னுற்பத்தி நிலையம் வரும் கோடை காலத்திலேயே முழுமையாகச் செயற்படவிருந்தது எனவும், இதற்கு முன்னோடியாகப் பலா சோதனைகள் அங்கு இடம்பெற்றதாகவும் மேயர் தெரிவித்தார். 100 இலிருந்து 200 பேர் வரையில் இந்நிலையத்தில் பணியில் இருந்தனர் என மேயர் தெரிவித்தார். இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து அழைத்துச்சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது செய்தித்தொடர்பு உதவியாளர் சேனகா டி சில்வாவும் கைது செய்யப்பட்டார். சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார். சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார். இருவரையும் இராணுவ காவற்துறை கைது செய்து கொண்டு செல்வதை படம் எடுத்த பத்திரிகையாளர்களின் படக்கருவிகளின் மெமரி சிப்களை இராணுவத்தினர் பறித்துச் சென்றுள்ளனர். ராணுவக் காவல்துறை இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் திங்கட்கிழமை, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக சண்டேலீடர் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது பொன்சேகா கூறியிருந்தார். "எனக்கு தெரிந்தது, நான் கேள்விப்பட்டது, எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை என்று தெரிவித்தார் ஜெனரல் சரத் பொன்சேகா. சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது – “உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்” – என்று பதிலளித்துள்ளார். இலங்கையின் முக்கிய தலைவர்களான, ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஆகியோர் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த வேளையில் சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு போர் குற்றங்களை செய்தன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] மக்களின் தீர்ப்பை மதித்து, அதிகாரத்தை முறைப்படி கையளிக்க உக்ரைனியத் தலைவர்கள் தயாராக வேண்டும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவுக்கான அமைப்பு கேட்டுள்ளது. ஆனாலும் பிரதமர் திமொசென்கோ தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கவில்லை. அந்த அமைப்பின் தலைவரான ஜோஸ் சோயரஸ் கருத்து வெளியிடும் போது உக்ரையினின் தேர்தல் ஆணையம் ஒளிவு மறைவின்றி பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். விக்டர் யனுக்கோவிச் ரஷ்ய சார்புடையவர் என்று கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு இரவில் இருந்து அமலுக்கு வரும் என்று அரசு சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையர் கூறுவார் என்றும் அவர் கூறினார். ஆனாலும் ஏப்ரல் 8 ஆம் நாள் தேர்தல் இடம்பெறலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இக்கைதுக்கு எதிராக இன்று புதன்கிழமையில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாடெங்கும் நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றன. சலங் என்ற இந்த சுரங்கப் பாதையின் உள்ளே புகையில் மூச்சுத் திணறி சிலர் இறந்தனர். மற்றவர்கள் பனிச் சரிவில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். சுரங்கப்பாதையின் உள்ளே எத்தனை பேர் சிக்குண்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. 2,500 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் வட பகுதியிலிருந்து காபூல் நோக்கி செல்லும் முக்கியப் பாதையில் உள்ள இச்சுரங்கப் பாதை மத்திய ஆசியாவை துணைக் கண்டத்துடன் தொடர்பு படுத்தும் பாதையாக அமைந்துள்ளது. இதற்கிடையில், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் திங்களன்று இடம்பெற்ற பனிச்சரிவுகளில் சிக்கி 17 இந்திய இராணுவத்தினர் இறந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பொன்சேகாவின் விடுதலை கோரி அவரது மனைவி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பெரும் ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. முதலில் கலைந்து ஓடினாலும் பின்னர் ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தங்களுடன் மோதிய ஆளுங்கட்சி ஆதரவாளர்களை திருப்பித் தாக்கி விரட்டியடித்து ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ஆளும் தரப்பு காடையர்களால் வீசப்பட்டகற்கள் சில ஊடகவியலாளர்கள் மீதும் பட்டு தலை, கைகளில் காயமேற்பட்டன. ஒரு ஊடகவியலாளரின் கமராவையும் ஆளும் தரப்பினர் பறித்தெடுத்துள்ளனர். இத்தருணத்தில் பொலிசாரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அவதானித்த நீதிமன்றத்திலிருந்த சட்டத்தரணிகள் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸாரின் செயலை கண்டித்து மக்களோடு இணைந்து தாமும் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். வளாகத்துக்கு வெளியே பொலிசார் அமைத்திருந்த தடைகளை உடைத்து நீதிமன்றத்துக்குள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நுழைந்திருந்தனர். கலகத்துக்குப் பின்னர் அனோமா பொன்சேகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச, இராணுவத்தின் புதிய தளபதி ஜெகத் ஜெயசூரிய, திங்கள் இரவு சரத் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்றிருந்த மூத்த இராணுவ அதிகாரி சுமித் மானவடு உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். கைதாகியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் கொல்லப்படுவார் என்று தாங்கள் அஞ்சுவதாக எதிர்கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. சரத் பொன்சேகா மீதான இராணுவ குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆதராங்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இராணுவ உறுப்பினராக இருந்தபொழுதே அரசியல் வாதிகளுடன் இணைந்து செயலாற்றியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா மறுக்கிறார். title பொன்சேகா கைதானதன் எதிரொலி கட்சிகளின் ஆதரவாளர்கள் மோதல் பொலிஸார் கண்ணீர் புகை, தடியடி கேப்டவுன் நகர் அருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது. விக்டர் வெர்ஸ்டர் சிறையின் வாயிற் கதவுக்கு வெளியே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வர்ணங்களான மஞ்சள், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் உடையணிந்த பெருந்திரளான மக்களும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பிரமுகர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர்; ஆடிப் பாடி கொண்டாடினர். தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்தமைக்காக 1964ல் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா தனது வாழ்க்கையில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர், தனது 71ஆவது வயதில் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற விடுதலை வீரர்களின் கனவு மெய்ப்படவும், நான்கு ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகம் மலரவும் மண்டேலாவின் விடுதலை வழிவகுத்திருந்தது. விடுதலைக்குப் பின்னர் நாட்டில் இனவெறி ஆட்சியை அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்க இவை வழி வகுத்தன. 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. வியாழன் அன்று இரசியப் படையினர் அங்கு 5 சதுர கிமீ பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அறிவிக்கப்படுகிறது. "தமக்குக் கிடைத்த ஒரு தகவாலை அடிப்படையாக வைத்தே இத்தாக்குதலைத் தாம் தொடர்ந்ததாக இராணுவத்தினர் அறிவித்திருக்கின்றனர். கிளர்ச்சிப்படைத் தலைவர் உமரோவ் என்பவரின் ஆட்கள் ஆர்ஷ்டி என்ற கிராமத்தில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். 1994 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்ய இராணுவத்தினர் செச்சினியா குடியரசில் பிரிவினைவாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர். மேலும் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறியிருக்கின்றனர். இலங்கையை பொறுத்தவரை அங்கு போர்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தான் சந்தேகிப்பதாகவும், நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்றும் அது சுதந்திரமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் அமையவேண்டும் என்றும் தான் வலியுறுத்தி வருவதாகவும் நவநீதம் பிள்ளை கூறினார். இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் தம்மை ஜெனீவாவில் சந்தித்ததை நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தினார். இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் தனது அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக போரின் போதும், அதற்குப் பிறகுமான காலகட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் தாம் கூறியதாகவும் அவர் கூறினார். ஐநாவின் மனித உரிமைகள் அவையில் இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ள்ளார். இந்தச் சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும், உள்துறைச் செயலர் தெரிவித்தார். தேடுவாரற்றுக் கிடந்த ஒரு பொதியை சிப்பந்தி ஒருவர் திறந்து பார்க்க எத்தனிக்கையிலேயே அப்பொதி வெடித்ததாக அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய புனே நகர துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர சோனாவானே, பூர்வாங்கத் தகவல்கள் மூலம், குண்டுவெடிப்பு என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் எமி பிஷப் என்ற பெண் பேராசிரியரே திடீரென எழுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேராசிரியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரியல் துறைத் தலைவர் மற்றும் அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் கோபி பொடில்லா ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவர். 2 பேர் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பேராசிரியருக்கு பதவி உத்தரவாதத்தை வழங்கும் விதமான பதவி உயர்வு ஒன்று முன்னர் மறுக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. இப்பெண் 24 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 18 வயது சகோதரரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போது இவ்விறப்பு ஒரு தற்செயலான நிகழ்வு என தீர்ப்புக் கூறப்பட்டது. அலபாமா பல்கலைக்கழகச் சூட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாமென பிபிசி செய்தி கூறுகிறது. இந்நபர்கள் ஐவரும் 2005 ஆம் ஆண்டில் குண்டுகள் தயாரிக்கும் படிமுறைகள், மற்றும் வெடிகுண்டு மருந்துப் பொருட்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்கள். சென்ற ஆண்டு இவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆஸ்திரேலியாவின் பங்களிப்புக் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கவே இவர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது. தாக்குதல் குறித்தோ அல்லது இந்நபர்களின் தாக்குதல் இலக்கு குறித்தோ எதுவும் வெளியிடப்படவில்லை. தீர்ப்புக் கூறப்படும்போது குற்றவாளிகள் தமக்கிடையே சிரித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை காலை எதிரெதிர்த் திசைகளில் வந்த இரண்டு பயணிகள் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அவற்றின் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு, மேலே சென்ற மின் கம்பிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 150 பேர் காயமடைந்தனர். இவர்களில் 55 பேர் கடும் காயமுற்றனர். சமிக்ஞை எதையும் கவனிக்காது ஒரு தொடருந்து கடந்து சென்றிருக்கலாம் என்று தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விபத்து காரணமாக ஐரோப்பாவின் வட மேற்கு பாகத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரசல்ஸ்-பாரிஸ் இடையிலான அதிவேக தொடருந்து சேவைகளும், லண்டனுக்கான யூரோஸ்டார் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் யாழ் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். கிழக்கிந்தியக் கம்பெனியை அவர் வாங்குவதற்கு கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டுள்ளார். 2004ம் ஆண்டிலேயே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கினார் மேத்தா. இந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அருங்காட்சியகங்கள், தொல்பொருள் மையங்களுக்குச் சென்று விரிவான தகவல்களை சேகரித்துள்ளார் மேத்தா. 1600 டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனி தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார். தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலும், சீனாவிலும் கால் பதித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. படிப்படியாக அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைக் கைப்பற்றி அப்படியே நாட்டையும் கைப்பற்றி விட்டது பிரித்தானிய அரசு. 1874ம் ஆண்டு ஜனவரி 1 இல் இங்கிலாந்து அரசு கம்பெனியை கலைத்து அனைத்து அதிகாரங்களையும் இங்கிலாந்து ராணிக்கு மாற்றியது. அதன் பின்னர் அந்த நிறுவனம் முடங்கிப் போனது. மும்பையில் பிறந்து பிரித்தானியாவில் வசிக்கும் 48 வயதாகும் மேத்தா கம்பனியின் விற்பனையகத்தை முதலில் மேபேர் பகுதியில் தொடங்கவுள்ளார். அடுத்து லண்டனில் ஒரு கிளை பரப்புகிறார். இது தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கிளைகளைக் கொண்டு போகப் போகிறாராம் மேத்தா. இந்த வர்த்தகக் கிளைகளில் காபி, தேயிலை, நறுமணப் பொருட்கள், இனிப்பு வகைகள், தோல் பொருட்கள், மரச் சாமான்கள் ஆகியவற்றை விற்கத் திட்டமிட்டுள்ளார் மேத்தா. தனது சாதனை குறித்து மேத்தா கூறுகையில், உண்மையில் இது மிகப் பெரிய சாதனையாகும். எனது நாட்டை அடிமைப்படுத்திய கம்பெனியை வாங்கி விட்ட பெருமை உள்ளது. நம்மை ஆட்டுவித்த நிறுவனத்தை இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து 200 கிமீ தொலைவில் சலாவுன் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 70 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்றுப் பின்னிரவு பாகுன்ச் ஆற்றை தற்காலிகப் பாலம் ஒன்றின் மீதாகக் கடக்கையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. 40 பயணிகள் பேருந்தின் பலகணிகளை உடைத்துக் கொண்டு தப்பி வெளியேறினர். ஆற்றில் மூழ்கிய பேருந்தினுள் இருந்து 22 பேரின் உடல்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டன. இப்படியான விபத்துக்கள் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். சீரான பாராமரிப்பற்ற பாதைகள், பழமையான வாகனங்கள், வாகன ஓட்டிகளின் கட்டுக்கடங்கா வேகம் போன்றவை இவ்விபத்துகளுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இன்று வியாழன் அதிகாலையில் ஜாமுய் மாவட்டத்தில் புல்வாரியா கொராசி என்ற கிராமத்தை நூற்றுக்கும் அதிகமான போராளிகள் தாக்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கிராமம் தலைநகர் பட்னாவில் இருந்து 200 கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தீவிரவாதிகள் வீடு ஒன்றைக் குண்டு வைத்துக் தகர்த்ததாகவும், முப்பதுக்கும் அதிகமான குடிசைகளைத் தீக்கிரையாக்கியதாவும் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடியோரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகமும்ம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் இக்கிராமத்தில் எட்டு போராளிகள் கிராமவாசிகளால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொலைகளுக்குப் பழிவாங்கவே இன்றைய தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. சில கிராமவாசிகள் போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பல இந்திய மாநிலங்களில் கடந்த 20 ஆண்டு காலமாக கம்யூனிச ஆட்சிக்காக தீவிரவாதிகள் நடத்தும் சண்டைகளில் இதுவரையில் 6,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் பல மாநிலங்களில் இந்திய அரசு போராளிகளுக்கு எதிரரக பல தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது. இந்தியாவின் 600 மாவட்டங்களில் 223 மாவட்டங்களில் போராளிகள் தீவிரமாயுள்ளனர். நாட்டின் அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரச நிறுவனங்களும் கலைக்கப்பட்டுள்ளதாகவும் புரட்சியை முன்னெடுத்த குழுவின் பேச்சாளரான இராணுவத் தளபதி ஒருவர் அறிவித்தார். இப்புரட்சிக்கு யார் தலைமை வகித்தார்கள் என்பது உடனடியாகத் தெரியயவிட்டாலும், மேஜர் அடாமூ ஹரூனா என்னும் இராணுவத் தலைவரே இதற்குக் காரணம் என பல இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே புரட்சி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பல மணிநேரம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அதிபர் மாளிகையைச் சுற்றி கேட்டன. சண்டை உள்ளூர் நேரப்படி பகல் 1:00 மணிக்கு ஆரம்பித்தது. இராணுவத்தினரில் மூன்று பேர் இறந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இவ்விராணுவப் புரட்சியை ஆப்பிரிக்க ஒன்றியம் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுத்தலைவர் தாஞ்சா நாட்டின் நாடாளுமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றைக் கலைத்து, தனது பதவிக்காலத்தை மேலும் மூன்றாண்டுகள் நீட்டித்ததை அடுத்தே இந்தப் புரட்சி இடம்பெற்றுள்ளது. அரசுத்தலைவரின் இந்த செயற்பாடு அவருக்கெதிராக பல அழுத்தங்களைப் பல்வேறு மட்டங்களிலும் தோற்றுவித்திருந்தது. கடந்த வாரம் அங்கு ஆயிரக்கணக்கானோர் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பேர்டீயின் மசூதியில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலும் 60 பேர் காயமடைந்தனர். பல நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த மழையை அடுத்தே இந்தக் கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர்த் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக ஏறத்தாழ 300 பேர் குழுமியிருந்ததாக உள்ளூர் வாசி ஒருவர் ராஅய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். "மசூதியின் இமாம் தொழுகையை ஆரம்பிக்க இருக்கையிலேயே மினார் இடிந்து வீழ்ந்தது என அவர் தெரிவித்தார். மொரோக்கோவின் பழைய கட்டடங்கள் அங்கு இடிந்து வீழ்வது வழமை என்றும், ஆனால் மினார் ஒன்று வீழ்ந்தது இதுவே முதற் தடவை என்று அவதானிகள் தெரிவித்தனர். இடிந்த மினாரை உடனடியாக மீள அமைக்க மொரோக்கோ மன்னர் ஆறாம் முகமது உத்தரவிட்டுள்ளார். அரசுக் கூட்டணிக் கட்சிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து தொழிற் கட்சி அரசில் இருந்து வெளியேறியுள்ளதாக கிருத்தவ மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜான் பீட்டர் பால்கெனெண்டெ அறிவித்தார். நேட்டோவின் வேண்டுகோளிற்கிணங்க 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் ஆப்கானிஸ்தானில் தமது படைகளை வைத்திருக்க திரு பால்கெனெண்டெ முடிவு செய்திருந்தார். ஆனால் அரசின் இரண்டாவது பெரிய கட்சியான தொழிற் கட்சி இந்நடவடிக்கையை எதிர்த்து வந்தது. 2006 ஆம் ஆண்டில் இருந்து தெற்கு ஆப்கானித்தானில் 2,000 வரையான டச்சுப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பல்வேறு படை நடவடிக்கைகளில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒருதடவை படைகளைத் திருப்பி அழைக்கும் நாள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில் டச்சுப் படையினரைத் திரும்பப் பெறுவதாக இருந்தது. ஆனாலும் அவர்களுக்காகப் பிரதியிட வேறு நேட்டோப் படையினர் முன்வராததனால், ஆகஸ்ட் 2010 வரை அங்கு தங்கியிருப்பதற்கு நாடாளுமன்றம் ஒத்திருந்தது. 1963 ஜூலை 20 ஆம் திகதி பிறந்த ஸ்ரீதர் பிச்சையப்பா, சிறு வயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு பிரபலமான நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் மிமிக்ரி மற்றும் ஓவியம் எனப் பல கலைத்துறைகளில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா பல்கலைத் தென்றல் என அழைக்கப்பட்டவர். நாடறிந்த நாடகக் கலைஞரான டி.வி. பிச்சையப்பாவின் மகனான ஸ்ரீதர் 1962ம் ஆண்டு கொழும்பு கதிரேசன் வீதி இல்லத்தில் பிறந்தார். கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர். தமது சிறுவயதில் இலங்கை வானொலியில் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி மூலம் சிறுவர் நாடகங்களில் பிரபல்யமாகி பின்னர் பாடகராக கலையுலகிற்கு பிரவேசித்தார். நவீன ஒவியத்தை வரைவதில் கொழும்பு மாவட்டத்தில் அவர் முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார். அத்துடன் கவிதை எழுதுவதிலும் திறமை படைத்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு மாகாண கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு கண்ணை இழந்தார். title பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார் ''ஜெம் என்ற "நீதியும் சமத்துவத்துக்குமான இயக்கம் Justice and Equality Movement Jem) மேலும் பேச்சுக்களுக்கு கால அட்டவணை விதித்துள்ளதுடன், அவர்களின் 100 போராளிகளுக்கான மரணதண்டனைகளை இரத்துச் செய்யவும் கேட்டுள்ளது. அரசுப் படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையில் கடந்த 7 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவரும் போரின் உச்சம் அண்மைக்காலமாகக் குறைந்திருந்தது. அதிகாரப் பகிர்வு, இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவது போன்ற விடயங்களுக்கு இவ்வாரத்தில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெம் கைதிகளின் மரணதண்டனைகளை இரத்துச் செய்வதாக சூடான் அரசுத்தலைவர் பஷீர் தெரிவித்தார். இவர்களுள் 30 விழுக்காட்டினர் உடனடியாக விடுதலை செய்யப்படுவர். இவ்வுடன்பாடு முறைப்படி கத்தாரின் தலைநகர் டோஹாவில் முறைப்படி கையெழுத்திடப்படும் என போராளிக்குழுவின் பேச்சாளர் அகமது உசைன் தெரிவித்தார். அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள மடெய்ரா தீவில் பெரும் மழை, மண்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் மண்சரிவுகளுக்கிடையில் அகப்பட்டிருக்கலாம் எனவும் இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அசப்படுகிறது. மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. போர்த்துக்கல் தனது இராணுவத்தினரை அங்கு உடனடியாக அனுப்பு வைத்துள்ளது. சேதங்களைப் பார்வையிட்ட போர்த்துக்கல் பிரதமர் ஒசே சொக்கிராட்டெஸ் "தேவைப்படும் உதவிகள் அனைத்தும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்" என உறுதியளித்தார். போர்த்துக்கல்லில் இருந்து 900 கிமீ தூரத்தில் மெடெய்ரா அமைந்திருக்கிறது. இது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் ஒரு பிரபல்யமான தளமாகும். மரங்கள் பல வீழ்ந்து கிடந்ததாகவும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். உருஸ்கான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக வந்து கொண்டிருந்த போராளிகளை நோக்கியே தாக்குதல் நடத்தப்பட்டதாக நேட்டோ தெரிவித்தது. தாக்குதலின் பின்னர் தரைப்படையினர் உடனடியாக அங்கு விரைந்து பார்த்ததில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களின் சடலங்கள் இருந்ததாக நேட்டோவின் அறிக்கை கூறுகிறது. இத்தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ தளபதி ஜெனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் ஆப்கானிய அரசுத்தலைவரிடம் மன்னிப்புக் கோரினார். முழுமையான விசாரணை இடம்பெறும் என அவர் உறுதி அளித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இஸ்தான்புல், அங்காரா போன்ற நகரங்களில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளில் தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் 14 அதிகாரிகளும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளும், கடற்படையின் முன்னாள் தலைவர், வான்படையின் முன்னாள் தலைவர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 2003 ஆம் ஆண்டில் இருந்து இருநூறுக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டை இராணுவத் தலைவர் மறுத்துள்ளார் இராணுவச் சதித்திட்டங்கள் முந்தைய காலங்களில் தான் நடைபெற்றுள்ளன. தற்போது அப்படி எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார். 1960 முதல் நான்கு முறை இராணுவப் புரட்சிகளில் அரசாங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 1997 ஆம் ஆண்டில் அரசு கலைக்கப்பட்டது. இப்படியான குற்றச்சாட்டுகளை கூறி அரசாங்கம் தமது எதிர்ப்பாளர்களை துன்புறுத்திவருகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பொன்சேகா தற்போது கடற்படை தலைமை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்து தீர்ப்பு வழங்கியது. அரசாங்கம் அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனாத்ல், ததம் ஒரு இளைப்பாறிய இராணுவத்தினர் என்ற வகையில் பொது நீதிமன்றம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா வாதாடி வருகிறார். குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் பொன்சேகாவை பார்வையிடுவதற்கும், தான் விரும்பிய ஒரு வைத்தியரை பொன்சேகாவுக்கு சிகிச்சை வழங்குவதற்கும் உடனடியான அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் விசாரணைகள் ஏப்ரல் 26 ஆம் நாள் இடம்பெறும் என தேதி குறிக்கப்படுள்ளது. அரசுக்கு எதிராக சதி முயற்சிகளில் ஈடுபட்டதாக பொண்சேகா மீது அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனாலும் குற்றப்பத்திரிகக எதுவும் இதுவரையில் தாக்கல் செய்யப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் மாவை சேனாதிராஜா தலைமையிலான 12 பேரின் பெயர்கள் இதில் அடக்கப்பட்டிருந்தன. மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், சி.வி.கே. சிவஞானம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி (தமிழ் காங்கிரஸ் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம், ஆறுமுகம் நடேசு இராசேந்திரன், கந்தையா அருந்தவபாலன், சிவஞானம் ஸ்ரீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவான் (சுடரொளி, உதயன் ஆசிரியர் இராசரத்தினம் சிவசந்திரன் (பேராசிரியர் ஐங்கரநேசன் பொன்னுத்துரை, மற்றும் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர். தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள். அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பையும் இந்தத் தேர்தலையொட்டி ஒன்றிணைப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை; இதனையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியில் தனித்தும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஈபிஆர்எல்எவ் வரதர் அணியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தது. இக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், இளைப்பறிய வங்கி உத்தியோகத்தர் கே.ஆறுமுகம், சட்டத்தரணி ரீ.சிவநாதன், இளைப்பாறிய அதிபர் எஸ்.சத்தியநாதன், இளைஞர் சேவை அதிகாரி எஸ்.யோகேஸ்வரன், ரெலோ உறுப்பினர் இந்திரகுமார் நித்தியானந்தம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 1988 இல் ஈரோஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.செளந்தராஜனுக்கும் அப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம்பெற்றுள்ளார். கே. மனோகரன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர் திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அரசுத் தலைவர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதர வளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரை ரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோர் மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுகின்றனர். சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர். பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், எஸ். ஜெயானந்தமூர்த்தி, ஆகியோர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. [[பகுப்பு:இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010 noinclude> 147 பந்துகளில் அவர் 200 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் சயீட் அன்வர் 1997 ஆம் ஆண்டிலும், சென்ற ஆண்டு சிம்பாப்வேயின் சார்ல்ஸ் கவெண்ட்ரியும் 194 ஓட்டங்களி ஒரு நாள் ஆட்டங்களில் எடுத்திருந்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. சச்சின் 200 ஓட்டங்களுடனும் தோனி 68 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். "இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன் என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார். கடந்த 12 ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறித்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதாகி நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர். அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் பிபிசி தமிழோசைக்கு கூறியிருக்கின்றார். 4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் 3 ம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். இராணுவக் காவல்துறையினரின் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமரசிங்கா தெரிவித்தார். லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் 'தமிழீழ விடுதலை நோக்கிய பயண' நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபான்ட் தொடக்கி வைத்துப் பேசினார். "நாடாளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பளிக்க நான் விரும்புகிறேன். இதனை மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக நான் கருதுகின்றேன். 14 நாடுகளிலிருந்து மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது பாரியதொரு வெற்றியாகும். உலகளாவிய ரீதியில் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் சுவாசத்தின் வெளிப்பாடாக இது காணப்படுகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கு சேவையாற்றக்கூடிய ஐக்கியம் குறித்ததாக இந்த மாநாடு அமையுமென்று நான் எதிர்பார்க்கிறேன். தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயல்பட வேண்டும் என்றும், இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைக்க வேண்டும் என்றும் மிலிபாண்ட் வலியுறுத்தினார். இந்த மாநாட்டிற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகைதந்திருந்த தூதுக் குழுவினரை பிரதமர் கோர்டன் பிறவுண் சந்தித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்கள், நோக்கங்கள் பற்றியும் விவரமாக எடுத்துரைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை அரசுக்குக்கான தமது அழுத்தம் தொடர்ந்து வருவதாகவும், அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றபோதுகூட அரசின் ஐனநாயக விரோதப்போக்கைக் கண்டித்து" கடிதம் எழுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை அரசு தொடர்ந்து இதே அலட்சியத் தன்மையைக் கடைப்பிடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் எனவும் பிரவுன் கூறினார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாது தடுத்து, ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கு தான் ஏற்பாடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரித்தானியப் பிரதமர், தமது அரசு முடிந்தளவு மேலும் பல அழுத்தங்களை இலங்கை அரசுக்குக் கொடுக்கும் எனக் கூறினார். இதற்கிடையில், உலகத் தமிழர் அமைப்பின் லண்டன் மாநாட்டில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டதையிட்டு இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது. நேற்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இலங்கைக்கான பிரித்தானியத் தூதரை நேரில் அழைத்துத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். பலமணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 காவலர்களும் 3 தாக்குதல் நடத்தியவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானில் இந்தியத் தூதரகம் தனது ஊழியர்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ள கட்டடங்கள் மற்றும் அந்நாட்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் தங்கும் இடங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் தூதரக ஊழியர்கள் உட்பட 9 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்றும், 12 இந்தியர்கள் காயமடைந்தனர் என்றும் இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. ஆப்கானிய அரசுத்தலைவர் அமீட் கர்சாய் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். இந்திய அரசும் இதனைக் கண்டித்துள்ளது. நேட்டோ மற்றும் ஆப்கானியப் படைகள் தாலிபான்களின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இத்தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. தாய்லாந்தில் 2006-ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியின்போது தக்சின் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவரது சொத்துகளை நீதிமன்றம் முடக்கி வைத்தது. சினவத்ராவுக்கு சொந்தமான மொத்த சொத்தில் இது அரைவாசிப்பங்காகும். சினவத்ரா பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில், தனது குடும்பத்துக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு செல்வம் குவித்தார் என்றும் அவர் ஈட்டிய லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பறிமுதல் தொகைக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர் இராணுவப் புரட்சி ஒன்றினால் பதவி கவிழ்க்கப்பட்ட தக்சினுக்கு தாய்லாந்தில் இன்னமும் செல்வாக்கு உள்ளது. தனது ஆட்சி காலத்தில் தவறு செய்ததாகக் கூறப்படுவதை தக்சின் மறுத்து வருகிறார். நீதிமன்றத் தீர்ப்பு தக்சினுக்கு பாதகமாக இருப்பதால் அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை முன்னிட்டு தாய்லாந்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் பேங்காக்கில் அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய பேரணியை நடத்த தக்சின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடப் போவதாக தக்சின் கூறி வருகிறார். தாய்லாந்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது முதல் வெளிநாட்டில் வசித்து வரும் தக்சின் தற்போது துபாயில் இருந்து வருகிறார். தீர்ப்புக் கூறப்பட்டவுடன் துபாயில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் உரையாற்றினார். "இது முழுமையானதொரு அரசியல் சதி. இத்தீர்ப்பினை அரசாங்கம் ஏற்கனவே அறிந்திருந்தது என அவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "எனது 30 பில்லியன் (பாட்) சொத்துக்களை என்னிடம் திருப்ப ஒப்படைப்பதற்கு அவர்களுக்குக் கருணை இருந்திருக்கிறது என அவர் கூறினார். தலைநகர் சண்டியாகோவில் இருந்து 325 கிமீ தென்மேற்கே, கொன்செப்சியன் நகரில் இருந்து 115 கிமீ வட-கிழக்கே இன்று அதிகாலை 0634 GMT நேரத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிகக்ப்பட்ட பிரதேசங்களில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசுத்தலைவர் மிசெல் பாசிலெட் அறிவித்துள்ளார். சண்டியாகோ விமானநிலையம் மூடப்பட்டு அனைத்து வான்சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரல் என்ற நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகருக்கு 20 கிமீ வடக்கேயுள்ள கோலினா என்ற நகரில் வேதித் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி எரிவதாக சிலியின் தொலைக்காட்சி அறிவித்தது. ஆனாலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. முற்றிலும் மண்ணால் அமைக்கப்பட்ட இம்மசூதியில் முகமது நபி அவர்களின் பிறந்த நாள் விழாவில் வெள்ளிக்கிழமை கலந்துகொள்ள வந்திருந்தவர்களே இவ்வாறு நெரிசலில் சிக்கினர். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மசூதியில் மீள் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், இதனால் பக்தர்கள் வழமையான வழியை விட மாற்று வழியைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள டிம்பக்டு நகரம், முன்னர் இசுலாமியக் கல்விக்கு ஒரு முக்கிய மையமாக இருந்து வந்தது. ஆண்டுதோறும் 25,000 பேர் வரையில் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்றும், மசூதியைச் சுற்றி மூன்று முறை அவர்கள் வலம் வருவார்கள் என்றும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்தார். வயதான பெண்மணி ஒருவர் கீழே வீழ்ந்ததால், ஏனையோர் அவருக்கு மேல் வீழ்ந்து அதனால் நெரிசல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். 40 பேர் வரையில் காயமடைந்தனர். ஜின்கெரெபர் டிம்பக்டுவில் மிகவும் பெரிய மசூதி ஆகும். முன்னர் மிகவும் செழுமை மிக்கதாக இருந்த இந்நகரம் மேற்கு ஆப்பிரிக்காவில் இசுலாமைப் பரப்ப ஒரு மையமாக இருந்தது. 16ம் நூற்றாண்டின் பின்னர் இவ்வட்டாரத்தின் முக்கிய வணிக வழி சகாரா பாலைவனத்தை விட்டு, அத்திலாந்திக் பெருங்கடலுக்கு மாறியதில், மாலியின் முக்கியத்துவம் குறைந்து போனது. மைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2015-16 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் ஐசிசி 2015 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியையும், இந்தியா ஐக்கிய அரபு எமிரேட் அணியையும் வென்றன. கலாநிதி விஐயரட்ணம் ஜோன் மனோகரன் கென்னடி (முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியகலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி, சந்தனம் ஸ்ரீபன் (கடற்தொழில் நடேசு துரைராஜா (விவாகப் பதிவாளர் நாகலிங்கம் குழந்தைவேலு, விஸ்வலிங்கம் மணிவண்ணன் (மாணவன் பிரான்சிஸ் வின்சன் டீ போல் (வியாபாரி செல்லத்துரை சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ செல்வராசா கஜேந்திரன் (முன்னாள் நா.உ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் (பொதுச் செயலாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) பிரான்ஸ் "தேசியப் பேரழிவை" அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மற்றும் மீள்குடியேற்றங்களுக்கு இந்தப் பிரகடனம் வழிவகுக்கும் என பிரான்சின் பிரதமர் பிரான்சுவா பிலியன் கருத்துத் தெரிவித்தார். புயலினால் பெரும் பாதிப்புக்குள்ளான அத்திலாந்திக் கரையோரப் பகுதிகளை பிரெஞ்சு அதிபர் பார்வையிட இருக்கிறார். இப்பகுதியில் 45 பேர் உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் மூழ்கியோ அல்லது இடிபாடுகள், மற்றும் மரங்களுக்கிடையில் சிக்குண்டு இறந்தார்கள். சிந்தியா என்று பெயரிடப்பட்ட அத்திலாந்திக் புயல் பிரான்ஸ், போர்த்துக்கல், மற்றும் ஸ்பெயினின் மேற்குக் கரைகளை 140 கீமீ/மணி வேகத்தில் தாக்கியது. அத்துடன் பெரும் மழையும் கூடவே பெய்தது. பிரான்சில் மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளதால் அங்கு மில்லியன் கணக்கானோர் மின்சாரமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாலும் ரயில்கள் தாமதமானதாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அத்துடன் இக்கூட்டமைப்பு எதிர்வரு்ம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் கீழ் போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அடுத்து பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும்வரை இடைக்காலத் தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போலைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இது வரை நடந்துள்ள குளிர்கால ஒலிம்பிக்சுகளில் எந்த நாடும் 14 தங்க பதக்கங்களை வென்றதில்லை. முதல் முறையாக கனடா அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தோனேசியாவில் இசுலாமியப் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது இக்கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் உள்ள இந்தோனேசிய இசுலாமியப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அத்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு சிறிய கோவில்கள் வெளிப்பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோவிலில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்களும் உள்ளன. விநாயகர் சிலை, லிங்கம், யோனி பீடம், பலிபீடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் சேதம் அதிகமில்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர் இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார். இந்த சிலைகள் அனைத்தும் தொல்பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது இக்கோவில் எல்லாரும் பார்க்கும்படியாக கண்காட்சிக்கு வைக்கப்படும் பல்கலைக்கழக அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார். ஒரு காலத்தில் பெளத்தம், இந்து மதங்கள் இந்தோனேசியாவில் பிரபல்யமாக விளங்கின. இன்று 90 வீதம் முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இசுலாம் பிந்திய காலங்களில் பரவியது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. முந்நூறுக்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் 60 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். இவர்கள் அங்குள்ள ஒரு மருத்துவ மையம் ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னிரவில் இம்மையம் சேதமடைந்தது. கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வணிக மையத்தை முற்றாக தரைமட்டமாக்கி, கடைகளையும், வீடுகளையும், ஏனைய கட்டிடங்களையும் புதையச் செய்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். தான் ஒரு தேவாலயத்தில் தங்கியிருக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டது என உயிர் தப்பியவர்களில் ஒருவர் கூறினார் தேவாலயம் திடீரென இடிந்து வீழ்ந்தது. அனைத்துப் பகுதியையும் சேறு சூழ்ந்து கொண்டது. எனக்கருகில் நின்றிருந்த ஐந்து பேர் இறந்ததை என் கண்ணால் பார்த்தேன்.சேற்றிற்கு மேலே என் தலைப்பகுதி இருந்ததால் நான் உயிர் தப்பினேன் என்றார் அவர். உயிர் தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதி தலைநகர் கம்பாலாவில் இருந்து 275 கிமீ வடகிழக்கே அமைந்துள்ளது. இப்பகுதியில் நிலச்சரிவு சாதாரணமான நிகழ்வு என்றும், உயிர்ச்சேதங்களும் அதிகம் எனவும் பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார். ஜுவனல் ஹபியரிமானா அவர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான், 16 ஆண்டுகளுக்கு முன்னர் ருவாண்டா இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு தூண்டிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளுக்கு திட்டமிட அகதா ஹப்யரிமானா உதவினார் என்று தற்போதைய ருவாண்டா அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. அவரை விசாரணை செய்ய ருவாண்டாவுக்கு அனுப்புமாறு கோரி வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் திருமதி ஹபியரிமானா ருவாண்டாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார். 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளில் 800,000 இற்கும் அதிகமான டுட்சி இனத்தவர்கள் இறந்தனர். ருவாண்டா விடுத்துள்ள கைது ஆணையை அடிப்படையாக வைத்து பிரெஞ்சுக் காவல்துறையினர் திருமதி ஹபியரிமானாவை பாரிசில் வைத்துக் கைது செய்தனர். அவரது கைதை வரவேற்றுள்ள ருவாண்டாவின் நீதி அமைச்சர், ஆனால், அவர் ருவாண்டாவிடம் கையளிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். சுமாத்திராவின் நிலநடுக்க அளவு அதிக அளவாயிருந்தாலும், சிலி நிலநடுக்கம் சுமத்ரா நிலநடுக்கத்தை விட பூமியின் அச்சை அதிக தூரம் இடம்பெயர வைத்திருக்கிறது. சிலி பூமியின் நடு-அகலக்கோட்டிற்கு அருகே காணப்படுவதால், பூமியின் அச்சைப் பலமாக மாற்றியிருக்கிறது என ரிச்சார்ட் குரொஸ் தெரிவித்தார். ஸ்கொட்லாந்தில் உள்ள பிரித்தானிய நிலவியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் டேவிட் கெரிட்ச் நிலநடுக்கம் எவ்வறு பூமியின் அச்சை இடம்பெயர்க்கிறது என விவரித்தார். பனிக்கட்டி மீது விளையாடும் ஒருவர் தன்னைத் தானே சுழலும் போது தனது கைகளை மடக்கி நீட்டும் போது அவரின் சுழற்சி வீதம் அதிகரிக்கிறது அவ்வாறே பூமியும் தன்னைத் தானே சுழலுகிறது. நிலநடுக்கத்தினால் அதன் திணிவு மையம் மாறும் போது சுழற்சி வீதம் மாறுகிறது என கெரிட்ச் புளூம்பேர்க் செய்தியாளருக்குத் தெரிவித்தார். டெக்சாசில் நடந்த விண்கோள் அறிவியல் மாநாட்டில் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிவித்த நாசா அறிவியலாளர்கள், நிலவின் வடதுருவத்தில் இருக்கும் மிகப்பெரும்பள்ளங்களில் நீராக இருந்து உறைபனியாக மாறிய உறை பனிப்படிமங்களை தங்களின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர். நாசாவின் மினி-சார் என்ற பரிசோதனை பெருமளவு உறைபனியைக் கண்டறிந்திருக்கிறது. நிலவின் நீருடன் ஐதரோகார்பன் போன்ற வேறு மூலக்கூறுகளும் கலந்திருந்ததையும் இப்பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சில பள்ளங்களில் இருக்கும் உறைபனிப்பாறைகள் இரண்டு முதல் 15 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருப்பதாகவும், இந்த பனிப்பாறைகளின் அடர்த்தி என்பது பல மீட்டர்களாக இருக்கக்கூடும் என்றும் வானியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த உறைபனியின் மொத்த அளவு குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் தொன்களாக இருக்கும் என்று கூறிய ஹூஸ்டனில் இருக்கும் நிலவு மற்றும் விண்கோள் ஆய்வு மையத்தைச்சேர்ந்த முனைவர் பால் ஸ்புடிஸ் இந்த உறைபனியில் இருக்கும் நீரின் மூலக்கூறுகளை ராக்கெட்டுக்கான எரிபொருளாக பயன்படுத்தினால், பூமிக்கும் நிலவுக்கும் இடையில் 2200 ஆண்டுகளுக்கு தினமும் ஒரு விண்ஓடத்தை இயக்க முடியும் என்றும் கூறினார். இத்தகைய பெருமளவான உறைபனி நிலவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம், நிலவுக்குள் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு மனிதன் தொடர்ந்து அங்கே வசிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகளும் காவல்துறை அதிகாரிகளுமாவர். இவர்களுக்கு 16 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோட்டா, தலைநகர் டிலியிலுள்ள அவரது வீட்டுக்கு முன்பாக வைத்து சுடப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அதே தினத்தில் பிரதமர் க்ஷானா னா குஸ்மாவோ பயணித்த வாகனத் தொடரணி தாக்குதலுக்குள்ளானபோது, அவரும் காயங்களுடன் உயிர் தப்பினார். குற்றவாளிகளாகக் காணப்பட்டோரை விட மேலும் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இவரக்ளில் அஞலீட்டா பிரெஸ் என்ற ஆத்திரேலியப் பெண்ணும் அடங்குவார். இவர் கொலைமுயற்சியின் போது கொல்லப்பட்ட போராளித் தலைவர் ஆல்பிரெடோ ரெய்னாடோ என்பவரின் சிநேகிதி ஆவார். குற்றவாளிகளாகக் காணப்பட்டோரில் பெரும்பான்மையானோர் முன்னாள் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஆவர். இவர்கள் 2006 ஆம் ஆண்டில் இராணுவத்தினரிடையே இடம்பெற்ற கிளர்ச்சியின் போது போராளிகளானோர். இக்கிளர்ச்சியின் போது பலர் கொல்லப்பட்டனர். ஆட்சியும் கவிழ்ந்தது. ரெய்னாடோவின் மறைவிற்குப் பின்னர் போராளிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்ற கஸ்தாவோ சால்சிகா என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் அரசிடம் சரணடைந்தார். இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள குண்டா கிராமத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இந்த ஆசிரமத்தில் இராம் ஜானகி கோயில் உள்ளது. இவை கிருபால் மகராஜ் என்ற தனியாருக்கு சொந்தமானது. கிருபால் மகராஜின் மனைவி நினைவுதினத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், உணவு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆசிரமத்தின் கதவு திடீரென இடிந்து விழுந்ததால் பக்தர்களிடையே கூட்டநெரிசல் ஏற்பட்டதாக லக்னெள சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறைத் தலைவர் பிரிஜ்லால் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்தபோது சுமார் 10,000 பக்தர்கள் ஆசிரமத்தில் கூடியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் பிரதாப்கர் மற்றும் அலகாபாதிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பிரிஜ்லால் தெரிவித்தார். கூட்ட நெரிச்சலில் சிக்கியவர்களில் பெரும்பான்மையோர் குழந்தைகளும், பெண்களும் ஆவர். title உத்திரபிரதேசத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் சாவு அசிலிசரஸ் கொங்குவி Asilisaurus kongwe என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விலங்கினங்கள் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "சைலசோர் silesaurs எனப்படும் இவ்வகை விலங்கினங்கள் டைனசோர்களின் மிக நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அவற்றின் மூதாதைகள் என இவ்வாய்வில் பங்குகொண்ட முனைவர் ரண்டல் ஏர்மிஸ் என்பவர் தெரிவித்தார். டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வுநடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்த புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "டைனசோர் பரம்பரையின் ஒரு கிளையை மட்டுமே இப்போது கண்டுபிடித்துள்ளோம். இரண்டாவது கிளையும் இதே காலப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். எனவே இப்பரம்பரையில் ஆரம்பகால டைனசோர்கள் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது" என ஏர்மிஸ் தெரிவித்தார். இக்குழந்தை காணமல் போனதாக ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த குழந்தையின் பெற்றோரினால் முறையிடப்பட்டிருந்தது. சிறுவனின் தாயார் மெல்பேர்ணில் கல்வி பயிலுகின்றார். கடந்த காலங்களில் இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வன்முறைகள் பல நிகழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவும் ஒரு இனவெறிப் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருப்பதால் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பு நிலவுகிறது. எப்படி இந்த சிறுவன் கொல்லப்பட்டான் என்பது குறித்த தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். "நாம் இக்கொலை தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். விரைவில் இக்கொலைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து விடுவோம்" என உதவிக் காவல்துறை அதிகாரி சேர் கென் ஜோன்ஸ் தெரிவித்தார். வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விடுமுறையைக் கழிக்கவென இங்கு வந்திருந்த போது, மெல்பேர்ணின் வடக்கில் உள்ள லாலோர் என்ற இடத்தில் அவனது வீட்டில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை திடீரெனக் காணாமல் போனான். 6 மணி நேரத்தின் பின்னர் 20 கிமீ தொலைவில் உள்ள வீதியொன்றின் ஓரத்தில் அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. "கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், கண்டுபிடிக்கப்பட்ட உடல் காணாமல் போன குர்சனினது தான் என கென் ஜோன்ஸ் தெரிவித்தார். "இக்கொலை தமக்கு மிகவும் கவலை அளித்துள்ளது" என விக்டோரிய மாநில முதலமைச்சர் ஜோன் பிரம்பி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து இந்தியாவுடனான முறுகல் நிலையைத் தணிக்கவென ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிமித் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 0640 மணிக்கு இடம்பெற்றது. அந்த மனிதன் அமைதியாக மெட்ரோ நிலையம் அருகில் உள்ள பெண்டகனின் நுழைவாயிலுக்கு வந்து, திடீரென தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை உருவி பாதுகாப்புக் கடமையில் இருந்த காவல்துறையினர் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தான் என அங்கிருந்த காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். வேறு எவரும் இந்நிகழ்வில் காயமடையவில்லை. அந்தத் துப்பாக்கிதாரி 36 வயதான ஜோன் பட்ரிக் பெடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளான். இரண்டு 9மிமீ தானியங்கித் துப்பாக்கிகளையும், பல துப்பாக்கி ரவைகளையும் வைத்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் சிறிய காயங்களுக்கே உள்ளாகினர் என பெண்டகனின் காவல்துறை உயரதிகாரி ரிச்சார்ட் கீவில் தெரிவித்தார். துப்பாக்கிதாரி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தான். கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஓசுர், சேலம், மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அரசு அமைக்கவிருக்கிறது. "தொழில்நுட்பம் தொடர்பான சகல துறைகளும் அடங்கலாக, தகவல் தொழில்நுட்பப் பகுதி வளர்ச்சியுற்று வருகிறது என இன்போசிஸ் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். இவ்வாண்டில் இதன் வளர்ச்சி 13 முதல் 15 விழுக்காடு வரை இருக்கும் எனவும், மூன்று இலட்சம் பேர் இதனால் வேலை வாய்ப்புப் பெறுவர் என நாஸ்காம் தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த கட்டுரை கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அதிருப்தி அலைகள் எழுந்தன. அதன் தொடர்பாகவே அந்தப் பத்திரிகை இந்த மன்னிப்பை கேட்டுக் கொண்டிருக்கிறது. சமயத்தைக் கைவிட்டு செல்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சம்பந்தமான கருத்துக்களை வெளியிடுவதுதான் அந்தக் கட்டுரையின் நோக்கமே தவிர கிறித்தவர்களையோ கிறித்தவ சமயத்தையோ இழிவுபடுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. மேலும் வழிபாட்டுத் தலத்தின் தூய்மைக்கும் மேன்மைக்கும் மாசு கற்பிக்கும் நோக்கம் துளியும் கிடையாது, என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. முறைகேடான மதமாற்றம் குறித்து எவ்விதத் தடயங்களையும் தாம் பெறவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியாளர்கள் மீதான விசாரணை கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கிறித்தவர்கள் புகார் செய்ய ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கும் மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கடந்த சில மாத காலமாக இங்கு மத தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன. மலே மக்கள் கட்டாயம் இசுலாம் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என மலேசியச் சட்டம் சொல்கிறது. ஆனாலும் அங்கு மலே இல்லாத சிறுபான்மையின சீன, மற்றும் இந்தியர் ஏனைய மதங்களைப் பின்பற்றுவதற்கு மலேசியச் சட்டம் இடம் கொடுக்கிறது. இவ்வாறான குழுவொன்றின் எவ்வகையான நியமனமும் இலங்கையை ‘அவசியமானதும் பொருத்தமானதுமான நடவடிக்கையை எடுப்பதற்கு’ தள்ளும் செயல் என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு எந்த வகையிலேனும் பொறுப்பேற்கப்படவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தாலும் அத்துடன் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளாலும் போர்க்கால குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை, பான்கீ மூன் குறிப்பிடத்தக்களவு மென்மையான இராசதந்திரப் போக்கையே கொண்டுள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினர் நிராயுதபாணிகளாக உள்ளவர்களை சுட்டுக் கொல்வதைக் காட்டுவதாக வெளியான காணொளி குறித்து பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென, சட்டத்துக்குப் புறம்பான கொலைச்சம்பவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலரின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ட்டன் கோரிக்கை விடுத்திருந்த போது, அல்ஸ்ட்டன் சுதந்திரமாக செயற்படுகின்றார் என பான்கீ மூன் தெரிவித்திருந்தார். இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி தற்போது குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்த திட்டத்தை அடிப்படையற்றதுடன் நியாயமற்றது என விமர்சித்துள்ளார். இவ்வாற நடவடிக்கை எதுவும் போரினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகள் தொடர்பில் எடுக்கப்படவில்லையெனவும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சில அரச சார்பற்ற நிறுவனங்களாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாலுமே சுமத்தப்பட்டுவருவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசுத்துறைச் செயலகத்தினால் கடந்த அக்டோபரில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் ஏற்கனவே குழுவொன்று ஆராய்ந்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மூன்று தசாப்தங்கள் வரை நீடித்த இனப்பிரச்சனைப் போர், அங்கு மனித உரிமைகளுக்கு பெரும் சாபக்கேடாகியுள்ள நிலையில், இந்தப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுகின்றது. ஆனால் அரசாங்கம் அதன்படி செயற்படவில்லையென்பது இலங்கை அரசு மீதான விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்திருந்தது. இது இவ்வாறிருக்க, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். அரசு உயர் அதிகாரிகள், மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகியோரிடம் இவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன விடயங்களை அவர் பேசப்போகிறார் என அறிவிக்கப்படா விட்டாலும், இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்குவது குறித்து இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர். டிலான் கேர்ஸ்வாக் என்ற அந்த இந்திய நபர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென் கில்டா காவல் நிலையத்தில் இந்நபர் மீது குற்றம் பதியப்பட்டுள்ளது. இந்நபர் பிணையில் செல்லுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. இந்நபர் கொலை செய்யப்பட்ட குர்சன் சிங் என்ற சிறுவனுக்கு உறவினன் இல்லை என்றாலும், அச்சிறுவன் வசித்து வந்த வீட்டிலேயே இந்நபரும் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அந்தக் கொலையாளி குர்சன் சிங் என்ற அந்தச் சிறுவனை மயங்கிய நிலையில் தனது மோட்டார் வாகனத்தின் பின்புறம் உள்ள பொதிகள் வைக்கும் இடத்தில் வைத்துப் பூட்டி எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் அக்குழந்தையை 20 கிமீ தூரத்திலுள்ள தெருவோரம் வீசி விட்டுச் சென்றிருக்கிறான். குழந்தை எப்போது இறந்ததென்பது இன்னும் அறியப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுக் கொலை மார்ச் 5, 2010 முன்னர் 100 பேர் வரையில் இறந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனாலும் உண்மை நிலவரத்தை அறிய முடியவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த ஜனவரியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்ததற்குப் பழி வாங்கவே நேற்றைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் அவதானிகள் தெரிவிக்கின்றனர். பதில் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் இராணுவத்தினரை உசார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சொட் மற்றும் டோகோ-நகாவா ஆகிய கிராமங்களில் நேற்றைய தாக்குதல்களில் இறந்தோரில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். ஜொஸ் நகரம் நைஜீரியாவின் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதிக்கும், கிருத்தவர்கள் அதிகமமக வாழும் தெற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. நைஜீரியாவில் முஸ்லிம் கிறிஸ்தவர்களிடையே மோதல், பலர் உயிரிழப்பு ஜனவரி 19, 2010 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த உயிரினங்களின் கிட்டத்தட்ட அரைவாசி அளவை முற்றாக அழித்த நிகழ்வு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கக்கூடிய 41 அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள். ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது. "டைனசோர்களின் முடிவு பூமியின் வரலாற்றுக்கு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம். இது பூமியில் மனித இனம் பெருக வழிவகுத்துள்ளது இவ்வாறு தெரிவித்தார் கரெத் எவன்ஸ். சைப்பிரஸ் தலைநகர் நிக்கோசியாவின் மயானம் ஒன்றில் முன்னாள் அதிபரின் உடல் கண்டுபிடிக்கபட்டது. 2003 ஆம் ஆண்டில் இருந்து பெப்ரவரி 2008 ஆம் ஆண்டு வரை சைப்பிரசின் அரசுத்தலைவராக இருந்தவர் பாப்படபவுலஸ். இவரின் உடல் காணமல் போனதற்கு காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், அதாவது அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்கு ஒரு நால் முன்னதாக இவரது உடல் காணாமல் போனது. இவர் புற்று நோய் காரணமாக இறந்தார். மிகவும் திட்டமிட்டு இவ்வுடல் களவாடப்பட்டிருக்கிறது எனக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். 250 கிகி நிறையுள்ள பளிங்கினாலான தட்டினைத் திறந்து உடலைத் திருடியிருக்கின்றனர். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்த சைப்பிரசின் விடுதலைக்காக கரந்தடிப் படைகளுடன் இணைந்து போராடி வெற்றி கண்டவர். தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல எதிரிகளை அவர் தேடிக்கொண்டார். நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 0432 மணிக்கு எலாசிக் மாகாணத்தில் பாசியூர்ட் என்ற கிராமத்தை மையமாக வைத்து இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 40 தடவைகள் பின்னதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அருகிலிருந்த ஒக்குலார் என்ற கிராமம் முற்றக அழிந்துள்ளதாகவும் மேலும் பல சேதமுற்றதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்குண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்கிராமங்களில் பல கட்டிடங்கள் களிமண்ணால் செய்யப்பட்ட செங்கட்டிகளால் கட்டப்பட்டவை ஆகும். ஆறு கிராமங்கள் இப்பூகம்பத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டன. வீட்டிலிருந்த மக்கள் அச்சத்தால் வெளியில் ஓடினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளமாகக் காணப்பட்டது. பள்ளிவாசல்களின் மினாராக்கள், மாளிகையின் கோபுரங்கள் இடிந்து வீழ்ந்ததால் தெருக்கள் எங்கும் இடிபாடுகள் காணப்பட்டன. போக்குவரத்துகளும் தடைப்பட்டன. மீட்புப்பணிகளில் ஈடுபட காவல்துறையினர், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. "களிமண் கட்டடங்கள் கட்டுவது இங்கு உள்ளூர் பாரம்பரியமாகும். துரதிர்ஷ்டவசமாக, இதனால் பலத்த சேதங்களைக் கண்டு விட்டோம் எனத் துருக்கிப் பிரதமர் தெரிவித்தார். title துருக்கியில் நேற்று பூகம்பம் 57பேர் பலி: நூறு பேர் காயம்; ஆறு கிராமங்கள் சேதம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் 186 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்மசோதா நிறைவேறியுள்ளது. ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். பல சிறிய கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இந்த மசோதா முதன் முதலாக 1996 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. எனினும் இப்போது தான் முக்கிய கட்சிகள் இதற்கு ஆதரவளித்துள்ளன. நாட்டில் பெண்களின் நிலையை வலுப்படுத்தும் திசையிலான நடவடிக்கைகளில் இந்த நகர்வு ஒரு முக்கிய முன்னேற்றம் இது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விபரித்துள்ளார். தற்போது கீழவையான லோகசபாவில் பெண்கள் 10 விழுக்காட்டினரே உள்ளனர். சட்டசபைகளில் மிகவும் குறைவானோரே உறுப்பினர்களாயுள்ளனர். இந்த நகர்வுக்கு எதிராக முறையற்ற விதத்தில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் முக்கிய கட்சிகள் இந்தச் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இது முஸ்லிம் போன்ற சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்று சில சோசலிசக்கட்சிகள் அஞ்சுகின்றன. டல்மடீனின் இறப்பு பற்றிய அறிவிப்பு ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் எனக் கருதப்படுகிறது. பாலிக் குண்டுவெடிப்பில் இறந்த 202 பேரில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆஸ்திரேலியர்கள் ஆவர். இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக இந்தோனேசியா நடத்திவரும் போராட்டத்தில் இவரது இறப்பு முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று காவல்துறையினரும் ஆய்வாளர்களும் நேற்று கூறினர். பன்டன் மாவட்டத்தின் பமுலாங் வட்டாரத்தில் காவல்துறையினர் திடீர் சோதனைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்டவர் ஜமா இசுலாமியா போராளிகள் அமைப்பைச் சேர்ந்த டல்மடின் என நம்பப்படுகிறது. இவருக்கும் “காவல்துறையினர் புலன் விசாரணை நடத்திவரும் பயங்கரவாதச் சம்பவங்களுக்கும்” தொடர்பிருப்பதாக நம்பப்படுவதாகத் தேசிய காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனால், சடலத்தை உறுதியாக அடையாளம் காண ஔரிரு நாட்கள் ஆகக்கூடும் என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், சுட்டுக் கொல்லப் பட்டவர் “டல்மடின் என்பதில் காவல்துறையினருக்கு வலுவான சந்தேகம்” இருப்பதாகத் திடீர் சோதனைகளில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அச்சே மாகாணத்தில் கடந்த மாதம் இசுலாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் என்று கூறப்படும் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தோனேசியப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தேடுதல்களை நடத்தி வருகிறார்கள். title முக்கிய ஜமா இஸ்லாமியா போராளி கொல்லப்பட்டார் இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது. அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது. சீனாவின் இந்த நிதியுதவிகள் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்திற்கான வீதி அபிவிருத்தி, தலைநகரில் பிரம்மாண்டமான அரங்கமொன்று, நிலக்கரி அனல்மின் ஆலைகள் என இன்னும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த வேலைத்திட்டங்கள் அனைத்திலுமே சீன கட்டுமான ஒப்பந்தக்காரர்களும் பெரும் எண்ணி்க்கையிலான அந்நாட்டு வேலையாட்களுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையினால் இலங்கையிலுள்ள கட்டுமானத்துறை நிறுவனங்களும் தொழிலாளர்களும் தமது வருமான வாய்ப்புகள் இழக்கப்படுவதாக கவலையடைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சீனாவின் வட்டி வீதம் சப்பான், மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் வட்டி வீதத்திலும் அதிகமாகும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சீனத் திட்டங்கள் மிக விரைவில் முடிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. இந்தியாவோ தன் பங்கிற்கு, இலங்கையின் தெற்கு ரயில்வே கட்டமைப்பை தரமுயர்த்துவதற்காக 70 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. மாணவர்கள் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட 50 பேர் நேற்று பல்கலைக்கழகத்தில் வைத்து உபவேந்தர் பதவி விலக வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். முன்னர் சிங்கள மாணவர் ஒருவரின் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தம்மை பதவிவிலகுமாறு கோரியதாக பத்மநாதன் பிபிசி தமிழோசை நிருபருக்குத் தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உபவேந்தரை அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தாம் ஏற்கனவே மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக தாம் அவர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் தொடர்ந்து பதவிவிலகலை வற்புறுத்தியதாக அவர் தெரிவித்தார். தாம் உடனடியாகவே பதவிவிலகுவதாக அவர் மாநியங்கள் ஆணைக்குழுவிற்குத் தொலைபேசி மூலம் அறிவித்தார். அரசுத்தலைவர் அவரது பதவிவிலகலை ஏற்றுக் கொள்ளும் வரையில் அவரைத் தொடர்ந்து உபவேந்தர் பதவியில் இருக்குமாறு மாநியங்கள் ஆணைக்குழு அவரிடம் கோரியிருந்து, அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமல் உடனடியாகவே பதவிவிலகுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தில், அரசியல் தலையீடுகள் அதிகரித்தமையின் ஒரு கட்டமாகவே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 2006ம் ஆண்டு பதில் துணைவேந்தராக இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட கலாநிதி பத்மநாதன் 2008 யூலை மாதத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே இவரது பதவிக்காலம் முடிவடைய இருந்தது. இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை இன்றுடன் கலைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் கலாநிதி பத்மநாதன் பதவி விலக வேண்டும் என குறிப்பிட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகளால் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அநேகமான மாணவர்கள் இன்று எழுத்து மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளதை அடுத்தே மாணவர் பேரவையைக் கலைக்கத் தீர்மானித்ததாகப் பதில் துணை வேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் தெரிவித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தக்சினின் ஆதரவாளர்கள் இன்று முதல் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகரில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய எதிப்புப் பேரணி சரியாக பகல் 12:12 மணிக்கு தலைநகரில் பௌத்த மதச் சடங்குகளுடன் ஆரம்பித்ததாக அறிவிக்கப்படுகிறது சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்களாட்சிக்கான ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பு இப்பேரணியை நடத்துகிறது. புதிய தேர்தல் ஒன்றைப் பிரதமர் அபிசித் வெசசீவா அறிவிக்கும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறும் என்றும், ஆர்ப்பாட்டங்களில் ஏறக்குறைய 600,000 பேர் கலந்துகொள்வர் என்றும் கூறுகின்றனர். “ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவத் தளங்களிலோ காவல்நிலையங்களிலோ அத்துமீறி நுழைந்தால் நாங்கள் அவர்களை பயங்கரவாதிகளாகக் கருதி ஆயுதப் பலப் பிரயோகம் செய்து நசுக்குவோம்,” என்றார் தாய்லாந்துத் துணைப் பிரதமர். முன்னாள் பிரதமர் தக்சின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ள தாய்லாந்து அரசாங்கம் ராணுவத்தினரை ஈடுபடுத்தவும், ஊரடங்கை அறிவிக்கவும், கூட்டங்களுக்குத் தடை விதிக்கவும் தயாராக உள்ளது. இதற்கு ஏதுவாக, நாட்டின் கடுமையான உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்பாட்டக்காரர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய பேங்காக்கிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டில் தக்சின் சினவாத்திராவின் ஆட்சியைக் கலைத்த இராணுவப் புரட்சியை "சிவப்புச் சட்டைக்காரர்கள்" எதிர்க்கின்றனர். தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல் பெப்ரவரி 27, 2010 title பேரணிகளை எதிர்கொள்ள பேங்காக்கில் 50,000 வீரர்கள் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அரசுத் தாக்குதல்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது எனவும், இதனால் பொதுமக்கள் 2 கிமீ தூரத்துக்குக் குறையாமல் வெளியேறுமாறு மேயர் அப்துரிசாக் முகமது நோர் கூறியுள்ளார். இரண்டு தசாப்தகால உள்நாட்டுப் போரினால் மொகதிசுவில் இருந்து அரைவாசிக்கும் அதிகமானோர் வெளியேறியிருந்தனர். கடந்த ஆறு வாரங்களில் 33,000 பேர் மொகதிசுவில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பிட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் முன்னணி அரண்களை நோகி அரசுப் படைகள் எறிகனைகளை வீசி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது தாக்குதல் லாகூரின் மையப் பகுதியில் ஆர்.ஏ. சந்தையில் இடம்பெற்றுள்ளது. இங்கு அடுத்தடுத்து 15 செக்கன் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இராணுவத்தினர். குண்டுதாரிகள் மோட்டார் உந்துருளியில் வந்து இராணுவ வாகனங்களை அண்மித்த போது தம்முடன் எடுத்து வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக பஞ்சாபின் சட்டத்துறை அமைச்சர் ராணா சனவுல்லா தெரிவித்தார். இரண்டாவது தாக்குதல் காவல் நிலலயம் ஒன்றை இலக்காக வைத்து நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 4 பேர் இறந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மேலும் பல குண்டுச் சத்தங்கள் நகரில் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்களன்று லாகூரில் இரகசியக் காவல்துறையினர் பயன்படுத்திய கட்டடம் ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட்டனர். இத்தாக்குதலை அடுத்து, இராணுவம், மற்றும் அமெரிக்கப் படைகள் தம்மீதான தாக்குதல்களை நிறுத்தாவிடின் தாம் மேலும் 3,000 தற்கொலைக் குண்டுதாரிகளை நாடு முழுவதும் அனுப்ப விருப்பதாக தாலிபான்கள் அறிவித்திருந்தனர். போருக்கு பின் அரசியல் தீர்வு, மக்களின் உடனடித் தேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை இந்த அறிக்கை கூறுகிறது. வடக்கு, கிழக்கு மீண்டும் ஒன்றிணைந்த மாகாணமாக சமஷ்டி அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்றும், அது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது. தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதுடன் அவர்கள் இலங்கைத்தீவில் ஏனைய இனத்தவருடன் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகவும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கியமான அம்சமாக கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன்,நிலம், சட்டம், ஒழுங்கு ,கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள், நிதி என்பனவற்றுக்கான அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதிகாரப்பகிர்வு அமையவேண்டுமெனவும் அறிக்கையில்ல் வலியுறுத்தப்பட்டுள்ளது. வட,கிழக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஏற்பாடு செய்தல், உயர்கல்வி வசதிக்கான ஏற்பாடுகள் வட,கிழக்கு இராணுவ சூன்யப்பகுதியாக்குதல்,இடம்பெயர்ந்த மக்களை கௌரவமான முறையில் மீளக்குடியமர்த்துதல், தடுப்பு காவலில் குற்றம் சுமத்தப்படாதிருப்பவர்களை விடுவித்தல், ஏனையோருக்கு பொதுமன்னிப்பு போன்ற வலியுறுத்தல்களும் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வெளிப்படுத்துவதுமே இன்றைய அத்தியாவசியத் தேவையென அறிக்கை வலியுறுத்தியறுத்துகிறது. பேராசிரியர் பெரியார்தாசன் தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டதாகவும் அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேஷாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். ”பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வந்த நான், மதங்கள் மட்டுமே இவ்வுலகிலிருந்து மறு உலகம் செல்வதற்கான வழி என்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன்”, என்றார். முஸ்லிம் மதத்தில் இணைந்துள்ள பேரா.பெரியார்தாசன் புனித நகரமான மக்காவுக்கு உம்ரா எனும் புனிதப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி இரண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் (2002, 2006) ஜெர்மனி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற்று சாம்பியன் ஆகியது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் பதவி விலகாவிட்டால் தங்களுடைய ஆர்ப்பாட்டம் தலைநகரின் மற்ற பகுதிகளுக்கு பரவும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தை கலைப்பது என்பது நடக்காத ஒன்று என்று அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் விச்சசீவா தெரிவித்தார். அரசுத் தலைவர் ஆர்ப்பாட்டம் நடந்த போது இராணுவத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத் தலைமையகத்தை சூழ்ந்து கொண்டு அவரை பதவி விலகும்படியும், முன்னாள் பிரதமர் தக்சினுக்கெதிரான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனவு வற்புறுத்தினர். ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரும், காவல்துறையினரும் தலைநகரில் குவிக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், தற்போதைய அரசு சட்டப்பூர்வமான ஒன்று அல்ல என்றும், இதற்கு இராணுவத்தின் ஆதரவு இருப்பதாகவும் கூறுகின்றனர். தக்சினின் சொத்துக்களை தாய்லாந்து நீதிமன்றம் பறிமுதல் செய்ததையடுத்து அங்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. எதிர்ப்புப் பேரணிகளை எதிர்கொள்ள பாங்கொக்கில் 50,000 படையினர் குவிப்பு மார்ச் 12, 2010 தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல் பெப்ரவரி 27, 2010 ஜெய்ப்பூரில் இருந்து 162 கிமீ தொலைவில், சவாய் மாதோபூர் தௌசா மாவட்டங்களின் எல்லையில் இன்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. புனித நகரான பிருந்தாவனுக்கு கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு ஜலாவர் நகருக்குத் திரும்பிய போது விபத்து நிகழ்ந்திருப்பதாக சவாய் மாதோபூர் மாவட்ட காவல்துறை அதிகாரி விகாஸ் குமார் தெரிவித்திருக்கிறார். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் கான்பூர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்குவர். 11 பேர் பெண்கள். காயமடைந்திருப்போரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஆண்டு தோறும் பல நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இவை பெரும்பாலும் ஓட்டுநர்களின் கவனயீனம், மற்றும் பழுதடைந்த வீதிகள் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன. மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறும் இன்றைய முதல் அமர்வின்போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக விசாரணை இடம்பெற்றது. முதற்கட்ட விசாரணையின் பின்னர் இன்றைய நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை குறித்த விசாரணைக்கு வேறொரு இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நாளை நடைபெறும். இக்குற்றச்சாட்டுக்கள் தம்மை அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையே என்றும், தம்மை ஏப்ரல் பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்காகவே இந்நடவடிக்கை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மிகவும் இரகசியமான முறையில் இடம்பெறும் இவ்விசாரணை சரத் பொன்சேகாவிலும் இளநிலை அதிகாரிகளினால் நடத்தப்படுகிறது என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹவிலாண்ட் தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள் எதுவும் விவரமாக பொது மக்களௌக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட 35 பேர் சாட்சிகளாக அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொன்சேகா தனக்காக வாதாட தனது வழக்கறிஞர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தலாம் எனவும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் பொன்சேகா முறையிடலாம் எனவும் இராணுவப் பேச்சாளர் பிபிசி நிருபருக்குத் தெரிவித்தார். சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றங்கள் சாதாரன நீதிமன்றம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். [[பகுப்பு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010]] 50 ஆண்டுக்காலப்பகுதிக்குள் பறவையினங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வெப்பகாலநிலையின் விளைவால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இந்த மாற்றம் இப்பறவைகளுக்கு பெரிதும் ஏதும் கெடுதல் விளைவிக்கும் எனக் கருத ஆதாரங்கள் சிறதளவே உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் துறையுடன் தொடர்புடைய ஒய்க்கோஸ் என்ற இதழ் இவ்வாய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோசு வான் புஸ்கிரிக், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ராபர்ட் லெபர்மான் ஆகிய அறிவியலாளர்களும் அவர்களது குழுவும் இவ்வாய்வை மேற்கொண்டனர். 1961 முதல் 2007 வரை கைப்பற்றப்பட்ட மொத்தம் 486,000 பறவைகளை இவர்கள் ஆய்வுக்குள்ளாக்கினர். இவை 102 பறவையினங்களைச் சேர்ந்தவையாகும். கலவரங்களை அடக்க தலைநகர் கம்பாலாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு தீ எப்படிப் பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைய புகாண்டா அரசரின் ஆதரவாளர்கள் தமது சுயாட்சியைக் குறைக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராக சென்ற ஆண்டு இங்கு கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். அழிந்த நினைவுச் சின்னங்கள் அருகே மக்கள் கவலையுடன் காணப்படுகிறார்கள் என பிபிசி செய்தியாளர் ஜோசுவா முமாலி தெரிவித்தார். உகாண்டாவின் நான்கு பண்டைய இராச்சியங்களில் புகாண்டா மிகப்பெரியதாகும். இந்த நாடகம் ஷேக்ஸ்பியரின் படைப்புதான் என்று கல்விமான்களின் அனுமதி கிடைத்த பின்ன்ரே இந்த நாடகம் வெளியிடப்பட்டுள்ளது. 'டபுள் ஃபால்ஸ்ஹுட்' என்ற இந்த நாடகம் ஜோன் பிளெட்ச்சர் என்ற வேறொரு நாடகாசிரியரினால் எழுதப்பட்டது. இந்நாடகம் 18ம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவியது என்ற விளம்பரத்துடன் அரங்கேற்றப்பட்டது. ஆனாலும் இது ஒரு ஏமாற்று வேலை என அன்று இந்நாடகம் நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த நாடகத்தை மீளாய்வு செய்த இலக்கிய நிபுணர்கள், இதனை எழுதியது ஷேக்ஸ்பியர்தான் என்றும், அதனை ஜோன் பிலெட்ச்சர் என்பவருடன் சேர்ந்து அவர் இதனை எழுதியுள்ளார் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மிக நீண்டகாலமாக தொலைந்து போனதாகக் கருதப்பட்ட ஷேக்ஸ்பியரின் கார்டேனியோ என்ற நாடகத்தின் தழுவலே இது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மொழிச் செறிவிலும், கற்பனை வளத்திலும், உருவக வர்ணனையிலும் இந்த நாடக இலக்கியம் மிகவும் செழுமையாக உள்ளது. எட்டாம் ஹென்றி, டூ நோபில் கின்ஸ்மன் ஆகிய இரண்டு நாடகங்களை ஷேக்ஸ்பியர் பிளெட்ச்சருடன் சேர்ந்து எழுதியிருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. டபிள் ஃபோல்ஸ்வுட் என்ற இந்த நாடகம் 1610களில் எழுதப்பட்டிருக்கிறது என நோட்டிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹமண்ட் தெரிவித்தார். 1613 ஆம் ஆண்டில் குறைந்தது இரு தடவைகள் இது மேடையேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் நிதியம், மற்றும் அரசு நிதிகளை மோசடி செய்ததாக அமெரிக்கா அல்போன்சோ மீது குற்றம் சாட்டியதை அடுத்து அவர் ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் குவாத்தமாலா நகரில் அதிபாதுகாப்பு சிறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 58 வயதான போர்ட்டிலோ இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். வடபகுதியில் விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்கள் உல்லாசப் பயணிகளின் மத்தியில் புகழ் பெற்றவையாக காணப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காக பெருந்தொகையானோர் அங்கு மக்கள் செல்வதாகவும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்களை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கமாட்டாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. எனவே, இவற்றினை இல்லாதொழித்து குறித்த பகுதிகளில் உணவு விடுதிகள், மற்றும் உல்லாசத் தலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மைக்கேல் டெயிலிமிரர் இணையதளத்திற்கு உறுதிப்படுத்தினார். “புலிகளின் நினைவுச்சின்னங்களை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதில்லை என்பதே அரசின் கொள்கை. ஏற்கனவே இவற்றில் சில அழிக்கப்பட்டு விட்டன. விடுதலைப் புலிகளும், போரின் போது மக்களைப் பாதித்த வன்முறைகளும் முற்றாக மறக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார். அதன் செயல்திறன், உலகின் 3வது தலைமுறை உலங்குவானூர்தி நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, இரசியா ஆகியவற்றுக்குப் பின் சீனா பெரியரக உலங்குவானூர்தியைத் தற்சார்பாக வடிவமைத்து தயாரிக்கின்ற திறனைப் பெற்றுள்ளது என சீன வானொலி அறிவித்துள்ளது. ஏசி313 என்ற இந்த உலங்கு வானூர்தி 900 கிமீ தூரம் செல்லவல்லது என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதன் முதற்பயண நிகழ்வு சீனத் தொலைக்கட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. லிபியத் தலைவரின் அறிக்கை ”ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை” என நைஜீரிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜொஸ் என்ற நகரில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் வன்முறைகளில் இறந்துள்ளனர். நைஜீரியா பொதுவாக வடக்கே பெரும்பான்மையாக முஸ்லிம்களையும், தெற்கே பெரும்பான்மையாக கிறித்தவர்களையும் கொண்டுள்ளது. 1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையை அடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்ததை அடுத்து அங்கு 200,00 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 12 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். 1967 ஆம் ஆண்டில் தென்கிழக்கு நைஜீரியாவில் இக்போ மக்கள் பிரிந்து போக முடிவெடுத்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற போரில் ஒரு மில்லியன் பேர் இறந்தனர். வில்லியம்ஸ், சுராயெவ் இருவரும் பூமிக்குத் திரும்பியதில், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தற்போது இரசியாவின் அலெக் கோத்தொவ், சப்பானின் சொயிச்சி நொகுச்சி, நாசாவின் டி.ஜே.கிறீமர் மற்றும் ஒரு வான் பொறியாளர் ஆகியோர் அங்கு தங்கியிருக்கின்றனர். ஏப்ரல் 4 ஆம் நாள் சோயுஸ் விண்கலத்தில் மேலும் அலெக்சாண்டர் ஸ்குவோர்த்சொவ், மிக்கைல் கர்னியென்கோ மற்றும் நாசாவின் திரேசி டைசன் ஆகியோர் விண்வெளி ந்இலையத்துக்குச் செல்லவிருக்கின்றனர். 59 அகவையுடைய ஜொனி ஹுர்ட்டாடோ என்ற விவசாயி கொலம்பியாவின் லா கட்டலீனா என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணையில் வைத்து சென்ற திங்கட்கிழமை மார்ச் 16 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து தாம் மிகவும் வருந்துவதாகவும் கொலம்பிய அரசு இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். "கொலை செய்யப்பட்ட நேரத்தில் கொலம்பிய இராணுவத்தினர் பெருமளவில் அந்த இடத்தில் குவிந்திருந்ததாக தமக்குச் செய்திகள் கிடைத்திருக்கின்றன,” என அவர்கள் கொலம்பிய அரசுத்தலைவர் அல்வாரோ வெலசிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர். கொலம்பிய அதிகாரிகள் இக்கொலை குறித்து கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், கொலை நடந்த பகுதி சிறப்பு இராணுவப் பிரிவினரால் நிருவகிக்கப்பட்டு வருவதாகவும், தமது இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லை எனவும் தேசியக் காவல்துறைத் தலைவர் சஜெனரல் ஒர்லாண்டோ பயெஸ் தெரிவித்தார். நான்கு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்த கொய்ராலா, பல ஆண்டுகளாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இரு ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற மாவோயிஸ்டுகள் இந்து மன்னராட்சியை இல்லாது ஒழித்ததுடன், நேபாளத்தை மத சார்பற்ற குடியரசாக அறிவித்தார்கள். 1940களின் இறுதியில் தொழிற்சங்கத் தலைவராக அரசியலில் நுழைந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா. மன்னராட்சிக்கெதிரான அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக பல தடவைகள் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். 1960 இல் எட்டு ஆண்டுகள் சிறி வாசம் அனுபவித்தார். 1991 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமரானார். மூன்று ஆண்டுகளில் அவரது ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. மே 2006 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சி நாடாளுமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாவோயிசத் தீவிரவாதிகளுடன் அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எவரும் இதுவரையில் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்புக் கருதி கிட்டத்தட்ட ஐநூறு பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் கடைசியாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1821 ஆம் ஆண்டில் எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பை அடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும், இது பனிக்கட்டியாறுக்கு மேல் உள்ள பகுதி மேலும் ஒருக ஆரம்பிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிளிஜோஸ்லிட் பகுதியில் ஏற்கனவே தூறுகள் விழ ஆரம்பித்துள்ளதாகவும், பனிக்கட்டியாற்றின் மேல் இருந்து பிரகாசமான வெளிச்சம் வருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாள், அடையாள அட்டைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ஆட்சேபித்து ஷார்ப்வில் என்ற நகரில் கறுப்பின மக்கள் ஊர்வலம் நடந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அதில் 69 பேர் கொல்லப்பட்டார்கள், குறைந்தது 180 பேர்வரை காயமடைந்தார்கள். இச்சூட்ட்ச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் எவரும் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டம் சந்தித்த மிகவும் கொடூரமான படுகொலைத் தருணம் அது. தென்னாப்பிரிக்காவில் இந்நாள் மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் ஆராதனைகள், சொற்பொழிவுகள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சார்ப்வில் படுகொலைகளைத் தொடர்ந்து ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் மற்றும் பான் ஆப்பிரிக்கானிய காங்கிரஸ் போன்ற அமைப்புகள் நாட்டில் தடை செய்யப்பட்டன. நிறவெறிக்கெதிரான ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு இந்நிகழ்வு ஏதுவாக அமைந்தது. ஜெயந்த் பட்டேல் என்ற 59 அகவையுடைய அந்த மருத்துவர் ஒவ்வொரு குற்றத்தையும் நீதிபதி படித்த போது “தான் குற்றவாளியல்ல” எனக் கூறினார். 2008 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்திரேலியாவில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகள் 4 முதல் 6 வாரங்கள் இடம்பெறும் எனவும், 90 பேர் வரையில் விசாரிக்கப்பட இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. டாக்டர் பட்டேல் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது திறமையின்மை, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருத்துவ முறைகளை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. நோயாளி ஒருவரின் குடலை எவ்விதக் காரணமும் இன்றி அகற்றியிருந்தார். வேறொரு நோயாளி உள் இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியாஇயால் அந்த நோயாளி இறந்துள்ளார். வேறொரு நோயாளிக்கு பட்டேல் தொண்டையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டார். இம்மாதிரியான சிகிச்சை பொதுவாக பண்டபேர்க் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்நோயாளி இரண்டு நாட்களில் உயிரிழந்தார். 1980களில் பட்டேல் அமெரிக்காவில் பணியாற்றும் போது அவரது திறமையின்மை குறித்து குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. 1984 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் அவருக்குத் தண்டம் அறவிடப்பட்டு மூன்றாண்டுகள் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டது. கொழும்பு பிரேபுறூக் பிளேஸில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் அந்த நிறுவனத்தின் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் நிறுவன அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். தம்மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு அந்த நிறுவன ஊழியர்களும் அவர்களைத் திருப்பித் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிது நேரத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து தாக்கியவர்கள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து எம்படிவி தொலைக்காட்சியின் வழக்கமான நிகழ்ச்சிகள் இடை நிறுத்தப்பட்டு தாக்குதல்களும், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளும் நேரடியாகத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 வரையானோர் சிரச அலுவலகத்துக்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அதில் சிலர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஊடகத்துறைப் பணிப்பாளர் அனுச பல்பிட்ட தெரிவித்தார். கொழும்பில் பிரபல அமெரிக்கப் பாடகர் ஏக்கோனின் நேரடி நிகழ்ச்சி ஒன்று ஏப்ரல் 24 இல் இடம்பெறுவதை ஆட்சேபித்தே ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றதாக காவல்துறை உயர் அதிகாரி பிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். எம்டிவி நிறுவனம் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது. இதற்கிடையில், நேற்று கைது செய்யப்பட்ட 16 சந்தேக நபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சனவரி 2008 இல் பன்னிப்பிட்டியாவில் உள்ள எம்டிவி ஸ்டூடியோ தாக்கப்பட்டது. அத்தாக்குதல் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்றிக் போயெர் Heinrich Boere என்பவர் தான் ஒரு கடைக்காரர், மருந்து விற்பனையாளர், மற்றும் ஒரு தீவிரவாதி என மூவரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தான் அதிகாரிகளின் கட்டளைக்கிணங்கவே அவர்களைக் கொலை செய்ததாக தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜோசப் சோங்கிராபர் என்ற 90 வயதுடையவர் போர்க்குற்றங்களுக்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் அவரது மேன்முறையீடு இன்னமும் முடிவுறாத நிலையில் பிணையில் அவர் விடுதலை ஆகியிருக்கிறார். நேற்று செவ்வாய் மாலை பார்க் வீதியில் இந்தத் தீ பரவ ஆரம்பித்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்டீவன் கோர்ட் கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. பலர் காயங்களுக்குள்ளாயினர். இவர்களில் பலர் எரிந்த ஆறு மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றவர்கள் ஆவர். மின்தூக்கி ஒன்றில் ஏற்பட்ட மின்னொழுக்கே தீ பரவக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் விசாரனைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். 2008 ஆம் ஆனில் இருந்து நகரில் மொத்தம் 10 தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தீ பரவுதல் இடங்கு ஒரு சாதாரண நிகழ்வு என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலர் பின்னர் இறந்துள்ளனர். பலரது உடல்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. திசைநாயகம் நடத்திவந்த பத்திரிகையில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கட்டுரைகளை எழுதி வந்தார் எனக் கூறி 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இந்த ஆண்டு சனவரி மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். வன்முறையைத் தான் ஆதரித்ததாக கூறப்படுவதை திசைநாயகம் மறுத்துள்ளார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. செய்தியாளர் ஒருவர் தமது பணிக்காக கைது செய்யப்பட்டதற்கு திசைநாயகம் ஓர் எடுத்துக்காட்டு என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சென்ற ஆண்டு கூறியிருந்தார். ”இலங்கை, மற்றும் சில நாடுகளில் ஊடகத்துறை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது,” என பிரித்தானிய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பொப் சாட்ச்வெல் பிபிசி சிங்கள் சேவைக்குத் தெரிவித்துள்ளார். "இப்படி ஒருவரின் நிலையை நாம் எடுத்துக்கூறுவதன் மூலம், அவர் வசிக்கும் நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப்படும். பேச்சுச் சுதந்திரம், அத்னூடாக ஊடக சுதந்திரம் இவற்றுக்காகவே நாம் குரல் கொடுக்கிறோம்,” என்றார் அவர். கடந்த செப்டம்பர் மாதம் தைரியமாகவும் தார்மீக முறையிலும் தனது பத்திரிகையாளர் பணியைச் செய்துவந்ததாக கூறி பாரிசைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லா செய்தியாளர்கள் அமைப்பு” திசைநாயகத்துக்கு விருது வழங்கியது. இரு மாதங்களுக்கு முன்னர் வேறொரு ஊடகவியலாளர் காணாமல் போனது குறித்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் “எல்லைகளில்லாத செய்தியாளர்கள் அமைப்பு” கடந்த செவ்வாய்க்கிழமையன்று கேட்டிடருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையில் ஒன்பது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படுகொலைகளில் தாம் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அரசு தெரிவிக்கிறது. வெள்ளையில்லாத மனிதர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகும் படம் ஒன்று காவல்துறையினரின் கணினிகளினூடாக அனுப்பப்பட்டுள்ளது. பலர் இச்செய்திக்கு இனவெறியைத் தூண்டும் வகையில் பின்னூட்டம் இட்டு அதைப் பலருக்கும் அனுப்பியுள்ளதாக “தி ஏஜ்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் இடத்து இவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. காவல்துறையினரில் சிலர் இனவெறியாளர்கள் என காவல்துறை அதிகாரி இம்மாத முற்பகுதியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க இளைஞர் ஒருவரை அடித்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அங்கு இராணுவத்தினர் தனித்து இக்குற்றங்களைப் புரியவில்லை. பல உள்ளூர் பொதுமக்கள், குறிப்பாக ஜமாத்-இ-இசுலாமி கட்சி உறுப்பினர்கள் இராணுவத்தினருக்குத் துணை போனார்கள். துணை இராணுவக் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டன. 9 மாதங்களாக நடந்த இந்த விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் உள்ளூர் உளவாளிகள் உதவியோடு சுமார் 30 லட்சம் பேரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மீது இப்போது வங்கதேச அரசு விசாரணைகளை மேற்கொள்ள இருக்கின்றது. இவர்கள் தாங்கள் குற்றமமற்றவர்கள் என்றும், இவை அரசியல் பழிவாங்கலே என்றும் அவர்கள் கூறுகின்றனர். வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. 12 பேர் அடங்கிய வழக்கறிஞர் குழு இந்த வழக்குகளை நடத்தும். இலங்கையில் விடுமுறையைக் கழிக்கவென வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கை அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட்டிருந்ததாகதாம் நம்புவதாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் பிபிசி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். எனினும் அவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. இப்பெண்ணின் பெயர் சிங்களப் பெயராக இருந்தாலும், ஒரு முஸ்லிம் பெண் போலவே அவரது உடைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். பாரேனில் இருந்து வெளியாகும் கல்ஃப் செய்திகள் என்ற பத்திரிகை இவரது பெயர் சேரா மலனி பெரேரா என்றும், 1980களில் இருந்து பாரேனில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கிறது. 1999 ஆம் ஆண்டிலேயே இவர் இசுலாமிற்கு மதம் மாறினார் என்றும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூட மதம் மாறியுள்ளார்கள் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து தான் எழுதிய நூல்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சித்த போது அஞ்சல் அலுவலகத்திலிருந்த ஒரு பணியாளர் கொடுத்த தகவலிலன் அடிப்படையில் அவரைக் காவல்துரையினர் கைது செய்ததாக பாரேனில் உள்ள அப்பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார். அப்பணியாளர் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பௌத்த தேசியவாதக் கட்சியொன்றின் உறுப்பினர் எனவும் கூறப்படுகிறது. பாரேனில் இப்பெண்ணின் வதிவிட உரிமை மார்ச் 24 இல் முடிவடைவதால் இவர் பாரேன் திரும்ப முடியாமல் போகலாம் என அவரது உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். முஸ்லிம்கள் இலங்கையின் மூன்றாவது பெரிய இனமாகும். ஆனாலும் பௌத்த மதத்தில் இருந்து இசுலாமிற்கு மதம் மாறுவது அங்கு ஓர் அபூர்வமான நிகழ்வு என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். 1,200 தொன் எடையுள்ள இக்கப்பல் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:30 இற்கும் 10:45 இற்கும் இடையில் பைங்கியொங் தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியது. கப்பல் மூழ்கியதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. வட கொரியா இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மஞ்சள் கடலில் 3 முதல் 5 பாகை செல்சியஸ் வெப்பநிலையுள்ள கடலில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உயிருடன் இருப்பது அபூர்வம் என கடற்பட அதிகார்ரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே காணாமல் போன 46 பேரையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. கப்பலில் பின்புறம் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், கப்பலின் இயந்திரம் உடனடியாகவே செயலற்றுப் போனதாகவும், அதன் பின்னர் கப்பல் வேகமாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தென் கொரியாவின் யொன்காப் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பல மாலுமிகள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்துள்ளனர். 1950 முதல் 1953 வரை நிகழ்ந்த கொரியப் போரை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்த வண்னம் உள்ளது. கொரியப் போருக்குப் பின்னர் மஞ்சள் கடல் பகுதியில் இது வரையில் மூன்று பெரும் சண்டைகள் நிகழ்ந்துள்ளன. இந்தப் போட்டியில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், இயங்குனர் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பல பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் தரவேற்றப்படும். சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதியில் உள்ள எஸ். திருச்செல்வம் என்ற வர்த்தகரின் மகனே கடத்தப்பட்டவர். இது தொடர்பாக கடந்த புதன்கிழமை 16 வயதுடைய திருச்செல்வம் கபில்நாத் என்ற அந்த மாணவனுடன் பயிலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்தே காணாமற்போன மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை எழுதியுள்ளது. மாணவன் காணாமல் போனதன் பின்னர் இது தொடர்பில் கடந்த தினம் ஒன்றில் அரசியல் கட்சியொன்றின் தென்மாராட்சிப் பொறுப்பாளர் ஒருவர் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேவேளை அவருடைய வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சித்தரப்புகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கொங்கோவின் வட-கிழக்குப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் LRA எனப்படும் ”கடவுளின் எதிர்ப்பு இராணுவம்” Lord's Resistance Army என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களால் சூறையாடப்பட்டுள்ளன. இதன் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடைசியாக இடம்பெற்ற இத்தாக்குதலில் கிராமத்தவர்கள் பலர் கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 250 பேர் வரையில் கடத்தப்பட்டுள்ளனர். 17 வயதுடைய ழான்-குளோட் சிங்பாட்டில் என்பவரும் அவரது நண்பர்களும் இவர்களால் கடத்தப்பட்டு பல நாட்கள் உப்பு மூட்டைகளைச் சுமந்துள்ளனர். "எங்களைப் பிடித்துச் செல்லும் போது எல்.ஆர்.ஏ தீவிரவாதிகள் வழியில் தென்பட்ட கிராமத்தவரைப் படுகொலை செய்தனர்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "அவர்கள் என்னையும் கொலை செயய்வே எண்ணினர். ஆனாலும், அவர்களுக்கு வலிமையுள்ள நபர்கள் தேவை என அவர்களின் தலைவன் கூறியதால், எம்மை அவர்கள் கொலவில்லை.” ”கடைசியாக, உன்னையும் கொலை செய்து விடுவார்கள். அதனால் இப்போதே தப்பி ஓடு” எனத் தீவிரவாதிகளுள் ஒருவர் எனக்குக் கூறினார். அவரும் எனது இனமான அசாண்டே என்ற இனத்தைச் சேர்ந்தவர் என ழான்-குளோட் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் நாளுக்குக் கிட்டவாக தாக்குதல் ஒன்று இடம்பெறும் என ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்குத் தகவல் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் தமது படையினரை டுங்கு, நயாங்கரா போன்ற நகரங்களுக்கே அனுப்பியிருந்தனர். ஆனால் தாக்குதல் இடம்பெற்ற கிராமங்களுக்கு அவர்கள் அனுப்பவில்லை. ட2009 டிசம்பர் 13ம் நாள் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாப்பிலி என்ற பகுதியில் இராணுவத் தலைவராக இருந்த லெப். ஜான்வியே பகாட்டி என்பவர் இக்கொலைகள் பற்றி அறிந்து அங்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்டோரை அடக்க செய்ய உதவினார். "நான் 268 இறந்த உடல்களை என் கண்ணால் கண்டேன்,” என அவர் கூறினார். அவர்கள் எதற்காக இக்கொலைகளைச் செய்தார்கள் என்பது குறித்து அறியப்படவில்லை. முதலாவது குண்டு உள்ளூர் நேரப்படி காலை 0756 மணிக்கு ரஷ்ய மத்திய புலனாய்வுக் கட்டடத்தின் கீழேயுள்ள மத்திய லுபியான்கா தொடருந்து நிலையத்தில் வெடித்தது. இதில் 23 பேர் கொல்லப்பட்டனர். 40 நிமிடங்களின் பின்னர் மற்றொரு மனிதக் குண்டு பார்க் குல்த்தூறி என்ற தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்றினுள் வெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ரஷ்யத் தலைநகரில் இடம்பெற்ற மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல்களுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லை. தமது இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் பல நகரங்களுக்கும் விரைவில் பரவ இருக்கின்றன என்று செச்சினிய தீவிரவாரதிகளின் தலைவர் டோக்கு உமாரொவ் கடந்த பெப்ரவரியில் தெரிவித்திருந்தார். "இரண்டு தாக்குதல்களும் பெண் தற்கொலைப் போராளிகளால் நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது,” என மாஸ்கோ நகர முதல்வர் யூரி லூஷ்க்கொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 2004 பெப்ரவரியில் மாஸ்கோவின் பவிலியெத்ஸ்கயா தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தோருக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சனவரியில் பாகிஸ்தானிய நபர் கத்தியால் பலமுறை குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் கிட்டத்தட்ட 50 பேர் தொடர்புபட்டிருந்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் 17 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். அமீரகத்தில் மதுபானம் விற்பதற்கு தடை உள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையினால் அங்கு அடிக்கடி வன்முறைகள் இடம்பெறுவதுண்டு. அமீரகத்தில் ஒரே தடவையில் அதிகளவு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது இதுவே முதற் தடவை எனக் கூறப்படுகிறது. ”ஸ்டேர்ன் ஹூவின் தண்டனை ஆத்திரேலியத் தரத்துக்கு மிக அதிகம்”, என ஆத்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிமித் தெரிவித்தார். வழக்கு விசாரணைகளை தூதரக அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்காதது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார் ஆவணங்கள் களவாடியமை தொடர்பான விசாரணைகளில் பதில் வழங்கமுடியாத கேள்விகள் இன்னமும் இருப்பதாக நான் நினைக்கிறேன்”, என ஸ்டீவன் சிமித் தெரிவித்தார். விசாரணையின் போது, குற்றவாளிகள் நால்வரும் தாம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றதாக ஒப்புக் கொண்டனர். ஸ்டேர்ன் ஹூ $600,000 அமெரிக்க டாலடர்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சீனாவின் எஃகு தொழில் இவர்களின் இந்நடவடிக்கை மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இவர்களின் நடவடிக்கை மூலம் சென்ற ஆண்டு சீனா தனது விலை மதிப்புகளை இடைநிறுத்தியிருந்தது. இத்தீர்ப்பு மூலம் சீனாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடைல் உறவுகள் பாதிக்கப்பட மாட்டாது என ஸ்டீவன் சிமித் தெரிவித்தார். தமது ஊழியர்களின் நடவடிக்கை மன்னிக்க முடியாதது எனத் தெரிவித்துள்ள ரியோ ட்ண்டோ நிறுவனம் அவர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. ஆத்திரேலிய சுரங்க நிறுவனங்களில் இருந்து இரும்பு உலோக மண்ணை சீனா வாங்குவதற்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க ஸ்டேர்ன் ஹூ முக்கிய இடைத்தரகராக செயற்பட்டார். ரியோ டின்டோ ஒரு பிரித்தானிய ஆத்திரேலியக் கூட்டு நிறுவனம் ஆகும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினிக்கு கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகத் தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நளினியை விடுதலை செய்வது உகந்ததல்ல என்ற சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பரிந்துரைக் குழுவின் அறிக்கையில் நளினியை விடுவிக்க முடியாது என்பதற்காக 8 காரணங்கள் கூறப்பட்டதாக தமிழ்க அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். * நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. நளினி கணவரின் சொந்த ஊர் இலங்கை. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். * நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை. * நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும். * தன்னுடைய குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது. * இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது. அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை. பொதுவாக இந்தியாவில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நன்னடைத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர் விடுதலை செய்யப்படலாம். நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இம்மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றன. நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் ஒரு நாள் வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும். ராஜீவ் காந்தி கொலைச் சதிக்கு உதவினார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயாவணக்கம். மேலே உள்ளதலைப்பில் மாநாட்டையொட்டித் என்றும் விக்கிப்பீடியாவுக்கு]]க் கட்டுரை என்றும் இருக்கவேண்டும். ஒற்றுப்பிழை நீக்கி அமைக்கவேண்டுகின்றேன். கிசிலியார் என்ற நகரில் மாநில உள்ளூராட்சி அமைச்சு அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை 0830 மணியளவில் கார் குண்டு ஒன்று வெடித்தது. அதே தெருவில் 35 நிமிடங்களுக்குப் பின்னர் இரண்டாவது குண்டு வெடித்தது. வடக்கு கவ்க்காஸ் மாநிலங்களின் நிலைகொண்டுள்ள தீவிரவாதிகளே இக்குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் என அவதானிகள் கருதுகின்றனர். இன்றைய இரண்டாவது தாக்குதலில் கிஸ்லியார் நகரக் காவல்துறைத் தலைவர் கேர்ணல் வித்தாலி வெதர்னிக்கொவ் எனபவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிஸ்லியார் நகரம் செச்சினிய எல்லைக்கு அண்மையாக அமைந்துள்ளது. மிக சிறிய பெரும்பான்மை வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செர்பியா அதன் அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தக்கூடிய மீள் இணக்கப்பாட்டு முயற்சிகளில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம பார்க்கப்படுகிறது. இனவழிப்பு இடம்பெற்றதை சேர்பிய நாடாளுமன்றம் ஒப்புக்கொள்ளத் தவறி விட்டதை சேர்பியாவில் உள்ள பொசுனிய முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். ஆனால் பொசுனியப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களில் ஐக்கிய நாடுகளால் ஜெனோசைட் (இனவழிப்பு) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு சம்பவமும் இதுவே. சிரெப்ரெனிக்கா படுகொலைகள் நிகழ்ந்து ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் செர்பியாவைப் பொறுத்தவரை பொசுனியப் போர் இன்றும் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த போர்க்காலத்தின் போது, பல மோசமான கொடூரங்கள் செர்பியாவின் பெயரிலேயே புரியப்பட்டுள்ளதை அவர்களின் நாடு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று அங்குள்ள பலரும் கருதுகின்றனர். ஆனால் மற்றவர்களோ செர்பியா மீது அநியாயமாக அப்பட்டமான அவதூறுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் நம்புகின்றனர். சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு இந்தத் தீர்மானம் ஒரு முக்கிய படிக்கல்லாகக் கருதப்படுகிறது. மொத்தம் 250 உறுப்பினர்களில் 127 பேர் மட்டுமே இத்தீர்மானத்திற்கு அதரவாக வாகக்ளித்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இவர்கள் மூவர் மீதும் பயங்கரவாத சட்டப்பிரிவின் கீழ் பொலிசார் வழக்குத் தொடுத்திருந்தபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஆத்திரேலியாவில் தடை செய்யப்படாத அமைப்பு என்பதால், கடந்த ஆண்டு பயங்கரவாதப் பிரிவின் கீழான வழக்கை காவல்துறையினர் திரும்பப் பெற்றதுடன் ஐக்கிய நாடுகளாலும் பெரும்பாலான உலக நாடுகளால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ஓர் இயக்கத்துக்கு நிதியுதவி புரிந்ததாக இவ்வழக்கு பின்னர் மாற்றப்பட்டிருந்தது. ”இம்மூவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களிடம் பணம் சேகரித்து இம்மூவரும் இலங்கையின் பிரிவினைவாத அமைப்புக்கு அனுப்பியிருந்தனர். தமிழ்ப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது ஆனால் அவர்கள் அவ்வமைப்பைப் பயங்கவாத அமைப்பாகப் பார்க்கவில்லை” என நீதிபதி தெரிவித்தார். கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் அவர் தனது தீர்ப்பை வாசித்தார். ”இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவவெனவே அவர்கள் பணத்தை அனுப்பினர். இக்கொடுப்பனவு அவ்வேளையில் தமிழ்ப் புலிகளுக்கூடாக மட்டுமே செய்திருக்க முடியும். ஆனால் அவர்களின் பணம் அங்கு வேறு வகையில் செலவிடப்பட்டதில் இவர்களுக்கு எதுவும் கட்டுப்பாடு இருக்கவில்லை” என நீதிபதி தெரிவித்தார். ”ஆரூரன் விநாயகமூர்த்தி $97,000 பெறுமதியான மின்னியல் உபகரணங்களைக் கொள்வனவு செய்து அனுப்பியதை ஒப்புக்கொண்டிருந்தார். இவ்வுபகரணங்களின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புகளுக்குப் பயன்பட்டதை விநாயகமூர்த்தி அறிந்திருக்கவில்லை. அவ்வுபகரணம் புலிகளின் காவல்துறையினருக்கே பயன்படுத்தப்படவிருந்ததாக அவர் நினைத்திருந்தார்” என நீதிபதி தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஊடகவியலாலருக்குக் கருத்துத் தெரிவித்த ஆரூரன், “இலங்கையில் உள்ள ஒரு தமிழன் இலங்கை அரசிடம் இருந்து எவ்வித நீதியையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன்று ஆஸ்திரேலிய நீதி அமைப்புக்கு அமைவாக நாம் எமக்கு நீதியைப் பெற்றுக் கொண்டோம்” என்றார். ஆரூரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு $1,000 டாலர் எதிர்கால நன்னடத்தை முன்நிபந்தனையின் பேரில் அவர் உடனடியாகவே விடுவிக்கப்பட்டார். ஏனையோருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் $1,000 எதிர்கால நன்னடத்தை முன்நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இம்மூவரும் பயங்கரவாத முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள்ள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் கார்லொசு கோமசு அடையாளம் தெரியாத ஓர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி பிரதமரை விடுவிக்கும்படி சத்தமிட்டதைத் தொடர்ந்து பிரதமர் விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் தொடர்ந்து அவர் வீட்டுக்காவலில் உள்ளதாகவும் பின்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. புரட்சியாளர்களின் தலைவர் ஜெனரல் அந்தோனியோ இண்ட்ஜாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து போகாவிடின் பிரதமரைக் கொல்லப்போவதாக தெரிவித்தார். ஆனாலும் பின்னர் அவர் இன்றைய நிகழ்வுகள் இராணுவத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினை என்றும், இராணுவப் புரட்சி அல்ல என்றும் கூறினார். அரசுத்தலைவர் மாலம் பக்காய் சான்கா இதனை ஒரு இராணுவப் புரட்சி என்பதை ஏற்க மறுத்து விட்டார். அனைத்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு சூன் மாதத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன. தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மில்லியன் சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்லுவதில்லை அல்லது பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்க பிள்ளைகள் ஆவர். கல்வியறிவு பெறுவதற்கு பால் மற்றும் சமூக வேறுபாடு கவனிக்கப்பட மாட்டாது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படும் என மன்மோகன் சிங் குறிப்பிட்டார். 2003 ஆம் அண்டில் இருந்து 2009 வரை இத்தொகை 57 மில்லியன்களால் அதிகரித்திருந்ததாக உலக வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலானோர் அரசுப் பள்ளிஅக்ளிலேயே இணைந்திருந்தனர். அத்துடன் தனியார் பள்ளிக்கூடங்களில் வறிய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கால்வாசி இடமாவது ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாசாவின் டிரேசி டைசன், மற்றும் இரசியாவின் அலெக்சாண்டர் ஸ்குவோர்த்சொவ், மிக்கைல் கர்னியென்க்கோ ஆகிய விண்வெளி வீரர்கள் இன்று புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் சென்றிருக்கிறார்கள். இவ்விண்கலம் இரண்டு நாட்களில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என நாசா தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று டிஸ்கவரி விண்ணோடம் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அன்று சோயுஸ் விண்வெளி வீரர்களுடன் இணைய இருக்கிறது. முதன் முதலில் 1967 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட சோயுஸ் விண்வெளித் திட்டத்தில் டிஎம்ஏ-18 105வது மனிதப் பயணம் ஆகும். இன்று விண்ணுக்குச் சென்றுள்ள மூவரும் பூமியச் சுற்றிக் கொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் வரை தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை கிட்டத்தட்ட 250 மைல்கள் உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தின் அமைப்புப் பணிகள் 90 விழுக்காடு அளவு முடிவடைந்து விட்டதெனவும், இன்னும் ஓராண்டில் முழுமையடைந்து விடும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. "இக்குண்டுத் தாக்குதலில் எவரும் கொல்லப்படவில்லை. தொடருந்துக்கள் எதுவும் அந்நேரத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கவில்லை என உள்ளூர் காவல்துறை அதிகாரி ஐஜாஸ் அகமது கூறினார். ஆனாலும் உள்ளூர் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை காலை அளவில் பாதை திருத்தப்பட்டு வழமையான சேவைகள் இயங்க ஆரம்பித்தன. அண்மைக் காலங்களில் காஷ்மீர் பகுதியில் வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளது. ஆனாலும் போராளிகள் மீளக் கூடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள் என அஞ்சப்படுகிறது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்திய ஆட்சிக்கெதிரான தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்கவென பல்லாயிரக்கணக்கான இந்தியப் படையினர் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு தானுந்துகளில் வந்துகொண்டிருந்த படையினர் மீதே செருமானியப் படையினர் தாக்குதலை நடத்தியிருந்தனர். நிறுத்தல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது தானுந்துகள் சென்றதால் அவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என நேட்டோ பேச்சாளர் தெரிவித்தார். நேற்றுக் காலை தீவிரவாதிகளுடனான சண்டையில் மூன்று செருமானியப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து அவ்விடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த படையினரே இத்தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானித்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினரின் தொகையில் செர்மானியர்கள் மூன்றாவது இடத்தை வகிக்கின்றனர். வெள்ளி மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு தாம் வருந்துவதாக நேட்டோவின் பன்னாட்டு பாதுகாப்பு உதவிப்படை Isaf தெரிவித்துள்ளது. தமது படையினர் பல வகைகளிலும் சமிக்கைகளைக் காட்டி அந்தத் தானுந்துகளை மறித்ததாகவும், ஆனால் அவை நிற்காமலே சென்றதாகவும் நேட்டோ அறிக்கை கூறுகிறது. "கடைசியில் படையினர் சுட்டதில் குறைந்தது ஐந்து ஆப்கானியப் படையினர் கொல்லப்பட்டனர்.” ஆப்கானித்தானில் செருமனியின் இராணுவத் தலையீடு செருமனியப் பொது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படவில்லை என பிபிசி தெரிவிக்கிறது. தமது படையினரின் எண்ணிக்கையை மேலும் 850 ஆல் (மொத்தமாக 5,350 ஆக) அதிகரிக்க செருமானிய நாடாளுமன்றம் சென்ற பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அதன்படி, தமிழகத்தில் "ஊனமுற்றோர்" என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் மாற்றுத் திறனாளிகள்" என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கலைஞர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "மாற்றுத் இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் நியமனம் வழங்குவதிலும் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை 2006ஆம் ஆண்டிற்குப்பின் இதுவரை 56 ஆயிரத்து 225 ஆசிரியப் பெருமக்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 236 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும், 549 கைகால்களில் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளும் ஆசிரியர்களாக நியமனம் செடீநுயப்பட்டுள்ளனர். மேலும், சமூக நலத்துறையின் சிறப்புத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 300 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் இனச்சுழற்சி விதிகளைத் தளர்த்தி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிநியமனம் செய்திட அரசு சிறப்பு அனுமதி வழங்கியதன்பேரில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 187 பேர் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். ஆக 2006-க்குப்பின் இதுவரை, 470 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் 549 கை கால்களில் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளும் என மொத்தம் 1019 பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்துடன், தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வழங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் ஒருசேர கண்ட முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அவர்கள் அனைவருக்கும் தாமே நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார். இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் 68 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவர். இந்த 95 மாற்றுத் திறனாளிகளுடன் சேர்த்து தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை, 29 பேர் முதுகலை ஆசிரியர்களாகவும், 856 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும், 22 பேர் ஆசிரியப் பயிற்றுநர்களாகவும், 227 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும் என மொத்தம் 1114 மாற்றுத் திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நமது நாட்டில் ஆண் இனத்திலும் சேராமல் பெண் இனத்திலும் சேராமல் அரவாணிகள் என்றழைக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும். அதற்கு ஏற்ப மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தம் செய்யவேண்டும்". அதுபோல நாம் பல்வேறு நலத்திட்டங்கள், நடவடிக்கைகள் செய்துள்ள போதிலும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களும் நிறைய பேர் உள்ளனர். பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் போது அவர்கள் விடுபட்டு போய் விடுகிறார்கள். எனவே நடைபாதைகளில் குடியிருப்பவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். செனிகலின் முன்னணிக் கட்டிடக் கலைஞரும், அரசுத் தலைவரின் ஆலோசகருமான பியர் குஜாபி அடேபாட்டினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனிதன் ஒருவன் ஒரு கையில் குழந்தை ஒன்றைத் தூக்கிப் பிடித்தவாறும், அவனது மற்றைய கை இளம் பெண் ஒருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவில் 19 ஆப்பிரிக்க நாடுகளின் அரசுத் தலைவர்கள், வடகொரிய அரசு அதிகாரிகள், வண. ஜெசி ஜாக்சன் உட்பட நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆளும் செனிகல் மக்களாட்சிக் கட்சியின் மஞ்சள், நீல நிறப் புடவைகள் அணிந்து வரிசையாக நின்றிருந்தனர். நாட்டின் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் செனிகல் நாட்டில் இச்சிலை குறித்து பல வித அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. இந்த சிலை திறக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் நேற்று தடையையும் மீறி எதிர்க்கட்சிகளின் கூட்டணி போராட்டப் பேரணி ஒன்றை நடத்தியது. இச்சிலை அமைக்கும் யோசனை தனதே என்று உரிமை கொண்டாடும் அரசுத்தலைவர் அப்துலாயி வேட், இச்சிலையினால் வரும் வருமானத்தின் 35 விழுக்காடு தனக்கே வர வேண்டும் எனக் கூறியது பலரது கண்டனத்துக்கும் உள்ளானது. 83 வயதாகும் அரசுத்தலைவர் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவர் இச்சிலையை இயேசு கிறித்துவுடன் ஒப்பிட்டமைக்காக கிறித்தவ மதத் தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிவிட்டது. இதன் பெயர் பின் சவுகான் என்பதாகும். இது பெப்ரவரி மாதம் 23 இல் பிறந்திருக்கிறது. இவ்வொட்டகம் எருது ஒன்றின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரணுவில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழும் உயிரினம் ஒன்றின் உயிரணுவில் இருந்து படியெடுக்கப்பட்ட முதலாவது ஒட்டகம் இதுவாகும். உலகின் முதல் ஓட்டகமும் துபாயில் தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இப்பொழுது ஓரு வயதாகிறது. அதன் பெயர் இன்ஜாஸ். இது இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட ஒரு ஒட்டகத்தின் உயிரணுவில் இருந்து உருவாக்கப்பட்டிருந்தது. அமீரக அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு வேண்டிய உணவு, பானங்களை விநியோகித்தனர். பின்னர் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி விரைவில் செல்ல ஏற்பாடு செய்தனர். வார இறுதி நாட்களாதலால் அலுவலர்கள் பற்றாக்குறையினால் தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக சவூதி அரேபியாவிற்கும் அமீரகத்திற்கும் சிற்சில விடயங்களின் நல்லுறவு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அரபு தேசத்திற்கு ஓரே பொது நாணயம் தொடர்பாக தலைமையிடம் அமைக்கும் பணியில் ரியாதிற்கும் அபுதாபிக்கும் பிரச்சினை இருந்ததாகவும் அதனாலேயே அமீரகம் பொது நாணயத்தின் திட்டத்தில் சேரவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டது. இந்தியாவின் கிழக்குக் கரையில் ஒரிசா மாநிலத்தில் கொராப்பூட் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இருபதுக்கும் அதிகமான காவல்துறையினர் மூன்று வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோது அதில் ஒரு வாகனம் கண்ணி வெடியில் சிக்கி பேருந்து சிதறுண்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் தீவிரவாதிகளுக்கு எதிராக பல மாநிலங்களில் அரசு தாக்குதல்களைத் தொடுத்திருந்தது. ஏறத்தாழ 50,000 நடுவண் அரசின் துணை-இராணுவத்தினரும், அதே அளவு காவல்துறையினரும் உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளற்ற தேடுதல் வானூர்திகள் சகிதம் இந்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். "காடுகளுக்குள் ஏன் அவர்கள் பதுங்கி இருக்கிறார்கள்? வன்முறைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வரும்படி அவர்களைக் கோரியிருந்தோம் என்றார் அவர் செய்தியாளர்களிடம். இதனிடையே, சோயிப் மாலிக் தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், தங்களுக்கு ஐந்து கோடி ரூபாய் மாலிக் தருவதாகக் கூறியதாக ஆயிஷாவின் தந்தை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. மேலும் ஐதராபாத்தை விட்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த சோயிப் திருமணம் நடந்தது உண்மை என்றாலும் வேறொரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். மேலும் தனது இந்த இக்கட்டான நேரத்தில் சோனியாவே பெரும் ஆறுதலாகவும், ஓத்துழைப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவை என்று கூறப்படுகிறது. இக்கொலையை அடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட வேண்டாம் என அந்நாட்டின் தலைவர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 69 வயதான டெரபிளான்ச் வடமேற்கு மாகாணத்தின் வெண்டர்ஸ்டோர்ப் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படாமையே இக்கொலைக்குக் காரனம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இரு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் கொலை செய்யப்பட்ட அறையில் கத்தியொன்றும் வேறு சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. டெரபிளான்ச் கட்டிலில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது முகத்திலும் தலையிலும் காயங்களும் உள்ளன. இவரது பண்ணைப் பணியாளர் ஒருவரின் கொலை முயற்சி தொடர்பாக இவர் 2001 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2004 இல் விடுவிக்கப்பட்டார். டெரபிளான்சின் படுகொலையை அரசுத்தலைவர் சூமா வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இது ஒரு கோழைத்தனமான செயல்” என வர்ணித்தார். இக்கொலை நாட்டில் இன வன்முறையைத் தூண்டி விடும் என்பதை தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் சூமா அறிந்துள்ளார் என பிபிசி செய்தியாளர் அறிவிக்கின்றார். அரசு இதனை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியிருக்கும் என அவர் தெரிவிக்கிறார். "இக்கொலைக்கு நாம் பழி வாங்குவோம்”, என ஆப்பிரிக்கானர் எதிர்ப்பியக்க செயலாளர் விசாகி பிபிசி இடம் தெரிவித்தார். "டெரபிளான்சின் படுகொலை கறுப்பினத்தவர்கள் வெள்ளையினத்தவர்களின் மீது போரை அறிவித்துள்ளதாகவே நாம் கருதுகிறோம்.” 1994 இல் இனவொதுக்கல் முடிவுக்கு வந்த பின்னர் ஏறத்தாழ 3,000 வெள்ளையின பண்ணையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 2 விழுக்காடு அரசியல், மற்றும் இனத்துவேசம் காரணம் என 2003 ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு அறிக்கை தெரிவிக்கிறது. இதேவளையில், தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வன்முறைகளில் தினமும் 50 கறுப்பினத்தவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் என வேறொரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. title தென்னாபிரிக்காவின் வெள்ளையின மேலாதிக்கவாதி அடித்துக்கொலை சூலை 2007 இல் அமெரிக்க ராணுவ அப்பாச்சி உலங்குவானூர்தி ஈராக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதமற்ற பொதுமக்களை தீவிரவாதிகள் எனக் கருதி சுட்டுக்கொன்றது. இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த புகைப்படக் கருவிகள் மற்றும் உபகரணங்களை ஏகே47 வகைத் துப்பாக்கிகள் என்று தவறாக கணக்கிட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அப்பாச்சியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் காணொளியை விக்கிகசிவுகள் என்கிற தளம் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட காணொளியை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் கோரி வந்தது. இம்முயற்சி பயனளிக்காத நேரத்தில் இந்த காணொளி கசிந்துள்ளது. முதல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை எடுத்துச்செல்வதற்காக வந்த வாகனத்தையும் தவறாக கணக்கிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுவர், சிறுமி படுகாயமடைந்தனர். பாலகர்கள் படுகாயம் பற்றி ராணுவ வீரர் கூறும் போது போர் செய்யும் இடத்திற்கு அவர்களை அழைத்துவந்தது தவறு என்று கூறுகிறார். இந்தக் காணொளியை யார் தமக்குத் தந்தது என்பதை விக்கிகசிவுகள் இணையத்தளம் வெளியிட மறுத்து விட்டது. விக்கிகசிவுகள் இணையத்தளம் தகவல் சுதந்திரம் குறித்து போராடி வருகிறது. வெளியுலகிற்குக் கசிந்த தகவல்களை அது இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இக்காணொளி பற்றி பெண்டகன் இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் இப்படுகொலைகள் குறித்து பல ஆண்டுகளாக பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அக்கோரிக்கையை சென்ற ஆகஸ்ட் மாதம் பிரித்தானியா நிராகரித்திருந்தது. “தாம் யொங்கின் இறப்பை அடுத்து இது பற்றிய அதிகாரபூர்வ விசாரணை இனி நடைபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. ஆனாலும் சம்பவம் நடக்கும் போது எட்டு வயதாயிருந்த இன்னும் ஒரு நபர் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் அவரைக் கொண்டு இக்கோரிக்கையை நாம் மீளக் கொண்டுவர முயல்வோம்” என குவெக் தெரிவித்தார். இம்மாத இறுதியில் தமது குழுவின் வழக்கறிஞர்கள் பிரித்தானிய அதிகாரிகளுடன் வாதாட இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். கொல்லப்பட்ட 24 பேரும் 12 ஆண்டுகளாக அன்றைய மலேயாவில் போராடி வந்த கம்யூனிசப் போராளிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என பிரித்தானிய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அன்றைய மலேய சட்டமா அதிபர் தமது படைகளின் செய்கையை நியாயப்படுத்தியிருந்தார். இந்நிகழ்வு 1970 ஆம் ஆண்டு வரையில் மறக்கப்பட்டிருந்தது. 1970 இல் பிரித்தானியப் பத்திரிகை ஒன்று இப்படுகொலைகள் குறித்து பிரித்தானிய படையினரின் வாக்குமூலங்களை வெளியிட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போராளிகள் அல்லவென்றும், அவர்கள் அனைவரும் கிராமவாசிகளே என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து முழுமையான விசாரணை நடைபெறும் என பிரித்தானியா அறிவித்திருந்தும், பின்னர் ஆட்சி மாறிய அரசுகள் அதனைக் கவனிக்கத் தவறிவிட்டன. 2008 ஆம் ஆண்டில் தாம் ஜயொங் ஏஎஃப்பி நிறுவனத்துக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி மாவட்ட கலெக்டர் போன்றவர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதில் அவர்கள் நளினியை விடுவிக்கக் கூடாது என்று அறிக்கை சமர்பித்திருந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு தனது கருத்தை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதில் தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட முடியாது என்றும் மத்திய அரசுதான் முடிவெடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது. இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் இவ்வழக்கில் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால் மத்திய அரசுதான் முடிவெடுக்கவேண்டும். தூக்குதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பெற்றதால் மற்ற கைதிகள் போல் விடுதலை செய்ய முடியாது, மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பதால் முன்கூட்டியே விடுதலை செய்ய கோர இயலாது என்று நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக நளினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நளினியின் விடுதலை மனுவை தமிழக அரசு ஏற்க மறுப்பு மார்ச் 30, 2010 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி விடுதலை கோரி உண்ணாநிலைப் போராட்டம் செப்டம்பர் 21, 2009 //இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி உள்பட 74 பேரும், மாநில காவல்துறையின் தலைமைக் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட உலங்குன்வானூர்தியும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த 7 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சுரங்கம் மசே எனர்ஜி என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். ஏற்கனவே இந்தச் சுரங்கத்தில் பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக இந்த நிறுவனத்துக்கு அரசு $900,000 பணம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. "மீட்புப் பணிகளுக்கு நடுவண் அரசு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாரான நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார். சண்முகராஜாவும் வேறு 4 மருத்துவர்களும் போர்க்களத்தில் இருந்து செய்திகளை வெளியிட்டமை இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள சமூகத்தினரிடையே பெரும் கோபத்தைக் கிளப்பியிருந்தது. முல்லைத்தீவு மக்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். ஆனாலும் நிலமை படிப்படியாக வழமைக்குத் திரும்புகின்றது என சண்முகராஜா தெரிவித்தார். மருத்துவர்கள் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளும் செஞ்சிலுவைச் சங்கமும் ஏவுகனைத் தாக்குதல்கள் அரசுத்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்கள் எவரும் தமது தாக்குதலில் கொல்லப்படவில்லை என அரசு கூறுகிறது. ”இழப்புகளின் தொகை குறித்து நான் கதைக்க விரும்பவில்லை. சர்ச்சைக்குரிய அந்தப் பகுதி முடிந்துவிட்டது,” சண்முகராஜா பிபிசிக்குத் தெரிவித்தார். இவர் அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே தோ்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ் அரசியல் அவதானிகள் நோக்குகின்றனர். 26 ஆண்டுகளாக தனி நாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் சென்ற ஆண்டு மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டனர். அரசுத்தலைவர் ராஜபக்சவின் ஆளும் கூட்டணி இவ்வாரம் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. title யுத்தத்தில் பொதுமக்கள் இழப்புகளை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மருத்துவரும் தேர்தல் களத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் வருகிற 8ம் தேதி கூடுகிறது. அடுத்த கூட்டத்தொடர் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மே 18ம் தேதி தொடங்கும். ஐக்கிய இராச்சியத்தில் தொழில் கட்சி, லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை மூன்று முக்கிய கட்சிகளாக உள்ளன. கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியே ஆட்சியில் உள்ள போதிலும் தற்போதைய பரவலான கருத்துக்கணிப்புகளின் படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னனியில் உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்கு 650 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இந்த வழக்கில், 10 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்றவர்கள் சிலரின் பிணையையும் உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்ததை தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறாகப் பிரிந்து போட்டியிடும் நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசுத்தலைவர் இம்முறைத் தேர்தலில் எதிர்பார்க்கிறார். நாளை வெள்ளிக்கிழமை மாலையில் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் சனவரித் தேர்தலிலும் பார்க்க சற்றுக் கூடுதலானோர் வாக்களித்துள்ளனர். வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது. வாக்களிப்பின் முதல் நான்கு மணி நேரத்தில் 160 தேர்தல் வன்முறைகள் பதியப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை ஆளும் கட்சிக்கெதிரான புகார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாகவும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள் வாக்களிக்கின்றனர். 36 அரசியல் கட்சிகள் மற்றும் 301 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 620பேர் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவியுமான ரோசா ஒட்டுன்பாயெவா இடைக்கால அரசு நாட்டை முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். முப்படைகளும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசுத்தலைவர் இன்னமும் தனது பதவியைத் துறப்பதாக அறிவிக்கவில்லை எனவும், நாட்டின் தெற்குப் பகுதியில் தனது ஆதரவாளர்களைத் திரட்டுவதில் முனைந்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவி தெரிவித்தார். தலைநகர் பிஷ்கெக் மற்றும் பல நகரங்களிலும் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைகளில் 75 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அரசுத்தலைவர் பாக்கியெவ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தார். இவர் இப்போது தனது சொந்த இடமான ஜலலாபாத் பகுதியில் உள்ள ஓஷ் என்ற ஊரில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் படைத்தலம் தொடர்பாக அமெரிக்காவுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக இடைக்கால அரசுத்தலைவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை தலைநகர் அமைதியாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள நித்திராய் என்னும் நகரில் தான் அநேகர் மண் சரிவில் சிக்கி மாண்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை அரசு தரப்பில் 153 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியோ நகரின் வடமேற்கில் அமைந்துள்ள நித்திராயில் ஏற்பட்ட இந்த பேராபத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. அங்குள்ள மலைப்பகுதிகளில் அதிகமான அளவில் சேரி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அளவுக்கதிகமாக குடியிருப்புகளை நிறுவியதும் மண் சரிவிற்கு ஒருவகை காரணம் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மோரோ பம்பா சேரி பகுதிகளிலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 28 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுக்காக அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுட்டிக்கப்படுவதாக ரியோ மாநகர ஆளுநர் செர்சியோ கார்பல் அறிவித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கோவைத் தமிழ்மாநாட்டில் தமிழக அரசு அளித்தக் கொடைச்சொற்களில் நம்மிடமில்லாச்சொற்களை கீழ்கண்ட தொடுப்பில் உள்ளவாறு தானியங்கி முறையில் பதிவேற்ற உள்ளோம். ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் பதிவேற உள்ளன. இதன்மூலம் தமிழ்விக்சனரி 17வது இடத்திலிருந்து, முதல் 10இடங்களுக்குள் சென்றடையும். தங்களின் கருத்துகளை அங்கு வாக்களித்து, மேல காணப்படும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எனது பயனர் கடவுச்சொல்லை மறந்து விட்டேன் மின்னஞ்சல் சமர்ப்பித்து இருக்கவில்லை எப்படி இங்கு மீட்க முடியும் Natkeeran ==விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டல்== தமிழ் விக்கி செய்திகள் அன்பர்கள் அனைவருக்கும், தமிழ் விக்கி நூல்கள் சார்பாக தீபத்திருநாளாம் தீபாவளி வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 65,119 வாக்குகளைப் பெற்று 5 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12,624 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 41,673 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12,783 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 66,235 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62,009 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 22,935 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி 13189 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 132,096 வாக்குகளைப் பெற்று 4 இடங்களைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 90,757 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 26,895 வாக்குகளைப் பெற்று 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், ராஜபக்சவின் கூட்டணி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. தேர்தல் 2010: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 13 இடங்கள் ஏப்ரல் 9, 2010 புகலிடம் கோரி வருவோரைக் கடத்தி வருகின்ற ஆட்களின் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கமாகவே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் தெரிவித்தார். ”இந்த நடவடிக்கையானது ஆட்களை கடத்திவருவோருக்கான வலுவான செய்தியாகும்” என்று அவர் கூறினார். அத்துடன் இந்த இரு நாடுகளிலும் தற்போது உள்நாட்டு நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனால், அவை குறித்து மறு ஆய்வு செய்யவேண்டியுள்ளதாகவும் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடக்கவிருக்கின்ற இந்த ஆண்டில், எப்போதுமே ஒரு சர்ச்சையை கிளப்புகின்ற இந்த விவகாரத்தை தணிப்பதற்கான அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக இது விமர்சிக்கப்படுகின்றது. புதிதாக வரும் படகுகள் திருப்பி அனுப்பபட மாட்டா என்றும், ஆனால் அவர்களின் அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்று அமைச்சர் கூறினார். மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையர்களின் நிலைமை தொடர்பாகவும், 6 மாதங்களின் பின்னர் ஆப்கானியர்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஆத்திரேலியா தெரிவித்திருக்கிறது. இக்குழம்புகள் அதனைச் சுற்றியுள்ள மேற்பரப்பில் உள்ள மூலப்பொருட் கலவையைவிட வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. ஏப்ரல் 8 சயன்ஸ் அறிவியல் இதழில் இத்தகவல்களை இக்குழு விபரமாக வெளியிட்டுள்ளது. "இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் என வீனஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தின் திட்ட அறிவியலாளர் ஏக்கன் சுவெடம் தெரிவித்தார். இவர்கள் பயணம் செய்த விமானம் இன்று காலை மாஸ்கோ நேரம் 1056 மணிக்கு கடும் பனிமூட்டத்தின் நடுவே சிமொலியென்ஸ்க் வான்படை விமான நிலையத்தில் தரையிரங்க முயற்சித்த போது மரங்களுடன் மோதி நொறுங்கியது என்றும் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பவில்லை என்றும் இரசிய அதிகாரிகள் தெரிவித்தனர். போலந்தின் அரசுத்தலைவர், அவரது மனைவி, இராணுவத் தளபதி, மத்திய வங்கி ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல வரலாற்றியலாளர்கள் உட்பட 80 இற்கும் மேற்பட்டோர் இவ்விமானத்தில் பயணம் செய்திருந்தனர். பிரதமர் டொனால்ட் டஸ்க் இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் அழுது விட்டார் என அவர் தெரிவிக்கிறார். திரு டஸ்க் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அரசியலமைப்பின் படி உடனடியாக அரசுத்தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் புரொனிசுலாவ் கமொரோவ்ஸ்கி பதில் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார். விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உடனடியாக அறியத்தரப்படவில்லை. 88 உயர் அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ 96 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமான் ஓட்டிகளின் தவறே இவ்விபத்துக்குக் காரணம் என இரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 20 ஆண்டுகள் பழமையான இரசியத் தயாரிப்பான தூப்பொலிவ் 154 என்ற விமானமே விபத்துக்குள்ளானது. "மின்ஸ்க் நகரிலேயே விமானத்தை தரையிறங்கக் கூறப்பட்டது. ஆனால் சிமொலியென்ஸ் என்ற இடத்தில் அது தரையிறங்கியது என இரசிய அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். இரசியத் தலைவர்கள் உட்பட பல உலகத் தலைவர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். பிரதமரை விடக் குறைவான அதிகாரங்களைக் கொண்டிருந்த காச்சின்ஸ்கி வெளியுறவுத்துறை விவகாரங்களில் பல அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். போலந்தின் அரசியலில் சர்ச்சைக்குரியவராகவும் இருந்திருக்கிறார். வலதுசாரி கத்தோலிக்கப் பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அவர், தாராள-சந்தைப்படுத்தலை எதிர்த்து வந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி ஒன்றை மீளக் கைப்பற்ற அரசுப் படைகள் முயன்ற போதே நேற்று சனிக்கிழமை அன்று பெரும் சண்டை மூண்டது. இறந்தவர்களில் 4 படையினரும் அடங்குவர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளாலும், ரப்பர் குண்டுகளாலும் தாக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை படையினர் மீது வீசினர். துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதென்பதை அரசுப் பேச்சாளர் பனித்தன் வட்டநாயகம் மறுத்துள்ளார். தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்களான சிவப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு மாத காலமாக அரசாங்க எதிர்ப்புப் பேரணிகளை தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் நடத்தி வருகின்றனர். பாங்கொக்கில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை புறக்கணித்து வருகின்றனர். பாங்கொக் வணிக வட்டாரம், ராணுவத் தளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த இடங்களை விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும் என்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும் என்றும் ராணுவம் முன்னதாக அறிவித்திருந்தது. இதற்கிடையில் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் அபிசித்திற்கு நெருக்குதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. திடீர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்று அபிசித் கூறியுள்ளார். இந்நிலையில் 43 நாடுகள், பேங்காக் செல்ல திட்டமிட்டுள்ள தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு பயண எச்சரிக்கை செய்துள்ளன. பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் மார்ச் 15, 2010 எதிர்ப்புப் பேரணிகளை எதிர்கொள்ள பாங்கொக்கில் 50,000 படையினர் குவிப்பு மார்ச் 12, 2010 நாவலப்பிட்டியில் வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள் மிரட்டப்பட்டமை, வாக்காளர்கள் தாக்கப்பட்டமை போன்றவைக்காகவும், திருகோணமலையின் கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் உள்ளே புகுந்த கும்பல் ஒன்று வாக்குப் பெட்டிகளைத் தூக்கிச் சென்றமைக்காகவும் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்பட்டன. இந்த நிலையில் அந்த வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் வாக்குப் பதிவுகள் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாவலபிட்டி மற்றும் கும்புறுபிட்டிய தேர்தல் வாக்கு நிலையங்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. எனவே எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தி, முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போராளிக் குழுவினர் வாடகை வாகனம் ஒன்றை தலைநகர் பெல்பாஸ்ட் இலிருந்து கடத்திருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவ்வாகனத்தில் குண்டு ஒன்று பொருத்தப்பட்டு ஹொலிவுட் என்ற இடத்தில் உள்ள இராணுவத் தளத்தின் பின்னே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 0020 மணிக்கு இடம்பெற்றது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதித்துறை, மற்றும் காவல்துறை அதிகாரஙக்ள் நடுவண் அரசிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டு சில நிமிடங்களின் பின்னரே இத்தாக்குதல் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். உயிரிழப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், உள்ளூர்ப் பொதுமகன் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் குறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்தோர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தலைநகர் கார்ட்டூமில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது எனினும், ஏனைய இடங்களில், குறிப்பாக செங்கடல் முதல் தூரதெற்குப் பகுதிகளில் வாகாளர்கள் பலவித இடர்ப்பாடுகளைச் சந்தித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தெற்கின் முக்கியமான கட்சி தேர்தல் நான்கு நாட்களுக்கு இடம்பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. சூடானின் வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்தே தேர்தல்கள் இடம்பெறுகின்றன. வெற்றி வாய்ப்பு தனக்கே கிடைக்குமென அரசுத்தலைவர் ஒமர் அல் பசீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேர்மையான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்க முடியாதென இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் கூறியதுடன் போட்டியிலிருந்தும் விலகிக் கொண்டன. இதனால் முடிவுகள் பசீருக்கு சாதகமாக முடியும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 2003ம் ஆண்டிலிருந்து சூடானின் தார்பூர் பிரதேசத்தில் மோதல்கள் இடம் பெறுகின்றன. மூன்று இலட்சம் பேர் உயிரிழந்து, மேலும் இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். டர்புர் மோதலை முடித்து வைக்க அங்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது. வடக்கு-தெற்கு உள்நாடுப்போர் 2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. சூடானில் மக்க விடுதலை இயக்கம் (SPLM) பசீரின் அரசுடன் அதிகாரப் பகிவுக்கு உடன்பட்டது. அதே நேரத்தில் தெற்கில் தமது அரசை அமைக்கவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. title ஜனாதிபதி, எம்.பி.க்கள், உள்ளூராட்சி தலைவர்களை தெரிவு செய்யும் தேர்தல் சூடானில் நேற்று ஆரம்பம் சென்ற புதன்கிழமை அன்று அரசுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்களை அடுத்து தலைநகர் பிஷ்கெக்கை விட்டு தப்பி ஓடி தனது சொந்த ஊரில் ஓடி ஒளிந்து கொண்டார். அன்றைய வன்முறைகளின் போது 80 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதிபரின் சொந்த இடமான நாட்டின் தெற்குப் பிராந்தியமான ஜலாலாபாத் நகரில் அவரது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 5,000 பேர் பாக்கியெவ் மீண்டும் பதவிக்கு வருவதற்கு ஆதரவாக ஊர்வலம் சென்றனர். "எனது சக்தி மக்களிடம் தான் உள்ளது, என்னிடம் இல்லை என அவர் தனது ஆதரவாளர்களுக்குக் கூறினார். "அரசுத்தலைவர் தானாகவே பதவி இறங்குவதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அவர் மக்களுக்கு எதிராக சட்டத்தைத் திருப்ப முயற்சிக்கிறார் என இடைக்காலப் பாதுகாப்பு அமைச்சர் பெக்னசாரொவ் தெரிவித்தார். "முன்னாள் அரசுத்தலைவருக்கு எதிராக நாம் குற்றவியல் வழக்கைத் தொடர்ந்திருக்கிறோம். இன்று அவர் எம்மிடம் வராவிட்டால் அவரைக் கைது செய்வோம்.” ”தன்னை அவர்கள் கைது செய்ய வருவார்களேயானால் இரத்த ஆறு தான் ஓடும்”, என பாக்கியெவ் தெரிவித்ததாக அல்-ஜசீரா செய்தியாளர் தெரிவிக்கிறார். பாக்கியெவ் மீண்டும் பதவிக்கு வருவதற்கு அவரது பகுதியில் பெருமளவு ஆதரவை அவர் எதிர்பார்க்க முடியாதென செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு மற்றும் நடு ஆசிய அலுவல்களுக்கால உதவிச் செயலர் ரொபேர்ட் பிளேக் தலைமையில் இந்தத் தூதுக்குழு இடைக்கால அரசுடன் பேச்சுக்களை நடத்தும். அவர் ஏற்கனவே இடைக்கால அரசுத்தலைவர் திருமதி ரோசா ஒட்டுன்பாயெவாவுடன் கதைத்துள்ளதாகத் தெரிவித்தார். கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சி புதிய இடைக்கால அரசை அறிவித்தது ஏப்ரல் 8, 2010 நகரின் வடக்குப் பகுதியில் முக்கிய சந்தைக்கு அருகாமையில் 14 பேர் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இராணுவ அணிவகுப்பு ஒன்றை நோக்கி முதலில் போராளிகள் எறிகணைகளை வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கி, ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் உள்ளூர் வாசிகள் கூறினர். இராணுவ அணிவகுப்பில் அரசுத்தலைவர், பிரதமர், இராணுவத்தலைவர்கள் உள்ளடங்கலாகப் பல அரசு அதிகாரிகள் கல்ந்து கொண்டனர். இதற்கிடையில், விமான நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மற்றொரு மோட்டார்த் தாக்குதலில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டு, ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். "வேறொரு தாக்குதலில், இராணுவ வாகனம் ஒன்று தாக்குதலுக்குள்ளாகியதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். அந்த இடத்துக்கு உதவிக்கு பொதுமக்கள் திரண்டதை அடுத்து அதே இடத்தில் வேறொரு குண்டு வெடித்ததில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்,” என உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் சிறப்பாக உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளால் அளிக்கப்படும் சிகிச்சையினால் ஈர்க்கப்பட்டு இங்கு வரும் மருத்துவ சுற்றுலாப் பயணிகள் (Medical Tourism) மற்றும் அழகிய மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், கோயில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற சிறப்புமிக்க நகரங்கள் போன்றவற்றுக்கு ஆண்டுக்கு 20 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். கிங்காய் மாகாணத்தில் யூசு என்ற பகுதியில் இன்று அதிகாலை 0749 (2349 கிரீனிச் நேரம்) மணியளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றது. ஜீகு என்ற நகரமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது நகரின் 80 விழுக்காடு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நிலச்சரிவு காரணமாக பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 80,000 மக்கள் வாழும் இந்நகரில் குறைந்தது 10,000 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகமான சிசிடிவி அறிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளிடையே இருந்து நூற்றுக்கணக்கானோர் உயிருடன் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்தனர். நிவாரணப்பொருட்களைத் தாங்கிய இராணுவ விமானம் ஒன்று மட்டுமே உள்ளூர் விமானநிலயத்தில் தரையிறங்க முடிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள அணைக்கட்டு உடையலாம் என்ற அச்சத்தினால், பல்லாயிரக்கணக்கானோர் அருகாமையில் உள்ள மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இடிந்த பாடசாலை ஒன்றின் அடியில் பல மாணவர்கள் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில் அருகில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 87,000 பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்திலேயே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில பாதுகாப்புத்துறை அமைச்சர் சிறீகுமார் முக்கர்ஜி இன்று சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். 50,000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக ம்திப்பிடப்பட்டுள்ளது. “வீடுகளின் இடிபாடுகளுக்கிடையே இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,” என திரு முக்கர்ஜி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். நூற்றுக்கணக்கானோர் கடும் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சூறாவழியுடன் சேர்ந்து பெரும் மழையும் பொழியத் தொடங்கியதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளின் மேல் மரங்கள் வீழ்ந்து அவை அறுந்து போயுள்ளன. சென்ற ஆண்டு மே மாதத்தில் ஐலா என்ற சூறாவளி இப்பகுதியில் தாக்கியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். title நள்ளிரவில் சூறாவளி: மேற்கு வங்கத்தில் 31 பேர் பலி நாட்டில் உள்ள 15 வானொலி நிலையங்களில் 13 நிலையங்கள் முன்னர் அனைத்து வகை இசையையும் ஒலிபரப்பி வந்துள்ளன இப்போது நாங்கள் வேறு வகை ஒலிகளை, குறிப்பாக, சூட்டுச் சத்தம், வாகனக்களின் சத்தம், பறவைகளின் ஒலி போன்றவற்றை நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒலிபரப்புகிறோம் என வானொலி நிலையம் ஒன்றின் மேலதிகாரி தெரிவித்தார். இத்தடையினால் வானொலி கேட்போர், மற்றும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறையும் என அஞ்சப்படுகிறது. கண்டாவாகி ஆற்றின் அருகே உள்ள ஒரு பூங்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குண்டுகள் வெடித்தன. இன்று மாலை உள்ளூர் நேரப்படி 1500 (0830 கிரீனிச் நேரம்) மணிக்கு இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. 30 பேர் வரையில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ரங்கூன் நகரில் வன்முறைகள் இடம்பெறுவது வழக்கம் என பிபிசி செய்தியாளர் அறிவிக்கிறார். பொதுவாக இத்தகைய குண்டுவெடிப்புகளுக்கு சுயாட்சி கேட்டுப் போராடும் இனக்குழுக்கள் மீது பர்மிய அதிகாரிகள் குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால் பெருமளவு உயிரிழப்புடன் கூடிய இப்படியான திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்புகள் அங்கு அபூர்வம். இரண்டு சதாப்தங்களுக்குப் பின்னர் பர்மாவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்பற்புகை 55,000 அடி உயரம் வரையில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமானங்களின் இயந்திரங்கள் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால் வா‌னிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் இரண்டாவது தடவையாக இந்த எரிமலை சென்ற புதன்கிழமை ஏப்ரல் 14 ஆம் நாள் வெடித்தது. வளிமண்டலத்தில் 11 கிமீ தூரம் வரையில் அதன் தூசுகள் கிளம்பின. இதனால் வெளிப்பட்ட வெப்பத்தினால் சுற்றவர இருந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பித்தன. இதனால் உருகிய நீரும் பனிப்பாறைகளில் இருந்து வெளியே வர ஆரம்பித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 800 பேர் வரையில் வீடுகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வியாழன் அன்று வெள்ளப்பெருக்கு குறைந்திருந்தாலும், எரிமலையில் இருந்து வெளிவரும் தூசுகள் ஐரோப்பாவின் ஏனைய இடங்களுக்குப் பரவ ஆரம்பித்தன. கடைசியாக மார்ச் 21 ஆம் நாள் இந்த எரிமலை வெடித்திருந்தது. 1821 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்தபோது அதன் தாக்கம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது மார்ச் 21, 2010 சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கடந்த ஆண்டு சனவரி 8 இல் இனந்தெரியாதோரினால் தலைநகர் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவரது கொலை தொடர்பாகவும், பின்னர் ரிவிர பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னக்கோன் கொலை முயற்சி, கீத் நுவார் என்ற மூத்த செய்தியாளரும் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, போன்ற சம்பவங்களில் இந்த இராணுவ உளவுப் பிரிவுப் படையினருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போது இவர்கள் இந்தச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே இவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும், பிரிகேடியர் துமிந்த கெப்பிதிவலன என்ற மூத்த இராணுவ அதிகாரி உட்பட மேலும் பல படையினர் லசந்த கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த விசாரணைகள் குறித்த அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி காவல்துறையினரிடம் உத்தரவிட்டுள்ளார். இக்கொலைகளுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அரசாங்கம் கூறி வருகிறது. title லசந்த கொலை: சந்தேகநபர்கள் விடுதலை பாக்கியெவின் சகோதரர் சானிபெக் என்பவரைக் கைது செய்ய இடைக்கால அரசு பிடியாணை பிறப்பித்திருக்கிறது. இவர் முன்னாள் அரசில் அரசுத்தலைவருக்கான பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தவர். ஏப்ரல் 7 ஆம் நாள் தலைநகர் பிஷ்கெக்கில் இடம்பெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களை நோக்கிச் சுடுவதற்கு உத்தரவிட்டவர் இவரே எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாக்கியெவ் ஏறிச் சென்ற விமானத்தில் அவரது சகோதரர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பாக்கியெவின் மகன் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பக்தீபெக் காலியெவ் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுக் காலையில் நாட்டின் தெற்குப் பகுதியில் பாக்கியெவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்தே பாக்கியெவ் அங்கிருந்து வெளியேறினார். மனித உரிமை ஆர்வலரான அசீசா ஆப்திரசுலோவா கருத்துத் தெரிவிக்கையில், “நேற்றைய எதிர்ப்புக் கூட்டத்தில் 5,00 பேர் வரையில் கலந்து கொண்டனர். பாக்கியெவ் அவர்களுக்கு மத்தியில் உரையாடத் தொடங்கும் போது இடைக்கால அரசின் ஆதரவாளர்கள் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். பாக்கியெவின் பாதுகாவலர்கள் வானை நோக்கிச் சுட்டார்கள் என்றும் அந்நேரத்தில், பாக்கியெவ் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு நகரை விட்டு வெளியேற்றப்பட்டார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை”, என்றார். கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு ஏப்ரல் 13, 2010 கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சி புதிய இடைக்கால அரசை அறிவித்தது ஏப்ரல் 8, 2010 சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது. இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும். சென்ற வாரம் இஸ்புல் இசுலாம் என்ற அமைப்பு நாடு முழுவதும் பாடல்கள், மற்றும் இசையை வானொலிகளில் ஒலிபரப்பத் தடை விதித்திருந்தது. நாங்கள் பாடங்கள் நிறைவடைந்ததை இப்போது கைகளைத் தட்டி அறிவிக்கிறோம் என பள்ளி ஆசிரியர் ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். சில ஆசிரியர்கள் மேசைகளிலும், கதவுகளிலும் தட்டி இதனை அறிவிக்கிறார்கள் என அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார். முன்னர் திரைப்படங்கள், உதைப்பந்தாட்டம் பார்ப்பது, செல் தொலைபேசிகளில் ஆரம்ப இசை ஒலிபரப்புதல் போன்றவற்றிற்குத் தடை விதித்திருந்தார்கள். அத்துடன், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு கல்லெறிதல், களவெடுப்போருக்கு தடியடி போன்ற தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். கடந்த வாரம், தலைநகர் மொகதிசு உட்பட தெற்குப் பகுதியில் உள்ள 5 நகரங்களில் பிபிசி மறுஒலிபரப்பு நிலையங்களை அல்-சபாப் போராளிகள் மூடியிருந்தனர். 1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் அரசு இயந்திரம் இயங்காமல் உள்ளது. போராளிகள் நாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். ஐநாவின் ஆதரவுடன் இயங்கும் அரசாங்கம் தலைநகர் மொகதிசுவின் சில பகுதிகளை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு ஏப்ரல் 15, 2010 கோஹாட் நகருக்கு வெளியே உள்ள கச்சா புக்கா என்ற முகாமிலேயே சில நிமிட இடைவெளிக்குள் இரண்டு குண்டுகள் வெடித்தன. நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த அகதிகள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. "தற்கொலைக் குண்டுதாரிகளின் வெடித்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என கோஹாட் காவல்துறை தலைவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 3,200 பேர் தற்கொலைத் தாக்குதல்களில் இறந்துள்ளனர். இத்தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக தற்போதைய அரசுத்தலைவர் மெகுமெட் அலி தலாட், மற்றும் துருக்கிய சைப்பிரசுப் பிரதமர் டேர்விசு எரோகுலு ஆகியோர் ஆவர். வடக்கு சைப்பிரசு எனப்படும் துருக்கிய சைப்பிரசுக் குடியரசு இதுவரையில் அங்கீகரிக்கப்படாத நாடாகவே விளங்குகிறது. அத்துடன் மேற்குலக நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றனர். இதனால் பெரும்பாலான துருக்கிய சைப்பிரசு மக்கள் இரு நாடுகளையும் இணைக்கவே விரும்புகின்றனர். சென்ற தேர்தலில் இருநாடுகளையும் இணைப்பதற்கு ஆதரவாகவே திரு தலாட் அவர்களுக்கு துருக்கிய சைப்பிரசு மக்களின் பெரும்பான்மையானோர் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர் என பிபிசியின் செய்தியாளர் தபீத்தா மோர்கன் தெரிவித்தார். ஆனாலும், கிரேக்க சைப்பிரசுத் தலைவர்களுடன் தலாட் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும் அவை வெற்றியளிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதபடியால், மக்கள் இம்முறை தலாட் அவர்களுக்கு வாக்களிக்க பின்வாங்குவதாக தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 164,000 வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் வலதுசாரியான எரோகுலுவுக்கு சாதகமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இலங்கையில் 2009 மே மாதத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின் பின்னர், பிரபாகரனின் பெற்றோர் முகாமில் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பில் இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமாகிவிடவே, தாயார் பார்வதி அம்மாள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மலேசியா சென்றிருந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சை பெறுவதற்காக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் 6 மாதகாலம் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதி பெற்று வெள்ளிக்கிழமை இரவு 10:45 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் வந்ததாகத் தெரிகிறது. எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அவர் மீண்டும் நள்ளிரவு நேரத்தில் அதே விமானத்தில் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார். சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல், மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில், சென்னையில் வரும் 23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். இதற்கிடையில், அதே இரவு மலேசியா சென்றடைந்த பார்வதி அம்மாளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு மாத விசா வழங்கியதாக அவரது நலன்களைக் கவனிக்கும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இரு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து சென்னை சென்ற திரு. சிவாஜிலிங்கம் அங்கு இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது. title பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு title இந்தியா திருப்பியனுப்பிய பார்வதிக்கு மலேசிய அரசு ஒருமாத கால விசா விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இவர்கள் அனைவரும் இந்தோனேசியாவின் தடுப்பு முகாம்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். “இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரி சுஜத்னமிக்கோ என்பவர் ஆத்திரேலிய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்ததாகவும், 12 மாதங்களில் தம்மை மீள்குடியேற்ற ஆத்திரேலியா அவருக்கு உறுதி கூறியதாக அவர் தமக்குத் தெரிவித்ததாகவும்” நிமால் ”தி ஆஸ்திரேலியன்” பத்திரிகைக்குக் கூறினார். இந்த வாக்குறுதி அண்மையில் ஆத்திரேலியா அரசு அறிவித்திருந்த இலங்கை அகதிகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை இடைநிறுத்தும் முடிவுக்கு எதிர்மாறானதாக இருக்கிறது என செய்தியாளர் தெரிவிக்கிறார். தம்மை ஆத்திரேலியாவில் மீளக் குடியேற அனுமதிக்கும் வரை தாம் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை எனக் கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். கிட்டத்தட்ட 200 இலங்கை அகதிகள் தற்போது ஜகார்த்தா விமான நிலையத்தை நோக்கி பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்தார். தடுப்பு முகாம்களில் அவர்களின் ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும் எனவும் வேறு எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ”2035 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கோளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவோம். அவர்களை ஏற்றி செல்லும் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் செவ்வாயை சுற்றி வந்து மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டத்தில் செவ்வாயில் மனிதன் இறங்குவார்கள்” என ஒபாமா அறிவித்தார். தமது புதிய திட்டம் பெருமளவில் வரவேற்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். title செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் முயற்சி 30 ஆண்டுகளில் சாத்தியம்; அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இரண்டு நாட்களுக்குப் பின் மனுசர்மா பயன்படுத்திய சபாரி கார் நோய்டா அருகே நிராதரவாக விடப்பட்டது. பிப்ரவரி 2006ல் விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக திசம்பர் 2006ல் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடாக மனு செய்திருந்தார். தில்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சோதி தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களே இந்த வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக பினா ரமனியும் அவரது மகள் மாலினி ரமனியும் நடந்த சம்பவங்களை விவரித்து, மனு சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளப்படுத்தினர். தங்களுக்கு பல்வேறு வகையில் மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன், 60 வீதமான வாக்குப் பதிவு இத்தொகுதிகளில் இடம்பெற்றிருப்பதாக கஃபே அமைப்பின் இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆளும் கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மை பலத்தைப் பெற்று விட்டபடியால், இன்றைய முடிவுகள் ஏதும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டா எனக் கருதப்படுகிறது. ஆளும் கூட்டணி இதுவரை அறிவிக்கப்பட்ட 180 முடிவுகளில் 117 இருக்கைகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. மொத்தம் 225 இருக்கைகளுக்காக தேர்தல் இடம்பெறுகிறது. முழுமையான முடிவுகள் நாளைக் காலையில் அறிவிக்கப்படும் என அறியப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தல்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றிருந்ததாக சுதந்திரமான தேர்தல்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சுயேட்சைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் முறைப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் கட்சிக்கு மாவட்ட வாரியான தேர்தல் மூலம் 127 இடங்களும், தேசியப் பட்டியல் மூலமாக 17 இடங்களுமாக மொத்தம் 144 இடங்கள் கிடைத்துள்ளது. இது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட 6 இடங்கள் மட்டுமே குறைவானதாகும். * கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அதே கூட்டணியில் அதே மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெற்றி பெற்றுள்ளார். * திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 82 வயதான ஜெனரல் பிக்னோனி 1978-1979 காலப்பகுதியில் இரண்டாம் நிலை இராணுவத்தலைவராக இருந்த போது ஆட்கடத்தல் மற்றும் கொலைகள், சித்திரவதை போன்ற செயல்களுக்கு உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புவனஸ் அயரெசில் இவரது வழக்கு முடிவடைந்த போது கொலை செய்யப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகளின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்னால் காணப்பட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் சப்தமிட்டனர். அதே காலப்பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மேலும் 6 அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. 1982 முதல் 1983 வரை நாட்டின் தலைவராக இருந்த ஜெனரல் பிக்னோனி மீது மொத்தம் 56 நபர்களை சித்திரவதைக் கூடங்களில் அடைத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இவர் நாட்டுத் தலைவராக வருவதற்கு முன்னர் டி மேயோ என்ற சித்திரவதை முகாமின் தலைமை அதிகாரியாக இவர் பணியாற்றிய போதே இக்குற்றங்களை அவர் இழைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டில் முடிவடைந்த ஏழாண்டு உள்நாட்டுப் போரின் போது இந்த டி மேயோ முகாம் நாட்டின் மிகப்பெரும் முகாமாக விளங்கியது. "நீதி மிகவும் மந்தகதியிலேயே வந்துள்ளது, ஆனாலும் அது இறுதியாகக் கிடைத்துள்ளது என மனித உரிமை ஆர்வலர் எஸ்டெல டி கார்லெட்டோ தெரிவித்தார். ஏழாண்டுப் போரில் மொத்தம் 30,000 பேர் வரை இறந்தோ அல்லது காணாமல் போயோ உள்ளனர். இடதுசாரி எதிர்ப்பாளர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். இதற்கிடையே செல்வமணி என்பவர் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காவி உடையணிந்து சல்லாபத்தில் ஈடுபட்ட நித்யானந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய மனுவிற்கு கடந்த 19ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற மே 20ல் அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. “இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள், மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காகக் கடந்த பெப்ரவரி 8 ஆம் நாள் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா, இன்று தான் முதன் முதலாகப் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார். மிகவும் கடுமையான இராணுவக் காவலின் மத்தியிலேயே அவர் இன்று நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். "இன்று இந்த நாட்டுக்கு மக்களாட்சியே தேவை. தனிமனித உரிமைகள், ஊடக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் அவரை அணுகுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக பிபிசியின் கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி ஏப்ரல் 8 இல் நடந்த தேர்தல்களில் மொத்தம் 7 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக தான் பழிவாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆளில்லாமல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அமெரிக்க வண்வெளித் திட்டத்தில் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விண்வெளியில் மேற்கொள்ளும் பரிசோதனைத் தரவுகளை மேலதிக ஆய்வுக்காக பூமிக்கு அனுப்பும். இந்த இராணுவ வானூர்தி விண்ணோடங்களைப் போலல்லாது, லித்தியம்-அயன் மின்கலங்களையும், சூரிய ஆற்றலையுமே தனது இயக்கத்துக்கு பாவிக்கிறது. இத்திட்டத்தின் செலவு, மற்றும் நோக்கம் போன்றவை வெளிப்படுத்தப்படவில்லை. X-37B என்ற இந்த விண்கலம் 270 நாட்கள் வரை பூமியைச் சுற்றிவரும் ஆற்றல் கொண்டது. ”இது எப்போது திரும்பி வரும் என்று எமக்கு உறுதியாகத் தெரியாது. இது மேற்கொள்ளும் பரிசோதனைகளின் வெற்றியிலேயே எல்லாம் தங்கியிருக்கிறது என்றார் அமெரிக்க வான் படையின் பேச்சாளர் காரி பேய்ட்டன். X-37B என்ற இந்த விமான 1999 இல் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாசா இத்திட்டத்தை 2004 ஆம் ஆண்டில் பெண்டகனிடம் கையளித்தது. நடிகை சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். கடந்த நடாளுமன்றத் தேர்தலில் ஆட்டிங்கள் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரது இறப்புக் குறித்து கோதமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய கடலோரக் காவல்படையினர் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வரும் நிலையில் படகில் உள்ளவர்கள் இறங்க மறுத்து வருகின்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்பதால் தமிழர்கள் தரையிறங்க மறுத்து வருகின்றனர். தரையிறங்க வேண்டுமானால், தங்களை மலேசியாவே அகதிகளாக ஏற்று கொள்ள வேண்டும் அல்லது தங்களை ஏற்கக் கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியாவில் மெராக் துறைமுக அகதிகளின் நிலையே இவர்களுக்கும் நேரலாம் எனப் பரவலாக அஞ்சப்படுகிறது. அதே வேளையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ல படகை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மலேசிய, மற்றும் இந்திய அரசுகளைக் கேட்டு இருக்கிறார். எல் டேர், கலாட், மசகவே என்ற இந்த மூன்று நகரங்களையும் எவ்வித எதிர்ப்பும் இன்றி அல்-சபாப் கைப்பற்றியுள்ளனர். இம்மூன்று நகரங்களும் தலைநகர் மொகதிசுவுக்கான பிரதான பாதையில் அமைந்துள்ளன. "சோமாலியாவிலிசுலாமைப் பரப்பும் எமது நடவடிக்கைகளுக்கு இந்த ஆலு சுனா போராளிகள் தடையாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அல்லாவின் அருளால் இந்த மூன்று நகரங்களையும் மீட்டிருக்கிறோம். அல்லாவின் எதிரிகளிடம் இருந்து முழுப் பிராந்தியத்தையும் கப்பற்றும் வரை நாம் ஓய மாட்டோம் என அல்-சபாப் போராளிக்குழுவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். சோமாலியாவின் தெற்குப் பகுதி மற்றும் தலைநகர் மொகதிசு ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளை அல்-சபாப் போராளிக்குழு தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. யாசூ நகரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மிசிசிப்பி ஆளுநர் ஹேலி பார்பர் தெரிவித்தார். 17 நகரங்களில் அவர் அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ளார். யாசூ நகரில் தேவாலயம் ஒன்று தரைமட்டமாகியுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அருகில் உள்ள லூசியானா, அர்க்கன்சஸ், அலபாமா மாநிலங்களையும் சூறவளை தாக்கியுள்ளது. சூறாவளி இப்போது கிழக்கு நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பினுள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் அனைத்தும் (முதற் பக்கம் தவிர வலைவாசல் பெயர்வெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வலைவாசல் ஒன்று இந்தப் பகுப்புக்குள் இணைக்கும் போது அது பின்வருமாறு இணைக்கப்பட வேண்டும் nowiki பகுப்பு:வலைவாசல் subst:PAGENAME nowiki கட்டுரைகளைத் தேடி வந்தீர்களா? பார்க்க Wikinews:காப்பகம் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சுனாமி எச்சரிக்க எதுவும் விடுக்கப்படவில்லை என தைவானின் நடுவண் காலநிலை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்க விடுக்கப்படவில்லை என பசிப்க் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் தலைநகர் தாய்பெய் நகரில் சில கட்டடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதாகவும், ஆனாலும் எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்புகளோ அறிவிக்கப்படவில்லை. பிரான்சின் நீதிமன்றம் ஒன்று 1999 ஆம் ஆண்டில் ஊழல் குற்றத்துக்காக நொரியேகாவுக்கு அவர் இல்லாத நிலையில் தண்டனை விதித்திருந்தது. எனினும் அவருக்கு எதிராகப் புதிதாக விசாரணை நடத்தப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. 76 வயதான நொரியேகா 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்தவுடன் பனாமாவுக்குத் திருப்பி அனுப்பும்படி அந்நாடு வேண்டுகோள் விதித்திருந்தது. ஆனாலும், பிரான்சுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து கடந்த பெப்ரவரியில் நொரியேகா மனுச் செய்திருந்தார். அதனை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. நொரியேகா பனாமாவின் அரசுத்தலைவராக 1983 இல் பதவியேற்கும் முன்னர் பல ஆண்டுகள் நாட்டின் இரகசியத்துறைக்குத் தலைவராகப் பணியாற்றினார். அதன் பின்னர் தேசியப் படைக்குத் தலவராக 1982 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். 1960களின் பிற்பகுதியில் இவர் அமெரிக்காவின் இரகசியத் துறையான சிஐஏ இனால் பணிக்கு அமர்த்தப்பட்டார். 1987 வரை அவர் அமெரிக்க அரசினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தார். 1988 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் அமெரிக்க அரசுக்கும் இருந்த உறவு முறிந்தது. அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை அடுத்து நொரியேகா அங்கு “போர் நிலை”யை அறிவித்தார். பனாமாக் கால்வாயில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும் பனாமாப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை வலுத்தது. அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் பனாமா நகரில் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து டிசம்பர் நடுப்பகுதியில் அமெரிக்கா பனாமாவை முற்றுகையிட்டது. 1992 ஆம் ஆண்டில் அவருக்கு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படட்து. பின்னர் அது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, மேலும் அவரது நன்னடத்தைக்காக 17 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அல்-பசீர் 68 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாக சூடானின் தேர்தல் வாரியம் அறிவித்திருக்கிறது. சல்வா கீர் அவரது பகுதியில் 93 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தல்களில் பல மோசடிகள் இடம்பெற்ரதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அல்-பசீரின் இரண்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. ”பக்கெட் இல 1” எனப் பெயரிடப்பட்ட இந்த ஆவணங்கள் முன்னர் சிறப்பு ஆய்வாளர்களுக்கே பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்படுகொலைகளில் தாம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என சோவியத் ஒன்றியம் பல தசாப்தங்களாகக் கூறி வந்துள்ளது. இம்மாதம் காட்டின் படுகொலை நினைவு நாள் நிகழ்வில் கந்து கொள்ளவென இரசியா வந்திருந்த போலந்து அரசுத்தலைவர் பற்றும் பல உயரதிகாரிகள் விமானவிபத்தில் கொல்லப்பட்டதை அடுத்து போலந்துக்கும் இரசியாவுக்கும் இடையில் உறவுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இரசியாவின் அரசுத் தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த ஆவணங்கள் இணையத்தில் வெலளியிடப்பட்டுள்ளன. இரசியா காட்டின் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என போலந்து பல ஆண்டுகலாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தது. இம்மாத ஆரம்பத்தில், இரசிய மற்றும் போலந்து பிரதமர்கள் இருவரும் சேர்ந்து முதற்தடவையாக இப்படுகொலைகளை நினைவு கூர்ந்தார்கள். ஏப்ரல் 1940 படுகொலைகள் சோவியத் இரகசியப் படையினரால் அன்றைய சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது கிட்டத்தட்ட 22,000 போலந்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், மற்றும் கலைஞர்கள், காட்டின் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டனர். இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார் ஏப்ரல் 11, 2010 இவரை எதிர்த்து மக்கள் கூட்டணி கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் சையிட் இப்ராகிம் போட்டியிட்டார். இவர் தேசிய முன்னணியில் மூத்த தலைவராக விளங்கியவர். சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். ஞாயிற்றுக்கிழமை இரவு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கமலநாதனுக்குக் கிடைத்த வாக்குகள் 24,997. சைட் இப்ராஹிமிற்குக் கிடைத்த வாக்குகள் 23,272. கமலநாதன் 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார். கடந்த 2008 இல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றினாலும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்தக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. மலேசிய இந்திய காங்கிரஸ் செல்வாக்குப் பெற்ற உலுசிலாங்கூரில் கடந்த தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி தோல்வியைத் தழுவியது. மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜைனல் அபிடின் சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து அங்கி இடைத்தேர்தல் நடந்தது. உலு சிலாங்கூர் இடைத் தேர்தல் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பொருளியல் சீர்திருத்தங்களுக்கான மக்கள் வாக்கெடுப்பாகப் பார்க்கப்பட்டது. முந்திய தேர்தலில் எதிர்க்கட்சியிடம் இழந்த உலுசிலாங்கூர் தொகுதியை மீண்டும் கைப்பற்ற ஆளும் தேசிய முன்னணி கடந்த பல நாட்களாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது குறித்து மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த வெற்றி மூலம் விரைவுபடுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். சீனர்களின் வாக்கு 2008 பொதுத்தேர்தலைப் போலவே இந்த இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சிக்குப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது என நோக்கர்கள் கருதுகின்றனர். சியாங்கு மாகாணத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் 5 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ற புதன்கிழமை நாட்டின் தென்பகுதியில் நடந்த இதே மாதிரியான தாக்குதலில் 16 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். சென்ற மாதம் பூச்சியான் மாகாணத்தில் 8 சிறுவர்களைச் சுட்டுக் கொன்ற மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். இன்றைய தாக்குதலை நடத்தியது சூ யூயுவான் என்ற 47 வயது வேலையற்ற நபர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். டாய்சிங் என்ற நகரில் ஆரம்பப்பள்ளி ஒன்றில் நுழைந்த இம்மனிதன் அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாகக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாகவும் அவனைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரியையும் அவன் குத்திக் காயப்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைத்துக் குழந்தைகளும் 4 முதல் 5 வயதானவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படுவது அதிகமாகியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தாக்குதல்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், மனநோய் பாதிக்கப்பட்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சூரியனில் இருந்து 480 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் 24 தெர்மிஸ் என்ற சிறுகோளை அறிவியலாளர்கள் முதற்தடவையாக ஆராய்ந்துள்ளார்கள். இக்கண்டுபிடிப்பு பூமியில் காணப்படும் பெருமளவு நீர் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்ற கொள்கையை மேலும் உறுதிப்படுத்தலாம் என நேச்சர் என்ற அறிவியல் இதழுக்கு மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உம்பெர்ட்டோ காம்பின்ஸ் கருத்துத் தெரிவித்தார்கள். இக்கண்டுபிடிப்பு தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வு முடிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் அங்கு சேதன, மற்றும் கார்பன் அதிகமுள்ள சேர்வைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் இடம்பெற்றுள்ளதாக FPNR என்ற போராளிக் குழுவின் தலைவர் அடூம் யாக்கூப் தெரிவித்தார். ஆனாலும் அவர் மேலும் விபரங்களைத் தெரிவிக்கவில்லை. கடந்த பெப்ரவரியில் சூடானும் சாட்டும் தத்தமது நாடுகளில் இயங்கும் போராளிக் குழுக்களுக்கு உதவி செய்வதில்லை என இணக்கம் தெரிவித்ததை அடுத்து இடம்பெற்றுள்ள முதலாவது மோதல் இதுவாகும். "முழுப் பகுதிகளையும் எமது இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என சாட்டின் தகவல்தொடர்பு அமைச்சர் கெடல்லா யூனுஸ் தெரிவித்தார். தமது தரப்பில் ஒரு இராணுவ வீரர் இறந்துள்ளதாகவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். FPNR குழு யுஎஃப்ஆர் என்ற முக்கிய போராளிக் குழுவில் இருந்து பிரிந்த ஒரு புதிய குழு என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். அரசுடனான பேச்சுக்களை இது எதிர்த்து வந்தது. சூடானின் தெற்குப் பகுதியான தார்பூரில் போராளிக்குழுக்களுக்கு உதவிகள் புரிவதாக சாட் நாட்டின் மீது சூடான் குற்றம் சாட்டி வந்துள்ளது. இதனையடுத்து சாட் சூடானுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. கிட்டத்தட்ட 250 நாடுகளும் உலக அமைப்புகளும் தனது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை இங்கு காட்சிப்படுத்தவுள்ளன. முதல் நாள் திறப்பு விழாவன்று பிரெஞ்சு அரசுத்தலைவர் சர்க்கோசி உட்படப் பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன அரசுத்தலைவர் ஹூ சிந்தாவு கண்காட்சியை அதிகாரபூவமாகத் திறந்து வைத்தார். முதல் நாள் நிகழ்வில் உலகம் அனைத்திலும் இருந்து 2,300 இசைக்கலைஞர்களும் வேறு பங்களிப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ”சிறந்த நகரம், இசை மற்றும் நடனத்தில் சிறந்த வாழ்வு” என்பதே இவ்வாண்டு எக்ஸ்போ கண்காட்சியின் தொனிப்பொருள் ஆகும். அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியை கிட்டத்தட்ட 70 மில்லியன் பேர் கண்டு களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் சீனர்களாக இருப்பர். இக்கண்காட்சிக்கான மொத்தச் செலவு 58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவை விட அதிகமாகும். இக்கண்காட்சிக்கென பாதுகாப்பு ஏற்பாடுகள் நகரில் பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மறக்கபட்ட ஊமைத் திரைப்படங்கள் ஹிட்ச்க்காக் தனது இளமைக்காலத்தில் உருவாக்கியவை என்றும், இவை அவரது பிற்கால ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவை 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்படும். ஆனாலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. ஹிட்ச்காக்கின் த மவுண்டன் ஈகல் என்ற திரைப்படம் 1926 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. இதுவே அவரது கடைசி ஊமைத் திரைப்படம் ஆகும். மீள்விக்கப்பட்ட ஹிட்ச்க்காக்கின் மூன்று ஊமைத் திரைப்படங்கள் ட்த பிளெசர் கார்டன் (1925 த லொட்ஜர் (1927 த ஃபார்மர்ஸ் வைஃப் (1928) ஆகியவை ஆகும். ஆல்பிரட் ஹிட்ச்காக் இறந்து 30 ஆண்டுகள் சென்ற வியாழக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது. ஆல்பிரட் ஜோசப் ஹிட்ச்காக் (ஆகஸ்ட் 13, 1899 ஏப்ரல் 29, 1980) ஆங்கிலத் திரைப்பட இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திரைப்படத் துறையில் ஈடுபட்ட இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். ஊமைத் திரைப்படங்கள் தொடங்கி, கறுப்பு வெள்ளை திரைப்படங்கள், வண்ணத் திரைப்படங்கள் என பலவித திரைப்படங்களை உருவாக்கினார். தொடந்து பல வெற்றி படங்களை இயக்கி, தனது காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இயக்குனராகத் திகழ்ந்தார். பல மர்மப் படங்களை இயக்கிய இவர், தனது சிறந்த இயக்கும் பாணிக்காக இன்றும் பேசப்படுகிறார். ஃபாமிலி புளொட் (1976) அவரது கடைசித் திரைப்படம் ஆகும். அல்-சபாப் போராளிக் குழுவின் முக்கிய தலைவர் ஒருவரைக் குறி வைத்தே தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. புவாட் கலாஃப் என்ற அத்தலைவர் தாக்குதலில் தப்பினாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை. "அப்தல்லா சிதியே என்ற மசூதியில் நேற்று பலர் தொழுகைக்காகக் குழுமியிருந்த போதே குண்டுகள் வெடித்தன. கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தோரில் பெரும்பான்மையானோர் சாதாரண பொது மக்கள்,” என உள்ளூர் வணிகர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். எவரும் இத்தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை. அப்தல்லா சிதியே மசூதி பொதுவாக அல்-சபாப் போராளிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு அதன் தலைவர்கள் உரையாற்றுவது வழக்கம். சென்ற செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் அபு உரேயா மசூதியில் நிலக்கண்ணி வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 1991 முதல் சோமாலியா உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத இசுலாமியப் போராளிகள் தெற்கு சோமாலியாவின் பல பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எண்ணெய்க் கசிவை அகற்ற மத்திய அரசாங்கத்தின் உதவியை லூயிசியானா மாநில ஆளுநர் பாபி ஜின்டால் நாடியுள்ளார். சுற்றுப்புற தூய்மைக்கேட்டிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே தங்கள் முதல் பணி என்று அவர் கூறியுள்ளார். தற்போது ஒதுங்கிவருவதைவிட மேலும் அடர்த்தியான எண்ணெய்த் திட்டு கரையோரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. குழாய் உடைப்பிலிருந்து ஒரு நாளைக்கு ஐயாரம் பீப்பாய்கள் என்ற அளவில் தொடர்ந்து எண்ணெய் கடலில் கசிந்துவருகிறது என்பதும் அந்தக் கசிவைத் தடுத்து நிறுத்துவது என்பது பெரும் சிரமம் என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். எண்ணெய்க் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு நாற்பத்து ஐந்து முதல் தொண்ணூறு நாட்கள் வரை ஆகலாம் என்று இந்த எண்ணெய் தொண்டியெடுக்கும் மேடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறுகிறது. மெக்சிக்கோ வளைகுடாப் பகுதிக் கரையோரம் என்பது சுற்றுச்சூழல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு இடமாகும். மீன்வளம் மிக்க இந்தப் பகுதி, அமெரிக்காவின் கடலுணவு வழங்கும் முக்கிய பிரதேசமாகவும் விளங்குகிறது. எண்ணெய் திட்டால் கரையோரப் பகுதியில் பாதிப்பு ஏற்படுமானால், மீன்பிடித் தொழில்துறையும் கணிசமாகப் பாதிக்கப்படும். ஈழத்தமிழர்களின் பிரிவினைப் போராட்டம் பற்றி ஜெயப்பிரகாச்ஜ் திசைநாயகம் தனது பத்திரிகையில் எழுதி வந்தார். உலக ஊடகவியலாளர் சுதந்திர நாளை ஒட்டி இந்த மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார். திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தன. சென்ற ஜனவரி மாதம் திசைநாயகம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வருடம் நடைபெற்ற இந்த வழக்கில் 658 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1,522 பக்கங்கள் கொண்டதாக தீர்ப்பு இருந்தது. கசாபிற்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை கோர இருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். கடந்த 2008, நவம்பர் 26 அன்று, பாகிஸ்தானைச் சார்ந்த பத்துபேர் கொண்ட கும்பல் கடல்வழியே விசைப்படகில் வந்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், நரிமன் பாயின்ட் போன்ற முக்கிய இடங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறைத் தலைவர் கர்கரே, 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர். 60 மணிநேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 9 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முதன்முறையாக அமெரிக்காவைச்சார்ந்த எப்பிஐ இந்திய அரசுக்கு உதவிகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் 24 பேர் கொல்லப்படனர், 10 இறும் அதிகமானோர் காயமடைந்தனர். கடுகதிப் பாதை வழியே கேப் டவுன் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றே நகரில் இருந்து 150 கிமீ வட-மேற்கே உள்ள இஅடம் ஒன்றில் வைத்து தனது கட்டுப்பாட்டை இழந்ததினால் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 0600 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்டவரக்ளில் 4 பேர் குழந்தைகள் ஆவர். தென்னாப்பிரிக்காவில் ஜூன் மாதத்தில் உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறப்போகும் தென்னாப்பிரிக்காவில், சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்படுகின்றனர். ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்த அரசு, வியாழக்கிழமை அன்று யராதுவாவின் உடல் இசுலாமிய முறைப்படி அவரது சொந்த இடமான கட்சீனாவில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து பதில் அரசுத்தலைவராகப் பணியாற்றும் உதவி சனாதிபதி குட்லக் ஜொனத்தன் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்பார். 58 அகவையுடைய யராதுவா 2007 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பதவிக்கு வந்தார். அவர் பல மறுசீரமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்திருந்தார். எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்ட்டா பகுதியில் குழப்பநிலையைப் போக்க இவர் எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளன என அவதானிகள் தெரிவித்தனர். மத்திய மாநிலமான ஜோஸ் பகுதியில் முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் அண்மைக் காலங்களில் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இரவு 09:00 மணியளவில் அபுஜா என்ற இடத்தில் இவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. யராதுவாவின் இறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன், அஞ்சலி தெரிவிக்கவென பொதுமக்கள் பலர் அரசுத்தலைவர் மாளிகையில் குழுமத்தொடங்கினர். அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா உட்படப் பல நாட்டுத்தலைவர்கள் தமது இரங்கல் செய்திகளைத் தெரிவித்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு பிறந்த யராதுவா அரசியலுக்கு வரும் முன்னர் வேதியியல் பேராசியராகப் பணியாற்றினார். இவருக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். 2007 ஆம் ஆண்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் சுகவீனம் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறச் சென்றார். பெப்ரவரியில் நாடு திரும்பிய யராதுவா பதில் தலைவரிடம் இருந்து பொறுப்புகக்ளைப் பாரமெடுக்கவில்லை. பதில் தலைவர் குட்லக் ஜொனத்தன் கடந்த மார்ச் மாதத்தில் அமைச்சரவையைக் கலைத்து விட்டு புதிய அமைச்சரவையை அறிவித்தார். விசாரணை அமைப்புக்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து அந்த சோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை மேலதிக விசாரணைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அந்தத் தகவல்களை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவிததுள்ளனர். பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்தும்போது, அவர்கள் உண்மையான தகவல்களைச் சொல்லாத நிலையில், மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு எந்த ஒரு தனிநபரையும் வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறத்துவது தனிநபரின் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவரையோ, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படுவோரையோ அல்லது சாட்சியம் அளிப்பவரையோ அதுபோன்ற சோதனைகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதை, அரசியல் சட்டப் பிரிவு 20 உட்பிரிவு மூன்றை மீறுவதாகும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பல குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சோதனையின் போது சோடியம் பென்தனோல் ஊசி மூலம் குற்றவாளியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இம்மருந்து தன்னிலை மறக்கச் செய்து உண்மைகளை வெளிக்கொணர வைக்கிறது. சென்ற ஆண்டு மாவோயிசத் தலைவர் கொபாத் காந்தி கைது செய்யப்பட்டபோது அவருக்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. அத்துடன், தில்லியில் 17 இளம் பெண்கள், மற்றும் குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு இந்த மருந்து ஏற்றப்பட்டது. கடும் கடன் சிக்கலில் இருக்கும் கிரேக்கத்துக்கு அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வங்கி கடன் கொடுத்து உதவ முன்வந்துள்ளன. ஆனால் கிரேக்கம் ஊதிய குறைப்பு, ஓய்வூதியம் குறைப்பு, அதிக வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. இதன் காரணமாக கிரேக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடனை திருப்பித்தர முடியாமல் கிரேக்கம் திவாலாகலாம் எனவும் இது போன்ற நிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல் போன்றவற்றிக்கும் வரலாம் என பங்குச்சந்தையில் அச்சம் பரவியுள்ளது. ஐரோப்பிய நடுவண் வங்கியானது கிரேக்க கடன் பத்திரங்கள் வாங்கல் போன்ற புது முயற்சிகள் எடுத்து கிரேக்க கடன் சிக்கல் தீர முயவில்லை எனவும் முதலீட்டாளர்கள் கவலை கொண்டுள்ளார்கள். வால் தெருவின் பெரிய வங்கி ஒன்று தவறுதலாக செய்த வணிகத்தினால் இந்த சரிவு ஏற்பட்டதாக வதந்தி உலவுகிறது. மும்பை ரயில் நிலையம், நட்சத்திர ஒட்டல்கள், யூத வழிபாட்டு மையம் மற்றும் ஒரு மருத்துவமனையில் பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் மும்பை வந்த 10 பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களில் 174 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 22 அகவையுடைய கசாப் மட்டும் காயங்களுடன் உயிருடன் பிடிக்கப்பட்டார். ஏனையோர் அனைவரும் படையினருடன் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டனர். ”கசாப் இந்தியாவை தாக்க வேண்டும் என்று நோக்கில் இருந்ததால் அவர் மீது தயவு தாட்சண்யம் காட்ட முடியாது,” என நீதிபதி தகல்யானி தனது தீர்ப்பில் கூறினார். கசாபை ஒரு கொல்லும் இயந்திரம் என்றும் கொடுரத்தின் அவதாரம் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் வர்ணித்துள்ளனர். நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த கூட்டமும் இந்துஸ்தானுக்கு ஜெய் என்று கோஷமிட்டு தனது மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளது. கசப்புக்குக் கருணை காட்ட வேண்டும் என அவரின் வழக்கறிஞர்கள் வாதாடினர். கசாப் தீவிரவாதக் குழுவினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர் என்றும், அவரைத் திருத்த முடியும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் தூக்கு தண்டனைகள் மிக அரிதாகவே நிறைவேற்றப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு நபர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக கசாப் மேல் முறையீடுகள் செய்ய முடியும். ஜனாதிபதியிடமும் அவர் கருணை மனு செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்பட பல ஆண்டுகள் பிடிக்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு மே 4, 2010 எரவிகுளம் தேசியப் பூங்காவில் ஆனைமுடி மலையில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் இவை காணப்படுவதாகவும், இந்தப் பகுதி பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். “இத்தவளையினம் வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்படவில்லை,” எனக் கண்டுபிடிப்பாளர் குழுவிற்குத் தலைமை தாங்கிய தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ். டி. பிஜு, பிரசல்ஸ் சுயாதீனப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிராங்கி பொசுயிட் ஆகியோர் தெரிவித்தனர். நிபுணர்களின் முந்தைய கணிப்புப்படி அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சிக்கு தொகுதிகள் வாரியாகவும், வாக்குகள் வீதத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது 258 தொகுதிகளே கைப்பற்றியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மரபுப்படி யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் ஆளும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சிக்கு வாக்குகள் வீதத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் அது போன்ற முயற்சியை மேற்கொள்ள ஆளும் கட்சிக்கு தார்மீக உரிமையில்லை என்று கேமரூன் தெரிவித்துள்ளார். கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பொதுக்கருத்துக்கள் அடிப்படையில் நிக் கிளக்கின் லிபரல் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அது நிறைவேறாத பட்சத்தில் லிபரல் உடன் கூட்டணி வைக்க முயற்சி செய்யப்போவதாக கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை, இராணி யாரை ஆட்சி அமைக்க அழைக்கிறார் என்பதுவரை, என அவரது வணிக ஆலோசகர் லார்ட் மேன்டல்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் என்கிற வகையில் பிரிட்டனின் நிலைத்தன்மை காக்கப்படுவதை உறுதி செய்வது தனது கடமை என்பதால் இராஜினாமா செய்யப்போவதில்லை என கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். உலக பொருளாதார சரிவுக்குப் பின் நடைபெற்ற இத்தேர்தலை உலகம் உன்னிப்பாக கவனித்தது. பொருளாதார சரிவின் பாதிப்புகள் அதிகம் ஏற்படுத்திய நாடுகளுள் ஐக்கிய இராச்சியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற மரபுப்படி தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் பட்சத்தில் அப்போதைய ஆளும் கட்சி ஆட்சியை தொடரலாம், பின்னர் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். கடந்த வியாழக்கிழமைக்கு முன்னர் அரசியல் கட்சிகளை மீள்பதிவு செய்யுமாறு இராணுவ ஆட்சியாளர்கள் விடுத்த அறிவுறுத்தல்களை சூ கியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி (NLD) நிறைவேற்றத் தவறியதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கெதிரான பிரபல கிளர்ச்சியொன்றின் பின்னர் 1988 இல் அமைக்கப்பட்ட இக்கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தல்களில் பங்கெடுப்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்திருந்தது. 1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி பெரும் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் அதற்கு அரசமைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மீள்பதிவு செய்யத்தவறும் கட்சிகள் கலைக்கப்படும் என இராணுவ ஆட்சியாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். இராணுவ ஆட்சியாளரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தேர்தல் சட்டங்கள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உத்தியோகபூர்வமாக சூகியின் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. மெச்துரேச்சென்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள இந்த ரஸ்பாத்ஸ்கயா சுரங்கத்தில் இரண்டாவது வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. 20 மீட்புப் பணியாளர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. "சுரங்கத்தினுள் நிலைமை சீரானதும் மீட்புப் பணிகள் தொடரும். ஆனாலும் இப்போது மீட்புப் பணியாளர்களை அங்கு அனுப்புவது என்பது அவர்களைக் கொலைக்களத்துக்கு அனுப்புவது போன்றது என்றார் கெமெரோவாவின் ஆளுநர் அமான் துலேயெவ். தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிழக்கே 3,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தச் சுரங்கத்தில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் தொன் நிலக்கரி உற்பத்தியாகிறது. இரசியாவின் சுரங்கங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆச்சே மாகாணத் தலைநகர் பண்டா ஆச்செயியில் இருந்து 214 கிலோமீட்டர் தெற்கே நிலநடுக்கம் இடம்பெற்றதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது. 2004 ஆம் ஆண்டின் பெரும் நிலநடுக்கம் நிகழ்ந்த இடத்துக்கு அருகாமையிலேயே இன்றைய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பகல் 1259 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வீடுகள் சேதமடைந்ததாகவும், மின்கம்பிகள் அறுந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமாத்ராவின் வட-மேற்கு முனையில் ஆச்சே அமைந்துள்ளது. இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் நிகழ்வாகும். சென்ற ஆண்டு மேற்கு சுமாத்ராவின் படாங் அருகே இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2004 நிலநடுக்கத்தில் ஆச்சே பிராந்தியத்தில் மட்டும் 170,000 பேர் உயிரிழந்தனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வெற்றி விழாக்களில் நேற்றைய நிகழ்வே மிகவும் சிரப்பாக இருந்ததாக அவதானிகள் தெரிவித்தனர். செஞ்சதுக்கத்தின் ஊடாக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள், தாங்கிகள் உட்படப் பல இராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. கிட்டத்தட்ட 150 விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் செஞ்சதுக்கத்தின் மேல் பரந்து வட்டமிட்டன. 10,000 இரசிய இராணுவத்தினர் பங்குபற்றினர். இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகள் எம்மிடையே ஒற்றுமையை தேவை என்பதை வலியுறுத்துகிறது, என இரசிய அரசுத்தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் உரையாற்றுகையில் தெரிவித்தார். மேற்குலக நாடுகள் வெற்றி விழாவை ஒவ்வோர் ஆண்டும் மே 8 ஆம் நாள் கொண்டாடுகின்றன. ஆனால் இரசியா மே 9 ஆம் நாளன்று கொண்டாடுகின்றது. இந்நாளிலேயே நாசிப் படையினர் அதிகாரபூர்வமாக சரணடைந்தனர். சென்ற புதன்கிழமை (மே 5) அன்று ஆத்திரேலியச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகைக் கண்டு அது பற்றி ஆத்திரேலிய கடலோரப் பாதுகாப்பு ஆணையத்துக்கு அறிவித்ததாகவும், பின்னர் அப்படகு காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொக்கோசு தீவுகளில் இருந்து 270 கிலோமீட்டர் வட மேற்கே விமானப்படையின் விமானங்கள் தேடுதலில் ஈடுபட்டன. மூன்று நாட்களுக்கு முன்னர் ஐந்து ஆண் பயணிகள் உயிர்காப்பு ஆடைகளை அணிந்த வண்ணம் உதவி நாடி கடலில் குதித்ததாக படகில் பயணம் செய்த ஏனைய அகதிகள் தெரிவித்தனர். சில உயிர்காப்பு ஆடைகள், மற்றும் டயர்கள் சில அவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் டேடும் பணி நிறைவடைந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இப்படகு இலங்கையில் இருந்து நேரடியாகப் பயணித்ததாக நம்பப்படுகிறது. இவ்விபத்தை அடுத்து எப். எஸ். டி. நிறுவனத்தின் மருத்துவக் குழுவினர் அம்புலன்ஸ் வண்டியில் விரைந்த போது வண்டி விபத்துக்குள்ளானதில் சாரதியும், மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பிரெஞ்சு நிபுணர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காமல உயிரிழந்துள்ளார். கொசோவோ-அல்பேனியர்களினது என நம்பப்படும் பெரும் புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 250 உடல்கள் இருக்கக் காணப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 1998, மற்றும் 1999 காலப்பகுதியில் சேர்பியா அல்பேனியப் படைகளுக்கிடையில் கொசோவாவில் இடம்பெற்ற மோதல்களின் போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தப் புதைகுழி சேர்பியத் தலைநகர் பெல்கிரேடில் இருந்து 180 கிலோமீடர் தெற்கே ராஸ்கா நகரில், கொசொவோ எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதைகுழி பற்றிய வதந்தி இரண்டாண்டுகளுக்கு முன்னர் சேர்பியாவில் பரவியிருந்தது. ஆனாலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்புதைகுழி கட்டடம் ஒன்றின் அடியில் உள்ளது. புதைகுழியை மறைக்கவே இக்கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இவ்வாறான புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை இது முதல் தடவையல்ல. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டிலும் 800 அல்பேனிய படையினரின் உடலங்கள், சேர்பியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கொசோவொ போரின் போது 11,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அல்பேனியர்கள், குறைந்தது 2,300 பேர் சேர்பியர்கள் ஆவர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. நேற்று தொழிற்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொண்ட முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன், நேற்று பிரதமர் பதவியில் இருந்து அதிராகபூர்வமாக விலகினார். கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைப்பதைத் தடுக்க, லிபரல் மற்றும் ஏனைய கட்சிகளுடனான சுமுகமான பேச்சுவார்த்தைகளை முறிவடையாமல் பாதுகாக்கவே தாம் தமது கட்சித் தலைமையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் மகாராணி கோர்டன் பிரௌனின் அதிகாரபூர்வ பதவி விலகலை ஏற்றுக் கொண்டார். ஹரியட் ஹார்மன் தொழிற்கட்சியின் தற்காலைகத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றிரவு 20:10 மணியளவில் அரண்மனைக்குச் சென்ற டேவின் கேமரனை எலிசபெத் மகாராணி புதிய அரசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். கன்சர்வேடிவ் கட்சியின் ஜார்ஜ் ஒஸ்போர்ன் நிதி அமைச்சராகவும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹேக் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரை பெரும்பாலான அறிவிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கே கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு துணைப்பிரதமர் உள்பட ஐந்து அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று தெரியவருகிறது. உயிர் தப்பிய டச்சுச் சிறுவன் சிறிய காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக லிபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது சிடான் தெரிவித்தார். ஆப்பிரிக்கியா ஏர்வேய்ஸ் (Afriqiyah Airways) நிறுவனம் தனது இணையத்தளத்தில் பின்வருமாறு அறிவித்திருந்தது ஜொகான்னஸ்பேர்க்கில் இருந்து புறப்பட்ட 8யூ771 விமானம் உள்ளூர் நேரப்படி இன்று மே 12 புதன்கிழமை அதிகாலை 06:00 (04:00 UTC) மணிக்கு திரிப்போலி பன்னாட்டு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.” விமான்ச் சிப்பந்திகள் 11 பேர்ம் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் சேதமுற்ர பகுதிகளை லிபிய அரசுத் தொலைக்காட்சி இன்று காண்பித்தது. காவல்துறையினரும், மீட்புப் பணியாளர்களும் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஓடுபாதைக்கு மிக அருகாமையிலேயே இவ்விபத்து இடம்பெற்றது. "விமானம் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறியது என லிபியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார். பயங்கரவாதம் காரணமல்ல என அமைச்சர் சிடான் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக காலநிலை மிகவும் சீராகவே இருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். ஆப்பிரிக்கியா ஏர்வேஸ் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு குறைந்த-செலவு விமான நிறுவனம் ஆகும். முக்கியமாக ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் இது சேவையாற்றுகின்றது. 1991-1995 விடுதலைப் போரின் போது போர்க்குற்றம் இழைத்ததாக இவர் குரொவேசியாவில் தேடப்பட்டு வந்தார். ஆத்திரேலியப் பிரசையான வசில்க்கோவிச் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தாலும், போரின் போது பொது மக்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். வசில்க்கோவிச் நாடு கடத்தைப்படுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அத்திரேலியாவின் உட்துறை அமைச்சர் பிரெண்டன் ஓக்கொனர் தெரிவித்தார். அதுவரையில் அவர் சிறையில் வைக்கப்படுவார் என அவர் தெரிவித்தார். 15 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வசில்க்கோவிச் 1991 ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் சென்று குரொவேசியப் போராளிகளுக்கு இரானுவப் பயிற்சி அளித்து வந்தார். இவர் அங்கு கிராச்சினா மாகாணத்தில் பொதுமக்களைச் சித்திரவதைப் படுத்தியதாகவும், பல பொதுமக்கள், மற்றும் சிறைக் கைதிகளைச் சித்திரவதைப் படுத்திக் கொலை செய்ததாகவும் குரொவேசியா குற்றம் சாட்டியுள்ளது. வெளிப்பக்கம் முழுவதும் தங்கத்தினால் முலாமிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் 10 கிராம் வரை எடையுள்ள தங்கச் சவரன்கள், மற்றும் காசுகள் உட்பட மொத்தம் 320 வகை அசல் 24 கரட் தங்கங்களைக் கொடுக்கவல்லது. இந்தத் தங்க இயந்திரம் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உலக தங்க நிலவரங்களை அதனுடன் பொருத்தப்பட்டுள்ள கணினி மூலம் அறிந்து அதே விலைக்கு தங்கத்தைத் தருமாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது உள்ளூர் டிராம் காசுகளையே இந்த இயந்திரம் ஏற்கிறது. பின்னாளில் இது கடன் அட்டைகளையும் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. "முதல் நாளிலேயே இதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது என கீஸ்லர் கூறினார் ஒரு வாடிக்கையாளர் இயந்திரத்தில் உள்ள அனைத்து வகைத் தங்களில் ஒவ்வொன்றை முதல் நாளில் வாங்கினார்." "அனைத்து தங்கங்களும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும் என அவர் கூறினார். அண்மைக்காலங்களில் தங்கத்தின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. தற்போது ஒரு அவுன்ஸ் $1,236 (£837) ஆக விற்கப்படுகிறது. தெற்கு நகரான ஜலாலாபாத்தில் அரசுக் கட்டிடங்களை மீள ஆக்கிரமிக்க அரசு ஆதரவாளர்கள் முயன்றபோது அங்கு சூட்டு சத்தங்கள் கேட்டன. முன்னதாக, முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவின் ஆதரவாளர்கள் ஓஷ் நகரில் உள்ள ரசுக் கட்டிடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஜலாலாபாத் நகரில் உள்ள அரசுக் கட்டடங்களை நேற்று வியாழக்கிழமை அன்று இருநூறுக்கும் அதிகமான பாக்கியெவ் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்ததை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால அரசின் ஆதரவாளர்கள் 4,000 பேர் அக்கட்டடங்களுள் நுழைந்தனர். இதனை அடுத்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. நகரில் உடனடியாக வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வீடு திரும்பினர். காயமடைந்தவர்களில் மூன்று ஆஸ்திரேலியர்களும் அடங்குவர் என ஆத்திரேலியத் தொலைக்காட்சி அறிவித்தது. அந்தப் பகுதியில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும் தொடர்ந்து கேட்டுவருகின்றன. ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினார்கள். இன்று சனிக்கிழமை மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர். செஞ்சட்டைக்காரர்கள் என்று அழைக்கப்படும் போராட்டக்காரர்கள் தங்களை நோக்கி முன்னேறிவரும் ராணுவத்தினரை தடுப்பதற்காக வாகனங்களுக்குத் தீவைத்தனர். போராட்டக்காரர்களுக்குத் தலைமை வகிக்கும் முன்னாள் ஜெனரல் காட்டியா சவஸ்திப்போல் என்பவர் சென்ற வியாழன் அன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்டுப் படுகாயமடைந்ததை அடுத்து வன்முறை தீவிரமாகியிருந்தது. செஞ்சட்டைக்காரருடன் எந்த சமரசங்களுக்கும் உடன்படப்போவதில்லை என அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்துபவர்களில் சிலர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து ராணுவத்தினர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் பிரதமர் அபிசித் வெச்சசிவா நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தப் போராட்டக்காரர்கள், நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் தக்சின் செனவத்ரவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடும் கொள்கையற்ற அரசியல் கூட்டாளிகள் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த செஞ்சட்டைக்காரர்களுக்கும் மீண்டும் தாய்லாந்தை ஆளவிரும்பும் தக்சினுக்குமான தொடர்புகள் மறுக்க முடியாதது என்றாலும், இந்தப் போராட்டம் என்பது அந்த வட்டத்தை தாண்டி விரிவடைந்து வருவதுபோல் தோன்றுகிறது. முக்கியமாக, நாட்டின் கிராப்புற மக்கள், அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களின் விரக்திக்கு இந்த போராட்டம் ஒரு வடிகாலாக மாறிவருகிறது. இவர்களோடு கூட நகர்ப்புற ஏழைகளும் இந்த செஞ்சட்டைக்காரர்களுக்கு ஆதரவாக திரண்டிருக்கிறார்கள். இடதுசாரி அறிவு ஜீவிகளும், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பகுதியும் கூட இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மாறியிருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய செல்வந்தச் சீமானான தக்சின் போன்ற ஒருவரை இவர்கள் ஏழை பங்காளன் என்று முன்னிறுத்துவதை அரசாங்கத்தில் இருப்பவர்களால் நம்பமுடியவில்லை. ஆனால் தக்சினைப் பொறுத்தவரை, அவர் சுயமாக முன்னேறிய ஒருவர். அதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க தாய்லாந்துக்காரர் என்றில்லாமல் ஒரு பாதி சீன வம்சாவளியிலிருந்து வரும் ஒரு வெளியாள் என்பதால், அவரோடு ஏழைபாழைகள் தங்களை இணைத்துப் பார்த்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. அவர் ஆட்சியில் இருந்தபோது கிராமப்புற ஏழைகள் பயன்பெறத்தக்க வகையில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார். அத்துடன் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்களும், வாகன வசதிகளும் மற்ற பல வசதிகளையும் அவர் கிராமங்களில் அதிகப்படுத்தினார். இப்படியான புதிதாக கிடைத்த வசதி வாய்ப்புக்களை அனுபவித்துப் பழகிய கிராமப்புறத்து ஏழைகள், அரசியலில் தங்களுக்கு கிடைத்த புதிய வாய்ப்பை தற்போது பயன்படுத்தி தங்களின் இருப்பை வலியுறுத்துவதன் ஒரு வெளிப்பாடாகவும் இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது. செஞ்சட்டைக்காரர்களின் பார்வையில் தற்போதைய தாய்லாந்து ஆட்சி என்பது அந்த நாட்டின் பாரம்பரிய ஆளும் வர்க்கங்களான, பெருந்தனக்காரர்கள், ராணுவம் மற்றும் நீதிபதிகளின் கூட்டணி. அதை முடிவுக்கு கொண்டு வருவது தான் தங்களுக்கு நல்லது என்பது இவர்களின் கருத்து. எவ்விடத்திலும் தரித்து நிற்காமல், தன்னந்தனியே உலகைச் சுற்றி வந்த முதலாவது வயது குறைந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றார். இவர் 18 இற்குக் குறைவான வயதுடையவர் என்பதனால் இவரது சாதனை கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என படகுகளுக்கான உலக வேகச் சாதனை மன்றம் World Speed Sailing Record Council அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள் சிட்னியை விட்டு இவர் புறப்பட்டார். ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றி வர 7 மாதங்கள் அவருக்குப் பிடித்துள்ளது. இப்பயணம் அவரது குறைந்த வயது காரணமாக மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கிறது என விமரிசகர்கள் முன்னர் கருத்துத் தெரிவித்திருந்தனர். சென்ற ஆண்டு தனது 17வது வயதில் உலகைச் சுற்றி வலம் வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த மைக் பேர்ஹம் இன்றைய சிட்னி வரவேற்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் உலகைச் சுற்றி வர 9 மாதங்கள் பிடித்தது. ஜெசிக்கா மொத்தம் 23,000 கடல் மைல் தூரம் பயணித்து உலகைச் சுற்றி வந்தார். ஆனாலும் இந்தத் தூரம் உலகைச் சுற்றிவரப் போதாது என படகுகளுக்கான உலக வேகச் சாதனை மன்றம் தெரிவித்துள்ளது. இவர் மத்தியக் கோட்டின் வட முனை வரை செல்லவில்லை என அம்மன்றம் தெரிவித்துள்ளது. ஜெசிக்கா தனது பாய்மரப் படகுப் பயணக் கதையை ரூப்பர்ட் மேர்டொக்கின் நியூஸ் லிமிட்டட் நிறுவனத்துக்கு $625,000 அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார். இதன் பின்னர் இவை அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கும் அப்பால், அதற்கு அப்பால் செவ்வாய்க் கோளை நோக்கி மனிதனை அனுப்பும் புதிய திட்டத்தை அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சென்ற மாதம் அட்லாண்டிஸ் விண்ணோடம் முதன் முதலாக 1985, அக்டோபர் 3 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. அதன் பின்னர் 32 தடவைகள் அது ஏவப்பட்டுள்ளது. மொத்தம் 186,315,249 கிலோமீட்டர் தூரம் அது பயணித்திருந்தது. 4,462 தடவைகள் அது பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றி வந்துள்ளது. இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும், டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன. இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார். தலைநகர் மொகதிசுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரியைக் குறை கூறிய நாடாளுமன்ற அவைத்தலைவரைப் பதவி விலக வேண்டும் என உறுப்பினர்கள் அங்கு கலவரத்தில் ஈடுபட்டனர். நேற்று ஞாயிற்றுக்க்கிழமை நடந்த தாக்குதல் பக்காரா என்ற தலைநகரின் பிரதான சந்தைப் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது. இப்பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சில மோட்டார் குண்டுகள் நாடாளுமன்றத்தின் அருகில் வந்து வீழ்ந்ததாகவும் ஆனாலும் கட்டடங்கள் எதுவும் சேதமடையவில்லை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். அமைதிப்படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் இடையில் அகப்பட்ட 20 பொதுமக்கள் காயமடைந்தனர். சந்தைப் பகுதியின் சில இடங்கள் தீப்ப்ற்றி எரிந்ததில் அங்கிருந்த பணியாளர்கள் பலர் உயிரிழந்தனர். கடந்த மூன்றாண்டுகளாக இடைக்கால அரசுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இன்று காலையில் இருந்து இவ்விமானம் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில வெளிநாட்டவர்களும் இவ்விமானத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்க, மற்றும் நேட்டோ மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தை நோக்கி சென்றுள்ளார்கள். "38 பயணிகளும் 5 விமானச் சிப்பந்திகளும் இவ்விமானத்தில் பயணித்து உறுதி செய்யப்பட்டுள்ளது என உள்ளக அமைச்சர் செமராய் பஷாரி தெரிவித்தார். விபத்துக்குள்ளான பாமிர் ஏர்வேஸ் தனியாருக்குச் சொந்தமானது. கடந்த 1995 முதல் ஆப்கானில் செயல்பட்டு வருகிறது. தினமும் அமீரகத்தில் உள்ள w:துபாய் நகருக்கு சேவை வழங்கி வருகிறது. சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அனுராதா ரமணன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 850 நாவல்களையும் எழுதியுள்ளார். ஒரு மலரின் பயணம்’, ‘சந்திப்புகள் தொடரும்’, கூட்டுப்புழுக்கள்’, ’மழைக்கால மல்லிகைகள்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ போன்ற நாவல்கள் மிகவும் பிரபலமானவை. சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள் ஆகிய இவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. எழுத்துத் துறையில் சிறந்து விளங்கியதற்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது, நாவல்களின் ராணி உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தெலுங்கில் இவர் எழுதிய ‘ஒரு மனைவியின் கதை’ படத்துக்கு 5 விருதுகள் கிடைத்தன. கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மறைந்த அனுராதா ரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 11 பேர் பொலிசார் என்று தெரிகிறது. "சுமார் 40 பேர் பயணித்த பேருந்து ஒன்று நிலக்கண்ணிவெடியினால் தாக்கப்பட்டது என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட காவல்துறையினர் அனைவரும் மாவோயிசத் தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதற்காக அரசுப் படைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பொது மக்கள் என அவர் மேலும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகள் அரசாங்கப் படைகள் இடையில் கடும் சண்டைகள் நடந்துவருகின்ற இடம் இது. சென்ற மாதம் இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 76 பேர் கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளாக இம்மாநிலத்தில் இடம்பெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற திங்கட்கிழமை சத்தீஸ்கரின் காட்டுப் பகுதி ஒன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 6 பொது மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் அரசின் உளவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு மாவோயிசவாதிகளால் முன்னதாகக் கடத்தப்பட்டவர்கள் ஆவர். நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிசத் தீவிரவாதிகள் கிராமப்புற ஏழை மக்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர்களின் மேம்பாட்டுக்காகப் போராடுவதாகக் கூறுகிறார்கள். அத்துடன், நேற்று மாலை வரையும் கொழும்பின் பல பகுதிகளிலுமுள்ள வீதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ளம் முற்றாக வழிந்தோடாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் வரை பெய்த அடைமழை காரணமாக கொழும்பு, கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள பல்வேறு வீதிகளும் தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்கள் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்,கொழும்பு நகரிலுள்ள பல பிரதான வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தன. கொழும்பில் ஐந்துலாம்புச்சந்தி, ஆமர்வீதி, பாடசாலை வீதி, கதிரான, திவுலம்பிட்டிய, புளூமென்டால் வீதி உட்பட பல்வேறு தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்ந்த பிரதேச குடியிருப்புகளில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது. மேலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. களுகங்கை மற்றும் அத்தகல ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், களுத்துறை மாவட்டத்திலுள்ள பாலிந்தநுவர, புளத்சிங்கள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 18 இல் போர் முடிவுக்கு வந்தத அடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் தமது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்தனர். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிச் சென்றிருக்கின்றபோதும் அழிக்கப்பட்ட வீடுகளையும் வயல்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்ற அவலமான நிலைமையையுமே அவர்கள் காணமுடிகிறது. இதற்கிடையில், முன்னர் கூறப்பட்டவையிலும் பார்க்க பொதுமக்கள் இழப்பு இன்னும் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது என்ற போர் வல்லுநர்களின் கூற்றுக்கு இதுவரை அரசு ஏதும் மறுமொழி கூறவில்லை. போர் முடிந்த ஓராண்டு இராணுவக் கொண்டாட்டங்களை சீரற்ற காலைநிலையைக் காரணம் காட்டி இலங்கை அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இக்கொண்டாட்டங்கள் அடுத்த வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான மோதல் காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து ஆராய்வதற்கான போர்க்கால படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு''வுக்கான உறுப்பினர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார். எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறது. பிடிக்கப்பட்ட பொதுமக்களின் காணொளியையும் புகைப்படங்களையும் வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் மேற்கோள் காட்டி சனல் 4 நேற்று செய்தி வெளியிட்டிருக்கிறது. "எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்" என்று படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ வீரர் ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் தலைவர் பிரபாகரன் எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்றும் கூறியுள்ளார். இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது, ”இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை”, என்று தெரிவித்திருக்கிறது. நான்கு சந்தேக நபர்களும் இன்று அதிகாலையில் பிரான்சின் தெற்கு நகரான பயோனியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். இவர்களினல் எட்டாவின் தற்போதைய இராணுவத் தலைவர் மிக்கேல் கபிக்கோயிட்ஸ் கரேரா சரோபியும் அடங்குவார். பிரான்சைத் தளமாகக் கொண்டு இக்குழு இயங்குவதாகவும், கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பிரான்சில் ஐந்து எட்டா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சுக் காவல்துறை அதிகாரி ஒருவரை பாரிசில் வைத்துக் கொலை செய்ய்யப்பட்டமைக்கு எட்டா அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இக்கொலையில் மிக்கேல் சரோபி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கலாம் இப்போது நம்பப்படுகிறது. பிரான்சில் இயங்கும் எட்டா தளங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சார்க்கோசி தெரிவித்துள்ளார். எட்டா அமைப்பு ஸ்பெயினில் பாஸ்க் இனத்தவருக்காக தனிநாடு கேட்டு கடந்த 41 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. இக்காலப் பகுதியில் 820 இற்கும் அதிகமானோரின் உயிரிழப்புகளுக்கு இவ்வமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் 2006 ஆம் ஆண்டில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும், அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் உடன்பாடு முறிவடைந்தது. முன்னதாக தாய்லாந்தில் அரசுக் கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட செஞ்சட்டை அணியினர் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு விட்டு பொது மைதானத்தில் ஒன்று கூடுமாறு செஞ்சட்டை அணியின் முக்கிய தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் நீண்ட நாள் முற்றுகையைக் கைவிட்ட செஞ்சட்டை அணியினர் மைதானத்தில் ஒன்று கூடினர். அரசு பாரிய தாக்குதலுக்குத் தயாரானதால் தாங்கள் மக்களின் உயிர் களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதாக செஞ்சட்டையணியினர் தெரிவித்தனர். அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நகர்வுகள் வெற்றியளித்ததாக தாய்லாந்து அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ஆர்ப்பாட்ட அணியின் ஆறு தலைவர்கள கைது செய்யப்பட்டனர். நேற்றைய வன்முறையின் போது குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். சென்ர வாரம் இராணுவ நடவடிக்கை ஆரம்பமான பின்னர் மொத்தம் 40 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். பாங்கொக்கின் பல கட்டடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். தென்கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய பல்பொருள் அங்காடி தீக்கிரையாக்கப்பட்டது. அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் சனல் 3 தொலைக்காட்சி நிலையம், மற்றும் இரண்டு ஆங்கிலேயக் கம்பனிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இராணுவ நடவடிக்கை தாய்லாந்தில் ஒரு திறந்த போரைக் கொண்டுவர வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் தக்சின் செனவாத்திரா தெரிவித்தார். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இடம்பெற்ற 21 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2005 ஆம் ஆண்டில் முடிவடையக் காரணமான அமைதி ஒப்பந்தத்தை அடுத்து கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சல்வார் கீர் பெரும் வெற்றி பெற்றிருந்தார். தெற்கு சூடான் விடுதலை பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு இடம்பெற விருக்கிறது. இத்தேர்தலில் விடுதலைக்கு சார்பாக அனைத்து மக்களும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். சூடானின் முக்கியமான எண்ணெய் வளம் தெற்குப் பகுதியிலேயே காணப்படுகின்றன. வடக்குடனான எல்லை இன்னமும் வரையறுக்கப்படவில்லை. மதன் தாமங் அகில இந்திய கூர்க்கா லீக் அமைப்பின் தலைவர் ஆவார். இக்கட்சி கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரிப் போராடி வந்த மிகப் பழமையான கட்சியாகும். இக்கொலைக்கு மற்றொரு போராளிக் குழுவான கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (GJM) கட்சி மீது கூர்க்கா லீக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை ஜன்முக்தி மோர்ச்சா மறுத்திருக்கிறது. நேப்பாள மொழியைப் பேசும் கூர்க்காக்கள் இந்தியாவின் தேயிலை பயிரிடும் மாவட்டமான டார்ஜீலிங் மலைப்பிரதேசத்தில் தனிநாடு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ”இன்று டார்ஜிலிங் நகரில் மதன் தாமங் அமைப்பு சார்பில் நடைபெறவிருந்த கூட்டம் ஒன்றின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரை கத்தியால் குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.. இச்சம்பவத்தையடுத்து டார்ஜிலிங் மாவட்டம் முழுவதும் கடைகளும், வணிக நிறுவனங்களும் உடனடியாக மூடப்பட்டன. தாமங் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ”த சயின்ஸ்” என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது. "இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான் என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர். அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தின் ஓடு தளத்தில் விமானம் தரையிறங்க முற்பட்ட போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு சற்று முன்னர் டயர் வெடிப்பது போல சத்தம் கேட்டதாக உயிர் தப்பிய உமர் பாரூக் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்தார். இவ்விமானத்தில் பயணம் செய்தோர்ரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார் இவர்கள் மத்திய கிழக்கில் பணியாற்றிவிட்டு குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் என பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். பல குழந்தைகள் இதில் பயணித்திருந்தனர். விபத்து நடந்த போது இலேசான மழை தூறிக்கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ள மங்களூர் விமான நிலையத்தின் ஓடு பாதையின் முடிவில் ஒரு பள்ளத்தாக்கு ஒன்றும் காணப்படுகிறது. இது விமானிகளுக்கு ஒரு கடும் சோதனையான ஓடு பாதை எனச் சொல்லப்படுகிறது. ”விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. இதனால் உயிர் தப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் பணி மிகவும் சிரமமாக உள்ளது,” என மங்களூர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ”விபத்து நடந்த இடத்தில் தற்போது உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயுள்ளன.” என ஏர் இந்தியாவின் மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஐந்தாண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஜூலையில் பட்னா நகரில் விமான விபத்து இடம்பெற்றது. அப்போது 50 பேர் கொல்லப்பட்டனர். "அம்மா, உலகின் அதி உயர் இடத்தில் இருந்து உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் என அவர் ஜோர்தான் கூறியதாக அவரது தாயார் ஆன் டிரேக் தெரிவித்தார். இந்தப் புதிய சாதனையுடன் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஆறு உயரமான மலைகளின் உச்சிகளை ஜோர்தான் ரொமேரோ எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை இவன் தனது 10வது வயதில் அடைந்திருந்தான். இவனது அடுத்த திட்டம் அண்டார்க்டிக்காவின் வின்சன் மாசிவ் மலையை எட்டுவது தான். நேபாளத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சீனாவில் இந்த வயதுக் கட்டுப்பாடு இல்லை. ஜோர்தானின் இந்த முயற்சியை இட்டு பல மலையேறிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் சீனப் பகுதியில் இருந்து மலையேறுவது அவ்வளவு கடினம் இல்லை என ஜோர்தானின் தந்தை தெரிவித்தார் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை அன்று அப்பா செர்ப்பா என்ற 50 வயது மலையேறி 20வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து தனது முன்னைய சாதனையை முறியடித்தார். குலசேகரம் சஞ்சயன், சேரன் சிறிபாலன், தர்சன் குணசிங்கம், பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏனைய மாநிலங்களில் இருந்து போட்டியின்றித் தெரிவானோர் விபரம்: போராளிகளின் தாக்குதலை அடுத்து ஆப்பிரிக்க அமைதி காக்கும் படையினரின் ஆதரவுடன் இயங்கும் சோமாலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோட்டார் தாக்குதல் நடந்த வேளை அரசுத் தலைவர் சேக் சரீப் அகமது அரசு மாளிகையில் தங்கியிருக்கவில்லை. அமைதி மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக துருக்கி சென்றிருந்தார். தலைநகரின் வடக்கில் உள்ள சிபிஸ், பொண்டியர் மாவட்டங்களில் போராளிகள் தாக்குதல் நடத்தினர். கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிமன் மீது படையினரின் மோட்டார் ஒன்று வீழ்ந்து வெடித்தது என ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்தார். கடந்த இரு தசாப்தங்களாக சோமாலியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அல்-சபாப் மற்றும் பல தீவிரவாதக் குழுக்கள் சோமாலியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளின் பெரும்பாலான இடங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. தமது சுற்று வட்டத்தில் செல்லும் கோள்களை விழுங்கும் வல்லமை விண்மீன்களுக்கு உண்டு என முன்னரே வானியலாளர்கள் அறிந்துள்ளனர் எனினும், இப்போதே முதற் தடவையாக அதற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாகக் கிடைத்துள்ளன. அக்காட்சியைப் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு ஹபிள் தொலைநோக்கி அக்கோளில் இருந்து மிகத் தொலைவில் இருந்த காரணத்தினால், தொலைநோக்கி தந்திருந்த தரவுகளில் இருந்து அறிவியலாளர்கள் படிமம் ஒன்றை வரைந்திருக்கின்றனர். இக்கண்டுபிடிப்பு அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் (The Astrophysical Journal Letters) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.. ஐக்கிய இராச்சியத்தின் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கரோல் ஹாஸ்வெல் என்பவர் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன கோளைச் சுற்றி வெளியேறிச் செல்லும் பெரும் மேக மூட்டம் காணப்பட்டது, இதனை விண்மீன் கைப்பற்றிக் கொள்ளும்” என அவர் விளக்கினார். இக்கண்டுபிடிப்பு மூலம் இக்கோள் எவ்வாறு உருவானது என்பது குறித்து தெளிவான விளக்கத்தைக் கூற முடியும் என அவர் தெரிவித்தார். ”எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே காணக்கிடைக்காத வேதி மூலகங்களை நாம் கண்டறிந்திருக்கிறோம்”. வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன ஆகஸ்ட் 27, 2009 அந்தச் சம்பவத்தை “இது ஒரு நட்பு நாடொன்றின் வேலை அல்ல” என ஆத்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் வர்ணித்துள்ளார். ஆத்திரேலியாவின் இந்நடவடிக்கை கவலைக்குரியது என இசுரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள இசுரேல் தூதரகம் அப்போது இந்த கடவுச்சீட்டுக்களை வழங்கி வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீவன் சிமித் தெரிவித்தார். ”இராசதந்திர விடயங்களில் மோசடி இடம்பெறுதை நாங்கள் ஏற்கமாட்டோம். எனவே ஒரு வார காலத்திற்குள் அந்தக் குறிப்பிட்ட இசுரேலியத் தூதரக அதிகாரி எமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும்,” என ஸ்டீவன் சிமித் தெரிவித்தார். அந்த அதிகாரியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இசுரேலின் மொசாத் என்கிற உளவு அமைப்பே இதில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதின் தமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை என துபாய் அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். இக்குற்றச்சாட்டை இசுரேலிய அரசு மறுத்து வருகிறது. 67 வயதான ”டச்சு” என அழைக்கப்படும் கெய்ங் குயெக் ஈவ் என்பவர் கம்போடியாவில் 1975 1979 காலப்பகுதியில் மனித உரிமை மீறல், மற்றும் கொலைகள் போன்றவற்றிற்காக விசாரிக்கப்பட்டு வருகிறார். "கம்போடிய மக்களுக்கு இதுவொரு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெமரூச்சை சேர்ந்த எவராவது நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று 30 ஆண்டு காலமாக கம்போடிய மக்கள் காத்திருந்தனர்,” என்று நீதிமன்றப் பேச்சாளர் லார்ஸ் ஒல்சென் கூறியுள்ளார். கெமரூச்சின் ஆட்சிக்காலத்தில், 1975 1979 காலப்பகுதியில் பட்டினி, நோய் மற்றும் நீதி விசாரணைக்குப் புறம்பாக மரண தண்டனையால் 2 மில்லியம் மக்கள் இறந்தனர். கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக கெமர்ரூச் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நகரங்கள் வெறுமையாகின. பண்ணைகளுக்கு மக்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். டுவோல் சிலெங் சிறையில் கெமரூச்சின் எதிரிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுமிருந்ததை மேற்பார்வை செய்ததை டச் விசாரணையின் போது ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் மீதான விசாரணை கடந்த பெப்ரவரியில் ஆரம்பமாகியிருந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சியைச் சேர்ந்த சர்வதேச விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் முதலாவது தலைவர் டச் ஆவார். கம்போடியாவின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரிக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக் கோரிக்கை சுதந்திரம் புலோடில்லா என்று பெயரிடப்பட்டுள்ள அதில் சர்வதேச ஊடகவியாலர்களுடன், 10,000 டன் அத்தியாவசியப் பொருட்களும் ஏற்றிச்செல்லப்படுகின்றன. 60 நாடுகளிலிருந்து 750 போராட்டக்காரர்களில் 44 பேர் அதிகாரிகளும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரபு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பத்து அல்ஜீரிய உறுப்பினர்களும் செல்கின்றனர். இதே போன்ற போராட்டத்தை கடந்த 2008 ஆகஸ்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 44 பேர் சைப்ரஸிலிருந்து இரண்டு சிறிய விசைப்படகில் புறப்பட்டு காசா சென்றடைந்தனர். ஆனால் டிசம்பர் 2009ல் உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பலை இசுரேல் இராணுவம் மறித்து கப்பலுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. காசா ஆக்கிரமிப்பை இசுரேல் உடனடியாக கைவிடவேண்டும் என்று சர்வதேச சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பினால் அங்குள்ள மக்களுக்குத் தேவையான மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தோபர் கோக் என்ற போதைப்பொருட் கடத்தல் தலைவரை நாடு கடத்த ஜமேக்க அரசு நடவடிக்கை எடுத்ததை அடுத்தே வன்முறை வெடித்தது. கோக்கைக் கைது செய்வதற்காக திங்கட்கிழமை அன்று மேற்கு கிங்ஸ்டனில் டிவொலி கார்டன்சைச்க் காவல்துறையினர் முற்றுகையிட்டனர். ஆனாலும் கோக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கோக்குக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர். தலைநகரில் பள்ளிகள் மற்றும் வர்ததக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கிங்க்ஸ்டனின் பல பகுதிகளில் அவசரகால நிலை கொண்டுவரப்பட்டிருந்தது. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ம் என்று தலைமை அமைச்சர் புரூஸ் கோல்டிங் அறிவித்தார். தான் ஒரு சட்டபூர்வமான வர்த்தகர் என்றும் கிங்ஸ்டனில் வறுமையில் வாடும் பல்லாயிரக்கணக்கானோர் தமக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்றும் 41 வயதுள்ள திரு. கோக் கூறுகிறார். ஆனாலும் இவரை உலகின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் காரர் என்று ஐக்கிய அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 41 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. கம்லாவின் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கூட்டணி 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனாதிபதி ஜோர்ஜ் மைக்சல் ரிட்சாட்ஸ் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கம்லா பிரதமராகப் பதவியேற்றார். 2002 இலிருந்து டிரினிடாட்டின் பிரதமராக இருந்து வந்த பட்ரிக் மானிங் தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவரது ”தேசிய மக்கள் இயக்கம்” என்ற கட்சியின் ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதை அடுத்து அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேயே கடந்த மாதம் தேர்தலை அறிவித்தார். இவரது கட்சிக்கு நாட்டில் உள்ள ஆப்பிரிக்க வம்சாவழியினரின் ஆதரவு உள்ளது. கரிபியன் பகுதியில் மிகவும் செல்வச்செழிப்பு மிக்க நாடு திரினிடாட் டொபாகோ. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு பெருமளவு காணப்படுகிறது. இந்திய வம்சாவழியான கம்லா 1952 இல் பிறந்தவர். தீவிர இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர். ”பெண்கள் மற்றும் பெண்களின் அமைப்புகளிடமிருந்து எனக்கு அதிகளவிலான ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பெண்கள் எதிர்நோக்கும் பல தடைகளை என்னால் உடைத்து முன்னேற முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றி பெண்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதனைக் கொண்டாட இருப்பதாகவும் கம்லா கூறியுள்ளார். கம்லா சட்டக் கல்லூரியில் பயின்றதுடன், வர்த்தக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அத்துடன், மேற்கு இந்தியத் தீவுப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்றவராகும். அத்துடன் அந்த நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும் சட்ட விவகார கல்வித் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருந்தார். 1845 1917 க்கும் இடையில் கம்லாவின் மூதாதையர் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். 1 இலட்சத்து 48 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்களின் ஒருவராக கம்லாவின் மூதாதையர் அங்கு சென்றிருந்தனர். கரும்பு, கொக்கோ பயிர்ச் செய்கையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 13 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ட்ரினிடாட், டுபாக்கோவில் புலம்பெயர்ந்த இந்திய சமூகம் 44 சதவீதமாகும். எஸ்டிஎஸ்-132 STS-132 என்ற விண்வெளிப் பயணத் திடட்த்தை முடித்துக்கொண்டு அட்லாண்டிஸ் விண்ணோடம் நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 08:48:18 (12:48 UTC) மணிக்கு தரையிறங்கியது. இது அட்லாண்டிசின் 32வது விண்வெளிப் பயணம் ஆகும். 25 ஆண்டு காலம் சேவையாற்றிய இது முதற் தடவையாக 1985 அக்டோபர் 3 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. இவ்விண்ணோடத்திற்கான கடைசிப் பயணம் இதுவாகும். டிஸ்கவரி, எண்டெவர் ஆகியன இவ்வாண்டுக்குள் இன்னும் ஒவ்வொரு பயணத்தை முடிக்கவுள்ளன. இப்பயணத்துடன் அட்லாண்டிஸ் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்படமாட்டாது. ஏனைய விண்ணோடங்கள் தமது பயணங்களை முடிக்கும் வரை அது கென்னடி விண்வெளித் தளத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏனைய விண்ணோடங்கள் விண்ணுக்கு ஏவிய பின்னர் ஏதாவது கோளாறு ஏற்படும் இடத்தில் விண்வெளிவீரர்களை மீட்பதற்காக அட்லாண்டிஸ் அனுப்பப்படும். அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது ஞாயிறு, மே 16, 2010 இரசியாவில் அண்மைக்காலத்தில் செச்சினியப் பேராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சென்ற மார்ச் 29 இல் மாஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 40 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பயணிகள் தொடருந்தின் குறைந்தபட்சம் ஐந்து பெட்டிகள் மோசமாக சேதமடைந்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். 68 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்து 14 மணித்தியாலங்க் கடந்து விட்ட நிலையில் அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பலர் மிகமோசமாக சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். விபத்து நடந்த மேற்கு மிதினாபூர் மாவட்டம் கல்கத்தாவில் இருந்து 150 கிமீ மேற்கே அமைந்துள்ளது. இது மாவோயிசத் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்துக்கு மாவோயிச ஆதரவு அமைப்பான பிசிபிஏ எனப்படும் "காவல்துறை அராஜகத்துக்கு எதிரான மக்கள் அமைப்பு" பொறுப்பேற்றிருப்பதாக மேற்கு வங்க காவல்துறை பணிப்பாளர் புப்பிந்தர் சிங் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் பிசிபிஏ அமைப்பினர், தாங்கள்தான் பொறுப்பு என்று எழுதி இரண்டு சுவரொட்டிகளை விட்டுச் சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். மாவோயிசவாதிகளுக்கு எதிராக அரசு துவங்கியுள்ள கிரீன்ஹன்ட் நடவடிக்கையைக் கண்டித்து, அவர்கள் இன்று வெள்ளி முதல் ஒரு வாரம் கறுப்புவாரம் கடைபிடிக்கப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத முற்பகுதியில் சத்தீசுக்கரில் பேருந்து ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 35 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கோவில் கோபுரம் இடிந்து விழப் பல காரணங்கள் சொல்லப்பட்ட போதிலும் கோவில் கோபுரங்களில் வளர்ந்த ஆலமரச் செடிகளாலேயே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக அப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் இராசகோபுரம் 122 அடி உயரம் கொண்டது. இதன் இராசகோபுரத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த இராஜகோபுரம் ரூ.15 இலட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் இராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு அது விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது. இந்தப் பிளவை அடுத்து, கோபுரத்தைச் சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கோபுரத்தை சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. இது குறித்து சென்னைப் பேராசிரியர் நரசிம்ம ராவ் கூறுகையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் இராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற இயற்கை பருவநிலை காரணமாக இராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையிலுள்ளது" என எச்சரித்திருந்தார். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு 08:05 மணியளவில் இராசகோபுரம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது. இச்செய்தி அறிந்ததும் ஆந்திர மாநில முதல்வர் கே. ரோசையா "உடனடியாக அதே இடத்தில் புதிய இராசகோபுரம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு" அதிகாரிகளைப் பணித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோல்மன் மே 26 ஆம் நாளன்று தனது வீட்டில் மாடியில் இருந்து வீழ்ந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நினைவு எதுவும் இல்லாத நிலையில் அவர் நேற்று மே 28 இல் பகலில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 42. இவரது வாழ்நாள் பூராவும் பலவித மருத்துவ நோய்களுக்கு உள்ளாகியிருந்தார். இவையே இவரின் மரணத்திற்குக் காரணமா என இன்னும் அறியப்படவில்லை. இவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதான நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டு நாளாந்த டயாலிசிசில் dialysis இருந்து வந்தார். கோல்மன் ”த ஜெஃபர்சன்ஸ்” (The Jeffersons ”குட் டைம்ஸ்” Good Times ஆகிய புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிப்புலகிற்கு அறிமுகமானார். ”டிபரண்ட் ஸ்ட்ரோக்ஸ்” என்ற தொடரில் ஆர்னல்ட் ஜாக்சன் என்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். தலைநகரில் இருந்து 30 கிமீ தெற்கே அமைந்துள்ள இந்த எரிமலையில் இருந்து கக்கும் கற்குழம்புகளில் இருந்து தப்புவதற்காக குறைந்தது 1,600 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். தலைநகர் குவாத்தமாலா நகரத்தின் பெரும்பகுதி தூசுகளினால் மூடப்பட்டுள்ளதாகவும், லா அவுரோரா என்ற முக்கிய பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். விமான சேவைகள் அனைத்தும் நாட்டின் ஏனைய விமான நிலையங்களுக்குத் திசை திருப்பப்ட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பக்கயாவுக்கு அருகாமையில் உள்ள கால்டெராஸ் என்ற கிராமத்தில் இருந்து வெளியேறிய பிரெண்டா காஸ்டெனாடா என்பவர் தனது வீட்டின் மீது கற்குழம்புகள் விழுந்ததை அடுத்து தாம் எப்படி தப்பித்தோம் என்பதை விபரித்தார். ”எமது குடும்பம் முழுவதும் கட்டில்களுக்கு அடியில் பதுங்கி இருந்து தப்பி ஓடி வந்தோம். எமது வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன”, என்றார் அவர். குவாத்தமாலாவின் அரசுத்தலைவர் அல்வாரோ கொலம் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதி அனைத்திலும் அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ளார். தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கற்குழம்புகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த எரிமலை கடைசியாக 2000 ஆம் ஆண்டு சனவரியில் வெடித்திருந்தது. "நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமான விவகாரங்களை மிக நெருக்கமாக அமெரிக்கா அவதானிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசுடனான சந்திப்பின் போது திருமதி கிளின்டன் கூறியுள்ளார். இவ்வாணைக்குழு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், இந்த ஆணையத்துக்கு போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென திருமதி கிளின்டன் கேட்டுக் கொண்டுள்ளார். "இவ்வாணைக்குழு சுயாதீனமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என கிளின்டன் தெரிவித்தார். "இப்படியான விசாரணை ஆணையங்கள் நீதியை நிலைநாட்டுவதில் அடுத்ததுடுத்து ஆட்சியில் இருந்தவர்களும் தொடர்ந்தும் தவறிவந்துள்ளனர் தவிர தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் உறுப்பினர்கள் பக்கச்சார்பின்றி செயல்படக்கூடியவர்கள் அல்ல என்று இலங்கை அரசாங்கத்தில் முந்தைய விசாரணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இலங்கை அரசாங்கத்தின் ஆலோகராகவும் இருந்த எம்.சி.எம். இக்பால் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சகர்கள் விரும்புகின்றனர். ஆனால் இலங்கையில் போரின் கடைசி ஏழு ஆண்டுகள் காலப் பகுதியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, இன நல்லிணக்கத்துக்கான வழிவகைகளையும் ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட ஆணையத்தையே இலங்கை அரசாங்கம் அண்மையில் அமைத்துள்ளது. 'நடந்த சம்பவங்கள்' என்று குறிப்பிட்டு அந்த சம்பவங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆராய்கின்ற அதிகாரம் இலங்கை நல்லிணக்க ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 'போர்க் குற்றங்கள்' என்பது இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பிபிசி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்ச இந்த வாரம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்த ஒரு நேர்கானலில் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக எவர் ஒருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் 37-ஆண்டு கால உள்நாட்டுப் போர் கடந்த ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போரின் போது ஒரு இலடசத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. "top kill" என அழைக்கப்பட்ட அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து எண்ணெய்க் கசிவைத் தடுக்க இனிமேல் புதிய வழிமுறைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளவிருப்பதாக BP நிறுவனத்தின் தலைமை அதிகாரி டக் சட்டில்ஸ் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் தொடர்ந்து கசிந்து வரும் எண்ணெய் கோபமூட்டுகிறது" எனத் தெரிவித்தார். BP எனப்படுவது எண்ணெய் அகழ்வில் ஈடுபடும் முன்னணி பிரித்தானிய நிறுவனங்களுள் ஒன்று. அது உலகப் பெருங்க்கடல்களின் பல இடங்களில் இயந்திர மேடைகளை அமைத்து ஆழ்துளை இயந்திரங்களின் மூலம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்கிறது. இந்நிலையில் மெக்சிக்கோ வளைகுடாவில், கரையிலிருந்து 48 மைல் தூரத்தில் இருக்கும் அந்நிறுவனத்தின் ஆழ்துளை இயந்திரம் ஒன்று கடந்த ஏப்ரல் 20 ஆம் நாள் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றிலேயே இவ்வெண்ணெய்க் கசிவு மிகவும் பெரியதாகக் கருதப்படுகிறது. சென்ற புதன்கிழமையில் இருந்து 30,000 பரல்கள் மணல் எண்ணெய்க் கிணற்றினுள் போடப்பட்டது, ஆனாலும் இம்முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கு இதுவரையில் 645 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவேற்பட்டுள்ளடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இனிமேல் குழாயில் கசிவு ஏற்பட்ட இடத்தை வெட்டி அதனை மூடுவதற்கு முயற்சி எடுக்கப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கைக்குக் கிட்டத்தட்ட 4 நாட்கள் பிடிக்கலாம் என டக் சட்டில்ஸ் தெரிவித்தார். இந்த முயற்சி, இத்தனை ஆழத்தில் இருப்பதால் ஒரு சோதனையாகத்தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளதுடன் அது சரியாக வேலை செய்யுமா என்பது தெரிவதற்குப் பல நாட்கள் பிடிக்கும் என்றும் பெற்றோலிய நிறுவனம் கூறியுள்ளது. குறைந்தது 12,000 பரல்கள் (504,000 கலன்) எண்ணெய் தினமும் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற காணி உரிமையாளர் ஒருவர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் தொழிலாளர்கள் மூலம் துப்பரவு செய்தபோதே இந்த சடலங்கள் குழிக்குள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உடனே அங்கு விரைந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சிவகுமார் மற்றும் வவுனியா பொதுமருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் முன்னிலையில் இந்த சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சடலங்களைப் பார்வையிட்ட நீதவான், மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார். கறுத்த பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து சடலங்கள் அந்தக் குழிக்குள் இருந்ததைக் கண்டதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. சிறீதரன் தமிழோசையிடம் தெரிவித்தார். இந்தநிலையில் தோண்டியெடுக்கப்பட்ட சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மரண விசாரணைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த சடலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளை ஒத்த ஆடைகள் காணப்பட்டதாக திரு. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலங்கள் இருக்கும் காணிப் பகுதி பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இறந்தவர்களில் 15 பேர் பெண்கள் என்றும் 10 பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து வடகிழக்கு கர்நாடகப் பகுதி அரசு போக்குவரத்து மேலாண் இயக்குனர் சங்கர் பாடீல் கூறியது எதிரே வந்த சுமையுந்து மீது மோதாமலிருக்க சாரதி பேருந்தைத் திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி உருண்டுள்ளது". இறந்தவர்கள் சுராப்புராவைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆவர். அவர்கள் வேலை தேடி பெங்களூருக்கு வந்துகொண்டு இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. குல்பர்காவில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட அவர்கள் பெங்களூருக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஓட்டுநரின் கவனக் குறைவே இந்த விபத்தின் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. சென்ற வாரம் கருநாடகத்தின் மங்களூரில் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தீப்பற்றி எரிந்ததில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமானோர் உடல் கருகி இறந்தனர். [[பகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுப்பு:இந்தியா noinclude> ஐநா இந்த அறிக்கையை வெளியிட்ட சற்று நேரத்துக்குள் பல காசா போராளிகள் எல்லையைக் கடந்து இசுரேலினுள் நுழைந்தனர். இதனையடுத்து இடம்பெற்ற மோதல்களில் இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதாக இசுரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இசுரேலிய உதவி வெளிவிவகார அமைச்சர் டனி அயலோன் கருத்துத் தெரிவிக்கையில் இக்கப்பல்களை ஒழுங்கு செய்தவர்கள் உலக ஜிகாட் அமைப்பு, அல்கைடா, மற்றும் ஹமாஸ் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள். ஆயுதக் கடத்தல், மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக இவர்கள் நெடுங்கால வரலாற்ரைக் கொண்டுள்ளவர்கள் எனத் தெரிவித்தார். இசுரேலின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக இக்கப்பல்கள் மீறியுள்ளதாகவும், இக்கப்பல்களை காசா சென்றடைய விட மாட்டோம் என்றும் இசுரேல் தெரிவித்தது. துருக்கிய கப்பலிலிருந்து அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வந்த தகவலின் படி இசுரேலியக் கடற்படையினர் கண்மூடித் தனமாக சுட்டதில் கப்பல் கேப்டன் காயமுற்றதாக கூறப்பட்டது. இசுரேலியத் தாக்குதலுக்கு ஹமாஸ் அரசாங்கத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இசுரேலின் இச்செயல் இருதரப்பு உறவை பாதிக்கும் செயலாகும் என்று துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு தேவைப்படும் உதவிப் பொருள்களில் இது கால்வாசியே என்று ஐநா கூறுகிறது. அட்டொயாமாவின் யப்பானிய மக்களாட்சிக் கட்சி அடுத்த யூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பலத்த எதிர்ப்பை எதிர் நோக்கியிருப்பதாக தேர்தல் அவதானிகள் கருதுகின்றனர். சென்ற ஆண்டில் இவரது கட்சி பெரும் வெற்றியைப் பெற்று ஐம்பதாண்டுகளாக ஜப்பானை ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்தை முறியடித்தது. 63 வயதான அட்டொயாமா கடந்த 4 ஆண்டுகளில் ஜப்பானில் பதவியில் இருந்த 4வது பிரதமராவார். அமெரிக்காவின் பியூட்டென்மா இராணுவத்தளம் ஒக்கினாவாவின் நிரந்தரமாகவே இருக்கும் என சென்ற வாரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அட்டொயாமா மீது அழுத்தம் அதிகரித்திருந்தது. இவ் இராணுவத்தளத்தில் மொத்தம் 47,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு ஒக்கினாவாவில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி அமெரிக்க இராணுவத்தினன் ஒருவனால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை, மற்றும் பல முறைகேடுகள் காரணமாக இத்தீவு வாசிகள் அமெரிக்கர்கள் மீது கோபமடைந்திருந்தனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் யப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி, யப்பான் தனக்கென போர்ப்படை ஒன்றை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் யப்பானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்திருந்தது. அந்திரே தனது வீட்டில் காலமானதாக இரசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் கென்னடி இவானொவ் நேற்று அறிவித்தார். வழக்கத்துக்கு மாறான இவரது கவிதைகளினால் இவர் பழமைவாத சோவியத் கவிஞர்களினால் விமர்சனத்துக்குள்ளானார். ஏனைய சோவியத் கவிதைகளுக்கு மாறான கவிதைகளை இவர் எழுதி வந்தார். ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் வைத்து முன்னாள் சோவியத் தலைவர் நிக்கித்தா குருசேவ் இவரை நாடு கடத்தப் போவதாகப் பயமுறுத்தியிருந்தார். 1976 ஆம் ஆண்டில் சிறிய கோள் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் அரசு விருது இவருக்கு 1978 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. புளோரிபர்ட் செபாயா என்பவரது உடல் நேற்று புதன்கிழமை இரவு அவரது வாகனத்தில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திரு. செபாயாவை காவல்துறையினர் அடிக்கடி அச்சுறுத்தியதாகவும், செவ்வாய்க்கிழமை அன்று அவர் தேசிய காவல்துறை தலைமை அதிகாரியைச் சந்திக்க அழைக்கப்பட்டிருந்தார் எனவும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தச் சந்திப்பு இடம்பெற்றதா என்பதை அறிய முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். இறப்பதற்கு முன்னர் செபாயா தனது மனைவிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். தான் காவல்துறை தலைமையகத்தில் கூட்டம் ஒன்றில் இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் அவரிடம் இருந்து எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என செய்தியாளர் தெரிவிக்கிறார். குரல்கொடுக்க முடியாதோரின் குரல் என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக செபாயா இருந்தவர். 1990களில் இருந்து அவர் கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் மக்களாட்சிக்கும், மனித உரிமைக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர். "இப்படியான ஒரு பிரபலமான மனித உரிமை ஆர்வலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது என பன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பிரதித் தலைவர் வெரோனிக் ஓபர்ட் தெரிவித்தார். பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவ்வமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் குடியிருப்பு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் அருகில் குடிசைகளில் குடியிருந்த மக்கள் சிலரே இறந்துள்ளனர். தொழிலாளர்கள். கூலியாட்கள் வாழும் பகுதியிலிருந்த கட்டடங்களே இவையாகும். ஆழ்ந்த தூக்கத்திலிருந்தால் எவராலும் தப்பியோட முடியவில்லை. தீயணைப்புப் படையினர் ஸ்தலத்துக்கு விரைந்ததுடன் கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மின்சாரக் கம்பிகள், எரிவாயுக்களின் கசிவுகளாலும் மீட்பு வேலைகள் இடைஞ்சலுக்குள்ளாகியுள்ளன. புதன்கிழமை காலை 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தோர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகடிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கால்வாயாக முன்னர் இருந்த ஒரு இடத்தின் மீதே இக்கட்டடம் கட்டப்பட்டதாகவும், இதன் உரிமையாளர் அதற்கும் மேலாக மேலதிக மாடி ஒன்றைக் கட்டினார் எனவும், இதனாலேயே கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டாக்காவில் 2005 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாகக் அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 பேர் வரையில் உயிரிழந்தனர். பிரிட்டனின் மேற்கு கம்பிரியா பகுதியிலேயே நேற்று முன்தினம் புதன்கிழமை இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாடகைக் கார் சாரதியான டெரிக் பேர்ட் என்பவரே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பிரியாவின் வைட்ஹாவன், சீஸ்கேல், எக்ரிமொண்ட் ஆகிய இடங்களில் மொத்தம் 30 வெவ்வேறு பகுதிகளில் குறித்த நபர் தனது வாகனத்தில் இருந்தவாறே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் நகரின் வெளிப்புறத்திற்கு சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் துப்பாக்கிதாரியின் சகோதரர், வக்கீல், மற்றும் அவரது நண்பரான சக வாகனச் சாரதி ஒருவரும் அடங்குவர். இச் சம்பவம் குறித்த விசாரணைகளை பிரித்தானியக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். title ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டனில் 12 பேர் பலி; 25 பேர் காயம் கடந்த 20 ஆண்டுகளில் டாக்காவில் இடம்பெற்ற தீவிபத்துக்களில் பெரியது இதுவாகும். தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். "கடைகளில் வேதிப் பொருட்கள் பல விற்பனை செய்யப்பட்டு வந்ததால் தீ விரைவாகப் பரவியிருந்தது என தீயணைப்பு அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார். வங்காளதேசப் பிரதமர் காயமடைந்தோரை நேரில் சென்று பார்வையிட்டார். சனிக்கிழமை தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இவ்விண்கலம் முதற்தடவையாக செலுத்தப்பட்ட போது எஞ்சினில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறினால் ஏவுதல் கடைசி செக்கனில் நிறுத்தப்படட்து. பின்னர் எஞ்சின் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஏவப்பட்டது. பால்க்கன் 9 பூமியின் சுற்று வட்டத்தை அடைந்து விட்டதென்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தனது முதலாவது பயணத்தில் பால்க்கன் 9 தன்னுடன் டிராகன் சரக்கு விண்கலம் ஒன்றைக் கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் இந்த டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பொருட்களையும் மனிதர்களையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும். உலக அளவில் நிலம் மற்றும் கடலின் மேற்பரப்பில் நிலவிய வெப்பநிலையை கணக்கிட்டு பார்த்து, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த சனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் கூறினர். இதற்கு முன்னராக புதிய பிரதமரைத் தெரிவதற்காக அட்டொயாமாவின் அமைச்சரவை முழுவதுமாகப் பதவி விலகியது. இதனையடுத்து அவர் கட்சியின் தலைவராகவும், பிரதமர் படஹ்விக்கு அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கான் பெரும்பான்மை வாக்குகளால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை சப்பானியப் பேரரசர் அக்கிஹிட்டோ ஜூன் நடுப்பகுதியில் சம்பிரதாயபூர்வமாக பிரதமராக நியமிப்பார். மக்களாட்சிக் கட்சியின் மிக முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான கான் நாட்டின் வர்த்தக சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவராகக் கருதப்படுகிறார். கடந்த மூன்று வருடங்களில் பதவிக்கு வந்துள்ள ஐந்தாவது பிரதமர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தென்பகுதியிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்தை அகற்றுவது உள்ளிட்ட தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளினால் அட்டொயாமா தனது பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய கான் சப்பானின் இராஜதந்திரக் கொள்கையில் அமெரிக்காவுக்கு முக்கிய இடமுண்டு எனக் குறிப்பிட்டுள்ள போதிலும் அமெரிக்கப் படைத்தளம் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. யப்பானியப் பிரதமர் யுகியோ அட்டொயாமா பதவி விலகினார் ஜூன் 2, 2010 சென்ற ஆண்டு வியாழன் மோதுகையைப் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் புதிய மோதுகை அவதானிக்கப்பட்டுள்ளது. சென்ர ஆண்டு 500 மீட்டர் அகலமுள்ள சிறு கோள் ஒன்று 2009, ஜூலை 19 இல் மோதியதென்றும், இதன் மூலம் பசிபிக் பெருங்கடல் போன்ற அளவுள்ள காயம் வியாழனில் தோன்றியுள்ளதாகவும் ஹைடி ஹம்மெல் என்பவரின் தலைமையில் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் தாக்கம் பல ஆயிரம் அணுகுண்டுகளின் தாக்கத்துக்கு ஒப்பானதாகும். 1994 ஜூலையில் ஷூமேக்கர்-லீவு 9 என்ற வால்வெள்ளி வியாழனைத் தாக்கியிருந்தது. வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது ஜூலை 21, 2009 உள்ளூர் பொதுமக்கள் ஈயம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் அகழ்வெடுப்பதால் இந்த உயிரிழப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிகரித்திருக்கிறது. நாட்டின் வடக்கு மாநிலமான சம்ஃப்ராவைச் சேர்ந்தவர்களே ஈய நச்சுத்தன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட 355 பேரில் 163 பேர் இறந்துள்ளதாக நைஜீரிய சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் வருடாந்த தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தச் சென்ற அதிகாரிகளே இந்த இறப்புகள் பற்றிக் கண்டறிந்துள்ளனர். வடக்கு மாநிலத்தின் பல வெளிப்புறக் கிராமங்களில் சிறுவர்களை அரிதாகவே காண முடிந்ததாக அவர்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். சம்ஃபாரா மாநிலம் அண்மையில் சீனக் கம்பனி ஒன்றை தங்கம் அகழ்வெடுக்க பணிக்கு அமர்த்தியிருந்தது. ஆனாலும் உள்ள்ர்ர்ப் பொதுமக்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கத்தை அகழ்வெடுத்து வந்துள்ளனர். அகழ்வு நடவடிக்கைகளின் போது வெளியான ஈயங்கள் உள்ளூர் நீர் வழங்கல் முறைமைகளுடன் கலந்ததைத் தொடர்ந்தே கிராமத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதாகக் கருதப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார். உலகின் மிகப்பெரும் தொழிற்சாலை விபத்தாகக் கருதப்படும் யூனியன் கார்பைட் எனும் உயிர்க்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் முதன்முறையாக இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் இறந்து விட்டார் எனவும் ஏனையோர் மேன்முறையீடு செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குற்றவாளிகளுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், இத்தீர்ப்பு காலம் கடந்தது எனவும் கூறி போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சில தன்னார்வ சேவை அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைத்தண்டனை பெற்றவர்களின் விபரம்: கேசுப் பகிந்திரா, இந்திய நிறுவனத்தின் தலைவர், வி.பி.கோகலே, முகாமைப் பணிப்பாளர், கிஷோர் கம்தார், பிரதித் தலைவர், ஜே. முகுந்த், தொழிற்துறை முகாமையாளர், ராய் சவுத்திரி (இறந்துவிட்டார் பிரதித் தொழிற்துறை முகாமையாளர், எஸ்பி சவுத்திரி, கே.வி, செட்டி, எஸ்ஐ. குரேசி. இவர்கள் அனைவரும் இந்தியர்கள். விபத்து நடந்த போது யூனியன் கார்பைட்டின் தலைவராக இருந்த வாரன் அண்டர்சனும் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். ஆனால் இத்தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. யூனியன் கார்பைட்ட் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் $470 மில்லியன்களை இழப்பீடாக இந்திய அரசுக்குக் கொடுத்திருந்தது. புதிய வருகைக்காக மேலதிகமாக இங்கு சுகாதார மற்றும் கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. அகதிக் குடும்பங்கள் முகாம்களிலேயே தங்கியிருப்பர் எனவும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் மட்டுமே அவர்கள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுவர்கள் உள்ளூர் பாடசாலைக்கு சென்று படிக்க அனுமதிக்கப்படுவர். அகதிகள் அனைவரும் இங்கு ஆகக்கூடியது 6 மாதங்கள் வரை இங்கு தங்கியிருப்பர் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த விபரீதம் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். சுமார் 40 சிறுவர்கள் அந்த தொங்கு பாலத்தில் ஒன்று கூடியிருந்தபோது பாலம் சரிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. சிறுவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்து விட்டதாகவும் அவர்களில் 25 பேர் காப்பாற்றப் பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். இவர்களில் 12 பேர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 12 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தெரியவந்துள்ளது. இப்பகுதியில் தொற்றுநோய் பரவுதலைத் தடுத்து துரதிர்ஷ்டத்தை போக்குவதற்காக இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆற்றில் சில பொருள்களை பெரியவர்கள் வீசுவதை அந்த சிறார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சிலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 படையினர் நேற்றுக்காலை கிளிநொச்சி நீதிவான் பி. சிவகுமார் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் நேற்று சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார். இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் செப்சிஸ் நோய் ஏற்படுகிறது. இந்நோய் ஆண்டுதோறும் உலகின் ஏறக்குறைய 20 மில்லியன் பேரை பாதிக்கிறது. பெரும்பாலானோர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நோய்க்கிருமி கட்டுப்படுத்தி ஆன்டிபயோட்டிக்) மருந்து கொடுக்கப்படுகிறது. இம்முறை மூலமே பல தசாப்தங்களாக நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. எலிகளின் இரத்தத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் sphingosine kinase 1 அல்லது SphK1 என்ற மூலக்கூற்றைத் தடுக்கும் முறையில் இப்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலிரியோ மெலன்டெஸ் என்பவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் அவரது குழுவும் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ஜூன் 4 ஆம் நாள் "சயன்ஸ்" அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அணுக்களை அழிக்கும் கிருமிகளை ஒடுக்கக் கொடுக்கப்படும் ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளுடன், இந்த ‘5சி’ மருந்தையும் சேர்த்துக் கொடுத்தால் நோயைக் குணப்படுத்தலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இம்முறை வெற்றி அளித்தால் இன்னும் ஆறு ஆண்டுகளுக்குள் இம்மருந்தை விற்பனைக்கு விடுவதற்கு விண்ணப்பிப்போம் என பேராசிரியர் மெலண்டெஸ் தெரிவித்தார். சுகாதாரமாக கைகள் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாள் “உலக கை கழுவும் நாளாக” கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, லைப்பாய் சோப் நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து 15,115 மாணவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து ஒரே சமயத்தில் கைகளைக் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகடிநச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகிறார்கள். இதனால் அங்கு கைகள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 90 சதவிகிதம் மக்கள் உணவு உண்பதற்கு அதிகமாக கைகளையே பயன்படுத்துகிறார்கள். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்று நோய், மற்றும் சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பின்னரும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிக அவசியம், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவிகிதம் தடுக்க முடியும். உலகத்தில் 15 இலட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் மற்றும் தன் சுத்தம் இல்லாமையே ஆகும். இதனால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்க முடியும். நேரோ-1 என்றழைக்கப்படும் இவ்விண்கலம் நேரோ விண்வெளி மையத்தில் இருந்து 1701 (0801 GMT) மணிக்கு ஏவப்பட்டு 137 செக்கன்களில் வெடித்துள்ளதாக தென்கொரிய அறிவியல் துறை அமைச்சர் ஆன் பியோங்-மான் தெரிவித்தார். 70 கிலோமீட்டர் உயரத்தில் இதனுடனான தொடர்புகள் அனைத்தும் முறிவடைந்துள்ளது. "விண்கலனின் முனையில் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவியில் தெரிந்த பிரகாசமான ஒளி மூலம் இந்த விண்கலம் தனது முதலாவது நிலையிலேயே வெடித்திருப்பது தெரிய வந்துள்ளது என திரு. ஆன் தெரிவித்தார். இவ்விண்கலனின் வெடிப்பு தென்கொரியாவின் விண்வெளிப் பந்தயத்திற்கு ஒரு பெரும் தோல்வி அன அவதானிகள் கருதுகின்றனர். தென் கொரியா கடந்த 2009 ஆகஸ்டில் முதற்தடவையாக விண்கலன் ஒன்றை ஏவ முயற்சித்து தோல்வி கண்டது. அதனை அடுத்து இந்த இரண்டாவது முறையும் தோல்வி கண்டுள்ளது. ஆசியாவில் சீனா, இந்தியா, சப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக ஏவுகலன்களை ஏவியுள்ளன. சீனா மூன்று முறை மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியது. விண் சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோளை ஏவும் தென்கொரியாவின் முதல் முயற்சி தோல்வி ஆகஸ்ட் 25, 2009 ஆனால் இந்தப் பொருளாதாரத் தடை என்பது கசங்கிய மெல்லிழைத்தாள் (used napkins) என்றும் ஈரான் வர்ணித்துள்ளது. இது தாங்களின் அணுக்கலன் அமைப்பதில் தடங்கல் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. தாங்கள் அமைதி வழியில் பயன்படுத்துவதற்கான ஒன்றாகவே இதனை அமைத்து வருவதாக ஈரான் கூறி வருகிறது. இந்தப் பொருளாதார தடையின் மூலம் ஈரானின் புரட்சிப்படைக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளும் அதனுடன் தொடர்புடைய 15 நிறுவனங்களையும், ஈரானின் இஸ்பகான் அணுநுட்ப மையத்துடன் தொடர்புடைய 40 நபர்களின் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஈரானின் முக்கிய வருவாயாக உள்ள பெட்ரோலிய வணிகத்தை இந்த தடை கட்டுப்படுத்தாது. அவ்வாறு இருந்தால் இரசியா, சீனா, மற்றும் அமெரிக்காவையும் அவை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தெற்கில் உள்ள ஓஷ் நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இறங்கி சண்டையில் ஈடுபட்டனர். குறைந்தது 400 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ள அரசு அங்கு மேலதிக படையினரை அனுப்பியுள்ளது. ஓஷ் நகரத்தில் பெருமளவு உஸ்பெக் மக்கள் வசிக்கின்றனர். அத்துடன் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவின் செல்வாக்கு மிக்க பகுதியும் இதுவாகும். இரு வெவ்வேறு ஆயுதக்குழுக்களிடையே ஆரம்பித்த சண்டை துப்பாக்கிச் சூட்டுச் சண்டையாக மாறியதாக உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. நகரில் பல கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், உள்ளூர் தொலைக்காட்சி நிலையம், திரை மாளிகை ஆகியன சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இங்குள்ள பெரும்பான்மையான நிறுவனக்கள் உஸ்பெக்குகளுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலையில் துப்பாக்கிச் சூடுகள் கேட்ட வண்ணம் உள்ளதென உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். எனினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளக அமைச்சு அறிவித்துள்ளது. சிறுவர் சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கான வாத்தியக்காரர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். தென்னாப்பிரிக்காவில் இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக நூறு கோடி டாலர்கள் கணக்கில் செலவு செய்து, கண்ணைக் கவரும் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையங்கள், பிற கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டுள்ளன. முதற்தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இப்போட்டிகள் இடம்பெறுகின்றன. 32 நாட்டு அணிகள் பங்குபற்றும் இறுதிச் சுற்றில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெறும். இறுதிப் போட்டி ஜூலை 11 இல் நடைபெறும். "தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி ஒழிந்த அந்த நாளுக்குப் பின்னர் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான நாள் என்றால் அது இன்றைய தினம்தான் என்று அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார். "இது வெறுமனே ஒரு விளையாட்டு போட்டி மட்டும் அல்ல. உலக மக்களை ஒருவரோடொருவர் தொடர்புபடுத்துவதற்கான ஓர் வழி இது என்று பன்னாட்டு கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவர் செப் பிளேட்டர் கூறினார். ஐநா செயலர் பான் கி மூன், அமெரிக்க உதவி அரசுத்தலைவர் ஜோ பிடென், மெக்சிக்கோ அரசுத்தலைவர் பிலிப்பே கால்டெரன் உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆரம்ப நிகழ்வுகள் 215 நாடுகளில் தொலைக்காட்சி மூலம் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது. லயனல் மெசி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, வைன் ரூனி போன்ற உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் இறுதிப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஆனாலும் இங்கிலாந்தின் ரியோ பெர்டினாண்ட், டேவிட் பெக்கம், ஜெர்மனியின் மைக்கல் பலாக், கானா நாட்டின் மைக்கல் எசியென் போன்றோர் காயங்கள் காரணமாக பங்குபற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும். "ஒரு முழுத்துண்டு தோலினால் இழையப்பட்ட இக்காலணி ஒரு துறைசார் வல்லுநர் ஒருவராலேயே செட்டப்பட்டிருக்க வேண்டும் என முனைவர் ரொன் பின்காசி தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிக்கோபார் தீவுகளில் மோகீன் என்ற இடத்துக்கு 150 கிலோமீட்டர் மேற்கே மையம் கொண்டிருந்தது. இது சுமாத்திராவுக்கு 440 கிமீ வடமேற்கேயும், பாங்கொக்கிற்கு 1155 கிமீ தென்மேற்கேயும், புதுதில்லிக்கு 2790 கிமீ தென்கிழக்கேயும் அமைந்திருந்தது. 10 முதல் 20 செக்கன்களுக்கு இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனை அடுத்து, திருச்சியிலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த மலைக்கோட்டை விரைவு வண்டிக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் துண்டுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்த்னர். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக மாநிலக் காவல்துறையினர் சொல்கிறார்கள். இத்துண்டுச் சீட்டுக்களில் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச சமீபத்தில் இந்தியா வந்ததைக் கண்டித்தும், அவரை வரவேற்ற இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருந்தாலும் “இந்தச் சம்பவத்தில் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை. உள்ளூர்க்காரர்கள் தான் காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்,” என்று தமிழக காவல்துறைத் தலைமை அதிகாரி லத்திகா சரண் தெரிவித்தார். மாதிரிகள் சேகரிக்கப்பட்ட கலம் இணைக்கப்பட்ட முதன்மைக் கலம் 200 கிமீ உயரத்தில் 12கிமீ/செக் வேகத்தில் வளிமண்டலத்துள் பிரவேசித்தது. முதன்மைக் கலம் 3,000C வெப்பத்தைத் தாங்காமல் தீப்பிடித்து அழிந்து விட்டது. மாதிரிகளைச் சுமந்து வந்த கலம் வெப்பக்காப்பிடப்பட்டிருந்ததால் தொடர்ந்து பூமியை நோக்கி வீழ்ந்தது. 10 கிமீ உயரத்தில் அதனுடன் பொருத்தப்பட்டிருந்த பாரசூட் விரிந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. தெற்கு ஆஸ்திரேலியாவின் வூமரா தடை வலயத்தினுள் இது தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹயபுசா Hayabusa திட்டம் இட்டோக்காவா Itokawa என்ற சிறுகோளுக்கு 2003 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இவ்விண்கலம் 2007 ஆம் ஆண்டில் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகளினால் மூன்றாண்டுகளின் பின்னரே திரும்பியிருக்கின்றது. இட்டக்கோவாவின் மாதிரிகள் இந்த விண்கலத்தில் இருக்குமா என்று சந்தேகம் கிளப்பப்படுகிறது. ஆனாலும், சப்பானிய விண்வெளித் திட்ட Jaxa அதிகாரிகள் இதில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். "இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இக்கொள்கலத்தை நாம் கைப்பற்றிவிடுவோம். அதற்குள் சிறிதளவேனும் தூசு இருக்கலாம் என நாம் திடமாக நம்புகிறோம். இது குறித்து திட்டவட்டமாக அறிய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என ஜாக்சாவின் துணைப் பணிப்பாளர் யோசியூக்கி ஹசிகாவா தெரிவித்தார். "இதனை நாம் சிறப்பு வானூர்தி ஒன்றின் மூலம் டோக்கியோவுக்குக் கொண்டு செல்வோம் என அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பி.சிவகுமார் முன்னிலையில் இடம் பெற்றது. இந்த அடையாள அணிவகுப்பில் 38 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நால்வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்டினர். அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர ஏனைய இருவரையும் கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார். அடையாளம் காணப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். கொழும்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் அமைப்பின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர். மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் பிபிசி செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்தைத் தொடர்ந்து நடத்துவதில் சட்டமா அதிபர் காட்டும் மும்முரத்தை பொறுத்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா அல்லது கடந்த காலங்களைப்போல வழக்கு கிடப்பில் போடப்படுமா என்பது தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பாலியல் வல்லுறவு, 6 படையினர் கைது சூன் 9, 2010 கிர்கீசிய ஆயுததாரிகள் உஸ்பெக் இனத்தவர்களைச் சுட்டுக் கொன்றும் அவர்களின் சொத்துக்களை தீயிட்டுக் கொளுத்தியும் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, ஒஷ் நகரில் கடுமையான துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் பி.பி.சி.செய்தியாளரொருவர் தெரிவித்துள்ளார். "இந்தப் படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பதற்குத் எம்மிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன என திருமதி பிள்ளையின் பேச்சாளர் ரூப்பர்ட் கோல்வில் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கலவரத்தில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கியிருந்தது. முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் கடந்த ஏப்ரலில் பதவி கவிழ்க்கப்பட்டதிலிருந்தே அவரின் செல்வாக்கு மிக்க இடமான நாட்டின் தென்பகுதியில் வன்முறைகள் வெடித்தன. கிர்கிஸ்தானில் மீண்டும் கலவரம், பலர் உயிரிழப்பு ஜூன் 11, 2010 சினலோவாவில் உள்ள மாசட்லான் சிறையில் ஒரு போதை கட்டத்தல் குழு துப்பாக்கி மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் கொண்டு உள் நுழைந்து எதிர் குழு சிறைவைக்கப்பட்டிருந்த அறையில் சுட்டதில் 18 பேர் உயிரிழந்தனர். சிறையின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட சண்டையில் 11 பேர் குத்தப்பட்டு இறந்தனர். உள்ளூர் செய்திகளின் படி இறந்தவர்களில் பலர் சீட்டா குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சினலோவா குழுவுடன் போதை மருந்து கடத்தல் பாதையை கைப்பற்ற சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. டிசம்பர் 2006 முதல் 23,000 பேர் போதை மருந்து தொடர்பான வன்முறையில் உயிரிழந்துள்ளார்கள். இம்மாகாணத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பப்புவா மாகாணம் இந்தோனேசியாவின் மிகவும் பின்தங்கிய பிரதேசம் ஆகும். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. யாப்பென் தீவில் 47 வயது பெண் ஒருவரும் 5 மாதக் குழந்தையும் அவர்களது வீடு இடிந்து வீழ்ந்ததால் உயிரிழந்தனர். குறைந்தது 20 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக யாப்பென் தீவுக் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குக் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. 2009 செப்டம்பரில் சுமாத்திராவில் இடம்பெற்ற நடுக்கத்தில் 1,000 பேர் உயிரிழந்தனர். 1972 ஜனவரி 30 இல் வட அயர்லாந்தின் லண்டன்டெரி நகரில் மனித உரிமைக் குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பிரித்தானியத் துணைப்படைகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு குறித்தான விசாரணை 12 ஆண்டுகளாக நடைபெற்று அதன் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை இராணுவத்தினரின் செயலைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இராணுவத்தினரே முதலில் தாக்குதலை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கேமரன் இவ்விசாரணை அறிக்கையிலுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வட அயர்லாந்தின் மிகுந்த சர்ச்சைக்குரிய நாளாகக் கருதப்படும் இந்நாளில் இடம்பெற்ற படுகொலை குறித்த விசாரணை அறிக்கை எவ்வித சந்தேகங்களுமின்றி இராணுவத்தினர் மீது குற்றஞ்சாட்டுவதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாக கேமரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே இவ்விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கேனரன் வெளியிட்டுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்குப் பதிலாக இவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவில்லையெனவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயப்பட்டோரின் மீதும் இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த எவரும் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும் தமது நடவடிக்கைகள் குறித்து இராணுவத்தினர் பொய் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கேமரனின் மன்னிப்புக் கோரலுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சேர் டேவிட் ரிச்சார்ட், ”13 பொதுமக்களின் இறப்புக்கு வழிவகுத்த அதிகாரிகளினதும் படை வீரர்களினதும் பெரும் தவறு தொடர்பில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இது குறித்து படை வீரர்களை விசாரணை செய்யும் தீர்மானம் நேரடியாக எடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையெனத் தெரிவிக்கும் செய்தியாளர்கள் 38 ஆண்டுகளின் பின்னர் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினமெனத் தெரிவித்துள்ளனர். 5,000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தயாரிக்க கிட்டத்தட்ட $285 மில்லியகள் செலவிடப்பட்டுள்ளது. படுகொலைகள் தொடர்பான விசாரணக்கு முன்னாள் பிரதமர் டொனி பிளேர் 1998 ஆம் ஆண்டில் உத்தரவிட்டார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற குழு எச் பிரிவுப் போட்டியொன்றில் சுவிட்சர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 1954ம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண முதல் போட்டியில் வெற்றியீட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், உலக ஆடவர் தரப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் அணி, 24 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அணியால் தோற்கடிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு ஸ்பெயின் அல்லது பிரேசிலுக்கு அதிகம் உள்ளது என்று பிரபல வீரர் பெலே கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 52ம் நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் கில்சன் பெர்னாண்டஸ் அபாரமான முறையில் கோல் ஒன்றைப் போட்டு சுவிட்சர்லாந்தின் வெற்றியை பதிவு செய்துள்ளார். அமாகா என்ற இடத்தில் உள்ள சான் பெர்னாண்டோ சுரங்கத்தில் புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10:00 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சுரங்கத்தில் சிக்குண்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான பணி என அதிகாரிகள் தெரிவித்தனர் உண்மையைச் சொல்லப்போனால், இவர்களைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என தேசிய அநர்த்த அதிகாரி ஒருவர் உள்ளூர் வானொலிக்குத் தெரிவித்தார். இவ்வெடிப்பு ஏன் நிகழ்ந்ததென்பது அறிய முடியாதுள்ளது. எனினும் சுரங்கத்தினுள் சில வாயுக்கள் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது ஜிங்கி யங் என்பவர் ஃபிஷரின் மகள் தான என்று அறிய அவரது உடலின் திசுப்பகுதி தேவையாயுள்ளது என ரெய்க்சாவிக் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் காலமான பாபி ஃபிஷர் இறக்கும் போது எவ்வித மரண சாசனத்தையும் எழுதி வைக்கவில்லை. ஃபிஷர் இறக்கும் வரை ஜிங்கிக்கு பணம் அனுப்பி வந்திருப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஜிங்கிக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் 1943 இல் பிறந்த பாபி ஃபிஷர் இறக்கும்போது ஐஸ்லாந்தின் குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவராவார். 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. 1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார். இவரது தாயார் ஒரு யூதர் ஆவார். வியாழக்கிழமை அன்று "தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம்" என்ற தலைப்பில் "சுதந்திர இலங்கையின் தமிழர்கள்" என்ற குறிப்பிடப்பட்டு சிங்களத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பில் உள்ள திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் மணிரத்தினத்தின் "ராவணன்" என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் நேற்று வெள்ளிக்கிழமை திரையிடப்படவிருந்தது. இதை தடுக்கும் முகமாகவே திரையரங்கிற்குள் கடந்த நள்ளிரவு புகுந்த சிலர் திரையரங்கின் திரைக்கு தீவைத்துள்ளனர். இதனால் திரை முற்றாக எரிந்துள்ளது. "இந்த இறப்புகள் அனைத்து கடந்த 12 நாட்களில் இடம்பெற்றுள்ளன, இவற்றில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என மாகாண சுகாதாரத்துறைப் பேச்சாளர் கூறினார். விருத்த சேதனத்தில் ஈடுபட்ட 11 பள்ளிகளில் இருந்து 60 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. சட்டவிரோதமான சிருத்த சேதனப் பள்ளிகள் கிழக்கு கேப் பகுதியில், குறிப்பாக கிராமப் பக்கங்களில் அதிகம் உள்ளன பயிற்றுவிக்கப்படாத மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இவற்றை மேற்கொள்ளுகின்றனர் என ஜொகான்னஸ்பேர்கில் உள்ள பிபிசி செய்தியாளர் பும்சா பீலானி அறிவித்தார். விருத்த சேதனம் என்பது ஆண்மைத்தன்மைக்கான வழி என தெற்கு ஆப்பிரிக்க இனக்குழுக்கள் சில நம்புகின்றன. விருத்த சேதனம் செய்வது குறிப்பாக கோசா மற்றும் இண்டெபெல் ஆகிய இனக்குழுகளிடையே பொதுவான வழக்கமாகும். தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும், அதன் பின்னர் பெரும் புகை மண்டலமும் கிளம்பியதாக தெரிவிக்கப்படுகிறது. தலைமைஅயகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த பல போராளிகளை விடுவித்துக் கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியுள்ளனர். ஏமனின் கிழக்குப் பகுதியில் அண்மையில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் ஒன்றுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளத்ன அதிகாரிகள் அல்கைடா தீவிரவாத அமைப்பின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவச் சீருடையில் வந்தே தாக்குதலை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 0740 மணிக்கு இடம்பெற்றுள்ளது. காலை நேர கொடியேற்றும் வைபவம் நடந்து கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதனாலேயே பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஆயுததாரிகள் காவலில் இருந்த தமது சகாக்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்றில் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 2003 ஆம் ஆண்டில், இதே கட்டடத்தில் இருந்து 10 பேர் தப்பியிருந்தனர். ஏமன் அரசு அல்கைடா, தெற்கு பிரிவினைவாதிகள், மற்றும் வடக்குப் பகுதிப் போராளிகள் என மூன்று முனைகளில் இருந்து எதிர்ப்பைச் சமாளிக்கிறது. வடக்குப் பகுதிப் போராளிகளுடன் அரசு அண்மையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அராபியக் குடாநாட்டின் அலி-கைடா அமைப்பு 2009 ஆம் ஆண்டில் இரண்டு தீவிரவாத அமைப்புகள் ஒன்றிணைந்ததில் அமைக்கப்பட்டிருந்தது. காங்கேசன்துறைப் பகுதிக்கு வியாழக்கிழமை பயணம் செய்து அப்பகுதியைப் பார்வையிட்ட பின்னர் அது தொடர்பாக தினக்குரல் செய்தியாளருக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். உயர்பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைப் பகுதியின் மாவிட்டபுரத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் சுண்ணக்கற்கள் தொடர்ச்சியாக இன்றும் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. இச்சுண்ணக்கற்கள் இப்பகுதி மக்களின் மிகப்பெரிய சொத்து என்பதைவிட இது அவர்களின் வளமாகும். சுமார் 4 கிலோமீற்றர் சதுரப்பரப்பளவிற்கும் அதிகமான பிரதேசத்தில் இக்கற்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன. இப்பிரதேசம் கடலை அண்டியது. இன்றைய நிலையில், கடல்நீர் பிரதேசத்திற்குள் உட்புகும் நிலையிலேயே கடல் மட்டத்தை விட ஆழமாக சுமார் 40 அடி வரை இங்கு பள்ளமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட இடத்தில் நிலத்தடி நீர் ஊறி வருகின்றது. சுமார் 4 வருடங்கள் வரையிலும் இப்பகுதியில் கற்கள் தோண்டப்பட்டிருக்கலாம். கீரிமலைக்கு அண்மித்த பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் கற்கள் தோண்டப்பட்டுள்ளதோடு மிகமிகப் பெரிய இயந்திரங்கள் மூலம் இக்கற்கள் உடைக்கப்பட்டு அங்காங்கே பெரிய பெரிய மலைகள் போல குவிக்கப்பட்டுள்ளன. அதைவிட தொடர்ந்து மேற்படி பகுதியில் வேலைகள் நடைபெறுகின்றன. இயந்திரங்கள் மூலம் கல் அகழ்தலும் கல்லுடைத்தலும் நடைபெற்று வருகின்றது. சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா மேற்படி பகுதிக்கு அண்மையில் நேரில் விஜயம் செய்ததுடன் உடனடியாக கற்கள் அகழ்ந்து எடுப்பதை நிறுத்தும்படியும் கூறியிருந்தார். ஆனால், அதனையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக கற்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. இவ்வாறு கற்கள் எடுக்கப்படுவதால் அப்பகுதியுடன் நன்னீர் உப்புத் தன்மை கொண்ட உவர்நீராக மாற்றமடையலாம் அத்துடன் அப்பகுதியில் எதிர் காலத்தில் மக்கள் குடியிருக்க முடியாத நிலையும் ஏற்படும் என திரு விநாயகமூர்த்தி தெரிவித்தார். மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் இரா.நாகசாமி தெரிவித்தார். தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிருத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பது போல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கென் டால்பொட் என்பவரும் காணாமல் போனோரில் ஒருவர் ஆவார். கொங்கோவில் உள்ள யாங்கடோ என்னும் இடத்தில் இரும்புத் தாதுப்பொருள் திட்டம் ஒன்றுக்கு இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். கமரூனின் தலைநகர் யோவுண்டேயில் இருந்து புறப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்தில் அதன் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கமரூனின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விமானம் அடர்ந்த காட்டில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. வானில் பலத்த வெடிச் சத்தத்தைக் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தாக "தி அட்வர்ட்டைசர்" பத்திரிகை தெரிவித்துள்ளது. தெகரான் புரட்சி நடுவர் மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப அப்துல்மாலிக் ரிகி, ஈவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஜுந்தலா என்ற இயக்கம் (கடவுளின் சிப்பாய்கள்) பலுச்சிச மக்களின் மனித உரிமை, பண்பாடு ஆகியவற்றைக் காக்கப் போராடும் அமைப்பாகக் கருதப்படுகிறது. மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பெரும் வெடிப்பு நிகழ்ந்ததில் 46 பேர் உயிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 72 பேர் சுரங்கத்தில் பணியில் இருந்த போது நேற்று திங்கட்கிழமை அதிகாலை இந்த வெடிப்பு நிகழ்ந்தது. அவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக என்று சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2,631 பேர் சுரங்க வெடிப்புக்குப் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் மாண்டிருக்கக்கூடும் என்றும், மதிப்புமிக்க நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்டு விடாமல் பல விபத்துகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என்று தனிப்பட்ட ஊழியர் குழு ஒன்று கூறியுள்ளது. சீனாவில் அடிக்கடி நிலக்கரிச் சுரங்க வெடிப்பு விபத்து நிகழ்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரிச் சுரங்களில் நிலவும் எளிதாக விபத்து நடக்கக்கூடிய வேலைச் சூழல், ஊழியர்களுக்குச் சரியான விதிமுறைகள் வகுக்கப்படாமை, ஊழல், திறனற்ற பணி முறை ஆகியவையே என்று கூறப்படுகிறது. சீனாவின் மின்சாரத் தேவையில் 70 விழுக்காடு அளவு நிலக்கரி வாயிலாகவே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாருஸ்மன் வட கொரியாவின் மனித உரிமைகளை ஆராயவென சிறப்புப் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகளால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தார். சட்டத்தரணி ஸ்டீவன் ரட்னர் முன்னர் கம்போடியாவில் கெமர் ரூச் அரசை எப்படி நீதிக்கு முன் நிறுத்துவது என்பது குறித்து ஐக்கிய நாடுகளுக்கு ஆலோசனை தந்தவர். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும். இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது என தெரிவித்துள்ள பேச்சாளர், செயலாளருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை இதற்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார். "இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரிக்கப் பின்னடிக்கும் நிலையில் இப்படியான நிபுணர் குழு அவசியம் தேவை என அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் பெகி ஹிக்ஸ் தெரிவித்தார். இந்த நிபுணர் குழு இலங்கைக்கு எதிரான பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையில், நிபுணர்கள் குழு நியமனத்திற்கு இலங்கை தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இறைமையுடைய நாட்டின் விவகாரங்களில் தலையிடுவது தேவையற்ற விடயம் என்று குறிப்பிட்டார். இலங்கை பலம் வாய்ந்த சுதந்திரமான நீதித்துறையுடைய ஒரு நாடு என்பதுடன், பரீட்சித்துப் பார்க்கப்பட்ட நீதி நிர்வாக அமைப்புக்கள் உள்ள ஒரு நாடு எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். திங்கட்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து தடம் புரண்டு விபத்துள்ளாகியது. நான்கு பெட்டிகள் தூக்கி எறியப்பட்டதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று நாள் தேசிய துக்க நாளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காயப்பட்டோர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 கிமீ நீளமான தொடருந்துப் பாதை 1920களில் பிரான்ஸ் அந்நாட்டை ஆளும் போது கட்டாய வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. இப்பாதை நிர்மானிக்கப்படும் போது ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இப்பாதை பின்னர் புனரமைக்கப்படவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். ஒரே வாரத்தில் இந்நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது பெரும் விபத்தாகும். சென்ற வாரம் ஆஸ்திரேலிய சுரங்கத் தொழில் நிபுணர்கள 11 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று கொங்கோ குடியரசில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். கெவின் ரட் தான் இப்போட்டியில் தோல்வியடைவதைத் தவிர்ப்பதற்காக அவர் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். சிறந்ததொரு அரசு அடுத்த அக்டோபர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தோல்வியடைவதில் இருந்து தவிர்ப்பதற்காகவே தாம் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதாக கிலார்ட் தெரிவித்தார். இவ்வாண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் ஆளும் தொழிற்கட்சி கடும் சரிவைக் கண்டிருந்தது. அண்மையில் ரட் அரசு அறிவித்திருந்த சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவனங்களுக்கான வரி அதிகரிப்பு கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது. இவ்வாண்டு ஆரம்பத்தில் கெவின் ரட் ஆஸ்திரேலியாவின் கடந்த 30 ஆண்டுகளில் புகழ் பெற்ற பிரதமர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டிருந்தார். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். முன்னாள் தமிழக முதல்வர் மு.க.கருணாநிதி தலைமையில் அம்மாதம் 27 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற்றது. முதல்வர் மு. கருணாநிதி தனது தலைமையுரையில் ஒரு மொழியைச் செம்மொழியாகக் கூற, தேவைப்படும் 11 தகுதிகளை மட்டுமின்றி, அதற்கு மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி, தமிழ் மொழி என்பதை தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் முதலாவது தாய் மொழியாகத் தமிழ் மொழி அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது" என்று கூறினார். "கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு சாதாரண மாநாடல்ல. இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம் என வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்கிற வேண்டுகோளை தமது வாழ்த்துரையின் போது பேராசிரியர் சிவத்தம்பி வெளியிட்டார். இதற்கான ஒரு அறிவிப்பு இந்த மாநாட்டில் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். கோவையில் நடைபெற்று வரும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி வண்ணமிகு பேரணி ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டையொட்டி கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றுபவர்களுக்கு மொழி பெயர்ப்பு வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்த ஒழுங்குகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றைய ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்திலும், 73 ஆவது நிமிடத்திலும் சிலவாக்கிய அணியின் ராபர்ட் விட்டேக் அடித்த கோல்கள், இத்தாலியை உலகக் கோப்பையை விட்டு வெளியேற வழி வகுத்தது. உமுவுஜிசி என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஜீன் ருகம்பாகே என்பவரை வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இவர் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெனரல் நயாம்வாசா நாடுகடந்த நிலையில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிறார். ருவாண்டாவில் ஆட்சித்தலைவர் தேர்தல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற விருக்கிறது. 1994 இனப்படுகொலைகளின் பின்னர் நடைபெறவிருக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். Companion on a journey என்ற பெயரில் இயங்கும் ஒருபாலுறவுக்காரர்களுக்கான ஓர் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது அங்கு இன்றுவரை சட்ட விரோதச் செயலாக இருந்துவருகிறது. "1883ல் பிரித்தானியர்கள் இலங்கையில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டம் ஒருபாலுறவை குற்றச் செயலாகக் காண்கிறது. ஆனால் காலத்துக்கு ஒவ்வாத இந்த சட்ட விதியை அகற்ற வேண்டும். ஒருபாலுறவுக்காரர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறுகிறார் இலங்கையில் ஒருபாலுறவுக்காரர்களுக்காக குரல் கொடுத்துவரும் ஷெர்மன் டெ றோஸ். இதற்கிடையே, இலங்கையில் உள்ள ஒருபாலுறவுக்காரர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும், அதேவேளை அவர்கள் விடயத்தில் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவும் நாட்டின் கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் இலங்கை பிரதமர் டி. எம். ஜயரட்ன கூறியுள்ளார். கானா ஐக்கிய அமெரிக்காவை 2 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாம் சுற்றில் இன்றைய ஆட்டங்களில் அர்ஜெண்டினா மெக்சிக்கோவையும், ஜெர்மனி இங்கிலாந்து அணியையும் எதிர்த்து விளையாடுகின்றன. ரோயல் அவையின் கோடை கண்காட்சிக் கருத்தரங்கில் ஆய்வாளர் டிம் ரைட் என்பவர் இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். அஃபார் பகுதியில் கட்ந்த 5 ஆண்டுகளில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை இவரது ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் 8 மீட்டர் அகல வெடிப்பு ஒன்று 60 கிமீ நீளத்தில் பத்து நாள் கால இடைவெளியில் தோன்றியது. மிகவும் சூடான உருகிய பாறைகள் பூமியின் அடியில் இருந்து மேலே கிளம்பி இந்த வெடிப்பை உண்டாக்குகின்றன. தற்போதும் இடம்பெற்று வரும் உள்வெடிப்பு இறுதியில் ஆப்பிரிக்காவில் புதிய சமுத்திரத்தைத் தோற்றுவிக்கும். இப்பகுதியில் மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதன் மூலம் பூமியின் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டமைக்கான காரணங்களை அறியக்கூடியதாக இருக்கும். கினி 1958 ஆம் ஆண்டு விடுதலை அடைந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது மக்களாட்சித் தேர்தல் இதுவாகும். கினியின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் செக்கூபா கோனேட் நாட்டில் மக்களாட்சியை விரைவில் ஏற்படுத்துவேன் எனச் சூளுரைத்தார். இத்தேர்தலில் தானோ அல்லது தனது அமைச்சரவை அங்கத்தவர் எவரும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார். 1958 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து கினியில் இராணுவத் தலைவர்கள் அல்லது சிவில் கொடுங்கோல் ஆட்சியாளர்களே ஆட்சி புரிகின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவியில் இருந்த லன்சானா கொண்டே என்பவர் 2008 ஆம் ஆண்டில் இறந்ததில் இருந்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மக்களாட்சி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது 150 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாட்டில் குழப்பநிலை நீடித்து வந்தது. நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து நாட்டை விட்டு லைபீரியாவுக்குச் சென்ற கினியர்கள் பலர் லைபீரியாவின் தலைநகர் மொன்றோவியாவில் 5 கிமீ நீள வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் செலூ டியாலோ, எதிர்க்கட்சித் தலைவர் அல்ஃபா கொண்டே ஆகியோர் உக்கியமாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர். தேர்தல் முடிவுகள் மூன்று நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கினியில் பெருமளவு பெறுமதி வாய்ந்த போக்சைட்டு, இரும்பு, மற்றும் வைரம் போன்ற தாதுப்பொருட்கள் காணப்படினும் இந்நாடு உலகின் வறுமையான நாடுகளில் ஒன்றாகும். நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். மாநாட்டையொட்டிய சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. இதில், கோவையில் செம்மொழி மாநாடு நினைவுப் பூங்கா அமைத்தல், தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க கோரிக்கை, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரிக்கை, ஐவகை நிலங்களின் பெயர்களில் பாரம்பரிய மரபணு பூங்கா, மதுரையில் தொல்காப்பிய உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் அமைத்தல், குமரிக் கண்டம் குறித்த அகழ்வாராய்ச்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கருணாநிதி அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 25 தன்னார்வலர்கள் முன்னின்று இரண்டரை நாட்கள் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்தினர். இதில் கணினியில் தமிழ்99 விசைப்பலகை வழி தமிழ்த் தட்டச்சு, செல்பேசியில் தமிழ் பயன்பாடு, விக்கித்திட்டங்கள், வலைப்பதிவுகள், கட்டற்ற மென்பொருள்கள், உபுண்டு போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கு இடம்பெற்றது. இணைய மாநாட்டில் வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது. நேற்று நடந்த அபிப்பிராய வாக்கெடுப்பை அடுத்து அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 90 விழுக்காடு வாக்காளர்கள் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரலில் அரசுத்தலைவர் குர்மான்பெக் பக்கியெவ் பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பதவியிலிருக்கும் இடைக்கால அரசுத் தலைவர் ரோசா ஒட்டுன்பாயெவா அபிப்பிராய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இப்புதிய அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்திற்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாத முற்பகுதியில் நாட்டின் தென்பகுதியில் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். வன்முறைகள் மிக மோசமானளவில் இடம்பெற்ற ஒஷ் நகரில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "கிர்கிஸ்தான் உண்மையான மக்களின் மக்களாட்சியாக உருப்பெறும் என வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து ரோசா ஒட்டுன்பாயெவா கருத்துத் தெரிவித்தார். அபிப்பிராய வாக்கெடுப்புக்கு ஐக்கிய நாடுகள், அமெரிக்க மற்றும் இரசியா தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஞாயிறன்று இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணியின் ஆதிக்கம் தொடக்கம் முதலே இருந்தது. ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் நோயர் பந்தை தனது பக்கத்திலிருந்து ஓங்கி உதைக்க அது மிக அதிக தூரம் பறந்து இங்கிலாந்து கோலை நோக்கி வந்தது. அந்த பந்தைப் பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் ஜேம்ஸ் முன்னேறி வந்தபோது ஜெர்மன் வீரர் குளோஸ் முந்திப் பாய்ந்து வந்து பந்தை கோலுக்குள் இலாவகமாகத் தட்டிவிட்டு ஜெர்மனியின் முதல் கோலை 20 ஆம் நிமிடத்தில் போட்டார். தொடர்ந்து 32ஆவது நிமிடத்தில் முல்லர் கொடுத்த பந்தைப் பெற்ற புடோஸ்கி ஜெர்மனிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணி ஒரு கோல் போட 2-1 என்கிற நிலை ஏற்பட்டது. முதல் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்டு அடித்த பந்து கோல்கம்பத்தில் மோதி எல்லைக் கோட்டை தாண்டி தரையில் குத்தியது. ஆனால் அதனை உருகுவே நாட்டு நடுவர் ஜார்ஜ் லோரியான்டோ நிராகரித்தார். எனினும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஜெர்மனி மேலும் இரண்டு கோல்களை அடிக்க இறுதியில் 4-1 என்கிற கணக்கில் ஜெர்மனி வென்றது. ஞாயிறன்று நடந்த மற்றொரு போட்டியில், அர்ஜென்டினா அணி மெக்சிக்கோ அணியை 3 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஜூலை 3 இல் இடம்பெறும் கால் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா ஜெர்மனியை எதிர்த்து ஆடும். இவர் வேறொரு நோயாளிக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவித்தார் என்னும் நான்காவது குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான தீர்ப்பு அடுத்த வியாழக்கிழமை அன்று அறிவிக்கப்படவிருக்கிறது. டாக்டர் பட்டேல் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது திறமையின்மை, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருத்துவ முறைகளை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டன. 50 மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் 12 பேரடங்கிய ஜூரிகள் இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டனர். பண்டபேர்க் அரசு மருத்துவமனையில் சத்திரசிகிச்சைப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது ஜெரி கெம்ப்ஸ், ஜேம்ஸ் பிலிப்ஸ், மேர்வின் மொரிஸ் ஆகிய நோயாளிகளின் இறப்புக்குக் காரணமான சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டமை, மற்றும் இயன் வோல்ஸ் என்பவர் மீது உடல் ரீதியாக தீங்கு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை மருத்துவர் பட்டேல் மறுத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் இவர் மீது கைது செய்வதற்கான பிடி விறாந்து பிறப்பிக்கப்படட்தை அடுத்து இவர் 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வைத்து கைது செயப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஜூரிமார்களின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் பட்டேலின் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு விக்கிசெய்தி, மார்ச் 22, 2010 படுவான்கரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள ஏனைய பிரதேசங்களில் இலங்கைப் படையினரின் தேடுதல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சாதாரண குடிமக்கள் போல் செயற்பட்டுவந்தனர் என்றும், இவர்களில் சிலர் தம்பதிகளைப் போன்று பல வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு அரசொன்றுக்காக சட்டரீதியற்ற முகவர்களாகச் செயற்பட்டதாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆகக்கூடியது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இக்குற்றச்சாட்டுகள் முரண்பாடானவை என ரஷ்ய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஈகர் லியாக்கின் புரோலொவ் தெரிவித்தார் தகவல்களை நாம் ஆராய்கிறோம். இவற்றில் பல முரண்பாடான தகவல்கள் உள்ளன என அவர் தெரிவித்தார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரொவ் வாஷிங்டன் இதற்கு விளக்கம் தர வேண்டும் எனத் தெரிவித்ததாக ரஷ்யாவின் இண்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கச் சட்டப்படி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இவர்கள் அணுவாயுதங்கள், அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு நிலைகள், ஈரான் மற்றும் வெள்ளைமாளிகை செய்திகள், சி.ஐ.ஏ.தலைமைத்துவ மாற்றம் மற்றும் அரசியல் கட்சிகள் போன்றவை தொடர்பில் தகவல்களை சேகரித்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆவது நபர் ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் நண்பர்களாக இருந்து ரஷ்யாவுக்கு தகவல்களை அனுப்புமாறு இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் மூலமே வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இவ் வலையமைப்பை கண்டுபிடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று புதன்கிழமை தளத்தைச் சுற்றி துப்பாக்கிச் அத்தங்கள் கேட்டதாகவும், அமெரிக்க உலங்கு வானூர்திகள் வீனில் சுற்றி வட்டமிடட்தாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 6 பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தாலிபான்கள் அல்ஜசீரா செய்தியாளருக்குத் தெரிவித்தனர். தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் வாகனத்தில் வந்து தளத்தின் வாயிலில் குண்டை வெடிக்க வைத்ததாகவும், ஏனையோர் தானியங்கிகள் மூலம் விமானநிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "விமானநிலையத்தினுள் தாம் நுழைந்ததாக தாலிபான்கள் தமக்குத் தெரிவித்ததாக காபூலில் உள்ள அல்ஜசீரா செய்தியாளர் செய்னா கோடர் தெரிவித்தார். பதில் தாக்குதலில் எட்டு தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், தமது தரப்பில் இரு படையினர் காயமுற்றதாகவும் நேட்டோ படையினர் தெரிவித்தனர். நோயாளி ஒருவரின் குடலை எவ்விதக் காரணமும் இன்றி அகற்றியிருந்தார். வேறொரு நோயாளி உள் இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியமையால் அந்த நோயாளி இறந்துள்ளார். வேறொரு நோயாளிக்கு பட்டேல் தொண்டையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டார். இம்மாதிரியான சிகிச்சை பொதுவாக பண்டபேர்க் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வசதிகளை அம்மருத்துவமனை கொண்டிருக்கவில்லை. அந்நோயாளி இரண்டு நாட்களில் உயிரிழந்தார். இவரது திறமையின்மையை அறிந்த அந்த மருத்துவமனையின் தாதிகள் நோயாளிகளை பட்டேலிடம் அனுப்புவதைத் தவிர்த்தனர் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 1980களில் பட்டேல் அமெரிக்காவில் பணியாற்றும் போது அவரது திறமையின்மை குறித்து குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. 1984 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் அவருக்குத் தண்டம் அறவிடப்பட்டு மூன்றாண்டுகள் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வது தடை செய்யப்பட்டது. குயின்ஸ்லாந்து மாநில சட்டப்படி மூன்றரை ஆண்டு சிறைவாசத்தின் பின்னர் பட்டேல் நன்னடத்தைப் பிணையில் விடுவிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்தது. அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு மார்ச் 22, 2010 ஆஸ்திரேலியாவில் அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டது ஜூன் 29, 2010 இராணுவத்தினரிடம் இருந்த ஆயுதங்கள், மற்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களை எடுத்துவிட்டு தீவிரவாதிகள் வாகனத்துக்குத் தீ வைத்தனர். இது அல்ஜீரியாவில் இவ்வாண்டில் நடந்த தாக்குதல்களில் மிகவும் தீவிரமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. 1992 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இசுலாமியக் கட்சி வெற்றி பெற்றமை ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து அங்கு தீவிரவாதம் தலைதூக்கியது. இதுவரை ஏறத்தாழ 150,000 பேர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். 1999 இல் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல தீவிரவாதிகள் ஆயுதங்களைக் களைந்துள்ளனர். அதில் இருந்து அரசியல் வன்முறைகள் வெகுவாகக் குறைந்திருந்தாலும், தீவிர இசுலாமியக் குழுக்கள் ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்கக் கடும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. சில காலமாகவே இந்த முயற்சிகள் தீவிரமாகவே உள்ளதாக அதிகாலை.காம் செய்தியாளர் தெரிவிக்கிறார். சமீபத்தில் வெளியான 'ரெட்டச்சுழி' படத்தில் முதன்முதலில் இயக்குனர் தாமிரா இவர்களிருவரையுமே நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், கடைசியில் அந்த முயற்சியையும் கைவிடப்பட்டது. ரஜினியையும், கமலையும் நடிக்க வைக்க தற்போதுத சிவாஜி பிலிம்ஸ் முயற்சித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கமலும், ரஜினியும் இணையப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இதற்குப் புன்னர் சில மாதங்களின் பின்னர் வேறு வானியலாளர்கள் பலர் புறக்கோள்கள் பலவற்றைப் படம் பிடித்ததாகக் கூறியிருந்தனர். 1RXS 1609 புறக்கோளை ஆய்ந்த குழுவினர் ஜெமினையில் இருந்து பெறப்பட்ட புதிய படங்கள் மற்றும் தரவுகளைக் கொண்டு தமது 2008 ஆம் ஆண்டு புகைப்படம் உண்மையில் 1RXS 1609 உடையது தான் என உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர். "ஆரம்பத்திலேயே இந்தப் புறக்கோளும் அதன் விண்மீனும் பொடுவான ஒரு ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டிருந்ததை நாம் ஊகித்தோம். இப்போது அதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்றார் கனடாவின் மொண்ட்றியால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் லாஃப்ரெனியேஎர் தெரிவித்தார். "இரண்டும் உண்மையில் ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டு இரண்டும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் விண்ணில் சுற்றி வருகின்றன." இத்தரவுகள் மூலம் இந்தக் கோளின் திணிவு, மற்றும் சுற்றுத்தூரம் போன்றவற்றை அறியக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக திரு. நேபாள் தெரிவித்தார். திரு, நேபாள் பதவியில் விலகுவதற்கு கடந்த சில மாதங்களாக மாவோயிசவாதிகளால் நெருக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தமது கட்சியே யார் பிரதமர் எனத் தீர்மானிக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். யார் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். புதிய அரசியலமைப்பை வரைவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டு காலம் நீடிக்க ஆளும் கூட்டணியும் மாவோயிசக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்த ஒரு மாத காலத்தில் பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கானா முதல் கோலை அடிக்க அரங்கில் குதூகலம் கரை புரண்டது. அடுத்த சில நிமிடங்களில் உருகுவே அதை சமன் செய்தது. அதன் பின் கடைசி நிமிடத்தில் கானாவின் டொமினிக் தலையால் முட்டி பந்தை கோலுக்கு அனுப்பினார். கோல்போஸ்டுக்கு உள்ளே நின்ற உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் அதை வேறு வழியின்றி கையால் தடுத்து நிறுத்தினார். கானா அணி கடைசி நிமிடம் வரை அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்றே பலரும் நினைத்திருந்தனர். முதல்பாதியின் 47வது நிமிடத்தில் கானாவின் சல்லி முன்டாரி ஒரு கோல் அடித்தார். இதனால் கானா 1-0 என்று முன்னிலை பெற்றது. பிற்பாதியில் 55வது நிமிடத்தில் உருகுவே அணியின் தலைவர் போர்லான் ஒரு கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 சமநிலை கண்டது. 90 நிமிட ஆட்டத்திலும் இரு அணிகளும் வேறு கோல்கள் அடிக்கவில்லை.இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. க்கூடுதல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் கானாவின் டொமினிக் தலையால் முட்டி பந்தை கோலுக்கு அனுப்பினார். கோல்போஸ்டுக்கு உள்ளே நின்ற உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் அதை வேறு வழியின்றி கையால் தடுத்து நிறுத்தினார். கடைசி நிமிடத்தில் சிகப்பு அட்டை பெற்ற சுவாரெஸ் மைதானத்தை விட்டு வெளியேறினார். கானாவுக்கு பெனால்டி உதை கிடைக்க அதை கானாவின் அசாமோ கயான் அதனை அடிக்க முடியாமல் போய் ஆட்டம் பெனால்ட்டிக்கு சென்றது. அதில் உருகுவே 4- 2 என்ற கணக்கில் வென்றது. நேற்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி பிரேசிலை வென்றது. ஜூலை 6 ஆம் நால் இடம்பெறும் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்துடன் உருகுவே மோதுகிறது. ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ரொபின்ஹோ போட்ட கோலின் மூலம் 1-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றது. 53 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஃபெலிப்பே மேலோ போட்ட கோலைத் தொடர்ந்து சமநிலையைத் தக்கவைக்க பெரிதும் சிரமப்பட்டது. 68-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் உவெஸ்லி ஸ்நைடர் மேலும் ஒரு கோல் அடித்து அணிக்கு 2-1 என்று முன்னிலையைப் பெற்றுத் தந்தார். நெதர்லாந்து வீரர்களின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தால் பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பையும் பிரேசில் வீரர்கள் தவற விட்டனர். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரேசில் காலிறுதியில் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள பிரேசில் அணியின் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி கானாவை வென்றது. ஜூலை 6 ஆம் நாள் இடம்பெறும் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்துடன் உருகுவே மோதுகிறது. இந்த இணைப்புத் தவறு காரணமாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களுக்கோ அல்லது விண்வெளி நிலையத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது. சுற்றுவட்டத்தைப் பொருத்து, இன்னும் 48 மணி நேரத்தில் மீண்டும் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். முதலாவது இணைவு முயற்சி நேற்று 1658 GMT மணிக்கு மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால் 28 நிமிடங்களுக்கு முனன்ரே வானொலித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து புரோகிரஸ் விண்வெளி நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் அதனை பாதுகாப்பாகக் கடப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த இடைத்தூரம் தற்போது அடிகருத்து வருகின்றது என நாசா தெரிவித்தது. பல ஆண்டுகளாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபட்டிருந்த புரோகிரஸ் விண்கலங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் இப்படியான தவறுகள் நிகழ்வது மிகவும் அரிது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கொல்லப்பட்டவர்களில் பலர் திரையரங்கு ஒன்றினுள் இருந்தவர்கள் எனவும் சிலர் தாங்கியில் இருந்து ஒழுகிய எண்ணெயை சேகரிக்க முயன்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் பெரும்தொகையாக புதைகுழி ஒன்றில் போடப்பட்டு மூடப்ப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். "ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் அரசுப் படையினரும் எண்ணெயைக் களவெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என ஒருவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரலில் முன்னாள் தலைவர் குர்மான்பெக் பாக்கியெவை இரத்தக்களரி மூலம் பதவியில் இருந்து அகற்றி அந்நாட்டின் இடைக்காலத் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்டவர் திருமதி ஒட்டுன்பாயெவா. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஒட்டுன்பாயெவா முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தானின் முதலாவது பெண் அரசுத்தலவர் என்ற பெருமையையும் பெறுகிறார். சென்ற வாரம் நடைபெற்ற நாடளாவிய கருத்து வாக்கெடுப்பில் மக்களாட்சி முறையிலான புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக பெருமளவான மக்கள் வாக்களித்திருந்தனர். ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் முல்லர் அபாரமான கோலடித்து ஜெர்மனியை முன்னணிக்கு இட்டுச் சென்றார். இருப்பினும் போட்டியின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த ஆர்ஜன்டீனா கடுமையாகப் போராடியது. ஆனால் 2வது பாதி ஆட்டத்தை முழுவதுமாக தனது பக்கம் திருப்பி விட்டது ஜெர்மனி. போட்டியின் 67ஆவது நிமிடத்தில் க்ளோஸ் போட்ட கோலுடன் அர்ஜெண்டினா திணறியது. பின்னர் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ரெய்ட்ரிச் மூன்றாவது கோலைப் போட்டார். இறுதியில் க்ளோஸ் மீண்டும் ஒரு கோலைப்போட ஜெர்மனி 4-0 கோல்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஜூலை 7 ஆம் நாள் இடம்பெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனியை எதிர்த்து விளையாடும். ஜூலை 6 இல் இடம்பெறும் மற்றொரு அரையிறுதி ஆடட்த்தில் நெதர்லாந்து அணி உருகுவே அணியை எதிர்த்து விளையாடும். புரோகிரஸ் M-06M என்ற இந்த சரக்கு விண்கலம் விண்வெளி நிலைஅயத்தில் தங்கியிருக்கும் ஆறு பன்னாட்டு விண்வெளி வீரர்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் வேறு அவசியப் பொருட்களை ஏற்றிச் சென்றது. சென்ற வெள்ளிக்கிழமை தொழில்நுட்பத் தவறு காரணமாக அது இணைய முடியாமல் போனது. இரண்டாவது இணைதல் முயற்சி எவ்வித பிரச்சினையும் இல்லாது முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். புரோகிரஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும் முயற்சி தோல்வி ஜூலை 3, 2010 "பொதுவாக இப்போதுள்ல மருத்துவமுறை புற்றுநோய்க் கிருமிகளை பொதுவாக அழித்தாலும், அவற்றின் வேர் உயிரணுக்கள் தப்பி விடுகின்றன. இவை பின்னர் புதிய உயிரணுக்களை உற்பத்தி செய்யும் அபாயம் உள்ளது." "எமது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் வெடி குண்டு உயிரணுக்களுக்கு வெளியே இல்லாமல், உள்ளேயே மருந்தை உட்செலுத்தும். இதன் மூலம், அவற்றின் வேர் அணுக்கள் முற்றாக அழிக்கப்படும்." ஐரோப்பிய நாடுகளுக்கு தைக்கப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக 1975 ஆம் ஆண்டில் இருந்து ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்தது. இலங்கை அரசாங்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் பட்சத்தில் அந்த நாட்டுக்கான ஜி எஸ் பி ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் கூறியிருந்தது. இதற்கு இலங்கை அதிகாரபூர்வமாகப் பதில் அளிக்காத காரணத்தினாலேயே இவ்வரிச் சலுகை நிறுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கான முடிவை முதல் கட்டமாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் எடுத்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஏற்றுமதி வரிச் சலுகையான ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டாலும் கூட இலங்கையின் ஏற்றுமதித்துறை அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும், தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் என்றும் இலங்கை மத்திய வங்கி முன்னர் அறிவித்திருந்தது. இன்னும் இரு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்கள் இடம்பெறவிருக்கும் நிலையில், அகதிகள் பிரச்சினை இங்கு அரசியல் ரீதியாக சூடு பிடித்துள்ளது. "அகதிகளைக் கடத்துவோர் இங்கு எதனையும் விற்க முடியாதென நாம் அவர்களுக்குத் தெரிய வைப்போம். படகு மூலம் வருவோர் உடனடியாக பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பப்படுவர் என ஜூலியா கிலார்ட் இன்று பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார். சட்டவிரோத அகதிகளுக்கான புதிய கொள்கைகளை அறிவித்ததன் மூலம் ஜூலியா கிலார்ட் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தலின் சூட்டைக் குறைப்பதற்கு முயலுகின்றார் என அவர் தெரிவித்தார். இலங்கை அகதிகளின் புகலிட விண்ணப்பங்களை ஏற்பதை ஆத்திரேலியா இடைநிறுத்தம் ஏப்ரல் 10, 2010 கொமரோவ்ஸ்கியின் வெற்றி மூலம் நாட்டில் பிரதமரும், அரசுத் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக வந்திருக்கின்றனர். இதனால் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரத் தன்மை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர். இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார் ஏப்ரல் 10, 2010 அலுவலகப் பணியாளர்கள் தமது வீட்டில் இருந்தே அன்றாடப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஐநா அலுவலகம் பணித்துள்ளது. சில முக்கிய அதிகாரிகள் மட்டும் அலுவலகத்தில் தங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஐக்கிய நாடுகள் உதவி நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று புதன்கிழ்மை அன்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதோடு, பான் கி மூனின் கொடும்பாவியையும் எரித்தனர். "பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என வீரவன்ச தெரிவித்தார். "இன்று எமக்கு ஒரு மறுமொழி வேண்டும். இல்லையேல் நாளை முதல் எமது பிரதிநிதி ஒருவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்குவார்." போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்ததை இலங்கை அரசு மறுத்திருக்கிறது. ஆனாலும் சில நாடுகள் மற்றும் அமைப்புகள் தம்மிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் வெளியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பான் கீ மூனினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை கலைக்கும் வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். 38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனையை தம்மகத்தே வைத்திருக்கிறார். பன்னாட்டுக் கிரிக்கெட்டில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 1000 விக்கெட்டுகளூக்கும் மேல் கைப்பற்றிய ஒரே சர்வதேச பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் தனக்கு இனிமேல் விளையாட முடியாத ஒன்றாகி விட்டதென்று கூறிய முரளிதரன், அதற்கான உடல் வலு தன்னிடம் இனிமேல் இருப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். முரளிதரன் 337 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 515 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த ஆண்டு வரை சில ஒரு-நாள் போட்டிகளில் விளையாடவிருப்பதாக அவர் தெரிவித்தார். முத்தையா முரளிதரன் ஏப்ரல் 17, 1972, கண்டியில் பிறந்தார். பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 ல் தமிழ்நாடு சென்னையில் மலர் மருத்துவமனை அதிபர் மகள் மதிமலர் ராமானுதியை திருமணம் செய்துகொண்டார். முரளிதரனின் 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது பந்து வீச்சு குறித்து பல விமரிசனங்கள் எழும்பியிருந்தன. இதனால அவர் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒரு சில ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது. ஆனாலும், பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் அவரது கையசைவு குறித்து பல பரிசோதனகளை மேற்கொண்டு அவரது பந்து வீச்சில் எவ்விதக் குழப்பமும் இல்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தது. உருகுவே நட்சத்திர வீரர் சாரஸ் காலிறுதிப் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி தலைவர் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். மைதானத்தின் இடது பக்கத்தில் இருந்து இடது காலால் அடிக்கப்பட்ட பந்து 30 அடி தொலைவை மிக வேகத்தில் கடந்து கோல்கம்பத்துக்குள் புகுந்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் புரோன்காஸ்ட் அடித்த முதல் கோல் இதுதான். ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார் உருகுவே தலைவர் போர்லான். சுமார் 25 அடி தொலைவில் இருந்து இவரால் உதைக்கப்பட்ட பந்து ஜபுலானி நெதர்லாந்து கோல்கீப்பர் கைக்குள் சிக்காமல் வளைந்து சென்று வலைக்குள் வீழ்ந்தது. 70ஆவது நிமிடத்தில் ஸ்னைடர் நெதர்லாந்துக்கான 2ஆவது கோலை அடித்தார். அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆர்ஜான் ராபன் 3ஆவது கோலை அடித்தார். டர்த் குயித் கொடுத்த பந்தை தலையால் முட்டி ராபன் கோலாக மாற்றினார். இதனால் நெதர்லாந்து 3-1 என்று முன்னிலை பெற்றது. இறுதியில் 92ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் பெரைரா ஒரு கோல் அடித்தார். அதோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நெதர்லாந்து அணி இறுதியாட்டத்தில் விளையாடப்போவது இதுவே முதற் தடவையாகும். மற்றொரு அரையிறுதிப் போட்டி ஜெர்மனி ஸ்பெயின் அணிகளுக்கிடையே இன்று இடம்பெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூலை 11 இல் இடம்பெறும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்து ஆடும். ஸ்பெயின் முதற் தடவையாக நேற்று உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியொன்றில் விளையாடியது. இதனால் அவர்களது ஆதரவாளர்களுக்கு பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது. நேற்றைய ஆட்டம் முழுக்க முழுக்க ஸ்பெயின் வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் பத்துக்கும் அதிகமான கோல் வாய்ப்புகளைத் தவறவிட்ட போதும், ஜெர்மனி வீரர்களுக்கு கோலடிக்க எந்த வாய்ப்பும் தரவில்லை. முற்பாதி ஆட்டம் கோல் எதுவும் போடப்படாமல் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பல கோல் வாய்ப்புகளை ஸ்பெயின் வீரர்கள் தவறவிட்டனர். ஜெர்மனியின் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு அற்புதமாகப் பயன்படுத்தி, ஸ்பெயின் வீரர் பயோல் தலையால் முட்டி கோலடித்தார். இதன் பிறகு ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எனினும் கோலடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை ஸ்பெயின் மக்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினார்கள். வான வேடிக்கைகள், பாடல்கள், நடனம் மூலமும் அவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் முன்னொருபோதும் உலகக்கோப்பையை வென்றதில்லை. அத்துடன், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய அணிகள் மோதுவதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நடமாட்டமற்ற அக்காட்டுப் பகுதியில் அண்மைக் காலமாக இரவு நேரங்களில் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கிடைத்த தகவல்களின் பேரில் வாகரை பிரதேச செயலாளர் திருமதி ஆர். ராகுலநாயகி உட்பட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றிருந்த போதே இக்கட்டிட இடிபாடு எச்சங்களும், தொல் பொருள் ஆய்வுக்குரிய தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு தாம் சென்றிருந்த போது சட்ட விரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அல்லது புதையல் தோண்டிய அடையாளங்களையும் காண முடிந்ததாக வாகரைப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். புத்த பிக்குகள் கொஞ்சப் பேர் இக்கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அண்மைய நாட்களில் புதையல்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 1856 ம் ஆண்டு பிரித்தானிய ஆய்வாளர் ஒருவரால் எழுதப்பட்ட மட்டக்களப்பு தொடக்கம் சிலாபம் வரையிலான பயணக் கட்டுரையில்; இந்தப் பகுதியில் 'வன்னிச்சியார்'என்ற ராணி ஆண்ட அரண்மனை இருந்ததாக் குறிப்பிட்டிருக்கின்றார். என்றாலும் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொல்பொருள் ஆய்வாளர் அறிக்கை கிடைத்த பின்னரே இது பற்றிய இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும் என்றும் வாகரைப் பிரதேச செயலாளர் கூறினார். இதனை அடுத்து கொழும்பில் இருந்து புதைபொருள் ஆராய்ச்சியாளர் நளீன் வீரதுங்க தலைமையிலான 20 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு சென்று ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் போது, 17ம் நூற்றாண்டுக்கு உரியவை என்று கருதப்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காலப்பகுதிக்குரிய கட்டிடங்கள், பாரிய மதில் சுவர்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஏனையோர் அடுத்த இரு மாதங்களில் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த முடிவின் மூலம் கியூபா ஒரு புதிய தசாப்தத்தினுள் நுழைந்திருக்கின்றது என ஸ்பெயினின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிகுவேல் மரட்டீனோஸ் தெரிவித்தார். கடந்த பெப்ரவரியில் அரசியல் கைதி ஒர்லாண்டோ தமாயோ உண்ணாநோன்பிருந்து இரந்ததை அடுத்து அவர்களை விடுவிக்க வேண்டும் என கியூபா அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இவர்களை அரசியல் கைதிகளாக கியூபா அரசு எப்போது அறிவித்திருக்கவில்லை. அவர்கள் அன்றைய அமெரிக அரசினால் அனுப்பப்பட்ட கைக்கூலிகள் என அவர்கள் தெரிவித்து வந்துள்ளனர். இந்த 52 பேர் விடுதலையானவுடன் அங்குள்ள அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 110 ஆகக் குறையும் என கியூபாவின் மனித உரிமை பேணும் அமைப்பு தெரிவித்துள்ளது. "இந்த விடுவிப்பை அடுத்து கியூபாவின் மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என நாம் நம்பவில்லை என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். கடைசியாக 1998 ஆம் ஆண்டில் பாப்பாண்டவரின் வருகையை முன்னிட்டு கியூபா 101 அரசியல் கைதிகளை விடுவித்திருந்தது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிடெல் காஸ்ட்ரோ 3,600 பேரை விடுவித்திருந்தார். "தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம் என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்விமானம் காலை 0900 (0700 GMT) மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்னில் இருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள பேயேர்ன் விமானநிலையத்தில் தரையிறங்கியது. சராசரியாக 25 மைல்/மணி வேகத்தில் 8,700 மீட்டர் உயரம் இவ்விமானம் இச்சோதனைப் பறப்பில் பறந்துள்ளது. விமானி மூலம் இயக்கப்பட்ட சூரிய ஆற்றலுடன் கூடிய விமானம் ஒன்று இவ்வளவு உயரம் பறந்ததும் இதுவே முதற் தடவையாகும். சுவிஸ் விமானப் படையின் முன்னாள் போர் விமானியான அந்திரே போர்சுபேர்க் என்பவரே இவ்விமானத்தை ஓட்டிச் சென்றார் 40 ஆண்டுகளாக நான் விமானியாகப் பணியாற்றுகிறேன். இந்த சோதனைப் பறப்பில் கலந்து கொண்டது எனது பணிக்காலத்தில் நான் பெற்ற அதிஉயர் சாதனையாக நான் கருதுகிறேன். மின்கலங்களில் ஆற்றல் அதிகரிப்பதை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். சுர்ரியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். எரிபொருள் எதுவுமின்றி, சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் 26 மணி நேரம் நான் வானில் பறந்திருக்கிறேன் என்றார் அந்திரே போர்சுபேர்க். இவ்விமானம் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல வல்லது. இதன் இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க 12,000 சூரியக் கலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கரிம இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை ஒரு மோட்டார் வண்டியின் எடையே ஆயினும், இதனுடைய இறக்கைகள் அறுபது மீட்டர்கள் நீளமுடையவை. இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ. எனினும், இப்பயணத்தின் போது சில பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது 17 மணி நேரப் பயணத்தின் பின்னர் சில பிரச்சினைகளை அந்திரே எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு முதுகுவலி ஏற்பட்டதாகவும், விமானி அறையில் மிகவும் குளிராக 20 பாகை செல்சியசு) இருந்ததாகவும் குறைப்பட்டுக் கொண்டார். குடிநீர் இதனால் உறைந்து விட்டதாகவும், அவரது ஐ-பொட் இயங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது." "தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது என சூரியத் தூண்டல் solar impulse என்ற இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு வளிமக்கூடு மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாநோன்புப் போராட்டத்துக்கு பல பௌத்த பிக்குகள் ஆதரவும் ஆசியும் வழங்கியுள்ளனர். அவர் போராட்டம் மேற்கொண்டிருக்கும் இடத்துக்கு அருகில், பான் கி மூனின் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு அதன் கீழ் அவரை அவமதிக்கும் வகையில் தகாத வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், ஐநாவின் நிபுணர் குழுவில் இருக்கும் மூவரின் படங்களும் இதே போல அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டு, அதற்கு கீழ் “மூன்று முட்டாள்கள்” என்கிற வாசகம் எழுத்தப்பட்டுள்ளது என பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். "இலங்கை அரசு தனது கடப்பாடுகளை உணர்ந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐநா தலைமைச் செயலர் சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. இன்றைக்குள் இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்படும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் நேற்று நீல் புனேயுடன் பேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு ஐநா அலுவலகம் முன்னால் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் ஜூலை 7, 2010 இக்கருங்குழியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த வாயுக் குமிழி மேலும் விரிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருங்குழிகள் பொதுவாக விண்பொருள் ஒன்றை விழுங்கும் போது பெருமளவு ஆற்றலை வெளிவிடுகின்றன. இவற்றில் பெருமளவு ஆற்றல் எக்ஸ்-கதிர்வீச்சாக வெளிப்படுகிறது. அதிக வீச்சுடன் வளிமத் துணிக்கைகளை வெளிவிடும் கருங்குழிகள் "மைக்ரோகுவாசார்கள் Microquasars என அழைக்கப்படுகின்றன. அமெரிக்க நீதிமன்ற விசாரணையின் போது "வெளிநாடொன்றுக்காக உளவு பார்த்த" குற்றத்தை இந்த 10 இரசியர்களும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். இதே வேளையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 5 ஆண்களும் 5 பெண்களும் நியூயோர்க்கிலிருந்து புறப்பட்ட விமானமொன்றில் அனுப்பிவைக்கப்பட்டு, வியன்னாவில் வைத்து உருசிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்கள் பின்னர் மாஸ்கோவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ;குறிப்பு: இது ஒரு மொழியி இணைப்புக்கு பின்னதாக இணைகப்படல் விரும்பத்தக்கதாகும். மோஹ்மண்ட் என்ற பழங்குடியினர் வாழும் பிரதேசத்தில் யாக்ககுண்ட் என்ற கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இந்த இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் வீடுகள், கடைகள், அரசாங்கக் கட்டடங்கள் பல சேதமடைந்தன. அன்பார் உத்மான்கெல் என்ற பழங்குடியினரிடையேயுள்ள தலிபான்களுக்கு எதிரான தலைவர்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையே தாம் குறி வைத்ததாக தலிபான்களின் உள்ளூர் பேச்சாளர் இக்ராமுல்லா மொஹ்மாண்ட் தெரிவித்தார். ஒரு தற்கொலைதாரி மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றவர் வெடிமருந்து நிரப்பிய வாகனம் ஒன்றில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பில் அருகில் இருந்த சிறைச்சாலை ஒன்று சேதமடைந்ததால் 28 சிறைக்கைதிகள் தப்பித்தனர் என்றும், அவர்கள் எவரும் போராளிகள் அல்லர் எனவும் ரசூல் கான் என்ற அதிகாரி தெரிவித்தார். 80 கடைகள் சேதமடைந்துள்ளன. இராசதந்திர ரீதியில் பலனளிக்காத, வெறும் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாகவே அமைச்சரின் இந்த போராட்டம் பலராலும் பார்க்கப்படுகிறது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தமது படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மிகக்கடுமையாகவே மறுக்கும் அரசாங்கம் கடந்த கால யுத்தத்திலிருந்து பெற்ற படிப்பினைகளை ஆராயும் விதத்தில் தனது சொந்த நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளதாக கூறுகிறது. உருசியா உட்பட இலங்கை அரசாங்கத்தின் நட்பு நாடுகள் சில இந்த போக்கை ஆதரிக்கின்றன. அரசுத்தலைவரிடம் பின்வரும் நான்கு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தே போராட்டம் கைவிடப்பட்டதாக விமல் வீரவன்சவின் ஐக்கிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது: # ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணவர்கள் குழு எந்த காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. # அந்த குழு தொடர்பில் விசாரணை நடத்த இலங்கையில் உள்ளநாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். # எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது. # ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே விமல் வீரவன்சவுக்கு மகிந்த நீரைப்பருக்கி உண்ணாநிலை போராட்டத்தை முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூன்கார் எனப்படும் இந்தப் பழங்குடிகளின் இப்போதைய தலைவர்கள் யாகனின் தலையை இங்கிலாந்தில் இருந்து தருவிப்பதற்குப் பல தசாப்தங்களாக முயற்சித்து 1997 ஆம் ஆண்டில் வெற்றியடைந்தனர். யாகனின் தலை கிளறி எடுக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்படட்து. இப்போது அது பேர்த்தில் உள்ள நினைவுப் பூங்கா ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யாகனின் உடலின் ஏனைய பகுதிகள் அந்தப் பூங்காவின் ஓரிடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. "(அவர்) தனது மக்களின் தலைவர், தனது நம்பிக்கைகளுக்காகப் போரிட்டவர். தான் சரியென நம்பிய ஒரு போராட்டத்தில் தனது உயிரைத் தியாகக் செய்தார் என மேற்கு ஆஸ்திரேலிய பழங்குடியினர் அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆதிக்கவாதிகளுடனான நூன்கார் பழங்குடிகளின் போரில் பல குடியேறிகள் யாகனால் கொல்லப்பட்டனர். "யாகன் இப்போது பெரும் மதிப்போடு அடக்கம் செய்யப்பட்டதில் நாம் அனைவரும் பெருமை அடைகிறோம் என யாகனின் தலையை எடுத்து வருவதற்காக இங்கிலாந்து சென்ற நூன்கார் பழங்குடிகளின் பேச்சாளர் ரிச்சார்ட் வில்க்ஸ் தெரிவித்தார். ஆட்ட முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதுவே ஸ்பெயின் அணி கைப்பற்றிய முதலாவது உலகக்கோப்பையாகும். நெதர்லாந்து அணியின் ஜான் கட்டிங்கா இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். இதனால் கடைசி நிமிடங்களில் நெதர்லாந்து அணி 10 பேருடன் மட்டுமே விளையாடியது. இறுதி ஆட்டத்தில் 13 பேர் மஞ்சள் அட்டை பெற்றனர். உருகுவே அணியின் டியேகோ ஃவார்லான் இந்த உலகக்கோப்பையில் 5 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தங்க காலணி பரிசாக அளிக்கப்பட்டது. இறுதி போட்டியை நெல்சன் மண்டேலா பார்வையிட்டார். இவரின் கொள்ளுப்பேத்தி விபத்தில் மரணமடைந்ததால் இவர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. உகாண்டாவின் அமைதிப் படையினர் சோமாலியாவில் நிலைகொண்டுள்ளனர். கம்பாலாவில் தாக்குதல் நடத்தப்படும் என அல்-கைதா சார்பு அல்-சபாப் குழுவினர் முன்னர் பல தடவை எச்சரித்திருந்தனர். சோமாலியாவின் இடைக்கால அரசின் பாதுகாப்புக்காக ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் 5,000 பேர் மொகதிசுவில் உள்ளனர். உகாண்டாவின் அரசுத்தலைவர் யொவேரி முசெவேனி இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். எனினும் மொகதிசுவில் தமது பணிகளைத் தாம் நிறைவேற்றியே தீருவோம் என சூளுரைத்தார். 1960களில் இருந்து போராடி வரும் பார்க் போராளிகளுக்கு இத்தாக்குதல் ஒரு பெரும் பின்னடைவு என்று கொலம்பியாவின் இராணுவப் படைத்தலைவர் தெரிவித்தார். போராளிகளுக்கும், படையினருக்கும் இடையே இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கொலம்பிய அரசுத் தலைவர் அல்வேரோ உரிபே இராணுவத்தினரின் வெற்றிகரமான அதிரடித் தாக்குதலுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். "மகாலி என்ற பெண் போராளித் தலைவர் உயிரிழந்ததை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். முன்னர் 70 படையினர் வரையில் கொல்லப்பட்டமைக்கு இவரே காரணகர்த்தா என அவர் தெரிவித்தார். மகாலி கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படை இயக்கத் தலைவரின் நெருங்கிய நண்பியாகவும் பார்க் இயக்கத்தின் ஒரு பிரிவின் தளபதியாகவும் விளங்கினார். அல்போன்சோ கேனோ எனவும் அழைக்கப்படும் பார்க் தலைவர் கொலெமோ சயென்ஸ் ஞாயிறன்று தாக்குதல் நடந்த இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹுவான் மனுவேல் சாண்டோஸ் அடுத்த மாதம் பதவியேற்கும் நிலையில் இத்தாக்குதல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்க் அமைப்பில் ஏறத்தாழ 8,000 போராளிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றங்களுக்காக இவர் மீது முன்னர் வழக்குப் பதிவாகியிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்திருந்தார். கடந்த 2009 மார்ச் மாதத்தில் முதற் தடவையாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இவர் மீது பிடியாணை பிறப்பித்திருந்தது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. புதிய குற்றச்சாட்டுகக்ள் குறித்து பசீரின் கட்சி உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இது அபத்தமானது என்றார். ஆனால் மேற்கு தார்பூர் பகுதியில் இயங்கும் போராளை அமைப்புகள் இதனைப் பெரும் "வெற்றி"யாக அறிவித்துள்ளனர். ஏழாண்டுகளாக இடம்பெற்ற போரில் 300,000 பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுத்தலைவர் பசீரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களுக்காக சூடான் அதிபரைக் கைது செய்ய ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு ஜூலை 4, 2009 பிஜிக்கான ஆஸ்திரேலியாவின் பதில் தூதுவர் சேரா ரொபேர்ட்ஸ் இன்று தலைநகர் சுவாவில் இருந்த தனது குடும்பத்தினருடன் வெளியேறினார். பிஜியில் மக்களாட்சிக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த அண்மையில் ஆஸ்திரேலியா கோரியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு இராணுவ ஆட்சியில் இருந்து வருகிறது. பிஜியின் இராணுவத் தலைவர் பிராங்க் பைனிமராமா நியூசிலாந்து வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது குறித்து ஆஸ்திரேலியாவை நேரடியாகக் குறை கூறினார். 2014 ஆம் ஆண்டில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட மக்களாட்சிக்கான பொதுத்தேர்தல்களை இரத்துச் செய்ய தாம் கடுமையாக யோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டுப் புரட்சியை அடுத்து, பொதுநலவாய அமைப்பு, மற்றும் 16 பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து அந்நாடு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்படப் பல நாடுகள் அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. 1977ம் ஆண்டில் அமெரிக்காவில் 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்காவில் பொலான்ஸ்கி மீது குற்றம் சுமத்தப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் இவருக்கு 42 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு மேலும் நீண்ட சிறைத்தண்டனை வழங்கப்படவிருக்கிறது என்று வதந்தி கிளம்பியதை அடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. ஆஸ்கார் விருது பெற்ற 76 வயதான பொலான்ஸ்கி கடந்த செப்டம்பர் மாதம் திரைப்பட விழா ஒன்றிற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த வேளையில் அங்கு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாடு கடத்துவதற்கு ஏற்ற காரணங்களை அமெரிக்கா முன்வைக்கத் தவறி விட்டது என சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அறிவித்துள்ளது. போலான்ஸ்கி குறித்த இரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதியளிக்காத காரணத்தினால் சுவிட்சர்லாந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதில்லை என்ற சுவிட்சர்லாந்தின் தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. போலான்ஸ்கியை நாடு கடத்துமாறு நாம் தொடர்ந்து கோரி வருவோம் என அமெரிக்க அரசுத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனாலும் அமெரிக்கா மேன்முறையீடு செய்ய முடியாது என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. வரும் செப்டம்பர் மாதம் மேலவையில் ஒப்புதல் பெற்ற பிறகு அது சட்டமாக்கப்படும். பொது இடங்களில் முஸ்லிம்கள் முகத்திரை அணிவதற்குத் தடை விதிக்கும் சட்டத்துக்கு பொது மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருந்தாலும் பிரான்சில் முஸ்லிம்களில் வெகு சிலரே முழு முகத்திரை அணிகின்றனர் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ் நாட்டவர்களின் தனி அடையாளம் பற்றிய விரிவான விவாதத்துக்குப் பிறகு அதிபர் நிக்கோலா சர்கோசி தடைக்கு ஆதரவு தெரிவித்தார். வாக்களிப்புக்குப் பிறகு பேசிய நீதி அமைச்சர் மிஷெல் அலியோட்-மேரி மக்களாட்சிக்கும் பிரெஞ்சுப் பண்புகளுக்கும் கிடைத்த வெற்றி என்றார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கிளிநொச்சியில் தமது அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளதன் மூலம், நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தில் உள்ளது என்பதையும், பிரிவினைவாத நாட்கள் ஒழிந்து விட்டன என்பதையும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது என்று கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹாவிலண்ட் தெரிவித்தார். கிளிநொச்சியில் உள்ள வன்னி இராணுவத் தலைமையகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. வடக்குப் பகுதியில் எரிபொருளின் விலையைக் குறைக்க அமைச்சரைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டம் 12:30 மணிக்கு முடிவடைந்தது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். குறிப்பாக வட மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார். பிரதமர் தி.மு.ஜயரட்ன உட்பட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து சொகுசு தொடருந்துகள் மூலம் இரணைமடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து வடமாகாண அரச அதிகாரிகள் பங்கு பற்றும் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெற்றது. வட இலங்கையில் நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கும் என இந்தக் கூட்டத்தில் அரசு உறுதி செய்தது. இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்த வடக்கு பகுதி மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை நிகரற்ற வேகத்தில் செய்தது, அரச அதிகாரிகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடபகுதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் கூறினாலும், அங்கு நிரந்தர இராணுவ முகாம்கள் இருக்கும் என்கிற செய்தி அவர்களை கவலையடைச் செய்துள்ளது என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் முகாம்கள் வடபகுதியில் நிரந்தரமாக அமையும் போது அவர்களுக்கான புதிய வீடுகளும் அமைக்கப்படும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சிஸ்டான் பலுச்சிஸ்தான் மாகாணத் தலைநகரான சாகிடான் என்ற நகரில் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றின் வெளியே அமைந்திருந்த காவல் அரணின் முன்னால் முதலாவது தற்கொலைதாரி தனது குண்டை வெடிக்க வைத்தார். சிறிது நேரத்தில் இன்னும் ஒரு குண்டு வெடிக்கவைக்கப்படடது. முதலாவது தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவ முன் வந்தோரே இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் அண்மையில் உகாண்டா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களும், இன்றைய ஈரான் தாக்குதலும் பயங்கரவாத இயக்கங்களுக்கெதிராக உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன என்றார் இலறி கிளிண்டன். ஈரானில் சுணி இசுலாமியத் தலைவர் தூக்கிலிடப்பட்டார் ஜூன் 21, 2010 அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்படுகிறது. புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரியுமான டி.உதயகுமார் ஆவார். இந்தப் புதிய குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி நேற்று தெரிவித்தார். "புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது நாணயங்களில் அச்சிடப்படும் என்று தெரிவித்த அம்பிகா சோனி, அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் உலகளாவிய அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்று அம்பிகா சோனி கூறினார். புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், கணினிப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில், கணினியின் விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரூபாய்க்கான அடையாள குறியீடாக தனது படைப்பு தேர்வானது குறித்து உதயகுமா‌ர் கூறுகையில் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன் என்றார். சிறு வயதிலேயே கருநாடக் இசையில் நாட்டம் கொண்டிருந்த சுப்பிரமணியம், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், டைகர் வரதாச்சாரியார், தஞ்சை பொன்னையா பிள்ளை போன்றோரிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் அண்ணாமலை இசைக் கல்லூரியில் சேர்ந்து சங்கீத பூசணம் பட்டத்தைப் பெற்றார். 1940 முதல் 1944வரையும், பின்னர் 1952 முதல் 1995 வரையிலும் புதுதில்லியில் உள்ள சண்முகானந்தா சங்கீத சபையில் மாணவர்களுக்கு கருநாடக இசையைப் பயிற்றுவித்தார். ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமர் கிலார்ட் இத்தேர்தல் மிகவும் கஷ்டமானதும் நெருக்கமானதாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார். இம்முறை பொருளாதாரம், சுகாதாரம், காலநிலை மாற்றம், மற்றும் குடிவரவு போன்ற பிரச்சினைகளில் ஆளும் தொழிற் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக் கூட்டணியும் முக்கியமாகக் கவனம் செலுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். அண்மைய கருத்துக் கணிப்புகளின் படி, தொழிற் கட்சி முன்னணியில் நிற்கிறது. எனவே தொழிற்கட்சி இரண்டாவது முறையும் வெற்றி பெறும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் சென்ற வாரம் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ இதில் அந்த இயக்கத்தின் தலைவரும்,​​ இயக்குநருமான சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் ​பேசியதாகக் கூறி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுப் பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீமானிடம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சென்னைக் காவல்துறையினர் இன்று வழங்கினர். தேசிய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீமானின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறி, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153&ஏ, 13 (1 பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 2009-ல், திருநெல்வேயில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ல் ‌இய‌க்குன‌ர் சீமா‌ன் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. நேற்று சனிக்கிழமை அதிகாலையில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. 10 வீடுகள் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் கிறித்தவ மதகுரு ஒருவரின் குடும்பத்தினரும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜோஸ் நகரில் உள்ள மசா என்ற கிராமத்தில் நூகு டவாட் என்ற கிறித்தவ மதகுருவின் மனைஇவி, இரண்டு பிள்ளைகள், மற்றும் ஒரு பேரப் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டனர். மதகுரு தாக்குதலில் உயிர் பிழைத்தார் நான் அனைத்தையும் நீதிக்காக கடவுளிடம் சமர்ப்பிக்கிறேன் என அவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். இவ்வன்முறை ஏனைய கிராமங்களுக்குப் பரவவில்லை என மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி கிரெகரி அன்யாட்டிங் தெரிவித்தார் இவ்வன்முறைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது குறித்து நாம் ஆரரய்ந்து வருகிறோம்." நைஜீரியாவில் 2001, 2008, 2001 ஆம் ஆண்டுகளில் ஹவுசா இசுலாமியர்களுக்கும், பெரோம் கிறித்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மத வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் 500 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இவ்வன்முறைகள் பொதுவாக முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தாலும், அரசியல், மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளே அடிப்படைக் காரணம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கு பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் இங்கு மேலும் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளது என அவதானிகள் தெரிவிக்கின்றனர். நைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு மார்ச் 8, 2010 பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டீவன் ஹூஸ்டன் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கிபி 350 முதல் 400 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த இக்கல்லறை எல் போட்ஸ் என்ற நகரில் உள்ள எல் டயபுலோ பிரமிதின் கீழே உள்ளது. இது கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 15 வியாழக்கிழமை அன்று குவாத்தமாலா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. "கல்லறை வைக்கப்பட்டிருந்த அறையை நாம் திறந்த போது, எனது தலையை உள்ளே நுழைத்துப் பார்த்தது நான் ஆச்சரியமடைந்தேன். அங்கு நறுமணம் வீசியது, கடும் குளிராகவும் இருந்தது ஹூஸ்டன் கூறினார் காற்று, மற்றும் சிறிதளவு நீர் கூடச் செல்லாமல் கல்லறை அடைக்கப்பட்டிருந்தது கல்லறை மட்டும் 6 அடி உயரமும், 12 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டது. இக்கல்லறையில் இருந்த உடல் வயது போன ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை. ஆறு சிறுவர்களின் எலும்புகள் அங்கு காணப்பட்டன. இவற்றில் இரண்டு முழுமையானதாக இருந்தது. "கல்லறையின் அமைப்பைப் பார்த்தால், இது மாயன் நாகரீகத்தின் நிறுவனருடையதாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம் என்றார் ஸ்டீவன் ஹூஸ்டன். "இது குறித்து இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. அரச குடும்பத்துக் கல்லறைகள் நிறைய விபரன்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து அறியப் பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கும் என்றார் அவர். இன்று மேற்கு வங்கத்தில் சாயிந்தியா என்ற தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு தொடருந்துடன் வேகமாக வந்த வேறொரு தொடருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்தமைக்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை. இடிபாடுகளிடையே அகப்பட்டிருந்த பொது மக்களை அவசர மீட்புப் பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் மீட்டனர். இவ்விபத்து இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 0200 மணிக்கு இடம்பெற்றது. உத்தர் பங்கா விரைவு வண்டி பகல்பூர்-வனஞ்சல் விரைவு வண்டியுடம் மோதியது. மோதிய வேகத்தில் தொடருந்துப் பெட்டிகள் சின்னாபின்னமாக சிதறிப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக விழுந்துள்ளன. சில பெட்டிகள் தொடருந்து நிலையத்தில் இருந்த நடை பாலம் மீது போய் மோதி நின்றது. பல பெட்டிகள் வாயு உடைப்பி மூலம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த நிலையில் இருந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டனர். இடிபாடுகளிடையே அகப்பட்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மோதிய வண்டி அந்த நிலையத்தில் நிற்க வேண்டியிருந்தாலும், அது மிகுந்த வேகத்தில் அங்கு வந்தது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இது இவ்வாண்டு மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய தொடருந்து விபத்தாகும். கடந்த மே மாதத்தில் மும்பாய் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் தொடருந்து சரக்கு வண்டியுடன் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார். ஜே.இ.எம் JEM) என அழைக்கப்படும் நீதி மற்றும் சமத்துவ இயக்கப் போராளிகளுடன் இடம்பெற்ற இந்தச் சமர்களில் மேலும் 86 போராளிகளைத் தாம் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அல்-தாயெப் அல்-முஸ்பா ஒஸ்மான் தெரிவித்தார். இராணுவத்தினர் கூடுதலாக உயிரிழந்த மோதல் சம்பவம் இதுவென அவர் தெரிவித்தார். போராளிகள் வாகனங்கள் பல அழிக்கப்பட்டன. போராளிகள் அமைப்பு இராணுவத்தினரின் கூற்றை மறுத்துள்ளனர். தாம் இராணுவத்தினரின் தாக்குதலை முறியடித்ததாகவும் இராணுவத்தினருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கனக்கான போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். ஆனால் 10 ஆயிரம் பேரே இறந்துள்ளதாக சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கொலைக் குற்றச்சாட்டில் சூடான் அரசுத்தலைவர் ஒமர் அல் பஷீருக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஜே.ஈ.எம். அமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை. சூடான் அரபு அரசாங்கத்துக்கெதிராக தார்புரிலுள்ள சிறுபான்மையினர் போரில் இறங்கியுள்ளனர். பெரியநீலாவணை முதல் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வரையான வீதிகள் வாழை மரங்களாலும் தென்னை ஓலைகளினாலும் சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற நிறங்களிலான கொடிகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தமிழ் செம்மொழி விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயச் சந்தியில் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். பெரிய நீலாவனையிலிருந்து இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவ மாணவியரின் ஊர்வலத்துடன் அழைத்து வரப்பட்ட அதிதிகள் காரைதீவில் உள்ள வித்தக மாமுனி விபுலானந்த அடிகள் பிறந்த வீட்டிற்குச் சென்று அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் பிறந்த வீடு, மற்றும் மணி மண்டபம் முதலானவற்றையும் பார்வையிட்டனர். நிகழ்வில் பேராளர்கள், பேராசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். கலாநிதி ந. நடராசாவின் "விபுலானந்த பொன்மொழிகள்" என்ற நூலும், கலாநிதி இ. பாலசுந்தரத்தின் "விபுலானந்தம்" என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன. 2010 தமிழ் மொழித்தின விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. ''Once A Jolly Hangman: Singapore Justice in the Dock என்பது அலன் சாட்றேக் எழுதிய புத்தகத்தின் பெயராகும். கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் அவர் தனது புத்தகத்தை வெளியிட்டார். நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டரை வருடங்கள் வரை சிறைத் தண்டனைக்கு வழி செய்யும் குற்றவியல் அவதூறு குறித்த புலன்விசாரணையின் ஒருபகுதியாக 75 வயதான அலன் சாண்ட்றேக் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தாம் அவரது புத்தகத்தை தடை செய்யவில்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் அரசாங்கம், அதனை வைத்திருக்காதீர்கள் என்று கடைக்காரர்களிடம் சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது என்றும் கூறுகிறது. இப்புத்தகம் சிங்கப்பூரின் நீதித்துறையின் பக்கசார்பின்மை, நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சிங்கப்பூரின் சட்டமா அதிபர் அலுவலகம் கூறுகிறது. பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் சாங்கி சிறையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவராக பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள தார்சன் சிங் என்பவரது நேர்காணலையும் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் பேட்டிகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக காவல்துறையினரால் கூறப்படுகின்ற குற்றவியல் அவதூறு புலனாய்வுகளுடன், நீதிமன்ற அவமரியாதை குறித்த குற்றச்சாட்டுக்களையும் இணைக்க சட்டமா அதிபர் அலுவலகம் விரும்புகிறது. கொலை, தேசத்துரோகம், போதை மருந்து கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது சிங்கப்பூரில் கட்டாயமானதாகும். குற்றங்களின் வீதத்தை குறைவாகப் பேணுவதற்கு அது மிகவும் அவசியம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஹூட்டிப் போராளிகள் வசமுள்ள வடக்கு மாகாணமான அம்ரனில் அரசு சார்பு பழங்குடியினர் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து அங்கு சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12 போராளிகளும் 21 பழங்குடியினரும் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்துக்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான மோதல் இதுவாகும். அண்மையில்ல் ஆளும் கட்சிக்கும் முக்கிய எதிர்க்கட்சிக்கும் இடையில் கையெழுத்தான உடன்படிக்கையைத் தாம் ஆதரிப்பதாக ஹூட்டு போராளிகள் அமைப்பு கடந்த திங்களன்று கூறியிருந்தது. 2004 ஆம் ஆண்டில் இருந்து கடந்த பெப்ரவரி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இத்தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. இலங்கையின் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவ்விலங்கின் வாழ்விடம் சுருங்கி அற்றுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். மேலும் தற்சமயம் இவற்றின் இயற்கை உயிர்த்தொகை நூற்றிற்கும் குறைவானதாகவே இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர் இந்த சாதனையை பெறுவதற்காக 800 வது விக்கெட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது அவர் விளையாடுகின்ற 133 வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியாகும். இப்போட்டியில் அவர் மொத்தம் எட்டு இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரணமாக விளையாட்டு நடைபெறாத போதிலும் 3ம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இறுதிநாளான இன்று 338 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததில், இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்று முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான இந்த துடுப்பாட்டப் போட்டிக்குப் பின்னர், தாம் இனிமேல் தேர்வுத் துடுப்பாட்டங்களில் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று முரளிதரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972 இல் கண்டியில் முரளிதரன் பிறந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார். இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். முரளிதரன் இது வரை 132 தேர்வுப் போட்டிகளை ஆடி உள்ளார். அதே போல் 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 இலக்குகளை வீழ்த்தி உள்ளார். முரளிதரன் இன்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கொசோவோவின் விடுதலைப் பிரகடனத்தை 69 உலக நாடுகள் அங்கீகரித்துள்ள போதும் இவ் வழக்கில் அதனை நிராகரிக்குமாறு சேர்பியா கோரியிருந்தது. பன்னாட்டு நீதிமன்றத்தின் 14 நீதிபதிகளில் 10 பேர் கொசோவோ விடுதலையை சட்டபூர்வமானது என அறிவித்தார்கள். சர்வதேச நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொண்டாலும் தாம் கொசோவோவை எப்போதும் அங்கீகரிக்கப்போவதில்லை என சேர்பியா தெரிவித்துள்ளது. பன்னாட்டு நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பை அடுத்து மேலும் பல நாடுகள் கொசோவோவை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 ஆண்டுகளின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர் 2008 இல் விடுதலைப் பிரகடனம் செய்தனர். கொசோவோ விடுதலைப் பிரகடனத்தின் சட்டபூர்வத் தன்மை குறித்து ஐநா நீதிமன்றத்தில் விசாரணை டிசம்பர் 2, 2009 முப்பரிமாணத்தில் அடுக்கப்பட்ட 60 கரிம அணுக்களை இந்தக் "கரிமப்பந்து கரிமக்கூண்டு) கொண்டுள்ளது. இவ்வணுக்கள் அனைத்தும் அறுகோண, மற்றும் ஐங்கோண வடிவில் ஒன்றோடொன்று பிணைந்து கால்பந்து வடிவில் கூண்டுபோல உள்ளன. "இவை பல வழிகளில் அலைந்து கொண்டும், அதிர்ந்து கொண்டும் குறிப்பிட்ட அலைநீளங்களில் அகச்சிவப்பு infrared ஒளியுடன் இடைத்தாக்கத்தில் ஈடுபட்டுள்ளன என பேராசிரியர் காமி விளக்கினார். அந்தக் குறிப்பிட்ட அலைநீளத்தில் உமிழ்வை தொலைநோக்கியில் அவதானித்த போது விண்ணில் இருந்து மாபெரும் மூலக்கூறுகளில் இருந்து சைகைகளைத் தாம் காண்பதை பேராசிரியர் காமி உணர்ந்தார். "புதிய வகை மூலக்கூறு ஒன்று அங்கு இருப்பதை இது உறுதிப்படுத்தியது என்றார் பேராசிரியர் காமி. பக்கிபந்தைக் கண்டுபிடித்தமைக்காக 1996 இல் நோபல் பரிசு பெற்ற சேர் ஹரி குரோட்டோ இந்தப் புதிய கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ளார் நான் முன்னர் சந்தேகப்பட்டது, இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எமது உடலில் உள்ள கரிமம் அண்டத்தூசியில் இருந்து வந்தவையே. எனவே, இந்தக் கரிமங்களில் சில இந்தக் கரிமப்பந்துகளில் இருந்து வந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார். ஏற்கனவே தெரிந்த பக்கிபோல்களின் இயல்புகளைப் பயன்படுத்தி இதன் மூலம் அண்டத்தில் இயற்பியல், மற்றும் வேதியியல் பகுப்புகளை அறிவதற்கு ஆய்வாளர்கள் தற்போது முயன்று வருகிறார்கள். இந்த வகை கதிர்க்குருவி உலகில் மிகவும் குறைவாக அறியப்பட்ட குருவிகளில் ஒன்றாகும். இவ்வகையில் ஒரேயொரு குருவி மட்டும் 1867 ஆம் ஆண்டு காணப்பட்டது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு வரையில் இவை எங்கும் காணப்படவில்லை. ஆனாலும், இப்போது தஜிகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள இடம் இவ்வகைப் பறவைகளின் இனப்பெருக்கும் பகுதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வுச் செய்திகள் ஏவியன் பயோலொஜி என்ற ஆய்வு இதழில் முதற்தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே பறவை வேறொரு பறவையுடன் தாய்லாந்தின் வேறோர் இடத்தில் காணப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஆய்வாளர் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் 15 பறவைகளைக் கண்டுபிடித்தனர். இவற்றின் டி.என்.ஏ. பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இவை Acrocephalus orinus என்ற வகையைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அங்கு இனப்பெருக்கும் இடம் உள்ளதா என்பது சர்வதேச விதிகளுக்கமைய உறுதிப்படுத்தபடவில்லை. சென்ற ஆண்டு இவைகளைக் கண்டுபிடித்தாலும் இப்போது தான் அவர்கள் அது குறித்தான தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். "எவ்வளவு குருவிகள் வாழ்கின்றன என்ற எண்ணிக்கையை இப்போது எம்மால் கூற முடியாதுள்ளது. இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என ஆய்வாளர் சுவெய்ட்சர் தெரிவித்தார். பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற உரைகளையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்தது. இவர் பிரித்தானியக் கடற்கரையான டோவரைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், அங்கிருந்து பாரிஸ் நோக்கி நடந்து, பின்னர் ஜெனீவா நோக்கிச் செல்ல இருக்கின்றார். இவ்விழாவின் போது இடம்பெற்ற "காதல் உலா love parade என்றழைக்கப்படும் சிறப்பு உலா நிகழ்ச்சிப் பகுதிக்குள் சுரங்க வழியூடாகச் செல்லவிருந்த அளவுக்கதிகமான மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதன்போதே இந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த அசம்பாவிதம் குறித்த விசாரணைகளைக் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மன் அரசுத் தலைவர் அங்கிலா மெர்க்கல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழந்த கவலையைத் தெரிவித்துள்ளார். ஒரு மில்லியன் மக்கள் வரையில் இவ்விழாவில் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது. நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 1700 (1500 GMT) மணிக்கு இந்த அசம்பாவிதம் நேரிட்டது. மேலும் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் விழா உடனடியாக நிறுத்தப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் பல்லாயிரக்கணக்கானோர் மைதானத்தில் கூடியிருந்ததால் விழாவை இடைநிறுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது என நகர பேச்சாளர் பிராங்க் கோப்பாட்செக் தெரிவித்தார். உள்ளிருந்தவர்களுக்கு வெளியே என்ன நடந்ததென்பது தெரியாமலேயே இருந்ததென தெரிவிக்கப்படுகிறது. பிரேசில், உருசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், மற்றும் ஆத்திரேலியா உட்படப் பல உலக நாடுகளிலும் இருந்து இவ்விழாவுக்கு ரசிகர்கள் வந்திருந்தனர். உலா பொதுவாக நகர வீதி வழியே கிட்டத்தட்ட 10 மணி நேரம் இடம்பெறுவது வழக்கம். காணாமல் போனோரைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு $20,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அவர்களது காபுல் தளத்தில் இருந்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக அவர்கள் லோகார் மாகாணத்தில் காணப்பட்டனர். இவர்கள் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் போராளிகளுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2099 ஜூன் மாதத்தில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட போவ் பேர்க்டால் என்னும் போர்வீரர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரைப்பற்றிய காணொளிகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் தாலிபான்கள் வெளியிட்டிருந்தனர். இப்போர்க்குற்ற நீதிமன்றத்தின் முதலாவது தீர்ப்பு இதுவாகும். டூச்சிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு இவருக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனாலும், டூச் சட்டவிரோதமாக சிறையில் முன்னர் அடைக்கப்பட்டிருந்தார் எனக் காரணம் காட்டி நீதிபதிகள் 5 ஆண்டுத் தண்டனையைக் குறைத்தனர். ஏற்கனவே சில ஆண்டுகள் சிறையில் இருந்த காரணத்தினால் இவரது சிறைத்தண்டனை மேலும் 11 ஆண்டுகள் குறைக்கப்பட்டதில் மொத்தம் 19 ஆண்டுகளில் அவர் விடுதலை பெறுவார். இத்தீர்ப்பு நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. 1975 முதல் 1979 வரை கம்போடியாவை ஆட்சி புரிந்த கெமரூச் நிர்வாகம், தமக்கு எதிரானவர்களை டுவோல் சிலெங் சிறையில் அடைத்து வைத்திருந்தது. அதற்குத் தலைமை அதிகாரியாக டூச் பணியாற்றினார். கெமரூச்சின் வீழ்ச்சியை அடுத்து டூச் தலைமறைவானார். பல மாற்றுப் பெயர்களில் வடமேற்கு கம்போடியாவில் வாழ்ந்து வந்த இவர் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். டுவோல் சிலெங் சிறைச்சாலையில் இருந்து பத்திற்கும் குறைவானோரே உயிருடன் திரும்பினர். அவர்களில் மூவர் இன்னும் உயிரோடுள்ளனர். கெமரூச்சின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த நுவோன் சியா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் இயெங் சாரி, அவரது மனைவி இயெங் திரித் ஆகியோர் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கம்போடியாவின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரிக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக் கோரிக்கை நவம்பர் 26, 2009 கெமரூச் சிறைத் தலைவருக்கு எதிரான தீர்ப்பு ஜூலை 26 இல் வழங்கப்படும் மே 25, 2010 உடல்களை அடையாளம் காணும் பணியில் நிபுணர்கள் ஈடுபாட்டுள்ளார்கள். கை, கால்கள் வெட்டப்பட்டு உடல் அவயவங்கள் சித்திரவதைக்குள்ளானமை தெரியவந்துள்ளது. சிலரது உடல்களில் சூட்டுக் காயங்களும் காணப்பட்டுள்ளன. அனைவரது உடல்களும் ஆண்களுடையதாகும். குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்ட இவ்வுடல்கள் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே புதைகுழி இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் 200 பேருக்கும் அதிகமானோர் எல்லப் பகுதிகளில் காணாமல் போயுள்ளனர். மெக்சிக்கோவில் 2006 டிசம்பர் முதல் 25,000 இற்கும் அதிகமானோர் கடத்தல் குழுவினரின் மோதல்களில் உயிரிழந்துள்ளனர். 72 மணி நேரத்திற்குள் கொலம்பிய இராசதந்திரிகள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். கொலம்பியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்க எடுத்த வெனிசுவேலாவின் முடிவை அமெரிக்கா குறை கூறியுள்ளது. முன்னதாக வாசிங்டனில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு ஒன்றில் கொலம்பியத் தூதுவர் பேசும் போது சாவெசின் அரசாங்கம் "பார்க்" தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது என்றும், வெனிசுவேலாவில் அவர்கள் நிலைகொன்டு தமது நாட்டுக்கெதிராகச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்த 30 நாட்களுக்குள் வெனிசுவேலாவில் பார்க் தீவிரவாதிகளின் நிலையை விசாரிக்க பன்னாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதை நிராகரித்த வெனிசுவேலா அரசுத்தலைவர் ஊகோ சாவெஸ் அமெரிக்காவே இவ்வாறான வீண் சந்தேகங்களை பிராந்திய நாடுகளுக்கிடையில் உண்டு பண்ணுகின்றது என்றார். "வெனிசுவேலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயாரென வெனிசூலா ஜனாதிபதி ஊகோ சாவெஸ் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை மாலை 5:10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலி வெலிகமவைச் சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க ரியன்ஸி அல்கம என்பவரே உடலின் 90 சதவீதமான பாகம் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், களுபோவிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் அக்கட்சியின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களையக் கோரியுமே அவர் தீக்குளித்துக் கொண்டதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா தெரிவித்தார். "அல்கம காலையில் என்னுடன் தொடர்பு கொண்டார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்து அவர் பெரும் கவலை கொண்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். ஒற்றுமையை அவர் என்னிடம் வலியுறுத்தினார். இதனாலேயே அவர் தீக்குளித்துக் கொண்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன் என்றார் கரு ஜெயசூரியா. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போருக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை பெற்றுக்கொண்டு மறைமுகமாக தலிபான்களுக்கும் உதவுவதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதில் குறிப்பிட்ட விபரங்கள் எதுவும் உண்மையில்லை என பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இணையத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் ரொய்டர் செய்தியாளர்கள் இருவரை பொதுமக்களுடன் சேர்த்து விமானத்தாக்குதல் மூலம் அமெரிக்கப் படைகள் சுட்டுக்கொல்வதாக கூறப்படும் படங்களும் இருக்கின்றன. தற்கொலைப் படை பயங்கரவாதிகள் எனக் கருதி, அப்பாவிகள் 195 பேரை நேட்டோ படைகள் கொன்றதாகவும், அவர்களது தாக்குதலில் மேலும் 174 பேர் காயம் அடைந்ததாகவும் "விக்கிலீக்ஸ்' தெரிவித்துள்ளது. இதுபோன்று அனுமதி இல்லாமல் ஆவணங்களை வெளியிடுவது, அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டு நாடுகளின் வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கோபத்துடன் குறிப்பிட்டார். எனினும், வெளிப்படையான தன்மை, அதிகபட்சமான ரகசியத்துக்கு எதிராகவே இந்த ஆவணத்தை வெளியிட்டதாகவும், இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகப்பட வேண்டியதில்லை எனவும் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறினார். இந்த ஆவணங்கள் எப்படி விக்கிலீக்ஸ் இணையத்தளத்துச் சென்றது என்பது குறித்த விசாரணைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது. விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி ஏப்ரல் 6, 2010 இலங்கையின் முக்கியமான சிறைச்சாலைகளில் ஒன்றான வெலிக்கடைச் சிறைச்சாலையின் வளாகத்தை அரசு விற்பனையில் இட திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறைச்சாலை முறைமைகளை மறுசீரமைக்கும் பணியின் ஒரு அங்கமாகத் தொடங்கப்படவுள்ளது. கொழும்பு நகரில் 40 ஏக்கர் பரப்பில் உள்ள வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்தை விற்பதன் மூலம் அரசு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பிற்கு பெருமளவில் பணம் கிடைக்கும் என்று நம்புகின்றது. இதே வரிசையில் மகசின் சிறைச்சாலை, யாழ்ப்பாணம் சிறைச்சாலை என்பனவும் வேறு இடங்களிற்கு மாற்றப்படும் என்று புணர்வாழ்வு அமைச்சர் குணசேகர தெரிவித்தார். "ஆப்பிளின் கொள்கை எப்பொழுதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஐபோனுடன் ஒரு பெரும் அனுபவம் கிடைக்கும்படி காத்துவருகிறது. மேலும், இவ்வாறான இயக்கமாற்றல் கடுமையாக அந்த அனுபவத்தை குறைத்துவிடும் என்பதை நாங்கள் அறிவோம்". "நாங்கள் முன்பு சொன்னதைப் போன்று, அனைத்து வாடிக்கையாளர்களும் இது உத்தரவாதத்தை இழப்பதினாலும், சாதனம் சரிவர வேலை செய்யாமல் போகக்கூடும் என்பதினாலும், ஐபோனை இயக்கமாற்றம் செய்யக்கூடாது" என்று அந்த நிறுவனம் திங்களன்று பதில் கூறியது. இயக்கமாற்றல் செயல்முறையினால் வெளி இயக்கமாற்று பயனிகளை நிறுவவும், ஐபோன் திரையை ஒளிப்பதிவு செய்யவும், புளுடூத் வழி கோப்புகளை அனுப்பி பெறவும் இயல்பிறப்பு ஒலி எச்சரிக்கைகள், அறிவிப்புகள் ஆக்கியவற்றை இயலச் செய்யலாம். கல்வி: இளநிலை பட்டம் w:இலத்திரனியல் மற்றும் தொடர்பு பொறியியல் பணிபுரியும் வேலை தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் w:இழைவலுவூட்டு நெகிழி]]க் குழாய்கள் ) மேலும், உங்கள் செய்திகள் அனைத்தும் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளன. பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக் குறித்து ஒரு சில கருத்துக்களை இங்கு தருகிறேன். எடுத்துக்காட்டாக நீங்கள் எழுதியிருந்த பந்தி ஒன்றைக் கீழே தருகிறேன்: //வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது அந்த சுற்றம் டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை மற்றும் தமிழ் நாடு மகாராசுத்திரா மற்றும் கோவா குசராத் கரியானா உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது வசனம் ஒன்றில் நிறுத்தற்புள்ளிக்கும் கடைசிச் சொல்லிற்கும் இடையில் எப்போதும் இடைவெளி வரமாட்டாது. அதேபோல் தான் காற்புள்ளிக்கும் கடைசி சொல்லிற்கும் இடையில் இடைவெளி வராது. இதன் திருத்தம் வருமாறு: //வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது. அந்த சுற்றம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தமிழ் நாடு, மகாராசுத்திரா மற்றும் கோவா, குசராத், கரியானா, உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது குறைந்தது 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிருடன் எவரும் தப்பியிருப்பார்களெனத் தாம் நம்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்று கொண்டிருந்த ஏர்புளூ என்ற பயணிகள் விமானத்தில் 146 பயணிகளும் 6 சிப்பந்திகளும் பயணித்தனர். இன்று காலை உள்ளூர் நேரப்படி 0750 மணிக்கு கராச்சியை விட்டு இது புறப்பட்டது. தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் அதனுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கடுமையான தீப்பிழம்பும், புகைமூட்டமும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆறு பயணிகள் படுகாயங்களுடன் தப்பியதாக தகவல்கள் வந்திருந்தாலும், அத்தகவல் தவாறானதெனப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் பெரு மழை பொழிந்து கொண்டிருப்பதால மீட்புப் பணிகள் மிகத் தாமதமாகவே நடைபெற்று வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விபத்தில் சதி்ச்செயல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் முதற் காற்பருவத்தில் பரந்த 3ஜி சேவைகள் அளிக்கப்படும் என்று அவர் சேர்த்தார். "ஒன்பது சுற்றங்களில் 3 ஜி சேவையை இந்த ஆண்டின் இறுதியில் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். நிறமாலை நிர்ணயிப்பதற்காக காத்திருக்கிறோம். நிறமாலை கிடைத்த உடனே நாங்கள் 3 ஜி சேவையை எவுவதாய் இருக்கிறோம் என்று வோடாபோன் ஏசர் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாட்சி இயக்குனர் மார்டேன் பீட்டர்ஸ் இன்று செய்தியாளர்களுக்கு கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று இந்தியாவிற்குள் மேற்கொள்ளும் பணப்பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தம் செய்வதாக பேபால் நிறுவனம் அறிவித்தது. பின் ஒரு சில வாரங்களில் அதனை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். ஒளியுமிழ் இருமுனைய தொலைக்காட்சிகள் திரவ எதிர்முனைய காட்டல் தொலைக்காட்சியிடம் இருந்து வேறுபட்டது. அவை வழக்கமான குளிர் எதிர்முனைய வீசல் விளக்குகளை விட வேறுபட்டு ஒளியுமிழ் இருமுனையத்தால் ஒளிக் காண்பிப்பதாகும். இதனால் அதி நுட்ப ஒளிதிருத்த விகிதம் ஒள்ளிய வடிவமைப்பு காரணி மற்றும் குறைந்த மின்னாற்றல் நுகர்வு ஆகியவை ஏற்ப்படுகிறது. சாம்சுங் இன் நான்கு வரிசைகலான 6200, 6900, 5000 மற்றும் 4000 ஆகியவைகளில் மொத்தம் 13 மாதிரிகள் உள்ளன. இதில் 22-அங்குலம் கொண்டது 25,000 ரூபாயும் மற்றவை 2,00,000 வரையிலும் மதிப்புடைதாகும். ஒரு கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் 1 கோடிக்கும் மேற்ப்பட்ட பயனர் விவர பட்டியலை அளித்துள்ளார். அவர் அந்த தகவலை பொது வலைவாசலில் கண்டெடுத்ததாக பேசுபுக் மீது குறை கூறியுள்ளார். ரோன் போவேஸ் என்ற சுகல் செக்யூரிட்டி ஆய்வாளர் கூறியதாவது பேசுபுக் பொது வலைவாசலில் அவர்கள் குறைந்த விவரங்களை சிலருடன் பகிர்ந்த பயனர்களின் விவரங்களை பட்டியலிட்டு உள்ளது. இதனால் ஒருவரின் இடம், அவரது மின்னஞ்சல் முகவரி போன்ற தகவலை எளிதில் கண்டறியலாம்." 1847 ஆம் ஆண்டில் சேர் ஜோன் பிராங்க்ளின் என்ற நாடுகாண் பயணியும் அவரது மாலுமிகளும் கப்பல்கள் செல்வதற்கான வடமேற்குப் பாதை Northwest passage கண்டறியும் நோக்கில் பயணம் செய்த கப்பல் காணாமல் போகவே, அதனைத் தேடி இன்வெஸ்டிகேட்டர் என்ற கப்பல் ஆர்க்டிக்கை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனாலும் 1853 இல் இக்கப்பல் பனிக்கட்டியுள் புதைந்து போகவே அதன அதன் மாலுமிகள் கைவிட வேண்டி வந்தது. அதன் மாலுமிகளை வேறொரு கப்பல் மீட்டு வந்தது. "இது ஒரு காணக்கிடைக்காத காட்சி என மேர்சி குடாவில் இருந்து கனேடிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜிம் பிரெண்டிஸ் கூறினார். ராபர்ட் மக்குளூர் என்பவரைக் காப்டனாகக் கொண்ட இன்வெஸ்டிகேட்டர் கப்பல் பிரித்தானியாவில் இருந்து 1848 இல் புறப்பட்டது. பிராங்கிளினின் பயணத்தைக் கண்டுபிடிக்க அக்கப்பல் இரண்டு முறை முயன்றது. கனேடிய ஆர்க்டிக் பகுதியின் மேற்குப் பக்கத்தில் பனிக்கட்டியில் சிக்கியதில் அக்கப்பலை அதன் மாலுமிகள் கைவிட்டனர். அக்கப்பலில் இறந்த பிரித்தானிய மாலுமிகள் மூவரின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்க் கனடா என்ற அரசு நிறுவனம் இக்கப்பலின் பகுதிகளை ஆராய்ந்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்ட இறந்த மாலுமிகளின் எச்சங்கள் குறித்து பிரித்தானிய அரசாங்கத்துடன் அது தொடர்பு கொண்டுள்ளது. காப்டன் மக்குளூர் வடமேற்கு வழியைக் கண்டுபிடித்த முதலாவது ஐரோப்பியர் எனப் போற்றப்படுகிறார். இன்வெஸ்டிகேட்டர் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பகுதியை வரலாற்று ரீதியாகக் கனடா உரிமை கோருவட்ர்ஹற்குச் சான்றுகள் கிடைத்துள்ளதாக ஜிம் பிரெண்டிஸ் தெரிவித்தார். கிண்டலே-யின் புதிய சாதனம் கிண்டலே டிஎக்ஸ் (கிராபைட் முற்றிலும் புதிய அனுபவம் உடையதாகவும், புதிய நிறத்தில், புதிய பொத்தான்கள் வடிவங்களும் இது வரை இல்லாத வகையில் வசீகரம் செய்கிறது. இது கிண்டலேவின் மூன்றாம் தலைமுறைச் சாதனம், இரண்டு பதிப்புகளில். இதில் முக்கியாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் புதிய பரிமாணங்கள் வை-பை வசதி போன்றவைகளை கூட்டினாலும், கிண்டலேவின் வடிவமைப்பு மேம்பட்டுயிருக்கிறது, மேலும் அதன் திரை தொழில்நுட்பமும் வளர்ந்து இருக்கிறது. இந்த புதிய இ-வாசிப்பகம் கிராபைட் வன் கரிப்பொருள் (பென்சிற்கரி) போன்றவற்றினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. | caption2 கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் பண்டுண்டு மாகாணம்}} பண்டுண்டு என்ற மேற்கு மாகாணத்தில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து நடந்ததுள்ளது. 80 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பலரைக் காணவில்லை எனவும் தகவல்துறை அமைச்சர் லாம்பேர்ட் மெண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு சேற்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பல தசாப்தங்களாக இங்கு இடம்பெற்று வரும் மோதல்களினால் தரை வழிப் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பெரும்பாலானோர் படகுகளிலேயே பயணிக்கின்றனர். இதே மாகாணத்தில் கடந்த ஆண்டு படகு ஒன்று கவிழந்ததில் 73 பேர் உயிரிழந்தனர். சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம் ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. ஆயுதம் ஏந்தி முகமூடி அணிந்திருந்த 12 பேர் நகர மையத்தில் உள்ள சியத்த அலுவலகத்துக்குள் நுழைந்து குண்டுகளை வீசியதோடு, ஒளிபரப்புக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 40 கணினிகள், குளிரூட்டிகள், இலத்திரனியல் சாதனங்கள் தீக்குள் அகப்பட்டு சேதமடைந்ததுடன், சியத்த தொலைக்காட்சியின் பிரதான கட்டுப்பாட்டு அறை சேதமடைந்ததால் தற்போது ஒளிபரப்புக்களை மேற்கொள்ளமுடியாதுள்ளதாக வொய்ஸ் எவ். ஏசியா நிறுவனத்தின் தலைவர் ரொஷான் காரியப்பெரும தெரிவித்தார். அங்கிருந்த பணியாளர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மண்டியிடச் செய்ததாகவும், இரண்டு ஊழியர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சியத்த ஒளிபரப்புகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலானவையாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. என்ன காரணத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பது இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. தீவைப்புச் சம்பவம் குறித்து விசேட புலனாய்வுகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபர் மகிந்த பாலசூரியவை அரசாங்கம் பணித்துள்ளது. இலங்கையில் 18 மாதங்களுக்கு முன்பு மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் இதே வகையில் தாக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் நாடுகளில் இலங்கை நான்காம் நிலையில் உள்ளது என ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் மனித உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. "கேள்வியே இன்றி, காணொளிச் செய்வோர் முதன்மையாக கோரிக்கை விடுத்தது, பதிவேற்றும் அளவை நீட்டிக்கவே என்று வியாழனன்று யூடியூப் தயாரிப்பு மேலாளர் ஜோசுவா சீகல் அறிக்கையொன்றில் தெரிவித்தார். இதே போன்றொரு ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அமெரிக்கா அணுவுலை ஒன்று கட்டி அமைப்பதாக நிறைவேறியது. பின் அந்த ஒப்பந்தம் அரசியல் சட்ட நெருக்கடியால் கைவிடப்பட்டது. 2008 ஆம் வரை இந்தியா அணுவுலைகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் சட்ட நெருக்கடி ஏற்பட்டு வந்து கொண்டே இருந்தது. தற்போது அந்த நெருக்கடிகள் விலகியதை அடுத்து இந்தியா இது போன்ற அணு எரிப்பொருள் கம்பிகளை இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று ரசியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிடும் சில மாதங்களுக்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வொல்கா என்ற ஊருக்கு பிரதமர் விளாதிமிர் பூட்டின் சென்று சேதங்களைப் பார்வையிட்டார். அங்குள்ள அனைத்து 341 வீடுகளும் தீயில் எரிந்து சேதம்மாகியுள்ளன. சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 200,000 ரூபிள்கள் (£4,200) வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார் அனைத்து வீடுகளும் அடுத்த குளிர்காலத்துக்கு முன்னர் மீளக் கட்டித்தரப்படும் என அவர் தெரிவித்தார். தலைநகர்ப் பகுதியில் மஸ்கோவயே என்ற ஊரில் மீட்புப்பணியாளர் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இரசியாவில் ஒரு நூற்றாண்டில் என்றுமில்லாத வரண்ட காலநிலை அங்கு நிலவுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். கைபர் பாஹ்துன்குவா என்ற வடக்கு மாகாணமே அதிகம் பாதிப்படைந்துள்ளது. இன்னும் பல இடங்களை சென்று சேர முடியாமல் இருப்பதாலும், மேலும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. கடுமையான காலநிலையினால் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பெஷாவாருக்கும் தலைநகர் இஸ்லாமாபாதிற்கு இடையில் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டிருந்தது. இன்று அப்பாதை திறக்கப்பட்டு ஓரளவு போக்குவரத்து இடம்பெறுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இவ்வார ஆரம்பத்தில் கடும் மழை காரணமாக இஸ்லாமாபாதில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர். மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் பணி புரிந்த போது தாம் கதிரியக்கத்தால் பாதிப்படைந்தததாக வசந்த குமார கமகே என்ற மருத்துவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். நோயாளிகளுக்கு கதிரியக்கச் சோதனை நடத்துவதற்காகத் தாம் ரால்ஸ்ட்ரன் இயந்திரம் பொருத்தப்பட்ட அறையினுள் 2001, ஏப்ரல் 5 ஆம் நாள் அம்மருத்துவர் சென்றிருந்தார். அவர் அங்கு சென்ற போது கதிரியக்க மூலம் நிலத்தில் கிடந்ததாகவும், அது குறித்துத் தனக்கு எதுவும் முன்கூட்டியே எச்சரிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து தான் உடல், உள ரீதியாகப் பாதிப்படைந்ததாக அவர் குற்றம் சாட்டினார். தம்மால் சரிவர நடக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குறித்த மருத்துவர் கதிரியக்கத்தால் பாதிப்படைந்துள்ளதாக இவரைப் பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் பேராசிரியர் ரிஸ்வி ஷெரிஃப், ஆர். எஸ். ஜெயதிலக ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சிவனொளிபாதமலை உட்பட முக்கிய மலைகளை உள்ளடக்கியுள்ள இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. தலைநகர் ஜொகான்னசுபேர்கில் இருந்து 50 கிமீ தென்கிழக்கே நைஜல் என்ற இடத்தில் பீட்டர் வெசெல்ஸ் முதியோர் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 0900 மணியளவில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இல்லத்தில் இருந்த மேலும் 84 பேர் அருகில் இருந்த தேவாலயம் ஒன்றிற்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். 17 பேர் தீயில் கருகி மாண்டனர் என்றும் ஒருவர் மாரடைப்பால் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”எட்டு அல்லது ஒன்பது பேரை நான் காப்பாற்றினேன் என நினைக்கிறேன். பலரை என்னால் பாரத்தினால் தூக்க முடியாமல் போய் விட்டது,” என ஒரு மீட்புப் பணியாளர் தெரிவித்தார். விமானப் பணியாளர்கள் மூவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பயணி பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கிராஸ்னயார்ஸ்க் நகரில் இருந்து 15 பேருடன் சென்ற அந்தோனொவ்-24 என்ற கத்திக்காவியா என்ற விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் இகார்க்கா என்ற நகரின் விமான நிலையத்தில் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளாகியது. ஒரு குழந்தை உட்பட 11 பயணிகளும் நான்கு விமானப் பணியாளர்களும் இவ்விமானத்தில் பயணித்திருந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. தாம் பணியாற்றிய உருசுகான் மாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக டச்சு இராணுவத் தலைவர் ஜெனரல் பீட்டர் வான் ஊம் தெரிவித்தார். ஆனாலும் தமது படைவிலகலை அடுத்து “இன்னும் நிறைய நடைபெற வேண்டி உள்ளது” என அவர் ஒப்புக்கொண்டார். டச்சுப் படையினர் தமது இராணுவக் கடமைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சம்பிரதாய பூர்வமாக அமெரிக்க மற்றும் ஆத்திரேலிய இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர். நான்கு எஃப்16 ஜெட் விமானங்கள், மற்று ஐந்து அப்பாச்சி உலங்கு வானூர்திகள் ஆகியவை தொடர்ந்து இவ்வாண்டு இறுதி வரை ஆப்கானித்தானில் தங்கியிருக்கும் என டச்சு அரசு அறிவித்துள்ளது. ஆப்கானித்தானியப் பணியில் இதுவரை 24 டச்சு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 140 பேர் காயமடைந்தனர். முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட கால எல்லைக்கும் மேலாக இன்னும் 12 மாதங்களுக்கு கடமையாற்றுமாறு நேட்டோ தலைமை விடுத்த வேண்டுகோளை நெதர்லாந்து நிராகரித்தது. உருகுசான் மாகாணத்தில் டச்சு இராணுவத்தினர் மிக மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டது. இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. அரசில் இணைந்திருந்த கட்சியொன்று அரசைவிட்டு வெளியேறியது. ஆப்கானித்தான் அரசுத்தலைவர் அமீத் அல் கர்சாயி டச்சு இராணுவம் நான்கு ஆண்டுகளாக முன்னெடுத்த கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானின் புனரமைப்புப்பணிகளில் நெதர்லாந்து பொறியியலாளர்கள் ஈடுபடுவதையும் பாராட்டினார். டச்சு இராணுவம் வெளியேறியதை தலிபான்கள் வரவேற்றனர். அத்துடன் ஏனைய நாடுகளின் படைகளும் விரைவாக வெளியேற வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆப்கானித்தானில் கிட்டத்தட்ட 145,000 வெளிநாட்டுப் படையினர் அமெரிக்க, மற்றும் நேட்டோ தலைமையில் பணியாற்றுகின்றனர். ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்ச்சையை அடுத்து டச்சு அரசாங்கம் கலைப்பு பெப்ரவரி 20, 2010 அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் தடுக் செரி இங் யென் யென் ”மலேசியாவிற்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகள் அயல்நாட்டுப் பேராளர் அலுவலகத்தை நாடுவதைவிட இப்பணிக்கு அமர்த்தப்பட்ட சிலரிடம் உள்ளூர் நியமாளரிடம் இருந்து எளிதாக விசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம்,” எனக் குறிப்பிட்டார். மலேசிய அயல்நாட்டுப் பேராளர் அலுவலகம் குறைவாக உள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விசா வழங்கு அமைப்பில் மேலும் எளிதாகச் செய்ய முயற்சித்து வருகிறது. நியமித்த தரகர்களிடம் விசாவிற்காக ஒரு சிறிய தொகை மட்டும் தரவேண்டும் என்றும், மேலும் முன்பு உள்ளது போன்று தொகை இல்லாமலும் விண்ணப்பிக்கலாம் என்றும் மலேசிய அரசு கூறியுள்ளது. இந்தியர்களும், சீனர்களும் தான் மலேசியாவிற்கு வரும் பெரும் சுற்றுலாக் கூட்டத்திற்கு காரணம் என்று மலேசியா அரசு தெரிவித்தது. டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம், ஒன்று தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர் ஐந்து அதிகாரிகளை அழைப்பு விடுத்திருந்தார். ஒரு அதிகாரி வரத் தவறியதை அடுத்து அவரை அழைத்த அமைச்சர், அவரை மாமரம் ஒன்றில் கட்டி வைத்ததாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மாமரத்தில் பிரதேச சபை அதிகாரி கட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பெண் அதிகாரி ஒருவர் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, அவரை அமைதியாக இருக்குமாறும் இல்லாவிடில் அவரையும் மரத்தில் கட்டுவேன் என்று அப்பெண்ணை பிரதியமைச்சர் எச்சரித்துள்ளார். டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக பல ஊடகவியலாளர்களை அமைச்சர் அழைத்திருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சிகளை பல ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தனது பிள்ளை சுகவீனமுற்று இருந்ததால் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்ற தினத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக மரத்தில் கட்டப்பட்டிருந்த அதிகாரி கூறியுள்ளார். தான் மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது அதிகாரிகளுக்கான முதலாவது எச்சரிக்கையெனவும் இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் மேர்வின் சில்வா உரியாற்றும் போது, தாம் அந்த உத்தியோகத்தரை மரத்தில் கட்டவில்லை என்றும், மற்றவர்களுக்குப் பிழையான உதாரணமாகத் தான் இருக்கக்கூடாது என்பதற்காக அந்த அதிகாரியே தம்மைத்தாமே மரத்தில் கட்டியதாகவும் தெரிவித்தார். இதேவேளையில், அமைச்சருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்வரை நாடெங்கிலும் டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று அறிவித்துள்ளனர். "எஃப்பிஐ இன் சின்னத்தை சட்டவிரோதமாகப் பாவிப்பது அமெரிக்கச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது என விக்கிப்பீடியாவின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்துக்கு எஃப்பிஐ கடிதம் ஒன்றை சூலை 22 ஆம் நாள் அனுப்பியுள்ளது இதனைச் சட்டவிரோதமாகப் பாவிப்பவர்கள் மீது குற்றப்பணம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தம் மீது எத்தவறும் இல்லை என்றும் எஃப்பிஐ இன் வழக்கறிஞர்கள் "சட்டத்தை தவறாகக் கணித்திருக்கின்றனர்" என விக்கிப்பீடியா நிறுவனம் கூறியுள்ளது. எஃப்பிஐ பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையில் அமெரிக்க உளவு நிறுவனத்தைப் பற்றிய விரிவான தகவல்களுடன், அதன் சின்னமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பல இணையத்தளங்களில் எஃப்பிஐ இன் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ள போதும், விக்கிப்பீடியாவை அந்நிறுவனம் ஏன் குறி வைத்துள்ளது என்பது இன்னமும் அறியப்படவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத் திட்டத்தை இதுவரை 184 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களில் இலங்கையின் மலையகம் இணைப்பு ஆகத்து 2, 2010 கொள்ளையர்களால் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும் 25 பயணிகள் காயம் அடைந்தும் உள்ளனர். தொடருந்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் சுடப்பட்டார். பின்னர் கியூல் தொடருந்து நிலையத்தை வண்டி அடைந்த போது பயணிகள் நிலைய அதிபரின் அலுவலகத்தைச் சுற்றி வளைத்து அதனைத் தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ தொடருந்துக்கு ஏன் பாதுகாப்புத் தரவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர். பீகார் காவலர்கள் அந்த குற்றச்சாட்டை மறுத்தனர். தொடருந்தில் ஒரு வழிக் காவலர் இருந்ததாகவும் ஆனால் அவரிடம் ஆயுதம் இல்லை என்றும் கூறினர். "நாலு கொள்ளையர்கள் முதலில் ஜமூயி நிலையத்தில் தொடருந்தினுள் ஏறினர். அவர்களை அங்கிருந்த பயணிகளும் பாதுகாப்பு ஊழியர்களும் மடக்கிப் பிடித்தனர் இருவர் பிடிபட்டனர், வேறும் இருவர் தப்பி ஓடி விட்டனர். அதன் பின்னர் அடுத்த தரிப்பு நிலையத்தில் ஏனைய கோளையர்கள் ஏறி தம் கைவரிசையைக் காட்டியுள்ளனர் எனக் காவல்துறையச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். நச்சுக்காற்றைப் போன்று அந்நகரெங்கும் புகை மண்டலமாக உள்ளதினால் அங்குள்ள மக்கள் அனைவரும் சுவாசப் பாதுகாப்பு உரையை அணிந்து உலவுகின்றனர். இதை அடுத்து அந்நகரிற்கு வந்து போகும் சுமார் 120 விமானங்கள் தாமதமாக்கப்பட்டது. இந்த காட்டுத்தீப் புகையினால் 52 பேர் இதுவரை இறந்துள்ளனர். அந்நாட்டு அரசு குறிப்பிட்டதில் இருந்து அதிகாரிகளும் தீயணைப்புப் படைகளும் தாமதமாக தீப்பற்றிய இடங்களுக்கு சென்றதினாலேயே இந்தத் தீ வெகுவாகப் பரவியுள்ளது என்று தெரிகிறது. இதனால் அதிகாரிகள் இராணுவத்தினையும் எச்சரித்துள்ளார்கள். இந்த தீயினால் அருகில் உள்ள அணுவாற்றல் ஆலைகளில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் இராணுவ ஆயுதங்கள் இருக்கும் பகுத்திக்கும் பரவ சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது. மொத்தம் இந்த தீ 528 இடங்களில் சுமார் 179,600 எக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதே போன்று 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் தீ பரவி அருகில் உள்ள செர்னோபில் அணு ஆலையில் தீப்பற்றியது குறிப்பிடத்தக்கது. உருசியாவில் காட்டுத்தீ பரவியதில் 23 பேர் உயிரிழப்பு சூலை 31, 2010 அடுத்த நாள் காலை பையைத் திறந்து பார்த்த போது, அதனுள் “அழுக்கான சில கற்கள்” இருந்ததாகவும், உடனிருந்தவர்கள் அந்தக் கற்கள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் என்றும் அவற்றை லைபீரிய அதிபர் டெய்லர் அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினர். அதையே தானும் அப்படியே ஊகித்ததாக அவர் கூறினார். ஆனால், அவை சார்ல்ஸ் டெய்லர் அனுப்பியது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நவோமி அக்கற்களை நெல்சன் மண்டேலாவின் சிறுவர் நிதியத்துக்காக அந்நிதியத்தின் அப்போதைய தலைவர் ஜெரமி ராட்கிளிபிடம் கையளித்ததாக அவர் தெரிவித்தார். சியரா லியோனில் உள்நாட்டுப் போர் நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து இரத்தக் கறை படிந்த வைரங்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஆயுதங்களை வழங்கி சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சார்ல்ஸ் டெய்லர் மறுக்கிறார். இதற்கிடையில், காம்பெலிடம் 1997 செப்டம்பர் 26 இல் வைரங்களைப் பெற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட திரு ஜெரமி ராட்கிளிப் அந்த மூன்று சிறு கற்களையும் தென்னாப்பிரிக்காவின் சிறப்புக் காவல்படையினரிடம் கடந்த வியாழன் அன்று ஒப்படைத்ததாக பிபிசி அறிவித்துள்ளது. ”இக்கற்களின் மூலத்தை அறிவதற்குத் தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என காவல்துறையினர் தெரிவித்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் 1945 இல் அமெரிக்க விமானம் இரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசியதில் கிட்டத்தட்ட 140,000 பேர் கொல்லப்பட்டோ அல்லது உயிரிழந்தோ போயுள்ளனர். மூன்று நாட்களின் பின்னர் ஆகஸ்ட் 9 இல் சப்பானின் வேறொரு நகரான நாகசாக்கி மீது அமெரிக்கா போட்ட அணுகுண்டை அடுத்து சப்பான் சரணடைந்தது. சப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோன் கீஸ் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டது, சப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இரோசிமாவுக்கு செல்வார் என்பதை உறுதிப்படுத்தும் சமிக்ஞையாகவே உள்ளது. "வாழ்க்கை மிகவும் சுருக்கமானது, ஆனால் நினைவுகளோ மிக நீண்டவை என அவர் கூறினார். 74 நாடுகளைச் சேர்ந்த 55,000 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் ”அணுவாயுதங்கள் அற்ற உலகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார். அணுவாயுதங்களால் தாக்கப்பட்ட ஒரேயொரு நாடு சப்பான் ஆகும். அணுகுண்டை வீசியமைக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என சில சப்பானியர்கள் கேட்டுக் கொண்டாலும், அப்படி நடக்கும் சாத்தியங்கள் இல்லை என பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார். வெளிநாட்டவர்களில் ஆறு பேர் அமெரிக்கர்கள், ஒரு பிரித்தானியப் பெண், மற்றும் ஒருவர் செருமனியைச் சேர்ந்தவர் எனவும் அறிவிக்கப்படுகிறது. ஏனைய இருவரும் ஆப்கானியர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அங்குள்ள கிராமங்களில் கண் சிகிச்சை மேற்கொள்ளும் பன்னாட்டு மருத்துவ தன்னார்வலர் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. "நேற்று 0800 (0330 GMT) மணியலவில் வெளிநாட்டவர்கள் சிலரை எமது ரோந்துப் படையினர் கண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிருத்தவ மதப் பரப்புனர்கள். அவர்கள் அனைவரையும் நாம் கொன்று போட்டுள்ளோம்,” என அவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தார். “அவர்கள் அமெரிக்கர்களுக்கு உளவு பார்ப்பவகள்,” என அவர் மேலும் தெரிவித்தார். கிருத்தவப் பணியாளர்கள் என்ற தலிபான்களின் குற்றச்சாட்டுக்களை ஐஏஎம் என்ற குறித்த மருத்துவ அமைப்பின் தலைவர் மறுத்துள்ளார் அது பொய். அது உண்மையல்ல. ஐஏஎம் என்பது கிருத்த அமைப்புத் தான்,எப்போது நாம் அவ்வாறே இருந்து வந்துள்ளோம் என்றார். காஸ்ட்ரோவைக் கண்டதும் நாடாளுமன்றத்தில் அனைவரும் எழும்பி நின்று கைதட்டி அவரை வரவேற்றனர். பிடெல் காஸ்ட்ரோவின் உரை மிகவும் தெளிவானதாகவும், உரத்தும் இருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். முன்னொரு காலத்தில் பிடெலின் உரைகள் பல மணி நேரம் இடம்பெறும். அதற்கு மாறாக இம்முறை 10 நிமிடங்களே அவர் உரையாற்றியிருந்தார். தமது உரையின் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து உறுப்பினர்களின் கேள்விகளைச் செவிமடுத்து அவற்றுக்கு மறுமொழி தந்தார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் நிகழும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார். ஈரானையும் வட கொரியாவையும் அமெரிக்கா தாக்கத்திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அவ்வாறு நிகழா வண்னம் அமெரிக்கா தடுக்க வேண்டும் என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்தார். "போர் தொடங்குமானால் தற்போதைய சமூக ஒழுங்கு மறைந்து விடும்,” என அவர் எச்சரித்தார். பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலராக இருக்கிறார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. 71 வயதான பசீர் முன்னர் 2002 பாலி குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறைவாசம் இருந்தவர். பாலி குண்டு வெடிப்பின் போது 168 ஆத்திரேலியர்கள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் இவர் விடுவிக்கப்பட்டார். அல்-கைதாவுடன் தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்ற இந்தோனேசியத் தீவிரவாதக் குழுவின் ஆன்மீகத் தலைவராக இவர் கருதப்படுகிறார். இக்குற்றச்சாட்டை அவர் எப்போது மறுத்தே வந்துள்ளார். இதனால், இங்குள்ள மக்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. தொண்டை வலி, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினை போன்றவற்றுக்குப் பெரும்பாலானோர் ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு நூற்றாண்டில் வரலாறு காணாத கடும் வெப்பம் அங்கு நிலவுவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மாஸ்கோவில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளிலேயே தங்கியிருப்பது நல்லது என்றும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ரஷ்யாவில் வீசும் அனல் காற்றின் வேகம் இன்று திங்கட்கிழமை வரை தணியவில்லை என்றும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீயில் இருந்து அணுஆற்றல் ஆலையைக் காப்பாற்ற உருசியா போராட்டம் ஆகத்து 6, 2010 உருசியாவில் காட்டுத்தீ பரவியதில் 23 பேர் உயிரிழப்பு சூலை 31, 2010 மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல் மைல் தொலைவில் காலிஜியா 3, எம்எஸ்சி சித்ரா என்ற இரு சரக்குக் கப்பல்கள் சனிக்கிழமை மோதின. இதில், சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது. மூன்றாவது நாளாக எண்ணெய் கசிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் மூழ்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் எண்ணெய் கசிவை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக எண்ணெய் கசிவு கடற்கரை வரை பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுள்ளார். பாபா அணு ஆய்வு மையத்தில் உள்ள துருவா, சிரஸ் ஆகிய அணு உலைகளை குளிரூட்டுவதற்காக கடல் நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடலில் எண்ணெய் கலந்ததை அடுத்த அணு உலைகளை குளிரூட்ட கடல் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏவுகணை வடிவமைப்புக்கு உதவி புரியவென கவாடியா 2003 2001 காலப்பகுதியில் சீனாவுக்குச் சென்று வந்தாரென குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவருக்கு $110,000 (£69,000) பணம் இதற்காகக் கொடுக்கப்பட்டது. இப்பணத்தைக் கொண்டு அவர் ஹவாயின் மாவுய் தீவில் உள்ள தனது ஆடம்பர வீட்டுக்கான கடனை அடைத்தார் எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்தியாவில் பிறந்த கவாடியா 1960களில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். சில ஆண்டுகளில் அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். கருவி வடிவமைப்புத்துறையில் சர்வதேச புகழ்பெற்ற நார்த்தராப்க்ரமென் கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், 1986ல் அதில் இருந்து விலகினார். பிறகு பல்வேறு நிறுவனங்களுக்கும் வடிவமைப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். இவரது கண்டுபிடிப்புகளில் ராணுவக் கருவிகளும் உண்டு. 2005 நவம்பரில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கான தண்டனை இவ்வாண்டு நவம்பரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை அன்று இவ்விமானம் காணாமல் போயிருந்தது. டிலிங்கம் என்ற நகரில் இருந்து 17 மைல்கள் தூரத்தில் மலைப்பகுதியில் இவ்விமானத்தின் சிதைந்த பாகங்களை உள்ளூர் வாசிகள் கண்டுபிடித்தனர். ரிப்பப்ளிக்கன் டெட் ஸ்டீவன்ஸ் மேலவையில் அதிக காலம் உறுப்பினராக இருந்த பெருமைக்கு உரியவர். 1968 ஆம் ஆண்டு முதல் இவர் மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008 நவம்பரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1978 இல் அலாஸ்காவில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் இவர் உயிர் பிழைத்திருந்தார். இவரது மனைவி ஆன் உட்படப் பலர் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். அலாஸ்காவில் கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்து இதுவாகும். இராணுவத் தொடரணி மீது போராளிகள் மலைப் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில், அவ்விடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தாக்கப்பட்டதாகவும், அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரே கொல்லப்பட்டதாக உயர் காவல்துறை அதிகாரி ஆர். கே. ஜல்ல தெரிவித்தார். இராணுவத்தினர் திருப்பிச் சுட ஆரம்பித்ததாகவும், தொடர்ந்து அங்கு சண்டை இடம்பெற்று வருவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்முவில் இருந்து 190 கிமீ வடக்கே கடல் மட்டத்தில் இருந்து 8,000 அடி உயரத்தில் உள்ல மலைப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ''எம்வி சன் சீ என்ற இந்தக் கப்பல் கனடாவின் போர்க்கப்பல் ஒன்றினால் இனங்காணப்பட்டுள்ளது. கனடாவின் பிரித்தானியக் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி இன்று அல்லது நாளை வெள்ளிக்கிழமை இது கொண்டு செல்லப்படும் என அவர்கள் தெரிவித்தனர். கரையில் இருந்து 370 கிமீ வட்டத்தில் உள்ள கனடாவின் “பொருளாதார வலயத்தினுள்’ இக்கப்பல் சென்றடைந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இக்கப்பலில் 200 பேர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு 500 பேர் வரையில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத் தங்க வைப்பதற்கு வான்கூவரின் கிழக்கே மேப்பிள் ரிட்ஜ் என்ற இடத்தில் தடுப்பு முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் உள்ள சிறுவர்களை சிறுவர் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க, விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ”தேர்தல் நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதில் நான் திருப்தி அடைகிறேன்,” என தேர்தல் உயர் அதிகாரி சார்ல்ஸ் முனியானிசா தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகளின் குரல் அங்கு ஓங்கி ஒலிக்கவில்லை என பொதுநலவாய கூட்டு நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். மூன்று எதிர்க்கட்சி வேட்பாளர்களும் ககாமெயின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "பல எதிர்க்கட்சிகள் போட்டியிட அறிவித்திருந்தும், பல நடைமுறைச் சிக்கல்களினால் அவர்களால் தேர்தலில் நிற்க முடியவில்லை என அவதானிகள் தெரிவித்தனர். 52 வயதான போல் ககாமெ 1994 இனப்படுகொலைகளுக்குப் பின்னர் நாட்டின் அரசுத் தலைவரானார். 2003 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் 95 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற நோயாளிகளுடன் இக்கிருமி பிரித்தானியாவுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இதுவரை சுமார் 50 பேரிடம் இக்கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கிருமி அமெரிக்கா, ஆத்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்குளும் வந்துள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் பாதிப்பு உலகெங்கிலும் பரவும் என்று அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர். இந்தக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உலகளாவிய கண்காணிப்பும் நடவடிக்கையும் தேவை என பிரித்தானியாவில் உள்ள அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னர் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரை எதிர்த்து அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சரத் பொன்சேகா தோல்வியடைந்தார். பின்னர் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஆனார். பொன்செகாவிற்கு எதிராக வேறு குற்றச்சாட்டுகளுடன் இராணுவ நீதிமன்றத்தில் வேறொரு வழக்கும் சிவில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சரத் பொன்சேகாவுக்கு சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட முன்பதாகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம் மார்ச் 16, 2010 இலங்கை உச்சநீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு பெப்ரவரி 24, 2010 இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது பெப்ரவரி 9, 2010 நேற்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவில் எஸ்க்கிமால்ட் துறைமுகத்தில் நங்கூரமிட்ட எம்வி சன் சீ கப்பலில் இருந்த அனைத்து 490 பேரும் இவர்களுக்கென சிறப்பாக அமைக்கப்பட்ட பெரும் கூடாரங்களில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெருமளவு ஆண்களைக் கொண்டிருந்த இக்கப்பல் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புறப்பட்டதாகத் தெரிகின்றது. இக்கப்பலில் இருந்த பலர் விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 6 மாதக் குழந்தை ஒன்று, நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்கள் இருவர் உட்படப் பலர் முதலுதவி வண்டிகளில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பாதுகாப்பு வேலியின் பின்னால் சிறு குழந்தைகளின் அழுகைக் குரலைக் கேட்கக் கூடியதாக இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். அந்தக் கப்பலில் 490 பேர் இருந்ததாக இந்தக் கப்பலுக்குள் நுழைந்து விசாரித்திருந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மொத்தம் 400 ஆண்கள், 60 பேர் பெண்கள், மற்றும் 30 சிறுவர்கள் இக்கப்பலில் வந்துள்ளதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக டீன் பேர்டி என்ற அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் அகதிகளாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கனடாவின் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் டௌவ்ஸ், எனினும் இதில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது. இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர். எம்வி சன் சீ ஓராண்டிற்குள் கனடாவுக்குள் நுழைந்த இரண்டாவது இலங்கைத் தமிழ் அகதிகள் கப்பலாகும். கடந்த அக்டோபரில் ஓஷன் லேடி என்ற கப்பல் 76 பேரை ஏற்றி வந்தது. இந்த 76 பேரில் 25 பேர் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். ஆனாலும், அவர்களுக்கெதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தற்போது டொரோண்டோவில் வாழ்ந்து வருகின்றனர். ஐநூறு இலங்கை அகதிகளுடன் எம்வி சன் சீ கப்பல் கனடாவை அண்மித்தது ஆகத்து 12, 2010 அத்துடன் அவர் இன்று முதல் சாதாரண பொதுமகனாகவே கருதப்படுவார். இராணுவத்தில் சேவையாற்றிய போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஆகத்து 13, 2010 இந்நிலையில் புதிய தேர்தல் சட்டங்கள் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இராணுவ ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதாக இருப்பதால் இவ்வாண்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் ஒரு போலியானதாகவே இருக்குமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, புதிய நாடாளுமன்றத்தில் இராணுவத்தினருக்கென 25 விழுக்காடு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் போட்டியிடும் கட்சிகள் பல இராணுவத்தினருக்குச் சார்பான கட்சிகள் எனவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தடுப்புக் காவலில் உள்ள ஆங் சான் சூ கீ உட்படப் பல மக்களாட்சிக்கு ஆதரவான தலைவர்கள் பல குற்றவியல் காரணங்களுக்காக தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை. மக்களாட்சி ஆர்வலர்களையும் பௌத்த மத குருமார்களையும் இலக்குவைத்தே புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பன்னாட்டு கண்காணிப்பாளர்கள் விமர்சித்திருந்தனர். இதேவேளை, நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கோஷங்கள், மற்றும் போராளிகள் கூட்டங்களில் உரையாற்றுதல் என்பவற்றுக்கும் பிரசாரத்தின் போது தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆங் சான் சூ கீ யின் வீட்டுக் காவல் தேர்தல் நடைபெறும் நாளுக்குச் சில நாட்களுக்குப் பின்னர் நவம்பர் 13 ஆம் நாள் அன்று முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முக்கிய எதிர்க்கட்சியான “மக்களாட்சிக்கான தேசிய முன்னணி” இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தலில் அது பதிவு செய்ய மறுத்ததை அடுத்து அக்கட்சி அரசினால் கலைக்கப்பட்டது. அக்கட்சியில் இரிந்து பிரிந்த “தேசிய மக்களாட்சிப் படை” National Democratic Force, NDF என்ற கட்சி உட்பட மேலும் 40 கட்சிகள் இத்தேர்தல்களில் போட்டியிடுகின்றன. 135 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளிலேயே இக்கம்பனி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1874 இல் இந்நிறுவனம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது. இதனைத் தற்போது லண்டனில் உள்ள சஞ்சீவ் மேத்தா என்ற இந்திய தொழிலதிபர் ஒருவர் 2005 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கியுள்ளார். சொகுசு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை அவர் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கிறார் The East India Company Fine Food Limited என்பது இந்நிறுவனத்தின் பெயர். ”இது வெறுமனே வர்த்தக முயற்சியல்ல, இதில் உணர்வு சார் தொடர்புகள் பொதிந்துள்ளன,” என சஞ்சீவ் மேத்தா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்த மேத்தா (அகவை 48 மில்லியன் மக்களுக்குப் பழக்கமான 400 ஆண்டுகள் பழமையான பெயர் ஒன்றைத் தாம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். 1600 டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனி தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார். தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலும், சீனாவிலும் கால் பதித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. படிப்படியாக அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைக் கைப்பற்றி அப்படியே நாட்டையும் கைப்பற்றி விட்டது பிரித்தானிய அரசு. 1874ம் ஆண்டு ஜனவரி 1 இல் இங்கிலாந்து அரசு கம்பெனியை கலைத்து அனைத்து அதிகாரங்களையும் இங்கிலாந்து ராணிக்கு மாற்றியது. அதன் பின்னர் அந்த நிறுவனம் முடங்கிப் போனது. லண்டனில் உள்ள மேத்தாவின் நிறூவனத்தில் 350 வகையான சொகுசு உணவுப் பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் வாங்கினார் பெப்ரவரி 17, 2010 இப்போட்டிகள் 14ம் தேதி தொடங்கி இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும். போட்டிகளில் 14 முதல் 18 வரை வயதுள்ள 3,600 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வர். 205 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த இந்த வீரர்கள், 26 வகை விளையாட்டுகளில் 184 போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வர். "ஒலிம்பிக் இயக்கத்தின் வரலாற்றில் இன்று நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி உள்ளோம் என்று பன்னாட்டு ஒலிம்பிக் இயக்கத்தின் தலைவர் சாக் ரொக் இளைய ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். முதல் நாள் வைபவத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அதிபர் எஸ். ஆர். நாதன் உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறை நீண்டகாலமாக ஐரோப்பிய நாடுகளில் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டதாக இருந்து வந்தது. ஜி.எஸ்.பி.பிளஸ் என்ற வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வந்தபோது உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களின் போதான போர்க் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு மறுத்துவிட்டது. இந்த வரிச்சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால ஒரு லட்சம் பேர் வரையிலானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழக்க நேரிடக் கூடும் எனவும் அவர் கூறுகிறார். நாட்டின் பாரிய கைத்தொழிற்றுறையாக ஆடை ஏற்றுமதியே காணப்படுகிறது. இத்தொழிற்றுறையில் 10 இலட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். தலைநகர் கொழும்பைச் சூழ 250 க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. ஜிஎஸ்பி சிறப்பு வரிச் சலுகையை இலங்கை இழந்தது ஜூலை 5, 2010 இவ்விபத்தில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டார். இவரும் மாரடைப்பினாலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனையோர்கள் ஓடுபாதையில் வீசி எறியப்பட்டார்கள். பயணிகள், மற்றும் சிப்பந்திகள் என மொத்தம் 131 பேருடன் கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் இருந்து சென்ற போயிங் 737 விமானம் சான் அண்ட்ரெசு என்ற தீவில் நேற்று திங்கட்கிழமை காலை 0149 மணிக்கு (0649 GMT) தரையிறங்க முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. அயரெசு என்ற உள்ளூர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இவ்விமானம் மின்னல் தாக்கியதாலேயே விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "விமானியின் சாதுரியத்தால் விமானம் விமான நிலையத்துடன் மோதாமல் தவிர்க்கப்பட்டது,” என கொலம்பிய வான்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 99 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரே கடுமையான காயத்துக்குள்ளாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வளவு பயணிகள் உயிர் தப்பியது ஓர் அதிசயம் என சான் ஆண்டிரெசு ஆளுநர் பெத்ரோ கலார்டோ தெரிவித்தார். சான் ஆண்டிரெசு தீவு நிக்கராகுவாக் கரையோரத்தின் கிழக்கே 190 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். கேன் இந்தியா நிறுவனம், இந்தியாவின் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி நிறுவனமாகும். இந்த எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும் என்று தான் நம்புவதாக வேதாந்தா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவன லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 100 பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் தலைவர் அனில் அகர்வால் ஓர் இந்தியர். இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு பெருமளவில் வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. இந்த தேவை வருமாண்டுகளில் மேலும் பெருகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒரிசாவின் குறிப்பிட்ட இடத்தில் கனிமம் தோண்டுவதில் அங்குள்ல இரு பெரும் பழங்குடியினரின் உரிமைகளைப் பறிப்பதாக முடியும் என அவ்வறிக்கை கூறுகிறது. அரசின் இறுதி முடிவுக்குத் தாம் கட்டுப்படுவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வறிக்கை வன வளப் பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இவ்விமான விபத்து லயோனிங் மாகாணத்தின் ஃபுசுன் நகரில், எல்லைப்பகுதியில் இருந்து 200 கிமீ தூரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வட கொரியர்கள் தமது நாட்டில் இருந்து தப்பிச் செல்வது பொதுவானது எனினும் விமானம் ஒன்றில் தப்புவது அபூர்வம் என செய்தியாளர் தெரிவிக்கிறார். சீனாவின் எல்லைப்பகுதியில் சினூஜு என்ற இடத்தில் வட கொரியா தனது வான் படைத்தளத்தை வைத்துள்ளது. வட கொரியாவுக்குச் சொந்தமான விமானம் தமது பகுதியில் வீழ்ந்துள்ளதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விபத்துக் குறித்து விசாரணைகள் நடைபெறுவதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்விமானச் சிதைவுகளை உள்ளூர் வாசி ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவ்விமானம் மிக்-15 வகை விமானம் என்றும் இவ்வ்விமான வைகள் 1950-53 கொரியப் போரின் போது பயன்படுத்தப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 9 வயது ஜிங்கி உஅங் என்ற பெண் குழந்தை பிஷரின் தந்தை அல்ல என முடிவுகள் காட்டுவதாகவும், இதனால் இவ்வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும் வழக்கறிஞர் தோர்டர் பொகாசன் தெரிவித்தார். சொத்துச் சம்பந்தமான வழக்கு இன்னமும் நடைபெற்று வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சதுரங்க வீரர் பாபி பிஷரின் உடல் தோண்டி எடுக்கப்பட இருக்கிறது சூன் 18, 2010 அக்சு என்ற நகரில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் வெடிபொருட்களுடன் மக்கள் கூட்டமாக நின்ற பகுதி ஒன்றுக்கு வந்த உய்கூர் இனத்தவர் ஒருவரே குண்டை வெடிக்க வைத்ததாக உள்ளூர் அரசுப் பேச்சாளர் ஹூ அன்மின் என்பவர் தெரிவித்தார். அம்மனிதன் கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். சின்சியாங் மாகாணத்தில் கடந்த ஆண்டு முஸ்லிம் உய்கூர் இனத்தவர்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடயே இனவன்முறை வெடித்ததில் பலர் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் இப்பகுதியில் பின்னர் பல குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு உய்கூர் இனத் தீவிரவாதிகளே பொறுப்பு என அரசு குற்றம் சாட்டியுள்ளது. சூலை 2009 இல் உருமுச்சி பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 200 பேர் வரையில் இறந்ததை அடுத்து மத்திய ஆசியாவின் எல்லைப் பகுதியில் உள்ள சின்சியாங் மாகாணத்தில் சீனா தனது படைகளைக் குவித்துள்ளது. சீன அரசு சுமார் 1000 பேர் வரையில் கைது செய்து காவலில் வைத்துள்ளது என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. சீனாவின் சின்சியாங்கில் கலவரம் நீடிக்கிறது சூலை 8, 2009 ஆனாலும் ஈராக்கிய இராணுவத்திரின் பயிற்சிக்காக 50,000 அமெரிக்கப் படையினர் 2011 ஆம் ஆண்டு முடிவு வரை அங்கு தங்கியிருப்பார்கள். அத்துடன் மேலும் 6,000 உதவிப் படையினர் இம்மாத முடிவு வரை அங்கு தங்கியிருப்பர். கடைசி அமெரிக்கப் போர் வீரர் இன்று காலை 06:00 மணிக்கு ஈராக்கிய எல்லையைக் கடந்ததாக லெப். கர்னர் எரிக் புளூம் தெரிவித்தார். "நாங்கள் போரை நிறுத்தியிருக்கிறோம் ஆனால் ஈராக்கில் எமது வேலைகள் முடியவில்லை. ஈராக்கில் எமக்கு நீண்ட காலத் திட்டம் உள்ளது என வெள்ளி மாளிகைப் பேச்சாளர் பி. ஜே. குரௌலி தெரிவித்தார். சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடு திரும்பிய அசோக்குமாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கழிவறைக்குச் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறைத் தரப்பு தெரிவிக்கிறது. இதனை அடுத்து சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கை எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி, விசாரித்து விட்டு, பாதிக்கப்பட்டுள்ள மாணவரை உடனடியாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அரசு செலவில் கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், திருக்கழுகுன்ற காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை உயர் காவல்துறை அதிகாரி விசாரணை செய்து அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மாணவனின் பொற்றோர்கள் அவரை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்டு்ள்ள அறிக்கையில், மாணவரை நிர்வாணப்படுத்தி காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இதுவரை 86 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் எதிர்வரும் வாரங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் வாழ்ந்து வந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. மனிதத்தன்மை அற்ற, வருந்தத்தக்க முறையில் வாழ்ந்து வந்த இம்மக்களை வெளிற்றுவது "மனிதாபிமான நடவடிக்கை" என பிரெஞ்சு அரசு கூறியுள்ளது. ஆனாலும் பிரெஞ்சு அரசின் இந்நடவடிக்கையை மனிட உரிமை அமைப்புகள், மற்றும் ருமேனிய அரசு ஆகியன வன்மையாகக் கண்டித்துள்ளன. "பிரெஞ்சு அரசின் நிலையை நாம் புரிந்து கொள்கிறோம். அதே நேரத்தில், ருமேனியக் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கட்டுப்பாடின்றி சென்று வரும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என ருமேனிய அரசுத்தலைவர் டிரயான் பசெஸ்கு தெரிவித்தார். ஆனாலும், ரோமா மக்கள் வெளியேற்றம் குறித்த நடவடிக்கைக்கு உதவ தமது காவல்துறையினரை நாம் பிரான்சுக்கு அனுப்பத் தயாராயுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு வெளியேற்றப்ப்பட்டவர்களுள் ஒருவரான கப்ரியேல் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில், பிரான்சில் இப்போது வாழ்வது மிகவும் ”சிரமம்” என்றும், ஆனாலும் ருமேனியாவில் வேலை இல்லை என்பதால் தாம் பிரான்சில் வசிப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தார். பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டோர் ஒவ்வொருவருக்கும் 300 யூரோக்களும் 384 ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக 100 யூரோக்களும் கொடுக்கப்பட்டன. அடுத்த மூன்று மாதங்களில் சட்டவிரோத ரோமா முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும் என பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. கிரெனோபிள் என்ற பிரான்சின் தெற்கு நகரத்தில் கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்புகளை அடுத்தே பிரெஞ்சு அரசு ரோமா மக்களை வெளியேற்ற ஆரம்பித்துள்ளது. வீதியில் குப்பைகளை வீசுவோரைக் கண்காணிக்க சிவில் உடையில் காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர் என காவல்துறை எச்சரித்துள்ளது. பேரண்டத்தின் முக்கால் வாசிப் பகுதியை இந்தக் கரிய ஆற்றல் மூடிக்கொண்டுள்ளது. ஆனால் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எமக்குத் தெரியும், ஏனெனில் அது பேரண்டத்தை விரிவடையச் செய்கிறது என அவர்கள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஏபெல் 1689 என்பது வேர்கோ என்ற விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு விண்மீன் திரள் கொத்து ஆகும். இதுவே இதுவரையில் கண்டுபிடிகக்ப்பட்ட இவ்வகைக் கொத்துகளில் மிகப் பெரியதாகும். இதன் பெரும் கனம் காரணமாக இது ஒரு உருப்பெருக்கும் கண்ணாடியாகத் தொழிற்பட்டு, ஒளி அதில் பட்டு வளைகிறது. ஆப்கானிஸ்தானின் பலூச்சி பள்ளத்தாக்கில் காலை 10:30 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எவ்வாறு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருப்பர் என அறிவிக்கப்படுகிறது. நேற்றைய இழப்புகளுடன் ஆப்கானித்தானில் மொத்தம் 21 ஆஸ்திரேலியர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற வாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஒரு ஆஸ்திரேலியர் கொல்லப்பட்டார். இவ்வாண்டு மட்டும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று ஆஸ்திரேலியாவில் போதுத்தேர்தல்கள் இடம்பெறும் தருணத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட் கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்து விட்டதும் அல்லாமல் அதன் சட்டவுரிமை நிலையையும் இழந்து விட்டது,” எனக் குறிப்பிட்டார். ஆத்திரேலியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல் தடவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட் எட்டு மாதங்களுக்கு முன்னரே லிபரல் கட்சியின் தலைவராக ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஆத்திரேலியாவில் வாக்களிப்பு சட்டப்படி கட்டாயம் ஆகும். ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது சூலை 17, 2010 ஜூலியா கிலார்ட் ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவு சூன் 24, 2010 பாலியல் வன்முறையில் அசான்ச் ஈடுபடவில்லை என தலைமை வழக்குத் தொடுநர் முடிவு செய்திருப்பதாக சுவீடனின் குற்றவியல் ஆணைய இணையத்தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் இது குறித்து விபரங்கள் எதனையும் அது வெளியிடவில்லை. முன்னதாக, அசான்ச் ஒரு பெண்ணை வன்புணவு செய்ததாகவும் வேறொரு பெண்ணை பாலியல் துன்பத்திற்குள்ளாக்கியதாகவும் அவர் மீது சுவீடனின் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது அவர் மீது வழக்குகள் திரும்பப் பெற்றுக் கொண்டாலும் பாலியல் துன்பத்திற்கெதிராகத் தொடர்ந்து விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விக்கிலீக்ஸ் ஆப்கானித்தான் தொடர்பான மேலும் 15,000 ஆவணங்களை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடப்போவதாக ஜூலிய அசான்ச் சென்ற வாரம் அறிவித்திருந்தார். ஆப்கானித்தான் தொடர்பான அமெரிக்காவின் இரகசிய உளவுத் தகவல்களை 'விக்கிலீக்ஸ்' வெளியிட்டது சூலை 27, 2010 தலைநகர் துஷான்பேயில் இன்று திங்கட்கிழமை அதிகாலயில் இந்தச் சிறை உடைப்பு நிகழ்ந்துள்ளது. சிறைக் கைதிகள் தப்பியோடும் போது ஐந்து சிறைக் காவலாளிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிகளையும் அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் உருசிய, மற்றும் ஆப்கானியர்களும் அடங்குவர் என தஜிகிஸ்தானின் ஏசியா பிளஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லைப் படைகள் உசார்ப் படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் போரிடும் தமது படைகளுக்கு தஜிகிஸ்தான் ஊடாகவே ஐக்கிய அமெரிக்கா இராணுவத் தளபாடங்களை அனுப்பி வருகிறது. அத்துடன் தஜிகிஸ்தானில் 10 மில்லிய டாலர் செலவில் தமது இராணுவத்தினருக்கான பயிற்சி முகாம் ஒன்றையும் அமெரிக்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தலைநகர் கத்மண்டுவுக்குத் தெற்கே 80 கிமீ தொலைவில் சிக்காப்பூர் என்ற கிராமத்தில் இந்த சிறியரக விமானம் வீழ்ந்து நொறுங்கியது. எவரெஸ்ட் சிகரத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமான லுக்லா நோக்கி இவ்விமானம் பறந்து கொண்டிருக்கையிலேயே விபத்துக்குள்ளானது. அக்னி என்ற பெயருள்ள இந்த விமானம் பல துண்டுகளாகப் பிளந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இவ்விமானத்தில் ஆறு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்களில் நான்கு அமெரிக்கர்கள், ஒரு சப்பானியரும் அடங்குவர். பிரித்தானியர் ஒருவரும் கொல்லப்பட்டதை பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. மோசமான காலநிலை நிலவியதால் இவ்விமானத்தை மீண்டும் கத்மண்டுவுக்குத் திரும்ப செய்தி அனுப்பபட்டதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 2008 ஆம் ஆண்டில் லுக்லாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆயுததாரிகள் மூனா விடுதியின் காவலதிகாரியை முதலில் தாக்கியதாகவும், பின்னர் ஆயுததாரி ஒருவர் உள்ளே நுழைந்து தன்னுடன் எடுத்துச் சென்ற குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். இசுலாமிய அல்-சபாப் தீவிரவாதிகளுக்கும் இடைக்கால அரசுப் படையினருக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாகச் சண்டை இடம்பெற்றுள்ள நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூனா விடுதியில் பெரும்பாலும் அரசு அதிகாரிகளே தங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ”இறந்த உடல்கள் விடுதி எங்கும் சிதறப்பட்டுக்” கிடந்ததாக மூனா விடுதியில் தங்கியிருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இரண்டு நாட்களாக இடம்பெற்ற சண்டையில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதகவும், 130 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார் குறைந்தது 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்,” என அவர் தெரிவித்தார். அல்-சபாப் போராளிகள் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை அன்று தாக்குதலை ஆரம்பித்தனர். 6,000 அமைதிப்படையினரும் ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து சில மணி நேரத்தில் தாக்குதல் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பதவி நீக்கப்பட்டிருந்த ரொலாண்டோ தனது பதவியை மீள வழங்குமாறு கோரியே அவர்களைப் பணயம் வைத்தார். கடத்தல் நாடகம் ஆரம்பித்து பலமணி நேரம் கடந்த பின்னரும் ஒருவரும் உதவிக்கு வராதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள இச் சம்பவத்தில் உயிர்பிழைத்த பெண் பயணியொருவர் ஏனைய பயணிகளை துப்பாக்கிதாரி சுடுவதைத் தடுக்க முயன்ற தனது கணவர் இச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சில் தனது 8 சுற்றுலாப் பயணிகளினதும் படுகொலை தொடர்பில் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள ஹொங்கொங் அந்நாட்டுக்கான அனைத்துப் போக்குவரத்துகளையும் இரத்துச் செய்துள்ளது. இச் சம்பவம் குறித்த முழு விசாரணைகளையும் மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதற்கான பதிலை வழங்குவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்கீனோ உறுதியளித்துள்ளார். இச் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் கையாண்ட விதம் தொடர்பில் உயிர்பிழைத்தவர்களும் நிபுணர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 காவல்துறையினர் தமது பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மொத்தம் ஏழு கோள்கள் இக்குடும்பத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இவற்றில் ஒன்று எமது பூமியின் எடையை ஒத்ததாக உள்ளது. ஐரோப்பிய தெற்கு அவதான நிலையத்தைப் பாவித்து வானியலாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இச்சூரியக் குடும்பத்தில் இருந்து உமிழப்பட்ட ஒளியைக் கொண்டு அவர்கள் அதன் இயல்புகளைக் கண்டறிந்துள்ளனர். ”இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளி உலகங்களில் இந்தப் புதிய உலகங்கள் மிகவும் கனதியானது,” என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோப் லோவிஸ் என்பவர் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கடந்த செவ்வாய்க்கிழமயன்று பாதுகாப்புப் படையினருக்கும், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்றிற்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையை அடுத்து பண்னையொன்றில் இருந்த அறை ஒன்றினுள் இந்த 72 பேரினதும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவ்வறையில் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருந்தன. இந்நிகழில் தப்பிய குடியேற்ற வாசி ஒருவரின் தகவலின் படி இவர்கள் அனைவரும் ஆயுதக் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டவர்கள் என்றும் பின்னர் கொல்லப்பட்டவர்கள் என்றும் அறியப்படுகிறது. இதனையடுத்து இராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஆயுதக் கும்பல் இராணுவத்தினரை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். கொல்லப்பட்டோரை அடையாளம் காண்பதற்காக பல்வேறு நாட்டுத் தூதரகங்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக மெக்சிக்கோவின் பல இடங்களிலும் கொல்லப்பட்ட சடலங்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கடந்த மாதத்தில் டாக்ஸ்கோ என்ற இடத்தில் 50 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மெக்சிக்கோவில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளில் 28,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவில் 50 சடலங்கள் அடங்கிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது சூலை 26, 2010 போராளிகளில் ஒருவரான மார்செலோ சேட்டானோ தன்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்றும், அவர் தம்மைக் கொல்லுவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் கூறியதாக அதிபர் “சிட்னி மோர்னிங் எரால்ட்” பத்திரிகைக்கு சென்ற ஆண்டு அதிபர் தெரிவித்திருந்தார். அவர்களை விடுவித்துள்ளதாக தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ளதாக “டெம்போ செமனால்” என்ர பத்திரிகை அறிவித்துள்ளது. இவர்களுக்கான பொது மன்னிப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. ரமோஸ்-ஹோர்ட்டா 1996 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை கிழக்குத் திமோர் பிரதமருடன் இணைந்து பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிலவின் மேற்பரப்பில் பல செங்குத்தான நிலப்பரப்புகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவையே நிலவு சிறிது சிறிதாகத் தேய்ந்து வருவதற்கான அறிகுறிகள் என அவர்கள் நம்புகின்றனர். பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலவின் இந்த மாற்றம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது என்றும், இது ஒரு தொடர் நிகழ்வு என்றும் கூறும் விஞ்ஞானிகள் இது பூமியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கின்றனர். ஆனாலும் விமான ஓட்டியின் சாதுரியத்தால் விமானம் விமானம் பாதுகாப்பாக கிறைஸ்ட்சேர்ச் விமானநிலையத்தில் தரையிறங்கியது. விமானச் சிப்பந்திகள் அப்பெண்னை மடக்கிப் பிடித்தனர். விமான ஓட்டி காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். அப்தில் என்ற இப்பெண் பிளென்ஹைம் என்ற இடத்தில் ஐந்தாண்டுகளாக வசித்து வந்தார். இவர் முன்னரும் பல தடவைகள் தாக்குதல் சம்பவங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தவர் என பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார். நேற்று இவருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி அவரின் மனோவியாதியையும் கவனத்தில் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் ஏன் விமானத்தை ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்துமாறு பணித்தார் என்பது இதுவரையில் தெரியவில்லை. நியூசிலாந்தில் இவ்வாறு நடைபெறுவது முதல் தடவை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நியூசிலாந்தின் உள்ளூர் விமானசேவைகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் தேவை நியூசிலாந்து அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பொதி திறக்கப்பட்டு புலிக்குட்டி மீட்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது. இப்புலிக்குட்டி ஒப்போது வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்புலி காட்டு மிருக இனத்தைச் சேர்ந்ததா அல்லது வீட்டில் வளர்க்கப்பட்டதா என்பதை அறிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். "இக்கடத்தல் முயற்சியை முறியடிக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கிறேன்,” என கடத்தல் தொடர்பான தென்கிழக்காசியப் பிராந்திய அதிகாரி கிறிஸ் ஷெப்பார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்படியான கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இப்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் $1,280 தண்டமும் அறவிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் இடம்பெற்ற வரலாறு காணா எண்ணெய்க் கசிவை அடுத்து அங்கு சில பகுதிகளில் காணப்பட்ட எண்ணெய் மாயமாக மறைந்தது குறித்து அறிவியலாளர்கள் வியப்புத் தெரிவித்திருந்தனர். கசிந்த எண்ணெய் எவ்வாறு ஆழ்கடலினுள் சென்றது மற்றும் எவ்வளவு ஆழம் சென்றது என்பது குறித்த விபரமான வரைபடம் வரையப்பட்டிருந்தது. ஆனாலும் இவ்வெண்ணெயில் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது. மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு அமெரிக்கக் கரையை அடைந்தது மே 2, 2010 சினாபுங் எரிமலை மெதான் என்ற சுமாத்திராவின் முக்கிய நகரத்தில் இருந்து தென்மேற்கே 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது கடந்த 400 ஆண்டுகளாக வெடிக்கவில்லை. கடைசியாக இது 1600 ஆம் ஆண்டில் வெடித்தது. நேற்று சனிக்கிழமை முழுவதும் இந்த எரிமலையில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அது குறித்து எவ்வித கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை ஆரம்பத்தில் இந்த புகையும் தூசும் மழை காரணமாகக் கிளம்பியிருக்கலாம் என நாம் நினைத்தோம். ஆனால் அது இப்போது எரிமலையில் இருந்து கிளம்பிய குழம்பே என நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்." "நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. அவசர நிவாரணப் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளார்கள் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வெளியேறியவர்கள்ளில் சிலர் இப்போது திரும்பி வரத் தொடங்கியுள்ளார்கள். சேத விபரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தோனேசிய தீவுக் கூட்டத்தில் குறைந்தது 129 எரிமலைகள் காணப்படுகின்றன. கொலைக்குற்றம் மற்றுக் உடந்தையாக இருந்தமை போன்ற குற்றங்கள் இவர் மீதும் மேலும் 18 பேர் மீதும் சுமத்தப்பட்டிருந்தன. குற்றம் சுமத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் இப்போது நாட்டில் இல்லை. நீதிமன்றம் அதிபர் ராசொய்லினாவின் அதிகாரத்தில் இருப்பதால் தமக்கு நீதி கிடைக்காது எனக் கூறி ரவலோமனானாவின் வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை தொடங்கியவுடன் நீதிமன்ரத்தை விட்டு வெளியேறினர் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிப்பதே இந்நீதிமன்றத்தின் நோக்கம். எனவே அவரால் இந்நாடுக்கு மீண்டும் திரும்பி வர முடியாது, எதிர்வரும் தேர்தல்களிலும் பங்குபற்ற முடியாது என வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த 19 ஆண்டுகளாக மடகஸ்காரில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. இவ்வெற்றிக்குப் பின்னர் அவருக்கு இனவெறியைத் தூண்டும் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றை அவர் நிராகரித்தார். தாம் ஒரு பழங்குடியினர் என்று தெரியாததால் தான் வாக்களித்ததாக பலர் தமக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வயாட் தெரிவித்தார் எனது வாழ்க்கை முழுவதும் நான் பழங்குடியினனாகவே வாழ்ந்து வந்துள்ளேன். 60களில், 70களில், 80களில்,” என அவர் கூறினார். "நாம் முன்னோக்கிச் செல்வோம் ஆஸ்திரேலியாவை நாம் முன்னோக்கி நகர்த்துவோம். ஹாஸ்லுக் ஏன் ஒரு பழங்குடியினரைத் தேர்ந்தெடுத்தது என்பதை இன்னும் ஐம்பதாண்டுகளில் வரலாற்றாளர்களும் மக்களும் ஆராய்வார்கள். நான் ஒரு பழங்குடி என்பதால் மட்டும் என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அவர்கள் அப்போது கண்டு பிடிப்பார்கள் என கென் வயாட் செய்தியாளர்களிடம் நேற்றுத் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால் அங்கு இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது. மொத்தம் 150 இடங்களில் எதிர்க்கட்சியான தாராளவாதக் கட்சி (லிபரல்) 73 இடங்களையும், ஆளும் தொழிற் கட்சி 72 இடங்களையும் பெற்றிருக்கின்றன. சுயேட்சை வேட்பாளர்கள் நால்வரும், பசுமைக் கட்சியின் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அரசு அமைப்பதற்கு 76 இடங்கள் தேவைப்படுகின்றன. இரண்டு முக்கிய கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களைத் தம் பக்கம் கவர அவர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியப் பொதுத்தேர்தல் 2010: எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆகஸ்ட் 22, 2010 வடக்கு கவ்க்காஸ் பகுதியில் அதிபர் ரம்சான் காதிரொவின் இல்லத்தின் மீது ஞயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 12 போராளிகளும் இரண்டு பாதுகாப்புப் படைப் பிரிவினரும் கொல்லப்பட்டனர். இடையில் அகப்பட்ட ஐந்து பொதுமக்களும் இதன் போது கொல்லப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஆல்வி கரீமொவ் தெரிவித்தார். சுமார் 60 போராளிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தாக்குதலின் போது அதிபர் காதிரொவ் அவரது இல்லத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் இறந்ததை அவர் நிராகரித்திருக்கிறார். பொதுமக்கள் சிலர் காயப்பட்டதாகவும் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. 2000 ஆம் ஆண்டு தர்மபுரியில் அதிமுக வினர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது தீ வைக்கப்பட்ட ஒரு பேருந்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். மூன்று எதிரிகளுக்கும் கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வேறு 25 பேருக்கு 2 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கியிருந்த இச்சம்பவத்தில் கோயமுத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். தில்லி உச்சநீதிமணர்ம் இப்போது இத்தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ”அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சமூகத்துக்கு எதிரானது. காட்டுமிராண்டி தனமானது. மிகவும் கொடுமையான செயல். மாணவிகள் வந்த சுற்றுலா பேருந்துக்கு தீ வைக்கப்பட்டபோது காவல்துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது,” என நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் மட்டுமே “காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்” என்று அழைக்கப்படும் என திரு. பழனிச்சாமி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் காஞ்சிபுரம் பட்டுபுடவைகளுக்கு என தனி முத்திரை பதிக்கப்பட்டு அதற்கு கீழே RGI என குறிக்கப்பட்டிருக்கும் இந்த முத்திரையை உபயோகப்படுத்த பதிவு செய்து கொள்ளாதவர்கள், இனி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்கிற பெயரில் விற்பனை செய்தால் ஆறு மாதத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் அவர் கூறினார். இதன் மூலம் இவ்வகைப் புடவைகளை தயாரிக்கும் நெசவாளர்களும், நுகர்வோர்களும் பயன் பெறுவர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கத் தவறியமைக்காக அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவத்திற்கு மேர்வின் சில்வா பொறுப்பு என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதுவும் அவருக்கு எதிராக இல்லை என்று மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. கிராமத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் தண்டனை தொடர்பாக உதாரணம் காட்டும் விதத்தில் தன்னைத்தானே மரத்தில் கட்டிவைக்க விரும்பியிருந்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாக ஒழுக்காறுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமது கடமையிலிருந்தும் ஏனையவர்கள் தவறி விடக்கூடாது என்பதை வெளிப்படுத்த இவ்வாறு செய்து காண்பித்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தன்னிச்சையாகவே அவர் மரத்தில் தன்னை கட்டியிருந்ததாக குழுவானது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றம் எதனையும் மேர்வின் சில்வா இழைத்திருக்கவில்லை என்று குழுவானது தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேர்வின் சில்வா மீண்டும் களனிப் பகுதியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார். இவரின் அமைச்சர் பதவி குறித்து அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. டெங்கு நிகழ்வில் கலந்து கொள்ளாத பிரதேச சபை அதிகாரியை மரத்தில் கட்டினார் பிரதி அமைச்சர் ஆகத்து 3, 2010 நியூசிலாந்தைச் சேர்ந்த விமான ஓட்டி கடும் காயங்களுடன் உயிர் தப்பினார். செவ்வாய்க்கிழமை அன்று இவ்விபத்து நடந்துள்ளது. இவ்விபத்தை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிமித், ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்லதாக தெரிவித்தார். இவ்விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரேலியர்கள் மிசிமா தீவுக்கருகில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய ரீஃப் பைலட்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என பப்புவா நியூ கினியின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இவ்விபத்துக் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் எமக்குத் தெரியவில்லை, தொடர்பு கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என அவர் தெரிவித்தார். கடந்த 12 மாதங்களுக்குள் பப்புவா நியூ கினியில் நடந்த விமான விபத்துக்களில் இது மூன்றாவதாகும். சென்ற ஆண்டு ஆகத்து மாதத்தில் கொக்கோடா என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் 9 ஆஸ்திரேலியர்கள் உயிரிழந்தனர். பகுப்பு:பப்புவா நியூ கினி|» பழைய செய்திகள்]] பாதுகாப்பு அதிகாரிகள் பல மணி நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்நபர் வெடிபொருட்களை வெடிக்க வைக்க இருந்த நேரத்திலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஜேம்ஸ் ஜேய் லீ என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர் கிட்டத்தட்ட 40 வயதுடையவர். இவர் கட்டிடத்துக்கு வெளியே பல தடவைகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியாவின் சான் டியேகோவைச் சேர்ந்த ஜேம் லீ 2008 ஆம் ஆண்டில் டிஸ்கவரி தலைமையகத்தின் முன்னால் அந்நிறுவனத்துக்கு எதிராகக் கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுக்களை வீசி எறிந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் என த கசெட் என்ற உள்ளூர்ப் பத்திரிகை தெரிவித்துள்ளது. புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி நிறுவனம் முயலவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு ஆகும். இம்மனிதரைத் தாம் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் ஆனால் “அவரது கோரிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,” என டிஸ்கவரி பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நாடு தொடர்பான எல்லா கட்டுரைகளையும் அகர வரிசையில் காணலாம். [[பகுப்பு:நாடுகள் வாரியாக செய்திகள் PAGENAME includeonly> 89 ஆண் அகதிகள் இப்போராட்டத்தில் குதித்திருந்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் காவல்துறையினரால் திரும்பவும் தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஐவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இத்தடுப்பு முகாமில் உள்ள பலர் அங்கு 10 மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. "என்னை இப்போது அனுப்பினால் எனது தலையைக் கொய்து விடுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கரெமிசயெட் என்பவர் கூறினார். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள். பத்து நாட்களுக்கு மேற்பட்ட செய்திகள் தொகுப்பதை தடைசெய்யப்பட்டு பரணிடப்பட்டு இங்கு பட்டியலிடப்படுகிறது. காண்க Wikinews:பரணிடல் கொள்கை ஏனைய மூன்று சுயேட்சைகளும் இதுவரையில் தமது முடிவை அறிவிக்கவில்லை. மூவரும் தொழிற்கட்சியுடனும் தாராளவாதக் கட்சியுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியும் எக்கட்சி ஆட்சியமைக்க இருக்கிறது என்பது இழுபறி நிலையிலேயே உள்ளது. சுயேட்சை உறுப்பினர் வில்க்கியின் ஆதரவுடன் தொழிற்கட்சிக்கு 74 இடங்களும், தாராளவாதக் கட்சிக் கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சியமைக்க 76 இடங்களைப் பிடித்தாக வேண்டும். வில்க்கியின் கோரிக்கைகள் பலவற்றை கிலார்ட் ஏற்றுக் கொண்டுள்ளார், அவற்றில் ஹோபார்ட் பொது மருத்துவமனைக்கு மேலதிக நிதி வழங்குதல், போக்கர் சூதாட்ட இயந்திரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருதல் போன்றவை இவற்றில் சிலவாகும். கிறித்தவத் தேவாலயங்கள் மூலமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று உத்தேச சட்டமூலத்தில் மாற்றம் கொண்டு வரப்படுதல் வேண்டும் என எதிர்ப்புக் கிளம்பியதால் முன்னர் ஒரு தடவை இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தது. இப்போது நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் (தொழிற்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் (தாராளவாதக் கட்சி) ஆகியோரின் ஆதரவுடன் இம்மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இம்மசோதாவை நாடாளுமன்றத்தி, சமர்ப்பித்து உரியாற்றிய முதல்வர் கிறிஸ்டீனா கென்னலி தாய் என்ற அந்தஸ்தில் எனது அனுபவங்களையும், நாடாளுமன்றவாதி என்ற நிலையில் எனது பொறுப்பு, கிறித்தவர் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கை போன்றவற்றில் எனது மனச்சாட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இம்மசோதாவை உங்கள் முன் வைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஓ’ஃபாரெல் உரையாற்றுகையில் பாலினம், பாற்தன்மை, நம்பிக்கை, பின்புலம் போன்றவற்றில் எமது மக்கள் ஒதுக்கப்படக்கூடாது என நான் நம்புகிறேன் என்றார். இம்மசோதா சட்டமூலமாகக் கொண்டுவரப்படுவதற்கு மாநில ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் மாநில மேலவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட வேண்டும். நாங்கு பாகிஸ்தானிய செய்தியாளர்களும் கொல்லப்பட்டவரக்ளில் அடங்குவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சியா தலைவர் அலாமா அபாஸ் குமாயிலி மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினார். பாகிஸ்தானிய தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் சுணி மற்றும் சியா முஸ்லிம்களை ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ள மேற்கொள்லப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றே இத்தாக்குதல் எனக் கூறினார். பாகிஸ்தானில் சுணி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சியா முஸ்லிம்கள் 20 விழுக்காட்டினர் ஆவர். கடந்த புதன்கிழமை லாகூரில் சியாக்களின் ஊர்வலம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு சுணி தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தாமே இத்தாக்குதலை நடத்தியிருந்ததாக தலிபான்கள் கூறியிருந்தனர். # தாராளமாக. விக்கி செய்திகளை நடுநிலையுடன் கூடிய உங்கள் துணிச்சலான அணுகுமுறையால் செம்மைப் படுத்துங்கள் பயனர்:பரிதிமதி 15:35, 27 சூலை 2009 [UTC] கிறைஸ்ட்சேர்ச் நகரில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் 386,000 பேர் வாழ்கின்றனர். இன்றைய நிலநடுக்கம் சனிக்கிழமை அதிகால உள்ளூர் நேரம் 0435 மணிக்கு (1635 GMT வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. அதிகமானோர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிறந்த ஊர் திட்டுவிளை, கன்னியாகுமரி மாவட்டம் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய போப்பாண்டவர் ஆங்கிலிக்க சபைத் தலைவராகிய கான்டர்பரி பேராயரைச் சந்தித்து உரையாடுவார். பல சமயங்களைச் சார்ந்த தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். கர்தினால் நியூமன் ஆங்கிலிக்க சபையிலிருந்து விலகி 1845இல் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இப்பின்னணியில் பிரான்சு நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அனுமதியின்றி உருவான 300க்கும் அதிகமான உரோமானி கூடாரங்களும் குடியிருப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவுசெய்தது. உரோமானி கூடாரங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், குழந்தைகள் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்படுவதாகவும், சட்டமீறல் நிகழ்வதாகவும் அரசு குற்றம் சாட்டியது. பிரான்சு நாட்டின் பாதுகாப்புக் கருதி, அனுமதியின்றி அல்லது வேலையின்றி வாழும் உரோமானி மக்களை மூன்று மாதங்களுக்குள் வெளியேற்ற அரசு துணிந்தது. கடந்த பல நூற்றாண்டுகளாகவே உரோமானி புலம்பெயர் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவந்துள்ளனர். இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்குப் பகுதியே உரோமானி மக்களின் பூர்வீகம் என்று கருதப்படுகிறது. அவர்கள் பேசுகின்ற மொழி, கடைப்பிடிக்கின்ற பழக்க வழக்கங்கள் பல அவர்கள் வடமேற்கு இந்தியாவோடு தொடர்புடையவர்களே என்பதற்கு ஆதாரமாக உள்ளன. இந்தியாவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கி.பி. 11ஆம் நூற்றாண்டின்போது இம்மக்கள் நடு ஆசியாவுக்கும் பின்னர் கிழக்கு ஐரோப்பாவுக்கும் சென்றனர். அங்கு பெரும்பாலும் புலம்பெயர் மக்களாக, நாடோடிகள் போன்று வாழ்க்கை நடத்திவந்துள்ளனர். உரோமானி மக்களை வெளியேற்றுவது மனித உரிமை மீறல் ஆகும் என்று கூறி, நேற்று பாரிசில் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. அதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு, சர்க்கோசி அரசைக் கண்டனம் செய்தனர். பிரான்சு நாட்டு அரசு சிறுபான்மை மக்களின் உரிமையை மீறி, வலதுசாரிக் குழுக்களின் ஆதரவைப் பெறவும், அரசியல் இலாபம் ஈட்டவுமே உரோமானி மக்களை வெளியேற்றுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரான்சு நாட்டு மக்களும் அரசின் இந்த தீவிர நடவடிக்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை. மேலும், இச்செயல் மனித உரிமை மீறல் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் அவையும் வத்திக்கான் நாடும் கூறியுள்ளன. ரோமா ஜிப்சிகளை பிரான்ஸ் ருமேனியாவுக்குத் திருப்பி அனுப்புகிறது ஆகத்து 20, 2010 இவர்களின் இவ்வறிவித்தலுக்கு இசுப்பானிய அரசு இதுவரை எந்த மறுமொழியும் தரவில்லை. எட்டா போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மாத்திரமே அவர்களுடன் பேச்சுக்குச் செல்வோம் என அவர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். எட்டா போராளிகள் முன்னர் இரண்டு முறை போர்நிறுத்தத்தை அறிவித்துப் பின்னர் பின்வாங்கினர். கடந்த ஆண்டில் ஹபிள் தொலைநோக்கி பழுது பார்க்கப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய பின்னர் எஸ்என் 1987ஏ (SN 1987A) என்ற இந்த விண்மீன் வெடிப்பின் முதலாவது படத்தை இப்பொழுது இத்தொலைநோக்கி அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த வெடிப்பினால் விண்ணில் எறியப்பட்ட பொருட்களின் தற்போதைய நிலை குறித்து அறியக்கூடியதாக இருக்கும் என வானியலாளர்கள் நம்புகின்றனர். இது குறித்த ஆய்வு சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலம் முழுவதும் பரவ வல்லவை. பெரும் எண்ணிக்கையான வாயுக்களையும், தூசுகளையும் இது வெளிவிடுகிறது. கந்தகம், சிலிக்கன், இரும்பு முதலான கனிமங்களை அவை கொண்டுள்ளன. முத்து மாலை வடிவிலான உள் வளையம் வெடிப்பு ஏற்படுவதற்கு சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னரேயே வெளியேறியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். "புதிய தரவுகளின் படி வெளியேற்றப்பட்ட விண்மீன் எச்சங்களின் பொதிவு மற்றும் வேகம் ஆகியவை துல்லியமாக அளக்கக் கூடியதாக உள்ளது. அத்துடன் விண்மீன் திரளில் இவ்வெடிப்பினால் எவ்வளவு ஆற்றல் மற்றும் கனிமங்கள் வெளியேற்றப்பட்டுள்ளது என்பதையும் அறியக்கூடியதாக உள்ளது என கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாலர் கெவின் பிரான்சு என்பவர் தெரிவித்தார். வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாடா தானுந்து ஒன்று புய்னாஸ்க்ஸ் என்ற இடத்தில் உள்ள இராணுவக் காவல் அரணை உடைத்துக் கொண்டு சென்று வெடிக்க வைக்கப்பட்டதாக இராணுவப் பேசாலர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் சனிக்கிழமை அன்று அதிகாலை 0100 (2100 GMT) நேரத்திற்கு இடம்பெற்றது. இதில் ராணுவ வாகனம் ஒன்றும், வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த கூடாரங்களும் தீப்பிடித்து எரிந்தன என்று கூறப்படுகிறது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தாகெஸ்தானில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் குண்டுவெடிப்புகளும் வழமையானது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். முன்னதாக தலைநகர் மக்காச்கலாவில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில், தாகெஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்முர்சா பெர்மூர்சாயெவ் படுகாயமடைந்தார். அவரது சாரதி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பொது நுண்ணுயிரியலுக்கான குமுகாயத்தின் கூட்டம் ஒன்றிலேயே இந்த ஆய்வு குறித்து அறிவிக்கப்பட்டது. கரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது. கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90 திறம் கொண்டவையாக உளவாம். இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும். ஆனால் மதிப்பற்ற கரப்பான் பூச்சியும் விரைவில் மனிதரின் உயிர்காக்கும் நண்பனாக மாறலாம் என்பது வியப்புதான்! நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று சுயேட்சை உறுப்பினர்கள் இன்று தமது இறுதி முடிவை அறிவித்தார்கள். டொனி வின்சர், ரொப் ஓக்‌ஷொட் ஆகியோர் கிலார்டின் தொழிற்கட்சிக்கும், பொப் காட்டர் எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட்டின் தாராளவாதக் கட்சிக்கும் ஆதரவைத் தெரிவித்தனர். தேர்தல் நடந்து முடிந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக யார் அரசமைப்பது என்பது குறித்து இழுபறி நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய அறிவிப்பின் மூலம் தொழிற்கட்சிக்கு 76 உறுப்பினர்களின் ஆதரவும், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 74 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஒரு சிறுபான்மை நாடாளுமன்றம் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியத் தேர்தல் 2010: ஜூலியா கிலார்ட் சுயேட்சை ஒருவரின் ஆதரவைப் பெற்றார் செப்டம்பர் 3, 2010 ஆஸ்திரேலியப் பொதுத்தேர்தல் 2010: எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆகத்து 22, 2010 நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையக் கோபுரங்கள் சாய்க்கப்பட்ட 9ஆம் ஆண்டு நெருங்கிவரும் வேளையில் (செப்டம்பர் 11, 2010) திருக்குர்-ஆன் நூல் எரிக்கப்படும் என்று அமெரிக்க கிறித்தவ குழுவொன்று அச்சுறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்கானிசுதான் தலைநகராகிய காபூலிலும் மற்றும் இந்தோனேசியாவிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்று காபூலில் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது சுமார் 500 பேர் இசுலாம் வாழ்க, அமெரிக்கா வீழ்க" என்று குரல் எழுப்பியதோடு, டெரி ஜோன்சு என்பவரின் உருவத்தையும் தீக்கிரையாக்கினர். இவர் பாதிரியாராகப் பணிபுரியும் "டவ் உலக நற்பணி மையம் Dove World Outreach Center) என்னும் கிறித்தவ குழுதான் குர்-ஆன் எரிப்பு நிகழ்த்தப் போவதாக அச்சுறுத்தியது. அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள புளோரிடா மாநிலத்தில் கெயின்சுவில் (Gainsville) நகரில் 50 பேர்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட இக்குழுவின் தீவிரப் போக்கைக் கண்டனம் செய்து, காபூலில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே, ஆப்கானிசுதானில் அமெரிக்க தலைமைத் தளபதியாகச் செயல்படும் டேவிட் பெட்ரேயசும் அறிக்கை விடுத்துள்ளார். அதில் குர்-ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டால் அமெரிக்க போர்வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். தலிபான் அமைப்பு இச்செயலைப் பயன்படுத்திக்கொண்டு காபூலில் மட்டுமன்றி உலகின் வேறு பகுதிகளிலும் பிரச்சினை கிளப்பக்கூடும்" என்று கூறியுள்ளார். வடக்கு அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு (NATO) துணைத்தலைவர் வில்லியம் கால்ட்வெல் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார் குர்-ஆன் முசுலிம்களின் மிகப் புனித நூல். அதற்குச் சேதம் விளைவித்து அதன் புனிதத்தைக் கெடுக்கப்போவதாக யாராவது கூறினால் அதன் விளைவுகள் மிக மோசமாக மாறிவிடும்." இந்தச் சர்ச்சை எழுவதற்கு முன் நியூயார்க் நகரில் மசூதி கட்டுவது பற்றி விவாதம் எழுந்தது தெரிந்ததே. அங்கே, முன்னாள் உலக வர்த்தக மையக் கோபுரங்கள் நின்றிருந்த தளத்திலிருந்து (Ground Zero) இரு தெருக்கள் தாண்டி ஒரு மசூதியை உள்ளடக்கிய இசுலாமிய கலைக் கூடம் கட்டும் திட்டத்தை எதிர்த்து பலர் குரலெழுப்பினர். இப்பின்னணியில் கெயின்சுவில் கிறித்தவக் குழுவின் குர்-ஆன் எரிப்புத் திட்டம் தீய விளைவுகளுக்குத் தூண்டுதலாக அமைந்துவிடும் ஆபத்து எழுந்துள்ளது. ஆப்கானிசுதானிலும் ஈராக்கிலும் அமெரிக்க போர்வீரர்கள் திருக்குர்-ஆனை இழிவுபடுத்தினர் என்னும் வதந்தி பரவியபோது சில இடங்களில் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம். ஈராக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க போர்வீரர் ஒருவர் குர்-ஆன் நூலில் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து ஆப்கானிசுதானில் 2008இல் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோரும் உண்டு. அதுபோலவே, குவான்டானமோ வளைகுடாவில் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் குர்-ஆன் பிரதியைக் கழிவறைத் தொட்டியில் வீசி இழிவுபடுத்தினர் என்று குற்றம் சாட்டி நியூசுவீக் வார இதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தும் 2005இல் கடும் எதிர்ப்பு எழுந்தது. இச்செய்தி உண்மையல்ல என்று தெரியவந்ததும் நியூசுவீக் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. சிலர் அணிந்திருக்கும் பாதணிகளைக் கொண்டு அவர்கள் சாதாரன பொது மக்கள் என அடையாளம் காணலாம் என மார்க்கோ ஸ்ட்ரோவ்சு கூறினார். கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்ட நிலையிலேயே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்கு சுலோவீனியாவின் பிரிவால்ச்சிக் காட்டில் பெருந்தொகையானோர் கொல்லப்பட்டதை தாம் ஒளிந்திருந்து கண்டதாக ஒரு சிறுவன் தெரிவித்ததாக அண்மையில் இங்கு வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் நாசிகளுக்கு ஆதரவானவர்கள் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகளினால் கொல்லப்பட்டனர். அத்துடன் சாதாரண பொதுமக்களையும் இவர்கள் படுகொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி தனது பதின்மூன்று மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அவர் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். பெரும்பாலான சுவாசி மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வது குறிப்பிடத்தக்கது. நாட்டில் 15 முதல் 49 வரையுள்ள மக்களின் 26 விழுக்காட்டினருக்கு எயிட்ஸ் நோய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல தென்னாப்பிரிக்க தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் நாள் நியூயார்க்கில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுத் தகர்க்கப்பட்டதிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதம் உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியது. இசுலாம் என்றாலே தீவிரவாதம்தான் என்றொரு தவறான கருத்து எழுந்ததால் அமெரிக்காவில் வாழ்கின்ற முசுலிம்கள் பலர் தங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என உணரத்தொடங்கியுள்ளனர். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட ஒன்பதாம் ஆண்டு நிகழ்வின்போது, அதாவது வருகிற செப்டம்பர் 11ஆம் நாள் இசுலாமிய தீவிர வாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் குர்-ஆனை எரிக்கப்போவதாக கெயின்சுவில் கிறித்தவக் குழு அறிவித்ததைத் தொடர்ந்து பல்சமய நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட பல அமைப்புகள் இசுலாம் சமயம் தன் இயல்பிலேயே தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என்பது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளன. கத்தோலிக்க கிறித்தவ சபையின் மைய இடமாகிய வத்திக்கான் நகரிலிருந்து இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட்டின் கீழ் வத்திக்கானில் செயல்படும் "பல்சமய உரையாடல் செயலகம்" அந்த அறிக்கையை விடுத்துள்ளது. அதன் சாரம் வருமாறு: "2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் எண்ணிறந்த மக்கள் உயிரிழந்தனர்; பெரும் சேதமும் விளைந்தது. அத்தாக்குலின் ஆண்டு நிகழ்வு அடுத்துவருவதை முன்னிட்டு குர்-ஆன் எரிப்பு நாள் அனுசரிக்கப்போவதாக வெளியான அறிக்கையைப் போப்பாண்டவர் பல்சமய உரையாடல் செயலகம் மிகுந்த கவலையோடு கணிக்கிறது. நிகழ்ந்துபோன வன்முறைத் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை. ஆனால் அதற்கு எதிர்வினையாக, இசுலாம் சமயத்தவர் புனிதமாகக் கருதுகின்ற குர்-ஆனை இழிவுபடுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எல்லா மதங்களின் புனித நூல்களும் வழிபாட்டுத் தலங்களும் அடையாளச் சின்னங்களும் மதிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் உரிய அடிப்படை மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும். தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அவர்களுக்குள்ள உரிமையும் மதிக்கப்பட வேண்டும். செப்டம்பர் 11ஆம் நாளன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிர்துறந்த எண்ணற்ற மக்களுக்காக நாம் அனுதாபம் தெரிவிக்கின்றோம். அவர்களின் இழப்பால் வருந்துகின்ற அனைவருடைய துயரத்திலும் நாம் பங்குகொள்கின்றோம். இதுவே இந்த ஆண்டு நினைவைக் கொண்டாட வேண்டிய முறை. எல்லாவித வன்முறையும், குறிப்பாக மதத்தின் பெயரால் நிகழும் வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதை சமயத் தலைவர்களும் சமய உறுப்பினரும் உணர வேண்டும். காலஞ்சென்ற போப்பாண்டவர் 2ஆம் ஜான் பவுல் கூறியதுபோல மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவது மதத்தின் உண்மையான படிப்பினையைத் திரித்துக் கொச்சைப்படுத்துவது ஆகும் பாகிசுதானின் புதிய அரச தூதுவருக்கு 1999, டிசம்பர் 16இல் ஆற்றிய உரை அதுபோலவே, இன்றைய போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட் அல்சீரியாவின் புதிய அரச தூதுவருக்கு ஆற்றிய உரையில் கீழ்வருமாறு கூறினார் நமக்கு எதிராகப் பிறர் செயல்படும்போது அதற்குப் பதில் கொடுப்பதுபோல நாமும் வன்முறையில் ஈடுபடுவது சரியாகாது. சமயங்கள் அறிக்கையிடுகி்ன்ற போதனை வன்முறையை ஆதரிப்பதில்லை" குர்-ஆன் எரிப்புத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல நாட்டுத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் மனித உரிமைக் குழுக்களும் விடுக்கின்ற கோரிக்கையை கெயின்சுவில் கிறித்தவக் குழு ஏற்குமா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. செப்டம்பர் 11இல் குர்-ஆன் எரிப்பு: அமெரிக்க கிறித்தவ குழுவின் அச்சுறுத்தல் செப்டம்பர் 7, 2010 அரசுத்தலைவரின் அதிகாரங்களும் இந்த அரசியமைப்புத் திருத்தம் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளன, 225 பேரைக் கொண்ட நாடாளுமன்றைத்தில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்தன. எதிராக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. சட்டப்பிரேரணை இரண்டாம் வாசிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணியாளர்கள், மனித உரிமை மற்றும் பல முக்கிய அதிகாரிகளை நியமிக்க அரசுத்தலைவருக்கு இச்சட்டமூலம் வழிவகுக்கிறது. இந்த சட்டமூலத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி ஆர்வலர்கள் தலைநகர் கொழும்பில் இன்று பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதேவேளை அரசாங்க ஆதரவாளர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். உலகின் மிக விரைவாக முதுமையடையும் மக்களைக் கொண்டுள்ள நாடுகளில் சப்பானும் ஒன்று. ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒருவர் 65 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 1943 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பஞ்சத்தின் போது ஒன்று முதல் மூன்று மில்லியன் மக்கள் வரை உயிரிழந்தனர். போர்க்காலத்தின் போது அவசர உதவிகளை அனுப்புவதற்கு கப்பல்கள் கிடைக்கவில்லை என அப்போது சர்ச்சில் தெரிவித்திருந்தார். ஆனால் மதுசிறீ முக்கர்ஜி என்ற இந்நூலின் ஆசிரியர் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. "வங்காளத்துக்கு நிவாரணம் அனுப்புமாறு பலமுறை விடுத்த வேண்டுகோள்களை சேர்ச்சிலும் அவரது உதவியாளர்களும் செவி மடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். "ஐக்கிய அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் நிவாரணப் பொருட்களை வழங்க முன்வந்ததாகவும் ஆனால் அதற்கான கப்பல்களை வழங்க சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவை மறுத்து விட்டதாக முக்கர்ஜி தெரிவித்தார். வியாழன் மாலையில் சான் புரூனோ நகரில் இடம்பெற்ற இவ்வெடிப்பினால் 53 வீடுகள் தகர்க்கப்பட்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. 1,000 அடி (300 மீட்டர்) உயரத்திற்கு தீப்பிழம்புகள் கிளம்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், கடும் வெப்பம் காரணமாக அப்பகுதிக்குள் எவரும் செல்ல முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை வாயுக் கசிவினாலேயே இவ்வெடி விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. "போயிங் 747 விமானம் எம்மீது வீழ்ந்ததாக நான் கருதினேன் என ஒரு தீயணைப்புப் படை வீரர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 41,000 பேர் வசிக்கும் சான் புரூனோ நகரம் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நியூயோர்க்கின் உலக வர்த்தக நிலைய இரட்டைக் கோபுரங்கள் மீதும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீதும் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் விமானத் தாக்குதல்களில் 2752 பேர் கொல்லப்பட்டனர். உறவினர்கள் கொல்லப்பட்ட தங்கல் உறவுகளின் பெயர்களை அங்கு படித்தனர். இரட்டைக் கோபுரங்கள் மீது இரு விமானங்கள் தாக்கிய நேரத்தை குறிக்கும் முகமாக அந்தத்தருணத்தில் மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடமான கிரவுண்ட் சீரோ அருகே இசுலாமிய நிலையம் ஒன்று கட்டப்படும் என்று திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரானை எரிக்கப் போவதாக கூறியிருந்த பாதிரியார் டெரி ஜோன்ஸ் அத்திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய மசூதி திட்டத்திற்கு ஆதரவானதும் எதிரான குழுக்கள் நினைவு நிகழ்வுகள் முடிவடைந்தபின் இரட்டைக் கோபுரம் இடிந்து வீழ்ந்த இடத்துக்கு சமீபமாக பேரணிகளை நடத்தினர். செப்டம்பர் 11இல் குர்-ஆன் எரிப்பு: அமெரிக்க கிறித்தவ குழுவின் அச்சுறுத்தல் செப்டம்பர் 7, 2010 இவ்வாண்டு ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்த ஒன்பது பேரின் மீதும் குஸ்க்கா என்ற கிராமத்தில் உள்ளூர் அல்பேனியப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றம் சுமத்தப்படவிருப்பதாக சேர்பிய போர்க்குற்ற நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த ஒன்பது பேரும் துணை இராணுவக் குழுவான சக்காலி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். கொசோவோவில் இருந்து அல்பேனியர்களை வெளியேற்றும் பொருட்டு இவர்கள் அல்பேனியப் பொதுமக்களை மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை, மற்றும் பாலியல் பலாத்காரம் போன்றவற்றை மேற்கொண்டு படுகொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியப் படையினருக்கு எதிரான நேட்டோ படைகளின் 11 வார கால குண்டுத்தாக்குதல்களை அடுத்து கொசோவோ போர் முடிவுக்கு வந்தது. கொசோவோ 2008 ஆம் ஆண்டில் சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது. ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொசோவோவை உடனடியாகவே அங்கீகரித்தன. ஆனால் சேர்பியா இதுவரையில் கொசோவோவை அங்கீகரிக்கவில்லை. 99 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 58 விழுக்காட்டினர் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு அடுத்த கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கூடிய பெரும்பாலான திருத்தங்கள் உள்ளடங்கலாக 26 புதிய சீர்திருத்தங்களுக்கு துருக்கி மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். "மக்களாட்சிக்கான பாதை இதன் மூலம் திறக்கப்பட்டுள்ளது என பிரதமர் எர்துகான் தெரிவித்தார். அரசியல் திருத்தங்கள் வெற்றியடைந்ததையிட்டு ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இதற்கிடையில், அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இரண்டு பிரதான நீதித்துறை நிறுவனங்களின் உறுப்புரிமையை விரிவு படுத்தும் இரண்டு அரசியல் திருத்தங்கள், அரசாங்கம் நீதித்துறையில் அளவு கடந்து செல்வாக்கு செலுத்துவதற்கு வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். உலகின் மிகவும் விலை உயர்ந்த புத்தகமாக மதிப்படப்பட்டிருக்கும் ஜோன் ஜேம்ஸ் ஓடபோன் என்பவர் எழுதிய அமெரிக்காவின் பறவைகள் Birds of America) என்ற புத்தகம் அமெரிக்காவில் உள்ள சோதிபைசு என்ற ஏலக்கடையில் விற்பனைக்கு விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்புத்தகத்தின் 19 முழுமையான பிரதிகளே தற்போது எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் 108 புத்தகங்கள் நூலகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. 200 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்புத்தகத்தின் ஒரு பிரதி 8,802,500 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதுவரையில் இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. ஹெஸ்கெத் பிரபுவின் சேகரிப்பில் ஷேக்ஸ்பியரின் First Folio என்ற அரிதான நூலும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இந்நூல் ஆங்கில இலக்கியத்தின் ஒரு முக்கிய நூல் என சோதிபைசு தெரிவித்தார். இப்புத்தகத்தின் 750 பிரதிகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டதாகவும், தற்போது 219 மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிரபல பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணி இன்று தனது 80வது அகவையில் சென்னையில் காலமானார். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது 1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார். 1931 இல் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் சூடாமணி. இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளர். ஆறாம் இவானின் உடல் இரசியாவின் வடக்கு ஆர்ஹாங்கெல்ஸ்க் பகுதியின் கல்மகோரி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1764 இல் இவானின் ஆதரவாளர்கள் அவனை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இவான் அவனது காவலாளர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டான். அவனது உடல் அங்கேயே புதைக்கப்பட்டதாக அப்போது நம்பப்பட்டது. இவானின் தந்தையின் உடல் பாகங்களைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே தொல்லியலாளர்கள் இவானின் எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர். # ஏழு நாட்களுக்கும் மேற்ப்பட்ட செய்திகள் பரணிடப்படல் வேண்டும். # பரணிடுவதற்கு முன் என்னும் வார்ப்புருவை கட்டுரைகளில் பதிய வேண்டும். # எழுத்துப்பிழைகள் இலக்கணப்பிழைகளில் மாற்றம் இருந்தால் அவற்றை பேச்சுப்பக்கத்தில் சுட்டிக் காட்டலாம். அவற்றை நிர்வாகிகள் திருத்துவர். # திருத்தங்கள் செய்தியில் சாராம்சத்தை பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டும். # கட்டுரைகளில் திருத்தம் வேண்டுவோர் வார்ப்புருவை பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும். கொன்வயசா என்ற அரசு விமான நிறுவனத்தின் பயணிகள் ஜெட் விமனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு புவெர்ட்டோ ஓர்டாசு என்ற நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. "உள்ளூர் உலோகத் தொழிற்சாலை ஒன்றின் மீதே இவ்விமானம் வீழ்ந்தது. அதிட்டவசமாக தரையில் இருந்த எவரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை,” என உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அன்கிருந்த தொழிலாளர்கள் உடனேயே விரைந்து சென்று காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தி உதவியதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பக் கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 160 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 2008 இல் இடம்பெற்ற ஒரு விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர். இது w PAGENAME PAGENAME பகுப்பு. இந்தப் பகுதியின் தற்போதைய செய்திகளுக்கு வலைவாசல் PAGENAME PAGENAME வலைவாசல் ஐ பார்க்கவும். புதிய கட்டுரை தொடங்க கீழுள்ள பெட்டியில் தட்டவும்: கடந்த மாதத்தில் இடம்பெற்ற நாடு கடத்தல்கள் "பெரும் இழுக்கு” என அவர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார் இப்படியான ஒரு முக்கிய நடவடிக்கை ஒரு சிறிய குற்றம் இல்லை." "இந்த ஆணையத்தில் 11 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் என்ற முறையில் நான் சொல்கிறேன். இன வாரியாக ஒருவரைp பாகுபாடு காட்டுவதென்பது ஐரோப்பாவில் இடம்பெற முடியாது என அவர் கூறினார். ”பிரான்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை,” என ரெடிங் தெரிவித்தார். இக்குற்றச்சாடுக்களை மறுத்துள்ள பிரான்சு, தாம் ரோமா சிறுபான்மையினத்தவரை இலக்கு வைக்கவில்லை எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு ஒப்பவே நாம் அவர்களி வெளியேற்றினோம் எனத் தெரிவித்துள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இப்பிரச்சினை ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு பிரான்சு மீது அபராதம் விதிக்கப்படலாம். பிரான்ஸ் கடந்த ஆகத்து மாதத்தில் சுமார் ஆயிரம் ரோமா மக்களை ருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் நாடு கடத்தியதை அடுத்து உலக நாடுகள் பல அதற்கு பலத்த கண்டனங்களைத் தெரிவித்தன. கடந்த சூலை மாதம் பிரான்சு நாட்டின் வடமேற்கிலுள்ள லுவார் பள்ளத்தாக்கில் ஓர் ரோமானி இளைஞர் பிரான்சு நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலகம் வெடித்தது. இப்பின்னணியில் பிரான்சு நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அனுமதியின்றி உருவான 300க்கும் அதிகமான உரோமானி கூடாரங்களும் குடியிருப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவுசெய்தது. உரோமானி கூடாரங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், குழந்தைகள் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்படுவதாகவும், சட்டமீறல் நிகழ்வதாகவும் அரசு குற்றம் சாட்டியது. பிரான்சு நாட்டின் பாதுகாப்புக் கருதி, அனுமதியின்றி அல்லது வேலையின்றி வாழும் உரோமானி மக்களை மூன்று மாதங்களுக்குள் வெளியேற்ற அரசு துணிந்தது. இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து 8,000 ரோமா மக்கள் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2009 இல் 9,875 பேர் நாடு கடத்தப்பட்டனர். ரோமா ஜிப்சிகளை பிரான்ஸ் ருமேனியாவுக்குத் திருப்பி அனுப்புகிறது ஆகத்து 20, 2010 உரோமானி மக்களை பிரான்சு நாடு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு செப்டம்பர் 5, 2010 இந்த ஆட்டத்தில் 7-6(5 7-6(4) என்ற நேர் செட்களில் பிரையன் சகோதரர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் இப்போட்டி குறித்து பாப் பிரையன் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது. “இதுவரை நாங்கள் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகச்சிறந்த போட்டி. இவர்கள் இருவரும்(குரேஷி-போபண்ணா) நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடுகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு இணையாக எங்களது ஆற்றலை அதிகரிக்க வேண்டியிருந்தது,” என்று கூறியுள்ளார் அவர். மேலும் பல கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றிக்கனியைப் பறிக்க அவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உலகின் முதல்நிலை வீரர்களாகவும், ஒட்டுமொத்தமாக 64 இரட்டையர் பட்டங்களைப் பெற்று உலக சாதனையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுமான பிரையன் சகோதரர்களின் இக்கருத்து குரேஷி-போபண்ணா இணையின் வருங்காலம் குறித்து கூறப்பட்ட கணிப்பு என்றால் அது மிகையல்ல. ஆட்சியாளர்களின் பாதகமான கொள்கைகளால் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் எப்போதும் இல்லாத வகையில் சீர்குலைந்து கிடக்கும் இந்த வேளையில் மக்களிடையே நல்லுறவை வளர்க்க இந்த சகோதரர்களின் விளையாட்டு உதவக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவில் உள்ள உயர் அதிகாரிகள் இவர்கள் விளையாடிய போட்டிகளை நேரில் சென்று ரசித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள அரசியல் ரீதியான விஷயங்கள் குறித்து போபண்ணா எதுவும் கூறவில்லை எனினும், குரேஷி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நாங்கள்(பாகிஸ்தானிகள்) எப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்களை பயங்கரவாதிகளாக எண்ணாதீர்கள்!” என்று இந்திய மக்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் அவர். இடைக்காலப் பிரதமருக்கும் சனாதிபதிக்கான இரண்டு வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார். இரண்டு தேர்தல் அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறி நாட்டில் வன்முறைகள் இடம்பெற்றதை அடுத்து அங்கு தேர்தலுக்கான ஆயத்தங்களில் தடங்கல்கள் ஏற்பட்டன. தேர்தலுக்கான புதிய திகதிகள் அடுத்த வியாழனறு இரண்டு வேட்பாளர்களுடனும் இடம்பெறவிருக்கும் சந்திப்பை அடுத்து முடிவு செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, 1958 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெறவிருக்கும் முதலாவது மக்களாட்சித் தேர்தல் இதுவாகும். கடந்த சூன் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் எவரும் வெற்றி பெறாததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஞாயிறன்று நாள் குறிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், கினியின் தேர்தல் ஆணையாளர் பென் செக்கு சில்லா கடந்த செவ்வாயன்று நீண்டகால சுகவீனம் காரணமாக இறந்தது குறிப்பிடத்தக்கது. கினியில் முதற்தடவையாக மக்களாட்சித் தேர்தல் இடம்பெற்றது சூன் 28, 2010 கெய்ரோவிற்குத் தெற்கே பண்டைய எகிப்தின் தலைநகரான மெம்பிசு என்ற இடத்தில் உள்ள சக்காரா என்ற மிகத் தொன்மையான கல்லறைப் பகுதியில் 1999 ஆம் ஆண்டில் இவை சூறையாடப்பட்டிருந்தன. இந்த வெடிபொருட்கள் காவல்நிலையத்தில் வைத்து சாலைப் போக்குவரத்து நிர்மாணப் பணிக்காக சீன ஒப்பந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்ட போதே தற்செயலாக இவ்வெடிப்பு நிகந்ததாக மேஜர் ஜெனரல் உபய மெடவல தெரிவித்தார். இந்த வெடிபொருட்கள் வாகனங்கள் பலவற்றில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு வாகனத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அது ஏனைய வாகனங்களுக்கும் பரவியது. அருகிலுள்ள வைத்தியசாலை மற்றும் கமநல சேவைகள் திணைக்கள கட்டிடமும் சேதமடைந்துள்ளன. இவ்வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனினும் “சதி வேலை எதுவும் இடம்பெற்றதாக நாம் சந்தேகிக்கவில்லை என உபய மெடவெல தெரிவித்தார். கரடியனாறு காவல்நிலையம் பலத்த சேதத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, இறந்தோர் எண்ணிக்கை 25 எனக் காவல்துறையினர் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களிலும், இரண்டு துறைமுகங்கள் அமைக்கும் பணியிலும் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. போலந்தின் தலைநகர் வார்சாவில் வைத்து இவர் கைது செய்யப்படதாக போலந்தின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கைதாணை குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும், அதற்குப் பின்பே இவரை நாடு கடத்துவதா அல்லது விடுவிப்பதா என்பது முடிவு செய்யப்படும் என அரசுப் பேச்சாளர் மொனிக்கா லெவண்டோவ்ஸ்கா தெரிவித்தார். ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் தீவிரவாத நடவடிக்கைகளுக்காகத் தேடப்பட்டுவரும் சக்காயெவ், 2005 இல் ரஷ்யப்படையுடனான சண்டையில் கொல்லப்பட்ட செச்சினியத் தலைவர் அஸ்லான் மஸ்காதொவ் என்பவரின் பேச்சாளராக இருந்தவர். இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டு இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. அதில் முதலாவது நீதிமன்ற விசாரணையில் அவர் இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் சம்பந்தப்பட்டதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அவர் ஏற்கனவே குற்றங்காணப்பட்ட நிலையில் சென்ற மாதம் அவரது பதவிகள் அனைத்தும் அவர் வசம் இருந்து பறிக்கப்பட்டு ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டதாக முதலாவது நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது பின்னர் அரசுத்தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாக அவரது வக்கீல் சுனில் வட்டகல பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஆகத்து 13, 2010 சண்டை தற்போது எல்லையைத் தாண்டி மாலியினுள்ளும் இடம்பெறுவதாக இராணுவத்தினரை ஆதாரம் காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. முண்ணதாக பல தடவைகள் இவ்வமைப்பு பிரெஞ்சு, மற்றும் ஐரோப்பியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது. இவர்களைப் பின்னர் மாலியில் உள்ள பாலைநிலங்களுக்கு கொண்டு சென்றது. இவ்வமைப்பு கடந்த சூலை மாதத்தில் தாம் பிடித்து வைத்திருந்த மிச்செல் ஜெர்மானியூ என்ற 78 வயதுப் பிரெஞ்சு ஒருவரைக் கொலை செய்தது. கடந்த ஆண்டில் எட்வின் டயர் என்ற பிரித்தானியப் பணயக் கைதியைச் சுட்டுக் கொன்றது. இந்தர்ஜித் சிங் ரெயாட் என்ற இந்த நபர் இவ்விமானக் குண்டுவெடிப்புக்கு சூத்திரதாரி என்ற வகையில் 2003 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இவ்விமானக் குண்டுவெடிப்பில் 329 பேர் கொல்லப்பட்டனர். இவர் பின்னர் இரண்டு சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிக்கையில், தான் தயாரித்த குண்டு எதற்காகப் பயன்படுத்தப்படப் போகிறது அல்லது எந்த அமைப்பு இதனைப் பயன்படுத்தப் போகிறது போன்ற விபரங்கள் தனக்குத் தெரியாது எனக் கூறியிருந்தார். அந்த இரண்டு தீவிரவாதிகளும் போதிய சாட்சியமின்மையால் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். வான்கூவரில் நடந்த பொய்ச்சாட்சிய வழக்கில் ரெயாட் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் காட்டுவதற்காகவும், மற்றவர்களைக் காப்பதற்காவும் பொய் சொன்னார் என அர்சுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இவருக்கான தீர்ப்பு பின்னொரு நாளில் வழங்கப்படவிருக்கிறது. பொய்ச்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகக் காணப்படுபவர்கள் பொதுவாக அதிக பட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவர் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏர் இந்தியா ‌விமான‌ம் அ‌ட்லா‌ண்டி‌க் கட‌லி‌ல் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கிய‌தி‌ல் அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த ‌சி‌ப்ப‌ந்‌திக‌ள் உ‌ள்பட 329 பய‌ணிகளு‌ம் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் 1984ஆ‌ண்டு ‌சி‌க்‌‌கிய‌ர்க‌ளி‌ன் பு‌னி‌த்தலமான பொ‌ற்கோ‌யிலு‌க்கு‌ள் ‌‌நுழை‌ந்த தீ‌விரவா‌திக‌ள் ‌மீது இ‌ந்‌திய இராணுவ‌த்‌தின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதற்குப் ப‌ழி வா‌ங்கு‌வதற்காகவே நடத்தப்பட்டவை எனக் கூறப்பட்டன. பல ஆண்டுகள் நடந்த விசாரணைகளின் பின்னர் ரிப்புதாமன் சிங் மாலிக், அஜிப் சிங் பக்ரி என்ற இரண்டு கனேடிய சீக்கியர்கள் இக்குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர் போதிய சாட்சியமின்மையால் விடுவிக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் இவர் பொய்ச்சாட்சிய வழக்கில் கைது செய்யப்பட்டு சூலை 2008 ஆம் ஆண்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இப்போது அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். கடந்த சூன் மாதத்தில் கனடாவில் இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் ‌‌சீ‌க்‌கிய ‌தீ‌விரவா‌திகளா‌ல் ஏ‌ர் இ‌ந்‌தியா ‌விமான‌ம் தக‌ர்‌‌க்க‌ப்ப‌டலா‌ம் எ‌ன்று அ‌றி‌ந்‌திரு‌ந்து‌ம் கனடா நா‌ட்டு பாதுகா‌ப்பு படை‌யின‌‌ர் அல‌ட்‌சியமாக இரு‌ந்ததா‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு ‌ச‌ம்பவ‌ம் நிக‌ழ்‌ந்து‌‌ள்ளதாக தெ‌ரி‌வித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு அளிக்கவும் உத்தரவிட்டது. வெளிக்கொள்கள் இருப்பதை 1995 ஆம் ஆண்டில் முதற் தடவையாகக் கண்டுபிடித்தவர் இவரே. இவர் 51 பெகாசி பி என்ற புறக்கோளைக் கண்டுபிடித்தார். "கடந்த 10 ஆண்டுகளாக மைக்கல் மேயரும் அவரது குழுவும் புறக்கோள்களின் இயற்பியல், மற்றும் வேதி இயல்புகளை ஆராய்ந்து அறிந்துள்ளனர். இந்த ஆய்வுகள் கோள்களின் தோற்றத்தை ஆராயும் ஆய்வுக்கு மிக முக்கியமானதாகும் என சுவிட்சர்லாந்து அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. இப்பரிசு முதன் முதலில் 2009 ஆம் ஆண்டில் ஆர்மேனியாவின் அரசுத்தலைவர் சேர்ஸ் சார்க்சியானினால் அறிவிக்கப்பட்டது. ஆர்மேனியாவின் தலைசிறந்த இயற்பியலாளரும் வானியலாளருமான விக்டர் அம்பார்த்சூமியானின் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படவிருக்கும் இப்பரிசு $500,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதாகும். ஐக்கிய இராச்சிய பாராளுமன்றக் கீழவைக்குச் சென்று போப்பாண்டவர் ஆற்றிய உரையில் மனித சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கை மறைந்துவிடாமல் காப்பதும், மத நம்பிக்கையைப் பகுத்தறிவோடு ஆய்ந்து தெளிவுபெறுவதும் தேவை" என்றுரைத்தார். ஐக்கிய இராச்சியத்தில் கிறித்தவம் தவிர வேறு பல சமயங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கின்றார்கள் என்பதை ஏற்று, போப்பாண்டவர் பல்சமய நல்லிணக்கக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, உலகில் சமாதானத்தையும் மக்களிடையே நல்லுறவையும் வளர்ப்பதில் மதங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுவது ஏற்கத்தகாதது என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார். போப்பாண்டவர் தம் பயணத்தின் இறுதிநாளில் கத்தோலிக்க சமயத்திற்கு முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அதுவே கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் (1801-1890) என்பவருக்கு "அருளாளர் முத்திப் பேறு பெற்றவர்) என்னும் பட்டமளிப்பு வழங்கிய நிகழ்ச்சி ஆகும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி, கடவுள் பக்தியிலும் பிறருக்கு சேவை செய்வதிலும் சிறந்து விளங்கி இறந்தவர்கள் தம் சாவுக்குப் பின்னும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து, முத்திப் பேறு அடைந்து மகிழ்கின்றார்கள். இதை உலகறிய அறிக்கையிட்டு, அவர்களை மக்களுக்கு முன்மாதிரியாக முன்னிறுத்துகின்ற செயலே "முத்திப் பேறு அருளாளர்) பட்டம் என்று அழைக்கப்படுகிறது. கர்தினால் நியூமனுக்கு இப்பட்டம் வழங்கியது ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இலண்டனில் பிறந்த நியூமன் ஆங்கிலிக்க சபையில் உறுப்பினராக வாழ்ந்து, அச்சபையில் குருவானார். புகழ்மிக்க ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்கி பல நூல்கள் வெளியிட்டார். நியூமன் தம் நாற்பத்து நான்காம் வயதில் (அக்டோபர் 9, 1845) கத்தோலிக்க சபைக்கு மாறி வந்தார். போப்பாண்டவர் 13ஆம் லியோ நியூமனுக்குக் கர்தினால் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார் (1879 அப்போது நியூமனுக்கு வயது 78. நியூமன் எழுதிய "தன்வரலாறு Apologia pro Vita Sua பல்கலைக் கழகத்தின் இயல்பு Idea of a University சமய நம்பிக்கையின் பகுத்தறிவு அடிப்படை An Essay in Aid of a Grammar of Assent செரோந்தியுசின் கனவு The Dream of Gerontius) முதலியவை புகழ்பெற்றவை. மேலும் "அருள்நிறை சோதியே, இருளில் வழிகாட்டாய் Lead kindly light amid the encircling gloom) எனத்தொடங்கும் பாடலை இயற்றியவரும், ஆங்கில மொழி நடையில் தலைசிறந்தவர் என்று அறியப்படுபவரும் நியூமன் ஆவார். பெனடிக்டின் ஐக்கிய இராச்சிய பயணத்தின்போது சில எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. ஆயினும் அவரைக் காணவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை ஒருவரின் ஐக்கிய இராச்சியத்துக்கான முதலாவது அரசு முறைப் பயணம் இதுவாகும். போப்பாண்டவர் ஐக்கிய இராச்சியம் செல்கிறார் செப்டம்பர் 4, 2010 இந்தச் சம்பவத்துக்குப் பின் ஜும்மா மசூதி அருகே மோட்டார் வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்தது. பிரஷர் குக்கரில் இந்த குண்டை பொருத்தி இருந்தனர். குண்டு வெடித்ததில் கார் முழுவதும் தீப் பற்றி எரிந்தது. இது சாதாரண வகைக் குண்டு என்பதால் பெரிய சேதம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த காரின் உரிமையாளர் இந்தக் கார் எப்படி பள்ளிவாசலுக்கு அருகில் வந்தது என்பது தனக்குத்தெரியாது என்று தெரிவித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் செச்சினியாவைச் சேர்ந்த போராளிகளும் அடங்குவர் என அவர் தெரிவித்தார் இவர்கள் தமது தாக்குதல்களுக்கு இசுலாமிய சமயத்தைத் தமது பாதுகாப்பாகக் கருதுகின்றனர் என அப்பேச்சாளர் கூறினார். சென்ற மாத சிறை உடைப்பில் தப்பிய 25 போராளிகளில்7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தஜிகிஸ்தான் சிறையை உடைத்து போராளிகள் தப்பினர் ஆகத்து 23, 2010 போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே இறக்க விலவூட் தடுப்பு முகாம் அதிகாரிகள் நேற்றிரவு முழுவதும் ஈடுபட்டிருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் நாங்கள் எல்லோரும் உண்மையான அகதிகள். பாதுகாப்புத் தேடியே ஆத்திரேலியா வந்துள்ளோம் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட நாங்கள் இங்கு வரவில்லை,” எனத் தெரிவித்துள்ளனர். ”போராட்டத்தில் ஈடுபடுவோரில் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தினால் அகதி அந்தஸ்து பெற்றவர்,” என இலங்கை அகதிகளுக்கான வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சேரா நாதன் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஈராக்கியரும், ஈரானியரும் இன்று செவ்வாய்க்கிழமை தமது போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர். ”போராட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இருக்காது,” என ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இவ்வாண்டு மட்டும் ஏறத்தாழ 4,000 அகதிகள் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆத்திரேலியாவினுள் படகுகள் மூலம் வந்துள்ளனர். இப்பள்ளிகளில் பயிலும் கர்ப்பிணிகளுக்கு முறையான கல்வியுடன் தினமும் மருத்துவச் சோதனை, மற்றும் சமயக் கலந்தாய்வு போன்றவையும் வழங்கப்படும். இங்கு பயிலும் பெண்களின் தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் வரை இந்தப் பள்ளியில் யாரும் சேரவில்லை என்று ஒரு வருத்தமான அறிக்கையை மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோசிறீ முகமது அலி ருஸ்தாம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் கர்ப்பிணிகளுக்கான இப்பள்ளித் திட்டத்திற்கு மலேசியாவின் பெண்களுக்கான அமைச்சர் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அடிப்படைப் பிரச்சினை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் கல்வி வழங்கப்படாததே என்றார் அமைச்சர். தவறான உறவுகளினால் கருவுறும் இளம் பெண்களுக்கென்று ஒரு பள்ளி உருவாகியுள்ளது தவறான செயல்களுக்கு மறைமுகமான ஆதரவைத் தருவது போல ஆகாதா என்று சில கட்டொழுங்கு ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இளம் பெண்களுக்கு இந்த நிலை வராமல் தடுப்பது எவ்வாறு என்று சிந்தித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தால் நல்லது என அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாண்டு மட்டும் மலேசியாவில் 70 குழந்தைகள் வீட்டு வாசல்களிலும், பொது மலசல கூடங்களிலும், கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தோரில் பெரும்பான்மையானோர் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட வந்திருந்த பெண்களும் குழந்தைகளும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான்-ஈராக் போர் ஆரம்பித்து 30 ஆண்டுகள் நிறைவு வைபவத்தைக் கொண்டாடும் முகமாகவே இந்த இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றது. ஈரான் ஈராக் போர் 1980 இல் ஆரம்பித்து 1988 வரை நீடித்திருந்தது. இப்போரின் போது மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். குர்தியப் பிரிவினைவாதிகளே இத்தாக்குதலை மேற்கொண்டதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். பின்னர் வந்த தகவல்களின் படி இறந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக குர்திய அரசியல் ஆர்வலர்கள் பலர் இங்கு கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கிறார். ஈரானின் மேற்குப் பகுதியில், வடக்கு ஈராக், மற்றும் கிழக்கு துருக்கி ஆகிய எல்லைப்பகுதிகளில் குர்திய இனத்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வசிக்கின்றனர். உலகின் மிக வேகமான ஆண் மற்றும் பெண் என்று அறியப்படும் யமைக்காவின் உசைன் போல்ட், மற்றும் செல்லி ஆன் ஃபிரேசர், 800 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவின் டேவிட் ருடீஷா இந்தப் போட்டிகளுக்கு செல்வதில்லை என்று அறிவித்துள்ளனர். தற்போது பிரித்தானியாவின் மூன்று முன்னணி வீரர்களும் பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி தாங்கள் புதுடில்லி செல்லவில்லை என்று அறிவித்துள்ளனர். இந்தப் போட்டிக்கான முழுமையான ஏற்பாடுகள் இன்னமும் முடியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் மற்றும் குடியிருப்புகள் குறித்த அதிருப்தி இன்னமும் நிலவி வருகின்றது. நேற்று பளுதூக்கும் போட்டிகள் நடைபெறவுள்ள உள்விளையாட்டு அரங்கில் மேற்கூரைக்கு கீழே பொருத்தப்பட்டுள்ள செயற்கைக் கூரையின் ஒரு பகுதி விழுந்தது இவ்விளையாட்டுப் போட்டிகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. வெளிநாட்டு வீரர்கள் தங்கும் பொதுநலவாயக் கிராமம் தரமாக இல்லை என்று பல மேற்கத்திய நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால், இவையெல்லாம் சிறிய பிரச்சினைகள் என்றும் போட்டிகள் தொடங்கும் முன்னர் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முடிக்கப்படும் எனவும் இந்திய அரசும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினரும் கூறுகிறார்கள். இதற்கிடையில், பொதுநலவாயப் போட்டிகள் அமைப்பின் தலைவரான மைக் ஃபென்னல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக சந்தித்து, போட்டிகள் சிறப்பாக நடக்கும் விதமாக உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோருவதற்காக இன்று வியாழக்கிழமை புதுதில்லி செல்லவுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐந்து யானைகள் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் இரண்டு யானைகள் படுகாயமடைந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக வட்டார வனத்துறை அதிகாரி சுனித்தா கட்டக் தெரிவித்தார். யானைகளின் கூட்டம் ஒன்று மொராகட் காட்டில் இருந்து டயானா காட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இரண்டு குட்டி யானைகள் வழியில் இருந்த தொடருந்துக் கடவையில் சிக்கிக்கொண்டதாகவும், அவற்றைக் காப்பாற்ற சில யானைகள் முயற்சித்ததாகவும் அதன் போதே தொடருந்து மோதியதாகவும் அவர் தெரிவித்தார். இறந்த மற்றும் காயமடைந்த யானைகளைச் சுற்றி ஏனைய யானைகள் காவல் இருந்ததால் அப்பகுதியில் தொடருந்துச் சேவைகள் அனைத்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேகமாகச் செல்லும் தொடருந்துகள் இவ்விடத்தில் யானைகளை மோதுவது வழக்கம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஒரு யானை இவ்வாறு இறந்துள்ளது. இவ்விடத்தில் 25 முதல் 40 கிமீ/மணி வேகத்திலேயே தொடருந்துகள் செல்ல அநுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்தக் குறிப்பிட்ட வண்டி 70 கிமீ.மனி வேகத்தில் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழாவிற்காக தமிழ்நாடு அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கி கோயிலின் பராமரிப்பு பணிகள் உட்பட நகரின் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டது. இவ்விழாவை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் இசுடாலின் இக்கோயிலை கட்டியது இராஜராஜனில்லை என்று சிலரால் புனையபட்டுவருவதாக வருவதாக குற்றம்சாட்டினார். டைட்டானிக்கின் இரண்டாம் நிலை அதிகாரியான சார்ல்ஸ் லைட்டொலர் என்பவரின் பேத்தி புதின எழுத்தாளர் லூயிஸ் பேட்டன் இது குறித்து தெரிவிக்கையில், ”டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்,” என சார்ல்ஸ் லைட்டோலர் தன்னிடம் தெரிவித்ததாக அண்மையில் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்திலேயே இந்த அனர்த்தம் விளைந்ததாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான ஒழுங்கமைப்புகள் நடைமுறையில் இருந்தன. ஒன்று நீராவிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ரடர் கட்டளை Rudder Orders மற்றையது பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட டில்லர் கட்டளை Tiller Orders இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. ஒரு முறையில் வலது பக்கம் திருப்பு என்ற கட்டளை மற்றைய முறையில் இடது பக்கத்துக்காகும். சார்லஸ் லைட்டோலர் இதனை வெளியில் சொல்லாமல் இரகசியமாகவே வைத்திருந்ததாக லூயிஸ் பேட்டன் தனது குட் அச் கோல்ட் Good As Gold என்ற தனது கடைசிப் புதின நூல் ஒன்றில் தெரிவித்துள்ளார். உயிர் தப்பியவர்களில் லைட்டோலர் மட்டுமே இதனைத் தெரிந்து வைத்துள்ளார். டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இவ்விரகசியத்தை வெளியிட வேண்டாமென்று அவரிடம் கேட்டுள்ளார். அதிகாரபூர்வ விசாரணைகளில் கூட லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை என லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். தான் பணியாற்றிய வைட் ஸ்டார் லைனர் கம்பனியைக் காட்டிக் கொடுக்க அவர் விரும்பாததே அதற்குக் காரணம் என பேட்டன் எழுதியுள்ளார். 1990 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கீயின் வெற்றியை பர்மாவின் இராணுவ ஆட்சியாளர் ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இப்போது ரங்கூன் தேர்தல் தொகுதியில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் நவம்பர் 7 இல் இடம்பெறவிருக்கும் தேர்தலில் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் சூ கீயின் பெயர் உள்ளீடு தேர்தல் முடிவுகளில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் இத்தேர்தலில் பங்கெடுக்கத் தேவையில்லை என சூ கீ அம்மையார் தனது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய தேர்தல் சட்டங்களின் கீழ் அவரது மக்களாட்சிக்கான தேசிய முன்னணி என்ற கட்சி கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான 25 விழுக்காடு இடங்கள் இராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்தடவையாக பர்மாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது ஆகத்து 14, 2010 மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்றத்தை மதிக்கும் வகையில் இந்தோனேசிய மொழியில் அவர்கள் உரையாற்றினார்கள். தமது பழைய வாழ்க்கையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டதாகவும், சமூகத்துக்குத் தொண்டாற்றத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தனது செய்கைக்காகத் தான் "உண்மையாக, ஆழமாக வருந்துவதாக" லண்டனில் பிறந்த அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழரான 29 வயதான சுகுமாரன் தெரிவித்தார். சுயநலத்துடன் தாம் வாழ விரும்பவில்லை என்றும், பொதுவான வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தான் எவ்வாறு சிந்தனையற்றவனாக, ஞானமற்றவனாக இருந்தேன் என்பது இப்போது எனக்கு விளங்குகிறது என அவர் தெரிவித்தார். “முன்னர் இந்த போதைப்பொருள் கடத்தல் எப்படி சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனபது தனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் பின்விளைவுகளைப் பற்றி நான் யோசித்திருக்கவில்லை. என்னுடைய மனதின் அடித்தளத்தில் இருந்து சொல்கிறேன், நான் இப்போது வித்தியாசமானதொரு மனிதன். சீர்திருத்தப்பட்ட ஒருவன்." சான், சுகுமாரன் இருவரும் பாலி கெரபோக்கன் சிறைச்சாலையில் தமது சக கைதிகளுக்கு அடிப்படைக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறைச்சாலையில் வெற்றிகரமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையிலேயே மேன்முறையீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீடு வெற்றியளிக்கும் பட்சத்தில் இவர்களது தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்படலாம். வெற்றியளிக்காத நிலையில் இந்தோனேசிய அரசுத்தலைவரின் மன்னிப்புக்காக வேண்டலாம். சான், மயூரன் சுகுமாரன் இருவரும் மேலும் ஏழு ஆஸ்திரேலியர்களுடன் பாலியில் கைதானார்கள். ஸ்கொட் ரஷ் என்பவரும் மரணதண்டனையை எதிர்நோக்குகிறார். ஏனைய ஐவரும் ஆயுள் தண்டனை பெற்றனர். ரெனே லோரன்சு என்ற பெண் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். சான், சுகுமாரன் இருவரினதும் மேன்முறையீடு அக்டோபர் 8 ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு வரும். ஜெமா இசுலாமீயா என்ற தீவிரவாத அமைப்பின் சிங்கப்பூர் கிளையின் தலைவர் எனக் கருதப்படும் மாஸ் செலமாட் கஸ்தாரி என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் இவர் இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அதி-உயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அச்சிறையில் இருந்து பெப்ரவரி 2008 இல் தப்பி வெளியேறினார். பலத்த தேடுதல்களுக்கு மத்தியில் இவர் இரு நாடுகளையும் பிரிக்கும் சிறு கடல் பகுதியை நீந்திக் கடந்து மலேசியாவுக்குள் சென்றார். மலேசியாவின் தெற்கு ஜோகோர் மாநிலத்தில் இவர் மலேசியக் காவல்துரையினரால் கைது செய்யப்பட்டார். 2002 பாலி குண்டுத்தாக்குதல் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களை ஜெமா இசுலாமியா இயக்கம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புளொஸ் வன் (Plos One) என்ற அறிவியல் இதழில் இக்கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மாக்கள் வெப்பமண்டல சதுப்பு நிலப்பரப்பில் வாழ்ந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை செரட்டோப்சியான் என்ற தொன்மாக் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். செரட்டோப் என்றால் கிரேக்க மொழியில் கொம்புள்ள முகம் என்று பொருள். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தொன்மாக்களும் தமது தலையில் பல கொம்புகளைக் கொண்டிருந்தாலும், இவற்றில் பெரியது தனது மூக்கில் மிகப் பெரும் கொம்பைக் கொண்டுள்ளது. இரண்டாவது வகை தொன்மா கொஸ்மொசெராட்டொப் ரிச்சார்ட்சோனி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் 11 கொம்புகளுமாக மொத்தம் 15 கொம்புகள் காணப்படுகின்றன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மாக்களில் இதுவே மிகவும் அழகுபடுத்தப்பட்ட தலையைக் கொண்ட தொன்மா எனக் கூறப்படுகிறது. நோக்கம் இல்லாக் கொலை, மற்றும் ஆபத்தான நடவடிக்கை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இராணுவக் குற்றவழக்குத் தொடருனரின் மேலாளர் இந்தக் குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீது அறிவித்திருக்கிறார். பொதுவான சட்ட ஆணையை மீறியமை, மற்றும் பாரபட்சமான நடவடிக்கை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு அடுத்த நாள் ஆத்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், தமது வீரர்கள் துப்பாக்கிச் சூடு, மற்றும் கிறனேடுகள் மூலம் தாக்குதல் "விடுவிப்பு நடவடிக்கை" மேற்கொண்டபோதே இறப்புகள் ஏற்பட்டன எனத் தெரிவித்திருந்தது. அத்துடன் தாலிபான்கள் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் தற்காப்புக்காகப் படையினர் திருப்பிச் சுட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இம்மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் தாம் தமது நடவடிக்கையை நியாயப்படுத்துவோம் எனத் தமது வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்துள்ளனர். யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட இந்தச் சுங்கான் பெட்டி £51,650 80,300) விலைக்குப் போனது. இது முன்னர் £8,000-£12,000 12,400-$18,600) வரையே மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 21 அங்குலம் (53 சமீ) நீளமுடையதாகும். கிறிஸ்டி என்ற ஏல விற்பனை நிறுவனத்தினால் விற்கப்பட்ட இந்தச் சுங்கான் பெட்டியை வாங்கியவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. வழமைக்கு மாறான புகை பிடிக்கும் குழாய்களில் நான்கு குழாய்களே உலகில் எஞ்சியுள்ளன. இவற்றில் ஒன்று லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பேர்ட் அருங்காட்சியகத்திலும், மேலும் இரண்டு நெதர்லாந்தில் உள்ள டி மொரியான் அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் இறந்த டிரெவர் பார்ட்டன் என்பவரின் 50 ஆண்டுகால சேகரிப்பில் இந்த இலங்கைச் சுங்கான் பெட்டி இருந்து வந்தது. 2000 ஆம் ஆண்டில் பீப்பில்ஸ் மகசீன் என்ற இதழ் இவரை உலகின் 50 அழகான நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது. மாஸ்கோவின் பதில் மாநகர முதல்வராக லுஷ்கோவின் ஆட்சியில் பிரதித் தலைவராக இருந்த விளாதிமிர் ரெசின் நியமிக்கப்பட்டுள்ளார். மாஸ்கோ முதல்வர்கள், மற்றும் பிராந்திய ஆளுனர்களை தேர்தல்கள் எதுவும் இல்லாமல் பதவியில் இருந்து அகற்ற இரசிய அரசுத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது. லுஷ்கொவும் அவரது கோடீசுவர மனைவி யெலேனா பத்துரீனாவும் பல்வேறு ஊழல் குற்றச்சட்டுக்களுக்கு அண்மைக்காலங்களில் இலக்காயினர். குறிப்பாக அரசு தொலைக்காட்சி நிறுவனம் இவர் மீது பல ஊழல் குற்றங்களை சுமத்தியிருந்தது. யூரி லுஷ்கோவ் இரசியாவின் மிகவும் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஆவார். கிரெம்லின் சார்பு ஐக்கிய ரஷ்யக் கட்சியின் முக்கிய மூத்த உறுப்பினரும் ஆவார். அண்மைக்காலங்கலில் வொல்ககொராட், சிவெர்தோவ்ஸ்க், பாசுகொர்டொஸ்தான் போன்ற நகர முதல்வர்கள் உட்படப் பல மூத்த தலைவர்களை மெட்வேடெவ் பதவியில் இருந்து அகற்றியுள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. பன்னாட்டுப் பாடசாலைக்கு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த போதே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்திச் சென்றவர்கள் பள்ளி நிருவாகத்திடம் தொடர்பு கொண்டு 20 மில்லியன் நைராக்களை 130,000) கேட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகள் அனைவரும் நைஜீரியர்கள் என்றும் அவர்கள் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் 4 முதல் 10 வயதுக்குள் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் அதிகம் விளையும் நைஜர் டெல்ட்ட பகுதியில் இப்படியான கடத்தல்கள அதிகமாக நிகழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக வசதி படைத்தவர்களும் அவர்களது குடும்பத்தவர்களௌமே கடத்திச் செல்லப்படுகிறார்கள். பல நடுத்தர வசதி படைத்த நைஜீரியர்கள் வெளியில் செல்லும் போது தம்முடன் ஆயுதம் தரித்த நபர்களையும் பாதுகாப்புக்காகக் கூட்டிச் செல்லுகின்றனர் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். செப்டம்பர் 17 ஆம் நாள் வழங்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த தண்டனை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆயுத கொள்வனவின் போது அவருடைய மருமகன் தனுன திலனரட்னவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது. முன்னதாக முதலாம் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் படி, பொன்சேகாவினுடைய இராணுவப் பதவிகள், பதக்கங்கள் ஆகியன பறிக்கப்பட்டன. இராணுவத்தில் பணியாற்றியபடி அரசியலில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருக்கிறார். முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க பிபிசி சிங்கள சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”இராணுவ நீதிமன்றம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது, எனவே அதன் தீர்ப்புகள் அனைத்தையும் நாம் நிராகரிக்கிறோம்,” என்றார். இத்தீர்ப்பினால் சரத் பொன்சேக்கா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டி வரும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இரண்டாவது நீதிமன்றமும் சரத் பொன்சேகா குற்றவாளியெனத் தீர்ப்பு செப்டம்பர் 18, 2010 கலிபோர்னியா பல்கலைக்கழகம், மற்றும் வாசிங்டன் கார்னர்ஜி கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் கடந்த 11 ஆண்டுகளாக இப்புறக்கோளின் கிளீசு 581 என்ற சூரியனை ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் சுற்றி வருவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்றே எமது பூமியை ஒத்த கிளீசு 581ஜி ஆகும். அண்மையில் இவ்வாய்வாளர்கள் இரண்டு புதிய வேற்றுலகங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றுடன் கிளீசு 581 ஐக் குறைந்தது 6 கோள்கள் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளீசு 581ஜி பூமியை விட மூன்று முதல் நான்கு மடங்கு திணிவு கூடியது என்றும் அது அதன் சூரியனைச் சுற்றிவர 37 நாட்கள் எடுக்கின்றது. பாறைகளுடன் கூடிய இந்தக் கோள் வளிமண்டலத்தைக் கொண்டிருக்கத் தேவையான ஈர்ப்பைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை -12செல். முதல் -31செல். வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பூமியைப் போல் அல்லாது, இந்த வேற்றுலகத்தின் ஒரு பக்கம் எப்போது அதன் சூரியனின் பக்கம் உள்ளது. மற்றைய பக்கம் எப்போது இருட்டாகவே உள்ளது. எனவே இந்த இரு பக்கத்திற்கும் இடையில் உள்ள நிழலும் வெளிச்சமுமாக உள்ள பகுதியில் உயிரினம் செழித்து வாழக்கூடிய சான்றுகள் காணப்படுகின்றன. விண்மீன் ஒன்றைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்று முதற்தடவையாக பத்தாண்டுகளுக்கு முன்னரேயே கண்டுபிடிக்கப்பட்டது. அத பின்னர் கிட்டத்தட்ட 500 வரையான புறக்கோள்கள் எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஜுப்பிட்டர் மாதிரியான வாயுக்கோள்கள் ஆகும். வி.சி.குகநாதனின் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளிவந்த "மதுர கீதம்' படத்தின் மூலம் அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தினார். எம்எஸ்விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது. பின் "மாங்குடி மைனர் மச்சானை பார்த்தீங்களா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் இடம்பெற்ற "மாம்பூவே சிறு மைனாவே' பாடல் ரசிகர்கள் நினைவில் என்றும் நிற்கும் பாடலாகும். "மனிதன் ஊர்க்காவலன் அண்ணா நகர் முதல் தெரு புதிய பாதை விடுதலை முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற 'மெதுவா மெதுவா சங்கர் குருவில் இடம் பெற்ற 'காக்கிச் சட்ட போட்ட மச்சான் மக்கள் என் பக்கம் படத்தில் வரும் 'ஆண்டவனைப் பாக்கணும்' போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த "நான் பெத்த மகனே" திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார். அண்மைக்காலங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார் கத்திக் கப்பல்' படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது "சூரன்' என்ற படத்தில் நடித்து வந்தார் மலர்கள் திருப்பாவை' உள்ளிட்ட சில தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த மணிமகுடம், கலைஞரின் பராசக்தி நாடகம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார். நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று 30ம்தேதி இறந்தார். மறைந்த சந்திரபோசுக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர். நீதிபதிகள் அகர்வால், எஸ்.வி. கான் ஆகியோர், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி தரம்வீர் சர்மா, அந்தப் பகுதி முழுவதும் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். கடந்த 1992-ம் ஆண்டு இந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் நடுப்பகுதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், இந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 2,000 பேர் வரை உயிரிழந்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இன்று சனிக்கிழமை அதிகாலை 03:00 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுரபாயா நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்று தரித்து நின்ற வேறொரு வண்டியுடன் மோதிய போதே இவ்விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமிக்கைத் தவறே காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். மோதலின் போது மூன்று பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததாகவும் அவற்றில் இருந்தவர்களே இறந்துள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில் மேலும் ஒரு தொடருந்து விபத்து சோலோ என்ற நகரில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒருவர் அவ்விபத்தில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் ஜாவாவில் இடம்பெற்ற ஒரு தொடருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். இவ்வமர்வில் ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் ராம்சி கிளார்க், மலேசிய பினாங்கு மாநில பிரதி முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க அரசுத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல். பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது. இதுவரை எந்தவொரு தனியான நாடோ அல்லது ஐக்கிய நாடுகள் மன்றம் போன்ற அமைப்புக்களோ இந்த நாடாளுமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. இது ஒரு சட்டவிரோதமான அமைப்பு என்று இலங்கை அரசாங்கம் இதனை முன்னர் அறிவித்திருந்தது. விண்ணோடம் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று. இதனால் விண்ணோடத் திட்டத்தில் மேலும் ஒரு பயணத்தைச் சேர்ப்பதற்கு அமெரிக்க காங்கிரசில் இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒராயன் குறித்த எதிர்காலத் திட்டங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்நிலையில், அதனைத் தயாரித்து வரும் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2012 இன் இறுதியில் இவ்விண்கலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் என அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய விண்வெளித் திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலையும் அது தயாரித்துள்ளது. ஆரம்பத் திட்டத்தின் படி, ஒராயன் விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு 6 பயணிகளையும், நிலவுக்கு நால்வரையும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது. இருந்த போதிலும், ஒபாமாவின் சிறுகோள் திட்டத்துக்கு ஒராயன் ஒரு முக்கிய பங்காற்றும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம் ஏப்ரல் 19, 2010 இராணுவ ஆட்சியாளரின் அவசரகால விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக பிஜி]]யின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்திரி கைது செய்யப்பட்டார். பிஜியின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் மகேந்திர சவுத்திரி, வேறும் ஐந்து பேரும் விதிகளை மீறிப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டனர். இந்த அவசரகால விதிகள் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாளை திங்கட்கிழமை இவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் என நம்பப்படுகிறது. மகேந்திர சவுத்திரியின் அரசு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து கலைக்கப்பட்டது. ரக்கிராக்கி என்ற இடத்தில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுடன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்தே சவுத்திரி கைதானார். பிஜியின் சர்க்கரை ஆலை தொழில் இராணுவ ஆட்சியாளருக்கு தலையிடியைக் கொடுக்கும் ஒரு துறையாகும். சர்க்கரை உற்பத்தியை நவீனமயப் படுத்த இராணுவ ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. இதனால் பெருமளவு பொருள் இழப்பு ஏற்பட்டது. தொழிற்கட்சி 1999 பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, சவுத்திரி பிஜியின் முதலாவது இந்திய இனப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டின் பின்னர் பிரபல தொழிலதிபரும், தேசியவாதியுமான ஜோர்ஜ் ஸ்பைட், இளைப்பாறிய இராணுவ மேஜர் இலிசோனி லிகாயிரி ஆகியோர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு சவுத்திரி மற்றும் அவரது அமைச்சரவையினரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர். ஸ்பைட் பதில் பிரதமராகத் தன்னை அறிவித்தார். இதனை அடுத்து பிஜி அதிபர் சவுத்திரியையும் அவரது அமைச்சரவையையும் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். 2006 ஆம் ஆண்டில் இராணுவத்தினர் மேஜர் பைனிமராமா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கு ஊடகத் தணிக்கை அமுல் படுத்தப்பட்டு, அரசியல் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன. தமிழ்நாடு தலைநகர் சென்னையில் வெள்ளியன்று வெளியிடப்பட்ட எந்திரன் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக முதல் நாள் இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்ததாக பிபிசி செய்தியாலர் தெரிவிக்கிறார். இத்திரைப்படம் வசூலில் புதிய சாதனையைப் பெறும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். அறிவியல் புனைவு படமான எந்திரன் உலகெங்கும் ஏறத்தாழ 2,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இத்திரைப்படம் இந்தியிலும், தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இத்திரைப்படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஹாலிவுட் திரைப்படங்களான டெர்மினேட்டர், கொட்சில்லா போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவு தொழில்நுட்பங்களை இது கொண்டுள்லது என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனைய இந்தியத் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு இதன் தொழிநுட்பம் இருப்பதாக இப்படத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். வசீகரன் என்கிற அறிவியலாளர் 10 ஆண்டுகாலமாக அயராது உழைத்து 'சிட்டி'என்கிற ஒரு தானியங்கியை (ரோபோ) வடிவமைக்கிறார். அதனைப் பல திறைமைகளோடு உருவாக்கி இராணுவத்தில் அதனைப் பணிபுரிய வைப்பதே அவரது குறிக்கோள். சிட்டிக்கு பல திறமைகள் இருந்தாலும், அதற்கு உணர்ச்சிகள் இல்லை என்ற காரணத்தினால், அதனைத் தவறாகப் பயன்படுத்தி கேடு விளைவிக்க வாய்ப்பு உள்ளதென்று அதற்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. சிட்டிக்கு உணர்ச்சிகள் இருந்தால் மட்டுமே மனித குலத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நம்பும் வசீகரன், சிட்டிக்கு உணர்ச்சிகளை செலுத்துகிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை படம் விளக்குகிறது. “குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல் என்றார் துபாயில் முதல் நாள் திரைப்படத்தைப் பார்த்த ஒரு ரசிகர். "படம் என்றால் இதான். இதுக்கு மேல் ஒரு உயர்தர வர்த்தக படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி ஷங்கர் இணைந்தது அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது,” என்றார் வேறொருவர். title வெளிநாடுகளில் திருவிழாக் கோலம் எந்திரன் மெகா ஹிட் முதல் தகவல் அறிக்கை! title தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் எந்திரன்: சினிமா விமர்சனம் துவக்கத்தில், இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளைப் பறைசாற்றும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் இசை முழக்கங்களை எழுப்பினார்கள். கண்கவர் வாண வேடிக்கைக்குப் பிறகு வண்ண விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய ஹீலியம் பலூன் பறந்தது. அதில், பல்வேறு விளையாட்டுகளைக் குறிக்கும் வகையிலான உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில், 7 வயது சிறுவன் கேசவ் மிகச்சிறப்பாக தபேலா வாசித்து அனைவரையும் கவர்ந்தான். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில், ஊழல் முறைகேடுகள், அரங்கங்கள் மற்றும் வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடுகள் என இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான எதிர்மறையான செய்திகள், இந்தப் போட்டிகள் தொடர்பாக பல சந்தேகங்களை ஏற்படுத்தின. ஆனாலும், வண்ணமயமாக sumaar 9,000 நிகழ்ச்சியாளர்கள் கலந்துகொண்ட ஆரம்ப விழா சுமூகமாக நடந்து முடிந்தது. இப்போட்டிகளுக்காக இந்தியா இதுவரை 6 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட செலவுகளை விட 60 மடங்கு அதிகமானதாகும். மொத்தம் உள்ள 17 போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது. கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை மேலும் முன்னேற்றம் அடையும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 1950கள், 60கள், 70களில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளின் பயனாக 1978 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் உலகின் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தை லூயிசு பிரவுன் இங்கிலாந்தில் பிறந்தது. அதன் பின்னர் சுமார் 4 மில்லியன் குழந்தைகள் இம்முறை மூலம் பிறந்தன. இவருடன் இணைந்து பணியாற்றிய பாட்றிக் ஸ்டெப்டோ 1988 இல் இறந்து விட்டார். உலகளவில் பத்து சதவீதமான மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் எட்வர்ட்சின் ஆய்வுகள் அந்தத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது. பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தணுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம் In-vitro fertilisation IVF ராபர்ட்சுக்கு நோபல் பரிசு கிடைத்தது “நல்ல செய்தி” என லூயிசு பிரவுன் தெரிவித்தார் ஐவிஎஃப் இன் முன்னோடி ஒருவர் இப்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பது எனக்கும் எனது தாயாருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெல்பேர்னில் இடம்பெற்ற போட்டிகளில் ஆத்திரேலிய அணி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. "சீருடற்பயிற்சி வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள். விளையாட்டுக்களைத் தொடங்குவதற்கு இது உந்துசக்தியாக விளங்கும் என ஜெபெரிசு தெரிவித்தார். இங்கிலாந்து அணி வெள்ளிப் பதக்கத்தையும், கனடா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றது. இவர்கள் இருவரும், வேறும் ஆய்வாளர்களின் உதவியுடன் முதன் முதலில் எழுத்தாணியில் பயன்படுத்தப்படும் கிரபைட்டில் இருந்து கரிமப் படலங்களை வேறுபடுத்தினார்கள். இக்கண்டுபிடிப்பு விரைவுக் கணினிகள் உட்பட இலத்திரனியலில் மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என நோபல் பரிசு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2010 மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சு பெற்றார் அக்டோபர் 5, 2010 "நசனல் ஜியோகிரபிக்" ஆய்வுக் குழுவினர் ஒரு சிறிய பகுதி ஒன்றில் வேறு இரண்டு மொழி பேசும் மக்களைக் கண்டுபிடிப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றனர். அப்போதே இந்த அரிய மூன்றாவது மொழியைக் கண்டுபிடித்தனர். இது ஒரு புதிய முன்னெப்போதும் எவரும் கண்டுபிடிக்கப்படாத மொழியாக இருந்தது. ஆயிரக்கணக்கான சொற்களை டேவிட் ஹரிசன் என்பவரின் தலைமையில் சென்ற ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஏனைய மொழிகளிடம் இருந்தும் கோரோ மொழி பெரிதும் வேறுபடுவதை அவர்கள் அறிந்தனர். திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தைல் இதுவும் உள்ளது. இந்தியாவில் இம்மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த 150 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனாலும் இம்மொழிக் குடும்பத்தில் கோரோ மொழியை ஒத்த வேறு மொழிகள் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இம்மொழி எப்போது எழுதப்பட்டிருக்கவில்லை என்றும் இப்போது 800 இற்கும் 1,200 இற்கும் இடைப்பட்டோரே இம்மொழியைப் பேசுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மொழி பற்றி மேலும் ஆராய்வதற்காக இவ்வாய்வுக்குழு அடுத்த மாதம் அளவில் இப்பகுதிக்கு செல்லவிருக்கின்றது என அக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இம்மொழி எங்கிருந்து உருவானது என்பது பற்றியும் எவ்வாறு இம்மொழி இவ்வளவு காலமும் வெளியில் வராமல் இருந்தது என்பது குறித்தும் அவர்கள் மேலும் ஆராயவிருக்கிறார்கள். இவ்வாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட புதிய வகை வேதியியல் முறை மூலம் மருந்துகள், இலத்திரனியல் போன்றவற்றில் புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கு அறிவியலாளர்களுக்கு வழி பிறந்துள்ளது. ”கரிமவேதியியல் தொகுதியில் பலேடியம்-வினையூக்கி குறுக்குப் பிணைப்பை” உருவாக்கியமைக்காக இவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுவதாக ரோயல் சுவீடிய அறிவியல் கழகம் நேற்று வெளியிட்ட தனது செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது. இவ்வாறான மூலக்கூறுகள் கடல் பாசியில் சிறிதளவு கடுபிடிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய்க் கலங்களை அழிக்க இவற்றைப் பயன்படுத அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வகைத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வில்லைகளைக் கொண்ட தாள் ஒன்றைப் பயன்படுத்தி ஒன்றின் மேல் ஒன்றாக படியக்கூடிய ஒன்பது பிம்ப வரிசைகளை உருவாக்க வல்லது. இதனைப் பார்ப்பவர் தனது ஒவ்வொரு கண்ணாலும் வெவ்வேறு படிமங்களைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் திரையில் முப்பரிமாண மாய வடிவத்தைப் பார்க்கலாம். "தொலைக்காட்சியை கண்ணாடி இல்லாமல் பார்ப்பது கட்டாயம் இயற்கையாக இருக்கும்,” என டொசிபா நிறுவனத் தலைவர் மசாக்கி ஊசுமி தெரிவித்தார். எனினும், தெளிவான முப்பரிமாணப் படிமங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்டளவு தூரத்தில் இருக்க வேண்டும். அதாவது, 20 அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் 35 அங்குல (90 செமீ) தூரத்தில் ஒருவர் இருந்து பார்க்க வேண்டும். அத்துடன் 40 பாகை கோண எல்லைக்குள் ஒருவர் இருக்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளுக்காகவே சொனி, சாம்சங், மற்றும் பனசோனிக் போன்ற பெரும் நிறுவனங்கள் தனது தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றன. டொஷிபாவின் சிறிய ரகத் தொலைக்கட்சிப் பெட்டிகள் 120,000 யென்களுக்கு 1,400) விற்கப்படும் என டொஷிபா அறிவித்துள்ளது. உள்ளூரில் ஒரு மாதத்திற்கு 1,000 பெட்டிகள் வரை விற்கப்படும் என டொசிபா நம்பிக்கை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சந்தைக்கு விடப்படும் நாள் தெரியவில்லை. டோக்கியோவில் இடம்பெற்ற சீடெக் இலத்திரனியல் கண்காட்சியில் இந்த முப்பரிமாணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் முதலாவது முப்பரிமாணத் தொலைக்காட்சிச் சேவையை ஸ்கை நிறுவனம் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியிருந்தது. டலோக்கான் என்ற நகரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட போதே ஆளுநர் முகமது ஒமார் கொல்லப்பட்டார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண பாதுகாப்பு உயரதிகாரி தெரிவித்தார். இத்தாக்குதலுக்கு உடனடியாக எவரும் உரிமை கோரவில்லை. ஆளுநர் ஒமார் அரசுத்தலைவர் அமீது கர்சாயிற்கு நெருங்கியவர் என்றும், இவர் முன்னர் பல தடவைகள் தாலிபான்களின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவரது சகோதரர் சென்ற ஆண்டு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். இதற்கிடையில் கோஸ்டு மாகாணத்தில் நேட்டோ உலங்குவானூர்தி ஒன்றைத் தாக்குவதற்கு முற்பட்ட ஐந்து பேரை நேட்டோ படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இத்தாக்குதலில் உயிழந்தவர்கள் பொதுமக்களே எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நகைச்சுவைப் புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்புகளை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட யோசா 1990ம் ஆண்டு பெரு நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993ம் ஆண்டு எசுப்பானியா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இவர் தற்போது இலண்டன் (ஐக்கிய இராச்சியம்) நகரில் வசித்து வருகிறார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சீனாவில் அடிப்படை மனித உரிமைகளுக்காக நடத்தப்பட்டு வரும் இயக்கத்துக்கு அவர் ஒரு முதன்மையான குறியிடாக விளங்குகிறார் என்று நோபல் பரிசுக் குழு தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. லியூ சியாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், லியு சியாபோ ஒரு குற்றவாளி என்றும், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது நோபல் அமைதிப் பரிசு நெறிகளை மீறும் செயல் என்று சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. 36 வயதுள்ள லிண்டா, டாய் (DAI) என்ற அமெரிக்க நிவாரண நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். இஅவரும் இவருடன் பணியாற்றிய வேறு மூன்று உள்ளூர் வாசிகளுடன் குனார் என்ற கிழக்கு மாகாணத்தில் வைத்து செப்டம்பர் 26 ஆம் நாள் கடத்திச் செல்லப்பட்டார். நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்கப் படையினர் இவரை மீட்க எடுத்த நடவடிக்கை ஒன்றின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார். "மீட்பு நடவடிக்கை ஒன்றின் போது அவரைப் பிடித்து வைத்திருந்தவர்களால் கொல்லப்பட்டுள்ளார் என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஏக் தெரிவித்தார். "நேசப்படையினருடன் நாம் பணியாற்றிக் கொண்டிருந்த போது லிண்டா குறித்த தகவலைப் பெற்றோம். அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. அவர் அங்கு அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரைக் காப்பாற்றுவதற்கு எமக்குக் கிடைத்த தகவல் போதுமானதாக இருந்தது,” என அவர் தெரிவித்தார். ”இப்படியான துயரமான முடிவுக்கு அவரைக் கடத்தியவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்”. சான் ஒசே சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலவறையை சென்றடையும் முயற்சி நேற்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரமுமாக இருந்தன. கடந்த ஆகத்து 5 ஆம் நாளில் இருந்து 700 மீட்டர் ஆழத்தில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தொழிலாளர்களை மேலே கொண்டு வருவதற்கு முன்னர் மருத்துவர் ஒருவர் கீழே சென்று அவர்களின் உடல், மனநிலையைப் பரிசோதிப்பார் என அமைச்சர் தெரிவித்தார். முதலாவது தொழிலாளரை மேலே கொண்டுவரும் பணி புதன்கிழமை தொடங்கும். இரு நாட்களில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பின் தலைவர் மைக் ஃபென்னெல் இத்தகவலைத் தெரிவித்தார். இது குறித்தான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும். மெத்தைல்ஹெக்சனீமைன் எனப்படும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தின் சான்றுகள் இவரது உடம்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளஹு. இம்மருந்து அண்மையில் தான் தடை செய்யப்பட்ட மருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்ற வியாழனன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாலி பியர்சன் தவறாக ஓட ஆரம்பித்ததை அடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து இரண்டாவதாக வந்த 24 வயது நைஜீரியப் பெண் ஒசாயெமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இன்றைய சோதனையில் இம்முடிவு உறுதி செய்யப்பட்டால், இவரது தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவருக்குத் தாற்காலிக தடை மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்தார் ஃபென்னெல். தில்லியில் நடைபெறும் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனையில் ஒருவர் வெற்றி பெறாதது இதுவே முதல் தடவையாகும். தாம் எவ்விதக் குற்றங்களையும் இழைக்கவில்லை என்றும், தமது போராளிகள் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் எதையும் நடத்துவதில்லை என்றும் தமது செய்தியாளரிடம் இவர் சென்ற ஆண்டு தெரிவித்திருந்ததாக பிபிசி கூறியுள்ளது. டிஆர் கொங்கோவில் போராளிகள் அண்மையில் நூற்றுக்கணக்கானோரைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 1994 ருவாண்டா தூத்சி இனப்படுகொலைகளிலும் "ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படையினரின் சில தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் தூத்சி இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட குழு ஆட்சியைக் கைப்பற்றியதும் இவர்கள் அயலில் உள்ள கொங்கோ மக்களாட்சிக் குடியரசிற்குள் தப்பி ஓடியதை அடுத்து கொங்கோவில் நீண்டகாலம் சுமுகநிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊட்டு இனப் போராளிகள் கொங்கோவைத் தமது தளமாகப் பாவிப்பதை நிறுத்துவதற்காக ருவாண்டா தனது படையினரை அங்கு இரு தடவைகள் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 5 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர். உக்ரைனின் தினிப்புரோபெத்ரோவ்ஸ்க் பகுதியில் அர்ஜனீகித்செ என நகரில் இன்று காலை உள்ளூர் நேரம் 0900 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். பயணிகளை ஏற்றி வந்த பேருந்து தொடருந்துக் கடவை ஒன்றைக் கடக்க முயல்கையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கடவையை நோக்கி வந்த புகைவண்டி எழுப்பிய ஒலியை பேருந்தின் சாரதி சட்டை செய்யாமல் கடக்க முற்பட்டார் என ஏபி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் சட்டங்கள் மாற்றப்பட்டு நாடாளுமன்ற மக்களாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஞாயிறன்று முதலாவது மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் மோசடிகள், வன்முறைகள் எதுவும் இத்தேர்தலில் இடம்பெறவில்லை என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சூன் மாதத்தில், நாட்டின் தெற்கில் கிர்கீசு இனத்தவருக்கும், சிறுபான்மை உஸ்பெக்குகளுக்கும் இடையே இடம்பெற்ற வன்முறைகளில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் உஸ்பெக்குகள் ஆவார். 400,000 பேர் இடம்பெயர்ந்தனர். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அரசுத்தலைவர் செபஸ்தியான் பெனேரேவும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட 31 வயது பிளாரன்சியோ அவலோசு என்பவரை அதிபர் கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் கடந்த சில நாட்களாக சுரங்கம் இருக்கும் இடத்தை முற்றுகையிட்டிருந்தனர். சிலி நாட்டிலுள்ள அட்டகாமா பாலைவனத்தில் உள்ள 700 மீட்டர் நீள சுரங்கத்தின் முக்கிய வழி கடந்த ஆகத்து 5ம் நாளன்று இடம்பெற்ற மண்சரிவால் மூடப்பட்டதை அடுத்து உட்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கிக் கொண்டவர்களிடம் இருந்து பல நாட்களாக எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இந்நிலையில் உள்ளிருந்தவர்கள், வெளியில் இருந்தவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதை தெரியப்படுத்தினர். இதையடுத்து, மண்சரிவால் மூடப்பட்ட பகுதியில் துளை ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக ஒரு சிறிய விடியோ கருவி மூலம் சுரங்கத்தின் உட்பகுதி கண்காணிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது. மீட்கப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சிலி அரசு அறிவித்துள்ளது. சிலி சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியின் முதற் கட்டம் வெற்றி அக்டோபர் 10, 2010 சீன அரசியலமைப்பின் படி அனைத்து மக்களுக்கும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளதெனினும், நடைமுறையில் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பொதுமக்கள் இணையத்தில் சுதந்திரமாகத் தமது கருத்துக்களைக் கூற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களுக்கு கூடுதல் மரியாதை அளிக்கப்ப வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர். "எமது அரசியலமைப்பை அவர்கள் மீறுகிறார்கள், ஒருவரின் பங்களிப்பை வெளியிட வேண்டாம் என தொலைபேசியில் அறிவுறுத்தப்படுகிறது, அல்லது குறித்த ஒரு நிகழ்வு குறித்து ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "தொலைபேசியில் கதைப்பவர்கள் தமது பெயர்களைத் தெரிவிப்பதில்லை." இக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் பலர் முன்னர் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கியவர்கள். இவர்களுள் முன்னாள் தலைவர் மா சே துங்கின் தனிப்பட்ட செயலாளராக இருந்தவர், வேறொருவர் ”மக்கள் தினசரி”யின் ஆசிரியராக இருந்தவர். சீன நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், பத்திரிகைத் தணிக்கை, மற்றும் நூல் வெளியிடுதலில் உள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றை நீக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 72 ஆண்டுகளின் பின்னர் பொதுநலவாயப் போட்டி ஒன்றில் குத்துச்சண்டையில் முதலாவது தங்கப் பதக்கத்தை இவர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1933 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 56 கிலோ எடைப்பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது. அதன்பின்னர் 1950 ஆம் ஆண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்ற ராணி யாதவ் என்ற இந்திய வீராங்கனை முதல் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். அவர் இந்தப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான இரண்டாவது பரிசோதனையிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்தால் அவர் போட்டிகளில் பங்கு பெற இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படக் கூடும். [[இலங்கை]]யில் இடம்பெற்ற ஈழப்போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு அமைத்துள்ள ”படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழு” முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை பன்னாட்டு மனித உரிமைக் குழுக்கள் பல நிராகரித்துள்ளன. இந்த ஆணைக்குழு நம்பகத்தன்மையற்றது எனவும் பக்கச்சார்பற்ற விசாரணை போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் அமையவில்லை என அக்குழுக்கள் கூறியுள்ளன. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து தமக்கு பல நம்பிக்கையான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கையின் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகள், அதிகாரங்கள் போன்றவை ஒட்டுமொத்தக் கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவை உள்ளடங்கிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க போதுமானவை அல்ல என்றும் கூறியுள்ளது. "இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற பன்னாட்டு ஆணைக்குழ்வே தேவையானது என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் கென்னத் ரொத் தெரிவித்தார். இருந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தனது விசாரணைகளை நடத்தி வருகின்றது. பல உள்நாட்டுத்தரப்பினரும் இந்த விசாரணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்து வருகின்றனர். இலங்கை இராணுவமும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படும் ஆயுதக்குழுக்களும் தமது உறவினர்களை கடத்திச் சென்றதாகவும், கொலை செய்ததாகவும் பலர் அங்கு முறைப்பாடு செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் துறை பேச்சாளரான இளந்திரையன் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களும் சாட்சியமளித்தனர். இளந்திரையனின் மனைவி வனிதா 2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை என தெரிவித்தார். மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியமளிக்கையில், தமது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வட்டுவான் என்னுமிடத்தில் ஏனைய பொது மக்களுடன் வந்த போது இராணுவத்தினர் விசாரணைக்கு எனக் கூறி பொது மக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை தன்னால் அறிய முடியாமல் இருப்பதாகக் கூறினார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தனது கணவர் மே 18 ஆம் தேதி இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார். போரின் இறுதி கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் படையினரிடம் சரணடைந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விபரங்களை வெளியிட இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடக்க சாத்தியமிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன. ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி கடந்த புதனன்று இந்திய அணியிடம் படு தோல்வியச் சந்தித்ததை அடுத்து பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்குபற்ற வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆத்திரமடைந்து அவர்கள் தங்கியிருந்த கிராமத்தை சேதப்படுத்தியதாக இந்திய ஊடகங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டிருந்தது. அறைகளில் இருந்த தளபாடங்கள், மின்னுபகரணங்களை சேதப்படுத்தியதாகவும், துணி துவைக்கும் மின்பொறியை எட்டாவது மாடியில் இருந்து கீழே எறிந்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துணி துவைக்கும் மின்பொறி சேதமடைந்ததை ஒப்புக்கொண்டிருக்கும் ஆத்திரேலியத் தூதரகம், தமது வீரர்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை எனக் கூறியிருக்கிறது. "வீட்டுப் பணியாளர்கள் ஆத்திரேலிய வீரர்களின் கூத்தைத் தடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் முடியவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் தெரிவித்துள்ளது. அவர்கள் சச்சின் தெடுல்க்காருக்கெதிராகக் கூச்ச்லிட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆத்திரேலிய தூதரகம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஆஸ்திரேலிய அணியினரும், வேறு பல அணியினரும் அங்கு வேடிக்கையாகக் கொண்டாடினர்,” எனத் தெரிவித்துள்ளது. துணி துவைக்கும் மின்பொறி சேதமடைந்தது உண்மை எனவும், ஆனால் அதனை சேதப்படுத்தியது யார் என்பது நிரூபிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தில்லிக் காவல்துறைக்கும், விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும், அவர்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை எனவும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்து முடிந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா 74 தங்கங்களுடன் முதலாம் இடத்தையும், இந்திய அணி 38 தங்கப்பதக்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்து அணி, 37 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. 57 கிமீ நீளமான கோத்தார்ட் தொடருந்துச் சுரங்கப்பாதை அமைக்க 14 ஆண்டுகள் பிடித்துள்ளன. இப்பாதை 2016 ஆம் ஆண்டிலேயே சேவையாற்றத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவுப் போக்குவரத்துப் பாதையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகம் இவ்வழியில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிச் நகருக்கும் மிலான் நகருக்கும் இடையேயான போக்குவரத்து நேரம் இதனால் ஒன்றரை மணித்தியாலங்களால் குறையும். ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக ஒரு நாளைக்கு 300 தொடருந்துகள் செல்லும் எனவும் கூறப்படுகிறது. சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் நேற்று உள்ளூர் நேரம் 1415 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிகழ்வு ஐரோப்பா முழுவதும் நேரடியாக திலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பு, எட்டுப் பணியாளர்களின் உயிர்த்தியாகம், 10 பில்லியன் அமெரிக்க டொலர் பொருட்செலவு என்பவற்றால், உலகின் மிக நீளமான மலைக்கீழ் சுரங்கப்பாதை வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது. 1909 ஆம் ஆண்டில் இறந்த மேரி மக்கிலொப் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட பாதிரியார்களுடன் சர்ச்சைகளில் ஈடுபட்டமைக்காக உயர்பீடத்திலிருந்த அன்றைய பாதிரியார்கள் இவரை சிறிது காலத்துக்கு துறவிப் பணிகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டிருந்தார். 1871 ஆம் ஆண்டில் இவர் கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இறந்து 85 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 இல் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலினால் முத்திப்பேறு பெற்றார். சோமாலியாவின் தெற்கு, மற்றும் நடுப் பகுதிகளை அல்-சபாப் போராளிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனாலும், அரசு-சார்புப் படையினர் கடந்த சில வாரங்களாக அங்கு தமது ஆதிக்கத்தைப் பலப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அரசுப் படையினரின் புதிய தாக்குதல்களை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ஔஅலில் உள்ள கென்யாவினுள் நுழைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். புலோ ஹாவோவில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள மண்டெரா என்ற கென்ய நகரினுள் இவர்கள் நுழைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 11 அல்-சபாப் போராளிகளும் ஒரு படை வீரரும் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. அந்நகரத்தின் அனைத்து அரசுக் கட்டடங்களிலும் அல்-சபாபின் கறுப்ப்க் கொடிகள் அகற்றப்பட்டு, சோமாலியாவின் நீல, வெள்ளை தேசியக் கொடிகள் பறப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகுலு சுன்னா வால் ஜமா என்ற மிதவாத இசுலாமியக் குழு அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இம்மாதம் தலைநகர் மகதிசுவின் பல இடங்களை அல்-சபாபிடம் இருந்து அரசுப் படையினர் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையின் ஆதரவுடன் கைப்பற்றியுள்ளனர். செச்சினியாவின் தலைநகர் குரொச்னியில் தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தைத் தாக்கியதில் இரண்டு பாதுகாப்புப் படையினரும், பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் மூரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் தற்கொலைக் குண்டுதாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், தக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என செச்சினிய அரசுத் தலைவர் ரம்சான் காதிரொவ் தெரிவித்தார். காலை 0845 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், கட்டிடக் காவல் நிலையமே தாக்குதலுக்கு இலக்கானதாகவும் காதிரொவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தினுள் இருந்த அனைத்து உறுப்பினர்களும் காயம் எதுவும் இன்றி வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக உருசிய செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செச்சினியா, மற்றும் அயல் மாநிலங்களான தாகெஸ்தான், இங்குசேத்தியா ஆகியவற்றில் தனிநாடு கோரி இசுலாமியத் தீவிரவாதிகள் போரிட்டு வருகிறார்கள். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இடங்களுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் முழுமையான சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் பிலிப்பைன்சைத் தாக்கிய பெரும் புயல் இந்த மெகி புயல் எனக் கூறப்படுகிறது. புயல்காற்றுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 2006-ம் ஆண்டு கடும் புயல் பிலிப்பைன்சைத் தாக்கியபோது ஏற்பட்ட மண் சரிவில் பல கிராமங்கள் புதையுண்டதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர். ஐநான் என்ற தெற்குச் சீனத் தீவில் ஒரு இலட்சம் பேர் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர். சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட சீர்திருத்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பால்ராஜ் (வயது 48 2009 செப்டம்பர் 22ம் நாள் சிங்கப்பூரில் உள்ள அவரது வீட்டில் அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் மேலதிக விசாரணைக்காக டிசம்பர் 18ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் இணைந்து செயல்பட்ட இலங்கை]]யின் திருநாவுக்கரசு வரதராசாவுக்கு (40 வயது) 57 மாத சிறைத்தண்டனையும், இந்தோனேசியாவின் 73 வயது ஹாஜி சுபான்டிக்கு 37 மாத சிறைத் தண்டனையும், ஓய்வுபெற்ற இந்தோனேசிய அதிகாரி 62 வயது எரிக் வோட்டுல்லொ என்பவருக்கு 30 மாத சிறைத் தண்டனையும் 2008ல் விதிக்கப்பட்டது. பால்ராஜ் நாயுடுவுக்கு ஆகக்கூடியது 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட சட்டத்தில் இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976ஆம் ஆண்டு முதல் தனி நாடு கோரி போராடி வந்தது. 100 வயதை அடைந்த இந்தியர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்காகப் பல்கலைக்கழகம் செல்கிறார். படிப்பதற்கு வயது எல்லை கிடையாது என அவர் கூறுகிறார். "எனது மகன் 55 வயதில் முனைவர் பட்டம் பெற்றார், என்னால் ஏன் முடியாது என திரு தாஸ் வினவினார். 1930 ஆம் ஆண்டில் தனது 19 வது அகவையில் இவர் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி சிறை சென்றவர். பின்னர் ஆசிரியராக, வழக்கறிஞராகப் பணியாற்றி அசாம் மாநில நீதிபதியாக 1971 ஆம் ஆண்டில் இளைப்பாறினார். முனைவர் பட்டத்திற்காக நியோ-வைஷ்ணவம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்லத் திட்டமிட்டுள்ளார். அசாமில் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க இத்தத்துவம் பயன்பட்டுள்ளது என இவர் நம்புகிறார். 50 பேர் வரையில் பயணம் செய்த இப்பேருந்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை இத்தாக்குதல் இடம்பெற்றது. இக்குண்டுவெடிப்பு யாரால் மேற்கொள்ளப்பட்டதென்பது உடனடியாகத் தெரியவில்லை எனினும், இப்பகுதியில் இசுலாமியத் தீவிரவாதிகள், மற்றும் கடத்தல்காரர்கள் பெருமளவு உலவி வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். குறிப்பிட்ட பேருந்து நிறுவனத்திற்கு ஆயுதக்குழுக்களிடம் இருந்து எச்சரிக்கைகள் கடந்த சில நாட்களாக வந்திருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் தமது மாணவர்களிடம் இருந்து அறவிடக்கூடிய அதிகபட்சக் கல்விக் கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் குழு கடந்த மே மாதம் நிர்ணயம் செய்தது. இக்கட்டணங்களின் விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்தே இக்கல்விக் கட்டண விவரங்களை மாநில அரசு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இக்கட்டண விவரங்களின் படி, 10,000 முதல் 11,000 ரூபாய் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை அரசுக்குத் தெரிவிக்காத 532 பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் பெற்றிருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 10,934 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமது படையினரின் செய்கைகள் வரம்புக்கு மீறியவை என்றும், தொழில் நெறிக்கு அப்பாற்பட்டது என இந்தோனெசியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்றும் இது குறித்த விசாரணைகள் தொடரும் எனவும் அவர் கூறினார். இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளி பன்னாடுகளிலும் மனித உரிமைக் குழுக்களால் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்தோனேசிய இராணுவத்துடன் ஐக்கிய அமெரிக்கா கூடுதல் உறவைப் பேண அண்மையில் எடுத்த முடிவுகள் சந்தேகத்தைப் பரவலாகக் கிளப்பியுள்ளன. பப்புவாவில் தாம் பிடித்த நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதைத் தாம் நம்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோக்கோ சுயாண்டோ தெரிவித்தார். அவர்களிடம் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். ஆனால் கைது செய்யப்பட்டோர் சாதாரண விவசாயிகள் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் மலேரியாவின் தாக்கத்தினால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் இறப்போரின் அதிகாரபூர்வத் தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவை ஆகும் என த லான்செட் செய்தி கூறுகிறது. ஆனாலும், பன்னாட்டு ஆய்வாளர்கள் எடுத்த கணிப்பின் படி, இவ்வேண்ணிக்கை மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றது. கிராமப்பகுதிகளிலும், மிகவும் பிந்தங்கிய பகுதிகளிலும், மலேரியாவினால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை என்றும், போதிய மருத்துவ வசதி இன்றி தமது வீடுகளிலேயே இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ‘த லான்செட்’ வெளியிட்டுள்ள அறிக்கையை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. தாம் வெளியிட்ட எண்ணிக்கை வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்டது என்றும் அது கூறியுள்ளது. அமெரிக்க இராணுவ வரலாற்றில் இதுவரையில் இவ்வளவு தொகையான ஆவணங்கள் கசியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாவணங்களின் படி, 2004-2009 காலப்பகுதியில் 109,000 இறப்புகள் பதியப்பட்டுள்ளன என்றும், இவர்களில் 66,000 பேர் பொது மக்கள் என்றும் கூறப்படுகிறது ஈராக்கில் போர் நடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சிறைச்சாலைகளில் போர்க் கைதிகள் சித்திரவதி செய்யப்படுதல், போன்ற பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவக் காவல் அரண்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் இறப்பு தொடர்பான ஆவணங்களை அமெரிக்க இராணுவம் வெளியிடாமல் இரகசியமாகப் பேணி வந்துள்ளதாகவும் விக்கிலீக்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. ”சட்டவிரோதமாகப் படுகொலை செய்யப்பட்ட 40 பொதுமக்கள் தொடர்பான ஆவணங்கள் வழக்குப் பதிவதற்கு ஏதுவானது” என விக்கிலீக்சின் ஆசிரியரும், நிறுவனருமான ஜூலியன் அசான்ச் அல்ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மூதூரில் தக்வா நகர் என்ற இடத்தில் இடம்பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி டெய்லிமிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். காயமடைந்த சிறுவர்கள் மூன்றிற்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூதூர் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரிலும் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஐவர் இனக்காணப்பட்டுள்ளதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எயிட்டியில் ஒரு நூறாண்டு காலமாக இல்லாமலிருந்த இந்நோய் தற்பொழுது தொற்றுநோயாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்தத் தொற்றுநோய் எயிட்டியில் கடந்த சனவரி மாதம் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தையடுத்து சுத்தமான குடிநீர் இன்றி ஆர்டிபோனைட் ஆற்று நீரைப் பொது மக்கள் குடிக்க நேர்ந்ததால் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்தனர். 15 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். காலரா தொற்றுநோயினால் வாந்தி, வயிற்றுப் போக்கு, கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது பரவி வருகின்றது. காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரிக்க தற்காலிக மருத்துவகூடங்கள் அமைக்கத் தேவையான உபகரணங்களை யுஎஸ் எயிட் நிறுவனம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. காலரா தொற்றுநோய்க்கு அசுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவே காரணம் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு நோய்த் தடுப்பு ஊசிகளும் போடப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை அன்று தலைநகர் நைரோபியில் நியாயோ தேசிய அரங்கத்தில் நாட்டின் இரண்டு புகழ்பெற்ற அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டி ஒன்றிலேயே இந்த நெரிசல் ஏற்பட்டது. "ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உதைப்பந்தாட்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தாது அரங்கத்தினுள் நுழைய முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது உள்ளூர் நிவாரணப் பணியாளர் டேவிட் மட்டீ தெரிவித்தார். 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் கூறினார். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போட்டி ஆரம்பித்து அரை மணி நேரத்தின் பின்னரே பார்வையாளர் ஒருவர் போட்டி நடுவர்களுக்கு இந்த அனர்த்தம் பற்றித் தெரிவித்ததில் போட்டி இடை நிறுத்தப்பட்டது. ஆனாலும் 10 நிமிட நேர இடவேளையின் பின்னர் ஆட்டம் மீள ஆரம்பித்தது. இந்த விபத்துக் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கென்ய அரசுத்தலைவர் ரைலா ஒடிங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை சமாதான நோக்கத்துக்காகவே உல்லாசப் பயணிகள் பொது நூலகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் என்றும் இதை அவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்களாயின் இதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாநகரசபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தெற்கு உல்லாசப் பயணிகள் சுமார் 300 பேர் வரை நூலக வாயிலில் குவிந்ததாகவும், உள்ளே நுழைய விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து யாழ் மாநகரசபை முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து சமரசப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் குறித்த பயணிகள் சிலர் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டதை அடுத்து அவர்களால் கதவு திறக்கப்பட்டு உல்லாசப் பயணிகளை உள்ளே நுழைந்தனர். உள்ளே சென்ற உல்லாசப் பயணிகள் அங்கிருந்த சில புத்தகங்களை எடுத்துக் கீழே எறிந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இதனாலேயே நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். யாழ் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தென்னிலங்கை வன்முறைக் குழுவொன்றால் தீக்கிரையாக்கப்பட்டது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இது பின்னர் மீள நிர்மாணிக்கப்பட்டது. ஈராக் போர் குறித்த கேள்விகளுக்கு பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து முடித்த போது பீட்டர் கிரே என்ற அந்த நபர் "ஈராக்கின் இறப்புகளுக்கு இது" எனக்கூறி தான் அணிந்திருந்த இரண்டு காலணிகளையும் கழற்றி ஹவார்ட் மீது எறிந்தார். இது நேரடியாக ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்நபர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். “ஜோன் ஹவார்ட் இதனை விட கடுமையான தண்டனை அனுபவிக்கவேண்டும்,” என அவர் மேலும் கூறினார். நேற்றைய சம்பவத்தில் வேறொரு பார்வையாளர் ஹவார்டை நோக்கி "உனது கைகளில் இரத்தம் தோய்ந்துள்ளது என்று கூறியவாறே அங்கிருந்து வெளியேறினார். 1991 மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ்காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக சண்முகநாதன் சிவசங்கரன் என்ற பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் உயிருடன் இல்லை என இலங்கை அரசு சமர்ப்பித்த ஆவணங்களை இந்திய அரசு இப்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக இம்முடிவு தெரிவிப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இந்திய சட்டத்தின்படி குற்றவாளிகளின் இறப்புகளுக்கு பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் போகும் ஏற்பாடு உள்ளது. சிங்கப்பூர் வரை இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ஆனால் அங்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பெட்டு மொங்கா என்ற இடத்தில் சுனாமி தாக்கியதில் அனேகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். “200 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் 40 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 160 பேரைக் காணவில்லை,” என அவர் தெரிவித்தார். மென்டவாய் தீவுகள் கடலலை சறுக்கு விளையாட்டுக்குப் பேர் போனது. சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 9 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போனதாக ஆத்திரேலிய அரசு அறிவித்தது. எனினும் அவர்கள் அனைவரும் கரை மீண்டுள்ளதாகப் பின்னர் அறிவித்தது. செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். எரிமலையில் இருந்து கிளம்பிய தூசு நிலமெங்கும் வெண்ணிறமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும், இதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீண்டும் தமது வீடுகளை நோக்கி வருவதற்கு எத்தனிப்பதாக அங்கு சென்றுள்ள பிபிசி நிருபர் தெரிவித்தார். பல விவசாயிகள் தமது கால்நடைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பல வீடுகளும் கால்நடைகளும் சூடான முகில் கூட்டங்கள் காரணமாக எரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிருபர் தெரிவிக்கிறார். 1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பை அடுத்து 13 கிராமங்கள் அழிந்தன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ”இதன் மூலம் நாம் எவரினதும் தனிப்பட்ட உரிமைகளைப் பறிக்க விரும்பவில்லை, ஆனால் மக்கள் எப்படி ஏன் கனவு காண்கிறார்கள் என்பதை அறிவதே எமது நோக்கம்”. பண்டைய எகிப்தியர்கள் கனவுகளை கடவுளின் செய்தி என நினைத்தனர் மக்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பதற்கு இதுவரை தெளிவான மறுமொழி தரப்படவில்லை" என மொரான் சேர்ஃப் தெரிவித்தார். [[சோமாலியா]]வில் இரண்டு இளம் பெண்கள் அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகளால் பகிரங்க மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பெலெட்வைன் என்ற நகரில் பொதுமக்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதின்ம வயதுப் பெண்கள் இருவரும் உளவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். மரணதண்டனைகுள்ளாக்கப்பட்ட பெண்கள் 15 வயதும் 18 வயதும் உடையவர்கள். இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவிருப்பதாகவும், அனைத்து மக்களும் இதனைக் காண வர வேண்டும் என அல்-சபாப் தீவிரவாதிகள் சிலர் நகரின் வீதிகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இருவரும் இசுலாமின் எதிரிகள் என அவர்கள் கூறினர். இக்கொலைகளைப் பார்த்த பொது மக்கள் பலர் அதிர்ச்சியடைந்ததாக நேரில் கண்ட ஒரு பெண் தெரிவித்தார். 1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் முறையான அரசு அமைக்கப்படவில்லை. அல்-கைடாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் இயக்கம் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. 74 வயதுள்ள அசீஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உதவிப் பிரதமராகவும் சதாம் உசேனின் முக்கிய ஆலோசகராகவும் விளங்கியவர். இவர் தற்போது கடும் சுகவீனமுற்று இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இவர் ஒரு கிறித்தவர் என்பது குறிபிடத்தக்கது. சியா முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டது, சியா முஸ்லிம்களைக் கொலை செய்தது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இவர் முன்னர் வர்த்தகர்கள் பலரின் கொலைகளுக்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டின் மீது தண்டனை வழங்கப்பட்டது. இவருடம் முன்னாள் உள்துறை அமைச்சர் சடூன் சாக்கிர், சதாம் உசேனின் முன்னாள் செயலாளர் அபெட் அமூட் ஆகிய இருவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. சுணி இசுலாம் பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் 1980, 1990களில் எதிர்க்கட்சிகளை குறிப்பாக சியா முஸ்லிம் பிரிவினரை அடக்கி வைத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காகவே அசீசுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். பக்தாத் போரின் பின்னர் 2003 ஆண்டில் அசீஸ் அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். 42 ஈராக்கிய வர்த்தகர்களைக் கொலை செய்வதற்குக் கட்டளை இட்ட குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு மார் 2009 இல் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குர்தியர்களை கட்டாயமாக வெளியேற்றியது தொப்டர்பாக மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த ஆகத்து மாதத்தில் த கார்டியன் செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்கானல் ஒன்றில் சதாம் உசேன் எவ்வாறு தனது நாட்டுக்குச் சேவையாற்றினார் என்பதை வரலாறு உணர்த்தும் எனக் கூறியிருந்தார். அத்துடன் அமெரிக்கப்படையினரைத் திரும்ப அழைக்கும் பராக் ஒபாமாவின் அறிவிப்பைக் குறை கூறினார் ஈராக்கை நரிகளின் கைகளில் ஒப்படைக்கிறார் எனக் கூறியிருந்தார். தென்னாப்பிரிக்காவில் இவ்வாண்டு நிகழ்ந்த கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் செருமனியின் ஓபர்ஹாசன் என்ற இடத்தில் உள்ள மீன் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சாக்குக்கணவாய் சரியான வெற்றியாளர்களை அடையாளம் காட்டியது. இரண்டு கண்ணாடித் தாங்கிகளில் ஒன்றை இது தெரிந்தெடுக்க வேண்டும். இரண்டு பெட்டிகளிலும் உணவுப் பொருட்கள் நிறைந்திருந்தன. இறுதிப் போட்டியில் வென்றஸ்பெயின் அணியை அது சரியாகக் கணித்தது. பால் இறந்தது குறித்து அந்தக் காட்சியகத்தின் அறிக்கையில் பாலின் இயற்கை மரணத்தை உலகுக்கு கவலையுடன் அறிவிக்கிறோம். நாங்கள் அனைவரும் பால் மீது மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் இருந்தோம். பாலின் மறைவு எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நான்காவது நபரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். பிரெஞ்சு துருவ ஆய்வு மையம் ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள், தொழிநுட்பவியலாளர் ஒருவர், மற்றும் விமானியுடன் புறப்பட்ட உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக காணாமல் போய் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்ற ஆய்வு மையத்தில் இருந்து ஏறத்தாழ 100 கிமீ தூரத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. AS350 ஸ்குவிரல் உலங்குவானூர்தி சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு 370 கிமீ தூரத்தில் இருந்த டுமோண்ட் டி ஊர்வில் என்ற தமது தளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் உலங்கு வானூர்தியின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக ஆத்திரேலிய தேடுதல் நிபுணர்கள் தெரிவித்தனர். எவரும் உயிர் தப்பிய்யிருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கூறினர். இந்திய அணு மின் கழகம் 2017 ஆம் ஆண்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 9580 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், 2000 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவும், 2020 ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட் அளவும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிதியுதவி, பங்குகளில் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் வழங்க பவர் கொர்போரேசன் நிறுவனம் முன்வந்துள்ளது. சியோல் என்ற இந்திய இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இந்தியாவில் எந்த நகரத்தில் இப்பணிமனை திறக்கப்படவிருக்கிறது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை, ஆனால் சில மாதங்களில் இது திறக்கப்படும் என அவர் கூறினார். இப்பணிமனையில் ஆரம்பத்தில் 2 முதல் நான்கு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். உள்ளூர் சமூகத்துக்குப் ப்ணியாற்றுவதே இதன் முக்கிய குறிக்கோள் என வேல்ஸ் கூறினார். "பல்மொழி மற்றும் பல மொழிகளிலும் உள்ள தகவல்களைப் பரிமாறுவதே விக்கிமீடியா முன்னே உள்ள குறிக்கோள் என அவர் கூறினார். "பணிமனை அமைப்பதற்கு ஐரோப்பா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஐரோப்பா ஏற்கனவே நன்கு அபிவிருந்த்தி அடைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் உண்டு." "இந்தியா இவ்விரண்டுக்கும் இடைப்பட்டது என வேல்ஸ் கூறினார் இப்பிராந்தியம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது மட்டுமல்ல நட்டில் வளர்ந்து வரும் ஆர்வம் என்னைக் கவருகிறது." விக்கிப்பீடியாவில் 270 மொழிகளில் 91,000 இற்கும் அதிகமானோர் தீவிர பங்களிப்பாளரக்ளாக உள்ளனர் என விக்கிப்பீடியா இணையத்தளம் தெரிவிக்கிறது. "இந்தியாவில் கட்டற்ற அறிவுக்கு பொதுவாக நல்ல வரவேற்பு உள்ளது என விக்கிமீடியா நிறுவனத்தின் உலகளாவிய திட்டமிடல் தலைமை அதிகாரி பாரி நியூஸ்டெட் தெரிவித்தார். 2001 இல் ஆரம்பிக்கப்பட்ட விக்கிப்பீடியா இணையத்தளத்துக்கு மாதம் ஒன்றுக்கு 78 மில்லியன் பேர் செல்கிறார்கள். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. நாட்டின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 62 வயதான ரூசெஃப் முன்னெப்போது எந்தப் பதவிகளையும் வகிக்காதவர். பிரேசில் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது எனவும் வறுமையை ஒழிப்பதே தமது முக்கிய குறிக்கோளாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு தடவைகள் பதவி வகித்து பிரேசில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா பதவி விலகியதை அடுத்து இடம்பெற்ற தேர்தலில் டில்மா ரூசெஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ரூசெப்பின் வெற்றியை வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர். அநேகமாக அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் மொத்த வாக்குகளில் ரூசொப் 56 விழுக்காடு வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சியான சமூக சனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒசே சேரா 44 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். முதல் கட்ட வாக்கெடுப்பு அக்டோபர் 3 ஆம் நாள் இடம்பெற்று அதில் ரூசெப் 47 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றதால், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றது. தன்னைத் தெரிவு செய்ததன் மூலம், மக்களாட்சி முறை பிரேசிலில் முன்னேற்றம் கண்டு வருவதையே காட்டுகிறது என டில்மா ரூசெஃப் தெரிவித்தார். 2011 சனவரி 1 ஆம் நாளன்று டில்மா ரூசெப் பதவியேற்பார். தேவாலயம் ஒன்றில் பிற்பகல் ஆராதனைக்காகக் குழுமியிருந்த கிட்டத்தட்ட 100 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள தமது அல்-கைடா சகாக்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் ஈராக்கியர்கள் அல்லர் எனவும், வெளிநாட்டைச் சேர்ந்த அரபுக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 1700 மணிக்கு பெரும் குண்டுச் சத்தமும் பின்னர் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டதாக பாக்தாதின் கராடா மாவட்டத்து மக்கள் தெரிவித்தனர். ஈராக்கின் பங்குச் சந்தைக் கட்டடத்தை முதலில் தாக்கிய தீவிரவாதிகள் பின்னர் அருகில் இருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தினுள் நுழந்தனர் என்றும் அங்கிருந்த காவலாளிகள் சிலருடன் நடந்த மோதலில் சில காவலாளிகள் உயிரிழந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் தேவாலயத்தைச் சூழ்ந்து அதிரடித் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். ஆலயத்தினுள் இடண்டு குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் கிரனைட்டுகளை எறிந்ததாகவும், தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் தெரிகிறது. 6 தீவிரவாதிகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இவர்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். 56 பொதுமக்கள் காயமடைந்தனர். ஈராக்கில் அரை மில்லியன் கிறித்தவர்கள் வசித்து வருகின்றனர். 2003 அமெரிக்கத் தாக்குதல்களை அடுத்து ஈராக்கிய கிறித்தவர்கள் பெருமளவில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். வணக்கம்! என் பெயர் அராபத் ரியாத். நான் திருநெல்வேலி மாவட்டம், பேட்டை நகரை சேர்ந்தவன். தற்போது பெங்களூர் நகரில் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றேன். சப்பானின் வட பகுதியில் அமைந்துள்ள நான்கு குரீல் தீவுகளில் ஒன்று உருசியாவின் தென்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. குணசீர் அல்லது குணசீரி என அழைக்கப்படும் இத்தீவுக்கே உருசிய அதிபர் பயணம் மேற்கொண்டுள்ளார். நவம்பர் நடுப்பகுதியில் ஆசிய-பசிபிக் உச்சி மாநாடு இடம்பெறவிருக்கும் தருணத்தில் இவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சப்பான் மாஸ்கோவுக்கான தனது தூதரை மேலதிக ஆலோசனைக்காகத் தற்காலிகமாகத் திருப்பி அழைத்திருக்கிறது. மெத்வேதெவின் பயணம் தமக்கு கவலை அளித்துள்ளதாக சப்பான் கூறியுள்ளது. "இந்த நான்கு வடக்குத் தீவுகளும் சப்பானுக்குச் சொந்தமானவை என்பதே எமது நிலைப்பாடு, எனவே அரசுத்தலைவரின் பயணம் கவலைக்குரியது என சப்பான் பிரதமர் நவோட்டோ கான் தெரிவித்தார். சப்பானின் இந்த ஆட்சேபனை ஏற்றுக்கொள்ள முடியாதது என உருசிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரொவ் தெரிவித்தார் அது எமது நிலம். உருசிய நிலத்துக்கே எமது தலைவர் சென்றுள்ளார் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இத்தீவுக்கூட்டம் சப்பானின் முக்கிய வடக்குத் தீவான ஒக்காய்டோ இலிருந்து உருசியாவின் கம்சாத்க்கா குடாநாடு வரை பரவியுள்ளது. மெத்வேதெவ் பயணம் மேற்கொண்டுள்ள குணசீர் தீவு ஒக்காய்டோவில் இருந்து 10 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. உள்ளூர் மருத்துவமனை உட்பட சில கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் பல வீடுகளுக்கு நீர், மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீடு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இருவர் கொல்லப்பட்டதாக செர்பியாவின் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 70,000 பேர் வசிக்கும் இந்நகரத்தில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணியாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் புதிய தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்து சிறிய கட்சி ஒன்று வெளியேறியதை அடுத்து எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. 120 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 66 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதமர் ஹசீம் தாச்சியின் பிகேகே கட்சி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 71 நாடுகள் மட்டுமே கொசோவோவைத் தனிநாடாக அங்கிகரித்துள்ளன. இதனால் ஐக்கிய நாடுகளில் இதற்கு இன்னும் உறுப்புரிமை வழங்கப்படவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட ஆங்கிலோ பிரஞ்சு அதிரடிப் படைகள் கூட்டு பயிற்சிகளை மெற்கொள்ளவும், இரு நாடுகளும் குறைந்தது ஒரு விமானந்தாங்கி கப்பலை தயார் நிலையில் வைத்திருக்கவும் இவை வழிவகை செய்யும். தங்கள் வசமுள்ள அணு ஆயுதங்களின் திறனை சோதித்துப் பார்க்க வழி செய்யவும் சோதனைக் கூடங்களை நிறுவவும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. சிட்னிக்கு செல்வதற்காக 433 பயணிகளுடனும் 26 பணியாளர்களுடனும் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இவ்விமானம் இந்தோனேசியாவின் பட்டாம் தீவிற்கருகில் பறந்து கொண்டிருந்த போது அதன் நாங்கு இயந்திரங்களில் ஒன்றில் இருந்து பெரும் வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து விமானம் நடுங்க ஆரம்பித்தது என பயணி ஒருவர் தெரிவித்தார். சிங்கப்பூர் நேரம் இன்று காலை 10 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக குவாண்டாஸ் அறிவித்துள்ளது. எஞ்சினில் இருந்து சிதறுண்ட சில பகுதிகள் பட்டாம் தீவில் வீழ்ந்ததைத் தரையில் உள்ளவர்கள் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. "இது ஒரு மிகப் பாரதூரமான இயந்திரக் கோளாறு என குவாண்டாஸ் தலைவர் அலன் ஜோயிஸ் தெரிவித்தார். இவ்விபத்தினால் எவரும் காயமடையவோ பாதிக்கப்படவோ இல்லை என அவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தில் தரையிறங்கிய இவ்விமானத்தின் இயந்திரத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது. ஒரு இயந்திரம் முற்றாகக் கரிய நிறமாக மாறியிருந்தது. மீதமிருந்த எரிபொருளைக் குறைப்பதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தரையிறங்காமல் விமான நிலையத்தைச் சுற்றி வந்தது. ஆனாலும் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. இவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என குவாண்டாஸ் அறிவித்துள்ளது. ஏ380 சேவைகளை நடத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இந்தோனேசியாவின் மெராப்பி எரிமலை வெடிப்பின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்ற வாதத்துக்கு குவாண்டாசிடம் இருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. பல விமான சேவைகள் இந்தோனேசியாவின் இப்பகுதியின் மேலாகப் பறப்பதை இடைநிறுத்தியிருந்தன. எ380 உலகின் மிகப்பெரும் பயணிகள் விமானம் ஆகும். இரட்டைத் தட்டுகளைக் கொண்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 800 பயணிகளைக் கொண்டு செல்லும். இவ்விமானத்தைத் தயாரித்த பிரித்தானியாவின் ரோல்ஸ்-ரோய்ஸ் நிறுவனம் இக்கோளாறு குறித்து தாம் ஆராய்வோம் என அறிவித்துள்ளது. அரசினால் நிர்வகிக்கப்படும் ஏரோகரிபியன் விமானம் கண்டியாகோ டி கியூபா என்ற கிழக்கு ந்கரில் இருந்து தலைநகர் அவானா நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. உயிர்தப்பியவர்கள் எவரும் காணப்படவில்லையென விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற கியூபாவின் வான்வெளிப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். பிரெஞ்சுத் தயாரிப்பான ஏடிஆர் டர்போ விமானம் வியாழன் மாலை குவாசிமால் என்ற நகரின் மலைப்பகுதியில் வீழ்ந்தது. இவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும் சுற்றுலாப் பயணிகள் எனக் கூறப்படுகிறது. விமானத்துக்கான தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் விமானி அவசர எச்சரிக்கை விடுத்திருந்தார். 1989 செப்டம்பர் 3 ஆம் நாள் சோவியத் தயாரிப்பான இலியூசின்-62 விமானம் அவானாவுக்கருகில் வீழ்ந்து நொறுங்கியதில் பயணிகள் 126 பேரும், தரையில் இருந்த 40 பேரும் கொல்லப்பட்டனர். அவ்விபத்துக்குப் பின்னர் நேற்று நடந்த விபத்தே கியூபாவில் நிகழ்ந்தவற்றில் பெரும் விமான விபத்தாகும். தனது இராணுவ இரகசியங்கள் பலவற்றை ஜோர்ஜிய இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகள் பலர் உருசியாவுக்குக் கொடுத்துள்ளதாக ஜோர்ஜிய உள்துறை அமைச்சு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் உருசியாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் உளவு பார்த்து தகவல்களை உருசிய உளவாளிகளுக்குக் கொடுத்ததாக உள்துறை அமைச்சுப் பேச்சாளர் உத்தியாஷ்விலி தெரிவித்தார். ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து போன தெற்கு ஒசேத்தியாவில் ஜோர்ஜியப் படைகள் நடத்திய தாக்குதலை முறியடிக்க உருசியப் படைகள் அங்கு ஊடுருவி ஜோர்ஜியப் படைகளுடன் மோதின. இக்கைதுகள் அக்டோபரில் இடம்பெற்றிருந்தாலும், அது குறித்து இன்று வெள்ளிக்கிழமையே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இக்கைதுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உருசிய வெளியுறவுத்துறை அமைச்சு ஜோர்ஜியாவின் இந்நடவடிக்கையை "ஒரு அரசியல் ஏய்ப்பு" எனத் தெரிவித்துள்ளது. ஆத்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் ஆத்திரேலிய அணி ஒருநாள் போட்டிக்த் தொடரில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவாகும். இதற்கு முன் 1983 ஆம் ஆண்டில் உலகக்கிண்ணப்போட்டியில் சிம்பாப்வேக்கு எதிரான காலிறுதியில் இந்தியாவின் கபில்தேவ்-கிர்மானி சோடி 9 வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அவர்களின் 27 ஆண்டுகால சாதனை தகர்க்கப்பட்டது. தெற்கு ஆத்திரேலிய ஆய்வு மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் அறிவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் டேவிட் கறி என்பவர் தலைமையில் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். 50 மில்லியன் ஆண்டுகளாக இந்த எரிமலை இருந்து வருவதாகத் தாம் நினைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த பகுதியில், மேலும் இதுபோன்ற எரிமலைகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. "16 உடல்களை நாம் தோண்டி எடுத்திருக்கிறோம். ஆனால் இது ஆரம்பமே, புதைகுழி மிகவும் ஆழமானது என ஆய்வில் பங்குபற்றிய ருமேனிய தொல்லியலாளர் ஏட்ரியன் சியோபிளாங்கா கூறினார். 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்படியான பெரும் இனவழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். மேற்குலக நாடுகள் இத்தேர்தலை சுதந்திரமான தேர்தல் என்பதை ஏற்க மறுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமைத் தேர்தல் "பன்னாட்டுத் தரத்தில்" அமையவில்லை என ஐக்கிய அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் இத்தேர்தலைக் குறி கூறியுள்ளன. மக்களாட்சிக்கான தேசிய முன்னணி என்ற முக்கிய எதிர்க்கட்சி தேர்தல்களில் போட்டியிடாத நிலையில், இராணுவத்துக்குச் சாதகமான சிறிய கட்சிகள் வெற்றி பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூ சி தலைமையிலான மக்களாட்சிக்கான தேசிய முன்னணி, மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு மிகவும் சொற்பமாகவே இருந்ததாக பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரங்கூனுக்கு அருகே தளமமைத்துள்ள படைகளின் ஒரு படைவீரர் பிபிசியுடன் பேசுகையில், பத்து இராணுவ ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த படையினர் தேர்தலில் வாக்களிக்க மறுத்துள்ளதாக கூறினார். இதற்கிடையில், தாய்லாது எல்லையில் இடம்பெற்ற மோதல்கள் இத்தேர்தல்கள் இனவாரியாக தீவிரவாதத்தை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மயாவதி என்ற நகரில் அரசுப் படைகளுடன் கேரன் சனநாயக பௌத்த இராணுவம் என்ற என்ற போராளிக்குழு மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து எல்லையில் கிரனைட்டு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. 11 பேர் காயமடைந்தனர். கிழக்கு பர்மாவில் சுயாட்சி கோரி இவர்கள் போராடி வருகின்றனர். சட்டவிரோதமாக எல்லையினூடாக உள்ளே நுழைய முயன்ற சப்பானிய செய்தியாளர் ஒருவர் மயாவதி என்ற நகரில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுச் செய்தியாளர்கள் எவரும் பர்மாவினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்த அனைத்து ஆத்திரேலியர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என கிலார்ட் தெரிவித்தார். "எமது முதலாவது ஆத்திரேலியர்களின் சிறப்பு இடத்தை ஆத்திரேலிய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை இதனால் அரசியலமைப்பு மாற்றம் மிகவும் அவசியமானதாகும் என அவர் தெரிவித்தர். இவ்வாக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என பிரதம அறிவிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தப்பட வேண்டும். ஆனால், இது பல தடவைகள் பின்போடப்பட்டு வந்துள்ளது. அனைத்துக் கியூபா மக்களும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் மகக்ளைக் கேட்டுக் கொண்டார். புரட்சியாளர்கள், தலைமைத்துவம், மற்றும் பொது மக்கள் ஆகியோரின் ஒற்றுமையிலேயே சோசலிசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது என அவர் கூறினார். கடந்த செப்டம்பரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசு தொழிலாளர்கள் தனியார் துறையில் வேலை தேடுவதற்கு ஊக்கமளிக்கப்பட்டார்கள். தனியார் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என காஸ்ட்ரோ அறிவித்தார். சிறு வர்த்தக நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கமர்த்துவதற்கும், பணம் கடன் வாங்கவும், அரசுத் திணைக்களங்களுக்கு தமது சேவைகளை வழங்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள் என அவர் மேலும் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக கியூபாவின் பெரும் ஏற்றுமதிப் பொருளான நிக்கலின் விலை உலக அளவில் சரிந்தமை, சுற்றுலாத் துறையில் வீழ்ச்சி போன்றவை கியூபாவின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அத்துடன் 48 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேற்கு சகாராவில் மொரோக்கோவின் 35 ஆண்டு கால ஆக்கிரமிப்பை எதிர்த்து அப்பகுதியின் தலைநகர் லாயோனில் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் பல பொதுமக்கள் காயத்துக்குள்ளாயினர். இப்பிரதேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய பேச்சுவார்த்தைகள் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னதாக இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் லாயோனுக்கு வெளியே இடம்பெயர்ந்த சாராவி மக்களினால் எதிர்ப்பு முகாம் ஒன்று கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இதில் தற்போது 12,000 இற்கும் அதிகமானோர் தங்கியுள்ளனர். இம்முகாம் மீதே மொரோக்கோப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். அதிகாலையில் முகாமிற்குள் புகுந்த படையினர் உலங்கு வானூர்தி மூலமும், தண்ணீர்க் குழாய்கள் மூலமும் அங்கிருந்தோரை வெளியேற்ற முயற்சித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. ஐந்து படையினர் கொல்லப்பட்டதாக மொரோக்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது மொரோக்கோ இப்பகுதிக்கு சுயாட்சி வழங்க ஒத்துக் கொண்டாலும், முழுமையான விடுதலை கோரி பொலிசாரியோ போராடுகிறது. கரையில் இருந்து 56 கிமீ தூரத்தில் ஏவுகணை ஒன்றில் இருந்து விடுபட்ட நீராவிப் புகையின் நிரலை சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் உலங்குவானூர்தி ஒன்று படம் பிடித்து வெளியிட்டிருந்தது. "இந்த ஏவுகணையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும் என பெண்டகனின் பேச்சாளர் டேவிட் லப்பான் கூறினார். இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பெண்டகன் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பொதுவாக அமெரிக்காவில் ஏவுகணை ஒன்று செலுத்தப்படுவதற்கு பலர் அதிகாரம் அளிக்க வேண்டும். அப்படியான எதுவும் வழங்கப்படவில்லை என பெண்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்து பல கோணங்களில் ஆராயப்பட்டு வருவதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. இது வரை இரத்தத்துக்கு மாற்று இல்லை. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதொன்றாகும். பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த இரத்த மாற்று உடனடியாகப் பயன்படலாம். இதன் முதன்மை ஆய்வாளர் மக்மாஸ்டட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிக் பாட்டியா ஆவார். சயன்ஸ் டிராசிலேசனல் மெடிசின் (Science Translational Medicine) என்ற மருத்துவ ஆய்விதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. “ஒவ்வொருவரும் மரபணுவின் இரண்டு படிகளைக் கொண்டிருப்பர். மரபணுவின் ஒரு படியை மட்டும் வைத்திருப்பவர்கள் மன இறுக்க நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது,” என டொரோண்டோவைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்கொட் வான் சீலண்ட் தெரிவித்தார். CNTNAP2 (காட்னாப் 2) என்ற மரபணுவைக் கொண்டிருப்பது மதி இறுக்க நோய் (ஆட்டிசம்) வாய்ப்பை அதிகரிப்பதை ஆய்வாளர்கள் நீண்ட நாட்களாக அறிந்திருந்தனர். தற்போது இந்த மரபணுக் கொண்ட சிறுவர்களின் மூளையின் அமைப்பை பற்றி கூடிய மேலும் புரிதல் கிடைத்துள்ளது. இவர்களின் இடது மூளை கூடிய தொடர்புகளையும், பின் மூளை பலவீனமான தொடர்புகளையும் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மன இறுக்க நோய் தொடர்பான சில மருந்துகளுக்கு உதவக் கூடிய தகவல் ஆகும். எனினும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இத்தீர்ப்பை அடுத்து கடல் வழியாகப் படகுகளில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கான தனது கொள்கைகளில் இடனடியாக மாற்றங்களைக் கொண்டுவர ஆத்திரேலிய அரசுக்கு நிர்ப்பண்டம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இவர்களின் அகதி விண்ணப்பங்களை ஆத்திரேலிய அகதிகள் சட்டத்துக்குப் புறம்பாகவே குடிவரவுத் திணக்க்கள அதிகாரிகள் விசாரித்து வந்ததாக அகதிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் கூறினர். வான் வழியே உள்நுழைபவர்களின் விண்ணப்பங்கள் ஆத்திரேலியாவுக்குள்ளேயே பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கு மேன்முறையீடு செய்யவும் முடியும். ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து நீதிபதிகளும் அகதிகளுக்குச் சார்பாகவே தீர்ப்பளித்துள்ளனர். அகதிகளுக்கான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பினால் அகதிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் மேன்முறையீடுகள் அடுத்த பல ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது. உலகில் இன்று இருக்கும் ஒரே ஒரு கம்யுனிச நாடு கியுபாதானே இது நல்ல முடிவுதான் தெற்கு சூடானில் அடுத்த ஆண்டு சனவரியில் இடம்பெறவிருக்கும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்த அச்சத்தினால் வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான தெற்கு சூடானிய மக்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கில் இருந்து வெளியேறுபவர்களுக்கான வசதிகளை தெற்கு சூடானிய அரசு செய்து வருகிறது. அவர்களைத் தெற்குக்குக் கொண்டு வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளையும் அது செய்து வருகிறது. 5,000 பேர் வரையில் இதுவரையில் தென்பகுதிக்குத் திரும்புவதற்குப் பதிவு செய்துள்ளார்கள். தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து போனால் வடக்கில் வாழும் தெற்கு சூடானிய மக்கள் அங்கு வரவேற்கப்பட மாட்டார்கள் என வடக்கின் அதிகாரிகள் பலர் தெரிவித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு பெருமளவு மக்கள் திரும்புவதை ஒட்டி ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பரோனெசு வலேரி ஏமொஸ் கவலை தெரிவித்தார் பலர் தமது வேலைகளை விட்டு இங்கு வருகிறார்கள். இவர்கள் தெற்கில் வேலையில்லாமல் இருக்கப் போகிறார்கள்." "பலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள் என அவர் தெரிவித்தார். பொத்தல ஜெயந்தா “இலங்கையில் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்” என அவ்வமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த வழக்கறிஞர் செர்கே மாக்னித்ஸ்கி "ஒருமைப்பாட்டுக்குக் குரல் கொடுத்ததன் மூலம் தனது உயிரைக் கொடுத்தவர் எனக் கூறியுள்ளது. பொத்தல ஜெயந்தா கடந்த ஆண்டு வரை ”இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர் சங்கத்தின்” பொதுச் செயலராக இருந்தவர். ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்து வந்தவர். ஆட்சியாளருக்கு எதிரானவராக இவர் அரசு ஆதரவாளர்களினால் பார்க்கப்பட்டவர். "அரசு ஊடகங்களில் பணியாற்றும் போதே ஊழலுக்கு எதிராகவும், ஊடக விடுதலைக்காகவும் குரல் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியே என அவர் பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை காலை 0530 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தாமே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தமது 14 தற்கொலைப் போராளிகள் இதில் கலந்து கொண்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விமானநிலையத்தைச் சுற்றிலும் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், அப்பகுதியில் புகை மண்டலங்கள் நிறைந்திருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலின் பின்னர் அயலில் உள்ள கிராமங்களை நோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பல சடலங்கள் வீதிகளில் கிடந்தன. பின்னர் இடம்பெற்ற வேறொரு நிகழ்வில் குண்டூஸ் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு ஒன்று வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். எமாம் சாகெப் மாவட்டத்தில் மக்கள் நிறைந்திருந்த சந்தைப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போராளித் தலைவர் ஒருவரும் இதில் கொல்லப்படதாக மாவட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். ரங்கூனில் உள்ள அவரது வீட்டின் முன்னால் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னால் அவர் உரையாற்றும் போது ”ஒற்றுமையின் மூலமே எமது குறிக்கோளை எட்ட முடியும்” எனக் கூறினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூச்சி அம்மையார் கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சிறையிலும், வீட்டுக்காவலிலும் கழித்தார். இவரது விடுதலைக்கு முன்நிபந்தனைகள் ஏதாவது வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற வாரம் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து இவர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல் ஒரு பெரும் மோசடி என உலக நாடுகள் வர்ணித்திருந்தனர். 1990 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி பெரும் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் இராணுவ ஆட்சியாளர்களால் அக்கட்சி ஆட்சியமைக்கத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் சூச்சி அம்மையார் தடுப்புக் காவலிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார். பல வெளிநாட்டுத் தலைவர்கள் இவரது விடுதலையை வரவேற்றிருக்கிறார்கள் சூச்சியின் விடுதலை எப்போதோ நடந்திருக்க வேண்டியது" என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறினார். {{DEFAULTSORT:பர்மாவின் ஆங் சான் சூ கீயி}} இதே வேளையில், நாட்டின் மேற்குப் பகுதியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் மூவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று ஆர்ப்பாட்டத்துக்கும் இந்தக் குண்டுத்தாக்குதலுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதைத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். வங்காளதேசத் தேசியக் கட்சியின் தலைவர் காலிடா சியா டாக்கவில் உள்ள இராணுவத் தளத்தினுள் உள்ள அவரது வீட்டை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் தந்தது. 1982 ஆம் ஆண்டில் இருந்து இந்த வீட்டை காலிடா சியா அரசிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றிருந்தார். ஆனால் அரசு சென்ற ஆண்டு அந்த உடன்பாட்டை சட்டவிரோதமானது எனக் கூறி ரத்துச் செய்திருந்தது. வீட்டில் இருந்து இராணுவத்தினரால் கலைக்கப்பட்ட காலிடா சியா கண்ணீருடன் தனது கட்சி அலுவலகத்துக்கு சென்றார். 1981 இல் அவரது கணவரும் முன்னாள் அரசுத்தலைவருமான சியா-உல்-ரகுமான் கொலை செய்யப்பட்டதை அடுத்து 1982 ஆம் ஆண்டில் இவ்வீட்டை அரசு திருமதி சியாவுக்கு குத்தகைக்குக் கொடுத்திருந்தது. பிரதமர் சேக் ஹசீனா இந்தக் குத்தகை உடன்பாட்டை சென்ற ஆண்டு இரத்துச் செய்திருந்தார். அரசுக்கெதிராக ஞாயிற்றுக்கிழமை அன்று நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகள் இடம்பெற்ற நிகழ்வுகளை ஆராய்ந்து அதன் மூலம் வேறொரு உள்நாடுப் போர் நிகழாவண்னம் தடுப்பதே இவ்வாணைக்குழுவின் நோக்கம் என இலங்கை அரசு கூறி வருகிறது. ஆணைக்குழுவின் நிகழ்வுகளைப் பார்வையிட பிபிசி செய்தியாளருக்கு இரு தடவைகள் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், கடந்த சனிக்கிழமை இந்தத்தடை நீக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக பிபிசிக்கு அறிவிக்கப்பட்டது. இலங்கையின் வடபகுதி முழுமையாக இராணுவ மயப்படுத்தப்படிருந்தாலும், அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. வடக்கில் இடம்பெறும் ஆணைக்குழு விசாரணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், வடக்கின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு இப்போதுள்ள தடை நீக்கப்படுமா என்பது குறித்து அறியப்படவில்லை. 13 மாதங்களுக்கு முன்னர் சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பிரித்தானியத் தம்பதியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர். தற்போது கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தில் தங்கியிருக்கும் இத்தம்பதியினர் விரைவில் நாடு திரும்புவர். முந்னதாக இவர்கள் எத்தியோப்பிய எல்லைப்பகுதியில் உள்ள அடாடோ என்ற சோமாலியப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தம்மை கடற்கொள்ளைக்காரர்கள் மிகவும் துன்புறுத்தியதாக சாண்ட்லேர்ஸ் தம்பதியினர் தெரிவித்தனர். மிருகங்களைப் போலத் தாம் நடத்தப்பட்டதாகவும் ஆனாலும் தாங்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் இருவரும் பிரித்தானிய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். கடந்த சூன் மாதத்தில் $430,000 கப்பமாகக் கட்டப்பட்டது. ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. கொள்ளைக்காரர்கள் மேலும் பணம் எதிர்பார்த்தார்கள். பிரித்தானியாவில் உள்ள சோமாலிய மக்களினாலும், வேறு நலம் விரும்பிகளாலும் பணம் திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த டப்பாவில் காணப்பட்ட மண் மாதிரிகளை ஆராய்ந்ததில் அவை வேறு கோளைச் சேர்ந்தவை தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது சப்பானின் விண்வெளி ஆய்வுக்குக் கிடைத்த பெரும் வெற்றி எனக் கருதப்படுகிறது. ஹயபுசா விண்கலம் 2005 ஆம் ஆண்டில் மூன்று வாரங்கள் இட்டக்கோவா என்ற சிறுகோளைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பில் இருந்து தூசுகளைச் சேகரித்தது. இதற்காக சப்பான் $200 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்தது. சிறுகோளுக்குச் சென்ற சப்பானிய விண்கலம் பாதுகாப்பாகத் திரும்பியது திங்கள், ஜூன் 14, 2010 லலிதா பூங்கா என்ற குடியிருப்புப் பகுதியின் குறுகலான வீதிகள் வழியே நிவாரணப் பணியாளர்கள் நுழைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பெரு மழி மற்றும் வெள்ளம் காரணமாக கட்டடத்தின் அத்திவாரம் வலுவிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளிடையே சிக்குண்டவர்கள் பலரை உறவினர்கள் தமது கைகளால் இழுத்து எடுத்தனர். மேலும் 30 பேருக்கு மேல் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் நேற்று இரவு 2015 மணியளவில் நிகழ்ந்துள்ளது. தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் அவ்விடத்துக்கு காலம் தாழ்த்தியே வந்தடைந்ததாக பொதுமக்கள் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தனர். இதுதொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2-டிஆக்சி-டி-குளுக்கோசு (‎2-Deoxy-D-Glucose (2-DG)‎)வகை சார்ந்த ஒரு மருந்தை இந்நிறுவனம் கண்டுபிடித்து, சோதனைகள் நிகழ்த்திய பிறகு, அதற்கான ஒப்புதலையும் அவர்கள் இந்திய மருந்துகள் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்து பெற்றுள்ளனர். இந்த மருந்தை கதிரியக்க சிகிச்சை அளிக்கும் முன்னர் வேதிச்சிகிச்சை முறையில் அளிக்க வேண்டும். இதனால் புற்று நோயால் பாதிப்படைந்த கலன்கள் குளுக்கோசுக்குப் பதிலாக 2-டிஆக்சி-டி-குளுக்கோசை அதிக அளவில் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் இக்கலன்கள் வலுவிழந்துவிடும். இந்த நிலையில் கதிரியக்கக சிகிச்சை அளிக்கும் பொழுது, புற்று நோயால் பாதிக்கப்பெற்ற வலுவிழந்த கலன்கள் அழிந்து விடும். அதிக அளவில் புற்று நோயால் பாதிப்படைந்த கலன்கள் இனப்பெருக்கம் அடைவது குறைவதாலும், அதிக அளவில் அழிவதாலும், பாதிப்பின் அளவு சிகிச்சைக்குப் பிறகு குறையும், மேலும் தேவைக்கேற்றவாறு கதிரியக்கத்தின் ஆற்றலைக் குறைவாக பயன்படுத்தி உடலின் இதர பாகங்களையும், உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த மேம்பட்ட சிகிச்சை முறையில் புற்று நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு முன்கூட்டியே குறைக்க இயலும்.நோயாளியின் வாழ்க்கைத் தரம் மேம்படும். பக்க விளைவுகளும் குறைவாகக் காணப்படும். மேலும் புற்று நோய் கலன்களையே நேரடியாகத் தாக்குவதால், அதிக பயன் அளிக்க வல்லதாகும். விமானம் தீப்பிடிப்பதற்கு சில செக்கன்களுக்கு முன்னர் சக விமான ஓட்டி “ஓடுபாதை அனைத்தும் எமக்கு முடிந்து விட்டது” எனக் கத்தியது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளில் இருந்து கேட்கப்பட்டது. இவ்விமான விபத்து குறித்த முழு அறிக்கையும் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து, 158 பேர் உயிரிழப்பு விக்கிசெய்தி இருந்து, சனி, மே 22, 2010 தாம் அரசைக் கலைத்துள்ளதாகவும், இராணுவ ஆட்சிக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கிளர்ச்சிக்காரர்களின் அறிவிப்பை நிராகரித்துள்ள ராசொய்லினா, இவர்களின் அச்சுறுத்தலுக்குத் தாம் பயப்படவில்லை எனக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான பொது வாக்கெடுப்பைக் குழப்புவதற்காக இராணுவத்தில் ஒரு சிறு குழுவே இவ்வாறு கிளர்ந்துள்ளது என அவர் கூறினார். கடந்த பல ஆண்டுகளாக மடகஸ்காரில் அரசியல் திரத்தன்மை அற்ற நிலை காணப்படுகிறது. அரசுத்தலைவர் ராசொய்லினா எதிர்க்கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ள காரணத்தினால், இராசதந்திர வட்டாரங்களால் விலத்தி வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் எனவும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், வெளிநாட்டுக்கு சென்றவர்கள் அனைவரும் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இராணுவக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த கேர்ணல் சார்ல்ஸ் அந்திரியானசோவினா தெரிவித்தார். தலைநகரில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இராணுவத் தளம் ஒன்றில் இருந்து இவர் இந்த அறிக்கையை வாசித்தார் எனச் செய்தியாளர்கள் தெரிவித்தனர். தொலைக்காட்சி, மற்றும் வானொலிகள் தமது வழமையான ஒலிபரப்புகளை மேற்கொண்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். அரசுத்தலைவர் மாளிகை அருகே அமைதி நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியலமைப்புத் திட்டம் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை ஆண்ட்ரி ராசொய்லினா பதவியில் இருப்பதற்கு வழி வகுக்கிறது. பொது வாக்கெடுப்பை மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. நியூசிலாந்தின் தெற்குத் தீவில் பைக் ஆற்றுப் படுகையில் 58 கிமீ தூரத்தே உள்ள கிரேமவுத் என்ற இடத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாக அந்நகரத்தின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது மிகவும் பாரதூரமான நிகழ்வு என்றும், ஆனாலும் நிவாரணப் பணியாளர்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுரங்கத்தினுள் அகப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் அறியப்படவில்லை என்றும் வெடி விபத்துக்கான காரணம் தெரிவ்யவில்லை எனவும் அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இவ்விபத்து உள்ளூர் நேரப்படி இன்று மாலை 1630 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு சுரங்க விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். விடுவிக்கப்பட்டவர்களில் இரண்டு அமெரிக்கர்கள், இரண்டு பிரெஞ்சுக் காரர்கள், இரண்டு ந்தோனேசியர்கள், மற்றும் ஒரு கனேடியரும் அடங்குவர். ஏனையோர் நைஜீரியர்கள். இவர்கள் அனைவரும் அணமைக் காலத்தில் நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளப் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டவர்கள் ஆவர், போராளிக் குழுவின் முன்னால் தலைவர் ஒருவரே இந்த நடவடிக்கையில் தமக்கு உதவியதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். இந்நடவடிக்கையில் பணயக் கைதிகளில் எவரும் கொல்லப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். "இது எமக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரும் வெற்றியாகும். முன்னாள் போராளிகளின் ஒத்துழைப்பு மற்றும் மன்னிப்புத் திட்டம் ஆகியவை எமக்கு இப்போது உதவுகிறது." சென்ற ஆண்டு அரசினால் அறிவிக்கப்பட்ட மன்னிப்புத் திட்டத்தை அடுத்து பல போராளிகள் ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தனர். அவர்களுக்கு அரசுத்தலைவரின் பொது மன்னிப்பு, பணக்கொடுப்பனவு, தொழிற்பயிற்சி என்பன அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தாலும், மென்ட் அமைப்பினர் மீண்டும் ஆட்கடத்தல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய்ப் பகுதியில் உள்ள வளங்கள் அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமது நாட்டு மக்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கனடா மற்றும் பிரான்ஸ் என்பன நைஜீரிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இந்த விண்மீன் கூட்டம் 6 முதல் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எமது பால் வழியால் உள்வாங்கப்பட்டதொன்றாகும். செருமனியின் மாக்ஸ் பிளாங்க் வானியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ரைனர் கிளமெண்ட் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கிளர்ச்சிக்காரர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சத்தங்கள் அடங்கியுள்ளதாக செய்திகல் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை அன்று நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றியிருந்த முகாமை முற்றுகையிட்டதை அடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அங்கு கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் முகாம் வெகு விரைவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. "அவர்கள் எம்மிடம் சரணடைந்து விட்டனர். இரத்தக்களரி இல்லாமல் எமது நடவடிக்கை எதிர் நடவடிக்கை முடிந்து விட்டது என நாட்டின் இராணுவப் பேச்சாளர் அலெயின் ரமரோசன் ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார். 20 நிமிடங்களில் முழு நடவடிக்கையும் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்தார். சென்ற வியாழன் அன்று புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை ஆண்ட்ரி ராசொய்லினா பதவியில் இருப்பதற்கு வழி வகுக்கிறது. பொது வாக்கெடுப்பை மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. மடகஸ்கார் அரசைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவக் குழு அறிவிப்பு விக்கிசெய்தி, வியாழன், நவம்பர் 18, 2010 "உலகில் உள்ள அனைத்து காவல்துறையினரும் இந்தப் பிடியாணையைக் காணுவார்கள் என சுவீடனின் தேசிய குற்றவியல் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆத்திரேலியாவைச் சேர்ந்த அசான்ச் தற்போது பிரித்தானியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஆகத்து மாதத்தில் இக்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அசான்ச் மறுத்திருந்தார். ஈராக், மற்றும் ஆப்கானித்தான் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை சென்ற மாதம் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டிருந்தது. அசான்ச் சுவீடனில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார் என்றும், மேலும் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது ஆகத்து 22, 2010 1911 ஆம் ஆண்டில் இந்த தொல்பொருட்கள் கடனாக யேல் பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்கப்பட்டது என பெரு கூறி வருகிறது. 2008 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அது வழக்குப் பதிவு செய்திருந்தது. பெரு அரசுத்தலைவர் அலன் காசியாவும் அவரது அரசும் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த தீவிரப் பிரச்சாரத்தின் பின்னர் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பிரச்சினை குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவுடனும் பெர் தலைவர் கதைத்திருந்தார். 1911 ஆம் ஆண்டில் யேல் ஆய்வாளர் இராம் பிங்கம் என்பவர் மச்சு பிக்ச்சுவை அதிகாரபூர்வமாகக் கண்டுபிடித்ததன் பின்னர் அவர் அங்கிருந்த இருந்த பல தொல்பொருட்களை கடனாகப் பெற்றுச் சென்றிருந்தார் என பெரு கூறி வருகிறது. ஆனால் தமக்குக் கொடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மிகவும் குறைவானவை என்றும் அவற்றில் 330 மட்டுமே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தக்கூடியவை என்றும் யேல் பல்கலைக்கழகம் கூறி வருகிறது. ஏனையவற்றை 80 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பக் கையளிக்கப்பட்டு விட்டது என்றும் அது கூறுகிறது. மச்சு பிக்ச்சு கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டுகள் கழியும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இவை மீண்டும் பெருவிடம் கையளிக்கப்படவிருக்கிறது. வரலாற்றுப் புகழ் மிக்க இந்த நாடாளுமன்றத்துக்கு நாள் ஒன்றுக்கு 10,000 பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். அல்-கைடாவுடன் தொடர்புள்ள இசுலாமியப் போராளிகள் ரெய்க்ஸ்டாக் கட்டடத்தைத் தாக்கி பலரைப் பணயக் கைதிகளாக்கத் திட்டன் தீட்டியுள்ளதாக செருமனியின் டேர் ஸ்பைகல் என்ற இதழ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரே இந்தத் தகவலைத் தமக்கு அறிவித்ததாக அது தெரிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் மிகப்பலமுள்ள தீவிரவாதிகள் அறுவர் இத்தாக்குதலை நடத்தவிருப்பதாக அது தகவல் தந்தது. "குறிப்பிட்ட தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் எம்மிடம் உள்ளன, ஆனால் அவர்கள் எங்கே எப்போது தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்ற விபரம் எமக்கு சரியாகத் தெரியவில்லை என செருமனியின் நடுவண் அரசு குற்றவியல் திணைக்களத் தலைவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு நாடாளுமன்ற மூடப்பட்டாலும், வழிகாட்டியுடனான சுற்றுலாக்களை மேற்கொள்ளலாம் என நாடாளுமன்றப் பேச்சாளர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார். புனித ரோமப் பேரரசு, வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பு ஆகியவற்றின் நாடாளுமன்றமாக 1945 வரை ரெய்க்ஸ்டாக் கட்டடம் இயங்கி வந்தது. இது 1894 இல் பெர்லினில் கட்டப்பட்டது. 1941 டிசம்பர் 11 இல் இட்லர் இம்மன்றத்தில் தான் அமெரிக்க அதிபர் பிராங்க்லின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றினார். மழைக்காலத்தை ஒட்டி ஆண்டுதோறும் இடம்பெறும் இத்திருவிழாவைத் தண்ணீர்த் திருவிழா என அழைப்பர். மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழாவின் கடைசி நாளான நேற்று திங்கட்கிழமை அன்றே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக பாலம் ஒன்றில் குழுமியிருந்த மக்களே நெரிசலில் சிக்கினர். 1970களின் இனப்படுகொலைகளை அடுத்து கம்போடியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய அனர்த்தம் இதுவாகும் என அந்நாட்டின் பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார். நாளை கம்போடியாவில் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் விழாக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. டயமண்ட் தீவில் இடம்பெற்ற களியாட்ட விழாவை அடுத்து டொன்லே சாப் ஆற்றில் இடம்பெற்ற படகுப் போட்டியைப் பார்ப்பதற்காக பாலத்தின் மீது மக்கள் குழுமியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. "பாலத்தின் மீது அளவுக்கும் அதிகமானோர் நின்றிருந்தனர் என்றும் இரு பக்கத்திலிருந்தும் நடுப்பக்கத்தை நோக்கி மக்கல் முண்டியடித்துக் கொண்டு செல்ல முற்பட்டனர் என ஆத்திரேலியாவில் இருந்து சென்ற சோன் நியூ என்பவர் பிபிசிக்குத் தெரிவித்தார். மின்சாரக் கம்பி அறுந்ததனால் பலர் மின் தாக்குதலுக்குள்ளாயினர் என அவர் கூறினார். "மக்கள் அச்சம் அடைந்து ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்தனர். பலர் பாலத்தில் இருந்து ஆற்றினுள் பாய்ந்தனர். சிலர் பாலத்தின் மீது ஏறி, மின்சாரக் கம்பிகளில் தொங்கியுள்ளனர் என்றும் அதனால் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலர் இறந்தனர். இறந்தவர்களில் பலர் இளம் வயதினர் ஆவர். காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. யோன்பியோங் தீவை நோக்கி இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1434 மணிக்கு எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து தென் கொரியப் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 50 எறிகணைகள் தென் கொரியப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன. அத்தீவில் உள்ள தென் கொரிய இராணுவத்தளத்தை நோக்கியே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தென் கொரிய கடற்படையினரும் மூன்று பொது மக்களும் இத்தாக்குதலின் போது காயமடைந்தனர். யோன்பியோங் தீவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. அங்கு வாழும் 1,600 பொது மக்களும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பதிலுக்கு தென் கொரியப் படையினர் 80 எறிகணைகளை வட கொரியா நோக்கிச் செலுத்தியது. ஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன வட கொரியாவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன. 1953 ஆம் ஆண்டில் அமைதி உடன்பாடு காணப்படாமல் முடிவடைந்த கொரியப் போரின் பின்னர் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான சம்பவம் இதுவென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று வட கொரியா தனது புதிதாத அமைக்கப்பட்ட யுரேனியம் செறிவாக்கல் அணுப்பகுதி ஒன்றை அமெரிக்க அறிவியலாளர் ஒருவருக்குக் காட்டியிருந்தது. தெற்குத் தீவில் பைக் ஆற்றில் உள்ள இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று பிற்பகல் 1437 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது பெரும் வெடிப்பில் எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என காவல்துறை உயர் அதிகாரி காரி நோல்சு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது ஒரு மாபெரும் தேசிய இழப்பாகும் என பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். வெள்ளிக்கிழமை வெடிப்பில் சிக்குண்டவர்களில் 24 நியூசிலாந்தர்களும், 2 ஆத்திரேலியர்களும், 2 பிரித்தானியரும், ஒரு தென்னாப்பிரிக்கரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 24 முதல் 62 வயதானவர்கள் ஆவர். வெள்ளிக்கிழமையில் இருந்து இவர்களுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. சுரங்கத்தினுள் மெத்தேன் வாயுவின் அளவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தாமதமாகியியிருந்த நிலையில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் மீட்டெடுக்கப்படும் என நிலக்கரிச் சுரங்கத்தின் பணிப்பாளர் பீட்டர் விட்டோல் தெரிவித்தார். இன்றைய அனர்த்தத்தைக் கோள்விப்பட்டவுடன் இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நிலத்தில் விழுந்து புரண்டதாக கிரே மாவட்ட முதல்வர் தெரிவித்தார். நியூசிலாந்தில் சுரங்க வெடிப்பை அடுத்து பல தொழிலாளர்களைக் காணவில்லை நவம்பர் 19, 2010 கராத்தே போட்டிகள் நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே மலேசிய கராத்தே வீரர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய மண்டலத்தில் தலை சிறந்த கராத்தே வீரராக இருக்கிறார் புவனேஸ்வரன். நேற்று நடந்த போட்டியில் அவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த எமாட் மிகமது அல்மால்க்கி என்பவரை வென்று ஆசியப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து கராத்தே போட்டிகளில் பதக்கம் பெற்ற ஒரே ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். எந்தவகை விளையாட்டிலும் இச்சாதனையை உலகில் ஏழு பேரே பெற்றுள்ளனர். “இது எனது கடைசி ஆசியப் போட்டியாக இருக்கும். நான் ஒரு பயிற்சியாளராக வர விரும்புகிறேன். மலேசிய தேசிய விளையாட்டுக் கழகம் அதனை முடிவு செய்ய வேண்டும்,” என புவனேசுவரன் தெரிவித்தார். இவர் 2002 ஆம் ஆண்டில் பூசான் நகரில் தங்கத்தையும், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை 1994 இல் பெற்றார். இச்சிறுவர்களில் இருவர் 15 உம் மற்றவர் 16 14 வயதினையும் உடையவர்கள். அக்டோபர் 5 ஆம் நாள் இவர்கள் அட்டாபு திடலில் இடம்பெற்ற ஆண்டுக் களியாட்ட விழாவில் கலந்து கொண்டு விட்டு சிறிய அலுமீனியம் படகில் வீடு திரும்புகையில் காணாமல் போனார்கள். நியூசிலாந்து வான்படையினர் இவர்களைத் தேடிய போது அவர்கள் அகப்படவில்லை. "மூவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், கடும் வெப்பம் காரணமாக உடல் எங்கும் சூரிய வெப்ப வடுக்கள் காணப்படுகின்றன என இவர்களைக் காப்பாற்றிய மீனவர் டாய் பிரெடெரிக்சன் தெரிவித்தார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. "அந்திரொமேடா மிகப்பெரும் இணைப்பு ஒன்றினால் உருவானதாக பல வானியலாளர்கள் நம்புகின்றனர் என்றார் பிரான்சுவா ஹாமர். ஆனாலும் இவர்களின் நம்பிக்கை எப்போதும் ஆய்வுக்குள்ளாக்கப்படவில்லை." ”எமது புதிய ஆய்வு மூலம் எமக்கு அருகில் உள்ள பேரடைகள் பற்றிய அறிவைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது மேலும் பேரடைகளில் காணப்படும் இருண்ட பொருளின் அளவு குறித்தும் ஆய்வுகளுக்கு உதவும்,” என்றார். அண்மையில் இறந்த ஹவுத்தி ஆன்மீகத் தலைவர் பாடர் அல்-டீன் ஹவுத்தி என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட போராளிகளின் வாகன் அணி மீது தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது வாகனத்தைச் செலுத்தி வெடிக்க வைத்தார். கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். புதன்கிழமை அன்று சியா சமய ஊர்வலம் ஒன்றின் மீது கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர். இன்றைய தாக்குதலை யார் நடத்தியதென்பது உடனடியாகத் தெரியவில்லை. ஹவுத்தி போராளிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே தற்போது போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சில தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். யேமனின் பலம் குறைந்த நடுவண் அரசு வடக்கில் தீவிரவாதப் போராளிகளையும், தெற்கில் பிரிவினைவாதிகளையும், அராபிய தீபகற்பத்தில் அல்-கைடா தீவிரவாதிகளையும் எதிர்த்துப் போராடி வருகிறது. 1940 ஆம் ஆண்டில் கத்தீன் படுகொலைகளுக்கு கட்டளையிட்டவர்கள் சோவியத் சர்வாதிகாரியும் சோவியத் அதிகாரிகளுமே என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. போலந்துக்கு உருசியத் தலைவரின் அதிகாரபூர்வப் பயணம் இடம்பெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் இவ்வறிக்கை வெளியிடப்பட்டதை போலந்து வரவேற்றுள்ளது. உருசிய நாடாளுமன்றத்தில் பலத்த விவாதங்களுக்கு மத்தியிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. பொதுவுடமைவாதிகள் இதற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உருசியக் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிர்த்து வாகளித்தது. இப்படுகொலைகளுக்கு நாசி செருமனியரே காரணம் என சோவியத் ஒன்றியம் அப்போது பரப்புரை செய்து வந்தது. ஆனாலும், சோவியத் அரசின் கடைசிக் காலங்களில் 1990 ஆம் ஆண்டில் அப்போதைய மிக்கைல் கர்பச்சோவின் அரசு இப்படுகொலைகளுக்கு தமது நாடே காரணம் எனக் கூறியது. அன்றில் இருந்து உருசியாவுக்கும் போலந்திற்கும் இடையே இவ்விடயம் குறித்து மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது. போலந்துடன் சனநாயக வழியில் புதிய உறவுகளுக்கான மேடை திறந்து வைக்கப்பட்டுள்ளது என உருசிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. கத்தீன் படுகொலைகள் குறித்து எவருக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருந்த அனைவரும் இறந்து விட்டார்கள் என உருசியா கூறி வருகிறது. 2005 ஆம் ஆண்டின் உருசிய விசாரணைகள் கத்தீன் சம்பவத்தில் 1803 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும் 22,000 போலந்து மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 8,000 பேர் இராணுவத்தினர் ஆவர். கத்தீன் படுகொலைகளின் போது பல்லாயிரக்கணக்கான சோவியத் மக்களும் படுகொலை செய்யப்பட்டதாக உருசிய டூமா தெரிவித்துள்ளது. இப்படுகொலைகளின் 70 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற ஏப்ரல் மாதம் அங்கு சென்ற போலந்து அரசுத்தலைவர் பயணம் செய்த விமானம் உருசியாவில் வீழ்ந்து நொறுங்கியதில் அரசுத்தலைவர் உட்பட போலந்தின் அரசு உயர் அதிகாரிகள் 90 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார் ஏப்ரல் 10, 2010 1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது ஏப்ரல் 28, 2010 அமெரிக்க அரசுத் திணைக்கத்துக்குச் சொந்தமான அதிகாரபூர்வ ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானதாகும் எனவும் இவ்வாவணங்களில் சம்பந்தப்பட்டுள்ள பலர் உயிராபத்தைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. முன்னர் ஆப்கானித்தான், ஈராக் தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களை விட இப்போது பல மடங்கு அதிகமான ஆவணங்களைத் தாம் வெளியிட விருப்பதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது. ”அரசாங்கத் திணைக்களத்தின் தொடர்புகள் மற்றும் உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எமது தூதரகங்களுடனான, குறிப்பாக ஆத்திரேலியா, பிரித்தானியா, கனடா, இசுரவேல், உருசியா, துருக்கி தூதரங்களுடனான தொடர்புகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுவதால் நாம் அதற்கு தயாராகி வருகிறோம்,” என அமெரிக்க அரசாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் இறவ்லி தெரிவித்தார். விக்கிலீக்ஸ் அனைத்து ஆவணங்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசுத் திணைகக்ள வழக்கறிஞர் ஹரல்ட் கோ அசான்ச்சிடம் கேட்டுள்ளார். சூடான் தலைநகர் கார்ட்டூமை நோக்கி நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட இவ்விமானம் ஒரு உருசியத் தயாரிப்பாகும். இதன் விமானிகளும் உருசியர்களே. விமானநிலையத்துக்கு அருகேயுள்ள கடற்படைத்தளம் ஒன்றின் மீதே இவ்விமானம் வீழ்ந்துள்ளது. இத்தளம் புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. கடற்படைத்தளம் தீப்பற்றி எரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்த இரு கட்டடத்தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இன்று அதிகாலை 0145 மணிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்டு ஒன்றரை நிமிட நேரத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது. இவ்விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, எனினும் இயந்திரக் கோளாறாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமெரிக்கா, பிரான்ஸ், சப்பான், உருசியா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே கைகா 4 அணு உலைகள் தயாராகிவிட்ட போதும், எரிபொருள் இல்லாததால் அதை செயல்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இங்கு 9900 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்திய அணுமின் கழகம் அணு மின் நிலையங்களை அமைத்து வணிக ரீதியில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான திட்டங்களை நடுவண் அரசின் அனுமதியுடன் தீட்டியுள்ளது. இதன் படி பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து ஜைத்தாபூரில் அமைக்கப்படும் திட்டம் வணிக ரீதியில் முதலாவது திட்டமாகும். 1973ஆம் ஆண்டு இந்தியா முதன் முதலில் அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் விதிக்கப்பட்ட அணுத்தொழில் நுட்பத் தடை, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்பட்டதையடுத்து செய்யப்பட்டுள்ள முதல் தொழில்நுட்ப-வணிக ஒப்பந்தம் இதுவாகும். இவ்வணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிராக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மாபெரும் எதிர்ப்பைக் காட்டினர். உள்ளூர் மீனவர்கள், மற்றும் மக்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இத்திட்டம் கொண்கன் கடலில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை அழிக்க மட்டும் அல்லாம உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் என அவர்கள் வாதிட்டனர். இப்பேராசிரியர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளே வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தெகரானின் சாகிது பெகெச்ட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மஜீத் ஷஹிரியாரி என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். இவர் இப்பல்கலைக்கழகத்தின் அணுசக்திப் பொறியியல் பிரிவின் உறுப்பினராவார். இவரது மனைவியும் தாக்குதலில் படுகாயமடைந்தார். இன்று திங்கட்கிழமை காலையில் தமது வீடுகளில் இருந்து பலகலைக்கழகத்திற்குப் புறப்பட்டு சென்ற வேளையிலேயே இக்குண்டுகள் வெடித்துள்ளன. "பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற இரண்டு பேராசிரியர்கள் தமது பணிக்குச் சென்று கொண்டிருக்கையில் சியோனிசியத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர்,” என ஈரானியத் தொலைக்காட்சி அறிவித்தது. இரண்டாவது தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் அப்பாசி என்பவர் "ஓரகத் தனிமங்களைப் பிரிக்கக்கூடிய ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்,” என இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஆரம்பத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்றில் ஈரானிய அறிவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இவர்களின் உடல் எச்சங்கள் 2009 ஆம் ஆண்டில் லித்துவேனியத் தலைநகர் வில்னியூசிற்கு வெளியே கட்டிடத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. நெப்போலியனின் உருசியா மீதான போரில் 500,000 பேர் அடங்கிய அணி பங்கு பற்றியது. ஆனால் இப்போரில் அவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர்களில் பெரும்பாலானோர் பட்டினி, கடும்குளிர், தொற்றுநோய் போன்ற காரணிகளால் அங்கேயே இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வில்னியூசிற்கு அருகே இறந்தனர். இவர்களின் உடல்கள் அவ்வவ்விடங்களிலேயே புதைக்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டில் 3,500 பிரெஞ்சு இராணுவத்தினரின் எச்சங்கள் லித்துவேனியாவில் அடக்கம் செய்யப்பட்டன. இப்போது வேறொரு பகுதியில் 18 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உருசியப் படைகள் வில்நியூசைக் கைப்பற்றுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தனது படையினரை விட்டு விட்டு நெப்போலியன் அங்கிருந்து தப்பியோடினான். கடும் குளிரில் நிலம் உறைந்து போயிருந்ததால் இறந்த பிரெஞ்சுப் படையினரின் உடல்கள் ஆங்காங்கேயிருந்த அகழிகளில் உருசியப் படையினரால் எறியப்பட்டன. வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கிய நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தில் வளர்ந்து பின்னர் 1804 ஆம் ஆண்டில் பிரெஞ்சுத் தலைவனாகத் தன்னை அறிவித்தான். தனது வல்லரசை விரிவாக்கும் அவனது திட்டங்கள் கடைசியில் தோல்வியடைந்தாலும், தனது இராணுவத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் வெற்றி கண்டான். "அவரை நாம் இங்கு வந்து தங்குவதற்கு அழைக்க இருக்கிறோம். அவர் இங்கு வந்து தமது விக்கிலீக்ஸ் வலைத்தளத்தை எவ்வித இடையூறும் இன்றித் தொடர்ந்து நடத்தலாம்,” என அவர் தெரிவித்தார். விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்றுத் திங்கட்கிழமை அன்று அமெரிக்க அரசாங்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய இரண்டரை லட்சம் இரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தம் இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களுக்கு அது கொடுத்துள்ளது. இது போன்ற தகவல்கள் உலக அரசுகளின் உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். அசான்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பன்னாட்டு பிடியாணையை அண்மையில் சுவீடன் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு இது என அவர் கூறியுள்ளார். அசான்ச் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய கசிவுகளை வெளியிட முன்னர் ஜோர்தானில் காணொளி மூலம் உரையாற்றியிருந்தார். ரகசிய செய்திக் கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார். எக்குவடோரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 1,621 இரகசியத் தகவல்கள் தம்மிடம் இருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அவற்றை இன்னும் வெளியிடவில்லை. "இச்சுவர் இரண்டாம் உலகப் போரின் குண்டுத் தாக்குதல்களினால் பெரிதும் சேதமுற்று இடிந்து வீழ்ந்து மீண்டும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் இடிந்து வீழ்ந்தது என பொம்பெய் அதிகாரி ஒருவர் ஏஎஃபி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இந்தச் சுவர் 7 மீட்டர் நீளமானதாகும். சில வாரங்களுக்கு முன்னர் இங்கிருந்த மற்போர் வீரர்களின் மாளிகை ஒன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து பல உள்ளூர் பழமை பேணும் ஆர்வலர்கள் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தனர். பண்டைய நகரத்தைப் பாதுகாக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். நேப்பிள்ஸ் நகருக்கு தெற்கேயுள்ளது பொம்பெய் நகரம். இது கிபி 79 இல் இடம்பெற்ற வெசுவியுஸ் எரிமலையின் சீற்றத்தால் தரைமட்டமானது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகின்றனர். இலங்கை இராணுவத்தினர் போன்று காணப்படும் சிலர் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள சில காட்சிகள் காண்பிக்கப்பட்டன. நிர்வாணமான நிலையில் இறந்த பெண்களின் சடலங்களும் காண்பிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காண்பிப்பதற்கு மிகவும் கோரமான காட்சிகள் எனக் கூறி அவற்றைத் தணிக்கை செய்ததாகவும் அது கூறியிருந்தது. இந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்பதை அந்த இராணுவத்தினரின் உரையாடல்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது என தொலைக்காட்சி கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த சனல்4 வெளியிட்டிருந்த ஒளிநாடாவில் உள்ளடக்கியிருந்தவற்றின் அதிகரித்த தன்மையைக் கொண்டதாக இது இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் ஆட்கள் கொல்லப்பட்டதாக கடந்த ஆண்டு காண்பிக்கப்பட்டது. சனல்4 செய்தி தொலைக்காட்சியின் ஒளிநாடாவானது உண்மைத்தன்மையற்றது என பிரித்தானியாவுக்கான இலங்கையில் உயர்தூதரகம் மறுத்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருந்ததாகக் கூறுகிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனரான பிராட் அடம்ஸ், எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் இத்தகைய வீடியோக்கள் வெளியாகும் சூழ்நிலையில் அவை குறித்து புலனாய்வுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசுத்தலைவர் ராஜபக்ச வந்திறங்கிய விமான நிலையத்திற்கு வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதேவெளையில் மகிந்த ராஜபக்ச ஒக்சுபோர்ட் ஒன்றியத்தில் இன்று வியாழக்கிழமை ஆற்றவிருந்த உரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்சுபோர்டு யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் லண்டனுக்கு திங்கட்கிழமை சென்றார். மனித உரிமை மீறலுக்காக அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சார்பாக லண்டனில் நாடாளுமன்றம் எதிரே புதன்கிழமை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியான நிலையில், அவருடைய உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக யூனியன் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்களில் பிரபலமானவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் உரையாற்ற அழைப்பது ஒக்சுபோர்டு யூனியனில் வழக்கம். அந்த அடிப்படையில் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக யூனியன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 2008 ஆம் ஆண்டில் நட்டாப்பி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். வனுவாட்டு பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது. ஒரு நாட்டின் அரசாங்கம் தனது இராணுவத்தினர் மீதும், மூத்த அதிகாரிகள் மீதும் போர்க்குற்றம் இழைத்தது தொடர்பான விசாரணையை நடத்தியதாக சரித்திரத்தில் இது வரை எவ்வித சம்பவமும் காணப்படவில்லை. இலங்கையைப் பொருத்தவரையில், போர்க் குற்றங்களுக்கான பொறுப்பு ரஜபக்ச சகோதரர்கள், ஜெனரல் பொன்சேக்கா உட்பட நாட்டின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சார்ந்ததாக இருப்பதாகவும் அவர் அனுப்பிய தந்திச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசை கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார். இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் போர்க் குற்ற விசாரணை பற்றி அதிகம் அழுத்தம் கொடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தை தம்மிடம் வெளியிட்டதாகவும், ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகிவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர் என்றும் அமெரிக்கத் தூதர் அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் தொடரை நடத்துவதற்குப் போட்டியிட்ட ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, சப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை விழுத்தி மத்திய கிழக்கு நாடான கத்தார் வென்றதை அடுத்து முதற்தடவையாக மத்திய கிழக்கு நாடொன்று உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டிகளுக்காக 22 புதிய விளையாட்டு அரங்கங்களை கத்தார் அமைக்கும். இவை அனைத்தும் 60 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் கட்டப்படும். அதன்பிறகு அவை பிரித்தெடுக்கப்பட்டு மற்ற வளரும் நாடுகளில் மறுபடி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அடுத்த தொடர் வரும் 2014ல் பிரேசிலில் நடக்கிறது. இவ்வாண்டு ஆரம்பத்தில் உள்ளூர் கட்டிடங்களில் சட்டவிரோதமாகக் குடியேறிய உள்ளூர் பழங்குடி மக்களைக் கலைப்பதற்காக அவர்கள் மீது காவல்துறையினர் தாக்கியதாக உள்ளூர்ப் பொதுமக்கள் தெரிவித்தனர். தமது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக இவ்விடங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும் ராப்பாநூயி மக்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையினரின் நடவடிக்கை இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 காவல்துறையினரும் 8 பொது மக்களும் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர்ப் புகையும் பயன்படுத்தினர். ஆனாலும், தமது தரப்பில் 19 பேர் காயமடைந்ததாகவும், காவல்துறையினர் எவரும் காயமடையவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ராப்பா நூயி என்பது ஈஸ்டர் தீவின் உள்ளூர் பெயராகும். இது சிலியின் மேற்குக் கரையில் இருந்து 3,200 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 4,000 பேர் வசிக்கும் இத்தீவில் உள்ள மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இதன் சிறப்பாகும். குபாக்போ தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா, ஐநா, பிரான்ஸ் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியன கேட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் பின்னர் இடம்பெற்ற இத்தேர்தல் நாட்டை ஒன்றுபட வைக்க உதவும் நம்பப்பட்டது. உண்மையான முடிவுகளை மாற்றுவது நாட்டின் திரத்தன்மையில் மேலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரதமர் கிலோமி சோரோ எச்சரித்திருக்கிறார். ஆனாலும் குபாக்போவும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து நாட்டின் சட்டசபை தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்துச் செய்தது. குபாக்போ 51% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக சட்டசபையின் தலைவர் அறிவித்தார். ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள 10,000 பேரடங்கிய ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே அமைதிப்படையினரின் பக்கம் இப்போது அனைவரதும் பார்வை திரும்பியுள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டனர். டயர்களை எரித்தும், கற்களை வீசியும் வன்முறைகளில் ஈடுபட்டனர். நாட்டின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், அமைதிப்படையினரும் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அபிஜான் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானி இயந்திரக் கோளாறு இருப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து அது தமதேதோவா விமான நிலையத்தில் தரையிறங்கியது. உருசியாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோஃபுளொட் கடந்த சனவரி மாதத்தில் தன்னிடம் இருந்த 23 து-154 ரக விமானங்களையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக சேவையில் இருந்து நிறுத்தி வைத்திருந்தது. இவ்வாண்டு ஆரம்பத்தில் போலந்து அரசுத்தலைவர் து-154 ரக விமானத்தில் பயணித்த போதே விபத்துக்குள்ளாகி இறந்தார். நோர்வே அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படம் ஒன்றில் கிராமின் வங்கியில் இருந்து அந்நிறுவனத்துக்குச் சொந்தமான வேறொரு அமைப்புக்கு பணம் திசை திருப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பேராசிரியர் யூனுசும் அவரது பங்காளர்களும் கிராமின் கல்யாண் என்ற அவர்களது வேறொரு கம்பனிக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்கியிருப்பதாக டென்மார்க்கின் ஆவணப் படத் தயாரிப்பாளர் டொம் ஹைன்மன் என்பவர் கூறியுள்ளார். கிராமின் கல்யாண் என்பது சிறுகடன் வழங்கும் ஒரு நிறுவனம் அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. நோர்வேயின் அதிகாரிகள் இது குறித்த தமது ஆட்சேபங்களை கிராமின் வங்கியாளர்களுக்குத் தெரிவித்தவுடன் அப்பணத்தில் ஒரு பகுதியான 30 மில்லியன் டாலர்கள் கிராமின் வங்கி திரும்பப்பெற்றதாக ஆவணப் படம் தெரிவிக்கிறது. ”சிறுகடனில் கைப்பற்றப்பட்டது” என்ற தலைப்பில் இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணம் கையாடல் தொடர்பில் தாம் பேராசிரியர் யூனுசை குற்றம் சாட்டவில்லை என்று ஹைன்மன் பிபிசி செய்தியளரிடம் தெரிவித்தார். நோர்வேயின் நொராட் என்ற நிவாரண நிறுவனம் வழங்கிய பணம் முழுவதையும் கிராமின் வங்கி திரும்பப்பெற்று விட்டது என்று அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வறிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும், அதன் நிறுவனர் யூனுசிற்கும் 2006ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. புரத்தோன் ஏவ்கணை ஏவப்பட்ட சில நிமிட நேரத்தில் அதன் பாதையை விட்டு 8 பாகை விலகிச் செல்ல ஆரம்பித்ததாக இரசிய செய்தி நிறுவனம் ரியா-நோவஸ்த்தி செய்தி வெளியிட்டுள்ளது. புரத்தோன் ஏவுகணையில் எவ்வித தொழில்நுட்பக்கோளாறும் இருக்கவில்லை என்றும் கணினியின் நிரலாக்கத்தில் இடம்பெற்ற தவறே இதற்குக் காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது. இரசியா இவ்வாண்டு பல செய்மதிகளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. புவியிடங்காட்டிக்கான புதிய அமைப்பு அடுத்த ஆண்டுக்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. துணைத் தலைவர் ஜி. பழனிவேல் 64 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கட்சியின் எட்டாவது தலைவராக பதவி ஏற்றார். சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் மலேசிய சோசலிச கட்சியின் வேட்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜிடம் தோல்வியுற்ற பின்னர், சாமிவேலு பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் வேகமடைந்தது. இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் தமது தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மலேசிய இந்திய காங்கிரசின் தலைமைப் பதவியிலிருந்து வெளியேறும் சாமிவேலு தெற்காசிய நாடுகளுக்கான விசேட தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். தெற்காசிய தலைவர்களுடனான தனது நீண்டகாலத் தொடர்பாடல்களின் மூலம் அவர் சிறப்பாகச் செயல்பட முடியும் என அரசாங்கம் கருதுகிறது. மலேசியாவின் 21 இலட்சம் இந்திய வம்சாவளியினரைப் பாரம்பரியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளது. அத்துடன் பிரதமர் ரசாக்கின் ஆளும் கூட்டணியில் பிரதான பங்காளியாக இக்கட்சி உள்ளது. மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் சிறிய தொகையாக ஒப்பீட்டளவில் காணப்பட்டாலும் சில தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி கொண்டதாக இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் காணப்படுகின்றன. 1946 இல் அமைக்கப்பட்ட இக்கட்சியானது தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியாகும். சர்கோசி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் 10000 மெகா வாட் இந்திய பிரான்ஸ் அணு உலைத் திட்டத்தின் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக இந்தியாவில் மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் நிறுவப்படும். பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த அணு மின் நிலையம் மகாராட்டிர மாநிலத்தில் ஜைதாபூரில் அமைக்கப்படும். இவ்வுலைகள் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படக் கூடியதாக இருக்கும் மேலும் இவ்வணு மின் நிலையத்திற்குத் தேவைப்படும் அணுக்கரு எரிபொருட்களை பிரான்ஸ் நாடு வழங்குவதற்கு இசைந்துள்ளது. இருந்தாலும், ஜைதாபூரில் வசிக்கும் மக்கள் இங்கு அணு மின் நிலையத்தை அமைப்பதை விரும்பவில்லை, அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் 22 அணுமின் உலைகள் உள்ளன. மேலும் அணுமின் உலைகளை அமைக்க அது திட்டமிட்டுள்ளது. மகாராட்டிரத்தில் ஜைதாபூர் அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி நவம்பர் 29, 2010 ஐரோப்பிய கைதாணை ஒன்றை அடுத்து இன்று காலை 0930 ஜிஎம்டி மணிக்கு லண்டனில் வைத்து அசான்ச் கைதானார் என ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அசான்ச் தானே முன்வந்து சரணடைந்தார் என்றும் இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதவான் முன்னிலையில் அவர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சுவீடனால் பிறப்பிக்கப்பட்ட கைதாணை சட்டப்படி சரியானதென நீதவான் அறிவிப்பாரானால், அசான்ச் சுவீடனுக்கும் நாடு கடத்தப்படுவார். ஆனாலும் இதற்கான விசாரணைகள் முடிய சில மாதங்கள் பிடிக்கும் எனக் கருதப்படுகிறது. அசான்சின் வழக்கறிஞர் மார்க் ஸ்டீவன்ஸ் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், யூலிய அசான்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மேலும் அறிய விரும்புகிறார் என்றும், தனது பெயருக்கு ஏற்பட்ட இழுக்குகளைக் களைய விரும்புகிறார் எனத் தெரிவித்தார். இக்குண்டுவெடிப்பினால் சிலை பெரும் சேதத்திற்குள்ளானதாகவும், அருகில் இருந்த குடிமனைகளுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். புஷ்கின் நகரில் சென்ற திங்கட்கிழமை அன்று இரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. லெனின் சிலையின் அரைப்பகுதி அளவில் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் வலெண்டீனா மத்வியென்கோ இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் நினைவுச் சின்னங்களின் மீது கை வைப்பவர்கள் வரலாற்றிற்கு எதிரானவர்கள் என்றும், லெனினைப் பற்றி யார் எப்படிக் கூறினாலும், தமது நகரின் குடிமக்கள் அனைவரும் இத்தாக்குதலைக் கண்டிப்பார்கள்,” என்றும் கூறினார். சென்ற ஆண்டு சென் பீட்டர்ஸ்பேர்கின் மத்திய பகுதியில் லெனினின் பெரிய சிலை ஒன்று குண்டுவெடிப்பில் சேதமடைந்திருந்ததை நினைவூட்டிய அந்நகரின் ஆளுநர் அதே போன்றதொரு தாக்குதலே இதுவும் என அவர் கூறினார். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவரும் கைதாகவில்லை. ஆனாலும் சிலை பின்னர் மீள நிர்மாணிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் போல்செவிக் புரட்சியாளர்களின் நினைவுச்சின்னங்கள் பல இரசியா முழுவதும் காணப்படுகின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அக்காட்சூக்கி என்ற இவ்விண்கலம் வெள்ளியை நோக்கிய தனது பயணைத்தில், வெள்ளியை அண்மியதும் அதன் வேகம் குறையவில்லை எனவும், அது இப்போது வெள்ளியைத் தாண்டிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டு மே 20 ஆம் நாள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதற்கு முன்னர் செவ்வாய்க் கோளை நோக்கி 1998 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட சப்பானிய விண்கலமும் செவ்வாயை அடையவில்லை. அக்காட்சூக்கியுடனான தொடர்புகள் முதலில் துண்டித்துப் போயிருந்தாலும், தற்போது அது பூமியுடன் தொடர்பில் உள்ள்தாகவும், அது தற்போது சூரியனைச் சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. "ஆறு ஆண்டுகளின் பின்னர் இது மீண்டும் வெள்ளிக்கு அண்மையில் வரும் போது மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம்,” என சப்பானின் ஜக்சா என்ற விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இட்டோசி சொயினோ தெரிவித்தார். ஈசா என்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பிய வீனஸ் என்ற விண்கலம் 2006 ஆம் ஆண்டில் வெள்ளியில் தரையிறங்கியது. அவ்விண்கலத்துடன் இணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்ளவென அக்காட்சூக்கி அனுப்பப்பட்டது. வெள்ளி கோள் கிட்டத்தட்ட பூமியைப் போன்ற பருமன் உடையது, அத்துடன் பூமியின் இயல்புகளைக் கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பாவின் வீனஸ் கலம் அண்மையில் அங்கு 250,000 வயதுடைய எரிமலைக் குழம்புகளைக் கண்டுபிடித்திருந்தது. இவ்வாண்டு ஆரம்பத்தில் சப்பானின் ஹயபூசா விண்கலம் சிறுகோள் ஒன்றில் இருந்து தூசி மாதிரிகளைச் சேகரித்து வெற்றிகரமாகப் பூமி திரும்பியிருந்தது. 1,100 பேரைக் கொள்ளக்கூடிய இந்தச் சிறையில் அளவுக்கு அதிகமாக 1,960 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று புதன்கிழமை காலையில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த கைதிகள் வெளியேற்றப்பட்டிருந்தாலும், 83 பேர் உயிர் இழந்தனர். காயமடைந்தோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தோரை அடையாலம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிலியின் அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் ஐந்து புதிய சிறைச்சாலைகள் நவீன வசதிகளுடன் உடனடியாக அமைக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சம்பவம் தனக்கு மன வேதனை அளிப்பதாக அவர் கூறினார். வைரம் அல்லது கிரபைட்டுகளுடன் கூடிய பாறைகள் அடங்கிய கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என்ற முன்னைய கண்டுபிடிப்புகள் இதனை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களது ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த புதிய கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன. "வைரங்களைக் கொண்ட மலைகளும் நிலப்பகுதிகளும் அங்கு காணப்படலாம் என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்த நிக்கு மதுசுதன் தெரிவித்தார். நிக்கு மதுசுதன் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வானியற்பியல் ஆய்வாளர் ஆவார். முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இக்கோள் அவதானிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது. இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் வரை எனவும் நாசா கூறியுள்ளது. இன்று வரை கிட்டத்தட்ட 500 புறக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது மே 24, 2010 வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன ஆகத்து 27, 2009 பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி, மற்றும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளிகளை அடுத்து பன்னாட்டு மன்னிப்பு அவை, மற்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளன. நிர்வாணப்படுத்தப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட கைதிகளை சிப்பாய்கள் தலையிலும் காலிலும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை இந்த வீடியோ பதிவு காட்டுகிறது. அதில் தரையில் இரண்டு பெண்களின் உடல்கள் இருக்கின்றன. இதில் ஒருவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்று அடையாள்ம் காண்ப்பட்டுள்ளார் என இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன. இறுதிப் போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது. ஆனால் இசைப்பிரியா உள்ளிட்ட கைதிகள் நிராயுதபாணிகளாகவும், போர் முனையில் இல்லாத நிலையிலும் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது என இந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இசைப்பிரியாவின் உடல் ஆடையுடனும், நிர்வாணமாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக இவ்வமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பிரஸ் டிவி எனப்படும் ஆங்கிலத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற 25 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவரைத் தான் கொன்றது எப்படி என்பது குறித்துக் கூறினார். தனது கணவரின் உடம்பில் எவ்வாறு எங்கு ஊசி ஏற்றினார் என்பதைக் கூறினார். தனது வீட்டில் வைத்து கணவருக்கு மருந்து ஏற்றியதாகவும், பின்னர் அஸ்தியானியின் காதலர் எனப்படுபவர் கணவரை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்தார் எனவும் அவர் கூறியுள்ளார். ஏழு தடவைகள் மின்சாரம் பாய்ச்சிய பின்னரே கணவர் இறந்துள்ளார். முன்னதாக அஸ்தியானி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்திருந்ததி அடுத்து இந்தக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இவருக்கு 2006 ஆண்டில் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அஸ்தியானியின் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அதற்கெதிராக பன்னாட்டு அமைப்புகள் கடுமையாக குரல் கொடுத்திருந்தன. மேலும் அஸ்தியானி இத் தண்டனையிலிருந்து மீள்வதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் உள்ளதாக ஈரானிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். பன்னாட்டு அமைப்புகள் அஸ்தியானி இன்னமும் சிறையில் இருப்பதாகவே தெரிவித்துள்ளன. அவரது மகனும் வழக்கறிஞரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அஸ்தியானியின் மரணதண்டணை இடைநிறுத்தப்பட்டபோதும் அவரது கணவனின் கொலை வழக்குதொடர்பில் அவர் தூக்கிலிடப்படலாமெனத் தெரிவிக்கப்பட்டது. [[சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோல் நகரில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டுரொட்டிங்கார்ட்டன் என்ற சன நெருக்கடியான நகர மையப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கார் ஒன்று வெடித்ததாகவும், இரண்டாவது கார் சில நிமிட நேரங்களில் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தாக்குதல் தற்கொலைக் குண்டுவெடிப்பு என சுவீடனின் செய்தி ந்றுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனாலும் காவல்துறையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. "தீவிரவாதிகளின் தாக்குதல்கள்" பாரதூரமானதாக இருந்திருக்கும் எனவும், ஆனாலும் அவை தோல்வியில் முடிந்துள்ளது எனவும் சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்தார். இத்தாக்குதல்கள் கவலையளிக்கக்கூடியன எனவும் அவர் தெரிவித்தார். டிடி என்ற உள்ளூர் செய்தி நிறுவனம் இத்தாக்குதலுக்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தமக்கு மின்னஞ்சல் மூலம் வந்த பயமுறுத்தல் செய்தி ஒன்று முஜாகுதீன் அல்லது இசுலாமியப் போராளிகளினால் அனுப்பப்பட்டது என அறிவித்துள்ளது. சுவீடனின் ஓவியர் லார்ஸ் வில்க்ஸ் வரைந்த முகமது நபி குறித்த கேலிச்சித்திரம், மற்றும் ஆப்கானித்தானில் சுவீடனின் இராணுவத்தினரின் பிரசன்னம் போன்றவற்றுக்காக சுவீடன் நாட்டவர்கள் எமது சகோதர, சகோதரிகளைப் போல இறக்க வேண்டியவர்கள் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பன்னாட்டு அமைதிப் படையின் ஒரு அங்கமாக சுவீடனின் 500 படை வீரர்கள் ஆப்கானித்தானில் நிலைகொண்டுள்ளனர். கொசோவோவின் விடுதலை அறிவிப்பை சேர்பியா அங்கீகரிக்காத நிலையில் கொசோவோவில் வாழும் சிறும்பான்மையின சேர்பியர்கள் இத்தேர்தலைப் புறக்கணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கொசோவோவில் இடம்பெறும் இத்தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரதமர் ஹசீம் தாச்சி தலைமையிலான கொசோவோ மக்களாட்சிக் கட்சி இத்தேர்தல்களில் முன்னணியில் நிற்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், பெரும்பான்மை பெறுவது சாத்தியமில்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஹசீம் தாச்சியின் கூட்டணியில் முன்னர் இருந்த கொசோவோ மக்களாட்சி முன்னணி ஆளும் கட்சிக்கு பலத்த சவாலாக விளங்குகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இப்படகில் 8 தென் கொரியர்கள், 8 சீனர்கள், 11 இந்தோனீசியர்கள், 3 பிலிப்பீனோக்கள், ஒரு உருசியர் ஆகியோர் பயணித்திருந்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் யோன்ஹாப் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேறொரு படகு 20 மாலுமிகளைக் காப்பாற்றியுள்ளனர். இப்படகு ஏன் மூழ்கியது என்பது தெரியவில்லை என நியூசிலாந்தின் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். காலநிலை அமைதியாகவே இருந்தது எனவும், அவசர சமிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். குளிரான கடல் பகுதியில் வேறு எவரும் உயிர்தப்பியிருக்க சாத்தியமில்லை என நியூசிலாந்து அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இம்முடிவு இலங்கையின் சிறுபான்மையினத்தை மேலும் தனிமைப்படுத்தவே உதவும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். புதிய தளத்தின் தொழில்நுட்பம் எந்த ஒரு நிறுவனத்தின் வலைத்தளத்தினுள்ளும் உள்வாங்கக்கூடியதாக அமைந்திருக்கும். இதன் மூலம் செய்தி கசிபவர் ஒருவர் தான் விரும்பும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் அநாமதேயமாகச் செய்தியை அனுப்பலாம். விக்கிலீக்சின் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இத்தளத்தில் மேம்பட்டிருக்கும் என அதன் நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள். "விக்கிலீக்ஸ் பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதாக நாம் உணருகிறோம் என டானியல் டொம்சீட்-பேர்க் பிபிசியிடம் தெரிவித்தார் ஒரு நிறுவனத்தில் பெருமளவு அதிகாரம் குவிந்துள்ளது; அளவுக்கதிகமான பொறுப்பு; அளவுக்கதிகமான நெரிசல்." விக்கிலீக்சைப் போல் அல்லாது ஓப்பன்லீக்ஸ் எந்த ஒரு ஆவணத்தையும் வெளியிடாது அல்லது அதன் நம்பகத்தன்மையை ஆராயாது. இதற்கான பொறுப்பு செய்திநிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றுக்கு விடப்படும். விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் நல்ல நிலையில் இயங்குவதாகவும், போதிய தகவல்களை பூமிக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசுத்துறைச் செயலர் இலரி கிணிண்டனுடனான சந்திப்பு ஒன்றை அடுத்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் உடனடியாக வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 21 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஞாயிறன்று மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி திங்களன்று அவர் இறந்தார். பராக் ஒபாமா உட்படப் பல உலகத் தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். பிரவுனின் உயிரணு எண்ணிக்கை எச்.ஐ.வி இல்லாதோரின் எண்ணிக்கை அளவே கடந்த மூன்றரை ஆண்டுகளாக உள்ளதாக இவ்வாரம் வெளியான பிளட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இவரது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். "இந்த நோயாளியின் எச்.ஐ.வி முற்றாகக் குணமடைந்து விட்டதாக நாம் முடிவு செய்துள்ளோம் என அவர்கள் எழுதியுள்ளனர். இரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் அவரிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாவார்ட், மயாமி பல்கலைக்கழக அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த செய்தி மிகவும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கின்றது ஆனாலும் முழுமையான தீர்வாக இருக்குமா என்பதில் ஐயப்பாடு எழுப்பியுள்ளனர். 42 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது. படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் ஈராக் மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விபத்து நடந்த சமயம் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பதை உறுதியாகத் தெரியவில்லை என ஆத்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் தெரிவித்தார். 100 பேர் வரையில் பயணித்திருக்கலாம் என குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார். கடல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஆத்திரேலிய சுங்க அதிகாரிகளையும் மீறி எப்படி இப்படகு கிறிஸ்துமஸ் தீவின் கரையை எட்டியது என்பது இப்போது கெள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலையில் அகதிகளின் கூக்குரலைக் கேட்ட உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தினர். படகு துண்டு துண்டாக சிதறியதைத் தாம் கண்ணால் பார்த்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அகதிகள் பலர் தமக்குக் கிடைத்த படகின் துண்டுகளைக் கைப்பற்றியபடி கடலில் தத்தளித்தனர். கடும் காலநிலை காரணமாக இப்படகு தமது அதிகாரிகளின் கண்ணுக்குத் தெரியவில்லை என பிரதமர் கூறினார். [[இலங்கை]]யில் இணையம் சார்ந்த குற்றச் செயற்பாடுகள் அதிகரிப்பதாக இலங்கையின் கணனி தொடர்பான பிரச்சனைகளை அவதானிக்கும் அமைப்பு (Computer Emergency Response Team) அறிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சார்ந்த றோகன பல்லியகு கருத்துத் தெரிவிக்கையில் "இணையக் குற்றச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஆறு மாத காலத்தில் 160க்கு மேற்பட்ட குற்றத்தாக்கல்களைப் பெற்றுள்ளோம்" என்று அறிவித்தார். அனேகமான குற்றச் செயற்பாடுகள், கடவுச்சொல் திருட்டு, தகவல் திருட்டு, கப்பம் கோரல், கடனட்டை திருட்டு, முகநூல் சார்ந்த குற்றச்சாட்டுகளைப் பெறுவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. லியாம் ஃபொக்சின் இலங்கைப் பயணம் தொடர்பில், பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஏக் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஏக்குடன், லியாம் ஃபொக்ஸ் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லியாம் பொக்சின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அதிகாரபூர்வப் பயணத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கைப் பயணம் கைவிடப்பட்டுள்ளதாக, லியாம் ஃபொக்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பொக்ஸ் இலங்கைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளுவர் எனவும் அவரின் பேச்சாளர் தெரிவித்தார். லியாம் பொக்ஸ் கடந்த இரண்டு முறை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுவதற்கு தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். முதல் பயணம் 2009 நவம்பர் 14-19 காலப்பகுதில் இடம்பெற்றது. அப்போது £3,000 செலவளிக்கப்பட்டது. இதற்கு எடின்பரோவில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறீலங்கா அபிவிருத்தி அறக்கட்டளை என்ற அமைப்பு பணம் கொடுத்ததாக இன்றைய தி ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்பயணத்துக்கான காரணமாக அவர் "இலங்கை சுந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கு பற்றுவதற்கும், இலங்கை அரசுத்தலைவர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்கவும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அசான்ச் 200,000 பவுண்டு (312,000 டாலர்) ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, குறிப்பிட்ட பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், தினமும் உள்ளூர்க் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க அவரது உடலில் மின்னணு கருவி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. அவரது பிணையை எதிர்த்து சுவீடன் அரசு தொடர்ந்த மேல் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சுவீடனில் தொடரப்பட்ட பாலியல் வழக்குத் தொடர்பாக லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அசான்சின் பிணைக்கான ரொக்கப் பணத்தை அவரது ஆதரவாளர்களே திரட்டிக் கொடுத்திருந்தனர். இவர்களில் பலர் பிரபலங்கள் ஆவர். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசு இந்தத் துணை இராணுவக் குழுக்களுக்கு பணம் கொடுத்து ஆதரவளித்து வந்ததாகவும், மகிந்த ராசபக்ச ஆட்சிக்கு வந்ததும், பணஉதவிகளை நிறுத்தி, பதிலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை கருணா குழுவினருக்கும் ஈபிடிபி குழுவினருக்கும் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்களை இவர்கள் மிரட்டி பணம் பறித்து கோத்தபயாவுக்கு கொடுத்து வந்தனர். மேலும் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் பெண்களை இக்குழுக்கள் அனுப்பி வைத்தனர். இதற்காக தனியாக ஒரு விபச்சாரக் குழுவையும் அவர்கள் வைத்திருந்தனர். மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவத் தளபதிகளை அங்கு தமிழ் எம்.பிக்கள் செய்துவரும் சில வேலைகளில் தலையிட வேண்டாம் என கோத்தபாய அறிவுறுத்தினார் எனவும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன பெண்ணின் சிலை ஆஷ்கெலன் என்ற நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1,800 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என இசுரேலின் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சிலை தற்போது மேலதிக ஆய்வுக்காக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. சென்ற வாரம் இடம்பெற்ற புயல் செய்சாரியா என்ற ரோமன் காலத்துப் பழைய துறைமுக நகரைப் பெரிதும் சேதப்படுத்தியுள்ளது. synopsis= ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. = எங்கள் உள்ளடக்கத்தை மறுபயன் செய்தல்: நீங்கள் பிரதி எடுக்கலாம் இற்றைப்படுத்துதற்கும், ஓரவஞ்சனையற்ற தொடர்புள்ள தரமான பொழுதுபோக்குடைதான அடைவிற்கும் 'குடிமக்களே செய்தியைப்பற்றி நன்கு அறிவார்கள்' என்ற நம்பிக்கையினால், பகிர்ந்த இதழியல் என்ற திட்டத்தை விக்கிசெய்திகள் பரப்புகிறது. தங்களை அன்புடன் விக்கிசெய்திகள் வரவேற்கவும், தங்கள் விருப்பத்தினடிப்படையில் இங்கு பங்களிக்க அழைக்கவும் செய்கிறது. விக்கிசெய்திகள் திட்டம் என்பது எவரும் சொந்த அனுபவத்திலோ, வேறு மூலங்களிலிருந்து தொகுக்கக் கூடிய திட்டமாகும். இது சிறிய, பெரிய அளவிலான செய்தி அறிக்கைகளைக் கொடுக்கும் விக்கிமீடியா நிறுவனத்தின் இலவச செய்திமூலம் ஆகும். இது செய்திகளின் ஊடகப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு நிறுவப்பட்டது. இது மூலச்செய்திகளையும் தாண்டி, பலதரப்பட்ட செய்திகளையும் நடுநிலைமையுடன் இலவசமாக விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. செய்திகள் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்காவிடிலும், இது ஏற்கனவே பயனுள்ளதாகவே இருக்கிறது ஏனெனிலில் நாம் கூட்டுமுயற்சியினால் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி கண்டுள்ளோம். இது மேலும் படிப்படியாக வளருக்கூடியது. பல சவால்கள் உள்ளன. இன்று விக்கிப்பீடியாவும், பிற விக்கியூடகங்களும் என்ன கொள்கைகளைக் கொண்டுள்ளனவோ, அதனையே விக்கிசெய்திகளும் கொண்டுள்ளது. அவை: நடுநிலைமை, இலவச அடைவு, வெளிப்படையான முடிவெடுக்கும் செயற்பாடுகள். ஐநா மற்றும் பிரெஞ்சுப் படைகள் முன்னாள் போராளிகளுடன் கூட்டு வைத்துள்ளனர் என அரசுத்தலைவரின் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். சென்ற மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் அலசானி ஊட்டாரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அவருக்குப் பதவியைத் தர தற்போதைய அரசுத்தலைவர் கிபாக்போ மறுத்துள்ளார். ஊட்டாரா தற்போது ஐநா படையினரின் பாதுகாப்பில் உள்ளார். ஊட்டாராவின் வெற்றியை ஐநா அமைதிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கிபாக்போ தானே வேறி பெற்றதாகக் கூறி வருகிறார். ஐநா படைகள் ஐவரி கோஸ்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக அரசுத்தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக தமது வாகன அணி ஒன்று அபிஜானில் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் பெரிய பசாம் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முதல் நாள் ஊட்டாராவின் ஆதரவாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, பிரான்சு, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியன கிபாக்போ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கிபாக்போ பதவி விலக வேண்டும் எனவும் அல்லாதுவிடில் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என பிரெஞ்சு அதலைவர் நிக்கொலா சர்க்கோசி வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஐக்கிய நாடுகளின் அவசரத்தேவையற்ர பணியாளர்கள் ஏற்கனவே ஐவரி கோஸ்டில் இருந்து வெளியேறியுள்ளனர். சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் உள்ளார். அவரது தலைமையில் அமைச்சரவை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 120 இருக்கைக கொண்ட நாடாளுமன்றத்தில் அத்தம்பாயெவிற்கு 92 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்தன. கடந்த அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. ஐந்து கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஏனைய மத்திய ஆசிய நாடுகளான துர்க்மெனிஸ்தான், கசக்ஸ்தான், தஜிக்கித்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகியவற்றில் சனாதிபதி ஆட்சியே உள்ளது. புதிய கிர்கீசு அரசுக்கு ஐக்கிய அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சனாதிபதியை விட பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வருங்கால சனாதிபதி ஒரு ஆறு-ஆண்டு காலமே பதவியில் இருக்க முடியும். ஆனாலும் அவருக்கு பாதுகாப்பு அமைச்சர், மற்றும் தேசியப் பாதுகாப்பு சேவைகளின் தலைவர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த புரட்சிக்குத் தலைமை வகித்தவரும் தற்போதைய இடைக்காலத் தலைவராகவும் இருக்கும் திருமது ரோசா ஒட்டுன்பாயெவா 2011, டிசம்பர் 31 இல் பதவி விலகுவார். பீமெக்ஸ் என்ற எண்ணெய் வழங்கி ஒன்றில் சிலர் சட்ட விரோதமாக எண்ணெய் திருட முயன்ற போதே வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வீதிகளில் பரவி தீப்பிடித்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் அவ்விடத்தில் இருந்து ஓடித் தப்பினர். சட்டவிரோதமாக எண்னெய் திருடுபவர்களினால் தமக்கு ஆண்டு தோறும் மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பீமெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இவ்வாண்டு மட்டும் 550 தடவைகள் எண்ணெய் திருட்டு பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுளதாக அந்நிறுவனம் கூறுகிறது. இவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட மெக்சிக்கோ அரசுத்தலைவர் பிலிப்பே கால்டெரன் இறந்தவர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என அவ்ர் தெரிவித்தார். செஞ்சூரியனில் நேற்று இடம்பெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் 37 வயதான சச்சின் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களைப் பெற்றார் இது எனக்கு மற்றுமொரு எண், ஆனால் அது மிகவும் இதமாக உள்ளது என டெண்டுல்கர் தெரிவித்தார். தனது இந்த 175வது தேர்வு ஆட்டத்தின் போது டெண்டுல்கர் தனது டெஸ்ட் துடுப்பாட்ட வரலாற்றில் 14,500 ஓட்டங்களை நேற்றுக் கடந்துள்ளார். டெண்டுல்க்கரின் சதத்தில் 12 நான்குகளும் ஒரு ஆறும் அடங்கும். இந்திய அணியின் பயிற்சியாளர் காரி கேர்ஸ்ட்டன் கருத்துத் தெரிவிக்கையில், “சச்சின் ஒரு துடுப்பாட்டப் பேராசிரியர்,” என்றார் ஒவ்வொரு கிரிக்கெட் ஆடத்தையும் சச்சின் அடக்கத்துடனும் மரியாதையுடனும் ஏற்றுக் கொள்வார்.” சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை நவம்பர் 6, 2009 திருக்குறள் நெறி பரவப் பல்வேறு வழிகளில் பாடுபட்ட அறிஞர்களில் கா. பொ. இரத்தினம் குறிப்பிடத்தக்கவர். உலகத்தமிழ் மாநாடுகளுக்கு அடித்தளமான திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர். 1952ம் ஆண்டு கொழும்பில் 'தமிழ்மறைக் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்ப் பணிகளை செவ்வனே ஆற்றி வந்தவர். இவர் தமிழ், இலக்கியம் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம், அன்புச் சோலை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா சென்று தங்கியிருந்த இவர், 2003 ஆம் ஆண்டு மீண்டும் கொழும்பு திரும்பி வெள்ளவத்தையில் வசித்து வந்தார். கா. பொ. இரத்தினம் அவர்கள் 'தமிழ்மறைக் காவலர் திருக்குறள் செல்வர் குறள் ஆய்வுச் செம்மல் செந்தமிழ்க் கலைமணி உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். ஈரானின் சிஸ்டன்-பலுச்சித்தான் மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாம் நகரில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 26,000 பேர் இறந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிரடிப்படையினர் நகரில் குவிக்கப்பட்டுப் பலர் கைது செய்யப்பட்டனர். அரசுத்தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். ஒரு சிலர் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்ததாக ப்பிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தேர்தலில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 600 பேர் வரையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக வாக்களிப்பு முறைமைகள் நல்லபடியாகவே நடந்திருந்தாலும், வாக்குக் கணக்கீட்டு நடைபெற்ற முறையில் தமக்கு அதிருப்தியைத் தருகிறது என ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழு கருத்துத் தெரிவித்துள்ளது. வாக்குக்கணிப்பு திறந்த முறையில் இடம்பெறவில்லை, இதனால் அதன் நம்பகத்தன்மை மிகவும் குறைவே என அது தெரிவித்துள்ளது. தனது கண்காணிப்பாளர்கள் 32 வீதமான வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் சமூகமளிக்க முடியவில்லை என்றும், மீதமான வாக்கெடுப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்பட்டதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. உருசிய அரசினால் அனுப்பப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் சிறந்த முறையில் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா இத்தேர்தல் முடிவுகளைத் தாம் முறையானதாகக் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனாலும் லுக்கசென்கோ தமது நாட்டில் புகவும் பிரபல்யமானவராகக் காணப்படுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. இரசியாவுடனான உறவு பலம் மிக்கதாக உள்ளது. இரசியாவில் இருந்து பெற்றோலியம் வாயு ஐரோப்பாவுக்கு பெலருஸ் வழியாகவே கொண்டுசெல்லப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ விமானநிலையக் குண்டுவெடிப்புத் தொடர்பில் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆஸ்திரேலியா]]வில் கைதான இந்திய மருத்துவர் முகம்மது ஹனீப் பெரும் தொகையான பணத்தை ஆத்திரேலிய அரசிடம் இருந்து இழப்பீடாகப் பெற்று அந்நாட்டு அரசுடன் சமரசமாகப் போவதற்கு உடன்பாடு கண்டுள்ளார். அடுத்த 12 மாதங்களில் தாம் மீண்டும் பிறிஸ்பேனுக்கு தனது மனைவி, மகளுடன் வந்து தனது மருத்துவப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனாலும், அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 1976-1983 காலப்பகுதியில் இராணுவ ஆட்சியின் போது பதவியில் இருந்தவர் இராணுவத் தலைவர் ஜெனரல் விடெலா, 85. தனது அரசியல் எதிரிகள் பலரைக் கொலை செய்ய உடந்தையாக இருந்தமைக்காக அவருக்கு கோர்டோபா நிதிமன்றம் குற்றவாளியாகக் கண்டது. 30,000 இற்கும் அதிகமானோர் அக்காலப்பகுதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்களின் சிறைச்சாலையில் அவர் தனது இறுதிக்காலத்தைச் செலவழிக்க வேண்டும் என நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறினர். ஏற்கனவே இவர் தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்காக ஆயுள்சிறையை அனுபவித்து வந்தார். ஆனாலும் அவர் சிறப்புச் சலுகைகளைப் பெற்று வந்தார். கோர்டோபாவில் 31 சிறைக்கைதிகளின் படுகொலைகளுக்கு விடெலா பொறுப்பாக இருந்தார் என நீதிபதி தெரிவித்தார். இடதுசாரி அரசியல்வாதிகள் பலர் சிறைக்கூடங்களில் இருந்து பலவந்தமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்து தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்போது இராணுவம் தெரிவித்தது. நேற்று முற்பகல் 1100 மணியளவில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்புகளில் இருவர் காயமடைந்துள்ளனர். இருவரும் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர். இத்தாலிய அராஜகக் குழு ஒன்று இத்தாக்குதலைத் தாமே நடத்தியதாகத் தெரிவிக்கும் குறிப்பு ஒன்று குண்டு வெடித்த இடத்தில் இருக்கக் காணப்பட்டுள்ளது. "எமது குரலை நாம் வார்த்தைகளின் மூலமாகவும், உண்மைச் செய்தி மூலமாகவும் வெளிப்படுத்த நாம் தீர்மானித்திருக்கிறோம், மேலாண்மை முறையை நாம் ஒழிப்போம், அராசகம் வாழ்க என முறைசாரா அராஜகவாதிகளின் கூட்டமைப்பு (Informal Anarchist Federation, FAI) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களை தீவிரவாதிகளின் தாக்குதல் என்ற வகையில் தமது விசாரணைகளை இத்தாலியக் காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். உக்ரேனியத் தூதரகத்திலும் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் எவ்வித வெடிபொருட்களும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல குண்டுவெடிப்புகள் நகரில் இடம்பெற்றதாகவும் 20 பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இச்செய்தியை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. பாதுகாப்புப் படையினர் இப்பகுதியில் தற்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இவ்வாண்டு மட்டும் இப்பகுதியில் இடம்பெற்ற இன மோதல்களில் ஆயிக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதிக்கும், கிறித்தவர்கள் வாழும் தெற்குப் பகுதிக்கும் எல்லைப்பகுதியில் ஜோஸ் நகரம் உள்ளது. இப்பகுதியில் இடம்பெறும் மோதல்கள் பெரும்பாலும் இன மோதல்கள் என அதிகாரிகள் தெரிவித்தாலும், இம்மோதல்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளே காரணம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் முஸ்லிம்கள் பொதுவாக ஹவுசா அல்லது ஃபுலானி மொழி பேசுபவர்கள். இவர்கள் கால்நடை வளர்த்தல், மற்றும் சிறு வணிகத் தொழில்களையே மேற்கொள்ளுகின்றனர். பெரோம், அனகூட்டா, அபிசாரி ஆகிய கிறித்தவ இனத்தவர்கள் பொதுவாக வேளாண்மைத் தொழிலைச் செய்து வருகின்றனர். ஹவுசா முஸ்லிம்கள் வடக்கில் இருந்து கால்நடைத் தீவனங்களைத் தேடி தமது வேளாண்மை நிலங்களுக்கு வருவதால், அவர்களால் தமக்கு எப்போதும் ஆபத்தே என சில கிறித்தவ விவசாயிகள் கருதுகின்றனர். இதற்கிடையில், வேறொரு சம்பவத்தில், இசுலாமியத் தீவிரவாதக் குழு ஒன்று மைடூகுரி என்ற நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிறித்துமசு ஆராதனைக்காகக் கூடியிருந்தோர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார். எவரும் காயமடையவில்லை. வடமேற்குப் பாக்கித்தானில் உணவு நிவாரணம் பெற்றுக் கொள்ளப் பெருந்தொகையானோர் கூடியிருந்த வேளையில் பெண் தற்கொலைதாரி ஒருவர் தனது குண்டை வெடிக்க வைத்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாக்கித்தானின் வடமேற்குப் பகுதியில் அண்மக்காலங்களில் பொது மக்கள் மீது பெருமளவு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. காயமடைந்த பலர் உலங்குவானூர்தி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தோர் சலர்சாய் இன மக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தாலிபான்களுக்கு எதிரான இராணுவத்தினரின் தாக்குதல்களை இந்த இனத்தோர் ஆதரித்து வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் 11 பாகித்தானிய இராணுவத்தினரும் 24 போராளிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 150 தலிபான் போராளிகள் பங்குபற்றியிருந்தனர். 1996-2001 காலப்பகுதியில் ஆப்கானித்தானில் தலிபான்களின் ஆட்சியை ஆதரித்து வந்த பாக்கித்தான் பின்னர் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க ஊடுருவலை அடுத்து அமெரிக்காவுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகிறது. "மானிங் ஒரு வெற்று அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு நடப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார், பொதுவாக எட்டடி நடப்பதற்கே அவ்வறைக்கு இடமுள்ளது. நடப்பதற்கு அவருக்கு மனமில்லை என அவர் தெரிவித்தால் உடனடியாக அவர் தனது சிறைக்கூடத்துக்கு கூட்டிச்செல்லப்படுகிறார் என கூம்ஸ் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை அன்று மாலை 4மணி 1 நிமிடம் அளவில் இந்தியாவின் புவியிசைவுத் துணைக்கோள் ஏவி (GSLV) ஜிசாட்-5பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளைக் காவிச் சென்ற போது தனது முதலாவது கட்டத்திலேயே திசைமாறிச் செல்ல ஆரம்பித்தது. இதன் பின்னர் பூமியுடனான தொடர்புகள் அறுந்த நிலையில் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதன் சிதறிய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தன. "முதல் 50 செக்கன்களுக்கு அது திட்டமிட்ட பாதையிலேயே சென்றது. அதன் பின்னர் அது திசை மாறிச் செல்ல ஆரம்பித்து பின்னர் வெடித்தது என இஸ்ரோவின் தலைவர் கே. இராதாகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த வாரம் டிசம்பர் 20 ஆம் நாள் இந்த ஏவூர்தி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது, திடீர் தொழில் நுட்ப கோளாறினால் அதன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் புவி வட்டப் பாதையை சென்றடையத் தேவையான சக்தியை அளிக்கும் கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பயனைத் தரவில்லை. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி எஸ் எல் வி-டி 3 (GSLV-D3) ராக்கெட்டை ஏவும் முதல்முயற்சி கடந்த ஏப்ரல் மாதம் தோல்வியடைந்தது. தற்போது ஏவப்பட்ட ஜி எஸ் எல் வி ராக்கெட்டில் ரஷ்யாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. கடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி வியாழன், ஏப்ரல் 15, 2010 சிட்னியின் ஹோல்ஸ்வேர்தி என்ற புறநகரில் உள்ள இராணுவத்தளத்தின் மீது தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டம் தீட்டினர் என நடுவண் காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்குலகில் இசுலாம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதால் தாம் இறக்கும் வரை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக், மற்றும் ஆப்கானித்தானில் ஆத்திரேலியாவின் பங்கு குறித்து இவர்கள் சஞ்சலத்துக்குள்ளாகியிருந்தனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் இசுலாமிய மத குருமார்களின் உத்தரவான ‘ஃபாத்வா’வைப் பெறுவதற்காக சோமாலியா சென்றதாகவும் இவர்கள் சோமாலியாவின் அல்-சபாப் தீவிரவாதக் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்கள் எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை செவ்வாய், ஆகஸ்ட் 4, 2009 ஐவரி கோஸ்டின் மிகப் பெரும் நகரான அபிஜானில் பெருமளவிலானோர் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலை அடுத்து அரசுத்தலைவர் குபாக்போ பதவி விலக மறுத்து வருகிறார். தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக அவர் தெரிவிக்கிறார். ஆனாலும், எதிர்க்கட்சி வேட்பாளர் ஓட்டாரா வெற்றி பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் உட்படப் பல உலக நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கிடையில் குபாக்போ பதவி விலகாவிட்டால் அவர் வெளியேற்றப்படுவார் என மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு எக்கோவாஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவும் பிரான்சும் தமக்கு எதிராகச் சதி செய்கிறது என குபாக்போ குற்றம் சாட்டியுள்ளார். அல்ஜசீரா செய்திச் சேவைக்கு அரசுத்தலைவர் குபாக்போ இன்று வழங்கிய பேட்டி ஒன்றில், பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் குழுவிற்க்உ அழைப்பு விடுக்கிறேன் எனவும், நாட்டில் அமைதி ஏற்படுத்துவதற்கு ஆட்சியை எதிர்க்கட்சியினருடன் பங்கிட்டுக் கொள்ள தான் எச்சரிக்கயுடன் தயாராயுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். ஐநா படைகளை வெளியேறுமாறு ஐவரி கோஸ்ட் அரசு கட்டளை டிசம்பர் 19, 2010 ஐவரி கோஸ்டில் எதிர்க்கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றதாக உலக நாடுகள் கருத்து டிசம்பர் 4, 2010 ஈரானியரான அலி அக்பர் சியாதத் என்பவர் தெகரானின் எவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். பல ஆண்டுகளாக இவர் மொசாட்டுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், ஈரானின் இராணுவத் தகவல்களை வழங்கி வந்தார் எனவும் இர்னா தெரிவித்துள்ளது. இவர் 2008 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் ஈரானில் இருந்து வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டார். தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட சியாதத் தான் வழங்கிய தகவல்களுக்காக "60,000 அமெரிக்க டொலர்களை சியோனிச ஆட்சியாளரிடம்" இருந்து பெற்றதாகத் தெரிவித்தார். ஈரானின் இராணுவத் தகவல்கள், போர் விமானங்கள், விமான விபத்துக்கள், ஏவுகணைகள் போன்ற பல தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவர் ஒரு அரச ஊழியரா என்பதும் எவ்வாறு அவர் இத்தகவல்களைப் பெற்றார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. சியாதத் துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த போதே இத்தகவல்களை மொசாடிற்கு வழங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஈரானியச் சட்டப்படி வேவு பார்த்தல் ஒரு மரணதண்டனைக்குரிய குற்றம் ஆகும். 2008 ஆம் ஆண்டில் ஈரானிய தொலைத்தொடர்புப் பொறியாளர் அலி அஷ்டாரி என்பவர் இசுரேலுக்கு உளவு பார்த்தமைக்காகக்த் தூக்கிலிடப்பட்டார். "அதிகாரபூர்வ மதிப்பீட்டின் படி, இந்தியா ஆண்டொன்றிற்கு 5,000 டிரில்லியன் கிலோவாட்மணி சூரியக் கதிர்வீச்சைப் பெற்று வருகிறது. இது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4-7 கிலோவாட்மணி ஆகும். இந்த மதிப்பீடு இந்தியாவின் மொத்த மின்சாரப் பயன்பாட்டை (848 பில்லியன் கிலோவாட்மணி) விட அதிகமானதாகும். இந்த வகையில் இந்தியா மிகப்பெரும் ஆற்றல் வளத்தைக் கொண்டுள்ளது. இதனை நாம் சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும் என மோசர் பேயர் நிறுவன தலைவர் ரத்துல் பூரி தெரிவித்தார். நாகூருக்கும் வேளாங்கண்ணிக்கும் இடையேயான அகலரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இன்று மெல்பேர்ணில் நடந்த நான்காவது போட்டியின் நான்காம் நாளில் ஆத்திரேலியாவில் கடைசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணிக்கு வெறும் 20 ஓவர்களே தேவைப்பட்டது. நான்காவது ஆட்டத்தில் ஒரு இன்னிங்க்ஸ், 157 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆத்திரேலிய அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். சிட்னியில் அடுத்தவாரம் சனவரி 3 ஆம் நாள் 5வது கடைசிப் போட்டி ஆரம்பமாகிறது. ஆனாலும் இங்கிலாந்து ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னணியில் தற்போது உள்ளதால், கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தாலும், ஆஷசுக் கோப்பையைத் தன்னுடன் கொண்டு செல்லும். தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் ஆத்திரேலியாவின் படு தோல்விகள்: *லண்டன், ஆகத்து 1938: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 579 ஓட்டங்களால் வெற்றி *அடிலெய்து, மார்ச் 1892: இங்கிலாந்து ஒரு இன்ஙிங்ஸ் 230 ஓட்டங்களால் வெற்றி *மெல்பேர்ண், பெப்ரவரி 1912: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 225 ஓட்டங்களால் வெற்றி *கல்கத்தா, மார்ச் 1998: இந்திய ஒரு இன்னிங்க்ஸ், 219 ஓட்டங்களால் வெற்றி *லண்டன், ஆகத்து 1886: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 217 ஓட்டங்களால் வெற்றி *கராச்சி, செப்டம்பர் 1998: பாகிஸ்தான் ஒரு இன்னிங்க்ஸ், 188 ஓட்டங்களால் வெற்றி *மான்செஸ்ட்டர், சூலை 1956: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 170 ஓட்டங்களால் வெற்றி *மெல்பேர்ண், டிசம்பர் 2010: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ் 157 ஓட்டங்களால் வெற்றி *லண்டன், ஆகத்து 1888: இங்கிலாந்து ஒரு இன்னிங்க்ஸ், 137 ஓட்டங்களால் வெற்றி *டர்பன், பெப்ரவரி 1970: தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்க்ஸ், 129 ஓட்டங்களால் வெற்றி நியண்டர்தால் (Neanderthal) மனிதர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. நியண்டர்தால் மனித எச்சங்கள் செருமனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தியதாகவும், குகைகளில் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சிறீ லங்கா தாயே என்னும் இலங்கையின் தேசியப் பண்ணின் தமிழ் வடிவத்தை இரத்துச் செய்ய இலங்கையின் அமைச்சரவை இம்மாத ஆரம்பத்தில் முடிவு செய்தது. இலங்கையின் தேசியப் பண் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், அப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளசு தேவானந்தா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்திருந்தார். அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இரண்டு மொழிப் பாடல்களையும் பாடுவதற்கு அனுமதி அளித்திருந்ததாகவும், இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாயினும், எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அழிவின் ஞாபகார்த்த நிகழ்வு கடந்த திசம்பர் 26 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிரதமர் டி. எம். ஜெயரத்தின தலைமையில் இடம்பெற்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றின் மாணவிகள் வலுக்கட்டாயமாக நாட்டுப்பண்ணை சிங்களத்தில் பாடும்படி வற்புறுத்தப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகால்கள் தெரிவிக்கின்றன. "தமிழிலேயே முதலில் பாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றும், பின்னர் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் உத்தரவினால் அவசர அவசரமாக சில மாணவர்களுக்கு சிங்களத்தில் பாடுவதற்குப் பயிற்சி அளிகக்ப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர் என டெய்லிமிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இது பற்றித் தெரிவிக்கையில், இலங்கை அரசுத்தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைப்பது ஒரு புதுமையான நிகழ்வல்ல என வாதாடினார். ஆனாலும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர். "இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசு உடனடிக் கவனம் எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கைப் படையினரின் திட்டமிட்ட செயலே காரணம் என யாழ்ப்பாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது இறுதிக் கிரியைகள் அவரது ஊரான இளவாலையில் செவ்வாய் அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து பெரும் தொகையான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசுச் செயலக அதிகாரிகளோ அல்லது யாழ்நகர மேயரோ இந்நிகழ்வ்ல் கலந்து கொள்ளவில்லையென தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்றே இலங்கைப் பிரதமர் பங்குபற்றிய நிகழ்வில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை உரிமைகளுக்கான வலைய மைப்பு விடுத்துள்ளது. இக்குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கையின் தேசியப் பண் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு திங்கள், டிசம்பர் 13, 2010 இந்த அருங்காட்சியத்தில் 50,000 சதுர அடி பரப்புள்ள 21 அரங்கங்கள் உள்ளன. இக்காட்சியகங்களில் கலையும் அறிவியலும், ஊடகத்துறையும் தொழில்நுட்பமும், மற்றும் வடிவமைப்பும் கட்டடக்கலையும் ஆகிய துறைகளில் பல காட்சிப் பொருட்கள் இடம்பெறும். அத்துடன் உலகம் முழுவதையும் சேர்ந்த அரிய பொருட்களைக் காண அருமையான வாய்ப்பாக இது திகழும் என்று மெரினா சேண்டஸ் நிறுவனம் தெரிவித்தது. இங்கு வரும் பார்வையாளர்கள் உந்துதல், உத்வேகம், வெளிப்படுத்தல் ஆகிய மூன்று முக்கிய அரங்கங்களூடாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். “அறிவுக்கலை: ஒரு புத்தாக்கப் பயணம்” என்ற நிரந்தர கண்காட்சியும் அங்கு இடம்பெறவிருக்கிறது. அத்துடன் உரைத் தொடர் ஒன்றையும் இந்த அருங்காட்சியம் தொடங்க இருக்கிறது. அறிவுக்கலைத் துறையில் உலகளாவிய அளவில் சிந்தனைச் சிற்பிகளை சிங்கப்பூருக்கு வரவழைத்து உரை நிகழ்ச்சிகளுக்கு அது ஏற்பாடு செய்யும். பாரெல் வெள்ளிக்கிழமை அன்று ரோம் நகரில் இடம்பெறவிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள இத்தாலி செல்லவிருந்தார். 1978 ஆம் ஆண்டில் "டாடி கூல்" என்ற தனது முதலாவது பாடல் மூலம் பொனி எம். குழு புகழ் பெற்றது. அதே ஆண்டு "றிவர்ஸ் ஒஃப் பாபிலோன்" என்ற பாடலுடன் சேர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவில் மட்டும் 2 மில்லியன் இசைத்தட்டுகள் விற்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து, ஃபாரெல் தனியே வேறு மூன்று பெண் பாடகியருடன் இணைந்து "Bobby Farrell of Boney M என்ற பெயரில் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். ரொக்காம்ப்டன் நகரில் வெள்ள மட்டம் உயர்ந்து வருவதால் அங்கிருந்து 4,000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளனர். தியோடர் நகரத்தில் டாவ்சன் ஆற்றில் நீர் மட்ட அளவு அதிகபட்ச அளவை எட்டியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 350-க்கும் மேற்பட்டோர் உலங்குவானூர்திகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். "மூன்று ஆறுகள் இப்போது பெருக்கெடுத்துள்ளன; அடுத்த 24 மணி நேரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளை இழப்பர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் அன்னா பிளை தெரிவித்தார். எமிரால்ட் நகரில் வெள்ள மட்டம் இப்போது 16 மீட்டர் மட்டத்திற்கு உயந்துள்ளதாகவும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நொகோவா ஆறு இன்று வெள்ளிக்கிழமை தனது அதிஉயர் மட்டத்திற்கு உயர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள 1,200 பேர் வெளியேறுவதற்குத் தயார் நிலையில் உள்ளனர். உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கமத்தொழில் விளைச்சலுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் பின்னர் அங்கிருந்த கிறித்தவர்கள் உள்ளூர் இசுலாமியர்களுடனும், காவல்துறையினருடனும் கலகத்தில் ஈடுபட்டனர் என்றும், அருகில் உள்ள இசுலாமியப் பள்ளிவாசல் ஒன்றின் மீது கற்களை எறிந்து தாக்கினர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மசூதியினுள் நுழைந்த சிலர் அங்கிருந்த புத்தகங்களை எடுத்து வீதிகளில் எறிந்ததாக அசோசியேட்டட் பிரசு செய்தியாளர் தெரிவிக்கிறார். காயமடைந்தோரில் எட்டுப் பேர் முஸ்லிம்கள் என அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்தில் தேவாலயங்கள் மீது அண்மைக்காலத்தில் தாக்குதல்கள அதிகரித்துள்ளதாக அலெக்சாந்திரியாவின் நகர முதல்வர் ஜெனரல் அடெல் லபீப் எகிப்தியத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். கார்க்குண்டு சற்று நேரம் கழித்து வெடித்திருந்தால் இன்னும் பலர் இறந்திருப்பார்கள் என உள்ளூர் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார். இன்றைய தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என அறிவிக்கப்படவில்லையாயினும், ஈராக்கின் அல்-கைடா என அழைக்கப்படும் ஒரு குழு எகிப்திய கொப்ட்டிக் கிறித்தவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எகிப்தில் கொப்டிக் பழமைவாத கிறித்தவர்கள் 10 விழுக்காட்டினர் உள்ளனர். "யூரோ வலயத்திற்கு இது ஒரு சிறிய படிக்கல், ஆனால் எசுத்தோனியாவிற்கு இது பெரும் படிக்கல் என அவர் தெரிவித்தார். சோவிஅத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து 20 ஆண்டுகளின் பின்னர் எசுத்தோனிய மக்கள் இப்போது தாம் முழுமையாக மேற்குலக நாடுகளுடன் ஒன்றிணைந்ததற்கான சான்றைப் பெற்றுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். எட்டு முன்னாள் கம்யூனிச நாடுகளுடன் சேர்ந்து எசுத்தோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தது. சுலொவீனியா, சுலொவாக்கியா இரண்டும் ஏற்கனவே யூரோவலயத்தில் சேர்ந்து யூரோவைத் தமது நாணய அலகாக்கிக்கொண்டுள்ளன. சனவரியின் முதல் அரைப்பகுதி வரை யூரோவுடன் இணைந்து குரூன்களும் ஏற்றுக் கொள்ளப்படும். 2011 இறுதி வரையில் வங்கிகள் குரூன்களை யூரோக்களுக்கு மாற்றிக் கொடுக்கும். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விமானம் வெடித்துச் சிதற முன்னரே 124 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் வெளியேற்றப்பட்டனர். விமானம் தீப்பிடித்து வெடித்ததில் 100 சதுர மீட்டர் சுற்று வட்டத்துக்கு தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 10 பயணிகள் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஆறு பேர் தீக்காயங்களுக்குள்ளானதாக நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். விமானம் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என உருசியாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈகர் லெவித்தின் தெரிவித்தார். தூப்போலெவ் (து-154) விமானம் சைபீரியாவில் இருந்து மாஸ்கோ செல்லுவதற்காகப் புறப்பட்டிருந்தது. 1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட து-154 விமானங்கள் பல அண்மைக்காலத்தில் விபத்துகளுக்குள்ளாயுள்ளன. கடந்த 2010 சனவரியில் இருந்து உருசியாவின் தேசிய விமான சேவையான ஏரோபுளொட் தமது சேவையில் இருந்த 23 து-154 விமானங்களையும் சேவையில் இருந்து திரும்ப எடுத்துக்கொண்டது. போலந்து விமானப்படையின் து-154 விமானம் சென்ற ஆண்டு விபத்துக்குள்ளாகியதில் போலந்து அரசுத்தலவர் லேக் காச்சின்ஸ்கி கொல்லப்பட்டார். குடத்தனையில் நேற்று முன்தினம் இரவு இளம் குடும்பத்தர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்துள்ளார். பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தவராஜா கேதீஸ்வரன் என்னும் 27 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ஒன்பது மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடியணிந்த இனந்தெரியாத நபர்களே வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். தடுக்க முயன்ற மனைவியையும் எச்சரித்த இவர்கள் கேதீஸ்வரனின் தலையில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர். தனிமையில் வாழ்ந்து வந்த தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் ஊர்காவற்றுறை தம்பாட்டிமனோன்மணி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இனம்தெரியாத சிலர் இவர்களின் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் இவர்களை வெட்டியதாக ஊர்காவற்றுறைக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, வடமராட்சி அல்வாய் என்ற இடத்தில் வீட்டோடு கடைவைத்து வியாபாரம் செய்து வந்த 48 வயது விதவைப் பெண் புஸ்பாதேவி யோகநாதன் என்பவர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆயுதபாணிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆறு பிள்ளைகளின் தாயராகிய இவரைத் தேடிவந்ததாகத் தெரிவிக்கப்படும் 6 பேர் கொண்ட ஆயுதந்தாங்கிய குழுவினரே வான் ஒன்றில் இவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. யாழ் குடாநாட்டில் தொடரும் வன்முறைகள், கடத்தல்கள், கொள்ளைகள், கொலைகள் என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தள்ளனர். பல இடங்களிலும் இரவு வேளைகளில் கொள்ளைகள் இடம்பெற்று வருவதுடன் கடந்த மூன்றுவார காலப்பகுதியில் இந்துமதக் குருக்கள் ஒருவர், கல்வித்துறை அதிகாரி, ஒரு வியாபாரி, அஞ்சல் பணியாளர் என நால்வர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கொலைகள் யாரால் என்ன காரணத்திற்காக ஏன் செய்யப்படுகின்றது என தெரியாமல் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்ளாள் ஆணையாளராகிய சி.வி.கே.சிவஞானம் கூறுகின்றார். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 600 கிலோமீட்டர் தென்மேற்கே அமைந்துள்ள திருவா என்ற நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை அச்சத்தினால் கரையோரப் பகுதிகளில் உள்ள பல நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் ஆனாலும், ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பதவியேற்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 70,000 ஆதரவாலர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பின் பின்னர் ஞாயிறன்று அவர் இசுப்பானிய இளவரசர் பிலிப்பே, மற்றும் உருகுவே அரசுத்தலைவர் ஒசே முஜிக்கா உட்படப் பல தல உலகத்தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். முன்னாள் மார்க்சியப் போராளியும், சிறைவாசம் அனுபவித்தவருமான ருசெஃப் பதவியில் இருந்து விலகிய அரசுத்தலைவர் லூயிசு லூலா ட சில்வாவின் அரசில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர். லூலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அரசுத்தலைவர் பதவிக்கு ரூசெஃபை அவர் தேர்ந்தெடுத்தார். அரசுத்தலைவருக்கான தேர்தல் காலத்தில் ரூசெபுக்காக தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டார். கடந்த அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் ரூசெஃப் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 63 வயதான ரூசெஃப், பிரேசிலின் உயர்ந்தளவு பணவீக்கம், மற்றும் வட்டி வீதம் போன்றவற்றுடன் போராட வேண்டி இருக்கும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று லூலா ட சில்வா தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில், செசாரே பட்டிஸ்டி என்ற இத்தாலிய இடதுசாரி அரசியல் போராளியை நாடுகடத்துவதற்கு எதிராகக் கையொப்பமிட்டமை இத்தாலியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. லூலாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தாலி தனது பிரேசிலுக்கான தூதரைத் திருப்பி அழைத்திருந்தது. 1970களில் நான்கு அரசியல் படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்தவர் பட்டிஸ்டி. அவருக்கு பிரேசில் அரசியல் தஞ்சம் கொடுத்திருந்த்தது. பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார் நவம்பர் 1, 2010 இந்தியாவின் வருமான வரி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒட்டாவியோ குவாத்துரோச்சி என்ற தொழிலதிபருக்கும், வின் சாத்தா என்ற இந்தியத் தரகருக்கும் ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய இராணுவத்துக்கு 1986 ஆம் ஆண்டில் 155 மிமீ பீரங்கிகள் சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதில் பல கோடி ரூபாய் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தபட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ 2009 ஆம் ஆண்டில் குவாத்துரோச்சிக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து குவாத்ரோச்சியின் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்கிவிட்டது. அத்துடன் இண்டர்போலின் தேடப்பட்டவர்களின் பட்டியலிலும் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டது. இதற்கிடையில் வின் சாத்தா இறந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான ஜேவிபி இவ்வழக்கை மீள விராரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி கேட்டது. நீதிபதிகள் ஆர்.சி.சர்மா, ஆர்.பி.துலானி ஆகியோரைக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று தீர்ப்புக் கூறியது. இடைத் தரகர் வின் சாத்தா, தொழில் அதிபர் குவாத்துரோச்சி ஆகியோருக்கு ரூ.41 கோடி தரகர் கட்டணம் வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தனர். இந்தியாவில் அந்த தொகை வழங்கப்பட்டிருப்பதால் அதற்கான வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு இந்திய நடுவண் அரசுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. இவரது படுகொலைக்கு உலகத் தலைவர்கள் பலர் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். ஆளுநர் சல்மான் டசீர் சகிப்புத் தன்மையைப் பரப்பியவர் என அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் தெரிவித்தார். ஆளும் பாக்கித்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினரான சல்மான் டசீர் (அகவை 66) அண்மையில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட கிருத்தவப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்ததால் அந்நாட்டில் அவர் சர்ச்சைக் குரியவராகப் பார்க்கப்பட்டார். கோசார் சந்தை அருகில் தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் போது அவரது மெய்க்காப்பாளர் ஒருவரினால் 26 தடவை சுடப்பட்டார். கொலையாளி உடனடியாகவே கைது செய்யப்பட்டார். மாலிக் காதிரி என்ற அக்கொலையாளி தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக பாக்கித்தானில் உட்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்தார். மத நிந்தனைச் சட்டத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை சல்மான் டசீர் ஆதரித்து வந்ததாலேயே அவரைக் கொலைசெய்ததாக அவர் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். "இக்கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என இப்போது விசாரித்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். சில இசுலாமியத் தலைவர்கள் இப்படுகொலையை வரவேற்றதோடு, சல்மான் டசீரின் இறுதி நிகழ்வுகளில் எவரையும் கலந்து கொள்ள வேண்டாம் என அழைப்பு வித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். வாழ்வதற்குத் தகுதியற்றவர்களாகக் கணிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான வலது குறைந்தோர் படுகொலை செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் பலர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை நம்புகிறது. இதனை அடுத்து இம்மருத்துவமனையின் மீள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆத்திரியாவின் ஸ்குலோசு ஹார்ட்டெயிம் என்ற மனநோய் மருத்துவமனையில் மட்டும் 30,பேர் கொல்லப்பட்டனர். 1942 இற்கும் 1945 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் இம்மருத்துவமனையில் புதைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆராயவென நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படும் என டிரோல் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். இக்கண்டுபிடிப்புகள் பற்றி நா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்தார் எமது வரலாற்றின் இருண்ட காலம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது" என அவர் கூறினார். புதைக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், இறப்புக்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை வட்டாரம் அறிவித்துள்ளது. கல்வித் தகைமை பொதுக்கலைமாணி, ஊடகவியல் சிறப்புப்பட்டம், இலங்கை கல்விச்சேவை இலக்கியத்துறை சிறுகதை, கவிதை, இலக்கிய ஆய்வு எழுதியுள்ள தமிழ் நூல்களின் எண்ணிக்கை 173 * 20 ஜூன் 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி ‎- 100 * 20 ஜூன் 2011 இலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை ‎- 99 * 18 ஜூன் 2011 இந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது ‎- 98 * 16 ஜூன் 2011 ஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம் 97 ‎ * 14 ஜூன் 2011 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் 96‎ * 13 ஜூன் 2011 பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு 95 * 12 ஜூன் 2011 கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பம் ‎- 94 * 10 ஜூன் 2011 இலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார் 93 ‎ * 9 ஜூன் 2011 பிரபல ஓவியர் எம்.எப்.உசைன் லண்டனில் காலமானார் ‎- 92 * 8 ஜூன் 2011 இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு 91 ‎ * 7 ஜூன் 2011 நடுவண் புலனாய்வுப் பிரிவு தயாநிதி மாறனை விசாரணை செய்ய இடமுண்டு 90 ‎ * 5 ஜூன் 2011 கறுப்புப் பணத்தை மீட்கும் போராட்டத்தில் பாபா ராம்தேவ் 89 ‎ * 4 ஜூன் 2011 லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர் ‎88 * 4 ஜூன் 2011 கோடீசுவரர்களை உருவாக்க வாய்ப்புள்ள நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் ‎- 87 * 3 ஜூன் 2011 கலைஞர் காப்பீட்டு திட்டதைக் கைவிட ஜெயலலிதா முடிவு 86‎ * 2 ஜூன் 2011 பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு ‎-85 * 2 ஜூன் 2011 இலங்கையின் காவல்துறை அதிபர் மகிந்த பாலசூரிய பதவி விலகினார் 84 * 1 ஜூன் 2011 கையடக்கத் தொலைபேசிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 83‎ * 31 மே 2011 ஈழப்போர்: நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த நவநீதம் பிள்ளை வலியுறுத்து 82‎ * 31 மே 2011 இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை ஐநா சிறப்புத் தூதர் 81‎ * 30 மே 2011 சர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல் 80 ‎ * 28 மே 2011 மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம் 79 * 27 மே 2011 அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ‎ -78 * 26 மே 2011 வெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம் ‎ -77 * 25 மே 2011 தமிழகத்தில் மேலவை அமைக்கப்படமாட்டாது, ஜெயலலிதா அறிவிப்பு ‎- 76 * 16 மே 2011 தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக ஜெயலலிதா பதவியேற்றார் ‎-75 * 15 மே 2011 தமிழகச் சட்டமன்றத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார் ‎- 74 * 14 மே 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு ‎-73 * 14 மே 2011 மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது 72 ‎ * 13 மே 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி 71 ‎ * 12 மே 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும் 70 ‎ * 12 மே 2011 அலைக்கற்றை ஊழல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் கனிமொழி ஆஜர் 69 ‎ * 11 மே 2011 போப்பால் நச்சுவாயுக் கசிவுத் தீர்ப்பில் மறுஆய்வு இல்லை என உச்சநீதிமன்றம் முடிவு 68 * 10 மே 2011 ஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு 67 ‎ * 9 மே 2011 2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது 66 ‎ * 8 மே 2011 இலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது 65 ‎ * 7 மே 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி 64 * 6 மே 2011 ஒசாமா பின் லாடன் கொலைப் படங்களை வெளியிடுவதில்லை என அமெரிக்கா முடிவு 63 ‎ * 4 மே 2011 அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை 62 * 2 மே 2011 அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார் 61 ‎ * 2 மே 2011 அருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது 60 ‎ * 30 ஏப்ரல் 2011 துடுப்பாட்டச் சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் முன்னாள் வீரர் திலகரத்ன குற்றச்சாட்டு 59 ‎ * 29 ஏப்ரல் 2011 அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வீசிய சூறாவளிக்கு 305 பேர் உயிரிழப்பு 58 ‎ * 28 ஏப்ரல் 2011 வில்லியம் கேத் மிடில்டன் திருமணம் 57 ‎ * 28 ஏப்ரல் 2011 ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் 56 ‎ * 28 ஏப்ரல் 2011 நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக முன்னெடுக்க முடியாது பான் கி மூன் 55‎ * 26 ஏப்ரல் 2011 சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் 54 ‎ * 26 ஏப்ரல் 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை 53 ‎ * 25 ஏப்ரல் 2011 நைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு ‎ -52 * 24 ஏப்ரல் 2011 இந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார் ‎-51 * 24 ஏப்ரல் 2011 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை ‎-50 * 23 ஏப்ரல் 2011 இலங்கை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 63 புதிய நீதிமன்றங்கள் ‎-49 * 22 ஏப்ரல் 2011 உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வர நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை என இலங்கை தெரிவிப்பு ‎-48 * 12 ஏப்ரல் 2011 இலங்கையின் நியமநேரம் அறிவிப்பு ‎-47 * 11 ஏப்ரல் 2011 தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது ‎-46 * 11 ஏப்ரல் 2011 முகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை ‎ -45 * 7 ஏப்ரல் 2011 4வது ஐ. பி. எல். துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பம் ‎-44 * 6 ஏப்ரல் 2011 நடிகை சுஜாதா தனது 58வது அகவையில் காலமானார் ‎-43 * 6 ஏப்ரல் 2011 இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவர் பணியில் இருந்து சங்கக்கார விலகல் ‎-42 * 23 மார்ச் 2011 2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம் ‎ -41 * 17 மார்ச் 2011 இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 40‎ * 14 மார்ச் 2011 லிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை ‎ -39 * 12 மார்ச் 2011 தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை தமிழகக் காவல்துறை ‎-38 * 11 மார்ச் 2011 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே ‎-36 * 4 மார்ச் 2011 இலங்கையின் வடக்கே மக்களின் விபரப் பதிவு இடைநிறுத்தம் ‎-35 * 2 மார்ச் 2011 தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம் 34 * 1 மார்ச் 2011 ஏப்ரல் 13 இல் தமிழக சட்டசபைத் தேர்தல் ‎-33 * 22 பெப்ரவரி 2011 2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி ‎-32 * 19 பெப்ரவரி 2011 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பம் ‎-31 * 18 பெப்ரவரி 2011 பக்ரைன் ஆர்ப்பாட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை ‎-30 * 16 பெப்ரவரி 2011 பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வுபெறுகிறார் ‎-29 * 16 பெப்ரவரி 2011 பக்ரைன் மக்கள் போராட்டங்களில் இருவர் உயிரிழப்பு ‎ -28 * 15 பெப்ரவரி 2011 முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை ‎-27 * 14 பெப்ரவரி 2011 தமிழகத் தேர்தலின் போது புலிகள் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல் ‎ -26 * 13 பெப்ரவரி 2011 தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார் ‎-25 * 13 பெப்ரவரி 2011 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு பிடியாணை ‎-24 * 11 பெப்ரவரி 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ‎-23 * 9 பெப்ரவரி 2011 கருணாநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி சுப்பிரமணிய சுவாமி மனு ‎-22 * 8 பெப்ரவரி 2011 இலங்கையில் மீண்டும் அடைமழை ‎-21 * 5 பெப்ரவரி 2011 இலங்கையில் வெள்ளத்தால் மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உலங்கு வானூர்தியினுள் பிரசவம் ‎-20 * 3 பெப்ரவரி 2011 இலங்கையில் மீண்டும் மழை, மண்சரிவு, மூவர் உயிரிழப்பு ‎-19 * 31 ஜனவரி 2011 இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம் ‎-18 * 30 ஜனவரி 2011 இலங்கை அதிபர் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் ‎ -17 * 29 ஜனவரி 2011 சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம் ‎-16 * 29 ஜனவரி 2011 விக்கிப்பீடியா நிறுவனருக்கு சுவிட்சர்லாந்தின் உயர் விருது ‎-15 * 29 ஜனவரி 2011 சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம் ‎-14 * 28 ஜனவரி 2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு 13‎ * 27 ஜனவரி 2011 சிறீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினர் பலர் கைது ‎-12 * 26 ஜனவரி 2011 சென்னையில் மகாபோதி சங்கம் மீது தாக்குதல், புத்த பிக்குகள் காயம் ‎-11 * 25 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு ‎-10 * 24 ஜனவரி 2011 திருகோணமலை, குச்சவெளியில் நிலவெடிப்பு, மக்கள் அச்சம் ‎-09 * 23 ஜனவரி 2011 கருநாடக முதல்வர் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி ‎ -08 * 19 ஜனவரி 2011 இலங்கை வெள்ளப்பெருக்கில் மூன்றரை இலட்சம் பண்ணை விலங்குகள் உயிரிழப்பு ‎-07 * 15 ஜனவரி 2011 இலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம் ‎-06 * 12 ஜனவரி 2011 ஆத்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், 12 பேர் உயிரிழப்பு 05 * 9 ஜனவரி 2011 இலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு 04 * 9 ஜனவரி 2011 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு சிறப்புக் காவல்துறை விருது ‎ 03 * 7 ஜனவரி 2011 இலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு ‎-02 * 6 ஜனவரி 2011 இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு 01 * 31 அக்டோபர் 2011 அருணாச்சலப் பிரதேசத்தில் தொங்கு பாலம் விழுந்ததில் பலர் உயிரிழப்பு ‎-200 * 30 அக்டோபர் 2011 சீனாவில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 95 கோடியை எட்டியது ‎ -199 * 29 அக்டோபர் 2011 இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு 198 ‎ * 28 அக்டோபர் 2011 ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா கைது ‎-197 * 27 அக்டோபர் 2011 உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகளுடன் வானில் பறந்தது ‎-196 * 26 அக்டோபர் 2011 லிபியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு 195 ‎ * 25 அக்டோபர் 2011 இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' திரைப்படப் பாடலுக்காக விருது ‎-194 * 24 அக்டோபர் 2011 துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 193 * 24 அக்டோபர் 2011 சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ் அமெரிக்காவில் காலமானார் 192‎ * 23 அக்டோபர் 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு 191 * 21 அக்டோபர் 2011 ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணை தொடர்கிறது 190‎ * 20 அக்டோபர் 2011 லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார் ‎-189 * 20 அக்டோபர் 2011 சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ‎-188 * 19 அக்டோபர் 2011 தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ‎-187 * 18 அக்டோபர் 2011 சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம் 186‎ * 17 அக்டோபர் 2011 தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு 185 * 16 அக்டோபர் 2011 கருநாடக மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா சிறையிலடைக்கப்பட்டார் ‎-184 * 15 அக்டோபர் 2011 பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார் 183 * 14 அக்டோபர் 2011 பங்கு மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை 182 ‎ * 13 அக்டோபர் 2011 அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம் ‎-181 * 12 அக்டோபர் 2011 பர்மா ஆறாயிரத்துக்கும் அதிகமான கைதிகளை விடுவிக்கிறது ‎-180 * 11 அக்டோபர் 2011 அமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு 179 ‎ * 10 அக்டோபர் 2011 பாக்கித்தானின் பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்த நபர்கள் மாணவியர் ஆசிரியைகளைத் தாக்கினர் 178‎ * 9 அக்டோபர் 2011 23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு, கல்முனை தவிர்ந்த 21 மன்றங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது ‎-177 * 8 அக்டோபர் 2011 இலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு ‎ -176 * 8 அக்டோபர் 2011 இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம் ‎- 175 * 7 அக்டோபர் 2011 சுவீடன் நாட்டுக் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 174 ‎ * 3 அக்டோபர் 2011 மன்னார் கடலில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராஜபக்ச அறிவிப்பு 173 ‎‎ * 2 அக்டோபர் 2011 துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது ‎- 172‎ *1 அக்டோபர் 2011 அல்-கைதா இயக்கத்தின் முக்கிய தலைவர் அல்-அவ்லாகி கொல்லப்பட்டார் 171 ‎ *1 அக்டோபர் 2011 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1800 பேர் விடுதலை 170 ‎ *29 செப்டம்பர் 2011 தமிழகப் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை அறிமுகம் 169 ‎ *28 செப்டம்பர் 2011 பாக்கித்தானில் பேருந்து விபத்தில் 37 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு 168 ‎ *27 செப்டம்பர் 2011 திரிப்பொலி அபு சலீம் சிறைப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு 167 ‎ *26 செப்டம்பர் 2011 சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்க மன்னர் முடிவு 166 ‎ *25 செப்டம்பர் 2011 நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது 165 ‎ *23 செப்டம்பர் 2011 இலங்கையின் முன்னணித் திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம காலமானார் 164 ‎ *22 செப்டம்பர் 2011 தற்கொலைத் தாக்குதலில் ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ரபானி படுகொலை 163 ‎ *21 செப்டம்பர் 2011 புரூண்டி மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழப்பு 162 ‎ *21 செப்டம்பர் 2011 பாக்கித்தானில் சமூக இணையதளங்களுக்குத் தடை 161 ‎ *21 செப்டம்பர் 2011 2011 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம் 160 ‎ *19 செப்டம்பர் 2011 சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு 159 ‎ ‎ *19 செப்டம்பர் 2011 இலங்கையில் மீண்டும் இனவாதத்திற்குத் தூபம் போடப்படும் சம்பவங்கள் 158 ‎ *14 செப்டம்பர் 2011 ஈராக்கில் சியா முசுலிம்கள் 22 பேர் சுட்டுக்கொலை 157 *11 செப்டம்பர் 2011 எகிப்தின் இசுரேலியத் தூதரக முற்றுகையில் மூவர் உயிரிழப்பு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் 156 ‎ *10 செப்டம்பர் 2011 லிபியா மோதலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு அறிவிப்பு 155 ‎ *9 செப்டம்பர் 2011 இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு சீனா ஆதரவளிக்கும் 154 ‎ *7 செப்டம்பர் 2011 தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு, 10 பேர் உயிரிழப்பு 153 ‎ *7 செப்டம்பர் 2011 சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இலங்கை இந்தியா ஒப்பந்தம் 152 ‎ *4 செப்டம்பர் 2011 இத்தாலியின் ஃபிலத்தீனோ நகரம் விடுதலையை அறிவித்தது 151 ‎ *1 செப்டம்பர் 2011 தமிழ் நாட்டின் 24வது ஆளுநராக கே. ரோசய்யா பதவியேற்பு 150 ‎ *30 ஆகஸ்ட் 2011 இராசீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை 8 வாரங்கள் தள்ளி வைப்பு 149 ‎ *30 ஆகஸ்ட் 2011 யப்பானின் புதிய பிரதமராக யோசிகிக்கோ நோடா பதவியேற்றார் 148 ‎ *29 ஆகஸ்ட் 2011 ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மேன் முறையீடு 147 ‎ *29 ஆகஸ்ட் 2011 ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தாக்கியது 146‎ *28 ஆகஸ்ட் 2011 லோக்பால் மசோதாவில் அசாரே முன்வைத்த கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் 145 ‎ *28 ஆகஸ்ட் 2011 சிங்கப்பூரின் புதிய அதிபராக டோனி டான் தெரிவு 144 ‎ *27 ஆகஸ்ட் 2011 இலங்கையில் காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரணதண்டனை 143 ‎ *25 ஆகஸ்ட் 2011 இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது, சனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பு 142 ‎ *25 ஆகஸ்ட் 2011 அமெரிக்காவின் கிழக்குக் கரையில் கடும் நிலநடுக்கம் 141 ‎ *24 ஆகஸ்ட் 2011 சர்ச்சைக்குரிய கருத்துகளால் தஸ்லிமா நஸ்ரினுக்கு நேபாளம் வரத் தடை 140 ‎ *23 ஆகஸ்ட் 2011 இங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி 139 ‎ *22 ஆகஸ்ட் 2011 மர்ம மனிதன் விவகாரம்: புத்தளத்தில் பொதுமக்களுடனான மோதலில் காவல்துறையினர் ஒருவர் உயிரிழப்பு 138 *21 ஆகஸ்ட் 2011 அசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு 137 ‎ ‎ *20 ஆகஸ்ட் 2011 தமிழக புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஜெயலலிதா முடிவு 136 ‎ *19 ஆகஸ்ட் 2011 தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் 135 ‎ *18 ஆகஸ்ட் 2011 ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போராட்டம் 134 ‎ *17 ஆகஸ்ட் 2011 ஈராக்கில் தொடர் குண்டுத்தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு 133 ‎ *15 ஆகஸ்ட் 2011 ஆப்கானிய மாகாண ஆளுநர் மாளிகை தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு 132 ‎ *15 ஆகஸ்ட் 2011 நேப்பாளப் பிரதமர் சாலா நாத் பதவி விலகினார் 131 *14 ஆகஸ்ட் 2011 இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று தொழிலாளர்கள் இறப்பு 130 ‎ *13 ஆகஸ்ட் 2011 நிலக்கரியை விடக் கருமையான ட்ரெஸ்-2பி புறக்கோள் கண்டுபிடிப்பு 129 ‎ *13 ஆகஸ்ட் 2011 கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் 128 ‎ *12 ஆகஸ்ட் 2011 இலங்கையில் மர்ம மனிதர்கள் நடமாட்டமும், மக்கள் பீதியும் 127 ‎ *12 ஆகஸ்ட் 2011 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு 126 ‎ *10 ஆகஸ்ட் 2011 லண்டன் வன்முறைகள் இங்கிலாந்து முழுவதும் பரவியது 125 ‎ *9 ஆகஸ்ட் 2011 சமச்சீர்க் கல்வித் திட்டத்தை 10 நாட்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 124 ‎‎ *9 ஆகஸ்ட் 2011 நாடு கடந்த திபெத்திய அரசின் பிரதமராக லோப்சங் சங்கை பதவியேற்பு 123 *6 ஆகஸ்ட் 2011 சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு ‎-122 *5 ஆகஸ்ட் 2011 கர்நாடகத்தின் புதிய முதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு 121 ‎ *5 ஆகஸ்ட் 2011 சிரிய வன்முறைகளில் அரசுப் படைகளினால் 2000 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல் 120 ‎ *3 ஆகஸ்ட் 2011 பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு 119 ‎ * 2 ஆகஸ்ட் 2011 வடக்கு ஆப்பிரிக்கப் படகு அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறப்பு 118 ‎ * 1 ஆகஸ்ட் 2011 தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது 117‎ * 31 ஜூலை 2011 கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலகினார்]]‎ -116 * 31 ஜூலை 2011 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை 6 ஆகக் குறையும்‎ 115 * 29 ஜூலை 2011 அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட சீனா புதிய செயற்கைக்கோளை ஏவியது 114 ‎ * 28 ஜூலை 2011 கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு 113 ‎ * 28 ஜூலை 2011 அக்டோபரில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை 112 ‎ * 26 ஜூலை 2011 பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ரவிச்சந்திரன் காலமானார் 111 ‎ * 25 ஜூலை 2011 சீனாவில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழப்பு 110 ‎ * 24 ஜூலை 2011 பிரபல பாடகி ஏமி வைன்ஹவுஸ் 27வது அகவையில் மரணமடைந்தார் 109 ‎ * 19 ஜூலை 2011 ஒட்டுக்கேட்டல் விவகாரம்: பிரித்தானிய காவல்துறைத் தலைவர் பதவி துறப்பு 107 ‎ * 2 ஜூலை 2011 போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை உடன் ஆரம்பிக்கவேண்டும், நவி பிள்ளை எச்சரிக்கை ‎- 106 25 ஜூன் 2011 அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை 105 ‎ * 24 ஜூன் 2011 ஆப்கானில் இருந்து 33,000 அமெரிக்கப் படைகள் 2012 இற்குள் திரும்பும், ஒபாமா அறிவிப்பு 104‎ * 23 ஜூன் 2011 லிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ‎-103 * 22 ஜூன் 2011 ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு 102‎ * 21 ஜூன் 2011 உருசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழப்பு ‎-101 22 ஜனவரி 2012 இணையத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவிப்பு]]‎ ‎- 291 ‎ * 21 ஜனவரி 2012 ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு]]‎ ‎- 290 ‎ * 20 ஜனவரி 2012 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை வருகை]]‎ ‎- 289 ‎ * 20 ஜனவரி 2012 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாக்கித்தான் பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் ‎ ‎- 288 ‎ * 19 ஜனவரி 2012 புகைக் குண்டுவீச்சை அடுத்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது]]‎ ‎- 287 ‎ * 18 ஜனவரி 2012 அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் எஸ். எம். கிருஷ்ணா]]‎ ‎- 286 ‎ * 17 ஜனவரி 2012 நீதிமன்ற அழைப்பாணையை அடுத்து பாக்கித்தான் பிரதமர் பதவி விலகத் தயாரென அறிவிப்பு]]‎ ‎- 285 ‎ * 17 ஜனவரி 2012 தமிழக அரசின் தொழில் வணிகத்துறை அலுவலகத் தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு]]‎ ‎- 284 ‎ * 16 ஜனவரி 2012 ஈராக்கில் மத நிகழ்வில் மனிதக்குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]‎ ‎- 283 ‎ * 15 ஜனவரி 2012 டேம் 999 படத் தடைக்கான விளக்கத்தை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் காலக்கெடு]]‎ ‎- 282 ‎ * 14 ஜனவரி 2012 தலிபான் உடல்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிப்பு காணொளியால் சர்ச்சை]]‎ ‎- 281 ‎ * 13 ஜனவரி 2012 பாக்கித்தானில் அரசியல் நெருக்கடி ‎ ‎- 280 ‎ * 13 ஜனவரி 2012 ருவாண்டாவின் முன்னாள் தலைவரின் படுகொலைக்கு ககாமே காரணமல்ல, அறிக்கை தெரிவிப்பு ‎ ‎- 279 ‎ * 12 ஜனவரி 2012 ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ‎ ‎- 278 * 12 ஜனவரி 2012 ஈரானில் நடந்த குண்டு வெடிப்பில் அணுவியல் விஞ்ஞானி உயிரிழந்தார் ‎ ‎- 277 ‎ * 12 ஜனவரி 2012 குவாண்டானாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தடுப்பு முகாமுக்கு 10 ஆண்டுகள் நிறைவு ‎ ‎- 276 * 11 ஜனவரி 2012 வடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம் ‎ ‎- 275 ‎ * 11 ஜனவரி 2012 பாக்கித்தான் குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ‎ ‎- 274 ‎ * 10 ஜனவரி 2012 புலிகள் முத்திரை விவகாரத்தில் சர்வதேச தபால் ஒன்றிய விதிகளை புறக்கணிக்க இலங்கை தீர்மானம் ‎ ‎- 273 ‎ * 10 ஜனவரி 2012 எரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டதையடுத்து நைஜீரியாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ‎‎- 272 * 9 ஜனவரி 2012 முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு தமிழகத்தில் மணி மண்டபம் ‎ ‎- 271 ‎ * 9 ஜனவரி 2012 ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொண்டது ‎ ‎- 270 * 8 ஜனவரி 2012 இலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களை கொல்லத் திட்டம் ‎- 269 ‎ * 8 ஜனவரி 2012 ஜெயலலிதா மீது அவதூறு செய்தியை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் ‎- 268 ‎ * 7 ஜனவரி 2012 பிரபல பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாசுக்கு ஸ்ரீ நாராயண விருது ‎ ‎- 267 * 7 ஜனவரி 2012 ஈரானிய எண்ணெய்க்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அளவில் ஒப்புதல் ‎- 266‎ * 6 ஜனவரி 2012 அமெரிக்க அரசு இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது ‎- 265 * 5 ஜனவரி 2012 சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு ‎ * 4 ஜனவரி 2012 பிரபல நடன ஆசிரியை சரசா காலமானார் ‎- 264 ‎ * 4 ஜனவரி 2012 தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயலலிதா முடிவு ‎- 263 * 3 ஜனவரி 2012 நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது ‎- 262 ‎ * 3 ஜனவரி 2012 காஷ்மீரில் மின்விநியோகம் கோரிப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு ‎- 261 ‎ * 2 ஜனவரி 2012 பாக்கித்தானுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா குறைத்தது ‎- 260 * 1 ஜனவரி 2012 நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம் 259 ‎ * 31 டிசம்பர் 2011 விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட நான்கு அஞ்சற்தலைகள் பிரான்சில் வெளியீடு ‎ -258 ‎ * 30 டிசம்பர் 2011 வட கொரியாவின் உயர் தலைவராக கிம் ஜொங்-உன் தெரிவு ‎ -257 ‎ * 29 டிசம்பர் 2011 வட இந்திய மாநிலங்களில் கடும் குளிர், 135 பேருக்கும் மேல் உயிரிழப்பு 256 ‎ * 29 டிசம்பர் 2011 இந்தியாவின் தேசிய கீதத்துக்கு வயது நூறு ‎ 255 ‎ * 27 டிசம்பர் 2011 மகேல ஜயவர்தன தேர்வுப் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை வீரானார் 254 ‎ * 26 டிசம்பர் 2011 நைஜீரியத் தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள், பலர் உயிரிழப்பு 253 ‎ * 26 டிசம்பர் 2011 சென்னை அருகே படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு 252 * 24 டிசம்பர் 2011 மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சுக்கு கிராமி விருது ‎ -251 ‎ * 24 டிசம்பர் 2011 பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு ‎ -250 ‎ * 23 டிசம்பர் 2011 எசுப்பானியாவின் புதிய பிரதமராக மாரியானோ ரகோய் பதவியேற்பு ‎ -249 ‎ * 23 டிசம்பர் 2011 ஈராக் தொடர் குண்டு வெடிப்புக்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ‎ -248 ‎ * 22 டிசம்பர் 2011 மட்டக்களப்பின் 9 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீடிப்பு ‎ -247 ‎ * 21 டிசம்பர் 2011 உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு 246 ‎ * 20 டிசம்பர் 2011 அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு ‎ -245 ‎ * 20 டிசம்பர் 2011 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு ‎ -244 ‎ * 19 டிசம்பர் 2011 ஆத்திரேலியா நோக்கிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 200 பேரைக் காணவில்லை ‎ -243 ‎ * 18 டிசம்பர் 2011 அமெரிக்கப் படையின் கடைசி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது ‎ -242 ‎ * 17 டிசம்பர் 2011 இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது ‎ -241 ‎ * 17 டிசம்பர் 2011 குழந்தைகளுக்கு பெண்டாவேலண்ட் தடுப்பூசி தமிழகத்திலும் கேரளாவிலும் அறிமுகம் ‎ -240 ‎ * 16 டிசம்பர் 2011 முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க தமிழக அரசு தீர்மானம் 239 * 16 டிசம்பர் 2011 மேற்கு வங்காளத்தில் நச்சு மதுபானம் அருந்திய 125 பேர் உயிரிழப்பு ‎ -238 ‎ * 14 டிசம்பர் 2011 சிரியாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக நவநீதம் பிள்ளை அறிவிப்பு 236 ‎ * 14 டிசம்பர் 2011 பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு 235 ‎ * 13 டிசம்பர் 2011 இந்தியப் பெருங்கடலில் சீனா இராணுவத் தளம் அமைக்க முடிவு 234 ‎ * 12 டிசம்பர் 2011 முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள எல்லையை நோக்கி மக்கள் பேரணி 233 ‎ * 11 டிசம்பர் 2011 பிலிப்பைன்சில் தொடக்கப் பள்ளியொன்றின் மீது விமானம் வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர் 232 ‎ * 10 டிசம்பர் 2011 கேரள சட்ட மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கத் தீர்மானம் 231 ‎ * 9 டிசம்பர் 2011 பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் வீரேந்தர் சேவாக் உலக சாதனை 230 ‎ * 8 டிசம்பர் 2011 பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது 229 ‎ * 7 டிசம்பர் 2011 ஆப்கான் பள்ளிவாயில் தற்கொலைத் தாக்குதல்களில் 58 பேர் உயிரிழப்பு 228 * 6 டிசம்பர் 2011 அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகத்தில் தடையாகவிருந்த கற்பாறை அகற்றப்பட்டது 227 ‎ * 5 டிசம்பர் 2011 பிரபல இந்தித் திரைப்பட நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் காலமானார் 226 ‎ * 4 டிசம்பர் 2011 உலகக்கிண்ணப் போட்டிகளை அடுத்து இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு சம்பள நிலுவை 225 ‎ * 3 டிசம்பர் 2011 நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக மு. க. ஸ்டாலின் மீது வழக்கு 224 ‎ * 2 டிசம்பர் 2011 டேம் 999 திரைப்படத்துக்கான தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ‎- 223 * 1 டிசம்பர் 2011 பிரித்தானியாவில் ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தம் 222 * 1 டிசம்பர் 2011 மைக்கல் ஜாக்சனின் இறப்புக்குக் காரணமான மருத்துவருக்கு 4 ஆண்டு சிறை 221 ‎ * 30 நவம்பர் 2011 ஊழல் புகாரை அடுத்து குவைத் அரசு பதவி விலகியது 220 ‎ * 29 நவம்பர் 2011 அலைக்கற்றை ஊழல் வழக்கு: கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டது 219 ‎ * 28 நவம்பர் 2011 விமானத் தளத்திலிருந்து வெளியேற அமெரிக்காவுக்கு பாக்கித்தான் 15 நாள் காலக்கெடு 218 ‎ * 27 நவம்பர் 2011 நேட்டோ தாக்குதலில் பாக்கித்தான் இராணுவத்தினர் 24 பேருக்கு மேல் உயிரிழப்பு 217 ‎ * 26 நவம்பர் 2011 இலங்கையில் அடைமழை, குறுஞ் சூறாவளி, 9 பேருக்கு மேல் உயிரிழப்பு 216 ‎ * 26 நவம்பர் 2011 எகிப்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் கமால் கன்சூரி நியமனம் 215 ‎ * 25 நவம்பர் 2011 எகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 214 ‎ *25 நவம்பர் 2011 தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை வெளியிடுவதற்கு அரசு தடை 213 ‎ *24 நவம்பர் 2011 இலங்கையின் முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்தை காலமானார் 212 ‎ *24 நவம்பர் 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்தது 211 ‎ *23 நவம்பர் 2011 டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு 210 ‎ *23 நவம்பர் 2011 அலைக்கற்றை ஊழல் வழக்கு: ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டது 209 ‎ * 22 நவம்பர் 2011 இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மீது பாலியல் குற்றச்சாட்டு 208 ‎ * 20 நவம்பர் 2011 லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சைஃப் அல்-இசுலாம் கைது 207 ‎ * 19 நவம்பர் 2011 வெள்ளைக்கொடி வழக்கு: சரத் பொன்சேகாவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை 206 ‎ * 17 நவம்பர் 2011 வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க பிரித்தானியா முடிவு ‎- 205 * 4 நவம்பர் 2011 துடுப்பாட்ட சூதாட்டக் குற்றச்சாட்டில் பாக்கித்தான் வீரர்கள் மூவருக்கு லண்டனில் சிறை ‎-204 * 3 நவம்பர் 2011 முகம்மது நபி குறித்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பிரான்சு இதழ் மீது குண்டுத்தாக்குதல் 203‎ * 2 நவம்பர் 2011 பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ முழுமையான அங்கீகாரம் ‎- 202 * 1 நவம்பர் 2011 அக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது குழந்தையே, ஐநா அறிவிப்பு ‎ -201 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. :புன்னியாமீன், தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. சில குறிப்புகள்: * தலைப்பில் நிறுத்தற்குறி இடுவது வழக்கமல்ல. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். [[இலங்கை]]யில் சகல உள்ளூராட்சி மன்றங்களும் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நிகால் ஜயதிலக கூறியுள்ளார். இன்று இது குறித்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதோடு இதற்கான திகதியை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிக்க உள்ளார். அதன் பின்னர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்கும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார். கோல்ட்மன் சாசின் முதலீட்டை அடுத்து, பேஸ்புக் இனித் தனது பங்குகளை வெளியிட வேண்டி வரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் 50 பில்லியன் டாலர் பெறுமதியானதாக இருக்குமானால் அது ஈபே, மற்றும் டைம் வார்னர் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்களின் மதிப்பை விட அதிகமானதாகும். பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் உள்ளடக்குவதால் அதன் மதிப்பு அதிகமானதாக இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். [[இலங்கை]]யில் 14 ஆவது மக்கள்தொகை மதிப்பீடு 30 ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டு நடைபெறவுள்ளதாகவும், இதற்கு 700 மில்லியன் இலங்கை ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல கூறினார். இதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்கள்தொகை மதிப்பீடு புதிய முறையில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதற்காக வெளியார் நிறுவனமொன்றின் சேவையைப் பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சர் கூறினார். சூலை 2011 இல் நாடெங்கும் மக்கள்தொகை மதிப்பீடு நடத்தப்படும் என இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் போது பார்வையாளர்கள் இலவசமாக துடுப்பாட்ட அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். ஏறத்தாழ இங்கிலாந்து ஆதரவாளர்களே நிறைந்து காணப்பட்டனர். ஆத்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க துடுப்பாட்டத் தொடர் ஆஷசு தொடர் ஆகும். 2006-2007 காலப்பகுதியில் ஆத்திரேலியாவில் இடம்பெற்ற தொடரில் ஆத்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் பெரு வெற்றி பெற்றிருந்தது. 24 ஆண்டுக்குப் பின் ஆத்திரேலிய மண்ணில், ஆஷசு தேர்வுத் தொடரை இங்கிலாந்து இப்போது கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 1987ம் ஆண்டு மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆத்திரேலியாவில் ஆஷசுத் தொடரைக் கைப்பற்றி இருந்தது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் போல் கொலிங்வுட் இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 67 தேர்வுப் போட்டிகளில் விளையாடி 10 சதம் உட்பட 4246 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்து வீரர் அலிஸ்டர் குக் தெரிவனார். இவர் ஐந்து ஆடங்களிலும் மொத்தம் 766 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஆத்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் கைமுறிவு காரணமாக ஐந்தாவது ஆட்டத்தில் விளையாடவில்லை. மைக்கல் கிளார்க் ஐந்தாவது ஆட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இன்றைய தோல்வியின் பின்னர் தான் இனிமேல் 20-20 ஆட்டங்களில் விளையாடப் போவதில்லை என மைக்கல் கிளார்க் அறிவித்தார். ஆத்திரேலிய துடுப்பாட்ட வரலாற்றில் முதல் முறையாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலிய அணியில் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டர். ஆஷசுத் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் இவர் தனது முதலாவது பன்னாட்டு ஆட்டத்தில் விளையாடினார். உசுமான் கவாஜா இசுலாமாபாத்தில் பிறந்தவர். இவருக்கு 24 வயதாகிறது. 2010 ஆஷசு கோப்பையை ஆத்திரேலியா தனது மண்ணில் இழந்தது புதன், டிசம்பர் 29, 2010 "இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் புதிய பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது இரு நாடுகளுக்குமிடையிலான பாரம்பரிய தொடர்புகளை மீளமைக்க வகை செய்யும்" என இரு நாடுகளும் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. முன்னர் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும், தலைமன்னாருக்கும் இரமேசுவரத்துக்குமிடையிலுமாக இரு சேவைகள் இடம்பெற்றுவந்தன. 1982 இல் உள்நாட்டுப் போர் காரணமாக இவை இடைநிறுத்தப்பட்டிருந்தன. கப்பலின் சிதைவுகளை மீட்பதற்கு இச்சுழியோடிகள் அமெரிக்கக் கடற்படையினரின் உதவியை நாடியுள்ளனர். பிரித்தானியருடன் 1812 இல் ஆரம்பித்த போருக்கு முன்னோடியாக இடம்பெற்ற மோதல் ஒன்றிலேயே ரோட் தீவின் வாட்ச் ஹில் என்ற கரயோரப் பகுதில் இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. ஒகையோ போரின் பின்னர் ஒலிவர் பெரி நான் எதிரியைச் சந்தித்தேன், அவர்கள் நம்மவர்களே எனக்கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலத்துக்குக் கீழ் உள்ள பாறைகள் குறித்தும் சுழியோடிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த ஆய்வின் போது கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். யாழ் குடாநாட்டில் கடத்தல்கள், கொலைகள் தொடருகின்றன ஞாயிறு, சனவரி 2, 2011 இந்நிகழ்வில் 40 அகவையுடைய காபிரியெலும் இறந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்த போதும் அவரது பொது விவகாரங்களுக்கான செயலாளர் இச்செய்தியை மறுத்துள்ளார். காபிரியேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆபத்தான கட்டத்தில் காபிரியேல் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட காபிரியேல் உயிருடன் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழக மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு குண்டு மட்டுமே காபிரியேலைத் தாக்கியுள்ளதாகவும், ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இத்தாக்குதலை மேற்கொண்ட நபர் 22 வயதான ஜாரெட் லோஃப்னர் என்ற இளைஞர் என்றும் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காபிரியேல் கிஃபர்ட்ஸ் ஒரு "அசாதாரணப் பொது ஊழியர்" என அரசுத்தலைவர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டினார். [[இலங்கை காவல்துறை வரலாற்றில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் 336 பேர் ஒரே தடவையில் காவல்துறைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியேறினர். இவர்களில் சகல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணரத்தினம் குணரோஜன் (வயது 25) முதலாம் இடத்தைப் பெற்று பல்வேறு சிறப்பு பரிசில்களை பெற்றுக்கொண்டார். காவல்துறைப் பயிற்சியை முடித்து வெளியேறியவர்களில் நான்கு கொன்ஸ்டபிள்களும், ஒரு பெண் கொன்ஸ்டபிளும் சிறப்பு நினைவுச் சின்னங்களைப் பெற்றுக்கொண்டனர் களுத்துறையில் உள்ள இலங்கைக் காவல்துறைப் பயிற்சிப் பாடசாலையில் 6 மாத பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பின் போது காவல்துறைமா அதிபர் மகிந்த பாலசூரிய நியமனங்களை வழங்கினார். இருபதாண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உடன்படிக்கை ஒன்றை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு சூடான் தலைவர்கள், கிறித்தவர்களையும், வேறு பழமைவாத இனங்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடானின் அமைதி வழியிலான பிரிவுக்கு சம்மதித்தனர். ஆனாலும் விடுதலை அடையவிருக்கும் தெற்கு சூடான் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும் என சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீர் எச்சரித்துள்ளார். வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரேயே வாக்கெடுப்பு நிலையங்களில் பெருந்தொகையானோர் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்ததை அவதானித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார் எனது தாய், தந்தை, சகோதரர்கள் போரில் இறந்து விட்டனர். அவர்களுக்காக நான் இன்று வாக்களிக்கிறேன் என ஆபிரகாம் பார்னியாங்கு என்பவர் தெரிவித்தார். தெற்கு சூடான் உலகின் மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. சூடானின் அரசு தம்மை ஏனைய பிரதேசங்களைப் போலக் கவனிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 2005 உடன்படிக்கையின் படி பொது வாக்கெடுப்பின் போது குறைந்தது 60 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். இல்லையேல் வாக்கெடுப்பு செல்லுபடியற்றதாகி விடும். வாக்கெடுப்பு முடிவுகள் பெப்ரவரி 1 ஆம் நாள் அறிவிக்கப்படும். சூலை 9 ஆம் நாள் விடுதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். விடுதலையின் பின்னர் தெற்குப் பகுதியில் உள்ள 80 விழுக்காடு எண்ணெய் வளங்கள் தெற்கின் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆத்திரேலியாவில் அகதிகளாக உள்ள தெற்கு சூடானிய மக்களும் இன்று ஆத்திரேலிய நகரங்களில் நடந்த வாக்கெடுப்பில் பெருமளவில் கலந்து கொண்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக 1,57,738 குடும்பங்களைச் சேர்ந்த 5,88,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் இது வரை 669 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 2631 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் 18 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 3558 பேரும் அம்பாறையில் 1127 பேரும் முகாம்களில் தங்கியுள்ளனர். இதேவேளை மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்கள் தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இதேவேளை தொடர் மழை காரணமாக 59 பிரதான குளங்களில் 36 குளங்கள் பெருக்கெடுத்துள்ளதாக நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கூறினார். அநுராதபுரத்தில் 7 குளங்கள் பெருக்கெடுத்துள்ளதோடு பதவிய மற்றும் ராஜாங்கனை குளங்களின் தலா இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 4 குளங்கள் பெருக்கெடுத்துள்ளன. உருகாமம் குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டையில் 8 குளங்களும் குருநாகலில் 5 குளங்களும் திருகோணமலையில் 2 குளங்களும் மன்னாரில் கட்டுக்கரை குளமும் பெருக்கெடுத்துள்ளதாக அவர் கூறினார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியது. 32 பேர் காப்பாற்றப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் வந்த செய்திகள் 50 பேர் வரையில் உயிர் தப்பியதாகத் தெரிவித்தன. இவ்விபத்து நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 1945 மணிக்கு இடம்பெற்றதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. கடுமையான காலநிலையே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பல துண்டுகளாக வெடித்திருந்தாலும், குண்டுவெடிப்பு இடம்பெறவில்லையென ஈரானின் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வடக்கு ஈரானில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 168 பேர் கொல்லப்பட்டனர். ஈரானில் பயணிகள் விமானம் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர் ஜூலை 15, 2009 கடந்த வெள்ளிக்கிழமை அன்று நைஜரின் தலைநகர் நியாமியில் வைத்துக் கடத்தப்பட்ட இரு பிரெஞ்சுப் பிரஜைகளையும் பிரெஞ்சு இராணுவத்தினர் விடுவிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர்கள் இருவரும் இறந்த நிலையில் இருக்கக் காணப்பட்டனர். இவர்களின் கடத்தலுக்கு எக்குழுவும் இதுவரையில் உரிமை கோரவில்லை எனினும், அல்-கைதாவின் வடக்கு ஆப்பிரிக்கக் குழு முன்னர் பல கடத்தல்களை இப்பகுதியில் மேற்கொண்டிருந்தது. நிவாரணப் பணியாளர் அண்டன் டி லூக்கோ மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைநகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் வைத்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். லூக்கோவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவரது நண்பர் நைஜர் வந்திருந்தார். நைஜரின் தேசியப் பாதுகாப்புப் படையினரும் பிரெஞ்சு விமானம் ஒன்றும் கடத்தல்காரரை பாலைவனம் வர துரத்திச் சென்றதாக பிரெஞ்சு இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இரண்டாவது தாக்குதலில் பல கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பிரெஞ்சுப் பிரசைகளும் இதன் போது கொல்லப்பட்டனர். "அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது இவர்கள் இருவரும் கடத்தல்காரர்களினால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே கருத இடமுண்டு என பிரெஞ்சு அதிகாரி தெரிவித்தார். குறித்த இருவரும் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சார்க்கோசி "இது ஒரு கோழைத்தனமான செயல் எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐந்து பிரெஞ்சுப் பிரசைகள் போராளிகளால் கடத்தப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லை. கெப்லர் தொலைநோக்கி "கடக்கும்" தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அதாவது, தனது சூரியனுக்கும் (அல்லது விண்மீன்) புவிக்கும் இடையில் கடக்கும் புறக்கோள்களை இது கண்டுபிடிக்கிறது. விண்மீனில் இருந்து வரும் ஒரு மிகச்சிறிய ஒளி காலமுறை தோறும் தடுக்கப்படுவது, கோள் ஒன்று அதனைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் உவெசுலியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிரீன்வுட் என்பவரின் தலைமையில் அப்பலோத் திட்டத்தின் மூலம் நிலவில் 1969 முதல் 1972 வரை தரையிறங்கிய அப்பல்லோ 11, 12, 14 மற்றும் 17 ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் ஆராயப்பட்டன. இவ்வாய்வின் படி, நிலவின் தண்ணீரின் வேதியியல் பண்புகள் பூமியில் உள்ள நீரின் பொதுவான பண்புகளை ஒத்திருக்கவில்லை எனக் காணப்பட்டுள்ளது. "அப்பல்லோ பாறை மாதிரிகளின் டியூட்டேரியம்/ஐதரசன் (D/H) விகிதம் புவியின் தண்ணீரின் விகிதத்தை விட வேறுபட்டவையாகக் காணப்படுகின்றது என கிரீன்வுட் தெரிவித்தார். இவ்வாய்வுகளின் முடிவுகள் புவியில் நீர் எவ்வாறு வந்தது என்பதற்கும் விடை கிடைக்கலாம் என கிரீன்வுட் தெரிவித்தார். இவ்வாய்வுகள் குறித்த முடிவுகள் சனவரி 9 ஆம் நாளைய நேச்சர் ஜியோசயன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. பிறிஸ்பேனுக்கு மேற்கே இப்ஸ்விச் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், பாலங்கள் உடைந்ததாலும் போக்குவரத்துக்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இதனால் தோணிகள், படகுகள், மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் காயமடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். காணாமல் போனோரைத் தேடிக் கண்டு பிடிக்க அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. லொக்கியர் பள்ளத்தாக்கு, வைவன்ஹோ அணைக்கட்டு ஆகியன கடந்த திங்களன்று நிரம்பிப் பெருக்கெடுத்ததால் பிறிஸ்பேன் நகரம் நாளை வியாழன் அன்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. பிறிஸ்பேனில் இருந்து 130 கிமீ மேற்கேயுள்ள டூவூம்பா நகரமே திங்களன்று இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்படைந்தது. தரை மட்டத்தில் இருந்து 8 மீட்டர் உயரம் வரை வெள்ளம் அங்கு பரவியது. இது ஒரு "உடனடி உள்ளூர் சுனாமி” என இதனை உள்ளூர் மக்கள் விவரித்தனர். வாகனங்கள் தீப்பெட்டிகள் போல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. குயின்ஸ்லாந்து வெள்ளத்தினால் பல பில்லியன் டொலர்கள் நட்டம் சேதம் ஏற்பட்டுள்ளதென்றும், 200,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது டெரெசொபோலிசு என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 130 பேர் உயிருடன் புதையுண்டனர். இங்குள்ள ஆறு ஒன்று பெருக்கெடுத்ததில், பல கட்டடங்கள் நீருள் மூழ்கின. நோவா பிரைபேர்கோ நகரில் மண்சரிவில் 107 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்புதினத்தில் காணப்படும் சில சொற்களும் உள்நோக்கங்களைக் கொண்ட வாசகங்களும் இந்தியர்களுக்கு சினத்தை மூட்டியுள்ளன. பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இப்பிரச்சினை குறித்து அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு வினவினார் அரசாங்கம் மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு மதத்தினரையும் அவர்களது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். ஏதேனும் தவறு நடந்து விட்டால், அதற்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் என்றும் தயார் நிலையில் இருக்க வேண்டும்”, என்றார் சந்தியாகு. 2011-ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்புக்கான மலாய்மொழி இலக்கியப்பாட நூல்கள் மாற்றப்பட்டுள்ளன. “இண்டர்லொக்” என்னும் நூல் மலாய் இலக்கியப் பாடத்திற்குரிய நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கொண்டு மலாய் இலக்கியப்பாட மாணவர்கள் இந்நூலைப் படித்து ஆய்வு செய்வர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் குறுநாவல் ஒன்று இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இப்புதினம் அப்துல்லா உசேன் என்ற தேசிய எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புதினம் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அப்புதினத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய பகுதிகள் வருமாறு: "மலையாளிகளும் தெலுங்கர்களும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இவர்கள் அனவரும் இயல்பாகப் பழகுவதற்குரிய காரணம்; இவர்கள் எல்லாரும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாகும் யாரையும் தொட்டால் தீட்டாகுமென இவர்கள் பயப்பட வேண்டியதில்லை ஆடுகளைப்போல முண்டியடித்தனர்." இண்டர்லொக் புதினத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிய அமைப்பு குறித்த பகுதிகள் புதினத்தில் தரப்பட்டுள்ள காலப்பகுதியைப் பிரதிபலிக்கின்றது என்றும் அது எந்த ஒரு சமூகத்தையும் இழிவு படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருக்கவில்லை எனவும் சீனாவின் பெய்ஜிங் வெளிநாட்டுப்படிப்புகளுக்கான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவாங் சரியான் தெரிவித்தார். விக்கிப்பீடியா இணையத்தளம் புதிய தலைமுறையை வேண்டி நிற்கிறது, பெருமளவு பெண்கள் பங்களிக்க வேண்டும், என பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்தார். உலகின் 5வது பிரபலமான இணையத்தளமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் சனவரி 15 ஆம் நாள் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது அதன் பயனர்களின் எண்ணிக்கையை 400 மில்லியனில் இருந்து 2015 ஆண்டுக்குள் 1 பில்லியனாக அதிகரிப்பதற்குக் குறிக்கோள் வைத்திருக்கிறோம். ஆனால் இவ்வளர்ச்சிக்கு புதிய இடைமுகப்பு அவசியமாகிறது என திரு. வேல்ஸ் தெரிவித்தார். "எமது பழைய பயனர்களை நாம் ஆதரிக்க வேண்டும், ஏனெனில் அவர்களே எமது வலைத்தளத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்தவர்கள், ஆனால் புதிய பயனர்களுக்கும் நாம் ஓர் ஏணி தயாரிக்க வேண்டும் என்று கூறிய அவர் பலர் எமது தளத்தில் பங்களிப்பதற்குப் "பயப்படுகிறார்கள் எமது நிரற்தொடர்கள் பல அவர்களுக்கு சிக்கலானதாக உள்ளது என்றார். “அவர்கள் நல்லவர்கள், ஏனென்றால் எதனையும் அவர்கள் "உடைக்க" விரும்பவில்லை.” தற்போது, பயனர்களிடம் இருந்து பெறும் நிதியைக் கொண்டு விக்கிப்பீடியா நிறுவனம் இலாப நோக்கமல்லாமல் இயங்குகிறது. இத்திட்டத்தை நாம் மாற்ற விரும்பவில்லை. இவ்வாண்டு நாம் 16 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பயனர்களிடம் இருந்து நன்கொடையாகப் பெற்றுள்ளோம். ஆனாலும், இவ்விரண்டு நிறுவனங்களும் ஓரளவு மென்மையான இணைப்பைக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக, விக்கிலீக்ஸ்.நெட், விக்கிலீக்ஸ்.கொம், விக்கிலீக்ஸ்.யூஎஸ் ஆகிய இணையத்தளங்களின் களப்பெயர்களின் உரிமை எமது விக்கியா நிறுவனத்திடமே உள்ளது. இவற்றை நாம் அவர்களுக்கு மாற்றி விட்டோம், ஆனாலும் அந்த மாற்றத்தை அவர்கள் தொழிநுட்பரீதியாக இன்னும் செயற்படுத்தவில்லை என்றர் வேல்ஸ். “அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கையெழுத்திட வேண்டியது மட்டுமே ஆனால் அவர்களுக்கு இப்போது அதற்கு நேரமில்லை. "இவ்வாரத்தில் இக்களப்பெயர்கள் காலாவதியாகின்றன. நான் இவற்றைப் புதிப்பிக்கப் போவதில்லை என்றார் திரு. வேல்ஸ். சயன்ஸ் ஆய்வு இதழில் இது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. நோய்க்கிருமிகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள மரபணு மாற்றப்பட்ட பல்வேறு வகையான உயிரினங்களை தயாரிக்க தமது ஆய்வு முடிவுகள் வழிவகுக்கின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர். தமது இந்த முறை மூலம் ஏனைய கோழிகள் மற்றும் கோழிகளை உண்ணும் மனிதர்களுக்கு எவ்வித நோய்க்கிருமிகளும் தொற்றாது என இவ்வாய்வுக் குழு நம்புகிறது. மரபணு மாற்றப்படுதல் முறை தடுப்பூசி ஏற்றுதலை விட நோய்த்தடுப்புக்கு சிறந்த முறை என எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெலன் சாங் தெரிவித்தார். வாகன நெரிசலிலும், அதன் பின்னர் எற்பட்ட கூட்ட நெரிசலிலும் பலர் சிக்கினர். 100 பேர் வரையில் இதில் உயிரிழந்திருக்கலாம் என கோயில் நிருவாகம் தெரிவித்துள்ளதாக கேரள கோயில் அலுவல்கள் அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி கூறினார். விபத்தும் நெரிசலும் நடந்த இடம் எளிதில் அணுகமுடியாத காட்டுப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும், தொலைத்தொடர்புத்துறையின் தகவல் தொழில்நுட்பம் எட்டாத இடமாக அது இருப்பதாலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான தகவல்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [[இலங்கை]]யின் மலையகத்தில் அண்மைக்கால மழையினால் மண் சரிவு அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளில் உள்ள 700 குடும்பங்கள் தமது இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இருநூறு குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினதும் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் தெரிவித்தனர். மழை காலத்தைத் தொடர்ந்து திடீரென வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவ்வீடுகளைப் பார்வையிடும் பணியில் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் பூகற்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச். ஆர். கே. பி. ஹேரத் கூறினார். இவ்வீடுகளில் வசித்து வருபவர்களில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 503 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 9 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். ஏனையவர்கள் நண்பர்கள்இ உறவினர்களது வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். இதேநேரம் மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டப் பிரதேசத்திலிருந்து மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முப்பது குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் இருந்து 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டிருப்பதாக பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிட்டார். தூனிசில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் முகமது கனூச்சி இடைக்கால அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவதே தமது அடுத்த பணியாக இருக்கும் என அவர் கூறினார். கூட்டணி அரசு அமைப்பதற்குத் தாம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார். 1987 ஆம் ஆண்டு முதல் பென் அலியின் தலைமையிலான அரசு துனீசியாவை ஆட்சி புரிந்து வருகிறது. 2014 இலேயே தாம் அதிபர் பதவியிலிருந்து விலகுவேன் என பென் அலி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம், உணவு விலை அதிகரிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு எதிராக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் தலைநகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பென் அலி பதவி துறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பென் அலி ஆட்சிக்கு வந்தபிறகு முதல் முறையாக இத்தகையதொரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக அவதானிகள் தெரிவித்தனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர். நகர்ப்புறங்களில் பல இடங்களில் சூறையாடல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தூனிசின் முக்கிய தொடருந்து நிலையம் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இடைக்கால அரசு நாட்டில் பொருளாதார, அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும் என மக்கள் எதிர்பார்த்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இணையத்தளமாகவே இல்லாது, முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த வாசகர்களே முனைய வேண்டும் எனவும், விக்கிமீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். விக்கிபீடியாவின் தமிழ் பதிப்பு, தமிழ் விக்கிபீடியா செப்டெம்பர் 2003 ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 27,000 இற்கும் அதிகமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கிறித்தவ நபர் ஒருவரினால் 12 வயது முஸ்லிம் சிறுமி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட நிகழ்வுக்குப் பழி வாங்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொப்டிக் கிறித்தவர்கள் மீதான இத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் மீதான தீர்ப்புகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. எகிப்தின் 80 மில்லியன் மக்கள்தொகையில் கொப்ட்டிக் (பழமைவாத) கிறித்தவர்கள் 10 விழுக்காடு ஆகும். இம்மாதம் புத்தாண்டு நாள் அன்று அலெக்சாண்டிரியா நகரில் கொப்ட்டிக் தேவாலயம் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 23 பேர் உயிரிழந்திருந்தனர். தம் மீது எப்போது பாகுபாடு காட்டப்படுவதாகவும், தம்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எப்போதும் தண்டனைக்குட்படுத்தப்படுவதில்லை அல்லது மிகக் குறைந்த தண்டனைகளே வழங்கப்படுகின்றன என கொப்ட்டிக் கிறித்தவர்கள் அரசு மீது குறை கூறி வருகின்றனர். எகிப்தில் கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல், 21 பேர் உயிரிழப்பு சனி, சனவரி 1, 2011 4தமிழ்மீடியா குழுமம் சார்பிலும், வாசகர்கள் சார்பிலும் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்! தொடர்ந்து இணையப்பணிகளின் பயணிப்பில் இணைந்திருப்போம்! ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்ற குற்ற்ம்சாட்டப்பட்டுக் கைதான அரவிந்த ராஜ்கோவா சென்ற மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் இருந்து அசாம் தனிநாடாக வேண்டும் என்று கோரி இவர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் கோகோய் செய்தியாளர்களிடம் இது குறித்துத் தெரிவிக்கையில், அரசுடன் உல்ஃபா பேச்சுவார்த்தைக்குத் தயாராய் உள்ளதாகத் தமக்கு அறிவித்துள்ளதாகக் கூறினார். "ஆனாலும் அவர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு இன்னும் வரவில்லை, அது வரையில் நாம் காத்திருப்போம் என அவர் கூறினார். உல்ஃபாவின் உயர் பீடம் இது குறித்துத் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும் என ராஜ்கோவா அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஓராண்டுக்கு முன்னர் எயிட்டியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தமையே தாம் இங்கு வருவதற்கு தூண்டுகோலாய் அமைந்ததாக டுவாலியரின் துணைவி வெரோனிக் ரோய் தெரிவித்தார். விமானநிலையத்தில் அவரது முன்னாள் ஆதரவாளர்கள் பலர் அவர்களை வரவேற்றனர். டுவாலியரது 15 ஆண்டுகால ஆட்சியில் அவரும் அவரது குடும்பத்தினரும் ஊழல், மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை அடுத்து அவர் ஆட்சியில் இருந்து கலைக்கப்பட்டார். கடந்த நவம்பர் 28 ஆம் நாள் இடம்பெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சியினரால் மோசடி இடம்பெற்றதாக நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பு இடம்பெற்று வருகிறது. மக்கள் கிளர்ச்சிகளில் பலர் கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஒசே இன்சல்சா திங்கள் அன்று தனது அறிக்கையைக் சமர்ப்பிப்பதற்காக எயிட்டிக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் டுவாலியரது வருகை இடம்பெற்றுள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்காக டுவாலிய 2007 ஆம் ஆண்டில் எயிட்டிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து பலர் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மொத்தமாக 40 பேர் வரையில் வெள்ள அனர்த்தத்தில் கொல்லப்பட்டும், மேலும் நால்வர் காணாமல் போயுமுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமை வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50,000 பேர் வரையில் முகாம்களில் தங்கியுள்ளனர். மழைவெள்ளத்தின் காரணமாக கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முகாம்களில் தங்கியுள்ள பலரும் தம்முடன் தமது உடமைகள் அதனையும் எடுத்து வரவில்லை என்றும், இதனால் அவர்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார். ஆரையம்பதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,000 பேருக்காக ஒதுக்கப்பட்ட அரிசி, மா, கூடாரங்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை என அவர்கள் முறையிட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார். பலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலிலேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் உணவுப் பொருட்களைக் கையாடி தமக்கு வேண்டியவர்களுக்குக் கொடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் சனவரி மாத வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுத்தானியங்கள் சேதமடைந்தும், கால்நடைகள் இறந்தும் உள்ளன. ஜூலியசு பாயெர் என்ற சுவிஸ் வங்கியின் கேமன் தீவுக் கிளையின் தலைவராக எல்மர் இருந்திருக்கிறார். முன்னர் இவர் வங்கி இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டில் இவரை அவ்வங்கி பணியில் இருந்து நீக்கியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக நாளை புதன்கிழமை எல்மர் சுவிட்சர்லாந்து செல்லவிருக்கிறார். ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலரின் 1990 2009 காலப்பகுதில் இருந்த சுவிஸ் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள் நேற்றுத் தரப்பட்டன முக்கியமாக வங்கிகளைப் பற்றியும் வங்கிச் செயற்பாடுகள் பற்றியும் விபரங்கள் உள்ளன. வரி ஏய்ப்பு செய்பவர்கள், கறுப்புப் பணப் புழக்கம், ஊழல் ஆகியவற்றால் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் போன்ற விபரங்கள்” தரப்பட்டுள்ளதாக எல்மரின் வழக்கறிஞர் கூறினார். இன்னும் இரு வாரங்களுக்குள் இது குறித்த தகவல்கள் விக்கிலீக்சில் வெளியிடப்படும் என அசான்ச் தெரிவித்தார். இன்று புதன்கிழமை அதிகாலை 0123 மணிக்கு பாக்கித்தானின் டால்பாண்டின் நகருக்கு மேற்கே 55 கிமீ தூரத்தில், 84 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதியின் அருகே உள்ள நகரங்களில் சேதம் அதிகம் ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். டல்பாண்டின் நகரில் வீடுகளின் கூரைகள் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்ததாக மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் அமனுல்லா நொட்டிசாய் தெரிவித்தார். டால்பாண்டின் நகரில் கிட்டத்தட்ட 15,000 பேர் வசிக்கின்றனர். ஆரம்பத்தில், இந்நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக இத்தகைய ஆழம் பெரும் சேதங்களை உண்டு பண்ண வல்லது. பின்னர் இதன் ஆழம் 84 கிமீ ஆகக் கூறப்பட்டது. இதனால் சேதம் அதிகம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், இந்நிலநடுக்கம் இந்தியா]]வில் தில்லி வரையிலும், துபாய், கட்டார் வரையிலும் உணரப்பட்டது. "கிரிமியன் கொங்கோ இரத்தப்பெருக்குக் காய்ச்சல் (Crimean–Congo hemorrhagic fever) மிகவும் பயங்கரமான ஒரு வைரசு, ஆனாலும் எவரும் பீதி அடையத் தேவையில்லை என அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 20க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் கோலாட் கிராமத்தில் 5 கிமீ சுற்றுப்புறத்தில் பரிசோதனையில் ஈடுபட பணிக்கப்பட்டுள்ளனர். புதிதாக எவரும் இக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கொங்கோ காய்ச்சல் உண்ணிகளால் பரப்பப்படும் ஒரு வைரசுக் காய்ச்சலாகும். இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மூலமாக மனிதரைப் பீடிக்கக் கூடியது. கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இந்நோய் பொதுவாகக் காணப்படுகிறது. மனிதரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய் 30% உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. கடந்த 24 மணி நேரத்தில் கிசிமென் எரிமலையின் சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 200 அதிர்வுகளைத் தமது நிலநடுக்க ஆய்வாளர்கள் பதிந்துள்ளதாக கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். பாதகமான காலநிலை காரணமாக எரிமலைக் குழம்பின் திசையை செயற்கைக் கோள்கள் அறிய முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார். பெத்ரொபவ்லொவ்ஸ்க் உட்பட மக்கள் செறிந்து வாழும் சுற்று வட்டத்தில் தூசிகள் வீழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்சாத்காவின் 60 வீத மக்கள் பெத்ரொபாவ்லொவ்ஸ்கில் வசித்து வருகின்றனர். எனினும் எரிமலையில் இருந்து கிளம்பும் தூசி அப்பிரதேசத்தில் பறக்கும் விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கம்சாத்கா பிரதேசத்தில் 150 இற்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன, அவற்றில் 29 உயிருடன் உள்ளன. தாராசிங் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என நடுவண் அரசு வழக்குத்தொடுநர்கள் வாதாடினர். உள்ளூர் நீதிமன்றம் முதலில் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. ஏழை இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்துக்கு இப்பாதிரியார் மதம் மாற்றுவதாக கடுமைவாத இந்துக்கள் இவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் வழக்குத்தொடுநர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மரணதண்டனை வழங்குவதற்கு தாராசிங் மீதான வழக்கு ”அபூர்வமானவற்றுள் அபூர்வமானது” அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். "ஒரு மதம் ஏனைய மதத்தை விட உயர்ந்தது என்பதோ, அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதோ, அல்லது ஒருவரின் நம்பிக்கையில் கட்டாயமாகத் தலையிடல் போன்றவற்றிற்கு நியாயம் கற்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். பஜ்ராங் தள் என்ற இந்து தீவிரவாதக் குழுவே இத்தாக்குதலுக்குக் காரணம் என கிறித்தவ சமூகத் தலைவர்கள் நம்புகின்றனர். ஆனாலும் எக்குழுவும் சம்பந்தப்பட்டுள்ளன ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டிருந்த இவ்வழக்கில் 2003 ஆம் ஆண்டில் தாராசிங் உட்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஒரிசா உயர் நீதிமன்றம் தாராசிங்கின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தது. அத்துடன் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட ஏனைய 11 பேரையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமையால் விடுதலை செய்தது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஓரான் பாமுக், கிரண் தேசாய் ஆகியோர் இலங்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் மீண்டும் இந்தியா திரும்புவதற்கு இந்திய குடிவரவு அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக தாங்கள் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போயுள்ளதாய் இந்த எழுத்தாளர்கள் மின்னஞ்சல் மூலம் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக காலி இலக்கிய விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது 17 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இலங்கை இலக்கிய விழாவில் கிரண் தேசாயும் ஓரான் பாமுக்கும் கலந்துகொள்ளாமைக்கும், தமது வீசா நடைமுறைகளுக்கும் எவ்வித தொடர்புமில்லையென இந்தியா தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல் இந்தியத் தூதரகம் பாமுக்கிற்கு பலமுறை இந்தியா சென்று திரும்புவதற்கு ஏதுவாக வீசா வழங்கியுள்ளதாக கொழும்பு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ முடிவுகள் பெப்ரவரி 14 ஆம் நாள் அறிவிக்கப்படும், ஆனாலும் முடிவுகளில் பெருமளவு மாற்றம் ஏற்படப்போவதில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு சூடான் நகரமான ஜுபா உலகின் புதிய தேசிய தலைநகராக உருவாகுவதற்கான எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகிறது. ஆனாலும் இவ்வெற்றி குறித்து அவசரப்பட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எண்ணெய் வளமிக்க தெற்கு சூடானைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முன்னாள் போராளிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். முடிவுகள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இவ்வாண்டு சூலை 9 ஆம் நாள் வட ஆப்பிரிக்காவின் புதிய நாடு தனது விடுதலையை அறிவிக்கும். இருபதாண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உடன்படிக்கை ஒன்றை அடுத்து இந்தப் பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. அரபு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு சூடான் தலைவர்கள், கிறித்தவர்களையும், வேறு பழமைவாத இனங்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடானின் அமைதி வழியிலான பிரிவுக்கு சம்மதித்தனர். நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் எதியூரப்பாவுக்கு பங்கிருப்பதாகக் கூறி இரு வழக்கறிஞர்கள் வழக்குகளைப் பதிவு செய்தனர். அரசு நிலத்தை, அதற்கான பட்டியலில் இருந்து நீக்கி, தனது குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் ஒதுக்கியதாக எதியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணைகள் வரும் சனவரி 24-ம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியைத் துறப்பீர்களா செய்வீர்களா என முதல்வர் எதியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு நான் எதற்காக பதவி துறக்க வேண்டும் என்று திருப்பிக் கேட்டார். இந்த விவகாரத்தில் எதியூரப்பா பதவி துறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர் நிதின் கட்காரியும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவுக்கு தடை கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கர்நாடக பாஜக முடிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட கடற்கொள்ளையர்களை கோலாலம்பூரில் வைத்து வழக்குத் தொடுப்பதா என தற்போது மலேசிய அரசு யோசித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 1,181 பேர் சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டனர். 53 கப்பல்கள் கடத்தப்பட்டன, இவற்றில் 49 சோமாலியக் கடற்பரப்பில் கடத்தப்பட்டன. எட்டு மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் விரிவான அடிப்படையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் ஆகியன இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக நிபுணர் குழு ஒன்று கொழும்பில் இருந்து குச்சவெளிக்கு அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன் தினம் குச்சவெளி கலப்பையாறு சுனாமி வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் உள்ள களப்புப் பகுதியில் இரண்டு சிறுமிகள் வயல்வெளியோரமாக நடந்து செல்கையில் ஒரு சிறுமியின் இரண்டு கால்களும் நிலத்தில் புதையுண்டு போனது. அடுத்த சிறுமி கால்கள் புதையுண்ட சிறுமியை இழுத்துக் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து இவ்விடயம் அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற களி மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது. நிலக் கீழ் நீர்மட்டம் உயர்தல் மற்றும் சதுப்பு நிலத்தின் கீழ் இயற்கை வாயு உற்பத்தியாகி அழுத்தம் ஏற்படுதல் போன்றவற்றாலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த நிலையில், மற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா இது என்ற கேள்வியுடன் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிக உயரே பறக்கும் வளிக்கூண்டுகளில் நகர்பேசிகள் முன்னர் எடுத்துச் செல்லப்பட்டிருந்தனவாயினும், எமது கோளுக்கு வெளியே பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திற்கு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுவது இதுவே முதற்தடவையாக இருக்கும். "இன்றைய செல்லிடப்பேசிகள் வியக்கத்தக்க தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன என SSTL திட்ட முகாமையாளர் சோன் கென்யன் தெரிவித்தார். "அவைகள் இப்போது 1GHz வரை இயங்கக்கூடிய செயலிகளுடன் உருவாக்கப்படுகின்றன, அத்துடன் அவை பெருமளவு w:திடீர் நினைவகம்| திடீர் நினைவகத்தை flash memory) கொண்டுள்ளன. முதலில் தொலைபேசிகளை அங்கு இயங்க வைக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும், அப்படி இயங்கினால், அதன் மூலம் ஒரு செய்மதியை இயக்க முடியுமா என ஆராய்வோம் என்றார் கென்யன். இந்த மோதல்களின் போது சிறைச்சாலையில் பல பகுதிகள் தீவைக்கப்பட்டதில் நூலகம், சமையலறை உட்பட பல கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ள வசதியினங்கள் குறித்து கைதிகள் நீண்டகாலமாக முறையிட்ட வந்துள்ளனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமையால் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். 50 வரையான கைதிகள் சிறைச்சாலையின் கூரைகளின் மீது ஏறி நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர். திடீரெனக் கலகம் ஆரம்பித்து கல் வீச்சுக்கள் இடம்பெற்றதுடன் கைதிகளை நோக்கி சிறை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இங்கு இடம்பெற்ற மோதல்கள் மற்றும் பல மணிநேர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பெருமளவாயிருக்கலாமெனக் கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. நால்வரின் இறந்த உடல்களைத் தாம் பார்த்ததாக கைதி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் 70 வரையான தமிழ் அரசியல் கைதிகள் தனிப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். கைதிகளின் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் பங்கெடுத்துக் கொள்ளாததால், சில கைதிகள் தமிழ்க் கைதிகளை நோக்கியும் கல் வீச்சுக்களை நடத்தியதாக பிபிசி தமிழோசைக்கு தமிழ் கைதி ஒருவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்து உள்ளார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பயணிகள் வருகை தரும் பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 1630 மணிக்கு 7கிகி எடையுள்ள டிஎன்டி குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோவில் இருந்து 40 கிமீ தென் கிழக்கே விமான நிலையம் அமைந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒரு பிரித்தானியரும், ஒரு செருமனியரும் அடங்குவர். குண்டு வெடித்த இடம் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உருசியாவின் வடக்கு கவ்க்காசியப் பகுதித் தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் எனப் பரவலாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மாஸ்கோவின் சுரங்கத் தொடருந்து ஒன்றில் இரண்டு தற்கொலை குண்டுகள் வெடித்ததில் நாற்பது பேர் கொல்லப்பட்டனர். மொஸ்கோ தொடருந்து நிலையங்களில் குண்டுவெடிப்புகள், பலர் இறப்பு திங்கள், மார்ச் 29, 2010 கடந்த செப்டம்பரில் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் ஒன்று இவரது பதவியைப் பறித்ததும் அல்லாமல் அவரின் குடியுரிமையையும் பறித்தது. இதனை எதிர்த்து பொன்சேக்கா உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இத்தீர்ப்பை அடுத்து தனது பதவி, குடியுரிமை மட்டும் அல்லாமல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வாக்குரிமையையும் இழப்பார். பொன்சேக்காவை விசாரிக்கவென அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் சட்டவிரோதமானது என பொன்சேக்காவின் வழக்கறிஞர்கள் விவாதித்தனர். இராணுவ நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்பவே அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொன்சேக்கா தனது நடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததை அடுத்து இலங்கைத் தேர்தல் சட்ட விதிப்படி அவருக்குப் பதிலாக அவரது கட்சியில் இருந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு பதவிக்குத் தெரிவு செய்யப்படாத அடுத்த நிலையில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்படுவார். கடந்த ஏப்ரல் 2010 இல் இடம்பெற்ற தேர்தலில் பொன்சேகா கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் பதிவாகி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. சரத் பொன்சேகாவின் தரங்கள், பதக்கங்களை நீக்க அரசுத்தலைவர் அனுமதி சனி, ஆகத்து 14, 2010 சரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஆகத்து 13, 2010 கடந்த 22-ம் தேதி தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்த தாக்குதல் நடந்திருக்கக்கூடும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இத்தாக்குதல் கடந்த திங்கள் அன்று இரவு 1000 மணியளவில் நடத்தப்பட்டது. இலங்கை அரசு இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னையில் உள்ள மகாபோதி சங்கம் தாக்குதலுக்கு பின் வேறு சில காரணங்கள் உள்ளன. இது இலங்கையில் மத மோதல்கள் ஏற்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் அவர்கள் வீசிய வலையில் சிக்கிவிட வேண்டாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதே வேளை சென்னை வந்துள்ள இந்தியாவுக்கன இலங்கைத் தூதர் காரியவசம், இந்தியாவைப் போலவே தனது நாடும் மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தார். பன்னாட்டுக் கட‌ல் எ‌ல்லையை இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் தா‌ண்டினாலு‌ம் அவர்கள் கொல்லப்படக்கூடாது, தாக்கக் கூடாது என்றே இலங்கை விரும்புவதாக அவர் கூறினார். அத்துடன் சென்னைக்குச் செல்லும் இலங்கைப் பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கைத் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த பத்து நாட்களில் இலங்கைக் கடற்படையினரால் 2 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதால் அங்கு பதட்டமானதொரு சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. குடியரசு நாளன்று சிறீநகரின் லால்சவுக் பகுதியில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பாரதீய ஜனதா கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் அதை நடுவண் அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இணைந்து முறியடித்து விட்டன. சிறீநகர் எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தடை போடப்பட்டது. இந்நிலையில் நேற்றுப் பிற்பகலில் லால்சவுக்கை நோக்கி தேசியக் கொடியுடன் வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பா.ஜ.க. தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, அனந்த்குமார் உள்ளிட்டோர் கடந்த திங்களன்று விமானம் மூலம் ஜம்மு சென்றடைந்தபோது, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். புதனன்று குடியரசு தின நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாஜகவினர் கொடியேற்றவிடாமல் தடுக்கப்பட்டது குறித்து அரசு மீது பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். ”அண்டவெளி நேரத்தில் தோன்றிய விண்மீன் நகரங்கள் என அழைக்கப்படும் இந்தப் பேரடைகளை நாம் இப்போது காண்கிறோம்,” என நெதர்லாந்தைச் சேர்ந்த லைடன் அவதானநிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் பவென்ஸ் கருத்துத் தெரிவித்தார். ஒப்பீட்டளவில் மிகச் சிறிய காலப்பகுதியில் பேரடைகளின் எண்ணிக்கை வளர்ந்து வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. பெரு வெடிப்புக்குப் பின்னர் 500 மில்லியன் ஆண்டுகளாக ஒரு பேரடையே இருந்துள்ளது. அதற்குப் பின்னர் 150 மில்லியன் ஆண்டுகளில் 10 பேரடைகள் உருவாயின. இது 100 மில்லியன் ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. பெரு வெடிப்புக்குச் சற்றுப் பின்னரான விண்மீன்கள், மற்றும் பேரடைகள் பற்றிய அறிவின் மூலம் பெருவெடிப்பிற்குப் பின்னர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இருந்த 'மீள் அயனாக்கல் reionization) என்ற காலப்பகுதியப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது என அறிவியலாளரக்ள் தெரிவிக்கின்றனர். இக்காலப்பகுதியில், விண்மீன்களுக்கிடையேயான வெளியில் உள்ள நடுநிலை ஐதரசன் அணுக்கள் புரோத்தன்களாகவும், இலத்திரன்களாகவும் பிளவடைந்து இந்த அண்டத்தை புற ஊதாக் கதிர்களுக்கு வழிவிட்டன. இதற்கிடையில் எதிர்வரும் மார்ச் 17 ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 4 மாநகர சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 258 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் 3931 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆளும் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட வேறு சில கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் உரிய நடைமுறைக்கு அமைய தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் அவைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக யாழ் தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியும் யாழ் அரசாங்க அதிபருமாகிய திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். மொத்தமாக 600 சுயேச்சைக்குழுக்கள் இம்முறை கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதில் ஆகக்கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 156 சுயேச்சைக்குழுக்களும் இரண்டாவதாக களுத்துறை மாவட்டத்தில் 72 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன. தாகெசுத்தானின் கசாவ்யூர்ட் நகரில் கரவான் உணவுச்சாலைக்கு முன்னர் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. உணவுச்சாலையில் இருந்தோரே கொல்லப்பட்டுள்ளனர். தாகெசுத்தானில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இம்மாநிலத்தில் நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக காவல்துறையினரையும், இராணுவத்தினரையுமே நோக்கியே இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே கடந்த 32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013 இல் முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை அரசுத்தலைவராக்க முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏமன் நாட்டின் மக்கள் தொகையில், பாதிப் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவற்றைக் காரணம் காட்டி வெகுண்டெழுந்த இளைஞர்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது அதிபர் அப்துல்லா சலேயைப் பதவி விலகக் கோரி தலைநகர் சனாவில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சலே பதவி விலகுவதைத் தவிர வேறு எந்த சமாதானத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக் சனி, சனவரி 29, 2011 துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதிக்குத் தப்பியோடினார் சனி, சனவரி 15, 2011 கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவிலும், மற்றும் பல நகரங்களிலும் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆளும் என்டிபி கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசுத் தொலைக்காட்சி, மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சு ஆகியவற்றையும் முற்றுகை இட்டனர். அரசுத்தலைவர் ஒஸ்னி முபாரக்கைப் பதவி விலகுமாறும் அரசைக் கவிழ்த்து புதிய தேர்தலை நடத்துமாறும் கோரியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. சித்திரவதை, வறுமை, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பவற்றால் தாம் விரக்தியடைந்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையைத் தாம் புரிந்து கொள்வதாகவும், ஆனாலும் எகிப்தின் திரத்தன்மையை இழக்கத் தாம் தயாராக இல்லை என அதிபர் முபாரக் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றுகையில் தெரிவித்தார். தற்போதுள்ள அரசைப் பதவி விக்லகக் கோரியுள்ளதாகவும், சனிக்கிழமை அன்று புதிய அரசை அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார். நேற்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் தலைநகரின் தாகிர் என்ற மத்திய பகுதியில் கிட்டத்தட்ட 20 இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சிதறி ஓடியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்திருக்கிறார். நேற்று மாலை 1800 முதல் இன்று காலை 0700 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. விக்கிபீடியா தற்போது 270 மொழிகளில் சுமார் 400 மில்லியன் பேரை தமது பார்வையாளர்களாக கொண்டுள்ளது. இந்தநிலையில் "அறிவு எமது முக்கிய வளம் என ஜிம்மி குறிப்பிட்டுள்ளார். அதுவே சமுதாயத்துக்கு சிறந்த சேவைகளை செய்தவதற்கான ஆதாரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமது அலுவலகங்களை திறக்கப் போவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் தமது இணையத்தளத்தை பல்வேறு மொழிகளிலும் விருத்தி செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கோட்லிப் டட்வெய்லர் விருது 100,000 சுவிசு பிராங்குகள் பெறுமதியானதாகும். கோட்லிப் டட்வெய்லர் ஆய்வுக் கழகம் இப்பரிசை வழங்குகிறது. இந்த ஆய்வுக் கழகமும் விருதும் மைகுரோசு பல்பொருள் அங்காடிக் குழுவின் நிறுவனர் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் டட்வெய்லரின் 70வது பிறந்த நாளுக்கு அவருக்கு 200,000 சுவிசு பிராங்குகள் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தப் பணத்தை முதலீடாக வைத்து சமூக, கலாசார மற்றும் பொருளாதாரத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் ஒருவருக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. இப்பரிசு சில ஆண்டுகளுக்கு ஒரு முறையே வழங்கப்பட்டு வந்தது. அவ்வகையில் கடைசியாக ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கொஃபி அனான் அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான புரூஸ் ஃபெய்ன் இலங்கை இராணுவத்தால் ரஜீகர் மனோகரன். பிரேமாஸ் ஆனந்தராஜா மற்றும் கலைசெல்வி லவனின் கணவர் ஆகியோர் கொல்லப்பட்டதற்காக அவர்களின் உறவினர் சார்பில் 1991 சட்டத்திற்கு அமைய அமெரிக்காவின் வாசிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டு அதிகாரிகள் சட்டவிரோதக் கொலைகளில் சம்பந்தப்பட்டிருந்தால் அமெரிக்காவின் இச்சட்டத்தின் மூலம் அவர்களை விசாரணைக்குட்படுத்த முடியும் என ஃபெயின் தெரிவித்தார். "இலங்கையில் மறைந்து கொண்டு சனாதிபதி மகிந்த ராசபக்ச நீண்ட காலம் நீதியிடம் இருந்து தப்ப முடியாது என அவர் தெரிவித்தார். சனாதிபதி மகிந்த ராஜபக்சேயிடம் இருந்து பதில் கிடைக்காது விட்டால், அவர் இல்லாமலேயே வழக்கை முன்கொண்டு செல்லத் தாம் தயாராக இருப்பதாக புரூஸ் பெயின் அறிவித்துள்ளார். 2009 இறுதிக்கட்டப் போரில் குறைந்தது 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. ஆனாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 30,000 என பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு ராஜபக்ச அமெரிக்கா சென்று திரும்பியிருந்தார். ராசபக்சவுக்கு எதிரான வழக்கைத் தொடுத்திருக்கும் இனவழிப்புக்கு எதிரான தமிழர்கள் என்ற அமெரிக்க அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ராசபக்சவை அமெரிக்கா எவ்வித விசாரணைகளும் இன்றி நாட்டுக்குள் அனுமதித்திருந்தமை குறித்து "ஆழந்த கவலையையும் கண்டனங்களையும்" தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்ட முயற்சி என சனாதிபதி ராஜபக்சேவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதில்லை என்று சனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். நேற்று சனிக்கிழமை அன்று இரவு 1030 மணியளவில் சாக்சனி-ஆன்கால்ட் என்ற மாநிலத்தின் மாக்டபர்க் நகருக்கு அருகில் உள்ள ஓர்டோர்ஃப் என்ற ஊரில் உள்ளூர் பயணிகள் வண்டியும், சரக்கு வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதின. பயணிகள் வண்டியில் மொத்தம் 45 பேர் மட்டுமே பயணித்திருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் வண்டியில் பல பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. எனினும் அவ்விடத்தில் உள்ள ரெயில்வே பாதையில் இரவு நேரத் திருத்த வேலைகளுக்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் செருமனியில் பல தொடருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர். 1998, சூன் 3 ஆம் நாள் இடம்பெற்ற ஒரு பயங்கர விபத்தில் வடக்கு செருமனியில் பாலம் ஒன்றுட தொடருந்து ஒன்று மோதியதில் 101 பெர் கொல்லப்பட்டனர். இலங்கைச் செய்திப் பத்திரிகைகளின் செய்திகளின்படி கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள் தொடர்பாகவும் இந்தியாவிலுள்ள இலங்கையின் பௌத்தமகா சம்மேளனம் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் இப்பேச்சுவாரத்தையின் போது சிறப்புக் கவனம் மேற்கொள்ளப்படுமென தெரிகிறது. இதேநேரம் இலங்கையின் வடக்கே முறிகண்டி பிரதேசத்தில் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படாமையினால் அங்குள்ள தமது காணிகள் பறிபோய் விடுமோ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். தாமதமின்றி அந்தப் பகுதிகளில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு விண்ணப்பம் ஒன்றை அவர்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. [[இலங்கை அரசை விமர்சிக்கும் லங்காஈநியூஸ் என்ற இணையத்தளத்தின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை இனந்தெரியாதோரினால் எரியூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்காஈநியூஸ் தளத்தின் கொழும்புபேஜ் என்ற இணையப்பத்திரிகையின் தகவல் படி, கொழும்பின் புறநகர்ப்பகுதியான மாலபேயில் தகம் மாவத்தையில் உள்ள அவர்களது அலுவலகத்தினுள் இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இப்போது கட்டடத்தினுள் உள்ள அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகி விட்டன என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளம் வெளியிட்டுவரும் சர்ச்சைக்குரிய கட்டுரைகளால் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இன்றைய சம்பவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என இணையத்தள ஆசிரியர் பெனட் ரூபசிங்க அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுக்களை அரசு மறுத்துள்ளது. “எவ்வித ஆதாரமும் இல்லாமல் எம்மைக் குற்றம் சாட்ட முடியாது என ஊடகப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல கூறினார். 2006 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாளை செவ்வாய்க்கிழமை அன்று பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் திட்டமிட்டு வருவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வர்த்தக நிலையங்களைச் சூறையாடுதல் மற்றும் வாகனங்களைத் தீக்கிரையாக்கல் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதால் தலைநகர் கெய்ரோ புகைமண்டலமாகக் காட்சியளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் போதான வன்முறைகளில் இதுவரை 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், முதலீட்டாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக் சனி, சனவரி 29, 2011 இந்த சூறாவளி குறித்து குயின்ஸ்லாந்து முதல்வர் அன்னா பிளை கருத்துத் தெரிவிக்கையில் இது மிகப் பெரியதும் உயிராபத்தை விளைவிக்கக்கூடியதும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சூறாவளி கேர்ன்ஸ் பகுதியைத் தாக்கினாலும், பல நூறு கிலோமீட்டர்களுக்கு இதன் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கேர்ன்ஸ் நகரில் அவசியமானால் கட்டாய வெளியேற்றம் அமுல் படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2006 மார்ச் மாதத்தில் குயின்சுலாந்தைத் தாக்கி பலத்த சேதத்தை உண்டு பண்ணிய லாரி என்ற சூறாவளியை விட யாசியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய அரசாங்கத்தின் "வேலைக்காக வேலை" என்ற திட்டத்தை மக்களிடையே பரப்ப எடுத்த முயற்சிகளுக்காக இவருக்கு உயர் விருதும் 44,000 இந்திய ரூபாய்கள் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. இவ்வேலைத் திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டொன்றிற்கு 100 நாட்கள் வேலை உறுதிப்படுத்தப்பட்டது. [[இலங்கை]]யின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவு காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்குப் பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு 44 பேர் உயிரிழந்த அவலம் ஏற்பட்டு சில வாரங்களில் மீண்டும் வெள்ள அபாயம் தலைதூக்கியுள்ளது. இலங்கைக்கு அருகில் தென் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலையே இக்காலநிலைக்குக் காரணம் எனவும், கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடாக்கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இக்கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். வவுனியா மாவட்டத்தில் 29,500 பேர் வரை 30க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். இலங்கையின் காலநிலையில் மீண்டும் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அடுத்துவரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை நீடிக்கும் என வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா தெரிவித்தார். இவை இவ்வாறிருக்க அடை மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 58 குளங்கள் நிரம்பி வழிவதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், பதுளை, குருநாகல், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, அநுராதபுரம், ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும், 22 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தின் பிரதான நீர் தேக்கமான சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பிரதான நீர் பாசன குளங்களில் நீர்மட்டம உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சேனநாயக்க சமுத்திரம் மற்றும் இதர நீர்பாசனக் குளங்களிலுள்ள வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் வீதிகளில் வெள்ளம் பாய்கிறது என்று அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். 16 ஆண்டுகளுக்கு பிறகு சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அம்பாறை மாவட்டத்தின் தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பகலுடன் பாடசாலைகள் மூடப்பட்டன. மனிதரில் மாணிக்கமாய் சிறப்பான ஒரு செயலாற்றி வந்த இவரின் இன்னொரு சிறப்பே இவ்விருதை திருப்பி அழித்தும் கருத்தப்படவேண்டும். இந்த ஆறு கோள்களும் பூமியை விட இரண்டு முதல் நாலரை மடங்கு ஆரையையும், இரண்டு முதல் 13 மடங்கு வரை திணிவையும் கொண்டுள்ளன. இவற்றில் ஐந்து கோள்கள் எமது சூரியனை புதன் கோள் சுற்றி வருவதைவிட குறைந்தளவு தூரத்தில் தமது சூரியனைச் சுற்றி வருகின்றன. கெப்லர் திட்டம் கண்டுபிடித்த மேலும் 1,235 புதிய கோள்களாகக் கணிக்கப்படக்கூடிய வான் பொருட்களைப் பற்றிய தகவல்களும் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டு மே 12 முதல் செப்டம்பர் 17 வரை கெப்லர் திட்டத்தால் அவதானிக்கப்பட்ட 156,000 விண்மீன்கள் பற்றிய தகவல்கள் மூலம் உய்த்தறியப்பட்டுள்ளது. புவியைப் போன்ற மிகச்சிறிய புறக்கோள் கண்டுபிடிப்பு செவ்வாய், சனவரி 11, 2011 65 வயதான தெய்ன் செயின் இராணுவத்தலைவர் தான் சுவேயின் மிக நெருங்கிய சகா ஆவார். இவர் இராணுவத்தினரின் ஆதரவுக் கட்சியான ஒருமைப்பாடு, மற்றும் மேம்பாட்டுக்கான முன்னணிக் கட்சியின் (USDP) தலைவர் ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற தேர்தல் ஒரு போலி என மேற்குலக நாடுகள் வர்ணித்திருந்தன. 1997 இல் இராணுவ அரசில் இணைந்த தெயின் செயின் முன்னாள் படைவீரர் ஆவார். தனது புதிய அரசிற்கு இவர் அமைச்சர்களை நியமிப்பார். இவரது அமைச்சர்களாக இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் இருந்து இராணுவத் தலைவராக பர்மாவை ஆட்சி நடத்திய 75 வயதாகும் தான் சுவே, புதிய அரசில் எப்படியான பங்கு வகிப்பார் என்பது அறியப்படவில்லை. ஆனாலும், இவர் தனது நிறைவேற்று அதிகாரங்களை புதிய தலைவருக்கு விட்டுக் கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். [[இலங்கை]]யில் அடைமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவர் உலங்கு வானூர்தியினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார். நேற்றுக்காலை பெல் – 212 உலங்கு வானூர்தியிலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து தாயையும் குழந்தையையும் அனுராதபுரம் மருத்துவமனையில் விமானப் படையினர் அனுமதித்தனர். வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் கிழக்கு, வட மத்திய மாகாணங்கள் அடங்களாக நாட்டிலுள்ள 13 மாவட்டங்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 553 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 42 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவென கடற்படையின் 24 உயிர் பாதுகாப்புப் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு இந்தக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானப் படை உலங்கு வானூர்திகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொலன்னறுவை பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களில் கர்ப்பிணிப் பெண்களையும் நோயாளர்களையும் உலங்கு வானூர்தியில் விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். கடற்படை படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் விமானப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படையினரின் பெல் – 212 2 உலங்கு வானூர்திகளும், எம். ஐ. – 17 இரண்டு உலங்கு வானூர்திகளும், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணாயக்கார தெரிவித்தார். இதேநேரம் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மட்ட பூகற்பவியலாளர்கள் குறிப்பிட்டனர். தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை இன்று வரை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார். தெற்கு சூடான் தனியாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் 99 வீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது. தெற்கு சூடானிய இராணுவத்தினர் சிலர் வடக்கு சூடானியர்களுடன் இணைந்து அந்நகரை விட்டு அகல மறுப்பதனாலேயே மோதல் இடம்பெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார். வடக்கில் தமக்கு எவ்வித உரிமையும் கிடைக்காது என அவர்கள் நம்புகின்றனர். பிரிவினைக்கு ஆதரவான தெற்கு சூடானின் இராணுவத்தினர் இம்மோதலில் பங்கெடுக்கவில்லை. 2011 சூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் உலகின் புதிய நாடாக அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் வடக்கு-தெற்கு எல்லையில் நிலவும் இராணுவத்தினரின் பிரச்சினையை புதிய அரசு எதிர்கொள்ள நேரிடும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆட்டங்கள் பல ஆடினாலும் தண்டிக்கா போகும் நியாத்திற்கு முன்னால் எந்த அடக்குமுறை அரசும் தப்பி பிழைக்க முடியாது சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்களை ஆதாரம் காட்டி அவர் மேலும் தெரிவிக்கையில், பார்வதி அம்மாள் தற்போது சுய நினைவினை இழந்து விட்டதாகவும், அவரால் யாரையும் அடையாளம் காண முடியாதுள்ளதாகவும், பேசும் சக்தியையும் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ”பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன்,” என திரு. சிவாஜிலிங்கம் கூறினார். 81 வயதான பார்வதியம்மாள் தொடர்பாக வல்வெட்டித்துறையில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவரான மயிலேறும் பெருமாள் யாழ்ப்பாணம் உதயன் செய்தியாளரிடம் கூறுகையில், ”பார்வதியம்மாவின் உடல் நிலை தளர்ந்து வருகின்றது. அவர் கடந்த ஒரு மாதமாகப் படுக்கையில் இருக்கிறார். அவருக்கும் பிள்ளைகள் தொடர்பான யோசனை அதிகமாகக் காணப்படுகின்றது. நீர் ஆகாரங்கள் குழாய் மூலமே உட்செலுத்தப்பட்டு வருகின்றன. இது திடீரென ஏற்படவில்லை. கடந்த பல நாட்களாக அவரது உடல்நிலை படிப்படியாகக் குன்றி வருகின்றது,” என்றார். பார்வதி அம்மாளின் கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சென்ற ஆண்டு காலமான நாள் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார். பார்வதி அம்மாள் 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் மலேசியாவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, இந்திய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு மாத விசா வழங்கியிருந்தது. அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது விக்கிசெய்தி, ஏப்ரல் 18, 2010 அமெரிக்க இராணுவத்தினரின் முடிவுக்கு எதிராகத் தாம் வெள்ளி மாளிகைக்கு மேன்முறையீடு செய்யவிருப்பதாக வாங் பாவோவின் நண்பர்கள் கூறியிருக்கின்றனர். "இவர் உமொங் மக்களுக்கு மட்டுமல்ல, ஆனால் வியட்நாமில் பணியாற்றிய ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் அவர் ஒரு வீரர் ஆவார்,” என அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த ஜிம் கொஸ்டா தெரிவித்தார். கலிபோர்னியாவின் பிரெஸ்னோ நகரில் தனது 81வது வயதில் வாங் பாவோ காலமானார். இந்நகரிலேயே பெரும்பாலான லாவோசிய உமொம்க் மக்கள் வசிக்கின்றனர். 1960கள் மற்றும் 70களில் அமெரிக்காவின் உதவியுடன் கெரில்லாப் போருக்கு வாங் பாவோ தலைமை வகித்தார். இளம் வயதில் இவர் யப்பானியப் படையினருக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் போர் புரிந்தார். 1950களில் வடக்கு வியட்நாமியர்களுக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தினருடன் இணைந்து போர் புரிந்தார். அமெரிக்காவுடன் இணைந்திருந்ததால் இவரால் தம் இனத்தவரில் பலர் உயிரிழக்க இவர் காரணமாக இருந்தார் என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. இதனை அவரும் உணர்ந்திருந்தார். பிற்காலத்தில் லாவோசில் புதிய கிளர்ச்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டது. இந்தியாவின் தென்மேற்குக் கரையில் இந்தியக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றிலேயே இப்படகு கைப்பற்றப்பட்டது. இவ்வாரத்தில் இந்தியக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த சில ஆண்டுகளாக சோமாலியக் கடற்கொள்ளையர் இந்தியப் பெருங்கடலில் பெருமளவு படகுகளை கொள்ளையடித்து வருகின்றனர். கடும் துப்பாக்கித் தாக்குதலை அடுத்து கடற்கொள்ளையர் சரணடைந்ததாக இந்தியக் கடற்படையினர் தெரிவித்தனர். தாய்லாந்துப் படகில் பயணக் கைதிகளாக இருந்த 24 தாய்லாந்து, மற்றும் பர்மிய மாலுமிகளை அவர்கள் விடுவித்தனர். இப்படகு சென்ற ஆண்டு கொள்ளையர்களினால் கைப்பறப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் இப்போது மும்பாய் கொண்டு செல்லப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இந்தியக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வேறொரு தாக்குதலில் படகொன்று மூழ்கடிக்கப்பட்டது. தமது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக இவ்விடங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களை சட்டவிரோதமாக வெளியேற்றிவிட்டு அங்கு சுற்றுலா விடுதி கட்டப்பட்டதாகவும் ராப்பா நூயி மக்கள் தெரிவிக்கின்றனர். பல மாதங்களாக இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகத்து மாதத்தில் ஹங்காரோ ஈக்கோ கிராமத்தையும் மருத்து நீரூற்றையும் இட்டோராங்கி என்ற பழங்குடிக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர். 1990களில் செயிஸ் குடும்பம் என்ற செல்வாக்குள்ள முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்த விடுதியை சிலி அரசிடம் இருந்து விலைக்கு வாங்கியது. ஆனால் அவ்விடம் தமது மூதாதைகளிடம் இருந்து ஏமாற்றிப் பறிக்கப்பட்ட நிலம் என பழங்குடியினர் வாதிட்டு வருகின்றனர். சுமார் 50 சிலி காவல்துறையினர் விடுதியினுள் புகுந்து அங்கு மீதமிருந்த ஐந்து பழங்குடியினரைக் கைது செய்தனர் என இக்குழுவுக்காக வாதாடும் வழக்கறிஞர் ரொட்ரிகோ கோமசு தெரிவித்தார் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும்" கோமசு தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற காவல்துறையினரின் தாக்குதலில் 20 பழங்குடியினர் காயமடைந்தனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ஜேம்ஸ் அனாயா ராப்பா நூயி மக்கள் பற்றிய தமது கரிசனையை சென்ற சனவரியில் வெளியிட்டிருந்தார். ராப்பா நூயி என்பது ஈஸ்டர் தீவின் உள்ளூர் பெயராகும். இது சிலியின் மேற்குக் கரையில் இருந்து 3,200 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 4,000 பேர் வசிக்கும் இத்தீவில் உள்ள மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இதன் சிறப்பாகும். ஈஸ்டர் தீவில் காவல்துறையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் சனி, டிசம்பர் 4, 2010 [[இலங்கை]]யில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவந்த கனத்த மழை நேற்று முன்தினம் முதல் ஓய்ந்திருந்த போதிலும் நேற்று பகல் முழுவதும் வானம் இருண்டுபோய் எங்கும் இருள்மயமாகக் காணப்பட்டது. அதேநேரம், மத்திய மலையகப் பகுதிகளில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் பகல் நேரத்தில் பயணித்த வாகனங்கள் மின் விளக்குகளை இயக்கியபடியே பயணித்தன. ‘லானினா’ நிலமை காரணமாகவே அதிகரித்த முகில் கூட்டங்கள் உருவாவதும், கனத்த மழை பெய்வதும் இடம்பெறுவதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி எட்டி ஹேவகே தெரிவித்தார். இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடல் பகுதியில் மீண்டும் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதும் தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய கால நிலைக்குக் காரணமாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே நேரம் நாட்டிலுள்ள 59 முக்கிய குளங்களில் 39 குளங்கள் நிரம்பி வழிவதாகவும், 20 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நீர்ப்பாசனத திணைக்களத்தின் நீர் வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறினார். இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது பாரிய வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2273 வரை உயர்ந்திருப்பதாகவும் 13 ஆயிரத்து 148 வரையான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார். இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக 85 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 11 ஆயிரத்து 287 பேர் 744 முகாம்களில் நேற்றும் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 இலட்சத்து 26 ஆயிரத்து 230 குடும்பத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 23 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புதிய சுற்றுப் போரில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக கம்போடிய அரசு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சுற்றுலாப் பயணி எனக் கூறப்படுகிறது. கம்போடிய-தாய்லாந்து எல்லையில் உள்ள கோயிலைச் சுற்றியுள்ள பிரதேசத்தை தாய்லாந்து கைப்பற்ற எண்ணியிருக்கிறது என உன் சென் தெரிவித்தார். மேலும் போரைத்தடுக்க அமைதிப்படையினரை சர்ச்சைக்குரிய பகுதிக்கு அனுப்ப வேண்டும் என ஐநாவை உன் சென் கேட்டுள்ளார். உலக பாரம்பரியக் களப் பட்டியலில் இருந்து இக்கோயிலை எடுத்துவிடும்படி தாய்லாந்து யுனெஸ்கோவைக் கோரவிருக்கிறது. போர் தொடங்கிய நாளில் இருந்து கோயில் பெரும் சேதத்துக்குள்ளாகியிருப்பதாக கம்போடியா குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதனை தாய்லாந்து மறுத்து வருகிறது. பிரியா விகார் கோயில் கிபி 11-12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில். 1962இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை சனி, நவம்பர் 7, 2009 இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனையை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஆகிய விவரங்களையும் மனுவுடன் சமர்பித்துள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும் என்றார். "விருப்புரிமை அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்வது என்பது சலுகை விலையை கொடுப்பது அல்ல. குலுக்கல் அடிப்படையிலும், சந்தை விலை நிலவரப்படி வீட்டு வசதி வாரியம் நிர்ணயித்த விலையின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார். ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது விஷமத்தனமானது, அவர் உண்மைகளை திரித்துக் கூறுகிறார். அது நடவடிக்கைக்கு உரியது" எ‌ன முதல்வர் எச்சரித்துள்ளார். அதிகாரபூர்வ இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது முன்னாள் தெற்கு சூடான் தலைவர் ஜோன் கராங் அவர்களின் கல்லறையின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தவாறு மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. வாக்கெடுப்பு சுமூகமாக நடந்தேறினால், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை விலக்கி வைப்பதாக ஐக்கிய அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்தது. சூடானுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெற்கு சூடானியத் தலைவரும், சூடானின் உப-சனாதிபதியுமான சல்வா கீர் தெரிவித்துள்ளார். ”வடக்கையும் தெற்கையும் பல காரணிகள் இணைக்கின்றன,” என அவர் தெரிவித்தார். எண்ணெய் வளம் மிக்கதாக இருந்தாலும், தெற்கு சூடான் உலகின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். 2005 அமைதி ஒப்பந்தத்தின் படி, 2011 சூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் விடுதலையை அறிவிக்கும். மார்டான் நகரில் காலை 0800 மணிக்கு இராணுவ அணிவகுப்பு நடைபெறும் திடலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அசீஸ் பட்டி கல்லூரியின் சீருடையை தற்கொலைக் குண்டுதாரி அணிந்திருந்ததாக மார்டான் நகர காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதே இடத்தில் 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மத்திய புலனாய்வு நிறுவனம் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பர் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் நடுவண் புலனாய்வு நிறுவனம், மற்றும் விசாரணை அமைப்புகள் உரிய முறையில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையின் விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் திடீர்ச்சோதனைகளின் போது கிடைத்த தகவல்கள், இந்த சர்ச்சைக்குரிய ஒதுக்கீடுகளால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு, எந்த நிறுவனங்கள் இதில் பயனடைந்தார்கள் போன்ற தகவல்களை நேற்று வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு நிறுவனம் தாக்கல் செய்தது. விசாரணைகள் மீண்டும் மார்ச் முதல் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி 143 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடாமல் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்தது தவறு. இதில் வெளிப்படையான தன்மை இருந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஜொங்கிளெய் மாநிலத்தில் ஃபாங்காக் நகரில் இரண்டு இராணுவ வாகனங்கள் மீது ஜோர்ஜ் ஆத்தரிற்கு ஆதரவான போராளிகள் இத்தாக்குதலை நடத்தினர். 4 இராணுவத்தினரும் 12 போராளிகளும் தாக்குதலில் இறந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனாலும், மேலும் பலர் இறந்திருக்கலாம் என அவர் கூறினார். ஜொங்கிளெய் தெற்கு சூடானில் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் ஆகும். தெற்கு சூடானின் ஆளும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்தின் (SPLA) இராணுவப் பிரிவான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) உறுப்பினராக இருந்தவர் ஜோர்ஜ் ஆத்தர். ஆனாலும், கடந்த ஆண்டில் இடம்பெற்ற மாநிலத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தமது இயக்கத்தின் மீது குற்றம் சாட்டி ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தார். கடந்த மாதம் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருந்தார். வடக்கு சூடானில் இருந்து பிரிவதற்கு தெற்கு சூடான் ஆயத்தமாகும் தறுவாயில் இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதம் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 98% தெற்கு சூடானியர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். நேற்று வியாழன் மாலையில் ஃபாங்காக் பகுதியில் சண்டை ஆரம்பமானதாகவும், ஆனாலும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவம் (SPLA) திரும்பத்தாக்கியதில், போராளிகள் பின்வாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜோர்ஜ் ஆத்தர் ஆயுதம் ஏந்திப் போராட விளைந்த வேளையில், வடக்கு சூடான் அவரைத் தூண்டி விட்டதாக அப்போது தெற்கு சூடானில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பொது வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எஸ்பிஎல்ஏ உடன் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டார். ஆனாலும், போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் ஆத்தர் கலந்து கொள்ளவில்லை. "மற்றைய தரப்பு ஏற்றுக் கொண்டால் நாம் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்த விரும்புகிறோம், அப்படி இல்லையெனில், அமைதி உடன்பாடு உடனடியாக முடிவுக்கு வந்து விடும் என ஆத்தர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். தெற்கு சூடான் தற்போது உள்நாட்டிலேயே பெரும் சவாலை எதிர்நோக்குவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தெற்கு சூடானில் நேற்று ஆரம்பமாகிய புதிய மோதல்கள் குறித்து தமது கவலையை ஐநாவின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்ஸ்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தெற்கு சூடான் விடுதலைக்கு ஆதரவு, இறுதி முடிவுகள் வெளிவந்தன புதன், பெப்ரவரி 9, 2011 சூடான் அரசுத் தலைவர் பசீர் மீது இரண்டாவது சர்வதேசப் பிடியாணை செவ்வாய், ஜூலை 13, 2010 புதிய ஒப்பந்தப்படி, மைக்குரோசொஃப்ட்டின் பிங் தேடுதளம் நோக்கியா தொலைபேசிகளில் தேடுதல்களுக்கும், அதே வேளையில், ”நோக்கியா மாப்ஸ்” (Nokia Maps) சேவையை மைக்குரோசாப்ட் பயன்படுத்தும். விண்டோஸ்-தளத்தைக் கொண்டு இயங்கும் முதலாவது நுண்ணறிபேசி எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கியாவின் மீகோ இயங்குதளமும் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தெரியவருகிறது. 2010 ஆம் ஆண்டில் நுண்ணறிபேசி சந்தையில் நோக்கியாவின் பங்கு 38% இலிருந்து 28% இற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. "நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, எகிப்திய அரசுத்தலைவர் ஒசுனி முபாரக் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இராணுவ உயர் மன்றம் நாட்டின் தலைமையைக் கவனிக்கும் என எகிப்தியப் பிரதித் தலைவர் ஒமார் சுலைமான் தெரிவித்தார். நாடாளுமன்றம், மற்றும் அமைச்சரவை ஆகியன கலைக்கப்படும் என அல்-அராபியா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்து வந்தார். எகிப்தில் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது திங்கள், சனவரி 31, 2011 எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக் சனி, சனவரி 29, 2011 எகிப்தில் இனியாவது மக்களாட்சிக்கு வழி பிறக்கட்டும்! வணக்கம், விக்கிசெய்தியில் உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் செய்திகள் தொடர்பாக சில கருத்துக்களும், திருத்தங்களும்: * விக்கிசெய்தியில் இடம்பெறும் செய்திகளின் மூலச் செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்பது செய்தியின் இறுதியில் தரப்பட வேண்டும். குறைந்தது இரண்டு மூலச் செய்திகளின் விபரங்கள் இருக்க வேண்டும். மூலச் செய்திகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உங்கள் பாணியில் எழுதப்பட வேண்டும். * நீங்கள் எழுதும் செய்தியின் இறுதியில் publish வார்ப்புருவைச் சேர்க்காதீர்கள் நீங்கள் எழுதும் செய்தி editor ஒருவரால் திருத்தப்பட்ட பின்பே வெளியிடப்பட வேண்டும். தற்போது மாஹிர், நான் ஆக இரண்டு editorகள் இருக்கிறோம். * தலைப்பு இடும்போது கவனிக்க வேண்டியது: தலைப்பினிறுதியில் நிறுத்தல் புள்ளி வராது. இது விக்கிப்பீடியாவின் கட்டுரைகளுக்கும் பொருந்தும். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதைத்தொடர்ந்து, முன்னணிச் செய்தி ஏடுகளும், தொலைக்காட்சிகளும், இந்திய நடுவண் புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி அலைக்கற்றை ஊழல் பணம் கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று 'பரபரப்பைக்' கிளப்பியுள்ளன. ஆனால் இது குறித்து கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2007-2008 -ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற மையத் தொலைத்தொடர்புத் துறையின் 'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டிற்கும் சினியுக் நிறுவனம் கலைஞர் தொலைகாட்சி' இடையே நடைப்பெற்ற வரவு செலவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை; சினியுக் நிறுவனம் ஒரு தொகையை கலைஞர் தொலைக் காட்சியில் முதலீடு செய்தது; பின்பு கலைஞர் தொலைக்காட்சிக்கும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இத் தொகையை சினியுக் நிறுவனம் திருப்பி எடுத்துக் கொண்டது. இந்தக் கருத்து வேறுபாடு காரணமாகக் கலைஞர் தொலைகாட்சி நிறுவனம், இத் தொகையைக் கூடக் கடன் தொகையாகக் கருதி, அதற்கு வட்டியாக ரூ. 31 கோடியைக் கொடுத்து விட்டது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் அப்போதே வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது; தேவையான அனைத்து வரிகளும் அப்பொழுதே செலுத்தப்பட்டுவிட்டன; எனவே 'ஊழல் பணம்' கலைஞர் தொலைக் காட்சியில் முதலீடு செய்யப்பட்டது என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக் காட்சி சார்பில் அதன் நிருவாக இயக்குனர் சரத்குமார் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதே வேளை, அலைக்கற்றை பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டியே வேறு ஒரு நிறுவனம் வழியாக ரூ. 210 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது என்றும் அது சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறது. முசாரப்பின் பேச்சாளர் பவாட் சவுத்திரி பிடியாணை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வழக்குக் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை. இது அரசியல் ஆதாயத்துக்காக எழுப்பப்பட்ட வழக்கு முன்னாள்) சனாதிபதி இது குறித்துக் கவலைப்படப்போவதில்லை எனத் தெரிவித்தார். நாடு திரும்பி அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாக்கித்தானில் நடக்கக்கூடிய தேர்தல்களில் போட்டியிடவேண்டும் என்பதில் அவர் மும்முரமாய் இருக்கிறார். அந்த விஷயத்தை தற்போதைய பிடியாணை மேலும் சிக்கலாக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். நோயுற்று படுக்கையிலிருக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தற்போது சிங்கள சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித் துறை அரச வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரனின் தாயார் (81 வயது) பார்வதி அம்மாளைப் பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர். 81 வயதான அவர் நோயுற்ற நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். அவரது உடல் நிலை நாளுக்கு நாள் தளர்வடைந்து வருகதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அவரை மருத்துவமனையில் வந்து பார்வையிட்டு, புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு அரச மருத்துவமனை, இங்கு கட்டுப்பாடுகள் கிடையாது. எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளதாம். முன்னர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு உல்லாசப் பயணிகளை அதிகளவு கவரும் இடமாக இருந்தது. ஆனால் இப்போது அவரின் தாயாரான பார்வதி அம்மாளை பார்ப்பதற்கே அதிகமானோர் செல்கின்றனர். பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது விக்கிசெய்தி, ஏப்ரல் 18, 2010 மேலும் அவர் பேசும்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேவைப்படும் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்துப் போதிய முடிவுகள் எடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஏற்கனவே அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது. இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; தேர்தல் விதி மீறல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க ஒருங்கிணைந்த மையம் ஏற்படுத்தப்பெற்று, அதற்கு மாநில அளவில் ஒரு தொடர்பு எண்ணும் வழங்கப்படும்; பள்ளிப்பாட ஏடுகளில் தேர்தல், வாக்களித்தல் குறித்தப் பாடங்களைச் சேர்க்க உரிய துறைகளிடம் பேச்சு நடத்தப்படும் என்றார். நிலநடுக்கம் ஏற்பட்டதும் மிக விரைவாக செயற்பட்ட மக்களை அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா பாராட்டினார். கடந்த ஆண்டு நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் அவசரநிலையைப் பற்றி அறிந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். "2010 பெப்ரவரி 27 இல் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவ்வாறு நிலநடுக்கங்கள் இடம்பெற வாய்ப்புண்டு என நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அரசுத்தலைவர் கூறினார். சிலியில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு சனி, பெப்ரவரி 27, 2010 "இந்த உரிம ஒதுக்கீட்டைப் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாதென்றால் எப்படித் தாங்கள் ஒரு அரசு நிருவாகத்தை நடத்துகிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்பேன் என்றும் தெரிவித்தார். இதற்கிடையில் இந்த ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்று அரசு கூறியுள்ளது. ஆனால், இது ஒரு ஊழல்; எஸ் பாண்டு உரிமத்தை தேவாஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முன்னர் எந்த ஒரு சரியான ஏல நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று திரு. பிரசாத் தெரிவித்தார். இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் கடந்த டிசம்பரிலேயே முடிந்திருக்கலாம் என்றும் இந்த தாக்குதல் பணிகளை ஒருங்கிணைக்க புலிகளின் நிதிப் பிரிவைச் சேர்ந்த முக்கிய நபர்களும் விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த சிலரும் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இப்போது இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள புலிகள் தந்துள்ள தகவலின்படி சென்னை வளசரவாக்கத்தில் எல்டிடிஈயினர் நீண்ட காலமாகவே தங்கியிருப்பதாகவும், இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு இவர்கள் உதவலாம் என்றும் மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்குத் தகவல் தந்துள்ளது. மேலும் புலிகளின் தற்கொலைப் படையினரில் ஒரு பிரிவினர் நாகர்கோவிலுக்குள் அகதிகள் என்ற பெயரில் ஊடுருவியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். "10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை எட்டும் என்பது உண்மை என பெய்ஜிங்கைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டொம் மில்லர் தெரிவித்தார். நாற்பது ஆண்டுகளில் முதல் தடவையாக சப்பான் இரண்டாவது பெரும் பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து வீழ்ந்துள்ளது. 37 வயதான ராகத்பதக் அலிகான் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல் மற்றும் காசோலைகள், கேட்பு வரைவோலைகள் ஆகியன வைத்து இருந்ததாகப் புது தில்லி பன்னாட்டு வானூர்தி முனையத்தில் தனது சகாக்கள் சித்திரேஷ் ஸ்ரீ வஸ்தாவா மற்றும் மறூப் ஆகியோருடன் கைது செய்யப்பட்டுப் பின்னர் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் வரும் 17 -ம் தேதி மீண்டும் விசாரணைக்குத் தம் முன் தோன்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். கணக்கில் காட்டப்படாத தொகையை அவர் வைத்திருந்தது குறித்துச் சரியான விவரங்களைத் தெரிவிக்காததால் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடகர் ராகத்பதக் அலிகான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் இசை நிகழ்ச்சியை நடத்துவதாகப் பணம் பெற்றுப் பின்னர் வராமல் ஏமாற்றி விட்டதாக ஏற்கனவே புகார் நிலுவையில் இருப்பதும், அவர் பாக்கித்தானில் இருந்ததால் அவர் மீது எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவரை விடுவிக்க பாக்கித்தான் வெளியுறவுச் செயலர் பாக்கித்தான் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வந்தார். பாகிசுதான், இவரைத் தகுந்த மதிப்புடன் நடத்துவதோடு விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டது. இத்துடன் இவருடைய கைது குறித்த விவகாரத்தை உன்னிப்பாக பாக்கித்தான் கவனித்து வருகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், ராவல்பிண்டி நீதிமன்றம் தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் சாட்சியமளிப்பதற்கு முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெனாசிர் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முஷாரப் நீதிமன்றில் சமூகமளிக்காத பட்சத்தில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது. பாக்கித்தான் உள்நாட்டமைச்சர் ரெகுமான் மாலிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நாடு கடத்தல் பிரித்தானியாவும் பாக்கித்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால் பாக்கித்தான் உளவுத்துறை, முஷாரப்பை நாடு கடத்தும் படி, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தனது சட்டப்படி தான் பிரித்தானியா முடிவெடுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1,76,௦௦௦ கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆ. ராசா உட்பட மூவர் நடுவண் புலனாய்வு அமைப்பால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடுவண் புலனாய்வு அமைப்பின் காவல் முடிந்தவுடன் ராசா தவிர மீதி இரண்டு பேரும் நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். ராசா மட்டும் முரண்பாடான தகவல்களைத் தருவதால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நடுவண் புலனாய்வு அமைப்பின் கோரிக்கைக்கு இணங்க காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு நடுவண் புலனாய்வு அமைப்பின் காவலிலேயே வைக்கப்பட்டு இருந்தார். இந்த விசாரணையின் தேவையைக் கருத்தில் கொண்டு, முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதில் நேரடியாகத் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்தின் உரிமையாளரும், பெரும் செல்வந்தருமான பல்வாவும் பின்னர் நடுவண் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த இருவரையும் வைத்து நேரடியாக விசாரணை நடத்திய நடுவண் புலனாய்வு அமைப்பினர், இவ்விருவருக்கும் காவல் முடிந்ததால் நேற்று இருவரையும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒப்புவித்து, இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் தேவைப்படுவதால் இவர்கள் இருவரையும் மீண்டும் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க இசைவு அளிக்கும் படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இதற்கு ராசாவின் வழக்குரைஞரும், பல்வாவின் வழக்குரைஞரும் எதிர்ப்புத் தெரிவித்தும், நடுவண் புலனாய்வு அமைப்பின் வழக்குரைஞரின் கோரிக்கை சரியானது எனக் கருதிய நீதிமன்றம் ராசாவை மேலும் மூன்று நாள்களுக்கும், பல்வாவை நான்கு நாள்களுக்கும் நடுவண் புலனாய்வு அமைப்பின் காவலில் வைத்திருக்க இசைவு தெரிவித்தது. எந்த ஒரு புலனாய்வு அமைப்பும், ஒருவரைக் கைது செய்தால் அதிக அளவாக 14 நாள்கள் மட்டும் தங்கள் காவலில் வைக்க முடியும் என்ற 'உச்ச' நீதிமன்றத்தின் ஆணையின் காரணமாக இனிமேலும் ராசாவுக்குக் காவல் நீட்டிப்புக் கோர முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வால்வெள்ளியின் நடுப்பகுதியில் இருந்து 200 கிமீ தூரத்தில் ஸ்டார்டஸ்ட் விண்கலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகத் துல்லியமான 70 படங்களை எடுக்கும் வண்ணம் ஸ்டார்டஸ்ட் கட்டளையிடப்படும். அதனை விட இவ்வான்பொருளின் சுற்றுப்புறச் சூழலையும் விண்கலத்துடன் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் ஆராயும். இச்சந்திப்பு பூமியில் இருந்து 336 மில்லியன் கிமீ தூரத்தில் நிகழ்ந்துள்ளது. படங்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் பூமிக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையை சே‌ர்‌ந்தவ‌ர் மு‌த்து‌க்குமா‌ர். உற‌வின‌ர் ‌வீ‌ட்டி‌ற்காக புது‌க்கோ‌ட்டை வ‌ந்த அவ‌ர் தமது ந‌ண்ப‌ரும் வழ‌க்க‌றிஞ‌ருமான போ‌த்த‌ப்பனுட‌ன் அ‌ண்ணா ‌சிலை கடை‌த் தெரு‌வி‌ல் நே‌ற்‌றிரவு பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்த போதே வெட்டப்பட்டார். முத்துக்குமார் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமானார். படுகாயமடைந்த அவரது நண்பர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, சிறு ஈயக் குண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டக்களை கொண்டு சுட்டும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் மேலும் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். பக்ரன் மன்னர் ஹமாத் பின் இசா அல் கலீபா நேற்று செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, இறப்புகள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார். பக்ரைனில் பெரும் கடற்படைத் தளத்தை வைத்துள்ள ஐக்கிய அமெரிக்கா இக்கொலைகள் குறித்து தமது கவலையைத் தெரிவித்துள்ளது சம்பந்தப்பட்ட அனைவரும் வன்முறையைக் கவிட வேண்டும்,” என அமெரிக்க அரசுத்திணைக்களப் பேச்சாளர் பி.ஜே. கிரவுளி கூறியுள்ளார். டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத் தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர். உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்கிற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் 18 ஆண்டுகள் உதைபந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதே போல வீழ்ச்சிகளையும் கண்டவர். 1996 – 97 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது, கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தை குறைக்க வேண்டிய சமயத்தில் அதை சரியாக கையாண்டு, குறித்த தருணத்தில் பந்தை கோல் வலைக்குள் தள்ளுவதில் அவர் வல்லவர். அப்போது தான் அவரது முழங்காலில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். ஆனாலும் 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் வென்ற போது, அவரது கால்பந்து வாழ்க்கை ஒரு உணர்வுபூர்வமான உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பிறகு தனது உடல் தகுதியை தக்க வைத்துக்கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டார். 2011 ஆம் அண்டு அவரது உதைபந்து வாழ்க்கையில் ஒரு மகுடமாக இருந்திருக்க வேண்டியது, ஆனால் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஒரு கசப்புணர்வுடனேயே தான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் நிலைக்கு ரொனால்டோ ஆளாகியுள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை பெப்ரவரி 28 வரை காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகத்தின் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் நாங்கள் மிக கவலைப்படுகிறோம், இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, சம்பவம் குறித்து இலங்கையுடன் பேசி அவர்களை விடுவிக்க ஆவன செய்யப்படும் என்றார். இதற்கிடையில், தொண்டைமனாறு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 24 இந்திய மீனவர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லையினுள் பெரும் இழுவைக்கப்பல்களில் நுழையும் இந்திய மீனவர்கள் தமது கடல் வளங்களை சூறையாடிச் செல்வதுடன் வடபகுதி மீனவர்கள் வலைகளையும் சேதமாக்கிச் செல்வதாக நீண்டகாலமாக வடபகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த சனவரியில் இலங்கைக் கடற்படையினரால் இரண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்தியா இலங்கை மீது குற்றம் சாட்டியிருந்தது. இதனையடுத்து இது குறித்துப் பேசுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சரை இந்தியா இலங்கைக்கு அவசர அவசரமாக அனுப்பியிருந்தது. நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டவர்களில் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்ற போது அதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு இறக்கவும் தயார் என அவர்கள் கூறுகின்றனர். அரசு எதிர்ப்பாலர்களுக்கு எதிராக அரசுக்கு ஆதரவானவர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களில் இறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மனாமாவின் முக்கிய வீதிகளில் இராணுவத்தாங்கிகள் நிலை கொண்டுள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் எடுப்பர் என உட்துறை அமைச்ச்சு தெரிவித்துள்ளது. நேற்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் நால்வர் இறந்துள்ளதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. முந்நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஆண்டிமுத்து ராசா 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உலககிண்ணப் போட்டிகளை பாக்கித்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் தாக்கப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கித்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது. லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாக்கித்தான் 14 ஆட்டங்களை ஓர் அரையிறுதி உட்பட நடத்துவதாக இருந்தது. அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காளதேசத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுவரை 9 உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்துள்ளன. 1975 நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பைப் போட்டியிலும், 1979ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக்கோப்பைப் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து வெற்றிபெற்றது. 1987, 1999, 2003, 2007 ஆகிய நான்கு முறையும் ஆஸ்திரேலியாவே கோப்பையை சுவீகரித்துக் கொண்டது. 1983ல் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியாவும் 1992ல் நடந்த போட்டியில் பாகிஸ்தானும் 1996ல் இலங்கையும் உலகக் கோப்பையை வென்றெடுத்தது. இருப்பினும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதேபோல தென் ஆப்பிரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் உலகக் கோப்பை வெறும் கனவாகவே இதுவரை இருந்துவந்துள்ளது. பெரும்பாலும் ஏழை மக்கள் வாழும் பிராந்திய நகரங்களிலேயே அமைதியின்மை நிலவுகிறது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்குள்ள நிலைமைகளின் உண்மை நிலை அறியப்படாதுள்ளது. லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை அங்கு அமைதியின்மை நிலவுவதையே காட்டுகிறது என அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து லிபியாவின் எதிர்க்கட்சி தலைவர் பைசல் ஜிப்ரில் கூறுகையில், லிபிய மக்கள் தமது பயத்தை கலைத்துள்ளனர் என்றார். இதற்கிடையில், அல்-பைடா என்ற கிழக்கு நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்ப்பாட்டக்காரகள் போராடி வருவதாக வெளிநாட்டில் வாழும் லிபியர்களை ஆதாரம் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முவம்மர் கடாபி 1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். இவரே அரபு நாடு ஒன்றில் அதிக காலம் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் ஆவார். துனீசியா, மற்றும் எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சிகள் வெற்றியடைந்ததை அடுத்து, மத்திய கிழக்கின் பல நாடுகளிலும், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பார்வதி அம்மாளின் கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சென்ற ஆண்டு காலமான நாள் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார். பார்வதி அம்மாள் 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் மலேசியாவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, இந்திய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு மாத விசா வழங்கியிருந்தது. அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இராணுவக் காவலில் இருக்கும் போது 2010 சனவரியில் காலமானார். 2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி பார்வதியம்மா ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் தாயார் உடல்நிலை மோசம், சுயநினைவை இழந்தார் பெப்ரவரி 6, 2011 இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார் வெள்ளி, ஜனவரி 8, 2010 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மிகவும் வருத்தபட வேண்டிய செய்தி, நல்ல முறையில் சிகிச்சையளித்து கவனித்து இருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்ககூடும். காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியின் அருகே உள்ள டார்விஷ் முகாமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 0830 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தாக்குதலை யார் நடத்தியது என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அல்-சபாப் போராளிகள் பல தாக்குதல்களை முன்னர் நடத்தியிருக்கின்றனர். "எம்மை நோக்கி ஒரு வாகனம் வேகமாக வந்து வெடித்தது. அப்பகுதி எங்கும் ஒரே புகை மண்டலமாகக் காணப்பட்டது என காவல்துறை அதிகாரி அசன் அலி ராய்ட்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். தெற்கு சோமாலியாவில் பல பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அல்-சபாப் போராளிகள் கடந்த சில மாதங்களாக இடைக்கால அரசுப் படைகளுடன் மொகதிசுவைக் கைப்பற்றுவதற்காக மோதி வருகின்றனர். சோமாலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நிரந்தரமான தேசிய அரசு ஒன்று இருக்கவில்லை. மகெல ஜயவர்தன போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது இது 6வது தடவையாகும். இந்தியாவுக்கு எதிராக யுத்தம் தொடுத்தது, பலரைக் கொலை செய்தது, தேசத்துக்கு எதிரான சதி வேலையில் ஈடுபட்டது உள்ளிட்ட கசாப் மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிபதிகள் கசாப்பின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். தற்போதைய தீர்ப்பை எதிர்த்து கசாப் இந்திய உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்டு முறையீடு செய்ய அனுமதி உண்டு என்றும் அவர் அப்படி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தால் அவருக்கு இலவச சட்ட உதவி செய்துதரப்படும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, கசாப் உள்பட 10 பேர் மும்பைக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரைக் கொன்றனர். 3 நாள் நீடித்த இந்தத் தாக்குதலில், கசாப் மட்டும் உயிருடன் பிடிபட மற்ற 9 பேரும் இந்திய கமாண்டோப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்படும். இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் என பல்வேறு வசதிகள் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இரு இந்தியர்களையும் விடுதலை செய்து மும்பை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதும் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு வெள்ளி, மே 7, 2010 மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு செவ்வாய், மே 4, 2010 இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 1251 மணிக்கு கிறைஸ்ட்சேர்ச் நகரில் இருந்து 10 கிமீ தென்கிழக்கே 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முதன்மையான பணிகள் நிறைவேற்றப்பட இருப்பதால், நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதால், இம்முறையும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அச்சம் கொண்ட நடுவண் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளது. நேற்று அவை கூடியதும், பிரதமர் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்துவைத்த பின்னர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையில், ஆ. ராசாவின் சகோதரரான கலியபெருமாளிடம் நேற்று அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில், கலியபெருமாள் ஒரு தொழில் அதிபர் என்ற நிலையில், நடுவண் புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் ஏற்கனவே அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையிட்டிருந்தது. இந்நிலையில் இன்று அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் கலியபெருமாளிடம் விசாரணை நடத்தினர். அவருடைய தொழில் நிறுவனங்களின் வரவு-செலவு குறித்த வினாக்கள் எழுப்பபட்டதாகத் தெரிகிறது. ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று அரசுக்கு எதிராக இடம்பெற்ற இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் இராணுவத்தினர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. நேற்று நடந்த தாக்குதலில் நான்கு இராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டன. அதில் பயணம் செய்த அனைத்து இராணுவத்தினரும் இறந்துள்ளதாக பாதுகாப்புத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவை எதிர்க்கட்சித்தலைவர் அலசானி ஓட்டாராவின் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கோசங்களை எழுப்பினர். “உண்மையைச் சொல்லு, உண்மையைச் சொல்லு” என அவர்கள் சூமாவுக்கு எதிராகக் கோசமிட்டனர். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஓட்டாராவின் ஆதரவாளர்கள் 500 பேர் பாதுகாப்புபடையினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மோதல்களில் குறைந்தது 300 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றதொன்றாகக் காணப்படுகின்றது. தலைநகரின் வீதிகளை கடாபியின் ஆதரவுப் படைகள் நுழைந்து தாக்கி வருவதால் நகரம் முழுவதும் வெறிச்சோடிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு நகரங்களில் மக்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் லிபியாவை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர். லிபியாவின் மேற்குப்பகுதி நகரான மிசுராட்டா நகரில் தாம் நிலை கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அந்நகரில் உள்ள இராணுவத்தினர் போராட்டத்துக்கு ஆதரவளித்து வருவதாக இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதாக எகிப்திய எல்லைக்கு 140 கிமீ தூரத்தில் உள்ள டொல்புரூக் நகரில் இருந்து அல்-ஜசீரா செய்தியாளர் தெரிவிக்கிறார். அங்கு இராணுவத்தினர் எவரும் இல்லை எனக் கூறப்படுகிறது. "நான் பார்த்த மட்டில், கிழக்கு லிபியா மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என செய்தியாளர் ஓடா அப்தெல்-ஹமீட் கூறுகிறார். லிபிய எல்லையில் எல்லப்பாதுகாப்புப் பணியில் எவரும் நிறுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். இதற்கிடையில், அல்-கடாபி இரு வார இடைவெளியின் பின்னர் செவ்வாயன்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். வீதிகளில் அரசுக்கெதிராகப் போராடுவோரை சுட்டுக்கொல்லுங்கள், கைது செய்யுங்கள் சரணடையும் வரை ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கியொடுக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டு உரையாற்றினார். இது எனது நாடு இதைக் காப்பாற்ற எனது இறுதி இரத்தம் இம்மண்ணில் விழும் வரை போராடுவேன். எந்த வெளிநாட்டுச் சக்திகளுக்கும் அடிபணியமாட்டேன் என்று அவர் கூறினார். வீடுகளிலுள்ளோரை எலி பிடிப்பதைப் போல் பிடியுங்கள். நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்களை நிராகரித்துள்ள லிபியத் தலைவர் வெளிநாட்டுச் செய்திச் சேவைகளை "நாய்'களென விமர்சித்துள்ளார். லிபியாவில் மக்கள் எழுச்சி, பலர் உயிரிழப்பு சனி, பெப்ரவரி 19, 2011 ககாரின் விண்ணுக்குச் செல்லுவதற்கு 20 நாட்களுக்கு முன்னர் வஸ்தோக் 3KA-3 விணுக்கு ஏவப்பட்டது. அதில் இவான் இவானவிச் என்ற பெயருடைய மனித உருப்படிமம் ஒன்றும் ஸ்வெஸ்டோச்கா (சிணிய விண்மீன்) என்ற பெயருடைய உயிருள்ள நாய் ஒன்றும் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இந்த விண்கலம் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது 2 மில்லியன் முதல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏலத்தில் விற்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. டிஸ்கவரி புறப்படும் காட்சியை விண்வெளி மையத்துக்குச் செல்லும் வீதியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நின்று கண்டு களித்தனர். 1984 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்ணுக்கு ஏவப்பட்ட டிஸ்கவரிக்கு இது 39வது பயணம் ஆகும். இப்பயணத்துடன் இது மொத்தம் 230 மில்லியன் கிமீ தூரம் பறந்திருக்கிறது. இந்த 39வது பயணம் எஸ்டிஎஸ்-133 (STS-133) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆஸ்டிரோயிட் எனப்படும் சிறுகோள்களை நோக்கி மனிதர்களை அனுப்புவது நாசாவின் அடுத்த திட்டங்களில் ஒன்றாகும். ஆளற்ற இந்த முழுமையான தானியங்கி விண்கலம் விண்வெளி நிலையத்தின் சுவெஸ்தா என்ற கலத்துடன் நேற்று வியாழக்கிழமை 1559 ஜிஎம்டி மணிக்கு இணைந்தது. இது விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களுக்கு எரிபொருள், உணவு, காற்று, மற்றும் தேவையான உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்றுள்ளது. யொகான்னசு கெப்லர் என்ற சரக்குக் கப்பல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Automated Transfer Vehicle (ATV) என்ற வகையில் இரண்டாவது தானியங்கிக் கப்பலாகும். ஜூல்ஸ் வேர்ன் என்ற முதலாவது விண்கப்பல் 2008 ஆம் ஆண்டில் தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. விண்வெளி நிலையம் தற்போது பூமியில் இருந்து 350 கிமீ உயரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த உயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்வது கெப்லரின் முக்கிய பணியாக இருக்கும். காலப்போக்கில் விண்வெளி நிலையம் பூமியில் விழும் சாத்தியக்கூறுகள் உள்ளது. விண்வெளி நிலையத்தின் தளத்தின் வேகத்தை அதிகரிக்க கெப்லர் கப்பல் சில வாரங்களுக்கு ஒரு முறை தனது அமுக்கியை உந்தச் செய்யும். டிஸ்கவரி விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது பெப்ரவரி 25, 2011 கடந்த வாரம் முழுவதும் தலைநகர் அல்ஜியர்சில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிக் குழுக்களின் கோரிக்கைகளில் அவசரகால நிலையைத் தளர்த்துவதும் ஒன்றாகும். அவசரகாலச் சட்டத்தை நீக்கியதநை அடுத்து உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளில் இராணுவத்தினரின் தலையீடு மிககுறைந்தளவே இருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக அரபுலக நாடுகளை உலுக்கிவரும் மக்கள் கிளர்ச்சிகள் தமது நாட்டிலும் உருவாவதைத் தவிர்க்கும் வகையிலேயே அரசு இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறது. எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கியமை ஒரு சிறு வெற்றி மட்டும் எனவே கருதப்படுகிறது. தலைநகர் அல்ஜியர்சில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டே இருக்கும் என உட்துறை அமைச்சர் டாகூ ஊல்ட் கபிலா தெரிவித்தார். அல்ஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயம் எப்போதும் இருந்து வருகின்றது என அவர் குறிப்பிட்டார். இதேவேளை அவசரகால நிலை முடிவுக்குக் கொண்டவரப்பட்டதை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனினும் அல்ஜீரிய அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இன்னும் இலங்கை வீழ்த்தவில்லை என்பதும் தொடர்கிறது. சயிட் அப்ரிடி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். உலகக்க்கிண்ணப் போட்டி ஒன்றில் பாக்கித்தான் அணியை இலங்கை இதுவரை தோற்கடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதத் தடை, மற்றும் சொத்துக்களை முடக்குவது போன்றவற்றுடன், முவம்மர் கடாபியை மனிதநேயத்திற்கு எதிராகச் செயற்பட்டமைக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது போன்ற அம்சங்கள் ஐநா உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் திரிப்பொலியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கடாபி, நாட்டின் கிழக்குப் பகுதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடாபிக்கு எதிரான இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் பணியில் எழுச்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடாபியின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்தெல்-ஜலீல் என்பவர் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது பதவியைத் துறந்துள்ளார். இராணுவம் மற்றும் பொதுத்துறை சார்ந்தவர்களைக் கொண்ட அமைப்பு அடுத்த மூன்று மாதத்துக்குள் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆலோசனைகள் எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐநாவுக்கான லிபியாவின் தூதர்கள் இந்த யோசனைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக இடம்பெற்றுவரும் மக்கள் எழுச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடாபியின் ஆதரவாளர்களால் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. லிபியாவில் மக்கள் எழுச்சி தொடர்கிறது, கிழக்கு நகரங்களின் கட்டுப்பாட்டை கடாபி இழந்தார் 23 பெப்ரவரி 2011 லிபியாவில் மக்கள் எழுச்சி, பலர் உயிரிழப்பு 19 பெப்ரவரி 2011 தலைநகர் கின்ஷாசாவில் உள்ள அரசுத்தலைவர் ஜோசப் கபிலாவின் மாளிகையை இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாக அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். கபிலாவின் மெய்க்காப்பாளர்கள் ஆயுதக்குழுவின் ஆறு பேரைச் சுட்டுக் கொன்றதாக பேச்சாளர் கூறினார். நேற்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1330 மணிக்கு ஆயுததாரிகளைக் கொண்ட குழு ஒன்று அரசுத்தலைவர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டது. தாக்குதல் நடந்த நேரம் கபிலா மாளிகையில் இருக்கவில்லை என தகவல் தொடர்புத்துறை அமைச்சர் லாம்பேர்ட் மெண்டே செய்தியாளர்களிடம் கூறினார். தாக்குதலில் பல ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டனர். 2001 ஆம் ஆண்டில் தனது தந்தை படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ஜோசப் கபிலா அரசுத்தலைவர் ஆனார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கனிமங்கள் அதிகமாகக் காணப்படும் இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 1998 ஆம் ஆண்டில் பெரும் உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது ஐந்து மில்லியன் மக்கள் வரை உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடம்பெற்ற மிகப் பெரும் மனித உயிரிழப்பு இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டின் பின்னர் போர் ஓய்ந்தது. ஆனாலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் அவ்வப்போது இராணுவத்தினருக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் இடையே சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. கபிலாவின் ஆலோசனைப்படி இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தல் ஒரு சுற்று மட்டுமே இடம்பெறும் என நாடாளுமன்றம் கடந்த சனவரி 15 ஆம் நாள் அன்று அறிவித்தது. இம்மாற்றத்தை அடுத்து 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளுடன் ஒருவர் அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இது குறித்த விசாரணைகளின் முடிவில் நீதிமன்றம் நிகழ்வு ஓர் திட்டமிடப்பட்ட நாசவேலை எனக் கடந்த வாரம் தீர்மானித்து 31 பேரை இத்தீயிடலுக்குக் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கியது. 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். அயோத்தியாவில் இருந்து இருந்து திரும்பிக்கொண்டிருந்த தொடருந்து வண்டியை கோத்ராவில் தடுத்து நிறுத்திய நபர்கள், பின்னர் அவ்வண்டியின் ஒரு பெட்டிக்குத் தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தொடருந்து அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று 2005ஆம் ஆண்டு இந்த எரிப்பு ஓர் தீ விபத்தே எனக் கண்டறிந்தது. ஆயினும் இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டதை குசராத் உயர்நீதிமன்றம் "சட்ட சம்மதமில்லாதது" மற்றும் "அரசியலமைப்பிற்கு புறம்பானது" எனவும் கூறித் தள்ளுபடி செய்தது. குசராத் அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு ஆணைக்குழு 2008 ஆம் ஆண்டு சதியொன்று தீட்டப்பட்டதாக நிறுவியது. விமானங்கள் இரண்டும் மோதுவதற்கு சற்று முன்னதாக விமானிகள் இருவரும் தத்தமது விமானங்களில் இருந்து வெளித்தள்ளும் கருவியைப் பயன்படுத்தி வெளியேறியுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிர்தப்பியுள்ளார். அவரும் கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக விமானப்படை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த விமானி லெப்டினன்ட் தரத்தைச் சேர்ந்த மொனாசு பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில் விபத்தின் போது தரையில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். கிபீர் விமானங்களில் ஒன்று வீதி ஒன்றில் உடைந்து வீழ்ந்துள்ளது. மற்றையது வீடு ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும். தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும். தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். தமிழக சட்டசபைக்கு மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும். புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளன. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7 மற்றும் மே 10 ஆகிய நாட்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அஸ்ஸாம் மாநிலத்தில், ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமிலும் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறும். முதல் முறையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். இந்தத் தேர்தலில், முதல் முறையாக, வாக்காளர்கள் புகார் தெரிவிக்க, அழைப்பு ஏற்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. பணிக்காக வீட்டில் இருந்து அமைச்சர் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அதிகாரி முகமது இக்பால் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு கிறித்தவ உறுப்பினராக பட்டி விளங்கினார். இவர் பாக்கித்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர். இதனால் இவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வந்தது. கடந்த சனவரி மாதத்தில், இச்சட்டத்தை எதிர்த்து வந்த பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் டசீர் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பாக்கித்தானில் இசுலாம் மதத்தை எதிர்ப்போரின் மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும். பாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் படுகொலை புதன், சனவரி 5, 2011 இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு மார்ச் 28லிருந்து ஏப்ரல் 11வரை நடைபெறவிருக்கிறது, 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவார்கள், அந்த நேரத்தில் பிரச்சாரம் தீவிரமாக இருக்கும், அதனால் மாணவர்களின் கவனம் சிதறும், தவிரவும் ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களும் தேர்வில்தான் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியிருக்கும், அதனால் மற்ற பணிகள் பாதிக்கப்படும் எனவே தேர்தல் தேதி மாற்றியமைக்கப்படவேண்டும் எனக் கோரியிருக்கிறார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில் 52% உருசியர்கள் கொர்பச்சோவ் இரசியாவுக்கு நல்லதை விடக் கெடுதலையே அதிகம் செய்துள்ளார் எனக் கூறியுள்ளனர். 11% வீதமானோர் மட்டுமே அவரை ஆதரித்துக் கருத்துக் கூறியிருந்தனர். மூன்றாவது தடவையாகவும் இரசிய அதிபராக பூட்டின் போட்டியிட முடிவு செய்ததை அவர் குறை கூறியுள்ளார். அரபு நாடுகளில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி போன்ற ஒன்றுக்கு இது வழிவகுக்கும் என அவர் எச்சரித்தார். இரசியப் புரட்சிக்கு முன் வழங்கப்பட்டு வந்த சென் அண்ட்ரூஸ் விருது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தனது பதவி நீக்கலுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள நோபல் பரிசு வென்றவரான முகமது யூனுஸ், தான் பதவியில் இருந்து அகற்றப்பட்டதையிட்டுக் கவலைப்படவில்லை என்றும், ஆனால் தான் "உரிய முறையில்" பதவி விலகவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தான் நிறுவிய கிராமின் வங்கியின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார். முகமது யூனுஸ் இளைப்பாறும் வயதை எட்டியும் பதவியில் இருப்பதாகவும், அத்தோடு அவர் முறையற்ற விதத்தில் பதவியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறி கடந்த புதன் அன்று வங்காளதேசத்தின் மத்திய வங்கி அவரைப் பணியில் இருந்து நீக்கியது. யூனுசிற்கு தற்போது 70 வயதாகிறது. வங்காளதேசத்தின் இளைப்பாறும் வயது 60 ஆகும். யூனுசின் பணி நீக்கலுக்கு எதிராக அவர் சமர்ப்பித்திருந்த மனு மீதான தீர்ப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். 2007 ஆம் ஆண்டில் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. பிரதமர் இராணுவ ஆட்சியின் போது வீட்டுக்காவலில் இருந்த போது யூனுஸ் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டார் என்பதில் ஹசீனாவுக்கும் யூனுசிற்கும் இடையில் பிரச்சனைகள் கிளம்பின. பேராசிரியர் யூனுஸ் கிராமின் வங்கியைத் தனது சொந்தச் சொத்தாகப் பாவிக்கிறார் என்றும், ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி அவர் பணம் கறக்கிறார் என்றும் கடந்த டிசம்பரில் ஷேக் ஹசீனா குற்றம் சாடியிருந்தார். வறிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும், அதன் நிறுவனர் யூனுசிற்கும் 2006ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பணம் திசை திருப்பப்பட்டதை வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மறுக்கிறது டிசம்பர் 5, 2011 செய்மதி புறப்படுவதற்கு முன்னர் எவ்வித வழுவும் இருக்கவில்லை என நாசா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனாலும் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இழுவைக் குறைப்பமைவு (fairing) எனப்படும் விலகல் இடம்பெறவில்லை கோள்ப்பாதையில் செலுத்த எம்மால் முடியவில்லை. செய்மதியும், அதனைக் கொண்டு சென்ற ஏவுகணையும் பசிபிக் கடலின் தென்பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் வீழ்ந்திருக்க வேண்டும் என நம்புகிறோம் என அவர் கூறினார். இந்த செய்மதி கடந்த பெப்ரவரி 23 இல் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனாலும் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் அவதானிக்கப்பட்ட ஒரு வழுவினால் அது புறப்படுவது தாமதிக்கப்பட்டது. 528 கிகி எடையுள்ள குளோரி இரண்டு முக்கிய உபகரணங்களைக் கொண்டு சென்றது. இது பூமியில் இருந்து 630 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வர இருந்தது. பின்னர் இது நசாவினால் அனுப்பப்பட்ட "A-Train" என்ற புவி அவதான திட்ட செய்மதிகளுடன் இணைவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் ஏற்கனவே அக்குவா (Aqua கிளௌட்சாட் (Cloudsat கலிப்சோ (Calipso பாரசோல் (Parasol அவுரா (Aura) என ஐந்து செய்மதிகள் இயங்குகின்றன. 1978 ஆம் ஆண்டு மே மாதத்தில் சூசன் பியர் என்பவர் தில்லியில் உள்ள அக்பர் விடுதியில் அழுக்கடைந்த தரையில் சறுக்கி விழுந்து தலையிலும் முதுகுப் புறத்திலும் காயம் அடைந்தார். அக்பர் விடுதி இந்தியச் சுற்றுலா வளர்ச்சிப்பணி நிறுவனத்துக்குச் சொந்தமான அரசு விடுதியாகும். "இது எமக்கு மிக நீண்டதொரு போராட்டமாகவும், சலிப்படைந்ததாகவும் இருந்தது. இந்தத் தீர்ப்பினால் இப்போது எமக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது என சூசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தியாவில் வழங்கப்பட்ட மிகப்பெரும் இழப்பீட்டுத் தொகை இதுவெனக் கருதப்படுகிறது. இந்தியச் சுற்றுலா வளர்ச்சிப்பணி நிறுவனம் இவ்விடுதியின் நீச்சல் தடாகத்தை சிறந்த முறையில் பராமரிக்க வில்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்திய நீதிமன்றகளில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க மிக நீண்ட காலம் எடுக்கப்படுகிறது. 10 மில்லியன் வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது. குழு ஏ இல் தற்போது பாக்கித்தான் அணி 3 ஆட்டங்கள் விளையாடி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இலங்கை அணி 4 ஆட்டங்கள் விளையாடி 5 புள்ளிகளும் ஆத்திரேலிய அணி 3 ஆட்டங்கள் ஆடி 5 புள்ளிகளும் பெற்றுள்ளன. நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களுக்கு 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, தமிழகத்தில் முதன்மையான அரசியல் கட்சிகளிடையே கூட்டணிக்கான பேச்சுக்கள் மிக வேகமாக நடைபெற்றன. காங்கிரஸ்- தி.மு.க. இடையே கூட்டணி குறித்துப் பேச, காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்த ஐவர் குழு -தி.மு.க. இடையே நடந்த பேச்சுக்களில் தொடக்கத்திலிருந்தே இழுபறி நீடித்தது. இருப்பினும் இது குறித்து தி.மு.க காங்கிரஸ் தலைவர்கள் எவரும் வெளிப்படையான எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இடையில் இந்த ஐவர் குழு தி.மு.க.-வுடன் அதிருப்தியடைந்து பேச்சுக்களில் இருந்து பின்வாங்கியது. எனவே, காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுக்களைத் தொடர்ந்தார். அவரும் பேச்சுக்களை முடித்துக்கொல்லாமலே தில்லி திரும்பினார். அலைக்கற்றை ஊழல் பிரச்சினை தி.மு.க.-விற்கு, தேர்தலைச் சந்திப்பதில் பெரும் சவாலாக இருக்கும் என்ற நிலையில், காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள்- அதுவும் தாங்கள் விரும்பும் இடங்கள் என்று கோரிக்கைகளை அதிகரித்துக் கொண்டே சென்றதால் கூட்டணிப் பேச்சு இழுபறியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும் கூட்டணிக்கான பேச்சு தொடர்கிறது; நல்ல முடிவு எட்டப்படும் என்றே இரு கட்சிகளின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை தர முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 63 இடங்களும், வேண்டிய தொகுதிகளும் தர வேண்டும் என கோரியது. நேற்று முன்தினம் முதல் முறையாக, தி.மு.க.-வின் தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்பதில் எந்த வித நியாயமும் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறைபட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை தி.மு.க. தலைமையகத்தில் நடந்த அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்த கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இக்கூட்டத்தின் இறுதியில் நடுவண் அமைச்சரவையிலிருந்து தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகவும், பிரச்சினைகள் அடிப்படையில் நடுவண் அரசிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் கருணாநிதி அறிவித்தார். நான் L. DORAI RAJ. நான் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். L. DORAI RAJ என்பதன் சுருக்கமாக Eldiaar ie, ldr என்று என் நண்பர்கள் அழைப்பதால் LDR என்ற பெயர் நிலைத்துவிட்டது. என்னுடைய முதன்மையான பொதுப் பணிகளில் தமிழைத் தூய்மையானதாக' மாற்ற வேண்டும் என்பது ஒரு இன்றியமையாத பணியாகும். இதற்கு மேல் அறிவே ஆற்றல்' என்பது என்னுடைய தத்துவம். அறிவு, கிழக்கத்திய மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, நமக்கும் சொந்தமானது ஆகும்; எனவே, நாமும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையும், ஒவ்வொரு நிலையிலும் துல்லியமாக, மிகத்துல்லியமாக, மிக மிகத்துல்லியமாக இருக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையும் எனக்கு மிகவும் இன்றியமையாதனவாகும். கீழ்க் கண்டவை என்னுடைய தொடர்பு எண்கள்: இவ்வாய்வு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், பூமியில் மட்டுமல்லாமல் பேரண்டத்தில் உயிரினங்கள் பரவலாக வாழ்வதும், சூரிய மண்டலத்தில் உலாவும் வால்வெள்ளி, நிலாக்கள் மற்றும் விண்பொருட்களில் இருந்து பூமிக்கு உயிரினம் வந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. நாசா வானியலாளர் ரிச்சார்ட் ஊவர் என்பவரின் இவ்வாய்வு பற்றிய அறிக்கை சென்ற வெள்ளிக்கிழமை அண்டவியல் ஆய்வேட்டில் (Journal of Cosmology) வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர்கள் உண்மையில் வெளியுலக உயிரா என்பது முழுமையாக நிரூபிக்க முடியாததெனிலும் இது ஒரு முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது. மிகவும் அரிதான சிஐ1 சார்பனேசசு கொண்ட்ரைட்ஸ் (CI1 carbonaceous chondrites) என அழைக்கப்படும் விண்வீழ்கற்கள் (meteorites) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வகையான ஒன்பது விண்வீழ்கற்கள் பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதர அறிவியலாளர்கள் இது பற்றிய மேலதிக ஆய்வுகளும் ஆழ விசாரணைகளும் தேவை எனக் கூறி உள்ளனர் இவ்வாறான அறிக்கைகள் முன்னரும் வெளிவந்துள்ளது என நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தின் வானுயிரியலாளர் டேவிட் மொராயசு தெரிவித்தார் இது ஒரு அசாதாரண ஆய்வு முடிவு. இவ்வாறான முடிவுகளுக்கு உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகளை எதிர்பார்க்கிறேன் என்றார் அவர். இதற்குக் காரணமாக காங்கிரஸ், கூட்டணிப் பேச்சுக்களில் தி.மு.க.விற்கு அதிக நிர்பந்தங்களை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. எனவே, தி.மு.க.வைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதிமாறன் ஆகியோரும், இணை அமைச்சர்கள் நெப்போலியன், பழனி மாணிக்கம், காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன் ஆகியயோரும் இன்று திங்கள்கிழமை தங்களது பதவி விலகுதலுக்கான கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிப்பார்கள் என்று தி.மு.க.வால் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இவ்வமைச்சர்கள் அனைவரும் இன்று காலை தில்லி சென்றனர். இதற்கிடையே நடுவண் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகும் கடிதம் அளித்தலை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும் காங்கிரஸ்-தி.மு.க. இடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க இன்னொருமுறை பேச்சு நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாயின. எனவே தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகுவது இன்று மாலை வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று மாலைக்குள் எந்த முடிவையும் காங்கிரசால் எட்ட முடியவில்லை. இந்நிலையில், பிரணாப் முகர்ஜி இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு இருமுறை பேசியதாகவும், காங்கிரசின் முடிவைத் தெரிவிக்க இன்னும் ஒரு நாள் அவகாசம் கேட்டதாகவும், தமிழகத்தின் துணை முதல்வர் சுடாலின் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். எனவே தி.மு.க. அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற முடிவு மார்ச் 6, 2011 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கடந்த டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அலசானி ஓட்டாரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், குபாக்போ தனது பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். இதனை அடுத்து அங்கு இரு அணியினருக்கும் இடையே கடும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. சென்ற வாரம் இரண்டு சிறிய நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று டொலேப்புலு என்ற மூன்றாவது நகரையும் கைப்பற்றியுள்ளனர். கொக்கோ ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் ஐவரி கோஸ்ட்டில் உள்நாட்டுப் போர் உருவாகும் ஆபத்து உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாட்டின் கொக்கோ ஏற்றுமதி மற்றும் உற்பத்தி முழுவதையும் அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசுத்தலைவர் குபாக்போ உத்தரவிட்டுள்ளார். கொக்கோ உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு அனைத்தயும் இனிமேல் அரசே மேற்கொள்ளும் என அரசுத் தொலைக்காட்சி நேற்று அறிவித்தது. உலகத் தேவைக்கென 40 விழுக்காடு கொக்கோ ஐவரி கோஸ்டில் இருந்தே ஏற்றுமதியாகிறது. இதுவரை காலமும் இதன் கட்டுப்பாடு முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் வசம் இருந்து வந்தன. குபாக்போவுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக கொக்கோ ஏற்றுமதிக்கு தற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும் என ஓட்டாரா பல்தேசியக் கம்பனிகளுக்கு விடுத்திருந்தார். 475,345 தொன்கள் கொக்கோ ஏற்றுமதிக்காக அவரி கோஸ்ட் துறைமுகங்களில் தேன்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 300,000 ஐவரியர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள லைபீரியாவுக்குச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் பெரும் மக்கள் போராட்டத்தின் பின்னர் கிர்கிஸ்தானின் குர்மான்பெக் பாக்கியெவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஒட்டுன்பாயெவா கடந்த சூன் மாதத்தில் நடந்த பொது வாக்கெடுப்பை அடுத்து நாட்டின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிவித்த ஒட்டுன்பாயெவா மத்திய ஆசிய நாடுகளில் முதல் தடவையாக மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையைப் பெறுகிறார். 2012 ஆம் ஆண்டில் நாட்டில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறவிருக்கிறது. விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய திருமதி கிளிண்டன் மத்திய ஆசிய நாடொன்றை ஆளும் ஒட்டுன்பாயெவாவின் பெரும் துணிச்சல், மற்றும் தலைமைத்துவம் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது எனக் குறிப்பிட்டார். துணிச்சலுள்ள பெண்களுக்கான விருது 2007 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 27 நாடுகளில் இருந்து மொத்தம் 36 பெண்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டில் இரத்தம் சிந்திய உள்நாட்டுக் கலவரத்துக்கு ஒட்டுன்பாயெவா பொறுப்பாக இருந்தவர் என தஜிபாயெவா குற்றம் சாட்டியுள்ளார். கிர்கிஸ்தானின் தெற்கில் கிர்கீசுகளுக்கும் உஸ்பெக்குகளுக்கும் இடையில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 400 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆங்கசு என்ற பிரதேசத்தில் உள்ள கிரிமுயர் என்ற நகரில் உடைந்த கற்பாறை ஒன்றின் கீழே இந்தச் சாடிகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதைகலங்களும் 4,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வகையான கலங்கள் வெண்கலக் காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இக்கலங்களில் ஒன்று 4 அங்குல விட்டமுடையதென்றும், மற்றையது 8 அங் எனவும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர். "வெண்கலக்காலத்தில் இறந்தவர்கள் விறகுகளைக் கொண்ட அடுக்குகளில் வைத்து எரிக்கப்பட்டு பின்னர் அவர்களின் எலும்புத்துண்டுகள் சேகரிக்கப்பட்டுஇவ்வாறான சாடிகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன என மசெல்பரோவைச் சேர்ந்த தொல்லியலாளர் மெலனி ஜோன்சன் தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட கலங்களில் பெருமளவு எலும்புத் துண்டுகள் காணப்பட்டதாகவும், இவற்றைக் கொண்டு அந்த எலும்புகளுக்குரியவரின் பால், வயது, அவர்கள் எவ்வகையான நோய்களால் பாதிக்கப்பட்டனர் போன்ற விபரங்களைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஜாவியா எனும் நகரின் தெற்கே அமைந்துள்ள அல் அல்ஜகுரா எனும் ஊரில் உள்ள தடை முகாம் ஒன்றில் வைத்து கைது செய்து அழைத்து சென்றிருக்கிறார்கள். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் 21 மணித்தியாலங்கள் இந்தச் சித்திரவதை நிகழ்திருக்கிறது. இதுபோன்று மேலும் பலர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். இறுதியில் சுமார் 20 நபர்களை வாகனம் ஒன்றில் அடைத்து ஜாவியாவில் உள்ள வெளிநாடு உளவுத்துறை அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏராளமானோர் கைகள் கட்டப்பட்டு அழுதவண்ணம் இருந்திருக்கின்றனர். பின்னர் ஒவ்வொருவராக சுவற்றின் பக்கம் நிற்கவைத்து கழுத்துக்கருகில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கின்றனர். இராணுவ வீரர் ஒருவர், பிபிசி செய்தியாளர் கிரிஸ் காதுக்கருகில் வைத்து துப்பாக்கியால் ஒருமுறை சுட்டும் இருந்திருக்கிறான். இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பதிலெடுத்தாடிய சிம்பாப்வே அணி 39 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 139 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. சிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பிரண்டன் டைலர், சக்காபுவா ஆரம்ப ஜோடி 116 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டைலர் 72 பந்துகளில் ஒரு சிக்சர், 9 எல்லைகள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றார். மறுபுறத்தில் சக்காபுவா 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து வந்த ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். பந்துவீச்சில் டில்சான் 4 விக்கெட்டுகளையும் முரளிதரன் 3 விக்கெட்டுக்களையும் மத்தியூஸ் 2 விக்கெட்டுக்களையும் பெரேரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியில் 139 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டி குழு ஏ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக டில்சான் தெரிவானார். நிலநடுக்கத்தை பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன. ஆழிப்பேரலைக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதுடன் வாகனங்களும் அலைகளில் அடித்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் டோக்கியோவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். உணவு விடிதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹவாய் தீவுகள், தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வடக்கு மரியானாஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இயங்கிவருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளமைக்கு தமிழகக் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வியளித்த பிரதமர் டி.எம். ஜயரத்ன. அந்த விடுதலைப்புலிகள் முகாம்கள் குறித்த கருத்து தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்று கூறினார். இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு வன்மையாக மறுத்திருந்தது. தமிழகக் காவல் துறையும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன நாடாளுமன்றத்தில் புதன் கிழமையன்று தெரிவித்திருந்தார். இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் தமிழகத்தில் பயிற்சி முகாம்களை நிறுவப்பட்டுள்ளதாக ஜயரத்ன குற்றம்சாட்டியிருந்தார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து இலங்கையும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதில் இந்திய அரசாங்கத்துக்கு சம்பந்தமிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டவில்லை. அவரது புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி லத்திகா சரண் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீசின் புலனாய்வுத் துறை விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இல்லையென இந்திய அரசு தெரிவித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அதே நேரம் முகாம் தொடர்பிலேயே விவாதம். இங்கு முகாமை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு விடுதலைப் புலிகள் உள்ளனர். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. இந்தியப் புலனாய்வுத் துறையே கூறுகின்றது என வீடமைப்பு மற்றும் பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர்கள் சந்திப்பிப்பொன்றில் கூறியுள்ளார். அணுமின் நிலையத்துக்குக் கிட்டவாக வசித்து வந்த ஏறத்தாழ 170,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். நிலையத்துக்கு சுற்றுவட்டத்தில் கதிரியக்க அளவு அதிகரித்துள்ளது என இந்நிலையத்தை இயக்கும் டெப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசுப் பேச்சாளர் யூக்கியோ எடானோ அணு உலை உருகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். அணு உலையைக் குளிரப்படுத்துவதற்காக பணியாளர்கள் அதற்குள் கடல் நீரை இறைக்கும் போது இவ்வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் உலோகக் கூடு மட்டும்தான் தற்போது நின்று கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் இதுவரை 1600 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரக்கணகானோர் காணாமல் போயுள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. "1960களின் முற்பகுதியில் இருந்து திபெத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தலைவராக இருக்க வேன்டும் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறியிருந்தேன். இதனைச் செயற்படுத்த வேண்டிய சரியான தருணம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது என வடக்கு இந்தியாவில் தரம்சாலா நகரில் நாடுகடந்த திபெத்திய அரசின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார். 1959 இல் நடைபெற்ற திபெத் கிளர்ச்சியின் நினைவுதினத்தை முன்னிட்டு இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் நாடுகடந்த திபெத்திய நாடாளுமன்றத்தின் கூட்டம் கூடும் போது தனது அரசியல் அதிகாரங்களை இல்லாமல் ஆக்கும் வகையாக அரசியலமைப்புக்குத் திருத்தம் கொன்டு வர இருப்பதாக அவர் தெரிவித்தார். 1959 ஆம் ஆண்டில் சீன ஆட்சிக்கெதிராக இடம்பெற்ற கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து தலாய்லாமா தனது ஆதரவாளர்களுடன் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார். சீனா திபெத்தை தனது ஆட்சிப் பகுதி என அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திபெத்தியர்கள் பல நூற்றாண்டுகளாக இமாலயப் பகுதி தனி நாடாகவே இருந்து வந்துள்ளது எனவும் 1950களில் சீனா அதனை ஆக்கிரமித்தது எனவும் கூறி வருகின்றனர். அலி அசன் அல் சபார் என்ற இந்த படப்பிடிப்பாளர் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு வாகனம் ஒன்றில் பெங்காசி திரும்பும் வழியில் இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் அலி அசன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமிரு செய்தியாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்றும் இந்நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளளனர். இறந்தவர் 24 வயதுள்ள தோஷா தாக்கர் எனக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இவர் சிட்னியில் உள்ள கல்லூரி ஒன்றில் கடந்த மூன்றாண்டுகளாகக் கணக்கியல் துறையில் படித்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தோஷா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கைப்பெட்டியில் வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்கொலை தொடர்பாக டேனியல் ஸ்டானி-ரெஜினால்ட் (19) என்ற நபர் கைது செய்யப்பட்டு, பேர்வுட் நகர நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக நிறுத்தப்பட்டார் இலங்கை வம்சாவழி ஆத்திரேலியரான இந்த நபர் கொலை செய்யப்பட்ட தோஷா வசித்து வந்த விடுதியிலேயே வேறொரு அறையில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாள் காலையில் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் வெளியில் சென்றிருந்த வேளையில் இந்தக் குற்றத்தை அவர் செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்த உடலை அவர் துண்டு துண்டாக வெட்டி கைப்பெட்டிக்குள் இட்டு கால்வாயில் எறிந்துள்ளார். இவ்வழக்குப் பற்றி காவல்துறைப் பேச்சாளர் பமெலா யங் கருத்துத் தெரிவிக்கையில், இப்பெண்ணுக்கும் குற்றவாளிக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை எனத் தெரிவித்தார். இவ்வழக்கு மீண்டும் மே மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழ்விக்கிப்பீடியா மீடியாவிக்கி:மோனோபுக்கில் தமிழ் தட்டச்சு கருவி நிரல்கள் மட்டுமே இருப்பதால் அப்படியே இங்கு போட்டுக்கொள்ளலாம். அங்கு ஏதாவது மாற்றங்கள், வழுக்கள் சரிசெய்யப்பட்டால் இங்கும் கிடைக்கும் மகமது இசோபு முன்னர் நடந்த இரண்டு தேர்தல்களில் கடந்த ஆண்டில் இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் மமடூ தாஞ்சாவினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். இம்முறை தாஞ்சா போட்டியிடவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் செய்னி ஊமரூ 42 வீத வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். தேர்தலை அடுத்து நாட்டில் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக சனநாயகக் கட்சித் தலைவர் இசோபு கடந்த சனவரியில் நடந்த முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தார். ஏப்ரல் மாதத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவரிடம் ஆட்சியை ஒப்படைப்போம் எனக் கூறிய இரானுவத்தினர் தாம் எக்கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளாக அரசுத் தலைவராக இருந்த தாஞ்சா தனது பதவிக்காலத்தை நீடிக்க முயன்றபோது கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் தற்போது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனங்களாகும். ஆனாலும் அங்கு யுரேனியக் கனிமம் அதிகமாக உள்ளதால், கோடிக்கணக்கான் டாலர்கள் அங்கு முதலீடு செய்யப்படுகிறது. உலகின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றான நைஜர் 1960 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதில் இருந்து பல முறை இராணுவ ஆட்சிக் கலைப்புகளைக் கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அல்-கைடா தீவிரவாதிகள் இங்கு வெளிநாட்டினரைக் கடத்தும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜரில் இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் கைது விக்கிசெய்தியில் இருந்து, வெள்ளி, பெப்ரவரி 19, 2010 பல தசாப்தங்களாக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இச்சோதனை குறித்த ஆவணங்கள் கடந்த ஆண்டில் வெலெஸ்லி கல்லூரிப் பேராசிரியர் சூசன் ரெவெர்பி என்ற மருத்துவ வரலாற்றாளரால் வெளியிடப்பட்டது. 1946 முதல் 1948 வரையான காலப்பகுதியில் அமெரிக்க அறிவியலாளர்களால் குவாத்தமாலாவில் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நாளைய குவாத்தமாலா அரசு இச்சோதனைகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது என பேராசிரியை ரெவெர்பி தெரிவித்தார். மருத்துவத் தாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்கள் மூலம் நோய்க்கிருமிகள் சிறைக்கைதிகளுக்குச் செலுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சிபிலிசு நோய் தொற்றிய விபச்சாரிகளுடன் உறவு கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இச்சோதனைகள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல் என தற்போதைய குவாத்தமாலா அரசுத்தலைவர் அல்வேரோ கொலொம் தெரிவித்துள்ளார். மியாகி என்ற இடத்தில் மட்டும் 2,000 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒரு நகரத்தில் மட்டும் மொத்த மக்கள்தொகையான 17,000 பேரில் அரைவாசிப்பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சின்னாபின்னமாகியிருக்கும் கரையோர நகரங்களில் சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணியை மீட்புப்பணியாளர்களின் உதவியுடன் தீவிரப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட 350,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மூன்றாவது நாளாக குடிநீர், உணவு, மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் வாடிக் கொண்டிருக்கும் வட,கிழக்குக் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் குளிரினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பொருட்கள் இன்னரும் சீரான முறையில் கிடைக்கவில்லை என்று கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இவாத்தேயிலுள்ள அரச அதிகாரியான ஹச்சினி ஷட்டோ கூறியுள்ளார். எமக்குத் தேவையானவற்றில் 10 சதவீதமானவற்றையே நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆனால்,நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சகலருமே துன்பப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், குளிரூட்டி செயலிழந்த காரணத்தால் வெப்பநிலை அதிகரித்து புக்குசீமாவில் 2வது அணு உலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, அணு உலைகள் உருகும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும், அணுக்கதிர் வீச்சு அளவு மனித உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் சப்பானிய அரசு முதல் முறையாக உறுதி செய்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சப்பானிய அணுமின் நிலையத்தில் வெடிப்பு மார்ச் 13, 2011 தேர்தல் மோசடிகள், வன்முறைகள் என்பவற்றைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலகம் கூறியது. 33 கலக மடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று அரலகன்வில என்னும் இடத்தில் தேர்தல் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது இன்று காலை நடத்தப்பட்ட கிரனைட் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாக அரலகன்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் காரணமாக 301 உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இதில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து யாழ்ப்பாணம் உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது. இந்தப் பத்து சபைகளுக்கும் 96 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபை பிரிவுகளில் கண்ணிவெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல், அங்கு மீள்குடியேற்றம் நடைபெறாத காரணத்தினால் இந்த சபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேச சபைக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால், அந்த சபைக்குரிய தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு பிரதேச சபைக்கான தேர்தலே நடைபெறுகிறது. உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு சனவரி 28, 2011 தொலைத் தொடர்புத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் அலைக்கற்றை ஊழலில் இவரும் நடுவண் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டார். ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ஆ. ராசா அமைச்சான பின்னரே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் வீட்டிலிருந்து 4 கடிதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று அக்கடிதங்களில் பாட்சா எழுதியுள்ளார். பட்டதாரியான சாதிக் பாட்சா தனது சொந்த ஊரில் துணிமணிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் வீட்டு மனைகள் வாங்கல், விற்றல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரின் தற்கொலையால் ஸ்பெக்டரம் ஊழல் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்று நடுவண் புலனாய்வு பணியகம் கூறியுள்ளது. மெசஞ்சர் விண்கலம் தற்போது சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 46 மில். கிமீ தூரத்திலும், பூமியில் இருந்து 155 மில். கிமீ தூரத்திலும் உள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் இவ்விண்கலத்தில் இருந்து வியக்கத்தக்க ஆய்வு முடிவுகளை எதிர்பார்ப்பதாக இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான சோன் சொலமன் தெரிவித்தார். மெசஞ்சர் விண்கலம் புதனின் மேற்பரப்புக்கு கிட்டத்தட்ட 200 கிமீ கிட்டவாக சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள ஏழு ஆய்வு கருவிகளின் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுப் பின்னர் மேற்பரப்புக்கு அதிகூடிய தூரத்துக்கு (கிட்டத்தட்ட 15,000 கிமீ) வரும்போது அத்தகவல்களை பூமிக்கு அனுப்புவதே மெசஞ்சரின் திட்டமாக இருக்கும். மெசஞ்சர் விண்கலம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலத்துக்கு புதனின் சுற்றுப்பாதையில் தங்கியிருக்கும். அக்காலப்பகுதியில் அது புதனை 730 தடவைகள் சுற்றி வரும். நியூயார்க் நகரில் இடம்பெற்ற பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. லிபியாவில் "பொது மக்களையும், பொதுமக்கள் சார்ந்த பகுதிகளையும் பாதுகாப்பதற்காக ஆக்கிரமிப்பு தவிர்ந்த அனைத்து நடவடிக்கைகளையும்" மேற்கொள்ளுவதற்கு இந்த முடிவு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு அவையில் 10 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இரசியா, சீனா, இந்தியா, செருமனி, பிரேசில் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை அவையில் முன்வைத்தன. பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலெய்ன் ஜூப்பி இத்தீர்மானத்தை முன்வைத்து அவையில் உரையாற்றுகையில் போர்விரும்பிகளை [நாம்] அனுமதிக்கப்போவதில்லை, பொதுமக்களை நாம் நிர்க்கதியாக விடப்போவதில்லை என்றார். மேற்குலக நாடுகளால் லிபியாவின் மீது எந்நேரமும் வான் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐநாவின் இத்தீர்மானத்தை அடுத்து லிபியா ”உடனடியாகப் போர் நிறுத்தத்தை” இன்று அறிவித்துள்ளது. பொதுமக்கள், மற்றும் வெளிநாட்டினரைப் பாதுகாக்க நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம் என லிபிய வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா கூசா தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அனைத்து இராணுவத்தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படுகிறது என அவர் கூறினார். "ஆர்ப்பாட்டம் நடைபெறும் பெங்காசி நகர் மீது நாம் இன்று தாக்குதல் நடத்தப் போகிறோம். கிளர்ச்சியாளர்கள் மீது இரக்கமோ கருணையோ காட்டப்பட மாட்டாது என நேற்று லிபியத் தலைவர் கடாபி அறிவித்திருந்தார். ஐக்கிய நாடுகளின் வான்பறப்புத் தடை முடிவை அறிந்த பெங்காசி மக்கள் நேற்று மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு சபைகளையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் கைப்பற்றிக்கொண்டன. நாடு முழுவதிலும் 335 உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்ற போதிலும் 234 மன்றங்களுக்கான வாக்களிப்பே 7ஆயிரத்து 402 வாக்களிப்பு நிலையங்களில் வியாழனன்று இடம்பெற்றது. இவ்வாக்களிப்பில் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மார்ச் 17, 2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு சனவரி 28, 2011 அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. அதேபோல பொத்துவில் பிரதேச சபையில் போட்டியிட்டு ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற்றது. இதேவேளை, வடக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் நடந்த தேர்தலில் முசலி பிரதேச சபை தவிர்ந்த சகல சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 05 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி 05 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்கள் * மாந்தை மேற்கு பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி 07 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 04 ஆசனங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம் இலங்கை தமழரசுக் கட்சி 06 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 03 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 06 ஆசனங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி 01 ஆசனம் * வவுனியா தெற்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி 07 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 01 ஆசனம் * வெண்கலச் செட்டிக் குளம் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி 05 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்கள் * வவுனியா தெற்கு பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி 08 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 04 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 01 ஆசனம் * மாந்தை கிழக்கு பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்கள் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 06 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி 01 ஆசனம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 04 ஆசனங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 01 ஆசனம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 05 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் சுயேட்சைக் குழு (01 01 ஆசனம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 01 ஆசனம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 08 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 01 ஆசனம் இலங்கை தமிழரசுக் கட்சி 05 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 01 ஆசனம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 07 ஆசனங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி 03 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 01 ஆசனம் இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: ஆளும் கூட்டணி பெரு வெற்றி மார்ச் 19, 2011 இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மார்ச் 17, 2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு சனவரி 28, 2011 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க, மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவ நிலைகளில் இருந்து 110 இற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியுள்ளதாக பெண்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைநகர் திரிப்பொலி, மற்றும் மிஸ்ராட்டா நகரங்களின் மீது சீர்வேக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டதாகவும், 150 பேர் காயமடைந்ததாகவும் லிபியத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. தம் நாட்டைத் தாக்குவோர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தப்படும் என கேர்னல் கடாபி தெரிவித்துள்ளார். லிபியாவைக் காப்பதற்காக ஆயுதக்கிடங்குகளை பொது மக்களுக்குத் திறந்து விடப் போவதாக அவர் கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை கிரீனிச் நேரப்படி மாலை 1645 மணிக்கு முதலாவது ஏவுகணையை பிரெஞ்சு விமானம் ஒன்று லிபிய அரசுத் தளங்கள் மீது ஏவியது. இத்தாக்குதலில் பல இராணுவ வாகனங்கள் சேதமுற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்றைய தாக்குதல் ஆரம்பித்த சில நிமிட நேரத்தில் பிரெஞ்சு விமானம் ஒன்றைத் தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக லிபியத் தொலைக்காட்சி அறிவித்திருந்தது. ஆனாலும், இதனை பிரான்ஸ் மறுத்துள்ளது. தமது விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாகத் தமது நிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. லிபியாவில் வான்பறப்புத் தடைக்கு ஆதரவாக ஐநா வாக்களித்தது மார்ச் 18, 2011 தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுவதால் தமிழக, புதுவை சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மதிமுக எடுத்த முடிவை அக்கட்சியினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. கே. ரங்கராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். [[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 noinclude> பல தசாப்த கால உள்நாட்டுக் கலவரங்களை அடுத்து, வரும் சூலை மாதத்தில் தெற்கு சூடான் விடுதலை பெற இருக்கிறது. ஜெனரல் ஜோர்ஜ் ஆத்தர் கடந்த ஏப்ரலில் ஜொங்கிளெய் மாநிலத்தின் ஆளுநருக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததை அடுத்து அரசுக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தார். மாகாணத் தலைநகர் குவெட்டாவிற்கு அருகில் உள்ள இச்சுரங்கம் பாதுகாப்பற்றதென சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த எச்சரிக்க புறக்கணிக்கப்பட்டிருந்தது. "சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க நாம் முயன்று வருகிறோம். ஆனாலும், சுரங்கத்தினுள் ஒக்சிசன் பற்றக்குறை உள்ளதால், அவர்களை உயிருடன் மீட்பது கடினமாகவே இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கனிமப் பொருட்கள் பெருமளவு காணப்படுகிறது. இச்சுரங்கம் பாக்கித்தான் அரசுக்குச் சொந்தமானது, ஆனாலும் இது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. டிரான்ஸ் ஏர் கொங்கோ என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த உருசியத் தயாரிப்பு அண்டோனொவ் விமானம் நேற்று திங்கட்கிழமை தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது. பொயிண்ட்-நொயுரே நகரின் முவோ-முவோ மாவட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. விமானம் வீழ்வதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2010 சூன் மாதத்தில் ஆத்திரேலியாவின் தொழிலதிபர் கென் டால்பொட் மற்றும் 10 பேர் பயணம் செய்த விமானம் கொங்கோவின் வடமேற்கில் வீழ்ந்து நொறுங்கியதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். வவுனியா பம்பைமடு தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் இயங்கி வரும் இந்தப் பயிற்சி முகாமில் 2009 ஆம் ஆண்டு மே இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் பிலி இளைஞர்கள் பலர் தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆறு சகோதரர்களுடன் பிறந்த இவரது குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இவரது இரண்டு சகோதரிகள் தமது கணவன்மாரை இழந்திருந்தனர். இவர் புனர்வாழ்வு பெற்று வந்த முகாமில், 38 அடி ஆழமுடைய பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் கோடீசுவரரான ராஜரத்தினம் உட்தகவல் வணிக மோசடியில் ஈடுபட்டு 45 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றார் என அவர் மீது குற்றம் சாடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். புகழ் பெற்ற கெலொன் (Galleon) நிறுவனத்தின் உரிமையாளரான ராஜரத்தினம் (53) 2009 அக்டோபர் 16 ஆம் நாள் அமெரிக்கப் புலனாய்வுத்துறையால் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவரின் மீது உள்தகவல் வணிகம் செய்தாக 34பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் பின்னர் 100 மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க பங்குச் சந்தையில் முன்கூட்டியே தகவல்களை பெற்று, அதன் அடிப்படையில் பெரிய அளவில் சற்று வீழ்ச்சியுறும் நிறுவனங்களின் பங்கை கொள்வனவு செய்து, பின்னர் அதனை விற்பதில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்ததாகவே இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இலங்கையில் பிறந்தவரான ராஜ் ராஜரத்தினம், நியூயோர்க்கில் கெலோன் குழுமத்தை ஆரம்பித்து, அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். பன்னாட்டு நிறுவனங்களில் உயர்மட்டத்திலுள்ள நண்பர்கள், நெருங்கியவர்கள் மூலம் தகவல்களைப் பெற்று, அதன் மூலம் பிரபல நிறுவனங்களின் பங்குகளை, அதிக விலைக்கு விற்றும், குறைந்த விலைக்கு வாங்கியும் லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ராஜரத்தினத்தின் மிக நெருங்கிய நண்பரான ராஜிவ் கோயல் தனது நிறுவனத்தின் இரகசியங்களை வெளியுலகிற்குத் தெரிய வர சில நாட்களுக்கு முன்னர் அவருக்குக் கொடுத்ததாகத் தெரிவித்தார். 2008, மார்ச் 24 ஆம் நாள் உள்தகவல்களை அடிப்படையாக வைத்து 125,800 கிளியர்வயர் பங்குகளை ராஜரத்தினம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு நாட்களின் பின்னர் கிளியர்வயர் மற்றும் ஸ்பிரிண்ட் நெக்ஸ்டெல் நிறுவனங்களுக்கிடையே புதிய ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்கு இண்டெல் நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக மே 7 ஆம் நாள் அறிவித்தது இண்டெல் நிறுவனத்துக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டேன்" என கோயல் தனது வாக்குமூலத்தில் கூறினார். குச்மா அரசுத்தலைவராக இருந்தபோது அவரை விமரிசித்து வந்த கியோர்கி கொங்காத்சே 2000 ஆம் ஆண்டு செப்டம்பரில் கடத்தப்பட்டார். சில மாதங்களின் பின்னர் இவரது தலையில்லாத உடல் காடொன்றில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அரசைக் கண்டித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 1994 முதல் 2005 வரை ஆட்சியில் இருந்த குச்மா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குச்மாவைப் படுகொலை செய்வதற்கு உட்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்ஸ்கா பிராவ்தா (உக்ரைனிய உண்மை) என்ற இணையத்தளத்தை நடத்தி வந்த கொங்காத்சே குச்மாவின் அரசு ஊழல்களை தனது இணையத்தளம் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டில், உட்துறை அமைச்சைச் அதிகாரியான ஒலெக்சி புக்காச் என்பவர் இக்கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். தானே கொங்காத்சேயை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் பின்னர் தலையைக் கொய்து எறிந்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் மூவர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உட்துறை அமைச்சர் யூரி கிராவ்ச்சென்கோ இப்படுகொலையைச் செய்ய உத்தரவிட்டதாக அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இவர் தற்போது இறந்து விட்டார். இவர் 2005 ஆம் ஆண்டில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வெற்றி மூலம் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக பாக்கித்தான் ஆத்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது. பாக்கித்தானின் தேசிய நாளான நேற்று அதன் தலைவர் அபிரிடி அணியின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் எனது நாட்டுக்கு நாம் தந்த பெரும் பரிசு அனக் குறிப்பிட்டார். 1987 இல் உலகக்கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற ஆத்திரேலிய அணி அதன்பின் 1999, 2003, 2007 ஆம் ஆண்டுகளில் உலககிண்ணத்தை வென்றிருந்தது. அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் உலகக் கிண்ணப் போட்டியில் 5வது சதத்தைப் எடுத்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 30வது சதமும் ஆகும். நேற்று வியாழக்கிழமை கிரீனிச் நேரப்படி 1355 மணிக்கு தாய்லந்தின் சியாங் ராய் நகரில் இருந்து 110 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 800 கிமீ தெற்கே தாய் தலைநகர் பாங்கொக், மற்றும் வியட்நாமியத் தலைநகர் ஹனோய் நகரங்கள் வரை உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 130 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பர்மாவின் பான் தாடுவா, பான் லாயென் ஆகிய பிரதேசங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆழிப்பேரலை அபாயம் இல்லை என பசிபிக் சுனாமி அவதான நிலையம் அறிவித்துள்ளது. மறு தேர்தல் நடத்தப்படும் இடத்தில் பழமைவாதக் கட்சி மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அரசு அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே கருதப்படுகிறது. 308 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய நாடாளுமன்றத்தில் 143 உறுப்பினர்களைப் பழமைவாதக் கட்சி கொண்டுள்ளது. ஹார்ப்பர் இம்முறையும் பெரும்பான்மை பெறாவிடின் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தில் இடம்பெறவிருக்கும் தேர்தல் கடந்த 7 ஆண்டுகளில் கனடாவில் நடைபெறும் நான்காவது தேர்தல் ஆகும். இந்த உலகக்கிண்ண அரையிறுதிக்குள் இந்தியா இலங்கை, பாக்கித்தான் ஆகிய மூன்று தெற்காசிய அணிகள் நுழைந்துள்ளன. எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது. "118வது தனிமம் அட்டவணையின் கடைசித் தனிமம் அல்ல என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம் என அவர் கூறினார். கண்டுபிடிக்கப்படவிருக்கும் 119வது தனிமத்துக்கு யுனுனேனியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் இயல்புகள் பிரான்சியம் அல்லது சீசியத்தின் இயல்புகளை ஒத்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே பல தடவைகள் இத்தனிமத்தைத் தொகுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. யூனுநோக்டியம் என்ற 118வது தனிமம் 2006 அக்டோபரில் தூப்னாவில் தொகுக்கப்பட்டது. மொத்தம் 6 தனிமங்கள் இந்த ஆய்வு நிறுவனத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்நிறுவனம் தனது 55வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இன்று அதிகாலை உள்ளூர் நேரம் 1:30 மணிக்கு எதிரணியின் படைகள் சிர்தே நகருக்குள் பிரவேசித்ததாக எதிரணியினரின் தேசியக் கவுன்சிலின் பேச்சாளர் சம்சி அப்துல் மோலா அல்ஜசீரா செய்தியாளருக்குத் தெரிவித்தார். சிர்தே திரிப்பொலியில் இருந்து 280 மைல் கிழக்கே அமைந்துள்ளது. எனினும் சிர்தே கைப்பற்றப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என அல்ஜசீரா தெரிவிக்கிறது. சிர்தே இன்னும் அரசின் கைவசம் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அரிவித்துள்ளது. ஞாயிறன்று பெரும் எண்ணிக்கையான இராணுவ வாகனங்கள் சிதேயை விட்டு வெளியேறி தலைநகர் திரிப்பொலி நோக்கி நகர்ந்துள்லதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசு மற்றும் எதிர்ப்புப் படைகளிடையே கடும் சண்டை நிகழ்ந்து வருகின்றது. எண்ணெய் வள நகரான அஜ்தபியாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கிளர்ச்சியாளர்கள் பிரேகாவையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு உதவியாக நேட்டோ படைகள் வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மிஸ்ராடா நகரின் விமானப் படைத்தளத்தில் பிரெஞ்சுப் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் லிபியாவின் 5 விமானங்களும் 2 உலங்குவானூர்திகளும் அழித்தொழிக்கப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கூட்டுப்படைகளின் தாக்குதலில் இதுவரை 100 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இவரது தலைமையின் கீழ் ஆத்திரேலிய அணி 77 தேர்வுப் போட்டிகளில் 48 இல் வெற்றி பெற்றது. டிசம்பர் 2005 முதல் சனவரி 2008 வரை போட்டியிட்ட அனைத்து 16 போட்டிகளிலும் இவ்வணி வெற்றி பெற்றுள்ளது. 227 ஒரு நாள் போட்டிகளில் 163 இல் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2003 மற்றும் 2007 உலகக்கோப்பை வெற்றிகளும் அடங்கும். ஆயுதக் கிடங்கு அமைந்துள்ள ஜார் நகரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இசுலாமியத் தீவிரவாதிகளின் முற்றுகைக்குள்ளானது. இதனை அடுத்து அங்கு இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சண்டை மூண்டது. திங்களன்று ஆயுதக்கிடங்கில் வெடிப்பு நிகழ்ந்த போது அங்கு பெருமளவு ஆயுதங்கள் மற்று வெடிபொருட்களை பொதுமக்கள் சூறையாடுவதி ஈடுபட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். கடந்த சில வாரங்களாக ஏமனில் அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகக்கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன. நாட்டில் உள்ள ஸ்திரமற்ற நிலையை தீவிரவாதிகள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி வருவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆட வந்த குமார் சங்கக்கார, திலகரட்ன டில்சான் சோடி 120 ஓட்டங்களைப் பெற்றனர். சங்கக்கார 73 ஓட்டங்களுடனும் டில்சான் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மகேல ஜயவர்தன ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியுடன் சேர்த்து 6 தடவை உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி 6 தடவையும் தோல்வியைத் தழுவியது. உலகக் கிண்ண இறுதிப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெற்ற அணியுடன் கிண்ணத்தை வெல்வதற்காக இலங்கை மோதவிருக்கிறது. இதேவேளை முத்தையா முரளிதரன் இலங்கையில் விளையாடிய கடைசிப் பன்னாட்டுப் போட்டி என்பதால் அவர் நேற்றைய ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்க அமசமாகும். முதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீரட் கோலி (9) யுவராஜ் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தழந்தனர். டெண்டுல்கர் 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களுடனும் சகீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார். வகாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் வீழ்த்தினர். சிறுமியின் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு ஏறியதாகவும் மற்றவரின் முகத்தில் சூடு பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையைக் கடந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் கறுப்பினத்தவர்கள் என்றும் 14 முதல் 17 அகவைக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிட்னியில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வதியும் ஓபர்ன் நகரில் சிறீ மந்திர் என்ற இந்த இந்தியக் கோயில் அமைந்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இக்கோயிலே ஆத்திரேலியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட இந்துக் கோயில் எனத் தெரிவிக்கப்படுகிறது. சென்ற வாரம் இக்கோயிலுள் நுழைந்த முகமூடி அணிந்த 2 நபர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோயில் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துக்கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. இக்கோயில் முன்னரும் பல முறை இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. முன்னர் ஒரு தடவை பெற்றோல் குண்டு வீசப்பட்டது. கடந்த நவம்பரில் கோயிலின் இரண்டு சாளரங்கள் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டன. பல தடவைகள் முட்டைகள், கற்கள் இக்கோயிலின் மீது வீசப்பட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனாலும் காவல்துறையினர் இத்தொடர் தாக்குதல் நிகழ்வுகள் குறித்துப் பாராமுகமாக இருந்து வருவதாக இங்குள்ள இந்திய சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஐக்கிய நாடுகளினாலும், பல உலக நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட ஐவரி கோஸ்ட் தலைவர் அலசானி ஓட்டாராவுக்கு விசுவாசமான படைகள் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுக்கும் லோரெண்ட் குபாக்போவின் படைகள் மீது பெரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் அபிஜானில் உள்ள அரசுத்தலைவர் மாளிகையின் மீது ஓட்டாராவின் படைகள் தாக்குதல் நடத்தினர். நகரில் நிலவும் பதற்ற சூநிலையை அடுத்து நகரில் இருந்த 500 வெளிநாட்டவர்களை பிரெஞ்சு இரணுவத்தினர் பாதுகாப்பாக இராணுவ நிலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அபிஜானின் பன்னாட்டு விமான நிலையம் ஐக்கிய நாடுகளினதும், பிரெஞ்சு இராணுவத்தினரினதும் கட்டுப்பாட்டில் உள்ளது. லோரெண்ட் குபாக்போவுக்கு இது கடைசி மணித்துளிகள் என அங்குள்ள நிலை குறித்துக் கருத்துக்கூறிய பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த பல வாரங்களாக அரசுத்தலைவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது அரசு மாளிகையில் தங்கியுள்ளாரா எனவும் தெரியவில்லை. "க்பாக்போ ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிரார்கள். எனவே அவர் ஆட்சியில் இருந்து அகலப்போவதில்லை அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஐவரி கோஸ்டின் எல்லைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஓட்டாராவின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இரவுநேர ஊரடக்கும் அங்கு அமுலில் உள்ளதாக அது அறிவித்துள்ளது. நவம்பர் தேர்தலில் தோல்வியுற்ற குபாக்போ தனது பதவியை ஓட்டாராவுக்குத் தருவதற்கு மறுத்து வருகிறார். ஓட்டாராவின் படைகள் தற்போது நாட்டின் 80 வீதமான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வியாழனின் வளையங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய திர்வலைகள் சூமாக்கர்-லெவி 9 வால்வெள்ளி இக்கோளை 1994 ஆம் ஆண்டில் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்த இரு ஆய்வறிக்கைகள் சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. வளைந்த கூரைத் தகடு போன்ற வடிவமைப்பில் அலையியக்கம் போன்ற ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். இது பின்னர் குறைந்த கோணத்தில் ஒளியூட்டப்பட்ட போது கரிய மற்றும் வெளிச்சமான பட்டைகளை அவதானித்தனர். இவ்வலையியக்கம் சனிக் கோளின் சி வளையம் முழுவதும் ஆயிடக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பரந்து காணப்பட்டது. டீ வளையத்திலும் இது போன்ற வடிவம் அவதானிக்கப்பட்டது. இதேவேளையில், வியாழக் கிரகத்தில் இரண்டு வெவ்வேறு சுருளிகள் காணப்பட்டுள்ளன. இத்தோற்றப்பாடு வால் நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய சிதைவுகளினால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வால் நட்சத்திரம் வளையத்தில் மோதி அதனைச் சாய்வடையச் செய்துள்ளது. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச, இந்திய சனாதிபதி பிரதீபா பட்டேல், இந்தியப் பிரதமர் மன்மோன் சிங், நடிகர் ரஜனிகாந்த் உட்படப் பல பிரபலங்கள் மும்பை வாங்கடே அரங்கில் இன்றைய ஆட்டத்தைப் பார்க்கக் குழுமியிருந்தனர். மும்பைக் காவல்துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள், இந்திய மத்திய துணை இராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஒன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை, மராட்டிய மாநில மேலதிக பொலிஸ் ஆகியோர் வாங்காடே அரங்கப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 25 அகவையுடைய ரோனன் கேர் என்பவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் வடக்கு அயர்லாந்துக் காவல்துறையில் பணியில் இணைந்தார். ஓமா என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனத்தின் இருக்கையில் அமர்ந்த போது வாகனம் வெடித்துச் சிதறியது. நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை ஆயினும், குடியரசுக் கட்சியில் இருந்து வெளியேறியவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும் எனப் பரவலாக நம்பப்படுகிறது. இது போன்ற தாக்குதல்களை அவர்கள் முன்னரும் பல தடவைகள் நடத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இதே போன்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஏழு ஐக்கிய நாடுகள் ஊழியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மார்ச் 20 ஆம் தேதி புளோரிடாவைச் சேர்ந்த வெயின் சாப் என்பவர் "மனிதத்துக்கு எதிரான குற்றம்" எனக்கூறி புனித நூலை எரித்திருந்தார். எனினும், நடந்து முடிந்த தேர்தல் பன்னாட்டு சனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய இடம்பெறவில்லை என பன்னாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியின்மை, ஊடக சுதந்திரம் இல்லாமை போன்றவை காணப்பட்டதாக அவரக்ள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு ஆயத்தமாகத் தமக்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனாலும், எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளதாக அரசு ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாதிருந்தது. கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கும் வரை விபத்துக்கான காரணத்தை அறிவது முடியாது என ஏர்பஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. விமானத்தின் பதிவு நாடாக்களைத் தேடும் பணி நான்காவது தடவையாக சென்ற மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. விமானத்தின் சிதைவுகளைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்தாலும், அவற்றின் விபரங்களை வெளியிடவில்லை. பிரேசில் முதல் மேற்கு ஆப்பிரிக்கா வரையான பெருங்கடலின் 4,000 மீ ஆழப் நிலப்பகுதிகளில் சுழியோடிகள், மற்றும் தானியங்கிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத் தேடுதல் மூலம் 50 உடல்களும் விமானத்தின் பல பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. கடைசித் தேடுதல் மே 2010 இல் முடிவடைந்தது. 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இவ்விமான விபத்தில் உயிரிழந்தனர். 1999 ஆம் ஆண்டில் இருந்து இங்கு ஐநா அமைதிப் படை நிலை கொண்டுள்ளது. இங்குள்ள 19,000 ஐக்கிய நாடுகளின் படையினரின் பணி அடுத்த சூன் மாதத்தில் முடிவடைய இருக்கிறது. 1998 முதல் 2003 வரை இங்கு நடந்த உள்நாட்டுப் போரில் 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். நாட்டின் கிழக்கே இப்போது இராணுவ மற்றும் ஆயுதக்குழுக்களின் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் இங்கு அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன. திங்களன்று ஏவப்பட்ட இவ்விண்கலத்தில் சென்றுள்ள இரண்டு உருசியர்களும் ஒரு அமெரிக்கரும், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள ஒரு உருசியர், ஒரு அமெரிக்கர், மற்றும் ஒரு இத்தாலியருடன் வியாழக்கிழமை அன்று இணைந்து கொள்வர். உருசியர் அந்திரே பொரிசென்கோ (46 அலெக்சாண்டர் சமகுத்தியாயெவ் (40) ஆகியோர் முதல் தடவையாக விண்வெளிக்குச் செல்கிறார்கள். அமெரிக்கர் ரொன் கரன் (49) ஏற்கனவே 2008 ஆம் ஆண்டில் 13 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார். பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா இன்று காலமானார். திசம்பர் 10, 1952 இல் இலங்கையில் பிறந்த இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இவரின் தாய்மொழி மலையாளம். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ள சுஜாதா, கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்தமான் காதலி, விதி, அன்னக்கிளி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன. கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று ஏப்ரல் 6, 2011 சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார். ஏப்ரல் 8, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை ஏப்ரல் 9, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் ஏப்ரல் 9, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொச்சி ஏப்ரல் 10, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் டெல்லி ஏப்ரல் 10, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) கிங்ஸ் (எதிர்) பஞ்சாப் நவி மும்பை ஏப்ரல் 11, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் கொல்கத்தா ஏப்ரல் 12, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் ஜெய்பூர் ஏப்ரல் 12, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் பெங்களூர் ஏப்ரல் 13, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் மொகாலி ஏப்ரல் 13, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா நவி மும்பை ஏப்ரல் 14, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹைதராபாத் ஏப்ரல் 15, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெய்பூர் ஏப்ரல் 15, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா மும்பை ஏப்ரல் 16, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை ஏப்ரல் 16, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) கிங்ஸ் XI பஞ்சாப் ஹைதராபாத் ஏப்ரல் 17, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் நவி மும்பை ஏப்ரல் 17, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா ஏப்ரல் 18, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி ஏப்ரல் 19, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் டெல்லி ஏப்ரல் 19, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ஏப்ரல் 20, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) பூனே வாரியர்ஸ் மும்பை ஏப்ரல் 20, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா கொல்கத்தா ஏப்ரல் 21, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் மொகாலி ஏப்ரல் 22, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொல்கத்தா ஏப்ரல் 22, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை ஏப்ரல் 23, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) கிங்ஸ் XI பஞ்சாப் டெல்லி ஏப்ரல் 24, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் ஏப்ரல் 24, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஜெய்பூர் ஏப்ரல் 25, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) பூனே வாரியர்ஸ் சென்னை ஏப்ரல் 26, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டெல்லி ஏப்ரல் 27, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் நவி மும்பை ஏப்ரல் 27, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் கொச்சி ஏப்ரல் 28, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி ஏப்ரல் 29, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் ஜெய்பூர் ஏப்ரல் 29, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) பூனே வாரியர்ஸ் பெங்களூர் ஏப்ரல் 30, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் கொச்சி ஏப்ரல் 30, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) கிங்ஸ் XI பஞ்சாப் கொல்கத்தா மே 1, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) பூனே வாரியர்ஸ் ஜெய்பூர் மே 1, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் சென்னை மே 2, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) கிங்ஸ் XI பஞ்சாப் மும்பை மே 2, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா டெல்லி மே 3, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹைதராபாத் மே 4, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை மே 4, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் நவி மும்பை மே 5, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொச்சி மே 5, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் ஹைதராபாத் மே 6, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) கிங்ஸ் XI பஞ்சாப் பெங்களூர் மே 7, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மே 7, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை மே 8, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா பெங்களூர் மே 8, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) பூனே வாரியர்ஸ் மொகாலி மே 9, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெய்பூர் மே 10, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் (எதிர்) பூனே வாரியர்ஸ் ஹைதராபாத் மே 10, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் மொகாலி மே 11, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜெய்பூர் மே 12, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் சென்னை மே 13, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) கிங்ஸ் XI பஞ்சாப் இன்டோர் மே 14, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் மே 14, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் மும்பை மே 15, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) டெல்லி டேர்டெவில்ஸ் தரம்சாலா மே 15, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் இன்டோர் மே 16, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் நவி மும்பை மே 17, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தரம்சாலா மே 18, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் (எதிர்) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா சென்னை மே 19, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் (எதிர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நவி மும்பை மே 20, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் (எதிர்) ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை மே 21, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் (எதிர்) டெக்கன் சார்ஜர்ஸ் தரம்சாலா மே 21, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் (எதிர்) பூனே வாரியர்ஸ் டெல்லி மே 22, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (எதிர்) சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் மே 22, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எதிர்) மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா மே 24, இரவு 8 மணி: முதல் தேர்வு அணி (எதிர்) இரண்டாவது தேர்வு அணி மும்பை மே 25, இரவு 8 மணி: 3வது இடம் பிடித்த அணி (எதிர்) 4வது இடம் பிடித்த அணி மும்பை மே 27, இரவு 8 மணி: எலிமினேட்டரில் வென்ற அணி (எதிர்) குவாலிபையர் ஒன்றில் தோற்ற அணி சென்னை மே 28, இரவு 8 மணி: குவாலிபையர் ஒன்றில் வென்ற அணி (எதிர்) குவாலிபையர் 2ல் வென்ற அணி சென்னை தனது ஆறு வயதில் தாயார் அபயாம்பாளிடம் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்ட கல்பகம் சுவாமிநாதன் "தஞ்சாவூர் பாணியில்" வீணை வாசிப்பதில் கை தேர்ந்தவர். இவர் கல்லிடைக்குறிச்சி ஆனந்தகிருஷ்ண ஐயர், பி. சாம்பமூர்த்தி போன்ற கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார். ஐம்பதுகளில் டைகர் வரதாச்சாரியாரினால் கலாசேத்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். பின்னர் 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இணைந்து 1980 இல் பேராசிரியையாக இளைப்பாறினார். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, இந்தியக் குடியரசுத் தலைவர் விருது, சங்கீத கலை ஆச்சாரியார் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. துப்பாக்கிதாரி 23 வயதான முன்னாள் மாணவர் என இனங் காணப்பட்டுள்ளார். இத்தகைய நிகழ்வு பிரேசில் நாட்டில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஒலிவெய்ரா இந்த நபர் பாடசாலை ஆரம்பித்த போது தான் பாடசாலையில் கற்பிப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்து உள் நுழைந்துள்ளார். பின்னர் ஒரு வகுப்பறையினுள் நுழைந்து அங்கு சரமாரியாகச் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த சில மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். "காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்திராவிட்டால் அங்கு மேலும் பலர் இறந்திருப்பர் எனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொலைகாரனின் உடையில் கடிதம் ஒன்று இருந்ததாகவும், தான் தற்கொலைத் தாக்குதலுக்கே அங்கு வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அண்டை வீட்டுக் காரர் எவர் என்பதைக் கூட அறிந்து கொள்வது அவசியமற்றதாக நினைந்து வாழும் தற்போதைய வாழும் நிலை மிகவும் வருந்தத் தக்க நடைமுறை. அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிர் வீட்டுக்காரர் எதிரில் வந்தாலும் ஒரு புன் சிரிப்பைக் கூட உதிர்க்க மனமின்றி புறம் பார்த்து கடந்து செல்லும் மனித இயல்பு எங்கும் காணப்படுகிறது. அவ்வாறெனில் அதே குடியிருப்பில் வேறு தளங்களின் குடியிருப்போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை. இந்த நடைமுறை அடுக்கு மாடி வாழ்க்கையில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது வலுக் கட்டாயமாக அனைத்து குடும்பங்களும் குழந்தைகளும் பங்கேற்கும் வருடாந்திர விழாக்கள் மட்டுமே அறிமுக வாய்ப்புகளாகும். அங்கும் கூட மேட்டுக்குடி மக்களைப் பார்த்து நடிக்கும் மனோ நிலையும், தாய் மொழியில் பேசுவது கூட தாழ்வு என்று பேசும் கருதும் மக்களையும் பார்க்க முடிகிறது. பன் மொழி மக்கள் வாழும் நகரவாழ்க்கையில் ஆங்கிலமொன்றே ஆதார சுருதியாகச் செயல்படுவதும் உண்மை. அவ்வாறிருக்க வேறு இடங்களில் வசித்து புகழ்பெற பெரியோர்களின் வரலாற்றுச்சுருக்கத்தையும் பெருமைகளையும் விக்கிப் பீடியாவில் வெளியிடும் அன்பர்க்கு நன்றிகள் பலப்பல "விண்வெளிக்கான மனிதப் பயணம் ஆரம்பமாகி ஐம்பதாண்டுகள் கழிந்து விட்டது, ஆனாலும் யூரி ககாரினின் சாதனை இன்று உலக நாடுகளில் விண்வெளிப்பயணத்தில் மனித சாதனைகள் அதிகரிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது என ஐநா அதிகாரி கியோ அகசாக்கா குறிப்பிட்டார். விண்வெளிக்கான முதலாவது மனிதப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஐநா தலைமையகத்தில் கண்காட்சி ஒன்றும் நடைபெற்று வருகிறது. மும்பையில் போரில் தமது கணவன்மாரை இழந்த விதவைப் பெண்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி அண்மையில் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் ஊழலுக்கு எதிரான கண்காணிப்பகத்தின் தலைவர் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சென்ற மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். மத்திய அரசுக்கும், அசாரேயின் பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்பு மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர். பால்ட்டிக் கடகுக்குக் கிட்டவாக உள்ள மெக்லென்பர்க்-மேற்கு பொமிரானியா மாநிலத்தில் ஏ-19 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நான்கு பாதைகளையும் நேற்று வெள்ளிக்கிழமை மணற்புயலும் தூசியும் திடீரெனத் தாக்கியது. அண்மைக்காலமாக அங்கு நிலவும் வறட்சியான காலநிலையும், கடுமையான காற்றும் சேர்ந்து நெடுஞ்ச்சலைக்கு அருகில் உள்ள வயற்காணிகளில் இருந்தே மணல் கிளம்பி வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் 20 வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. மொத்தம் 41 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடுமையான காயத்துக்குள்ளாயினர். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்றின் தாக்கத்தினால் பல வாகனங்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. உயிர்காப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். புனித பிரான்சிசு 13ம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டார். இவர் பின்னர் மிருகங்களின் புனிதராகவும், இத்தாலியின் புனிதராகவும் வழங்கப்பட்டு வருகிறார். இவர் தனது வாழ்வை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தவர். அசிசி நகரில் செல்வந்தரான ஒரு துணி வணிகருக்கு மகனாகப் பிறந்த பிரான்சிசு தனது செல்வந்த வாழ்க்கையை உதறி விட்டு ஏழை மக்களுக்காக வாழ ஆரம்பித்தார். இவரது உடல் ஒரு செப்புப் பேழையில் வைக்கப்பட்டு அவரது பிறந்த ஊரிலேயே கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டது. இப்போது முதற்தடவையாக இக்கல்லறை புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக இதன் புனரமைப்பு வேலைகள் கட்டிட நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவ்விழாவைக் கொண்டாடுவதற்கு உலகெங்கும் உள்ள பிரான்சிசுவின் பக்தர்கள் சிறப்பு ஆராதனைகளை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1230 மணியளவில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த மௌலவி மருத்துவமனையில் உயிரிழந்தார். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் ஷாவைக் கொல்ல இரண்டு முயற்சிகள் நடைபெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இவரது படுகொலையை அடுத்து ஸ்ரீநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் கொண்டாடப்பட்டது. கொல்லப்பட்ட ஷா முஸ்லிம்களின் வகாபி பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜமாய்ட்-இ-ஆலி அதித் என்ற மதவாதக் கட்சியின் தலைவர் ஆவார். இக்கட்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒரு பிரிவின் தலைவரே இவர். பிரிவினைக்கு ஆதரவான அரசியலில் ஷா மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனாலும் மிதவாதப் போக்கையே இவர் கடைப்பிடித்து வந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜம்மி-காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசுலாமியப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இவர் அண்மையில் மாநில ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருந்தமை குறித்து இவர் ஏனைய பிரிவினைவாதக் கட்சிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். புதிய சட்டத்தின்படி முகத்தைக் காட்ட மறுக்கும் பெண்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. அங்கு அவரை அடையாளம் கண்டபிறகு அபராதம் விதிக்கப்படும். பெண்களை பர்தா அணியக் கட்டாயப்படுத்துபவர்களுக்கு அதிக தொகை தண்டமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இந்த சட்டத்தை கடந்த ஆண்டு சூன் மாதத்திலிருந்து அமல்படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால் இது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட்ட பிறகு அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகே முகத்தை மட்டும் மூடிச் செல்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்ற நிலையில் பிரான்சில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பிரான்சில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். பிரான்சில் மொத்தம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 2,000 பெண்கள் மட்டுமே பர்தா அணிந்து செல்வதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரபு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் சில பகுதிகளில் மட்டும் முகத்தை மூடியபடி பர்தா அணியும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பிரான்சின் அரசுத்தலைவர் சர்கோசி விதித்துள்ள இந்த புதிய சட்டத்துக்கு சில முஸ்லிம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக சில சட்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரையறுக்கப்படாததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் முகத்தை மூடிச் சென்றாலும் அபராதம் விதிக்க வேண்டுமா என்ற குழப்பமும் உள்ளது. இருப்பினும் இந்த முடிவை வரவேற்போரும் பிரான்சில் உள்ளனர். இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுவதுமாக மூடிச் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் இசுலாமியப் பெண்கள் முழு முகத்திரை அணியத் தடை சூலை 15, 2011 லிபிய அரசு தமது இந்த முன்மொழிவை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியைச் சந்தித்துப் பேசியிருந்தனர். தான் இந்த முன்மொழிவை ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் கடாபி பதவியில் இருந்து விலக வேண்டும் என்னும் தங்களது கோரிக்கையைத் தாம் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். கடாபிக்கு ஆதரவான படைகள் அண்மையில் எதிரணியின் மீது சில வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர், ஆனாலும் நேட்டோவின் வான்படைகள் அவர்களது முன்னேற்றத்தைத் தடுத்துள்ளனர். நேற்று ஞாயிறு மட்டும் கடாபியின் 25 தாங்கிகளை அஜ்தாபியாவில் அழித்துள்ளதாக நேட்டோ தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி முன்மொழிவு வருமாறு: * மனிதாபிமான நிவாரண உதவிகள் தடையின்றி வழங்குதல் * அரசியல் தீர்வுக்கு அரசு மற்றும் எதிரணிப் பேச்சுவார்த்தை * நேட்டோ வான் தாக்குதல் நிறுத்தப்படல் தேர்தலையொட்டி கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, தான் போட்டியிடும் திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடித்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நிறைவு செய்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து அதனை நிறைவு செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், இன்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி இன்று நடக்கிறது. பதற்றமான இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 25 ஆயிரம் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், ரிசர்வ் காவல்துறை, தமிழக காவல்துறை, சிறைத்துறையினர், என்சிசி படையினர், முன்னாள் ராணுவத்தினர் என மாநிலம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 15 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும். நேற்று திங்கட்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 1755 மணிக்கு அக்தியாபிர்ஸ்கயா தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று வந்து நின்ற போதே இக்குண்டு வெடித்துள்ளதாக நெரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இக்குண்டுவெடிப்பினால் தொடருந்து நிலையம் பெரும் சேதத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. தானியங்கி வானொலிக் கருவி மூலம் இக்குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தாம் சில காணொளி ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு ஆண்கள் இது தொடர்பாகத் தேடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என அரசு கூறியுள்ளது. 5கிகி எடையுள்ள இக்குண்டு "அதிகமான மக்களைக் கொலை செய்யும் நோக்கோடு" அங்கு வைக்கப்பட்டுள்ளது என உட்துறை அமைச்சர் அனத்தோலி குலிசோவ் தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டில் இருந்து அரசுத்தலைவராக இருக்கும் லூக்கசென்கோ சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக பன்னாட்டுக் கண்காணிப்பாளர்கள் கூறியிருந்தனர். இவரது தெரிவை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் 600 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் பலர் விசாரணைகளை எதிர்கொண்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த பாக்போ மீது உரிய முறைப்படி நீதி விசாரணைகள் நடத்தப்படும் எனவும் உண்மை மற்றும் இணக்கக் கமிசன் ஒன்று நிறுவப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அபிஜான் நகரில் உள்ள அரசுத்தலைவர் மாளிகை மீது பிரெஞ்சு இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை அடுத்து சரணடைந்த பாக்போ ஐவரி கோஸ்டில் வழமையான வாழ்க்கை திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கடந்த நவம்பர் மாதத் தேர்தல்களில் அலசான் வட்டாரா வெற்றி பெற்றிருந்தாலும், தாமே வெற்றி பெற்றதாக பாக்போ அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவுட்டாராவுக்கு ஆதரவான படைகள் பாக்போவின் வதிவிடம் மீது தாக்குதல்களை ஆரம்பித்திருந்தன. ஐநாவின் ஆதரவுடன் பிரெஞ்சுப் படைகள் வட்டாராவின் படைகளுக்கு பின்பலமாக இருந்தன. பாக்போ கைப்பற்றப்பட்டதை இட்டு மகிழ்ச்சி தெரிவித்த ஐநா பொதுச் செயலர் பான் கி மூன், கடந்த சில மாதங்களாக உருவெடுத்திருந்த இந்தத் தேவையற்ற பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது எனக் குறிப்பிட்டார். புதிய அரசை ஐக்கிய நாடுகள் ஆதரிக்கும் என அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இளைஞர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட புதிய தலைவர் வட்டாரா, மிக விரைவில் நாட்டில் அமைதி திரும்பும் என உறுதி அளித்தார். கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற சண்டையில் சிக்கி குறைந்தது 400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக லைபீரியா, மற்றும் கானா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு முன்பாக மரியாதை நிமித்தம் இலங்கை அரசிடமும் ஒரு பிரதியை கையளிப்பது தொடர்பாக பான் கி மூன் ஆலோசித்து வருவதாக பர்ஹான் ஹக் தெரிவித்தார். இந்த அறிக்கையினை பான் கி மூன் ஆழமாக படித்து அதன்பின்னர் இவ்வறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பார். இலங்கையின் போர்க்குற்றங்களை ஆராய ஐநா நிபுணர் குழு நியமனம் புதன், சூன் 23, 2010 கொழும்பு ஐநா அலுவலகம் முன்னால் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் புதன், சூலை 7, 2010 நேற்று இரவே வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு முகவர்கள் முன்னிலையில் முத்திரை இடப்பட்டன. அங்கும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். திருண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், கன்னியாகுமரி தொகுதியிலும் வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதாலும், நெய்வேலியில் 2 எந்திரத்தை சிலர் சேதப்படுத்தியதாலும் அங்கு வருகிற 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும். விட்டோரியோ அரிகோனி என்ற 36 அகவையுடைய இந்த நபர் நேற்று வியாழக்கிழமை அன்று ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான ஒரு தீவிரவாதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டார். தமது குழுவின் தலைவரை விடுவிக்குமாறு இக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. காசா நகர வீடு ஒன்றில் விட்டோரியோவின் உடல் தூக்கில் தொங்கியபடி இருக்கக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இப்படுகொலையைக் கண்டித்திருக்கும் இத்தாலிய அரசு, ”காட்டுமிராண்டித்தனமான படுகொலை” என வர்ணித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் கடத்தப்பட்டதற்குப் பின்னர் முதற்தடவையாக வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் காசாவில் கடத்தப்பட்ட்உள்ளார். ஹமாஸ் இயக்கம் மிதவாதப் போக்கைக் கொண்டதாகக் கருதும் சலாஃப் இசுலாமியத் தீவிரவாத இயக்கமே அரிகோனியைக் கடத்தியிருந்தது. தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இன்று வெள்ளிக்கிழமை மாலைக்கு முன்னர் விட்டோரியோ கொலை செய்யப்படுவார் என அவர்கள் அறிவித்திருந்தனர். இவர்களது தலைவர் ஷேக் மக்டாசி சென்ற மாதம் ஹமாஸ் காவல்துறையினரால் காசாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். சலாஃப் இயக்கம் வெளியிட்டிருந்த காணொளியில் அரிகோனி கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையான காயங்களுடன் இருக்கக் காணப்பட்டார் ஊழலைப் பரப்புவதற்காக இத்தாலியக் குடிமகன் எமது நாட்டுக்குள் நுழைந்துள்ளார்” என காணொளியில் கூறப்பட்டது. அவர்களது காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே அவர் கொலை செய்யப்பட்டு விட்டார். பன்னாட்டு ஒருமைப்பாட்டு இயக்கத்தின் உறுப்பினரான அரிகோனி கடந்த பல ஆண்டுகளாக காசாவில் வசித்து வந்தார். புதிய ஆசிரியர் குழுவில் மா. ராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு.ராமசாமி, ட்ராட்ஸ்கி மருது, கி.நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினி ட்ரெம்மல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம் அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு கணையாழி இதழ் வெளிவருகிறது. மெக்கே உட்பட இப்பகுதியின் பல நகரங்களில் இதன் தாக்கம் உணரப்பட்டது. எனினும், எவ்வித உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இன்றைய நிலநடுக்கம் ஒரு அரிதானதொன்றென ஜியோசயன்ஸ் ஆஸ்திரேலியா நிறுவனத்தைச் சேர்ந்த நிலநடுக்கவியலாளர் டேவிட் ஜெப்சன் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் இது மிகப் பெரியதென அவர் வர்ணித்தார். அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ இன் ஆதரவுடன் இடம்பெற்ற பன்றிக் குடா தாக்குதல் முறியடிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான கியூப மக்கள் தலைநகர் அவானாவில் கூடினர். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் ராவுல் காஸ்ட்ரோ உரையாற்றினார். கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்திய அவர் கட்சியில் விமரிசனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார். காஸ்ட்ரோவின் உரையில் நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் செல்வாக்கைக் குறைப்பது குறித்தும், தனியார் துறையை ஊக்குவிப்பது குறித்தும் அதிகம் பேசப்பட்டது. கியூபாவின் புதிய பொருளாதாரக் கோட்பாடு முழுமையாக நடைமுறைக்கு வர குறைந்தது ஐந்தாண்டுகள் பிடிக்கும் என அவர் கூறினார். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்றவை தொடர்ந்து தரப்படும் என அவர் உறுதி அளித்தார். ஆனாலும், அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவி மானியம் படிப்படியாக அகற்றப்படும் எனக் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்கமைய ஏற்கனவே 200,000 பேர் சுய வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனாலும் கியூபா தனது சோசலிசப் பாதையிலேயே தொடர்ந்து செல்லும் எனவும் சொத்துக்கள் சேர்ப்பது அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் கூறினார். 1961 ஆம் ஆண்டி ஏப்ரல் 17 ஆம் நாள் கியூபாவில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் சிலர் சிஐஏ இன் உதவியுடன் காஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் அவானாவுக்கு 160 கிமீ தென்கிழக்கே பன்றிக் குடாவில் தரையிறங்கினர். பிடெல் காஸ்ட்ரோவின் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் எதிர்த்தாக்குதல் நடத்தி இரண்டு நாட்களில் கிளர்ச்சியை முறியடித்தனர். கட்சியின் மாநாடு 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. 14 ஆண்டுகளின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்த காஸ்ட்ரோ முடிவு நவம்பர் 9, 2010 அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர்வொன்றை வழங்கி, தமிழ் மக்கள் உள்ளடங்கும் அதிகார அலகு தொடர்பில் சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்று அது பரிந்துரைத்துள்ளது. அதன் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு கணிசமான அதிகாரங்களுடன் கூடிய அதிகார அலகொன்று வழங்கப்படுவதுடன், அதன் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை விட சர்வதேசத்தின் கண்காணிப்புக்குழுவொன்றுக்கு தலையிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது நிபுணர் குழுவின் பரிந்துரையின் சாராம்சமாகும். அத்துடன் அங்கு அமையும் உருவாக்கப்படும் அதிகாரப் பிரிவு (மாகாண சபை அல்லது சமஷ்டி அரசாங்கம்) சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. முன்னதாக இராணுவக் கிளர்ச்சியாளர்கள் தமது பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி தலைநகரின் வர்த்தகர்கள் அரசாங்கக் கட்சியின் தலைமையகத்தைத் தீ வைத்துக் கொளுத்தினர். 45 பேர், சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பலர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசு சொம்போரே சென்ற வெள்ளியன்று அரசைக் கலைக்க உத்தரவிட்டார். அதனை அடுத்து புதிய இராணுவத் தலைவரை நியமித்தார். அத்துடன் இராணுவக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருந்த தனது பாதுகாப்பு அதிகாரியையும் பதவியில் இருந்து நீக்கினார். தமக்கு வீட்டு மானியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளதைச் சுட்டிக் காட்டியே அரசுத்தலைவரின் பாதுகாப்புப் பிரிவு கிளர்ச்சியை ஆரம்பித்திருந்தது. இது பின்னர் வேறு பல முகாம்களிலும் பரவியது. வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மனித உரிமை மீறல் போன்ற காரணங்களைக் காட்டிப் பலர் தலைநகரை நோக்கிப் படை எடுக்க ஆரம்பித்தனர். நிலுவையில் உள்ள மானியத் தொகையை விரைவில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பின்னர் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், உணவுப் பொருட்களின் அதிகரித்த விலைகளால் அரசுத்தலைவர் பிளைசு சொம்போரே நாட்டில் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 ஆம் ஆண்டில் தனது நண்பரான தொமஸ் சங்காரா என்பவரை புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றிய சொம்போரே அதன் பின்னர் நான்கு தடவைகள் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடைசியாக 2010 நவம்பரில் தேர்தல் இடம்பெற்றிருந்தது. இராணுவத்தினரிடையே இவரது செல்வாக்குக் குறைந்து வருவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1966-ல் இளவரசி பத்மினி தேவியை பவானிசிங் மணந்தார். இவர்களுக்கு திவ்ய குமாரி என்ற ஒரே மகள் உள்ளார். மகாராஜா இரண்டாம் சவை மான்சிங் 1970 ஆம் ஆண்டில் இறந்ததை அடுத்து அவரது மகன் பவானி சிங் மகாராஜாவானார். ஆனாலும் இவர் பதவியேற்ற சில நாட்களில் அரச வம்சப் பதவிகள் இல்லாமல் ஆக்கப்பட்டன. பவானி சிங் இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். குடியரசுத் தலைவரின் பாதுகாப்பாளராக இருந்தார். 1971-ல் நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரின் போது பாகித்தானின் சிந்து பகுதியின் எல்லைக்குள் படையுடன் புகுந்து எதிரிகளைத் தாக்கியுள்ளார். இவருக்கு பரம்வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. 1974-ல் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றார். 1989-ல் மக்களவைத் தேர்தலில் ஜெய்புரான் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மகாராஜாவின் இறப்பை முன்னிட்டு ராஜஸ்தான் மாநில அரசு இரண்டு நாள் துக்கம் அனுட்டிக்கிறது. 1973 ஆம் ஆண்டில் ஆகுஸ்தோ பினொச்சே இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். இதன் போது அப்போதைய அரசுத்தலைவர் சல்வடோர் அலண்டே தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது நண்பரும் சியூபாத் தலைவருமான பிடெல் கஸ்ட்ரோ அவருக்களித்த துப்பாக்கி மூலம் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாக இராணுவத்தினர் கூறினர். போர் வானூர்திகள் மூலமும், தாங்கிகள் மூலமும் பெரும் தாக்குதலுக்குள்ளான அரசுத்தலைவர் மாளிகையில் அலண்டேயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்போது உண்மையில் அலண்டே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மே மாதக் கடைசியில் இவரது உடல் தோண்டி எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இராணுவத் தலைவர் பினொச்சேயின் 1990 ஆம் ஆண்டு வரையான ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கனக்கானோர் படுகொலை செய்யப்பட்டும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும் உள்ளனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவரது பொருளாதார சீர்திருத்தங்கள் அமெரிக்காவைக் கோபத்துக்குள்ளாக்கியது. அவருக்கெதிரான இராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது. ஜெனரல் பினோச்சேயின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் விசாரணைகளை எதிர்கொண்ட வேளையில் தனது 91வது அகவையில் 2006 ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார். முக்கர்ஜியின் The Emperor of All Maladies: A Biography of Cancer என்ற நூல் புற்றுநோயின் வரலாற்றையும் மருத்துவர்கள அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது. பண்டைய எகிப்திய காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை புற்றுநோய்ச் சிகிச்சை முறைகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஏற்கனவே வேறு பல விருதுகளையும் பெற்றுள்ளது. ஓப்ரா இதழ், மற்றும் நியூயார்க் டைம்ஸ் இதழ் ஆகியவற்றின் "2010 இன் முதல் 10 நூல்கள்" பட்டியல்களிலும், டைம் இதழின் புனைகதைகளல்லாத முதல் 10 நூல்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. புனைகதையல்லாத பொதுப் பகுதிக்குக் கீழ் இந்தப் புலிட்சர் பரிசு $10,000 வழங்கப்பட்டுள்ளது. புலிட்சர் பரிசு பத்திரிகைத்துறை, இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது மேற்படி துறைகளுக்கான மிக உயர்ந்த தேசிய கௌரவமாகக் கருதப்படுகின்றது. நியூயார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு (25) என்ற பொறியியலாளர் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ராசபக்ச அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தீக்குளிப்பதாகக் கடிதம் எழுதி வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை, தன் மீது ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி மயங்கி விழுந்தார். மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த திசம்பர் மாதத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு சென்ற பி.எஸ்.எல்.வி விண்கலம் ஏவப்பட்ட சில நிமிட நேரத்தில் வங்காள விரிகுடாவில் வீழ்ந்து வெடித்திருந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி. சி16 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முந்தைய விண்கலங்களை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியத் தயாரிப்பில் உருவான 1,206 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ்சாட்-2' என்ற தொலையுணர்வுச் செயற்கைக்கோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், பூமியின் இயற்கை வளத்தில் மனிதரால் ஏற்படும் பாதிப்புக் குறித்தும், சுற்றுச்சூழல், மற்றும் இயற்கை பேரழிவுகள் தொடர்பாகவும் ஆராய முடியும். பி.எஸ்.எல்.வி. விண்கலத்தில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியச் செயற்கைக் கோளைக் காவிச் சென்ற ராக்கெட் வானில் வெடித்துச் சிதறியது திசம்பர் 26, 2010 விலவூட் தடுப்பு முகாமின் கூரையின் மீதேறிய சில அகதிகள் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கூரையின் ஓடுகளைத் தூக்கி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். நேற்று புதன்கிழமை அன்று இரண்டு அகதிகள் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களுக்கு ஆதரவாக மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில் எவரும் காயமடையவில்லை என தடுப்பு முகாம் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நிலைமை ம்கட்டுக்கடங்காமல் போகவே கலவரம் அடக்கும் காவல்துறையினர் பின்னர் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தீப்பற்றிய இடங்களுக்கு தீயணப்புப் படையினர் உடனடியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார். முகாமில் இருந்த சமையலறை, மருத்துவ மனை, கணினி மையம் ஆகியன தீக்கிரையாகியுள்ளன. அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரே நேற்றைய கலவரத்தில் பெரும்பான்மையாக ஈடுபட்டிருந்ததாக குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்தார். படகுகளில் ஆத்திரேலியாவுக்கு அகதிகளாக வந்தோரும், விசா விதிமுறைகளை மீறியோருமே விலவூட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐநா இந்த அறிக்கையை வெளியிடவோ அல்லது அதிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவோ முனையக்கூடாது எனக் குறிப்பிட்டார். நாட்டில் நல்லிணக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய இந்த தருணத்தில், அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே நிபுணர் குழு அறிக்கை அமைந்திருக்கும் என்பது இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸின் வாதம். அத்தோடு இந்த அறிக்கை ஐநாவின் கட்டமைப்புக்கும் பெரும் சேதத்தையே ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்களிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெருமளவு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். எனினும், ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் 20-20 போட்டிகளிலும் தான் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 20-20 உலகக் கிண்ணம் மற்றும் 2015ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என்பவற்றில் பங்குபற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் நாடு திரும்பியதும் தனது இந்த முடிவு குறித்து இலங்கை அணித் தேர்வுக் குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்க்குகளை வீழ்த்துபவரின் முன்னணியில் திகழுகிறார். இன்றைய அவரது முடிவை அடுத்து ஐபிஎல் இன் இவ்வாண்டுக்கான அனைத்துப் போட்டிகளிலும் மாலிங்க பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது நீண்ட நாளையத் துடுப்பாட்ட வாழ்க்கையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். [[இலங்கை]]யில் போர் மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பகுதிகளில் நீதி பரிபாலனத்தை மேம்படுத்துவதற்கு 63 இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அங்கு தமிழ் தெரிந்த நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் ரவூப் அக்கீம் தெரிவித்துள்ளார். மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் நீதிமன்றங்களைப் பார்வையிடுவதற்கும், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிவதற்குமாக இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக அவர் இந்தப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்திருந்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அக்சஸ் டூ ஜஸ்டிஸ்' என்ற திட்டத்தின் கீழ் செருமனி நாட்டின் நிதியுதவியோடு மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அழிந்துள்ள நீதிமன்றக் கட்டிடங்களைப் புதிதாக திருத்தியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இலகுவில் நீதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறையைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கான தமிழ் பேசும் சட்டத்தரணிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார். பிரதான நகர நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற தமிழ்பேசும் சட்டத்தரணிகள் இந்தப் பிரதேசங்களில் பணியாற்ற முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். கடந்த 1996 ஆம் ஆண்டிற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முடிக்கப்படாமல் குவிந்துள்ள வழக்குகளை மாகாணங்களில் இயங்கி வருகின்ற சிவில் மேன்முறையீட்டு மன்றங்களின் ஊடாக விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தவிர மாவட்ட நீதிமன்றங்களில் பல வருடக்கணக்காகத் தேங்கிக்கிடக்கின்ற வழக்குகளை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரஸ்தாப விடயம் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து வாரங்களாக இடம்பெற்று வரும் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் நேற்றைய நிகழ்வே மிகப் பெரியதென அவதானிகள் கருதுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் நேற்று சிரியாவின் நகர வீதிகளில் இறங்கி அல்-அசாத்தைப் பதவியில் இருந்து விலகுமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரமே நாட்டில் 48 ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசர காலச் சட்டத்தை அல்-அசாட் நீக்கியிருந்தார். ஆனாலும் இது போராட்டக்காரர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவர்கள் மேலும் சுதந்திரமும், அரசியல் சீர்திருத்தங்களும் வேண்டும் எனக் கோரினர். ஆர்ப்பாட்டங்கள் குறித்து அரசுத் தொலைக்காட்சி அறிவிக்கையில், வன்முறைச் சம்பவங்களில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனவும், ஆயுதக் குழுக்களே வன்முறைகளில் இறங்கின எனவும் கூறியது. இராணுவத்தினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையே பயன்படுத்தினர் என அரசு கூறுகிறது. வெள்ளிக்கிழமை வன்முறைகளை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். புதிய மோதல்கள் வெள்ளிக்கிழமை காலை 0600 மணியளவில் ஆரம்பித்ததாக தாய்லாந்து இராணுவத் தகவல் தொடர்பாளர் தெரிவித்தார் சண்டையை நிறுத்துவதற்கு நாங்கள் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மோதலில் தமது தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து அறிவித்த அதே வேளையில், தமது தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்ததாக கம்போடியா அறிவித்துள்ளது. பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிரியா விகார் கோயில் 1962 ஆம் ஆண்டு கம்போடியாவிடம் கையளிக்கப்பட்டது. இந்துக் கோயில் எல்லைப் போர் குறித்து கம்போடியா ஐநாவுக்கு முறையீடு பெப்ரவரி 8, 2011 [[இலங்கை]]யின் 2009 இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் சனிக்கிழமை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு மேலுள்ள 483 முன்னாள் விடுதலை புலி போராளிகள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் விடுதலை புலிப் போராளிகளுக்கு அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட 483 முன்னாள் விடுதலை புலி போரளிகளை விடுதலை செய்யும் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ரெபியா நிறுவனத்தின் ஊடாக வட மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 1,000 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளுக்கு 250,000 ரூபா வரையான சுயதொழில் கடன் வழங்கவுள்ளதாகவும், குறித்த கடன் திட்டம் மே மாத நடுப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் முன்னாள் விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வுக்கென அரசாங்கம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா செலவு செய்து வந்ததாகவும், புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ளவர்களுக்கென மாதாந்தம் 50 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்ப உறவினர்கள் பலர் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவைச் சந்தித்து மனுக்கள் கையளித்து கோரிக்கை விடுத்தனர். புனர்வாழ்வு பயிற்சிகள் முடிவடைந்ததும் அவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களிடம் உறுதியளித்த அமைச்சர், விடுதலை பெற்றுச் செல்பவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல், நாட்டை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திப் பாதையில் செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டார். புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக்கொண்ட ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. * லங்காதீப சிங்களப் பத்திரிகை, ஏப்ரல் 24, 2011 சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. சத்தியசாயி மருத்துவ அறிவியல் கல்விக் கழகம் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1993 சூன் 6 ல் சாய்பாபாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. சாயிபாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாயி குல்வந்த் மண்டபத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணியிலிருந்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் புதன்கிழமை காலை சாயி குல்வந்த் மண்டபத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் அமைப்பு முன்வைத்த யோசனைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தலைநகர் சனாவில் அரச உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாத காலத்துக்குள் திரு. சாலே தனது பதவியை பிரதி அரசுத்தலைவருக்கு ஒப்படைப்பார். பதிலாக தன் மீது எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என எதிர்க்கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமைதியான வழியில் ஆட்சி மாற்றம் இடம்பெற அனைத்துத் தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அரசுத்தலைவரின் இம்முடிவை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாசின் நோமன், தேசிய அரசு ஒன்றை அமைக்கும் பட்சத்தில் அதில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். கடந்த 2 மாதங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் வடக்கு பகுதி, தெற்குப் பகுதி என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இசுலாமியர்களும், தெற்கு பகுதியில் கிறித்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். தெற்குப் பகுதியைக் காட்டிலும் வடக்கு பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியிருப்பது மக்களிடையே வெறுப்பை அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சுரங்கப் பாதை சிறைக்கு வெளியில் இருந்தே அமைக்கப்பட்டதாகவும், தப்பியோரில் பெரும்பாலானோர் தலிபான் தீவிரவாதிகள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பிய சிறைக் கைதிகளில் சிலர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக கண்டகார் மாகாண ஆளுநர் தெரிவித்தார். ஆனாலும் மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை. சுரங்கப்பாதை 320 மீட்டர் (1,050 அடி) நீளம் உடையதென்றும் அதனை அமைப்பதற்குத் தமக்கு ஐந்து மாதங்கள் வரை பிடித்ததாகவும் தலிபான் பேச்சாளர் சபியுல்லா முஜாஹிட் தெரிவித்தார். தப்பியோரில் ஏறத்தாழ 100 பேர் தலிபான் தளபதிகள் எனவும் ஏனையோர் சாதாரண போராளிகள் என்றும் அவர் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது பெரும் சிறைச்சாலை உடைப்பு எனக் கூறப்படுகிறது. 2008 சூன் மாதத்தில், கண்டகார் சிறையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றை அடுத்து 900 கைதிகள் தப்பியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தலிபான் போராளிகள் ஆவர். கண்டகார் சிறைச்சாலை 1,200 கைதிகளை உள்ளடக்கக்கூடியது. டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஊழல் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி தொகை வேறு நிறுவனங்கள் வழியாகக் கைமாறியுள்ளது என்று விசாரணைகள் காட்டுவதாக மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக மத்திய புலனாய்வுத் துறை கருதுகிறது. கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதே நேரம் கனிமொழி உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை பெப்ரவரி 18, 2011 இரு தரப்பிலும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் இந்த 216 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐநா பகிரங்கமாக வெளியிட்டது. இவ்வறிக்கையை வெளியிட வேண்டாமென இலங்கை அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் ஐநாவை முன்னதாக வலியுறுத்தியிருந்தார். ஐநாவின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் ஐநா மையங்கள், பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் மீது திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சுடப்பட்டார்கள் என்றும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வர நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை என இலங்கை தெரிவிப்பு ஏப்ரல் 22, 2011 இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழு அறிக்கை கையளிக்கப்பட்டது ஏப்ரல் 13, 2011 சுவிஸ் வங்கிகளில் மற்ற நாடுகளின் பணத்தை விட இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது என்றும், அதுகுறித்து தகவல் தெரிந்தும் பணத்தை மீட்க இந்திய அரசு மெத்தனப் போக்கை காட்டுகிறது என்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள், கணக்குகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து கூறிய ஜூலியன் அசாஞ்ஜே உலகம் முழுவதும் உள்ள பல வங்கிகளில் இருந்து பலவிதமான தகவல்களை திரட்டி வருகிறோம். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மீது வங்கிகள்தான் அதிகளவில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தகவல்களை வெளியிடுவோம். இந்தியாவில் கருப்பு பணம் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்தியாவில் இருந்துதான் கருப்பு பணம் அதிகம் வருகிறது. நாங்கள் திரட்டியுள்ள தகவல்களில் பல இந்தியர்களின் பெயர்கள் உள்ளன. இது பற்றி தொடர்ந்து விசாரித்து தகவல்கள் வெளியிடுவோம். கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் ஒருநாள் நிச்சயம் வெளிவரும். கருப்பு பண விடயத்தில் ஜெர்மனி அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வரிஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலை பெறுவதில் அமெரிக்காவும் முனைப்புடன் உள்ளது. அதேபோல இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தலாய் லாமா திபெத்தின் ஆன்மிகத் தலைவராக தொடர்ந்து பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் திபெத்தின் நாடு கடந்த அரசு செயல்படும் இந்திய நகரமான தரம்சாலாவில் அறிவிக்கப்பட்டன. புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட லோப்சங் சங்கை 42 வயதானவர். இந்தியாவில் பிறந்த இவர் திபெத்துக்கு என்றும் சென்றதில்லை. இவரது தந்தை 1959 ஆம் ஆண்டில் தலாய் லாமாவுடன் சேர்ந்து திபெத்தை விட்டு வெளியேறினார். தான் தரம்சாலாவுக்குச் சென்று வாழவிருப்பதாகக் கூறிய லோப்சங் சீனா குறித்து தலாய் லாமாவின் கொள்கைகளை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். "திபெத்தியர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட்டால், சீனாவின் ஒரு பகுதியாக திபெத்து இருப்பதை நாம் ஆதரிக்கிறோம் என அவர் கூறினார். சீனா திபெத்தை தனது ஆட்சிப் பகுதி என அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திபெத்தியர்கள் பல நூற்றாண்டுகளாக இமாலயப் பகுதி தனி நாடாகவே இருந்து வந்துள்ளது எனவும் 1950களில் சீனா அதனை ஆக்கிரமித்தது எனவும் கூறி வருகின்றனர். தலாய் லாமா அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு மார்ச் 13, 2011 இது இவ்வாறிருக்க இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை அமெரிக்க வெகுவாக வரவேற்றுள்ளது. இந்தக் குழுவின் விபரமான, நீண்ட பணிகளை தாம் பாராட்டுவதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ள ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சூசன் ஈ ரைஸ் அவர்கள், இலங்கையில் நீதி, பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை பெறுமதியான பங்களிப்பை செய்துள்ளதாக தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பாலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல் உட்பட, அங்கு போருக்குப் பின்னான வெளிப்படைத்தன்மையுடைய நல்லிணக்கத்துக்கான ஆதரவு தரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா என்றும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே குறைபாடுடைய ஒன்று என்றும், பக்கசார்பான ஆவணங்களை அது ஆதாரமாகக் கொண்டது என்றும், சரியான தெளிவுபடுத்தல்கள் இல்லாமல் அது வெளியிடப்பட்டுள்ளது என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போர் நடந்து முடிந்ததை அடுத்து, இலங்கை அரசாங்கம் மீள் கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளால் குறிப்பாக மீள்குடியேற்றம், முன்னாள் சிறார் போராளிகளை விடுவித்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், ஜனநாயக நடைமுறைகளை மீளக் கொண்டுவருதல் போன்ற விடயங்கள் வடக்கு கிழக்கில் மிகவும் முன்னேற்றங்களைக் கண்டுவருவதாகவும் கூறியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை, ஆனால், ஐநா குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டமை, சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை இலங்கையில் மீளக்கொண்டுவருவததற்கான முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஈழப்போர்: இராணுவத்தினரின் எறிகணைகளே தமிழரைக் கொன்றது ஐநா ஏப்ரல் 26, 2011 காபூல் விமான நிலையத்தில் நேட்டோ படைகள் மற்றும் ஆப்கானிய இராணுவத்தின் விமானப்படை பிரிவினரிடையே நடைபெற்ற கூட்டமொன்றில் ஆப்கானிய இராணுவத்தைச் சார்ந்த அந்த அதிகாரிக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அவர் இவ்வாறு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஐந்து ஆப்கான் ராணுவ வீரர்களும் காயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட அந்த அதிகாரி பெயர் அகமது குல் என்றும், காபூல் மாகாணத்தைச் சார்ந்தவர் என்றும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதான அகமது குல்லும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டு விட்டார். இவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்ததாகவும் தீவிரவாதிகளுடன் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லையென அவருடைய சகோதரர் அசன் சாகிபி தெரிவித்துள்ளார். ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதோடு பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. தங்களது அமைப்பைச் சார்ந்த ஒருவர் மாறுவேடத்தில் சென்று இந்த காரியத்தை நிகழ்த்தியதாக தாலிபான் அமைப்பின் பேச்சாளர் சபியுல்லா முஜாகித் தெரிவி்த்துள்ளார். ஆனால் இதனை ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்த முகம்மத் சாகிர் மறுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் ஆப்கானியக் காவல்துறை வீரர் ஒருவர் சுட்டதில் ஐந்து அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெளிநாட்டுப் படையினர் தமது ஆப்கானியப் படையினரை முழுமையாக நம்புவதில்லை என்றும், அவர்கள் மேல் எப்போது சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர் என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் அரச குடும்பத்தில் நடைபெறும் முக்கிய திருமணம் என்பதால், இங்கிலாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். திருமணம் நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபி பகுதியில், மக்கள் இப்போதே உற்சாகத்துடன் குவியத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்து மக்கள் சுமார் 6 லட்சம் பேர் லண்டனில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியம் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் முதன் முதலாக கேத்தரின் மிடில்டனை சந்தித்தார். அப்போது இருந்தே இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். கேத்தரின் மிடில்டனுக்கு 29 வயதாகிறது. இவர் வில்லியமை விட 5 மாதங்கள் மூத்தவர். கடந்த 1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட கடும் சூறாவளிக்கு 310 பேர் இறந்தனர். அதன் பிறகு தற்போது தான் மோசமான சூறாவளி வீசியுள்ளது. இதனால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சூறாவளியில் சிக்கி அலபாமா ஆளுநரின் சொந்த ஊரான டஸ்கலூசா முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. அதனால் இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் 300க்கும் அதிகமான சூறாவளிகள் இப்பகுதிகளை தாக்கியுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 130 சூறாவளிகள் வீசியுள்ளன. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ள இயக்குநர் பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். 81 வயதாகும் பாலச்சந்தர் இயக்கிய இருகோடுகள் (1969 அபூர்வராகங்கள் (1975 தண்ணீர் தண்ணீர் (1981 அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய நான்கு தமிழ்ப் படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன. 1988-ல் வெளியான ருத்ரவீணா தெலுங்குப் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்கான நர்கீஸ் தத் தேசிய விருதை வென்றது. ஒரு வீடு இரு வாசல் படம் 1991-ம் ஆண்டுக்கான தேசிய விருதை (சிறந்த சமூகப் பிரச்னைக்கான படம்) வென்றது. பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைக்காக மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருதை 1987-ல் அளித்து கௌரவித்துள்ளது. பல தொலைக்காட்சி நாடகத் தொடர்களை இவர் இயக்கியிருக்கிறார். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,080 உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மார்ச் 30-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 15,464 என்ற விலையில் விற்பனை ஆனது. அடுத்த 30 நாள்களில் ரூ. 1,080 விலை அதிகரித்து, நேற்று ஏப்ரல் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ரூ. 16,544 என்ற விலையில் விற்பனையானது. ஒரு கிராம் ரூ.2,068. இது குறித்து முன்னணி தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் போட்டிக்கு முன்னரே முடிவை நிர்ணயிக்கும் மேட்ச் ஃபிக்சிங் முறைகேடுகள் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் 1992ம் ஆண்டு முதலே நடந்துவருவதாகவும், இதனை பொறுப்புணர்வுடன் தன் கூறுவதாகவும், பல சந்தர்ப்பங்களில் இந்த சூதாட்ட விவகாரம் வெளியில் வந்து விடும் என்ற அச்சம் இருந்ததாகவும், ஆனால் இது பலருக்கு பணம் கொடுத்து அமுக்கப்பட்டதாகவும் திலகரத்னே கூறியுள்ளார். 43 வயதான திலகரத்னே 2003 ஏப்ரல் முதல் 2004 மார்ச் வரை இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவராக இருந்தார். 83 தேர்வு மற்றும் 200 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார். 1996 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்க தலைமையில் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். திலகரத்தினவின் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் ஒரு சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கைத் துடுப்பாட்ட வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திலகரத்தின வழங்கிய நேர்காணல் குறித்த செய்தி நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியர் சன்னக்க டி சில்வா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் அணித் தலைவர் என்ற முறையில் திலகரத்தினவின் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என்றார். இக்குற்றச்சாட்டை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுதாமகே மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் திலகரத்னேவின் புகாரை நான் மறுக்கிறேன். துடுப்பாட்ட சூதாட்ட குற்றச்சாட்டு குறித்த ஆதாரத்தை விளையாட்டு அமைச்சகத்திடம் திலகரத்னே காண்பிக்க வேண்டும். அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் அது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். துடுப்பாட்ட சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் தொடர்பு வைத்து இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் இதுபற்றி நினைத்து பார்க்கமாட்டார்கள். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றார். பிரித்தானிய மகாராணி எலிசபெத், வில்லியமின் தந்தை இளவரசர் சார்லஸ்- கமிலா மற்றும் அரச குடும்பத்தினர், பிரபலங்களின் முன்னிலையில் நடந்த இத்திருமணச் சடங்கில் இங்கிலாந்தின் கேண்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ் அவர்கள் வில்லியம் கேட் சோடியை கணவன் மனைவியாக அறிவித்தார். திருமணத்தை அடுத்து இளவரசர் வில்லியத்துக்கு கேம்பிரிட்ச் கோமகன் (டியூக் ஒஃப் கேம்பிரிஜ்) என்ற பட்டமும், கேட் மிடில்டனுக்கு கேம்பிரிட்ச் சீமாட்டி (டச்சஸ் ஒஃப் கேம்பிரிஜ்) என்ற பட்டமும் மகாராணியாரால் வழங்கப்பட்டது. திருமணச் சடங்கின் முடிவில் மணமக்கள் 4 குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்று அதன் மேல்மாடத்தில் இருந்து பொதுமக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியம்முக்கு "அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன்" என்று கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார். திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட கொண்டை ஊசியை இலங்கை அரசு சார்பில் வழங்கப்பட்டது. முன்னதாக 1981ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்திருந்தது. மை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை சுமார் 200 கோடி பேர் பார்த்தனர். நடுத்தர குடும்பத்தில் இருந்து சுமார் 350 ஆண்டுகளுக்குப்பின் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை கேட் பெற்றார். இந்த திருமண நிகழ்ச்சியில் பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், 40 நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினர், 1900 வெளிநாட்டுப் பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேர், கோர்டன் பிரவுன் ஆகியோருக்கு திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு ஆர்ப்பாட்டங்களும் அமைதியாக நடந்தன. வில்லியம் கேத்தரின் மிடில்டன் திருமணம் ஏப்ரல் 28, 2011 வான் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தில் கேர்ணல் கடாபியும் தங்கியிருந்தார் என்றும் ஆனால் அவருக்கு எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கடாபியின் இளைய மகன் சயீப் உடன் கடாபியின் மூன்று பேரப் பிள்ளைகளும் உயிரிழந்தனர். இத்தாக்குதலை உறுதிப் படுத்தியுள்ள நேட்டோ பேச்சாளர், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை நேட்டோவின் தாக்குதல்கள அனைத்தும் இராணுவ நிலைகள் மீதே நடத்தப்படுகின்றன தனிப்பட்ட எவரையும் நாம் குறி வைக்கவில்லை என நேட்டோ பேச்சாளர் லெப்-ஜெனரல் சார்ல்ஸ் பூச்சார்ட் தெரிவித்தார் உயிரிழப்புகள் குறித்து நாம் கவலை அடைகிறோம், குறிப்பாக தற்போதைய பிரச்சனையில் பொதுமக்கள் பலர் உயிரிழக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். கடாபியின் வளர்ப்பு மகள் ஒருவர் 1986 ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார். ரோம் நகர் இவ்வளவு பெருந்தொகையானோரை கடந்த ஆறாண்டு காலமாகக் கானவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆறாண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் ஜான் பால் இறந்த நிகழ்வுக்கு 3 மில்லியன் பேர் சமூகமளித்திருந்தனர். நாளை திங்கள் காலை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் நன்றித் திருப்பலி நிகழ்த்துவார். அருளாளர் பட்டம் என்பது இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் எனவும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். முக்திபேறு பட்டம், புனிதர் பட்டம் பெறுவதற்கான நான்கு படிகளில் மூன்றாவது படியாகும். முதல்வர் சென்ற உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைக் கண்டுபிடிக்கும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவர்களால் எளிதாக முன்னேற முடியவில்லை. ஒரு வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களுடன் அவர்கள் காட்டுக்குள் சென்றுள்ளனர். அடுத்த 2 நாளுக்கு அருணாச்சலில் 50 கி.மீ வேகத்தில் சூறை காற்று வீசும், கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றிய டோர்ஜி காண்டு, வங்கதேசப் போரின்போது முக்கியப் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சீனாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, தலாய் லாமாவை தவாங் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார் முதல் முறையாக 2007ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார். கெகாங் அபாங் பதவி துறந்தததைத் தொடர்ந்து டோர்ஜி முதல்வரானார். பின்னர் 2009ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் ஆனார். கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற உலங்குவானூர்தி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று இசுலாமாபாத் நகரில் இருந்து 100 கிமீ வடகிழக்கு நகரான அபட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் ஒரு சிறு குழு தாக்குதலை நடத்தியது அமெரிக்கர்கள் எவரும் இத்தாக்குதலில் உயிரிழக்கவில்லை" என பராக் ஒபாமா தெரிவித்தார். 40 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இத்திடீர்த் தாக்குதலில் பின் லாதின் தவிர அவரது ஒரு மகனும், மேலும் இருவரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். வேறும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். பின் லாதினின் மிக நெருங்கிய ஒருவரை கடந்த பல ஆண்டுகளாகத் தாம் உளவு பார்த்ததாகத் தெரிவித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், பின் லாதினின் இருப்பிடமான அபாட்டபாத்தைக் கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் அடையாளம் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார். கடந்த 2001ஆம் ஆண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பின் லாதினைப் பிடிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அவர் பாக்கித்தான் ஆப்கானித்தான் மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தெரியவந்ததும், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால், இதுவரை அவர் பிடிபடவில்லை. தற்போது வெளியாகியுள்ள செய்தி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும் ஆறுதலாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அண்மைக் காலமாக அமெரிக்க மக்களிடையே சிறிது சிறிதாகச் சரிந்துவரும் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு, இந்த அறிவிப்பின் மூலம் சற்றே நிமிரக்கூடும் என்று தெரிகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கடந்த ஏழு ஆண்டுகளில் இது கனடாவில் நடந்த நான்காவது பொதுத்தேர்தல் ஆகும். 2006 ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மை உறுப்பினர்களுடன் ஸ்டீவன் ஹார்ப்பர் ஆட்சி செய்து வந்துள்ளார். கடந்த தேர்தலில் பழமைவாதிகள் 143 இடங்களைப் பெற்றனர். பழமைவாதிகள் ஆட்சியில் இருந்த போது லிபரல் கட்சியே எப்போதும் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கி வந்துள்ளது. ஆனால், தற்போது அது மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு புதிய சனநாயகக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கவிருக்கிறது. கனடாவின் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத்தில் தனிநாடு கோரிப் போராடும் கியூபெக்வா புளொக் கட்சி இம்முறை பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. சென்ற முறை 49 இடங்களை வென்றிருந்த அக்கட்சி இம்முறை வெறும் 4 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 26, 2011 அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை பெப்ரவரி 18, 2011 உலங்குவானூர்தியின் உடைந்த பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை அடுத்து காண்டு இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது உலங்குவானூர்தி லோப்தாங் என்ற இடத்தில், ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களை தேடுதல் படையினர் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடல்களை தேடுல் படையினர் மீட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். டோர்ஜி காண்டுவின் உடலை அவரது உறவினரான பஞ்சாயத்து தலைவர் துப்தென் அடையாளம் காட்டினார் என மத்திய அமைச்சர் பி.கே.ஹண்டிக் தெரிவித்தார். இதர 4 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்துபோயுள்ளதாக ஹண்டிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை தவாங்கில் இருந்து இடாநகருக்கு பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் அனைத்து தகவல் தொடர்பையும் இழந்தது. அவரைத் தேடும்பணியில் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் 3000 வீரர்கள் உட்பட 10,000 இற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டனர். அண்டைய நாடான பூட்டானிலும் தேடுதல் நடத்தப்பட்டது. காண்டுவின் மகன் தஷி த்செரிங்க் காண்டுவும் இத்தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தார். அருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது மே 2, 2011 அமெரிக்கா தனது இந்த செயல் மூலம் தனது ஆணவப்போக்கை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.அடுத்த நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி அசிங்கப் படுத்தியுள்ளது.இது அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் அநாகரீகச் செயலாகும்.இந்தப் போக்கை மற்ற நாடுகள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் இல்லையன்றால் இனிவரும் நாட்களில் நம்மையறியாமலே நம்மை விற்று விடுவார்கள் ஜி.தேவி பிரித்தானியாவில் பிறந்த கிளவுட் சவுல்ஸ் என்பவர் 15வது அகவையில் பிரித்தானிய ரோயல் கடற்படையில் இணைந்து எச்.எம்.எஸ். ரிவெஞ்ச் என்ற போர்க்கப்பலில் பணிக்குச் சென்றார். 1920களில் இவர் ஆத்திரேலியாவில் குடியேறினார். அங்கு இராணுவத்தில் 1956 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஆத்திரேலிய கடற்படையில் இணைந்து பணியாற்றினார். முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய வீரர்கள் பில் ஸ்டோன், ஹென்றி அலிங்கம், ஹாரி பாட்ச் ஆகிய அனைவரும் 2009 இல் இறந்து விட்டனர். அமெரிக்கப் போர் வீரர் பிராங்க் பக்கில்ஸ் இவ்வாண்டு ஆரம்பத்தில் காலமானார். பெண்களுக்கான ரோயல் வான் படையில் பரிசாரகியாகப் பணியாற்றிய பிரித்தானியப் பெண் புளோரென்ஸ் கிறீன் கடந்த பெப்ரவரியில் தனது 110வது அகவையைத் தாண்டியுள்ளார். இவர் போரில் நேரடியாகப் பங்குபற்றவில்லை. கொடுரமான நிலையில் இருக்கும் சடலத்தைக் காட்டும் இந்தப் புகைப்படங்கள் வன்செயல்களைத் தூண்டலாம் என்ற அச்சம் தனக்கு இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு, அமெரிக்காவில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் ரூடி ஜூலானி கருத்துத் தெரிவிக்கையில் என்றோ ஒருநாள் இந்த புகைப்படங்கள் எப்படியாவது வெளிவரத்தான் செய்யும். அப்படிப்பட்ட நிலையில் அவற்றை இப்போதே வெளியிடுவதுதான் சரி என்று தெரிவித்திருக்கிறார் இப்போது இந்தப் புகைப்படங்களை வெளியிட்டால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் அதன் தீவிரம் குறைந்து போகும் என்றும், இவற்றை வெளியிடுவதன்மூலம் பின் லாடனின் அடையாளத்தை உறுதிப்படுத்த நினைக்கும் ஆட்களையாவது திருப்திப்படுத்த முடியும். உடனடியாக இது ஆபத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட கால அளவில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். குடியரசுக் கட்சித் தலைவரும், அமெரிக்க செனட்டருமான லின்ட்சி கிரகாம் கூறியதாவது ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டார் என்பது எனக்கும் தெரியும். பின்லாடன் பதுங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பின், அந்த இடத்தின் மீது, குண்டுவீசித் தாக்குதல் நடத்தாமல், கமாண்டோ படையினரை அனுப்பி, தாக்குதல் நடத்தப்பட்டது. பின்லாடன் மரணம் அடைந்தாரா, இல்லையா என்ற சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே. பின்லாடனின் மரணத்தை, உலக நாடுகளுக்கு, எந்தவித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். அதிபரின் இந்த முடிவின் மூலம், பின்லாடன் இறந்தாரா, இல்லையா என்ற விவாதம் நீண்ட நாட்களுக்கும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார். அதே நேரம் அமெரிக்கப்படையின் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மூன்று ஆண்களின் உடல்களின் புகைப்படத்தை ராய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார் மே 2, 2011 41 வயதான ஷேன் வார்ன் இத்தகவலைத் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்திருக்கிறார். இவர் தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிப் பயிற்சியாளராக விளங்குவதுடன் அவ்வணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியும் வருகிறார். "இன்னும் நான்கு அல்லது ஐந்து போட்டிகளே விளையாட இருக்கிறேன்" என அவர் எழுதியுள்ளார். அடுத்த திங்கள் அன்று ராஜஸ்தான் அணி சென்னை அணியுடன் மோதவிருக்கிறது. வார்னின் கடைசி ஆட்டம் மே 20 இல் மும்பை அணிக்கு எதிராக இருக்கும். ராஜஸ்தான் அணி இத்தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் மேலும் இரண்டு ஆட்டங்களில் இவர் விளையாடுவார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டில் இளைப்பாறிய ஷேன் வார்ன் 708 தெரிவு விக்கெட்டுகளையும், 293 ஒரு-நாள் விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். முதல் தரப் போட்டிகளில் இருந்து 2008 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 1991 ஆம் ஆண்டில் முதல் தரப் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய வார்ன் இவ்வாண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் 11 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றும் இன்றும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடினார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் கூறினார். சரத்குமார் தரப்பில் அப்துல் அஜீஸ் வாதாடினார். முன்னதாக சி.பி.ஐ வழக்கறிஞர் தனது வாதத்தி்ல், சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் கனிமொழிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும், சரத்குமார் கலைஞர் த‌ொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும், கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விடயங்களையும், தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்றும் எடுத்துரைத்தார். இது குறித்து வரும் 14 ம் தேதிக்குள் தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வரும் மே 13ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை மே 4, 2011 இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் கைமானா என்ற சிறிய நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் வீழ்ந்தது. 15 பேரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. "விமானம் கடலில் வீழ்ந்து வெடித்ததில் அனைத்துப் பயணிகளும் கொல்லப்பட்டனர் எனக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் விமானம் சிறிய துண்டுகளாகச் சிதறின." கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல சிறியரக விமானக்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. 2007 ஆம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான கருடா உட்பட அனைத்து விமானங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனாலும், கருடாவின் தடை 2009 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை இலங்கை அரசு ஏற்கவில்லை. அறிக்கையைக் கண்டித்து இலங்கையில் மே 1-ம் தேதி பேரணியையும் இலங்கை அரசு நடத்தியது. இந்நிலையில் நிபுணர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிட்டதால் அக்குழுவினை கலைப்பதாக பான் கி மூன் அறிவித்துள்ளார். இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்குப் பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது. ஈழப்போர்: இராணுவத்தினரின் எறிகணைகளே தமிழரைக் கொன்றது ஐநா ஏப்ரல் 26, 2011 நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக முன்னெடுக்க முடியாது பான் கி மூன் ஏப்ரல் 28, 2011 அயல் நாடுகளில் அகதிகளை அனுப்பி அங்கு அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் ஆத்திரேலிய அரசின் நடவடிக்கைகளை மனித உரிமைக் குழுக்கள் விமரிசித்தே வந்துள்ளன. முன்னால் பிரதமர் ஜோன் ஹவார்ட் தலைமையிலான அரசு பப்புவா நியூ கினி, மற்றும் நவூரு தீவிலும் இந்த நிலையங்களை அமைத்து மாதக் கணக்காக அகதிகளை அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காவலில் வைத்திருந்தது. கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த பிராந்திய நிலையங்களை 2008 இல் மூடியது. அங்கிருந்த அனைவரும் ஆத்திரேலியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில் மட்டும் 6,000 பேர் அகதிகளாகப் படகுகளில் ஆத்திரேலியாவினுள் நுழைந்தனர். இதற்கிடையில், பப்புவா நியூ கினியில் மீண்டும் அகதிகள் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசுடன் ஆத்திரேலியா பேச்சுக்களில் இறங்கியுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் நேற்று இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுக் கூட்டமைப்பின் ஒழுங்காற்றுக் குழு அமர்வில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேசிய இளவரசரும் கூட்டமைப்பின் பிரதித் தலைவருமான துங்கு இம்ரான் தலைமையில் இக்குழு கூடியது. கடந்த வருடம் புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப்போட்டியில் மஞ்சு வன்னியாராச்சி தங்கப்பதக்கம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு மஞ்சு வன்னியாராச்சி 56 கிலோகிராம் எடைக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வேல்ஸ் நாட்டின் சோன் மெக்கோல்ட்ரிக் என்பவரை வீழ்த்தி சுமார் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார். ஆனால் தடைசெய்யப்பட்ட நன்ட்ரோலின் எனும் ஊக்கமருந்தை உட்கொண்டதால் அவர் பதக்கத்தை இழந்துள்ளார். மஞ்சு வன்னியராய்ச்சிக்கு விளையாட்டுகளுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுகளை பொறுத்து, இரண்டாம் இடத்தை பெற்ற வேல்ஸ் நாட்டின் ஷான் மெக்கோல்ட்ரிக்குக்கு வழங்கப்படும் எனவும் அந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக இடம் பெற்ற சோதனையில், மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரிய வந்ததை அடுத்து, அவரிடமிருந்து பதக்கத்தை இலங்கை ஒலிம்பிக் சங்கம் திரும்பப் பெற்றது. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்பாட்டை தடுக்கும் அமைப்பான வாடாவின் தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துகளின் பட்டியலில் உள்ள நாண்ட்ரோலின் எனும் மருந்தின் ஒரு வடிவான 19-நொராண்ட்ரோஸ்டிரோன், மஞ்சு வன்னியராய்ச்சியின் சிறுநீரில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கைக்கு ஒரே ஒரு தங்கப் பதக்கமே கிடைத்திருந்தது. 1995, 1996, 2004, 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் மஞ்சு வன்னியாராட்சி பெற்றுள்ளார். 2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம் அக்டோபர் 14, 2010 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. "இடத்தை பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. இந்நிலையில், எவரும் கோராத வகையில் புதிய தீர்வினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது ஆச்சரியமாகவும் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிப்பதற்கான உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததோடு, அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றும் கூறியது. கடந்த 1992-ம் ஆண்டு இந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் நடுப்பகுதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், இந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தார்கள். 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 2,000 பேர் வரை உயிரிழந்தனர். சர்ச்சைக்குரிய பாபர் மசூதிப் பகுதியை மூன்றாகப் பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அக்டோபர் 2, 2011 சிட்னி நகரின் நேரத்தில் இருந்து 29 மணி நேரம் பின்னோக்கி இருக்கும் சமோவா இவ்வாண்டு டிசம்பர் 29 ஆம் நாளில் இருந்து 3 மணி நேரம் முன்னோக்கி இருக்கும். 119 ஆண்டுகளுக்கு முன்னர் சமோவா எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவுடன் அதன் வணிகத் தொடர்புகளை விருத்தி செய்வதற்காக கிழக்குப் பகுதிக்கு மாறியது. ஆனாலும் பின்னாளில் ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்துடன் அதன் வணிகத் தொடர்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. "நியூநிலாந்து, ஆத்திரேலியாவுடன் வணிகத்தில் ஈடுபடும்போது நாம் வாரத்திற்கு இரண்டு தொழில் நாட்களை இழக்கிறோம் என்றார் சமோவாப் பிரதமர் துலீப்பா மலீலிகாவொய். "இங்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது, நியூசிலாந்தில் சனிக்கிழமை, நாம் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் செல்லும் போது சிட்னி, பிறிஸ்பேன் நகரங்கள் வர்த்தகத்தை ஆரம்பித்து விடுகின்றன என்றார் அவர். யூ55 (2005 YU55) என்ற இந்தச் சிறுகோள் (asteroid) 2005 ஆம் ஆண்டு திசம்பர் 28 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மெக்மிலன் என்பவரால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பருமனும், பூமியிலிருந்தான இதன் தூரமும் இச்சிறுகோளைப் பற்றி மேலும் அறிய வானியலாளர்களுக்கு ஆர்வம் மிகுந்துள்ளது. “இச்சிறுகோள் 400 மீட்டர்கள் அகலமானது. 2028 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமிக்குக் கிட்டவாக வரும் மிகப்பெரிய விண்கல் இதுவாக இருக்கும்,” என நாசாவைச் சேர்ந்த டொன் யோமன்ஸ் தெரிவித்தார். ஆனாலும் இது குறித்து நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர். “யூ55 குறைந்தது அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு இல்லை,” என்றார் யோமன்சு. “பூமிக்கு மிகக் கிட்டவாக வரும் போது, பூமியின் மீது அதன் ஈர்ப்பு விசை மிகவும் புறக்கணிக்கத்தக்க அளவாகவே இருக்கும்.” இப்படியான சிறுகோள்கள் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்குக் கிட்டவாக வந்து போகின்றன என நாசா தெரிவிக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் கோரப்பட்ட சரணடைதலை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் "நாம் அந்நிலையைக் கடந்து விட்டோம்" என்று கூறியதாகவும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் போர்ப் பகுதிக்குச் செல்லவும் அது தடை விதித்ததாகவும் அமெரிக்க அரசுத் தகவல்கள் மூலம் கசிந்துள்ளது. இலங்கை அரசு இத்தகைய குற்றச்சாட்டுகளை எப்போது மறுத்தே வந்துள்ளது. ஆஃப்டென்போஸ்டன் என்ற நோர்வே செய்திப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இத்தகவல்களின் படி, 2009 மே 16 ஆம் நாள் இலங்கையின் நோர்வே தூதுவர் அமெரிக்கத் தூதுவருக்கு தொலைபேசி மூலம் புலிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி சரணடைய விரும்புவதாகத் தம்மிடம் புலிகளின் பன்னாட்டு முகவர் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து அமெரிக்கத் தூதுவர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் ஊழியர்கள் சரணடைவதை உறுதிப்படுத்த இராணுவ உலங்குவானூர்தி மூலம் போர்ப்பகுதிக்குச் செல்ல ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான முகவர் போல் கொஸ்டெலோ புலிகள் சரணடைவது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் தகவல் அனுப்பினார். அதற்கு கோத்தபாய சரணடையத் தயாராக இருக்கும் புலிகளின் பெயர்களைத் தருமாறு அவர் கேட்டதாகவும், ஆனால் அப்பெயர்ப் பட்டியலை நோர்வே தரப்புக்கு புலிகளின் தரப்பு வழங்கவில்லை என்றும் செய்திகள் கசிந்துள்ளன. இராணுவ ஆட்சியின் போது அர்ஜென்டினா]]வில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 'வானூர்திக் கொலைகள்' தொடர்பாக மூன்று முன்னாள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1977 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கன்னியாஸ்திரியான லியோனி டூக்கே, மற்றும் அசுச்சீனா வில்லாஃபுலோர் என்ற மனித உரிமை ஆர்வலர் மற்றும் பலர் விமானம் ஒன்றில் இருந்து தூக்கி எறியப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் பயணம் செய்த விமானத்தில் கைது செய்யப்பட்ட காவல்துறையினர் விமானப் பணியாளர்களாக இருந்துள்லதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு எறியப்பட்டவர்களின் உடல்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் இனந்தெரியாத புதைகுழி ஒன்றில் புதைக்கப்பட்டனர். 2005 ஆம் ஆண்டிலேயே இவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இவ்வகையில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த செவ்வாய்க் கிழமை அர்ஜெண்டீன நீதிமன்றம் ஒன்று இந்தக் காவல்துறையினரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. பிளாசா டி மாயோவின் அன்னைகள் என்ற மனித உரிமைகள் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் சகோதரி லியோனி டூக்கேயும் ஒருவர். இவரும் இவருடன் சேர்ந்த மேலும் பலரும் திசம்பர் 1977 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் கைதான அலீசு டொமோன் என்ற வேறொரு பிரெஞ்சுக் கன்னியாஸ்திரியின் உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களின் கடத்தல் மற்றும் படுகொலைகள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைக் கப்டன் ஆல்பிரெடோ அஸ்டிஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வழக்குத் தொடுநர்கள் கோரிக்கை விடுத்துள்லனர். 1976 முதல் 1983 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற இராணுவ ஆட்சியில் 10,000 முதல் 30,000 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. 1984ம் ஆண்டு போப்பால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய நச்சுவாயுவால் 3,500 பேர் வரையில் உடனடியாகவும், 15,000 பேர் வரையில் அதன் தாக்கத்தினால் பின்னரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்போடு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டார். போப்பால் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவர் கேசுப் மகிந்திரா மற்றும் 6 பேருக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதி்த்துத் தீர்ப்பளித்தார். அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான உயிரிழக்கக் காரணமானவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் தண்டனை என்பது மிக மென்மையான தண்டனை என பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், சிபிஐ மற்றும் மத்தியப் பிரதேச அரசு, உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தன. 1984 போபால் நச்சுக் கசிவு: குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை திங்கள், சூன் 7, 2010 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்காக, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஜ்யசபா எம்பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று ஆஜரானார். இந்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, டில்லியில் உள்ள சிபிஐ கோர்ட்டில், 14ம் தேதி வரை தினமும் கையெழுத்து இட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரராக உள்ள கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த 6-ந்தேதி ஆஜர் ஆனார். அமலாக்கப்பரிவும் கனிமொழியிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவும் விசாரணைக்கு சென்னையில் ஆஜர் ஆகும் படி சம்மன் அனுப்பியது. சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டி இருப்ப‌தால், இவ்விரு நாட்களிலும் சிபிஐ சிறப்பு கோர்ட்டிற்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இன்று கனிமொழி ஆஜரானார்.அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கனிமொழியின் வருகையை அடுத்து, அந்த அலுவலகதத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரிடம், 2004ம் ஆண்டு முதல் வருமான வரி கணக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவன முதலீடுகள், வாங்கியுள்ள பங்குகள் அனைத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை மே 4, 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 26, 2011 அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை பெப்ரவரி 18, 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாலை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன. வழக்கமான வாக்கு எண்ணிக்கையை விட முடிவுகளை வெளியிட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் செல்லும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகத்தில் 91 மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இதில், 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 27 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் 18 கம்பெனிகள் இன்று வருகின்றன. காலை 5 மணிக்கே, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு, தொகுதியின் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்துவிடுவர். எந்தெந்த மேசையில் வாக்கு எண்ணிக்கைக்கு எந்த ஊழியரை பயன்படுத்துவது என்பது அப்போது முடிவு செய்யப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியதும், தொகுதி தேர்தல் அதிகாரியின் மேசையில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரத்துக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும், அதற்கான படிவம் நிரப்பப்பட்டு, தேர்தல் அதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்படும். ஒரு சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட பின், அந்த சுற்று விவரம் அறிவிக்கப்படும். இது தவிர, வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். அந்த வீடியோ காட்சிகள் சிடி'யாக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று பிரவீன்குமார் தெரிவித்தார். ராஜரத்தினத்துக்கு எதிராக எதிராக முன்வைக்கப்பட்ட 14 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பதினைந்தரை தொடக்கம் பத்தொன்பதரை வருடங்கள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு எதிர்வரும் ஜுலை மாதம் 29ம் திகதி வெளியிடப்படும் என்று அமெரிக்க மான்ஹட்டன் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரிச்சட் ஹொல்வெல் தெரிவித்துள்ளார். பங்கு வணிகத்தில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டத்தை தவிர்ப்பதற்காக உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு இலாபம் உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. [[இலங்கை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜரத்தினம், உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் 236ம் இடத்தில் இருந்தார். 2009 அக்டோபர் 16 ஆம் நாள் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பங்கு சந்தை மோசடி தொடர்பில் 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உலகப் பங்குச் சந்தைகளில் உட்தகவல் பெற்று, அதன் அடிப்படையில் வணிகம் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். அவை தொடர்பில், ராஜரத்தினத்தின் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு, நேற்றைய தினம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. ராஜரத்தினம் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக அவரது வீட்டைக் கண்காணிக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேவேளை தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்து ராஜரத்தினம் மேன்முறையீடு செய்யவிருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜோன் டவுட் தெரிவித்தார். ராஜரத்தினத்துக்கு எதிரான வழக்கை முன்ன் நின்று நடத்திய புலனாய்வுத்துறை முகவர் பி. ஜே. காங், தீர்ப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம் மார்ச் 23 2011 வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது அக்டோபர் 17, 2009 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த காவல்துறை அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 15ம் தேதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நகரின் ஆயிரக்கணக்கான வரலாற்றுத் தொன்மை மிக்க கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 93,000 பேர் வசிக்கும் லோர்க்கா நகரின் அனேகமாக அனைத்துக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தின் அளவு குறைவாக இருந்தாலும் மேற்பரப்புக்குக் கிட்டவாக இது நிலை கொண்டிருந்ததால் இதன் தாக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. 1956 ஆம் ஆண்டில் கிரனாடாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இம்முறைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. திரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர். கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி சந்தித்ததையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் புத்ததேவ் பட்டாச்சார்ஜி. அவர் போட்டியிட்ட ஜாதவ்பூர் தொகுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில் இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங் தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்' என்றார். தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில் இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்' என்றார். மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் பானர்ஜிக்குக் கிடைக்கவுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி மே 13, 2011 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் இடதுசாரி முன்னணி (எல்டிஎப்) தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் கூட்டணி 4 இடங்கள் மட்டும் அதிகமாகப் பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 140 நாற்பது இடங்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய சனநாயகக் கூட்டணி 72 இடங்களையும், மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி சனநாயக் கூட்டணி 68 இடங்களையும் வென்றுள்ளன. மார்க்சியக் கம்யூனிஸ்ட் 45 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தனித்து 38 இடங்களிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் 20 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (எம்) 9 இடங்களிலும், சோசலிஸ்ட் ஜனதா (சனநாயகம்) கட்சி 2 இடத்திலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப் கேரள காங்கிரஸ் (பி ஆர்எஸ்பி (பி) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இடதுசாரி முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் 13 இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடத்திலும், தேசியவாத காங்கிரஸ், ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தலா 2 இடத்திலும் வெற்றி பெற்றன. இடதுசாரி ஆதரவில் போட்டியிட்ட 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தில் தருண் கோகாய் தலைமையில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 76 தொகுதிகளில் வென்றுள்ளது. அசாம் கணபரிக்சத் 10 தொகுதிகளில் வென்றது. அசாமில் 2001-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அதே நேரத்தில், கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கனிமொழிக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லை என்றும், அவரை காவலில் வைக்கக் கூடாது என்றும் வாதிட்டார். அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை மே 4, 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 26, 2011 அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை பெப்ரவரி 18, 2011 முன்னாள் ஆளும் கட்சியான தி. மு. க. இம்முறை தேர்தலில் 21 தொகுதிகளை மாத்திரமே பிடித்திருக்கும் நிலையில், தே.மு.தி.க. போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தே. மு. தி. க சார்பில் போட்டியிட்டு வென்ற பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தில் விஜயகாந்த்தை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். இதன் மூலம் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தே. மு. தி. க, பிரதிநிதிகளின் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தனது கட்சி பிரதிநிதிகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். சட்டசபை தேர்தலில் சாதி அடிப்படையில் செயல்படும் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார். லீ குவான் யூவுடன் இணைந்து மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர். லீ குவான் யூவின் மகனும் தற்போதைய பிரதமருமான லீ சியன் லூங்கின் புதிய அமைச்சரவையில் இளைய, புதிய அமைச்சர்கள் இடம்பெற வழிவகுக்க தாங்கள் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதாக நேற்று இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர். ஆளும் மக்கள் செயல் கட்சி இம்மாதம் நடைபெற்ற தேர்தலில் 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக பெரும் பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து லீ குவான் யூ இம்முடிவை எடுத்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். 87 வயதான லீ கூவான் யூ 1959 ஆம் ஆண்டு முதல் 1990 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். அவருக்குப் பின்னர் 2004 வரை கோ சோக் டோங் பிரதமரானார். இருவரும் மே 7 இல் நடந்த தேர்தலில் தமது தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். "புதிய அரசியல் நிலவரத்தை நாங்கள் நன்கு ஆராய்ந்துவிட்டோம். அது எதிர்காலத்தில் எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துள்ளோம். சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு நாங்கள் பங்காற்றி விட்டோம். அதிக சிக்கல் மிகுந்த, சிரமமான காலத்துக்குள் சிங்கப்பூரைக் கொண்டு செல்லும் இளைய தலை முறையினருக்கு வழிவிடும் நேரம் வந்துவிட்டது என்று இரு முன்னாள் பிரதமர்களும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அமைச்சரவையிலிருந்து விலகினாலும் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். பிரதமர் லீ சியன் லூங்கின் பழைய அமைச்சரவையில் இருந்து இவர்கள் இருவர் தவிர, பேராசிரியர் எஸ். ஜெயக்குமார், லிம் பூன் ஹெங், ஜார்ஜ் இயோ, லிம் ஹுவி ஹுவா ஆகியோரும் பதவி விலகியுள்ளனர். இம்மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஆளும் கட்சி 60% வாக்குகளைப் பெற்றது. 2006 தேர்தலில் 67% வாக்குகளையும், 2001 தேர்தலில் 75% வாக்குகளையும் அது பெற்றிருந்தது. ஜெயலலிதாவைத் தொடர்ந்து ‌நி‌தி‌த்துறை அமை‌ச்ச‌ராக ப‌ன்‌னீ‌ர்செ‌ல்வ‌ம் உ‌ட்பட 33 பே‌ர் அமை‌ச்ச‌ர்க‌ளாக பத‌‌வியே‌ற்று‌க் கொ‌ண்டன‌ர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. பதவியேற்புக்குப் பின்னர் இன்று மாலை ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவை சகாக்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். "சாவியா நகரில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு கேணல் பிக்கியே காரணம் என நம்பப்படுகிறது என எதிரணிகளை மேற்கோள் காட்டி அல் அராபியா தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நேட்டோவின் வான் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக லிபிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அது மேலதிக தகவல் எதனையும் தரவில்லை. கடாபியின் 40-ஆண்டுகால ஆட்சிக்கெதிராக கடந்த பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். லிபியா மீது நேட்டோ படைகள் மார்ச் 31 இல் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை நேட்டோவின் போர் வானூர்திகள் மொத்தம் 6,661 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. ஆனாலும் பல போர் முனைகளில் எதிரணிகளுக்கும் கடாபியின் படைகளுக்கும் இடையில் சண்டைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் டேவிட் ரிச்சார்ட்ஸ் சண்டே டெலிகிராஃப் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலில், கடாபியின் படைகளுக்கு எதிராக நேட்டோ தனது வான் தாக்குதலை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். மிகவும் வித்தியாசமாக இருக்கிறது Interesting news article 62 வயதான ஸ்ட்ராஸ்-கான் சமர்ப்பித்திருந்த 1 மில்லியன் டாலர் பிணை மனுவை நிராகரித்த நீதிபதி, ஸ்ட்ராஸ்-கான் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடலாம் என்ற காரணத்தினாலேயே பிணை மறுத்ததாகத் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள விடுதி ஒன்றின் பணிப்பெண்ணை பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை நாட்டில் இருந்து விமானம் ஒன்றில் பிரான்சிற்கு வெளியேற முற்பட்ட வேளையில் ஸ்ட்ராஸ்-கான் விமானத்தில் வைத்து அமெரிக்கக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 25 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் 11 x13 அளவுடைய சிறைக்கூண்டொன்றில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை இவர் மறுத்துள்ளார். இதற்கிடையில், டிரிஸ்தன் பனோன் என்ற பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் ஒருவர் ஸ்ட்ரோஸ்-கான் மீது மேலுமொரு பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் ஸ்டிராஸ்-கான் மோசமாக நடந்து கொண்டிருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் நியூயார்க்கில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்திற்குப் பின்னர், திரிஸ்தன் பனோனும் ஸ்டிராஸ்கனுக்கு எதிராக வழக்கு தொடர்வது பற்றி பரிசீலித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மகாராணியாரின் நான்கு நாள் பயணத்துக்கு 4,000 பேர் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இவரது பயணத்தின் போது குடியரசுத் தீவிரவாதிகளின் வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டப்ளினை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் குண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. லண்டனில் குண்டுப் புரளி ஒன்று குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் மேரி மெக்கலீஸ் சம்பிரதாயபூர்வமாக டப்ளினில் உள்ள அவரது மளிகையில் மகாராணியை வரவேற்பார். 1911 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசர் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் கடைசியாக அயர்லாந்துக்குச் என்றிருந்தார். ஆனால் அப்போது அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. சரியாக நூறு ஆண்டுகளின் பின்னர் தற்போது மகாராணி செல்லவிருக்கிறார். ஏற்கனவே இரண்டு வங்காளதேசக் கம்பனிகள் உகாண்டா, காம்பியா, மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் பாவிக்கப்படாமல் இருக்கும் பண்படுத்ததகுந்த நிலங்களை குத்தலைக்கு எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கங்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வார இறுதியில் தான்சானியாவில் மேலும் 30,000 எக்டயர் நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பெருமளவு உழத்தகுந்த நிலங்கள் பாவிக்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில், ஆண்டு முழுவதும் முக்கிய பயிர் வகைகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மனித வளமும், நுண்திறமையும் வங்காளதேசம் கொண்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இக்குத்தகைத் திட்டத்தின் படி, இந்நிலங்களில் விளையும் பயிர்வகைகளின் குறைந்தது 60 விழுக்காடு வரை வங்காளதேச நிறுவனங்கள் தமக்கு எடுத்துக் கொள்ளும். பதிலாக, வங்காளதேசம் ஆப்பிரிக்க விவசாயிகளை நெல் உற்பத்தி, விதைப் பாதுகாப்பு, மற்றும் நீர்ப்பாசனம் போறவற்றில் பயிற்சி அளிக்கும். இப்புதிய திட்டத்தின் படி உணவு உற்பத்தி அதிகரிக்கும் என்றும், வங்காளதேசத்தின் விரிவடையும் வேலையாட்கள ஆப்பிரிக்க விளை நிலங்களில் பணியாற்ற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் கோதுமை, மற்றும் பருத்தி போன்றவற்றையும் விளைவிக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். "எமது வேளாண்மையை விருத்தி செய்வதற்கு நாம் முயலுகிறோம், ஆனாலும் எமது நாட்டில் அதற்குத் தேவையாவ விளைநிலங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனாலேயே நாம் ஆப்பிரிக்கா நோக்கி நகர முயற்சி செய்கிறோம் என வங்காளதேச வெளியுறவுத்துறை அதிகாரி வகிதுர் ரகுமான் தெரிவித்தார். வங்காளதேசம் உலகின் நான்காவது பெரிய அரிசி விளையும் நாடாகும். கடந்த ஆண்டு மட்டும் அது 34 மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்துள்ளது. வங்காளதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களினால் அங்கு உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. ருவாண்டாவுக்கான ஐநா போர்க்குற்ற நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அத்துடன் முன்னாள் துணை இராணுவக் காவல்துறைத் தலைவர் அகஸ்டின் இண்டிலியிமனா என்பவரும் குற்றவாளியாகக் கண்டுள்ளது. ஆனாலும் அவர் ஏற்கனவே தனது தண்டனைக்காலத்தை ஏற்கனவே சிறையில் கழித்தமையினால் அவரை விடுவித்தது. மேலும் இரு மூத்த இராணுவ அதிகாரிகள்ளுக்கு 20 ஆண்டுகாலத் தண்டன வழங்கப்பட்டது. இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோரை விசாரணை செய்தவதற்காக ஐநா நியமித்த இந்தப் போர்க்குற்ற நீதிமன்றம் அயல்நாடான தான்சானியாவில் கூடியிருந்தது. ஜெனரல் பிசிமுங்கு தனிப்பட்ட முறையில் போராளிகளில் வீடுகளுக்குச் சென்று தூட்சி இனத்தவரைச் சுட்டுக் கொல்லுமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தூட்சிகளை அவர் கரப்பான் பூச்சிகள் எனவே அழைப்பார் என்றும் கூறப்பட்டது. ருவாண்டாவின் அப்போதைய அரசுத்தலைவர் ஜுவெனல் ஹபியாரிமானா 1994 ஏப்ரல் 6 ஆம் நாள் தலைநகர் கிகாலியில் விமானத்தில் பயணம் மேற்கொண்டபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து கொல்லப்பட்டார். இதனை அடுத்தே அங்கு இனக்கலவரம் மூண்டது. நேற்று புதன்கிழமை இரவு உள்ளூர் நேரம் 9 மணியளவில் ரியோ நேக்ரோ மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது அபாய அறிவிப்புக் கிடைத்ததாகவும் சிறிது நேரத்தில் அது வீழ்ந்துள்ளதாகவும் சோல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானம் வீழ்ந்த லொஸ் மெனுக்கோஸ் என்ற நகருக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நகரின் தென்மேற்கே 25 கிமீ தூரத்தில் இவ்விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும், விமானம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக உள்ளூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. வெளியுறவு அமைச்சர் பதவிக்கு கா. சண்முகம் தெரிவு செய்யப்பட்டார். முன்பு அவர் கவனித்த வந்த சட்ட அமைச்சர் பொறுப்பிலும் சண்முகம் தொடர்ந்து செயல்படுவார். எஸ். ஈஸ்வரன் பிரதமர் அலுவலக அமைச்சர் பொறுப்புடன், உட்துறை அமைச்சு, வர்த்தகத் தொழில் அமைச்சு ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராகவும் செயல்படுவார். முன்பு சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விவியன் பாலகிருஷ்ணன், புதிய சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சராகிறார். “திருப்புமுனை தேர்தலுக்குப் பிறகு நாம் நமது கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. புதிய தலைமுறை சிங்கப்பூரர்களுடன் பணியாற்றவும் அதிக சிக்கலான சூழ்நிலையில் சிங்கப்பூரை முன்நடத்திச் செல்லவும் புதிய தோற்றமுடைய அமைச்சரவையை அமைக்க வேண்டியதாயிற்று,” என்று பிரதமர் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். அமைச்சரவையின் பதவிகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் பதவியேற்புச் சடங்குக்குப் பிறகு நடப்புக்கு வரும். லீ குவான் யூ சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து விலகினார் மே 15, 2011 இலங்கையில் உள்ள இசுலாமிய அமைப்புகள் இப்படப்பிடிப்பு குறித்து தமது கோபத்தை வெளியிட்டுள்ளதாக கொழும்பு பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். * சிறந்த திரைப்படம் ஆதாமிண்டே மகன் அபு (மலையாளம்) * சிறந்த அறிமுகப் படம் (இந்திராகாந்தி விருது பாபூ பாண்ட் பாஜா (மராத்தி) * சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் தபங்க் (இந்தி) * சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுப் படம் (நர்கீஸ் தத் விருது மோனெர் மனுஷ் (வங்காளம்) * சமுதாய விவங்காரங்கள் தொடர்பான சிறந்த படம் சாம்பியன்ஸ் (மராத்தி) * சூழலியல் தொடர்பான சிறந்த படம் பெட்டடா ஜீவ (கன்னடம்) * சிறந்த குழந்தைகள் படம் ஹெஜ்ஜேகளு (தெலுங்கு) * சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் (தமிழ் திரைப்படம் ஆடுகளம்) * சிறந்த நடிகர் தனுஷ் (தமிழ் திரைப்படம் ஆடுகளம்) சலீம் குமார் (மலையாளம் திரைப்படம் ஆதாமிண்டே மகன் அபு) * சிறந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் (தமிழ் திரைப்படம் தென்மேற்குப் பருவக்காற்று) மிதாலி ஜக்தப் வரத்கர் (மராத்தி பாபூ பாண்ட் பாஜா) * சிறந்த துணை நடிகர் விருது ஜே. தம்பி இராமையா (தமிழ் திரைப்படம் மைனா) * சிறந்த துணை நடிகை விருது சுகுமாரி (தமிழ் திரைப்படம் நம்ம கிராமம்) * சிறந்த குழந்தை நட்சத்திரம் ஹர்ஷ் மாயர் (இந்தி திரைப்படம் ஐ அம் கலாம்) சாந்தணு ரங்கனேக்கர், மச்சிந்திரா கட்கர் (மராத்தி திரைப்படம் சாம்பியன்ஸ்) விவேக் சாபுக்ஸ்வர் (மராத்தி திரைப்படம் -பாபூ பாண்ட் பாஜா) இன்னும் செய்தியை விரிவாக எழுத வேண்டும் குற்றத்தின் தீவிரம், தன்மை, குற்றச்சாட்டுக்களின் அளவு, சாட்சிகளின் பலம், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பிணை வழங்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். பெரும்பாலான சாட்சிகள், கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றுவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையில் விட்டால் அந்தச் சாட்சிகள் மீது அவர்கள் தங்கள் செல்வாக்கை செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார். அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை மே 4, 2011 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 26, 2011 அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை பெப்ரவரி 18, 2011 இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 1430 மணிக்கு இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் பெரும் மழை பெய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமானோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோலாலம்பூரின் தெற்கேயுள்ள ஹூலு லங்காட் என்ற மாவட்டத்தில் உள்ள இதாயா மத்ரசா அல்-தக்வா அனாதை இல்லமே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டது. சிறுவர்கள் அங்குள்ள முகாம் ஒன்றில் பாரம்பரிய மலாய் இசைக்கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போதே மண்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிக விரைவாக இரண்டு மண்சரிவுகள் ஏற்பட்டதென்றும், மிகச் சிலரே தப்பியோடக்கூடியதாக இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மீட்புப்பணிகள் நடைபெற்றபோது அங்கு மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மூன்று நாட்களாக வடக்கு மற்றும் தெற்கு சூடானிய இராணுவத்தினரிடையே இடம்பெற்றுவந்த கடும் சண்டையை அடுத்து அபியெய் நகரில் இருந்து எதிரிகளை விரட்டி விட்டோம் என சூடானிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. எண்ணெய் வளம் மிக்க இப்பகுதி வடக்கு தெற்கு சூடான்களுக்கிடையே எதிர்காலத்தில் பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாறலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் சூலை மாதத்தில் தெற்கு சூடான் அதிகாரபூர்வமாக சூடானிடம் இருந்து விடுதலை பெற இருக்கிறது. ஆனாலும் அபியெய் நகரை இரு பகுதிகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. "சூடானிய இராணுவம் அபியெய் நகருக்குள் ஊடுருவி விட்டது என தெற்கு சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்தின் பேச்சாளர் பிலிப் அகுவெர் தெரிவித்தார் அங்கு இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது, ஆனால் அவர்கள் தாங்கிகளுடன் எம்மைத் தாக்குகின்றனர் என்றார். சூடானில் தற்போது தங்கியிருக்கும் ஐநா பாதுகாப்புச் சபைப் பிரதிநிதிகள் திங்களன்று அபியெய் செல்லவிருக்கின்றனர். வடக்கு செருமனியில் டொலென்சே பள்ளத்தாக்கில் எலும்புகள் முறிந்த நிலையில் பல மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை கிமு 1200 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என வரலாற்றாய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். எலும்புக் கூடுகளில் காணப்படும் காயங்கள் அக்காலத்தில் இரு வேறு இனக்களிடையே இடம்பெற்ற நேருக்கு நேர் மோதலில் கொல்லப்பட்டவர்கள் உடையதென அவர்கள் நம்புகின்றனர். அண்டிக்குவிட்டி என்ற ஆய்விதழில் இது பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. டொலென்சே பள்ளத்தாக்குப் பகுதியில் 2008 ஆம் ஆண்டில் இது குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் எட்டு உடல்களில் காயங்கள் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் இளைஞர்களுடையதாகவும் இருந்தன. ஈட்டிகளால் தாக்கப்பட்டிருப்பதற்கான காயங்களாக அவை இருந்தன. இரண்டு கூரான ஆயுதங்களும் அவற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "இவ்வுடல்கள் எங்கிருந்து ஆற்றுக்குள் வந்துள்ளன என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும், அதிலிருந்தே இவர்கள் போரில் கொல்லப்பட்டனரா அல்லது சமயச் சடங்குகளின் போது கொல்லப்பட்டவர்களா எனத் தீர்மானிக்கலாம். ஆனாலும் போர்க்களத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நாம் பெரும்பாலும் நம்புகிறோம் என இவ்வாய்வில் பங்கேற்ற செருமனியில் உள்ள பால்ட்டிக் மற்றும் ஸ்கண்டிநேவிய தொல்லியல் மையத்தின் ஆய்வாளர் ஹரல்ட் லூப்கே தெரிவித்தார். அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ள மாநகர ஆளுநர் ஜேய் நிக்சன், மேலும் சூறாவளிகள் தாக்கலாம் என எச்சரித்துள்ளார். நேற்றைய சூறாவளியின் தாக்கத்தினால் மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்புகள் ஜொப்ளின் நகரில் துண்டிக்கப்பட்டுள்ளன. வால்மார்ட் பல்பொருள் அங்காடி இருக்கும் தெருவில் முதலுதவி வண்டிகள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு நூற்றுக்கணக்கானோர் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சென் ஜோன்ஸ் மருத்துவமனையும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீசப்பட்ட பல மருத்துவ உபகரணங்கள் பல மைல் தூரத்துக்கு அப்பால் வீழ்ந்திருக்கக் காணப்பட்டன. கடந்த மாதம் அலபாமாவிலும் மேலும் ஆறு தெற்கு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 350 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பணி,பொழுதுபோக்கு:ஏதாவது ஒரு வகையில் நானும் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பவன் ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது மெரீனா கடற்கரைக்கு வந்து திடீரென உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. அவரது தலைமாட்டில் துணைவி ராசாத்தி அம்மாளும், கால்மாட்டில் மனைவி தயாளு அம்மாளும் உட்கார்ந்திருக்க சில மணி நேரம் படுத்தபடி இருந்தார் கருணாநிதி. பின்னர் ஈழத்தில் போர் முடிந்து விட்டதாகக் கூறி கிளம்பிச் சென்றார். இந்த அதிரடி உண்ணாவிரதம், அது முடிந்த விதம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தின. இவையெல்லாம் தற்போது நாடகம் என்று தயாநிதி மாறன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார். இதற்கிடையில், திமுக பற்றி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தான் கூறியதாக தெரிவிக்கப்படும் விக்கிலீக்ஸ் செய்திகளை பிரசுரித்தமைக்கு ஆங்கில நாளேடான இந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இல்லையேல், 5 கோடி ரூபாய் கேட்டு தான் மான நட்ட வழக்குத் தொடர இருப்பதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மேலவை மறுபடி வேண்டும் எனக்கோரி மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டமும் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. இப்பின்னணியில் நேற்று செவ்வாய்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் சட்டமேலவை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் முடிவே கட்சியின் கொள்கை என்றார். ஆரம்ப ஆய்வின் படி இரண்டு பிரமிடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. "பிரமிடை அகழ்வாஅய்வு செய்வது என்பது ஒவ்வொரு தொல்பொருளாய்வாளரும் காணும் கனவு என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்த அமெரிக்க தொல்பொருளியலாளர் சேரா பார்சாக் தெரிவித்தார். பூமிக்கு மேலாக 700 கிமீ தூரத்தில் செலுத்தப்பட்ட செய்மதி மூலம் எடுகக்ப்பட்ட படங்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இச்செய்மதியில் பூமியில் 1 மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள பொருட்களையும் துல்லியமாகப் படம் பிடிக்கக் கூடிய புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமிக்குக் கீழே உள்ள பொருட்களைக் கண்டறிவதற்கு அகச்சிவப்புக் கதிர் முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல தொல்பொருட்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க முடியும் என சேரா பார்சாக் தெரிவித்தார். கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை போரின் இறுதிக் கட்டம் வரை இராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாகவே நான் கேள்விப்பட்டிருந்தேன். அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் இடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு வினாவையும் தொடுக்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட முறையில் உரையாடும் போதே நான் மேற்கண்ட விடயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன், என்றார் பொன்சேகா. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. இராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவுமில்லை என்றும் சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கை சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நியாயமானது. அவர்கள் விடயத்தில் அரசாங்கம் தனது கடமைகளை சரிவர செய்யவில்லை என்று பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் கலந்துகொள்வதற்காக பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே செல்லும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் செர்பிய இராணுவத் தலைவரான மிலாடிச், அகவை 69, கைது செய்யப்பட்டதை செர்பிய அரசுத் தலைவர் பொரிஸ் டாடிச் இன்று நடைபெற்ற செய்தியாலர் மாநாட்டில் உறுதி செய்தார். 1995 ஆம் ஆண்டில் செரெபிரெனிக்காவில் குறைந்தது 7,500 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு இவரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது கைது மூலம் நாம் செர்பிய வரலாற்றின் ஒரு பகுதியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம், என அவர் கூறினார். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் சேர்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தலைநகர் பெல்கிரேடில் வாழ்ந்து வந்த மிலாடிச் 2001 ஆம் ஆண்டில் முன்னாள் யூகொசுலாவிய அரசுத்தலைவர் சிலபடான் மிலொசேவிச் கைது செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். சூலை 2008 ஆம் ஆண்டில் மற்றும் ஒரு போர்க் குற்றவாளி ரடொவான் கராட்சிச் கைது செய்யப்பட்டதை அடுத்து இவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது விக்கிசெய்தி, மார்ச் 31, 2010 சேர்பிய போர்க்குற்றவாளி ஆஸ்திரேலியாவில் கைது விக்கிசெய்தி, மே 13, 2010 ஒக்லகாமா நகரின் கனடியப் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன. அதேபோல, கன்சாசு மற்றும் அர்கன்சா மாநிலங்களையும் சூறாவளி தாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. சூறாவளி பயணித்த பகுதியில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் சேதம் அதிகமாகியுள்ளது. அமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு மே 23, 2011 ஆத்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைந்த 800 அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முன்வைத்திருக்கும் திட்டம் அகதிகளுக்கான சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயலாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூடிய மனிதாபிமானத்தை கடைப்பிடிக்குமாறும் அவர் ஆத்திரேலியாவைக் கோரியுள்ளார். மலேசியா துன்புறுத்தல்கள் சாசனம் மற்றும் அகதிகள் தொடர்பான சாசனத்தினை உறுதிப்படுத்தாத நாடுகளில் ஒன்றாகும். அவ்வாறான நடு ஒன்றுக்கு தனிநபர்களை அவுஸ்திரேலியா அனுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் மலேசியாவில் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. அத்துடன் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் ஆத்திரேலியா இவ்வாறான திட்டங்களுடன் ஒத்துப்போக முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மக்களை எவ்வாறு திருப்பி அனுப்புவது என்பது முதலாவது தெரிவாக இருக்கக் கூடாது. மக்களை எவ்வாறு ஏற்பது என்பதுதான் முதலாவது தெரிவாக இருக்க வேண்டும் எனவும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார். இதே வேளையில், படகுகள் மூலம் ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க்கும் ஆத்திரேலியாவின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டின் மனித உரிமை கண்காணிப்பகம் கேட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளோரிடன், தற்கொலைகள், வன்முறைகள், மன அழுத்தம் போன்றவை அதிகமாகக் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். "தேசிய சிறுநீரக பவுண்டேஷன் சிங்கப்பூர்' மருத்துவமனையில் ரஜினிகாந்த் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ளார். இவருடன் இரண்டு மருத்துவ நிபுணர்களும், ரஜினியின் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றனர். 61 வயதான நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே 13 அன்று மூச்சுத் திணறல் மட்டும் காய்ச்சல் காரணமாக அன்று தமிழகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இத்தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை அன்று நவ்சாட் மாவட்டத்தில் அமெரிக்கக் கடற்படைத்தளம் ஒன்று தாக்குதலுக்குள்ளானதை அடுத்து நேட்டோ படையினர் பதில் தாக்குதலை நடத்தியதிலேயே இப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. தீவிரவாதிகளை நோக்கி ஏவப்பட்ட இத்தாக்குதலில் பொதுமக்களின் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இரண்டு பெண்களும் 12 சிறுவர்களும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இரண்டு வயதுக் குழந்தையும் அடங்கும். இந்நிகழ்வு குறித்து நேட்டோ மற்றும் ஆப்கானித்தான் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இப்பகுதியில் தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கூட்டுப்படைகளைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பது குறித்து நேட்டோ படையினர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஆப்கானிய அரசுத்தலைவர் ஹமீட் கர்சாய் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக இவர் கழக அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து பீபா ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணைக்கு முகம் கொடுத்ததைத் தொடர்ந்தே அமாம் இந்த முடிவை எடுத்துள்ளார். தன்னை போட்டியிலிருந்து விலக்குவதற்கான சதியே இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய தலைவர் செப் பிளாட்டரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஒழுங்கு விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். இதற்கிடையில், பீபாவின் பிரதித் தலைவர் ஜாக் வார்னர், மற்றும் முகம்மது அமாம் ஆகியோரை அக்கழகத்தின் பணிப்பாளர் குழுவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து சுற்றுச்சூழல் அமைச்சர் நோர்பர்ட் ரொட்சென் அரசின் இம்முடிவை அறிவித்தார். செருமனியின் பல பாகங்களிலும் அணு உலைகளை மூடி விடுமாறு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். சப்பானிய அணு உலை விபத்தை அடுத்து செருமனியின் மிகப் பழமையான ஏழு அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன. இவை மீண்டும் பாவிக்கப்பபட மாட்டா என ரொட்ச்சென் ஆறிவித்தார். வடக்கு செருமனியில் உள்ள எட்டாவது உலை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக மூடப்பட்டது. இது நிரந்தரமாகவெ மூடப்பட்டு விட்டதாக அவர் அறிவித்தார். மேலும் ஆறு அணு உலைகள் 2021 ஆம் ஆண்டில் மூடப்படும். அண்மையில் அமைக்கப்பட்ட மூன்று புதிய உலைகள் 2022 ஆம் ஆண்டில் மூடப்பட விருக்கிறது. நிராயுதபாணிகளாக இருந்தவர்களை இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வதுபோல காட்டும் ஒரு வீடியோவை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி பல மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பியது. இது குறித்து கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் நேற்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறும் போது சேனல்-4" வெளியிட்ட காணொளிகளில் பதிவானவை அனைத்தும் உண்மை. அவை தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு அனைத்தும் உண்மை என்று உறுதியானது. நடந்ததை நடந்தபடி அந்தக் காட்சிகள் காட்டுகின்றன,” என்றார். 'இலங்கையின் உள்ளூர் புலன்விசாரணைகளைக் கண்காணிக்க ஒரு சர்வதேசக் கட்டமைப்பு தேவை மற்றும் தேவையான நடவடிக்கைகளை அந்த சர்வதேச கட்டமைப்பே மேற்கொள்ளலாம்' என்ற பரிந்துரையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளாலும், இலங்கை அரசாங்கப் படைகளாலும் சர்வதேச சட்டங்கள் பரந்துபட்ட அளவில் கடுமையாக மீறப்பட்டதாக முடிவு செய்வதற்கு நம்பகத்தன்மையுடனான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தலைமைச் செயலரின் நிபுணர் குழு அறிக்கை கூறுவதை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன். அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன், என்றும் அவர் குறிப்பிட்டார் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு எதிரொலிக்க வேண்டும் என்றும் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார். ஆனால், ஐநா நிபுணர் குழுவில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அங்கு பேசிய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க அங்கு தெரிவித்தார். கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பதனால் புற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பன்னாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கிளியோமா எனப்படும் ஒரு வகை மூளையில் ஏற்படும் கட்டிக்கும் காரணமாகின்றதென அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. தற்போது கையடக்கத் தொலைபேசிகள் 'Carcinogen' எனப்படும் நேரடியாக புற்றுநோயைத் ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் கையடக்கத் தொலைபேசிகள் நவீன தொழிநுட்ப சாதனமென்பதினால் இவற்றின் பாதிப்புக்கள் தொடர்பில் தெரிந்துகொள்ள நீண்ட காலம் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி முடிவானது 14 நாடுகளைச் சேர்ந்த 31 அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வையடுத்தே வெளியிடப்பட்டுள்ளது. குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனத்தன் சாமெட் இருந்தார். கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்று நோய் நோயை ஏற்படுத்தும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. வெளிநாட்டில் கையடக்கத் தொலைபேசி வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்றை அறிந்து கொண்டு பின்னர் தான் கையடக்கத் தொலைபேசிகளை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. பழங்குடி கூட்டமைப்பு ஒன்றின் தலைவர் சேக் சாதிக் அல்-அக்மர் என்பருக்கு ஆதரவான போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததை அடுத்து வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. இவ்வன்முறைகள் ஏமனில் உள்நாட்டுப் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படூம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகுவதற்கு மறுத்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பல இடங்களில் முறுகல் நிலை தொடர்கின்றன. ஆளும் பொது மக்கள் காங்கிரசுக் கட்சியின் தலைமையகம் மற்றும் சில கட்டடங்களை பழங்குடியினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. 33 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் சாலியைப் பதவியில் இருந்து விலகுமாறு அண்மையில் அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் பேச்சாளர் கேட்டுக் கொண்டிருந்தார். [[இலங்கை]]யின் காவல்துறைத் தலைவர் மகிந்த பாலசூரிய தமது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே இருக்கும் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 250 பேர் காயமடைந்த நிலையில், நாட்டின் தலைமை காவல்துறை அதிகாரியான மகிந்த பாலசூரிய தான் ஓய்வு பெறும் காலத்துக்கு முன்னரே விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கோரியுள்ளார். ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினரை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டாம் எனப் பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவையும் மீறி காவல்துரையினர் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது அதிகார மீறலில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை மீறி செயற்ப்பட்டமையினால் இந்தக் கலகம் தொடர்பில் பொறுப்பேற்ற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 15 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று அரசு கூறுகிறது. பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் ஃபிஃபாவின் தலைவராக செஃப் பிளாட்டர் நான்காவது தடவையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபிஃபா அமைப்பை மீண்டும் நேரான பாதையில் கொண்டு செல்ல தான் உறுதியுடன் இருப்பதாகவும், பன்னாட்டு அளவில், கால்பந்து விளையாட்டின் பெருமையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் பல தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மறுபடியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செப் பிளாட்டர் கூறியுள்ளார். ஃபிஃபா ஒரு கண்ணியமற்ற சூழலில் இருக்கிறது என்றாலும், அதன் நிதி விவகாரங்கள் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படையாகவே இருக்கிறது என்று அந்த மாநாட்டில் செஃப் பிளாட்டர் தெரிவித்தார். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, அதற்குப் பதில் புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். இலங்கையில் போரினால் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள தமிழர்களும் உரிய கெளரவத்துடன் அவரவர் பகுதிகளிலேயே வாழ, உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது இந்த அரசு. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில தேவையான வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நீடிக்கப்படும். லாத்வியாவில் நாடாளுமன்றமே அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. ஆண்டிரிசு 100 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 53 பேரின் ஆதரவைப் பெற்று லாத்வியாவின் அரசுத் தலைவராக இருந்த வால்டிசு சாட்லர்சை வென்று புதிய அரசுத்தலைவாரானார். 66 வயதுள்ள பர்சின்ஸ் முன்னாளில் வங்கியாளராகப் பணியாற்றி பசுமை மற்றும் விவசாயிகளின் தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தார். 56 வயதுள்ள முன்னாள் அரசுத்தலைவர் வால்டிஸ் சாட்லர்ஸ் பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்திருந்தார். சூலை 2007 இல் அரசுத்தலவரான இவர் ஒரு மருத்துவர் ஆவார். நாட்டின் புகழ்பெற்ற உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவரது வீட்டை சோதிப்பதற்கு லாத்வியாவின் ஊழலுக்கு எதிரான அரசு நிறுவனம் அவரது வீட்டை சோதிப்பதற்கு நாடாளுமன்றம் தடை விதித்திருந்ததை அடுத்து சாட்லர்ஸ் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தார். இதனாலேயே வாக்குகள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். லாத்வியா அனைத்துலக நாணய நிதியம், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து பெருந்தொகையான நிதியைக் கடனாகப் பெற்றுள்ளமை அதனை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து லாத்வியா பிரிந்ததில் இருந்து ஆண்டிரிஸ் பெர்சின்ஸ் அரசியலில் ஒரு புள்ளியாக இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வரை அவர் வங்கி ஒன்றை நிர்வகித்து வந்தார். பின்னர் நாட்டின் வர்த்தக சங்கத் தலைவராகப் பணியாற்றினார். கடந்த ஆண்டு அக்டோபரிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்களை அகதிகள் என்ற போர்வையில் ஆத்திரேலியாவுக்குள் கடத்துவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என அதன் குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்தார். "பெற்றோர் அல்லது பாதுகாவலர் இன்றி வரும் சிறுவர்கள் எமக்குத் தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார். எனினும், ஆத்திரேலிய அரசின் இத்திட்டத்துக்கு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாகப் பெண் பிள்ளைகள் பலர் கிறிஸ்துமசுத் தீவில் மலேசியாவுக்கு அனுப்பப்படுவதற்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். "அமைச்சர் இப்பிள்ளைகளுக்கு தானே பாதுகாவலராக உள்ளார் என்பதை மறந்து விட்டார் என பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் சேரா ஹான்சன்-யங் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக ஆத்திரேலியாவின் யூனிசெஃப் நிறுவனத்தின் பணிப்பாளர் நோர்மன் கிலெஸ்பி தெரிவித்தார். கடந்த திசம்பரில், அகதிகளையும் குழந்தைகளையும் ஏற்றி வந்த படகொன்று கிறித்துமசுத் தீவுக் கரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் கொல்லப்பட்டனர். படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது மே 8, 2011 கோடீசுவரர்களை உருவாக்கும் வாய்ப்புள்ள உலக நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான 'பாஸ்டன் கன்சல்டிங் குரூப்' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 850 பேர் வரையில் பயணித்ததாகவும் இதுவரையில் 578 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடுமையான காற்று வீசியதாலும் அளவுக்கதிகமானோர் கப்பலில் பயணம் செய்ததாலும் இக்கப்பல் விபத்துக்குள்ளானது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாக நெரிட்டது. உயிர் தப்பியோர் ஐநா அகதிகள் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். லிபியாவில் கடந்த சில நாட்களாக இராணுவ மற்றும் அரச நிலைகள் மீது நேட்டோ படையினர் வான், மற்றும் தரைவழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் லிபிய அக்திகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று லிபியத் தலைநகர் திரிப்பொலிக்கு அருகே விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். ஏமன் அரசுத்தலைவரின் மாளிகையில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் அரசுத்தலைவர் தொழுகையில் இருந்த போதே ஷெல் வீழ்ந்து வெடித்தது. துணைப் பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர் உட்படப் பலர் காயமடைந்துள்ளனர். 7 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் அரசுத்தலைவர் சாலே சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாக்குதலுக்குப் பின்னர் நேற்றிரவு தொலைக்காட்சியில் அவரது உரை ஒலிபரப்பப்பட்டது. தான் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சாதிக் அல்-அஹ்மர் தலைமையில் இயங்கும் பழங்குடியினரே நடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார். இவர்களுக்கும் தற்போது நாட்டில் கிளர்ச்சி நடத்தும் இளைஞர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார். இத்தாக்குதலில் இறந்தவர்களை அவர் மாவீரர்கள் எனப் போற்றினார். இதற்கிடையில், இத்தாக்குதலில் காயமடைந்த அரசுத்தலைவர் சாலே மேலதிக சிகிச்சைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளதாக அல்-அராபியா செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இத்தகவலை ஏமன் அதிகாரிகள் மறுத்திருந்தாலும், சவுதி அரேபிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் தாக்குதலில் படு காயமடைந்த ஐந்து மூத்த தலைவர்கள் சவுதி அரேபியாவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர். அரேபிய நாடான ஏமனில் 33 ஆண்டுகளாக சலே பதவியிலிருந்து வருகிறார். அவரை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய் அன்று இடம்பெற்ற வன்முறைகளில் 37 பேர் உயிரிழந்தனர். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நடுவண் அரசு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து யோகாசனப் பயிற்சி ஆசிரியரான பாபா ராம்தேவ் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை நேற்று துவக்கினார். அவரின் ஆதரவாளர்கள் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். கறுப்புப் பணம் குறித்து மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அது குறித்து மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறும் ராம்தேவ், லஞ்சமாக கொடுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை முழுமையாக வெளிக் கொண்டு வந்தால் அதன் பிறகு நாட்டில் யாருமே பசியோடு இருக்கமாட்டாரகள், வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், எழுத்தறிவின்மை பிரச்சனையையும் நம்மால் ஒழிக்க முடியும் என்றும், போராட்டத்தை ஆரம்பித்த பிறகும் அரசுக்கும் தனக்கும் இடையான பேச்சுக்கள் தொடர்வதாகவும் ராம்தேவ் கூறியுள்ளார். அதே நேரம் கறுப்புப் பணம் தொடர்பான பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்று கூறும் மத்திய அரசு இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள நிபுணர் குழுக்களை அமைத்துள்ளது. இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியே ஆர்எஸ்எஸ் தான். உண்ணாவிரத்ததில் எங்கும் எதிலும் ஆர்எஸ்எஸ் மயமாகவே உள்ளது. பாபா யோகா கற்றுக் கொடுத்தால் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், அரசியல் செய்தால் முதலில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்என்று கூறியுள்ளார் ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார். இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இறுதிச்சுற்றில் இசுப்பானியாவின் ரஃபேல் நடால், சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அரையிறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான நடால் 6-4, 7-5, 6-4 என்ற கணக்கில் பிரித்தானியாவின் ஆண்டி மரேயை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் பெடரர் 7-6, 6-3, 3-6, 7-6 (5) என்ற கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் செக். குடியரசின் ஆண்ட்ரியா-லூசி இணைந்து 6-4, 6-3 என்ற கணக்கில் சானியா-வெஸ்னினா இணையை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது. கிராண்ட் சிலாம் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா பெற்றார். கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இராணுவத்தினரின் ஒரு பகுதி நாட்டின் இரண்டாவது பெரிய நகரான போபோ டியோவுலாசோவில் உள்ள இராணுவ முகாமில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக முதற் தடவையாக அரசு ஆதரவுப் படைகள் நேற்றுத் தாக்குதலை மேற்கொண்டன. இராணுவக் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் வணிக நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களைச் சூறையாடி வந்தனர். கிளர்ச்சியாளர்கள் அதிக ஊதியம் வேண்டி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசுத்தலைவர் பிளைசு சொம்போரே தனது இராணுவத் தளபதியை கடந்த ஏப்ரலில் பதவி நீக்கம் செய்து இராணுவத்தினருக்கு அதிக சலூகைகளை அறிவித்திருந்தார். நாட்டில் விலைவாசி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவித்தும் பல தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தன. நகரத்தில் தற்போது அமைதி நிலவுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். 57 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டதாக நீதி அமைச்சர் ஜெரோமி டிரோரே தெரிவித்தார். 25 பொது மக்களும், எட்டு அரசுப் படையினரும் காயமடைந்தனர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் 1987 ஆம் ஆண்டில் தனது நண்பரான தொமஸ் சங்காரா என்பவரை புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றிய சொம்போரே அதன் பின்னர் நான்கு தடவைகள் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடைசியாக 2010 நவம்பரில் தேர்தல் இடம்பெற்றிருந்தது. இராணுவக் கிளர்ச்சியை அடுத்து புர்க்கினா பாசோ அரசு கலைக்கப்பட்டது ஏப்ரல் 17, 2011 "இந்தத் தோல்வி முழுவதும் எனதே. இத்தோல்விக்கு நான் பொறுப்பெடுக்கிறேன் என திரு. சோக்கிராட்டெசு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறினார். கடந்த மார்ச் மாதத்தில் சோசலிச அரசு கவிழ்ந்ததை அடுத்து போர்த்துக்கல் யூரோ வலயத்தில் கிரேக்கம், அயர்லாந்து நாடுகளுடன் மூன்றாவது நாடாக பொருளாதார மீளமைப்புக்கு உதவி கோரியது. கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் பெரும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தலைநகர் லீமாவில் பங்குச்சந்தைக் குறியீடு 10 விழுக்காடு குறைந்தது. நாட்டின் கனிமவள அதிகரிப்பில் கிடைக்குமிலாபம் முழுவதும் பெருவின் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என தேர்தலில் வெற்றி பெற்ற திரு. ஒலாண்டா உமாலா கூறினார். கெய்க்கோ ஃபுஜிமோரி முன்னாள் அரசுத்தலவரும் தற்போது சிறையில் உள்ளவருமான அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் மகள் ஆவார். 1982 இல் இராணுவத்தில் இணைந்த உமாலா 2000 ஆம் ஆண்டில் அல்பேர்ட்டொ ஃபுஜிமோரியின் ஆட்சிக்கெதிராகக் கிளம்பிய இராணுவக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தார். 2006 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தற்போது அரசு தலைவராக உள்ள அலன் கார்சியா இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு இதுதான் சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) அனுமதிப்பத்திரம் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் அனுமதிப்பத்திரம் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார். இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று நடுவண் புலனாய்வுப் பிரிவு நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது இது தொடர்பாக மேற்குறித்தவாறு சிவசங்கரன் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அவரை நேரில் வரவழைத்து நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், தயாநிதி தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்"நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன்' என்றார். இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது. லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்னை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது என்றார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு திமுக இன்று ஆதரவு தெரிவித்தது. இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு திமுக சார்பில் துரைமுருகன் பேசினார். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. வாகனச் சாரதி, மற்றும் பயணி ஒருவர் மட்டுமே உயிர் தப்பி வெளியே வந்தனர். ஏனைய அனைவரும் உயிருடன் உடல் கருகி மாண்டனர். இதுவரை 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்த 22 பேரில், 14 பேர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள். 4 பேர் உடுமலை மற்றும் 4 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்களாவர். விபத்தில் உயிர் தப்பியவர் சென்னை முகபேரை சேர்ந்த கார்த்திக் என்ற ஆசிரியராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற போது விபத்து ஏற்படுகையில் பின்பக்கக் கதவு திறந்ததால் வெளியே குதித்துவிட்டதாகவும் தீ மளமளவென பரவியதால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அசாம் மாநிலத்தில் பேருந்து ஒன்று பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் ஆற்றினுள் மூழ்கியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட உசைன் இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார். எம்.எப். உசைன், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது மறைவு தேசிய இழப்பு என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உப்புல் தரங்க மீது ஊக்கமருந்து உட்கொண்டமை தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சனத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் இவர் இம்மாதம் 30 ஆம் திகதி தனது 42 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார். 42 வயதாகும் சனத் ஜயசூரிய, தற்போது பன்னாட்டுப் போட்டிகளில் நீடித்திருக்கும் அதிக வயதான வீரராக உள்ளார். 444 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜயசூரிய, உலகக்கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படாதமை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துடனான போட்டிகளில் முடிந்தளவு சிறப்பாக விளையாடுவேன் எனவும், தான் 18 வயதில் இருந்ததைப் போல சிறந்த உடல் திட நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்தும் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு இவ்விண்கலத்தில் இருந்து எவ்வித செய்திகளும் பூமிக்கு அனுப்பப்பட மாட்டாது. இது மீண்டும் 2014 ஆம் ஆண்டு சனவரி 20 ஆம் நாள் விழித்துக் கொள்ளும். பனிக்கட்டியும், தூசுகளும் நிரைந்த 4கிமீ அகலமுள்ள இந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியைக் கீழிறக்கும். "ரொசெட்டா இப்போது ஓய்வெடுத்துக் கொண்டாலும், இதன் திட்டப்பணியாளர்களுக்கு இனி வரும் மாதங்கள் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். வால்வெள்ளியை சந்திப்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஐரோப்பிய விண்வெளி மையம் ஈசாவின் ரோசெட்டா திட்டப் பணிப்பாளர் ஜெரார்ட் சுவெம் தெரிவித்தார். ரொசெட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. 2014 நடுப்பகுதியில் இது குறித்த வால்வெள்ளியை அணுகும். 2014 நவம்பரில் வால்வெள்ளியின் தரையில் ஒரு தளவுளவியை இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரடைப்பால் இறந்துவிடும் இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கக் கூடிய புரதமருந்து ஒன்று அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் இறந்துபோன இதயத்தசையை மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கினால் இதயச் செயலிழப்பு ஏற்படாது, மாரடைப்பின் பின்னரும் குறிப்பிட்ட நபர் ஆரோக்கியமாக வாழலாம், எனினும் இயல்பான நிலையில் இறந்த இதயத்தசை இறந்ததாகவே இருக்க அவ்விடத்தில் நார் இழையங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்குத் தீர்வே இல்லையென்று நினைத்திருந்த காலம் இப்பொழுது மலையேறிவிட்டது. அறிவியலாளர்கள் புதிதாக மருந்தொன்றைக் கண்டுபிடித்து உள்ளனர், இது இறந்த இதயத்தசையை மீண்டும் உருவாக்குகின்றது. இதயம் ஒரு தசையால் உருவாக்கப்பட்ட உறுப்பு என்பது பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு விடயம். இதயத்தின் இத்தசைப்பகுதியைச் சுற்றி மென்சவ்வு உள்ளது; இது இதய மேற்சவ்வு (epicardium) எனப்படும். இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான உயிரணுக்கள் இந்த இதய மேற்சவ்வில் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புறத்தூண்டல் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இவை அங்கிருந்து இதயத்தசைப் பகுதிக்கு அசைந்து பின்னர் இதயத்தசை செப்பனிடப்படுகின்றது. ஏற்கனவே பரிச்சயமான தைமொசின் பீட்டா4 (thymosin β4) எனும் புரதம் இத்தூண்டலை ஏற்படுத்தவல்லது என அறியப்பட்டது; சுண்டெலியில் இப்புரதம் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, விளைவு வெற்றிகரமானதாக அமைந்தது. சுண்டெலி ஒன்றுக்கு இப்புரதம் மருந்துவடிவில் கொடுக்கப்பட்ட பின்னர் செயற்கையான மாரடைப்பு உண்டாக்கப்பட்டது, இதனால் இறந்த தசை இழையங்கள் சிலநாட்களில் மீண்டும் உருவாகின. தாக்குதல் நடத்தியவர் அமைச்சரின் மருமகள் என்றும் அல்-சபாப் போரளிக் குழுவின் உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இப்பெண் அடிக்கடி அமைச்சர் வீட்டுக்கு வந்து போனவர் என்றும் அவர் மீது பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குண்டுத்தாக்குதல் நடத்தியவர் அதே இடத்திலேயே இறந்தார், அமைச்சர் படுகாயமுற்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சோமாலியாவின் தலைநகரில் கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இது மூன்றாவதாகும். தற்கொலைக் குண்டைத் தவிர இரண்டாவது குண்டு அமைச்சரின் படுக்கை அறையில், கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை அதிகாரி நூர் பாரா ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். இந்த இரண்டாவது குண்டினாலேயே வீட்டுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது." இத்தாக்குதல் நடைபெற்ற வேளையில், தலைநகர் மொகதிசுவிலும் வேறும் பல சோமாலிய நகரங்களிலும் இரண்டு நாள் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நாடாளுமன்றத்தினதும், அரசுத்தலைவரினதும் பதவிக்காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தமிழ்நாட்டின் தெற்கே மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா- இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்திருந்தன. முன்னர் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும், தலைமன்னாருக்கும் இரமேசுவரத்துக்குமிடையிலுமாக இரு சேவைகள் இடம்பெற்றுவந்தன. 1982 இல் உள்நாட்டுப் போர் காரணமாக இவை இடைநிறுத்தப்பட்டிருந்தன. எம். வி. ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பெயரைக்கொண்ட கப்பல் கொழும்பை வந்தடைய சுமார் 14 மணித்தியாலங்கள் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கப்பலில் 1200 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். 4 ஆயிரம் தொன் எடையுள்ள சரக்குகளை ஏற்ற முடியும். 325 அறைகளைக் கொண்ட இக்கப்பலில் பயணிகளுக்குத் தேவையான உணவு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளது. இக்கப்பலில் ஒரு வழிப் பயணத்துக்கு குறைந்தபட்சமாக 49 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன் முதலில் வாரம் இருமுறை இக்கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும் என்றும் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார். இவ்விரு நகரங்கள் இடையே முதல் முறையாக 1907 ஆம் ஆண்டு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்புக்கு தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்பைச் சென்றடையும். கொழும்பிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திரும்பும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும். 'கேலோங் கிங்’ என அழைக்கப்படும் வில்சன் ராஜ் பெருமாள் பின்லாந்து நீதிமன்றத்தில் பல தகவல்களை வெளியிட்டார். பின்லாந்தில் லப்லாந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு பலந்த்த காவலுடன் அழைத்து வரப்பட்டார். காற்பந்து சூதாட்டத்தின் முக்கிய களமாக சிங்கப்பூர் விளங்குவதாக அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்தது. பின்லாந்தின் முன்னாள் சம்பியன்களான டாம்பேரே என்ற அணி ஃபீஃபா அமைப்பில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வணி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து $435,000 பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஏன் இவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. ஆனால் சூதாட்டமே காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் அவருடைய சூதாட்டக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர். 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகமெங்கும் பல ஆட்டங்களை நிர்ணயித்ததாக வில்சன் ராஜ் ஒப்புக்கொண்டார். போட்டிகளை ஏற்பாடு செய்வது, வீரர்கள், நடுவர்கள் மற்றும் காற் பந்து சங்கங்களைத் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் பங்கு கொள்ளச் செய்வது போன்றவை தனது பணி என அவர் தெரிவித்தார். தம் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு சிலவற்றைத் தவிர பல குற்றச்சாட்டுக்களை பெருமாள் ஏற்றுக் கொண்டுள்ளதாக பெருமாளுக்காக வாதாடும் வழக்கறிஞர் பேர்ட்டி பொய்க்கோ தெரிவித்தார். இவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என வழக்குத் தொட்நர்கள் வாதாடுகின்றனர். நள்ளிரவுக்குச் சற்று நேரத்தின் பின்னர் இக்குண்டுகள் வெடித்துள்ளன. குண்டுவெடிப்பு நடந்த இடம் இராணுவ, மற்றும் அரசியல் அலுவலகங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மின்தடை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் இந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், தமது போராளிகளின் உடல்களை இராணுவத்தினர் தம்முடன் கொண்டு செல்வதை தீவிரவாதிகள் விரும்புவதில்லை எனவும், அவர்களே இவற்றைப் புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் வாசிகள் தெரிவித்த முறைப்பாடு ஒன்றை அடுத்தே காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கண்டெடுக்க ப்பட்ட உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் சிலர் சீருடை அணிந்திருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பழங்குடியினரதும் மற்றும் ஏழைகளினதும் உரிமைகளுக்காகத் தாம் போராடுவதாக தீவிரவாதிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் மாவோயிசத் தீவிரவாதிகள் பெருமளவு உள்ளனர் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இதேவேளையில், அடிக்கடி தற்போது இப்பகுதியில் இடம்பெறும் நிலநடுக்கங்களினால் கிறைஸ்ட்சேர்ச் பிராந்தியத்தின் சில பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு ஏற்றதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. "நேற்றைய நிலநடுக்கத்தை அடுத்து எப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாது என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். 10,000 வீடுகள் வரையில் அழிக்கப்படும் என முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். பெப்ரவரி நிலநடுக்கத்தினால் மீள்கட்டுமானப் பணிகளுக்காக குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு பெப்ரவரி 22, 2011 தலைநகர் போர்ட் மோஸ்பியில் உள்ள அபாலின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து திங்கட்கிழமை இவ்வுடல் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபாலின் வளர்ப்பு மகன் தியோ இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் கண்டெடுக்கப்பட்ட நாளில் இருந்து இவர் தலைமறைவாகியிருந்தார். இவரே இப்பெண்ணுடன் கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. பப்புவா நியூ கினியின் அரசுத்தலைவர் மைக்கல் சொமாரே இதய அறுவை சிகிச்சையை அடுத்து ஓய்வெடுத்துள்ளதை அடுத்து அபால் அரசுக்குத் தலைமை வகித்து வந்தார். பெண்ணின் இறப்புக்கு காரனம் எதுவும் கூறப்படவில்லை, ஆனாலும் காவல்துறையினர் கொலை வழக்கைப் பதிந்துள்ளனர். இவ்வழக்கில் தாமும் தமது குடும்பமுமே உடனடிச் சந்தேக நபர்கள் என திரு. அபால் கூறினார். இந்நிகழ்வு ஒரு துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்துக்குரியது ஆகும் என அவர் கூறினார். வழக்கு விசாரணைக்குக் குந்தகம் ஏற்படாதிருக்க பிரதமரும் அவரது குடும்பத்தினரும் தற்போது ஒரு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். தனது குடும்பத்தினர் எவரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரதமர் அபால் செய்தியாலர்களிடம் தெரிவித்தார். 75 வயதாகும் அரசுத்தலைவர் சொமாரே கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர். 1990களில் தனது நிதி நிலை அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கவென இவர் திசம்பர் 2010 இல் இவர் பதவியில் இருந்து விலகி தனக்குப் பதிலாக தனது நம்பிக்கைக்குரிய திரு. அபாலை பதில் பிரதமராக்கினார். அபால் முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். [[இலங்கை]]யில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படம் பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய் அன்றிரவு ஒளிபரப்பாகியுள்ள நிலையில், இலங்கை அரசு இது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் கோரியுள்ளார். சேனல் 4 தொலைக்காட்சியால் "இது வரை வெளியாகாத படங்கள்" என்று கூறப்படும் ஒளிப்படங்களில், இலங்கை இராணுவம் தமிழ் மக்களை சட்டவிரோதமாக கொலை செய்வதாகக் கருதப்படக் கூடிய படங்கள் இடம் பெற்றிருந்தன. பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட், இந்த ஆவணப்படத்தை பார்த்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதை பார்க்கும் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய பிரிட்டன் தயாராக இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்த வீடியோவை நிராகரித்துள்ளது. இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது. சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்ட இந்த யுத்தத்தில் இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் புலிகள் ஆகிய இரு தரப்பு மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி வீடியோக்களில் ஒன்றில், ஒருபெண் உட்பட குறைந்தபட்சம் 3 கைதிகள், கைகள் கட்டப்பட்ட நிலையில், நெருங்கிய தூரத்தில் வைத்து சுடப்படும் காட்சி உள்ளது. அதில், அவர்களை எப்படி கொல்வது என்பதை சிப்பாய் ஒருவர் ஏனையோருக்கு அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளானால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களையும் சனல் 4 வீடியா காண்பித்துள்ளது. பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை சாட்சிகள் விபரிப்பதும் அந்த படத்தில் உள்ளது. இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை ஐநா சிறப்புத் தூதர் மே 31, 2011 பச்சை ஒளிரிப் புரதம் (green fluorescent protein, GFP) என்னும் பெயர் கொண்ட ஒரு சிறப்புப் புரதம் 1960களில் இழுதுமீன்களில் (jellyfish) இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது உயிரியல் உருவங்களின் படிம ஆராய்வுக்கு மிக்க உதவியாக இருந்துவருகின்றது. 2008-ல் வேதியியலுக்கான நோபெல் பரிசை மூவருக்கு ஈட்டிக்கொடுத்ததும் இந்தப் பச்சை ஒளிரிப் புரதமேயாகும். இதுவரை உயிரற்ற பொருட்கள் சீரொளியை வெளிவிடுமாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன; 1971-இல் சாயம் ஒன்றுக்குள் செலற்றின் இடப்பட்டு சீரொளி வெளிவிடுமாறு ஆக்கப்பட்டது, 1975-இல் அல்ககோலின் ஒளி இயல்பில் மாற்றம் செய்தல் மூலம் ரம், வோட்கா போன்ற மதுபானங்கள் சீரோளியை உண்டாக்கியது. உயிருள்ள பொருட்கள் சீரோளியை வெளிவிடுவது என்பது ஒரு கற்பனைக் கதையாகவே இருந்துவந்தது. இன்று இது சாத்தியம் என்பது காணக்க்கூடியவாறு உள்ளது. மனித சிறுநீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்கள் மரபணுப் பொறியியல் நுட்பம் மூலம் பச்சை ஒளிரிப் புரதத்தை உற்பத்தி செய்யக்கூடியவாறு மாற்றி அமைக்கப்பட்டது. இவ்வகை உயிரணுக்கள் பின்னர் இரு கண்ணாடிகளுக்கு இடையே வைத்து அவதானிக்கப்பட்டது, அவை பச்சைச் சீரொளியை வெளிவிடுவது அவதானிக்கப்பட்டது. நீலநிற ஒளி ஊடகத்தில் இவை அவதானிக்கும் போது இன்னமும் பிரகாசமான சீரொளி தென்படும். இவ்வாறு வெளிவிடப்படும் ஒளியை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என்று யுன் தெரிவித்தார். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உயிரணுக்கள் ஆய்வின் போதும் அதன் பின்னரும் உயிருடன் இருந்தன. மருத்துவ உலகில் ஒளி சம்பந்தமான சிகிச்சைகளுக்கும் படிமங்களை ஆராயவும், மருத்துவ அறுதியிடலுக்கும் உயிரணுவை ஒளிரச்செய்வதன் மூலம் பற்பல சிக்கல்கள் தீரும், ஒட்டு மொத்தத்தில் இவ்வாராய்வு அறிவியலின் இன்னுமொரு படிக்கல்லாக அமைகின்றது. உயிரினங்கள் யாவும் ஒளியை வெளிவிட முடியும் என்று ஒரு கற்பனை செய்தால், அது இப்படிப்பட்ட ஆய்வின்மூலம் வருங்காலத்தில் உண்மையாகும் என்பதை மறுக்கமுடியாது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைநகர் ஜகார்த்தாவில் இத்தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 72 வயதான பசீர் அரசு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இசுலாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கும் போராளிகளுக்குப் பயிற்சி அளிக்க உதவினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இவருக்கு போராளிகளுடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்ற இந்தோனேசியத் தீவிரவாதக் குழுவின் ஆன்மீகத் தலைவராக இவர் கருதப்படுகிறார். இக்குற்றச்சாட்டை அவர் எப்போதும் மறுத்தே வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இவர் பல முறை சிறைப் பிடிக்கப்பட்டாலும் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். வழக்குத் தொடுநர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். பசீர் சென்ற ஆண்டு ஆகத்து மாதத்தில் ஆச்சே மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாலிக் குண்டுவெடிப்புகளில் இவர் சம்பந்தப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின்னர் 2006 இல் விடுவிக்கப்பட்டிருந்தார். அப்போது 88 ஆத்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவின் தீவிரவாத மதக்குரு அபூ பாக்கர் பசீர் கைதானார் ஆகத்து 9, 2011 இப்போது தனது மரணதண்டனையை நிறுத்துமாறு சான் கடைசித் தடவையாக இந்தோனேசிய அரசுத்தலைவர் சுசீலோ யுதயோனோவுக்கு விண்ணப்பிக்கலாம். சானுக்கு அறிவிக்கப்பட்ட இம்முடிவினால் மயூரன் சுகுமாரனுக்கும் பாதகமான முடிவே தரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆத்திரேலியாவின் ஏபிசி வானொலி கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் சான் மற்றும் மயூரன் இருவரும் உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்திருந்தனர். தமது பழைய வாழ்க்கையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டதாகவும், சமூகத்துக்குத் தொண்டாற்றத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தமது வாதத்தில் எடுத்துரைத்தனர். பாலி ஒன்பதின் இன்னும் ஒரு உறுப்பினரான ஸ்கொட் ரஷ் என்பவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை கடந்த மே மாதத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் ஐவர், மார்ட்டின் ஸ்டீவன்ஸ், மாத்தியூ நோர்மன், மைக்கல் சுகாஜ், சீ சென், டான் நியூவென் ஆகியோர் ஏற்கனவே ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. ரினாய் லோரன்ஸ் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பாலியில் மரணதண்டனையை எதிர்நோக்கும் மயூரனின் கடைசி மேன்முறையீடு செப்டம்பர் 25, 2011 இம்முன்மொழிவுகள் மக்களாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள், மனித உரிமைகளைப் பேணல், பேச்சுரிமைகளைப் பேணல் போன்ற பல அம்சங்கள் இந்த முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ளன. பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்கும் அதிக நிருவாக அதிகாரங்களை வழங்கல், பேர்பர் மொழியை அரபு மொழியுடன் இணைந்து நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக்குவது போன்ற முக்கிய சீர்திருத்தங்களும் இதில் அடங்கியிருந்தன. இந்த முன்மொழிவுகள் சூலை மாதம் 1 ஆம் நாள் பொதுமக்கள் கருத்துக்கணிப்புக்கு விடப்படும். மத்திய கிழக்கு, மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் மன்னராட்சிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் மொரோக்கோ மன்னர் நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். ஆனாலும், ஆயிரக்கணக்கானோர் மொரோக்கோவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மன்னர் முகம்மது அரசியலமைப்பு மாற்றங்களை முன்மொழிவதற்காக அண்மையில் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருந்தார். அக்குழுவின் ஆலோசனைப்படியே இந்த முன்மொழிவுகள் மன்னரால் அறிவிக்கப்பட்டுள்ளன. மொரோக்கோவில் வேலையில்லாமை, மற்றும் வறுமை நிலை அதிகரிப்பு போன்றவற்றால் அந்நாடு பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் 1972ம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக, அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இஸ்ரோ வடிவமைத்துள்ள ஜி சாட்-12 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி.17 ராக்கெட் மூலம் சூலை இரண்டாவது வாரத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளதுடன், செப்டம்பர் மாதத்தில் மேகா டிரோபிக்ஸ் என்ற செயற்கைக்கோளும், கடல்வளத்தை ஆய்வதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்கள் வரும் டிசம்பர் மாதத்திலும் விண்ணில் ஏவப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய திரவ இயக்க திட்ட மையத்தில் "ராக்கெட் உந்து தொழில்நுட்ப எல்லைகள் விரிவாக்கம்' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கிய பின்பு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கே. ராதாகிருஷ்ணன் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார். இஸ்ரோ 1969 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை தினத்தன்று இந்தியாவின் விண்வெளித் தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது. கடந்த 1993 முதல் 2010ம் ஆண்டு வரை பறக்கவிடப்பட்ட 17 ராக்கெட்டுகளில், 20 இந்திய செயற்கைக் கோள்களும், 25 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டன. மூன்று செயற்கை கோள்களுடன் இந்திய ராக்கெட் பிஎஸ்எல்விசி16 ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் பி.எஸ்.எல்.வி. வரிசையில் 18வது ராக்கெட் ஆகும். சித்திரவதையினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் இலங்கையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட சிலரின் உறவினர்களால் ராஜபக்சவிடம் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டஈடு கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹேக் உடன்படிக்கையின் கீழ் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் அமெரிக்காவும் இலங்கையும் அடங்குகின்றன. இந்த அழைப்பாணை அரசுத்தலைவர் வசிக்கும் அலரி மாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது என்றும் ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டதையடுத்து நீதி அமைச்சு அதைப் பெற்றுக் கொண்டது என்றும் நீதியமைச்சின் செயலர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். அதே நேரம் இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றும், தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பெயின் கடந்த சனவரி 28 ஆம் திகதி இம்மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் அமெரிக்காவில் உள்லது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரிடம் நட்டஈடு கோரி வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என புரூஸ் ஃபெயின் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. "இலங்கை அரசுத்தலைவர் இந்த அழைப்பாணைக்குப் பதிலளிக்காவிட்டால், அவருக்கு எதிராகத் தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் வழங்கும் என்றும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டுக்கு உத்தரவிடப்பட்டால், அவருக்கு அமெரிக்காவிலோ அல்லது இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளிலோ இருக்கக்கூடிய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியும் என்றும், அத்துடன் அங்கு போர் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகவும் மாறும் என்றும் புரூஸ் ஃபெயின் கூறினார். தாம் திரிப்பொலியில் உள்ள ஏவுகணைத் தளம் ஒன்றின் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தியதாக நேட்டோ தெரிவித்துள்ளது. ஆனாலும் முன்னைய தாக்குதல்கள் பல அவர்களது இலக்குகளை அடையவில்லை என நேட்டோ ஒத்துக்கொண்டிருந்தது. கடாபியின் படைகளிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் ஐநா தீர்மானத்துக்கு அமைவாகவே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என நேட்டோ தெரிவித்துள்ளது. இன்றைய தாக்குதல் குறித்து தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் நேட்டோ கூறியுள்ளது. இன்றைய தாக்குதலில் மூன்று மாடிகள் கொண்ட வீடு ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளதாக அங்கு சென்ற பிபிசி செய்தியாலர் ஜெரமி போவன் தெரிவிக்கிறார். இரண்டு பொதுமக்களின் உடல்களை இடிபாடுகளிடையே இருந்து இழுத்து எடுப்பதைத் தாம் கண்டதாகவும் தெரிவிக்கிறார். அவ்வீட்டில் குடியிருந்த குடும்பம் ஒன்றின் அனைவரும் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். சேதங்களைப் பார்த்த போது அது வான் தாக்குதல் ஒன்றிலேயே சேதமடைந்ததாக ஊகிக்க முடிவதாக அவர் தெரிவித்தார் நேட்டோவின் தாக்குதலில் பொதுமக்கள் இறந்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அதற்காக நாம் மனம் வருத்துகிறோம் என நேட்டோ அதிகாரி மைக் பிரேக்கன் பிபிசி இடம் தெரிவித்தார். லிபியாவுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நேட்டோ படையினர் இதுவரையில் 11,000 ஏவுகணைகள எறிந்திருக்கின்றனர். லிபியாவின் போராளிகள் நாட்டின் கிழக்கே மூன்றில் ஒரு பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இலங்கை பிரிமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சூலை 19 தொடங்கி ஆகத்து 4 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியாவின் 12 வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரவீன் குமார், முனாப் படேல், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, சவ்ராப் திவாரி, உமேஷ் யாதொவ், வினாய்குமார், மனிஷ் பாண்டி, போல் வல்தாட்டி ஆகிய வீரர்களே இந்த தொடரில் விளையாட இருந்தனர். எனினும் இவர்களை இந்தியத் துடுப்பாட்ட வாரியம் இந்தத் தொடரில் விளையாட அனுமதி மறுத்துள்ளது. அதேநேரம் எஸ். எல். பி. எல். தொடர் ஐ. சி. சி. அங்கீகாரம் பெற்ற தொடர் எனவும் இந்திய துடுப்பாட்ட வாரியத்துக்கு இலங்கை சபை பதில் அளித்துள்ளது. இதில் சிங்கப்பூரை மையமாக கொண்ட சமர்செட் வென்சர்ஸ் நிறுவனம் தொடரின் விளம்பர உரிமையை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் இலங்கை துடுப்பாட்ட சபை குறிப்பிட்டுள்ளது. இந் நிலையில் இலங்கை துடுப்பாட்ட சபை இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று அவசர குழுக்கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிய வருகிறது. 81 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் குவாத்தமாலா நகரத்தின் வைத்துக் கைது செய்யப்பட்டார். எஃப்ரெயின் ரியோஸ் மொண்ட் என்பவரின் தலைமையில் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலத்தில் இனப்படுகொலைகளிலும், வேறு பல குற்றங்களிலும் இவர் பங்கேற்றார் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. 36 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போரில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படுவது சூலை 2-வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகத்து முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு சிறை மே 21, 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு மே 15, 2011 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி மே 7, 2011 விபத்து நடந்தபோது விமான நிலைய ஓடுபாதையில் பனி மூட்ட விளக்குகள் விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள பெத்ரசவோத்ஸ்க் நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. ஓடுபாதைக்கருகில் இருந்த வீடுகள் சேதமடையவில்லை. பாதையெங்கும் எரிந்த உடல்கள் சிதறிக்கிடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர். காயமடைந்தவர்கள் நகர அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளி்க்கப்பட்டு வருவ‌தாக உருசியாவின் புலனாய்வுத்துறை கமிட்டியின் செய்தி தொடர்பாளர் விளாடிமிர் மார்க்கின் தெரிவித்தார். இறந்தவர்களில் டச்சு, சுவீடன், மற்றும் இரண்டு உக்ரைனியர்களும் அடங்குவர். உருசியாவின் கில்டோபிரெஸ் என்ற அணுமின் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டனர். விபத்துக்கான காரனம் உடனடியாகக் கூறப்படவில்லை எனினும், சீரற்ற காலநிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகளும், அது ஏற்றிவந்த கழிவுப்பொருட்களும் ஆவியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. விண்கலத்தின் சில துண்டுகளே கடலில் வீழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கெப்லர் விண்கலத்தின் நான்கு மாதப் பயணம் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. விண்வெளி நிலையத்துக்கு ஏழு தொன்களுக்கும் அதிகமான எரிபொருள், உணவு, மற்றும் உபகரணங்களை இது கொண்டு சென்றது. பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைந்துள்ள உயரத்தை தனது அமுக்கி மூலம் மேலும் அதிகரிக்கச் செய்தமை கெப்லரின் மற்றுமொரு முக்கிய பணியாக இருந்தது. இதன் மூலம் விண்வெளி நிலையத்தின் பூமியில் இருந்தான உயரம் 360 கிமீ உயரத்தில் இருந்து 380 கிமீ ஆக அதிகரித்தது. யொகான்னசு கெப்லர் என்ற இந்தச் சரக்குக் கப்பல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Automated Transfer Vehicle (ATV) என்ற வகையில் இரண்டாவது தானியங்கிக் கப்பலாகும். ஜூல்ஸ் வேர்ன் என்ற முதலாவது கப்பல் 2008 ஆம் ஆண்டில் தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. எதிர்காலத்தில் மேலும் மூன்று சரக்கு விண்கலங்களை விண்வெளி நிலையத்தை நோக்கி அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. எடுவார்டோ அமால்டி என்ற விண்கலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஏவப்படும். அடுத்த இரண்டும் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அனுப்பபடும். யொகான்னசு கெப்லர் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது பெப்ரவரி 25, 2011 லிபியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அராப் துருக்கிய வங்கி, வட ஆப்பிரிக்க சர்வதேச வங்கி, வட ஆப்பிரிக்க வர்த்தக வங்கி ஆகிய 3 வெளிநாட்டு வங்கிகள் மீதும், மேலும் ஆறு நிறுவனங்கள் மீதும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாக்கித்தானைச் சேர்ந்த பாக்-லிபியா ஹோல்டிங் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் லிபியாவின் பங்கு 50 சதவீதமும், பாகிஸ்தானின் பங்கு 50 சதவீதமும் உள்ளது. அமெரிக்கத் தடையால் லிபியா அரசுக்குச் சொந்தமான கானா- லிபியா அராப் கோல்டிங் நிறுவனம், கிளாக்கோ ஹோட்டல்ஸ், நார்வேயன் ரசாயன நிறுவனம், லிபியன்- நார்வே உர நிறுவனம் ஆகியவற்றுடன் இனிமேல் வர்த்தகம் செய்ய முடியாது. இதனால் நிறுவனங்கள் நலிவடைந்து மூடவேண்டிய நிலை உருவாகும். இதுபற்றி அமெரிக்க நிதித்துறை கூறுகையில் லிபியாவில் மட்டுமின்றி, உலகளவில் லிபியாவுக்கு சொந்தமான நிறுவனங்கள், இந்த பொருளாதார தடையை மீறி, அந்நாட்டிற்கு உதவி செய்வது குறித்து அமெரிக்க நிதித்துறை கண்காணிப்பு மேற்கொள்ளும். சர்வதேச நிதி உதவியில் இருந்து, கடாபியை தனிமைப்படுத்த தொடர்ந்து விழிப்புடன் செயல்படுவோம். அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் தொழில் தொடர்புகள் வைத்துக் கொள்ளவும் இந்த தடை செல்லும். லிபியாவின் முன்னாள் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மீதான தடையை அமெரிக்கா நீக்கிக் கொள்கிறது என தெரிவித்துள்ளது. லிபியத் தலைவர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார். தென் கொரியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான பான் கி மூனுக்கு எதிராக எவரும் போட்டியிடவில்லை. வல்லரசுகளைப் பொறுத்த அவரியில் பான் கி மூன் பாரபட்சமாகச் செயற்பட்டாலும், காலநிலை மாற்றம், மற்றும் மத்திய கிழக்கு, மற்றும் வட ஆப்பிரிக்க நடுகளில் இடம்பெற்று வரும் கிளர்ச்சிகள் தொடர்பாக அவரின் நிலைப்பாடுகள் சிறந்ததாக இருந்ததாக விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் இவர் பொதுச் செயலராகப் பதவியேற்றார். இவரது இரண்டாவது தவணை 2012 சனவரி 1 இல் ஆரம்பமாகி, 2016 இல் முடிவடையும். ஆப்கானித்தானில் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். இதற்காக அமெரிக்க அரசு வாரம் ஒன்றுக்கு 2 பில்லியன் டொலர்களை செலவு செய்கிறது. இது குறித்து அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். ஆப்கானில் இதுவரை 1500 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, 12,000 பேர் காயமடைந்துள்ளனர். அதே வேளை, தாம் ஆலோசனை கொடுத்த கால எல்லையை விட ஒபாமா மிக வேகமாகச் செயல்படுகிறார் என அட்மிரல் மைக் மலன் என்ற அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆப்கானிய அதிபர் ஹமீட் கர்சாய் ஒபாமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார். ஆனாலும், தாலிபான்கள் அனைத்து வெளிநாட்டூப் படையினரும் வெளியேறும் வரையில் தாம் போரிடப் போவதாகக் கூறியுள்ளனர். 2012 நவம்பரில் நடக்கவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் ஒபாமா மீண்டும் போட்டியிட இருக்கிறார். குடும்பநல, மற்றும் பெண்கள் மறுவாழ்வு அமைச்சராக இருந்த நியிரமசுகூக்கோ, தெற்கு ருவாண்டாவில் பூட்டாரே என்ற தனது தொகுதியில் இனப்படுகொலைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது 20 வயதாக இருந்த தனது மகனுடன் சேர்ந்து தூத்சி இனப் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தூத்சி இனத்தவர்களை மிக விரைவாக அழிப்பதே அவர்களது நோக்கமாக இருந்ததாக போர்க்குற்ற நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட போது போலீன் நியிரமசுகூக்கோ எவ்வித சலனமும் இன்றி அமர்ந்திருந்ததாக பிபிசி செய்தியாலர் தெரிவித்தார். தன் மீதான குற்றங்கள் அனைத்தையும் அவர் நிராகரித்திருந்தார். இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோரை விசாரணை செய்தவதற்காக ஐநா நியமித்த இந்தப் போர்க்குற்ற நீதிமன்றம் அயல்நாடான தான்சானியாவில் கூடியிருந்தது. ருவாண்டா இனப்படுகொலை: முன்னாள் இராணுவத் தலைவருக்கு 30-ஆண்டு சிறை மே 18, 2011 ருவாண்டா படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது அக்டோபர் 6, 2009 ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது செப்டம்பர் 20, 2009 சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டவுடன் மக்கள் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். துறைமுகப் பகுதிகளில் இருந்து மீன்பிடிப் படகுகள் கரையில் இருந்து கடலுக்குள் வெளியேறிச் சென்றன. ஆனாலும் ஒரு மணி நேரத்தின் பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சேத விபரங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இத்தாக்குதலில் மேலும் 50 பேர் வரை காயமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனை பெரும் சேதத்துக்குள்ளானதாகவும், இடிபாடுகளிடையே பலரது உடல்கள் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலிபான் இயக்கத்தினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்த போதும் தலிபான் இயக்கம் இதனை மறுத்துள்ளது. தாம் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என தலிபான் பேச்சாலர் ஒருவர் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை தலைநகர் காபூலில் இருந்து 40 கிமீ கிழக்கே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்ரைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவரை மருத்துவமனை வாயிலில் காவல்துறையினர் தடுத்த போது குண்டை வெடிக்க வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற வேளையில் மருத்துவமனையில் பெருமளவு வெளி நோயாளிகள் சிகிச்சைக்காகக் குழுமியிருந்தனர். மருத்துர்கள், மற்றும் தாதிமாரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் தீக்காயங்களினால் இறந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ஆப்கானித்தானில் பொதுமக்களின் இழப்புகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாக இம்மாதம் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை ஒன்று கூறியுள்ளது. மே மாதத்தில் மட்டும் 368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தொகை 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே மாதத்தில் கொல்லப்பட்டவர்களில் மிகக் கூடிய எண்ணிக்கை ஆகும். 2010 ஆம் ஆண்டில் 2,777 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். "என்சலடசு சூடான நீர் மற்றும் கனிம வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளது. இவை உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படையாகும் என நாசா அறிவியலாளர் டெனிஸ் மாட்சன் 2008 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். சனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது டிசம்பர் 20, 2009 அலெக்சாண்டர் பொத்தேயெவ் என்பவரே காட்டிக் கொடுத்த குற்றச்சாட்டுக்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் என நேற்று மொஸ்கோ நீதிமன்றம் அறிவித்தது. 10 உருசியர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு முன்னதாக பொத்தேயெவும் அவரது குடும்பமும் அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர். ஆனாலும், பொத்தேயெவ் இல்லாத நிலையிலேயே அவர் மீதான வழக்கு விசாரணை மாஸ்கோ நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இவருக்கு குறைந்தது 25 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்குமாறு வழக்குத் தொடுநர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவும் உருசியாவும் உளவாளிகளைப் பரிமாறின சூலை 10, 2010 ரஷ்ய உளவாளிகள் 10 பேர் அமெரிக்காவில் கைது சூன் 30, 2010 மனித குலத்துக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்தமை, பொதுமக்களைத் தாக்குவதற்கு உத்தரவு பிறப்பித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் கடாபி மீது சுமத்தப்பட்டுள்ளன. கடாபியின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாயின. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் கடாபியுடன் அவரது இரண்டு உதவியாளர்களான, கடாபியின் மகன் சாயிஃப் அல்-இசுலாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல்-சனூசி ஆகியோருக்கும் கைதாணை பிறப்பித்தது. கைதாணை பிறப்பிக்குமாறு கடந்த மே மாதத்தில் ஐசிசி வழக்குத் தொடுநர் லூயிஸ் மொரேனோ-ஒக்காம்போ கேட்டுக் கொண்டார் இம்மூவரும் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு கரணகர்த்தாக்களாவர் என அவர் தெரிவித்தார். பன்னாட்டு நீதிமன்றத்தைத் தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், கைதானைகளுக்குத் தாம் பதிலளிக்கப்போவதில்லை எனவும் லிபியா முன்னர் கூறியிருந்தது. 1960களில் இருந்து பப்புவா நியூ கினியின் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த 75-அகவையுடைய சொமாரே இவ்வாண்டில் ஆரம்பத்தில் இருந்து இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். 1975 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா]]விடம் இருந்து பப்புவா நியூ கினி விடுதலை பெற்ற நாளில் இருந்து சேர் சொமாரே நாட்டின் பிரதமராகப் பதவியில் இருந்து வந்தார். விடுதலை இயக்கத்தில் மிகத் தீவிரமாகப் பங்கு பறி வந்தார். பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறும். இந்தப் பருமனான சிறுகோள்கள் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியை அணுகுகிறது. ஆனாலும், இவ்வாண்டு ஆரம்பத்தில், இதனை விடச் சிறுகோள் ஒன்று 3,500 மைல் தூரத்தில் பூமியைக் கடந்து சென்றுள்ளது. 2011 எம்டி பூமியை நோக்கி வந்திருந்தாலும், அது வளிமண்டலத்திலேயே முழுமையாக எரிந்திருக்கும் எனவும், பூமியில் சேதம் எதனையும் ஏற்படுத்தியிருக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது. டைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே மார்ச் 8, 2011 2011 நவம்பரில் சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகாக செல்லவிருக்கிறது மே 10, 2011 2030களில் பூமியை மோதவிருக்கும் சிறுகோளைத் தடுக்கும் முயற்சியில் ரஷ்யா சனவரி 1, 2010 செவ்வாய் அன்று ருனியாயா ஆரம்பப் பள்ளியில் மாலை 4:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 15 சிறுமிகளும், மூன்று சிறுவர்களும் இறந்ததாக காவல்துறை அதிகாரி ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார். மேலும் 36 பேர் எரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இவ்வாறான மின்னல் தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியுள்ளனர். கடந்த வாரம் மட்டும் உகாண்டாவில் 28 பேர் மின்னல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். பொதுக் கட்டடங்களில் மின்னல் கடத்திகள் இணைக்கப்படாமையே இந்த இறப்புகளுக்குக் காரணம் என வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். வன்முறை தொடர்பான தொலைபேசி அழைப்புகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் போன்ற பதிவேடுகள் 2007 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டு விட்டன. மத்திய அரசின் விதிகளுக்கமையவே சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பதிவேடுகள் அழிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் எஸ்.பி. வாகில் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டில் இவ்வன்முறை குறித்து விசாரிப்பதற்காக இந்திய உச்சநீதிமன்றம் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருந்தது. 2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு மார்ச் 1, 2011 பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த தலம் தற்போது திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இக்கோயிலில் 6 இரகசிய அறைகள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றிலும் பல கோடி விலை மதிப்பற்ற தங்கம், வெள்ளி மற்றும் அரிய வகை ரத்தினங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆயினும் இந்த அறைகளில் சில 1875-ஆம் ஆண்டுக்குப் பிறகு திறக்கப்படவில்லை. அண்மையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் அப்பர் என்பவர் இந்த அறைகளில் உள்ள ஆபரணங்களும் ரத்தினங்களும் கண்டெடுக்கப்படவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை முடிந்து, பத்மநாதசுவாமி ஆலயத்தின் அறைகள் திறக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர், நீதிபதிகள் உட்பட, கோயில் நிர்வாக அதிகாரி, தொல்பொருள்துறை இயக்குனர் மற்றும் மேலும் சில முக்கிய அதிகாரிகளுடன் இந்த அறைகள் திறக்கப்பட்டன. அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையின் போது பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல்நாள் திறக்கப்பட்ட ஒரு அறையிலிருந்தே ரூ 450 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் 450 தங்கக் குடங்கள், தங்கக் கட்டிகள் உட்பட தங்க கோலும் கண்டெடுக்கப்பட்டன. இவையனைத்தும் நூற்றாண்டுகால பழமையான நகைகள் என்பதால் அதன் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், இது பற்றி அதிகாரபூர்வமாக எவ்வித கருத்துக்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த நகைகளைப் பார்வையிட்ட ஒருவர், தங்க ஆபரணங்கள், வைரம் பதிக்கப்பட்ட நகைகள், தங்கத்தால் செய்யப்பட்ட கயிறு உள்ளிட்ட பல விலைமதிப்பான பொருட்கள் ஓர் அறையில் இருந்ததாக தம்மிடம் தெரிவித்ததாக மலையாள மனோரமா தொலைக்காட்சியின் செய்தியாளர் சந்திரகாந்த் விஸ்வநாத் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த விசாரணை என்பது ஒரு காலவரம்பற்ற, முடிவில்லாத வழிமுறையாக இருக்கக்கூடாது என்று கூறிய நவி பிள்ளை, இலங்கை அரசு ஏற்கனவே தானாக முன்வந்து நடத்திய உள்நாட்டு அளவிலான விசாரணை அதற்கு தரப்பட்ட பணியை முடிக்க தவறிவிட்டது, வெளிப்படை இல்லாத அந்த விசாரணை குறித்த விவரம், அறிக்கை வெளியிடப்படவில்லை. அந்த விசாரணையின் விளைவாக ஒருவர் கூட நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை என்றார். இலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என நவநீதம்பிள்ளை அறிவிப்பு பெப்ரவரி 13, 2010 ஈழப்போர்: நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த நவநீதம் பிள்ளை வலியுறுத்து மே 31, 2011 80 வயதான மிட்ச்செல், இப்படப்பிடிப்புக் கருவியை தன்னுடன் வைத்திருக்க நாசா தனக்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும், தனது காலத்தில் விண்வெளி வீரர்கள் தமது பயண நினைவாக சில பொருட்களத் தமதாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர் எனவும் கூறியிள்ளார். இக்கருவியைத் தாம் வைத்திருக்காவிட்டால், அதனை நாசா அழித்திருக்கும் என அவர் வாதாடுகிறார். அது அவர்களுக்கு "ஒரு கழிவுப் பொருளே" என அவர் கூறினார். "நாசாவின் பயணங்களில் பாவிக்கப்பட்ட அனைத்துக் கருவிகளும் உடமைகளும் அதிகாரபூர்வமாக வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படாவிட்டால் அவை நாசாவுக்குச் சொந்தமானவை என நாசா தனது வழக்குப் பதிவில் தெரிவித்துள்ளது. மிட்ச்செலுக்கு இப்புகைப்படக் கருவி வழங்கப்பட்டதற்கான எவ்வித அதிகாரபூர்வ ஆவணங்களும் இருக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது. நிதி நிலைமை மோசமான நிலையில் மிட்ச்செல் இக்கருவியை விற்க முன்வந்துள்ளார். இது கிட்டத்தட்ட 60,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்கார் மிட்ச்செல், அலன் ஷெப்பர்ட் உடன் இணைந்து அப்பல்லோ 14 கப்பலில் 1971 ஆம் ஆண்டில் சந்திரனில் தரையிறங்கினர். இது சந்திரனில் இறங்கிய மூன்றாவது கப்பலாகும். இருவரும் 33 மணி நேரம் சந்திரனில் கழித்தனர். ஷெப்பர்ட், மிட்ச்செல் இருவரும் சந்திரனில் தரையிறங்கிய ஐந்தாவது, ஆறாவது மனிதர்கள் எனப் பேர் பெற்றனர். இச்சீர்திருத்தங்களை அடுத்து பிரதமருக்கு நிருவாக அதிகாரம் வழங்கப்பட விருக்கிறது. ஆனாலும், இராணுவம், சமயம் மற்றும் நீதி ஆகிய துறைகளை மன்னரே வைத்திருப்பார். மத்திய கிழக்கு, மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் மன்னராட்சிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் மொரோக்கோ மன்னர் நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். மன்னரின் 12 ஆண்டுகால ஆட்சியில் முதன் முதலாக இடம்பெற்ற இவ்வாக்கெடுப்பில் 73 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர். இது ஒரு "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்" என மன்னர் கூறினார். நாட்டின் அனைத்துக் கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மொரோக்கோ மன்னர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அறிவித்தார் சூன் 18, 2011 புனரமைப்புப் பணிகளின் போது கோயிலின் மூன்றடுக்குக் கோபுரத்தின் ஏறத்தாழ 300,000 கருங்கற்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுக்கப்பட்டு மீளப் பொருத்தப்பட்டது. 1960களில் ஆரம்பிக்கப்பட்ட புனருத்தாரண வேலைகள் கம்போடியாவின் உள்நட்டுப் போரினால் தாமதப்படுத்தப்பட்டு, 1990களின் நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10,000 கருங்கற்கள் வரை புனரமைப்புக்குப் பின்னர் எஞ்சியுள்ளன. இவை அனைத்தும் கோயிலைச் சுற்றிவர உள்ல காடுகளில் பரவலாக அடுக்கப்பட்டுள்ளன. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில் ஆண்டு தோறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து தக்சின் சினவாத்திரா பதவி இழந்தார். தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக தக்சின் தற்போது நாடு கடந்த நிலையில் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாய்லாந்து அரசியலில் மீண்டும் இணைவதற்கு தாம் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல் பெப்ரவரி 27, 2010 "ஆய்வுக் கப்பலின் முழுமையான பயணத்தின் போது ரசியா என்ற இந்த பனி-உடைப்புக் கப்பல் அதனுடன் பயணிக்கும் எனவும், இதன் மூலம் முழுப் பயணத்தின் போதும் கப்பலின் வேகம் மாறாமல் இருப்பதை உறுதிப் படுத்தும். இதனையே நாம் எமது ஆதாரங்களுக்குப் பயன்படுத்துவோம் என ரொஸ்அட்டம்ஃபுலொட் நிறுவனத்தின் பேச்சாளர் எக்கத்தரீனா அனானியேவா தெரிவித்தார். இரு மாதங்கள் நீடிக்கும் இப்பயணத்தில் லமனோசொவ் முகட்டின் அடியில் உள்ள வண்டல் பகுதியின் தடிப்பை அளவிடுதல் எமது முக்கிய நோக்கம். உருசியா இவ்வாய்வில் வெற்றி பெற்றால், ஆர்க்டிக் அடுக்கில் உள்ள பெருமளவு ஆற்றல் வளங்களை உருசியா பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருசியப் பிரதமர் விளாதிமிர் பூட்டின் சென்ற வாரம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் லமனோசொவ், மற்றும் மெண்டெலீவ் முகடுகளின் உரிமையை நாம் என்றுமே விட்டுக் கொடுக்கப்போவதில்லை எனக் கூறியிருந்தார். பியோதரொவ் ஆய்வுக் கப்பலுடன் பணியாற்றுவதற்காக உருசியா சென்ற ஆண்டு தனது யாமல் என்ற தனது பனி-உடைப்புக் கப்பலை இதே நோக்கத்திற்காக அனுப்பியிருந்தது. இந்த எலும்புக்கூடு முழுமையானதாக இருப்பதால் ஆத்திரேலியாவின் வரலாற்றுக்கு முன்னரான கண்டுபிடிப்புகளில் இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குயின்ஸ்லாந்தின் ரிவர்ஸ்லி தொல்லுயிர் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பல மில்லியன் டாலர்கள் அளவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்த ஊழல் வழக்கு இந்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆ ராசா தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ராசாவுக்கு முன்னதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மாறன் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய நிறுவனத்துக்கு விற்க, ஏர்செல் நிறுவனத்தின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகளால் அரசிற்கு 39 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுக் கணக்காய்வாளர் தெரிவித்திருக்கிறார். இத்தொகை ஓராண்டுக்கான நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்துக்கு சமமானதாகும். அலைக்கற்றை ஊழல் தொடர்பாக திமுக ராஜியசபா உறுப்பினர் கனிமொழி மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தயாநிதி மாறன் வகித்து வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பை டி.ஆர். பாலுவுக்கு வழங்கும்படி திமுக தரப்பில் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இப்படகில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பலர் சோமாலியர்கள் எனவும் அங்கு நிலவும் கடும் வறட்சி காரணமாக வெளியேறியவர்கள் எனவும் கூறப்படுகிறது. எரித்திரியா எல்லைக்கு அருகில் சூடான் துறைமுகத்துக்கு தெற்கே 150 கிமீ தூரத்தில் இவ்விபத்து ஏற்பட்டது. சவுதி அரேபியா, மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குக் குடி பெயர்பவர்கள் செங்கடல் வழியையே தெரிந்து எடுக்கின்றனர். விபத்துக்கு காரணமான நான்கு ஏமன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் வழியாக 247 பேர் கடத்திச் செல்லும் முயற்சியையும் சூடான் உள்ளூர் நிர்வாகத்தினர் முறியடித்தனர். 168-ஆண்டுகள் பழைமையான இப்பத்திரிகை பிரித்தானியாவின் அரசியல்வாதிகள், திரையுலகத்தவர்கள், அரச குடும்பத்தினர் போன்ற பிரபலங்களின் கைத்தொலைபேசிகளை அழைப்புகளை இரகசியமாகப் பதிவு செய்து பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாம் கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து நான்காயிரத்துக்கும் அதிகமானோர் பற்றிய தகவல்கள் உள்ளதாக காவல்துறையினர் நேற்று அறிவித்துள்ளனர். இந்த பத்திரிகை அத்து மீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கூறினர். இவ்வாரம் வெளிவரும் கடைசி இதழில் விளம்பரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாதெனக் கூறிய ஜேம்ஸ் மேர்டொக், பதிலாக விளம்பரப் பக்கங்கள் அனைத்தும் தரும ஸ்தாபனங்களுக்கு அளிக்கப்படும் என்றார். பத்திரிகை விற்பனையில் பெறப்படும் பணம் முழுவதும் நல்நோக்கங்களுக்குச் செலவிடப்படும் என்றும் கூறினார். பத்திரிகை மூடப்படும் நிகழ்வுக்கு பெரும் வேதனை அடைந்து உள்ளதாக உரிமையாளர் மேர்டோக் தெரிவித்தார். பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரியும் 200 இற்கும் மேற்பட்டோர் தமது ஏனைய நிறுவனங்களில் உள்ள வேலைகளுக்கு விண்னப்பிக்கலாம் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தலைநகர் சூபாவில் இன்று அதிகாலை 12:01 மணிக்கு வைபவங்கள் ஆரம்பமாயின. அப்போது புதிய நாட்டுப் பண் தொலைக்காட்சியில் இசைக்கப்பட்டது. தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட 193வது நாடாகும். அத்துடன் இது ஆப்பிரிக்காவில் உள்ல 54வது நாடும் ஆகும். 19,745 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தென் சூடானில் 7,500,000 முதல் 9,700,000 வரையான மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சல்வா கீர் மாயார்தீத் டீட் அந்நாட்டின் அரசுத்தலைவராக விளங்குகிறார். தெற்கு சூடான் நாடு ஆரம்பத்தில் பிரித்தானியர் மற்றும் எகிப்தியரின் கூட்டுரிமையுடன் கூடிய ஆங்கிலோ-எகிப்திய சூடானின் கீழ் ஆளப்பட்டு வந்தது. பின்னர் 1956 ஆம் ஆண்டில் சூடான் குடியரசின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. எண்ணெய் வளம் கொண்ட தெற்கு சூடானில் இடம்பெற்ற முதலாவது உள்நாட்டுப் போரை அடுத்து 1972 ஆம் ஆண்டில் இது சூடானின் கீழ் தன்னாட்சியுடன் கூடிய சிறப்புப் பகுதியாக 1983 ஆம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் 1983 இல் இடம்பெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரில் 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். 2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டை அடுத்து, அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. அந்த உடன்படிக்கையின்படியே கடந்த சனவரி மாதம் இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 12 நாட்கள் நீடிக்கும் இக்கடைசிப் பயணத்தின் போது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய உபகரணங்கள், சரக்குகளைக் கொண்டு செல்வது, மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நான்கு விண்வெளி வீரர்கள் இத்திட்டத்தில் இணைந்து விண்ணுக்குச் செல்கிறார்கள். கிறிஸ்டோபர் ஃபேர்கசன், டக்லஸ் ஹேர்லி, சேண்ட்ரா மாக்னசு, ரெக்ஸ் வால்ஹைம் ஆகியோர் சென்றுள்ளனர். முதலாவது விண்ணோடப் பயணம் 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இடம்பெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக 135 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு இரண்டு பயணங்கள் விபத்தில் சிக்கின. சலேஞ்சர் விண்ணோடம் சனவரி 1986 இலும், கொலம்பியா விண்ணோடம் பெப்ரவரி 2003 இலும் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். 16 நாடுகளைச் சேர்ந்த 355 விண்வெளி வீரர்கள் இத்திட்டங்களில் பங்கேற்று 852 தடவைகள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். 26 ஆண்டுகளாக விண்ணுக்கு அனுப்பட்டுள்ள அட்லாண்டிஸ் விண்ணோடம் 33 தடவைகள் ஏவப்பட்டது. உலகில் மிக மோசமாக ஆள் ஒன்றுக்கு பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்றாகும். ஆத்திரேலியா தனக்குத் தேவையான 80 விழுக்காடு மின்சாரத்துக்கு நிலக்கரியையே நம்பியுள்ளது. அத்துடன் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இது முன்னணியில் உள்ளது. பல தொழில் நிறுவனங்கள், மற்றும் எதிர்க்கட்சிகள் கரிவ வரிக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொருளாதாரப் போட்டித்தன்மையை இந்த வரித்திட்டம் பாதிக்கும் என விமரிசகர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரச் செலவு அதிகரிப்பை ஈடு கட்டுவதற்காக கரிம வரியின் மூலம் பெறப்படும் நிதியின் ஒரு பகுதியை குடியிருப்பாளர்களுக்கு மீள அளிக்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பொது மக்களின் எதிர்ப்பைக் குறைக்கலாம் என அரசு எண்ணியுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர மட்டத்தினருக்கு வரிக் குறைப்பு, மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்க்கு மேலதிக கொடுப்பனவுகள் போன்றவற்றைக் கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் 90 விழுக்காடு ஆத்திரேலியக் குடியிருப்பாளர்கள் பயனடைவர் என அரசு கூறியுள்ளது. குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பெட்ரோலியப் பொருட்களுக்கு கரிம வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் கரிம மாசை 159 மில்லியன் தொன்களாகக் குறைக்க ஆத்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2000 ஆம் ஆண்டு நிலையை விட 5% குறைவானதாகும். ஜூலியா கிலார்ட் தலைமையிலான தொழிற்கட்சிக் கூட்டணி ஒரே ஒரு பெரும்பான்மை இடத்தையே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. "மொத்தம் 140 பயணிகளும், 33 பணியாளர்களும் இந்த இரட்டைத்தட்டுக் கப்பலில் பயணித்தனர். அவ்வழியால் சென்ற வேறொரு கப்பல் இவர்களில் 55 பேரைக் காப்பாற்றியது என அதிகாரிகள் தெரிவித்தனர். பல்காரியா என்ற இக்கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரம் 13:58 மணிக்கு தத்தர்ஸ்த்தான் மாநிலத்தில் கான்ஸ்கோ-உஸ்தினோவ்ஸ்க்கி மாவட்டத்தில் சியூகியெவா என்ற ஊருக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக 22 பேர் மட்டுமே இக்கப்பலில் பயணித்திருந்ததாகச் செய்திகள் தெரிவித்திருந்தன. உலங்குவானூர்தி ஒன்றும், இரண்டு உயிர்காப்புப் படகுகளும் அவ்விடத்துக்கு விரைந்துள்ளன. காற்பந்துச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பும் வழியில் அவர்கள் பயணம் செய்த பாரவுந்து கால்வாய் ஒன்றில் சறுக்கி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. சிட்டகொங் மாவட்டத்தில், டாக்காவில் இருந்து 216 கிமீ தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றது. மேலும் பலர் வாகனத்தினுள் சிக்கியுள்ளனர் என்றும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. முன்னதாக 40 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இறந்தவர்கள் அனைவரும் 8 முதல் 12 வயதானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய கடற்படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தம்மை நியுசிலாந்து அரசோ, ஐநா மன்றமோ பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளனர் எமது எதிர்காலம் நியூசிலாந்திலேயே நியூசிலாந்துக்குச் செல்ல விரும்புகிறோம்" போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளுடன் அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கப்பலில் இருப்பதாக கப்பலிலிருந்து செல்வக்குமார் என்பவர் தமிழோசைக்குத் தெரிவித்தார். கப்பலிலுள்ள பெரும்பாலானவர்கள் மலேசியாவிலிருந்தே, புறப்பட்டதாகவும், கப்பல் இந்தோனேசியாவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டதென்றும் செல்வக்குமார் மேலும் கூறினார். ஆனாலும், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இவர்களின் கோரிக்கைக்கு இணங்க மறுத்துள்ளார். எமது முடிவு பேசி முடியத்தக்கதல்ல எனக் கூறினார். "இவர்களை நாம் ஏற்றுக் கொள்வதனால், மக்களைக் கடத்துவோருக்கு நாம் ஆதரவளிப்பதாக முடியும். அத்துடன், ஏனையோரின் உயிருக்கும் ஆபத்தானதாக இருக்கும் என அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். படகில் வருபவர்கள் அனைவரும் உண்மையான அகதிகள் எனபதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நியூசிலாந்து ஆண்டுதோறும் 750 அகதிகளைப் பொறுப்பெடுக்கின்றது. ஆனாலும், சட்டவிரோதமாக நுழைபவர்களை நாம் பொறுப்பெடுக்க முடியாது என அவர் கூறினார். இந்த அறிவித்தல் மூலம் ஜோன் கீ அகதி அந்தஸ்து கோருவோரின் சட்டபூர்வப் பாதுகாப்பை நிராகரிப்பதாக பன்னாட்டு மன்னிப்பு ஆணையம் கூறியுள்ளது சர்வதேசச் சட்டத்தின் படி அகதிகள் தமக்குப் பாதுகாப்புக் கோருவதற்கு அவர்களுக்கு அதிகாரமுள்ளது என அதன் தலைவர் பாட்ரிக் ஹோம்ஸ் கூறியுள்ளார். ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் பிரபலம் வாய்ந்த அரசியல் புள்ளியாக இருந்த அகமது வாலி கர்சாய் (வயது 50) அவரது வீட்டில் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலை நேட்டொ படைகளுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. படுகொலை செய்யப்பட்ட அகமது கர்சாய் ஒரு போர்ப்பிரபு என்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் என்றும் விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இக்கருத்தினை அரசுத்தலைவர் அமீது கர்சாய் மறுத்திருக்கிறார். கண்டகார் மாகாணசபையின் தலைவராக உள்ள அகமது கர்சாய் ஆப்கானித்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க மற்றும் நேசப் படைகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியவர். இதனால் அவர் தனது போதைப் பொருள் வர்த்தகத்தை தடங்கலின்றி நடத்த முடிந்தது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். எல்410 என்ற இரட்டை-எஞ்சின் பொருத்தப்பட்ட இவ்விமானம் இன்று அதிகாலை 0615 மணிக்கு ரெசிஃப் நகரை விட்டுக் கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுதாகியது. ரெசிஃபின் கடற்கரை ஒன்றில் தரையிறங்க முயற்சித்த போது, தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. விமானம் உடனடியாகத் தீப்பற்றி எரிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் உடனடியாகத் தலத்துக்கு விரைந்து தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். [[இந்தியா]]வின் மும்பை நகரில் நேற்று இடம்பெற்ற மூன்று தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மராட்டிய மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு குண்டுகள் நகரின் மத்திய பகுதியிலும் ஒன்று நகரின் தென் பகுதியிலும் வெடித்துள்ளன. இவை ஐ ஈ டி என்னும் வெடிபொருளை உள்ளடக்கிய குண்டுகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6:30 மணியளவில் 15-நிமிட இடைவெளிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. சக்தி வாய்ந்த குண்டு மும்பையின் தெற்கே ஒப்பேரா மாளிகை வணிகப் பகுதியில் இடம்பெற்றது. இரண்டாவது குண்டு நகரின் தெற்கே சாவேரி சந்தைப் பகுதியிலும், மூன்றாவது குண்டு நகர மத்தியில் வெடித்துள்ளன. இக்குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. 2008 ஆம் ஆண்டில் மும்பையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரும் குண்டுவெடிப்புகள் ஆகும். 165 பேர் கொல்லப்பட்ட 2008 குண்டுவெடிப்புகளுக்கு பாக்கித்தானியத் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாக்கித்தான் அரசு, மற்றும் ஐக்கிய நாடுகள் நேற்றைய தாக்குதல்களுக்குத் தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. 2006 ஆம் ஆண்டில் மெண்டினேகிரோ புதிய நாடாக இணைந்த பின்னர் புதிய நாடொன்றும் இணைவது இதுவே முதற்தடவை ஆகும். இந்நாள் "வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மகிழ்ச்சியானதும்" என பொதுச் சபையின் தலைவர் யோசப் டீஸ் தெரிவித்தார். வாக்கெடுப்பு எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது. "நல்வரவு, நாடுகளின் கூட்டமைப்புக்கு தெற்கு சூடானை வரவேற்கிறோம் என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று இடம்பெற்ற ஐநாவின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் தெற்கு சூடானை ஐநாவில் இணைவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சனவரி மாதத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று தெற்கு சூடான் சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. தனது புதிய நாணயத்தையும் தெற்கு சூடான் வெளியிடவுள்ளது. தெற்கு சூடான் பவுண்டு என அழைக்கப்படும் இந்நாணயம் வரும் திங்கள் அன்று அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் புதிய கடவுச் சீட்டும் அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது. பெரும் எண்ணெய் வளம் கொண்டுள்ள நாடாக இருந்த போதிலும், தெற்கு சூடான் உலகின் மிகக்குறைந்தளவு அபிவிருத்தி அடைந்த நாடாகக் கருதப்படுகிறது. இந்நாட்டில் உள்ள பெண்களில் 16 விழுக்காட்டினரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகள் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றன. 1,500 மீட்டர் உயரத்துக்கு தூசு, மணல், மற்றும் கற்கள் வீசப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. "நாம் இதனை எதிர்பார்த்து மக்களை எச்சரித்துள்ளோம், இதனால் மக்கள் இது குறித்து பெரிதளவில் பயப்படவில்லை, ஆனாலும், அங்குள்ள மக்களை நாம் தொடர்ந்து வெளியேற்றி வருகிறோம் என்றார் அரசு பேச்சாளர் கிறிஸ்டியாண்டோ. 1,580 மீட்டர் உயரமான இந்த எரிமலை கடைசியாக 1991 ஆம் ஆண்டு வெடித்தது. இந்தோனேசியாவில் உள்ள உயிருள்ள பல எரிமலைகளில் லோக்கோன் எரிமலை முக்கியமானதாகும். அடுத்த ஆண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இந்நிறுவனம் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளது இவற்றைவிட கூடிய வசதிகளுடன், விலை அதிகமான வீடுகளை அமைக்கவும் எம்மிடம் திட்டங்கள் உண்டு என அவர் கூறினார். ”மாநில அரசுகளுடனும், கிராம ஆட்சியாளர்களிடமும் பேசி வருகிறோம். ஆனாலும் திட்டம் இப்போது ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. கட்டடப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பது முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார் சுமித்தேஷ் தாஸ். 530 கிமீ விட்டமுள்ள வெஸ்டாவை சுற்றி வருவதாக டோன் விண்கலம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "டோன் விண்கலத்தின் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் சிறுகோள்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு உதவும். 2025 ஆம் ஆண்டுக்குள் சிறுகோள் ஒன்றுக்கு மனிதனை அனுப்பி வைக்க அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். டோன் இத் திட்டம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பெறும்." வெஸ்டா சிறுகோள் 1807 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய்க்கும் ஜுப்பிட்டருக்கும் இடையில் உள்ள பாறைகள் கொண்ட சிறுகோள் பட்டையில் அடையாளம் காணப்பட்ட நான்காவது சிறுகோள் இதுவாகும். டோன் விண்கலம் தற்போது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 188 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது. வெஸ்டாவில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ சுற்றுவட்டம் வரை செல்லுவதற்கு நாசா வானியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாண்டு ஆரம்பத்தில் பிரியா விகார் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டதை அடுத்து கம்போடியா பன்னாட்டு நீதிமன்றத்துக்கு முறையிட்டது. இக்கோவில் கம்போடியாவுக்குச் சொந்தமாக இருந்தாலும், இதனைச் சுற்றியுள்ள பெருமளவு இடம் தாய்லாந்தில் உள்ளது. நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக முறுகல் நிலை இருந்து வந்துள்ளது. நீதிமன்றத்தின் இன்றைய முடிவு இவ்வழக்கு விசாரணைகளின் முதல் கட்டமே என்றும், இவ்வழக்கு முடிவடைய மிக நீண்ட காலம் பிடிக்கும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். 1962 ஆம் ஆண்டில் பன்னாட்டு நீதிமன்றம் இக்கோயிலின் உரிமைகளி கம்போடியாவுக்கு அளித்திருந்தது. ஆனாலும், இத்தீர்ப்பு பல பிரச்சினைகளுக்குப் பதிலளிக்காமலே முடிவடைந்ததை அடுத்து கம்போடியா மேலதிக விளக்கத்தை நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது. தாய்லாந்து இவ்வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என விவாதித்தது. 2008 ஆம் ஆண்டில் இக்கோயில் பகுதிகள் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டதை அடுத்து கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது. இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர். ஏப்ரலில் மேலும் 18 பேர் உயிரிழந்தனர். இன்றைய தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் தமது இராணுவம் உடனடியாக சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் இருந்து வெளியேறாது எனத் தெரிவித்துள்ளார். இந்துக் கோயில் விவகாரம்: தாய்லாந்து கம்போடிய எல்லையில் மீண்டும் மோதல் ஏப்ரல் 23, 2011 இந்துக் கோயில் எல்லைப் போர் குறித்து கம்போடியா ஐநாவுக்கு முறையீடு பெப்ரவரி 8, 2011 கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை நவம்பர் 7, 2009 "இக்கேள்விக்கு நாம் பல முறை பதிலளித்துள்ளோம். எதிர்மறையானதே எமது பதில் என லாவ்ரொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். லிபியாவின் இடைக்கால தேசிய சபையை பேச்சுவார்த்தைக்கான இணைப்பாக உருசியா அங்கீகரித்துள்ளது. ஆனால் லிபிய மக்களின் ஒரே ஒரு பிரதிநிதியாக நாம் அதனை ஏற்கப்போவதில்லை என அவர் கூறினார். ஐக்கிய நாடுகள், அரபு முன்னணி, ஆப்பிரிக்க ஒன்றியம் உட்பட 40 நாடுகளின் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று லிபியாவின் இடைக்கால தேசிய சபையை (Transitional National Council of Libya TNC) லிபியாவின் அதிகாரபூர்வ அரசாக அங்கீகரித்துள்ளது. அத்துடன் கடாபியின் அரசு தனது சட்டபூர்வமான தலைமையை இழந்து விட்டது எனவும் அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடாபியின் குடும்பம் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கோரியுள்ளது. இதற்கிடையில், கிழக்கு நகரான பிரேகாவில் தாம் கடாபியின் இராணுவத்தினரின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே பெரும் சண்டை நிகழ்ந்து வருகிறது. நேட்டோ தலைமையிலான பன்னாட்டு இராணுவத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மூடப்பட்ட நியூஸ் ஒப் த வேர்ல்ட்' பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு, பலரது பதவிகளையும் காவு வாங்கி வருகிறது. இப்பத்திரிகையில் பணியாற்றி வந்த முன்னாள் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் என, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 57 வயதான போல் ஸ்டீவன்சன் தனது பதவியை நேற்று முன்தினம் பதவி துறந்தார். எனினும் தொலைபேசி ஒட்டுக்கேட்ட விவகாரத்துடன் தனக்கு தொடர்பில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்தார். 168 ஆண்டுகள் பழமையான 'நியூஸ் ஒஃப் த வேர்ல்ட்' பத்திரிகை மூடப்பட்டது சூலை 8, 2011 மேற்கு வங்க மாநில அரசு, இந்திய நடுவண் அரசு மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி ஆகியன இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கை நேற்று சூலை 18 ஆம் நாள் இந்திய உட்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மெற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. சில உள்ளூர் இனக்குழுக்கள் இவ்வுடன்படிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. அம்ரா பென்காலி, ஜன ஜகரன் மற்றும் ஜன சேட்டனா போன்ற குழுக்கள் தனி மாநிலத்துக்குக் குறைவான எந்த ஒரு தீர்வுக்கும் தாம் உடன்படத் தயாரில்லை என அறிவித்துள்ளன. இந்த நிருவாகப் பிரிவு எமது நீண்ட காலக் கோரிக்கையான தனி மாநிலத்துக்கான முதற்படி என ஜனமுக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். இவ்வாய்வுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அலண்டேயின் உடல் அவரது புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டது. அலண்டே தற்கொலை செய்து கொண்டார் என்பதில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் கொள்லவில்லை, ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் அவர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ச் சந்தேகம் தெரிவித்து அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரியிருந்தனர். அலண்டேயின் உடலைச் சோதித்த பன்னாட்டு நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை சிலியின் அரசாங்கத்துக்குக் கையளித்துள்ளனர். இதன்படி அவரது கால்களுக்கிடையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மூலம் பாய்ந்த இரண்டு குண்டுகள் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்லது. "மூன்றாம் மனிதர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என நிபுணர் குழுவின் தலைவர் டேவிட் பிரேயர் தெரிவித்தார். சிலியின் முன்னாள் தலைவர் சல்வடோர் அலண்டேயின் உடல் தோண்டி எடுக்க உத்தரவு ஏப்ரல் 18, 2011 செர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான குரோவாசியர்கள் மற்றும் சேர்பியர்கள் அல்லாத சிறுபான்மையினரையும் படுகொலை செய்ததாக காத்சிச் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காத்சிச் கைது செய்யப்பட்டதை சேர்பிய அரசுத்தலைவர் போரிஸ் தாதிச் இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். பெல்கிரேட் நகரின் வடக்கே புரூஸ்கா கோரா மலைப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார். இவர் அப்பகுதியில் ஒளிந்திருப்பதாக பல நாட்களாக நம்பப்பட்டு வந்தது. ஏழாண்டுகளுக்கு முன்னர் இவர் தலைமறைவாகியிருந்தார். செர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டார் மே 26, 2011 இந்நிலையில் சோமாலியாவில் இருந்து உணவு தேடி நாளொன்றுக்கு 5000 பேர் ஆளவில் அண்மையிலுள்ள கென்யா மற்றும் எத்தியோப்பியா அகதி முகாம்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கென்யாவில் அமைக்கப்பட்டுள்ள டெடாப் அகதி முகாமுக்கு வருகை தருகின்றனர். உலகிலேயே மிகப் பெரிய அகதி முகாமாக கருதப்படும் இதில் சுமார் 90,000 பேர் தங்குவதற்கே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தற்போது இங்கு 400,000 பேரளவில் உள்ளதாக ஐ. நா கூறியுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலை காரணமாக கென்யா, எதியோப்பியா, சோமாலியா, உகண்டா மற்றும் டிஜிபெளடி நாடுகளில் மொத்தமாக 11 மில்லியன் பேர் அளவில் பஞ்சத்தால் வாடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஃபெர்கானா பள்ளத்தாக்கில் நேற்று புதன்கிழமை அதிகாலை 01:35 மணிக்கு இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தில் மேலும் 86 பேர் காயமடைந்ததாக உஸ்பெக் அரசு அறிவித்துள்ளது. கிர்கிஸ்தானில் இது வரை எவ்வித உயிர்ச் சேதமும் அறிவிக்கப்படவில்லை. ஃபெர்கானா நகரின் தென்மேற்கே 42 கிமீ தொலைவில் 18 அடி ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. "ஃபெர்கானா பகுதியில் சில பழைய கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த இடிபாடுகளிடையே சிக்கி 13 பேர் உயிரிழந்தனர் என உஸ்பெக்கிஸ்தான் அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். இரவு முழுவதும் மக்கள் வெளி இடங்களிலேயே கழித்தனர். ஃபெர்கானா பள்ளத்தாக்கு மூன்று நாடுகளை, உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. இப்பகுதி மத்திய ஆசியாவில் மிகவும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசம் ஆகும். [[இலங்கை]]யில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சூலை 23 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் தேர்தல்கள் நடைபெறும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, காரைநகர், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் ஆகிய 16 சபைகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிளைபள்ளி, கராச்சி, பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச சபைக்கும், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் ஆகியவற்றுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தேர்தலுக்கான சுவரொட்டிகள் நேற்றுடன் அகற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், அரச ஆதரவுச் சுவரொட்டிகள் எதுவும் அகற்றப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவில் சேதமடைந்து காணப்படும் வீதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையின் குறைபாடு போன்ற காரணங்களினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களின் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம் என சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே அறிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையே கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஒரு போதும் இல்லாத வகையில் வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக உலா வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை, இந்தியா வலியுறுத்தி வருகின்ற தீர்வு என்பவற்றின் வெற்றிகள் இந்தத் தேர்தலில் நடத்தப்படுகின்ற வழிமுறைகளிலேயே தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணம் உட்பட 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கான தேர்தல்களே நாளை நடைபெறுகிறது. இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி மார்ச் 19, 2011 இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மார்ச் 17, 2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு சனவரி 28, 2011 ஒசுலோவில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் 3:20 மணிக்கு வெடித்த முதல் குண்டினால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். யுட்டேயா என்ற தீவு ஒன்றில் இடம்பெற்ற இளைஞர் முகாம் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது நோர்வேஜியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இளைஞர் முகாமில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் ஒசுலோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கும் இவருக்குத் தொடர்பிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். காவல்துறையினரைப் போன்று சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நோர்வே ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. இத்தாக்குதல்களை நோர்வே பிரதமர் ஜென்சு ஸ்டோல்டென்பர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார் எமது நாடு சிறியது, எம்மைக் கொன்று எமது உணர்வுகளை அழிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தீவு முகாமில் பலரைக் காணவில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிக்காத வெடிபொருட்கள் பல அங்கு கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். இத்தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் இதுவரையில் உரிமை கோரவில்லை. தலைநகர் ஒசுலோவில் குண்டுவெடிப்பினார் பல அரசுக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. எரிந்து கொண்டிருக்கும் சில கட்டடங்களில் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை நோர்வேயில் பொது விடுமுறையானதால் மேலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசுப் பேச்சாளர் கிறிஸ்டியான் அமுண்ட்சன் தெரிவித்தார். இவர் இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டதாக சக போராளி ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். ஆனாலும் இராணுவப் பேச்சாளர் இதனை நிராகரித்துள்ளார். தனது குழுவின் பிரதித் தலைவருடன் முரண்பட்டதாலேயே அவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2,416 வாக்குகள், 7 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 633 வாக்குகள், 2 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 3263 வாக்குகள், 7 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1107 வாக்குகள், 2 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 8938 வாக்குகள், 7 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3022 வாக்குகள், 2 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 4,307 வாக்குகள், 9 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1232 வாக்குகள், 2 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 12,565 வாக்குகள், 12 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3161 வாக்குகள், 2 இடங்கள் ஐக்கிய தேசிய கட்சி, 667 வாக்குகள், 1 இடம் இலங்கை தமிழரசுக் கட்சி, 10,207 வாக்குகள், 10 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,238 வாக்குகள், 2 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 1787 வாக்குகள், 3 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1667 வாக்குகள், 1 இடம் ஐக்கிய தேசிய கட்சி, 928 வாக்குகள், 1 இடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,834 வாக்குகள், 4 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 805 வாக்குகள், 1 இடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,609 வாக்குகள், 8 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 216 வாக்குகள், 1 இடம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3973 வாக்குக, 8 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 2221 வாக்குக 3 இடங்கள் * வலிகாமம் மேற்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி, 12117 வாக்குகள், 11 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3041 வாக்குகள், 3 இடங்கள் * வலிகாமம் வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி, 12,065 வாக்குகள், 15 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4919 வாக்குகள், 6 இடங்கள் * வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி, 11,954 வாக்குகள், 12 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4428 வாக்குகள், 4 இடங்கள் * வலிகாமம் தெற்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி, 12895 வாக்குகள், 13 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 4027 வாக்குகள், 3 இடங்கள் * வலிகாமம் கிழக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி, 16,763 வாக்குகள், 16 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 6635 வாக்குகள், 5 இடங்கள் * வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி, 12454 வாக்குகள், 15 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 2522 வாக்குகள், 3 இடங்கள் பச்சிளைப்பள்ளி, கரைச்சி, பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கு தேர்தல்கள் இடம்பெற்றது இந்த மூன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. தமிழர் விடுதலைக் கூட்டணி, 1650 வாக்குகள், 6 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1184 வாக்குகள், 3 இடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி, 18609 வாக்குகள், 15 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 6097 வாக்குகள், 4 இடங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி, 3827 வாக்குகள், 6 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 3689 வாக்குகள், 4 இடங்கள் துணுக்காய் பிரதேச சபைக்கு மட்டும் தேர்தல் இடம்பெற்றது. இதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. இலங்கை தமிழரசுக் கட்சி, 2198 வாக்குகள், 7 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 847 வாக்குகள், 2 இடங்கள் காரைதீவு, திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளுக்குத் தேர்தல்கள் இடம்பெற்றன. இவை இரண்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. இலங்கை தமிழரசுக் கட்சி, 4284 வாக்குகள், 4 இடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 2364 வாக்குகள், 1 இடம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 6,865 வாக்குகள், 7 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 1,249 வாக்குகள், 1 இடம் சேருவில, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றில் திருகோணமலை பட்டின சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய மூன்றையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் கைப்பற்றின. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 8,451 வாக்குகள், 6 இடங்கள் இலங்கை தமிழரசு கட்சி 2,961 வாக்குகள், 2 இடங்கள் * திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை இலங்கை தமிழரசு கட்சி 8,986 வாக்குகள், 5 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 6,353 வாக்குகள், 3 இடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி, 2869 வாக்குகள், 1 இடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 4,471 வாக்குகள், 7 இடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி, 728 வாக்குகள், 1 இடம் இலங்கை தமிழரசு கட்சி 649 வாக்குகள், 1 இடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 14,270 வாக்குகள், 8 இடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி, 5,820 வாக்குகள், 5 இடம் உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு சனவரி 28, 2011 இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி மார்ச் 19, 2011 இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: ஆளும் கூட்டணி பெரு வெற்றி மார்ச் 19, 2011 இவர் எவ்வாறு இறந்திருக்கலாம் என்பது குறித்து காவல்துறையினர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்றார். 2003ல் வெளிவந்த இவரின் ஃபிராங் என்ற இசைத்தட்டு ஐக்கிய இராச்சியத்தில் பெரும் வெற்றி பெற்றது. இது மெர்க்குரி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2006ல் வெளி வந்த பேக் டு பிளாக் என்ற இசைத்தட்டு 6 கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை பெற்றது. இவரே 5 கிராமிய விருதுகளை வென்ற முதல் பிரித்தானியர் ஆவார். சிறந்த பிரித்தானிய பெண் கலைஞருக்கு வழங்கப்படும் பிரிட் விருதை 2007ல் பெற்றார்.இதன் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார். பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த ஏமி பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுப் போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால் அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார். நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை. இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. கடைசியாகக் கடந்த புதன்கிழமை அன்று இரவு காம்டென் நகரில் ஒரு விழாவில் கலந்து கொண்டு நடனமாடினார். சீனாவின் தென்பகுதியில் உள்ள சேச்சியாங் மாகாணத்தில், வென்சூ நகரிலிருந்து பூசூ நகருக்குச் சென்று கொண்டிருந்த புல்லட் வண்டி என அழைக்கப்படும் டி- 3115 அதிவேகத் தொடருந்து வண்டி வழியில் மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அத்தடத்தில் பின்புறமாக மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் வந்த மற்றொரு தொடருந்து மோதியது. விபத்து நடந்த போது, இரண்டு வண்டிகளிலும் 1,400 பயணிகள் இருந்தனர். மீட்புப் பணிகள் விரைந்து நடக்க சீன அரசுத்தலைவர் ஹூ சிண்டாவோ உத்தரவிட்டுள்ளார். சீனாவில் புல்லட் தொடருந்து விபத்திற்குள்ளாவது இதுவே முதன் முறையாகும் சீனா டெய்லி' வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்,"புல்லட் ரயில்கள் துவக்கப்பட்ட இரு வாரங்களிலேயே, அவற்றின் சேவைகள் குறித்து மிக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து சீன ரெயில்வேயின் மூன்று உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு கருதி 58 அதிவேக தொடருந்து சேவைகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதத்துக்குள் பழைய தாள்கள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என சூடானிய மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. "தெற்கில் புழக்கத்தில் உள்ள சூடானியப் பணம் தொடர்பாக இரண்டு தரப்பும் ஒரு சுமுகமான உடன்பாட்டுக்கு வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி பிரதி ஆளுநர் பத்ர் அல்-டின் மகுமுத் தெரிவித்தார். இரு நாடுகள் எண்ணெய் தொடர்பாக உடன்பாட்டுக்கு வர வேண்டி உள்ளது. பெற்றோலியம் முழுவதும் தெற்கு சூடானிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்புகள் அனைத்தும் சூடானிலேயே உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதற்கு தெற்கு சூடான் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதில் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தான் நடித்த முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் 1960கள்-70களில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆண்டுக்கு பத்து படங்கள் வரை வெளியாகி அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "காதலிக்க நேரமில்லை இதயக்கமலம் குமரிப்பெண் நான் மூன்றெழுத்து அதே கண்கள் உத்தரவின்றி உள்ளே வா" என பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தார். அண்மைக்கால திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்தார். கடைசியாக நடித்த படம் ‘ஆடுபுலி‘. இதுதவிர ‘மானசீக காதல்‘, ‘மந்திரன்‘ உள்பட 7 படங்களை இயக்கினார். தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார். மறைந்த நடிகர் ரவிசந்திரனின் பூர்வீகம் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். ஆனால் அவரது குடும்பம் மலேசியாவில் வசித்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் ‘தமிழ் நேசன்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார் மறைந்த ரவிசந்திரனுக்கு விமலா என்ற மனைவியும் பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். அம்சவர்தனும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பொலிவார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சென்ற ஆண்டு வெனிசுவேலாவின் அரசுத் தலைவர் ஹூகோ சாவெஸ் பொலிவாரின் உடலைத் தோண்டி எடுத்து ஆராய்வதற்கு அறிவியலாளர் குழு ஒன்றுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். அநேகமான வரலாற்றுச் சான்றுகள் பொலிவார் 1830 ஆம் ஆண்டில் காச நோயினால் பீடிக்கப்பட்டு இறந்தார் எனவே கூறுகின்றன. ஆனாலும், இதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எவ்வித சான்றுகளையும் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நஞ்சூட்டப்பட்டதற்கான சான்றுகளும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தமது ஆய்வைக் கைவிடவில்லை என வெனிசுவேலாவின் பிரதித் தலைவர் எலியாசு ஜாவுவா தெரிவித்தார். சிமோன் பொலிவாரின் விடுதலைப் போராட்டத்திற்கும், தனது சோசலிசப் புரட்சிக்கும் இடையில் ஒற்றுமையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சாவெசுவின் விருப்பம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். சிமோன் பொலிவாரின் 228வது பிறந்த ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 19ம் நூற்றாண்டில் எசுப்பானியாவுக்கு எதிரான விடுதலைப் போரை நடத்தியவர் சிமோன் பொலிவார். இதன் மூலம் வெனிசுவேலா உட்படப் பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் விடுதலை அடைந்தன. மொரோக்கோவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மிகப் பெரிய விமான விபத்தாகக் கருதப்படும் இச்சம்பவத்தில், மூவர் எரிகாயங்களுடன் உயிர் தப்பியிருந்தாலும், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சி-130 ரக எர்க்கூலிசு விமானம் சர்ச்சைக்குரிய மேற்கு சகாராப் பகுதியின் வடக்கே குவெல்மிம் என்ற இடத்துக்கருகில் நேற்றுக் கால 09:00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றது. மோசமான காலநிலையே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விமானம் இராணுவ நிலை ஒன்றில் தரையிறங்க முயற்சித்த போதே மலை ஒன்றில் மோதி தீப்பற்றியது. 60 இராணுவத்தினர், 12 பொது மக்கள், மற்றும் 9 விமானச் சிப்பந்திகள் ஆகியோர் விமானத்தில் பயணித்திருந்தனர். 42 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இது வரையில். மிகவும் ஆழத்தை எட்டிய கப்பல் ஜப்பான் நாட்டின் சின்கையாகும் (Shinkai அது 1989 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 6500 மீட்டரையும் தாண்டி 6527 மீட்டரை எட்டியது. "5000 மீட்டர் ஆழத்தில், ஜியாலோங் ஒரு சதுர மீட்டருக்கு 5000 டன் எடையைத் தாங்கிக்கொண்டது" என்று வாங் கூறினார். இந்தக் கப்பலை வடிவமைத்த முதன்மை வடிவமைப்பாளர் ஆகிய க்சு க்வினான் (Xu Qinan) கூறியதாவது உலகத்தில் 7000 மீட்டர் ஆழம் வரை செல்வதற்காக மனிதன் வடிவமைத்த முதல் நீர் மூழ்கிக் கப்பல் ஜியாலோங் ஆகும். உள்ளூரிலேயே தயாரித்த ஜியாலோங், தொன்மையான கடல் நாகத்தின் பெயர் கொண்டது, கடந்த வியாழன் அன்று சுமார் ஐந்தே மணி நேரத்தில் 4,027 மீட்டர் ஆழத்தை எட்டியது. ஜியாலோங் திட்டத்தை 2002 ஆம் ஆண்டில் சீனா தொடங்கியது. ஒரு மனிதனை கடல் மட்டத்தின் கீழே 3,500 மீட்டர் ஆழத்திற்கும் கொண்டு செல்லும் திறமையை, அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு வளர்த்துக்கொண்ட ஐந்தாவது நாடு சீனா ஆகும். இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய ஜேட்லி மற்றும் ராஜ்நாத் நாளை பெங்களூர் வருகின்றனர். அடுத்த முதல்வராக தேர்வு செய்ய ஐந்து பேரின் பெயரை பாஜக மேலிடம் பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் எதியூரப்பா மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் இவரும், இவரது குடும்பத்தினரும் பெரும் ஆதாயம் பெற்றதாக லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்த அறிக்கையில் சுரங்க ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுரங்க நிறுவனத்திடம் இருந்து எடியூரப்பா மகன்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் என்றும், மேலும் சில அமைச்சர்களும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆகியோரும் ஆதாயம் அடைந்துள்ளனர், என்றும் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் எக்டே கூறியுள்ளார். அதே நேரம் பதவி விலக எதியூரப்பா மறுத்து வருகிறார். தன்னை நீக்கினால் ஆட்சி கவிழும் என எச்சரித்துள்ளார் எதியூரப்பா. ஜிபிஎஸ் என்பது செயற்கைக்கோள் மூலம் பூமியில் இருப்பிடங்களை தெரிந்து கொள்ள உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். இது அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க உதவியை எதிர்பார்க்காமல் செயல்பட இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி பாய்ந்ததும் அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். பெய் தோ வழிகாட்டல் தொகுதி, சீனா மற்றும் அதன் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு வழிகாட்டல் சேவை புரிந்து, போக்குவரத்து, மீன்பிடித்தல், வனத் தொழில், வானிலை, செய்தித் தொடர்பு முதலிய துறைகளில் இதனை பயன்படுத்துவோரின் தேவைகளை நிறைவேற்றும். 2020ம் ஆண்டுக்குள், பெய் தோ வழிகாட்டல் தொகுதியில் 30க்கு மேற்பட்ட செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டு அத்தொகுதி முழுமையடையும் என்று தெரிகிறது. நீதிபதிகளால் விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது இவர்கள் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கிளர்ச்சிக் குழுத் தலைவரும், இடைக்காலத் தேசியக் கவுன்சிலின் தலைவருமான முஸ்தஃபா அப்துல்-ஜலீல் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்களின் தலைவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், வேறு விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இவர்களின் இறப்புக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுட்டிக்கப்படும் என ஜலீல் தெரிவித்தார். 1969 ஆண்டு புரட்சி முடிவில் லிபிய அரசுத் தலைவர் கேர்ணல் கடாபியின் கீழ் அவரது விசுவாசியாக இருந்த ஜெனரல் யூனிஸ் உட்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் கடந்த பெப்ரவரியில் லிபிய எழுச்சி ஆரம்பமான போது கிளர்ச்சியளர்களுடன் இணைந்து செயல்பட்டார். இவர் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்திருந்தாலும், கடாபியின் தலைமைத்துவத்துடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என வதந்திகள் பரவியிருந்தன. யூனிசும் அவரது இரண்டு உதவியாளர்களும் வியாழக்கிழமை லிபியாவின் கிழக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, துனீசிய எல்லையில் அமைந்துள்ள லிபியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கசாயா என்ற நகரைத் தாம் கைப்பற்றியுள்ளதாக வியாழக்கிழமை காலையில் கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். லிபியக் கிளர்ச்சியாளர்களுக்குத் தூதுவ அங்கீகாரம் வழங்கும் முயற்சிக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இதுவரை 30 நாடுகள் இடைக்கால தேசியக் கவுன்சிலை அங்கீகரித்துள்ளன. இரண்டு நபர்கள் இரும்புக் கம்பியினால் அவரைத் தாக்கிவிட்டு ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர் என்று வீதியில் சைக்கிளில் வந்த ஒருவர் விவரித்தார். இரண்டு பேர் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த இடத்தில் தரித்து நின்றனர் என்று செய்தி ஆசிரியரின் அயலவர்கள் தெரிவித்தனர். உதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மே 28, 2011 நியூயோர்க் நகரில் இருந்து 150 பயணிகளுடன் புறப்பட்ட கரிபியன் ஏர்லைன்சு போயிங் 737-800 விமானமே விபத்துக்குள்ளானது. காலநிலை சீரற்றதாக இருந்தமையே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. செடி ஜகான் பன்னாட்டு விமான நிலையத்தில் இவ்விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கயானாவின் அரசுத்தலைவர் பரத் ஜாக்டியோ தெரிவித்தார். "பலர் சிறு காயங்களுடன் தப்பி விட்டமைக்கு நாம் நன்றியுடையவர்கள் என ஜாக்டியோ தெரிவித்தார். இரவு நேரமானதால் இடிபாடுகளிடையே இருந்து பயணிகளைக் காப்பதற்கு மீட்புப் பணியாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அவசர உதவி வருவதற்கு முன்னர் வாடகைக் கார் ஒன்று வந்து தன்னை விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதாகவும் அதற்கு அந்த சாரதி தம்மிடம் இருந்து பணம் பெற்றதாகவும் ஒரு பயணி தெரிவித்தார். ஒருவர் மட்டும் கால்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்ட்தாகவும், ஏனையோர் சிறு காயங்களுக்கு மட்டுமே உள்ளனதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் லெஸ்லி ராம்சாமி தெரிவித்தார். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டிலிருந்து 3 இலட்சத்து 30 ஆயிரத்தால் குறைவடைந்திருப்பதால் அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கையும் குறைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவதனால் எஞ்சியிருக்கும் 4 ஆசனங்களும் இலங்கையின் தென்மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் இரத்தினபுரி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கும் தலா ஒன்று என்ற அடிப்படையில் ஒதுக்கப்படவிருப்பதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய முதல்வராகத், தான் சொல்லும் நபரையே தெரிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை, பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டதால், எதியூரப்பா தன் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்குச் சம்மதம் தெரிவித்தார். 68 வயதாகும் எதியூரப்பா தலைமையில் தென் மாநிலமான கர்நாடகத்தில் 2008-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் எதியூரப்பா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இடையே உட்கட்சி பூசலும் உருவானது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இதுநாள் வரை எதியூரப்பா தனது பதவியைக் காப்பாற்றி வந்தார். ஆனால் சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. முதல்வர் எதியூரப்பா மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதெனவும், சுரங்க நிறுவனத்திடம் இருந்து எதியூரப்பாவின் மகன்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும், அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் எனவும் லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது. கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு சூலை 28, 2011 தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும், திமுகவினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு, போலீசார் கைது செய்து வருகின்றனர். இதைக் கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதனையடுத்து சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதில் கலந்து கொண்ட திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எமஎல்ஏ உதய சூரியன், அங்கையர்கண்ணி, செஞ்சி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி, நகர செயலாளர் பாலாஜி உள்பட மொத்தம் 2000 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் திமுக எம்.எல்.ஏ சவுந்திரபாண்டியன், கழக வெளியீட்டுச் செயலாளர் செல்வேந்திரன், தங்கராசு, திமுக எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திமுகவிரை அழைத்துச் செல்ல வாகனங்கள் இல்லாததால் அரசுப் பேருந்துக்கள் மூலம் கைது செய்யப்பட்டவர்களை அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். உயிர்தப்பிய 271 பேருடன் சென்ற 15-மீட்டர் நீளப் படகு லாம்பெடூசா என்ற தெற்கு இத்தாலியத் தீவில் நேற்று திங்கட்கிழமை தரை தட்டியது. படகின் எஞ்சின் அறையில் 25 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வடக்கு ஆப்பிரிக்க நாடுகளான லிபியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உள்நாட்டு கலவரம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றமை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அகதிகளில் 36 பெண்களும் 21 குழந்தைகளும் அடங்குவர். இப்பகுதியில் மிக மோசமான வானிலை நிலவுவதால் பெரும்பாலான அகதிகள் கடலில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். லிபிய கடல் எல்லையைக் கடப்பதற்கு சிறிய ரக மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கடல் மூலம் இத்தாலியை எட்டுவதற்கு இரண்டு நாட்களாகும். லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர் சூன் 4, 2011 சிறிய ரக வர்த்தக நிறுவனங்களை உருவாக்குதல், மேலாண்மையை நீக்கல் போன்ற இந்த சீரமைப்புகளுக்கு கியூபா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. நாட்டின் சர்ச்சைக்குரிய குடிவரவு, குடியகல்வு மற்றும் பயனச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவிருப்பதாகவும் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். தனது சீர்திருத்தங்களைக் குழப்ப எத்தனிப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமூக, அரசியல் மாற்றங்கலை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக காஸ்ட்ரோ தெரிவித்தார். இந்த சீரமைப்புகள் மூலம் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் எதிர்ப்பை காஸ்ட்ரோ சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புதிய மாற்றங்களின் படி கட்சித் தலைவர்கள் பலர் தமது பதவிகளை இழக்க வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசுப் பணிகளைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேளாண்மை, சிறு வர்த்தகம், கட்டடத் தொழில் போன்றவற்றில் அரசின் ஆதிக்கம் குறைக்கப்படும். கியூப மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து மனித உரிமைக் குழுக்கள் அரசைக் குறை கூறி வந்துள்ளன. கியூபாவில் அரசியல் சீர்திருத்தங்களை ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார் ஏப்ரல் 17, 2011 புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் ஓ’நீலுக்கு ஆதரவாக 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 24 பேர் வாக்களித்தனர். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பப்புவா நியூ கினி 1975-ல் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை அடுத்து சேர் மைக்கேல் சோமாரே அந்நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் பொறுப்பைத் தற்காலிகமாக அவரது நம்பிக்கைக்குரியவரான சாம் அபாலிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் பதவி காலியாகவுள்ளதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பீட்டர் ஓ’நீல் முன்னால் பிரதமர் சர் மைக்கேல் சோமாரேயின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் நீண்டகால அரசியல் அனுபவிக்க இவரின் தலைமையில் நாடு புதிய பாதையில் பயணிக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். திரு பீட்டர் ஓ’நீலின் தெரிவை எதிர்த்து தாம் நீதிமன்றம் செல்லவிருப்பதாக இடைக்காலப் பிரதமர் சாம் அபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பப்புவா நியூ கினி இயற்கை எரிவாயு, தங்கம் ஆகிய இயற்கை வளங்களைக் கொண்டது. பப்புவா நியூ கினி தலைவர் மைக்கேல் சொமாரே அரசியலில் இருந்து ஓய்வு சூன் 28, 2011 விண்வெளியில் ஒக்சிசன் மூலக்கூறுகளை வானியலாளர்கள் முதற்தடவையாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓரியன் என்ற விண்மீன் குழுமத்தில் விண்மீன் உருவாகும் பகுதியில் ஐரோப்பாவின் எர்ச்செல் விண்தொலைநோக்கி ஒக்சிசன் மூலக்கூறுகளைக் கண்டறிந்துளது. இது குறித்த ஆய்வு முடிவுகள் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவுள்ளது. அண்டவெளியில் ஐதரசன், மற்றும் ஈலியத்துக்கு அடுத்தபடியாக பெருமளவில் காணப்படும் மூலகம் ஒக்சிசன் ஆகும். ஆனாலும் பூமியில் உயிர்வாழ்வதற்கு அவசியமாக உள்ள ஒக்சிசன் மூலக்கூறு வடிவில், இரண்டு அணுக்கள் பிணைந்த நிலையில், விண்வெளியில் இதுவரையில் அறியப்படவில்லை. அகச்சிவப்பு ஒளியை உணரக்கூடிய உபகரணங்கள் பொருத்தப்பட்ட எர்ச்செல் நுண்ணோக்கி யில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் ஒக்சிசன் மூலக்கூறுகளின் சிறிய அளவைக் கண்டுபிடித்துள்ளது. "ஒக்சிசன் மூலக்கூறுகள் ஒளிந்திருக்கும் இடங்கள் இதன் மூலம் தெளிவாகலாம் எனக் கூறினார் எர்ச்செல் ஆய்வாலர் பவுல் கோல்ட்ஸ்மித். "பெருமளவு உயிர்வாயுவை நாம் கண்டுபிடிக்கவில்லை. பேரண்டம் இன்னும் பல இரகசியங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது என்றார் அவர். கடந்த வாரம் கொழும்பு கல்கிசையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகள் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டன. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாளர் என்ற விருதும், 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாளர் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. வன்னி மக்களின் நெருக்கடி மிக்க பிரச்சினைகளை செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் புகைப்படங்களாகவும் இவர் வெளியிட்டு வந்தவர். இலங்கைப் பத்திரிகைகளில் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகள், உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருகிறார். 1983 இல் பிறந்த தீபச்செல்வன், கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக பிரிவில் வருகை விரிவுரையாளராக பணிபுரிகிறார். நொரியேகா ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக தற்போது பிரான்சில் சிறைத்தண்டனை அநுபவித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவர் அமெரிக்காவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அடுத்த மாதம் அளவில் நொரியேகா பனாமாவிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீது ஏற்கனவே பனாமா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மூன்று மனித உரிமை மீறல்களில் அவர் அங்கு குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத நிலையில் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தன. நாடு கடத்துவதற்கு எதிராக அவர் அடுத்த ஒரு மாத காலத்துள் மேன்முறையீடு செய்ய வேண்டும். 77 வயதான மனுவேல் நொரியேகா தனது நாட்டுக்குத் திரும்புவதையே விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். நொரியேகா பனாமாவின் அரசுத்தலைவராக 1983 இல் பதவியேற்கும் முன்னர் பல ஆண்டுகள் அந்நாட்டின் இரகசியத்துறைக்குத் தலைவராகப் பணியாற்றினார். அதன் பின்னர் தேசியப் படைக்குத் தலவராக 1982 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். 1960களின் பிற்பகுதியில் இவர் அமெரிக்காவின் இரகசியத் துறையான சிஐஏ இனால் பணிக்கு அமர்த்தப்பட்டார். 1987 வரை அவர் அமெரிக்க அரசினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தார். 1988 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் அமெரிக்க அரசுக்கும் இருந்த உறவு முறிந்தது. அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை அடுத்து நொரியேகா அங்கு “போர் நிலை”யை அறிவித்தார். பனாமாக் கால்வாயில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும் பனாமாப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை வலுத்தது. அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் பனாமா நகரில் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து டிசம்பர் நடுப்பகுதியில் அமெரிக்கா பனாமாவை முற்றுகையிட்டது. இதையடுத்து வத்திக்கன் தூதரகத்தில் நொரியேகா தஞ்சமடைந்தார். அமெரிக்கப் படைகள் தூதரகத்தின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்ததை அடுத்து 1990 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் நாள் நொரியேகா அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர் மயாமிக்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் சிரைத்தண்டனை பெற்று பின்னர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார். பனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார் ஏப்ரல் 27, 2010 கடந்த சில நாட்களில் ஹமா நகரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஹமா நகரப் பகுதியில் குறைந்தது 45 பொது மக்களைச் சிரியப் படையினர் கொன்றுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பொது மக்கள் மீது துப்பாக்கிகள், மற்றும் தாங்கிகள் தாக்குதல் நடத்துவதாகவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிகழ்வதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். துனீசியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம் தேதி முதல், அரசுத்தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்கள் மீதான அரசின் அடக்குமுறைகளினால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதியூரப்பா ஆதரவு பெற்ற சதானந்த கவுடா, மற்றும் ஈஸ்வரப்பா அனந்த குமார் ஆதரவு பெற்ற அமைச்சர் ஜெகதீஷ் செட்டரும், முதல்வர் பதவிக்காக களம் இறங்கினர். கடந்த மூன்று நாட்களாக இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் கூறி வந்தனர். புதிய முதல்வரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவித்தனர். வாக்கு எண்ணிக்கையில் சதானந்த கவுடாவுக்கு 63 வாக்குகளும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு 55 வாக்குகளும் கிடைத்தன. வெற்றி பெற்ற சதானந்த கவுடா கருத்துத் தெரிவிக்கையில் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. தற்போது நடந்து வரும் திட்டங்களும், பல்வேறு புதிய திட்டங்களையும் அமுல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். எதியூரப்பா கொண்டு வந்துள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும். நல்ல நிர்வாகத்தை கொண்டு வருவேன் என்றார். இந்நிலையில் முக்கிய இலாகாக்களை தங்களுக்கு வழங்குமாறு மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலகினார் சூலை 31, 2011 தமிழில் தட்டச்சு செய்ய விக்கிபீடியாவில் எளிதாக உள்ளது. நான் கணினி வரைகலை குறித்த செய்திகளை உள்ளீடு செய்ய உள்ளேன். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் 12:25 மணிக்கு புளோரிடாவில் அமைந்துள்ள கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 என்ற ராக்கெட் மூலம் இது ஏவப்பட்டது. ஈலியக் கசிவு காரணமாக சிறிது நேரத் தாமதத்துக்குப் பின்னரே விண்ணுக்குச் சென்றது. "இத்திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் புதிய ஒரு எல்லையை நாசா தாண்ட விருக்கிறது என நாசாவின் நிர்வாகி சார்ல்ஸ் போல்டன் தெரிவித்தார். வியாழன் கோளில் பூமியை விட 1/25 பங்கு சூரிய ஒளியே காணப்படுவதால், அங்கு அனுப்பப்படும் விண்கலங்கள் புளுட்டோனியம் மின்கலங்களையே பயன்படுத்துகின்றன. ஆனால், ஜூனோ விண்கலம் 18,000 சூரியக் கலங்கள் பொருத்தப்பட்ட மூன்று இறக்கைகளுடன் செல்கிறது. "ஜூனோவின் சூரியக் கலங்கள் எப்போதும் சூரியனை நோக்கியே இருக்க வேண்டும். இதனால் வியாழனின் நிழலுக்குள் நாம் செல்லப்போவதில்லை என இத்திட்டத்தின் பிரதம அறிவியலாளர் ஸ்கொட் போல்ட்டன் தெரிவித்தார். வியாழனின் முனைவுச் சுற்று வட்டத்திற்கு இது சென்று அங்கிருந்து அக்கோளின் பொதிவுகள், ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், வியாழனின் காந்தக்கோளம் போன்றவற்றை ஆராயும். அத்துடன், வியாழன் எவ்வாறு தோன்றியது, பாறைகளை அது கொண்டுள்ளதா, அங்குள்ள நீரின் அளவு, கோளில் அதன் திணிவுப் பரம்பல் போன்றவற்றையும் ஆராயும். கிழக்கு ஆப்கானித்தானில் உலங்கு வானூர்தி ஒன்று தலிபான்களின் தாக்குதலுக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 30 அமெரிக்கப் படையினர், ஏழு ஆப்கானியப் படையினர், மற்றும் ஒரு பொது மகன் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அதிக அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவையாகும். வார்டாக் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலையில் சினூக் என்ற இந்த அமெரிக்க உலங்கு வானூர்தி சுட்டு வீழ்ததப்பட்டதாக ஆப்கானிய அரசுத்தலைவர் அமீட் கர்சாய் தெரிவித்தார். தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்தி விட்டுத் திரும்பும் வழியிலேயே இது சுட்டு வீழ்த்தப்பட்டது. தமது வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதை பராக் ஒபாமாவின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் வானூர்தி ஒன்றைச் சுட்டு வீழ்த்துவது மிக அரிதான செயல் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்த அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு ஆத்திரேலிய உச்ச நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. இவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் குறித்து மேலும் ஆராயப் படவேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இம்மாத இறுதியளவில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரை அகதிகள் பரிமாற்ரம் நிறுத்தி வக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 800 சட்டவிரோத அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பும் ஆத்திரேலிய அரசின் திட்டம் நீதிமன்றத்தின் இந்த அறிவித்தலால் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலியா கிலார்டின் அரசு மலேசிய அரசுடன் செய்துகொண்டுள்ள உடன்பாட்டின் படி, மலேசியாவில் அகதிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4,000 பேரை ஆத்திரேலியாவுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படும். படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது மே 8, 2011 அகதிச் சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலியா திட்டம் சூன் 3, 2011 சோமாலியாவின் அல்-சபாப் இசுலாமியப் போராளிகள் தாம் தலைநகர் மொகதிசுவில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளனர். சோமாலிய அரசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவோடிரவாக அவர்கள் வெளியேறியதை அடுத்து, சோமாலிய அரசுத்தலைவர் சேக் சரீப் அகமது "போராளிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகத்" தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்நடவடிக்கை ஒரு ஒரு இராணுவத் தந்திரோபாய நடவடிக்கை என்று அல்-சபாப் போராளிகளின் பேச்சாளர் கூறினார். மோதல்கள் இடம்பெறும் நிலையில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு உதவி நிறுவனங்கள் செல்லுவதற்குப் போராளிகள் தடை விதித்துள்ளனர். தலைநகரில் இருந்து போராளிகள் வெளியேறியுள்ளதால், தலைநகர்ப் பகுதிகளில் நிவாரணங்கள் வழங்க முடியும் என தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசுப் படைகளும் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப் படையினரும் மொகதிசுவின் சில பகுதிகளையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெரும்பாலான பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. வெள்ளி இரவு கடும் மோதல் இடம்பெற்றதை அடுத்தே போராளிகள் வெளியேறியதாகத் தெரிய வருகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் புதிய பிரதமர் லோப்சங் சங்கைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமா‌ தொடர்ந்து மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என திபெத்திய அரசு நிர்வாகம் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் சங்கை (அகவை 43) வெற்றி பெற்று புதிய பிரதமரானார். இவர் டார்ஜிலிங் நகரில் பிறந்தவர். டில்லியில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். ஹார்வர்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். சீன ஆட்சியில் திபெத்தியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது, நாடு கடந்த அரசை நிருவகிப்பது போன்றவை லோப்சங் சகையின் பணிகளாக இருக்கும். திபெத்திய நாடு கடந்த அரசை இதுவரை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காதது, மற்றும் தனது தாய்நாட்டை என்றுமே பார்த்தறியாத ஒருவர் தலைவராக இருப்பது போன்றவை இவர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாகும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். திபெத்து நாடு கடந்த அரசின் தலைவராக லோப்சங் சங்கை தெரிவு ஏப்ரல் 27, 2011 இதனையடுத்து 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 25 காரணங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பெற்றோர், மாணவர்கள் தரப்பில், சென்னை உயர்நீதி மன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத் திருத்தத்துக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றம் மேன்முறையீடு செய்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கின் மீது, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே நேரம் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக தமிழக அரசு காத்திருப்பதாகவும், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் நேற்றுத் தெரிவித்திருந்தார். பர்மிங்ஹாம், லிவர்ப்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய ஊர்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் லண்டனில் மேலதிகமாக 1,700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்துடன் தொடர்புடைய 334 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், 69 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் காவல்துறை அறிவித்துள்ளனர். பர்மிங்ஹாமில் வின்சன் கிறீன் என்ற இடத்தில் வீதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினரையும் சுற்றுப் புறத்தையும் காப்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாக்கித்தானிய இளைஞர்கள் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாகனம் ஒன்றை ஏற்றிக் கொன்றனர். பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் வசிக்கும் லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள டொட்டன்ஹாம் பகுதியில் முதலில் இந்த வன்முறை பரவியது. 16 வயது சிறுமியை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதாலும், மார்க் டுக்கான் (29) என்ற வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டதாலும் இந்த வன்முறை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300 பேர் காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் மேலும் பரவியது. இன்று மலையக நகரான அப்புத்தளை தொட்டலாகலத் தோட்டத்திற்குச் சென்ற இரு நபர்களை மர்ம நபர்கள் எனச் சந்தேகித்த தோட்டத் தொழிலாளர்கள் அந்நபர்களை வெட்டி, தாக்கி கொன்றுள்ளதாக தமிழ்மிரர் செய்தி தெரிவித்துள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி எனுமிடத்தில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலை மோதலாக மாறியதை அடுத்து அங்கு நேற்று புதன்கிழமை பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. நேற்று மர்மமனிதன் எனப்படும் நபரொருவர் ஓட்டமாவடி (நாவலடி) கிராமத்தில் 31வயதுடைய பெண்ணின் கையைப்பிடித்து இழுத்ததைத்தொடர்ந்து மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு கோரியே மக்களில் சிலர் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் விடுவித்துவிட்டதாக பரவிய வதந்தியை அடுத்து, அங்கு கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு காவல்துறையினரையும் கற்களால் தாக்கியுள்ளனர். இதன்போது, ஏற்பட்ட கைகலப்பு மற்றும் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பொதுமக்கள் தரப்பில் இருவரும்காவல்துறையினர் தரப்பில் ஒருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறை வாகனங்களையும் மக்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதன்போது 25 பொது மக்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நண்பகல் வேளையில் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கடைத் தெருக்கள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்துமின்றி பிரதேசத்தின் நிலமை பெரும் பதற்றமாக இருந்ததுடன் பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மாலை அளவில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர். மலையகத்தில் மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், பொகவந்தலாவ, டிக்கோயா பகுதிகளிலுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த போது திடீரென மர்ம மனிதர்கள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியதால் ஆண், பெண் தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேலைத்தலத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார்கள். மஸ்கெலியா பகுதியில் மறே, லக்சபான, மவுசாக்கொல்லை, பிரவுண்லோ, பிரன்ஸ்விக், ஸ்ரெஸ்பி தோட்டங்களிலும் நோர்வூட் பகுதிகளிலுள்ள தோட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. பாலித் தீவுகளில் சுற்றுலா விடுதி ஒன்றில் 202 பேர் இறக்கக் காரணமாயிருந்த ஜெமா இசுலாமியா இயக்கத்தினரின் தாக்குதல்களை இவரே ஒருங்கிணைத்தார் என பயங்கரவாதத்துக்கெதிரான நிபுணர்கள் கருதுகின்றனர். இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களில் இவர் ஒருவரே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனையோர் கைது செய்யப்பட்டோ அல்லது இறந்தோ போயுள்ளனர். தாக்குதலை நடத்திய டல்மடின் என்பவருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார் எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். டல்மடின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் காவல்துறையினரின் தாக்குதலின் போது கொல்லப்பட்டார். உமர் பட்டேக் மேலும் மூன்று தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாயிருந்திருப்பதாகவும், இவர் தெற்கு பிலிப்பீன்சு, மற்றும் ஆசியாவில் உள்ள அல்-கைதா இயக்கத்தினருடனும் தொடர்புள்ளவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இவ்வாண்டு அரம்பத்தில் பாக்கித்தானின் அபாட்டபாத் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இந்ந்நகரிலேயே ஒசாமா பின் லாடனும் அமஎரிக்கப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பாலிக் குண்டுவெடிப்புகளில் 21 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 88 பேர் ஆத்திரேலியர்கள் ஆவர். பாலி குண்டுவெடிப்புக்கு காரணமான போராளி கொல்லப்பட்டார் மார்ச் 10, 2010 ராஜீவ் காந்தியின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபரில் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலையில் சம்பந்தப்பட்ட அவரது மெய்க்காப்பாளர் பின்னர் தூக்கிலிடப்பட்டார். கடைசியாக 2004 ஆம் ஆண்டில் 41 வயதுடைய முன்னாள் காவல் பணியாளர் ஒருவர் 14 வயது பள்ளி மானவி ஒருவரை பாலியல் வன்புணருக்குட்படுத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். அமெரிக்க இராணுவ அறிவியலாளர்கள் பரிசோதனை முறையில் ஏவிய ஆளில்லா மீஒலிவேக வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபால்க்கன் மீஒலிவேக சோதனைக் கலம் Falcon Hypersonic Test Vehicle 2 HTV-2) வெற்றிகரமாகத் தனது ராக்கெட்டில் இருந்து விடுபட்ட போதிலும், வெளியேறிய சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்புகள் அறுந்து விட்டன. இவ்வானூர்தி ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் செல்லவல்லது. அமெரிக்க பாதுகாப்புத் துறையினரின் இந்த ஃபால்க்கன் திட்டத்தின் மூலம் இவ்வாறான மீஒலிவேக வானூர்திகள் மூலம் உலகின் எந்த மூலையையும் ஒரு மணி நேரத்தினுள் தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை காலையில் கலிபோர்னியாவின் வாண்டர்பர்க் விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த அதிவேக விமானம் புறப்பட்ட 9 நிமிடத்தில் அதனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இது பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்போர் விமானம் கடந்த ஆண்டும் சோதனை முயற்சியாக ஏவப்பட்டது. ஆனாலும் இவ்விமானமும் ஏவப்பட்ட சில நிமிடநேரத்தில் தொடர்புகளை இழந்து பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. இரண்டாவது தடவையும் இத்திட்டம் பிழைத்ததை அடுத்து இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து மீளாய்வு செய்யப்படலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். “இக்கோள் அசாதாரணமாகக் கருப்பாக இருப்பது எதனால் என்று தெளிவாகத் தெரியவில்லை,” என பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் டேவிட் ஸ்பீகல் தெரிவித்தார். “ஆனாலும், இது முழுமையான கருங்கோள் அல்ல. இது மிகவும் சூடான கோள், இதனால் இது மிக மெலிதான சிவப்பு ஒளிக்கதிரை வீசுகிறது.” வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார். ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "அதிக கடன் சுமையுள்ள வளர்முக நாடுகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இந்திய லோக்சபாவில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: அதிகமாக வெளிநாட்டு கடன் சுமையுள்ள, 20 வளர்முக நாடுகள் குறித்த பட்டியலை, உலக வங்கி வெளியிட்டது. இதன்படி, 2009ல், அதிக கடன் சுமையுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தாலும் இந்த கடன் சுமை சமாளிக்கக் கூடியதே. இது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றார். இந்தப் பட்டியலில் சீனா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். தேயிலையை உலரச் செய்வதற்காக தோட்ட நிர்வாகம் அண்மையில் நாளொன்றுக்கு ஐயாயிரம் தேயிலை கொழுந்தை மிகவிரைவாக உலரச் செய்ய கூடிய கொதிகலன் ஒன்றை அமைத்திருந்தது. இந்த கொதிகலன் வெடிப்புண்டதிலேயே மேற்படி விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே மூவர் இறந்துள்ளனர். நெதல்ஹில் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா ராஜன் (42 பாலையா ஜீவபாக்கியம் (52 சிங்காரவேல் விஜயம் (30) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள். பல தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வெடிப்பினால் தேயிலை தொழிற்சாலையின் மூன்றாம் மாடிக் கூரை சேதமடைந்திருப்பதாகவும், சம்பவ இடம் பெரும் குண்டு வெடிப்பு இடம்பெற்றதைப் போன்று காட்சியளிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிவாயுவினால் இயங்கும் இத்தகைய கொதிகலனை இயக்குவதற்கு தொழில் நுட்பவியலாளர்கள் தேவை. எனினும் இதனை நிர்வாகம் தொழில்நுட்பமே தெரியாத சாதாரண தொழிலாளர்களை கொண்டே இயக்கி வந்தது எனக் கூறப்படுகிறது. பெர்லினில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பெர்லின் நகர முதல்வர் கிளாவுஸ் வொவரீட் பெர்லின்) சுவர் ஒரு வரலாறு, அதனை நாம் மறந்து விடக்கூடாது என்றார். பெர்லின் சுவரைத் தாண்ட முற்பட்டு உயிர் நீத்தவர்களுக்காக நண்பகல் 12:00 மணிக்கு நகரில் ஒரு நிமிட நேர மௌனம் அனுட்டிக்கப்பட்டது. பெர்லின் சுவரைத் தாண்டியவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 136 எனக் கூறப்பட்டாலும், உண்மையில் 700 பேர் வரையில் உயிரிழந்ததாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக முதலாவதாக கெண்டர் லிட்ஃபின் என்பவர் 1961 ஆம் ஆண்டு ஆகத்து 24 ஆம் நாள் இறந்தார். கடைசியாக கிறிஸ் கெஃப்ரோய் என்பவர் 1989 பெப்ரவரி 6 இல் இறந்தார். பெர்லினின் கிழக்குப் பகுதியில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிய பிரிஜிட்டா ஐன்றிக் என்பவர் ரியா-நோவஸ்தி செய்தியாளரிடம் கூறுகையில் எனது மாணவர்களில் ஒருவர் ஆரம்ப காலங்களில் ஏணி ஒன்றின் உதவியுடன் சுவரைத் தாண்டித் தப்பித்துச் சென்றார். இதனை அடுத்து அம்மாணவனின் பெற்றோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தாயார் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார் எனக் கூறினார். இப்போது கிழக்கு செருமனியிலேயே வாழ்ந்து வரும் இவர், பெர்லினுக்கு மேற்கேயுள்ள மேற்கு செருமனியில் உள்ளோர் இப்போதும் தம்மை வேறு இனத்தவர் போலவே பார்க்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலி இப்போதும் உள்ளது எனத் தெரிவித்தார். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம் Special:Contributions safesubst PAGENAME உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நேபாள காங்கிரசும், மாவோயிஸ்ட் கட்சியும் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க போட்டி போடுகின்றன. மாவோயிஸ்ட் சார்பில் கட்சி துணை தலைவர் பாபுராம் பட்டாரய், காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் துபே, போத்யால் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதால் நேபாளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது சில டசின் மொழிகளே எஞ்சியுள்ளன. 22 மில்லியன் மக்கள் வாழும் ஆத்திரேலியாவில் தற்போது ஏறத்தாழ 470,000 பழங்குடியினரே வாழ்கின்றனர். "எமது நாட்டின் பேச்சு மற்றும் எழுத்து மொழிகளே எமது கலாசாரத்தின் முதுகெலும்பு என ஆத்திரேலிய கலைத்துறை அமைச்சர் ஜோர்ஜ் சூரிஸ் தெரிவித்தார். ரியோ-டிண்டோ என்ற ஆங்கில-ஆத்திரேலிய்ச் சுரங்க நிறுவனம் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கிறது. 2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, 145 பழங்குடி மொழிகளே தற்போது எஞ்சியுள்ளன. இவற்றில் 110 மொழிகள் அழியும் தறுவாயில் உள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கே சுமார் 50 கிமீ தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மாளிகையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. பர்வான் மாநிலத்தில் தீவிரவாதிகள் பிரச்சினை குறைவாகவே இருந்து வந்துள்ளது. அப்துல் பசீர் சலாங்கி என்பவரே இங்கு ஆளுநராக உள்ளார். நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் தீவிரவாதிகள் ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு வாகனக் குண்டு தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதில் நுழைவு வாயில் முன்பு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்பே மாளிகைச் சுவரில் விழுந்த ஓட்டை வழியாகவே தற்கொலை தீவிரவாதிகள் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது ஆளுநர் மாளிகைக்குள் பாதுகாப்பு நிலை குறித்து உள்ளூர் ராணுவத் தளபதி, மற்றும் 2 நேட்டோ ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அவர்களின் அறைக்குள் தீவிரவாதிகள் நுழையவில்லை. தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக அதில் கலந்து கொண்ட மாகாணக் காவல்துறை அதிகாரி ஷெர் அகமது மாலதானி தெரிவித்தார். இந்த தாக்குதல் பற்றி கவர்னர் சலாங்கி நிருபர்களிடம் கூறுகையில், 6 தற்கொலை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் தாக்குதலின் போது, பல முறை குண்டுகள் வெடித்த சத்தமும், துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டது என்றும் குறிப்பிட்டார். மாநில தலைமை டாக்டர் முகமது ஆசிப் கூறுகையில், பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்று குறிப்பிட்டார். ஈராக்கின் தலைநகரம் பாக்தாதின் மையப் பகுதியில் உள்ள கட்டிட நிர்மாணப் பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் குடிநீரைக் குளிராக வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியொன்றிலிருந்தே முதலாவது குண்டு வெடித்ததாகவும், மற்றையது வாகனத் தரிப்பிடத்தில் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர். இது தவிர பக்பா நகரில் ராணுவ சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கிர்குக் நகரிலும், நஜப், கர்பாலா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் நாடு முழுவதும் 42 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தன. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கில் வன்முறைகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் கருதப்படுகின்ற போதும் பெரும்பாலும் நாளாந்தம் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட தொகையான அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்தும் நாட்டில் வைத்திருப்பதற்கான பேச்சுகளை அமெரிக்காவும் ஈராக்கும் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [[இந்தியா]]வுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட சுகோய் டி-50 (Sukhoi T-50) என்ற இந்த போர் விமானம் தலைநகர் மாஸ்கோவில் நேற்று இடம்பெற்ற மாக்ஸ் 2011 விமானக் காட்சியில் பறக்கவிடப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இவ்வகைப் போர் விமானங்களை உருசியா தயாரிக்கும். இவற்றில் 200 வரையான விமானங்களை இந்தியா வாங்க விருக்கிறது. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இவை தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைட்டட் ஏர்கிராஃப்ட் என்ற அரசு நிறுவனம் இவ்விமானத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது டி-50 ஜெட் சுப்பர்சோனிக் விமானம் உருசிய விமானப் படைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் தனது சேவைகளை வழங்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் மிக்கைல் பகசியான் தெரிவித்தார். உருசிய விமானப் படை இவ்வகை விமானங்கள் 200 ஐ வாங்க விருப்பதாகவும், அவை தற்போதுள்ள எஸ்யு-27 போர் விமானங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். டி-50 ரக விமானங்கள் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக அதன் வெளியீடு பல தடவைகள் தள்ளிப் போடப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் இரகசியமான முறையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. நீண்ட தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தவல்லது என்றது மட்டுமின்றி, விண் பாதுகாப்பிலும், எதிரியின் ராடாரில் சிக்காத வல்லமையும், விண் போரில் எப்படிப்பட்ட சூழலிற்கு ஏற்பவும் பயன்படுத்திக்கொள்ளத் தக்கதாக உருவாக்கப்பட்டுள்ள சுகோய் டி-50 அனைத்துக் காலநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய T-50 விமானங்கள் 300 முதல் 400 மீட்டர்கள் ஓடுபாதையில் புறப்படவல்லன. அத்துடன், வானிலும், தரையிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தக் கூடியவை என்றும் கூறப்படுகிறது. இவற்றுக்கு இணையான அமெரிக்க விமானங்களை அமெரிக்காவின் ராப்டர் நிறுவனம் 140 மில்லியன் டாலர்களுக்கு (20 ஆண்டுகளுக்கு முன்னர்) விற்பனை செய்தது. இப்பேரணியில் இதில் சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, ரோசி சேனாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, தலதா அத்துகோரல, சுஜீவ சேரசிங்க, புத்திக பத்திரண உள்ளிட்ட பல ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்து வரும் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டுமென இவர்கள் குரலெழுப்பினர். ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு, அதன் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவை தலைவராக நியமிக்க வேண்டுமென சஜித் பிரேமதாச தலைமையிலான பிரிவினர் முயற்சித்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான உரைகளை சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர ஆகியோர் நிகழ்த்தினர். அங்குரையாற்றிய சஜித் பிரேமதாச, பதினேழு வருடங்களாக படுதோல்வியை எதிர்நோக்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்புவது ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமல்ல என்றும், அவருக்கு கட்சியின் தலைமை பதவியில் வீற்றிருக்கும் சுயநலநோக்கம் மாத்திரமே இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்தார். ரணிலுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் எண்ணத்துடன் தாங்கள் சத்தியாக்கிரகம் போன்ற சாத்வீகப் போராட்டங்களை நடத்துவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார். ரணில் எதிர்பார்ப்பதைப் போன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஓடிவிடமாட்டேன் என்று அறிவித்த சஜித் பிரேமதாச உயிருள்ளவரை கட்சியின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருப்பேன் என்று சொன்னார். இதேவேளை, நேற்றுப் பிற்பகல் கட்சியின் செயற்குழு அதன் தலைமைப்பீடமான சிறீகொத்தாவில் கூடியது. இதில் 54 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் எதுவித தீர்மாணங்களும் எடுக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. செயற்குழு தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக சஜித் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். என்றாலும், கட்சித் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்ட எதுவும் நடத்தக் கூடாதென கங்கொடவில் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, தங்களது போராட்டத்தை சஜித் பிரேமதாச அணியினர் கொழும்பு, விகார மகாதேவி பூங்கா அருகில் நடத்தினர். ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள அக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியை பகிரங்கமாக கடுமையாக விமர்சித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும் கட்சியில் சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஐதேகவின் வேறு பல அங்கத்தவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான பிரேரணையை அக்கட்சியின் செயற்குழு நிராகரித்தது. உலகமே வியக்கும் உழல் பணமும் இந்தியாவில் தான் அதிகம் கடந்த 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, தனது வீட்டில் இருந்து காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அசாரே (அகவை 74 பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அன்றிரவே அவரை விடுதலை செய்வதாக சிறை அதிகாரிகள் அறிவித்தாலும், வெளியே செல்ல மறுத்தார் அசரே. உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தனக்கு நிபந்தனையற்ற அனுமதி கிடைக்கும் வரை சிறையை விட்டுச் செல்ல முடியாது எனப் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, டெல்லி காவல் துறையினருக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று சமரசத்தை அடுத்தே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிறையிலிருந்து உண்ணாவிரதம் நடைபெற இருக்கும் ராம் லீலா மைதானத்துக்குச் செல்ல இருப்பதாகவும் அங்கு செப்டம்பர் 2 வரை உண்ணாவிரதம் இருக்க ஒப்புக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அசாரே 1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றோம். ஆனால் விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும், முழுமையான விடுதலையை நாம் இன்னும் அடையவில்லை எனத் தெரிவித்தார். இதற்கிடையே, இந்தப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த பிரமதர் மன்மோகன் சிங், சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளதே தவிர, அண்ணா அசாரே தனது மசோதாவை திணிக்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவரான என். விட்டல் பிபிசி செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையில், அண்ணா அசாரே போன்றவர்கள், அரசு எந்தவிதம் செயல்படுகிறது என்பதை உணராததால் அவர்கள் சொல்கிற ஜனலோக்பால் சட்டம் போன்ற ஏற்பாடுகள் நடைமுறைக்கு ஒத்துவராது எனவும் நடைமுறையில் செயல்படுத்தமுடியாத ஒன்றை முன்வைத்து, அதைத்தான் செயல்முறை படுத்தவேண்டும் என்று சொன்னால் அது கடைசியில் ஏட்டுச் சுரைக்காய் போலத்தான் இருக்கும் எனவும் கூறினார். இந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஏப்ரல் 9, 2011 இன்று அதிகாலை 05:30 மணிக்கு கலாசார மையத்தின் சுவரை கார்க் குண்டு ஒன்று மோதி சுவர் தகர்க்கப்பட்டதை அடுத்து ஆயுததாரிகள் பலர் உள்நுழைந்து தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர், மற்றும் குண்டுவெடிப்புகளை அடுத்து ஆயுததாரிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் காபூல் தூதுவர் அறிவித்துள்ளார். 1919 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை நினைவு கூருவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். குறைந்தது 8 ஆப்கானியக் காவல்துறையினரும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் தாக்குதலின் போது கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்தனர். கலாசார மையத்தில் இருந்த அனைத்து பிரித்தானியர்களௌம் பாதுகாப்பாக இருப்பதாக ஐக்கிய இராச்சிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிரித்தானியக் கலாசார மையம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். இது பெரும்பாலும், பல்-கலாசார நிகழ்ச்சிகளை அங்கு ஒழுங்கு செய்கிறது. தி.மு.க ஆட்சியில், 450 கோடி ரூபாய் செலவில் புதிய செயலகம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி புதிய சட்டசபை வளாகத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கட்டடத்தையே அதிநவீன மருத்துவமனையாக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், தரமான உயரிய சிகிச்சையை இலவசமாக பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார். இதற்கு அருகில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அறிவித்தார். "புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பில், எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ, கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். பிரதமர் இது குறித்துச் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான விவாதத்துக்கும், பேச்சு நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது. இது குறித்து தேசிய அளவிலான கருத்தொற்றுமை தேவை. நாட்டின் அனைத்துப் பிரிவினரும் விரும்பும் வகையில் வலுவான லோக்பால் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஊழலை ஒழிக்கும் லோக்பாலுக்கு நாங்களும் ஆதரவாளர்கள்தான். அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் அரசு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். லோக்பால் மசோதைவை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடமாட்டேன், உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்று அண்ணா அசாரே உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக நேற்று முன் தினத்தில் இருந்து அண்ணா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்கு பேராதரவு பெருகி வருகிறது. தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் ஆகத்து 19, 2011 80 சிறு தீவுகளைக் கொண்ட வனுவாட்டு ஏறத்தாழ கால் மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது நிலநடுக்கங்கள், மற்றும் ஆழிப்பேரலைகள் தாக்கும் பகுதியாகும். இன்றைய நிலநடுக்கத்துக்குப் பின்னரான எதிர்த்தாக்கங்கள் பல இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூரில் ஆழிப்பேரலைகள் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து புத்தளம் நகர பிரதான சுற்றுவலயத்தில் காவல்துறையினருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் இனம் தெரியாதோரால் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், ரயர்களும் வீதியில் போட்டு எரிக்கப்பட்டதால் போக்குவரத்து தடங்கல்கள் சில மணிநேரம் காணப்பட்டது. மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் நாட்டின் நாலா பக்கங்களிலும் இடம்பெற்று வருவதாக இலங்கை ஊடகங்களில் நாள்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில சமூகவிரோதிகளும் திருடர்களும் பெண் பித்தர்களுமே இவ்விதம் பதற்ற நிலையை நாடெங்கிலும் ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் கூறிவருகின்ற போதிலும்கூட நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து மக்கள் குறைப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மர்ம மனிதன் நடமாட்டமும் அசம்பாவிதங்களும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை வாழும் பிரதேசங்களிலே அதிகமாக நடைபெற்றுவருவது குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் நிலவிவருகின்றன. கடந்த சில வாரங்களாக கிராமப் புறங்களில் காணப்பட்டுவந்த க்ரீஸ் மனிதன் பீதி நேற்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு, புதுக்கடை பகுதிக்குள் மர்மமனிதர்கள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலால் இப்பகுதியில் நேற்றுக்காலை பெரும் பரபரப்பும் பதற்றமும் எற்பட்டது. மர்மமனிதர்கள் இருவரை தாம் கண்டதாக சிலர் தெரிவித்ததையடுத்தே இந்த நிலை இங்கு ஏற்பட்டது. இலங்கையில் மர்ம மனிதர்கள் நடமாட்டமும், மக்கள் பீதியும் ஆகத்து 11, 2011 11 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி இந்த தேர்வுத் தொடரில் ஒரு போட்டியைக் கூட வெற்றி தோல்வியின்றி முடிவு செய்ய முடியாமல் முழுமையாக இழந்துள்ளது. இதற்கு முன் 2000 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் (2-0 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் (3-0) ஆகியவற்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்திய அணி 79 ஆண்டுகாலமாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளைக் கொண்ட தேர்வுத் தொடரில் 3 முறை இவ்வாறு அனைத்துப் போட்டிகளையும் இழந்துள்ளது. 1959-ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-5 என்ற கணக்கிலும், 1961-62-ல் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 0-5 என்ற கணக்கிலும், 1967-68-ல் ஆஸ்திரேலியாவிடம் 0-4 என்ற கணக்கிலும் இந்தியா தொடரை முழுமையாக இழந்துள்ளது. லிபியத் தலைவர் முஆம்மர் கடாபியின் மகன் ஆயிஃப் அல்-இசுலாம் தலைநகர் திரிப்பொலியில் தனது ஆதரவாளர்களின் மத்தியில் தோன்றி "கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை" தமது படைகள் முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளார். கடாஃபியின் மூன்று மகன்களையும் தாம் கைது செய்துள்ளதாக திரிப்பொலியை முற்றுகை இட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் நேற்றுத் தெரிவித்திருந்தனர். ஆனாலும், கடாபியின் மகன் ஆயிஃப் (அகவை 39) இன்று அதிகாலையில் அவரது ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் செய்தியாளர்களின் மத்தியில் திடீரெனத் தோன்றினார். சாயிஃப் அல்-இசுலாம் மிகவும் உறுதியுடன் காணப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இதற்கிடையில் கடாஃபியின் மாளிகையான பாப் அல்-அசீசியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் இன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடாபி எங்கே உள்ளார் என்பது இதுவரையில் அறியப்படாதுள்ளது. தலைநகரின் பெரும்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக இரண்டு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். நேற்றுக் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட கடாஃபியின் மூத்த மகன் முகம்மது கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். கடாஃபியின் படைகள் கிளர்ச்சியாளர்களுடனான தமது சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவும் உருசியாவும் கெட்டுக்கொண்டுள்ளன. அதே வேளையில், பிராந்தியத் தலைவர்கள் இவ்வார இறுதியில் நியூயோர்க் நகரில் கூடி லிபியப் பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாக ஐநா செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். கடாஃபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாயின. நாட்டின் கிழக்குப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள் சென்ற ஞாயிறன்று தலைநகர் திரிப்பொலியினுள் நுழைந்தனர். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் முதன் முறையாக நான்கு நாட்கள் இலக்கிய மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தஸ்லிமா நஸ்ரினும் கலந்துகொள்ள இருந்தார். இந்நிலையில் தனது டுவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியாவின் ஒரு பகுதிதான் நேபாளம் என கருத்தினை இவர் வெளியிட்டதினால் நேபாள நாட்டினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இலக்கிய மாநாட்டில் தஸ்லிமா கலந்துகொள்ள வந்தால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் எனவும் ஆவேசத்துடன் கூறினர். இது குறித்து நேபாள நாட்டு இலக்கிய மாநாட்டு அமைப்பாளர்கள், தஸ்லிமாவை நேபாளம் வர வேண்டாம் எனவும், அவ்வாறு வருமிடத்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாதெனவும் என யோசனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தஸ்லிமா தனது நேபாள பயணத்தை ரத்துச் செய்தார். இது தொடர்பாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், நேபாளம் செல்வதற்காக டில்லி சர்வதேச விமான நிலையம் வந்த போது தான் தனது சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டை கொண்டு வர மறந்துவிட்டதால், நேபாளம் செல்லும் விமானத்தை தவறவிட்டேன் என தெரிவித்திருந்தார். செவ்வாய்க்கிழமை நிலநடுக்கத்தின் எதிரொலி, வாசிங்டனிலும் இருந்தது. பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், நாடாளுமன்றக் கட்டடம், வெள்ளை மாளிகை பென்டகன்' ஆகியவற்றில் இருந்த அலுவலர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வாசிங்டனில் உள்ள தேசிய சர்ச்சின் உச்சியில் உள்ள நான்கு கோபுரங்களில் ஒரு கோபுரத்தின் உச்சிப் பகுதி, நிலநடுக்கத்தில் உடைந்து விழுந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வடக்கு மின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன என அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செய்தித் தொடர்பாளர் ரொஜர் ஹன்னா தெரிவித்தார். மொத்தமாக அப்பகுதியில் இயங்கி வரும் 12 அணுமின் உலைகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலேண்ட் பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அணுமின் நிலைய ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. [[இலங்கை]]யில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணை ஒன்றை அவர் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது. நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம், உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலிலேயே இருக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.பாதுகாப்புத் தடைச் சட்டமானது தனியாக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் அவசரகாலச் சட்டம் 1971ம் ஆண்டு இடம்பெற்ற கிளர்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்பு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. அவசரகாலச் சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வந்தன. அது மட்டுமல்லாது மனித உரிமை அமைப்பு மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செப்டம்பர் 22 ஆம் நாள் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு கசக்ஸ்தானில் இருந்து அனுப்பப்படவிருந்த ஆறு-பேரடங்கிய பன்னாட்டு மனித விண்வெளிப் பயணம் தடைப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அக்டோபர் 28 இல் விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்லும் திட்டமும் உள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை அன்று சோயூஸ்-யூ என்ற ஏவுகலம் மூலம் அனுப்பப்பட்ட புரோகிரஸ் எம்-12எம் என்ற சரக்கு விண்கலம் சரியான சுற்றுப்பாதைக்கு வராத காரணத்தினால் பூமியில் வீழந்ததாக உருசியாவின் நடுவண் விண்வெளி ஆய்வு மையம் (ரொஸ்கொஸ்மொஸ்) அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவர்களை தூக்கிலிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு குறித்து தமிழக சிறைத்துறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறுகையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜனாதிபதியின் உத்தரவு நகல் சிறைத்துறை டிஐஜி நேரடியாக வேலூர் மத்திய சிறைக்கு கொண்டுவந்து கொடுத்துள்ளார். கருணைமனு நிராகரிக்கப்பட்ட தகவல் 3 பேருக்கும் தெரிவிக்கப்பட்டு, நகலும் அளிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 7 வேலைநாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகள், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி ஆகிய விடுமுறை நாட்களை கழித்தால் 8ம் தேதி வரை 7 அரசு வேலைநாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அவகாசம் முடிந்த பிறகு வருகிற 9ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனக் கூறினார். ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் புகழேந்தி, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்துவார் என்று அந்த மூவரும் நம்பியிருந்ததாகத் தெரிவித்தார். ராஜீவ் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு திமுக தலைவர் கருணாநிதி மத்திய மாநில அரசுகளைின்று அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார். மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் கருணை நடவடிக்கை மேற்கொண்டு, மூவரின் வாழ்க்கையையும் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் சோனியா விரைந்து முன்வந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு ஆக்த்து 12, 2011 [[இலங்கை]]யில் 2009 இல் இடம்பெற்ற அங்குலானை இரட்டைகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த அங்குலானை காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 40 வருட சிறைத் தண்டனையும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அங்குலானை காவல் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி நியூட்டன், காவல்துறை கான்ஸ்டபிள்களான ஜீ. ஏ. குமாரசிறி, நிஹால் ஜயரட்ன, சிவில் பாதுகாப்பு படையின் ஜனத்பிரிய சேனாரத்ன ஆகிய நால்வருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஆகத்து மாதம் 12ம் திகதி தினேஸ் தரங்க பெனாண்டோ, தனுஸ்க அப்பொன்ஸ் ஆகிய இரு இளைஞர்களையும் கடத்திச் சென்று கொலை செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள் காணாமல் போனதால் அங்குலான பகுதியில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. மக்கள் காவல்துறையினருக்கு எதிராக கிளர்த்தெழுந்ததோடு காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பின்னரே கைதான இரு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, ஏ. பீ. வராவெள மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய நீதியரசர்கள் ஆகத்து 25ம் திகதி இத்தீர்ப்பினை வழங்கினர். இத்தாக்குதலைத் தாமே நடத்தியதாக போக்கோ ஹரம் என்ற இசுலாமியப் போராளிக் குழுவின் பேச்சாளர் ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் ஷரியா என்ற இசுலாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே தமது குழு போராடுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு பாதுகாப்புக் கடவைகளை இடித்துக் கொண்டு சென்ற வாகனம் கட்டத்தின் முன்பகுதியத் தாக்கி வெடித்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர். நைஜீரியாவில் உள்ள ஐநா கட்டடத்தில் மனிதநேய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும் 26 நிறுவனங்கள் தமது அலுவலகங்களை வைத்துள்ளன. கிட்டத்தட்ட 400 ஐநா ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். காலை 11:00 மணியலவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது கட்டடத்தில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள் போன்ற விபரங்கள் தெரிய வரவில்லை. போக்கோ ஹராம் அமைப்புக்கும் வடக்கு ஆப்பிரிக்காவில் செயல்படும் அல்-கைதா அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் சென்ற மாதம் கருத்துத் தெரிவித்திருந்தார். லோக்பால் என்று சொல்லப்படுகின்ற ஊழல் ஒழிப்பு நடைமுறைக்கான சட்ட மசோதா வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது. இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நடந்த விவாதத்தில் காங்கிரஸ், பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே அசாரேயின் 3 அம்சங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும். அதேநேரம் நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை நேற்றுக்காலை அசாரே விதித்திருந்தார். இதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையே ஹசாரேயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவரது இதய துடிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்திருந்தனர். முதலில் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், பின்னர் மக்களவையிலும் இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்குப் பிறகு மக்களவையை நாள் முழுவதும் சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். திட்டமிட்டபடி குரல் வாக்கெடுப்பு நடக்காததால், இந்தத் தீர்மானம் நிறைவேறியதா என்பது குறித்து குழப்பம் எழுந்தது. ஆனால், குரல் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து எம்.பி.க்களும் மேசையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் ஆகத்து 19, 2011 இந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஏப்ரல் 9, 2011 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டோனி டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பும், ஆத்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 71 வயதாகும் டோனி டான், முன்பு அமைச்சராக இருந்தவர். வங்கிப் பணியிலிருந்த அனுபவம் வாயந்தவர். 1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக கடந்த சூன் மாதம் இவர் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது என்றாலும் கூட, அந்தப் பதவிக்கு வருபவர்கள், சிங்கப்பூரின் பழமையான கட்சியான மக்கள் நடவடிக்கைக் கட்சியின் ஆதரவுடன்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளனர் அல்லது அந்தக் கட்சியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இந்தக் கட்சிதான் கடந்த 1959ம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர். ஐரீன் சூறாவளி குறித்து வடக்கு கரோலைனா, வேர்ஜினியா, மேரிலாந்து, டெலாவேர், நியூஜெர்சி, நியூயோர்க் மற்றும் கனடிக்கட் ஆகிய 7 மாநிலங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் முக்கிய விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து நிலையங்கள், பாதாள தொடருந்துப் போக்குவரத்து ஆகியவை நேற்று முன்தினமே நிறுத்தப்பட்டன. வடக்கு கரோலினா முதல் பாஸ்டன் நகர் வரையிலான 9,000 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹட்சன் ஆறு மற்றும் துறைமுகப் பகுதியில் கடல் ஆகியவற்றின் நீர்மட்டம் நேற்று எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால், நகரின் பல தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏழு மாகாணங்களிலும் மொத்தம் 150 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 56 வயது பட்டாராய், மாவோயிசக் கிளர்ச்சியின் போது தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஆனாலும் மாவோயிசப் போராளிகளுக்கு இவரே முக்கிய வழிகாட்டியாக இருந்து வந்துள்ளதாக நம்பப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில் மாவோயிசக் கிளர்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நேப்பாள அரசியலில் குழப்பநிலை நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், நேப்பாள இராணுவத்தில் சேர்க்கப்படவிருந்த மாவோயிசப் போராளிகளின் எண்ணிக்கையில் ஆட்சியில் இருந்த கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் 2009 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அகன்றனர். அன்றில் இருந்து நேபாளத்தில் ஒரு திரமான ஆட்சி இருக்கவில்லை. முன்னாள் மாவோயிசப் போராளிகள் 19,000 பேர் இன்னும் இராணுவத்தில் இணைக்கப்படாமல் உள்ளனர். இப்பிரச்சினை குறித்து அடுத்த சில மாதங்களில் தீர்வு ஒன்று எட்டப்படும் என பட்டாராய் நம்பிக்கை தெரிவித்தார். நேப்பாளப் பிரதமர் சாலா நாத் பதவி விலகினார் ஆகத்து 15, 2011 மாவோயிசவாதிகளின் நெருக்கடியை அடுத்து நேபாளப் பிரதமர் பதவி விலகினார் சூலை 2, 2010 மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவும், ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி இன்னொரு மனுவும் என இரண்டு மனுக்கள் மூன்று பேரின் சார்பிலும் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரின் சார்பிலும் சட்டத்தரணி சந்திரசேகர் நீதிபதியிடம் அனுமதி பெற்றுள்ளார். இதனையடுத்தே அவர், இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கு: செப். 9 இல் தூக்கிலிட உத்தரவு வந்தது ஆகத்து 26, 2011 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு ஆக்த்து 12, 2011 நேற்று ஆளும் சனநாயகக் கட்சியின் கூட்டத்தில் 54 வயதான நோடோ கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து இன்று கூடிய நாடாளுமன்றம் அவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. யப்பானில் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுமின் நிலையக் கதிர்வீச்சு ஆகிய பேரிடர்களை, அப்போதைய பிரதமர் நவோட்டோ கான் சரியாகக் கையாளவில்லை என, மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தமையினால் கான் கடந்த, 26ம் தேதி வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து ஆளும், யப்பான் சனநாயகக் கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர் நோடா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்ஜி மகேரா, வர்த்தகத்துறை அமைச்சர் பான்ரி காயேடா உள்ளிட்ட ஐந்து பேர், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். தேர்தலில் நோடா 215 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். யப்பானில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் மாறியுள்ளனர். இப்போது ஆறாவது பிரதமராக நோடா பொறுப்பை ஏற்கிறார் வெற்றிக்குப் பின் பேசிய நோடா, கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வழக்கில் ஆஜராக தில்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோகித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் உட்பட மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மூவரும் தாக்கல் செய்த மனுக்களில் நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம். இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், மூன்று பேரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பேரவையில் இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர். நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மேன் முறையீடு]] ராஜீவ் கொலை வழக்கு: செப். 9 இல் தூக்கிலிட உத்தரவு வந்தது ஆகத்து 26, 2011 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு ஆகத்து 12, 2011 ஆஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் அண்மையில் எட்டப்பட்ட அகதிகளைப் பரிமாறும் உடன்பாடு "சட்டவிரோதமானது" என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு பெரும் பின்னடைவு எனக் கூறப்படுகிறது. ஆனாலும், மலேசியாவில் அகதிகளுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக இம்மாத ஆரம்பத்தில் மெல்பேர்ண் உயர் நீதிமன்றம் ஒன்று அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இன்றைய எமக்கு பெரிதும் ஏமாற்றத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் மலேசியா இதுவரையில் கையெழுத்திடாத படியால், அகதிகளுக்கான பாதுகாப்பு அங்கு இல்லை என அகதிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து அகதிகளை வெளியேற்றுவதற்க்கு கிறிஸ் போவனுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. மலேசியா ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கூல் அனுப்பத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பினால் இவர்களின் வருகையில் பெரிதும் குழப்ப நிலை ஏற்படும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். படகு அகதிகளை மலேசியாவுக்கு அனுப்ப ஆத்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு ஆகத்து 8, 2011 படகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது மே 8, 2011 குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேமுரு என்ற இடத்தில் சூலை 7 1933 இல் பிறந்த ரோசய்யா ஆந்திராவைச் சேர்ந்தவர். ஆந்திராவில் 16 முறை வரவு செலவு தாக்கல் செய்து சாதனை படைத்தவர். பல்வேறு முதல்வர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் 2009ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல் 2010 நவம்பர் 24 வரை முதல்வர் பொறுப்பை வகித்தார். பதவிப்பிரமாண விழாவில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்றுக் கொண்ட பின்னர் மலர்க்கொத்து கொடுத்து முதல்வர் ஜெயலலிதாவும், தலைமை நீதிபதி இக்பாலும் ஆளுநர் ரோசய்யாவை வாழ்த்தினர். முஅம்மர் கடாபிக்குப் பின்னரான லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக 60 நாடுகளின் பிரதிநிதிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியுள்ளனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய தேசிய இடைக்காலப் பேரவையின் (NTC) தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் அடுத்த 18 மாதத்துக்குள் புதிய அரசியலமைப்புடன் கூடிய தேர்தல்கள் நடத்தப்படும் என உறுதியளித்தார். மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சர்க்கோசி தலைவர்களிடையே "மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் இணக்கப்பாடு" கட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் கூறினார். கடாபியினால் அச்சுறுத்தல் உள்ள வரையில் அங்கு வான் தாக்குதல்கள் நிறுத்தப்படாது எனவும் அவர் கூறினார். வெளிநாட்டில் முடக்கிவைக்கப்பட்டுள்ள லிபிய நிதிகளை மீள வழங்குவதில் நாம் உறுதியாக உள்ளோம். 15 பில்லியன் டாலர்கள் லிபிய நிதி வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்தும் மாநாட்டில் ஆராயப்படுகிறது. கேர்ணல் கடாபி இதுவரையில் தலைமறைவாகவே உள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் வானொலி ஒன்றுக்கு வழங்கிய உரையில், தாம் ஒரு போதும் சரணடையப் போவதில்லை எனத் தெரிவித்தார். கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய 42வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு அவர் நேற்று இவ்வுரையை நிகழ்த்தியிருந்தார். கடாபியின் சொந்த இடமான சேர்த்தில் அவரது ஆதரவுப் படைகள் இன்னமும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறார்கள். இதற்கிடையில், லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையை உருசியா அங்கீகரித்துள்ளதாக நேற்று அறிவித்தது. காசா-212 விமானம் இரண்டு தடவைகள் யுவான் பெர்னாண்டஸ் தீவில் தரையிறங்க முற்பட்டதாகவும், அதன் பின்னர் காணாமல் போனதாகவும் சிலியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அண்ட்ரெசு அலமான் தெரிவித்தார். காலநிலை மோசமானதாக இருந்ததாகத் தெரிவித்த தீவின் முதல்வர் பயணிகளின் பயணப் பொதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிவித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் பிலிப் கமிரோகா என்பவரும் மேலும் நான்கு தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களும் இறந்தவர்களில் அடங்குவர் விபத்து நடந்துள்ளதாகவே நாம் நம்புகிறோம், எவரும் உயிர் தப்பவில்லை என நகர முதல்வர் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிலியின் அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா ஆறுதல் தெரிவித்தார். சிலித் தீவுகளில் சென்ற ஆண்டு இடம்பெற்ற பெரும் நலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைக்குப் பின்னரான தாக்கங்கள் குறித்து நிகழ்ச்சி தயாரிப்பதற்காக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் குழு அங்கு சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டது. சிலியின் கரையில் இருந்து 670 கிமீ தூரத்தில் யுவான் பெர்னான்டஸ் தீவுகள் அமைந்துள்ளன. மொத்தம் 7,379 யானைகள் உள்ளதாகவும், இவற்றில் 5,879 யானைகள் தேசிய வனங்களிலும் சரணாலயங்களிலும் ஏனைய 1,500 யானைகள் காட்டுப் பகுதிகளில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மூன்று நாள் கணக்கெடுப்பு கடந்த ஆகத்து 11 இல் ஆரம்பமாகியது. அனைஅத்து யானைகளும் வயது மற்றும் பால் வாரியாக வகைப்படுத்தப்பட்டன. 3,500 பேர் இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,533 கணக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆசியக் கண்டத்திலேயே அதி உயர் காட்டு யானை அடர்த்தி கொண்ட நாடு இலங்கை என கமநல சேவைகள் மற்றும் வன விலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின்படி 1,107 குட்டியானைகளும் 122 கொம்பன் யானைகளும் உள்ளன. மகாவலிப் பகுதியிலேயே கூடிய எண்ணிக்கையில் 1,751 யானைகள் செறிந்து காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டியுள்ளன. மத்திய பகுதியில் 47 யானைகளும், கிழக்கில் 1,573 யானைகளும் வடக்கு, கிழக்கில் 1,189 யானைகளும் தெற்கில் 1,086 யானைகளும் உள்ளதாக இந்த ஆய்வு காட்டியுள்ளது. யானைகளை பௌத்தக் கோயில்களில் வளர்ப்பதற்காகவே இந்த தொகை மதிப்பீடு செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனை மறுத்துள்ள அமைச்சர் ஏதோ காரணத்தால் தனித்து நிற்கும் யானைளகளும் பின்னவெல சரணாலயத்திலிருந்து தெரிவு செய்யப்படும் யானைகளும் மட்டும்தான் கோவில்களுக்கு கொடுக்கப்படும எனவும் வேறு எந்த யானையும் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வளர்ப்புக்காக கொடுக்கப்படமாட்டாது எனவும் கூறினார். விவசாய நிலங்களை அழிக்கும் யானைகள் ஆண்டு தோறும் 200 வரையில் சுட்டுக் கொல்லப்படுகின்றன. அதே வேளையில் யானைகளால் தாக்கப்பட்டு ஆண்டுதோறும் 50 பேர் வரையில் இறக்கிறார்கள். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ரோம் நகரின் கிழக்கே 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஃபிலத்தீனோ நகரை அருகிலுள்ள ட்ரேவி என்ற நகருடன் இணைக்க வேண்டுமென உள்ளூர் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் ரோம் அரசாங்கத்தின் புதிய ஒழுங்குவிதிகள் வற்புறுத்தி வந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்நகரம் தனி நாடாக விடுதலையை அறிவித்துள்ளது. நகர முதல்வர் லூக்கா செல்லாரியின் தலை பொறிக்கப்பட்டுள்ள ஃபியரீத்தோ என்ற புதிய நாணயத் தாள்கள் ஏற்கனவே உள்ளூர் சந்தைகளில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சீனாவின் மத்திய மாகாணமான சாங்கியில் அமைந்துள்ள பண்டைய கல்லறை ஒன்றில் பெரும் துவாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனச் செய்தி நிறுவனம் சின்குவா அறிவித்துள்ளது. சின் கொங் மயானத்தில் கலாசாரப் பழமையான முக்கிய கல்லறை இந்தத் துளையில் இருந்தது. இத்துளை கடந்த சீன் 3 ஆம் நாள் அந்த மயானத்தின் பணியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மூன்று மாதத்தின் பின்னரே அது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்லறை முன்னர் எப்போதும் திறக்கப்பட்டிருக்காத படியினால், இங்கிருந்து திருடப்பட்டவற்றின் மதிப்பு தெரியவரவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் சியானில் சின் வம்சத்தின் கல்லறை உடைத்துத் திருடப்பட்டிருந்தது. சிக்கோக்கு தீவைத் தாக்கிய சூறாவளி டலாஸ் இப்பகுதியில் பெரும் வெள்ளப் பெருக்கத்தையும், நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. 50 பேருக்கு அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் சப்பானை சூறாவளிகள் தாக்கி வருகின்றன. ஆனாலும் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே கடுமையான சூறாவளி எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 460,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. டலாஸ் சூறாவளி தற்போது சப்பானைத் தாண்டி சப்பான் கடல் (கிழக்குக் கடல்) நோக்கிச் சென்றுள்ளதாக சப்பானியக் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆனாலும், பெரும் மழை, மற்றும் கடும் காற்று தொடர்ந்து இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. முன்னாள் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியினால் படைகளில் இணைக்கப்பட்ட துவாரெக் போராளிகளைக் கொண்ட அணியே நைஜரின் அகாதெஸ் நகரைச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாகன அணியில் கடாபியோ அல்லது அவரது குடும்பத்தினர் எவராவது இருந்தனரா என்பது தெரிய வரவில்லை. கடாபி இன்னும் லிபியாவிலேயே இருப்பதாக நேற்று அவரது பேச்சாளர் அறிவித்திருந்தார். இராணுவ வாகன அணி நேற்று திங்கட்கிழமை மாலை அகாதஸ் நகரை சென்றடைந்ததாக பிரான்ஸ் மற்றும் நைஜரின் இராணுவத் தகவல்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 200 முதல் 250 இராணுவ வாகனங்கள் இவ்வணியில் இருந்தன. இவற்றுக்கு நைஜர் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். கடாபியின் பாதுகாப்பு உயர் தலைவர் மன்சூர் டோ என்பவர் ஏற்கனவே நைஜருக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் அந்நாட்டில் இடம்பெற்றுள்ள மிகப் பெரும் வறட்சியினால் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். அல்-சபாப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்குப் பகுதியில் பே என்ற பகுதி புதிதாக பட்டினிப் பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மில்லியன் மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. "மொத்தத்தில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் 750,000 பேர் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்றனர் என ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை இறந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் என அவர் கூறினார். சோமாலியாவுக்கு அயல் நாடுகளான ஜிபூட்டி, எரித்தீரியா, எதியோப்பியா, கென்யா, மற்று உகாண்டா ஆகியவையும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குலக உதவி நிறுவனங்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக வறட்சியை மிகைப்படுத்திக் காட்டுவதாக அல்-சபாப் இயக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். [[இலங்கை]]யின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் என்.ரீ.பீ.சி. நிறுவனமும் கூட்டு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன. இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கையெழுத்திட்டனர். 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது. இத்திட்டத்திற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும். 25 ஆண்டுகளுக்கு குறித்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். இலங்கையில் அமைக்கப்படவுள்ள இந்த அனல் மின் நிலையம் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையமாகும். ஏற்கனவே புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை எனுமிடத்தில் சீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முதலாவது அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றத்தின் முக்கிய வாயிலில் வைக்கப்பட்டிருந்த பயணப் பொதி ஒன்று இன்று காலை 10:17 மணியளவில் வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அதிக பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில் நன்கு திட்டமிட்டே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை என்பதால் அப்பகுதியில் வழக்கறிஞர்களும் சாட்சிகளும் பெருமளவில் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. "இது ஒரு கோழைத்தனமான பயங்கரவாதச் செயல் எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஹர்க்காத்-உல் ஜிகாத் (ஹூஜி) என்ற தீவிரவாதக் குழு இக்குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்பதாக மின்னஞ்சல் தெரிவித்துள்ளது. இம்மாஞ்சல் குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம் என இந்திய தேசியப் புலனாய்வுத்துறைத் தலைவர் எஸ். சி. சின்ஹா தெரிவித்துள்ளார். ஹூஜி என்ற இக்குழு அல்-கைதாவுடன் தொடர்புடையதாக அமெரிக்க அரசுத் திணைக்களம் கூறியிருக்கிறது. 2007 மேயில் இடம்பெற்ற ஐதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, மார்ச் 2006 வாரனாசி தாக்குதல் ஆகியவற்றுக்கு இக்குழுவே பொறுப்பு என அமரிக்க அரசுத் திணைக்களம் கூறுகிறது. கடந்த சூன் மாதத்தில் வட-மேற்கு பாக்கித்தானில் இடம்பெற்ற அமெரிக்க வான் தாக்குதலில் ஹூஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி என்பவர் கொல்லப்பட்டிருந்தார். "இது எமது விளையாட்டின் இருண்ட நாள்" என உலகப் பனி வளைதடியாட்டத் தலைவர் ரெனே ஃபேசெல் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை யாரொசிலாவில் நகரின் துனோஷ்னா விமான நிலையத்தில் இருந்து யாக்-42 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிட நேரத்தில் மாலை 1605 மணி நேரத்தில் வெடித்துச் சிதறியது. உருசிய மற்றும் ஐரோப்பிய விளையாட்டு வீரர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர். இருவர் எரிகாயங்களுடன் உயிர் தப்பினர். பெலருசில் தனது முதலாவது விளையாட்டை ஆடுவதற்காக இவ்வணியினர் சென்று கொண்டிருந்தனர். விமானத்தில் இருந்த அனைத்து 11 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் உயிரிழந்தனர். இவர்களில் அணியின் கனேடியப் பயிற்சியாளர் பிராட் மெக்கிரிமன், சுவீடனின் வீரர் ஸ்டெபான் லீவ், மற்றும் பெலருஸ், செக் குடியரசு, செருமனி, லாத்வியா, சிலொவாக்கியா, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடங்குவர். 35 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை, ஆனாலும் விமானம் வானொலிக் கொடிக்கம்பம் ஒன்றுடன் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் விமான சேவைகளின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க உத்தரவிட்டுள்ள அரசுத்தலைவர் திமீத்ரி மெட்வெடெவ், விமானப் பயணப் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களை வாங்கப்படலாம் எனத் தெரிவித்தார். நேற்றைய விமான விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கம் கடுமையான சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறினார். யாரொசிலாவில் நகரம் மாஸ்கோவில் இருந்து வடகிழக்கே 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை]]க்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள எந்தவொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா உறுதியளித்துள்ளது. இந்த உறுதிமொழியை சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ பிரதமர் டி. எம். ஜயரட்ணவிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதென்று சர்வதேச ரீதியில் விசாரணையொன்றை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவர மனித உரிமைகள் பேரவை முயன்று வரும் நிலையிலே இத்தகைய உறுதிமொழியை சீனா வழங்கியுள்ளது. இலங்கையின் இறைமையை பேணிப் பாதுகாப்பதற்கு சீனா தன்னுடைய முழு ஆதரவையும் நல்குமென்றுவும் உறுதியளித்துள்ளது. இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இரு தலைவர்களும் நடைமுறை விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கையின் சுதந்திரம், இறைமையை சீனா மதிக்கிறது. அத்துடன், நாட்டின் அபிவிருத்திக்கும் உதவி புரிய முன்வருவதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டார். சீனா இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பது குறித்து பெருமை படுகிறதென்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் சிறப்புற்று விளங்குகிறதென்றும் சீன ஜனாதிபதி இலங்கை பிரதமரிடம் தெரிவித்ததாக சின்யுவா செய்தி சேவை அறிவித்தது. 1948 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படையினரால் மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட 24 கிராமவாசிகளின் படுகொலைகளை மீள் விசாரிக்க லண்டனின் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மலாயா பிரித்தானியப் பேரரசின் ஆட்சியில் இருந்த போது பட்டாங் காலி என்ற இடத்தில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன இனத்தவர்களின் குடும்பத்தினர் பொது விசாரணைக்காகவும், நட்டஈட்டுக்காகவும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அப்போது கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் தம்மிடம் இருந்து தப்பி ஓடியபோதே கொல்லப்பட்டார்கள் என்றும் பிரித்தானியா கூறி வருகிறது. கம்யூனிசப் போராளிகளின் கிளர்ச்சியின் போதே இப்படுகொலைகள் நடத்தப்பட்டன. இக்கிளர்ச்சி 1950களின் இறுதி வரையில் நீடித்திருந்தது. அன்றைய மலேய சட்டமா அதிபர் தமது படைகளின் செய்கையை நியாயப்படுத்தியிருந்தார். இந்நிகழ்வு 1970 ஆம் ஆண்டு வரையில் மறக்கப்பட்டிருந்தது. 1970 இல் பிரித்தானியப் பத்திரிகை ஒன்று இப்படுகொலைகள் குறித்து பிரித்தானிய படையினரின் வாக்குமூலங்களை வெளியிட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போராளிகள் அல்லவென்றும், அவர்கள் அனைவரும் கிராமவாசிகளே என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து முழுமையான விசாரணை நடைபெறும் என பிரித்தானியா அறிவித்திருந்தும், பின்னர் ஆட்சி மாறிய அரசுகள் அதனைக் கவனிக்கத் தவறிவிட்டன. 2012 ஆம் ஆண்டு முற் பகுதியில் முழுமையான விசாரணைகள் தொடங்கும் என இறந்தவர்களின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 1948 மலேசியப் படுகொலைகளை நேரில் பார்த்த கடைசி சாட்சி இறப்பு ஏப்ரல் 6, 2010 லிபியாவில் தலைவர் கடாபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களை ஒடுக்க கடாபி படைகள் விமான தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இந்த சண்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும்இ 50 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இது விடயமாக பர்கத் மேலும் தகவல் தருகையில் மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில், 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 4 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடாபி ராணுவம் பலரை கொன்று புதைத்துள்ளது. புதைக்கப்பட்ட இடங்களை மீண்டும் தோண்டி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. எனவே, இந்த ஆறு மாதத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். கடாபி ராணுவ வீரர்கள் 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதிருப்தியாளர்கள் தரப்பில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 900 பேர் கை, கால்களை இழந்துள்ளனர்' என்றார். இந்தியாவின் முதல் தேவை இது தான், 32000 இல்லை 100000 ரூபாய் என நிர்னயம் செய்தலும் பல கோடி மக்களின் கன்வு நிறைவேறும், இதை ஒட்டு மொத்த இந்தியாவே வரவேற்க்கும்,குடிசை அற்ற இந்தியா என்கிற என்போன்றோர் கனவு நிசமாகும், கடந்த மாதம் 18ம் தேதி, இசுரேல்- எகிப்து எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எகிப்தியக் காவல்துறையைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த எகிப்து நாட்டின் கிளர்ச்சியாளர்களே நேற்று முன்தினம், கெய்ரோவில் உள்ள இசுரேல் தூதரகத்தை முற்றுகையிட்டனர். இவர்கள் தூதரக அதிகாரிகளை, நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தினர். எகிப்து ராணுவத்தினரும், காவல்துறையினரும் கவச வாகனங்களுடன் வந்து, கிளர்ச்சியாளர்களை அடித்து விரட்டினர். இந்தச் சம்பவத்தில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கட்டிடத்துக்குள் சிக்குண்டிருந்த இசுரேலிகள் ஆறு பேரை எகிப்திய கமாண்டோக்கள் மீட்டிருந்தனர். இசுரேல் நாட்டின் விமானப்படை விமானம் மூலம், தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இசுரேலுக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். இசுரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இரண்டு அரபு நாடுகளில் எகிப்தும் ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இத்தனை காலமும் எகிப்தில் இசுரேலுக்கு எதிரான உணர்வலைகள் எழும்போது அவற்றுக்கு ஒசுனி முபாரக் அணைபோட்டு வந்தார். ஆனால் தற்போது முபாரக் பதவியில் அகற்றப்பட்டதும் அந்த உணர்வு கிளர்ந்தெழுந்து வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ஏறத்தாழ 800 பேருடன் சென்ற இப்படகு சன்சிபாரின் உன்குஜா, பெம்பா ஆகிய முக்கிய இந்தியப் பெருங்கடல் தீவுகளுக்கு இடையே கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமான பயணிகளை இப்படகு ஏற்றிச் சென்றதாக தப்பியவர்கள் தெரிவித்தனர். இயந்திரம் திடீரெனப் பழுதாகியதாலேயே கப்பல் மூழ்கியதாகக் கருதப்படுகிறது. இது குறித்து விசாரணைகளை சன்சிபார் அரசு ஆரம்பித்துள்ளது. நேற்று சனிக்கிழமை காலையில் இவ்விபத்து ஏற்பட்டது. மாலைக்கிடையில் 600 பேர் மட்டில் காப்பாற்றப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக உன்குஜாவின் விளையாட்டு அரங்கு ஒன்றில் வைக்கப்பட்டன. மூழ்கிய எம்வி ஸ்பைஸ் ஐலண்டர் என்ற கப்பல் 600 பேர் மட்டுமே பயணிக்கக்கூடியது. இது டார் எஸ் சலாம் இலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை வழிமறித்துப் பல அரச வாகனங்களை எரித்துச் சேதப்படுத்தினர். தற்பாதுகாப்புக்காகவே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கலவரத்தின் போது காவல்துறையினர் மீது கற்களும் கம்புகளும் எறியப்பட்டதை அடுத்து, அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரையும் காவல்துறையினர் பீய்ச்சி அடித்துள்ளனர். தீ வைக்கப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்றின் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்துக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். கலவரக்காரர்களை கலவரக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிந்ந்தனர். கடந்த சனிக்கிழமை தலித் மாணவர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதே இந்த மோதல்களுக்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பரமக்‍குடி சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தலைநகரின் லுங்கா லுங்கா என்ற தொழிற்சாலைப் பகுதியில் இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. தீ அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் அப்பகுதியை மூடியுள்ளனர். தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எண்பதிற்கும் அதிகமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். பெட்ரோல் எரிவாயுக் குழாய் நைரோபியின் மத்திய பகுதியில் இருந்து பன்னாட்டு விமான நிலையம் வரை குடியிருப்புப் பகுதிகளூடாகச் செல்கிறது. பல உடல்கள் தீயில் கருகி அடையாளம் தெரியாமல் எலும்புத் துண்டுகளுடன் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்ததாக பிபிசியின் நைரோபிச் செய்தியாளர் தெரிவிக்கிறார். அருகில் இருந்த ஆறு ஒன்றிலும் இறந்த உடல்கள் மித்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பெட்ரோல் குழாயில் சிறு வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை அடுத்துக் கசிந்த பெட்ரோலை மக்கள் சேகரிக்க ஆரம்பித்ததாகவும், சிறிது நேரத்தின் பின்னர் பெரும் வெடிப்புக் கேட்டதாகவும் நேரில் கண்டோர் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டில் மேற்கு கென்யாவில் இதே போன்று இடம்பெற்ற எரிவாயுக் குழாய் விபத்து ஒன்றில் 122 பேர் கொல்லப்பட்டனர். புதிதாதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்களில் 16 புறக்கோள்கள் எமது பூமியை விடப் பெரியதும், ஆனால் வியாழனை விட சிறியனவாகவும் உள்ளன. இவை "சூப்பர் ஏர்த்ஸ்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று உயிரிங்கள் வாழக்கூடிய வலயத்தினுள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அமெரிக்காவின் வயோமிங்கு மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவல்கள் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவிருக்கிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்களில் 5 கோள்கள் பூமியை விட ஐந்து மடங்குக்கும் குறைவான பருமனைக் கொண்டுள்ளன உயிரினங்களைத் தேடும் பணி எதிர்காலத்தில் இக்கோள்களையே மையப்படுத்தி இடம்பெறும் என நாம் நம்புகிறோம் ஜெனீவா வானியல் அவதான மையத்தைச் சேர்ந்த வானியலாளர் பிரான்செஸ்கோ பெப்பே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு தன்னால் உத்தரவிட முடியாதெனக் கூறிய பான் கி மூன், மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புக்கள் இதனை மேற்கொள்ளமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற மோதலின்போது இலங்கைப் படையினர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றதாக பான் கி மூனினால் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கூறியது. இருப்பினும் இரு தரப்பினரும் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாமெனவும் அக்குழு தெரிவித்திருந்தது. போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை இப்போது மனித உரிமைகள் பேரவைக்கு அஞுப்பப்பட்டிருப்பது தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பேரவை அமர்வில் கலந்து கொண்ட இலங்கைக் குழுவின் தலைவர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழு அறிக்கை கையளிக்கப்பட்டது ஏப்ரல் 13, 2011 இலங்கையின் போர்க்குற்றங்களை ஆராய ஐநா நிபுணர் குழு நியமனம் புதன், சூன் 23, 2010 சிரியாவில் உள்ள ஒரு இசுலாமியத் தலத்தைத் தரிசிக்கவென இவர்கள் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 8 பெண்கள் உட்பட 30 பேர் இப்பேருந்தில் பயணம் செய்தனர். அந்த பேருந்து திங்கள் இரவு மேற்கு பாக்தாத் பகுதியில் உள்ள நௌகைர் பாலைவனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆயுதம் தாங்கிய சிலர் பேருந்தை வழிமறித்து அதில் இருந்த பெண்களை இறக்கி விட்டு ஆண்களை வேறோர் இடத்துக்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதாக ஈராக்கியக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஈராக்கிய இராணுவத்தினர் பாதையோரம் நின்றிருந்த பெண்கள் அனைவரையும் மீட்டு வந்தனர். பயணிகள் அனைவரும் கர்பாலா நகரைச் சேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களில் சியா முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் ஈராக்கில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டு 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்று கொண்டிருந்த பயணிகள் வண்டி, சித்தேரி அருகே நிறுத்தப்பட்டிருந்த போது பின்புறமாக சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார தொடருந்து வண்டி மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன, இவற்றில் மூன்று முற்றாக சேதமடைந்துள்ளன. விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்வதால், மீட்புப்பணி சற்று நேரம் பாதிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்கள். விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் இரு தொடருந்துகள் மோதியதில் மூவர் கொல்லப்பட்டு 200 பேர் வரையில் காயமடைந்தனர். சூலை மாதத்தில், உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். நேற்றைய விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், மனிதத் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். உவாம்போ நகர விமான நிலையத்தில் இருந்து தலைநகர் லுவாண்டா நோக்கி நேற்று நண்பகல் அளவில் புறப்பட்ட இவ்விமானம் சிறிது நேரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானம் இரண்டாக வெடித்து பின்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. விமானி உட்பட 6 பேர் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான விமானம் இராணுவ உயர் அதிகாரிகளின் உபயோகத்துக்காக அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களில் அங்கோலாவில் இடம்பெற்ற மூன்றாவது இராணுவ விமான விபத்து இதுவாகும். விமானம் ஏன் விபத்துக்குள்ளானது எனத் தெரியவில்லை என உயிர் தப்பிய விமானி தெரிவித்தார். முதலமைச்சர் சிறப்புத் திட்டம் வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் கடலூரிலும், 17ஆம் தேதி மேல்புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களிலும், 18ஆம் தேதி நெய்வேலியிலும் பொதுமக்களுக்கு வழங்க உள்ளது. இன்று முதலமைச்சர் கடலூரில் சிறப்பு திட்டங்கள் வழங்கும் விழாவில், இது போன்ற சிறப்பு திட்டங்களை கொச்சை படுத்தக் கூடாது என்றும், இவைகள் மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது என்றும், இது போன்று இழிவு படுத்தலை பொருளாதாரம் அறிந்த எவரும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை விற்க கூடாது என்று அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இப்போது வழங்கப்பட்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொடர்பான காப்புரிமை மென்பொருளைப் பயன்படுத்த மாணவர்கள் ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்று விமரிசகர்கள் கூறுகின்றனர். ஆர்வலர்களின் கடுமையாக எதிர்ப்பின் விளைவாக இலவசமாகவே கணினியில் பயன்படுத்தக்கூடிய லினக்ஸ் மென்பொருளும் லாப்டாப்பில் இணைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மாடுகளை வழங்க திட்டமிட்டுள்ள அரசாங்கம், மாடுகளுக்குத் தேவையான தீவனம், மேய்ச்சல் நிலம், ஆடுகள் வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் இவற்றையெல்லாம் அரசில் கணக்கிலெடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை என்றும் வேறு சிலர் குறை கூறுகின்றனர். உலகின் பெரிய சில்லு தயாரிப்பு நிறுவனம் இன்டெல் கார்பரேசன், எதிர்கால தொழில்நுட்பங்களின் முன்னோடியாக பத்து ஆண்டுகளில் கணினிகளின் மின் செயல்திறனை 300-மடங்காக உயர்த்தவும், அதேபோல் தரவு பாதுகாப்பு மற்றும் பயனர் முற்றொருமைகள் போன்றவைகளை உறுதி செய்யும் திட்டங்களையும் உருவாக்கி கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இன்டெல் வளர்ப்போர் மன்றம் 2011 விழாவின் இறுதி நாளன்று பேசிய அலுவலகத் தலைவர் (இன்டெல் தொழில்நுட்பம்) ஜஸ்டின் ரத்னர், நிறுவனம் கணினியியலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக மேம்பட்ட செயல்திறம் மற்றும் குறைந்த மின்நுகர்வு ஆகியவை கொண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கிவருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு இன்டெல் வளர்ப்போர் மன்ற மாநாட்டின் முக்கிய கருத்தே ஆற்றல் செயல்திறத்தை பற்றியதாகும். இது தொடர்பாக இன்டெல் அலுவலர்கள் பலர் இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கிகாட்டினர். எப்போதும் பெருமளவில் நகர்மை கொள்ளும் கணினி கருவிகளால் ஒளி நுகர்வு நிறைவின் அவசியத்தை முக்கியம் என்று இந்த நிறுவனம் கருதுகிறது. மேலும் ஜஸ்டின் கூறுகையில், இவ்வாறு மின்னுகர்வை மேம்படுத்தும் பொழுது, ஒன்றிற்கு மேற்பட்ட செயலிகளை பயன்படுத்தும் நுட்பமான பல்லகடு தொழில்நுட்பம் தற்போது கணினியின் செயல்திறம் உயர்வதற்கான சிறந்த முறையியல் என்று ஒற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். கெப்லர்-16பி பற்றிய தகவல்கள் இன்றைய சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கோளின் இரண்டு சூரியன்களும் எமது சூரியனை விடச் சிறியதாகும். இரண்டு சூரியன்களையும் அது 229 நாட்களுக்கு ஒரு முறை 104 மில். கிமீ தூரத்தில் சுற்றுகிறது. இது கிட்டத்தட்ட வெள்ளியின் சுற்று வட்டத்தைப் போன்றதாகும். கெப்லர் தொலைநோக்கி 2009 ஆம் ஆண்டில் பூமிக்கு ஒத்த கோள்களைக் கண்டுபிடிப்பதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. கெப்லர் தொலைநோக்கி "கடக்கும்" தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அதாவது, தனது சூரியனுக்கும் (அல்லது விண்மீன்) புவிக்கும் இடையில் கடக்கும் புறக்கோள்களை இது கண்டுபிடிக்கிறது. விண்மீனில் இருந்து வரும் ஒரு மிகச்சிறிய ஒளி காலமுறை தோறும் தடுக்கப்படுவது, கோள் ஒன்று அதனைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது. உலாவிகளில் ஜாவாஸ்கிரிப்டினால் முப்பரிமாண கணினிவிளையாட்டுக்கள், காணொளி திருத்தங்கள், இன்னும் பிற பயன்பாட்டு நிரல்கள் போன்றவைகளை வேகத்துடன் உருவாக்க இயலாததால் நேடிவ் கிளையன்ட் ஆரம்பிக்கப்பட்டது. "ஜாவாஸ்கிரிப்ட் ஒரு நம்ப முடியாத மென்பொருள்; அது அதன் நற்பயனை எப்போதும் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஜாவாஸ்கிரிப்ட் எழுதாத நிறைய நல்ல மென்பொருள்களும் உள்ளன. அறிவுத்திறனுள்ள நிறைய மென்பொருள் வளர்ப்போர்களும் இது போன்ற வேறு நிரலாக்க மொழிகளில் பணிபுரிய விரும்புகின்றனர் என்று கூகுளின் நேட்டிவ் கிளையண்ட் திட்டத்தைக் கவனிக்கும் பிராட் சென் கூறினார். "இந்த திட்டப்பணியில் நாங்கள் வெற்றி பெற்றால், பின் பிறமொழிகளையும் இதில் சேர்க்க முயலுவோம். எங்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லாத பிற மொழிகளையும் இயக்க ஒரு பொதுவான தளம் தேவை. அதே நேரத்தில் பெயர்வுத்தன்மையும், பாதுகாப்பும் பலமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். குரோம் 14 நிலைப்பதிவின் நேடிவ் கிளைன்ட் தற்போது கூகுளின் வலை அங்காடியில் உள்ள பயன்பாடுகளை மட்டுமே இயக்கம். இந்த வகையில் கூகிள் தனது மற்ற தளங்களில் உள்ள நிரல் வளர்போர்களையும் உறுதி செய்ய வேண்டும். கூகுளின் மாக் பதிவில் பல புதிய வசதிகளை உருவாக்கியுள்ளது. டென்மார்க் கடந்த 10 ஆண்டுகாலமாக வலதுசாரி ஆட்சியில் இருந்து வந்துள்ளது. தற்போதைய பிரதமர் லார்ஸ் லொக்கி ரஸ்முசன் தமது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். தனது அரசின் பதவி விலகலை இராணியிடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். 179 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிக் கூட்டணி 89 இடங்களை வென்றுள்ளது. ஹெல்லி தோர்னிங்-சிமித் வரிகளை அதிகரித்தல், கல்வி மற்றும் பொதுநலச் செலவினத்தை அதிகரித்தல் போன்றவற்றை தமது தேர்தல் பிரசாரத்தில் முன் வைத்திருந்தார். அத்துடன், நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான குடிவரவுச் சட்டங்களை நீக்கவும் உறுதி அளித்துள்ளார். ஒரு நாள் வேலை நேரத்தை 12 நிமிடங்களால் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் டென்மார்க் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவை எதிர் கொண்டுள்ளது. 2008 இல் ஒன்பது வங்கிகள் அரச உடமையாக்கப்பட்டன. புதிய பிரதமர் பிரித்தானியாவின் முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் நீல் கினொக்கின் மருமகள் ஆவார். 1999 இல் இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 இல் சமூக சனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கணையாழி கலை இலக்கிய இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த செயற்கைக்கோள் பல துண்டுகளாக சிதறி விடும். மத்திய கோட்டுக்கு வடக்கு, தெற்காக 57 பாகை பகுதியில் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிதறிய துண்டுகள் பூமியில் மக்கள் வாழும் பகுதியில் அதி வேகத்தில் வந்து விழும். இதனால் மக்களின் பாதுக்காப்பைக் கருதி நாசா அந்த செயற்கைகோளை விண்ணிலேயே அழித்துவிட எண்ணியுள்ளது. ஆனால் இதனால் பெரும் ஆபத்து நேராது என்றும் நாசா மையத்தினர் கூறியுள்ளனர். 1950 இல் இது போன்று செயற்கைக்கோள் மறுநுழைவு செய்த போது அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை என்றும், தற்போது இதனை எதிர் கொள்வது முன்பைவிடு சற்று எளிதென்றும் மக்கள் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். இந்த துகள் தூசிகள் எங்கு வந்து விழுமென்று இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அது சுமார் 500 கிமீ தொலைவிற்கு விரிந்து கீழே கொட்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு பூமியில் வந்து விழும் பொருட்களை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும், அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும் நாசா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 1979 இல் ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் மேற்கு ஆத்திரேலியாவில் வீழ்ந்த போது, வீழ்ந்த இடங்களைத் துப்பரவு செய்ய அமெரிக்க அரசு ஆத்திரேலிய அரசுக்குப் பணம் செலுத்தியிருந்தது. 1958 ஆம் ஆண்டில் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 செயற்கைக்கோள் கட்டுப்பாடிழந்து நியூயோர்க்கில் இருந்து அமேசான் வரை 10 நிமிடங்கள் வரை சென்றதைப் பலர் கண்டனர். இதற்கிடையில், நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி வழககுத் தாக்கல் செய்திருக்கும் பிரபல வழக்கறிஞர் விக்டர் கொப்பேயின் வேண்டுகோளுக்கிணங்க நீதிபதியின் அனுமதியுடன் நேற்று சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக்களம் ஆவணக்காட்சி திரையிடப்பட்டது. இக்காட்சியினை அங்கு வருகை தந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பார்வையிட்டனர். தென்னாப்பிரிக்க அபிவிருத்தி சமூகம் இவ்வுடன்பாட்டுக்கு மத்தியத்தம் வகித்திருந்தது. 2009 ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து மடகஸ்கார் இச்சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்படப் பல நாடுகளும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. ஆப்பிரிக்க ஒன்றியத்தில் இருந்தும் மடகஸ்கார் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் மரியசு பிரான்சுமன் தலைமையில் மடகஸ்கார் தலைநகர் அண்டனனரீவோ நகரில் சமாதான உடன்பாடு கையெழுத்தானது. ஆண்ட்ரி ராசொய்லினா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் இடம்பெறும் வரையில் வரையில் பதவியில் இருப்பார். மார்க் ரவலொமனானா தற்போது தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார். இலங்கையில் அண்மைக்காலங்களாக இனவாதத்துக்குத் தூபம் போடும் சில சம்பவங்கள் இடம் பெற்றுவருவதால் இலங்கை சிறுபான்மை மக்கள் மத்தியில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பேணப்படுவது குறித்து ஒரு ஐயப்பாடு ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடைபெறவிருந்த வேள்வியில் சிலர் புகுந்து இடையூறு விளைவித்ததுடன் அங்கு வேள்விக்காகவென பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பிராணிகளையும் எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தமை இந்து மக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் ஒரு அமைச்சர் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று அநுராதபுரம் சந்தியில் பல நூறு வருடங்களாக அமைந்திருந்த இஸ்லாமிய மக்களின் புனித சியாரம் அடக்கஸ்தளம் ஒன்றை சில பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த குண்டர் கும்பலொன்று இடித்துத் தகர்த்தியுள்ளது. துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த காரணத்தினாலேயே இந்த அடக்கஸ்தளம் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்துள்ள போதிலும் அவர்கள் இக்கும்பலின் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. * இலங்கை வார இதழ். செப்டம்பர் 18, 2011 * நமது தூது வார இதழ். செப்டம்பர் 18, 2011 சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதற்கிடையே நிலநடுக்கத்தால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இங்கிலாந்து தூதரக அலுவலக கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். லக்னோ, பாட்னா, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கேங்டாக் மற்றும் டார்ஜீலிங்கில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிமின் சில பகுதிகளில் தொலைபேசி இணைப்புகளும் செயலிழ்ந்துள்ளன. மேற்கு வங்கத்திலும் தொலைபேசி இணைப்புகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. லிபியாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான தடைகளைக் களைய இந்நடவடிக்கை பயன்படும். இதன்மூலம் போரால் சீரழிந்த லிபியாவின் பொருளாதார மற்றும் அரசியல் மீட்பு சாத்தியப்படும். ஐக்கிய நாடுகளின் இம்முடிவை அமெரிக்காவும் பிரிட்டனும் வரவேற்றுள்ளன. மக்களை அமைதி பேணும்படி அறிவித்த குவாத்தமாலா அரசுத்தலைவர் அல்வேரோ கொலொம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குயிலாப்பா என்ற இடத்தில் மூவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் வாகனம் ஒன்று புதையுண்டதால் கொல்லப்பட்டனர். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சாலைகளில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. எல் சல்வடோருக்குச் செல்லும் நெடுஞ்சாலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. 51 ஆண்டு கால உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) ஒரு நீண்ட கால சர்ச்சையாக இருந்து வந்தது. விசாரணையின்றி எவரையும் தடுத்து வைக்கவும், ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் இச்சட்டம் வழிவகுத்தது. இச்சட்டத்தை நீக்க பிரதமர் நஜிப் துன் ரசாக் எடுத்த முடிவு புரட்சிகரமானது என்று அந்நாட்டின் பல்வேறு தலைவர்கள் வர்ணித்துள்ளனர். 2013ம் ஆண்டில் நடைபெற விருக்கும் மலேசிய பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு இந்த சட்ட மாற்றங்கள் சாதக நிலையைத் ஏற்படுத்தித் தரும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான ஜி. பழனிவேல் “ஒரே அறிவிப்பின் மூலம் பிரதமர் உலக நாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் மலேசிய நாட்டை இட்டுச் சென்றுவிட்டார்,” என்று கூறியுள்ளார். பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு மாற்றாக தீவிரவாதிகளைத் தடுத்து வைப்பதற்கு ஏதுவான இரு புதிய சட்டங்கள் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. ஐநா பொதுச்சபையின் 2011ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமானது. 130 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அவற்றுள் பாலத்தீனத்துக்கு ஐநாவில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என, அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முன்வைத்துள்ள கோரிக்கை, மேலும் அரபுலக நாடுகளின் எழுச்சி நிலை, லிபியா அரசு சார்பில் எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின் பிரதிநிதி பங்கேற்பதுடன அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல் தொடர்பான விவாதங்கள், சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடை குறித்த விவாதங்கள், புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடானின் பங்கேற்பு என்பனவே அவை. அதே நேரம் இந்தியப் பிரதமர் மன்மோகன் ஐநா பாதுகாப்புப் பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் குறித்து வாதாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களுக்கு பாக்கித்தான் தடை விதித்துள்ளது. நீதிபதி சேக் அஜ்மத் சயீத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு இந்த உத்தரவை நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார். ஃபேஸ்புக்கில் முகமது நபிக்கு எதிராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதால் அதை முற்றாக தடை செய்ய வேண்டும் என முகமது அசாத் சித்திக் என்ற பாகிஸ்தான் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையிலே ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூப்பைத் தொடர்ந்து பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய தளத்திற்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர இதே சர்ச்சை தொடர்பாக மேலும் 450 இணையதளங்களுக்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது. எனினும் கூகுள் மற்றும் இதர தேடுதளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டாம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் இத்தளங்களுக்குச் செல்லுபவர்கள், அத் தளம் தடை செய்யப்பட்டுள்ள தகவலையே பார்க்க முடிவதாக பலரும் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களை அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சகம் முற்றாக தடை செய்துவிட்டது. இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது குறித்து அக்டோபர் 6-ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினமிரவு தலைநகரான புசும்புராவில் உள்ள மதுபான விடுதியொன்றினுள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு தள்ளியது. இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இது குறித்து சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருவர் கூறுகையில், மதுபான விடுதிக்குள் ராணுவ உடை அணிந்த 12இற்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று நுழைந்து விடுதியில் இருந்தவர்களை கீழே படுக்க வைத்து அவர்கள் மீது 20 நிமிடங்கள் சரமாரியாக சுட்டனர்” என்றார். இக் கொலைவெறித் தாக்குதல் குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் பீர் குருன்சிசா தனது நியூயார்க் பயணத்தை ரத்து செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டுமுள்ளார். மத்திய ஆப்பிரிக்காவின் சிறிய நாடான புரூண்டியில், கடந்த 12 ஆண்டுகளாக சிறுபான்மையின தூத்சி இனத்தவரான இராணுவத்தினருக்கும், ஹூட்டு போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புரூண்டியின் கடைசி போராளிக் குழு 2009 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக தனது ஆயுதங்களைக் கையளித்தது. ஆனாலும் அங்கு தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. 2005 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. முன்னாள் போராளித் தலைவர் ந்குருன்சீசா என்பவர் அரசுத் தலைவராகத் தேர்ந்தஎடுக்கப்பட்டார், ஆனாலும், FNL எனப்படும் தேசிய விடுதலைப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல்களை அடுத்து இடம்பெற்ற பெரும் வன்முறையாக மதுபான விடுதிக் கொலைகள் கருதப்படுகின்றன. முன்னாள் போராளித் தலைவர் அகத்தோன் ருவாசா அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி நாட்டில் இருந்து வெளியேறினார். ஆப்கானித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பர்ஹானுதீன் ரபானி (71) கடந்த செவ்வாய்க்கிழமை தலிபான்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து சிறப்புச் செய்தி கொண்டு வந்துள்ள தூதர் என்று கூறி ரபானியை அவரது இல்லத்தில் சந்தித்த தீவிரவாதி ஒருவர் தனது தலைப்பாகைக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்துக் கொண்டு வந்து வெடிக்கச் செய்துள்ளார். ரபானியைச் சந்தித்தவுடன் அன்போடு தழுவுவது போல் தனது தலையை ரபானியின் தோளில் சாய்த்துக் கொண்டு அந்த குண்டை அவர் வெடிக்கச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. குண்டுதாரியுடன் இன்னொருவரும் வந்ததாகவும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த அந்த மனிதர் பின்னர் கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புர்ஹானுதீன் ரப்பானி 1980களில் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஆப்கானித்தான் இருந்தபோது சக்திவாய்ந்த முஜாகிதீன் கட்சியின் தலைவராக விளங்கியவர். சோவியத் ஒன்றியம் வெளியேறிய பின் 1992 சூன் 28 முதல் 1996 செப்டம்பர் 27 வரை ஆப்கான் அரசுத்தலைவராக பதவி வகித்தார். பின்னர் அவரிடமிருந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் 2001 இல் சில காலம் இவர் மீண்டும் ஆப்கான் சனாதிபதியாகப் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆப்கான் ஜனாதிபதி அமீட் கர்சாயினால் உயர் சமாதானப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தான் அரசின் சார்பில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர் ரபானி. 1990களில் ஆப்கானித்தானில் நூற்றுக்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்ட போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று ரபானி மீது மனித உரிமை அமைப்புகள் புகார் கூறியிருந்தனர். இந்த படுகொலை 2001 இல் தலிபான்களை ஆட்சியதிகாரத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வீழ்த்திய பின்னர் நடந்த மிக முக்கியமான அரசியல் படுகொலை என்று கூறப்படுகிறது. இயற்கை உணவுப்பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கலவைகளால் இம்மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தோலின் ஆழப்பகுதியில் உள்ள கொலாசின் எனப்படும் புரதமே தோல் சுருக்கமின்றி தொனியுடன் விளங்குவதற்குக் காரணம். வயது செல்லச் செல்ல இப்புரதம் குறைவடைவதால் தோலில் சுருக்கம் ஏற்படுகின்றது. இம்மருந்து மரபணு மட்டத்தில் தொழிற்பட்டு கொலாசினின் உற்பத்தியைக் கூட்டுகிறது, இதனால் தோல் மீண்டும் பளபளப்பை அடைகின்றது. இம்மருந்துக்கு ஒரு மாதச் செலவு கிட்டத்தட்ட £35 ஆகும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் களிம்புகள் மேற்தோல் மட்டத்தில் செயற்படுகின்றன, ஆனால் இம்மருந்தோ உட்தோல் பகுதியில் என்பதால் மிகவும் பயனுள்ள விளைவுகள் கிடைக்கின்றன. அடுத்த மாதமே இம்மருந்து விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ அபேவிக்கிரம இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள, இரத்தினபுரி மாவட்டத்தில் லேலோபிட்டிய எனும் பின்தங்கிய கிராமமொன்றில் 1927 சூன் 22ம் திகதி பிறந்தார். 1940 களில் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்த இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். இவரது முதல் திரைப்படம் 'சரதம' 1957இல் திரையிடப்பட்டது. 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாக ரசிகர்களிடம் இடம்பிடித்துக் கொண்டார். இலங்கையில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயர் விருதான சரசவிய விருதினை 11 தடவைகளும், சனாதிபதி விருதினை 07 தடவைகளும் பெற்றுள்ள இவர் 1999ல் 12வது சர்வதேச சிங்கப்பூர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'புரஹந்த கலுவர' திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதான 'சில்வர் ஸ்கிரீன்' விருதினையும் பெற்றுள்ளார். இவரின் இறுதிக் கிரிகைகள் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு தடவைகள் அரசுத்தலைவர் தேர்தல்களில் கல்ந்து கொண்ட மைக்கேல் சாட்டா 43% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். "சாம்பிய மக்கள் சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டும். நாம் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம் என ரூப்பையா பண்டா செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறினார். அவர் சார்ந்துள்ள பலகட்சி சனநாயகத்துக்கான இயக்கம் 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ளது. மைக்கேல் சாட்டாவின் நாட்டுப்பற்றுள்ள முன்னணி ஆதரவாளர்கள் தமது கட்சியின் வெற்றியை வெகு விமரிசையாக வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர். முன்னாளில் லண்டன் விக்டோரியா தொடருந்து நிலையத்தில் துப்பரவுப் பணியாளராகப் பணியாற்றிய திரு சாட்டா பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இன்று வெள்ளிக்கிழமை இவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி, தொழில், மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தார். சீனா உட்பட வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களை இவர் வெகுவாக விமரிசித்து வந்தவர். சுரங்க நிறுவனங்களுக்கு 25% இலாபவரியை மீளவும் அறவிடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சாம்பியாவில் 60 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இறுதிச் சுற்று நேயர்களின் முன்னிலையில் மிகவும் வெள்ளிக்கிழமை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் செண்டர், நந்தம்பக்கத்தில் நடைபெற்றது. இரண்டு வாரங்களாக நடந்த இறுதிச் சுற்றில் அதிக வாக்குகளின் அடிப்படையில் நான்கு போட்டியாளர்கள் சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரண், சந்தோஷ் ஆகியோர் பங்குபற்றினர். இவர்களின் வெற்றி, பார்வையாளர்களின் வாக்குகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சூலையில் ஆரம்பமான இப்போட்டித் தொடரில் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், கனடா, சிங்கப்பூரில் இருந்தும் இளம் பாடகர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு கட்டங்களாக இப்போட்டி இடம்பெற்றது. போட்டி நடுவர்களாக பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் பங்குபற்றினர். வெற்றிபெற்ற போட்டியாளர் சாய்சரண் ரூபாய் 40லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றைப் பரிசாகப் பெற்றார். இரண்டாவதாக வந்த சந்தோஷ் டாடா விஸ்டா காரையும், மூன்றாவதாக வெற்றி பெற்ற சத்யபிரகாஷ் ரூபாய் மூன்று லட்சத்தையும், நான்காவதாக வந்த பூஜா ரூபாய் ஒரு லட்சத்தையும் பரிசாகப் பெற்றனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மனிதர் பார்த்த திரைப்படக் காட்சிகளின் போது மூளையில் நிகழும் நிகழ்வுகளை வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவுக் கருவி (functional magnetic resonance imaging (fMRI கொண்டு பதிவு செய்து, அதைக் கணினி நிரல்கள் கொண்டு மீள் உருவாக்கம் செய்யும் முறையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை தற்போதைய உயிரியல் Currenct Biology) என்ற ஆய்வேட்டில் வெளிவந்துள்ளது. இந்தப் பரிசோதனைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வாளர்கள் ஐயம் தெரிவித்துள்ளார்கள். எல்லாத் தரப்பினரும் மேலதிக ஆய்வுகள் தேவை என்று கூறி உள்ளார்கள். அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும். தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என ஆய்வாளர்கள் விரும்புகின்றனர். கலிபோர்னியாவின் வாண்டென்பர்க் வான் படைத் தளத்தில் அமைந்துள்ள கூட்டு விண்வெளிக் கட்டளைப் பணியகத்தில் இருந்து இச்செயற்கைக்கோளின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டன. செயற்கைக்கோளின் சில பகுதிகள் மேற்குக் கனடாவில் வீழ்ந்ததாக முன்னர் தகவல்கள் தெரிவித்தன. ஆனாலும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது. 20-ஆண்டு காலப் பழமையான இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்துள் வந்து முழுமையாக எரிந்து விட்டது. ஆனாலும் எரிய முடியாத கிட்டத்தட்ட 500 கிகி பாகங்கள் பூமியில் வீழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு 1979ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலேப் பூமியில் விழுந்தது. அதேபோல 2001ம் ஆண்டு உருசியாவின் 135 தொன் எடை கொண்ட மீர் விண்கலம், பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இதை உருசிய வி்ஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டின் மூலம் இயக்கி கடலில் விழ வைத்தனர். நாசாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருகிறது செப்டம்பர் 17, 2011 16 சுற்றுலாப் பயணிகளுடன் எவரெஸ்ட் மலையைக் காணச் சென்று திரும்பும் வழியிலேயே அவர்கள் பயணம் செய்த புத்தா என்ற விமானம் தலைநகர் கத்மண்டு அருகில் வீழ்ந்தது. இந்தத் தனியார் விமானம் இன்று காலை உள்ளூர் நேரம் 07:31 மணிக்கு தரைக்கட்டுப்பாட்டை இழந்தது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டாராயினும், அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விமானத்தில் 10 இந்தியர்கள், இரண்டு அமெரிக்கர், ஒரு சப்பானியர், ஆறு நேபாளிகள் பயணம் செய்ததாக சுற்றுலாத்துறை செயலர் கணேசராஜ் ஜோசி தெரிவித்தார். இவர்களில் மூன்று விமானிகளும் அடங்குவர். விபத்துக்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. புசான்குநாராயண் என்ற கிராமத்தில் வீட்டுக் கூரை ஒன்றுடன் விமானம் மோதியதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த திசம்பரில், கத்மண்டுவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்திருந்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர். அதர்கு முன்னதாக 2010 ஆகத்து மாதத்தில் இமயமலைப் பகுதியில் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு அமெரிக்கர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். நேபாளத்தில் வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு ஆகத்து 24, 2010 அடுத்த வியாழன் அன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அவற்றை அடுத்தே இம்மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். உள்ளூராட்சிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஷூரா மன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மன்னர் இம்முடிவுகளை அறிவித்தார். மன்னருக்கு ஆலோசனை வழங்கும் ஷூரா மன்றத்துக்கு மன்னரே உறுப்பினர்களை நியமிக்கிறார். "இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமூகப் பங்களிப்பு செய்ய முடியும் என்றால், அதனை நாங்கள் தடுக்க மாட்டோம், பெண்களை ஒதுக்கிவைக்க மாட்டோம் என்றும், மூத்த மதகுருக்களிடமும், மற்றவர்களிடமும் கலந்து ஆலோசித்து அடுத்த தடவையிலிருந்து பெண்களையும் ஷூரா மன்றத்தில் உறுப்பினராக்குவது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்று மன்னர் தனது உரையில் தெரிவித்தார். மிகக் கடுமையான சுணி இசுலாமியக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்க மன்னர் எடுத்த முடிவுகளை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது, ஆண் துணையின்றி வெளிநாடு செல்ல முடியாது என்பது போன்ற தடைகள் நடைமுறையில் உள்ளன. "கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர் என சவுதி எழுத்தாளர் நீமா இசுமாயில் நவாப் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். சவுதி அரேபியாவில் உள்ளூராட்சித் தேர்தல்களே ஒரே ஒரு பொது மக்கள் வாக்களிக்கும் தேர்தல் ஆகும். வியாழன் அன்று இடம்பெறும் தேர்தல்களில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் போட்டியிடுகின்றனர். டிரீம்லைனர் விமானம் 2008 ஆம் ஆண்டில் சப்பானிடம் கையளிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இதனைத் தாமதப்படுத்தியிருந்தன. கடந்த சனவரியில் இடம்பெற்ற ஒரு சோதனைப் பறப்பின் போது விமானத்தில் தீ பரவியதாக அறிவிக்கப்பட்டது. 787 டிரீம்லைனரின் சிறப்பு குறைவான எடையாகும். இதனால் இது குறைவான எரிபொருளையே செலவழிக்கும். இதன் காரணமாக இது நீண்ட தூரம் எரிபொருள் நிரப்பாமல் பறக்க முடியும். தற்போதுள்ள விமானங்களை விட 20 விழுக்காடு எரிபொருளைக் குறைவாகவே டிரீம்லைனர் பயன்படுத்தும். 2013 ஆம் ஆண்டில் இருந்து மாதத்துக்கு 10 விமானங்களைத் தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது 821 விமானங்களுக்கு உலகின் பல்வேறு விமான நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. ஆகக்கூடியது 290 பயணிகளை இது ஏற்றிச் செல்லும். போயிங் 747 ஜம்போ ஜெட் விமானத்தை விட 787 சிறியதாகும். போயிங் டிரிம் லைனர் 787 -ன் முதல் சோதனை ஓட்டம் டிசம்பர் 15, 2009 அபூ சலிம் சிறைச்சாலைக்கு அண்மையில் உள்ள பாலைவன பகுதியிலேயே இந்த பாரிய மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைகுழியின் மேற்பரப்பில் இருந்து உடல் எச்சங்கள் மற்றும் உடைகளின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஆகத்து 20ம் தேதி அபு சலிம் சிறை வளாகத்தில், முன்பு பணியாற்றிய சிறை அலுவலர்கள் உதவியுடன், கைதிகள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டதாக, லிபியா இடைக்கால கவுன்சில் உறுப்பினர் கமால் அல் ஷரீப் நேற்றுத் தெரிவித்தார். இது குறித்து மருத்துவ அதிகாரியான டாக்டர் ஒஸ்மன் அப்துல் ஜலீல் கூறியதாவது, 1,270க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகளை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டெடுக்கப்பட்டவர்களின் உறவினர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம், என்றார். அமெரிக்க அரசுடனான ஒப்பந்தத்தின் படி கப்பல் சிதைவின் பெறுமதியின் 80 விழுக்காட்டினை 160 மில்லியன்) ஒடிசி மரைன் நிறுவனம் தனதாக்கிக் கொள்ளும். பாக்கித்தானின் லாகூர் அருகே பாசிலாபாத் நகரில் அமைந்துள்ள பள்ளியொன்றின் மாணவர்கள் காலார்கார் பகுதிக்கு சுற்றுலா சென்றபோதே அவர்கள் சென்ற பேருந்து மலைப்பாங்கான சாவல்நகர் அருகே சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் வீழ்ந்தது. தலைநகர் இசுலாமாபாதில் இருந்து தென்கிழக்கே 160 கிமீ தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த பள்ளிச் சிறுவர்கள் 12 இற்கும் 14 இற்கும் இடைப்பட்ட வயதினராவார். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமான மாணவர்களை ‌பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வழங்‌கியமை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்துக் குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் கூறு‌கையில், அதிகளவிலான கூட்டம் மற்றும் ‌போதிய வெளிச்சம் இன்மையாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதேசமயம் விசாரணை அதிகாரிகள் பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த சூன் மாதத்தில், பாக்கித்தானின் காசுமீர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஏரியொன்றில் கவிந்து விபத்துக்குள்ளானதில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். சென்ற ஆண்டு சனவரியில் பள்ளிச் சிறுவர்கள் சென்ற பேருந்து தொடருந்து ஒன்றுடன் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு சனவரி 23, 2010 இதயமுடுக்கி முதன்முதலாக 1960 ஆம் ஆண்டில் மனிதருக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் இதயத் துடிப்பு ஒரே சீராக இயங்க வைக்கப்படுகிறது. தற்போது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதனைப் பொருத்தி வருகின்றனர். கிரேட்பாட்ச் லிமிட்டெட் என்ற இவரது நிறுவனம் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகளுக்கு மின்கலங்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகித்தது. 1983 ஆம் ஆண்டில் தொழில்நிலைப் பொறியாளர்களின் தேசிய மன்றம் கிரேட்பாட்சின் கண்டுபிடிப்பை ஐம்பதாண்டுகளில் 10 பெரும் பொறியியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவித்தது. தனது கடைசிக் காலங்களில் கிரேட்பாட்ச் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார். முதலாவது வெற்றிகரமான செயற்கை இதயமுடுக்கி நியூயோர்க்கில் உள்ள பஃபல்லோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டது. 77 வயதான நோயாளி இதனைப் பொருத்தி 18 மாதங்கள் வரை உயிரோடிருந்தார். எதிர்வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை‎ (கிரேடு முறை) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளிலும் இந்த தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை‎ அமலுக்கு வரும். ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், சூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், சனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைக்கேற்பவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் கிரேடு முறை அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர். ஆனாலும், ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவ, மாணவியின் செயல்பாட்டிலும் கவனம் செலுத்தி, பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் ஒருவர் தினமலர் செய்தியாளரிடம் தெரிவித்தார் ஆசிரியர்களின் கையில், 40 மதிப்பெண்கள் வழங்கும் பொறுப்பு இருப்பதால், தேவையான மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களும், பிடிக்காத மாணவர்களுக்கு குறைத்து மதிப்பெண்கள் வழங்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் நேர்மையான முறையில், மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்யாவிட்டால், மாணவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்தார். 18 பேருடன் சென்ற விமானம் ஒன்று மேற்கு இந்தோனேசியாவின் மலைப் பகுதிகளில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். எசுபானியத் தயாரிப்பான காசா சி-212 என்ற இந்த விமானம் வடக்கு சுமாத்திராவுக்கும் ஆச்சே மாகாணத்திற்கும் இடையில் பயணிக்கும் போது அவசர சைகையை அனுப்பியதாக போக்குவரத்துத் துறை அமைச்சு அதிகாரி தெரிவித்தார். உடனேயே தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வடக்கு சுமாத்திராவின் பகோரொக் என்ற ஊரில் வீழ்ந்தது. இன்று காலை உள்ளூர் நேரம் 07:28 மணிக்கும் 08:05 மணிக்கும் இடையில் இவ்விபத்து நடந்தது. பெரும் மழை மற்றும் காற்றினால் நிவாரண உதவிகள் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானம் வீழ்ந்த பகுதி வான்வெளி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பெரிதும் சேதமடைந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் நான்கு சிறுவர்கள், நான்கு விமானிகள் உட்பட 18 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் நிலையைப் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை. கடந்த மே மாதத்தில், மேற்கு பப்புவா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். இந்தோனேசிய விமான விபத்தில் 27 பேர் உயிரிழப்பு மே 7, 2011 இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் பலாத்காரம்) பிரிவின் கீழ் 17 பேருக்கு 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 12 பேருக்கு 3(2) வி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை கட்டத் தவறினால் 30 மாதம் சிறைவாசம். மற்ற குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்க்ப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மு்தல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வழக்கில் பாலியல் புகார் இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது இந்த தீர்ப்பு குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில் வரலாற்று சிறப்பு மிக்க வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு தலா ரூ.15 ஆயிரம் அறிவித்துள்ளார்கள். இந்த தொகை போதாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார். உள்ளூர் நேரம் 21:16 மணிக்கு வடமேற்குப் பகுதியில் கோபி பாலைவனத்தில் உள்ள சியுசுவன் செயற்கைக்கோள் ஏவுமையத்திலிருந்து இருந்து ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மேலாகச் சென்ற ஏவுகலன் பூமியில் இருந்து 350 கிமீ உயர சுற்றுப்பாதைக்குச் செலுத்தப்பட்டது. தானியங்கியாகச் செயற்படவிருக்கும் இந்த ஆய்வுகூடத்துடன் இன்னும் சில வாரங்களில் சென்சோ-8 என்ற ஆளில்லா விண்கலத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது இது, சீனா நடத்தும் விண்வெளியில் இரண்டு விண்கலன்கள் இணைகின்ற முதலாவது நடவடிக்கையாகும். இது, சீன விண்வெளி நிலையத்தைக் கட்டியமைப்பதற்கு அடிப்படையாகும் என்று ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளர் சூசியான் பிங் கூறினார். சென்சோ-8 விண்கலம் வெற்றிகரமாக இணையும் பட்சத்தில், இரண்டு விண்வெளிவீரர்களைக் கொண்ட சென்சோ-9, சென்சோ-10 போன்ற விண்கலங்களை ஆய்வுகூடத்துடன் இணைவதற்காக அடுத்த ஆண்டில் சீனா செலுத்தவிருக்கிறது. சீனா தனது விண்வெளித் திட்டத்திற்காக பில்லியன்களுக்கும் அதிகமான டொலர்களைச் செலவழிக்கிறது. ஏற்கனவே இரண்டு செயற்கைக்கோள்கள் சந்திரனின் சுற்றுப்பாதையை வலம் வருகின்றன. சந்திரனில் இறங்குவதற்காக மேலும் ஒரு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தவிருக்கிறது. தியேன்குங்-1 ஆய்வுகூடம் இரண்டு ஆண்டுகால வாழ்வுக்காலத்தையே கொண்டிருக்கும். இதை அடுத்து மேலும் இரண்டு ஆய்வுகூடங்களை சீனா அனுப்பவுள்ளது. தியேன்குங்-1 இன் திட்டம் முடிவடைந்தவுடன், அது வளிமண்டலத்துள் செலுத்தப்பட்டு, அழிக்கப்பட்டு பசிபிக் பெருங்கடலில் வீழ்த்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட சீனா புதிய செயற்கைக்கோளை ஏவியது சூலை 29, 2011 இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11,600 க்கும் சற்று அதிகமான விடுதலைப் புலிகள் தம்மால் பிடிக்கப்பட்டார்கள் அல்லது சரணடைந்தார்கள் என்று அரசு அறிவித்தது. தடுப்பில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களை கட்டம் கட்டமாக அரசு விடுவித்து வந்தது. வழக்குகளை எதிர்கொள்ளும் 63 பெண்கள் உள்ளிட்ட சுமார் 1400 போராளிகளே தற்போது தடுப்பில் இருப்பதாகவும் அவர்களையும் விரைவாக விடுவிக்க அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்தவரான அவ்லாகி (அகவை 40) தனது ஆங்கிலப் புலமையாலும், கணினி அறிவினாலும் அல்-கைதா இயக்கத்தின் பிரச்சார நடவடிக்கைகளின் தூணாக விளங்கினார். அவ்வியக்கத்தின் மிக உறுதியான பிரிவாகக் கருதப்படும் ஏமன் நாட்டு பிரிவின் தலைவரான இவர் இயக்கத்தில் ஆட்களை இணைப்பதிலும் முன்னின்று செயற்பட்டவராவார். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டுள்ள இவர் அந்நாட்டினால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகின்றார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இவரை சுட்டுக் கொல்லும்படி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளார். அவ்லாகியுடன் சேர்ந்து சமீர் கான் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். இவரும் அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார். ஏமனின் தலைநகர் சனாவில் இருந்து 90 மைல் கிழக்கே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அல்-கைதா இயக்கத்துக்கு இது ஒரு பெரும் பின்னடைவு, ஆனாலும் அவ்வியக்கம் இப்பிராந்தியத்தில் அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்னமும் உள்ளது என்றார். கடந்த டிசம்பர் மாதத்தில் அவ்லாக்கி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் இவர் 30 போராளிகள் வரை கொல்லப்பட்டனர், ஆனால் அவ்லாக்கி உயிர் தப்பினார். ஒசாமா பின் லாதின் கொல்லப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் தேடுதல் பட்டியலில் அவ்லாக்கி முதலாமிடத்தில் இருந்தார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. எசுப்பானியாவின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள புனித மேரி தேவாலயத்திற்குள் புகுந்த இனந்தெரியாத நபரொருவர் பிராத்தனையில் ஈடுபட்டிருந்த 2 பெண்களை சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சூடுபட்ட நிறைமாத கர்ப்பணிப் பெண்ணொருவர் இத்தாக்குதலில் இறந்தார். இருப்பினும் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இச்சம்பவம் நேற்று முன்தினம் மாட்ரிட் புனித மேரி தேவாலயத்தில் 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடம்பெற்றது. 36 வயதுள்ள தாய் அதிர்ச்சியில் இறந்துள்ள நிலையில், கர்ப்பத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கும் அதிர்ச்சி மற்றும் ஆக்சிஜன் குறைப்பாட்டால் உடல்நிலை பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மர்மநபர் தேவாலயத்திற்கு வந்து எதற்காக சுட்டார் என்ற காரணம் தெரியவில்லை. சுட்ட நபருக்கு ஏற்கனவே போதை கடத்தல், சிறையில் இருந்து தப்புதல் மற்றும் உள்ளுர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. பல்கேரியாவின் ஜிப்சிகள் என அழைக்கப்படும் ரோமா மக்கள் கூட்டுக் குற்றத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்ற வாரம் ரோமா குழுவினரின் தலைவர் ஒருவரின் உறவினரின் வாகனம் ஒன்றில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன துவேச உணர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசுத்தலைவர் கியோர்கி பர்வானொவ் கூறியுள்ளார். "அண்டி வாழும் மக்கள், குற்றக்குழுக்கள் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அக்டோபர் 23 இல் அரசுத்தலைவருக்கான தேர்தல்கள் இடம்பெற இருக்கும் வேளையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. வலதுசாரி வேட்பாளர் வோலென் சீதரொவ் தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றுகையில் மரணதண்டனை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும், ரோமாமக்களின் சேரிகள் அகற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இயற்கையாக இலைகள் சூரிய ஒளி, நீர், கார்பனீரொக்சட்டைப் பயன்படுத்தி காபோவைதரேட்டு மற்றும் ஒக்சிசன் ஆக மாற்றும் ஒளிச்சேர்க்கை முறையை இந்த செயற்கை இலைகள் செய்யும். அமெரிக்காவின் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் டேனியல் நொசேரா இதற்கான ஆய்வறிக்கையைக் கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க வேதியியல் சங்க தேசிய சந்திப்பில் சமர்ப்பித்திருந்தார். இப்போது அவர் அதனை இவ்வார சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் சூரிய ஆற்றலை நேரடியாக வேதியியல் எரிபொருளாக மாற்றி அதனை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். செயற்கை இலை சிலிக்கன் சூரியக் கலன் வெளி இணைப்புகள் ஏதும் இல்லாமல் இயங்கக்கூடியது. இக்கருவி நீருள்ள பாத்திரம் ஒன்றில் வைக்கப்பட்டு சூரிய ஒளி செலுத்தப்படும். உடனடியாகவே இதன் ஒரு பக்கத்தில் இருந்து ஒக்சிசன் குமிழ்களும் மறு பக்கத்தில் இருந்து ஐதரசன் குமிழ்களும் வெளியேறுகின்றன. இவை இரண்டும் வெவ்வேறாக சேகரிக்கப்பட்டு பின்னர் மின்ஆற்றல் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, எரிபொருள் மின்கலத்திற்கு இவை செலுத்தப்படும் போது, மின்கலம் இவையிரண்டையும் மீண்டும் நீராக மாற்றி அதே வேளையில் மின்னோட்டத்தையும் வெளிவிடுகிறது. இந்த "செயற்கை இலை" பூமியில் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய அதிகச் செலவில்லாத சிலிக்கன், கோபால்ட், மற்றும் நிக்கல் போன்ற வேதியியல் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் நொசேரா தெரிவிக்கிறார். அத்துடன் சாதாரண நீரில் இதனைப் பயன்படுத்த முடியும். முன்னர் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளிச்சேர்க்கைகள் பொதுவாக பிளாட்டினம் போன்ற அரிதான விலை உயர்ந்த பொருட்களால் ஆனதாக அவர் குறிப்பிட்டார். இந்த தொழில்நுட்பம் மேம்படும் பட்சத்தில் இது ஒரு ஆற்றல் மூலமாக அமையும் என்று அறிவியலாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள். நுணி அல்லது உச்ச நிகழ்வுகளை எதிர்வுகூறுவதற்கு புதிய கணித புள்ளியியல் வழிமுறை பற்றி "புள்ளியியலின் பதிவேடு The Annals of Statistics ஆய்வேட்டில் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய வழிமுறை முழுமையான தரவுகளையும் பயன்படுத்துவது சிறந்ததா என முடிவு செய்ய உதவுகிறது. எல்லாத் தரவுகளையும் எல்லா சந்தர்ப்பங்களும் பயன்படுத்துதல் என்பது சில வேளைகளில் பிழையான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாம், எனவே அப்படிச் செய்ய வேண்டுமா என முடிவை எடுக்க இந்தப் புதிய வழிமுறை உதவுகிறது. கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெயிர்ன் இந்தியா என்ற நிறுவனமே இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை தனக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடற்படுகையில் 1354 மீற்றர் வரை ஆழம் வரை துளையிட்டதில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத்தக்கதா இல்லையா என்பதை அறிய மேலும் அகழ்வு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கெயிர்ன் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்கான உரிமை கெயிர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. சிக்யு எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெயிர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும். மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் இருப்பது பற்றிய தகவல்கள் கிடைத்ததையடுத்து, இந்திய மற்றும் சீன தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எரிபொருள் கிணறு தோண்டுவதற்கான அனுமதி இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்த நிறுவனங்கள் திட்டமிட்டபடி தமது பணிகளைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாயைப் போன்ற உடல் அமைப்புக் கொண்ட ஆனால் நாயை விட பல மடங்கு பெரிய தானியங்கி ஒன்றின் முன்வடிவம் ஒன்றை அதைத் உருவாக்கும் அமெரிக்காவின் பொசுட்டன் டைனாமிக்சு நிறுவனம் காட்சிப்படுத்தியது. இந்த நாய் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறைக்காக அதன் ஆய்வு நிறுவன நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தானியங்கியின் முழுப் பெயர் காலாட் படை ஆதரவு ஒருங்கியம் (Legged Squad Support System) என்பது ஆகும். இந்த நாய் 400 இறாத்தல்கள் சுமக்கக் கூடியது. 24 மணித்தியாலங்களுக்குள் 20 மைல் போகக் கூடியது. கணினிப் பார்வையுடன் குறிப்பிடப்பட்ட இடத்துக்குப் போகக் கூடியது. பல்வேறு போர்ப் பயன்பாடுகளையும் கொண்டது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அமெரிக்காவின் புரூஸ் பட்லர், பிரெஞ்சு அறிவியலாளர் ஜூல்ஸ் ஹொஃப்மன், கனடாவின் ரால்ஃப் ஸ்டெயின்மன் ஆகியோருக்கே விருது வழங்கப்படுகிறது. இவர்களில் ரால்ஃப் ஸ்டெயின்மன் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 30 ஆம் நாள் புற்றுநோய் காரணமாக தனது 68வது அகவையில் இறந்து விட்டார். அவர் இறந்தது தெரியாமல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இறந்தவர் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. இது குறித்து ஆராய்ந்த நோபல் பரிசுக் குழு, கொடுத்த விருதை திரும்ப வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளது. "நோபல் பரிசு விதிமுறைகளின் படி, இறந்த ஒருவர் அவர் இறப்புக்கு முன்னரான ஆக்கத்திற்கு பரிசு வழங்க முடியாது. ஆனாலும், ஒருவருக்குப் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்திருந்தால், அப்பரிரை அவருக்கு வழங்க முடியும் இதன் படி ஸ்டெயின்மனுக்குப் பரிசு வழங்க முடியும் என்ற முடிவுக்கு நோபல் பரிசுக் குழு வந்துள்ளது நல்லெண்ணத்தின் அடிப்படையில், அவர் உயிரோடு உள்ளார் என்ற நம்பிக்கையிலேயே பரிசு அறிவிக்கப்பட்டது என பரிசுக் குழு தெரிவித்துள்ளது. புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது என்பதை ரால்ஃப் ஸ்டெயின்மன் கண்டறிந்தார். ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பட்லரும் ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சோல் பேர்ல்மட்டர், அடம் ரீஸ் மற்றும் ஆத்திரேலியாவைச் சேர்ந்த பிறையன் சிமித் ஆகியோர் இப்பரிசைப் பெறுகின்றனர். கரிய ஆற்றல் (dark energy) என்பது பேரண்டத்தை விரிவடையச் செய்ய உதவும் ஒரு புதிரான விசை ஆகும். இக்கரிய ஆற்றல் எவ்வாறு பேரண்டத்தில் பகுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்ததில், பேரண்டம் விரிவடைகிறது எனத் தெரிய வந்தது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலக்கியத்திற்கு என வழங்கப்படும் நோபல் பரிசு இறுதிச்சுற்று பெயர் பட்டியலில் இந்தியர்கள் இருவரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து இந்தியர் ஒருவருக்கு ‌நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்தியர்கள் பரவலாக நம்புகின்றனர். மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன், 40 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவரது படைப்புகள் இத்தாலியம், பிரெஞ்சு, அரபு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. திருச்சூரில் பிறந்த சச்சிதானந்தன் 1996-2006-ம் ஆண்டு கால கட்டங்களில் சாகித்திய அகாடமியின் தலைவராக இருந்துள்ளார். 85 வயதாகும் விஜய்தன் தெத்தா 800-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். புதினங்கள், கட்டுரைகளும் எழுதி உள்ளார். அவரது படைப்புகள், நாடகமாகவும் பகேலி சாரந்தாஸ் சோர்' உள்ளிட்ட திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று அரச அமைச்சு அலுவலக வாயிலில் நுழைய முற்பட்ட போது வெடிக்க வைக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அல்-சபாப் என்ற இசுலாமியப் போராளிக் குழு தாமே இத்தாக்குதலை நடத்தியதாக பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது. கடந்த ஆகத்து மாதத்தில் மொகதிசுவில் இருந்து தமது போராளிகளை வெளியேற்றிய பின்னர் அல்-சபாப் இயக்கம் நடத்திய பெரும் தாக்குதல் என இது கருதப்படுகிறது. குறைந்தது 93 பேர் காயமடைந்துள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் எனவும் கல்வி அமைச்சு அலுவலகத்துக்கு வந்திருந்த மாணவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஆதரவில் இயங்கும் இடைக்கால அரசு இத்தாக்குதலைக் கண்டித்துள்ளது. அரசு உயர் அதிகாரிகள் எவரும் இத்தாக்குதலில் காயமடையவோ இறக்கவோ இல்லை என அரசு தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற நேரம் அலுவலகத்தில் அரச அதிகாரிகளின் கூட்டம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டில் முகமது சியாட் பாரே பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து அங்கு நிருவாக அரசு ஒன்று அமைக்கப்படவில்லை. இசுரேலிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த டேனியல் செட்சுமன் 10 மில்லியன் சுவீடியக் குரோனர்களை (£940,000) பரிசாகப் பெறுவார். அலுமீனியம், மங்கனீசு போன்ற உருக்கிய உலோகங்களை வெகு விரைவாகக் குளிரவைப்பதன் மூலம் பகுதிப்படிகங்களை செட்சுமன் உருவாக்கினார். நுண்ணோக்கியூடாக இவற்றை அவதானித்த போது வழமையான படிகம் போலல்லாமல், புதிய படிகங்கள் முழுமையாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் உருவவடிவம் சீராக அடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனைப் பார்க்க சீராக இருப்பது போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சீரொன்றாத படிகம். இதனாலேயே அவை quasicrystal என அழைக்கப்படுகின்றன. இவ்வகையான படிகங்கள் மிகவும் அழகானவை என வேதியியல் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்தார். இதை டாட்டாவிண்ட் என்ற கனடிய வணிக நிறுவனம் இந்திய அரசின் உதவியுடன் 5 ஆண்டு விருத்திக்குப் பின்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறு மிக வரவேற்புடன் கொண்டுவரப்பட்ட சிம்பியூட்டர் பின்னர் கைவிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சாதனைத்தை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒட்டுமொத்தமாக 1 கோடி மாணவர்களுக்கு இது போன்ற கணினிகளை அளிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பொதுச் சந்தையில் விற்கப்படும் போது இதன் விலை மூவாயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாக இருக்கும். இந்தக் கணினியில் wifi எனப்படும் கம்பியில்லா இணைய வசதி உண்டு. அண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் மூலம் இது இயங்கும். இணையத்தில் இருக்கும் செய்திகளை வாசித்துச் சொல்லும் திறனும் இதற்கு உண்டு. டில்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் இக்கணினியை அறிமுகப்படுத்தினார். 1998 இல் ஆப்பிள் ஐ-மாக் கணினியை வெளியிட்டது. 2001 இல் ஐபாட்டையும், அதே ஆண்டு ஐரூன்சையும், 2007 இல் ஐபோனையும், 2010 ஐபாட்டையும் ஆப்பிள் வெளியிட்டது. இவை அனைத்தும் சந்தையில் மிக வரவேற்பைப் பெற்றுப் பெரும் தொகையில் விற்பனையாகின. இதனால் 2010 இல் 350 பில்லியன் பெறுமதியுடன் உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனமாக அப்பிள் மாறியது. இவர் வெளியே அறியப்பட்ட பெரும் கொடைகள் எதையும் செய்யவில்லை மாற்றாக தனது படைப்புக்களே உலகுக்கு தான் செய்யும் கொடை என்றும், அதுவே அவரை நிம்மதியாக நித்திரை கொள்ள வைக்கிறது என்றும் கூறினார் இவரது இறப்பு ஆப்பிள் நிறுவனத்தில் எதிர்கால புத்தாக்க நிலையை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. இவரது நெறிப்படுத்தல் இல்லாமல் ஆப்பிள் பழைமை பேணி புத்தாக்க வீச்சை இழந்துவிடும் என்று சிலர் எதிர்வு கூறுகிறார்கள் விக்கி செய்திகளில் தமிழில் தட்டச்சு செய்ய: 1) பக்கத்தின் முதல் வரியில் உள்ள “தமிழில் எழுத” இணைப்பினைத் தேர்வு செய்யுங்கள்: 2) செயலாக்குக என்ற சதுரப்பெட்டியைத் தெரிவு செய்யுங்கள் 4) இத்தேர்வு செய்த பின்னர் பக்கத்தில் அனைத்து பெட்டிகளிலும் நீங்கள் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சுக் கருவி தேர்வு செய்யப்பட்டிருப்பதின் அடையாளமாக, பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அவருடைய கவிதைகள் உண்மையிருப்பைத் தனித்தன்மையாக, செறிவான, ஊடுருவிக் காட்டும் தன்மையதாகவும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உண்மையிருப்பைப் புதுக்கண்ணோட்டத்துடன் காண ஓர் அணுக்கம் தருவதாக எண்ணுகிறார்கள். சுவீடன் தலைநகர் இசுட்டாக்கோமில் நோபல் பரிசு குழுவினால் நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவரது கவிதைகள் ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1974 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோபல் பரிசு பெறும் முதலாவது சுவீடியர் இவராவார். ஏப்ரல் 1931 பிறந்த இவர் 1956 ஆம் ஆண்டில் உளவியலில் பட்டம் பெற்றார். தனது 23 வது அகவையில் முதலாவது தொகுதிக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 80 வயதான தோமசு திரான்சிட்ரோமர் இலக்கியத்திற்கான நோபல் விருதை வெல்லும் 108வது நபர் ஆவார். 10 மில்லியன் சுவீடியக் குரோனர்கள் இவர் பரிசாகப் பெறுவார். உளவியல் நிபுணரான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்துள்ளார். இந்த ஆண்டு இலக்கியத்திற்கு என வழங்கப்படும் நோபல் பரிசு இறுதிச்சுற்றுப் பெயர்ப் பட்டியலில் இந்தியர்கள் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இலக்கியத்திற்கான ‌நோபல் விருது இந்தியருக்குக் கிடைக்க வாய்ப்பு அக்டோபர் 5, 2011 "பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான உரிமைகளுக்காக வன்முறையற்ற வழியில் போராடியதற்காக" இவர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. எலன் சர்லீஃப் லைபீரியாவின் தற்போதைய அதிபர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் இவர். லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பாடுபட்டவர். மேலும் பெண்களின் நிலையை வலுப்படுத்தவும், சமூக மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பாடுபட்டவர். லேமா குபோவீ ஒரு அமைதி ஆர்வலர். லைபீரியாவில் அமைதிக்கான இயக்கத்தை ஆரம்பித்து 2-வது உள்நாட்டுப்போரை 2003-ல் முடிவுக்குக் கொண்டு வந்தவர். மேலும் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு உறுதி ஏற்படுத்திக் கொடுத்தவர். தவக்குல் கர்மான் மத்திய கிழக்கின் ஏமன் நாட்டில் மக்களாட்சிக்காகவும் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் முக்கியப் பங்காற்றியவர். நோபல் அமைதிப் பரிசு பெறும் முதலாவது அரபுப் பெண் இவராவார். "இந்த மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு மூலம் இன்னும் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதை முடிவுக்குக் கொண்டுவர உதவிபுரியும் என நோபல் அமைதிப் பரிசுக்கான குழுவின் தலைவர் தோர்ப்ஜோன் ஜாக்லண்டு தெரிவித்தார். இதுவரையில் பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன் படலம் கண்டறியப்பட்டிருந்தது. ஏனைய கோள்களில் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் வானியலாளர்களின் முயற்சிக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியின் ஓசோன் படலம் வெள்ளியில் இருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளதாக பிரான்சின் லாட்மொஸ் ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த பிராங்க் மொண்ட்மெசின் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது பூமியினுடையதை விட மூன்று மடங்கு உயரமானதாகும். சப்பானின் அக்காட்சூக்கி விண்கலம் வெள்ளிக் கோளை அடையத் தவறியது டிசம்பர் 9, 2010 வெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன ஏப்ரல் 10, 2010 கொழும்பு, தெகிவளை கல்கிசை, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பகா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகரசபைக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, அம்பாந்தோட்டை சூரியவெவ ஆகிய 5 பிரதேசசபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 2010 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு படி நடைபெற இருக்கும் இத்தேர்தலில் 1,589,622 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் 420 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். 26 அரசியல் கட்சிகளும், 104 சுயேச்சைக் குழுக்களும் சார்பாக 5,488 பேர் போட்டியிடுகின்றனர். இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முடிவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சிக் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான அணியும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஏஜேஎம் முசம்மில் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன. தமிழ் கட்சியான மனோ கணேசன் தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணி இன்னொரு அணியாக போட்டியிடுகின்றது. இக்கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. கட்டம் கட்டமாக நடத்தப்படும் தேர்தல்களில் அரசு தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பிரசாரங்களிலும் ஏனைய அரசியல் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது என ஆரம்பத்திலிருந்தே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அப்பிரதேச நபர் உயிரிழந்துள்ளார். நாட்டில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் கடந்த மார்ச் 17 ஆம் நாள் முதற்கட்டமாக 245 உள்ளூராட்சி சபைகளுக்கும், இரண்டாம் கட்டமாக சூலை 23 இல் 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. இன்றைய 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் வாக்களிப்பு முடிவுற்றதும் இரண்டு உள்ளூராட்சி சபைகள் மாத்திரமே தேர்தல் நடத்துவதற்கு எஞ்சியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய இரு உள்ளூராட்சி சபை பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையாததால் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 23 உள்ளூராட்சி சபைகளுக்காக வாக்களிப்பு நடைபெற்ற இன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தில் இருகுழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்சுமன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்துள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்த பிரேமச்சந்திர இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றி வருகின்றார். அவரது மெய்ப்பாதுகாவலவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். காயமடைந்த துமிந்த சில்வா ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின்போது காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை தேர்தல் வன்முறை சம்பவங்கள் 24 பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பால மெதவத்த தெரிவித்துள்ளார். இதே பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அப்பிரதேச நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என காவல்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இத்தகைய மீத்திறன் கொண்ட களைகளை ஒழிப்பதற்கு உழவர்கள் வேறு சிக்கல் மிகுந்த வேதியியல் கலவைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. உழவர்கள் இந்தக் களைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய செலவுகளையும் எதிர்நோக்குகிறார்கள். உழவர்கள் நீண்ட நாட்கள் பயிரிட்டு வந்த இந்தக் களை எதிர்ப்பு தாவரங்களும் இனிப் பயிரிடப்பட முடியாதுள்ளது. கிளைபொசேட்டு எதிர்ப்புத் திறன் கொண்ட களைகள் 2002, 2003 ஆம் ஆண்டுகளில் தோன்றின. தென்மேற்கு இந்தியானாவில் சோயா பயிரிடும் நிலங்களில் 80 விழுக்காடு நிலத்தை இத்தகைய களைகள் பாதித்தன. இந்தக் களை எதிர்ப்புத் தாவரங்களை விற்பனை செய்யும் மொன்சான்டோ (Monsanto) உயிரித்தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இதற்கான தீர்வு காண பொறுப்பு உள்ளதா என விமர்சகர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லை மீறிய மீன்பிடிப்பை ஏதுவாக்கி, பல்வேறு கடல்களில் மீன்களின் முழுமையான அழிவுக்கு உதவியுள்ளன. இந்த அபாய நிலை பற்றி மீனவர்கள் உட்பட எல்லோரும் அக்கறை கொண்டு சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். அரச சட்டங்களும் புதிய தொழில்நுட்பங்களும் இந்த வகையில் உதவியுள்ளன. சிறிய சோனார் கருவிகள் டொல்பின்கள் வலையில் அகப்படுவதைத் தடுக்கின்றன. கப்பலில் அமையும் கண்காணிப்புக் கருவிகள் அருகிய நிலையில் இருக்கும் உயிரினங்கள் பிடிபட்டுள்ளனவா என்று அறிய உதவுகின்றன. சில சிறப்பு கொக்கிகள் அல்லது தூண்டில்களும் சில வகை மீன்கள் தப்ப உதவுகின்றன. புதிய வகை இழுவலைகள் சில குறிப்பிட்ட உயிரினங்களை மட்டும் இழுக்கும் வகையில் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு புதிய தொழில்நுட்பங்கள் பேண்தகு முறையில் மீன்பிடிப்புச் செய்ய உதவி செய்கின்றன. எனினும் தற்போதைய நிலையில் பல நாடுகளில் எல்லை மீறிய மீன்பிடிப்புத் தொடர்கிறது. மீன்பிடிப்பின் போது கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் 23 உள்ளூராட்சி சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் 245 பேரும், ஐதேகவில் 131 பேரும், ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியில் 5 பேரும், முஸ்லிம் காங்கிரசில் 11 பேரும், ஏனைய கட்சிகளில் 28 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கல்முனை மாநகரசபையை 11 இடங்களைப் பெற்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவதாக வந்துள்ளது. ஆளும் கூட்டணிக்கு 3 இடங்களும் ஐதேக விற்கு 1 இடமும் கிடைத்தன. 58 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக கண்டி மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நாட்டில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் இவ்வாண்டு மார்ச் 17 ஆம் நாள் முதற்கட்டமாக 245 உள்ளூராட்சி சபைகளுக்கும், இரண்டாம் கட்டமாக சூலை 23 இல் 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. மூன்றாவது கட்டமாக நேற்று 23 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய இரு உள்ளூராட்சி சபை பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையாததால் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகள் 11 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,524 வாக்குகள் 3 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 2,805 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய தேசிய கட்சி 101,920 வாக்குகள் 24 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 77,089 வாக்குகள் 16 உறுப்பினர்கள் ஜனநாயக மக்கள் முன்னணி 26,229 வாக்குகள் 6 உறுப்பினர் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 9,979 வாக்குகள் 2 உறுப்பினர்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணி 7,830 வாக்குகள் 2 உறுப்பினர்கள் சுயேட்ச்சைகுழு 2ம் இலக்கம் 4,085 வாக்குகள் 1 உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னணி 3,162 வாக்குகள் 1 உறுப்பினர் சுயேட்ச்சைகுழு 1ம் இலக்கம் 2,962 வாக்குகள் 1 உறுப்பினர் * தெகிவளை கல்கிசை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 39,812 வாக்குகள் 16 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 31,082 வாக்குகள் 11 உறுப்பினர்கள் ஜனநாயக மக்கள் முன்னணி 2,167 வாக்குகள் 1 உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னணி 1,568 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,275 வாக்குகள் 6 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 5,781 வாக்குகள் 3 உறுப்பினர்கள் ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி 1,237 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23,189 வாக்குகள் 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 20,087 வாக்குகள் 10 உறுப்பினர்கள் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1,248 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11,303 வாக்குகள் 6 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 10,667 வாக்குகள் 4 உறுப்பினர்கள் ஜனநாயக மக்கள் முன்னணி 938 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20,681 வாக்குகள் 9 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 12,619 வாக்குகள் 5 உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணி 1,449 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,578 வாக்குகள் 8 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 4,838 வாக்குகள் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11,836 வாக்குகள் 6 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 3,788 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,849 வாக்குகள் 10 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 5,028 வாக்குகள் 3 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23,539 வாக்குகள் 11 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 16,137 வாக்குகள் 7 உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணி 1,085 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,183 வாக்குகள் 8 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 4,742 வாக்குகள் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13,337 வாக்குகள் 10 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 6,982 வாக்குகள் 5 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34,488 வாக்குகள் 14 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 16,934 வாக்குகள் 6 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு 2,128 வாக்குகள் 1 உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னணி 1,561 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11,407 வாக்குகள் 9 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 4,751 வாக்குகள் 3 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு 05ம் இலக்கம் 552 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 15, 626 வாக்குகள் 11 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 6,820 வாக்குகள் 4 உறுப்பினர்கள் * கங்கவட்ட கோறளை பிரேதச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,083 வாக்குகள் 8 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 9,418 வாக்குகள் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,279 வாக்குகள் 4 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 5,388 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 22,679 வாக்குகள் 14 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 6,478 வாக்குகள் 3 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு 03ம் இலக்கம் 835 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,232 வாக்குகள் 16 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 24,712 வாக்குகள் 9 உறுப்பினர்கள் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1,588 வாக்குகள் 1 உறுப்பினர் * கொட்டிகாவத்த முல்லேரியா பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,998 வாக்குகள் 16 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 12,269 வாக்குகள் 5 உறுப்பினர்கள் * ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 26,723 வாக்குகள் 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 10,830 வாக்குகள் 5 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு 3 ம் இலக்கம் 2,178 வாக்குகள் 1 உறுப்பினர் லங்கா சமசமாஜ கட்சி 1,291 வாக்குகள் 1 உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45,286 வாக்குகள் 18 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி 25,224 வாக்குகள் 9 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு 1 ம் இலக்கம் 3,478 வாக்குகள் 1 உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னணி 1,585 வாக்குகள் 1 உறுப்பினர் இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம் அக்டோபர் 8, 2011 இலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு அக்டோபர் 8, 2011 கடந்த சனிக்கிழமை அன்று முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் இரும்புக் கம்பிகளுடன் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து மாணவியரும், ஆசிரியைகளும் ஆடம்பரமாக பொருத்தமில்லாத உடையணிந்து வருவதாக குற்றம்சாட்டி, அவர்களை இரும்புக் கம்பிகளால் அடித்துத் தாக்கியுள்ளனர். அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து வர வேண்டும், அனைவரும் தலையில் அணியும் ஹிஜாப் அணிந்து வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து நகரில் மக்கள் மத்தியில் அச்சம் பரவியது. பல பள்ளிகள் மூடப்பட்டன. அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் ரியாதில் கடந்த வெள்ளி அன்று இந்தத் தொழிலாளர்கள் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். 2007 ஆம் ஆண்டில் எகிப்தியரான பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் மூன்று வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வேறு கொலைக்குற்றம் தொடர்பாக மேலும் 5 வங்காளதேசத் தொழிலாளர்கள் மரணதண்டனையை எதிர் நோக்கியுள்ளனர். வங்காளதேசத் தொழிலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டதற்கு மனிதநேயத்தைப் பேணும் எவரும் கண்டிக்க வேண்டும் என மனித உரிமைக் குழுக்கள் கோரியுள்ளன. சவுதி சட்டப்படி இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், பொது மக்கள் முன்னிலையில் இவ்வாறு நிறைவேற்றுவது வங்காளதேசத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்குப் பெரிதும் மன அழுத்தத்தையும் வேதனையையும் அளிக்கும் என வங்காலதேசத்தின் மனித உரிமை பேணும் ஐன் ஒ'சாலிசு கெண்ட்ரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக வெளிநாட்டு வேலையாட்கள் அரபி மொழியில் உள்ள சவுதி சட்டங்களைத் தெளிவாக விளங்கிக்கொள்வதில்லை, மற்றும் தமக்காக வாதாடுவதற்காக வழக்கறிஞர்களை அவர்கள் பெறுவது அரிது என அக்குழு தெரிவித்துள்ளது. ரமழான் பண்டிகை முடிந்த பின்னர் சவுதி அரேலியாவில் மரணதண்டனைகள் பெருமளவு நிறைவேற்றப்படுவதாக பன்னாட்டு மன்னிப்பகம் கூறியுள்ளது. மரணதண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் வளரும் நாடுகளில் இருந்து வந்து தொழில் புரிபவர்களே என அவர்கள் தெரிவிக்கின்றனர். சவுதி அரேபியாவில் இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான வங்காளதேசிகள் தொழில் புரிகின்றனர். "ஒக்கியூப்பை வோல் ஸ்ட்ரீட்" பல தரப்பட்ட மக்களையும், அவர்களது பல தரப்பட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கியது. எனினும், அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் வணிக நிறுவனங்கள் அல்லது காப்பிரேசங்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும், அங்கு அதிகரித்து வரும் ஏற்ற தாழ்வை எதிர்த்தும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவில் சிறிய பணக்கார வர்க்கம் அதீத செல்வாக்கை அரசுகள் மீது பிரயோகிப்பதாகவும், அதனால் தமது குரல்கள் யாருக்கும் கேட்கவில்லை என்றும், அதனாலேயே இத்தகைய போராட்டங்கள் அவசியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பல அரசியல் ஆய்வாளர்கள் ஒக்கியூப்பை வோல் இசுரீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தேனீர் கட்சி வழிமுறைகளுடன் ஒத்து இருப்பதாகவும், ஆனால் கொள்கையில் நேர் எதிராக இருப்பதையும் சுட்டியுள்ளனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 1 அன்று 700 வரை கைது செய்யப்பட்டதாக நியூயோர்க் டைம்சு செய்தி வெளியிட்டது. நோபல் பரிசை வென்றெடுத்துள்ள இருவரும் பேரினப் பொருளாதாரம் macro economics தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். வட்டியை அதிகரித்தல், வரியில் மாற்றங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைககள் எவ்வாறு பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். தொமசு சார்ஜென்ட், 68, நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியை இவர் ஆராய்ந்தவர். இக்காலத்திலேயே பெரும்பாலான நாடுகள் ஆரம்பத்தில் பணவீக்கத்தை அதிகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு, பின்னர் தமது பொருளாதாரக் கொள்கையில் திட்டமிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தி பணவீக்கத்தைக் குறைத்தன. 1895 ஆம் ஆண்டு அறிமுகமான நோபல் பரிசில், பொருளியலுக்கான நோபல் பரிசு 1969 ஆண்டு தொடக்கமே வழங்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு வழங்கும் வைபவம் ஸ்டொக்ஹோமில் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் விடுவிக்கப்படுவர் என அரசு அறிவித்திருந்தாலும், இவர்களில் எத்தனை பேர் அரசியல் கைதிகள் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆனாலும் 150 இற்கும் அதிகமான அரசியல் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை அடுத்து சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். மியான்மரில் 2000 க்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகளாக இருப்பதாகவும் மேலும் பல ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், பெளத்த பிக்குகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மியன்மரின் மிகவும் மோசமான சிறைச்சாலை எனக் கருதப்படும் யங்கூன் சிறைச்சாலை உட்பட 42 சிறைச்சாலைகளிலும், 109 தடுப்பு முகாம்களிலும் 60 ஆயிரம் கைதிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. உக்ரைனின் அரசு எரிபொருள் நிறுவனம் நாஃப்டோகாஸ், உருசியாவின் காஸ்புரொம் ஆகியவற்றுடனான இந்த உடன்பாட்டை பேரம் பேசும்போது தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உருசியாவின் எரிவாயு குழாய்கள் மூலமாக உக்ரைன் ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இரு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக முறுகல் நிலை நீடித்து வருகிறது. திமொசென்கோ அரசியலில் வருவதற்கு முன்னர் பொருளியல் மற்றும் கல்வித்துறையில் செயலாற்றி வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னரே எரிவளி தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். 2004ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு சனவரி வரை நடந்த செம்மஞ்சள் புரட்சிக்குத் தலைமையேற்று உக்ரைனின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில், விக்டர் யானுகோவைச்சிடம் தோல்வியுற்றார். முதலில் தேர்தல் முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தோல்வியை ஏற்க மறுத்த திமொசென்கோ, 2010 பெப்ரவரி 20 அன்று "நீதிமன்றத்தில் உண்மை வெளிப்படாது" என்று கூறி தமது முறையீட்டை மீளப் பெற்றுக்கொண்டார். சனநாயகவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள செனட் சபையில் 63-35 என்ற அடிப்படையில் இம்முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. சீனா தனது 'யுவான்' நாணயத்தை, டாலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால், சீன ஏற்றுமதியாளர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும், இதனால் அமெரிக்காவில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் எனவும், அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையிலே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க வேலையில்லா திண்டாட்டத்திற்கு தனது நாணய மதிப்பு காரணமல்ல எனவும், 2005 முதல் இதுவரை, யுவானின் மதிப்பை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சீனா மறுப்பு தெரிவித்து வந்தது. மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதுபோன்ற நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கிடையில் வணிகப் போரைத் தான் உருவாக்கும் என எச்சரித்துள்ளது. அதிபர் ஒபாமா இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. [[இலங்கை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜரத்தினம் (அகவை 54 உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் 236ம் இடத்தில் இருந்தார். நியூயோர்க்கில் கெலோன் குழுமத்தை ஆரம்பித்து, அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். பன்னாட்டு நிறுவனங்களில் உயர்மட்டத்திலுள்ள நண்பர்கள், நெருங்கியவர்கள் மூலம் தகவல்களைப் பெற்று, அதன் மூலம் பிரபல நிறுவனங்களின் பங்குகளை, அதிக விலைக்கு விற்றும், குறைந்த விலைக்கு வாங்கியும் லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் 75 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கோல்ட்மேன் சாக்ஸ், இன்டேல், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை ராஜ் ராஜரத்தினம் வாங்கி விற்றுள்ளார். 2007ம் ஆண்டு இவரது கெலோன் நிறுவனத்தின் மதிப்பு பல கோடியை எட்டியது. இந் நிலையில் இவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அமெரிக்க நிதித்துறையினர் இவரை கண்காணிக்க ஆரம்பித்தனர். இவரது தொலைபேசிகள், பேக்ஸ், மெயில் ஆகியவை உளவு பார்க்கப்பட்டபோது, இவரது மோசடிகள் அம்பலத்துக்கு வந்தன. கிட்டத்தட்ட இவரை 1 ஆண்டு காலமாக இரகசியமாகக் கண்காணித்த உளவுத்துறையினர் 2009ஆம் ஆண்டு அவ‌ரைக் கைது செய்‌தனர். அவர் மீது 14 குற்றச்சா‌ட்டுகள் கூற‌ப்ப‌ட்டன. ‌நியுயார்க் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில், 12 நீதிபதிகளை கொண்ட குழு கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இ‌ந்த வழ‌க்‌கி‌ல் அனைத்து குற்றச்சா‌ட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி, ராஜரத்தினத்தை குற்றவாளி என கடந்த மே மாதத்தில் நீதிபதிகள் அறிவித்தனர். 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்த நிலையில் ராஜரட்னத்தின் நோய்களைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரினர். இதனையடுத்து அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. நவம்பர் 28 இல் சிறைக்குச் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார் மே 12, 2011 ராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம் மார்ச் 23 2011 வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது அக்டோபர் 17, 2009 ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த இரண்டு விமானிகள் உயிர் தப்பியவர்களில் அடங்குவர் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. பிஎன்ஜி டாஷ்-6 என்ற விமானம் லாய் என்ற இடத்தில் இருந்து மடாங் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் மடாங் இலிருந்து 20 கிமீ தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வீழ்ந்தது. நிவாரணப் பணியாளர்களும், பாதுகாப்புத் துறையினரும் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், விசாரணைகளைத் தொடர்ந்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்தவர்கள் அனைவரும் பப்புவா நியூ கினி மக்கள் ஆவர். மடாங் பல்கலைக்கழகத்தில் தமது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பெற்றோர்களே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எனக் கூறப்படுகிறது. உள்ளூரில் வசிக்கும் மக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு உதவிக்கு விரைந்ததாகவும் காயமடைந்தவர்களை வெளியே அவர்கள் உதவியதாகவும் ஆத்திரேலியத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டில் இருந்து 20 இற்கும் அதிகமான விமானங்கள் பப்புவா நியூ கினியில் விபத்துக்குள்ளாகியுள்ளன. 1941 ஆம் ஆண்டு பிறந்த டெனிஸ் ரிட்சி தன் 30 ஆவது வயதில் யூனிக்ஸ் இயங்குதளத்தினைத் தந்தவர். நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த இவர் கடந்த புதன்கிழமையன்று நியூஜெர்சியில் காலமானார். ரிட்ச்சி பெல் ஆய்வுகூடங்களில் லூசெண்ட் டெக்னலாஜீஸ் ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் தன் நண்பர்களுடன் இணைந்து எழுதிய சி நிரலாக்க மொழி நூல், இன்றும் கணினி மாணவர்களால் ஓர் அடிப்படை நூலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவர் உருவாக்கிய சி மொழி பின்னர் பல மொழிகளுக்கும், குறியீடுகளுக்கும், திறந்த மூலத் திட்டத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது. இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பாய யுனிக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது. இப்பிரச்சினை குறித்து பிரித்தானிய அமைச்சரவையின் செயலாளர் சேர் கஸ் ஓ'டொன்னெல் அவர்களின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. லியாம் ஃபொக்ஸ், அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற வகையிலோ அவரது நண்பர் ஆடம் வெரிட்டி எந்தப் பதவியிலும் நியமிக்கவில்லை. எனினும் வெரைட்டி தமது சொந்தத் தொடர்பு அட்டையில் லியாம் ஃபொக்சின் ஆலோசகர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். ஃபொக்சுடன் சுமார் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். சுமார் 40 அதிகாரபூர்வக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சர்ச்சை குறித்து கடந்த திங்களன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய லியம் ஃபொக்ஸ், இலங்கையில் மீள் இணக்கப்பாட்டை கொண்டுவர தான் ஸ்ரீலங்கா டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்பை 2009 ல் உருவாக்கியதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த அமைப்பு இவரின் இலங்கைப் பயணத்துக்கு பணம் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. இவர்கள் தேசிய படையினருக்கு ஆலோசனை, மற்றும் "தகவல்களை" வழங்குவர் என ஒபாமா அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். உகாண்டாவில் ஒரு சிறிய அமெரிக்கப் படையினர் ஏற்கனவே சென்றுள்ளனர். தேவையெற்படும் பட்சத்தில் ஏனைய மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மத்திய ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொதுமக்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், மற்றும் கடத்தல் போன்றவைகளுக்கு எல்ஆர்ஏ எனப்படும் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவத்தினரே (Lord's Resistance Army) பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோசப் கோனி என்பவர் இக்குழுவிற்குத் தலைவராக இருக்கிறார் கொல் அல்லது கைப்பற்று" என்ற கொள்கையையே அமெரிக்கப் படையினர் கடைப்பிடிப்பர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எல்ஆர்ஏ இயக்கத்தின் ஆயுதங்களைக் கலைவது மற்றும் அவ்வியக்கத்தின் தலைவரை நீதிமன்றில் நிறுத்துவது போன்றவற்றுக்கு உதவுவது குறித்து அண்மையில் அமெரிக்காவில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனையடுத்தே அமெரிக்க அதிபர் துருப்புக்களை அனுப்ப முடிவு செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் உகாண்டாவின் வடக்குப் பகுதியில் குறைந்தது 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளனர். சிறுவர்கள் கடத்தப்பட்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாகவும், பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குழு கொங்கோ சனநாயகக் குடியரசு, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற அயல் நாடுகளில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா, மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையிலே நேற்று மாலை அவர் சரணடைந்தார். எதியூரப்பா மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதெனவும், சுரங்க நிறுவனத்திடம் இருந்து எதியூரப்பாவின் மகன்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும், அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் எனவும் லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது. இதையடுத்து சூலை மாத இறுதியில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். கருநாடக முதல்வர் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி]] கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு]] கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலகினார்]] குறைந்தது 30 அங்கத்தவர்கள் இணைந்து தொழிற்சங்கங்களை அமைக்கலாம் என்றும், வேலைநிறுத்தம் மேற்கொள்ளுவதற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் இடத்து அவை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டில் இருந்து தொழிற்சங்கங்கள் பர்மாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு இம்மாறங்களை வரவேற்றுள்ளது. பர்மாவின் புதிய அரசு அண்மைக்காலங்களில் கொண்டுவந்திருக்கும் முக்கிய அரசியல் சீர்திருத்தங்களில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தொழிலாளர்களின் ஒரு சில உரிமைகளாவது தரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என ஆங் சான் சூச்சியின் சனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் பேச்சாளர் நியான் வின் தெரிவித்தார். இவ்வார ஆரம்பத்தில் 200 இற்கும் அதிகமான அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தனர். பழனியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கடந்த சனி முதல் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. பழனி நகரில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 24 மணி நேரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. இங்குள்ள வர்தமான் அணையின் நீர்மட்டம் 58அடியாக உள்ளது. பழனிமலையில் உள்ள தண்டபாணி கோவிலுக்கு கோவில் யானைகள் செல்லும் விதமாக படிகள் இல்லாத வழி அமைக்கப்பட்டுள்ளது. பிற பாதைகள் கட்டமைக்கப்படுவதற்கு முன்னரே இது கட்டப்பட்டது. நேற்று பெய்த பலத்த மழையினால் இப்பாதையில் வள்ளிசுனை என்ற ஊற்று இருக்குமிடத்திற்கு அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை மேலிருந்து வழிந்த நீரும் ஊற்று நிரும் பாய்கையில் பாதையின் மேலுள்ள மணல் மற்றும் ஜல்லிக்கற்களைப் புரட்டி இந்த நிலச்சரிவை ஏற்படுத்தியது. இருப்பினும் பக்தர்களுக்கும் பிறருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று கார்த்திகை விரதம் என்பதால் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்தனர். எதிர்வரும் கந்தசட்டி விழாவினை ஒட்டி பெருந்திரளான பக்தர் கூட்டத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நிலச்சரிவு கோவில் நிர்வாகத்தைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய 2 நாட்கள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். [[இலங்கை]]யில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வலிந்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சி ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன. அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை படையினரும் காவல்துறையினரும் தடுக்க முற்பட்ட போதும் பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது. 'வடபகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விலக்கக் கோரி தற்போது நாம் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட் டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பொது மக்களை இடையில் வைத்து தடுத்து நிறுத்திய படையினரும் காவல்துறையினரும் அவர்கலைத் திருப்பி அனுப்ப முயற்சித்ததுடன் நகரசபை பிரதான நுழைவாயிலும் காவல்துறையினரால் மூடப்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் படையினருடன் முரண்படவே பின்னர் நகரசபை மைதான வாசல் திறக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இங்கு கட்சித் தலைவர்களின் கருத்துரைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்றது. அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு மாலை 4 மணிக்கு பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுவிக்கப்பட்ட சாலித் காசாவில் இருந்து எகிப்து கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இசுரேலுக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் இசுரேலிய உலங்குவானூர்தி ஒன்றின் மூலம், விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்று, பின்னர், அவரது குடும்பத்தினரிடம் ஒப்புவிக்கப்படுவார். இதற்கிடையில், கைதிகள் பரிமாறும் உடன்படிக்கையின் படி, முதற்கட்டமாக இசுரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள 477 பாலத்தீனக் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு காசா வந்து சேர்ந்தனர். மேலும் 550 பேர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர். சார்ஜண்ட் சாலித் (வயது 25) 2006 ஆம் ஆண்டில் இசுரேலினுள் சுரங்க வழியாக வந்த ஹமாசுப் போராளிகளினால் கைப்பற்றப்பட்டார். தான் தடுத்துவைக்கப்பட்டபோது, தனியாக உணர்ந்ததாகவும், ஆனால், என்றாவது ஒருநாள் தான் விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அவர் எகிப்தியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். தனது விடுதலை பாலத்தீன மற்றும் இசுரேலியர்களுக்குமிடையே ஒரு நாள் அமைதி ஓப்பந்தத்துக்கு வழிவகுககும் என்று நம்புவதாக அவர் கூறினார். இன்று இரண்டாவது கட்டமாக 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்களிக்க 38 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு (தலா 2) வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு இணையக்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு அக்டோபர் 17, 2011 யாழ்நகரின் வடக்கில் பன்னிரண்டு மைல் தொலைவில் தெல்லிப்பழை என்னும் அழகிய கிராமம் உள்ளது.இதனை அண்மிய சிற்றூர் கட்டுவன். இது நீர்வளம்,நிலவளம்,கற்றோர்வளம்,சான்றோர்வளம் எனபல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த செம்மண் நிலப்பரப்பாகும். மேற்கே காங்கேசன்துறை வீதி,கிழக்கே பலாலி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை கொண்டபெருநிலப்பரப்பில்.மயிலிட்டி,குப்பிளான்,குரும்பசிட்டி,புன்னாலைகட்டுவன், சுன்னாகம்,மல்லாகம் என அயலூர்களை எல்லையாக கொண்ட ஊராகும். குர்திய மாகாணமான ஹக்காரியில் இடம்பெற்ற இத்தாக்குதல், கடந்த பல ஆண்டுகளக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் துருக்கியப் படையினருக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு எனக் கூறப்படுகிறது. தென்கிழக்கு பிட்லிசு மாகாணத்தில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டு அடுத்த நாள் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல்களை அடுத்துப் போராளிகள் நிலைகொண்டுள்ள வடக்கு ஈராக்கினுள் தமது படையினர் நுழைந்துள்ளதாக அரசு கூறியுள்ளது இத்தாக்குதலுக்கு நாம் முறையான பதிலடி கொடுப்போம் என அரசுத்தலைவர் அப்துல்லா குல் தெரிவித்தார். குர்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் கிழக்குப் பகுதியில் அதிக சுயாட்சி வழங்கக் கோரி குர்தியப் போராளிகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். 1984 ஆம் ஆண்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மீண்டும் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகத்தின் தரப்பில் தலைமைச் செயலர் மற்றும் காவல் துறைத் தலைவர் ஆகியோரது கருத்துக்களுடன் புதிய மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க, விமான நிலையத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் வரை முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உறுதியளிக்கப்பட்டது. கர்நாடக அரசு இவ்வாறு உறுதியளித்திருக்கும் நிலையில், அந்தப் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்புவது நியாயம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள். பாதுகாப்புக் காரணங்களால், சிறப்பு நீதிமன்றம், அக்ரஹாரத்தில் மத்திய சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கர்நாடகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா முதலில் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதையடுத்து, உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்சநீதிமன்றமும் அதை ஏற்க மறுத்துவிட்டது. ஜெயலலிதாவின் யோசனைப்படி, அக்டோபர் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. முன்னதாக கடாபியின் கால்கள் இரண்டிலும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் பிடிபட்டுள்ளதாக அரசுப் படையினர் அறிவித்திருந்தனர். லிபியாவின் பதில் பிரதமர் மகுமுத் ஜிப்ரில் கடாபி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். உயிருடன் பிடிபட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் அவர் கொல்லப்பட்டார் என அவர் தெரிவித்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வழியில் அவர் இறந்துள்ளார். வீதிகளில் அவர் இழுத்துச் செல்லப்பட்டதைக் காட்டும் காணொளிகள் காட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் அப்போது உயிடன் இருந்தாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் லிபியப் புரட்சி இன்று வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் லிபியாவுக்கு ஒரு முக்கிய நாள்" எனக் கூறினார். 1969ம் ஆண்டு லிபியாவின் தலைவரான கேணல் கடாபி தொடர்ச்சியாக லிபியாவை ஆட்சி செய்து வந்தார். அண்மையில் கடாபி பதவி விலக வேண்டுமென அந்த நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்கள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கடாபி அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே கிளர்ச்சிக் குழுவினருக்கும் கடாபியின் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கடாபி பதவி விலக வேண்டும் என்ற கிளர்ச்சிக் குழுவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி கடாபியின் படைகள் மீது நேட்டோ படைகளை அனுப்பி தாக்குதல்களும் நடத்தின கடாபி கடந்த ஆகத்து மாதத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தலைநகர் திரிப்பொலியை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியதை அடுத்து கடாபி தலைமறைவானார். அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளனர் அல்லது தலைமறைவாயுள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் தவிர, நீதிமன்றத்துக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. நீதிபதியின் உத்தரவின்பேரில், பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் வந்திருந்தனர். 359 சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் சாராம்சத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கேள்விகளை நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா முன்னிலையில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஜெயலலிதாவிடம் கேட்கத் தொடங்கினார். கொடநாடு மாளிகை, திருநெல்வேலியில் விவசாய நிலம் வாங்கியது, போயஸ் தோட்டம் புதுப்பிக்கப்பட்டது, பங்குகளை வாங்கியது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 1005 கேள்விகள் ஜெயலலிதாவிடம் இன்று கேட்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் அக்டோபர் 20, 2011 பாஸ்க் போராளிகளின் இவ்வறிவிப்பை வரவேற்றிருக்கும் எசுப்பானியப் பிரதமர் ஓசே சப்பாட்டெரோ சனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார். பாஸ்க் போராளிகள் இதற்கு முன்னரும் பல தடவை இவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவித்து அதனைப் பல முறை மீறியுள்ளதால், அரசியல்வாதிகள் இவர்களின் உறுதி மொழிகளைப் பொதுவாக நம்புவதில்லை. அரசும் இவர்களின் அறிவிப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. ஆனாலும், இம்முறை இவ்வறிவிப்பு வித்தியாசமானதாக இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். ஏட்டா போராளிகள் அமைதி முறைக்கு தமது போராட்டத்தைக் கொண்டு செல்லவிருப்பதாக நேற்ரைய அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். மூன்று ஏட்டா போராளிகள் தமது வழமையான பாஸ்க் தொப்பி, மற்றும் வெள்ளை முகமூடி அணிந்த வண்ணம் தோன்றி இந்த அறிவிப்பை விடுத்திருந்தனர். பாஸ்க் மக்களின் போராட்டம் குறித்த பன்னாட்டு மாநாடு ஒன்று இவ்வாரம் பாஸ்க் நாட்டில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனான், மற்றும் வடக்கு அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களில் கலந்து கொண்ட முக்கியத்தர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். ஏட்டா உடனடியாக ஆயுதங்களைக் களைய வேண்டும் என அம்மாநாட்டில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. நவம்பர் மாதத்தில் எசுப்பானியாவில் பொதுத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதனால் புதிய அரசாங்கம் ஏட்டா போராளிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டி இருக்கும் என சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அல்ஃபிரெடோ பெரெசு ருபல்காபா தெரிவித்தார். திரு. சப்பாட்டேரோ இம்முறைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. இசுப்பானிய பாஸ்க் போராளிகள் போர்நிறுத்தத்தை அறிவித்தனர் செப்டம்பர் 5, 2011 எட்டா போராளிகளின் இராணுவத் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பிரான்சில் கைது மே 20, 2010 "ஒளியனைத்துக்கும் ஊற்றாய் இருக்கின்ற இறைவன் உங்கள் உள்ளங்களையும், இல்லங்களையும், சமூகங்களையும் ஒளிர்வித்து, உங்களுக்கு அமைதியையும் நல்வளத்தையும் நல்குவாராக என்று அக்டோபர் 20ஆம் நாள் "பல்சமய உரையாடல் சங்கம்" வெளியிட்ட வாழ்த்துச் செய்தி கூறுகிறது. அச்சங்கத்தின் தலைவர் கர்தினால் ழான்-லூயி தோரான் மற்றும் செயலர் பேராயர் பியெர் லூயிஜி செலாட்டா ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட அச்செய்தி உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பெயரால் வெளியிடப்பட்டது. மூன்று நாள் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 26ஆம் நாள் தொடங்குகிறது. வத்திக்கானில் அமைந்துள்ள "பல்சமய உரையாடல் சங்கம்" ஒவ்வொரு ஆண்டும் இத்தகு வாழ்த்துச் செய்தியை வழங்குகிறது. இந்த ஆண்டுச் செய்தி "மதச் சுதந்திரம்" என்னும் மையப் பொருளைக் கொண்டுள்ளது ஒரு குறிப்பிட்ட குழுவினர் தாம் தெரிந்துகொண்ட மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களைப் பற்றித் தவறான எண்ணங்களையும் முற்சாய்வான கருத்துக்களையும் கொண்டு, அவர்களை வெறுப்பதும் ஒதுக்கிவைப்பதும் துன்புறுத்துவதுமாகிய செயல்களில் ஈடுபடுவது முறையாகாது" என அச்செய்தி கூறுகிறது. மதச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும் எங்கே மதச் சுதந்திரம் ஆபத்துக்கு உள்ளாகிறதோ, மறுக்கப்படுகிறதோ, அங்கே மற்றெல்லா உரிமைகளும் மறுக்கப்படும் ஆபத்து எழுகிறது. தனியாரோ, குழுக்களோ, சமூகங்களோ, நிறுவனங்களோ யாரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஏற்றுக் கடைப்பிடிக்க நிர்ப்பந்தம் செய்வது முறையாகாது" என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் கிறித்தவ எதிர்ப்பு வன்முறை நடந்ததன் பின்னணியில் மேற்கூறிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கிறித்தவர்களுக்கு எதிராகச் சில தீவிரவாத இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டு அவர்களை வீடுகளிலிருந்து துரத்தி, அவர்களது வழிபாட்டு இடங்களை அழித்தனர். "பல்சமய உரையாடல் சங்கம்" வெளியிட்ட செய்தி, மதச் சுதந்திரம் தனிமனிதரோ குழுக்களோ தனிப்பட்ட முறையிலும் பொது வாழ்விலும் தாம் தெரிந்துகொண்ட சமயத்தை வெளிக்கட்டாயமின்றி கடைப்பிடிக்கவும் அறிக்கையிடவும் உரிமைகொண்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அச்சுதந்திரத்தை ஆட்சியாளர்களும், குழுக்களும் தனிமனிதரும் மதிக்க வேண்டும். ;மதச் சுதந்திரத்தை மதிப்பதே அமைதிக்கு வழி மதச் சுதந்திரம் மதிக்கப்படாவிட்டால் "உண்மையான, நிலையான அமைதி" ஏற்பட இயலாது என்றும் அச்செய்தி கூறுகிறது. எனவே, நீதியின் அடிப்படையில் அமைந்ததொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால், சமய நம்பிக்கையுடையோர் அவர்களோடு வாழ்கின்ற பிற மக்களோடு இணைந்து ஆர்வத்தோடு ஒத்துழைக்க முன்வர வேண்டும். சமய நம்பிக்கையுடையோர் மனித உயிரைக் காப்பதிலும், குடும்பத்தின் மாண்பைப் பேணுவதிலும், குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதிலும், பொதுவாழ்வில் நேர்மையை வளர்ப்பதிலும், இயற்கை வளங்களை வீணடிக்காமல் இருப்பதிலும் கருத்தைச் செலுத்தி, பொது நலனை முன்னேற்றிட தம்மையே அர்ப்பணிக்க வேண்டும். "எல்லா மனிதருக்கும் மதச் சுதந்திரம் உண்டு என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, மதச் சுதந்திரத்தைப் பேணுவது நமது கூட்டுப்பொறுப்பு என்பதை உணர்ந்து ஒத்துழைக்க முன்வருவோம். தீபாவளிக் கொண்டாட்டம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அமையட்டும்" என்று "பல்சமய உரையாடல் சங்கம்" வாழ்த்துக் கூறியுள்ளது. அக்டோபர் 27ஆம் நாள் அசிசியில் நிகழவிருக்கின்ற கூட்டத்திற்கு "உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்" என்னும் பொருள் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கர்தினால் டர்க்சன் மேலும் கூறியபோது 25 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததுபோலவே, இன்றைய உலகுக்கும் அமைதி தேவை. உலக சமயங்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு ஒத்துழைத்ததைத் தொடர்ந்து, அந்த ஒத்துழைப்பின் பலன்களை மதிப்பீடு செய்து, புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக மீண்டும் நம்மை அர்ப்பணிப்பது தேவை என்றார். தம் செய்தி உரையின்போது கர்தினால் டர்க்சன், இந்த ஆண்டு அமைதிக் கூட்டத்தில் நிகழவிருக்கின்ற ஒரே "பொது இறைவேண்டல் public prayer கத்தோலிக்க இறைவேண்டலாகவே இருக்கும் என்றும், அந்த இறைவேண்டலைக் கூட்டத்திற்கு முந்தின நாள் மாலையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புனித பேதுரு பெருங்கோவிலில், கத்தோலிக்க நம்பிக்கைகொண்டவர்களோடு முன்னின்று நடத்துவார் என்றும் கூறினார். பின்னர் உலக சமயத் தலைவர்கள் சிறிதளவு நண்பகல் உணவு frugal lunch அருந்துவார்கள். அருகிலிருக்கும் பிரான்சிஸ்கு சபை விடுதியில் ஒவ்வொருக்கும் ஒரு தனியறை கொடுக்கப்படும். அங்கே அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் அமைதி காத்தல், தியானம் அல்லது இறைவேண்டல் செய்வதில் ஈடுபடலாம். மாலை வேளையில் சமயத் தலைவர்கள் அசிசியின் புனித பிரான்சிசு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்குச் செல்வார்கள். அங்கே, அமைதிக்காக உழைக்கும் தீர்மானத்தைப் புதுப்பிப்பார்கள். யூத-கிறித்தவ சமய பிரதிநிதிகள் தவிர, 176 பிற சமயத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பர். அவர்களுள் 50 பேர் முசுலிம்கள். இந்த எண்ணிக்கை 1986இல் நிகழ்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முசுலிம் தலைவர்களைவிட ஐந்து மடங்கு கூடுதல் ஆகும். "வேறு அலுவல் காரணமாக" தலாய் லாமா இந்த ஆண்டு அசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று "நீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கம் Pontifical Council for Justice and Peace என்னும் வத்திக்கான் அமைப்பின் செயலர் ஆயர் பியேர் செலாட்டா கூறினார். கிறித்தவ உலகிலிருந்து 31 பிரதிநிதிகள் பங்கேற்பர். முக்கிய திருச்சபைத் தலைவர்களாகிய காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு, உலக ஆங்கிலிக்கன் திருச்சபைத் தலைவர் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இத்தலைவர்களை அழைப்பதற்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முடிவுசெய்தது பற்றி "பண்பாட்டுக்கான திருத்தந்தை சங்கம் Pontifical Council for Culture என்னும் வத்திக்கான் அமைப்பின் அலுவலர் மொன்சிஞ்ஞோர் அந்திரேயா பல்மியேரி Monsignor Andrea Palmieri கீழ்வருமாறு கூறினார் ஆண் பெண் இருபாலாரும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுள் பற்றிய தேடலில், பரம்பொருளைக் கண்டடையும் தேடலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, எல்லா மனிதருமே உண்மையின் முழுமையை நோக்கிப் பயணம் செய்கின்ற திருப்பயணிகள்தாம். இந்த அடிப்படையில்தான் நாத்திகரையும் அசிசி கூட்டத்திற்கு அழைக்க திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முடிவு செய்தார்." கத்தோலிக்க கிறித்தவத்தைக் கடுமையாக விமர்சிப்பவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மெய்யியலாருமான ஆண்டனி க்ரேலிங் Anthony Grayling என்பவர் கடைசி நேரத்தில் அசிசி கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக் கொண்டார். அவர் கூறியது: "சமூகத்தில் மதங்கள் வகிக்கும் இடம் என்னவென்பது குறித்து திருத்தந்தையோடு கருத்துப் பரிமாற்றம் நிகழும் என்று முதலில் கூறப்பட்டதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் இது ஒரு சிறிய நிகழ்ச்சியாகிவிட்டது. அழைக்கப்பட்டவர்கள் திருத்தந்தையோடு திருப்பயணமாகக் கூடச் செல்வதுதான் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவதால் விலகிக் கொள்ள முடிவுசெய்தேன்." ;1986 அசிசி கூட்டத்திற்கும் இவ்வாண்டு கூட்டத்திற்கும் இடையே வேறுபாடு காலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் முதன்முறையாக அசிசியில் உலக அமைதியைப் பேணுவதற்காக சமயத் தலைவர்களை ஒன்றுகூட்டி இறைவேண்டல் நிகழ்த்த முடிவுசெய்தார். எனவே அந்த முதல் கூட்டம் அமைதிக்கான உலக இறைவேண்டல் நாள் World Day of Prayer for Peace என்று அழைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 160 உலக சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஒரு நாள் முழுதும் நோன்பு காத்தலிலும் இறைவேண்டல் செய்வதிலும் செலவிட்டனர். 32 கிறித்தவ சபைகளிலிருந்து பல பிரதிநிதிகளும், 11 கிறித்தவமல்லா சமயங்களிலிருந்து பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கத்தோலிக்க சமயத்திற்கும் வேறு சமயங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், எல்லா சமயத்தாரையும் ஒரே இறைவேண்டல் நிகழ்ச்சியில் இணைத்தது ஏற்புடையதல்ல என்று சில கத்தோலிக்க குழுக்கள் விமர்சித்தன. ;அசிசியில் நிகழ்ந்த பிற அமைதி கூட்டங்கள் 1993ஆம் ஆண்டு அசிசியில் உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டம் நிகழ்ந்தது. அச்சமயம் போஸ்னியாவில் நிகழ்ந்த போர் விரைவில் முடியவேண்டும் என்னும் கருத்துக்காக இறைவேண்டல் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கிறித்தவர், யூதர் மற்றும் முசுலிம்கள் கலந்துகொண்டனர். 2002ஆம் ஆண்டு, சனவரி 24ஆம் நாள் அசிசியில் நடந்த உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டத்தில் 200 சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் கத்தோலிக்க கிறித்தவ கர்தினால்கள், முசுலிம் இமாம்கள், யூத ரபிக்கள் பங்கேற்றனர். மேலும், புத்த மதம், சீக்கிய மதம், பாகாய் மதம், இந்துமதம், சமண மதம், சரஸ்துத்திர சமயம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மக்களிடையே போர்களையும் கலவரங்களையும் உருவாக்கும் கருவியாக மதம் மாறிவிடலாகாது என்னும் கருத்தது அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 23,222 கிமீ உயரச் சுற்றுவட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு சோயுஸ் ஏவுகலனுக்கு 3 மணித்தியாலம் 49 நிமிடங்கள் பிடித்தது. "ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு இச்செயற்கைக்கோள்கள் அவசியமானதாகும் என ஐரோப்பிய ஆணையத்தின் பிரதித் தலைவர் அண்டோனியோ தஜானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே இவ்வகையான 18 செயற்கைக்கோள்கள் தயாரிப்புக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கும் மேலதிகமாக 6 முதல் 8 வரையான செயற்கைக்கோள்களுக்கு தொழில்ரீதியான போட்டிக்கு தஜானி அறிவிப்புக் கொடுத்துள்ளார். அமெரிக்காவின் புவியிடங்காட்டித் திட்டத்துடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவின் கலிலியோ திட்டம் துல்லியமான அணுக்கடிகாரங்களைக் கொண்டுள்ளன. இதனால், கலிலியோ தரும் தகவல்கள் அமெரிக்கத் திட்டத்தினதையும் விடத் துல்லியமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. கலிலியோ திட்டம் செயல்படும் போது, அது இரண்டு தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களைக் கொண்டிருக்கும். ஒன்று செருமனியின் மியூனிக் நகருக்கு அருகாமையிலும், மற்றையது இத்தாலியின் ஃபூச்சினோ நகரிலும் அமைந்திருக்கும். ஆரம்பத்தில் இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் தொழிற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 2015 ஆம் ஆண்டளவிலேயே தொழிற்பட ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுத் திட்டமும் 2019 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஐரோப்பியக் கொள்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரையிடும் வகையில் இல்லை என்று ஹேக் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியமை குண்டுத் தாக்குதல் கொலை என்பவற்றுக்கு துணைபோனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன டச்சு சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தப்பட முடியாது" எனினும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையானது இவர்கள் மேல் செல்லுபடியாகும் என்பதனால், விடுதலைப் புலிகளுக்காக இவர்கள் பணம் சேர்த்தமை சட்ட விரோதமாகிறது என்று எழுத்து மூலம் வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர். விடுதலைப்புலிகளுக்குப் பணப் பங்களிப்பு செய்யாவிடில் ஊருக்குச் செல்ல முடியாது என்று வன்முறையற்ற வழியில் பலவந்தப்படுத்தி விடுதலைப் புலிகளுக்காகப் பணம் வசூலித்தமைக்காக இவர்களுக்கு 2 முதல் 6 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பணம் சேகரித்ததில் கணக்கராகச் செயல்பட்ட செல்லையா என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இன்னும் இரண்டரை வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி இருக்கும். இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து ஆண்டுகளும், இளவரசன் என்பவருக்கு மூன்று ஆண்டுகளும், லிங்கம் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளும், மனோ என்பவருக்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழுக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான முதற்படியாக, இன்று ஹேக் மாவட்ட நீதிமன்றம் விடுதலைப்புலிகள் பற்றி வங்கிய தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர். இவர்கள் மீது ஊழல், ஏமாற்றியது, உயர்பதவியை தவறாக பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரிவு 409ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை தண்டனை கொடுக்கப்படலாம். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, பிணை கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கனிமொழி உள்ளிட்டோரின் பிணை மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சனிக்கிழமை காலை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். பின்னர், திகார் சிறையில் தனது மகள் கனிமொழியைப் பார்த்தார். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு நகராட்சியைக் கூட வெல்லமுடியவில்லை. இன்னும் இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இப்போதைய முடிவுகள் அதற்குப் பெரும் பின்னடைவாகியுள்ளது. கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த மதிமுகவிற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலகள் சற்று நம்பிக்கை அளிப்பதாயிருக்கிறது. குளித்தலை நகராட்சியை அது கைப்பற்றியிருக்கிறது, தூத்துக்குடியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, மற்றும் சில பேரூராட்சித் தலைவர் பதவிகளையும் அது வென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அக்டோபர் 19, 2011 தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கெடுப்பு அக்டோபர் 17, 2011 இவர், மன்னர் அப்துல்லாவின் சகோதரர். அடுத்த மன்னராகும் வாய்ப்பில் இருந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து 78 வயதாகும் சவுதி உள்துறை அமைச்சரும் இவரது இளைய சகோதரருமான நயீப் பின் அப்துல் அசீஸ் மன்னர் அப்துல்லாவுக்குப் பின், மன்னராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கடந்த சூன் மாதம் முதல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சவுதி அரேபிய அரசவை அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது இரண்டு புனிதமான மசூதிகளின் தக்காரான அரசர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ், தமது சகோதரர் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அதிகாலை வெளிநாட்டில் இறந்தது குறித்து ஆளாத் துயர் அடைகிறார்' என்று அரசவையின் அதிகாரபூர்வ அறிவிப்பு கூறியிருந்தது. இளவரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சவூதி தொலைக்காட்சிகளில் குரான் ஓதப்படும் காட்சி ஒளிபரப்பானது. இவரது உடல், சவூதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, 25ம் தேதி தலைநகர் ரியாதில் இறுதிச் சடங்கு நடைபெறுமென அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 87 வயதாகும் சவூதி அரசர் அப்துல்லா, ரியாதில் உள்ள மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். கட்டட இடிபாடுகளிலிருந்து ஏராளமானவர்களின் குரல்கள் கேட்பதாக வான் நகர அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். அருகில் உள்ள மாகாணங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி பிரதமர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு பூகம்பம் குறித்து ஆய்வு செய்தார். இதனிடையே புவியியல் நிறுனத்தின் தலைவரான பேராசிரியர் முஸ்தபா இர்டிக், இஸ்தான்புல் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் லெந்து கொண்டு கூறுகையில், துருக்கியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் 500 முதல் ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என தெரிவித்தார். துருக்கி முக்கிய பிளவுப் பெயர்ச்சிக்கோட்டின் மேல் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். 1999-ல் துருக்கியின் வடமேற்குப் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 20,000 பேர் உயிரிழந்தனர். வான் பகுதியில் உள்ள கால்திரான் பகுதியில் 1976-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,840 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் கடும் நிலநடுக்கம்: 57 பேர் உயிரிழப்பு மார்ச் 9, 2011 நேட்டோப் படையினரின் ஆதரவில் இடைக்காலப் பேரவையின் படையினர் கடாஃபியின் செர்ட் நகரைக் கடந்த வியாழன் அன்று கைப்பற்றி கதாஃபியையும் சுட்டுக் கொன்றனர். இதற்கிடையில், கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடாஃபி பிடிக்கப்பட்ட சமயத்தில் உயிரோடு இருந்துள்ளார் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று காட்டும் கைத்தொலைபேசி வீடியோ படங்கள் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார். கடாஃபியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவரது தலையில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது தெளிவாகியுள்ளது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கழிவிடக் கால்வாய் ஒன்றில் பதுங்கியிருந்த கடாஃபியைக் கண்டுபிடித்த கிளர்ச்சியாளர்கள் அவரை தரையில் உயிருதன் இழுத்துக் கொண்டு சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. பின்னர் அவர் இறந்து கிடந்த காணொளிகள் காட்டப்பட்டுள்ளன யார் அவரைக் கொன்றது அல்லது எந்தத் துப்பாக்கியால் அவர் சுடப்பபாட்டார் என்பது தெரியாது என கடாஃபியைக் கைப்பற்றிய படைகளின் தளபதி ஒம்ரான் அல்-அவெய்ப் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். கடாஃபியினதும், அவருடன் கொல்லப்பட்ட அவரது மகன் முதாசிம் ஆகியோரின் உடல்கள் மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி பதனப்படுத்தப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. சடலங்களைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அடுத்த ஆண்டு யூன் மாதம் அளவில் சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெறும் என பதில் பிரதமர் மகுமுத் ஜிப்ரில் முன்னதாகத் தெரிவித்திருந்தார். லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார் அக்டோபர் 20, 2011 இந்த ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக சிறப்பான முறையில் இசையமைத்தமைக்காக ஏ. ஆர். ரகுமானின் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவ்வாண்டு அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக 'பப்ளிக் சாய்ஸ்' விருது வழங்கப்பட்டது இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக ஏ. ஆர். ரகுமானுக்கு விமர்சகர்கள் விருதும் ஆண்டின் ஆரம்பத்தில் கிடைத்திருந்தது. 'எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஏ. ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள் பெப்ரவரி 1, 2010 சம்பவம் நடந்த பகுதியில், எரிந்து, கருகிய உடல் சிதரிக் கிடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. கடாபியும், அவரது மகனும் சமீபத்தில் புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை நான்கு நாட்கள் காட்சிக்கு வைத்து பின்னர் அப்புறப்படுத்தினர். அவர்களது உடல்கள் இனம்தெரியாத ஒரு இடத்தில் புதைக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே சேர்ட் நகரில் உள்ள ஒரு எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியுள்ளது. மிகப் பெரிய சத்தத்துடன் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதாகவும், உடல்கள் சிதறிக் கிடப்பது பார்க்கவே கொடூரமாக இருப்பதாகவும் புரட்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். எரிபொருள் தாங்கி யாரேனும் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிட்னி நகரில் உள்ள விலவூட் குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூட்டி என அழைக்கப்படும் 27 வயதான மேற்படி இளைஞர் கடந்த நள்ளிரவுக்குப் பின் அதிகாலை 3 மணியளவில் மரணமானதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாமில் இச்சம்பவம் நடந்தது கவலைப்படக்கூடிய சம்பவம் என ஆத்திரேலியாவின் முன்னாள் குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் எவான்ஸ் தெரிவித்தார். இறந்தவரது குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இவர் இரு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாக விலாவூட் குடிவரவு தடுப்பு நிலையத்திலுள்ள அவரின் சகா ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது இளைய சகோதரர் ஒருவர் இலங்கையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரது குடும்பத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இவரது இறப்பு சம்பந்தமாக தகுந்த மரண விசாரணைகள் நடத்தப்படும் என குடிவரவுத் துறை அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை தற்கொலை செய்துகொண்ட நபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒருவர் அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டவர் என வெளியான செய்திகளை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரௌன் நிராகரித்துள்ளார். இந்த இளைஞரின் அகதி அடைக்கலக் கோரிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏற்கப்பட்டிருந்தது. ஆனாலும், பாதுகாப்பு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால், அவர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பல்வேறு நிறுவனங்களுடனான அவரின் தொடர்புகள் ஆராயப்பட்டு வந்ததாக அமைச்சர் கூறியுள்ளார். மக்கள் தமது கோரிக்கைள் மதிப்பிடப்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்புடன் தொடர்டைய விடயங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது, செய்துகொள்ளவும் மாட்டோம் என அமைச்சர் கிறிஸ் பிரௌன் தெரிவித்தார். கடந்த ஆண்டு மூன்று பேர் இம்முகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நேற்றைய முதல் பயணத்தில், முதல் வகுப்பு இருக்கைகள் ஆறு சுமார் 34,000 டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இந்த ஏலத்தால் கிடைத்த தொகையை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்கொடையாகத் தரப்போவதாக நிப்போன் ஏர்லைன் கூறியிருக்கிறது. டிரீம்லைனரின் வழமையான சேவைகள் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என அல்ல் நிப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது. டிரீம்லைனர் விமானம் 2008 ஆம் ஆண்டில் சப்பானிடம் கையளிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இதனைத் தாமதப்படுத்தியிருந்தன. கடந்த சனவரியில் இடம்பெற்ற ஒரு சோதனைப் பறப்பின் போது விமானத்தில் தீ பரவியதாக அறிவிக்கப்பட்டது. ட்ரீம்லைனர், அதே அளவு திறனுள்ள பிற ஜெட் விமானங்களை விட அதிக தூரம் பயணிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களில் இயந்திரங்கள் உட்பட சுமார் கால் பகுதி பொருட்கள், பிரித்தானியாவிலும், ஏனையவை அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தின் சாளரங்கள் சற்றுப் பெரிதாக இருக்கும், காற்றின் தரமும், உள்ளே வெளிச்சமும் மேம்பட்டதாக இருக்கும் என்று போயிங் கூறுகிறது. இந்த விமானத்தை பரீட்சார்த்த முறையில் பறக்கவிட்டதன் அடிப்படையில், அது 20 சதவீதம் குறைவான அளவில் எரிபொருளை பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது. போயிங் தனது முதலாவது 787 டிரீம்லைனர் விமானத்தை விநியோகிக்கிறது செப்டம்பர் 26, 2011 போயிங் டிரிம் லைனர் 787 -ன் முதல் சோதனை ஓட்டம் டிசம்பர் 15, 2009 அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்புக் குழுவில் இரா. சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்கியிருந்தனர். தமிழர்களின் சனநாயகத் தலைமையுடன் பேச்சுக்களை அமெரிக்கா மேற்கொள்வது குறித்து இலங்கை கடும் கண்டனத்தை வெளியிட்ட போதும் அமெரிக்கா அதனை கருத்திற் கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘உட்தகவல் வணிகம்’ மூலம் அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட ராஜரத்தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்கக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, தான் பணியாற்றிய புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்சைர் இன்வெஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ் மற்றும் மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்குத் அளித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஜத் குப்தா தவிர மேலும் ஏராளமான நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் ராஜரத்தினத்திற்கு உதவியுள்ளனர். இதற்காக இவர்களுக்கும் ராஜரத்தினம் ஏராளமான பணம் கொடுத்துள்ளார். 62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட ஓர் இந்தியர் ஆவார். இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்பிஐ. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இந் நிலையில் ரஜத் குப்தா 10 மில்லியன் டாலர் பிணையில் அமெரிக்காவை விட்டு வெளியே செல்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது. பங்கு மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அக்டோபர் 14, 2011 பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார் மே 12, 2011 ராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம் மார்ச் 23 2011 வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது அக்டோபர் 17, 2009 லிபியாவின் புதிய அரசு நாடு விடுதலை அடைந்து விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தியிருந்தது. நேட்டோவின் இராணுவ நடவடிக்கை லிபியாவில் தொடர்ந்திருக்க வேண்டும் என இடைக்கால அரசு கேட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் அதற்கு மாறாக ஐக்கிய நாடுகள் தமது நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. பொதுமக்களைப் பாதுகாக்கும் தமது திட்டம் நிறைவடைந்து விட்டதாகவும், ஏனையை உதவிகள் வழங்குவது குறித்து வேறாக ஆராயப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபை அதிகாரிகள் தெரிவித்தனர். ஐநாவின் இந்த முடிவு லிபியாவில் அமைதியான முறையில் சனநாயகத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு மைல்கல் என ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார். லிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு அக்டோபர் 24, 2011 லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார் அக்டோபர் 20, 2011 [[இந்தியா]]வில் மணிக்கு 15 பேர் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 368 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்வதாக இந்திய மத்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள் கூறுகின்றன. தற்கொலை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நேற்றைய தாக்குதல் முற்பகல் 11:20 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்ட அமெரிக்கர்களில் எட்டுப் பொதுமக்களும், ஐந்து படைவீரர்களும் அடங்குவர் என பெண்டகன் நிருவாகம் அறிவித்துள்ளது. தமது படைவீரர் ஒருவரும் உயிரிழந்ததாக கனடா தெரிவித்துள்ளது. மூன்று ஆப்கானியர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டுப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. வேறொரு சம்பவத்தில் நாட்டின் தெற்குப் பகுதியில் ஆப்கானிய இராணுவ உடை தரித்தவரினால் மூன்று ஆத்திரேலியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவுவிட்டதாக நேட்டோ அறிவித்துள்ளது. வேறொரு நிகழ்வில் ஆப்கானிய புலனாய்வுப் பிரிவின் கட்டடமொன்றினுள் ஊடுருவியப் பதின்ம வயதுப் பெண் தற்கொலைப் போராளி நடத்திய குண்டுத் தாக்குதலில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். காபூலில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட நிலையில் தலிபான்களும், பாக்கித்தானில் நிலைகொண்டுள்ள ஹக்கானி இயக்கமும் தலைநகர் காபூலில் இவ்வாறான சில தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகத்து மாதத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது 20 மணி நேரத் தாக்குதலை ஹக்கானி அமைப்பு நடத்தியிருந்தது. 2014 ஆம் ஆண்டளவில் ஆப்கானித்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கவிருப்பதாக அமெரிக்க அரசு முன்னதாக அறிவித்திருந்தது. உலகம் முழுவதும் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது குறித்து அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி இந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 95 கோடி 23 லட்சத்து 10 ஆயிரம் பேர் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கின்றனர். இவர்களில் 1 கோடி 22 லட்சத்து 20 ஆயிரம் பேர் புதிதாக கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்கள். இவர்களில் 3ஜி கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவோர் மட்டும் 1 கோடி 2 லட்சத்து 46 ஆயிரம் பேர். கையடக்கத் தொலைபேசி தவிர அகன்ற அலைவரிசை இணைய இணைப்பை 1 கோடி 49 லட்சத்து 93 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆண்டு தோறும் 23 லட்சத்து 64 ஆயிரம் பேர் கூடுதலாக இணைய இணைப்பு பெறுகின்றனர் என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மேற்கு காமங் மாவட்டத்தில் உள்ள காமங் ஆற்றுப்பகுதியின் மேல் ஒரு பழமையான தொங்கு பாலமே நேற்று முன் தினம் உடைந்து வீழ்ந்துள்ளது. 60 முதல் 70 பேர் வரை இப்பாலம் வழியாக ஒரே நேரத்தில் சென்று கொண்டிருந்த போதே பாரம் தாங்காமல் பாலம் அறுந்து விழுந்தது. ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பலரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அருகில் இருந்த மலைவாழ் மக்கள் சிலரை காப்பாற்றினர். 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இம்மாவட்டக் காவல்துறை அதிகாரி கிமே அயா விபத்து குறித்து கூறுகையில் 70 மீட்டர் நீளமும், 40 அடி அகலமும் கொண்ட இந்த பாலம் செப்பா நகரை இணைக்கிறது. ஒரே நேரத்தில் பலர் சென்றதால் பாலம் அறுந்து விழுந்திருக்கிறது. பலரது உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் மத்திய பொலிஸ் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார் பாலம் உடைந்து வீழ்ந்தது இந்தியாவில் ஒரே வாரத்தில் இது இரண்டாவது தடவையாகும். சென்றவாரம் அக்டோபர் 23 இல் டார்ஜிலிங் பகுதியில் மரப்பாலம் அறுந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர், 132 பேர் காயமடைந்தனர். 95 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அத்தம்பாயெவ் 63 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளதாக மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் துகுனாலி அப்ராய்மோவொன் தெரிவித்துள்ளார். அத்தம்பாயெவை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இருவர் 15% இற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த தேசியவாதிகள் ஆவர். தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கும் இவர்கள், தேர்தல் முடிவுகளைத் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அது மொத்தத் தேர்தல் முடிவுகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தியிராது என்றார். 55 வயதான அத்தம்பாயெவ் நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெரும் செல்வந்த வணிகர் ஆவார். உலகின் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானை வளம் மிக்க திரமான நாடாக ஆக்குவதே தமது முதல் பணியாக இருக்கும் என அவர் கூறியிருக்கிறார். சமூக சனநாயகக் கட்சியின் தலைவராக அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் உள்ளார். கிர்கிஸ்தானில் அமெரிக்காவின் பெரும் இராணுவத்தளம் ஒன்று அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலமே ஆப்கானித்தானின் அமெரிக்க அரசு போரிட்டு வருகிறது. அதனால், இத்தேர்தல் முடிவுகளை அமெரிக்க அரசு மிகத் தீவிரமாகக் அவதானித்து வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கிர்கித்தானில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார் டிசம்பர் 19, 2010 கிர்கிஸ்தானின் அரசுத்தலைவராக ரோசா ஒட்டுன்பாயெவா பதவியேற்றார் சூலை 4, 2010 பதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார் ஏப்ரல் 16, 2010 நேற்று அக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது ஆளாகக் கருதப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது. [[இந்தியா]]வில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மால் என்ற கிராமத்தில் நேற்றுப் பிறந்துள்ள நர்கிஸ் என்ற பெண் குழந்தையை பிளான் இண்டர்நேஷனல் என்ற குழந்தைகள் உரிமைக்குழு உலகின் 700 கோடியாவது குழந்தையாக குறியீட்டளவில் தேர்வுசெய்துள்ளது. பெண் குழந்தைகள் கருவில் அல்லது பிறந்தவுடன் கொல்லப்படுகின்ற பிரச்சினை இந்தியாவில் இருந்து வருவதை உலகின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தக் குழந்தை தேர்ந்தெடுக்கப்படுவதாக பிளான் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மக்கள்தொகை 300 மில்லியனாக இருந்தது. 1800ம் ஆண்டில் அது ஒரு பில்லியனாகவும், 1927ல் இரண்டு பில்லியனாகவும், 1960ல் மூன்று பில்லியனாகவும், 1974ல் நான்கு பில்லியனாகவும் 1987ல் ஐந்து பில்லியனாகவும், 1999ல் ஆறு பில்லியனாகவும், 2011 ஒக்டோபர் 31ம் திகதி ஏழு பில்லியனாகவும் அதிகரித்துள்ளது. சீன ஆட்களை ஏற்றுச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் தலைமை ஆணையாளர் சாங் வான்சுவான் இந்த வேளையில் அறிவித்தாவது சென்ஷோ-8 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றார் அவர். சீனா தனது முதலாவது சென்ஷோ-1 என்ற விண்கலத்தை 1999 ஆம் ஆண்டில் செலுத்தியது. சீனாவின் ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்படி, ஆட்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கக் கூடிய விண்வெளி நிலையத்தைக் கட்டியமைக்கும் பணி மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும். சீன ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் செய்தித் தொடர்பாளர் திருமதி வூ பிங் இத்திட்டம் குறித்துத் தெரிவித்த போது விண்கலத்தில் 600க்கு மேற்பட்ட வசதிகள் பொருத்தப்பட்டன. சென்ஷோ-8 விண்கலத்தில் விண்வெளி உயிர் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். விண்வெளி அறிவியல் பயன்பாட்டுத் துறையில் சீனா சர்வதேச ஒத்துழைப்பில் ஈடுபடுவது இது முதல் முறையாகும். சீனா மற்றும் செருமன் அறிவியலாளர்கள் மொத்தமாக 17 அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வர். இரண்டு விண்வெளி வீரர்களைக் கொண்ட சென்ஷோ-9, சென்ஷோ-10 ஆகிய விண்கலங்களை ஆய்வுகூடத்துடன் இணைவதற்காக அடுத்த ஆண்டில் செலுத்தப்படும் என்றார். 2020 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஒரு முழுமையான நிரந்தர ஆய்வு கூடத்தை நிறுவுவதே சீனாவின் திட்டமாகும். சீனா தனது முதலாவது விண்வெளி ஆய்வுகூடத்தை விண்ணுக்கு ஏவியது செப்டம்பர் 30, 2011 இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு 107 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் இந்த அமைப்பில் 173 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. யுனெஸ்கோவின் இத்தீர்மானத்தை அமெரிக்காவும் இசுரேலும் கடுமையாக எதிர்த்துள்ளன. அமெரிக்கா நவம்பர் மாதம் யுனெஸ்கோவிற்கு வழங்க வேண்டிய 60 மில்லியன் டொலர் தொகையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவிற்கு ஆண்டு தோறும் கிடைக்கும் நிதியில் அமெரிக்கா 20 விழுக்காடுகள் வரை தரும் நாடாக உள்ளது. மத்தியகிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் வாய்ப்புகளை இது பாதிக்கும் என்று இஸ்ரேல் தனது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டுள்ளது. மேலும் சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்லும் முயற்சிக்கு எதிராக இருக்கும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். யுனெஸ்கோவின் இந்த முடிவை அடுத்து மேற்குக் கரையிலும் கிழக்கு எருசலேமிலும் தமது குடியேற்றத் திட்டங்களை அதிகரிக்கவிருப்பதாக இசுரேல் இன்று அறிவித்துள்ளது. 2,000 வீடுகள் உடனடியாக அமைப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது. அத்துடன் பாலத்தீன அதிகாரசபைக்கு நிதிகள் வழங்குவதையும் தற்காலிகமாக அது முடக்கியுள்ளது. பாலத்தீனியர்களுக்கும் இசுரேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுகள் முறிவடைந்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இசுரேலியக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்துமாறு பாலத்தீனம் நிர்ப்பந்தித்து வருகிறது. இசுரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏறத்தாழ 500,000 யூதர்கள் இதுவரையில் குடியேற்றப்பட்டுள்ளனர். வேறு எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என ஆத்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் ஆஸ்திரேலியா நோக்கிப் படகுகளில் வந்த வண்ணம் உள்ளனர். படகு அகதிகளின் வருகையைக் கட்டுப் படுத்துவற்தற்காக அண்மையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் மலேசியாவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தார். ஆத்திரேலியாவுக்குள் வரும் அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பி அங்குள்ள முகாம்களில் தங்க வைத்து அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது என்பதே உடன்பாடு. ஆனாலும் இவ்வுடன்பாட்டை ஆத்திரேலிய உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது எனக்கூறி நிராகரித்ததை அடுத்து இவ்வுடன்பாடு கைவிடப்பட்டது. இதன்படி நேற்றுப் புதன்கிழமை இந்த சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. எனினும் இது சந்தைக்குச் செல்லும் முன்னரே நேற்று அதிகாலை அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பத்திரிகை அலுவலகம் உட்பட அனைத்து உபகரணங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டதாகவும், அனைத்து சிறப்பு இதழ்களும் அழிந்து விட்டன எனவும் சார்லி ஹெப்டொ இதழின் வெளியீட்டாளரும் ஆசிரியருமான கேப் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விதழின் முகப்பில் 'நீங்கள் சிரிக்காவிட்டால் 100 கசையடி' என்று முகம்மது நபி கூறுவது போல் படம் வரையப்பட்டிருந்தது. அதன் உட்பக்கங்களிலும் நபியின் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை அந்நாட்டுப் பிரதமர் ஃபிரான்சுவா ஃபியோன் கண்டித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்பது பிரான்ஸ் சனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் இவ்வாறான வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2007 ஆம் ஆண்டில் இதே பத்திரிகை முகம்மது நபியின் 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டிருந்தது. இவை முதன்முதலாக டென்மார்க்கில் வெளியிடப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். டென்மார்க் சித்திரத்தில் வெடிகுண்டு தலைப்பாகை அணிந்தவராக முகமது நபியைக் சித்தரித்திருந்தது. இந்தக் கேலிச்சித்திரத்திற்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தாக்கப்பட்டிருந்தன. கொலை மிரட்டல்கள் காரணமாக கேலிச் சித்திர ஓவியர்கள் சிலர் தலைமறைவாக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அனைத்து மதங்களையும் கேலிக்குட்படுத்தி படங்கள் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். பாக்கித்தான் அணியின் சென்ற ஆண்டு இங்கிலாந்துச் சுற்றுப் பயணத்தின் போது 'ஸ்பொட் பிக்சிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காகவே இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆமீர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மற்ற 2 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆமீருக்கு 5 ஆண்டுகளும், முகமது ஆசிபுக்கு 7 ஆண்டுகளும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளச் சர்வதேச துடுப்பாட்டக் கவுன்ஸில் போட்டித் தடை விதித்திருந்தது. ஆட்டத்தில் முறைகேடு செய்தமைக்காக சிறைத் தண்டனைகளைப் பெறும் முதல் விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. 'இந்த ஒட்டுமொத்த விவகாரங்களையும் நடத்திக் காட்டியது நீங்கள்தான். ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தருணத்தில் ஆசிப்பையும் ஆமீரையும் பந்து வீசச் செய்ய வைத்தது நீங்கள் தான் என்று நீதிபதி குக், சல்மான் பட்டிடம் கூறினார். மொஹமட் ஆசிபிடம் அவர் கூறிய போது உங்களிடம் பணம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் ‘நோ பால்' வீசுவதில் கூட்டாக செயல்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஆட்டத்திற்கு முந்தையதாக நிர்ணயம் செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை. இதனால் உங்கள் விடயத்தை தனியான ஒரு நிகழ்வாக பார்க்க முடியாது என்றார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் பட், மொகமட் ஆசிப் மற்றும் சூதாட்ட முகவர் மசார் மஜீத் ஆகியோர் தெற்கு லண்டனில் உள்ள வென்டஸ்வேர்த் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 19 வயதான ஆமிர் மேற்கு லண்டனில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான கல்வி நிறுவனத்தில் தனது 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவுள்ளார். எனினும் ஆமீர் பிணையில் விடுதலை பெற மனு தாக்கல் செய்வார் என அவரது வழக்கறிஞர் ஹென்ட்ரி பிளக்ஸ் பான்ட தெரிவித்தார். 2010 ஆகத்து மாதத்தில் பாக்கித்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற நாலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது மூவரும் கைது செய்யப்பட்டனர் நியூஸ் ஒஃப் தெ வர்ல்ட்" நிருபர் தரகர் மஜீதுக்கு 150,000 ஸ்டேர்லிங் பவுண்டுகள் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மஜீத் ஆசிபுக்கு £65,000 உம் பட் இற்கு £10,000 உம் அமீருக்கு £2,500 பணமும் கொடுத்திருந்தார். தமது ஆட்டக்காரர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டது "பாக்கித்தான் துடுப்பாட்டத்துக்கு ஒரு துக்ககரமான நாள்" என பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் கூறியுள்ளது. 2010 ஆம் ஆண்டு சூலை 3 ஆம் நாள் இந்த விண்கலத்தின் கதவுகள் மூன்று உருசியர்கள், ஒரு பிரான்சியர், ஒரு இத்தாலியர், ஒரு சீனர் ஆகியோருடன் இறுகப் பூட்டப்பட்டது. இன்று அக்கதவுகள் திறந்து விடப்பட்டு அனைவரும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். 520 நாட்கள் பரிசோதனையின் பின்னர் வெளியேறிய வீர்ரகளை அவர்களது உறவினர்கள், மற்றும் உருசிய உயிரிமருத்துவக் கழகத்தின் அறிவியலாளர்களும் வரவேற்றனர். இத்திட்டம் செவ்வாய்500 Mars500 திட்டம் எனப் பெயரிடப்பட்டது. நீண்டகால விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் போது விண்வெளி வீரர்களின் மனம் மற்றும் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைக் கண்டறியும் முகமாகவே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையின் போது, செவ்வாய்க் கோளில் இறங்குவது மற்றும் நடப்பது போன்ற பல பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாம் அனைவரும் நல்ல தேகாரோக்கியத்துடன் உள்ளோம். இனி எமது அடுத்த திட்டத்தை நோக்கிச் செல்லவிருக்கிறோம் என இப்பரிசோதனையில் தலைவராகச் செயல்பட்ட அலெக்சி சீத்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவருடன் திட்டத்தில் கலந்து கொண்ட ஏனையோர் அலெக்சாண்டர் சிமலியேவ்ஸ்கி, சூக்ரோப் கமலோவ், ரொமயின் சார்ல்ஸ் (பிரான்சியர் டியேகோ ஊர்பீனா (இத்தாலியர் மற்றும் வாங் யூ (சீனர்) ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இப்போது மருத்துவப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல்கள் குறிப்பாக கிறித்தவக் கோயில்களையும் யோப் மாநிலக் காவதுறையினரையும் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து பொதுமக்கள் பலர் நகரை விட்டு வெளியேறியுள்ளனர். மைடுகூரி என்ற நகரில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களை போக்கோ ஹராம் என்ற இசுலாமியக் குழுவே மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு தாக்குதல்கள் ஆரம்பமானதாகவும் 90 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கூறினர். கிறித்தவக் கோயில்கள் மீது குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டன. 10 கோயில்கள் வரை தீக்கிரையாகின. இது அவர்களின் மக்களுக்கு நடந்திருந்தால் தெரிந்திருக்கும் இரக்கம் கெட்டவர்களாக தான் மதிக்கப்படுவார்கள் வெள்ளிக்கிழமை அன்று நாட்டின் தென்மேற்கே காவுக்கா மாகாணத்தில் சுவாரெசு நகருக்கருகே உள்ள அடர்ந்த காடுகளில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கானோ (63 வயது) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹுவான் கார்லோசு பின்சோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கொலம்பியாவுக்கும் அதன் மக்களுக்கும் இது ஒரு முக்கிய செய்தியாகும் என அவர் கூறினார். அல்ஃபோன்சோ கானோவின் இறந்த உடலின் புகைப்படங்களையும் அமைச்சர் காண்பித்தார். படத்தில் கானோவின் வழமையான தாடி இருக்கவில்லை என செய்தியாளர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், தமது தலைவர் இறந்திருந்தாலும், தாம் தொடர்ந்து போராடப்போவதாக ஃபார்க் போராளிகள் அறிவித்துள்ளார். சுவீடனைத் தளமாகக் கொண்டுள்ள ஆன்கோல் இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபார்க் போரளிகளுக்கு கொலம்பியாவின் அரசுத்தலைவர் ஹுவான் மனுவேல் சாண்டோசு விடுத்துள்ள எச்சரிக்கையில் உங்கள் ஒவ்வொருவருவருக்கும் நான் விடுக்கும் செய்தி என்னவென்றால் கலைந்து விடுங்கள் அல்லது நீங்கள் சிறையிலேயோ அல்லது கல்லறையிலேயோ அடைக்கப்படுவீர்கள். நாங்கள் அமைதியை அடைவோம்" என்றார். கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் பல ஃபார்க் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் மோனோ ஜோஜோய் என்ற ஃபார்க் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். ஃபார்க் போராளிக் குழு 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக நீடித்து வரும் கொலம்பியாவின் உள்நாட்டுப் போரில் இடதுசாரி போராளிகளும், வலதுசாரி துணை இராணுவக்குழுக்களும் போரில் ஈடுபட்டு வருகின்றன. பைன் தீவுப் பனியாற்றின் முன் உள்ள மிதக்கும் பனிக்கட்டியில் பிளவு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்திற்குச் செல்கிறது. இதன் ஆழம் 60 மீ ஆகும். இது நாள் தோறும் வளர்ந்து வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வாக்குகளின் எண்ணப்பட்ட நிலையில், மொலினா 55% வாக்குகளையும், மனுவேல் பால்டிசோன் 45% வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரண்டு வேட்பாளர்களும் நாட்டில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருதல், மற்றும் மெக்சிக்கோவின் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டினுள் ஊடுருவதைத் தடுக்கவும் முன்னுரிமை தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஐக்கிய அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே போதைப்பொருட்கள் குவாத்தமாலா ஊடாகவே கடத்தப்படுகின்றன. 36 ஆண்டுகால உள்நாட்டுப் போரை அடுத்து 1996 ஆம் ஆண்டில் மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. 200,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குவாத்தமாலாவின் அரசியலமைப்பின் படி, ஒருவர் ஒரு முறை மட்டுமே அரசுத்தலைவர் பதவியில் இருக்க முடியும். மைக்கல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு சூன் 25 இல் அளவு கூடிய ஆற்றல் வாய்ந்த மயக்க மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்தார். 58 வயதான மருத்துவர் மறீ நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அநுபவிக்க நேரிடும் என்றும் அவரது வைத்தியராகப் பணியாற்றும் உரிமமும் இரத்துச் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்துக்கு வெளியே குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நீதிமன்றத்தினுள் அமர்ந்திருந்த ஜாக்சனின் குடும்பத்தினர் அமைதியாக அழுததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவர் மறீக்கான தண்டனை நவம்பர் 29 ஆம் நாள் வழங்கப்படும். அதுவரையில் அவருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது எனவும் தடுப்புக் காவலிலேயே வைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கல் ஜாக்சன் மருத்துவரை ஆலோசியாமல் அளவுக்கதிகமாக மயக்க மருந்தை உட்கொண்டார் என மருத்துவரின் வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆறு வாரங்கள் நடந்த இந்த வழக்கில் 49 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். 300 இற்கும் அதிகமான அத்தாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. காயத்திரி பரிவார் என்ற இந்துப் பிரிவை ஆரம்பித்த குரு பண்டித் சிறீராம் சர்மாவின் 100வது பிறந்த நாளை ஒட்டி இடம்பெற்ற மத வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் நீராடினார்கள். இதன் போதே பெரும் நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் எனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சமயச் சடங்குகள் நடைபெற்றபோது, பலர் முண்டியடித்துக் கொண்டு தமது காணிக்கைகளை எரியும் தீயில் இடுவதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர். இதனால் குட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். நெரிசலில் பலர் கீழே வீழ்ந்தனர், அவர்களையும் தாண்டியபடி பலர் முன்னே செல்லத் தொடங்கினர் எனக் கூறப்படுகிறது. தலைநகர் தில்லியில் இருந்து 173 கிமீ தொலைவில் உள்ள அரிதுவார் பல இந்துக் கோயில்களைக் கொண்டுள்ளது. இமய மலையில் இருந்து கங்கை நதி இங்கு பாய்வதால் இந்துக்கள் இதனை முக்கியத் தலமாகக் கருதுகின்றனர். சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர் சனவரி 15, 2011 கடந்த 200 ஆண்டுகளில் பூமிக்கு மிகக் கிட்டவாக வந்த சிறுகோள் இதுவேயாகும். அத்துடன் 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பூமிக்குக் கிட்டவாக வந்த மிகப்பெரும் விண்பாறையும் இதுவேயாகும். இது போன்ற பெரிய சிறுகோள் அடுத்த தடவை 2028 ஆம் ஆண்டிலேயே பூமிக்குக் கிட்டவாக வரும். இச்சிறுகோள் கருமை நிறத்திலும், கிட்டத்தட்ட உருளை வடிவிலும் காணப்பட்டது. 20 மணித்தியாலத்திற்கு ஒரு முறை சுழன்றபடி சென்றது. "2005 யூ55 குறைந்தது அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பூமியைத் தாக்காது என நாசா வானியலாளர் லான்ஸ் பென்னர் தெரிவித்தார். மிக்கக்கிட்டவாக வந்ததனால் இச்சிறுகோளை மிகவும் ஆழமாகப் படிக்க முடிந்ததாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா, மற்றும் புவெர்ட்டோ ரிக்கோ ஆகிய இடங்களில் உள்ள வானொலி தொலைநோக்கிகள் இச்சிறுகோளில் இருந்து வெளிவந்த வானொலி எதிரொலிகளைப் பதிந்துள்ளன. இதன் மூலம் இச்சிறுகோள் எதனால் ஆனது, மற்றும் இதன் வடிவம் போன்றவற்றைத் துல்லியமாகக் கூற முடியும். பூமியை 7,600 மைல் தொலைவில் கடந்து சென்ற சிறுகோள் சூன் 29, 2011 2011 நவம்பரில் சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகாக செல்லவிருக்கிறது மே 10, 2011 2030களில் பூமியை மோதவிருக்கும் சிறுகோளைத் தடுக்கும் முயற்சியில் ரஷ்யா சனவரி 1, 2010 ஃபோபோஸ்-கிரண்ட் என அழைக்கப்பட்டும் இந்த விண்கலம் தற்போது பூமியின் சுற்று பாதைக்குச் சென்றுள்ளதாகவும், அவற்றின் மின்கலங்கள் மூன்று நட்களுக்குள் செயலிழக்கும் முன்னர் இதனைத் திருத்த வேண்டும் எனவும் உருசியா கூறியுள்ளது. இவ்விண்கலம் தன்னுடன் சீனாவின் செவ்வாய்க்கான முதலாவது செயற்கைக்கோளையும் கொண்டு சென்றுள்ளது. யிங்குவோ-1 என்ற இந்த 115கிகி செயற்கைக்கோள் செவ்வாய்க் கோளைச் சுற்றிவர அனுப்பப்படவிருந்தது. கசக்ஸ்தானில் உள்ள பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 00:16 (உள்ளூர் நேரம்) ஃபோபோசு-கிரண்ட் என்ற இந்த விண்கலம் ஏவப்பட்டது. இவ்விண்கலம் சீர் செய்யப்படுமிடத்து செவ்வாயின் சந்திரனில் இருந்து பாறைகளையும் தூசுகளையும் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் பூமிக்கு இது கொண்டு வரும். 1960களில் இருந்து உருசியா மொத்தம் 16 விண்கலங்களை செவ்வாயை நோக்கி அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. கடைசியாக அனுப்பிய மார்ஸ்-16 விண்கலம் ஏவிய சிறிது நேரத்திலேயே அழிந்தது. "கடந்த 15 ஆண்டுகளாக நாம் எந்தப் பெரிய விண்வெளிப் பயணத்தையும் பூர்த்தி செய்யவில்லை என மாஸ்கோ விண்வெளி ஆய்வுக் கழகத்தின் அறிவியலாளர் அலெக்சாண்டர் சாகரொவ் தெரிவித்தார். வான் என்ற நகரில் ஒரு ஆறு-மாடி உணவு விடுதி உட்பட 25 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. 23 பேர் இடிபாடுகளிடையே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த பைராம் விடுதியில் இருந்த சில ஊடகவியலாளர்கள் தம்மைக் காப்பாற்றுமாறு குறுஞ்செய்திகளை தமது உறவினருக்கு அனுப்பியுள்ளனர். துருக்கி முக்கிய பிளவுப் பெயர்ச்சிக்கோட்டின் மேல் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். 1999-ல் துருக்கியின் வடமேற்குப் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 20,000 பேர் உயிரிழந்தனர். வான் பகுதியில் உள்ள கால்திரான் பகுதியில் 1976-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,840 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் கடும் நிலநடுக்கம்: 57 பேர் உயிரிழப்பு மார்ச் 9, 2011 எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய மாநிலம் எனப்படும் தெற்கு சூடானிய மாநிலத்தில் யீடா முகாம் மீது நேற்று வியாழக்கிழமை இத்தாக்குதல் நடைபெற்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டை சூடானிய இராணுவம் நிராகரித்துள்ளது. தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் தமது செய்தியாளர் அங்கு நின்றதாக பிபிசி தெரிவித்துள்ளது. இரண்டு தடவைகள் குண்டுகள் வீழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குண்டு வீச்சுகள் நடந்த சிறிது நேரத்தில் விமானம் ஒன்று வடக்கை நோக்கிச் சென்றதாக அவர் கூறினார். குண்டுகளை வீசுவதற்கு முன்னர் விமானம் முகாமைச் சுற்றிப் பறந்ததாக அகதிகள் தெரிவித்தனர். மொத்தம் ஐந்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் நான்கு மட்டுமே வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூடானின் தெற்கு கொர்டோஃபான் பகுதியில் நிகழும் சண்டையை அடுத்து அங்கிருந்து மக்கள் எல்லையைக் கடந்து வந்து யீடா முகாமில் தங்கியுள்ளனர். கடந்த சூலை மாதத்தில் தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடாகியது. பொதுநலவாயப் போட்டிகளின் 80 ஆண்டு கால வரலாற்றில் ஆஸ்திரேலியா இதுவரையில் நான்கு தடவைகள் போட்டிகளை நடத்தியுள்ளது. ஆனால் இலங்கை முதற் தடவையாக தனது நகரம் ஒன்றில் நடத்துவதற்குப் போட்டியிட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாந்தோட்டை நகரரில் 2016 ஆம் ஆண்டுக்குள் புதிய விளையாட்டு அரங்கங்கள், பன்னாட்டு விமான நிலையம், மற்றும் உட்கட்டமைப்புகளை அமைக்கவிருப்பதாக இலங்கை உறுதியளித்திருந்தது. குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னா பிளை முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சென் கிட்ஸ் தீவில் இருந்தார் கோல்ட் கோஸ்டிற்கும் குயின்ஸ்லாந்திற்கும், ஆஸ்திரேலியாவுக்கும் எனது வாழ்த்துகள், நாங்கள் வென்று விட்டோம் எனக்கூறி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார். பொதுநலவாயத்தின் அடுத்த போட்டிகள் 2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கின்றன. இலங்கையில் நடந்த மோதலுக்கு முடிவு காண எடுக்கப்பட்ட இந்த அமைதி வழிமுறை தோல்வியில் முடிந்ததற்கு பல காரணங்களை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் நிலவும் பரம்பரை அரசியல், உட்கட்சி போட்டிகள், வேண்டியவர்களுக்கு அனுகூலம் செய்யும் அரசியல், தேசியவாத அரசியல் அணி திரட்டல் ஆகியவை நாட்டை சீர்திருத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கும் இடைஞ்சலாக இருந்தன. 2004ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டது, ராணுவ சமநிலையை, அரசுக்குச் சாதகமாக மாற்றியது என்று இந்த அறிக்கை கூறுகிறது. அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இந்த அமைதி வழிமுறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், சர்வதேச கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், சர்வதேச மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசிய வாத எதிர்வினையைத்தான் தூண்டின என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது. 2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக சிக்கறுக்கப்பட ஆரம்பித்தபோது கொழும்பு மீது புதுடில்லி அனுதாபம் கொண்டிருந்தது. 2004 இல் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக கோரி வந்தது. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதன் இராணுவ ரீதியிலான தெரிவு தொடர்பாக எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட சந்திப்புகளின்போது புலிகளுடன் நோர்வே அதிக நட்பாக இருப்பது குறித்து இந்தியா நோர்வேயை விமர்சித்தது. அத்துடன் புலிகளை உரிய இடத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. பொதுமக்கள் உயிரிழப்புகளை மட்டுப்படுத்துமாறு இந்தியா சில கோரிக்கைகளை விடுத்தாலும் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தாம் ஆதரவளிப்பதை இந்தியா மிகத் தெளிவாக்கியது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசுலாமியப் போராளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர், இரண்டு பொதுமக்கள் என அறுவரைச் சுட்டுக் கொன்று விட்டுப் பின்னர் அந்நபர் தன்னைத் தானே குண்டு வைத்துத் தகர்த்துள்ளார். மேலும் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர். இத்தாக்குதல் நேற்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. கசக்ஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் தற்போது தலை தூக்குவதையே இத்தாக்குதல் காட்டுகிறது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரி ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த கரீயெவ் என அழைக்கப்படும் 34 வயதுடையவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கசக்ஸ்தானில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே சில குண்டுவீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கடந்த மாதம் அட்டிராவு என்ற மேற்கு நகரில் இரண்டு குண்டுகள் வெடித்தல. இத்தாக்குதலில் குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டார். ஜுண்ட் அல்-கலீஃபா என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்பு தாமே அத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியிருந்தது. மே மாதத்தில் அக்டோபே என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். யூரோ வலய நாடுகளில் தீவிர அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தீவிர கடன் நெருக்கடிகளையடுத்து சமீபத்தில் நடந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இத்தாலி தன் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நிதிச் சீர்திருத்தச் சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இது தொடர்பான வாக்கெடுப்பில் எதிர்க் கட்சிகள் எதுவும் வாக்களிக்காமையினால் பெர்லுஸ்கோனி பெரும்பான்மை இழந்து விட்ட நிலையில் தமது பதவியைத் துறக்க முன்வந்தார். முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரும் பொருளாதார நிபுணருமான திரு மொன்டியின் (வயது 68) நியமனத்தை இத்தாலிய அதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். பெர்லுஸ்கோனி தனது பதவி விலகல் கடிதத்தை அதிபரிடம் கையளிக்க வந்த போது அதிபர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டுத் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெர்லுஸ்கோனி மூன்று தடவைகள் பிரதமராகப் பதவியில் இருந்தார். இவர் பல பாலியல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இத்தீர்மானத்தை "ஒரு பயங்கரமான முடிவு' என வர்ணித்திருக்கும் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல்-முவால்லம் கூட்டமைப்பு அமெரிக்காவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய செயல்பட்டு வருவதையே காட்டுகிறது" எனக் கூறினார். கடந்த சனிக்கிழமை அன்று இந்த இடைநிறுத்தல் அறிவிப்பை அரபு நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டது. சிரியாவுக்கு எதிராகத் தடைகள் விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் கூடி உரையாடி வருகின்றனர். முக்கியமாக ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து சிரியா உதவி பெறுவதைத் தடை செய்ய ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன. சிரிய மக்களுக்குப் பாதுகாப்புத் தரும் நேரம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர், இது குறித்து ஐக்கிய நாடுகள் கடுமையான நிலையை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அரபுக் கூட்டமைப்பின் முடிவுக்கு அமெரிக்கத் தலைவர் அபராக் ஒபாமா பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிரிய ஆட்சியாளர்களின் வன்முறைகளை எதிர்கொள்ள அந்நாட்டு பக்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அவர் கூறியுள்ளார். ஹோம்ஸ் நகரில் கடந்த சனியன்று நடந்த வன்முறைகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஹால் என்ற நகரில் மருத்துவமனையுடன் அண்டிய இந்தப் புதைகுழி இவ்வாண்டு ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பல்லாயிரக்கணக்கான வலது குறைந்தோர் இவ்வாறு நாட்சிகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாதவர்களாகக் கணிக்கப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் 220 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. உடல் எச்சங்களின் பெரும்பாலானவைகள் நாட்சி காலத்தவை என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வுடல்களில் பெரும்பாலானவற்றில் எலும்புகள் உடைந்தும், காயங்களுடனும் காணப்பட்டுள்ளன. ஆனாலும் இவர்கள் எவ்வாறும் இறந்தார்கள் என்பதை அறிவதற்கு மேலும் ஆய்வுகள் தேவையாயுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தோண்டியெடுக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களின் 14 முதல் 90 வயது வரையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவமனை வட்டாரங்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. இது பற்றிய விசாரணைகள் 2013 ஆம் ஆண்டளவிலேயே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரியாவில் நாட்சி-கால புதைகுழி மீளத் தோண்டப்படவிருக்கிறது சனவரி 5, 2011 ஹரஸ்டா என்ற இடத்தில் அமைந்திருந்த வான்படைப் புலனாய்வுத் தளம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கட்டடத்தின் பெரும் பகுதி சேதமடைந்ததாக சிரிய புரட்சிப் பொது ஆணையம் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களினால் சுதந்திர சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. சென்ற மார்ச் மாதத்தில் பொது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்ததில் இருந்து இதுவரையில் 3,500 பேர் வரையில் சிரிய அரசுப் படைகளினால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களே இந்த வன்முறைகளை நடத்தியதாக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அரசுத்தலைவர் அசாதுக்கு எதிரான இராணுவத்தினரால் சுதந்திர சிரிய இராணுவம் என்ற பெயரில் ஆயுத அமைப்பு சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பில் 15,000 பேர் வரையில் உறுப்பினர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் இடம்பெற்று வரும் பொதுமக்கள் மீதான வன்முறைகளை நிறுத்துமாறு அரசுத்தலைவர் அசாதுக்கு உலக நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அரபு நாடுகளின் கூட்டமைப்பு சென்ற வாரம் சிரியாவை அதன் அமைப்பில் இருந்து இடைநிறுத்தியிருந்தது. அரபு நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சிரியா இடைநிறுத்தம் நவம்பர் 14, 2011 இந்நிலையில், இப்பட்டியலில் இடம்பெற்றிருந்த உயர்நிலைக் கல்விப் பிரிவில் உயிரியல் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பேச்சு மற்றும் மொழி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், கண் மருத்துவர்கள் ஆகிய பணியிடங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கம் புலம்பெயர்தல் பற்றிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (செப்டம்பரோடு முடிந்த காலாண்டில் வேலையில்லாதோர் பட்டியலில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். வேலை தேடுவோருக்கான உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையில், 5,300 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது, 16 லட்சம் பேர் உதவித்தொகை பெறுகின்றனர். வேலையில்லாதோரில், 16 முதல் 24 வயது வரையில் உள்ளவர்கள் மட்டும் 10 லட்சத்து 20 ஆயிரம் பேர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும், வேலையில் இருந்து வெளியேறியவர்கள் 67 ஆயிரம் பேர். வேலையில்லாதோரில் பெண்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 43 ஆயிரம் பேர் வேலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது, 10 லட்சத்து ஒன்பதாயிரம் பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது 1988க்குப் பின், மிக அதிகளவு என்பது குறிப்பிடத்தக்கது. யூரோப்பாவுக்கான விண்வெளித் திட்டங்களை 2020களின் ஆரம்பத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆரம்பிக்கவிருக்கின்றன. அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியைத் தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டதாக லண்டனில் உள்ள கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கக் கல்வி நிலையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் பேராசிரியர் அன்வித்தா அபி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நான்கு மொழிகளில் போ மற்றும் கோரா ஆகிய இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஏனைய இரண்டு மொழிகள் ஜேரு மற்றும் சாரே ஆகியவை மிகச் சிலரால் பேசப்பட்டு வருகிறது. அகராதியில் இணைக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மிக விரிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்கள் அறிவியலாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என மொழியியலாளர்கள் கருதுகின்றனர். அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களின் மொழிகளில் சில 70,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது. பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் வழியாக செல்லப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது அதிகரித்துவரும் சுற்றுலாத் தொழில் காரணமாக பழங்குடியினருக்கும் வெளியுலகுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துவருகின்றன. ஆனால் இத்தொடர்புகள் காரணமாக வெளி உலக பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படத் தொடங்கியுள்ளதாகவும் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு பெப்ரவரி 5, 2010 சிட்னியின் மேற்கே குவேக்கர்ஸ் ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள இந்த முதியோர் இல்லத்தில் எழுந்து நடமாட முடியாதவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டோருமே இருந்தனர். இந்த இல்லத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இரண்டு இடங்களில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தை அடுத்து மொத்தம் 88 பேர் அதிகாலை வேளையில் வெளியே படுத்த படுக்கைகளில் இருந்த படியே வெளியே இழுத்து வரப்பட்டனர். பலரும் புகையை உள்ளெடுத்த படியால் மூச்சுத் திணறி இருந்தனர். நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 32 முதியோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஆணையர் கேத்தரின் பேர்ன் தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் எவரும் காயப்படவில்லை என அவர் தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாகக் கூறினார். குறித்த முதியோர் இல்லத்தில் பணியாற்றும் 35 வயதுடைய ஆண் தாதி ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் பின்னர் தெரிவித்துள்ளனர். இவர் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த சூலை மாதத்தில் இந்த முதியோர் இல்லத்தில் அவசரகால நீர்த்தூவிகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என நடுவண் அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்தார். ஆனால் சட்டப்படி இது தேவையற்றதாகும் என அவர் தெரிவித்தார். 1981 ஆம் ஆண்டில் சிட்னியின் சிவேனியா ஹைட்ஸ் என்ற இடத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பொன்சேகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நிராகரித்த சரத்பொன்சேகா, தன்னை அரசியலில் இருக்க விடாமல் தடுக்கின்ற நோக்கத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்நிலையில் தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் நலின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார். இராணுவத்துக்காக தளபாடங்கள் கொள்வனவு செய்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று இராணுவ நீதிமன்றம் முடிவு செய்ததை அடுத்து ஏற்கனவே முப்பது மாத கால சிறைவாசத்தை அவர் அனுபவித்து வருகிறார். வெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம் மே 26, 2011 சரத் பொன்சேக்காவுக்கு 30 மாதக் கடூழியச் சிறை விதிக்க அரசுத்தலைவர் ஒப்புதல் செப்டம்பர் 30, 2010 இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இவர்கள் மூலம் விக்கிப்பீடியா தனது உள்ளூர் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளை அதிகரிக்கச் செய்ய விக்கிமீடியா நிறுவனம் எண்ணியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற எந்த விக்கி மாநாடுகளிலும் இவ்வளவு பெருந்தொகையானோர் கலந்து கொள்ளவில்லை என அந்நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மும்பை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 700 "விக்கிமீடியர்கள்" வரையில் கலந்து கொள்கின்றனர். "இந்தியா பெருந்தொகையான அறிவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ரிக்வேதம் முதல் பகவத் கீதை வரை, உயிரித் தொழிநுட்பம் வரை அறிவாளர்கள் உள்ளனர். எனவே விக்கிப்பீடியா போன்ற தளங்களில் இந்தியர்கள் தமது அறிவை வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என இந்திய விக்கிமீடியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. விக்கிமீடியா மாநாடு நடைபெறும் பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே சிறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தியாவின் வரைபடம் ஒன்று தவறான தகவல்களுடன் சட்டவிரோத எல்லைகளைக் கொண்டு வரையப்பட்டு விக்கிமீடியாவில் காட்சிப்படுத்தப்பட்டதை எதிர்த்து சிறு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது இந்திய பிரச்சனை மட்டுமல்ல. இவர்கள் இதுபோல் இன்னும் என்ன குற்றங்கள் செய்துள்ளனர்? என்பதும் யார் இவர்கள் பின்னணி என்பதையும் கண்டறியவேண்டும் இவ்வளவு பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி ஒரு செயலை செய்தார்களாயின் இன்னும் பல பின்னணிகள் இருக்கும் இவர்களதும் இவர்களை சார்ந்தவர்களதும் சொத்துக்கள் மற்றும் செயற்பாடுகளை முற்றிலும் முடக்க வேண்டும் அதற்கு அரசியல் தலையீடு இல்லாமல் முதலில் குறித்த நபர்களை தனிமைபடுத்த வேண்டும் .தனி புலன்விசாரணை குழு தனி நீதிமன்று போன்றவற்றை வைப்பது கூட தவறில்லை. 1972-ம் ஆண்டு பிறந்த சயீப், கடாபி, சஃபியா கடாபி தம்பதியரின் மூத்த மகனாவார். தன்னை ஒரு புரட்சியான சீர்திருத்தவாதியாக காட்டிக் கொண்டதால் இவருக்கு மேற்கத்திய ஆதரவு கிடைத்தது. ஆனால் சமீபத்தில் முடிந்த லிபிய உள்நாட்டுப் போரில் தந்தை கடாபிக்கு உதவியாக செயல்பட்டார். சயீப் பிடிபட்ட செய்தி வெளியான உடன், மக்கள் வாகனங்களில் ஒலிப்பானை ஒலித்தும், கொடிகளை அசைத்தும், வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியும், அவரது மகன் முட்டாசிமும் கடந்த மாதம் எதிர்ப்பாளர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் இடைத்தேர்தல்களில் பங்குபற்றவிருப்பதாக மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு வெள்ளியன்று அறிவித்துள்ளது. கடந்த 2010 நவம்பரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை இக்கட்சி ஒன்றியொதுக்கல் செய்திருந்தது. அடுத்த மாதமளவில் அமெரிக்க இராசாங்கச் செயலர் இலறி கிளிண்டன் பர்மாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில் சூச்சி அம்மையார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளர். கிளிண்டனை அனுப்பத் தீர்மானிப்பதற்கு முன்னால் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சூச்சி அம்மையாருடன் தொலைபேசியில் கதைத்திருந்தார். இராணுவத்தினரின் பின்புலத்தில் அமைக்கப்பட்ட பர்மிய அரசின் அரசியல் சீர்திருத்தங்களை அங்கீகரிப்பதற்கான முதற் படிகளே இவை என பிபிசிச் செய்தியாளர் தெரிவிக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 48 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இத்தொகுதிகள் அனைத்துக்கும் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு முடிவு செய்துள்ளது. ஆங் சான் சூச்சியும் இத்தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடவுள்ளார். இவ்விரண்டு உடல்களாக கூடைகளில் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இக்குழந்தைகள் அனைத்து மூன்று வயதுக்குள்ளேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து உடல்களிலும் அவர்களின் மார்புப் பகுதியில் எரிமலைக் கல் ஒன்று கட்டப்பட்டு, உடல்களைச் சுற்றி அவற்றுக்கான காணிக்கைப் பொருட்களும் காணப்படுகின்றன. இவற்றில் மிருகங்கள், உணவு, தட்டுகள், மற்றும் குடங்கள் போன்றவையும் அடங்குவதாக தொல்லியலாளர் எதுவார்தோ அரிசாக்கா தெரிவித்தார். கொல்லா மக்களுக்கும் அவர்களின் எதிர் நாகரிக மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரங்களின் போது இக்குழந்தைகள் பலியிடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட 200 பேரின் உடல்கள் சில்லுஸ்தானி என்ற இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. சில்லுஸ்தானி தலைநகர் லீமாவில் இருந்து தென்கிழக்கே 1,300 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இதேவேளை, கட்சித் தலைவருக்கு எதிரான முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அதனை ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு பேஜ் இணையத்தளத்திற்குத் தெரிவித்திருக்கிறார் கடிதம் தொடர்பாக நான் எதுவும் செய்ய முடியாது. கட்சியின் ஆலோசனைச் சபைக்கு சமர்ப்பிப்பேன். அது தொடர்பாக எவ்வாறு செயற்படுவதென ஆலோசனைச் சபை தீர்மானிக்கும் என்றும், இந்த இரு அமைப்புக்களினதும் கூட்டம் விரைவில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இல்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டேராடூனில் இருந்து ஹௌரா நோக்கிச் சென்று கொண்டிருந்த டூன் கடுகதித் தொடருந்தின் இரண்டு பயணிகள் பெட்டிகள் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டன. தீக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டே தீப்பற்றிக்கொண்டுள்ளன. தீயினால் மிகவும் சேதமுற்றிருந்த பெட்டிகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 வயதுச் சிறுமியும் ஒருவரும் இறந்துள்ளார். யாரோ ஒருவர் குளிரூட்டிய அணைத்து விட்டு சூடாக்கியை இயக்கச் செய்த போது தீப்பற்றியதாகப் பயணி ஒருவர் தெரிவித்தார். விபத்து இடம்பெற்று இரண்டு மணி நேரத்தின் பின்னரே மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர் எனப் பயணிகள் தெரிவித்தனர். சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிப்பேரா ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகளை இவர்கள் கலைக்க முயன்றால் பிணை திரும்பப்பெறப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 5 பேருடைய கடவுச் சீட்டுகளும் நீதிமன்றத்தில் ஒப்புடைக்கப்பட வேண்டும் என்றும் அனைவரும் தில்லியிலேயே தங்கிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இதற்கிடையில், அலைக்கற்றை ஊழல் விசாரணைகள் இனிமேல் தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து திகார் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நேற்று நீதிமன்றம் அறிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி.சைனி நேற்று தெரிவித்து, வியாழக்கிழமையில் இருந்து திகார் சிறையில்தான் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார். ஆனால், இதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. இந்த வழக்கை பொறுத்த வரையில் அனைவருக்கும் பிணை மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறைக்குள்ளே நீதிமன்றத்தை நடத்த நீதிபதி எடுத்த முடிவு குற்றவாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாகவும் அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கு விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் நாட்களில் கனிமொழி, ஆ ராசா ஆகியோருக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்களும், திமுக தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து அவர்களை அடிக்கடி சந்துத்துப் பேசி வந்தனர். திகார் சிறைக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டால், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கோடு சம்மந்தப்பட்ட சாட்சிகள் போன்றோர் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. பழமையான ஓர் அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. இந்தத் திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 25 திகதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையை மையமாகக் கொண்டு, டேம்ஸ் என்ற பெயரில் சோகன் ராய் தயாரித்த குறும்படம், ஹாலிவுட்டில் விருது பெற்றிருந்தது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், 136 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் கேரள அரசின் பிரசாரம் என்றும், அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. முதல்வரிடம் நடந்து வந்த விசாரணை முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த மூவரும் நவம்பர் 29ம் தேதி ஆஜராக நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டுள்ளார். அவர்களிடம் கேட்பதற்கு 142 கேள்விகளை நீதிமன்றம் தயாரித்துள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணை தொடர்கிறது அக்டோபர் 21, 2011 சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் அக்டோபர் 20, 2011 "பூமியைப் போன்ற சூழ்நிலைகள் வேற்றுலகங்களில் உள்ளனவா என்பது முதலாவது கேள்வியாகும். இச்சூழ்நிலைகள் உள்ள உலகங்கள் மனிதர் வாழத் தகுதியானவை என நாம் அனுமானிக்கலாம் என வாசிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாலர் டர்க் சூல்சு-மாக்குச் என்பவர் கூறினார். "எமக்குத் தெரித்த அல்லது தெரியாத வேறு இனங்கள் வாழக்கூடிய சூழல் புறக்கோள்களில் உள்ளனவா என்பது எம்முன் உள்ள இரண்டாவது கேள்வியாகும்." இரு வகைகளில் இவை தரப்படுத்தப்படுகின்றன. பருமன், அடர்த்தி, தாய் விண்மீனிலிருந்தான தூரம் போன்ற இயல்புகளைக் கொண்டு பூமியை ஒத்துள்ளதா எனக் கணிக்கும் முறை முதலாவதாகும். இது பூமியை ஒத்த குறியீட்டெண் (Earth similarity index) என அழைக்கப்படுகிறது. மற்றையது வேற்றுலகம் ஒன்று பாறைகளினால் ஆனதா அல்லது உறைந்த மேற்பரப்பாலானதா, வளிமண்டலம் உள்ளதா அல்லது காந்தப் புலம் உள்ளதா போன்ற இயல்புகளை ஆராய்கிறது. இது கோள்களில் வாழத்தகுந்த குறியீட்டெண் (Planetary Habitability Index, PHI) என அழைக்கப்படுகிறது. வியாழனின் சந்திரனில் ஆழமில்லா ஏரி கண்டுபிடிப்பு நவம்பர் 17, 2011 உயிரினம் வாழக்கூடிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர் அக்டோபர் 1, 2010 1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த- 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமான போது, விடுதலைப்புலிகளுக்கெதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவரது தலைமையின் கீழ் பிரதான பங்கை வகித்து இராணுவ நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன. 1995 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது, இவர் முக்கிய பங்கை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. அணைக்கட்டு உடைந்து இலட்சக்கணக்கான மக்கள் மரணமடைவது போல தயாரிக்கப்பட்டுள்ள டேம் 999 ஆங்கிலப்படம் இந்தியாவில் இன்று வெளியாகிறது. வெளிநாட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் சோகன் ராய் மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே இது போன்று சர்ச்சைக்குரிய படத்தை எடுத்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும் தெரிவித்திருந்தனர். 'அந்தப் படம் தமிழகத்துக்கு எதிரானது என தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் தடைவிதிக்காத பட்சத்தில், மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டால் ஒரு வாரத்துக்குள் அந்தப் படத்துக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பதைத் தெரிந்துகொள்வார்கள்,’ என்றும் இயக்குநர் ஷோகன் ராய் தெரிவித்துள்ளார். டேம் 999 திரைப்படம் முப்பரிமாணத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியக் கூட்டுத்தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. அஷிஷ் வித்யார்த்தி, விமலா ராமன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அமீரகத்தில் இத்திரைப்படம் நேற்று திரையிடப்பட்டுள்ளது. டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு நவம்பர் 23, 2011 எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை தலைநகர் கெய்ரோவில் நடத்துவதற்கு எதிர்ப்பாளர்கள் ஆயத்தம் செய்து வருகின்றனர். 6 ஆவது நாளாக நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாரிர் சதுக்கத்தில் கூடியிருந்தனர். திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 40 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் தேர்தல்களை ஒத்திப் போடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். 30 ஆண்டு காலம் எகிப்தை ஆண்டு வந்த ஒசுனி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. முபாரக், மக்களால் விரட்டப்பட்ட பின், தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற ராணுவ உயர்மட்ட கவுன்சில், ஆறு மாதங்களுக்குள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதாக வாக்களித்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தல் உட்பட, கவுன்சில் சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல்கள் நடத்தப்பட முன்னர் இராணுவத்தினர் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு காவல்துறையினரும், இராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் வீசினார். அதே நேரம் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அவரது அமைச்சரவையினர், இராணுவ உயர்மட்ட கவுன்சிலிடம் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர். இருப்பினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம், எகிப்தின் பல நகரங்களிலும் தீவிரமடைந்து வருகிறது. கெய்ரோ தவிர அலெக்சாந்திரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், எகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவப் பேரவை மன்னிப்புக் கேட்டுள்ளது. இதற்கு முன் இராணுவத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால அரசின் பிரதமர் யெசாம் ஷரஃப்பின் அமைச்சரவை அங்கு கடந்த சில நாட்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த வாரம் தமது அரசைக் கலைத்திருந்தது. இதனிடையே இராணுவ அரசிற்கு எதிராக நடக்கும் போராட்டம் தொடர்ந்து ஒரு வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 41 பேர் வரை பலியாகியுள்ளனர். 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இராணுவம் ஆட்சியைப் பொது மக்களிடம் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவர் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு மில்லியன் மக்களை ஒன்று கூடும் படி அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் எகிப்தில் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் இத்தேர்தல்களை ஒத்திப் போடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். எகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு நவம்பர் 25, 2011 [[இலங்கை முழுவதும் நேற்றுப் பெய்த அடைமழை மற்றும் குறுஞ் சூறாவளியினால் வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை சீர்கேட்டினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் இன்றும் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி, வெள்ளம், மண்சரிவால் 6153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். காலநிலைச் சீர்கேட்டினால் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. மாத்தறையில் குறுஞ் சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 3 பேரும் கடலுக்குச் சென்றவர்கள் நால்வருமே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மழை, கடுங்காற்று காரணமாக காலி மாவட்டத்தில் நூறு வீடுகள் சேதமடைந்திருப்பதாக காலி மாவட்ட மேலதிக செயலாளர் குறிப்பிட்டார். இதேநேரம் வன்னிப் பகுதியில் இரணைமடு குளத்தின் பத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்றும் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இம்மாவட்டத்தில் 50,000 ஏக்கர் நெற்செய்கை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வாகனேரி வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பகுதிகளிலேயே நெற் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. பாக்கித்தானில் சோதனைச் சாவடியொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நேட்டோ உலங்குவானுர்தி நடத்திய தாக்குதலில் 24 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 உயரதிகாரிகளும் அடங்குவர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று பாக்கித்தான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கித்தான் மற்றும் ஆப்கான் எல்லைப் பகுதியிலேயே நேறுச் சனிக்கிழமை அன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பொருட்கள் போகும் பாதைகள் அனைத்தையும் மூடியுள்ளதாகப் பாக்கித்தான் ராணுவம் கூறியுள்ளதோடு குறித்த சம்பவத்திற்கு பாக்கித்தான் அரசு கடும் கண்டனத்தினையும் தெரிவித்துள்ளது. 'இத்தாக்குதலுக்கான தக்க பதில் நடவடிக்கை இருக்கிறது, அது என்ன என்பதை பாகிஸ்தான் ராணுவம் தீர்மானித்துக் கொள்ளும்’ என்று பாக்கித்தான் ராணுவத்தின் சார்பில் பேசிய ஜெனரல் அதர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைக் கடும் கோபத்தைக் கிளப்பும் செயல் என்று வர்ணித்த பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். என்ன நடந்தது என்று உண்மையை அறிய விசாரணைகளை நடத்துவதாக நேட்டோ தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவினர், மற்றும் குடும்பங்களுக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளின் தலைமைத் தளபதி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். ஒரு தொன் எடையுள்ள இந்தத் தரையூர்தி புளோரிடாவில் உள்ள கேப் கேனர்வல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ராக்கெட் ஒன்றின் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. செவ்வாய்க் கோளில் உள்ள Gale Crater எனப்படும் மிக ஆழமான பள்ளங்களில் ஒன்றில் இந்த வண்டியை தரையிறக்கிவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பள்ளத்தின் உள்ளே 5 கிமீ உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. செவ்வாயை நோக்கி உருசியா அனுப்பிய விண்கலம் திசை மாறிச் சென்றது நவம்பர் 9, 2011 பலுக்கித்தான் மாகாணத்தில் உள்ள விமானப் படைதளத்தில் இருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாக்கித்தான் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நேட்டோ படைத் தாக்குதலைத் தொடர்ந்து பாக்கித்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெளியுறவு அமைச்சகத்தில் அவசர கூட்டத்தை நடத்தினார். பிரதமர் யூசுப் ராசா கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாகித்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது பாக்கித்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என பிரதமர் கிலானி இதை வர்ணித்துள்ளார். அத்துடன், ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள், ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாக்கித்தான் அடைத்து விட்டது. மேலும், பலுக்கித்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறும், அமெரிக்காவுக்கு பாகித்தான் உத்தரவிட்டுள்ளது. நேட்டோ படை கடந்த வெள்ளிக்கிழமை எல்லை மீறி நடத்திய தாக்குதலில் 28 பாக்கித்தானியப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே பாக். அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகித்தான், அமெரிக்க உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானித்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகளுக்கு பாகித்தானின் கோர்க்காம், சாமன் ஆகிய எல்லைப் பகுதிகள் வழியாகத் தான் லொறிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் வீரர்களுக்கான உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, அந்த பாதைகளை அடைத்து விடுவது என முடிவு செய்யப்பட்டது. அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோன்று பாகித்தான் வட மேற்கு பகுதியில் ஆப்கானித்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பாகித்தானுடன் இணைந்து அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவு கணைகளை வீசி அழிந்து வருகிறது. அதற்காக ஷாம்ஸி விமானப் படைத்தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் அமெரிக்க இராணுவம் மேற்படி தளத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு பாக். அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு கண்டன கடிதத்தை அனுப்பியுள்ளது. அத்துடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருக்கு, பிரதமர் கிலாலியை உடனடியாக சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகித்தான் பிரமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் பாகித்தான் அரசு அமெரிக்கா, நேட்டோ படை மற்றும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகளுடனான உறவு குறித்து மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளை இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒபாமா அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகித்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியை இந்த தாக்குதல் பயனற்றதாக்கி உள்ளதாக தெரிவித்தார். தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானது வருத்தமளிப்பதாகவும், இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் ஹில்லரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. நேட்டோ தாக்குதலில் பாக்கித்தான் இராணுவத்தினர் 24 பேருக்கு மேல் உயிரிழப்பு நவம்பர் 27, 2011 "எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது சரியாகக் கணக்கிட முடியவில்லை என தேசிய அனர்த்த முகாமைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 39 பேர் காயமடைந்தனர் என அவர் கூறினார். இவ்விபத்துக் குறித்து இந்தோனேசிய அதிபர் சுசிலோ யுதயோனோ உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 720 மீட்டர் நீளமான இப்பாலம் 2002 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. போர்னியோவில் உள்ள மிக நீளமான தொங்கு பாலம் இதுவாகும். விசாரணைக்கு நீதிமன்றத்தில் தவறாமல் சமூகமளிக்க வேண்டும், கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும், வெளிநாட்டுக்கு பயணம் செய்ய கூடாது, சாட்சிகளை கலைக்க தவறும் பட்சத்தில் பிணை நிராகரிக்கப்படும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பிணை வழங்கப்பட்டது. கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக தில்லி திகார் சிறையில் இருந்து வந்தார். அவரது பிணை மனுக்கள் 4 முறை தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 6 மாதம் வரை பிணை கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிப்பேரா ஆகிய நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து தங்களுக்கும் பிணை கிடைத்துவிடும் என்று கனிமொழி உள்ளிட்டோர் நம்பினர். இதனால் டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய வழக்கை முன்னதாகவே விசாரிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர். இவர்களது பிணை மனுக்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமையும், நேற்றும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் 5 பேருக்கும் பிணை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரது மனு மீதான விசாரணை இன்றும் தொடரவுள்ளது. நம்பிக்கை மோசடி, குற்றவியல் சதி, ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சோவியத்தில் பிரிஜேஷ் சிங் என்ற இந்தியக் கம்யூனிஸ்டிடம் அவர் கொண்டிருந்த நட்புக் காரணமாக பிரிஜேஷ் சிங் சோவியத் அதிகாரிகளினால் மோசமாக நடத்தப்பட்டமையே தாம் அந்நாட்டில் இருந்து வெளியேறத் தூண்டிய காரணம் என சுவெத்லானா கூறியுள்ளார். சிங் என்பவரைத் தனது கணவர் என அவர் பின்னர் கூறியிருந்தாலும், அவரைத் திருமணம் புரிவதற்கு சுவெத்லானாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 1966 இல் பிரிஜேஷ் சிங் இறக்கவே அவரது அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக இந்தியா சென்ற சுவெத்லானா அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்தார். பின்னர் அவர் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று அரசியல் தஞ்சம் பெற்றார். 1949 இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சுவெத்லானா ஆசிரியையாகவும், மொழிபெயர்ப்பாளர் ஆகவும் பணியாற்றினார். மூன்று தடவைகள் மணம் புரிந்த அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். அமெரிக்காவில் கட்டிடக்கலைஞர் வில்லியம் உவெஸ்லி பீட்டர்ஸ் என்பவரை திருமணம் புரிந்து லானா பீட்டர்ஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றார். 1973 இல் இவர்களது மணம் முறிவடைந்தது. இவர்களுக்கு ஒல்கா என்ற பெண் பிள்ளை உள்ளார். 1984 இல் சோவியத் ஒன்றியத்துக்குத் திரும்பியவர் அவரது உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் அமெரிக்கா சென்றார். இவர் பிற்காலத்தில் வறுமையில் வாழ்ந்ததாக 1990 இல் செய்திப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவர் குறிப்பிட்டிருந்தார். சுவெத்லானா தனது ஆறாவது வயதில் தனது தாயை இழந்தார். தனது தந்தையுடன் இவர் நெருக்கமாக இருந்தாலும், பின்னர் பிற்காலத்தில் அவரிடம் இருந்து விலகியே இருந்தார். சுவெத்லானாவின் முதலாவது காதலர் ஒரு யூதர். இவர் சைபீரியாவுக்கு 10 ஆண்டுகள் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத் மன்னர் ஷேக் ஷபா அல் அகமது அல் சபா பரிந்துரையின்படி ஷேக் நாசர் அல் முகமது அல் சபா கடந்த 2006ம் ஆண்டு பிரதமரானார். இவரின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி உள்ளதாக எதிர்க்கட்சி புகார் தெரிவித்து நேற்று முன்தினம் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதையடுத்து பிரச்சனை அதிகரிப்பதை உணர்ந்த மன்னர் ஷேக் சபா உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரதமர் நாசர் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி விலகும் படி உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவுப்படி நாசர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. அவர்களது பதவி விலகலை மன்னர் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு பதவியேற்கும் வரையில் நாசர் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குற்றங்கள் அனைத்தும் 2010 டிசம்பர் 16 முதல் 2011 ஏப்ரல் 12 வரை இடம்பெற்றவையாகும். கடந்த ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளை குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். ஐவரி கோஸ்ட் சட்டமன்றத்துக்கு இடம்பெற விருக்கும் தேர்தல்களுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பாக்போ நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரலில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அரசுத் தலைவர் ஒருவர் அங்கு விசாரிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும். நியூயார்க் கவுன்டி சிறையில், இரண்டு ஆண்டுக் காலமும் அதன் பின் தேசியச் சிறையில், இரண்டு ஆண்டுக் காலமும் இவர் தனது தண்டனையைக் கழிக்க வேண்டும். "வழக்கின் ஆதாரங்கள் மறீயிற்குப் பாதகமாகவே அமைந்துள்ளன. அவர் தனது பொறுப்பில் இருந்து தவறியுள்ளார். இன்னுமொரு மனிதரின் இறப்புக்குப் பொறுப்புக் கூறவேண்டியவராக இருக்கின்றார். அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்து ஜாக்சனின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததற்காக அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மீது ஜாக்சன் வைத்திருந்த நம்பிக்கைக்கு பாதகமாக அவர் நடந்து கொண்டார் என நீதிபதி மைக்கல் பொஸ்டர் தனது தீர்ப்பின்போது என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். மேலும் ஜக்சனின் குடும்பத்தினருக்கு மருத்துவர் நட்டஈடு வழங்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நட்டஈட்டுத் தொகை 2012 ஆம் ஆண்டு சனவரியில் நீதிபதிகள் குழாம் கூடித் தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் 2009 சூன் 25-ல் மரணமடைந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று கூறப்பட்டாலும், அவரது திடீர் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடைசி நேரத்தில் ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மறீ மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில், அளவுக்கு அதிகமாக ப்ரோபோபோல்' என்ற வலி நிவாரணி அவர் உடம்பில் இருந்தது தெரியவந்தது. மைக்கல் ஜாக்சனின் இறப்புக்கு அவரது மருத்துவரே காரணம், நீதிமன்றம் தீர்ப்பு நவம்பர் 8, 2011 பிரித்தானிய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்து ஏறத்தாழ 20 இலட்சம் அரசுத் துறை ஊழியர்கள் நேற்று மிகப் பெரிய அளவில் ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரித்தானியாவின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. பிரித்தானியாவில் 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த நடத்திய இந்த வேலை நிறுத்தத்தில் பாடசாலை, கல்லூரிகள், சாலை, தொடருந்து, விமான சேவை, மருத்துவத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் பிரித்தானிய விமான நிலையங்களின் சேவைகள் பாதிப்படைந்தன. நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான பேரணிகள் நடந்தன. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் எல்லைப் பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வழமையான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. அதேபோன்று கடந்த ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக பிரித்தானிய ஆசிரியர்கள் நேற்றைய நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிட்டனின் 80 வீதமான பாடசாலைகள் மூடப்பட்டன. சுகாதாரத் துறையில் தாதிகள் மருத்துவமனை உதவியாளர்கள் என 4 இலட்சம் பேர் அளவில் பங்கேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது. வேலை நிறுத்தம் குறித்து நேற்றுப் பேசிய நிதித்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் இந்த வேலை நிறுத்தம் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் நமது பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் செய்யும். இதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்றார். 1926ல் நடந்த வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து இந்த வேலை நிறுத்தம்தான் பிரிட்டினில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தமாக பதிவாகியுள்ளது. தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 திரையிடப்பட்டது. தற்போது தமிழக அரசின் தடையை எதிர்த்து படத்தின் இயக்குனர் சோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவித்த போது பிரேசில், சீனா போன்ற நாடுகளில் அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் டேம் 999 படத்தை எடுத்தேன். அதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதமை நியாயமற்றது. இதை எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார். கடந்த மாதம் 24ம்திகதி டேம் 999 படத்தின் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்ற நேரத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சோகன் ராய் பேட்டியளித்த போது 'தமிழக அரசின் நடவடிக்கை முற்றிலும் துரதிருஷ்டவசமானது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் படைப்பாற்றலை அழித்து விடும் என்றும் ஏற்கனவே டேம் 999 படத்தை திரையிட தணிக்கைக் குழு அனுமதி அளித்துள்ள நிலையில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளேன்' என்றும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை வெளியிடுவதற்கு அரசு தடை நவம்பர் 25, 2011 டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு நவம்பர் 23, 2011 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை மு க ஸ்டாலினும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆக்கிரமித்துக்கொண்டதாக ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வியாழக்கிழமையன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இது தொடர்பாக விளக்கமளிக்கவே சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு மு.க. ஸ்டாலின் வழக்குரைஞர்களோடு சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஸ்டாலின் என் மீது போடப்பட்டிருக்கிற வழக்கு பொய் வழக்கு. அதாவது நிலஅபகரிப்பு என்ற பெயரிலே சொல்லப்பட்டிருக்கிற அந்த வழக்கைப் பொறுத்தவரையில் அந்த சொத்துக்கும் எனக்கும், என்னுடைய குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அந்த வீட்டைப்பொறுத்த வரையில், என்னுடைய மகன் உதயநிதி அவர் தொழில் செய்துக்கொண்டிருக்கிற சினிமா கம்பெனி பெயரிலே, வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பெற்றுள்ளார். அதிலே என்னுடைய மகளும், மருமகனும் குடியிருக்கிறார்களே தவிர, வேறு எந்த தொடர்பும் அந்த வீட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்குக் கிடையாது. எனவே அந்த புகார் தந்திருக்கக்கூடிய அந்த நபர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கோரிக்கையை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். என்னைக் கைது செய்யப்பட்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் டிஜிபி அலுவலகத்துக்கு வந்தேன். அங்கு உயர் அதிகாரிகள் யாரும் இல்லை. அங்கு கீழ்நிலை அதிகாரிகள் தான் இருந்தனர். எனவே அவர்களிடம் என்னை கைது செய்யுங்கள் என்று சொன்னபோது, அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை. எனவே தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். உண்மையில் நிலப்பறிப்பு பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா மீதுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். என் மீதான புகார்களை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன் என்றார். முன்மொழியப்பட்ட இப்பெயர்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடத்து, 114 வது மூலகம் இயற்பியலாளர் கியோர்கி ஃபிளெரொவ் என்பவரின் நினைவாக ஃபிளெரோவியம் Flerovium Fl) எனப் பெயரிடப்படும். 116 வது மூலகம் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் நினைவாக லிவர்மோரியம் Livermorium Lv) எனப் பெயரிடப்படும். ஆவர்த்தன அட்டவணையை நிர்வகிக்கும் குழு இன்னும் ஐந்து மாதங்களில் இவற்றின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். இம்மூலகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். 113வது, 115வது, மற்றும் 118வது மூலகங்கள் இன்னமும் மறு ஆய்வில் உள்ளன. லிவர்மோர் ஆய்வுகூட அறிவியலாளர்கள், உருசியாவின் டூப்னாவில் உள்ள ஃபிளெரோவ் ஆய்வுகூடத்துடன் இணைந்து இந்த இரண்டு புதிய மூலகங்களையும் கண்டுபிடித்தனர். கியூரியம் மூலகத்துடன் கல்சியம் அயன்களை மோதவிடுவதன் மூலம் 116வது மூலகம் உருவானது, இது விரைவாகத் தேய்வடைந்து 114வது மூலகமானது. கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் வீரர்களுக்கு இன்னும் போட்டிகளுக்கான கட்டணங்கள், உடன்படிக்கைத் தொகைகள் வழங்கப்படவில்லை என்றும் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்திய பின்னர், கடுமையான நிதி நெருக்கடியை இலங்கை துடுப்பாட்ட வாரியம் எதிர் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் ஊழியர்களுக்கும் கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுபடவில்லையென்று உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இதேவேளை, இது தொடர்பிலான ஆலோசனை உதவிகளுக்காக இலங்கைத் துடுப்பாட்ட வீரர்கள் சங்கம் தம்முடன் தொடர்பு கொண்டுள்ளதாக சர்வதேச துடுப்பாட்ட சங்கங்களின் சம்மேளனமான எஃப்ஐசிஏ தெரிவித்துள்ளது. இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் சங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், தற்காலிக தீர்வு குறித்து ஆராய்வதற்காக என்பதற்காக ஐசிசியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்வதேச துடுப்பாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் மூத்த நிறைவேற்று அதிகாரி டிம் மே பிபிசியிடம் கூறியிருந்தார். பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் விளையாடுவதை நிறுத்துவது தான் வீரர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலமை ஏற்படாது என்று தான் நம்புவதாகவும் கூறினார். 1923-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பஞ்சாபில் குருதாஸ்பூர் என்ற ஊரில் பிறந்த தேவ் ஆனந்த், பாகித்தானில் உள்ள லாகூரில் அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1940-ம் ஆண்டு அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். 1946ம் ஆண்டு தனது 23வது வயதில் 'ஹம் ஏக் ஹெய்ன்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 1947 ம் ஆண்டு வெளியான சித்தி படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அதன்பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் பெரும் வெற்றி பெற்றன. அவரது கைடு, பாசி, நகைத் திருடன், சிஐடி, ஜானி மேரா நாம், டாக்ஸி டிரைவர், முனீம்ஜி, அமீர் கரீப், வாரண்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ், ஹம் தோனோ ஆகிய திரைப்படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. இளமை மாறாமல் இருந்ததால் மார்க்கண்டேயன் நடிகர் என்று புகழப்பட்ட இவருக்கு 2001ம் ஆண்டு இந்தியாவின உயர் விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது. 2 முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார் தேவ் ஆனந்த் 1949ம் ஆண்டு 'நவ்கேதன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி 35க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். தேவ் ஆனந்த்துடன் பிறந்த இரு சகோதரர்களான சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோரும் கூட திரைத் துறையில் பிரபலமானவர்கள்தான். இவரது சகோதரி ஷீல் காந்தா கபூரின் மகன்தான் பிரபல இயக்குநர் சேகர் கபூர் ஆவார். அடுத்ந ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியடவிருக்கும் பூட்டினுக்கு இத்தேர்தல் தனது செல்வாக்கைச் சோதிக்கும் போட்டிக்களமாக இருந்தது. உருசிய கம்யூனிஸ்ட் கட்சி 92 இடங்களைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளது. கடந்த தேர்தல்களில் இது 57 இடங்களையே கைப்பற்றியிருந்தது. லிபரல் சனநாயகக் கட்சி 56 இடங்களை (2007 இல் 46) இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல்களில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கோலோசு என்றழைக்கப்படும் ஒரேயொரு தேதல் கண்காணிப்புக் குழு 5,300 தேர்தல் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பூட்டின் இரண்டு தடவைகள் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். உருசிய அரசியலமைப்பின் படி அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் அரசுத்தலைவராகப் பதவியில் இருக்க முடியும். இதனால் அவர் 2008 தேர்தல்களில் போட்டியிடவில்லை. இப்போது 2012 தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இத்துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் 2010 நவம்பர் 17 வருகை தந்தது. பன்னாட்டுத் துறைமுகக் கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய'களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்சிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கைத் துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. 2010 நவம்பர் 17 இல் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச அதனைத் திறந்து வைத்ததன் பின்னர் சர்வதேசத்தில் இருந்து கப்பல்கள் எதுவும் வரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன. இதன் பின்னர் பாரிய கற்பாறை இருப்பதன் காரணமாகவே பெரிய கப்பல்கள் வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்ட அரசாங்கம் கற்களை அகற்ற சீன நிறுவனத்திடம் நிதி பெற்று தற்போது கற்பாறை முற்றாக அகற்றப்பட்டுள்ளதென அறிவித்துள்ளது. கெப்லர் தொலைநோக்கித் திட்டத்தின் முதலாவது அறிவியல் மாநாட்டில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தலைநகர் காபூலின் மையப் பகுதியில் அமைந்துள்ள அபுல் உல் ஃபாசில் பள்ளிவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டனர். வேறொரு நிகழ்வில் வட ஆப்கானித்தானிலுள்ள மசார் இ சரீஃப் நகரில் உள்ள ஒரு ஷியா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு குண்டு வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் நேற்று இடம் பெற்றன. ஆப்கானித்தானில் தலிபான் ஆட்சிக்காலத்தின்போது ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆஷுரா பண்டிகை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2001-ம் ஆண்டில் மேற்கத்திய உதவியுடன் இடைக்கால அரசு அமைந்தவுடன் அந்தத் தடை விலக்கப்பட்டது. ஒரு புனித தினத்தன்று இப்படியான ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல் முறை என்று ஆப்கானித்தான் அரசுத்தலைவர் ஹமீத் கர்சாய் கூறியுள்ளார். அதேவேளையில், தலிபான்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் காபூல் மற்றும் மசார் ஷரீஃப் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் பான் நகரில் ஆப்கான் தொடர்பான சர்வதேச கூட்டம் நடத்தப்பட்ட வேளையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதத்தில் நேட்டோ படைகளின் தாக்குதலில் 24 பாக்கித்தானியப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாக்கித்தான் இம்மாநாட்டைப் புறக்கணித்தது. ஓராண்டுக்கு முன்னர் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அவர் மேன்முறையீடு செய்திருந்தமையினால், தனது இல்லத்திலேயே இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 66 வயதான கத்சவ் 2007 ஆம் ஆண்டில் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார். 1990களில் அவர் அமைச்சராக இருந்த போது அவரது முன்னாள் பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், அதிபராக இருந்த காலத்தில் இரு பெண் ஊழியர்கள் மீது பாலியல் குற்றங்கள் இழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம் அவரைக் குற்றவாளியாகக் கண்டது. தனது குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் குழப்ப நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாதிருக்கும் பொருட்டு அவரைக் கண்காணிக்க சிறப்பு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் சிறைச்சாலையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என சிறைச்சாலைகள் சேவை ஆணையாளர் ஆரன் பிரான்கோ தெரிவித்தார். இரு மாநில எல்லையில் பதற்றம் தொடர்வதால் காவல்துறை, தமிழ்நாடு சிறப்புப் படை காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் இருந்து தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை நேற்றுமுன்தினம் மாலை, கேரள போராட்டக்காரர்கள் அடித்துத் தாக்கினர். குமுளி பகுதி வழியாக சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை சிலர் தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த ஐயப்ப பக்கதர்களை வாகனங்களில் இருந்து இறக்கி விரட்டித் தாக்கினர். மேலும் அங்கிருந்த தமிழர்களின் உணவுவிடுதிகள், கடைகள் ஆகியவற்றை உருட்டுக் கட்டையால் தாக்கி சேதப்படுத்தினர். சில நாட்களாக நடந்து வரும் இக்சம்பவங்களால் அச்சமடைந்த வணிகர்கள் தங்களது கடைகளை மூடினர். ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் எத்தாபாளையம் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து கூடலூர் வரை 11 கி. மீ. தூரத்திற்கு வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டன. அவற்றில் பயணித்த பக்தர்கள், உணவுகூட கிடைக்காமல் அவதியுற்றனர். இதனால், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் பயணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து செல்ல இருந்தவர்கள், தங்கள் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். டிசம்பர் 27ம் தேதி வரை, மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை திறந்திருக்கும் என்பதாலும், டிசம்பர் 30ம் தேதி மீண்டும் மகர ஜோதிக்காக நடை திறக்கப்படும் என்பதாலும், பிரச்னை தீரும் வரை காத்திருந்து, பின், பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் நேற்று முன்தினம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசித் தீர்க்கலாம் என்று தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்றுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்க்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்குக் கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கேரள மக்களின் பாதுகாப்பு தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உடனடியாக 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துத் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்றார். அதேநேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளில் கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை ச்நதேகிக்க வேண்டியதில்லை காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும் நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. பல நூற்றாண்டுகளாக இரு மாநில மக்களுக்கும் இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு வன்முறையால் தீர்வு காண முடியாது என்று தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தெரிவித்துள்ளார். தமது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுடன் பேச்சுக்கு வரத் தாம் தயாரென வடக்குப் பெருவில் இவ்வியக்கத்துக்குத் தலைமை தாங்கும் தோழர் ஆர்ட்டேமியோ கூறியுள்ளார். அவ்வியக்கத்தின் ஏனைய போராளிகளும் ஆயுதங்களைக் கைவிடத் தயாரா என்பது இதுவரையில் அறியப்படவில்லை. 1980களிலும் 1990களின் ஆரம்ப காலத்திலும் ஷைனிங் பாத் என்ற இந்த இயக்கம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த போது இடம்பெற்ற மோதல்களில் கிட்டத்தட்ட 70,000 பேர் வரையில் இறந்துள்லதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெருவின் பூர்ஷுவா மக்களாட்சி எனத் தாம் கருதிய அப்போதைய அரசை ஒழிக்கவென 1980 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாவோயிச வழியில் கம்யூனிச அரசை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அபிமாயெல் குஸ்மன் கைது செய்யப்பட்டமை, மற்றும் பெருவின் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் தீவிரவாதத்துக்கெதிரான கடுமையான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால் இவ்வியக்கம் பலவீனமடைந்தது. பெருவின் சில பகுதிகளில் எஞ்சியுள்ள சில போராளிகளுடன் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மோதல்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன. இதற்கு முன்னர் ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சேவாக் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இதே மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 200 ஓட்டங்களை பெற்று டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஒருநாள் வரலாற்றில் இரட்டைச் சதம் பெற்ற இரண்டாவது வீரராகவும் சேவாக் வரலாறு படைத்தார். அணித் தலைவராக களம் இறங்கி ஓட்டங்களைக் குவித்த சேவாக், 149 பந்துகளில் 25 எல்லைகள், 7 சிக்சர்கள் அடங்கலாக 219 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். எனினும் சேவாக் 170 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டாரன் சாமி அவரை ஆட்டமிழக்கச் செய்யக் கூடிய ஒரு சுலபமான வாய்ப்பைத் தவறவிட்டார். இதற்கு முன்னர் சேவாக் விளையாடியுள்ள 239 ஒரு நாள் போட்டிகளில், ஒன்றில் அவர் எடுத்திருந்த அதிக பட்சமான ஓட்டங்கள் 175. இது உலக கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிராக எடுத்த ஓட்டங்களாகும். இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 418 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் ஒருநாள் அரங்கில் நான்காவது அதிகூடிய ஓட்டங்களை இந்திய அணி பதிவு செய்து கொண்டது. இறுதியில் இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் கீழ்ப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தீப்பரவியதில் இறந்தவர்கள் பெரும்பான்மையானோர் நோயாளிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கீழ்த்தளத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே முதலில் தீப்பற்றியது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் வரை போராடியே தீயை முற்றாக அணைக்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் உதவியுடன் மாடியை நெருங்கி ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பலர் நோயாளிகள் என்பதால் அவர்களை ஏணி வழியாக விரைவில் மீட்பதில் பிரச்னை ஏற்பட்டது. எனினும் தங்களால் முடிந்த அளவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்த நோயாளிகளை வீரர்கள் மீட்டனர். 25 தீயணைப்பு வாகனங்களுடன் 250 வீரர்கள் பெரும் போராட்டத்துக்குப்பின் தீயை அணைத்தனர். மருத்துவமனை மிகவும் நெரிசலான பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அங்கு போதிய தீ விபத்து தடுப்பு வசதிகள், அவசரமாக வெளியேறும் வழிகள் என எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. இத்தீவிபத்து ஒரு "மன்னிக்கமுடியாத குற்றம்" எனத் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இத் தீவிபத்துக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறினார். ஏழு அடுக்குமாடி கொண்ட இந்த மருத்துவமனையில் பாதுகாப்பு விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தீப்பிடித்த உடன் அதனை அணைக்கும் முயற்சி எதையும் மேற்கொள்ளாமல் மருத்துவர்களும், பிற பணியாளர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக மருத்துவமனையின் 6 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும், அவர்களை கவனிக்க வந்த உறவினர்களும் அங்குமிங்குமாக ஓடியதாகவும், பல இடங்களில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி பலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்ட போது முதல்வர் உம்மன் சாண்டி தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது, பலவீனமாக உள்ளது என்றும் இதனால் கேரளாவின் ஐந்து மாவட்ட மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அணை அமைந்துள்ள பகுதியில் தொடரும் நில அதிர்வுகளால் 116 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து புதிய அணைதான் ஒரே தீர்வு என்றும் கூறினார். மூன்று மணிநேர விவாதத்தை முடித்துவைத்துப் பேசுகையில் முதல்வர் சாண்டி, தமிழ் நாட்டுடன் சுமுக உறவைப் பேணவே கேரளம் விரும்புவதாகவும் பிரச்சினையினை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார். அதே நேரம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசஃப் ‘எந்த இடத்தில் புதிய அணை கட்டப்பட வேண்டுமென தீர்மானித்துவிட்டோம். மத்திய அரசு சுற்றுச்சூழல் பிரச்சினையை உறுதிப்படுத்திவிட்டு அனுமதி வழங்கியதும் எங்கள் செலவிலேயே அணை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்றும் கூறியுள்ளார். இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 12-ம் நாள் தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதெனவும், 15ம் தேதி மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவது எனவும் நேற்று சென்னையில் கூடிய திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் திமுக அதிருப்தியாக உள்ளதாக கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார். கபிலா 49% வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், மூத்த அரசியல்வாதியும், எதிர்க்கட்சித் தலைவருமான எத்தியேன் த்சிசேக்கேடி 32% வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். இதற்கிடையில், எத்தியேன் த்சிசேக்கேடி இம்முடிவுகளை நிராகரித்துள்ளதோடு, தாமே அரசுத்தலைவர் எனப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து அங்கு வன்முறைகள் தலைதூக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்தாலும், சில தொழில்நுட்பக் குறைபாடுகளால் முடிவுகள் அறிவிப்பது தள்ளிப்போடப்பட்டது. கொங்கோ மக்களாட்சிக் குடியரசு தங்கம், வைரம், மற்றும் கோல்ட்டான் போன்ற தனிமங்கள் பெருமளவு கிடைக்கும் ஒரு நாடாகும். ஆனாலும், பல ஆண்டுகளாக அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பம், மற்றும் நிருவாகக் குளறுபடிகள் போன்றவற்றினால், அந்நாடு உலகின் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நாடுகளின் வரிசையில் கடைசியாக இருந்து வருகிறது. தலைநகர் கின்சாசாவில் கலவரம் அடக்கும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கொங்கோவில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி நான்கு மில்லியன் மக்கள் வரையில் உயிரிழந்துள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் ஜோசப் கபிலா பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளார். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அவரின் பங்களிப்பு அங்கு பெரிதளவில் பேசப்படுகிறது. கொங்கோவின் மேற்குப் பகுதியில் அவர் செல்வாக்குக் குறைந்தவராகக் காணப்படுகிறார். 40 வயதாகும் கபிலா 2001 ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் அரசுத்தலைவராக இருந்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் இடம்பெற்ற முதலாவது தேர்தலில் வெற்றி பெற்றார். டிசம்பர் 20 இல் அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்க விருக்கிறார். கெப்லர்22பி படங்களை காண்பித்தால் நன்றாக இருக்க்ம் நேற்று சனிக்கிழமை இவ்விபத்து நடந்தது. மணிலா விமான நிலையத்திலிருந்து விமானம் பறக்க ஆரம்பித்தவுடன், உடனடியாகத் தரையிறங்க வேண்டுமென விமான ஓட்டியிடம் இருந்து தகவல் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக விமான நிலையத்தில் தரையிறக்க மேற்கொண்ட முயற்சியை அடுத்தே விமானம் பள்ளியின் மீது வீழ்ந்துள்ளது. ஆறு முதல் எட்டு பேர் செல்லக்கூடிய சிறிய விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட இதுவரை 13 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாக ரெட் கிராஸ் செயலர் ஜீவென் பாங் தெரிவித்தார். விபத்து நடக்கும்போது பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இவ்விபத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீயானது அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. கிட்டத்தட்ட 30 குடிசை வீடுகள் எரிந்துள்ளதாக பிலிப்பீனிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என உடனடியாகத் தெரியவில்லை. விமானத்தின் விமானி மற்றும் உதவியாளர் ஆகியோரைக் காணவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு மாநிலமான குவெரேரோவை நேற்றிரவு உள்ளூர் நேரம் 19:47 அளவில் தாக்கியது. இதன் தாக்கம் தலைநகர் மெக்சிக்கோ நகரிலும் உணரப்பட்டது. இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இகுவாலா நகரில் வீட்டின் கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றும் ஒருவர் பயணம் செய்த வாகனம் ஒன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் கொல்லப்பட்டார். நிலநடுக்கம் 65 கிமீ ஆழத்தில் இடம்பெற்றுள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இக் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் முன்தினமும் நேற்றும் யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றாலும் கூட குமுளி வரை மக்கள் முன்னேறினர். பின்னர் மாவட்ட ஆட்சியhளரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர். இதற்கிடையே,எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள எல்லை அருகே சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பொதுமக்கள் உறுதியளித்தனர். தமிழகத்தில் கேரளாவை சேர்ந்த நிறுவனங்கள் ஆங்காங்கே தாக்கப்படுகின்றன. பொது மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஞாயிறு மாலை இவர் விமானம் மூலம் பனாமா நகருக்கு வந்து சேர்ந்தார். 1980களில் இவர் ஆட்சியில் இருந்த போது நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக இவர் மூன்று மனித உரிமை மீறல்களில் அவர் பனாமாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத நிலையில் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தன. 77 வயதாகும் நொரியேகா ஏற்கனவே பிரான்சிலும் அமெரிக்காவிலுமாக மொத்தம் 20 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். பிரான்சின் நீதிமன்ரம் சென்ர மாதம் அச்வரை மீண்டும் பனாமாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு அனுமதி அளித்திருந்தது. பனாமாவில் நொரியேகாவின் பாதுகாப்புக்கு முக்கிய கவம்னம் மேற்கொள்ளப்படும் என பனாமாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரொபர்ட்டோ ஹென்றிகஸ் கூறினார். ஜெனரல் நொரியேகா 1983 முதல் 1989 வரை பனாமாவின் தலைவராக இருந்தவர். ஒரு காலத்தின் அமெரிக்காவின் நண்பராக இருந்தவர். 1988 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் அமெரிக்க அரசுக்கும் இருந்த உறவு முறிந்தது. அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை அடுத்து நொரியேகா அங்கு “போர் நிலை”யை அறிவித்தார். பனாமாக் கால்வாயில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும் பனாமாப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை வலுத்தது. அமெரிக்கக் கடற்படை வீரர் ஒருவர் பனாமா நகரில் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து 1990 இல் அமெரிக்கா பனாமாவை முற்றுகையிட்டது. இதையடுத்து வத்திக்கன் தூதரகத்தில் நொரியேகா தஞ்சமடைந்தார். அமெரிக்கப் படைகள் தூதரகத்தின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்ததை அடுத்து 1990 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் நாள் நொரியேகா அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர் மியாமிக்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுப் பின்னர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார். மனுவேல் நொரியெகாவை பனாமாவுக்கு நாடு கடத்த பிரான்ஸ் முடிவு ஆகத்து 4, 2011 சீனக் கடற்படைக்குத் தேவைப்படும் கருவிகளையும் சாதனங்களையும் வழங்கவும், அதற்குத் தேவைப்படும் பழுதுபார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளைச் செய்யவும் இந்தத் தளம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்து மகா சமுத்திரத்தில் சீனக் கடற்படை போரில் ஈடுபட்டால் அதற்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் எரிபொருளையும் நிரப்பிக்கொள்ளவும் பழுதுபார்க்கவும் இந்தத் தளம் முக்கியமான மையமாகச் செயல்படும். இதன் மூலம், சீன இராணுவ நோக்கங்களுக்கு இந்த மையம் உதவும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சிசெல்சு நாட்டுக்கு 'நல்லெண்ணப் பயணமாக'ச் சென்ற சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லீ, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டுத் திரும்பியுள்ளார். இராணுவத் தளம் மட்டுமின்றி, சிசெல்சு நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்று சீனாவிடமும் இருக்கிறது. ஆனால் அதில் இதுவரை விமானந்தாங்கிக் கப்பல் சேர்க்கப்படவில்லை. இப்போது முதல்முறையாகச் சேர்க்கப்படவிருக்கிறது. இந்த நிலையில் சீசெல்சுத் தீவில் அதற்கு தளம் அமைவது முக்கியத்துவம் வாய்ந்தது என அவதானிகள் கருதுகின்றனர். சிசெல்சு சுமார் 115 தீவுகள் கொண்ட தீவுக்கூட்டமாகும். இவை நெருக்கமாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 5 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளன. இந்தத் தீவுக்கூட்டங்களை 3 பெரும் பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக இருப்பதைத் தவிர்த்து இந்த தீவுக்கூட்டங்கள் வேறு எதற்கும் அதிகம் பயன்படுவது கிடையாது. ஆபிரிக்காவின் கிழக்குக் கடலோரத்திலிருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் இருக்கிறது. பன்னாட்டுக் கடல் வாணிபத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் கடல் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கவும் ஒடுக்கவும் இந்த தளம் சீனத்துக்கு உதவும் என்று சிசெல்சுத் தீவின் வெளியுறவு அமைச்சர் ஜீன் பால் ஆடம் கூறியுள்ளார். இளங்கலை மூன்றாம் ஆண்டு குடிசார் பொறியியல் மாணவன். பெல்ஜியத்தின் லீஜ் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த புனித லாம்பர்ட் சதுக்கத்தில் இருந்த மக்கள் மீது, அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில் கூரையிலிருந்து ஒருவர் பல கையெறிக் குண்டுகளை வீசியதாக இந்நிகழ்வை நேரில் பார்த்த ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். தாக்குதலை நடத்தியவர் நோர்டீன் அம்ரானி என்பவர் 33 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார் என்றும் அந்த நபர் பின்னரை தன்னையும் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் தனியாகவே அதை செய்தார் என்றும், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர் அவர் குறித்த விபரங்களை சேகரித்து வைத்திருந்தனர் என்றும் லீஜ் நகரின் முதல்வர் கூறியுள்ளார். இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் இறந்த உடலைத் தாம் கண்டெடுத்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்தனர். தலையின் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிரிய விவகாரம் குறித்து ஐ. நா. பாதுகாப்புச் சபைக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக, கடந்த பத்து மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மக்களின் கோரிக்கை ஏற்காத சிரியா அரசு மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை விதித்துள்ளன. பப்புவா நியூ கினியின் லாய் என்ற இரண்டாவது பெரிய நகரத்தில் இருந்து 89 கிமீ தூரத்தில் 121 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 3 நிமிடங்கள் தொடர்ந்த நிலநடுக்கம் மிகவும் பெரிய அளவில் இருந்ததாகவும் சில கட்டடங்களின் சுவர்கள் மட்டும் லேசான பாதிப்படைந்ததாகவும், நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளிலிருந்து வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் போர்ட் மோர்ஸ்பியை சேர்ந்த மக்களும், இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்காளத்தில் நச்சுச் சாராயம் அருந்தி 125 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ரிக்சா வண்டி இழுப்பவர்களும், சாலையில் கூலி விற்பனை செய்வோரும் ஆவர். 175 பேர் வரையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கராம்புர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகவும், இதில் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மது குடித்த பலரும் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்த பின்பே அவர்கள் குடித்தது நச்சுச் சாராயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது. இதனை முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். இதே வேளையில், மதுபானம் விற்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை வழங்கப்படும் என மம்தா அறிவித்துள்ளர். கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 91 நோயாளிகள் கொல்லப்பட்டனர். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ஏற்று, அந்த அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006 ஆம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு(திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கூறுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பிட்ட அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று, உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பி, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த வாரம் ஒரு தீர்மானத்தை இயற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அது சரியானது அல்ல என்கிற காரணத்தால், அந்தத் தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தை தெரிவிப்பது எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் தெரிவிக்கிறது. * 12 டிசம்பர் 2011 முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள எல்லையை நோக்கி மக்கள் பேரணி]] * 10 டிசம்பர் 2011 கேரள சட்ட மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கத் தீர்மானம்]] * 8 டிசம்பர் 2011 பெரியாறு அணை விவகாரத்தால் தமிழக-கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது]] தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் பிறந்த குழந்தைகளுக்கு தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை தடுப்பு உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பெண்டாவேலண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தற்போது வழங்கப்பட உள்ளது. பெண்டாவேலண்ட் தடுப்பூசியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எச்ஐபி தடுப்பூசி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது. நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார். சட்ட நிபுணரான சி. ஆர். டி சில்வா தலைமையிலான இக் குழுவினர் நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர். ஆணைக்குழு தன் அறிக்கையை 388 பக்கங்களிலும் அதற்குரிய இணைப்புகளை 375 பக்கங்களிலும் உள்ளடக்கி இருபாகங்களை முன்வைத்துள்ளது. இந்த இரு பாகங்களையும், அவற்றின் சுருக்க அறிக்கையை மூன்று மொழிகளிலும் கொண்ட ஆவணங்களையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் சமர்பித்தார். மகிந்த ராஜபக்ச 2010, மே 15ம் திகதி இந்த ஆணைக்குழுவை நியமித்தார். இக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு தமது அறிக்கையை கடந்த நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தனர். இராணுவம் பொதுமக்கள் இருந்த பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அதன் பிறகு காணமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதற்காக இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் வேண்டுமென்றே மிகவும் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. எப்படியிருந்த போதிலும் சில தருணங்களில் பலப்பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், அவை குறித்து மேலதிக புலன் விசாரணைகள் தேவை என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. இந்த விடயத்தில் இராணுவத்தின் பொதுவான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக குற்றங்காணப்படும் இலங்கை இராணுவச் சிப்பாய்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பபட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. சர்வதேச போர்ச் சட்டங்கள் குறித்து தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தற்போதைய பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், அரசாங்கங்களுக்கும், அரசாங்கம் அல்லாத போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான போர்களுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் அல்லாத குழுக்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாத காரணத்தால், அதற்கேற்றவாறு சர்வதேச சட்டங்களை மாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணாமல்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவை குறித்து விசாரிக்க காணாமல்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்ப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. வெளியுலகுக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படுதலில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. குற்றமிழைத்ததற்கான சாட்சியங்கள் போதுமானதவையாக இல்லை எனக் காரணம் காட்டி ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படைகள் FDLR) என்ற போராளிக்குழுவின் தலைவர் உம்பருசிமானாவை உடனடியாக விடுவிக்குமாறு த ஹேக் நகரில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர். இத்தீர்ப்புக்கு எதிராகத் தாம் மேன்முறையீடு செய்யவிருப்பதாக வழக்குத் தொடுநர்கள் அறிவித்துள்ளனர். கொங்கோவில் 2009 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கானோரைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கவும், படுகொலைகள் செய்யவும் போராளிகளுக்கு உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் இவர் பிரான்சில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். 1994 ருவாண்டா தூத்சி இனப்படுகொலைகளிலும் "ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படையினரின் சில தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் தூத்சி இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட குழு ஆட்சியைக் கைப்பற்றியதும் இவர்கள் அயலில் உள்ள கொங்கோ மக்களாட்சிக் குடியரசிற்குள் தப்பி ஓடியதை அடுத்து கொங்கோவில் நீண்டகாலம் சுமுகநிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊட்டு இனப் போராளிகள் கொங்கோவைத் தமது தளமாகப் பாவிப்பதை நிறுத்துவதற்காக ருவாண்டா தனது படையினரை அங்கு இரு தடவைகள் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 5 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர். ருவாண்டா போராளிக் குழுத் தலைவர் பிரான்சில் கைது அக்டோபர் 12, 2011 இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உசைன் அல் அசாதி ஈராக்கில் உள்ள கடைசி ராணுவக் குழு விடை பெறுவதாக ஈராக் மக்களுக்கு அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இன்று எங்கள் பணியின் கடைசி பக்கத்தை திருப்புகிறோம். ஈராக்கில் உள்ள கடைசி ராணுவப் படைக்கு பொறுப்பாளராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக நாடு திரும்பி வந்த நிலையில் இறுதியாக நாசிரியாவில் மட்டுமே 4,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்தும் திட்டத்துடன், கடந்த 2003ம் ஆண்டு 1,70,000 அமெரிக்க படைவீரர்கள் களமிறங்கினர். நீண்ட தேடுலுக்கு பிறகு சதாம் உசேனை கைது செய்து தூக்கிலிடப்பட்டார். பின்பு சதாமின் ஆதரவாளர்கள் ஈராக்கில் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஆங்காங்கே குண்டுவெடிப்புகளும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதனை தடுக்கும் பொருட்டு, அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். * 28 டிசம்பர் 2010 ஈராக்கில் இருந்து அமெரிக்கப் போர்ப் படைகள் வெளியேற்றம்]] கடந்த 12 மணி நேரமாகப் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென்று மழை வலுத்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சூறாவலை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டு தோறும் பிலிப்பீன்சில் சூறாவளிகள் தாக்கினாலும், நாட்டின் தெற்குப் பகுதியில் குறைந்தளவு சேதங்களே ஏற்படுவதுண்டு. 2 குழந்தைகள், 1 பெண் உட்பட 33 பேர் மீன்பிடித்துக் கொணடிருந்தவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக, ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூழ்கியவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களை மீட்கும் பணியில் இரு உலங்குவானூர்திகளும், கடற்படைக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆப்கானித்தான், துருக்கி, ஈரான், சவூதி அரேபியாவை சேர்ந்தவர்களே ஆத்திரேலியாவில் குடியேற சட்டவிரோதமாகச் சென்றுள்ளனர். கிழக்கு ஜாவாவை அடுத்த கடல்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில் தப்பியவர்கள் மூன்று முதல் நான்கு மீட்டர் உயரமுள்ள அலைகள் இருந்த்தாகவும், வேகமாக காற்றடித்தாகவும் கூறுகின்றனர். ஜாவாவில் இருந்து 40 கடல்மைல் தூரத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தப் படகில் 250 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படகு மூழ்கிய இடங்களில், சுறாமீன்கள் அதிகளவில் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் பணிக்கென ஆத்திரேலியாவைச் சேர்ந்த 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்குள் ஆத்திரேலியா நோக்கி வந்த இரண்டாவது கப்பல் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இறந்த தலைவரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் பியோங்யாங் நகரில் டிசம்பர் 28 இல் இடம்பெறும். கிம் ஜொங்-உன் தலைமை வகிப்பார். கிம் ஜொங்-இல் 1994 ஆம் ஆண்டில் அவரது தந்தை கிம் உல்-சுங் இறந்த பின்னர் கம்யூனிச நாட்டின் தலைவரானார். இவர் தலைமைப் பொறுப்பு ஏற்ற சில மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தினால் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் உயிரிழந்தனர். மனித உரிமை மீறல்கள், மற்றும் அணுவாயுதப் பயன்பாடு போன்றவற்றினால் உலக நாடுகள் வட கொரியாவை ஒதுக்கியே வைத்துள்ளன. சீனா போன்ற ஒரு சில நாடுகளே இந்நாட்டுடன் நட்புறவு கொண்டுள்ளன. 2006 ஆம் ஆண்டில் வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதித் தலைவர், தேசிய அமைப்பாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கும் நேற்று திங்கட்கிழமை நண்பகல் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்ற போதே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்டனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு 72 வாக்குகளும், கரு ஜயசூரியவுக்கு 24 வாக்குகளும் கிடைத்தன. இரகசிய வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ரணிலின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். அதேநேரம், கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர். கற்களையும், தடிகளையும், சிறிகொத்தா அலுவலகத்தை நோக்கி வீசினர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததுடன், சிறிகொத்தா அலுவலகமும் சேதமுற்றது. கட்சித் தலைமைப் பதவியிலிருந்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை வெளியேற்றுவதற்கு சஜித் பிரேமதாச எம்.பியின் அணியினர் கடந்த சில மாதங்களாக முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்தடிப்படையில் கட்சி யாப்பின் பிரகாரம் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்த ஜெயலலிதா, சசிகலாவை உற்ற தோழியாக தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார். நாளுக்கு நாள் இவர்களது நட்பு உச்சத்தை பெற்றது. இதனையடுத்து, ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா ஜெயலலிதாவிற்கு அறிவுரை வழங்கி வந்தார். மேலும் தன் குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சியில் சேர்க்க வைத்தார். சசிகலாவின் அக்காள் மகன்கனான சுதாகரை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அதுமட்டுமின்றி தன் வளர்ப்பு மகன் திருமணத்தை தமிழகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டாக ஜெயலலிதா நடத்தியிருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீக்கப்பட்ட இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கத்தில் சசிகலாவுக்கூடாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக பதவி துறந்த சூழ்நிலையில் சசிகலாவும் அவரின் குடும்பத்தினரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எதிர்வரும் 30ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடக்கவுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுச் செயலாளரான ஜெயலலிதா எடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உருசியாவில் செயல்படும் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த சாது பிரியா தாஸ், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது: இந்த நூல் குறித்து மாஸ்கோவிலும், சென் பீட்டர்ஸ்பர்க்கிலும் உள்ள இந்தியாவின் வரலாறு, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றை நன்கு அறிந்த அறிஞர்களிடம் நீதிமன்றம் கருத்துக் கேட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீர்ப்பை டிசம்பர் 28-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது என்றார். அதேநேரம் 'இந்தியாவின் எதிர் நாட்டில் கூட இப்படி ஒரு எண்ணம் வரவில்லை ஆனால் நமது நட்புறவு நாடான உருசியாவில் தான் இந்து மத புனித நூலான பகவத்கீதைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் கவலை அளிப்பதாகவும், இதற்கு எதிரான தீர்ப்பு எதுவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உருசிய அரசின் பொறுப்பு என்றும் உருசியாவிற்கான இந்தியத் தூதர் அஜய் மல்கோத்ரா அந்நாட்டு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்கிடையே, இது போன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டதற்கு, ரஷ்யா, வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சான்டர் கடாகின், புனித நூல்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற நகரில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது விந்தையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் இக்கோள்களில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும், இவற்றில் ஒன்று நமது பூமியை ஒத்த இயல்புகளைக் கொண்டிருந்திருக்கக்கூடும் எனவும் வானியலாளர்கள் கருதுகின்றனர். எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களில் இவையே மிக முக்கியமானதாக இவர்கள் கருதுகின்றனர். நேச்சர் என்ற வானியல் ஆய்விதழில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வர்ட்-சிமித்சோனியன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர் பிரான்சுவா ஃபிரெசின் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோள்களும் மிகவும் சூடானதாக இருப்பதால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனாலும், இக்கோள்கள் முன்னர் தமது விண்மீனுக்கு மிகத் தூரவாக இருந்துள்ளன என்றும், அப்போது அவற்றின் மேற்பரப்பு நீர் இருக்கும் அளவுக்கு போதிய அளவு குளிர்மையாக இருந்திருக்கின்றன என்றும் ஃபிரெசின் தெரிவித்தார். இதற்கிணங்க எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவடையவுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2013 மார்ச் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றது. குறித்த உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகப் பிரிவுகள் தமிழர்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களாகும். இந்திய மாணவர் ஒருவரை குத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஆத்திரேலிய இளைஞர் ஒருவருக்கு 13 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2010 சனவரி மாதத்தில் மெல்பர்ண் நகரில் நித்தின் கார்க் என்ற 21 வயது மாணவனை கொலை செய்ததை 17 வயது ஆத்திரேலிய இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார். இப்படுகொலையை அடுத்து இந்தியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை தோன்றியிருந்தது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சிட்னியிலும் மெல்பர்னிலும் இந்திய மாணவர்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்நிகழ்வுகளை அடுத்து ஆத்திரேலியாவுக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த நிதின் கார்க் மெல்போர்னில் மேற்கு பூட்ஸ்கிரே என்ற இடத்தில் உள்ள "த ஹங்க்றி ஜாக்ஸ்" உணவகத்தில் அவர் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இரவு அவர் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது ஆத்திரேலிய இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து நித்தினைத் தாக்கினர். ஒருவர் கத்தியால் பல முறை குத்தியுள்ளார். அவர் ஓட ஓட விரட்டிச் சென்று தாக்கினார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் கைத்தொலைபேசியைப் பறிக்கவே தாம் அவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்தார் இது இனவெறித் தாக்குதல் அல்லாமல், தற்செயலாக இடம்பெற்றதே என நீதிபதி போல் கோக்லன் தெரிவித்தார். எட்டு ஆண்டு சிறைக்குப் பின்னர் இவ்விளைஞர் நான்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்படலாம் என நீதிபதி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை சனவரி 10, 2010 ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு சூலை 30, 2009 ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் சனவரி 9, 2010 'இண்டர்லொக்" என்ற இலக்கியப் பாடநூல் ஒன்றில் உள்ள புதினம் மலேசியத் தமிழரிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இது குறித்து கண்டனங்களைத் தெரிவித்தனர். மலாயாவிற்கு வந்த தென்னிந்தியர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய “மணியம் குடும்பத்தார்” (Keluarga Maniam) என்னும் குறுநாவல் ஒன்று இந்நூலில் சேர்க்கப்பட்டது. எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட இப்புதினம் அப்துல்லா உசேன் என்ற தேசிய எழுத்தாளரால் எழுதப்பட்டது. இப்புதினம் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை இடித்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மிகவும் தாமதமாக மீட்டுக்கொள்ளப்பட்டாலும், அரசாங்கத்தின் இம்முடிவு எழுத்தாளரின் கெளரவத்தை பாதுகாப்பதோடு, இன நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதாக பல அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன. மலேசியப் பாடநூலில் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் சனவரி 13, 2011 இந்தக் குண்டு தாக்குதல்கள் நேற்றுக் காலை பாக்தாதின் அலாவி, பாப் அல் முதாம், கர்ராதா மாவட்டம், அத்யாமிய, ஜுவலா, கிழக்கு ஜெத்ரியா, கசாலியா, அல் ஆமில், தூரா பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. பாதையோரங்கள் கட்டிடங்கள் எனப் பல இடங்களில் இக்குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்புக் கூறவில்லை. எனினும் திட்டமிட்ட ஓர் அமைப்பே இத் தாக்குதலை நடத்தியிருக்கும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து நடத்தப்படவில்லை என்று, பாதுகாப்பு படைகளின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் காசிம் அத்தா தெரிவித்துள்ளார். பாடசாலைகள், தினக்கூலிகள் மற்றும் ஊழல் தடுப்பு அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்தே தாக்குதல் இடம்பெற்றது எனவும் அவர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் அந்நாட்டு அரசர் உவான் கார்லோசு முன்னிலையில் பிரதமர் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த இரண்டு முக்கிய தாக்குதல்களை விட மேலும் சிறிய நிலநடுக்கங்கள் ஆங்காங்கே பிற்பகல் முழுவதும் உணரப்பட்டன. நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மின்சாரமும் தடைப்பட்டது. பெக்சுலி மாவட்டத்தின் சாலைகளில் இரண்டு பெரும் குழிகள் தோன்றியுள்ளன. நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் சூன் 14, 2011 நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு பெப்ரவரி 22, 2011 கடந்த ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலை மக்கள் விரோதமானது என்று கூறி இக்கட்சி புறக்கணித்ததை அடுத்து அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பர்மாவில் தற்போது ஆட்சி செய்யும் இராணுவ ஆதரவு பெற்ற புதிய அரசாங்கம், சீர்திருத்தப் போக்கில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதை அடுத்து, அரசியல் அமைப்புக்குள் மீண்டும் இணைவதற்கான தருணம் இது என்று ஆங் சான் சூச்சி முடிவெடுத்துள்ளார். சனநாயக விழுமியங்களைக் கடைப்பிடித்ததற்காக தன்னையும் தனது இயக்கத்தையும் ஒரு காலத்தில் தண்டித்திருந்த பழைய இராணுவ அரசாங்கத்தின் மையத்தில் இருந்த அதே ஆட்கள்தான் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக, அதிபர் தெய்ன் செய்ன் நாடு சனநாயக வழியில் செல்லும் என உறுதியளித்தார். ஆங்சான் சூச்சியின் கட்சி தற்போது அந்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்ற அனைத்து தொகுதியிலும் போட்டியிட முடிவுசெய்துள்ளது. தனிப்பட்ட முறையில் சூச் சியுமே கூட இவ்விடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆங் சான் சூச்சியின் சனநாயகக் கட்சி அரசியலில் இணைய முடிவு நவம்பர் 20, 2011 ஐக்கிய அமெரிக்காவில் ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தனது 56 வது அகவையில் புற்றுநோயால் மரணம் அடைந்தார். கணினித் தொழில்நுட்பத் துறையை புரட்சிகரமாக மாற்றி அமைத்த இவர், 2010 இல் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் பெறுமதி (350 பில்லியன்) மிக்க நிறுவனமாக வளர்த்தெடுத்தார். இதனால் இவர் உலகில் மிகவும் பணமும், செல்வாக்கும் மிக்கவர்களில் ஒருவர் ஆனார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். ஸ்டீவ் ஜாப்ஸ் தனது உயரிய கணணிக் கண்டுபிடிப்புகளான ஐபாட், ஐடியூன் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அதற்காக அவருக்கு இந்த கிராமி விருது வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 12ந் தேதி நடைபெறவுள்ளது. இசை உலகில் சாதனை படைத்து மரணம் அடைந்தவர்களை கௌரவிக்க வழங்கப்படும் விருதான “மறைவிற்குப் பின்னரான கிராமி விருது” ஸ்டீவ் ஜாப்சுக்கு வழங்கப்படுகிறது. இவர் தவிர கிலின் காம்பெல், ஆல்மன் பிரதர்ஸ் பாண்ட், ஜார்ஜ் ஜோன்ஸ், டயனா ஆகியோருக்கும் வாழ்நான் சாதனையாளர் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 56வது அகவையில் காலமானார் அக்டோபர் 6, 2011 பூட்டினின் பேச்சாளர் திமீத்ரி பெஸ்கோவ் பிபிசி செய்தியாளரிடம் கூறுகையில் பெரும்பாலானோர் பூட்டினையே ஆதரிக்கிறார்கள், ஆர்பாட்டக்காரர்கள் ஒரு மிகச் சிறுபான்மையினரே என்றார். கிட்டத்தட்ட 56,000 பேர் வரையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் கணித்துள்ளன. கிரெம்ளினுக்கு சில மைல்கள் தொலைவில் உள்ள சக்காரொவ் வீதியில் நேற்று சனிக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கானோர் பூட்டினுக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் திரண்டனர். இதே மாதிரியான ஆர்ப்பாட்டப் பேரணிகள் நாடு முழுவது இடம்பெற்றுள்ளன. தூரகிழக்கு நகரான விளாதிவஸ்த்தோக்கில் பிரம்மாண்டமான பேரணி இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் மீண்டும் இடம்பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பூட்டினின் கட்சி இத்தேர்தலில் மிகக் குறைவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பூட்டினின் அரசில் நிதி அமைச்சராக இருந்து அண்மையில் பதவி விலகிய அலெக்சி கூட்ரின் ஆர்ப்பாட்டப் பேரணியில் உரையாற்றும் போது விரைவில் மறு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். உருசியத் தேர்தல்களில் பூட்டினின் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது திசம்பர் 5, 2011 உருசிய மொழி பேசும் திரான்சுனிஸ்திரியா குடியரசு 1990 ஆம் ஆண்டில் மல்தோவாவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது. உருசிய, மல்தோவிய மற்றும் திரான்சுனிஸ்திரியக் கூட்டுப் படைகள் அங்கு நிலை கொண்டுள்ளன. திரான்சுனிஸ்திரியா முழுமையான விடுதலையை எதிர்பார்த்தாலும், மல்தோவா தன்னுடைய நாட்டின் இறைமையுள்ள சுயாட்சி அமைப்பை மட்டுமே வழங்குவதற்கு தயாராக உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. படகில் 25க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. படகு பாரம் தாங்க முடியாமல், ஏரியின் நடுவில் கவிழ்ந்தது. 22 பேர் நீர்ல் மூழ்கி உயிரிழந்தனர். 3 குழந்தைகளை மட்டுமே மீன்பிடிப் படகுகளால் உயிருடன் மீட்கமுடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீட்புப் பணியில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி சுற்றுலாத் தலமாகும். அபாயகரமான ஏரியும் கூட. இருப்பினும் பலரும் இங்கு சுற்றுலா சவாரியாக படகுச் சவாரி செய்வது வழக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல்களை அடுத்து நாடே சோகத்தில் மூழ்கியது. நாட்டின் வடக்குப் பகுதி நகரான மடல்லாவுக்கு அருகில் உள்ள புனித தெரேசா தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு முதலில் வெடித்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போகோ ஹரம் தீவிரவாதிகள், தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் மத்திய நகரான ஜொஸ்ஸில் நடந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். சிலர் காயமடைந்தனர். இவ்விரு குண்டுவெடிப்புகள் நடந்த அதேவேளையில் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சில நகரங்களில் போகோ ஹரம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களைப் பாதுகாப்பு வீரர்கள் திருப்பித் தாக்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்குப் பகுதியில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடி வரும் போகோ ஹரம் என்ற அமைப்பினர் தொடர்ந்து பொதுமக்களையும், பாதுகாப்பு வீரர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி அஜுபுகே கூறினார். இதற்கிடையே சிறுவர், சிறுமியர் தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தாமே நேரடியாக பன்னாட்டு அமைப்புகளிடம் புகார் செய்வதற்கு வழி செய்யும் ஏற்பாடு ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இயக்கப் பேச்சாளர் கிப்ரில் ஆடம் பிலால் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற வியாழக்கிழமை காலை 03:00 மணியளவில் ஏவுகணை ஒன்று தமது முகாம் மீது வீழ்ந்து வெடித்ததில் கலீல் இப்ராகிம், மற்றும் அவரது மெய்க்காப்பாளர் ஆகியார் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார். உளவு விமானம் ஒன்றில் இருந்தே ஏவுகணை வீசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வடக்கு கொர்டோஃபான் பகுதியில் வாட் பண்டா என்ற நகரில் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் இப்ராகிம் கொல்லப்பட்டதாக சூடானிய இராணுவம் நேற்று அறிவித்திருந்தது. 201 பெப்ரவரியில் ஜெம் இயக்கம் சூடானிய அரசுடன் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்திருந்தது. ஆனாலும், தார்பூர் மீது இராணுவம் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருவதாகக் கூறி போர்நிறுத்த இடன்பாட்டில் இருந்து சில மாதங்களில் விலகிக் கொண்டனர். தார்பூரின் முக்கிய போராளிக்குழு சூடான் அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 21, 2010 தார்பூர் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஐநா அறிவிப்பு ஆகஸ்ட் 27, 2009 ஏற்கெனவே 9999 ஓட்டங்களைப் பெற்றிருந்த மகேல தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்துவரும் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாளான நேற்று ஒரு ஓட்டத்தைப் பெற்றபோதே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் எனும் மைல்கல்லைத் தொட்டார். இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான 34 வயதுடைய ஜயவர்த்தன, 127 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 29 சதங்களையும், 40 அரைசதங்களையும் அடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இலங்கைக் கிரிக்கெட் வீரர்களில் வரிசையில் இரண்டாவதாக குமார் சங்கக்கார உள்ளார். 9170 ஓட்டங்களைப் பெற்ற அவர் நேற்று ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். நேற்று திங்கட்கிழமை அதிகாலை லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒன்பது சக இந்திய மாணவர்களுடன் நின்றிருந்த அனுஜ் பித்வி என்பவரை இரண்டு பேர் அணுகினர் எனவும், மிகக் குறுகிய நேர வாக்குவாதங்களை அடுத்து அவர்கள் அனுஜைச் சுட்டுக் கொன்றனர். இக்கொலை தொடர்பாக 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டவர் ஒரு வெள்ளையர் எனவும் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கூறப்படுகிறது. அனுஜைச் சுட்டு விட்டு இருவரும் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிப்பதற்காக சக மாணவ மாணவியருடன் அருகில் இருந்த உணவு விடுதி ஒன்றில் அனுஜ் தங்கியிருந்தார். ஏனைய மாணவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பின்னர் அவர்களது பலகலைக்கழகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மகாராட்டிராவின் புனே நகரைச் சேர்ந்த அனுஜின் பெற்றோருக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்த காவல்துறையினர் சகல கோணத்திலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொருட்டு அன்றிரவு முழுவதும் ஆங்காங்கே சண்டைகள் இடம்பெற்றதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கினி-பிசாவு நாட்டின் அரசுத் தலைவரும் சனாதிபதியுமான பலாம் பக்காய் சானா இம்மாத ஆரம்பத்தில் இருந்து பிரான்சில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டில் கடற்படைத் தளபதி ஒரு "போதைப்பொருள் கடத்தல் மன்னன்” என ஐக்கிய அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கினி-பிசாவினூடாகவே போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்துள்ளன. தலைநகர் பிசாவுவில் திங்கள் அதிகாலை முதல் குழப்பநிலை இருந்து வந்தது. பிரதமர் கார்லோசு கோமஸ் அங்குள்ள அங்கோலா தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார். புரட்சியில் பங்கெடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். திங்களன்று இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதிக ஊதியம் கோரி படைவீரர்களே இராணுவத் தலைமையகத்தைத் தாக்கியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் கடத்தலில் இராணுவத்தினுள் இரண்டு குழுக்கள் செயல்படுவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. ஆனாலும், அரசாங்கத்தை கவிழ்க்கவே முயற்சிகள் மேற்கொள்லப்பட்டதாக இராணுவத் தலைவர் ஜெனரல் அந்தோனியோ இஞ்சாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 30 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி ஏப்ரல் 1, 2010 வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள டொமொஹோன் நகரில் உள்ள இரட்டை மலைகளில் ஒன்று லோக்கோன் மலை. இது நேற்று முதல் மூன்று தடவைகள் சீறியுள்ளதாக ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் எரிமலை சீறியதைக் கேட்கக்கூடியதாக இருந்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 10,000 பேரடங்கிய இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சூலை மாதத்தில் இந்த எரிமலைகள் இரண்டும் வெடித்ததில் 5,000 பேர் வரையில் இடம் பெயர்ந்தனர். 1991 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்த போது சுவிஸ் நாட்டுக் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தோனேசியா மற்றும் பல பசிபிக் தீவுகளில் உள்ள எரிமலைகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள "பசிபிக் தீ வளையத்தில்" உள்ளன. இது தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதி முதல் வட அமெரிக்கா வரை கிழக்காசியாவூடாகப் பரந்து காணப்படுகிறது. இந்தோனேசிய சுலாவெசித் தீவில் எரிமலை சீறல், மக்கள் வெளியேற்றம் சூலை 15, 2011 வட இந்திய மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் குளிர் நிலவுவதால் வெப்பநிலை இயல்பான அளவை விட குறைந்துள்ளது. குளிரால் மாத்திரம் 135 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் காலை 11 மணிவரை பனி மூட்டமாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டும் பலர் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1950 சனவரி 24-ம் தேதி "ஜன கண மன தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 2010 அக்டோபர் மாதத்தில் நடந்த தேர்தல்களுக்குப் பின்னர் பொசுனியாவில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படாமல் இருந்து வந்தது. புதிய உடன்படிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் நேட்டோ அமைப்புகளில் பொசுனியா உறுப்புரிமை கோரவும் வழி ஏற்பட்டுள்ளது. புதிய உடன்படிக்கையின் படி, பொசுனிய-குரொவாசியர் ஒருவர் பிரதமராகவும், பொசுனிய-முசுலிம் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். புதிய அரசு அடுத்த மாத ஆரம்பத்தில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருசியாவில் நேற்று வியாழக்கிழமை அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் செர்கே சோயிகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உருசியாவின் வடமேற்கே மூர்மன்ஸ்க் வட்டாரத்தில் எக்கத்தரின்புர்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த போதே நேற்றுத் தீப்பிடித்தது. தீ எதிர்ப்பு நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்காமையே தீப்பிடித்தமைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. எவரும் இறக்கவோ அல்லது காயங்களுக்குள்ளாகவோ இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். மரத்தாலான அழிக்கட்டமைப்பிலேயே தீ பரவத் தொடங்கியதாகவும் பின்னர் அது கப்பலின் வெளிச்சுவரில் பற்றித் தீப்பிடித்ததாகவும் முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவரினூடாகத் தீ உள்ளே பரவுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என பேச்சாளர் வதீம் செர்கா தெரிவித்தார். தீயை அணைப்பதற்கு உலங்கு வானூர்தி ஒன்றும் பயன்படுத்தப்பட்டது. தீ மேலும் பரவுவதற்கு முன்னர் அனைத்து அணுவாயுதங்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். ஆகத்து 2000 ஆம் ஆண்டில் கூர்ஸ்க் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகியதில் அதில் இருந்த 118 மாலுமிகளும் கொல்லப்பட்டனர். கிம் ஜொங்-இல்லின் இறுதி நிகழ்வு நேற்று இடம் பெற்ற போது திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதியுயர் தலைவராக இவர் தெரிவுசெய்யப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுத்திருப்பது வட கொரிய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. தனது தந்தையைப் போன்ற கொள்கை மற்றும் குணாதிசயங்களை கொண்டவர் அவர் என்று விவரிக்கப்பட்டார். இன்னும் முப்பது வயது கூட நிரம்பாதவர் கிம் யாங்-உன். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இப்படி ஒருவர் இருப்பதே அந்நாட்டு மக்களுக்குத் தெரியும். கிம் ஜொங்-இல் கடந்த 17ம் திகதி மாரடைப்பால் தனது 69 ஆவது அகவையில் காலமானார். அவரது இறுதிக்கிரியை நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ள கிம் ஜொங்-உன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். எனினும் கிம் ஜொங்-இல்லின் மூத்த மகன்கள் இருவரும் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல் காலமானார் திசம்பர் 19, 2011 புதுவை நகரின் அனைத்து் சாலைகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் பெயர்ந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 15 சமீ மழை பெய்துள்ளது. ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில் அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார். சென்னை-புதுவை-கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்பரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மரம் விழுந்து ஒருவர் அங்கு இறந்துள்ளார். தானே புயல் என்பது 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவதும், முதலாவது அதி தீவிரப் புயலும் ஆகும். வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் திசம்பர் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதுடன் அது மெல்ல மெல்ல வலுவடைந்து திசம்பர் 27ம் தேதி புயலாக மாறியிருந்தது. அந்த முத்திரைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவம், தமீழீழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலரான கார்த்திகைப்பூ மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னம் ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் பிரான்சின் தபால் துறையின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டுகின்றது. நேற்று முன்தினம் முதல் இந்த அஞ்சற்தலைகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு பிரான்சு வாழ் சிங்கள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்துத்தெரிவித்துள்ள பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலரான அகமட் ராசி, இப்படியான அஞ்சற்தலைகள் வெளியானதாக தமக்கு செய்திகள் கிடைத்ததாகவும், ஆனால் பிரான்சின் தபால் சேவையான லாபோஸ்ட் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது அப்படியான முத்திரை எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் அப்படியான முத்திரை எதுவும் வெளியாகியிருந்தால், அவற்றைத் தடை செய்யுமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை இலங்கை தூதரகம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இளம் சட்டவிரோதக் குடியேறிகள் 35 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். குர்தியப் போராளிகள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக துருக்கியின் இராணுவத்தலைவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இத்தாக்குதல் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. புதன்கிழமைத் தாக்குதலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் துருக்கியில் கூடி ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர். அவர்கள் அரசுக்கெதிராகக் கோஷங்களை எழுப்பினர். குர்திய சிறுபான்மையினர் துருக்கியில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். துருக்கியில் பிடிபி எனப்படும் குர்தியர்களின் செல்வாக்கு மிக்க கட்சி இத்தாக்குதலை மனித நேயத்துக்கு எதிரானதாக வர்ணித்ததுடன், ஐக்கிய நாடுகள் இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் 16 இற்கும் 20 இற்கும் இடைப்பட்ட வயதினர் எனக் கூறப்படுகிறது. 1984 ஆம் ஆண்டில் இருந்து பிகேகே எனப்படும் குர்திய தொழிலாளர் கட்சி குர்திய இனத்தவர்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுவரை 40,000 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நேற்று சனிக்கிழமை முழுவதும் புதிய ஆண்டை உலகில் முதன் முதலாகக் கொண்டாடும் மக்கள் என்ற வகையில் பல்வேறு களியாட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருந்தனர். வழமையாக இவர்களே உலகில் கடைசியாகப் புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுபவர்களாக இருந்து வந்துள்ளனர். ஐரோப்பாவில் பல நாடுகளிலும் தற்போது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாஸ்கோவில் பல்லாயிரக்கணக்கானோர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக செஞ்சதுக்கத்தில் கூடியுள்ளனர். ஆனாலும் அங்கு மதுபானம் விற்பனை இன்று தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விடுதலை சதுக்கத்தில் (மெர்டேகா) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மலேசிய செய்தித்துறை அமைச்சர் கலந்துகொண்டார். மெர்டேகா சதுக்கத்தில் வாணவேடிக்கை முடிந்தவுடன் பாஸ் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டங்களை எதிர்த்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சமோவா நாட்காட்டி ஒரு நாள் முன்னே செல்ல இருக்கிறது மே 10, 2011 2010 ஆம் ஆண்டில் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற உருசியாவில் பிறந்த ஆந்திரே கெயிம், கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் ஆகியோருக்கும் சர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேட் போன்றவற்றை வடிவமைத்தவரான ஜோனதன் ஐவிக்கும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கிரெயில்-ஏ எனப்படும் இச்செயற்கைக்கோள் நேற்று சனிக்கிழமை அன்று நலவைச் சுற்றியுள்ள நீள்வட்டப் பாதையில் இணைந்தது. கிரெயில்-பி எனப்படும் மற்றை செயற்கைக் கோள் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் நிலவின் உட்புறத்தை மிகத் துல்லியமாக அளவிடும் எனவும், இதன் மூலம் சிறப்பான முடிவுகளை வானியலாளர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. நிலவின் தோற்றம், மற்றும் நிலவின் கிட்ட, மற்றும் தூரப் பகுதிகள் ஏன் வேறுபட்டுக் காணப்படுகின்றன போன்றவற்றுக்கு விடை அறியப்படலாம் என வானியலாளர்கள் நம்புகின்றனர். நிலவின் மேற்பரப்புகளில் உள்ள சிறிய ஈர்ப்பு மாற்றங்களை கிரெயில் செயற்கைக்கோள் அளவிடும். இந்த இரட்டைச் செயற்கைக் கோள்கள் 2011 செப்டம்பர் 10 ஆம் நாள் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. பாக்கித்தானுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கி வந்த இராணுவ உதவிக்கான தொகை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 158 கோடி குறைக்கப்பட்டுள்ளது. முன்பு அளிக்கப்பட்டு வந்த தொகையில் இருந்து சுமார் 60 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கான நிதி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். பாக்கித்தானுக்கான உதவித்தொகை குறைப்பு பாக்கித்தான் அமெரிக்க உறவில் மேலும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பாக்கித்தானுக்கு அமெரிக்கா பெருமளவில் நிதி வழங்கி வந்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்கித்தான் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், முக்கியமாக நாசகர வெடிகுண்டுகள் தயாரிப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை பாக்கித்தான் எடுத்துள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்க காங்கிரசில் முன்னதாக அறிக்கை அளித்தது. ஐக்கிய அமெரிக்காவில் 2012-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை செலவுக்காக ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றுக்காக சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறைக்கு இவ்வளவு அதிகம் நிதி ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள அவர், அல்-கொய்தா அமைப்பையும், ஒசாமாவையும் ஒழித்ததை அதற்கு உதாரணமாகக் கூறியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி மூலம் பதவிக்கு வந்த பைனிமராமா புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்கள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிவித்தார். இக்கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக பொதுவான அவசரகாலச் சட்டம் சனவரி 7 ஆம் நாள் விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். 2009 ஏப்ரலில் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இராணுவப் புரட்சி சட்டவிரோதமானது என பிஜியின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஊடகத் தணிக்கை, மற்றும் பொதுக் கூட்டங்களுக்குத் தடை போன்ற சட்டங்களை அமுல் படுத்தினார். தேர்தல்கள் பின்போடப்பட்டதை அடுத்து அதே ஆண்டு பொதுநலவாய அமைப்பில் இருந்து பிஜி இடைநிறுத்தப்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டில் இருந்து பிஜியில் நான்கு முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றன. உள்ளூர் பிஜி இனத்தவருக்கும், பிஜி-இந்தியர்களுக்கும் இடையே அங்கு அரசியல் முறுகல் நிலை இடம்பெற்று வந்தது. 2014 ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடத்தப்படும் என பைனிமாராமா நேற்றைய உரையில் உறுதியளித்துள்ளார். பிஜியர்கள் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் எனவும் கூறினார். பிஜிக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்த ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இராணுவத் தலைவரின் நேற்றைய உரையை வரவேற்றுள்ளன. ஆனாலும் அங்கு சனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என ஆத்திரேலிய அமைச்சர் ரிச்சார்ட் மார்ல்ஸ் தெரிவித்தார். இந்தியாவின் காஷ்மீரில் மின்சாரம் வழங்கக் கோரிப் போராடிய மக்கள் மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலகப் பாதுகாப்புப் படையினர் நேற்றுத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் படுகாயமுற்றனர். 5 பாதுகாப்புப் ப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் வடக்கே பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போன்யர் பகுதியில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரியும் அவ்வூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவியது. போராட்டம் நடத்தியவர்கள் மின் நிலைய பிரதான நுழைவாயிலை நோக்கி முன்னேறிய போதே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. சாவுக்கு காரணமாக இருந்த தொழில் பாதுகாப்பு படை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் போராட்டம் வலுத்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடும் அதிருப்தியும், வருத்தமும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் பற்றாக்குறை இருந்து வந்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த போராட்டம் ஏனைய மாநிலங்களிலும் பரவி விடலாம் என சம்பவம் நடந்த பகுதிக்கு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் இரு தொலைதூர ஏவுகணைகளை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த ஹார்மோஸ் பகுதியில் கடந்த சில நாள்களாக ஈரான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. கடைசி நாளான திங்கட்கிழமை 200 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து தாக்கும் 2 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. தரையில் இருந்து கடலை நோக்கிச் செல்லும் காடர் குரூஸ் ஏவுகணை, தரையில் இருந்து தரைக்குப் பாயும் நூர் எனப்படும் நீண்ட தூர ஏவுகணை, தரையில் இருந்து வான் நோக்கிச் செல்லும் நடுத்தர ஏவுகணை ஆகியவற்றை ஈரான் வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணை சோதனைக்குப் பின் உயர் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் 'இந்த ஏவுகணை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. அதோடு, ராடாரின் கண்காணிப்பில் சிக்காத இலக்குகளையும், இந்த ஏவுகணை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது’ என்றார். மேலும், முதன் முதலாக உள்நாட்டில் வடிவடைக்கப்பட்ட, நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஏவுகணை ஒன்று பரிசோதிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். உள்ளூர் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஐக்கிய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளது. 6,000 இற்கும் அதிகமான போராளிகள் தமது எதிராளிகளுடன் போரிடுவதற்காக நகரை நெருங்கி வருவதாக ஐநா எச்சரித்துள்ளது. நூவர் வெள்ளை இராணுவம் என அழைக்கப்படும் போராளிக் குழு ஒன்று "தமது இனத்தையும், நூவர் கால்நடைகளையும் நீண்ட கால நோக்கில் காப்பாற்றுவதற்கு மூர்லி இனத்தை முற்றாக அழிப்பதே சிறந்தது" என டிசம்பர் 26 இல் ஓர் அறிக்கை விடுத்திருந்தது. 2005 ஆம் ஆண்டில் இருந்து தமது இனத்தையும், தமது கால்நடைகளையும் திட்டமிட்டு அழித்து வருவதாக மூர்லி இனத்தவர் மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிகக் காவல்துறையினரையும், படையினரையும் கலவர இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெற்கு சூடானிய அரசு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அன்று பிபோர் நகரில் இருந்து மூர்லி இனத்தவர்கள் நூவர் போராளிகளின் தாக்குதலுக்கஞ்சி பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர். பிபோர் நகரில் உள்ள தமது பணியாளர்கள் 130 பேருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக எம்எஸ்எஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. 13 பேருடன் மட்டும் தாம் தொடர்பு கொண்டுள்ளோம் என தெற்கு சூடானில் உள்ள எம்எஸ்எஃப் நிறுவனத்தின் தலைவர் பார்த்தசாரதி இராஜேந்திரன் தெரிவித்தார். மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரையிலும் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், அதாவது 2002-ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளாகிய ஒலிம்பிக், ஆசிய, பொதுநலவாயம், தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களை கௌரவிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்க முடிவெடுத்தது. பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை இவ்வாண்டு முதல் மேலும் உயர்த்தி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும், ஊக்கத்தொகையை உயர்த்தியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை 50 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதேபோல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 5 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாயாகவும் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் குழுப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 5 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு, சென்னை மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை நடத்தி வந்த கே. ஜே. சரசா (72) நேற்று முன்தினம் காலமானார். முதல்வர் ஜெயலலிதா நடிக்க வரும் முன்பும், நடிகையான பின்பும் இவரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டார். பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கும் ஆரம்ப நாட்களில் நடன ஆசிரியை இவரே. நடன இயக்குநர் ரகுராம், நடிகை ஷோபனா உட்பட பல பிரபலங்கள் இவரிடம் நடனம் பயின்றுள்ளனர். பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும் 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சரசாவுக்கு நேற்று முன்தினம் காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். சரசா கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இவர் தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியைத் தத்தெடுத்து வளர்த்தார். ராஜலட்சுmi முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி ஆவார். சரசாவின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் எனது பரதநாட்டிய குருவான சரசா மறைவு கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவு நாட்டியக் கலையில் ஈடுபட்டுள்ளோருக்கு பெரிய இழப்பாகும் எனத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் சனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் படி சிங்கப்பூரில் அதன் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது. புதிய சம்பளத் திட்டத்தின்படி சிங்கப்பூர் சனாதிபதியின் சம்பளம் 51 சதவீதத்தினால் குறைக்கப்படும். கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்கள் குறைக்கப்படுகிறது. அந்தக் குழு பிரதமர் லீ சியன் லூங் அவர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. லீ செய்ன் லூங் கடந்த வருடத் தேர்தலில் சம்பள குறைப்புக்கு உறுதியளித்தார். இதன்படி அவரின் அடிப்படை சம்பளம் 36 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. இனி அவர் ஆண்டுச் சம்பளமாக 22 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களைப் பெறுவார். இருந்த போதிலும் அவர் தான் உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட தலைவர்களில் அதிக ஊதியம் பெரும் தலைவராக இருப்பார். அவரது சம்பளம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலானது. பராக் ஒபாமா ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டொலர்களே சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அரசால் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் பிரதமரைப் போலவே 36 சதவீதம் குறையும். அவர்களின் ஆண்டுச் சம்பளம் இனி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களாக இருக்கும். சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக ஒரு பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகள் அதிகப்படியான இடங்களை வென்ற பிறகு அரசு கடும் அழுத்தத்துக்கு உள்ளான நிலையில், கடந்த மே மாதம் பிரதம் லீ இந்த சம்பள ஆய்வுக் குழுவை நியமித்தார். அந்தத் தேர்தலின் போது தீவு நாடான சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே, செல்வ நிலைகளில் உள்ள வித்தியாசம் வாக்காளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. அரசின் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், இது குறித்து இருவார காலம் விவாதங்கள் நடைபெறும் என்றும், பிரதமர் லீ தெரிவித்துள்ளார். இம்மாத ஆரம்பத்தில் இருந்து தெற்கு கீவு மாகாணத்தில் பல பின்தங்கிய கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாயின. ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படைகள் (FDLR) என்ற இயக்கமே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர்கள் கொங்கோ கிராமத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொது மக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் துணை இராணுவத்தினரை மக்கள் ஆதரிப்பதாலேயே தம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் மக்கள் கூறுவதாக இராணுவம் தெரிவித்தது. 1994 இல் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து கொங்கோவில் குடியேறிய ஊட்டு இன மக்களைக் கொண்டு FDLR போராளிக் குழு உருவாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையினர் நிலை கொண்டிருந்தாலும், அங்கு இடம்பெறும் படுகொலைகள், மற்றும் வன்புணர்வுகளுக்கு இப்போராளிக்குழுவே பொறுப்பு எனக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை இணையதளத்தில் இந்தியா]]வின் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இத் தளத்தில் அனைத்து நாடுகளுக்கான எல்லைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். முன்னர் வெளியிடப்பட்ட வரைபடத்தில் இந்தியாவின் எல்லையை குறிக்கும் வரைபடத்தில் காஷ்மீர் பகுதி நீக்கப்பட்டு அவை பாக்கித்தானுடன் இணைந்திருப்பதாக ‌வெளியிடப்பட்டது. பாக்கித்தான் நாட்டின் வரைபடத்தில் காஷ்மீர் பகுதி இணைந்திருப்பதை போன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனை நீக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தவறான வரைபடம் அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தவறான வரைபடம் வெளியிட்டதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலான்ட் செய்தியாளர்களிடம் கூறிய போது, அமெரிக்க இணையதளத்திலும், பயணம் தொடர்பான அனைத்து தகவல் மையங்களுக்கும் சரி செய்யப்பட்ட வரைபடம் அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். 1972 ம் ஆண்டு நடைமுறையில் இருந்த இந்திய வரைபடத்தினை அடிப்படையாக கொண்டே பழைய வரைபடம் வெளியிடப்பட்டதாக கூறிய அவர், இந்தியாவின் ஆட்சேபத்தை அடுத்து உடனடியாக சரியான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். "வடக்கு மெக்சிக்கோ மக்களை முன்னெப்போதும் இல்லாதவாறு இப்பாலம் இணைக்கிறது என அரசுத்தலைவர் கால்டெரன் தெரிவித்தார். 1,124மீ (3,687அடி) நீளப் பாலம் எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோ விடுதலை பெற்று 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்க நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதியில் இப்பாலம் பொது மக்களுக்காகத் திறந்துவிடப்படும். பசாட்லான் மற்றும் டுராங்கோ ஆகிய நகரங்களுக்கிடையேயான பயண நேரம் இதன் மூலம் 6 மணித்தியாலங்களால் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மெக்சிக்கோவில் சுற்றுலாத்துறை, மற்றும் வணிகம் ஆகியன மேம்படும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆனாலும் இப்புதிய வழி மூலம் போதைப் பொருட்கள் கடத்துவோரின் தொகை அதிகரிக்கும் என விமரிசகர்கள் கருதுகின்றனர். வெவ்வேறு இன விலங்குகளின் முளையங்களில் இருந்து உயிரணுக்கள் பெறப்பட்டு அவற்றை பெண் குரங்குகளில் செலுத்தப்பட்டு இவ்வகையான மிருகங்களை ஆய்வாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வகையான விலங்குகள் கிமீராக்கள் (chimeras) என அழைக்கப்படுகின்றன. "செல்" எனப்படும் உயிரியல் ஆய்வு இதழில் இது குது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை அமெரிக்காவின் போர்ட்லாந்தின் ஒரிகோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். மருத்துவ ஆய்வுக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என அவர்கள் கூறுகின்றனர். கரு அபிவிருத்தி குறித்த ஆய்வுக்கு கிமீராக்கள் முக்கியமானவை ஆகும், ஆனாலும் இதுகால வரையிலும் சுண்டெலி வகைகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளன. இவ்வகையில் உருவாக்கப்பட்ட மூன்று ரீசசுக் குரங்குகளுக்கு கிமேரோ, ரோக்கு, ரெக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வகையான வெவ்வேறு முளையங்களில் இருந்து பெறப்பட்ட உயிரணுக்களின் திசுக்களை இவை கொண்டுள்ளன. சனவரி 30ம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் ஈரான் எண்ணெய்க்குத் தடைவிதிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள பிரான்சின் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுப்பே, ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்று வழிவகை செய்யப்பட்ட பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்; ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியில் 17 வீதமானதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஈரானின் எண்ணெய்க்கு தடை விதித்தால் அவை தனது எண்ணெய் தேவைக்காக மாற்று ஆசிய நாடுகளை நாடவேண்டி ஏற்படும். இதே நேரம் இந்த தடையால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக மாற்று சந்தைகளை உருவாக்க முடியும் என்றும் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் எஸ்.எம். கம்சாரி குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஈரான் மீது மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டை அது தொடர்ந்து மறுத்து வருகிறது. இதேவேளை, அணு ஆயுதங்கள் தயாரிப்பு விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன் பரஸ்ட் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியொன்றில் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைப் பிரிவு தலைவர் கேத்ரீன் ஆஸ்டனின் திகதி மற்றும் இடம் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். அவரது அறிவிப்பு வெளியான உடன், ஈரான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலர் ஜலீலி, தனது முடிவுகளை அறிவிப்பார் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது சனவரி 2, 2012 யேசுதாஸ் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000கும் அதிகமான திரைப்பாடல்களையும் பக்திப்பாடல்களையும் பாடி சாதனை புரிந்துள்ளார். தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளுக்காக பத்மசிறி, பத்மபூசண் ஆகிய நடுவண் அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரின் திறமையை பாராட்டி அவருக்கு 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருது வழங்கப்படவிருக்கிறது. இவரது இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார். வளிமக்கூடு மின்சாரக் கம்பிகளில் மோதி வெடித்துத் தீப்பற்றியதாக நேரில் கண்டவர்கள் கூறினர். தலைநகர் வெலிங்டனுக்கு 80 கிமீ தூரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வளிமக்கூட்டில் பயணம் செய்த ஐந்து தம்பதியினர், மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர். வளிகூண்டு கீழே விழும் போது இருவர் அதில் இருந்து பாய்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை சீராகத் தெளிவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 1979 ஆம் ஆண்டில் ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று அண்டார்க்ட்டிக்காவில் எரெபஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 279 பேர் கொல்லப்பட்டனர். அச்சம்பவத்துக்குப் பின்னர் நியூசிலாந்தில் ஏற்பட்ட பெரும் வான விபத்தாக இது கருதப்படுகிறது. இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில், காவல்துறைக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார். நேற்று பிற்பகலுக்குப் பின்பும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்தி வெளியிட்ட வார இதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் நேற்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் சங்கங்கள் கூறுகையில், தனிப்பட்ட முறையில் தரக்குறைவான விமர்சனங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. இலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களை நாய்க்கடியிலிருந்தும், வெறிநாய்க்கடி நோயிலிருந்தும் காப்பாற்றும் முயற்சியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாய்களின் பெருக்கத்தையும், தாக்கத்தையும் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் மிருக வைத்தியப் பிரிவு ஆரம்பித்த சகல திட்டங்களும் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்திருந்தார் நாய்க்கடியினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு ஆண்டுதோறும் 50 கோடி ரூபா செலவிடுகிறது. அவற்றைவிட நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஆண்டுதோறும் 50 கோடி ரூபா செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நாய்களின் பெருக்கத்தை தடுக்க மாற்று திட்டம் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் நாய்கள் மனிதர்களைக் கடிப்பது என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்றும் நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாய்களைக் கொல்லும் அரசின் திட்டத்தை மிருக உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். தனது பதவியேற்பு விழாவில் உரையாற்றிய சிம்சன் மில்லர் பிரித்தானிய முடியாட்சியில் இருந்து விலகவும், எமது சனாதிபதி ஒருவரை நாமே தேர்ந்தெடுக்கவும் தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பிரித்தானியாவிடம் இருந்து ஜமேக்கா விடுதலை பெற்ற 50 ஆண்டுகள் நிறைவு இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் கொண்டாடப்படவிருக்கும் தருணத்தில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. "சுயாட்சி பெற்ற நாடாக நாம் அடைந்த முன்னேற்றங்களைக் கொண்டாடும் நேரத்தில், எமது விடுதலை முழுமையாக்க வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார். 66 வயதுள்ள திருமதி மில்லர் இரண்டாம் தடவையாகக் கடந்த டிசம்பர் 29 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். இது குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜமேக்கா அரசுத்தலைவர் வெளியிட்டுள்ள கருத்து முழுமையாக ஜமேக்கா அரசினாலும், அந்நாட்டு மக்களினாலுமே கவனிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிபியன் தீவான ஜமேக்காவின் பொருளாதாரம் பெருமளவு வறுமை, வேலையின்மை, பெரும் கடன் சுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஆபிரிக்கத் தலைவர்கள், பேராயர் டெஸ்மன்ட் டூட்டு மற்றும் ஆப்பிரிக்க- அமெரிக்க சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜெசி ஜாக்சன் போன்றோரும் புளூம்பொன்டீன் நகரில் கூடியிருந்தனர். புளூம்பொன்டீன் நகரத் திருச்சபைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஏற்றி வைத்த நூற்றாண்டு விடுதலைத் தீபம் அருகே உள்ள சுதந்திர அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, ஆப்பிரிக்காவினதும் உலகினதும் ஒத்துழைப்புடன் நிறவெறியையும் காலனித்துவத்துவத்தையும் வெற்றிகொண்ட தென்னாபிரிக்க மக்களுக்கு இதுவொரு பொன்னான நாள் என்று கூறினார். தென்னாப்பிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை காரணமாக அவரால் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. நிறவெறியின் முடிவில் கட்சியை ஆட்சி அதிகாரத்தை நோக்கி கொண்டு வழிநடத்திய, 93வயதான நெல்சன் மண்டேலா அண்மைக்காலமாக பொது நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதில் முக்கியபங்களிப்பினை வழங்கியவர் ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர். கர்னல் பென்னிகுவிக் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார். அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரித்தானியப் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுவிக் அவர்களது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக் அவர்களின் பேரன் அழைக்கப்படவுள்ளார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையவுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இவ்வழக்கு மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது முதன் முதலில் 1998 இல் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு ஓன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார். 2008, சூன் 29 இல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகக் கூறி வழக்கு தாக்கல் செய்தார். ஓரினப் பாற்புணர்ச்சி மலேசியாவில் சட்டவிரோதமானதாகும். நைஜீரியாவின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் அவற்றின் முழுமையான ஆற்றலுக்கு ஏற்ற வகையில் இயங்காத காரணத்தால், அங்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனையாகிறது. அவை உள்ளூரில் மானிய விலையில் விற்கப்படுகின்றன. இதற்காக செலவாகும் பில்லியன் கணக்கான டாலர்களை வறியவர்களுக்கான உதவித்திட்டங்களின் பிரயோகித்தால், சுகாதாரம், கல்வி உட்பட பல விடயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஊழல் காரணமாக, தமக்கு கூறப்படுகின்ற நிவாரணத்தைத் இந்த மறுசீரமைப்புத் திட்டம் தராது என்று சாதாரண நைஜீரியர்கள் நம்புகிறார்கள். இந்த திட்டத்தின் எதிர்ப்பாளர்கள், இந்த சீர்திருத்தத்தை அமெரிக்காதான் வலியுறுத்துகிறது என்று கூறுவதுடன், அதனை எப்படியாவது எதிர்க்கப் போவதாகக் கூறுகிறார்கள். இதனிடையே தெற்கு நைஜீரியாவில், பெனின் நகரில் ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை கூட்டம் ஒன்று எரித்ததில் 10 பேர் காயமடைந்தனர். கடும்போக்கு இசுலாமியக் குழுவான போக்கோ ஹராமால் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரெஞ்சு தபால்துறைக்கு தான் கூறியுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் தாங்கிய ஒரு அஞ்சற்தலையுடன், விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட படங்களைத் தாங்கிய நான்கு அஞ்சல் தலைகள் பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முத்திரைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவம், தமீழீழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலரான கார்த்திகைப்பூ மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னம் ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் பிரான்சின் தபால் துறையின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இம்முத்திரை வெளியீடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஏற்கெனவே பிரெஞ்சு தூதரகத்திடம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இம்மாத ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட முத்திரைகளை கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன. இறைமையுள்ள நாடு என்ற ரீதியில், எந்தவொரு சர்வதேச சட்ட ஒழுங்குவிதியையும் புறந்தள்ளிவிட்டு இறைமைக்கு ஏற்றவகையில் தான் செயற்பட வேண்டுமென்பது அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தபால் திணைக்களம் செயற்படுவதாகவும் தபால் மாஅதிபர் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட நான்கு அஞ்சற்தலைகள் பிரான்சில் வெளியீடு திசம்பர் 31, 2011 மேற்கு ஆப்பிரிக்காவின் கினி-பிசாவு நாட்டின் அரசுத் தலைவர் மாலம் பக்காய் சானா தனது 64வது அகவையில் பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார் என கினி-பிசாவு அரசு வானொலி நேற்று அறிவித்தது. கடும் சுகவீனமுற்று மேலதிக சிகிச்சைக்காக கடந்த நவம்பரில் இவர் பாரிஸ் சென்றார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வன்முறைகள், மற்றும் இராணுவப் புரட்சியை அடுத்து மாலம் சானா அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அரசியலில் நிலையற்ர தன்மை காணப்படுவதாகவும், இதனால் குழப்பநிலை உருவாகும் எனவும் கடந்த மாதம் ஐக்கிய அமெரிக்கா கினி-பிசாவு மக்களை எச்சரித்திருந்தது. நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப, நாடாளுமன்ற சபாநாயகர் புதிய இடைக்கால அரசுத்தலைவராக பதவியேற்றுள்ளார். மறைந்த தலைவர் மாலம் சானா நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றியவர். ஆளும் கட்சியில் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். சூலை 2009 இல் நடந்த தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்த்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பாக்கித்தானின் வடமேற்குப் பகுதியில் கைபர் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள சந்தையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். கைபர் பழங்குடியினப் பகுதியில் உள்ள ஜம்ருட் நகரில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றது. இங்குள்ள சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. தூரத்தில் இருந்து வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் அந்த வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவரும் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் அருகிலிருந்த பெட்ரோல் நிரப்பு நிலையமும், சில வாகனங்களும் சேதமுற்றன. காயமுற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலும், ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் தெஹ்ரிக்-இ-தலிபான், லஷ்கர்-இ-இஸ்லாம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் அரசு மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று அந்த அமைப்பு ஏற்கெனவே எச்சரித்து இருந்தது. ஆனாலும் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. நிலநடுக்கம் பான்டாஏக் மாகாணத்திலிருந்து 420 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் உணரப்பட்டதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பான்டாஏக் மக்கள் பீதியில் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேறினர். சேதங்களை பற்றிய தகவல் இதுவரை ஏதும் தெரியவில்லை. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்திய பெருங்கடலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைப்போன்று இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் . முன்னாள் சண்டினிஸ்டா கெரில்லா தலைவரான ஒர்ட்டேகா அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சிக் காலத்தில் பெருமளவு அரசியல் மாற்றம் எதுவும் இடம்பெற மாட்டாது என உறுதியளித்தார். தலைநகர் மனாகுவாவில் நடந்த பதவியேற்பு நிகழ்வுகளில் முக்கிய எதிர்க்கட்சி பங்குகொள்ளவில்லை. தேர்தல்கள் முறைகேடாக நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெனிசுவேலாவின் தலைவர் ஹூகோ சாவேசு, ஈரானிய அரசுத் தலைவர் மகுமுத் அகமதினிஜாத் உட்படப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். தேர்தலில் 62 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஒர்ட்டேகா (அகவை 66) வெற்றி பெற்றார். அவர் சார்ந்திருக்கும் சண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி (FSLN) நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியலமைப்பை மாற்றியமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனாலும், இப்பிராந்தியத்தில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் அது கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு முகாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாக காலத்தில் அமைக்கப்பட்டது. முகாமுக்கு முதலாவது கைதி 2002 சனவரி 11 இல் கொண்டு வரப்பட்டார். கடந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் பதவிக்கு வந்தால் ஒரு ஆண்டுக்குள் அந்த தடுப்பு முகாமை மூடுவேன் என்று ஒபாமா வாக்குறுதி வழங்கியிருந்தார். அதனைச்செய்ய தாம் திடசங்கற்பம் பூண்டிருப்பதாக அவர் இன்னமும் கூறிவருகின்ற போதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டார்கள். மீதமிருக்கின்ற கைதிகளை என்ன செய்வது என்பது குறித்து நடந்துகொண்டிருக்கின்ற பாதுகாப்பு, சட்ட மற்றும் அரசியல் இழுபறிகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தடுப்பு முகாமில் மிகவும் அதிகமாக 800 பேர்வரை ஒரே நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அங்கு 170 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். முகாமின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பன்னாட்டு மன்னிப்பகம் கருத்துக் கூறுகையில் மனித உரிமைகள் தொடர்பில் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த முன்மாதிரியை இந்த முகாம் ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளது. அகமதி ரோசன் யுரேனிய செறிவூட்டு மையத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தெகரான் பல்கலைக்கழகத்துக்கு வெளியே நேற்று புதன்கிழமை இத்தாக்குதல் நடந்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காந்தத்தால் ஆன வெடிகுண்டைக் காரில் வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஈரான் நாட்டு விஞ்ஞானிகள் மூவர் இதே போன்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் அணு விஞ்ஞானிகள். இதே தேதியில் 2010 ஆம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்பில் இயற்பியலாளர் மசூத் அலி மொகமதி என்பவர் கொல்லப்பட்டார். அமெரிக்காவும் இசுரேலுமே இத்தாக்குதல்களுக்குக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் நாடாளுமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் ஈரான் நாட்டு வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஈரானில் அணுவியல் பேராசிரியர் ஒருவர் படுகொலை நவம்பர் 29, 2010 ஈரானிய இயற்பியலாளர் கொலையில் தமக்குத் தொடர்பு இல்லை: அமெரிக்கா அறிவிப்பு சனவரி 14, 2010 தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களை எடுத்துப் படுதோல்வி கண்டது. ஒருநாள் பன்னாட்டுத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். ஏற்கனவே மேற்கிந்தியத் தீவு துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1986ம் ஆண்டில் சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 55 ஓட்டங்கள் பெற்றமை குறைவான ஓட்டங்களாக இருந்து வந்தது. பன்னாட்டு ஒருநாள் அரங்கில் மிகக் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணிகளின் பட்டியலில் தற்போது இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சிம்பாப்பே (35 ஓட்டங்கள், எதிர். இலங்கை, ஹராரே, 2004) உள்ளது. 2, 3வது இடங்களில் முறையே கனடா (36 ஓட்டங்கள், எதிர், இலங்கை, பார்ல், 2003 சிம்பாப்பே (38 ஓட்டங்கள், எதிர் இலங்கை, கொழும்பு 2001) அணிகள் உள்ளன. 1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவின் அரசுத்தலைவர் ஜுவெனல் அபியாரிமானாவின் படுகொலைக்கு தற்போதைய அரசுத்தலைவர் பவுல் ககாமே காரணம் இல்லை என விசாரணைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு நிபுணர் குழு ஒன்று இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டது. தாக்குதல் நடந்த பகுதிக்குச் சென்று, அபியாரிமானா சென்ற விமானத்தைத் தாக்கிய ஏவுகணை எந்த இடத்திலிருந்து ஏவப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் இந்த முடிவைத் தெரிவித்துள்ளனர். "அபியாரிமானா சென்றுகொண்டிருந்த விமானம் தலைநகர் கிகாலியில் தரையிறங்க வந்த நேரத்தில் அதனைத் தாக்கிய ஏவுகணை, அந்த விமானத்துக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலான இடத்திலிருந்துதான் ஏவப்பட்டிருக்க வேண்டும். அப்போது அந்தப் பகுதி ஊட்டு இனத்தார் ஆதிக்கம் செலுத்திவந்த ருவாண்டா ராணுவத்தின் வசம்தான் இருந்தது. ககாமேவுக்கு விசுவாசமான துட்சி கிளர்ச்சிப் படைகள் இந்த இடத்தில் செயல்பட்டிருக்க வாய்ப்பு இல்லை" எனப் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1962 இல் பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றபின்னர் பல்லாயிரக்கணக்கான தூத்சி இனத்தவர்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள உகாண்டாவில் குடியேறி 1990 ஆம் ஆண்டில் ருவாண்டாவில் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தனர். 1993 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்பாடு அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுத்திருந்தாலும், இனமோதல்கள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளன. ருவாண்டாவின் முன்னாள் அரசுத்தலைவரின் மனைவி பிரான்சில் கைது மார்ச் 3, 2010 இராணுவம் ஆட்சியக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் உதவியை பாக்கித்தான் நாடியதாகக் கூறப்படும் "மெமோகேட்' சர்ச்சை, அதிபர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், ராணுவத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பாதுகாப்புச் செயலர் நயீம் கலீத் நீக்கம் போன்ற காரணங்களால் அரசியல் பரபரப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், பாக்கித்தான் அரசுத்தலைவர் ஆசிப் அலி சர்தாரி நேற்று வியாழக்கிழமை துபாய் சென்றுள்ளார். நெருங்கிய நண்பரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின் இன்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும்போது, அதிபர் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பது நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது. ஆட்சியை ராணுவம் கைப்பற்றக்கூடும் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில், ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் ராணுவத்தின் மூத்த தளபதிகளுடன் ராணுவத் தலைமைத் தளபதி அஷ்ஃபக் பர்வீஸ் கயானி வியாழக்கிழமை மட்டும் இரண்டுமுறை அவசர ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் இருந்து மூத்த ராணுவ அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கூட்டங்கள் குறித்து ராணுவத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் தேசியப் பேரவை (மக்களவை) கூட்டத்தை பிரதமர் கிலானி அவசரமாக நேற்று கூட்டினார். மறுபுறமாக நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் செரீப் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வுடன்பாட்டின் படி, தகவல் பரிமாற்ற அலுவலகங்கள் அமைக்கவும், பிராந்தியங்களுக்கிடையே போக்குவரத்துகளை ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக காரென் மக்கள் தமக்கு அதிக சுயாட்சி வழங்க வேண்டும் எனக் கோரிப் போராடி வருகின்றனர். இவ்வுடன்பாட்டை வரவேற்றுள்ள தேசிய ஒன்றியத்தின் தலைவர் டேவிட் தாவு இதுவரையில் பேச்சுவார்த்தைகளே இடம்பெற்றுள்ளன, உண்மையில் எவ்வாறு இதனை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது என்றார். இதற்கிடையில், மேலும் ஒரு தொகுதி கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவிருப்பதாக நேற்று பர்மிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்திருந்தது. 600 பேர் வரையில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவர்களில் எத்தனை பேர் அரசியல் கைதிகள் போன்ற விபரம் தெரியவில்லை. இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறுகையில், இது மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்தக் காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சம்பந்தப்பட்ட நால்வரில் இருவர் அமெரிக்க கடற்படை புலனாய்வாளர்களால் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வாறான தண்டனைகள் அளிக்க முடியும் எனத் தீர்மானிப்பதற்கு லெப். ஜெனரல் தாமசு வால்தாசர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்படையினர் ஆப்கானித்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சேவை புரிந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆப்கானித்தானைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் 2014ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டுநாட்டை விட்டு வெளியேற நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன இந்நிலையில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் பல்வேறு விதி மீறல்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அடுத்து வரும் சில நாட்களில் இந்த வான் ஆய்வுக்கூடம் உறைந்த நிலையில் இருந்து சூடாகும் என பொறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இத்தொலைநோக்கியின் இரண்டு உபகரணங்களில் ஒன்று செயலிழக்கும். உல்லாசப் பயணிகள் கப்பல் ஒன்று இத்தாலியின் மேற்குக் கரையில் வெள்ளிக்கிழமை இரவு மூழ்கியதை அடுத்து 4,000 பேர் வரையில் உயிர்க்காப்புப் படகுகள் மூலம் கரைக்கு வந்து சேர்ந்தனர். சிலர் நீந்தியே கரையை அடைய வேண்டியிருந்தது. 40 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கப்பலில் 3,200 பயணிகளும் ஆயிரம் பேர் வரையான சிப்பந்திகளும் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணிகளில் இத்தாலி, செருமன், பிரெஞ்சு, பிரித்தானியர், மற்றும் உருசியர் உட்படப் பல வெளி நாட்டவர்களும் இருந்தனர். இரண்டு பிரெஞ்சுப் பயணிகளும் பெருவைச் சேர்ந்த ஒரு பணியாளரும் கொல்லப்பட்டனர். மேலும் இரு வயோதிகப்ர்களின் இறந்த உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 40 பேர் வரையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "நாம் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது கப்பல் ஏதோ ஒன்றுடன் மோதியது போன்ற பலத்த சப்தம் கேட்டது என பயணி ஒருவர் தெரிவித்தார் கப்பலினுள் கடல் நீர் உள்ளே வரத் தொடங்கிய போது, கப்பல் சரியத் தொடங்கியது." அவசர நிலையில் கப்பலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்று தமக்கு எவ்ந்த அறிவுறுத்தல்களும் தரப்படவில்லை எனப் பயணிகள் கூறினர். அவசர வெளியேற்றப் பயிற்சி சனிக்கிழமைக்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல பயணிகள் 1912 ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதை இவ்விபத்துடன் ஒப்பிட்டனர். அப்போது 1,500 பேர் வரையில் உயிரிழந்தனர். இதற்கிடையில், கப்பலின் அறை ஒன்றில் இருந்து மூவர் இன்று காப்பாற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் இருவர் தென் கொரியாவில் இருந்து தமது தேன் நிலவைக் கழிக்கவென வந்தவர்கள் ஆவர். 114,500 தொன் எடையுள்ள கொஸ்டா கொன்கோர்டியா கப்பல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும். இது 2006 சூலை மாதத்தில் சேவைக்கு விடப்பட்டது. இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் பிரகாஷ், அந்தத் திரைப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், அதன் மீதான தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு சார்பில் வாதாடிய கிருஷ்ண குமார், சர்ச்சைகள் நிறைந்த டேம் 999 திரைப்படம் தமிழகத்தில் வெளியானால் சட்டம் ஒழுங்குப் பாதிக்கப்படும் நாட்டில் அமைதி சீர்கெடும் என்பதை கருத்தில் கொண்டே படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது என்றார். இதனையடுத்து, தெளிவான விசாரணைக்கு பிறகு. டேம் 999 படத்தில் கலாசார, மத உணர்வுகளை தூண்டும் விதத்திலோ, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அதை இந்த நீதிமன்றம் புரிந்து கொள்ளும். அப்படி இல்லாதப்பட்சத்தில் படம் திரையிடப்படுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும், படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதால் எத்தகைய சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதையும் அரசு எழுத்து மூல விளக்கம் வருகிற 25ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் 21 மாலுமிகளுடன் கைப்பற்றப்பட்ட எம்வி ஃபெயர்கெம் போகி என்ற இந்தியக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "21 மாலுமிகளும் நலமுடன் உள்ளனர், கப்பல் தற்போது பாதுகாப்பான துறைமுகம் ஒன்றை நோக்கிச் செல்லுகிறது என இந்தியக் கப்பற்துறைப் பணிப்பாளர் எஸ். பி. அக்னிஹோத்ரி இந்திய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். இந்திய மாலுமிகளை விடுவிக்க பெருமளவு பணம் கப்பமாகக் கொடுக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் இது பற்றி திரு. அக்னிஹோத்ரி தகவல் எதுவும் தர மறுத்து விட்டார். சோமாலியாவின் கிழக்குக் கரைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தீவிரம் அதிகரித்து வந்துள்ளது. பாஸ்ரா புறநகர் பகுதியில் உள்ள இமாம் அலி புனிதத் தலத்துக்கு ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டுகளுடன் கூட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதி, அங்குள்ள காவல் சோதனைச் சாவடி அருகே குண்டை வெடிக்க வைத்தமையினாலே மேற்படி இழப்புகள் ஏற்பட்டன ஈராக் நாட்டில் சதாம் உசேன் அரசை வீழ்த்திய பிறகு, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க படைகள் தொடர்ந்து காவலில் ஈடுபட்டு வந்தன. அதன்பின், படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்த படையின் கடைசி குழுவினர் கடந்த மாத இறுதியில் அமெரிக்கா திரும்பினர். இமாம் உசேன் போரில் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கர்பாலா மற்றும் பாஸ்ரா பகுதிகளில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர். இந் நிகழ்ச்சிகளில் சன்னி பிரிவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பாக்தாதில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 78 பேர் உயிரிழந்தனர். கடந்த நவம்பர் மாதத்தில் செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பப்பட்ட டோபொசு-கிரண்ட் என்ற விண்கலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பசிபிக் பகுதியில் வீழ்ந்து அழிந்ததாக உருசியா அறிவித்துள்ளது. செவ்வாயின் சந்திரனில் இருந்து பாறைகளை எடுத்து வரும் 33 மாத காலத் திட்டத்துக்காக உருசியா அனுப்பிய இந்த விண்கலம் சரியான திசையில் விண்கலத்தைச் செலுத்தவிருந்த இயந்திரம் செயலிழந்து போனதால் ஏவிய சில நிமிடங்களில் திசை மாறிச் சென்றது. பூமியில் இருந்து அது 345 கிமீ தூரம் அளவே சென்றது. 13-தொன் எடையுள்ள இவ்விண்கலத்தின் 200 கிகி எச்சமே பூமியில் வீழ்ந்தது என உருசியா விண்வெளி நிறுவனம் ரொஸ்கொஸ்மஸ் அறிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மூன்று விண்கலங்கள் இவ்வாறு பூமியில் வீழ்ந்துள்ளன. 1960களில் இருந்து உருசியா மொத்தம் 16 விண்கலங்களை செவ்வாயை நோக்கி அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதனால் செவ்வாய்க்கான தனது எதிர்காலத் திட்டங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு உருசியா முயலலாம் என அவதானிகள் கருதுகின்றனர். 2016, 2018 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் எக்சோமார்ஸ் திட்டத்தில் இணைய உருசியாவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாயை நோக்கி உருசியா அனுப்பிய விண்கலம் திசை மாறிச் சென்றது நவம்பர் 9, 2011 சென்னை சேப்பாக்கத்தில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்கள் இயங்கி வந்த புராதனக் கட்டிடமொன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீயினை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர். பல அரசு அலுவலகங்களை உள்ளடக்கிய எழிலகம் வளாகத்தினையொட்டி அமைந்துள்ள சேப்பாக்கம் அரண்மனைக் கட்டிடத் தொகுதியில் வணிகத்துறை அலுவலகத்திலேயே முதலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கும் தீ பரவியது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய ஒரு தீயணைப்பு வீரர் அதே இடத்தில் இறந்தார். அவரை மீட்பதற்குச் சென்ற மூவர் படுகாயம் அடைந்தனர். பிறகு அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீயில் அரசு அலுவலகங்களின் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. எனவே, இது விபத்தா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சதியா என சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், பொங்கல் நாள் விடுமுறையை ஒட்டி, அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை என்பதால் எழிலகக் கட்டிடமே வெறிச்சோடியிருந்தது. இரவில் தங்கிப் பணிபுரியும் பணியாளர்களும் இல்லாத நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆனால், மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சத்துணவு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கே.கோபால் கட்டிடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் அரசு துறை அலுவலகங்களை வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எரிந்து போன ஆவணங்களின் நகல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே அவ்வகையில் பாதிப்பு எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார். பாக்கித்தான் சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்க தவறியதற்காகவே இந்தக் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி நேரில் நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்குமாறு பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பாக். சனாதிபதி சர்தாரி மீதான ஊழல் வழக்கு நேற்று 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. எனினும் இது தொடர்பான தகவல்களை அரசு நீதிமன்றத்திற்கு வழங்காதது மற்றும் நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டுகள் பிரதமர் கிலானி மீது சுமத்தப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இதுபற்றி விளக்குவதாகவும், ஆளும் கூட்டணி கட்சியினரும் தனது பாக்கித்தான் மக்கள் கட்சி எம்.பி.க்களும் அதை ஏற்காவிட்டால் உடனடியாக பதவி விலகத் தயார் என்றும் கிலானி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1990களில் சுவிட்சர்லாந்து நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உட்பட அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்யும்படி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பிட்டிருந்தது. இந்தக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிரதமர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தின்படி சனாதிபதிக்கு எதிராக தமக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என பிரதமர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஊழல் விவாகாரத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பாக்கித்தான் உச்ச நீதிமன்றம் ஆலோசித்துவருகிறது. இதேநேரத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முழு ஆதரவு அளிக்கத் தயார் என்று முன்னாள் ராணுவ தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரப் நேற்று அறிவித்திருதார். லண்டனில் வசிக்கும் அவர் இந்த மாத இறுதியில் பாக்கித்தான் திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் ராணுவ புரட்சியை ஆதரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மாணவர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கை ஒன்றில் உங்கள் வீட்டுப்பாடங்களை முன்கூட்டியே செய்து விடுங்கள். புதன்கிழமை அன்று விக்கிப்பீடியா கெட்ட சட்டம் ஒன்றை எதிர்க்கிறது என எழுதியுள்ளார். வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டம் Stop Online Piracy Act SOPA) தற்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமூலம் ஏற்கனவே ஹாலிவுட், வணிக மென்பொருள் கூட்டமைப்பு போன்ற பல அமைப்புகளினதும் மற்றும் இசை உலகத்தினரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே வேளையில், கூகுள், டுவிட்டர், விக்கிப்பீடியா, யாஹூ! போன்ற இணையத் தளங்கள் இச்சட்டமூலத்துக்கு எதிராக சென்ற மாதம் குரல் கொடுத்திருந்தன தற்போது சீனா, மலேசியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் உள்ள இணையத் தணிக்கை போன்று அமெரிக்க அரசுக்கும் இது போன்ற அதிகாரம் கிடைக்கும் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இவ்வரைவு சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும். கடந்த சனவரி 15 ஆம் நாள் விக்கிப்பீடியா தனது 11வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 282 மொழிகளில் 20 மில்லியன் கட்டுரைகளை அது கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதே நேரம் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ள தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நேர்மையான அரசியல் மீள் இணக்கப்பாட்டை எட்டும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபடும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் அவற்றை காலதாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவும் பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்க தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா தெற்கிலும் வடக்கிலும் இந்திய முதலீட்டில் நடந்துவரும் வேலைத்திட்டங்களையும் சென்று பார்வையிடவுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்-மகிந்த சூலை 6, 2009 எல் மொசோட்டே நகரில் இடதுசாரித் தீவிரவாதிகளை ஆதரித்தார்கள் எனக் குற்றஞ்சாட்டி 1981 டிசம்பர் 11 முதல் 13 வரையான நாட்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை இராணுவத்தினர் படுகொலை செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் 75,000 பேர் உயிரிழந்தனர். எல் சால்வடோரில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு விழாக் கொண்டாட்டத்தின் போதே திரு. ஃபியூனெசு இந்த உருக்கமான உரையை நிகழ்த்தியுள்ளார். எல் மொசோட்டே நகரம் தலைநகர் சான் சால்வடோரில் இருந்து 200கிமீ தூரத்தில் ஒந்துராசின் எல்லையில் அமைந்துள்ளது. "இப்படுகொலைகளுக்காக, அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நாம் மன்னிப்புக் கேட்கிறோம் என கடந்த திங்கட்கிழமை நடந்த விழாவில் தெரிவித்தார் மூன்று நாட்களில் மிகப் பெரிய அழிவு இடம்பெற்றது எனக் கண்ணீர் மல்க அவர் கூறினார். இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோர் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. 1992 இல் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. தீவிர இடதுசாரியான மொரீசியோ ஃபியூனெசு 2009 ஆம் ஆண்டில் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980களில் அமெரிக்க சார்பு அரசை எதிர்த்துப் போரிட்ட ஃபாரபுண்டோ பார்ட்டி தேசிய விடுதலை முன்னணி (FMLN) என்ற மார்க்சியப் போராளிக் குழுவைச் சேர்ந்தவர். விக்கிப்பீடியா எதிர்ப்பது இரண்டு சட்ட முன்வரைவுகளை. ”இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என்பது Stop Online Piracy Act bill என்பதன் மொழிபெயர்ப்பு முயற்சி என நினைக்கிறேன் இது சரியா? இணையம் என்ற கலைச்சொல்லை இண்டர்நெட் என்பதற்கு மட்டும்தான் தமிழ்.நெட்டில் படைக்கப்பட்டது சொல்லப் போனால், அதைப் படைத்த மலேசியத் தமிழர் “நயனம்” ஆசிரியர் கோமகன் (ராஜகுமாரன் அதை தமிழ்.நெட் என்ற குழுமத்துக்கு மட்டும்தான் கருதினார் என நினைவு ஆனால், அதை நாங்கள் இண்டர்நெட் என்பதற்கு இணையாகக் கருதி வழங்கி வந்துள்ளோம் அந்தக் கலைச்சொல்லை web, online, internet, Inter-Net என்று எல்லாவற்றிற்கும் புழங்குவது அதை நீர்த்துப் போக வைக்கிறது. அது சரியல்ல. Web க்கு வலை என்றும், internetக்கு இணையம் என்றும், Inter-Netக்கு வலைப்பின்னல் எனவும் Onlineக்குத் தடவழி என்றோ அல்லது வலைவழி என்றோ ஏன் வலைத்தடம் என்றோ சொல்லலாம். அதைக் கட்டாயம் இணையம் என்று சொல்லக் கூடாது. அதே போல் Piracy என்பது திருட்டு அல்ல பொதுவாக Sea Pirates என்பதைத் தமிழில் கடற் கொள்ளைக்காரர்கள் என்போம் அறிவுசார் சொத்துத் திருட்டு Intellectual property theft என்றும் சொல்லலாம். "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என்பதை விட ”வலைத்தடக் கொள்ளைத் தடைச் ச்ட்டம்” என்பது பொருந்தும் என நினைக்கிறேன். நிறுத்தல் என்றால் எடை போடுத்ல் என்று பொருள் நிறுத்துதல் என்றால் to stop எனப் பொருள் கொள்ளலாம். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஏப்ரல் 1 ஆம் நாள் ரங்கூனின் தென்மேற்கே காவுமு என்ற தொகுதியில் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி (NLD) கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஆங் சான் சூச்சி போட்டியிடுகிறார். 2010 நவம்பரில் வீட்டுக்காவலில் இருந்து ஆங் சான் சூச்சி விடுவிக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களை இவரது கட்சி ஒன்றியொதுக்கல் செய்திருந்தது. ஆனாலும், பர்மிய இராணுவ அரசு அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தத்தை அடுத்து இப்போது தேர்தல்களில் மீண்டும் போட்டியிட என்எல்டி கட்சி முடிவு செய்துள்ளது. அமைச்சரவை உறுப்பினர்கள் தமது பதவிகளை ஏற்றதை அடுத்து 48 நடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடங்கள் வெறுமையாக்கப்பட்டன. இவற்றுக்கே ஏப்ரலில் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சி 40 இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல்கள் 2015 ஆம் ஆண்டளவிலேயே இடம்பெறவிருக்கிறது. மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி 1990 இல் இடம்பெற்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும், அவரது கட்சி ஆட்சியமைக்க இராணுவ அரசால் அனுமதிக்கப்படவில்லை. ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பர்மிய இராணுவ அரசின் இந்த நடவடிக்கைகளை அடுத்து அமெரிக்கா பர்மாவுடனான இராசதந்திர உறவு புதுப்பிக்கப்படும் என அறிவித்திருந்தது. வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள சாலையில் ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி ஒன்று நடைபெற்றபோது புகை குண்டு வீசப்பட்டதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அமெரிக்கா அரசியலில் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வால்ஸ்ட்ரீட் போராட்டம்' கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கியது. தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே, இப்போராட்டம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் நேற்று வெள்ளை மாளிகையின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெள்ளை மாளிகையின் சுற்றுச் சுவரை ஒட்டிய உள் பகுதியில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் உளவுப் பிரிவினரும் அங்கு விரைந்து சோதனையிட்டபோது யாரோ புகைக்குண்டை உள்ளே வீசியது தெரியவந்தது. குண்டு உடனடியாக அகற்றப்பட்டாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாளிகையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. மாளிகையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அமைதியான முறையில் கலைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த போது, அதிபர் ஒபாமாவும், அவரின் மனைவி மிச்சேலும் மாளிகையில் இருக்கவில்லை. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என, வெள்ளை மாளிகை பாதுகாப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். "நாம் பாலியல் தொழிலாளிகள் அல்ல. பாலியல் சேவைகளை வழங்கி பணம் ஈட்டவே நாம் அங்கு செல்கிறோம் என அவர்கள் கூறினர். இந்தியா தனது சொந்த பாலியல் தொழில் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும், அதை விடுத்து ஏனைய நாடுகளைக் குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நடவடிக்கைக்கு இந்தியா உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெண்ணியவாதிகளில் ஒருவரான அலெக்சாண்ட்ரா செவ்ச்சென்கோ செய்தியாளர்களிடம் கூறினார். கடும் குளிரில் பல பெண்கள் இந்தியத் தூதரின் இல்லத்தின் மேல்மாடத்தில் அரை நிர்வாணமாக பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பாக்கித்தான் அரசுத்தலைவர் ஆசிப் அலி சர்தாரி உட்பட பல முக்கிய தலைவர்களின் ஊழல் வழக்குகள் தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் கிலானி நேற்றுக் காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக சமூகமளித்தார். இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் பிரதமர் கிலானி நீதிமன்றத்தில் சமூகமளித்தார். நீதிபதி நசீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து சமூகமளித்தமைக்காக, நீதிபதிகள் கிலானிக்கு பாராட்டு தெரிவித்தனர். விசாரணையின் போது "ஆசிப் அலி சர்தாரி மீதான நிதி முறைகேடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகளை செயல்படுத்தாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது நீதித்துறையை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. தவிர உலகளவில் சனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது. அதுபோல் தான் பாக்கித்தான் சனாதிபதிக்கும் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்று நான் நினைத்துப் கூடப் பார்க்கவில்லை என்று கூறினார். பிரதமர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அயித்சாஷ் அக்சன் கூறுகையில் வியன்னா உடன்படிக்கையின்படி, உலக நாடுகளின் எந்தவொரு அதிபரின் மீதும் வழக்கு தொடர முடியாது. எனவே, இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசிடம் கடிதம் எழுதுமாறு நீதிமன்றம் பிரதமருக்கு அறிவுறுத்தக்கூடாது. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை அரசு செயல்படுத்தாதது குறித்து சட்டத்துறை செயலாளர் விளக்கம் அளிப்பார்' என்றார் அரசியல் சாசனச் சட்டத்தின்படி அதிபருக்கு எதிராக வழக்குத் தொடர்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகாவிட்டால், வழக்கை விசாரிக்க சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதுவீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக ஆவணங்களைப் படித்துப் பார்த்த பின்தான் பதில் கூற முடியும். அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவை' என்று பிரதமரின் வழக்குரைஞர் பதிலளித்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அப்போது சர்தாரி மீது நடவடிக்கை எடுக்காததற்கான உரிய காரணத்தை, ஆவணமாக நீதிமன்றத்தில் அரசு ஒப்படைக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில் கிலானி இனிமேல் நீதிமன்றத்தில் சமூகமளிக்கத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் ஒருவர் சமூகமளிப்பது இது 3வது முறையாகும். இதற்கு முன் சுல்பிக்கார் அலி பூட்டோ, மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். நீதிமன்ற அழைப்பாணையை அடுத்து பாக்கித்தான் பிரதமர் பதவி விலகத் தயாரென அறிவிப்பு சனவரி 17, 2012 "அப்துல் கலாமிடம் காணப்படும் சிறந்த அறிவினைப் பயன்படுத்துவதற்கு எமக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார். மாலியின் வடக்கே உள்ள பெரும் பாலைவனப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். மோதல்களில் போராளிகளின் பல வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும், டெசாலிட், அகுவெல் ஹொக் உட்பட மூன்று நகரங்களைத் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. போராளிகளில் சிலர் லிபியாவில் முன்னாள் தலைவர் முவம்மர் கடாபியின் படைகளில் இணைந்து போராடிப் பின்னர் நாடு திரும்பியவர்கள் ஆவர். புதிதாக உருவாக்கப்பட்ட அசவாட் விடுதலைக்கான தேசிய முன்னணி என்ற குழுவின் உறுப்பினர்களே இவர்கள் என அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இப்பிராந்தியத்தில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த அமைதி இவ்வார மோதல்களினால் முடிவுக்கு வந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். துவாரெக் மக்கள் தெற்கு அரசாங்கத்தால் புறந்தள்ளப்படுவதாகக் கூறி கடந்த பல ஆண்டுகளாக மாலியின் வடக்கே அசவாத் பகுதியில் சுயாட்சி கோரிப் போராடி வருகிறார்கள். இவர்கள் வடக்கு மாலி, வடக்கு நைஜர், மற்றும் தெற்கு அல்ஜீரியா பகுதிகளில் வாழும் நாடோடி இன மக்கள் ஆவர். இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் ருஷ்டியின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று இசுலாமிய மதப்பள்ளியான தாருல் உலூம் தியோபந்தின் துணைவேந்தர் அப்துல் காசிம் நுமானி கோரிக்கை விடுத்து, சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சில அரசியல் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ருஷ்டி வருகைக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் சட்டப்படித்தான் அதனை அணுக வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யக் கூடாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சீத் கூறியிருந்தார். 1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய ஒரு நாவலில், இசுலாமியர்களைப் புண்படுத்தியிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராக, ஈரானின் மதத் தலைவரான அயதொல்லா கொமெனி மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்தார். இந்தியாவும் அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. ருஷ்டி இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியிருப்பவர். சல்மான் ருஷ்டி பலமுறை இந்தியா வந்துள்ளார். ஆனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போதுதான் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான வில்லியம் டால்ரிம்பிள் கூறும்போது வெளிநாட்டில் குடியிருந்தாலும் ருஷ்டி இந்தியாவில் பிறந்தவர். அவருக்கு விசா தேவையில்லை. அவர் பலமுறை ஜெய்ப்பூர் வந்திருக்கிறார். ஒருமுறை கூட அவருக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை’ என்றார். இந்நிலையிலே ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். சல்மான் ருஷ்டியின் புதினம் இலங்கையில் இரகசியமான முறையில் படப்பிடிப்பு மே 20, 2011 செருமனியின் விண்வெளி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்த முதலாவது கூட்டம் இவ்வாரம் இடம்பெறவிருக்கிறது. ஐரோப்பா, உருசியா, மற்றும் அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும். இவ்வாறான விண்பொருட்களை பூமியில் மோதாமல் தடுப்பதற்குரிய பொறிமுறைகள் இக்கூட்டத்தில் ஆராயப்படும் பூமிக்கு அருகில் வராமல் அவற்றின் பாதையை எவ்வாறு மாற்றுவதற்கு சிறுகோள்களைப் பற்றி எத்தகையான அறிவு எமக்குத் தேவை என ஆராய்வோம் என இத்திட்டத்தின் தலைவர் பேராசிரியர் அலன் ஹரிஸ் கூறினார். மூன்றரை ஆண்டு காலத்தில் இத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு வாகனம் ஒன்றின் பருமனைக் கொண்ட விண்பொருள் ஒன்று பூமியின் வளிமண்டலத்துள் வந்து வெடிக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டரங்கம் போன்ற அளவுடைய விண்பொருள் பூமியைத் தாக்கி அவ்விடத்தில் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. சில மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை சில கிலோமீட்டர்கள் அளவுள்ல பொருட்கள் பூமியைத் தாக்கி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாசாவின் வைஸ் தொலைநோக்கி அனுப்பிய தரவுகளின் அடிப்படையில், 100 முதல் 1,000 மீட்டர்கள் அளவில் கிட்டத்தட்ட 19,500 பூமிக்குக் கிட்டவாக நகரும் விண்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. [[இந்தியா]]வில் இணையதளத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் நடுவண் அரசிடம் கிடையாது என்று தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இணையதள தகவல்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்து மீதான விவாதங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அரசின் சார்பில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமயங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி கூகுள், யாஹூ மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் மீது, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த விசாரணையின் போது இணையதளங்களில் உள்ள சர்ச்சைக்குரியவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் சீனாவைப் போல அவற்றை இந்தியாவிலும் தடை செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணைய தளத்தில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் நடுவண் அரசிடம் இல்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கூறியுள்ளதுடன், ஒவ்வொரு நிறுவனமும் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கினாலே போதுமானது. எனினும், சட்டதிட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சில நடைமுறைகளை உருவாக்குவது அவசியம் என்றும் கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போக்கோ ஹராம் என்ற போராளிகள் அமைப்பு இத்தாக்குதல்களைத் தாமே நடத்தியதாக அறிவித்துள்ளது. நைஜீரிய அரசைக் கவிழ்த்து இசுலாமிய நாடாக்குவதே தமது நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசுக் கட்டிடங்களை மட்டுமல்லாமல் இவர்கள அண்மைக் காலத்தில் கிறித்தவக் கோயில்களையும் தாக்கி நூற்றுக்கணக்கான கிறித்தவர்கள், மற்றும் முஸ்லிம்களையும் கொன்றிருக்கின்றனர். வடக்கு நைஜீரியாவில் முஸ்லிம்களும், தெற்கே கிறித்தவர்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். வெள்ளிக்கிழமைத் தாக்குதலில் காயமடைந்தோரில் இந்தியர்களும், லெபனானியர்களும் அடங்குவர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையின் நுழையுரிமை விதிகளை மீறியமைக்காக வெளிநாட்டு முஸ்லிம் அறவுரையாளர்கள் 161 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகள் பணித்துள்ளனர். சுற்றுலா வீசா பெற்று வந்தவர்கள் பள்ளிவாசல்களில் அறவுரை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குடிவரவுத்துறை தலைவர் சுலானந்தா பெரேரா தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவ்வாறு அறவுரை வழங்குபவர்கள் இசுலாமின் மிதவாதமான கொள்கைகளை எடுத்துரைப்பதில்லை என உள்ளூர் முஸ்லிம்கள் முறையிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், மாலைதீவுகள், மற்றும் அரபு நாடுகளில் இருந்து வந்துள்ள இந்த அறவுரையாளர்கள் அனைவரும் இம்மாதம் 31ம் நாளுக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தப்லிகி ஜமாத் என்ற இசுலாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வியக்கம் கிழக்காசியப் பிராந்தியத்தில் மிகவும் புகழ் பெற்றது. இவர்களது வெளியேற்றம் குறித்த முடிவுகள் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக இன்று உயர் அதிகாரிகளைச் சந்திக்க விருக்கிறார்கள். இலங்கையில், சிங்களவர்கள், தமிழர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களே அதிகளவில் உள்ளனர். தூர கிழக்கு பிறிமோறியே பிராந்தியத்தில் இக்கையளிப்பு வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் உருசியாவுக்கான இந்தியத் தூதர் அஜய் மல்கோத்ரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய மாலுமிகளும் உருசிய கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்டனர். அதிகபட்சம் 30 கடல்மைல்/மணி வேகத்தில் செல்லவல்ல இக்கப்பல் 600 மீட்டர் ஆழம் வரையில் செல்லும். 2008 ஆம் ஆண்டில் நெர்ப்பா நீர்மூழ்கி சப்பான் கடலில் பயிற்சியில் இருந்த போது விபத்துக்குள்ளாகி நச்சு வாயுவை வெளியேறியதில் 20 மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். இச்சட்டம் ஒரு "பொறுப்பற்ற செயல்" எனத் தெரிவித்துள்ள துருக்கிய வெளியுறவுத்துற அமைச்சு இதற்குத் தகுந்த முறையில் பதிலடி கொடுப்போம் எனக் கூறியிருக்கிறது. பிரெஞ்சு மேலைவையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்ட வரைபு அரசுத்தலைவர் நிக்கொலா சர்க்கோசியின் ஒப்புதல் பெற்றபின்னர் பெப்ரவரி முடிவுக்குள் சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சின் கீழவை சென்ற மாதம் இச்சட்டமூலத்தை அங்கீகரித்திருந்தது. பிரான்சில் அடுத்து வரும் அரசுத்தலைவர் தேர்தலை நோக்காகக் கொண்டே இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக துருக்கிய வெளியுறவுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரான்சில் ஏறத்தாழ 500,000 ஆர்மேனியர்கள் வசிக்கின்றனர். 1915 படுகொலைகளை இனப்படுகொலைகள் என பிரான்சு ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. ஆனாலும் புதிய சட்டமூலத்தின் படி, இவற்றை மறுக்கும் எவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை தண்டமும் விதிக்கப்படும். 1915 ஏப்ரல் 24 இல் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் இன்று வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. 2011 மார்ச் 11 இலிருந்து தலைநகரில் ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளின் எண்ணிக்கையைக் கொண்டே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். வழக்கத்தை விட இக்காலப் பகுதியில் ஐந்து மடங்கு அதிகமான நில அதிர்வுகள் எற்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர். மனித சேதம் எவ்வளவு இருக்கும் என்பதை எதிர்வு கூறுவது கடினம் எனத் தெரிவித்துள்ள இவர்களில் அறிக்கை, அரசாங்கமும், தனிப்பட்டவர்களும் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அடுத்த மாதம் அவுத்திரேலியாவில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் அணித்தலைவர் பொறுப்பை மகேல ஜயவர்தனாவே வகிப்பார். 34 வயதான மகேல ஜயவர்தன, ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் தொடர்ந்தும் உபதலைவராகப் பதவியில் இருப்பார். அதே நேரம் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கிரகாம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியவர். இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஜெஃப் மார்ஷ் நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குள் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயலினால் உயர்-ஆற்றல் துகள்கள் பூமியைத் தாக்கி வருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்புயலினால் குறிப்பாக செயற்கைக்கோள்கள், மற்றும் விண்வெளி வீரர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் துருவங்களிற்குக் கிட்டவாகச் செல்லும் வானூர்திகளும் பாதிப்புக்குள்ளாகலாம். கடந்த திங்கட்கிழமை ஜிஎம்டி நேரம் 0400 மணிக்கு சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. பூமியின் மீது இதன் தாக்கம் இன்று புதன்கிழமை வரை உணரப்படும் என நாசா வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரியனின் வளிமண்டலத்தில் சேகரிக்கப்பட்டுள்ள காந்த ஆற்றல் சடுதியாக வெளிவிடப்படுவதால் இந்த சூரியப் புயல் உருவாகிறது. ஒளிவட்டப் பொருள் வெளியேற்றம் கிட்டத்தட்ட 2,200 கிமீ/செக் வேகத்தில் செல்கிறது. இது பூமியின் காந்தக்கோளத்தை செவ்வாய்க்கிழமை 1400 மணியளவில் 7 மணி) தாக்கும் என நாசா எதிர்வு கூறியிருக்கிறது. 1972 இல் இவ்வாறான சூரியப் புயல் அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தைத் தாக்கி தகவல் தொடர்புகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. 1989 ஆம் ஆண்டில் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் 6 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம், அறிவியலாளர்கள் எச்சரிக்கை சனி, சூன் 12, 2010 தமிழக அரசு தமிழில் சிறந்த நூல்கள் எழுதுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.25 ,000 நிதியுதவி வழங்கி வந்தது. இந்தத் தொகை தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த ஆணையின் மூலம் ரூ 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த அரசு திட்டம் மூலம் இது வரை ரூ.25,000 ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மட்டுமே இதுவரை விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர். சிறந்த இலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் அதிக அளவில் வெளிவருவதை மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்; ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்கள் ஏற்றம் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு நிதியுதவியாக 50,000 ரூபாய் அல்லது எழுதுப்பொருள் அச்சகத் துறையின் மதிப்பீட்டுத் தொகையில் 60 விழுக்காடு, இதில் எது குறைவானதோ, அத்தொகை வழங்கப்படும். தமிழக அரசின் மேற்கண்ட அரசின் இந்த அறிவிப்பு மூலம் ஏழ்மையில் உள்ள பல எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுடைய நூல்கள் மென்மேலும் பதிப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. நன்றி இனிமேல் தாங்கள் வழிகாட்டியபடி செய்கிறேன் இன்று வியாழக்கிழமை காலையில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் சுமார் 20 பேரடங்கிய படையினரின் கலகம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு மாத காலமாக தாமே நாட்டின் பிரதமர் எனக் கூறிக்கொள்ளும் பீட்டர் ஓ’நீல் மற்றும் சேர் மைக்கேல் சொமாரே ஆகியோருக்கு இடையேயான முறுகல் நிலையே இக்கலகத்திற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. கலகக்காரரினால் கைது செய்யப்பட்ட பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் ஆக்வி விடுவிக்கப்பட்டுள்ளதாக பீட்டர் ஓ’நீல் ஆத்திரேலியாவின் ஏபிசி செய்தியாளருக்கு இன்று தெரிவித்தார். கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த இளைப்பாறிய கேர்ணல் யாவுரா சாசா என்பவர் தாமே தற்போது பாதுகாப்புத் தளபதி எனவும் சேர் மைக்கேலின் அரசே தம்மை அப்பதவிக்கு நியமித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் முன்னதாகத் தெரிவித்திருந்தார். "அரசியலமைப்பையும், நீதித்துறையையும் பாதுகாப்பதே தமது முக்கிய நோக்கம் என அவர் பாதுகாப்புத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார் இன்னும் ஒரு வாரத்தில் சேர் மைக்கேல் பிரதமராக நியமிக்கப்படா விட்டால் தாம அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் எனவும் அவர் கூறினார். ஆனாலும், அவர் அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தின் பின்னர், கலகம் செய்த 30 பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பிரதமர் பெல்டென் நாமா அறிவித்தார். இவர்களுக்கு படையினரின் பெரும்பாலானோரின் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஓ’நீலின் தெரிவு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் ஓ’நீல் பதவி விலகச் சம்மதிக்கவில்லை. இன்றைய கலகத்திற்குப் பின்னர் ஓ’நீல் எவ்விதமான அறிக்கையையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார். குவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் எஃபிரெயின் ரியோசு மொண்ட் மீது இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜெனரல் மொண்ட் மறுத்துள்ளார். ஆனாலும் அவரை வீட்டுக்காவலில் வைப்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஜெனரல் ரியோசு மொண்ட் 12 ஆண்டுகளுக்கு குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் சட்டவிலக்கு அளிக்கப்பட்டிருந்தார். இந்த சட்டவிலக்கு இம்மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 1771 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கும், 29,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தமைக்கும் ஜெனரல் மொண்ட் காறமாக இருந்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் இருப்பதாக வழக்குத் தொடுநர்கள் கூறுகின்றனர். 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் எதிர்க்கட்சித் தலைவர் எத்தியேன் த்சிசெக்கேடிக்கு ஆதரவாகத் தலைநகர் கின்சாசாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிக் கலைத்தனர். தம்மை அரசுத்தலைவர் மாளிகைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு திரு. த்சிசெக்கேடி தனது ஆதரவாலர்களை முன்னதாகக் கேட்டுக் கொண்டார். கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதெனக் கூறியுள்ள அவர் தானே அந்நாட்டின் சனாதிபதி என அறிவித்திருந்தார். இவர் தற்போது வீட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். அரசுத்தலைவர் ஜோசப் கபிலா நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், இத்தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் அரசுத்தலைவராக சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டார். நேற்று வியாழன் அன்று அவரும் அவரது கட்சி ஆதரவாளர்களும் அரசுத்தலைவர் மாளிகைக்கு செல்ல எடுத்த முயற்சியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். [[இந்தியா]]வில் இராணுவத்தினருக்கு முகநூல், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், கூகுள், ஆர்குட் ஆகிய சமூக வலை தளங்களில் பதிவேற்றப்படும் கருத்துக்களை உரிய தணிக்கைக்கு உட்படுத்தி வெளியிட உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்க சமூக வலை தளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. முறைப்படி பதில் அளிக்காவிட்டால் அவற்றுக்குத் தடை விதிப்போம் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பதில் மனுத் தாக்கல் செய்தன. கருத்துக்களை தணிக்கை செய்வது கடினம் என மனுவில் கூறியிருந்தன. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. [[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று முன்தினம் மதியம் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். சிறிய இடைவெளியில் 5 முறை நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்து ஆன்மிக சேவை மையம், உலக கலாசார இணக்க மையத்துடன் இணைந்து நடத்தும் நான்காவது ஆண்டு இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி சென்னை அரும்பாக்கம் டி. ஜி. வைஷ்ணவக் கல்லூரியில் சனவரி 25 புதன்கிழமை அன்று துவங்கி சனவரி 29 ஞாயிற்றுக்கிழமை வரை நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, திருமலா-திருப்பதி தேவஸ்தானம், ராமகிருஷ்ணா மடம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம், சத்யசாய் சேவை அமைப்பு உள்பட 160-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன. கண்காட்சியை ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தானந்த சுவாமி தொடங்கிவைத்தார். கோவை சிரவை ஆதீனம் கவுமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இந்து சமய மற்றும் அறநிலையத்துறை செயலாளர் எம்.ராஜாராம், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். ஆன்மிக சொற்பொழிவுகள், திருமுறைப் பாராயணம் போன்றவையும், பரதநாட்டிய நடனம், யோகாசன பயிற்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இக்கண்காட்சி குறித்து, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி அமைப்புக்குழு தலைவரும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவருமான எஸ். நடராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் போது பல்வேறு அமைப்புகள் ஆன்மிகப் பணிகளில் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், பொருளாதார மேம்பாடு என மக்களுக்கான பல்வேறு சமுதாயப் பணிகளை நிறைவேற்றி வருகின்றன. இந்த அமைப்புகளின் சேவை, ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து விடாமல் நாடு முழுவதும் பரந்து விரிந்து அமைந்துள்ளன. மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகள், பல துறைகளின் நிபுணர்கள், வித்தியாசமான பார்வையாளர்கள், வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டவர்கள் சேவை மனப்பான்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ஒரே நோக்கத்துடன் ஒருங்கிணைந்து சேவை புரிந்து வருகிறார்கள் எனக் கூறினார். "இது போன்ற அமைப்புகளின் சேவையைப் பாராட்டுவதற்காகவும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும், அந்த சேவையில் நாமும் பங்குபெறவேண்டும் என்ற உத்வேகம் அனைத்து தரப்பினரிடமும் வரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் ஆண்டுதோறும் ஆன்மிக கண்காட்சியை நடத்தி வருகிறோம்." இந்நியமனம் குறித்து தற்போதைய பதில் உபவேந்தர் முனைவர் பிரேம்குமார் அவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வர்த்தமானி அறிவித்தலின்படி கடந்த 23ந் திகதியிலிருந்து இந்நியமனம் அமுலுக்கு வந்தது. முறைப்படியான உபவேந்தர் நியமனத்திற்காக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் பேரவை மூன்று தமிழர்களின் பெயர்களை சிபார்சு செய்து அனுப்பிவைத்திருந்தது. ஆயினும் பேராசிரியர் அத்தநாயக்க இத்தெரிவுக்கு விண்ணப்பிக்கவில்லை. பேராசிரியர் அத்தநாயக்க கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக 2011 பெப்ரவரி முதல் டிசம்பர் வரை பணியாற்றினார். பல்கலைக்கழகத்திற்கு முறையான பேரவை தெரிவானதிலிருந்து இவரது பதவிக் காலம் முடிவடைந்தது. மேற்படி நியமனத்தை எதிர்த்து கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்புநிலை விரிவுரைப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வந்தனர். உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அந்த அறிவித்தலை உடனடியாக ரத்துசெய்து, புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்மிடம் உறுதியளித்துள்ளதாக துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். * வீரகேசரி, இலங்கை தமிழ் நாளிதழ், சனவரி 27, 2012 அசரென்காவிடம் தோல்வியுற்ற மரியா சரப்போவா 2008 ஆம் ஆண்டு ஆத்திரேலியத் திறந்த சுற்று வெற்றியாளரும் 2007 ஆம் ஆண்டு இறுதிச் சுற்றில் போட்டியிட்டவரும் ஆவார். கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற முதலாவது பெலருஸ் வீராங்கனை அசரென்கா ஆவார். 1988-ல் பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் அப்போதைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த நத்தாசா சுவேரேவா இறுதிச்சுற்று வரை முன்னேறியதே இன்றளவும் சாதனையாக உள்ளது. மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து மேற்படி நியமனத்தை இரத்து செய்வதெனவும் பேரவை முன்மொழிந்த மூவரில் ஒருவரை உபவேந்தராக நியமிக்கப் பரிந்துரைப்பதெனவும் உயர்கல்வி அமைச்சு இணங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தென்னமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லீமாவில் போதைப்பொருள் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் நேற்று சனிக்கிழமை காலையில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கிறிஸ்து அன்புக்குரியவர் மையம் என்ற இந்த முகாமில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு விவிலியப் பாடங்கள் மூலம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்தது. முகாமின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் பலரும் தீப்பரவியதும் முகாமை விட்டு வெளியேற முடியாமல் தீயில் அகப்பட்டுக் கொண்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். சிலர் சாளரங்களை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இது குறித்து சுகாதார அமைச்சர் அல்பேர்ட்டோ தெஜாடா கருத்துத் தெரிவிக்கையில், புனர்வாழ்வு நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதென்றும், இரண்டு தடவைகள் இதனை மூடுமாறு கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவம் நடந்த போது அங்கு பொறுப்பானவர்கள் எவரும் இருக்கவில்லை என அவர் கூறினார். முகாமின் உரிமையாளர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். முகாம் தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய இராஜதந்திரிகளில் ஒருவரு, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2009ல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட இலங்கையின் இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார். தற்போது இவர் ஐநாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக பணியாற்றுகிறார். நான்காம் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு இவரே காரணம் என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஸ்டீவ் ஜாப்ஸ் இவர் காலமாகவில்லை. அனைவரது விழிகளிலும் கண்ணீரானார். இவர் சாதித்த சாதனைகளள் ஒவ்வொன்றின் பின்னாலும் இவரின் உழைப்பும் கடினமும் யாரும் அறியர். உண்மையிலேயே கணணி பரிணாமத்தை மாற்றியமைத்த வித்துவான் இவர். இவருக்கு அஞ்சலி செலுத்துவதை விட, எழுந்து நின்று மரியாதைதான் செலுத்த வேண்டும். ஏன் என்றால் அஞ்சலி இறந்தவர்களுக்குத்தான் செலுத்துவார்கள். இவர்தான் இன்னும் இவர் உருவாக்கிய ஒவ்வொரு சாதனத்தின் வடிவிலும் உயிர் வாழ்கிறாரே டென்னிசு பெருவெற்றித் தொடர் ஒன்றின் இறுதி ஆட்டத்தில் அதிகளவு நேரம் எடுத்துக்கொண்ட ஆட்டமும் இதுவே ஆகும். ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் ரொட் லேவர் அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பமான ஆட்டம் இன்று உள்ளூர் நேரம் அதிகாலை 01:37 மணிக்கு ஆட்டம் முடிவடைந்தது. ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் தர நிலையில் உள்ளார். 2-ம் இடத்தில் நடால் உள்ளார். 24 வயதான ஜொக்கோவிச் ஆத்திரேலிய திறந்த சுற்றை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2008 மற்றும் 2011-ம் ஆண்டும் வென்றிருக்கிறார். அடுத்த சூன் மாதத்தில் இடம்பெறும் பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் ஜோக்கோவிச் வெற்றி பெறுவாரானால் அனைத்து நான்கு பெருவெற்றித் தொடர்களையும் கைப்பற்றிய வீரராவார். நடால் ஜொக்கோவிச்சுக்கு எதிராக இதுவரை மோதிய 30 ஆட்டங்களில் 16-ல் வெற்றி கண்டிருக்கிறார். இருப்பினும் கடைசியாக ஜொக்கோவிச்சை சந்தித்த 7 மோதல்களிலும் தோல்வியையே தழுவியிருக்கிறார். இவை அனைத்துமே இறுதிச் சுற்று ஆட்டங்களாகும். இன்று நள்ளிரவுக்கு சர்ரூப் பின்னர் ஈக்கா என்ற நகரின் தென்கிழக்கே 15கிமீ தொலைவில் 39கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது. பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலநடுக்கத்தை அடுத்து மின்சாரம் அங்கு தடைப்பட்டுள்ளது. எனினும் பெரும் சேதம் ஏற்படவில்லை. தெற்கு ஏமனில் அல்-கைதா போராளிகள் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் நால்வர் அல்-கைதாவின் உள்ளூர்த் தலைவர்கள் என உள்ளூர்ப் பழங்குடித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். எமனின் தெற்கே அபியான் மாகாணத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் அபியான் மாகாணத்தை இசுலாமியப் போராளிகள் தம் வசப்படுத்திருந்தனர். இவர்களை விரட்டுவதற்கு ஏமன் பாதுகாப்புப் படையினர் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. படையினர் தரப்பில் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. பாடசாலை ஒன்றில் திங்கட்கிழமை இடம்பெற்ற அல்-கைதா தலைவர்களின் தலைவர்களின் இரகசிய இரவு கூட்டம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் உள்ளூர்த் தலைவர் அப்துல் மோனெம் அல்-ஃபாத்தானி என்பவர் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்க விமானங்களே இத்தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். நிச்சயமாக நாங்கள் காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்க முடியாது. அப்படி அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சனாதிபதி கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் எஸ். எம். கிருஷ்ணா சனவரி 18, 2012 ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்-மகிந்த சூலை 6, 2009 தெற்கு சூடானில் கால்நடைகளை அபகரிப்பதற்காக வாறாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்தது 74 பேராக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 45 பெர் பெண்களும் சிறுவர்களும் ஆவர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு சூடான் சூடானிடம் இருந்து கடந்த ஆண்டு பிரிந்ததில் இருந்து அங்கு இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்து வருகிறது. தெற்கு சூடானில் கால்நடை வளர்ப்பே பெரும்பான்மையோருக்கு வருமானத்தைத் தருகிறது. கடந்த சில வாரங்களாக ஜொங்கிளெய் மாநிலத்தில் கால்நடைகளுக்காக இடம்பெற்றுவரும் சண்டையில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். தெற்கு சூடானில் இனமோதல், பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம் சனவரி 3, 2012 இம்மோதலை அடுத்து எகிப்தின் அமைச்சரவையும், நாடாளுமன்றமும் உடனடியாகக் கூட்டப்பட்டன. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்காததை ஒட்டி இன்று வியாழக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போர்ட் செட் நகருக்கு கலவரத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பாதுகாப்பு ஊழியர்கள் சிலரும் அடங்குவர். கால்பந்தாட்ட ஆட்டத்தைச் பார்க்கச் சென்ற சிலர் கத்திகளையும் தம்முடன் எடுத்துச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் போர்ட் செட் அணியான அல்-மாஸ்ரி 3-1 என்ற கணக்கில் அல்-ஆஹ்லி அணியை வென்றது. இதனை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. அல்-ஆஹ்லி அணி ஆதரவாளர்கள் மைதானத்தில் இறங்கி ஆட்டக்காரர்களையும் ஆதரவாளர்களையும் தாக்கத் தொடங்கினர். அங்கு மிகக் குறைந்தளவு காவல் துறையினரே பணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மைதானத்தின் ஒரு பகுதி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அல்-அஹ்லி அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேறொரு கால்பந்து ஆட்டம் ஒன்று போர்ட் செட் கலவரத்தை அடுத்து இடையில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தின் ஒரு பகுதியைத் தீ வைத்துக் கொளுத்தினர். ஆனாலும், ஆட்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தப் பொருட்கள் விண்மீன்கள், கோள் மற்றும் உயிரினத்தால் அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இது தொடர்பில் ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும். எமது சூரியமண்டலத்திற்குள் உள்ள பொருட்களை விட இவை பெரிது வேறுபட்டுள்ளதாக நாசாவின் அறிவியலாளர் டேவிட் மெக்கோமசு கூறினார் நெயோனுடன் ஒப்பிடும் பொழுது இவற்றில் ஒக்சிசன் குறைவாக உள்ளது." ஐபெக்ஸ் விண்கலம் 2008ஆம் ஆண்டு சூரிய மண்டலத்திற்கும் அண்டவெளிக்கும் உள்ள எல்லையை வரைபடமாக உருவாக்கும் முயற்சியாக நாசாவினால் அனுப்பப்பட்டது. இதன் மூலம் விண்வெளியில் பல முக்கியமான ஆய்வுகளை நாசா மேற்கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் சூரியக் காற்று பூமியின் காந்தக்கோளத்தில் மோதுவதை இது படம் பிடித்ததன் மூலம் சூரியனில் இருந்து மணிக்கு மில்லியன் மைல்கள் வேகத்தில் செல்லும் மர்மமான மின்னூட்டத் துகள்களைக் கண்டுபிடித்தது. ஊழலுக்கு எதிரான தன்னார்வ அமைப்பு, மற்றும் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்திருந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. டாட்டா நிறுவனத்தின் மூன்று உரிமங்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 உரிமங்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 உரிமங்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 உரிமங்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 உரிமங்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 உரிமங்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 உரிமங்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 உரிமங்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 உரிமங்களும் நீக்கப்பட்டவைக்குள் அடங்குகின்றன. நேற்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பினால் நாட்டின் 5 விழுக்காடு மொபைல் தொலைபேசிப் பயனர்கள் பாதிப்படைவார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முறைகேடாக உரிமங்கள் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தலா ஐந்து கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 69-வயதான டூச் 1975-1979 காலப்பகுதியில் துவோல் சிலெங்கு சிறைச்சாலை அதிகாரியாகப் பணியாற்றியவர். இச்சிறையில் குறைந்தது 15,000 ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் எனக் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னர் வழங்கப்பட்ட 35 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை போதாது என அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர் காயிங் கெக் இயேவ் செய்த குற்றம் மனிதகுல வரலாற்றில் மிகவும் மன்னிக்க முடியாதது, இவர்களுக்கு அதிக பட்சத் தண்டனையே வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கொங் சிரிம் தனது தீர்ப்பில் தெரிவித்தார். படுகொலைகளில் இருந்து உயிர் தப்பியவர்களும் அவர்களது உறவினர்களுமாக நூற்றுக்க்கணக்கானோர் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தனர். கெமரூச்சின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த நுவோன் சியா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் இயெங் சாரி, அவரது மனைவி இயெங் திரித் ஆகியோர் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றிய நேப்பாளத்தின் முன்னாள் போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர் தமது ஆயுதப் போராட்டத்திக் கைவிட்டு முகாம்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதன் முதற்கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை அன்று நூற்றுக்கணக்கானோர் தமது முகாம்களை விட்டு வெளியேறினர். 2007 ஆம் ஆண்டில் இருந்து முகாம்களில் தங்கியிருந்த ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகமாக நிதியுதவி பெறுகின்றனர். அரசுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி, விரும்பியவர்கள் நேப்பாள இராணுவத்தில் இணையலாம் அல்லது ஏனையோர் பணம் பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். பொது வாழ்வில் இணைபவர்களுக்கு $6,000 முதல் $11,000 வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. சுமார் 6,500 பேர் வரையில் இராணுவத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும், எதிர்பார்த்ததை விட அதிகமானோர் இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். மொத்தம் 17,000 முதல் 19,000 வரையான போராளிகள் முகாம்களில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளில் மேலும் அதிகமானோரை இராணுவத்தில் சேர்ப்பதற்கு மாவோயிசப் பிரதமர் பாபுராம் பட்டாராய் கடந்த டிசம்பர் மாதத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாரெனினும், முக்கிய எதிர்க்கட்சி இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றது. தெற்கு சூடானில் சென்ற வாரம் இடம்பெற்ற கலவரங்களை அடுத்து சம்பந்தப்பட்டோருக்கு இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். ஐநா அமைதிப்படை உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். கொல்லப்பட்டவர்களில் பொது மக்களும் அடங்குவர். ஆனாலும் காவல்துறையினரே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள். யுனிட்டி மாநிலம், வராப் மாநிலம் ஆகியவற்றின் காவல்துறையினரிடையே "பிரச்சினை கிளம்பியதால்" வன்முறை வெடித்ததாக தெற்கு சூடானின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மஜாக் டாகூட் தெரிவித்தார். கடந்த சூலை மாதத்தில் தெற்கு சூடான் விடுதலை அடைந்த பின்னர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய பிடெல் காஸ்ட்ரோ, தனது நாட்டுக்காகவும் மனித இனத்துக்காகவும், இந்தப் பூமிக்காகவும் கியூபா நாட்டினன் ஒவ்வொருவரும் தமது கடைசி மூச்சு இருக்கும் வரை போராட வேண்டும் எனக் கூறினார். 85 வயதான காஸ்ட்ரோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் பொது மக்கள் முன்னால் தோன்றியது இதுவே முதற் தடவையாகும். தலைநகர் அபானாவில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா ஆறு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ரதாக கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப்பத்திரிகை கிரான்மா தெரிவித்துள்ளது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த நினைவுக் குறிப்புகள் காஸ்ட்ரோ, மற்றும் ஊடகவியலாளர் கத்தியூஸ்க்கா பிளான்கோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வீட்டோ பயன்படுத்தியது வெட்கப்படக்கூடிய செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு எதிரான தீர்மானம் சமநிலைப்படுத்தப்பட்டதல்ல என சீனாவும் உருசியாவும் தெரிவித்துள்ளன. சிரியாவின் ஹோம்சு நகரில் 55 பேர் கொல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்த சிறிது நேரத்தில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவில் உள்ள சிரியத் தூதரகம் தாக்குதலுக்குள்ளானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 பேரடங்கிய குழுவொன்று தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தளவாடங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த கணினிகளையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அசாத்தின் அரசுக்கு எதிராக இடம்பெற்று ஆர்ப்பாட்டங்கலில் கிட்டத்தட்ட 5,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் கூறுகிறது. பீனிக்ஸ் இறங்கிய பகுதியில் பனிக்கட்டிகள் காணப்பட்டிருந்தாலும், பல மில்லியன் ஆண்டுகளாக அதன் மேற்பரப்பில் வரட்சி நிலவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க் கோளின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மணல் ஒரே சீரான தன்மையானவை என முன்னர் நிறுவப்பட்டிருந்தது. இதனால் செவ்வாயின் மேற்பரப்பு முழுவதும் வரண்ட தன்மையே காணப்படும் என அவர்கள் கூறுகின்றனர். நேகுரோசுத் தீவில் டுமாகெட் நகரில் இருந்து சுமார் 0 கிமீ தொலைவில் காலை 11:49 மணிக்கு 20 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் பதியப்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்குக் கரையிலும், சேபு நகரத்தின் மேற்கிலும் 1 மீட்டர் உயரத்திற்கு ஆழிபேரலை ஏற்படலாம் என பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் அச்சமடைந்து பாடசாலைகளில் இருந்தும், தொழிலகங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். டயாசன் நகரில் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததினால் குழந்தை ஒன்று இறந்துள்ளதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகரில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்லதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததற்கு வாயு வெடிப்பே காரணமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலைக் கட்டடமும், அதனருகே இருந்த இரு வீடுகளும் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளன. இடிபாடுகளிடையே இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்லே சிக்குண்டவர்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். 30 முதல் 100 வரையானோர் உள்ளே சிக்குண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசுத் தொலைக்காட்சியில் இன்று தோன்றி உரையாற்றிய முகமது நசீட் நாட்டின் தற்போதைய நிலையில் தாம் பதவி விலகுவதே சிறந்தது எனக் கூறினார். பிரதி அரசுத்தலைவர் முகமது வாகித் அசனிடம் அவர் தனது பதவியைக் கையளிப்பார் எனக் கருதப்படுகிறது. கடந்த மாதம் அப்துல்லா முகமது என்ற மூத்த நீதிபதியை மாலைதீவுகளின் இராணுவத்தினர் கைது செய்ததை அடுத்து அங்கு வீதி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை சிறையில் இருந்து விடுவித்த அவரது முடிவு அரசியல் நோக்கமானது என அவர் மீது குற்றம் சாட்டியது. முன்னாள் மனித உரிமை ஆர்வலரான முகமது நசீட் 2008 ஆம் ஆண்டு முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பதவியில் இருந்த அப்துல் கையூமை தேர்தலில் வென்று அரசுத் தலைவரானார். ஆனாலும் நசீடை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததால் அவருக்கு அரசியல் ரீதியாக பெரும் நெருக்கடி இருந்து வந்தது. கடந்த பல நாட்களாக வஸ்தோக் ஏரியை அடைவதற்காக உருசியர் அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது அவர்கள் 3,768 மீட்டர்கள் ஆழத்தை அடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒண்டாரியோ ஏரியின் அளவை ஒத்தது இந்த வஸ்தோக் ஏரி. இது கிழக்கு அண்டார்க்டிக்காவின் பனியாற்றில் கிட்டத்தட்ட 4 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 14 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், பல்வேறு பனியாற்றடிகள் மூலம் நீர் அங்கு சென்றிருக்கலாம் என்பதால், அங்குள்ள நீர் சில ஆயிரம் ஆண்டுகள் வயதுடையதாகவே இருக்கும் என நம்பப்டுகிறது. குளிரைத் தாங்கக்கூடிய சில உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் கூறப்படுகிறது. இவ்வாண்டு இறுதியில், பிரித்தானிய ஆய்வாளர்கள் அண்டார்க்டிக்காவில் எல்ஸ்வர்த் ஏரியை அடைய பனியாற்றைத் தோண்டத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு போக்லாந்து போரில் போரிட்ட இராணுவத்தினர், முதுவர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தில் உரையாற்றிய அர்ஜென்டீன அரசுத்தலைவர் கிறிஸ்டீனா பெர்னாண்டசு டி கிர்ச்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மெர்க்கசூர் என்ற தென்னமெரிக்க வணிக நிறுவனம் போக்லாந்து கொடியுடன் செல்லும் கப்பல்களை தமது துறைமுகங்களூடாக செல்வதற்கு சென்ற மாதம் தடை விதித்திருந்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் போக்லாந்து மக்கள் பிரித்தானியர்கள். அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். போக்லாந்து மக்கள் விரும்பினாலொழிய அர்ஜெண்டீனாவுடன் எவ்விதப் பேச்சுக்களிலும் தாம் ஈடுபடப் போவதில்லை எனக் கூறியிருந்தது. பிரேசில், உருகுவாய் போன்ற நாடுகள் இது விடயத்தில் ஆர்ஜெண்டீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. ஏற்கனவே போக்லாந்து கப்பல்கள் தமது துறைமுகங்களுக்கு வர அவர்கள் தடை விதித்துள்ளனர். சிலியின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அண்மையில் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார். முன்னாள் தலைவர் முகமது நசீது தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்தது அவர் செய்த மிகப் பெரிய தவறு" என வாகித் அசன் செய்தியாளர்களிடம் கூறினார். மத்தியில் கூட்டாட்சி அமைத்து நாட்டில் நிலையான சனநாயக ஆட்சியை அமைப்பதே தமது குறிக்கோள் என அவர் கூறினார். வாகித் அசன் முன்னாள் தலைவர் முகமது நசிதின் கீழ் பிரதி அரசுத் தலைவராக இருந்தவர். திரு நசீதின் வீட்டின் முன்னாள் மதுபானப் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திரு நசீதுக்கு எதிராகத் தாம் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என உறுதியளித்த வாகித் அசன் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறினார். நீதிபதி அப்துல்லா முகமது என்பவர் சென்ற மாதம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து முகமது நசீது தாம் பதவி விலகுவதாக நேற்று அறிவித்தார். புதிய தலைவர் பதவிக்கு வந்தததும் நீதிபதி அப்துல்லா முகமது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் புதிய தலைவர் உறுதியளித்தார். மாலைதீவில் அரசியல் கலவரங்களை அடுத்து அரசுத்தலைவர் முகமது நசீட் பதவி விலகினார் பெப்ரவரி 7, 2012 சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உணவகம் ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று நேற்று புதன்கிழமை வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். தாமே இத்தாக்குதலை மேற்கொண்டதாக அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாத இயக்கமான அல்-சபாப் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் சோமாலிய அரசுப் படையினராலும், ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையினராலும் தலைநகர் மொகதிசுவில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் அல்-சபாப் இயக்கம் இவ்வாறான தற்கொலைத் தாக்குதல்கலை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது. சோமாலியாவில் அரசியல் தீர்வைக் கொண்டு வரும் முகமாகவும், கடற்கொள்ளைக்காரர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும், லண்டனில் பெப்ரவரி 23 ஆம் நாள் பன்னாட்டு மாநாடு ஒன்றை பிரித்தானியா ஒழுங்கு படுத்தியுள்ளது. சூடானின் தார்பூர் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் போரினால் அழிந்திருக்கும் பகுதிகளைன் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக ஆணையம் ஒன்றை சூடான் அரசுத்தலைவர் அமைத்திருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரினால் பாதிப்புற்றோருக்கு உதவவும், போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுவதற்கும் இந்தப் புதிய பிராந்திய ஆணையம் உதவும் எனக் கூறப்படுகிறது. இதற்கான உடன்பாடு சூடான் அரசுக்கும், தார்பூரின் வலுகுன்றியிருக்கும் போராளிக் குழு ஒன்றுக்கும் இடையில் எட்டப்பட்டது. ஏனைய போராளிக் குழுக்கள் இவ்வுடன்பாட்டை ஏற்க மறுத்திருக்கின்றன. கடந்த ஆண்டு தோஹா உடன்படிக்கையில் கையெழுத்திட்ட விடுதலை மற்றும் நீதிக்கான இயக்கத்தின் (LJM) உறுப்பினர்களை சிறைகளில் இருந்து விடுவிப்பதாக நேற்றைய நிகழ்வில் அல்-பஷீர் அறிவித்தார். ஆனாலும், உடன்படிக்கையில் கையெழுத்திடாத ஏனைய இயக்கங்களுக்கு இந்தச் சலுகை காட்டப்படமாடாதென அவர் அறிவித்தார். எல்ஜேஎம் குழுவின் தலைவர் திஜானி சேசே தார்பூர் பிராந்திய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தார்பூரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக சூடானின் அதிபர் ஓமர்-அல்-பசீர் உட்பட பல அதிகாரிகளுக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அழைப்பாணையைப் பிறப்பித்திருந்தது. முகமது நசீதைக் கைது செய்யுமாறு முன்னதாக மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. தன்னைக் கைது செய்ய மாலைதீவு காவல்துறை தயாராகி வருவதாகவும் தான் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் நசீத் நேற்று தெரிவித்திருந்தார். இதேவேளை மாலைதீவின் முன்னாள் அரசுத்தலைவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளதாக அதிபர் முகமது வாகித் அசன் அறிவித்துள்ளார். இதற்கிடையில், மாலைதீவுகளில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்ப நிலையை அடுத்து ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் ஒஸ்கார் பெர்னாண்டசு-தரான்கோ மாலே வந்து சேர்ந்துள்ளார். இவர் முன்னாள் மற்றும் தற்போதைய அரசுத்தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அனைவரையும் அமைதி காக்கும்படி அவர் வேண்டியுள்ளார். விண்வெளி மையத்தின் மூத்த அதிகாரியான லெப். கேணல் விளாதிமிர் நெஸ்தெரெத்ஸ் என்பவரே குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதாக உருசியாவின் இரகசியப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. உருசியா அண்மைக்காலத்தில் நிகழ்த்திய எவுகணைச் சோதனைத் திட்டங்களின் முடிவுகளை தாம் அமெரிக்காவுக்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமது கணவர் தாம் குற்றமற்றவர் எனத் தமக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்ததாக அவரது மனைவி ரியாநோவஸ்தி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 199 வெளிநாட்டு உளவாளிகள் தம்மிடம் பிடிபட்டுள்ளதாக உருசியாவின் அரசுத்தலைவர் திமீத்ரி மெத்வெடெவ் அண்மையில் அறிவித்திருந்தார். இவர்களில் சிலர் மேற்கத்தைய நிறுவனங்களில் பணிபுரியும் உருசியர்கள் என அவர் கூறினார். கடந்த ஆண்டு சூலை மாதத்தில் தெற்கு சூடான் சூடானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய எல்லைகள் தொடர்பாக முறுகல் நிலை நிலவி வந்துள்ளது. அத்துடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான சர்ச்சையில் எண்ணெய் அகழ்வையும் நிறுத்தி வைத்திருந்தது. சூடான் 815 மில்லியன் டாலர்கள் பெறுமதியான எண்ணெயை தம்மிடம் இருந்து அபகரித்துக் கொண்டுள்ளதாக தெற்கு சூடான் குற்றம் சாட்டியிருந்தது. எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. முதல் நாள் பேச்சுக்களின் முடிவில் இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு உடன்பட்டன. எண்ணெய்ப் பிரச்சினை தொடர்பாக பேச்சுகள் இன்றும் தொடர்கின்றன. கஷ்காரி மீண்டும் சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதை மலேசியக் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மனித உரிமைக் குழுக்கள் இவரது நாடு கடத்தலை எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தன. 23 வயதான கஷ்காரி கடந்த வாரம் முகமது நபி குறித்து சில கருத்துகளை தமது டுவிட்டரில் இட்டிருந்தார். நபி பிறந்தநாள் தொடர்பில் அம்சா எழுதியிருந்த டுவிட்டர் கருத்தில் உன்னைப் பற்றிய பல அம்சங்களை நான் விரும்புகிறேன். அதேநேரம் உன்னைப் பற்றிய சில அம்சங்களை நான் வெறுக்கவும் செய்கிறேன். உன்னைப் பற்றிய பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. நான் உனக்காக பிரார்த்திக்க மாட்டேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து 30,000 இற்கும் அதிகமானோர் அவருக்குப் பதில் அனுப்பியிருந்தனர். பல மரண அச்சுறுத்தல்களும் அவருக்கு விடப்பட்டிருந்தன. இதனையடுத்து அவர் அச்செய்தியை நீக்கியிருந்ததுடன், மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு மேலும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் உடனடியாக கடந்த வியாழன் அன்று அவர் மலேசியா கிளம்பிச் சென்றார். ஆனாலும் அவர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதிகளைப் பரிமாறும் உடன்படிக்கை எதுவும் மலேசியாவும் சவூதி அரேபியாவும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இசுலாமிய நாடுகள் என்ற வகையில் இரண்டு நாடுகளும் தமக்கிடையே இணக்க நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. முகமது நபியை அவமதிக்கும் எவரும் சவூதி அரேபியாவில் சட்டப்படி மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சமயத் துறவுக்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், கஷ்காரி அங்கு மரணதண்டனைக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக பன்னாட்டு மன்னிப்பகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆர்டேமியோ கைது செய்யப்பட்டதன் மூலம் கொக்கெயின் அதிகம் விளையும் ஆல்ட்டோ உவால்லாகா பள்ளத்தாக்கு நமது முழுமையான கட்டுப்பாட்டில் வந்துள்ளது என பெருவின் அரசுத்தலைவர் ஒலாண்டா உமாலா கூறினார். இப்போது எனி-அப்புரிமாக் பள்ளத்தாக்கில் நிலைகொண்டுள்ள ஏனைய போராளிகளுக்கு எதிராக நாம் தாக்குதல்நடத்தவிருக்கிறோம் என அவர் மேலும் கூறினார். ஆர்ட்டேமியோ இறந்து விட்டதாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவித்திருந்தாலும், அவர் கடுமையான காயங்களுடன் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது வலது கையை முற்றிலுமாக இழந்துள்ளார். அவருக்கு தற்போது தலைநகர் லீமாவில் மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பெருவின் பூர்சுவா மக்களாட்சி எனத் தாம் கருதிய அப்போதைய அரசை ஒழிக்கவென 1980 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாவோயிச வழியில் கம்யூனிச அரசை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அபிமாயெல் குஸ்மன் கைது செய்யப்பட்டமை, மற்றும் பெருவின் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் தீவிரவாதத்துக்கெதிரான கடுமையான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால் இவ்வியக்கம் பலவீனமடைந்தது. பெருவின் கம்யூனிசப் போராளிக் குழு தோல்வியை ஒப்புக் கொண்டது திசம்பர் 8, 2012 தனியார் ஜெட் விமானம் புக்காவு நகரில் தரையிறங்கும் போது விபத்துக்குளாகி வீழ்ந்ததில் அகுஸ்டின் கட்டும்பா முவான்கே, மற்றும் விமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். நாட்டின் நிதி அமைச்சர் மட்டாட்டோ மாப்போ மற்றும் மாகாண ஆளுனர் ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். "முவான்கேயின் இறப்பு நாட்டிற்கு ஒரு பேரிழப்பு என அரசுப் பேச்சாளர் கூறினார். விமானத்தை செலுத்திய விமானி பிளைட் லெப்டினன்ட் தரிது ஹேரத் உயிர் தப்பியுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் அன்ட்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார். விமானம் வீழ்வதற்கு முன்னரே விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என நம்பபடுகிறது. விமானம் வீழ்ந்த இடத்தில் உடைமைகளுக்கோ அல்லது ஆட்களுக்கோ ஏதும் சேதம் ஏற்படவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. இவ்விபத்துத் தொடர்பாக தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என விமானப்படைத் தலைவர் அர்சா அபேவிக்கிரம தெரிவித்தார். இலங்கை விமானப்படை உருசியத் தயாரிப்பான மிக்-27 போர் விமானங்களை தரைத்தாக்குதல், மற்றும் வான் உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் இவை இலங்கையில் சேவைக்கு விடப்பட்டன. ஈழப்போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மிக்-27 போர் விமானம் ஒன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீழ்ந்து நொறுங்கியதில் உக்ரேனிய விமானி ஒருவர் கொல்லப்பட்டார். 2001 சூலையில், விடுதலைப் புலிகளினால் மிக்-27 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 2004 சூன் மாதத்தில் வேறொரு மிக்-27 விமானம் கட்டுநாயக்காவிற்கு அருகில் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்தியாவின் கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி. எஸ். ஆச்சார்யா (71) கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்ட போது இருக்கையில் அமர்ந்தவாறே திடீரென மேடையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த இவர் விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார். அங்கு நடநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மல்லிகே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் சூலை 4 1940-இல் பிறந்தவர் கணிதத் துறை முனைவர் பட்டம் பெற்ற இவர் 1993ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் வரையிலான காலப்பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக 2004ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, கனடாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு, பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறைப் பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன், கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடப் பீடாதிபதி எஸ்.சுதர்சன், மற்றும் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரமான புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. சரிஸ்கா புலிகள் சரணாலயத்தைச் சேர்ந்த உம்ரி என்ற கிராமத்தில் இருந்த 82 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் புதிய இருப்பிடத்துக்கு சென்ற வாரம் இடம்பெயர்ந்தனர். 886 சதுர கிமீ பரப்பளவுள்ள சரிஸ்கா சரணாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து புலிகளே எஞ்சியுள்ளன. 2002 ஆம் ஆண்டில் இங்கிருந்த புலிகளின் எண்ணிக்கை பூச்சியத்தை அடைந்திருந்தது. சில தசாப்த காலமாக புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருமளவில் குறைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 1,700 புலிகளே உள்ளன. நூறாண்டுகளுக்கு முன்னர் 100,000 புலிகள் வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயத்தைச் சுற்றி 11 கிராமங்கள் உள்ளதாகவும், இவற்றில் குடியுள்ள 2,500 பேர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர வைக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 4 கிராம மக்கள் இடம் பெயர்வர். "மக்களை இடம் பெயர வைப்பது என்பது இலகுவான காரியமல்ல. கட்டாயமாக அவர்களை நாம் இடம் பெயர வைக்க முடியாது. இடம்பெயர அவர்கள் விரும்ப வேண்டும் என ராசத்தான் காட்டிலாகா அதிகாரி பி. எஸ். சோமசேகர் தெரிவித்தார். இவர்களுக்கு நாம் காணி, பணம், மற்றும் கால்நடைகள் போன்றவற்றை வழங்குகிறோம் என அவர் கூறினார். கிராம மக்களுக்கும் சரணாலயத்தில் உள்ள புலிகளுக்கும் இடையில் நல்லுறவு எப்போதும் இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தமது எருமை ஒன்றைத் தாக்கிய புலி ஒன்றை கிராம மக்கள் நஞ்சூட்டிக் கொன்றனர். [[இலங்கை]]யில் எரிபொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து சிலாபம் நகரில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து, காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனி என்பவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, மூன்று நாட்களாக புத்தளம், சிலாபம், மன்னார் பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லாமல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து அகில இலங்கை மட்டத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஏற்கனவே போரி்னால் பாதிக்கப்பட்டிருந்து, படிப்படியாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முயற்சிக்கின்ற தமக்கு திடீரென 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையால் பலத்த அடி விழுந்துள்ளதாக வடபகுதி மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெற்றொல் விலை 12 ரூபாயாலும் டீசல் விலை 31 ரூபாயாலும் மண்ணெண்ணெய் விலை 35 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டன. இப்பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன், தொடர் பதற்றநிலை காணப்பட்டு வந்த நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிலாபத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிக்க சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் அங்கு அனுப்பட்டுள்ளனர் என காவல்துறை மா அதிபர் என். கே. இலங்க்கக்கோன் தெரிவித்தார். காவல்துறையினர் எவரும் இச்சம்பவத்தில் காயமடையவில்லை. அதே நேரத்தில் சிலாபம் நகர் பகுதிக்கு நாளை காலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். செவ்வாய் பின் இரவில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. பல கைதிகள் தங்களின் அறையிலேயே சிக்கிகுண்டு அடையாளம் காணமுடியாத அளவில் வெந்துள்ளார்கள். கைதிகளின் அறையின் சாவி இல்லாததாலும் அதை வைத்திருந்த காவலர்களை காணாததாலும் தீயணைப்பு வீரர்களால் அறைக்குள் மாட்டிய கைதிகளை வெளியே கொண்டு வரமுடியவி்ல்லை. சில கைதிகள் அறையின் மேற்கூரையை பிய்த்து தீ விபத்திலிருந்து தப்பினார்கள். தீ விபத்துக்கு முன் சிறையில் கலகம் நடந்ததாக சில ஹொண்டுரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதை சிறைத்துறை தலைமை அதிகாரி மறுத்துள்ளார். ஹொண்டுரான் அதிபர் லோபோ இவ்விபத்து தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடக்கும் என்றும் விசாரணை நடக்கும் போது உள்ளூர் மற்றும் தேசிய சிறைத்துறை அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். [[இலங்கை]]யில் நான்காம் ஈழப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய்ந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை இராணுவம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை விரிவாக ஆராயவென இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் சுதந்த டி சில்வா தலைமையில் ஐந்து இராணுவ உயர் அதிகாரிகள் இந்த நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாத இறுதியில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, அதனை நாடாளுமன்றத்திடம் ராஜபக்ச முன்வைத்தார். கடந்த சனவரி மாத ஆரம்பத்திலேயே இந்த இராணுவ விசாரணை மன்றம் நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த விசாரணையின் போது, இராணுவ வீரர் ஒருவர் போர்க்குற்றம் புரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டால், அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் இராணுவச் சட்டக்கோவையின் படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி மற்றும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இராணுவ விசாரணை மன்றம் ஆராயும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். இத்தாலியக் கப்பலின் பாதுகாப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் இரண்டு பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்கக் காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பலில் வந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த 48 வயதான் மீனவர் ஜெலெஸ்டின் மற்றும் 19 வயதான அஜித் பிங்க் ஆகியோர் உயிரிழந்தனர். கொல்லத்திலிருந்து இந்த மீ்னவர்கள் மீன்பிடிக்கக கடந்த வாரம் கடலுக்குள் சென்றிருந்தனர். மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோதுதான் மரணத்தை சந்தித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய இத்தாலிக் கப்பலின் பெயர் என்ரிகா லெக்ஸி என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலை விசாரணைக்காக தற்போது கொச்சிக்கு கொண்டு வந்து அதன் அதிகாரிகளிடம் விசாரணை நட்த்திவருகின்றனர். மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என தவறாக நினைத்து, பதட்டத்தில் அப்படகின் மீது சுட்டுவிட்டதாக கப்பலைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். இத்தாலியத் தூதரோ இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏதோ நிகழ்ந்ததாகக் கூறியிருக்கிறார். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று, மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். நேற்று பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.வீடுகள் முன்பு கறுப்புக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. சோமாலியக் கொள்ளைக்காரர்கள் தற்போது இந்தியப் பெருங்கடலினுள்ளும் ஊடுருவியுள்ளனர் என இந்தியா முதலில் எச்சரித்திருந்தது. சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களைக் கண்காணிக்கவென இந்தியா போர்க்கப்பல் ஒன்றை ஏற்கனவே சோமாலியக் கடற்பகுதியில் தயார் நிலையில் வைத்துள்ளது. இறந்த இரு தமிழக மீனவர்களுக்கும் தலா 50,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. கிளீன்ஸ்பேஸ் வன் CleanSpace One என அழைக்கப்படும் இச்செயற்கைக் கோள் 10 மில்லியன் பிராங்கு செலவில் சுவிசு விண்வெளி மையத்தினால் தயாரிக்கப்படவுள்ளது. மூன்று முதல் ஐந்தாண்டு காலத்துக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு இப்போது செயலிழந்துள்ள இரண்டு செயற்கைக்கோள்களின் எச்சங்களை மீட்பது இத்திட்டத்தின் முதற் பணியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 500,000 கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட 28,000 கிமீ/மணி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை உண்டு பண்ணும். 1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறான கழிவுப் பொருள் மோதியதனால் சேதமுற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செயற்கைக் கோள் ஒன்று உருசியாவினால் கைவிடப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியதில் அழிந்தது. 2007 ஆம் ஆண்டில் சீனா தான் ஏவிய செயற்கைக்கோள் ஒன்றை சோதனைக்காக எவுகணை மூலம் மோதிச் சேதப்படுத்தியதில், அச்செயற்கைக்கோள் 150,000 சிறிய துண்டுகளாக விண்வெளிக் கழிவுகளில் சேர்ந்தது. இவ்வாறான கழிவுகளால் விண்வெளியின் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்து அமெரிக்க அரசுச் செயலர் இலரி கிளிண்டன் கடந்த மாதம் எச்சரித்திருந்தார். இது குறித்து முறைசாரா விதிகளைக் அமுல்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா கலந்துரையாடும் என அவர் தெரிவித்திருந்தார். [[இலங்கை]]யில் விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தை ஆட்சேபித்தும், உடன் சம்பள உயர்வைக் கோரியும் எதிர்க்கட்சிகளினால் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைப்பதற்குப் காவல் துறையினர் கண்ணீர்ப் புகை, மற்றும் நீர்ப்பாய்ச்சிகளைப் பிரயோகித்ததோடு ஊர்வலத்தில் ஈடுபட்டோர் மீது குண்டாந்தடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மேல்மாகாண மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இதனால் நேற்று பிற்பகலில் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தொடருந்து நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்தியில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் உரையாற்றியதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அரசுத்தலைவர் செயலகப் பக்கத்துக்கு ஊர்வலமாகச் செல்ல முற்பட்டனர். இந்த ஊர்வலம் ரெலிகொம் சந்திவரையே பயணிக்க முடிந்தது. அவ்விடத்தில் காவல் துறையினர் அணிதிரண்டு வீதியின் குறுக்காக இரும்புக் கம்பி வேலித் தடைகளைப் போட்டு ஊர்வலத்தை தடுக்க முற்பட்டனர். இந்தத் தடைகளையும் உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்னேறிச் செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் சில ஆர்பாட்டக்காரர்கள் காவல் துறையினரை நோக்கித் தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்தினுள் பிரவேசித்தனர். கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கூடி முன்னேற முயன்றபோது அவர்கள் மீது மீண்டும் பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப்புகைப் பிரயோக செய்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கும் கூடுதலான அப்பகுதியில் பெரும் கலவர நிலை காணப்பட்டது. பாக்கித்தானின் வடமேற்கில், பழங்குடியினர் வாழும் குர்ரம் பகுதியிலுள்ள பள்ளிவாசல் அருகே சந்தையொன்றில் நேற்று வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடித்ததில் பலம் வாய்ந்த குண்டொன்று வெடித்தது. இத்தாக்குதலில் 26 பழங்குடியினர் கொல்லப்பட்டனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குர்ரம் பகுதியில் சியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்கிடையே நடந்து வரும் பிரச்சினையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடித்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு சம்பவத்திற்கு காரணமானவர்களை தீவிரமாக தேடுதல் நடத்தினர். "நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர்தான் இந்த பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால் அந்த நம்பிக்கையை நான் இழந்து விட்டேன். எனவே, இன்று அதிபர் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் எப்போதும் நான் நேர்மையானவன்" என உல்ப் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் பதவியிலிருக்கும்போதே குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் அதிபர் உல்ப்தான். செருமனியில் சனாதிபதி பதவி பெரும்பாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஒரு வீட்டிற்கு ஏதோ ஒரு வகையில் வந்த பணம் தான் இவரது பதவி விலகலுக்குக் காரணமாக ஆனது. தொடர்ந்து இவரது விடுமுறைப் பயணங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் விலையுயர்ந்த உல்லாசச் செலவுகள். இப்படி கடந்த 2 மாதமாக உள்ளூர் ஊடகங்கள் இவர் ஊழல் செய்து விட்டதாக சர்ச்சையைக் கிளப்பின. அனைத்து அரசியல் கட்சிகளாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் ஏற்கக்கூடிய நபரை அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில் மெர்க்கெல் ஈடுபட்டுள்ளார். அதுவரை கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சி'யைச் சேர்ந்த ஓர்ஸ்ட் சீஹோஃபர் தற்காலிக அதிபராக பதவி வகிப்பார் எனத் தெரியவருகின்றது. இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாக உறுதி கூறிய உஸ்பெக்கித்தான் தகவல் தொடர்பு அமைச்சகப் பேச்சாளர், தற்போது அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்து வருகிறார். உருசியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உஸ்பெக் தூதரகமும் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டதாக ரியாநோவஸ்தி செய்தியாளர் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை வரை உஸ்பெக் விக்கிப்பீடியாவில் மொத்தம் 7,876 கட்டுரைகள் உள்ளன. 30-மில்லியன் மக்கள்தொகை கொண்ட உஸ்பெக்கித்தானில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது. பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் சமூகமளித்த சசிகலாவிடம், நேற்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‘வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களை முழுமையாக நிர்வகித்து வந்ததாகவும், ஜெயலலிதா செயல்படாத பங்குதாரராக மட்டுமே இருந்தார், அலுவலகப் பணிகளில் அவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை’ என்றும், வங்கிக் கணக்கைத் தான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்றும் சசிகலா கூறியுள்ளார். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா. அரபு நாடுகளான கட்டார், சவூதி அரேபியா மற்றும் எகிப்து நாடுகள் கொண்டுவந்த இந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு 193 நாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் 137 நாடுகள் ஆதரவளித்துள்ளன. சீனா, உருசியா, ஈரான், உட்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டன. இதே நேரம் சீனாவின் வெளியுறவு துணை மந்திரி சியாய் ஜுன் நேற்று முன்தினம் அவசரமாக சிரியா சென்றார். தலைநகர் டமாஸ்கசுக்கு சென்ற அவர் சிரிய வெளியுறவு மந்திரியை சந்தித்தார். இதனை அடுத்து நேற்று அதிபர் ஆசாத் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். சோமாலியாவின் பண்ட்லாந்து என்ற தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைநகர் கரோவியில் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனாலும், இக்கூட்டத்தில் முக்கிய போராளிக் குழுவால அல்-சபாப் இயக்கத்தினர் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மத்திய, மற்றும் தெற்குப் பகுதிகளையும், சோமாலிலாந்து என்ற தன்னிச்சையாக தனிநாடாகப் பிரகடனப் பகுதியும் அல்-சபாப் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்று நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில் சோமாலிய அரசுத்தலைவர் சேக் சரீப் சேக் அகமது, மற்றும் அல்-சுன்னா வால் ஜமாக்கா என்ற அரசு சார்புப் போராளிக் குழு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போதுள்ள இடைக்கால அரசின் பதவிக்காலம் இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் நிறைவடைகிறது. புதிய உடன்படிக்கையின் படி, சோமாலியா ஒரு கூட்டரசாகவும், மொகதிசு அதன் தலைநகரமாகவும் செயல்படும். நாடாளுமன்றத்திற்கு 225 பேரும், மேலவைக்கு சோமாலிய மூத்தோரைக் கொண்ட 54 பேரும் தெரிவு செய்யப்படுவர். நாடாளுமன்றத்திற்கு 30% பெண்கள் தெரிவு செய்யப்படுவர். கரோவி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் ஆப்பிரிக்க ஒன்றியம், மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எஸ்.என்.லட்சுமி பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். அண்மைக்காலத்தில் மகாந‌தி, விருமா‌ண்டி, தேவ‌ர்மக‌ன் உ‌ள்‌ளி‌ட்ட பட‌ங்க‌ளி‌ல் மூ‌த்த வேட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து இரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார். நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந்தரின் ராகினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளில் நடித்து மெருகேறியவர். த‌ற்போது தெ‌‌ன்ற‌ல் எ‌ன்ற தொலை‌க்க‌ட்‌சி தொட‌ரி‌‌ல் நடி‌த்து வ‌ந்தா‌ர் லட‌்சு‌மி. இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணுஉலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நிபுணர் குழுவை அமைத்தார். இந்தக் குழுவினர் நேற்று கூடங்குளத்தில் நேரிடையாக சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை நெல்லை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சுமார் 2 மணி நேரம் நடந்தது. ஆலோசனைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவுடனான பேச்சுவார்த்தை தொடக்கம் தான். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை நிபுணர் குழு நேரிடையாக சந்திக்க வேண்டும். போராட்டக் குழுவின் நிபுணர் குழுவையும் தமிழக நிபுணர் குழு சந்திக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு தெரிவிப்பதாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு கூறியதாகவும் கூறினார். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிக்கோவின், வடக்கு மாகாணமான மான்டெரரி பகுதியில், ஆப்போடாகா சிறையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 44 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சிறைச்சாலையில் மொத்தம் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி உண்டு. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 30 சதவீதம் அதிகமான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறைச்சாலையின் 'டி' கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்த 2 தரப்பு கைதிகள் இடையே அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட மோதலின் போது, கையில் கிடைத்த பயங்கர ஆயுதங்களால் கைதிகள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சுட்டது சிறைச்சாலை அதிகாரிகளா அல்லது கைதிகளா என்பது தெரியவில்லை. மெக்சிக்கோ சிறையில் கைதிகள் மோதிக்கொள்வது வழக்கமான ஒரு விடயமாகும். இதே போன்று கடந்த மாதமும் இச்சிறையில் கலவரம் நடந்ததுள்ளது. இந்த சிறையில் போதை மருந்து கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய் கைதிகள் உள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகின்றது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இது காலவரையில் உயிர்ப்பிக்கப்பட்ட மிகப்பழைய தாவரம் இதுவே என அவர்கள் கூறுகின்றனர். முன்னதாக 2,000 ஆண்டுகள் பழமையான பேரிச்சம்பழ விதைகள் இசுரவேலில் மசாடா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது ஆத்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆத்திரேலிய துடுப்பாட்ட அணிகளுக்கு இடையே நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் ரிக்கி பாண்டிங் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக எந்த ஒரு ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், அடுத்து வரும் போட்டிகளிலிருந்து நீக்க முடிவெடுத்தது. இது ரிக்கி பாண்டிங்குக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டார். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆத்திரேலிய அணி 2003 மற்றும் 2007ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று கோப்பையை வென்றது. ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (457 போட்டி, 18,179 ஓட்டங்கள்) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 375 ஒரு நாள் போட்டிகளில் 13,704 ஓட்டங்களையும் (30 சதம் 162 தேர்வுப் போட்டிகளில் 13, 200 ஓட்டங்களைம் (41 சதம்) எடுத்துள்ளார். இது குறித்து ஆத்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜான் இன்வராரிட்டி கூறுகையில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தயார் இல்லாத காரணத்தால் பாண்டிங் நீக்கப்பட்டார். இவர் இல்லாத நிலையில் பழைய ஆத்திரேலிய அணியை காண முடியாது. தலைசிறந்த வீரர்களை நீக்குவது விளையாட்டில் சகஜம். ஒருநாள் போட்டிகளில் பாண்டிங் மிகச் சிறந்த வீரர். இதற்கு அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளே சான்று. அணிக்கு இரு முறை உலக கோப்பை வென்று தந்துள்ளார். துடுப்பாட்டம் மட்டுமல்லாமல் களத்தடுப்பிலும் அசத்தக் கூடியவர். கடந்த போட்டியில் கிளார்க் இல்லாத நிலையில், அணியின் நலன் கருதி தலைவர் பதவியை ஏற்றார். இது இவரது சுயநலமற்ற அணுகுமுறைக்கு நல்ல உதாரணம். இவர் தேர்வுப் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறோம். ஆனாலும், இவருக்கு இடம் உறுதி என்று உத்தரவாதம் எதுவும் அளிக்க முடியாது. தனது எதிர்காலம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் விவாதித்து, இன்னும் இரண்டு அல்லது 3 தினங்களில் பத்திரிகையாளர் சந்திப்பில், தனது முடிவை அறிவிப்பார் என்றார். "ஜிஜே 1214பி என்ற இக்கோள் எமக்குத் தெரிந்த வேறு எந்தக் கோளைப் போன்றும் காணப்படவில்லை என ஆர்வார்டு சிமித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சக்கோரி பெர்ட்டா தெரிவித்தார். கிழக்கு ஆப்கானித்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் இராணுவ முகாம் ஒன்றில் இசுலாமியப் புனித நூலான அல்-குர்ஆனை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான சலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது பத்துபேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானித்தானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைக்கிடங்கில் எரிந்த நிலையில் இசுலாமியர்களின் புனித நூலான குர்ஆன் கிடந்ததை உள்ளூர்வாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆப்கானியர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராக சுலோகங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். முன்னதாக போராட்டக்காரர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தாங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குரான் உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியது. அந்தப் புத்தகங்கள் மூலம் தமக்கிடையே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் செய்திகளை பரிமாறிக் கொண்டனர் என்று அமெரிக்கர்கள் நம்பியுள்ளனர். ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளின் தலைவர் ஜெனரல் ஜான் ஆலன் கூறுகையில், குப்பைக்கிடங்கில் போட்டு எரிக்கக் கொடுத்த புத்தகங்களுக்கு நடுவே தெரியாதத்தனமாக குர்ஆன் இருந்துள்ளது. எரிக்கக் கொடுத்தவற்றில் குர்ஆன் இருந்தது தெரிய வந்ததுமே அதை தடுத்து நிறுத்திவிட்டோம். இதை யாரும் வேண்டும் என்றே செய்யவில்லை என்றார். ஆப்கானித்தானில் இசுலாமியர்களின் புனிதநூலான குர்ஆன் எரிக்கப்பட்டது ஒரு துரதிட்டமான சம்பவம் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜே. கார்னி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கான் அதிபர் அமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். சிரியாவின் ஓம்சு நகரின் பாபா அமர் பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மீது சிரிய இராணுவத்தினர் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்திய போதே இவர்கள் இறந்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பாபா அமர் என்கிற பகுதியில் இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த வீடு, அரச எதிர்ப்பாளர்களின் தற்காலிக ஊடக மையமாகச் செயற்பட்டு வந்தது. புதன்கிழமை காலை இந்தக் கட்டிடத்தின்மீது ஷெல் தாக்கியது. அதைத் தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் மேற்குலக செய்தியாளர்கள் சிரியாவுக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் அங்கே சென்றபடி இருக்கிறார்கள். பிரெஞ்சு நாட்டின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கில்லிஸ் ஜாக்குயர், சிரிய அரசு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் ஓம்சு நகருக்கு சென்றபோது கடந்தமாதம் கொல்லப்பட்டார். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டு செய்தியாளரான மேரி கால்வின் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். உலகின் மோதல் நடக்கும் பிரதேசங்களில் அவர் இதற்கு முன்னரும் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கொசோவோ, செசென்யா மற்றும் பல அரபு நாடுகளிலும் அவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். 2001 ஆம் ஆண்டு இலங்கையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர் செய்தி சேகரித்தபோது அவருக்கு ஏற்பட்ட காயத்தில் அவர் தனது ஒரு கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டுகளாக நடந்த போருக்குப்பின், கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறின. அதன் பிறகு ஈராக்கில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு சன்னி இனத்தவரான துணை ஜனாதிபதி தரிக் அல்-கஷெமி கைது செய்யப்பட்டது முதல், ஈராக்கில் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. [[இலங்கை]]க்கு எதிராக மேற்கு நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் பலத்தை காண்பிக்கும் பொருட்டும் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கூட்டத்தொடர் பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பிக்கப்படும் அதே நாளன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நாடு முழுவதிலும் இந்த மாபெரும் பேரணி ஒரே நேரத்தில் நடாத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்றுத் தெரிவித்தார். சகல அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ள இந்த மக்கள் பேரணியில் இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல தரப்பினரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன, மற்றும் அமைச்சர்களான விமல் வீரவங்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமைக்கு அமெரிக்கா இலங்கையை பழிவாங்க முயற்சிப்பதாக அமைச்சர் விமல் தெரிவித்தார். லிபியா, சூடான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நிலைக்கு இலங்கையையும் தள்ளுவது அமெரிக்காவின் நோக்கம் என அவர் கூறியுள்ளார். எதிர்வரும் 27ம் திகதி நாட்டிலுள்ள சகல பிரதான நகரங்களிலும் நடைபெறவுவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் பிபிசிக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு போராட்டங்களின் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவற்றை சர்வதேச சமூகத்துடன் அரசாங்கந்தான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார். தாம் தோண்டிய பகுதிகளின் கிட்டத்தட்ட கால்வாசிப் பகுதிகளில் இந்த வகை சிக்கிலிடேக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இப்பகுதிகளில் பெருமளவு காணப்படுவதற்கு சாத்தியம் உள்ளது என இவ்வாய்வுக்குத் தலைமை தாங்கிய தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சத்தியபாமா தாஸ் பிஜு பிபிசிக்குத் தெரிவித்தார். மனிதக் குடியிருப்புகளிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவறுதலாக நச்சுப் பாம்புகள் எனக் கருதப்பட்டு மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. ஆனால், இவை எவ்வித நஞ்சையும் கொண்டிருக்கவில்லை எனப் பேராசிரியர் பிஜு தெரிவித்தார். இந்தியாவில் புதிய நிலநீர்வாழிகளைக் கண்டுபிடிப்பதில் பேராசிரியர் பிஜு முன்னணியில் உள்ளார். இதனால் இவரை "தவளை மனிதன்" என்றும் அழைப்பர். லண்டன் ரோயல் கழக இதழில் சிக்கிலிடே குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் புள்ளி விபரங்களின் படி 2,600 இற்கும் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டில் காணாமல் போயுள்ளனர். அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை சந்தடி எதுவும் இன்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு சூன் மாதம் முதல் ஆகத்து மாதம் வரை சுமார் 2500 தமிழ் பேசும் அரச ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் நாடு உருவாக்கப்பட்டதில் இருந்து 1970கள் வரை சிறுவர்கள் தமது அடையாளம் அகற்றப்பட்டே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். 150,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் கிறித்தவத் தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் ஆசிரியர்களினால் தவறாக நடத்தப்பட்டனர். இப்பிள்லைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போது "உயிரில்லாமலேயே" வெளியேறினர் என இடைக்கால அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இப்பிள்ளைகளின் வாழ்க்கை போதைப்பொருள், மது மற்றும் வன்செயல் போன்றவற்றினால் சீரழிக்கப்பட்டது. பாடசாலைகளில் பழங்குடிடிச் சிறுவர்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தவறாக நடத்தப்பட்டிருந்தனர் என கனடிய நடுவண் அரசு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புக் கொண்டிருந்தது. தமது தாய்மொழியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர்கள் தமது தாய் தந்தையருடன் பழகுவதைக் குறைத்துக் கொண்டனர். இவர்களின் வாழ்வியல் பொருளாதார மூலங்கள் சிதைக்கப்பட்டதால் இவர்கள் கனேடிய அரசைத் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். உண்மை மற்றும் நல்லினக்க ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் இறுதி அறிக்கை 2012 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும். அண்டார்க்டிக் தீபகற்பத்தின் உச்சிக்கு அருகில் கிங் ஜார்ஜ் தீவில் உள்ள கொமந்தாண்ட் பெரசு தளத்தில் இயந்திர அறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தே இந்த வெடிப்புக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆய்வு நிலையம் முழுவதும் தீயில் சேதமடைந்து விட்டதாகவும், தீ இன்னமும் அணைக்கப்படவில்லை என்றும் பிரேசில் கடற்படை தெரிவித்துள்ளது. 44 பேர் அருகில் உள்ள சிலி நாட்டு ஆய்வு நிலையத்துக்கு வெளியேற்றப்பட்டனர். கரையோர மற்றும் கடற்பகுதியில் சூழ்மண்டலத்தை இந்த ஆய்வு நிலையத்தில் உள்ள அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். நேற்று சனிக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு கிட்டத்தட்ட 60 பேர் தங்கியிருந்தனர். தீயை அணைப்பதற்கு முயன்ற இரண்டு பாதுகாப்புப் படையினர் காணாமல் போயினர். இவர்களின் இறந்த உடல்கள் பின்னர் மீட்கப்பட்டன. காயமடைந்த இராணுவத்தினர் ஒருவர் போலந்து நாட்டின் ஆர்க்தோவ்ஸ்க்கி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மங்கோலியாவின் எல்லைக்கருகே சைபீரியாவின் தூவா குடியரசின் தலைநகர் கிசீல் இல் இருந்து 107 கிமீ கிழக்கே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக உருசியாவின் அவசரகாலத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மாலை 15:19 முதல் 15:24 வரை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. மாடிக் கட்டடங்களில் குடியிருந்தவர்கள் தமது பொருட்கள் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனாலும் பெரிய அலவில் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இப்பகுதியில் மேலும் பல நிலநடுக்கங்கள் உருவாகும் என உருசிய அறிவியல் கழகத்தின் சைபீரியக் கிளைத் தலைவர் விக்டர் செலெசினியோவ் எச்சரித்துள்ளார். அடுத்ததாக பைக்கால் ஏரியை அண்டிய பகுதியில் இடம்பெறலாம் என அவர் எதிர்வு கூறியுள்ளார். ஆத்திரேலியாவில் நடைபெறும் இந்தியா, ஆத்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் பொதுநலவாய முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆத்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியதால் இந்தியா இறுதிப்போட்டி வாய்ப்பினை அனேகமாக இழந்துள்ள அதே நேரத்தில் ஆத்திரேலிய அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மொத்தம் 12 முதன்மைப் போட்டிகளைக் கொண்ட முத்தரப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் ஆரம்பத்தில் பின்தங்கி இருந்த இலங்கை திடீர் எழுச்சி அடைந்து 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் ஆத்திரேலியா வெற்றி பெற்றதால் 19 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. பட்டியலில் 10 புள்ளிகளுடன் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. இத்தொடரில் லீக் போட்டிகளில் இலங்கைக்கு மேலும் இரண்டு போட்டிகள் உள்ளன. அவுத்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியிலும் இலங்கை ஆடவுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவாக வேண்டுமெனில் நாளைய 11வது போட்டியில் இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றியை ஊக்குவிப்புப் புள்ளியுடன் பெற வேண்டும். ஊக்குவிப்பாக ஒரு புள்ளியைப் பெற தவறினால், இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைக்காது. அதே நேரம் இலங்கை அணி, ஆத்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் (மார்ச் 2) தோல்வி அடையும் பட்சத்தில், அதேவேளையில், இந்தியா ஓட்டவிகிதத்தில் முன்னிலை பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதி வாய்ப்புக் கிடைக்கலாம். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் காட்சி உருசியத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. பூட்டின் மீதான தாக்குதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் தேர்தலில் பூட்டின் வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவரில் ஒருவர் இலியா பியான்சின் என்பவர், தான் பூட்டினைக் கொல்வதற்கு செச்சினிய போராளிக்குழுத் தலைவர் டோக்கு உமாரொவ் என்பவரினாலும், ஒடேசாவில் கடந்த மாதம் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்ட ருஸ்லான் மதாயெவ் என்பவரினாலும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தொலைக்காட்சியில் தோன்றித் தெரிவித்தார். ஆடம் ஒஸ்மாயெவ் என்ற இரண்டாமவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து உலகில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர். விளாதிமிர் பூட்டின் நாள்தோறும் நடமாடும் மாஸ்கோவில் உள்ள குத்துசோவ்ஸ்க்கி வீதியில் குண்டு வெடிப்பை நடத்துவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஒடேசாவில் குண்டுவெடிப்பு நடந்த வீடு ஒன்றில் வைத்து பியான்சின் கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் கொல்லப்பட்ட மதாயெவ் என்பவரும் தோக்கு உமாரொவின் கட்டலை ஒன்றிற்கு இணங்க ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துருக்கி வழியாக உக்ரைன் வந்தடைந்ததாக பியான்சின் தெரிவித்தார். ஒஸ்மாயெவ் என்ற இரண்டாமவர் நீண்ட காலம் இலண்டனில் வசித்தவர் என்றும் கூறப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை உருசியாவின் அரசுத்தலைவராக இரு தடவைகள் இருந்த பூட்டின் மூன்றாவது தடவையாக மார்ச் 4 ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த குல் முகமது என்பவர் மிகக் குள்ளமான மனிதர் என்ற பட்டம் பெற்று இருந்தார். இவரது உயரம் 57 சமீ. தனது கின்னசு சாதனை பற்றி டான்ஜி கூறும்போது இப்பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதுவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மிக குள்ளமானவர்களிலேயே டாங்கிக்கு தான் அதிக வயthaakum. வெளிநாடுகளுக்கு செல்லவும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க விரும்புவதாகவும் டான்ஜி தெரிவித்துள்ளார். இதன் பின்னர் நியண்டர்தால்களின் சிறிய கூட்டம் ஒன்று ஐரோப்பாவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் குடியேறி 10,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கின்றனர். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று மூலக்கூற்று உயிரியல் மற்றும் கூர்ப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 13 நியண்டர்தால்களின் எலும்புகளில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மூலம் சுவீடன் மற்றும் எசுப்பானிய ஆய்வாளர்கள் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பா, மற்றும் ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 முதல் 35,000 ஆண்டுகள் காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் எச்சங்களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 48,000 ஆண்டுகள் பழமையான எச்சங்களில் ஆசிய எச்சங்கலும் பார்க்க குறிப்பிடத்தக்க அளவு பிறப்புரிமை வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால், 48,000 ஆண்டுகளிலும் குறைந்த வயது எச்சங்களில் இந்த வேறுபாடு குறைந்து காணப்பட்டது. காலநிலை மாற்றம் போன்ற இயற்கைக் காரணிகளால் மேற்கு ஐரோப்பாவில் இருந்த நியண்டர்தால்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். வெப்பமான தெற்குப் பகுதியில் இவர்களின் அழிவு பின்னர் ஏற்பட்டிருக்கலாம். தெற்கு எசுப்பானியாவில் நெர்ச்சா என்ற இடத்தில் உள்ள குகைகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் சில 42,000 ஆண்டுகள் பழமையானது என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இவை நியண்டர்தால்களினால் உருவாக்கப்பட்டவை எனக் கூறப்பட்டாலும் இக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு 2012 நேற்று இலங்கை]]த் தலைநகர் கொழும்பில் உள்ள கலதாரி விடுதியில் ஆரம்பமானது. இன்றும் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். செயற்பாட்டுத் திறன் தொடர்பாக தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டிணைப்பை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில் அம்மாநாடு நடைபெறுகின்றது. இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், அவுத்திரேலியா, பிரான்சு, இந்தோனேசியா, கென்யா, குவைத்து, ஓமான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்ற இந்த மாநாட்டின் போது கடற்படை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி பட்டறையும் இடம்பெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு நிதியுதவி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட செருமானியர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதே வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதா என்பதை ஆய்ந்தறிய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையினை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க் கிழமை சமர்ப்பித்தது. குழுவினர் அறிக்கை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. பழுப்பு நிறக் கண்கள், ஓ ரக குருதி அமைப்பைக் கொண்டிருந்த இந்த மனிதன், சர்க்கரைக்கு ஒவ்வாதவனாகவும், இதய நோய்க்கு உட்பட்டவனாகவும் இருந்திருக்கிறான். "நாம் இந்த பனிமனிதன் பற்றிக் கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறோம். அவன் எங்கே வாழ்ந்தான், எவ்வாறு இறந்தான் போன்ற விபரங்களை நாம் ஏற்கனவே கண்டுபிடித்திருக்கிறோம் ஆனாலும் அவனது மரபணுக்கள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்து வந்தோம் என இத்தாலி, பொல்சானோவில் உள்ள மம்மிகளுக்கான யூராக் ஆய்வுக் கழக்த்தைச் சேர்ந்த ஆல்பர்ட் சிங்க் கூறுகிறார். வேளாண்மை பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போது ஏட்சியின் மூதாதையர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்திருக்கலாம் என அவர் கூறுகிறார். மேலும் இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் டவ் நிறுவனத்தை விளம்பரதாரராகச் சேர்க்க கூடாது என வலியுறுத்தி பன்னாட்டு ஒலிம்பிக் சங்கத்திற்குக் கடிதம் அனுப்பியிருந்தது. பன்னாட்டு ஒலிம்பிக் சங்கம் இந்நிறுவனத்தை விளம்பரதாரர் ஒப்பந்தத்திலிருந்து நீக்க இயலாது என கூறிவிட்டது. இந்நிலையில், டெள விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்க மாட்டோம். அவ்வாறு செய்தால் போட்டிக்காக தயாராகி வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய சோகமான நிகழ்வாகிவிடும் என்று ஐஓஏ பொதுச் செயலர் ரந்திர் சிங் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டெü கெமிக்கல் நிறுவனத்தை ஒலிம்பிக் போட்டியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்தியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. டெü நிறுவனத்தை நீக்காதபட்சத்தில் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் "போட்டியை புறக்கணித்தால் அது போட்டிக்காக தயாராகிவரும் வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முன்னணி வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் தகுதிபெற்றுவிட்டது. அதனால் அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலர் ரந்திர் சிங் தெரிவித்தார். இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அமெரிக்கா வாழ் தமிழர்கள் இந்த வழக்கினை தொடுத்திருந்தனர். "நாட்டின் தலைவர் என்னும் சிறப்புரிமையின்படி அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு சட்டவிலக்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அலுவலகம் அறிவித்துள்ளது என தனது தீர்ப்பில் அமெரிக்க மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர்-கொட்டெல்லி கூறினார். இருந்தபோதிலும், இதனை நாம் மிக இலகுவாக எடுக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, மனித உரிமைகள் அங்கு மீறப்பட்டமை அதிர்ச்சியைத் தருகிறது என்றார். மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இறுதிக்கட்டத்திலேயே இடம்பெற்றது. வாசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. "இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் உள்ள சட்டமூலங்கள் காரணமாக இவ்வழக்கை இப்போது மேலே கொண்டு செல்லமுடியாதுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். முன்னாள் இராணுவத் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று இதே காரணங்களினால் சென்ற மாதம் அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இவர் தற்போது ஐநாவுக்கான இலங்கையின் உதவித் தூதுவராகப் பணியாற்றுகிறார். இலங்கை அரசுத்தலைவர் ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை சூன் 19, 2011 இலங்கை அதிபர் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் சனவரி 30, 2011 வட கொரியா தனது யுரேனிய செறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்துடன் சேர்த்து அணுசக்தி மற்றும் நீண்ட-தூர ஏவுகணைகளுக்கான சோதனைத் திட்டத்தையும் நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதை அமெரிக்கா, மற்றும் உலக நாடுகள் வரவேற்றுள்ளன. கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிரதேசமாக்குவதற்கு இது ஒரு முக்கிய படிக்கல்லாக இருக்கும் என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜெய் கார்னி தெரிவித்திருக்கிறார். சீனாவும் உருசியாவும் இதனை வரவேற்றுள்ளன. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை என சப்பான் கூறியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் வட கொரிய அதிகாரிகளுக்கும் இடையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் தனது யுரேனிய செறிவூட்டல் திட்டத்தைக் கைவிடும் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்கு ஐநா சோதனையாளர்களை அனுமதிக்கவும் வடகொரியா இணங்கியிருக்கிறது. வடகொரியாவுக்கு 240,000 தொன் உணவு உதவியை வழங்குவதற்கு அமெரிக்க உறுதியளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மேலும் தொடரும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது. வடகொரியாவில் 1990களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதன் பிற்பாடு அங்கு பெரும் உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா வடகொரியாவிற்கு உணவு அனுப்புவதை நிறுத்தியுள்ளது. புதிய திட்டத்தின் படி அமெரிக்கா சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையே அனுப்பவுள்ளது. இவருக்கு எதிரான 20 மனித உரிமை மீறல் குற்றங்களும், 21 போர்க்குற்றங்களும் இவரை கைது செய்தவதற்குப் போதியவையாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகத்து 2003 முதல் மார்ச் 20004 வரை சூடானின் தார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு திரு. உசைனே முக்கிய பங்காற்றியவர் என பன்னாட்டு நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் பூயிசு மொரேனோ-ஒக்காம்போ கூறியுள்ளார். தார்பூரின் கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளை முக்கியமாக அரபு ஜஞ்சாவீது என்ற துணை இராணுவக் குழுவே முன்னின்று நடத்தியிருந்தது. சூடானிய இராணுவம் கறுப்பினத்தவரின் கிராமம் ஒன்றை சுற்றி வளைக்கும் போது, போர் வானூர்திகளின் துணையுடன், பாதுகாப்புப் படையினரு துணை இராணுவத்தினரும் கிராமத்தினுள் நுழைந்து மக்களைப் படுகொலை செய்தும், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும் வந்தனர். இவ்வாறான போர்க்குற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்ததாக பன்னாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. இக்கால கட்டத்தில் உசைன் சூடானின் உட்துறை அமைச்சராகவும், சூடானிய அரசின் தார்புர் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். தார்பூரில் 2003 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்து 300,000 பேர் வரையில் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. ஆனாலும் சூடானிய அரசு 12,000 பேர் வரையிலேயே இறந்துள்ளதாகக் கூறி வருகிறது. மொத்தம் 12 முதன்மைப் போட்டிகளைக் கொண்ட முத்தரப்பு தொடரின் 12 வது போட்டி நேற்று மெல்பேர்ண் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா 4 முறை முதன்மை ஆட்டங்களில் மோதின. ஆத்திரேலியா 7 போட்டிகளில் 19 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்திருந்த நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளியுடன் சமநிலையில் இருந்தன. இலங்கை அணி தனது கடைசி முதன்மை ஆட்டத்தில் ஆத்திரேலியாவை வீழ்த்தினால் அல்லது சமப்படுத்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் நேற்று களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 238 ஓட்டங்களைப் பெற்றது. சங்கக்கார 64 ஓட்டங்களும், சந்திமால் 75 ஓட்டங்களும் பெற்றனர். இலங்கை அணி 9 ஓட்ட வித்தியாசத்தில் வென்று 19 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆத்திரேலியா தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் இலங்கையிடம் தோற்றுள்ளது. ஆத்திரேலியாவின் தயவில் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பு கிடைக்குமா என ஆவலுடன் காத்திருந்த இந்திய அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது. ஆத்திரேலியா, இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட இறுதிப் போட்டியில் மோதுகின்றன. முதல் போட்டி பிரிஸ்பேனில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் பெப்ரவரி 27, 2012 அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களான அலபாமா, ஜியார்ஜியா, கென்டக்கி, இன்டியானா, ஒகையோ ஆகியவற்றில் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 90 சூறாவளிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சூறாவளிகள் தாக்குவது அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனாலும், இக்காலப்பகுதியில் இவ்வாறான கடுமையான சூறாவளி நிகழ்வது அபூர்வம் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக மார்ச்சு முதல் மே மாதம் வரை தென் பகுதியில் அதிகமாகவும், அதன் பின்னர் வடக்கே சூறாவளிகள் வீசும். கடந்த ஆண்டு மட்டும் 500 பேர் வரையில் சூறாவளியின் தாக்கத்தினால் கொல்லப்பட்டனர். கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் முன்னோடிக் கருவி ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இக்கருவி மூலம் பயன்படுத்தப்படும் கழிவு நீரை தூய நீராக்கவும் முடியும். கழிவு நீரை நன்னீராக்கவும், வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் வளரும் நாடுகளில் இம்முறையைப் பயன்படுத்த முடியும் என அவர்கள் கூறுகின்றனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று சயன்ஸ் அறிவியலிதழில் வெளிவந்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆறுகளில் இருந்து நன்னீர் கடலின் உப்புத் தண்ணீருடன் கலக்கும் கரையோரப் பகுதிகள் சிலவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேர்மாறான மின்வழிக் கூழ்மைப் பிரிகை (RED) மூலம் நன்னீரும், கடல் நீரும் சவ்வுகள் இடையில் வைக்கப்பட்டு பிரிக்கப்பட்டு மின்வேதியியல் மின்னேற்றம் பெறப்படுகிறது. இதே தொழிநுட்பத்தைப் நோர்வே நாட்டு நிறுவனம் ஒன்றும் பயன்படுத்தி வருகிறது. இம்முறையில் பெருமளவு சவ்வுகள் (membranes) பயன்படுத்தப்பட வேண்டி உள்ளதாகவும், அத்துடன் மின்னுற்பத்தி நிலையங்களை கடலை ஒட்டியே நிறுவ வேண்டியுள்ளதாகவும் பென்சில்வேனிய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இத்தொழில்நுட்பத்துடன் நுண்ணுயிரி எரிபொருள் கலங்கள் (MFCகள்) பயன்படுத்தப்படின், சவ்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் மின்னுற்பத்தி பெருமளவில் கிடைக்கும் என்றும் கழிவு நீர் போன்ற கரிமப் பொருட்கள் நுண்ணுயிரி எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். உப்பு நீருக்குப் பதிலாக இத்தொழில்நுட்பத்தில் அமோனியம் இருகார்பனேட்டுக் கரைசல் பயன்படுத்தப்பட முடியும். இதனால் நாட்டின் எந்த இடத்திலும் இதனை நிறுவ முடியும். அமோனியம் இருகார்பனேட்டுக் கரைசல் உள்ளூர்த் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு வெப்பம் மூலம் தொடர்ச்சியாக மறுசுழற்சி முறை மூலம் பயன்படுத்தப்பட முடியும். தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க் கட்சிகள் முறையிட்டுள்ளன. பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளித்துள்ளனர் என அவர்கள் கூறுகின்றனர். இன்று திங்கட்கிழமை மாஸ்கோவின் மத்திய பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதே வேளையில் பூட்டினின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கிரெம்ளினுக்கு முன்னே கூடி தமது தலைவரின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், நேற்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கை அணியை 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் ஆத்திரேலியா அணி 1-0 என முன்னிலைபெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆத்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. ஆரம்ப வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மத்தியூ வாட் ஆகியோர் 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆத்திரேலிய அணி சார்பில் அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் 157 பந்துகளுக்கு முகம் கொடுத்து 13 எல்லைகளும், 2 சிக்சர்களும் அடங்கலாக 163 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். ஆத்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் டேவிட் அசி 4 விக்கெட்களையும், பிரெட் லீ 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஷேன் வாட்சன் இலங்கை அணியின் இறுதி 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட முத்தரப்புத்தொடரில் முதல் இறுதிப் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் ஆத்திரேலியா முன்னிலை பெற்றுள்ளதனால் நாளை செவ்வாய்க்கிழமை அடிலெயிட் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அணி உள்ளது. ஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி மார்ச் 3, 2012 முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் பெப்ரவரி 27, 2012 தில்லியிலோ அல்லது பகதுர்காவிலோ பொருட்சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல முறிவுப் பாதைகளுக்குக் கிட்டவாக தில்லி நகரம் அமைந்திருக்கிறது. அண்மையில் இங்கு நிலநடுக்கத்தை எதிர்நோக்க மக்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டர்ம்பர் மாதத்தில் இருந்து தில்லியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது மூன்றாவது தடவை ஆகும். 20 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் பீகாரின் தலைநகர் பட்னாவில் இருந்து 25 கிமீ தூரத்தில் கங்கைக் கரையில் நேற்று இடம்பெற்றது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரின் வைசாலி மாவட்டத்தில் 40 ஏக்கர் காணியில் இது அமைக்கப்படவுள்ளது. யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக வகைப்படுத்தப்பட்டுள்ள அங்கூர் வாட் 12ம் நூற்றாண்டில் இந்துக் கோயிலாக சூரியவர்மனால் கட்டப்பட்டது. ஆனால் அது இப்போது ஒரு பௌத்த வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. "கம்போடியக் கோயிலை விட இக்கோயில் உயரமானதாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும் என இந்து அறக்கட்டளையின் செயலர் கிசோர் குணால் ஆச்சாரியார் தெரிவித்தார் வீராட் அங்கூர் வாட் ராமர் கோயில் என இக்கோயில் அழைக்கப்படும். இங்கு இராமர் மட்டுமல்லாமல், சிவன், பார்வதி, விநாயகர், கிருட்டிணன், விஷ்ணுவின் 10 அவதாரங்கள் ஆகியோருக்கும் கோயில்கள் அமைக்கப்படும் என அவர் கூறினார். இராமர் தமது பயணத்தின் போது இந்த இடத்தைத் தரிசித்ததாகவும், வைசாலி இராச்சியத்தின் அரசன் சுமதியினால் அவர் வரவேற்கப்பட்டதாகவும் திரு. குனால் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்ற இரண்டாம் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆத்திரேலிய அணியை 8 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. முதலாவது இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கையை 15 ஓட்டங்களால வென்றது. தெற்கு ஆத்திரேலியத் தலைநகர் அடிலெய்டில் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆத்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வார்னர் 100 ஓட்டங்களும், அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் 117 ஓட்டங்களும் பெற்றிருந்தனர். மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி மார்ச் 5, 2012 ஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி மார்ச் 3, 2012 முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் பெப்ரவரி 27, 2012 இந்நகரில் உள்ள முக்கிய விளையாட்டு மைதானம் ஒன்றை உள்ளூர் அதிகாரிகள் மூடியுள்ளனர். சிவப்பு பறக்கும் நரி என அழைக்கப்படும் இந்தப் பழ வௌவால்கள் கடந்த மாதம் இந்நகரை நோக்கிப் படையெடுத்தன. கடந்த சில நாட்களாக இவற்றின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையானவை அங்கு காணப்படுகின்றன. காலநிலை மாற்றங்களினாலும், வாழ்விடங்கள் அழிக்கப்படுவதனாலும், இவை இங்கு வந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "பழவகைகளும், பூக்களும் இந்நகரில் ஆண்டு தோறும் நிறைய விளைகின்றன. எனவே இவற்றைத் தேடியே இவை இங்கு வருகின்றன என ஜோன் பர்க் என்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வௌவால்களால் தாக்கப்பட்டவர்கள் அரிதாக உயிரிழக்கக்கூடும். ஆனாலும், இந்நோயிற்கு எதிராகத் தடுப்பூசிகள் உள்ளன. இந்தப் பறக்கும் நரிகள் பத்தாண்டுகளுக்கு ஓரிரு தடவைகளே இவ்வாறு பெருமளவில் இந்நகரை நோக்கிப் படையெடுக்கின்றன என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். சைரெனைக்கா என அழைக்கப்படும் இப்பிராந்தியம் லிபியாவின் முன்னைய அரசால் பல்லாண்டு காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், இக்கோரிக்கையை அடுத்து தலைநகர் திரிப்பொலியில் லிபிய தேசிய இடைக்கால அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அரபு நாடுகள் நாட்டில் பிரிவினையைக் கிளறி பிரச்சினைகளை உருவாக்குவதாக இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் குற்றம் சாட்டியுள்ளார். சுயாட்சி கோருபவர்கள் அப்பிராந்தியத்தில் பெரும்பான்மையைப் பிரதிபலிக்கவில்லை என இடைக்கால அரசின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், பெங்காசி நகரில் பெரும்பான்மை மக்கள் சுயாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தமக்கு தனியே ஒரு நாடாளுமன்றம், காவல்துறை அதிகாரம், நீதிமன்றம், தலைநகர் பெங்காசி போன்றவற்றை அவர்கள் கோரினர். வெளியுறவுத்துறை திரிப்பொலியில் இருக்கலாம் என அவர்கள் கூறினர். கடாபியின் ஆட்சியில் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டிருந்த அகமது அல்-சுபைர் என்பவர் ஆளும் கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பிராந்திய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், அதே நேரம் லிபியாவைத் துண்டாட நாம் அனுமதியோம், அது ஒரு நாடாகவே இருக்கும் என அகமது அல்-சுபைர் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். வரலாற்றின் படி, லிபியா மூன்று பிராந்தியங்களாகப் பிரிந்திருந்தன. சைரெனைக்கா அவற்றில் ஒன்றாகும். ஏனையவை வடமேற்கே திரிப்பொலித்தானியா, மற்றும் தென் மேற்கே ஃபெசான் ஆகியவையாகும். மத்தியக் கரையோர நகரமான சேர் முதல் கிழக்கே லிபிய-எகிப்திய எல்லை வரையில் சைரெனைக்கா நீண்டிருப்பதாக அவதன் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது நாட்டின் எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பகுதியாகும். 1951 இல் லிபியா விடுதலை அடைந்த பின்னர் இந்த மூன்று மாநிலங்களும் நடுவண் அரசின் கீழ் தனித்தனி மாநிலங்களாக நிருவகிக்கப்பட்டன. 1963 இல் இவை மூன்றும் ஒன்றாக்கப்பட்டன. சைரெனைக்காவின் மக்கள் பார்க்கா என அழைக்கப்படுகின்றனர். உத்திரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை சமாஜ்வாதி கட்சி 224 தொகுதிகளில் வென்றது. உத்திராகண்டத்தின் 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை, காங்கிரசு 32 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் வென்றுள்ளதால் ஆட்சி அமைப்பதில் இழுப்பறி ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் 117 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகள் தேவை, அகாலி தளம் 56 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரசு 46 தொகுதிகளில் வென்றுள்ளது. மணிப்பூரின் 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை, காங்கிரசு 42 தொகுதிகளில் வென்றது. கோவாவின் 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை, பாஜக 21 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றன. ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுத்துள்ளது. இவ்வரைபின் நகல்களை 47 உறுப்பு நாடுகளுக்கும் அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த வரைபு தொடர்பாக ஒரு உப மாநாட்டை இன்று வியாழக்கிழமை நடத்துவதற்கும் அமெரிக்கா ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புடைமையையும் ஊக்குவித்தல் எனும் தலைப்பிலான இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் அது கண்டறிந்தவை, சிபாரிசுகள் என்பவற்றை கருத்திற்கொள்வதுடன் இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு அதன் சாதகமான பங்களிப்பையும் ஏற்றுக்கொள்கிறது. நீதிக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல்போகச் செய்தல், வடக்கு இராணுவ மயமாதலை நீக்கல், பாரபட்சமற்ற காணி பிணக்கு தீர்மான பொறிமுறைகளை அமுல்படுதுதல், தடுத்துவைப்பு கொள்கையை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் நிறுவனங்களை வலிமைப்படுத்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்தல் உள்ளடங்கிய அரசியல் தீர்வை அடைதல், அனைவருக்குமான கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சிக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் உட்பட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை ஆக்கபூர்வமான சிபாரிசுகளை வரவேற்ற்றுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது சர்வதேச சட்டங்களின் மீறல்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளை போதுமானளவு ஆராயவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கோருவதுடன் தொடர்புடைய சட்டக் கடப்பாடுகளை நிறைவேற்ற தேவையான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை, மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான, சுயாதீன நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உறுதி பூணுமாறும் கோருகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கும் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச சட்ட மீறல்களை ஆராயவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை விபரிக்கும் முழுமையான செயற்திட்டமொன்றை இயன்றவரை விரைவாக சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகிறது. ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்ற மூன்றாவது இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கை அணியை 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் 2-1 என வெற்றியைப் பெற்ற ஆத்திரேலியா அணி கோப்பையை வென்றது. இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது அணியான இந்தியா ஆரம்பம் முதலே தோல்விகளை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி மார்ச் 6, 2012 ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி மார்ச் 5, 2012 ஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி மார்ச் 3, 2012 முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் பெப்ரவரி 27, 2012 சப்பானின் ஒக்காய்டோ தீவின் வடக்கேயுள்ள நான்கு தீவுகளை இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் படையினர் சப்பானிடம் இருந்து ஆக்கிரமித்திருந்தன. உருசியா இத்தீவுகளை தெற்கு கூரில் தீவுகள் என அழைக்கிறது. சப்பான் இவற்றை வடக்குப் பிராந்தியம் என அழைக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் முடிந்து விட்டதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு இத்தீவுகள் குறித்த பிரச்சினை ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. நேற்று வியாழக்கிழமை சப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் யொசிகிடோ நோடா சர்ச்சைக்குரிய நான்கு தீவுகளும் முழுமையாகத் தமக்கு திருப்பித் தரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இத்தீவுகளின் சில பகுதிகளை மட்டும் சப்பானுக்குத் திருப்பித் தருவதாக உருசியா கூறிவருகிறது. 2010 ஆம் ஆண்டு நவம்பரில் உருசிய அரசுத்தலைவர் திமீத்ரி மெட்வெடெவ் கூரில் தீவுகளுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டதில் இருந்து சப்பானுக்கும் உருசியாவுக்கும் இடையே கடும் முறுகல் நிலை இருந்து வருகிறது. உருசியத் தலைவர் ஒருவர் கூரில் தீவுகளுக்கு சென்றது அதுவே முதல் தடவையாகும். கூரில் தீவுகளில் உருசிய இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கும் என மெத்வெதெவ் அறிவித்திருந்தார். பாரதி பிரகாஷ் புது தில்லி சவகர் லால் நேரு பல்கலைக் கழக இந்திய மொழித் துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அமெரிக்காவின் புலப்படாத சிறுவர்கள் என்ற அமைப்பு ஜோசப் கோனியின் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவத்தினர் (எல்.ஆர்.ஏ) சிறுவர்களைப் படை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதை வெளிப்படுத்து அரை மணி நேர காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இக்காணொளி யூடியூப் மூலம் இதுவரை 20 மில்லியன்கள் வரையில் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்தப் பரப்புரையின் உள்ளடக்கமும், நம்பகத்தன்மையும் விமரிசகர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. புலப்படாத சிறுவர்கள் (Invisible Children) என்ற அமைப்பு தாம் சேகரித்த நிதியை திரைப்படம் தயாரிக்கவும், வெளிநாட்டுப் பயணத்திற்கும், பணியாளர்களின் சம்பளத்திற்கும் செலவழித்து வருகின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உகாண்டாவின் உள்ளூர் ஊடகவியலாளர்களும், ஆர்வலர்களும் இந்தப் பரப்புரையை ஆதிரித்துள்ள போதும், களத்தின் உண்மை நிலையை இப்பரப்புரை எடுத்துக் கூறப்படவில்லை என விமரிசகர்கள் கருதுகின்றனர். ஜோசப் கோனியும் அவரது சகாக்களும் ஐசிசி எனப்படும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினால் 2005 ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வருபவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜோசப் கோனியின் எல்.ஆர்.ஏ அமைப்பு 1987 ஆம் ஆண்டில் அச்சோலி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் அவர்களுக்குத் தனிநாடு அமைக்கவும் தீவிரவாத அமைப்பாகத் தோற்றம் பெற்றது. இவ்வமைப்பு தற்போது அயல் நாடுகளிலேயே தீவிரமாக இயங்கி வருகிறது. சொகைர் அல்-காய்சி என்பவர் இசுரேலின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும், அதனாலேயே அவர் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்திருக்கிறது. பல ராக்கெட் தாக்குதல்கள் இசுரேல் நோக்கி நடத்தப்பட்டதாகவும் அந்நாட்டு கூறியுள்ளது. இசுலாமிய ஜிகாட் குழு தமது போராளிகளில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர் என இசுரேலியப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த பல மாதங்களுக்குப் பின்னர் காசாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இசுரேலியர்களின் தாக்குதலுக்கு தாம் பதிலடி கொடுப்போம் என பிஆர்சி என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இத்தொடரில் இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. தொடரின் முதல் போட்டியில் பாக்கித்தான், வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. ஒவ்வோர் அணியும் பிற அணிகளுடன் ஒருமுறை மோதும். இதில் அதிக வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மார்ச் 22-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய, இலங்கை அணிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 5 முறையும், இலங்கை அணி 4 முறையும், பாக்கித்தான் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன. 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. மேற்படி தொடரில் அனைத்துப் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறும். சோமாலியாவின் மத்திய பகுதியில் கெடோ பிரதேசத்தில் யூர்க்குட் கிராமம் அருகே உள்ள முகாம் மீது இரு முனைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 73 படையினர் கொல்லப்பட்டதாக அல்-சபாப் போராளிகள் அறிவித்துள்ளனர். பதிலுக்கு 48 போராளிகள் கொல்லப்பட்டனர் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது. எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற சரியான விபரம் அறியப்படவில்லை. 3 மணி நேரம் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியப் படையினர் சோமாலியாவில் நுழைந்ததன் பின்னர் அவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவெனக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் பைடோவா, மற்றும் பெலெடுவைன் பகுதிகளில் இருந்து எத்தியோப்பியப் படையினர் விலக்கிக்கொள்ளப்படுவர் என ஆப்பிரிக்க ஒன்றியம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் படையினரின் எண்ணிக்கையை 17,000 ஆக அதிகரிப்பதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அண்மையில் வாக்களித்திருந்தது. ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படைகளில் கென்யாவும் அடுத்த வாரம் இணைந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடல்களைப் பரிசோதனை செய்த தேசிய மானிடவியல் கழகம் இவை கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கூறியிருக்கிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மட்கலங்கள் மூலம் இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்க முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். ஆரம்பத்தில் இந்த உடல்கள் குவாத்தமாலாவில் 1960-1996 காலத்தில் இடம்பெற்ர உள்நாட்டுக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என நம்பப்பட்டது. ஆரம்பக் கட்ட ஆய்வுகள் இவ்வுடல்கள் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனக் கூறின. ஆனாலும், தடயவியல் சான்றுகளின் படி, இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உடல்களின் பால், வயது, மற்றும் சமூகம் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கு அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். 1982-1990 காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான எதிர்த்தரப்பு மக்களைக் கொலை செய்யவும், சித்திரவதை செய்யவும் உத்தரவிட்டதாக 69 வயதாகும் திரு. ஆப்ரே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் பினோச்சே என வர்ணிக்கப்படும் இவர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். 1990 ஆம் ஆண்டில் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டது முதல் இவர் செனெகல் நாட்டில் வாழ்ந்து வருகிறார். 2005 ஆம் ஆண்டில் கைது செய்யப்படாலும், அவருக்கு இதுவரையில் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. பெல்ஜியம் அவரை நாடு கடத்த நான்கு தடவைகள் கோரியிருந்தது, ஆனாலும் செனெகல் அவரை நாடு கடத்த மறுத்து வந்துள்ளது. இதனை அடுத்தே பெல்ஜியம் தற்போது ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் சாட் அரசைக் கவிழ்ப்பதற்குத் திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டி ஹாப்ரேக்கு சாட் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அவரது எட்டாண்டு கால ஆட்சியில் 40,000 பேரின் இறப்பிற்கு இவர் காரணமாக இருந்தார் என 1992 ஆம் ஆண்டில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஹாப்ரே மீது வழக்குத் தொடுக்க வேண்டும் அல்லது அவரை விசாரணை செய்வதற்காக வேறு நாடொன்றுக்கு நாடு கடத்த வேண்டும் என செனெகல் அரசை ஆப்பிரிக்க ஒன்றியம் கடந்த ஆண்டு கேட்டிருந்தது. 55 வயதான பெத்ரோ பிமாண்டெல் ரியோசு என்பவர் கடந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தார். 1982 ஆம் ஆண்டில் டொஸ் எரெசு என்ற கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்காக தண்டனை பெற்ற ஐந்தாவது முன்னாள் இராணுவ வீரர் இவராவார். 36-ஆண்டுகால குவாத்தமாலாவின் இனப்போரில் டொஸ் எரெசு கிராமப் படுகொலைகளே மிகவும் உக்கிரமானதெனக் கருதப்படுகிறது. இடதுசாரி போராளிகளுக்கு ஆதரவு வழங்கியதற்காக கைபிலெசு என்ற குவாத்தமாலாவின் இராணுவப் பிரிவு இந்தக் கிராமத்தைத் தாக்கி மக்களைப் படுகொலை செய்தனர். மூன்று நாட்களாக இடம்பெற்ற தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ரியோசுக்கு ஒவ்வொரு படுகொலைக்கும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனித உரிமை மீறல்களுக்காக 30 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிமாண்டெல் ரியோசு கலிபோர்னியாவில் பல ஆண்டு காலம் வாழ்ந்த நிலையில் 2010 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 1996 இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போது கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழந்துள்ளனர். 1974 ஆம் ஆண்டில் இவர் குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1970களின் இறுதியில் வெளியிடப்பட்ட ரோலண்ட் மற்றும் அவரது குழுவினரினதும் ஆய்வு முடிவுகளை அடுத்து இந்த குளோரோபுளோரோகார்பன்கள் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அண்டார்க்டிக்கா மீதுள்ள ஓசோன் படலத்தில் பல துளைகள் காணப்படுவது வேதியியல் பொருட்களினால் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாடு ஓசோன் தேய்வு பொருட்களான குளோரோபுளோரோகார்பன்களை போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது. 1985 ஆம் ஆண்டளவில் குளோரோபுளோரோகார்பன்களைத் தடை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இது மொண்ட்ரியால் உடன்பாடு என அழைக்கப்படுகிறது. சிறிது காலம் சுவவீனமுற்றிருந்த ரோலண்ட் கடந்த மார்ச் 10 சனிக்கிழமை கலிபோர்னியாவில் காலமானார். விக்கிப்பீடியா போன்ற இணையக் கலைக்களஞ்சியங்களுடன் போட்டியாக இனிமேல் தனது எண்ணிம இணையக் கலைக்களஞ்சியத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. டாப்லெட் கணினிகளுக்கான கலைக்களஞ்சியத் தொகுதி ஒன்றை அண்மையில் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. "அச்சில் வெளிவரும் கலைக்களஞ்சியங்களின் விற்பனை கடந்த பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கத்தக்க அளவாகக் குறைந்துள்ளது என பிரித்தானிக்காவின் தலைவர் ஜோர்ஜ் கோசு தெரிவித்தார். இந்நிலை வரும் என நாங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தோம் என அவர் கூறினார். பல பத்திரிகைகள், வார இதழ்கள் மற்றும் நூல் பதிப்பாளர்கள் தமது பதிப்புகளை தற்போது இணையத்திலேயே பெருமளவு வெளியிடுகிறார்கள். சிறிய நேர இடைவெளியில் கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கத்தை அடிக்கடி மேம்படுத்தும் வசதி இணையத்தில் உள்ளது. ஆனால் அச்சுப் பதிப்பில் அப்படியல்ல. ஒரு முறை அச்சில் வெளியிட்டால் அது காலாவதியாகிவிடுகிறது, என பிரித்தானிக்கா கூறுகிறது. பிரித்தானிக்கா என்சைக்கிளோப்பீடியா முதன் முதலில் எடின்பரோவில் ஆடம் மற்றும் சார்ல்சு பிளாக் என்பவர்களினால் 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பதிப்பிக்கப்பட்டது. பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த மன்னர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டன. 1870களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு ஸ்கொட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு த டைம்ஸ் என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்ஸ் ரோபக் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிகாகோவிற்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்ளலாயிற்று. சுவிட்சர்லாந்து சுரங்கப் பாதை ஒன்றில் சென்றுகொண்டிருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 சிறுவர்கள் காயமடைந்தனர். இத்தாலிய எல்லைக்கருகில் வாலெய்ஸ் பிராந்தியத்தின் சியேரே நகரில் இந்த அனர்த்தம் நேற்றிரவு 09:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 52 பேரை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் பெல்ஜியம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. பேருந்தின் இரண்டு சாரதிகளும் உயிரிழந்தனர். சிறுவர்கள் தமது பனிச்சறுக்கல் சுற்றுலாவை முடித்துக் கொண்டு பெல்ஜியத்தின் லொம்மெல், ஹெவர்லீ நகரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். இறந்த சிறுவர்கள் அனைவரும் 12 வயதானவர்கள் ஆவர். இக்குழுவினர் மூன்று பேருந்துகளில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஏனைய இரண்டும் பாதுகாப்பாக பெல்ஜியம் திரும்பியது. விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்த பெல்ஜியத்தின் பிரதமர் எலியோ டி ரூப்போ "இந்நாள் பெல்ஜியத்திற்கு ஒரு பேரிழப்பான நாள் எனக் குறிப்பிட்டார். மீட்புப் பணியில் 200 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர். இதுவரையில் அறியப்படாத மனித இனம் ஒன்றின் எச்சங்கள் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறைந்தது ஐந்து பேரின் எலும்புகள் 11,500 முதல் 14,500 ஆண்டுகள் பழைமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளின் அடையாளத்தை வைத்து இந்த இனத்தை செம்மான் குகை மக்கள் (Red Deer Cave people) என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். சீனாவின் யுணான் மாகாணத்தில் மெங்சி நகருக்கருகில் உள்ள மெலுடொங் என்ற குகைப்பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. அயலில் உள்ள குவாங்சி மாகாணத்திலும் சில மனித ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் பற்கள் மற்றும் மண்டை ஓடுகள் ஒரே வகையினதாக இருந்தன. இன்றைய நவீன மனித இனத்துடன் ஒப்பிடுகையில் இவை பெரிதும் மாறுபட்டிருந்தன. இந்த மனித எச்சங்களின் இனத்தை அடையாளம் காண்பதற்கு இவை விரிவாக மேலும் ஆராயப்பட வேண்டும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது குறிப்பாக இந்த இனத்தை அடையாளம் காண் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம் என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்தவர்களில் ஒருவரும், ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான டரென் கர்னோ கூறினார். இந்த மனித எச்சங்களின் டிஎன்ஏ ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக் காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரே போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று இந்த ஆவணப்படத்தின் மூலம் "சனல் 4" தொலைக்காட்சி நிறுவுகிறது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தினைச் சேர்ந்த சர்வதேசப் பணியாளர்கள் இருவரை உள்ளடக்கிய குழு உடையார்கட்டுப் பகுதியில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி தற்காலிக தங்கிடம் ஒன்றை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த சம்பவத்துடன் இந்த ஆவணப்படம் போர்க் குற்றங்களை ஆராயத் தொடங்குகிறது. இலங்கை அரசு கூறியது போன்று இல்லாமல் தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்கிற முதலாவது போர்க் குற்றச்சாட்டை ஆவணப்படம் முன்வைக்கிறது. போர் வலயத்துக்குள் அகப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வேண்டும் என்றே குறைத்துக் காட்டி, உண்மையான மக்கள் எண்ணிக்கைக்கு வேண்டிய உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்பி வைக்காமல் தடையை ஏற்படுத்தியமை அரசின் இரண்டாவது போர்க் குற்றம் என்றும் நிறுவப்படுகிறது. போரின் இறுதி நாட்களில் கனரக ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தியது என்றும் தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் நிறுவியுள்ளது. இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்குப் பின்னராவது இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேள்வி எழுப்புவதுடன் காணொளி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பான சகல குற்றச்சாட்டுக்களையும் பாதுகாப்பு அமைச்சு நிராகரிக்கிறது என இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்சுமன் உலுகல்ல விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இறுதிப்போரின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமைகள் என்பன தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையின் கொலைக்களங்கள் 2’ எனும் வீடியோ காட்சிக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் உண்மையான புதிய காணொளியை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதம் அடித்து சாதனை படைத்தார் இந்திய துடுப்பாட்ட வீரர் w:சச்சின் டெண்டுல்கர்| சச்சின் டெண்டுல்கர் ஆசியக்கிண்ணப் போட்டித் தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதலாவது ஆட்டத்தில் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தை 21 ஓட்டங்களாலும், இரண்டாவதில் இந்தியா இலங்கையை 50 ஓட்டங்களாலும், மூன்றாவதில் பாக்கித்தான் இலங்கையை 6 இலக்குகளாலும், நான்காவதில் வங்காளதேசம் இந்தியாவை 5 இலக்குகளாலும் வென்றன. அதே ஆய்வுகூடத்தில் இக்காரசு என்ற வேறொரு பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்ட மீள்பரிசோதனைகள் நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்திலேயே செல்லுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய முடிவுகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. செனீவாவில் அமைத்துள்ள செர்ன் எனப்படும் அணு ஆய்வுக்கான ஐரோப்பிய ஆய்வுகூடத் வேகமுடுக்கியில் இருந்து 730 கிமீ தூரத்திற்கு செலுத்தப்பட்ட நியூட்ரினோக்களைக் கண்டறிய 600 தொன்கள் (430,000 லீட்டர்கள்) திரவ ஆர்கன் இக்காரசு குழுவினரின் இந்தப் பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டது. "பாடசாலைகளில் படித்த ஒளியின் வேகத்திலேயே நாம் நிற்கிறோம் என இக்காரசு ஆய்வுக்குழுவின் பேச்சாளர் சாண்ட்ரோ செண்ட்ரோ தெரிவித்தார். இந்த முடிவுகள் எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என அவர் கூறினார். நியூட்ரினோக்களின் வேகம் குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் முகமாக மேலும் தனிப்பட்ட பரிசோதனைகள் சிலவற்றை இம்மாத இறுதியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை செப்டம்பர் 24, 2011 விளாதிசுலாவ் கொவாலியொவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவரது தாயார் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாகத் தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லியூபோவ் கவாலியோவா மின்ஸ்க் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். தனது மகன் ஒரு அப்பாவி என்றும், பெலருசிய அதிகாரிகள் தமது குற்றங்களை மறைப்பதற்கு எமது பிள்ளைகள் மேல் குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இவர்களது மரணதண்டனைகளை இரத்துச் செய்யுமாறு மேற்கத்தைய அரசுகளும் மனித உரிமை அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் பெலருஸ் அரசுத்தலைவர் அலெக்சாண்டர் லூக்கசென்க்கோ மன்னிப்பு வழங்க மறுத்து விட்டார். ஐரோப்பிய நடுகளில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் ஒரேயொரு நாடு பெலருஸ் ஆகும். திமீத்ரி கொனவாலொவ் என்ற இரண்டாவது குற்றவாளியின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஏப்ரல் 11 இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பெலருஸ் தொடருந்து நிலையக் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு ஏப்ரல் 12, 2011 லிபியாவின் முன்னாள் தலைவர் முவாம்மர் கடாஃபியின் புலனாய்வுத்துறைத் தலைவராகப் பணியாற்றிய அப்துல்லா அல்-செனூசி மூரித்தானியாவில் விமானம் மூலம் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார். இவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு லிபிய இடைக்கால அரசு மூரித்தானியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமும் இவருக்கு கடந்த ஆண்டு சூன் மாதத்தில் கைதாணை பிறப்பித்திருந்தது. அத்துடன் 1989 ஆம் ஆண்டில் தமது நாட்டு விமானம் ஒன்றில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பிரான்சும் இவருக்குக் கைதாணை பிறப்பித்திருந்தது. இத்தாக்குதலில் 170 பயணிகள் உயிரிழந்தனர். 1996 ஆம் ஆண்டில் லிபிய சிறைச்சாலை ஒன்றில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டமையிலும் இவருக்குத் தொடர்புள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், இவரை நாடு கடத்தும் முன்பாகத் தமது நாடும் இவர் மீது விசாரணைகளை மேற்கொள்ளும் என மூரித்தானியா அறிவித்துள்ளது. மொரோக்கோவில் இருந்து போலிக் கடவுச்சீட்டு மூலம் மூரித்தானியா தலைநகர் நுவாக்சொட்டில் நுழைய முயன்ற போதே செனூசி கைது செய்யப்பட்டார். ஆனாலும், இவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மூரித்தானியா இது வரையில் எவ்வித சான்றுகளையும் அறிவிக்கவில்லை. 63 வயதாகும் செனூசி கடாபியின் ஆட்சி ஆட்டம் கண்டபோது நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். வெள்ளிக்கிழமை மால 6:30 மணிக்கு மூடப்பட்டது என்றும், மறுநாள் காலையில் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட போதே பல காட்சிப் பொருட்கள் காணாமல் போயுள்ளது அவதானிக்கப்பட்டது. இது குறித்து கறுவாக்காட்டுக் காவல்துறையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. தேசிய அருங்காட்சியகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு படக்கருவிகள் இயங்காமலிருந்ததாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார். திருடப்பட்ட இடத்தில் இருந்த காமெராக்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே அகற்ரப்பட்டிருந்ததாக அருங்காட்சியக ஊழியர் ஒருவர் செய்தியாலர்களுக்குத் தெரிவித்தார். ஆனால், இக்கூற்றுக்களை அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நந்தா விக்கிரமசிங்க மறுத்துள்ளார். அனைத்து படக்கருவிகளும் பழுதில்லாமல் இருந்தன என அவர் குறிப்பிட்டார். கொழும்பு அருங்காட்சியகத்தில் திருட்டு நடப்பது இது இரண்டாவது முறையாகும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தங்கத்தினாலான புத்தர் சிலை ஒன்று களவு போனது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மிகவும் துயரமான சம்பவம் இதனை வெழி உலகுக்கு காட்டிய ஷனல் 4 க்கு உலக தமிழர்கழின் னன்ட்ரி விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. 170-தீவுகளைக் கொண்ட தொங்காவில் 165 ஆண்டு கால நிலவுடைமை முறை நவம்பர் 2010 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்து தமது முதலாவது நாடாளுமன்றத்தை அந்நாட்டு மக்கள் தெரிவு செய்தனர். வாக்களிப்புக்கு முன்னர் மன்னர் தூப்போ தமது நிறைவேற்று அதிகாரங்களை நடாளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். செப்டம்பர் 2006 ஆம் ஆண்டில் நான்காம் தாவுஃபாஹாவ் தூப்போ இறந்த பின்னர் ஜோர்ஜ் தூப்போ பதவிக்கு வந்தார். ஆனாலும் நாட்டில் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகக் குழப்பநிலை நிலவியதை அடுத்து அவரது பதவிப்பிரமாணம் 2008 ஆகத்து மாதத்திலேயே இடம்பெற்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஜோர்ஜ் தூப்போ திருமணமாகாதவர். தனது சகோதரர் துப்போடோவா லவாக்கா என்பவரை நாட்டின் அடுத்த மன்னராக அவர் அறிவித்திருந்தார். பிரான்சிம் டூலோசு என்ர இடத்தில் உள்ள யூத இனப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருவர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிதாரி தப்பி ஓடிவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சென்ற வாரம் வியாழன் அன்று இதே இடத்தில் பாதுகாப்புப் படையினர் இனந்தெரியாத நபரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த பாதுகாப்புப் படையினர் அனைவரும் வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஆவர். பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சர்க்கோசி, தனது கல்வி அமைச்சருடன் சம்பவம் இடத்துக்கு விரைந்துள்ளார். இன்றைய சம்பவத்திற்கு இசுரேல் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் பாடசாலை ஆசிரியையும் அவரது ஆறு வயது மகளும், மற்றவர் 17-வயது பள்ளி மாணவனும் ஆவார். கூடங்குளம் பிரச்சினை குறித்து ஆராயவென நடுவண், மற்றும் மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின் நிலையத்திற்கு எதிரானவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு, அணுமின் நிலையம் செயல்படவேண்டும், அது பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை முடிவு வெளியான பின்னணியில், கூடங்குளத்தில் போராட்டக் குழுத்தலைவர்கள் குறைந்தது 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதைக் கண்டித்து போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் இடிந்தக்கரையில் லூர்து மாதா கோவில் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. அங்கே பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் எந்த நேரமும் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அணுமின் நிலையம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, ஆழிபேரலையோ ஏற்பட்டதாக வரலாறு இல்லை எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலைகளில் கூடிய விரைவில் மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பணிக்கு திரும்பிய உருசிய அறிவியலாளர்கள் தெரிவித்தனர். உருசிய அறிவியலாளரும், அணு உலை வடிவமைப்பு சிறப்பு நிபுணருமான மேமினோ அலெக்சாண்டர், மற்றும் மாஸ்கோ கிரிகோரி ஆகியோரது தலைமையில் 96 பேர் இன்று பணிக்கு வந்தனர். கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதாக செருமானியர் நாடுகடத்தப்பட்டார் பெப்ரவரி 29, 2012 கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என வல்லுநர் குழு அறிவிப்பு பெப்ரவரி 20, 2012 இந்திய அரசு தனது 2012 நிதி ஆண்டில் செவ்வாய்க் கோள் பற்றிய ஆய்வுத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையை ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 125 கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மொத்தமாக வழங்கும் ஒதுக்கீடு 4432 கோடி ரூபாயை எட்டியுள்ளது. விண்வெளித்திட்டம் நவீன அறிவியல் முறைமையில் மிக முக்கிய ஒரு பகுதியென இந்தியா கருதுகிறது. இத்துறையிலான முதலீடு, தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும், இத்துறையில் இந்தியா பின்தங்கியிருக்க விரும்பவில்லை. தவிர, விண்வெளி துறையின் வெற்றி, மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்து நாட்டின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்று இந்திய அரசு கருதுகிறது. விண்வெளியை விட, இந்தியாவின் சமூகத்தின் பல துறைகளில் மேலதிக ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று விமரிசகர்கள் கூறுகின்றனர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரால் Bhagvad Gita As It Is என்ற நூல் வெளியிடப்பட்டது. பகவத் கீதையின் உரையிலேயே சில சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக உருசியாவின் வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது. இச்சர்ச்சைக்குரிய உரையை ஹரே கிருஷ்ணா இயத்தின் நிறுவனர் ஏ. சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் எழுதியிருந்தார். உருசியாவின் பழமைவாதக் கிறித்தவத் திருச்சபையினரே தமது இயக்கத்தினரின் சேவைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வழக்கைத் தாக்கல் செய்திருக்கின்றனர் என ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் மெக்சிக்கோ நகரில் உள்ள அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது பணியிடங்களை விட்டு வெளியேறினர். ஒரு நிமிட நேரம் கட்டிடங்கள் அதிர்ந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குவெரேரோ மாநிலத்தில் 500 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்தார். எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். நிலநடுக்கத்தின் பின்னரான அதிர்வுகள் ஆறு தடவைகள் தாக்கியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. துவாரெக் இனப் போராளிகளை எதிர்கொள்ளுவதற்கு அரசு போதிய ஆயுதங்களைத் தமக்கு வழங்கவில்லை எனக் கூறி இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் நேற்று புதன்கிழமை அன்று அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராணுவக் கிளர்ச்சியை எக்கோவாஸ் எனப்படும் மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய ஆணையம் கடுமையாக விமரிசித்திருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய காப்டன் அமடோ சனோகோ என்பவர் இன்று காலையில் தொலைக்காட்சியில் தோன்றி தேசிய ஊரடங்கு அமுலில் உள்ளதாக அறிவித்தார். அரசுத்தலைவர் அமடோ துமானி தவுரியின் "தகுதியற்ற அரசை" நாம் கலைத்துள்ளோம் என கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி கூறினார். அரசுத்தலைவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது அறிவிக்கப்படவில்லை. ரெட் பெரெட்ஸ் எனப்படும் சிறப்புப் படையினர் இன்னமும் அரசுத்தலைவருக்கு ஆதரவாகவே இருப்பதாகத் தாம் நம்புவதாக என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த 20 ஆண்டுகாலமாக மாலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளது. இராணுவத்தினரும், அரசாங்கமும் தமக்கிடையே உள்ள பிணக்குகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என அமெரிக்காவும் பிரான்சும் இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளன. துவாரெக் மக்கள் தெற்கு அரசாங்கத்தால் புறந்தள்ளப்படுவதாகக் கூறி கடந்த பல ஆண்டுகளாக மாலியின் வடக்கே அசவாத் பகுதியில் சுயாட்சி கோரிப் போராடி வருகிறார்கள். இவர்கள் வடக்கு மாலி, வடக்கு நைஜர், மற்றும் தெற்கு அல்ஜீரியா பகுதிகளில் வாழும் நாடோடி இன மக்கள் ஆவர். துவாரெக் போராளிகள் கடந்த சில மாதங்களில் பல வடக்கு நகரங்களில் இருந்து இராணுவத்தினரை விரட்டியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அரசுத்தலைவர் தேர்தல் நடக்கவிருந்தது. மாலியில் இராணுவத்தினருடனான மோதலில் 45 போராளிகள் உயிரிழப்பு சனவரி 20, 2012 தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துள்ளதாகவும் இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்த வைப்பதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. போர் முடிந்து இலங்கை தனது வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் இருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா பிரேரணையை முன்வைத்து தெரிவித்துள்ளது. 47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய நாடுகள், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் வாதிட்டன. இந்தியா, சிலி, கொஸ்தா ரிக்கா, குவாத்தமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே, ஆத்திரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கிரேக்கம், அங்கேரி, போலந்து, மோல்டோவா, ருமேனியா, பெனின், கெமரூன், லிபியா, மொரிசியஸ், மற்றும் நைஜீரியா ஆகியன அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்காவின் பிரேணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்: கொங்கோ, மவுரித்தேனியா, உகாண்டா, வங்காளதேசம், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, எக்குவடோர், உருசியா. அங்கோலா, பொட்சுவானா, புர்கினா பாசோ, ஜிபூட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகியன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கை குறித்த பிரேரணையை ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்தது மார்ச் 8, 2012 சுற்றுப் போட்டிகளில் இந்திய, இலங்கை அணிகளைப் பின் தள்ளி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்காளதேச அணி கிண்ணத்தை கைப்பற்ற பாக்கித்தானின் 237 ஓட்டங்கள் என்ற இலக்கை நெருங்கிய போதிலும் அது இரு ஓட்டங்களால் நழுவிப்போனது. 11வது ஆசியக் கிண்ணப் போட்டி வங்காளதேசத்தில் மேப்பூரில் உள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் இடம்பெற்று வந்தது. நேற்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பாக்கித்தான் அணி 236 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கிய தமீம் இக்பால், நஜிமுடீன் இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். தமீம் இக்பால் 60 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். சகிப் அல் அசன் 68 ஓட்டங்கள் எடுத்தார். * ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது பாகிஸ்தான், வீரகேசரி, மார்ச் 23, 2012 பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அண்டி விண்வெளிக் கழிவுப் பொருள் ஒன்று சென்றதை அடுத்து விண்வெளி நிலைய வீரர்கள் அவசர அவசரமாகத் தமது பாதுகாப்பு அறையினுள் சென்றனர். உருசிய விண்கலம் ஒன்றில் இருந்து வெளியகற்றப்பட்ட கழிவுப் பொருள் ஒன்று விண்வெளி நிலையத்தை நோக்கி வருவது நேற்று வெள்ளிக்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்ட போது விண்வெளி நிலையத்தை நகர்த்துவதற்கு நேரம் கிடைக்கவில்லை. விண்வெளி நிலையத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அது கடந்து சென்றது. விண்கழிவுப் பொருள் ஆபத்தான தூரத்தில் இல்லாவிட்டாலும், பாதுகாப்புக் கருதியே விண்வெளி வீரர்கள் சோயூஸ் பாதுகாப்புக் கவசத்தினுள் சென்றனர் என நாசா அறிவித்துள்ளது. உருசியாவின் கொஸ்மஸ்-2251 என்ற செயற்கைக்கோள் 1993 சூன் 16 இல் ஏவப்பட்டது. 2009 பெப்ரவரி 10 ஆம் நாள் இந்தச் செயற்கைக்கோள் அமெரிக்காவின் இரிடியம்-33 என்ற வேறொரு செயற்கைக் கோளுடன் 790 கிமீ உயரத்தில் மோதியது. இரண்டும் முற்றாக அழிக்கப்பட்டன. இவ்வாறு விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்கள் மோதுவது அதுவே முதற்தடவை எனக் கூறப்பட்டது. கொஸ்மஸ்-2251 600 துண்டுகள் வரை சிதறுண்டது. இதில் ஒன்றே நேற்று விண்வெளி நிலையத்தைக் கடந்து சென்றது. கடந்த 12 ஆண்டுகளில் விண்வெளி நிலையம் விண்கழிவுப் பொருள் ஒன்றைத் தனது பாதையில் காண்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஆண்டு சூன் மாதத்தில் கழிவுப் பொருள் ஒன்று 335 மீட்டர்கள் தூரத்தில் கடந்து சென்றது. அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தற்போது மூன்று உருசியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு சப்பானியர் என 6 விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். 2011 மார்ச் மாதத்தில் சப்பானில் இடம்பெற்ற ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று கனடாவின் மேற்குக் கரையில் மிதக்கக் காணப்பட்டுள்ளது. 15 மீட்டர் நீளமான இந்தப் படகை நேற்று முன்தினம் பிரித்தானியக் கொலம்பியாக் கடலில் ரோந்தில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று ஹைடா குவாய் தீவுகளில் இருந்து 275 கிமீ தூரத்தில் கண்டுபிடித்தது. பசிபிக் பெருங்கடலைத் தாண்டிய பல மில்லியன் தொன்களுக்கும் அதிகமான சுனாமிக் கழிவுகளில் இது மிகப் பெரியது எனக் கருதப்படுகிறது. சப்பானின் ஹொக்கைடோவில் பதிவு செய்யப்பட்ட இக்கப்பலில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படகில் கடல்மாசுக்கள் இருக்கலாம் என நம்பப்படுவதால் இது தற்போது கனடாவின் போக்குவரத்து அமைச்சினால் மிகவும் அவதானமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டீப்சீ காலஞ்சர் (Deepsea Challenger) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் 11 கிமீ ஆழத்தைச் செல்லுவதற்கு இவருக்கு 2 மணித்தியாலத்திற்கும் அதிகம் பிடித்திருக்கிறது. இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 07:52 மணிக்கு மரியானா அகழியின் ஆழத்தை இவர் அடைந்தார். மூன்று மணி நேரம் கடல் நிலத்தை ஆராய்ந்து விட்டு கேமரன் மேலே திரும்பினார். படம்பிடிக்கும் கருவிகள், மற்றும் விளக்குகளுடன் சென்ற அவர் நிலத்தை விரிவாக ஆராய்ந்து காணொளிப் படங்களும் எடுத்து வந்துள்ளார். இவற்றை வைத்து ஆவணப் படம் ஒன்றை வெளியிடுவதற்கு இவர் திட்டமிட்டுள்ளார். பெருங்கடலின் மிக ஆழமான பகுதியை மனிதர் அடைவது இது இரண்டாவது தடவையாகும். 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லெப். டொன் வால்சு, மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் 20 நிமிடங்கள் கடல் ஆழத்தில் கழித்தனர். டீப்சீ சாலஞ்சர் கப்பல் ஆத்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டது. இது 11 தொன் நிறையும், 7 மீட்டர் நீளமும் கொண்டது. கடலடியில் 1,000 வளிமண்டல அமுக்கத்தைச் சமாளிப்பதற்காக தடித்த எஃகினால் ஆன சிறிய அறை ஒன்றில் ஜேம்ஸ் கேமரன் தங்கியிருந்தார். கடலடியில் இருந்து பாறைகளையும், மண்களையும் சேகரிக்க தானியங்கிகளும் கப்பலில் இணைக்கப்பட்டிருந்தன. 1995 ஆம் ஆண்டில் சப்பானி கைக்கோ என்ற ஆளில்லா கப்பல் மரியானா அகழிக்குச் சென்று திரும்பியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நீரியசு என்ற ஆளில்லா கப்பலும் சென்று திரும்பியிருந்தது. சப்பான் மேலும் ஒரு அணு உலையை முற்றாக மூடியதை அடுத்து அங்குள்ள 54 அணு உலைகளில் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் வரும் மே மாதத்தில் செயலிழக்கச் செய்யப்படும். ஃபுக்குசிமா பேரழிவிற்குப் பின்னர் தற்காலிகமாகவேனும் இந்த முடிவை எடுக்க சப்பான் முன்வந்திருக்கிறது. அணு உலைகளை மீளவும் திறக்கக் கூடாது என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கண்காணிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளுக்காக கசிவசாக்கி-கரிவா அணுமின் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இது மீண்டும் திறக்கப்படுமா என்பது அறியப்படவில்லை. புக்குசிமா விபத்துக்கு முன்னர் சப்பான் அதன் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை அணுவாற்றல் மூலமே பெற்றுக்கொண்டது. கண்காணிப்புக்காக மூடப்படும் அணு உளைகளை மீண்டும் திறப்பதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சோமாலியாவில் அல்-சபாப் போராளிகளின் முக்கிய தளம் ஒன்றை எத்தியோப்பிய மற்றும் சோமாலிய அரசு சார்புப் படையினர் கைப்பற்றியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல் பூர் என்ற நகரம் அல்-கைதாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் போராளிகளின் முக்கிய தளமாகும். ஆனாலும், அரசுப் படைகள் நகரைத் தாக்குவதற்கு முன்னரே போராளிகள் அதனைக் கைவிட்டு வெளியேறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அல்-சபாப் தற்போது பல தெற்குப் பகுதி நகரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனாலும், கென்ய மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரால் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கென்யப் படையினர் தெற்குப் பகுதியினுள் ஊடுருவியுள்ளனர். அதே வேளையில் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர் தலைநகர் மொகதிசுவில் இருந்து அல்-சபாப் படையினரை விரட்டியுள்ளனர். 1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் ஒரு திரமான அரசாங்கம் அமைக்கப்படவில்லை. ஐநா உதவியுடன் தலைநகர் மொகதிசுவை அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்தியத் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி இறந்துள்ளார். சாம்பெல் யேசி என்பவர் 90 விழுக்காடு எரிகாயங்களுக்கு இலக்காகி இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவில் மட்டும் கடந்த சில மாதங்களில் பல பெண்கள் உட்படக் குறைந்தது 25 திபெத்தியர்கள் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தீக்குள்த்து இறந்துள்ளனர். பெரும்பாலான தீக்குளிப்புகள் சிக்குவான் மாகாணத்தின் திபெத்தியப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. திபெத்தியப் பகுதிகளை சீனாவில் இருந்து பிரிக்க முடியாது என சீனா கூறி வருகிறது. நாடுகடந்த திபெத்திய அரசாங்கம் வட இந்திய நகரான தரம்சாலாவில் இயங்கி வருகிறது. "நகரம் மேலும் நீரினுள் மூழ்காமல் தடுக்கப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டு வந்தது, ஆனால் அது தொடர்ந்து காலவரையறையின்றி சிறிது சிறிதாக மூழ்கி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என கலிபோர்னியாவைச் சேர்ந்த புவிப்பரப்பிய அளவியலார் யெகுடா பொக் தெரிவித்தார். வெனிசின் மணல் நிலத்துக்கடியில் இறுகி வருவதால் அது தன்னுடன் நகரையும் கீழே இழுத்து வருகிறது. அப்பெனின் மலைகளுக்குக் கீழே மிக மெதுவாகச் செல்லும் பூமியின் மேலோட்டில் உள்ள தட்டு மீது வெனிசு நகரம் செல்வதால், வெனிசு நகரத்தில் ஒரு சாய்வு ஏற்பட முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர்கள் வரை நகரம் நீரில் மூழ்கி வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த சராசரியை விடப் பெருமளவு குறைவாகும். அத்துடன், நியூ ஓர்லீன்சு நகரம் நீரில் மூழ்கும் வீதத்தை விடவும் இது குறைவானதாகும். இதனால் இதனைப் பல ஆய்வாளர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனாலும், கடல் மட்ட வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளும் போது 1 மில்லிமீட்டர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவாகும் என யெகுடா பொக் தெரிவித்தார். 20ம் நூற்றாண்டில் வெனிசு நகரில் கடல் மட்டம் 13 செ.மீ. களால் உயர்ந்ததில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. “பேரலைகள் ஏற்படும் போது தடுப்புகள் போடப்பட்டன. இவற்றை எதிர்காலத்தில் அடிக்கடி பயன்படுத்த வேண்டி வரலாம்,” என அவர் எச்சரித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அத்திலாந்திக் பெருங்கடலில் 14,000 அடி ஆழத்தில் ஐந்து இயந்திரங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாக பெசோசு தனது வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார். இவற்றில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மேலே கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 விண்கலம் விண்வெளி வீரர்களை முதற்தடவையாக நிலவுக்குக் கொண்டு சென்றது. சட்டர்ன் என்ற அப்பல்லோவின் ஏவுகலனில் எஃப்-1 இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது அப்பல்லோ விண்கலத்தை பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே கொண்டு சென்றது. இரண்டாம் கட்ட ஏவுதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இவை எரிந்து பூமியில் அத்திலாந்திக் கடலில் வீழ்ந்தன. நாசாவுக்குச் சொந்தமான இந்த ஏவுகலன் இயந்திரங்களில் ஒன்றைத் தமது சொந்த நகரான சியாட்டலில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஜெஃப் பெசோசு நாசாவைக் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளார். நான்காம் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைப் பதிவு செய்து ஆவணப் படமாக வெளியிட்ட இந்தியாவில் இருந்து வெளிவரும் 'ஹெட்லைன் டுடே’ பத்திரிகையின் புலனாய்வு ஊடகவியலாளர் பிரியம்வதா பஞ்சாபிகேசனுக்கு செய்தித் தொலைக்காட்சிக்கான தேசிய விருந்து வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை தலைநகர் தில்லியில் இடம்பெற்ற போது ஹெட்லைன் டுடே பத்திரிகையின் சென்னை நிருபர் பிரியம்வதாவுக்கு சிறந்த புலனாய்வுப் பெண் நிருபர் என்ற மதிப்பு மிக்க தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் இலங்கைக்குச் சென்று கள நிலைவரங்களை பதிவு செய்து From inside Sri Lanka's killing fields: I witnessed genocide என்ற தலைப்பில் செய்திப்படமாக இவர் வெளியிட்டிருந்தார். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடைபெற்ற பேரவலத்தினை பிரியம்வதா தனது மூன்று நாள் பயணத்தின் போது பதிவு செய்திருந்தார். ஹெட்லைன் டுடே தொலைக்காட்சி ஊடாக இவர் வெளியிட்ட கருத்துகள் இந்தியா எங்கணும் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தன. தெற்காசிய நாடுகளுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தின் போது கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஆத்திரேலியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொப் கார் இந்த நிதியுதவியை அறிவித்துள்ளார். "700 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மற்றும் புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது கடமை. நாளொன்றுக்கு 20,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். இது போன்ற இடங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று பொப் கார் தெரிவித்தார். கிடால் பிராந்தியத்தின் தலைநகரைப் போராளிகள் கைப்பற்றியிருப்பதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளனர். கிடால் பிராந்தியம் சகாரா பாலைவனம் வரை நீண்டுள்ளது. இராணுவத்தினரின் பெரும் முகாம் ஒன்று இந்நகரில் அமைந்துள்ளது கிடால் தற்போது எமது வசம் வந்துள்ளது. அனைத்து இராணுவ நிலைகளும் எம்மிடம் வீழ்ந்து விட்டன என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் போராளி ஒருவர் தெரிவித்தார். மாலியின் அரசாங்கம் நாட்டின் வடக்கேயுள்ள தமது பிராந்திய மக்களைப் புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டி துவாரக் இன மக்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடி வருகின்றனர். இராணுவப் புரட்சியை நடத்திய காப்டன் அம்டோ சனோகோ போராளிகளை அடக்க வெளிநாட்டு உதவியைக் கோரியுள்ளார். மாலியின் அயல் நாடுகள், மற்றும் மேற்காப்பிரிக்க பொருளாதாரக் குழு (எக்கோவாஸ்) ஆகியன மாலி இராணுவப் புரட்சியைக் கண்டித்துள்ளதோடு பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளன. வரும் திங்கட்கிழமைக்குள் இராணுவம் ஆட்சியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கத் தவறினால், மாலியின் எல்லைப் பகுதிகளை மூடப்போவதாகவும், அதன் சொத்துக்களை முடக்கவிருப்பதாகவும் எக்கோவாஸ் அறிவித்துள்ளது. தமது அமைதி படையினரையும் அது தயார் நிலையில் வைத்துள்ளது. துவாரக் போராளிகளில் பலர் லிபியாவில் முன்னாள் தலைவர் முவம்மர் கடாபியின் படைகளில் இணைந்து போராடிப் பின்னர் கடாபியின் வீழ்ச்சிக்யுடன் நாடு திரும்பியவர்கள் ஆவர். இராணுவக் கிளர்ச்சியாளர்களினால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட மாலியின் அரசுத்தலைவர் அமடோ தவுமானி தவுரே தாம் இன்னமும் மாலியிலேயே இருப்பதாகவும், நல்ல தேகநிலையுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாலியில் கிளர்ச்சி இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர் மார்ச் 22, 29012 மாலியில் இராணுவத்தினருடனான மோதலில் 45 போராளிகள் உயிரிழப்பு சனவரி 20, 2012 அண்மையில் கியூபாவிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த திருந்த்தந்தை கியூப அரசிடம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். கத்தோலிக்கர் புனித வெள்ளியை இயேசு கிறித்துவின் இறந்த நாளாகக் கொண்டாடுவர். அத்துடன் இந்நாளை அவர்கள் உயிர்த்த ஞாயிறு நிகழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டாடுவர். கியூபாவில் 1960களில் மத ரீதியான விடுமுறைகள் அனைத்தும் கம்யூனிச அரசால் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் முதற்தடவையாக பெரிய வெள்ளியை விடுமுறை நாளாக அந்நாடு அறிவித்துள்ளது. இவ்வாண்டு மட்டுமே பெரிய வெள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் இதனை நிரந்தரமாக விடுமுறை நாளாக அறிவிப்பதா என்று பின்னர் முடிவு செய்யப்படும் என அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கியூபாவுக்கான 3 நாள் பயணத்தின் போது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருத்தந்தை கியூபாவின் அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோவைச் சந்தித்து கியூப மக்களின் மனித உரிமைகள் பற்றி விவாதித்தார். மக்களின் அடிப்படை உரிமைகளை எவரும் மறுக்க முடியாது என அவர் காஸ்ட்ரோவிடம் எடுத்துக் கூறினார். அத்துடன் கியூபா மீது அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பொருளாதாரத் தடையை அமுல் படுத்தியுள்ளது பற்றியும் அவர் அமெரிக்கா மீது கண்டனத்தைத் தெரிவித்தார். பர்மாவில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அம்மையார் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாகப் போட்டியிடுகிறார். சூச்சி அம்மையாரின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி (NLD) கட்சி அனைத்து 45 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதிகாரபூர்வமற்ற முடிவுகளின் படி ஆங் சான் சூச்சி தனது தேர்தல் தொகுதியில் வெற்றி பெறுகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினரின் பின்னணியுடன் கூடிய கட்சி பெரும்பான்மையாக ஆட்சியில் இருந்தாலும், பர்மாவில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கு இத்தேர்தல்கள் ஒரு முக்கிய படிக்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும், பன்னாட்டுக் கண்காணிப்பாளர்களுக்கும் அங்கு முதற்தடவையாக மிகப் பரந்த அளவில் அணுக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கெடுப்பு அங்கு சுமூகமாக நடைபெறும் பட்சத்தில் பொருளாதாரத் தடையைத் தளர்த்தவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. தலைநகரில் சில வாக்களிப்பு நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக என்எல்டி கட்சி தெரிவித்துள்ளது. மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி 1990 இல் இடம்பெற்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும், அவரது கட்சி ஆட்சியமைக்க இராணுவ அரசால் அனுமதிக்கப்படவில்லை. ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பர்மிய இடைத்தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூச்சி பதிவு சனவரி 19, 2012 மேற்கு சைப்பிரியாவில் தியூமென் நகரில் இன்று அவசரமாகத் தரையிறங்க முற்பட்ட உருசிய பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானப் பணியாளர்கள் அனைவரும் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யூட் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏடிஆர்-72 விமானம் 4 விமானிகளுடனும் 39 பயணிகளுடனும் சுர்குட் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் சிறுவர்கள் எவரும் இருக்கவில்லை. விமானம் தரையிறங்கும் போது விமானத்தில் இரண்டு இயந்திரங்களிலும் இருந்து புகை கிளம்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஏடிஆர்-72 என்ற இந்த விமானம் பிரெஞ்சு-இத்தாலியத் தயாரிப்பாகும். கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் இதே விமான நிலையத்தில் ஜெட் விமானம் 124 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததில் மூவர் உயிரிழந்தனர். செப்டம்பரில் இடம்பெற்ற விபத்தில் லோக்கோமோட்டிவ் யாரொசுலாவ் ஹாக்கி அணியின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் இறந்தனர். உருசிய விமான விபத்தில் பனி வளைதடியாட்டக் குழுவினர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர் செப்டம்பர் 8, 2011 சைபீரியாவில் ஜெட் விமானம் தீப்பற்றியதில் மூவர் உயிரிழப்பு சனவரி 2, 2011 சைபீரிய விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு ஆகத்து 3, 2010 உலகில் முதற்தடவையாக 640 மில்லியன் அமெரிக்க டொலர் அமெரிக்கக் குலுக்கலில் (லொத்தர்) வெல்லப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குலுக்கல் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வெற்றியாளர்களைத் தேடும் பணிகள் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 42 மாநிலங்கள் பங்கு பற்றிய இந்தக் குலுக்கலில் இலினொய், கன்சாசு மற்றும் மேரிலாந்து மாநிலங்களைச் சேர்ந்த மூன்று வெற்றியாளர்கள் இந்த அதிட்டச் சீட்டினை பெற்றிருக்கின்றனர். மூவருக்கும் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. உலகளவில் முதல் தடவையாக அதிக பணத்தொகை இதன் மூலம் வெல்லப்பட்டுள்ளது. புளோரிடா, அலபாமா, மிசிசிப்பி, அலாஸ்கா, அவாய், வயோமிங்கு, ஊட்டா, மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்கள் குலுக்கலில் பங்குபற்றவில்லை. ஒவ்வொரு பரிசாளரும் கிட்டத்தட்ட 213 மில்லியன் டாலர்களைப் பரிசாகப் பெறுவர். இவர்கள் தமது முழுப் பணத்தையும் 26 ஆண்டுத் தவணைகளில் பெறலாம், அல்லது ஒரே தடவையில் குறைந்தளவு பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 176 மில்லியன்களில் ஒருவருக்கே குலுக்கலில் வெற்றி பெறுவதற்குச் சந்தர்ப்பம் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடைசியாக 2007 ஆம் ஆண்டில் 390 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக இரண்டு பேருக்குக் குலுக்கலில் கிடைத்தது. மிதிவெடிகள் பற்றிய விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி 2012 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிதிவெடி நடவடிக்கை தின நிகழ்வுகள் வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று 2012 ஏப்ரல் 4 ஆம் நாள் காலை 9 மணிமுதல் 12 மணிவரையும் நடைபெற்றது அதைத் தொடர்ந்து கண்காட்சி மாலை 4 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா அன்றைய அரச அதிபர் திருமதி சார்லசும் கௌரவ விருந்தினராக வன்னிப் பாதுகாப்புப் படைத்தலமை அலுவலகத்தின் கட்டளைத்தளபதி பெரேராவும் கலந்து சிறப்பித்தனர். ஆரம்பத்தில் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டனர். அதைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து சேட், கிராமிய அபிவிருத்தி அமைப்பு, பீப்பிள் விஷன் அமைப்புக்கள் நடத்திய நாடகமும் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டில் இலங்கையை கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது. பொருளாதார அமைச்சின் செலயாளர் கௌரவ பசில் இராசபட்ச வெளிநாட்டுகுச் சென்றிருந்ததால் மீண்டும் ஒரு நிகழ்வு கொழும்பில் 10 ஏப்ரல் 2012 இல் இடம்பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டு அந்நிகவும் பின்னர் இடம்பெற்றது மேற்காப்பிரிக்க நாடுகள் மாலி மீது உடனடியாக அமுலுக்கு வருமாறு பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளதாக ஐவரி கோஸ்ட் அரசுத்தலைவர் கூறியுள்ளார். மாலியின் இராணுவ ஆட்சியாளரை நேற்று திங்கட்கிழமைக்கு முன்னர் பதவி விலகும் படி எக்கோவாஸ் அமைப்பு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. எக்கோவாசின் பொருளாதாரத் தடையைத் தாம் கருத்தில் கொண்டுள்ளதாக மாலியின் இராணுவப் புரட்சிக்குத் தலைமை வகித்த கப்டன் அமடீ சனோகோ தெரிவித்துள்ளார். மாலியின் பொருளாதாரம் முக்கியமாக தனது அயல்நாடுகளான எக்கோவாஸ் அமைப்பிலேயே தங்கியுள்ளது. மாலி உட்பட ஏழு நாடுகள் ஒரே நாணய அலகைக் கொண்டுள்ளன. இதனால் எக்கோவாசின் பொருளாதாரத் தடை மாலியைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் போராளிகள் குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. ஒரு பிரிவு துவாரெக் மக்களுக்குத் தனிநாடு கேட்கிறது, மற்றையது அல்-கைதாவின் வட-மேற்கு ஆப்பிரிக்கக் கிளையுடன் தொடர்புள்ளது. மாலியின் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஐநாவின் பாதுகாப்பு அவை கூடுகிறது. சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் புதிதாகத் திறக்கப்பட்ட நாடக அரங்கு ஒன்றில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். அரங்கில் இடம்பெற்ர நிகழ்வு ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் சோமாலிய அமைச்சர் ஒருவரும், விளையாட்டுத்துறைப் பிரமுகர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என தேசியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. வேறும் பல முக்கிய பிரமுகர்களும் கொல்லப்பட்டதாக பிபிசிச் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியத் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டுப் போரை அடுத்து 1990களில் மூடப்பட்ட இந்த அரங்கம் மீளப் புனரமைக்கப்பட்டு கடந்த மாதமே திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் தலைநகரில் இருந்து அல்-சபாப் போராளிக் குழுவினர் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரால் வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் வடக்கு மாலியில் துவாரெக்குகளுடன் இணைந்து போரிட்ட இசுலாமியத் தீவிரவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. நேற்று புதன்கிழமை கூடிய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் மாலியில் அனைத்து வகை இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது. இதனை அடுத்தே துவாரெக் போராளிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அல்-கைதாவுடன் தொடர்புடையது இசுலாமியத் தீவிரவாதக் குழுவான அன்சார் தைன் என்ற அமைப்பு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சரியா என்ற இசுலாமியத் தீவிரவாதக் கொள்கையை அமுல் படுத்தப் போராடி வருகிறது. இவ்வமைப்புக் குறித்தும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை எச்சாரிக்கை விடுத்திருக்கிறது. மாலி மீது மேற்காப்பிரிக்க நாடுகள் பொருளாதாரத் தடை விதிப்பு ஏப்ரல் 3, 2012 மாலியின் பாலைவன நகரைப் போராளிகள் கைப்பற்றினர் மார்ச் 31, 2012 மாலியின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சு அசவாதின் விடுதலைப் பிரகடனத்தை ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் ஏற்காது விட்டால் தாமும் ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. துவாரெக் போராளிக் குழுவினருடன் இணைந்து போரில் இறங்கிய அன்சார் தைன் என்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்ப நிலையே நீடிக்கிறது. அசவாதின் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் துவாரெக் போராளிகளை விட இசுலாமியத் தீவிரவாதிகளே அதிகம் நடமாடி வருவதாக அங்கிருந்து வெளியேறிய சிலர் தெரிவித்ததாக பிபிசிச் செய்தியாளர் தெரிவிக்கிறார். நேற்று வியாழன் அன்று மாலியின் வடகிழக்கே அல்ஜீரியத் தூதரக அதிகாரிகள் ஏழு பேரை இசுலாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதற்கிடையில் ஐக்கிய இராச்சியம் மாலியின் தலைநகர் பமக்கோவில் இருந்த தமது தூதரகத்தை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. மாலியின் துவாரெக் போராளிகளின் இராணுவ நடவடிக்கை நிறுத்தம் ஏப்ரல் 5, 2012 மாலி மீது மேற்காப்பிரிக்க நாடுகள் பொருளாதாரத் தடை விதிப்பு ஏப்ரல் 3, 2012 மாலியின் பாலைவன நகரைப் போராளிகள் கைப்பற்றினர் மார்ச் 31, 2012 இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர், மகாத்மா காந்தி, பேடன் பவல், மற்றும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் சிலைகள் வியாழன் நள்ளிரவில் இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டதை அடுத்து நகர மக்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. குறித்த பகுதியில் காவல்துறை மற்றும் படையினரும் குவிக்கப்பட்டனர். நகரில் அமைந்துள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமையானதாகும். பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் இடம்பெற்று வருகையில் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது. சிலைகள் உடைக்கப்பட்டமை மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகப்பிரிவில் காத்தான்குடி – ஆரையம்பதி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டது. திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி சில மாதங்களுக்கு முன்னர் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய காஷ்மீரியப் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் பனிச்சரிவில் குறைந்தது 100 பாக்கித்தானிய இராணுவத்தினர் உயிருடன் புதையுண்டனர் என இராணுவம் அறிவித்துள்ளது. இறந்தவர்கள் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாக்கித்தானிய இராணுவப் பேச்சாளர் எவ்வளவு பேர் உயிர் தப்பினர் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. இமாலயத்தின் கரக்கோரம் பகுதியில் உள்ள சியாச்சென் பனியாற்றின் அருகேயுள்ள இராணுவ முகாம் இன்று அதிகாலை உள்ளூர் நேரம் 06:00 மணியளவில் பனிச்சரிவினால் புதையுண்டது. புதையுண்டவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 130 பேர் வரையில் புதையுண்டிருக்கலாம் எனச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக காரென் போராளிகள் தமது இனத்தவருக்குத் தனிநாடு கோரிப் போரிட்டு வருகின்றனர். மிக நீண்ட காலமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் இப்படியான ஒரு உயர்மட்டச் சந்திப்பு நடப்பது இதுவே முதற்தடவையாகும். பர்மா 1948 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களிடம் விடுதலை பெற்றதில் இருந்து அங்கு இனமோதல்கள் இருந்து வருகின்றன. இதனை அடுத்து சிறுபான்மையின மக்கள் பலர் எல்லையைத் தாண்டி தாய்லாந்தில் குடியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். காரென் போராளிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆங் சான் சூச்சி அம்மையாரைச் சந்திக்கவுள்ளனர். கடந்த வாரம் நடந்த இடைத்தேர்தல்களில் 45 இடங்களில் போட்டியிட்ட சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி 43 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. காரென் போராளிகளுடன் பர்மிய அரசு போர்நிறுத்த உடன்பாடு சனவரி 13, 2012 'SearchHint s என்பதைக் கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தேடவும்', 'globalSearchHint s என்பதை பல மொழிகளிலும் உள்ள விக்கிப்பீடியாக்களில் தேடவும்', 'togglePreviewsHint இந்த பக்கத்தில் முன்னெழு சட்டத்தில் முன்தோற்றம் உருவாக்குவதை மாற்று', 'disablePopupsHint முன்னெழு சட்டங்களை இந்த பக்கத்தில் முடக்கவும். மீண்டும் செயல்படுத்த பக்கத்தை மீளேற்றவும 'purgePopupsHint முன்னெழு சட்டங்களை மீட்டமை, இடைமாற்றில் உள்ள அனைத்து முன்னெழு சட்ட தரவுகளும் நீக்கப்படுகிறது 'PopupsHint முன்னெழு சட்டங்களை மீட்டமை, இடைமாற்றில் உள்ள அனைத்து முன்னெழு சட்ட தரவுகளும் நீக்கப்படுகிறது 'UndeleteHint sக்கான நீக்கல் வரலாற்றைக் காண்பி', 'protectHint sக்கான தொகுத்தல் உரிமைகளை கட்டுப்படுத்து', 'unprotectHint sஐ மீண்டும் யார்வேண்டுமானாலும் தொகுக்க அனுமதிக்கவும்', 'nullEditHint sக்கு ஒரு தொகுப்பை சமர்ப்பிக்கவும், மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை 'historyHint sக்கு செய்யப்பட்ட மாற்றங்களை பட்டியலிடு', 'Show the last edit மிக அண்மைய மாற்றத்தின் விளைவைக் காட்டு', 'lastContribHint கடைசித் தொகுப்பாளரால் செய்யப்பட்ட தொகுப்பின் நிகர மாற்றத்தைக் காட்டு', 'renderHint sன் எளிய எச்டிஎம்எல் பதிப்பை காண்பி', 'changes since mine எனது தொகுப்பிற்கு பிந்தைய வேறுபாடு', 'sinceMeHint எனது கடைசி தொகுப்பிற்கு பிந்தைய மாற்றங்களை காண்பி', 'editorListHint ஐத் தொகுத்தவர்களின் பட்டியலைக் காட்டு', 'RecentchangeslinkedHint sக்கு தொடர்புடைய கட்டுரை மாற்றங்களை காண்பி', 'defaultpopupRedlinkSummary முன்னெழு சட்டங்களைப் பயன்படுத்தி காலி பக்கம் %sக்கான இணைப்பு நீக்கப்படுகிறது', 'defaultpopupFixDabsSummary முன்னெழு சட்டங்களைப் பயன்படுத்தி %s லிருந்து %sக்கு பக்க வழி நெறிப்படுத்து', 'defaultpopupRevertToPreviousSummary முன்னெழு சட்டங்களைப் பயன்படுத்தி பதிப்பு s க்கு முந்தைய பதிப்புக்கு முன்நிலையாக்கு', 'defaultpopupRevertSummary முன்னெழு சட்டங்களைப் பயன்படுத்தி பதிப்பு %sக்கு முன்நிலையாக்கு 'defaultpopupQueriedRevertToPreviousSummary முன்னெழு சட்டங்களைப் பயன்படுத்தி $2 தேதியிடப்பட்ட,$3 ஆல் தொகுக்கப்பட்ட பதிப்பு 1க்கு முந்தைய பதிப்புக்கு முன்நிலையாக்கு', 'defaultpopupQueriedRevertSummary முன்னெழு சட்டங்களைப் பயன்படுத்தி $2 தேதியிடப்பட்ட,$3 ஆல் தொகுக்கப்பட்ட பதிப்பு 1க்கு முன்நிலையாக்கு', 'remove all links to this page from this article இந்த பக்கத்துக்கான அனைத்து இணைப்புகளையும் இந்தக் கட்டுரையிலிருந்து நீக்கு', 'remove all links to this disambig page from this article இந்த பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்துக்கான அனைத்து இணைப்புகளையும் இந்தக் கட்டுரையிலிருந்து நீக்கு', 'WhatlinkshereHint sக்கு இணைக்கப்பட்ட பக்கங்களை பட்டியலிடு', 'watchHint sஐ எனது கவனிப்புப் பட்டியலில் சேர்', 'unwatchHint sஐ எனது கவனிப்புப் பட்டியலிலிருந்து நீக்கு 'Category members s shown பகுப்பு உறுப்பினர்கள் s காண்பிக்கப்படுகிறது 'not commons இந்த பெயருடன் விக்கிமீடியா பொதுவில் எந்த கோப்பும் இல்லை 'commons only இந்தக் கோப்பு விக்கிமீடியா பொதுவிலுள்ளது 'commons dupe இதே கோப்பு விக்கிமீடியா காமன்சில் இருப்பதாகத் தெரிகிறது 'commons conflict இதே பெயரில் வேறொரு கோப்பு விக்கிமீடியா காமன்சில் இருப்பதாகத் தெரிகிறது 'edit user talk பயனர் பேச்சுப் பக்கத்தைத் தொகு', 'email user பயனருக்கு மின்னஞ்சல் அனுப்பு', 'EmailuserHint sக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பு', 'PrefixindexHint sன் பயனர் வெளியில் உள்ள பக்கங்களை காண்பி', 'katelinkHint sஆல் செய்யப்பட்ட பங்களிப்புகளை எண்ணவும்', 'blockLogHint s க்கான தடைப்பதிகையை காண்பி', 'protectLogHint s க்கான காப்புப் பதிகையை காண்பி', 'pageLogHint s பக்கத்துக்கான பதிகைகளை காண்பி', 'deleteLogHint s க்கான நீக்கல் பதிகையை காண்பி', 'Invalid %s %s விருப்பத்தேர்வு %s ஆனது செல்லத்தக்கதல்ல s', 'Enter a non-empty edit summary or press cancel to abort ஒரு காலியல்லாத தொகுப்பு சுருக்கத்தை உள்ளடவும் அல்லது ரத்துசெய்ய ரத்துசெய் பொத்தானை அழுத்தவும்', ஜே.வி.பி.யிலிருந்து அண்மையில் பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் வெளியேறிய மாற்றுக் குழுவினர் "மக்கள் போராட்ட இயக்கம்" என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் "முன்னிலை சோசலிசக் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியொன்றையும் உருவாக்கியிருந்தனர். வரும் திங்கட்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இக்கட்சியின் முதலாவது மாநாடு நடைபெறவிருக்கிறது. காணாமல் போயுள்ள இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லையென காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஆத்திரேலியக் குடியுரிமை பெற்றவரான பிரேம்குமார் குணரட்ணம் காணாமற் போனது குறித்து கொழும்பிலுள்ள ஆத்திரேலியத் தூதரகத்தில் முறையிடப்பட்டுள்ளது. பிரேம்குமாரின் சகோதரர் ரஞ்சிதம் குணரத்தினம் 1989 ஜேவிபி கிளர்ச்சியின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். வடக்கு நைஜீரியாவில் கடூனா நகரில் இடம்பெற்ற இரண்டு வாகனக் குண்டுவெடிப்புகளில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். நகரின் மத்திய பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கு அருகில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. பல கட்டடங்கள் சேதமுற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மதச் சார்பு வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு திருநாளையொட்டி இங்கு வன்முறைகள் இடம்பெறலாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இத்தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை, ஆனாலும், போக்கோ ஹராம் என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழுவினர் உயிர்த்த ஞாயிறன்று தாம் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறியிருந்தது. மேற்காப்பிரிக்க நாடான மாலியில் இராணுவப் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவக் கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் அமடோ தவுரே தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது பதவி விலகைலை புர்க்கினா ஃபாசோவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் மாலிக்கான பன்னாட்டு அமைதித் தூதருமான ஜிப்ரில் பசோல் உறுதிப்படுத்தியுள்ளார். அமைதி உடன்பாட்டின் படி இராணுவப் புரட்சித் தலைவர்கள் ஆட்சியை நாடாளுமன்ற அவைத்தலைவருக்குக் கையளிப்பர். அவைத்தலைவர் புதிய இடைக்கால அரசு ஒன்றை அமைப்பார், பின்னர் 40 நாட்களுக்குள் தேர்தலுக்கான தேதியை அவர் அறிவிப்பார். எக்கோவாஸ் சார்பாக புர்க்கினா ஃபாசோ அமைச்சர் ஜிப்ரில் பசோல் மாலி அரசுத்தலைவர் தவுரேயை மாலியின் தலைநகர் பமாக்கோவில் சந்தித்தார். புதிய உடன்படிக்கையை அடுத்து மாலி மீதான பொருளாதாரத் தடை விலக்கப்படுவதாக எக்கோவாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இராணுவப் புரட்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது. வாக்குப்பதிவுகள் அமைதியாகவும் மோசடி எதுவுமில்லாமலும் நடைபெற்றதாக உருசியாவில் இருந்து சென்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் இந்த வாக்குப்பதிவை நிராகரித்திருக்கின்றன. தெற்கு ஒசெத்தியா இன்னும் ஜோர்ஜியாவின் ஒரு பகுதி என்றே இரண்டு நாடுகளும் கருதுகின்றன. தெற்கு ஒசேத்தியாவை உருசியா உட்பட சில நாடுகளே அங்கீகரித்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித்தலைவர் அல்லா ஜியோயேவா வெற்றி பெற்றார். ஆனாலும், வாக்கெடுப்பில் ஜியோயேவா சார்பில் பெரும் மோசடி நிகழ்ந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அத்தேர்தலை நிராகரித்திருந்தது மட்டுமன்றி ஜியோயேவா இரண்டாம் கட்டத் தேர்தலில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஆத்திரேலியக் குடியுரிமை பெற்ற பிரேம்குமாரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு இலங்கை அரசுக்கு ஆத்திரேலியா கடும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. இந்த நிலையிலேயே நேற்றிரவு குணரத்தினம் கொழும்புக்கு அருகேயுள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு அருகில் இறக்கிவிடப்பட்டார். அவர் பின்னர் காவல்நிலையத்துக்குச் சென்று தன்னை வெளிப்படுத்தியதாக ஆத்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் இன்றுகாலை அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார். இலங்கைக்கான ஆத்திரேலியத் தூதர் பிரேம்குமாரை கொழும்பு விமானநிலையத்தில் வைத்து வழியனுப்பி வைத்தார். இதற்கிடையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமாருடன் கடத்தப்பட்ட, அந்தக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவி திமுத்து ஆட்டிகல இன்று காலை 10 மணியளவில் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள மடவெல பகுதியில் வைத்து கடத்தல்காரர்கள் இவரை விடுவித்துள்ளனர். கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுத்து ஆட்டிகல வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆறு பேர் எனது கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். அவர்கள் என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர். அதிகாலை 5 மணியளவில் கடத்தல்காரர்கள் குணரத்தினத்தையும் என்னையும் விசாரணைக்கு உட்படுத்தினர். நீங்கள் இல்லையென்றால், தலைவர் இல்லாமல் உங்களின் கட்சியின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விடுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த இரவு நான் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை வரை அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். தம்மை அடையாளம் காண முனையவோ, வாகன இலக்கத்தைக் குறிப்பெடுக்கவோ கூடாது என்று கடத்தல்காரர்கள் என்னிடம் கூறினர். இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்றும் கடத்தல்காரர்கள் என்னிடம் கூறியிருந்தனர் என்று திமுத்து ஆட்டிக்கல கூறினார். மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இலிருந்து கடந்த ஆண்டு பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் வெளியேறிய மாற்றுக் குழுவினர் "மக்கள் போராட்ட இயக்கம்" என்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் "முன்னிலை சோசலிசக் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியொன்றையும் உருவாக்கியிருந்தனர். நேற்று திங்கட்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இக்கட்சியின் முதலாவது மாநாடு நடைபெற்றது. இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மாற்றுக் குழுத் தலைவர்கள் இருவர் கடத்தப்பட்டனர் ஏப்ரல் 8, 2012 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தமிழகத்தில் திருச்சி, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், பெங்களூரு மற்றும், இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மாலை 4:17 மணிக்கு சென்னையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுனாமி இந்தியாவை தாக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளது. சுனாமியால் ஏற்பட்ட சேத நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்ல. வடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம் சனவரி 11, 2012 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. பெருவில் சுரங்கம் ஒன்றினுள் பாறை ஒன்று வீழ்ந்ததில் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த 9 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவின் தெற்குப் பகுதியில் கபேசா டி நேக்ரோ என்ற இடத்தில் உள்ள செப்புச் சுரங்கம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டு 200 மீட்டர் ஆழத்தில் 9 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். இவர்களை வெளியே மீட்கும் பணி ஆரம்பிக்கபட்டு இன்று புதன்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. வெளியே கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை அவர்களது உறவினர்களும், பெருவின் அரசுத்தலைவர் ஒலாண்டா உமாலாவும் வரவேற்றனர். தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரங்களின் போது 23 முஸ்லிம்களைப் படுகொலை செய்த குற்றங்களுக்காக 18 பேருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 5 பேருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஓடே என்ற ஊரில் 2002 மார்ச் 1 ஆம் நாள் வீடொன்றில் தஞ்சமடைந்திருந்த 23 முஸ்லிம்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இறந்தவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இவர்கள் மேன்முறையீடு செய்யவிருப்பதாக குற்றவாளிகள் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் தெரிவித்தார். குஜராத் வன்முறைகளின் போது 10 நிகழ்வுகள் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் மூன்றாவது தீர்ப்பு இதுவாகும். 47 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஒருவர் வழக்குக் காலத்தில் இறந்து விட்டார். குஜராத்தில் சர்தார்ப்புரா கிராமத்தில் 33 முஸ்லிம்களை உயிருடன் தீயிட்டுக் கொலை செய்த நிகழ்வில் கடந்த ஆண்டு 2011 நவம்பரில் 31 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. சபர்மதி தொடருந்தில் 59 இந்துப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கடந்த ஆண்டு பெப்ரவரியில், 11 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். 2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு மார்ச் 1, 2012 2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு சூன் 30, 2011 சூடானின் எண்ணெய் உற்பத்தியின் அரைவாசிப் பகுதி ஹெக்லிக் நகரில் இருந்தே பெறப்படுகின்றன. இப்பகுதி சூடானுக்குச் சொந்தமானது என பன்னாட்டுச் சமூகம் அங்கீகரித்துள்ளது, ஆனாலும், தெற்கு சூடான் இதற்கு இணங்க மறுத்து வருகின்றது. யுனிட்டி மாநிலத்தில் சூடான் மொத்தம் ஐந்து குண்டுகளை வீசியது. இத்தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்தனர். வட கொரியா ஏவிய ராக்கெட் ஐக்கிய நாடுகளினால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட நீண்டதூர ஏவுகணைத் திட்டம் எனப் பல நாடுகளால் சந்தேகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தமது தேசியத் தலைவர் கிம் இல்-சுங்கின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் முகமாக செயற்கைக்கோள் ஒன்றை பூமியின் சுற்றுப்பாதைக்குச் செலுத்தவே இந்த ராக்கெட் ஏவப்பட்டது என வட கொரியா தெரிவித்துள்ளது. திட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும், ராக்கெட் ஏவப்பட்டதை அமெரிக்கா கடுமையாகச் சாடியிருக்கிறது. ராக்கெட் ஏவப்பட்டது வருந்தத்தக்கது என ஐநா செயலர் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார். தமது வான்பரப்பில் இந்த ராக்கெட் செல்லுமானால் அதனைச் சுட்டு வீழ்த்துவோம் என வட கொரியாவும், யப்பானும் எச்சரித்திருந்தன. மேற்கு ஆப்பிரிக்காவின் கினி-பிசாவு நாட்டில் இராணுவத்தினர் தலைநகரின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிசாவு நகரிலும், பிரதமர் கார்லொசு கோமசுவின் இருப்பிடத்தை சுற்றியும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. தேசிய வானொலி, மற்றும் ஆளும் கட்சியின் பணிமனையையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ஆனாலும் இராணுவத்தினர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த மாதம் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் கோமசு வெற்றி பெற்றிருந்தாலும், அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இதனால் தேர்தல்கள் இன்னும் முடிவுறாமல் உள்ளன. இரண்டாம் கட்டத் தேர்தல் எப்ரல் 29 ஆம் நாளுக்கு ஏற்பாடாகியிருந்தது. கோமசு, மற்றும் இடைக்கால அரசுத்தலைவர் ரைமுண்டோ பெரெய்ரா ஆகியோர் தற்போது எங்கிருக்கின்றனர் எனத் தெரியவில்லை. 1974 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா சுட்டுக் கொல்லப்பட்டார். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு போதைப்பொருள் கினி-பிசாவு ஊடாகவே கடத்தப்பட்டு வருகிறது. கினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி ஏப்ரல் 1, 2010 தெற்கு ஆத்திரேலியாவின் தாஸ்மானியா தீவில் இருந்து எடுக்கப்பட்ட உவர் சேற்று நில மண்ணின் படிவுகளின் மாதிரிகளில் இருந்து கடந்த 200 ஆண்டுகளில் கடல்நீர் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. "மொத்தமாக, கடந்த 200 ஆண்டுகளில் இப்பகுதியில் கடல்மட்டம் 20 செண்டிமீட்டர்களினால் அதிகரித்துள்ளது குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் பட்ரிக் மொஸ் தெரிவித்தார் தாஸ்மானியா அருகில் கடல்மட்டம் 1880 வரையில் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஏறத்தாழ நிலையாக இருந்திருக்கிறது. 1880ம் ஆண்டுக்குப் பின்னரே நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது." புவியின் பனிப் பிரதேசங்களில் 500 ஆண்டுகால குளிரான தன்மை 1850 ஆம் ஆண்டு வாக்கில் குறையத் தொடங்கியதை இதற்குக் காரணமாகக் கருதலாம். இதைத்தொடர்ந்து பனியாறுகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல்மட்டம் பசிபிக் பகுதியில் உயரத் தொடங்கியது. இப்போது பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதால் இந்த எச்சரிக்கை அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும். இது குறித்த ஆய்வுக்கட்டுரை பூமி மற்றும் கோள் அறிவியலுக்கான ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஆத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் நியூசிலாந்து ஆய்வாளர்கள் பங்குபற்றினர். தலைநகரின் அருகேயுள்ள ஏரிக்கரை ஒன்றில் இந்த ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் நால்வர் 20 வயதிற்கும் குறைந்தவர்கள் என்றும், ஐந்தாமவர் 40 வயதானவர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் உடல்களில் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன. இப்படுகொலைகள் தொடர்பாக எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. கடந்த மாதம் மக்கெடோனியாவின் சிலாவிய மொழி பேசும் பெரும்பான்மை இளைஞர்களுக்கும், அல்பேனிய சிறுபான்மை இளைஞர்களுக்கும் இடையே கலவரம் இடம்பெற்றிருந்தது. இக்கலவரத்தின் போது 7 பேர் உயிரிழந்தனர். நேற்றைய படுகொலைகள் சென்ற மாதக் கலவரத்துடன் தொடர்புடையதா எனக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இப்படுகொலைகளை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரி உள்ளூர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதை அடுத்து கலவரம் அடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் இக்குழு இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சென்று அங்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு சகோதரரும், அவைத்தலைவருமான சாமல் ராஜபக்சவைச் சந்திக்கின்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுகிறது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் சில இந்த குழுவால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளன. மதிமுக தலைவர் வைகோ இந்த பயணத்தினால் எந்த பயனும் இல்லை என கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதா ஆகியோர் தாங்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற போவதில்லை என கூறியுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி, ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் சென்ற குழுவினரின் அனுபவத்தில் இருந்து இந்த குழுவின் பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என அறிந்து கொண்டதாக கூறியுள்ளார். இதேவேளையில், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவினர்களுக்கு இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் உறவுகளின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். கப்பல் மூழ்கிய வடக்கு அத்திலாந்திக் கடலில் எம்எஸ் பால்மோரல் என்ற பயணிகள் கப்பலில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இறந்த 1,517 பேரையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட நேரம் மௌனம் செலுத்தப்பட்டு கடலில் மலர்களும் தூவப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பெல்பாஸ்ட் நகரில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. பெயர்கள் அகரவரிசைப்படி பொறிக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் மிகப் பெரிய சொகுசுக் கப்பலான டைட்டானிக் வட அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்டில் தயாரிக்கப்பட்டது. நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். டைட்டானிக் கப்பல் சென்றிறங்க வேண்டியிருந்த நியூயோர்க் நகரத்திலும் மற்றும் பல இடங்களிலும் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன. கோடீசுவரர்கள் முதல் ஏழை குடியேற்றவாதிகள் வரை 1,300 பயணிகளும், 900 சிப்பந்திகளும் டைட்டானிக்கில் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து 1912 ஏப்ரல் 10 ஆம் நாள் தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தது. நியூயோர்க் செல்வதற்கு முன்னர் பிரான்சின் செர்பூர்க், அயர்லாந்தின் குயீன்ஸ்டவுன் ஆகிய துறைமுகங்களிலும் தரித்துச் சென்றது. 1912 ஏப்ரல் 14 உள்ளூர் நேரம் 23:40 மணிக்கு பனிப்பாறை ஒன்றுடன் கப்பல் மோதியது. கப்பல் முழுமையாக மூழ்க இரண்டரை மணி நேரம் பிடித்தது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F 2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி என உயிர் தப்பிய கப்பல் அதிகாரியின் பேத்தி விளக்கம் செப்டம்பர் 24, 2010 டைட்டானிக் நடிகை குளோரியா ஸ்டுவர்ட் தனது 100 வது அகவையில் காலமானார் செப்டம்பர் 28, 2010 ஆப்கானித்தானின் தலைநகர் காபூலின் பல இடங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோ தலைமையகம், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் ஆகிய பல இடங்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. குறைந்தபட்சம் 24 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், 7 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நேட்டோ அறிக்கைப்படி காபூலில் ஏழு இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் வீழ்ந்த சிறுகோள் (asteroid) ஏற்படுத்திய குழியை ஆராய்ந்த எடின்பரோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் அங்கு உயிரினங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறான குழிகள் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். வேறு கோள்களில் உள்ள இவ்வாறான குழிகள் உயிரினங்களை மறைத்து வைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நுண்ணுயிர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் செசாபீக் என்ற இடத்தில் உள்ள சிறுகோள் தாக்கிய குழி ஒன்றில் 2 கிமீ ஆழத்திற்கு ஆய்வாளர்கள் தோண்டினர். நுண்ணுயிர்கள் பாறைகள் முழுவதும் பரந்து காணப்பட்டதாக மண் மாதிரிகள் தெரிவிக்கின்றன. சிறுகோள் மோதியதால் விளைந்த வெப்பம் காரணமாக மேற்பரப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கும் எனவும், ஆனால் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளின் வெடிப்புகளில் உயிர் வாழ்வதற்கு ஏதுவான நீர் மற்றும் ஊட்டப் பொருட்கள் தடையின்றிச் செல்லக்கூடியதாக இருக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். "செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதை உறுதிப்படுத்த இவ்வாறான குழிகளை ஆராய்வது நன்மை பயக்கும் என எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்ல்ஸ் கொக்கெல் தெரிவித்தார். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று வானுயிரியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கிர்கித்தானில் இடம்பெற்று வரும் எதிர்ப்புப் போராட்டங்களை நிறுத்தக் கோரி வயோதிபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை 73 வயதான வயோதிபர் தன் உடல் மீது எரிபொருளை ஊற்றித் தனக்குத் தானே தீ மூட்டினார் என கிர்கித்தானின் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. உடம்பில் 96 வீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த நபர் இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த நபரின் கோரிக்கை என்னவென்பது உறுதியாகத் தெரியவில்லை எனக் கூறிய காவல்துறையினர், அவர் தன்னுடன் எடுத்துச் என்ற பதாகைகளையும் சேர்த்து எரித்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆனாலும், இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அந்த வயோதிபர் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஆர்ப்பட்டங்களால் மனமுடைந்து போயிருந்ததாகவும், இதனால் அவர் நாட்டில் ஒழுங்கைப் பேண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன் தனது மனைவி மிகக் கடுமையாகச் சுகவீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனக் கோரியதாகவும் தெரிகிறது. சூடானிய இராணுவம் எக்லிக் நகரில் இருந்து தெற்கு சூடான் மீது தாக்குதல் நடத்தி வந்தது என தெற்கு சூடான் குற்றம் சாட்டியிருக்கிறது. இரண்டு நாடுகளும் தற்போது முழுமையான போரில் ஈடுபடுவதற்கான் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். தெற்கு சூடானின் எல்லையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை முகாம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூடானின் விமானத் தாக்குதலுக்குள்ளானது. எவரும் காயமடையவில்லை. ஆனாலும் வேறு தாக்குதல்களில் 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். தெற்கு சூடான் கடந்த ஆண்டு சூலை மாதத்தில் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. ஆனாலும், எண்ணெய் வளப் பகுதிகள், மற்றும் எல்லைகள் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே நீண்டகால சர்ச்சை இருந்து வருகிறது. எக்லிக் நகரை எந்த விலை கொடுத்தும் மீண்டும் கைப்பற்றுவோம் என சூடான் சூளுரைத்திருக்கிறது. சூடானின் எண்ணெய்த் தேவையில் அரைவாசிப் பங்கு எக்லிக் இலிருந்து பெறப்படுகிறது. இப்பகுதி சூடானுக்குச் சொந்தமானது என ஏற்கனவே ஐநா உட்படப் பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் அதன் எல்லை வரையறுக்கப்படவில்லை. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ருவாக் 61% வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பிரான்சிசுக்கோ குட்டரெசு 39% வாக்குகளையே பெற்றுள்ளார். தற்போது சனாதிபதியாக இருக்கும் ஒசே ரமோசு-ஓர்ட்டா முதற்கட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து இரண்டாம் கட்டத்தில் அவர் போட்டியிட முடியவில்லை. கிழக்குத் திமோரில் சனாதிபதிப் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாகவே கருதப்படுகிறது. பிரதம மந்திரி சகானா குஸ்மாவோ அரசுத்தலைவராக உள்ளார். அதிகாரபூர்வமான முடிவுகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் போட்டியிட்ட இருவருமே 20 ஆண்டுகால இந்தோனேசிய ஆட்சியில் கிழக்குத் திமோரின் விடுதலைக்காக போராடியவர்களில் முக்கியமானவர்கள். மூன்றாண்டுகள் ஐக்கிய நாடுகளின் ஆட்சியில் இருந்த கிழக்குத் திமோர் 2002 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் படைவீரர்கள் அந்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையினர் 2006 ஆம் ஆண்டில் அங்கு சென்றனர். அடுத்த சூலை மாதத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை அடுத்து அமைதிப் படையினர் அங்கிருந்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. லாயி என்ற கரையோர நகரில் இருந்து 137 கிலோமீட்டர் வடக்கே 202 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தெற்குக் கரையில் உள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பப்புவா நியூ கினி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலநடுக்கத்தினால் சேதங்களஓ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை, அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதுவரை சீனா, உருசியா, பிரான்சு, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை மட்டுமே இவ்வாறான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ளன. இன்று இடம்பெற வேண்டிய சோதனை மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானித்தானில் இருந்து தமது படையினரை 2013 ஆம் ஆண்டுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவர் என ஆத்திரேலிய அரசு அறிவித்துள்ளது. முன்னர் 2014 ஆம் ஆண்டுக்குள் திரும்ப அழைப்பதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆப்கானித்தானின் மத்திய உருஸ்கான் மாகாணத்திலேயே ஆத்திரேலியப் படையினர் பெரும்பாலும் தங்கியுள்ளனர். இவர்கள் அங்கே ஆப்கானிய இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். ஒசாமா பின் லாடன், மற்றும் அல்-கைதாவின் முக்கிய உறுப்பினர்கள் அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்தே ஆத்திரேலியா தனது படைவிலகலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்குள் பெருமளவு படையினர் திரும்ப அழைக்கப்பட்டு விடுவர். ஆனாலும், சில சிறப்புப் படையினர் அங்கு 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இருப்பர் என ஜூலியா கிலார்ட் தெரிவித்தார். 2001 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் மீது படையெடுத்து தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியதில் இருந்து அங்கு இதுவரையில் 32 ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலியா கிலார்டின் ஆளும் தொழிற்கட்சி ஆத்திரேலியாவில் பெருமளவு செல்வாக்குக் குறைந்து காணப்படுகிறது. இதனாலேயே தமது செல்வாக்கை மீளப் பெறுவதற்காகவே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த ஏவுகணை சோதனை முயற்சி இந்தியாவின் ஏவுகணை சோதனை மற்றும் மேம்பாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என கூறியுள்ளார். மேலும் இதற்காக உழைத்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா அதிகாரப்பூர்வமாக கூறாவிட்டாலும் இந்த ஏவுகணை சோதனை முயற்சி சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவும் என கூறப்படுகிறது. இதுபற்றி சீனா உடனடியாக எதுவும் கூறாவிட்டாலும் சீன அரசுத் துறை நிறுவனமான சீன சென்ட்ரல் தொலைக்காட்சி (CCTV) இந்தியாவிற்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும் என கூறியுள்ளது. இந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது ஏப்ரல் 18, 2012 கிரொலாமோ டி ரொமானியினால் வரையப்பட்ட சிலுவையைச் சுமந்து செல்லும் கிறித்து என்ற ஓவியம் பிரெட்ரிக்கோ ஜெண்டிலி டி சூசெப்பு என்பவரின் கலையகத்தில் இருந்து திருடப்பட்ட 70 ஓவியங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிகாரிகளினால் இந்த ஓவியம் கைப்பற்றப்பட்டது. ஜெண்டிலி 1940 ஆம் ஆண்டு காலமானார். இவரது சேகரிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு அரசினால் 1941 ஆம் ஆண்டில் விற்கப்பட்டன. மிலானில் உள்ள அருங்காட்சியகம் 1998 ஆம் ஆண்டில் இந்த ஓவியங்களை விலைக்கு வாங்கியது. பின்னர் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு ஐம்பதாண்டுகளுக்குக் கடனாக வழங்கப்பட்டன. அதன் பின்னரே இவை திருடப்பட்ட ஓவியங்களென சந்தேகிக்கப்பட்டு இண்டர்போலிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஜெண்டிலியின் பேரப் பிள்ளைகள் 1997 இல் வழக்குத் தொடர்ந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் பாரிசில் உள்ள அருங்காட்சியகம் ஐந்து ஓவியங்களை ஓவியரின் குடும்பத்துக்குத் தந்தது. நூரானியா ஹசன் (பௌசுல் ஹசன்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளரும் தற்போது அதன் சந்தைப்படுத்தல் முகாமையாளரும், மூத்த ஒலிபரப்பாளரும் ஆவார். முஸ்லிம் சேவைப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சூடானின் எல்லைப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஹெக்லிக் எண்ணெய் வயல் பகுதியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெற்கு சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் இன்று தமது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். சூடானிய அரசு ஹெக்லிக் நகரில் இருந்து தம் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டி தெற்கு சூடானியப் படைகள் சென்ற வாரம் ஹெக்லிக் பகுதியைக் கைப்பற்றினர். ஆனாலும், இந்த ஆக்கிரமிப்பு சட்ட விரோதமானது எனக் கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் டெஹ்ற்கு சூடானியப் படையினர் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், அத்துடன் தெற்கு சூடான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அவர் சூடானைக் கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மூண்ட இப்பிரச்சினை ஒரு முழு அளவான போரைத் தோற்றுவிக்கும் அபாயம் உருவாகியிருந்தது. தெற்கு சூடானின் இன்றைய அறிவித்தல் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வழிவகுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மூன்று நாட்களுக்குள் முழுப் படையினரும் திரும்பி விடுவர் என தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. ஹெக்லிக் தெற்கு சூடானின் பகுதி எனத் தாம் இப்போதும் நம்புவதாகவும், பன்னாடுகளின் ஒத்துழைப்புடன் நாம் இதற்கு ஒரு தீர்வைக் காணுவோம் என அரசுத்தலைவர் கூறினார். ஹெகிலிக் சூடானின் பகுதி என உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. பாக்கித்தானில் போஜா ஏர் ஜெட் (BHO-213) விமானம் கராச்சியிலிருந்து இசுலாமாபாத் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக சக்லாலா, ராவல்பிண்டி அருகே விழுந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இசுலாமாபாத் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே நிகழ்ந்துள்ளது. இவ்விமானம் 117 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் கொண்ட குழுவினருடன் சென்ற போயிங் 737 வகை விமானம் என நம்பப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்ததாகவும் அதனால் விமானம் முழுவதும் எரிந்து போனதாகவும் கூறப்படுகிறது. இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நேற்று வெள்ளி இரவும் இன்று சனி அதிகாலையும் சில மணி நேரத்தில் பல தடவைகள் நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கங்கங்களால் உயிரிழப்புகளோ அல்லது பெருமளவு சேதங்களோ இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இன்று பிற்பகல் 4-4:30 மணி அளவில் 15 முதல் 20 வரையான மாவோயிசத் தீவிரவாதிகள் அலெக்ஸ் மேனன் பயணம் செய்த வாகனத்தை மறித்து அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். மாநில அரசின் "கிராம சுவராஜ் அபிஜான்" என்ற வேலைத்திட்டத்தில் பங்கு கொண்டு விட்டு திரும்பி வரும் போதே இவர் கடத்தப்பட்டுள்ளார். 32 வயதுடைய ஆட்சியர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டார். மாவோயிசத் தீவிரவாதிகளின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும். கிராம அபிவிருத்தித் திட்டங்களில் திரு. மேனன் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்பவர். நக்சலைட்டுகளினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தவர்களை புனர்வாழ்வளித்து அவர்களை வழமையான வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதற்கு மாநில அரசின் வேலைத்திட்டங்கள் உதவுகின்றன. இவ்வேலைத்திட்டங்களை மாவோயிசவாதிகள் விரும்பவில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர். மேனன் கடத்தப்பட்ட அதே பகுதியில் சென்ற மாதம் மாநில ஆளும் கட்சி பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜீனா இக்காக்கா என்பவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவரை விடுவிப்பதற்கு தமது 29 கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் கோரியிருக்கின்றனர். இந்த 29 பேரில் 8 மாவோயிஸ்டுகள் உட்பட 25 பேரை மட்டும் விடுவிப்பதற்கு மாநில அரசு இணங்கியுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த பிலிப்சு நிறுவனம் இந்த விளக்குகளை உருவாக்கியுள்ளது. மிக நீண்ட காலம் பாவிக்கக்கூடிய இந்த விளக்குகளின் அறிமுக விலையாக 60 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் 100 வாட்டு வலுவுள்ள வெள்ளோளிர்வு விளக்குகளின் தயாரிப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. 60 வாட்டு வலுவுள்ள விளக்குகளின் தயாரிப்பு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டு விட்டன. அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டு விடும். 2014 ஆம் ஆண்டில் இருந்து 40 வாட்டு அல்லது அதற்கு மேல் இவ்விளக்குகளைப் பயன்படுத்தப்படுவது 2014 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்படும். உறுதிமொழி எடுப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக சனநாயகத்துக்கு ஆதரவான ஆங் சான் சூச்சியின் கட்சியினரின் ஒன்றியொதுக்கலையும் பொருட்படுத்தாது பர்மிய நாடாளுமன்றம் இன்று கூடியது. அரசியலமைப்பைப் "பாதுகாப்போம்" என்பதை விட "மதிப்போம்" என உறுதிமொழி எடுப்பதாக மக்களாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பது என்பது சனநாயகத்திற்கு எதிரானது என அவர்கள் கருதுகின்றனர். உறுதிமொழி வாசகங்கள் மாற்றப்பட்டால் மட்டுமே தாம் நாடாளுமன்றத்தில் பங்கேற்போம் என தேசிய முன்னணியின் பேச்சாளர் ஓன் கியாயிங் தெரிவித்தார். ஆனாலும் இந்தப் பிரச்சினை மிக விரைவில் தீர்த்து வைக்கப்படும் என அக்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 1 ஆம் நாள் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 45 இடங்களில் 43 ஐ தேசிய முன்னணி கைப்பற்றியிருந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஆங் சான் சூச்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றார். பர்மாவின் அரசியலமைப்பு 2008 ஆம் ஆண்டில் அந்நாட்டின் இராணுவத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத்தில் 25 வீதமான உறுப்பினர்கள் இராணுவத்தில் இருந்து நியமிக்கப்படுவார்கள். இராணுவத்தினரும் பர்மிய இராணுவத்துக்குச் சார்பான ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் நாடாளுமன்றத்தில் 80 விழுக்காடு உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆங் சான் சூச்சியின் தேசிய முன்னணியினர் பங்குபற்றவில்லை. இதற்கிடையில், பர்மாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஓராண்டுக்கு விலக்கி வைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் ஆயுத விற்பனைத் தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் ஏற்கனவே சில தடைகளை விலக்குவதாக அறிவித்துள்ளன. 1915 ஏப்ரல் 24 இல் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் இன்று வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. 1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு சனவரி 24, 2012 ஆனாலும், இத்திட்டம் மிகவும் துணிச்சல் மிக்கதெனவும், சிரமமானது எனவும், விலை உயர்ந்ததெனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாட்டினம், தங்கம் ஆகியன அவுன்ஸ் 1,600 டாலர்களாக இருக்கையில், இத்திட்டம் எவ்வாறு விலை பயன் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறுகோள் ஒன்றில் இருந்து 60 கிராம் பொருள் ஒன்றை எடுத்து வருவதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா தனது அடுத்த திட்டத்தில் செலவழிக்கவிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் விண்வெளியில் கனிவளம் அதிகமுள்ள சிறுகோள்களைக் கண்டறிவதற்கு நுண்தொலைநோக்கிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பூமிக்குக் கிட்டவாகச் செல்லும் ஆயிரக்கணக்கான சிறுகோள்களை இத்தொலைநோக்கிகள் ஆராயும். இந்தியா வரை செல்லக்கூடிய சாகீன்-1ஏ என்ற இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் 1998 ஆம் ஆண்டில் அணுவாயுதங்களை வெற்றிகரமாகச் சோதித்திருந்தன. பாக்கித்தான் செலுத்திய ஏவுகணை 2,500 முதல் 3,000 கிமீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர், ஆனாலும் பாக்கித்தான் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது ஏப்ரல் 19, 2012 ஒரிசாவின் நாராயன்பட்னா காட்டுப்பகுதியில் பாலிபெட்டா கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜீனா இக்காக்கா என்பவரை வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் என்பவரிடம் மாவோயிஸ்டுகள் கையளித்தனர் நான் நலமே உள்ளேன். அவர்கள் என்னை எவ்விதத்திலும் துன்புறுத்தவில்லை,"என ஜீனா இக்காக்கா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பொதுக்கூட்டம் ஒன்றில் பங்குபற்றி விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் கடந்த மார்ச் 24 ஆம் நாள் இவர் கடத்தப்பட்டார். இருபதுக்கும் அதிகமான மாவோயிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அரசு சிறையில் இருந்து விடுவிக்க ஒப்புக்கொண்ட பின்னரே இவர் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரு. இக்காக்கா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தம்மிடம் உறுதியளித்துள்ளார் எனவும் அதன் பின்னரே இவரை விடுவிக்கத் தமது மேலிடம் கட்டளை பிறப்பித்ததாகவும் போராளிகளின் பேச்சாளர் ஒருவர் நேற்று விடுத்த வாய்மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார். இக்காக்கா கடத்தப்படுவதற்கு முன்னர் இரண்டு இத்தாலியச் சுற்றுலாப் பயணிகள் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு ஒருவர் மார்ச் 25 இலும், மற்றவர் ஏப்ரல் 12 ஆம் நாளும் விடுவிக்கப்பட்டனர். 64 வயதுடைய சார்ல்ஸ் டெய்லர் கடந்த ஐந்து ஆண்டு காலமாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார். டெய்லருக்கு எதிரான தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்மானம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்துத் தெரிவித்துள்ளது. சியேரா லியோனியில் 1991 2002 ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்யப் போராளிகளைத் தூண்டினார் அல்லது அவர்களுக்கு உதவி புரிந்தார் என டெய்லர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தீவிரவாதம், படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகியவற்றுக்குத் துணை போனார் என உட்பட 11 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. 1997 ஆம் ஆண்டு லைபீரிய அரசுத்தலைவராக சார்ல்சு டெய்லர் தெரிவு செய்யப்பட்டார். சியேரா லியோனியில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 120,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் அங்கவீனமடைந்ததுடன், போதையேறிய கிளர்ச்சியாளர்களால் இவர்களில் பலர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்களிடமிருந்து பெறுமதியான இரத்தினக்கற்களை பெற்றுக்கொண்டு அவற்றுக்குப் பதிலாக ஆயுதங்களை வழங்கியதாக சார்ல்ஸ் டெய்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சார்ல்சு டெய்லருக்கு எதிரான தீர்ப்பு குற்றம் புரியும் அனைவருக்கும், குறிப்பாக உயர் பதவியில் இருக்கும் அனைத்துக் குற்றவாளிகளுக்கும் ஓர் எச்சரிக்கை என அமெரிக்க அரசத் திணைக்களம் கூறியுள்ளது. குற்றம் புரிபவர்கள் எவரானாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. சார்ல்ஸ் டெய்லருக்கான தண்டனை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னாள் லைபீரியத் தலைவருக்கெதிரான விசாரணையில் நவோமி காம்ப்பெல் சாட்சியம் ஆகத்து 6, 2010 முதல் இரண்டு குண்டுகளும் திராம் பேருந்து தப்பிடத்துக்கு அருகிலும், அருகில் உள்ள திரைப்பட மாளிகை அருகிலும் வெடித்துள்ளன. குண்டுகள் அனைத்தும் கழிவுக் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டிருந்தன. இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவி யூலியா தொமோசென்கோ தினேப்பிர்பெத்ரோவ்ஸ்க் நகரைச் சேர்ந்தவர். திமோசென்கோ கைது செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள நிலையிலேயே இந்தக் குண்டுவெடிப்புகள் இன்று நிகழ்ந்துள்ளன. 2004 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற மேற்கத்தியவாதிகளுக்கு ஆதரவான புரட்சிக்கு திமோசென்கோ தலைமை வகித்தவர், ஆனாலும் 2010 தேர்தலில் உருசியாவுக்கு ஆதரவான யானுக்கோவிச் வெற்றி பெற்றார். இவ்வாண்டு கோடை காலத்தில் யூரோ 2012 காற்பந்துப் போட்டிகள் உக்ரைனில் நடைபெறவிருக்கின்றன. உக்ரைனின் முன்னாள் பிரதமர் திமொசென்கோவுக்கு ஏழாண்டுகள் சிறை அக்டோபர் 12, 2011 பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆளும் கூட்டணிக் கட்சி எதிர்வரும் தேர்தலில் தற்போதைய தேர்தல் முறையால் பெரிதும் பயனடையும் என எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இது மிகப் பெரிதாகும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறைந்தது 20 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25,000 பேர் வரை கலந்து கொண்டதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனால் 80,000 பேர் வரையில் கலந்து கொண்டதாக சில மலேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியின் ஆதரவுடன் பேர்சி என்ற அமைப்பு இந்தப் பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. ஆனாலும், நகரத்தின் முக்கியமான மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 2017 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தக்கூடியதாக இந்த செயற்கைக்கோள் அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான மொத்தச் செலவு 300 மில்லியன் யூரோக்கள் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளி யுகத்தில் ஐக்கிய இராச்சியம் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த ஏப்ரல் 26 ஆம் நாள் அன்று இதற்கான ஒப்பந்தம் ஈசா என்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்திற்கும், ஆஸ்ட்ரியம் யூகே என்ற நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. 1962 ஏப்ரல் 26 ஆம் நாள் ஏரியல்-1 என்ற செயற்கைக்கோளை பிரித்தானியா விண்ணுக்கு ஏவியது. சோலோ என்ற சூரிய விண்சுற்றுக்கலம் விண்ணில் ஏவப்பட்டு, சூரியக் குடும்பத்தின் உட்பகுதியை நோக்கிச் செலுத்தப்படும். சூரியனில் இருந்து 42, மில்லியன் கிமீ தூரம் வரை இது செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோலோ விண்கலத் திட்டத்தில் ஈசாவுடன் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனமும் இணைந்திருக்கிறது. விண்கலத்தை ஏவுவதற்கான ஏவுகலன், மற்றும் ஒரு உபகரணம் ஆகியவற்றை நாசா வழங்கும். ஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்தில் நியூரி என்ற இடத்துக்கு அருகில் 270 கிகி வெடிமருந்துகள் கொண்ட குண்டு ஒன்று வெடிக்கக்கூடிய நிலையில் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கைவிடப்பட்ட வாகனம் ஒன்றில் இந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்தமை வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலையில் இது பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் நியூரி நீதிமன்ற வளாகத்தில் வெடித்த குண்டிலும் பார்க்க இது இரு மடங்கு எனக் காவல்துறை உயர் அதிகாரி அலிஸ்டர் ரொபின்சன் தெரிவித்தார். இது வெடித்திருந்தால் 100 மீட்டர் சுற்றளவில் பெருமளவு சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும் என அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக வடக்கு அயர்லாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பிரிந்து சென்ற குடியரசு துணை இராணுவக் குழுக்கள் மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நைஜீரியாவின் வடக்கே கானோ நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, மற்றும் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். பயேரோ பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் கிறித்தவர்களின் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். குண்டுதாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எக்குழுவும் இத்தாக்குதலுக்கு உரிமை கோராவிடினும், அண்மைக் காலங்களில் இப்பகுதியில் கிறித்தவ ஆலயங்கள் மீது போக்கோ அராம் என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு தாக்குதல் நடத்தி வருகிறது. இக்குழு முக்கியமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கே மையம் கொண்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் வட-கிழக்கு நகரான மைதுகுரியில் ஒரு கிறித்தவத் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அடுத்த ஆண்டு இறுதியில் இதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டில் இது சேவைக்கு விடப்படும் என கிளைவ் பால்மர் ஆத்திரேலிய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். டைட்டானிக் கப்பலின் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் புதிய கப்பல் நவீன தொழில்நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அனைத்தும் திட்டமிட்டவாறு நிறைவு பெற்றால் இரண்டாம் டைட்டானிக்கின் கன்னிப் பயணம் லண்டனில் இருந்து நியூயோர்க்கிற்கு 2016 ஆம் ஆண்டில் செல்லும். இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் நேற்று திங்கட்கிழமை பயணிகள் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 103 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 150 பேர் வரையில் உயிருடன் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அசாம் மாநில முதல்வர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அசாமின் குவகாத்தி நகரில் இருந்து 350 கிமீ மேற்கே தூப்ரி மாவட்டத்தில் இந்த விபத்து நேரிட்டது. படகு புயலில் சிக்கி இரண்டாகப் பிளவுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் உயிர்காப்புப் படகோ அல்லது மிதவை அங்கிகளோ இருக்கவில்லை எனவும், அளவுக்கதிகமான பயணிகளை அது ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் தென் பகுதியிருந்து பெரும்தொகையான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தில் இணக்கம் கண்டனர். அமைச்சர் டக்ளசு தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியின் மே தின ஊர்வலமும் மூன்று இடங்களில் இருந்து தொடங்கியது. தேவானந்தா உட்பட அக்கட்சியின் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது. 1895 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம் சோதபி என்ற நியூயோர்க் ஏலவிற்பனைக் கூடத்தில் அநாமதேய நபர் ஒருவரினால் வாங்கப்பட்டது 40 மில்லியன்களில் இருந்து ஏலம் ஆரம்பித்து 12 நிமிடங்களில் விற்கப்பட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு நோர்வேயில் புதிய அருங்காட்சியகம், உணவகம், கலைக்கூடம் ஆகியன அமைக்கப்படும். எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற ஓவியத்தின் நான்கு மூலப் பிரதிகளில் இந்த ஓவியம் மட்டுமே இதுவரையில் தனியார் ஒருவர் உரிமையாளராயிருந்தார். பீட்டர் ஓல்சென் என்பவர் இதனை விற்பனை செய்தார். இவரது தந்தை ஓவியர் மண்ச்சிற்கு நண்பராயிருந்தவர். இரண்டு ஓவியங்கள் 1994 இலும் 2004 இலும் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டன. இந்தியாவின் சத்தீசுக்கர் மாநிலத்தில் 12 நாட்களுக்கு முன்னர் மாவோயிசத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 21 ஆம் நாள் கடத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் மேனன் நேற்று மத்தியஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட மேனன் ஊடகவியலாளர்களிடம் உரையாடிய போது, தனக்காக மத்தியஸ்தம் செய்த இரு தரப்பினருக்கும், இந்திய அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார் நான் இப்போது மிகவும் களைப்பாயிருக்கிறேன். வீட்டுக்குச் சென்று இளைப்பாற வேண்டும் என அவர் தெரிவித்தார். மாவோயிசவாதிகளாலும் பழங்குடியினத்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உடனடியாக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என மத்தியத்தர்கள் எஸ்.டி. சர்மா, மற்றும் பேராசிரியர் ஜி. அர்கோபால் ஆகியோர் தெரிவித்தனர். விவசாயிகள் மற்றும் வறிய பழங்குடியின மக்களுக்காக தாம் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களால், தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆட்கடத்தல்களில், இந்தக் கடத்தல் கடைசியாக நடந்ததாகும். இந்தியாவின் சத்தீசுகரில் மாவட்ட ஆட்சியர் மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்டார் ஏப்ரல் 21, 2012 காவல்துறையினரின் காவலரண் அருகே இந்தக் குண்டுகள் நேற்று வியாழன் அன்று வெடித்தன. இச்சம்வத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அஸ்திரகான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் மறித்துச் சோதனையிட்ட போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. 20 நிமிடங்களின் பின்னர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இறந்தவர்களில் பலர் காவல்துறையினரும், பாதுகாப்புப் பணியாளர்களுமே எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல்களை யார் நடத்தியது எனத் தெரிவிக்கப்படாவிட்டாலும், தாகெசுத்தானில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அண்மைக் காலங்களில் தினமும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. உருசியாவின் தாகெசுத்தான் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர் சனவரி 28, 2011 தாமியானா கிரீகி என்ற பெண் 4 வயதாக இருக்கும் போது 1896 ஆம் ஆண்டில் வெள்ளையின குடியேற்றவாதிகளால் கடத்தப்பட்டார். இப்பெண்ணின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இப்பெண் 11 ஆண்டுகளின் பின்னர் அர்ஜெண்டீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இறந்துவிட்டார். இப்பெண்ணின் எச்சங்கள் மானிடவியலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதியில் செருமனியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பார்வைக்காகக் வைக்கப்பட்டிருந்தது. பராகுவே பழங்குடியினரின் நீண்ட காலக்கோரிக்கையை அடுத்து இப்பெண்ணின் தலையோடு பராகுவே தலைநகரில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்து ஆச்சே பழங்குடியினரிடம் கையளிக்கப்பட்டது. இது அப்பெண் பிறந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட விருக்கிறது. "ஆச்சே மக்களிடம் எம்மை மன்னிக்கும் படி நாம் கேட்டுக் கொள்கிறோம் எனப் பராகுவே பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் வைபவத்தில் உரையாற்றும் போது கூறினார். ஆச்சே பிரதேசம் தற்போது தேசியப் பூங்காவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரதேசத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆச்சே இனத்தவர்கள் கோரி வருகின்றனர் இது எமது வம்சாவழியினரின் நிலம், முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கிருந்து வெள்ளையினத்தவரால் எடுத்துச் செல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்காக எமது பிரதேசத்தை எம்மிடம் ஒப்படைப்பதே சிறந்தது" என பழங்குடியினத் தலைவர்களில் ஒருவர் கூறினார். நேப்பாளத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொக்காராவினுள் வெள்ளநீர் புகுந்தது. சேத்தி ஆற்று நீர் கரப்பானி கிராமத்தினுள் வேகமாகப் புகுந்ததில் இரண்டு கட்டடங்கள், மற்றும் பல சேரி வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்தவ பலர் அவர்களது கால்நடைகளுடன் சேர்த்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன பலரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். "இப்பகுதியில் வெந்நீர் ஊற்று ஒன்று இருப்பதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். அண்மைக்காலத்தில் இங்கு மழை பெய்யவில்லை, இதனால் ஏன் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது புரியவில்லை என அரசு அதிகாரி தெரிவித்தார். அண்மைநிலை முழு நிலவு எனக்கூறப்படும் இந்நிகழ்வின் போது நிலவு பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதிலும் பார்க்க 14% பெரிதாகவும், 30% ஒளிர்வு கூடியதாகவும் காணப்படும். நிலவு மிகப் பெரிதாக இருக்கும் போது அது பூமியில் இருந்து 356,400கிமீ (221,457 மைல்கள்) தூரத்தில் இருக்கும், இதன் வழமையான தூரம் 384,000கிமீ (238,606 மைல்கள்) ஆகும். நிலவு பூமிய வட்டப்பாதையில் அல்லாமல் நீள்பாதையில் சுற்றி வருவதால் பூமியிலிருந்தான அதன் தூரம் கூடிக் குறையும். கடைசியாக 2011 மார்ச் 19 அன்று முழுப்பெருநிலவு ஏற்பட்டது. "பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கம் (lunar tide) கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும் என ரோயல் வானியல் கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மசே கூறுகிறார். ஆனாலும் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அழிவுகள் ஏற்படமாட்டாது என அவர் தெரிவித்தார். பிரான்சுவா ஆலந்து ஒரு சமூக ஆர்வலர் ஆவார். 1980களுக்குப் பிறகு பிரான்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முதல் சமூக ஆர்வலர் இவரே. பிரான்சுவா ஆலந்து மே 16 க்குள் அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரான்சுவா ஆலந்து மே 18ல் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார், அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப்பார் என எதிபார்க்கப்படுகிறது. சிக்காகோவில் நடைபெறவிருக்கும் நேட்டோ மாநாட்டிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தி முகமது பென் அமர் என்பவரின் கல்லறைக்குச் சென்று வழிபாடு நடத்துபவர்களை தீவிரவாதிகள் எச்சரித்து வந்துள்ளனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர் இறந்தவரை வழிபட்டு உதவி கேட்பதை விடுத்து இறைவனிடம் உதவி கேளுங்கள் என அவர்கள் மக்களிடம் தெரிவித்துள்ளனர். ஏனைய கல்லறைகளையும் அவர்கள் அழித்து விடவிருப்பதாகப் பயமுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திம்புக்துவில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று பெரும் மசூதிகளும், 16 கல்லறைகளும் காணப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கி வருகிறது. ஏர் இந்தியா மூலம் பயணம் செய்வதற்கு பயணிகள் இந்திய ஹஜ் அமைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் 125,000 பேர் வரை இந்த சலுகைகளைப் பெறுகின்றனர். தில்லியில் இருந்து ஜெட்டா வரை செல்லுவதற்கு இவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் 16,000 ரூபாய் வரை அறவிடப்படுகிறது. வழமையான பயணம் இதனை விட இரண்டு மடங்கு வரை செலவாகும். ஒருவருக்கு ஒரு முறையே மானியம் வழங்கப்படும் என சென்ற மாதம் இந்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. தற்போது ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மெக்கா செல்லுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் 70 வயதிற்கு மேலானவர்களுக்கும், முன்னர் எப்போது பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. ஆர்மீனியாவின் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசுத்தலைவர் சேர்சு சர்கிசியானுக்கு ஆதரவான குடியரசுக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. குடியரசுக் கட்சி 44 வீத வாக்குகளையும், ஆளும் கூட்டணியின் மற்றொரு கட்சியான சுபிட்சமான ஆர்மீனியக் கட்சி 30 வீத வாக்குகளையும் பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள் திங்களன்று அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளில் ஆர்மீனியத் தேசியக் காங்கிரசு மூன்றாவதாக 7 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது. தனது அயல்நாடான அசர்பைஜானுடன் முறிந்து போன அமைதிப் பேச்சுக்களைத் தொடருவதற்கும் துருக்கியுடனான எல்லைகளை மீளத் திறப்பதற்கும் இந்தத் தேர்தல் வெற்றி அரசுத்தலைவருக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழு கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். எட்டு உருசிய விமானிகள், விமானப்பணியாளர்கள், இந்தோனேசிய விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊடகவியாலாளர்கள் ஆகியோர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஏனையோரைத் தேடும் பணி பணி முடுக்கி விடப்பட்டுள்ளது, எனினும் மோசமான வானிலை காரணமாக தேடும் பணி தொய்வடைந்துள்ளதாகாக் கூறப்படுகிறது. இதுவரை சுகோய் நிறுவனம் போர் விமானங்களை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது பயணிகள் விமானத்தை தயாரித்து சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது. இவ்விமானத்தில் 100 பேர் வரை பயணம் செய்யலாம். சுகோய் நிறுவனத்துடன் இதன் தயாரிப்பில் இத்தாலியின் ஃபின்மெச்சானிக்கா மற்றும் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்தோனேசியாவிற்கு இத்தகைய 42 விமானங்களை சுகோய் நிறுவனம் விற்கவிருந்தாகக் கூறப்படுகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்தத் தொல்லியல் பொருட்கள் குறித்த தகவல்கள் சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களில் இவையே மிகப் பழமையானவையாகும். கிமு 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து நடு அமெரிக்காவில் ஆதிக்கத்தில் இருந்த மாயன் நாகரிகம் 15ம் நூற்றாண்டளவில் எசுப்பானியர்களின் குடியேற்றத்தை அடுத்து வீழ்ச்சி அடையத் தொடங்கியது. சுல்த்துன் என்ற இடத்தில் உள்ள சிதையல்கள் 1912 ஆம் ஆண்டில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் 30 சதுர கிமீ சுற்றளவில் இன்னும் பல இடங்கள் அகழ்வாயப்படாமல் உள்ளன. மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது சூலை 18, 2010 இலங்கையின் வடக்கே கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ் கனேடியர் ஒருவரின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை தேவை என கனடா அதிகாரபூர்வமாக இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்பவர் ஈழப்போரின் போது இழந்த தனது சொத்துக்களை மீளப் பெற இலங்கை சென்றிருந்தபோது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைமையிடமாக அமைந்திருந்த கிளிநொச்சி நகர் அவரது இருப்பிடமாகும். கிளிநொச்சியில் அவரது இருப்பிடத்துக்கருகில் சில குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கைக்கான கனடா தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்தார். முகமூடி அணிந்த சிலரினால் மகேந்திரராஜா தாக்கப்படுவதை உள்ளூர்வாசிகள் சிலர் அவதானித்துள்ளதாக ஈழ ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இக்குழுவினரிடமிருந்த தப்பிப்பதற்காக மிகவும் போராடியதாகத் தெரிவிக்கின்றன. அத்துடன் அவரது அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டும் உள்ளன. கிளிநொச்சியில் கடைகளின் உரிமையாளராக இருந்த மகேந்திரராஜா போர்க் காலத்தில் கனடாவில் குடியேறினார். அவரது சொத்துக்கள் பல்பொருள் அங்காடி நிறுவனம் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் வசம் உள்ளதாகவும் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார். தனது சொத்துக்கள் குறித்து இராணுவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இராணுவ புலனாய்வுத் தரப்பினரால் அவரது நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானித்தானின் அமைதித் தூதுவர்களாகப் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் தலைநகர் காபூலில் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அர்சாலா ரகுமானி என்பவர் முன்னாள் தலிபான் அரசில் உயர் கல்வி அமைச்சராகவும், ஆப்கானித்தானின் உயர் அமைதிப் பணியகத்தின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலிபான்களுடன் அமைதி உடன்படிக்கைகளை ஏற்படுத்த இவரது பணி முக்கியமாகக் கருதப்படுகிறது. இவரது இறப்பு அரசுத்தலைவர் அமீது கர்சாயின் அமைதிப் பேச்சுக்களுக்கு பெரும் பின்னடைவு என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மேற்கு காபூலில் தனது பணியகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். தலிபான்கள் தாம் இக்கொலையைச் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய குடியரசு எனப்படும் இந்தியாவின் நாடாளுமன்றம் ஆரம்பமாகி இன்றோடு 60 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதைக் கொண்டாட இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் 1951-52களில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது, பிறகு ஏப்ரல் 13, 1952 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இன்றுடன் இந்திய நாடாளுமன்றம் ஆரம்பாமாகி 60 ஆண்டுகள் நிறைவாகிறது. இன்று நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தை மக்களவையில் பிரணாப் முகர்ஜியும், மாநிலங்கவையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் துவக்கிவைத்தனர். இன்றைய கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஆகியோர் உரையாற்றினர். இன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் முதல் மக்களவையின் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். நேபாளத்தின் வடக்குப் பகுதியில் 21 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அக்னி ஏர் எனும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் ஜாம்சொம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இவ்விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை 09:45 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றது. இவ்விமானத்தில் 18 பயணிகள், மூன்று விமானப் பணியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 21 பேர் பயணம் செய்தனர். இதில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர் தப்பியவர்களில் விமானப் பணியாளர் ஒருவரும், இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று இந்தியர்களும் அடங்குவர். ஏனையோர் வேறு நாட்டவராவர். மலைகள் நிறைந்த நேபாளத்தில் இது போல சிறிய விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது. மேலும் சென்ற வருடம் காத்மாண்டு அருகே நடந்த விமான விபத்தில் 19 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. பிந்திக் கிடைத்த செய்திகளின் படி இந்த விமான விபத்தில் இந்தியாவின் திரைப்படக் குழந்தை நடிகை தருணி சச்தேவ் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். 14 வயதான இவர் தனது தாயாருடன் விபத்தில் இறந்தார். பா என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார். மொத்தம் 13 இந்தியர்கள் இவ்விபத்தில் இறந்துள்ளனர். கார்ம் மாவட்டத்திலேயே பெரும் சேதம் ஏற்பட்டது. இரண்டு கட்டடங்கள் முழுமையாக இடிந்து வீழ்ந்தன. மேலும் பல சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாடுகளும், ஆடுகளும் உயிருடன் புதையுண்டன. சோமாலியாவில் நிலை கொண்டுள்ள கடற்கொள்ளையரின் நிலைகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் முதற்தடவையாகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அராடியர் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தளங்கள் மீது உலங்கு வானூர்திகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடற்கொள்ளையர்களினால் கைப்பற்றப்பட்டுள்ள மாலுமிகளின் உயிர்ப்பாதுகாப்பைக் கருதியே வெளிநாட்டுப் படகள் இதுவரையில் தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்துள்ளனர். 17 கப்பல்களுடன் 300 இற்கும் அதிகமான மாலுமிகள் கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் சிமீர்னி என்ற கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் சோமாலியக் கடற்கொள்ளையரினால் கடத்தப்பட்டதை அடுத்தே ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக பிபிசி செய்தி கூறுகிறது. கடற்கொள்ளையர்களின் தளங்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையவில்லை என ஐரோப்பியப் படையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு சோமாலிய அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர் தெரிவித்தார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஈரானின் அணுவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் அறிவித்துள்ளது. இவர் இசுரேலின் மொசாட் என்ற புலனாய்வுப் பிரிவின் முகவராகவும் செயற்பட்டார் எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. இவருக்கு இசுரேல் இக்கொலையைச் செய்வதற்காக 120,000 டாலர்களைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. இசுரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பேராசிரியர் அலி முகம்மதி தெகரான் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். இவர் ஈரானின் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்தவர். இக்கொலைக்குப் பின்னால் இசுரேலும் அமெரிக்காவும் உள்ளதாக ஈரான் ஜனாதிபதி அகமெதிநெசாத் குற்றம்சாட்டியிருந்தார். இது போன்ற தாக்குதலை இசுரேலின் மொசாட் அமைப்பே வெளிநாடுகளில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஒந்துராசில் சென்ற வாரம் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் அல்பிரெடோ விலட்டோரோ என்பவர் தலைநகர் தெகுச்சிகல்ப்பாவுக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். வானொலி செய்தியாளரான விலட்டோரோ மே 9 ஆம் நாள் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத இளைஞர்கள் சிலரால் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆனாலும் எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவருக்குப் பல காலமாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன. 2009 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து நாட்டில் 200-இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளரும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவருமான எரிக் மார்ட்டினெசு என்பவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டு தலைநகருக்கு வடக்கேயுள்ள ஒரு கிராம வீதியில் வீசி எறியப்பட்டிருந்தார். அதே நேரத்தில், ராசா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. 1995 ஆம் ஆண்டில் செரெபிரெனிக்காவில் ஏழாயிரத்திற்கும் அதிகமான 7,500 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு இவரே பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்கள் 'பயங்கரமானவை' என்று 70 வயதாகும் மிலாடிச் கூறியுள்ளார். மிலாடிச்சுக்கு எதிரான வழக்கு பற்றிய ஒலி-ஒளி ஆவணப் பதிவொன்று வெளியிடப்பட்டது. முதல் நாள் விசாரணையின் போது ஜெனரல் மிலாடிச்சு பொசுனியாவில் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என வழக்குத் தொடுநர்கள் வாதிட்டனர். வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒன்றை முதற்தடவையாக சப்பான் வணிகரீதியில் விண்ணுக்கு ஏவியுள்ளது. தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட கொம்ப்சாட்-3 என்ற இந்த செயற்கைக்கோள் எச்-2ஏ என்ற ஏவுகலம் மூலம் தெற்கு சப்பானின் தனிகசீமா தீவில் இருந்து இன்று அதிகாலை 1:39 மணிக்கு ஏவப்பட்டது. இது ஏவப்பட்டு 16 நிமிடங்களில் செயற்கைக்கோள் ஏவுகலத்தில் இருந்து பிரிந்தது. இதனுடன் செலுத்தப்பட்ட மேலும் மூன்று சப்பானிய செயற்கைக்கோள்கள் பின்னர் பிரிந்தன. இதன் மூலம் விண்கலங்களை ஏவும் வணிக முயற்சியில் ஐரோப்பா, மற்றும் உருசியாவுடன் சப்பானும் தற்போது இணைந்துள்ளது. ஏவுகலத்தை 2007 ஆம் ஆண்டில் இருந்து இயக்கி வரும் மிட்சுபிஷி நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் பல வணிக செயற்கைக்கோள்களை ஏவும் பணியில் ஈடுபடவுள்ளது. கொரிய விண்வெளி ஆய்வுக் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொம்ப்சாட்-3 (KOMPSAT-3) செயற்கைக்கோள் பல்நோக்கு அவதான நிலையமாகச் செயற்படும் என சப்பானிய விண்வெளி ஆய்வு நிலையம் (ஜாக்சா) தெரிவித்துள்ளது. ஜாக்சாவின் எச்-2ஏ ஏவுகலம் 21வது தடவையாக விண்வெளிக்கு ஏவப்படுகிறது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியமை, மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலேயே அவருக்கு நேற்றுப் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மே நீதிமன்ற நீதிபதி சுனில் ராசபக்ச இதற்கான தீர்ப்பை வழங்கினார். மேலும் பொன்சேகா தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வெளிநாடு செல்லும் தேவை ஏற்படின் நீதிமன்ற அனுமதியை அவர் பெற வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். பொன்சேகா மீது வெள்ளைக்கொடி விவகார வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்து அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பொது மன்னிப்பு அளிக்க விருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தொழிற்சாலை ஒன்று இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வேறு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் அகப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அச்சத்தில் தமது வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க சில கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சென் குவாங்சென் என்பவர் தனது புதிய வாழ்வை ஆரம்பிக்கவென குடும்பத்துடன் நியூயோர்க் வந்து சேர்ந்தார். வழக்கறிஞரான இவர் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் புத்தாய்வு மாணவராகச் சேரவிருக்கிறார். பிறவிக் குருடரான இவர் கடந்த மாதம் வீட்டுக் காவலில் இருந்து தப்பி பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடைந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தூதரகப் போர் இடம்பெற்று வந்தது. அவர் ஆறு நாட்கள் தூதரகத்தில் தங்கியிருந்தார். தனது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் தற்போது அங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகலாம் என நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சென் அச்சம் தெரிவித்தார். தனக்கு உதவி செய்த அமெரிக்க அதிகாரிகளுக்கும் நண்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பெய்ஜிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென் நேற்று சனிக்கிழமை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு நியூயோர்க்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார். இவருடன் அவரது மனைவி, மற்றும் ஆறு, எட்டு வயதுடைய அவரது இரு பிள்ளைகளும் நியூயோர்க் வந்து சேர்ந்தனர். சென் குவாங்சென் சீனாவின் ஒரு-பிள்ளைக் கொள்கை, மற்றும் கட்டாயக் கருக்கலைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் இவர் 2006 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்த செயற்பாட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள எழுத்து மற்றும் படங்களை குறுகிய லேசர் கதிர்களைக் கொண்டு, அவை ஆவியாகும் வரை வெப்பப்படுத்தி அழிக்கப்படுகிறது. இம்முறை காகிதம் உருவாக்குவதற்கு மரங்களை வெட்டுவதை குறைக்கவும், மறுசுழற்சி முறைக்கு ஒரு மாற்று வழியாகவும் இருக்கும் என இம்முறையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் குழுவைச் சேர்ந்த டேவிட் லீல் அயாலா தெரிவித்துள்ளார். இந்த இயந்திரத்தை வடிவமைக்க 19000 யூரோக்கள் வரை செலவாகும் என இக்குழுவினர் கணித்துள்ளனர். இப்பொறியாளர்கள் இந்த கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் இல்லை எனினும் இவர்கள் இச்செயற்பட்டில் காகிதத்தின் வண்ணம் மாறுவது அல்லது காகிதம் கிழிந்து விடுவது அல்லது இதற்கென வடிவமைக்கப்பட்ட மையைப் பயன்படுத்துவது போன்ற குறைபாடுகளைக் களைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. செர்பியாவின் சனாதிபதியாக தேசியவாதி திசுலாவ் நிக்கோலிச் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை இத்தேர்தலில் மிக முக்கியமான கருப்பொருளாக இருந்தது ஐரோப்பாவில் இணைய செர்பியா ஒரு போதும் பின் நிற்க மாட்டாது" எனப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர் கூறினார். சேர்பியாவின் வேலையற்றோர் வீதம் 24% ஆகவும், வெளிநாட்டுக் கடன் 24 பில். யூரோக்களும் ஆகவும் உள்ளது. தொமிசுலாவ் நிக்கோலிச் முன்னாள் யூகொசுலாவிய தலைவரும் போர்க்குற்றச்ச்சாட்டுகளின் பேரில் விசாரணைகளை எதிர்நோக்கும் சிலோபதாம் மிலோசவிச் அரசின் கீழ் பிரதிப் பிரதமராகப் பதவியில் இருந்தவர். 1999 ஆம் ஆண்டில் நேட்டோ படையினர் செர்பியா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். அப்போது அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதிலும் பார்க்க உருசியாவுடன் இணைவதையே தாம் விரும்புவதாகக் கூறி வந்தவர். ஆனாலும் அண்மைக் காலத்தில் அவர் ஐரோப்பா மீது மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியா இணைவது மேலும் கடினமாக்கும் எனவும், 2008 விடுதலையை அறிவித்த கொசோவோவுடனான உறவிலும் பாதிப்பு ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஆனந்த் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். மற்ற ஆட்டங்கள் அனைத்தும் வெற்றி தோல்வியின்றி முடிந்து இருந்தன. 7வது சுற்று முடிவில் போரிஸ் ஜெல்ஃபான்ட் 4-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறார். இதேவேளை, சரத் பொன்சேகா தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்புக்கு எதிரான தனது இரண்டு மேன்முறையீட்டு மனுக்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பிபிசி செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியில், போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். எனினும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த பன்னாட்டு விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். யுத்தம் முடித்தமை குறித்த கேள்விகளை எதிர்கொள்வதற்கு எவரின் முன்னாலும் சமுகமளிக்கத் தயார் எனவும் அவர் கூறினார். கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்க்கன் ஏவுகலம் மூலம் டிராகன் என்ற சரக்கு விண்கலம் புளோரிடா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 03:44 மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 10 நிமிடங்களில் பூமியில் இருந்து 340 கிமீ தூரத்துக்குச் சென்றது. விண்வெளி நிலையத்தைச் சென்றடைய 2 நாட்கள் வரை எடுக்கும். விண்கலத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ள 500 கிகி நிறையுள்ள உணவும், நீர், மற்றும் உபகரணங்களையும் அவர்கள் எடுத்து விட்டு இம்மாத இறுதியில் அதனைப் பூமிக்கு அனுப்புவார்கள். 2010களின் இறுதியில் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு பணம் சேமிக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா திட்டமிட்டுள்ளது. இப்பணத்தை பூமிக்கு அப்பால் செவ்வாய், மற்றும் சிறுகோள்களுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்துக்கு நாசா பயன்படுத்தவுள்ளது. ஆனாலும், இடைக்கால அரசில் இராணுவப் புரட்சியை நடத்திய இராணுவத் தலைவர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால், அரசில் இராணுவத்தினர் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவார்கள் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிராந்திய அமைதிப் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ரூயி டுவார்ட்டே பாரோசு என்பவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இரண்டு இராணுவத்தினரும் 27-உறுப்பினர் கொண்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராக மனுவேல் செரிபோ நாமட்சோ என்பவரை இராணுவப் புரட்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்த இராணுவப் புரட்சிக்கு முன்னர் இருந்த அமைச்சரவையில் இருந்த எவரும் புதிய அரசில் இடம்பெறவில்லை. இராணுவப் புரட்சித் தலைவர்கள் 5 பேருக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பயணத்தடையை விதித்திருந்தது. 40 ஆண்டுகளாக விடுவிக்கப்பட்டிருக்கும் மேற்காப்பிரிக்க நாடான கினி-பிசாவுவில் எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவரும் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்கவில்லை. 1974 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா சுட்டுக் கொல்லப்பட்டார். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு போதைப்பொருள் கினி-பிசாவு ஊடாகவே கடத்தப்பட்டு வருகிறது. கினி-பிசாவு நாட்டில் இராணுவப் புரட்சிக்கு இராணுவத்தினர் முயற்சி ஏப்ரல் 13, 2012 இந்த ஏவுகணை நேட்டோவின் ஐரோப்பிய ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை ஊடறுத்துச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளனர். போலியான அணுவாயுத முனையைக் கொண்டு சென்ற இந்த ஏவுகணை நேற்று புதன்கிழமை 10:15 மணியளவில் 6,000 கிமீ சோதனைத் தூரம் செலுத்தப்பட்டது. கம்சாத்கா வட்டாரத்தில் கூரா பகுதியில் இது திட்டமிட்டபடி வெற்றிகரமாக்ச் சென்றடைந்ததாக பாதுகாப்பு அமைசுப் பேச்சாளர் கேர்ணல் வதீம் கோவல் தெரிவித்தார். கடந்த செப்டம்பரில் இதே மாதிரியான ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதில் அது தோல்வியில் முடிந்திருந்தது. நேட்டோ தமது ஏவுகணைத் திட்டம் "இடைக்கால செயற்பாட்டுத் திறமையை" அடைந்துள்ளதாக அறிவித்த நாட்களுக்குப் பின்னர் இந்த இரகசிய உருசிய ஏவுகணைத் திட்டம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. முன்னதாக, பாக்கித்தான் அணி அர்ஜெண்டீனிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்று தடவைகள் வெற்றியாளராக வந்திருந்த பாக்கித்தான் அணி சென்ற ஆண்டு நடந்த அஸ்லான் ஷா போட்டித்தொடரில் இறுதிப் போட்டியில் ஆத்திரேலியாவிடம் தோற்றது. நகரின் கிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் பிற்பகல் 2:44 மணிக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அரசு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து அச்சத்தில் மக்கள் வீதிகளில் இறங்கினர். சிவப்பு வலயம் என அழைக்கப்படும் நகர மத்தியப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடப் பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பெரும் நிலநடுக்கம் இப்பகுதியில் ஏற்பட்டதில் 200 இற்கும் அதிகமானோர் இறந்தனர். நகரின் மத்தியில் உள்ள பல வணிகக் கட்டடங்கள், மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் நகரைச் சுற்றியுள்ள பல பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவையாக உள்ளன. இந்த பெரும் நிலநடுக்கத்தை அடுத்து ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள் டிசம்பர் 23, 2012 நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் சூன் 14, 2011 நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு பெப்ரவரி 22, 2011 விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. ஒரு மில்லியன் சதுர மீட்டர்கள் (கிட்டத்தட்ட 200 உதைப்பந்தாட்ட மைதானங்களில் அளவில்) மொத்தப்பரப்பளவில் இந்த வானலை வாங்கிகள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில் பரந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறிய வானலைவாங்கிகளிடம் இருந்து பெறப்படும் சமிக்கைகளை இது பெறும். தென்னாப்பிரிக்காவில் இந்தத் தொலைநோக்கி அமைக்கப்படுவதன் மூலம் அங்கு ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கரூ என அழைக்கப்படும் பெரும் பாலைவனப் பகுதியில் 3,000 தொலைநோக்கிகள் நிறுவப்படவுள்ளன. எஸ்கேஏ என அழைக்கப்படும் "சதுர கிலோமீட்டர் அணி" அணியில் ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, இத்தாலி, சீனா, கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன உறுப்பு நாடுகளாகவுள்ளன. இந்தியா இவ்வணியில் துணை உறுப்பு நாடாக அங்கம் வகிக்கின்றது. இத்திட்டத்தின் முதலாவது கட்டம் 2015/16 ஆம் ஆண்டில் 360மில் யூரோக்கள் செலவில் நிறைவேற்றப்படும். இதற்கான பணிகள் 2013 இல் ஆரம்பமாகும். வெனிசுவேலா விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார் என வெனிசுவேலா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவரைப் பற்றிய தகவல்கள் சில வாரங்களுக்கு முன்னரே வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. ஆர்ஜெண்டீனிய இசைக்குழு ஒன்று இவரைப் பற்றிய தகவல்களை முதன் முதலில் யூடியூபில் வெளியிட்டது. இந்த இசைக்குழு உறுப்பினர்கள் சிமோன் பொலிவார் பன்னாட்டு விமான நிலையத்தில் 22வது கேட் அருகே இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த இந்த இளைஞரைக் கண்டு உரையாடிய போது இத்தகவல்கள் வெளிவந்தன. எசுப்பானிய மொழி முற்றாகத் தெரியாத நிலையில் ஆங்கிலமும் ஓரளவு மட்டுமே பேசக்கூடிய நிலையில் இவரிடம் இருந்து மிகக் குறைந்த அளவு தகவல்களையே பெற முடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரமேசுவரன் எனத் தனது பெயரை இந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். விமானநிலைய அதிகாரி ஒருவரின் தகவல்படி இந்த இளைஞரிடம் எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை எனவும், இதனால் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. வெனிசுவேலாவில் இலங்கைத் தூதரகம் இல்லாதமையால், இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பரமேசுவரன் முதலில் மெக்சிக்கோவுக்கு வந்திறங்கியதாகவும், பின்னர் அவர் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு சில உதவிகள் வழங்கியதாகவும், வெனிசுவேலாவின் குடிவரவுத் துறை அவருக்கு உணவு மற்றும் உறங்கப் படுக்கை ஆகியன வழங்கியிருந்தனர். ஆனாலும் விமான நிலையத்தை விட்டு வெளிவர அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் பரமேசுவரன் திடீரென விமான நிலையத்தில் காணப்படவில்லை என வெனிசுவேலா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் என்னவானார் என்பது குறித்து உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் சில கவலை வெளியிட்டுள்ளன. சிரியாவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற அரசுப் படைகளின் தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 90 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். ஹூலா நகரத்தில் இடம்பெற்ற இத்தாக்குதல்கள் பன்னாட்டுச் சட்டங்களைப் புறக்கணிப்பதாக உள்ளது என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். ஆயுதபாணிகளான தீவிரவாதிகளே இத்தாக்குதல்களை நடத்தியதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011 மார்ச் மாதத்தில் சிரிய அரசுத்தலைவர் பசார் அல்-அசாதின் ஆட்சிக்கு எதிரான எழுச்சி ஆரம்பித்ததற்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும் எனக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் பலர் எறிகணைத் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையோர் சஹீபா என்றழைக்கப்படும் சிரியத் துணை இராணுவக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கோஃபி அன்னான் தலைமையில் ஐநாவின் 250 கண்காணிப்பாளர்கள் நிலை கொண்டுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சிகள் ஆரம்பித்து இதுவரை 10,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். புரட்சிக்கு ஆதரவானவர்களால் கடந்த வாரம் மே 21 இல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் மாலியின் இடைக்காலத் தலைவர் டியோன்குண்டா டிராவோர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பிரான்சில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆப்கானித்தானின் கிழக்கு மாகாணமான பாக்த்தியாவில் நேட்டோ படையினர் வான் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை சூரி காயில் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் ஆறு குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் கொல்லப்பட்டனர். இத்தகவல் குறித்து தாம் விசாரித்து வருவதாக நேட்டோ அறிவித்துள்ளது. தாக்குதலில் இறந்தவர்கள் தலிபான்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர் என மாகாண அரசுப் பெச்சாளர் ரொகுல்லா சமூன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக, நேற்று சனிக்கிழமையன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் நான்கு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்கு முன்னதாக சனிக்கிழமையன்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலேயே சம்பந்தன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிருவாகச் செயலாளராக குலநாயகம், பொருளாளராக எஸ்.ரி.ஆர். தியாகராஜா, சிரேஷ்ட உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, பேராசிரியர் சி. சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுடன், பிரதிச் செயலாளர் நாயகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைராசசிங்கம், தொழிற்சங்கச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன், கலாச்சாரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன், சட்டம் மற்றும் வெளி விவகாரங்களுக்கான செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் தெரிவாகினர். ஞாயிற்றுக்கிழமை காலையில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில் திரு. சம்பந்தன் உரையாற்றுகையில் இலங்கைத் தீவின் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்தும் தமது இன, மத, பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி, அவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவதே ஆகும் எனக் கூறினார் ஒற்றையாட்சி இலங்கை என்ற அமைப்பிற்கு வெளியே, ஐக்கிய இலங்கை என்ற அரசமைப்பிற்குள், தமிழர்கள் சுயமரியாதையுடனும், தன்னிறைவுடனும் வாழத் தேவையான ஆகக்கூடிய அரசியல் அதிகாரங்களை உள்ளடக்கிய ஓர் ஆட்சியலகையே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, மறுபுறமாகக் கூறினால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கான உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை நாம் உலக சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார். முன்னதாக இம்மாநாடு நடைபெறவிருந்த மட்டக்களப்பில் உள்ள தேவநாயகம் மண்டபத்தின் மேடை முதல் நாளிரவு தீ விபத்தில் எரிந்து விட்டதால் மாநாடு அமெரிக்க மிசன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் தமது மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. செருமனியில் சூரிய ஆற்றல் மூலம் மணிக்கு 22 கிகாவாட்டு (22,000 மெகாவாட்டு) மின்திறன் பெறப்பட்டு உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "மணிக்கு 22 கிகாவாட்டு சூரிய ஆற்றல் மின்சாரம் சனிக்கிழமையன்று தேசிய அளவில் வழங்கப்பட்டது. இது நாட்டின் மதிய நேர மின் தேவையின் 50 வீதத்தை நிறைவு செய்தது எனப் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் நோர்பர்ட் ஆல்னொக் கூறினார் எப்போதும் இல்லாத அளவு ஒரு நாடு இவ்வளவு மின்திறனை உற்பத்தி செய்துள்ளது இதுவே முதற்தடவை என அவர் கூறினார். மத்திய கிழக்கின் கத்தார் நாட்டின் தலைநகர் டோகாவில் வணிகத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். விலாச்சியோ என்றழைக்கப்படும் இந்தக் கடைத்தொகுதி தீவிபத்தில் இறந்தவர்களில் 13 பேர் குழந்தைகள் ஆவர். இவர்களில் 4 பேர் எசுப்பானியர், மூவர் நியூசிலாந்தவர்கள், மற்றும் ஒரு குழந்தை பிரான்சைச் சேர்ந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்தில் பிலிப்பீன்சைச் சேர்ந்த 4 ஆசிரியர்களும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். கட்டிடத் தொகுதியில் உள்ள பாலர் பள்ளி ஒன்றிலேயே முதலில் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. நேற்று திங்கட்கிழமை பகல் 11:00 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக கத்தார் உட்துறை அமைச்சர் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடத் தொகுதி முறையாகத் திட்டமிடப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 64 வயதான டெய்லர் இக்குற்றங்களை மறுத்துள்ளதோடு இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தார். சியேரா லியோனியில் இடம்பெற்ற வன்முறைகள் மனித வரலாற்றில் அருவருக்கத்தக்கதும், மிகக்கொடுமையானதும் ஆகும் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரிச்சார்ட் லூசிக் நீதிமன்றத்தில் தெரிவித்தார். "திரு டெய்லர் சியேரா லியோனியில் எப்போதும் கால் வைக்கவில்லையானாலும், அவரது பதிவுகள் அங்கு காணப்படுகின்றன என நீதிபதி குறிப்பிட்டார். "பொதுமக்கள் முன்னிலையில் கைதிகளைத் தூக்கிலிட்டமை, சோதனைச் சாவடிகளில் கொலை செய்யப்பட்டவர்களின் தலைகளைத் தொங்கவிட்டமை, பெண்களையும், சிறுமிகளையும் பொதுவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியமை, பொதுமக்கள் உயிருடன் தீவைக்கப்பட்டமை போன்ற போர்க்குற்றங்கள் சியேரா லியோனியில் இடம்பெற்றுள்ளன என நீதிபதிகள் தெரிவித்தனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் முன்னாள் அரசுத்தலைவர் ஒருவரை பன்னாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளியாகக் காண்பது இதுவே முதற்தடவையாகும். இந்த உலக சதுரங்கப் போட்டியில் இதுவரை நடந்து 12 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றனர், மீதி போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன. எனவே இருவரும் 6-6 புள்ளிகளில் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் இன்று நடந்த 2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி]] இசுரேலில் இடம்பெற்ற தாக்குதல்களின் போது இறந்த 91 பாலத்தீனியர்களின் உடல்களை இசுரேல் பாலத்தீனிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. தற்கொலைக் குண்டுதாரிகளும், போராளிகளுமாக 1975 ஆம் ஆண்டு முதல் இறந்தவர்களின் உடல்கள் இவர்களில் அடங்கும். கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இசுரேலிய சிறைச்சாலைகளில் கைதிகளாகவுள்ள நூற்றுக்கணக்கான பாலத்தீனியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் பகுதியாகவே இந்தக் கையளிப்பு இடம்பெற்றது. இந்த 91 உடல்களில் 79 ரமல்லா நகருக்கும், ஏனைய 12 உடல்களும் காசாவுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உடல்கள் மீள அடக்கம் செய்யப்படும் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. காசாவில் அடக்கம் செய்யப்படுபவர்களுக்கு சிறப்பு இராணுவ மரியாதை அளிக்க ஹமாஸ் இயக்கம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு உடலுக்கும் 21 முறை மரியாதை வேட்டுகள் தீர்க்கப்படும். கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் பாலத்தீனத்தில் மாவீரர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். மேற்குக் கரையில் இசுரேல் அமைத்து வரும் குடியிருப்புகளை நிறுத்த இசுரேல் மறுத்ததை அடுத்து 2010 ஆண்டு டிசம்பரில் பாலத்தீனத்திற்கும் இசுரேலுக்கும் இடையில் இடம்பெற்று வந்த நேரடி அமைதிப் பேச்சுகள் தடைப்பட்டிருந்தன. "இன்று, அந்திரொமேடா பேரடை எமது கண்களுக்கு மிகச் சிறிய ஒரு பொருளாகவே தெரிகிறது, இவ்வாறே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது வானியலாலர்கள் கண்டனர் என அமெரிக்காவின் பால்ட்டிமோரில் உள்ள விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரோய்லண்ட் வான் டெர் மாரெல் தெரிவித்தார். அந்திரொமேடா பேரடையின் பக்கவாட்டு நகர்வு மிகத்துல்லியமாக ஹபிள் தொலைநோக்கியூடாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணிப்பொறி ஒப்புருவாக்கம் நடத்தப்பட்டதில் இரண்டு பேரடைகளும் இணைந்து ஒரு நீள்வட்ட அண்டமாக மாறும் எனத் தெரியவந்துள்ளது. இப்பேரடைக்குள் இருக்கும் விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிகவும் பெரிதாததால், விண்மீன்களுக்கு குறைந்தளவு பாதிப்பே ஏற்படும். எகிப்தில் கடந்த 31 ஆண்டு காலமாக அமுலில் இருந்து வந்த அவசரகாலச் சட்டம் நேற்று வியாழக்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் சந்தேக நபர்களை நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க, மற்றும் அவர்களை சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 1981 ஆம் ஆண்டு அன்றைய அரசுத்தலைவர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக இது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் அரசுத்தலைவர் ஒசுனி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் இச்சட்டத்தை நீக்கும் படி முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தனர். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசுத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் மக்களாட்சியை நோக்கிய பயணத்தில் இது ஒரு முக்கிய படிக்கல் எனக் கூறினார். எகிப்தில் ஒரு காலத்தில் 10,000 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறியிருந்தன. தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் பலரைக் காணவில்லை எனவும் அவை தெரிவித்திருந்தன. இத்தீர்ப்பை அடுத்து 84-வயது முபாரக் எகிப்தியச் சிறைக்கு அனுப்பட்ட போது அவர் "கடுமையாக சுகவீனம்" உற்றதாக அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. முன்னாள் உட்துறை அமைச்சர் அபீப் அல்-அட்லி என்பவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நான்கு முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். ஊழல் வழக்குகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முபாரக் மற்றும் அவரது மகன்களும் அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முபாரக்கிற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து மக்கல் வீதிகளில் இறங்கி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனாலும், பாதுகாப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை அறிந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து கலகமடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். கானா தலைநகர் ஆக்ராவில் சரக்கு விமானம் ஒன்று தரையில் நின்ற பயணிகள் பேருந்துடன் மோதியதில் பேருந்தில் இருந்த 10 பேர் கொல்லப்பட்டனர். விமானிகள் நால்வரும் உயிர் தப்பினர். நேற்று சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 7:10 மணிக்கு கொட்டோக்கா பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டது. நைஜீரியாவின் லாகோசு நகரில் இருந்து சென்ற போயிங் 727 விமானமே கொட்டோக்கோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறும் என கானாவின் பிரதி அரசுத்தலைவர் ஜோன் திரமானி மகமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 24 மில்லியன் மக்களைக் கொண்ட மேற்காப்பிரிக்க நாடான கானாவில் அண்மைக் காலங்களில் விமான விபத்துகள் ஏதும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 153 பேருடன் பறந்து கொண்டிருந்த விமானமொன்று நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியருக்குச் சொந்தாமான டானா ஏர் நிறுவனத்தின் போயிங் எம்டி-83 என்ற இவ்விமானம், முர்த்தாலா முகமது பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் மின்சார கம்பியொன்றில் மோதியபின் இரு மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டிடமொன்றின் மீது மோதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபுஜா நகருக்கும் லாகோஸ் நகருக்கும் இடையில் பயணித்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையில் இருந்தவர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று விடுமுறை நாளாகையால் கட்டடத்தில் எவரும் தங்கியிருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இறந்தவர்களின் விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விமானத்திலிருந்து எவரும் உயிர் தப்பியிருப்பார்கள் என தான் நம்பவில்லை என நைஜீரிய சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஹரோல்ட் டெனூரன் தெரிவித்துள்ளார். பயணிகளில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள் ஆவர். ஆறு சீனப் பயணிகளும் இறந்துள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நைஜீரியாவின் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் தெரிவித்துள்ளார். தமது எல்லைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஐந்து இராணுவத்தினர் ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. நேற்று இதே எல்லைப் பகுதியில் மூன்று ஆர்மீனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு எதிர்த் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இக்குற்றச்சாட்டு குறித்து ஆர்மீனியா உடனடியாக பதில் எதுவும் அளிக்கவில்லை. 1990களில் இந்த இரண்டு முன்னாள் சோவியத் நாடுகளுக்கிடையே சர்ச்சைக்குரிய நகர்னோ-கரபாக் பிராந்தியம் மீதான போர் இடம்பெற்றது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இப்பகுதிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் இரு நாடுகளையும் அமைதி பேணக் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்மீனியாவில் இருந்து ஜோர்ஜியா வருகின்றார். நாளை அசர்பைஜான் செல்லவிருக்கிறார். ஆர்மீனியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நகர்னோ-கரபாக் பிராந்தியம் 1880களின் இறுதியில் அசர்பைஜானில் இருந்து பிரிவதாக அறிவித்தை அடுத்து ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே போர் மூண்டது. 1988 முதல் 1994 வரை இடம்பெற்ற இந்த உள்நாட்டுப் போரில் இர பக்கத்திலுமாக 30,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது இப்போது ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இரண்டு தசாப்தங்களாக உருசியா அமைதி பேச்சுக்களை நடத்தி வருகிறது. இதே வேளையில், ஆர்மீனிய, அசர்பைஜானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையே சூன் 18 ஆம் நாள் பார்சில் சர்ச்சைக்குரிய பிராந்தியம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ள்டுளது. சூரிய வட்டத்துக்குக் குறுக்கே மிகச்சிறிய கரும் புள்ளியாக வெள்ளி நகர்ந்தது. இந்த நகர்வு ஆறு மணி 40 நிமிடங்கள் வரை நீடித்தது. வெறும் கண்களால் இந்த நிகழ்வைப் பார்ப்பது கண்களுக்கு ஆபத்தானது என முன்கூட்டியே வானியலாளர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிகழ்வைப் பார்வையிட சிறப்பு அவதான நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளியின் இடைநகர்வு 243 ஆண்டுகளுக்கு 4 தடவைகள் மட்டுமே இடம்பெறுகின்றன. வெள்ளி ஏறத்தாழ 10 கோடியே 81 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகின்றது. இது சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றிவர 224 நாட்களும் 16 மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றது. வெள்ளியினதும் பூமியினதும் சுற்றுவட்டங்கள் ஒரே தளத்தில் இல்லாதபடியால் இடைநகர்வு ஏற்பட பெரும் இடைவெளி ஏற்படுகிறது. அத்துடன், இடைநகர்வின் போது வெள்ளி, பூமி, மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இன்றைய நிகழ்வுக்கு முன்னர் 1631, 1639, 1761, 1769, 1874, 1882 மற்றும் 2004 ஆகிய நாடுகளில் வெள்ளி இடைநகர்வு அவதானிக்கப்பட்டது. அடுத்த இடைநகர்வு 2117 இலும் பின்னர் 2125 இலும் இடம்பெறும். அண்டத்தில் உள்ள பூமியைப் போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கும், வெள்ளியைப் பற்றியும் அதன் சிக்கலான வளிமண்டலம் பற்றி மேலும் அறியவும் இந்த வெள்ளி இடைநகர்வு நிகழ்வை வானியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். கரிமநாரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் 12,000 சூரியக் கலங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்பஸ் ஏ430 இன் வடிவத்தை ஒத்த இந்த விமானம் சராசரி தானுந்து ஒன்றின் பருமனையே கொண்டுள்ளதாக அவர்கள் கூறினர். 2014 ஆம் ஆண்டில் இந்த விமானத்தில் உலகச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்கு இவர்கள் திட்டமிடுகின்றனர். 2,500 கிமீ தூரப் பயணம் மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் ஆரம்பமானது. சூரியத் தூண்டல் (Solar Impluse) என்ற இத்திட்டத்தை பேர்ட்ரண்டு பிக்கார்ட், சுவிட்சர்லாந்தின் விமானி ஆந்திரே போஷ்பர்க் என்பவருடன் இணைந்து 2003ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். இவர்களின் முதல் பயணம் சென்ற மாதம் சுவிட்சர்லாந்தில் இருந்து மாத்ரிது வரை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாகவே மாத்ரிதில் இருந்து ஆப்பிரிக்காவின் மொரோக்கோ வரை பயணம் மேற்கொண்டார். 2011 மார்ச் மாதத்தில் சப்பானில் இடம்பெற்ற பெரும் ஆழிப்பேரலையில் அங்கிருந்து அடித்துச் செல்லப்பட்ட பெரும் துறைமுகக் களம் ஒன்று 8,050 கிமீ தூரத்தில் அமெரிக்காவின் வடமேற்கே ஓரிகன் மாநிலத்தில் கரையொதுங்கியுள்ளது. கொங்கிறீட்டு, உலோகம், மற்றும் இரப்பர் டயர்களால் அமைக்கப்பட்ட 165-தொன் எடையுள்ளதும், 21 மீட்டர் நீளமானதுமான இந்த மாபெரும் களம் ஓரிகனின் போர்ட்லாந்து கரையை வந்தடைந்துள்ளது. இக்களத்தில் கதிரியக்கத்தின் தாக்கம் எதுவும் இல்லை எனக் கூறியிருக்கும் அறிவியலாளர்கள், இக்களத்தில் சப்பானின் கடல்வாழ் உயிரினங்கள் பல இருக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர். இக்களத்தை என்ன செய்வது என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதே வேளையில் காவல்துறையினர் இந்தக்களத்திற்குப் பாதுகாப்பளித்து வருகின்றனர். சப்பானின் வடக்கே மிசாவா துறைமுகத்தைச் சேர்ந்ததாக இக்களத்தில் காணப்பட்டுள்ள இலச்சினை தெரிவிக்கிறது. இத்துறைமுகத்தில் இருந்து மேலும் இரண்டு களங்கள் காணாமல் போயுள்ளன. 2011 சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட சப்பானியப் படகு கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது மார்ச் 25, 2012 இந்த உரையின் பிரதி ஒன்றை தருமாறு பாக்கித்தானின் அரசு வானொலி இந்திய வானொலியிடம் அதிகாரபூர்வமாகக் கேட்டிருந்தது. பாக்கித்தான் உருவாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் 1947 ஆகத்து 11 ஆம் நாள் சட்டசபையில் ஜின்னா இந்த உரையை ஆற்றியிருந்தார். பிரித்தானியாவின் பிபிசி வானொலி தனது ஆவணக் காப்பகத்தில் இவ்வுரை இல்லை என்றும் அதனைத் தருமாறும் பாக்கித்தானிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது பாக்கித்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் குறிப்பிட்ட நாள் ஒன்றில் இடம்பெற்ற உரை குறித்துத் தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்த அனைத்திந்திய வானொலியின் பணிப்பாளர் ஜெனரல் எல்.டி. மந்திலோய், தற்போது அந்த உரையின் பதிவு தம்மிடம் இல்லை எனத் தெரிவித்தார். "(ஜின்னாவின்) இந்த உரை, குறிப்பாக நவீன, சனநாயக முறையிலான பாக்கித்தானை உருவாக்க விரும்பும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது என பாக்கித்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் முர்த்தாசா சோலங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாக்கித்தானின் வானொலி நிலையங்களில் உரைகளைப் பதியும் தொழினுட்பங்கள் அப்போது இருக்கவில்லை என அவர் தெரிவித்தார். இந்த உரையில் ஜின்னா நீங்கள் சுதந்திரமானவர்கள்; நீங்கள் கோயில்களுக்குப் போவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது, பாக்கித்தானின் பள்ளிவாயில்களுக்கோ அல்லது வேறு எந்தக் கோயில்களுக்கோ சென்று வழிபட உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் எந்த மதத்தையோ அல்லது இனத்தையோ சார்ந்திருக்கலாம், அது பாக்கித்தான் அரசைச் சார்ந்ததல்ல எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐவரி கோஸ்டின் தென்மேற்கே இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஐக்கிய நாடுகளின் ஏழு அமைதிப்படையினர் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர், என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. ஐவரி கோஸ்ட் இராணுவத்தினர் சிலரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. "இத்தாக்குதலை அடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எல்லையைத் தாண்டி லைபீரியாவுக்குள் சென்றுள்ளனர் என ஐநா அமைதிப்படையினரின் பேச்சாளர் அனூக் டெசுகுரோசெயிலியர்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சூலை மாதத்தில் இருந்து குபாக்போவின் ஆதரவுப் படையினரால் 40 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சென்ற வாரம் குற்றம் சாட்டியிருந்தது. முன்னாள் உதவி அரசுத்தலைவரான சைட்டோட்டி சோமாலியாவின் அல்-சபாப் என்ற போராளிக் குழுவை வெகுவாக விமரிசித்து வந்தவர். எதிர்வரும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடவிருந்தார். தற்போதைய அரசுத்தலைவர் கிபாக்கியின் பதவிக்காலம் 2013 சனவரியுடன் நிறைவடைகின்றது. பிரதமர் ரைலா ஒடிங்கா தானும் இத்தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருந்தார். டிசம்பர் 2007 இல் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 1,500 பேர் கொல்லப்பட்டனர். தன்னைக் கைப்பற்றிய பிரித்தானியர்களின் மொழியை கற்க நெப்போலியன் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தான் என்பதை கொம்டே டி லாசு கேசசு தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியைத் தழுவியதை அடுத்து கைது செய்யப்பட்டு புனித எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். தனது 51வது அகவையில் 1821 ஆம் ஆண்டில் புனித எலனா தீவில் நெப்போலியன் இறந்தான். சியாச்சென் பனியாற்றுப் பகுதிக்கு இரு நாடுகளுமே உரிமை கோரி வருகின்றன. இரு நாடுகளும் இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான படையினரை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தியுள்ளன. இந்தியத் தரப்புக்கு இந்திய பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா தலைமை தாங்குவார். பாக்கித்தான் தரப்புக்கு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் நர்கீசு சேதி தலைமை தாங்குவார். 1947 ஆம் ஆண்டு முதல் காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே பிரிக்கப்பட்டது. இப்பிராந்தியம் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்ற சர்ச்சையில் இரு நாடுகளும் இரு முறை போரில் ஈடுபட்டன சியாச்சென் பனியாறு உலகின் மிக உயரமான போர்முனை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 6,700 மீட்டர்கள் உயரத்தில் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் போர் நடவடிக்கைகளையும் விட தீவிரமான காலநிலை காரணமாகவே பெருந்தொகையானோர் இறந்துள்ளனர். மலை ஒன்றின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட நிலசரிவினால் பக்லாம் மாகாணத்தின் போர்க்கா மாவட்டத்தில் 23 வீடுகள் முற்றாக நிலத்தில் புதையுண்டன. புதையுண்டவர்களை மீட்கும் பணியில் நிவாரணப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். "இது ஒரு மனிதப் பேரவலம், ஒரு கிராமம் முழுவதும் அழிந்து விட்டது என பக்லான் மாகான ஆளுனர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். "10 முதல் 20 மீட்டர்கள் வரை மண், மற்றும் கற்கள், பாறைகள் வீடுகளை மூடி விட்டன. இவை வீழ்ந்த வேகத்தைப் பார்த்தால், எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என ஆளுனரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நிலநடுக்கங்களின் தாக்கம் 170 கிமீ தூரத்தில் உள்ள தலைநகர் காபூலிலும் உணரப்பட்டது. பெரும்தொகையான பணத்தைக் களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 75 உயர் அரசு அதிகாரிகளைப் பணிகளில் இருந்து இடைநிறுத்தம் செய்தவதற்கு தெற்கு சூடானின் நாடாளுமன்றம் ஆதரவாக வாக்களித்தது. களவாடப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை மீளச் செலுத்துமாறு தற்போதைய மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு அரசுத்தலைவர் சல்வா கீர் கடந்த மாதம் கடிதங்கள் அனுப்பியிருந்தார். இதனை அடுத்து 60 மில்லியன் டாலர்கள் வரை அரசுக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு சூலை மாதத்தில் தெற்கு சூடான் விடுதலை பெற்றது. அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாக அங்கு உள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பர்மாவின் சனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சான் சூச்சி அம்மையார் ஐரோப்பாவுக்கான தனது முக்கியத்துவமிக்க பயணத்தை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தார். 1988 ஆம் ஆண்டிற்கு பின் அவர் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். சூச்சி அம்மையாரின் இப்பயணம் மியன்மாரில் ஏற்பட்டு வரும் அரசியல் முன்னேற்றத்தின் முக்கிய படிக்கல்லாகக் கருதப்படுகிறது. இரு வாரப் பயணம் மேற்கொள்ளும் ஆங் சான் சூச்சி பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, பிரான்சு மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவிருக்கும் பன்னாட்டு தொழிற் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசை நோர்வேயில் வைத்து அவர் அதிகாரபூர்வமாகப் பெற்றுக் கொள்வார். கடந்த 24 ஆண்டுகளில் பெரும்பாலான பகுதியை இவர் பர்மாவில் வீட்டுக் காவலில் கழித்திருந்தார். 2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதம் அவர் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ஆங் சான் சூச்சி பர்மாவின் விடுதலை வீரர் ஆங் சானின் மகள் ஆவார். ஆங் சான் 1947 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படார். ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இந்த வொயேஜர் 1 விண்கலத்தை 1977 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் எந்நேரத்திலும் நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது. மிகத் தூரத்தில் உள்ள விண்மீன்களில் இருந்து வெளியேறும் உயர்-ஆற்றல் துகள்கள் வொயேஜர் விண்கலத்தைத் தாக்க ஆரம்பித்துள்ளதாக இந்த விண்கலத்தை அவதானிக்கும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், இது தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை விரைவில் அடையும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். "இயற்பியல் விதிகளின் படி, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று விண்மீனிடைவெளிக்குள் செல்லுவது இதுவே முதற் தடவையாக இருக்கும், ஆனாலும் எப்போது இது நடைபெறும் என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது கலிபோர்னியா தொழிநுட்பக் கழகத்தைச் சேர்ந்த எட் ஸ்டோன் தெரிவித்துள்ளதாக நாசாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அண்டக் கதிர்கள் விண்கலத்தைத் தாக்கும் எண்ணிக்கையைக் கொண்டே விண்கலம் எப்போது விண்மீனிடைவெளிக்குள் செல்லும் என்பதை அறிவியலாளர்கள் கணக்கிடுவார்கள். கடந்த ஒரு மாதமாக அண்டக் கதிர்கள் தாக்கும் வேகம் மிக வேகமாக அதிகரித்திருப்பதை அறிவியலாளர்கள் அவதானித்துள்ளார்கள். வொயேஜர் 1 வினாடிக்கு 17 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது தற்போது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் கிமீ தூரத்தில் காணப்படுகிறது. இந்த விண்கலத்தில் இருந்து வெளிவரும் குறிப்பலை ஒன்று நாசாவின் ஏற்பு வலையை வந்தடைய பதினாறரை மணிக்கும் சற்றுக் கூடுதலாக எடுக்கிறது. கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆங்காங்கே மோதல்களும் இடம்பெற்றுள்ளன. 30 பேர் வரையில் காயமுற்றனர். இவ்வாண்டு அக்டோபரில் இடம்பெறவிருக்கும் அந்நாட்டுத் தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களை அந்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்ததை அடுத்தே கலவரங்கள் மூண்டன. அரசுத்தலைவர் ஒருவர் தேர்தலில் பல முறை போட்டியிடக்கூடியதாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே டோகோ நாட்டில் அரசுத்தலைவர்களாக உள்ளனர். பௌரி ஞாசிங்பி அவரது தந்தையின் 38 ஆண்டு கால ஆட்சியின் பின்னர், 2005 ஆம் ஆண்டில் இறந்த பின்னர் அரசுத்தலைவராகப் பதவியேற்றார். பௌரி ஞாசிங்பி 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு தடவைகள் மட்டுமே போட்டியிட வழிவகுக்கும் 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் படி ஆர்ப்பாட்டக்காரகள் கோரி வருகின்றனர். இந்தச் சட்டம் 2002 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தினால் திருத்தப்பட்டது. கல்கத்தாவில் பிறந்த 63 அகவையுடைய ரஜத் குப்தா பங்குச் சந்தை மோசடியில் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், மற்றும் சதி முயற்சியில் ஈடுபட்டதற்காகவும் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நடுவண் சான்றாயர் குழுவினால் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனையடுத்து பங்குச் சந்தை மோசடிகளுக்காக அதிக பட்சம் 20 ஆண்டுகளும், சதி முயற்சிக்காக அதிகபட்சம் 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் வரை ரஜத் குப்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ராக்கொவ் தெரிவித்தார். ரஜத் குப்தா தான் பணியாற்றிய நிறுவனங்களின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்கு அளித்ததாகவும், இதை அடிப்படையாக வைத்து ராஜரத்தினம் இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை சரியாக இருக்கும்போது பங்குகளை வாங்கிக் குவித்ததாகவும், நிலைமை சரிய ஆரம்பித்த போது பங்குகளை விற்று பல பில்லியன் லாபம் அடைந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக ரஜத் குப்தா உள்ளிட்டோருக்கு ராஜரத்தினம் ஏராளமான பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். குப்தா குற்றமற்றவர் என அவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார். தேவைப்பட்டால் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார். ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா கைது அக்டோபர் 28, 2011 பங்கு மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அக்டோபர் 14, 2011 பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார் மே 12, 2011 ராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம் மார்ச் 23 2011 வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது அக்டோபர் 17, 2009 சீனா விண்வெளிக்கு பெண் ஒருவரை முதற்தடவையாக அனுப்பியுள்ளது. ஒரு குழந்தையின் தாயான 33 வயதான லியு யங், சீன விமானப்படையில் மேஜர் தர அதிகாரியாவார். போக்குவரத்து விமானத்தின் விமானியாக செயற்பட்ட அவர், பல பறவைகள் விமானத்தில் மோதி அதன் ஒரு இயந்திரம் செயற்பாட்டை இழந்த தருணத்திலும், கூட அதனால் ஏற்பட்ட அழுத்தங்களை மிகவும் லாவகமாக கையாண்டவர். கைப்பந்து வீராங்கனையான இவர், இரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் சீன விண்வெளித்திட்டத்தில் இணைந்தார். சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் குழுவின் தலைவர் வூ பாங் கோ சனிக்கிழமை பிற்பகல் சியூச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் விண்வெளி வீரர்களை வழியனுப்பினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவரும் சீன மத்திய இராணுவக் கமிட்டியின் தலைவருமான ஹு சிந்தாவ் விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். சீனா தனது விண்வெளித்திட்டத்திற்கு பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே இரு செயற்கைக்கோள்களை சந்திரனின் சுற்றுவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. அடுத்த தடவை நிலவில் விண்ணுளவி ஒன்றைத் தரையிறக்க எண்ணியுள்ளது. சீனா தனது விண்வெளி ஆய்வுகூடத்தை நோக்கி சென்சோ-8 விண்கலத்தை ஏவியது நவம்பர் 1, 2011 சீனா தனது முதலாவது விண்வெளி ஆய்வுகூடத்தை விண்ணுக்கு ஏவியது செப்டம்பர் 30, 2011 அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட சீனா புதிய செயற்கைக்கோளை ஏவியது சூலை 29, 2011 நைஜீரியாவின் வடக்கே கடூனா மாநிலத்தில் கிறித்தவக் கோயில்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், மற்றும் மதக் கலவரங்களினால் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில்கள் மீதான தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இதனை அடுத்து முஸ்லிம்கள் மீதும், நிவாரணப் பணியாளர்கள் மீதும் நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் மேலும் 20 பேர் கொல்லப்பட்டனர். கடூனாவின் தெற்கே கிறித்தவ இளைஞர்கள் முஸ்லிம்களை அவர்களது வாகனங்களில் இருந்து கீழே இறக்கி உயிருடன் எரித்துப் படுகொலை செய்தனர் என செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் தெரிவித்தனர். பலரது உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரியூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோயில்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லை எனினும், இது போன்று இம்மாநிலத்தில் முன்னர் நடந்த தாக்குதல்களை போக்கோ அராம் என்ற தீவிரவாத இசுலாமியக் குழுவே நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரமும் கிறித்தவக் கோவில்கள் இரண்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அண்மைக் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் கிறித்தவக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நைஜீரியாவில் இசுலாமிய சரியா சட்டங்களைக் கொண்டுவரவிருப்பதாக பொக்கோ அராம் போராளிகள் கூறுகின்றனர். கண்டெடுக்கப்பட்ட எலும்பிலிருந்து கரிம மாதிரிகளைப் பிரித்தெடுத்து மேலதிக நுண்ணிய ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, இந்த எலும்புக்கூட்டின் வயது துல்லியமாகக் கண்டறியப்படும் எனத் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர். "எமது எதிர்கால ஆராய்ச்சிக்கு இது மிக முக்கியமானது, இதன் மூலம் வரலாற்றுக்கு முந்திய கால மனிதன் பற்றித் தெரியாத உண்மைகளை அறிந்துகொள்ள முடியும் என தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் தசநாயக்க தெரிவித்தார். இந்த இடத்திலிருந்து சில கற்கருவிகளையும், உணவு சம்பந்தமான எச்சங்களையும் தாங்கள் தோண்டி எடுத்துள்ளதாக அகழ்வாய்வுப் பணிகளின் இயக்குநர் கலாநிதி நிமல் பெரேரா பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார். இதற்கு முன்னரும் அம்பலாந்தோட்டை, ஹங்கம பகுதிகளில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது, ஆனாலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது ஒரு முழுமையான எலும்புக்கூடு ஆகும் என இலங்கை தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான போராளிகள் வடக்கு ஈராக்கில் உள்ள மறைவிடங்களில் நிலைகொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டில் போராளிகள் ஆயுதம் தாங்கிப் போரிட ஆரம்பித்ததில் இருந்து அங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்துள்ளனர். நேற்றிரவு எல்லையைத் தாண்டி துருக்கியப் பகுதிக்குள் நுழைந்த போராளிகள் அங்குள்ள இராணுவக் காவலரண் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் ஈராக்கிற்குள் தப்பியோடி விட்டனர் என அவர்கள் தெரிவித்தனர். 10 போராளிகளும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பிரதமர் ரிசெப் தாயிப் எர்தோகனின் அரசு போராளிகள் மீது தற்போது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். போராளிகளுக்கு ஆதரவளிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்கு துருக்கியில் தனிநாட்டுக்காகப் போராடி வரும் பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை ஒரு தீவிரவாதக் குழுவாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வகைப்படுத்தியுள்ளன. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள போராளிகள் குர்திய மக்களுக்கு கலாசார உரிமைகளையும் கூட்டமைப்புக்குள் தன்னாட்சி கோரிப் போராடுவதாகவும் அறிவித்துள்ளனர். துருக்கி விமானத் தாக்குதலில் 35 குர்திய இனத்தவர்கள் உயிரிழப்பு டிசம்பர் 31, 2012 குர்தியப் போராளிகளின் தாக்குதலில் 26 துருக்கியப் படையினர் உயிரிழப்பு அக்டோபர் 19, 2011 35 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட விண்கல அலைகள் நமக்கு வர 16 மணிக்கு மேல் ஆகிறது. சூரியனில் வெள்ளி நிழல் நகர்வதை நாம் பார்த்தோம். இப்போது வாழும் என் பேத்தியின் மகனே அடுத்து நிகழப்போகும் இந்த நிழல்நகர்வைப் பார்க்க இயலாது. வொயேஜர் 1 அனுப்பும் செய்களைப் பார்த்து அண்டத்தை அளக்கப்போவது நமது வழித்தோன்றல்கள். நமது பணிகள் இப்படித் தொலைநோக்குடையனவாக அமையட்டுமே! *கட்டுரை மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. *தமிழில் வரும் அறிவியல் கட்டுரைகள் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பாக இல்லாமல் இவ்வாறு செய்தித் தொகுப்பாக அமைய வேண்டும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பாக்கித்தான் சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உருசியாவுக்கான தனது பயணத்தை இடைநிறுத்தியுள்ளார். சனாதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு கிலானி மறுத்தததை அடுத்து கிலானிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் முன்பு அவர் மீதான குற்றத்தை உறுதி செய்து, கிலானிக்கு நீதிமன்றம் கலையும் வரையான தடுப்புக்காவலை விதித்தது. "'மேன்முறையீட்டு மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சயீட் யூசுப் ரசா கிலானி, மஜ்லிஸ் ஈ சூரா (நாடாளுமன்ற) அங்கத்தவராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என பிரதம நீதியரசர் இப்திகார் அலி சௌத்திரி நீதிமன்றத்தில் அறிவித்தார் அவர் பிரதமர் பதவியிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ளார். தற்போது பிரதமர் பதவி வெற்றிடமாகவுள்ளது" எனவும் பிரதம நீதியரசர் தெரிவித்தார். பாக்கித்தானில் அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்துவரும் கடுமையான மோதல்களின் தொடர்ச்சியே நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இலங்கையின் வடக்கே இராணுவத்தால் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றில் இடம்பெற்ற மாலபே வைத்தியக் கல்லூரி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கும் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் 25 வருடங்களாக மீள்குடியேற முடியாமல் இருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் சனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாமல் உள்ளது என்றார். வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முகப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள். மக்கள் மீது கழிவு எண்ணெயும் ஊற்றப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அளிக்க, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முயன்ற போது அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்று கொண்டிருந்த போது, புன்னாலைக் கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் பயணித்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதே வேளையில், யாழ் நகரில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் யாழ் பேருந்து நிலையப் பகுதியில் பிற்பகலில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் திரண்டிருந்த போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்கள் இடம்பெறக் கூடும் என்ற காரணத்தைக்காட்டி, இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என யாழ் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் கிறித்துமசுத் தீவில் இருந்து 110 கடல் மைல்கள் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகைத் தாம் அவதானித்ததாக ஆஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இப்படகில் 200 பேர் வரையில் இருந்ததாகவும், இவர்கள் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இது உறுதி செய்யப்படவில்லை. மூழ்கிய படகின் மேற்பகுதியில் 40 பேர் வரையில் காணப்பட்டதாக மேற்கு ஆத்திரேலியக் காவல்துறை அதிகாரி கார்ல் ஓ’கலகன் தெரிவித்தார். ஏனையோர் கடலில் காணப்பட்டதாகவும் தெரிவித்த அவர் 75 பேர் வரையில் இறந்திருக்கக்கூடும் எனக் கூறினார். படகை நோக்கி இரண்டு இந்தோனேசியக் கடற்படைக் கப்பல்கள் விரைந்துள்ளதாக இந்தோனேசியப் பேச்சாளர் தெரிவித்தார். உயிர்தப்பியோர் ஆத்திரேலியாவுக்கா அல்லது இந்தோனேசியாவுக்கா கொண்டு செல்லப்படுவர் என உறுதியாகக் கூற முடியாதென அவர் கூறினார். இப்படகு இலங்கையில் இருந்தே புறப்பட்டது என்பதை ஆத்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்கு ஆத்திரேலியக் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று படகுகள் 238 பேருடன் கிறித்துமசுத் தீவுக்கருகில் ஆத்திரேலிய எல்லைக் காப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கிறித்துமசுத் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 2010 திசம்பரில் பெண்கள், குழந்தைகளுடன் 50 அகதிகள் கொண்ட படகு கடலில் மூழ்கியது. 1991 ஆம் ஆண்டில் பிரிவினையை அறிவித்த சோமாலிலாந்து ஒரு தனிநாடாக விரும்புகிறது, ஆனாலும் இதுவரையில் எந்த நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை. சோமாலியா இந்த வடக்குப் பிரதேசத்தைத் தன்னுடன் வைத்திருக்கவே விரும்புகிறது. விடுதலையை அறிவித்த நாள் முதல் சோமாலியாவின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது சோமாலிலாந்தில் கூடுதல் அமைதி நிலவி வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலிலாந்து சோமாலியாவுடன் 1960 சூலை 1 இல் இணைவதற்கு முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்து வந்துள்ளது, அதேவேளையில் சோமாலியாவின் ஏனைய பகுதிகள் இத்தாலியக் குடியேற்ற நாடாக இருந்துள்ளது. நேற்றைய பேச்சுக்களின் முடிவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் விரைவில் சந்தித்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதென முடிவாகியுள்ளது. இச்சந்திப்பு அடுத்த வாரம் துபாயில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்புக் குறித்து நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு பன்னாட்டு சமூகங்களிடம் இருந்து உதவிகளைக் கேட்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சோமாலியாவில் தற்போதுள்ள தீவிரவாதிகள், மற்றும் கடற்கொள்ளையர் பிரச்சினைகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. பிரித்தானியா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இரு தரப்பும் கூடிய விரைவில் தீர்வு ஒன்றை எட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றன. சோமாலியாவின் இடைக்கால அரசின் பதவிக்காலம் இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் முடிவுக்கு வரும் நிலையில், அது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசுத்தலைவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். சோமாலியாவின் கடைசி தேசிய அரசின் தலைவர் சியாட் பாரே பதவியில் இருந்து இறக்கப்பட்டதை அடுத்து சோமாலிலாந்து தன்னாட்சியை அறிவித்திருந்தது. சோமாலியாவின் ஏனைய பகுதிகளைப் போலல்லாமல் அங்கு சனநாயக முறையில் தேர்தல்கள் ஒழுங்காக நடைபெற்று மக்களாட்சி இடம்பெற்று வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் விமானப் படை விமானம் ஒன்று குடியிருப்பு மனைகள் மீது வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். ஃபொக்கர் எஃப்27 ரக விமானமே நேற்று வியாழன் அன்று ஹலீம் பெர்தனாக்சுமா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வீழ்ந்து தீப்பற்றியதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த விமானப் படையைச் சேர்ந்த ஏழு பேரில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், விமானம் வீழ்ந்த இடத்தில் இருந்த வீடொன்றில் ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தததாகவும் விமானப்படைப் பேச்சாளர் அஸ்மன் யூனுஸ் தெரிவித்தார். உயிர் தப்பிய விமானப் படை வீரர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 56 பேர் பயணம் செய்யக்கூடிய டச்சுத் தயாரிப்பான ஃபொக்கர் எஃப் 27 ரக விமானங்கள் 1950களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அஷ்ரப்பிற்கு ஆதரவாக 211 வாக்குகள் கிடைத்தன. இவருக்கு எதிராகப் போட்டியிட்ட சர்தார் மெகுதாப் அகமது கான் அப்பாசி 89 வாக்குகளைப் பெற்றார். சனாதிபதியின் விருப்பத்தேர்வு வேட்பாளர் மக்தூம் சகாபுத்தீனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடைசி நிமிடத்தில் அஷ்ரபின் பெயர் பிரேரிக்கப்பட்டது. பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அஷ்ரப்பின் பதவிக்காலம் மிகவும் குறுகியதாகவே இருக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். 1950 ஆம் ஆண்டில் பிறந்த அஷ்ரப் 198 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் நுழைந்தார். 2008 ஆண்டு முதல் நீர் மற்றும் மின்வலுத்துறை அமைச்சராகவும், தகவற்தொழிநுட்ப அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார். பிரதமராக தெரிவு செய்யப்பட்டபின்னர் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதாக உறுதியளித்த ராஜா பர்வேசு அஷ்ரப் மக்களாட்சிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவைக் கோரினார். பிறப்பின் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சை சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது. அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் 17 வார முதிர்மூலவுருவின் (fetus) வாய்ப் பகுதியில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதுவே உலகில் முதல் தடவை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சிகிச்சை என்று விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமி, புளோரிடாவில் உள்ள ஜாக்சன் நினைவு மருத்துவமனையில் இந்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு மிகவும் அரிதான மருத்துவ நிகழ்வு, இக்கட்டி வாய் சினைப்பருவ அபரிமித வளர்ச்சி (oral teratoma) என அழைக்கப்படுகின்றது. இச்சிகிச்சை 2010இல் நடைபெற்றது; லெய்னா கொன்சலேசு (Leyna Gonzalez) எனும் சிறுமி தாயின் வயிற்றுள் முதிர்மூலவுருவாக இருந்தபோதே இவ்வறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சையின் ஐந்து மாதங்களின் பின்னர் லெய்னா பிறந்தார். தற்போது 20 மாதம் வயதுடைய அச்சிறுமியும் அதனது தாயார் டம்மி கொன்சலேசும் ஆரோக்கியமாக உள்ளனர். இலத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயின் அரசுத்தலைவர் பெர்னாண்டோ லூகோ தனது அதிகாரத்தை நெறிதவறிப் பாவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவரது பதவி நீக்கத்தை அடுத்து இலத்தீன் அமெரிக்க நாடுகள் பராகுவே மீது கடும் சீற்றம் அடைந்துள்ளன. அர்ஜென்டீனா, பிரேசில், மற்றும் உருகுவாய் ஆகிய நாடுகள் தமது தூதர்களை ஆலோசனைக்காக மீள அழைத்துள்ளன. எக்குவடோர், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. ஆனாலும், லூகோவின் பதவி நீக்கம் அரசியல் சூழ்ச்சி அல்லவென்று புதிதாக அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள பெதெரிக்கோ பிராங்கோ வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நடைமுறையில் உள்ள மக்களாட்சியில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார். இவர் முன்னர் லூகோவின் அரசில் பிரதித்தலைவராகப் பணியாற்றியவர். கடந்த வெள்ளியன்று மேலவையில் 39-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததை அடுத்து பெர்னான்டோ லூகோ பதவி விலகினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசித்து வந்த 150 விவசாயிகளை வெளியேற்ற கடந்த வாரம் காவல்துறையினருக்கு லூகோ உத்தரவிட்டதை அடுத்து விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் மோதலில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. விவசாயிகள் பல ஆண்டுகளாக வசித்து வந்த 4,900 ஏக்கர் நிலம், கொலராடோ கட்சி அரசியல் தலைவருக்கு சொந்தமானது என்றும் அதனைக் கைப்பற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரவும் லூகோ முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், 5 குற்றச்சாட்டுகளின் கீழ் லூகோ மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற செனட்டில் இதுதொடர்பாக விசாரணை நடந்த போது, அதில் அதிபர் லூகோ சமூகமளிக்கவில்லை. அடுத்த வாரம் அர்ஜென்டீனாவில் நடைபெறவிருக்கும் மெர்க்கோசூர் என்ற தென்னமெரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் இந்த அரசியல் புரட்சி" குறித்து முடிவெடுக்கப்படும் என அர்ஜென்டீன அரசுத்தலைவர் கிறித்தீனா பெர்னான்டசு அறிவித்துள்ளார். அமெரிக்காவும் எசுப்பானியாவும் இது குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காவிடினும், பராகுவேயில் சனநாயகத்துக்கான தேவையை வலியுறுத்தியுள்ளன. சீனா தனது தியேன்குங்-1 என்ற விண்வெளி நிலையத்துடன் சென்சோ-9 என்ற விண்கலத்தை தானியங்கியாக அல்லாமல் மனித முயற்சியால் வெற்றிகரமாக இணைத்தது. சென்சோ-9 விண்வெளி வீரர்களான சின் ஆய்ப்பெங், லியூ வான், மற்றும் சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான லியூ யான் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டதை சீன அரசுத் தொலைக்காட்சி காண்பித்தது. தனது நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை விண்வெளியில் அமைக்கும் சீனாவின் திடட்த்திற்கு இது முக்கிய படிக்கல்லாக சீனா கருதுகிறது. இத்திட்டத்தை 2020 ஆம் ஆன்டிற்குள் நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது. தானியங்கியாக இணைப்பதில் சிக்கல் ஏற்படுமிடத்து மனித முயற்சி இணைப்பு எதிர்காலத்தில் சீனா பயன்படுத்தும். மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் செல்லும் இரண்டு விண்கலங்களை மனித முயற்சியால் ஒன்றிணைப்பது மிகச் சிரமமான ஒரு பணியாகும். 1960களில் சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் மனித முயற்சியால் இரு கலங்களை இணைத்துள்ளன. முர்சியின் வெற்றியை மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகரின் மத்தியில் உள்ள தாகிர் சதுக்கத்தில் கூடினர். அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்ட முர்சி இங்கு தனது முதலாவது உரையை நிகழ்த்தவிருந்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் சூழ்ந்து கொண்டனர். எகிப்தின் தற்போதைய இராணுவ ஆட்சியாளர் உசைன் தண்டாவி தேர்தலில் வெற்றி பெற்ற முர்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இசுரேல் உட்பட உலக நாடுகள் பலவும் முர்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே நடைமுறையில் உள்ள நீண்ட கால அமைதி உடன்பாட்டில் மாற்றம் ஏதும் இராது எனத் தாம் நம்புவதாக இசுரேல் பிரதமர் பெஞ்சமின் தெத்தனியாகு தெரிவித்தார். இதற்கிடையில் சூன் 30 ஆம் நாள் முர்சியிடன் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இராணுவம் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும் தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்புக்குள் மட்டுமே அவரது அதிகார வரம்புகள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. உகாண்டாவின் கிழக்கே மலைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து மூன்று கிராமங்கள் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. புடூடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வீடுகள் நிலத்தில் புதையுண்டுள்ளன. மொத்தம் 300 பேர் வரையில் இக்கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். குறைந்தது 72 பேர் வரையில் உயிர் தப்பினர், இவர்கள் அனைவரும் சந்தைக்குச் சென்றவர்கள் ஆவர். கென்ய எல்லைக்கருகில் உள்ள எல்கோன் மலையை அண்டிய பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் அண்மைக்காலமாக பெரும் மழை பெய்து வந்ததெனத் தெரிவிக்கப்படுகிறது. எக்குவடோரில் உள்ள கலாபகசு தேசியப் பூங்காவில் வசித்து வந்த மாபெரும் ஆமை ஒன்று இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இவ்வகை இராட்சத ஆமை இனத்தில் உயிர் வாழ்ந்த கடைசி ஆமை இதுவென நம்பப்படுகிறது. இந்த ஆமை தனிமையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்ததால் இதற்கு "தனியன் ஜோர்ஜ் Lonesome George எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்டா தீவு ஆமை என அழைக்கப்படும் ஜோர்ஜின் வயது 100 இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இறப்பிற்கான காரணத்தை அறிய இந்த ஆமையின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆமைக்கு வாரிசுகளோ அல்லது இதன் இனத்தவர்களோ இல்லாததால், இது மிக அரிதான உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக இந்த ஆமையைப் பாதுகாத்து வந்தவர் பௌஸ்டோ லெரேனே என்பவர். ஆமையின் அடைப்பிடத்தில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. பின்டா தீவு ஆமையை வேறு வகைப் பெண் ஆமைகளுடன் சேர்க்கையை உண்டாக்கி அதன் வாரிசுகளை உருவாக்க சூழலியலாலர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இவ்வகை ஆமைகள் 200 ஆண்டுகள் வரையில் உயிர் வாழும் என நம்பப்படுகிறது. 15 ஆண்டுகளாக வூல்ஃப் எரிமலைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்றுடன் இது வாழ்ந்து வந்து ஒன்று கூடிய போதும் அதன் முட்டைகள் கருவற்றவையாகவே இருந்தன. எசுப்பனியோலா தீவு பெண் ஆமைகளுடனும் சேர்ந்து வாழ்ந்த போதும் அவற்றுடன் கூட மறுத்து விட்டது. லோன்சம் ஜோர்ஜைப் பார்ப்பதற்கு ஆண்டு தோறும் 180,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருவர். ஜோர்ஜின் உடல் பெரும்பாலும் பதனிடப்பட்டு எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இத்தீவுகளில் ஆமைகள் பெருமளவு இருந்த போது, பின்னர் இங்கு ஆடுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இவற்றின் தொகை குறைய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 20,000 வேறு பெரிய வகை ஆமைகள் கலபாகசுத் தீவுகளில் இப்போதும் காணப்படுகின்றன. இன்று புதன்கிழமை காலையில் இப்படகு கடலில் தத்தளிப்பதைக் கண்ணுற்ற ஆத்திரேலிய எல்லைக்காவல் படையினர் விரைந்து சென்று 123 பேரைக் காப்பாற்றினர். இப்படகில் 133 பேர் வரையில் பயணித்ததாக ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 123 பேர் காப்பாற்றப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கிறித்துமசுத் தீவு ஆத்திரேலியாவின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது. ஆத்திரேலியாவின் ஆளுகைக்கு உட்பட்ட இத்தீவை நோக்கியே பல அகதிகள் படகுகள் மூலம் இந்தோனேசியாவூடாக ஆத்திரேலியப் பெரும்பரப்பில் குடியேறும் முயற்சியில் வருகின்றனர். இங்கு வரும் அகதிகள் தற்காலிகமாக இத்தீவிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் இவர்கள் தொகுதி தொகுதியாக ஆத்திரேலியப் பெரும்பரப்புக்குள் கொண்டுவரப்படுகின்றனர். சென்னை மாநகரப் பேருந்து 17-எம், மேம்பாலத்தில் வளைவான சாலையில் செல்லும்போது திடீரென பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது. இதில், பயணிகள் 39 பேர் காயமடைந்தனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். துவாரெக் போராளிகளின் அரசியல் தலைவர் ஒருவர் படுகாயமடைந்தார். அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகள் நகரில் இருந்த துவாரெக்குகளின் தலைமைக் கட்டடத்தைத் தாக்கிக் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கள் அன்று காவோ நகர உள்ளூர் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. மோதல்களில் இறந்தவர்கள் பெரும்பாலானோர் ஆயுததாரிகள் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறின. பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுகோள்களைக் asteroid கண்டுபிடிக்கும் முயற்சியில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இலாப-நோக்கமற்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தை இந்த தசாப்த இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர். பூமிக்குக் கிட்டவாக இருக்கும் பூமிக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பெரும் பாறைகளைக் கண்டுபிடிக்க இடங்காட்டும் அகச்சிவப்பு தொலைக்காட்டி ஒன்றை விண்வெளியில் வைத்திருக்க இத்திட்டம் வழிவகுக்கும். இந்த பி612 (B612 Foundation) என்ற இந்தத் திட்டத்திற்கு பலநூறு மில்லியன் டாலர்கள் செலவழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையை எட்ட உலகெங்கிலும் இருந்து நன்கொடை திரட்டப்படவிருக்கிறது. இத்திட்டத்தில் பல முன்னாள் விண்வெளிவீரர்கள், மற்றும் நாசா அறிவியலாளர்கள் பலர் இணைந்துள்ளனர். விண்வெளியில் உலவும் இத்தகைய சிறுகோள்களால் பூமிக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உலக நாடுகளுக்கு இந்த அமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துக்கூறி வருகின்றனர். இந்தப் பாறைகள் எங்குள்ளன என்பதை அறிய வேண்டிய தருணம் வந்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். "மனிதனுக்கான சுற்றுச்சூழல் என்பது நிலம், நீர், மற்றும் காற்று மட்டுமல்லாமல் விண்வெளியும் இணைந்தது என்பதை கடந்த சில ஆண்டுகளாக நாம் உணர்ந்து வருகிறோம் இத்திட்டத்தின் தலைவரும், அப்பல்லோ 9 இன் விண்வெளிவீரருமான ரஸ்டி சுவெய்க்கார்ட் தெரிவித்தார். 2030களில் பூமியை மோதவிருக்கும் சிறுகோளைத் தடுக்கும் முயற்சியில் ரஷ்யா சனவரி 1, 2010 இயேசு கிறித்து பிறந்த இடமாகக் கருதப்படும் தளத்தில் உள்ள குகையின் மேல் கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தமைக்கு பாலத்தீனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இக்கோரிக்கை அரசியல் நோக்கமுடையது எனக்கூறி அமெரிக்காவும் இசுரேலும் எதிர்த்து வாக்களித்தன. கடந்த ஆண்டு பாலத்தீனம் யுனெஸ்கோவில் உறுப்புரிமை பெற்றதன் பின்னர் அந்நாட்டின் வேண்டுகோள் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். கிபி 399 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இக்கோவில் தீயில் அழிந்ததை அடுத்து 6ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது. இது கிறித்தவர்களின் புனித இடமாக உள்ளது. யெருசலேமில் இருந்து பெத்லகேம் வரையான பயணப்பாதையில் ஒரு சிறிய பகுதியூடாக மேரியும் யோசப்பும் கிறித்துமசு நாட்களில் ஊர்வலமாகச் செல்வர் என்று கூறப்படுகிறது. ஆண்டு தோறும் இரண்டு மில்லியன் மக்கள் வரை இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று தரிசித்து வருகின்றனர். நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள புறக்கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை வானியலாளர்கள் முதற்தடவையாகக் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அனுப்பிய தகவல்களை ஆராய்ந்த பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தப் புறக்கோளின் சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பே இதன் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த சூரிய வெடிப்பை நாசாவின் சுவிஃப்ட் செயற்கைக்கோள் அவதானித்துள்ளது. "ஹபிள் மற்றும் சுவிஃப்ட் ஆகிய விண்கருவிகளின் பல்-அலைநீள அவதானிப்பு நமக்கு சூரியன் ஒன்றின் ஆற்றல் மிகுந்த ஒளிக்குழம்பினதும், ஒரு மாபெரும் புறக்கோள் ஒன்றின் வளிமண்டலத்தினதும் முன்னொருபோதும் தெரியாத ஒரு இடைத்தாக்கத்தை நமக்குக் காட்டியுள்ளது என பாரிசு வானியற்பியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அலெயின் லேக்கவெலியே கூறினார். நமது சூரிய எரிமலை வெடிப்பினால் பூமி பெறும் எக்சு-கதிர்களை விட 3 மில்லியன் மடங்கு அதிகமாக எச்டி 189733பி புறக்கோள் பெறுகிறது என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தொடருந்துப் போக்குவரத்தும் இந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக நெடுஞ்சாலை 217, மற்றும் 218 ஆகியவற்றில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள, பராமரிப்பு மீட்புதவிப் பிரிவுகள், பெரிய ரக இயந்திரங்கள் ஆகியவற்றை, போக்குவரத்து வாரியம் அனுப்பியுள்ளது. சோமாலியா எல்லையில் உள்ள கரிசா என்ற நகரில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம், மற்றும் ஆப்பிரிக்க உள்நாட்டுக் கோயில் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை கிரனைட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிராந்தியக் காவல்துறை அதிகாரி பிலிப் ந்டோலோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஞாயிறு காலை ஆராதனைக்காக மக்கள் கூடியிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதிகளுடனான போருக்கு ஆதரவாக கென்யப் படைகள் சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து கென்யாவின் எல்லைப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் பதட்ட நிலை நிலவுகிறது. கென்ய மண்ணில் இடம்பெறும் ஆட்கடத்தல்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டே தாம் தமது படையினரை சோமாலியாவுக்கு அனுப்பியதாக கென்யா தெரிவிக்கிறது. ஆனாலும், கென்யாவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்கு தாமே பொறுப்பு என அல்-சபாப் இயக்கம் தெரிவித்திருந்தது. நேற்றைய இறுதிப் போட்டியின் முதலாவது கோலை போட்டியின் 14ஆவது நிமிடத்திலேயே எசுப்பானிய அணி சார்பாக டேவிட் சில்வா அவ்வணிக்காகப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 41வது நிமிடத்தில் எசுப்பானியாவின் ஜோர்டி ஆல்பா இரண்டாவது கோலைப் போட்டார். முதல் பாதியில் எசுப்பானியா 2-0 என்று முன்னிலை பெற்றது. போட்டியின் இறுதி 10 நிமிடங்களில் இத்தாலி அணியில் 10 பேரே விளையாடினர். ஏற்கனவே போட்டியில் 3 மாற்று வீரர்களைக் களமிறக்கியிருந்த நிலையில் இத்தாலியின் தியாகோ மோட்டோ காயம் காரணமாக வெளியேற இத்தாலி அணி 10 பேர் கொண்ட அணியாக விளையாட அதை எசுப்பானிய அணி சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. போட்டியின் 84ஆவது நிமிடத்தில் பீட்டர் டொரெசு கோலொன்றை எடுத்தார். 88ஆவது நிமிடத்தில் உவான் மாட்டா கடைசி கோலைப் போட்டார். இதற்கு முன் 1964, 2008ம் ஆண்டுகளில் எசுப்பானிய அணி ஐரோப்பியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் யூரோ கிண்ணப் போட்டிகளில் 3 தடவைகள் வென்ற செருமனியின் சாதனையை எசுப்பானியா சமப்படுத்தியது. அதோடு ஐரோப்பியக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் அதிக கோல்கள் பெற்ற சாதனையையும் அவ்வணி பெற்றுள்ளது. இறுதிச் சுற்றில் 16 ஐரோப்பிய அணிகள் பங்கு பெற்றன. அரை இறுதி ஆட்டத்தில் எசுப்பானியா போர்த்துகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கிலும், மற்றொரு அரை இறுதியில் இத்தாலி செருமனியை 2-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன. ஒக்சிசன் நிரப்பப்பட்ட நுண்துகள்களை உள்ளடக்கிய ஊசி மருந்து வகை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவில் பொசுடன் சிறுவர் மருத்துவமனை அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவசர காலத்தில் இந்த ஊசிமருந்து பலரது உயிர்களைக் காப்பாற்றும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரிய மருத்துவமனைகளில் இதய-நுரையீரல் இயந்திரங்களின் உதவி கொண்டு குருதியில் ஒட்சிசன் சேர்க்கப்படுகின்றது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை; மருத்துவமனைக்கு அப்பால் தொலைவில் உள்ள ஒரு நபருக்கு உடனடியான ஒட்சிசன் சிகிச்சை கிடைப்பது சிக்கல். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு தற்காலிகமான தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்று எனும் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவியல் அறிஞர்களால் ஒட்சிசன் ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொசுடன் சிறார் மருத்துவமனை ஆய்வாளர்களால் நுண்ணிய ஒட்சிசன் நிரப்பப்பட்ட நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒரு நபரின் நாளம் மூலம் குருதிக்குள் செலுத்தப்படக்கூடியவை, இதனால் அவரது குருதி விரைவில் ஒட்சிசனால் நிரம்பிக்கொள்ளும். ஒவ்வொரு முதலுதவி வல்லுனர்கள், மருத்துவர்களிடம் இத்தகைய ஒட்சிசன் நுண்துகள் ஊசி இருப்பதன்மூலம் உயிர்காப்பது இலகுவில் அமையும் என நம்பலாம். மருத்துவர் சோன் கேயிர் (Dr. John Kheir) மற்றும் அவரது சகாக்கள் பொசுடன் சிறார் மருத்துவமனை இதயவியல் துறைப்பிரிவில் இவ்வாராய்ச்சி நிகழ்வை நடாத்தினர். சுவாசக்குழாய் முற்றிலும் தடுக்கப்பட்டு சுவாசிக்காமல் உள்ள எலிக்கு கொழுப்பு உறையினால் சூழப்பட்டுள்ள ஒட்சிசன் நுண்துகள் நாளத்தினூடு குருதிக்குள் செலுத்தப்பட்டது. ஒட்சிசன் நுண்துகள் உதவியுடன் 15 நிமிடங்களுக்கு சுவாசிக்காமல் எலி இருப்பதை அவதானித்தனர். ஆய்வுகூடத்தில் ஒட்சிசன் இல்லாத நீலநிறமுடைய குருதி இத்துகள்கள் சேர்க்கப்பட்ட பின்னர் சிவப்பு நிறம் பெற்றதை கண்களால் கண்டோம் என சோன் கேயிர் தெரிவித்தார். ஒட்சிசன் நுண்துகள்களால் 15 – 30 நிமிடங்களுக்கே உதவமுடிகின்றது. இவை காபனீரொக்சைட்டைப் பரிமாறவில்லை, எனவே 30 நிமிடங்களுக்கும் மேற்பட்ட நேரத்தில் இவை செலுத்தப்படுவது குருதியில் காபனீரொக்சைட்டை மிகையாக்கும், ஆனால் இதனால் ஒரு நபர் இறப்பதில்லை. குறைவான ஒட்சிசனை ஈடு செய்து உயிரிழப்பைத் தடுப்பதே இச்சிகிச்சையின் நோக்கம். எடுத்துக்காட்டாக, நீரில் மூழ்கி சுவாசம் பாதிப்படைந்த ஒருவருக்கு மருத்துவமனை கொண்டு செல்லும் வரை ஒட்சிசன் வழங்குவது அவரது உயிரை மேலும் 30 நிமிடங்களுக்கு நீட்டிப்பதாக அமைகின்றது. ஹோர்மூஸ் கால்வாய் வழியாகவே ஆசிய, ஐரோப்பிய நாடுகள் தங்களது எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்கின்றன. கடந்த ஆண்டு புகுசிமா அணுவுலையில் கதிரியக்கம் கசிந்த போதிலும், சப்பான் ஒகி அணுவுலையை மறுதொடக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து ஒகி நகராட்சியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் போராட்டம் நடத்தினர். ஆப்பிள் விதைகளில் சயனைடு என்னும் கொடிய விஷம் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண் ஒருவர் ஆப்பிள் விதைகளைக் கொடுத்து தனது கணவரைக் கொன்றதாகவும் வாட்ஸ்ஆப் செய்தி ஒன்று பரவுகிறது. மேலும் அதில் ஆப்பிள் பழம் சாப்பிடும்போது விதைகளை அகற்றிவிட்டு கவனமாகச் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிடக் கொடுக்காதீர்கள். அப்படியே கொடுத்தாலும் விதைகளை அகற்றிவிட்டுக் கொடுங்கள் ஆப்பிள் பழம் சத்து நிறைந்த ஒரு பழம் என்பதால், பெரும்பாலான நோயாளிகளுக்கு அது பரிந்துரைக் கப்படுகிறது. ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் அதன் விதையில், ஆளையே கொல்லுமளவுக்கு சயனைடு விஷம் இருக்கிறது என்பது உண்மையா? சித்த மருத்துவர்சிவராமனிடம் கேட்டோம். ``ஆப்பிள் விதையில் மட்டுமல்ல ஆப்ரிகாட், செர்ரி, பிளம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விதைகளில் அவற்றைப் பாதுகாப்பதற்காக இயற்கையாக உருவாகும் ஒருவித நச்சு ரசாயனமான அமிக்டாலின் உருவாகும். அது, விதைகள் அப்படியே இருக்கும்போது எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனால், விதைகள் சேதமடையும்போது, அதாவது நாம் அவற்றை மெல்லும்போதும் அவை செரிக்கப்படும்போதும் விதைகளில் உள்ள அமிக்டாலின் ரசாயனம் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றமடையும். அப்போது அது விஷத்தன்மை கொண்டதாக மாறும். அது அளவில் அதிகரிக்கும்போது ஆபத்தையும் ஏற்படுத்தும் உடனே, ஆப்பிள் விதை விஷத்தன்மை வாய்ந்தது என்று பயப்பட வேண்டாம். இந்த விதைகளை ஒரு கப் அளவுக்கும் அதிகமாகச் சாப்பிட்டால்தான், ஆபத்தை ஏற்படுத்தும். நாம் ஆப்பிள் பழங்களைச் சாப்பிடும்போது ஒன்றிரண்டு விதைகள் தெரிந்தோ தெரியாமலோ நம் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல, ஒரு கப் அளவு சாப்பிட நேரிடும்போது இதயம், மூளையை பாதிக்கும். மூச்சுத்திணறல், இதயத்துடிப்பில் மாற்றம், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற நிலை ஏற்படலாம். சில நேரம் கோமாநிலைக்கும் கொண்டு சென்று இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படி யாரும் அதிகளவில் ஆப்பிள் விதைகளைச் சேகரித்துச் சாப்பிடுவதில்லை என்பதால் பீதியடைய வேண்டாம். வாட்ஸ்அப்பில் உலாவரும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி நாம் அறியாவிட்டாலும், அதிலும்கூட அந்தப் பெண் திட்டமிட்டு தன் கணவரைக் கொல்வதற்காக அளவுக்கு அதிகமாக ஆப்பிள் விதைகளைச் சேகரித்துப் பயன்படுத்தியிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, நார்மலாக ஒருவர் ஆப்பிள் சாப்பிடும்போது தவறுதலாக ஒன்றிரண்டு விதைகள் வயிற்றுக்குள் செல்ல நேர்ந்தால் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. விதைகளை அகற்றிவிட்டு ஆப்பிளைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்வது நலம் என்றார். மரியா டி விலோட்டா எம்ஆர்-01 Marussia F1 பந்தய சீருந்தை ஐக்கிய இராச்சியத்தின் காம்பிரிட்ஜ்சயரில் உள்ள டக்ஸ்போர்டு காற்றுவெளி மைதானத்தில் முதல் முறையாகப் பயிற்சிக்காக ஓட்டிய போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தார். இவர் ஓட்டிய சீருந்து, அதனை பந்தயப்பாதையில் கொண்டு வந்துவிடும் மருசியா உதவு பார வண்டியின் மீது மோதியது. இதனையடுத்து மரியா காம்பிரிட்ஜ்சயரில் அடென்புரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐபேடு-2 இல் உள்ளது போல படத்துணுக்குகளை இச்சிறிய ஐபேடை வடிவமைத்து வருகிறது. ஆனாலும், ஐபேடு-3 இல் உள்ளது போல விழித்திரை படங்காட்டியை இச்சிறிய ஐபேடை கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வின்டோஸ் நிறுவனமும் வின்டோஸ் 8ஐ அக்டோபரில் வெளியிடுவதாக உள்ளதால், இவ்விரண்டிற்கும் இடையில் போட்டி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகள் தொடர்பாக வரும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய ஐபோனையும் வெளியிடத் தீர்மானித்துள்ளது. அமேசானின் கின்டில் போன்ற சிறுய வகைக் கைக்கணிகிகள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. சூலை 17 இல் வெளிவரவிருக்கும் கூகுளின் நெக்சசு 7 சிறியவகைக் கைக்கணினி £159 களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு, கிக்சு போசானின் கடவுள் துகளைப் போன்ற ஒரு துணை-அணுத் துகளை கடந்த புதன்கிழமை செர்னின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக பேசிய செர்னின் தலைமை இயக்குநர் ரோல்வ் கியர் "நாங்கள் இயற்கையை புரிந்துகொள்வதில் ஒரு படிக்கல்லைத் தாண்டியுள்ளோம்" என்றார். மேலும் "இவ்வாறு கண்டறிந்த கிக்சு போசானின் கடவுள் துகள் போன்றதான இத்துகளினால், விரிவாக இதனைப் படிக்கவும், பெரிய அளவில் புள்ளிவிவரங்களை சேகரிக்கவும் வேண்டிய கட்டாயத்தை இது உருவாக்கியுள்ளது" என்று அவர் கூறினார் இந்த அண்டத்தில் உள்ள புரியாத பல புதிர்களை அறிய இத்தகைய முயற்சி உதவும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கடவுள் துகள் பற்றிய காணொளியை செர்ன் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. "அதன் நிறையானது 100 புரோத்தனை விட அதிகமாக இருக்கும். இது இரு ஒளியன்களாக சிதைவதை நம்மால் பார்க்க முடிவதாய் இருப்பதினால் தான் இதனை கிக்சு போசானின் கடவுள் துகள் போன்றது என கூறுகிறோம். இது முழுமைப்பெற்ற சுழற்சியை கொண்டதாகவுள்ளது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இன்னும் இதன் பண்புகளை மேலும் படிக்க வேண்டியுள்ளது" என்று ஊடக தொடர்பாளர் ஜோ இன்கான்டலா கூறினார். அடிப்படைத் துகிள்கள் இரு பெருவகைப் படும் ஒன்று ஃபெர்மியோன் (Fermion) எனப்படும் பொருள் துகள் மற்றையது போசோன் எனப்படும் விசை காவும் துகிள் ஃபெர்மியோன் துகிள்கள் குவார்க்சு லெப்ரான் என இரு வகைப்படும். அணு பற்றிய தற்போதைய செந்தர மாதிரியின் (Standard Model) படி அனைத்து திண்மங்களும் குவார்க்சு மற்றும் லெப்ரொன் ஆகிய ஃபெர்மியோன் துகள்களால் ஆனவை குவார்க்சு கட்டுண்டு புரோட்டனையும் நியூற்ரோனையும் உருவாக்குகின்றன புரோட்டனும் நியூற்றோனும் வலுவான விசையால் அணுவின் கருவை (nuclei) அமைக்கின்றன லிப்ரன்கள் இரு வகையாக இயற்கையில் தோன்றுகின்றன. ஒன்று எதிர்ம மின்னூட்டம் பெற்ற எலொக்ரோன் மற்றையது மின்னூட்டம் இல்லாத நியூற்றியோனசு (neutrinos நியுற்றியோனசு பொருட்களோடு பெரிதும் ஊடாடுவதில்லை எலொக்ரோன்கள் நேர்ம மின்னோட்டம் பெற்ற அணுக்கருவோடு கவரப்பட்டு அணுவாக உருவாகின்றது எவ்வாறு ஃபெர்மியோன்கள் சேர்ந்து பொருளாக உருவாகின்றன என்பது அடிப்படை விசைகளில் தங்கி உள்ளது அண்டத்தில் நான்கு வகையான அடிப்படை விசைகள் உள்ளன. அவை: மின்காந்த விசை, புவியீர்ப்பு விசை, வலுவற்ற விசை, வலுவான விசை. துகிள்களுக்கு இடையேயான விசை போசோன் வகை துகிள்களை பரிமாறுவதன் மூலம் உருவாகிறது தற்போதைய அணு, அணுத் துகள்கள் பற்றிய கோட்பாட்டு மாதிரியில் (Standard Model) அனைத்து விசை காவும் துகிள்களுக்கு திணிவு இருக்கக் கூடாது. ஆனால் வலுகுறை விசையைக் காவும் துகிள்களுக்கு திணிவு உண்டு. சப்பானியத் திட்டத்தினை எதிரொலிப்பதாய் அறிவியல் ஆராய்ச்சிக்கான திமிங்கல வேட்டை எனப்படும் சட்டபூர்வ அனுமதியுடன் திமிங்கலங்களை வேட்டையாடுவதாய் தென் கொரியா முன்மொழிந்துள்ளது. இவ்வேட்டையானது கொரியப் பெருங்கடலில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. எத்தனை திமிங்கிலங்கள் இவ்வாறு வேட்டையாடப்படும் என அது அறிவிக்கவில்லை. "மிங்க்கி திமிங்கிலங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு இந்தத் திட்டம் அவசியமானது என திமிங்கில வேட்டைக்கான பன்னாட்டு ஆணையத்துக்கான தென் கொரியத் தூதுக்குழு தெரிவித்துள்ளது. இத்திட்டம் எப்போது ஆரம்பமாகும் என தென் கொரியா தெரிவிக்கவில்லை. கொரியாவின் இந்த அறிவிப்பை பல உலக நாடுகள் கண்டித்திருக்கின்றன. கரையோர திமிங்கில வேட்டையாடுதலை மீளத் துவங்குவதே தென் கொரியாவின் முக்கிய குறிக்கோள் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். [[இலங்கை]]யின் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தெற்கே மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் நிமலரூபன் என்ற அரசியல் கைதி சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்றுக் காலை இறந்துள்ளார் என பிபிசி அறிவித்துள்ளது. வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்து நிமலரூபன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் இவர் அங்கிருந்து மேற்கு மாகாணத்தில் உள்ள மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 29 வயதான இந்த இளைஞர் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்தவர். இவர் எவ்வாறு இறந்தார் எனத் தெரியாது என மகர சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார். மகர சிறையில் இருந்து ராகமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னரே அவர் இறந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தாலும், சிறைச்சாலையிலேயே அவர் இறந்து விட்டதாகவும் அதன் பின்னரே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என சக கைதிகள் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களில் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 22 பேரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் மகர சிறைச்சாலையில் நேற்றுப் புதன்கிழமை பார்வையிட்டனர். மகர சிறைக்கைதிகளில் நான்கு பேர் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹர சிறைசாலைக்கும் ராகம மருத்துவமனைக்கும் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு சட்டத்தரணிகள் முயற்சி செய்ததனர். ஆனால், இந்த காயமடைந்த கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு தெரிவித்தது. நிமலரூபனின் உயிருக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கமே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்ட எந்த கைதியும் இறக்கவில்லை. இருதய நோய்க்கு சிகிச்சைபெற்று வந்த கைதி ஒருவரே நேற்று ராகம ஆஸ்பத்திரியில் இறந்துள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். வடக்கு அகலேகாவில் விமான இறங்குபாதை ஒன்றும் உள்ளது. மொரீசியசை விட இந்தியாவுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த இரண்டு தீவுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 2006 ஆம் ஆண்டில் ஆரம்பக் கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. 87-அடுக்குகளைக் கொண்ட இக்கோபுரத்தில் வணிக அலுவலகங்கள், தனிப்பட்ட சில மனைகள், ஒரு ஆடம்பர உணவு விடுதி, உணவு சாலைகள், மற்றும் காட்சிச் சாலை ஆகியன உள்ளடங்கியுள்ளன. இதன் உள் வேலைகள் 2013 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானளாவியில் 44 மின்தூக்கிகள் இயங்குகின்றன. இதன் 69 ஆம் மாடியில் இருந்து லண்டன் முழுவதையும் பார்க்கக்கூடியதாகக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிக் கூடத்திற்குச் செல்வதற்கு 25 பிரித்தானியப் பவுண்டுகள் அறவிடப்படும். இந்த வானளாவியை 200 ஆம் ஆண்டில் இத்தாலிய கட்டிடக் கலைஞர் வரைந்திருந்தார். இவரே பாரிசின் புகழ் பெற்ற பொம்பிடோ மையத்தை அமைத்திருந்தார். நிதிப் பற்றாக்குறையால் கட்டட நிர்மாணப் பணி 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கட்டார் முதலீட்டாளர்கள் சிலரின் முயற்சியால் கட்டிடப் பணி 2009 ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கட்டார் முதலீட்டாளர்கள் இந்த வானளாவிக்கான 80% பங்குகளைத் தம் வசம் வைத்துள்ளனர். இதன் அமைவிடம் குறித்தும், கட்டிட அமைப்புக் குறித்தும் விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், பிக் பென், புனித பவுலின் தேவாலயம், லண்டனின் கண் போன்ற கட்டடங்களுடன் இந்த வானளாவியும் பிரித்தானியத் தலைநகரின் குறிப்பிடத்தக்க சின்னமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்ப நாடாளுமன்றத்தின் முழுமையான அமர்வில் முன்மொழிந்த ஏசிடிஏ (ACTA) என்னும் கள்ளநாணயத் தடுப்பு வர்த்தக ஒப்பந்தம் 478 எதிர்ப்பு வாக்குகளுடன், 39 ஆதரவு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. 165 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. ஏசிடிஏ மறுக்கப்பட்டதை அடுத்து, ஐரோப்பா முழுவதும் உள்ள போராட்டக்காரர்கள் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலைப் பார்த்து கொண்டு காப்புரிமைகளையும், வர்த்தகக் குறியீடுகளையும் சார்ந்திருக்கும் ஏசிடிஏவின் ஆதரவாளர்கள் அவர்களின் வாழ்க்கைக்காகவே இதனை முன்மொழிந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. இந்தப் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் ஆசுத்திரேலியா, கனடா, சப்பான், மொரோக்கோ, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, மற்றும் அமெரிக்கா ஆகியன சென்ற ஆண்டு அக்டோபரில் கையெழுத்திட்டிருந்தன. அறிவுசார் சொத்துரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பன்னாட்டு செந்தரம் ஒன்றை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள், வர்க்க மருந்துகள், இணையத்தில் பதிப்புரிமை மீறல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டுச் சட்டவடிவமைப்பை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பா முழுவதும் போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடைபெற்றன. இத்தீர்மானத்திற்கு எதிராக 2 மில்லியன் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ.கட்சி சார்பில் சங்மா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் நாள் 19 சூலை, 2012 * ரவீந்திரபாரதி சங்க தலைவர் பதவியில் இருந்து கடந்த 20-ந் தேதியே பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும், பிர்பூம் கல்லூரியின் தலைவர் பதவியை 2004-ம் ஆண்டே ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. * பிரணாப் முகர்ஜி இரண்டு ஆதாயம் தரும் பதவியை வகிப்பதால் அவரின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் சங்மா வலியுறுத்தியுள்ளார். * மேற்கு வங்க முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ், பிரணாப் முகர்ஜிக்கு மார்க்கிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் ஆதரவு சரியான முடிவே என தெரிவித்தார். பிரணாபுக்கு எதிரான எனது புகாரை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் உத்தரவு கிடைத்துள்ளது. சட்ட நிபுணர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன் சங்மா (பா.ஜ.கட்சி) பிரணாப்பின் அசல் ராஜினாமா கடிதத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் சென்றதாக கூறுகின்றனர். சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் பா.ஜ. மூத்த தலைவர் அலுவாலியா. பல தசாப்தங்களின் பின்னர் உருசியாவில் இவ்வாறான பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல நகரங்கள், மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. கிராஸ்னதார் பிரதேசத்தில் கெண்ட்சிக், நோவரசீஸ்க், கிரீம்ஸ்க் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராஸ்னதார் நகரில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள கிரீம்ஸ்க் மாவட்டத்தில் 150 சிறுவர்கள் உட்பட 300 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், அங்கு காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் வெள்ளி இரவு பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்த போது வெள்ளம் தாக்கியது. 2002 ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் கிராஸ்னதார் பிரதேசத்தில் வழமைக்கு மாறான சூடான குளிர்காலத்தில் வெள்ளம் தாக்கியதில் 60 பேர் வரையில் கொல்லப்பட்டனர். நியூஸ்24 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 2006 ஆம் ஆண்டில் தாமே மன்னர் என்பதை அரசியல் கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்ததாகவும், ஆனால் பின்னர் அப்போதை அரசு 2008 ஆம் ஆண்டில் மன்னராட்சியை இல்லாதொழித்தது எனவும் அவர் கூறினார். தாம் அரசியலில் பங்களிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் சம்பிரதாயபூர்வமான மன்னராகத் தாம் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். நேபாளத்தில் தற்போது அரசியல் நெருக்கடி நிலவும் தருணத்தில் இவரது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கான உடன்பாடு ஒன்று எட்டப்படாமையால் அண்மையில் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் நவம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று உகாண்டா எல்லையில் அமைந்திருந்த புனாகனா என்ற நகரை எம்23 போராளிகள் கைப்பற்றியதை அடுத்து கொங்கோ இராணுவத்தினர் 600 பேர் வரையில் எல்லையைத் தாண்டி உகாண்டாவிற்குத் தப்பி ஓடினர். இத்தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த அமைதிகாப்புப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்டு வரும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொஸ்கோ தகாண்டா என்பவருக்கு ஆதரவான போராளிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆயுதப் போரை ஆரம்பித்தனர். ஜெனரல் தகாண்டாவின் இராணுவ சகா ஒருவர் சிறுவர்களை ஆயுதப்போருக்குச் சேர்த்ததாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. இதனால் பொஸ்கோ தகாண்டாவைக் கைது செய்வதற்கு அரசுக்கு அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து தகாண்டாவுக்கு ஆதரவான பலர் இராணுவத்தில் இருந்து வெளியேறினர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து போரில் அகப்பட்ட 200,000 பொதுமக்கள் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 20,000 இற்கும் அதிகமானோர் அயல் நாடுகளான உகாண்டா, மற்றும் ருவாண்டா நாடுகளினுள் தஞ்சமடைந்துள்ளனர். போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக ருவாண்டா மீது அண்மையில் ஐக்கிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெனரல் தகாண்டா ருவாண்டாவின் அரசினரைப் போல துத்சி இனத்தவர் ஆவார். ஆனாலும், இக்குற்றச்சாட்டை ருவாண்டா கடுமையாக மறுத்துள்ளது. கனிம-வளங்கள் நிறைந்த கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதி 1994 ஆம் ஆண்டு முதல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ருவாண்டா இனப்படுகொலையில் இருந்து தப்பி மில்லியன் துத்சி இனத்தவர்கள் எல்லை தாண்டி கொங்கோ வந்தனர். ஹூட்டு போராளிகள் கொங்கோவில் ஒளிந்திருக்கிறார்கள் எனக் காரணம் காட்டி இரண்டு தடவைகள் ருவாண்டா கொங்கோ மக்களாட்சிக் குடியரசு மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 1997-2003 காலப்பகுதியில் உகாண்டாவும் தமது இராணுவத்தினரை கொங்கோவுக்கு அனுப்பியது. இறுதி ஆட்டத்தில் ரொஜர் பெடரருடன் இங்கிலாந்தின் ஆன்டி முரே ஆடினர். நேற்றைய ஆட்டத்தின் பெடரர் முதல் செட்டில் 4 6 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதும், அடுத்த 3 செட்களில் 4 -6, 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் முரேயை வீழ்த்தினார். இது பெடரர் பெறும் 7வது விம்பிள்டன் பட்டமும், 17வது பெருவெற்றிப் (கிராண்ட் சிலாம்) பட்டமுமாகும். இதன்மூலம், விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றுள்ள பீட் சாம்ப்ராசின் சாதனையை பெடரர் சமப்படுத்தியுள்ளார். நேற்றைய வெற்றியை அடுத்து பெடரர் உலகின் டென்னிசு ஆட்டக்காரர் வரிசையில் மீண்டும் 1வது இடத்துக்கு வந்துள்ளார். கடைசியாக பிரித்தானிய வீரர் ஒருவர் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடி வென்றது 1938 ஆண்டிலாகும். அப்போது "பணி" ஆஸ்டின் என்பவர் விம்பிள்டன் கோப்பையை வென்றார். நேற்றைய ஆட்டத்தில் பிரித்தானியாவின் முரே வெற்றி பெறுவார் என இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். சனியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தனது 5வது விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார். 2002 2003 காலப்பகுதியில் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் முன்னாள் போர்த்தளபதி தொமசு லுபாங்கா சிறுவர்களைத் தமது கிளர்ச்சிப் படையில் சேர்த்த குற்றங்களுக்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். கடந்த மார்ச் மாதத்தில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இவரைக் குற்றவாளியாகக் கண்டது. ஏற்கனவே இவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதால் இவர் மேலும் 8 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும். கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் வட-கிழக்கே இத்தூரி என்ற மாவட்டத்தில் இடம்பெற்ற இனவன்முறைகளில் குறைந்தது 60,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். லுபாங்கா கொங்கோ நாட்டுப்பற்றாளர் ஒன்றியம் என்ற ஹேமா இனப் போராளிகள் அமைப்புக்குத் தலைமை வகித்தவர். இத்தூரி பிரதேசத்தில் 1999 ஆம் ஆண்டில் இது போரில் ஈடுபட்டது. சிறுவர் துஷ்பிரயோகம், இளவயதினரை தற்கொலைக்குத் தூண்டல், மற்றும் போதைப்பொருள் தொடர்பான விபரங்களை வெளியிடுதல் போன்ற இணையதளங்களைத் தடை செய்ய தமக்கு அதிக அதிகாரம் தேவையென உருசிய அரசு கேட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டமூலம் சீனாவில் கொண்டுவரப்பட்ட தணிக்கைச் சட்டங்களுக்கு இணையானது என விக்கிப்பீடியா கருதுகிறது. இச்சட்டமூலம் ஒரு பரந்த விரிவடையக்கூடிய தன்மை உள்ளதென இணையப் பயனர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் விவாதிக்கின்றனர். இணையத்தளங்களைத் தெரிவு செய்யும் உரிமை அரசுக்கு இதன் மூலம் வழங்கப்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லறைகளைத் தகர்க்கும் முன்பு போராளிகள் ஆகாயத்தில் சுட்டு அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சென்ற வாரம் இங்குள்ள சில மதத்தலங்கள் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இவ்வாறான செய்கைகள் போர்க்குற்றம் என அது எச்சரித்துள்ளது. இதனால் இவ்வாறான அழிப்புகள் ஹேக் நகரில் உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படலாம் எனக் கூறப்படுகிறது. 15ம், 16ம் நூற்றாண்டுகளில் திம்பக்து நகரம் பாரம்பரிய இசுலாமியக் கலாசார, மற்றும் கல்வி மையமாகத் திகழ்ந்துள்ளது. இந்நகரம் 333 மதக்குருக்களின் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. 83 அகவையுள்ள தாரா சிங், 1960 ஆம் ஆண்டு உலக மற்போர்ப் பட்டத்தை வென்றவர். அதன் பின்னர் பல இந்தித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் அனுமானாக நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். தாரா சிங் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். கிங் கொங், பௌலத், மேரா நாம் ஜோகர் உட்பட 140 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2007 ஆம் ஆண்டில் ஜப் வி மெட் என்ற படத்தில் கரீனா கபூரின் தாத்தாவாக நடித்தார். 1928ம் ஆண்டு நவம்பர் 19 இல் அமிர்தரசரில் உள்ள தர்மூச கிராமத்தில் பிறந்தவர். பொதுநலவாயப் போட்டிகளில் மற்போரில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 500 க்கு மேற்பட்ட தடவை மல்யுத்த மோதல்களில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்படப் பலர் இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். புளூட்டோ தொகுதி எவ்வாறு தோன்றியது, மற்றும் அதன் வளர்ச்சி பற்றி அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு சிறிய உலகம் இத்தனை அதிகமான துணைக்கோள்களைக் கொண்டிருப்பது அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புளூட்டோவிற்கும் வேறொரு பெரிய விண்பொருள் ஒன்றிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இவ்வாறான துணைக்கோள்கள் உருவாகியிருக்கலாம் என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். எசு2012 (134340) 1, அல்லது பி5 என அழைக்கப்படும் இந்த ஐந்தாவது துணைக்கோள் சூன் 26 முதல் சூலை 9 வரையான காலப்பகுதியில் ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருந்த அகலப்புலப் படம்பிடிகருவி எடுத்த 9 தொகுதிப் படிமங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில் நேகா மற்றும் 23 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் கின்பொட் செவன் என்ற எதிர்க்கட்சிக் குழு ஒன்றுடன் தொடர்புள்ளவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வியக்கம் எத்தியோப்பியாவில் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்துவாலெம் அராகே என்ற எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த மே மாதத்தில் எசுகிண்டர் நேகாவிற்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற பென் அமெரிக்காவின் எழுதுவதற்கு உரிமை என்ற அமைப்பின் உயர் விருது வழங்கப்பட்டிருந்தது. மனித உரிமை அமைப்புகள் பல எத்தியோப்பியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளன. 35 உறுப்பினர்கள் கொண்ட கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களுமாக 35 பேர் இத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர். மூன்று மாகாணசபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் சூலை 19 ஆகும். [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] இறந்த பென்குயின்களின் 30 மாதிரிகள் போர்ட்டோ அலெக்ரி பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இறந்த பென்குயின்கள அனைத்தும் நன்றாக உணவுண்டுள்ளதாகவும், அவற்றின் உடல்களில் காயங்களோ அல்லது எண்ணெய்த்தன்மையோ எதுவும் இருக்கவில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை எவ்வாறு இறந்தன என்பது ஆச்சரியமடைய வைக்கின்றது என அவர்கள் மேலும் தெரிவித்தனர். மகெலனியப் பென்குயின்கள் என அழைக்கப்படும் இவ்வகைப் பறவைகள் தெற்கு அர்ஜெண்டீனா மற்றும் சிலி ஆகியவற்றிற்கு இடையில் உள்ள பட்டகோனியாப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. இவை வழக்கமாக மார்ச் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே தெற்குக் குளிர் காலங்களின் போது இடம்பெயர்ந்து பிரேசில் வரை செல்கின்றன. அண்டார்க்ட்டிக் வட்டத்தில் இருந்தும் பென்குயின்கள் இங்கு வருகின்றன. இவை பொதுவாக சிறிய வகை மீன்களையே உண்கின்றன. தெற்குப் பகுதியின் கடல் சிங்கங்களே இவற்றின் முக்கிய எதிரிகளாகும். கடந்த வாரம் ரியோ டி ஜெனெய்ரோ கடற்கரைகளில் இருந்து பத்துக்கும் அதிகமான பென்குயின்கள் மீட்கப்பட்டன. இவை தமது வழக்கமான எல்லைகளைத் தாண்டி வந்தவை ஆகும். இவற்றை மீண்டும் தென் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு பிரேசில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருத்திற் கொண்டு அதனை தடை செய்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சின் செயலாளர் தர்மேந்திரா ஷர்மா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதன் போது இவ்வியக்கத்தின் தலைவர் வி.பிரபாகரனும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னதாக இந்த தடை உத்தரவானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னும் இத் தடை நீடிக்கிறது. இவ்வியக்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் உறுப்பினர்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் அவர்கள் இவ்வியக்கத்தை தொடர்ந்து கட்டியெழுப்ப முற்படுவதாகவும் அதேவேளை இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும் அதில் அங்கம் வகித்தவர்கள் தனித் தமிழீழம் குறித்த முன்னெடுப்புகளை இதுவரையிலும் கொண்டிருக்கின்றனர் எனவும் இதனை நிறைவேற்றுவதற்காக அவர்கள் சர்வதேச ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நடைமுறைகள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவை எனவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. உருசியாவின் விண்கலம் ஒன்று மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்பட்டது. உருசியாவின் யூரி மலென்ச்சியென்கோ (அகவை 50 நாசாவின் சுனித்தியா வில்லியம்சு, மற்றும் சப்பானின் அக்கிஹிக்கோ ஓசிது ஆகியோர் விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள நாசாவின் யோசப் அக்காபா, உருசியாவின் கெனாடி பதல்க்கா மற்றும் செர்கே ரேவின் ஆகிய மூவருடன் இணைவர். விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் போது இவர்கள் 30 பரிசோதனைத் திட்டங்களை நடத்துவர். யூரி மலென்ச்சியென்கோவிற்கு இது ஐந்தாவது மிக நீண்ட விண்வெளிப் பயணம் ஆகும். ஏனைய இருவரும் தலா ஒரு தடவை நாசாவின் விண்ணோடத் திட்டத்தில் விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பியுள்ளனர். அடுத்த வாரம் சப்பானின் சரக்கு கப்பல் ஒன்றும் விண்வெளி நிலையத்துடன் இணையவிருக்கிறது. மேலும் எட்டு விண்கலங்கள் விரைவில் விண்வெளி நிலையத்துடன் இணையவுள்ளன. நேபாளத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஒரு பேருந்து விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இதே போன்றதொரு விபத்தில் 39 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் கத்மண்டுவில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் பேருந்து பாதையில் இருந்து விலகி ஆற்றினுள் பாய்ந்துள்ளது. காணாமல் போனோரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நேற்றைய விபத்து நேபாளத்தின் தென்-மேற்கே பாராசி நகரில் இடம்பெற்றது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் பேருந்து தடம் புரண்டு கால்வாய் ஒன்றினுள் வீழ்ந்ததில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். பேருந்து அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், பலர் பேருந்தின் கூரை மேல் ஏறிச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் பேருந்து ஒன்று கிழக்கு நேபாளத்தில் மலைப் பாதை ஒன்றில் இருந்து தடம் புரண்டு ஆறு ஒன்றில் மூழ்கியதில் 41 பேர் கொல்லப்பட்டனர். பாலித்த பெர்னாண்டோவை 27வது சட்ட மா அதிபராக நியமிக்க இலங்கையின் நாடாளுமன்றப் பேரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது. சட்ட மா அதிபராக பதவி வகித்த ஈவா வனசுந்தர அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவரது நியமனம் நிகழ்ந்துள்ளது. 260 அடிகளுக்கு மேல் நீளமும், ஏறக்குறைய 33 அடி உயரமும் 20 மில்லியன் கலன்களுக்கும் அதிகளவிலான நீரைத் தேக்கிவைக்கக் கூடிய மனிதனால் ஆக்கப்பட்ட நீர்த்தேக்கத்தையும் கொண்டதாக வெட்டப்பட்ட கருங்கல், சரளைக்கல் மற்றும் மணல் கொண்டு இந்த அணைக்கட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு குவாத்தமாலாவில் உள்ள தீகால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கட்டமைப்புகள் மாயன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீர் நிலப் பயன்பாட்டு முறைகள் பற்றியும் சுற்றாடலின் சவால்களையும் பருவகால வரட்சியையும் எதிர்கொண்டு கையாளப்பட்ட இயற்கை வளப் பயன்பாடு பற்றியும் அறியத் தருவதாயுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாசுக்கசில் தேசியப் பாதுகாப்புப் பேரவைத் தலைமையகத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிரியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாவூது இராஜிகா கொல்லப்பட்டார் என அந்நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. துணைப் பாதுகாப்பு அமைச்சர், அரசுத்தலைவர் அசாடின் மைத்துனர் ஆகியோர் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பல உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற வேளை இவர்கள் உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். 60 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலைமையகம் அமைந்துள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்புக்காக மூடப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுதாரி அரசுத்தலைவர் பசார் அல்-அசாடின் அதிகாரிகளுக்கு மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகரில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெனரல் இரஜீகா கடந்த ஓராண்டு காலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருக்கிறார். இவர் அரசுக்கெதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை வன்முறைகள் மூலம் அடக்கியமைக்காக அமெரிக்க அரசின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட தாவூது இராஜிகா ஒரு பழமைவாதக் கிறித்தவராவார். இதற்கிடையில் சிரியப் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிரியா தொடர்பான சிறப்புத் தூதர் கோபி அனான் உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டினையும், ஐநா செயலர் பான் கி-மூன் சீனத் தலைவர் ஹு சிந்தாவுவையும் சந்தித்துப் பேசியுள்ளனர். கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 12 ஆசனங்களை ஒதுக்கித்தர முடிவு செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, அமைச்சர்களான அலாவுல்லா (தேசிய காங்கிரஸ் ரிசாத் பதியூதின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆசனம் 11ஆக குறைக்கப்பட்டது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நெருக்கடியில் விழுந்தது. எனினும் இது குறித்து இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததை அடுத்து கிழக்கு மாகாணத்தில் தனியாக மரச் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மூன்று மாகாணசபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் சூலை 19 ஆகும். [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] [[இலங்கை]]யில் அண்மையில் கிழக்கு, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய இன்று நண்பகல் இந்த அறிவிப்பை ஊடகங்களுக்கு விடுத்தார். இதேவேளை, இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. மூன்று மாகாண சபைகளிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3073 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். கிழக்கு மாகாண சபையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர், அம்பாறையில் 14 பேர், திருகோணமலையில் 10 பேர் உட்பட மொத்தம் 37 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] சுவீடனில் பிறந்த டாக் ஹமாஷெல்ட் மர்மமான முறையில் இறந்தது குறித்து 1962 ஆம் ஆண்டில் ஐநா நடத்திய விசாரணைகளில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இப்போது பன்னாட்டு வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கொண்ட குழு ஒன்று புதிய தடயங்களைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கவிருக்கிறது. அமைதித் திட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அப்போது ஐநா செயலாளராகப் பணியாற்றிய ஹமாஹெல்டும் அவரது குழுவினரும் கொங்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணம் செய்த விமானம் வடக்கு ரொடீசியாவின் உண்டோலா நகரில் (தற்போது சாம்பியாவில்) விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் விமானச் சிப்பந்திகளும், ஒரு பயணியும் மட்டுமே உயிர் பிழைத்தனர். இவ்விபத்து 1961 செப்டம்பர் 18 இல் இடம்பெற்றது. இது குறித்து விசாரிக்க சரியான தருணம் வந்துள்ளதாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவின் தலைவர் டேவிட் லீ கூறியுள்ளார். இவ்விசாரணையின் முடிவுகள் ஓர் ஆண்டிற்குள் ஐநாவிடம் சமர்ப்பிக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. சூயெசு கால்வாய் தொடர்பான போரை அடுத்து ஐக்கிய நாடுகளின் முதலாவது அமைதிப்படையை இவரே உருவாக்கினார். அமைதிக்கான நோபல் பரிசு இறந்த பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பற்றிய விபரங்கள் இவ்வார வானியற்பியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு வவுனியாவின் மூத்த காவல்துறை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கூறி நிமலரூபனின் உடலை அவர் இறந்த மகர நகரிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று மகர நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், தமது மகனின் சடலத்தை தமது சொந்த ஊரான வவுனியாவில் தான் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிமலரூபனின் பெற்றோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். நிமலரூபனின் உடல் சூலை 23 திங்களன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர் வாயில் ஒன்று மிகவும் வறண்ட ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கம் இன்னும் 400 ஆண்டுகளுக்குப் போதுமான அளவு நீரை வழங்க வல்லது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் 10,000 ஆண்டுகள் பழமையானது ஆனாலும், இந்த நீர் தற்போது பயன்பாட்டில் உள்ள நீரை விட மிகவும் சுத்தமானது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நமீபிய அரசு செருமனி, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவியுடன் ஆய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது அவர்கள் அங்கோலாவுக்கும் நமீபியாவுக்கும் இடையில் பாயும் ஒகாங்குவேனா II என்ற நிலத்தடி நீர்த்தேக்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். நமீபியாவின் எல்லைப் பகுதியில் இது 1,075 சதுரமைல் பரப்பளவில் காணப்பட்டுள்ளது. தற்போது நமீபியாவின் வடக்கில் வாழும் 800,000 குடிமக்களுக்கு அயல் நாடான அங்கோலாவில் இருந்து வரும் 40 ஆண்டு-காலப் பழமையான கால்வாய் ஒன்றின் மூலமே நீர் வழங்கப்படுகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கசு, மற்றும் அலெப்போ ஆகிய நகரங்களில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. தலைநகரின் வட-கிழக்குப் பகுதியான பார்சே மீது உலங்குவானூர்திகள் உதவியுடன் இராணுவத்தின் சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அலெப்போ நகரில் மூன்றாவது நாளாக மோதல்கள் தொடர்வதாகவும், இராணுவத் தாங்கிகளின் தாக்குதலால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 2011 மார்ச் மாதம் முதல் சிரியாவில் 19,106 பேர் இறந்துள்ளதாக இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டுள்ள சிரியாவின் மனித உரிமைகளுக்கான அவதான நிலையம் அறிவித்துள்ளது. இறந்தவர்களில் 13,296 பேர் கிளர்ச்சியாளர்கள், மற்றும் பொது மக்கள் எனவும், 5,700 பேர் வரையில் இராணுவத்தினர் எனவும் அந்நிலையம் கூறியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார், தேசிய ஜனநாயகக் கூட்டணி சங்மாவை ஆதரித்தது. தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டில் பதவி வரும் சூலை 24 ம் தேதி முடிவுறுவதால், 25 ம் தேதி பிரணாப் புதிய குடியரசுத் தலைவராகப் பதவியேற்பார். இவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மருத்துவரான லட்சுமி சாகல் 1943ஆம் ஆண்டு நேத்தாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். 20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர். 1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது இவருக்குக் கிடைத்தது. 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சென்னையில் 1914 ஆம் ஆண்டில் பிரபல வழக்கறிஞர் எஸ். சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தவர் லட்சுமி. 1938 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்று அங்கு மருத்துவராகப் பணியாற்றிய பின்னர் 1943 இல் இந்தியா திரும்பி, இந்திய தேசியப் படையில் இணந்தார். 1947 இல் கான்பூரைச் சேர்ந்த கேர்ணல் பிரேம் குமார் சாகல் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் மகள் சுபாஷினி அலி பொதுவுடமைக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர். சூலை 19 இல் கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இன்று காலை 11:20 மணிக்கு மாரடைப்பினால் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தினர் சிலரால் முற்றுகையிடப்பட்டிருந்த இராணுவ முகாம் ஒன்றை மடகஸ்கார் இராணுவம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விமான நிலையம் அமைந்துள்ள அண்டனனரீவோ நகரைச் சுற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும், மூவர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுக்குச் சென்றவர்களில் ஒருவராவார். அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்தே தாம் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று முழுவதும் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையின் போது கிளர்ச்சியாளர்களின் தலைவரும், வேறு ஒரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். நேற்றைய இராணுவக் கிளர்ச்சிக்கு காரணம் எதுவும் இராணுவத்தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை. மடகஸ்காரின் அரசியலில் இராணுவம் அடிக்கடி தலையிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நகர வளாகத்தின் டவுன் பிளாசா அரங்கத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த விழாவில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய மரபுடைமையைப் போற்றுவதன் அவசியத்தைப் பற்றிய தீவிரமான உரையாடலில் இறங்கினர். தேசிய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ த‌மிழ்ப் பேர‌வையின் 33ம் ஆண்டின் செய‌ற்குழுவின‌ர் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்த மாநாடு "த‌மிழ் இளைய‌ர் அடையாள‌ம்: ஒரு க‌ண்ணோட்ட‌ம் என்ற‌ க‌ருப்பொருளில் நடைபெற்றது. மாநாட்டில் இக்கால இளையர்களுக்கு ஏற்றாற்போல் ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கப்பட்டதை இளையர்கள் வரவேற்றனர். தேசியப் பல்கலைக்கழகத்தில் இரவு விருந்துடனும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இமர்ஜென்ஸ் இசைக்குழுவின் இசைக்கச்சேரியுடனும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. ஈராக் தலைநகர் பாக்தாதில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது 216 பேர் காயமடைந்தனர். பாக்தாதின் வடக்கே தாஜி என்ற இடத்திலேயே பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு 41 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஓராண்டு காலத்தில் ஈராக்கில் நடந்த மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். மொத்தம் 19 ஈராக்கிய நகரங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அபூபக்கர் அல்-பக்தாதி என்பவர் ஈராக்கின் அல்-கைதா குழுவின் தலைவர் எனத் தன்னை அறிவித்துக்கொண்ட சில நாட்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த திசம்பரில் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறிய பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் கூறியிருந்தார். "ஈராக்கின் பெரும்பான்மையான சுணி முசுலிம்கள் அல்-கைதாவுக்கு ஆதரவு தருகிறார்கள், அல்-கைதாவின் வரவை அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என அல்-பக்தாதி தெரிவித்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய ஆசிய நாடான தஜிக்கித்தானின் கோர்னோ-பதக்சான் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் ஒன்றில் 12 இராணுவத்தினரும், 30 போராளிகளும் கொல்லப்பட்டதாக அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இம்மோதல்களில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். 200 பேர் வரையில் இறந்திருக்கலாம் என தலைநகர் துசான்பே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சனிக்கிழமை அன்று உயர் இராணுவ அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இராணுவத்தினர் இப்பிராந்தியத்தின் உள்ளூர்த் தலைவர் அயொம்பெக்கொவ் என்பவருக்கு எதிராக இந்த இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர். இவர் சரணடைய மறுத்ததனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பிராந்தியத்தின் தலைநகர் கோரோக் போர்ச்சூழலில் காணப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 1990களில் தஜிக்கித்தானின் உள்நாட்டுப் போரில் அயொம்பெக்கொவ் பங்குபெற்றிருந்தார். முன்னாள் சோவியத் குடியரசான தஜிக்கித்தான் 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. மத்திய ஆசியாவின் மிகவும் வறுமையான நாடாக தஜிக்கித்தான் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கோந்தைப்பிட்டி என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிபதியை தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பாக இலங்கையின் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக மூத்த சட்டத்தரணிகள் இணைந்து வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளனர். அமைச்சருக்கு எதிராக இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் கிளை சங்கம் ஒன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் ரிசாட் பதியுதீனை செப்டம்பர் 5 ஆம் நாள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது. முறையீட்டாளர்களையோ அல்லது சாட்சிகளையோ அமைச்சர் அச்சுறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் மீனவர்கள் கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் மீனவர்களின் மீன்வாடிகள், மீன்பிடி படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மன்னார் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை முஸ்லிம் மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் மீனவர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நீதிமன்றத்திற்கும் மன்னார் நீதவானுக்கு ௭திராகவும் அவர்கள் குரல் ௭ழுப்பினர். காவல்துறையினர் மீதும், நீதிமன்றக் கட்டிடத்தின் மீதும், வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இந்தக் கலவரத்தின்போது, மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு காவல்துறையினரும், பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்குப் பின்னணியில் இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்னார் நீதவானை அமைச்சர் தொலைபேசியில் அழைத்து அவரது தீர்ப்பு பிழையானது ௭ன்றும், இதனால் மன்னார் பற்றி ௭ரியும் ௭ன்று தெரிவித்திருந்ததாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இக்குற்றச்சாட்டை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மறுத்துள்ளார். மன்னார் நீதவான் செய்த முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். காச்மீரின் இந்திய நிருவாகப் பகுதியில் பாரவுந்து ஒன்று நேற்று வியாழக்கிழமை பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். அமர்நாத் குகைக்கோயின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டுப் பாரவுந்து ஒன்றில் திரும்பிய பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் இருந்து, கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்குச் செல்பவர்கள் பகல்காம் என்ற இடத்தில் உள்ள தளம் ஒன்றில் தங்கியிருந்து 45 கிமீ கடினமான பயணம் செய்ய வேண்டும். அமர்நாத்தில் இருந்து திரும்பிய இந்துப் பயணிகள் இவ்வாறு கொல்லப்படுவது இம்மாதத்தில் மட்டும் இது இரண்டாவது தடவையாகும். சூலை 14 ஆம் நாள் ரம்பான் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனின் கிழக்கே ஸ்ட்ராட்ஃபோர்ட் ஒலிம்பிக் பூங்கா பகுதியில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவைக் காண 60,000 இற்கும் மேலானவர்கள் திரண்டிருந்தனர். பிரித்தானிய மகாராணி, அவரது குடும்பம், அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர், ஐரோப்பிய மன்னர் குடும்பத்தினர், மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். மொத்தம் 17 நாள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 204 நாடுகளைச் சேர்ந்த 10,000 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். லண்டன் மாநகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். கிரேக்கத்தில் இருந்து தொடங்கிய ஒலிம்பிக் ஒளிப்பந்தத்தின் ஓட்டம் லண்டனை சுற்றி வந்த பின்னர், தேம்சு நதியில் அலங்கரிக்கப்பட்ட படகில் வலம் வந்தது. இந்த படகில் உலக தரத்தில் முன்னணியில் இருக்கும் படகு போட்டி வீரர்கள் எடுத்து வந்தனர். பிரித்தானிய அரசி எலிசபெத் ஜேம்ஸ்பாண்டுடன் ஒரு உலங்கு வானூர்தியில் இருந்து பாரசூட் மூலம் பறந்து விளையாட்டு அரங்கில் வருவது போன்ற காட்சி திரையிடப்பட்டது. அந்தக்காட்சியை அடுத்து, அரசியும், இளவரசர் பிலிப்பும் சிறப்பு நுழைவாயில் வழியாக அரங்குக்குள் வரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகளை அடுத்து பங்கேற்கும் நாட்டு அணிகள் அகர வரிசைப்படி அரங்கினுள் வந்தனர். ஒலிம்பிக் மரபின்படி, முதல் நாடாக கிரேக்கமும், கடைசியாக போட்டிகளை நடத்தும் ஐக்கிய இராச்சியமும் தமது அணிகளுடன் அரங்கில் நுழைந்தனர். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை எலிசபெத் அரசி முறைப்படி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து வாணவேடிக்கைகளுடன் தொடக்க விழா இனிதே முடிந்தது. எத்தியோப்பியாவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இனமோதலுக்கு அஞ்சி 20,000 பேர் வரையில் எல்லையைத் தாண்டி கென்யாவிற்குள் நுழைந்துள்ளதாக கென்ய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. நில உரிமைகள் தொடர்பாக மொயால் பிராந்தியத்தில் பொரானா மற்றும் காரி ஆகிய இனத்தவரிடையே சென்ற புதனன்று மோதல் ஆரம்பமானதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய போராளிகள் இப்பிரதேசத்தின் பல கிராமங்களை புதன்கிழமை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் சண்டை எத்தியோப்பிய-கென்ய எல்லைப்பகுதிக்கும் பரவியதாக செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் டே சோவ் லியாங் (26 டோனி டான் போ சுவான் (26) ஆகிய இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். திவாரி தங்கியிருந்த வீட்டிலேயே இந்த இரு மாணவர்களின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் பயிலும் மூவரும் ஒரே வீட்டிலேயே குடியிருந்தனர். அடிப்பந்தாட்ட மட்டையால் இந்த இரு மாணவர்களும் அடித்துக் கொல்லப்பட்டிருந்தனர். எட்டு மாதங்களின் பின்னர் திவாரி மீது காவல்துறையினர் கொலைக்குற்றம் சாட்டினர். திவாரிக்கு அப்போது வயது 23. சிங்கப்பூர் இராணுவத்தில் பணியாற்றும் திவாரி புலமைப்பரிசில் பெற்று சிட்னியில் கல்வியைத் தொடர்ந்து வந்தவர். விசாரணை முடிவில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் மேன்முறையீட்டை அடுத்து 2009 ஆம் ஆண்டில் இத்தண்டனை 48 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேன்முறையீட்டை அடுத்து நியூ சவுத் வேல்சு குற்றவியல் மேன்நீதிமன்றத்தில் இவ்வழக்கு சென்ற வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அந்தக் கொலைச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அந்த வாகனத்தில் இருந்த மூவர் பற்றியும், அவர்களுக்கும் இரட்டைக் கொலைகளுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றியும் நீதிமன்ற வழக்கில் கடைசி வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தற்காப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி திவாரியை நிபந்தனைகள் எதுவும் இன்றி விடுவித்தார். ராம் திவாரி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த கொல்லப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர். தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு அதிவிரைவு தொடர் வண்டி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் அருகே தீப்பிடித்ததில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்வண்டியில் 15 பேர் வரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பயணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து உறவினர்கள் மற்றும் மருத்துவக்குழுவுடன் சிறப்பு தொடருந்து ஒன்று நெல்லூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியுள்ளதால் அடையாளம் காண்பது கடினம் என நெல்லூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கடந்த மே மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் பயணிகள் வண்டி ஒன்று சரக்கு வண்டியுடன் மோதியதில் 24 கொல்லப்பட்டனர். இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடருந்து விபத்துகளில் மட்டும் மொத்தம் 1,220 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என அண்மையில் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் உகாண்டாவின் மேற்குப் பகுதியில் இந்நோய் பரவியதை அடுத்து தலைநகரில் ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத்தலைவர் தனது சிறப்புச் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். எபோலா தீநுண்ம நோய் உலகின் மிகவும் வீரியமான வைரசு எனக் கருதப்படுகிறது. முக்கியமாக உடற்தொடர்பினாலேயே இந்நோய் பரவுகிறது. இந்நோய் தொற்றியவர்களில் 90 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர். இந்நோயாளர்களுடன் தொடர்புக் கொண்டவர்கள் பற்றிய விபரங்களை மருத்துவ ஊழியர்கள் சேகரித்து வருகிறார்கள் எனவும் திரு. முசவேனி தெரிவித்தார். இந்நோய் பரவாமல் தடுக்க மக்கள் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்தல், முத்தமிடல், பாலுறவு கொள்ளல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். எபோலா நோய் எனச் சந்தேகத்தில் இறப்பவர்கள் எவரையும் அவர்களது உறவினர்கள் உடனடியாக அடக்கம் செய்யக் கூடாது எனவும், பதிலாக சுகாதார அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் உகாண்டாவில் மூன்று முறை இந்த நச்சுயிரி நோய் பரவியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் 425 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிக்கட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும். எபோலா தீ நுண்மத்திற்கான தடுப்பு மருந்து கண்டறிய அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர். இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மொத்தம் 14 மாநிலங்களின் இன்று இரண்டாவது நாளாக மின்தடை ஏற்பட்டதால் நாட்டின் அரைவாசிப் பகுதி இருளில் மூழ்கின. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மின்தொகுப்புகள் பழுதடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 300 தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே தொடருந்துகள் நின்று கொண்டிருப்பதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் பேருந்துகளுக்கு காத்து நின்றபடியால், சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன. மின் தொகுப்பில் எவ்வாறு கோளாறு எற்பட்டதென்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்த மின்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே, சில மாநிலங்கள் கூடுதலாக மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவில் அதிகரித்து வரும் மின் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்துறையில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வாத கட்டமைப்புகளால் ஈடுகொடுக்க முடியாத சூழல் உள்ளது என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடக்கே தில்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மற்றும் கிழக்கே மேற்கு வங்கம், பிகார், ஒரிசா, ஜார்க்கந்து ஆகிய மாநிலங்கள் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், சில சில இடங்களில் அடிக்கடி மின் தடைகள் ஏற்படுவது வழமை எனினும், இவ்வாறு நாட்டின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது கடைசியாக 2001 ஆம் ஆண்டில் இடம்பெற்றது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியாவில் இம்மாதம் தெரிவு செய்யப்படவிருக்கும் புதிய அரசை அமைப்பதற்கான அரசியலமைப்புக்கு சோமாலிய அரசியல் தலைவர்கள் தங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்களின் இன்றைய கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு முன்பாக இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்துள்ளன. தற்கொலைக் குண்டுதாரிகள் தவிர வேறு எவரும் இச்சம்பவத்தில் உயிரிழக்கவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். கூட்டத்தில் சமூகமளித்திருந்த 645 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 621 பேர் அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். 13 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இந்த ஆவணம் இடைக்கால நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் புதிய நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும். இக்குழு ஆகத்து 20 ஆம் நாள் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக சோமாலியாவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது. அல்-கைதா அமைப்புடன் தொடர்புடைய போராளிகள் நாட்டின் பெரும் பகுதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். சோமாலியாவின் கடைசி அரசு 1991 ஆம் ஆண்டில் கவிழ்க்கப்பட்டது. சோமாலியாவுக்கு வழங்கப்படும் பன்னாட்டு உதவிகளில் 70 விழுக்காட்டுக்கு கணக்குக் காட்டப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆனாலும் இடைக்கால அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளது. சோமாலியாவில் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது பெப்ரவரி 19, 2012 தென் கொரியாவைச் சேர்ந்த நால்வரும், சீனாவைச் சேர்ந்த இருவரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவரும் ஆக எட்டுப் பேர் நேற்று இலண்டனில் நடந்த ஒலிம்பிக் சுற்றுப் போட்டிகளின் பின்னர் மேலும் விளையாடுவதற்குத் தகுதியிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்த நான்கு சோடிகளும் நேற்று நடந்த போட்டியில் வேண்டுமென்றே தோற்றதாக எழுந்த சர்ச்சையை அடுத்தே உலக இறகுப்பந்தாட்டக் கழகம் இம்முடிவை அறிவித்துள்ளது. காலிறுதிக்கு சீனா ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், நேற்றையை போட்டிகளில் விளையாடிய சீன இரட்டையர்கள் மற்றும் தென் கொரிய வீராங்கனைகள் சமனில் முடிக்கும் நோக்குடன் விளையாடியுள்ளனர். இறுதியில் தென் கொரிய அணி வெற்றி பெற்றது. இதில் சீனா இறுதிப் போட்டியில் வலிமையான அணிகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தோல்வியுற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு தென்கொரிய வீராங்கனைகள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சீன வீராங்கனைகள் அடுத்த போட்டியில் விளையாடுவதற்காகத் தங்கள் ஆற்றலைப் பாதுகாத்ததாக செய்தியாளர்களிடம் கூறினர். "நெட் கெலியின் இறுதி நல்லடக்கம் நடைபெற கெலியின் உறவினர்கள் தற்போது ஆயத்தப்படுத்துகிறார்கள் என கெலியின் சகோதரியின் கொள்ளுப்பேத்தி எலென் ஹொலோ என்பவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். நெட் கெலி ஒரு பயங்கரக் கொலைகாரனாக அல்லது கொள்ளைக்காரனாக சிலரால் பார்க்கப்பட்டாலும், பலர் அவனை குடியேற்றவாதிகளுக்கு எதிராகப் போரிட்ட ஒரு இன வீரனாகவே பார்க்கின்றனர். 1880 ஆம் ஆண்டில் அவன் பிடிபடுவதற்கு முன்பு மூன்று காவல்துறையினர் உட்பட ஆறு பேரைப் படுகொலை செய்தான். மேலும் பலர் இவனது துப்பாக்கிச் சூட்டுக்குக் காயமடைந்தனர். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய மெல்பேர்ண் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனது உடல் மனிதப் புதைகுழிக்குள் போடப்பட்டு காணாமல் போய்விட்டது. பின்னர் புதைகுழியில் இருந்த உடல்கள் 1929 ஆம் ஆண்டில் பெண்ட்றிட்ச் சிறைக்கு மாற்றப்பட்டது. இப்புதகுழி மீண்டும் 2009 ஆண்டில் தோண்டப்பட்டது. நெட் கெலியின் கதை பின்னர் பல திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்குக் கதைக்கருவாயிற்று. பிஜியின் முன்னாள் பிரதமர் லைசீனியா கராசே மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் மீது மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியமை, 1990களில் அரசு முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராக இருந்த போது ஊழல்களில் ஈடுபட்டமை, மற்றும் சிறுபான்மை இந்திய வம்சாவளியினருக்கு எதிராக பிஜி இனத்தவர்களுக்கு சாதகமாக செயற்பட்டதன் மூலம் இனமோதலை தூண்டியமை, தன்னைத்தானே பிரதமராக நியமித்துக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளை கராசே மறுத்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த பிஜியின் உச்சநீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ கராசேயிற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். 71 வயதான கராசே பிஜியின் கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தற்போது பதவியில் உள்ள இராணுவ ஆட்சியாளர் கொமடோர் பிராங்க் பைனிமராமா 2014 ஆம் ஆண்டில் தேர்தல்கள் இடம்பெறும் எனக் கூறி வருகிறார். 2006 இராணுவப் புரட்சியை அடுத்து பொதுநலவாய அமைப்பில் இருந்து பிஜி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டின் மீது பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகளும் அமுலில் உள்ளன. 2009 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவும், நியூசிலாந்தும் தமது தூதர்களை திருப்பி அழைத்திருந்தன. ஆனாலும், சென்ற வாரம் இவ்விரு நாடுகளும் பிஜியுடன் மீண்டும் முழுமையான தூதரக உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தன. எண்ணெய் வயல்கள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் போர்ச்சூழலில் சிக்கியிருந்த சூடானும் தெற்கு சூடானும் தற்போது உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. "நியாயமான புரிந்துணர்வு" எட்டப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் மேலதியப் பாதுகாப்புத் தேவை எனவும் சூடானின் பேச்சாளர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்று வந்தன. இப்பேச்சுகளுக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி தலைமை வகித்தார். 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்த போது சூடானின் எண்ணெய் வயல்களில் முக்கால் வாசிப் பகுதி தெற்கு சூடானுக்கு வந்தது. இதனால் சூடானுக்கு எண்ணெய் உற்பத்தியில் பல கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருந்தது. இன்றைய உடன்பாட்டை அடுத்து தெற்கு சூடான் இந்த இழப்பை ஈடு செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் தெற்கு சூடான் தலைநகர் சூபாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சில மணி நேரத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. இரு நாடுகளும் இச்சர்ச்சை தொடர்பாக தமக்கிடையே உடன்பாட்டை எட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் கடந்த வியாழன் வரை தவணை கொடுத்திருந்தது. இலண்டனில் நடைபெறும் 2012 ஒலிம்பிக்சு விளையாட்டுப் போட்டிகளில் எத்தியோப்பியாவின் திருநேசு டிபாபா பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தனது தங்கப்பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். திருநேசு டிபாபாவிற்கு இது மூன்றாவது தங்கப்பதக்கம் ஆகும். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர்களில் முதலாவதாக வந்து சாதனை படைத்திருந்தார். இம்முறையும் ஆகத்து 10 வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் 5,000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இவர் கலந்து கொள்ளவிருக்கிறார். ! விளையாட்டு வீரர் நாடு முடிவு ஒலிம்பிக் போட்டிகளில் 18 தங்கங்கள், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்று உருசியாவின் லரீசா லெத்தினினாவின் 18 பதக்கங்கள் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார். நேற்றைய போட்டியில் சப்பான் இரண்டாவதாகவும், ஆத்திரேலியா மூன்றாவதாகவும் வந்தது. பெல்ப்சு முதன் முதலில் 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தனது 15வது அகவையில் பங்குபற்றி ஆறு தங்கங்களைப் பெற்றார். 2004 ஏத்தன்சு போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார். அதன் பின்னர் 2008 பெஜிங்கில் நடந்த போட்டிகளில் 8 தங்கங்களைப் பெற்றார். தற்போது நடைபெறும் லண்டன் போட்டிகளில் இவர் 4 தங்கப்பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றார். 15 ஆண்டுகளாக பொப் போமன் இவரின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குள் புகுந்த துப்பாக்கி மனிதன் அங்கு வழிபாட்டிற்காகக் குழுமியிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்த காவல்துறை அதிகாரி அங்கு விரைந்த போது அவரை நோக்கியும் கொலையாளி பலமுறை சுட்டுள்ளான். பின்னர் அங்கு விரைந்த இரண்டாவது காவல்துறை அதிகாரி கொலையாளியைச் சுட்டுக் கொன்றார். காவல்துறையினர் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர். விஸ்கொன்சின் சீக்கியக் கோயிலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள குடாகி நகரில் உள்ள கொலையாளியின் வீடு காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. கொலையாளி வெள்ளை இனத்தவர் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இது ஒரு உள்ளூர்த் தீவிரவாதம் என்றே காவல்துறையினர் கணித்துள்ளனர். 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இவ்வாறான தாக்குதல் தமக்கு நிகழக்கூடும் என்ற அச்சத்தில் தாம் வாழ்ந்து வந்ததாக விஸ்கொன்சில் மாநிலத்தில் வதியும் சீக்கிய மக்கள் தெரிவித்தனர் தம்மை தலிபான்களின் உறுப்பினர்கள் என்றோ அல்லது பில் லாதினின் ஆட்கள் என்றோ தவறுதலாகக் கருதுகின்றனர் என ரஜ்வந்த் சிங் என்பவர் தெரிவித்தார். சீக்கியர்களைத் தவறுதலாக முசுலிம்கள் என நினைத்து ஆங்காங்கே இவர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்றைய தாக்குதலில் இறந்தவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தரையுளவி செவ்வாயில் தரையிறங்கிய சமிக்கை நாசாவின் ஒடிசி செயற்கைக் கோள் வழியாக பூமியை எட்டியதை அடுத்து கலிபோர்னியாவின் பசடேனா நகரில் உள்ள ஜெட் உந்துகை ஆய்வுகூடத்தில் பெரும் கரகோசத்துடன் வரவேற்கப்பட்டது. கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கிய முதலாவது படிமங்கள் ஏற்கனவே பூமிக்குக் கிடைத்துள்ளது. கியூரியோசிட்டி செவ்வாயில் தரையிறங்கும் நாசாவின் நான்காவது தரையுளவி ஆகும். ஆனாலும் இது ஏனைய திட்டங்களிளை விட மிகப் பெரியதாகும். 1997 ஆம் ஆண்டில் தரையிறங்கிய முதலாவது தரையுளவி நிறியை விட 4 மடங்கு பாரமான பரிசோதனைக் கருவியை கியூரியோசிட்டி கொண்டு சென்றுள்ளது. தரையுளவி தரையிறங்கிய பள்ளத்தில் உள்ள 5 கிமீ உயர மலை ஒன்றை கியூரியோசிட்டி ஆராயும். மலையில் ஏறும் போது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரவ நீரில் உருவாகிய பாறைகளையும், நுண்ணுயிரிகள் வாழ்ந்த சூழ்நிலைகளையும் அது ஆராயும். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்தரையுளவி இயங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது இது பத்து அல்லது அதற்கு மேலான ஆண்டுகளுக்கும் இயங்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு காலமாக உறக்கத்தில் இருந்த நியூசிலாந்தின் எரிமலை ஒன்று திடீரென வெடித்து சாம்பல்களை வெளியேற்றியது. வானூர்திப் பயணங்கள் தடைப்பட்டுள்ளன, சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. 1,978 மீட்டர் உயரமான இந்த மலை நியூசிலாந்தின் தேசியப் பூங்காவும் ஆகும். இதனைப் பொதுவாக மலையேறிகள் பயன்படுத்துவர். டொங்காரிரோ எரிமலை கடைசியாக 1896 நவம்பரில் வெடித்து 1897 அக்டோபர் வரை நீடித்திருந்தது. நேற்றைய வெடிப்பை அடுத்து மேலும் வெடிப்புகள் ஏற்படுமா என்பதை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் 'என்னத்தெ' கன்னையா நேற்று செவ்வாய்க்கிழமை தனது 87வது அகவையில் சென்னையில் காலமானார். கடந்த ஒரு மாதகாலமாக உடல்நலக்குறைவா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்த கன்னையா, நேற்று மாலை ‌திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மரணமானார். மதுரையைப் பிறப்பிட்ரமாகக் கொண்ட கன்னையா சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். மனைவி ராஜம் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்‌களுக்‌கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது. டி.கே.சண்முகம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரது நாடகக் குழுக்களில் இணைந்து 1942-ல் கலைத்துறைக்கு அறிமுகமான கன்னையா 1950-ல் "ஏழை படும்பாடு' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் நான்' திரைப்படத்தில் கண்ணையா பேசிய "என்னத்த' என்ற வசனத்தின் மூலம் "என்னத்த' கன்னையா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். ”தொட்டால் பூ மலரும்' என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த "வரும் ஆனால் வராது என்ற நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஏழைபடும் பாடு, நம்நாடு, பாசம், முதலாளி, சொர்க்கம், நான், மூன்றெழுத்து, இதயவீணை, தொட்டால் பூ மலரும், ம‌ன்ன‌‌ன் உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவ‌ர் எ‌ன்ன‌த்த க‌ன்னையா. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இலங்கையின் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தெற்கே மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் டில்ருக்சன் மரியதாஸ் என்ற மற்றொரு அரசியல் கைதி ராகமை மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார் என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண அறிவித்துள்ளார். 'இக்கொலைக்கு நாம் அரசாங்கத்தை பொறுப்பாளியாக்குகிறோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் சிவில் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கென்யாவின் வடக்கே கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர்ப் புதைபடிவுகளில் இருந்து இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக்கூடிய புதிய வகை மனித இனத்தை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய கண்டுபிடிப்புகள் ஆப்பிரிக்காவில் மூன்று வகை மனித இனம் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இவற்றை விடப் பழமையான ஹோமோ ஹாபிலிசு என்ற புதிய மனித இனத்தை அடையாளம் கண்டனர். இவை ஹோமோ எரெக்டசுகளுடன் இணைந்து வாழ்ந்திருந்தன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டது ஹோமோ ருடொல்ஃபென்செசிசு homo rudofensis என அழைக்கப்படுகிறது. இந்த வகை மனித எச்சம் 1972 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பெரிய மூளைப் பகுதியையும், நீண்ட தட்டையான முகத்தையும் கொண்ட இந்த வகை மனித இனம் உண்மையில் புதிய வகையினதா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ்வகை எச்சங்களில் இருந்து இவை வேறு வகை மனித இனம் என்பதை தொல்லியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆங்கிலத்தில் Liancourt Rocks எனவும் தென் கொரியாவினால் டொக்டோ எனவும் சப்பானினால் தக்கெசீமா எனவும் அழைக்கப்படும் தீவுகளுக்கு தென் கொரிய அரசுத்தலைவர் லீ மியுங்-பாக் சென்றுள்ளார். தென் கொரிய அரசுத்தலைவர் ஒருவர் இத்தீவுகளுக்குச் செல்வது இதுவே முதற் தடவையாகும். இதனை அடுத்து சப்பான் தென் கொரியாவுக்கான தனது தூதுவரைத் திரும்ப அழைத்துள்ளது. இத்தீவுகளுக்கு வரலாற்று ரீதியாக தாம் உரிமை கொண்டாடுவதாக இரு நாடுகளும் கூறிவருகின்றன. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் ஏறத்தாழ நடுவில் உள்ள இந்தத் தீவுகள் மிகச் சிறியதானாலும், மீன்பிடி வளங்கள் நிறைந்ததாகவும், பெரும் வளிமப் படிவுகளையும் கொண்டுள்ளன. தென் கொரியா தனது கடலோரக் காவல்படையை 1954 முதல் அங்கு நிறுத்தியுள்ளது. இத்தீவுகளுக்கு சப்பான் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க சென்ற மாதம் தென் கொரிய நபர் ஒருவர் தமது பாரவூர்தியை சியோல் நகரத்தில் அமைந்துள்ள சப்பானிய தூதரகத்தினுள் அதன் வாயிற்கதவைத் தகர்த்துக் கொண்டு செலுத்தியுள்ளார். 1945 ஆம் ஆண்டில் சப்பானிய ஆதிக்கவாதிகளிடம் இருந்து தென் கொரியா விடுதலையான நினைவு நாள் ஆகத்து 15 ஆம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் 10,000 சதுர மைல் (26,000 சதுர கிமீ) பரப்பளவைக் கொண்ட பரந்த எரிமலைப் பாறைகளை நியூசிலாந்து இராணுவ விமானம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. நியூசிலாந்துக் கரையில் இருந்து 1,000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஒரு கடற்படை கப்பல் மிதப்புப் பாறைகளைக் கொண்ட திரளைத் தவிர்க்கும் பொருட்டு தனது வழியை கட்டாயமாக மாற்ற வேண்டியிருந்தது. இந்த அசாதாரண நிகழ்வு அநேகமாக ஒரு நீருக்கடியில் உள்ள எரிமலையிலிருந்து வெளியிடப்பட்ட நுரைக்கல்லாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லெப். டிம் ஆஸ்கார் என்ற கடற்படை அதிகாரி ஒருவர் இந்த நிகழ்வு "விநோதமானது" எனத் தெரிவித்தார். இந்த நுரைக்கல்லின் மூலம் நியூசிலாந்தின் வடக்கே உள்ள மொனோவாய் என அழைக்கப்படும் கடலுக்கடியில் உள்ள எரிமலைப் பாறையில் இருந்து உருவாகியிருக்கலாம் என அக்கப்பலில் சென்ற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடல்மலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குழம்பு கடல்நீருடன் கலக்கும் போது, அது நீரை விட அடர்த்தி குறைவானதால் விரைவாக மேற்பரப்புக்கு நுரைக்கல்லாக வெளியேறுகிறது எனக் கூறப்படுகிறது. ஈரானின் வடமேற்கே இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கியதில் குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர். 2,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கிடையேயிருந்து அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தோர் எண்ணிக்கை இனி அதிகரிக்காது என ஈரானின் உட்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலாவது நிலநடுக்கம் அகாரில் இருந்து 23 கிமீ தென்மேற்கே, தபிரிசில் இருந்து 58 கிமீ வடகிழக்கே உள்ளூர் நேரம் 16:54 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது. 11 நிமிடங்களின் பின்னர் இரண்டாவது அதிர்வு தபிரிசிற்குக் கிட்டவாக நிகழ்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் பாம் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 25,000 பேர் உயிரிழந்தனர். 2012 லண்டன் மாரத்தான் ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் உகாண்டாவைச் சேர்ந்த ஸ்டீவன் கிப்ரோட்டிச் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தைப் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை கென்ய வீரர்கள் அபெல் கிரூயி, வில்சன் கிப்சாங் ஆகியோர் பெற்றனர். கிப்ரோட்டிச் எடுத்துக்கொண்ட நேரம் 2 மணி, 8 நிமி. 11 செக். ஆகும். இவர் இரண்டாவதாக வந்த கென்ய வீரர் கிரூயி ஐ 26 செக்கன்களாலும், மற்றுமொரு கென்ய வீரர் கிப்சாங்கை மேலும் 70 செக்கன்களாலும் வென்றார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் உகாண்டாவுக்குக் கிடைத்த ஒரேயொரு பதக்கம் இதுவாகும். உகாண்டாவின் கடைசி ஒலிம்பிக் வீரர் ஜோன் அக்கீ-புவா ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டின் மூனிச் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் பெற்றார். சூடானின் தார்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் அங்கு பணியாற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய-ஐக்கிய நாடுகள் கூட்டு அமைதிப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த அமைதிப்படை வீரர் 40 வயதுள்ள அஜ்கார் அலி என்னும் வங்காளதேச நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வங்காளதேசப் பத்திரிகை டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது. "உள்ளூர் இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றின் காவல்துறை அலுவலகத்தைச் சுற்றிவளைத்த ஆயுததாரிகள் காவல்துறையினர் மீது சுட்டதில் இவர் உயிரிழந்தார் ஐநா நிறுவனம் அறிவித்துள்ளது. தெற்கு தார்பூரின் தலைநகர் நியாலாவில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் ஆப்பிரிக்க ஒன்றிய-ஐக்கிய நாடுகள் கூட்டு அமைதிப் படையைச் சேர்ந்த வேறொருவர் காயமடைந்தார். படகுகளில் சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் அகதிகளை பப்புவா நியூ கினி, நவூரூ ஆகிய நாடுகளில் தடுத்து வைத்து அவர்களின் அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான சட்டமூலம் ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. நிபுணர் குழு பரிந்துரைக்கேற்ப ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவை நேற்று செவ்வாய்க்கிழமை இச்சட்டமூலத்தை நிறைவேற்றியது. இச்சட்டமூலம் அடுத்த சில நாட்களில் மேலவைக்கு (செனட் சபை) கொண்டு செல்லப்படவிருக்கிறது. ஆளும் தொழிற்கட்சியும், எதிர்க்கட்சியும் இச்சட்டமூலத்தை ஆதரித்திருப்பதால் மேலவை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவர் மட்டுமே இச்சட்டமூலத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர். 2008 ஆம் ஆண்டில் அப்போதைய தொழிற்கட்சிப் பிரதமர் கெவின் ரட் வெளிநாடுகளில் இயங்கிய தடுப்புமுகாம்களை காலவரையறையின்றி மூடினார். கடந்த திங்கட்கிழமை வரை இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த பிரதமர் ஜூலியா கிலார்டு "நரூ மற்றும் பப்புவா நியூ கினியில் ஆத்திரேலிய அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் இயங்கத் தொடங்கும் என நம்புகிறோம் எனக் கூறினார். படகுமூலம் வரும் அகதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பசிபிக் தீவுகளில் இரு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், தம்மை ஆத்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதற்காக கடத்தல்காரர்களுக்குப் பணம் வழங்குவதற்கு முன் மக்கள் இருதடவை சிந்திப்பார்கள் என ஆத்திரேலிய அரசு நம்புகிறது. கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 60 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஓரியன்டல் மாகாணத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் சுமார் 100 மீட்டர் ஆழ தங்கச் சுரங்கமே இடிந்து வீழ்ந்துள்ளது. தலைநகர் மம்பாசாவில் இருந்து 120 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள பங்கோய் என்ற நகரில் இவ்விபத்து நிகழ்ந்தது. இந்தச் சுரங்கம் காட்டுப் பகுதியில் உள்ளதாலும், அங்கு போராளிகளின் நடவடிக்கை அதிகமிருப்பதாலும் மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தை அடைவதில் தாமதமேற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமாகப் பணியாற்றுபவர்கள் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத தங்கச் சுரங்கங்களில் இருந்து பெறப்படும் வருமானத்தின் பெரும் பகுதி கொங்கோவில் இனமோதல்களில் ஈடுபட்டு வரும் போராளிகளையே சென்றடைவதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சுவீடனில் தேடப்பட்டு வந்த ஜூலியன் அசான்ச் கடந்த சூன் மாதத்தில் லண்டனில் உள்ள எக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு இது என அவர் கூறியுள்ளார். தனது நாட்டை விட்டு அசான்ச் வெளியேற முடியாது என ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது. ஆனாலும், இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தைகள் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க உதவும் என எக்குவடோரின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிபிசிக்குத் தெரிவித்திருக்கிறார். எக்குவடோரின் சுதந்திரமான இத்தீர்மானத்தை ஐக்கிய இராச்சியம் மதிக்க வேண்டும் எனக் கூறிய ரிக்கார்டோ பர்ட்டீனோ, அல்லாவிடில் பன்னாட்டு சட்டத்தின் படி அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார். அசாஞ்சின் விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் உட்பட வெளிநாட்டுத் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுவீடனுக்கு நாடு கடத்தினால் அது தம்மை அமெரிக்க நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் என அசாஞ்ச் குறிப்பிட்டுள்ளார். சூடானில் இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டதாக சூடான் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இராணுவத்தினர்,அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட 31 பேர் வரை சென்ற விமானம் நூபா மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. புனித ரமழான் பெருநாள் நிறைவடைந்த ஈத் அல்-பிதுர் கொண்டாட்டத்திற்காக தலைநகர் கார்ட்டூம் இல் இருந்து தெற்கு கோர்டோஃபான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளானது. சூடான் அமைச்சர் காசி அல்-சாதிக் அப்துல் ரகீம், நீதிக் கட்சியின் தலைவர் மக்கி அலி பலாயில் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் முக்கிய புள்ளிகள் ஆவார். மேலும் இரண்டு அமைச்சர்கள் உயிரிழந்ததாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. காலநிலை சீராக இல்லாததால் முதற் தடவை விமானம் தரையிறங்க முடியவில்லை என்றும், இரண்டாம் தடவை தரையிறங்க முற்பட்ட போதே விமானம் மலையில் மோதி வெடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிளாட்டினம் சுரங்கத் தொழிற்சாலை ஒன்றில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 34 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 78 பேர் காயமடைந்தனர். 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். யொகான்னசுபர்க் நகரில் இருந்து 100 கிமீ வடமேற்கே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தொலைவில் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்று சென்று பார்த்த தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் யாக்கோபு சூமா, இந்நிகழ்வு தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கத்திகள், மற்றும் வாள்களுடன் காவல்துறையினரை நோக்கிச் சென்றதாகவும், காவல்துறையினர் அவர்களை நோக்கிச் சுட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 4,000 முதல் 5,000 ராண்டுகள் 484-$605) வரை சம்பளமாகப் பெறும் சுரங்கத் தொழிலாளர்கள், 12,500 ராண்டுகள் 1,512) உயர்வு கோரிப் போராடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா உலகில் மிக அதிகமாக பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடாகும். களனி மானல்வத்த விகாரைக்கு இச்சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டு செப்டெம்பர் 4 ஆம் திகதிவரை அங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். 1978 ஆம் ஆண்டில் இந்தப் புனிதச் சின்னங்கள் இலங்கைக்கு முதன் முறையாகக் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் மொங்கோலியாவில் 1993 இலும், சிங்கப்பூரில் 1994 இலும், தென்கொரியாவில் 1995 இலும், தாய்லாந்தில் 1996 இலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. தற்பொது மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இலங்கைக்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன. கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் என அழைக்கப்படும் இச்சின்னங்கள் பீகார் மாநிலத்திலுள்ள புராதன கபிலவஸ்து நகரம் என கருதப்படும் பகுதியில் பிப்பிராவா என்ற இடத்தில் 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். பர்மாவில் ஊடகத்தணிக்கை இன்று திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக அந்நாட்டின் தகவற்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் இன்று முதல் தமது ஆக்கங்களை மேற்பார்வைக்காக தமக்கு அனுப்பத் தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மக்கள் அரசு அமைக்கப்பட்டதில் இருந்து அங்கு பல அரசியல் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன தணிக்கை முறை 1964, ஆகத்து 6 ஆம் நாள் அமுலுக்கு வந்தது. 48 ஆண்டுகள் இரண்டு வாரங்கள் கழித்து அது நீக்கப்படுகிறது என அமைச்சு அதிகாரி டிண்டு சுவே என்பவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் திரைப்படங்கள் தொடர்ந்தும் தணிக்கைக்குள்ளாகும் என அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தார். 30,000 இற்கும் அதிகமான இணையத்தளங்கள் மீதான தடைகளும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அரசியல் செய்திகள் தொடர்பான இணையத்தளங்களை எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயனர்கள் முதற்தடவையாகப் பார்வையிடலாம். கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகளுடனான சண்டையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட காவல்துறையினர் ஒருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற போது தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தம்மை வெடிக்க வைத்துள்ளார். இங்குசேத்தியாவின் வடமேற்கே மால்கோபெக் மாவட்டத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இத்தாக்குதலில் இறந்தவர்களில் தற்கொலைக் குண்டுதாரி தவிர்த்து ஏனையோர் அனைவரும் காவல்துறையினர் ஆவர். தற்கொலை மனிதனின் தலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. எத்தியோப்பியாவின் பிரதமர் மெலெசு செனாவி தனது 57 வது அகவையில் "வெளிநாடு" ஒன்றின் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என அந்நாட்டு அரசு இன்று அரசுத் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் தரப்படாத போதிலும், செனாவி பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் காலமானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். எத்தியோப்பியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும், பிரதிப் பிரதமருமான ஐலு மரியாம் தெசாலென் பதில் பிரதமாராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரதமர் செனாவி பல வாரங்களாக பொதுவில் நடமாடாத நிலையில், கடந்த மாதம் தலைநகர் அடிசு அபாபாவில் இடம்பெற்ற உச்சி மாநாடொன்றில் இவர் கலந்து கொள்ளாததால் அவரது உடல்நலம் குறித்து பல வதந்திகள் உலவி வந்தன. மெலெசு செனாவி 1991 ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத் சார்பு தலைவர் மெங்கிஸ்து ஐலு மரியாமை பதவியில் இருந்து அகற்றி நாட்டின் சனாதிபதி ஆனார். எத்தியோப்பியாவின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெரிதும் உழைத்தவர் என இவர் போற்றப்படுகிறார். ஆனாலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் இவரது அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடியவர் செனாவி ஆப்பிரிக்காவின் பேச்சாளர்" எனக் கூறிய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன், வறுமையில் இருந்து பல மில்லியன் மக்களைக் காப்பாற்றியவர் எனக் கூறினார் கடந்த 2 மாதங்களாக வெளிநாடு ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நமது பிரதமர், திடீர் சுகவீனமடைந்து நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 23:40 மணிக்குக் காலமானார் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. எரித்திரியா நாடு எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டிருந்தாலும், எத்தியோப்பியாவின் பொருளாதாரம் பெருமளவு வளர்ச்சி கண்டிருந்தது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். மெலெசின் தலைமையிலான அரசு அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணி வந்தது. அந்நாட்டில் இருந்து பெருமளவு நிதியை கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தளம் ஒன்றையும் அது கொண்டுள்ளது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது படைகளை அங்கு அனுப்பியிருந்தது. 2005 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் குறைந்தது 200 பேர் வரை கொல்லப்பட்டனர். பெருமளவு ஊடகவியலாளர்கள், மற்றும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என வாதிக்கும் கியூரியோசிட்டி திட்ட வல்லுனர்கள், இது பழுதடைந்ததால் சில அளவீடுகள் எடுக்க முடியாமல் போகலாம் எனக் கூறுகின்றனர். எவ்வாறு இந்த உணர்கருவி பழுதடைந்தது எனக் கண்டுபிடிக்கப்படவில்லை ஆயினும், இந்தத் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கும் போது உணர்கருவிச் சுற்றை அது தாக்கியிருக்கக்கூடும் எனவும், இதனால் அதன் கம்பியிணைப்புகள் அறுந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் எனவும் அழைக்கப்படும் இந்த தரையுளவி இரண்டு வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தரையிறங்கியது. இது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி ஆய்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய தடையங்களை இது ஆராயும். கியூரியோசிட்டியின் வானிலை நிலையம் எசுப்பானிய அறிவியலாளர்களால் தயாரிக்கப்பட்டது. இது வளி மண்டலம், மற்றும் தரை வெப்பநிலைகள், வளி அமுக்கம், ஈரப்பதன், காற்றுத் திசை, வேகம் பேன்றவற்றை அளக்கக்கூடியது. செயற்கைக்கோள்கள் அமைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உருசியா திட்டமிட்டுள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவிற்கு வெளியே சோல்க்கோவா என்ற இடத்திலேயே இத்தொழிற்சாலை அமைக்கப்படவிருப்பதாக மாஸ்கோ பிராந்திய ஆளுனர் செர்கே சோயிகு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இது ஒரு புதிய தொழிற்சாலையாக இருக்கும்,” எனத் தெரிவித்த சோயிகு, புதிய ஆய்வு நிலையம் ஒன்றும் நிறுவப்படும் எனக் கூறினார். ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 600 தகவற்தொடர்பு மற்றும் அவதானிப்பு செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,000 பேர் வேலை வாய்ப்பைப் பெறுவர். இத்தொழிற்சாலை “சுற்றுச்சூழலுக்கு சுத்தமானதாகவும்" இருக்கும் எனவும் ஆளுனர் தெரிவித்தார். கென்யாவின் தென்கிழக்கே இரு இனங்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக கென்யக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கென்யாவின் கரையோர மாகாணத்தின் தானா ஆற்று மாவட்டத்தில் செவ்வாய் மாலையில் ஓர்மா மற்றும் பொக்கோமோ ஆகிய இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. பெண்களும் குழந்தைகளும் கத்திகளால் குத்தப்பட்டு மடிந்தனர். மேலும் பலர் குடிசைகளில் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடைகளை மேய்ப்பதற்கான உரிமைப்பிரச்சினையே வன்முறைக்குக் காரணம் என நம்பப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின் படி ஓர்மா இனத்தவர்கள் மீது பொக்கோமோக்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு இனத்தவர்களுக்கும் இடையே அண்மைக்காலத்தில் வன்முறைகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம் எனவும், ஆனால் இவ்வளவு மோசமாக நடந்ததில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். 2001 ஆம் ஆண்டில் இதே பகுதியில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டனர். சீனாவில் கடந்த ஆண்டு நவம்பரில் பல மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட பாலம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூவர் கொல்லப்பட்டனர், மேலும் ஐவர் காயமடைந்தனர். எய்லோங்சியாங் மாகாணத்தின் கார்பின் நகரில் உள்ள யாங்மிங்ட்டட் பாலத்தின் 100 மீட்டர் நீளமான ஒரு பகுதி உடைந்ததில் அதில் சென்று கொண்டிருந்த நான்கு பாரவூர்திகள் கீழே வீழ்ந்ததாக சின்குவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 05:30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மட்டமான கட்டுமானத்தையும், பாரவூர்திகளின் பாரத்தையும் தாங்காததனாலேயே பாலம் உடைந்திருக்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது. பாரவூர்திகள் அதிக பாரத்தைக் கொண்டு சென்றனவா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சூலை மாதத்திற்குப் பின்னர் சீனாவில் பாலம் உடைவது இது ஆறாவது தடவையாகும். காம்பியாவில் 9 மரணதண்டனைக் கைதிகள் சென்ற வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த சில நாட்களில் அங்கு மேலும் பலர் தூக்கிலிடப்பட விருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. தூக்குத்தண்டனையை எதிர்நோக்கும் அனைத்து 47 பேருக்கும் அடுத்த மாதத்திற்குள் தண்டனை நிறை வேற்றப்படும் என காம்பியாவின் அரசுத்தலைவர் யாகியா ஜாமி ரமழான் பெருநாளை முன்னிட்டு தனது உரை ஒன்றில் கடந்த ஞாயிறன்று அறிவித்திருந்தார். காம்பியாவில் கடைசியாக 1985 ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. கடந்த வியாழன் இரவு ஒரு பெண் கைதி உட்பட 9 பேர் அவர்களது சிறை அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூவர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றவர்கள். அரசுத்தலைவர் தனது திட்டத்தைக் கைவிடவேண்டுமென ஆப்பிரிக்க ஒன்றியம் ஜாமி அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தது. தூக்குத்தண்டனை பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் கைதிகள், அல்லது முறையான விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டவர்கள் என மன்னிப்பகத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிரதிப் பணிப்பாளர் பவுலி ரிகாட் தெரிவித்துள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்ட 47 பேரும் தனியானதொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத்துறையினரை ஆதாரம் காட்டி ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் அரசுத்தலைவர் ஜாமி மிகவும் உறுதியாக உள்ளார் என அதே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காம்பியாவில் முன்னாள் தலைவர் தாவ்தா ஜவாரா பதவியில் இருந்த போது மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து பதவிக்கு வந்த ஜாமி மரணதண்டனையை மீண்டும் சட்டபூர்வமாக்கினார். யாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் தேர்தலில் நான்காவது தடவையாக அவர் வெற்றி பெற்ற போது அவரது மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது "நரகத்திற்குச் செல்லுங்கள், நான் அல்லா ஒருவருக்கே பயப்படுகிறேன்" என பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார். மேற்கு ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடான காம்பியா ஒரு பிரபலமான சுற்றுலா மையம் ஆகும். துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்ட பிரெய்விக் அது தொடர்பாகத் தான் வருந்தவில்லை என முன்னதாகத் தெரிவித்திருந்தார். தான் சிறந்த மனநிலையிலேயே இவற்றைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். 2011 சூலை 22 ஆம் நாள் தலைநகர் ஒசுலோவில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இவர் குண்டு வீசியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அவர் படகு ஒன்றில் ஏறி உத்தோயா தீவில் தொழிற்கட்சியின் இளைஞர் முகாம் நடந்து கொண்டிருந்த மண்டபத்திற்குச் சென்று அங்கு கூடியிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் உறவினர்களும், நண்பர்களும் தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலர் இந்தத் தீர்ப்பு போதுமானதாக இல்லை எனக் கருத்துத் தெரிவித்தனர். நோர்வேயை இசுலாமியமயமாக்குதலில் இருந்து காக்கவே இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தார் நான் மேலும் பலரைக் கொல்லாமுடியாமல் போனதற்கு நோர்வே, மற்றும் ஐரோப்பாவில் உள்ள தேசியவாதப் போராளிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். இம்மாத முற்பகுதியில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையை அடுத்து ஏற்பட்ட கோளாறுகளினால் அவர் நேற்று சனிக்கிழமை இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1969 ஆம் ஆண்டு சூலை 20 இல் நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடி, ஆனால் மனித குலத்திற்கு இது பெரும் படி" என அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர் பொதுமக்கள் விருதான காங்கிரசு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டிருந்தது. அப்பல்லோ 11 விண்கலத்தின் தலைவராக இவர் நிலவுக்குச் சென்றார். உலகெங்கணும் இருந்து 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வைக் கண்டு களித்தனர். ஆம்ஸ்ட்ராங்கும், அவரது சகாவான எட்வின் ஆல்ட்ரினும் மூன்று மணி நேரம் நிலவில் உலவினர். நிலவின் மண் மாதிரிகள் சேகரிப்பு, சோதனைகள், மற்றும் படங்கள் எடுத்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பல்லோ 11 பயணம் அவரது கடைசி விண்வெளிப் பயணமாக இருந்தது. பின்னர் அவர் நாசாவில் இருந்து விலகி, விண்வெளிப் பொறியியலில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டில் ஒகையோ மாநிலத்தில் பிறந்த ஆம்ஸ்ட்ரோங் 1950களில் கொரியப் போரில் அமெரிக்கப் போர் விமானங்களில் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் இணைந்து கொண்டார். 2010 ஆம் ஆண்டில் நோக்கமில்லாக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜயந்த் பட்டேல் மீது மீள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆத்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரைப் பிணையில் விடுவித்தது. மரு. பட்டேல் மீது நடத்தப்பட்ட விசாரணைகளில் நீதி தவறியுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 58 நாட்கள் நடைபெற்ற இவரது வழக்கின் 43 ஆம் நாள் வழக்குத் தொடுநர்கள் "வழக்கில் அடிப்படையான மாற்றம் ஒன்றைக்" கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ள நீதிமன்றம், இதனை நீதிதவறியமையாக அறிவித்திருக்கிறது. வழக்கு விசாரணைகளின் போது மரு. பட்டேல் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள் அனைத்தும் மருத்துவத் தர நிர்ணயத்திற்கமையவே நிறைவேற்றப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. ஆனாலும், அதனைக் கருத்தில் கொள்ளாது, அவர் தனது சிகிச்சைகளில் கவனக்குறைவாகச் செயல்பட்டார் என்ற ரீதியிலேயே வழக்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அமெரிக்க மருத்துவர் ஜெயந்த் பட்டேலுக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை சூலை 1, 2010 ஆஸ்திரேலியாவில் அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டது ஜூன் 29, 2010 அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு மார்ச் 22, 2010 ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்தந்த மாவட்டங்களின் வாக்காளர் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் தேர்தல் ஆணையாளரால் நிர்ணயிக்கப்படுகிறது. வன்னி தேர்தல் மாவட்டம் மன்னார், வவுனியா, மற்றும் முல்லைத்தீவு தேதல் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். 2011 ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் பதிவான வாக்காளரின் எண்ணிக்கை 221,409 ஆகும். இந்த எண்ணிக்கை 2010 இல் 236,449 ஆகவும், 2009 இல் 270,707 ஆகவும் இருந்தது. பிபிலை, மொனராகலை, மற்றும் வெல்லவாயா தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டில் 319,557 வாக்காளர்கள் பதிவாகியன். இவ்வெண்ணிக்கை 2010 இல் 315,452 ஆகவும், 2009 இல் 308,230 ஆகவும் இருந்தன. ஆப்கானித்தானின் மேற்கு எல்மாண்டு மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளால், கேளிக்கைக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 17 பொதுமக்களின் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரு பெண்கள், மற்றும் 15 ஆண்களின் இறந்த உடல்கள் மூசா காலா மாவட்டத்தில் உள்ள சாலையோரம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலையில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள் ஆடுவதைப் பார்ப்பதற்காகக் கேளிக்கை கொண்டாட்டம் ஒன்றில் கூடியிருந்தவர்கள் தாக்கப்பட்டதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இதே வேளையில், இதே மாவட்டத்தில் வேறோர் இடத்தில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 10 ஆப்கானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்கானித்தானில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானியத் தேசிய இராணுவ வீரர் ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2008 சனவரி முதலாம் நாள் காலை கொழும்பு கொட்டாஞ்சேனை சிவன் கோவிலில் இடம்பெற்ற புத்தாண்டு வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். மகேசுவரனையும், சந்திரகுமார் மகிந்தன் என்பவரையும் சுட்டுக் கொலை செய்தது தொடர்பில் ஜோன்சன் வலண்டைன் என்பவருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபர் சார்பில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. வழக்குத் தொடர்பிலான 150 பக்க தீர்ப்பு நேற்று மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. சந்திரகுமார் என்பவரை சுட்டுக் கொன்றது தொடர்பில் போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் அக்குற்றச்சாட்டில் இருந்து சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் மகேஸ்வரனை சுட்டுக்கொலை செய்தது தொடர்பில் அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மகேசுவரனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் படிந்திருந்த சந்தேகநபரின் இரத்தம் டி.என்.ஏ. சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. தனக்கு இந்த சம்பவத்துடன் எதுவித தொடர்பும் கிடையாது என குற்றவாளி தெரிவித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் துசார குமாரவும், சந்தேகநபர் சார்பில் எஸ். ஜெயக்குமாரும் வாதாடினர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இவரது மனைவி விஜயகலா மகேஸ்வரன் கடந்த தேர்தலில் ஐதேக சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கென்யாவில் அடிப்படைவாத இசுலாமிய மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கென்யாவின் இரண்டாவது நகரமான மெம்போசாவில் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் மீது கிரனேட் வீசப்பட்டதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார். இரண்டு நாள் கலவரங்களை அடுத்து மொம்பாசாவில் தற்போது காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மதகுரு அபூட் ரோகோ முகம்மது என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவர் சோமாலியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு உதவுபவர் என ஐக்கிய நாடுகளும் அமெரிக்காவும் இவர் மீது குற்றம் சுமத்தியிருந்தன. மதகுரு கொல்லப்பட்டதை அடுத்து கோபம் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் கடைகளுக்குத் தீ வைத்தும், கிறித்தவக் கோயில்களைத் தாக்கியும் வருகின்றனர். அல்-சபாப் தீவிரவாதிகளே இளைஞர்களுக்கிடையே தமக்கு ஆதரவைப் பெருக்க மதகுருவைக் கொலை செய்ததாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மதகுரு ரோகோ மீது ஐநா பாதுகாப்புச் சபை பயணத் தடை விதித்து, அவரது சொத்துக்களையும் முடக்கி வைப்பதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆப்கானித்தானில் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் ஐந்து ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை ஹெல்மாண்டு மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்து ஒன்றில் இரண்டு ஆத்திரேலியர்கள் கொல்லப்பட்டனர். நேற்று புதன்கிழமை உருஸ்கான் மாகாணத்தில் ஆப்கானிய இராணுவ உடையில் வந்த ஒரு நபர் மூன்று ஆத்திரேலியப் படையினரைச் சுட்டுக் கொன்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் காயமடைந்தனர். "பல உயிர்களைக் காவு கொண்ட ஒரு போரில் ஒரே நாளில் இவ்வளவு படையினரை நாம் எப்போதும் இழந்ததில்லை" என ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குக் தீவுகளில் பசிபிக் நாடுகளின் கூட்டத் தொடர் ஒன்றில் பங்குபற்றவெனச் சென்றிருந்த ஜூலியா கிலார்டு தனது பயணத்தை இடைநிறுத்திவிட்டு உடனடியாக நாடு திரும்பினார். 2002 ஆம் ஆண்டு முதல் ஆப்கானித்தானில் 33 ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். உருஸ்கான் மாகாணத்தில் கிட்டத்தட்ட 1,500 ஆத்திரேலியப் படையினர் நிலை கொண்டுள்ளனர். ஆப்கானியப் படையினருக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற மத வன்முறைகளில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு உடந்தையாக இருந்தமைக்காக பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு இந்திய நீதிமன்றம் ஒன்று 28 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவுமான மாயா கொட்னானி என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரின் புறநகரான நரோதா பாட்டியாவில் இடம்பெற்ற இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட மேலும் 30 பேருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில் மாயா கொட்னானி அமைச்சராகப் பதவியில் இருக்கவில்லை. பின்னாளில் 2007 ஆம் ஆண்டில் நரேந்திர மோதியின் அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராகப் பதவியேற்றார். படுகொலைகள் தொடர்பாக இவர் 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட போது அமைச்சர் பதவியைத் துறந்தார். ஆனாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். பஜ்ராங் தால் என்ற இந்து அமைப்பின் முன்னாள் தலைவர் பாபு பச்சிராங்கி என்பவருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தல்கள் இவ்வாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் நிலையில் இன்றைய தீர்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி முயலலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். கிர்கித்தான் பிரதமர் ஒமுர்பெக் பபானொவ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது பதவி விலகலை சனாதிபதி அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் ஏற்றுக் கொண்டுள்ளதாக சனாதிபதி மாளிகை இன்று அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஆளும் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதை அடுத்து நேற்று தனது அரசைக் கலைத்த பபானொவ், சமூக மக்களாட்சிக் கட்சியை புதிய கூட்டணியை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தாம் நடைமுறைப்படுத்திய அரசியல், மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைப் புதிய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் எனத் தாம் நம்புவதாக பபானொவ் கூறினார். கிர்கித்தான் பிரதமரை அரசுத்தலைவராகக் கொண்டு இயங்கும் ஒரு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள கட்சிகளின் கூட்டணியே பொதுவாக அரசு அமைக்கிறது. 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேர்தல்களை அடுத்து, ஐந்து கட்சிகள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் 4 கட்சிகள் சமூக-மக்களாட்சிக் கட்சி, அட்டா மேக்கென், குடியரசுக் கட்சி, ஆர் நாமிசு இணைந்து ஆட்சியமைத்தது. அட்டா சூர்ட் கட்சி எதிரணியில் அமர்ந்தது. இவற்றில் ஆர் நாமிசு, அட்டா மேக்கென் ஆகிய கட்சிகள் இவ்வார ஆரம்பத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. கிர்கித்தான் அரசியல் சட்டப்படி, கூட்டணி ஒன்று உடையும் போது, பிரதமர் அரசைக் கலைத்துப் பதவியில் இருந்து விலக வேண்டும். இவ்வாண்டு சனவரி மாதத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்த ஒமுர்பெக் பபானொவின் அரசு எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்துள்ளது. 2010 சூன் மாதத்தில், நாட்டின் தெற்கில் கிர்கீசு இனத்தவருக்கும், சிறுபான்மை உஸ்பெக்குகளுக்கும் இடையே இடம்பெற்ற வன்முறைகளில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் உஸ்பெக்குகள் ஆவார். 400,000 பேர் இடம்பெயர்ந்தனர். இம்முடிவுகளின் படி, 1979 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் அரசுத்தலைவர் ஒசே எதுவார்தோ டோசு சாண்டோசு (70) மீண்டும் ஒரு தடவை ஆட்சியில் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்றுள்ளதைத் தேர்தல் முடிவுகள் முடிவுகள் காட்டுவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும். புதிய அரசியலமைப்பின் படி, 220 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வெற்றி பெறும் கட்சியின் தலைவர் அரசுத்தலைவராக (சனாதிபதியாக) அறிவிக்கப்படுவார். 1975 ஆம் ஆண்டு அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்ற நாளில் இருந்து அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆப்பிரிக்காவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் அங்கோலா உள்ளது. 2002 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் அதன் பொருளாதாரம் பெருமளவு மேம்பட்டுள்ளதாயினும், அதன் வளம் ஒரு குறிப்பிட்ட சிலரையே அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2013 ஆம் ஆண்டுக்குள் தனது இராணுவத்தினரை ஆப்கானித்தானில் இருந்து மீள அழைக்கவிருப்பதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. நியூசிலாந்து 2003 ஆண்டில் இருந்து தனது படைகளை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வருகிறது. தற்போது ஆப்கானித்தானின் பாமியன் மாகாணத்தில் நியூசிலாந்தில் 140 படையினர் நிலை கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஐந்து நியூசிலாந்துப் படையினர் இரு வெவ்வேறு நிகழ்வுகளில் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. "கடந்த பத்தாண்டுகளில் நியூசிலாந்துப் படையினர் தீவிரவாதத்துக்கு எதிரான பன்னாட்டுப் படையினரின் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளனர், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது, பாமியான் மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் ஆளுமையில் பெரும் பங்கை வகித்தது என நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜொனத்தன் கோல்மன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆப்கானித்தானுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்குப் பயிற்சி, நிதியுதவி, மற்றும் அபிவிருத்திக்கான உதவி போன்றவை இவற்றுள் அடங்கும் என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். செப்டம்பர் 2014 ஆம் ஆண்டிலேயே தமது படையினரைத் திரும்ப அழைக்க நியூசிலாந்து முன்னதாகத் திட்டமிட்டிருந்தது. துருக்கியில் ஈராக், சிரிய எல்லைப்பகுதியில் குர்தியப் போராளிகளின் தாக்குதல் ஒன்றில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக துருக்கியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஏழு படையினர் காயமடைந்தனர். 20 போராளிகளும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக சிர்னாக் மாகாண ஆளுனர் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் மோதல் வெடித்ததாகவும், தொடர்ந்து அங்கு சண்டை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குர்தியர்களுக்கு தென்கிழக்கு துருக்கியில் 1984 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி கோரிப் போராடி வரும் பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் மோதல் அதிகரித்துள்ளன. பிகேகே கட்சியை ஒரு தீவிரவாதக் குழுவாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வகைப்படுத்தியுள்ளன. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள போராளிகள் குர்திய மக்களுக்கு கலாசார உரிமைகளையும் கூட்டமைப்புக்குள் தன்னாட்சி கோரிப் போராடுவதாகவும் அறிவித்துள்ளனர். 1966 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மோதிய பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் மோண்ட் பிளாங்க் மலைப்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அஞ்சல் பொதி ஒன்றை இந்தியா பெற்றுக் கொண்டது. பாரிசில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி சத்வந்த் கனாலியா இப்பொதியை பிரெஞ்சு அதிகாரிகளிடம் இருந்து நேற்றுப் பெற்றுக் கொண்டார். மோண்ட் பிளாங்கின் பனியாறு ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சிலரால் ஆகத்து 21 ஆம் நாள் இப்பொதி கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பொதியில் "தூதரகப் பொதி" என்றும் "வெளிவிவகார அமைச்சு" என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. இப்பொதியில் மிக முக்கிய வரலாற்று ஆவணங்கள் அடங்கியுள்ளதாக தூதரக அதிகாரி தெரிவித்தார். 2008 செப்டம்பரில் இப்பகுதியில் சனவரி 23, 1966 தேதியிடப்பட்ட இந்தியப் புதினப்பத்திரிகைகள் சிலவற்றை டேனியல் ரோச் என்பவர் கண்டெடுத்தார். 1950 ஆம் ஆண்டிலும் இதே பகுதியில் இந்திய விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது. இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர், 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். நாட்டின் 90 விழுக்காடு பட்டாசுத் தேவைகள் சிவகாசியிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஏனைய ஆசிய நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வெடிவிபத்துக்கு காரணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை, ஆயினும் தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. சிவகாசி சென்னையில் இருந்து தென்மேற்கே 650 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்கப்பூருக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று நைஜீரியக் கரைக்கப்பால் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதென்று உடனடியாகத் தெரியவில்லை எனக் கடற்படை அதிகாரி ஜெரி ஒமடாரா தெரிவித்தார். கப்பலில் 23 பணியாளர்கள் இருந்தனர் என்றும், அவர்கள் பாதுகாப்புக்காக அறை ஒன்றினுள் சென்று அறையைப் பூட்டியுள்ளதாக பன்னாட்டு கடல்வழிப் பணியகம் தெரிவித்துள்ளது. லேகோசுத் துறைமுகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் கப்பல் கொள்ளைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர். நைஜீரியாவில் மட்டும் இவ்வாண்டு 17 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. இதே வேளையில், ஏடன் வளைகுடாவில் கடற் கொள்ளைகளைத் தடுக்கும் பன்னாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் நான்காவது குழு நேற்றுப் புறப்பட்டது. மூன்று மாதப் பணியில் 145 பேர் அடங்கிய குழு ஈடுபடும். சோமாலியாவுக்கு அருகே கடற் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கடற்பகுதிக்கு சிங்கப்பூர் கடற்படையின் நவீன விமானங்களும் உலங்குவானூர்திகளும் அனுப்பப்படுகின்றன. நடு அமெரிக்காவில் உள்ள கோஸ்டா ரிக்கா நாட்டின் வட-மேற்குப் பகுதியில் இடம்பெற்ற பலம் வாய்ந்த நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவானாகாஸ்ட் என்ற இடத்தில் 55 வயதுப் பெண்ணும், சுவர் இடிந்து வீழ்ந்ததில் கட்டடத் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர். பெரிதளவிலான சேதம் இல்லை என அரசுத்தலைவர் லோரா சின்சில்லா தெரிவித்தார். தலைநகர் சான் ஒசேயிலும் சில கட்டடங்கள் குலுங்கியதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அயல் நாடுகளான நிக்கராகுவா, எல் சல்வடோர் நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. 530 கிமீ அகலமுள்ள வெஸ்டா பாறையின் ஈர்ப்பில் இருந்து விலகியதை டோன் விண்கலத்தில் இருந்து நேற்றுப் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற சமிக்கை உறுதிப்படுத்தியதாக நாசா தெரிவிக்கிறது. செரசுவை நோக்கிச் செல்ல முன்னர் டோன் விண்கலம் வெஸ்டாவின் வடமுனைப் படங்களை பூமிக்கு அனுப்பியிருந்தது. வெஸ்டாவில் உள்ள மலைகளும், எரிமலைவாய்களையும் முதற்தடவையாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர், மேலும் 150 பேர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. யூனான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 20,000 வீடுகள் வரையில் தேதமடைந்தன. இறந்தவர்கள் அனைவரும் யூனான் மாகாணத்தின் யிலியாங் நகரைச் சேர்ந்தவர்கள் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை நடந்து முடிந்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மூன்று மாகாணங்களிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை கணியவெலி சிங்கள மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் சிறீலங்கா முசுலிம் காங்கிரசு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கிடையிலேயே குண்டாந்தடித் தாக்குதல் இடம்பெற்றதாகவும், சட்டவிரோதமான முறையில் வாக்களிக்க முயன்ற சிலரைக் கிண்ணியா காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாகாண சபைகளுக்கும் 108 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் 3073 பேர் போட்டியிட்டனர். முதலாவது தேர்தல் முடிவு இன்றிரவு 10 மணியளவில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகத் தேர்தல்கள் திணைக்களம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] இம்மாகாண சபையில் கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேவேளை, இம்மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தமிழ் வேட்பாளர்கள் இருவர் தெரிவாகியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்மாகாணத்தில் மலையக மக்கள் முன்னணி மற்றும் சனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. * ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 488714 வாக்குகள் (28 இடங்கள்) * ஐக்கிய தேசிய கட்சி 286857 வாக்குகள் (14 இடங்கள்) * இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 25985 வாக்குகள் (2 இடங்கள்) [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] [[w:இஸ்ரோ| இஸ்ரோ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 100 வது விண்வெளித் திட்டமான பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்வெளித் திட்டம் ஆர்யபட்டா ஏவுதலுடன் 1975 ஆம் ஆண்டு தொடங்கியது. இன்றைய வெற்றிகரமான ஏவுதல் மூலம் 100 விண்வெளித் திட்டங்களை முடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார். இந்திய விண்வெளித் துறையையும், இந்திய விண்வெளி நிறுவனத்தின் அனைத்து நபர்களையும் வாழ்த்துவதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் புதன் கோளின் சூழ்நிலையை ஆராய "மங்கல்யான்" எனப்படும் ஆளில்லா விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இம்மாகாண சபையில் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 11 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 1 இடத்தைக் கைப்பற்றியது. * ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 338,552 வாக்குகள் (21 இடங்கள்) * ஐக்கிய தேசிய கட்சி 196,127 வாக்குகள் (11 இடங்கள்) * மக்கள் விடுதலை முன்னணி 16,066 வாக்குகள் (1 இடங்கள்) [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] இம்மாகாண சபையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களுடன் இரண்டாமிடத்தில் வந்தது. ஆளும் கூட்டணிக் கட்சியின் அங்கமான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு இம்முறை தனித்துப் போட்டியிட்டு மொத்தம் 7 இடங்களையும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 3 இடங்களையும், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, குறைந்தது 19 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்குமா அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐதேகவின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் தமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் அக்கீம் தெரிவித்துள்ளார். * ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 200, 044 வாக்குகள் (14 இடங்கள்) * இலங்கைத் தமிழரசுக் கட்சி 193,827 வாக்குகள் 11 இடங்கள் * ஐக்கிய தேசிய கட்சி 74,901 வாக்குகள் (3 இடங்கள்) * தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகள் (1 இடம்) [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] category=இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012 [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012 noinclude> சூடானில் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இரு முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் பலர் கொல்லப்பட்டனர். கிராமம் ஒன்றைத் தாம் விடுவித்துள்ளதாக நீதி மற்றும் சமத்துவ இயக்கம் (JEM) என்ற போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சண்டையில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீரின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கோடு சூடானிய, மற்றும் தெற்கு சூடானியப் போராளிகள் அமைப்புகள் கடந்த ஆண்டு தமக்குள் கூட்டுச் சேர்ந்தன. தெற்கு சூடான் பயங்கரவாதத்துக்குத் துணை போவதாக சூடானிய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக ஆப்பிரிக்க ஒன்றியம் வரைந்த எல்லை வரைபடத்தை தெற்கு சூடான் ஏற்றுக் கொண்ட போதும், சூடான் அதனை ஏற்க மறுத்து வருகிறது. கிறித்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடான் கடந்த ஆண்டு இசுலாமிய சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. மாலியின் மத்திய சேகு பகுதியில் டயாபெலி என்னும் நகரில் சோதனைச் சாவடி ஒன்றில் நிற்காமல் பயணம் செய்த வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சுட்டதில் 16 பேர் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இந்த வாகனத்தில் பயணம் செய்தோரில் பெரும்பான்மையானோர் தாவா என்ற மிதவாத இசுலாமிய அறவுரையாளர்கள் எனவும் ஏனையோர் மாலி, மற்றும் மவுரித்தானியர் எனவும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இசுலாமிய மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தலைநகர் நோக்கிப் பயணித்தவர்கள் ஆவர். மாலியின் வடக்குப் பகுதி தற்போது இசுலாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தீவிரவாதிகள் என இராணுவத்தினர் தவறுதலாகக் கணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. சோமாலியாவில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக நாட்டின் புதிய அரசுத்தலைவராக அசன் சேக் மகுமுது என்பவரை சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர். அல்-கைதாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் போராளிகள் தற்போது நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். தலைநகர் மொகதிசுவில் அடிக்கடி தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதுவரை பிரதமராக இருந்த அப்திவெலி முகமது அலி முதற்கட்ட வாக்கெடுப்பில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் போட்டியிடவில்லை. சோமாலியாவில் அரசுத்தலைவராக இருந்த சேக் சரீப் சேக் அகமது இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். தேசியத் தொலைக்காட்சியில் அவர் உரையாற்றுகையில், 42 ஆண்டுகளுக்குப் பின்னர் முறையான ஒரு தேர்தல் நடத்தப்பட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். 58 வயதான அசன் சேக் மகமுது பல தேசிய மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். சோமாலி தேசிய பல்கலைக்கழகத்தில் 1981 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் இந்தியாவில் போப்பால் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். யுனிசெப் நிறுவனத்தில் 1995 வரை பணியாற்றியிருந்தார். தலைநகர் மொகதிசுவில் சிமாட் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். 2011 இல் அமைதி மற்றும் அபிவிருத்திக் கட்சியைத் தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் படி, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 12 தமிழ் உறுப்பினர்களும், 8 சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தலா 4 உறுப்பினர்களும் என 15 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 2 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும் என 12 தமிழ் உறுப்பினர்கள் தெரிவாயினர். அம்பாறை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும் என 8 சிங்கள உறுப்பினர்கள் தெரிவாயினர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் போட்டியிட்ட 11 பேரில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். பிரதி அமைச்சர் கருணா என்ற முரளிதரனின் சகோதரி திருமதி ஞானபாஸ்கரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 22 சிங்கள உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும், ஒரு தமிழ் உறுப்பினரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 15 சிங்கள உறுப்பினர்களும், 2 முஸ்லிம் உறுப்பினர்களும், ஒரு தமிழ் உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] பாக்கித்தானின் கராச்சி நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 247 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இத்தீவிபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். எரியும் கட்டடத்தின் உள்ளே இருந்து பலர் வெளியே குதித்தனர். 40 இற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபடுத்தப்பட்டன. நாலு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலை இன்று காலை வரை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும், இறந்த உடல்கள் பல இடிபாடுகளுக்கிடையேயிருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற வேறொரு சம்பவத்தில் லாகூர் நகரில் ஒரு காலணித் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 23 பேர் கொல்லப்பட்டனர். லாகூர் தீ மின்சார ஒழுக்கினால் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லிபியாவின் வடக்கு நகரான பெங்காசியில் செவ்வாய் இரவு அமெரி்க்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறித்தோபர் ஸ்டீவன்சு கொல்லப்பட்டார். ஆயுதங்கள் தரித்த நபர்கள் ராக்கெட் குண்டுகளை வீசித் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலில் கிளம்பிய புகைமண்டலத்தில் மூச்சுத்திணறி அமெரிக்கத் தூதர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று அமெரிக்கர்களும் 10 இலிபியர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். தூதரகம் பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்தனர். அமெரிக்க தூதர் பணி விடயமாக தலைநகர் திரிப்பொலியில் இருந்து பெங்காசி வந்திருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனக் கூறியுள்ள அமெரிக்கா அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தனது இரு போர்க் கப்பல்களை லிபியக் கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இச்சம்பவத்திற்கு அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதே வேளையில், சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஏனைய இசுலாமிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. மூன்றாவது நாளாக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சண்முகம் இப்பயிலரங்கினைத் தொடங்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பாடல் துறைப் பேராசிரியர். பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவத் தொகுத்தல், தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறி பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் போன்றவற்றை செயல்முறையாக விளக்கி மாணாக்கர்கள் உடனுக்குடன் கேட்ட ஐயங்களை விளக்கினார். பயிலரங்கின் மதிய அமர்வில் விக்கிப்பீடியர் பார்வதிஸ்ரீ கலந்துகொண்டு, விக்கிப்பீடியா, விக்சனரி மற்றும் பிற விக்கித் திட்டங்களைப் பற்றிய அறிமுகம் செய்தார். மாணவர்களுக்கு விக்கியில் பங்கெடுப்பது பற்றி விளக்கிக் கூறினார். பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பயிலரங்கப் பங்கேற்பாளர்களை அணி அணியாகப்பிரித்து விக்கி தொகுத்தல் பயிற்சியை அளித்தனர். இப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணாக்கர்கள் 18 பேரும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் 135 பேரும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 12 பேரும் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் 16 பேரும் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் 15-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் விக்கிப்பீடியாவில் புதிய கணக்கினைத் தொடங்கினர். இரா. மணிகண்டன், கணினி அறிவியல் துறைத்தலைவரின் நன்றியுரையுடன் பயிலரங்கம் நிறைவடைந்தது. இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்புப் பணிகளை கணினி அறிவியல் துறைத்தலைவர் இரா. மணிகண்டன், தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் அ. அறிவழகன், இணைப் பொறுப்பாளர் சி. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்டனர். பணியிடம்: பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ் நாடு, இந்திய ஒன்றியம். "முதற் தொகுதியில் சில "நடைமுறைக் காரணங்களுக்காக" ஆண்கள் இடம்பெற்றுள்ளனர், அடுத்த தொகுதியில் பெண்கள், குழந்தைகளும் இடம்பெறுவர் என ஆத்திரேலியக் குடிவரவுத் துறை அமைச்சர் கிறிசு போவன் தெரிவித்தார் எமது செய்தி மிகத் தெளிவாக உள்ளது: நீங்கள் ஆத்திரேலியாவுக்குள் படகில் வந்தால், உடனடியாக வேறொரு நாட்டுக்கு உங்களை விமானம் மூலம் கூட்டிச் சென்று அங்கு வைத்து விசாரிக்கப்படுவீர்கள் என கிறிஸ் போவ்சன் தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு காலம் நவூருவில் தங்க நேரிடும் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அவர்களது விண்ணப்பங்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்படும் வரை அங்கு தங்கியிருப்பார்கள் என அவர் தெரிவித்தார். நவூருவுக்கு அனுப்பப்படுவோரின் பாதுகாப்பு, மற்றும் சட்ட ஆலோசனைக்கான வழிமுறைகள் குறித்து ஆத்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கிலியன் டிரிக்சு ஆழ்ந்த கரிசனை தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு அங்கு வசதிகள் உள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அவர் தெரிவித்தார். புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாடொன்றுக்கு அனுப்பபடுவார்கள் என ஆத்திரேலிய அரசு அறிவித்த நாளில் இருந்து இதுவரையில் கிட்டத்தட்ட 2100 இற்கும் அதிகமானோர் படகுகள் மூலம் ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் வந்திருக்கின்றனர். பப்புவா நியூ கினியின் மானுசு தீவிலும் தடுப்பு முகாம் ஒன்றை விரைவில் நிறுவுவதற்கு ஆத்திரேலிய அரசு அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட அண்டோனொவ்-28 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இரண்டு குழந்தைகள் உட்பட 12 பயணிகளுடனும், இரண்டு விமானிகளுடனும் கம்சாத்கா பிரதேசத்தின் தலைநகர் பெத்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி நகரில் இருந்து புறப்பட்ட இவ்விமானம் 990 கிமீ தூரத்தில் உள்ள பலானா என்ற கிராமத்தின் விமான இறங்கு துறை ஒன்றில் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் பலானாவில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்படுகையிலேயே விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானத்தின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த நால்வருமே உயிர்தப்பியவர்கள் ஆவர். உயிர் தப்பியவர்களில் ஒருவரான விளாதிமிர் சபால்க்கொவ் கருத்துத் தெரிவிக்கையில், தாம் நால்வரும் விமானம் தரையில் மோதுவதற்குச் சற்று முன்பாக வெளியே வீசப்பட்டதனால் காயங்களுடன் தப்பியதாகத் தெரிவித்தார். இதற்கிடையில், விபத்துக்குள்ளான விமானத்தின் பதிவுப் பெட்டி மீட்புப் பணியாளர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. மரணதண்டனை விதிக்கப்பட்டோர் பலர் அரசியல் கைதிகள் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. காம்பியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் 47 பேரினதும் மரணதண்டனைகளை செப்டம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிறைவேற்றவிருப்பதாக கடந்த மாத இறுதியில் அரசுத்தலைவர் கூறியிருந்தார். இதனை அடுத்து ஒன்பது பேர் ஆகத்து 25 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இந்த ஒன்பது பேரில் இருவர் செனிகல் நாட்டவர்கள் ஆவர். காம்பியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதற் தடவையாகும். 35 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்காலப் பேரவை செனிகல் தலைநகர் டக்காரைத் தளமாகக் கொண்டிருக்கும் என திரு. பாயோ கூறினார். 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இளம் இராணுவ வீரராக இருந்த யாகியா ஜாமி ஆட்சியைக் கைப்பற்றினார். அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து இடம்பெற்ற நான்கு சர்ச்சைக்குரிய பல-கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றார். யாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், மரணதண்டனைகளை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்துள்ளதாக இன்று அரசுத்தலைவர் யாகியா ஜாமி அறிவித்துள்ளார். பல வெளி நாடுகளும், அமைப்புகளும் கேட்டுக் கொண்டதை அடுத்தே இது இடைநிறுத்தப்படுவதாக அரசுத்தலைவரின் அறிக்கை கூறுகிறது. ஆப்கானித்தானத்தில் காவல்துறையினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால் நான்கு நேட்டோ படை வீரர்கள் இன்று கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பதாக சோதனைச்சாவடி ஒன்றில் காவல்துறையினரின் சீருடை அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். இவற்றுடன் இவ்வாண்டு ஆப்கானியப் படையினரால் கொல்லப்பட்ட நேட்டோ படையினரின் எண்ணிக்கை 51 ஆகும். வெள்ளிக்கிழமை அன்று தாலிபான்களின் தாக்குதலில் இரண்டு அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். வேறு நிகழ்வுகளில், சனிக்கிழமை இரவு நிங்கார்கார் மாகாணத்தில் காவல்துறையினர் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் குறைந்தது 20 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், முகமது நபியை கேவலமாகச் சித்தரித்து அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தலைநகர் காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளூர் நேரம் 08:53 மணிக்கு விண்கலம் பாதுகாப்பாக வந்திறங்கியதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க விண்ணோடத் திட்டம் முடக்கப்பட்டதன் பின்னர் விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்குத் தற்போது சோயூஸ் திட்டமே கை கொடுக்கிறது. -90செ வெப்பநிலையில் மிகக் குளிரான காலநிலை நிலவும் இப்பகுதியில் தனது ஆறு மாத நடைப்பயணத்தை அடுத்த ஆண்டு இவர் தொடங்கவிருக்கிறார். 68 அகவையுள்ள சர் ரானுல்பிற்கு இது ஒரு அடுத்த கட்ட உலக சாதனையாக இருக்கும். எற்கனவே பல உலக சாதனைகளை நிகழ்த்தி கின்னசு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். உயிருடன் இருக்கும் தேடலாய்வாளர்களில் இவர் புகழ் படைத்தவர் என கின்னசு குறிப்பிட்டுள்ளது. அண்டார்க்டிக்காவின் பசிபிக் கரைக்குக் கப்பல் மூலம் செல்லும் இவரது குழுவினர் 2013 மார்ச்சு 21 இல் சம இரவு-நாள் வரும் வரை காத்திருந்து தமது நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கின்றனர். சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில், தெற்குக் குளிர்காலத்தில் தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய காப்டன் ஸ்கொட் என்பவர் பயணத்தை முடிக்காமலேயே இறந்து போனார். மெக்சிக்கோவில் அமெரிக்க எல்லைக்கருகில் உள்ள சிறை ஒன்றில் இருந்து 130 இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் சிறையை உடைத்து தப்பியோடினர். தப்பியோடிய கைதிகளைத் தேடி மாபெரும் தேடுதல் வேட்டையை மெக்சிக்கோ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க எல்லைப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோடிய ஒவ்வொரு கைதி பற்றியும் தகவல் தெரிவிப்போருக்கு 200,000 பேசோக்கள் 15,600) வெகுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் அக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 ஆண்டு காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை மஜீத் பெறுகின்றார். இவர் 11,726 விருப்பு வாக்குககளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார். கடந்த சுமார் ஒரு வார காலமாக ஆளும் கூட்டணிக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே நடந்த இழுபறியுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது தேர்வு முடிவானது. முஸ்லிம் காங்கிரஸ் 2012 ஏப்ரலில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. பின்னர் அது அக்கூட்டணியில் இருந்து விலகி ஆளும் கட்சிக் கூட்டணியில் இணைந்து கொண்டது. இதற்கிடையில் மக்கள் கொடுத்த ஆணையையும் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த விடயத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதறித் தள்ளியிருக்கிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், அதனைக்கூட தட்டிக்யொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம் எனக் கூறினார் இரா. சம்பந்தன். [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] உருசியாவின் சைபீரியாப் பிரதேசத்தில் விண்கல் ஆக்குப் பள்ளம் ஒன்றின் அடியில் பலகோடிக்கணக்கான காரட்டு வைரங்களைக் கொண்ட மாபெரும் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உருசிய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வைரங்கள் வழமையான வைரங்களை விட இரண்டு மடங்கு கடினமானவை என்றும் தொழிற்துறையில் பயன்படுத்தக்கூடியவை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் ஒளிர்விண்கல் ஒன்றின் மோதுகையால் உருவான 62 மைல் அகல பொப்பிகை என்ற கிண்ணக்குழியின் அடியில் இந்த வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வைரங்கள் இப்பகுதியில் இருப்பது 1970களில் சோவியத் ஆட்சிக் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இப்போது தான் இதுகுறித்தான தகவல்கள் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன. "பொப்பிகை பள்ளத்தாக்கில் உள்ள இந்த வைரங்கள் உலகில் உள்ள வைர வயல்களை விட பத்து மடங்கு பெரியது என நோவசிபீர்ஸ்க் நிலவியல், மற்றும் கனிமவியல் ஆய்வுக் கழகத் தலைவர் நிக்கொலாய் போக்கிலென்கோ செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார் நாம் திரில்லியன் கணக்கான காரட்டுகளைப் பற்றிக் கூறுகிறோம். எமக்குத் தெரிந்த யாக்கூத்தியாவில் ஒரு பில்லியன் காரட்டுகளே உள்ளன என்றார். உருசிய அரசுக்குச் சொந்தமான அல்ரோசா நிறுவனம் உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்க நிறுவனமாகும். இது கிழக்கு சைபீரியாவில் யாக்கூத்தியா பிரதேசத்தில் ஆர்க்டிக் பெருங்கடல் வரை பரந்துள்ளது. இது செல்லும் பாதையில், 25 செமீ உயரமும், 40 செமீ அகலமும் கொண்ட இருண்ட கற்பாறை ஒன்றையும் அது ஆராயவுள்ளது. இப்பாறையில் எவ்வித அறிவியல் பெறுமதியும் இல்லை என நம்பப்படுகிறது. ஆனாலும், கியூரியோசிட்டி தானியங்கி தனது ஆய்வு உபகரணங்களில் மூன்றை ஒன்றன் பின் ஒன்றாக முதன்முதலாகச் சோதித்துப் பார்ப்பதற்கு இப்பாறையைப் பயன்படுத்தும். கெம்காம் லேசர் மூலம் தூரத்தில் இருந்து இப்பாறையைப் பிளந்து பின்னர் அதனை அண்மித்து தனது கரத்தில் பொருத்தப்பட்டுள்ள வில்லை, மற்றும் எக்சு-கதிர் நிறமாலைமானி மூலம் அப்பாறையில் ஆய்வுகளை நடத்தும். கடந்த புதன்கிழமை நாசா அறிவியலாளர்கள் கியூரியோசிட்டி தரையுளவியின் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். செவ்வாயின் நிலாக்களான போபோசு, டெய்மோசு ஆகியன சூரியனுக்கு முன் சென்ற போது தரையுளவி எடுத்த படங்களையும் அவர்கள் செய்தியாளர்களிடம் காண்பித்தனர். சண்டே லீடர் பத்திரிகை இலங்கை அரசை விமரிசித்து வந்துள்ள நிலையில், இதன் நிருவாகம் இப்போது அரசு சார்பானவர்களிடம் கைமாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய உரிமையாளர் பத்திரிகையின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு தன்னை வலியுறுத்தி வந்ததாக பிரெடெரிக்கா ஜான்சு பிபிசி செய்தியாளரிடம் தெரிவிக்கிறார். இக்கோரிக்கையை மறுத்தமையே தம்மை பணிநீக்கம் செய்யக் காரணம் என அவர் கூறியுள்ளார். மகிந்த ராசபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான அசங்க செனவிரத்தின என்பவரே இந்தப் பத்திரிகையின் பங்குகளில் 72 சதவீதத்தை வாங்கியிருந்தார். இவர் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சிக்கும் கட்டுரைகளையோ அல்லது செய்திகளையோ வெளியிடக்கூடாது என்றும், தான் எழுதும் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டதாக ஜான்ஸ் கூறினார். இந்த உத்தரவை ஏற்க மறுத்ததாலேயே தனக்கு வழங்கப்பட்ட பணி ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை என அவர் கூறினார். கடந்த ஆண்டில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரெடெரிக்கா ஜான்சுக்கு வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணல் குறித்து இராணுவ நீதிமன்றத்தில் பிரெடெரிக்கா சார்ட்சி சொல்ல வேண்டியிருந்தது. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை கொல்லுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக பொன்சேக்கா தனது நேர்காணலில் கூறியிருந்தார். இதை அவர் பின்னர் மறுத்திருந்தார். ஐவரி கோஸ்டின் எல்லைப்புறக் கிராமம் ஒன்றின் இராணுவ நிலைகள் தாக்கப்பட்டுப் பலர் இறந்ததை அடுத்து கானாவுடனான அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளதாக ஐவரி கோஸ்ட் அறிவித்துள்ளது. கானாவின் ஆயுதபாணிகள் நோயி என்ற தமது எல்லைப்புறக் கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக ஐவரி கோஸ்ட் பாதுகாப்பு அமைச்சர் பவுல் கோஃபி கோஃபி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதலில் குறைந்தது ஐந்து ஆயுதபாணிகள் கொல்லப்பட்டதாகவும், ஏனையோர் எல்லையைத் தாண்டி தப்பியோடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஐவர் கைது செய்யப்பட்டனர். மறு அறிவித்தல் வரை 700கிமீ நீள எல்லையும், கடல் மற்றும் ஆகாய எல்லைகளும் மூடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். சோமாலியாவின் புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவர் தலைநகர் மொகதிசுவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆஜி மாலிம் என்பவர் தெற்கு வாபேரி மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இருந்து மாலை நேர தொழுகையை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதக் குழுவே இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு இக்குழு தலைநகரில் இருந்து வெளியேறியது, ஆனாலும், ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வியாழன் அன்று புலம்பெயர் சோமாலியர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 1991 ஆம் ஆண்டில் சியாத் பாரே பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் சோமாலியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளும், துணை இராணுவக் குழுக்களும், அயல் நாடுகளும் சோமாலியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமுகமாக போரிட்டு வருகின்றன. மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் இணைப்பேராலயம் மட்டக்களப்பு மறைமாவட்ட பேராலயமாகவும் அறிவிக்கப்பட்டது. இன்று மிகவும் பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அதிவண. கலாநிதி யோசப் ஸ்பிட்டேரி முன்னிலையில் யோசப் பொன்னையா ஆண்டகை ஆயராக பதவியேற்றார். இந்நிகழ்வில், இலங்கையின் ஏனைய 11 மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள், துறவியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர். ஆரம்பகாலத்தில் இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை ஒரே மறைமாவட்டமாக இந்தியாவின் கொச்சின் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1845ல் கொழும்பு, யாழ்ப்பாணம் என இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கிலங்கைக் கத்தோலிக்க திருச்சபை யாழ்ப்பாண மறைவாட்ட நிர்வாகத்தின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் கத்தோலிக்கரின் பரம்பல் காரணமாகவும் அவர்களது ஆன்மீகத் தேவையின் அதிகரிப்புக் காரணமாகவும் புதிய மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. முன்னாள் சோவியத் குடியரசான பெலருசில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசுத்தலைவர் அலெக்சாண்டர் லூக்கசென்கோவின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். இத்தேர்தல்களை முக்கியமான இரண்டு எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அனைத்து 110 தொகுதிகளிலும் குறைந்தது 50 விழுக்காட்டினர் வாக்களித்ததாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல்கள் நீதியாக நடைபெறவில்லை என லூக்கசென்கோவின் எதிராளிகள் தெரிவித்தனர். 2010 இல் எதிர்க்கட்சிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து லுக்கசென்கோ மற்றும் அவரது அரசு அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. சில சிறுபான்மை எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்ட போதும் அவர்கள் வெற்றி பெறவில்லை. இமயமலையில் பனிச்சரிவு ஒன்று சனிக்கிழமை அன்று மலையேறிகளைத் திடீரெனத் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், பலரைக் காணவில்லை. குறைந்தது ஐந்து மலையேறிகள் உயிருடன் காப்பற்றப்பட்டனர் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இறந்தவர்களில் நால்வரும், காணாமல் போனோரில் மூவரும் பிரெஞ்சு நாட்டவர்கள் ஆவர். 8,156 மீட்டர் உயர மலையில் 7,000 மீட்டர்கள் உயரத்திலேயே பனிச்சரிவு இடம்பெற்றது. உலகின் 14 உயரமான மலைகளில் எவரெஸ்ட் மலை உட்பட 8 மலைகள் இமயமலைகளில் உள்ளன. மனசுலு மலை உலகின் 8வது உயரமான மலையாகும். இதுவே மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மலை எனக் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் பலர் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இக்குன்றுகளில் ஏறுவதற்காக இங்கு வருகின்றனர். கூதிர் கால மலையேறும் பருவ காலம் இம்மாதம் ஆரம்பமானது. இம்முறை அமைச்சரவையில், முதலமைச்சரை விட முசுலிம் காங்கிரசைச் சேர்ந்த இருவர் (எம். ஐ. எம். மன்சூர், செய்னுலாப்தீன் அகமட் நசீர் தேசியக் காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் (எம். எஸ். உதுமான் லெப்பை சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் (விமலவீர திசாநாயக்கா) இடம்பெற்றுள்ளனர். அவை முதல்வர், மற்றும் அவை துணை முதல்வர் பதவிகளும் சுதந்திரக் கட்சிக்கும், முசுலிம் காங்கிரசுக்கும் வழங்கப்பட்டுள்ளன. [[பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012]] விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியை உயிருடன் பிடித்தவரான ஒம்ரான் பென் சாபான் என்பவர் நேற்று பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார். இவர் கடாபியின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார். 22 வயதான சாபானின் உடல் அவரது பிறந்த ஊரான மிஸ்ரட்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது இறுதிக்கிரியைகளில் இன்று பத்தாயியத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சாபான் கடந்த சூலை மாதத்தில் கடத்தப்பட்டு 50 நாட்களாக பானி வாலிது என்ற நகரில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அரசுத்தரப்பின் சமரசப் பேச்சுக்களை அடுத்து கடந்த வாரம் இவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் கடுமையான சித்திரவதைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்கான நிலையின் விடுவிக்கப்பட்ட சாபான் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்று உயிரிழந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 20 இல் கடாபியை அவர் மறைந்திருந்த வடிகால் குழாயில் இருந்து வெளியே இழுத்தெடுத்து வீதியெங்கும் இழுத்துச் சென்றதை அடுத்து சாபான் பிரபலமானார். லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார் அக்டோபர் 20, 2011 சூடான், தெற்கு சூடான் நாடுகளுக்கிடையே எல்லை, மற்றும் எண்ணெய் உற்பத்தி தொடர்பாக உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாக இரு நாட்டுப் பேச்சளர்களும் தெரிவித்துள்ளனர். இதன்படி, தெற்கு சூடானில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் சூடானுக்கூடாக ஏற்றுமதி செய்யப்படும். எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற நான்கு நாட்கள் பேச்சுக்களில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், சர்ச்சைக்குரிய பிரதேசங்கள் தொடர்பாக இன்னும் இழுபறி நிலையே நீடிப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் அபாயம் இருந்து வந்தது. இரு நாடுகளும் தமக்கிடையே உடன்பாட்டுக்கு வராவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் எச்சரித்திருந்தது. சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர், தெற்கு சூடானியத் தலைவர் அசல்வா கீர் ஆகியோருக்கிடையே உடன்பாடு இன்று வியாழக்கிழமை கையெழுத்திடப்படவிருக்கிறது. 2011 சூலையில் தெற்கு சூடான் தனிநாடான போது சூடானின் எண்ணெய் வளப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானுடன் சேர்க்கப்பட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் ஏற்றுமதி தொடர்பான பணிகளை சூடான் பொறுப்பேற்றது. எவரெஸ்டு மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று நேப்பாளத் தலைநகர் காத்மண்டுவின் அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 19 பேரும் கொல்லப்பப்டனர். இறந்தவர்களில் ஏழு பேர் பிரித்தானியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர். சீதா ஏர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இவ்விமானம் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரத்தில் அருகில் உள்ள ஆற்றங்கரை அருகில் வீழ்ந்து தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை இயந்திரங்கள் பொருத்தப்பட்ட டோர்னியர் 228 ரக விமானத்தில் மூன்று நேப்பாள விமானப் பணியாளர்களும், ஏழு பிரித்தானியர்களும், ஐந்து சீனர்களும், ஐந்து நேபாளப் பயணிகளும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை, எனினும் பறவை ஒன்று மோதியிருக்கலாம் என திரிபுவனப் பன்னாட்டு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானப் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. சிறியரக விமானங்கள் நேப்பாள மலைப்பகுதிகளில் விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகும். நேபாள விமான விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு மே 14, 2012 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு செப்டம்பர் 25, 2011 நேபாளத்தில் வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு ஆகத்து 24, 2010 நக்கூலா பசெலி நக்கூலா என்ற 55 அகவையுடைய நபரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டில் வங்கி முறைகேடு வழக்கு ஒன்றில் கைதாகிப் பின்னர் நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டார். நன்னடத்தையை மீறியதாலேயே இவருக்குத் தற்போது பிணை வழங்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். எகிபதைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறித்தவரான நக்கூலா இனசென்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் 14 -நிமிட முன்னோட்டம் ஒன்றைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இக்காணொளி வெளிவந்த பின்னர் இவர் தலைமறைவானார். 2011 இல் இவருக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் கணினிகள் பாவிப்பது, இணையத்தை ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரி ஒருவரின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். "இவர் மீது தற்போது இந்த நீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க மத்திய மாவட்ட உயர் நீதிமன்ற தீதிபதி சூசன் சேகல் தெரிவித்தார். இந்த காணொளி அமெரிக்க விதிகள் எதையும் மீறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காணொளியை யூடியூபில் இருந்து அகற்றுமாறு ஒபாமா நிருவாகம் கூகுள் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க கூகுள் மறுத்து விட்டது. தமது விதிகளை எவ்விதத்திலும் அக்காணொளி மீறவில்லை என அது தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் சிலர், இயக்குனர் தம்மைத் தவறாக வழிநடத்தியதாகத் தெரிவித்துள்ளனர். தாம் திரைப்படத்தில் நடிக்கும் போது அது இசுலாமுக்கு எதிரானதாகவோ, அல்லது நபிக்கு எதிராகவோ இருப்பதாகத் தாம் உணரவில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஈரானிய மக்களின் முஜாகதீன் (Mujahideen-e Khalq, MEK) என்ற இந்த அமைப்பை 1997 ஆம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாகக் கூறி அமெரிக்கா தடை செய்தது. 1970களில் அமெரிக்காவின் ஆதரவில் இயங்கிய ஈரானிய ஷா மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க இந்த அமைப்பு ஆயுதமேந்திப் போராடியது. அத்துடன் ஷா மன்னரை அடுத்து பதவிக்கு வந்த இசுலாமிய மதகுருக்களின் ஆட்சிகளையும் அது எதிர்த்து வந்தது. தற்போது இது அனைத்து ஆயுத வன்முறைகளையும் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்தடை நீக்கத்தை இவ்வமைப்பின் தலைவர் மரியாம் ரஜாவி வரவேற்றுள்ளார். ஈரானிய மக்களின் சனநாயகத்துக்கான போராட்டத்துக்கு முக்கிய தடை நீங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான்னிய முஜாகதீன் அமைப்புக்கு ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் உசைன் ஈராக்கில் புகலிடம் வழங்கியிருந்தார். ஆனாலும், அவருக்குப் பின்னர் வந்த புதிய சியா அரசு இவர்களை வரவேற்கவில்லை. ஈராக்கின் அகதிகள் முகாம் ஒன்றில் இவ்வியக்க உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். பிரித்தானியா இவ்வியக்கத்தின் மீதிருந்த தடையை 2008 ஆம் ஆண்டில் நீக்கியது, அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் 2009 ஆம் ஆண்டில் தடையை நீக்கியது. கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள கிறித்தவக் கோயில் ஒன்றில் ஞாயிறுப் பாடசாலை மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. சோமாலியாவின் அல்-சபாப் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற நெரிசலில் சிக்கியே பல சிறுவர்கள் காயமடைந்தனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இத்தாக்குதலின் பின்னர் அருகில் உள்ள அலாபின் மசூதி சில இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளானது. ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருடன் இணைந்து கென்யாப் படையினர் இவ்வார ஆரம்பத்தில் சோமாலியாவின் கிஸ்மாயோ நகரில் இருந்து அல்-சபாப் போராளிகளை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். ஆப்கானித்தானின் கிழக்குப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அந்நாட்டில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் மொத்த எண்ணிக்கையை 2,000 ஆக்கியது. வார்தாக் மாகாணத்தில் சனிக்கி8ழமை அன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு அமெரிக்க வீரர், மூன்று ஆப்கானியப் படையினர் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு ஆப்கானியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினரா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளதாக நேட்டோ அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில், ஆப்கானித்தானின் கிழக்கே கோஸ்ட் நகரில் இன்று இடம்பெற்ற ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 நேட்டோ படையினர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இறந்த நேட்டோ படையினர் எந்த நாட்டவர் என்பதௌ அறிவிக்கப்படவில்லை எனினும், இப்பகுதியில் அமெரிக்கப் படையினரே நிலை கொண்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நேட்டோ தனது போரிடும் படையினரை 2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் விலக்கிக்கொள்ளப்போவதாக முன்னர் அறிவித்திருந்தது. ஹொங்கொங் கரைக்கப்பால் இரண்டு பயணிகள் படகுகள் நேற்று திங்கள் இரவு நேருக்கு நேர் மோதியதில் ஐந்து சிறுவர்கள் உட்படக் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக படகுகளின் பணியாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகுகளில் ஒன்று வாண வேடிக்கையைப் பார்ப்பதற்காக சென்ற சுமார் 120 பேரை ஏற்றிச் சென்றது. லம்மா தீவுக்கருகில் இது வேறொரு படகுடன் மோதி அரைப்பகுதி மூழ்கிய நிலையில் உள்ளது. பல பயணிகள் மோதலை அடுத்து கடலிற்குள் வீசப்பட்டனர். மோதிய சில நிமிட நேரத்தில் படகு மூழ்கியது. ஹொங்கொங் பவர் கம்பனி மூழ்கிய படகின் உரிமையாளர்கள் ஆவர். இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினருமே விக்டோரியா துறைமுகத்தில் வாண வேடிக்கையைப் பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிர்தப்பியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. சீனாவின் தேசிய தினம் நேற்று அக்டோபர் 1 இல் கொண்டாடப்பட்ட நிலையில், ஹொங்கொங்கின் கடல்வழியில் வழமையை விட போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லம்மா தீவு ஹொங்கொங் தீவின் தென்கிழக்கே 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஜோர்ஜியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தனது கட்சி தோல்வியடைந்து விட்டதாக அரசுத்தலைவர் மிக்கைல் சாக்காஷ்விலி இன்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். கோடீசுவரர் பிஜினா இவானிஷ்விலி தலைமையிலான ஜோர்ஜியக் கனவு என்ற முக்கிய எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் சோவியத் ஆட்சிக்குப் பின்னரான ஜோர்ஜியக் குடியரசில் மக்களாட்சி முறையில் அரசு மாற்றம் முதன் முறையாக இடம்பெறவுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர். 2003 ஆண்டு அரசுத்தலைவராகப் பதவிக்கு வந்த சக்காஷ்விலி அடுத்த ஆண்டு அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறும் வரை தொடர்ந்து பதவியில் இருப்பார். ஆனாலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின் படி, நாடாளுமன்றத்துக்கும், பிரதமருக்கும திக அரசுத்தலைவரை விட அதிக அதிகாரங்கள் வழங்கப்படும். இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, மொத்தமுள்ள 150 தொகுதிகளில் எதிர்க்கட்சி 77 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேற்குலக ஆதரவாளரான சக்காஷ்விலி, புதிய அரசு மாஸ்கோ சார்புக் கொள்கைகளையே முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே சிறிய போர் மூண்டது. தெற்கு சூடானில் இராணுவம் பொது மக்கள் மீது கொலைகள், மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கிழக்கு ஜொங்கிலி மாநிலத்தில் ஆயுதக்க்களைவு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த மனித உரிமை அமைப்பு தெரிவிக்கிறது. இவ்வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தெற்கு சூடானிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது கேட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளை அரசு மறுத்துள்ளது. ஆங்காங்கே ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும், பரவலாக எதுவும் இடம்பெறவில்லை என்றும் அரசுப் பேச்சாளர் ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் கூறினார். துருக்கிய அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் துருக்கிய இராணுவம் சிரிய எல்லையைக் கடந்து அங்கு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு துருக்கிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிரிய எல்லையில் உள்ள துருக்கியக் கிராமம் ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை சிரிய இராணுவத்தினர் குண்டுத் தாக்குதல் மேறொண்டதில் மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அவசர முடிவை துருக்கிய நாடாளுமன்றம் எடுத்துள்ளது. இம்முடிவுக்கு ஆதரவாக 320 வாக்குகளும், எதிராக 129 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டமுன்வரைவு மூலம் ஓராண்டு காலத்துக்கு சிரியாவுக்குள் இராணுவத்தை அனுப்பவும், அல்லது சிரியா மீது வான் தாக்குதல் நடத்தவும் அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்,சிரியா மீது போரை அறிவிக்கும் திட்டம் தம்மிடம் இல்லை என துருக்கிய அரசு அறிவித்துள்ளது. உலகின் ஆற்றல் மிக்க அதிவேகமான தொலைநோக்கிகளில் ஒன்றை ஆத்திரேலியா அமைத்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் விண்மீன்கள் மற்றும் விண்மீன்திரள்களின் பூர்வீகத்தைக் கணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. $155 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொலைநோக்கி இன்று வெள்ளிக்கிழமை முதல் செயல்பட ஆரம்பிக்கும். தற்போதுள்ள தொலைநோக்கிகளை விட மிக வேகமாக இத்தொலைநோக்கி வானை ஆய்வு செய்யும் எனக் கூறப்படுகிறது. கருந்துளைகளை ஆராய்வது இத்தொலைநோக்கியின் ஒரு முக்கிய திட்டமாகும். தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அமையவிருக்கும் சகிஅ (SKA) தொலைநோக்கி உலகின் மிகப்பெரும் தொலைநோக்கியாகவிருக்கும். இன்று சனிக்கிழமை பகல் நேரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாதுகாப்புப் படையினரைச் சுட்டுக் கொன்று விட்டே தாம் தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் ஓடி வரும் போது ஆறு சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் தற்போது தென் கொரியப் பாதுகாப்பில் இருப்பதாகவும், தென் கொரிய அதிகாரிகளினால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக நில மார்க்கமாக எல்லையை தாண்டுவது மிகவும் அபூர்வம் ஆகும். கடைசியாக 2010 ஆம் ஆண்டில் வட கொரிய வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நுழைந்தார். கடந்த 60 ஆண்டுகளில் சீனா, தாய்லாந்து, மங்கோலியா போன்ற நாடுகள் ஊடாக தென் கொரியாவுக்குள் கிட்டத்தட்ட 20,000 வட கொரியர்கள் தென் கொரியாவுக்குள் சென்றுள்ளனர். 1950-53 போரை அடுத்து இரு நாடுகளும் போரின் விளிம்பிலேயே உள்ளன. போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், அமைதி உடன்பாடு எதுவும் நடைமுறையில் இல்லை. காலனித்துவக் காலத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று கென்ய நாட்டவர்கள் ஐக்கிய இராச்சிய அரசிடம் இருந்து முறைப்படி நட்டஈடு கோரலாம் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 1950களில் இடம்பெற்ற மாவு மாவு கிளர்ச்சியின் போது இடம்பெற்ற இந்தச் சித்திரவதைகள் குறித்த முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காலனித்துவ ஆட்சியில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குள்ளானார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சிய அரசு, இதற்குத் தாம் பொறுப்பல்ல என்றும், இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. 1963 ஆம் ஆண்டில் கென்யா விடுதலையான போது காலனித்துவ அரசினால் சித்திரவதைக்குள்ளானோருக்கான அனைவருக்குமான பொறுப்புகளும் புதிய கென்யக் குடியரசுக்கு வழங்கப்பட்டு விட்டதாக ஐக்கிய இராச்சிய அரசு வாதிட்டு வந்துள்ளது. சித்திரவதைக்குள்ளான மூன்று கென்யர்கள், பவுலோ மூக்கா என்சீலி, வம்பூகா வா நிங்கீ, ஜேன் முதோனி மாரா ஆகியோர் "சட்டப்படி ஏற்புக்குரிய வழக்குகளை" தொடுத்துள்ளதாக 2011 ஆம் ஆண்டில் லண்டன் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நான்காவது நபர் இவ்வாண்டு ஆரம்பத்தில் இறந்து போனார். 1952 முதல் 1960 வரையான காலப்பகுதியில் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக கிக்குயு இனத்தவர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் போது 12,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். * கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும். *உங்களுடைய எழுத்துகள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர் *அத்துடன் நீங்களே இதை எழுதியதாகவும் வேறு பொதுக் களத்திலிருந்தோ அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்தோ பிரதி எடுக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறீர்கள் div> பிலிப்ப்பீன் அரசு அந்நாட்டின் மிகப் பெரும் இசுலாமியப் போராளிக் குழுவுடன் அமைதி உடன்பாட்டை எட்டியுள்ளதாக பிலிப்பீனிய அரசுத்தலைவர் பெனினோ அக்கீனோ அறிவித்துள்ளார். 40 ஆண்டுகள் இனப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி (MILF) என்ற போராளிக்குழவுடன் இவ்வுடன்பாடு எட்டப்பட்டது. இது வரை இடம்பெற்ற போரில் 120,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பீன்சு நாட்டில் அதன் தெற்கே முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட புதிய சுயாட்சிப் பிராந்தியம் அமைக்கப்படும். இந்த உடன்பாடு தமக்குத் திருப்தி அளிப்பதாக போராளிகளின் பேச்சாளர் கூறினார். இரு தரப்புக்கும் இடையே மலேசியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு அடுத்த வாரம் பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் சம்பிரதாயபூர்வமாகக் கையெழுத்திடப்படும். புதிய சுயாட்சிப் பிரதேசம் பாங்சமோரோ எனப் பெயரிடப்படும். மோரோ இன மக்கள் அங்கு வாழ்கின்றனர். அரசுத்தலைவர் அக்கீனோவின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு முடிவதற்குள் இவ்வொப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பாடத் தேர்ந்தது. முதல் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களை மட்டுமே அவ்வணி எடுக்கக்கூடியதாக இருந்தது. கிறிஸ் கெயில் 16 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையே எடுத்திருந்தார். ஆனாலும், பின்னர் விளையாடிய மார்லன் சாமுவேல்சு 56 பந்துகளை எதிர்கொண்டு 78 ஓட்டங்களைக் குவித்தார். இவற்றில் ஆறு எல்லைகளும் அடங்கும். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 இலக்குகளை இழந்து 137 ஓட்டங்களை 20 ஓவர்களில் எடுத்தது. அஜந்த மென்டிஸ் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளைக் கைப்பற்றினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை அணி இறுதி ஆட்டம் ஒன்றில் தோல்வியடைவது இது நான்காவது தடவையாகும். 2007, 2011 களில் உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டிகளில் முறையே ஆத்திரேலியா, மற்றும் இந்தியாவிடம் தோற்றது. 2009 இல் இருபது20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாக்கித்தானிடம் தோற்றது. போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்சும், போட்டித் தொடரின் நாயகனாக ஆத்திரேலியாவின் ஷேன் வொட்சனும் தெரிவாயினர். இதற்கிடையில், இலங்கை அணித் தலைவர் மகேல ஜெயவர்தன இலங்கையின் இருபது20 அணிக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நேற்றைய இறுதிப் போட்டிக்குப் பின்னரே மகேல இவ்வாறு அறிவித்தார். நைஜீரியாவின் வட-கிழக்கு நகரான மைதுகுரியில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் சுட்டதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர், வீடுகள் பல தீக்கிரையாக்கப்பட்டன. குண்டுவெடிப்பு ஒன்றில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் தாம் பொதுமக்கள் மீது தாக்குதல் எதையும் நடத்தவில்லை என இராணுவப் பேச்சாளர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். மைதுகுரி நகரம் போக்கோ ஹரம் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமாட்டுரு நகரில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டையில் 30 போராளிகள் வரை கொல்லப்பட்டனர். இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையில் இடம்பெறும் சண்டைகளில் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். 2010 ஆம் ஆண்டு முதல் மத்திய மற்றும் வடக்கு நைஜீரியப் பகுதிகளில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை 1,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் சார்பில், இயற்பியல் துறையின் கருத்தரங்க அறையில் ஊடகங்கள் கட்டமைக்கும் உடல்நலம் என்னும் சிறப்புச்சொற்பொழிவு நேற்று திங்கட்கிழமை நடந்தது. இந்த சிறப்புச்சொற்பொழிவு நிகழ்வை பேராசிரியர்.மா.தமிழ்ப்பரிதி தொடங்கி வைத்தார். ''ஊடகங்கள் கட்டமைக்கும் உடல்நலம் என்னும் தலைப்பில் ஹீலர் அ. உமர் பாரூக் சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார். ஹீலர் அ. உமர் பாரூக் இன்றைய சூழலில், ஊடகங்கள் எவ்வாறு உடல்நலச் செய்திகளை கட்டமைக்கின்றன எனவும் அவற்றை எவ்வாறு பிரித்தரிய வேண்டும் என்றும் விளக்கினார். நிகழ்வின் இறுதியில், மாணவர்களின் ஐயங்களுக்கு ஹீலர் அ. உமர் பாரூக் விடையளித்தார். இந்நிகழ்வை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி ஒருங்கிணைத்தார். நிகழ்வில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் மாணவர்களும், பொதுமக்களும், ஹீலர்களும் கலந்து கொண்டனர். இதற்கான அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தனியான துணிக்கைகள், அவற்றின் இயற்கையான கதிரியக்கப் பொறிமுறை நிலையில் பேணப்பட்டிருக்கையில் அவற்றை அளவிடுதல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அவர்களின் பணிக்காகவே இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் துகள்களைத் தம் சூழலில் இருந்து தனிமைப்படுத்திக் காண்பது அரிது. புற உலகில் இயங்கும் பொழுது இவை தம் தனித்தன்மையான பண்புகளை இழக்கின்றன, எனவே இவற்றின் வியப்பூட்டும் குவாண்டம் பண்புகளை நேரடியாக உளவி (probe) அறிய முடியவில்லை. ஆனால் இவர்களுடைய சிறப்பான ஆய்வின் பயனாய் ஒளியனைப் பிடிபட்ட நிலையில் உள்ள அணுக்களோடு வினையுறவு கொள்ளச் செய்து, பல அடிப்படைப் பண்புகளை அறிய உதவுகின்றது. வருங்காலத்தில் அணுக் கடிகாரத்தைவிட மிக மிகத் துல்லியமான கடிகாரங்கள் அமைக்க முடியும். * வீரகேசரி, அக்டோபர் 10, 2012 பப்புவா நியூ கினியின் மானுசு தீவில் அகதிகளைத் தங்க வைக்க இதன் மூலம் நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அங்கு முதல் தொகுதி அகதிகள் அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மானுஸ் தீவில் இருந்த முகாம் எட்டாண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. தற்போது அதனை மீளப் புனரமைக்கும் வேலைகளை அங்கு நிலைகொண்டுள்ள ஆத்திரேலிய இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். இம்முகாமில் 600 அகதிகள் வரை தங்க வைக்கப்படுவர் என ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். சட்ட விரோதப் படகுகள் தொடர்ந்து ஆத்திரேலியாவுக்குள் தற்போதும் வந்து கொண்டிருந்தாலும், சிலர் தமது நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து மீளச் சென்றுள்ளனர் என கிறிஸ் போவன் கூறினார். ஐரோப்பாவை "போர்க் கண்டம் ஒன்றில் இருந்து அமைதிக் கண்டமாக" மாற்றியமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரிதும் உதவியுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்போது நிகழும் நிதி நெருக்கடி, மற்றும் சமூகக் கொந்தளிப்பு போன்றவை பற்றித் தாம் அறிவோம் என நோபல் குழுவின் தலைவர் கூறினார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரான்சுக்கும் செருமனிக்கும் இடையில் முரண்பாடுகளைத் தவிர்க்க, மற்றும் 1970களில் எசுப்பானியா, போர்த்துகல், கிரேக்கம் ஆகிய நாடுகள் ஆதிக்கவாதிகளின் பிடிகளில் இருந்து விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றிய பங்கை அவர் பாராட்டினார். அமைப்பு ஒன்றுக்குக் கடைசியாக 1999 ஆம் ஆண்டில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புக்கு அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. மாலியின் வடக்குப் பகுதியை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றுவதற்கு ஏதுவாக இராணுவத் தலையீட்டுக்கு வழி ஏற்படுத்தும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை எடுத்துள்ளது. இராணுவத் தலையீடு பற்றிய விரிவான திட்ட அறிக்கை ஒன்றை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புப் பேரவை ஆப்பிரிக்க அமைப்புகளிடம் இருந்து கேட்டுள்ளது. விரிவான திட்டம் இல்லாமல் இராணுவத் தலையீட்டை அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் இதுவரையில் கூறி வந்துள்ளது. விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மவுரித்தேனியா நாட்டின் அரசுத்தலைவர் முகமது அப்தெல் அசீசு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசுத்தலைவரை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி மீது தலைநகர் நவாக்சோட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசுத்தலைவருக்கு கையில் காயமேற்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்பத்தில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து அரசுத்தலைவர் தப்பித்ததாக அரசுப் பேச்சாளர் தெரிவித்திருந்தாலும், பின்னர் ரோந்து சென்ற இராணுவத்தினரே தவறுதலாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். இராணுவத்தினர் அந்தத் தொடரணி அரசுத்தலைவருக்குரியது எனபதை அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்த முகமது அசீசு 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். மாரடைப்புக் காரணமாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையொன்றில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த பல ஆண்டுகளாக இவர் சுகவீனமுற்று இருந்தார். 1941 ஆம் ஆண்டில் மன்னராக முடிசூடிக் கொண்ட நொரடோம் சிகானுக், 1953 ஆம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து கம்போடியா விடுதலை அடைவதற்கு பெரும் பங்காற்றியிருந்தார். பல ஆண்டு காலம் நாடு கடந்த நிலையில் வாழ்ந்தவர். 2004 ஆம் ஆண்டில் சுகவீனம் காரணமாக முடி துறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மகன் நொரடோம் சிகாமொனி மன்னரானார். சிகானூக் 1922 ஆம் ஆண்டில் அரசர் நொரடோம் சுராமரித், அரசி கொசாமக் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சாய்கோன் பிரெஞ்சுப் பாடசாலைகள், பின்னர் பாரிசிலும் கல்வி கற்றார். அப்போதைய பிரான்சின் நாட்சி அரசினால் 18வது அகவையில் கம்போடியாவின் மன்னராக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததை அடுத்து பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடினார். இரத்தம் எதுவும் சிந்தாமலேயே நூறாண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் பின்னர் 1953 இல் விடுதலை கிடைத்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து லொன் நொல் கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை அடுத்து சிகானூக் சீனாவில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார். வியட்நாமியப் படையினர் கெமர் ரூச் ஆட்சியாளரைத் தோற்கடித்ததை அடுத்து சிகானூக் மீண்டும் சீனா சென்றார். கம்போடியா உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட அந்தப் 13 ஆண்டு காலம் சிகானூக் சீனாவில் தங்கியிருந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், வியட்நாம் படைகள் 1991 இல் கம்போடியாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து சிகானூக் 1993 இல் நாடு திரும்பி மீண்டும் அரசராக முடி சூடிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில் தனது மகன்களில் ஒருவரான நொரடோம் சிகாமணியை மன்னராக அறிவித்து விட்டு, சிகானூக் சீனா சென்றார். விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. அக்டோபர் 1917 போல்செவிக் புரட்சியின் சின்னமாக இருந்த அவுரோரா கப்பலில் இருந்து உருசியக் கடற்படையினர் கடைசித் தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியேறினர். இக்கப்பல் இப்போது பொதுத்துறையைச் சேர்ந்த மாலுமிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாக படைத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1917 அக்டோபர் புரட்சியில் இக்கப்பல் மிக முக்கிய பங்கு வகித்தது. போல்செவிக் தொழிலாளர்களும் படையினரும் சார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலுக்கு முன்னோடியாக அவுரோரா கப்பல் வெற்றுக் குண்டை வீசித் தாக்குதலை ஆரம்பித்தது. அதன் பின்னர் கம்யூனிசவாதிகள் சென் பீட்டர்சுபர்க் நகரையும், பின்னர் தலைநகரையும் கைப்பற்றினர். 1944 ஆம் ஆண்டில் இக்கப்பல் பெத்ரோவ்ஸ்க்கி கரையில் நங்கூரமிட்டு, மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அன்று முதல் இது மத்திய கடற்படை அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இக்கப்பல் உருசியக் கடற்படைக்கு மீள வழங்கப்பட்டு, இதனைத் தொழிற்படுத்த ஊழியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனாலும், இம்முடிவு பல அரசியல்வாதிகளாலும், பொது மக்களாலும் பலத்த எதிர்ப்புக்குள்ளானது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள் அல்பா செண்டாரி பி விண்மீனுக்குக் கிட்டவாகக் காணப்படுகிறது. இது சிலியில் அமைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தெற்கு வானாய்வகத்தில் அமைந்துள்ள ஆர்ப்சு தொலைநோக்கியூடாக அவதானிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்கள் செல்லவுள்ளதை ஒட்டி நிலையத்தின் சுற்றுப்பாதை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்டதாக உருசியாவின் விண்வெளி நிலையத் திட்டப் பணிப்பகம் அறிவித்துள்ளது. உருசியாவின் சுவெஸ்தா சேவைக் கலம் இந்த மாற்றத்தை தனது அமுக்கிகள் மூலம் செயற்படுத்தியுள்ளது. அக்டோபர் 25 இல் சொயூசு டிஎம்ஏ-06எம் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு வசதியாகவே சுற்றுப்பாதை உயரம் மாற்றப்பட்டுள்ளது. சோயுசு விண்கலத்தில் உருசிய வீரர்கள் அலேக் நொவீத்ஸ்கி, யெவ்கேனி தாரெக்கின், மற்றும் நாசாவைச் சேர்ந்த கெவின் ஃபோர்ட் ஆகியோர் செல்லவுள்ளனர். தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் சுனித்தா வில்லியம்சு, உருசியாவின் யூரி மாலென்சின்கோ, யப்பானின் அக்கிகிக்கோ ஓசிடே ஆகியோருடன் இந்த மூவரும் இணைவர். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் அடுத்த இரண்டாண்டுகளுக்கு உறுப்பினராக இருப்பதற்கு ருவாண்டா தேர்ந்தெடுக்கப்பட்டது. தனது அயல் நாடான கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இடம்பெற்று வரும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு ருவாண்டா உதவியளித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் இந்தத் தெரிவு இடம்பெற்றிருக்கிறது. ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் கொங்கோவின் எம்23 போராளிக் குழுக்களுக்கு நேரடியாக உத்தரவு வழங்கி வருவதாக ஐநாவின் அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. 15-உறுப்பினர்கள் அடங்கிய பாதுகாப்பு அவைக்கான ஐந்து நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ருவாண்டாவைத் தவிர அர்ஜெண்டீனா, ஆத்திரேலியா, தென் கொரியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ருவாண்டாவின் தெரிவுக்கு கொங்கோ எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், ருவாண்டாவுக்கு ஆதரவாக 148 வாக்குகள் கிடைத்தன. தற்போது தென்னாப்பிரிக்காவிடம் உள்ள பாதுகாப்பு அவை உறுப்புரிமை சனவரி 1 இல் ருவாண்டாவுக்குக் கிடைக்கும். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அந்நாட்டுன் புலனாய்வுத்துறைத் தலைவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர், 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்குண்டுவெடிப்புக்கு சிரியா தலைவர் பசார் அல-அசாடே பொறுப்பு என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு உடனடியாகப் பதவி துறக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சாட் அரீரி கேட்டுக் கொண்டுள்ளார். இத்தாக்குதலுக்கு எதிராக பெய்ரூட் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கிறித்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அசுராஃபியா மாவட்டத்திலேயே இத்தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலில் புலனாய்வுத்துறைத் தலைவர் வாசிம் அல்-அசன் கொல்லப்பட்டார். இவர் அரீரியின் நெருங்கிய சகா எனக் கூறப்படுகிறது. அரீரி சிரியாவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். அரீரியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஃபிக் அரீரி 2005 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டமையில் சிரியாவின் பங்கு பற்றி வாசிம் அல்-அசன் அண்மையில் புலனாய்வில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் லெபனானில் சிரிய ஆதரவுடன் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி முன்னாள் அமைச்சர் ஒருவரை இவர் கைது செய்திருந்தார். லெபனானின் மதக் குழுக்களில் ஒரு பிரிவினர், குறிப்பாக சியா முசுலிம்கள் சிரிய அதிபர் அல்-அசாட்டின் ஆதரவாளர்கள். ஏனையோர், குறிப்பாக சுணி இசுலாமியர்கள், சிரியாவில் தாக்குதலை நடத்திவரும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தில் இடம்பெற்ற கிளர்ச்சியில் பங்கு கொண்ட 723 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. ஊதியம், மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணங்களுக்காக இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து கிட்டத்தட்ட 6,000 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர். இக்கிளர்ச்சியில் 74 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 735 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் இருவர் சிறையிலேயே இறந்து விட்டனர், மேலும் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 723 பேரில் 64 இராணுவ வீரர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 86 பேருக்கு எதிராகத் தனியான விசாரணைகள் இடம்பெறும் எனவும், இவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இராணுவ விசாரணை மன்றத்தைக் கடுமையாக விமரிசித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், கைது செய்யப்பட்ட பலர் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டதை அடுத்து இறந்துள்ளதாகக் குற்றம் சாட்டியது. இதனை மறுத்துள்ள இராணுவ வட்டாரம், சிறையில் மாரடைப்பு, மற்றும் இயற்கைக் காரணங்களுக்காகவே இறந்தனர் எனத் தெரிவித்துள்ளது. தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற எல்லைக்காவல் படையினரின் கிளர்ச்சி 33 மணி நேரம் நீடித்தது. ஏனைய பிரதேசங்களிலும் கிளர்ச்சி பரவியது. இறந்தவர்களில் 57 பேர் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஆவர். மேற்காப்பிரிக்க நாடான கினி-பிசாவுவில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். நேற்று அதிகாலை தலைநகர் பிசாவுவுக்கு வெளியே இடம்பெற்ற தாக்குதலை முறியடித்த இராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் ஆறு போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டில் தற்போது நிலவிவரும் உறுதியின்மை அதனைப் போதைப்பொருள் கடத்தும் முக்கிய இடமாக மாற்றியுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் இருந்து கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள் கினி-பிசாவு ஊடாக ஐரோப்பாவுக்குக் கடத்தப்படுகின்றன. இராணுவத்தினரின் உயர் அதிகாரிகள் சிலரும் இக்கடத்தலில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அங்கு அரசியலமைப்பு ஆட்சியை ஏற்படுத்துமாறு அந்நாட்டின் ஆட்சியாளரை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை அண்மையில் கோரியிருந்தது. 1974 ஆம் ஆண்டில் போர்த்துகலிடம் இருந்து விடுதலை அடைந்தது முதல் அங்கு அடிக்கடி இராணுவப் புரட்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு தலைவரும் இங்கு தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஆட்சி நடத்தவில்லை. புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஆத்திரேலியாவுக்கு வெளியே வைத்துப் பரிசீலிக்க ஆத்திரேலிய நடுவண் அரசு அணமையில் முடிவெடுத்திருந்தது. அங்கு அனுப்பப்படுள்ள பெரும்பாலானோர் கிறித்துமசுத் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். டார்வினில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். நேற்றுப் பிற்பகல் கிறித்துமசுத் தீவின் தெற்கே மேலும் ஒரு தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் தரை வந்திறங்கினர். இவர்கள் தற்காலிகமாக அங்கு தங்க வைக்கப்பட்டு, பின்னர் நவூருவிற்கு அனுப்பப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், நவூரு தடுப்பு முகாமிற்கு அனுப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது அவலத்தைக் காண அங்கு நேரடியாக வரும்படி பன்னாட்டு ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தங்களுக்கு அவசரமாக உதவுமாறு சுமார் 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர். இவர்களில் பலர் இலங்கையர் ஆவர். இவர்கள் அனைவரும் தற்காலிகக் குடில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 40 பாகை செல்சியசு வெப்பம் நிலவுவதோடு அடிப்படை வசதிகள் குறைவாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐந்து பேர் வரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜிகாட் போராளிகள் பலர் மாலியின் வடக்குப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர் என காவோ நகரத்தின் முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். 60 முதல் 100 வரையான அல்ஜீரியர்கள், மற்றும் சாராவிகள் (மேற்கு சகாரா) கடந்த ஐந்து நாட்களுக்குள் வடக்கு மாலிக்குள் வந்திருப்பதாக சடூ டியாலோ கூறினார். மேலும் 150 இற்கும் அதிகமான சூடானியப் போராளிகளும் சென்ற வார இறுதியில் மாலியின் திம்பக்து நகருக்குள் வந்திறங்கியுள்ளனர் என உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார். காவோ நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மேற்காப்பிரிக்க ஜிகாட் என்ற அமைப்பினர் உள்ளூர் குரான் பாடசாலைகளில் இருந்து 200 மாணவர்களைத் தமது படைகளில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 300 முதல் 400 டாலர்கள் வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்தின் மின் தேவைகள் அணு, அனல் மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு, நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல் எனப் பல வழிகளில் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கணிசமான அளவு பயன் அளிக்கின்றன. மாநிலத்தின் மொத்த மின் தேவையின் கணிசமான அளவு நீர் மின் நிலையங்கள் வாயிலாகவே உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், பருவ மழை பொய்த்ததால் நீர் மின் உற்பத்தியும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. மேலும் கடும் வெப்பத்தால் மின் விசிறிகள் மற்றும் குளிராக்கிகளின் பயன்பாடும் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் வட கிழக்குப் பருவ மழையின் காரணமாக மின் தேவை மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது. தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் கனமழை பெய்ததால், விவசாயிகள் மின் மோட்டார்களை இயக்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்; குளிர்ந்த தட்பவெப்ப நிலையால் மின் விசிறி மற்றும் குளிராக்கிகளின் பயன்பாடுகளும் பெரிய அளவில் குறைந்துள்ளன. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் ஓடுவதால் நீர் மின் உற்பத்தியும் திருப்திகரமாக உயர்ந்து உள்ளது. எனினும் இது போன்ற எதிர்பாராத ஒரு வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குறியே. மழை இனியும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களும் முழு உற்பத்தித் திறனை எட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதுவும் ஒரு எதிர்பாராத தற்காலிகத் தீர்வு மட்டுமே என்பதையும் அரசு முழுமையாக உணர்ந்து நிலையான மின் உற்பத்தித் திட்டங்களை முடுக்கி விடுவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். சூடான்பின் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் மீது இசுரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சூடான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் காயமடைந்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தலைநகர் கார்ட்டூமின் தெற்கே யார்மூக் என்ற இடத்தில் உள்ள இராணுவ ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் ம்கீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. "இதற்கான பதில் தாக்குதல் நகழ்த்தும் நேரததையும் இடத்தையும் நாம் தீர்மானிப்போம் என சூடானின் தகவல்துறை அமைச்சர் அகமது உஸ்மான் செய்தியாளர்களிடம் கூறினார். நான்கு விமானங்கள் இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இசுரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், சூடான் "ஒரு மிகவும் பயங்கரவாத நாடு" எனக் கூறினார். ஆனாலும் இத்தாக்குதலில் இசுரேல் சம்பந்தப்பட்டுள்ளதா என வினவிய போது அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார். சூடானுக்கூடாகவே காசாக் கரைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக இசுரேல் நம்புகிறது என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஈரானிய ஆயுதங்களை சூடான் காசாக் கரைக்கு இரகசியமாக வழங்கி வருவதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அரசுத் திணைக்களத்தில் இருந்து வெஅலியிடப்பட்ட செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2011 ஏப்ரலில் சூடான் துறைமுகத்திற்கு அருகில் வாகனம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலையும் இசுரேலே நடத்தியதாக சூடான் குற்றம் சாட்டியிருந்தது. விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் காலத்துக் கல்லறைகளுள் மிகப் பழமையானதெனக் கருதப்படும் கல்லரை ஒன்று குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு ஆட்சியாளர் அல்லது ஒரு மதத் தலைவர் ஒருவரின் கல்லறை ஒன்று ரெத்தல்ஹூலு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லறையில் உள்ள கரிம-கால அளவையின் படி இது கிமு 700 முதல் கிமு 400 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என முகுவெல் ஒரேகோ என்பவர் தெரிவித்தார். பச்சை மாணிக்கக்கற்களைக் கொண்ட நகைகள், மற்றும் கழுகின் தலை போன்ற உருவம் பொறித்த கழுத்தணி ஒன்றும் அங்கு இருக்கக் காணப்பட்டன. எலும்புகள் எதுவும் அங்கு இருக்கவில்லை. அவை காலப்போக்கில் சிதைவுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கழுகின் தலை வடிவம் அது ஒரு ஆட்சியாளனின் கல்லறை எனபதைக் குறிக்கிறது. இக்கல்லறைக்குரியவனுக்கு கூத்சு சிமான் (K'utz Chman) என தொல்லியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். மாயன் மொழியில் இது பாட்டன் கழுகு ஆகும். கிமு 400களில் ஓல்மெக் இராச்சியத்தின் ஆதிக்கம் குறையத் தொடங்கி, பதிலாக மாயன் நாகரீகம் பரவத் தொடங்கியது. கிபி 250 முதல் 800 வரை நடு அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்தனர். மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது சூலை 18, 2012 பர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ராக்கைன் வாழ் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா முசுலிம்களுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் இனக்கலவரங்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அங்கு இரவு நேரத்தில் கலவரங்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகம் செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி எண்ணூறுக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பர்மாவில் அண்மைய இனக்கலவரங்களால் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளதை பர்மிய அரசுத்தலைவர் தெயின் செயின் ஒப்புக்கொண்டுள்ளார் ரான்கைன் மாநிலத்தில் பல கிராமங்கள், நகரங்கள் பகுதியாகவோ முற்றாகவோ அழிக்கப்பட்டுள்ளன தெயின் செயினின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். அண்மைய இனக்கலவரம் எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல முஸ்லிம்கள் எல்லையைக் கடந்து வங்காளதேசத்துக்குள் நுழையக் காத்திருப்பதாக வங்காளதேச அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு பர்மாவில் வாழும் ரோகிஞ்சா முசுலிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என பர்மிய அரசு கருதுகிறது. பர்மாவில் இவர்கள் குடியுரிமை அற்றவர்கள். இவர்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை இனக்குழு என்று ஐநா கருதுகிறது. சுனாமி அலையின் முதல் தாக்கம் அவாய் தீவுகளில் நேற்றிரவு உள்ளூர் நேரம் 22:30 மணிக்கு (08:30ஜிஎம்டி) ஏற்பட்டுள்ளது. அவாயில் 1,500 மைல்களுக்குள் நூற்றுக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. 3 முதல் 6 அடிகள் வரை அலைகள் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லித்துவேனியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் அந்திரியசு குபீலியசின் அரசு தோல்வியுறும் நிலையில் உள்ளது. 141 இடங்கள் உள்ள நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி, சமூக சனநாயகவாதிகள், மற்றும் வலதுசாரி நீதி இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து 78 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சி 32 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. சமூக சனநாயகக் கட்சியின் தலைவர் அல்கிர்டாசு புட்கேவிச்சசு லித்துவேனியாவின் அடுத்த தலைவராகப் பதவியேற்பார் என தொழிற்கட்சித் தலைவரும், உருசியாவில் பிறந்த கோடீசுவரருமான விக்டர் உஸ்பாஸ்கிச் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் யூரோ வலயத்தினுள் இணைதல், மிகக்குறைந்த ஊதியத் தொகையை அதிகப்படுத்தல், அதிக வருமானம் உள்ளோரிடம் அதிக வரி அறவிடுதல் போன்றவை எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாகும். சாண்டி என அழைக்கப்படும் மாபெரும் சூறாவளி ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையைத் தாக்கியதில், அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு, மற்றும் மின்தடை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க் நகரினுள் வரலாறு காணாத அளவு கடல்நீர் உட்புகுந்துள்ளது. பேருந்து, மற்றும் சாலைப் போக்குவரத்துப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. கீழ் மான்கட்டன் பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அரசுத்தலைவர் ஒபாமா நியூயோர்க் மாநிலத்தை "முக்கிய அழிவாக" அறிவித்துள்ளார். ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள் சூறாவளி சாண்டியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்களை தமது இருப்பிடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் குறைந்தது ஐந்து மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கையில் தமது தேர்தல் பிரசாரங்களை பராக் ஒபாமாவும், குடியரசு வேட்பாளர் மிட் ரொம்னியும் இடைநிறுத்தியுள்ளனர். நியூ ஜெர்சி மாநிலத்தின் அட்லாண்டா நகரில் சூறாவளி சாண்டி உள்ளூர் நேரம் 8 மணியளவில் தரைதட்டியது. 130 கிமீ/மணி வேகத்தில் காற்று வீசியது. அட்லாண்டா நகரத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. 'நிலம்' என்று அழைக்கப்படும் வெப்பவலயப் புயல் இலங்கையின் பல பகுதிகளைத் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 4,000 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். இப்புயல் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இன்று புதன்கிழமை இரவு இந்தியாவில் தரை தட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என முன்னர் கருதப்பட்டிருந்தாலும், இப்புயல் தற்போது தமிழ்நாட்ட நோக்கி நகர்வதால் இங்கு பெரும் அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமையகம் தெரிவித்துள்ளது. மக்களை வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. 100 கிமீ/மணி வேகத்தில் நிலம் புயல் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டக் கரையோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையின் வன்னியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 6,497 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் புயல் கரையைக் கடந்தது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன், பெருமழையும் பெய்தது. மரங்கள் பல சாய்ந்தன, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டன. ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடர்ந்து இயங்கி வருகின்றது. புயல் தாக்குவதற்கு முன்னரேயே ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கப்பல் கரை ஒதுங்கியது அக்டோபர் 31, 2012 இலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு அக்டோபர் 31, 2012 மூழ்கிய கப்பலில் இருந்து பதினைந்து மாலுமிகள் இன்று வியாழக்கிழமை காலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. மும்பாயைச் சேர்ந்த பிரதீபா கப்பல் கம்பனிக்கு இக்கப்பல் சொந்தமானது. இலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு அக்டோபர் 31, 2012 நிலம் புயல் சென்னையை அடைந்தது நவம்பர் 1, 2012 இலங்கை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி மோசடி மற்றும் தொழில்சார் ஊழல்களில் ஈடுபட்டதாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவாக்கச் சபைக்கும் நீதித்துறைக்கும் இடையில் காணப்படக்கூடிய சமநிலைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரதம நீதியரசர் தனது பதவியைப் பயன்படுத்தியமையே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் கொண்டுவரக் காரணியாய் அமைந்தது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரத்தின் உள்ளடக்கம் குறித்து புலன் விசாரணை நடாத்துவதை ஊடகவியலளர்கள் நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். இந்தப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையின் அனுமதி கிடைத்துள்ளது. அரசியலமைப்பின் 107ம் சரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் அல்லது உச்ச நீதிமன்ற நீதவான் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க முன்னர் நாடாளுமன்றின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். இதன்படி, குறைந்தபட்சம் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தேவை என்ற போதிலும், 117 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒரு நிதியை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான திவிநெகும என்ற சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை தாமதப்படுத்திய சிராணி பண்டாரநாயக்கவின் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கத்தை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தது. சில வாரங்களின் பின்னர், அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்வதாகக் கருத்துக் கூறிய மற்றுமொரு மூத்த நீதிபதி கைத்துப்பாக்கி முனையில் மிரட்டப்படார். இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்சவின் அதிகரித்துவரும் அதிகாரங்கள், சட்டத்தின் ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதாக பல பன்னாட்டு உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன. இதேவேளையில், இலங்கையில் நீதி நிருவாகத் துறையில் அரசாங்கத்தின் தலையீடு நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. ஜே.ஆர். ஜயவர்தன முன்னர் அரசுத்தலைவராக இருந்த போது பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிரகாவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராகவும் அப்போதைய சபாநாயகர்களிடம் நம்பிக்கையில்லா பிரேரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் சீக்கிய மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை இனப்படுகொலைகளாக அறிவிக்க ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்தை நேற்று வியாழக்கிழமை தாராண்மைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாரன் என்செட்ச் என்பவர் அவையில் சமர்ப்பித்தார். இவ்வன்முறை சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை' எனக் குறிப்பிடப்படுவது சீக்கிய சமூகத்துக்கு இது முடிவுறாத பிரச்சினையாக இருக்கும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளார். இவ்விண்ணப்பத்தில் 4,453 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அத்துடன் 1984 வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது "தகுந்த நடவடிக்கை" எடுக்க இந்தியாவை ஆத்திரேலிய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ரித்சர் நகரில் உள்ள பொற்கோயிலில் மறைந்திருந்த காலிஸ்தான் தனிநாட்டுக்காக போராடி வந்த சீக்கியப் போராளிகளை அங்கிருந்து அகற்றுவதற்காக பொற்கோயில் மீது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். நைஜீரியாவின் மைதுகிரி மாகாணத்தில் 40 இற்கும் அதிகமான இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என உள்ளூர்ச் செய்திகளை ஆதாரம் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தான் வசிக்கும் வீதியில், தனது நான்கு மகன்கள் உட்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மலாம் அஜி முஸ்தபா என்ற இமாம் ஒருவர் செய்தியாளருக்குத் தெரிவித்தார். மைதுகிரியின் இராணுவப் பேச்சாளர் இது பற்றித் தமக்கு எதுவும் தெரியாதெனக் கூறியிருந்தார். ஆனாலும் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். வியாழக்கிழமை அவரும் அவரது மகன்களையும் இராணுவத்தினர் கைது செய்து திறந்த வெளி ஒன்றுக்குக் கூட்டிச் சென்றனர் என்றும் அங்கே ஏற்கனவே மேலும் பலர் கூடியிருந்ததாகவும் தெரிவித்தார். அங்கு வைத்து பலர் அடையாளம் காணப்பட்டு வேறுபடுத்தப்பட்டதாகவும், தனக்கு முன்னாலேயே தனது பிள்ளைகளையும், மேலும் பலரையும் சுட்டுக் கொன்றதாகவும் அவர் தெரிவித்தார் இறந்த உடல்களை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் தனது மகன்களின் உடல்களைப் பொறுப்பெடுக்க மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கு 48 உடல்களைக் கண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இசுலாமியப் போராளிகள் மீது தாக்குதலைத் தொடங்கியிருக்கும் நைஜீரிய இராணுவத்தினர் சட்டவிரோதப் படுகொலைகளை நடத்தியுள்ளதாக அண்மையில் பன்னாட்டு மன்னிப்பகம் குற்றம் சாட்டியிருந்தது. நைஜீரியா முழுவதும் இசுலாமிய சரியா சட்டத்தை அமுல் படுத்தக்கோரிப் போராடும் போக்கோ ஹராம் போராளிகள் அமைப்பு மைதுகிரி பிராந்தியத்தில் பலமான நிலையில் உள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் நைஜீரியாவின் வடக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இக்குழுவினரின் தாக்குதல்களில் இறந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை அன்று இளைப்பாறிய இராணுவ ஜெனரல் முகமது சுவா என்பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 1960களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பியாபிரான் தீவிரவாதிகளை அடக்கியவர். இவரது கொலைக்கு போக்கோ ஹராம் தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது. விரைவாக அசையும் விண்மீன்களைக் கொண்ட ஓரியன் விண்முகில் படலத்தை பன்னாட்டு வானியலாளர் குழுவொன்று ஆராய்ந்துள்ளது. இக்குழுவினரின் ஆய்வு முடிவுகள் முடிவுகள் வானியற்பியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஓரியன் விண்முகில் கூட்டத்தில் குறைந்த திணிவுள்ள விண்மீன்களை விட அதிக பருமனையுடைய விண்மீன்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. முழுக் கூட்டமும் வெவ்வேறாகப் பிரிந்து செல்வதான தோற்றப்பாடுடன், இவை அதிக வேகத்துடன் அசைகின்றன. “வானியலாளர்களுக்கு இந்த இயல்பு ஒரு புதிராகும்,” என ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல்கர் பவும்கார்ட் கூறுகிறார். இந்த விண்மீன்களின் அசைவைக் கணிக்கும் போது, விண்மீனிடை வளிப்படலம் வெளிப்பக்கமாகச் செல்லும் போது விண்முகில் கூட்டம் விரிவடைவது அவதானிக்கப்பட்டது. பல பருமனான விண்மீன்கள் வெளியேறிச் செல்ல, சில விண்மீன்கள் முகில் கூட்டத்தின் நடுப்பகுதியை நோக்கிச் செல்கின்றன. இதன் போது மத்தியில் உள்ள மிகப் பருமனான விண்மீனுடன் அவை மோதுகைக்கு உள்ளாகின்றன. “விண்முகில் கூட்டத்தின் நடுப்பகுதிக்குக் கிட்டவாக உள்ள பெரும் விண்மீன்கள் கருந்துளை ஒன்றில் அடங்குகிறது,” என இவ்வாய்வுக்குழுவின் தலைவர் செக் குடியரசைச் சேர்ந்த லாடிசுலாவ் சூபர் தெரிவித்தார். மிகப் பருமனான விண்மீன் நிலையற்றதாக வரும் போது அது கருந்துளையாக மாறுகின்றது. “எமக்குக் கிட்டவாக வெறுமனே 1,300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இவ்வாறானதொரு பெரும் கருந்துளை இருப்பது இந்தப் புதிரான பொருட்களை ஆராய நமக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகும்,” என அவர் கூறினார். பக்ரைனில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பக்ரைன் தலைநகர் மனாமாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மொத்தம் ஐந்து குண்டுவெடிப்புகள் இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளன. குதாய்பியா என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்தபோது அருகில் இருந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் திரைப்பட மாளிகை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இறந்தவர்கள் இருவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. ஆத்லியா என்ற இடத்தில் இடம்பெற்ற மேலுமொரு குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். இன்று வெடித்த குண்டுகள் அனைத்தும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட சிறியரகக் குண்டுகள் எனக் கூறப்படுகிறது. சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்படும் பொருட்கள் எதனையும் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பு வழமைக்குத் திரும்பும் வரை நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக சென்ற வாரம் பக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்ததை அடுத்தே வன்முறைகள் ஆரம்பித்ததாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி சட்டமூலத்தின் சில பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் மேலும் சில விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 47 பிரிவுகளில் 16 இலங்கைக் குடியரசின் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு முரணாக அமைந்திருப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திவிநெகும சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், குறைந்த வருமானம் பெறும் 18 இலட்சம் பேரின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே திவிநெகுமவின் இலக்காகுமெனத் தெரிவித்தார். அமெரிக்காவின் முதலாவது கருப்பின அரசுத்தலைவர் அதிபராவதற்குத் தேவையான 270 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றார். அதிபர் ஒபாமா சிக்காகோவில் தனது ஆதரவாளர்களின் முன்னிலையில் உரையாற்றுகையில், நமது நாட்டை முன்னே கொண்டு செல்வதற்கு எவ்வாறு சேர்ந்து உழைப்பது என்பதைத் தாம் மிட் ராம்னியுடன் விரைவில் பேசுவேன் எனக் குறிப்பிட்டார். ஒபாமாவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்த போதிலும் அவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒபாமாவின் சனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அமெரிக்க மேலவையில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றனர். அதே வேளையில் கீழவையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர். புளோரிடா மாநிலத்தில் 29 இடங்களில் இன்னும் முடிவுகள் வெளிவராத நிலையில், ஒபாமா 303 தேர்தல் வாக்குகளையும், ராம்னி 206 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவற்றின் மக்கள்தொகைக்கேற்ப குறிப்பிட்ட தொகையான தேர்தல் வாக்குகள் தரப்பட்டுள்ளன. குறைந்தது 270 வாக்குகள் பெற்றவர் அரசுத்தலைவராக அறிவிக்கப்படுவார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தலில், பராக் ஒபாமா கொலராடோ, ஐயோவா, பென்சில்வேனியா, மிச்சிகன், மினசோட்டா, வர்ஜீனியா, விஸ்கான்சின் போன்ற முக்கிய மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். வேறும் சில முடிவுகள்: மெயின், மேரிலாந்து, வாசிங்டன் டிசி ஆகிய மாநிலங்களில் இடம்பெற்ற மக்கள் பொது வாக்கெடுப்புகளில் ஓரினத் திருமணங்களுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர். கலிபோர்னியாவில் மரணதண்டனையை இரத்துச் செய்ய வேண்டி இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். புவெர்ட்டோ ரிக்கோ மக்கள் தமது நாட்டை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைப்பதற்கு பெரும்பான்மையினர் வாக்களித்துள்ளனர். நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரம் 10:35 மணிக்கு சாம்பெரிக்கோ நகரில் இருந்து 23 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவுகள் காரணமாக பல பாதைகள் நிலத்தில் மூழ்கியுள்ளன. மெக்சிக்கோவின் சான் சல்வடோர் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பல கட்டடங்கள் அதிர்ந்தன. 73,000 பேருக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் பல நில அதிர்வுகள் அங்கு இடம்பெற்றுள்ளன. சான் மார்கோசு நகரமே பெரிது பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 30 இற்கும் அதிகமான கட்டடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. சான் கிறிஸோபல் கூச்சோ என்ற நகரத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். கானாவின் தலைநகர் ஆக்ராவில் பல்லடுக்கு வணிக வளாகம் ஒன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து இடிபாடுகளில் இருந்து இது வரையில் 78 பேர் வெளியே இழுத்து எடுக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் இறந்த நிலையிலும், 69 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே அகப்பட்டுள்ளனர் எனவும் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த வணிக வளாகம் இடிந்து வீழ்ந்ததற்கு கட்டுமானத்தில் இடம்பெற்ற பெரும் தவறுகளே காரணம் எனக் கூறப்படுகிறது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் பிரபலமான வெலிக்கடைச் சிறைச் சாலையில் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர் என கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சிறைச்சாலைக்குள் தேடுதல் நடத்தச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினருக்கும் மரண தண்டனைக் கைதிகளுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையே பின்னர் மோதலாக வெடித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். மோதலை அடக்க சுமார் 2,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். பொரளை சந்தி முதல் தெமட்டகொடை சந்தி வரையான பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பியோட முயன்றதாகவும் அவர்கள் மீது துப்பாக்கிப் பொரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கலவரத்தின் போது சிறப்பு அதிரடிப்படையின் தளபதி ஒருவர் படுகாயம் அடைந்தார். பல கைதிகள் துப்பாக்கிகள் சகிதம் சிறைக் கூரையின் மீது காணப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் சிறைச்சாலையின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெலிக்கடை சிறையில் சுமார் 4,000 சிறைக்கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு முன்னரும் பல தடவைகள் மோதல்கள் வெடித்துள்ளன. கடந்த சனவரி மாதத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 25 கைதிகளும், நான்கு காவலர்களும் காயமடைந்தனர். 2010 ஆம் ஆண்டில் கைதிகளிடம் இருந்து மொபைல் தொலைபேசிகளைக் கைப்பற்றச் சென்ற காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 50 பேர் காயமடைந்தனர். 1983 ஆம் ஆண்டில் தமிழருக்கு எதிராக நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரங்களின் போது வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் சக சிங்கள கைதிகளால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பர்மாவின் மத்திய பகுதியை பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். சுவெபோ நகரில் புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. அதில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து கட்டடப் பணியாளர்களைக் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். தங்கச் சுரங்கம் ஒன்றும் சேதத்துக்குள்ளாகியதில் அதில் அகப்பட்டு சிலர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தின் பாங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாலியின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து மாலியின் வடக்குப் பகுதியை இசுலாமியக் குழுக்களும், துவாரெக் போராளிகளும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மாலி மீதான இராணுவத் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் ஒப்புதல் அளித்தவுடன் எக்கோவாஸ் படையினர் அங்கு அனுப்பப்படுவர் என ஐவரி கோஸ்ட் தலைவர் அலசானி ஒட்டாரா நைஜீரியத் தலைநகரில் வைத்து அறிவித்தார். நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் ஐநா பாதுகாப்புச் சபை இத்திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பயிற்சி, மற்றும் முகாம்கள் அமைத்தல் போன்ற ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் உட்பட இத்திட்டத்தை ஆறு மாதங்களில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இசுலாமியப் போராளிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான இசுலாமிய சரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐநா குற்றம் சாட்டியிருந்தது. ஒபாமா வெல்வது அறிந்த விடயம்தான்.அமெரிக்காவின் மேலாதிக்க குணத்தை அவர் தனது ஆட்சிக்காலத்தில் அருமையாக கொண்டுவந்துள்ளார்.பொருளாதாரத்தில் கோட்டை விட்டாலும் கூட, வரலாற்றுச் சிறப்பு மிக்க மச்சு பிக்ச்சு நகரில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்கத் தொல்லியலாளரால் எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா பெருவிடம் மீள ஒப்படைத்துள்ளது. 35,000 இற்கும் அதிகமான கடைசித் தொகுதி தொல்பொருட்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து விமானம் மூலம் பெருவின் குஸ்க்கோ நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் இராம் பிங்கம் என்பவர் மச்சு பிக்ச்சுவை அதிகாரபூர்வமாகக் கண்டுபிடித்ததன் பின்னர் அவர் அங்கிருந்த பல தொல்பொருட்களை கடனாகப் பெற்றுச் சென்றிருந்தார் என பெரு கூறி வந்தது. இராம் பிங்கின் கண்டுபிடிப்பை அடுத்தே மச்சு பிக்ச்சு நகரம் உலகப் புகழ் பெற்றது. அமெரிக்க தொல்லியலாளர் பிங்கம் மட்பாண்டங்கள், மனித எச்சங்கள், மற்றும் உலோகத் துண்டுகள் உட்பட 46,000 தொல்பொருட்களை அங்கிருந்து எடுத்துச் சென்றார். கடந்த ஆண்டு முதல் இரண்டு தொகுதி பொருட்களை யேல் பல்கலைக்கழகம் திரும்ப ஒப்படைத்திருந்தது. மீள ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் இருந்து சிறந்த தொல்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு குஸ்கோ நகரில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். மச்சு பிச்சு கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம். பொதுவாக "இன்காக்களின் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று வருகின்றனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் சிலர் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் உண்ணாநிலைப் போராட்டமே இதற்கு சான்றாகும் என அவர் கூறினார். அங்குள்ள வாழ்க்கை நிலை, மற்றும் தடுத்து வைக்கப்படும் கால எல்லை போன்றவற்றுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆத்திரேலியா தனது தமது எல்லைக்கப்பால் வைத்து அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் திட்டத்தை ஆத்திரேலியா கடந்த செப்டம்பர் மாதத்தில் மீள அமுல்படுத்தியிருந்தது. இத்திட்டத்தின் படி, சட்டவிரோதமாக ஆத்திரேலியாவுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகள் தற்போது நவூருவில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இன்னும் சில வாரங்களில் பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவிற்கும் அனுப்பப்படுவர். ஆத்திரேலியாவின் ஏபிசி வானொலிக்கு நவி பிள்ளை அளித்த நேர்காணலில் அடைக்கலம் கோருவோரின் உரிமைகளை ஆத்திரேலியா மதிக்க வேண்டும் எனக் கூறினார் மிக நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு இது ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டுக்கும் என நான் அஞ்சுகிறேன் என்றார் அடைக்கலம் கோருவோரைத் தடுத்து வைப்பது கடைசி வழிமுறையாகவே இருக்க வேண்டும், அது முதலாவதாக இருக்கக் கூடாது". நவூருவில் 300 பேர் வரையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். பன்னாட்டு மன்னிப்பகத்தின் அதிகாரிகள் அடுத்த வாரம் நவூருவுக்கு வர இருக்கிறார்கள் என்ற செய்தியை அடுத்து பலர் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவூருவில் தற்போது 370 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கை, மற்றும் ஆப்கானித்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களிலேயே தங்கியுள்ளனர். ஐரோப்பியக் குடியேறிகள் மற்றும் விமானம் மூலம் வரும் அகதிகள் நேரடியாக ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் கடல்வழி மூலம் வருபவர்கள் மட்டுமே தடுப்பு முகாம்களில் வைக்கப்படுகின்றனர். இது இரட்டை நியாயம் என நவி பிள்ளை ஆத்திரேலிய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 18வது தேசிய மாநாடு நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று இடம்பெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மத்தியக் குழுவின் முதல் முழு அமர்வில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீ ச்சின்பிங் தோன்றி உரையாற்றினார். உலகத்தைச் சீனா மேலும் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில், சீனாவை உலகம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில், சீனாவுக்கும் உலகத்துக்குமிடையிலான புரிந்துணர்வை அதிகரிப்பதற்குச் செய்தியாளர்கள் பங்காற்ற வேண்டுமென செய்தியாளர்களைச் சந்தித்த போது சீ சின்பிங் தெரிவித்தார். சீ சின்பிங், லீ கெச்சியங், சாங் தெஜியங், யூ ச்சங்சங், லியூ யுன்சென், வாங் சிசென், சாங் காவ்லி ஆகியோர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் சீ சின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சங்காய் நகர முன்னாள் கட்சித் தலைவரான சீ சின்பிங் (அகவை 59) 2007 ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். கடந்த புதன்கிழமை முதல் பாலத்தீனம் மீது இசுரேல் நடத்திய வான் தாக்குதல்கள் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் என காசா அமைச்சர் அஷ்ரப் அல்-கீத்ரா தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பெயிட் அனூன் நகரில் வாகனம் ஒன்றின் மீது இசுரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதில் 10, 14, 16 வயது பாலத்தீனியச் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். காசாவின் ஆளும் அமாசு அமைப்பின் இராணுவப் பிரிவான இசதின் அல் கசாம் படையின் தளபதி அகமது அல்-சபரி என்பவர் புதன்கிழமை அன்று இசுரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்தே அங்கு இரு தரப்பு மோதல் வலுவடைந்துள்ளது. இத்தாக்குதல் குறித்து இசுரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது. நேற்றிரவு மட்டும் இசுரேல் காசா மீது 130 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு அமாசு போராளிகள் 11 ஏவுகணைத் தாக்குதல்களை இசுரேல் மீது நடத்தியுள்ளனர். அமாசு போராளிகளின் தாக்குதலில் தெற்கு இசுரேலில் மூன்று இசுரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், காசா-இசுரேல் மோதலை அடுத்து காசாவுக்கு அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள எகிப்தியப் பிரதமர் இசாம் காண்டில், இசுரேலின் கண்மூடித்தனமான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது மூன்று மணி நேரக் குறுகிய பயணத்தில் அவர் பாலத்தீனிய அரசியல்வாதிகளைச் சந்தித்து உரையாடினார். இசுரேலியத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் குரல் கொடுத்தார். இவரது முசுலிம் சகோதரத்துவக் கட்சி எகிப்தின் ஆளும் கட்சியாக உள்ளது. இது அமாஸ் இயக்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புகலிடத் தமிழர் அமைப்புகள், அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் இலங்கையில் முழுமையான, சுதந்திரம் உள்ள, அனைத்துலக விசாரணையை மீண்டும் கோரி உள்ளார்கள். 86 வயதுடைய பால் தாக்கரே வரைகலை நிபுணராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். வெளிமாநிலங்களில் இருந்து வந்து மகாராட்டிர மாநிலத்தில் குடியேறியவர்கள், மராட்டியர்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறிய தாக்கரே, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி, 1966 ஆம் ஆண்டில் சிவசேனா கட்சியைத் துவக்கினார். குறிப்பாகத் தமிழர்கள் சிவசேனைக் கட்சியின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் மும்பையின் வல்லமை மிக்க அரசியல்வாதியாக விளங்கிய இவர் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. பால் தாக்கரேயின் மறைவுக்கு முக்கிய தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கிறது. இதனை ஒட்டி, மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தின் மத்திய பகுதியில் பள்ளிப் பேருந்து ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதியதில் நான்கு முதல் ஆறு வயதுடைய பள்ளி மாணவர்கள் 50 பேரும் பேருந்து ஓட்டுனரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தலைநகர் கெய்ரோவில் இருந்து 350 கிமீ தூரத்தில் மன்பாலுட் நகரிலேயே நேற்று சனிக்கிழமை இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று எகிப்தின் போக்குவரத்துறை அமைச்சர் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்துள்ளார். ரெயில்வே ஆணையாளரும் தனது பதவியைத் துறந்துள்ளார். திறந்திருந்த தொடருந்துக் கடவை ஒன்றை குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து கடந்ததில் இவ்விபத்து ஏற்பட்டது. தொடருந்துக் கடவையை இயக்கும் நபர் தூக்கத்தில் இருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. விபத்தில் சிக்கிய பேருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் தொடருந்துடன் இழுபட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்தில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 8,000 பேர் வரையில் போக்குவரத்து விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் பராக் ஒபாமா பர்மாவுக்கான வரலாற்றுப் புகழ் மிக்க தனது பயணத்தை இன்று ஆரம்பித்தார். பதவியில் இருக்கும் ஒரு அமஎரிக்கத் தலைவர் பர்மாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். பர்மியத் தலைவர் திரின் செயினைச் சந்திப்பதற்காக ஒபாமா சென்ற போது வழியெங்கும் மக்கள் கூடி அவரை வரவேற்றனர். பலர் அமெரிக்கக் கொடிகளை அசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஒபாமா ஆங் சான் சூச்சி அம்மையாரையும் சந்தித்தார். பின்னர் ரங்கூன் பல்கலைக்கழகத்தில் உரியாற்றினார். 2010 நவம்பரில் இராணுவ ஆட்சி முடிவடைந்ததை அடுத்து தலைவர் தெயின் செய்னினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே ஒபாமாவின் இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். ஆறு மணி நேரம் மட்டுமே பர்மாவில் தங்கியிருக்கிறார் அதிபர் பராக் ஒபாமா. இங்கு தங்கியிருக்கும் குறுகிய நேரத்தில் அவர் அரசுத்தலைவர்கள் பலரை அவர் சந்திக்க விருக்கிறார். பர்மாவுக்கு அமெரிக்கா வழங்கவிருக்கும் $170 மில்லியன் நிதி உதவி பற்றியும் அவர் அறிவிப்பார். அமெரிக்கத் தலைவருடனான சந்திப்பை அடுத்து பர்மியத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் மியன்மாரில் சனநாயகம் மலரவும், அங்கு மனித உரிமைகள் சரவதேசத் தரத்தில் இருக்கவும் இரு தரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன என்றார். பர்மாவின் வரலாற்றுப் புகழ் மிக்க சுவேதகோன் பௌத்த கோயிலையும் அவர் பார்வையிட்டார். பர்மாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பராக் ஒபாமா கம்போடியாவில் இடம்ம்பெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதியில் கோமோ என்ற முக்கியமான நகரினுள் போராளிகள் பலர் நுழைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நகரின் விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எம்23 என்ற போராளிகள் குழு அறிவித்துள்ளனர், ஆனாலும் ஐக்கிய நாடுகள் அமைப் படையினர் இத்தகவலை மறுத்துள்ளனர். கொங்கோ போர் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னர் நடந்த போரில் சுமார் அந்து மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். போராளிகளுக்கு ஆயுத உதவி வழங்குவதாக எல்லை நாடான ருவாண்டா மீது உலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ருவாண்டா இதனை மறுத்து வருகிறது. கோமா விமான நிலையத்தில் இருந்து அரசு படைகள் பின்வாங்கியிருந்தாலும், ஐநா அமைதிப் படையினர் அங்கு தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோமா நகரில் இருந்து அரசுப் படையினரை வெளியேற போராளிகள் 24 மணி நேர அவகாசத்தை போராளிகள் நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தனர். அரசு அதனை நிராகரித்திருந்தது. போராளிக் குழுக்களுடன் தாம் பேச்சுவார்த்தைகளில் இறங்கப் போவதில்லை என்றும், ருவாண்டாவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை, மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 19 பேர் இன்று அதிகால சிறப்பு விமானம் மூலம் பப்புவா நியூ கினியில் வந்திறங்கினர். மானுஸ் தீவில் புதிதாக அமைகக்ப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு வரும் முதல் தொகுதியினர் இவர்களாவர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பன்னாட்டு மன்னிப்பகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று நவூரு தீவுக்குச் சென்று அங்குள்ள முகாம்களின் நிலைமைகளை அவதானித்தது. இக்குழுவின் அறிக்கை இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கித்தானியரான கசாப் (வயது 25) தனக்குக் கருணை காட்டுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தும், அவரது கோரிக்கை இம்மாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 0730 மணிக்கு புனே சிறைச்சாலையில் இவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தூக்குத்தண்டனை நிறைவேறியது குறித்து கசாப்பின் உறவினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆயினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நேரம் இடம் என்பன மிகுந்த இரகசியமாகப் பேணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2008 நவம்பர் 26 ஆரம்பமான 60-மணிநேர மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தொடருந்து நிலையம், ஆடம்பர விடுதிகள், மற்றும் யூதக் கலாசார நிலையம் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2010 மே மாதத்தில் கசாப் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆகத்து மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மரணதண்டனை அறிவிக்கப்பட்டது. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டதும் புனேயின் யெரவாதா சிறைக்கு முன்னால் மக்கள் கூடி ஆரவாரித்தனர். பலர் தேசப்பற்றுப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதேவேளை கசாப்பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை பற்றிய செய்தி பாக்கிஸ்தான் அரசிற்கு அறிவிக்கப்பட்டதாக மகாராஸ்டிராவின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டில் அறிவித்துள்ளார். அத்துடன் கசாப் மரணத்திற்கு முன்னர் எந்தவொரு இறுதி ஆசையையும் வெளிப்படுத்தவில்லை என்று பட்டில் தெரிவித்தார். பாக்கித்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கார்-இ-தாயிபா இயக்கம் "கசாப் ஒரு மாவீரன்" என அறிவித்துள்ளது. பாக்கித்தான் தாலிபான் இயக்கம் தூக்குத்தண்டனை நிறைவேற்றம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதற்தடவையாகும். கல்கத்தாவில் பள்ளிச்சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக 2004 ஆம் ஆண்டில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். 2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி பெப்ரவரி 22, 2011 2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு வெள்ளி, மே 7, 2010 மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு செவ்வாய், மே 4, 2010 உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து காசாவில் நேற்று புதன்கிழமை இரவு பொதுமக்கள் கொடிகளை அசைத்து ஆரவாரித்து மகிழ்ந்தனர். காசாவில் இருந்து மூன்று ராக்கெட்டுகள் இசுரேலை நோக்கி ஏவப்பட்டதாக இசுரேலிய வானொலி தெரிவித்துள்ளது. ஆனாலும் இசுரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அது தெரிவித்தது. எகிப்தின் மத்தியத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டை இரு தரப்பும் மதித்து நடக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. நாடுகடந்த நிலையில் வாழும் அமாசின் அரசியல் தலைவர் காலிது மெசால் கருத்துத் தெரிவிக்கையில், இசுரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது, அமாசின் முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். காசாவுக்கு வரும் பாதைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்றார் காலிது மெசால். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அமாசு இயக்கத்தினர் முதற்தடவையாக டெல் அவீவ், மற்றும் எருசலேம் நகர்களைத் தாக்கக் கூடிய நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. நேற்றைய தினம், டெல் அவீவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் பலர் காயமடைந்தனர். மன்னிப்பகத்தின் பிரதிநிதிகள் மூன்று நாட்கள் நவூருவில் தங்கியிருந்து அங்குள்ள முகாம்களின் நிலைமைகளை நேரில் அவதானித்து தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இம்முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தற்போது 386 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கூடாரங்கள் மிகவும் சூடாகவும், ஈரமாகவும் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலம் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அகதிகள் பலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர். 16 ஆண்கள் அல்லது 5 ஆண்கள் தங்கக்கூடிய மற்றும் 150மீ x 100மீ கூடாரங்களில் மிக நெருக்கமாகத் தூக்குப் படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடுப்புகள் வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஸ்டிக்குப் பெட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்பகம் கண்டுள்ளது. 40 பாகை வெப்பநிலையில் மிகக்கடுமையான சூடு அங்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஏதோ பயங்கரக் குற்றவாளிகளைப் போல எம்மை நடத்துகிறார்கள். ஆத்திரேலியாவில் பயங்கரக் குற்றவாளிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறார்கள் என முகாமில் தங்கியுள்ள அகதி ஒருவர் கூறினார். ஒன்பது ஆண்கள் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதற்குப் பதிலளித்துள்ள ஆத்திரேலிய அரசுப் பேச்சாளர் ஒருவர், உணவு, மற்றும் நீர் தாராளமாக வழங்கப்படுகின்றன என்றும் தேவையான நேரத்தில், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். பொழுதுபோக்கு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளனர் என்றார். இவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பரிசீலிக்கப்படும் என்றார். நவூருவில் தங்கியிருப்போரில் பெரும்பான்மையானோர் இலங்கை, மற்றும் ஆப்கானித்தான் அகதிகள் ஆவர். 50,000 மக்களைக் காவு கொண்ட 1991-2002 உள்நாட்டுப் போரை அடுத்து அங்கு இடம்பெற்றுள்ள மூன்றாவது தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் அமைதியாகவும், முறைகேடுகள் எதுவும் இன்றி நடைபெற்றதாக பன்னாட்டுக் கண்காணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற, மற்றும் உள்ளூராட்ட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நாட்டின் இராணுவம் ஒரு காலத்தில் கட்டுப்பாடற்ற நிலையில் பெருமளவு கிளர்ச்சியாளர்களிக் கொண்டு இயங்கி வந்தது. தற்போது இது ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சியேரா லியோனியின் இராணுவ வீரர்கள் உலகின் பல பாகங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணிபுரிகின்றனர். ஐ .நா வா அப்படின்னா அது என்ன உலக மக்களை காப்பாற்ற உருவாகக்கப்பட்ட அமைப்பா உலக மக்கள் எல்லோரும் சமம் என்று உருவக்கக்க்பட்ட அமைப்பா அப்படியானால் "வீட்டோ பவர் எதற்கு சில நாடுகளுக்கு மட்டும் சரி, இப்பொழுதுதான் தெரிந்து விட்டதே இலங்கை போர் குற்றம் செய்துள்ளது எ ன்று ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே போரிலே அதற்கும் தான் பங்கு இருக்கிறதே பிறகு எப்படி நாம் அரசியல் வாதிகளை நம்பிக்கொண்டு இருப்பது போல்தான் ஐ நா அரசியலுக்கு அப்பாற்பட்டதா என்னா நாமும் இந்த மண்ணில் பாவப்பட்ட ஜென்மன்கலாக வாழவேண்டியதான் நம்மையும் கொல்லாமல் இருக்கும் வரை நம் உலக அரசியல் வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று சனிக்கிழமை இரவு டாக்காவின் புறநகர்ப் பகுதியான அசுலியாவில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றியது. தீயில் இருந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே குதித்த சிலரும் உயிரிழந்தனர். கட்டடத்தின் கீழ்மாடியில் முதலில் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தீக்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மின்னொழுக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தொழிற்சாலையில் அவசர வெளியேற்றப் பகுதி அமைக்கப்பட்டிருக்கவில்லை என தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்காளதேசத்தில் ஏறத்தாழ 4,500 ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 80 விழுக்காடு ஆகும். ஆடைத் தொழிற்சாலைகளில் தீப்பற்றுவது அடிக்கடி இடம்பெறும் நிகழ்வுகள் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2010 டிசம்பரில் இதே பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைத் தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் தலைநகர் ஆபுஜாவில் காவல்துறைத் தலைமையம் ஒன்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போக்கோ ஹராம் இசுலாமியத் தீவிரவாதிகள் பலர் இக்கட்டடத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். தடுப்புக் காவலில் உள்ள சிலர் வெளியேறியுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டடத்தைச் சுற்றி பல அரசு செயலகங்கள் உள்ளதால் இப்பகுதிக்கு வழக்கமாக உயர்மட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. இத்தாக்குதலுக்கு எந்தக் குழுவு இதுவரை பொறுப்பேற்காவிடினும், போக்கோ ஹராம் போராளிகளே இதனை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. நைஜீரியாவில் இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வர இக்குழு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி வருகிறது. இவ்வாண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். கடூனா மாநிலத்தில் இராணுவ நிலைகளுக்குள்ளே அமைந்திருந்த கிறித்தவக் கோயில் ஒன்றில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2004ம் ஆண்டு பிரான்சின் இராணுவ மருத்துவமனை ஒன்றில் தனது 75வது வயதில் உயிரிழந்த யாசிர் அரபாத்தின் உடைமைகளில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வல்லுனர் குழுவொன்று அண்மையில் பொலொனியம் -210 என்ற கதிரியக்கம் இருப்பது கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து மேலதிக விசாரணைக்கு பிரான்சு உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை ஏதும் மேற்கொள்ளப்படாது அப்படியே அவரது உடல் புதைக்கப்பட்டது. எனினும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியார் சுகா அரபாத் சர்ச்சை எழுப்பியிருந்தார். இசுரேலே அரபாத்தை நஞ்சூட்டிக் கொன்றிருக்கலாம் என பெரும்பாலான பாலத்தீனர்கள் நம்புகின்றனர். ஆனால் இசுரேல் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருக்கிறது. இவரது உடல் பகுதிகள் சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு, மற்றும் உருசிய வல்லுனர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இவர்கள் இவற்றைத் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்று பரிசோதிப்பார்கள். அரபாத்தின் உடல் மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் உள்ள நினைவாலயம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் தோண்டியெடுக்கப்படவிருப்பதை முன்னிட்டு இந்த நினைவாலயம் பார்வையாளர்களுக்கு கடந்த மாதம் மூடப்பட்டது. இவரது உடல் இன்று தோண்டியெடுக்கப்பட்டௌ அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலத்தீனிய மருத்துவர்களால் உடல் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு மீண்டும் நினைவாலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல் பரிசோதனைகளின் முடிவுகள் தெரிய பல மாதங்கள் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 35 ஆண்டு காலம் பாலத்தீன விடுதலை இயக்கத்தைக் கொண்டு நடத்திய யாசிர் அரபாத் 1996 ஆம் ஆண்டில் பாலத்தீன அதிகாரசபையின் முதலாவது தலைவரானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவர்கள் இன்று படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த மோதல் நிலையை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 06:05 மணிக்கு வீடுகள், மற்றும் கோயில்களில் தீபங்கள் ஏற்றியும், மணியோசை எழுப்பியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தனர். பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நேற்று மாலை புகுந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் மாணவர்களைத் தாக்க முயற்சித்ததில் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் நேற்று உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வன்னிப் பகுதியிலும் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது. முறையான கையளிப்பு வைபவம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. கடந்த வார இறுதியில் உகாண்டாவில் அவசர அவசரமாகக் கூடிய ஆப்பிரிக்கப் பிராந்தியத் தலைவர்கள், போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் அனைவரும் கோமா நகரை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தில் இருந்து எம்23 என்ற கிளர்ச்சிக் குழுவினர் வெளியேறி இராணுவத்தினருக்கு எதிராகப் போர் தொடுத்ததை அடுத்து, நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து 500,000 பேர் வரை இடம்பெயர்ந்தனர். எம்23 போராளிகளைத் தாம் ஆதரிப்பதாக வந்த செய்திகளை உகாண்டாவும், ருவாண்டாவும் மறுத்து வருகின்றன. எம்23 குழுவினரின் அரசியல் பிரிவினர் கோமா நகரில் தொடர்ந்து தங்கியிருப்பர் என்றும் வதந்திகள் உலாவுகின்றன. இசுரேலுடனான "இரு-நாட்டுத் தீர்வைப் பெறுவதற்கு இதுவே கடைசிச் சந்தர்ப்பமாகும்" என பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் தெரிவித்தார். ஆனால், அமைதிப் பேச்சுக்கல் இதன் மூலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது என ஐநாவுக்கான இசுரேல் தூதர் தெரிவித்தார். பாலத்தீனம் பார்வையாளர் தகுதியைப் பெற்றுக் கொண்டதை அடுத்து அந்நாடு ஐக்கிய நாடுகளின் விவாதங்களிலும், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஐநா அமைப்புகளிலும் பங்கேற்க முடியும். பாலத்தீனத்துக்கு ஆதரவாக 138 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன. ஆத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், செருமனி உட்பட 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. செக் குடியரசு, கனடா, மார்சல் தீவுகள், பனாமா போன்றவை எதிர்த்து வாக்களித்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நூற்றுக் கணக்கான பாலத்தீனர்கள் மேற்குக் கரையின் ரமல்லா நகரின் வீதிகளில் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 1967 ஆம் ஆண்டில் இசுரேலினால் கைப்பற்றப்பட்ட மேற்குக் கரை, காசா, கிழக்கு எருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாலத்தீன நாட்டுக்கு ஐக்கிய நாடுகளில் உறுப்புரிமையை பாலத்தீனியர்கள் கோரி வருகின்றனர். புதன் கோளில் இருந்து வெளிவரும் நியூத்திரன்களை அளக்கக்கூடிய "நியூத்திரன் நிறமாலைமானி" ஒன்று மெசஞ்சர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிறமாலைமானியின் மூலமே நீர்ப் பனிக்கட்டிகளின் இருப்பு பற்றி அறியப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கருக்கலைப்புக்குப் புதிய சட்டமூலம் இயற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்ய இடமளிக்க 80 வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அயர்லாந்தில் சவிதா என்ற இந்தியப் பல் மருத்துவர் ஒருவர் கருச்சிதைவினால் கடந்த மாதம் இறந்ததை அடுத்து நாடெங்கும் இந்தக் கருத்துக் கணிப்பு இடம்பெற்றது. கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படாததாலேயே இப்பெண் இறந்ததாக அவரின் உறவினர் தெரிவித்தனர். கருக்கலைப்புக்குப் புதிய சட்டங்களைக் கொண்டுவர ஐரிய அரசு தீர்மானித்துள்ளது. இது பற்றிய அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருக்கிறது. ஆனாலும் புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கும் அதிகமான காலம் தேவைப்படும் எனத் தெரிகிறது. கருக்கலைப்புக்கு ஆதரவானோர் அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சவிதாவின் இறப்பு இந்தச் சட்டமூலத்தின் அவசரத் தேவையை வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகும். ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 4,000 ஐரியப் பெண்கள் கருக்கலைப்புக்காக இங்கிலாந்து, மற்றும் வேல்சுக்குச் செல்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் இலங்கைப் படைத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த் (கந்தர்மடம் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜனமேஜயன் (புதுக்குடியிருப்பு விஞ்ஞானப் பிரிவு மாணவர் சொலமன் (யாழ் மருத்துவப் பிரிவு சுதர்சன் (உரும்பிராய்) ஆகியோரே இவ்வாறு யாழில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்கள் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சிறீடெலோ கட்சி அலுவலகம் மீது குண்டு வீசித் தாக்கியமை, புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியமை ஆகியன இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆகும். இக்கைதுகளை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது வகுப்புகளைக் காலவரையறையின்றி ஒன்றியொதுக்கல் செய்து வருகின்றனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி, சிரேட்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் புஸ்பரட்ணம், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் உட்பட்டோர் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி மற்றும் பிற பல தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒர் எதிர்ப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை அன்று ஒழுங்கு செய்துள்ளது. "சீனாவின் இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது, தென்சீனக் கடல் பிரதேசத்தின் முழுப் பகுதிக்கும் சீனா இவ்வாறு உரிமை கோருவது அனைத்து நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல் என பிலிப்பீன்சின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின் இந்தப் புதிய சட்டம், சீனாவின் கைனான் மாகாணத்து எல்லைக் காவல் படையினர் வெளிநாட்டுக் கப்பல்களை வழிமறிக்க, உட்புகுந்து சோதனையிட, பறிமுதல் செய்ய, மற்றும் வெளியேற்ற வழி செய்கிறது. இதற்கிடையில் எண்ணெய் வளம் அதிகம் காணப்படும் இப்பிரதேசத்தில் 2015 ஆம் ஆண்டுக்குள் ஆண்டொன்றுக்கு 15 பில்லியன் கனமீட்டர் இயற்கை வாயுவை அகழ்ந்தெடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாடு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் இப்பிரதேசத்தில் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை வளைகுடாப் பகுதியின் வான் பரப்பில் தாம் கைப்பற்றியிருப்பதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையைத் தாம் ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் ஸ்கேன்ஈகிள் என்ற சிறிய ரக விமானத்தைத் தாம் வீழ்த்தியிருப்பதாக ஈரானின் புரட்சிப் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஆளில்லா விமானம் பல உளவுப் பயணங்களை மேற்கொண்டிருந்ததாக ஈரானிய இராணுவத்தைச் சேர்ந்த அலி பதாவி கூறியுள்ளார். இவ்வகையான விமானங்கள் பெரும் போர்க்கப்பல்களில் இருந்தே ஏவப்படுகின்றன என அவர் தெரிவித்தார். ஸ்கேன்ஈகிள் என்ற இவ்விமானத்தின் இறக்கைகளுக்கிடத் தூரம் 10 அடிகள் (3 மீ) மட்டுமே. போயிங் நிறுவனத்தின் இன்சிட்டு (Insitu) என்ற உபரி நிறுவனம் இந்த குறைந்த செலவிலான, நீண்ட காலம் பாவிக்கக்கூடிய விமானங்களைத் தயாரித்து வருகிறது. கடந்த மாதம் தனது உளவு விமானம் ஒன்றைப் பன்னாட்டு வான்பரப்பில் ஈரானியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாகக் குற்ரம் சாட்டியிருந்தது. ஆனால், இவ்விமானம் தமது வான்பரப்பினுள் நுழைந்ததாக ஈரான் கூறியிருந்தது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள "காந்த நெடுஞ்சாலை magnetic highway) சூரியன்சூழ் வான்மண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள வான்வெளியையும் இணைக்கிறது என இயற்பியலாளர் ஸ்தமோத்தியோசு கிரிமிகிசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் அமெரிக்கப் புவியியற்பியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். "இதன் படி பார்த்தால் விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்கிறது என்பதாகக் கூறிவிடலாம்" என ஸ்தமோத்தியோசு கிரிமிகிசு கூறினார். அதே வேளையில் நாம் எதிர்பார்த்தவாறு காந்தப் புலத்தின் செறிவு அதிகரித்த போதும், அதன் திசையில் மாற்றம் ஏற்படுவதை எமது உபகரணங்கள் உணரவில்லை இக்காரணத்தினால் விண்மீன்களிடை வெளியை விண்கலம் அடைந்து விட்டதை நாம் உறுதியாகக் கூற முடியாதுள்ளது என லியோனார்து புர்லாகா என்பவர் கூறினார். சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்தான காந்தப் புலத்தினால் உருவான நெடுஞ்சாலைப் பகுதி சூரியன்சூழ் வான்மண்டலத்தில் உள்ள துணிக்கைகளை விண்மீன்களிடை வெளியை நோக்கி தப்பித்துச் செல்ல அனுமதிக்கிறது, அதே வேளையில் வெளிப்புறத்தில் இருந்து துணிக்கைகளை உள்ளே வரவும் அது அனுமதிக்கிறது. 1977 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட வொயேஜர் 1 விண்கலம் தற்போது சூரியனில் இருந்து 11 பில்லியன் மைல்களுக்கு அப்பால் சேன்று கொண்டிருக்கிறது. மனிதனால் செய்யப்பட்ட ஒரு பொருள் இவ்வளவு தூரம் செல்வது இதுவே முதற் தடவையாகும் என நாசா கூறுகிறது. இதன் சகோதர விண்கலம் வொயேஜர் 2 விண்கலம் சூரியனில் இருந்து 9 பில்லியன் மைல்களுக்கு அப்பால் செல்கின்றது. புளுட்டோனியம்-238 இனால் இயங்கும் இவற்றின் உபகரணங்களின் வாழ்வுக்காலம் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்த நெடுஞ்சாலை 5 முதல் 10 வானிலை அலகுகள் தடிப்பானவையாக (அதாவது, சூரியனில் இருந்து பூமிக்கிடையையேயான தூரத்தின் 5 முதல் 10 மடங்கு தூரம்) இருக்கலாம் என நாசா அறிவியலாளர்கள் நம்புகின்றனர். இந்த அனுமானம் உண்மையாக இருக்குமானால், வொயேஜர் 1 விண்கலம் இப்பிராந்தியத்தைத் தாண்ட குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லும். வொயேஜர் 1 விண்கலம் விரைவில் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லவிருப்பதாக நாசா அறிவிப்பு சூன் 15, 2012 ஈரானின் கிழக்கே பெரும் நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டடங்கள் சேதமடைந்தன. மீன்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 12 கிராமங்கள் இந்நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஈரானில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் வட-மேற்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30 பேர் வரை கொல்லப்பட்டனர். பசிபிக் பெருங்கடலின் ஏனைய பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை இன்று உள்ளூர் நேரம் 19:20 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ, பெரும் சேதங்களோ ஏற்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் பாலத்தீனத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து அமாசு இயக்கம் பட்டா இயக்கத்தினரை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியது. மேற்குக் கரையின் சில பகுதிகளை பட்டா இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1997 ஆம் ஆண்டில் யோர்தானில் இசுரேலின் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து மசால் தப்பியிருந்தார். பிரித்தானிய இள­வ­ர­சர் வில்­லி­ய­மின் மனைவி கேத்தரின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த மருத்துவமனை தாதி ஒருவர் நேற்று மர்மமான முறையில் அவரது மருத்துவமனை இருப்பிடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அரச குடும்பத்தார் பேசுவது போல நடித்து 2டே எஃப்எம் என்ற ஆத்திரேலிய வானொலி நிலையத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை முதலில் எடுத்து அதனைக் கேத்தரின் தங்கியிருந்த அறைக்கு கொடுத்திருந்த செவிலி இவரே என லண்டன் கிங் எட்வர்ட் மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 46 வயதான ஜெசிந்தா சல்தானா என்பவரே இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவே கருதப்படுகிறது. கேத்தரின் கர்ப்பமுற்றிருந்த செய்தி சில நாட்களுக்கு முன்னர் அரச குடும்பத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் அவர் மசக்கை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேத்தரினைப் பராமரித்து வந்த வேறொரு தாதி, கேத்தரினுடைய உடல் நலம் பற்றி சில தகவல்களை 2டே எஃப்எம் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மெல் க்ரெய்க், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோருக்குக் கொடுத்துள்ளார். இத்தகவல்கள் ஆத்திரேலிய வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருந்தன. சல்தானாவின் மறைவு ஒரு துயர சம்பவம் என சிட்னி டுடே எஃப்எம் வானொலி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து பெற்ற தகவல்கள் வானொலி நிலையப் பணிப்பாளர்கள், மற்றும் அதன் வழக்கறிஞர்களின் ஓப்புதல் பெற்றே ஒலிபரப்பபட்டதாக வானொலி நிலையம் அறிவித்துள்ளது. சட்டரீதியாக தாம் எத்தவறும் இழைக்கவில்லை என வானொலி நிலையப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையத்துக்கான விளம்பரங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறிப்பிட்ட வானொலி அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மனமுடைந்து போயுள்ளனர் என்று வானொலி நிலையம் அறிவித்துள்ளது. சல்தானாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இவ்வாரம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையினர் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரண்டு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களையும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. ஜிப்சிகளின் மொழி, சமக்கிருதச் சொற்களின் கலப்பு, மற்றும் நிறம் போன்றவற்றைக் கொண்டு இவர்கள் இந்திய வம்சாவழியினர் என பல ஆண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனாலும், அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. தற்போது கேம்பிரிட்ச் பல்கலைக்கழகப் பேராசிரியர் தூமசு கிவிசில்டு மற்றும் இந்திய, எஸ்தோனிய வரலாற்றாளர்களின் ஆய்வுகள் இவர்கள் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்துள்ளன. ஜிப்சிகளின் மூதாதைகளின் வாழ்விடம், மற்றும் அவர்களின் சமூகப் பின்னணி போன்றவையும் அறியப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் உள்ள ரோமா மக்களின் மூதாதைகள் இன்றைய பஞ்சாப் பிரதேசத்தில் இருந்து கிபி 1001 இற்கும் 1026 இடைப்பட்ட காலத்தில் தமது சாதியினரின் நிலைகளை உயர்த்தும் பொருட்டு இடம்பெற்ற போர்களினால் மேற்கு நோக்கி முதன் முதலில் நகர்ந்தனர் என் வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இன்றைய பாக்கித்தான் போன்ற பிரதேசங்களில் இந்து இராச்சியங்களின் வீழ்ச்சியை அடுத்து இடம்பெயர நேர்ந்தது. இந்திய உபகண்டத்தில் இசுலாம் பரவிய காலத்தில் அகதிகளாக வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவுக்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர். பிரித்தானியாவில் முதன் முதலாக ஜிப்சிகள் கிபி 1500 ஆம் ஆண்டளவில் வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும், குதிரை வர்த்தகர்களாகவும் அறியப்பட்டனர். ரோமா ஜிப்சிகளை பிரான்ஸ் ருமேனியாவுக்குத் திருப்பி அனுப்புகிறது ஆகத்து 20, 2012 ரோமா மக்களை வெளியேற்றுவதற்கு பிரான்சு மீது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை செப்டம்பர் 15, 2012 ரோமா மக்களுக்கு எதிராக பல்கேரியர்கள் ஆர்ப்பாட்டம் அக்டோபர் 2011 உள்நாட்டுப் போர்க்காலத்தில் நிகழ்த்தியதாகக் கூறப்படும் படுகொலைகளை விசாரணை செய்யுமாறும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் எல் சால்வடோருக்கு அமெரிக்காக்களுக்கிடையேயான மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எல் மொசோட்டே படுகொலைகளில் 1,000 பேர் வரையில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொஸ்டா ரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட அமெரிக்காக்களுக்கிடையேயான மனித உரிமைகள் நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று திங்கட்கிழமை வழங்கியிருந்தது. எல் மொசோட்டே நகரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் இடம்பெற்ற படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என நீதிமன்றம் கூறியுள்ளது. 1981 டிசம்பர் 11 முதல் 13 வரையான காலப்பகுதியில், இடதுசாரிப் போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறி எல் மொசோட்டே நகர மக்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோரை இராணுவத்தினர் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் ஆவர். 440 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது, ஆனாலும் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாகும் என உறுதியான தகவல்கள் தெரிவிப்பதாக நீதிமன்றம் கூறியது. இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோர் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. 1992 இல் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. தீவிர இடதுசாரியான மொரீசியோ ஃபியூனெசு 2009 ஆம் ஆண்டில் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980களில் அமெரிக்க சார்பு அரசை எதிர்த்துப் போரிட்ட ஃபாரபுண்டோ பார்ட்டி தேசிய விடுதலை முன்னணி (FMLN) என்ற மார்க்சியப் போராளிக் குழுவைச் சேர்ந்தவர் வட கொரியா நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக இன்று உள்ளூர் நேரம் 09:49 மணிக்கு ஏவியது. செயற்கைக் கோளொன்றைத் தாங்கிச் சென்ற இந்த ஏவுகணை அதனை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப் பாதையில் செலுத்தியது. வட கொரியாவின் மேற்குக் கரைப் பகுதியில் இருந்து இந்த மூன்று கட்ட ஏவுகணை செலுத்தப்பட்டது. வட கொரியாவின் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதை ஐக்கிய அமெரிக்கா உறுதிப் படுத்தியது. நீண்ட தூர ஏவுகணையைச் சோதிக்கவே வட கொரியா இச்செயலில் இறங்கியது என தென் கொரியா, அமெரிக்கா, சப்பான் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. சூன் 2009 இல் வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் அனைத்துக்கும் ஐக்கிய நாடுகள் தடை விதித்திருந்தது. வட கொரியாவின் இரண்டாவது அணுசக்திச் சோதனையை அடுத்தே ஐக்கிய நாடுகள் இந்த முடிவை அறிவித்திருந்தது. இன்றை ஏவுகணைச் சோதனை ஐநா விதிமுறைகளை மீறும் செயலென ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கப் பெரும்பரப்பைத் தாக்கக்கூடிய நீண்ட தூரம் பாயும் ஏவுகணை தயாரிக்கும் முயர்சியில் வட கொரியா இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. 1992-95 பொசுனியப் போரில் இனப்படுகொலை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொசுனிய-செர்பிய இராணுவ ஜெனரல் ஸ்த்ராவ்கோ தொலிமிர் என்பவருக்கு முன்னாள் யுகோசுலாவியாவுக்கான ஐநா பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. 64 வயதுடைய தொலிமிர் பொசுனிய செர்பிய இராணுவத்தில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைக்கு பதில் படைத்தலைவராக இருந்தவர். மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள், மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்கு இவரை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டுள்ளது. முசுலிம்களையும், குரோவாசியர்களையும் பொசுனியாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு இவர் ஆதரவாக இருந்தார் என்றும், இந்நடவடிக்கைகளில் இவர் மிகுந்த பற்றுடன் பங்கேற்றார் என்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 1995 சூலை மாதத்தில் சிரெப்ரெனிக்கா நகரம் செர்பியப் படைகளால் கைப்பற்றப்பட்டதை அடுத்து 8,000 முசுலிம் ஆண்கள், மற்றும் சிறுவர்களைப் படுகொலை செய்த நிகழ்வில் நேரடியாக தொலிமிர் சம்பந்தப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. சிரெப்ரெனிக்காவிலும், சேப்பா நகரிலும் இடம்பெற்ற கொலைகள் பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டது என்றும் சாதாரண பொதுமக்களுக்கு எதிரானவையல்ல என்றும் தொலிமிர் வாதாடினார். த ஏக் நகரில் அமைந்துள்ள போர்க்குற்ற நீதிமன்றம் 2005 பெப்ரவரியில் தொலிமிர் குற்றவாளியாகக் கண்டது. இரண்டு ஆண்டுகள் தலைமறைவாயிருந்த தொலிமிர் 2007 மே மாதத்தில் பொசுனியா எர்செகோவினாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு உடனடியாகவே மேலதிக விசாரணைக்காக நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பொசுனிய செர்பிய இராணுவத் தலைவர் மிலாதிச், மற்றும் அரசியல் தலைவர் ரதொவான் கராத்சிச் ஆகியோர் தற்போது போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். செர்பியப் போர்க்குற்றவாளி மிலாடிச் மீதான வழக்கு ஆரம்பம் மே 17, 2012 1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது மார் 31, 2010 பூமியின் நைல் நதியைப் போன்ற மாபெரும் நதி ஒன்றை சனிக் கோளின் துணைக்கோளான டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். 400 கிமீ நீளமான இந்த நதி பெருங்கடல் ஒன்றினுள் பாய்வது அவதானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா, மற்றும் ஐரோப்பாவின் ஈசா ஆகியவற்றின் கூட்டுத்திட்டமான காசினி விண்கலமே இத்தகவலைப் பூமிக்கு அனுப்பியுள்ளது. காசினி விண்கலம் பூமிக்கு அப்பால் இவ்வாறான ஒரு பெரும் நதி கட்டமைப்பொன்று அவதானிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். பூமிக்கு அடுத்தபடியாக டைட்டன் துணைக்கோளே பெருங்கடற்பரப்புகளைக் கொண்டது என வானியலாளர்கள் கருதுகின்றனர். 400 கிமீ நீளமான இந்நதி ஐதரோகார்பன் நிறைந்த கடலினுள் பாய்கிறது. கடலில் உள்ள திரவநீர் டைட்டனின் குளிர் காரணமாக எப்போதும் உறைந்தே காணப்படும், ஆனாலும் எத்தேன், மெத்தேன்களான ஐதரோகார்பன்கள் திரவநிலையிலேயே காணப்படுவதற்கு ஏற்ப சூடான நிலை அங்கு காணப்படுகிறது. துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். துப்பாக்கிதாரியின் அடையாள இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அப்பாடசாலையில் பணியாற்றும் ஒரு ஆசிரியையின் 20 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆசிரியை துப்பாக்கிதாரியால் அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்ட பின்பே அவன் பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெற்றைய நிகவில் 18 மாணவர்கள் உடனடியாகவே இறந்தனர் எனவும், ஏனைய இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறினர். இறந்த சிறுவர்கள் அனைவரும் ஆறு முதல் ஏழு வயதானவர்கள் ஆவர். இறந்த ஆறு வயதானவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் ஆவர். பள்ளியின் ஒரு பகுதியில் உள்ள இரு அறைகளில் இந்தச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளை மாளிகையில், அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் இந்தப் பிள்ளைகளின் பெற்றோர், சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்களுக்காக, மற்றும் இறந்த ஏனையோரின் குடும்பத்தினருக்காக இன்று எமது இதயம் உடைந்துள்ளது எனக் கண்ணீர் மல்க அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் மிகத் தரம் வாய்ந்ததாகக் கூறப்படும் சாண்டி ஹுக் பள்ளியில் 5 முதல் 10 வயது வரையான 600 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கின்றனர். இருநூறுக்கும் அதிகமான மிக அரிதான வலசை செல்லும் கிழக்கத்திய வெள்ளை நாரைகள் சீனாவின் வடக்கே தியான்சின் மாவட்டத்தின் சதுப்பு நிலங்களில் தனித்து விடப்பட்டுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கிழக்கத்திய வெள்ளை நாரைகள் நவம்பர் இறுதியில் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டியவை என்றும், ஆனாலும் தற்போதும் அவை பனி நிறைந்த பெய்தாகங் இயற்கை வனத்தில் காணப்படுவதாகவும், இது இவ்வாண்டின் ஓர் அரிதான நிகழ்வு என்றும் கூறப்படுகிறது. வெள்ளியன்று பெரும் பனிக்கட்டிப் பொழிவு இருந்ததால் இப்பறவைகளுக்கு உணவு கிடைப்பது பெரும் பாடாயுள்ளது. இப்பறவைகள் நச்சு உணவுகளை உண்டிருக்கலாம் என்றோ அல்லது பறப்பதற்கு ஏற்ற உடல்நிலையில் அவை இல்லை என்றோ இயற்கை வன அதிகாரிகள் நம்புகின்றனர். சிறிய வகை மீன்களை வன அதிகாரிகள் இப்பறவைகளுக்கு வெள்ளியிரவு உணவாகக் கொடுத்துள்ளார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையும் மேலும் உணவைக் கொடுக்கவிருக்கிறார்கள். "இவற்றை உண்டு விட்டு அவை தெற்கு நோக்கிச் செல்லாமல் இருந்தால், இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கும் வன அதிகாரி வாங் தெரிவித்தார். கடந்த மாதம் நவம்பர் 20 இல் இந்த வெள்ளை நாரைகளில் இருபது இறந்திருக்கக் காணப்பட்டன. மேலும் 13 நாரைகள் பூச்சிக்கொல்லி கலந்த நீரை அருந்தியதால நச்சூட்டப்பட்டன. நீரில் பூச்சிக்கொல்லி கலந்த இருவர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிழக்கத்திய வெள்ளை நாரைகள் உலகில் 2,500 முதல் 3,000 வரையிலேயே எஞ்சியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகை நாரைகள் அருகி வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக வடகிழக்கே வாழ்ந்து வரும் இவ்வகை நாரைகள் பனிக்காலங்களில் தெற்கு நோக்கி நகருகின்றன. இவைகள் வலசை போகும் வழியிலேயே பெய்தாகங் இயற்கை வனம் காணப்படுகிறது. வடமேற்குப் பாக்கித்தானில் கைபர் என்ற பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் இன்று இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர், 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் பெண்களும் சிறுவர்களும் ஆவர். எந்தக் குழுவும் இதுவரையில் இக்குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்கவில்லை. மாவட்டத்தின் அரசு அலுவலகங்கள் பல இப்பகுதியில் அமைந்துள்ளன. பல வாகனங்களும் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. நாசாவின் நிலவுக்கான ஈர்ப்புப் புலவரைவு செயற்கைக்கோள்கள் இரண்டு நிலவின் 2 கிமீ உயர மலை ஒன்றுடன் மோத விடப்பட்டதன் மூலம் அவற்றின் ஓராண்டு கால ஆய்வுத் திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. விண்கலங்களின் எரிபொருள் முடிவடைந்ததை அடுத்து, நிலவின் வட முனையில் உள்ள மலை ஒன்றுடன் இவை மோத விடப்பட்டன. முதலாவது விண்கலத்துடனான வானொலித் தொடர்புகள் திங்கட்கிழமை கிரினிச் நேரம் 22:28 மணிக்கு துண்டிக்கப்பட்டன. அதற்கு 20 செக்கன்களுக்குப் பின்னர் இரண்டாவதன் தொடர்பும் இழக்கப்பட்டது என நாசா அறிவித்துள்ளது. இவ்விரு விண்கலங்களும் நிலவில் மோதிய பகுதிக்கு அமெரிக்காவின் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையான சாலி ரைட் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் கடந்த சூலை மாதத்தில் காலமானார். நாசா செயற்கைக்கோள் 'கிரெயில்' நிலவின் சுற்றுப் பாதையில் இணைந்தது சனவரி 1, 2012 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ப்ரியா என்ற வைரம்-மிகுந்த நகரை போராளிகள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டுக்கு அயல் நாடான சாட் தனது படையினரை நேற்று அனுப்பியுள்ளது. தமது இராணுவத்தினரால் போராளிகளை அடக்க முடியாமல் போனதை அடுத்து மத்திய ஆப்பிரிகக்க் குடியரசின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசிசே அயல் நாடான சாட்டிடம் இருந்து இராணுவ உதவியைக் கோரியுள்ளார். போராளிகளுடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 2007 ஆம் ஆண்டில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையை பொசிசே சரிவர நடைமுறைப்படுத்தவில்லை எனப் போராளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2007 உடன்படிக்கையின் படி போராளிகள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். ஆனாலும் பல போராஅளிகள் இராணுவத்தில் இருந்து தப்பி அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். 1960 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பல முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளானது. இதன் மூலம் அயல் நாடான சாட் பல முறை இந்நாட்டின் அரசியலில் நேரடியாகத் தலையிட வேண்டி வந்தது. 2003 ஆம் ஆண்டில் பொசிசே இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சாட் நாடு பல வழிகளில் உதவியது. பின்னர் 2005, 2011 தேர்தல்களில் வெற்றியீட்டினார். ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு தங்கம், மற்றும் வைரம் போன்ற கனிமப்பொருட்கள் மிகுந்த நாடாகும். நமக்கு மிகக் கிட்டவாகவுள்ள "நமது சூரியனை ஒத்த" தாவு செற்றி (Tau Ceti, τ Ceti) என்ற விண்மீன் தன்னகத்தே ஐந்து கோள்களைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் ஒன்று உயிரினம் வாழக்கூடிய வலயத்தில் உள்ளதாகவும் வானியலாளர்கள் கண்டுள்ளனர். இது குறித்த ஆய்வு முடிவுகள் வானியல், மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறைகள் மேலும் பல உலகங்களைக் கண்டறிய உதவும் என நம்பப்படுகிறது. நமக்குக் கிட்டவுள்ள கோள்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும் அல்பா-சென்டோரி விண்மீனுடன் தாவு செற்றியும் இணைகிறது. தாவு செற்றி 12 ஒளியாண்டுகள் தூரத்திலேயே காணப்படுகிறது. அல்பா சென்டோரி 4 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. கோள்கள் அவற்றின் விண்மீன்களின் ஒளியில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாவு செற்றியின் கோள்கள் பூமியை விட இரண்டு முதல் ஆறு மடங்கு எடை கூடியவை. இவற்றின் சுழற்சிக்காலம் 14 முதல் 640 நாட்கள் ஆகும். இவற்றில் ஒரு கோள், எச்டி 10700இ, உயிரினம் வாழக்கூடிய வலயத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகத்தின் இறுதி நாள் இன்று என நம்புவோர் பல்லாயிரக்கணக்கானோர் நடு அமெரிக்கா மற்றும் பல இடங்களில் பண்டைய சிதையல்கள் உள்ள இடங்களில் கூடினர். மெக்சிக்கோவின் மெரிடா நகர், தெற்கு பிரான்சின் புகாராக் மலைப்பகுதி, துருக்கியின் சிரின்சு நகரம், செர்பியாவின் ருந்தாஜ் மலை போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். மாயா ஊழியை நம்புவோரை விட செய்தியாளரகளே இவ்விடங்களில் அதிகமாகக் கூடியுள்ளனர் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். "உலகம் அழியும் என்பதை நான் நம்பவில்லை, ஆனாலும் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன் என செர்பியர் ஒருவர் செய்தியாளரிடம் கூறினார். மாயா நாகரிகம் பண்டைக்கால நடு அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஒண்டுராசு போன்ற நாடுகள் விரவியிருக்கும் நடு அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. எசுப்பானியரின் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் உள்ளனர். தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐக்கிய நாடுகளின் உலங்குவானூர்தி ஒன்றை அந்நாட்டு இராணுவத்தினர் நேற்று சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த உருசியர்கள் என நம்பப்படும் நால்வர் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்திருக்கும் ஐநா செயலர் பான் கி மூன், உலங்குவானூர்தி "மிகத் தெளிவாக" இலச்சினையிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வுக்கான காரணம் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை என தெற்கு சூடானின் தகல்துறை அமைச்சர் கூறினார். ஆனாலும், உலங்கு வானூர்தியைத் தாமே சுட்டதாக இராணுவத்தினர் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐநா பேச்சாளர் தெரிவித்தார். தெற்கு சூடானின் ஜொங்கிளெய் மாநிலத்தில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு இனக்குழுக்களிடையே அகப்பட்டுள்ள பொது மக்களுக்கு உதவும் பணியை ஐக்கிய நாடுகள் மேற்கொண்டுள்ளது. உருசியத் தயாரிப்பான எம்ஐ 8 ரக உலங்கு வானூர்தியே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த நால்வரும் உருசியர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு சூடானில் போராளிகளுக்கு உதவுவதாக அந்நாடு சூடானைக் குற்றம் சாட்டி வருகிறது. இக்குற்றச்சாட்டை சூடான் மறுத்து வருகிறது. சென்ற ஆண்டு சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. 39 அகவையுடைய டெண்டுல்கர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் உலகக்கோப்பையை வென்றடுத்த இந்திய அணியின் ஒரு பங்காளனாக இருந்ததில் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலாக 1989 ஆம் ஆண்டில் விளையாடினார். இது வரை ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 18,426 ஓட்டங்களைக் குவித்துள்ள சச்சின், அதிக ஒரு நாள் போட்டி, அதிக ஓட்டங்கள், அதிக சதம், அதிக இரட்டை சதம் என அடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார். 49 சதங்களை அடித்துள்ளார். இவரது கடைசி ஒரு நாள் போட்டி ஆசியக் கோப்பைக்காக 2012 மார்ச் 18 இல் விளையாடினார். பாக்கித்தானுக்கு எதிரான இப்போட்டியில் 52 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய அணி ஆறு இலக்குகளில் வெற்றி பெற்றது. இந்தியா பாக்கித்தான் போட்டித் தொடர் மீண்டும் நடக்கவுள்ள நிலையில் சச்சின் இன்று தனது ஓய்வை அறிவித்தார். இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 18 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த பெரும் மழையை அடுத்து இடம்பெற்ற வெள்ளப்பெருக்கும், மறும் மண்சரிவுகளினால் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர். சீரற்ற காலநிலையினால் இலங்கை எங்கனும், 60,784 குடும்பங்களைச் சேர்ந்த 2,22,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,830 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என இலங்கை அனர்த்த நிவாரண நிலையம் அறிவித்துள்ளது. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஆறுகள் பல பெருக்கெடுத்துள்ளன. கடும் வெள்ளம் காரணமாக ஏ-9 வீதி நேற்று மூன்று மணி நேரம் மூடப்பட்டிருந்தது. குடிமனைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முத்தையன்கட்டுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் நேற்றுக் காலை திறந்துவிடப்பட்டுள்ளன. இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க்குளத்தின் அவசர வான்கதவுகள் பத்தும் திறந்துவிடப்பட்டுள்ளதால் தம்பலகாமம் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அத்துடன், திருகோணமலை கண்டி வீதியிலுள்ள பிரசித்தி பெற்ற பாலம்போட்டாறு பத்தினியம்மன் ஆலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பர்மாவில் பயணிகள் விமானம் ஒன்று அவசர அவசரமாகத் தரையிறங்கி, தரையுடன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் காயமடைந்தனர். 60 இற்கும் மேற்பட்டோருடன் ரங்கூனில் இருந்து சான் மாநிலத்தின் ஈகோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஏர் பேகன் விமானமே தரையிறங்க வேண்டிய விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தூரத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. பயணிகளில் பலர் வெளிநாட்டவர் எனக் கூறப்படுகிறது. விமானத்தின் எந்திரம் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாகவே விமானம் அவசரமாகத் தரையிறங்கியதாக ஆரம்ப விசாரணைகளின் படி தெரிய வருகிறது. விமானம் தரையில் மோதியதில் அது இரண்டாக பிளவடைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பயணி ஒருவர் விமானத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக பர்மிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நெல் வயல் ஒன்றில் தரையிறங்கிய போது தரையில் நின்றிருந்த பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். விமான ஓட்டிகள் இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் பிரித்தானியர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனத் தலைநகர் பெய்ஜிங்கையும் குவாங்க்சூ நகரையும் இணைக்கும் உலகின் மிக நீளமான அதி வேகத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது தொடருந்து இன்று காலையில் பெய்ஜிங் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இத்தொடருந்துகள் 300கிமீ/மணி வேகத்தில் செல்லும். இதன் மூலம் பயண நேரம் அரைவாசிக்கும் மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2,298 கிமீ தூரப் பாதையில் முக்கிய நகரங்களான வுகான், ஷாங்சா போன்றவை உட்பட மொத்தம் 35 தரிப்புகள் உள்ளன. பொதுவாக 22 மணி நேரப் பயணம் தற்போது 10 மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவடைகிறது. முன்னாள் கம்யூனிசத் தலைவர் மா சேதுங்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தத் தொடருந்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. நிக்கராகுவாவின் சான் கிறிஸ்தோபல் எரிமலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சீறத் தொடங்கியதை அடுத்து அதற்கு அண்மையில் 5 கிமீ சுற்றுவட்டத்தில் வசிக்கும் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாக வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், கிட்டத்தட்ட 1,500 விவசாயிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் 15 முறை எரிமலைக் கக்கல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். 500 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சீறல் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மீட்புப் பணிக்கென இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். சான் கிறிஸ்தோபல் நிக்கராகுவாவின் மிகப் பெரும் எரிமலை ஆகும். இது தலைநகர் மனாகுவாவில் இருந்து வடமேற்கே 135 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் இந்த எரிமலை சீறியதில் பண்ணை விலங்குகள் பல உயிரிழந்தன. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் போராளிக் குழுக்கள் தலைநகர் பங்கூயி நகரை நோக்கி முன்னேறி வருவதை அடுத்து அங்கிருந்த தனது தூதரகத்தை மூடியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுடனான தூதரக உறவுகளைத் தாம் முறித்து விடவில்லை என்று கூறியுள்ள அமெரிக்க அரசுப் பேச்சாளர், நாட்டில் குழப்ப நிலை நிலவும் சூழலில் அந்நாட்டிற்கு அமெரிக்கர்களைச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார். முன்னதாக, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே போராளிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா, மற்றும் பிரான்சின் உதவிகளைக் கோருவதாக அறிவித்தார். அத்தியாவசியமற்ற சேவைகளை வழங்கி வரும் ஐநா ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய நாடுகள் கோரியுள்ளது. இந்தியத் தலைநகர் தில்லியில் இரு வாரங்களுக்கு முன்னர் பேருந்து ஒன்றில் கும்பல்-வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பயனளிக்காமல் இறந்ததை அடுத்து, தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் பல பகுதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன. மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட இப்பெண் இன்று சனிக்கிழமை சிங்கப்பூரின் மவுன் எலிசபெத் மருத்துவமனையில் உயிரிழந்தார். 23 வயதான இப்பெண்ணின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இந்நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளில் காவல்துறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். வன்புணர்வு தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உ‌த்தரப்‌பிரதேச மா‌நில‌த்தை சே‌ர்‌ந்த ‌23 வயது இயங்குனர் மருத்துவ மாணவி பணியிடைப் பயிற்சிக்காக தில்லி வ‌ந்திருந்தார். 16 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் ஒரு மணித்தியாலம் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இரும்புக் கம்பிகளால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் இரு‌ந்து தூ‌க்‌கி ‌வீச‌ப்ப‌ட்ட இருவரு‌ம் சிகிச்சைக்காக தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவியின் உடல் நிலை மோசமானதை‌‌த் தொட‌ர்‌ந்து உயர் சிகிச்சைக்காக 26 ஆம் தேதி இரவு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். ஆனாலும் சிகிச்சை அவர் உயிரிழந்தார். இறக்கும் போது அவரது குடும்பத்தினரும் அருகில் இருந்தனர். அந்தப் பெண்ணின் பல அவயங்கள் செயலிழந்துவிட்டன என்றும், பெண்ணின் மூளையிலும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரது நுரையீரல் மற்றும் அடிவயிற்றில் கிருமித் தொற்றுக்கள் இருப்பதாகவும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அந்தப் பெண் உயிருக்குப் போராடி வந்ததாகவும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் லோ தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இப்பெண் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அரசியல் நோக்கம் எதுவும் இருக்கவில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். உருசியப் பயணிகள் விமானம் ஒன்று மாஸ்கோ விமான நிலையத்தில் நேற்றுத் தரையிறங்க எத்தனித்த போது ஓடுபாதையை விட்டு விலகி அருகில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் மோதி நொறுங்கியதில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர். வுனூக்கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ரெட் விங்க்ஸ் துப்போலெவ்-204 என்ற பயணிகள் விமானத்தில் எட்டு முதல் 12 விமானப் பணியாளர்கள் மட்டுமே பயணித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றனர். விமானம் பல துண்டுகளாக சிதறியது. செக் குடியரசில் இருந்து இவ்விமானம் புறப்பட்டிருந்தது. இறந்தவர்களில் இருவர் விமான ஓட்டிகள் ஆவர். நால்வர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறியுமாறு உருசியப் பிரதமர் திமீத்ரி மெத்வேதெவ் கட்டளையிட்டுள்ளார். விமான விபத்துக்கு பாதகமான காலநிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமான ஓட்டிகளின் தவறு ஆகியவற்றில் ஒன்றே காரணமாயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. துப்போலெவ்-204 புதிய, நவீனகரமான பயணிகள் ஜெட் விமானம் ஆகும், இவை 200 பேர் வரையில் பயணம் செய்யக்கூடியவை ஆகும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் போராளிகள் தலைநகர் பாங்குயி நோக்கி முன்னேறி வருவதை அடுத்து, போராளிகளுடன் கூட்டரசு அமைக்க அந்நாட்டின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே உறுதியெடுத்துள்ளார். அரசுத்தலைவரின் இந்தக் கோரிக்கையைத் தாம் பரிசீலிக்க விருப்பதாக போராளிகள் அறிவித்துள்ளனர். அரசைக் கைப்பற்றுவது தமது நோக்கமல்ல என்றும், பேச்சுக்களின் முடிவைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் போராளிகளின் பேச்சாளர் எரிக் மாசி தெரிவித்தார். சனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். போராளிகள் முன்னேறி வருவதை அடுத்து, அரசுப் படையினர் தலைநகரில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ள டமாரா நகரைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், பொசீசேயின் செல்வாக்கு அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் வீழ்ந்து வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, செலேக்கா போராளிகள் கூட்டணி சிபூட் நகரை வெள்ளியன்று கைப்பற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட பிரெஞ்சுப் படையினர் தலைநகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனாலும், தமது பிரெஞ்சுக் குடிமக்களைப் பாதுகாக்கவே படையினர் அங்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அரசைப் பாதுகாக்கவல்ல என்றும் பிரான்சிய அரசு தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை அரசுத்தலைவர் பொசீசே புறக்கணித்து விட்டதாக மூன்று போராளிக் குழுக்களின் கூட்டமைப்பான செலேக்கா குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்திருந்தனர். பல முக்கிய நகரங்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஐவரி கோஸ்டின் வணிகத் தலைநகர் அபிஜான் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விளையாட்டரங்கம் ஒன்றில் வாண வேடிக்கைகளைக் கண்டு களித்து விட்டு வெளியேறும் போதே இந்த அனர்த்தம் நிகழ்துள்ளது. 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை. இதற்கிடையில் உலகின் பல நகரங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டுக் வாண வேடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. முதற் தடவையாக பர்மாவிலும் இம்முறை வாண வேடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. பர்மாவின் வடக்கு மாநிலமான கெச்சினில் அமைந்துள்ள போராளிகள் தளங்கள் மீது பர்மிய இராணுவ வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுதந்திர பர்மியக் குழு என்ற மனித நலம் சார்ந்த அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் உலங்கு வானூர்திகள், மற்றும் போர் விமானங்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவது காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இராணுவத்தினரின் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 ஆம் ஆண்டில் மீல ஆரம்பித்திருந்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் போர் விமானங்கள், மற்றும் உலங்கு வானூர்திகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதை நேரில் கண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மோதல் இடம்பெறும் பகுதிகளில் குடியிருந்த 75,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களை விட்டு கெச்சினின் வெறு பகுதிகளுக்கும், எல்லையைத் தாண்டி சீனாவுக்குள்ளும் ஏற்கனவே வெளியேறியுள்ளனர். தாக்குதல்கள் குறித்து சனாதிபதி அலுவலகப் பேச்சாளர் கூறுகையில், நிலைமை அங்கு மிகவும் சிக்கலானது, அங்குள்ள படையினருக்குத் தேவையான இராணுவ உதவிகளைக் கொண்டு செல்வதற்கே வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார். போராளிகளின் தலைமையகம் அமைந்திருக்கும் லாய்சா என்ற இடத்தின் மீது முழு அளவிலான தாக்குதல் ஒன்றை நடத்த இராணுவம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் சூறாவளி பிரெஞ்சுத் தீவான ரெயூனியனைத் தாக்கியதில் பெரும் மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரையும் வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60,000 இறிகும் அதிகமான வீடுகளில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. டுமைல் புயல் என அழைக்கப்படும் இந்த சூறாவளி ரெயூனியன், மற்றும் மடகஸ்காருக்குத் தெற்கே வீசியது. 180கிமீ/மணி வேகத்தில் புயல்காற்று வீசியது. ரெயூனியனில் வான் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாளை இந்த சூறாவளி ரெயூனியனை மேலும் பலமாகத் தாக்கும் எனக் கூறப்படுகிறது. பிரபல பிரெஞ்சு நடிகரும் இயக்குனருமான ஜெரார் டெப்பார்டியேவுக்கு உருசியக் குடியுரிமை வழங்கும் ஆணைக்கு உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் நேற்றுக் கையெழுத்திட்டார். டெப்பார்டியே அண்மையில் தனது பிரெஞ்சுக் குடியுரிமையைக் கைவிட்டு, பெல்ஜிய எல்லையில் உள்ள நெச்சின் நகருக்குக் குடி பெயர்ந்தார். பிரான்சின் சோசலிச அரசு 1 மில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக வருமானமுள்ளவர்களுக்கு 75 விழுக்காடு வரி அறவிடுவதற்கு முடிவெடுக்கவிருப்பதை அடுத்தே டெப்பார்டியே பிரான்சில் இருந்து வெளியேற முடிவெடுத்தார். உருசியாவில் தற்போது அனைவருக்கும் 13 வீத வருமான வரியே விதிக்கப்படுகிறது. பூட்டினின் முடிவை வரவேற்றுள்ள டெப்பார்டியே, தான் உருசியாவை விரும்புவதாகவும், அது உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு எனவும் புகழ் மாலை சூட்டினார். 64 வயதுள்ள டெப்பார்டியே 70 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் பல பன்னாட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு இவர் உருசிய-பிரெஞ்சு கூட்டுத்தயாரிப்பு ஒன்றில் உருசியாவின் இரண்டாம் நிக்கலாஸ் பேரரசன் தனது ஒரே மகனைக் குணப்படுத்துவதற்காகப் பணிக்கமர்த்திய சர்ச்சைக்குரிய கிரிகோரி ரஸ்புட்டீனின் பாத்திரத்தில் நடித்திருந்தார். தமது நாட்டை விட்டு வெளியேற டெப்பார்டே முடிவெடுத்ததைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சுப் பிரதமர், ”டெப்பார்டேயின் முடிவு அருவருக்கத்தக்கது எனக் கூறினார். பிரெஞ்சு சட்ட விதிகளின் படி, இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்படுகிறது, ஆனால் நாடற்றவராக இருப்பது சட்டவிரோதமாகும். தமது நாட்டின் குடியுரிமையை நிராகரிக்க முன்னர் அவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருக்க வேண்டும். முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசியிலும், மற்றும் நகரங்களிலும் அரசுத்தலைவர் மிக்கைல் சக்காஷ்விலியைப் பதவி விலகக் கோரி அரச எதிர்ப்பாளர்கள் நேற்றுப் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்றும் முன்னாள் நாடாளுமன்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். சனவரி 20 ஆம் தேதி சக்காஷ்விலியின் இரண்டு ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், சனவரி 20 இற்குள் அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் காலக்கெடு விதித்துள்ளனர். அவர் அதற்குள் பதவி விலகாவிட்டால், நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் மூலம் சக்காஷ்விலி தனது பதவிக்காலத்தை சட்டவிரோதமாக அக்டோபர் 2013 வரை நீடித்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். முன்னாள் நாடாளுமன்றத்தில் சக்காஷ்விலியின் ஐக்கிய தேசிய இயக்கம் என்ற கட்சியே பெரும்பான்மை பலத்தில் இருந்தது. புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இவானிஷ்விலியும், அவரது அமைச்சரவையும் சக்காஷ்விலியின் முன்னாள் அரசின் முக்கிய பிரமுகர்களைக் கைது செய்துள்ளது. கட்சியின் ஒன்பதாண்டு கால அரசில் சக்காஷ்விலியும் அவரது கட்சியினரும் நாட்டைப் பாழ்படுத்தி விட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாண்டு சனவரி மாதம் முதல் அமுல் படுத்தப்படவிருக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் படி, அரசுத்தலைவரின் (சனாதிபதி) அதிகாரங்கள் பல பிரதமருக்கு மாற்றப்பட்டுள்ளன. சூடான், மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையே அவற்றின் எல்லைப்பகுதிகளில் இராணுவமயமற்ற சூனிய வலயம் ஒன்றை அமைக்க இரு நாட்டு அரசுத்தலைவர்களும் உடன்பாடு கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எத்தியோப்பியத் தலைநகரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி முகவர் தாபோ உம்பெக்கி தெரிவித்துள்ளார். சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர், தெற்கு சூடான் தலைவர் சல்வா கீர் ஆகியோர் “உடன்பாடுகள் அனைத்தையும் நிபந்தனை எதுவுமில்லாது நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்ததாக உம்பெக்கி கூறினார். ஆனாலும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தலைவர்களும் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் விடுதலை அடைந்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பாக சர்ச்சைகள் ஆரம்பித்தன. சூடான் தனது எண்ணெய் வளங்களில் 75 விழுக்காட்டை இழந்தது. 2012 இன் இறுதியில், தெற்கு சூடானில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை தமது குழாய்கள் மூலம் ஏற்றுமதி செய்ய சூடான் மறுத்ததைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டின் இறுதியில் தெற்கு சூடானில் எண்ணெய் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரபூர்வ பொது ஆவணங்களில் "பாலத்தீன நாடு" என்பதைப் பயன்படுத்தத் தயாராகுமாறு மேற்குக் கரை அரசு அலுவலர்களுக்கு பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் நேற்று உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் "பாலத்தீன அதிகாரசபை" என்றே பொறிக்கப்பட்டு வருகிறது. பொது ஆவாணங்களில் இவ்வாறான மாற்றம் பாலத்தீன நாடு "தனது சொந்த அமைப்புகளை அமைக்கவும், தமது நாட்டுக்கான அரசுரிமையை அங்கீகரிக்கவும்" உதவும் என அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார். வெளியுறவு அமைச்சு, மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாலத்தீனத் தூதரகங்கள் இனிமேல் பாலத்தீன நாடு என்பதைப் பயன்படுத்த வேண்டுமென சென்ற வாரம் அப்பாஸ் உத்தரவிட்டிருந்தார். இந்தத் திடீர் அறிவிப்புக் குறித்து இசுரேல் இதுவரை கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் கடந்த காலங்களில் தற்காலிகமாக கைவிடப்பட்ட இரட்டை குடியுரிமைச் சட்டங்களை மீண்டும் அமுல்படுத்த குடிவரவு கட்டுப்பாட்டுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் இரட்டை குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் சூலாநந்தா பெரேரா தெரிவித்திருந்தார். கடந்த பல மாதங்களாக இந்த சட்டம், சட்டவரைஞர் திணைக்களத்தில் பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த முறைமைகளை நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அமுலாக்கும் பொருட்டு, தற்காலிகமாக இது கைவிடப்பட்டிருந்ததாக வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரிக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரட்டை குடியுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்வரும் சனவரி மாதம் 18ம் திகதி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கெப்லர் விண்கலம் இதுவரையில் மொத்தம் 2,740 புதிய உலகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 105 கோள்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு விண்மீன்களில் ஒன்று குறைந்தது ஆறு பூமியைன் பருமனைக் கொண்ட கோள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் விண்மீன் திரளில் இவ்வாறான ஏறத்தாழ 17 பில்லியன் கோள்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் நடைபெறும் அமெரிக்க வானியல் கழகத்தின் 221வது கூட்டத்தொடரிலேயே இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட கெப்லர் தொலைநோக்கி வானின் ஒரு குறிப்பிட இடத்தில் நிலை கொண்டு ஏறத்தாழ 150,000 விண்மீன்களைத் தனது காட்சிப் புலத்தில் கண்காணித்து வருகிறது. விண்மீன் ஒன்றில் இருந்து வரும் ஒளி அவ்விண்மீனைச் சுற்றி வரும் கோள் ஒன்றினால் மறைக்கப்படும் நிகழ்வை அது கண்காணிக்கிறது. சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட திவிநெகும (வாழ்வின் எழுச்சி) என்ற சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தன. ஈபிடிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. பிரபா கணேசன் ஆதரவாக வாக்களித்தார். பிரஜைகள் முன்னணி செயலாளர் சிறீரங்கா எதிர்த்து வாக்களித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுகையில், அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமாகவே 13வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் திவிநெகும சட்டமூலம் 13வது திருத்தத்தையும் பறித்துச் செல்லும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார். அமைச்சர் டியூ குணசேகர பேசும் போது, திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக எண்ணுவது தவறு என்று கூறினார். வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக 27,000 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஓய்வூதியம் பெறுகின்ற அரசசேவை உத்தியோகத்தர்களாக மாற்றம் பெறுவர் என அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றும் போது கூறினார். இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தான் பணிபுரிந்த வீட்டில் குழந்தைக்குப் பால் கொடுத்த போது அக்குழந்தை மரணமடைந்ததை அடுத்து ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு சவுதி நீதிமன்றத்தால் இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரிசானாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரேபிய அரசு அதற்கு இணங்காது ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனையை நிறைவேற்றி உள்ளது. ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது. இதேவேளை சவூதி அரேபியாவில், இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசானா நபீக் மூதூரை சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்றை சேர்ந்தவராவார். குடும்ப வறுமை காரணமாக 17வயதில் வீட்டுப்பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். மாலியின் இராணுவத்தினர் டுவென்ட்சா என்ற முக்கிய மத்திய நகரத்தை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மத்தியில் நாட்டின் வடக்குப் பகுதியை போராளிகள் கைப்பற்றியதை அடுத்து இராணுவம் திருப்பித் தாக்கியது இதுவே முதல் முறையாகும். கோனா என்ற நகரின் மீதும் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இசுலாமியப் போராளிகளிகளுடனான போருக்கு நேட்டோ தனது படைகளை அங்ஃப்கு அனுப்ப வேண்டும் என ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் தொமசு போனி யாயி கடந்த செவ்வாயன்று கூறியிருந்தார். ஆப்கானித்தானில் தாலிபான்களுடனான போரைப் போன்றே மாலியிலும் உலக நாடுகள் தலையிட வேண்டும் என அவர் கூறினார். மாலிக்கு 3,000 மேற்காப்பிரிக்கப் படையினரை அனுப்ப ஐநா பாதுகாப்புப் பேரவை கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது. ஆனாலும், இவ்வாண்டு செப்டம்பரிலேயே அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள் என ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர். இசுலாமியத் தீவிரவாதிகள் மீது போர்க்குற்றம், மற்றும் இசுலாமிய சரியா சட்டத்தை அமுல் படுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு மிக்க திம்பக்து நகரத்தில் அமைந்திருந்த நூற்றாண்டுகள் பழமையான சூபி மசூதிகளும் கல்லறைகளும் போராளிகளால் அழிக்கப்பட்டன. ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக இரண்டு தடவைகள் கோரியிருந்தார். மேலும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியிருந்தனர். எனினும். இந்தக் கோரிக்கைளை இசுலாமிய சரியாச் சட்டத்தின் அடிப்படையில் நிராகரித்த சவூதி அரேபிய நீதிமன்றம் ரிசானாவிற்கான மரண தண்டனையை நிறைவேற்றியது. இந்த நிலையில் சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவரை திரும்ப அழைத்துள்ளது. இதற்கிடையில், ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடூரமானதும் மனிதத்தன்மை அற்றதுமான நடவடிக்கை என பிரித்தானியா கண்டித்துள்ளது தலை வெட்டப்படுவது கொடூரமானதும் மனிதத் தன்மை அற்றதுமான நடவடிக்கையென நாம் கருதுகிறோம். அடிக்கடி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உட்பட மனித உரிமைகள் பற்றி எமது விசனத்தை சவூதி அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றோம்' என மத்திய கிழக்குக்கான வெளிநாட்டு அமைச்சர் அலிஸ்ரெயர் பேட் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அரசுடன் போரில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் காபொன் நாட்டில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளனர். நாட்டில் கூட்டு அரசு ஒன்றை அமைப்பதற்கு போராளிகளும் அரசுத்தலைவரும் உடன்பட்டுள்ளனர் என்றும், இக்கூட்டரசு இன்று சனிக்கிழமை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாத ஆரம்பத்தில் செலெக்கா போராளிகள் கூட்டணி மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். முன்னர் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கைகளை அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே மீறி விட்டார் எனப் போராளிகள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்றைய உடன்பாட்டின் படி, நாட்டின் தேசியப் பேரவை (நாடாளுமன்றம்) கலைக்கப்படும் என்றும், 12 மாதங்களில் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை எதிர்க்கட்சியில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக உறுப்பினர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான ஐநா சிறப்புப் பிரதிநிதி மாகரெட் வோட் ஆகியோரின் முன்னிலையில் புதிய உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. சனாதிபதி பொசீசே அவரது பதவிக்கால 2016 இல் முடியும் வரை அப்பதவியில் தொடர்ந்து இருப்பார். எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுக்கும் புதிய பிரதமருக்கு அடுத்த 12 மாதங்களுக்கு அரசாட்சி அமைக்க அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். புதிய இடைக்கால அரசை நீக்கும் அதிகாரம் சனாதிபதிக்குக் கிடையாது. பிரதமரே அரசுத்தலைவராகவும் இருப்பார். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து பொசீசே அரசுத்தலைவரானார். தலைமை நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வாக்களித்து அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனை அடுத்தே சனாதிபதி உடனடியாகவே அமுலுக்கு வரும் வகையில் இன்று பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் 107(2) பிரிவின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரசுத்தலைவரின் இந்த நடவடிக்கையை சிராணி பண்டாரநாயக்கா புறக்கணிக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். சிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன் அரசாங்கம் கொண்டுவந்த கண்டனத் தீர்மானம் மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற வாரம் அறிவித்திருந்ததே இதற்குக் காரணமாகும். சிராணி பண்டாரநாயக்கா தாக்கல் செய்திருந்த 'ரிட் மனு' மீதான தீர்ப்பின் போதே நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்திருந்தது. நிதி மோசடி மற்றும் தொழில்சார் ஊழல்களில் ஈடுபட்டதாக தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சட்டவாக்கச் சபைக்கும் நீதித்துறைக்கும் இடையில் காணப்படக்கூடிய சமநிலைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரதம நீதிபதி தனது பதவியைப் பயன்படுத்தியமையே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் கொண்டுவரக் காரணியாய் அமைந்தது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 54 வயதுடைய சிராணி பண்டாரநாயக்கா மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. தொழில்சார் ஊழல்கள் புரிந்தமைக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு இவரைக் குற்றவாளியாகக் கண்டது. தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அவதானிகள் கருதுகின்றனர். சிராணி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருகின்றனர். அரசுத்தலைவர் நியமிக்கும் புதிய தலைமை நீதிபதியைத் தாம் அங்கீகரிக்க மாட்டோம் எனவும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் எச்சரித்துள்ளனர். பிரதம நீதியரசரை வெளியேற்றுவது தொடர்பில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையினால் சர்வதேச ரீதியில் இலங்கை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. உயர்நீதிமன்ற கட்டளையையும் மீறி பிரதம நீதியரசர் மீது குற்றப் பிரேரணை மிகவும் கவலையளிப்பதாகவும், இலங்கை தனது சட்ட திட்டங்களை முறையாகக் கடைப்பிடிப்பதுடன் சனநாயகக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியக் கடற்படைக் கப்பல் மும்பை செல்லும் வழியில் இராமேசுவரத்தில் தரிந்து நின்றது. கடந்த புதன்கிழமை பாம்பன் பாலம் அருகே அது தரை தட்டியிருந்தது. அதனை மீட்கும் பணி ஆரம்பமாகியிருந்தது. ஆனாலும் கப்பலின் நங்கூரத்தின் பிடி தளர்ந்ததால், கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியது. இதனையடுத்து இராமேசுவரம் நோக்கிய அனைத்து தொடருந்து சேவைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1700களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆத்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேற்றம் பற்றிய ஆய்வுக்கு ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூ கினி, தென்கிழக்காசியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களினதும் மரபணுக்கள் ஒப்பிடப்பட்டன. இவ்வாய்வுகளின் படி, 35,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூகினியினரதும் மரபியலில் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், ஆத்திரேலியாவும், நியூ கினியும் சாகுல் என்றழைக்கப்பட்ட ஒரே நிலப்பகுதியைக் கொண்டிருந்தன. இதே வேளையில் 4,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கும், ஆத்திரேலியாவுக்கும் இடையில் இருந்தமையும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது என செருமனியைச் சேர்ந்த மானுடவியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டோன்கிங் தெரிவித்தார். இக்காலப்பகுதியைச் சேர்ந்த மனித எச்சங்கள், மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் இவர்கள் ஆராய்ந்தனர். "இந்தியர்கள் எவ்வழியாக இக்கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை இந்த மரபணுச் சோதனைகள் தெரியப்படுத்தவில்லை, ஆனாலும் ஆத்திரேலியா நாம் முன்னர் கருதியது போன்று தனித்த உலகமாக இருக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்றார் பேராசிரியர் ஸ்டோன்கிங். இலங்கையின் 44வது தலைமை நீதியரசராக மொகான் பீரிசு நேற்றுக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் ஆலோசகரும் ஆவார். இதே வேளை ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பு, புதிய தலைமை நீதியரசராக மொகான் பீரிசு சட்டமா அதிபராக இருந்த காலத்தில் இலஞ்ச முறைகேடு சம்பவம் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டி முறைப்பாடு ஒன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. * வீரகேசரி, இலங்கைத் தமிழ் நாழிதழ், தலைப்புச் செய்தி சனவரி 16, 2013 மாலியின் தலைநகர் பமாக்கோவுக்கு வடக்கே 350 கிமீ தூரத்தில் உள்ள டயபாலி நகர வீதிகளில் இசுலாமியப் போராளிகளுடன் பிரெஞ்சுப் படையினர் சண்டையிட்டு வருவதாக மாலிய, மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். மாலியின் வடக்கே இசுலாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை மீட்க அங்கு பிரான்சியப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போராளிகள் தலைநகர் நோக்கி முன்னேறுவதைத் தடுப்பதே பிரெஞ்சுப் படையினரின் முதன்மைப் பணியாகும். இசுலாமியப் போராளிகள் கடந்த திங்கட்கிழமை அன்று டயபாலி நகரை மாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றியிருந்தனர். அன்றில் இருந்து பிரெஞ்சு விமானப் படையினர் போராளிகளின் தளங்கள் மீது குண்டுகள வீசித் தாக்கி வருகின்றன. தற்போது தரைப்படையினரும் தமது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர் என பிரெஞ்சு இராணுவத் தலைவர் எதுவார்த் கிலாட் தெரிவித்தார். மாலியில் தற்போது ஏறத்தாழ 800 பிரெஞ்சுப் படையினர் நிலை கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் 2,500 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சுப் படைகளுக்கு உதவியாக நைஜீரியாவும் தனது 190 படையினரை மாலிக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. இன்று இவர்கள் மாலியை அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பெனின், கானா, நைஜர், புர்க்கீனா பாசோ, டோகோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும் தமது படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளன. சாட் நாடும் 2,000 இராணுவத்தினரை அனுப்பவுள்ளது. மேற்காப்பிரிக்கப் படையினர் மாலியின் வடக்கே தமது தாக்குதலை நடத்தத் தீர்மானித்திருந்த வேளையில், போராளிகள் தெற்கு நோக்கி நகர ஆரம்பித்தனர். கடந்த வியாழன் அன்று கோனா நகரை அவர்கள் கைப்பற்றினர். இதற்கிடையில், மாலியின் அயல் நாடான அல்ஜீரியாவில் அல்-கைதாவுடன் தொடர்புள்ள இசுலாமியப் போராளிகள் 40 இற்கும் அதிகமான வெளிநாட்டினரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். இரு பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பிரெஞ்சுப் படையினர் மாலியில் தமது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனிப்பட்ட கருவிப்பட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரத்தைக் காட்டல், அவ்விணைப்பை அழுத்துவதன் மூலம் பக்க இடைமாற்றை நீக்கலாம் அல்ஜீரியாவில் சகாரா பாலைவனம் பகுதியில் உள்ள ஒரு எரிவாயுத் தொழிற்சாலையில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளரெனினும், பலர் இன்னும் விடுவிக்கப்படாதுள்ளனர் எனப் பிரித்தானியா கூறியுள்ளது. அல்ஜீரியாவின் அமனாஸ் என்ற இடத்தில் எரிவாயு ஆலையை ஆயுதம் தாங்கிய போராளிகள் கடந்த புதன்கிழமை அன்று கைப்பற்றினர். தம்மிடம் 41 வெளிநாட்டவர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர் என போராளிகள் அறிவித்துள்ளனர். பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரித்தானியா, மற்றும் அல்ஜீரிய நாட்டவர் இருவர் கொல்லப்பட்டனர். வியாழனன்று இவர்களை விடுவிக்க அல்ஜீரியத் துருப்புகள் முயன்றபோது பணயக் கைதிகள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர். நால்வர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை. இரண்டு பிரித்தானியரும், இரண்டு பிலிப்பீனோக்களும் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 35 வெளிநாட்டவரும் 15 போராளிகளும் உயிரிழந்ததாக போராளிகளின் பேச்சாளர் தெரிவித்ததாக மவுரித்தேனியாவின் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது. பிடித்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்க நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று அல்ஜீரிய அதிகாரிகள் வியாழனன்றே அறிவித்திருந்தாலும், ஆயுததாரிகள் பணயக் கைதிகளை பிடித்துவைத்துள்ள அந்த தொழிற்சாலையை சிறப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ள முற்றுகை நீடிக்கிறது என அல்ஜீரிய அரசு வானொலி கூறியுள்ளது. பர்மாவின் வடக்கே கெச்சின் மாநிலத்தில் அங்கு போரிட்டு வரும் கெச்சின் போராளிகளுக்கு எதிரான போரை இன்று சனிக்கிழமை காலை 06:00 மணி முதல் முதல் நிறுத்துவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே இராணுவம் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாகப் போராளிகள் அறிவித்திருந்தாலும், தற்போது முழுமையாகப் போர் நிறுத்தம் அமுலில் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 18 மாதங்களாக இராணுவம் தாக்குதல் நடத்தி வருகையில், இராணுவம் அமைதி உடன்பாட்டுக்கு வரும் எனத் தாம் கருதவில்லை என போராளிகள் தெரிவித்திருக்கின்றனர். போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அங்கு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என பர்மிய நாடாளுமன்றம் அறிவித்த சில மணி நேரத்தில் இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது. கெச்சின் விடுதலை இயக்கம் ஒன்றூபட்ட பர்மாவினுள் கெச்சின் மாநிலத்துக்கு அதிக சுயாட்சி வேண்டுமெனக் கோரிப் போரிட்டு வருகிறது. கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 ஆம் ஆண்டில் மீள ஆரம்பித்திருந்தது. கெச்சின் போராளிகளின் தளங்கள் மீது பர்மிய இராணுவம் தாக்குதல் சனவரி 2, 2013 திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)யின் நாட்டார் வழக்காற்றியல் துறையும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையமும் 'சித்திரமும் கைப்பழக்கம்' இயக்கமும் இணைந்து நிகழ்த்தும் "இந்திய சினிமா நூற்றாண்டு மக்களும் மரபுகளும்" சர்வதேச ஆவணப்பட விழா நாளை சனவரி 21, சனவரி 22 ஆகிய நாட்களில் தூய சவேரியார் கல்லூரியின் கௌசானல் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 வரை நிகழ உள்ளது. இந்நிகழ்விற்கு தூய சவேரியார் கல்லூரி அருள்திரு முனைவர் ஆ. ஜோசப் தலைமை தாங்கவும் நாட்டார் வழக்காற்றியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் நா. இராமச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தவும் உள்ளனர். இந்நிகழ்வில் முனைவர். ஆ. தனஞ்செயன் எழுதிய ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும் என்னும் நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் வெளியிடவும், தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் அருள்திரு பிரிட்டோ வின்சென்ட் நூலைப் பெற்றுக் கொள்ளவும், நூலறிமுகத்தை ஆவணப்பட இயக்குநர் கே.பி. கதிரவவேல் வழங்கவும் உள்ளனர். இந்நிகழ்வில், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் அருள்திரு முனைவர். அ. ஆரோக்கியசாமியும் நியூ செஞ்சுரி புக் ஹவுசின் நிருவாகி கிருஷ்ணமூர்த்தி கருத்துரை வழங்கவும் நாட்டார் வழக்காற்றியல் துறையின் துறைத்தலைவர் முனைவர். ஆ. தனஞ்செயன் நன்றியுரைக்கவும் உள்ளனர். ஆவணப்பட திரையீட்டின் போது நிகழவுள்ள விவாதத்தில் முனைவர் சகாயராஜ், பேராசிரியர் பெர்னார்ட் சந்திரா எழுத்தாளர் சிவசங்கர், முனைவர் மணிவண்ணன், பேராசிரியர் அமலநாதன், பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் இராதா, பேராசிரியர். ஜெய் சக்திவேல், ஆய்வாளர் சாந்தினி சாரா, பேராசிரியர் புருஷோத்தமன், முனைவர். சாந்தி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை நாட்டார் வழக்காற்றியல் துறையைச்சார்ந்த முனைவர் ஜே. ஜோசப் அந்தோணி ராஜ், பேராசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தைச்சார்ந்த முத்துராஜா மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் இயக்கத்தைச்சார்ந்த கே.பி. கதிரவவேலும் ஒருங்கிணைக்க உள்ளனர். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவும் அருட்தந்தை முனைவர். ஆல்பர்ட் வில்லியம், செயலாளர், இலயோலா கல்லூரி முன்னிலை வகிக்கவும் இந்தியப் பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த இரா. நல்லக்கண்ணு சிறப்புரையாற்றவும் கு. வி. கிருஷ்ணமூர்த்தி முந்நீர் விழவு குறித்து அறிமுகம் செய்யவும் உள்ளனர். நிகழ்வில் சுற்றுச்சூழல் குறித்த நூல்கள் வெளியிடப்பெற உள்ளன. இரண்டாம் நாள் நிகழ்வில், பேராசிரியர். லால் மோகன், முனைவர் தீபச் சாமுவேல், ஒரிசா பாலு, பேராசிரியர். ஜனகராஜன், பாமயன், கி. வரதராஜன், திருவாரூர், அரச்சலூர் செல்வம், பொறிஞர் இளங்கோவன், பொறிஞர் சா. காந்தி, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், எம். ஆர். பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கவும் உள்ளனர். நிகழ்வில் பொது மக்கள் விவாத அரங்கு, மக்கள் நீர்க் கொள்கை வரைவு உருவாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரியச் சிறு தானிய உணவு விருந்தோடு புத்தகச்சந்தையு இயற்கை உணவுப்பொருள் காட்சியும் முந்நீர் குறித்த ஒளிப்படக் கண்காட்சியும் நிகழ உள்ளன. சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று மரபுக்கலை பற்றிய இரண்டு நாள் பயிலரங்கம் தொடங்கியது. இப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் கலை பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. வீ. சிங்காரம் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி. முத்து செழியன் பயிலரங்கை தொடங்கி வைத்து, தலைமையுரை நிகழ்த்தி மையத்தின் பணிகளை விளக்கி, எதிர்கால திட்டங்களை விளக்கினார். பெரியார் பல்கலைக்கழகஆட்சிக்குழு உறுப்பினர் பேரா. சிங்காரம் பழனியாண்டி நோக்கவுரை நிகழ்த்தினார். புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிலரங்கை நடத்தினார். இந் நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா. குணசேகரன், பேரா. மூர்த்தி, பேரா. இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. நந்தகுமார் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் முனைவர் திருமூர்த்தி நிகழ்ச்சித் தொகுப்புரை வழங்கினார். 1971 விடுதலைப் போரின் பாது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபலமான இசுலாமிய மதகுரு ஒருவருக்கு வங்காளதேசத்தின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம் மவுலானா அப்துல் கலாம் அசாதுக்கு தண்டனை வழங்கியுள்ளது. இந்நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட முதல் நபர் இவராகும். இவர் தற்போது பாக்கித்தானில் வாழ்ந்து வருவதால், குற்றவாளி இல்லாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசுலாமிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் இவர் போரின் போது ஆறு இந்துக்களை கொலை செய்தும், பல இந்துப் பெண்களை பாலியன் வன்புணர்வுக்கும் ஆளாக்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மவுலானா அசாத், மற்றும் பலர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் என சில விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1971 ஆம் ஆண்டில் ஜமாத்-இ-இசுலாமி என்ற கட்சியின் மாணவர் அமைப்புத் தலைவராக அசாத் விளங்கியிருந்தார். அத்துடன், பாக்கித்தானிய இராணுவத்துக்கு உதவியாக அமைக்கப்பட்ட ரசக்கார் வாகினி என்ற துணை-இராணுவப்படையிலும் உறுப்பினராக இருந்தார். இந்த இராணுவப்படை இந்துக்கள் மீதும், வங்காளத் தேசியவாதிகளைன் ஆதரவாளர்களுக்கும் எதிராக பல தாக்குதல்களை நடத்தியிருந்தது. வங்காளதேசன் தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர், மற்றும் ஜமாத் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலர் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர். எரித்திரியாவின் முன்னாள் இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை அந்நாட்டின் தகவல்துறை அமைச்சகத்தைச் சுற்றி வளைத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். கிளர்ச்சியாளர்களின் இந்தக் கோரிகையை அடுத்து அரசு ஊடகங்கள் அனைத்தும் சில மணி நேரம் இடை நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றைய நிகழ்வு குறித்து எரித்திரிய அரசிடம் இருந்து எவ்வித அறிக்கைகளும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. கிளர்ச்சியாளர்கள் அரசைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை எனவும், 1997 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மீள அமுல் படுத்த வேண்டும் எனவே கோரியுள்ளனர் எனக் கருதப்படுகிறது. சுமார் 200 இராணுவத்தினர் இரண்டு இராணுவத் தாங்கிகளில் வந்திருந்த சுமார் 200 இராணுவத்தினர் அமைச்சைச் சுற்றி வளைத்ததாக வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன. 1993 ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்நாட்டை இசாயாசு எபெவெர்க்கி என்பவர் ஆட்சி செய்து வருகிறார். வட கொரியாவை அடுத்து உலகின் மிக இருண்ட நாடாகக் கருதப்படும் எரித்திரியாவில் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இங்கு ஒரு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 6 மில்லியன் மக்கள் வாழும் எரித்திரியாவில் 5,000 முதல் 10,000 வரையான அரசியல் கைதிகள் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் தலைவர் சென்ற ஆண்டு கூறியிருந்தார். சோமாலியாவில் கிளர்ச்சியில் ஈடுபடும் அல்-சபாப் தீவிரவாதிகளுக்கு உதவுவதாககுற்றம் சாட்டி 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை எரித்திரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. வட-கிழக்கு நைஜீரியாவில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். டம்போவா என்னும் இடத்தில் ஆப்பிரிக்க காட்டிறைச்சி விற்பனையாளர்கள் மீது இசுலாமியப் போராளிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். இசுலாமியர்கள் இவ்வகையான இறைச்சியை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. கானோ என்ற இடத்தில் டிராஃப்ட்சு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இசுலாமியத் தனிநாடு கோரும் போக்கோ அராம் போராளிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் இவர்களே அங்கு பெருமளவு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 2010 முதல் மத்திய, மற்றும் வடக்குப் பகுதிகளில் போக்கோ அராம் தாக்குதல்களில் 1,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரணை செய்வதற்கான சிறப்பு நீதிமன்றம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவே பெண்களுக்கான முதலாவது சிறப்பு நீதிமன்றமாக இருக்கும். இந்நீதிமன்றத்திற்கு இரண்டு பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். பெண்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் இங்கு மிகத் துரித கதியில் தீர்த்து வைக்கப்படும் என மூத்த நீதிபதி ஒருவர் தெரிவித்தார். "ஆண்கள் அமர்ந்திருக்கும் நீதிமன்றத்தில் பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படையாகக் கூற வெட்கப்படுவார்கள். இவ்வகையான நீதிமன்றங்கள் பெண்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்க உதவும் என மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. மாலி மற்றும் பிரெஞ்சுக் கூட்டுப் படையினர் அந்நாட்டின் வடக்கே ஒம்போரி என்ற நகரை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இசுலாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாலியின் வடக்குப் பகுதியின் முக்கிய நகரான காவோ நகரில் இருந்து 160 கிமீ தூரத்தில் உள்ளது ஒம்போரி நகரம். முன்னதாக காவோ நகருக்கு அருகில் உள்ள போராளிகளின் தளங்கள் மீது பிரெஞ்சு விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கின. அதே வேளையில், கிழக்கே நைஜர் நாட்டை இணைக்கும் பாலம் ஒன்றை போராளிகள் தகர்த்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பாலத்தினூடாகவே ஆப்பிரிக்கப் படையினர் தமது தளம் ஒன்றை அமைக்க எண்ணியிருந்தனர். ஆனாலும், தீவிரவாதிகளின் பகுதிக்குள் நுழையத் தமக்கு வேறு வழிகள் உள்ளன என மாலி அரசு தெரிவித்துள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகள் மாலிக்கு இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மாலியில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளுக்கு உதவத் தமது உளவு விமானம் ஒன்றை அனுப்ப பிரித்தானியா முன்வந்துள்ளது. இத்தகைய விமானங்கள் லிபியாவில் 2011 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2012 பெப்ரவரியில் இரண்டு எதிரணிக் கால்பந்து ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 21 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் போர்ட் செட் சிறையில் இடம்பெற்ற வன்முறைகளில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எகிப்தின் முன்னாள் அதிபர் ஒசுனி முபாரக் பதவியில் இருந்து அகற்றப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவின் போது வன்முறைகள் இடம்பெற்ற வேளையிலேயே இத்தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எகிப்தியப் புரட்சியை காட்டிக் கொடுத்து விட்டதாக இன்றைய அரசுத்தலைவர் முகமது மோர்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். எகிப்து முழுவதும் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டங்களின் போது குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மிலோசு செமான் 55% வாக்குகளும், வெளியுறவுத்துறை அமைச்சர் கரெல் சுவார்சென்பர்க் 45% வாக்குகளும் பெற்றனர். தற்போது அரசுத்தலைவராகப் பதவியில் இருக்கும் வாத்சுலாவ் கிளவுசு பத்தாண்டுகள் பதவியில் இருந்த பின்னர் இவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் பதவியில் இருந்து விலகுவார். செக் குடியரசின் அரசுத்தலைவருக்கு முழுமையான நிறைவேற்றதிகாரம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தல், அரசியலமைப்பு நீதிமன்றம், மற்றும் மத்திய வங்கி போன்ற அமைப்புகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமித்தல் போன்ற முக்கிய சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அரசின் நாளாந்தப் பணிகளைக் கொண்டு நடத்தும் அதிகாரம் பிரதமருக்கே உண்டு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் செமான் அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அவருக்கு அவரது சொந்தக் கட்சியினரே வாக்களித்திருக்கவில்லை. பெருமளவு மது அருந்துபவரும், தொடர்ச்சியான புகை பிடிக்கும் பழக்கமும் உடையவர் செமான் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் தற்போது அரசியலில் குதித்துள்ளார். சமூக சனநாயகக் கட்சித் தலைவரான 70 வயதாகும் மிலோசு செமான் வாத்சுலாவ் கிளவுசின் அரசில் 1998 முதல் 2002 வரை பிரதமராகப் பதவி வகித்தார். நீங்கள் மேலே குறிப்பிட்ட விக்கியில் செயற்பாடற்றோர் தொகுதியில் உள்ளடங்குகிறீர். அந்த விக்கியிடம் தனக்குச் சொந்தமான உரிமை மீள்நோக்கு இல்லாததால், உலகளாவிய விக்கிக்கு இது பொருத்தமானது. விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. பிரேசிலின் தெற்குப் பகுதியில் சாண்டா மரீயா என்ற நகரில் அமைந்துள்ள பிரபலமான இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி குறைந்தது 232 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இறந்தவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்கள் எனக் கூறப்படுகிறது. விடுதியில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் இசைக்குழுவினர் திடீரென வாணவெடிகளை எறிந்ததிலேயே தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பலர் நச்சு வாயுவை சுவாசித்ததனாலும், மேலும் பலர் நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் எரிகாயங்களுக்கு உள்ளாயினர். சிலியில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த அரசுத்தலைவர் தில்மா ரூசெஃப் பயணத்தை இடை நிறுத்தி பிரேசில் திரும்பியுள்ளார். சாண்டா மரியாவில் அமைந்துள்ள கிஸ் கிளப் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானதாகும். வார இறுதி நாட்களில் இங்கு 2,000 முதல் 3,000 வரையானோர் கூடுகின்றனர். பல்கலைக்கழகங்களுக்குப் பிரபலமான இந்நகரத்தில் சாண்டா மரியா நடுவண் பல்கலைக்கழகம் உட்பட பல தனியார் பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளன. 27,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை, காவல் துறை சனவரி 28 அன்று கைது செய்துள்ளது. கசக்ஸ்தானின் வணிகத் தலைநகரான அல்மாத்தியில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். கசக்ஸ்தானின் வடக்கு நகரான கொக்செத்தாவுவில் இருந்து புறப்பட்ட விமானம் உள்ளூர் நேரம் 1300 மணிக்கு விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என ஸ்காட் ஏர்லைன்சு நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை, ஆனாலும் வானில் பெரும் மூடுபனி காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் தீயோ அல்லது வெடிப்புகளோ இடம்பெறவில்லை என்றும், ஆனாலும் விமானம் தரையில் மோதியுள்ளதென்றும் அல்மாத்தி நகர அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்டக் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உயர் இராணுவ அதிகாரிகள் பயணம் செய்த இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் கொல்லப்பட்டனர். சர்ச்சைக்குரியதாகியுள்ள திரைப்படமான கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’, இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுமைக்குமாக 40 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் பெங்களூரில் 17 திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ‘அரங்கு நிறைந்த காட்சிகளாக’ திரைப்படம் ஓடிக் கொண்டிருப்பதாக கருநாடக மாநிலத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ள எச். டி. கங்கராஜு தெரிவித்துள்ளார். “எல்லா இசுலாமியர்களும் தீவிரவாதிகள் அல்லர்” எனும் வரி இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை இசுலாமியத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவினால் எழுப்பப்பட்டதாக பெங்களூர் நகர காவல்துறை ஆணையர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி தெரிவித்தார். தான் இந்தப் படத்தைப் பார்த்ததாகவும், “ஆட்சேபணைக்குரிய கருத்துகள் எதுவும் திரைப்படத்தில் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனவரி 25 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இத்திரைப்படம், தமிழ்நாட்டில் இரு வார காலத்திற்கு தடைக்குள்ளாகியுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியமையே இத்தடைக்குக் காரணமாகும். முன்னதாக காவல்துறைப் பரிந்துரைப்பின்படி, கருநாடக மாநிலத்தில் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. மிலாது நபி மற்றும் குடியரசு தினம் வருவதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. சனவரி 26 அன்று பத்ராவதியில் நிகழ்ந்த ஒரு குழு மோதலும், தாமதமான வெளியிடலுக்குக் காரணம். லோக்பால் சட்ட முன்வரைவு: இந்திய நடுவண் அரசு மீது சமூக சேவகர் அண்ணா அசாரே குற்றச்சாட்டு]] # உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு எச்சரிக்கை # உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: புலனாய்வு ஆவணங்களைத் தருவதற்கு இத்தாலி நீதிமன்றம் மறுப்பு மதுவின் மீதான முழுமையானத் தடைக்காகப் பணியாற்றுவேன்: வைகோ பேச்சு]] இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு]] இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணம்: தமிழகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள்]] # சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ. நெடுமாறன் கைது # இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது # போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரம்: தமிழகத்தில் அதிர்ச்சி உணர்வுகள் எழுந்துள்ளன கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு]] கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: தமிழக அரசின் தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு]] கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் உரையாற்றினார்]] சொந்தமாக எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இங்கு வைக்கப்படும்! இசுலாமியப் போராளிகள் வசமுள்ள முக்கிய நகரான மாலியின் வடக்குப் பகுதியில் உள்ள கிடால் நகரினுள் தாம் நுழைந்துள்ளதாக பிரெஞ்சுப் படையினர் அறிவித்துள்ளனர். கிடால் விமான நிலையத்தை பிரெஞ்சுப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து அங்கு பல விமானங்களும் உலங்கு வானூர்திகளும் இரவிரவாகத் தரையிறக்கப்பட்டன. இசுலாமியப் போராளிகள் நகரை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 9:30 மணியளவில் விமான நிலையத்தைக் கைப்பற்றிய படையினர் பின்னர் நகரினுள் நுழைந்ததாக கிடால் நகரப் பிராந்தியப் பேரவையின் இடைக்காலத் தலைவர் அமினி மைகா தெரிவித்தார். முன்னதாக பிரெஞ்சு மற்றும் மாலிப் படையினர் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காவோ, திம்பக்து நகரங்களை எவ்வித எதிர்ப்புகளும் இன்றிக் கைப்பற்றினர். மாலியின் முன்னாள் காலனித்துவ அரசான பிரான்சு இம்மாத ஆரம்பத்தில் மாலியின் வடக்கே இசுலாமியப் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது. அல்-கைதாவுடன் தொடர்புள்ள அன்சார் தைன் இயக்கத்தின் தலைவர் இயாத் அக் காலி கிடாலின் வடக்கே மலைப்பகுதிக்குள் சென்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அசவாத் இசுலாமிய இயக்கம் தாம் தற்போது பிரெஞ்சுப் படையினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்துள்ளது. தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தாம் நிராகரித்து விட்டதாகவும், அமைதியான உடன்பாட்டுக்கு வரவே தாம் விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கமும் (MNLA) இவ்வாறே அறிவித்துள்ளது. ஆனாலும், மாலியின் இராணுவத்தினரைத் தாம் திரும்புவதற்கு அனுமதியோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். மக்களுக்கு எதிரான பல குற்றச் செயல்களை அவர்கள் புரிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச்சு மாதத்தில் மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இசுலாமியப் போராளிகள் ஆலியின் வடக்குப் பகுதியை மாலி இராணுவத்தினரிடம் இருந்து மிக இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டனர். தாம் கைப்பற்றிய பகுதிகளில் இசுலாமிய சரியா சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தினர். மாலியின் தலைநகர் பமாக்கோவில் இருந்து வடகிழக்கே 1,500 கிமீ தூரத்தில் கிடால் நகரம் அமைந்துள்ளது. இந்த வழக்கில் நேற்றைக்கும் இன்றைக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக அரசு விதித்த தடையினை எதிர்த்து கமல் ஹாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நேற்று நீதிபதி வெங்கட்ராமன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். படத்தினை பார்வையிட்ட நீதிபதி, தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, இந்த உத்தரவினை எதிர்த்து இன்று மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி எலிபி தர்மராவ் (பொறுப்பு) மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் இவர்களை உள்ளடக்கிய நடுவர் ஆயம், நேற்று நீதிபதி வெங்கட்ராமனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்தது தமிழக அரசின் தடை தொடரும்" எனவும், இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த புதன்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறியுள்ளது. திபெத்தியர்கள் எட்டுப் பேரைத் தீக்குளிக்கத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட திபெத்திய மதகுரு ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனையும், அவரது உறவினர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. லொராங் கொன்ச்சொக், 40, மற்றும் லொராங் செரிங்கு, 31, ஆகியோருக்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் தமது குற்றச்சாட்டுகளை வற்புறுத்தலின் பேரிலேயே ஒப்புக்கொண்டுள்ளனர் என திபெத்திய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தீக்குளித்தவர்கள் பலர் திபெத்திய மதகுருக்களும் சந்நியாசினிகளும் ஆவர். கூடுதலான மத சுதந்திரம் கோரியும், ஆன்மிகக் குரு தலாய் லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் இவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், இசுலாமிய அமைப்புகளும் நடிகர் கமல் ஹாசனும் ஒரு உடன்படிக்கையினை கொண்டுவர முற்பட்டால் அந்தப் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். இத்திரைப்படத்தினை இசுலாமிய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களுக்கு கமல் ஹாசன் முன்கூட்டியே திரையிட்டுக் காட்டியிருந்தால், இந்த சிக்கல்களை வராமல் தவிர்த்திருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்தார். கமல் ஹாசன் மீது தனக்கு மனவெறுப்பு எதுவும் கிடையாது என தெரிவித்த அவர், சொந்த விருப்பு – வெறுப்புகளின்பேரில் தடை உத்தரவினை தாம் பிறப்பிக்கவில்லை எனவும் கூறினார் பேச்சுரிமைக்கு முட்டுக்கட்டை போடும் பேச்சுக்கே இடமில்லை" என்றும் அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஜெயலலிதா மேலும் பேசுகையில் சட்டம், ஒழுங்கிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ‘மிகவும் உண்மை’. இசுலாமிய அமைப்புகள் பல தமது எதிர்ப்புப் போராட்டங்களை அறிவித்திருந்தார்கள். எனது அரசின் முதன்மையான நோக்கம், அமைதியை நிலைநாட்டுவதாகும். தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் எனது முதல் மற்றும் தலையாய முன்னுரிமை – சட்டம், ஒழுங்கினை பாதுகாப்பதும் அமைதி நிலவுவதை உறுதி செய்வதுமாகும். படம் திரையிடப்படும் 524 திரையரங்குகளுக்கு பாதுகாப்புதரும் அளவிற்கு காவல்துறையில் போதிய ஆள்பலம் இல்லை என்றார். செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்னதாக, உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றினை முதல்வர் நடத்தியிருந்தார். பேராசிரியர் நா. வானமாமலை (1917 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகள், வழக்கங்களை சேகரித்து பதிப்பித்தார். மெக்சிக்கோ நகரில் பெமெக்சு என்ற பிரபல எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற பெரும் வெடிப்பை அடுத்து கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இடிபாடுகளிடையே சிக்கியுள்ளவர்களை மீட்க ஐநூறுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இவ்வெடிப்புக்கான காரணம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெமெக்சு நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலையில் அலுவலகத்தின் கீழ் மாடியில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. அந்நேரத்தில் பணியாளர்களின் மணி மாற்றம் நிகழ்ந்த நேரமாதலால், அங்கு பெருமளவு பணியாளர்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்சிக்கோ நகரின் முக்கிய வணிக மையத்தில் இக்கட்டடம் அமைந்துள்ளது. மெக்சிக்கோ அரசுத்தலைவர் என்றிக்கே பீனா நீட்டோ சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகள் குறித்து அறிந்து கொண்டார். மெக்சிக்கோ நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறான பெரும் வெடிப்பு நிகழ்வது இதுவே முதற் தடவையாகும். கடந்த சில ஆண்டுகளாக பெமெக்சு நிறுவனத்தில் பல குறிப்பிடத்தக்க விபத்துகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், மெக்சிக்கோவின் வடக்கே இந்நிறுவனத்தின் எரிவாயுத் திட்டம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 30 பேர் வரை இறந்தனர். தேர்தல் ஆணையத்தைப் போன்று மத்திய புலனாய்வுத்துறை (CBI – Central Bureau of Investigation) மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC – Central Vigilance Commission) போன்றவையும் தன்னிச்சையாக செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும் என அண்ணா ஹசாரே கோரினார். இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர் தேவைப்படின் மீண்டும் ராம்லிலா மைதானத்திற்குச் செல்வேன்" என தெரிவித்தார். இன்னொரு உண்ணாவிரதப் போராட்டம் குறித்து இவ்விதம் அவர் சூசகமாக தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டதாகவும் அண்ணா ஹசாரே குற்றஞ்சாட்டினார். "நாடு முழுவதும் பயணித்து அரசின் வஞ்சகத்தன்மையை மக்களுக்கு உணர்த்துவேன்; தூய்மையானவர்களை 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்குமாறு மக்களை ஊக்கப்படுத்துவேன்" என அவர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். முன்னாள் சோவியத் சர்வாதிகாரி யோசப் ஸ்டாலினுடன் தொடர்புடைய அனைத்து நினைவுச் சின்னங்களையும் நீக்குவதற்காக அப்போதைய அரசு 1961 ஆம் ஆண்டில் ஸ்டாலின்கிராத் நகரத்தின் பெயரை வோல்ககிராத் என அதிகாரபூர்வமாக மாற்றியது. தற்போது வோல்ககிராத் நகர உள்ளூராட்சி மன்றம் ஆண்டுக்கு ஆறு நாட்கள் தனது நகரின் பெயரை "ஸ்டாலின்கிராத் சாதனையாளர் நகரம்" எனப் பயன்படுத்தவிருக்கிறது. பெப்ரவரி 2, மே 9, சூன் 22, ஆகத்து 23, செப்டம்பர் 2 மற்றும் நவம்பர் 19 ஆகியவையே அந்நாட்களாகும். இந்நாட்கள் அனைத்தும் இராணுவ வெற்றிகளை நினைவுகூரும் நாட்களாகும். இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றி தற்போதும் உயிருடன் இருப்பவர்கள் பலரின் வேண்டுகோளின் படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்துவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். ஸ்டாலினை மீண்டும் பெரும் போர்த் தலைவராக ஆக்க அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் முனைப்புக் கொண்டுள்ளார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இது அரசியல் நோக்கமுடையது என எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒலெக் மிக்கேயெவ் கூறியுள்ளார். ஸ்டாலின்கிராத் என்ற பெயரை நிரந்தரமாக மாற்ற வேண்டும் என இப்பிராந்தியத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோரி வருகின்றன. கடந்த நூற்றாண்டில் இந்நகரம் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தது. த்சாரித்சின் என இருந்த ஆரம்பப் பெயர் 1925 ஆம் ஆண்டில் உருசிய உள்நாட்டுப் போரில் போல்செவிக் படைகளுக்கு ஸ்டாலின் தலைமை வகித்ததை நினைவு கூர்ந்து ஸ்டாலின்கிராத் என மாற்றப்பட்டது. படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த சில முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேற்று சனிக்கிழமை இரவு அரசுச் செயலகத்தில் சுமார் நான்கு மணி நேரம் கலந்துரையாடிய பின்னர் கமல் ஹாசன் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், படத்தில் வரும் ஏழு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும், அதன் பின்னர் தணிக்கைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ஆர். இராஜகோபால் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. கமல் ஹாசன் தரப்பில் அவரின் சகோதரர் எஸ். சந்திரஹாசன் கலந்துகொண்டார். முஸ்லிம் அமைப்புகளின் தரப்பில் 'தமிழ்நாடு முஸ்லிம் சமூக, அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு' மற்றும் 'தமிழ்நாடு தொவீத் ஜமாத்' அமைப்புகளின் உறுப்பினர்கள் 15 பேர் கலந்துகொண்டனர். "இப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உதவிய தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். படக்காட்சிகளில் சில மாற்றங்களைச் செய்து வெளியிட முஸ்லிம் தலைவர்களும் நானும் உடன்பட்டுள்ளோம்,” என்றார் கமல் ஹாசன். எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்த கமல் ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை விரைவில் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் சனவரி 25 ஆம் நாள் தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள், இலங்கை, மலேசியா தவிர்த்த ஏனைய நாடுகளில் குறித்த நாளில் வெளியிடப்பட்டது. கருநாடகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் பின்னர் அதற்கிருந்த தடையை நீக்கின. இலங்கையில் இன்னும் இத்தடை அமுலில் உள்ளது. உலக நாடுகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் மண்டபம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு சனவரி 29, 2013 கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: தமிழக அரசின் தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு சனவரி 30, 2013 கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் உரையாற்றினார் சனவரி 31, 2013 இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டத்தில் உள்ள பாத்லியா என்ற இடத்தில் அமைந்துள்ள டைனசோர் கூடுகளில் உள்ளூர் நபர்கள் டைனசோர் முட்டைகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் முகமாக மாநில சட்டமன்றத்தில் "தொல்லுயிர் புதைபடிவங்கள் பாதுகாப்புச் சட்டம்" கொண்டுவரப்படவுள்ளது. பாத்லியாவில் ஏறத்தாழ 89 எக்டையர் பரப்பளவு நிலப்பகுதி 2007 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பற்ற பிரதேசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கு டைனசோர் முட்டைகளை சட்டவிரோதமாக வேட்டையாடுவோர் தொகை அதிகரித்துள்ளது. "இதுவரையில் எத்தனை முட்டைகள் இங்கிருந்து அகற்றப்பட்டது என்பதற்கு சரியான கணக்கு இல்லை… ஆனாலும், புதிய சட்டமூலம் இவற்றை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் சட்டவிரோதமாக்குகிறது என மத்தியப் பிரதேச மாநில காட்டுவளத்துறை அமைச்சர் சர்தாஜ் சிங் தெரிவித்தார். கூட்டத்தில் தொடர்ந்து பேசிய வைகோ மது அருந்தும் தீயப் பழக்கம் ஏராளமான குடும்பங்களைச் சிதைத்து வருகிறது. இளைஞர்களின் மது அருந்தும் பழக்கம், குடும்பத்தையும் சமூகத்தையும் நிலைகுலைய வைக்கிறது. எப்பாடுபட்டாவது நாம் இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும். பெரியார், காமராசர், ராஜாஜி போன்ற தலைவர்கள் மதுவின் மீதான தடைக்குக் குரல் கொடுத்தார்கள். குற்றங்கள் பெருகுவதற்கு 'மது அருந்துதல்' ஒரு நேரடிக் காரணம் என்பது எனது கருத்து" என்றார். 1971 ஆம் ஆண்டில் பாக்கித்தானுடனான விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தின் முக்கிய இசுலாமியக் கட்சியின் தலைவருக்கு அந்நாட்டின் வங்காளதேசத்தின் போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. ஜமாத்-இ-இசுலாமி என்ற தீவிர இசுலாமியக் கட்சியின் தலைவர் அப்துல் காதர் முல்லா ஆயுள்தண்டனை பெற்றார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். முல்லாவுக்கான தீர்ப்பு நாடெங்கும் எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. திங்கட்கிழமை அன்று ஆயிரக்கணக்கானோர் தலைநகர் டாக்காவில் கூடி தமது தலைவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே கைகலப்பும் இடம்பெற்றுள்ளன. தமது அரசியல் எதிரிகளை ஓரங்கட்டவே அரசு இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு ஜமாத் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஜமாத் இசுலாமியின் தலைவர்கள் சிலர், மற்றும் வங்காளதேச தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட மொத்தம் 12 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து பல பசிபிக் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது, ஆனாலும் இரண்டு மணி நேரத்தின் பின்னர் இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. சொலமன் தீவுகள், வனுவாட்டு, நவூரு, பப்புவா நியூ கினி, துவாலு, நியூ கலிடோனியா, கோசுரே, பிஜி, கிரிபட்டி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுப், பின்னர் நீக்கப்பட்டன. இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச, எதிர்வரும் 8 ஆம் தேதியன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவிற்கும், ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதிக்கும் பயணிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. மகிந்த ராசபக்சவின் இந்திய வருகை மீதான காரசாரமான விவாதங்கள், தமிழகத்தின் தனியார் செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன. [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் யாழ். தினக்குரல் பத்திரிகைகளை எடுத்துச் சென்ற விநியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. குறித்த விநியோகத்தர் யாழ் நகரில் இருந்து பருத்தித்துறைக்கு விசையுந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது புத்தூர் சந்திக்கு அண்மையில் அவர் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. காயமடைந்த நிலையில் வீதியோரமாக நின்றிருந்த அவரை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தாக்குதல் நடந்த இடத்துக்கு விரைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் எரிந்த நிலையில் இருந்த விசையுந்தையும், பத்திரிகைகளையும் பார்வையிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். சென்ற மாதம் யாழ். உதயன் பத்திரிகைகள் வடமராட்சி குங்கர் கடையடிப்பகுதியில் வைத்து தீயிடப்பட்டது. ஊழியர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. கணிதவியலாளரும் மத்திய மிசூரிப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான கேர்ட்டிஸ் கூப்பர், இதுவரை அறியப்பட்டவற்றில் மிகப்பெரிய முதன்மை எண்ணைக் கண்டுபிடித்துள்ளார். சனவரி 25ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இது பெப்ரவரி ஆரம்பத்திலிருந்து பல்வேறு நபர்களாலும், பல்வேறு மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்களைப் பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பின்னர் இது பற்றிய செய்தி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. GIMPS என்று அறியப்படும் கணினி வேலைத்திட்டத்தின் கீழ் இம் முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்துக்கான கணனி செய்நிரலான பிரைம்95 ஆனது பல்கலைக்கழகத்திலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் செயற்படுத்தப்பட்டது. சனவரி 25 அன்று இந்த முதன்மை எண், பல்கலைக்கழகக் கணினி ஒன்றிலிருந்து GIMPS சேவையகக் கணனிக்கு அறிவிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடிப்பதற்காக இக் கணினி 39 நாட்கள் தொடர்ந்து ஓய்வின்றி செயற்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஏனைய பெறுபேறுகளைப் போலவே இக் கண்டுபிடிப்பும் பல்வேறு தரப்பினராலும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அறிவிக்கப்பட்டது. இதற்காக மூன்று தனித்தனி சரிபார்ப்புக்கள் நடத்தப்பட்டன. இதற்காக சக்திவாய்ந்த கணனி வன்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதுடன் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை தேவைப்பட்டன. இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் இந்தியப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள் நடந்துள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடியினை ஏற்றுதல், தொடர்வண்டியை மறித்தல், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு என பலதரப்பட்ட போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மைய தொடர்வண்டி நிலையத்திலும், தாம்பரம் தொடர்வண்டி நிலையத்திலும் ‘தொடர்வண்டி மறியல்’ போராட்டத்தை இன்று 'நாம் தமிழர்' கட்சியினர் நடத்தினர். கொருக்குப்பேட்டையில் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியினர் மின்சாரத் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், வீடுகளில் கறுப்பு நிறக் கொடிகளை ஏற்றி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். உருவபொம்மையை தீ வைத்துக் கொளுத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 65 பேரை காவல்துறை கைது செய்தது. உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள கணியூர் எனுமிடத்தில் உருவபொம்மையை தீ வைத்துக் கொளுத்திய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 6 பேர், காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] காவோ என்ற வடக்கு மாலி நகரில் தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மாலியில் இவ்வாறான தாக்குதல் நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும். இன்று காலை 6:00 மணியளவில் இராணுவத்தினரை நோக்கி விசையுந்து ஒன்றைச் செலுத்தி வந்த போராளி ஒருவர் தன்னுடலில் கட்டப்பட்டிருந்த குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார். இதேவேளையில், மாலியின் தலைநகர் பமாக்கோவில் மாலிப் படையினரிடையே துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினர் சிலர் சிறப்பு துணை இராணுவமுகாம் ஒன்றைத் தாக்கியதில் பல துணை இராணுவத்தினர் காயமடைந்தனர். வடக்கு மாலியில் காவோ நகரமே மக்கள் அதிகம் வாழும் நகரமாகும். கடந்த ஆண்டு இந்நகரை போராளிகள் தம் வசப்படுத்தியிருந்தனர். கடந்த சனவரி 11 இல் போராளிகளை அடக்க பிரான்சு தனது 4,000 படையினரை வடக்கு மாலிக்கு அனுப்பியிருந்தது. காவோவுக்கு அருகில் நிலக்கண்ணி ஒன்று வெடித்ததில் நான்கு மாலி இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த போராளி ஒருவருக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று தூக்கிலிடப்பட்டார். 2001 தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்ட அச்சம்பவத்தில் தாம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அஃப்சல் குரு எப்போதும் கூறி வந்துள்ளார். 2001 டிசம்பர் 13 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தை ஊடுருவிய ஐந்து போராளிகள் பூந்தோட்டக் காவலாளி ஒருவரையும், எட்டு காவல்துறையினரையும் சுட்டுக் கொன்றனர். போராளிகள் அனைவரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை பாக்கித்தானின் ஆதரவில் இயங்கும் ஜையிஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பே நடத்தியது என இந்தியா குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டை பாக்கித்தான் மறுத்து வந்தது. இத்தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக முன்னாள் பழ வியாபாரி அஃப்சல் குரு, மற்றும் சவுக்காத் உசைன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், மேன்முறையீட்டை அடுத்து இரண்டாமவரின் தண்டனை 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும் இருவர் போதிய ஆதாரமின்மையால் விடுவிக்கப்பட்டனர். ஜையிஷ்-இ-முகம்மது குழுவில் உறுப்பினரான குரு மீது தாக்குதலுக்கு ஆயுதங்கள் பெற்றுக் கொடுத்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டது. கியூரியோசிட்டியின் தானியங்கிகள் 6 செமீ ஆழத்தில் இருந்து எடுத்த பாறைத் துண்டுகளை முதலில் சல்லடைப் பகுப்பாய்வு செய்த பின்னரே அவற்றை விண்கலத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு மேலதிய ஆய்வுக்காகக் கொண்டு செல்லும். வேறோர் உலகம் ஒன்றில் இவ்வாறு மாதிரிகள் எடுத்துப் பகுப்பாய்வு செய்வது இதுவே முதற் தடவையாகும். இது ஒரு பெரும் சாதனை என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய்க் கோளின் முன்னைய சுற்றுச் சூழலில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளதா என்பதை அறிவதே கியூரியோசிட்டியின் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும். கியூரியோசிட்டி விண்கலம் 2012 ஆகத்து மாதம் 6 ஆம் நாள் செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியாக் கண்டத்தின் வருடாந்திர விடுமுறைக் காலத்தைக் குறிக்கும் சீனப் புத்தாண்டினை, பெரும்பாலான ஆசிய நாடுகளில் கோடிக்கணக்கானோர் கொண்டாடி வருகின்றனர். ‘டிராகன் வருடம்’ முடிந்து ‘பாம்பு வருடம்’ ஆரம்பமாகிறது. சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான நள்ளிரவில் (நேற்றிரவு வாண வேடிக்கைகளுடன் குடும்பத்தினர் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடந்தன. சீன மக்களால் ‘பாம்பு’ என்பது நல்லறிவு, அழகு, புத்திசாலித்தனம் இவற்றோடு தொடர்புபடுத்தப்படுகிறது; பெருமைமிக்கதாகவும் கோபத்தன்மை உடையதாகவும் கருதப்படுகின்றது. சீனாவில் ஏறத்தாழ 20 கோடி பேர் ‘குடும்பத்துடன் ஐக்கியமாகும் நிகழ்வு’களுக்காக பயணம் செய்திருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. விடுமுறைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அடுத்த ஒருவார காலத்திற்கு அரசு அலுவலகங்களும், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக பரிவர்த்தனைகளும் மூடப்படும். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், வழக்கத்தைவிட குறைவான அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், பட்டாசு விற்பனையில் 37 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாசுக்கட்டுப்பாட்டினைக் கருத்தில்கொண்டு நகர நிர்வாகம் கேட்டுகொண்டதன்பேரில், பொதுமக்கள் குறைந்த அளவில் பட்டாசுகளை கொளுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுசுதிரேலியப் பெருநகர் சிட்னியிலும் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. சீன மரபுவழியைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் அவுசுதிரேலியாவில் வாழ்கின்றனர். இந்தியாவின் வடக்கே அலகபாத் நகரத் தொடருந்து நிலையம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 39 பேர் காயமடைந்தனர். இந்துக்களின் முக்கிய திருவிழாவான கும்பமேளாவில் கலந்து விட்டுத் திரும்பியவர்களே இவ்வாறு நெரிசலில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அசாம் கான் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தொடருந்து நிலைய மேடையில் அளவுக்கதிகமான பயணிகள் கூடியிருந்தமையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக மாநில ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார். தொடருந்து நிலையத்தில் உள்ள பாதசாரிகளுக்கான பாலம் உடைந்து வீழ்ந்ததாலேயே நெரிசல் ஏற்பட்டதெனக் கூறப்படுவதை அமைச்சர் மறுதலித்துள்ளார். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் சிறுவர்களும் ஆவர். இவ்வாண்டு கும்பமேளா விழாவில் சுமார் 30 மில்லியன் இந்துக்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பண்டிகையே உலகின் மிகப் பெரிய மனித ஒன்றுகூடல் எனக் கூறப்படுகிறது. மொத்தம் 55 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமையே முக்கிய நாளாகும். இந்நாளில் இந்துக்கள் தமது பாவங்களைக் களைவதற்காக கங்கையும் யமுனையும் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினர். இவ்வாண்டு பண்டிகை மகா கும்பமேளாவும் ஆகும். இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகிறது. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2005 ஆம் ஆண்டில் இறந்ததை அடுத்து செருமனியில் பிறந்த கருதினால் யோசப் ரட்சிங்கர் பதினாறாம் பெனடிக்ட் என்ற பெயரில் 265வது திருத்தந்தை ஆனார். கடந்த எட்டு ஆண்டுகளாகத் திருத்தந்தையாகப் பதவியில் இருக்கும் 85 வயதான திருத்தந்தை பெனடிக்ட் கத்தோலிக்கத் திருச்சபைக்குத் தலைமை வகிப்பதற்கு இந்த வயது மிக அதிகம் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளைச் சரியாக ஏற்று நடத்த முடியாத நிலையில் இம்முடிவைத் தான் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள திருத்தந்தை, 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து இம்மாதம் 28ம் நாள் உரோமை நேரம் இரவு 8 மணியிலிருந்து பணி ஓய்வு பெறுவதாக திருத்தந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாண்டு ஈஸ்டர் விழாவிற்கு முன்னர் புதிய போப்பாண்டவர் தெரிவு செய்யப்படுவார் என வத்திக்கான் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக போப்பாண்டவர் ஒருவர் பதவி விலகுவது வத்திக்கான், மற்றும் உலகத் தலைவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக 1415 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் கிரெகரி கத்தோலிக்கத் திருச்சபையில் சமயப்பிளவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகினார். வெளிநாட்டுப் பயணங்கள் எதையும் இனி மேற்கொள்ள வேண்டாம் என திருத்தந்தையின் மருத்துவர் அவருக்கு அண்மையில் அறிவுறுத்தியிருந்ததாக அவரின் உடன்பிறந்தவரான கியார்க் ரட்சிங்கர் செய்தியாளரிடம் தெரிவித்தார். இதனால் பதவியில் இருந்து விலகுவதற்கு சில காலத்திற்கு முன்னதாகவே முடிவு செய்திருந்ததாக அவர் தெரிவித்தார் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் அவர் தலையிடமாட்டார் என கியார்க் ரட்சிங்கர் கூறினார். ஐரோப்பியர் ஒருவரே அடுத்த திருத்தந்தையாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போதைய மிலான் பேராயர் அஞ்செலோ ஸ்கோலா, பெனடிக்டின் முன்னாள் மாணவர் ஆஸ்திரியரான கிறிஸ்தோப் ஸ்கோன்புரொன் ஆகியோரின் பெயர்கள் பத்திரிகைகளில் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், கானா நாட்டின் கருதினார் பீட்டர் டர்க்சன், நைஜீரிய கருதினால் பிரான்சிசு அரின்சே ஆகியோருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 28ம் தேதி ஓய்வு பெறும் திருத்தந்தை, அதன்பின் திருத்தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சிறிது காலம் தங்கியிருப்பார் எனவும், அதன் பின்னர் வத்திக்கானுக்கு உள்ளேயுள்ள அடைபட்ட கன்னியர் மடத்தில் செபம் மற்றும் தியானத்தில் தன் வாழ்வைச் செலவிடுவார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். பதினாறாம் பெனடிக்ட் பொதுவாக கொஞ்சம் பழைமைவாதியாகப் பார்க்கப்படுகிறார். கருத்தடை விவகாரத்தில், உயிருக்கு ஒரு புனிதத்துவம் இருக்கிறது, அதனைக் கெடுக்கக்கூடாது என்று தார்மீக துல்லியத்தை வலியுறுத்தியிருந்தார். தனது பதவிக்காலத்தில், கத்தோலிக்க திருச்சபையை ஆக்கிரமித்திருந்த சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இவர் எதிர்கொண்டார். கடந்த திங்கட்கிழமையன்று, தான் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் இப்போராட்டங்கள் குறித்து வைகோ விளக்கியிருந்தார். அந்த அறிக்கையில் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காக கிர்கிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவுக்கு அவர் நாட்டில் இல்லாத நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. குர்மான்பெக்கின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவருமான சானிசுக்கு ஆயுள்காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் மீது படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் முன்னர் மத்திய ஆசிய நாடுகளிலேயே நிலையான அரசாங்கத்தைக் கொண்ட நாடாகத் திகழ்ந்தது. 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் அரசுத்தலைவர் அஸ்கார் அகாயெவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பாக்கியெவ் அரசுத்தலைவரானார். கிருட்டிணகிரி கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுப்பையா மற்றும் பத்மவாணி கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்; இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையைச்சார்ந்த உதவிப்பேராசிரியர்கள் முனைவர் இரா. சுப்பிரமணி, மா. தமிழ்ப்பரிதி, முனைவர் பட்ட ஆய்வாளர் முரளி ஆகியோர் தங்கள் வானொலி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்; மாணவர்கள் மாதிரி வானொலி நிகழ்ச்சிகளை வழங்கினர். இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் இணைப்பேராசிரியர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக, தேசிய நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. நந்தகுமார் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் நாளை யுனெஸ்கோவின் பரிந்துரையின்படி, வானொலி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் வானொலியின் பயனை உலகறியச்செய்யும் வகையிலும் உலக வானொலி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. உக்ரைனின் கிழக்கே தனியெத்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று நேற்றுத் தரையிறங்குகையில் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பற்றியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனராயினும், பெரும்பாலான பயணிகள் தாமாகவே விமானத்தை விட்டு வெளியேறியதாக விமானநிலையப் பேச்சாளர் கூறினார். ஒடேசாவில் இருந்து தனியெத்ஸ்கிற்கு காற்பந்தாட்ட இரசிகர்களை ஏற்றி வந்த அண்டோனொவ் ஆன்-24 ரக விமானமே விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 45 பேர் இருந்ததாகவும், 39 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையில் இருந்து 700 மீட்டர்கள் தொலைவில் வயல் பகுதி ஒன்றில் தரையிறங்கி மூன்று பகுதிகளாக சிதறியது. விபத்துக்கான காரணங்களை அறிய உக்ரைன் பிரதமர் மிக்கோலா அசாரொன் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களில் ஒடேசாவின் பல அரசு அதிகாரிகளும் அடங்குவர். அண்மைக் காலங்களில் ஆன்-24 விமானங்கள் சில விபத்துக்குள்ளாகியுள்ளன. 2010-2011 காலப்பகுதியில் நான்கு விபத்துகளில் 18 பேர் கொல்லப்பட்டனர். விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. இத்தாலியின் விமானத் தயாரிப்பு மற்றும் ஆயுதத் தளவாட நிறுவனமான ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான ‘அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’டுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், நேற்று விடுத்த ஒரு அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வணிக பரிவர்த்தனையின்போது இந்திய நிறுவனத்துக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கோ கையூட்டு தரப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டுள்ள அறிக்கையில், தொடர்பான விவரங்களை அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியிருந்தால் ‘வணிக உடன்படிக்கை இரத்து, செலுத்திய பணத்தைத் திரும்பப்பெறல், கறுப்புப்பட்டியலில் சேர்த்தல், சட்டபூர்வமான நடவடிக்கை’ போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உருசியாவின் மத்திய ஊரல் பகுதியை இன்று காலையில் எரிவிண்மீன் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்கள் சேதமடைந்ததில் நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கட்டடங்களின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதாலேயே பலர் காயமடைந்தனர். காலை 09:20 மணியளவில் வானினூடாக எரிகோளம் ஒன்று செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் செபார்க்குல் என்ற இடத்தில் உள்ள ஏரி ஒன்றில் வீழ்ந்து பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் வீழ்ந்துள்ளதாக ரொஸ்கொஸ்மொஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எக்கத்தரின்பூர்க் நகரில் இருந்து 200 கிமீ தெற்கே செல்யாபின்ஸ்க் நகரிலேயே பெரும் தாக்கம் இடம்பெற்றுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிமீ கிழக்கே செல்யாபின்ஸ்க் நகரம் உள்ளது. இங்கு பல தொழிற்சாலைகள், ஒரு அணு மின் நிலையம், மற்றும் மயாக் அணுக் கழிவு சேமிப்பு நிலையம் போன்றவை அமைந்துள்ளன. கீழ் வளிமண்டலத்தில் ஒரு பெரும் எரிவெள்ளி எரிந்து சிறு துண்டுகளாக வீழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெருமளவு நிவாரணப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எரிவெள்ளியின் சிதறிய துண்டுகள் உருசியாவின் செல்யாபின்ஸ்க், தியூமென், கூர்கன், சுவெர்துலோவ்ஸ்க், மற்றும் அயல் நாடான கசக்ஸ்தானின் வடக்கிலும் வீழ்ந்துள்ளதாக உருசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான எரிவெள்ளிகள் பூமியில் வீழ்வது மிக அபூர்வமான நிகழ்வாகும். 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் இவ்வாறான எரிவெள்ளி வீழ்ந்ததில் 2,000 சதுர கிமீ பரப்பளவு நிலம் சேதமுற்றது. நேற்றிரவு கிரீனிச் நேரம் 19:25 மணிக்கு இது பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது. இச்சிறுகோள் பூமியை நெருங்கியதற்கு சற்று முன்னர் எரிவிண்மீன் ஒன்று உருசியாவில் வீழ்ந்து வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆனாலும், இந்த எரிவிண்மீன் வீழ்கைக்கும் சிறுகோள் பூமியை நெருங்கியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் பிட்சிமன்சு கூறினார். சிறுகோள் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பக்கத்தின் மேலே சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆத்திரேலியா போன்ற இடங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இச்சிறுகோளை முதன்முதலாக எசுப்பானிய வானியலாளர்களே 2012 பெப்ரவரி 23 ஆம் நாள் கண்டறிந்து அறிவித்தனர். இது கிட்டத்தட்ட 45 மீட்டர் அகலம் உடையது. குறைந்தது 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியை அணுகும் எனக் கணக்கிட்டுள்ளனர். புலனாய்வு ஆவணங்களைத் தர வேண்டி இந்தியா விடுத்த வேண்டுகோளை, உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழலை விசாரித்துவரும் இத்தாலிய நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது இத்தகவல்கள், இரகசியமாக காக்கப்பட வேண்டியவை" என காரணம் கூறப்பட்டுள்ளது. உறுதியான தகவல்களையும் ஆவணங்களையும் பெறும்பொருட்டு கடந்த 13 ஆம் திகதியன்று ரோமில் உள்ள இந்தியத் தூதரகம், இத்தாலி நாட்டு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்து இத்தாலிய நீதிமன்றம் நேற்று அனுப்பிய கடிதமொன்றில் "நேர்முறையான பதிலைத் தர இயலவில்லை" எனக் குறிப்பிட்டது. அக்கடிதத்தில் மேலும் "புலனாய்வு ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இத்தருணத்தில், சட்ட விதி 329 இன்படி அனைத்துத் தகவல்களும் இரகசியமானவையாகும்; வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வழக்குரைஞர்களுக்கு மட்டுமே ஆவணங்களை வழங்க முடியும். இரகசிய நடைமுறைகள் முடிவடைந்தபிறகு, இந்தியாவிடமிருந்து புதிய கோரிக்கை வருமானால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்" எனவும் கூறப்பட்டுள்ளது. பாக்கித்தானின் பலுச்சித்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் சந்தைப் பகுதி ஒன்றில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டனர். 178 பேர் காயமடைந்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியில் நேற்று மாலை 6:00 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இப்பகுதியில் பலசரக்குக் கடைகள், மரக்கறிச் சந்தை, பாடசாலை, மற்றும் கணினி மையம் போன்றவை அமைந்துள்ளன. மங்கோலிய, மற்றும் மத்திய ஆசிய வம்சாவழியினரான ஹசாரா மக்கள் பெருமளவு மத்திய ஆப்கானித்தானில் பாமியன் மாகாணத்தில் வசிப்பவர்கள். ஆப்கானித்தானை 13ம் நூற்றாண்டில் கைப்பற்றிய மங்கோலியாவின் செங்கிஸ் கான் மற்றும் அவனது படையினரின் வழித்தோன்றல்கள் இவர்கள் என நம்பப்படுகிறது. ஆப்கானித்தானில் இருந்து இடம்பெயர்ந்து குறைந்தது 600,000 பேர் தற்போது பாக்கித்தானின் குவெட்டா நகரில் வசிக்கின்றனர். “நாம் இப்போது தான் நமது ஆய்வை முடித்துள்ளோம். செபார்க்குல் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகள் எரிவிண்மீனின் சிதைவுகளே என நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் என ஊரல் நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் கிரகோவ்ஸ்கி கூறியுள்ளார். "இந்த எரிவிண்மீன் ஒரு சாதாரண வேதி எரிகல் (chondrite) ஆகும். இது ஒரு பாறைகளினால் ஆன எரிவிண்மீன், இது சுமார் 10 விழுக்காடு இரும்பைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இவ்வெரிவிண்மீனுக்கு செபார்க்குல் எரிவிண்மீன் எனப் பெயரிடப்படலாம் என கிரகோவ்ஸ்கி கூறினார். செபர்க்குல் ஏரியில் ஆறு மூட்டர் அகலத்தில் பெரும் குழியொன்று ஏற்பட்டுள்ளது. இந்த எரிவிண்மீன் புவியின் வளிமண்டலத்துள் நுழைவதற்கு சற்று முன்னர் அதன் எடை 10 தொன்களாக இருந்திருக்கலாம் எனவும், வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் சென்றுள்ள இந்த விண்மீன் தரையில் இருந்து 30 முதல் 50 கிமீ உயரத்தில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என உருசிய அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனாலும், அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதன் எடையை 10,000 தொன்கள் எனவும், அகலம் 17 மீட்டர் எனவும் கணித்துள்ளது. அத்துடன் 500 கிலோதொன்கள் ஆற்றலை அது வெளியிட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் ஆற்றல் 12-15 கிலோதொன்கள் ஆகும். இவ்வாறான எரிவெள்ளிகள் பூமியில் வீழ்வது மிக அபூர்வமான நிகழ்வாகும். 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் இவ்வாறான எரிவெள்ளி வீழ்ந்ததில் 2,000 சதுர கிமீ பரப்பளவு நிலம் சேதமுற்றது. இந்திய அரசின் உயர் ஆய்வு நிறுவனங்களான UGC, DST, INSA, CSIR, DRDO, BRNS, TNSCST மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இம்மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் 15 சிறப்பு சொற்பொழிவுகள், 6 தொடக்க உரைகள், 67 ஆய்வுக் கட்டுரைகள் நேரடியாகவும் எஞ்சிய 290 ஆய்வுக்கட்டுரைகள் சுவரொட்டி வாயிலாகவும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மொத்தமாக நானூறுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாநாட்டில் பங்கேற்று கட்டுரைகள் வாசிக்க உள்ளனர். இக்கருத்தரங்கில் பங்கேற்க வெளிநாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களான போர்ச்சுகல் கொயிம்பிரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூயிபாஸ்டோ, இத்தாலி, மெசினா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி. நேரி, பல்கேரியா, மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இரினா கோஸ்டோவா ஆகியோர் பங்கேற்று ஆய்வு நோக்கவுரை நிகழ்த்த உள்ளனர். தேசிய அளவில் முன்னனிப் பேராசிரியர்களான குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எம்.என். பட்டேல், கிஸோர் பாய் ஆர். தேஸாய், ஆக்ரா டாக்டர் பி.ஆர்.ஏ. பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.சி.சர்மா, கர்நாடகா குவம்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் போஜய்யா நாயக், ஆந்திரா ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ஹூசன் ரெட்டி, சஹிபாபாட், சி.சி.எஸ். பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம். கே. அகர்வால் மற்றும் ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனப்பேராசிரியர் ஹாசிக் கோஷ் ஆகியோர் பங்கேற்று ஆய்வுக் கண்டுபிடிப்புகளை நெறிப்படுத்தி விவாதங்களை வழிநடத்தவுள்ளனர். இம்மாநாட்டில் புற்றுநோய், ஒளி இயங்கியல் சிகிச்சை, பசுமை வேதியியல், உயிர் கனிம வேதியியலின் மருத்துவத் துறைப் பயன்பாடுகள், வளி மண்டலத்தில் பெருகிவரும் கார்பன் டை ஆக்ஸைடு அளவை மாற்றி வேறு வகை பயன்பாடு கொண்ட கரிம மூலக்கூறுகளாக மாற்றும் ஆய்வுகள், ஹைட்ரஜன் பயன்பாடுகளை அதிகரித்தல், உடலிலுள்ள என்சைம், புரோட்டீன் போன்றவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிதல், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளான எதிர் நுண்ணுயிர்களின் செயல்திறனைக் கண்டறிதல், துணித்துறையில் சாயங்களின் பயன்பாடுகள் போன்ற பொருண்மைகளின் கீழ் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. தொடக்க விழாவை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கி.முத்துச்செழியன் தலைமையுரையாற்றி தொடக்கி வைக்கிறார். பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் பால் செல்லர்ஸ் தொடக்கவிழா உரை நிகழ்த்துகிறார். பல்கேரியா மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரினா கோஸ்டோவா மாநாட்டு மைய உரை நிகழ்த்துகிறார். மாநாட்டு மலரை போர்ச்சுகல் கொயிம்பிரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூயி பாஸ்டோ வெளியிடுகிறார். இந்திய அரசின் பட்நாகர் விருது பெற்ற மதிப்புறு பேராசிரியர் பி. நடராஜன், இத்தாலி தொழில் மற்றும் வேதியியல் துறைப்பேராசிரியர் ஜி.நேரி உள்ளிட்டோர் மாநாட்டு தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். இம்மூன்று நாள் மாநாட்டில் ஒரே நேரத்தில் பல அரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளின் தரம், நேர்த்தி, கண்டு பிடிப்புகளின் தன்மை ஆகியவற்றை ஒவ்வொரு அரங்கிலும் வல்லுநர் குழு மதிப்பிட்டு சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான பரிசுகளும்,விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மாநாட்டின் நிறைவு விழா நிகழ்வுகள் பெப்ரவரி 22 பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படவுள்ளன. பதினைந்து இலட்ச ரூபாய் நிதிச்செலவில் நடைபெறும் இவ் உயிர் கனிம வேதியியலின் முதல் பன்னாட்டு மாநாட்டு நிகழ்வுகளைப் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், வேதியியல் துறையின் உதவிப்பேராசிரியருமான முனைவர். இரா.இராஜவேல் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். ஈழப்போரின்போது இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விளக்கும் இன்னொரு ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது நோ ஃபயர் ஜோன் No Fire Zone) எனத் தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை கேலம் மெக்கரே என்பவர் உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச்சு மாதத்தில் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின்போது 'ஜெனீவா மனித உரிமைகள் திரைப்பட விழா'வில் இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்படும். ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியாகும் 'தி இண்டிபென்டன்ட்' நாளிதழில் கேலம் மெக்கரே எழுதியிருக்கும் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது குறித்த அதிர்ச்சியான தகவல்கள் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கட்டுரையில் இராணுவத்தால் இளஞ்சிறுவன் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் இந்த ஆவணத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது; இந்த ஆதாரங்கள் அனைத்தும் தடவியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டவை" எனவும் கேலம் மெக்கரே எழுதியுள்ளார். ஈழப்போர் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' ஆவணப் படத்தை சேனல் 4 வெளியிட்டது மார்ச் 16, 2012 ஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம் சூன் 16, 2011 இளஞ்சிறுவனின் மீது இராணுவம் திட்டமிட்டு நடத்திய படுகொலை குறித்த புதிய ஆதாரத் தகவல்கள், தமிழகத்தில் அதிர்ச்சியையும், கவலையையும், கோப உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் பிரமுகர்கள் தமது அதிர்ச்சியையும் கோப உணர்வுகளையும் தெரிவித்துள்ளார்கள். ;விஜயகாந்த் (தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்) "உலக நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை ஐநா அவை மூலம் கோர வேண்டும்; இந்தியா, இலங்கைக்கு தரும் ஆதரவினை விலக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்" "இலங்கை அரசும் அதன் இராணுவமும் நடத்திய மனித உரிமை மீறல் செயல்களுக்கு, குழந்தையின் மீது நிகழ்த்தியிருக்கும் இந்தப் படுகொலை ஒரு சான்றாகும். இலங்கை இராணுவத்தின் இச்செயலால் 'நாகரீகமடைந்த உலகின் தலை' தூக்கில் தொங்குகிறது. குற்றத்திற்குக் காரணமானவர்களும் இக்குற்றத்தை செய்தவர்களும் கடுமையான முறையில் தண்டிக்கப்படவேண்டும்" தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் நேற்று முழுவதும் இந்த ஆதாரங்கள் குறித்து பேசப்பட்டன. இந்தியாவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதங்களில் வாசகர்கள் பலரும் தமது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளார்கள். கேலம் மெக்கரே எழுதியிருந்த கட்டுரை, தி இண்டிபென்டென்ட் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த அதே நாளில் (நேற்று தி இந்து' நாளிதழும் அக்கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருந்தது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது பெப்ரவரி 19, 2013 பிரித்தானிய வரலாற்றில் பெரும் இரத்தக்களரியை உண்டு பண்ணிய படுகொலைகளில் ஒன்றாகக் கருதப்படும் நிகழ்வை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார். "பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு கறை படிந்த நிகழ்வு என கேமரன் கூறினார் இங்கு நடந்தவைகளை நாம் என்றுமே மறக்கக் கூடாது எனத் தனது அஞ்சலிக் குறிப்பில் அவர் எழுதினார். ஆனாலும் அதற்காக அவர் முறையான மன்னிப்பு எதனையும் கேட்கவில்லை. 1919 படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என அன்றைய பிரித்தானிய அரசு கூறியிருந்தது. ஆனாலும் இத்தொகை 1,000 இற்கும் அதிகம் என இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. முன்னரும் பல பிரதமர்கள் தமது கவலைகளை வெளியிட்டிருந்தாலும், பணியில் இருக்கும் ஒரு பிரதமர் ஒருவர் நேரில் ஜாலியன்வாலா பாக் நினைவாலயத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது இதுவே முதற் தடவையாகும். நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே மிகச் சிறிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெப்லர்-37பி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்புறக்கோள் நமது நிலவை விடச் சற்றுப் பெரியதாகவும், புதன் கோளை விடச் சிறியதாகவும் உள்ளது. "இது போன்ற சிறிய பாறைகளைக் கண்டுபிடிப்பது விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் ஒரு பெரும் முன்னேற்றம் என வானியற்பியலுக்கான ஹாவார்டு-சிமித்சோனியன் மையத்தைச் சேர்ந்த பிரான்சுவா பிரெசின் தெரிவித்தார். நேற்று மாலை உள்ளூர் நேரம் 7:00 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாதில் பழங்கள் விற்பனை செய்யும் சந்தைப் பகுதி ஒன்றில் 150 மீற்றர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஈருருளிகளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் 10 நிமிட இடைவெளியில் வெடித்துள்ளன. இக்குண்டுவெடிப்புகளுக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. குண்டு வெடித்த இடத்துக்கு சென்று பார்வையிட்ட இந்திய உட்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே, ஐதராபாத் தாக்குதல் குறித்து குறிப்பாக எந்தப் புலனாய்வு எச்சரிக்கையும் கிடைத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். மக்களை அமைதியாக இருக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 200,000 ரூபாய்கள் வழங்க அவர் உத்தரவிட்டார். இந்தியாவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையே மார்ச் 2 ஆம் நாள் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி இடம்பெறவிருக்கும் நிலையில், தமது அணியினரின் பாதுகாப்புக் குறித்து ஆத்திரேலியா இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தது. அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளும் இத்தாக்குதல் குறித்து தமது கவலைகளை வெளியிட்டுள்ளன. 18 மாதங்களுக்கு முன்னதாக தலைநகர் தில்லியில் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவில் நடந்த பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதல் இதுவாகும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க இருப்பதால், தமிழகத்தில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த இயலாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையொன்றில் அறிவித்துள்ளார். நேற்று அவர் விடுத்த நீண்ட அறிக்கையில் வேறு எங்காவது போட்டிகளை நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகளக் கழகம் கேட்டுக் கொள்ளப்படும்" எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும், கௌரவத்துடனும் நடத்தப்படவேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது" என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். 20’ஆவது ஆசிய தடகளப் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதத்தில் தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றும், இத்தகவலை அந்நாட்டிற்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்றும் ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்கடிதத்திற்கு பதில் ஏதும் இதுகாறும் வரவில்லை போன்ற தகவல்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள புதிய ஆதாரம் பற்றியும், தமிழக முதல்வர் தனது அறிக்கையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார் பிரபாகரனின் மகன் என்ற காரணத்துக்காக 12 வயது சிறுவனை, இலங்கை இராணுவம் சுட்டுத் தள்ளியக் கொடூரம் – மன்னிக்க முடியாத போர்க்குற்றமாகும்; இது என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாலியின் மலைப் பிரதேசம் ஒன்றில் போராளிகளுடன் இடம்பெற்ற சண்டையில் சாட் நாட்டைச் சேர்ந்த 13 இராணுவத்தினரும், 65 இசுலாமியப் போராளிகளும் கொல்லப்பட்டதாக சாட் இராணுவ வட்டாரம் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை சண்டை இடம்பெற்ற இஃபோகாசு மலைப் பிரதேசத்தில் பெருமளவு இசுலாமியப் போராளிகள் ஒளிந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். 2012 ஆம் ஆண்டில் மாலியின் வடக்குப் பிரதேசத்தைக் கைப்பற்றிய இசுலாமியப் போராளிகளை விரட்டும் நோக்கில் கடந்த மாதம் பிரான்சு நாடு அங்கு பெரும் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருந்தது. அங்கு ஒளிந்திருக்கும் இசுலாமியப் போராளிகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்வதற்காகத் தமது ஆளில்லா விமானங்கள் நைஜர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா முன்னதாக அறிவித்திருந்தது. இசுலாமியப் போராளிகள் கடந்த சில வாரங்களில் மாலியின் வடக்கு நகரான கிடாலின் பாலைவனப் பகுதியான இஃபோகாசு மலைப் பிரதேசத்திற்கு விரட்டப்பட்டிருந்தனர். இப்பகுதி அல்ஜீரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாத ஆரம்பத்தில் 1,800 சாட் நாட்டு இராணுவத்தினர் கிடால் நகருக்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதே வேளையில், மாலியின் வடக்கே காவோ நகரில் பிரான்சின் துணையுடன், மாலிப் படையினர் இசுலாமியப் போராளிகளுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதமளவில் பிரான்சு தனது 4,000 படையினரை மாலியில் இருந்து வெளியேற்றுவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்குப் பதிலாக ஐநா தலைமையிலான ஆப்பிரிக்க அமைதிகாக்கும் படையினர் அங்கு அனுப்பப்படுவர் எனத் தெரிய வருகிறது. கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை நீக்கி, அந்நீரை பலநிலைகளில் சுத்திகரித்து, குடிப்பதற்குரிய நீராக மாற்றும் தொழிற்நுட்பத்திற்கு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம் – மகாபலிபுரம் அருகேயுள்ள நெம்மேலி எனும் ஊரில் கடல்நீரைக் குடிநீராக்கும் உற்பத்தி நிலையத்தின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இந்தியப் பணமதிப்பின்படி 871 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் தினந்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும். சென்னை மாநகருக்கு தெற்கே 36 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது நெம்மேலி. இன்னும் ஓரிரு தினங்களில் இங்கு உற்பத்தியாகும் குடிநீர், தென் சென்னை மற்றும் அதன் விரிவாக்கப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15 இலட்சம் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஏ டெக் வாபேக் (VA Tech Wabag) எனும் நிறுவனம் இந்த உற்பத்தி நிலையத்தை கட்டித் தந்துள்ளது. மாநில அரசின் ‘சென்னை மெட்ரோவாட்டர்’ நிறுவனமே இந்த நிலையத்தை நேரடியாக இயக்கும். ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள நிலத்தடித் தொட்டிகளின் உதவிகொண்டும், ஏறத்தாழ 64 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ள குழாய் இணைப்புகளின் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த விநியோக கட்டமைப்புகளை இந்தியாவின் புகழ்வாய்ந்த கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனம் செய்துள்ளது. # முதற்நிலை சுத்திகரிப்பு: ‘மேல்நோக்கு வடிகட்டி’ மூலமாக கடல்நீர் வடிகட்டப்படும் # இரண்டாம் நிலை சுத்திகரிப்பு: ‘தட்டு வடிகட்டி’ மூலமாக 100 மைக்ரான் அளவுக்கு மேலுள்ள கசடுகள் வடிகட்டப்படும். இது இசுரேல் நாட்டின் தொழிற்நுட்பம் என அறியப்படுகிறது. # நான்காம் நிலை சுத்திகரிப்பு: ‘எதிர்ச் சவ்வூடு பரவல்’ முறையில் உப்பு நீக்கப்படுகிறது. இது சப்பான் நாட்டின் தொழிற்நுட்பம் என அறியப்படுகிறது. 10 கோடி லிட்டர் நீர், குடிநீராகக் கிடைக்கிறது. கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் அமைதியைக் கொண்டு வரும் முகமாக ஐக்கிய நாடுகளின் ஆதரவில் அமைதி உடன்பாடு ஒன்று ஆப்பிரிக்கத் தலவர்களிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. ஐநா பொதுச் செயலர் பான் கி மூனின் தலைமையில் எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த அமைதி உடன்பாடு கையெழுத்தானது. இவ்வுடன்பாட்டின் மூலம் பிராந்தியத்தில் அமைதியும் திரத்தன்மையும் ஏற்படும் என பான் கி மூன் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த மே மாதத்தில் சின்சாசா அரசுக்கு எதிராக மார்ச் 23 போராளிக் குழு (எம்23) ஆயுதமேந்திப் போராடத் தொடங்கியதில் இருந்து கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் 800,000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மொசாம்பிக், ருவாண்டா, தன்சானியா, தென்னாப்பிரிக்கா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொங்கோ குடியரசு, தெற்கு சூடான் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் இந்த அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வுடன்படிக்கையின் படி, கிழக்குக் கொங்கோவில் ஐநாவின் சிறப்புப் படையொன்று நிலை கொண்டிருக்கும். அத்துடன் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் பொருட்டு அரசியல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. கொங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பிராந்தியத்தில் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என எம்23 போராளிக் குழு போராடி வருகிறது. இந்தியப் பெருங்கடலின் அடியில் 2,000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் காணப்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொரீசியசு நாட்டின் கடற்கரைகளில் கிடைக்கக்கூடிய மண் மாதிரிகளை ஆராய்ந்த அறிவியலாளர் குழுவே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளது. ஒன்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எரிமலை வெடிப்புக்கு முன்னர் இந்த சிர்க்கான் எனப்படும் கனிமங்கள் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருந்தாலும், அவை மேலும் பழைமையானவை எனக் கூறப்படுகிறது. நோர்வேயின் ஒசுலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ட்ரொண்ட் தோர்சுவிக் என்பவர் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மொரீசியாவின் சிதறிய துண்டுகள் மொரீசியசின் கீழ் 10 கிமீ ஆழத்தில் இருப்பதாகத் தாம் நம்புவதாக பேராசிரியர் தோர்சுவிக் பிபிசிக்கு தெரிவித்தார். 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மடகாசுக்கரில் இருந்து இந்தியா பிரிந்த போது குறுங்கண்டம் துண்டுகளாகச் சிதறி கடலுக்கடியில் சென்றிருக்கலாம் என தோர்சுவிக் தெரிவித்தார். தொலைந்த இந்தக் கண்டத்தின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என அவர் கூறினார். எகிப்திய நகரான லக்சோரில் வெப்ப வளிக்கூண்டு (பலூன்) நிலத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த 19 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பிரித்தானியா, பிரான்சு, அங்கேரி, ஹொங்கொங், சப்பானியர்களும் அடங்குவர். 1,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பலூன் வெடித்து தீப்பற்றி நிலத்தில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பலூன் ஓட்டுனர் உட்பட குறைந்தது இருவர் உயிருடன் தப்பினர். இவர்கள் பலூன் தரையில் மோத முன்னரே பலூனில் இருந்து வெளியே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர். இவ்விபத்தை அடுத்து லக்சோர் நகரில் அனைத்து வளிக்கூண்டுப் பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. லக்சோர் நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா நகரம் ஆகும். மாலியின் வடக்கே கிடால் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்தும் இசுலாமியப் போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆங்காங்கே இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. மாலியின் வடக்குப் பகுதி பெரும்பாலும் இசுலாமியப் போராளிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டாலும், உள்ளூர் துவாரெக் மக்களிடையே இன்னமும் அச்ச நிலைமை காணப்படுகிறது. மாலிப் படையினரால தாம் துன்புறுத்தப்படுவோம் என அவர்கள் அஞ்சுகின்றனர். மாலி இராணுவத்தினர் அங்கு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. துவாரக் போராளிகள் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இசுலாமியப் போராளிகளுடன் இணைந்தே மாலி இராணுவத்தினருடன் சண்டையிட்டு வடக்கின் பல பகுதிகளைப் பிடித்திருந்தனர். ஆனாலும், அவர்கள் பின்னர் இசுலாமியப் போராளிகளிடம் இருந்து விலகி பிரெஞ்சு இராணுவத்தினருக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை நடத்திட ஐநா அவையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டுமென இந்திய மாநிலங்களவையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வா. மைத்ரேயன் நேற்று மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்ததையடுத்து, விவாதத்தில் வா. மைத்ரேயன் முக்கிய உரையாற்றினார். தமது உரையில் அவர் போருக்கு பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன. தமிழர்களின் வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஓர் இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் இலங்கையை நட்பு நாடு என மத்திய அரசு போற்றி வருகிறது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையை நட்பு நாடாகக் கருத மாட்டோம்; அதை எதிரி நாடாகவே கருதுவோம்" என்றார். மைத்ரேயனைத் தொடர்ந்து டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருச்சி சிவா (திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். இந்த விவாதத்தில் வெங்கய்ய நாயுடு (பாரதிய ஜனதா கட்சி சஞ்சய் ரௌத் (சிவசேனை), டி. பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ் எம். ரமேஷ் (தெலுங்கு தேசம் நரேஷ் அகர்வால் (சமாஜவாதி கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி சிவானந்த திவாரி (ஐக்கிய ஜனதா தளம் தருண் விஜய் (பாரதிய ஜனதா கட்சி ராம் கிரிபால் யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்) ஆகிய உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர். போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரம்: தமிழகத்தில் அதிர்ச்சி உணர்வுகள் எழுந்துள்ளன பெப்ரவரி 20, 2013 இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது பெப்ரவரி 19, 2013 தாய்லாந்தின் தெற்கே பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இசுலாமியப் போராளிகளுடன் தாய்லாந்து அரசு முதற்தடவையாக அமைதி உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. தாய்லாந்தில் கிளர்ச்சியில் ஈடுபடும் கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றான தேசியப் புரட்சி முன்னணி (BRN) என்ற அமைப்புடன் மலேசியாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை அடுத்து மலேசியப் பிரதமர் நசீப் ரசாக், மற்றும் தாய்லாந்துப் பிரதமர் யிங்லக் சினவாத்ராவிற்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் இன்று இடம்பெறவுள்ளன. இப்பேச்சுக்களை அடுத்தே அமைதி உடன்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 2004 ஆம் ஆண்டில் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஆரம்பமான சர்ச்சைகளை அடுத்து அங்கு குறைந்தது 5,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பெரும்பான்மைப் பௌத்தர்களிடம் இருந்து கூடுதல் சுயாட்சியுடன் கூடிய அதிகாரங்களை முசுலிம்கள் கோருகின்றனர். 1971 ஆம் ஆண்டில் பாக்கித்தானுடனான விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தின் மூத்த இசுலாமியத் தலைவர் ஒருவருக்கு அந்நாட்டின் போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றம் நேற்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததை அடுத்து நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். கொலை, சித்திரவதை, மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்காக டெல்வார் உசைன் சயீதி என்பருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை அடுத்து ஜமாத்-இ-இசுலாமி கட்சி ஆதரவாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக வன்முறைகளில் இறங்கினர். வடக்கு கைபாந்தா மாவட்டத்தில் 2,000 இற்கும் அதிகமானோர் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கி அங்கிருந்த மூன்று காவல்துறையினரை உயிருடன் அடித்துக் கொன்றனர். நோக்காலி என்ற இடத்தில் இந்துக் கோயில் ஒன்று சேதமாக்கப்பட்டது. பல இந்துக்கள் தாக்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வங்கதேச விடுதலையின் போது ஜமாத் கட்சி விடுதலைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தது. ஆனாலும், பாக்கித்தாந்சார்பு இராணுவத்தினர் நடத்திய போர்க்குற்றங்களுக்குத் தாம் துணை போகவில்லை எனக் கூறி வருகிறது. விடுதலைப் போர்க் காலத்தில் அல்-பத்ர் என்ற குழுவுடன் இணைந்து சயீதி செயல்பட்டு வந்ததாகவும், விடுதலை கோரிய மக்களுக்கு எதிராகப் பல கொடுமைகளை இழைத்ததாகவும், பல இந்துக்களை மதம் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் மே 2009 இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரி இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் 'சேனல் 4' ஊடகம் தனது இரண்டாவது ஆவணப் படத்தை நேற்று ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் திரையிட்டது. “மோதல் தவிர்ப்பு வலயம்” No fire zone எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப் படத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்கள் காண்பிக்கப்பட்டன. பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாலியல் குற்றங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலை குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என இலங்கை அரசு கேட்டுக் கொண்டிருந்த போதிலும், திரைப்படம் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவில் ஐநாவின் 23 ஆம் இலக்க அறையில் காண்பிக்கப்பட்டது. ஐநா மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின் இராசதந்திரிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் இதனைப் பார்வையிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் ஆவணப் படத்தில் வழங்கப்பட்டுள்ளன. திரைப்பட வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறினார். மண்டபத்துக்கு வந்திருந்த ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியிருக்கிறார். பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல் துறையைச் சார்ந்த பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினி பயிலரங்கில் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இப்பயிலரங்கில், பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறி பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருணமைகளில் சிறப்புரையும் பயிற்சியும் அளிக்க உள்ளார். பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில், தேசிய நாட்டுநலப்பணித்திட்டத்தில் 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. முனைவர் கணேசன், முனைவர் சந்திரன், திருமதி சத்யா, முனைவர் விஜயராணி ஆகிய பேராசிரியர்கள் இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆவார்கள். செம்பூர்னாவின் கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலில் ஆயுதக்கும்பல் ஒன்று நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து செம்பூர்னா காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் அங்கு சென்ற போது அவர்கள் திடீர்த்தாக்குதலுக்கு இலக்கானார்கள். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் பிலிப்பீன்சைச் சேர்ந்த குறைந்தது 100 ஆயுததாரிகள் லகாத் டத்து மாவட்டத்திற்குப் படகுகள் மூலமாக வந்திறங்கியிருந்தனர். இவர்களுக்கும் நேற்றுத் தாக்குதல் நடத்திய ஆயுதக் கும்பலுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதா என்பது ஆராயப்பட்டு வருவதாகக் காவல் துறை தலைவர் இசுமைல் ஒமார் தெரிவித்தார். இப்பகுதி தமக்கே சொந்தம் என 19 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் காட்டுவதாக பிலிப்பீனோக்கள் கூறுகின்றனர் சூலு அரசுப் படை" எனக் கூறிக் கொள்ளும் இந்த முஸ்லிம் ஆயுதக் குழு கடந்த பெப்ரவரி முதல் லகாத் டத்து மாவட்டக் கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசம் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளியன்று இப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில் 12 பிலிப்பினோக்களும், இரண்டு மலேசியக் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். சபாவின் உண்மையான உரிமையாளராகத் தம்மை அறிவிக்குமாறு சூலு அரசுப் படை கோரி வருகிறது. அத்துடன் பழைய குத்தகை உரிமையை மீள் பரிசீலனைக்கு விடுமாறும் அது கேட்டு வருகின்றது. இக்கோரிக்கையை ஏற்க மலேசியா மறுத்து வருகிறது. சூலு சுல்தானகத்தின் சுல்தானாகத் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட மூன்றாம் ஜமாலுல் கிராம் என்பவரின் இளைய சகோதரரான அக்பிமுதின் கிராமின் தலைமையில் சுமார் நூறு பேர் கொண்ட ஆயுதக் கும்பலொன்று தற்போது லகாத் டத்து மாவட்டத்தை ஊடுருவியுள்ளது. இதற்கிடையில், லகாத் டத்து பகுதியில் ஊடுருவியுள்ள பிலிப்பீன்சு நாட்டவர்களுடன் இனிப் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்களைச் சரண் அடையுமாறும் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் சரணடைய மறுத்தால் அவர்கள் கடும் நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆயுதக்குழு அப்பகுதியை விட்டு வெளியேறக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டதாகவும் இனி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நஜிப் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அரசைக் கவிழ்ப்பதற்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது அனைத்து அமீரகம்' என்ற இசுலாமிய இயக்கத்தினர் பலர் கடந்த ஆண்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்துக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர். 12 பெண்களையும் உள்ளடக்கிய இக்குழுவினர் குற்றவாளிகளாகக் காணப்படும் பட்சத்தில், இவர்களுக்கு மேன்முறையீடு செய்யமுடியாத குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது. இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் அபுதாபியில் அமைந்துள்ள நடுவண் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமானது. "எமக்குத் தெரிந்த வரையில் அல் இஸ்லா அமைப்பு பாரம்பரிய இசுலாமியக் கொள்கைகளைக் கொண்ட ஒரு அமைதியான மக்கள் நிறுவனம் என மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த நிக் மெக்கீகன் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார். கைதிகள் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரி, மார்ச் 1 முதல் மாசிலாபாளையத்தில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமினை ஒருங்கிணைத்துள்ளது. தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியுள்ள சூழலில் மாணவர்களுக்கு தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா விழிப்புணர்வு, பயிற்சி தேவையைக் கருத்தில் கொண்டு, பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் மோ. தமிழ்மாறன் தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினிப் பயிலரங்கு நிகழ உறுதுணை செய்தார். பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினி பயிலரங்கில் பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி, மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி அளித்தார். பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில், தேசிய நாட்டுநலப்பணித்திட்டத்தில் உள்ள 4 அலகுகளின் மாணவர்களும் பங்கேற்றனர். முனைவர் கணேசன், முனைவர் சந்திரன், திருமதி சத்யா, முனைவர் விஜயராணி ஆகிய பேராசிரியர்கள் இம்முகாமினை ஒருங்கிணைத்தனர். ஊரக மாணவர்களிடையே விக்கிப்பீடியா விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்நிகழ்வு தமிழ் விக்கி பயணத்தில் நல்லதொரு தொடக்கம் ஆகும். தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான பணி வாய்ப்பு மிகவும் குறைவு. கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கலையியல் புலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மற்றம் ஆய்வு நிலை மாணவர்களுக்கு உலகளாவிய கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா தொகுத்தல், இதழியல் பணி சார்ந்த வாய்ப்புக்கள் குறித்த பயிற்சி பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. இப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக் கழக இதழியல்துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை செய்முறைப் பயிற்சி அளிக்கவுள்ளார். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் முனைவர் சிவப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்சியை எடூஎ மீடியா அமைப்பு வடிவமைத்து உள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆர்காட் தொண்டு நிறுவனம் நிகழ்ச்சிக்கான உதவியைச் செய்துள்ளது. மலேசியாவின் போர்னியோ தீவில் ஊடுருவியுள்ள பிலிப்பீனிய ஆயுதக் குழு மீது மலேசிய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. லகாட் டத்து மாகாணத்தில் போர் விமானங்கள், மற்றும் உலங்கு வானூர்திகளின் உதவியுடன் தரைப்படையினர் தாக்குதலை நேற்றுக் காலையில் ஆரம்பித்தனர். அங்கு கிட்டத்தட்ட 180 ஆயுததாரிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர்க் காவல்துறையினருக்கு உதவியாக ஏழு இராணுவப் பிரிவுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு படையின் தாக்குதல் தமது இலக்கை அடைந்துள்ளதாக காவல்துறைத் தலைவர் இசுமைல் ஒமார் தெரிவித்துள்ளார். படைத்தரப்பில் இதுவரை எந்தவொரு உயிருடற்சேதமும் இல்லை எனவும் அவர் கூறினார். கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்றுவரும் சண்டைகளில் எட்டு மலேசியக் காவல்துறையினரும், 19 ஆயுதக் குழுவினரும் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சு நாட்டவர்கள் அந்நாட்டிலுள்ள மலேசிய தூதரகம் முன்பு கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். இதனை அடுத்து தலைநகர் மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டது. மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதக் கும்பலுடனான மோதலில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர் மார்ச் 3, 2013 நிகழ்வு சிறப்புடன் நடந்தேறவும், அதன் மூலம் பல நூறு மாணவர்கள் பயன் பெறுவதோடு தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு இந்நிகழ்வு தூண்டுகோலாய் அமையவும் வாழ்த்துக்கள். கடந்த ஈராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவெசுவிற்கு கூபா நாட்டில் பல தடவைகள் சத்திர சிக்கிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஊகோ சாவெசு இறந்த கரக்காசு மருத்துவமனை அருகே நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். ஒரு புரட்சியாளராகத் தன்னை அறிவித்துக் கொண்ட ஊகோ சாவெசு அமெரிக்க ஆதிக்கவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அமைப்புகள் துளிர்விடக் காரணமாக அமைந்தவர். சாவெசுவின் மறைவை அடுத்து, 30 நாட்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதுவரையில் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக பிரதித் தலைவர் நிக்கலாசு மதூரோ பதவியில் இருப்பார் என வெளியுறவுத்துறை அமைச்சர் எலியாசு சாவுவா அறிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவராகவும் மதூரோ விளங்குவார். சாவெசுவின் "புரட்சிகர, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, சோசலிசக்" கொள்கைகளைத் தாம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்போவதாக நிக்கலாசு மதூரோ அறிவித்துள்ளார். கடந்த அக்டோபரில் நான்காவது தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாவெசு முறைப்படி பதவியேற்க அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. கடந்த பல மாதங்களாக அவர் எவ்வித பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் இராணுவ வீரரான ஊகொ சாவெசு 1992 ஆம் ஆண்டில் அவர் வழிநடத்தித் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்புப் புரட்சி ஒன்றின் மூலம் புகழ் பெற்றார். இரண்டாண்டுகள் சிறையில் கழித்த அவர், சிறையில் இருந்து மீண்டதும் தீவிர அரசியலில் இறங்கினார். 1998 தேர்தலில் வெற்றி பெற்று அரசுத் தலைவரானார். வறிய மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றார். நாட்டின் எண்ணெய் வளத்தை நிருவகிக்க சோசலிச நடைமுறைகளைக் கொண்டு வந்தார். ஆனாலும், இவர் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதாகவும், நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குக் கொண்டு செல்வதாகவும் இவர் மீது எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தின. இவருக்கு எதிராக 2002 ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று இடம்பெற்றது தோல்வியில் முடிந்த இப்புரட்சியை அமெரிக்காவே வழி நடத்தியதாக சாவெசு அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார். ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அதிகாரபூர்வமான இறுதி நிகழ்வுகளில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்வர் என நம்பப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பார்வதிநாதசிவம் கல்வி கற்றார். அப்போது அவர் பாவேந்தர் பாரதிதாசனை அடிக்கடி சென்று சந்திப்பார். தனது கவிதைகள் எளிமையாக அமைய இவரே காரணம் என்பார் புலவர் பார்வதிநாதசிவம். சுதந்திரன் பத்திரிகையில் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த பார்வதிநாதசிவம் அவர்கள், பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழின் ஞாயிறு இதழுக்கு ஆசிரியராக 1970-1980களிலும், உதயன் பத்திரிகையில் 1990களிலும் பணியாற்றினார். அத்துடன் முரசொலி, சஞ்சீவி, தினக்குரல் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகளின் தொகுப்பு தமிழ்ச்செல்வம் என்ற பெயரில் வெளிவந்தது கலைக்கண்' என்ற பெயரில் இதழ் ஒன்றை 1970களில் வெளியிட்டு வந்தார். புலவரின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை அன்னாரின் கொக்குவில் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கனடாவில் வசிக்கும் பாரதி என்ற மகளும் யாழ்ப்பாணத்தில் வதியும் மகாலிங்கசிவம், இளங்கோ, பாலமுரளி என மூன்று மகன்மாரும் உள்ளனர். காணாமல் போன தங்களது உறவினர்களை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை தமிழர்கள் நடத்தினர். காணாமல் போன தங்களது உற்றார் உறவினர்களை விடுதலை செய்யக் கோரியும், ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்ப்பதற்குமாக நேற்று புதன்கிழமை கொழும்பில் தமிழர்கள் கலந்துகொள்ளும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த சுமார் ஆயிரம் பேரை வவுனியாவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதே, இந்த குறைந்த எண்ணிக்கைக்குக் காரணம் என பிபிசி தெரிவித்துள்ளது. பதினோரு பேருந்துகளில் மன்னார், மற்றும் வவுனியாவில் இருந்து கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்ட சுமார் ஆயிரம் பேரை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி வவுனியா காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு தடுத்து நிறுத்தினர். சிங்களப் பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படவிருப்பதாகத் தெரிவித்தே காவல்துறையினர் இவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து பேருந்துகளில் வந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரின் பெற்றோர், உறவினர்கள் இலங்கை அதிகாரிகளால் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கோரும் போராட்டத்துக்காகவே அவர்கள் வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சென்றனர்; இதற்காக அவர்களை தடுத்து நிறுத்தியமை நியாயமான செயலல்ல என அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளையில், ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் சிங்களக் கடும்போக்காளர்கள் சிலர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இம்மாதம் 28 ஆம் நாள் சோயுஸ்-டிஎம்ஏ-08எம் ஏவூர்தியில் விண்வெளி நிலையத்தை நோக்கிப் பயணம் செய்யவிருக்கும் புதிய விண்வெளி வீரர்களே விண்வெளி நிலையத்தின் வெளிப் பகுதியில் இந்தக் கருவியைப் பொருத்துவார்கள் என வினொகிராதொவ் தெரிவித்தார். புவியின் வளிமண்டலத்தின் மேற்படலத்தின் இடம்பெறும் அயனிம (பிளாசுமா) மற்றும் அலைகளை ஆராயும் சிக்கலான உணர்கருவிகளையும் வானலைவாங்கிகளையும் இந்தச் சிறப்புக் கருவி கொண்டிருக்கும். இதன் மூலம் நிலநடுக்கங்கள், மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இந்த உருசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் புதிய ஆய்வுகூடப் பாகம் ஒன்று இவ்வாண்டு இறுதியில் விண்வெளி நிலையத்தில் பொருத்தப்படவிருக்கிறது. கென்யாவில் கடந்த திங்களன்று இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் பிரதிப் பிரதமர் உகுரு கென்யாட்டா வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 இல் நாட்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியமைக்காக கென்யாட்டா மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது நாட்டில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 1,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 600,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு இம்முறை தேர்தல்கள் மிகுந்த சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இடம்பெற்றதாக சுயாதீனத் தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. எப்போதும் இல்லாதவாறு பெருந்தொகையானோர் வாக்களித்துள்ளதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது. ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்தின் வான் தாக்குதல் ஒன்றில் நாட்டின் பிரபலமான நடிகர் நசார் முகமது எல்மாண்டி என்பவர் கொல்லப்பட்டார். எல்மாண்டி தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிரான பரப்புரைத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். ஆப்கானித்தானின் எல்மாண்ட் மாகாணத்தில் அரசுக்கு உளவு சொல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவர் போராளிகளால் கடத்தப்பட்டார். இவருடன் மூன்று போராளிகளும் கொல்லப்பட்டனர். தனது நோய்வாய்ப்பட்ட சகோதரி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக கொஸ்காபி என்ற கிராமத்திற்குச் சென்ற போதே இவர் போராளிகளால் கடத்தப்பட்டார். நேட்டோ படையினர் தாக்குதல் நடத்திய போது எல்மாண்டியை போராளிகள் விசாரணை செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் 3 போராளிகளுடன் எல்மாண்டியும் கொல்லப்பட்டார். எல்மாண்டியின் உடன் உருக்குலைந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக அவரது சகோதரர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். நேட்டோவின் வான் தாக்குதலை உறுதிப்படுத்திய காவல்துறையினர் உள்ளூர் போராளித் தளபதி முகமது அலாம் என்பரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். கடந்த மாதம் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவரும் கொல்லப்பட்டு விட்டதாக நைஜீரியாவில் இசுலாமியப் போராளிக் குழு ஒன்று அறிவித்துள்ளது. நைஜீரியாவின் பவுச்சி மாநிலத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி, பிரித்தானியா, கிரீசு, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே கடத்தப்பட்டவர்களாவர். அன்சாரு என்ற இசுலாமியப் போராளிக் குழு தாமே இவர்களைக் கொன்றதாக இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் இறந்த உடல்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. நைஜீரியாவில் பிரபலமான போக்கோ ஹராம் என்ற இசுலாமியக் குழுவைச் சேர்ந்த ஒரு துணைக் குழுவே இந்த அன்சாரு என நம்பப்படுகிறது. படையினர் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்தே தாம் இவர்களைக் கொன்றதாக அன்சாரு இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால் இதனைப் பிரித்தானியா மறுத்துள்ளது. நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் அண்மையில் நடமாடிய போர் விமானங்கள் மாலியில் இடம்பெற்றுவரும் பிரெஞ்சுப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளுக்காக படையினரை ஏற்றிச் சென்றன என்றும், நைஜீரியாவில் தாக்குதல் நடத்தவல்ல எனவும் பிரித்தானியா கூறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் கருத்துத் தெரிவிக்கையில், பிரெண்டன் வோன் என்ற பிரித்தானிய கட்டடத் தொழிலாளர் "வேறு ஆறு வெளிநாட்டவர்களுடன் சேர்த்து அவர்களைக் கடத்தியவர்களால் அனேகமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இது ஒரு மன்னிக்க முடியாத கொலைகள், இவற்றுக்கு எவ்விதத்திலும் நியாயம் கூற முடியாது எனக் கூறினார். அன்சாரு இயக்கம் 2012 சனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானிய அரசு இக்குழுவைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநர் வே. தில்லைநாயகம் இன்று மாலை 3 மணியளவில் கம்பத்தில் தனது இல்லத்தில் தமது 87வது அகவையில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன. இரண்டு நாட்கள் இடம்பெற்ற இப்பொது வாக்கெடுப்பில் 1,517 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 90% ஆகும். மூவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்திருந்தனர். மொத்த மக்கள் தொகை 2,900 ஆகும். ஆர்ஜெண்டீனா இத்தீவுகளுக்கு உரிமை கோரியதை அடுத்தே இக்கருத்துக் கணிப்பு இடம்பெற்றது. 31 ஆண்டுகளுக்கு முன்னர் போக்லாந்து தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே போர் இடம்பெற்றது. இவ்விடயத்தில் கருத்துத் தெரிவித்த ஆர்ஜெண்டீனிய அரசுத்தலைவர் கிறித்தீனா பெர்னாண்டசு, பிராந்தியப் பிரச்சினையே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது, மக்கள் விருப்பமல்ல எனக் கூறினார். 1982 ஏப்ரல் 2 ஆம் நாள் ஆர்ஜெண்டீனியப் படையினர் போக்லாந்து தீவுகளை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து பிரித்தானியாவின் ரோயல் கடற்படையினருடன் இரண்டு மாதங்கள் வரையில் இடம்பெற்ற சண்டையில் அர்ஜ்னெடீனா இறுதியில் சரணடைந்தது. பிரித்தானியா போக்லாந்து தீவுகளை மட்டுமல்லாது, தெற்கு ஜோர்ஜியா உட்பட ஏனைய தெற்கு அத்திலாந்திக் பிராந்தியங்களையும் கைப்பற்றியது. இச்சண்டையில் 255 பிரித்தானியப் படையினரும், 650 ஆர்ஜெண்டீனியப் படையினரும் கொல்லப்பட்டனர். மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டனர். 1767 ஆம் ஆண்டில் எசுப்பானிய இராச்சியத்திடம் இருந்து போக்லாந்து தீவுகளைப் பெற்றதாகவும், 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளைக் கைப்பற்றியதாகவும் ஆர்ஜெண்டீனா கூறி வருகிறது. ஆனாலும், இத்தீவுகளில் தமது குடியேற்றம் முன்னரே ஆரம்பித்து விட்டதாகவும், அதனை விட்டுத்தர முடியாது எனவும் பிரித்தானியா கூறுகிறது. தொடர்ந்து தமது குடியேற்றம் இடம்பெற்று வந்ததாகவும், 1833 முதல் தாம் இதனை நிருவகித்து வருவதாகவும் பிரித்தானியா கூறுகிறது. இக்கைதுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசிக் கலைத்தனர். முன்னாள் அரசுத்தலைவர் பிங்கு வா முத்தாரிக்கா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார் முன்னாள் தலைவர் முத்தாரிக்காவின் இறப்புக் குறித்த அறிக்கை வெளியானதை அடுத்து, தனிப்பட்ட நபர்கள் சில குற்றச் செயல்களைப் புரிந்துள்ளதாக நம்பகரமாகத் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்தே இக்கைதுகள் இடம்பெற்றன என மலாவியின் தகவல் துறை அமைச்சர் மோசசு குங்குயு தெரிவித்தார். இறந்த முன்னாள் தலைவரின் சகோதரர் பீட்டர் முத்தாரிக்கா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், தற்போதைய அமைச்சர் கொண்டுவி ஆகியோர் ஆட்சியைக் கைப்பற்றுமாறு இராணுவத்தைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் பீட்டர் முத்தாரிக்கா முன்னாள் ஆளும் கட்சியான சனநாயக முற்போக்குக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும், அதற்கு இந்தியா உரியனவற்றை செய்யவேண்டும் எனக்கூறியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலவரையறையற்ற உண்ணாநிலை, அடையாள உண்ணாநிலை, சாலை மறியல், தொடர்வண்டி மறியல், அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், உருவபொம்மை எரித்தல், உள்ளிருப்புப் போராட்டம், வகுப்புகளைப் புறக்கணித்தல், அமைதிப் பேரணி செல்லல் போன்ற போராட்டங்களை அவர்கள் நடத்திவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) சென்னையின் குறிப்பிடத்தக்க கல்லூரியான லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர், காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினர். இந்தப் போராட்டமே பின்னர் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும் பரவியதாக ‘ஊடக செய்தி அறிக்கைகள்’ தெரிவிக்கின்றன. பல்வேறு பகுதிகளிலுள்ள பலதரப்பட்ட மாணவர்களால் நடத்தப்படும் இப்போராட்டங்களில் எழுப்பப்படும் கோரிக்கைகள் சற்று வேறுபட்டாலும், அடிப்படை நோக்கம் ஒன்றே என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். [[பகுப்பு:தமிழக மாணவர் ஈழ ஆதரவுப் போராட்டம்]] புதன்கிழமை அன்று ஆரம்பமான வாக்கெடுப்பில் 115 கர்தினால்கள் கலந்து கொண்டனர். நான்கு தடவைகள் நடந்த வாக்கெடுப்பில் எவரும் தெரிவாகவில்லை. ஐந்தாவது தடவையில் பிரான்சிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ச்சென்டினாவின் புவனெசு ஐரசு நகரில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஜோர்கே. இவரது தந்தை இரயில்வே துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலிய நாட்டவர். வேதியியலில் பட்டம் பெற்ற கோர்கே 1958ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். மெய்யியல், மற்றும் மனநலவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்று, புவனெசு ஐரெசுவில் டெல் சால்வடோர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1969ம் ஆண்டு குருநிலைப்படுத்தப்பட்டு, 1973ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை அர்ச்சென்டின இயேசு சபை மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். 1992இல் நகர உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவரை 2001 இல் கர்தினாலாக உயர்த்தினார். 2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் ஆசீர்வாதப்பர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோ 40 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தார் எனக் கூறப்படுகிறது. பேராயராக வாழ்ந்திருந்தாலும் சிறியதோர் வீட்டில் வாழ்ந்து, பேருந்திலும், தொடருந்துகளிலும் தனது பணிகளைச் செய்யச் சென்ற எளிமையே வடிவானவர் என உலக மக்களால் இவர் போற்றப்படுகிறார். புதிய பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கிறார். தற்போதைய பிரதமர் வென் சியாபாவுக்குப் பதிலாக லெ கெக்கியாங் பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மூத்த புரட்சித் தலைவர் சீ சோங்சுன் என்பவரின் மகனான 59 வயது சீ சின்பிங், செச்சியாங், சங்காய் நகர கட்சித் தலைவராக செயற்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டில் நிலைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார். கட்சித் தலைமைப் பொறுப்பை இவர் கடந்த ஆண்டு எடுத்த பின்னர், சீன அரசுத் தலைமைகளின் ஆடம்பர வாழ்க்கை குறித்து விமர்சனத்தை வெளியிட்டதோடு அரச அதிகாரிகளுக்கான சிக்கன நடவடிக்கையையும் முன்னெடுத்தார். புதிதாகப் பதவியேற்ற பின்னர் சீன அரசுத் தலைவர் சீ சின்பிங் நேற்றுப் பிற்பகல் உருசியத் தலைவர் பூட்டினுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். சீன அரசுத் தலைவராக சீ சின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குப் பூட்டின் வாழ்த்துத் தெரிவித்ததோடு, சீனா இடைவிடாமல் வளர்ந்து, சீன மக்கள் இன்பமாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்துத் தெரிவித்தார். சீ அரசுமுறைப் பயணமாக விரைவில் உருசியா செல்லவிருக்கிறார். அரசுத்தலைவராக இவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெறவுள்ளது. பிரிட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்கிறார். 12வது சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைகிறது. க. அரிஅரவேலன் மதுரையில் வாழும் பதிவர் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழறிஞர்கள், நூல்கள் பற்றி கட்டுரைகள் வரைகிறார். நேப்பாளத்தின் புதிய இடைக்கால அரசின் தலவராக அந்நாட்டின் பிரதம நீதியரசர் கில்ராஜ் ரெக்மி பதவியேற்றுள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் தேர்தல்களை நடத்துவதே இவ்வரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். நான்கு முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு ஒன்றின் படி இந்த இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது. நேப்பாளத்தின் கடைசி நாடாளுமன்றம் 2008 ஆம் ஆண்டில் தேர்தெடுக்கப்பட்டது. ஆனாலும் புதிய அரசியலமைப்பை வெளியிடாமலே அதன் பதவிக்காலம் 2012 மே மாதத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் ஐக்கிய கம்யூனிஸ்ட் (மாவோயிச) கட்சியின் தலைவர் பாபுராம் பட்டாராய் என்பவர் இடைக்காலத் தலைவரானார். சில அரசியல் கட்சிகள் இவரது பதவியேற்பை விரும்பாததால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து 2012 நவம்பரில் இடம்பெறவிருந்த தேர்தல்கள் தள்ளிப்போடப்பட்டன. புதிய உடன்பாட்டின் படி நீதியரசர் தலைமையிலான இடைக்கால அரசு வரும் சூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களைக் கண்காணிக்கும். புதிய அரசியலமைப்பும் அதன் பின்னர் வரையப்பட விருக்கிறது. இது நாட்டில் நிலையான அமைதியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெக்மியின் புதிய பதவி இடைக்காலத் தேர்தல் அரசின் தலைவர் என்பதாகும். தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர் மீண்டும் பிரதம நீதியரசராகத் தமது பழைய பணியைத் தொடருவார். இச்சட்டமூலம் மாநில ஆளுனர் மார்ட்டின் ஓ’மாலியின் கையெழுத்திற்கு அனுப்பப்பட்டு அதிகாரபூர்வமாகச் சட்டமாக்கப்படும். மாநில சனநாயகக் கட்சி ஆளுனர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மரணதண்டனை ஒழிப்புக்கு ஆதரவாகப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருபவர் ஆவார். இதனால், இது சட்டமாக்கப்படுவதில் எச்சிக்கலும் இராது என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். "மரண தண்டனையை நாம் இனப்பாகுபாடு இல்லாமல் நிருவகிக்க முடியாது, ஒருவரை ஆயுள் காலத்திற்கும் நன்னடத்தைக் கால விடுதலையின்றி அடைத்து வைத்திருப்பதிலும் பார்க்க மரணதண்டனையை நிறைவேற்றுவது செலவு அதிகம் ஆளுனர் ஓ’மாலி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நிரபராதி ஒருவர் மரணதண்டனை பெற்றால், அவரை நாம் மீளக் கொண்டுவர முடியாது எனக் கூறினார். மிகப் பாரதூரமான குற்றங்களை இழைப்பவர்களுக்கு மரணதண்டனை அவசியமான ஒன்று என இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மரணதண்டனை ஒழிப்பு சட்டமாக்கப்படின், மரணதண்டனையை ஒழிக்கும் அமெரிக்காவின் 18வது மாநிலமாக மேரிலாந்து திகழவிருக்கிறது. 1638 ஆம் ஆண்டில் மேரிலாந்து பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்த போது அங்கு மரணதண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. கடைசியாக அங்கு 2005 ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் கனெடிகட் மாநிலம் மரணதண்டனையை இல்லாதொழித்தது. கல்லூரிகளின் 'மாணவர் தங்கும் விடுதி'களிலிருந்து மாணவர்களை வெள்ளிக்கிழமை மாலைக்குள் காலிசெய்துவிட்டு செல்ல உத்தரவிடுமாறு, கல்லூரி நிர்வாகங்களை 'கல்லூரிக் கல்வி இயக்குனரகம்' கேட்டுள்ளது. தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்த மாணவர் அமைப்புகள் திட்டமிட்டுவரும் சூழலில், மாநில அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழக செய்தி ஊடகங்கள் கருதுகின்றன. தமிழக செய்தித் தொலைக்காட்சிகளுக்கு செவ்வி வழங்கிய மாணவர்கள் விடுமுறை அறிவிப்பால் எங்களின் போராட்டங்களை அரசு தடுத்து நிறுத்திவிட முடியாது; பிற கல்லூரி மாணவர்களுடன் கைகோர்த்து, எங்களின் போராட்டங்களை வலுப்படுத்துவோம்" என்றனர். போராட்டங்கள் ஆரம்பித்த தருணத்தில் வேறுபட்டிருந்த கோரிக்கைகள், இப்போது ஒன்றுபட்டு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பொதுவான கோரிக்கைகளை முன்வைப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரசியல் கட்சி சார்பில்லாமல் போராடும் மாணவர்கள், பிற சமூக அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [[இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மார்ச் 14, 2013 [[பகுப்பு:தமிழக மாணவர் ஈழ ஆதரவுப் போராட்டம்]] வடக்கு மாலியில் இடம்பெற்ற சண்டை ஒன்றில் பிரெஞ்சு கோப்பரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஒலாண்டேயின் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் படையினரின் எண்ணிக்கை இதன் மூலம் ஐந்தாக உயர்ந்துள்ளது. உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கும் பிரான்சுவா ஒலாண்டே எவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வியிரிழப்பு ஏற்பட்டது எனப்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகளுடனான போரில் ஈடுபட்டு வரும் மாலி இராணுவத்தினருக்கு உதவி செய்வதற்காக பிரான்சு கடந்த சனவரி மாதத்தில் அங்கு தனது படையினரை அனுப்பியிருந்தது. 1960 ஆம் ஆண்டு வரையில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த மாலியில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இசுலாமியத் தீவிரவாதிகள் துவாரெக் இனப் போராளிகளுடன் இணைந்து மாலியின் வடக்குப் பகுதிகளைத் தமது கட்டுப்ப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். ஆனாலும், துவாரெக் போராளிகளைப் புறம் தள்ளிய அல்-கைதா தீவிரவாதிகள் வடக்கே கடுமையான இசுலாமிய சரியா சட்டத்தை அமுல் படுத்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திம்பக்து நகரில் உள்ள பல முக்கிய வரலாற்றுச் சின்னங்களை அழித்தனர். இதன் பின்னர் அவர்கள் தெற்கு நோக்கித் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனை அடுத்து பிரான்சு தனது 4,000 படையினரை மாலிக்கு அனுப்பியது. இதழியல் துறையில் பணிவாய்ப்பு குறித்தும், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் குறித்தும் பயிலரங்கு, சென்ற வியாழக்கிழமை மார்ச் 14 இல் இல் கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் கிருட்டிணகிரி  மாவட்டம் உள்ளது. இங்குக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான பணி வாய்ப்பு மிகவும் குறைவு. இச்சூழலில், கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கலையியல் புலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மற்றும் ஆய்வு நிலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் உலகளாவிய கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா தொகுத்தல், இதழியல் பணி சார்ந்த வாய்ப்புகள் குறித்த பயிற்சி பயிலரங்கம் நடத்தப்பட்டது. காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இப்பயிலரங்கில் பேராசிரியர். இரா. வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கிருட்டிணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் பேராசிரியர். க. பச்சமுத்து, தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியின் தேவை குறித்தும், இதழியல் பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் தலைமையுரையில் விளக்கினார். இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர். சு. சுந்தரம், கணித்த துறை இணைப்பேராசிரியர். சா. மூர்த்தி, தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர். நா. பழனி வேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பத்திரிகையாளர் இரா. மலர் அமுதன் பயிற்சி நோக்க உரையில் பயிற்சியின் வடிவமைப்பு, அமர்வு, மாணவர்களின் ஊடாட்டத்தின் தேவை குறித்து விளக்கினார். இப்பயிலரங்கின் முதல் அமர்வில், பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, விக்கிப்பீடியாவின் தோற்றம் வளர்ச்சி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரையாற்றி செய்முறைப் பயிற்சி அளித்தார். இப்பயிலரங்கின் இரண்டாம் அமர்வில், பத்திரிகையாளர் இரா. மலர் அமுதன் பத்திரிகைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவது, பத்திரிகை செய்திகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் பொதுக் கருத்தை உருவாக்க முயற்சிப்பது, அதற்காகத் தங்கள் வசிப்பிடம் சார்ந்து செயல்படுவதை ஊக்குவிப்பது, பத்திரிகைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது, பணியாற்றுவதற்கான பயிற்சி முறைகள் குறித்த செய்திகளைத் தெரிவிப்பது என்னும் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரையாற்றி மாணவர்களோடு உரையாற்றினார். பயிலரங்கின் இறுதியில், பேராசிரியர் முனைவர் சிவப்பிரியா நன்றியுரை நிகழ்த்தினார். கல்லூரியின் அனைத்துத் துறைப்பேராசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வை அ முதல் ஆ ஊடக அமைப்பு வடிவமைத்தது. கிருட்டிணகிரியைச் சேர்ந்த ஆர்காட் தொண்டு நிறுவனம் நிகழ்ச்சிக்கான உதவியைச் செய்தது. தமிழக அரசு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணியை வழங்கியிருக்கும் இன்றையச்சூழலில், கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை அறியவும், இதழியல் வரலாற்றையும், அதன் பயன்பாட்டையும் அறிய இந்நிகழ்வு உதவியதாக தெரிவித்துள்ளனர். உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் நுண்ணுயிர்கள் மலிந்து காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலத்துக்கடியில் உள்ள இத்தகைய அகழி உயிரினம் வாழ்வதற்கு தகுந்தவை அல்லவென முன்னர் கருதப்பட்டு வந்தது. ஆனாலும், உறைபனி வெப்பநிலை, உயர் அமுக்கம், முழுமையான இருள் போன்ற சூழலிலும் சில நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஆளில்லா நீர்மூழ்கி ஒன்றை அறிவியலாளர்கள் மரியானா அகழியின் ஆழ்கடலுக்கு அனுப்பி அங்கிருந்து இருண்ட படிவுகளின் மாதிரிகளைச் சேகரித்திருந்தார்கள். இம்மாதிரிகளில் காணப்பட்ட ஒக்சிசனின் அளவு அங்கு நுண்ணுயிர்கள் பெருமளவு வாழ்வதற்கு ஏற்றனவாக இருந்தது. ஸ்கொட்லாந்து கடலியல் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் துர்னேவித்சு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் இந்த நுண்ணுயிர்கள் எம்மைப் போன்றே சுவாசிக்கின்றன. இந்த ஒக்சிசன் நுகர்வு இந்த நுண்ணுயிர்களின் நடவடிக்கைகளை அறியும் ஒரு மறைமுக அளவீடு எனக் குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு குமுகாயத்தின் இன்ன பிற அமைப்புகள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றன. போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் ‘ஒருநாள் அடையாளப் போராட்டங்கள்’ நடத்திட சில வணிக மற்றும் திரைப்படத்தொழில் அமைப்புகள் முன்வந்துள்ளன. ஆசியக் கண்டத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தையான சென்னையிலுள்ள 'கோயம்பேடு சந்தை' நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணிவரை செயல்படாது என அங்கு இயங்கிவரும் வணிகச் சங்கம் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 3000 கடைகள் வரை அங்கிருக்கின்றன; அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சந்தைக்கு காய்கறி, கனிகள் மற்றும் மலர்களைக் கொண்டுவரும் சுமார் 700 லாரிகள், மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிகிறது முழக்கப் போராட்டம்' ஒன்றும் சந்தையில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகையர் மற்றும் தொலைக்காட்சி தொழில் வல்லுனர்கள் பங்குபெறும் 'ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்' சென்னையில் இன்று நடைபெறுகிறது. சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் கலை, அறிவியல் பாடம் கற்கும் மாணவர்கள் மட்டுமே இதுகாறும் போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது கடந்த சனிக்கிழமை முதல், போராட்டங்களில் கலந்துகொள்ள தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்களும் முன்வந்துள்ளனர். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த ஞாயிறன்று சென்னையிலுள்ள ஐஐடி கல்வியகத்தைச் சேர்ந்த 69 மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாநிலை' மேற்கொண்டனர். அன்று மாலையில் மேலும் 100 மாணவர்கள் இவர்களுடன் இணைந்து ஊர்வலமாக சென்றனர். பொதுவாக போராட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாத ஐஐடி கல்வியக மாணவர்களின் இச்செயல்பாடு, அரசியல் பகுத்தாய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏழு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை அந்த மாணவர்கள் ஏந்திச் சென்றனர். வகுப்பு நடைபெறுவதற்கு ஊறுவிளைவிக்காமல் தங்களின் போராட்டம் இருக்குமென்றும், தங்களால் முடிந்த அளவிற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் அந்த மாணவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். [[பகுப்பு:தமிழக மாணவர் ஈழ ஆதரவுப் போராட்டம்]] இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தில் கடுமையான வாசகங்களுடன் கூடிய திருத்தம் செய்ய இந்திய நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து உடனடியாக விலகுவதாக திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். திமுகவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு இனிமேல் ஆதரவளிக்கப்போவதில்லை. மேலும் திமுகவின் ஐந்து அமைச்சர்களும் தமது பதவிகளைத் துறப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டாலும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசில் இருந்தும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி, பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். இந்திய நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் 543. காங்கிரசுக் கட்சிக்கு 206 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 272 பேரின் ஆதரவு தேவை. இதில் காங்கிரசுக் கூட்டணியின் பலம் 266 ஆக இருந்தது. கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் 19 பேர் கூட்டணியில் இருந்து விலகியதால் கூட்டணியின் பலம் 247 ஆக குறைந்தது. அப்போது அஜித் சிங்கின் லோக் தளம் கட்சி 5 உறுப்பினர்களுடன் கூட்டணியில் சேர்ந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் நடுவண் அரசை வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. தற்போது திமுக வெளியேறிவிட்டதால் காங்கிரசு கூட்டணியின் பலம் 229 ஆகக் குறைந்து விட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குத் தாம் தொடர்ந்து அதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு அங்கு தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் மாலியில் வைத்துத் தாம் கைப்பற்றிய பிரெஞ்சுத் தொழிலதிபர் ஒருவரைத் தாம் கொன்றுவிட்டதாக அல்-கைதாவின் வட்டக்கு ஆப்பிரிக்கக் கிளை அறிவித்துள்ளது. மாலியின் பிரெஞ்சுப் படையினரின் ஊடுருவலை எதிர்த்தே தாம் பிலிப்ப் வேர்டன் எனபவரைக் கொன்றதாக அல்-கைதாவின் இசுலாமிய மாகிரெப் (ஆக்கிம்) என்ற இயக்கம் கூறியுள்ளது. பிலிப் வேர்டனும், செர்கே லசாரவிச் என்னும் வேறொரு பிரான்சிய நாட்டவரும் தொழில் முறைப் பயணமாக மாலிக்குச் சென்ற போது 2011 நவம்பரில் அவர்களது விடுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டனர். ஆக்கிம் என்ற இயக்கம் தாமே இவர்களைக் கடத்தியதாகக் கூறி அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. ஆப்பிரிக்காவில் மட்டும் மொத்தம் 14 பிரான்சிய நாட்டவர்கள் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் மாலியில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பிரான்சு தற்போது வடக்கு மாலியில் தனது 4,000 படையினரை இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தியுள்ளது. இதனை அடுத்து வடக்கு மாலியின் பெரும்பாலான பகுதிகளை அது இசுலாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளது. ஆனாலும், பாலைவன மலைப்பகுதிகளில் இப்போது சண்டை இடம்பெற்று வருகிறது. அடுத்த மாதம் பிரான்சு தனது படைகளை மாலியில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. சூலை மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் வரை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அமைதிப் படையினர் அங்கு நிலைகொண்டிருப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு தீர்மானத்தின் முன்வரைவினை இக்கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீர்மான முன்வரைவின் மீது விவாதித்து, பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்திட இன்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தீர்மானத்தின் முன்வரைவைத் தாக்கல் செய்தபிறகு இரண்டு முறை அதில் திருத்தங்களை அமெரிக்க ஐக்கிய நாடு செய்துள்ளது. ஆக, இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்வரைவின் பதிப்பு எண், 3 ஆகும். திருத்தங்களினால் தீர்மானம் நீர்த்துப் போய்விட்டதாக 'அனைத்துலக மன்னிப்பு அவை (Amnesty International வருத்தம் தெரிவித்துள்ளது. கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம் இதழியல் துறையில் பணிவாய்ப்பு குறித்தும், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் குறித்தும் பயிலரங்கு, சென்ற வியாழக்கிழமை மார்ச் 14 இல் இல் கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிலரங்கின் முதல் அமர்வில், பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, விக்கிப்பீடியாவின் தோற்றம் வளர்ச்சி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரையாற்றி செய்முறைப் பயிற்சி அளித்தார். கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை அறியவும், இதழியல் வரலாற்றையும், அதன் பயன்பாட்டையும் அறிய இந்நிகழ்வு உதவியாக இருந்தது. பர்மாவின் மெய்க்திலா நகரில் கடந்த மூன்று நாட்களாக பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற இனமோதல்களை அடுத்து அந்நகரத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் விடுத்த இந்த அறிவித்தல் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. இனமோதலில் சேதமடைந்திருக்கும் நகரில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இந்த அவசரகாலச் சட்டம் உதவும் என அரசுத்தலைவர் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் இறந்தோர் எண்ணிக்கை விபரம் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. இனக்கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த மக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மெய்க்திலா நாடாளுமன்ற உறுப்பினர் வின் தெய்ன் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த புதன்கிழமை அன்று நகைக்கடை ஒன்றில் இடம்பெற்ற வாய்த்தர்க்கமே இந்த இனமோதலுக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இச்சர்ச்சை விரைவாக நகரம் முழுவது பரவியதில், முஸ்லிம்களின் கட்டடங்கள், மற்றும் பள்ளிவாசல்கள் என்பன தாக்கப்பட்டன. இதனை அடுத்து சமூக இளைஞர்களுக்கும் இடையே வீதிச் சண்டைகள் இடம்பெற்றன. நூற்றுக்கனக்கான முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி நகரின் விளையாட்டு அரங்கு ஒன்றில் தங்கியுள்ளனர். பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட 60 மில்லியன் மக்கள் வாழும் பர்மாவில் 5% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பர்மாவின் மிகப்பெரிய நகரங்களான யங்கோன், மண்டலாய் நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். தலைநகர் பாங்குயியை நோக்கிய போராளிகளின் முன்னேற்றத்தைத் தாம் தடுத்து நிறுத்தியுள்ளதாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுப் படையினர் அறிவித்துள்ளனர். தலைநகரில் இருந்து 75 கிமீ வடக்கே தடுப்புச் சாவடி முகாம் ஒன்றைத்தாண்டி நகரை நோக்கி முன்னேறிய செலெக்கா போராளிகளின் வாகன அணி மீது தமது உலங்கு வானூர்தி, தாக்குதல் நடத்தியதாக படையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2,000 போராளிகள் வரை தடுப்புச் சாவடியைத் தாண்டி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் பாங்குயியில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சனவரி மாதத்தில் செலெக்காப் போராளிகளுடன் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே செய்துகொண்ட உடன்பாட்டை பொசீசே மீறிவிட்டதாக செலெக்கா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இக்குற்றச்சாட்டை பொசீசே மறுத்து வருகிறார். பிராந்திய அரசுகளின் முன்னிலையில் காபொன் நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்த உடன்பாடு 2013 சனவரியில் எட்டப்பட்டிருந்தது. தலைநகர் பாங்குயியில் சுமார் 400 தென்னாப்பிரிக்கப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 1960 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பல முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளானது. இதன் மூலம் அயல் நாடான சாட் பல முறை இந்நாட்டின் அரசியலில் நேரடியாகத் தலையிட வேண்டி வந்தது. 2003 ஆம் ஆண்டில் பொசீசே, இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சாட் நாடு பல வழிகளில் உதவியது. பின்னர் 2005, 2011 தேர்தல்களில் அவரே வெற்றியீட்டினார். ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தங்கம் மற்றும் வைரம் போன்ற கனிமப்பொருட்கள் மிகுந்த நாடாகும். ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், நேற்று முன்தினம் (மார்ச் 21) நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன; 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கப்போனின் பிரதிநிதி வாக்கு அளிக்க இயலவில்லை. அமெரிக்கா, இந்தியா, அர்கெந்தீனா, ஆசுதிரியா, மான்டிநெக்ரா, எசுத்தோனியா, செக் குடியரசு, லிபியா, செருமனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, எசுப்பானியா மற்றும் கோட் டிவார் பாக்கித்தான், இந்தோனேசியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரசு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்சு, குவைத் மற்றும் மவுரிடானியா. ; வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடுகள் அங்கோலா, போட்சுவானா, பர்கினாபாசோ, எத்தியோப்பியா, சப்பான், கசகிசுதான், கென்யா மற்றும் மலேசியா [[இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது ஐநா அவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது மார்ச் 21, 2013 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் மாளிகையை போராளிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள போராளிகளின் தளபதி கேணல் ஜூமா நார்க்காயோ, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் சனாதிபதி மாளிகையை நாம் கைப்பற்றி விட்டோம், ஆனால் பொசீசே அங்கு இருக்கவில்லை என்றார். பாங்குயியில் உள்ள தேசிய வானொலிக் கட்டடத்தை நோக்கி நாம் செல்லவிருக்கிறோம். எமது தலைவர் மைக்கேல் ஜொத்தோடியா அங்கு உரையாற்றவிருக்கிறார், என அவர் மேலும் தெரிவித்தார். "போராளிகள் நகரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் அரசுத்தலைவர் மாளிகையின் பேச்சாளர் காஸ்டன் மெக்குசாங்பா தெரிவித்துள்ளார். போராளிகளின் இத்திடீர் முன்னேற்றத்தை அடுத்து பிரான்சு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாட்டின் விமான நிலையத்தைப் போராளிகள் கைப்பற்றாமல் இருக்க அங்கு தனது படையினரையும் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள பிரெஞ்சுக் குடிமக்களை தமது வீடுகளினுள் இருக்குமாறு பிரான்சு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 1,200 பிரான்சியப் படையினர் நிலை கொண்டுள்ளனர். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பிரான்சுவா பொசீசே ஆட்சியைக் கைப்பற்றினார். துபாயில் இருந்து வந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஆயுதம் தரித்த பாதுகாப்பு வீரர்கள் அவரை வரவேற்றனர். மே மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தலில் முசாரப்பின் கட்சிக்கு இவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தாலிபான்கள் வெளியிட்ட ஒரு காணொளியில் ஜெனரல் முசாரபை தாம் கொல்லப் போவதாகத் தெரிவித்திருந்தனர். படுகொலைகள் உட்படப் பல குற்றச்சாட்டுகள் முசாரப் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனைத்து வழக்குகளிலிருந்தும் அவருக்குப் பிணை கிடைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவி பெனசீர் பூட்டோ இலண்டனில் இருந்து நாடு திரும்பிய போது அவருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும். இதற்கிடையில், பாக்கித்தானின் வட-மேற்கே நேற்றிரவு இடம்பெற்ற ஒரு தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இலங்கைத் தலைநகர் கொழும்பில் இந்த ஆண்டின் இறுதியில் காமன்வெல்த் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று தான் எழுதிய கடிதமொன்றில் காமன்வெல்த் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை இலங்கையில் நடத்தினால், அந்நாடு நிகழ்த்திய போர்க்குற்றங்கள், இனஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் இப்போது நடந்துவரும் 'மனிதஉரிமை மீறல்' செயல்களை அங்கீகரிப்பது போலாகிவிடும். எனவே, கொழும்பு நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டாம்; அதில் கலந்துகொள்ள உத்தேசித்துள்ள மற்ற தலைவர்கள் பின்வாங்க வேண்டும்" என ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா அறிவித்துள்ளதையும், பிரிட்டனின் பிரதமருக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் செய்துள்ள பரிந்துரையையும் சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, அனைத்துலக அளவில் எந்த இடத்திலும் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கடிதத்தில் "ஐநா அவையில் கொண்டு வரப்பட்ட நீர்த்துப் போன தீர்மானத்தை எவ்வித திருத்தங்களும் இன்றி இந்தியா ஆதரித்தது; இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது" என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரைக் கைப்பற்றிய போராளிகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். செலேக்கா போராளிக் குழுவின் தலைவர் மைக்கேல் ஜொத்தோடியா நியாயமான தேர்தல்கள் இன்னும் மூன்றாண்டுகளில் இடம்பெறும்வரை நாட்டை தமது தலைமையில் ஓர் இடைக்கால அரசு நிர்வகிக்கும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கமரூன் நாட்டிற்குள் சென்றுள்ளார் என கமரூன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து ஆப்பிரிக்க ஒன்றியம் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசை தனது அமைப்பில் இருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், போராளித் தலைவர்களுகு எதிராக பல தடைகளையும் அறிவித்துள்ளது. அரசுடன் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாட்டை அதிபர் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனக் குற்றம் சாட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 5,000 செலேக்கா போராளிகள் தலைநகர் பாங்குயி நகருக்குள் ஊடுருவினர். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சண்டைகளில் அரசுப் படைகளுக்கு உதவிக்குச் சென்ற தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 13 படையினர் கொல்லப்பட்டனர் என தென்னாப்பிரிக்கத் தலைவர் யாக்கோபு சூமா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இந்தியக் குடிமக்கள் இருவர் அங்கு நிலை கொண்டுள்ள பிரெஞ்சுப் படையினரால் நேற்று திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என பிரான்சின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆஅறு பேர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொங்கோ, கமரூன் ஆகிய அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலையில் தாய்வானை நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். நன்டூ நகரில் கோயில் ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 72-வயதுப் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். தாய்வானின் மத்திய பகுதியில் 19 பேர் வரையில் காயமடைந்தனர். இரண்டு கண்டத்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் தாய்வான் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. 1999 ஆம் ஆண்டில் கடைசியாக இதே பகுதியில் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அப்போது 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பினை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட தீர்மானமொன்று, தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்திய நடுவண் அரசின்முன் வைக்கப்படும் தீர்மானமாக இது அமைந்துள்ளது. நேற்றைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து தாக்கல் செய்தார்; முதல்வரின் நீண்ட உரைக்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக, இலங்கைப் பிரச்சினைத் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கோவி. செழியன் (திமுக கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட் கணேஷ்குமார் (பாமக ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) முதலிய உறுப்பினர்கள் பேசினர். இதற்கு முதல்வர் பதிலளித்துப் பேசுகையில் கோரிக்கைகளை முன்வைக்கும்' தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ; இந்திய அரசை வலியுறுத்தி முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் கூறுகள் # இலங்கை நாட்டினை 'நட்பு நாடு' என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். # போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான அனைத்துலக புலன்விசாரணை நடக்கவேண்டும். # போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்கள் அனைத்துலக நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். # தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும்வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். # ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தனி ஈழம்' குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவேண்டும்; இதற்கென ஐநா அவையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு உருசியர்கள், ஒரு அமெரிக்கர் ஆக மூன்று பேருடன் சென்ற விண்கலம் நான்கு சுற்றிலேயே கடுகதிப் பயணமாக விண்வெளி நிலையத்தை அடைந்தது. பொதுவாக உருசிய விண்கலம் ஒன்றுக்கு இப்பயணம் 2 நாட்கள் எடுக்கக்கூடியது. கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் சென்ற பவெல் வினொகிராதொவ், அலெக்சாண்டர் மிசூர்க்கின், கிறிஸ் காசிடி ஆகியோர் விண்வெளி நிலையத்தில் செப்டம்பர் மாதம் வரை தங்கியிருப்பர். இவர்களுடன் சேர்த்து விண்வெளி நிலையத்தில் தற்போது ஆறு வீரர்கள் தங்கியுள்ளனர். ஏனைய மூவரும் இவ்வாண்டு மே மாதத்தில் புவிக்குத் திரும்புவர். இக்குறுகிய காலப் பயணம் ஏற்கனவே மூன்று முறை உருசியாவின் புரோகிரஸ் திட்டத்தின் மூலம் ஆளில்லாமல் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆறு மாத காலத்தில் விண்வெளி வீரர்கள் 137 பரிசோதனைகளை விண்வெளி நிலையத்தின் அமெரிக்கப் பகுதியில் மேற்கொள்வர் என்றும், 44 பரிசோதனைகளை உருசியப் பகுதியில் மேற்கொள்ளுவர் என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அறிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தில் இயற்கை அழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கருவி மார்ச் 8, 2013 சீனாவின் திபெத்துப் பகுதியில் நேற்றுக்காலை இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து 83 சுரங்கப் பணியாளர்கள் நிலத்தில் புதையுண்டனர். பிராந்தியத் தலைநகரான லாசாவில் 4,600 மீட்டர் உயரமான பகுதியில் காலை 06:00 மணிக்கு 3 கிமீ நீளத்தில் இந்நிலச்சரிவு ஏற்பட்டது. காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், மருத்துவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று 36 மணி நேரத்தின் பின்னரே புதையுண்ட ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. என்னும், புதையுண்டவர்களை உயிருடன் மீட்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதையுண்டவர்களில் பெரும்பாலானோர் யுனான், கூசூ, சிச்சுவான் மாகாணங்களைச் சேர்ந்த கான் சீனர்கள் எனவும், இருவர் திபெத்தியர்கள் அனவும் தெரிவிக்கப்படுகிறது. திபெத்தியப் பீடபூமி செப்பு, ஈயம், நாகம், இரும்பு போன்ற கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும். சீனாவில் நேற்று இடம்பெற்ற வேறொரு சம்பவத்தில், சிலின் மாகாணத்தின் வடகிழக்கே பைசான் நகரில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வாயு வெடிப்பு ஒன்றில் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தான்சானியாவின் தார் அல் சலாம் நகரின் மத்திய பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று பல-அடுக்கு கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. முன்னதாக கட்டடத் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட 45 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கட்டட இடிபாடுகளிடையே சிக்குண்டோர் தமது செல்பேசி வழியாக உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தான்சானியாவின் அரசுத்தலைவர் யக்காயா கிக்வெத்த சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் இந்த மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. இக்கட்டடம் 12 மாடிகளைக் கொண்டது. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ள நால்வர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் பர்மாவில் தனியார் பத்திரிகைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் பத்திரிகைகளின் மீதிருந்த அரசு ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 16 பத்திரிகைகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது, ஆனாலும் நான்கு மட்டுமே இன்று திங்கட்கிழமை அன்று வெளிவந்துள்ளன. பர்மாவில் ஆதிக்கவாதிகளின் ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு முக்கிய படிக்கல் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். முன்னாள் பிரித்தானியக் குடியேற்ற நாடான பர்மாவில் பர்மிய, ஆங்கில, மற்றும் வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு வந்த தனியார் பத்திரிகைகள் 1964 ஆம் ஆண்டில் அன்றைய இராணுவ ஆட்சியாளர்களினால் தடை செய்யப்பட்டன. இதனை அடுத்து ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதிக்குள்ளாக்கப்பட்டனர். எதிர்க் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி அம்மையாரின் கட்சிப் பத்திரிகை இம்மாத இறுதியில் தொடங்கப்படவிருக்கிறது. சிரியாவில் நிகழ்ந்த மோதல்களில், மார்ச் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 6000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'சிரியாவின் மனித உரிமைகளுக்கான அவதான நிலையம்' தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 291 பெண்களும் 298 சிறுவர்களும் அடங்குவர். மேலும் 1,486 போராளிகளும் முன்னாள் இராணுவத்தினரும், 1,464 சிரிய இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் அடையாலம் தெரியாதோர் ஆவர். சிரியாவில் அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை இக்குழு கண்காணித்து வருகிறது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தம்மால் அறிவிக்கப்பட்ட 62,554 இறப்புகளை விட அதிகமாகும் எனவும் அக்குழு அறிவித்துள்ளது 120,000 பேர் இதுவரையில் இறந்திருக்கலாம் என நாம் மதிப்பிட்டுள்ளோர் சிரியாவின் மனித உரிமைகளுக்கான அவதான நிலையத்தின் தலைவர் ராமி அப்தல்ரகுமான் கூறினார். சிரியாவில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் அரசுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்ததில் இருந்து 70,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. தேர்தல் திகதியை நிர்ணயிக்க தேர்தல் அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் கூடி முடிவு செய்வர். இம்மாத இறுதியில் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா விடுதலை அடைந்த நாளில் இருந்து தேசிய முன்னணி அந்நாட்டு அரசியலில் முன்னணியில் இருந்து வந்துள்ளது. மலேசியாவின் பலமான பொருளாதார வளர்ச்சியே தேசிய முன்னணியின் இம்முறை முக்கிய தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடம் வகிக்கும். "இம்முறை பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்படுமாயின் அது எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாகவே நடைபெறும் என நஜீப் தனது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார். மலேசிய நாடாளுமன்றத்தை பிரதமர் நஜீப் ரசாக் கலைத்தார், விரைவில் தேர்தல் ஏப்ரல் 3, 2013 பாரவூர்தி ஒன்றில் இருந்து அதிகாலை 05:00 மணிக்கு பத்திரிகைப் பிரதிகள் கீழிறக்கப்படும் போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக கிளிநொச்சிக் காவல்துறையினர் தெரிவித்தனர் தாக்குதலில் காயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்" எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். உதயன் கிளை அலுவலகம் கிளிநொச்சி காவல்நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நகரில் அந்நேரம் பெருமளவு இராணுவத்தினர் பணியில் ஈடுபட்டிருந்ததாக உதயன் கிளிநொச்சிப் பணிமனையின் ஊழியர் சுகிர்தன் என்பவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். முகமூடி அணிந்த ஏழு பேர் துடுப்பாட்ட மட்டைகளுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சுகிர்தன் கூறினார். அலுவலக உபகரணங்கள், கணினிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், பாரவூர்தி ஆகியன சேதமடைந்தன. அலுவலகப் பொறுப்பாளர் ஏ. பொன்ராசா, மற்றும் பார்த்திபன் ஆகியோர் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயினர். எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடருகின்றன என்றும் கிளிநொச்சிக் காவல்துறைப் பொறுப்பாளர் கபில ஜெயசேகர தெரிவித்தார். இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் மீது இவ்வாண்டு மட்டும் நான்காவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உதயன் பத்திரிகை அலுவலகங்கள் மீது பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதயன் பத்திரிகை ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உதயனின் மூத்த ஆசிரியர் குகநாதன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை அன்று, கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றின் மீது கற்கள் எறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எவரும் கைது செய்யப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிகை விநியோகர் மீது தாக்குதல், பத்திரிகைகளும் எரிப்பு பெப்ரவரி 7, 2013 உதயன் பத்திரிகை ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டார் சூலை 30, 2011 உதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மே 28, 2011 இந்தியாவின் வணிக நகரான மும்பைக்கு அருகில் உள்ள தாணேயில் கட்டி முடிக்கப்படாத தொடர் மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை இடிந்து வீழ்ந்ததில் 23 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 60 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறைந்தது நான்கு மாடிகள் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் குடி புகுந்துள்ளனர். மேலும் மூன்று மாடிகள் முடிக்கப்பட்டு எட்டாவது மாடி கட்டப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இடிந்து வீழ்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் கட்டடத் தொழிலாளிகள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், மகாராட்டிராவில் வாகோலி நகரில் இவ்வாறான கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பரில் புனே நகரில் கட்டடம் இடிந்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களை தேடும் பணி ஏப்ரல் 6 அன்று நிறுத்தப்பட்டது. இசுலாமைத் தாக்கி எழுதும் வலைப்பதிவர்களுக்கு மரண தண்டனை உட்படக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் வங்காளதேசத்தில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினர். மத நிந்தனைக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் எனக் கோரி இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டார். தலைநகர் டாக்காவின் தென்மேற்கே உள்ள பங்கா நகரில் அவாமி லீக், எஃபசாட்-இ-இசுலாமி கட்சி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் அவாமி லீக் கட்சியின் உள்ளூர் தலைவர் நௌசர் கான் என்பவர் கொல்லப்பட்டார். "நீண்ட ஊர்வலம்" என அழைக்கப்பட்ட இந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு தூர இடங்களில் இருந்தும் கிராம மக்கள் வந்து கூடினர். பழமைவாத மதக் கட்சிகளுக்கெதிராக அண்மைக்காலங்களில் வலைப்பதிவுகள் எழுதப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் ஆதரவுடன் இயங்கும் எஃபசாத்-இ-இசுலாம் என்ற இசுலாமியக் குழு இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தைக் குலைப்பதற்காக முன்னதாக மதச்சார்பற்றவர்கள் நாடு முழுவதிலும் 22-மணி நேர வேலைநிறுத்தத்தைக் கோரியிருந்தனர். இதனால் தலைநகர் டாக்காவில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு மரணதனடனை விதிக்க வேண்டும் என வலைப்பதிவர்கள் பலர் கோரியிருந்தனர். இவ்வலைப்பதிவர்களில் ஒருவரான அகமது ரஜீப் ஐதர் என்பவர் கடந்த பெப்ரவரியில் அவரது வீட்டிற்கு வெளியே வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வார ஆரம்பத்தில் நான்கு வலைப்பதிவர்கள் இசுலாம் மதத்திற்கு எதிராகப் பரப்புரை செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாக ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும், இசுலாமியவாதிகளுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்று வருகிறது. இரியன் ஜயா என முன்னர் அழைக்கப்பட்ட பப்புவா மாகாணத்தில் தொலிக்காரா என்ற இடத்தில் இருந்து 56 கிமீ தூரத்தில் மலைப் பகுதி ஒன்றில் 58 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலையல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவ்வதிர்வு நிலத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயப்புர உட்படப் பல பகுதிகளிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மக்கள் பலரும் அச்சத்தின் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். பெல் பிரபு இது குறித்து அறிவிக்கையில் மார்க், கரோல் தாட்சர் இருவரும் தங்களது தாயார் இன்று காலையில் பக்கவாதத்தினால் காலமானார் என்பதை மிக்க வருத்தத்துடன் அறிவித்துள்ளார்கள்" எனக் கூறினார். பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட தாட்சர், கன்சர்வேட்டிவ் கட்சிப் பிரதமராக 1979 முதல் 1990 வரை பதவியில் இருந்தார். பிரித்தானியப் பிரதமராக பணியாற்றிய ஒரேயொரு பெண் இவராவார். 1925 இல் பிறந்த மார்கரெட் வடக்கு இலண்டனின் பின்சிலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1959 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979, 1983, 1987 தேர்தல்களில் வெற்றி பெற்றுப் பிரதமரானார். 1992 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். தாட்சரின் அரசு, அரசு நிறுவனங்கள் பலவற்றைத் தனியார் மயமாக்கியது. இவரது காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகள் தொடர்பாக 1982 ஆம் ஆண்டில் அர்ஜெண்டீனாவுடன் போரில் இறங்கியது. போர் மூளும் பட்சத்தில் தென் கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வட கொரியாவின் ஆசிய-பசிபிக் அமைதிக் குழு இன்று விடுத்துள்ள அறிக்கையில் கொரியத் தீபகற்பத்தில் தற்போதுள்ள நிலைமை ஒரு வெப்ப-அணுவாயுதப் போருக்கு கொண்டு செல்கிறது" எனத் தெரிவித்துள்ளது போர் மூளும் பட்சத்தில், வெளிநாட்டவர் எவரும் பாதிப்படைய நாம் விரும்பவில்லை. அனைத்து வெளிநாட்டு அமைப்புகள், தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நாம் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்" என அவ்வறிக்கை தெரிவிக்கிறது. கொரியப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் தென் கொரிய, அமெரிக்க மற்றும் சப்பானியத் தளங்கள் மீது போர்த் தாக்குதல் நடத்தவிருப்பதாக வட கொரியா முன்னதாக அச்சுறுத்தியிருந்தது. சப்பான் தனது தலைநகரில் வசிக்கும் 30 மில்லியன் மக்களைக் காக்கவென ஏவுகணை-எதிர்ப்பு மின்கலங்களை டோக்கியோவின் மூன்று இடங்களில் பொருத்தியிருக்கிறது. சப்பானியத் தீவுகளுக்கு மேலாக வட கொரியா ஏவுகணைகளை ஏவும் பட்சத்தில் அவற்றை உடனடியாகச் சுட்டு வீழ்த்தும் வகையில் சப்பான் கடந்த வார இறுதியில் தனது நவீனப் போர்கப்பல்கள் இரண்டை சப்பானியக் கடலுக்கு அனுப்பியிருந்தது. எந்தவொரு வெளிநாட்டுத் தூதரகமும் நாட்டை விட்டு வெளியேற இதுவரையில் தீர்மானிக்கவில்லை. அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு அங்கு உடனடியான அச்சுறுத்தல் இல்லை என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வட கொரியாவில் அமைந்திருக்கும் படைகளகற்றிய வலயத்தில் உள்ள கேசோங் தொழிற்துறை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியப் பணியாளர்கள் எவரும் பணிக்குச் செல்லவில்லை. இதன் மூலம் தென் கொரியாவுடனான ஒரேயொரு தொடர்பு தடைப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் தென் கொரியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் படி, இவ்வளாகத்தில் 123 தென் கொரிய வணிக நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இங்கு திறந்துள்ளன. இவற்றில் ஏறத்தாழ 53,000 வட கொரிய ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது ஊதியம் அனைத்தும் நேரடியாக வட கொரிய அரசுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் ஏப்ரல் 3 ஆம் நாள் தென் கொரியர்கள் இங்கு வருவதற்கு வட கொரியா தடை விதித்தது. அத்துடன் அங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடிவிட உத்தரவிட்டது. வட கொரியாவின் மூன்றாவது அணுவாயுதச் சோதனையை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. மலேசியாவின் நாடாளுமன்றத் தேர்தலும் பொதுத்தேர்தலும் மே 5 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தல் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஒரு பெரும் சவால் நிறைந்த தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற கருத்துக் கணிப்புகளின் படி தேசிய முன்னணி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசிய அரசியலில் தற்போது ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறார். ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஏலத்துக்கு வந்தது. கடந்த ஆண்டு இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. நேற்று புதன்கிழமை நடந்த சட்டசபைக் கூட்டத்தில், சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் அறிக்கையொன்றினை முதல்வர் வாசித்தார். நிலத்தடி நீரின் மீதான நம்பகத் தன்மை குறைந்து வருவதைக் கருத்திற் கொண்டு, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒன்றென மொத்தம் இரண்டு 'கடல்நீரைக் குடிநீராக்கும் உற்பத்தி நிலையங்கள்' அமைக்கப்படுமென அப்போது அவர் தெரிவித்தார். தினந்தோறும் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். திட்டப்பணிச் செலவுகள், திட்டப்பணிக் காலம் மற்றும் துல்லியமான அமைவிடம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது உற்பத்தி நிலையம், தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது பெப்ரவரி 23, 2013 தலைநகர் ஜூபாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட, சல்வா கீர் பசீரை நேரில் சென்று வரவேற்றார். தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. நாடு பிரிந்த போது தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்காக சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் நிகழும் ஆபத்து இருந்தது. ஆனாலும், கடந்த மாதம் சூடானூடாக எண்ணெய் ஏற்றுமதி ஆரம்பித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த முறுகல் நிலை சற்றுத் தணிந்தது. சூடானின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளின் மூன்றில் இரண்டு பகுதிகளை நாடு பிரிந்த போது தெற்கு சூடானுடன் சேர்க்கப்பட்டது. தகவல்களைப் (உள்ளுருமைகளைப்) பாதுகாப்பதற்காக, வானூர்தியில் இருந்து தரைத்தளத்திற்கு அனுப்பப்படுகிற ஒளியன்களின் ஒரு துல்லிய ஒளிக்கற்றை மீது உடைக்கமுடியாத ஒரு மறையீட்டுத் திறவியை (encryption key) ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு தரை நிலையத்திற்கு, ஒளியன்களின் குறுகியக் கற்றையொன்றை அனுப்பும் ஒரு சீரொளியை அந்த வானூர்தியில் ஆய்வாளர்கள் பொருத்தியுள்ளனர். அதன் குறிகை (signal) போதிய வலுவானதாக இருக்கிறது என்றும், அனுப்புநர் வானூர்தியிலும் பெறுநர் தரை நிலையத்திலும் இருந்து கொண்டு துளிம மறையீட்டுத் திறவியை நிறுவக்கூடிய தடையங்காணுதல் போதிய துல்லியமானதாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் அறிக்கை கூறுகிறது. 93 அகவைகள் நிரம்பிய பிரான் 1920கள் முதல் 1990கள் வரை இந்தித் திரைப்படங்களில் பல எதிர்மறை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார் மதுமதி ஜித்தி ராம் அவுர் ஷ்யாம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது எதிர்மறை வேடத்தால் மக்களின் வெறுப்புணர்ச்சிக்கு ஆளானவர். “இன்று அதிகாலை 5 மணியளவில் வழக்கமான பத்திரிகை விநியோகம் ஆரம்பமாக இருந்த சமயத்தில் அச்சகப் பகுதிக்குள் நுழைந்த ஆயுதம் தரித்த மூவர் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி உள்நுழைந்து பணியாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். உள்நுழைந்த போது இயந்திரங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு இயந்திரங்களைச் சேதமாக்கிய பின்னர் அவற்றுக்கு பெற்றோல் ஊற்றித் தீ வைத்தனர் என உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமநாத் தேவநாயகம் தெரிவித்தார். "சரளமாகத் தமிழில் கதைத்து, ஊழியர்களை வெளியேறுமாறு பணித்தனர். அவர்கள் வெளியேற மறுக்கவே வானை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். உடனடியாகவே பணியாளர்கள் வெளியேறியதும் இயந்திரங்களுக்குத் தீவைத்துக் கொளுத்தினர். தெய்வாதீனமாக இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என அவர் கூறினார். அச்சகத்தில் இருந்த மிக முக்கியமான அச்சியந்திரம் திருத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளது. நாளை ஞாயிறுப் பதிப்புடன் வெளிவரவிருந்த பின்னிணைப்புகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இன்றைய தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்சுமன் உலுகல்ல இது ஒரு உள் வீட்டு வேலை என்றே ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது எனக் கூறினார். இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையான உதயன் அலுவலகம் அடித்து நொறுக்கி பத்திரிக்கைக்கு தீவைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஸ்ரீநிவாஸ் சென்னை, சி.ஐ.டி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது இறுதிச் சடங்கு நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. கலையுலகப் பிரமுகர்கள் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் ஒன்றை அமெரிக்க அறிவியலாளர்கள் எலி ஒன்றுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளார்கள். இச்சிறுநீரகம் எலியின் உடலில் இருந்து சிறுநீரை உற்பத்தி செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறுநீரகம் எலியின் உடலில் இருந்து சிறுநீரை உற்பத்தி செய்வதாகவும், ஆனால் இயற்கையான சிறுநீரகத்தை விட இவை செயற்திறன் குறைந்தவையாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், இவ்வாய்வு எதிர்காலத்தில் பெரும் வெற்றியடையும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உடம்பில் உள்ள குருதியில் சேரும் கழிவுகள், மற்றும் மேலதிக நீரை சிறுநீரகங்கள் வடிகட்டி வெளியேற்றுகின்றன. அமெரிக்காவின் பொஸ்டனில் உள்ள மசாசூச்செட்சு பொது மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இறந்த எலி ஒன்றின் சிறுநீரகத்தை அகற்றி அதில் இருந்த பழைய கலங்களைக் கழுவி வெளியேற்றினர். பின்னர் புதிதாகப் பிறந்த எலிகளின் சிறுநீரகம், மற்றும் குருதிக் கலன்களை பழைய சிறுநீரகத்தினுள் சேர்த்து 12 நாட்களுக்கு உறுப்புகள் வளர்ச்சியடைய விட்டனர். பின்னர் இச்சிறுநீரகத்தை வாழும் எலிக்குப் பொருத்தினர். இச்சிறுநீரகம் வெற்றிகரமாக எலியின் குருதியை வடிகட்டி சிறுநீரை வெளியேற்றியது. ஆனாலும் இதன் செயற்திறன் 5% ஆகவே இருந்தது. இன்று சிறுநீரகங்களே மாற்றுறுப்புக்காக அதிகம் தேவைப்படும் உள்ளுறுப்பாகும். குண்டுவெடிப்புகள் உள்ளூர் நேரம் பிற்பகல் 2:50 மணிக்கு இடம்பெற்றது. 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் 8 வயதுச் சிறுவன் ஒருவனும் அடங்கியுள்ளான். அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். இக்குண்டுத்தாக்க்ய்தலுக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் நாம் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என அரசுத்தலைவர் பராக் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றித் தெரிவித்தார். முதலாவது குண்டு உள்ளூர் நேரம் 14:50 மணிக்கு (18:50 ஒசநே) பாலிஸ்டன் சாலைக்கு வடக்கே இடம்பெற்றுள்ளது. வெற்றியாளர்கள் நிறைவுக் கோட்டைத் தாண்டி இரண்டு மணி நேரத்தில் இது வெடித்தது. சில ஓட்டக்காரர்கள் தரையில் வீழ்ந்தார்கள். காவல்துறையினரும், ஏனையோரும் குண்டுவெடிப்பில் சிக்கியோருக்கு உதவிக்கு விரைந்தார்கள். சில செக்கன்களுக்குப் பின்னர் 50 மீட்டர்கள் தொலைவில் மக்கள் குழுமியிருந்த இடம் ஒன்றில் அடுத்த குண்டு வெடித்தது. சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பாஸ்டன் காவல்துறை ஆணையாளர் எட்வர்ட் டேவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களை அவர் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பாஸ்டன் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நிகழும் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இவ்வாண்டு 23,000 ஓட்டக்காரர்கள் பங்குபற்றினர். பல்லாயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். 1775 ஆம் ஆண்டின் அமெரிகப் புரட்சியின் முதல் சமர்களை நினைவு கூரும் முகமாக 1897 ஆம் ஆண்டு முதல் நாட்டுப்பற்றாளர் நாளில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது. பாஸ்டன் குண்டுவெடிப்புகளை அடுத்து, வரும் ஞாயிறன்று லண்டனில் இடம்பெறவிருக்கும் லண்டன் மாரத்தான் போட்டிகளின் பாதுகாப்புத் திட்டங்களை லண்டன் காவல்துறையினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 3:14 மணிக்கு ஈரானின் சிஸ்தான் பலுச்சித்தான் மாகாணத்தில் காஷ், சரவான் ஆகிய நகரங்களுக்குக் கிட்டவாக 95 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய் நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. அராபியா, யூரேசியா ஆகிய கண்டத் தட்டுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வினாலேயே நேற்றைய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அராபியாத் தட்டு ஆண்டுதோறும் வடக்கு நோக்கிப் பல சென்டிமீட்டர்கள் தூரம் நகர்ந்து வருகிறது. அண்டார்க்ட்டிக் கடலின் பனிப்படி அடுக்குகளின் கீழ் பனி உருகுவதனால் உருவாகும் நன்னீர் ஒப்பீட்டளவில் குளிரானதாக இருப்பதே இந்த முரண்பாடான நிகழ்வுக்குக் காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த உருகும் நீர் உப்பு நீரைக் காட்டிலும் குறைந்த அடர்த்தியைக் கொண்டிருப்பதால் அது பெருங்கடலின் மேற்படையிலேயே சேமிக்கப்படுகிறது. இந்தக் குளிரான நீர் பின்னர் கூதிர், குளிர் காலங்களில் இலகுவாக மீளவும் உறைகிறது. குளிர் காலங்களில் பனிப்பாறைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம் என ரோயல் நெதர்லாந்து வானிலையியல் கழக அறிவியலாளர் குழு தெரிவித்துள்ளது. இந்நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்கும் என அக்குழுவினர் கூறுகிறார்கள். அண்டார்க்டிக்காவில் பெரும் பனிப்பாறை உருவாகிறது நவம்பர் 7, 2011 இந்த விசித்திர வளையங்கள் பல்லாண்டுப் புல்லினத்தின் காய்ந்த புள்ளிகளாகும். இவை மண்ணாக ஆங்கிலோவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு படர்ந்ததன் ஆரம்பத்தினை கண்டு சூழல் மற்றும் தொன்ம ஊகங்களில் கவரப்படுகின்றவை. நீர் விநியோகம் மற்றும் விசித்திர வளையங்களின் வாழ்க்கைக்காக சுமார் 40 முறை ஆப்பிரிக்காவிற்கு பயணித்தப்பின் செருமனி நாட்டின் ஆம்பர்கு பல்கலைக்கழத்தின் அறிவியலாளர் நோபெர்ட்டு சூர்சென்சு (Norbert Jürgens) இதற்கு பின்புலமாக மண் கறையான்களே உள்ளன என முடிவுரைத்தார். அந்த மண் கறையானின் உயிரியல் பெயர் சம்மோடெருமசு அலோசெரசு Psammotermes allocerus) ஆகும். அந்த விசித்திர வளையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரினங்களில் இந்த மண்கறையானே அனைத்து பகுதியிலும் படர்ந்து இருந்தது என அவர் மார்ச்சு 29 சயன்சு அறிவியலிதழில் வெளியிட்டுள்ளார். இக்கறையான்கள் வேர்களையும், புல்லினங்களையும் தின்று அற்புதமான மொட்டைத் தரையை பொறித்துள்ளது. சோதனையின் பொழுது அந்த மொட்டைத் தரை பிற இடங்களைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுதியானதாக உள்ளது. இந்த ஈரப்பதமானது இக்கறையான்களுக்கு மட்டுமல்லாமல் பிற புல்லினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வசதியாக இருக்கிறது. சொல்லப்போனால், உண்மையில் இக்கறையான்கள் பிற உயிரினங்களுடன் போட்டிப்போட்டு வென்று வருகிறது. இவ்வாறு சூழலியல் பொறியாளரான நோபெர்ட்டு சூர்சென்சு கூறினார். சுடோன்கென்ஞ்சைக் (Stonehenge) கட்டியவர்கள் விவசாயிகள் இல்லை என்றும், மேய்ச்சல்காரர்கள் என்றும் ஒரு புதிய ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது. அவர்கள் இறைச்சி உணவுகளை உண்டும், புலம் பெயர்ந்து திரியும் வாழ்வையும் கொண்டிருந்தனர். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயமே பிரித்தானிய தீவுகளில் (British Isles) முதலில் தோன்றி, பின் விலங்குகள் மேய்ச்சலுக்கு வழிவிட்டது என்கின்றனர். இந்த நிலப்பகுதியில் இலேசான, ஈரமான பருவம் உதயமாயின. அப்பொழுது எமர்த்தானியக் கோதுமை (emmer wheat வாற்கோதுமை (barley திராட்சைகள் (grapes) போன்ற மடுத்திரைப் பயிர்கள் (Mediterranean Crops) பிரித்தானிய தீவுகளில் அறிமுகமாயின. இதனை இங்கிலாந்தின் சாலிசுபரியில் (Salisbury) உள்ள வெசக்சு அகழாய்வியலில் (Wessex Archaeology) அகழாய்வு உயிரியலாளர் (Archaeobiologist) கிரிசு சிடீவன்சு (Chris Stevens)என்பரும், யுனிவர்சிட்டி காலேசு இலண்டனின் (University College London) டோரியன் புள்ளர் (Dorian Fuller) என்பவரும் தெரிவித்தனர். முதலில் உழுதலுடன், தோட்டங்களில் பழங்களும் விதைகளும் பரிந்த்து உணவுண்டு, அத்துடன் சில கால்நடைகளையும் வளர்த்து வந்தனர். பிறகு 5300 ஆண்டுகளுக்கு முன்பு கடும் குளிரும், நிலத்தில் உலர்வுத்தன்மை ஏற்பட்டதினால் விவசாயம் செய்ய இயலாமல், கால்நடை வளர்ப்பை அதிகரித்து வாழ்ந்து வந்தனர் என்று சிடீவன்சும், புள்ளரும் கூறினர். அவர்கள் செம்மறி, பன்றி, பசுக்கள் ஆகியவற்றை வளர்த்து வந்தனர் என்று செப்டம்பர் ஆண்டிகியூட்டியில் (Antiquity) வெளியிட்டனர். 3500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் வெண்கலக் காலத்தில் திரும்பவும் விவசாயம் தலைத்தூக்கின. மேய்த்து இடம்பெயரும் வாழ்வு போயின. 6000 ஆண்டிற்கு முன்பும், 4000 ஆண்டிற்கு முன்பும் விவசாயம் செய்துள்ளனர். இந்த இரண்டுக் காலப்பகுதிக்குள் தான் இந்த சுடோன்கென்ஞ்சுப் போன்ற கல் நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன் தான் இவை கட்டத்தொடங்கியுள்ளனர். 4400 ஆண்டுகளுக்கு முன் இக்கற்கள் வேறு ஒரு இடத்திலிருந்து இழுத்துவரப்பட்டுள்ளது. பழங்கால பிரித்தானிய மக்கள் பிறப்பு, இறப்பும், மறுபிறப்பும் கொண்ட நிலப்பகுதியில் வாழ்ந்தனர். அப்பொழுது அங்கு மேய்ச்சலுக்காக வந்த சிறு மேய்ப்பாளர் குழுவிடம் இணைந்து கட்டினார்கள் என சிடீவன்சும், புள்ளரும் கூறினர். இவர்கள் ஏன் இதனை கட்டினார்கள் எனபதற்கான கேள்விக்கு புள்ளர், “அவர்களின் குழுக்களுக்குள் ஏற்படும் திருமணம், நெடுதொலைவு செல்லும் பொழுது கால்நடைகளுக்கு தங்களுக்கு களைப்பாற்றவும், ஓய்வெடுக்கவும், விருந்துகள் நடத்தவும், பிற விழாக்களுக்கும் அவர்கள் இவ்வகையான கற்களை கட்டமைத்தனர்.” என்றார். இதனை ஒரு பெருங்கூட்டம் கட்டியிருக்க வேண்டும் என்றனர். ”5000 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் பொருளாதாரம் மிக பலமானதாக இருந்தது. அதுவே அவர்கள் சுடோன்கென்ஞ்சு கட்டுவதற்கு ஏற்றதாக இருந்தன.” என போர்ன்மெளத் பல்கலைக்கழத்தின் டிமோத்தி டார்வில் கூறினார். அதன் பிறகே இக்கற்களை அவர்கள் எடுத்துவந்தனர். சுமார் 700 உண்வுகளை 198 இடங்களில் முன்பே ஆய்வு செய்ததின் அடிப்படையில் பிரித்தானிய தீவுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் செய்வதற்கான காலநிலை நன்றாக இருந்ததும், அவர்கள் தோட்டங்களில் பல பழங்களை பயிரிட்டனர் என்பதையும் வானலை கரிம காலக்கணிப்பின் மூலம் கண்டரிந்ததை சிடீவன்சும், புள்ளரும் எடுத்துரைத்தனர். 3500 முன்பு பல புதிய பயிர்கள், அதாவது பட்டாணிகள், அவரைகள் மென்மாக் கோதுமை வகைகள் போன்றவை அறிமுகமாயின. இதற்கென தேக்கக்குழிகள், கூலக்களஞ்சியம் ஆகியவற்றை அக்கால மக்கள் உருவாக்கினர். அது ஒரு வெண்கலக் காலம். சிடீவன்சு, மற்றும் புள்ளர் ஆகியோரின் ஆய்வு அக்காலத்தில் உழுதலும், மேய்ச்சலும் எப்படி இருந்தன என்பதை விவரிக்கின்றன என்று வேல்சில் (Wales) உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தின் (Cardiff University) அலாசுடார் வித்தில் (Alasdair Whittle) கூறினார். மேலும் வித்தில், “விவசாயிகள் இதனைக் கட்டவில்லை என்றால் இக்கற்களை இழுத்துவந்தவர்கள் உழவர்களே“ என்றார். பெருங்கடலின் அதிக அமிலத்தன்மையினால் மிதவை வாழிகளுக்கு அதன் கால்சியம் கார்பனேட்டு கூடுகளை உருவாக்குவதில் கடினமான சிக்கல் ஏற்படும் என்று அறிவியாலளர் எண்ணியிருந்தனர். ஆனால் அதற்கு மாறாக, அவை ஒரு மில்லியனில் 1320 கார்பன்டையாக்சைடு பகுதிகள் உள்ள ஒரு கடல் நீர்க்குளத்தில் 17 விழுக்காடு வேகமாக வளர்வதை சான்டா பார்பரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெபோரா இக்லேசியெசு-ராட்ரிகசு என்பவரின் தலைமையிலான அறிவியலாளர் குழுவொன்று கண்டறிந்துள்ளது. அவ்வாறு வளர்ச்சியடையும் எமிலியானியா கக்சுலெயி (Emiliania huxleyi) என்னும் இந்த மிதவை வாழிகளின் கூடுகளை காக்கோலித்து (coccolith) என அழைக்கின்றனர். இந்த காக்கோலித்துக் கூட்டின் பயன்பாட்டை அவர்களால் இன்னும் அறிய முடியவில்லை, ஆனாலும் அவை அதன் உடலில் ஒரு அடிப்படை உறுப்பு என அவர்கள் மேலும் கூறினர். இது பற்றிய முழு ஆய்வினை பிளோஸ் ஒன் இணையத்தில் ஆய்வாளர்கள் இவ்வாரம் வெளியிட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் டி. கே. இராமமூர்த்தி; தலைமுறைப் பெருமைவாய்ந்த இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கிருஷ்ணசாமியும், தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும் வயலின் கலைஞர்களாவர். இதனால் ராமமூர்த்தியும் சிறுவயதில் வயலின் வாசிப்பில் சிறந்து விளங்கினார். திரையுலகில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தும், வயலின் தனியிசை நிகழ்ச்சி நடத்தியும் வந்தார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இவரை தன்னோடு சேர்த்துக் கொண்டார். அதன்பிறகு இராமமூர்த்தியுடன் எம். எஸ். விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டார். ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் சிறப்புப் பெயரினால் அழைக்கப்பட்ட இவ்விருவரும் 1952ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை இணைந்து இசையமைத்தனர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்திற்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர். 1995ஆம் ஆண்டில் டி. கே. இராமமூர்த்தியும் எம். எஸ். விஸ்வநாதனும் மீண்டும் இணைந்து ‘இலக்கியச் சோலை’ எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தனர். 2012ஆம் ஆண்டு ‘ஜெயா டிவி’ நடத்திய பாராட்டு விழாவில் இருவருக்கும் தனித்தனியே ‘திரையிசைச் சக்ரவர்த்தி’ எனும் பட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மறைந்த கலைஞர் டி. கே. இராமமூர்த்திக்கு இசையமைப்பாளர்கள் எம். எஸ். விஸ்வநாதன் சங்கர்) கணேஷ், தேவா, பாடகர்கள் பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கவிஞர் வாலி போன்றோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளனர். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று காலை சென்னை மயிலாப்பூர் மின்மயானத்தில் நடந்தது. ரோபாட் என அழைக்கப்படும் தானியங்கிகளின் முரட்டுத்தனமான கைகளுக்கு மென்மையான செயல்பாட்டை உணர்த்தும் விதமாக அதிக செலவில்லாத தொட்டறி உணரி ஒன்றை அமெரிக்காவின் மாசச்சூசெட்சு மாநிலத்தில் உள்ள ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்குறைந்த விலைத் தொட்டறி உணரியின் பெயர் டாக்டைல் TakkTile) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறிய காற்றழுத்தமானியும், வெற்றிடம் அடைத்த இரப்பரின் அடுக்கு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வுணரி காற்று அழுத்தத்தை உணரவும், 20 பவுண்டு நேரடி அழுத்தத்தை எதிர்கொள்ளவும் முடியும் என ஆய்வாளர்கள் கூறினர். இவ்வளவு நாட்களாய் இது போன்ற தொட்டறி உணரிகள் மிக விலை உயர்ந்ததாக இருந்தது. சுமார் 16000 டாலர் விலை மதிப்புள்ளது. அதனாலேயே வணிக ரீதியாக இது வெற்றியடையவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எளிதான விலை மலிவானதான ஒரு தொட்டறி உணரியானதால் இது வணிக ரீதியில் வெற்றியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மென்மையான செயல்பாட்டினை கையாளுவதால் இதனை மருத்துவ சிகிச்சை செய்யக்கூடப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள் சென்டோஃப்டு மற்றும் டென்சர் ஆகியோர். இதனை பொம்மைத் தயாரிக்கும் நிறுவனங்களும் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர். இந்த ஆய்வுக்கு பிறகு இவர்களுக்கு சில வர்த்தக வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. மின்கலங்களினால் இயங்கும் தயாரிப்புகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி 3 வாட் வரை ஆற்றலைத் தரக்கூடிய எரிபொருள் மின்கலம் ஒன்று வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இது நுண்ணிய எரிபொருள் மின்கல தொழினுட்பத்தை சார்ந்ததாகும். இதன் பெயர் மைஎஃப்சி பவர்ட்ரெக் (MyFC PowerTrekk) என இதனை உருவாக்கிய சுவீடன், சுடாக்கோமில் உள்ள கேடிஎச் ராயல் தொழில்நுட்பக் கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கழகத்தின் ஆய்வாளரும், மைஎஃப்சியின் இயக்குனருமான ஆப்டெர்சு லூடுபிளாடு மடிக்கணினிகளுக்கு எரிபொருள் மின்கலம் அமைப்பதற்கான முதல் படி இதுவே எனக் கூறினார். குமுகாயத்தில் எரிபொருள் மின்கலங்களை பயன்படுத்த இந்த மின்தேக்கி முக்கிய பங்காற்றும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் நீரினை ஒரு சிறிய நீக்கக்கூடிய மாழை வட்டுக்குள் ஊற்றினால், அதிலுள்ள நீர்மமானது வெளியாகி, உயிர்வாயுவுடன் இணைந்து மின்சாரத்தை உண்டாக்குகிறது. இதன் முடிவான மின் ஊட்டம் ஆப்பிள் ஐபோனின் மின்தேக்க திறனில் 25 முதல் 100 விழுக்காடு வரை மின்சாரத்தை ஊட்டுகிறது. இது கையடக்க கருவிகளாகவும் கூட பயன்படுத்தலாம். மைஎஃப்சி என்பது ஒரு மலிவுவிலை மின்கலங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது கைப்பேசி மற்றும் மடிக்கணினிகளுக்கு கையடைக்கமான கருவிகளை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுப் பயன்பாட்டிற்கும் நவீன ஒலி வடிவமைப்பாளர்களுக்கும் இரண்டு ஒலி மூலங்களை ஒரே சில்லு (chip) மூலம் ஒன்றிணைக்க அனுமதிக்கும் ஒலி செயலாக்கியை அமெரிக்காவின் டெக்சாசு இன்சுட்ரூமன்சு நிறுவனம் தயாரித்துள்ளது. TAS5548 என்ற இந்தச் சில்லு, இரண்டு ஒத்தியங்கா மாதிரி விகித மாற்றிகளைக் (asynchronous sample rate converters) கொண்டவொரு துடிப்பு அகல குறிப்பேற்ற (PWM) ஒலி செயலாக்கியாகும். இதனை அந்நிறுவனம் இதே போன்று ஏனைய ஒலி செயலாக்கிகளில் இரண்டு சில்லுகள் தேவைப்படுவதைப் போலல்லாமல் ஒரே சில்லுடன் வடிவ நெகிழ்மையும், செலவு சேமிப்பும் கொண்டுள்ளதாக கூறுகிறது. இந்த செயலாக்கி 8 முதல் 192 கிலோஎர்ட்சு மாதிரி விகிதத்தை ஏற்கிறது, மேலும் கெழுக்களை உருவாக்கி, சேமித்து, மாற்றுவதை தடுக்குமாறு அவைகளை 96 அல்லது 192 கிலோஎர்ட்சாக மாற்றியமைக்கிறது. திறன் வரம்பை அடைந்தால் மிக ஆற்றல்மிக்கதாக செயல்பட புரவன் செயலாக்கியை (host processor) குறுக்கிட்டு, ஒரு தொகுத்த சுட்டித் திறன் இயக்கியானது (integrated smart power manager) ஒலி கட்டகத்தின் உச்சத் திறனை (peak power) கட்டுப்படுத்துகிறது. உயர் முனை ஒலி அமைப்பிற்கு, ஒரு திறன் வழங்கி ஒலிமுழக்கக் கட்டுப்பாடு ஆற்றல்மிக்கதொரு உயர் திறன் செயல்பாட்டை தருகிறது. சீனாவின் தென்மேற்கே சிக்குவான் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர், 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தலைநகரில் மக்கள் தமது விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். கட்டடங்கள் பல இடிந்து வீழ்ந்தன. தொலைத்தொடர்புகள், மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான படையினர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 2008 மே மாதத்தில் சிக்குவான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 90,000 பேர் கொல்லப்பட்டனர், 5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். இட உயிர்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வௌவாலின் முப்பரிமாணக் காட்சிகளைக் காணச்செய்கிறது என அண்மைய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது. ஆங்கில அறிவியல் இதழான சயன்சு ஏப்ரல் 18 இதழில் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு எகிப்தியக்கசு Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்தியப் பழந்தின்னி வௌவால் தன் இட உயிர்மிகளால் தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. வௌவாலின் மூளையில் மின்முனைகளைப் பொருத்தியும், அதன் தலைகளில் சிறிய கம்பியற்ற பதிவுக் கருவிகளை வைத்தும் வௌவால் மேலும் கீழும் பறக்கும் பொழுது நரம்பணுக்களின் செயல்பாட்டை பதிவு செய்தனர். வௌவால் ஒரு பொருளைப் பெரிதாக்கிப் பார்க்கும் பொழுது இட உயிர்மிகள் சோர்வு நீங்கி உற்சாகமடைகிறது என இசுரேலில் உள்ள வெய்சுமன் அறிவியல் கழகத்தை (Weizmann Institute of Science) சேர்ந்த மைக்கேல் யார்ட்சேவ், நாக்கும் உலனோவுசுக்கி ஆகியோர் அறிவித்தனர். ஒரு வரைபடத்தில் நாம் குறித்த இடங்களைப் புள்ளிகளால் குறித்து வைப்பதைப் போன்று, அந்தப் பதிவுத் தாளானது அமைந்திருந்தது. அந்த வௌவால் அறையில் எங்கெல்லாம் தனது முப்பரிமாண காட்சியைக் காண முற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வௌவால் தனது இட உயிர்மிகளை செயலாக்கிக் கொள்கிறது. கம்பியற்ற நரம்பு தொலையளவியல் கட்டகத்தைப் (neural-telemetry system) பயன்படுத்தி பதிவு செய்த போது, 90 விழுக்காடு நரம்பணுக்களை செயலாக்கி, மூன்று பரிமாண அச்சுக்களிலுமே கிட்டத்தட்ட ஒரே அளவு பகுதிறனுடன் அது காட்சிகளை உள்வாங்கிக்கொள்கிறது என அறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வின் முடிவை மூளைச் சுற்றுகள் எப்படி விலங்குகள் தான் காணும் முப்பரிமாண இடத்தை அறிந்து கொள்கிறது என்ற நீண்டகால புதிரின் விடையாக கருதலாம் எனவும் அவர்கள் மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த செய்மதியில் 45 எலிகள், 8 மங்கோலிய கேர்பில்கள் (கொறிணிகள் 15 பல்லிகள், நத்தைகள், மீன் முட்டைகள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட தாவரங்களும் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்செய்மதி மீளவும் பூமிக்குத் திரும்பக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான செய்மதிகள் ஏவப்படுவது இதுவே முதற் தடவையாகும். 575 கி.மீ உயர கோள்பாதையில் 30 நாட்கள் பயணத்தை முடித்து இந்த செய்மதி இவ்வாண்டு மே 18 இல் பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் இருக்கும் காலத்தில் மரபியல், உடலியல் மற்றும் உயிரியல் சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வர். இந்த சோதனையின் முடிவுகள் எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளுக்கான மனித விண்வெளிப் பயணத்திற்கு பயன்படும். இதனுடன் இந்த ஏவுகலம் செருமனி, ஐக்கிய அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகளின் 6 தெரிவிப்பு செய்மதிகளையும் விண்ணில் சேர்த்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு உருசியா, உயிரியல் செய்மதி ஏவுதலை மீண்டும் தொடங்கியுள்ளது. மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பலத்த சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். நிலச்சரிவுகளினால் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் பலர் கால்நடையாகவே அங்கு செல்கிறார்கள். பாதுகாப்புப் படையினர் இரவு பகலாக பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதிலும், காயப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதிலும் முனைந்துள்ளனர். இந்தியத் தலைநகர் புது தில்லியில் இன்னொரு வன்புணர்வு நிகழ்வு நடந்துள்ளது. 5 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் கடந்த 2 நாட்களாக தெருப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுதில்லி மருத்துவ அறிவியலுக்கான அனைத்திந்திய கல்விக்கழக (எய்ம்சு) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாக மருத்துவக் குழு அறிக்கை விடுத்துள்ளது. கிழக்கு தில்லியின் காந்தி நகரில் 5 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இச்சிறுமி இரு நாட்கள் கழித்து 17ஆம் தேதியன்று பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார். மிகுந்த காயங்களுடன் அரற்றிக் கொண்டிருந்த குழந்தையை பெற்றோர் காவல்துறையினரின் உதவியுடன் அருகிலிருந்த சுவாமி தயானந்த் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமியை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ‘வன்புணர்வு மற்றும் உடல்ரீதியான கடுமையான தாக்குதலுக்கு’ சிறுமி உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டனர். உடனடியாக அறுவை சிகிச்சையும் நடந்தது. மேலதிக சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை பிற்பகலில் இச்சிறுமி ‘எய்ம்சு’ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குழந்தையொன்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான செய்தி தரும் அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, புகாரை காவற்துறை கையாண்டவிதம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமி காணாமல் போனதாக தாங்கள் குடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காவற்துறை காலந்தாழ்த்திவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட மறுதினம் (வியாழக்கிழமை) மாலை நேரத்தில் காவற்துறையினர் சிலர் தன்னிடம் 2000 ரூபாய் பணத்தினைத் தந்து, ‘நடந்த நிகழ்வுகளை யாரிடமும் சொல்லவேண்டாம்’ எனப் பணித்ததாக சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், சுவாமி தயானந்த் மருத்துவமனையில் நுழைந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது, 17 வயது மாணவி ஒருவரின் கன்னத்தில் காவற்துறை உயர் அதிகாரியொருவர் அறைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் (22) என்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். தலைநகரில் இடம்பெற்ற வேறொரு நிகழ்வில், 19-வயதுப் பெண்ணொருவர் கடந்த புதன்கிழமை அன்று கும்பல் ஒன்றினால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். "இது ஒரு சீரிய வகையிலான ஆய்வு" என சிகாகோவில் உள்ள இலினொய் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் மற்றும் கொள்ளைநோயியலாளரான ராபர்ட்டு பெயிலி கூறுகிறார். ஆனால் இதுபோல் முன்தோல் நீக்கப்படுவதினால் கெச்சு.ஐ.வி பரவல் அதிகமாகாது என்று சொல்லவதற்கில்லை என்றும் இது அதற்கு மாறுபட்ட ஆய்வு எனவும் அவர் மேலும் கூறினார். ஏப்ரல் 16 அன்று வெளியிடப்பட்ட எம்பையோவின் அறிக்கையில், ஆண்குறியின் முன்தோலை நீக்கியப்பின், பெரும்பாலான நுண்ணுயிரிகள் அந்த இடத்தில் உயிர்வாயுக்கள் கிடைக்கபெறுவதாய் உள்ளதினால் அவை அங்கிருந்து ஓடிப்போய்விடுகின்றன. இந்த மாற்றங்களை அறிய, உகண்டாவில் இருந்து 156 விருத்த சேதனம் செய்யப்படாத ஆண்களுடைய குறியின் முன்தோல் பூச்சு மாதிரி எடுக்கப்பட்டது. அதில் பாதி ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் பூச்சு மாதிரி எடுக்கப்பட்டது. முதலில் குறைவான வேறுபாடுகளே காணப்பட்டன. பிறகு எடுக்கப்பட்ட மாதிரிகளில் விருத்த சேதனம் செய்யப்பட்ட ஆண்குறியில் குறைவான நுண்ணுயிரிகள் உள்ளதை கண்டறிந்தனர். ஒன்பது வகை உயிர்வளிவேண்டா பாக்டீரியா உயிர்வளி அதிகரிப்பினால் குறைந்து காணப்படுகின்றன. பீரின் (ஒரு வகை மதுபானம்) சுவை மனிதனின் மூளையை சுறுசுறுப்பாக்கி மேலும் அப்பானத்தை அருந்தத் தூண்டுகிறது என அண்மைய ஆய்வு தெரிவிக்கின்றது. ஏப்பிரல் 15 அன்று வெளியான நியூரோசைக்கோபார்மக்காலசி (Neuropsychopharmacology) இதழின் ஆய்வு அறிக்கை ஒன்றில், இந்தியானா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் உள்ள ஆய்வாளர்கள் 49 ஆண்களில் சோதனை செய்து இதனைக் கண்டறிந்துள்ளனர். அருந்திய சிறிய அளவு பீரின் சுவை மட்டுமே, மூளையின் வேதியியல் வெகுமதிக் குறிகையான டோபமைனை (dopamine) வெளியிடுகிறது. டோபமைன் என்பது மனித உடலில் இருந்து வெளியாகும் ஒரு வேதிப்பொருள் ஆகும். அது மது மற்றும் மருந்துகள் பயன்பாட்டிற்கும், இன்பமுறுதலுக்கும் ஆகும். குடும்ப குடிப்பழக்கத்தில் உள்ள ஆண்களில், டோபமைன்னு வெளிப்பாடானது மிக பெரியதாகும். ஆய்வாளர்கள் 15 மி.லி பீரும், விளையாட்டின் பானமும் 15 நிமிட இடைவேளை விட்டு பங்குபெற்றவர்களுக்கு கொடுத்தனர். பிறகு அவர்களின் மூளையை துலாவிப் பார்த்ததில் அதில் டோபமைன் இருந்ததை அறிந்தனர். ஆய்வாளர்கள் 15 மி.லி பீரும் உடலில் மது அடைவை அதிகரிக்காது என்றும், நஞ்சுத்தன்மையை கொடுக்கக்கூடியதாகாது என்றும் கூறினர். கதிர்வீச்சைப் பயன்படுத்தும் ஒரு படிம தொழினுட்பமான நேர்மின்னணு உமிழ் பரு வரைவினால் (positron emission tomography) நிறைவேற்றிய மூளை துலாவலானது மனித மூளையின் முப்பரிணாம படிமங்களை காட்டுகிறது. இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் டேவிட் ஏ. காரிக்கென் இதுவே மது நஞ்சுத்தன்மையில்லாது மனிதனின் மூளை வெகுமதியகத்தில் டோபமைன் அதிகரிப்பதாக மனிதர்களில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு" எனக் கூறினார். பொருட்களின் பயிற்சி, கொள்கை மற்றும் பயன்பாடு ஆகியற்றின் பேராசிரியரான நியூகாசில் பல்கலைக்கழகத்தின் பீட்டர் ஆன்டர்சன் "இது ஒரு வகை குறிப்புகள். சுவை, மணம், படிமம் ஆகியவை விரும்பும் படியாக செய்யக்கூடியது. இது ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. சுவை விரும்பக்கூடியதாக இருந்தால், அதன் பிரிதிபலிப்பு மூளையின் செயல்பாட்டில் தெரியும் எனக் கூறியுள்ளார். செருமனியின் இலுப்தான்சா வானூர்தியின் அட்டவணைபடுத்தப்பட்ட 1700 பறப்புச்சேவைகளில் 20 சேவைகள் மட்டுமே இன்று திங்கட்கிழமை அன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த முடிவு என நிருவாகம் அறிவித்துள்ளது. ஊதியம் தொடர்பாக ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளார்கள். இதற்கு முன்பு லுப்தான்சா நிருவாகம் நீதிமன்றம் மூலம் வேலை நிறுத்தம் செய்வதை தடுத்துள்ளது. பிராங்பர்ட் நகரில் இருந்து 6 பறப்புச்சேவைகளும், முனிச் நகரிலிருந்து 3 பறப்புச்சேவைகளும் டசல்டோர்வ் நகரிலிலுருந்து 3 நீண்ட தூர பறப்புச்சேவைகளும் செயல்படும் என நிருவாகம் தெரிவித்துள்ளது. செருமன்விங்சு மூலம் வானூர்திகள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது, இந்திய அரசாங்கத்தின் பத்ம பூசன், பத்மசிறீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள ஜெயராமன் ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் இசைப்பணி ஆற்றியுள்ளார். தனி மற்றும் பக்கவாத்திய வயலின் கலைஞராக விளங்கியதோடு, பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர், இசையாசிரியர் என இசையின் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தவர். புகழ்வாய்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்களாகிய காலஞ்சென்ற அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், கே. வீ. நாராயணசுவாமி, மகாராஜபுரம் சந்தானம், டி. கே. ஜெயராமன் ஆகியோருக்கு இலால்குடி ஜெயராமன் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்; புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார். சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்களாக விளங்கும் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, டி. வீ. சங்கரநாராயணன், டி. என். சேஷகோபாலன் ஆகியோருக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ள இலால்குடி ஜெயராமன், எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். இவர்களில் இலால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன், இலால்குடி விஜயலக்ஷ்மி, விட்டல் இராமமூர்த்தி, பத்மா சங்கர், உசா இராஜகோபாலன், பாம்பே ஜெயசிறீ, சாகீதராமன், விசாகா ஹரி ஆகியோர் குறிப்பிடத்தக்க கலைஞர்களாக இன்றைய கருநாடக இசையுலகில் விளங்குகின்றனர். இது குறித்த ஆய்வு அறிக்கை ஏப்ரல் 22 புறொசிடிங்குசு ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சசு இதழில் வெளியாகியுள்ளது. யாங்சி ஆறு, திபெத்திய சமவெளியில் இருந்து கிழக்கு சீனக் கடல் வரை சீனாவில் சுமார் 6300 கி.மீ தொலைவிற்கு நீண்டிருக்கிறது. நிலவியலாளர்கள் ஒரு நூற்றாண்டுகளாக இவ்வாற்றின் வயதை, 2 மில்லியனில் இருந்து 45 மில்லியன் ஆண்டுகள் வரம்புக்குள் இருக்கும் என சொல்லாடல் நடத்தினர். சீனாவின் நாஞ்சிங்கு நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள கொங்போ செங் என்பவரின் குழு திரி கோர்கெசு டாமின் அடிவாரத்தில் ஓடும் ஆற்றின் ஓரத்தில் உள்ள ஜியாங்கன் இறக்கத்தில் இருக்கும் பாறைகளை ஆய்வு செய்து இயாங்க்சி ஆறின் வயதை கண்டறிய முயற்சி செய்தனர். அறிவியலாளர்கள் திபெத்திய சமவெளியின் மேலெழும்பலால் ஏற்பட்ட சீனாவின் நிலத்திணையியலின் மாற்றங்களைப் பொருத்தே இயாங்க்சியின் பிறப்பும் இருக்கும் என கூறுகின்றனர். இந்த ஆற்றை மூழ்க அடிக்கும் ஆசியாவின் கோடைகால பருவமழையும் இந்த காலங்களிலேயே ஆரம்பம் ஆகின என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். 2013ம் ஆண்டில் 5 கிரகணங்கள் தோன்ற உள்ளது. இதில் 2 இந்தியாவில் தெரிய உள்ளது. பகுதி சந்திர கிரகணம் ஏப்ரல் 25ம் தேதியும், முழு சந்திர கிரகணம் அக்டோபர் 18ம் தேதியும் தோன்ற உள்ளன. இந்த சந்திர கிரகணத்தை காண்பதற்காக டெலஸ்கோப் வசதிகளை செய்ய மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. சூரிய கிரகணம் மே 10 மற்றும் நவம்பர் 3ம் தேதி தெரிய உள்ளது. ஆனால் இவற்றை இந்தியாவில் காண இயலாது என வானியல் ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் எட்டு-மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களை மீட்கும் பணி இராணுவத்தினரின் உதவியுடன் மிக்க சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்கட்டடத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று, வங்கி, மற்றும் பல வணிக நிறுவனங்கள் அடங்கியிருந்தன. இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களில் தமது உறவினர்களையும், நண்பர்களையும் தேடிப் பலர் அங்கு படையெடுத்துள்ளனர். கட்டடம் இடிந்ததற்கான காரணம் அறிவிக்கப்படவில்லையாயினு, நேற்று செவ்வாய்க்கிழமை கட்டடத்தில் சிறிது வெடிப்பு அவதானிக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று புதன்கிழமை காலையில் மக்கள் கூடியிருந்த நேரத்தில் கட்டடத்தின் பின்பகுதி திடீரென குலைந்து விழ ஆரம்பித்ததாகவும், பின்னர் சிறிது நேரத்தில் முழுக் கட்டடமும் இடிந்து வீழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டடத்தின் கீழ்மாடி மட்டுமே உடையாமல் இருந்தது. எதிர்க்கட்சிகளினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுப் பின்போடப்பட்டுள்ளது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சாலெ மிகம்மது செர்போ ஜாமுஸ் என்ற போராளி சூடானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். செர்போ ஜாமுஸ் வடக்கு தார்பூரில் கடந்த வெள்ளிஉக்கிழமை இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார் என அவரது பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில் தார்பூரில் ஆப்பிரிக்க அமைதிப்படையினர் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல் தொடர்பாக இவர் மீதான விசாரணைகள் 2014 மே மாதத்தில் ஆரம்பமாகவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 12 ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர் கொல்லப்பட்டனர். இவருடன் மற்றுமொரு தார்பூர் போராளித் தலைவர் அப்தல்லா பண்டா அபக்கீர் நுரைன் என்பவரும் வழக்கை எதிர்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைந்தார்கள். பின்னர் இவர்கள் இருவரும் நெதர்லாந்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். கிப்ரில் இப்ராகிம் என்பவரின் தலைமையிலான நீதிக்கும் சமத்துவத்துக்குமான படைகள் என்ற போராளி இயக்கத்துடனான மோதல் ஒன்றில் செர்போ கொல்லப்பட்டார் என ஏஎஃப்பி செய்திகள் தெரிவிக்கின்றன. தார்பூர் போர் தொடர்பாக சூடானின் அரசுத்தலைவர், இரண்டு அமைச்சர்கள், அரசுக்கு சார்பான துணை இராணுவக் குழுத் தலைவர் ஒருவர் ஆகியோர் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சிரியாவின் அலிப்போ நகரின் பழங்கால உமாயத் பள்ளிவாசலின் மினார்ட் எனப்படும் தொழுகைக்கு அழைக்கும் உயரமான கட்டிடம் அரசப்படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்கும் நடந்த சண்டையில் முழுதாக அழிக்கப்பட்டது. யுனெஸ்கோ 1986ம் ஆண்டு முதல் அலிப்போ நகரம் முழுவதையும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. அரசாங்கப்படைகள் 11ம் நூற்றாண்டைச்சேர்ந்த உமாயத் பள்ளிவாசலின் தொழுகைக்கு அழைக்கும் உயரமான கட்டிடத்தை அரசு எதிர்ப்புப் படையில் உள்ள அல் கொய்தாவில் அங்கம் வகிக்கும் ஜப்ஆட் அல் நுசரா என்ற குழு வெடிகுண்டு வைத்து அழித்து விட்டதாக குற்றம் சாட்டியது. அரச எதிர்பு படைகள் அரசாங்க கவச வண்டியின் குண்டால் மினார்ட் அழிந்தது என்று கூறுகிறது. முசுலிம் உலகின் அழகிய பள்ளிவாசல் இது என்று அழைத்த யுனெஸ்கோ இதை பாதுக்குமாறு சிரிய உள்நாட்டு போரில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் 2012 அக்டோபர் மாதம் கேட்டுக்கொண்டது. பலமாதங்களாக நடந்த உள் நாட்டுப்போரினால் பள்ளிவாசலின் பெரும் பகுதி கடும் சேதமடைத்துள்ளது. பள்ளிவாசலின் பல அரிய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் முகமது நபி அவர்களின் முடிஉள்ளதாக கருதப்படும் பெட்டியும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்த பழங்கால கையெழுத்தால் ஆன குர்ஆனை பாதுகாத்து அதை மறைவிடத்தில் வைத்துள்ளதாக அரசு எதிர்ப்புப்படைகள் கூறியுள்ளன. அலிப்போ நகருக்கு அருகிலுள்ள இராணுவ வானூர்தி தளத்தை கைப்பற்ற அரசப்படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்கும் பல நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இத்தளத்தை அரசாங்கம் இழந்தால் அது பெரியதொரு இழப்பாகும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். காணாமல் போனோரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களில் இதுவரையில் 40 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்த போது அங்கு 2,000 பேர் வரையில் தங்கியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனோர் 372 பேர்களின் விபரங்கள் இதுவரையில் உறவினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் எட்டு தொழிற்சாலைகள் இயங்கின. இத் தொழிற்சாலைகள் மேற்குலக பன்னாட்டு நிறுவனங்களுக்கு உடைகள் உட்பட பல பொருட்கள் உற்பத்தி செய்வன. இக்கட்டிடத்தின் குறைபாடுகள் தொடர்பாக அண்மையில் காவல்துறை உரிமையாளருக்கு அறிவுறுத்தி தொழிலாளர்களை வெளியேறுமாறு பணித்திருந்தது. ஆனால் உரிமையாளர் அக் கட்டிடம் உறுதியானது என்று கூறியததைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் தொழிலாளர்களை தொடர்ந்து பணி புரிய கட்டுப்படுத்தி உள்ளன. மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிக ஆபத்தான சூழ்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை இயக்குவது, அல்லது அவற்றை பயன்படுத்துவது கடந்த பல ஆண்டுகளாக கண்டனத்துக்கு உள்ளான ஒரு செயற்பாடாக இருந்து வருகிறது. கடந்த நவம்பரில் இதே போன்ற ஒரு இன்னுமொரு உடைத் தொழிற்சாலை தீ பற்றி எரிந்ததில் 117 பேர் இறந்தனர். அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெளியேறாதவாறு பூட்டப்பட்டு இருந்தது. 2005 இருந்து இந்த மாதிரியான விபத்துக்களில் குறைந்தது 700 பேர் வங்காளதேசத்தில் இறந்துள்ளார்கள். டாக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 82 பேர் உயிரிழப்பு ஏப்ரல் 24, 2013 உருசியத் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ரமென்ஸ்கி என்ற சிறு நகரம் ஒன்றில் மனநோய் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 38 பேர் கொல்லப்பட்டனர், மூவர் மட்டுமே உயிருடன் காப்பாற்றப்பட்டனர். "மருத்துவமனையில் கடமையில் இருந்த தாதி ஒருவர் எரியும் கட்டடத்தில் இருந்து இரண்டு நோயாளிகளை மட்டுமே காப்பாற்றித் தாமும் வெளியேறியுள்ளார்,” எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் இரண்டு மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர். இன்று அதிகாலை 2 மணியளவில் தீப்பரவியதாகவும், நோயாளிகள் பலரும் உறக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். 12 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 முதல் 76 வயதுடைய நோயாளிகள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். 1950களில் கட்டப்பட்ட இந்த ஒரு-மாடிக்கட்டடம் செங்கற்களினாலும், மரத்தினாலும் கட்டப்பட்டதாகும். தீப்பற்றியதற்கான காரணம் அறியப்படவில்லையாயினும், நோயாளி ஒருவர் தடையை மீறிப் புகை பிடித்தமையே காரணம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் 55 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வர வேண்டியிருந்தது. மேலும், இப்போது குளிர் காலமாதலால், இடையில் இருந்த ஆற்றின் குறுக்கே சேவையில் இருந்த கப்பல் சேவையும் இடை நிறுத்தப்பட்டிருந்ததால், மீட்புப் பணியாளர்கள் வரக் காலதாமதம் ஆயிற்று. 2009 ஆம் ஆண்டில் உருசியாவின் கோமி நகரில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 23 பேர் இறந்தனர். 2007 இல் கிராஸ்னதாரில் இல்லம் ஒன்று தீப்பிடித்ததில் 63 பேர் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் மருத்துவமனை ஒன்றில் தீப் பரவியதில் 45 பெண்கள் உயிரிழந்தனர். அமெரிக்கப் புலனாய்வுத் துறை, சிரியா சிறிய அளவில் நரம்பைப் பாதிக்கும் 'சரின்' என்ற வேதியியல் ஆயுதத்தை பயன்படுத்தியாக நம்புகிறது. அமெரிக்கா கடைசியாக தனக்கு கிடைத்த புலனாய்வு செய்திகளின் படி வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது. சிரியா தான் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதாக சொல்லப்படுவது பொய் என்று கூறியுள்ளது. சிரியா அதிக அளவிளான வேதியியல் ஆயுதங்களை வைத்திருப்பதாக கருதப்படுகிறது. வேதியியல் ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக பல குற்றசாட்டுகள் இருந்தாலும் அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை. சிரியா உள்நாட்டுப் போரில் வேதியியல் ஆயுதத்தை பயன்படுத்தினால் அமெரிக்கா தன் படைகளை கொண்டு தலையிடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா டிசம்பர் மாதம் எச்சரித்திருந்தார். அமெரிக்க மேலவை உறுப்பினர் (செனட்) ஜான் மெக்கெய்ன் சிரிய அரசு எதிர்ப்புப் படைகளுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார். தெற்கு சூடானின் முக்கிய போராளிக் குழுவைச் சேர்ந்த சுமார் 3,000 போராளிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சரணடைந்து வரும் போராளிகளை தெற்கு சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் எப்போதும் மன்னித்தே வந்திருக்கிறார் என அந்நாட்டின் தகவற்துறை அமைச்சர் பர்னாபா பெஞ்சமின் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது தெற்கு சூடானின் இராணுவத்தில் உள்வாங்கப்படுகின்றனர். தெற்கு சூடானை ஆண்டு வரும் முன்னாள் போராளிக் குழுவான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் செல்வாக்கு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகத் தாம் போராடுவதாக தெற்கு சூடான் விடுதலை இராணுவம் கூறுகிறது. தெற்கு சூடானின் இராணுவத்தினர் பெரும்பாலும் நாட்டின் டின்க்கா என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் நூயெர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தெற்கு சூடானின் இரண்டாவது பெரிய இனமாகும். தெற்கு சூடான் எண்ணெய் உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு அண்மைக் காலத்தில் மேம்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் பிரிந்ததை அடுத்து சூடானின் எண்ணெய் வளத்தின் பெரும் பகுதியை தெற்கு சூடான் தனதாக்கிக்கொண்டது. ஆனாலும், ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் எண்ணெய்க் குழாய்கள் சூடானுக்கூடாகவே செல்கின்றது. மலேசியாவின் சபா மாநிலத்துள் ஊடுருவ முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய சூலு போராளிகள் 35 பேரை பிலிப்பீன்சின் கடற்படையினரும் கடலோரக் காவல்படையினரும் புதன்கிழமை அன்று சுட்டுக் கொன்றுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. தமது கடற்படையினர் சூலு போராளிகளைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படும் செய்திகளை பிலிப்பீன்சின் படைத்துறையினர் மறுத்துள்ளனர். மலேசிய எல்லைப் பகுதி "அமைதியாக" உள்ளதாக பிலிப்பீனிசின் பிராந்தியக் கடற்படைத் தளபதி கப்டன் ரெனாட்டோ யோங் தெரிவித்தார். உளவுத் துறையின் அறிக்கை ஒன்றின் படி, சபாவுக்குள் ஊடுருவ முற்பட்ட சூலு போராளிகள் மலேசியத் தேர்தலின் போது பிரச்சினையை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததாக மலேசியப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் 2013 நவம்பரில் இலங்கையில் நடைபெறும் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது என கனடாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் சாத்தானை பொதுநலவாய நாடுகள் அமைப்பு அரவணைக்கிறது என்றும் கூறியுள்ளார். கனடிய பிரதமர் ஸ்டீவன் கார்ப்பர் இலங்கை கடைசிக் கட்ட உள்நாட்டுப்போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை விசாரிக்காவிட்டால் கனடா கூட்டத்தை புறக்கணிக்கும் என்று தெரிவித்தார். கனடா பல்வேறு அமைப்புகளில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததாகவும் அவற்றை தான் அனைத்து அமைப்புகளிலும் முறியடித்து வந்ததாகவும் இப்போது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இலங்கையில் நடைபெறும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாக இலங்கையின் செய்தி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரம்புவெல்ல கூறியுள்ளார். பொதுநலவாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கமலேசு சர்மா எந்த உறுப்பினர் நாடும் கூட்டம் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை என்று இலண்டனில் கூறினார். ஆத்திரேலியா இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுத்துவிட்டது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணித்தால் அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும் என ஆஸ்திரேலியா கருதியபோதிலும் கனடாவை முன் மாதிரியாக கொண்டு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் பிரேசரும் கிரீன் கட்சி தலைவர் மில்னும் கூறியுள்ளனர். கனடா புறக்கணிப்பதாக எடுத்த முடிவு துணிவுள்ள முடிவு என்று மில்ன் கூறியுள்ளார். தாய்லாந்தின் மத்திய மாகணமான அயூத்தியாவில் நேற்று ஞாயிறு இரவு தொங்கு பாலம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர். தலைநகர் பாங்கொக்கில் இருந்து வடக்கே 90 கிலோமீட்டர் தூரத்தில் பா சாக் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட 31 ஆண்டு பழமையான பாலம் உடைந்து வீழ்ந்தது. இப்பாலத்தை மிதியுந்து ஓட்டுனர்களும், பாதசாரிகளும் பயன்படுத்தி வந்தனர். இது 120 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமானதுமாகும். பாலம் உடைந்த போது அதில் 100 பேர் வரை பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அனைவரும் ஆறினுள் வீசப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பலர் பாலத்தின் சிதைபாடுகளிடையே சிக்குண்டிருப்பதால் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. பாலத்தைத் தாங்கும் கம்பிகள் அறுந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. ''பிளாசிசுடிக் லாட்சிக்கு என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனம் வடிவமைத்த இந்த சுட்டிப்பேசி மெலிதான நெகிழ்வுக் கூழ்ம மின்பிரிகை படங்காட்டிகளால் (electrophoretic display) உருவக்கியுள்ளனர். இந்த படங்காட்டிக்கு உள்ளே பல்வேறு வடிவ நினைவக உலோகக்கம்பிகள் உள்ளன. பேசியானது பயனர்களுக்கு குறிப்புகாட்ட முற்படும் பொழுது, இந்த கம்பிகள் சுருங்கக்கூடியவை. இந்த பேசி தனது முழு வடிவம் அல்லது மூன்று முனைகளில் சுருங்கக்கூடியவை. குறுங்செய்தி, அழைப்பு அல்லது மின்னஞ்சல் போன்ற நினைவூட்டல்களுக்கு இந்த வடிவமாற்றம் பயன்படுகிறது. பயனர்கள் ஒவ்வொரு நினைவூட்டலுக்கும் ஒரு முனையின் வடிவமாற்றத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, குறுஞ்செய்திக்கு ஒரு முனையும், மின்னஞ்சலுக்கு ஒரு முனையும், அழைப்புகளுக்கு மூன்று முனைகளும் சுருங்கும்படி. சில மிக முக்கிய பயன்பாட்டிற்கு, முனைக்களை தொடர்ந்து மேலும் கீழுமாக அசையும்படியும் கூட அமைக்கலாம். குயின்சு பல்கலைக்கழகத்தின் மனித ஊடக ஆய்வக இயக்குனர் ரொயெல் வெர்ட்டிகால் "மனித தொடர்புகளுக்கான மெல்லிய நெகிழ்வு படங்காட்டி தொழினுட்பத்தில் இது அடுத்தக்கட்ட முயற்சி" என கூறினார். MorePhone கள் இன்னும் ஐந்து முதல் 10 ஆண்டுகளில் பரந்த அடிப்படையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோடித் திட்டத்தை குயின்சு பல்க்கலைக்கழக ஆய்வாளர்கள் பாரிசில் தற்போது நடைபெறும் கணினியியலில் மனித திறன்சார்புகள் குறித்த ACM CHI 2013 மாநாட்டில் நேற்று ஏப்ரல் 29 அன்று முன்வைத்துள்ளார்கள். 33 ஆண்டுகள் நெதர்லாந்தின் இராணியாக இருந்த பியடிரிக்சு முடிதுறந்தை அடுத்து அவர் மகன் வில்லெம் அலெக்சாண்டர் மன்னராக பதவியேற்றார். 1890ம் ஆண்டில் மூன்றாம் வில்லெம் மறைந்த பிறகு நெதர்லாந்தின் மன்னராக பதவியேற்பவர் இவரே. பதவியேற்பு விழா ஆம்ஸ்டர்டாம் நகரில் சிறப்புடன் நிகழ்ந்தது. இவ்விழாவுக்கு பெருந்திரளான மக்கள் ஆரஞ்சு நிற ஆடை உடுத்தி கூடியிருந்தனர். முடிதுறந்ததை அடுத்து இராணி பியடிரிக்சு இனி இளவரசி என அழைக்கப்படுவார். 73 வயதுடைய இராணி பியடிரிக் தன் மகன் அரியணைக்கு வருவதற்காக முடி துறக்க உள்ளதாக சனவரி மாதம் அறிவித்தார். புதிய தலைமுறை அரியணை ஏறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று கூறியிருந்தார். 47 வயதான மன்னர் வில்லெம் அலெக்சாண்டரின் மனைவி மாக்சிம் (41 வயது) அர்ஜெண்டீனா நாட்டில் பிறந்தவர் இவரும் தான் அரியணைக்கு உரிமை கோரப்போவதில்லை என்று எழுதி கொடுத்துள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு உலகின் பல்வேறு அரச குலத்தினரும் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். நெதர்லாந்தில் மன்னருக்கு சில அதிகாரங்களே உள்ளது. இது அலங்கார பதவியாகும். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நெதர்லாந்தை ஆளும் ஆரஞ்சு-நாசாவ் வம்சத்தின் 7 வது மன்னராக இவர் பதவியேற்றுள்ளார். ஐரோப்பாவின் பில்லியன் யூரோ பெறுமதியான எர்செல் விண்வெளி அவதான நிலையம் அதன் இயக்கத்துக்குத் தேவையான திரவ ஈலியம் முடிவடைந்த நிலையில் தனது விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்தது. இந்நிலையத்தின் உபகரணங்களை அதி குறைந்த வெப்பநிலையில் வைத்திருக்க திரவ ஈலியம் அவசியமானதாகும். எர்செல் விண்வெளித் தொலைநோக்கி தற்போது சூடடைந்துள்ளதால் இத்தொலைநோக்கி வானைக் காண இயலாத நிலைக்கு வந்துள்ளது. மீஅகச்சிவப்புக் கதிர்களுக்கு மிக்க உணர்திறனுள்ள இந்த எர்செல் விண் தொலைநோக்கி விண்மீன்களின் தோற்றம், விண்மீண் திரள்களின் வளர்ச்சியையும் ஆராய்வதற்காக 2009 ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி அவதான நிலையங்களில் இதுவே மிகவும் வலுக்கூடிய தொலைநோக்கி ஆகும். செருமனியின் டார்ம்ஸ்டாட் என்ற இடத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி மையம் ஈசாவின் கட்டுப்பாட்டு மையத்தில் இன்னும் சில வாரங்களில் எர்செல் விண்கலத்துக்கான சில கடைசி சோதனைகள் நடத்தப்படவுள்ளன அதன் பின்னர் இது ஞாயிற்றுமைய ஒழுக்கிற்குள் தள்ளப்பட்டு செயலற்றதாக்கப்படும் என எர்செல் விண்கலத்தின் ஒருங்கிணைப்பாளர் மிச்சா சிமித் கூறினார். எர்செல் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்குக் கிட்டவாக வரமாட்டாது எனக் கூறப்படுகிறது. கடந்த நவம்பரில் பிறந்த குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலி நாட்டைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவரின் இறந்த உடலைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக பெரு நாட்டுக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 35 வயதுடைய ரமோன் காஸ்டில்லோ குவேரா என்பவர் கடந்த இரண்டு மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். இவரது உடல் பெருவின் குஸ்க்கோ நகரில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கிறித்தவத்துக்கு எதிரானது எனக் கூறி இக்குழந்தை இந்த மதவாதக் குழுவினரால் உயிருடன் எரியும் தீயில் வீசப்பட்டுக் கொல்லப்பட்டது. குழந்தையின் தாய் நத்தாலியா குவேராவும், மேலும் மூன்று சந்தேக நபர்களும் சிலியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். ரமோன் காஸ்டில்லோ குவேரா இக்குழந்தையின் தந்தை என நம்பப்படுகிறது. தான் ஒரு கடவுள் என்றும், 2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியும் எனவும் இவர் கூறி வந்திருந்தார். கடந்த நவம்பரில் பிறந்து மூன்று நாட்களே ஆன இக்குழந்தை கொல்லப்பட்டது ரோமன் கத்தோலிக்க மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிலி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சோமாலியாவில் 2010 முதல் 2012வரை ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்பும் அமெரிக்காவின் நிதி உதவி பெறும் பஞ்சம் வருவதை முன் அறிவிக்கும் அமைப்பும் நடத்திய ஆய்வு கூறுகிறது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். 1992ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் 220,000 மக்கள் இறந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடும் வறட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளூர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் பஞ்சம் ஏற்பட காரணமாக இருந்தது. 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்களிலேயே இது தான் பெரியது. ஐநா 2011ல் சோமாலியாவின் தென்பகுதி பிரதேசமான பகூலிலும் கீழ் சாபெல்லேயிலும் பஞ்சம் ஏற்பட்டதை அறிவித்தது. இப்பகுதிகள் இசுலாமிய குழுவான அல்-சபாப் கட்டுப்பாட்டில் உள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பஞ்சம் என்பதை மறுத்த அல்-சபாப், மேற்கத்திய நாடுகளின் உதவிக் குழுக்கள் தனது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயல்பட தடை விதித்தது. கீழ் சாபெல்லேயில் 18 மொகதிசுவில் 17% ஐந்து வயதுக்குட்பட்டோர் இறந்தனர் என்று அறிக்கை சொல்கிறது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியே மிக மோசமானது என்று ஐநா கூறுகிறது. பிப்ரவரி 2012 ல் பஞ்சம் முடிவுக்கு வந்ததாக ஐநா தெரிவித்துள்ளது. தற்போது நிலைமை முன்னேற்றமடைந்து காணப்பட்டாலும், சோமாலியாவிலேயே உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர் என்றும் சோமாலியாவில் அதிகளவில் பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது. சாட் நாட்டில் அரசுத்தலைவர் இதிரிசு தேபி ஆட்சிக்கு எதிராக அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற குழு ஒன்றின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இரண்டு இராணுவத் தளபதிகள், ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு மாதங்களாக சிறு குழு ஒன்று ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகருக்கு வெளியே துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. குறைந்தது மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தலைநகர் ஞாமீனாவில் அமைதி நிலவுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சாட் நாட்டில் அடிக்கடி இராணுவப் புரட்சிகளும், கிளர்ச்சிகளும் இடம்பெற்று வந்துள்ளன. இதிரிசு தேபி 1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றையடுத்து பதவிக்கு வந்தவர். 1960 ஆம் ஆண்டில் சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. வடக்கே பெரும்பான்மையாக வாழும் அரபு-முசுலிம்களுக்கும், பெரும்பான்மையாக வாழும் கிறித்தவர்களுக்கும் இடையே அடிக்கடி கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. கிழக்கு சாடைச் சேர்ந்த போராளிகளின் தாக்குதல்களில் இருந்து 2006, 2008 ஆம் ஆண்டுகளில் இதிரிசு தேபி உயிர் தப்பியிருந்தார். கிழக்கு சாட் போராளிகளுக்கு சூடானிய அரசு உதவி வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் பொதுத்தேர்தல்கள் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், பெருமளவான வாக்காளர்கள் எக்கட்சிக்கு வாக்களிப்பது என்பதை இதுவரையில் தீர்மானிக்கவில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மெர்தெக்கா மையத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, மொத்தமுள்ள 222 இடங்களில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி குறைந்தது 89 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் பிரதமர் நஜீப் தலைமையிலான ஆளும் கூட்டணி குறைந்தது 85 இடங்களைக் கைப்பற்றும். அரசு அமைப்பதற்குக் குறைந்தது 112 இடங்கள் தேவையாகும். "கருத்துக்கணிப்பின் படி, எக்கட்சியும் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றுவது சாத்தியமல்ல. தீர்மானிக்கப்படாத இடங்களை யார் கைப்பற்றுவாரோ அவரே அரசாங்கத்தை அமைப்பார் என மெர்தெக்கா மையத்தின் பணிப்பாளர் இப்ராகிம் சுபியான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 42 விழுக்காட்டினர் எதிர்க்கட்சிக்கு ஆட்சியமைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். அதேவேளையில், 41 விழுக்காட்டினர் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியே ஆட்சியில் தொடர்ந்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். 4 விழுக்காட்டினர் பதிலளிக்கவில்லை. 13 விழுக்காட்டினர் தெரியாது என்று பதிலளித்தனர். ஏப்ரல் 28லிருந்து நேற்று முன்தினம் வரை 1,600 வாக்காளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 59% மலாய்க்காரர்கள், 32% சீனர்கள், 9% இந்தியர்கள். ஆய்வில் பங்கெடுத்த இந்தியர்களில் 31 விழுக்காட்டினர் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்தனர். 2008 தேர்தலில் தேசிய ரீதியாக 47 விழுக்காட்டினர் பாக்காத்தான் என்ற எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களித்தனர், ஆனாலும் அக்கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு இடங்களையே கைப்பற்ற முடிந்தது. இனம், மற்றும் மதம் ஆகியன இத்தேர்தலில் முக்கிய பங்காற்றும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இதற்கிடையில், போட்டி கடுமையாகவுள்ள தொகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு சேர்க்க சிறப்பு விமானப் பயணங்களுக்கு பிரதமர் நஜீப் ஏற்பாடு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சி ஆதரவாளர்கள் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்துத்தான் இந்த விமானப் பயணங்களுக்கு கட்டணம் செலுத்தினார்கள் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. தென் மேற்கு சீனாவின் குன்மிங் நகரத்துக்கு அருகில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், இதில் கலந்து கொண்டவர்கள் 200 பேர் என்று தெரிவித்தது. ஆனால் வலைப்பதிவர்கள், கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2000 என்று கூறுகிறார்கள். சில போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்தும் பதாகைகளை ஆட்டியும் பாராசைலின்னினால் [paraxylene (PX ஏற்படும் கெடுதல்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். தங்களுக்கு தேவை சுகாதாரம், நாங்கள் வாழ விரும்புகிறோம், குன்மிங்கிலிருந்து பாராசைலினை வெளியேற்று என்று கோசம் எழுப்பினர். சீன இயற்கை பெட்ரோலிய கழகம் அவ்வாலையில் இருந்து ஆண்டுக்கு 500,000 டன் பாராசைலின் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் இருந்து பாராசைலின் (paraxylene (PX தயாரிக்கப்படும். ஆடை தயாரிக்கப்படும் போது பயன்படும் பாலிஸ்டர் தயாரிக்க பாராசைலின் பயன்படுகிறது. அருகில் அமைக்கவிருக்கும் வேதியியல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைப் போராட வருமாறு துண்டு பிரசுரம் செங்டூ நகரில் காணப்பட்டதால் செங்டூ நகர் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு எதிரே காவலர்கள் காணப்பட்டதாக நகர மக்கள் தெரிவித்தனர். எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என சீன அரசு துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தியது. நிலநடுக்க தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒத்திகை பார்க்கவே காவலர்கள் செங்டூ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டனர் என்று சீன அரசு கூறியது. எதிர்ப்பு போராட்டம் செங்டூ நகரில் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு நிங்போ நகரில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தால் அங்கு அமைக்கப்பட இருந்த பாராசைலின் உற்பத்திக்கான வேதியியல் ஆலை திட்டம் கைவிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் டாலியன் நகரில் பாராசைலின் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போராட்டத்தால் சீன அரசு ஆலை தொடங்கும் திட்டத்தை நிறுத்தியது. ஆனால் பின்பு அங்கு அவ்வாலையைத் தொடங்கியது. 2007ல் சியாமென் நகரில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தால் அங்கு அமைக்கப்பட இருந்த பாராசைலின் உற்பத்திக்கான வேதியியல் ஆலைத் திட்டம் கைவிடப்பட்டது. வேதியியல் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில ஆண்டுகளாக சீனாவின் நகர்ப்புறங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சிரியத் தலைநகர் டமாசுக்கசில் இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு இசுரேல் ஏவிய ஏவுகணைகளே காரணம் என சிரியா இசுரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜம்ராயா ஆய்வு மையம் மீது ஏவுகணைகள் வீழ்ந்ததாக சிரிய ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்த ஆய்வு மையம் வேதியியல் ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்து வந்துள்ளன. இத்தாக்குதலை இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இசுரேலிய வானொலி உறுதிப்படுத்தியுள்ளது. லெபனானின் எஸ்புல்லா போராளிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீதே தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்துள்ளது. கடந்த இரு நாட்களில் இசுரேல் சிரியா மீது நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். வெள்ளியன்று லெபனான் எல்லைப் பகுதியில் ஏவுகணைகளைக் கொண்டு சென்ற கப்பல் மீது இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது. சிரியப் பிரச்சினையில் இசுரேலின் நேரடி தலையீடு அதிகரித்து வருவதையே நேற்றைய தாக்குதல்கள் காட்டுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிரியாவின் கரையோர நகரான பனியாசில் சுணி முசுலிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். 2011 மார்ச்சு மாதத்தில் ஆரம்பமான உள் நாட்டுப் போரில் இது வரையில் சுமார் 70,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முறைகேடுகள் குறித்து தகுந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று புதன்கிழமை அன்று இடம்பெறும் என அவர் கூறினார். நஜீப் ரசாக் இன்று மாலை மன்னர் முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். வாக்­­­களிப்பு நேற்று பெரும்பா­லும் அமை­­­தி­­­யான முறை­­­யில் நடந்து முடிந்தது. இம்முறை தேர்தலில் 80 விழுக்காட்டினர் (12,992,661 வாக்காளர்கள்) வாக்களித்துள்ளனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 நாடா­­­ளு­­­மன்றத் தொகு­­­தி­­­கள், மற்றும் 505 சட்­­­ட­­­மன்றத் தொகு­­­தி­­­களில் மொத்தம் 1,900 வேட்­­­பா­­­ளர்­­­கள் போட்­­­டி­­­யிட்­­­ட­­­னர். ­­­­­­­­­­­­­­­சுயேட்சை­­­யாக போட்டியிட்டவர்கள் பலர் வைப்­­­புத்­­­தொகையை இழந்­­­துள்­­­ள­­­னர். பினாங்கு, சிலாங்­கூர், கிளந்தான் ஆகிய மாநி­லங்களில் எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­ வெற்றி பெற்றுள்ளது. சரவாக், ஜோகூர் ஆகிய மாநிலங்களைத் தேசிய முன்னணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. ஜனநாயக செயல் கட்சி 5 இடங்களிலும் கெஅடிலான் ஓர் இடத்திலும் வென்றது. சிரிய அரசு எதிர்ப்பு படையினர் வேதியியல் ஆயுதமான நரம்பை பாதிக்கும் சிரினை பயன்படுத்தி இருக்கலாம் என ஐயப்படுவதாக ஐநா மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர். சிரிய உள் நாட்டுப்போரில் பாதிக்கட்டவர்களும் மருத்துவர்களும் கொடுத்த தகவல் படி எதிர்ப்புப் படையினர் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தி இருக்கலாம் என தான் ஐயமுறுவதாக இந்த அமைப்பின் உறுப்பினர் கார்லா டி பான்டே தெரிவித்தார். எனினும் உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். சிரிய அரசுப்படைகள் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் சிக்கவில்லை என்று இவ்வமைப்பினர் தெரிவித்தனர். வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவதை சிரிய எதிர்ப்புப் படைகள் மறுத்துள்ளன. சரின் என்பது நிறமற்ற சுவையற்ற காற்று இது நரம்பு மண்டலத்தை பாதித்து மனிதனை கொல்லும் திறன் உடையது. இதன் பயன்பாட்டை அனைத்துலக சட்டம் தடைசெய்துள்ளது. கார்லா டி பான்டே சுவிச்சர்லாந்து நாட்டின் முன்னால் தலைமை அரசு வழக்கறிஞர் ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தில் யுகோசுலோவியா நாட்டுக்கு எதிரான வழக்குரைஞராக உள்ளார். சிரிய அரசும், எதிர்ப்புப் படைகளும் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஒன்றை மற்றொன்று குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்க அரசு சிரிய எதிர்ப்புப் படைகள் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கமோ திறனோ உடையவர்கள் என்று தகவல் தங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளது. ருசிய வெளியுற அமைச்சர் சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு உலக மக்களை தயார்படுத்தும் செயல் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். சிரிய அரசு வேதியியல் ஆயுதத்தை பயன்படுத்துவதாக தான் கருதுவதாக கூறி ருசியாவின் சிரிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மாஸ்கோவுக்கு இந்த வாரம் மேற்கொள்ளவிருந்த பயணம் டி பான்டே அவர்களின் கருத்தால் சிக்கலாகியுள்ளது. சிரியா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு ஏப்ரல் 26, 2013 தலைநகர் மணிலாவில் இருந்து தென்கிழக்கே 330 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை இன்று செவ்வாய்க்க்கிழமை காலையில் தூசுகளையும், பாறைத்துண்டுகளையும் கக்க ஆரம்பித்தது. இவ்வெரிமலை ஏறத்தாழக் கூம்பு வடிவில் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வெரிமலை வெடிப்பு சுமார் ஒரு நிமிட நேரம் மட்டுமே நீடித்தது ஏழு மலையேறிகள் காயமடைந்தனர் என பிலிப்பீனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிமலை வெடிப்பை அடுத்து மழை போல் வீழ்ந்த பாறைகளினால் தாக்கப்பட்டே ஐவர் உயிரிழந்ததாக மலையேறி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் நடந்த போது மொத்தம் இருபது பேர் மலை உச்சியை அடைவதற்குச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த எரிமலைச் சீறல் ஒரு சிறிய நிகழ்வென்றும், 73 செக்கன்களே இது நீடித்திருந்ததென்றும், 500 மீட்டர் உயரத்திற்கு தூசிகளை எறிந்ததாகவும் பிலிப்பீனிய எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது. மயோன் எரிமலை பதிவுகள் ஆரம்பமான ஆண்டில் இருந்து 48 தடவைகள் வெடித்துள்ளது. 1814 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெடிப்பில் 1,200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல நகரங்கள் அழிந்தன. 2009 இல் இடம்பெற்ற வெடிப்பில் பல்லாயிரக்கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். போர்நிறுத்த உடன்பாடு ஒன்றை அடுத்து அடுத்து குர்தியப் போராளிகள் தென்கிழக்குத் துருக்கியில் உள்ள தமது இருப்பிடங்களை விட்டு ஈராக் நோக்கி நகர்ந்துள்ளதாக குர்திய வட்டாரங்கள் அறிவித்துள்ளன. பிகேகே என அழைக்கப்படும் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியினர் தமது படையினரின் கட்டம் கட்டமான விலகலை மே மாதத்தில் ஆரம்பிக்கப்போவதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தனர் அவர்கள் விலக ஆரம்பித்து விட்டனர் என்பது எமக்குத் தெரியும் என அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்ட குர்திய அரசியல்வாதி செலகாட்டின் தெமீர்த்தசு தெரிவித்தார். பிகேகே தனது போராளிகள் இரண்டாயிரம் பேரை துருக்கியில் வைத்துள்ளது. இவர்களின் முழு விலகலும் முடிய ஏறத்தாழ நான்கு மாதங்கள் வரை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கால்நடையாகவே ஈராக்கின் காண்டில் மலைகளில் உள்ள தமது தளங்களுக்குத் திரும்புவர். துருக்கியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பிகேகே தலைவர் அப்துல்லா ஒக்கலான் தமது படைகளை துருக்கியை விலகுமாறு மார்ச் மாதத்தில் உத்தரவிட்டிருந்தார். 1999 ஆண்டில் இவ்வாறான படை விலகலின் போது துருக்கியப் படையினர் போராளிகள் மீது தாக்கியதில் சுமார் 500 போராளிகள் வரை உயிரிழந்தனர். ஆனால், இம்முறை இராணுவத்தினர் தாக்குதலை நடத்த மாட்டார்கள் என துருக்கியப் பிரதமர் ரெக்கெப் தாயிப் எர்தோகான் உறுதியளித்துள்ளார். துருக்கிக்கு எதிரான 30 ஆண்டு காலப் போரில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மீர்ப்பூர் தொழிற்துறை நகரில் நேற்றிரவு இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவரும், ஆடைத்தொழிற்சாலையின் உரிமையாளரும் கொல்லப்பட்ட 8 பேரில் அடங்குவர். 11 மாடிக் கட்டடத்தில் இருவரும் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே கட்டடத்தில் தீப்பிடித்துள்ளது. தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்து தீ ஏனைய மாடிகளுக்குப் பரவாமல் தடுத்தனர். கட்டடம் தீப்பற்றிய போது, பல தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியிருந்ததால், உயிரிழப்புகள் குறைவாக இருந்தன. எவ்வாறு இவ்விபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 24 கட்டட உருக்குலைவு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 912 என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மேலும் 94 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. இக்கட்டத்தில் பல ஆடைத்தொழிற்சாலைகள் இயங்கியிருந்தன. இறந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் 2,500 பேர் வரையில் காயமடைந்தனர், 2,437 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பாதுகாப்புக் கருதி 18 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு நேற்று அறிவித்திருந்தது. ரானா பிளாசா கட்டடத்தின் உரிமையாளர் உட்படப் பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த விண்மீன்கள் இரண்டை ஆராய்ந்த அறிவியலாளர்கள், நமது சூரியக் குடும்பம் சில பில்லியன் ஆண்டுகளின் பின்னர் எவ்வாறு காணப்படும் என்பதைக் கணித்துள்ளனர். சூரியனின் அணுக்கரு எரிபொருள் குறையும் போது அது வெளிப்பக்கமாக விரிவடைந்து, பின்னர் ஒரு காலத்தில் அதன் வெளிப் படலங்கள் வெடித்துச் சிதறும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதன் போது சூரியனுக்குக் கிட்டவாக உள்ள சில கோள்கள் சூரியனால் உள்வாங்கப்படும் எனவும், அவற்றில் இருந்து asteroids எனப்படும் சிறுகோள்கள் அவற்றின் சுற்றுவட்டத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் நமது பால் வழி விண்மீன் பேரடையில் கோள்களின் நிலை குறித்து மேலும் தகவல்களை இவ்வாய்வு மூலம் பெறக்கூடியதாக இருந்ததாக வானியலாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த முடிவுகள் ராயல் வானியல் கழகத்தின் மாதாந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 1982-1983 காலப்பகுதியில் மாயன் இனக்குழுவினர் 1,771 பேரைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட குற்றத்திற்காக குவாத்தமாலாவில் அக்காலத்தில் அரசுத்தலைவராக முன்னாள் இராணுவத் தலைவர் எஃப்ரெயின் ரியோசு மொண்ட் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இனப்படுகொலைக் குற்றத்திற்காக 50 ஆண்டுகளும் மனித உரிமை மீறல்களுக்காக 30 ஆண்டுகளுமாக மொத்தம் 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இனப்படுகொலைகளுக்காக உலகிலேயே தமது சொந்த நாட்டிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அரசுத்தலைவர் இவராவார். ஏனைய இனப்படுகொலைக் குற்றங்கள் பன்னாட்டு நீதிமன்றங்களினாலேயே விசாரிக்கப்பட்டு வந்தன. "இக்சில் இனத்தவர்கள் நாட்டின் பொது எதிரிகள் எனக் கருதப்பட்டு வந்தனர், அத்துடன் நாட்டின் இனப்பாகுபாட்டுக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களும் ஆவர் என நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் இக்சில்களுக்கு எதிரான வன்முறைகள் திடீரென இடம்பெறவில்லை, அவை திட்டமிட்டு நடத்தப்பட்டனவாகும்." கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் போது நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தினரால் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்தனர். 1960 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மௌனா லோவ கண்காணிப்பகம் உலகின் மிகப் பழமையான கார்பன்டைஆக்சைடு தொடர் மதிப்பீட்டு நிலையமாகும். இந்த ஆய்வகம் அமெரிக்காவின் அவாய் தீவில் உள்ள மௌனா லோவ எரிமலையின் மீதுள்ள வளிமண்டத்தின் கார்பன்டைஆக்சைடு அளவை கண்காணித்து வந்தது. மே 9 அன்று நேசனல் ஓசியானிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் (National Oceanic and Atmospheric Administration) அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலாஸ்கா, கனடா மற்றும் பிற ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தின் கார்பன்டைஆக்சைடு அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக காணப்படுகிறது என்றும், தென் அரைக்கோளத்தில் அடுத்த ஆண்டில் 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிக்கும் எனவும், 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய பைங்குடில் வளியானது 400 மில்லியனில் ஒரு பகுதிகளை தொடும் கூறியுள்ளனர். இவ்வாய்வு முடிவுகளை அடுத்து காலநிலை மாற்றம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவியலாளர்கள் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்த "மேலாண்மை வாரியம்" அமைக்க இந்திய அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த மனுவின் மீதான இரண்டாம் கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. உச்சநீதிமன்றம், 2007ல் வெளியான இறுதி தீர்ப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுவதற்கு பதிலாக கர்நாடக வழக்குரைஞர் பாலி நாரிமன் வாதத்தை ஏற்று மேற்பார்வைக்குழுவை அமைக்க ஆணையிட்டுள்ளது. அதன் படி காவிரி மேற்பார்வைக் குழு மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் அமைக்கப்படும். இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களின் தலைமை செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, காவிரி நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ஆலோசித்து முடிவு எடுப்பது இவர்களது கடமையாகும். இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் இவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக உழவர் முன்னணியின் சார்பில் அதன் கடலூர் மாவட்ட செயலாளார் சி.ஆறுமுகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அண்மையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை கூறி மேலாண்மை வாரியம் அமைப்பதை இந்திய அரசு தவிர்த்தது. உச்ச நீதிமன்றம் இப்போதைய தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு எதையும் இந்திய அரசுக்கு விதிக்கவில்லை. மொத்தத்தில் எந்த தீர்ப்பு கிடைத்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என்ற நிலைப்பாட்டில் இந்திய அரசு தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்றமும் கர்நாடகத்தின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் மன்றமாகவே உள்ளது. ஆகவே, தமிழக அரசு அனைத்து கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தை கூட்டி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சி. ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். "இது முக்கியமானதும், எதிர்பாராததுமான ஆய்வு முடிவு" என கால்டெக்கின் (Caltech) கோள் அறிவியலாளர் (planetary scientist) டேவிட் ஸ்டெவன்சன் (David Stevenson) கூறினார். இந்தக் கண்டுபிடிப்புகள் இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக "நிலவு வறண்டதாக பிறந்தது" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது கிடைக்கப்பெற்றது. 1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளைக் அது கொண்டுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும். பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது. அதே போல் வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிலாளி பணிபுரிந்திருந்தாலே ஒரு நாள் வார விடுப்பு வழங்க வேண்டும். மகப்பேறுக்கு தயாராகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 6 வாரம் விடுப்பும், பிரசவத்திற்கு பின்பு 20 வாரமும் விடுப்பு அளிக்கப்படும். அதே போல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தந்தைக்கு இரண்டு வார விடுப்பும் அளிக்கப்படும். இதே விடுப்புக்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு குறைந்த ஒரு குழந்தையை தத்தெடுக்கும் குடும்பத்தின் தம்பதிகளுக்கும் வழங்கப்படும். இந்த சட்டம் அமலாவது மூலம் பிரசவத்திற்கு அதிக விடுப்பு வழங்கும் நாடுகளில் மூன்றாவது நாடாக வெனிசுலா திகழும். அதே போல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அது சுய தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் குடும்ப பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்கு முன்பு நீண்ட விவாதம் நடைபெற்றிருந்தாலும், இந்தாண்டில் ஆரம்பத்தில் இந்த சட்டத்திருத்தத்தில் மாறுதல் செய்ய வேண்டி தொழிலாளர்களும், மற்றவர்களும் விரும்பினால் மே 7ம் தேதிக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதே போல் இந்த சட்டம் இந்த வாரம் முதல் அமாலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அடுத்து வரும் 6 வாரங்கள் தொடர்ந்து வேலையிடங்களில் சட்ட அமலாக்கத்திற்கும் ஏதார்த்ததிற்கும் உள்ள நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த சட்டப்படி எந்த தொழிலாளரையும் இணைக்காமல் இருந்தால் ஆலைகளுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும். தொழிலாளர்களும் தங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்திட வேண்டும். தேவைப்பட்டால் தொழிலாளர் துறையிடம் இது குறித்த தகவலை தெரிவிக்கலாம் என்று வெனிசுவேலாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மரியா இக்லேசியாசு தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் அமலாவது என்பது முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசபாதையின் வராலாற்று முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்த அரசு குறித்து தொழிலாளர்களிடம் பரப்பப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது பதினான்கு ஆண்டுகால முயற்சியின் வெற்றியாகும் என தேசிய பொதுத்துறை ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பிராங்கிளின் ரோன்டன் தெரிவித்துள்ளார். கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு (LED Light) வெளியீடு பற்றி லார்சன் எலக்டிரானிக்ஸ் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலோக உப்பீனிய விளக்கு 1000 வாட் மின்திறனைக் கொண்டு உருவாக்கக்கூடிய ஒளியூட்டத்தை LEDP5W-60-1227-20C என்னும் இந்தப் புதிய ஒளியீரி விளக்கு வெறும் 300 வாட் மின்திறனை மட்டும் பயன்படுத்தி ஒளியூட்டக்கூடியதாக லார்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 300 வாட் மின்திறனைக் கொண்டு 29587 ஒளிப்பாயங்கள் வரை இது உற்பத்தி செய்யக்கூடியது எனவும், இது IP68 நீர்காப்பு தரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கில், நீர்காப்பு உட்புற மின்மாற்றிகளுடன் ஒளியீரிகளும், 127-270 விர்சுவல் மாறுதலை மின்சாரத்தினை பெறும் 20 அடி நீள கம்பிவடமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று உந்து வண்டி அல்லது கப்பல் மின்சார கட்டகத்தில் இருந்து 12 அல்லது 20 வோல்டு மின்னழுத்தத்தை பெறுமாறும் இதனை மாற்றியமைக்கத்தக்கதாக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் கைதிற்குப் பிறகு வன்முறையில் ஈடுபட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்ய தமிழக அரசு தயங்காது என தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டசபையில் இன்று அனைத்துக் கட்சிகளின் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளார் தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்கள் அனைத்திற்கும் விடுதலை சிறுத்தைகள், தமிழக அரசு மற்றும் காவல் துறை இவை மூன்றும்தான் காரணம் என்று கூறியுள்ள ராமதாஸின் கருத்து பொய்யானது. பா.ம.க எந்த வன்முறை செயலையும் செய்யாது என்று கூறுவதன் மூலம் பா.ம.க நிகழ்த்திய வன்முறைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று ராமதாஸ் நினைக்கிறார்" என அவர் கூறினார். மேலும், தன் மீதும், தமிழக அரசு மற்றும் காவல் துறை மீதும் அவதூறுகளை பரப்பி வரும் ராமதாஸ் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். "பா.ம.க நடத்திய வன்முறை காரணமாக அரசுக்கும் தனியாருக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு பா.ம.கவினரிடம் இருந்து நஷ்டஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வண்ணம் வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய அரசு தயங்காது என அவர் உறுதிபடக் கூறினார். ரூ.100 கோடி செலவில் மதுரையில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டிடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும்" என்றார். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் அன்று வழங்கப்படும். சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும். பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பச் சூழ்நிலைகளையும், தற்போதைய காலச் சூழ்நிலையையும், கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 6 ஆயிரத்தில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பத்திரிகையாளரின் மனைவிக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார். கொங்கோ சனநாயகக் குடியரசின் மத்திய பகுதியில் பத்திரிசு லுமும்பா பிறந்த காசாய்-ஓரியெண்டல் மாகாணத்தில் லுமும்பாவில் என்ற பெயரில் இந்நகரம் நிறுவப்பட விருப்பதாக அரசுப் பேச்சாளர் லாம்பர்ட் மெண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கான நிர்மாணப் பணிகள் 2014 இல் ஆரம்பமாகும். லுமும்பாவின் படுகொலையில் ஐக்கிய இராச்சியம் சம்பந்தப்பட்டிருந்ததாக டாஃப்னி பார்க் எனும் முன்னாள் இரகசியப் புலனாய்வுத்துறை அதிகாரி தம்மிடம் கூறியதாக ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லீ பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார். பத்திரிசு எமெரி லுமும்பா (1925–1961) கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆவார். இவரே பெல்சியத்திடம் இருந்து தமது நாட்டுக்கு ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தையின் நினைவாகப் புதிய நகரம் அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள அவரது மகன் லோரண்ட், தனது தந்தையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எனபதை அரசு கண்டுபிடிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். கருவணு பெருக்கமடையும் ஆரம்ப நான்கைந்து நாட்களுக்குள் உருவாகும்100 முதல் 150 வரை உயிரணுக்களைக் கொண்ட இளம்கருவளர் பருவ (blastocyst) முளையத்தின் உயிரணுக் கூட்டமே முளையக் குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) எனப்படும். முளைய குருத்தணுக்கள் எவ்வகையான இழையத்தையும் உருவாக்கும் தன்மை கொண்டவை இதன் மூலம் புதிய இதயம், எலும்பு, ஈரல், நரம்பு இழையங்கள் போன்றவற்றை உருவாக்கலாம். இதயத்தசை இறப்பினால் (மாரடைப்பு) பழுதுபட்ட இதயம் மிகவிரைவில் செயலிழப்புக்கு உள்ளாகின்றது. இறந்துபட்ட இழையங்களை ஈடு செய்ய புதிய உயிரணுக்கள் தேவை. அந்தக் குறிப்பிட நபரின் உயிரணுக்களே பழுதைச் சீர்படுத்த வல்லது. வேறொருவரின் உயிரணுக்கள் ஒவ்வாமையை உருவாக்கும். இச்சிக்கல் படியெடுப்பு முறை மூலம் நீங்குகின்றது. இந்நிகழ்வில் ஒரு நபரில் இருந்து எடுக்கப்பட்ட தோல் உயிரணுக்களின் கருவில் உள்ள மரபணுக்கள் (டி.என்.ஏ பெண் வழங்கி ஒருவரின் மரபணுக்கள் நீக்கப்பட்ட முட்டையுள் புகுத்தப்பட்டது. ஏற்கனவே இம்முறையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் 6 – 12 வரையிலான பருவத்தையே எட்டினர். ஆனால் ஒரேகனில் தற்போது நிகழ்த்திய ஆய்வில் 150 வரை உயிரணுக்களைக் கொண்ட இளம்கருவளர் பருவத்தை பெற்றுக்கொண்டனர். இது முழுமையான முளையக் குருத்தணுக்களை உருவாகத்தேவையான பருவமாகும். குருத்தணுக்கள் மருத்துவத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாக இருக்கும் இக்கால கட்டத்தில் இக்கண்டுபிடிப்பு சிறந்த விளைவுகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உயிரணுக்கள் மட்டுமே கொண்ட இம்முளையம் ஒரு மனிதனாக வளர்தெடுக்கப்படப் போவதில்லை, எனினும் இதற்குப் பல எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. இன்று வியாழக்கிழமை பத்துவக்காலி மாவட்டத்தை மணிக்கு 100 கிமீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. தற்போது சிட்டகொங்கை நோக்கி நகருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசம், பர்மா ஆகிய நாடுகளின் தாழ்நிலைப் பகுதிகளில் வாழும் ஒரு மில்லியன் மக்கள் வரையில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒன்பது மணித்தியாலங்களில் சுமார் 175 கிமீ தூரத்தை புயல் தாக்கியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆனாலும், மிகப்பெரும் பாதிப்பு இதனால் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. சிட்டாகொங், மற்றும் கொக்சு பசார் ஆகிய இடங்களில் வானூர்தி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. மகசென் சூறாவளி இலங்கையைத் தாக்கவில்லை ஆயினும், பெரும் மழை மற்றும் மண்சரிவுகளினால் ஏழு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஐநா சபையில் புதனன்று சிரிய அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்க்கும் சிரிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சிரிய அரசுப் படைகள் பலம் வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், மனித உரிமைகள் திட்டமிட்ட முறையில் மீறப்பட்டு வருவதாகவும் சிரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது ஐநாவுக்கான பிரேசில் நாட்டுத்தூதர் மரியா லூசியா ரிபைரோ வியோட்டி பேசும்போது, சிரியா நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச சமூகம் முயன்று வரும், இந்த நேரத்தில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது, சமாதான முயற்சியை பலவீனப்படுத்தி விடும். இருதரப்பினரும் ஆயுதங்களை குவிப்பதை தடுப்பது குறித்து தீர்மானத்தில் எதுவும் இல்லாதது அநீதியானது என்று வேதனையுடன் குறிப்பிட்டார். ஐநாவுக்கான சீனாவின் நிரந்தர உறுப்பினர் லீபாடோங் பேசும்போது, சிரியாவுக்கு எதிராக கட்டாய வாக்கெடுப்பு நடத்துவது உறுப்பு நாடுகளிடையே உள்ள ஒற்றுமையையும், சமாதான முயற்சியையும் கெடுத்துவிடும் என்றார். உருசியாவின் நிரந்தர உறுப்பினர் அலெக்சாண்டர் பான்கின் பேசும்போது, சிரியா அரசை மாற்றுவதை நோக்கமாக கொண்டு அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானம் மிக தீமையானது. அழிவை ஏற்படுத்தக்கூடியது என்று ஆவேசத்துடன் கூறினார். இறுதியில் சிரிய அரசின் பிரதிநிதி பசீர் ஜஃபாரி உரையாற்றும் போது, சிரியாவில் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அகற்ற முயன்று வருகிறார்கள். பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக சிரியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க முயன்று வருகிறார்கள். இதை அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். ஜெனீவாவில் நடக்க இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு காண்பது சர்வதேச நாடுகளின் கடமை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. ஐநா சபையின் மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193. அன்று வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாட்டு பிரதிநிதிகளில் 107 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 59 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனாவும், உருசியாவும் அடங்கும். இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்பட 59 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. திரிபுராவில் பெண்-ஆண் விகிதா சாரம் 948-ல் இருந்து 960 ஆக அதிகரித்துள்ளது. தேசிய பெண்-ஆண் விகிதாசாரம் ஆயிரத்திற்கு 943 என்ற நிலையில் உள்ளது. ஆனால் திரிபுரா மாநிலத்தில் ஆயிரம் ஆண்கள் 960 பெண்கள் என்ற முன்னேற்றம் உள்ளது. இந்த அறிக்கை வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டது. இவ்வாண்டு செப்டம்பருக்குள் திரிபுரா மாநிலம் கல்வியறிவில் 100 விழுக்காட்டை எட்டிவிடும் என திரிபுராவின் முதலமைச்சர் மனிக் சர்க்கார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நியூயோர்க் நகருக்கு அண்மையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் இரு பயணிகள் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 60 பேர் வரையில் காயமடைந்தனர். 250 பேர் வரையில் இத்தொடருந்துகளில் பயணம் செய்தனர் எனவும், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து நேற்று மாலை உள்ளூர் நேரம் 6 மணியளவில் இடம்பெற்றது. ஐந்து பேர் வரையில் படுகாயமடைந்தனர். நியூயோர்க் நகரின் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தொடருந்து கனெடிகட் மாநிலத்தின் நியூ ஏவன் நகரில் தடம் புரண்டதை அடுத்து எதிரே வந்து கொண்டிருந்த வேறொரு தொடருந்து இதனுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தை அடுத்து நியூயோர்க்கிற்கும் பொஸ்டனுக்கும் இடையிலான சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. தொடருந்தின் முன்பகுதி பெருமளவு சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கனெடிகட் ஆளுனர் டனெல் மலோய், ஒரு தொடருந்தின் சில்லுகள் மற்றையதுடன் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறினார். எவ்வாறு இவ்விபத்து இடம்பெற்றது என்பது இதுவரை அறியப்படவில்லை. 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசுப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்காக நேற்று மே 18 நினைவு நாளை இலங்கை, மற்றும் உலகத் தமிழர் உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் மே 17 வெள்ளிக்கிழமை தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நேற்று அதிகாலை முதல் வளாகத்தைச் சுற்றிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் தவிர்ந்த வேறு எவரும் உள்ளே செல்லாதவாறு படையினர் தடுத்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அங்கு இவ்வாறு இடம்பெற்ற நினைவு நிகழ்வு படையினரால் தடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா நகர சபை மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் கூட்டமும் இடம்பெற்றன. பெருமளவான மக்களும் பெற்றோரை இழந்த சிறுவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ. சரவணபவன், எஸ். சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி. ஆனந்தசங்கரி, சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த சிறி ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்திலும் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோருடன் கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் மார்பிள் ஆர்ச் பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் பிக்காடிலி சர்க்கஸ் வரை தொடர்ந்தது. இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில், அங்கு நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை பிரித்தானியப் பிரதமரும், பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். மாலை 4 மணி அளவில் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் இந்தியக் கம்யூனிச கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் தா. பாண்டியன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர். சுவிட்சர்லாந்தில் வணக்க நிகழ்வுகள் சூரிச் நகரில் எல்வேசியா பிளாத்சு திடலில் நடைபெற்றது. நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுவிஸ் டொச் மொழியிலும் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து பதாகை ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் இறந்த சொந்தங்களை நினைவு கூர்ந்தனர். தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிட்டனர். அவுத்திரேலியாவின் மெல்பேர்ண், மற்றும் சிட்னியின் பிளாக்டவுன் என்ற இடத்திலும் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மலையின் உச்சியை சவுதி அரேபியப் பெண் ஒருவர் உட்பட 64 பேர் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 35 வெளிநாட்டவர்கள் 29 நேபாள செர்ப்பா வழிகாட்டிகளுடன் 8,850 மீட்டர் (29,035 அடி) உயரத்தை மே 18 சனிக்கிழமை காலையில் அடைந்துள்ளதாக திலக் பாட்னி என்பவர் தெரிவித்துள்ளார். அனைவரும் நலமுடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார். ராகா மொகாரக் என்ற 25 வயதுப் பெண் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் சவுதி அரேபியப் பெண் ஆவார். அத்துடன் மலையின் உச்சியை அடைந்த முதலாவது வயதில் குறைந்த அரபு நாட்டவரும் இவரே ஆவார். சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரைச் சேர்ந்த ராகா மொகாரக் தற்போது துபாய் நகரில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகிறார். நேபாளம் அல்லது திபெத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற முடியும். மே மாதத்திலேயே அதிகம் பேர் மலை ஏறுவர். இம்மாதமே மலையேறுவதற்கு ஏற்ற காலநிலை உள்ள மாதம் ஆகும். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 13 வயது அமெரிக்கச் சிறுவன் சாதனை மே 23, 2010 அமெரிக்காவின் ஓக்லகோமா நகரப் பகுதியில் 2 மைல் சுற்றளவுடன் சூறாவளி தாக்கியதில் 20 சிறுவர்கள் உட்படக் குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டனர். 200 கிமீ/மணி வேகத்தில் வீசிய இப்புயலில் ஆரம்பப் பாடசாலை ஒன்று நேரடியாகத் தாக்கப்பட்டதில் இடிபாடுகளிடையே பலர் சிக்குண்டனர். மேலும் பாடசாலை சேதமடைந்தது. அரசுத்தலைவர் பராக் ஒபாமா ஓக்லகோமா மாநிலத்தை பேரழிவுப் பகுதி என அறிவித்துள்ளார். நடுவண் அரசின் நிவாரண உதவிகள் உள்ளூர் மக்களுக்குச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2:56 மணிக்கு 55,000 மக்கள் தொகை கொண்ட மூர் என்ற புறநகரை சூறாவளி தாக்கி சுமார் 45 நிமிட நேரம் நிலை கொண்டிருந்தது. பிளாசா டவற்சு ஆரம்பப் பாடசாலையின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டன, சுவர்கள் இடிந்து வீழ்ந்தன. மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக இத்தகைய சூறைப் புயல்கள் பொது வெளிகளையே தாக்கும், ஆனால் இம்முறை குடியிருப்புகளைத் தாக்கியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 1999 மே 3 ஆம் நாள் இப்பகுதியில் தாக்கிய சூறாவளியினால் 40 பேர் கொல்லப்பட்டனர். அனைத்து நாடுகளும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். குவாத்தமாலாவின் முன்னாள் இராணுவத் தலைவர் எஃப்ரெயின் ரியோசு மொண்ட் என்பவருக்கு எதிராக அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் எப்ரல் 19 ஆம் நாளுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பை ரத்துச் செய்துள்ளது. கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதி வாரங்களில் வழங்கப்பட்டிருந்த சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் சாசன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் நாள் இடம்பெற்ற விசாரணைகளில் ரியோசு மொண்டின் வழக்கறிஞர் நீதிமன்ற அவையில் இருந்து நீதிபதிகளால் வெளியேற்றப்பட்டார் என்றும், இதனால் தமது தரப்பை அவர்களால் வெற்றிகரமாக வாதாட முடியவில்லை எனக் காரணம் காட்டி அரசியல் சாசன நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்னைய தீர்ப்பை ரத்துச் செய்வதாக அறிவித்தது. ரியோசு மொண்ட் அனேகமாக வீட்டுக் காவலில் மீண்டும் வைக்கப்படுவார் என நம்பப்படுகிறது. அரசியல் சாசன நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் அலுவலகம் முறையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாத்தமாலாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதனால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு இது பெரும் பின்னடைவு என பன்னாட்டு மன்னிப்பகம் கூறியுள்ளது. 1960 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ''நைட் டெம்ளர் என்ற போதை மருந்து கடத்தல் குழுவிடமிருந்து தென்மேற்கு மாநிலமான மிசோஆகான் நகரங்களைக் காக்க மெக்சிக்கோ படைகளை அனுப்பி உள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பும் அமைதியும் திரும்பும் வரை படைகள் அங்கிருக்கும் எனப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். உட்துறை அமைச்சர் மிகால் ஒசோரியோ சோங் உள்ளூர் அதிகாரிகளை மாநில தலைநகரில் சந்தித்தார். அரசு மீது அவநம்பிக்கை கொண்டுள்ள மக்கள் போதை மருந்து கடத்தல் குழுவிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுய பாதுகாப்பு குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளனர். 2006ல் போதைப்பொருட் கடத்தல் குழுக்கள் மீது அப்போதைய மெக்சிக்கோ அதிபர் கால்டிரென் நடவடிக்கை எடுத்த போதும் படை அணிகள் இம்மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன, அப்போதைய படை நடவடிக்கைக்கும் இப்போது அனுப்பப்பட்ட படை அணிக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டபோது உத்திகளில் மாறுபாடு உள்ளது என மிகால் ஒசோரியோ கூறினார். மாநில அரசும் நடுவண் அரசும் நெருக்கமாக பணியாற்றும் என்று கூறிய அவர் எவ்வளவு பணம் செலவு செய்யப்படும் என்று கூற மறுத்துவிட்டார். நைட் டெம்ளர் குழுவினர் தொழில் நிறுவனங்கள், கடைகள், பண்ணைகள் ஆகியவை பாதுகாப்பு பணம் கொடுக்காவிட்டால் அவற்றை தீ வைப்பது போன்ற நாசகார செயல்களினால் அழித்துவிடுவார்கள். ஊரகப்பகுதிகளில் இக்குழுவின் செயல்பாடு நன்கு தெரியும் படி 2010ல் காவல்துறையினருடன் நடந்த சண்டையில் மறைந்த இக்குழுவின் தலைவருக்கு நிறைய இடங்களில் சாலையோரம் சிறிய கோயில் கட்டியுள்ளார்கள். கோல்கோமன் நகரில் எரிக்கப்பட்ட மூன்று மரம் அறுக்கும் ஆலைகள் எரிக்கப்பட்டதற்கு அவை விற்கும் மரத்திற்கு கன மீட்டருக்கு 120 பிசோ பாதுகாப்பு பணம் கட்ட மறுத்ததே ஆகும். அவகாடோ உற்பத்தியாளர்கள் எக்டருக்கு 2000 பிசோ பாதுகாப்பு பணம் நைட் டெம்ளர் குழுவிற்கு செலுத்தவேண்டும். லா பெமிலியா குழுவின் தலைவர் நசாரியோ மரினோ கான்சாலசு 2010ல் பாதுகாப்புபடையுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதை அடுத்து சீசசு மென்டுசு வர்காசு தலைமைப் பதவியேற்றதைப் பிடிக்காமல் செர்வனடோ கோமச் மார்டின்சு தலைமையில் நைட் டெம்ளர் பிரிந்தது. நேற்று புதன்கிழமை இரவு யெஃப்ரேமொவ் நகரைத் தாக்கிய இந்த நுண்வானியல் வெடிப்பினால் microburst வீடுகள், மற்றும் சமூக நிலையங்கள் சேதமடைந்தன. தூலா ஆளுனர் விளாதிமிர் குருசுதேவ் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் நகரில் அவசர நிலையைப் பிறப்பித்தார். “இதன் மூலம் நடுவண் அரசின் நிவாரண உதவிகளை பாதிப்படைந்த மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்,” என ஆளுனர் குருசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நுண்வானியல் வெடிப்பினால் பாதிப்படைந்த குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1,600 டாலர்கள் நிவாரண உதவியாகக் கொடுக்கப்படும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் படி, நுண்வானியல் வெடிப்பை அடுத்து இடம்பெற்ற சூறைக்காற்றினால், 167 வீடுகள், 29 குடியிருப்பு மனைகள், நான்கு பாடசாலைகள், இரண்டு பாலர் பள்ளிகள் ஆகியன சேதமடைந்துள்ளன. காயங்களுக்குள்ளான பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேற்காப்பிரிக்க நாடான நைஜரில் அகாடசு நகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குள்ளானதில் 18 இராணுவத்தினர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியோரில் 4 பேர் கொல்லப்பட்டனர். சோமையர் என்ற நகரில் பிரான்சினால் நடத்தப்படும் யுரேனியச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மற்றும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் 14 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல்களை போராளிகளின் தலைவர் மொக்தார் பெல்மொக்தார் என்பவரே நடத்தியதாகக் கூறப்பட்டாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று அதிகாலை 05:00 மணிக்கு மக்கள் காலை நேரத் தொழுகையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இராணுவ முகாமினுள் குண்டுகள் நிரப்பிய மோட்டார் வாகனம் ஒன்று செலுத்தப்பட்டு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டதாக நைஜரின் பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இரண்டாவது தாக்குதலில் சுரங்கத் தொழிலாளர்கள் குழுமியிருந்த இடத்துக்கருகாமையில் வாகனம் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது. நைஜரில் உள்ள பிரெஞ்சு வளங்களைத் தமது அரசு பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாக பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஒலாண்டே அறிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தாம் நைஜர் அரசுக்கு தேவையான உதவி வழங்குவோம் என அவர் கூறினார். பக்ரைனில் மூத்த சியா பிரிவு இசுலாமிய மதகுரு சேக் இசா குவாசிம் வீடு காவல்துறையால் சோதனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பக்ரைனின் பெரிய அரச எதிர்ப்பு அமைப்பான அல்-விவெக் அழைப்பின் பேரில் போராட்டம் செய்தனர். பக்ரைனின் மன்னர் அமட் அரசில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறினாலும் அல்-விவெக் உள்ளிட்ட பலர் மனித உரிமை மீறல்களும் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையும் இன்னும் தொடர்வதாக குற்றஞ்சாட்டினர். சேக் இசா குவாசிமை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர். சோதனை நடந்த சமயத்தில் வீட்டில் சேக் இசா குவாசிம் இல்லை என்றும் காவல்துறை பல ஆவணங்களை கைப்பற்றியதாகவும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சௌந்தரராஜன், சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிய நிலையில் இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 1950 ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி" என்ற பாடல் மூலம் திரையுலகில் அடி வைத்தார். தென்னிந்தியத் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் 10,000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அன்றைய பிரபலமான நடிகர்கள் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ராஜன், நாகேஷ் எனப் பலருக்கும் குரல் கொடுத்துள்ள சௌந்தரராஜன் இன்றைய நாயகர்கள் ரஜினிகாந்த், கமலகாசன் ஆகியோருக்கும் பாடியுள்ளார். ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசைப் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்த சௌந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி சீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் முறையாக கருநாடக இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடைக் கச்சேரி செய்து வந்தார். 2012-ம் ஆண்டில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் குரலில் பதிவான கடைசிப் பாடல் ஆகும். சௌந்தரராஜனுக்கு மனைவி, ஒரு மகள், மற்றும் பால்ராஜ், செல்வகுமார் என இரண்டு மகன்களும் உள்ளனர். இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எக்குவடோரில் 50 வயதான ரஃபாயெல் பேல் கொரெயா இடதுசாரித் தலைவரும் வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் ஊகோ சாவேசுவின் நெருங்கிய சகாவும் ஆவார். நாட்டில் மிகவும் செல்வாக்குள்ளவரான கொரெயாவின் சோசலிச இயக்கத்திற்கான கூட்டணிக் கட்சி நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், மூன்றாவது முறையாக அந்நாட்டு சனாதிபதியாக சோசலிச இயக்கத்திற்கான கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிவு கடந்த பிப்ரவரி 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 137 இடங்களில் 100 இடங்களை கொரெயா தலைமையிலான சோசலிச இயக்கத்திற்கான கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் ரஃபயெல் கொரெயா மூன்றாவது முறையாக எக்குவடோரின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளியன்று எக்குவடோர் தலைநகர் கியூடோவில் உள்ள நாடாளுமன்றத்தில் சனாதிபதி பதவியேற்பு விழா நடைபெற்றது. சனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட பின்னர் ரஃபயெல் கொரெயா கூறியதாவது தற்போது எக்குவடோர் குடிமக்களின் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏழைகளின் புரட்சி ஆகும். இந்த புரட்சி வெறும் ஆரம்பம் தான் என்றார். சுதந்திர விளக்கை ஏந்தி முன்னோக்கி செல்ல வேண்டிய பொறுப்பு நம் கையில் இருக்கிறது. நாட்டில் நிலவும் வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக இரண்டாவது விடுதலைப் போரை நடத்திட வேண்டும். இதன் மூலம் ஆழமான அரசியல், மற்றும் சமூகப் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும். 2007ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு மில்லியன் மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு நல்வாழ்வு அளித்திருக்கிறோம். நம் நாட்டில் இருக்கும் இயற்கை வளம், மனித திறமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிறந்த கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு வறுமையை தோற்கடிக்க வேண்டும் என்பதே நமது முக்கிய இலக்காகும். இலத்தின் அமெரிக்காவில் வறுமையை குறைத்து வரும் நாடுகளில் எக்குவடோர் ஒன்றாக இருக்கிறது என இலத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் பொருளாதார ஆணையம் கூறுகிறது. அமெரிக்காவில் ஏராளமானோர் வறுமையின் பிடியில் இருந்து வருகின்றனர். இந்தப் பூமியில் இருந்தே வறுமை அகற்ற வேண்டியது நமது தார்மீக கடமையாகும். மனித வரலாற்றில் வறுமை இந்த பூலோகத்தில் உள்ள வளங்களின் பற்றாக்குறையால் வருவதல்ல. மாறாக தவறான கொள்கைகள் மற்றும் இந்த விபரிதமான கட்டமைப்புகள்தான் காரணம் ஆகும். வறுமை மற்றும் முறை கேடான சமத்துவமின்மையைத் தோற்கடித்து உண்மையான சனநாயகத்தை அடைய, சனநாயக அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட மனித திறமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு மக்களிடம் ஆழமான அரசியல் அறிவை மேம்படுத்த வேண்டும். அரசியல் படுத்த வேண்டும். இந்த பதவியேற்பு நிகழ்வில் வெனிசுவேலா அரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோ, பெருவின் தலைவர் ஓலண்டா உமலா, கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் சின்சில்லா, இந்துராசின் சனாதிபதி போர்பிரியோ லோபோ, கொலம்பியா அரசுத்தலைவர் உவான் சாண்டோஸ், மற்றும் சிலி சனாதிபதி செபஸ்தியான் பினிரா ஆகியோர் உட்பட 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 2006 ஆம் ஆண்டில் கொரெயா முதற்தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பல ஆண்டு காலமாக நிலவிவந்த திரமற்ற அரசியல் நிலைமை சீரடைந்தது மக்கள் புரட்சி" என அழைக்கப்பட்ட அவரது இடதுசாரி அரசியல் கொள்கை அவரை சாதாரண மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றது மட்டுமல்லாமல் அயல் நாடுகளில் இடதுசாரித் தலைவர்களை நண்பர்களாக்கியது. 2007 ஆம் ஆண்டில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தினார். இதன் மூலம் அவர் 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அரசுத்தலைவராகப் போட்டியிட வழி வகுத்தது. இந்தியாவின் மத்திய பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிசப் போராளைகளின் தாக்குதலில் காங்கிரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலை அடுத்து சத்தீசுக்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டனர். இவர்களது உடல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பின்னர் கண்டெடுக்கப்பட்டது. சுக்மா மாவட்டத்தில் சென்ற காங்கிரஸ் கட்சி வாகன அணி ஒன்றின் மீது கண்ணிவெடித் நடத்தப்பட்டுப் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டது இத்தாக்குதல்களில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறை அதிகாரி ராம்னிவாசு தெரிவித்தார். காயமடைந்தவர்களில் முன்னாள் இந்திய நடுவண் அமைச்சர் வித்யா சரண் சுக்லா என்பவரும் அடங்குவார். இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய மக்களாட்சிக்கு இது ஒரு கருப்பு நாள்" எனத் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சத்தீஸ்கர் சென்று தாக்குதலுக்கு இலக்கானவர்களை சந்தித்தனர். நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிசவாதிகள் ஏழை மக்களுக்கு நில உரிமையும் வேலை வாய்ப்பும் வேண்டும் எனக்கோரி கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியாவின் மத்திய, கிழக்கு மாநிலங்களில் ஆயுதமேந்திப் போராடுகின்றனர். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகின்றது. 74 பேரை மட்டுமே பயணம் செய்யக்கூடிய இப்படகில் நூறுக்கும் அதிகமானோர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கு ஆற்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணியளவில் இப்படகு மூழ்கியதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இப்படகில் பெண்கள், மற்றும் குழந்தைகளும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. சர்வாக் மாநிலத்தில் தாயக் பழங்குடி மக்களின் முக்கியமான காவாய் பண்டிகைக்காகச் சென்று இப்படகு சென்று கொண்டிருந்தது. இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 20 முதல் 30 பேர் வரையில் படகினுள் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போர்னியோ தீவு மூன்று நாடுகளிடையே பங்கிடப்பட்டுள்ளது. தெற்குப் பகுதி இந்தோனேசியாவிற்கும், வடக்கே இரண்டு மாநிலங்கள் மலேசியாவிற்கும், வடகரை ஒரு சிறிய பகுதி புருணைக்கும் சொந்தமானவையாகும். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்கர்களை குறி வைத்து செயல்படுவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றச்சாட்டியுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கென்யாவின் அதிபர் கென்யட்டாவை மனிதகுலத்துக்கு எதிராக குற்றம் புரிந்தவர் என்று வழக்கு தொடர்ந்து நடத்துவதற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக எத்தியோப்பியாவின் பிரதமர் தெரிவித்தார். தனது இக்கருத்தை ஐக்கிய நாடுகளின் கவனத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கொண்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 99% ஆப்பிரிக்கர்கள் என்றும் அது இந்த அமைப்பில் குறையிருப்பதை காட்டுவதாகவும் எத்தியோப்பிய வில்லியம் ருடோவும் கென்யட்டாவும் 2007ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறையை தூண்டிவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அக்கலவரத்தில் 1000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் 600,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறினர் என்றும் கூறப்படுகிறது. அப்போது எதிர் முகாம்களில் இருந்த ருடோவும் கென்யட்டாவும் 2013 தேர்தலில் இணைந்து செயல்பட்டார்கள். ருடோ துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கென்யட்டாவும் ருடோவும் கென்ய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் 150 பேர் சார்பாக வாதாடும் கென்ய 1990களில் பால்க்கன் போரின் போது முன்னாள் யுகோசுலாவியாவில் போர்க்குற்றம், மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றம் புரிந்ததாகக் குற்றம் சட்டப்பட்ட ஆறு முன்னாள் பொசுனிய குரொவாசியத் தலைவர்களும் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகளின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொசுனியாவில் தனியான குரொவாசிய நாடு ஒன்றை அமைக்கும் பொருட்டு பொசுனிய முஸ்லிம்களையும், குரொவாசியரல்லாதோரையும் படுகொலை புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நெதர்லாந்தின் த ஏக் நகரில் அமைந்துள்ள ஐநா நீதிமன்றம் யத்ரான்கோ பிரிலிக் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ஏனையோர் ஐவருக்கும் 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. * யத்ரான்கோ பிரிலிக் சுயாதீனமாக அறிவிக்கப்பட்ட குரொவாசிய நாட்டின் தலைவர் 25 ஆண்டுகள் * புரூனோ ஸ்டோஜிச் பிரிந்து போன எர்செக்-பொசுனா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் 20 ஆண்டுகள் * சுலொபதான் பிரல்ஜாக் முன்னாள் போராளிகள் குழுத் தலைவர் 20 ஆண்டுகள் * மிலிவோஜ் பெத்கோவிச் முன்னாள் போராளித் தலைவர் 20 ஆண்டுகள் * வலண்டின் கோரிச் பொசுனிய குரொவாசிய முன்னாள் காவல்துறைத் தலைவர் 16 ஆண்டுகள் * பெரிசிலாவு பூசிச் முன்னாள் சிறைச்சாலை தலைவர் 10 ஆண்டுகள் இவ்வாண்டு சூலை 1 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள குரொவாசியா இப் போர்க்குற்றச்செயல்களைப் புரிந்ததாகவும், தூய்மையான குரொவாசியா நாட்டை உருவாக்குவதற்கு இனவழிப்பு முக்கியமானதாக இருந்ததாக முன்னாள் பொசுனியத் தலைவர் பிரான்சோ துஜ்மன் நம்பியதாக நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் சுமார் 33 இலட்சம் பேர் பயன்பெறும் வகையிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடக்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘காணொலிக் கருத்தரங்கு’ வசதி மூலமாக இத்திட்டத்தினை முதல்வர் தொடக்கி வைத்தார். காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டிருக்கும் இத்திட்டத்தினால் சிற்றூர்களில் வாழும் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 40 லிட்டர் எனும் விகிதத்தில் நீர் வழங்கிட முடியும். நகரங்களில் வாழ்பவருக்கு இவ்விகிதம் 135 லிட்டர் நீர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வறட்சியான பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டமும் தருமபுரி மாவட்டமும் குறிப்பிடத்தக்கவை. மாநிலத்தின் வடமேற்குப் பகுதியான இம்மாவட்டங்களில் நிலத்தடி நீரிலுள்ள புளோரைடின் அளவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இப்பகுதிகளில் வாழும் மக்கள் எலும்பு மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல்' துறையின் ஆய்வு அறிக்கை ஒன்று, இம்மாவட்டப் பள்ளி மாணவர்களில் பலரும் பல்லீறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நீர்த்திட்டம், 1960ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பிறகு பல காரணங்களினால் இத்திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 1986ஆம் ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மேலும் 3 மாவட்டங்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்தார். அப்போது திட்டச் செலவு ரூபாய் 110 கோடி எனக் கணக்கிடப்பட்டது. காமராசரின் நினைவாக இத்திட்டத்திற்கு ‘காமராஜ் திட்டச் செயல்திட்டம்’ என எம். ஜி. ஆர். பெயரிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. 1994ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இத்திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. அப்போது திட்டச் செலவு, ரூபாய் 450கோடி எனக் கணக்கிடப்பட்டது. 1996ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, ரூபாய் 600 கோடியாக உயர்ந்த திட்டச் செலவு நிதியை ஜப்பானிடமிருந்து பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 1998ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போக்ரான் அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் விளைவால் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் காரணமாக, இந்த நிதியுதவி கிடைப்பது சிக்கலானது. [[பகுப்பு:தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்]] [[பகுப்பு:தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்]] கெச்சின் விடுதலை அமைப்பு போராளிகளுடன் பர்மிய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இரு தரப்பும் ஏழு அம்சத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது குறித்த உடன்பாடு கெச்சின் மாநிலத் தலைநகர் மித்கீனாவில் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தில் போர்நிறுத்தம், மற்றும் இரு பக்கங்களிலும் இராணுவத்தினரை நிறுத்தல் போன்றவையும் அடங்கியுள்ளன. கெச்சின் மாநிலத்துக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்த பேச்சுக்கள் பின்னர் இடம்பெறும். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் சீன அரசுப் பிரதிநிதிகள், மற்றும் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். கெச்சின் விடுதலை அமைப்பு ஒன்றுபட்ட பர்மாவினுள் கெச்சின் மாநிலத்துக்கு அதிக சுயாட்சி வேண்டுமெனக் கோரி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகப் போராடி வருகிறது. கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 சூன் மாதத்தில் மீள ஆரம்பித்திருந்தது. இதனை அடுத்து இடம்பெற்ற சண்டைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வன்செயல்களில் இடம்பெயர்ந்தனர். கெச்சின் மாநிலத்தில் மூன்று இனக்குழுக்கள் வசிக்கின்றனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கெச்சின் இனத்தவராவர். கெச்சின்களில் பெரும்பான்மையானோர் கிறித்தவர்கள். மாவ் சான், பாமர் ஆகிய இனக்குழுக்களில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் ஆவர். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் மாற்றத்திற்கான சாதனையாளர் Champion of Change உயர் விருது அமெரிக்காவில் வாழும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் என்பவருக்குக் கிடைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 11 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. ”அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உழைக்கும் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களில் சிறந்தவர்களையும், அறிவுசாலிகளையும் கௌரவிக்க இவ்விருது வழங்கப்படுகிறது,” வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 1980 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சிறப்புப் பட்டம் பெற்று சிகாகோ இலினோய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இலினோய் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். மெர்க்குரி-காட்மியம்-தெலுரைடு (MCT) என்னும் சேர்மப்பொருள் குறைக்கடத்தித் துறையில் வல்லவர். அகச்சிவப்புக் கதிரை மின்னாற்றலாக மாற்றவல்லது இத்தொழில்நுட்பம். அகச்சிவப்புக் கதிர் என்பது கண்ணுக்குத் தெரியாத வெபபம் போன்ற மின்காந்த அலைகள் அடங்கியவை. இரவில் மனிதர்களின் அல்லது கருவிகளின் வெப்பத்தை மட்டும் கொண்டு காட்சிப்படுத்திக் காட்டும் குறைக்கடத்திக்கருவிகளின் துறை. இவர் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இயற்பியல் துறையினரும் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாக்கித்தானின் 14வது தேசியப் பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் பாக்கித்தானின் 66 ஆண்டுகால வரலாற்றில் முதற் தடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாற்று அரசுக்கு ஆட்சியைக் கொடுத்துள்ளது. தலைநகர் இசுலாமாபாதில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். 13-வது அவையின் அவை முதல்வர் பெக்மிதா மிர்சா புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 63 வயதுள்ள ஷெரீப் 1990 முதல் 1993 வரையும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு தடவைகள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக 1998 இல் பாகிஸ்தானில் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதில் இவர் பரவலாக அறியப்பட்டவர். பெர்வேஸ் முஷாரப்பினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். நுவரெலியா மாவட்டத்தில் திவுரும்பொலை என்ற இடத்தில் இக்கோவில் கட்டப்படவுள்ளது. இந்த இடத்திலேயே சீதை "அக்கினிப் பரீட்சை" நடத்தியதாக நம்பப்படுகிறது. “இலங்கை அரசிடம் இருந்து எமக்கு அனுமதி கிடைத்துள்ளது, அத்துடன் இந்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது,” என சௌகான் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் கோவில் சுவாமி தயானந்தா அறக்கட்டளை மூலம் நிறுவப்படவுள்ளது எனக் கூறினார். சீதைக்காக இலங்கையில் அமைக்கப்பட்ட இரண்டாவது கோயிலாக இது விளங்கும். சீதா எலிய என்ற இடத்தில் சீதைக்கு ஒரு கோவில் ஏற்கனவே உள்ளது. இராமாயணத்துடன் தொடர்புள்ள 50 இடங்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் துறை ஆணையம் இதற்கான திட்டத்தை முன்னெடுத்திருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா, அர்கன்சாசு மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய புயலுக்கு குறைந்தது பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சுழற்றி அடித்த புயல் பெரும் மழையைக் கொட்டியது. புயல் அமெரிக்காவின் கிழக்குக் கரையை நோக்கி நகர்கிறது. சுமார் நூறு பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். ஓக்லகோமா நகரில் புயலில் சிக்கி பத்து பேர் உயிரிழந்தனர். அர்கன்சாசு மாநிலத்தில் மழைக்கு மூன்று பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை இரவு வீசிய புயலில் விளம்பர பலகைகள் வளைந்து கொண்டன. மோட்டார் வாகனக்கள் தூக்கி எறியப்பட்டன. டிராக்டர் டிரெய்லர்களும் சாலைகளில் புரட்டிப் போடப்பட்டன. வேலையை விட்டு செல்வோரும், புயலுக்கு பயந்து வெளியேறியவர்களும் போக்குவரத்து நெருக்கடியை உச்சத்துக்கு கொண்டு சென்றனர். ஓக்லகோமா நகருக்கு வெளியே உருவான புயல் மக்களுக்கு போதுமான எச்சரிக்கை அவகாசத்தைக் கொடுத்தது. புகலிடத்தை தேடிக்கொள்ளுமாறு காவல்துறை கூறியதால் வெளியேறிய மக்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக புயல் வீசும் வேளையில் அதனிடம் மாட்டிக் கொண்டனர். தான் ஓட்டிச் சென்ற காரை புயல் உயரத் தூக்கி கீழேபோட்டது என்று ஆசிரியரின் உதவியாளர் டெர்ரி பிளாக் தெரிவித்தார். தனது வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு பின்னர் அவர் வருத்தப்பட்டார். வெள்ளியன்று ஏற்பட்ட புயலால் ஒக்லஹோமா மாநிலம் மட்டும் பாதிக்கப்படவில்லை. மிசூரி மாநிலத்தில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. செயிண்ட் சார்லஸ் கவுண்டியில் 71 வீடுகள் மோசமாக சேதம் அடைந்துள்ளன. சுமார் நூறு வீடுகள் சுமாராக பாதிக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தின் தேகூய் நகரின் கோழிக்கறி பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் இறந்தனர். தீ ஏற்படும் முன் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது தொழிலாளர்களிடையே பதற்றத்தை உருவாக்கியதாகவும் தப்பும் வழியில் பலர் சிக்குண்டதாகவும் வெளியேறும் வழிகள் பல பூட்டப்பட்டிருந்தாகவும் தப்பியவர்கள் கூறுகின்றனர். மாகாண தீயணைக்கும் துறையினர் அம்மோனியா கசிவினால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் அல்லது அது தீ அணைக்கும் பணியை சிரமமாக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர். வேறு சிலர் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர். 100 தொழிலாளர்கள் தப்பிவிட்டதாகவும் ஆலையின் சிக்கலான உள்கட்டமைப்பும் நெருக்கலான வெளியேரும் வழிகளும் காப்பாற்றும் பணியை சிரமமாக்கியுள்ளதாக சீனாவின் ஜின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஆலையின் முன் கதவு பூட்டப்பட்டிருந்ததாக ஜின்குவா கூறுகிறது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் 300 தொழிலாளர்கள் அவ்வாலையில் இருந்ததாக தெரிகிறது. 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாகாண அரசு கூறியுள்ளது. 270க்கு மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் பணி நிவாரணப்பணியில் உள்ளனர் என்று கூறியுள்ளது. அமெரிக்க கண்டத்தில் பயணமாக உள்ள சீன அதிபர் நிவாரணப்பணிகள் துரிதமாக நடக்க ஆணையிட்டுள்ளார். இது 2000ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட சீனாவின் மோசமான தீ விபத்தாகும். 2000ம் ஆண்டு 309 பேர் கெனான் மாகாணத்தில் ஓர் நடன அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தனர் பேரணியில் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி டேனியல் எல்ஸ்பர்க் கலந்து கொண்டு உரையாற்றும் போது உண்மையை சொல்பவர்கள் மீது அமெரிக்கா போர் தொடுக்கிறது. அரசின் குற்றங்கள், பொய்கள் வெளிவருவதை அமெரிக்கா விரும்புவதில்லை. சனநாயக நாட்டில் உண்மையை அறிய மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதை அரசு தடுக்கக் கூடாது. தடுத்தால் அது குற்றமாகும். எனவே உண்மையை வெளியிட்ட பிரட்லி விடுதலை செய்யப்பட வேண்டும். அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை பிரட்லி விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதால் இப்போது ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். எனவே பிரட்லி தேசபக்தி மிக்கவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். டேனியல் எல்ஸ்பர்க் கடந்த 1971 ம் ஆண்டு இராணுவத்தில் அதிகாரியாக இருந்தபோது வியட்நாமில் அமெரிக்க ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பான ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பி வெளியிடச் செய்தார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட வியட்நாமில் அமெரிக்க ராணுவத்தினரின் அத்துமீறல்கள் செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. வியட்நாமில் அப்போது இருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தேடப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். இப்போதும் இவர் எக்குவடோர் தூதரகத்தில் தான் உள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள பிரட்லி மீது அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை கடந்த திங்களன்று தொடங்கியது. விசாரணையின் போது பிரட்லி, நாங்கள் வெளியிட்ட 2 ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இப்போதும் நம்புகிறேன் என்று தெரிவித்தார். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரட்லிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பிரட்லிக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்தி உள்ளனர். கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்ட்டா மாவட்டங்களில் காவிரிப் படுகையில் படிந்துள்ள மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்ட்டா மாவட்ட விவசாயம் முற்றிலுமாக அழிந்துபோகும் என்ற அபாயத்தை எடுத்துரைத்து, இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி. எஸ். கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கூறியதாவது மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியின் பேரில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் சோதனை அடிப்படையில் அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இப்பணியில் ஈடுபடும்போது முதலாவதாக நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு, அதன்பிறகே மீத்தேன் எரிவாயுவை சேமிக்க வேண்டும். ஏற்கனவே காவிரி டெல்ட்டா மாவட்டங்கள் சாகுபடிப் பணிகளில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையில் மேற்கண்ட தனியார் நிறுவனம் நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டால் விவசாய விளைநிலங்கள் முற்றிலுமாக அழிந்து போகும். மேலும் கடல்நீர் உள்ளே புகுந்து இருக்கின்ற தண்ணீரும் உப்புநீராக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது. வளிமண்டலம் பாதிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் ஆபத்தும் இதில் உள்ளது. ஏற்கனவே கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. அப்போது தமிழக முதலமைச்சர் மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர மக்களை அழித்துவிட்டு திட்டங்களை கொண்டுவரமுடியாது என்று அறிவித்திருந்தார். இதே கருத்தை தற்போது மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திலும் தமிழக அரசு உணர்த்தி, திட்டத்தை உடனடியாகக் கைவிட நடுவண் அரசிடம் வலியுறுத்த வேண்டும். மீத்தேன் எரிவாயு எடுக்கும் இந்தப் பணியை உடனடியாக தனியார் நிறுவனம் கைவிடாவிட்டால் விவசாயிகளை அணி திரட்டி நேரடியாக களத்தில் இறங்கி இந்த திட்டப்பணிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 12 கிராமங்களிலும் மீத்தேன் எடுக்கும் நிறுவனம் முதல் கட்ட வேலையைத் துவங்கியுள்ளது. மேலும் 254 கிராமங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். ‘ஆறு தேசியக்கட்சிகள் (காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம் சிபிஐ, என்சிபி, பகு ஜன் சமாஜ் ஆகியன) நடுவண் அரசால் கணிசமான அளவிற்கு நிதி உதவி பெற்று வருகின்றன என்றும், எனவே இந்தக் கட்சிகள் மேற்கண்ட சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்களாகக் கருதப்பட வேண்டும்’ என்று மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு கூறுகிறது. சனநாயக சீர்திருத்த சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சுபாஷ் அகர்வால், அனில் பெய்ர்வால் ஆகியோர், காங்கிரஸ், பாஜக உட்பட்ட 6 அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நன்கொடையாகப் பெற்ற தொகை, வழங்கியவர்களின் விபரங்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகள் உள்ளடங்காது எனக் கூறி, 6 கட்சிகளும் தகவல் தர மறுத்திருந்தன. இதனை அடுத்து அகர்வால், பெய்ர்வால் ஆகியோர் மத்திய தகவல் ஆணையத்தில் இது குறித்து விளக்கம் கேட்டனர். தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிசுரா, தகவல் ஆணையர் எம். எல். சர்மா, அன்னபூர்ணா தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு இக்கோரிக்கையை விசாரித்து, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவையே என உத்தரவிட்டுள்ளது. துருக்கி அரசிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அந்நாட்டுப் பொதுத்துறைகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களும் செவ்வாயன்று பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துருக்கியை ஆளும் பிரதமர் ரைய்ப் ஏர்டோகன் தலைமையிலான அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்திருத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த சட்ட திருத்தங்களை கண்டித்து கடந்த வாரம் அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள டாக்சிம் சதுக்கத்தில் அரசிற்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டின் காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், காவல்துறையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல் உள்ளிட்டவைகளால் பலர் பார்வையிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துருக்கி அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சனநாயக அமைப்புகளின் சார்பில் கடந்த ஒருவார காலமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அந்நாட்டின் பொதுத்துறைகளில் பணியாற்றும் சுமார் இரண்டரை லட்சம் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பொதுத்துறை நிறுவன பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கின. அரசிற்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியுள்ளன. குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் அங்காரா மற்றும் கடற்கரை நகரங்களான அன்டாலயா, இஸ்மீர் உள்ளிட்ட 67 நகரங்களுக்கு இந்த எதிர்ப்பு போராட்டங்கள் பரவியுள்ளது. இதனிடையே, இப்போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். வோடபோன் இந்தியா நிறுவனம் தனது வருமானத்தைக் குறைத்துக் கணக்குக் காட்டி மோசடி செய்தததற்காக ரூ.1,263 கோடி அபராதம் விதித்து நடுவண் தொலைத் தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில் அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸ் ஆகும். வோடபோன் இந்தியா நிறுவனம் கடந்த 2008-2009 மற்றும் 2010-11 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் ஈட்டிய வருவாய், வரி மற்றும் வட்டி போன்றவற்றை மறைத்து வருவாயைக் குறைத்துக் காண்பித்து மோசடி செய்துள்ளதை மத்தியத் தொலைத் தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து, 2008-2009 ஆம் நிதியாண்டிற்கு ரூ.715 கோடியும், 2010-11 ஆம் நிதியாண்டிற்கு ரூ.548 கோடியும் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தவும், இது குறித்து விளக்கமளிக்கவும் அந்நிறுவனத்திற்து தொலைத் தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு இந்நிறுவனங்களின் 2006-07 மற்றும் 2007-08 ஆம் நிதியாண்டிற்களுக்கான கணக்குகளை தணிக்கை செய்வதற்காக தொலைத் தொடர்புத்துறை குழு ஒன்றை அமைத்தது. அக்குழு ஆய்வு செய்ததில், இந்நிறுவனம் இக்காலகட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது. சப்பானில் மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் தொடருந்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சப்பானில் சக்கரம் இல்லாத காந்த சக்தியில் இயங்கும் அதிவிரைவு புல்லட் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, இதன் சோதனை ஓட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த அதி விரைவு ரயில் சப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து புறப்பட்டு நாகோயா நகருக்கு வெற்றிகரமாகச் சென்றடைந்தது. இவ்வகையான மாக்லெவ் தொழில்நுட்ப ரயில்களை முதன் முதலாக சப்பானே 1964 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி சேவைக்கு விட்டிருந்தது. சின்கான்சென் என இந்த முதலாவது புலட் தொடருந்து அழைக்கப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சின்கான்சென் எல்0 (L0 Series Shinkansen) தொடர் ஆகும். இந்தியாவில் இவ்வகையான தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த சப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், சப்பானியப் பிரதமர் சின்சோ அபே இற்கும் இடையே கடந்த மாதம் கையெழுத்தானது. பல போராளிக் குழுக்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய மன்றம் என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் நாட்டின் வடகிழக்குப் பகுதி பெரும் அச்சுறுத்தலுக்குளாகியுள்ளது என மாணிக் சர்க்கார் எச்சரித்துள்ளார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் தமிழில் உண்மையான தகவல்களை பதிவதே என் நோக்கம். அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அறிவு என்பது‍ சமுதாயத்தின் சொத்து. ஒருவரின் தனிப்பட்ட அறிவு என்பது‍ சமூகத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் மூலம் தொடர்ந்து‍ அடுத்தடுத்த சந்ததியினருக்கு‍ மாற்றப்பட்டு‍ கொண்டு‍ வந்ததன் மூலம் ஒருவருக்கு‍ கிடைக்கும் என்பது‍ என் கருத்து. பெரு நாட்டின் ஒளிர்தடவழி Shining Path என்ற முன்னைநாள் கம்யூனிசப் போராளிக் குழுவின் கடைசித் தலைவர் எனக் கருதப்படும் தோழர் ஆர்ட்டேமியோ என்பவருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 52 வயதான புளோரின்டோ புளோரெசு எனும் தோழர் ஆர்ட்டேமியோ பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத நாணயமாற்று ஆகிய குற்றங்களுக்காக தலைநகர் லீமாவில் உள்ள நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளியாகக் கண்டிருக்கின்றனர். ஆயுள்தண்டனையுடன் $183 மில்லியன் அபராதமு விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய பின்னர் நீதிபதி தெரிவித்ததாவது பொதுமக்கள், காவல்துறையினர், மற்றும் இராணுவத்தினரைப் படுகொலை செய்ய ஆர்ட்டேமியோ உத்தரவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ”ஒளிர்தடவழியின் மத்திய குழுவில் இவர் இருந்துள்ளார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” பெருவின் பூர்சுவா மக்களாட்சி எனத் தாம் கருதிய அப்போதைய அரசை ஒழிக்கவென 1980 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மாவோயிச வழியில் கம்யூனிச அரசை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அபிமாயெல் குஸ்மன் கைது செய்யப்பட்டமை, மற்றும் பெருவின் அரசுத்தலைவர் அல்பேர்ட்டோ ஃபுஜிமோரியின் தீவிரவாதத்துக்கெதிரான கடுமையான தாக்குதல்கள் போன்ற காரணங்களினால் இவ்வியக்கம் பலவீனமடைந்தது. இந்தியப் பெருங்கடலில் கிறித்துமசுத் தீவில் இருந்து 120 கிமீ தொலைவில் 55 பேருடன் சென்ற படகு ஒன்று சென்ற வெள்ளியன்று மூழ்கியதை அடுத்து 13 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படகு புதன்கிழமை அன்று கிறித்துமசுத் தீவை நோக்கி வருவது அவதானிக்கப்பட்டதாக ஆத்திரேலியக் கடற்படையினர் கூறியுள்ளனர். அப்படகில் ஏறத்தாழ 55 பேர் இருந்ததாக ஆத்திரேலிய வான்படை விமானம் ஒன்றில் இருந்து கணிக்கப்பட்டது. ஆனாலும், படகில் இருந்து உதவி எதுவும் கேட்கப்படவில்லை என அவர்கள் கூறினர். படகில் குழந்தைகளும், பெண்களும் சிலர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று இறந்த உடல் ஒன்று அப்பகுதியில் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் பல உடல்கள் சனிக்கிழமை அன்று மீட்கப்பட்டன. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் 15 கப்பல்களும் 10 உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படகில் இருந்தவர்கள் எந்த நாட்டினர் என்று தெரிவிக்கப்படவில்லை எனினும், பொதுவாக ஆப்கானித்தான், ஈராக், ஈரான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்தோர் இந்தோனேசியாவூடாக ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழைகின்றனர். இதேவேளையில், சனிக்கிழமை அன்று மேலும் ஒரு படகில் இருந்து உதவி கோரப்பட்டதாகவும், ஆனாலும், அப்படகைத் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் ஆத்திரேலிய உட்துறை அமைச்சர் ஜேசன் கிளேர் கூறியுள்ளார். இன்று மாலை கொக்கோசுத் தீவின் மேற்கே 500 கடல் மைல் தொலைவில் 78 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சரக்குக் கப்பல் ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இப்படகை மீட்டுள்ளது. வேறொரு படகு ஒன்று 130 பேருடன் நேற்று சனிக்கிழமை அன்று கிறித்துமசுத் தீவின் வட-மேற்கே மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கிறித்துமசுத் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு படகு வெள்ளிக்கிழமை அன்று 69 பேருடன் கிறித்துமசுத் தீவுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆத்திரேலியாவுக்குச் சொந்தமான கிறித்துமசுத் தீவு ஆத்திரேலியாவில் இருந்து சுமார் 1,600 மைல் தூரத்திலும், இந்தோனேசியக் கரையில் இருந்து 300 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. எஸ்பரான்சு எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாறையில் அடையாளம் காணப்பட்டுள்ள கனிமங்கள் மூலம், இப்பாறை கடந்த காலத்தில் நீருடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது. "2004 ஆம் ஆண்டில் இத்தரையுளவி செவ்வாயில் இறங்கிய காலம் முதல் அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதுவரைக் காலமும் நமக்குக் கிடைத்த பெருமளவு ஆதாரங்கள் பிஎச் அளவு மிகக் குறைந்ததாகவே இருந்தன. அதாவது அவை அமிலத்தன்மையானவை. சல்பூரிக் அமிலம் இருப்பதற்கான ஆதாரங்களே பெருமளவு கிடைத்துள்ளன. ஆனால், தற்போது கிடைத்துள்ள களிமண் வகை நடுநிலை பிஎச் உடன் உள்ளன. இது தூய நீருக்கான ஆதாரம் ஆகும் என ஒப்போர்ச்சுனிட்டி தரையுளவியின் நாசா ஒருங்கிணைப்பாளர் நியூயோர்க் கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் ஸ்குயிரசு தெரிவித்தார். எஸ்பரான்சு பாறையில் பெருமளவு அலுமீனியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அலுமீனியம் மொண்ட்மொரொலொனைட்டு (montmorillonite) வகை என நம்பப்படுகிறது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஒப்போச்சுனிட்டி தற்போது தனது எதிர்பார்க்கப்பட்ட வாழ்வுக் காலத்தை விட அதிகமாகவே இயங்கி வருகிறது. சனவரி 2004 இல் செவ்வாயில் தரையிறங்கிய இதன் வாழ்வுக்காலம் அப்போது 90 செவ்வாய் வேலை நாட்களே எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது அது 3,300 வேலை நாட்களைக் கடந்து இயங்கி வருகின்றது. 65 வயதான திலீப் சர்க்கார் நேற்று ஞாயிறன்று அசன்சால்-ராணி கஞ்ச் தொழிலகப் பகுதியில் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பர்துவான் மாவட்டத்தின் பாரபாணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் திலீப் சர்க்கார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களும், பொது மக்களும் ஆவேசத்துடன் கண்டனப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். திலீப் சர்க்கார் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் பர்துவான் மாவட்டத்தில் நடந்துள்ள மூன்றாவது படுகொலை சம்பவம் இது ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இதேபோல காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது குறிவைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கொடிய குற்றச் செயல் குறித்து முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது‍. கொரியத் தீபகற்பத்தில் நிலவும் அனைத்து சர்ச்சைகளையும் தீர்த்து இருநாட்டின் உறவை மீண்டும் வலுப்படுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று வட மற்றும் தென் கொரிய அரசுகள் அறிவித்துள்ளன. இப்பேச்சுவார்த்தைகள் வரும் புதன், வியாழக்கிழமைகளில் தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இப்பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் அரசுத் தரப்பிலான முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும். கடந்த பல மாதங்களாக இருநாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. மேலும், இருநாடுகளும் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தன. தென் கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா போர்ப்பயிற்சியைத் துவங்கியதோடு, வடகொரிய கடல் எல்லையில் அதிநவீன ஆயுதக் கப்பல்களை நிறுத்தியதை, வடகொரியா எச்சரித்து வந்தது. ஆனால், வடகொரியாவை அச்சுறுத்தினால், அமெரிக்கா மீது நேரடியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இதனால், இருநாட்டு எல்லைகளிலும் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இருநாடுகளின் கூட்டு முயற்சியில் இயங்கிக் கொண்டிருந்த எண்ணெய் நிறுவனம் மூடப்பட்டது. மேலும், இருநாட்டு மக்களின் உறவும் பாதிக்கப்பட்டது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே போர் மூண்டால் அது உலகிற்கே பெரும் ஆபத்தாக முடியும். மேலும், பேச்சுவார்த்தையின் மூலமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். எனவே, இருநாடுகளும் அமைதி காக்கும்படி கியூபப் புரட்சியாளர் பிடெல் காஸ்ட்ரோ, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன், சீன அரசுத்தலைவர் ஜி ஜின்பிங் ஆகியோர் அறிவுறுத்தினர். இதனையடுத்து இருநாடுகளும் போர் ஒத்திகையை நிறுத்தியிருந்தன. இந்நிலையில், கடந்த ஜூன் 6ம் தேதியன்று இருநாட்டுப் பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்தது. இதனை தென்கொரியா உடனடியாக ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, தென்கொரியாவிற்கு வழங்கிவந்த உடனடித் தொடர்புச் சேவையை கடந்த ஜூன் 7ம் தேதி வடகொரியா மீண்டும் வழங்கியது. மேலும், இருநாட்டு உறவுகளையும் மீண்டும் வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறன்று இருநாட்டு எல்லையில் உள்ள சமாதானக் கிராமம் என்றழைக்கப்படுகிறது பன்முன்ஜம் கிராமத்தில் இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இதில், தென்கொரிய ஒருங்கிணைப்புத் திட்ட அதிகாரி சுன்-ஹி-சுன் மற்றும் வடகொரியா பிரதிநிதி கிம் சாங் ஹை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளுக்கிமிடையே இருக்கும் பல முக்கியப் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, திங்களன்று காலை நாட்டின் எதிர்காலம், மக்களின் நலன், இருநாட்டின் உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசுத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு அரசும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனையடுத்தே உயர்மட்டப் பேச்சுக்கள் ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற அறிவிக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகலில் ஈடுபடும் குழுவினரின் எண்ணிக்கை குறித்தே இரு தரப்பும் தற்போது முரண்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகள் நாளை நடைபெற மாட்டாது என இரு நாடுகளும் அறிவித்துள்ளன. உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளிக்கிடையே எல்லைப் பிரச்சனை, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கீசோங் கூட்டு தொழிற்சாலை நடவடிக்கைகளை துவங்குவது, பிரிந்து கிடக்கும் குடும்பங்களை மீண்டும் இணைப்பது மற்றும் மனிதநேய அடிப்படையிலான இதர பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தென் மற்றும் வடகொரிய கூட்டுப் பிரகடன தினம் மற்றும் 1972ம் ஆண்டு யூலை 4ம் தேதி இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கை தினங்களை கொண்டாடுவது தொடர்பாகவும் பேசவுள்ளனர். இது 2007ம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முதலாவது அரசு அளவிலான பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கில் இடம்பெற்ற தொடர் கார் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 191 பேர் காயம் அடைந்தனர். ஈராக் நாட்டில் கார் குண்டுவெடிப்பு என்பது தினசரி நிகழ்வாகி விட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், காவல்துறையினரும், இராணுவத்தினரும் உயிரிழக்கிறார்கள். இந்த நிலையில் திங்களன்று ஈராக்கின் பல பகுதிகளில் தொடர்ந்து கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டது. தலைநகர் பாக்தாதில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோசூல் என்ற நகரில் 5 இடங்களில் கார் குண்டுகள் வெடித்து சிதறின. இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி அப்பாவி மக்கள் 25 பேர் இறந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து மோசூல் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் துஸ் குர்மத் நகரில் திங்கட்கிழமை கார்க்குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயம் அடைந்தனர். கிர்குக் நகரில் இராணுவ முகாமைத் தகர்க்கும் நோக்கில் குண்டு வைத்து வெடிக்க செய்ததில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். 12 வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கிடையில் திக்ரித் நகரில் ராணுவ சோதனைச் சாவடியை நோக்கி காரில் வந்த மர்ம நபர் தானியங்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 10 பேர் வீரர்கள் காயமடைந்தனர். தஜி நகரில் உள்ள மொத்த மீன் சந்தைப் பகுதியில் கார்க்குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் திங்கட்கிழமை அதிகாலை பகுபா நகரில் உள்ள காய்கறிச் சந்தையில் கார்க்குண்டு வெடித்ததில் அப்பாவி பொது மக்கள் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 39 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இந்த குண்டு வெடிப்புகள் பின்னணியில் அல்-கைதா அமைப்பு இருக்கலாம் என்று ஈராக் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். உலக நாடுகளில் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகளில் கத்தார் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. துபாயைச் சேர்ந்த பாஸ்டன் ஆலோசனைக்குழுவின் 13-ம் ஆண்டு ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. உலகில் எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் ஒன்று கத்தார் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்களாக உள்ளனர். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் விழுக்காடு பணக்காரர்களுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பாஸ்டன் ஆலோசனைக்குழுவின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. பாஸ்டன் ஆலோசனைக் குழுவானது உலக அளவில் வியாபார உத்திகளுக்கும் மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது. துருக்கியில் அரசிற்கெதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான கேஜி பூங்காவை இடித்துவிடுமாறு அந்நாட்டுப் பிரதமர் ரிசெப் தய்யிப் எர்டோகன் உத்தரவிட்டார். இந்த இடம் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் துவங்கும் பாரம்பரிய இடமாக இருந்து வருகிறது. இதனால், இப்பூங்காவை தரைமட்டமாக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 31ம் தேதி முதல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். சாதாரண எதிர்ப்பாக துவங்கிய இப்போராட்டம் அரசின் அடக்குமுறையால் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து பிரதமர் பதவியிலிருந்து எர்டோகன் விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பின்னர் இப்போராட்டம் நாடு முழுவதும் வெடித்தன. இந்நிலையில், செவ்வாயன்று இஸ்தான்புல் நகரில் உள்ள தாக்சிம் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, போராட்டக்குழுவின் தலைவர்களுடன் புதனன்று பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கடந்த ஜூன் 8ம் தேதி துருக்கியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான தேசிய இயக்கக் கட்சியின் தலைவர் தெவ்லெத் பஹ்சேலி வலியுறுத்தினார். துருக்கியில் போராடி வரும் மக்கள் மீது அந்நாட்டு அரசு கையாண்டு வரும் அடக்குமுறைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா, தொடர்ந்து ஐந்தாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 94 வயதான மண்டேலா ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பிரிட்டோரியா மருத்துவமனையில் ஆறாவது நாளாகத் தங்கியிருந்து நுரையீரல் தொற்றுநோய் தொடர்பான சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அவரது மகள்கள் மகஜியா, செனானி ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். தங்களது தந்தை உடல்நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மண்டேலா வெள்ளையின சிறுபான்மை அரசுக்கு எதிரான போராட்டத்துக்குத் தலைமை வகித்தவர். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அரசுத்தலைவராக 1994 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்தாண்டுகளின் பின்னர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில் பொது வாழ்வில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்ட நெல்சன் மண்டேலா அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்துக் கொண்டார். பசிபிக், மற்றும் அத்திலாந்திக் பெருங்கடல்களை இணைக்க அவற்றின் குறுக்கே கால்வாய் ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு நிக்கராகுவா காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இக்கால்வாய் அமைக்கப்பட்டால் இதனூடாகச் செல்லும் சரக்குக் கப்பல்களால் நிக்கராகுவா ஏரிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இப்படியான பாரிய திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட ஹொங்கொங் நிறுவனத்திற்குப் போதிய அனுபவம் இல்லை என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இத்திட்டம் கரிபியன் பிராந்தியத்திற்குப் பெரும் நன்மையைக் கொண்டு வரும் என நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்ட்டேகா தெரிவித்துள்ளார். கரிபியன் கரையை பசிபிக்குடன் இணைப்பதற்கு நிக்கராகுவாவின் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாகக் கனவு கண்டு வந்தனர். இவர்களின் முயற்சி பல முறை தடைப்பட்டு வந்தது. கடைசியாக 1914 ஆம் ஆண்டில் அமெரிக்கா பனாமா கால்வாயை அமைத்ததை அடுத்து இவர்களின் கனவு முற்றாகத் தகர்க்கப்பட்டது. "இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அல்ல என நிக்கராகுவா காங்கிரஸ் உறுப்பினர் ஜெசிண்டோ சுவாரெசு செய்தியாளர்களிடம் கூறினார் புவியியல் ரீதியாக நிக்கராகுவாவின் அமைவிடம் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளது. இதனாலேயே இது குறித்த திட்டம் எப்போதும் எம்மிடம் இருந்து வந்தது என அவர் கூறினார். பாக்கித்தானின் வடமேற்கு நகரான குவெட்டாவில் பெண்கள் பல்கலைக்கழக மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெடித்ததில் குறைந்தது 11 மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமுற்றனர். பலுச்சித்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் அண்மைக்காலமாக போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சில தாக்குதல்கள் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டிருந்தாலும், மேலும் பல பெண்களுக்கான கல்வியை எதிர்த்துப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்படுகின்றன. கடந்த மாதம், குவெட்டாவில் பாதுகாப்புப் படையினர் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர். முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் தலைநகர் தெகரான் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சீர்திருத்தத்திற்கு ஆதரவாக கோசங்களை அவர்கள் எழுப்பினர். தேர்தலில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தமை, தணிக்கை போன்றவை குறித்து அமெரிக்கா கரிசனம் தெரிவித்திருந்தாலும், ஈரானிய மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறது. புதிய அரசுடன் தாம் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. ஆனாலும், ஈரானின் அணுவாயுதத் திட்டங்கள் குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ள இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு ஈரான் மீது மேற்கத்தைய நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 64 வயதுடைய முன்னாள் மதத்தலைவரான ஹசன் ரௌஹானி, நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து மக்களாட்சியைப் பலப்படுத்துவேன் என உறுதி பூண்டார். புதிய தலைவருக்கு நாட்டின் உயர் மதத்தலைவர் அயதொல்லா கொமெய்னி வாழ்த்துத் தெரிவித்தார். ஆகத்து மாதம் 3 ஆம் நாள் புதிய அரசுத்தலைவராக அசன் ரவ்கானி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமது நாடு தயாராய் உள்ளது என வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் பிராந்தியப் பாதுகாப்புப் பற்றித் தாம் பேச விரும்புவதாக வடகொரியா கூறுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்கா முன்நிபந்தனை எதுவும் விதிக்கக்கூடாது என அதஎச்சரித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பேச்சாளர் வடகொரியாவை அதன் நடவடிக்கைகள் மூலமே நாம் அதன் மீது நாம் நம்பிக்கை வைக்கலாம், வெறும் பேச்சுக்களினால் அல்ல எனக் கூறினார். கொரியத் தீபகற்பத்தில் தற்போது நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளைக் குறைக்கவும், இடைக்கால போர் ஒப்பந்தத்தை அமைதி ஒப்பந்தமாக மாற்றவும், அணுவாற்றல் குறித்து நேர்மையான முறையில் விவாதிக்க விரும்புவதாகவும் வடகொரியா கூறியிருக்கின்றது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் வடகொரியா தனது மூன்றாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியதை அடுத்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதன் தொடர்புகளைத் துண்டிப்பதற்கான கடைசிக் கட்டளை செருமனியின் டார்ம்ஸ்டட் நகரில் உள்ள ஐரோப்பிய விண்வெளிக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து திங்கட்கிழமை 12:25 மணிக்கு அனுப்பப்பட்டது. இக்கட்டளை தொலைநோக்கியைச் சென்றடைய ஆறு செக்கன்கள் பிடித்தது. இவ்விண்கலத்தின் செயற்பாடுகள் நிறைவடைந்திருத்தாலும், எர்செலினால் சேகரிக்கப்பட்ட பெருமளவு தகவல்கள் வானியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது. பிளாங்க் தொலைநோக்கி இவ்வாண்டு அக்டோபரில் தனது திட்டத்தை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய வெண்வெளி ஆய்வு நிறுவனமான ஈசாவின் இரண்டாம் லாக்ராஞ்சன் புள்ளிக்கான அடுத்த தொலைநோக்கித் திட்டம் காயா (Gaia) ஆகும். இவ்வாண்டு செப்டம்பரில் ஏவப்படவிருக்கிறது. அடுத்த மாதமளவில் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக துவாரெக் போராளிகளுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது. உடனடிப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசுப் படையினர் போராளிகள் வசமுள்ள கிடால் நகருக்கு மீண்டும் வர இவ்வமைதை உடன்பாடு வழிவகுக்கிறது. கடந்த பெப்ரவரியில் பிரெஞ்சுப் படையினர் வெளியேறியதை அடுத்து கிடால் நகரை போராளிகள் மீண்டும் கைப்பற்றித் தம் வசம் வைத்துள்ளனர். 1960 இல் மாலி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற நாளில் இருந்து துவாரெக்குகள் அதிக சுயாட்சி கோரிப் போராடி வருகின்றனர். வட அயர்லாந்தில் தற்போது இடம்பெற்று வரும் ஜி8 நாடுகளின் உச்சிமாநாட்டின் போது பிரான்சின் அரசுத்தலைவர் பிரான்சுவா ஒலாண்டே இந்த அமைதி உடன்பாடு பற்றி அறிவித்தார். இந்த உடன்பாட்டில் துவாரெக் போராளிகளின் முக்கிய அமைப்பான அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் (MNLA) இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. 2012 ஆம் ஆண்டில் இந்த இயக்கம் அல்-கைதா தொடர்பு இசுலாமியப் போராளிக் குழுக்களுடன் இணைந்து மாலியின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றியது. ஆனாலும், இக்கூட்டணி நீடிக்கவில்லை. இசுலாமியத் தீவிரவாதிகள் துவாரெக்குகளை ஒதுக்கி விட்டு வடக்குப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் பிரான்சியப் படையினர் மாலியின் வடக்குப் பகுதியினுள் நுழைந்து அப்பகுதியை இசுலாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டனர். புர்க்கினா பாசோ தலைநகரில் அந்நாட்டின் தலைவர் பிளைசி கொம்பாரோ தலைமையில் இந்த அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாடு குறித்து துவாரெக் போராளிக் குழ்வின் பேச்சாளர் மூசா அக் அத்தாகர் உறுதிப்படுத்தினார். துவாரெக்குகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளனர். பதிலாக தாம் வாழும் பகுதிகளில் அதிக சுயாட்சியை அவர்கள் பெற்றுக் கொள்வர். சூலை 28 இல் தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன. தேர்தலை ஒட்டி நாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த 12,600 அமைதிப்படையினரை ஐக்கிய நாடுகள் அங்கு அனுப்பவுள்ளது. பதினாறு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த திங்கட்கிழமை இரவு மிகவும் மோசமாக புகை மூட்டம் சிங்கப்பூரைச் சூழ்ந்திருந்தது. இந்தோனேசியக் காடுகளில் பற்றி எரியும் தீச் சம்பவங்களை அடுத்து சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவு புகைமூட்டம் காணப்பட்டது. இந்நிலைமை இன்னும் சில வாரங்கள் நீடித்திருக்கும் என சிங்கப்பூர் பிரதமர் எச்சரித்திருக்கிறார். இந்தோனேசியாவின் சுமாத்திரா காடுகளில் சட்டவிரோத தீவைப்பு சம்பவங்களஏ இப்புகை மூட்டத்த்கிற்குக் காரணம். இது குறித்து இரௌ நாடுகளினதும் அதிகாரிகள் ஜகார்த்தாவில் இன்று நடந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இத்தீவைப்புகளுக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு வர்த்தக ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிங்கப்பூர் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் இந்தோனீசியாவுக்கு சிங்கப்பூர் உதவத் தயாராக இருப்பதாக டாக்டர் விவியன் கூறினார். "சிங்கப்பூரர்கள் அவசரத் தேவைகளைத் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மக்களைக் கேட்டுக் கொண்டார். சிங்கப்பூர் இராணுவத்தினர் தமது வெளிப் பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர். மலேசியாவின் சில பகுதிகளுக்கும் புகை மூட்டம் பரவியுள்ளது. நாட்டின் தெற்கே 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 1997, 1998 களில் இந்தோனேசியத் தீயினால் தென்கிழக்காசிய நாடுகள் பல புகை மூட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியுள்ளது. அரிதுவார் நகரில் கங்கை ஆற்றில் இருந்து குறைந்தது 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அரிதுவாரில் இடம்பெற்ற பெரும் மழை அங்கு வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. மீட்புப் பணியாளர்கள் அங்கு உயிர் தப்பியோரைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக துணை ராணுவப் படையினர், மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் யமுனை நதியில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. அரியானா மாநிலத்தில் உள்ள அத்தினிகுண்ட் அணையில் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 9 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கேதார் நாத் புனிதத்தலத்திற்கு ஆன்மிகப் பயணம் செய்த 50,000 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். 500 இற்கும் அதிகமான சாலைகள், மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. கேதார் கட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு கிராமம் வெள்ளத்தில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது பெருமழை பெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தின் படையினரால் திருடப்பட்ட ஓவியங்களை செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கெலும், உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டினும் நேற்றுப் பார்வையிட்டனர். உருசியாவின் சென் பீட்டர்ஸ்புர்க் நகரில் அமைந்துள்ள எர்மித்தாச் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்களைத் தம்மிடம் திரும்ப ஒப்படைக்குமாறு மெர்க்கெல் கேட்டுக் கொள்வார் என செய்திகள் முன்னதாக வெளிவந்திருந்தன. ஆனாலும், இப்பிரச்சினை தொடர்பாக உருசியாவும், செருமனியும் தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபடும் என மெர்க்கெல் செய்தியாளர்களிடம் கூறினார். போர் ஓவியப் பிரச்சினை "மிகவும் உணர்வுபூர்வமானது" என பூட்டின் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து விவாதத்தில் ஈடுபடத் தாம் விரும்பவில்லை எனவும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பும் முயலும் என அவர் கூறினார். சென் பீட்டர்ஸ்பூர்க் (முன்னாளில் லெனின்கிராத்) நகரில் ஆண்டு தோறும் இடம்பெறும் பன்னாட்டு பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்கென அங்கிலா மெர்க்கெல் உருசியா வந்திருந்தார். குறிப்பிட்ட ஓவியங்கள் முதற்தடவையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதை அவர் வரவேற்றார். உலகப் போரின் இறுதியில் சோவியத் இராணுவம் பெர்லின் நகரை சுற்றி வளைத்து மூடியதை அடுத்து பல்லாயிரக்கணக்கான ஓவியங்களை அவர்கள் திருடிச் சென்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படுகிறது. பெர்லினின் அருங்காட்சியகம் ஒன்றில் ரூபன்சு, கரவாகியோ உட்பட்ட பல ஓவியர்களின் 441 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன. களவாடப்பட்ட ஓவியங்கள் சோவியத் செம்படையினர் சிந்திய இரத்தத்திற்காகக் கொடுக்கப்பட்ட விலை என்பதே பெரும்பாலான உருசியர்களின் கருத்து என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நெப்போலியன் உருசியா மீது படையெடுத்த போது பல உருசியப் படைப்புகள் களவாடப்பட்டதாகவும், அவை தற்போது பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன எனவும் உருசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நாட்சி செருமனியினர் சோவியத் மீதான ஆக்கிரமிப்பின் போது உருசிய ஓவியங்கள் பலவற்றைத் திருடியுள்ளனர். வடக்குப் பாக்கித்தானில் உணவு விடுதி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது ஒன்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஐந்து பேர் உக்ரேனியர், மூவர் சீனர், மற்றும் ஒருவர் லித்துவேனியர் என அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார். கில்கித்-பால்திஸ்தான் என்ற உலகின் 9வது உயர்ந்த (8,126 மீட்டர்) மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தங்குமிடப் பகுதியிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சுமார் 20 பேரடங்கிய போராளிகள் தாக்குதல் நடத்தினர். இறந்தவர்களின் கடவுச்சீட்டுக்கள், மற்றும் பணத்தையும் அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். இப்பகுதியில் மேலும் 40 வெளிநாட்டு மலையேறிகள் தங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பாக்கித்தானின் தெக்ரிக்-இ-தாலிபான் இயக்கம் தாமே இத்தாக்குதலை நடத்தியதாக பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் தமது தளபதிகளில் ஒருவரான வாலியூர் ரெகுமான் என்பவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாகவே தாம் இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டினர் மீது தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என அவர்கள் கூறினர். கில்கித்-பால்திஸ்தான் பிரதேசம் சர்ச்சைக்குரிய காசுமீர் பகுதியில் அமைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவும், பாக்கித்தானும் பிரிந்து தனி நாடுகளாக விடுதலை பெற்ற நாளில் இருந்து இப்பகுதி சர்ச்சைக்குரியதாக விளங்கி வருகிறது. சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் சிரிய அரசுக்கு லெபனானின் சியா இயக்க எஸ்புல்லா அமைப்பினர் ஆதரவளிப்பதை அடுத்தே நாட்டில் மத வன்முறை அண்மைக்காலத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. லெபனானில் இம்மாதம் நடைபெறவிருந்த தேர்தல்கள் சிரியப் பிரச்சினையை அடுத்து பின் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன் (29) கடந்த மே மாதம் 20-ம் தேதி திடீரென்று அமெரிக்காவில் இருந்து வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங்கில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அமெரிக்கர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பதாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவின் கூகுள், பேஸ்புக் மற்றும் இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்ததற்கான சான்றுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு எட்வர்ட் ஸ்னோடனை கைது செய்யப் பல வழிகளில் முயன்றது. எட்வர்ட் ஸ்னோடனை ஒப்படைக்கும் படி ஹாங்ஹாங்கிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு ஹாங்ஹாங் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்த நிலையில் எட்வர்ட் ஸ்னோடன் ஹாங்ஹாங்கில் இருந்து பயணிகள் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை உருசியத் தலைநகர் மாஸ்கோ போய்ச் சேர்ந்தார். ஆனால் பயணிகளுக்கு எட்வர்ட் ஸ்னோடன் விமானத்தில் இருந்தது தெரியாது. இது பற்றி மாஸ்கோ செரிமெத்தியோவா விமானநிலைய அதிகாரி ரோமன் ஜெனிசிடம் கேட்டபோது, எட்வர்ட் ஸ்னோடன் விமானத்தில் வந்தது பற்றி எனக்கு தகவல் இல்லை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஸ்னோடன் வெளியில் வரவில்லை. விமானத்தில் அவருடன் விக்கிலீக்ஸ் இணையத்தின் பிரதிநிதி சாரா ஹாரிசன் உடன் வந்திருந்திருக்கிறார். ஸ்னோடன் வந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, எக்குவடார் நாட்டுத் தூதரகத்தைச் சேர்ந்த 2 வாகனங்கள் விமான நிலையத்துக்கு வெளியில் தயாராக இருந்ததாக சின்குவா நிறுவன செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் மாஸ்கோ செரிமெத்தியோவா விமான நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஸ்னோடன் விமானத்தில் மாஸ்கோ வந்தது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. உருசியாவுக்கு வர அவரிடம் உரிய விசா இருக்க வேண்டும். விசா இருந்தால் அவரை கைது செய்ய முடியாது என்றார். இதற்கிடையில் ஸ்னோடனிடம் உருசிய நுழைவாணை இல்லை என்றும், இதனால் தான் அவர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மாஸ்கோ விமானநிலையத்தில் இருந்து அப்படியே கியூபா தலைநகர் ஹவானா செல்கிறார். பின்னர் ஹவானாவில் இருந்து வெனிசுவேலா தலைநகர் கராகஸ் செல்கிறார். அதன் பின்னர் அவர் எந்த நாட்டில் தஞ்சம் அடைவார் என்பது தெரியவரும். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எட்வர்ட் ஸ்னோடனுக்கு அடைக்கலம் தர மறுத்து வந்த நிலையில், இடதுசாரிகள் வசம் இருக்கும் இலத்தின் அமெரிக்க நாடுகள் அவருக்கு அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா ஹாங்காங்கிடம் எப்படி ஸ்னோடனை தப்பவிடலாம் என கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்குப் பதிலளித்துள்ள ஹாங்காங், ஹாங்காங் சட்ட விதிகளின் படி, மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் ஒருவர் எப்போதும் போல், எப்படி ஹாங்காங்கில் இருந்த மற்ற நாடுகளுக்கு செல்வார்களோ அதுபோல் சென்றிருக்கிறார். அமெரிக்கா ஸ்னோடனை கைது செய்வதற்கு ஹாங்காங் சட்டப்படி அமெரிக்கா போதுமான உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அதனால் அவரை கைது செய்து, அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஹாங்ஹாங் நாட்டின் தகவல்களை இணையதளம் மூலம் திருடுவதாக வெளியாகியிருக்கும் தகவல்ககளை சுட்டிகாட்டி, ஹாங்ஹாங் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை எப்படி அமெரிக்கா உளவு பார்த்தது என விளக்கம் கேட்டு அமெரிக்காவிற்கு ஹாங்ஹாங் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. வெனிசுவேலாப் புரட்சியாளர் மறைந்த ஊகோ சாவேசின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்க இயக்குனரும், அவரது தீவிர ரசிகருமான ஆலிவர் ஸ்டோன் இயக்கி வருகிறார். அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் புரட்சியாளர் ஊகோ சாவேசு. 1954ம் ஆண்டு பிறந்த இவர் இராணுவக் கல்லூரியில் படிப்பை முடித்தபின் ராணுவத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1997ம் ஆண்டு முதல் ஐந்தாவது குடியரசு இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்த இவர், பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து 2007ம் ஆண்டு வெனிசுலா ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியைத் துவங்கி 2013ம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்தார். 1999ம் ஆண்டு முதன்முறையாக வெனிசுவேலா அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாவேசு தொடர்ந்து மூன்று முறை அரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெனிசுவேலாவின் நெருங்கிய நட்பு நாடான கியூபாவில் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, கடந்த மார்ச் 5ம் தேதி உயிரிழந்தார். 14 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து நாட்டில் பொதுவுடைமை நிலவவும், சோசலிசம் உருவாக்கவும் பாடுபட்டவர் சாவேசு. இவரது தீவிரமான ரசிகர் அமெரிக்காவின் திரைப்பட இயக்குனரான ஆலிவர் ஸ்டோன். இவர் ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு சாவேசு, பொலிவியா அரசுத்தலைவர் ஈவோ மொரேல்ஸ், எக்குவடோர் தலைவர் ரஃபேல் கொரியா ஆகியோரை மையமாக வைத்து தென் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் குறித்து “சவுத் ஆப் தி பார்டர்” என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது சாவேசின் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்றை அவர் இயக்கி வருவதாக வெனிசுவேலா அரசுத்தலைவர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 10 பகுதிகள் உள்ளன. இந்தப்படம் அடுத்த மாதம் முடிவடைந்து விடும் என்றும், விரைவில் திரைக்கு வரும் எனப் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், சாவேசின் வாழ்க்கை குறித்த “அமெரிக்காவின் ஏகாதிபத்தியம்” திரைப்படத்தை பெரிய திரையில் காண நாங்கள் ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் வெனிசுவேலாவில் திரையிடப்படவுள்ளதாகவும், இதில் இப்பட இயக்குனர் ஆலிவர் ஸ்டோன் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆலிவர் ஸ்டோன்ஸ், வியட்நாம் போர் தொடர்பாக ‘ப்ளடூன்’ என்ற படத்தை முதன்முறையாக வெளியிட்டார். அதன்பின்னர், ஜேஎஃப்கே, நேச்சுரல் பார்ன் கில்லர் மற்றும் நிக்சான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் குறித்து “டபிள்யூ” என்ற பெயரிலும், “வால் ஸ்ட்ரீட்ஸ்” படமும் பிரபலமானவை. தலைமைப் பதவிக்கான போட்டியை இன்று அறிவித்த ஜூலியா கிலார்டுக்கு 45 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெவின் ரட்டிற்கு 57 வாக்குகளும் கிடைத்தன. எதிர்வரும் செப்டம்பரில் பொதுத்தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்தத் திடீர்த் தலைமைப் போட்டி இடம்பெற்றது. பொதுக் கருத்துக் கணிப்பின் படி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் தொழிற் கட்சி பலத்த தோல்வியைத் தழுவும் எனக் கூறப்படுகிறது. வாக்காளர்களிடையே ஜூலியா கிலார்டை விட கெவின் ரட்டுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால், வரும் தேர்தல்களில் அவரது தலைமையில் தொழிற்கட்சி சிறந்த பெறுபேறுகளைப் பெறும் என தொழிற்கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. இதேவேளையில், ஜூலியா கிலார்டினால் அறிவிக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாதத்துக்கான பொதுத்தேர்தலை கெவின் ரட் ஆகத்து மாத இறுதியில் நடத்த விருப்பதாக இன்று அறிவித்துள்ளார். இன்றைய தோல்வியின் பின்னர் ஜூலியா கிலார்ட் அடுத்த பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும், அரசியலில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஜூலியா கிலார்ட் முறைப்படி தமது பதவிவிலகல் கடிதத்தை ஆளுனருக்கு சமர்ப்பித்த பின்னர், கெவின் ரட் புதிய பிரதமராக ஆளுனரால் அறிவிக்கப்படுவார். ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் நடுவண் அரசின் திருமணப் பாதுகாப்புச் சட்டத்தின் (Defense of Marriage Act) மூன்றாம் பகுதி அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது திருத்ததிற்கு எதிரானது எனத் தீர்ப்பளித்துள்ளது. ஒருபாலின துணைவர்களுக்கு ஓய்வூதியம், சொத்துரிமை உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுவண் அரசின் சேவைகளை மறுத்த திருமணப் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி இத் தீர்ப்பை அடுத்து செல்லுபடியாகாது. இச் சட்டத்துக்கு எதிரான வழக்கை எடித் வின்சர் கொண்டு வந்தார். எடித் வின்சர் தனது நாற்பது ஆண்டு கால ஒருபால் துணைவரை 2009 இல் இழந்தார். இவர்களது திருமணம் நியூயோர்க் மாநிலத்தில் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் திருமணப் பாதுகாப்புச் சட்டத்தினால் நடுவண் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் துணையை இழந்தவர்களுக்கு கிடைக்கும் பல உரிமைகள் இவருக்கு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து இவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் வரை வந்த இந்த வழக்கில் இவருக்குச் சார்பாக அச்சட்டத்தை எதிர்த்து ஐந்து நீதிபதிகளும் இவருக்கு எதிராக நான்கு பேரும் தீர்ப்பு வழங்கினார்கள். சார்பாக தீர்ப்பு வழங்கியவர்கள் இச் சட்டம் ஒருபால் துணைவர்களுக்கு எதிராக நியாயமின்றிப் பாகுபாடு காட்டுகின்றது என்றும், இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது என்றும் கூறினர். இத் தீர்வின் சிறுபான்மைக் கருத்தை வெளியிட்ட நீதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கிய இச் சட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். இச் சட்டம் 1996 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் சட்ட ஏற்புப் பெற்றது. ஆனால் 2012 இல் ஒபாமாவின் அரசு இச் சட்டதுக்கு ஆதரவளிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒருபாலின ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளார்கள். குடியரசுக் கட்சியர், பழமைவாதக் கொள்கையினர், சமய அடிப்படைவாதிகள் எதிர்த்துள்ளார்கள். இலத்தின் அமெரிக்க நாடான பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்று பல பெறுமதியான பொருட்களுடனும், பெண்களின் பதனிடப்பட்ட எலும்புக்கூடுகளுடன் தொல்லியலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது. கல்லறையினுள் 63 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று வாரி இராச்சிய மகாராணிகளின் எலும்புக்கூடுகள் ஆகும். இவை அனைத்தும் பொன், வெள்ளி நகைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அழகாக வண்ணப் பூச்சிடப்பட்ட மட்பாண்டங்களும் இருந்தன. வாரி பண்பாட்டின் அரசுக் கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். கல்லறையில் 63 மனித உடல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையவை ஆகும். இங்குள்ள பலரின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் முறையில் இருந்து அவர்கள் மனிதப் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தாம் நம்புவதாக தொல்லியலாளர் வியெஸ்லாவ் வியெக்கோவ்ஸ்க்கி தெரிவித்தார். "ஆறு எலும்புக்கூடுகள் துணிகளுக்கு மேல் இருக்கவில்லை. இவை ஏனைய புதைவிடங்களுக்கு மேல் மிகவும் விசித்திரமான நிலைகளில் இருப்பதைப் பார்த்தால் அவை மனிதப் பலி கொடுக்கப்பட்ட்டவர்களாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம் என அவர் கூறினார். வாரி நாகரிகம் கிபி 7 முதல் 10ம் நூற்றாண்டு வரை இன்றைய பெருவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தது. பின்னர் இது திடீரென அழிந்து போனது. தாய்லாந்தின் தெற்கே யால மாகாணத்தில் குரொங் பினாங் மாவட்டத்தில் வீதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்று வெடித்ததில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டனர். இராணுவ அணியொன்றை இலக்கு வைத்து இக்குண்டு வெடிக்கப்பட்டது. இராணுவ பாரவுந்து ஒன்று முற்றாக சேதமடைந்ததுள்ளதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர். அண்மைக்காலங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் இதுவே மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது. பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்தில், யால, பட்டாணி, நரதிவாத் ஆகிய மூன்று தெற்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 2004 ஆம் ஆண்டில் வாழும் இப்பகுதியில் இசுலாமியத் தீவிரவாதம் தலை தூக்கியதை அடுத்து இதுவரை அங்கு 5,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு போராளிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தாலும், இவ்வாறான சம்பவங்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம்களுக்கு அதிக சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனப் போராளிகள் கோரி வருகின்றனர். சோமாலியாவின் முக்கியமான அல்-சபாப் ஆயுதக் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்குழுவின் மிக முக்கிய தலைவர், சேக் அசன் தாகிர் அவெயிசு, தலைநகர் மொகதிசுவை வந்தடைந்தார். அபாடோ என்ற வடக்கு நகரம் ஒன்றில் இருந்து அரசுப் படைகளின் பாதுகாப்பில் இவர் வந்திறங்கியுள்ளார். ஆனாலும், இவர் தானாகவே சரணடைந்தாரா, அல்லது போராளிக் குழுவில் இருந்து விலகினாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை., உட்கட்சிப் பிளவு ஒன்றை அடுத்தே இவர் அரசுப் படைகளிடம் சரணடைந்ததாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆனாலும், இக்கூற்றை போராளிகள் மறுத்துள்ளனர். கடந்த வாரம் அல்-சபாப் குழுவினரிடையே பலத்த மோதல் இடம்பெற்றதை அடுத்தே அவெய்சு தப்பி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இம்மோதல்களில் அல்-சபாபின் இரண்டு உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர். அவெய்சு ஒரு தீவிரவாதி என ஐக்கிய நாடுகளும், அமெரிக்காவும் அறிவித்திருந்தன. ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ள புதிய சோமாலிய அரசு அல்-சபாப் போராளிகளின் வசம் உள்ள இடங்களைக் கைப்பற்றுவதற்கு முயன்று வருகிறது. குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டதை அடுத்து தலைநகர் சாகிரெபில் மக்கள் பெருமளவு கூடி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள் குரோவாசிய எல்லைகளில் பறக்க விடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் சுங்கத்துறையினர் தமது பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என குரோவாசிய அரசுத்தலைவர் ஐவோ ஜொசிப்போவிச் கூறினார். ஆயினும், பல ஆண்டுகாலமாக நாட்டில் நிலவி வந்த பொருளாதார மந்தநிலை காரணமாக பெருமளவு மக்கள் இந்நிகழ்வைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குரோவாசியா விடுதலைப் போர் நடத்தி யூகோசுலாவியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. குரோவாசியா 10 ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்திருந்தது. யூகோசுலாவியாவின் மற்றும் ஒரு முன்னாள் குடியரசு சுலோவீனியா ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கசக்ஸ்தானில் உள்ள உருசியாவின் பைக்கனூர் வானூர்தி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட புரோட்டோன்-எம் என்ற ஏவூர்தி (rocket) புறப்பட்டு சில வினாடிகளில் வீழ்ந்து வெடித்தது. ஏவூர்தி வெடிக்க முன்னர் பல துண்டுகளாகச் சிதறிய நிகழ்வை உருசியத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. ஏறத்தாழ 600 தொன் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏவூர்தி வீழ்ந்த இடத்தில் கடுமையான புகை மண்டலம் காணப்பட்டது. அங்குள்ளோரை தற்காலிகமாக வெளியேற்றும் நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உருசியாவின் குளோநாசு என அழைக்கப்படும் புவியிடங்காட்டிக்கான மூன்று செயற்கைக்கோள்களை இந்த ஏவூர்தி காவிச் சென்றது. சூலை 27 இல் ஏவப்படவிருந்த புரோகிரஸ் -20எம் விண்கலத்தின் பயணம் இன்றைய விபத்தை அடுத்து தள்ளிப்போடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆச்சே மாகாணத்தின் மத்திய பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் 6 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அச்சே மாகாணத் தலைநகர் பண்டா ஆச்சே முதல் பெனெர் மெரியா வரையான பகுதிகளில் 15 வினாடிகளுக்கு நில்கநடுக்கம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2004 டிசம்பரில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையில் இங்கு மட்டும் 230,000 பேர் உயிரிழந்தனர். முன்னதாக அவர் உருசியாவிடம் அரசியல் தஞ்சம் கேட்டார். மாஸ்கோவில் இருந்தபடியே அவர் அமெரிக்காவின் மேலும் பல உளவுச் சதிகளை வெளியிட்டார். இது பற்றி உருசிய அதிபர் பூட்டின் வெளியிட்ட அறிக்கையில் ஸ்னோடெனை மாஸ்கோவில் இருந்து உருசியா வெளியேற்றாது. அவரை அமெரிக்காவிடமும் ஒப்படைக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து சினோடென் இந்தியா, கியூபா, போலந்து, எக்குவடோர், பொலிவியா, சீனா உள்ளிட்ட 21 நாடுகளிடம் அரசியல் தஞ்சம் கோரினார். போலந்து நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கேட்டு ஸ்னோடென் அனுப்பிய மனுவில், நான் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இந்தியா, போலந்து, பின்லாந்து, பிரேசில், ஸ்பெயின், நார்வே, இத்தாலி, எக்குவடோர், ஆஸ்திரியா ஆகிய 9 நாடுகள் சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் கொடுக்க மறுத்து விட்டன. இது தொடர்பாக ஸ்பெயின், நார்வே, எக்குவடோர், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தெரிவிக்கையில் தங்கள் நாட்டுக்கு வந்த பின்னர் தான் அரசியல் தஞ்சம் கோர முடியும். வெளியில் இருந்து கொண்டு அரசியல் தஞ்சம் கேட்க முடியாது என்று தெரிவித்தன. இது பற்றி இத்தாலி கூறுகையில், சினோடன் அரசியல் தஞ்சம் கேட்கும் மனுவை தொலைநகல் மூலம் அனுப்பி இருந்தார். தொலைநகல் மனுவை ஏற்க முடியாது என்று அது தெரிவித்தது. கியூபா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நிக்கரகுவா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. சீனா சினோடெனின் மனுவைப் பரிசீலனைக்கு இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளது. சினோடெனிடமிருந்து அரசியல் தஞ்சம் கோரும் மனு எதுவும் இதுவரை வரவில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பொலிவியா சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க முன் வந்துள்ளது. இது பற்றி பொலிவியா நாட்டு அரசுத்தலைவர் ஏவோ மொராலெசு கூறும்போது, சினோடெனிடமிருந்து அரசியல் தஞ்சம் கேட்டு எந்த கோரிக்கையும் பொலிவியா அரசுக்கு வரவில்லை. அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை வந்தால், அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்படும். உளவுச் சதியை வெளியிடுபவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க பொலிவியா எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற கருத்தை வெனிசுவேலா அதிபர் நிக்கோலசு மதுரோவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மாஸ்கோ செய்தியாளர்களிடம் நிக்கோலஸ் மதுரோ கருத்துத் தெரிவிக்கையில் சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்ட அடிப்படையில் சினோடென் காப்பாற்றப்பட வேண்டும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சினோடெனுக்கு முழு உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. அதில் அமெரிக்க அதிபர், துணை அதிபர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். சினோடென் என்ன குற்றம் செய்தார். ஏவுகணை வீசி யாரையாவது கொன்றாரா? அல்லது குண்டு வைத்து யாரையாவது கொலை செய்தாரா? அல்லது உளவு சதியில் ஈடுபட்டாரா? இதுபோன்ற எந்த குற்றத்தையும் அவர் செய்யவில்லை. பிறகு எப்படி அவர் குற்றவாளியாக முடியும்? போரை தடுக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளா என்றார். "உலக நாடுகளுக்கு எதிரான சதியை முறியடிக்க அனைத்தையும் செய்துள்ளார். இப்படிப்பட்ட தியாகத்தை செய்யத சினோடென் அரசியல் தஞ்சம் கேட்டால் வெனிசுவேலா நாடு அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கத் தயாராக உள்ளது,” என அவர் கூறினார். இதற்கிடையில், பொலிவிய அரசுத்தலைவர் சென்ற விமானத்தில் சினோடென் இருப்பதாகப் பரவிய செய்தியினை அடுத்து, ஐரோப்பிய வான்வெளியில் அவ்விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. உருசியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து புதன்கிழமை காலை பொலிவியத் தலைவருடன் விமானம் கிளம்பி, லா பாஸ் நோக்கிச் சென்றது. இந்த விமானம் பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய வான்வெளியிலும், வேறு சில ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியிலும் பறக்க திடீரென தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியென்னாவில் தரையிறக்கப்பட்டது. சினோடென் இந்த விமானத்தில் இருக்கிறார் என்பது பெரிய பொய் என்றும், தங்கள் நாட்டு ஜனாதிபதி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய வதந்தி இது என்றும் பொலிவிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விமானத்தில் சினோடென் இல்லை என ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலண்டனில் உள்ள எக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் இரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எக்குவடோர் அறிவித்துள்ளது. இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும் இக்குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது. பொலிவியா அதிபர் பயணம் செய்த விமானத்தில் அத்துமீறி சோதனை நடத்தியதற்கு பொலிவியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் புகார் செய்யப் போவதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட சினோடென் இப்போது உருசியாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் தங்கும் பகுதியில் மறைந்து இருக்கிறார். தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி வெனிசுலா, கியூபா, பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க தயார் என்று பொலிவியா தலைவர் இவோ மொராலெஸ் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பொலிவியா அரசுத்தலைவர் இவோ மொராலெஸ் மாஸ்கோவில் நடந்த எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் கலந்து கொண்டார். மாநாடு முடிந்த பின்னர் பொலிவியா ஜனாதிபதி இவோ மொராலெஸ் தனி விமானத்தில் தாய்நாடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவருடைய விமானம் தங்கள் நாட்டின் மீது பறக்க தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் திடீரென்று அறிவித்தன. ஆஸ்திரியா நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த பொலிவியா ஜனாதிபதியின் விமானம் தலைநகர் வியன்னா விமான நிலையத்தில் கட்டாயமாக தரை இறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா போலீஸ் அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்த வந்தனர். இதற்கு பொலிவியா ஜனாதிபதி இவோ மொராலெஸ் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஆஸ்திரிய அதிகாரிகள் சினோடென் விமானத்தில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் சோதனை நடத்துகிறோம் என்று கூறி சோதனை செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பின்னர் அவருடைய விமானம் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.ஒரு நாட்டின் ஜனாதிபதி விமானத்தை வேறு ஒரு நாடு கட்டாயமாக தரை இறக்கி சோதனை நடத்தியது உலக நாட்டு தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பொலிவியா நாட்டு வெளியுறவு அமைச்சர் டேவிட் கூறும் போது, பொலிவியா ஜனாதிபதியின் விமானத்தில் ஸ்னோடென் இருக்கிறார் என்ற மாபெரும் பொய்யை கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. இந்த பொய்யினால் எங்கள் நாட்டு ஜனாதிபதியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவானது என்று தெரிவித்தார். வெனிசுலா நாட்டு வெளியுறவு அமைச்சர் இலியாஸ் ஜூவா கூறும் போது, இதன் பின்னணியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் உள்ளன. இந்த பிரச்சனையை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளிடம் கொண்டு செல்வோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார். அர்ஜென்டினா நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டினா கிரிச்னர் கூறுகையில், ஜனாதிபதி இவோ மொராலெஸ் விமானத்தை தரையிறக்கிய செயல் பைத்தியக்காரத்தனமானது. இந்த குற்றத்தை மன்னிக்க முடியாது என்றார். இந்த நிலையில் பொலிவியா துணை ஜனாதிபதி அல்வரோ கர்சியா கூறும்போது, எங்கள் ஜனாதிபதி விமானத்தை சர்வதேச விதிகளை மீறி கட்டாயமாக தரை இறக்கியது பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் புகார் செய்வோம். நாங்கள் ஒன்றும் ஐரோப்பிய நாடுகளின் காலனிகள் அல்ல. சில ஐரோப்பிய நாடுகள் தான் காலனி நாடுகளாக உள்ளன என்று காட்டத்துடன் தெரிவித்தார். நைஜீரியாவின் வடகிழக்கில் யோபி மாநிலத்தில் மமுடோ நகரில் பாடசாலை ஒன்றின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 29 மாணவர்கள், மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் எரிக்கப்பட்டதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யோபி உட்பட மூன்று மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் அவசரகாலச் சட்டத்தை அந்நாட்டு அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் பிறப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு பெருமளவு படையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டனர். இறந்தவர்கள் பலரின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு கருகி உள்ளதால் அவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அடையாளம் காணச் சிரமப்படுகின்றனர். தீவிரவாதிகள் எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கிகளுடன் வந்து பாடசாலைக்குத் தீ மூட்டினர் என உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். மேலும் பலர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தனர். இப்பகுதியில் போக்கோ அராம் போராளிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 600 இற்கும் அதிகமானோர் இக்குழுவால் கொல்லப்பட்டுள்ளனர். இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நைஜீரியாவின் வடக்கே இசுலாமிய நாடொன்றை அமைப்பதே போக்கோ அராம் போராளிகளின் நோக்கம் ஆகும். தென் கொரியாவில் இருந்து சென்ற போயிங் 777 ரக பயணைகள் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய போது வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இவ்விபத்திற்கு விமானத்தின் தொழிநுட்பக் கோளாறு காரணமல்ல என ஆசியானா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த 307 பேரில் பெரும்பாலானோர் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர், ஆனாலும் 49 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் ஐவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் மொத்தம் 291 பயணிகளும், 16 பணியாளர்களும் பயணம் செய்தனர். பயணிகளில் 141 சீனர், 77 கொரியர்கள், 61 அமெரிக்கர் ஆகியோர் விமானத்தில் இருந்தனர். விமான ஓடுபாதையில் விமானம் தரையிறங்கவில்லை என்றும், சிறிது தள்ளியே அது தரையைத் தொட்டது எனவும் இதனால் இதன் வால் பகுதி இரண்டு துண்டுகளாகப் பிளவடைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. விமானம் தரையிறங்கும் போது எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தப்பியவர்களில் ஒருவர் தெரிவித்தார். இவ்விபத்திற்கு விமான ஓட்டிகளின் தவறு இருந்திருக்கலாம் எனத் தெரிவித்த ஆசியானா நிறுவனத் தலைவர் யூன் யங்-டூ, ஆனாலும், விமானிகள் அனைவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் எனத் தெரிவித்தார். விமானத்தின் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு சீனப் பெண்கள் கொல்லப்பட்டனர். போயிங் 777 ரக விமான விபத்து ஒன்றில் இறந்த முதல் நபர்கள் இவர்களே எனக் கூறப்படுகிறது. இரட்டை-எந்திரங்களைக் கொண்ட இவ்வகை விமானங்கள் பொதுவாக மிகவும் பாதுகாப்பானவை எனப் பெயர் பெற்றிருந்தது. பல விமான நிறுவனங்கள் இவற்றைத் தமது சேவைகளில் பயன்படுத்தி வருகின்றன. தலைநகர் பாட்னாவில் இருந்து 60 மைல் தூரத்தில் அமைந்துள்ள மகாபோதி கோயிலில் வரிசையாக ஒன்பது இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. கோயிலுக்குள் ஐந்து குண்டுகளும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று குண்டுகளும் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ஒன்றின் அடியில் ஒரு குண்டுமாக மொத்தம் ஒன்பது குண்டுகள் வெடித்தன. மேலும் இரு குண்டுகள் வெடிக்காத நிலையில் செயலிழக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 05:40 மணியளவில் சிறப்பு வழிபாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் முதலாவது வளாகத்தினுள் வெடித்தது. இதனை அடுத்து கூடியிருந்த பக்தர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து மேலும் குண்டுகள் துறவிகள் மடப் பகுதி உட்படப் பல இடங்களில் வெடித்தன. மியன்மாரைச் சேர்ந்த இரண்டு பௌத்த துறவிகள் காயமடைந்தனர். இக்குண்டுவெடிப்புகளினால் மகாபோதிக்கோ, புனித அரச மரத்திற்கோ சேதம் எதுவும் ஏற்படவில்லை. எந்த இயக்கமும் தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை. குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உயரதிகாரிகளுடன் உடனடியாக புத்தகாயா சென்றார். பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கு வந்து வந்து வழிபடுகின்றனர். யுனெஸ்கோ இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் பௌத்தர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றன என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அண்மைக் காலங்களில் பர்மா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் முசுலிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே முறுகல் நிலை இருந்து வருகிறது. எட்வர்ட் சினோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பதற்கு கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்கக் கணினி நிபுணர் எட்வர்டு சினோடென் இப்போது உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செரெமெத்தியெவோ விமான நிலையத்தின் பன்னாட்டுப் பயணிகள் பகுதியில் மறைந்து இருக்கிறார். அங்கிருந்தபடியே அவர் பல உலக நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். இவருடைய கோரிக்கையை ஏற்று வெனிசுவேலா, பொலிவியா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன. இதற்கிடையில், சினோடெனைக் கைது செய்ய அமெரிக்கா மிகத் தீவிரமாக முயன்று வருகிறது. சினோடெனைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உருசியாவை அமெரிக்கா கேட்டது. ஆனால் உருசியா அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, சினோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து சில நாடுகள் சினோடெனுக்கு தஞ்சம் அளிக்க மறுப்பு தெரிவித்தன. மேலும் சில நாடுகள் தஞ்சம் அளிக்க தயங்கி வருகின்றன. இந்த நிலையில் கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோ ஞாயிற்றுக் கிழமை கியூபா நாடாளுமன்றத்தின் முன் நடந்த கூட்டத்தில் பேசியதாவது நமது பாரம்பரியத்தின்படி உயர்ந்த லட்சியம் மற்றும் சனநாயகத்துக்கு போராடுபவர்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு அளிப்போம். அந்த வகையில் சனநாயகத்துக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்ட அமெரிக்க சதிக்கு எதிராக உள்ள சினோடெனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வெனிசுவேலா, பொலிவியா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. இந்த நாடுகளின் முடிவை கியூபா ஆதரிக்கிறது. பொலிவிய அரசுத்தலைவர் இவோ மொராலசு வந்த விமானத்தில் சினோடென் ஒளிந்திருப்பதாகக் கூறி அவருடைய விமானத்தை வலுக்கட்டாயமாக தரை இறக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். சினோடெனுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதன் மூலம் அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும், உலக நாடுகளின் சுதந்திரத்தையும் மீறி இருக்கிறது. கியூபாவின் நீண்ட எதிரி நாடாக அமெரிக்கா உள்ளதால், அதன் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் உளவு சதிகளை நாம் அறிந்திருக்கிறோம் என்றார். கொலம்பியாவின் ஃபார்க் போராளிகளுடன் தொடர்புடைய அரசியல் கட்சி அந்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டதை அடுத்து, அடுத்த ஆண்டுத் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டில் அப்போதைய அரசுத்தலைவர் பெலிசாரியோ பெட்டன்கோர்ட் இற்கும் போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட தேசப்பற்றுள்ள ஒன்றியம் என்ற அரசியல் கட்சி 2002 ஆம் ஆண்டில் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் போனதை அடுத்து தடை செய்யப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கிய சில ஆயுதக்குழுக்களினால் இக்கட்சி அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்ததாகக் கூறப்பட்டு அக்கட்சி அதிகாரபூர்வமான அரசியல் கட்சியாக நீதிமன்றத்தினால் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படை எனப்படும் ஃபார்க் இயக்கப் போராளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை அடுத்தே இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே கியூபாவில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. 1960களில் இருந்து சுமார் 600,000 பேர் உள்நாட்டுப் போரின் போது உயிரிழதனர். மூன்று மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளனர். ஃபார்க் போராளிக் குழுவில் தற்போது 8,000 பேராளிகள் வரை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 16,000 ஆக இருந்தது. சீனாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கற்கோடாலிகள் இரண்டில் உலகின் ஆரம்பகால தொல் எழுத்துகள் காணப்படுவதாக சீனத் தொல்பொருளாய்வாளர்கள் கூறியுள்ளனர். சீனாவின் சங்காய் நகருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட இப்பொருட்கள் குறைந்தது 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும், இப்பொருட்களில் காணப்படும் குறியீடுகள் உண்மையில் எழுத்துகளா அல்லது வெறும் சின்னங்களா என்பதில் சீன ஆய்வாளர்களிடையே முரண்பாடான நிலை காணப்படுகிறது. 2003 முதல் 2006 வரை சங்காயின் தெற்கே பெருமளவு தொன்மைக் கற்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றில் சிலவற்றிலேயே எழுத்துகள் இருக்கக் காணப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து தமது கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கு ஆய்வாளர்களுக்கு பல ஆண்டுகள் பிடித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இக்கண்டுபிடிப்புகள் சீனாவுக்கு வெளியேயிருந்தான ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படவில்லை. "கற்கோடாலிகளில் காணப்பட்டுள்ள எழுத்துகளைத் தம்மால் துல்லியமாக படித்து, அவற்றின் அர்த்தத்தை அறிய முடியாவிட்டாலும், இவை ஒரு குறிப்பிட்ட வகை சொற்கள் என எம்மால் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர் சூ சின்மின் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனாலும், எம்முடிவையும் எடுப்பதற்கு இவர்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என சங்காயின் பூடான் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வாளர் லியூ சாவோ தெரிவித்தார். இவை உணமையாக இருக்கும் பட்சத்தில், சீனாவில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 3,300 ஆண்டுகள் பழமையான விலங்கு எலும்புகளின் மீதான எழுத்துகளை விடப் பழமையானதாக இவை இருக்கும். உலகின் மிகப்பழைய எழுத்துகள் கிமு 3,300 ஆண்டுகளுக்கு முன்னதான மெசப்பத்தோமியா காலத்தையது என நம்பப்படுகிறது. முன்னாள் சிஐஏ பணியாளர் எட்வர்ட் சினோடனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உலகக் குடிமகனுக்கான கடவுச்சீட்டை தமது நாடு அங்கீகரிக்காது என எக்குவடோர் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். சினோடனின் அமெரிக்கக் கடவுச்சீட்டை அமெரிக்க திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, வாசிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக சேவைகள் ஆணையம் World Service Authority WSA) இவ்வார ஆரம்பத்தில் அவருக்கு உலகக் குடிமகனுக்கான கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. இக்கடவுச்சீட்டுடன் அவர் எக்குவடோருக்குள் நுழைந்தால் தாம் அவரை அனுமதிக்கமாட்டோம் என எக்குவடோர் கூறியுள்ளது. “இத்தகையை கடவுச்சீட்டுகளை நாம் அங்கீகரிக்க மாட்டோம்,” என மார்க்கோ அல்புஜா தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோ கடந்த திங்கட்கிழமை இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், தமது நாடு சினோடனின் வருகையை எதிர்பார்த்திருக்கிறது என்று கூறினார். இதற்கிடையில், மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருக்கும் எட்வர்ட் சினோடன், தாம் மனித உரிமை அமைப்புகளைச் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உருசியாவைச் சேர்ந்த சில மனித உரிமை அமைப்புகளுடன் இன்று வெள்ளிக்கிழமை சினோடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ரியா நோவஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது. பன்னாட்டு மன்னிப்பகம், மனித உரிமை கண்காணிப்பகம், ஐநா அகதிகளுக்கான ஆணையாளரின் வதிவிடப் பிரதிநிதி, வழக்கறிஞர் என்ரிக் பாத்வா தடை" என்ற உருசிய உரிமைகளுக்கான இயக்கத்தின் தலைவர் ஒல்கா கொஸ்ரீனா ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் சினோடனைச் சந்தித்து உரையாடவிருக்கின்றனர். இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டுத் தற்போது காவலில் உள்ள எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது மோர்சியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா எகிப்திய இராணுவத்திடம் கோரியுள்ளது. கடந்த அவாரம் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், மோர்சியை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் மோர்சிக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்புகளும் எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. பொதுமக்கள் பலர் வன்முறைகளில் கொல்லப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் மோர்சியின் ஆதரவாளர்கள் 50 பேர் இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டனர். கடந்த சில நாட்களாக மோர்சியின் ஆதரவாளர்கள் தலைநகரில் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே அமெரிக்கா இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. மோர்சியை விடுவிக்க செருமனியும் கோரியுள்ளது. ரமழான் மாத ஆரம்ப நாளான நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கே மோர்சியின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மோர்சியை மீண்டும் அரசுத்தலைவர் பதவியில் அமரச் செய்யும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்று அவர்கள் கூறியுள்ளனர். மோர்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் கடந்த சூலை 3 ஆம் நாள் அவர் இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆட்லி மன்சூர் என்பவரை இடைக்கால அரசுத்தலைவராக இராணுவம் நியமித்தது. திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலை ஊக்குவித்த குற்றங்களுக்காக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ஆன்மிகத் தலைவர் முகம்மது பாடி, மற்றும் அக்கட்சியின் முக்கிய 9 உறுப்பினர்களையும் கைது செய்ய எகிப்திய அரசு புதன்கிழமை அன்று கைது ஆணை பிறப்பித்தது. எகிப்தின் இந்த முடிவை ஒபாமா நிர்வாகமும் ஐநாவும் குறை கூறியுள்ளன. இதற்கிடையில் மன்சூரினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் அசெம் அல்-பெப்லாவி தமது அமைச்சரவையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கிளையான சுதந்திர சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் அமைச்சரவையில் தமது கட்சி இணையாது என முஸ்லிம் சகோதரத்துவம் கூறி விட்டது. பூட்டானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் சனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூட்டான் விடுதலை பெற்ற பின்னர் இடம்பெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். தோல்வியடைந்த ஆளும் துருக் புவென்சும் சோப்கா கட்சி பூட்டான் அரசருடன் நட்புறவு கொண்டுள்ளது. 80% வாக்காளர்கள் வாக்களித்தனர். மன்னராட்சியில் பொருளாதாரச் சீர்கேடு, அயல் நாடான இந்தியாவுடனான பிரச்சினைகள் இத்தேர்தல் களத்தில் முக்கியமாக அலசப்பட்டன. 2008 ஆம் ஆண்டு பூட்டான் மன்னர் தமது நிறைவேற்று அதிகாரங்களைக் களைந்ததை அடுத்து அங்கு மக்களாட்சி இடம்பெற்று வருகிறது. மொத்தம் 47 நாடாளுமன்ற இடங்களில் எதிர்க்கட்சியினர் 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் செரிங்கு தொப்கே பிரதமராக அறிவிக்கப்படுவார் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவுடனான உறவுகள் அண்மைக்காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பல்லாண்டு காலமாக வணிக மற்றும் வெளிநாட்டு உறவுகளில் இந்தியாவிலேயே பூட்டான் தங்கி வந்துள்ளது. ஆனாலும், அண்மையில் இந்தியா பூட்டானுக்கான எரிபொருள் மற்றும் எரிவாயு மானியத்தைப் பெருமளவு குறைந்த்திருந்தது. பூட்டான் அண்மைக்காலங்களில் சீனாவைச் சார்ந்து சென்று கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என எதிர்க்க்கட்சியினர் கூறுகின்றனர். இந்தியாவின் வட மாநிலமான உத்தராகண்டத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன 5,700 பேருக்கு மேற்பட்டோர் இறந்து விட்டதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடு வழங்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 600 பேர் இறந்ததாக அரசு உறுதிப்படுத்தியிருந்தது. கடந்த சூன் மாதத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உத்தராகண்ட மாநிலமே அதிகம் பாதிப்புக்குள்ளானது. கடந்த 80 ஆண்டுகளில் இம்முறையே வெள்ளப்பெருக்கினால் மிக அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 4,000 கிராமங்கள் பாதிப்படைந்தன. இமாலய மலைப்பிரதேசத்தில் 100,000 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். ஆறுகள் பெருக்கெடுத்தனால் பல கிராமங்கள் அடியோடு அழிந்தன. சுற்றுலாப் பயணிகள் பலர் இவ்வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தனர். 5,748 பேர் காணாமல் போயிருந்தனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் இல்லாததால், இவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தது 500,000 ரூபாய்கள் நட்ட ஈடாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தினால் சேதமடைந்த வரலாற்றுப் புகழ் மிக்க கேதாரநாத் கோவில் அடுத்த ஓராண்டு காலத்திற்கு பொது மக்களின் வழிபாட்டிற்கு மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது. பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களை சமாளிக்கும் பொருட்டு, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது. எஸ்/2004 என் 1 (S/2004 N 1) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நிலவு நெப்டியூனின் அறியப்பட்ட 14வது நிலவாகும். இதுவே நெப்டியூனின் மிகச் சிறிய நிலவும் ஆகும். 20 கிமீ விட்டம் மட்டுமே கொண்டுள்ள இந்த நிலவு நெப்டியூனை 23 மணித்தியாலத்திற்கு ஒரு முறை சுற்றி வருகிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியலாளர் மார்க் ஷோவால்ட்டர் என்பவர் நெப்டியூனைச் சுற்றியுள்ள வளையங்களை ஆராய்ந்த போது இந்தச் சிறிய நிலவைக் கண்டுபிடித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஹபிள் தொலைநோக்கி எடுத்த 150 புகைப்படங்களை ஆராய்ந்த போது இதனை அவர் கண்டுபிடித்தார். கிழக்கிந்திய மாநிலமான பீகாரில் பள்ளி ஒன்றில் இலவசமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதால் குறைந்தது 22 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் 28 பேர் கடும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தலைநகர் பட்னாவில் இருந்து வடக்கே தர்மசாத்தி கண்டமான் என்ற கிராமத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வறுமையைப் போக்குவதற்கும், மாணவர் வருகையை ஊக்குவிப்பதற்காகவும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும், இவை போதுமான அளவு சுத்தமானதாக இருப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இறந்த பிள்ளைகளின் பெற்றோரும் உறவினர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதில் நான்கு காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இறந்த ஒவ்வொரு பிள்ளையினதும் குடும்பத்தினருக்கு 200,000 ரூபா நட்டத்தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. உணவில் பொசுபரசு கலந்திருந்தமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக மாநிலக் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். மரக்கறி அல்லது அரிசியில் நச்சுக் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக உயர் கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டம் இந்தியாவில் சென்னையிலேயே முதன்முதலாக 1925-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நெதர்லாந்தின் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபரில் களவாடப்பட்ட பெறுமதி வாய்ந்த ஓவியங்கள் உருமேனியாவில் எரிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஓவியங்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் தாயாரே தனது வீட்டு அடுப்பில் இவற்றை எரித்துள்ளார். ரொட்டர்டாம் குன்ஸ்தால் அருங்காட்சியகத்தில் இருந்து களவாடப்பட்ட ஓவியங்களில் புகழ்பெற்ற ஓவியர்களான பிக்காசோ, கிளாடு மோனே, மற்றும் என்றி மாட்டீசு ஆகியோரின் ஆக்கங்களும் அடங்கும். இவற்றின் பெறுமதி 100 முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திருட்டுத் தொடர்பாக ஆறு உருமேனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். களவு தொடர்பாக தனது மகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தடயங்களை அழிப்பதற்காக இவற்றை எரித்ததாக ஒல்கா தொகாரு ஒப்புக்கொண்டுள்ளார். இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இது "மனித இனத்திற்கெதிராக நடத்தப்பட்ட மாபெரும் குற்றம்" என உருமேனியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகப் பணிப்பாளர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார். 1991 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் வான் கோ அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட 20 ஓவியங்களுக்குப் பின்னர் இதுவே அந்நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஓவியத் திருட்டுச் செயலாகக் கருதப்படுகிறது. ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருவரங்கத்தில் பிறந்தவர். வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். 2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார். வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வாலிக்கு பாலாஜி எனும் மகன் உள்ளார். தகுந்த நுழைவாணை இல்லாமல் இன்று முதல் படகுகளில் ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழையும் அகதிகள் ஆத்திரேலியாவில் இனிமேல் அகதிகளாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனப் பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். பப்புவா நியூ கினி பிரதமர் பீட்டர் ஓ’நீலுடன் இன்று பிறிஸ்பேன் நகரில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றை அடுத்தே பிரதமர் ரட் இவ்வாறு அறிவித்துள்ளார். மக்களைக் கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருடன் இப்புதிய ஒப்பந்தத்தின் படி தாம் புதிய போர் ஒன்றைத் தொடுத்துள்ளதாக அவர் கூறினார். பப்புவா நியூ கினியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி, சட்டவிரோதமாக ஆத்திரேலியக் கடற்பரப்பினுள் நுழையும் அனைவரும் பப்புவா நியூ கினிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அந்நாட்டு அதிகாரிகளே அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்பர். உண்மையான அகதிகள் எனக் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பப்புவா நியூ கினியிலேயே குடியேற அனுமதிக்கப்படுவார்கள். ஏனையோர் அவர்களது சொந்த நாடுகளுக்கோ அல்லது வேறொரு நாட்டுக்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள். "இத்தீர்மானம் மிகக் கடுமையானது என்பதை நான் அறிவேன் என கெவின் ரட் கூறினார். ஆனாலும், இது தேவையானதொரு தீர்மானம் என அவர் கூறினார். பப்புவா நியூ கினிக்கு அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கையின் அதிக பட்ச அளவில் எந்தக் கட்டுப்பாடும் இராது என அவர் கூறினார். ஆனாலும், கெவின் ரட் அவர்களின் இந்த மாற்றங்களை சட்டபூர்வமாக அணுகுவது குறித்து அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர். ஆத்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபொட் "இத்தீர்மானத்தை நான் வரவேற்கிறேன், ஆனால், இத்திட்டம் கெவின் ரட்டின் தலைமையிலான அரசினால் செயற்படுத்த முடியாது என்றார். ஆத்திரேலியப் பசுமைக் கட்சியின் தலைவர் கிறிஸ்ட்டின் மில்னி, அரசியல் நெருக்கடியினால் தஞ்சம் கோர வருபவர்களை வறுமையான நாடு ஒன்றுக்கு அனுப்பும் திட்டத்தைக் கண்டித்துக் கருத்து வெளியிட்டுள்ளார். பப்புவா நியூ கினி ஏற்கனவே ஊழல், வன்முறைகள், மற்றும் மலேரியா தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அந்நாட்டின் நிலைமை இல்லை என அவர் கூறினார். வன்முறையை அடக்க காவல்துறையினருக்கு உதவியாக உள்ளூர் வாசிகளும் இரும்புக் குழாய்களுடனும், கத்திகளுடனும் வந்து இணைந்து கொண்டனர். வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானோர் ஈரானியர்கள் எனக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை இந்த வன்முறை வெடித்ததாகவும், இரண்டு மணித்தியாலங்களுல் அவர்கள் முழு முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனவும் முகாமின் காவலாளி ஒருவர் செய்தியாளருக்குத் தெரிவித்தார். முகாம் வாசிகள் பலரிடம் சமையலறைகளில் இருந்து எடுக்கப்பட்ட கத்திகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முகாமில் இருந்த நால்வர் காயமடைந்தனர். காவலாளிகள் பலரும் காயமடைந்துள்ளனர். நான்கு மணி நேரத்தின் பின்னர் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் காவல்துறையினர் முகாமைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் இருந்த சிலர் தப்பி ஓடியதாகவும், ஆனாலும் தற்போது அவர்கள் அனைவரும் முகாம் திரும்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் பெருமளவு அகதிகள் ஆத்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் நுழைந்துள்ளனர். நேற்று முதல் படகுகள் மூலம் வருபவர்கள் எவரும் எப்போதும் ஆத்திரேலியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கெவின் ரட் நேற்ரு அறிவித்தார். பதிலாக, அவர்கள் அனைவரும் பப்புவா நியூ கினிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்தௌ அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் தொடர்ந்து பப்புவா நியூ கினியில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஏனையோர் தமது சொந்த நாட்டுக்கோ அல்லது வேறொரு நாட்டுக்கோ அனுப்பி வைக்கப்படுவார்கள். நியூசிலாந்தை இன்று ஒரு நிமிட நேர நிலநடுக்கம் தாக்கியதில் தலைநகர் வெலிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்றம் சேதமடைந்தது. உயிரிழப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. சுனாமி அறிவித்தல் ஏதும் விடுக்கப்படவில்லை. மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டன. வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. தண்ணீர்க் குழாய்கள் சில வெடித்தன. வீதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் வடமேற்கில் கான்சு மாகாணத்தை ஆற்றல் வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கியதில் குறைந்தது 54 பேர் உயிரிழந்தனர். 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இப்பகுதியில் 371 முறை பின் அதிர்வுகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கான்சு மாகாணத்தின் சாங்சியான் நகரில் 5,600 வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தை அடுத்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் சிக்குவான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 90,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து உலகெங்கிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளனர். பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் எடின்பரோ கோமகனும் தாங்கள் மிகுந்த உவகை கொள்வதாகக் கூறியுள்ளனர். குழந்தைக்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. ஆனாலும், ஜார்ஜ் என்ற பெயரைப் பலரும் விரும்புகின்றனர். அதன் பின்னர் ஜேம்சு, அலெக்சாண்டர் போன்ற பெயர்களும் மக்களின் விருப்பபெயர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாஸ்கோவில் உள்ள செரெமெத்தியேவோ விமான நிலையத்தில் தங்கியுள்ள முன்னாள் சிஐஏ முகவரான எட்வர்ட் சினோடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளார் என முன்னர் வந்த செய்தியை சினோடனின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். உருசியாவுக்குள் நுழைவதற்கான நுழைவாணை அடங்கிய ஆவணங்களை உருசிய நடுவண் குடியகல்வுத்துறை வழங்கியுள்ளதாக முன்னர் செய்தி வெளி வந்திருந்தது. விமான நிலையத்தின் கடப்பு வலயத்திலேயே அவர் தொடர்ந்து தங்கியிருப்பார் என வழக்கறிஞர் அனத்தோலி குச்ச்ரேனா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார். ஆங்காங்கில் இருந்து சூன் 23 ஆம் நாள் விமானம் மூலம் உருசியா வந்தடைந்த சினோடன், உருசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லாததால் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் சினோடன் (29) கடந்த மே மாதம் 20-ம் தேதி திடீரென்று அமெரிக்காவில் இருந்து வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆங்காங்கில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, அமெரிக்கர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பதாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவின் கூகுள், முகநூல் மற்றும் இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்ததற்கான சான்றுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு எட்வர்ட் சினோடனைக் கைது செய்யப் பல வழிகளில் முயன்றது. அரசியல் புகலிடம் தர உலக நாடுகள் பலவும் மறுத்ததை அடுத்து உருசியாவில் தங்குவதற்கு தற்காலிக அனுமதியை அவர் அண்மையில் கோரியிருந்தார். இந்தத் தலைப்பினை 'எட்வர்ட் சினோடன் விமான நிலையத்தை விட்டு வெளியே வர உருசியா அனுமதி' என மாற்றலாமா என பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். *ஒரு வாசகரின் பார்வையில் இந்தத் தலைப்பினை நான் நோக்கியபோது முதலில் தவறாகவே புரிந்து கொண்டேன் நாட்டை விட்டு வெளியேற உருசியா அனுமதி என புரிந்து கொண்டேன் அதாவது தனது நாட்டில் நுழைய அனுமதிக்காமல், அதே நேரத்தில் எவ்வித வழக்கும் பதியாமல் நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததாகவே முதலில் புரிந்து கொண்டேன். *எவரையேனும் நாட்டை விட்டு வெளியேற ஒரு அரசாங்கம் பணிக்கும்போதே 'நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் ஆணையிட்டது' என பொதுவாக செய்தி எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து வெளியேற என்பதனை ஒரு வாசகனாக படிக்கும்போது தவறுதலாக எண்ண ஏதுவாகிறது! *அல்லது 'எட்வர்ட் சினோடன் உருசியாவுக்குள் நுழைய உருசிய அதிகாரிகள் அனுமதி' என எழுதலாமா? எசுப்பானியாவின் வடமேற்கே தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தலைநகர் மாத்ரிதில் இருந்து பெரோல் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் தொடருந்து சண்டியாகோ டி கொம்போஸ்டெலா நகருக்கு அருகாமையில் தொடருந்தின் எட்டுப் பெட்டிகளும் தடம் புரண்டன. வளைவு ஒன்றில் செல்லக்கூடிய வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் இத்தொடருந்து பயணித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பத் தவறுகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என ரெயில்வே தலைவர் ஜூலியோ போமார் கூறினார். இத்தொடருந்தில் 218 பேர் பயணம் செய்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது எசுப்பானியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்துகளில் பெரியது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1972 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் தெற்கே அண்டலூசியா என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 70 முதல் 80 வரையானோர் கொல்லப்பட்டனர். 1944 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர். துனீசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் முகம்மது பிராமி நேற்று வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து இனந்தெரியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையை அடுத்து தலைநகரிலும் ஏனைய பகுதிகளிலும் இசுலாமிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று நாட்டில் பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நாட்டின் முக்கிய இசுலாமியக் கட்சியான என்னாடா கட்சியினரே இக்கொலையைச் செய்ததாக பிராமியின் சகோதரி கருத்துத் தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து தனது கணவர் வெளியே சென்றதாகவும், வெளியே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் தனது கணவர் கீழே வீழ்ந்து கிடந்ததாகவும், இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியதை கண்டதாகவும் பிராமியின் மனைவி கூறினார். பிராமி மதச்சார்பற்ற அரபு தேசியவாத வெகுசன முன்னணிக் கட்சியின் தலைவர் ஆவார். இக்கட்சியின் முன்னாள் தலைவர் சோக்ரி பெலாட் கடந்த பெப்ரவரி 6 ஆம் நாள் இதே போன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலையின் பின்னர் நாட்டில் பல வன்முறைகள் இடம்பெற்றன. 58 வயதுள்ள முகம்மது பிராமி என்னாடா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். துனீசியாவின் முன்னாள் ஆட்சியாளர் பென் அலி 2011 சனவரியில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து இசுலாமிய என்னாடா கட்சி சிறிய மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனாலும், நாட்டின் தீவிரவாத சலாபி இசுலாமியர்களின் பிடியில் ஆட்சி வீழ்ந்து விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பெயாயிடுவின் படுகொலையை சபாலி இசுலாமியக் குழுவே நடத்தியதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டினர். இக்குழுவைச் சேர்ந்த கொலையாளிகள் ஆறு பேர் தற்போது பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக அரசு தெரிவித்து வருகிறது. பாக்கித்தானின் வடக்கே ஆப்கானித்தான் எல்லைப் பகுதியில் உள்ள பராச்சினார் என்ற இடத்தில் சந்தை ஒன்றில் இன்று நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு குண்டுகளும் இரண்டு வெவ்வேறு இசுலாமியப் பள்ளிவாசல்களுக்கு அருகே இடம்பெற்றுள்ளன. 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ரமழான் நோன்புக்காக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு சந்தையில் பெருமளவு மக்கள் கூடியிருந்த நேரத்திலேயே இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. ஒரு குண்டு மோட்டார் சைக்கிளின் அடியில் பொருத்தப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இளம் வயதுப் பையன் ஒருவன் "கடவுள் பெரியவர்" எனக் கூவிக் கொண்டிருந்த போது இரண்டாவது குண்டு வெடித்ததாக நேரில் கண்ட ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை அயலில் உள்ள கைபர் என்ற பிரதேசத்தில் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேரின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களாக தீவிரவாதிகளைத் தேடும் பணி அரசுப் படையினர் முன்னெடுத்து வந்தனர். படையினரின் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பாலத்தீனர்களுடன் செய்து கொள்ளப்படும் எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு மக்கள் முன் வைக்கப்பட வேண்டும் என இசுரேலிய அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் அலுவலகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை" எனக் கூறியுள்ளது. பாலத்தீனக் கைதிகளில் ஒரு தொகுதியினரை விடுவிக்கக் கோரும் சர்ச்சைக்குரிய பிரதமரின் திட்டத்தையும் அமைச்சரவை விவாதித்து வருகிறது. அமெரிக்காவின் ஆதரவில் அமைதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் அமெரிக்காவில் இடம்பெறும் என பாலத்தீனிய ஊடகங்கள் தெரிவித்திருந்தாலும், அதிகாரபூர்வமாக இது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டில் இருந்து அமைதிப்பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ந. இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கு. அரசேந்திரன் தன் தலைமையுரையில் தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணியின் தேவை குறித்தும் தமிழ் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் விளக்கினார். பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை துணைப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி செய்முறைப் பயிற்சி அளித்தார். மாணவி கவிதா நன்றியுரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் ஐயங்களுக்கு பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி செய்முறை விளக்கமளித்தார். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அ. ஜெகநாதன், து. ரவிகரன், வீ. கனகசுந்தரசுவாமி, சி. சிவமோகன், வ. கமலேஸ்வரன், க. சிவநேசன், ஆ. புவனேஸ்வரன், திருமதி கு. கமலகுணசிலன் எம். தியாகரசா, க. லிங்கநாதன், ப. சத்தியலிங்கம், எம். பி. நடராஜ், து. நடராஜாசிங்கம், க. சந்திரகுலசிங்கம், இ. இந்திரராசா, மு. முகுந்தரதன், செ. மயூரன் ஞா. குணசீலன், யோ. ஆனந்தன் குரூஸ், சு. சிவகரன், பா. டெனிஸ்ரன், சு. பிறிமோஸ் சித்ராய்வா, கி. விமலசேகரம், இ. சாள்ஸ், ஆயூப் அஸ்மி. மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணி போட்டியிடுகிறது. இக்கூட்டணியின் சார்பில் அசெய்க் அய்யூப் அஸ்மி (நளீமி) என்பவர் போட்டியிடுகிறார். வட மாகாண சபை தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர மேலும் ஆறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், 12 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து கட்டுப்பணமும் செலுத்தியுள்ளன. யாழ். மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் கட்சியும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு ஜனசெவன முன்னணியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. [[பகுப்பு:இலங்கை மாகாணசபைத் தேர்தல், 2013 noinclude> தனது தலைமுறைக் கலைஞர்களில் இவ்விருதினைப் பெறும் முதலாவது கலைஞர், சுதா ரகுநாதன். இவரை இந்த ஆண்டின் விருதினைப் பெறுபவராக அகாதெமியின் நிர்வாகக் குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்ததென அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறை கலைஞர்களுக்கு கருநாடக இசை எடுத்துச் செல்லப்பட்டு விட்டதையே இந்தத் தெரிவு காட்டுவதாக மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளி கருத்து தெரிவித்துள்ளார். பாக்கித்தானின் வட-மேற்கே உள்ள சிறைச்சாலை ஒன்றைத் தாக்கிய தலிபான்கள் அங்கிருந்த 248 சிறைக்கைதிகளை விடுவித்தனர். தானியங்கித் துப்பாக்கிகள், மோட்டார்கள், கிரனேடுகள் கொண்டு சிறைச்சாலையின் சுவரைத் தகர்த்து சிறைச்சாலைக்குள் தாலிபான்கள் நுழைந்தனர். இச்சம்பவம் தேரா இசுமாயில் கான் என்ற நகரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. பல மணி நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. ஆறு காவல்துறையினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இன்றைய தாக்குதலில் நூறு போராளிகள் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் காவல்துறையினரின் சீருடை அணிந்திருந்தனர். தாக்குதலுக்குள்ளான சிறைச்சாலை நூற்றாண்டு காலப் பழமையானது எனவும், அதிக பாதுகாப்பு அற்றதுமாகும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறையில் இருந்து 5 பெண் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பெண் சிறைக் காவலாளியையும் தலிபான்கள் கொண்டு சென்றுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 30 தலிபான் தளபதிகளும் அடங்கியுள்ளனர். நகரப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதே போன்றதொரு தாக்குதல் பான்னு என்ற இடத்தில் இடம்பெற்றதில் 400 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தியாவின் 29வது புதிய மாநிலமாக தெலுங்கானாவை ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரித்தெடுத்து உருவாக்குவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நேற்று முடிவு செய்ததை அடுத்து ஆந்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. 35 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தெலுங்கானா பிரதேசம் ஆந்திரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் ஐதராபாது உட்பட 10 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. புதிதாக உருவாகவிருக்கும் தெலுங்கானா மாநிலத்தின் பரப்பளவு 115,000 சதுர கிலோமீட்டர் ஆகும். ஐதராபாது இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமும் ஆகும். ஐதராபாத் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் இணைந்த நலைநகராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் அதன் பின்னர் ஆந்திர மாநிலம் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்க வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானாவில், இந்த புதிய மாநிலத்திற்கான போராட்டம் கடந்த 50 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. பொருளாதார ரீதியில் தாங்கள் பின் தங்கி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். புதிய மாநிலம் உருவாக்குவதற்கான இறுதி முடிவு இந்திய நடாளுமன்றத்திலேயே எடுக்கப்படும். அத்துடன் மாநில சட்டமன்றமும் புதிய மாநிலம் உருவாகுவதற்கு ஆதரவாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். தெலுங்கானா புதிய மாநிலமாக உருவாவதற்கு ஆளும் கட்சியிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததையொட்டி, கோர்க்காலாந்து உட்பட நாட்டின் பிற இடங்களில் இருந்து எழும் தனி மாநிலக் கோரிக்கைகள் எதிர்காலத்தில் வலுப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆப்கானித்தான், ஈரான், மற்றும் பாக்கித்தானிய ஆண்கள் 40 பேர் இன்று கிறிஸ்துமஸ் தீவில் இருந்து மானுஸ் தீவுக்கு சென்றடைந்தனர். ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் டோனி பேர்க் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புதிய திட்டம் சட்டவிரோத ஆட்கடத்தல்காரருக்கு கடுமையான ஓர் எச்சரிக்கையாக இருக்கும் எனக் கூறினார். கூடிய விரைவில் அங்கு பெண்கள், மற்றும் குழந்தைகளும் அனுப்பப்படுவார்கள் என அவர் கூறினார். பப்புவா நியூ கினியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டின் படி, ஆத்திரேலியா அந்நாட்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கும். பப்புவா நியு கினியின் சட்ட முறைமை அகதிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு போதுமானதாக இல்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3785 வேட்­பா­ளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். மூன்று மாகாண சபை­க­ளுக்கும் 142 உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்யப்படுவர். 4,358,261 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். மத்­திய மாகாண சபைக்கு கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பில் 1517 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர். வடமேல் மாகா­ணத்தில் இரண்டு மாவட்­டங்­க­ளுக்கும் 1362 வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். வட மாகாணத்தில் 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டணி, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட முக்கிய அர­சியல் கட்­சி­கள், மற்றும் சுயேட்சைக் குழுக்­கள் சார்பாக 906 பேர் இங்குள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றனர். 714,488 பேர் இங்கு வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 16 பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 426,703 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். கிளிநொச்சி மாவட்­டத்தில் 4 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 68,589 பேர் வாக்­க­ளிக்கத் தகு­தி­பெற்­றுள்­ளனர். மன்னார் மாவட்­டத்தில் 5 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 72,420 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். வவுனியா மாவட்­டத்தில் 6 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 94,367 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­துடன் 52,409 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். வட மாகாணசபைக்கு முதற்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. இலங்கைத் தொழி­லாளர் கட்சி, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, ஜன­சத பெர­முன, சோச­லிச சமத்­துவக் கட்சி, ஐக்­கி­ய­ தே­சியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டணி, ஜன­நா­யக சுதந்­திரக் கட்சி, ஜன­நா­யக ஐக்­கிய முன்னணி, ஐக்­கிய சோசலிசக் கட்சி, ஸ்ரீலங்கா மகா­ஜன பட்­சய ஆகிய 11 அர­சியல் கட்­சிகள் யாழ். மாவட்­டத்தில் போட்டியிடுகின்றன. அத்துடன் அன்­ரனி ரங்­க­து­சாரா, இரா­ஜ­லிங்கம் விதுன்நாச், ரங்­க­நாதன் திரி­லோ­க­நாதன், பின் மதிமுகராசா விஜ­யகாந், ஜனுன் முகமட் விஜய், இரா­ச­ரத்­தினம் தாமோ­தரம் ராஜா, மாணிக்கசோதி அபி­மன்­ன­சிங்கம், செல்வி. தம்­பிப்­பிள்ளை இரு­த­ய­நாதர், கிருஷ்­ண­சாமி சுபாஸ்­கரன் ஆகியோர் தலை­மை­யி­லான 9 சுயேச்சை குழுக்­களும் யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளன. மத்­திய மாகா­ணத்தில் 56 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்ய 1,889,557 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். கண்டி மாவட்டத்தில் 1,015,315 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 29 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாத்­தளை மாவட்­டத்தில் 366,549 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 11 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 507,693 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 16 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 2009 தேர்தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்டணி 36 உறுப்பினர்களையும், ஐக்­கிய தேசிய கட்சி 22 உறுப்பினர்களையும், பெற்றிருந்தது. வட மேல் மாகா­ணத்தில் 50 பிர­தி­நி­தி­களை தெரிவு செய்ய 1,754,218 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். குரு­ணாகல் மாவட்­டத்தில் 1,227,810 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 34 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். புத்­தளம் மாவட்­டத்தில் 526,408 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ள­துடன் 16 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 2009 தேர்தலில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணி 37 உறுப்பினர்களையும், ஐக்­கிய தேசிய கட்சி 14 உறுப்பினர்களையும், மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு உறுப்பினரையும் பெற்­றி­ருந்­தன. சூன் 23 ஆம் நாள் எட்வர்ட் சினோடன் ஹொங்கொங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ வந்து சேர்ந்தார். ஆனாலும், இவரிடம் முறையான நுழைவானை ஏதும் இல்லாததால் இவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பல உலக நாடுகள் நிராகரித்து விட்ட நிலையிலேயே உருசியா தற்காலிக நுழைவாணையை வழங்கியுள்ளது. நேற்று மாலை 3:30 மணிக்கு இவர் பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வாடகைக் கார் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். இவர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் கிரெம்ளினின் ஆலோசகர் யூரி உசக்கோவிற்கும் உருசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் மெக்ஃபோலிற்கும் இடையில் சினோடன் தொடர்பாகப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ரியாநோவஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது. பூட்டினின் உருசியாவுடனான உறவுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கெயின் ஒபாமா நிருவாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். சினோடனுக்கு நுழைவாணை வழங்கியதன் மூலம் உருசியா அமெரிக்காவை சீண்டிப் பார்த்துள்ளது என ஜோன் மெக்கெயின் கூறியுள்ளார். ஆத்திரேலியாவில் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், படகுகளில் அகதிகளாக வருவோரை வேறு நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை அந்நாடு மேலும் விரிவுபடுத்தியுள்ளது. நவூருவுடனான உடன்பாட்டில் குடும்பங்களும், பெரியவர்களுடன் வராத சிறுவர்களும் நவூருவில் குடியமர்த்தப்படுவர். இதற்காக ஆத்திரேலியா பெருமளவு உதவிகளை நவூருவுக்கு அளிக்க முன்வந்துள்ளது. "நவூரு ஒரு மிகச் சிறிய நாடு, இதனால் அங்கு குடியமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் என கெவின் ரட் தெரிவித்தார். நவூருவின் மக்கள் தொகை 9,400 மட்டுமே. பப்புவா நியூ கினி திட்டத்தை ஏற்கனவே மனித உரிமை ஆர்வலர்களும், அகதிகளுக்காக குரல் கொடுப்பவர்களும் எதிர்த்துள்ளனர். புதிய திட்டத்தினால் தாம் குழம்பிப் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. பேசும் இயந்திர மனிதன் ஒன்று முதற் தடவையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சப்பான் இந்த எந்திரனை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் விண்வெளிக்குச் செல்லவிருக்கும் சப்பானிய விண்வெளி வீரர் கோச்சி வக்காட்டாவிற்குத் துணையாக இந்த எந்திர மனிதன் தொழிற்படும். கிரோபோ என அழைக்கப்படும் இந்த எந்திர மனிதனை ஆளில்லா விண்கலம் ஒன்று தனிகாசீமா தீவில் இருந்து கொண்டு சென்றுள்ளது. இக்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் செல்கிறது. விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் 6 விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய பொருட்களையும் இது காவிச் சென்றுள்ளது. 34செமீ உயரமும் 1 கிகி எடையும் கொண்ட கிரோபோ என்ற இயந்திர மனிதன் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை ஆகத்து 9 ஆம் நாள் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சப்பானிய மொழியில் பேசக் கற்றுக் கொண்டுள்ளது. 2013 நவம்பரில் செல்லவுள்ள கோச்சி வக்காட்டாவுடனான பேச்சுக்களை இது பதிவு செய்யும். அத்துடன் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து செல்லும் செய்திகளை வக்காட்டாவுக்கு எடுத்துச் சொல்லும். விண்வெளியில் பல மாதங்களாகத் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு உணர்வு பூர்வமான துணையை இயந்திரங்கள் எவ்வாறு வழங்க முடியும் என்பதைப் பற்றிய ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த எந்திரன் அனுப்பப்பட்டுள்ளது. எசுப்பானியா-சிப்ரால்ட்டர் எல்லையில் சோதனைக் கெடுபிடிகளை எசுப்பானியா கடந்த வார இறுதியில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை பிரித்தானியா வெளியிட்டுள்ளது. எல்லையைக் கடப்பவர்களிடம் இருந்து ஆளுக்கு 50 யூரோக்களை அறவிட எசுப்பானிய திட்டமிட்டுள்ளதென நேற்று அந்நாடு அறிவித்திருந்தது. சிப்ரால்ட்டர் நாட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் எசுப்பானியாவில் வேலைக்காக அங்கு சென்று வருகின்றனர். பணம் அறவிடும் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என சிப்ரால்ட்டர் கூறுகிறது. இப்புதிய திட்டங்கள் குறித்து தமக்கு எசுப்பானிய விளக்கம் தர வேண்டும் என ஐக்கிய இராச்சியம் அறிவுறுத்தியுள்ளது. சிப்ரால்ட்டர் கடந்த 300 ஆண்டு காலமாக பிரித்தானியாவின் ஆட்சியில் உள்ளது. ஆனாலும், ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சி உரிமை தொடர்பாக எசுப்பானியா கருத்து வேறுபாடு கொண்டுள்ளது. சிப்ரால்ட்டர் மத்திய தரைக் கடல் பகுதியில் ஐபீரிய நீரிணையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் எசுப்பானியா உள்ளது. பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது, தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. சிப்ரால்ட்டர் அண்மையில் தனது கடற்பரப்பில் செயற்கையான கடலடிப் பாறை ஒன்றை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்திருந்ததை அடுத்தே இந்த சர்ச்சை ஆரம்பித்தது. தனது நாட்டு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை இத்திட்டம் மீறுவதாக எசுப்பானியா கூறுகிறது. செவ்வாய்க் கோளின் மேல் வளிமண்டலத்தை ஆராயும் பொருட்டு புதிய விண்கலம் ஒன்றை செவ்வாய் நோக்கி அனுப்புவதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா தயாராகி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. “வளிமண்டலத்தில் உள்ள வளிமத்தின் இழப்பு எவ்வாறு செவ்வாய்க் கோளின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். முன்னர் அறிந்திராத பல தகவல்களைப் பெற இயலுமென அறிவியலாளர்கள் நம்புகின்றனர்” என நாசா கூறுகிறது. ஓராண்டு காலத் திட்டப்படி இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுப்பாதையை 2014 செப்டம்பரில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. "மாவென் செவ்வாயில் உயிரினங்களைக் கண்டறியாது" எனக் கொலராடோ பல்கலைக்கழக வானியலாளர் புரூசு ஜாக்கொவ்ஸ்கி தெரிவித்தார் ஆனால் செவ்வாயின் காலநிலை வரலாற்றை அறிவதற்கு இது துணையாக இருக்கும்." கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் திடீரெனத் தீ பரவியதை அடுத்து விமான நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டது. நைரோபி விமான நிலையம் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமானதாகும். இன்று அதிகாலை 5 மணிக்கு விமானப் புறப்படு தளத்தில் குடியகல்வுப் பகுதியில் தோன்றிய தீ விரைவாக பன்னாட்டு விமான இறங்கு துறைக்கும் பரவியது. உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் அறிவிக்கப்படவில்லை, ஆனாலும், தீ மிகப் பெரிதாக இருந்ததென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இறங்குதுறை மற்றும் குடியகல்வுப் பகுதிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நைரோபியில் வந்திறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திசை திருப்பப்பட்டன. விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை. விபத்துக் குறித்து விசாரிப்பதற்கு கென்ய அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தோனேசியாவில் பௌத்த கோயில் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அங்குள்ள பௌத்த கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இந்தோனேசிய முஸ்லிம்கள் புனித ஈத் அல்-பிதுர் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில் கோயில்கள் மீது மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜாவாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொரபுதூர் கோயிலில் நானூறுக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளாகலாம் எனக் கருதப்படும் இடங்களுக்கு 140,000 இற்கும் மேலான காவல்துறையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று இரவு ஜகார்த்தாவில் உள்ள ஏகாயாண கோயிலில் வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிறிய குண்டு ஒன்று வெடித்தது. மூவர் காயமடைந்தனர். பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பர்மாவில் ரோகிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஜகார்த்தாவில் உள்ள பர்மியத் தூதரகத்தின் மீது நடத்தப்படவிருந்த குண்டுத் தாக்குதல் ஒன்றை இந்தோனேசியக் காவல்துறையினர் கடந்த மே மாதத்தில் கண்டுபிடித்தனர். எட்டு மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட பட்டை ஒன்றில் மூன்று சிற்பங்கள் வார்க்கப்பட்டுள்ளன. இவை குவெட்சால் எனப்படும் நீள் தோகையுடைய பசும்பொன்நிறம் வாய்ந்த அமெரிக்கப் பறவைகளின் சிறகுகள், மற்றும் பச்சைகற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 20 மீட்டர் உயர பிரமிது ஒன்றின் அடியில் இப்பட்டை கண்டெடுக்கப்பட்டது. இப்பிரமிது கிபி 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிபி 590 இல் புதிய மாயன் மன்னரின் முடிசூடல் நிகழ்வு இச்சிற்பங்களில் செதுக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெனிசுவேலா அரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளர் என்ரிக் கேப்ரில்ஸ் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மதுரோவின் வெற்றியை ஏற்க முடியாது எனக் கூறி கேப்ரில்சின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்கினர். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெனிசுவேலாவில் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேநேரம், கேப்ரில்ஸ் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்களின் எதிர்ப்பின் காரணமாக அடங்கியது. இதன்பின், மதுரோவின் வெற்றி செல்லாது என்றும், வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி வேட்பாளர் கேப்ரில்ஸ் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வெனிசுவேலா நாட்டு தேர்தல் ஆணையம் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்தியது. இதில் மதுரோவின் வெற்றியைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. இருப்பினும், இம்முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத என்ரிக் கேப்ரில்ஸ், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி மதுரோவின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கேப்ரில்ஸ் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் கிடையாது. எனவே, அவர் தாக்கல் செய்துள்ள மனுவினை நிராகரித்து உத்தரவிடுவதாக தீர்ப்பளித்தார். இந்தோனேசியாவின் மிகச் சிறிய தீவுகளில் ஒன்றான பாலு (Palue) தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 2,000 கிமீ கிழக்கே அமைந்துள்ள 4கிமீ அகலமான இந்த பாலு தீவில் உள்ள ரொக்கடெண்டா எரிமலை வெடித்ததில் அதிலிருந்து தூசுகளும், பாறைகளும் நூற்றுக்கணக்கான உயரத்திற்கு வானில் கிளம்பின. அண்மையில் உள்ள கடற்கரையை வெப்பத் தூசு மூடியதில் அங்கிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த எரிமலை கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சிறிது சிறிதாக சீறி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏற்கனவே பலர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இறந்த ஐவரும் எவ்வாறு அங்கு சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெருமளவு சிறப்பு அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர் இரவு பாலத்துறை பொலிஸ் பகுதியில் 10 மணிக்கு அமுலுக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு அடுத்தநாள் காலை 7 மணிவரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான பௌத்த மதத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று பொல்லுகள், இரும்புக் கம்பிகள், வாள்கள், தடிகளுடன் அவ்விடத்துக்கு வந்து தாக்­குதல் நடத்­தி­னர். கல்­வீச்சு மேற்கொண்டதில் பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­த­ன. கல்­வீச்சுத் தாக்­கு­த­லினால் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன. காயமடைந்தவர்களில் இருவர் காவல்துறையினர் எனக் கூறப்படுகிறது. சிறப்பு அதி­ரடிப் படை­யி­னரும் காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிகழ்வு தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்­சாளர் புத்­திக சிறி­வர்த்­தன கூறு­கையில், கடந்த ஒரு மாத கால­மா­கவே இது தொடர்பில் இழு­ப­றி­ நி­லைமை நில­வு­வ­தா­கவும், இங்கு அமைக்­கப்­பட்ட பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரு­வ­தா­கவும் தெரி­வித்தார். இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடொன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரும் கூறிவந்தனர். இந்தியா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கப்பல் கட்டுமிடம் ஒன்றில் இருந்து வெள்ளோட்டம் விட்டது. 37,500 தொன் எடையுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant) என்ற இக்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். 2016 ஆம் ஆண்டில் இக்கப்பல் மேலும் பல சோதனைப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறான கப்பல்களைத் தயாரிக்கும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், உருசியா, மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. விக்ராந்தின் முதற்கட்ட நிருமாணப் பணிகள் இன்று திங்கட்கிழமை முடிவடைந்தது. 25 முதல் 30 வரையான மிக்29கே, காமொவ் 31 போன்ற போர் விமானங்கள் இக்கப்பலில் இருந்து ஏவப்படக்கூடியதாக இருக்கும். நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர். கொண்டுங்கா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசுலாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ அராம் போராளிகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. நுகோம் என்ற கிராமத்தில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் 12 பேர் கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் நால்வர் மக்கள் விழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. போர்னோ மற்றும் அயலில் உள்ள இரண்டு மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து இவ்வாறான பல விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழிப்புக் குழுவினரைத் தேடியே பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. பொதுவாக இசுலாமியத் தீவிரவாதிகள் கிறித்தவ ஆலயங்களிலேயே தமது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். ஆனாலும், தமது கருத்துக்களுடன் ஒத்துப் போகாத இசுலாமியர்கள் மீதும் அவர்கள் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். போக்கோ அராம் போராளிகள் நாட்டின் வடக்கே இசுலாமிய நாடு ஒன்றை அமைக்கும் எண்ணத்தில் ஆயுதம் தாங்கிப் போரிட்டு வருகின்றனர். மும்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பற்றியதில் அக்கப்பலின் பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர் என இந்தியப் பாதுகாபு அமைச்சர் தெரிவித்தார். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் போன்ற விபரங்களை அமைச்சர் ஏ. கே. அந்தோனி தெரிவிக்கவில்லை. ஆனாலும், 18 மாலுமிகள் தீப்பிடித்த கப்பலில் சிக்கியிருந்தனர் என முன்னர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். வெடிப்பை அடுத்து பெரும்பாலான மாலுமிகள் கப்பலில் இருந்து கடலினுள் குதித்து உயிர் தப்பினர். உருசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி அண்மையில் 80 மில்லியன் டாலர் செலவில் உருசியாவில் மிக நவீனமயமாக்கப்பட்டு சேவைக்கு மீண்டும் விடப்பட்டிருந்தது. வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் கப்பலில் வெடிபொருட்கள் நிறைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010 பெப்ரவரியில் இதே கப்பல் விசாகப்பட்டணம் கடற்படைத் தளத்தில் வைத்து தீ விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார். நெர்ப்பா அணுவாற்றல்-நீர்மூழ்கிக் கப்பலை உருசியா இந்தியாவிடம் கையளித்தது சனவரி 23, 2012 இந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது சூலை 26, 2009 2008 ஆம் ஆண்டில் நைஜீரியா பிரித்து விட்ட எண்ணெய்-வளம் மிக்க பக்காசி தீபகற்பத்தை கமரூன் அதிகாரபூர்வமாகப் பெற்றுக் கொண்டது. பன்னாட்டு நீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப இப்பிராந்தியம் கமரூனுக்குக் கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஐந்தாண்டுகள் ஆட்சி மாற்றம் இப்பிராந்தியத்தில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தின் 90 விழுக்காட்டினர் நைஜீரியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஆவர். இக்காலப்பகுதியில் இவர்கள் வருமான வரியில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். நைஜீரியாவில் சிறு-வணிகம் செய்வோருக்கு வரி விலக்கு அமுலில் உள்ளது. ஆனால், இவ்வரி விலக்கு கமரூனில் இல்லாததால், இவர்கள் தற்போது வரி கட்ட வேண்டியவர்களாக உள்ளனர். 1,000 சதுர கிமீ பரப்பளவுள்ள பக்காசி தீபகற்பத்தில் சுமார் 300,000 பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பக்காசி மீனவர்கள் தமது மீன்களை வழக்கமாக எலையைத் தாண்டிச் சென்று நைஜீரியாவில் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்குத் தற்போது ஏற்றுமதி வரி, மற்றும் சுங்க வரி போன்றவை அறவிடப்படவுள்ளன. 1960 ஆம் ஆண்டு நைஜீரியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் பெக்காசி நைஜீரியாவின் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனாலும், குடியேற்றவாதக் காலத்தில் இருந்த வரைபடம் மூலம் கமரூன் அதன் ஆட்சியைக் கோரி வந்தது. பக்காசி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் 1981 ஆம் ஆண்டில் முறுகல் நிலை ஆரம்பித்திருந்தது. 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் நைஜீரியாவுக்கு எதிராக கமரூன் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 2002 ஆம் ஆண்டில் பக்காசியின் உரிமை கமரூனுக்கு வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. நைஜீரியா இத்தீர்ப்பை நிராகரித்தது. ஆனாலும், ஐக்கிய நாடுகளின் தலையீட்டில், இரு நாடுகளும் தமக்கிடையே இருந்த வேறுபாடுகளை நீக்க கூட்டு ஆணைக்குழுவை நியமித்தது. இதனை அடுத்து 2008 ஆகத்து 14 இல் நைஜீரியா கமரூனிடம் இதன் ஆட்சிப் பொறுப்பைக் கையளித்தது. ஆனாலும், ஐந்தாண்டுகள் இப்பகுதி ஐநாவின் கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்த ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அதன் முழுப் பொறுப்பையும் கமரூன் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. சீனாவின் சாங்காய் நகரத்திலுள்ள 'உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கான நடுவம் Center for World-Class Universities) எனும் அமைப்பு, உலகின் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து பட்டியலிடுகிறது. வழங்கப்படும் கல்வித் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வமைப்பானது சாங்காய் ஜியோ தாங் பல்கலைக்கழகத்தின் (Shanghai Jiao Tong University) கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது. உத்தமம் என்ற பெயரில் இயங்கும் உலகத் தமிழ் தகவல், தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு, நேற்று வியாழக்கிழமை மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ என்னும் கருப்பொருளுடன் தொடங்கியது. இந்த மாநாட்டை மலேசியத் தொடர்புத் துறை, பல்லூடக அமைச்சர் ஷாபரி சிக் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டின் செலவுகளுக்காக அமைச்சர் 50,000 ரிங்கிட் வழங்கப்படுவதாகவும் தமது உரையில் அறிவித்தார். இணைய வளர்ச்சிக்கும், பல் ஊடக தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கும் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார். உலகின் உயர்நிலை பல்கலைக்கழகங்களோடு இணைந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வரும் உத்தமம் அமைப்பை அமைச்சர் பாராட்டினார். மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சுரைடா முகமட் டோன் வரவேற்புரை ஆற்றினார். தமதுரையில் இத்தகைய மாநாடுகளுக்கு மலாயாப் பல்கலைக் கழகம் எப்போதும் ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார். மலாயாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டான்ஸ்ரீ கவுத் ஜாஸ்மோன், மாநாட்டுத் தலைவரும், உத்தமம் அமைப்பின் நடப்புத் தலைவருமான சி.எம்.இளந்தமிழ், கான்பூரிலுள்ள இந்திய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஏழு நாடுகளிலிருந்து வருகை தரும் ஏறத்தாழ 650 பேராளர்களும் பங்கேற்பாளர்களும் கலந்து கொள்வதோடு நூறு ஆய்வுக்கட்டுரைகள் பன்னாட்டுப் பேராளர்களால் படைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ளும், பல்வேறு அமைப்புக்களின் அரங்குகளோடு கூடிய கண்காட்சியும் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகும். இந்த செய்தியை தந்தமைக்கு நன்றி. முத்துப்பாண்டி பாண்டியன் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பெருமளவில் சேதங்களோ அல்லது உயிரிழப்புக்களோ அறிவிக்கப்படவில்லை. இவற்றின் அதிர்வுகள் நியூசிலாந்தின் மத்திய பகுதிகள் முழுவதும் உணரப்பட்டது. தலைநகர் வெலிங்டனில் பணிமனைகள் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் தமது பணியிடங்களை விட்டு வெளியேறினர். மின்சாரத் தடை ஏற்பட்டது. போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டன. வணிக அங்காடிகளில் பொருட்கள் தட்டுகளில் இருந்து வீழ்ந்தன. சாளரங்கள் அதிர்ந்தன. ஆனாலும் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சாலைகளில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டன. நேற்று சனிக்கிழமை மட்டும் 10,000 பேருக்கும் அதிகமானோர் பெஸ்காபர் எல்லையைத் தாண்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த வியாழன் அன்று 7,000 பேர் அகதிகளாக குர்திஸ்தானுக்குள் வந்துள்ளனர். இவ்வளவு பெருந்தொகையானோரின் தேவைகளைக் கவனிக்க ஐக்கிய நாடுகள் நிறுவனமும், குர்திய அரசு அதிகாரிகளும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். அகதிகள் தொகை திடீரென அதிகரித்திருப்பதன் காரணம் அறியப்படாவிட்டாலும், சிரியக் குர்தியர்களுக்கும், அரசு-எதிர்ப்பு இசுலாமியப் போராளிகளுக்கும் இடையே அண்மைக் காலங்களில் மோதல்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 150,000 சிரிய அகதிகள் ஏற்கனவே ஈராக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் மோதல்கள் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து 3 மில்லியன் அகதிகள் சிரியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவின் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் குர்தியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் சிரியாவின் வட-கிழக்கே வாழ்கின்றனர். இப்பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு சிரிய அரசுப் படைகள் வெளியேறியதை அடுத்து இப்பகுதிகளை குர்திய உள்ளூராட்சிகளும், போராளிகளும் ஆட்சி செய்து வருகின்றனர். சிரியப் பிரச்சினையில் சிக்கியுள்ள குர்தியர்களை மீட்க தாம் தலையிடப்போவதாக அண்மையில் ஈராக்கியக் குர்திஸ்தானின் தலைவர் மசூட் பர்சானி அறிவித்திருந்தார். ஈராக்கியக் குர்திஸ்தான் வடக்கு ஈராக்கின் மூன்று மாகாணங்களைக் கொண்ட ஒரு சுயாட்சிப் பிரதேசம் ஆகும். இவர்களுக்குத் தனியே இராணுவ, மற்றும் காவல்துறையினர் உள்ளனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு, சேலம் ‘படைப்பாளர் பேரவை’ கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, பொதுமக்கள் பங்குபெறும் பாடல் (கவிதை) போட்டி, பெரியார், அண்ணா விருதுகளைப் பெறத் தகுதிமிக்க சான்றோர்களின் பெயர்களை பரிந்துரைக்கவும் கோரியுள்ளது. மேற்படி விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி (5 மணித்துளிகள்) விழாவன்று நிகழ்த்தப்பெறும் என்றும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், சிறந்த படைப்புக்களுக்குப் பரிசும் சான்றும் வழங்கப்பெறும் என்றும் சிறந்த பாடல்களைத் தொகுத்து நூல்வடிவமாக்க முயற்சிக்கப்படும் எனவும், அண்ணா விருதுகளைப் பெறத் தகுதிமிக்க சான்றோர்களின் பெயர்களை 30/08/2013க்குள் பரிந்துரைக்கலாம் என சேலம் படைப்பாளர் பேரவையின் செயலர் இலா. வின்சென்ட், பொருளர் ஆசிரியர் வை.ந மற்றும் தலைவர் பாவலர் எழுஞாயிறு அறிவித்துள்ளனர். போட்டி விதிமுறைகள்: பேச்சுப்போட்டித் தலைப்பு- என் பார்வையில் பெரியார், என் பார்வையில் அண்ணா என்னும் ஏதேனும் ஒரு தலைப்பில் ஒன்றைப்பற்றிப் பேசலாம். பொதுமக்கள் பங்குபெறும் பாடல் (கவிதை) போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பாடல் ஒரு பக்க அளவில் பாடலை வழங்கலாம். பாடல்களில் பெரியார், அண்ணா பற்றிய மதிப்பீடுகள் இடம் பெறவேண்டும். பாடல்கள், பெரியார், அண்ணா விருதுகளைப் பெறத் தகுதிமிக்க சான்றோர்களின் பெயர்களை 30/08/2013க்குள் பேரவை முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விடுக்க வேண்டும்.தொடர்பு முகவரி: படைப்பாளர் பேரவை, சுரதா கூடம், 64/10 காளியப்பர் குடியிருப்பு, பெரமனூர், சேலம் – 636007. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்து நிலையம் ஒன்றில் பாதையைக் கடந்து செல்ல முயன்றோரில் குறைந்தது 37 பேர் விரைவுத் தொடருந்து மோதி உயிரிழந்தனர். தமாரா கட் தொடருந்து நிலையத்தில் உள்ளூர் தொடருந்து ஒன்றில் இருந்து இறங்கி பாதையைக் கடந்து சென்றோரே இவ்வாறு உயிரிழந்தனர். இவர்கள் சகார்சா மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில் விழா ஒன்றில் பங்கு பற்றுவதற்காக சென்று கொண்டிருந்தனர். இச்சம்பவம் இன்று காலை உள்ளூர் நேரம் 08:40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இக்கோர விபத்தை அடுத்து அங்கிருந்த ஏனையோர் தொடருந்துச் சாரதியைத் தாக்கி தொடருந்தின் இரண்டு பெட்டிகளைத் தீ வைத்துக் கொளுத்தினர். இச்சம்பவத்தை அடுத்து மீட்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் அவ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உடல்கள் சிதறிப் போனதால் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்பதைக் கணக்கெடுக்க முடியவில்லை என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 1953 ஆகத்து மாதத்தில் ஈரானியப் பிரதமர் முகம்மது மொசாடெக்கின் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவப் புரட்சியில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனம் சிஐஏ முக்கிய பங்கு வகித்ததாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. பிரித்தானியரின் வசமிருந்த ஈரானின் எண்ணெய் வளங்களை ஈரான் தேசிய மயமாக்க முடிவு செய்ததை அடுத்தே இந்த ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது. இராணுவப் புரட்சியின் 60வது ஆண்டு நிறைவையொட்டி இப்புரட்சி பற்றிய சிஐஏ இன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. "அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கிணங்க சிஐஏயின் நேரடி அறிவுறுத்தலின் படி இராணுவப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது என ஆவணம் தெரிவிக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னரான தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அன்றைய ஈரானிய எண்ணெயிலேயே தங்கியுள்ளது என பிரித்தானியர் நம்பியிருந்தனர். ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்து ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க அரசுச் செயலாளர் மடெலின் ஆல்பிறைட், 2009 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா ஆகியோர் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனாலும், இப்பங்களிப்புக் குறித்து சிஐஏ நிறுவனம் மறுப்புத் தெரிவித்து வந்திருந்தது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜோர்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் இத்தகவல்களைப் பெற்றிருக்கிறது. 1951 ஆம் ஆண்டில் மொசாடெக் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத் தலைவரானார். அவர் பதவிக்கு வந்ததும் எண்ணெய் வளத்தை அரசுடைமையாக்க முடிவு செய்தார். அன்றைய பனிப்போர்க் காலத்தில் இது சோவியத் ஒன்றியத்தின் பலத்தை மத்திய கிழக்கில் அதிகரிக்கச் செய்யும் என மேற்கு நாடுகள் கருதின. இதனை அடுத்து மொட்சாடெக்குக்கு எதிரான கருத்துகள் ஈரானிய, அமெரிக்க ஊடகங்களில் பரப்பப்பட்டன. இப்புறக்கோளில் இருந்து வரும் ஒளியை கெப்லர் வானியல் தொலைக்காட்டி மூலம் வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். இந்த ஒளி புறக்கோளின் மேற்பரப்பில் இருந்து வெளியேறியதாக இருக்கலாம், அல்லது அதன் மீது பட்டுத் தெறித்து வந்த கதிர்களாகவும் இருக்கலாம் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட கெப்லர் விண்கலத்தின் இரண்டு சில்லுகள் தற்போது பழுதடைந்துள்ளதாக நாசா இவ்வாரம் அறிவித்திருந்தது. இதனால் இத்தொலைக்காட்டி புதிய புறக்கோள்களைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும் என நாசா கூறியுள்ளது. இதனைத் திருத்துவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்விண்கலம் சேகரித்த ஒளிக்கீற்றுகளை வானியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 25 வயதாகும் பிராட்லி மானிங் மீது வேவு பார்த்தமை உட்பட 20 குற்றச்சாட்டுகள் கடந்த சூலை மாதத்தில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பிராட்லி எழுதிய அறிக்கை ஒன்றை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் படித்தார் நமது நாட்டின் நன்மைக்காகவே, அதன் மீது அன்பு கொண்டே" இதனைத் தான் செய்ததாகத் தெரிவித்தார். பிராட்லியின் ஆதரவாளர்கள் பிராட்லியை மன்னிக்கும் படி அரசுத்தலைவர் பராக் ஒபாமாவைக் கேட்டுக் கொண்டுள்ளனர். பிராட்லி ஏறத்தாழ 7 முதல் 10 ஆண்டுகளில் நன்னடத்தை விடுதலை பெறுவார் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்தார். அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் 60 ஆண்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வாதாடியிருந்தனர். ஆனால், 35 ஆண்டுத் தண்டனை ஒரு முக்கிய வெற்றி என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. விக்கிலீக்சிற்கு ஆவணங்களைக் கசிந்த சிப்பாய் சித்திரவதைக்கு உள்ளாவதாகக் குற்றச்சாட்டு டிசம்பர் 26, 2010 விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க் சூன் 4, 2013 அல்தான்தூயா (27) என்ற மொங்கோலிய மாடல் அழகி 2006 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல், இராணுவம் பயன்படுத்தும் சி-4 ரக வெடிமருந்துகளால் வெடி வைத்துச் சிதறல் செய்யப்பட்ட பின்னர், ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக மலேசியப் பிரபலங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் இன்ஸ்பெக்டர் அசிலா அட்ரி, முன்னாள் காபரல் சிருள் அசார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 2009 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்களை முன்வைக்காததால் அவ்விருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். அரசுத்தரப்பு இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளது. கடந்த வியாழன் அன்று கோமா நகர் மீது போராளிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதலை தாம் நடத்தியதாக ஐநா பேச்சாளர் தெரிவித்தார். போராளிகளின் தாக்குதலில் ஒரு பெண், மற்றும் சிறுவர்கள் உட்பட ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த எறிகணைத் தாக்குதல் ருவாண்டாவின் பகுதியில் இருந்தே வந்ததாக கொங்கோ தகவல்துறை அமைச்சர் லாம்பர்ட் மெண்டே தெரிவித்துள்ளார். ருவாண்டாவின் எல்லையில் கோமா நகரம் அமைந்துள்ளது. கோமா நகர் மீது தாக்குதல் தாங்கள் தாக்குதல் தடத்தவில்லை எனத் தெரிவித்துள்ள எம்23 போராளிகள், தாக்குதல்களுக்கு இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டினர். போராளிகளின் ஆயுதங்களைக் களைந்து அவர்களைக் கலைப்பதே ஐக்கிய நாடுகளின் படையின் நோக்கமாகும். ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள 18,000 ஐநா அமைதிப் படையினருக்கு ஆதரவாக மேலும் 3,000 பேர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாண்டு உகாண்டாவில் இடம்பெறவிருந்த அமைதிப் பேச்சுக்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை எறிந்து வன்முறைகளில் ஈடுபட்டதை அடுத்து அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். 75 பேர் வரை கைது செய்யப்பட்டனர். ரோமா இனத்தவருக்கு எதிராக நடத்தப்படவிருந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து பன்னாட்டு மன்னிப்பகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ரோமா மக்களைப் பாதுகாக்குமாறு அரசை மன்னிப்பகம் கேட்டிருந்தது. செக் சமூகத்தில் ரோமா மக்களே மிகவும் வறுமையானவர்கள். 250,000 முதல் 300,000 ரோமா இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். தமது இனத்தவர் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக ரோமா இனத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரோமா இனத்தவருக்கு ஆதரவு தெரிவித்து மனித உரிமை ஆர்வலர்களும் தலைநகர் பிராகில் ஊர்வலங்களை நடத்தினர். 2010 ஆம் ஆண்டில், வித்கோவ் நகரில் ரோமா இனத்துக் குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறு குழந்தை ஒன்று பலத்த எரிகாயங்களுக்கு உள்ளானது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ரோமா ஜிப்சிகளை பிரான்ஸ் ருமேனியாவுக்குத் திருப்பி அனுப்புகிறது ஆகத்து 20, 2012 ரோமா மக்களை வெளியேற்றுவதற்கு பிரான்சு மீது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை செப்டம்பர் 15, 2012 ரோமா மக்களுக்கு எதிராக பல்கேரியர்கள் ஆர்ப்பாட்டம் அக்டோபர், 2011 ஐரோப்பிய உரோமா மக்கள் இந்திய தலித்துகளின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிப்பு டிசம்பர் 10, 2012 பர்மாவின் வடமேற்கே இடம்பெற்ற வன்முறைகளில் முஸ்லிம் இனத்தவரின் வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பர்மாவின் சாகாயிங் பிரதேசத்தில் கந்த்பாலு நகருக்கருகில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மதக் கும்பல் ஒன்று முஸ்லிம்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது. முஸ்லிம் நபர் ஒருவர் பெண் ஒருத்தியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கிளம்பிய வதந்தியை அடுத்தே பௌத்தர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமாக 42 வீடுகளும், 15 கடைகளும் சனிக்கிழமை அன்று சேதமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எவரும் காயமடையவில்லை. பர்மாவில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினப் பௌத்தர்களின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் இடம்பெற்ற வன்முறைகளில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 140,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ராக்கைன் மாநிலத்துள் புகுந்து தமது நிலங்களை அபகரித்துள்ளதாக பௌத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாண்டு பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் லைபீரிய மாணவர்கள் எவரும் சித்தியடையாதது குறித்து அந்நாட்டின் கல்வி அமைச்சர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். லைபீரியப் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வு சோதனை எழுதிய அனைத்து 25,000 மாணவர்களும் சோதனையில் தோல்வியடைந்தனர். மாணவர்களிடம் ஆர்வம் இல்லை, மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு இல்லை என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லைபீரியாவின் பள்ளிகள் அடிப்படைக் கல்விக்கான வசதிகள் எதுவும் கிடையாது, போதியளவு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவு என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், சோதனை எழுதிய எவரும் சித்தியடையாமல் போனது இம்முறையே முதற் தடவையாக நடந்துள்ளது. அடுத்த மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் போது முதலாண்டு மாணவர்கள் எவரும் அங்கு இருக்க மாட்டார்கள். லைபீரியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்நாட்டுப் போர் முடிவடைந்து தற்போது அமைதி திரும்பியுள்ளது. யாழ் பொது நூலகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் ஆளுனர், மற்றும் அரச அதிகாரிகளை அவர் சந்தித்தார். நவி பிள்­ளையின் கவ­னத்தை ஈர்க்கும் முக­மாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகு­தி­க­ளிலும் அதற்கு வெளி­யேயும் காணாமல் போன­வர்கள் தொடர்­பான நியா­ய­மான விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் அர­சியல் கைதிகள் மற்றும் புனர்­வாழ்வு முகாம்­களில் தடுப்­பி­லுள்­ள­வர்­களையும் விடு­விக்­கக்­கோ­ரியும் நேற்று யாழ்.பொது நூல­கத்­திற்கு அருகில் கவ­ன­ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடை­பெற்­றது. இக் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் சுமார் ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான காணாமல் போனோரின் உற­வி­னர்கள் இன, மத, பேத­மின்றி மூவின மக்­களும் ஒன்றுதிரண்டு கலந்து கொண்­டனர். இலங்கையில் காணாமல் போனவர்களை தேடும் உறவினர்களின் அமைப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஆகியன இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது உற­வு­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி கதறி அழுது கோஷங்­களை எழுப்­பினர். காணா­மல்­போன தமது பெற்­றோரை மீட்­டுத்­த­ரு­மாறு குழந்­தை­களும் சிறு­வர்­களும் தந்­தை­யி­னதும் தாயி­னதும் படங்­களை ஏந்­தி­ய­வாறு அழுது புலம்பி கோஷங்­களை எழுப்­பினர். பொது நூல­கத்­திற்கு முன்னால் ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­ற­பொ­ழுது வட­மா­காண ஆளு­நரைச் சந்­தித்த நவ­நீ­தம்­பிள்ளையை இவ்வார்ப்­பாட்டம் நடை­பெற்ற இடத்­திற்குச் செல்­லாது மாற்று வீதி­யூ­டாக அவ்­வி­டத்­தி­னை­விட்டுக் கூட்டிச் சென்றுள்ளனர். நூலகத்தை நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து விட்டனர். முள்­ளி­வாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் கேப்­பாப்­பி­லவு பகு­தி­க­ளுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட நவ­நீ­தம்­பிள்ளை அந்­தப் ­ப­குதி மக்­களின் குறை­பா­டு­களை கேட்­ட­றிந்­து­கொண்டார் காணா­மல்­போனோர் விவ­காரம் உட்­பட யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­கள் தொடர்பில் ஆழ­மாகக் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எனது முழு அதி­கா­ரத்­தையும் பயன்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்ட உங்­க­ளது ஆதங்­கங்கள் எனக்கு புரி­கின்­றது என்று நவ­நீ­தம்­ பிள்ளை தெரி­வித்­துள்ளார். நவநீதம்பிள்ளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இரு மாவட்டங்களிலும் படையினரை எங்கும் காணமுடியாத நிலை இன்று காணப்பட்டதாக தமிழ்வின் இணையதள தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏ-35வீதியூடாக அம்மையார் பயணித்திருந்த நிலையில் மேற்படி வீதியில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அனைத்தும் இன்று வெறுமையாக காணப்பட்டதுடன் சுதந்திரபுரம் பகுதியில் சூட்டுத் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்திவிட்டு படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய இடத்திலிருந்த பெருமளவு வாகனங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உயரமான வேலிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது மக்கள் மீது வேதியியல் தாக்­­­­­­­கு­­­­­­­தல் நடத்தியமையைக் கண்டிக்கும் முகமாக சிரியா மீது தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகவிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் அறிவித்துள்ளார். ஆனாலும், இது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். தம்மீதான குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ள சிரியா, எவ்விதமான தாக்குதலையும் எதிர் கொள்ளத் தம் நாடு தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளது. சிரியா மீது நடத்­­­தப்­­­படும் எந்தத் தாக்­­­கு­­­த­­­லும் அவ்­­­வட்­­­டா­­­ரத்­­­தில் பாதகமான விளை­­­வு­­­களை ஏற்­­­படுத்­­­தும் என்று சிரி­­­யா­­­வின் நட்பு நாடு­­­க­­­ளான உருசியா, ஈரான், மற்றும் சீனா ஆகியன எச்­­­ச­­­ரித்­­­துள்­­­ளன. முன்னதாக கடந்த ஆகத்து 21 இல் நடைபெற்றதாகக் கூறப்படும் வேதித் தாக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு சிரியாவில் தமது விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தியது. இக்குழுவின் அறிக்கை சனிக்கிழமை அன்று தமக்குக் கிடைக்கும் என்றும் அதன் பின்னரே முடிவெடுக்கப்படும் என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் அறிவித்துள்ளார். சிரியப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஏனைய மேற்குலக நாடுகள் தமது அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றன. பொதுமக்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளுக்கு ஐநா பாதுகாப்புச் சபை அங்கீகாரம் தரவேண்டும் என பிரித்தானியா கேட்டுக் கொண்டுள்ளது. இராணுவத் தலையீடு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று கூடி ஆராயவுள்ளது. இராணுவத் தலையீடு குறித்து பிரான்சும் ஆராய்ந்து வருகிறது. ஆனாலும், சிரியாவில் தலைதூக்கியுள்ள வன்முறைகளைத் தற்காலிகமாக நிறுத்தினால் அரசியல் தீர்வு சாத்தியமானது என பிரெஞ்சுத் தலைவர் பிரான்சுவா ஒலாண்டே கூறியுள்ளார். இதற்கிடையில், சிடியா மீது வான் தாக்குதல் நடத்தப்படுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என சீனாவின் அரசுப் பத்திரிகையான சைனா டெய்லி எழுதியுள்ளது. அதேப் போன்று, சிரியா மீதான இராணுவத் தலையீட்டைத் தாம் எதிர்க்கப்போவதாக உருசியாவும் அறிவித்துள்ளது. நடுநிலக் கடலின் கிழக்குப் பகுதிக்கு உருசியா தனது எதிர்-நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும், போர்க்க்கப்பல் ஒன்றையும் அனுப்பியுள்ளது. பிரித்தானியா தனது ஆறு போர் விமானங்களை சைப்பிரசு நாட்டுக்கு அனுப்பியுள்ளது. தமது தளங்களைப் பாதுகாக்கவே தாம் இவற்றை அனுப்பியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இராணுவத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக தனது முதலாவது செயற்கைக் கோளை இந்தியா இன்று அதிகாலையில் விண்ணுக்கு ஏவியுள்ளது. ஜிசாட்-7 (GSAT-7) என அழைக்கப்படும் இந்த தகவல்-செயற்கைக்கோளை இந்திய வான் ஆய்வு மையம் (இஸ்ரோ) பிரெஞ்சு கினியில் அமைந்துள்ள கோரோ வான்தளத்தில் இருந்து ஏவியது. செயற்கைக்கோள் ஏவப்படும் காட்சி இந்தியத் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் இச்செயற்கைக் கோள் சுற்றுப்பாதை ஒன்றில் வைக்கப்படும் என இசுரோ தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றத்தையும், உளவுத் திறனையும் இச்செயற்கைக்கோள் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளுக்கு" இச்செயற்கைக் கோள் முக்கியப் பங்காற்றும் என இசுரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா பல-பில்லியன் டாலர் செலவில் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணிற்கு ஏவியுள்ளது. அதே வேளையில், செவ்வாய்க் கோளுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருகின்றது. போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்தத் தவறினால் பன்னாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக நவநீதம் பிள்ளை தெரிவித்தார். காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழு பற்றிய மேலதிக தகவல்களை அரசாங்கத்திடம் கேட்டறிந்தேன். கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட இது போன்ற ஆணைக்குழுக்களை விட புதிய ஆணைக்குழு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளேன். கடந்த ஆண்டுகளில் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் பற்றிய பல முறைப்பாடுகள் கிடைத்தன. அவை தொடர்பான விடயத்தில் இருந்தும் தவறி விட மாட்டோம் என்றார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றார். போரின் போது பிடிபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தினார். இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர், ஏனைய சார்க் நாடுகளில் உள்ளது போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையில் தான் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பயணத்தின்போது, தன்னிடம் பேசிய சில மனித உரிமை ஆர்வலர்கள் பிற்பாடு காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் தொல்லைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானதாக குற்றச்சாட்டுகள் வந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார். "என்னை இங்கே வரவழைத்துவிட்டு, இப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்யக்கூடாது. இலங்கையில் ஆட்கள் கண்காணிக்கப்படுவதென்பதும் துன்புறுத்தப்படுவதென்பதும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இங்கே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களது குரல்களை ஒரேயடியாக ஒடுக்கிவிடும் விதமான காரியங்களும் நடக்கின்றன." மேலும் தனது இந்தியத் தமிழ்ப் பாரம்பரியத்தை வைத்து தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் கருவியென இலங்கையிலுள்ள அமைச்சர்கள், ஊடகங்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் கொள்கைப்பரப்பாளர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருந்து எந்த கௌரவத்தையும் எதிர்பார்க்க முடியாது என நவநீதம் பிள்ளை கூறினார். போரின் முடிவு ஒரு புதிய துடிப்பான சகலரையும் அணைத்துப்போகும் அரசொன்றை உருவாக்க வாய்ப்பை வழங்கிய போதும் இலங்கையில் எதேச்சதிகார வழியில் செல்வதற்கான அடையாளங்களைக் காணமுடிகின்றது' என அவர் கூறினார். ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம் ஆகத்து 28, 2013 இமாலயப் பகுதியில் விமான விபத்தொன்றின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர் ஒருவரின் உடல் 45 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் என்பவரின் உடல் இமாச்சலப் பிரதேசத்தின் வடக்கே டாக்கா பனியாற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலுடன் காணப்பட்ட அடையாளத் தட்டு, காப்புறுதிப் பத்திரம், கடிதம் ஒன்று ஆகியவை மூலம் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 1968 பெப்ரவரி 7 இல் அந்தோனொவ்-12 என்ற இராணுவத்தினரின் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 98 இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களுடன் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தையும், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மிரையும் இணைக்கும் ரோட்டாங் வழியில் விமானத்தில் இருந்து கடைசித் தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இவ்விமானத்தின் சிதைந்த பகுதிகள் 2003 ஆண்டில் டாக்கா பனியாற்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் இடம்பெற்ற தேடுதல்களில் 4 உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. டாக்கா பனியாறு அண்ணளவாக 17,000-18,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் உடல்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆகத்து 16 இல் ஆரம்பமாயின. விமானத்தின் கருப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ள முசாரப், இவை அனைத்து தன்னை அரசியல் ரீதியாகப் பழி வாங்கு நடவடிக்கை எனக் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் இசுலாமாபாதில் செம்மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்துல் ரசீத் காசி என்ற மதகுரு கொல்லப்பட்டமை தற்போது முசாரப் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாக்கித்தானிய இராணுவத்தினரின் இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1999 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியின் மூலம் பிரதமர் நவாஸ் செரீபின் ஆட்சியைக் கலைத்து அரசுத்தலைவர் ஆனார். ஒன்பதாண்டுகள் ஆட்சியில் இருந்த இவர் தேர்தலில் தோற்ற பின்னர் நாட்டை விட்டு வெளியேறி துபாய், மற்றும் லண்டனில் தங்கியிருந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக மீண்டும் நாடு திரும்பினார், ஆனாலும், இவர் மீது பல தேசத்துரோகக் குற்றங்கள் சுமத்தப்பட்டு தேர்தலில் பங்குபற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டார். கியூபாவில் இருந்து அமெரிக்கா வரை சுறாமீன்களுக்கு எதிரான காப்பு வலை எதுவும் இன்றி நீந்திக் கடந்து சாதமை புரிந்தார் டயானா நியாத் என்ற அமெரிக்கப் பெண். சனிக்கிழமை காலையில் கியூபா தலைநகர் அவானாவில் இருந்து புறப்பட்டு 177 கிமீ தூரத்தை 53 மணித்தியாலங்களில் நீந்திக் கடந்து திங்கட்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2:00 மணிக்கு புளோரிடாக் கரையை அடைந்தார் 64 வயதான டயானா. இவருக்கு உதவியாக 35 பேரடங்கிய குழு ஒன்று படகுகளில் அவருடன் கூடச் சென்றது. 1978-ம் ஆண்டு முதல் 4 முறை இம்முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைந்தார் டயானா. 1978 ஒரு முறையும், 2011 இல் இரண்டு முறையும், 2012 இல் ஒரு முறையும் தோல்வியடைந்தார். ஆனாலும், தனது வயதைக் கருத்தில் கொள்ளாமல் முயற்சியைக் கைவிடாமல் 5-வது முறையாக நீந்தி வெற்றி பெற்றுள்ளார். கடலில் நீந்துகிறபோது ஜெலி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிக்கான் முகமூடியை இவர் அணிந்து கொண்டார். அத்துடன் சுறாமீன்களில் இருந்து தப்புவதற்காக இவரைச் சுற்றி மெலிதான மின்புலம் ஒன்றைப் பரப்பும் கருவி ஒன்றை இவரது குழுவினர் தம்முடன் எடுத்துச் சென்றனர். இவர் எந்த நேரத்திலும் இவருக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற படகைத் தொட முடியாது என்பது நீச்சல் விதிமுறையாகும். ஆனாலும், நீச்சல்காரருக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. 1997 ஆம் ஆண்டில் ஆத்திரேலியரான சூசி மரோனி என்பவர் சுறாமீன் பாதுகாப்பு வலையின் உதவியுடன் வெற்றிகரமாக நீந்திக் கடந்திருந்தார். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தன்­னாட்சி அதி­காரம் ஒன்­றுக்­காக குரல் கொடுக்கும் அதே­வேளை, ஆட்சி அதி­கா­ரத்தை பகிர்ந்­து­கொள்­வ­தற்­கான அர­சியல் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுப்போம். தமிழ் மக்­களை ஆளுகின்ற உரிமை கொழும்­பி­லி­ருக்கும் அர­சாங்­கத்­தி­ட­மன்றி அம்­மக்­க­ளி­டமே இருக்­கின்­றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்மாதம் 21 ஆம் நாள் நடைபெறவிருக்கும் வடமாகாண சபைத் தேர்தலை ஒட்டி நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்கள் வரு­மாறு: 30 ஆண்டுப் பகையும் போரும் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு பகு­தியை பேர­ழி­வுக்கு உள்­ளாக்­கி­ய­தோடு தமிழ் மக்­க­ளையும் கதி­யற்­ற­வர்­க­ளாக்­கி­யது. இதனால் 10 லட்­சத்­துக்கும் மேற்­பட்ட தமி­ழர்கள் பாது­காப்பு தேடி ஏனைய நாடு­க­ளுக்குத் தப்பிச் செல்ல மேலும் 5 லட்சம் தமி­ழர்கள் நாட்­டுக்­குள்­ளேயே இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். ஒரு லட்­சத்து 50 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட தமி­ழர்கள் மோதல் நில­விய ஆண்­டு­களில் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இரா­ணுவத் தாக்­கு­தலின் இறு­திக்­கட்­டத்தில் எழுபதாயிரத்திற்கும் மேற்­பட்ட மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 5 லட்­சத்­துக்கும் மேற்­பட்ட தமிழர்கள் வீடற்­ற­வர்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இன்­னமும் மீள் குடி­யேற்றம் நிறை­வ­டை­யாமல் உள்­ளது. தமிழ் மக்கள் ஒரு தனிச்­சி­றப்பு மிக்க தேசிய இன­மாகும். புவி­யியல் ரீதி­யாக பிணைக்­கப்­பட்­டுள்­ளதும் தமிழ் பேசும் மக்களைப் மக்­களை பெரும்­பான்­மை­யி­ன­ராக கொண்­ட­து­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களே தமிழ் பேசும் மக்­களின் வரலாற்று ரீதி­யான வாழ்­வி­ட­மாகும். தமிழ் மக்கள் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள். தமிழ் பேசும் முஸ்லிம்மக்களுக்கும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய முறையில் சமஷ்டிக் கட்­ட­மைப்­பொன்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் எனும் ஓர் அல­கி­லான அதி­காரப் பகிர்வு ஏற்­பா­டுகள் நிறு­வப்­பட வேண்டும். அதி­காரப் பகிர்­வா­னது காணி, சட்டம் ஒழுங்கு, சுகா­தாரம், கல்வி ஆகி­யன உள்­ளிட்ட சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வளங்கள் மற்றும் நிதி அதி­கா­ரங்கள் ஆகி­ய­வற்றை கொண்­டி­ருக்க வேண்டும். வடக்கு, கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரை அகற்­று­வதன் மூலம் 1983இல் நில­விய யுத்­தத்­துக்கு முந்­திய சூழ்­நிலை மீண்டும் ஏற்­படும் வகையில் இரா­ணுவப் பிர­சன்­ன­மற்ற நிலைமை இருக்க வேண்டும். இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு குடி­யேற்­றப்­பட்டு வீடுகள் வழங்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது வாழ்­வா­தாரம் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இறுதிக் கட்ட யுத்­தத்தில் சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மானச் சட்­டங்­களை மீறி­யமை தொடர்பில் சர்­வ­தேச சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட்டு உண்­மையும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதியும் நிலை­நாட்­டப்­ப­டு­வ­தோடு இழப்­பீ­டுகள் அடங்­க­லான நிவா­ர­ணங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். குற்­றச்­சாட்­டுக்­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் விரைவாக விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தோடு ஏனை­ய­வர்­க­ளுக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்டும். காணா­மல்­போன ஆயி­ரக்கணக்­­கா­ன­வர்கள் தொடர்­பாக இறுதி முடிவு எட்­டப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்­கப்­பட வேண்டும். நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டிய தமி­ழர்கள் நாடு­தி­ரும்­பு­வ­தற்­கான சூழல் உரு­வாக்­குதல் அவ­சியம். இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை உரு­வாக்­குதல் அடங்­க­லாக வடக்கு, கிழக்கின் அபி­வி­ருத்­திக்­கான விரி­வா­ன­தொரு நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அர­சாங்­கத்­தி­னதும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­னதும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் முனைப்­பான ஆதரவுடன் மேற்­கொள்­ளப்­படும். மத்­திய அர­சாங்­கத்­திலும் அதன் முக­வ­ரான ஆளு­ந­ரி­டமும் அதி­காரம் குவிந்து கிடக்­கி­றது என்­பதால் இலங்கை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் மீறப்­பட்­டுள்­ளது. நம்மில் நாம் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்மை நாமே ஆளு­கின்ற அர­சாங்கம் எமக்கு வேண்­டு­மென்­பது முக்­கி­ய­மாகும். வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தன்­னாட்சி அர­சாங்­கத்­­துக்­காக குரல்­கொ­டுப்­பதில் சிறந்த பங்­கொன்றை வகிப்­ப­தற்கே எங்­களால் இயன்ற அனைத்­தையும் செய்­கின்ற அதே­வேளை ஆட்சி அதி­கா­ரத்தை பகிர்ந்து கொள்­வ­தற்­கான எமது காத்­தி­ர­மான அர­சியல் பேச்­சு­வார்த்­தை­களை நாம் முன்­னெ­டுப்போம். வடக்கு, கிழக்கில் காணிகள் மீதான கட்­டுப்­பாட்டை மாகாண நிர்­வாகம் தக்­க­வைத்­துக்­கொள்­வதில் தமிழ் கூட்­ட­மைப்பு பற்­று­றுதி கொண்­டுள்­ளது. இதேபோல் மாகாண சபை­யினால் பணிப்­புரை விடுக்­கப்­ப­டு­கின்ற ஒரு பொலிஸ் படையே வடக்கு கிழக்­குக்­கான மிகவும் பயன் மிக்க ஒரு பொலிஸ் படை­யாக அமை­யு­மென்று கூட்­ட­மைப்பு நம்­பு­கி­றது. * தன்னாட்சி அதிகாரத்திற்கு குரல் கொடுக்கும் அதேவேளை பேச்சுவார்த்தைக்கும் தயார் வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு, வீரகேசரி, செப்டெம்பர் 4, 2013 இத்திரைப்படத்தில் 1969 மே மாதத்தில் நடந்த இனக்கலவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 200 பேர் கொல்லப்பட்ட அந்தக் கலவரத்திற்கு சீன இனத்தவரே காரணம் என்பது போன்ற கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 1969 மே 13 முதல் சூலை 31 வரை கோலாலம்பூரிலும், ஏனைய பகுதிகளிலும் மலாய் இனத்தவருக்கும், சீன இனத்தவருக்கும் இடையில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் அதிகாரபூர்வ அறிக்கைகளின் படி 196 பேர் இறந்துள்ளனர். ஆனாலும், இறந்தோர் எண்ணிக்கை இதனை விட அதிகம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தண்டா புத்ரா’ படத்தை திரையிட வேண்டாம் என பினாங்கு, செபராங் பிராய் ஊராட்சி மன்றங்கள் அம்மாநில அரசாங்கத்தில் கீழுள்ள திரைப்பட அரங்குகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இங்கு சீன இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இத்திரைப்படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் மலேசியாவின் சீன இளைஞர்கள் மலேசிய நாட்டின் கொடி ஏற்றப்பட்டிருக்கும் கம்பத்தின் மீது சிறுநீர் கழிப்பதுபோல காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ஃபினாஸ் எனும் மலேசியத் தேசியத் திரைப்படக் கழகத்தின் அனுமதி இல்லாமல் திரையரங்குகள் இத்திரைப்படத்தைத் திரையிடுவதை ரத்துச் செய்தால், அவற்றின் அனுமதிகள் ரத்துச் செய்யப்படலாம் என இத்திரைப்படத்தின் இயக்குநர் சுகாய்மி பாபா தெரிவித்துள்ளார். தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் 61 பைசாவும், மானியம் இல்லாத சமையல் எரிவாயு 59 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை 50 ரூபாயும், மண்ணெண்ணை விலை 2 ரூபாயும் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மாறாக, மத்திய அரசு நியாயப்படுத்துகிறது. இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை திரும்ப பெற வேண்டும்; உத்தேசித்துள்ள விலை உயர்வுகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (செப்.5) கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் நடைபெற்றது. கிண்டி ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் திடீரென்று ரயில்வே பாதைக்கு சென்று மறியல் செய்தனர். இதனால் கடற்கரையிலிருந்து தாம்பரம் மார்க்கமாக சென்ற ரயில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் க. பீம்ராவ் எம்எல்ஏ தலைமை தாங்கினர். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா தனது புதிய விண்கலம் ஒன்றை நிலவை நோக்கி ஏவியுள்ளது. கோள்களுக்கான தனது எதிர்காலத் திட்டங்களில் பயன்படுத்தவென நாசா திட்டமிட்டுள்ள புதிய லேசர் தகவற்தொடர்பு அமைப்பு ஒன்றையும் லாடீ சோதிக்கவுள்ளது. சந்திரனுக்கு வளிமண்டலம் இல்லை என நினைத்திருப்பவர்கள் இத்திட்டம் குறித்து வியப்படையலாம் எனக் குறிப்பிட்டுள்ள இத்திட்டத்தின் வானியலாளர் சேரா நோபிள் நிலவுக்கும் வளிமண்டலம் உள்ளது, ஆனால் அது மிக மிக மெலிதானது,” எனக் குறிப்பிட்டார். நிலவின் வளிமண்டலத்தில் மிகக்குறைந்த அளவு மூலக்கூறுகளே உள்ளன, இவையும் ஒன்றுக்கொன்று தொலைவில் உள்ளதால் அவை ஒன்றுடன் ஒன்று மோதித் தாக்கமடைவதில்லை. “இது புறவளிமண்டலத்தைப் (exosphere) போன்றது. பூமிக்கும் புறவளிமண்டலம் உள்ளது. ஆனால் அது பன்னாட்டு விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவரும் தூரத்தை விட வெளியில் உள்ளது. ஆனால் நிலவில் இத்தகைய புறவளிமண்டலம் அதன் மேற்பரப்பிலேயே காணப்படுகின்றது எனக் கூறினார் சேரா நோபிள். லாடீ நிலவின் மேற்பரப்பில் இருந்து 20 கிமீ உயரத்தில் இருந்து தனது ஆய்வுகளை நடத்தும். இத்திட்டம் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும். திட்ட முடிவில் நிலவின் மேற்பரப்புடன் அது மோதவிடப்படும். லாடீ (LADEE) என்பது Lunar Atmosphere and Dust Environment Explorer (நிலவின் வளிமண்டல மற்றும் தூசுச் சூழல் ஆய்வுக்கலம்) என்பதன் சுருக்கமாகும். ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (49) ஆப்கானிஸ்தானில் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானித்தானைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியான சுஷ்மிதாவின் சமூக நலப் பணிகளை தலிபான்கள் சகித்துக் கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் தான் கொல்கத்தாவில் ஈத் பண்டிகையை கொண்டாடி விட்டு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கரானாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களைக் கட்டிப் போட்டனர். சுஷ்மிதா பானர்ஜியை சுட்டுக் கொன்றனர். இக்கொலை மாநிலங்களவை வெள்ளியன்று கூடிய போது கடுமையாக எதிரொலித்தது. மேற்கு வங்க உறுப்பினர்களும், இதர உறுப்பினர்களும் இதை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். இம்முறை தேர்தலில், பொருளாதார மந்தநிலை, தொழிற்கட்சி அரசு அறிமுகப்படுத்திய கரிம-வரி, சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகள் பிரச்சினை ஆகியன முக்கிய இடத்தைப் பிடித்தன. "கரிம வரியை அகற்றுதல், படகு அகதிகளை நிறுத்துதல் ஆகிய பிரச்சினைகளுக்கு தாம் முன்னுரிமை கொடுக்கப்போவதாக அபோட் அறிவித்துள்ளார். பொருளாதாரம், மற்றும் சட்டவியலில் ஒக்சுபோர்ட் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற அபோட் அரசியலில் நுழைய முன்னர் ரோமன் கத்தோலிக்க மதகுருவாகப் பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் 14 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆத்திரேலியாவில் வாக்களிப்பு கட்டாயம் ஆகும். பசிபிக் பெருங்கடலின் அடியில் உலகின் மிகப் பெரும் எரிமலை ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். சப்பானின் கிழக்கே 1,600 கிமீ தூரத்தில் ஷாட்ஸ்கி ரைஸ் என்ற கடலுக்கடியில் உள்ள தீபகற்பத்தில் கடலுக்கடியில் 2 கிமீ தூரத்தில் தாமு மாசிப் அமைந்துள்ளது. இது ஹவாயில் உள்ள மோனா லோவா எரிமலையை விடப் பெரியதாகும். தாமு மாசிப் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் வாழ்வுக் காலத்தில் இது எப்போதும் கடல் மட்டத்துக்கு மேல் வந்ததில்லை என அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக அறிவியலாளர் வில்லியம் சேஜர் கூறுகிறார். அத்துடன் எதிர்காலத்திலும் இவ்வெரிமலை வெடிக்கும் என அறிவியலாளர்கள் நம்பவில்லை. 2020 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ நகரம் இஸ்தான்புல்லையும் மாட்ரிட்டையும் தோற்கடித்து தகுதி பெற்றது. அர்ஜெண்டினா தலைநகர் புவனெசு அயரசில் பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு உறுப்பினர்களுக்கிடையே நடந்த வாக்கெடுப்பின் இறுதிச்சுற்றில் இஸ்தான்புல்லை 60-36 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 1964ம் ஆண்டும் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆசியாவில் இரண்டாவது முறையாக போட்டியை நடத்தும் நகரம் டோக்கியோவாகும். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த போட்டியிட்டாலும் அவை முறையே இலண்டனுக்கும் ரியோ டி ஜெனிரோ நகருக்கும் சென்றன. இறுதிச்சுற்று வாக்குப்பதிவின் போது நிப்பானியப் பிரதமர் புக்குசிமா அணு உலை விபத்தால் டோக்கியோ பாதிக்கப்படவில்லை என்றும் இனிமேலும் பாதிக்கப்படாது என்றும் உறுதி கூறியதும் காரணமாகும். முதல் சுற்றில் மாட்ரிட் வெளியேறியது, அந்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமாக உள்ளதும் புட்ரோ நடவடிக்கையில் ஏற்பட்ட முறைகேடும் அதற்கு காரணமாகும், டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இலண்டன் மாநகர மேயர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லும் மாட்ரிட்டும் மின்னணு வாக்குப்பதிவில் சமமான வாக்குகள் பெற்றதால் நடந்த இரண்டாவது வாக்குப்பதிவில் 49-45 என்ற வாக்குகள் கணக்கில் இஸ்தான்புல் வெற்றிபெற்றது. நோர்வேயில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி தோல்வியை ஒப்புக் கொண்டதை அடுத்து பழமைவாதக் கட்சியின் தலைவர் எர்னா சோல்பேர்க் புதிய அரசை அமைக்கவிருக்கிறார். இவர் குடியேற்றத்திற்கு எதிரான முன்னேற்றக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 169 நாடாளுமன்ற இடங்களில் நான்கு வலதுசாரிக் கட்சிகள் கூட்டாக 96 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 52 வயதான சோல்பர்க், நோர்வேயின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவி ஏற்பார். அத்துடன் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவரே முதலாவது கன்சர்வேட்டிவ் பிரதமரும் ஆவார். கென்யாவின் வடக்கே துர்க்கானா வறண்ட பிரதேசத்தில் புதிய நிலத்தடி நீர்த்தேக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 70 ஆண்டுத் தேவையை இது பூர்த்தி செய்யும் என கென்ய அரசு கூறியுள்ளது. லொத்திக்கியுப்பி நீர்த்தேக்கம் செயற்கைக் கோள்கள், மற்றும் ரேடார்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தேக்கத்தில் 200பில்லியன் கனலீட்டர் நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. யுனெஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கென்யாவின் சுற்றுச்சூழலுக்கான அமைச்சர் ஜூடி வக்குங்கு இதனை அறிவித்தார். கென்யாவின் மிகவும் வறண்ட பகுதிகளில் துர்க்கானாவும் ஒன்று. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் நாடோடிகள் ஆவர். கென்யாவின் 41 மில்லியன் மக்கள்தொகையில் 17 மில்லியன் பேர் வரையில் போதிய குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர் என யுனெஸ்கோவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் டச்சுக் குடியேற்ற நாடான இந்தோனேசியாவில் தமது படையினரால் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நெதர்லாந்து அரசு பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. 1945 முதல் 1949 இல் இந்தோனேசியா விடுதலை பெறும் வரையில் டச்சுப் படையினர் மேற்கொண்ட குற்றச்செயல்களுக்கு இந்தோனேசியாவுக்கான டச்சுத் தூதர் ஜீர்டு டி சுவான் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டார். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்கு நெதர்லாந்து அரசு ஏற்கனவே மன்னிப்புக் கேட்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்கியிருந்தாலும், இப்போது முதன்முதலாகப் பொது மன்னிப்புக் கோரியுள்ளது. அன்றைய படுகொலைகள் திட்டமிட்ட முறையில் மிகக் கடுமையான முறையில் நிகழ்த்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1945 ஆம் ஆண்டில் இந்தோனேசியர்களுக்கும் டச்சு இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் ஆரம்பமாயின. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணமே மிகவும் பாதிப்படைந்தது. சனவரி 1947 இல், உள்ளூர் அரசி அலுவலகம் ஒன்றின் முன்னால் 200 இற்கும் அதிகமான இந்தோனேசிய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு பாலொங்சாரி என்ற கிராமத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டனர். நெதர்லாந்தில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு 20,000 யூரோக்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனாலும், இப்படுகொலைகளுக்கு டச்சுப் படையினர் எவரும் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படவில்லை.. தற்போதைய இந்தோனேசியாவின் பெரும் பகுதி 19 ஆம் நூற்றாண்டு முதல் இரண்டாம் உலகப்போர் வரையில் டச்சுக்களின் பிடியில் இருந்து வந்தது. பின்னர் சப்பானியப் படையினர் டச்சுக்களைத் துரத்தினர். டச்சுக்கள் மீண்டும் இழந்த பகுதிகளை யப்பானியரிடம் இருந்து மீட்க முயன்ற போது இந்தோனேசியரிடம் இருந்து பெரும் எதிர்ப்பைச் சந்தித்தனர். இறுதியில் 1949 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் விடுதலையை நெதர்லாந்து ஏற்றுக் கொண்டது. விண்கலம் சூரியனின் உயர் வெப்ப வளிமக்குமிழை விட்டு வெளியேறி விண்மீன்களிடை வெளிக்குச் சென்றிருப்பதாக அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2012 ஆகத்து 25 இல் இது சூரியக் குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அன்றைய நாளில் விண்கலம் 121 வானியல் அலகு தூரத்தில் சென்றது. இத்தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையையான தூரத்தை விட 121 மடங்கு அதிகமாகும். அண்டக் கதிர்கள் விண்கலத்தைத் தாக்கும் எண்ணிக்கையைக் கொண்டே விண்கலம் எப்போது விண்மீனிடைவெளிக்குள் செல்லும் என்பதை அறிவியலாளர்கள் கணக்கிடுகிறார்கள். 1977 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட வொயேஜர் 1 விண்கலம் வெளிக் கோள்களை ஆராயவே அனுப்பப்பட்டது, ஆனால் அது தற்போது அவற்றையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இன்று வரை இக்கலம் பூமியில் இருந்து 19 பில்லியன் கிமீ தூரம் சென்றுள்ளது. இக்கலத்தில் இருந்து அனுப்பப்படும் வானொலி சமிக்கை பூமியை அடைய 17 மணித்தியாலங்கள் எடுக்கிறது. சூரியன்சூழ் வான்மண்டல எல்லையைத் தாண்டுவது ஒரு மிகப் பெரும் சாதனை, என ஆங்கிலேயெ வானியலாளர் பேராசிரியர் சேர் மார்ட்டின் ரீஸ் தெரிவித்தார் 1970களின் தொழில்நுட்பம் இப்பெரும் தூரத்தை அடைந்தது வியப்பை அளிக்கிறது என அவர் கூறினார். வொயேஜர் 1 விண்கலம் எந்த ஒரு விண்மீனை நோக்கி செல்லவில்லை. ஆனாலும் அடுத்த 40,000 ஆண்டுகளுக்கு அது விண்மீன் எதனையும் அணுகாது வொயேஜர் 1 நமது விண்மீன் பேரடையின் மையத்தின் ஒழுக்கில் பல பில்லியன் ஆண்டுகளாக சுற்றி வரும் என இத்திட்டத்தின் முதன்மை அறிவியலாளர் பேராசிரியர் ஸ்டோன் தெரிவித்தார். 1977 இல் செலுத்தப்பட்ட வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் செல்லவிருக்கிறது டிசம்பர் 14, 2010 வொயேஜர் 1 விண்கலம் விரைவில் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லவிருப்பதாக நாசா அறிவிப்பு சூன் 15, 2012 வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையில் 'காந்த நெடுஞ்சாலை' ஒன்றைக் கண்டுபிடித்தது டிசம்பர் 5, 2012 முக்கேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குப்தா ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியிருந்தது. தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர். குற்­ற­வா­ளிகள் ஆறுபேரையும் உடனே தூக்­கி­லிட வேண்டும் என்று பல இடங்­களில் பொதுமக்களும் பல்­வேறு அமைப்புகளும் தொடர்ச்­சி­யான ஆர்ப்­பாட்­டங்­க­ளில் ஈடுபட்டு வந்தனர். இக்குற்றச்செயலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறுவன் என்­பதால், அவனுக்கு டில்லி சிறுவர் நீதி­மன்றம் 3 ஆண்­டுகள் சிறைத்தண்டனை அண்மையில் வழங்கித் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. ராம்சிங் என்ற ஆறாமவர் சிறை­யி­லேயே சுருக்­கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குற்­ற­வா­ளிகள் சார்­பாக வாதாடிய வழக்­க­றிஞர் ஏ. பி. சிங் கருத்துத் தெரிவிக்கையில் இந்தத் தீர்ப்பு அரசின் தலை­யீட்டின் பேரிலேயே வழங்­கப்­பட்­டுள்­ளது. மர­ணத்­தண்­டனை விதிப்­பதால் வன்­பு­ணர்வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது" என்றார். இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தை அணுகவும், ஜனாதிபதிக்கு மேன்முறையீடு செய்யவும் குற்றவாளிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்­தி­யாவில் பாலியல் வன்­பு­ணர்வு வழக்கில் தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது இதுவே முதன்­முறையாகும். போலந்து அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய தொழில் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் கடந்த நான்கு நாட்களாக தலைநகர் வார்சாவாவில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மிகக்குறைந்த சம்பளத்தை அதிகரித்தல், அதிகரித்த தொழில் பாதுகாப்பு, மற்றும் இளைப்பாறும் வயதை 67 ஆக அதிகரித்திருப்பதற்கு எதிர்ப்பு போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்பட்டக் கோரிக்கைகளாகும். பிரதமர் டொனால்ட் டஸ்க் உடனடியாகப் பதவி துறக்க வேண்டும் என அவர்கள் கோரினர். இவ்வார்ப்பாட்டத்தில் பல தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப் பெரும் எதிர்ப்புப் போராட்டம் இதுவெனக் கூறப்படுகிறது. இவ்வார்ப்பாட்டங்களில் சுமார் 120,000 பேர் வரை பங்குபற்றியதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். 2007 ஆம் ஆண்டில் டொனால்ட் டஸ்க் பதவியேற்றதில் இருந்து வலதுசாரி கூட்டணியின் செல்வாக்கு அங்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மைக்காலப் பொருளாதாரத் தேக்கத்தில் பாதிக்காத ஒரே ஒரு நாடு போலந்து ஆகும். ஆனாலும், தமது நாடு ஏனைய சில ஐரோப்பிய நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். சிரியாவிடம் உள்ள வேதியியல் ஆயுதங்களை 2014ம் ஆண்டு மத்திக்குள் ஒழித்து விட அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் போது அமெரிக்க வான் தாக்குதல் சிரியா மீது நடக்கக்கூடாது எனவும் ஒப்பந்தம் சொல்கிறது. மூன்று நாட்கள் ஜெனிவாவில் நடந்த கடுமையான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் ஏற்பட்டதை இரு நாடுகளும் கூட்டாக அறிவித்தன. இது போன்ற சூழ்நிலை முன் ஏற்பட்டதில்லை என்று வேதியியல் ஆயுதங்கள் நிபுணர் ஏமி ஸ்மித்தன் கூறுகிறார். இந்த ஒப்பந்தம் மறைமுகமாக ஐக்கிய நாடுகள் சபையை முதன் முறையாக குறிப்பிட்டு சிரியா மீது ஐநா ஒப்புதல் பெற்ற இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் உருசியா சிரியா மீது எந்த இராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. பென்டகனின் செய்தி தொடர்பாளர் சிரியா மீது அமெரிக்கா தனியாக வான் தாக்குதல் தொடுக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் விலகவில்லை என்று கூறியுள்ளார். சிரிய அரசு செய்தி நிறுவனம் சானா இவ்வொப்பந்தத்தை வரவேற்றபோதிலும் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றும் கூறியுள்ளது. சிரிய அரசு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து எதுவும் சொல்லவில்லை. எப்படியிருந்தாலும் இவ்வொப்பந்தம் சிரிய அதிபர் ஆசாத்துக்கு தற்காலிகமான அமைதியை தான் தரும் என்றும் இது ஆசாத்தின் தீவிர நண்பனும் ஆயத விற்பனையாளருமான உருசியாவின் கருத்துப்படி பன்னாட்டுப்படை முடிவு எடுப்பது அமையும் என்றும் கருதப்படுகிறது. சிரியா இவ்வொந்தப்படி நடக்கத்தவறினால் ஐநா சாசனம் VII இன் படி ஐநா இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெரி கூறினார். இருசிய வெளியுறவு அமைச்சர் செர்கி லிவ்ராவ் சிரியா மீதான எந்த இராணுவ நடவடிக்கையையும் உருசியா எதிர்க்கும் என்றார். உருசியாவிற்கு ஐநாவில் வீட்டோ அதிகாரம் உள்ளது. ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாத சிரியா மீது ஐநா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அமெரிக்கா தனியாக சிரியா மீது வான் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரு நாட்டு ஆயுதக் கட்டுப்பாட்டாளர்களும் இரவு முழுதும் உழைத்தனர். இது பனிப்போரின் போது ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்காக உழைத்ததை நினைவுபடுத்தியது. இந்த ஒப்பந்தத்தை ஐநா தலைவர் பான்-கீ-முன் வரவேற்றுள்ளார். பிரிட்டன் வெளியுறவு செயலர் வில்லியம் ஏக் வரவேற்றுள்ளார். இவ்வொப்பந்தம் அக்டோபர் 14 முதல் நடைமுறைக்கு வருவதாக பான்-கீ-முன் தெரிவித்தார். சீனா, அரபு லீக், நேட்டோ, பிரான்சு ஆகியவை ஒப்பந்தம் நிறைவளிப்பதாகக் கூறியுள்ளன. பெயர்தெரிவிக்காத அமெரிக்க வெளியுறவு அதிகாரி சிரியா 1000 டன் வேதியியல் ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்காவும் உருசியாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார். வேதியியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய குறைந்தது 45 இடங்கள் சிரியாவில் இருக்கின்றன என்கிறது அமெரிக்கா. உருசியா வேதியியல் ஆயுதங்கள் உள்ள இடங்களின் எண்ணிக்கையை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகத்து 21 அன்று நடந்த வேதியியல் ஆயுத தாக்குதலுக்கு சிரிய அரசு காரணம் என்று அமெரிக்கா கூறுகிறது. இதை உருசியா ஏற்கவில்லை, இதை கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என்கிறது. தென் கொரிய எல்லையில் ஆற்றொன்றைக் கடந்து வடக்கே செல்ல முயன்ற நபர் ஒருவரை அந்நாட்டுப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இம்ச்சின் ஆற்றில் குதித்த இந்த நபர் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து நீந்திச் செல்ல முயன்றதை அடுத்தே எல்லைக் காவல் படையினர் அவரை நோக்கிச் சுட்டனர். ஆனாலும் பட்டப்பகலில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இவ்வாறு தப்பிச் செல்வது மிக மிக அபூர்வம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், 41 ஆண்டுகளுக்கு முன்னர் வட கொரியாவினால் கடத்திச் செல்லப்பட்ட தென் கொரிய நபர் ஒருவர் கடந்த வெள்ளியன்று அங்கிருந்து தப்பி வீடு வந்து சேர்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 68 வயதான ஜோன் வூக்-பியோ என்பவர் 1972 ஆம் ஆண்டில் மஞ்சள் கடலில் மீன் பிடிப் படகு ஒன்றில் வேறு 25 பேருடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இவர் தற்போது மூன்றாவது நாடு ஒன்றினூடாக தெற்கு வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் மீனவர்களைக் கொண்ட சுமார் 500 தென் கொரியர்கள் வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தென் கொரியா கூறி வருகிறது. வட கொரியாவில் இருந்து தப்ப முயல்பவர்கள் வழக்கமாக எல்லையூடாக சீனாவை அடைந்து பின்னர் மூன்றாவது நாடொன்றுக்குச் செல்வார்கள். சீனா இவர்களைக் கைப்பற்றினால், உடனடியாக இவர்கள் வட கொரியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் வட கொரியாவில் கட்டாய தொழில் முகாம்களில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும், 24,000 இற்கும் அதிகமான வட கொரியர் தெற்கிலும், யப்பானிலும் வாழ்கின்றனர். அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படை தளம் ஒன்றினுள் இராணுவ உடையில் வந்த நபர் ஒருவர் நேற்றுக் காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் இருவர், மற்றும் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் பின்னர் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் டெக்சாசு மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஆரன் அலெக்சிசு என்ற முன்னாள் கடற்படையாளர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிகழ்வு நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 08:20 இற்கு இடம்பெற்றுள்ளது. இறந்தவர்கள் 46 முதல் 73 வயதானவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தாக்குதல் கோழைத்தனமானது என அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆரம்பத்தில் இத்தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருந்ததாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தாலும், பலத்த தேடுதலின் பின்னர் ஒருவரே இதனை நடத்தியுள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவரிடம் ஏஆர்-15 ரக பகுதி-தானியங்கி துப்பாக்கி, வேட்டைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுடன் காவலாளி ஒருவரிடம் இருந்து பறித்த கைத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்துள்ளார். கடற்படைத்தளத்தினுள் நுழைவதற்கு நுழைவாணை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆரன் அலெக்சிசு புத்த மதத்தை பின்பற்றுபவர் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். 2004-ம் ஆண்டு சியாட்டிலில் ஒரு கட்டிடத் தொழிலாளரின் கார் டயர்களை சுட்டு சேதப்படுத்தியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் 2007-2011 காலப்பகுதியில் கடற்படையில் மின்சாரப் பணியாளராகப் பணியாற்றினார். பல்வேறு சிறு முறைகேடுகளைத் தொடர்ந்து பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றும் இக்கடற்படைத்தளம் துப்பாக்கிச் சூட்டை அடுத்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் இராணுவ வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. உலங்கு வானூர்திகளும் வரவழைக்கப்பட்டன. தலைநகரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமெரிக்க மேலவைக் கட்டடம், மற்றும் அருகில் உள்ள பள்ளிகள் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டன. ரேகன் தேசிய வானூர்தி நிலையத்தில் விமானங்கள் வெளியேறுவது சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது. வாசிங்டன் கடற்படைத்தளம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டதாகும். இது கடற்படையின் கட்டளை மையத்தின் தலைமையகமாகும். கடற்படைக்குத் தேவையான கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வடிவமைப்பது, வாங்குவது, கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் இந்த வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், திருகோணமலையில் புலிகளின் கட்டளைத் தளபதியாக இருந்தவருமான சிவசுப்ரமணியம் வரதநாதன் (பதுமன்) நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் 2009 ஏப்ரலில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று அவர் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போதே நீதிபதி அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்தார். திருகோணமலை கல்லூரி வீதியைச் சேர்ந்த பதுமன் 2001 யூலை 1 முதல் டிசம்பர் 31 வரை இலங்கை இராணுவத்தின் படைமுகாம்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக இவர் மீது 979 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பதுமனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தரப்படவில்லை என்றும், அவரது வாக்குமூலங்கள் முன்னுக்குப் முரணாக உள்ளதாகவும் கூறி திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். அமல் ரணராஜா அவரை விடுதலை செய்தார். மனுவேல் என அழைக்கப்படும் வெப்பவலயப் புயல் மெக்சிக்கோவின் தென்மேற்கே தாக்கியதை அடுத்து, அதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், தற்போது அது முதலாம் தரப் புயலாக தரமுயர்த்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மனுவேல் தற்போது வட-மேற்கு மெக்சிக்கோவை நோக்கிச் செல்வதாகவும், இது மேலும் பெரும் சேதங்களை விளைவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லா பிண்டாடா என்ற கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கிய 58 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கோயில், பாடசாலைகள் அழிந்துள்ளன. காலநிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கெதியிலேயே இடம்பெற்றுவருவதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். வீதிகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மின்கம்பிகள் அறுந்துள்ளதால் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறு­­­­­­­களில் வெள்ளம் பெருக்­­­­­­­கெ­­­­­­­டுத்­­­­­­­தோ­­­­­­­டு­­­­­­­கிறது. உள்­­­­­­­ள­­­­­­­டங்­­­­­­­கிய பகு­­­­­­­தி­­­­­­­களில் ஏராளமானோர் சிக்­­­­­­­கி­­­­­­­யுள்­­­­­­­ள­­­­­­­தாக அஞ்சப்­­­­­­­படு­­­­­­­கிறது. அக்காபுல்க்கோ நகரில் சிக்கியிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் இராணுவ உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைப் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி விக்கிப்பீடியா தொகுத்தல் மற்றும் தமிழ்க்கணினியின் தேவை குறித்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் ,தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பன குறித்துச் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை சேலம் சுழற் சங்கம் மேற்கொண்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். தொடர்பு எண்: 0427-2419958. நாட்டில் தற்போதுள்ள தேர்தல் முறை "மன்னராட்சிக்குள் மக்களாட்சி" என மன்னர் முசுவாத்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆப்பிரிக்காவின் கடைசி அதிகாரபூர்வ மன்னராகத் திகழும் முசுவாத்தி 55 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தை எந்நேரமும் கலைக்க அவருக்கு அதிகாரங்கள் உள்ளன. 1800களில் இருந்து சுவாசிலாந்தில் மன்னராட்சி உள்ளது. 45 வயதாகும் மன்னர் முசுவாத்தி தனது 15வது மனைவியாக 18 வயது அழகுராணி ஒருவரைத் திருமணம் புரியவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் தடவையாக நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். மொத்தமாக 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகவும் இரண்டு உறுப்பினர்கள் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கட்சியில் இருந்தும் தெரிவு செய்யப்படுவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறைத் தேர்தலில் முக்கிய கட்சியாகப் போட்டியிடுகிறது. இன்று சனிக்கிழமை காலை வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள பின்னணியில், அச்சமும் குழப்பமும் கலந்த ஒரு சூழ்நிலையே வடமாகாணத் தேர்தல் களத்தில் காணப்படுவதாக பிபிசி செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கிறார். இராணுவத் தலையீடுகள் அதிகம் இருப்பதாக பொதுமக்களும், வேட்பாளர்களும் முறையிட்ட போதிலும், இராணுவம் இதனை மறுத்திருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு பெண் வேட்பாளராகிய அனந்தி சசிதரனின் வீடு வியாழனன்று இரவு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. இச்சம்பவத்தின் போது அனந்தி அங்கில்லாததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பலர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர். இராணுவ சீருடையில் வந்தவர்களே அனந்தியின் வீட்டைச் சுற்றி வளைத்து தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை அறிந்து அங்கு சென்ற உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த சட்டத்தரணி சுபாஸ் என்பவரும் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டார். தான் யார் என்று அடையாளப்படுத்திய பின்னரும் அவர்கள் தம்மைத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் 10 பேர் பாதுகாப்பாக யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவரின் நிலைமைகள் மோசமாக இருந்ததாகவும் முறிவு காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் யாழ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தாக்குதலைத் தாம் நடத்தவில்லை என இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் நீதியான வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் விரைவாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை நேற்றிரவு பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது காரியாலயத்தில் சிறீதரன் உட்பட உட்படப் பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இம்மாநாட்டில், பிரதம விருந்தினராகவும், பிரதம பேச்சாளராகவும் பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட் கலந்து கொண்டு உரையாற்றினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தென்னாசியக் கற்கைகள் துறை இணைப்பாராசிரியர் கலாநிதி ராகுல் முகர்ஜியும் கலந்து கொண்டார். இவர்களுடன், கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே. மகேசன், ரஜரட்டை பல்கலைக்கழக வேளாண்மைப் பீடப் பேராசிரியர் அருணி வீரசிங்க, கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர் கலாநிதி ரி. சர்வேஸ்வரன் உள்ளிட்டோரும் கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் கலாசார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைவடிவமான களரித் தோரணம் சிறிய வடிவில் அலங்கார நினைவுப் பரிசாக வடிவமைக்கப்பட்டு அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வினையடுத்து ஆய்வுச் சுவரொட்டிக் காட்சிப்படுத்தல்கள் நடைபெற்றன. இம்மாநாட்டில், இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. வாய்மொழி மூல மற்றும் காட்சிப்படுத்தல்களுக்காக 61 கட்டுரைகள் பன்னாட்டு, தேசிய துறைசார் நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்வின் இறுதியில், மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளரும், மூத்த விரிவுரையாளருமான திருமதி கிருஸ்ணாள் திருமார்பன் நன்றியுரை நிகழ்த்தினார். 6 அமர்வுகளாக நடைபெற்ற இவ் மாநாட்டில் 12ஆம் திகதி மாலை மாநாட்டு இரா விருந்தும் கலாசாசர நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரிலுள்ள பாடுமீன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தேசிய அளவில், 2006ஆம் ஆய்வு மாநாடு முதல் தடவையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டிருந்தது. இம்முறை இவ் மாநாடு சர்வதேச அளவில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் தலைமையுரையாற்றிய கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் தமது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் தற்போது ஏற்பட்டு வருகின்றன என தெரிவித்தார். மாநாட்டின் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமது இலங்கையில் இருக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம்களிடையே உள்ள தேசியம் தொடர்பான பார்வைக்கும் வேறு நாட்டவர்களிடையே இலங்கை தொடர்பில் உள்ள தேசியம் தொடர்பான பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில், ஒன்றிணைவுகளுக்கான சூழ்நிலையை உருவாக்கும் வல்லமை கலைகளுக்குண்டு எனத் தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையும், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாட்டிற்கான கலாசார நிகழ்வுகள் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றன. இதில், கர்நாடக இசைக்கச்சேரிகளும், பாரம்பரிய கூத்துக்களும் இடம்பெற்றிருந்தன. நேற்று நடந்து முடிந்த இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டமைப்பு சராசரியாக 84% வாக்குகளைப் பெற்றுள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஈழ மக்கள் சனநாயகக் கட்சியுடன் (ஈபிடிபி) இணைந்து போட்டியிட்டிருந்தாலும், அவர்களுக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அத்துடன் ஈபிடிபி இன் கோட்டை எனக் கருதப்பட்டு வந்த ஊர்காவற்துறைத் தொகுதியில் கூட்டமைப்பு 64% வாக்குகளைப் பெற்றது. "மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள். அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4164 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3,763 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4, ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3,898 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4386 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,424 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,953 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,193 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2651 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2416 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7737 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7,063 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 16,310 ::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,696 கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேற் வணிக வளாகத்தில் இசுலாமியத் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய திடீர்த் தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். 170 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் இரண்டு இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்களும் அடங்குவர். வெஸ்ட்கேட் அங்காடியில் தற்போது 10 முதல் 15 தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த போது சுமார் ஆயிரம் பேர் வரையில் வளாகத்தில் இருந்தனர். அங்கிருந்து இன்று சுமார் 15 நிமிட நேரம் தொடர் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியாவின் அல்-சபாப் போராளிகள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளார்கள். இன்று காலை இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக கென்ய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க மற்றும் இசுரேலிய உதவியும் இராணுவத்தினருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்த் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் காயமடைந்தனர். பொதுமக்கள் சிலர் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். கென்ய அரசுத்தலைவர் உகுரு கென்யாட்டா பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் குற்றவாளிகள் தற்போது கட்டடத்தின் ஓரு குறிப்பிட்ட இடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளனர். மிக விரைவில் நாம் அவர்களைப் பிடித்து விடுவோம் எனத் தெரிவித்தார். தனது மருமகனும் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மூன்று பிரித்தானிய நபர்கள், இரண்டு இந்தியர்கள், கனடிய தூதரக அதிகாரி ஒருவர், இரண்டு பிரெஞ்சு நாட்டினர், கானாவைச் சேர்ந்த பிரபல கவிஞர் கோபி அவூனூர் ஆகியோரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். இவர்களை விட டச்சு, தென்னாப்பிரிக்கர்கள், ஆத்திரேலிய-பிரித்தானியரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். வணிக வளாகத்தில் அமைந்துள்ள பல நிறுவனங்கள் இசுரேலியர்களுக்குச் சொந்தமானதாகும். சோமாலியாவின் தெற்குப் பகுதியில் சுமார் 4,000 கென்யப் படையினர் நிலை கொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் அவர்கள் அங்கு அல்-சபாப் தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அல்-கைதாவுடன் தொடர்புள்ள அல்-சபாப் தீவிரவாதிகள் கென்யப் படைகள் சோமாலியாவில் இருந்து வெளியேறும் வரை கென்யாவில் தாம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். இந்தக் கூட்­டத்தில் வட­மா­கா­ண­ச­பையின் முத­ல­மைச்­ச­ரா­கவும் மாகா­ண­ச­பையின் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களின் குழுத் தலை­வ­ரா­கவும் முன்னாள் நீதி­ய­ரசர் சி. வி. விக்­கி­னேஸ்­வரனின் பெயரை திரு­மதி அனந்தி சசி­தரன் பிரே­ரிக்க வவு­னியா மாவட்ட உறுப்­பினர் ஜி. ரி. லிங்­க­நாதன் வழி­மொ­ழிந்தார். இத­னை­ய­டுத்து ஏக­ம­ன­தாக இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தெரி­வான உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­ட­வுடன் முதலமைச்சர் தெரி­வுக்­கான கடிதம் வட­மா­காண ஆளு­ந­ருக்கு அனுப்­பி­வைப்­பது எனவும் இங்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் 38 இடங்களில் 30 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப் படைத்திருக்கின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஏழு இடங்களையும், முசுலிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தது. சி. வி. விக்­னேஸ்­வரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அனந்தி சசி­தரன் 87,870, தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் 39,715, இம்­மா­னுவேல் ஆனல்ட் 26,888, சி.வி.கே.சிவ­ஞானம் 26,747, பாலச்­சந்­திரன் கஜ­தீபன் 23,669, கன­க­லிங்கம் சிவா­ஜி­லிங்கம் 22,660, ஐங்கர­நேசன் பொன்­னுத்­துரை 22,268, சந்­தி­ர­லிங்கம் சுகிர்தன் 20,541, கேசவன் சயந்தன் 20,179, விந்தன் கன­க­ரட்னம் 16,463, அரி­ய­குட்டி பரஞ்­சோதி 16,359, ஆறு­முகம் கந்­தையா சர்­வேஸ்­வரன் 14,761, வேலுப்­பிள்ளை சிவ­யோகன் 13,479 வாக்குகள் பெற்றுத் தெரிவாயினர். ஏனையோர் பெற்ற வாக்குகள்: கே.தர்­ம­லிங்கம் 13,016, சபா­ரத்­தினம் குகதாஸ் 11,256, எம்.தம்­பி­ராசா 7,325, ஆர்.ஜெய­சே­கரம் 6,775, வி.சுப்­பி­ர­ம­ணியம் 6,578. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்டணியில் கந்­த­சாமி கம­லேந்­திரன் 13,632, அங்­கஜன் இரா­ம­நாதன் 10,031 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாயினர். ஏனையோர் பெற்ற வாக்குகள்: சின்­னத்­துரை தவ­ராசா 9,803, ஐயாத்­துரை சிறி­ரங்­கேஸ்­வரன் 5,462, அலெக்சாண்டர் சூசை­முத்து 4,666, பால­கி­ருஷ்ணன் சிவ­குரு 4,611, அப்துல் கரீம் நுவான் சிராஸ் முகமட் 3,323, அந்­தோ­னிப்­பிள்ளை அகஸ்ரின் 2,487, அகி­லதாஸ் சிவக்­கொ­ழுந்து 2,482, குமா­ர­குரு சர்­வா­னந்தன் 2,293, நட­ராஜா தமி­ழ­ழகன் 1,976, நாகன் கணேசன் 1,966, சுந்­தரம் டிவ­க­லாலா 1,963, ஞான­சக்தி சிறி­தரன் 1,939, முடி­யப்பு றெமி­டியஸ் 1,801, கதி­ர­வேலு செவ்வேள் 1,605, கோடீஸ்வரன் றுசாங்கன் 1,174, அகமட் சுல்தான் சுபியான 1,046, மற்றும் நாகனாதி பொன்னம்பலம் 797. நிலநடுக்கத்தின் பின்னர் குவாடார் துறைமுகக் கரைக்கு அருகில் சிறிய தீவு ஒன்று வெளிக்கிளம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 200 மீட்டர் நீளமும், 100 மீட்டர் அகலமும், 20 மீட்டர் உயரமும் உடையதாக இருந்தது. நேற்றைய நிலநடுக்கம் கராச்சி, ஐதராபாது, மற்றும் இந்தியத் தலைநகர் தில்லி ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது. நான் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவள். | புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி ஆத்தூர் 1 5) | சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர் 9 -12) பாக்கித்தானில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக குவாடர் கடற்பகுதியில் உள்ள கடலில் சுமார் 20 மீட்டர் உயரம் உள்ள சிறிய மலை போன்ற தீவு உருவாகியுள்ளது. குவாடர் கடற்கரையிலிருந்து 600 மீட்டர் தள்ளி கடலில் இத்தீவு உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது 200 மீட்டர் நீளமும் 100 மீட்டர் அகலமும் உடையதாக உள்ளது. இதனை ஆராய்வதற்கென நிபுணர்கள் பலர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாக்கித்தானின் தெற்குக் கரையில் மேலும் சிறிய தீவுகள் வெளிக்கிளம்பியிருக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறான நிலப்பகுதிகள் முன்னரும் தோன்றியுள்ளன என்றும், காலப்போக்கில் அவை மறைந்து விடுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாய்ப்பு குறைவாக உள்ளதாக செய்தி வந்ததே? கடந்த சூன் மாதத்தில் மாலி அரசுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக துவாரெக் போராளிகள் அறிவித்துள்ளனர். அமைதி உடன்பாட்டை மாலி அரசு மதிக்கவில்லை என போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். துவாரெக் இனத்தைச் சேர்ந்த மூன்று குழுக்கள் அயல் நாடான புர்க்கினா பாசோவில் கூடிப் பேசியதை அடுத்து இந்த விலகல் குறித்து அறிவித்தார்கள். அத்துடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும் அவசரக் கூட்டத்திற்கு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர். அமைதிப் பேச்சுக்கள் மூலம் தேசிய அளவில் தேர்தல்கள் இடம்பெற்றன. அதே வேளையில், உடன்பாட்டின் படி தெற்கு நகரான கிடாலினுள் இராணுவத்தினரை நுழைய போராளிகள் இணங்கினர். "அமைதி உடன்பாட்டில் எட்டப்பட்ட எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான மொசா அக் அச்சரத்தோமனே என்பவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்பாட்டின் படி, சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் துவாரெக் பிரிவினைவாதிகள் எவரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என என அவர் கூறினார். செவ்வாய்க் கோளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் ஆளில்லா விண்ணுளவி கியூரியோசிட்டி சேகரித்த மண் மாதிரிகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் செந்தூசியில் 2% நீர் இருப்பதாக கியூரியோசிட்டி ஆய்வாளர் லோரி லெசின் மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர். இது எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ள மூல வளமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். செவ்வாய்க் கோளின் முன்னைய சுற்றுச் சூழலில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளதா என்பதை அறிவதே கியூரியோசிட்டியின் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும். கியூரியோசிட்டி விண்கலம் 2012 ஆகத்து மாதம் 6 ஆம் நாள் செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கே கல்லூரி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 மாணவர்கள் கொல்லப்பட்டனர். யோப் மாநிலத்தின் குஜ்பா மாகாணத்தில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றின் விடுதியில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பலர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். வகுப்பறைகள் பல தீக்கிரையாக்கப்பட்டன. போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த கடந்த மே மாதத்தில் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் உத்தரவிட்டிருந்தார். மே 14 ஆம் நாள் வட-கிழக்கில் அவசரகால சட்டத்தை அறிவித்தார். இதனை அடுத்து பெரும்பாலான இசுலாமியத் தீவிரவாதிகள் தமது தளங்களை விட்டு வெளியேறினர். ஆனாலும், அவ்வப்போது அவர்கள் இவ்வாறான திடீர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நாட்டில் இசுலாமிய ஆட்சியை நிறுவுவதற்கு ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். பள்ளிகள் மேற்குலகக் கலாச்சாரத்தின் சின்னம் என அறிவித்து அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பல பள்ளிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். போக்கோ ஹராம் இயக்கத்திற்கு அபூபக்கர் சேக்காவு என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த ஆகத்து மாதத்தில் தமது தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டு விட்டதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். ஆனாலும், கடந்த வாரம் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் அவர் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்களும் ஆர்வலர்களுமாக நூற்றுக்கும் அதிகமானோர் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வையும் அதில் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற ஆர்வத்தையும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஒன்று கூடலுக்கு முன்பதாக நேற்று முன்தினம் சனிக்கிழமை பங்களிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர். இந்திய விக்கிப்பீடியா கிளை மேலாளார் திருமூர்த்தி, கனடா வாட்டர்லு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் செல்வக்குமார், மொழி பெயர்ப்பு குறித்து ஆழிப்பதிப்பகத்தின் சே. ச. செந்தில்நாதன், ஒளிப்படக்கலைக் குறித்து ஹரிபிரசாத், கட்டற்ற மென்பொருள் இயக்கம் குறித்து அருண்குமார் ஆகியோர் பேசினர். தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது. தமிழ் விக்கிபீடியாவின் நிறைவுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு ரூ30000 வழங்கப்பட்டது. முனைவர் துரை.மணிகண்டன், த. வானதி ஆகியோர் எழுதிய “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. 1971 இல் பாக்கித்தானுடன் இடம்பெற்ற விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்நாட்டின் போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. சலாகுதீன் காதர் சவுத்திரி என்பவருக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, அவற்றில் ஒன்பது குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இவ்வழக்கு அரசியல் வஞ்சம் தீர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக தேசியக் கட்சியினரும், சவுத்திரியின் வழக்கறிஞர்களும் கூறியுள்ளனர். இவருக்கு எதிராக இனப்படுகொலை, கடத்தல், சிறுபான்மையின இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இந்துக்கள் பலரை கட்டாயமாக இசுலாமிய மதத்துக்கு மதம் மாற்றியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இவர் சிட்டகாங் பகுதியை சார்ந்த அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பாஸ்லூல் காதர் சவுத்திரி வங்கதேச விடுதலைக்கு முன் பாக்கித்தான் தேசியக்கட்சியின் உறுப்பினராக இருந்தவர். வங்கதேச விடுதலையை எதிர்த்து வந்தவர். இவர் மீதும் போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும் போது சிறைச்சாலையில் மரணமடைந்தார். சவுத்திரியின் சொந்த இடமான சிட்டாகொங் மாவட்டத்தில் கலவரங்களை அடக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் சவுத்திரி ஆறு தடவைகள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் ஜமாட்-இ-இசுலாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா என்பவருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததை அடுத்து நாடெங்கும் ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த, நல் வாழ்த்துக்கள். உங்களது வளமான எதிர்காலம் இப்போதே துவங்கி விட்டது. தமிழன் ஆண்ட பரம்பரையில் வந்தவன். அவனுக்கு நீதி, நேர்மை, நல் ஒழுக்கம், நன்னெறி தவறாது ஆட்சி செய்யும் திறமை உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கட்டும். முதல்வராக வரவிருக்கும் தலைவருக்கு தமிழக மக்களின் கோடானு கோடி முதன்மை வாழ்த்துகள் ஈழ தமிழ் மக்கள் வாழ்வு மலரவும், தமிழர் ஆட்சி நற்பேரு பெறவும் மீண்டும் நல்வாழ்த்துக்களை பகிர்வது தமிழ் அன்பு உள்ளங்கள். அமெரிக்காவில் புதிய நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை வழங்குவதில் காங்கிரசின் இரு அவைகளிலும் இணக்கப்பாடு ஏற்படாததால் பகுதி அளவான அரச நிறுவனங்களை மூட வெள்ளை மாளிகை நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, நேற்று நள்ளிரவுடன் பல்வேறு அரச சேவைகளும் மூடப்பட்டதோடு, 700,000 இற்கும் அதிகமான நடுவண் அரசு ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. தேசியப் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், உட்படப் பல அவசியமற்ற சேவைகள் மூடப்பட்டுள்ளன. ஓய்வூதியம், மற்றும் போர்க்கால நல்கைகளுக்கான காசோலைகள் வழங்குவது, கடவுச்சீட்டு, மற்றும் விசா வழங்கல் ஆகியவை தாமதப்படுத்தப்பட்டுளன. ஆனாலும், இராணுவத்தினருக்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் சனநாயக கட்சியின் வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை கீழவையில் நிறைவேற்ற வேண்டுமானால் அரசுத்தலைவர் பராக் ஒபாமா அறிவித்திருக்கும் ஒபாமாகேர் என அழைக்கப்படும் மருத்துவ காப்பீட்டு சீர்திருத்தத் திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என குடியரசு கட்சி நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையிலேயே திங்கட்கிழமை நள்ளிரவு வரை இது தொடர்பில் இணக்கம் ஏற்படாததால் நிதி ஒதுக்கீடு தோல்வி யடைந்துள்ளது. அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ஒரு கட்சியில் உள்ள சிலரே இதற்குக் காரணம், ஏனென்றால் அவர்கள் ஒரு சட்டமூலத்தை விரும்பவில்லை என்றார். இந்த விவகாரத்தை அடுத்து பராக் ஒபாமா தனது ஏற்கனவே திட்டமிடப்பட்ட மலேசிய, பிலிப்பீன்சு அரசு முறைப் பயணத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக 1995 – 1996 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பில் கிளின்டன் ஆட்சியில் எதிர்க் கட்சியினர் இதேபோன்று அரசை முடக்கியிருந்தனர். 21 நாட்கள் நீடித்த இந்த முடக்கம் எதிர்க் கட்சியினரின் கோரிக்கைக்கு பில் கிளின்டன் இணங்கியதையடுத்தே முடிவுக்கு வந்தது. இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்படும். இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 9047655025, 9750933101 ஆகிய எண்களில் தங்களின் பெயரைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். ஐக்கிய இராச்சியம் உட்பட 54-நாடுகள் கூட்டமைப்பு ஒரு புதுக்குடியேற்றப்போக்குள்ள அமைப்பு என காம்பியா வர்ணித்துள்ளது. பொதுநலவாயத்தில் இருந்து விலகுவதாக காம்பியாவின் அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ள போதும், விலகுவதற்கான வேறு எந்தக் காரணத்தையும் அது கூறவில்லை. காம்பியா பொதுநலவாயத்தில் இருந்து விலகுவது தமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது என பிரித்தானியா கூறியுள்ளது. தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியம் செயல்பட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசுத்தலைவர் யாகியா ஜாமி பிரித்தானியாவைக் குற்றம் சாட்டியிருந்தார். 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இளம் இராணுவ வீரராக இருந்த யாகியா ஜாமி ஆட்சியைக் கைப்பற்றினார். அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து இடம்பெற்ற நான்கு சர்ச்சைக்குரிய பல-கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றார். யாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன. கடைசியாக 2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே நாடு பொதுநலவாயத்தில் இருந்து விலகியது. 2009 இல் ருவாண்டாவும், 1995 இல் கமரூன், மொசாம்பிக் நாடுகளும் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டன. பொதுநலவாய அமைப்புகளின் தலைவர்களின் உச்சி மாநாடு அடுத்த மாதம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிகளை ஏற்றி வந்த படகொன்று நேற்று வியாழன் அன்று இத்தாலியின் தெற்குக் கரையில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் குறைந்தது 300 பேர் வரையில் உயிரிழந்தனர். இத்தாலியின் தெற்கே லாம்பதூசா தீவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 500 பேரை ஏற்றி வந்த இந்த மீன்பிடிப் படகு தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியது. இது வரையில் 111 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 155 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களும், நான்கு சிறுவர்களும் அடங்குவர். மூழ்கிய படகில் பலரின் உடல்கள் இன்னும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. படகில் வந்தோர் பெரும்பாலானோர் எரித்திரியா, மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகளின் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இறந்தவர்களை நினைவு கூரும் முகமாக இத்தாலியப் பாடசாலைகளில் இன்று காலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. துனீசியாவைச் சேர்ந்த படகு ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படகு லிபியாவின் மிஸ்ராட்டா நகரில் புறப்பட்டதாகவும், இது லாம்பெதூசா தீவை அண்மித்த போது இயந்திரம் பழுதடைந்து இயங்க மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படகில் இருந்த சிலர் அவ்வழியால் வரும் கப்பல்களை உதவிக்கு அழைப்பதற்காக துணி ஒன்றுக்குத் தீவைத்ததாகவும், அது படகின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வார ஆரம்பத்தில் இத்தாலியின் சிசிலியில் படகொன்று மூழ்கியதில் 13 குடியேறிகள் கொல்லப்பட்டனர். இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை இத்தாலிக்கு 30,100 குடியேறிகள் கடல் மார்க்கமாக வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. எரித்திரியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 3,000 பேர் வரையில் வெளியேறுகின்றனர். 10,000 பேர் வரையில் அங்குள்ள சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த எரிவிண்மீன் மிகப் பெரும் வான்பொருள் ஒன்றின் ஒரு சிறு பகுதி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் பெரும்பாலும் பாறைகளினால் ஆன ஒரு சாதாரண வேதிஎரிகல் (chondrite) என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். உருசியாவைத் தாக்கிய எரிவிண்மீனின் பகுதிகள் மீட்பு பெப்ரவரி 18, 2013 உருசியாவின் மத்திய பகுதியை எரிவிண்மீன் தாக்கியதில் 400 பேர் வரையில் காயம் பெப்ரவரி 15, 2013 மல்தோவா அரசு தமது நாட்டில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடுத்த மாதம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே கம்யூனிஸ்டுகள் போராடி வருகின்றனர். அத்துடன் நாட்டில் பெருகி வரும் ஊழல், குற்றங்கள், மற்றும் நீதித்துறை, ஊடகத்துரை மீதான அழுத்தங்கள், அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவையும் போராட்டத்திற்கான காரணம் ஆகும். “மல்தோவியர்கள் தற்போது போர்க்காலத்தை விட அதிகமான அளவு வறுமையில் வாடுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படுகின்றன, வங்கிகள் சூறையாடப்படுகின்றன என தலைநகர் சிசினோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். மல்தோவாவில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைமது, மற்றும் மதுசாரங்கள் மீது உருசியா தடை விதித்திருந்தது. மல்தோவா ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டிணைவதை எதிர்ப்பதற்கே உருசியா இம்முடிவை எடுத்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, புளொட் தலைவரும் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் விக்னேசுவரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். விக்னேசுவரன் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்தார். அரசுத்தலைவர் முன் பதவிப்பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இந்தப் பதவிப் பிரமாண வைபவம் நடந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். பதவியேற்றல் நிகழ்வின் பின்னர் முதலமைச்சர் விக்னேசுவரன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார் இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே நாட்டின் சனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம் என்று தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவியாகும். தூரநோக்கின் அடிப்படையிலும் குறுகிய நோக்கின் அடிப்படையிலும் பணியாற்றும் படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது." "போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான குறுகிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்." "உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும். சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்." "இங்கு வன்முறைக்கு இடமில்லை. பலாத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சீத் இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இன்று இலங்கை வந்தடைந்திருக்கிறார். 13வது சட்டதிருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து குர்சித் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் நாளை செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். அங்கு அவர் முதலமைச்சர் விக்னேசுவரன், ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார். மாலைதீவில் செப்டம்பர் 7 இல் இடம்பெற்ற முதற்கட்ட அரசுத்தலைவர் தேர்தல் செல்லாது என அறிவித்திருக்கும் அந்நாட்டு உச்சநீதிமன்றம், புதிய தேர்தல் அக்டோபர் 20 இல் இடம்பெற வேண்டும் எனக் கூறியுள்ளது. முன்னதாக, தேர்தல் முறைபாடுகள் கிளம்பியதை அடுத்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்புகளை நீதிமன்றம் தள்ளிப் போட்டிருந்தது. கடந்த ஆண்டு பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்ட முகம்மது நசீத் சென்ற மாதம் இடம்பெற்ற தேர்தலில் 45% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 50% வாக்குகளைப் பெற வேண்டும். இரண்டாவதாக வந்த அப்துல்லா யமீன் 25% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னாள் அரசுத்தலைவர் மாமூன் அப்துல் கயூமின் உறவினர் ஆவார். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் முதலாவது சுதந்திரமான தேர்தலில் நசீத் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். கடந்த மாத வாக்கெடுப்பில் மூன்றாவதாக வந்த காசிம் இப்ராகிம் தேர்தல் செல்லாது என அறிவிக்ககோரி வழக்கௌப் பதிவு செய்தார். ஆனாலும், தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில், முகமது நசீதுக்கு ஆதரவளிக்கும் தொலைக்காட்சி நிலையம் ஒன்று நேற்று இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு "வேதியியல் பரிசோதனைகளை இணையத்திற்குக் கொண்டு சென்றமைக்காக" மூவருக்கு அறிவிக்கப்பட்டது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரித்தானிய-அமெரிக்கரான மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க-ஆத்திரியரான மார்ட்டின் கார்பிளஸ், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏரியா வார்செல் ஆகியோருக்கே வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. வேதியியல் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கு கணிப்பொறி ஒப்புருவாக்கங்களை இவர்கள் உருவாக்கினர். இதன் மூலம் புதிய வகை மருந்து வகைகளைக் கண்டுபிடிப்பதற்கு அடித்தளம் இட்டுள்ளனர். சுதந்திரப் பேச்சுக்காக சகாரொவ் பரிசு ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு 50,000 யூரோக்கள் ஆகும். இப்பரிசு சோவியத் இயற்பியலாளரும், சோவியத் அதிருப்தியாளருமான அந்திரேய் சாகரோவ் என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. 16-வயது மலாலா பெண் பிள்ளைகளுக்கு அதிக உரிமைகள் கோரியதால் சென்ற ஆண்டு சுடப்பட்டார். பாக்கித்தானின் சுவாட் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் வசித்து வந்தார். தாலிபான்கள் பெண்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து மலாலா பெண்களுக்கு அதிக உரிமை கேட்டுப் போராடி வந்தார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்று வந்தார். 2009 ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று புனைப் பெயரில் எழுதி வந்தார். பின்னர் தொலைக்காட்சி நேர்முகம் ஒன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து இவர் பரவலாக அறியப்பட்டார். தனது நண்பர்களுடன் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் போது இவர் தலையில் சுடப்பட்டார். மலாலா அண்மையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். தற்போது இவர் புலம் பெயர்ந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வாழ்ந்து வருகிறார். சாகரோவ் பரிசு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, பர்மாவின் ஆங் சான் சூச்சி அம்மையார் போன்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாண்டுப் பரிசுக்கு அமெரிக்க இரகசியங்களைக் கசியவிட்ட எட்வர்ட் சினோடன், மற்றும் மூன்று பெலருசியர்கள் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பின் "வேதி ஆயுதங்களைக் களைவதில் காட்டும் தீவிரத்திற்காக" இப்பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு கூறியுள்ளது. நெதர்லாந்தில் தி ஏக் நகரில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சிரியாவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வேதி ஆயுதங்களை அழிப்பதற்காக இக்குழு தமது கண்காணிப்பாளர்களை சிரியாவுக்கு அனுப்பியிருந்தது. போர் முனை ஒன்றில் தமது பணியாளர்களை இவ்வமைப்பு அனுப்பியிருப்பது இதுவே முதற் தடவையாகும். சென்ற ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் வட மாகாண சபைக்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாகாண சபையின் முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமைச்சர்களின் தெரிவில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் கோரிக்கைகளைக் கவனிக்கவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சி. வி. கே. சிவஞானம் சபையின் தலைவராகவும், அந்தோனி ஜெகநாதன் துணைத் தலவராகவும் பதவியேற்றுக் கொண்டனர். நேற்றைய பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மக்கள் சார்ந்த முடிவுகளை தான்தோன்றித்தனமாக எடுக்கக்கூடாது எனத் தெரிவித்தார் வன்முறைக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பதை எவரும் மறக்கக்கூடாது, சுய இலாபத்திற்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் க. துரைசாமி, ஐஸ்வரியா, கணேஷ், ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கு அருகே நெரிசல் ஏற்பட்டதில் 60 பேர் வரையில் கொல்லப்பட்டனர், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா நகரில் இருந்து 60 கிமீ தூரத்தில் ரத்தன்கார் கோயிலில் இந்த நெரிசல் ஏற்பட்டது. கோயில் மூலத்தானத்திற்கு அருகில் உள்ள சிந்து ஆற்றைக் கடக்கும் பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும், பலர் நெரிசலில் சிக்கி இறந்தந்தாகவும், மேலும் பலர் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்ததில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. நெரிசல் ஏற்பட்ட போது பாலத்தில் சுமார் ஆயிரம் பேர் வரையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலம் உடையவிருப்பதாகப் பரவிய வதந்தியே நெரிசலுக்குக் காரணம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்ததால் நெரிசல் ஏற்பட்டதாக வேறு சிலர் குறிப்பிட்டனர். 500 மீட்டர் நீளமான ஒடுக்கமான பாலம் 2007 ஆம் ஆண்டில் இதே போன்ற நெரிசலினால் சேதமடைந்து அண்மையில் திருத்தப்பட்டது. அல்லா என்ற சொல் இசுலாமுக்கு மட்டுமே உரித்தானது எனக் கூறியிருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம், இது மீறப்படுமானால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என எச்சரித்துள்ளது. பொதுவாக மலேசியாவில் கிறித்தவர்கள் தமது கடவுளை மலாய் மொழியில் அல்லா எனவே வழங்குகின்றனர். அரபி மொழியில் இருந்து மலாய் மொழிக்கு அல்லா என்ற சொல் வந்ததாக, பல நூற்றண்டுகளாக தாம் தமது கடவுளை விளைக்க அல்லா என்ற சொல்லையே பயன்படுத்தி வந்ததாக கிறித்தவர்கள் வாதிடுகின்றனர். இன்றைய தீர்ப்பு தமது அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும் என அவர்ரக்ள் கூறுகின்றனர். கத்தோலிக்க பதிப்பகமான "எரால்டு" தனது வாரப் பத்திரிக்கையில் "அல்லா" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சு தடை விதித்தது. இதனை எதிர்த்து எரால்டு பத்திரிகை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. பத்திரிகைக்கு சார்பாக 2009 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மலேசிய அரசு மேன்முறையீடு செய்ததில் தற்போது 2009 தீர்ப்பு தவறானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிக்கின்றனர் என பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும். போகோல் தீவின் அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்கு குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர். அருகில் உள்ளா சேபு தீவில் பல கட்டடங்கள், 16ம், 17ம் நூற்றாண்டு வரலாற்றுப் புகழ் மிக்க தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இவ்விடங்களில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தேசிய விடுமுறை நாளான இன்று காலை 08:12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பாடசாலைகள் எதுவும் இயங்காத படியால் இழப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டன. இந்நிகழ்வில் விக்கிமீடியா குறித்து விளக்க, கருத்தாளர்கள் தகவல் உழவன் மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாண்டு ஆரம்பத்தில் உருசியாவின் செல்யாபின்ஸ்க் நகரில் வீழ்ந்த பாரிய விண்கல் ஒன்றின் துண்டு எனக் கருதப்படும் 570 கிகி எடையுள்ள பாறை ஒன்றை செபார்க்குல் ஏரியில் இருந்து சுழியோடிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறை ஏரியில் வீழ்ந்த போது 6 மீட்டர் அகலமுள்ள துளை ஒன்றை உறைந்த பனியில் ஏற்படுத்தியிருந்தது. இது விண்கல்லின் ஒரு பகுதி என உறுதி செய்யப்படுமானால், இதுவரை புவியில் வீழ்ந்த விண்கற்களில் இதுவே மிகப் பெரியதாக இருக்கும். பெப்ரவரி 15 ஆம் நாள் 17 மீட்டர் அகல 10,000 தொன் எடையுள்ள விண்கல் வீழ்ந்த போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாறை விண்கல்லின் ஒரு பகுதியெனக் கண்டறிவதற்குத் தமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 12 இற்கும் அதிகமான துண்டுகளை சுழியோடிகள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் மீட்டுள்ளனர். ஆனால், இவற்றில் நான்கு அல்லது ஐந்து கற்களே விண்கல்லின் பகுதிகள் என உறுதிப்படுத்தப்பட்டன. உருசியாவில் வீழ்ந்த எரிவிண்மீன் சூரியக் குடும்பத்தின் வயதை ஒத்ததாக அறிவியலாளர்கள் கருத்து அக்டோபர் 5, 2013 உருசியாவைத் தாக்கிய எரிவிண்மீனின் பகுதிகள் மீட்பு பெப்ரவரி 18, 2013 உருசியாவின் மத்திய பகுதியை எரிவிண்மீன் தாக்கியதில் 400 பேர் வரையில் காயம் பெப்ரவரி 15, 2013 தென்கிழக்காசிய நாடான லாவோசின் தெற்கே மேக்கொங் ஆற்றில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர். மோசமான காலநிலையே இவ்விபத்திற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் வியந்தியானில் இருந்து புறப்பட்ட லாவோஸ் ஏர்லைன்சைச் சேர்ந்த ஏடிஆர் 72-600 ரக இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம் பாக்சி நகரில் தரையிறங்கும் போதே மேக்கொங் ஆற்றில் வீழ்ந்தது. விமானத்தி 44 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் 17 பேர் லாவோசு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் பிரான்சு, ஆத்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம், கனடா, சீனா, மலேசியா, தாய்வான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை ஆறு பேரின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன. இவ்விமானம் இவ்வாண்டு மார்ச் மாதத்திலேயே சேவைக்கு விடப்பட்டதாக ஏடிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து பற்றிய முழுமையான விசாரணைக்கு தாம் ஒத்துழைப்போம் என இந்நிறுவனம் கூறியுள்ளது. ஆத்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சு தமது நாட்டவர் ஆறு பேர் இவ்விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவர். லாவோசிற்கு செல்லும் உல்லாசப் பயணிகள் பெரும்பாலும் வியெந்தியான் தலைநகர் பாக்சி விமானப் பயணத்தில் கூடுதலாக ஈடுபடுவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2011 டிசம்பரில் பிரித்தானியாவைச் சேர்ந்த நிவாரணப் பணியாளர் ஒருவர் கொழும்பில் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் நெருங்கிய சகா ஒருவர் உட்பட ஆறு பேர் மீது வழக்குத் தாக்கலாகியுள்ளது. செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் குராம் சேக், 32, கிறித்துமசு நாள் அன்று விடுமுறையில் இருந்த போது சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். மற்றும் அவருடைய நண்பி பாலியல் ரீதியாக தாக்கிக் காயப்படுத்தப்பட்டார். அம்பாந்தோட்டை, தங்காலை என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையின் ஆளும் கட்சியின் உறுப்பினரும், தங்காலை பிரதேசசபை தலைவர் சம்பத் விதான பத்திரன என்பவர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்று அடுத்த விசாரணை நாள் வரை பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டோரில் ஒருவர் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் மிக நெருங்கிய நண்பர் என்றும் இவர்கள் அனைவரும் மிக விரைவில் விசாரணையை எதிர் கொள்வர் எனவும் இலங்கை சட்டமா அதிபர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த கொலை சம்பவம் இடம்பெற்று 2 ஆண்டுகளாகியும், பிரித்தானியப் பிரதமர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உட்படப் பல அமைப்புகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வழக்கின் முக்கிய சாட்சிகள் பலரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து வழக்கு விசாரணைகள் தங்காலையில் இருந்து தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் செல்வதையடுத்தே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இலங்கையின் சட்டமா அதிபர் வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்துள்ளது. கடந்த மாதம் கினியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கினியின் அரசுத்தலைவர் அல்ஃபா கொண்டேயின் ஆளும் கட்சி அரைவாசிக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 114 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கினி மக்களுக்கான பேரணி 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சி 37 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்கவில்லை என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் இன, மத வன்முறைகள் இடம்பெற்றன. 2010 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு இடைக்கால நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பின்னர் முதற்தடவையாக இப்போது தேர்தல்கள் இடம்பெற்றன. விண்மீனின் சுழல் திசைக்கு எதிர் திசையில் அதன் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கெப்லர் விண்கலம் ஒரு விண்மீனில் அதன் இரண்டு கோள்களும் 45 பாகையில் அதனை சுற்றிவருவதை கண்டறிந்துள்ளது. அப்பொழுது அதனை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் அதன் இரண்டு கோள்களும் மிகவும் சாய்ந்து வட்டமிடுவதுடன் அவ்விண்மீன் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றுவதை கவனித்துள்ளனர். இதனால் உலகில் முதன்முறையாக இவ்வாறான மாறுபட்ட சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்ணுக்கு ஏவிய கெப்லர் விண்கலம் தற்போது கோள்கள் கண்டறியும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட, அது கடந்த 4 ஆண்டுகளாக சேகரித்த தகவல்களை அறிவியலாளர்கள் அதனை மேலும் பகுப்பாய்வு செய்த போது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. உருசியாவின் தெற்கே வோல்ககிராத் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30 பெர் காயமடைந்தனர். வடக்கு காக்கசுப் பகுதியின் தாகெஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இசுலாமியத் தீவிரவாதப் பெண் ஒருவரே இத்தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். பிற்பகல் 2 மணியளவில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றது. பேருந்தில் மாணவர்கள் உட்பட சுமார் 40 பேர் வரையில், பயணம் செய்ததாகத் தெரிகிறது. வொல்ககிராத் நகரம் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தெற்கே 900 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. உருசியாவின் கருங்கடல் நகரான சோச்சியில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருப்பதால், தீவிரவாதிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வடக்கு காக்கசசு பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் உத்தரவிட்டுள்ளார். மொசாம்பிக் எதிர்க்கட்சியான ரெனாமோ இயக்கத்தின் தலைவர் அபோன்சோ திலாகாமாவின் இருப்பிடம் அரசுப் படையினரால் தாக்கப்பட்டதை அடுத்து 1992 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தைத் தாம் முறித்துக் கொண்டு விட்டதாக அவ்வியக்கம் அறிவித்துள்ளது. மொசாம்பிக்கின் மத்திய பகுதியான சத்துஞ்சிரா தளத்தை அரசுப் படையினர் தாக்கி கைப்பற்றினர். ஆனாலும் ரெனாமோ இயக்கத்தின் தலைவர் திலாகாமா அவ்விடத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்த பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்தவுடன் நாட்டில் பொருளாதாரம் ஏற்றமடைந்திருந்தது. நேற்று இடம்பெற்ற தாக்குதல் தமது தலைவரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்டது என ரெனாமோ இயக்கப் பேச்சாளர் தெரிவித்தார். தாக்குதல் தொடர்பாக அரசுத்தலைவர் அர்மாண்டோ கிபுசா மீது எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ரெனாமோ இயக்கம் நாட்டை மீண்டும் போர் முனைக்கு இட்டு செல்வதே நோக்கமாகக் கொண்டுள்ளதாக மொசாம்பிக்கின் பிரெலிமோ அரசு கூறியுள்ளது. இக்குற்றச்சாட்டை ரெனாமோ மறுத்து வந்துள்ளது. கடந்த ஏப்ரலில் ரெனாமோ இயக்கம் காவல் நிலையம் ஒன்றைத் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மொசாம்பிக்கில் நவம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலும், அடுத்த ஆண்டில் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கிபூசாவின் பிரெலிமோ கட்சி 1975 முதல் ஆட்சியில் உள்ளது. இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட ரெனாமோ இயக்கம் தென்னாப்பிரிக்கா, மற்றும் சிம்பாப்வேயின் சிறுபான்மை அரசுகளினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தது. கியூபா தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை-நாணய முறைமையை விலக்கிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அதிகாரபூர்வ ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1994 ஆம் ஆண்டு முதல் கியூபாவில் இரண்டு நாணய அலகுகள் நடைமுறையில் உள்ளன, ஒன்று மாற்றத்தக்க பேசோ (அமெரிக்க டாலருக்கு சமானது மற்றையது பேசோ (குறைந்த பெறுமதி உள்ளது அதிக பெறுமதியுடைய மாற்றத்தக்க பேசோ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இனிமேல் இரண்டும் படிப்படியாக ஒன்றாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து கியூபாவின் சரியும் பொருளாதார நிலையை ஈடுகட்ட இந்த இரட்டை நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் குறைந்த பெறுமதியுடைய நாணயம் மூலம் பொருட்களை வாங்குவது உள்ளூர் மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. பெறுமதியான பல பொருட்கள் அங்கு மாற்றத்தக்க பேசோ மூலமே கொள்வனவு செய்ய முடியும். இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட குறைந்தது 18 மாதங்கள் வரை பிடிக்கும் என கியூபாவின் பொருளியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள விண்மீன் பேரடை (Galaxy) ஒன்றை பன்னாட்டு வானியலாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் இது மிக அதிக தூரத்தில் உள்ள பேரடை ஆகும். இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதல் அமர்வின் போது உரையாற்றிய முதலமைச்சர் விக்னேசுவரன் வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி பணியாற்றுவதை நாம் விரும்பவில்லை, மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே ஆளுநராக வர வேண்டும் என மக்களும் விரும்புகின்றார்கள் எனக் குறிப்பிட்டார் வடமாகாணத்தில் தற்போது உள்ள மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஐந்தில் ஒன்று என்கிற எண்ணிக்கையில் இராணுவத்தினர் உள்ளனர். இவர்களைப் படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்" எனக் கூறினார். வட மாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்ட வரையறைக்குள் தந்திரோபாய அடிப்படையில் முன்னகர்த்தி செல்லவுள்ளது என்றார் சி. வி. விக்னேஸ்வரன். இன்றைய நிகழ்வில் முன்னதாக மருத்துவ செலவுக்காக உதவித் தொகையினைக் கோரியிருந்த 55 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. நேற்று வெள்ளிக்கிழமை அன்று தமது 14 எல்லைக் காவல் படையினர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக ஈரான் சிறை வைக்கப்பட்டிருந்த 16 போராளிகளைத் தூக்கிலிட்டது. நேற்றைய தாக்குதல் நடந்த செகெடான் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையிலேயே இந்தப் 16 பேரும் தூக்கிலிடப்பட்டனர். எல்லைக் காவலர் தாக்கப்பட்டமைக்கும், தூக்கிலிடப்பட்ட கைதிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. போராளிகளின் நேற்றைய தாக்குதல் பாக்கித்தானுடனான தென்கிழக்கு எல்லையில் இடம்பெற்றுள்ளது. ஜுண்டல்லா என்ற சுணி இசுலாமிய ஆயுதக் குழு இப்பகுதியில் கடந்த காலங்களில் பல தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது. முன்னாள் சோவியத் குடியரசான செக் குடியரசில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், சமூக சனநாயகக் கட்சி 20% இற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளனர். தனியே ஆட்சியமைக்க இது போதுமானதாக இல்லை. இதனால் இங்கு மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக 19% வாக்குகளைப் பெற்று ஏஎன்ஓ கட்சி வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் 15% வாக்குகளைப் பெற்றனர். பீட்டர் நேக்கசின் கட்சி ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டதை அடுத்து கடந்த சூன் மாதத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பங்குபற்றவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நால்வரைக் கைது செய்துள்ளனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 8 குண்டு வெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 102 பேர் காயம் அடைந்தனர். பீகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இக்குண்டுகள் வெடித்தன. இப்பூங்காவில் நரேந்திர மோடி உரையாற்றவிருந்தார். எந்த இயக்கமும் இத்தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. "தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ளோம், அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் மூவரைக் கைது செய்துள்ளோம் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களுக்குக் கூறினார். வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட சிறிய வகைக் குண்டுகள் என அவர் தெரிவித்தார். முதலாவது குண்டு பட்னா தொடருந்து நிலையத்தில் காலை 09:30 மணிக்கு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இம்தியாஸ் அன்சாரி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கூட்டம் நடைபெறவிருந்த பகுதிகளில் ஏழு குண்டுகள் வெடித்தன. இரண்டு குண்டுகள் வெடிக்கவில்லை. உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே கூட்டத்தில் குண்டுகளை வெடிக்க செய்ததாக கைது செய்யப்பட்ட அன்சாரி தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நரேந்திர மோடி இந்திய அரசியலில் மிகவும் செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவராகக் கணிக்கப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற இந்து-முசுலிம் கலவரங்களைத் தடுக்க இவர் தவறி விட்டார் என இவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இக்கலவரத்தில் 1000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். எம்23 போராளிகள் இராணுவ ரீதியில் இனிமேல் அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என கொங்கோ மக்களாட்சிக் குடியரசுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் மார்ட்டின் கோப்லர் அறிவித்துள்ளார். போராளிகள் நாட்டின் கிழக்கேயுள்ள தமது தளங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தற்போது ருவாண்டா எல்லையில் உள்ள சிறிய முக்கோண வடிவ நிலப்பகுதியிலேயே தளம் அமைத்துள்ளார்கள் என ஐநா தூதர் தெரிவித்தார். ருவாண்டாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேகு மலைப்பகுதியை விட்டு போராளிகள் வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை அன்று போராளிகளின் ஐந்தாவது தளம் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் தமது படை விலகல் ஒரு தற்காலிக நடவடிக்கையே என போராளிகள் கூறுகின்றனர். போராளிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தாம் நம்புவதாக பிரெஞ்சுத் தூதர் ஜெரார்டு ஆராட் கருத்துத் தெரிவித்தார். கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. அரசுப் படைகள் நேற்று ருமாங்காபோ நகரினுள் நுழைந்ததை உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி வரவேற்புரை ஆற்றினார். பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர். கே. அங்கமுத்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றி தமிழ்க்கணினியின் தற்காலத் தேவைகளையும் மின்னாளுமையில் தமிழின் பங்கையும் எடுத்துரைத்தார். சேலம் சுழற்சங்கத்தின் தலைவர் ம. கோ. கொ. விஜய குமார், சமூகத்தில் சுழற்சங்கத்தின் பங்கு என்னும் தலைப்பில் உரையாற்றினார், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இணையம் சார்ந்த வேலைவாய்ப்புகள் என்னும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது, விக்கிமீடியா இந்தியப்பிரிவின் நிருவாக மேலாளர் தி. சௌம்யன் இந்தியாவில் விக்கிமீடியா செயற்பாடுகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார், இணைய மற்றும் சமூக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஷ்ணுவர்தன் இந்திய மொழிகளில் கணிமை, என்னும் தலைப்பில் உரையாற்றினார், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, கணித்தமிழ் மற்றும் விக்கிப்பீடியாவின் இன்றியமையாமை என்னும் தலைப்பில் உரையாற்றினார், சேலம் சுழற்சங்க செயலர் த. சௌந்தராஜன் நன்றியுரை ஆற்றினார். இரண்டாம் அமர்வில் ‘‘கணிதமிழ் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா’’ குறித்த இணைய வழி நேரிடை செயல் விளக்க படக்காட்சிப் பயிற்சியை, பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அளித்தார். இந்நிகழ்வில் விக்கிமீடியா குறித்து விளக்க, கருத்தாளர்கள் தகவல் உழவன் மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர், அலுவலர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி ஒருங்கிணைத்தார். இப்பயிற்சியானது, சேலம் பகுதியைச்சார்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு “தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா” தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இப்பயிலரங்கில் முதல்கட்டப்பயிற்சி பெற்றவர்களுக்கு கூடுதல் சிறப்புப்பயிற்சியும், இரண்டாம் கட்ட பயிலரங்கில் பங்கு பெறுவோருக்கு அடிப்படைப்பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிரங்கில் ஊடகத்துறை, புகைப்படக்கலைஞர்கள், தட்டச்சர்கள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தனிப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கில் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்ற உள்ளார். இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சொகுசுப் பேருந்து திடீரெனத் தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 45 பேர் உயிருடன் தீயில் கருகி மாண்டனர். ஓட்டுநர் உட்பட நான்கு பேர் எரிகாயங்களுடன் தப்பினர். பெங்களூர் நகரில் இருந்து ஐதராபாதுக்கு சென்று கொண்டிருந்த இப்பேருந்து ஐதராபாதில் இருந்து 140 கிமீ தூரத்தில் மாபுப்நகர் மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டா என்ற நகரிலேயே இவ்விபத்து ஏற்பட்டது. குளிரூட்டப்பட்ட வொல்வோ ரகப் பேருந்தின் எண்ணெய்த் தாங்கியை மதகு ஒன்று தாக்கியதை அடுத்தே அது தீப்பற்றியது. இவ்விபத்து நேற்று புதன்கிழமை அதிகாலையில் 05:00 மணியளவில் நிகழ்ந்தது. இக்கோர விபத்து நிகழ்ந்த போது பயணிகள் பலர் உறக்கத்தில் இருந்தனர். என்ன நடைபெற்றது என அறியும் முன்னரே அவர்களை தீ சூழ்ந்து கொண்டது. பேருந்தின் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பயணிகள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே பாய்ந்தனர். பயணிகள் பலர் இருக்கைகளிலேயே இறந்து கிடந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கணினிப் பொறியாளர்களே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தகவலறிந்து மெகபூப் நகரில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன ஆனாலும், அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. 2008 ஆம் ஆண்டில் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பிரான்சு நாட்டின் ரேடியோ பிரான்சு இண்டர்னேசனல் (ஆர்.எஃப்.ஐ) வானொலியைச் சேர்ந்த இரண்டு செய்தியாளர்கள் மாலியின் வடக்கு நகரான கிடாலில் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிலோட் வெர்லன், கிரிசுலெயின் டூப்போன் ஆகிய இருவரும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை நேர்காணல் செய்ததை அடுத்துக் கடத்தப்பட்டனர். பின்னர் இவர்களது இறந்த உடல்கள் நகருக்கு வெளியே கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டன. கொல்லப்பட்ட இரு செய்தியாளர்களும் இரண்டாவது தடவையாக மாலிக்குச் சென்றுள்ளதாக வானொலி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த யூலை மாதத்தில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தல் காலத்தில் இவர்கள் மாலி சென்று திரும்பியிருந்தனர். 2013 ஆம் ஆண்டில் இதுவரை உலகெங்கணும் 42 செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிடால் நகரில் தற்போது 200 பிரெஞ்சுப் படையினரும், 200 ஐநா அமைதிப்படையினரும் நிலைகொண்டுள்ளனர். இவர்களுடன் உள்ளூர் மாலி படையினரும் அங்குள்ளனர். அயல்நாடான நைஜரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட நான்கு பிரெஞ்சுப் பணியாளர்கள் இவ்வார ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டனர். 1990களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் என நம்பப்படும் 360 பேரின் மனித எச்சங்கள் பொசுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. பொசுனியாவின் வட-மேற்கே தொமாசிக்கா என்ற கிராமத்திலேயே இப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது பொசுனிய செர்பியப் படைகளினால் செர்பியரல்லாதோர் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பொசுனிய முசுலிம்கள், மற்றும் குரொவாசிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மேலும் 1,000 பேரின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்படலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். போர்க்குற்றங்களுக்காக இப்பகுதியில் இருந்த 16 பொசுனிய செர்பியர்கள் இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பிரிஜிடோர் என்ற அயல் நகரத்தில் பொசுனிய செர்பியர்கள் பெருமளவு வாழ்ந்து வந்தனர். இப்பகுதியில் உள்ள சிறைக்கூடங்களில் பொசுனிய சேர்பியர்களினால் இக்குற்றங்கள் இழைக்கப்பட்டன. பொசுனிய-எர்செகோவினாவின் ஏனைய சில பகுதிகளில் பொசுனிய முசுலிம்களினாலும், பொசுனிய குரொவாசியர்களினாலும் பொசுனிய செர்பியர்கள் மீது குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. பாக்கித்தான் தாலிபான் தலைவர் அக்கிமுல்லா மெகுசூத் கொல்லப்பட்டுள்ளதை தாலிபான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாக்கித்தானின் வடக்கு வாசிரித்தான் பகுதியில் உள்ள மெகுசூதின் வீட்டின் மீதும் காரின் மீதும் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத் தாக்குதல்களில் அக்கிமுல்லா மெகுசூத், அவரது சகோதரர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். தாலிபான் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக தூதுக்குழுவொன்றை நேற்று சனிக்கிழமை தாலிபான் பகுதிக்கு அனுப்பவுள்ளதாக பாக்கித்தான் அரசு அறிவித்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் இத்தாக்குதல் குறித்து விவாதிக்க பாக்கித்தான் பிரதமர் அமைச்சரவையை அவசரமாகக் கூட்டியுள்ளார். தமது நாட்டு இறைமையை அமெரிக்கா மீறியுள்ளதாக பாக்கித்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாக்கித்தான் தாலிபான்களின் முன்னாள் தலைவரும் 2009 ஆம் ஆண்டில் இவ்வாறே அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார். சீனாவின் வடக்கே உள்ள உள் மங்கோலியா சுயாட்சி பகுதியில் மூன்று சூரியன்கள் தோன்றிய அற்புத வானியல் நிகழ்வை அங்குள்ள மக்கள் கண்டு களித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனுடன் உடன் பிறப்புகளான இரட்டை சிறிய சூரியன்கள் திடீரென்று உருவாகின. இவை மூன்றும் வானவில் போன்ற ஒளி வட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன. சீப்பெங் நகரில் தோன்றிய இந்த நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது. பலர் இந்நிகழ்வைத் தமது காணொளிக் கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாகவும் சிலர் கூறினர். இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீப்பெங் வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கு போலிச் சூரியன் அல்லது பனிக்கட்டி ஒளிவட்டம் (ice halo) என்று பெயர்கள் உண்டு. வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில் ஊருடுவும் ஒளிச் சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார். இவ்விண்கலம் 300 நாட்கள் வரை, 44 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 இல் செவ்வாயின் சுற்றுவட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு டிசம்பர் 1 இல் இவ்விண்கலம் புவியீர்ப்பு விசையை உடைத்து புவியை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதியில் ஆயுதப் போரை நடத்தி வந்த எம்23 போராளிக்குழு தாம் ஆயுதங்களைக் களைவதாக அறிவித்துள்ளது. அரசுப்படைகள் தாம் இராணுவ வெற்றி பெற்றதாக அறிவித்த சில மணி நேரத்தில் போராளிகளின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமது நோக்கத்தை நிறைவேற்றத் தாம் அரசியல் வழிகளைக் கையாளத் தீர்மானித்துள்ளதாக எம்23 போராளிக்குழுவின் தலைவர் பேர்ட்ரண்டு பிசிமுவா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களைய ஆணையிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடைசிப் போராளிகள் சரணடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் நாட்டில் இருந்து தப்பி வெளியேறிவிட்டதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஆயுதங்களைக் களையாத ஏனைய போராளிக் குழுக்களை போரைக் கைவிடுமாறு தாம் கேட்கவிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் எம்23 போராளிகள் ஆயுதப்போரில் ஈடுபட ஆரம்பித்ததில் இருந்து சுமார் 800,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். தென்னாப்பிரிக்கத் தலைநகர் பிரித்தோரியாவில் கடந்த திங்களன்று இடம்பெற்ற ஆப்பிரிக்கத் தலவர்களின் மாநாட்டை அடுத்து கொங்கோ பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாந்திரே லூபா உந்தாம்போ செய்தியாளர்களிடம் கூறுகையில், போராளிகள் தாம் ஆயுதங்களைக் கைவிடுவதாக பொது அறிவிப்பு வெளியான பின்னர் ஐந்து நாட்களின் பின்னர் முறையான அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என்றார். கனிம-வளங்கள் நிறைந்த கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதி 1994 ஆம் ஆண்டு முதல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ருவாண்டா இனப்படுகொலையில் இருந்து தப்பி மில்லியன் துத்சி இனத்தவர்கள் எல்லை தாண்டி கொங்கோ வந்தனர். ஹூட்டு போராளிகள் கொங்கோவில் ஒளிந்திருக்கிறார்கள் எனக் காரணம் காட்டி இரண்டு தடவைகள் ருவாண்டா கொங்கோ மக்களாட்சிக் குடியரசு மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 1997-2003 காலப்பகுதியில் உகாண்டாவும் தமது இராணுவத்தினரை கொங்கோவுக்கு அனுப்பியது. பாக்கித்தானின் முன்னாள் இராணுவ ஆட்சித்தலைவர் பெர்வேசு முசாரப் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்லார் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இவரது உயிர் மீது அச்சுறுத்தல் உள்ளதால் இவர் தமது வீட்டை விட்டு வெளியேறுவாரா என்பது ஐயத்துக்கிடமானது என அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர். செம்மசூதி மீதான தாக்குதலை அப்போது அரசுத்தலைவராக இருந்த முசாரபே அனுமதித்திருந்தார். இத்தாக்குதலில் மசூதி மதகுரு உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் பாக்கித்தானில் தீவிரவாதம் தலைதூக்க உதவியது. 12 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடர் சென்னையில் தேனாம்பேட்டையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள ரீஜன்சி ஹோட்டலில் 350 தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. அத்துடன் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் இருந்து பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 43 வயதாகும் விசுவநாதன் ஆனந்த் 2007 ஆம் ஆண்டு முதல் சாம்பியனாக உள்ளார். ஆனாலும் 22 வயதாகும் கார்ல்சன் சதுரங்கப் போட்டிகளில் உலக தரத்தில் முதலாவதாக உள்ளார். ஆனந்த் எட்டாவது தரத்திலேயே உள்ளார். இன்று தொடங்கிய முதலாவது ஆட்டத்தில் ஆனந்த் கருப்புக் காய்களுடன் ஆடத் தொடங்கினார். 16வது நகர்வில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருவரைப் பற்றிய தகவலுடன் முதலாவது போட்டி முடிந்தவுடனேயே கட்டுரையை வெளியிட்டமை பாராட்டுக்குரியது. பிலிப்பீன்சின் மெயிட் மாகாணத்தின் தலைநகர் தக்கிளோபானுக்கு அருகாமையில் உள்ள சமார் தீவில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 2,000 பேரைக் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனாலும் 151 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். குடிநீர், மின்சாரம், மற்றும் உணவுக்கு அங்கு பெரும் தட்டுப்பாடு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாம் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர்கள் கூறினர். சூறாவளி ஹையான் வியட்நாமை திங்கட்கிழமை பிற்பகலில் தாக்கக்கூடும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். மாலைதீவில் நேற்று நடைபெறவிருந்த அரசுத்தலைர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்களிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று நடந்த தேர்தலில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது நசீது 47 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான 50% வாக்குகளைப் பெறத் தவறியதால் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், தோல்வியடைந்த வேட்பாளர் அப்துல்லா யமீன், புதிய தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் கோரியதை அடுத்து தேர்தலை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. வாக்களிப்பு செயற்பாடுகளில் மேலும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என முகம்மது நசீதின் கட்சி மற்றும் பொது நலவாய நாடுகளின் சிறப்புக் குழு, ஐக்கிய அமெரிக்க அரசு ஆகியன வலியுறுத்தியுள்ளன. அடுத்த சனிக்கிழமையே தேர்தல் நடத்துவதற்கு உகந்த நாள் என நீதிமன்றம் கூறியுள்ளது. 240,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சனிக்கிழமை வாக்கெடுப்பில் 86 வீதமானோர் வாக்களித்தனர். பிரியா விகார் கோயில் அகுதியில் நிலைகொண்டுள்ள தாய்லாந்துப் படையினர் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் என நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் தாய்லாந்தைக் கேட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிகள் அனைத்தும் கம்போடியாவுக்குச் சொந்தமானது என நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கம்போடியா உரிமை கோர முடியாது என அது கூறியுள்ளது. பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரு நாட்டு அரசுகளும் வரவேற்றுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் ஏற்க வேன்டும் என தாய்லாந்துப் பிரதமர் யிங்க்லக் சினவாத்ரா கேட்டுக் கொண்டுள்ளார். கம்போடியப் பிரதமர் ஊன் சென் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், எல்லைப் பிரச்சினை குறித்து தாம் தாய்லாந்து அரசுடன் அமைதியான முறையில் பேச்சுக்களை நடத்துவோம் எனக் கூறினார். பிரியா விகார் கோயில் கிபி 11-12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஆகும். 1962 இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. தீர்ப்பு கம்போடியாவுக்குச் சாதகமாக வழங்கப்பட்டிருப்பதனால், எல்லைக் கிராமங்களில் தேசியவாதிகளினால் வன்முறைகள் கிளப்பப்படலாம் ஐயம் கிளப்பப்பட்டுள்ளது. பன்னாட்டு நீதிமன்றத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள 1962 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் விளக்கம் என்பதால் இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது. பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றி, பயிலரங்கம் குறித்த அறிமுத்தை வழங்கினார். பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றமு மக்கள் தொடர்பாடல் துறையைச்சார்ந்த பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி ‘‘கணித்தமிழ் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா’’ குறித்து இணைய வழி நேரிடை செயல் விளக்க படக்காட்சியுன் சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் அமர்வாக பெரியார் பல்கலைக்கழக கணினி மையத்தில் நடைபெற்ற செய்முறைப்பயிற்சியினை தகவலுழவன், திருமதி. பார்வதிஸ்ரீ, ஆகியோர் அளித்தனர். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகியப் பொருண்மைகளில் நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர், அலுவலர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி ஒருங்கிணைத்தார். இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அந்நாட்டில் இவ்வாரம் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதில்லை என மொரீசியசுப் பிரதமர் நவீன் ராம்கூலம் அறிவித்துள்ளார். ஏற்கனவே கனடியப் பிரதமர் ஸ்டீவன் ஆர்ப்பர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தாம் இம்மாநாட்டின் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்து விட்டனர். விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பல போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டதாக இலங்கை மீது பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்து வருகிறது. நாளை மறுநாள் வியாழன் அன்று கொழும்பில் ஆரம்பமாகும் தலைவர்கள் மாநாட்டில் மொரீசியசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அர்வின் பூலெல் பங்குபற்றுவார் என பிரதமர் ராம்கூலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரின் இம்முடிவை அந்நாட்டின் தமிழர்களின் பிரதிநிதி மேனன் மர்டே வரவேற்றிருக்கிறார். இந்தியாவும் தனது பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது. எபிராஜ் கருணாநிதி, இதழியல் ஆய்வு மாணவர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம். பேசி:8015192390 வெனிசுவேலாவில் சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் ஒரு கட்டமாக அந்நாட்டில் மோசடி விலை நிர்ணயத்தைத் தடுக்க தனியார் நிறுவனங்கள் பெறு இலாபத்திற்கு உச்சவரம்பு கொண்டுவர அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோ தீர்மானித்துள்ளார். நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் மக்களிடம் விற்கும் பொருட்களின் மீது பல மடங்கு வரை விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகிறது. இதனால் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனை ஒழுங்கு படுத்தும் விதமாக இலாபத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படும் என வெனிசுவேலாவின் தலைவர் மதுரோ அறிவித்துள்ளார். பெரும் தனியார் நிறுவனங்கள் பல, வலதுசாரி அரசியலுக்கு ஆதரவாக, வெனிசுவேலா அரசிற்கெதிராக பொருளாதார ரீதியாக தாக்குதலை தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக நியாயமற்ற முறையில் யூகத்தின் அடிப்படையில் விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளை லாபம் அடிப்பது. மேலும் பொருட்களை பதுக்கல் மற்றும் உற்பத்தி குறைப்பு மூலம் செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்கி, விலையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. இதனை எதிர்கொள்ள நிக்கக்சு மதுரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பதுக்கலைத் தடுத்து நிறுத்த, உற்பத்தி மையத்தில் இருந்து விற்பனை நிலையம் வரை தொடர் ஆய்வு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதற்கென்று நுகர்வோர் சேவை மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் தொடர் கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது. அதே போல் அயல்நாட்டு நாணய பரிமாற்றம் குறித்தும் பல்வேறு புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் அரசின் சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், தடைசெய்யப்பட்டும் வருகிறது. இந்த நடவடிக்கைகளை அடுத்து ஜேவிசி போன்ற நிறுவனங்கள் விலையைக் குறைத்து நியாயமான விலையில் விற்பனை செய்ய முன்வந்தன. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். வாலின்சிகாவில் உள்ள ஒரு டாக்கா நிறுவனத்தில் மக்கள் கடையை உடைத்து உள்ளிருந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர். இச்சூறையாடலில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அரசின் அதிரடி சோதனைக்குப் பயந்து சில பெரும் நிறுவனங்கள் தங்களின் கடைகளை இழுத்து மூடியுள்ளன. இதே வேளையில் சாம்சங் நிறுவனத்துடன் வெனிசுவேலா அரசு இணைந்து தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிர்நசாதனப் பெட்டிகள், தொலைபேசிகள், மற்றும் டேப்லட் கணினிகளை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 14வது நிதி ஆணைக்குழுவிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஒய். வி. ரெட்டி தலைமையிலான நடுவண் அரசின் 14வது நிதி ஆணைக்குழு மூன்று நாள் பயணமாக திரிபுரா வந்துள்ளது. இக்குழு முதலமைச்சர், உயரதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து நிதிச் செலவினங்கள் குறித்தும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தது. இக்குழுவைச் சந்தித்த பின்னர் அகர்தலாவில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், பெருமளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை ஈடுகட்டி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்பு ஒதுக்கீடாக ரூ.67 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார். நடுவண் அரசுத் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் அமலாக்கி வருவது குறித்து நிதிக்குழு பாராட்டு தெரிவித்தது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டிலேயே 73 சதவீதம் அளவிற்கு வனப் பாதுகாப்பை உறுதி செய்து மிகப்பெருமளவில் காற்று மண்டலத்தை தூய்மைப்படுத்துவதில் திரிபுரா அரசே முன்னிற்கிறது எனவும் நிதி ஆணைக்குழு பாராட்டியுள்ளது. கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவென இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் ஒரு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் சென்றடைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் உலக நாடுகள் ஒன்றின் அரசுத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்றது இதுவே முதற் தடவையாகும். இவருடன் முப்பதிற்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் சென்றனர். யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் டேவிட் கேமரன் முதலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஆறு அம்சத் திட்டம் ஒன்று அடங்கிய ஆவணங்களை முதலமைச்சர் விக்னேசுவரன் பிரதமரிடம் கையளித்தார். இராணுவத்தினரை அகற்றல், சிவிலியன் ஆளுனரை நியமித்தல், 13வது திருத்தச் சர்ட்டத்தை காவல்துறை, மற்றும் காணி அதிகாரங்களுடன் அமுல்படுத்தல், இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தல், கல்வி, மற்று வேலை வாய்ப்பு போன்ற பல அம்சங்கள் இதில் அடங்கியிருந்தன. கேமரன் வட மாகாணசபை முதல்வரை சந்தித்துக் கொண்டிருந்த வேளை, நூலகத்திற்கு வெளியே காணாமல் போனோரின் உறவுகள் நூற்றுக்கணக்கில் கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆனாலும், நூலக நுழைவாயிலுக்கு செல்ல அவர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதனால் அந்தப் பகுதியில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது. இப்போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பிரதமரின் வாகனத் தொடரணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் அதனை மறித்து, அவரிடம் புகார் செய்ய காணாமல் போனவர்களின் உறவினர்கள் முயற்சித்தார்கள். ஆனாலும், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலர் வெளியே வந்து, நிலைமைகளை அவதானித்தனர். அவர்களிடம் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதே வேளையில், அரச ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அங்கு திடீரெனக் கூடி பதாதைகளுடன் நூலக நுழைவாயிலுக்கு முன்னாக அரசுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். அதன் பின்னர் பிரித்தானியப் பிரதமர் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அம்மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் மாவிட்டபுரம்- கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமையினால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்ததுடன், சில மக்கள் அழுதும் உள்ளனர். முன்னதாக வெள்ளிக்கிழமை காலை யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் மாவிட்டபுரம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மக்களுக்கு படைப்புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், 3 வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாலைதீவுகளில் நேற்று நடைபெற்று முடிந்த அரசுத்தலைவர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அப்துல்லா யமீன் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் தலைநகர் மாலேயில் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். யமீனுடன் போட்டியிட்ட முன்னாள் அதிபர் முகம்மது நசீத் தோல்வியை ஏற்றுக் கொண்டார். புதிய தலைவருக்கு இந்தியா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. இரண்டு ஆண்டுகள் நாட்டில் நிலவி வந்த அரசியல் கொந்தளிப்பு நிலைக்கு இத்தேர்தல் முடிவுகள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என பெரும்பாலான மாலைதீவு மக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அப்துல்லா யமீன் 30 ஆண்டு காலம் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கையூமின் உடன்பிறவா சகோதரர் ஆவார். நாட்டில் அரசியல் திர நிலையைக் கொண்டு வருவதே தமது முதல் பணியாகும் என அப்துல்லா யமீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திரு. நசீத் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாம் ஒரு சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம். மக்களாட்சி முறையில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்றார். ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப. கமலக்கண்ணன் இந்த பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளார். உருசியாவின் கசான் நகர விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 50 பேரும் கொல்லப்பட்டனர். உருசியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தத்தர்ஸ்தான் குடியரசின் சகசான் நகரை நோக்கிச் சென்ற புறப்பட்ட போயிங் 737 விமானம் கசான் விமான நிலையத்தில் நேற்றிரவு உள்ளூர் நேரம் 07:30 மணிக்கு தரையில் மோதி வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 44 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் தலைகீழாகக் கீழே வீழ்ந்ததாக அறிவிக்கப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளாகியதில் தொழில்நுட்பக் கோளாறா அல்லது விமானிகளின் தவறா எனக் கண்டறிவதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்களில் தத்தர்ஸ்தான் குடியரசின் அரசுத்தலைவரின் மகன், மற்றும் தத்தர்ஸ்தானின் நடுவண் புலனாய்வுத்துறையின் தலைவர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டொனா புல் என்ற பிரித்தானிய ஆசிரியை ஒருவரும் இறந்தவர்களில் ஒருவர் என ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் "இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்துக்குள்ளான விமானம் 1990 ஆம் ஆண்டில் இருந்து சேவையில் உள்ளது என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. கசான் நகரம் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 720 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 671 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் எவ்வித இடர்ப்பாடும் இன்றி செல்லும் பட்சத்தில், 10 மாதங்களில் 2014 செப்டம்பர் 22 இல் செவ்வாயை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவென் விண்கலம் செவ்வாயின் மேல் வளிமண்டலத்தை ஆராயும். இதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள வளிமத்தின் இழப்பு எவ்வாறு செவ்வாய்க் கோளின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது மங்கள்யான் விண்கலத்தை நவம்பர் 5 இல் செவ்வாயை நோக்கி ஏவியது. ஆனாலும், மங்கள்யானை விட மாவென் சில நாட்கள் முன்கூட்டியே செவ்வாயைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோவிற்கு சிறப்பு அதிகாரங்களை அளிப்பதற்கான சட்டமூலத்துக்கு அந்நாட்டின் தேசியப் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் படி அடுத்த 12 மாதங்களுக்கு காங்கிரசின் ஆலோசனைகளைப் பெறாமலேயே நிக்கொலாசு மதுரோ ஆட்சி நடத்த முடியும். இச்சட்டமூலத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், நாட்டில் விலைவாசிகள் குறைக்கப்படும் என்றும், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினையை சீர்ப்படுத்துவதே தமது புதிய அதிகாரங்களின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தனது அதிகாரங்களை எதிர்க்கடசியினருக்கு எதிராக அவர் திருப்பி விடக்கூடும் என அரசியல் விமரிசகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலாவில் தற்போது உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களிற்கான பற்றாக்குறை நிலவுகிறது, நாட்டில் மின்வெட்டு அமுலில் உள்ளது. அத்துடன் 54% பணவீக்கமும் காணப்படுகிறது. உகாண்டாவில் உள்ள போராளிக் குழுத் தலைவர் யோசப் கோனி சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசு அறிவித்துள்ளது. சரணடைவதற்கு முன்னடர் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என கோனி எதிர்பார்ப்பதாக அரசு கூறுகிறது. எல்.ஆர்.ஏ எனப்படும் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவத்தின் (Lord's Resistance Army) தலைவர் யோசப் கோனி போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்பட்டு வருகிறார். இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்தது. கோனி தலைமையிலான கிளர்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு உகாண்டாவில் ஆரம்பமானது. இவர்கள் சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலிலும், அடிமைகளாகவும், கிளர்ச்சிகளிலும் ஈடுபடுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் எல்.ஆர்.ஏ. போராளிகள் உகாண்டாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அன்றில் இருந்து இவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், கொங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் இயங்கி வந்தனர். மதுரை தொடருந்து நிலையத்திற்கு தினசரி 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக கூடுதல் நடை மேம்பாலம் அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை மாநகர் கருதப்படுப்படுகிறது. இங்குள்ள தொடருந்து நிலையத்தில் தினசரி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் தெற்கு நகரங்களை, வடக்கு நகரங்களோடு இணைக்கும் முக்கிய புறப்படும் புறப்படும் நேரங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள பழைய நடை மேம்பாலம் பழுதானதால், சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பயணிகள் தற்போது புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதால், நெரிசல் அதிகம் உள்ளது. நுழைவு வாயிலிலிருந்து புதிய மேம்பாலம் சற்று தள்ளியிருப்பதாலும், படிகட்டுகள் உயரமாக இருப்பதாலும், முதியோர், பெண்களுக்கு சிரமமாக உள்ளது. தானியங்கி படிக்கட்டுகள் இருந்தும்கூட, நெரிசல் காரணமாக நடை மேம்பாலங்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க பழைய நடைபாதை பாலத்திற்கு அருகில் ஒரு நடை மேம்பாலத்தை அமைக்க ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து, மதுரை தொடருந்து நிலையத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதனை, கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை தாங்கி. கூடுதல் மேலாளர் அஜீத்குமார் முன்னிலை வகித்தார். வர்த்தக மேலாளர் கோவிந்தப்பராஜ், ஸ்டேஷன் மேலாளர் சாலமோன் சிவத்தையா, துணை தலைமை பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக மதுரையின் சிறப்புகளான மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் போன்றவைகளை ஓவியமாக வரைய 4 இடங்களை கோட்ட மேலாளர் ரஸ்தோகி உத்தரவின் பெயரில், நிலைய மேலாளர் தேர்வு செய்து கொடுத்தார். சொந்த ஊர் திருமங்கலம், மதுரை மாவட்டம். பள்ளிப்படிப்பு அனைத்தும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன், தமிழின் சிறப்புகளையே அறியாமல். கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படிக்கும் போது, விக்கி ஆங்கிலத்தில் தான் முதலில் தொகுக்க ஆரம்பித்தேன். பட்டம் முடித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். இங்கு பயன்படுத்தும் தமிழைக் கண்டு(கேட்டு நமது மொழியும், கலாச்சாரமும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதற்கான தேடலில் தான், என் கவனம் தமிழ் விக்கியின் மீது திரும்பியது. ஆங்கிலத்தில் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீதுள்ள ஆர்வமும் என்னை இங்கு ஈர்த்தது. மேலும் எனது பணியை இங்கிருந்தே தொடங்கினேன். மதுரை மாட்டுத்தாவணியில், பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "ஆட்டோ பே" திட்டத்தில், முறையான கட்டண நிர்ணயம் செய்யாததால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே திட்டமிட்டு முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வைகோ சந்தித்து உள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்குமே வைகோ வந்து சென்றதே தெரியாதபடி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக அவர் வந்து சென்ற காரில் கட்சி கொடி கூட இல்லை. அவர் சாதாரன நபர் போல வந்து சென்றுள்ளார். இது மற்ற அரசியல் கட்சி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநில கொள்கைபரப்பு செயலாளர் அழகுசுந்தரம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வீரத்தமிழ்செல்வன், மதுரை மாவட்ட செயலாளர் பூமிநாதன், திருப்பரங்குன்றம் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கரடிக்கல், தங்களாச்சேரி, புங்கங்குளம், உரப்பனூர் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறவை மாடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில வாரங்களாக இப்பகுதி மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. இவ்வகை நோய் பாதிப்புக்குள்ளான மாடுகள் தீவனம் உண்ணாமலும், நீர் அருந்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். நடக்க முடியாமலும் உள்ளன. தினசரி 10 முதல் 15 லிட்டர் பால் தந்த பசு மாடுகள், நோய் பாதிப்பால் 2 லிட்டர் கூட பால் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாடுகள் வளர்ப்போர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சில கிராமங்களில் காளை மாடுகளும் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. லாத்வியத் தலைநகர் ரீகாவில் பல்பொருள் அங்காடி ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலையில் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மேலும் ஒரு கூரை இடிந்து வீழ்ந்தது. மீட்புப் பணியாளர்கள் மூவர் இதில் கொல்லப்பட்டனர். இவ்விபத்துக் குறித்து காவல்துறையினர் புலனாய்வு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளிடையே இருந்து 40 பேர் வரை இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை ஆயினும், மேல் மாடியில் பூங்கா ஒன்றை அமைக்கும் பணி இடம்பெற்று வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாக்சிமா என்ற இந்த பல்பொருள் அங்காடி 2011 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்ட போது இதற்கு சிறந்த கட்டிடக்கலைக்கான தேசிய விருது இதற்கு வழங்கப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவிக்கிறது. மதுரை வானூர்தி நிலையத்தை சுங்கவரி நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டும், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றுவரையிலும் செய்து தரப்படவில்லை. அதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தென் மாவட்டங்களின் மையமாகத் திகழ்கின்ற மதுரை மாநகரம், கல்வியில் சிறந்ததாகவும், தொழில்துறை நகராகவும் வளர்ந்து வருகின்றது. அதனை ஒட்டி அமைந்து உள்ள தென்மாவட்டங்களும் வாகன உதிரிப் பாகங்கள், இரப்பர், வேதிப் பொருள் தொழிற்சாலைகள், கிரனைட்டு போன்ற தொழில்கள் மூலமாக வளர்ந்து வருகின்றன. இவை அனைத்தும், நெடுந்தொலைவில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன. மேற்கண்டவைகள் அனைத்தும் மதுரை விமான நிலையத்தில் வழியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டால், போக்குவரத்துச் செலவு குறைவும்; கால விரயம் தவிர்க்கப்படும்; ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவும் குறையும். மே மாதம் மதுரை விமான நிலையம், சுங்கவரி விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆயினும், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும், இன்றுவரையிலும் செய்து தரப்படவில்லை. எனவே, மதுரை விமான நிலையம், முழுமையான அளவில் சுங்கவரி விமான நிலையமாக இயங்கிடத்தக்க வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என பிரதமருக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுரையில் அறிவிக்கப்படாத மின்தடை நேரம் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 12 மணி நேரம் மட்டுமே மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. கொசுக்கடியால் இரவு தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த சிலஆண்டுகளாக தமிழகத்தில் வரலாற்றில் கண்டிராத அளவுக்கு மின் தடை இருந்தது. குறிப்பாக கோடை காலத்தில் தினமும் 4 மணி நேரம் 20 மணி நேரம் மின் தடை இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயம் முதல் அனைத்துத் தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. சிலமாதங்கள் தொடர்ச்சியாக நீடித்த இந்த மின் தடை, காற்றாலைகளின் மின்உற்பத்தியால் படிப்படியாக குறைக்கப்பட்டது. மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து மின் வெட்டு இல்லாமல் இருந்தது. இதனிடையில், தூத்துக்குடி, வட சென்னை மற்றும் வல்லூர் போன்ற அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்தது, காற்றாலையும் கை கொடுக்கவில்லை, மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் சீராக இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மதுரையில் இரவு, பகல் என மீண்டும் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது. இரவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கொசுத்தொல்லை அதிகளவு உள்ளது. தூக்கமின்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோர்வே நாட்டைச் சேர்ந்த 22 வயது மாக்னசு கார்ல்சன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்தை வெற்றி கொண்டு 16வது உலக சதுரங்க வாகையாளர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 2007 ஆம் ஆண்டு முதல் உலக சாம்பியனாகத் திகழும் விசுவநாதன் ஆனந்த் (43 வயது) உலகத் தரவரிசையில் எட்டாவதாக உள்ளார். இசை மன்றங்கள் தமது இணையத்தளத்தில் இவ்வாண்டிற்குரிய நிகழ்ச்சி நிரல்களை பதிப்பிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் தமது மன்றம் ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதுகள் குறித்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சில அமைப்புகள், அறிவிப்பு ஒட்டிகளை நகரத்துச் சுவர்களிலும் பேருந்துகளிலும் ஒட்டி தமது நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரத்தை ஆரம்பித்துள்ளன. இலக்சுமண் சுருதி நடத்தும் 9 ஆவது சென்னையில் திருவையாறு இசை விழா, டிசம்பர் 18 முதல் டிசம்பர் 25 வரை நடைபெறுகின்றன. எட்டு நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு சமய சொற்பொழிவுகளும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திரப் பிரதேசத்தில் விசாகபட்டினம் நகரில் வை. எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களை எடுத்தது. 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி் ஆட்டத்தை துவங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இறுதி நேரத்தில் ஆடிய சமி 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 99 ஓட்டங்களும், தோனி 51 ஓட்டங்களும், தவான் 35 ஓட்டங்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து போவதற்கு நடத்தப்படவிருக்கும் பொதுக் கருத்துக்கணிப்பு வெற்றி பெறும் பட்சத்தில் 2016 மார்ச் 24 ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவதற்கான நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து விடுதலைக்கான திட்டவரைபை உள்ளடக்கிய வெள்ளை ஆவணம் ஒன்றிலேயே இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை ஆவணத்தில் ஸ்கொட்லாந்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் சமத்துவம் போன்ற பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் துணை முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறினார். இந்த 670-பக்க வெள்ளை ஆவணம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது. ஸ்கொட்லாந்தின் செயலாளர் அலிஸ்டர் கார்மைக்கேல் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் உத்தேச வாக்கெடுப்பு ஐக்கிய இராச்சியத்தின் எதிர்காலத்திற்கு ஒரு பெரும் சவால் எனக் குறிப்பிட்டார். ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் மாதம் 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு வெற்றி பெற்றால், தற்போதைய ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் 2016 மார்ச் 23 நள்ளிரவு கலைக்கப்படும். கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தில் மிகப் பழைய புத்த கோவில் ஒன்றின் பகுதிகள் தொல்லியலாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் லும்பினியில் மாயாதேவி கோவிலுக்கு அடியில் இருந்து கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தினாலான கோவிலை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோவிலில் மரம் ஒன்றும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது புத்தரைப் பற்றிய கதை ஒன்றுடன் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. புத்தரின் தாயார் மாயாதேவி மரக்கிளை ஒன்றைப் பிடித்தவாறு புத்தரைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. அனடிக்குவிட்டி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இத்தகவல்கள் புத்தர் பிறந்த நாள் குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் டர்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபின் கொனிங்கம் என்பவர் தலைமையிலான குழு இவ்வாய்வில் ஈடுபட்டது. புத்தர் பிறந்தது கிமு 623 ஆம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக நம்பப்பட்டு வந்தது. ஆனாலும், பெரும்பாலான வரலாற்றியலாளர்கள் கிமு 390-340 என நம்புகின்றனர். இதுவரை காலமும், புத்தரைப் பற்றிய ஆதாரங்கள் கிமு 3ஆம் நூற்றாண்டு பழமையானவையாகவே இருந்து வந்துள்ளன. இவை பெரும்பாலும் அசோக மன்னர் காலத்தவையாகும். புதிய கண்டுபிடிப்புகள் இப்புனித தலத்தை பாதுகாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு குறித்து சில தொல்லியலாளர்கள் எதிர்மாறான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஜூலியா ஷா, மரம் ஒன்று கட்டடத்தை சுற்றியுள்ளதாகக் கூறப்படுவது ஒரு ஊகமே எனக் கூறியுள்ளார். ஆனாலும் இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாளத்தின் தென் மேற்கில் தலைநகர் கத்மண்டுவில் இருந்து 300 கிமீ தூரத்தில் இந்திய எல்லைக்கருகில் அமைந்துள்ளது. இப்பகுதியை 1997 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவித்தது. பாரத் கலாச்சார் மன்றத்தின் 27 ஆவது 'மார்கழி மகோத்சவ்' விழா நிகழ்ச்சிகள், டிசம்பர் 1, 2013 முதல் சனவரி 14, 2014 வரை நடைபெறுகின்றன. ஏறத்தாழ 45 நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு பரத நாட்டிய நிகழ்ச்சிகளும், மேடை நாடகங்களும் இடம்பெறுகின்றன. சென்னை நகரின் தியாகராயர் நகரப் பகுதியில் அமைந்துள்ள சிறீ ஒய். ஜி. பி. கலையரங்கத்தில் இவ்விழா நடைபெறும். திசம்பர் 1 முதல் திசம்பர் 10 வரையிலான காலகட்டத்தில் நுழைவுச்சீட்டின்றி நேயர்கள் இவ்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாக்காலம் முழுமைக்குமான நுழைவுச்சீட்டுக் கட்டணம் இந்திய உரூபாய் 8000 என அறியப்படுகிறது. சீசன் டிக்கெட் என்றழைக்கப்படும் இச்சீட்டினை முன்பதிவு முறையில் பெற்றுக் கொள்ளல் வேண்டும். இதைத் தவிர அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, இருப்பிற்குத் தகுந்தபடி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். உரூபாய் 500, 300, 200, 100 எனும் கட்டண வகைகளில் இந்த சீட்டுகள் வழங்கப்படும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் மூவர் காயமடைந்தனர். இந்திய-உருசியக் கூட்டில் அமைக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் அக்டோபரில் இயங்க ஆரம்பித்தது. 2011 இல் யப்பானில் இடம்பெற்ற சுனாமியில் புக்குசிமா அணுமின் நிலையம் பாதிப்புக்குள்ளானதால், இவ்வாறான விபத்துகள் கூடங்குளத்திலும் இடம்பெறலாம் என்பதே எதிர்ப்பாளர்களின் கருத்தாகும். இப்பகுதி 2004 ஆம் ஆண்டு சுனாமியில் பெரும் பாதிப்புக்குள்ளானது. குண்டுவெடிப்பினால் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய அணுவாற்றல் ஆணையத்தின் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் உட்பட உலகெங்கணும் உள்ள தமிழர்கள் நேற்று மாவீரர் நாள் அன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று இராணுவத்தினர் கடுமையான சோதனைப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இரண்டு நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என இலங்கைக் காவல்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், வடமாராட்சியில் "மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா எனக் கேட்டு இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், அச்சுறுத்தல்களைத் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் நினைவு கூரப்பட்டது. திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மாவீரர் நாளை ஒட்டி நேற்று வடமாகாண கல்வியமைச்சின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராசா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் வே. சிவயோகன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர் மரங்களை நாட்டி வைத்தனர். முன்னதாக யாழநகரில் தந்தை செல்வா தூபிப் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மரநடுகையினை மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் அறிவித்திருந்தார். எனினும் அவரிற்கு வீடு தேடி சென்ற இலங்கைப்படையினர் பகிரங்கமாகவே கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டம் மாற்றஞ் செய்யப்பட்டு கல்வியங்காடு ஆடியபாதம் வீதியினிலுள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் அலுவலக வளவில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர். இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எக்சல் மண்டபத்தில் நடந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் என்னும்ஈதனை ஒழுங்கு செய்திருந்தது. நண்பகலில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர். சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார். பொதுச் சுடரினை தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார். பனிக்கட்டியும் தூசுகளும் நிறைந்த இந்த மாபெரும் வால்வெள்ளி சூரியனை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல முயன்ற நிலையில், நேற்று வியாழக்கிழமை சூரிய ஈர்ப்பு விசையின் காரணமாக அதன் மீது மோதியது. சூரியனின் பின்புறமாகச் சென்ற இந்த வால்வெள்ளி மீளத் திரும்பாத நிலையில் அது அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது கிடைக்கப்பட்டுள்ள படங்களின் படி வால்வெள்ளியில் சிறு பகுதி இன்னமும் ஒளிர்வீசிக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இன்னும் சில மணித்தியாலங்கள அல்லது நாட்களுக்குள் இவ்வால் நட்சத்திரத்துக்கு எதுவும் நடக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இப்போது காணப்படும் துண்டு தொடர்ந்து ஒளிர் வீசலாம் அல்லது மறைந்தே விடலாம். "கடந்த ஓராண்டு காலமாக இந்த வால்வெள்ளியை நாம் அவதானித்து வருகிறோம். இதன் நடவடிக்கை எமக்கு வியப்பாகவும் அதே வேளையில் விசித்திரமாகவும் உள்ளது என வானியற்பியலாளர் கார்ல் பாட்டம்ஸ் கூறினார். தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னனி நடன இயக்குனரான இவருக்கு கடந்த ஆண்டு, திரைப்படத்துறையில் வெற்றிகரமாக 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, திரைத்துறையினரால் விழா எடுக்கப்பட்டது. திரைத்துறையில் நான்கு தலைமுறைகள் கண்ட இவரும், கமலஹாசனும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். கடைசியாக, 2008ம் ஆண்டு இவரும் கமலஹாசனும் தசாவதாரம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் இவரது மகள் ஆவார். கடந்த சூன் மாதத்தில் மாலி நாட்டு அரசுடன் தாம் ஏற்படுத்திய போர் நிறுத்த உடன்பாட்டை முடித்துக் கொண்டுள்ளதாக துவாரெக் இனப் போராளிகள் அறிவித்துள்ளனர். மாலியின் வடக்கே கிடால் நகருக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ஓமார் தத்தாம் லீயிற்கு எதிர்ப்புத் தெரிவித்த துவாரெக் இனத்தவருக்கும் மாலிப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்தே இவ்வறிவிப்பை போராளிகள் விடுத்துள்ளனர். இம்மோதலில் பலர் காயமடைந்தனர். மேற்படி மோதல் இது போருக்கான அறைகூவல் என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கூறியுள்ளார். 18 மாதங்கள் இடம்பெற்ற மோதல்களை அடுத்து பிரெஞ்சுப் படையினர் நாட்டில் ஊடுருவி அமைதியை நிலைநாட்டினர். இதனை அடுத்து சூன் மாதத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டது. துவாரெக் போராளிகள் மாலியின் வடக்குப் பகுதியில் அசவாத் என்ற பெயரில் தனிநாடு கோரிப் போராடி வருகின்றனர். சீனா தனது முதலாவது விண்ணுளவியை நிலவை நோக்கி ஏவியுள்ளது. சான்'எ-3 (Chang'e-3) என அழைக்கப்படும் இவ்விண்கலம் இன்று திங்கட்கிழமை காலை 01:30 மணிக்கு நிலவை நோக்கிச் சென்றது. சந்திரனில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்ணுளவிக்கு 'ஜேட் ராபிட் Jade Rabbit) அல்லது 'யுட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 120 கிகி எடையுள்ளது. இம்மாதம் நடுப்பகுதியளவில் இது சந்திரனின் வடக்கு அரைக்கோளத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் நிலவில் உலவவிருக்கும் இந்த விண்ணுளவி 30 பாகை சாய்வான தளத்திலும் செல்லக்கூடியதாக இருக்கும். விண்ணுளவியும் அது தரையிறங்க உதவும் விண்கலமும் சூரிய மின்கலன்களின் ஆற்றலினால் இயக்கப்படும். ஆனாலும் குளிர் இரவுகளில் விண்ணுளவியை சூடாக வைத்திருக்க புளுட்டோனியம்-238 கலந்த கதிரியக்க சூடாக்கிகளும் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாரத் கலாச்சார், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் போன்ற கலை மன்றங்கள் தமது விழாக்களை மாதத்தின் முதல் நாளிலேயே தொடங்கிவிட்டன. ஜெயா தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் நடக்கும் மார்கழி மகா உத்சவம் எனும் இசை விழாவும் டிசம்பர் 1 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. டிசம்பர் இசை விழா 2013: சென்னையின் இசை மன்றங்கள் தயாராகி வருகின்றன நவம்பர் 23, 2013 பிரான்சின் வறுமைக்கு எதிரான அமைப்பின் 17 நிவாரணப் பணியாளர்களை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தது என்றும், கொலையாளிகளை இலங்கை அரசு பாதுகாத்து வருவது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் எனவும் அவ்வமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளது. 2006 ஆகத்து 4 ஆம் நாள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இப்படுகொலைகளை நிகழ்த்தியது இலங்கை இராணுவம், கடற்படை, மற்றும் காவல்துறையினர் என்பதற்குத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது. "நிவாரணப் பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகப் பெரும் தாக்குதல் இதுவாகும். 17 பேரும் வரிசையாக முழங்காலில் நிற்கவைக்கப்பட்டுப் தலையில் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்,” என வறுமைக்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது. "17 மனித நேய உதவிப் பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் 16 பேர், ஒருவர் முஸ்லிம். இலங்கை அரசின் அதிகாரபூர்வ விசாரணை முடிவுக்காக நாம் காத்திருந்தோம். ஆனால், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். சர்வதேச அளவில் நீதியான விசாரணை நடத்தியே, இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். தமக்குத் தெரிந்த உண்மையை முன்னரே வெளியிட்டிருந்தால் நமது விசாரணைக்கு அது உதவியிருக்கும் என அவர் தெரிவித்தார். 2004 சுனாமி அழிவுகளை அடுத்து ஏசிஎஃப் அமைப்பின் பணியாளர்கள் மூதூரில் தமது நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து பல பன்னாட்டு உதவி நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் ஏசிஎஃப் போன்ற ஒரு சில நிறுவனங்களே அங்கு தங்கியிருந்து சேவையாற்றின. குறிப்பிட்ட நாளில் அரசுப் படையினர் அவ்விடத்துக்கு வந்த போது நிவாரணப் பணியாளர்கள் தேநீர் இடைவேளை எடுத்திருந்தனர் எனத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டனர் என்றும் கடற்படையின் சிறப்புக் கமாண்டோக்களின் முன்னிலையில் 15 பேரை அவர்களின் தலைகளில் காவல்துறையினர் சுட்டனர் என்றும் மேலும் இருவர் தப்பியோட எத்தனிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படுகொலைகளின் பின்னர் ஏசிஎஃப் அதிகாரிகள் அங்கு செல்ல முயன்ற போது அவர்கள் இராணுவத்தினரால் நான்கு முறை தடுக்கப்பட்டனர். பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், மற்றும் இலங்கை போர்க் கண்காணிப்பு அலுவலர்களும் அவ்விடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 7 ஆம் நாளே இறந்தவர்களின் உடல்களை மீட்க முடிந்தது. இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 37 பேர் படுகாயமடைந்தனர். பாப் அல்-யமான் நகரில் உள்ள அமைச்சக் கட்டடத்தின் நுழைவாயிலில் முதலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆயுதம் தாங்கிய போராளிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் அறிவிக்கப்படுகிறது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பலர் இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களாக மோட்டார் சைக்கிள்களில் வரும் போராளிகள் அதிகாரிகள் மீது தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. தொலைக்காட்சியில் பேசிய சூமா மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தெரிவித்தார். நமது நாடு ‘தலைசிறந்த மகனை’ இன்று இழந்து விட்டது என அவர் கூறினார். மண்டேலாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றார். மண்டேலாவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறுகையில், இந்த உலகம் இனி நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவரைக் காணாது. நெல்சன் மண்டேலாவை உதாரணமாகக் கொள்ளாமல் எனது வாழ்வை நினைத்துப்பார்க்க முடியாது என்றார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரன் வெளியிட்ட அறிக்கையில், இந்த உலகின் சுடர் ஒளி மறைந்து விட்டதாகக் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நெல்சன் மண்டேலா உண்மையான காந்தியவாதி என்றும், உலகின் தலை சிறந்த மனிதர்களில் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நெல்சன் மண்டேலாவுக்கு 1990-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் இறுசி சடங்குகள் இம்மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அரச மரியாதையுடன் நடக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் யாக்கோபு சூமா அறிவித்துள்ளார். டிசம்பர் இசை விழா 2013: சென்னையில் தொடங்கியது டிசம்பர் 3, 2013 இன வன்முறைகள் தலைதூக்கியுள்ள மத்திய ஆப்பிரிகக்க் குடியரசின் பொசாங்கோ நகருக்கு பிரெஞ்சுப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அங்குள்ள ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருக்கு உதவியாக பிரான்சு தனது 1,600 படைவீரர்களை அங்கு அனுப்பியுள்ளது. நாட்டில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும், நிவாரண உதவிகள் தடையின்றிக் கிடைக்க வழிவகை செய்வதுமே தமது முக்கிய நோக்கம் என பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த மார்ச்சு மாதத்தில் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட பின்னர் மத்திய ஆப்பிரிகக்க் குடியரசில் பெரும் வன்முறைகள் வெடித்துள்ளன. பிரான்சுவா பொசீசே செலெக்கா என்ற போராளிக் கூட்டமைப்பினரால் பதவியில் இருந்து அகற்ரப்பட்டார். அவ்வமைப்பின் தலைவர் மிக்கெல் ஜொட்டோடியா அரசுத்தலைவரானார். செலெக்காவின் ஆயுதம் தாங்கிய போராளிகள் நாட்டைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் 30 பேர் வரையில் அங்கு வன்முறைகளினால் கொல்லப்பட்டுள்ளனர். விக்கி செய்திக்கு மிக்க நன்றி செல்வக்குமார் இதனால் அவற்றில் இருந்து வெளிவரும் கதிர்கள் உடல்நலக் கேடு உண்டாக்குகின்றன. பலரும் தோல் பாதிக்கப்பட்டும், கண்பார்வை இழந்தும் உள்ளனர் என எச்சரித்துள்ளனர். BNB Medical Co. Ltd. தயாரிக்கும் Epsil BSL-10, மற்றும் Carful Company Ltd. தயாரிக்கும் SI-808 ஆகியவை தற்சமயம் ஆபத்து தரக் கூடியவை என அறிய முடிகின்றது. அத்தோடு இவற்றைப் போல மேலும் பல போலி சாதனங்கள் இணைய சந்தையில் விற்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Radiation Emitting Devices Act, the Medical Devices Regulations and the Food and Drugs Act ஆகிய சட்டங்கள் விதித்துள்ள நியமங்களைப் பின்பற்றித் தயாரிக்கப்படும் முடி நீக்கி சாதனங்கள் மட்டுமே உடல்நலத்துக்கு உகந்தது என தெரிவிக்கக்கப்பட்டுள்ளது. முறையற்ற சாதனங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டோர் தமது குடும்ப மருத்துவரிடம் உடனடியாக கலந்தாலோசித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளுமாறும் அறிவுரைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வடக்கே நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஊழலுக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக போட்டியிட்டு எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி தோற்றுள்ளது. முதலமைச்சராக இருந்த சீலா தீக்சித்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேச்றிவால் தோற்கடித்தும் உள்ளார். மொத்தம் உள்ள 70 இடங்களில் 17 இடங்களை இக்கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்தச் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 32 இடங்களுடன் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ள கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 35 இடங்களை அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. ஆம் ஆத்மியின் இந்த வெற்றி நாட்டின் பிற பகுதிகளில் குறிப்பாக இளைஞர்கள், நடுத்தரக் குடுபத்தவர் மத்தியில் எதிரொலிக்கும் எனவும். நாடாளமன்ற தேர்தலில் பிற கட்சிகளுக்கு இது பெரும் சவாலாய் அமையலாம் எனவும், 30 தொகுதிகள் வரை கைப்பற்றி முக்கியமான கட்சியாய் உருவெடுக்க கூடும் என அரசியல் ஆய்வாளர் சுவாமிநாதன் ஐயர் கூறுகின்றார். ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான பொது மக்களின் கோபம் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும் என பரவலாக கருதப்படுகின்றது. * தலைப்பில் நிறுத்தற்குறியினை இங்கு நாம் இடுவதில்லை. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மூண்ட கலவரத்தில் காவல்துறையினர் உட்பட 18 பேர் காயமடைந்தனர். 27 தெற்காசிய நாட்டவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில மணி நேரத்தில் கல­வ­ரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினரின் அறிக்கை தெரி­வித்தது. காயமடைந்தவர்களில் 10 பேர் காவல்துறையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் சிங்கப்பூர் கண்ட முதலாவது கலவரம் இதுவாகும் என காவல்துறை ஆணையர் இங் ஜூ ஹீ கூறினார். இவ்வகையான கலவரம் சிங்கப்பூருக்கு உகந்ததல்ல என அவர் வர்ணித்தார். லிட்டில் இந்தியா அல்லது குட்டி இந்தியா என்றழைக்கப்படும் பகுதியில் பொதுவாக இந்திய, வங்காளதேச நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று கூடுவர். இவர்களுக்காகவே பல மதுபானக் கடைகள் அண்மைய காலத்தில் இப்பகுதியில் திறக்கப்பட்டுள்ளன. இவர்கள் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சாலை விபத்து பற்றித் தகவல் அறிந்த­தும் அங்கு விரைந்த தற்­காப்­புப் படை­யி­னர் பேருந்தில் அகப்பட்ட நபர் இறந்து விட்­ட­தா­கத் தெரிவித்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை தெரிவித்தது. பேருந்­துக்கு அடியில் மாட்­டிக் ­கொண்­டி­ருந்த அந்நபரின் உடலை மீட்ட ஊழியர்கள் மீது கலகக்காரர்கள் பொருட்களையும் கற்களையும் வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர். அங்கிருந்த வாக­னங்களைச் சேதப்படுத்­தி­யும் அதி­கா­ரி­களைக் காயப்­படுத்­தி­யும் கல­வ­ரத்­தில் ஈடு­பட்டனர். குடிமைத் பாது­காப்­புப் படையினரின் ஒன்பது வாக­னங்கள் சேதம் அடைந்த­ன. இவற்றில் ஐந்து வாகனங்கள் தீமூட்டி எரிக்கப்பட்டன. சிங்கப்பூரில் கலவரங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் கசையடியும் வழங்கப்படுகின்றது. "இது ஒரு கடுமை­யான சம்ப­வம். இதில் பல­ருக்­குக் காயம் ஏற்­பட்­ட­து­டன் பொதுச் சொத்துகளும் சேதப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் அனைத்து முயற்­சி­களை­யும் மேற்­கொள்­வர்,” என்று துணைப் பிர­த­ம­ரும் உட்துறை அமைச்சருமான டியோ சீ ஹியன் தெரி­வித்­தார். "கலவரம் வெடிக்க எக்காரணம் இருந்தாலும், இவ்வகையான வன்முறைகள் மன்னிக்க முடியாதவை என பிரதமர் லீ ஹிசியென் லூங் கூறினார். கேல் எரிமலைவாய் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் நீளம் 50 கி.மீ மற்றும் அகலம் 3 கி.மீ ஆகும். முதன்முறையாக செவ்வாய் கோளில் வைத்தே அந்த பாறைகளின் வயதை நாசா விஞ்ஞானிகள் கணக்கிட்டு சாதித்துள்ளனர். இருந்த போதும் உயிர்கள் வாழ்ந்தமைக்கான Total organic carbon பொருட்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர்கள் உயிர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் மேலும் கிடைக்குமா என தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். டிசம்பர் இசை விழா 2013: சென்னையில் தொடங்கியது டிசம்பர் 3, 2013 தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு நேற்று 90 இற்கும் அதிகமான உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான தென்னாப்பிரிக்க மக்களின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஜொகான்னர்சுபர்க்கில் அமைந்துள்ள கால்பந்து அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன், கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்று இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வு காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய பன்னாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவரான மண்டேலா கடந்த வியாழக்கிழமை தனது 95 ஆவது வயதில் காலமானார். இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. நெல்சன் மண்டேலாவின் உடலடங்கிய பெட்டி இந்த விளையாட்டரங்கில் வைக்கப்படவில்லை. அவரது உடல் அரச மரியாதைக்காக பிரிட்டோரியாவில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். நேற்றைய நிகழ்வில் மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உரையாற்றிய பராக் ஒபாமா, மண்டேலாவை மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசினார். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்நிகழ்வில் உரையாற்றினார். இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவும் கலந்து கொண்டார். நேற்றைய நிகழ்வில் தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, பிரேசில் சனாதிபதி டில்மா ருசொவ், சீன துணை சனாதிபதி லீ யுவன்சோ ஆகியோரும் உரையாற்றினர். கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ உரை நிகழ்த்த வந்திருந்த போது அரங்கம் எங்கும் மக்கள் ஆரவாரமாகக் கைதட்டி வரவேற்றனர். இதுவரை கன்னட விக்கிப்பீடியாவில் 15,696 (அக்டோபர் 2013) கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஏனைய திராவிட மொழிகளை விடவும் மிக குறைவானதாகவே இருக்கின்றது. தமிழில் 56, 000 கட்டுரைகளும், தெலுங்கு மொழியில் 53,000 கட்டுரைகளும், மலையாளத்தில் 33,528 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. பிற இந்திய மொழிகளான இந்தியிலேயே இந்திய அளவில் அதிக அளவாக ஒரு லட்சம் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. மராத்தி மொழியில் 40,000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. கன்னட மொழியில் சுமார் 40 பங்களிப்பாளர்கள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். ஆனால் பல கட்டுரைகளின் தரமும், தகவல் ஆழமும் தாழ்ந்த நிலையில் தான் உள்ளது என்பது வருந்ததக்கது. கன்னட மொழி விக்கிப்பீடியாவில் பலரும் தொடர்ந்து பங்களிக்கவும், புதியவர்களை பங்களிக்கச் செய்யவும் வேண்டும் என கன்னட மொழி ஆர்வலர்கள் விரும்புகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 17 அன்று கன்னட விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய உலகின் முதலாவது நாடாக இலத்தீன் அமெரிக்க நாடான உருகுவே விளங்கவிருக்கிறது. இதன் மூலம் மரிஜுவானா என அழைக்கப்படும் இப்போதைப் பொருளை அந்நாட்டில் உற்பத்தி செய்யவோ, வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். உருகுவேயின் மேலவையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் இடம்பெற்ற 12 மணிநேர விவாதத்திற்கு பின் இச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக 16 பேரும் எதிராக 13 பேரும் வாக்களித்தனர். காங்கிரசின் கீழவை ஏற்கனவே இச்சட்டமூலத்தை கடந்த யூலை மாதத்தில் அங்கீகரித்திருந்தது. "இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் அரசுகளும் இச்சட்டத்தை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என மேலவை உறுப்பினர் கொன்ஸ்டான்சா மொரெய்ரா கூறினார். இச்சட்டமூலம் இடதுசாரி அரசுத்தலைவர் ஒசே முகிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உலகப் போர் தோல்வியடைந்துள்ளது எனவும், போதைக் கடத்தல்காரர்களை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் உதவும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 78 வயதான ஒசே முகிக்கா இச்சட்டமூலத்திற்கு கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே இது சட்டமாக்கப்படும். இச்சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உருகுவே தலைநகர் மொண்டிவிடியோவில் உள்ள காங்கிரஸ் அவைக்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் கூடி ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும், நாட்டில் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்பின் படி, மூன்றில் இரண்டு பங்கினர் இச்சட்டமூலத்திற்கு எதிராகக் கருத்துக் கூறியுள்ளனர். மரிஜுவானா பயன்படுத்துவது உருகுவேயில் ஏற்கனவே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது ஆயினும் அதன் விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்யப்பட்டிருந்தது. இப்புதிய சட்டத்தின் மூலம் அதிக மக்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயம் இருப்பதாக எதிர்ப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறுவர்கள் இதன் மூலம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் அல்பிரடோ சோலாரி கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், போதைப்பொருளைச் சட்டபூர்வமாக்கும் உருகுவேயின் முடிவை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. மரிஜுவானாவின் விற்பனை, உற்பத்தி ஆகியவற்றை சட்டபூர்வமாக்குவது பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டத்தைத் தெரிந்து கொண்டே முறிப்பது தமக்கு ஆச்சரியத்தைத் தருவதாகப் பன்னாட்டுப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ரேமண்ட் யான்ஸ் கூறியுள்ளார். வங்காளதேசத்தின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதலாவது நபர் இவர் ஆவார். 1971 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக இத்தீர்ப்பாயம் 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இவர் "மிர்ப்பூரின் கசாப்புக்காரர்" என பன்னாட்டுத் தீர்ப்பாயத்தினால் வர்ணிக்கப்பட்டவர். டாக்காவின் மிர்ப்பூர் புறநகரில் பாக்கித்தானில் இருந்து விடுதலையை ஆதரித்த அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் கல்விமான்களைப் படுகொலை செய்தமை, மற்றும் பல போர்க்குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தே வந்துள்ளார். 65 வயதான அப்துல் காதர் முல்லாவின் மரணதண்டனை நேற்று பிற்பகல் டாக்கா மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது. இவரது மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜமாத்-இ-இசுலாமியா கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கைகலப்புகளில் மூவர் உயிரிழந்தனர். ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் மேலும் நான்கு தலைவர்களும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளார்கள். தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை மாலி நாட்டின் வடகிழக்கே கிடால் நகரில் இன்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பு ஒன்றில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் இருவர் கொல்லப்பட்டனர். அமைதிப்படையினர் காவலுக்கு இருந்த ஒரு வங்கியே தாக்குதலுக்குள்ளானது. ஐநா வாகனம் ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இத்தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். வங்கிக் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாலியில் இசுலாமியப் போராளிகளை பிரெஞ்சு அமைதிப் படையினர் ஓராண்டுக்கு முன்னர் தோற்கடித்தனர். ஆனாலும், தீவிரவாதிகள் தாக்குதல்கள் அங்கு நிற்கவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அலக்சா எனப் பெயரிடப்பட்டுள்ள பனிப்புயலால் மத்திய கிழக்கின் மேற்கு நாடுகள் முழுவதும் கடும் பனிப்பொழிவு, மழை, மணல் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீனம், இராக், சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் இந்த புயலின் தாக்கம் உணரப்பட்டது. எகிப்தின் வறட்சியான சினாய் தீபகற்பத்தில் தொடர்ந்து பனி பொழிவு ஏற்பட்டதுடன், 100 ஆண்டுகளுக்குப் பின் கய்ரோ நகரத்தில் பனிமழை பொழிந்துள்ளது. இஸ்ரேலின் பல பாகங்களில் 60 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட இப் பனிமழையால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் பெத்லகேம் நகரம் பனிமழையால் போர்த்தப்பட்டுள்ள காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. ஜெருசலேம் நகரில் 20 அங்குலத்துக்கு பனிமழை பொழிவு பதிவாகி உள்ளது. காசாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஆளும் ஹமாஸ் கட்சி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இப் பனிமழை பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டது சிரியாவின் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள அப்பாவி மக்களே. லெபனானின் பெக்கா பள்ளதாக்கில் திறந்தவெளிகளில் கொட்டாரமிட்டுள்ள சுமார் பத்து லட்சம் சிரிய அகதிகள் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சில உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றனர். மேலும் இலட்சக்கணக்கான அகதிகள் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலில் பல இடங்களில் உள்கட்டமைப்புக்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐரோப்பாவிலும் வழைமைக்கு மாறான கனத்த மழையும், கடும் பனிப்பொழிவுகளும் இவ்வாண்டு காணப்படுவதாக வானிலை செய்திகள் அறிவித்துள்ளன. சீனாவின் ஜேட் ராபிட் என்ற தானியங்கி விண்ணுலவி சாங் ஏ-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனில் மென்மையாகத் தரையிறங்கும் மூன்றாவது நாடாக சீனா வந்துள்ளது. 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும். சாங்'ஏ-3 கலம் தரையிறங்கியது நிலவின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள வானவில் விரிகுடா என்ற எரிமலைச் சமவெளிப் பகுதியாகும். இதற்கு முன் ஆய்வுக்கலம் எதுவும் இப்பகுதிக்கு வரவில்லை. நேற்று 1300 மணி ஜிஎம்டி (1200 பீஜிங்கு) நேரத்தில் சாங்'எ-3 விண்கலம் நிலவில் தரையிறங்க ஆரம்பித்து, 11 நிமிடங்களில் அது தரையைத் தொட்டது. மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் நிலவில் உலவவிருக்கும் 120 கிகி எடையுள்ள ஜேட் ராபிட் விண்ணுளவி 30 பாகை சாய்வான தளத்திலும் செல்லக்கூடியதாக இருக்கும். விண்கலமும் விண்ணுலவியும் சூரிய ஆற்றலினால் இயங்கினாலும், புளுட்டோனியம்-238 உடன் கூடிய கதிரியக்கசமதானிகளைக் கொண்ட வெப்பவாக்கிகளையும் அது கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவை குளிரான இரவிலும் சூடாக இருக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணுளவி மூன்று மாதங்கள் வரை நிலவில் உலவி அறிவியல் தகவல்களைச் சேகரிப்பதுடன், கனிமங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது பற்றியும் ஆராயும். நிலவில் மென்மையாகத் தரையிறங்குதல் மிகவும் சிக்கலான விண்வெளி நடவடிக்கை. சோவியத் ஒன்றியம் 12 முறை முயற்சி மேற்கொண்ட பின்னரே வெற்றி பெற்றது. அமெரிக்காவும் 3 முறை தோல்விகளை சந்தித்துள்ளது. வலைதள வடிவமைப்பாளர், தமிழ் வளர்ச்சி, மேம்பாட்டுப்பணிகளில் ஆர்வம். இந்நிகழ்வில் இக்கல்லூரியின் மாணவர்கள் 70 பேரும் இணையவழிப்பதிவு செய்த 40 பேரும் பங்கேற்றனர். இப்பயிலரங்க ஒருங்கிணைப்புப் பணிகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வை. கலைச்செல்வி, சி. அங்கயற்கண்ணி, சா. சிவமணி, அர. ஜோதிமணி, ந. மணிகண்டன், இரா. விசுவநாதன் ஆகியோர் மேற்கொண்டனர். தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து ஒரு நாளாகியும் தலைநகர் சூபாவில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் தொடருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு மாளிகையைச் சுற்றிலும், மற்றும் தலைநகரின் பிற பாகங்களிலும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் சத்தங்கள் கேட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு ஐநா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். தலைநகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கடந்த சூலை மாதத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணை சனாதிபதி ரீக் மச்சாருக்கு ஆதரவான படையினரே ஞாயிற்றுக்கிழமை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இறங்கியதாக அரசுத்தலைவர் சால்வா கீர் தெரிவித்துள்ளார். இவ்வன்முறைகளில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிறன்று ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றின் போது சீருடை தரித்தவர்கள் பலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்தே வன்முறைகள் ஆரம்பமாயின என அரசுத்தலைவர் கூறினார். ரீக் மச்சார் தற்போது தலைமறைவாகியுள்ளார். இரவுநேர ஊரடங்கு உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது நான்கு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் தமது முழுக் கட்டுப்பாட்டுள் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரீக் மச்சார் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது இவர் தெற்கு சூடானின் ஆளும் கட்சியான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் அதிருப்தியாளர்களுக்குத் தலைமை தாங்குகிறார். தெற்கு சூடான் 2011 இல் சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் அங்கு ஒரு நிலையான ஆட்சி ஒன்றை அமைக்க ஆட்சியாளர்களால் முடியாமல் உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஈரோடு என்பது தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். இப்பகுப்பில் ஈரோடு, ஈரோடு மாவட்டச்செய்திகள் பகுக்கப்பெறும். இப்பயிலரங்கில், வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பின் செயலர் செ. குறிஞ்சிவாணன் வரவேற்புரை வழங்க உள்ளார். இப்பயிலரங்கத்தைத் பெரியண்ணன் அரசு தொடங்கி வைத்துத் தலைமையுரை வழங்கவும், புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்விற்கு மேனாள் அரசு பொது வழக்குரைஞர் கே.கே செல்லப் பாண்டியன் முன்னிலை வகிக்க உள்ளார். இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை  பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி  சிறப்புரை ஆற்றி, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப் பயிற்சி அளிக்க உள்ளார். தமிழகம் வலைதளமும் வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பின் செயலர், புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்க அமைப்பாளர் செ. குறிஞ்சிவாணனும் இந்தப் பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளார். நாடு கடத்தப்படவிருப்போரில் 52 பேர் இந்தியர்கள் என்றும், ஒருவர் வங்காளதேசத்தவர் என்றும் காவல்துறை ஆணையர் இங் ஜூ ஹீ கூறினார். இக்கல­வ­ரம் தொடர்­பி­லான காவல்துறையினரின் முதற்கட்ட விசா­ரணை­கள் பெரு­ம­ளவு முடிந்­து­விட்­ட­தாக அறிவிக்கப்­பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டுக் குற்றம் சாட்டப்பட்ட 35 இந்தியர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 28 பேர் மீதான விசாரணைகள் தொடருகின்றன. ஏனைய 53 பேரும் நேற்றுக் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனைகளில் பிடிபட்டனர். சட்டத்தைப் பின்பற்றுபவர்கள் கவலைப்படத் தேவையில்லை, அதே வேளையில், தவறிழைப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என துணைப் பிரதமர் டியோ சீ இயன் செயுதியாளர்களிடம் கூறினார். விசாரணை எதுவுமின்றித் தன்னிச்சையான நாடுகடத்தல் பெரும் கவலையைத் தருகிறது என சிங்கப்பூர் வர்க்ஃபெயர் என்ற தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கில் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையைச் சார்ந்த இணைப் பேராசிரியர். பிரசில்லா வரவேற்புரை வழங்க உள்ளார். எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். செல்வநாயகி வாழ்த்துரை வழங்க உள்ளார். எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி இந்தப் பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளது. இப்பயிலரங்கம் மகளிருக்கு கணித்தமிழ் பயிற்சி, விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது. கல்லூரி முகவரி: எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி, பிங்கர் போஸ்ட், உதகமண்டலம்-643006. இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி எதுவும் வைத்துக்கொள்ளாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். [[பகுப்பு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014]] மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டிற்கொருமுறை கூடல் என்னும் மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013 கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் இராதா கன்வென்சன் அரங்கில் இன்று தொடங்கியது. இந்நிகழ்விற்கு இந்தியாவின் பல பகுதியிலிந்து விக்கிப்பீடியா பயனர்களும் பொது மக்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வு திசம்பர் 21, 22 ஆகிய நாட்களில் கருத்தரங்கமாகவும் 23 ஆம் நாளன்று நீர் உலாவாகவும் நடைபெற உள்ளது. திசம்பர் 21, சனிக்கிழமை அன்று பங்கேற்பாளர்களின் பதிவுடன் நிகழ்வு தொடங்கியது. விக்கி மாணவர் சந்திப்பு, விக்கி மாற்றுத்திறனாளி பயனர்களுக்கான விக்கி தொகுத்தல் பயிற்சி, பொது மக்களுக்கான விக்கி தொகுத்தல் பயிற்சி, விக்கி வினா-விடை, விவாதங்கள், விக்கி வலையமைப்பு ஆகியன காலை நிகழ்வில் நிகழ்ந்தன. மதிய அமர்வில் “மலையாள மொழியும் விக்கியூடகத்திட்டங்களும்-கொடுத்துப்பெறுதல்”என்னும் கருத்தரங்கமும் உரைவீச்சுகளும் மலையாளம் அல்லா விக்கிப்பீடியர்களுடனான விவாதமும் விக்கி நட்பகம் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றன. மாலை நிகழ்வில் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாலை நிகழ்வில் இந்திய மொழிகளின் விக்கிப்பீடியர்கள் தங்கள் அனுவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வில் இந்திய மொழிகளில் விக்கிமீடியா திட்டங்களின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர். திசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று கருத்தரங்கமும், மலையாளத்தில் விக்கிப்பீடியா தொகுத்தல் மற்றும் தட்டச்சுப் பயிலரங்கமும் நிகழவுள்ளது. மதிய அமர்வாக "தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு பட்டறிவு" என்னும் தலைப்பில் அ. இரவிசங்கரின் உரைவீச்சும் வினா விடை கலந்துரையாடல்களும் நிகழ உள்ளன. தேநீர் இடைவேளைக்குப்பிறகு ஆங்கில உரைவீச்சுகளும், விக்கி நட்பக கலந்துரையாடலும் மாலையில் நிகழ்வு நிறைவு விழாவும் நிகழ உள்ளது. தெற்கு சூடானில் யுனிட்டி என அழைக்கப்படும் எண்ணெய் வளமிக்க பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தெற்கு சூடானின் முன்னாள் பிரதி சனாதிபதி ரெயில் மச்சார் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள படையினர் தமது தலைமையின் கீழ் இயங்குகின்றனர் என அவர் தெரிவித்தார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என ஐநா செயலாளர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார். தாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள மச்சார், ஆனால் அதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் எத்தியோப்பியா போன்றதொரு நடுநிலை நாடொன்றில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். அமெரிக்கக் குடிமக்களை வெளியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு அமெரிக்கப் படையினர் பயணம் செய்த வானூர்தி ஒன்று சுடப்பட்டதை அடுத்து அந்நால்வரும் காயமடைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் (பொது மனிதனின் கட்சி) தலைவரும், முன்னாள் அரசு அதிகாரியுமான அரவிந்த் கேச்ரிவால் புதிய முதல்வராகப் பொறுப்பேற்பார் என அக்கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. தேர்தலின் பின்னர் வேறு எந்த கட்சியிடமிருந்தும் ஆதரவு கோரப் போவதில்லை என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு வகைகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை அடுத்து, அக்கட்சி ஆட்சியமைப்பதையே பெரும்பாலானோர் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. இக்கட்சியின் முடிவை தில்லியின் முன்னாள் முதல்வர் சீலா தீக்சித் வரவேற்றிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பிஜேபி தலைவர் ஹர்சு வர்தன், காங்கிரசுடன் கூட்டுச் சேர்வது என்று ஆம் ஆத்மி கட்சி எடுத்த முடிவை சாடியுள்ளார். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் துரோகமிழைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். ஊழலுக்கெதிராக அரவிந்த் கேச்ரிவால், அன்னா அசாரே போன்றார் நடத்திய இயக்கத்தின் விளைவாக ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டது. ஆக் கா தாரியா என்ற இத்திரைப்படம் முன்னர் நிதி நெருக்கடி காரணமாக வெளியிடப்படவில்லை என இதன் இயக்குநர் வி. எஸ். ராஜேந்தர் பாபு தெரிவித்தார். பின்னர் இதன் மூலப் பிரதி பெருமளவு சேதமடைந்தது. ஆனாலும், இத்திரைப்படத்தின் பிரதி ஒன்று அண்மையில் சிங்கப்பூர் பட விநியோகத்தர் ஒருவரிடம் இருந்து சேதமற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திலீப் குமார் இத்திரைப்படத்தில் இந்திய வான்படை அதிகாரியாக நடித்துள்ளார். ரேகா கதாநாயகியாக நடித்துள்ளார். "இத்திரைப்படம் திலீப் குமாரின் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படமாக இருக்கலாம். இதனைப் பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியூட்டும் என ராஜேந்தர் பாபு கூறினார். 90 வயதாகும் நடிகர் திலீப் குமார் தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் உள்ளார். 1950கள், 60களில் இவர் பெரும் புகழ் பெற்ற நடிகராக விளங்கினார். இந்தி நடிகர்களில் அதிக விருதுகளைப் பெற்றவர். இவர் எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. முசுலிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மது மோர்சி சென்ற ஆண்டு நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும், ஓராண்டின் பின்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். கட்சியும் தடை செய்யப்பட்டது. நேற்றைய அறிவிப்பு இந்த அமைப்புக்கு எதிரான ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்த இராணுவத்தினருக்கு சுதந்திரம் வழங்குவதாக பிரதிப் பிரதமர் ஒசாம் எய்சா தெரிவித்தார். 1998 இல் தீவிரவாதத்துக்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஏனைய அரபு நாடுகளுக்கு தமது முடிவு அறிவிக்கப்படும் என அவர் கூறினார். காவல்துறைத் தலைமையகம் மீதான தாக்குதலுக்குத் தாம் பொறுப்பல்ல என சகோதரத்துவக் கட்சி அறிவித்திருந்தது. அதே வேளையில், சினாயைத் தளமாகக் கொண்டியங்கும் அன்சார் பைத்அல் மக்தில் என்ற அல்-கைதா ஆதரவு ஆயுதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது சேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம் 28, 29 ஆகிய இருநாட்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் சேலம் இரும்பாலையின் முதல் வாயிலுக்கு அருகிலுள்ள சமுதாயக்கூடத்தில் நிகழ உள்ளது. தமிழக அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர், கல்வி ஆர்வளர்களை மையப்படுத்தி நான்கு மாதத்திற்கு ஒருமுறை மாநில அளவில் மாற்றுக்கல்விக்கான முகாம்களை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் கல்வி சார்ந்த நூல்களைத்தேர்வு செய்து கூட்டாகப் படித்து கலந்தாய்வு செய்து,சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு அக்கலந்தாய்வுகளைத் தொகுப்பது என்னும் திட்டத்தின் அடிப்படையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முறை முகாமிற்கு ஆயிசா இரா. நடராசன் எழுதிய இது யாருடைய வகுப்பறை என்ற நூல் படித்து கலந்தாய்விற்கும் தொகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பெற உள்ளது. இந்நிகழ்வில் பேராசிரியர் மணி வரவேற்புரை ஆற்றவும்,புதிய தலைமுறை கல்வி இதழின் ஆசிரியர் பொன். தனசேகரன் தொகுப்புரையாற்ற உள்ளார் பேராசிரியர் ச. மாடசாமி பேராசிரியர் கே. இராஜூ பேராசிரியர். பெ. விஜய குமார் கல்வி ஆய்வாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஜெ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்று நிகழ்விற்கு உறுதுணையாற்ற உள்ளனர். இம்முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 82க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். முகாம் தொடர்பிற்கு 7598225040, 9443391777, 9486486755 ஆகிய உலா பேசி எண்களைத்தொடர்பு கொள்ளலாம். பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இன்று இடம்பெற்ற ஒரு பெரும் குண்டுத்தாக்குதலில் லெபனானின் முன்னாள் நிதி அமைச்சர் முகம்மது சாட்டா உட்பட ஐவர் கொல்லப்பட்டர். ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இன்றைய தாக்குதலில், பெய்ரூட்டின் பல கட்டடங்கள் சேதமடைந்தன. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. 2005 பெப்ரவரியில் முன்னாள் பிரதமரும், ஹரீரியின் தந்தையுமான ராஃபிக் என்பவரைக் கொலை செய்தமைக்காக ஐந்து எஸ்புல்லா இயக்கத்தினர் இன்னும் மூன்று வாரங்களில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கின்றனர். இக்கொலையில் தாம் சம்பந்தப்படவில்லை என எஸ்புல்லா அமைப்பு கூறி வந்தது. எஸ்புல்லா இயக்கத்தினரை ஆதரித்து வரும் ஈரானின் பெய்ரூட் தூதரகம் கடந்த மாதம் தாக்குதலுக்குள்ளானது. சுணி இசுலாமிய இயக்கம் ஒன்று இதற்கு உரிமை கோரியிருந்தது. தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தொடருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில் இரு சிறுவர்கள் உட்படக் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். மகாராட்டிராவின் நான்டெட் நகரில் இருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த விரைவுத் தொடருந்தின் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றே இன்று அதிகாலை 3:30 மணியளவில் தீப்பிடித்தது. இப்பெட்டியில் சுமார் 60 பேர் வரை பயணம் செய்து கொண்டிருந்தனர். வெனிசுவேலாவில் மிகக்குறைந்த ஊதியம் பெற்றுவரும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அரசின் சார்பில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன. இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவில் அனைவருக்கும் ஒரு சொந்த வீடு என்ற ஒரு புதிய திட்டத்தை அந்நாட்டின் முன்னாள் இடதுசாரி அரசியல் தலைவர் ஹியூகோ சாவேஸ் சில ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்தார். இதன்படி 2019 ஆம் ஆண்டிற்குள் 30 லட்சம் வீடுகளை வெனிசுவேலாவில் அரசின் சார்பில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இவ்வீடுகள் அந்நாட்டில் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்களுக்கு அரசின் அதிகப்படியான மானியத்துடன் குறைந்த விலைக்கு அளிக்கப்படும். அதேநேரம், குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுவோர்க்கும், 2010 ஆம் ஆண்டு அந்நாட்டில் பெய்த கடும் மழையின் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 5 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட தயாராகி உள்ள நிலையில், மெரிடா நகரில் வெள்ளியன்று நடைபெற்ற ஒரு விழாவில் அரசுத்தலைவர் மதுரோ பங்கேற்று, மழையினால் வீடுகளை இழந்த 700 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக அரசின் இலவச வீடுகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். அண்டார்க்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் சிக்குண்டுள்ள உருசியக் கப்பலை மீட்பதற்காக ஆத்திரேலியாவின் பனியுடைப்புக் கப்பல் ஒன்று அங்கு விரிந்துள்ளதாக ஆத்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. அகாதெமிக் சொக்கால்ஸ்கி என்ற ஆய்வு, மற்றும் சுற்றுலாக் கப்பல் சிக்குண்டுள்ள இடத்தில் இருந்து 100 கடல் மைல் (185 கிமீ) தூரத்தில் அவுரோரா அஸ்திராலிசு என்ற ஆத்திரேலியக் கப்பல் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் தனது இலக்கை ஜிஎம்டி நேரம் பகல் 12 மணியளவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்துக்காக வட, தென் முனைகளை ஆய்வு செய்வதற்காக பின்லாந்தில் கட்டப்பட்ட அகாதெமிக் சொக்கால்ஸ்கி என்ற இக்கப்பல் உருசிய அரசுக்கு சொந்தமானது. ஆத்திரேலியாவின் அவுரோரா எக்சுபெடிஷன் என்ற நிறுவனம் இதனை வாடகைக்கு எடுத்திருந்தது. டிசம்பர் 8 இல் நியூசிலாந்தின் பிளஃப் என்ற இடத்தில் இருந்து அண்டார்க்டிக்கா நோக்கி அறிவியலாளர்கள், தேடலாய்வாளர்கள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் பணியாளர்கள் உட்பட 74 பேர்களுடன் புறப்பட்டது. டிசம்பர் 25 இல் அண்டார்க்டிக்கா கரையில் இருந்து சில மைல்கள் தூரத்தில் அது பனிக்கட்டிகளூடே சிக்கிக் கொண்டது. இக்கப்பலை மீட்பதற்காக பிரான்சு, மற்றும் சீனாவின் பனியுடைப்புக் கப்பல்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் அவற்றால் உருசியக் கப்பலை அணுக முடியவில்லை. தற்போது ஆத்திரேலியப் பனியுடைப்புக் கப்பல் அங்கு சென்றுள்ளது. 101 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியாவில் இருந்து அண்டார்க்டிக்காவுக்குச் சென்ற டக்லசு மோசன் என்பவரின் பிரசித்தி பெற்ற பயணப் பாதை வழியே அக்காதெமிக் சொக்கால்ஸ்கி கப்பலும் செல்லவிருந்தது. இப்பயணத்திற்காக சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரிடமும் இருந்து $15,000 பணம் அறவிடப்பட்டது. சாலையோர உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆவி பறக்கும் பன்ரொட்டிக்கு அது புகழ்பெற்ற கடை. அங்கு உணவுக்கு டோக்கன் வாங்கக் காத்திருந்தவர்கள் மத்தியில் நின்றவரை பார்த்த மக்கள் வியப்புடன் திறந்த வாய் மூடாமல் நின்றனர். உணர்வு பெற்றோர் விரைந்து சென்று அவருக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அங்கு வரிசையில் நின்றவர் வேறு யாருமில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சீன ஜனாதிபதியுமான சி ஜின்பிங் வரிசையில் நின்று உணவு வாங்கக் காத்திருந்தார். அவர் பன்றிக்கறி வைக்கப்பட்ட பன்ரொட்டி, வறுத்த ஈரல், ஒரு பிளேட் கடுகு இலை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு உணவகத்துக்குள் சென்றார். அதன் விலை 21 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.214) ஆகும். அவர் முன்னறிவிப்பின்றி அங்கு உணவருந்த வந்தார். எவ்விதப் பாதுகாப்பும் இன்றி வந்திருந்தார். உணவுக்குரிய கட்டணத்தை அவர் தன்பையில் இருந்து கொடுத்தார். மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்களுடைய செல்போன் கேமிராக்களால் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர். அவர் மக்கள் உறவில் ஒரு வெற்றியைப் பெற்று விட்டார். அவர் அங்கு செலுத்திய 21 யுவானைக் கொண்டு, அரசு விழாக்கள் நடக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியாது. எனவே ஒரு தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது ஒரு வரவேற்கத்தக்க மாறுதலாகும் .சாலையோர உணவக நிர்வாகிகள் ஜின்பிங் தனது பாதுகாப்புப் படையினரோடு வரவில்லை என்று கூறினர். அவர்வந்தவுடன் உணவகம் மூடப்படவில்லை என்றும், மற்றவர்களுக்கு தொடர்ந்து உணவுவழங்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். ஜனாதிபதி வரப்போகிறார் என்று தங்களுக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மாறுபட்ட தலைமைப்பாணி கொண்ட ஜின்பிங் முதல் முறையாக இவ்வாறு நடக்கவில்லை. இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜின்பிங் பெய்ஜிங்நகரவீதிகளில் எவ்வித பாதுகாப்புமின்றி வாடகைக்காரில் பயணித்தார். அப்போது கட்சிக்கு தொடர்புடைய ஹாங்காங் செய்தித்தாளில் வெளியான இச்செய்தியை அரசுஉடனடியாக மறுத்தது. இப்போது ஜனாதிபதியுடன் மக்கள் எடுத்த புகைப்படங்கள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் வெளியாகி விட்டன. அரசின் செய்தி நிறுவனமான சின்குவாவில் இந்த புகைப்படங்கள் வெளியாயின. உருசியாவின் வோல்ககிராத் நகரில் இன்று திங்கட்கிழமை மின்சாரப் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், 28 பேர் காயமடைந்தனர். வோல்ககிராத் நகரில் 24 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு இதுவாகும். நேற்று திடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மற்றொரு தற்கொலைக் குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். இன்றைய குண்டுவெடிப்பில் 6 மாதக் குழந்தை உட்பட காயமடைந்த பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ட்ரொலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சாரப் பேருந்து மக்கள் நடமாட்டம் அதிகமான இடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போதே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில், பேருந்து முழுவதுமாக சேதமடைந்தது. இரு தாக்குதல்களையும் நடத்திய ஆண் தற்கொலைதாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத்துறை அதிகாரி விளாதிமிர் மார்க்கின் தெரிவித்தார். உருசியாவின் கருங்கடல் நகரான சோச்சியில் பெப்ரவரி 7 இல் 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருப்பதால், தீவிரவாதிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் உத்தரவிட்டுள்ளார். பல நாட்டுத் தலைவர்களும் இத்தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல்களில் உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் 1 மில்லியன் ரூபிள்கள் 305,000) நட்டைஇடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தோர் 200,000 முதல் 400,000 ரூபிள்கள் வரை பெறுவர். ஸ்டாலின்கிராத் என முன்னர் அழைக்கப்பட்ட வோல்ககிராத் நகரம் சோச்சி நகரில் இருந்து 690 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பியாத்திகோர்ஸ்க் என்ற நகரில் கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். இப்பயிலரங்கினை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்பயிலரங்கில் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையைச் சார்ந்த இணைப் பேராசிரியர். பிரசில்லா வரவேற்புரை வழங்கினார். இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றினார்.தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பதான பொருண்மைகள் குறித்த கணினிவழி நேரிடை செயல்முறைப் பயிற்சியை அவர் அளித்தார் இப்பயிலரங்கில் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தலைமை நிருவாக அலுவலர் திருமதி சுபத்திரா இப்பயிலரங்கில், கல்லூரியின் தமிழ்க்கணினி கழகத்தை தொடங்கி வைத்து நன்றியுரை வழங்கினார். இந்தப் பயிலரங்கை மாணவி கலைவாணி தொகுத்துரைத்தார். கோ. நம்மாழ்வார் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற ஊரில், 1938 ஆம் ஆண்டு பிறந்தார். வேளாண் அறிவியலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண்மை ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்தார். வேதி உரங்கள், பூச்ச, பூஞ்சாணக்கொல்லிகளால் மண்ணிற்கும், பயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், இயற்கை உழவியல் ஏற்பட்ட முழு ஈடுபாட்டால் அரசு வேலையை விட்டொழித்து, இயற்கை வழி வேளாண்மையை தம் வாழ்நாள் பணியாகச் செய்தார். இவரின் வாழ்நாள் பணிகளைப் பாராட்டி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. உழவில்லா வேளாண்மை, மருந்தில்லா மருத்துவம், கல்வியில்லா கல்வி (முறைசாரக்கல்வி) என்னும் மும்முழக்கத்தை தமிழ்நாட்டிற்கு அளித்தவர் இவர். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வாழ்நாளின் இறுதிவரை இயற்கை வேளாண்மைக்கும், உழவர் உரிமைக்கும் உழைத்த முனைவர் நம்மாழ்வாரின் இழப்பு ஈடுசெய்யவியலா பேரிழப்பு என தமிழகச் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். லாத்வியப் பிரதமர் லெட்பிசு டொம்ப்ரோஸ்கிசு நள்ளிரவில் தன்னியக்க வங்கி இயந்திரத்தினூடே யூரோ நாணயத்தைப் பெற்று இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். பொதுமக்கள் தம்மிடம் உள்ள லாட்சு நாணயத்தை யூரோவாக மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் சேவைக்காலம் பல மணி நேரமாக நீடிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக உக்ரையினில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் லாத்வியா யூரோ வலயத்தில் இணைந்ததை நியாயப்படுத்தும் என லாத்விய நிதி அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். “உருசியா எப்போதும் மாறப்போவதில்லை. எமக்கு நமது அயல்நாட்டைப் பற்றித் தெரியும். எதிர்பாராத நிகழ்வு பல முன்னர் இடம்பெற்றுள்ளன. இனியும் இடம்பெறலாம். ஐரோப்பிய ஒன்றியம் உட்பட நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவசியம்" என அவர் கூறினார். உக்ரையினின் பல மில்லியன் டொலர் தேசியக் கடன் அண்மையில் அந்நாட்டுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. இதனை அடுத்து உக்ரைன் உருசியாவுடனான தனது உறவுகளை உறுதியாக்கிக் கொண்டது. கன மீட்புத் தொகையாக உருசியாவிடம் இருந்து 15 பில்லியன் டொலர்களை அது பெற்றுக் கொண்டது. யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது சனவரி 1, 2011 சூறாவளியின் தாக்கத்தில் உருவான காற்று மணிக்கு 150 கிமீ வேகத்தில் தாக்கியது. கரையில் இருந்து 15 கிமீ தூரத்தில் அலைகள் பெருக்கெடுக்க ஆரம்பித்தன. கிட்டத்தட்ட 800,000 மக்கள்தொகை கொண்ட இத்தீவில் 90,000 வீடுகளில் குடிநீர் வழங்கல், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ரோலண்டு காரொசு விமான நிலையம் மூடப்பட்டது. உள்ளூர்ப் போக்குவரத்து, மற்றும் அஞ்சல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. பிரெஞ்சு நாட்டினால் நிருவகிக்கப்படும் ரீயூனியன் மடகாசுகருக்குக் கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கிமீ (120 மைல்) தென்மேற்காக அமைந்துள்ளது. இங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள். அண்டார்க்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் ஒரு வார காலத்துக்கும் அதிகமாக சிக்குண்டிருந்த உருசியக் கப்பலில் இருந்த 52 பயணிகள், மற்றும் ஆய்வாளர்களை சீனப் பனியுடைப்புக் கப்பலில் இருந்த உலங்கு வானூர்தி வெற்றிகரமாக நேற்று மீட்டுள்ளது. அகாதமிக் சொக்கால்ஸ்கி என்ற இந்த உருசிய ஆய்வுக் கப்பல் டிசம்பர் 24 ஆம் நாள் டூமோன்ட் டி'ஊர்வில் என்ற பிரெஞ்சுத் தளத்தில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் கடும் பனிக்கட்டியில் சிக்குண்டது. இக்கப்பலில் 22 மாலுமிகளும், 52 பயணிகளும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் அண்டார்க்ட்டிக் ஆய்வாலர்கள். ஏனையோர் சுற்றுலாப் பயணிகள். இக்கப்பலை விடுவிக்கவென பிரெஞ்சு, சீன, மற்றும் ஆத்திரேலியப் பனியுடைப்புக் கப்பல்கள் அங்கு விரைந்தன, ஆனாலும் கடும் பனி காரணமாக அவற்றால் உருசியக் கப்பலை நெருங்க முடியவில்லை. இதனை அடுத்து சீனக் கப்பலில் நிலை கொண்டிருந்த உலங்குவானூர்தி பயணிகள் அனைவரையும் நேற்று பாதுகாப்பாக ஆத்திரேலியக் கப்பலுக்குக் கொண்டு சென்றது. உருசியக் கப்பலின் மாலுமிகள் 22 பேரும் கப்பலிலேயே தங்கியுள்ளனர். காலநிலை சீரானதும், கப்பலை மீண்டும் இயக்க அவர்கள் முயற்சி செய்வார்கள். 101 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியாவில் இருந்து அண்டார்க்டிக்காவுக்குச் சென்ற டக்லசு மோசன் என்பவரின் பிரசித்தி பெற்ற பயணப் பாதை வழியே அக்காதெமிக் சொக்கால்ஸ்கி கப்பலும் செல்லவிருந்தது. பின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இக்கப்பல் கடும் பனிக்கட்டிப் பாறைகளை உடைத்துச் செல்லவல்லது எனக் கூறப்பட்டது. இதற்கிடையில், சீன பனியுடைப்புக் கப்பலும் இப்போது நகர முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது டிசம்பர் 29, 2013 தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு தரப்புகளுக்கும் இடையே எத்தியோப்பியாவில் ஆரம்பமாகவிருந்த பேச்சுவார்த்தைகள் பின்போடப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் சால்வா கீர், மற்றும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை அரசுத்தலைவர் ரீக் மச்சாருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவிருந்தன. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் தெற்கு சூடானில் இரு தரப்புக்குமிடையே சண்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. டிசம்பர் 15 ஆம் நாள் ஆரம்பமான சண்டைகளில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 180,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தோர் பலர் குடிநீர் பற்றாக்குறையால் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாக நிவாரண நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வடக்கு மாநிலமான யுனிட்டியில் போர், மற்றும் பென்டியூ நகரங்களை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீளக் கைப்பற்றுவதற்கு அரசுப் படையினர் போராடி வருகின்றனர். இன்னும் 24 மணி நேரத்தில் போர் நகரை நாம் மீளக் கைப்பற்றி விடுவோம் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தெற்கு சூடான் 2011 ஆம் ஆண்டில் சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. இந்தியாவின் மேற்கு மாநிலமான கோவாவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனக்கோனா நகரில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. கட்டடத் தொழிலாளிகள் உட்பட குறைந்தது 40 பேர் விபத்து நடந்த நேரத்தில் அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இராணுவத்தினரும் மீட்புப் பணியாளர்களுக்கு உதவியாக அங்கு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்ததற்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. முதலமைச்சர் மனோகர் பரிக்கார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். வங்காளதேசத்தில் வன்முறைகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சிகள் இத்தேர்தலைப் புறக்கணித்திருந்தன. 300 நாடாளுமன்றத் தொகுதிகலில் அரைவாசிக்கும் அதிகமானவற்றில் ஆளும் கட்சியினர் போட்டியின்றித் தெரிவாயினர். 20% ற்கும் சற்று அதிகமானவர்களே வாக்களித்திருந்தனர். 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் 70% இற்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர். தேர்தல் இடம்பெற்ற 147 தொகுதிகளில் 105 இல் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. ஏனையவற்றை ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், சுயேட்சையாளர்களும் வென்றனர். 127 இடங்களில் அவாமி லீக் கட்சியினர் போட்டியின்றித் தெரிவாயினர். எட்டுத் தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. நேற்றைய தேர்தல் நாளில் மட்டும் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். வங்காளதேச தேசியக் கட்சி கடந்த சனிக்கிழமை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருந்தது. தமது ஆதரவாளர்களைத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிக்குமாறு அக்கட்சியின் தலைவி காலிதா சியா முன்னதாகக் கேட்டிருந்தார். தேர்தல் முடிவுகளை செல்லாமல் ஆக்கக் கோரிக்கை விடுத்த அவர் இன்று திங்கட்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்ததிற்கு அறைகூவல் விடுத்தார். வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல்கள் நடக்கும் போது ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி, பக்கச் சார்பற்ற ஒரு இடைக்கால அரசு ஒன்றின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுவது சட்டபூர்வமான வழக்கமாகும். ஆனால் இவ்வழக்கத்தை கடந்த 2010 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத் திருத்தம் மூலம் அவாமி லீக் அரசு மாற்றியதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரம் பகுதியில் கடந்த சில வாரங்களாகத் தோண்டப்பட்டு வரும் மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் ஏழு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருக்கேதீச்சரம் மாந்தை வீதியில் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய்கள் புதைப்பதற்கு கடந்த மாதம் டிசம்பர் 20 ஆம் திகதி குழிகள் தோண்டப்பட்ட போதே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நேற்றுடன் மொத்தம் 32 எலும்புக்கூடுகள் உட்பட மனித உடற்பாகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுணர்கள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை மாணவர்கள், உடற்கூறியல் நிபுணர், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் புதைகுழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதை­குழியில் இருந்து சிறு­வர்­களின் பற்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதைகுழி உள்ள இடம் ஈழப் போர்க்காலத்தில் அதியுயர் பாதுகாப்புப் பிரதேசமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமராத காரணத்தினால் இந்தப் பகுதி பற்றைக் காடாகக் காட்சியளிக்கின்றது. இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் பன்னாட்டு விசாரணை அவசியம் என மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு கோரியிருக்கின்றார். நேற்று இலங்கை வந்துள்ள சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவன் ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வரவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று தெரிவித்தார். விக்கிசெய்திகளில் செய்திகள் எழுதுவதற்கு சில நடைமுறைகள் உண்டு. இந்தியத் தமிழ் ஊடகங்களில் எழுதுவது போல் எழுதக் கூடாது. இந்தியத் தமிழ் ஊடகங்களில் செய்தி ஒன்றை எழுதும் போது, செய்தி பற்றிய வரலாற்றை முதலில் தந்து விட்டே பின்னர் இன்றைய செய்தியைத் தருவார்கள். இவ்வாறாக ஊடகவியலாளர்கள் எழுதக் கூடாது. முதலில் அன்றைய செய்தியை சுருக்கமாக எழுதிய பின்னர், அது குறித்த வரலாற்றை எழுத வேண்டும். உ+ம் கடந்த வருடம் முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையில் 111 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். குறித்த மீனவர்கள் இலங்கை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் ரீ.சரவணராஜா விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார் இவ்வாறு செய்தியை ஆரம்பிப்பது தவறு. இது பின்வருமாறு எழுதப்படலாம்: எழுதும் இனி நான் செய்திகளுக்கு publish வார்ப்புருவை சேர்த்துக்கொள்ளலாம என் தவறுகளை கண்டு துவண்டதில்லை வெற்றியை தேடி விரைகிறேன் விடாமுயற்சியோடு தவறுகளால் வெற்றிக்கான அனுபவங்களை அண்டார்க்டிக்காவின் பனிக்கடலில் இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக சிக்குண்டிருந்த உருசிய ஆய்வுக் கப்பல் காலநிலை ஓரளவு சீரானதை அடுத்து பனிக்கட்டியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியேறித் தனது பயணத்தைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்காதெமிக் சொக்கால்ஸ்கி என்ற இவ்வாய்வுக் கப்பல் தற்போது 7 நொட்டுகள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பனிக்கட்டியில் சிக்குண்ட இக்கப்பலை மீட்பதற்காக சென்ற சீனப் பனியுடைப்புக் கப்பலும் பனியில் சிக்கி நகர முடியாமல் இருந்தது. அதுவும் தற்போது வெளியேறியுள்ளது. இப்பகுதியில் காற்று திசை மாறி வீசியதால் பனிப்பாறைகளில் ஒரு பிளவு ஏற்பட்டதாக உருசியக் கப்பல் தலைவர் தெரிவித்தார். உருசியக் கப்பலில் பயணம் செய்த 52 ஆய்வாளர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கடந்த வாரம் சீனக் கப்பலில் இருந்து சென்ற உலங்கு வானூர்தி ஒன்றின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவுரோரா என்ற ஆத்திரேலியக் கப்பல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இக்கப்பல் தற்போது கேசி என்ற ஆத்திரேலிய ஆய்வுக் கூடத்தை நெருங்கியுள்ளது. அங்கு அக்கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொண்டு தாஸ்மானியா நோக்கிச் செல்லும். 101 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியாவில் இருந்து அண்டார்க்டிக்காவுக்குச் சென்ற டக்லசு மோசன் என்பவரின் பிரசித்தி பெற்ற பயணப் பாதை வழியே அக்காதெமிக் சொக்கால்ஸ்கி கப்பலும் செல்லவிருக்கிறது. அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர் சனவரி 3, 2014 அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது டிசம்பர் 29, 2013 உருசியாவின் சுதாவிரப்போல் நகரில் நான்கு வாகனங்களில் ஐந்து உடல்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் நாள் உருசியாவின் சொச்சி நகரில் 2014 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்தாவ்ரபோல் நகரம் சோச்சியில் இருந்து 300 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 37,000 காவல்துறையினரும், உட்துறை அமைச்சுப் பாதுகாப்பு அதிகாரிகளும் சோச்சி நகருக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடக்கு காக்கசுப் பகுதியில் இருந்து இசுலாமியத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என பரவலாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. செச்சினியாவின் போராளிக் குழுத் தலைவர் டோக்கு உமாரொவ் என்பவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகளைக் குறி வைக்குமாறு அண்மையில் தமது போராளிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். தேவயானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்தே அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார். விசா மோசடி, மற்றும் தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்குக் குறைவான ஊதியம் வழங்கியமை தொடர்பாக இவர் சென்ற மாதம் நியூ யோர்க் நகரில் கைது செய்யப்பட்டார். இவர் நடுவண் காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அமெரிக்கா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இந்தியா வற்புறுத்தியது. தான் நிரபராதி என தேவயானி எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார். விசா மோசடி, நீதிபதியிடம் தவறான வாக்குமூலங்களை அளித்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. விசா மோசடி வழக்கில் தேவயானி சிக்கிய பின்னர் அவரை இந்தியா ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரத் தூதர் பதவியில் அமர்த்தியது. இதனால் அமெரிக்கா அவருக்கு அரசுத்துறைப் பாதுகாப்பு வழங்கியது. தேவயானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சார்ட் என்பவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் தேவயானி கைது செய்யப்பட்டார். ஆனால், தேவயானி, சங்கீதா தன்னை மிரட்டியதாகவும், வீட்டில் இருந்த பொருட்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். உலகின் மிகப்பெரியக் குடியரசு நாடான இந்தியாவில் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் இற்றைப்படுத்தப்படுகிறது. மாநிலவாரியாக நடக்கும் இப்பணியானது தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ளது. இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களுக்கு நேற்று செவ்வி வழங்கினார். நடப்பு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, பட்டியல் குறித்த தரவுகளையும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். [[பகுப்பு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014]] மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த வெள்ளி அன்று பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதை அடுத்து அவர் பெனின் நாட்டுக்குச் சென்றார். அங்கேயே அவர் நாடு கடந்த நிலையில் வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெனின் வந்திறங்கிய ஜொட்டோடியாவை பெனின் வெளியுறவுத்துறை அமைச்சர் நசீரோ அரிபாரி விமான நிலையத்தில் சந்தித்தார். கடந்த மாதம் கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களிக்கும் இடையில் ஆரம்பமான இன வன்முறைகளில் குறைந்தது ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர். ஜொட்டோடியா, மற்றும் பிரதமர் நிக்கொலாசு தியெங்காயி ஆகியோரின் பதவி விலகல் தலைநகர் பாங்கூயியில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இரு தரப்புகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்று வருவதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. குறைந்தது ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர். முஸ்லிம்களின் வீடுகள், மற்றும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் கிறித்தவர்கள் தமக்கிடையே கண்காணிப்புக் குழுக்களை அமைத்து பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரை நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை பன்னாட்டு அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது. இலங்கை, வத்தளை காவல்துறையினர் இன்று ஆமைகளை இறைச்சிக்காக கொலைசெய்து விற்கப்படும் இடம் ஒன்றை பரிசோதனையில் முடக்கினர். பிடிபான, நீர்கொழும்பு எனும் இடத்திலேயே இந்த சட்டவிரோத இறைச்சி விற்பனை நிலையம் இயங்கிவந்துள்ளது. பொலீசார் இரண்டு ஆமைகள் இறைச்சிக்காக கொலைசெய்யப்பட்டிருப்பதை கண்டுகொண்டதுடன் மேலும் எதிர்கால இறைச்சித் தேவைக்காக வைத்திருந்த இரண்டு உயிர் ஆமைகளையும் கைப்பற்றினர். காவல்துறையினரின் கருத்துப்படி இதுவரை சுமார் 100 ஆமைகள் இங்கே கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். மீன்பிடி வலையில் சிக்கும் ஆமைகளை இந்த இறைச்சி விற்பனை நிலையத்திற்கு மீனவர்கள் வழங்கியுள்ளதாகவும், இங்கிருந்து ஒரு கிலோ இறைச்சி சுமார் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமைகள் ஒரு அழிந்துவரும் இனம் என்பதோடு இலங்கையின் நீர்கொழும்புப் பகுதியின் கரையோரத்தில் வாழ்து வரும் மக்கள் ஆமை இறைச்சி ஒரு சத்தான உணவு என்றும் எண்ணுகின்றனர். இலங்கை சட்டத்தின்படி ஆமைகளைக் கொலைசெய்வது சட்டப்படி குற்றமாகும். அதை மீறி கொலைசெய்பவரிற்கு தண்டம் மற்றும் சிறைத் தண்டனை ஆகியவை வழங்கப்படலாம். இந்த இறைச்சி விற்பனை நிலையத்தை நடத்தியவர் என்று கருதப்படும் நபர் நீர்கொழும்பு நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார். இந்திய அரசினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வுகளின் பின்னர் பெப்ரவரி மாதத்திலேயே இந்த அறிக்கையை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1980 இல் அம்மை நோய் முற்றாக இந்தியாவில் இருந்து அழிக்கப்பட்டபின்னர் தற்போது இளம்பிள்ளை வாதமும் அழிக்கப்பட்டுள்ளது. இறுதியாக போலியோ தாக்கத்திற்குள்ளான 18 வயதான பெண் ஒருவர் 2011ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அறியப்பட்டார். இதேவேளை 2009ம் ஆண்டு சுமார் 741 நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். இது உலகளவில் அறிவிக்கப்பட்ட போலியோ தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளின் சரி அரைவாசிப் பங்காகும். 1978ற்கும் 1995ற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 50,000 தொடக்கம் 100,000 வரையானனோர் பாதிப்புக்குள்ளானார்கள். இந்தியாவிலிருந்தே போலியோ உலகின் பல நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக அக்காலத்தில் பெரும் குற்றச்சாட்டுகளும் நிலவியது. இந்தியாவின் பொதுச் சுகாதாரத்துறையின் தொடர்ச்சியான வேலைத் திட்டங்களினால் இந்த மைல்கல் எட்டப்பட்டதாக கருதப்படுகின்றது. இந்தப் போலியோ மருந்து வழங்கும் செயற்பாட்டில் சுமார் 23 லட்சம் தொண்டர்கள் ஈடுபட்டார்கள் என்பதையும், அவர்கள் சுமார் 170 மில்லியன் சிறுவர்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்தார்கள் என்பதையும் குறிப்பிடப்படவேண்டும். இந்தியாவின் சுகாதார அமைச்சர் குலாம் நாபி அசாட் அவர்கள் "போலியோ தாக்கத்திற்குள்ளான ஒரு நபர் கூட மூன்று வருடங்களில் அறிவிக்கப்படாமையானது இந்தியாவின் பெருமை மிக்க தருணம். இது பெரும் செயற்றிட்டங்களின் மூலம் கடுமையாக உழைத்து எட்டிய ஒரு பெரும் பாரிய மைல்கல்" என்று தெரிவித்தார். இதேவேளை சுகாதார நிறுவனங்கள் இந்த நோய் உலகில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டாலும் யுத்தம் நிலவும் நாடுகளில் மீளவும் தலைதூக்கும் நிலை காணப்படுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக சோமாலியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே போலியோ அழிக்கப்பட்டிருந்தாலும் தற்போது மீளவும் அங்கே போலியோ தாக்கியோர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே வேளையில் பாக்கிஸ்தானில் போலியோ தடுப்பு வேலை திட்டங்களை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆயுததாரிகள் மேற்கு நாடுகளின் ஒரு சதிவேலையே இந்த சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி என்று எண்டுவதே இதற்கான முக்கிய காரணமாகும். பாக்கிஸ்தான் இந்த வேலைத் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அல்லது மீளவும் இந்தியாவினுள் போலியோ பாக்கிஸ்தானில் இருந்து பரவும் சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போதய நிலை நீடித்தால் ஆப்கானித்தான் மற்றும் நைஜீரியாவில் 2014ல் போலியோ நோய் முற்றாக அழிந்துவிடும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாதசுவர இசைக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை எனும் கருத்தினை அண்மைக்காலமாக இசை விமர்சகர்கள் தமிழக பத்திரிகைகளில் எழுதிவருகிறார்கள். இந்நிலையில், சென்னையின் இசை மன்றங்கள் சிலவற்றில் நாதசுவர இசைக்கென தனியாக விழா எடுத்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் 26ஆவது பொங்கல் நாகசுவர விழா நேற்று தொடங்கியது. நான்கு நாட்களுக்கு நடக்கவிருக்கும் இந்த விழாவினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. இராமசுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்தத் தொடக்க விழாவில், நாதசுவர இசைக் கலைஞர் இஞ்சிக்குடி ஈ. எம். சுப்பிரமணியத்திற்கு ‘சங்கீத சூடாமணி’ பட்டம் வழங்கப்பட்டது. சுப்பிரமணியத்திற்கு தங்கப்பதக்கம், சான்றிதல் மற்றும் ஒரு இலட்சம் உரூபாய் அடங்கிய விருதினை இசை விற்பன்னர் பி. எம். சுந்தரம் வழங்கினார். சங்கீத சூடாமணி விருதினை ‘ஊக்குவித்தலின் ஒரு அடையாளமாக’ தான் பார்ப்பதாக, இஞ்சிக்குடி ஈ. எம். சுப்பிரமணியம் தனது ஏற்புரையின்போது பேசினார். இந்த விருதினை தனது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உரித்தாக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். தெற்கு சூடானில் மலாக்கால் நகரில் இடம்பெற்று வரும் சண்டைகளினால் இடம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைல் நதியில் கவிழ்ந்ததில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் பெண்கள் குழந்தைகளும் இறந்துள்ளனர். தெற்கு சூடான் அரசுப் படையினருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சண்டைகளினால் 350,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. தெற்கு சூடானின் எண்ணெய்க்கிணறுகளுக்கு மலாக்கால் நகரினூடாகவே செல்ல வேண்டும். அண்மைக் காலத்தில் மலாக்கால் நகரில் உள்ள ஐநா தளத்துக்கு 9,000 பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளனர் என ஐநா பேச்சாளர் தெரிவித்தார். இதற்கிடையில், நாட்டில் இடம்பெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. அரசுத்தலைவர் சல்வா கீருக்கு ஆதரவானோருக்கும், முன்னாள் பிரதி அரசுத்தலைவர் ரீக் மச்சாருக்கு ஆதரவானோருக்கும் இடையில் டிசம்பர் 15 இல் சண்டைகள் ஆரம்பமானதில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தெற்கு சூடான் 2011 ஆம் ஆண்டில் சூடானில் இருந்து தனிநாடாகப் பிரிந்து சென்றது. 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காக்கப்பட்ட ஆவணங்களை பொதுவில் விடுவது பிரித்தானிய வழக்கமாகும். அவ்வகையில் வெளியிடப்பட்ட சில ஆவணங்கள் 1984ம் ஆண்டு பொற்கோயில் மீது இந்திய இராணவம் நடத்திய தாக்குதலிற்கு பிரித்தானியா ஆதரவு வழங்கியதாகத் தெரியவருகின்றது. இதை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வட்சன் அவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக விசாரணைசெய்யுமாறு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரோன் உத்தரவிட்டுள்ளார். 6 பெப்ரவரி 1984 என திகதியிடப்பட்ட ஆவணம் ஒன்றில் இந்தியா பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடையம் தொடர்பாக வெளியுறவு செயலர் பிரதமர் கூறியபடி செயற்படவேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வட்சன் பிரித்தானிய அரசு இந்தச் சம்பவம் தொடர்பான மேலும் பல ஆவணங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவற்றையும் பொதுவில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கே உரிய சிங்க இனமான மேற்கு ஆப்பிரிக்கச் சிங்கங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அஞ்சப்படுகின்றது. பந்தேரா எனும் தன்னார்வ நிறுவனம் தற்போதைய கணக்கெடுப்பின் படி சுமார் 400 ஆப்பிரிக்க சிங்கங்கள் மட்டுமே அப்பிரதேசங்களில் எஞ்சியிருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வமைப்பு உலகமெங்கும் பூனை வகை உயிரினங்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புடன் செயற்பட்டுவருகின்றது. செனகல் முதல் நைஜீரியா வரை சுமார் ஆறு ஆண்டுகள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவாகவே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரியமாக ஆபிரிக்க சிங்கங்கள் வாழ்ந்து வந்த வாழ்விடங்களின் 99% விவசாயம் போன்ற தேவைகளுக்காக அழிவடைந்து தற்போது வெறும் ஒரு வீதம் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழிவின் விளிம்பில் இருக்கும் சிங்கங்களைக் காப்பதற்கான நிதிவசதி அந்தப்பகுதி அரசுகளுக்கு இல்லை என்றும் சிங்கங்களைக் காப்பதைவிட முக்கியமான முன்னுரிமை கூடிய மக்களின் வறுமை போன்ற பல காரியங்கள் இந்த அரசுகளின் முன்னால் இறைந்து கிடப்பதனால் இந்த சிங்கங்களில் அழிவு மேலும் உறுதிப்படுத்தப்படுவதாக அஞ்சப்படுகின்றது. மேலும் பந்தேரா நிறுவனம் சிங்கங்களை அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ள விலங்குகள் என்று பட்டியலிடவேண்டும் என்றும், இந்த மேற்கு ஆபிரிக்கச் சிங்கங்களின் பாதுகாப்பிற்காக மேலும் பல சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது. இதைவிட சட்டவிரோத வேட்டைக்காரர்கள், கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், புகைப்படம் எடுக்க விரும்பும் ஆர்வலர்களை இப்பகுதிகளுக்கு அழைத்து வந்து அதன் மூலம் பெறும் பணத்தில் இப்பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று பரிந்துரை வழங்கியுள்ளனர். இலங்கையின் கடல் எல்லையினும் மீன் பிடித்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதென்று முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். இலங்கை சிறைச்சாலைகளில் சுமார் 236 இந்திய மீனவர்களும் அவர்களின் 90 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இதே போன்று தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 129 இலங்கை மீனவர்களும் அவர்களது 34 படகுகளும் அங்கிருந்து விடுவித்து இலங்கை அனுப்பப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்திய எல்லைப் புறங்களில் இந்திய மீனவர்களின் பிரைச்சனை தொடர்பாக கலந்துரையாடல் நடத்த இந்தியா சென்றிருந்த வேளையிலேயே இந்த அறிவித்தலை ராஜித சேனாரத்ன விடுத்துள்ளார். மேலும் சென்னையில் இரு நாட்டு மீனவர்களும் வரும் 20ம் திகதி சந்தித்து கலந்தாலோசிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இதனிடையே நேற்று இலங்கை மீன்பிடி அமைச்சரை இந்திய மீனவர்கள் சந்திப்பதாக ஆரம்பத்தில் திட்டம் இருந்தாலும் இறுதியில் இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. இதேவேளையில் இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு இந்தப் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தையில் 2004ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அனுபவமிக்க ஆளுமைகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்றும் கோரியுள்ளனர். மேலும் தென் இலங்கை மீனவர்களை மீட்கவே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த இலங்கை மீன்பிடி அமைச்சர் இணங்கியுள்ளாரோ என்றும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளில் வந்து இலங்கைக் கடல் வளத்தைச் சுரண்டிக்கொண்டு சென்றுவிடுவதாக அவர்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] நான் ஒரு மேனிலைப்பள்ளி மாணவன். தமிழ் விக்கி செய்திப்பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளது. இலங்கையில் ஒன்பது மாகாணசபைகளுக்கும் கட்டம் கட்டமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, தெற்கு, மேற்கு மாகாண சபைகள், அம்மாகாண ஆளுனர்களின் வேண்டுகோளின் படி இம்மாதம் 12ம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 10 (1) பிரிவிற்கமைய தேர்தல் ஆணையாளர் இம்மாகாணங்களுக்கான வேட்பு மனு ஏற்கும் திகதியை நேற்று அறிவித்தார். மார்ச் மாத இறுதியில் 22 அல்லது 29 ஆம் திகதியில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின. மேல் மாகாணத்தில் 4,014,230 பேரும், தென் மாகாணத்தில் 2,140,498 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2013 வாக்காளர் பதிவில் இருந்தே இவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். தென் மாகாண சபைக்கு தேர்தல் மூலம் 53 பேரும், இரு கூடுதல் இடங்களுடன் மொத்தம் 55 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேல் மாகாண சபைக்கு தேர்தல் மூலம் 102 பேரும், இரு கூடுதல் இடங்களுடன் மொத்தம் 104 பேர் தெரிவு செய்யப்படுவர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட முக்கிய கட்சிகள் களத்தில் இறங்கவுள்ளன. கனடாவின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தனது இலங்கை விஜயத்தின்போது தன்னை இலங்கை அரசின் உளவாளிகள் பின்தொடர்ந்ததாகவும், விசாரணைகளை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசன் இலங்கையில் பிறந்தவர், அவர் குடும்பம் சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறியது. இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில், தான் சிறுவயதில் வாழ்க்கையை நடத்திய இடத்தைப் பார்வையிடவே வந்ததாகவும், தான் உத்தியோகபூர்வமான விஜயத்தை நிகழ்த்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்தவருடம் டிசம்பர் மாதம் 28ம் திகதி ராதிகா சிற்சபேசன் இலங்கை விஜயத்தை நிகழ்த்தியிருந்தார். இதன்போது தொடர்ச்சியாக இலங்கை அரசின் உளவாளிகளால் தான் தொடரப்பட்டதாகவும், தனியாக வைத்து விசாரணைகள் செய்யப்பட்டதாகவும் ராதிகா அறிவித்துள்ளார். குறிப்பாக விசாரணையின் போது அதிகாரிகள் தான் சென்ற இடங்களின் பட்டியலை கையில் வைத்திருந்ததாகவும், அது தொடர்பாகவும் தான் சந்தித்த நபர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அனாதைகள் இல்லத்தைப் பார்வையிடச் சென்றபோது அங்கு வந்த அரச அதிகாரிகள் சிலர் தம்மிடம் ராதிகாவைக் கைதுசெய்ய அனுமதி இருப்பதாக மிரட்டியதாகவும் ராதிகா தெரிவித்தார். மேலும் பிரைச்சனைகளைத் தவிர்க்க தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியதுடன் கனடாவிற்கான உயர்தானிகரைத் தொடர்புகொண்டு நிலைமையை ஆராய்ந்ததாகவும் ராதிகா தெரிவித்தார். இந்த நிகழ்வுகளானது உலகமெங்கும் மனித உரிமைக்காக குரல்கொடுக்க வேண்டும் என்ற தன் கொள்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பாக இலங்கையில் உள்ள தன் சகோதர சகோதரிகளுக்காக உரிமைக் குரல் கொடுப்பேன் என்றும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்தார். ஆயினும் இவரது கருத்துக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. ராதிகா சிற்சபேசனை இலங்கை அரசு கௌரவமாகவே நடத்தியது, இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தவே இவ்வாறு கருத்துக்களை அவர் வெளியிடுவதாக இலங்கை உயர்தானிகர் இணையத்தளம் தெரிவித்துள்ளது. நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு அரும்பணியாற்றிய தமிழகப் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு, பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் சார்பில் ஆண்டுதோறும் நாவா நாள் நிகழ்வுகள் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த ஆண்டு நாவா நளினை முன்னிட்டு, பெப்ரவரி 3 திங்கட் கிழமை அன்று, காலை 10 மணி அளவில், பேராசிரியர் நா. வானமாமலை நினைவுச் சொற்பொழிவு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியிலுள்ள கௌசானல் அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு பொ. வேல்சாமி திருக்குறள் திருவள்ளுவர் பதிப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை நாட்டார் வழக்காற்றியல் துறை ஒருங்கிணைக்க உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிகளைக் கொலை செய்தனர் என்று ஆப்கானிய அரசு அறிவித்துள்ளது. இத் தாக்குதல் பற்றித் தலீபான் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் இந்த உணவகத்திற்கு வரும் வெளி நாட்டவரைக் குறி வைத்தே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆப்கானித்தானில் பெரும் கேள்விக்குறியாள உள்ளமையுடன், ஆப்கானித்தானில் இருக்கும் நேட்டோ படையின் இறுதி படையணியும் இந்த வருட இறுதியில் ஆப்கானித்தானை விட்டு வெளியேற உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் பெரும் பாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதும் மீளவும் ஆப்கானித்தானை தமது கட்டுப்பாட்டினுள் தாம் கொண்டுவந்துவிடுவோம் என்றும் தலீபான் அறிவித்துள்ளனர். இதேவேளை வாசிங்டன், வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றத்தின் பின்னரும் அமெரிக்கப் படைகளை ஆப்கானித்தானில் தங்க வைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி ஆப்கானிய அரசை வற்புறுத்தி வருகின்றது. நாளை சென்னை, இந்தியாவில் நடைபெற இருந்த இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு மேலும் ஒரு வாரகாலம் தாமதப்படுத்தி 27, சனவரி 2014 அன்று நடைபெறும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலங்கைத் தரப்பு மீனவர்கள் கலந்துகொள்வதில் ஏற்படும் காலதாமதத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தமிழக அரசிற்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20ம் திகதி மீனவர்களிற்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவது பற்றி தனக்கு யாரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தானும் பத்திரிகை வாயிலாகவே இந்தத்தகவல்கள் பற்றி அறிந்தேன் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்திருந்தார். மேலும் இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முக்கியமான தடைக்கல்லாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் குற்றம் சாட்டியுள்ளார். 27ம் திகதி இலங்கை மீனவர்கள் 20 பேர் கொண்ட குழு ஒன்றை பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாகவும் ராஜிதசேனாரத்ன கூறியுள்ளதாக அவரின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் அறிக்கையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் முயற்சியில் பேரில் 179 இலங்கை மீனவர்களில் சுமார் 113 மீனவர்கள் தமிழகச் சிறையில் இருந்தும், மற்றும் தமிழகம், புதிச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 179 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] முசுலிம் சகோதரத்துவ கட்சி இப்புதிய வாக்கெடுப்பை ஏமாற்று என்று கூறியுள்ளது. இப்புதிய அரசியலமைப்புக்கான வாக்கு இராணுவம் கடந்த ஆண்டு சூலையில் மொர்சி அரசை நீக்கியதற்கு எகிப்து மக்கள் தரும் ஒப்புதல் என்று கருதப்படுகிறது. இவ்வாக்கெடுப்பை பல பன்னாட்டு அமைப்புகள் சுதந்திரமான சூழலில் நடக்கவில்லை என்று கூறி கண்காணிக்க மறுத்துவிட்டன. இவ்வரசியலமைப்பை ஏற்காமல் மறுத்து வாக்களித்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். முதல் நாள் நடந்த வாக்கெடுப்பின் போது நடந்த கலவரத்தில் மொர்சியின் ஆதரவாளர்கள் பலர் இறந்தனர். வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் நான்கு பேர் இறந்தனர் என சுகாதாரத்துறை அறிவித்தது. இவ்வரசியலமைப்புக்கான வாக்கெடுப்பு சனவரி 14 15ம் தேதிகளில் நடைபெற்றது. வெளிநாட்டு வாழ் எகிப்தியர்கள் சனவரி 8 முதல் 12ந் தேதி வரை வாக்களித்தனர். சனிக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி புதிய அரசியலைமைப்பு சட்டத்தின் படி முழுமையாக சுதந்திரமும் உரிமையையும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். 2012ம் ஆண்டு மொர்சி தலைமையில் அரசியலமைப்புக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதை மதச்சார்பற்ற கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. 33% வாக்காளர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் 64% பேர் இதற்கு ஒப்புதல் அளித்தனர். இராணுவத்தின் அரசலைமைப்பை 50 பேர் கொண்ட ஆணையகம் தயாரித்தது. 2 இசுலாமிய கட்சி உறுப்பினர்களை தவிர அனைவரும் இதில் கலந்துகொண்டனர். சட்டம் இயற்றுவதில் சரியாவே முதன்மையான மூலமாக இருக்க வேண்டும் என்பன போன்ற சில இசுலாமிய ஆதரவு கருத்துக்கள் இவ்வரசியலமைப்பில் நீக்கப்பட்டிருந்தன. விமர்சகர்கள் இந்த அரசலைமைப்பு இராணுவத்துக்கு ஆதரவாக உள்ளதாக கருதுகின்றனர். இந்த புதிய அரசியலமைப்பின்படி அதிபர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக பதவி வகிக்கமுடியாது. அதிபர் நாடாளுமன்றத்தால் பழிச்சாட்டுக்கு ஆளாகலாம். இசுலாம் அரசாங்கத்தின் மதமாக இருந்தாலும் மற்றவர்களும் சுதந்திரமாக அவர்கள் மதத்தை அனுபவிக்கலாம். அரசு ஆண்களையும் பெண்களையும் இணையாக நடத்தும். அரசு மக்களை மதம், பால், குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்தவர்கள் என்று வேறுபடுத்தி நடத்தாது. இராணுவம் பாதுகாப்பு அமைச்சரை அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நியமிக்கும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுத் தலைநகர் பாங்குயியில் முஸ்லிம்கள் இருவர் கிறித்தவக் கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர். தமது பகுதியில் உள்ள முஸ்லிம்களைத் தாம் கொல்லப்போவதாக அக்கும்பல் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் போராளிகள் நாட்டைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து அங்கு எழுந்துள்ள இனமோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் பிரெஞ்சு, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர் பெரும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளனர். நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது புதிய இடைக்கால அரசை இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யவிருக்கின்றனர். முன்னாள் அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த வாரம் தமது பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். இவரது தலைமையிலான செலெக்கா என்ற முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து ஜொட்டோடியா அந்நாட்டின் முதலாவது சிறுபான்மையின முஸ்லிம் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பெரும்பான்மையினக் கிறித்தவர்களுக்கும், சிறுபான்மையின முஸ்லிம்களுக்கும் இடையே இனமோதல்கள் வெடித்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஜொட்டோடியா நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த வெள்ளிக்கிழமை தமது இருப்பிடங்களை விட்டு அயல்நாடான கமெரூனுக்கு வெளியேற எத்தனித்த 22 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்து விட்டதாகக் கூறி, 15 பேரின் மரண தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பழனிசாமி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. இன்றைய வரலாற்றும் புகழ் மிக்க தீர்ப்பை மனித உரிமை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். வருங்காலத்தில் மரணதண்டனைகளைக் குறைக்க இது வழிகோலும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தனிமைச் சிறையில் அடைப்பது சட்டவிரோதம் எனவும், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இன்று உச்சநீதிமன்றத்தில் இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 15 பேர் தொடுத்த வழக்கில், 13 பேருக்கு கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டமையைக் காரணம் காட்டி மகன்லால், சுந்தர்சிங் ஆகிய இருவரின் தூக்குத்தண்டனையும் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இன்றைய தீர்ப்பின் விளைவாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் என மரணதண்டனை பெற்றுள்ள மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரின் தண்டனைகளும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்கிசெய்தியில் எவரும் செய்தி எழுதலாம்! நேரம், உழைப்பு, கற்றுக் கொள்ளும் ஆர்வம் என்பன மட்டுமே முக்கியத் தேவைகள். மனநோயாளிகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்து இப்போது இருக்கும் சிறைச் சட்டம் நம்நாட்டில்; 1894 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் இயற்றப்பட்ட சட்டம். வெள்ளையனுக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கிளர்ச்சிகள் நடந்த காலகட்டம் அது. நமது மக்களை அடக்கி ஒடுக்கி ஆள ஒரு கடுமையான சிறைச் சட்டம் தேவைப்பட்டது. அதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இன்றைய சிறைச்சட்டம். சிறையில் இருப்பதே கொடுமையான விசயம். அதிலும் அரசியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசிகளின் நிலைமை மிகக் கொடுமையானது. ஆயுள் தண்டனை என்பது உயிர் உள்ள வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது வெள்ளையன் போட்ட சட்டம். இதையே 1947க்குப் பின் சிறு சிறு மாற்றங்கள் செய்து சிறையில் நன்னடத்தையுடன் அதாவது உயிரிருந்தும் உணர்வற்றுஇ சிறையில் அதிகாரிகள் அடித்தாலும் உதைத்தாலும்இ நாம் எதிர்த்துப் பேசாமல் 20 ஆண்டுகள் இருந்தால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதை மாநில அரசுகள் இதுவரையிலும் அதைக்கூட முழுமையாக ஆயுள்சிறைவாசம் என்றால் வெள்ளையர்கள் ஆண்டபோது 20 ஆண்டுகள் என்றும் பொதுவாக மக்களிடம் 14 ஆண்டுகள்தான் என்றும் அரசுகள் அறிவுரை மூலம் 14 ஆண்டுகளில் விடுதலைபற்றி பரிசீலிக்கப்படுகிறது என்றும் இருக்கிறது ஆனால் உச்சநீதிமன்றம் ஒரு தீர்புரையில்அதற்கு விளக்கம் அளிக்க முற்படும்போது ஆயுள் சிறை என்றால் அம் மனிதனின் ஆயுள்காலம் வரையே என்று தீர்ப்புகள் வழங்கியது. ஆனால் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 161ன்படி தண்டனையை குறைப்பதற்கான அதிகாரத்தை மாநில ஆளுனர்களுக்கு வழங்குகிறது. அப்படி முன் விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம் பார்க்காமல் விடுதலை செய்யவேண்டும் என்று ஆதே உச்சநீதிமன்றம் பல தீர்புரைகளில் கூறி இருக்கிறது ஆனால் நடை முறை என்பது வேறு விதமாக சிறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள்இ உழைப்பாளிகள்இ இசுலாமியர்கள் தலித்துகள்இ தொழிலாளிகள். ஒரு தவறுக்காக தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும்இ தண்டனை அனுபவிப்பது அவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தான். ஒரு சிறையாளியின் குடும்பத்தையும் சிறைக்கைதியாகவே பார்க்கும் அவல நிலை நம் சமூகத்தில் உள்ளது. “குற்றத்தை விட்டு விட்டுஇ குற்றவாளியை வெறுக்கும் மனநிலை” தான் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சிறைவாசியை விட அவன் குடும்பம் படும் அவமானம் மிகக் கொடுமையானது. சிறையில் இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள். இவர்களால் பணம் செலவழித்து சொந்தமாக வழக்கறிஞர் அமர்த்தி வழக்கு நடத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் தான் அதிகம் பேர் உள்ளார்கள். கேரளாவில் 7 ஆண்டுகளில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதையும்இ ஆந்திராவில் 5 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதையும்இ உத்திரபிரதேசத்தில் கான்சிராம் பிறந்த தினத்தை முன்னிட்டு 10இ000த்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகளை மாயவதி அரசு விடுதலை செய்ததையும்இ மகாராஸ்ட்ராஇ மேற்குவங்கம்இகர்நாடகபோன்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை ஆனால் தமிழகத்தில் தாங்கள் எப்போழுது விடுதலை செய்யப்படுவோமோ இல்லை சிறையிலேயே செத்து விடுவோமோ என்று தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 161 மாநில அரசுகளுக்கு தண்டனை குறைபிற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது அரசமைப்பு சட்டப்படி நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனையை நிறுத்திவைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ அதில் ஒரு பகுதியை குறைக்கவோ அல்லது தண்டனையை முற்றிலுமாக நீக்கவோ மாநில தமிழகத்தில் பெரும் பகுதி அரசுகள் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வதில்லை அப்படியும் முன் விடுதலை செய்தால் சமுக வழக்குகள் என்ற காரணம் காட்டியும் சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்றவர்கள் என்ற காரணத்தினால் இசுலாமியர்கள்இதலித்கள்இ அரசியல் கடந்த ஆட்சியில் 2008ம்வருடம் அரசின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழக சிறைகளில் ஆயுள்தண்டனை பெற்ற 1405 சிறைவாசிகள் 7 ஆண்டுகள் கழித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆனால் அதில் ஒரு முஸ்லீம் சிறைவாசிகூட இல்லை ஏன் இந்த பாரபட்சம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14கின்படி இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும் சட்டத்தின் முன் சம உரிமையும் சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பையும் பெற அரசு மறுக்கக்கூடலீது எனவும். பிரிவு 15 சமயம்இபாலினம் பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் எந்த குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது எனவும் கூறுகிறது. இதையே வலியுறுத்தி உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புரைகளில் கூறுகிறது ஆனால் உச்சநீதிமன்ற தீர்புரைகள் இங்கு ஆயுள் தண்டனை பெற்று 10 .15 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஒருவர் விடுதலை ஆவான் என்றால்இ அவனால் அவன் குடும்பத்துக்கோ, சமூகத்துக்கோ எந்தப் பயனும் இல்லை. அவனின் உழைக்கும் சக்தி முழுவதையும் சிறையிலேயே கழித்து விட்டு அனைவருக்கும் ஒரு பாரமாகவே வாழ வேண்டிய ஒரு நிலை உள்ளது. தவறு செய்தவனுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதால் மட்டும் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. தவறு செய்யும் போது தண்டிக்கும் சட்டம் இதன் தவறை நினைத்து வருந்தும் போது அவனை வாழ விட கடமைப்பட்டுள்ளது. எந்த வகையிலும் சமூகம் சட்டத்தைச் சார்ந்து இருக்கவில்லை. இது ஒரு சட்ட ரீதியான கற்பனையே. மாறாக சட்டமே சமூகத்தைச் மனிதனின் வாழ்க்கை நிலை மாறும் போது சட்டமும் மாறித்தான் ஆக வேண்டும். சிறைச் சட்டங்கள் இன்னும் மென்மையாக்கப்பட வேண்டும். “கடுமையான சட்டங்கள் திறமையான குற்றவாளிகளை உருவாக்கும்” என்பதை கவனத்தில் கொண்டும் சிறையில் பிற்படுத்தப்பட்ட ஏழைஇ எளிய மக்கள் தான் என்பதைக் கவனத்தில் கொண்டும் இந்த சிறை சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும். இந்திய சிறை விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களுக்கு பின் 1983ஆம் ஆண்டு நீதிபதிகள் திரு. ஆனந்த் திரு. நாராயண் திரு. முல்லா ஆகிய மூவர் குழு ஒன்றை மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் அமைத்தார். அந்தக் குழு இந்தியாவில் உள்ளஇ தமிழகம் உட்பட பல முக்கிய சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்து அதன் இறுதி அறிக்கையை 1984 ஆம் ஆண்டு நடுவண் அரசுக்கு சமர்பித்தது. அந்த அறிக்கையில் மிக முக்கியமாக தெரிவித்தது என்ன வென்றால் எந்த ஒரு கைதியையும் அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைத்து இருந்தால் அவனின் மனித பண்புகளை மறக்கச் செய்வதுடன்இ அவன் மிகக் கொடூர சிந்தனையுள்ளவனாக மாறிவிடுவான். இது சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த கமிசன் அறிக்கை குப்பையில் போடப்பட்டு விட்டது. தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் ஒரு சிறைவாசியின் மனமாற்றத்திற்கு 7 ஆண்டுகள் அவனை சிறை வைத்தாலே போதும் என்று ஒருவரை ஆயுள் முழுவதும் சிறைவைப்பது அவரின் அனைத்து இயக்கங்களையும் அவருக்கும் சமுகத்திற்க்குமான தொடர்பை அறுத்துவிடுவதும். தன்னுடைய குடும்பத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுப்பதும். சிறைவாசியின் மனம் சார்ந்தஇ உடல் சார்ந்த அனைத்தையும் தடுப்பதும் மொத்தத்தில் செத்த பிணத்திற்க்கு சமமானதும் ஒன்றுதான். “ மதுரை லீலாவதி “ கொலைவழக்கில் சிறைப்பட்டவர்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்குள் விடுதலையாகிவிடஇ அப்பாவிகள்இ அரசியல் போராளிகள் என 1. ’அபுதாகிர்’ 10ஆண்டுகளுக்கும் மேலாக தனது 17 வயதில் இருந்து சிறையில் இருக்கிறார். இவரது பெற்றோர் அண்ணன் சிறையிலேயே இறந்து இருக்கிறார்கள். இவருக்கு ளுடுநு என்கிற கொடிய நோய் இருக்கிறது. இது இவரது ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் செயலிழக்கச் செய்து தற்போது கண் பார்வைஇ சிறுநீரகம் என முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து மரணத்தினை எதிர்பார்த்திருப்பவரை விடுதலை செய்து வீட்டில் அமைதியான முறையில் மரணத்தினை எதிர்கொள்ளவேண்டுமென்று சொன்னபிறகும் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவரது விடுதலை குறித்து அரசு ஏதும் பேசவில்லை.. 2. ’பக்கா’ என்கிற ’விஜயா’ க்டந்த 23 வருடங்களாக சிறையில் இருக்கும் பெண். மன நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் விடுதலை செய்யப்படவில்லை. இந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் இருக்கும் பெண். 3. ’நளினி’ ‘ஜெயக்குமார்’ ராபர்ட் பயஸ்’ ‘ரவிச்சந்திரன்’ 22 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். 4. தோழர். ‘துரைப்பாண்டி’ தலித் மக்களின் உரிமைக்காக போராடி சிறை சென்றவர். 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். 5. வீரப்பனுடைய அண்ணன் என்கிற காரணத்துக்காக 26 ஆண்டுகளிக்கும் மேலாக சிறையில் இருக்கும் ‘மாதையன்’ கண்பார்வையினை இழந்த பின்னரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை. தன்னை கருணைக் கொலை இவ்வாறு இசுலாமியர் என்கிற காரணத்தினாலேயே பலர் தமிழ்த் தேசியவாதிகள் அரசியல்-சமூக விடுதலைப் போராளிகள் என எண்ணற்றோர் சிறையில் நீண்ட நாட்களாக வாடுகிறார்கள். நேற்று இவர்களுக்கு நடைபெற்றதை இன்று இடிந்தகரை மக்களுக்கும் ஏனைய போராடும் இயக்கத் தோழர்களுக்கும் நிகழ்கிறது. இசுலாமியர் என்பது தனித்த இனமல்ல. அவர்கள் தமிழர்களே இந்துத்துவத்தின் சாதியத்தால் மதம் மாறியவர்களே. நம்பிக்கை வேறு வேறாக இருந்தாலும் இப்பொழுது சொல்லுங்கள் அண்ணா பிறந்த நாளில் இவர்களைபோன்றவர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமா அல்லது அரசியல் கிரிமினல்கள் விடுதலை செய்யப்பட சிறைச் சாலை இன்றைக்கு மனநோயாளிகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்து வருகிறது என்பது உண்மையா? என நமக்குள் கேள்வி எழுகிறது ! உக்ரைன் தலைநகர் கீவில் அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை செய்யும் சட்டமூலம் இன்று புதன்கிழமை நடைமுறைக்கு வருவதையிட்டு கடந்த இரண்டு நாட்களாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆர்ப்பாட்ட இயக்கம் யூரோமைதான் என அழைக்கப்படுகிறது. 10,000 இற்கும் அதிகமான கலகமடக்கும் படையினரை தலைநகருக்கு அனுப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக உக்ரைனிய ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் அரசுத்தலைவர் யானுக்கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இரத்துச் செய்து உருசியாவுடன் கூட்டுச் சேர எடுத்த முடிவை எதிர்க்கும் முகமாக யூரோமைதான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ரொசெட்டாவில் இருந்து வெளிவந்த குறிப்பு ஒன்று செர்மனியில் டார்ம்ஸ்டார்ட் நகரக் கட்டளை மையத்திற்கு கடந்த திங்கட்கிழமை சனவரி 20 இல் கிடைத்தது. இவ்விண்கலம் தற்போது கிட்டத்தட்ட 800 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மே மாதத்தில் விண்கலத்தில் இருந்து 9 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள 67பி வால்வெள்ளியை நோக்கி இது செல்ல ஆரம்பிக்கும். செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 10கிமீ தூரத்தில் இருக்கும். பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியை நவம்பரில் கீழிறக்கும். ரொசெட்டா விண்கலம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் சூன் 10, 2011 இலங்கைப் பணிப்பெண்கள் மூவர் தமது இரண்டாண்டுக் காலப் பணி ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முயன்றதற்காக சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு தண்டனை விதித்துள்ளது. இவர்கள் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப ஆளுக்கு 43,000 சவூதி ரியால்கள் பணம் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. இப்பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் மூன்று பெண்களும் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். பணி ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முடியாத வகையில் சவூதி அரேபிய அரசு சட்டமியற்றியுள்ளது. வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான புதிய சட்டமூலம் கடந்த ஆண்டு சூலை 15 இல் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இதன் படி, வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தகுந்த காரணமின்றி தனக்கான வேலையை நிராகரிக்கவோ, அல்லது வேலையை விட்டு நீங்கவோ முடியாது. தாம் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் அவர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, அவர்களை, குறிப்பாக சிறுவர்களை எவ்வகையிலும் துன்புறுத்தக்கூடாது போன்ற பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமது தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் எவ்வித கேளிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. அத்துடன் பணிப்பெண்ணுக்கு ஊதியம் எவ்வித தடங்கலுமின்றி வழங்கப்பட வேண்டும், வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, ஒரு நாளுக்கு குறைந்தது 9 மணி நேரம் ஓய்வு போன்ற பல விடயங்கள் இச்சட்டமூலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுமுறை வழங்கப்படும். இடம் துபாய் ஐக்கிய அரபு அமீரகம்]] பிறந்த இடம் கண்டி உடத்தலவின்னை இலங்கை கடந்த ஆண்டு முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களும் இன்று இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 111 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிபதி முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனாலும், மீனவர்கள் தமது படகுகளைத் திரும்பப் பெறாமல் நாடு திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். இதனை அடுத்து இது குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் சனவரி 17 அன்று திருகோணமலை நீதிபதி ரீ. சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 15 படகுகளையும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. மீனவர்களும் படகுகளும் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு விடுவிக்கப்படுவர். இதற்கிடையில், கடந்த 16-ம் தேதி இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 71 பேரை இலங்கை படையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம், இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] சயுர என்ற கப்பல் மீது இலங்கையின் மேற்குக் கரையில் நீர்கொழும்பில் வைத்து 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. இத்தாக்குதலுடன் தொடர்புடையதாக ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சயுர கப்பலைத் தாக்கியமை, கடற்படையினரை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுக்கள் இந்திரதாஸ் வசீகரன், மரியதாஸ் எஞ்சலோ, பீட்டர் பியோமேசன், ஜெயசிங்கம் ஜெயமோகன், சிரில் ஜூன் கிரிசாந்த, குமார் அந்தனி ஆகிய அறுவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக சந்தேக நபர்கள் அறுவரும் ஒப்புக் கொண்டனர். குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தலா இரண்டாண்டு காலம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லலிதா ஜயசூரிய இந்தத் தண்டனையை விதித்துள்ளார். மெல்பேர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆத்திரேலிய ஓப்பன் டென்னிசுப் போட்டியின் இறுதிப் போட்டியில் உலகத் தர வரிசையில் எட்டாவதாக இருக்கும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டனிசுலாசு வாவ்ரிங்கா, உலகின் தர வரிசையில் முதலாவதாக இருக்கும் ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் வென்று வெற்றியாளராக வந்தார். 28 வயதுடைய வாவ்ரிங்கா பெற்ற முதலாவது பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்) இதுவாகும். அத்துடன் 17-தடவை பெருவெற்றித் தொடரை வென்ற ரொஜர் பெரடருக்கு அடுத்தபடியாக கிராண்ட் சிலாம் வென்ற இரண்டாவது சுவிசு நட்டவர் இவராவார். முதலாவது செட்டில் 6-3 என்று எளிதில் வாவ்ரிங்கா வென்றார். இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வென்றார். அதன் பின்னர் மிகவும் நிதானத்துடன் விளையாடிய எசுப்பானியரான நடால் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். ஆனாலும், 4வது செட்டை 3-6 என இழந்தார். கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவை கடுமையான ஆழ்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் குடிமனைகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இறப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பனியூமாசு நகரில் பள்ளிவாசல் ஒன்றின் கூரை இடிந்து வீழ்ந்துள்ளது. பல வீடுகள் இடிந்துள்ளன. மத்திய மற்றும் மேற்கு ஜாவா மாகாணங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் மக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர். சுமார் 20 செக்கன்கள் இந்நிலநடுக்கம் இந்த நிலநடுக்கத்தால் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவன இணையதள தகவல்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியே ஓடினர். சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக உட்துறை அமைச்சர் யியானிசு மிக்கெலாக்கிசு தெரிவித்தார். தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு தரப்புகளுக்கும் இடையிலான முதற்கட்டப் பேச்சுக்கள் சென்னையில் நேற்று நடைபெற்றது. 15 பேர் கொண்ட குழு இலங்கை சார்பாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் பதினேழுக்கும் மேற்பட்டோரும், இந்திய நடுவண் அரசின் உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை சார்பில் இலங்கை மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமல் எட்டியாரச்சி, மீன்பிடியமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் எஸ். சுபசிங்க, மீன்பிடி திணைக்கள கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா, மன்னார் மீன்பிடி உதவிப் பணிப்பாளர் பி. எஸ். மிரெண்டா, அமைச்சின் ஆலோசகர் சதாசிவம், மன்னார் மீன்பிடி சங்கத் தலைவர்களான ஜஸ்டின் சொய்ஸா, ஜேசுநாதன் சூசை, யாழ். மீன்பிடி சங்கத் தலைவர் பொன்னம்பலம், முல்லைத்தீவு தலைவர் ஜெனிபர், கிளிநொச்சியைச் சேர்ந்த பிரான்சிஸ், புத்தளத்தைச் சேர்ந்த கெமினஸ் பெரேரா, நீர்கொழும்பு சங்கத் தலைவர் மைக்கல் பெர்னாண்டோ, திருகோணமலையைச் சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்திய இலங்கை மீன்பிடி ஆலோசகர் சபை உறுப்பினர் அந்தோனி முத்து ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்றும் சர்ச்சைக்குரிய ட்ராலர்கள் மற்றும் இழுவை வலை, இரட்டை மடிப்பு வலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் இலங்கை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பாக். ஜல சந்தி பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பதோடு, தங்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என்று தமிழகப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] இராமேசுவரம் மீனவர்கள் 38 பேர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 6 படகுகளில் இராமேசுவரத்தில் இருந்து நேற்று தமிழக மீன்துறையின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த இந்திய மீனவர்கள் அனைவரையும் இன்று யாழ் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] மலேசியாவில் குவாந்தான் நகருக்கு அருகே தாஞ்சோங் ஆபி என்ற இடத்தில் உள்ள கிறித்தவ இடுகாடு ஒன்றில் இருந்த எட்டுக் கல்லறைகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. இக்கல்லறைகளில் அமைக்கப்பட்டிருந்த சிலுவைகள் உட்பட நினைவுச்சின்னங்கள் கடின ஆயுதங்களைக் கொண்டு உடைக்கப்பட்டிருந்தன. பலவற்றில் அருகில் இருந்த பூந்தொட்டிகளும் சேதமாக்கப்பட்டன. இது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள குவாந்தான் தஞ்சோங் ஆபி கிறித்தவக் கல்லறைக் குழுவின் தலைமை உறுப்பினர் ஜேக் ஹவ், காவல்துறையினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். இதே வேளையில் நேற்று முன்தினம் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன், லெபோ ஃபார்க்குவார் சாலையில் உள்ள கிறித்தவக் கோவில் ஒன்றினுள் அதிகாலையில் இனந்தெரியாதோரால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இரண்டும் தேவாலயத்திற்கு வெளியே புற்தரையில் வீழ்ந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இவற்றில் ஒன்றே வெடித்தது. பினாங்கில் உள்ள கிறித்தவக் கோயில்களுக்கு வெளியே "அல்லாவின் புதல்வரே இயேசு" போன்ற சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. இவ்வார வன்முறைகளை அடுத்து 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்றது போன்ற இனக்கலவரம் வெடிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பை வந்தடைந்துள்ள அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 2 வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளுடனும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். இலங்கை வந்துள்ள நிசா பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள வட மாகாண முதலமைச்சர், மகாணசபை மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீர்மானித்து செயலாற்றி வருகின்றது. அதனொரு கட்டமாகவே நிசா பிசுவாலின் இலங்கைப் பயணமும் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மொதியுர் ரகுமான் நிசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அயல் நாடான இந்தியாவின் அசாம் மாநிலத்துக்கு சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியமைக்காக ஜமாத்-இ-இசுலாமி தலைவர் மற்றும் 13 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். 2004 ஆம் ஆண்டில் இவர் வங்காளதேசத்தின் தொழிற்துறை அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். இவருக்கு எதிராக 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரில் போர்க்குற்றம் இழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றம் தொடர்பாக இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இவரது கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களுக்கு போர்க்குற்றம் தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்குகளுக்கான தீர்ப்புகளை அடுத்து நாட்டில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தீர்ப்புத் தொடர்பாகத் தாம் மேன்முறையீடு செய்யவிருப்பதாக ஜமாத் தலைவர் தெரிவித்தார். நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் முதலாவது ஓட்டத்தை எடுத்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். டோனி தனது 214வது இன்னிங்சில் 8000 ஓட்டங்களைக் கடந்தார். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சினாபுங் எரிமலை கடந்த சில மாதங்களாக குமுறிக்கொண்டிருந்தது. எனவே அப்பகுதியை சுற்றியிருந்த 30,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் அரசு தங்கவைத்தது. இந்த எரிமலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது, எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்துள்ளார். இலங்கையின் மூத்த வணிக ஊடகவியலாளர் மெல் குணசேகர (வயது 46) கொழும்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடல் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று கத்திக் குத்து காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மெல் குணசேகரவின் பெற்றோரும் சகோதரனும் தேவாலயத்திற்கு ஞாயிறு காலை ஆராதனைக்கு சென்றிருந்த வேளையிலேயே இவர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு தொம்பேயைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மெல் குணசேகர பிட்ச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்திலேயே இறுதியாகப் பணியாற்றினார். ஏ. எப். பி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராகவும் பணியாற்றியிருந்தார். இங்குள்ள இவோனியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பெரிய தீவான கெபலோனியாவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் ஏதென்சின் மேற்குப் பகுதியில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள லிக்சோரியன் நகரில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. எண்ணற்ற வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 35,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது. இராஷ்ட்ரபதி பவனில் நடந்த ஒரு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நடுவண் அமைச்சர்கள், சச்சினின் குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் இந்திய விளையாட்டு வீரரும், மற்றும் இவ்விருதைப் பெறும் முதலாவது இளம் விருதாளரும் ஆவார். ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஹாப்மேன் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெராயின் போதைப் பொருள் அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்திருக்கக்கூடும்' எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இவரது உடல் அருகில் மருந்து செலுத்தும் ஊசி ஒன்று கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. இறக்கும் போது அவருக்கு வயது 46. இதற்கிடையில், இறந்த ஹாப்மேனின் வீட்டில் இருந்து 70 பைகளில் எரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூயார்க் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2005ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக எ மோஸ்ட் வோன்டேட் மேன் என்னும் படத்தில் நடித்திருந்தார். உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர், சத்ய நாதெல்லா தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். தனது 25வது வயதில் மைக்ரோசாப்ட்டில் சேர்ந்த நாதெல்லா, கடந்த 22 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்நிறுவனத்தை வழிநடத்த சத்ய நாதெல்லாவைவிடச் சிறந்த நபர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுத்தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு வெலிக்கடை உட்பட நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 1242 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 கைதிகளும் நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 36 சிறைச்சாலைகளிலிருந்த 1233 கைதிகளும் (1194 ஆண்கள், 39 பெண்கள்) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 900 கிகி வெடிகுண்டு ஒன்றை ஹொங்கொங் காவல்துறையினர் செயலிழக்கச் செய்துள்ளனர். இந்நகரில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கால வெடிகுண்டுகளில் இதுவே பெரியது எனக் கூறப்படுகிறது. நகரின் ஹாப்பி வலி மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் இடத்திலேயே இக்குண்டு வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 2,200 பேருக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படனர். பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்த ஹொங்கொங்கை சப்பானியர்கள் கைப்பற்றியதை அடுத்து இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கக் கடற்படையினரால் இக்குண்டு வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்குண்டு வெடித்திருந்தால் 10 மீட்டர் தூரத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 29 சனிக்கிழமை நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார். வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு மாகாணங்களிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து 129 மனுக்கள் கிடைக்கப்பெற்று, அவற்றில் 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரண்டு மாகாண சபைகளுக்கும் 159 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்காக 3794 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேல் மாகாணத்தில் 40,24,614 வாக்காளர்களும், தென் மாகாணத்தில் 18,73,804 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மேற்கு மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 102 பேரும் கூடுதல் இடங்கள் மூலம் இருவரும் தெரிவாகவுள்ளனர். இதற்காக மொத்தம் 2743 பேர் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 18 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இம்மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் கட்சி உட்பட 18 கட்சிகளும், 11 சுயேட்சைக் குழுகக்ளும் போட்டியிடுகின்றன. மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கம்பகா மாவட்டத்தில் 9 சுயேச்சைக் குழுக்களும் 13 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. தெற்கு மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 53 உறுப்பினர்களும், கூடுதல் இடங்கள் மூலம் இருவரும் தெரிவாகவுள்ளனர். 1051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலி மாவட்டத்தில் இருந்து 14 அரசியல் கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மாத்தறை மாவட்டத்தில் 10 கட்சிகளும் 5 சுயேச்சைக் குழுக்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. நடுவண் அரசை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இரண்டு மாகாணங்களிலும் ஆட்சியில் இருந்தது. இம்முறை தேர்தலில் நாட்டில் விலைவாசி உயர்வு, போதைப்பொருள் வியாபாரம் அதிகரிப்பு, ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்க்கட்சிகள் பிரச்சாரப் பொருளாக முன்னெடுக்கும் அதே வேளையில், அரசாங்கக் கட்சியோ, 5 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததை தமது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்துகின்றது. உருசியாவின் சோச்சி நகரில் 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தி கூகிள் நிறுவனம் தனது முகப்பில் தற்பாலினத்தோருக்கு ஆதரவாக வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அண்மைய காலங்களில் உருசியாவில் தற்பாலினத்தோருக்கு எதிரான தடைச்சட்டங்களும், அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பழமைவாத கிறித்தவப் பிரிவைச் சேர்ந்த உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் தற்பாலினத்தோருக்கு எதிராக சில சட்டமூலங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். இதனால் சோச்சி நகரில் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் தற்பாலின விளையாட்டு வீரர்கள் சுதந்திரமாக பங்கேற்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்தே உருசியாவிற்கும், தற்பாலின உரிமைகளைப் பாதுகாக்க தவறிய ஒலிம்பிக் நிர்வாகத்துக்கும் தமது எதிர்ப்பை காட்டும் முகமாக கூகிள் நிறுவனம் தற்பாலின சமூகத்தை அடையாளப்படுத்தும் ஆறு வண்ணங்களைக் கொண்ட வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் கூகிள் நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை. தமிழகத் திரைப்படத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் தளத்தில் இம்முடிவை அவர் அறிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். சப்பானில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் வடகிழக்கு நகரான சென்டாயின் சாலைகளில் 35 செ.மீ அளவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. இந்த கடும் பனிப்பொழிவு 27 செ.மீ அளவிற்கு பதிவாகியுள்ளதாக டோக்கியோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக சாலை விபத்துகளில், 11 பேர் உயிரிழந்தனர். 25,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது வீட்டு கூரைகளில் குவிந்த பனி குவியலை, அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள், கீழே விழுந்து காயமடைந்து உள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. ஜப்பானில் சுமார் 740 விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 5,000 பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். நகரின் முக்கிய போக்குவரத்தான ‘புல்லட் தொடருந்து’ செல்லும் பாதைகளிலும் பனி மூடி இருந்ததால் பல தொடருந்துகள் தமது வேகத்தை குறைத்து செல்கின்றன சப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு எழுத இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்க நேரிட்டது சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்திற்குக் கிழக்கே 48 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் செய்யப்பட்டனர். இவர்களின் 5 விசைப்படகுகளும் ஐயாயிரம் கிலோ மீன்களும் இந்தியக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 25 பேரையும் கடலோர காவல் படையினர், காரைக்கால் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நாகை கீழையூர் கடலோர காவல் படையினரிடம், கடலோர காவற்படை கமாண்டர் உதல்சிங் ஒப்படைத்தார். கைதான 25 பேரும் இன்று மதியம் நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] அல்ஜீரியாவில் சி-130 ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 77 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சென்றதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறின. இவ்விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். நேற்று செவ்வாய்க்கிழமை ஓர்க்லா என்ற இடத்தில் இருந்து கான்ஸ்டான்டைன் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்ட இவ்விமானம் தலைநகர் அல்ஜீயர்ஸின் தெற்கே 380 கிமீ தொலைவில் உள்ள ஓம் எல் புவாகி என்ற பகுதியில் ஜெபெல் பெர்ட்டாசு என்ற மலையில் விழுந்து நொறுங்கியதாக அல்ஜீரியத் தேசிய வானொலி தெரிவித்தது. விபத்திற்கான காரணம் குறித்துக் கண்டறிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடுமாறு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசமான காலநிலையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்த இராணுவத்தினர்கள் "மாவீரர்கள்" என அந்நாட்டு அரசுத்தலைவர் அப்தெலாசிசு பூட்டெஃபிக்கா கூறினார். இன்று முதல் மூன்று நாட்கள் தேசிய துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அல்சீரியாவில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவாகும். இராணுவ எர்க்கூலிசு விமானம் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது தடவையாகும். 2003 ஆம் ஆண்டில் ஏர் அல்ஜீரியா போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியதில் 103 பேர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழக மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கப் போவதாக சீனா கூறியுள்ளது. சீனாவுக்கான அதிகாரபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிசுக்கும், சீனா வெளிவிவகார அமைச்சர் வோங் ஜீக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன்போது, கருத்து வெளியிடும் போதே சீனா வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமை மற்ற நாடுகளுக்கு இல்லை. அந்நாடுகளை சீனாவும் எதிர்க்கிறது” “நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அந்நாட்டுக்கு போதிய அறிவு உள்ளது” என்றும் வாங் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களைப் படுகொலை செய்யும் கிறித்தவ இராணுவக் குழுக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கத் தயங்க மாட்டேன் என மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் கேத்தரின் சாம்பா-பான்சா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் கிறித்தவ இராணுவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கேமரூன், மற்றும் சாட் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர் உள்ளூரிலேயே ஐநா முகாம்களில் வசித்து வருகின்றனர். நாட்டில் தற்போது இனவழிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பன்னாட்டு மன்னிப்பகம் கூறியுள்ளது. ஆனாலும், இக்கூற்றை மறுத்துள்ள அரசுத்தலைவர் நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகள் "பாதுகாப்புப் பிரச்சினை" மட்டுமே எனக் கூறியுள்ளார்.. "நான் ஒரு பெண் என்பதால் என்னை அவர்கள் பலவீனமானவள் என நினைத்து விட்டனர். படுகொலைகளில் ஈடுபடும் அனைவரும் வேட்டையாடப்படுவர் என அவர் தனது உரையில் கூறியுள்ளார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 50% கிறித்தவர்களும், 15% முஸ்லிம்களும் உள்ளனர். ஏனையோர் பழங்குடி இனத்தவர் ஆவர். தங்கம், வைரம், மற்றும் இயற்கைக் கனிம வளங்கள் கொண்ட இந்நாட்டில் பல்லாண்டு காலமாக இடம்பெற்று வரும் இனமோதல்களினால் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். இந்தோனேசியாவின் கிழக்கு சாவகத் தீவில் எரிமலை வெடித்ததில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர். கெலூட் எரிமலை வெடித்ததில் சாம்பலும், தூசியும் 130 கிமீ தூரத்தில் உள்ள தலைநகர் சுரபாயா வரை பரவியுள்ளது. இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். சில நகரங்கள் 4 செமீ சாம்பலால் மூடப்பட்டுள்ளன. மூன்று முக்கிய பன்னாட்டு விமான நிலையங்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டன. பல விமான சேவைகள் வேறு இடங்களுக்குத் திசை திருப்பப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 130 செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. கெலூட் எரிமலை கடைசியாக 1990 ஆம் ஆண்டில் வெடித்தது. 1919 ஆம் ஆண்டில் வெடித்த போது 5,000 பேர் வரை உயிரிழந்தனர். அரசியல்வாதிகள், மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சுதந்திரமான மக்கள் குழு ஒன்றை அமைக்கும் சட்டமூலமே ஜன் லோக்பால் மசோதா ஆகும். நடுவண் அரசின் ஒப்புதல் பெறாமல் இச்சட்டமூலத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என எதிர்க்கட்சிகள் வாதிட்டனர். சட்டமூலத்தை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காங்கிரஸ், மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியன எதிர்த்தன. வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சட்டமூலத்திற்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் 27 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 42 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். தமது ஆதரவாளர்களிடையே கெச்ரிவால் உரையாற்றும் போது நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க எமது ஆட்சியால் முடியவில்லை. தில்லி முதல்வர் பதவியைத் துறந்து விட்டு, சட்டமன்றத் தேர்தலை புதிதாக சந்திப்பது என எமது கட்சி முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார். வெனிசுவேலாவின் தலைநகர் கரக்காசில் அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோவின் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் தமக்கிடையே மோதிக்கொண்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். வெனிசுவேலாவில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கடந்த புதன்கிழமை மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரங்களில் ஈடுபட்ட 100 இற்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டு மக்களுக்கு மதுரோ உரையாற்றும் போது, வன்முறைகளுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் எனக் கூறினார் எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறேன். நாட்டில் அமைதி வேண்டி உடனடியாக வீதிகளில் இறங்குங்கள் என அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் லெப்போல்டோ லோப்பசுவைத் தேடிக் காவல்துறையினர் வலை விரித்துள்ளனர். வன்முறையில் ஈடுபடும் சிறுவர்களுக்கு இவரே பயிற்சி கொடுத்தார் என்றும், தற்போது அவர் ஓடி ஒளிந்து விட்டார் என்றும் மதுரோ கூறினார். கடந்த புதன்கிழமை அவருக்கு எதிராகப் பிடி ஆணை கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பொது இடங்களில் காணப்படவில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் கொல்லப்பட்டனர். இறந்த 18 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். நேபாள ஏர்லைன்சு நிறுவனத்துக்குச் சொந்தமான கனடாவில் வடிவமைக்கப்பட்ட இச்சிறிய ரக விமானம் பொக்காரா என்ற சுற்றுலா நகரில் இருந்து புறப்பட்ட பின்னர் காணாமல் போனது. அர்ககாஞ்சி மாவட்டத்தில் மசினேலெக் என்ற மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களில் ஒருவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். ஏனையோர் நேபாளிகள் ஆவர். மோசமான காலநிலையே விபத்துக்குக் காரணம் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இடம்பெற்ற இரண்டு விமான விபத்துகளில் 34 பேர் கொல்லப்பட்டனர். நேபாள விமான விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு மே 14, 2012 நேபாளத் தலைநகரில் பயணிகள் விமானம் தீப்பற்றி வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர் செப்டம்பர் 28, 2012 1991 ஆண்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற நீதியரசர் ப. சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனாலும், இம்மூவரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-இன் படி இவர்களை மாநில அரசு விடுவிக்கலாம் எனவும் நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த மாதம் வேறொரு வழக்கில் தூக்குத்தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களைப் பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், அவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை மேற்கோள் காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்காக வழக்கறிஞர்கள் ராம் ஜேத்மலானி மற்றும் யோக்முக் சவுத்திரி ஆகியோர் வாதாடினார்கள். இன்றைய தீர்ப்பு தமக்கு ஆறுதல் தருவதாக பன்னாட்டு மன்னிப்பகத்தின் இந்தியக் கிளை கூறியுள்ளது. மரண தண்டனை முறை இந்தியாவில் ஒழிக்கப்பட வேண்டும் என அது கூறியுள்ளது. இத்தீர்ப்பு 22 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நீதியரசர் சதாசிவம் இந்த தீர்ப்பு மூலம் தமிழர்களை காப்பாற்றி நீதியை நிலைநாட்டி உள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கருத்துத் தெரிவிக்கையில், 432, 433 ஏ சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினார். இன்று நீதித்துறை வரலாற்றின் பொன்நாள் எனவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் நேற்று அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததை அடுத்து காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் கீவில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற பெரும் ஆர்ப்பட்டத்தின் போது துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல் உக்ரைனில் கொல்லப்பட்ட ஐவரின் உடல்களைத் தாம் கண்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்ட இயக்கம் யூரோமைதான் என அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அரசுத்தலைவர் யானுக்கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இரத்துச் செய்து உருசியாவுடன் கூட்டுச் சேர எடுத்த முடிவை எதிர்க்கும் முகமாக யூரோமைதான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐரோப்பியத்தின் ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும், அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. செருமனி, போலந்து, பிரான்சு ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கீவ் நகரில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைனுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் யோசித்து வருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், உருசியாவின் சோச்சி நகரில் இடம்பெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருந்த 45 உக்ரைனியர்களில் அரைவாசிப்பேர் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பியுள்ளனர். தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியே தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள் என உருசியா கருத்துத் தெரிவித்துள்ளது. உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் பண்பலை ஒலிபரப்பு எனக் கூறப்படும் மலேசியா மின்னல் எப். எம். ஐச் சேர்ந்த செல்வி பொன் கோகிலம் அது ஒரு அரச நிறுவனம் என்றும் அதன் தமிழ் ஒலிபரப்பில் வேற்று மொழிச் சொற்கள் ஒன்று கூட இடம்பெறக் கூடாதென கண்டிப்பான உத்தரவு உள்ளது எனக் கூறினார். பொதுவாக ஒலிவாங்கியின் முன்னால் அமர்ந்திருக்கும் அறிவிப்பாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களையும் அவற்றை வெற்றிகரமாக கையாள்வது எப்படி என்பதையும் சில உதாரணங்களோடு எடுத்துக் கூறினார். டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (DRM) என்ற புதிய வானொலி ஒலிபரப்பு முறை பற்றி ஜெய்சக்திவேல் விளக்கிக் கூறினார். இந்த ஒலிபரப்பு முறையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் (Script) வானொலிப் பெட்டியில் காட்சியாகப் பார்க்க முடியும் எனவும் சென்னை வானொலி நிலையம் இந்த முறையில் ஒலிபரப்பு செய்வதாகவும் ஆனால் தமிழ் நாட்டில் தற்போது இந்த முறையில் இயங்கும் இரண்டு வானொலி பெட்டிகளே உள்ளன என்றும் கூறினார். ஈற்றில் மாணவர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறையில் அநுபவம் பெற்றவர்கள் பதில் அளித்தார்கள். மருத்துவர்களையும், நோயாளிகளையும் ஏற்றிச் சென்ற லிபிய இராணுவ விமானம் ஒன்று துனீசியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 11 பேரும் கொல்லப்பட்டனர் என துனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் தூனிசில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள குரொம்பாலியா நகரின் வெளி ஒன்றில் அந்தோனொவ்-26 ரக விமானம் வீழ்ந்தது. இவ்விமானத்தில் மூன்று மருத்துவர்களும், இரண்டு நோயாளிகளும் பயணம் செய்திருந்தனர். ஏனையோர் விமானப் பணியாளர்கள் ஆவர். பொதுவாக லிபிய நோயாளிகள் தமது மருத்துவத் தேவைக்கு துனீசியா செல்வது வழக்கமாகும். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் முழுவதுமாக எரிந்து விட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல்லின சமகால பாரம்பரிய இசைக்குழு (Ethnic Contemporary Classical Orchestra, எக்கோ) கிழக்கு லண்டனிலுள்ள வேத்தியர் விழா மண்டபத்தில் (Royal Festival Hall) நேற்று வெள்ளிக்கிழமை ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது ரேச்சல் பாண்டின் இசைக்குழுவை வழிநடத்தினார். பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பல மொழிப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதில் பல இன சமூகங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் ஒன்று கூடி பலதரப்பட்ட வாத்தியங்களை வாசித்தனர். எக்கோ இசைக்குழு 2009 ஆம் ஆண்டு மொரீசியோ வெனெகஸ்-அஸ்டோர்கா, ரேச்சல் பாண்டின் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இன்றைய இளைய சமுதாயத்தினரின் இசை அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் பலதரப்பட்டதும் உள்ளடக்கக்கூடியதுமான ஒரு மாதிரி இளையவர் இசைக்குழுவை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோளாகும். ஆப்கானித்தானில் குனார் மாகாணத்தில் தாலிபான்களின் தாக்குதலில் குறைந்தது 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏழு இராணுவத்தினரை உயிருடன் தாம் கைப்பறியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானித்தான் அரசுத்தலைவர் ஹமீட் கர்சாய் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை வரவிருந்தார். இன்றைய தாலிபான் தாக்குதல்களை அடுத்து அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிய அரசுத்தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசுத்தலைவர் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இவ்வாண்டு இறுதியளவில் வெளிநாட்டுப் படையினர் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறவிருக்கின்றனர். ஏப்ரல் தேர்தலில் 11 பேர் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். கர்சாயின் பதவிக்காலம் முடிவடைவதால், அவர் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இன்றைய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான போராளிகள் ஈடுபட்டதாக ஜெனரல் முகம்மது சாகிர் அசிமி தெரிவித்தார். தாக்குதலில் ஒரு போராளியும் உயிரிழந்தார். ஆறு இராணுவத்தினரையே தாலிபான்கள் பிடித்துச் ந்சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். தாக்குதலை ஒழுங்குபடுத்த இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளும் உதவியிருக்கக் கூடும் எனத் தாம் நம்புவதாக குனார் மாகாண ஆளுனர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். உக்ரைனில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை அடுத்து புதிய இடைக்கால அரசுத்தலைவராகவும், நாடாளுமன்ற அவைத்தலைவராகவும் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் தேர்தெடுக்கப்பட்டார். ஐரோப்பிய ஆணையம் துர்ச்சீனொவுக்குத் தமது ஆதரவை அறிவித்துள்ளது. யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டமைக்கும், ஐரோப்பிய-சார்பு அரசு ஒன்று அமைக்கப்பட்டமைக்கும், உருசிய மொழி பேசும் சிறுபான்மையின உக்ரைனிய மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். உருசியாவும் இது குறித்து கடும் கோபம் உற்றிருந்தாலும், தாம் இவ்விடயத்தில் தலையிடப்போவதில்லை என உருசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரொவ் கூறியுள்ளார். இதற்கிடையில் எதிர்க்கட்சியுடனான கூட்டு அரசு அமைக்கப்படுவது பின் போடப்பட்டுள்ளதாக புதிய தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேச்சுக்கள் இடம்பெறும் என அவர் கூறினார். பதவியில் இருந்து அகற்றப்பட்ட விக்டர் யானுக்கோவிச் தற்போது எங்குள்ளார் என அறியப்படாவிட்டாலும், அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இவர் கடந்த ஞாயிறன்று கிரிமியா பகுதியில் பலக்கிளாவா நகரில் காணப்பட்டார் என செய்தியாளர்கள் கூறுகின்றனர். நாட்டை விட்டு உருசியாவுக்கு செல்வதற்கு அவர் எடுத்த முயற்சி கைகூடவில்லை. எல்லைக் காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அரசு எதிர்ப்பாளர்களைப் படுகொலை செய்தமைக்காக இவர் மீதும் இவரது அதிகாரிகள் மீதும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மட்டும் 80 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இரண்டாண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் யூலியா திமோசென்கோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தாம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். ஆனாலும், அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் யானுக்கோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இரத்துச் செய்து உருசியாவுடன் கூட்டுச் சேர முடிவெடுத்ததை அடுத்து அங்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்க யூரோமைதான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நைஜீரியாவின் வடமேற்கே உணவுறைப் பள்ளி ஒன்றில் நேற்றிரவு போக்கோ அராம் இசுலாமியக் குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 59 மாணவர்கள் சுடப்பட்டும், எரியூட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். "சில மாணவர்களின் உடல்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன என காவல்துறை ஆணையாளர் சனூசி ருபாயி தெரிவித்தார். நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் நடுவண் அரசு நிருவகிக்கும் பூனி யாடி என்ற ஓர் இடைநிலைப் பள்ளியொன்றே தாக்குதலுக்குள்ளானது. இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும், பாடசாலையின் 29 கட்டடங்களும் எரிந்து சேதமடைந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு நைஜீரியாவில் இசுலாமிய நாடு ஒன்றை அமைக்கப்போராடி வரும் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். போக்கோ அராம் என்பது "மேற்குலகக் கல்வி ஒரு பாவச்செயல்" என அர்த்தமாகும். கடந்த காலங்களில் இவர்கள் பாடசாலைகள் பலவற்றைத் தாக்கியுள்ளார்கள். நைஜீரியாவில் கல்லூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 மாணவர்கள் வரை சுட்டுக் கொல்லப்பட்டனர் செப்டம்பர் 29, 2013 600 மெகாவாட் திறனுடைய மிக உய்ய அனல் மின் நிலையம் (Super Critical Thermal Power Station) தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் முதலாவது மிக உய்ய அனல் மின் நிலையமாகக் கருதப்படும் இத்திட்டத்திற்கு 4956 கோடி உரூபாய் இந்தியப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிக்கான அனுமதியை கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச்சு 30 அன்று தமிழக அரசு வழங்கியது. சுற்றுச்சூழல் மற்றும் காட்டுவளத்திற்குரிய நடுவண் அமைச்சரகம், கடந்த சனவரி மாதத்தின் இறுதியில் இத்திட்டத்தினை துவக்குவதற்கான அனுமதியினை வழங்கியது. இந்தப் புதிய மின் நிலையமானது 42 மாதங்களில் நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இயங்கிவரும் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் வளாகத்திலேயே இந்தப் புதிய மின் நிலையம் அமையவிருக்கிறது. ஏறத்தாழ 85 ஏக்கர் நிலப்பரப்பு இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும். மேம்பட்ட வெப்ப வீதம், குறைவான நிலக்கரிப் பயன்பாடு, குறைவான கரியமில வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழலுக்கு சாதகமான செய்பணி ஆகியன இவ்வகையான மின் நிலையங்களின் உயரிய நன்மைகளாக கருதப்படுகின்றன. உருசியப் படையினரின் இராணுவ வாகனங்கள் அரசுக் கட்டடங்களைச் சுற்றி வளைத்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தொடர்பூடகங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், உக்ரைனுக்குள் உருசியா படைகளை அனுப்பியது பன்னாட்டு சட்டங்களை மீறிய செயல் என அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா உருசியத் தலைவருக்குத் தெரிவித்துள்ளார். 90 நிமிடங்கள் வரை இன்று தொலைபேசியில் உரையாடிய ஒபாமா, கிரிமியாவில் இருந்து படைகளைத் திரும்ப அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், தமது நலனையும், உக்ரைனில் உள்ள உருசியர்களின் நலனையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாஸ்கோவிற்கு உள்ளதாக பூட்டின் பதிலளித்துள்ளார். உக்ரைன் தனது பாதுகாப்புப் படையினரை உசாரில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. அணுவாற்றல் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் அரசுத்தலைவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் கூறியுள்ளார். கிரிமியாவில் தற்போது 6,000 கூடுதல் உருசியப் படையினரும், 30 கூடுதல் கனரக வாகனங்களும் நிலை கொண்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஈகர் தெனியூக் கூறினார். கிரிமியாவில் இவ்வாரம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உருசிய-சார்பு தலைவர் சேர்கி அக்சியோனொவ், கிரிமியாவில் அமைதியை நிலைநாட்ட மேலதிக உதவிகளை உருசியாவிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். அக்சியோனொவின் அரசை உக்ரைனிய நடுவண் அரசு அங்கீகரிக்கவில்லை. பிராந்திய நாடாளுமன்றத்தின் அவசரகாலக் கூட்டத்தில் இடம்பெற்ற அக்சோனொவின் தேர்வு சட்டவிரோதமானது என உக்ரைன் அறிவித்துள்ளது. வட அமெரிக்காவின் குவாத்தமாலாவில் பக்காயா என்ற எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் 3,000 பேர் வரையில் அப்பகுதிய விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்ற சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அருத்து பக்காயா எரிமலை தூசுகளையும், எரிமலைக் குழம்புகளையும் வெளியேற்ற ஆரம்பித்திருந்தது. ஞாயிறன்றும் புதிய வெடிப்புகள் அவதானிக்கப்பட்டன. 4 கிமீ உயரத்திற்கு தூசுகள் கிளம்பின. பக்காயா எரிமலைப் பகுதி தலைநகர் குவாத்தமாலா நகரில் இருந்து தெற்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விமான சேவைகள் இப்பகுதியில் இருந்து வேறு திசைகளுக்கு மாற்றப்பட்டன. நடு அமெரிக்கப் பகுதியில் உயிர்ப்புடன் உள்ள மூன்று எரிமலைகளில் பக்காயாவும் ஒன்றாகும். ஏனையவை பியூகோ, சான்டா மரியா என்பவையாகும். இந்தியாவின் 16ஆவது மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மே 16 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். புது தில்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களவைத் தேர்தலுக்கான முழுமையான தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் வி. எஸ். சம்பத் வெளியிட்டார். இச்சந்திப்பின்போது தேர்தல் ஆணையர்கள் கைச். எஸ். பிரம்மா, எஸ். என். ஏ. ஜைதி ஆகியோரும் இருந்தனர். ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் அட்டவணையும், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் அட்டவணையும் அப்போது வெளியிடப்பட்டன. உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமியாவை உருசியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மார்ச் 16 ஆம் நாள் இது பொது வாக்கெடுப்புக்கு விடப்படும் என நாடாளுமன்றம் அறிவித்தது. உருசியாவுடன் கிரிமியா இணைய எடுக்கும் எந்த ஒரு முடிவும் அரசியலமைப்புக்கு விரோதமானது என உக்ரைனிய அமைச்சர் பாவ்லோ செரெமெத்தியேவா கருத்துத் தெரிவித்துள்ளார். கிரிமியா பிரச்சினையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரலாம் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரசல்சில் கூடி ஆராய்ந்து வரும் வேளையில், கிரிமிய நாடாளுமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது. கிரிமியாவின் இம்முடிவு உருசியத் தலைவர் பூட்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். உக்ரைனின் மாஸ்கோ-சார்பு அரசுத்தலைவர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து உருசியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கிரிமியாவில் வன்முறைகள் வெடித்தன. உருசியப் படையினரும், உருசிய சார்பு உக்ரைனியப் படையினரும் கிரிமியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தமிழகத்தில் தனது கூட்டணியை இறுதிசெய்வதில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தமிழகப் பிரிவு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மக்களவைக்கான பொதுத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தமது கூட்டணியை இறுதிசெய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாஜக தமிழகப் பிரிவும் இப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ஆகியவற்றுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாமகவின் ஜி. கே. மணி, இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மாலையில் தேமுதிகவின் அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன் பாஜக குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எண்ணிக்கை அடிப்படையிலான தொகுதிப் பங்கீடுகள் குறித்து ஓரளவு முடிவு எட்டப்பட்டுவிட்டது; கட்சிகள் குறிப்பிட்டுக் கேட்கும் தொகுதிகளை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திப் பத்திரிகைகள் கணிக்கின்றன. [[பகுப்பு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014]] கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கு நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்சு விமானம் ஒன்று காணாமல் போனதை அடுத்து மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எம்எச்370 என்ற இவ்விமான சேவையின் போயிங் 777-200ஈஆர் விமானம் தமது ராடார் கருவிகளில் இருந்து காணாமல் போனதாக கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் உள்ளூர் நேரம் 02:40 மணிக்கு தொடர்புகள் அனைத்தையும் இழந்து விட்டதாக விமான நிறுவன அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இவ்விமானம் பெய்ஜிங்கை காலை 06:30 மணிக்கு அடைவதாக இருந்தது. இவ்விமானத்தில் பயணித்தவர்களில் 153 பேர் சீனர்கள், 38 பேர் மலேசியர்கள், 12 பேர் இந்தோனேசியர்கள், 6 ஆத்திரேலியர்கள், 5 இந்தியர்கள், 4 அமெரிக்கர்கள் மற்றும் பிரான்ஸ் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த சிலரும், 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இரண்டு பாலகர்களும் இதில் பயணித்திருந்தனர். பயணிகளின் குடும்பத்தினருக்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசியா ஏர்லைன்சு நிறுவன அதிகாரி தெரிவித்தார். வியட்நாமின் தெற்கே இவ்விமானம் தமது இராடார் கருவிகளில் இருந்து மறைந்து விட்டதாக வியட்நாமிய அரசு இணையதளம் ஒன்று தெரிவிக்கிறது. கடைசியாக வியட்நாமின் கா மாவு தீபகற்பத்தில் இது காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சீனக் கடலின் கிழக்குக் கரையில் தேடுவதற்கென விமானம் ஒன்றும், இரண்டு உலங்கு வானூர்திகளும் நான்கு கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது. இவற்றை விட வியட்நாம், பிலிப்பீன்சு, சீனா ஆகிய நாடுகளும் தமது நாட்டுக் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளன. விமான ஓட்டி 53 வயதான கப்டன் சகாரி அகமது ஷா 1981 ஆம் ஆண்டில் மலேசியா ஏர்லைன்சில் இணைந்தவர். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடி 50 பந்துப் பரிமாற்றங்களுக்கு ஐந்து இலக்குகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. ஃபவாத் அலாம் 114 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் அசித் மாலிங்க 56 ஓட்டங்களுக்கு அனைத்து அந்து இலக்குகளையும் கைப்பற்றினார். இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமான்ன 101 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது மூன்றாவது ஒரு நாள் சதம் ஆகும். மூத்த ஆட்டக்காரர் மகேல ஜெயவர்த்தன 75 ஓட்டங்களை எடுத்தார். மற்றுமொரு மூத்த ஆட்டக்காரரான குமார் சங்கக்கார எந்த ஓட்டமும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இம்முறை ஆசியக் கிண்ணப் பந்தயத்தில் தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் அனைத்திலுமே இலங்கை வெற்றி பெற்றிருந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. இலங்கை அணியின் ஐந்தாவது ஆசியக் கிண்ண வெற்றி, இந்திய அணியின் வெற்றியை சமப்படுத்தியது. ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகு ஒன்று ஏமன் கரைக்கப்பால் கவிழ்ந்ததில் 42 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். தெற்கு சாப்வா மாகாணத்தில் பீர் அலி கரையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. மூழ்கிய படகில் இருந்த 30 பேரை ஏமனியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றி அகதி முகாமுக்குக் கொண்டு சென்றது. ஆண்டு தோறும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் இவ்வாறான ஆபத்தான பயணங்களை ஏமனுக்கு மேற்கொண்டு வருகின்றனர். பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் சத்தீசுக்கர் மாநிலத்தில் மாவோயிசத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் 25 காவல்துறையினர் காயமடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. போராளிகளுக்கு சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிசத் தீவிரவாதிகள் கிராமப்புற ஏழை மக்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர்களின் மேம்பாட்டுக்காகப் போராடுவதாகக் கூறுகிறார்கள். மாவோயிசத் தீவிரவாதம் 1960களின் பிற்பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆரம்பமானது. இது தற்போது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவை அடுத்து ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்தன. இவ்விபத்தில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 250 தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். கட்டட வெடுப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் வாயுக் கசிவு குறித்து அவசர சேவைக்குத் தகவல் தரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கம் போன்ற ஒரு சத்தத்துடன் கட்டடம் வெடித்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர். பல வாரங்களாக இப்பகுதியில் எரிவாயுக் கசிவு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போயிங்777 விமானம் காணாமல் போய் அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு செயற்கைக் கோள்களுக்கு தரவுகளை அனுப்பியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகவல் குறித்து மலேசியா எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தற்போது தமது கடற்படைக் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. அத்துடன் இந்தியக் கடற்படை, வான்படை மற்றும் கரையோரக் காவல்படையும் தேடுதல் நடவடிக்கையில் இணைந்துள்ளன. அந்தமான் தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவ ராடார்கள் மறைந்த விமானத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றிருக்கக்கூடும் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. கோலாம்பூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பேசினார். அப்போது அவர் விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது யாராலோ வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார். செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார். உக்ரைனின் தன்ன் ஆட்சிக் குடியரசான கிரிமியா உக்ரைனிடம் இருந்து விடுதலையை அறிவித்து, உருசியக் கூட்டமைப்பில் இணைய முறைப்படி விண்ணப்பித்துக் கொண்டது. கிரிமியா மேலதிக சுயாட்சி அதிகாரத்துடன் உக்ரைனுக்குள்ளேயே நீடிக்க வேண்டுமா அல்லது உருசியாவுடன் இணைய வேண்டுமா என கிரிமியாவின் இருபது லட்சம் குடிமக்களிடம் கருத்துக் கேட்டு நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பின் படி, 97% மக்கள் உருசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை கிரிமிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றின் படி, உக்ரைனிய சட்டம் அப்பகுதியில் செல்லாது என்றும், உக்ரைனிய அரசுக்குச் சொந்தமான அனைத்தும் கிரிமியாவுக்கு உரியது என்றும் கூறப்பட்டுள்ளது. இம்முடிவுகளை உக்ரைனிய அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இவ்வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், மாஸ்கோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் முதல் கிரிமியா உருசிய-ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இப்படையினர் உருசிய ஆதரவு தற்காப்புப் படையினர் எனவும், தமது நேரடிக் கட்டுப்பாட்டில் அவை இல்லை என்றும் உருசியா தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 22 இல் உக்ரைனின் மாஸ்கோ-ஆதரவு அரசுத் தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, உருசியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரிமியாவை உருசிய ஆதரவுப் படைகள் கைப்பற்றின. ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் இன்று ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். செய்மதி மூலம் அவதானிக்கப்பட்ட இரு பகுதிகளின் மிகப் பெரியது கிட்டத்தட்ட 24 மீ நீளமானது எனக் கூறப்படுகிறது. ஆனாலும், இவை மறைந்த விமானத்தினுடையது தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து தென்-மேற்கே 2,500 கிமீ தொலைவில் உள்ள தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆத்திரேலிய, நியூசிலாந்து, மற்றும் அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. இம்மாதம் 8 ஆம் நாள் கோலாலம்ப்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங்கு நோக்கிப் புறப்பட்ட போயிங்777 விமானம் புறப்பட்ட ஓரு மணி நேரத்தினுள் தொடர்புகளை இழந்தது. அமெரிக்க செய்மதிகளின் தகவல்களின் படி, விமானம் திசை திருப்பப்பட்டு வேறு திசையில் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமானத்தைத் தேடும் பணியில் மலேசியாவுடன் மேலும் 25 நாடுகள் இணைந்து கொண்டன. தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்ததையடுத்து, கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது. கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்த முழுமையான தகவல்களை பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று அறிவித்தார். ! கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் | தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் மத்திய சென்னை, வட சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் (தனி) | பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை, வேலூர், நீலகிரி (தனி கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி | பாட்டாளி மக்கள் கட்சி ஆரணி, அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம் (தனி மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் (தனி) | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி) | இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூர் | கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொள்ளாச்சி | என். ஆர். காங்கிரஸ் கட்சி பாண்டிச்சேரி [[பகுப்பு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014]] ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் உருசியா மீது மேலும் தடைகளை அறிவித்துள்ளன. கிரிமியாவில் உருசிய ஆதரவுப் படைகள் அங்குள்ள உக்ரைனியக் கப்பல்களையும், இராணுவத்தளங்களையும் கைப்பற்றி வருகின்றன. உக்ரைனியப் படைகளில் பணியாற்றும் கிரிமியர்களைத் தமது பக்கத்துக்கு வருமாறு உருசிய ஆதரவுப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விளாதிமிர் பூட்டினின் நெருங்கிய சகாக்கள் 12 பேர் மீது ஐக்கிய அமெரிக்கா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. இதனையடுத்து உருசியப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்திய மக்களவைக்கான தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. களமிறங்கும் கூட்டணிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இத்தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமென அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அண்மைக்கால தமிழகத் தேர்தல்களில் இவ்வளவு கடுமையான போட்டி நிலவியதில்லை. நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டில் எப்போதுமே ஓரளவு தெளிவான முடிவுகளை முன்கூட்டியே கணிக்க இயலும். ஆனால் இம்முறை கணிப்பு என்பது கடினமாக உள்ளது. அதிமுக, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி எனும் வலுவான 3 அணிகள் களத்தில் இருப்பதே இதற்குக் காரணம். அதிமுக திமுக கூட்டணி பாஜக கூட்டணி – காங்கிரசு – இடதுசாரிக் கட்சிகள் என நடக்கும் பல்முனைப் போட்டியில் வாக்குகள் பிரியும் வாய்ப்புகள் இருப்பதால், எந்தக் கூட்டணி முன்னிலை பெறும் என்பதனைக் கணிக்க இயலவில்லை. அதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. துவக்கத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படும் நிலை இருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சமரசம் ஏற்படாததால் கூட்டணி அமையவில்லை. தனது மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தேமுதிகவுடன் கூட்டணி அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரசுடனும் கூட்டணி அமையவில்லை. இறுதியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், முஸ்லிம் லீக் எனும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளது திமுக. தற்போதைய அதிமுக அரசின்மீது குறைகளை சுமத்தி திமுக தேர்தல் பரப்புரை செய்துவருகிறது. தமிழகத்தின் இரு பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு எதிராக களம்நிற்கும் ஒரு வலுவான அணியாக பாஜக கூட்டணியை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். இந்தியாவில் மோடி அலை வீசுவதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவித்துவரும் வேளையில், தமிழகத்தின் பாஜக கூட்டணியானது வலுவான அணியாக கருதப்படுகிறது. கூட்டணியிலுள்ள மாநிலக்கட்சிகள் குறிப்பிட்ட வட்டாரங்களில் செல்வாக்கினைப் பெற்றுள்ளன. உதாரணமாக பாமகவுக்கு வடதமிழகத்திலும், மதிமுகவுக்கு தென்தமிழகத்திலும் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. இப்பகுதிகளில் பாஜக கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகள் ஒன்றுசேரும் என கணிக்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவுடன் அப்போது கொண்டிருந்த கூட்டும் காரணமாக இருக்கக்கூடும். அப்போது தேமுதிகவுக்கு இருந்த ஆதரவு இப்போதும் தொடருமானால், இக்கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க இடங்கள் கிடைக்குமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். காங்கிரசு எந்தக் கூட்டும் இன்றி தனியே தேர்தலை சந்திக்கிறது. காங்கிரசுக்கென்று இருக்கும் பாரம்பரிய வாக்குவங்கியின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து எவ்விதத் தரவும் இல்லை. தமிழ்நாட்டின் காங்கிரசுத் தலைவர்கள் ப. சிதம்பரம், ஜி. கே. வாசன், கே. வி. தங்கபாலு ஆகியோர் இம்முறை தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரசை நான்காவது அணியாகவே தமிழக ஊடகங்கள் பார்க்கின்றன. பெரும்பாலான தேர்தல்களில் ஏதேனுமொரு திராவிடக்கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இம்முறை தமக்குள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் வாக்காளர்களின் வாக்குகளை இக்கூட்டணி பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தேர்தலுக்காக இதுவரை வெளியான சில கருத்துக் கணிப்புகள், கூட்டணி நிலைகள் முடிவாவதற்கு முன்பு செய்யப்பட்டவையாகும். புதிய கருத்துக் கணிப்புகள், யாருக்கு மக்களின் ஆதரவு என்பதனை ஓரளவு கணிக்கக்கூடும். ஆனால், இன்றைய சூழலில் எந்த அணி முன்னிலை வகிக்கிறது என்பதைச் சொல்வது கடினமே. [[பகுப்பு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014]] கிரிமியாவில் இருந்து தமது படைகளை நாட்டுக்குத் திரும்புமாறு உக்ரைனிய இடைக்கால அரசுத்தலைவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் உத்தரவிட்டுள்ளார். கிரிமியாவில் நிலை கொண்டுள்ள உக்ரைனிய இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உருசியப் படையினரால் உயிராபத்து நேரக்கூடிய நிலைமை தோன்றியுள்ளதால் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதாக துர்ச்சீனொவ் கூறினார். பியோதேசியா உட்பட கிரிமியக் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை உருசியப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் உருசியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரிமியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றை அடுத்து உருசியா கிரிமியாவை இணைத்துக் கொண்டது. இவ்விணைப்பு சட்டவிரோதமானது என உக்ரைனும், மேற்கு நாடுகளும் கூறியுள்ளன. 239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சு விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை எனவும் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் வான் விபத்துகளை விசாரணை செய்யும் நிறுவனம் தந்துள்ள தகவல்களின் படி எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்கு நோக்கிப் பறந்ததாகவும், இது கடைசியாக ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து மேற்கே இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ற பகுதிகள் எதுவும் இப்பரந்த கடற்பகுதியில் காணப்படவில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார். இங்கிலாந்தின் இன்மர்சாட் என்ற செய்மதித் தகவல் சேவை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இம்முடிவு தனக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான கணிப்புகள் இதற்கு முன்னர் எப்போதும் கணிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். "இதனை அடிப்படையாக வைத்து மலேசிய ஏர்லைன்சு விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு விட்டதாக மிகக் கவலையுடன் அறிவிக்கிறேன் என மலேசியப் பிரதமர் கூறினார். விமானத்தில் இருந்த 239 பேரில் ஒருவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும், விமானத்தில் இருந்தவர்கள் அனைவரினதும் உறவினர்களுக்கு இத் தகவல்கள் கூறப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் பாகங்களைத் தேட இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட முயற்சி மோசமான காலநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆத்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு இன்று அறிவித்திருக்கிறது. இந்த விமானத்தில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்கள், சீனத் தலைநகரில் உள்ள மலேசியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மலேசியா இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினர். மறைந்த விமானத்தில் பயணம் செய்த 229 பயணிகளில் 153 பேர் சீனர்கள் ஆவர். சிலி நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நான்கு-மீட்டர் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள பெரும் புகைப்படக் கருவி மூலம் புதிய குறுங்கோள் அவதானிக்கப்பட்டதாக அமெரிக்காவின் கார்னஜி அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஸ்கொட் செப்பர்டு என்பவர் கூறினார். 2012 விபி113 குறுங்கோள் சூரியனைச் சுற்றிவர 4,000 ஆண்டுகள் பிடிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றங்களை விசாரணைக்கு வழி செய்யும் தீர்மானம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது. அமெரிக்க, மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தில் முதற்தடவையாகப் பன்னாட்டு விசாரணை குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகால விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரை அடுத்து இலங்கை இராணுவம் 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டது. இரு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும், போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 தமிழ் மக்கள் வரையில் பெரும்பாலும் அரசுப்படையினரின் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நேற்றைய ஐநா தீர்மானம் மொத்தம் 47 உறுப்பினர்களில் 23 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாக்கித்தான், உருசியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசுவேலா, வியட்நாம், கியூபா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, எத்தியோப்பியா, குவைத், இந்தோனேசியா, சப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டன. இந்தியா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் அது ஒதுங்கிக் கொண்டது. இந்த தீர்மானத்துக்கான வாக்களிப்பில் இருந்து இந்தியா விலகி இருந்தமை, அதற்காக அதன் தூதுவர் கூறிய காரணங்கள், மற்றும் போதுமான நிதி இல்லை என்பதை காரணம் காட்டி அந்த தீர்மானத்தை பின்போடவும், சர்வதேச விசாரணையை தடுக்கவும் பாக்கித்தான் கொண்டுவந்த எதிர்ப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை ஆகியவை குறித்து இலங்கை தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இலங்கை இந்தத் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது இத்தீர்மானத்தை நாம் நிராகரிக்கிறோம் என இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச செய்தியாளர்களிடம் கூறினார். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது. இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றியும் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியுள்ளது. இந்த விமானம் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நோக்கிச் செல்லும்போது விபத்துக்குள்ளானது. மத்தியப் பிரதேசம்-இராஜஸ்தான் எல்லைப் பகுதியில் ஜெய்ப்பூர் நகரில் இருந்து 165 கிமீ தூரத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது. ஆக்ராவில் இருந்து காலை 10 மணியளவில் வழமையான பயிற்சிக்கு சென்ற போதே விமானம் தரையில் மோதியதாக பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்விபத்துக் குறித்து ஆராய அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என பேச்சாளர் கோசுவாமி கூறினார். ஒரு கோடி ரூபா மதிப்புள்ள சி-130ஜே சூப்பர் ஹெர்குலீசு விமானம் அமெரிக்காவின் லொக்கிட் மார்ட்டின் என்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யபட்டதாகும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்க பணியாளர்களுக்கு மார்ச்சு 22, 23 ஆகிய இருநாட்களில் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்க அலுவலகத்தின் கருத்தரங்க அறையில் தமிழ்க்கணினி பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிரங்கினை தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் தொடங்கி வைத்து, காலத்தின் தேவை கருதி தமிழக அரசுப்பணியாளர்கள் கணித்தமிழில் பயிற்சி பெற வேண்டும் என்று கூறினார். இப்பயிலரங்கினை பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி ஒருங்கிணைத்து, தமிழ்க்கணிமையின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பதான பொருண்மைகள் குறித்த கணினிவழி நேரிடை செயல்முறைப் பயிற்சியை அவர் அளித்தார் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணசபைகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தல்களில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்று இரண்டு சபைகளையும் கைப்பற்றியது. மேல் மாகாணசபையில் ஐமசுகூ 56 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 28 இடங்களையும் சரத் பொன்சேக்காவின் சனநாயகக் கட்சி 9 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) 6 இடங்களையும், மனோ கனேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசு 2 இடங்களையும் கைப்பற்றின. தெற்கு மாகாண சபையில் ஐமசுகூ 33 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 14 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 5 இடங்களையும் சனநாயகக் கட்சி 3 இடங்களையும் கைப்பற்றின. : ஓர் ஆண்டு 11 மாதம் 1 நாளின் போது பங்களித்த செய்தி அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்க்கு கலிபோர்னியா நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு தங்களின் செய்திக் கட்டுரை சிறப்பாக அமைய சில ஆலோசனைகள் # மேற்கோள் போன்று காட்ட வேண்டிய அவசியமில்லை. மூலம் எனக் குறிப்பிட்டு அதன்கீழே நம்பகமான செய்தித்தளங்களை குறிப்பிடுங்கள். குறைந்தது, 2 வெவ்வேறு மூலங்களைக் குறிப்பிடுங்கள்! கவனிக்க இந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது]] 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி என எழுதி தலைப்பினை உருவாக்கலாம். பாக்கித்தான் நீதிமன்றம் ஒன்று முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேசு முசாரப் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தை சட்டவிரோதமாக இடைநிறுத்தி, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது தொடர்பாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனையை அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என அவர் கூறியுள்ளார். 70 வயதாகும் முசாரப் 2001 ஆம் ஆண்டு முதல் 2008 வரை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். 2008 ஆம் ஆண்டில் நாட்டில் இருந்து வெளியேறி 2013 மார்ச் மாதத்தில் நாடு திரும்பினார். [[இந்தியா இதுவரை சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி குரூப் சுற்றில் இதுவரை ஒரு ஆட்டத்திலும் தோழ்வியடையாமல் தரவரிசை புள்ளிகள் 7ஐ பெற்று மொத்தமாக 130 புள்ளிகள் என்ற கணக்கில் வங்காள தேசத்தில் நடக்கும் டி-20 போட்டியில் முன்னேறி உள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, குரூப் சுற்றில் ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் 7 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற இந்தியா ஒட்டுமொத்தமாக 130 ரேட்டிங் புள்ளிகளை எட்டியுள்ளது. 239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சு விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம் என மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் இன்று தெரிவித்தார். இந்த துணைக்கோளானது இந்திய எல்லையில் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகள், கடல் எல்லைகள், தரைவழிகள், வான்வழிகள், கடல்வழிப்பாதைகள், கடல் போக்குவரத்து, இயற்கை பேரிடர் போன்றவைகளைக் கண்காணிக்கும். போல்டுஸ்கோப் என்ற காகித நுண்ணோக்கியை எளிய பொருட்கள் கொண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞனி கண்டுபிடித்துள்ளார். இந்திய வம்சாளியைச் சேர்ந்த மனு பிரகாஷ் (Manu Prakash) என்ற விஞ்ஞானி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர் சாதாரண காகிதத்தின் உதவியோடு போல்டுஸ்கோப் என்ற இந்த நுண்ணோக்கியை தயாரித்துளார். இதன் செயல்பாடுகளை மூன்று நிலைகளாக பிரித்துள்ளார். எந்த பொருளை பரிசோதனை செய்ய விரும்புகிறோமோ அதன் மாதிரியின் 'ஸ்லைடை' பொருத்த வேண்டும். பின்னர் கோளவடிவிலான 'லென்சை' வைக்க வேண்டும், பின்னர் 'லெட்' விளக்கின் ஒளியை ஒளியூட்டவேண்டும். இப்போது நாம் வைத்துள்ள பொருளைப் பெரிதாக்க நாம் வைத்துள்ள பொருளை நமது கட்டைவிரலால் நகர்த்த வேண்டும். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் 2014ம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருதினை அறிவித்துள்ளது. 2002ம் ஆண்டும் முதல் இந்த விருதினை இந்தியர்கள் பெருவது குறுப்பிடத்தக்கது. யேல் ஃபெல்லோ விருதினை இந்திய திரைப்பட நடிகையும், சுதந்திரமான திரைப்பட உருவாக்குநருமான நந்திதா தாஸ் என்பவருக்கும் காத்ரெஜ் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் பர்மேஷ் ஷஹானி என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை உலகின் நடுநிலை சிந்தனையாலருக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தை பிறப்பு விகிதம், பாலின வேறுபாடுகள், இனப்பிரட்சனை, பெண்கொடுமைகள், பொன்றவைபற்றி நடிகை நந்திதா தாஸ் மேற்கொண்ட விழிப்புணவிற்க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மொத்தம் 15 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. அசாமில் 76 திரிபுராவில் 85% என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுக்கான போட்டி நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் நடந்தது. ''பரதேசி என்ற தமிழ் திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றுள்ளது. இப்படம் சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்று சிறந்த படம், இரண்டாவது சிறந்த இயக்குநர் (பாலா மூன்றாவது சிறந்த நடிகர் (அதர்வா மற்றும் நான்காவது சிறந்த ஒளிப்பதிவாளர் (செழியன்) என நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. ! மாநிலம் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம் | அருணாச்சலப் பிரதேசம் 2 71% இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் மூன்றாவது கட்டமாக 11 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என 91 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் உள்ளிட்ட 5 இந்திய மொழிகள் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் இந்திய வம்சாவளியினர் அதிகளவு வசிக்கும் கவாசுலு நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக, கற்பிக்கப்படும். இது விருப்பப்பாடமாக இருக்கும். தென்னாப்பிரிக்காவின் பள்ளிகள் சிலவற்றில் இந்திய மொழிகளுக்கான வகுப்புகள் நடந்து வந்தபோதிலும், இப்போதுதான் 5 மொழிப் பாடங்களை அங்கீகரிக்க அரசு முன்வந்துள்ளது. பள்ளிப்படிப்பு இறுதிவரை இந்த மொழிப்பாடங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்களாக இருக்கும் இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. ! மாநிலம் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம் முக்கியக் குறிப்பு இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் பின்னர் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இந்திய வம்சாவளிக்கவிஞர் விஜய் சேஷாத்ரி என்பவருக்கு 2014ம் ஆண்டிற்க்கான புலிட்சர் விருதினை 3 செக்‌ஷன்ஸ் என்ற கவிதையை எழுதியற்க்காக வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டதிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 400 அடிகள் கொண்ட ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுவன் ரோபோ எந்திரம் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளான். இந்தியாவில் இதுவரை நடந்த சம்பவங்களில் பெரும்பாலும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இதுதான் முதல் முறையாக நடந்த அதிசய சம்பவமாகும். தென் கொரியா நாட்டின் பயணிகள் கப்பல் ஒன்று 470 பயணிகளுடன் சென்ற போது விபத்துக்குள்ளனது. இந்த கப்பலில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 450 பேர் சுற்றுலாவிற்க்காக தென் கொரியாவின் அருகில் அமைந்துள்ள ஜெஜூ தீவிற்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இக்கப்பல் மூழ்கத்துவங்கியது. இந்த விபத்து தென் கொரியாவிலிருந்து 100 கிலோ மீட்டர்கள் தூரத்தில் நடந்துள்ளது. இயக்குனர் ராம் இயக்கிய தங்க மீன்கள் என்ற தமிழ் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திரைப்படத் துறைக்கான 61ஆவது தேசிய விருதினை அறிவித்துள்ளது. இதில் குழந்தை நட்சத்திரம் சாதனா நடித்த தங்கமீன்கள் என்ற குடும்பப் படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், குழந்தை நட்சத்திரத்திற்கான விருது சாதனாவிற்கும் ஆனந்த யாழை மீட்டுகிறாள்' என்ற பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் ஆக மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஆய்வுக்கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வைரஸ் கிருமிகளின் பாதுகாப்பு குப்பிகளைக் காணவில்லை என்று பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகவும் சிறந்ததாக விளங்குவது பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகளை 29 குப்பிகளில் பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்த 29 குப்பிகளும் தற்போது காணாமல் போய்விட்டதாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் 1980 ஆண்டு எச். ஐ. வி கிருமிகளை தனிமைப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பூமியைப்போன்ற புதிய கோளை விண்ணில் கண்டுபிடித்துள்ளார்கள். விண்ணில் 500 ஒலிஆண்டுகள் தூரத்தில் அளவில் பூமியைப்போன்ற ஒரு கோள் உள்ளதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிருவனத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இக்கோளிற்க்கு கெப்லர் 186எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இக்கோளில் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளார்கள். மேற்க்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா என்ற நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். நைஜீரியா நாட்டின் சுபோக் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் பலர் சேர்ந்து பள்ளி மாணவிகள் 129 பேரை பலவந்தமாக கடத்திச்சென்றுள்ளார்கள். அப்பள்ளி உரிமையாளர்கள் கழந்தைகள் பற்றிய எந்த தகபவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழனன்று நடந்து முடிந்தது. ! மாநிலம் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம் | ஜம்மு காஷ்மீர் 1 69% | மத்தியப் பிரதேசம் 10 54% | உத்தரப் பிரதேசம் 11 63% முக்கியக் குறிப்பு இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் என்னும் இடத்தில் முகநூல் காதல் விவகாரத்தால் பெண் ஒருவர் தனது ஆண் நண்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார். மத்தியபிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் என்னும் இடத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள பேடாகாட் என்னும் இடத்தில் வினித்குமார் (24) என்ற இளைஞர் தனது முகநூல் மூலம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த 42 வயது பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண் தனது வயதை குறைவாக தெரிவித்தது கண்டு அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். செல்லிடத் தொலைபேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு புதிதாக பல நோய்கள் உருவாகிறது என்று மூளை நரம்பியல் துறை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மனிதர்கள் பல காரணங்களுக்காக பயத்தை வெளிக்காட்டும் குணத்தைக் கொண்டுள்ளார்கள். ஒவ்வோரு காரணத்திற்கும் போபியா என்னும் நோயின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு ரிங்டோன் போபியா என்ற நோய் உருவாகுவதாக திருச்சி கி. ஆ. பெ. வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம் தெரிவிக்கிறார். தன்னை அறியாமலே ரிங்டோன் அடிக்கிறதா என்று பார்ப்பது, சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் போது செல்போனிலிருந்து வைப்பிரேசன் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் வந்ததாக நினைத்துக்கொண்டு தன்னிச்சைச் செயலாக நடந்து கொள்வது போன்ற காரணங்களால் பல தொந்தரவுகளுக்கு ஆட்படுகிறார்கள். 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டினர் வாழும் வசிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற மூன்று தற்கொலைத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும் 37 பேருக்கு 3 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அல்-கைதா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 39 வெளிநாட்டினர் மற்றும் சவூதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அந்நாட்டு அரசு ஜிகாத் குழுக்கள் மீது தீவிரக் கண்காணிப்பு நடத்தி ஆயிரகணக்கானோரைக் கைது செய்தது. அல்-கைதா இயக்கத்தின் சவூதி உறுப்பினர்கள் தமது நாட்டில் இயக்கத்தை நடத்த முடியாவிட்டாலும், அயல் நாடான யெமனில் தொடர்ந்து தமது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்தான இறுதிநிலை கணிப்புகள், தமிழகத்தின் பிரபலமான சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இக்கணிப்புகளின் திரளாவது: அதிமுக திமுக பாஜக மதிமுக பாமக புதிய தமிழகம் விடுதலை சிறுத்தைகள் முஸ்லீம் லீக் அதிமுக திமுக கடும்போட்டி அதிமுக பாஜக கடும்போட்டி அதிமுக பாமக கடும்போட்டி அதிமுக மதிமுக கடும்போட்டி திமுக மதிமுக கடும்போட்டி மதிமுக புதிய தமிழகம் பாஜக முஸ்லீம் லீக் கடும்போட்டி * குமுதம், நக்கீரன் வெளியிட்டுள்ளவை மக்களிடையே மாதிரி வாக்கெடுப்பு நடத்தி, புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டவை. * குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளவை இப்பத்திரிகைகளின் நிருபர்களால் மதிப்பிடப்பட்ட தொகுதி நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. [[இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல் மார்ச் 23, 2014 * அண்மையில் வெளியான குமுதம் வார இதழ்கள் * ஏப்ரல் 21 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் * அண்மையில் வெளியான நக்கீரன் இதழ்கள் * ஏப்ரல் 22 அன்று வெளியான ஜூனியர் விகடன் இதழ் [[பகுப்பு:தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014]] அமெரிக்காவில் விமான சக்கர பகுதியில் ஒளிந்திருந்து சிறுவன் ஒருவன் பயணம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் தரையிறங்கும் போது பாதுகாப்பாக கீழே குதித்து உயிர் தப்பினான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா கிளாரா என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டில் நடந்த சண்டையால் அருகில் இருந்த சான் ஓசே விமான நிலையத்திற்குச் சென்றான். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் ஒழிந்து கொண்டான். அந்த விமானம் ஹவாய் தீவில் உள்ள மவு என்ற ஊரில் அமைந்துள்ள காகுலை விமான நிலையத்தில் இறங்கியது. அப்போது அச்சிறுவன் கீழே குதித்து உயிர் தப்பினான். 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும் போது காற்றில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அத்துடன் வெப்பநிலையும் -62 செல்சியசாக இருந்தது. சுமார் 5 மணி நேரம் பயணம் செய்து இச்சிறுவன் அதிசயமாக உயிர்தப்பினான். இச்சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் 16 வயது சிறுவன் ஒருவன் நியூயார்க்கில் இருந்து பாஸ்டன் சென்ற விமான இறைக்ககளுக்கிடையே பயணம் செய்து தனது உயிரை மாய்த்தான். 1947 முதல் 2012 வரை இவ்வாறான 96 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 23 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கொரியா நாட்டின் அணு மற்றும் குவாண்டம் பொறியியல் பேராசிரியர் சுன் டி ரிம் என்பவர் ஐந்து மீட்டர் தூரத்திலிருந்து கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்ய உதவும் இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி Dipole Coil Resonant System (DCRS என்ற உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இந்த வகையான இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி எல்லா அலுவலகங்களிலும் அமைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உபகரணம் கொண்டு ஒரே நேரத்தில் 40 கைபேசிகளை கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்யலாம். பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியைக் கூட இந்த உபகரணம் கொண்டு இயக்கும் அளவு சக்தியைக்கொண்டது. இந்த உபகரணத்தை வீட்டிலோ, அலுவலகத்திலோ சிறிய அறையில் அமைக்கலாம் என்று இதனைக் கண்டுபிடித்தவர் தெரிவித்துள்ளார். [[பகுப்பு:இந்தியப் பொதுத் தேர்தல் 2014 noinclude> இரு குழுக்களும் 2007 ஆம் ஆண்டில் பிரிந்தன. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட உடன்பாடுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஃபத்தா அமைப்பின் தலைவர் மகுமுது அப்பாசிற்கும் இசுரேலுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை அடுத்தே புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பை அடுத்து, புதன்கிழமை இடம்பெறவிருந்த பேச்சுக்களில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என இசுரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாக இசுரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கருதுகின்றன. ஹமாசுடனான ஃபத்தா அமைப்பின் புதிய உடன்பாடு எட்டப்பட்டமைக்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. இது இசுரேலுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என அமெரிக்க அரசு மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டார். இன்னும் ஐந்து வாரங்களில் அப்பாஸ் தலைமையில் ஒரு புதிய ஒருமைப்பாட்டு அரசு உருவாகும் என இரு குழுக்களும் அறிவித்துள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும். புதிய உடன்பாட்டை காசா மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். வரலாற்று ரீதியாக ஃபாத்தா அமைப்பு பாலத்தீன தேசிய இயக்கத்தில் பலம் வாய்ந்ததாக இருப்பினும், 2006 சனவரியில் நடைபெற்ற தேர்தல்களில் அது ஹமாசிடம் தோற்றது. நேற்றைய உடன்பாடு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வடக்கு காசாவில் இசுரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குத் தயாராகவிருந்த போராளிகள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் கூறியுள்ளது. எக்குவடோர் அரசின் அறிவிப்பு ஒன்றை அடுத்து இம்மாத இறுதிக்குள் தமது 20 இராணுவ அதிகாரிகள் அந்நாட்டில் இருந்து வெளியேறுவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது. எக்குவடோர் நாட்டின் உள்நாட்டு அலுவல்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி அரசுத்தலைவர் ரஃபாயெல் கொரெயா அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு அண்மையில் பணித்திருந்தார். ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவக் கூட்டில் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரெயாவின் முடிவினால் தாம் கவலை அடைதுள்ளதாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். எக்குவடோரில் மிக அதிகமான அளவு அமெரிக்க இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் எக்குவடோரின் இடதுசாரி அரசுத்தலைவர் ரஃபாயெல் கொரெயா குற்றம் சாட்டியிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் பதவியெற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இறுக்கமான நிலையை அடைந்திருந்தன. 2012 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயிற்கு எக்குவடோர் தமது இலண்டன் தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தது. அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக இரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் ஊடகங்களுக்குக் கசிய விட்டிருந்தது. அருமையான கண்டுபிடிப்பு. இதன் அடிப்படையில் அதிக மின் அழுத்த மின்சாரத்தை தொலை தூரங்களுக்கும்(கம்பி இல்லாமல்) கொண்டு செல்லவேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேரும்.வாழ்க மனித ஆற்றல்.வளர்க அறிவியல் கண்டுபிடிப்புகள். திருத்தந்தை பிரான்சிசு, மற்றும் இவருக்கு முன்னிருந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஆகியோர் இவ்வைபவத்தை நடத்தி வைத்தனர். 2 மணி நேரம் இடம்பெற்ற இவ்வைபவத்தை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதனை நேரில் கண்டு களித்தனர். அரசு, மற்றும் நாட்டுத்தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர். இரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 2005 ஆம் ஆண்டு இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்கால 26 ஆன்டுகளாகும். 9 ஆண்டுகளில் இவரை புனிதர் பட்டம் வந்தடைந்தது. ஆனால், இத்தாலியில் பிறந்த 23ம் யோவான் 1958 முதல் 1963 வரை பதவியில் இருந்தார். இவர் நல்ல திருத்தந்தை என அழைப்பட்டவர். இவரைப் புனிதராக்கும் திட்டத்தை அண்மையிலேயே திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார். தமது அயல் இசுலாமிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகியவற்றை விடக் கடுமையான இசுலாமிய சட்டத்தை புருணை ஏற்கனவே கொண்டுள்ளது. மது விற்கப்படுவதோ அல்லது அருந்துவதோ அங்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. புதிய இசுலாமியச் சரியா சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. "நாளை 2014 மே 1 முதல் சரியா சட்டத்தின் முதல் கட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன் பின்னர் அடுத்தடுத்த கட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுல்தான் செய்தியாளர்களிடம் கூறினார். தண்டனைச் சட்டம் அடுத்த மூன்று ஆண்டு காலத்துக்குள் முழுமையாக அமுல் படுத்தப்படவிருக்கிறது. முதல் கட்டத்தில் தண்டம், மற்றும் சிறைத்தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படும், இரண்டாம் கட்டத்தில், உறுப்புகள் வெட்டுதல் போன்ற தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படும். திருமணத்துக்குப் புறம்பான உறவுகள், மற்றும் தன்னினச் சேர்க்கை போன்றவற்றுக்கு கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கடுமையான சட்டங்கள் மூன்றாம் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். இசுலாமியர் அல்லாதோருக்கும் இச்சட்டங்கள் பொருந்தும். போர்னியோ தீவில் உள்ள சிறிய நாடான புருணை சுல்தான் அசனால் போல்கையா என்பவரால் ஆளப்பட்டு வருகிறது. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்குள்ள பெரும்பான்மையானோர் மலாய் முஸ்லிம்கள் ஆவர். ஆனாலும் பௌத்தர்களும், கிறித்தவர்களும் இங்கு குறிப்பிட்டளவு வாழ்கின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அமெரிக்க நாட்டின் சிறப்புப் பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ், பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான காஷ்மீர் பகுதியை அண்டை நாடான பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. இந்த விவகாரம் பற்றி அமெரிக்க பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ் பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள காஷ்மீர் பற்றிய விவகாரத்தில் எந்த ஒரு மூன்றாம் நபரையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளதால் அமெரிக்கா இந்த விசயத்தில் மத்தியஸ்தம் பன்ன விரும்பவில்லை என்று தெரிவித்தார். அத்தோடு எல்லை தாண்டிய தீவிரவாதம் தமக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த புதனன்று நடந்து முடிந்தது. ! மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவிகிதம் | ஆந்திரப் பிரதேசம் 17 70% முக்கியக் குறிப்பு இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தனமாக இருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து தனிமாநிலமாக மாறி கேரளா மாநிலமாக பிரிந்தது. அப்போது ஆங்கிலேய அரசு தமிழகப்பகுதிகளான கம்பம், தேனி, மதுரை போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் தேவையை தீர்த்துவைக்க 999 ஆண்டுகளுக்கான சட்டம் இயற்றப்பட்டு முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே அணையை கட்டிக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1895ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து கேரளா மாநிலமாக மாறியபின் 142 அடிகள் தண்ணீர் இருந்ததை அந்த அரசு 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலத்திலிருந்த மொர்பி அணை உடைந்து பலபேர் பலியானதை காரணம் காட்டி 136 அடியாக குறைத்தது. இதன் காரணமாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து பலமுறை போராடி, தற்போது 2014ம் ஆண்டு 7ம் தேதி மே மாதம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் இடமாற்றம் செய்ய்யப்பட்டது சட்டவிரோதமானது என அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. யிங்லக் தன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுதளித்திருந்தார். இந்த இடமாற்றத்தின் மூலம் யிங்லக்கின் உறவினர் நன்மை பெற்றிருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இத்தீர்ப்பினை அடுத்து வர்த்தகத்துறை அமைச்சர் நிவாத்தும்ரோங் பூன்சொங்பைசான் என்பவரை இடைக்காலப் பிரதமராக நியமிக்க மீதமுள்ள அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். தாய்லாந்தில் கடந்த பல மாதங்களாக அரசியல் கொந்தளிப்பு நீடித்து வரும் நிலையில் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்ப்பு வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரைப் பதவியில் இருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். 2006ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தக்சின் சினவாத்திரா இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அங்கு கொந்தளிப்பு நீடித்து வருகிறது. இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த புதனன்று நடந்து முடிந்தது. ! மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம் | இமாசலப் பிரதேசம் 4 65 | ஜம்மு காஷ்மீர் 2 43 முக்கியக் குறிப்பு இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும். சென்னையின் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எம். சவ்ஜன்யா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் அப்பா ஒரு பார்வையற்றவர் ஆவார். இவரின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இந்தக் குடும்ப சூழ்நிலையிலும் இந்த மாணவி படித்து அவரின் அப்பாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். பிரிட்டனில் பிறந்த இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி என்பவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளார். கடந்த மாதம் நைஜீரியாவின் பள்ளி ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 130 மாணவிகளைக் கொண்ட காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டுள்ளனர். அரசினால் பிடிக்கப்பட்டிருக்கும் தமது போராளிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை இவர்கள் தமது காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள் என குழுவின் தலைவர் அபூபக்கர் சேக்காவு காணொளியில் கூறினார். மாணவிகள் அனைவரும் இசுமாம் மதத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள் என அவர் கூறினார். மாணவிகள் வழிபடுவதை இன்று வெளியிடப்பட்ட காணொளி காட்டியது. நைஜீரியாவின் வடக்கே போர்னோ நகரில் கடந்த மாதம் ஏப்ரல் 14 இல் சுமார் 200 மாணவிகள் ஆயுதமுனையில் கடத்தப்பட்டனர். இவர்களை அடிமைகளாக விற்கப்போவதாக போக்கோ அராம் போராளிகள் முன்னர் கூறியிருந்தனர். இன்று வெளியிடப்பட்ட 17-நிமிடக் காணொளியில் மாணவிகளில் மூவர் உரையாற்றுவதும் காட்டப்பட்டது. தாம் துன்புறுத்தப்படவில்லை என அவர்களில் ஒருவர் கூறினார். அவர்களில் இருவர் தாம் கிறித்தவர்கள் என்றும், தற்போது இசுலாமியராக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மற்றவர் தாம் ஒரு முஸ்லிம் எனக் கூறினார். போக்கோ அராம் என்பது "மேற்கத்தைய கல்வி ஒரு பாவச் செயல்" எனப் பொருள். மாணவிகள் பாடசாலை செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் திருமணம் புரிய வேண்டியவர்கள் என அக்குழு கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் இக்குழு அரசுடன் ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகிறது. துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 205 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என்றும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். வெடி விபத்து சமயத்தில் 787 பேர் சுரங்கத்தில் இருந்ததாக அமைச்சர் கூறினார். மானிசா மாகாணத்தின் சோமா நகரிலுள்ள இச்சுரங்க விபத்து மின்சாரக் கோளாறால் நடந்ததாகத் தெரிகிறது. மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணிபுரிந்து சுரங்கத்தில் சிக்கிய நூறுக்கு மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் சுரங்கத்தில் சுரங்க நுழைவாயிலில் இருந்து 4 கிமீ தூரத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர். தலைநகரான அங்காராவில் இருந்து இச்சுரங்கம் 450 கிமீ தொலைவில் உள்ளது. தொழிலாளிகளின் உறவினர்கள் தனியாருக்கு உரிமையான இச்சுரங்கத்துக்கு அருகில் கூடியுள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் சுரங்கத்தின் உள்ளே 360 தொழிலாளிகள் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். கார்பன் மோனாக்சைடு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் தப்பி பிழைத்துள்ளோரை காப்பாற்ற ஆக்சிசன் உள்ளே செலுத்தப்படுவதாகவும் கூறினார். செவ்வாய்கிழமை நண்பகல் நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அவசர காலப் பணியாளர்கள் சுரங்கத்தை விரைவில் அடைய உதவுகின்றனர். இவ்விபத்தால் துருக்கியப் பிரதமர் அல்பேனியாவுக்கு செல்லும் தன் திட்டத்தை ஒத்திவைத்து சுரங்கம் உள்ள சோமா பகுதிக்கு விரைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்க முதலாளி இவ்விபத்து பற்றி விசாரணை நடப்பதாக தெரிவித்தார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இவ்வாறு நடந்துள்ளது எனக் கூறினார். லிக்னைட் நிலக்கரியை வெட்டி எடுப்பது சோமா பகுதியில் பெரும் தொழிலாகும். இந்நிலக்கரி அருகிலுள்ள மின் உற்பத்தி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஆய்வாளர்கள் துருக்கியின் சுரங்கக் காப்பு மற்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடும் போது பின்தங்கி உள்ளது என்கின்றனர். 1992இல் கருங்கடல் பகுதியிலுள்ள சுரங்க விபத்தில் 270 பலியானதே துருக்கியின் மோசமான சுரங்க விபத்தாகும். சூடானியப் பெண்ணொருவர் இசுலாம் மதத்தில் இருந்து மதம் மாறி கிறித்தவர் ஒருவரைத் திருமணம் புரிந்த குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கத் தீர்ப்பளித்தது. "இசுலாம் மதத்துக்கு மீண்டும் வர நாம் மூன்று நாட்கள் தவணை கொடுத்தோம், ஆனாலும், நீ இசுலாமுக்கு வரவில்லை. இதனால் நாம் தூக்குத்தண்டனை தீர்ப்பளிக்கிறோம் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். எட்டு மாதக் கர்ப்பிணியான அப்பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு மனித உரிமை அமைப்புகளும், வெளிநாட்டு தூதரகங்களும் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. அப்பெண் குழநதை பெற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே தண்டனை நிறைவேற்றப்படும் என உள்நாட்டு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. சூடானிய இசுலாமிய சட்டத்தின் படி, கிறித்தவர் ஒருவரைத் திருமணம் புரிவது சட்டவிரோதம் என்பதால் அப்பெண்ணுக்கு 100 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானை சேர்ந்த ஒரு கிறித்தவரையே இவர் மணம் புரிந்தார். மீரியாம் யேஹியா இப்ராகிம் இசாக் என்ற இப்பெண் ஒரு பழமைவாதக் கிறித்தவராக வளர்க்கப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவித்துள்ளது. இவரது தாயார் ஒரு கிறித்தவர் என்றும், தந்தை ஒரு முஸ்லிம் எனவும் கூறப்படுகிறது. தந்தை சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு விலகி விட்டார். தமிழ்நாடு, கொடைக்கானலில் உள்ள தூய இதயக் கல்லூரியில் ஏசு சபை மாணவர்களுக்கான கோடை முகாம் நிகழ்ந்து வருகின்றது. இளங்கலை, முதுகலை மெய்யியல், இறையியல் மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமின் ஒரு அமர்வாக, இன்று வெள்ளிக்கிழமை ஏசு சபை மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியை பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி ஒருங்கிணைத்து, தமிழ்க்கணிமையின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் என்பதான பொருண்மைகள் குறித்த கணினிவழி நேரிடை செயல்முறைப் பயிற்சியை அவர் அளித்தார். இம்முகாமினை தமிழக ஏசுசபை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை இராஜ் இருதயா ஒருங்கிணைத்தார். நவீன ரக செயற்கைக்கோள் ஒன்றைக் காவிச் சென்ற உருசியாவின் புரோட்டோன்-எம் என்ற ஏவூர்தி இன்று வெள்ளிக்கிழமை தனது மூன்றாம் கட்ட ஏவுகையின் போது சீனாவின் வான் பகுதியில் வெடித்து முற்றாக எரிந்தது. கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலையில் ஏவப்பட்ட இவ்வேவூர்தி கிளம்பிய ஒன்பதாவது நிமிடத்தில் வெடித்துச் சிதறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 160 கிமீ உயரத்தில் செக்கனுக்கு 7 கிமீ வேகத்தில் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. “ராக்கெட், மற்றும் செயற்கைக்கோள் அனைத்தும் வளிமண்டலத்திலேயே முற்றாக எரிந்து விட்டன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீன வான் பரப்பிலேயே இது நிகழ்ந்துள்ளது. இவற்றின் சிதைவுகள் எவையும் புவியை வந்தடையவில்லை என உறுதியாகத் தெரிவிக்க முடியும் என ரொஸ்கொஸ்மசு தலைவர் ஒலேக் ஒஸ்தாபென்கோ செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவில் புதிய நடுவண் அரசினை அமைத்திட, 272 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும். தனியொரு கட்சியாக இந்நிலையினை அடைய முடியவில்லையெனில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இயலும். ஆனால் இந்த முறை பாரதிய ஜனதா கட்சி 272 இடங்களுக்குமேல் தனக்கெனப் பெற்றுள்ளதால், மற்ற கட்சிகளின் ஆதரவின்றி தானாகவே ஆட்சி அமைக்கும். இந்த வெற்றியின் வாயிலாக, விடுதலை இந்தியாவின் அரசியல் வரலாற்றில் சில சாதனைகளை பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது: * 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் இந்தியாவில் கட்சியொன்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆண்டுத் தேர்தல்களில் எந்தத் தனிக் கட்சியும் 272 எனும் எண்ணிக்கை இலக்கினை அடையவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சிகள் அமைக்கப்பட்டன. * இந்திய தேசிய காங்கிரசு அல்லாது, தனிப் பெரும்பான்மையினைப் பெற்ற இரண்டாவது கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. * இந்த வெற்றியே பாரதிய ஜனதா கட்சியின் இதுவரையிலான சிறந்த செயல்திறனாகும். இதற்கு முன்னதாக 1998, 1999 ஆண்டுத் தேர்தல்களில் அதிகபட்சமாக 182 இடங்களை வென்றிருந்தது. * இந்தத் தோல்வியே இந்திய தேசிய காங்கிரசின் மோசமான தோல்வியாகும். இதற்கு முன்னதாக 1999 ஆண்டுத் தேர்தலில் குறைந்தபட்சமாக 114 இடங்களை வென்றிருந்தது. வியட்நாமில் சீன மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து அங்குள்ள சீனக் குடிமக்களை வெளியேற்றுவதற்காக ஐந்து கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது. ஏற்கனவே 3,000 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடுமையாகக் காயமடைந்த 16 பேர் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனா எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டதை அடுத்தே அங்கு கலவரங்கள் வெடித்தது. இரண்டு சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சட்டவிரோத எண்ணெய் அகழ்வையடுத்து கடந்த வாரம் வியட்நாமிய, சீனக் கடற்படைக் கப்பல்களிடையே மோதல்கள் இடம்பெற்றன. பராசெல் தீவுகளுக்கு மேற்கே தாம் தொடர்ந்து எண்ணெய் அகழ்வாய்வில் ஈடுபடப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவினால் நிருவகிக்கப்படும் இப்பகுதிக்கு வியட்நாமும் உரிமை கோரி வருகிறது. கடந்த சில நாட்களில் கலவரக்காரர்கள் குறைந்தது 15 வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர். இவை சீன, தாய்வான், மற்றும் தென் கொரிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாகும். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை நடத்திட ஐநா அவையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டுமென இந்திய மாநிலங்களவையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வா. மைத்ரேயன் நேற்று மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்ததையடுத்து, விவாதத்தில் வா. மைத்ரேயன் முக்கிய உரையாற்றினார். தமது உரையில் அவர் போருக்கு பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன. தமிழர்களின் வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஓர் இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் இலங்கையை நட்பு நாடு என மத்திய அரசு போற்றி வருகிறது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையை நட்பு நாடாகக் கருத மாட்டோம்; அதை எதிரி நாடாகவே கருதுவோம்" என்றார். மைத்ரேயனைத் தொடர்ந்து டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருச்சி சிவா (திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். இந்த விவாதத்தில் வெங்கய்ய நாயுடு (பாரதிய ஜனதா கட்சி சஞ்சய் ரௌத் (சிவசேனை டி. பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ் எம். ரமேஷ் (தெலுங்கு தேசம் நரேஷ் அகர்வால் (சமாஜவாதி கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி சிவானந்த திவாரி (ஐக்கிய ஜனதா தளம் தருண் விஜய் (பாரதிய ஜனதா கட்சி ராம் கிரிபால் யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்) ஆகிய உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர். தாய்லாந்தில் சட்டம் ஒழுங்கைப் பேணும் பொருட்டு அந்நாட்டு இராணுவம் அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனாலும் இது இராணுவப் புரட்சி அல்ல என இராணுவம் கூறியுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய இராணுவம் செயல்பட வேண்டும் எனவும், வன்முறையைத் தூண்டக் கூடாது எனவும் தாய்லாந்தின் பதில் பிரதமர் இராணுவத்தினரைக் கேட்டுக் கொண்டார். தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையங்களை இராணுவத்தினர் கைப்பற்றினர். தலைநகர் பாங்கொக்கிற்கான பாதைகளையும் அவர்கள் துண்டித்தனர். தேசியப் பாதுகாப்பைக் கருதி ஊடகத் தணிக்கையும் அமுல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக அரசுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கொந்தளிப்பு காணப்படும் நிலையில் இன்றைய அறிவிப்பு வந்துள்ளது. 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் குறைந்தது 11 தடவைகள் இராணுவப் புரட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அரசும் எதிர்க்கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென இராணுவத் தலைவர் பிராயுத் சான்-ஓச்சா இரு தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளர். பொதுச் சொத்தை சூறையாடியமைக்காக எகிப்தின் முன்னாள் அரசுசுத்தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. 86 வயதாகும் ஒசுனி முபாரக் ஆட்சியில் இருக்கும் போது 2011 எழுச்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொல்லப் பணித்தமைக்காக அவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவர் 2012 ஆர்ப்பாட்டங்களின் போது முறைகேடாக நடந்தமைக்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டை அடுத்து மீள விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகத்தில் முபாரக் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சனநாயக முறையில் அரசுத்தலைவராக தெரிவு செய்யப்பட முகம்மது மோர்சி கடந்த சூலை மாதத்தில் இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து முபாரக் மீதான பொதுமக்களின் கவனம் குறைந்திருந்தது. தாய்லாந்தில் வலிய ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அரசை இராணுவம் தம் பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அந்நாட்டின் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் என்றும், அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தொலைக்காட்சி உரை ஒன்றில் இராணுவத் தளபதி கூறினார். கடந்த பல மாதங்களாக அரசுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கொந்தளிப்பு நிலை இருந்து வந்தது. 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் குறைந்தது 12 தடவைகள் இராணுவப் புரட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் சிபூட்டி நாட்டில் வெளிநாட்டினர் பெருமளவு பயன்படுத்தும் உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாதோர் நடத்திய கிரனைட்டுத் தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர். சிபூட்டி தலைநகரில் உள்ள லா சாமியேர் என்ற உணவகத்தின் மீதே கிரனைட்டுகள் எறியப்பட்டன. குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். உணவகத்தின் இரு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். எக்குழுவும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில் பல குண்டுச் சத்தங்கள் கேட்டது, அதன் பின்னர் அப்பகுதி உடனடியாக காவல்துறையினரால் மூடப்பட்டது. முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான சிபூட்டியில் அமெரிக்க, மற்றும் பிரெஞ்சு இராணுவத் தளங்கள் அமைந்துள்ளன. அயல்நாடான சோமாலியாவில் போரிடும் அல்-சபாப் இயக்கப் போராளிகளுக்கு எதிரான ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு இதுவே முக்கியத் தளமாக உள்ளது. ஏடன் குடாவினூடாகச் செல்லும் கப்பல்களை சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க வெளிநாட்டுக் கடற்படையினருக்கு இந்நாட்டில் உள்ள துறைமுகமே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு சரக்கு வண்டி ஒன்றுடன் மோதியதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். கான்ட் கபீர் நகர் மாவட்டத்தில் சூரெப் தொடருந்து நிலையத்தில் கோராக்தம் விரைவு வண்டியின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் வண்டியினுள்ளே சிக்குண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. அரியானா மாநிலத்தின் இசார் நகரை நோக்கி இவ்விரைவு வண்டி சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமராக இன்று பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோதி, இறந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாக டுவிட்டர் மூலம் செய்தி தெரிவித்துள்ளார். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நேற்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும் இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். புதிய அமைச்சரவையில் உள்ள 45 பேரில், நரேந்திர மோடி உள்பட 24 பேர் ஒன்றிய ஆய அமைச்சர்களாவர். 10 பேர் தனிப் பொறுப்புகளுடன் கூடிய இணையமைச்சர்கள்; 11 பேர் இணையமைச்சர்களாவர். [[இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது மே 17, 2014 இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புது தில்லியிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துள்ளன. கருப்புக் கொடி ஏந்தி அணி செல்லுதல், தொடர்வண்டியை மறித்தல், சாலை மறியல், உருவபொம்மை எரிக்க முயலுதல், நீதிமன்றப் புறக்கணிப்பு என பலதரப்பட்ட போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கான தேதி குறிக்கப்பட்டது. இந்த விழாவினில் கலந்துகொள்ள இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பிலுள்ள அனைத்து நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முடிவில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், மகிந்த ராசபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று புது தில்லியிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. கருப்புக் கொடி ஏந்தியவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அவரின் கட்சியினர் 187 பேர் கைது செய்யப்பட்டார்கள். தொடர்வண்டி மறிப்புப் போராட்டங்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடந்தது. உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தினை நடத்திய மதிமுக உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது. உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தினை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது. தொடருந்து நிலையத்தில் இராமேஸ்வரம் மதுரை பயணிகள் வண்டி மறிக்கப்பட்டது. தொடருந்து மறியலில் ஈடுபட முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர். தொடருந்து மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் கலை இலக்கியக் கழகம், உலக தமிழர் பேரமைப்பு, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி இவற்றின் உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். [[பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்]] வணக்கம். பங்களிக்கத் தொடங்கியமைக்கு நன்றி! ஏற்கனவே Publish ஆகியுள்ள மற்ற கட்டுரைகளையும் கவனித்துப் பாருங்கள்! ஜப்பான் நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்று ஹிமேஜி துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏழுபேர் மீட்கப்பட்டனர். இக்கப்பலின் மாலுமியைக் காணவில்லை. இவரைக் கடற்படையினர் தேடிவருகின்றனர். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான மாநிலந் தழுவிய பரப்புரை இயக்கம் கடந்த ஞாயிறன்று சென்னையில் தொடங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பரப்புரையை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி முரசறைந்து தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகளில்தான் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்பது ஒரு மூட நம்பிக்கையே; 93 விழுக்காடு தனியார் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை என்பதே உண்மை நிலை என்றார் அவர். ஏழைகளுக்கானது என்றால் தரமற்றது என்ற எண்ணம் பரப்பப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துவது போல் செயல்படுகின்றன என்று அவர் விமர்சித்தார். தாய் மொழி வழி கற்றவர்கள்தான் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்துத்துறைகளிலும் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். “மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளின் மூலம் கட்டணமின்றி தரமான கல்வியைத் தங்களது குழந்தைகளுக்கு வழங்கக் கோருவது பெற்றோரின் உரிமை; அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தி பொதுப் பள்ளிகளை வலுப்படுத்துவது அரசின் கடமை” எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது. பிரச்சார இயக்கத்தை வாழ்த்திப் பேசிய மூத்த கல்வியாளர் எஸ். எஸ். ராஜகோபாலன், அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டிய பணியை அறிவியல் இயக்கம் மேற்கொண்டிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் முறைப்படி பயிற்சி பெற்றவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் 70 விழுக்காடு ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்களாக, தற்காலிகமாக நியமிக்கப்பட்டு சொற்ப ஊதியத்திற்கு வேலை வாங்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாகுபாடுகளுடன் குழந்தைகள் வளர்க்கப்படுவது சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்றார் அவர். அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவரும் சமச்சீர் கல்விக்காக வாதாடியவருமான பேராசிரியர் ச. மாடசாமி, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பணம், சாதி என நுட்பமான பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றார். உடன்பிறந்தவர்களான இரண்டு சிறுமிகள் மேல் படிப்புக்குப் போகமுடியாது என்பதால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது நாட்டிற்கே பெரும் இழுக்கு என்றார் அவர். அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என். மணி, ஒரு வகுப்புக்கு ஒரு வகுப்பறை, ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்பதை உத்தரவாதப்படுத்துவது அரசின் பொறுப்பு என்றார். பல தனியார் பள்ளிகளில் பயிற்சி பெறாதவர்கள், சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவுரையாற்றிய தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, “சமம்” என்ற வார்த்தையே தவறானது என்ற கருத்து திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டிருக்கிறது என்றார். தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் எதுவும் சொல்லாதவர்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிகமான அளவுக்கு எளிய குடும்பங்களின் குழந்தைகள் முதல் நிலை மதிப்பெண்கள் எடுக்கிறபோது அது எப்படி என்றும் மதிப்பெண்களில் தாராளம் காட்டப்பட்டதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மாநில தேசிய அளவிலான அறிவியல் மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைப்பதால் இயல்பாக அவர்கள் சமுதாயப் பங்கேற்போடு வளர முடிகிறது என்றும், பெரும்பாலான தனியார் பள்ளிகளிலோ அதிக மதிப்பெண் வாங்குவதே வெற்றி என்று மாணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் வீடு வீடாகச் சென்று எடுத்துரைக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் நாடகத்தை சென்னையில் அமைந்துள்ள மியூசிக் அகாதமியில் நாடகமாக நடித்துக்காட்ட எஸ். எஸ். இன்டர்நேசனல் நிறுவனம் தயாராகியுள்ளது. இந்த நிகழ்வினை ஜூன் 8 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சென்னையிலும், ஜூன் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மதுரையிலும், ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கோவையிலும் நடத்திக் காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 16வது மக்களைவையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நேற்று 3ம் தேதி விபத்தில் மரணமடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டேவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியாவில் நடந்து முடிந்த 16வது மக்களவைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். [[இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார் மே 27, 2014 சீனாவின் தென்மேற்கே வான்ஷெங் மாவட்டத்தில் சொங்கிங் என்ற நகரில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது மொத்தம் 28 பேர் இச்சுரங்கத்தில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகில் சுரங்க விபத்துகள் சீனாவிலேயே அதிகம் இடம்பெறுகின்றன என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரைனின் கிழக்கே உருசிய ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ள சிலோவியான்ஸ்க் நகருக்கு அருகாமையில் லுகான்ஸ்க் நகரில் உள்ள இரண்டு உக்ரைனிய இராணுவத் தளங்களை உருசிய-ஆதரவுப் படையினர் கைப்பற்றினர். நேற்று செவ்வாய்க்கிழமை அன்று உருசிய-ஆதரவுப் படையினர் இந்த இரு தளங்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கடந்த திங்களன்று லுகான்ஸ்க் நகரின் மீது இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனியப் படையினர் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்து விட்டதாகவும், ஆனாலும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கிடையில், தனியெத்ஸ்க் பிராந்தியத்தில் சிலோவியான்ஸ்க் நகரை மீளக் கைப்பற்றும் முயற்சியில் உக்ரைனியப் படையினர் முயன்று வருகின்றனர். கடந்த மாதம் தோனெத்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிரதேசங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடத்திய உருசிய-ஆதரவுப் படையினர், வாக்கெடுப்பு முடிவுகளின் படி அப்பிரதேசங்களை விடுதலை பெற்ற பிரதேசங்களாக அறிவித்தனர். இவ்வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என உக்ரைனிய அரசு கூறியுள்ளது. கடந்த பெப்ரவரியில் உக்ரைனின் மாஸ்கோ-ஆதரவு அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதை அடுத்து அங்கு அரசியல் கொந்தளிப்பு நிலை இருந்து வந்தது. யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, உக்ரைனின் கிளழக்கே உருசியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரிமியா விடுதலையை அறிவித்து, உருசியாவுடன் இணைந்து கொண்டது. இதனை உருசியா தவிர வேறு எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. தென்கிழக்கு உக்ரைனில் போரிடு கிளர்ச்சியாளர்களுக்கு தாம் எவ்வித இராணுவ உதவியும் வழங்கவில்லை என உருசிய அரசுத்தலைவர் பூட்டின் பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் கம்போடியக் கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட 1000-ஆண்டுகள் பழமையான மூன்று இந்து சிலைகள் மீளவும் கம்போடியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. இச்சிலைகளை வரவேற்க கடந்த செவ்வாய் அன்று தலைநகர் நோம் பென்னில் வைபவம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புகழ் பெற்ற அங்கூர் வாட் கோவில் அமைந்துள்ள சியாம் ரீப் மாகாணத்தில் உள்ள கோ கேர் கோவிலில் இருந்து உள்நாட்டுப் போர்க்காலத்தில் இச்சிலைகள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட இச்சிலைகள் இந்துத் தொன்மப் பாத்திரங்களான துரியோதனன், பலராமன், மற்றும் பீமன் ஆகியோருடையது எனக் கருதப்படுகிறது. "கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள், களவு, கடத்தல், மற்றும் உலகச் சுற்றுலா போன்றவற்றில் இருந்து தப்பியிருந்த இச்சிலைகள் இறுதியாக தமது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளன என பிரதிப் பிரதமர் சோக் ஆன் கூறினார். உலக அருங்காட்சியகங்களில் உள்ள இவை போன்ற சிற்பங்களும் திரும்பக் கிடைக்க வேண்டும் என அவர் கூறினார். 5 அடி உயர துரியோதனன் சிலை 1972 இல் திருடப்பட்டு 1975 இல் லண்டனில் ஏலத்தில் விற்கப்பட்டது. இது பின்னர் நியூயோர்க் சோதர்பி ஏலவகத்தில் விற்கப்படவிருந்ததை கம்போடிய அதிகாரிகளின் மேன்முறையீட்டை அடுத்து விற்பனை நிறுத்தப்பட்டது. பல்வேறு சட்டச் சிக்கல்களின் இறுதியில் இச்சிலை கம்போடியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பீமனின் சிலை 1976 இல் கலிபோர்னியாவில் உள்ள நோர்ட்டன் சைமன் அருங்காட்சியகத்தினால் வாங்கப்பட்டது. பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, அவர்கள் இப்போது இதனை கம்போடியாவுக்கு "அன்பளிப்பாகக்" கொடுத்துள்ளார்கள். பலராமனின் சிலை அமெரிக்காவின் கிறிஸ்டி ஏலவகத்துக்கும் கம்போடிய அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை அடுத்து திரும்பக் கொடுக்கப்பட்டது. நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் சிறப்புச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. உலகிலுள்ள எந்த சிறந்த சாஸ்திரங்களின் சிந்தனைகளாக இருந்தாலும், அவை எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளுக்கான போட்டியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கதைகளை அனுப்ப கடைசித் தேதி 2014 சூலை 25 ஆகும். முதல் பரிசாக ரூ.10,000 இரண்டாம் பரிசாக ரூ. 8,000 மூன்றாம் பரிசாக ரூ. 6,000 மற்றும் ரூ. 2,000 வீதம் 5 ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன. முடிவுகள் செப்டம்பர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அகிலத்தின் வண்ணமயமான அதிர்ச்சி தரும் அகல்பரப்பு படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சாதாரண மனிதனால் காணமுடியாத புற ஊதாக்கதிர்கள் அடங்கிய அகிலமாக இது தெரிகிறது. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா கொண்டுவரவேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தனித் தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பிற்கு இந்தியா வலியுறுத்த வேண்டுமெனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பதவியேற்றுள்ள இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செவ்வாயன்று புது தில்லியில் சந்தித்தார். அச்சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை பிரதமரிடம் முதல்வர் அளித்தார். இந்த மனுவில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த கோரிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. 15 முதன்மையான தலைப்புகளில் பல்வேறு பிரச்சனைகள், இந்த மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. நீர்வள ஆதாரங்கள் குறித்த தலைப்பிற்கு அடுத்ததாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தலைப்பு மனுவில் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு காலில் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இவருக்கு வயது 71 ஆகிறது. ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு பெல்சியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் சென்ற புதன்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு அதன் உறுப்பு நாடான உருசியாவின் தலைவர் விளாதிமிர் பூட்டின் அழைக்கப்படவில்லை. இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டின் அமைதியை கருத்தில் கொண்டு உருசியா அதன்மீது ஏற்படுத்தியிருக்கும் படைக்குவிப்பு போன்ற தேவையற்ற செயல்களை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்தலைவர்களும் ஒரு மனதாக முடிவெடுப்பதாக அறிவித்தார்கள். அத்தோடு உருசியா இந்த நிகழ்வை பொருட்படுத்தாத பட்சத்தில் அதன் மீது பொருளாதார தடைவிதிக்கவும் தயக்கம் காட்டமாட்டோம் என்று தலைவர்கள் தெரிவித்தார்கள். இதற்கிடையில் ரஷ்யா தனது படைகளை பின்வாங்க செய்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஜான் குமார் ஜூன் 1-ம் தேதி தனது பேராசிரியர் பணியை நிறைவு செய்தார். அதேபோல் இவரின் ஓய்வை நினைத்து இவரின் மாணவர்கள் பலரும் (பெரிய பதவியில் உள்ளவர்கள்) புகழாரம் சூட்டினார்கள். அவர்கள் நேரில் சென்றும், மின்னஞ்சல்கள் மூலமும், சமூக வலைத்தளங்களிலும், கைபேசிகள் மூலம் குறுந்தகவல்களாகவும் மற்றும் கடிதம் உதவியுடனும் தமது பேராசிரியருக்கு புகழாரம் சூட்டி கண்ணீர் வடித்தார்கள். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தமது பயணிகளுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் கம்பியில்லா மெய்நிலை (வைஃபை, WiFi) தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக இங்கிலாந்து செல்லும் வழியிலும், பின்னர் படிப்படியாக மற்ற வழித்தடங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதற்கான செலவுகள் குறித்து உயர்மட்ட குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2016 ஆம் ஆண்டு வாக்கில் பிரத்தியேக செயற்கைக்கோள் ஒன்று ஏவப்படும். இந்த சேவை லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும். பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியுடன் கோள் ஒன்று மோதியதாலேயே நமது சந்திரன் தோன்றியதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பல்லோ விண்வெளி வீரர்களினால் கொண்டுவரப்பட்ட சந்திரனின் பாறை ஒன்றிலேயே தீயா என்ற கோளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்பின் மூலம் இப்படியான மோதுகையின் மூலம் சந்திரன் தோன்றியது என்று முன்னர் கூறப்பட்ட கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை சயன்சு என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. பாகித்தானின் மிகப் பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலைத் தாமே நிகழ்த்தியதாக பாகித்தானியத் தாலிபான்கள் கூறியுள்ளனர். இத்தாக்குதலில் 10 போராளிகள் உட்பட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 14 பேர் காயமடைந்தனர். விமான நிலையம் தற்போது தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இராணுவம் அறிவித்து சில மணி நேரத்தில் இன்று திங்கட்கிழமை மீண்டும் அங்கு சண்டை மூண்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. "கிராமங்கள் மீது இராணுவம் குண்டுத்தாக்குதல் நடத்தி அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறது. இவற்றுக்கு நாம் பதிலடி கொடுப்போம் என்பதை நாம் இத்தாக்குதல் மூலம் அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என தாலிபான்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதலில் இறந்தவரக்ள் அனைவரும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலை அடுத்து அனைத்து வானூர்திகளும் வேறு இடங்களுக்குத் திருப்பப்பட்டன. பாக்கித்தான் பிரதமர் நவாஸ் செரீப் முன்னெடுத்து வரும் தாலிபான்களுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு இத்தாக்குதல் தடங்கலை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 10 பேரைக் கொண்ட தாலிபான்களின் அணி இரண்டு பிரிவுகளாக விமான நிலையப் பாதுகாப்பு வீரர்களைப் போன்ற சீருடைகளில் பாதுகாப்புக் காவலாளிகளின் தடுப்பு அரண் வழியாக வாகனம் ஒன்றில் விமான நிலையத்தின் சரக்கு விமான முனைக்கு தானியங்கி ஆயுதங்கள், வெடிகுண்டுகள், ஏவுகணை வெடிகுண்டுகள் மற்றும் பிற வெடிபொருட்களோடு ஊடுருவினர். அவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதலுக்கான உடையையும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக தாலிபான்களுக்கு எதிராக பாக்கித்தான் இராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். 2011 ஆம் ஆன்டில் கராச்சியின் மெகரான் கடற்படைத்தளம் தாலிபான்களால் தாக்கப்பட்ட போது 10 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 17 மணி நேரம் நடந்த இத்தாக்குதலில் இரண்டு தாக்குதல் வானூர்திகளும் சேதமாக்கப்பட்டன. தமிழ்நாடு தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல்மின் நிலையத்தில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மிக விரைவில் இங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள தூத்துக்குடி நகரின் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் 2001- 2002 காலப்பகுதியில் என்.டி.பி.எல். என்ற கூட்டு நிறுவனத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான செலவுகள் ரூ.4,910 கோடிகள் ஆகும் என முடிவு செய்யப்பட்டது. ஆல்பா திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா மூலம் பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை கர்நாடகா மாநிலத்தின் கார்வார் கடற்பகுதியில் நடந்தது. இதில் அனைத்து படிநிலைகளிலும் வெற்றி கிடைத்தது. பிரமோஸ் ஏவுகணை விரைவில் சு-30எம்கேஐ என்ற போர் விமானத்தில் வைத்து சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்சிசன் உபகரணங்கள் எதுவும் இல்லாது 8,000 மீட்டர்கள் (26,200 அடி) உயரத்தில் இருந்து வெப்ப-வளிமக் கூண்டில் இருந்து குதித்து உலகசாதனை நிகழ்த்தினார். ரெமோ லாங் என்ற 38 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் வளிமக் கூண்டின் மூலம் 8,000 மீட்டர் உயரம் சென்று மேலே சென்று கீழே குதித்தார். 10 நிமிடங்களின் பின்னர் அவர் சுவிட்சர்லாந்தின் ஆர்பேர்க் என்ற இடத்தில் தரையிறங்கினார். அவர் இறக்கை ஆடை அணிந்திருந்தார். லாங் கீழே குதிப்பதற்கு முன்னர் சுமார் அரை மணி நேரம் இடைவிடாது ஆக்சிசனை சுவாசித்த வண்ணம் இருந்தார் என அவரது குழு தெரிவித்தது. துப்பாக்கிதாரிகளின் டிஎன்ஏ மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் இவர்கள் உஸ்பெக்கைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது. வடக்கு வரிசிஸ்தானின் பழங்குடிகளின் பிரதேசத்தில் இயங்கும் இவ்வியக்கத்தினர் கடும் பயிற்சி எடுத்த போராளிகள் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அல்-காயிதா மற்றும் தாலிபான்களுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர். 2012 பெசாவர் விமான நிலையத் தாக்குதலிலும் இவர்கள் பங்கு கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமைத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை கராச்சி விமான நிலையத்தின் அருகே அமைந்திருந்த பாதுகாப்புப் படையினரின் பயிற்சி முகாம் மீது துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இத்தாக்குதலில் எவரும் உயிர் துறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலையில் வடமேற்கு கைபர் பிரதேசத்தில் பாக்கித்தானிய இராணுவம் வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 15 போராளிகள் கொல்லப்பட்டனர். திட்டப்பக்கத்தில் இருந்தவை தமிழாக்கம் முடிந்து, இன்னொருவர் பார்வையிட்டபிறகு இங்குள்ள ஆங்கில உள்ளடக்கங்களை நீக்கிவிடலாம்) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிஷ்க் ஆப்ரகாம் என்ற சிறுவன் தனது 10 வயதில் உயர் பள்ளி டிப்ளோமா முடித்து சாதனை செய்துள்ளான். இச்சிறுவன் 7ஆம் வகுப்பிற்குப் பின் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இந்த சாதனையை செய்துள்ளான். தனது 10 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை எழுதுவது தனக்கு கடினமாக இருந்தது என்று கூறினான். அடுத்து கல்லூரியில் படிக்க ஆயத்தமாக உள்ளான். உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா என அழைக்கப்படும் உலகக்கிண்ணப் போட்டிகள் சூலை 13 வரை பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெறவுள்ளன. 32 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் ஒவ்வொன்றிலும் 4 நான்கு அணிகளாக எட்டுப் பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறும். ஏ பிரிவில் பிரேசில், மெக்சிக்கோ, குரோவாசியா, கமரூன் ஆகிய அணிகளும், பி பிரிவில் எசுப்பானியா, நெதர்லாந்து, சிலி, ஆத்திரேலியா ஆகிய அணிகளும், சி பிரிவில் கிரேக்கம், கொலம்பியா, ஐவரி கோஸ்ட், சப்பான் ஆகிய அணிகளும், டி பிரிவில் இத்தாலி, உருகுவாய், இங்கிலாந்து, கொஸ்டா ரிக்கா ஆகிய அணிகளும் இ பிரிவில் பிரான்சு, சுவிட்சர்லாந்து, எக்குவடோர், ஒந்துராசு அணிகளும், ஆறாவது எஃப் பிரிவில் ஆர்ஜன்டினா, பொசுனியா எர்சகோவினா, ஈரான், நைஜீரியா ஆகிய அணிகளும், ஏழாவது 'ஜி' பிரிவில் செருமனி, போர்த்துக்கல், கானா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும், எட்டாவது 'எச்' பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, உருசியா, தென் கொரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. முதற்கட்ட ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்குத் (நொக் அவுட்) தகுதி பெறும். 30 நிமிடங்கள் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் 660 பேர் நடனமாடி சிறப்பித்தார்கள். ஒவ்வொருவரும் பல்வேறு வகையான மரங்கள், மற்றும் பூக்கல் போன்ற ஆடைகளை அணிந்து நடனமாடினார்கள். பிரேசில் நாட்டின் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மூன்று வெவ்வேறு நிகழ்வுகளாக நடந்த ஆரம்ப விழாவின் இறுதியில் பிரேசில் பாடகி குளோடொயா லெயிட்டி, அமெரிக்கப் பாடகி ஜெனிபர் லோப்பசு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஜெனிபரே உலகக் கிண்ண போட்டிக்கான அதிகாரபூர்வப் பாடலைப் பாடியவர் ஆவார். ஆரம்ப வைபவத்தை அடுத்து உலகக்கிண்ணத்தின் முதலாவது போட்டி பிரேசில் அணிக்கும் குரொவாசியா அணிக்கும் இடையில் நடைபெற்றது. 3:1 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. குரோவாசியாவுக்கான கோலை பிரேசில் அணியைச் சேர்ந்த மார்செலோ சுய கோலாகப் போட்டார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. ஆட்டம் முடிவடைய 20 நிமிடங்கள் இருக்கையில் பிரேசில் அணிக்கு பெனால்ட்டி கோல் வாய்ப்புக் கிடைத்தது. 71-வது நிமிடங்களில் இந்த கோல் அடிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதன் போது பிரேசிலின் வீரர் நெய்மர் தனது இரண்டாவது கோலை அடித்தார். மூன்றாவது கோலை ஒஸ்கார் அடித்து பிரேசில் அணியை வெற்றி பெறச் செய்தார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா, நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் எசுப்பானிய கால்பந்து அணி இது போன்ற தோல்வியைத் தழுவியது கிடையாது. இடைவேளைக்குப் பின்னர் மழையும் தொடங்கியது. 53 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ரோபென், 64 நிமிடத்தில் டி வெர்ஜ் ஆகியோர் கோல்கள் போட்டனர், 72 ஆவது நிமிடத்தில் வான் பெர்சி மேலும் ஒரு கோலை அடித்தார். இறுதியாக ரோபென் நெதர்லாந்துக்காக தனது இரண்டாவது கோலை 79 ஆவது நிமிடத்தில் அடித்ததை அடுத்து எசுப்பானியா 1-5 எனும் தோல்வியைத் தழுவியது. அடுத்த கட்டத்துக்கு முன்னேற குழு நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் எசுப்பானியா வெற்றி பெற வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்பு 1950 ஆம் ஆண்டு பிரேசிலிடம் 6-1 என்ற கோல் கணக்கிலும், 1963 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணியிடம் 6-2 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெயின் கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது. ஆப்பிரிக்கக் காடுகளில் தந்தத்திற்காக கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கென்யா, தான்சானியா, மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் அதிகளவாக 80% யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த வேலைகளை வியாபாரத்தில் கள்ளத்தனமாக செயல்படும் மாபியா கும்பல் நடத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆசியப் பகுதிகளிலும் நடக்கிறது ஆனால் துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை என்று சர்வதேச வனவிலங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. யானைகள் சீன சர்க்கஸ்களுக்கும், தாய்லாந்து சுற்றுலாத் துறைக்கும் இங்கிருந்து அனுப்பப்படுவதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது. சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து 20 ஆயிரம் கோடி செலவில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான சேவை ரயில் குளு குளு வசதி செய்யப்பட்டதாக இருக்கும். இந்த சேவையைப் பயன்படுத்த சீசன் டிக்கட்கள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக டோக்கன், மற்றும் ஸ்மார்ட் கார்டு முறை பயன்படுத்தப்படும். குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும் படிப்படியாக 15 ரூபாய், 20 ரூபாய் என்று வசூலிக்கப்படும். இலங்கையின் தெற்கே களுத்துறை மாவட்டத்தின் அளுத்கமை நகரில் சிங்களப் பௌத்தக் கும்பல்களுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த மோதல்களில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர். பொசன் பூரணை நாளன்று குருந்துவத்தை சிறீ விஜயராம கோயிலின் பிரதம குருவும் அவரது வாகன ஓட்டியும் தர்கா நகரைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி தீவிரவாதப் பௌத்த அமைப்பான பொது பல சேனா நேற்று அளுத்கமையில் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது. இதனை அடுத்து இரு இனத்தவரிடையே நேற்று மோதல்கள் வெடித்தன. முஸ்லிம்களின் கடைகள், மற்றும் பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. ஊர்வலத்தில் சென்ற பௌத்தர்கள்மீது கல் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தினர். இதனை அடுத்து அப்பிரதேசத்தில் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளுர் செய்தியாளர்களும் இதில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிடுவதில் தணிக்கை உத்தரவு வந்துள்ளதாக உள்ளூர் செய்தித்தளங்கள் தெரிவித்துள்ளன. அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. சட்ட ஒழுங்கை பேணி பொதுமக்களின் உயிர்களையும், வழிபாட்டுத் தலங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியான ஈராக் நாட்டில் ஆளும் சியா முஸ்லிம்களின் ஆட்சிக்கு எதிராக முன்னால் அதிபர் சதாம் உசேனின் சன்னி பிரிவு ஆதரவுப்படைகளின் புரட்சி கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட் (ஐஎஸ்ஐஎல்) என்ற புரட்சி படையானது சில நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் 16ஆம் தேதி கணக்குப்படி வடக்கு பிராந்திய முக்கிய நகரான தல் அஃபாரை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் இரண்டு லட்சம் மக்கள் வாழுகிறார்கள். இதில் அதிகப்படியாக ஜியா முஸ்லீம்கள், மற்றும் சன்னி டர்கோமென் பிரிவைச்சேர்ந்த மக்கள் வாழுகிறார்கள். இந்த தாக்குதல்களினால் ஜியா பிரிவு தலைவரான பிரதமர் நூரி அல் மாலிக் அரசிற்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சன்னி முஸ்லீம்களின் படை பிடித்துள்ள நகர மக்கள் குர்திஸ் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். உலக கோப்பை கால்பந்து தொடரில் தரவரிசையில் நம்பர்–2ம் இடத்தில் உள்ள ஜெர்மனி அணியும், 4வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும் இன்று மோதுகின்றன. இந்த உலக கிண்ண போட்டில் போர்ச்சுகல் நட்சதிர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்திற்க்கு பெறும் எதிபார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஈராக்கில் வன்முறைகள் இடம்பெற்று வரும் மோசுல் நகரில் பணியாற்றிவந்த 40 இந்தியர்கள் கடத்தப்பட்டதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடத் தொழிலாளிகளே இவ்வாறு கடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார். இவர்களில் பெரும்பான்மையானோர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், கடத்தியவர்களின் கோரிக்கை எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இது குறித்த மேலதிக தகவலறிய சிறப்புத் தூதுவர் ஒருவர் பாக்தாதுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஈராக்கில் கிளர்ச்சியாளர்களினால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நகரான திக்ரித்தின் மருத்துவமனையில் பணி புரிந்து வரும் 46 இந்தியத் தாதிகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் புதிய நிருவாகம் அவர்களுக்குரிய பழைய சம்பள நிலுவையை வழங்க மறுத்து வருவதாக இத்தாதிகள் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளனர். திக்ரித், மற்றும் மோசுல் நகரங்கள் இசிசிசு என அழைக்கப்படும் சுணி இசுலாமியத் தீவிரவாதக் குழுவினர் கடந்த வாரம் ஈராக்கிய இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர். ஈராக்கிற்கு தமது குடிமக்களை செல்ல வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது. அங்கிருப்போரையும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ் இலக்கியத் திருவிழா ஒன்று நாளையும், நாளை மறுதினமும் சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொடக்கப் பேருரை நிகழ்த்தவுள்ளார். ஈடாக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் மேலும் ஒரு நகரை சுணி இசுலாமியப் போராளிகள் கைப்பற்றினர். கடந்த இரு நாட்களில் அவர்கள் கைப்பற்றிய நான்காவது நகரம் இதுவாகும். முன்னதாக பாக்தாத் நகரை நோக்கிய தமது முன்னகர்வின் போது சிரிய எல்லையில் கையிம் என்ற நகரையும், மேற்கு ஈராக்கில் ராவா, அனா ஆகிய இரு நகரங்களையும் கைப்பற்றியிருந்தனர். கையின் நகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் 30 ஈராக்கிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சுணி மக்கள் பெரும்பான்மையாக வாழும் அன்பார் மாகாணத்தின் முழுப் பகுதியையும் அத்துடன் ஈராக்கியத் தலைநகரையும் கைப்பற்றுவதே கிளர்ச்சியாளர்களின் முக்கிய நோக்கம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாத ஆரம்பத்தில் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல் சுணி போராளிகளின் வசம் வீழ்ந்தது. அன்றில் இருந்து அவர்கள் ஈராக்கின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை அடக்க ஈராக்கிய அரசு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவியைக் கேட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் தனது படைகளை ஈராக்கில் இருந்து திரும்ப அழைத்த அமெரிக்கா தற்போது 300 இராணுவ ஆலோசகர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. ஈராக்கியப் பிரதமர் நௌரி மாலிக்கி சியா இசுலாமியர்களின் நலன்களையே கவனித்து வருவதாகவும், சுணி முஸ்லிம்களை அவர் உதாசீனப்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற துடுப்பாட்டத் தேர்வுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று இங்கிலாந்து மண்ணில் தனது முதலாவது தேர்வுத் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. தொடரின் இரண்டாவதும் கடைசியுமான இப்போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 457 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மகேல ஜெயவர்தனா 79 ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 8 வது விக்கெட்டுக்காக இணைந்து ஆடிய ரங்கன ஹேரத் மற்றும் தலைவர் மெத்தியூஸ் ஆகியோர் இணைந்து 149 ஓட்டங்களைப் பெற்றனர். அணித்தலைவர் மெத்தியூஸ் 160 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இங்கிலாந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் அது 5 விக்கெட்டுகள் இழப்பில் 57 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இடைநிலை வீரர்கள் சில ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் மொயீன் அலி திறமையாக ஆடி ஆட்டமிழக்காமல் தனது முதலாவது சதத்தைப் பெற்றார். மறுமுனையில் இவருடன் ஆடிய அன்டர்சன் 50 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்கள் எதுவும் பெறாமலே ஆட்டமிழந்தார். இறுதியில், ஒரு பந்து மட்டுமே வீச வேண்டிய நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சங்கக்கரா, ஜெயவர்த்தனா இருவரும் தேர்வுத் தரவரிசையில் 6வது இடத்தில் 11493 ஓட்டங்கள் பெற்று சமநிலையில் இருக்கின்றனர். இங்கிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்கு சென்று அகதிகளாக தஞ்சமடையும் துயர சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு உள்ளது. இந்த வரிசையில் அதிகமாக ஆஸ்திரேலியா நாட்டில் தஞ்சமடைகிறார்கள். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சமடைய 152 இலங்கை அகதிகள் படகில் சென்றுள்ளார்கள். அவர்கள் சென்ற படகு ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 250 கி.மீட்டர்கள் தூரத்தில் எண்ணெய்க் கசிவின் காரணமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய நாட்டின் வானொலி தெரிவித்துள்ளது. அல்ஜீரியாவின் தேசிய கால்பந்து அணி முதற்தடவையாக ஆட்டமிழக்கும் நிலையான இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானதை பல்லாயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் அந்நாட்டின் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர். இரவு முழுவதும் வாணவேடிக்கைகளுடன் மக்கள் தமது குடும்பங்களுடன் கொண்டாடினர். அடுத்த சுற்றில் திங்கள் அன்று அல்ஜீரியா செருமனியுடன் மோத விருக்கிறது. 1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மேற்கு செருமனி ஆஸ்திரியாவுடன் மோதி சமனாக ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதனால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின. இதனால் அல்ஜீரியா இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகவில்லை. மேற்கு செருமனி வேண்டுமென்றே இவ்வாறு சம்னாக ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது அதனை நாம் இன்னமும் மறக்கவில்லை என அல்ஜீரியப் பயிற்சியாளர் வாகிது அலில்கோட்சிச் கூறினார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் நேற்று அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளனர் என அஞ்சப்படுகிறது. சென்னை, போரூருக்கு அருகிலுள்ள மௌலிவாக்கம் எனும் பகுதியில் 12-மாடி குடியிருப்பு மனை ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கட்டடம் இடிந்து வீழ்ந்தது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது அங்கு கனத்த மழை பெய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளிடையே நிவாரணப் பணியாளர்கள் அங்கு சிக்குண்டவர்களைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். "சுமார் 132 கட்டடத் தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளார்கள் என நம்பப்படுகிறது. இவர்களில் 100 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரையில் 26 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இவ்விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் இந்தியத் தலைநகர் தில்லியில் 4-மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 5 சிறுவர்கள் உட்படப் 10 பேர் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் காவல்துறையினரால் விடுவிக்கப்படாததை அடுத்து உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். சிறுவனின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மூன்று இசுரேலியச் சிறுவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகவே பாலத்தீன சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முகம்மது அபு காதிர் என்ற 17 வயது பாலத்தீன சிறுவனின் உடல் நேற்று புதன்கிழமை எருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிறுவன் பாலத்தீனர்கள் அதிகம் வாழும் கிழக்கு எருசலேமின் சுஃபாத் நகரில் வாகனம் ஒன்றில் நேற்று பலவந்தமாக ஏற்றப்பட்டுக் கடத்தப்பட்டான் என செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலையில் இசுரேலிய வான் படையினர் காசாவில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 10 பத்து பாலத்தீனர்கள் காயமடைந்தனர். பாலத்தீனப் போராளிகள் இசுரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல்கள் நடத்தியதாலேயே இசுரேல் பதில் தாக்குதல் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யூதக் குடியேற்றக்காரர்களே சிறுவனைக் கடத்திச் சென்று கொன்றுள்ளதாக பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் தெரிவித்தார். இப்படுகொலையை இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு வன்மையாகக் கண்டித்துள்ளார். கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு அவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இரண்டரை வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட யூத இன மதப்பள்ளி மாணவர்கள் மூவரின் இறந்த உடல்கள் கடந்த திங்களன்று எப்ரோன் நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த இசுரேலிய இளைஞர்கள் கடந்த மாதம் 12 ஆம் திகதி ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் வைத்து காணாமல் போயினர். இவர்களைத் தேடி மேற்குக் கரையில் இசுரேல் இராணுவம் தீவிர சோதனை நடத்தியிருந்தது. இவர்களது இறுதிக் கிரியைகள் செவ்வாய் அன்று நடைபெற்றன. ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியிருந்த 46 இந்திய செவிலியர் உட்பட 137 பேர் பெரும் முயற்சிக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். ஈராக்கில் 40 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டதாக இந்தியா அறிவிப்பு சூன் 18, 2014 ஆத்திரேலியாவின் வட-மேற்கேயுள்ள கடல் பகுதியில் 200 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்க ஆத்திரேலியா மறுத்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் இந்த இரண்டு கப்பல்களும் இடைமறிக்கப்பட்டதாகவும், இவற்றில் பயணம் செய்த சிலர் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பன்னாட்டுச் சட்டத்திற்கு முரணாக ஆத்திரேலியா நடத்துள்ளதென அகதிகளுக்காகக் குரல் கொடுப்போர் குற்றம் சாட்டினர். படகுகளில் இருந்தோரில் குறைந்தது 11 பேர் இலங்கையில் படையினரால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்கள் என அவர்கள் கூறுகின்றனர். கடல் வழியாக ஆத்திரேலியாவை அடையும் அகதிகள் மீது அந்நாட்டு கடுமையான அழுத்தங்களை அண்மைக் காலங்களில் பிரயோகித்து வருகிறது. இரண்டு படகுகளைத் தாம் வழி மறித்ததாகவோ அல்லது மறுத்தோ இதுவரையில் ஆத்திரேலிய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை. அகதிகளின் விண்ணப்பங்களை முறைப்படி பரிசீலிக்காமல் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவது பன்னாட்டுச் சட்டத்தின் படி சட்டவிரோதமானது என ஆத்திரேலியாவின் அகதிகளுக்கான பேரவை கூறியுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து ஜோர்ஜியா பிரிந்ததை அடுத்து இவர் அந்நாட்டின் அரசுத்தலைவரானார். ஜோர்ஜியாவில் உள்நாட்டுப் போரை இவர் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் நிலைப்புநிலையை ஏற்படுத்தினார். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல்களில் குளறுபடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி, ரோஸ் புரட்சி என்ற பெயரில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனை அடுத்து 2003 நவம்பரில் இவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். 1928 இல் பிறந்த செவர்த்நாத்சே 1946 இல் கம்யூனிஸ்டுக் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்தார். 1972 இல் ஜோர்ஜியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவரானார். 1985 இல் சீர்திருத்தத் தலைவரான மிக்கைல் கொர்பச்சோவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தானில் சோவியத் படையினரை மீள அழைப்பதற்கும், அதற்குப் பின்னர் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரவும் இவர் பெரும் பங்காற்றினார். 1990 இல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியைத் துறந்த செவர்த்நாத்சே சோவியத் ஒன்றியம் பிளவடைய ஆரம்பித்த வேளையில் 1991 இல் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சரானார். 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, ஜோர்ஜியாவின் அரசுத்தலைவரானார். இவர் தனது இறுதிக் காலத்தில் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசியில் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டார். ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் செருமனியின் தொமஸ் முல்லர் முதலாவது கோலைப் போட்டார். ஆட்டம் தொடங்கி 29 நிமிடங்களில் செருமனி அணி 5-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தனர். 23-வது நிமிடம் முதல் அடுத்த 6 நிமிடங்களில் 4 கோல் அடித்து சாதனை படைத்தது செருய்மனிய அணி. இரண்டாவது பகுதியில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டனர். 90வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஒஸ்கார் ஒரு கோலைப் போட்டார். நேற்றைய வெற்றி மூலம் செருமனிய அணி உலகக்கிண்ண வரலாற்றில் 8வது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலககோப்பைப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இவற்றில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் வாகையாளர் பட்டத்தைப் பெற்றது. பிரேசில் அணி, தனது கால்பந்து வரலாற்றிலேயே பெரும் தோல்வியை நேற்று சந்தித்தது. கடைசியாக 1920-ம் ஆண்டு உருகுவாய் அணிக்கு எதிராக 0-6 என்ற கணக்கில் தோற்று இருந்தது. பிரேசில் அணியின் முக்கிய ஆட்டக்காரர் நெய்மார் முதுகெலும்பு முறிந்த நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. அத்துடன் பிரேசில் அணித்தலைவர் தியேகோ சில்வாவும் ஏற்கனவே இரண்டு மஞ்சள் அட்டைகள் வாங்கியதால் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. செருமனியின் மிரசிலாவ் குளோஸ் உலகக்கிண்ண போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் தனது 16வது உலககோப்பை கோலைப் போட்டு பிரேசிலின் ரொனால்டோவின் சாதனயை முறியடித்தார். குளோஸ் இதுவரை 4 உலகக்கிண்ணத் தொடர்களில் பங்குபற்றினார். இதற்கிடையில், நேற்றைய போட்டியில் பிரேசில் அணி அடைந்த மிகப்பெரும் தோல்வியினால் அந்நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் பிரேசிலியர்கள் அனைவரும் போலவே, இத்தோல்வியால் நானும் மிக மிக வேதனை அடைந்துள்ளேன் என பிரேசில் அரசுத்தலைவர் தில்மா ரூசெஃப் தனது டுவீட்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை ஆர்ஜென்டீனாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நடைபெறவிருக்கும் மற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் செருமனியை எதிர்கொள்ளும். செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கல் இறுதிப் போட்டியைக் கண்டு களிக்க பிரேசில் செல்லவிருக்கிறார். காசா மீது இசுரேல் இன்றும் தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த சில நாட்களாக இசுரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் மொத்தம் 80 பேர் வரை இறந்துள்ளார்கள். காசாவின் தெற்கே கான் யூனிசு என்ற இடத்தில் வீடு ஒன்றின் மீதும் உணவகம் ஒன்றின் மீதும் இன்று இசுரேலின் குண்டுகள் வந்து வீழ்ந்ததில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இதன் போது 5 பிள்ளைகள், மூன்று பெண்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் போராளிகளும் இசுரேல் மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசி வருகின்றனர். கடந்த நள்ளிரவு முதல் தாம் காசாவின் 108 இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்தது. ஹமாசு போராளிகள் 12 ஏவுகணைகள் ஏவியதாகவும் அவற்றில் ஏழை தாம் அழித்து விட்டதாகவும் இசுரேல் கூறியது. இசுரேல் காசா மீது முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைக்கு "பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இசுரேல் 40,000 துணைப் படையினரை அவசர இராணுவ சேவைக்கு அழைத்துள்ளது. தரை வழித் தாக்குதல்களையும் இசுரேல் விரைவில் ஆரம்பிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் நிலைமை "கத்தியின் முனையில் இருப்பது போன்று என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார். காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுத் அப்பாஸ் இசுரேலைக் கேட்டுக் கொண்டுள்ளார். 90 நிமிட நேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடாமல் சமநிலையில் முடிந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டாவது கூடுதல் நேரத்தின் 113 வது நிமிடத்தில் மரியா கோட்சே கோல் அடிக்க, ஆட்டத்தை இரசித்துக் கொண்டிருந்த செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கல் உட்பட அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். ஆட்டத்தை சமப்படுத்த அர்ச்சென்டீனா எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. அர்ச்சென்டீனாவின் நட்சத்திர வீரர லியோனல் மெசி மிகவும் சிறப்பாக ஆடியிருந்தாலும், செருமனியின் எதிர்த் தாக்குதலை அவ்வணியினால் எதிர்கொள்ள முடியவில்லை. இறுதியில் செருமனி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது. மொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 171 கோல்கள் மொத்தமாக அடிக்கப்பட்டன. சிறந்த கோல் காப்பளராக செருமனியின் மனுவேல் நோயரும். தொடரின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக அர்ச்செண்டினாவின் லியோனல் மெசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருது கொலம்பியாவின் ஜேம்சு ரொட்ரிகசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் ஆட்டக்காரராக பிரான்சின் பவுல் பொக்பா தெரிவு செய்யப்பட்டார். ரியோ டி ஜெனெய்ரோ மரக்கானா விளையாட்டரங்கத்தில் நேற்றைய இறுதிப்போட்டி நடைபெறும் முன்னர் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கொலம்பியாவைச் சேர்ந்த பொப் பாடகி ஷகீரா, மெக்சிகோவின் கித்தார் கலைஞர் சான்டனா, பிரேசிலின் பாடகி ஐவெட் சாங்கலோ மற்றும் பலர் இசை விருந்து படைத்தனர். அடுத்த உலகக்கோப்பை காற்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு உருசியாவில் நடைபெறவுள்ளது. உருசியத் தலைநகர் மாஸ்கோவில் சுரங்கத் தொடருந்துப் பாதை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயமடைந்தனர். மாஸ்கோவின் மேற்கே சிலவியான்ஸ்கி புலெவார்ட் மற்றும் மலஜியோச்னயா ஆகிய தொடருந்து நிலையங்களுக்கிடையே சுரங்கப் பாதையில் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. 200 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த பலருக்கு அதே இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 106 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 24 பேர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். நான் பெரியார் பல்கலைக்கழக இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை மாணவன். விக்கிசெய்தியில் இணைந்தது எமக்கு மகிழ்வளிக்கும் செய்தி. நேற்று வியாழக்கிழமை ஆடி முதல் நாளன்று, தொன்ம நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் வழக்காறு நிகழ்ந்தது. இந்நிகழ்வை முன்னிட்டு மக்கள் தேங்காயை நார் முழுவதும் நீங்குமாறு தரையில் நன்கு தரையில் தேய்த்துப், பிறகு தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு அதன் நீரை முழுவதும் வெளியேற்றிய பின், தேங்காயின் மேல் மஞ்சளைப் பூசுவார்கள். பின்பு தேங்காயினுள் எள், கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய் ஆகியவற்றை இட்டு அந்தத் தேங்காயை அழிஞ்சி எனப்படும் குச்சியில் செருகி, தங்கள் இல்லத்திற்கு அருகில் நெருப்பு மூட்டி நண்பர்கள், உறவினர்களுடன் நெருப்பில் தேங்காயைச் சுட்டார்கள். தீயில் கருகித் தேங்காய் நன்கு வெந்தவுடன், சுடப்பட்ட தேங்காயைக் கடவுளுக்கு வைத்துப் படைத்து உண்டார்கள். பின்பு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சுடப்பட்ட தேங்காய் படையலை வழங்கி மகிழ்ந்தார்கள். இந்தத் தேங்காய் சுடும் வழக்காறு சேலம், தருமபுரி, நாமக்கல், கிருட்டிணகிரி மாவட்டங்களுக்கே உரிய தனித்த நாட்டார் வழக்காறு எனவும் இந்த நிகழ்வு மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகவும், மகாபாரதப்போர் ஆடி மாதம் 1-ஆம் நாள் தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது, எனும் அடிப்படையில் ஆடி முதல் நாளன்று இந்நிகழ்வு கடைபிடிக்கப்படுவதாகவும் சேலம் வெள்ளாளப்பட்டியைச் சார்ந்த ப. செல்வகுமார் குறிப்பிடுகின்றார். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற மலேசிய ஏர்லைன்சு பயணிகள் விமானம் ஒன்று உக்ரைனில் போர் நடைபெறும் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டனர். உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள தோனெத்ஸ்க் வட்டாரத்திலேயே இவ்விமானம் வீழ்ந்துள்ளது. இவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக கிளர்ச்சியாளர்களும் உக்ரைனிய அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். போயிங் 777 ரக மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 சக்தார்ஸ்க் என்ற இடத்தில் வெடித்து வீழ்ந்தது. இவ்விமானத்தில் மலேசியர் உட்படப் பல வெளிநாட்டவரும் பயணம் செய்ததாக மலேசியா ஏர்லைன்சு விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்களில் 173 நெதர்லாந்து நாட்டவர், 27 ஆத்திரேலியர், 44 மலேசியர்கள் (இவர்களில் 15 பேர் விமானப் பணியாளர்கள் 12 இந்தோனேசியர்கள், மற்றும் ஒன்பது பிரித்தானியர் ஆகியோர் அடங்குவர். அத்துடன் செருமனி, பெல்ஜியம், பிலிப்பீன்சு, கனடா, இந்தியா, ஆங்காங் நாட்டுக்காரரும் இருந்தனர். இறந்தவர்களில் உலகப்புகழ் பெற்ற டச்சு ஆய்வாளர் ஜோயெப் லாங்கேயும் அடங்குவார். வீழ்ந்த விமானத்தின் கறுப்புப் பெட்டிகளைத் தாம் கண்டெடுத்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவை மேலதிக ஆய்விற்காக உருசியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் வீழ்ந்த இடத்திற்கு பன்னாட்டு ஆய்வாளர்களை அனுமதிப்பதற்கு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்விமான விபத்து "பயங்கரவாதத்தின் ஒரு நடவடிக்கை" என உக்ரைனிய அரசுத்தலைவர் கூறினார். உருசியாவே இதற்குக் காரணம் என அவர் உருசியாவைக் குற்றம் சாட்டினார். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது. இதற்கான ஆதாரங்களையும் உக்ரைனிய அரசு வெளியிட்டுள்ளது. இவ்விபத்துக் குறித்து பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உருசியத் தலைவர் பூட்டின் கேட்டுக் கொண்டார். முன்னதாக தமது இராணுவ விமானம் ஒன்றை உருசிய வான் படையினர் புதன்கிழமை அன்று சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியிருந்தது. கடந்த திங்களன்றும் சரக்கு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆசியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாகக் கருதப்படுகிறது. உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டு வீழ்த்தி இருந்ததால், இந்த பாதையை பன்னாட்டு விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே அவ்வழியாக பறக்கும் அனைத்துப் பயணிகள் விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என பல உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய விமான விபத்து குறித்து ஆராய்வதற்காக ஐநா பாதுகாப்பு அவை இன்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த விருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்சு விமானம் எம்எச்370 239 பேருடன் காணாமல் போனது. இவ்விமானம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டோரெசு என்னும் நகரில் குளிரூட்டப்பட்ட தொடருந்து வண்டியொன்றில் வைக்கப்பட்டுள்ளன. மலே­சிய விமானம் வீழ்ந்த இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயன்று வருவதாக உக்ரைனிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. உருசியாவின் ஆதரவிலேயே கிளர்ச்சியாளர்கள் செயல்படுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் கிளர்ச்சியாளர்கள் தமக்கு விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவதற்கு முழுமையான அனுமதியை வழங்கவில்லை என விமானத்தின் சிதைவுகளை ஆராய்வதற்கெனச் சென்ற ஐரோப்பியக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் விமானத்தில் பயணம் செய்த பயணிகளதும், பணியாளர்களினது விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன் படி, விமானத்தில் 193 நெதர்லாந்து நாட்டவரும் (இவர்களில் ஒருவர் அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர்) 43 மலேசியர்கள் (15 பணியாளர் உட்பட 27 ஆத்திரேலியர்கள், 12 இந்தோனேசியர்கள், 10 பிரித்தானியர் (ஒருவர் தென்னாப்பிரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர் நான்கு செருமனியர், நான்கு பெல்ஜியம் நாட்டவர், மூன்று பிலிப்பீனியர், மற்றும் கனடா, நியூசிலாந்து நாட்டவர்கள் ஒவ்வொருவர் பயணித்துள்ளனர். ஆத்திரேலியாவில் நடைபெறும் எயிட்சு பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்குபற்றவெனப் புறப்பட்ட சில ஆய்வாளர்களும் விபத்தில் இறந்துள்ளனர். இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் சண்டை தொடர்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இசுலாமியப் போராளிகள் கடந்த மாதம் மோசுல் நகரைக் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள கிறித்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். சூலை 9 இல் வெளியிடப்பட்ட ஒரு யூடியூப் காணொளியில் விவிலியக் காலக் கல்லறை ஒன்று சேதமாக்கப்படுவது காண்பிக்கப்பட்டது. முன்னதாக, மோசுல் நகரில் உள்ள கிறித்தவர்கள் அனைவரும் இசுலாமிய மதத்திற்கு மாற வேண்டும், அல்லது அவர்கள் வரி செலுத்த வேண்டும், மீறினால் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை வரை அவர்களுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பெருமளவு கிறித்தவர்கள் வெள்ளியன்றே அங்கிருந்து வெளியேறி விட்டனர். இவர்கள் குர்திஸ்தானின் டோகுக், ஆர்பில் நகர்களை நோக்கிச் செல்வதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார். மோசுல் நகரில் உள்ள கிபி 4ம் நூற்றாண்டு பழமையான ஒரு கிறித்தவ மதப்பள்ளி ஒன்றைக் கைப்பற்றிய இசுலாமியர்கள் அங்கிருந்த மதகுருமாரை வெளியேற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2003 ஆம் ஆண்டில் முன்னாள் தலைவர் சதாம் உசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை ஈராக்கில் ஏறத்தாழ ஒரு மில்லியன் கிறித்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இசுலாமியப் போராளிகளினால் இவர்கள் ஆங்காங்கே தாக்குதல்கலுக்கு உள்ளாகியதை அடுத்து பலர் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது ஈராக்கில் 450,000 கிறித்தவர்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறிய பிரபோவோ சுபியான்டோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து முறையிடப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் சர்வாதிகார ஆட்சிக்குத் தாம் முடிவு கட்டவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜோகோவி, ஏழைகளின் சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார். இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை தொடருந்து ஒன்று மோதியதில் குறைந்தது 20 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்தின் சாரதியும் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். பேருந்து பாதுகாப்பற்ற கடவை ஒன்றைக் கடக்க முற்படுகையிலேயே பயணிகள் தொடருந்து ஒன்று அதனை மோதியுள்ளது. பேருந்து பல நூறு மீட்டர்கள் தூரம் தொடருந்துடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. மெதாக் மாவட்டத்தில் மசாய்ப்பேட்டை என்ற ஊரில் இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 13 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் பேருந்தில் சிக்கிய சில சிறுவர்களைக் காப்பாற்ற முடிந்தது. காயமடைந்தோர் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டார். இப்பேருந்தில் 5 முதல் 12 வயது வரையான சிறுவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் சுமார் 15,000 பாதுகாப்பற்ற கடவைகள் உள்ளன. இதனால் ஆண்டு தோறும் இங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஆத்திரேலியக் கடற்பரப்பில் ஓசன் புரொட்டெக்டர் என்ற ஆத்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 ஈழத்தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் கொக்கோசுத் தீவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வேறு இடங்களுக்கு மூன்று விமானங்களில் எடுத்துச் செல்லப்பட்டனர். கொக்கோசுத் தீவில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏர் நவூரு போயிங் 737 விமானம் மூலம் இன்று நண்பகல் அளவில் அங்கிருந்து புறப்பட்டது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என அறியப்படாவிட்டாலும், மேற்கு ஆத்திரேலியாவின் கேர்ட்டின் தடுப்பு முகாம் நோக்கி இவ்விமானம் சென்றதாக கொக்கோசுத் தீவின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரு விமானங்களும் மீதமானோரைக் கொண்டு சென்றுள்ளது. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வரிசையாக கப்பலில் இருந்து இறக்கப்பட்டதை த கார்டியன் பத்திரிகை காணொளிச் செய்தியொன்றைத் தந்துள்ளது. இவர்கள் வெளியேறிச் சென்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் வரிசையாக நின்றிருந்தனர். இந்தியாவில் இருந்து கடல் வழியாக ஆத்திரேலியாவை நோக்கி வந்த 157 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களையும் ஆத்திரேலிய அரசு நவூரு தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் 50 பேர் குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர். இவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில் இந்திய குடிவரவு அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் இந்திய அதிகாரிகளை சந்திக்க மறுத்து விட்டதை அடுத்து அனைவரும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டதாக ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். இவர்களது அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரையில் மாதக்கணக்கில் நவூருவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் இவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என ஸ்கொட் மொரிசன் கூறினார். “நவூருவுக்கு சென்றவர்கள் எவரும் இனிமேல் இந்தியாவுக்கு செல்ல முடியாமல் போகும் எனத் தெரிவித்த மொரிசன், இவர்கள் ஆத்திரேலியாவிலும் குடியமர முடியாது. அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோரும், ஆத்திரேலியாவுக்குள் வர முடியாது. நவூருவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, இவர்கள் நவூருவிலேயே குடியேற்றப்படுவர் எனத் தெரிவித்தார். இந்திய அதிகாரிகளை சந்திக்க அகதிகளின் வழக்கறிஞர்களே அவர்களைத் தடுத்துள்ளனர் என நம்பப்படுவதாக அவர் கூறினார். 157 பேரில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களை இந்தியா திரும்ப எடுத்துக் கொள்ளும் என இந்தியாவுடன் ஆத்திரேலியா உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அகதிகள் அனைவரையும் ஆத்திரேலியாவில் குடியேற அனுமதிக்க வேண்டுமென பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் சேரா ஆன்சன்-யங் பரப்புரை செய்திருந்தார். குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இக்கட்டான" மற்றும் "கோழைத்தனமான நடவடிக்கைகளில் மிகவும் பெயர் பெற்றவர் என பசுமைக் கட்சி விமர்சித்துள்ளது. நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்பட உள்ளதாக இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய சட்ட வல்லுனர் டெஸ்மன் டி சில்வா தலைமையில் மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்றினை மகிந்த ஏற்கனவே நியமித்திருந்தார். தற்போது இந்த எண்ணிக்கையை அவர் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான விவகாரங்களில் மட்டுமே நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள் எனவும், விசாரணைகளில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த விசாரணைகள் தொடர்பில் எவரும் பதற்றமடைய வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "நாம் இப்போது வால்வெள்ளியில் இருக்கிறோம் என செருமனியில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த சில்வெயின் லோடியோ தெரிவித்தார். பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியை 2014 நவம்பரில் கீழிறக்கும். விக்கிப்பீடியாவில் சுற்றிக் கொண்டிருப்பேன். உதவி தேவைப்படின் அங்கே கேளுங்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் சார்பில் திருமணத்திற்கு முன்-பின் மற்றும் குடும்பம் சார்ந்த மன நல ஆற்றுப்படுத்துதல் தேசியப் பயிலரங்கம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 20 -ஆம் நாள் முதல் 22-ஆம் நாள் அறிவியல் புலக்கூடம் 2 இன் சொற்பொழிவு அறையில் நிகழ உள்ளது. இப்பயிலரங்கத்தில் உளவியல் துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உடல் மற்றும் மனநலச் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சமூகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இப்பயிலரங்கத்தில் மன நல ஆலோசகர்களுக்கு, தி ஃபவுண்டன் மனநலப் பயிற்சி மையத்தின் இயக்குநர் அருட்தந்தை ஜான் ஆண்டன் சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளார். இப்பயிலரங்கிற்கான பதிவுக்கட்டணம் மற்றும் மேலதிக விவரங்களுக்கு ஜெ.பரமேஸ்வரி, உதவிப் பேராசிரியர் மற்றும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், உளவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம் -636011 அவர்களைத்தொடர்பு கொள்ளலாம். அலைபேசி 9655589871. தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் அனைத்து மாவட்ட தலைநகரிலும், சிறப்பான ஆட்சிமொழி செயலாக்கத்தின் பொருட்டு அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கினை ஒருங்கிணைத்து வருகின்றது. இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சியை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அளிக்க உள்ளார். நிகழ்ச்சி குறித்த தொடர்புக்கு: லெ.கல்யாணசுந்தரி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ அலைபேசி எண்: 9443736686 உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இந்திய முஜாஹிதீனை சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார். பூனேவில் தகவல் அழைப்பு மையத்தில் வேலை செய்து வந்த அஜாஸ் ஷேக் என்பவரை டெல்லி காவல்த்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை கைது செய்தது. கைது செய்யப்பட அஜாஸ் ஷேக் என்பவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமா மசூதி குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இவரது கைதையும் சேர்த்தால் இந்தியன் முஜாஹிதீனின் முக்கிய புள்ளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட தீவிரவாதி தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர் என்றும், தீவிரவாதிகளுக்கு போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் கைது நடந்ததை தொடர்ந்து, அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நடக்க திட்டமிடப்பட்டிருந்ததா என காவல்த்துறையினர் சந்தேகக்கின்றனர். அக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா முதலில் அவர்களது ஆயுத செல்வாக்கை வீழ்த்துவது மூலம் அந்த இயக்கத்தின் மனிதவளத்தை நம்மால் குறி வைத்து அழிக்க முடியும்" என்று கூறினார். அமெரிக்கா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், கனடா, ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, பிரித்தானியா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதே கூட்டத்தில் உருசியா-உக்ரைன் கலகம் மற்றும் ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்தினை பற்றியும் நாட்டோ உறுப்பினர் நாடுகள் விவாதித்தனர். உருசியா வெற்றிகரமாக தனது கண்டம் விட்டு கண்டம் செல்லும் நீண்ட தூர அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது என உருசியாவின் கடற்படை தளபதி கூறினார். இச்சோதனை போரெ வகை நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. அக்டோபரிலும் நவம்பரிலும் மேலும் இரு சோதனைகள் நடத்தப்படும் என்றார். இவ்வேவுகணை 8,000 கிமீ தொலைவு செல்லக்கூடியதும், 6 லிருந்து 10 அணுஆயுதங்களை தாங்கிச்செல்லக்கூடியதும் ஆகும். உருசிய கடற்படையின் அட்மிரல் விக்டர் வெள்ளை கடலில் இவ்வேவுகணையின் சோதனை நிகழ்ந்ததாகவும் அது உருசியாவின் தூரக் கிழக்கிலுள்ள குரா சோதனைக் களத்திலுள்ள குறியை சரியாக தாக்கியதாகவும் தெரிவித்தார். அக்டோபரிலும் நவம்பரிலும் நடைபெறும் சோதனைகளில் கடற்படையின் ஏவுகணைக் கப்பல் மூலம் இது சோதிக்கப்படும் என்றார். வருங்காலத்தில் இதுவே உருசியப் படைகளின் முக்கிய ஏவுகணையாக இருக்கும். இதன் ஆரம்ப கால சோதனைகள் தோல்வியில் முடிந்தது, இத்திட்டத்திற்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. புதன்கிழமை நடந்த சோதனை இவ்வேவுகணையின் 19ஆவது சோதனையாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன் 6 மற்றும் சாம்சங் காலக்சி நோட் 4 ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் ஆப்பிளின் சிறப்பு நிகழ்வில் ஐ-போன் 6 மற்றும் ஐ-போன் 6 பிளசு ஆகியவை செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டன. ஐ-வாட்ச் என்பதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆனால் அது 2015ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் காலக்சி நோட்-4 செப்டம்பர் 4 அன்று ஐரோப்பாவிலுள்ள மின்னணு பொருட்களின் முதன்மைக் கண்காட்சி/சந்தையான பன்னாட்டு வானொலிக் காட்சியகத்தில் (IFA) வெளியிடப்பட்டது. பன்னாட்டு வானொலிக் காட்சியகம் யேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ளது. யேர்மன் விற்பனையாளர்கள் இதற்கான முன்பதிவை தொடங்கிவிட்டார்கள். ஐ-போன் 6 மற்றும் ஐ-போன் 6 பிளசு ஆகியவை ஆப்பிளின் புதிய இயக்கு தளமான ஐஓஎசு8 என்பதனை பயன்படுத்தவுள்ளன. இரண்டு ஐ-போன்களும் ஆப்பிளின் 64-பிட்ட் ஏ8 சில்லையும் (chip) எம்-8 (M8) அடுத்த தலைமுறை அசை செயலியையும் (processor) பயன்படுத்துகின்றன. கூடுதலான செயலியினால் இதன் ஆற்றல் தொடக்ககால ஐ-போனைவிட 84 மடங்கு விரைவாக இருக்கும். இப்போன் அமெரிக்காவில் செப்டம்பர் 19 முதல் கிடைக்கும். செப்டம்பர் 12 முதல் முன்பதிவு செய்யப்படும். இதிலிலிருந்து தொலைபேசி அழைப்புகளை கம்பியில்லா அகலப்பட்டை இணைப்பு மூலம் மேற்கொள்ளலாம் என்றும் செல்பேசியின் வலைப்பின்னல் அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்குள்ள நலப்பணியாளர்கள் சமாளிக்க முடியாத அளவு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவ உலக நாடுகள் நலப்பணியாளர்களை அனுப்பி உதவ வேண்டும் என கோரியுள்ளது. இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400 என்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்க்கரெட் சென் கூறினார். லைபீரியா, சியேரா லியோனி, கினி ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தொடர்பாளர் இக்கொள்ளை நோயை தடுக்க பல புதிய முறைகளை கையாள்வதாக கூறினார். நோய் தாக்குதல் இல்லாதவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நெகிழி முதலிய எதுவாக இருந்தாலும் அதனால் தங்களை மூடிக்கொண்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்குமாறு கூறியுள்ளார்கள். நோயின் பாதிப்பிலிருந்து தப்பியவர்கள் இந்நோய் மீண்டும் தாக்காத வண்ணம் எதிர்ப்பாற்றல் பெற்றுள்ளதால் அவர்கள் இந்நோயினால் பாதிக்கப்ப மக்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள். கியுபா நலத்துறை அமைச்சர் தங்கள் நாடு 165 நலப்பணியாளர்களை அனுப்புவதாக கூறினார். இதுவே இதுவரை ஒரு நாடு அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நலப்பணியார்களான மருத்துவர்கள் செவிலியர்களை அனுப்புவதாகும். அக்டோபரில் சியேரா லியோனி அவர்கள் செல்ல உள்ளனர். கியுபா நலத்துறை அமைச்சர் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400 க்கும் மிக அதிமாக இருக்கும் என கருதுகிறார். எபோலா தீநுண்மத்தால் பாதிக்கப்பட்ட நலப்பணியாளர்களின் இறப்பு அதிகளவில் உள்ளது. பாதிக்கப்பட்ட 301 பணியாளர்களில் பாதி பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். 37 டிகிரிக்கு மேல் காய்ச்சலுடன் வருபவர்கள் பீதியடைந்து காணப்படுகிறார்கள் என்று சியேரா_லியோனில் உள்ள தன்னார்வலர் தெரிவித்தார். சியேரா_லியோனில் இரண்டாவது எபோலா சிகிட்சை மையம் தொடங்கப்படுகிறது. எபோலாவை கட்டுப்படுத்த இது பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் முயற்சியாகும். சுதந்திர இசுக்காட்லாந்துக்கான வாக்கெடுப்பு நெருங்கும் வேளையில் இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்தால் அது வருத்தத்திற்குரியது எனக் கூறியதால் பிரிட்டிசு பெட்ரோலியம் தண்டனைக்குள்ளாகும் என மூத்த இசுக்காட்லாந்து தேசியவாதி எச்சரித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் முடிவு தேசியவாதிகளுக்கும் ஐக்கியவாதிகளுக்கும் நெருக்கமான முடிவை தரும் என்ற இருக்கும் நிலையில் இசுக்காட்லாந்து பிரிந்தால் அது பொருளாதார, நிதி நிலையில் கடும் சரிவை சந்திக்கும் என ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரூன் வணிக முதலாளிகளை கொண்டு அச்சப்படுத்தும் பரப்புரையில் ஈடுபடுகிறார் என்று தேசியவாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். தேசியவாத தலைவர் அலக்சு சல்மாண்ட், இசுக்காட்லாந்து செப்டம்பர் 18, 2014 அன்று பிரிந்து செல்ல வாக்களித்தால் பிரிட்டிசு பெட்ரோலியம் தேசிய உடைமையாக்கப்படும் என்றார். மற்றொரு பெட்ரோலிய நிறுவனமான "செல்"லும் பிரிவினைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. அலக்சின் எதிர்ப்பாளரான இன்னொரு தேசியவாதி சில்லர், வாக்கெடுப்பில் பிரிந்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டால் பிரிட்டிசு பெட்ரோலியம் மற்றும் வங்கிகள் தங்கள் செயல்களின் விளைவுகளை சந்திப்பார்கள் என்றார். பிபிசி செய்தியாளர் இது தொடர்பாக அவரிம் கேட்டபோது, நிறுவனங்களை தேசியமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஊடகங்களின் கவனத்தைப் பெறவே அச்சொல்லை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இசுக்காட்லாந்து தேசியவாதிகளின் பேச்சு குறித்து பிரிட்டிசு பெட்ரோலியம் கருத்து தெரிவிக்கவில்லை. பிரிவினையை எதிர்ப்பதால் மக்கள் இசுக்காட்லாந்து பிரிந்து செல்ல வாக்களித்தால் இசுடேண்டர்டு லைப் என்ற வங்கி தீவிரமாக தொழிலாளர் நல சட்டத்தை செயல்படுத்த கட்டாயப்படுத்தப்படும் என சில்லர் கூறினார். ராயல் பேங்க் ஆப் இசுக்காட்லாந்து. லாயிட்சு ஆகிய ஐக்கிய இராச்சியத்தின் இரு பெரும் வங்கிகள் இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தால் தங்கள் தளத்தை இங்கிலாந்துக்கு மாற்றிக்கொள்ளப்போவதாக தெரிவித்தன. அதே போல் தேசிய அவுத்திரேலிய வங்கியின் கிறைடசுடேல் வங்கியும் இங்கிலாந்துக்கு மாறிவிடுவதாக கூறியுள்ளது. ராயல் பேங்க் ஆப் இசுக்காட்லாந்து, இசுக்காட்லாந்தில் 11,500 பணியாளர்களை கொண்டுள்ளது.. டச்சுச்சே வங்கி, இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடிவெடுத்தால் அது பெரும் தவறாக முடியும் என்றது. முதலீட்டாளர்கள் 27 பில்லியன் டாலர்களை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கடந்த மாதத்தில் எடுத்தனர். செப்டம்பர் வரை 201ல் நடந்த ஒரே ஒரு வாக்கெடுப்பைத் தவிர எல்லா வாக்கெடுப்புகளும் ஐக்கியவாதிகளுக்கே வெற்றி என்றன, ஆனால் இம்மாத வாக்கெடுப்பு தேசியவாதிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்கின்றன. இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லவது போல் தெரிவதால் இசுக்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து நிறைய மக்கள் மத்திய எடின்பர்க் நோக்கி அணிவகுத்து செல்கிறார்கள். இந்தியாவில் நடத்த 32 சட்டசபைக்கும் 3 மக்களவைக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின 2014, செப்டம்பர் 13 அன்று நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் முடிவும் செப்டம்பர் 16 அன்று வெளியானது. இதில் 3 மக்களவை தொகுதிகளிலும் பாசக, சமாச்வாடி கட்சி, தெலுங்கானா ராசுட்டிர சமிதி ஆகியவை வெற்றி பெற்றன. இவை பொதுத்தேர்தலின் போது ஏற்பட்ட முடிவின் படியே இருந்தன. உத்திரப்பிரதேசத்தில் பாசக 3 தொகுதிகளிலும் சமாச்வாடி கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உத்திரப்பிரதேசத்தில் முன்பு பாசக வசம் இருந்த 9 தொகுதி அதன் கூட்டணி கட்சியான அப்னா தளத்திடம் இருந்த 1 தொகுதி என 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அது தோற்றுள்ளது. நொய்டா, லக்டோ (கிழக்கு சகரன்பூர் நகர் என மூன்று தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது. ராசசுத்தானில் போட்டியிட்ட நான்கு இடங்களில் மூன்றை காங்கிரசும் ஒன்றை பாசகவும் பெற்றன. அசாமில் நடந்த மூன்று தொகுதிகளில் காங்கிரசு, பாசக, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி தலா ஒரு இடத்தை பெற்றன. மேற்கு வங்கத்தில் நடந்த இரு தொகுதிகளுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரசும், பாசகவும் தலா ஒரு இடத்தை பெற்றன. இங்கு வெற்றி பெற்றதன் மூலம் பாசக முதன்முறையாக மேற்குவங்க சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குசராத்தின் 9 சட்டசபைக்கு நடத்த தேர்தலில் 6 தொகுதிகளில் பாசகவும் 3 கொகுதிகளில் காங்கிரசும் வென்றன. திரிபுராவின் ஒரு தொகுதியில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சியம் ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில் தெலுங்கு தேசமும், சிக்கிமின் ஒரு தொகுதியில் கட்சி சாரா வேட்பாளரும் வென்றனர். இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரியலாமா வேண்டாமா என்று 2014, செப்டம்பர் 18 அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தோற்றதால் இசுக்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்சு சால்மண்ட் பதவி விலகினார். எல்லோரும் ஐக்கியமாக இருக்கவேண்டும் கேட்டதுடன் நாட்டின் ஐக்கியத்திற்காக வாக்கு சேகரித்த கட்சிகள் இசுக்காட்லாந்திற்கு பல உரிமைகளை விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பிரதமர் தேவிது காம்ரன் ஐக்கிய இராச்சியத்தில் பிளவு ஏற்படாதது கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார் மேலும் விரைவாக இசுக்காட்லாந்துக்கு அதிக உரிமைக்ளை வழங்கபோவதாக கூறினார். கிளாக்சோ பொது நலவாய போட்டிகளை நடத்திய கெல்வினின் இசுமித் பிரபு நவம்பருக்குள் தர உறுதியளிக்கப்பட்ட வரி, செலவினம், நலத்திட்டங்களை மேற்பார்வையிடுவார் என்றும் கூறினார். இது தொடர்பாக சனவரி மாதம் சட்ட முன்வரைவு கொண்டுவரப்படும் என்று கூறியதுடன் இங்கிலாந்து, வேல்சு, வடக்கு அயர்லாந்து ஆகியவற்றின் மக்களுக்கு அவர்கள் தொடர்பான நிகழ்வுகளில் அதிக பங்களிப்பு இருக்கும் என்றார். மேற்கு லோத்தியன் தீர்வுக்கு சரியான முடிவு எடுக்கப்படும் என்றார். இப்போதைய தீர்வின் படி இசுக்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெசுட்மினிசுட்டரில் இங்காலந்து தொடர்பான விடயங்களில் வாக்கு செலுத்தமுடியும்.. தோராயமாக 46% மக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல வாக்களித்திருப்பதால் பிரதமர் காம்ரன் இசுக்காட்லாந்து இத்தலைமுறையில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லாது எனவும் ஆனால் இது எப்போதும் நிரந்தரம் அல்ல எனவும் கூறினார். ஆப்கானித்தானில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன்று வேட்பாகளர்கள் போட்டியிட்டனர். அதில் அப்துல்லா முதலிடத்தை பிடித்தாலும் அதிபர் ஆவதற்கு தேவையான வாக்குகளை பெறாததால் இரண்டாவது இடத்தை பிடித்த அசுரப் கானியுடன் மீண்டும் யூன் தேர்தலை சந்தித்தார். அத்தேர்தலில் அசுரப் கானி 56% வாக்குகளை பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது அப்துல்லா ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்தது. தேர்தலில் பெரும்முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அப்துல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2009ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அப்துல்லா இரண்டாவதாக வந்தார். அப்போது கர்சாய்க்கு ஆதரவாக தேர்தலில் பெரும்முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அப்துல்லா முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார். அசுரப் கானி முன்னாள் நிதியமைச்சர் ஆவார். ஆப்கானித்தான் தேர்தல் ஆணையர் யூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும் தவறுகள் நடைபெற்றதை ஒப்புக்கொண்டதுடன் ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் தணிக்கை முறைகேடுகளை முழுவதும் தடுக்க முடியவில்லை என்றும் கூறினார். அப்துல்லாவிற்கும் அசுரப் கானிக்கும் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பட்டு அசுரப் கானி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இருவருக்குமான உடன்படிக்கையின் படி கானி அதிகாரத்தை அப்துல்லாவுடன் பகிர்ந்து கொள்வார். அசுரப் கானி ஆப்கானின் பெரிய இனமான பசுத்தூன் இனத்தவராவார், அப்துல்லா இரண்டாவது பெரிய இனமான தாஜிக் இனத்தவராவார். அடுத்த வாரத்திற்குள் கானி பதவியேற்பார் என்று கர்சாயின் செய்திதொடர்பாளர் கூறினார். ஆப்கான் அரசமைப்பு சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து ஒருவர் அதிபராக இருக்க முடியாது. ஏப்பிரல் மாதத்தில் இருந்து யார் அதிபராக வருவார்கள் என்று ஆப்கன் மக்களின் கேள்விக்கு இப்போது விடை தெரிந்துள்ளது. [[w:இஸ்ரோ| இஸ்ரோ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 100 வது விண்வெளித் திட்டமான பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் வெற்றிகரமாக செப்டம்பர் 9, 2012 அன்று விண்ணில் ஏவப்பட்டது. 51 முயற்சிகளில் அமெரிக்கா, உருசியா, ஐரோப்பா (பல்வேறு நாடுகள் சேர்ந்தது) ஆகியவையே வெற்றி பெற்றுள்ளன. இப்போது இந்தியாவும் இந்த நாடுகள் வரிசையில் இணைந்துள்ளது. இந்தியாவின் மங்கள்யான் முதல் முயற்சியிலேயே செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் முதல் முயற்சியில் செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்த மற்றொரு அமைப்பாகும். ஆனால் விண்கலம் ஐரோப்பிய அமைப்பினுடையதாக இருந்தாலும் இது உருசியாவின் ஏவுதளத்தில் உருசிய ஏவுகணை மூலம் ஏவப்பட்டது. 2013, நவம்பர் 5 அன்று ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்கள் 680 மில்லியன் கிமீகள் (422 மில்லியன் மைல்கள்) பயணப்பட்டு செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை அடைந்துள்ளது மங்கள்யான் விண்கலத்தின் எடை 1,350 கிலோகிராம் ஆகும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் பதற்றம் நிலவுகின்றது. பல இடங்களில் கடையடைப்பு, ரயில் மறிப்பு, போக்குவரத்துக்கு இடையூறு ஆகியவை நடந்துவருகின்றன. காஞ்சிபுரத்தில் பேருந்து எரிக்கப்பட்டது. தமிழகத்துக்கு கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வரும் சில பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். முன்பு அமைச்சர்களாக இருத்தவர்களே மீண்டும் பதவியேற்றார்கள் அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்தியா முனைய துணைக்கோள் ஏவுகலம் சி26 மூலம் சிறீ ஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து அமெரிக்காவின் புவி நிலை காட்டி க்கு மாற்றாக இந்திய வட்டார இடஞ்சுட்டும் செயற்கை கோள் தொகுதி 1 சி ஐ செலுத்தியுள்ளது. செயற்கோளின் வாழ்நாள் 10 ஆண்டுகளாகும் முனைய துணைக்கோள் ஏவுகலம் சி26 இச்செயற்கைகோளை அக்டோபர் 10 அன்று ஏவுவதாக இருந்தது, தொழில் நுட்ப சிக்கல் காரணமாக அன்று ஏவப்படவில்லை. இச்செயற்கைகோள் இந்திய வட்டார இடச்சுட்டும் செயற்கை கோள் தொகுதி 1 சி இறுதியில் பூமியிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இதில் இரண்டு வகையான சேவைகள் உண்டு. ஒன்று எல்லோருக்கும் பொதுவான அனைவரும் பயன்படுத்தும் இயல்பான சேவை. மற்றொன்று தகவல்கள் மறைக்கப்பட்டு செல்லும் அதிகாரமளிக்கப்பட்டுள்ள பயனர்களுக்கான சேவை. இந்திய வட்டார இடச்சுட்டும் செயற்கை கோள் தொகுதியானது ஏழு செயற்கோள்களை கொண்டிருக்கும் 1420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இது 2015ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியின் முதல் இரண்டு செயற்கைகோள்கள் கடந்த ஆண்டு யூலை, இவ்வாண்டு ஏப்ரல் மாதங்களில் செலுத்தப்பட்டன. அனைத்துலக நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் விண்வெளியில் ஆராய்ச்சிக்காக நிமானிக்கப்பட்டுள்ள விண்வெளி நிலையத்துக்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் சென்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆளில்லா ராக்கெட் விண்வெளியில் வெடித்து சிதறியது. வர்ஜீனியா ஏவுகணை ஆய்வு தளத்திலிருந்து நேற்று மாலை இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இதன் எடை 5000 பவுண்டுகள் ஆகும். ஆட்கள் யாருக்கும் சேதம் இல்லை ஆனால் ஏவுதளம் சேதம் அடைந்துள்ளதாக நாசா த்ர்டிவித்துள்ளது. ஜப்பான் அரசு இந்தியாவின் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு தனது நாட்டின் உயரிய விருதை அளிக்க முடிவு செய்துள்ளது. 1888ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’ என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியாவில் அமைந்துள்ள ஜப்பானின் பேரரசரின் அரண்மனையில் நடைபெறும் விழாவில் மன்மோகன் சிங் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். சிறிராம் சர்மா யாழ் மற்றும் சென்னை ஊடக மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்தி விட்டு சென்று தனது முகநூலில் பதிந்த பதிவு இன்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்த கூர்மதி கொண்ட இருபத்தைந்து மாணவ – மாணவியர்களிடையே ஓர் எழுச்சி நிறைந்த நாள் 11 மணிமுதல் 12 மணி வரை 'வேலு நாச்சியார் தொடர்பியல் பார்வையில் ஆக்கமும் சவால்களும் என்னும் தலைப்பில் நான் சொற்பொழிவாற்ற வேண்டும் ! ஆனால், கடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கும் சுற்றுலா சென்று வந்திருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக அரங்கம் வந்து நிறைக்கும் ஓர் சூழல்! நானொரு வல்லமையுள்ள ஓர் பேச்சாளனா என்றால் இல்லை உணர்வு வயப்பட்டு பேசும் ஓர் படைப்பாளன் ஆயினும் வேலு நாச்சியார் வரலாறு இதழியல் தொடர்பியல் என நான்கு கூறுகளை உள்ளடக்கிய எனது ஒரு மணி நேர சொற்பொழிவு என்பது உணவு இடை வேளையையும் கடந்து இரண்டரை மணி நேரமாக நீண்டு மதியம் 1. 30 க்குத் தான் இனிதே நிறைவடைந்தது எனில் அதற்கு முழு முதற் காரணம் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் உள்வாங்கும் திறனும் – இடையிடையே அவர்கள் எழுப்பிய ஆச்சர்யமூட்டும் வரலாற்றுக் கேள்விகளும் – கூர்ந்த மதிக்கூறும்தான் இரண்டரை மணி நேர இயல்பான சொற்பொழிவை அரங்கம் நிறைத்திருந்திருந்து உள்வாங்கி தங்கள் உணர்வுகளால் என்னை நெகிழ வைத்து விட்டார்கள் ! 'கடவுளே இந்த பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை சம்பாதித்துக் கொடேன் என்று நான் வணங்கும் அந்த பரம்பொருளை நோக்கி மனமுருக தியானித்துக் கொண்டேன் தொடக்கத்தில் ஈழத்தில் இனப் படுகொலைக்கு ஆளான ஆன்மாக்களுக்கு இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று 'மௌன அஞ்சலி' செய்யக் கேட்டுக் கொண்டு துவங்கிய எனது உரையை முடிவில் 'வைகோ' அவர்களின் வேலு நாச்சியார் குறித்த ஆறு நிமிட எழுச்சியான வீடியோ திரையிடலோடு' நிறைவுக்கு கொண்டு வந்தேன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை என்னுள் விதைத்தபடி எழுந்து நின்றார்கள் யாழ்ப்பாணத்து மாணவக் கண்மணிகள் ! நன்றியென்றும் எனது மனமாட்கொண்ட துறை ஆசான் 'கோபாலன் இரவீந்திரன்' அவர்களுக்கே உரியது ! சிறிராம் சர்மாவுக்கு யாழ் ஊடக மாணவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்துகொள்ளுகின்றனர், என மாணவர்கள் தெரிவித்தனர். சிறிராம் சர்மா யாழ் மற்றும் சென்னை ஊடக மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்தி விட்டு சென்று தனது முகநூலில் பதிந்த பதிவு இன்று, சென்னைப் பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்த கூர்மதி கொண்ட இருபத்தைந்து மாணவ – மாணவியர்களிடையே ஓர் எழுச்சி நிறைந்த நாள் 11 மணிமுதல் 12 மணி வரை 'வேலு நாச்சியார் தொடர்பியல் பார்வையில் ஆக்கமும் சவால்களும் என்னும் தலைப்பில் நான் சொற்பொழிவாற்ற வேண்டும் ! ஆனால், கடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கும் சுற்றுலா சென்று வந்திருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக அரங்கம் வந்து நிறைக்கும் ஓர் சூழல்! நானொரு வல்லமையுள்ள ஓர் பேச்சாளனா என்றால் இல்லை உணர்வு வயப்பட்டு பேசும் ஓர் படைப்பாளன் ஆயினும் வேலு நாச்சியார் வரலாறு இதழியல் தொடர்பியல் என நான்கு கூறுகளை உள்ளடக்கிய எனது ஒரு மணி நேர சொற்பொழிவு என்பது உணவு இடை வேளையையும் கடந்து இரண்டரை மணி நேரமாக நீண்டு மதியம் 1. 30 க்குத் தான் இனிதே நிறைவடைந்தது எனில் அதற்கு முழு முதற் காரணம் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் உள்வாங்கும் திறனும் – இடையிடையே அவர்கள் எழுப்பிய ஆச்சர்யமூட்டும் வரலாற்றுக் கேள்விகளும் – கூர்ந்த மதிக்கூறும்தான் இரண்டரை மணி நேர இயல்பான சொற்பொழிவை அரங்கம் நிறைத்திருந்திருந்து உள்வாங்கி தங்கள் உணர்வுகளால் என்னை நெகிழ வைத்து விட்டார்கள் ! 'கடவுளே இந்த பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை சம்பாதித்துக் கொடேன் என்று நான் வணங்கும் அந்த பரம்பொருளை நோக்கி மனமுருக தியானித்துக் கொண்டேன் தொடக்கத்தில் ஈழத்தில் இனப் படுகொலைக்கு ஆளான ஆன்மாக்களுக்கு இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று 'மௌன அஞ்சலி' செய்யக் கேட்டுக் கொண்டு துவங்கிய எனது உரையை முடிவில் 'வைகோ' அவர்களின் வேலு நாச்சியார் குறித்த ஆறு நிமிட எழுச்சியான வீடியோ திரையிடலோடு' நிறைவுக்கு கொண்டு வந்தேன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை என்னுள் விதைத்தபடி எழுந்து நின்றார்கள் யாழ்ப்பாணத்து மாணவக் கண்மணிகள் ! நன்றியென்றும் எனது மனமாட்கொண்ட துறை ஆசான் 'கோபாலன் இரவீந்திரன்' அவர்களுக்கே உரியது ! சிறிராம் சர்மாவுக்கு யாழ் ஊடக மாணவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்துகொள்ளுகின்றனர், என மாணவர்கள் தெரிவித்தனர். சென்னை தி. நகரில் அமைந்துள்ள பாரத் கலாச்சார் கலைமன்றத்தின் 28ஆவது மார்கழி மகோத்சவ் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நடத்தும் 40ஆவது ஆண்டு கலைவிழா 2014 ஜெயா தொலைக்காட்சி நடத்தும் மார்கழி உத்சவம் 2014 ஸ்ரீ ராம பக்த ஜன சமாஜ் நடத்தும் 18ஆவது ஆண்டு இசை விழா 2014 ஆகியன இன்று ஆரம்பமாகின்றன. பிற கலைமன்றங்கள் நடத்தும் விழாக்கள், அடுத்து வரும் நாட்களில் தொடங்குமென நாளிதழ்களில் வெளியாகியுள்ள அறிவிப்புகள், விளம்பரங்கள் மற்றும் நகரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மூலமாக தெரியவருகிறது. டிசம்பர் இசை விழா சென்னையில் இன்று தொடங்குகிறது டிசம்பர் 1, 2014 * பக்கம் எண்: 8 இசை விழா சிறப்பு இணைப்பு, தி இந்து (ஆங்கிலம் டிசம்பர் 1, 2014 மைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2015-16 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். ஐசிசி 2015 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியையும், இந்தியா ஐக்கிய அரபு எமிரேட் அணியையும் வென்றன * பக்கம் எண்: 4, 11 இசை விழா சிறப்பு இணைப்பு, தி இந்து (ஆங்கிலம் டிசம்பர் 1, 2014 பாக்கித்தானின் பெசாவார் நகரில் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 141 பேர் பலியாயினர். இதில் 131 பேர் பள்ளிக்குழந்தைகள். இப்பள்ளி இராணுவத்தால் நடத்தப்படுவதாகும். இத்தாக்குதலை ஏழு தீவிரவாதிகள் நடத்தியதாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும் இராணுவம் தெரிவித்தது. இதுவே பாக்கித்தானில் தாலிபான்கள் நடத்திய மோசமான தாக்குதலாகும். வடக்கு வசிரித்தானிலும் அருகிலுள்ள கைபர் பகுதியிலும் இராணுவ தாக்குதலில் நூற்றுக்கணக்கான தாலிபான்கள் பலியாயினர். இராணுவத்தினரின் இத்தாக்குதலுக்கு பதிலடியாக பள்ளி மீதான இத்தாக்குதலை நடத்தியதாக தாலிபான்களின் பேச்சாளர் பிபிசியின் உருது பதிப்புக்குக்கு தெரிவித்தார். தாலிபானின் பேச்சாளர் முகமது உமர் கோராசானி, பாக்கித்தான் இராணுவம் தங்கள் குடும்பத்தையும் பெண்களையும் தாக்குவதால் இராணுவப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாகவும் அப்போது தான் அவர்களால் எங்கள் வலியை உணரமுடியும் என்றும் கூறினார். அரசியல்வாதிகள் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கியது இராணுவம் அவர்கள் மீதான தாக்குதலை நீடிக்க உதவவில்லை. பாக்கித்தான் பிரதமர், இத்தாக்குதல் தேசிய இழப்பு எனவும் தீவிரவாதிகள் தங்கள் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்படும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்தார். இவ்வேவுகலம் எடை கூடுதலான செயற்கைகோள்களை விண்ணுக்கு எடுத்துச்செல்லும் திறன் வாய்ந்தது. 4,000 கிலோ எடையுடைய செயற்கை கோள்களை இதன் மூலம் ஏவலாம். இந்தியா இதுவரை எடை குறைந்த செயற்கைகோள்களையே விண்ணுக்கு செலுத்தும் திறன் பெற்றிருந்தது. இவ்வேவுகலத்தின் மூலம் எடை கூடிய தொலை தொடர்பு செயற்கை கோள்களை ஏவுவதற்கு வெளிநாட்டு ஏவுகலங்களை நம்பியிருக்க தேவையில்லை. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ராதாகிருட்டிணன் இந்திய விண்வெளி வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த நாள் என்று கூறினார். இரண்டு அல்லது மூன்று விண்வெளிவீரர்களை கொள்ளும் 3,775 கிலோ எடையுடைய குடிலை பொதியாக இவ்வேவுகலம் ஏற்றிச்சென்றது. அக்குடில்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் ஏவுகலம் ஏவப்பட்ட 20 நிமிடம் கழித்து கடலில் பத்திரமாக வந்தடைந்ததால் குடில்கள் சோதனை வெற்றி என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது. இவ்வேவுகலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு டிவிட்டரில் இந்திய பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்தார். செப்டம்பரில் செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு இந்தியா வெற்றிகரமாக செயற்கைகோளை செலுத்தியது. பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கைலாசம் பாலசந்தர், சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84. இயக்குனர் சிகரம் என்றழைக்கப்பட்ட பாலசந்தர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930ம் ஆண்டு சூலை 9ம் நாளில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 101 திரைப்படங்களை இயக்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஏஆர் ரகுமான் சுஜாதா, ஷோபா, விவேக் என ஏறத்தாழ அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்பட நடிகர் நடிகையர்களை அறிமுகப்படுத்தியவர். தன் படத்தில் சமுதாயத்திற்கான செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்து படங்களையும் எடுத்தார். பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள். மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலசந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார். இவரது மறைவிற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமக தலைவர் நடிகர் சரத்குமார், மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பட பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். இவரது மறைவு காரணமாக, புதன்கிழமையன்று (திசம்பர் 24, 2014) தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்படுவதாக இயக்குனர் விக்ரமன் அறிவித்தார். இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 155 பயணிகள் 7 பணிக்குழுவினருடன் சாவா கடல் மீது பறந்து கொண்டிருந்த போது சனிக்கிழமை அன்று (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) காலையில் மறைந்தது. அதை தேடும் பணியில் இந்தோனேசியாவின் வான் படையும் கப்பல்களும் ஈடுபட்டிருந்தன. மோசமான வானிலை காரணமாக தேடும் பணி நிறுத்தபட்டது. அடுத்த நாள் காலை தேடுதல் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளில் 149 பேர் இந்தோனேசியர்கள் ஒருவர் சிங்கப்பூர், ஒருவர் பிரித்தானியா, ஒருவர் மலேசியா, மூவர் தென் கொரியா. பணிக்குழுவினரில் வானோடி ஒருவர் பிரெஞ்சுக்காரர் மற்ற ஆறு பேரும் இந்தோனேசியர்கள். விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப் பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், மேகக்கூட்டத்தை தவிர்க்க 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வானூர்தியை 38,000 அடியில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி ஏர்பசு 320-200 வகையை சார்ந்தது. இந்தோனேசியாவின் சாவா தீவின் கிழக்கு சாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது மறைந்துள்ளது. சுரபயா நகரில் இருந்து கிளம்பிய 42 நிமிடத்தில் வானூர்தி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2008 இவ்வானூர்தியை ஏர் ஆசியா நிறுவனம் வாங்கியது. அது இதுவரை 13,600 தடவை பறந்துள்ளது. பறந்த மொத்த நேரம் 23,000 மணிகள் ஆகும். இதன் வானூர்திகள் 20,500 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்கள் இதில் 7,000 ஏர் ஆசியாவில் பறந்தது ஆகும். ஒசூர் மலை மீது அமைந்துள்ளபுகழ்பெற்ற அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் தேர்திருவிழா மார்ச் 5ல் நடைபெறஉள்ளது அதையொட்டி பல்லக்கு உற்சவம் கரகம்உற்சவம் நடைபெற்றது பிள்ளையார் சந்திரசூடேஸ்வரா் பண்டாஞ்ஜனேயர் கோட்டைமாரியம்மன் கோதண்டராமா் நஞ்சண்டேஸ்வரர் பஸ்வேஸ்வரர் தர்மராஜர்துரெளபதியம்மன் முருகன் முத்துமாரியம்மன் சப்ளம்மா எல்லம்மா பாண்டுரங்கர் வேணுகோபாலர் கிருஷ்ணசாமி மணல்மாரியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகள் அலங்காரவாகனங்களில் ஓளிஅலங்காரத்தில் கரகம்அனைத்து பல்லக்தகு முன்பு வழிபாடும் தேர்பேட்டையில் தீமிதிநடைபெற்றது முக்கயவீதிகளில் ஐம்பது பல்லக்குகள் சிறப்பான வழிபாடுகளுடன் உற்சவம்நடைபெற்றது ஸ்ரீ விஜய் கல்விக் குழுமத்தைச் சார்ந்த டி. என். சி. மணிவண்ணன், செல்வி மணிவண்ணன், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிருவாக அலுவலர் பொ.சண்முகவடிவேல், துணை முதல்வர் திரு.க.பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். இந் நிகழ்வில் இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை பெரியார் பல்கலைக்கழகச் சார்ந்த பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு தொகுத்தல் பணிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம் என்னும் நேரிடைப் பயிற்சியை வழங்க உள்ளார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவி எஸ்.வினோதினி நன்றியுரை வழங்க உள்ளார் இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர். கா.மு.சேகர் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இஆப தலைமையுரை நிகழ்த்தவுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நூலை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகச் சார்ந்த, இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, பயிலரங்கச் சிறப்புரையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமத்தை வழங்கி, தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணிகளின் தேவே, தமிழ்க்கணினி குறித்த அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்து நேரிடை செயல்முறைப்பயிற்சியை அளித்தார். இக்கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் தமிழ அரசு வழங்கியுள்ள மடிக்கணியைப் பயன்படுத்தி வருவதால், அவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்களை தங்கள் கணினியில் நிறுவதிலும் பயன்படுத்துவதிலும் எழுந்த ஐயங்களைக் கேட்டறிய ஏதுவாக இருந்தது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவி எசு.வினோதினி நன்றியுரை வழங்கினார். இப்பயிலரங்கின் தொடக்கவிழா நிகழ்வில் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர். கா.மு.சேகர் வரவேற்புரை நிகழ்த்தி தமிழ்க்கணிமையின் தேவைகளை விளக்கினார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை சார்பில் உளவியல் கோட்பாடு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாட்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கத்தில் உளவியல் துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உடல் மற்றும் மனநலச் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கருத்தரங்கில் மருத்துவ உளவியல், கல்வி உளவியல், தொழில் சார் உளவியல், சமூக உளவியல் வாழ்நடை உளவியல் மற்றும் பயன்பாட்டு உளவியல் போன்ற பற்பல உள்தலைப்புக்கள் விவாதிக்கப்பட உள்ளன. விவாதங்களில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுதில்லி மற்றும் இந்தியாவின் பற்பல பகுதிகளிலிருந்து உளவியல் வல்லுநர்கள் தமது ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். செஞ்சுருள் சங்கம் என்பது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் எச்.ஐ.வி/ எய்ட்சு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பினை தமிழ் நாடு மாநில எய்ட்சு கட்டுப்பாட்டுச் சங்கம் நெறிப்படுத்தி வருகின்றது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாண்பமை பேராசிரியர் பேராசிரியர் முனைவர் சி. சுவாமிநாதன் இந்நிகழ்வைத் தொடங்கிவைத்து விழாப்பேருரை வழங்க உள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் க. அங்கமுத்து இந்நிகழ்விற்கு தலைமையேற்க உள்ளார். பெரியார் பல்கலைக் கழக தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். சு. நந்த குமார் இந்நிகழ்வினை ஒருங்கிணைக்க உள்ளார். 2014ஆம் ஆண்டு கும்பு பனியாற்றின் பகுதியான கும்பு பனியருவிப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மலையேறுபவர்களின் வழிகாட்டிகளாக செயல்பட்ட 16 செர்பாக்கள் கொல்லப்பட்டனர். இவ்விபத்து 2014 ஏப்பிரல் 18 அன்று நடந்தது. அடிவார முகாமிலிருந்து முதலாம் முகாமுக்கு மலையேறுபவர்கள் செல்ல ஆபத்தான கும்பு பனியருவிப்பகுதியில் கயிறு, ஏணி போன்றவற்றை அமைக்க செர்பாக்கள் முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டது. அதனால் விபத்து ஏற்பட்ட கும்பு பனியருவியின் இடது புறத்தை தவிர்த்து முதலாம் முகாமுக்கு செல்ல மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும். 2015 மலையேற்ற காலத்திலிருந்து இப்பாதையையே பயன்படுத்த வேண்டும் என நேபாள அரசு அறிவித்துள்ளது. இப்பாதை கடினமானதும் ஏறுவதற்கு நேரம் பிடிப்பதும் ஆகும். ஆனால் இதில் பனிச்சரிவு ஆபத்து குறைவு. இப்பாதை புதியதல்ல இருபது ஆண்டுகளுக்கு 1950-1990 வரை இப்பாதை பயன்படுத்தப்பட்டது. 1990இல் கும்பு பனியருவியின் இடது புற பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது.பனிச்சரிவு ஆபத்து அதிமுள்ளபோதும் குறைந்த தூரம், ஏறுவதற்கு எளியது என்பதால் அப்பாதையை தேர்ந்தெடுத்தனர். விபத்தின் காரணமாக, செர்பாக்கள் பல கோரிக்கைகளை நேபாள அரசு முன் வைத்தார்கள். அதில் அடிவார முகாமிலிருந்து முதலாம் முகாமிற்கு உலங்கூர்தி மூலம் எடை கூடிய பொருட்களை கொண்டு செல்வது, இக்கோரிக்கைக்கு மலையேறுபவர்களுக்கான வெளிநாட்டு முகவர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நேபாள மலையேற்ற முகவர்கள் இதை ஏற்கவில்லை. நேபாள சட்டம் மீட்பு பணிக்கு கூட உலங்கூர்தியை அடிவார முகாமுக்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை. மலையின் சூழல் மற்றும் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுத்துள்ளது. அரசு உலங்கூர்திப் பயன்பாட்டில் மாற்றம் கொண்டு வர மறுத்ததுடன் பாதுகாப்பான புதிய பாதையானது செர்பாக்களின் கோபத்தை தணிக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளது. பாதை மாற்றத்தை நேபாள, வெளிநாட்டு நடத்துநர்கள் வரவேற்றுள்ளனர். 2015-16ஆம் ஆண்டுக்கான இந்திய தொடருந்து வரவு செலவு கணக்கை அத்துறையின் அமைச்சர் சுரேசு பிரபு மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இது அவர் அறிமுகப்படுத்தும் முதல் வரவு-செலவு திட்டமாகும். பயணிகள் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால் சரக்கு போக்குவரத்து கட்டணம் 10% அளவு உயர்த்தப்பட்டுள்ளது. 400 தொடருந்து நிலையங்களில் வெய்பை எனப்படும் கம்பியில்லா இணைய இணைப்பு வழங்கப்படும் என்றும் தொடருந்துகளில் நவீன கழிப்பறை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது 17,388 உயிரிகழிவறைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் இவ்வாண்டில் 17,000 நிறுவப்பட்டுவிடும் என்றும் கூறினார். ஐந்து ஆண்டுகளில் (2015-19) ரூ 12,500 கோடிக்கு அளவில் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றும் டிக்கெட்டுகளை பயணநாளுக்கு 60 நாளுக்கு முன்பதிவு செய்படுவதற்கு பதில் இப்போது 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இப்போது 5 நிமிடத்தில் பெறலாம் என்றும் அதற்காக தொடருந்து நிலையங்களில் தானியங்கி எந்திரம் வைக்கப்படும் என்று கூறினார் விரைவில் இருக்கை காலியாக உள்ளதா என்று அறியும் வசதி செய்யப்படும் என்றார். தொலைபேசி குறுஞ்செய்திகளின் வழியாக தொடருந்துகள் புறப்படும் மற்றும் வருகை நேரங்களை அறிவி்க்கப்படும் என்றார். சில சதாப்தி தொடருந்துகளில் பொழுதுபோக்கு வசதி செய்யப்படும் என்றும் அதன் வரவேற்பை பொருத்து அனைத்து சதாப்திகளிலும் அவ்வசதி செய்து தரப்படும் என்றார். அலைபேசிகளை மின்னேற்றம் செய்ய இன்னும் அதிக இடங்களில் மின்னேற்றவசதி செய்துதரப்படும் என்றார். பெண்களின் பாதுகாப்பிற்காக சில தொடருந்துகளில் நிழற்படக்கருவி பொருத்தப்படும் என்றார். பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணம் இல்லா 182 என்ற எண் பயன்படுத்தப்படும் என்றார். ஒன்பது வழித்தடங்களில் தற்போதைய தொடருந்தின் வேகம் மணிக்கு 110-130 கிமீ என்பதை மணிக்கு 160-200 கிமீ என்று அதிகப்படுத்தப்படும் என்றும் இதனால் மும்பை-தில்லி, தில்லி-கொல்கத்தா பயணம் ஓரிவிலேயே முடிந்து விடும். சில தொடருந்தில் 24 பெட்டிகளுக்கு பதிலாக மேலும் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு அது 26 பெட்டிகள் உடையதாக ஆக்கப்படும் என்றும் அதனால் அதிக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்றும் கூறினார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015- 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 28, 2015 அன்று தாக்கல் செய்தார் * மார்ச்சு வரையான பணவீக்கம் 5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. * நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை குறைப்பதன் மூலம் 2015-16ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ 410 பில்லியன் வருமானம் வரும். * 2016-17ஆம் ஆண்டில் அரசு நிறுவன பங்குகளை குறைத்து ரூ 55,000 கோடி வருமானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. * பொதுத்துறை வங்கிகளின் நிருவாகத்தை மேம்படுத்த தன்னிட்ச்சையான அதிகாரம் கொண்ட வங்கி ஆணையம் அமைக்கப்படும். * தற்போது 43 நாடுகளுக்கு மட்டும் உள்ள வந்ததும் பெறும் நுழைவாணை 150 நாடுகளுக்கு உயர்த்தப்படும். * சந்தையின் மொத்த கடன் வாங்கும் திறன் ரூ 6 திரிலியன் என கணிக்கப்பட்டுள்ளது. * அதற்கு பதிலாக 2% மேல்வரி பெரும்பணக்காரர்களுக்கு விதிக்கப்படும். * நிறுவனங்களுக்கான வரி 30% என்பதிலிருந்து 25%மாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைக்கப்படும். * 22 பொருட்களுக்கு ஆயத்தீர்வு வரி குறைக்கப்படும். * இரும்புக்கும் எ கிற்கும் மான இறக்குமதி வரி 10%லிருந் 15% ஆக உயர்த்தப்படுகிறது * தேசிய உள்கட்டமைப்பு நிதி அமைக்கப்படும் * சாலை, தொடருந்து, பாசனம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக வரி இல்லா கடன்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் * 4,000 மெகா வாட் திறனுடைய 5 மின்திட்டங்கள் முன்மொழியப்படும் * கூடங்குளத்தில் இரண்டாவது அலகு அணு மின் உலை செயல்படுத்தப்படும் * தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 ஆக இருக்கும் இதில் மாற்றமில்லை * இந்தியா தங்க நாணயங்களை வெளியிடும் இது தங்க இறக்குமதியை குறைக்கும் * எரிபொருள் மானியம் ரூ 300 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது. சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பெப்ருவரி 27, 28 ஆகிய இரு நாட்களில் நாட்டு வளர்ச்சியில் உயிரி அறிவியல் என்னும் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தாவரவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ். முருகேசன் வரவேற்புரை வழங்கினார். விலங்கியல் துறையின் பேராசிரியர் சௌ. கண்ணன் இக்கருத்தரங்கம் குறித்த நோக்கவுரை நிகழ்த்தினார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சுவாமிநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். அறிவியல், தொழிற்நுட்ப இயக்கத்தைச் சார்ந்த முனைவர் சி. இராஜதுரை இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியலின் பங்கு என்பது குறித்துப் பேசினார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என். தர்மராஜ், நானோ இலைகளின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். மதிய அமர்வில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அறிவியலர் சஞ்சீவ் குப்தா இந்தியாவில் தோல் பதனிடுதல் குறித்து சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் மாணவர்கள் ஒருங்கிணைத்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மார்ட் லிப்பேர்ட் தலைநகர் சியோலில் நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்கானார். காலை விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது இச்சம்பவம் நடைபெற்றது. தாக்குதல் நடத்தியவர் 55 வயது நிரம்பிய கிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார் வடகொரியாவும் தென் கொரியாவும் இணைக்கப்பட வேண்டும்" எனக் கூச்சலிட்டவாறு கத்தியுடன் லிப்பேர்டை நெருங்கி வந்ததாகவும், போர்ப் பயிற்சிக்கு இடமில்லை எனக் கூறியவாறு தாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிசார் கிம்மை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். * தென் கொரிய தலைநகரில் அமெரிக்கத் தூதுவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரால் பரபரப்பு, வீரகேசரி,மார்ச்சு 06, 2015. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமம், வீரநாராயண பெருமாள்புரம் என்றழைக்கப்பட்ட முதலாம் பராந்தக மன்னனர் காலத்தில்காட்டுமன்னார்கோயில் தலை நகராக கொண்டு 161 கிராமங்கள் இயங்கின, அதில் முடிகண்டநல்லூறூம் ஒன்று. “முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவரான. சோழ மரபினரின் பொற்காலம் என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம்இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள் குழப்பமாகவே உள்ளன. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான் கொல்லம். கொல்ல தேசம்.கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார். முடிகண்டநல்லூர் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வெற்றி கொண்ட பகுதியை முடிகண்டநல்லூர் என்னும் பெயரில் ஒரு கிராமதை உருவாக்கினார். அப்பொழுது இராசராச சோழனுக்கு முடிகொண்டான் என பெயர் சூட்டப்பட்டது இந்த ஊரில்தான் முதல் (மடம்) சத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் குண்டபண்டிதர் ஓடை மற்றும் பெரிய ஏரி. சித்தேரி. தாமரை குளம்(சாவடிக்குளம்) மற்றும் மூர்த்திவினாயகர் குளம். திருகுளம் போன்ற பல நீர் நிலைகளை உருவானது இந்த கிராமத்தில். கணினி மாணவன், தமிழ் விக்கி செய்தி தொகுப்புப்பணிகளில் ஆர்வமுண்டு. கணினி மாணவன் தமிழ் மேம்பாட்டில் ஆர்வம் பாடல் கேட்பதில் ஆர்வம். கதைகளில் ஆர்வம். கணிப்பொறி மாணவி. நவீன சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கபடுபவரும் 31 ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராக இருந்த 91 வயதுடைய லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிட்சை பலனலளிக்காமல் ஞாயிறு அன்று மரணமடைந்தார். நாட்டு மக்கள் மரியாதை செலுத்துவதற்காக ஒரு வாரம் உடல் வைக்கப்பட்டிருக்கும் என்றும் மார்ச்சு 29 அன்று உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு இவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 2011 வரை அமைச்சரவையில் பங்கு பெற்றார். இறக்கும் வரை இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கேம்பிரிச்சில் படித்த வழக்கறிஞர் ஆவார். இவரின் மூத்த மகன் லீ சீன் லூங் 2004இல் இருந்து பிரதமராக உள்ளார். மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமை குறித்த ஒரு நாள் பயிலரங்கினை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல் துறையுடன் இணைந்து மார்ச்சு 31, 2015 செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்த்த உள்ளது. இப்பயிலரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள ஆட்சிப்பேரவைக் கூடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிகழ உள்ளது. இப்பயிலரங்கின் வரவேற்புரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம. சாதிக் பாட்சா வழங்க உள்ளார், தலைமையுரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சுவாமிநாதன் வழங்க உள்ளார், பயிலரங்க வாழ்த்துரையினை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் வை. நடராஜன் வழங்க உள்ளார், பயிலரங்கின் நோக்கவுரையை இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி வழங்க உள்ளார், நிகழ்வின் நன்றியுரையை முனைவர் எ. சி கவிதா வழங்க உள்ளார். இப்பயிலரங்கின் பயிற்சிகள் இரண்டு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி மாணவர்களுக்கான நேரிடைப் பயிற்சியை வழங்க உள்ளார். முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த அறிமுகம் அளிக்கப்பெறும். இவ்வமர்வில் தமிழ் உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பெறும். மதியம் நிகழவுள்ள இரண்டாம் அமர்வில் விக்கி பொதுவகத்தில் காட்சிக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியங்களை மின் ஆவணங்களாக (GLAM) மாற்றும் பயிற்சி திறவூற்று மென்மங்கள், தமிழ் மென்மங்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பெறும். இப்பயிலரங்கில் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணவர்களும், மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமைப் பணிகளின் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர். சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கு தமிழ்க்கணிமைப்பயிலரங்கம் மார்ச்சு 25, 2015 இல் புதன்கிழமை அன்று நிகழ உள்ளது. இப்பயிலரங்கில் பயிற்சிகளை மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி மாணவர்களுக்கான நேரிடைப் பயிற்சியை வழங்க உள்ளார்.முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த அறிமுகம் அளிக்கப்பெறும். இவ்வமர்வில் தமிழ் ஒருங்குகுளிறி உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பெறும். மதியம் நிகழவுள்ள இரண்டாம் அமர்வில் விக்கியூடகத் தொகுப்பு, திறவூற்று மூலங்கள், திறவூற்று அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், திறவூற்று வலைதளங்கள், திறவூற்று மென்பொருட்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பெறும்.இப்பயிலரங்கில்சேலம் நடுவண் சிறையின் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர். சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கான தமிழ்க்கணிமைப் பயிலரங்கம் மார்ச்சு 25, 2015 புதன்கிழமை அன்று சேலம் நடுவண் சிறையின் அலுவலகப் பணியாளர் திறன் மேம்பாட்டு நடுவத்தின் சார்பில் நிகழ்ந்தது. இப்பயிலரங்கில் பயிற்சிகளை இரண்டு அமர்வுகளாகப் பிரித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி நேரிடைப் பயிற்சியை நடத்தினார். முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த அறிமுகத்தை அவர் அளித்தார். இவ்வமர்வில் தமிழ் ஒருங்குகுறி உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் ஆகியன குறித்து பயிற்சி அளித்தார். மதிய நிகழ்வான இரண்டாம் அமர்வில் விக்கியூடகத் தொகுப்புப் பணிகள், விக்கியூடகத் திட்டங்கள், திறவூற்று மூலங்கள், திறவூற்று அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், திறவூற்று வலைதளங்கள், திறவூற்று மென்பொருட்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கபெற்றது. இப்பயிலரங்கில் சேலம் நடுவண் சிறையின் அலுவலகப் பணியாளர்கள் 50 பேர் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் பயிலரங்கப் பங்கேற்பாளர்களுக்கு திறவூற்று மென்பொருட்கள் அளிக்கப்பெற்றது. இப்பயிலரங்கின் நன்றியுரையை சேலம் நடுவண் சிறையின் மனநல ஆலோசகர் செல்வகுமார் வழங்கினார். மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமை குறித்த ஒரு நாள் பயிலரங்கத்தை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல் துறையுடன் இணைந்து மார்ச்சு 31, 2015 செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்த்தியது. இப்பயிலரங்கின் பயிற்சிகள் இரண்டு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கான நேரிடைப் பயிற்சியை மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அளித்தார். முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த முழுமையான அறிமுகத்துடன் தமிழ் உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பெற்றது. மதியம் நிகழந்த இரண்டாம் அமர்வில் விக்கி பொதுவகத்தில் காட்சிக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியங்களை மின் ஆவணங்களாக (GLAM) மாற்றும் பயிற்சி, திறவூற்று மென்மங்கள், தமிழ் மென்மங்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பெற்றது. இப்பயிலரங்கின் நிறைவுவிழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எம். ஜெயப்பிரகாஷ் வரவேற்புரையை நிகழ்த்தினார். பயிலரங்க அறிக்கையை நன்றியுரையை முனைவர் எ. சி கவிதா வழங்கினார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழை பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் பேராசிரியர் எஸ். லீலா வழங்கினார், பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம. சாதிக் பாட்சா நன்றியுரை வழங்கினார். இப்பயிலரங்கின் அமைப்பாளராக பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம. சாதிக் பாட்சா வும், ஒருங்கிணைப்புச் செயலராக முனைவர் எ. சி கவிதா வும், ஒருங்கிணைப்குழு உறுப்பினர்களாக முனைவர் என். இராதாகிருஷ்ணன், முனைவர். கோமதி, முனைவர் எம். ஜெயப்பிரகாஷ் முனைவர் எம். பழனியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியை சு. சுதா அ. ரூபிநந்தினி ஆகிய முனைவர்ப் பட்ட மாணவர்கள் தொகுத்து வழங்கினர். இப்பயிலரங்கில் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல், கல்வியல் துறைகளைச்சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர், முனைவர்ப்பட்ட ஆய்வு மாணவர்களும் மின் ஆவண ஆக்க மற்றும் தமிழ்க்கணிமைப் பணிகளின் ஆர்வலர்கள் பங்கேற்றனர். இதழியல் துறையின் மாணவி, தமிழில் செய்திகளை உருவாக்க ஆர்வமுண்டு. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமம், வீரநாராயண பெருமாள்புரம் என்றழைக்கப்பட்ட முதலாம் பராந்தக மன்னனர் காலத்தில்காட்டுமன்னார்கோயில் தலை நகராக கொண்டு 161 கிராமங்கள் இயங்கின, அதில் முடிகண்டநல்லூறூம் ஒன்று. “முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவரான. சோழ மரபினரின் பொற்காலம் என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம்இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள் குழப்பமாகவே உள்ளன. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான் கொல்லம். கொல்ல தேசம்.கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார். முடிகண்டநல்லூர் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வெற்றி கொண்ட பகுதியை முடிகண்டநல்லூர் என்னும் பெயரில் ஒரு கிராமதை உருவாக்கினார். அப்பொழுது இராசராச சோழனுக்கு முடிகொண்டான் என பெயர் சூட்டப்பட்டது இந்த ஊரில்தான் முதல் (மடம்) சத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் குண்டபண்டிதர் ஓடை மற்றும் பெரிய ஏரி. சித்தேரி. தாமரை குளம்(சாவடிக்குளம்) மற்றும் மூர்த்திவினாயகர் குளம். திருகுளம் போன்ற பல நீர் நிலைகளை உருவானது இந்த கிராமத்தில். கென்யாவில் உள்ள காரிசா பல்கலைக்கழகத்தில் சோமாலியாவின் அல் சபாப் தீவிரவாத குழுவினர் நடைத்திய தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியானதாகவும், குறைந்தது 79 பேர் காயமடைந்ததாகவும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர் எனவும் சுமார் 300 பேர் குறித்த தகவல் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் இறந்தவர் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இறந்தவர் எண்ணிக்கை 147 என்று சிலர் கூறுகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதாகம் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை தொடர்வதாகவும் கென்யாவின் உள்துறை அமைச்சர் யோசப் தெரிவித்தார். இத்தாக்குதலை ஒட்டி நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கென்ய சோமாலியா எல்லையில் உள்ள நான்கு கவுண்டிகளான வசிர், காரிசா, தானா ஆறு, மன்டேரா ஆகியவற்றிற்கு மாலையில் இருந்து விடியும் வரை ஊரடங்கு உத்தரவு 2 வாரங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கென்ய படைகளின் கட்டுப்பாட்டில் சில கட்டடங்கள் வந்தாலும் இன்னும் சண்டை நீடிக்கிறது என கென்யாவின் ரெட் கிராசு அதிகாரி கூறினார். காரிசா பல்கலைக்கழகம் சோமாலியா எல்லையில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. இத்தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என்று அல் சபாப் பிபிசிக்கு தெரிவித்தது. இத்தாக்குதலுக்கு காரணமானவர் முகமது குனோ என்ற அல் சபாபின் உயர்பொறுப்பில் உள்ளவர் என கென்ய அரசு அறிவித்துள்ளது. அவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு $220,000 பரிசு அளிப்பதாக கென்யா அரசு அறிவித்துள்ளது. முகமது குனோ கென்யாவின் காரிசா கவுண்டியிலுள்ள இசுலாமிய பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். 2007இல் அவ்வேலையை விட்டு விலகினார். இவருக்கு துல்யதியன் என்ற பட்டப்பெயராலும் அழைக்கப்படுகிறார் சோமாலிய மொழியில் அதற்கு நீண்ட கைகளை உடையர் என்று பொருள். கமாதரெ என்ற பெயராலும் அறியப்படுகிறார். மாணவர் மன்றத்தின் துணை அவைத்தலைவர் கோலின்சு வெடன்குலா ஆயுததாரிகள் மாணவர் தங்கும் அறைக்கு வந்து மறைந்துள்ள மாணவர்கள் எம்மதம் என்று கேட்டு முசுலிம் அல்லாதவர்களை சுட்டுக்கொன்றனர் என்றார். மாணவர் கிறுத்துவர் என்றால் மாணவரை அங்கேயே சுட்டனர் என்றார். ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு புலம் பெயர முயன்றவர்களை ஏற்றிச்சென்ற மீன்பிடி படகு மத்திய தரைக்கடலில் விபத்தில் சிக்கியதில் குறைந்தது 700 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இப்படகு வடக்கு லிபியாவில் இருந்து புறப்பட்டது. 20 மீட்டர் நீளமுடைய இப்படகு லிபியாவின் கடற்கரையில் இருந்து 70 மைல் தொலைவில் மூழ்கியது. இவ்விபத்தில் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக சிசிலி கொண்டு செல்லப்பட்ட வங்காளதேசத்தவர் படகில் 950 பேர் இருந்ததாக கூறினார். முன்னதாக அதிகாரிகள் விபத்து நடந்த படகில் 700 பேர் இருந்ததாக கூறினர். கடந்த ஆண்டு 219,000 பேர் கடலை கடந்து ஐரோப்பாவுக்கு பத்திரமாக வந்ததாகவும் 3,500 பேர் இறந்ததாகவும், இவ்வாண்டு 35,000 கடலை கடந்து ரோப்பாவுக்கு பத்திரமாக வந்ததாகவும் 3,500 பேர் இறந்ததாகவும் இது வரை 900 பேர் கடலை கடக்கையில் இறந்துள்ளதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான தலைவர் கூறினார். இது வரை 28 பேர் காப்பாற்றபட்டுள்ளதாக தெரிகிறது. இத்தாலிய கடற்படையும் கடலோர காவற்படையும் வானூர்தியும் தேடுதலிலும் மீட்புபணியிலும் ஈடுபட்டுள்ளன. கடந்த செவ்வாய் அன்று ஏமன் கௌதி புரட்சியாளர்கள் மீது நடத்தப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக கூறிய சௌதி அரேபியா மீண்டும் ஏமனின் கௌதி புரட்சியாளர்கள் மீது வான் தாக்குதலை தொடங்கியது. ஏமனின் அதிபரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக கடந்த ஒரு மாதமாக நடந்த வான் தாக்குதல்கள் தங்கள் இலக்கை அடைந்ததால் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக சௌதி அரேபியா கூறியது. வான் தாக்குதல்களாலும் உள்நாட்டு சண்டையாலும் மார்ச்சு 19 முதல் இதுவரை 944 பேர் இறந்துள்ளதாகவும் 3,487 பேர் காயமுற்றதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. புரட்சியாளர்கள் தாய்ச் நகரின் வடபகுதியில் உள்ள 35வது படைப்பிரிவின் தலைமையகத்தை புதன் அதிகாலையில் கைப்பற்றினர். 35வது படைப்பிரிவு அதிபர் கைய்தியின் ஆதரவு படையாகும். இப்படைப்பிரிவு புரட்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து சௌதி அரேபியா மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது. முதலாம் உலகப்போரின் முடிவில் 1915-16ஆம் ஆண்டும் ஒட்டாமான் பேரரசு ஒரு மில்லியனுக்கும் மேலான ஆர்மீனியர்களை இனப்படுகொலை செய்ததை ஆர்மீனியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் 24 அன்று நினைவு கூறுகிறார்கள். இந்த இனப்படுகொலையை ருசியா பிரான்சு போன்ற நாடுகள் ஒத்துக்கொண்டு இவ்வாண்டு நினைவு கூறல் நிகழ்ச்சியில் ருசிய அதிபர் புடினும் பிரான்சு அதிபர் ஆலண்டேவும் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்கா சார்பாக கருவூல செயலரும், ஐக்கிய இராச்சியம் சார்பாக ஆர்மீனியாவுக்கான அ அனைத்து கட்சியின் அவைத்தலைவரும் கலந்து கொள்கிறார்கள். துருக்கி நாடே சுருக்கப்பட்ட ஒட்டாமான் பேரரசின் தற்போதைய வடிவமாகும். ஒட்டாமான் பேரரசை ஆண்டவர்கள் துருக்கியர்கள். செருமனி 1920ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒட்டாமான் பேரரசு ஒரு நாட்டு மக்களை கொன்றதை ஓர் ஆவணத்தில் விவரித்துள்ளது. ஆர்மீனியர்கள் கிறுத்துவ சமயத்தை கடைபிடித்தவர்கள். ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டது இனப்படுகொலை என செருமனியின் அதிபர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். துருக்கி இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் போரின் காரணமா பலர் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கிறது. இசுரேல், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகியனவும் இனப்படுகொலை நடந்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. கத்தோலிக கிறுத்துவர்களின் தலைமையகமான வாட்டிகன் இனப்படுகொலை நடந்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போதைய திருத்தந்தை பிரான்சிசு கூறியது அவரது தனிக்கருத்து என்று தெரிவிக்கப்பட்டது. பல பழமையான கட்டடங்களும் கோவில்களும் இடிந்தாலும் காத்மாண்டுவில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டு பசுபதி நாத் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பீகாரில் 32 பேரும் உத்திரப்பிரதேசத்தில் 8 பேரும் மேற்கு வங்காளத்தில் 3 பேரும் உயிரழந்துள்ளனர். நிலநடுக்கம் உருவாக்கிய பனிச்சறிவினால் எவரெசுட் அடிவார முகாமில் 18 பேர் உயிரிழந்தனர். இத்தோனோசியா எட்டு பேரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது. இதில் ஏழு பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பன்னிரெண்டு பேர் கொண்ட துப்பாக்கி வீர்ர்கள் மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். ஆவுசுத்திரேலியாவை சேர்ந்த இருவரும் பிரேசிலை சேர்ந்த ஒருவர் நைசீரியாவைச் சேர்ந்த நால்வர் இத்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் எட்டு பேருக்கு துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆவுசுத்திரேலியாவை சேர்ந்தவர்களின் பெயர் மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரு சென் என்று தெரியவந்துள்ளது. இருவரும் 33, 31 வயதுடையவர்கள். இவர்கள் இருவருக்கும் 2005இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பாலி ஒன்பது எனப்படும் குழுவின் தலைவர்கள் என கருதப்படுகிறது. இவர்கள் ஆவுசுத்திரேலியாவுக்கு 18 பவுண்டு போதை பொருளை கடத்த முயன்ற போது தென்பாசர் வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் விபரம்; மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரு சென் இருவரும் ஆவுசுத்திரேலியாவை சேர்ந்தவர்கள், ரகீம் சலமி, சில்வர் ஒபிக்வே வோலிசே, ஓகேவுடில் ஓயாடன்சி, மார்டின் ஆண்டர்சன் ஆகிய நால்வரும் நைசீரியாவை சேர்ந்தவர்கள், சானின்அல் அபைடின் இந்தோனேசியாவை சேர்ந்தவர் ரோடிரிகோ குலார்டே பிரேசிலை சேர்ந்தவர். இறுதி நேரத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர் சேன் வெலசோ என்ற பிலிப்பானிய பெண். கடந்த சனவரியில் பிரேசில் நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து பிரேசில் தனது தூதுவரை இந்தோனேசியாவில் இருந்து விலக்கிக்கொண்டது. ஆவுசுத்திரேலியாவும் தனது தூதரை விலக்கிக் கொண்டுள்ளது. பிலிப்பைன்சுக்கும் இந்தோனேசியாவிற்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவதற்கு முன் இறுதி நேரத்தில் உடன்பாடு ஏற்பட்டதை ஒட்டி ஒன்பதாவது கைதியான பிலிப்பைன்சை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற ஆளில்லாத சோயுசு விண்கலம் பொருட்களை நிலையத்திற்கு தரும் முன் கட்டுப்பாட்டை இழந்து விண்ணில் சுற்றுகிறது. இதன் பெயர் பிராகசு 59 என்பதாகும். இந்த விண்கலம் கசகசக்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது. தற்போது அனைத்துலக விண்வெளி நிலையத்தில் மூன்று இருசியர்களும் இரு அமெரிக்கர்களும் ஒர் இத்தாலி நாட்டவரும் உள்ளனர். இந்த விண்கலம் பூமியில் மோதும் என்றும் பூமியின் வளி மண்டலத்தில் உராயும் போது எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் விண்வெளி நிபுணர்கள் தெரிவித்தனர். அனைத்து பிராகிரசு விண்கலன்களும் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் குப்பைகளை ஏற்றிக்கொண்டு பூமிக்கு திரும்பும் போது பூமியின் வளி மண்டலத்தில் உராய்ந்து எரியும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்விண்கலம் நீர், எரிபொருள், உணவு, உடை, சில கருவிகள் என்று ஏறக்குறைய மூன்று டன் எடையுடைய பொருட்களுடன் சென்றது. அடுத்த விண்கலம் யூன் மாதத்தில் செல்லும் தனியாரின் இசுபேசு எக்சு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் ஆர்பிட்டல் சயின்சு என்ற விண்கலம் வெர்சீனியா மாநிலத்தில் ஏவும் போது வெடித்ததில் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பொருட்கள் தீக்கரையாகின. ஏவுகலத்தில் இருந்து மூன்றாவது நிலையில் பிரிந்த உடனே இது கட்டுப்பாட்டை இழந்தது. அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதத்திற்கான உணவு உட்பட பொருட்கள் இருப்பு இருக்கும் என்ற போதிலும் அக்டோபர் மாதம் ஆர்பிட்டல் சயின்சு விண்கலம் வெடித்ததால் வைத்துள்ள இருப்பில் சிறு பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதனால் விண்வெளி வீரர்களுக்கு எப்பாதிப்பும் ஏற்படாது என்று நாசா அதிகாரிகள் கூறினர். யூன் மாதத்தில் இசுபேசு எக்சு செல்லும் போது பற்றாக்குறை சரி செய்யப்படும் என்றனர். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் (பழமைவாத) கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி காமன்சு சபையிலுள்ள 650 தொகுதிகளில் 321 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறுதிப்பெரும்பான்மைக்கு 326 தொகுதிகளில் வென்றால் போதும். இரண்டாவதாக வந்த தொழிற் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக வந்த இசுக்காட்லாந்து தேசிய கட்சி 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தாராளவாத சனநாயக் கட்சியும் சனநாயக கூட்டுறவுக் கட்சியும் தலா 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சின் பெயின் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது, சமூக சனநாயக தொழிற் கட்சியும் பிளெயிட் சிம்ரு கட்சியும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன, அல்ஸ்டர் கூட்டுறவுக் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பசுமைக் கட்சியும் ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சியும் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றன. ருசியா சனிக்கிழமை அன்று நாசி செர்மனியை இரண்டாம் உலகப்போரில் வெற்றி கொண்டதன் 70ஆம் ஆண்டு விழாவை கொண்டாடியது. இந்த விழாவில் பெரும் இராணுவ அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டது இதில் 16,000 வீரர்களும் 200 கவச ஊர்திகளும் 150 வானூர்திகளும் பங்கு பெற்றன. இவ்விழாவில் சீன அதிபர் சி சின்பிங்கும் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ச்சி கூபா அதிபர், வெனிசுலா அதிபர் நிக்கோலசு முட்ரோ கசக்கசுத்தான் அதிபர், சிம்பாவ்வே அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர், எகிப்தின் அதிபர், ஐக்கிய நாடுகள் தலைவர் பா கி முன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல மேற்குல நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் நடைபெரும் சண்டைக்கு ருசியா காரணம் என்று கூறி விழாவைப் புறக்கணித்தனர். இவ்விழாவின் அணிவகுப்பில் ருசியாவின் புதிய இராணுவ பீரங்கியான ஆர்மடா டி-14 என்பதை அறிமுகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போர் பெரும் தேசபக்த போர் என ருசியர்களால் அழைக்கப்படுகிறது. இப்போரில் 26 மில்லியனுக்கும் மேற்பட்ட ருசியர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் போரில் இறந்த 4 மில்லியன் ருசிய போர்வீரர்கள் உடல்கள் மீட்கப்படவில்லை என ருசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் நேச நாடுகளின் 70ஆம் ஆண்டு வெற்றியை தனியாக கொண்டாடின. செருமனியின் வேந்தர் அங்கெலா மேர்க்கெல் சனிக்கிழமை நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை புறக்கணித்தாலும் ஞாயிறு அன்று மாசுக்கோ சென்று இரண்டாம் உலகப்போரில் உயர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இரண்டாம் உலகப்போரில் ருசிய அதிபர் புடினின் தந்தையும் பங்கெடுத்துள்ளார். ருசியாவில் உள்ளோரில் 70% க்கும் அதிகமானோரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது போரின் போது கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் ருசியாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி நாள் மே 09 அன்று கொண்டாடப்படும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வெற்றி நாள் மே 08 அன்று கொண்டாடப்படும். ஏப்பிரல் 25 ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,000 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் துறை 15 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறுகிறது. இந்நிலநடுக்கம் புதுதில்லி முதல் சென்னை வரை உணரப்பட்டது. ஆனால் அங்கு பாதிப்பு ஏதும் இல்லை. நிலநடுக்க செய்தியை அடுத்து புதுதில்லி மெட்ரோ இரயில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கியது, தலைமைச்செயலகம் உட்பட பல அரசு அலுவலகங்களின் அலுவலர்கள் வெளியேற்றப்பட்டனர். சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன இப்பயிற்சிகளைப் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் வழங்கி வருகிறார்கள் ஏழை பட்டதாரிகளும் பெற்று பயன் பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகளைக் கொடுக்கப் பயிலகம் பயிற்சி இப்பயிற்சிகளுக்கு அனுமதிக் கட்டணம், பதிவுக் கட்டணம் என்பன போன்ற எந்த 1)பயிற்சிகளில் இணைந்து பயன் பெறும் மாணவர் ஏதாவது ஒரு துறையில் பட்டப் படிப்பு பட்டயப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும் 2)ஏழ்மை நிலையில் இருப்பவராக இருக்க வேண்டும் இவற்றைத் தவிர வேறெந்த நிபந்தனைகளும் இல்லை இணையத்தளத்தில் செய்யலாம் அல்லது 8883775533 என்னும் எண்ணைத் தொடர்பு 67/4 இ, விஜய நகர் 3ஆவது குறுக்குத் தெரு கொலம்பியாவின் பெரிய இடதுசாரி கிளர்ச்சியாளர் குழுவான கொலம்பியாவின் புரட்சி இராணுவ படை என்ற பெயர் கொண்ட பார்க் (FARC Fuerzas Armadas Revolucionarias de Colombia) தன்னிச்சையாக அறிவித்திருந்திருந் போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டது. 2014, டிசம்பர் முதல் அரசு போர்நிறுத்தத்தை அறிவிக்காத போதிலும் பார்க் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது, வியாழன் அன்று வான் தரைப்படை கூட்டு தாக்குதலில் அதன் உறுப்பினர்கள் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்தாக அறிவித்தது. போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்ட போதிலும் கூபா தலைநகர் அவானாவில் நடைபெறும் இறுதி கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் அவ்வியக்கம் கலந்து கொள்ளும் என அறிவித்தது. கடந்த ஏப்பிரல் மாதம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து கொலம்பிய அதிபர் சாண்டோசு வான் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். பேச்சுவார்த்தையின் போது ்பார்க் வலது சாரி ஆயுத குழுக்கள் கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதை அரசு தடுக்க வேண்டும் என கேட்டிருந்தது. வெப்பத்தாக்கத்தால் இந்தியாவில் அதக உயிரிழப்பு என்று சொன்னாலும் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா மாநிலங்களிலேயே அதிக இறப்புகள் நேர்ந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் புதன்கிழமைக்கு பின் 414 பேர் இறந்துள்ளார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் 1000க்கும் அதிகமானவர்கள் இதனால் இறந்துள்ளார்கள். தெலுங்கானாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் இதுவரை ஒடிசாவில் 43 பேரும் குசராத்தில் ஏழு பேரும் தில்லியில் இருவரும் உயிரிழந்துள்ளார்கள். கடும் வெப்ப தாக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என ஐதரபாத்து வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்திலேயே அதிகமக்கள் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குண்டூர், விசாகப்பட்டணம், விசயநகரம், நெல்லூர் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிகபேர் இறந்துள்ளார்கள். மற்ற மாவட்டங்களிலும் வெப்பத்தால் மக்கள் இறந்துள்ளார்கள் தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்திலேயே அதிகமக்கள் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக கம்மம், கரீம் நகர், மெகபூப் நகர் மாவட்டங்களில் அதிகபேர் இறந்துள்ளார்கள். மற்ற மாவட்டங்களிலும் வெப்பத்தால் மக்கள் இறந்துள்ளார்கள் முதியவர்களும், தொழிலாளர்களுமே அதிக அளவில் இறந்துள்ளார்கள். 1800க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக புதிய செய்திகள் கூறுகின்றன. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், சார்கண்ட், இராசசுத்தான் போன்ற மாநிலங்களிலும் வழக்கத்துக்கு அதிகமான வெப்பத்தாக்கம் இப்போது நிலவுகிறது. சீனாவிலுள்ள யாங்சி ஆற்றில் உல்லாச படகு சவாரி செய்ய 456 பேர் ஈசுடர்ன் இசுடார் (Eastern Star) என்ற கப்பலில் பயணித்த போது குபாய் மாகாணத்தின் சியான்லி கவுண்டியிலுள்ள யாங்சி ஆற்றில் அது கவிழ்ந்ததில் அனைவரும் மூழ்கினர். இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கப்பலின் தலைவரும் தலைமை பொறியாளரும் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கப்பல் எச்சரிக்கை சமைக்கையை அனுப்பவில்லை என்றும் அது புயலில் சிக்கி மூழ்கியது என்றும் தெரிவித்தனர். இரவு முழுவதும் மீட்புப்பணி மோசமான வானிலை நிலவிய போதும் தொடர்ந்தது. மீட்டுப்பணியில் 150 படகுகளும் 4,000 ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் 405 சீன சுற்றுலா பயணிகளும் 46 கப்பலின் ஊழியர்களும் 5 சுற்றுலா முகவர்களும் பயணித்தனர். முதலில் இவ்விபத்தில் 15 மீட்கப்பட்டதாகவும் 458 பேர் (406 சீன சுற்றுலா பயணிகள், 47 கப்பலின் ஊழியர்கள் 5 சுற்றுலா முகவர்கள்) இக்கப்பலில் பயணம் செய்ததாகவும் சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் சின்குவா தெரிவித்தது. கப்பல் சில நிமிடங்களில் மூழ்கியதாக படகின் தலைவன் தெரிவித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்தன. இதில் பயணம் செய்தவர்கள் 50-80 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இப்கப்பல் கிழக்கில் உள்ள நகரமான நான்சிங்கிலிருந்து தென் மேற்கிலுள்ள சோங்குயிங் வரை 1,500 கிமீ அனைவரும் இப்படகில் பயணம் செய்ய திட்டமிட்டுருந்தார்கள். கப்பல் யாங்கி ஆற்றின் நீர்வழியான டாமாசு அருகே மூழ்கியது. அருகிலுள்ள நகரம் சியான்லி. மீட்புப்பணிக்காக மூன்று பள்ளத்தாக்கு அணையிலிருந்து நீர் குறைவாக திறக்கப்பட்டுள்ளது. சீன பிரதமர் லி விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளார். 1994ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கப்பல் 76 மீட்டர் நீளமும் 2,200 டன் எடையும் உள்ளது, அதிகபட்சமாக 534பேரை சுமந்து செல்லக்கூடியது. 11வது இந்திய ஜனாதிபதியாக பதவியை ஏற்கும் முன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். நந்தகுமார், இணை பேராசிரியர், கரோலின்ஸ்கா மையம், சுவீடன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 263-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 191 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் விரைந்தார். நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான கைபர் பக்துன்குவா பகுதியை அவர் விமானம் மூலம் பார்வையிட்டார். கைபர் பக்துன்குவாவின் தலைநகரான பெஷாவர் நகரில் மட்டுமே 18 பேர் உயிரிழந்ததாக, மாகாண தகவல் துறை அமைச்சர் முஷ்தாக் கனி தெரிவித்தார். அந்த மாகாணத்திலுள்ள மலாகண்ட் பகுதியில் அதிகபட்சமாக 137 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நூறுக்கும் மேற்பட்டோர் அந்நகரின் லேடி ரெடிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் 5 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 4 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பஜாவுர் பழங்குடிப் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து நால்வர் உயிரிழந்ததாக "தி டான்' நாளிதழ் தெரிவித்தது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. பாகிஸ்தானையொட்டிய நங்கர்ஹார் மாகாணத்தில் 6 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர். "நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க இந்தியா தயாராக உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி, தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்துள்ளார். நமது சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது என்னும் கணிப்பு தவறாக இருக்கலாம் என இம்முடிவுகள் காட்டுவதாக அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கோள்கள் உருவாகிக்கொண்டிருக்கும் போது ஆக்சிசன் ஏனைய தனிமங்களுடன் வினை புரிந்திருக்கலாம் என நம்பப்பட்டது. இது குறித்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. வால்வெள்ளியைச் சுற்றி நீராவி, கார்பன் மோனொக்சைடு, கார்பனீரொக்சைடு ஆகியவற்றுக்கு அடுத்ததாக சுயாதீன ஆக்சிசன் மூலக்கூறுகள் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஆக்சிசன் பொதுவாக ஏனைய மூலக்கூறுகளுடன் மிக விரைவில் வினை புரிகின்றன, இதனால் அவை தனி மூலக்கூறுகளாக இருப்பது மிக அரிதாகும். வால்வெள்ளியில் ஆக்சிசன் மூலக்கூறுகள் மிக விரைவில் உறைந்து போயிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2004 மார்ச் மாதத்தில் ஆரியான் ஏவூர்தி மூலம் ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியை நோக்கிய நீண்ட பயணத்தை ஆரம்பித்திருந்தது. பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியை 2014 நவம்பரில் கீழிறக்கியது. இத்தளவுளவியுடனான தொடர்புகள் சில நாட்களில் நின்று போயிற்று. ஆனாலும், வால்வெள்ளியைச் சுற்றி வரும் ரொசெட்டா தாய்க்கலம் மிகவும் பயனுள்ள தகவல்களை புவிக்கு அனுப்பி வருகிறது. ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியின் சுற்றுவட்டத்தை அடைந்தது ஆகத்து 6, 2014 இரண்டரை ஆண்டுகளாக உறக்கத்தில் இருந்த 'ரொசெட்டா' விண்கலம் விழித்தெழுந்தது சனவரி 23, 2014 ரொசெட்டா விண்கலம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் சூன் 10, 2011 224 பேருடன் சென்ற உருசிய விமானம் ஒன்று எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக எகிப்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். 9,000 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போதே ராடார்களில் இருந்து அவ்விமானம் மறைந்ததாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் சிதைவுகள் அசானா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு உள்ளதாக விமானி எகிப்தியத் தரைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அறிவித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என எகிப்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தீவிரவாதிகளின் நடமாட்டங்கள் அதிகரித்திருந்தன. பல்வேறு தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் கொல்லப்பட்டனர். உருசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழப்பு சூன் 21, 2011 விக்கிப்பீடியா பராமரிப்பு முதலிய சில காரணங்களுக்காக கட்டுரைகளில் காட்டப்படாத பகுப்புகள். நவம்பர் 2 அன்று தென்னிந்தியப் பகுதிகளில் பலத்த மழை இருக்குமென சென்னை வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. இன்றைய செவ்வாயின் வளி அழுத்தம் புவியினுடையதை விட 1% இற்கும் குறைவாகக் காணப்படுகிறது. இதனால் வளியில் காணப்படும் சுயாதீன நீர் மூலக்கூறுகள் உடனடியாகவே ஆவியாக அல்லது உறைந்து விடுகின்றன. சில வளி மூலக்கூறுகள் தரையில் உள்ள கனிமங்களுடன் தாக்கமடைந்து விடுகின்றன. ஆனாலும், மாவென் விண்கலத்தின் ஆய்வுகளின் படி, சூரியனின் தாக்கத்தால், செவ்வாய்க் கோளின் சூடான, ஈரத்தன்மையான பகுதிகள் குளிர்ந்த, உலர்ந்த பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மாவென் விண்கலம் 2013 நவம்பர் 18 இல் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது. 2014 செப்டம்பரில் செவ்வாயின் சுற்றுப் பாதையை அடைந்தது. * ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரம் இணைக்கப்படல் வேண்டும். அறிவியல், தொழினுட்பம் குறித்த செய்தி 1 (அல்லது) குறிப்பிடத்தக்கது என்றால் கலை, இலக்கியம், பண்பாடு, பொழுதுபோக்கு குறித்த 1 செய்தி பாண்டிச்சேரி மீன்பிடித் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன மழைக்கான முன்னறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. வி774104 என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள இப்பொருள் 500-1000கிமீ பருமன் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் பற்றி அறிய இது மேலும் பல காலம் அவதானிக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். வி774104 வான்பொருள் 66 முதல் 140 பில்லியன் கிமீ தூரம் ஆழமாகச் செல்லக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு, கரூர் அருகே அரசுப் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்ததில், சுமார் 30 பேர் வரை படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கரூர் அருகே காந்திகிராமம் பகுதியை அடுத்த பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அப்போது அந்த சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததாலும், மழையினாலும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஒரத்தில் உள்ள பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் சுமார் 7 பேர் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும், மீதமுள்ள நபர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான நாய் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இறந்தது. கடும் மழையில் இவ்விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தால் கரூரிலிருந்து திருச்சிக்கு செல்லும் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இச்சம்பவமறிந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஜெ பேரவை மாவட்ட செயலாளருமான எஸ். காமராஜ் சம்பவத்தில் பாதிக்கபட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிரியாவில் இசுலாமிய அரசு (ஐஎஸ்) போராளிகளுக்கு எதிரான போரில் உருசியப் படையினர் ஈடுபட்டிருந்தபோது அப்படையின் போர் விமானமான சுகோய் எஸ்.யூ.24 என்ற விமானத்தை துருக்கி அதன் போர் விமானம் எப்.16 என்பதன் மூலம் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியது. சிரியா மற்றும் அதன் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், உலக நாடுகள் அனைத்திற்கும் பயத்தை உண்டுபண்ணும் ஐஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நேச நாடுகளின் படைகள் போர் புரிந்துவரும் வேளையில் உருசியாவும் தனது பங்காக சிரியா எல்லையில் அதன் படைகளைக் குவித்து போர் புரிந்துவருகிறது. இதற்கிடையில் துருக்கி நாடு தனது எல்லைக்குள் உருசிய விமானங்கள் அத்துமீறி நுழைவதாக புகார் கூறிக்கொண்டு இருந்தது. அதே வேளையில் நேற்று செவ்வாய்க்கிழமை உருசிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கு உருசிய அதிபர் பூட்டின் முதுகில் குத்திவிட்டார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இந்நாடு கடந்த 17 ஆண்டுகளாக சோசலிஸ்டுகளின் ஆட்சியில் இருந்தது. வாக்கெடுப்பு முடிவடைந்த ஐந்து மணித்தியாலங்களுக்குள் 99 இடங்களை எதிர்க்கட்சியினர் கைப்பற்றினர். சோசலிஸ்டுகள் 46 இடங்களைக் கைப்பற்றினர். 22 இடங்களுக்கு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பழமைவாத எதிர்க்கட்சியினர் குறைந்தது 112 இடங்களைக் கைப்பற்றுவர் எனக் கூறப்படுகிறது. அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோ தோல்வியை ஒப்புக் கொண்டார். தேர்தல் முடிவுகளைத் தமது கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனாலும், வெனிசுவேலாவின் தற்போதைய சனாதிபதி ஆட்சி முறையில், ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சி உள்ளூராட்சி சபைகளின் பெரும்பாலான இடங்களைத் தன் கைவசம் வைத்துள்ளது. ஐக்கிய சோசலிசக் கட்சி நாட்டின் பொருளாதாரம், மற்றும் எண்ணெய் வளத்தை சரியான முறையில் நிருவகிக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் லோப்பசு நாட்டில் வன்முறைகளைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவ்வாண்டு ஆரம்பத்தில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவே இவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் அரசைக் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலநடுக்கம் இந்தோனேசியாவின் கிழக்கே சுமார் 174 கிலோமீட்டர் (108 மைல்) தொலைவிலுள்ள பந்தா, அம்பொன் தீவுப் பகுதியில் கடலடியில் 75 கிலோமீட்டர் (47 மைல்) ஆழத்தில் நிகழ்ந்தது. இந்நிலநடுக்கத்தின்போது அப்பிராந்தியத்தின் கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும்பாலான மக்கள் பீதியடைந்தனர், எனினும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை, அதேவேளையில் இந்நிலநடுக்கத்தால் எவ்வொரு பாதிப்பும் இல்லையென்பதே மூலத்தகவலாக அறியப்பட்டது. இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் வட மாவட்டங்களாகிய சென்னை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளின் பள்ளிகள், கல்லூரிகள் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. இப்பாடசாலைகள் தொடர் பெருமழை, மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு மாதகாலம் இயங்காமல் இருந்தது. 2015 நவம்பர் 10-ம் திகதி செவ்வாய்கிழமை தீபஒளி கொண்டாட்டத்திற்காக, நவம்பர் 8-ம் திகதி முதல் 11-ம் திகதி முடிய விடுமுறை வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தொடர் மழை பெருவெள்ளம் போன்ற இடர்களின் காரணங்களால் வானிலை நடுவம்" அறிவுறுத்தலின்படி தொடர் விடுப்பு அளிக்கப்பட்டது. இடையில் நவம்பர் 19, 20, 21, 23 ஆகிய நான்கு நாட்கள் மட்டும் பாடசாலைகள் இயங்கியிருந்தன. சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வமான ஐக்கிய ராச்சிய விண்வெளி வீரர் டிம் பீக்கெவுடன் விண்வெளியில் அனைத்துலக விண்வெளி நிலையத்தை நோக்கி பைகானூர் விண்வெளி தளத்திலிருந்து செவ்வாய் அன்று பயணப்பட்டது. இவர் ஐக்கிய ராச்சியத்தின் முன்னாள் இராணுவ வானோடியாவார். பீக்கே ஆறு மாதங்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருப்பார். இப்போது சென்ற மூவர் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள மூவருடன் இணைந்துகொள்வார்கள். 1991ம் ஆண்டு இங்கிலாந்து குடிமகள் கெலன் செர்மான் சோயசு விண்கலம் மூலமாக அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். டிம் மீப்கெவுக்கு முன் சென்ற ஐக்கிய ராச்சியத்தவர் அனைவரும் தனிப்பட்ட முறையில் அல்லது அமெரிக்கக் குடியுரிமை பெற்று நாசா மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் ஆவர். சென்ற மூவரும் அடுத்த ஆண்டு யூன் 5 அன்று பூமிக்குத் திரும்புவர். 1961இல் யூரி ககாரின் சென்ற அதே தளத்திலிருந்து இவ்விண்கலம் ஏவப்பட்டது. சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் ஐம்பதாவது ஏவுதல் இதுவாகும். இது பிஎசுஎல்வியின் முப்பத்திரண்டாவது பறப்பாகும். ஏவுகலம் 226 டன் எடையும் 44 மீட்டர் உயரமும் உடையதாக இருந்தது. 400 கிகி எடையுடைய TeLEOS 1 என்னும் புவி உணர்வு செயற்கைக் கோளே, செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் மிகப்பெரியதாகும். இது சிங்கப்பூரின் ST Electronics மூலம் உருவாக்கப்பட்டது. இதன் ஆயுள் ஐந்து ஆண்டுகள் ஆக வடிவமைக்கப்பட்டது. இதிலுள்ள கேமரா மூலம் புவியில் ஒரு மீட்டர் அளவிலுள்ள பொருட்களை பார்க்கமுடியும். இந்தியாவின் தென்புலமான தமிழ்நாட்டில், தொடர்மழையால் தள்ளிவைக்கப்பட்ட 10-ஆம், 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள், வரும் 2016 சனவரி 11-ம் திகதி முதல்- 27-ம் திகதி முடிய நடைபெறும் என தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், நேற்று வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தொடர்மழை காரணமாக, 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் அரையாண்டு பொதுத்தேர்வுகள் 2016 சனவரி 11-ல் தொடங்கி சனவரி 27-ம் வரையில் நடைபெறும் என அறிவித்தார். 14 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உயிரினம் வாழத்தகுந்த சூழலுள்ள புறக்கோள் ஒன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலிய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். ஊல்ஃப் 1061 என்ற சூரியனைச் சுற்றி வரும் இக்கோளுக்கு ஊல்ஃப் 1061சி Wolf 1061c எனப் பெயரிடப்பட்டுள்ளது. இச்சூரியன் பூமிக்குக் கிட்டவாகவுள்ள 35வது சூரியனாகும். மூன்று கோள்கள் செங்குறளி விண்மீனான ஊல்ஃப் 1061 ஐச் சுற்றி வருவதாக நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ரைட் தெரிவித்தார். இம்மூன்றும் பூமி, மற்றும் வெள்ளியைப் போன்று பாறைகளாலானவை என நம்பப்படுகிறது. இம்மூன்று கோள்களில் ஒன்று அவற்றின் சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ளதால் அங்கு வாழத்தகுந்த சூழல் இல்லை என நம்பப்படுகிறது. மற்றையது மிகத் தூரத்தில் உள்ளதால் அது மிகவும் குளிரானதாக உள்ளது. மூன்றாவது இடைத்தூரத்தில் உள்ளதால் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது. இது கிட்டத்தட்ட 130 திரிலியன் கிமீ தூரத்தில் (14 ஒளியாண்டு) உள்ளது. ஊல்ஃப் 1061சி 18 நாட்களுக்கு ஒரு தடவை தனது சூரியனை சுற்றி வருகிறது. ஆனாலும், ஊல்ஃப் 1061 விண்மீனின் வெப்பநிலை (3,300 கெல்வின்) நமது சூரியனின் வெப்பநிலையுடன் (5800 கெ) ஒப்பிடும்போது குறைந்ததாகும். அமெரிக்காவின் லாசு வேகாசு நகரில் நடந்த மிசு யூனிவர்சு என்னும் அண்டத்தின் அழகி பட்டம் முதலில் கொலம்பியா அழகியான அரிட்னா குடிர்ரேச்சுக்கு தவறுதலாக அளிக்கப்பட்டு பின் சரியான தேர்வான பிலிப்பைன்சு அழகி பியா அலோன்சோ வுர்ட்பேச்சுக்கு அளிக்கப்பட்டது. இந்த தவறுக்கு பட்டம் பெற்ற அழகியின் பெயரை அறிவிக்கும் நிகழ்ச்சியின் நடத்துநர் இச்டீவ் கார்வே பொறுப்பேற்பதாக கூறினார். வெற்றி பெற்றவர் பெயருள்ள அட்டையை தவறாக படித்ததே இக்குழப்பத்துக்கு காரணம் என்றார். கீச்சு செய்யும் போது கொலம்பியா பிலிப்பைன்சு பெயர்களின் ஆங்கில எழுத்துகளை தவறாக கீச்சினார். பின் அது அழிக்கப்பட்டது. 90 நிமிடங்களுக்கு பிறகே கொலம்பியா அழகியின் பட்டம் பறிக்கப்பட்டு பிலிப்பைன்சு அழகிக்கு தரப்பட்டது. இது குறித்து ஒரு பிலிப்பைன்சு காரர் முகநூலில் ஆரம்ப நிமிடத்தின் கவனம் பறிக்கப்பட்டு போட்டியை நடத்தும் நிறுவனம் தங்கள் நாட்டையும் நாட்டு அழகியையும் அசிங்கப்படுத்தி விட்டதாக கூறினார். 19 முதல் 27 வயதுடைய 80 நாடுகளின் அழகிகள் பங்கெடுத்தனர். முதல் முறையாக நிகழ்ச்சியின் நான்கு நீதிபதிகளை தவிர பார்வையாளர்களும் வாக்களித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாவிடினும் இந்த நிகழ்ச்சி நடந்த அரங்கத்துக்கு அருகிலுள்ள கூட்டத்தில் கார் புகுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமுற்றனர். சென்ற ஆண்டு (2014) வரை என்பிசி யூனிவர்சலும் டோனல்ட் டிரம்பும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார். யூன் மாதம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்பிய போது டோனல்ட் டிரம்பு குடியேற்றத்துக்கு எதிரான கருத்து சொல்லும் போது லத்தீன் அமெரிக்கர்களை குற்றம் சுமத்தினார். லத்தீன் மொழி நிறுவனமான யூனிவிசன் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் இருந்து விலகிக்கொண்டது. என்பிசி உடனான வணிகத்தை முறித்துக்கொண்டது. இதனால் டோனல்ட் டிரம்பு இவ்விருநிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் மாதம் என்பிசி சமரசம் செய்து கொண்டார் அதன் படி அழகிப்போட்டியில் என்பிசியின் பங்குகளை பெற்றார். அதே மாதத்தில் மிசு யூனிவர்சு, மிசு யூஎசுஏ, மிசு டீன் யூஎசுஏ ஆகியவற்றை WME-IMG என்ற நிறுவனத்துக்கு விற்றார். இந்தியாவின் 29-ஆவது மாநிலமான தெலுங்கானாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மகா சண்டி யாகம் நடைபெற்ற யாக சாலையில் லேசான தீ விபத்து ஏற்பட்டது, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் எர்ரபல்லி எனும் பகுதியில், அம்மாநில முதல்வர் கே. சந்திராசேகர ராவ் பண்ணை நிலத்தில் உலக அமைதி வேண்டி, தனது சொந்த பணம் 2௦ கோடி செலவு செய்து மகா சண்டியாகத்தை நடத்தியாக தெரிகிறது. இந்நிலையில், இறுதிநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டியாக பந்தலில் திடிரென தீ பிடித்துகொண்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனணத்தாக அறியபடுகிறது. பந்தலில் தீ பற்றியவுடன் மக்கள் நான்கு பக்கமும் சிதறியோடினர், காவலர்கள் சாதுர்யமாக அனைத்து தடுப்புகளையும் திறந்துவிட்டு கூட்ட நெரிசலை தவிர்த்தனர். இறுதி சிறப்பு பூசையில் (இன்று) இந்திய நாட்டின் குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜி கலந்து கொள்வதாக இருந்தார். தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும் மழை பொழிந்து மிகப்பெரிய இயற்கை பேரழிவு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நிகழ்ந்தது. இந்த பேரழிவின் விளைவாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் தென்னிந்திய மாநிலங்களில் கோரமண்டல் கடற்கரைப் பகுதி, மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி ஒன்றியப் பகுதி, குறிப்பாக சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் 18 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த மழையின் காரணம் எல் நினோ என்ற புவியியல் மாற்றத்தால் இவ்வெள்ளங்கள் ஏற்பட்டதெனக் கூறப்படுகிறது. அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியில் டிசம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரம் கன அடி நீர் செம்பரம்பாக்கம் அணையில் இருந்து அடையாற்றில் விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளம் அடையாற்றில் ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் தண்ணீருக்குள் மூழ்கியன. போக்குவரத்து நிறுத்தப்பட்டன .தண்ணீருக்குள் மூழ்கிய பிரதான பாலங்கள் சைதாப்பேட்டை பாலம் மற்றும் ஈக்காட்டுத் தாங்கல் பாலம். ஆற்றின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நுழைந்தது. குடிசைகள் பல அடித்துச் செல்லப்பட்டன. ஆவடி அருகே நீர் வேகமான ஓட்டம் காரணமாக பாலம் ஒன்று உடைந்தது. தரை பாலங்கள் பல மூழ்கியது. தி.நகர் சுரங்கப்பாதை, கிண்டி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து எல்லா ரயில்களும் டிசம்பர் 1 முதல் ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் 7 முதல் ரயில் சேவை வழக்கமான இருந்தது. ஓடுபாதை வெள்ளம் காரணமாக விமான சேவை டிசம்பர் 2 முதல் இருந்து டிசம்பர் 7 வரை ரத்து செய்யப்பட்டன. அரக்கோணம் கடற்படை விமானத் தளம் பயணிகள் பொது விமான நிலையமாக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டது. டிசம்பர் 6இல் இருந்து உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது. டிசம்பர் 7முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கியது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெள்ளம் காரணமாக மின் வெட்டு இருந்தது.அதற்கு பிறகுடிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு இருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக அலைபேசி கோபுரம் பல செயல் இழந்துவிட்டது. எனவே சென்னை வாழ்மக்கள் மற்ற இடங்களில் இருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.எஸ்.என்.எல் ஒரு வாரம் காலத்திற்கு இலவச இணையத்தளச் சேவை மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை அறிவித்தது. நவம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர். அவர்களின் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 அன்று அரசாங்கம் அனைத்து நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவித்தது. இந்நிகழ்வில் 9 பலியாகினர் 1௦௦-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த புவிநடுக்கத்தால், தூங்கிக் கொண்டிந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெட்டவெளிக்கு ஓடிவந்தனர். மேலும் இம்பால் நகரில் கட்டிடங்கள் இடிந்தது விழுந்ததுடன் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்ப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தின் மையப்பகுதியான தமங்லாங் நகரில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்பது மூலதகவலாக உள்ளது. அசாம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மேற்குவங்கம், ஒடிசா, சார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் பூகம்ப தாக்கம் உணரப்பட்டதாக ஊடகத்தகவல்கள் உள்ளது. மேற்குப் பகுதி லிபியாவில் உள்ள கடலோர சலிடன் (Zliten) நகரில் காவல்துறைக்கு தேர்வானவர்கள் பயிற்சிக்கு சென்றிருந்த போது டிரக்கில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் இறந்தனர். முகமது கடாபி வீழ்ந்ததற்குப் பின் விபியாவில் நடந்த மோசமான டிரக் வெடிகுண்டு நிகழ்வு இதுவாகும். இந்தப் பயிற்சி மையத்தின் பெயர் அல்-சாபல் ஆகும். இது முன்னர் இராணுவத் தளமாக பயன்பட்டிருந்தது. இதற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் சமீபகாலமாக லிபியாவில் இசுலாமிய தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டு, தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு அந்நாட்டில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையே காரணம். மோசமான இவ்வெடிகுண்டு வெடித்த சத்தம் மைல்களுக்கு அப்பாலும் கேட்டதாக காமண்டி என்றவர் தொலைபேசியில் கூறினார். இறந்தவர்கள் அனைவரும் வயதில் இளையவர்கள் என்றும் அவர்கள் இப்போது தான் வாழ்க்கையை தொடங்கினர் என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் மிசுராடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 65 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் பேரிடர் ஆணையமும் சுகாதாரத்துறை அமைச்சகமும் பின் 47 பேர் இறந்ததாகவும் 118 பேர் காயமுற்றதாகவும் தெரிவித்தனர். நாட்டின் எண்ணெய் வளத்திற்காகவும் ஒபெக் அமைப்பில் உறுப்பு ஆகவும் இந்நாட்டில் இரு அரசுகளும் பல ஆயுதக்குழுக்களும் இறங்கி நாட்டில் குழப்பம் நிலவுகிறது. இதனால் இசுலாமிய அரசு தீவிரவாத அமைப்பு இங்கு வலிமையடைந்து வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக லிபியா விடியல் என்ற ஆயுதக்குழு தலைநகர் திரிபோலியை கட்டுக்குள் வைத்திருந்தது. தன் அரசை நியமித்திருந்தது. அதிகாரபூர்வ அரசு லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து செயல்பட்டது. தமிழகத்தில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி, முதன்மையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் விளையாட்டு) போட்டிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராட்டிரா, பஞ்சாப், அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டுவண்டி போட்டிகள் காட்சிப்படுத்தப்படும் கால்நடைகளாக பயிற்றுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறவேண்டுமெனவும், மாட்டுவண்டி போட்டிகள் பொறுத்தமட்டில், 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மிகாமலும், சரியான பாதைகளில் அப்போட்டிகள் நடத்தப்படவேண்டுமெனவும், ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிபடவேண்டுமெனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை நடத்தும் முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளைப் பரிசோதிக்கவும், அவற்றிற்கு மருந்துகளேதும் புகுத்தப்பட்டுள்ளதாவெனவும், மிருகவதைக்கெதிரான மாவட்டக் கமிட்டியும், மாவட்ட விலங்குகள் நலவாரியமும் கண்காணிக்க வேண்டுமென்று அச்செய்திக் குறிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, 11/07/2011-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைமாட்டை இணைத்திருந்தது, பின்பு 2014 மே 7-ஆம் திகதி, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. இதனால் 2015-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. தற்போதும் மத்திய அரசு, விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்காதபோதும், 2016-ன் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மத்திய அரசு தமிழக ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பினை தமிழக மக்களும், கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், விலங்குகள் நலம் மற்றும் ஆதரவு அமைப்பான "பெடா" கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடைபெறும் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு 900 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. பவர்பால் குலுக்கலில்(லாட்டரி) 44 மாநிலங்களும் வாசிங்டன் டிசி போர்டரிகோ, அமெரிக்க வெர்சின் தீவ ஆகிய மூன்று ஆட்சிப்பகுதிகளும் கலந்துகொள்கின்றன. குலுக்கல் முடியும் நேரத்துக்குள் நிறைபரிசு ஒரு மில்லியன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க குலுக்கலில் இன்று நடைபெறுவதே அதிக தொகையுடைய குலுக்கலாகும். ஒரு குலுக்கல் சீட்டின் விலை இரண்டு அமெரிக்க டாலராகும். பரிசுத் தொகை அதிகமிருப்பதால் பவர்பாலை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பரிசை 29 ஆண்டுகளுக்கு பெறமறுத்து மொத்தமாக வாங்கினால் வரி பிடித்தம் போக 558 மில்லியன் டாலர் கிடைக்கும். தமிழத்தில், பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு எனும் தமிழர் வீரவிளையாட்டு காலங்காலமாக நடந்துவரும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் (2016) ஜல்லிக்கட்டு நடத்தப்பட அனுமதிக்கும்படி தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும், தமிழக அரசும் மத்திய அரசை வற்புறுத்தியது, இதைதொடர்ந்து இவ்வாண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் மாட்டுவண்டி போட்டிகள் நடத்த மத்திய அரசு 2016 சனவரி 8-ம் திகதியன்று நிபந்தனையோடுகூடிய அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்தியரசு உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் மேல்முறையீட்டின் அடிப்படையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா ஆகியோர் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அறிவிப்பு அளிக்க உத்தரவிட்டதோடு, இவ்வழக்கு விசாரணையை வரும் மார்ச் 15-ம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்துள்ளனர். இச்சூழலில், இந்த பொங்கல் பண்டிகைக்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடுத்துவதற்கு தேவையான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செவ்வாய்க் கிழமையன்று (12/01/2016 இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் அதன் சொத்துக்கள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டது, எண்ணெய் வணிகமும் பாதிக்கப்பட்டது. 2015 யூலை மாதம் ஐக்கிய அமெரிக்கா, ருசியா, பிரித்தானியா. பிரான்சு. செருமனியுடன் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டின் படி ஈரான் அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் மையவிலக்கு கருவியை பெருமளவு குறைத்துக்கொண்டதுடன் அராக் நகரிலுள்ள கனநீர் அணு உலையை மூடவும் ஒத்துக்கொண்ட்டது. பன்னாட்டு அணு சக்தி அமைப்பு ஈரான் உடன்படுக்கையின் படி நடந்துகொண்டுள்ளதை உறுதிசெய்ததால் ஈரான் மீதான பொருளாதார தடை முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தடை விலக்கத்தால் வெளிநாடுகளில் சுமார் நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முடக்கப்பட்ட அதன் சொத்துக்களை அதனால் மீண்டும் கையாள முடியும். ஈரான் தனது அணுதிட்டம் அமைதிவழிக்களுக்கானது என்கிறது. யூலை 14 உடன்பாட்டின் படி ஈரான் தன் மீதான பொருளாதார தடைகளை பன்னாட்டு சமூகம் விலக்கிக்கொள்ள 15 ஆண்டுகளுக்கு அதன் பல்வேறு வகையான அணுதிட்டங்களை பன்னாட்டு அணு சக்தி அமைப்பு ஒத்துக்கொண்டுள்ளது. உடன்படிக்கையை மீறினால் அதன் மீது மீண்டும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தவும் ஒத்துக்கொண்டுள்ளது. இந்தியா வின் தென்கடை மாநிலமான தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் அவனியாபுரம் ஆகிய ஊர்களில் இந்த ஆண்டு (2016) பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் மேற்கூறிய பகுதிகளில் கலையிழந்து காணப்பட்டதோடு தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. காணும்பொங்கல் கொண்டாடும் தினமான ஞாயிற்றுக்கிழமை (17/01/2016 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்கள் மாடுகள் வெளியேறும் வாடிவாசல் முன்பாக ஒன்றுகூடி ஒப்பாரி வைத்துது மட்டுமல்லாமல், அலங்காநல்லூர் முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டு கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டில் (2016) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும்படி தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும், தமிழக அரசும், மத்திய அரசை வற்புறுத்தியது, இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் மாட்டுவண்டி போட்டிகள் நடத்த மத்திய அரசு 2016 சனவரி 7-ம் திகதியன்று நிபந்தனையோடுகூடிய அனுமதி வழங்கியது. இந்த மாதம் (சனவரி) 15-ம் திகதி அவனியாபுரத்திலும், 16-ம் திகதி பாலமேட்டிலும், அதைதொடர்ந்து 17-ம் திகதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்தியரசு உத்தரவுக்கு, இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்தது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நிறைவுற்றிருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்டிருப்பது தாங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், மனவுளைச்சலையும் அளிப்பதாக மாடுபிடி வீரர்களும், அப்பகுதி மக்களும் ஆதங்கத்தோடு கூறியதாக ஊடங்களின் வாயிலாக அறியப்படுகிறது. இந்தியாவில் மாகராஷ்டிரா மாநிலத்தின் ராய்கட் பகுதியைச்சார்ந்த முருத் என்ற கடல் பகுதியில் சுற்றுலா சென்ற மாணவர்களில் பலபேர் கடல் அலையில் சிக்கிக்கொண்டனர். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். இப்பகுதி மும்பையிலிருந்து 140 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும் 19 வயதுமுதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் 3 பேர் பெண்கள் ஆவார்கள். சிகா தீநுண்மம் தென் அமெரிக்க கண்டத்தில் அதிகளவில் பரவியுள்ளது. குறிப்பாக பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிகா தீநுண்மம் மூலம் உருவாகும் காய்ச்சல் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. டெங்கு, மஞ்சள் காய்ச்சல் ஆகியவற்றை பரப்பும் கொசுக்கள் மூலமே சிகாவும் பரவுகிறது. முதன் முறையாக ஐக்கிய அமெரிக்காவில் டெக்ச்சு மாதிலத்தில் உள்ள ஒருவருக்கு உடலுறவு மூலம் இக்காய்ச்சல் பரவியுள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்தில் கொசுத்தொல்லைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர் சிகா பாதித்த நாடுகளுக்கு சென்றதில்லை. ஆனால் அவர் சிகா பாதிப்புள்ள வெனிசுலா நாட்டுக்கு சென்று வந்தவருடன் உடலுறவு வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தலை சிறியதாகவும் மூளை வளர்ச்சி குன்றியும் காணப்படுகிறது. சிகா காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு உகாண்டாவில் இத்தீநுண்மம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேசிலில் அதிகரித்துள்ள சிகா காய்ச்சலால் ஆகத்து மாதம் ரியோ டி செனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் குறித்து கவலைகள் தோன்றியுள்ளது. தைனான் நகரில் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன. 17 மாடிக் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளிடையே குறைந்தது 30 பேர் வரை சிக்குண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கட்டடத்தில் குறைந்தது 256 பேர் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றும் அடங்கும். மீட்புப் பணியில் எண்ணூறுக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 200 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் பின்னர் குறைந்தது 5 நில அதிர்வுகள் வரை அங்கு நிகழ்ந்துள்ளன. நிலநடுக்கத்தின் அதிர்வு 300 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் தைப்பே வரை உணரப்பட்டுள்ளது. இரண்டு கண்டத்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. மெக்சிக்கோவின் வடகிழக்கு மாண்டிரேயிலிலுள்ள சிறைச்சாலையில் வியாழக்கிழமை அன்று போதை கடத்தல் கும்பல்கள் இடையேயான தகராறில் தீ வைக்கப்பட்டதில் 52 பேர் இறந்தனர். 12 பேர் காயமுற்றனர். நடு இரவில் சிறையின் டாபோ சிகோ பகுதியின் இரு பகுதிகளில் சீட்டா போதை கும்பலுக்கும் மற்றொரு போதை கும்பலுக்கும் இடையே சண்டை மூண்டது என நிவோ இயோன் மாநில ஆளுநர் தெரிவித்தார். டாபோ சிகோ சிறை மிக பழைமையானதாகும்.மாண்டிரே மெக்சிக்கோவின் மூன்றாவது பெருநகரமாகும். 2014 மனித உரிமை அறிக்கை டாபோ சிகோ சிறைச்சாலை கலவரங்களை தடுக்க அக்கறை காட்டுவதில்லை என குறிப்பிட்டிருந்தது. இச்சிறையிலேயே சீட்டா போதை குழு உறுப்பினர்களே அதிகம் அடைக்கப்பட்டுள்ளனர். 2015 ஆண்டு மார்ச் 31 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஆதாரங்களின் அடிப்படையிலேயே தேமுதிகவின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கு, அவை உரிமை மீறல் குழு முடிவு செய்ததாக அந்தக் குழுவின் கூட்ட நடவடிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த காணொளி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் காணொளியை கோரிய போதும் காட்டப்படவில்லை. இடைநீக்கத்தை எதிர்த்து அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், வி.சி. சந்திரகுமார், கே. தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர். பார்த்திபன், எல். வெங்கடேசன் ஆகிய ஆறு தேமுதிக உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் செலமேஸ்வர், அபய் மனோகர் சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் இந்த இடைநீக்கத்தை விலக்கியதுடன் ஆறு உறுப்பினர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம், பிற சலுகைகள் போன்றவற்றை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். [[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 noinclude> காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். வேளாண் பொறியியல் மாணவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வேளாண் கலைக்களஞ்சிய உருவாக்கப் பயலரங்கில் என் கணக்கினைத்தொடங்குகின்றேன். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது முன்னிலை வகிப்பதாக கடந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து செயற்படும் புதிய தலைமுறை எனும் தொலைக்காட்சி நிறுவனம் தமிழகத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, அதில் தெரியவந்த விவரங்களை பிப்ரவரி 15 அன்று தனது சிறப்பு ஒளிபரப்பில் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 200 இடங்களில், ஏறத்தாழ 5018 வாக்காளர்களிடம் சனவரி 22 முதல் பிப்ரவரி 6 வரையான காலகட்டத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட வாக்காளர்களிடம் 14 கேள்விகள் முன்வைக்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற ஜமைக்கா தேர்தலில் ஆளும் மக்கள் தேசிய கட்சியை தோற்கடித்து ஜமைக்கா தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் ஆண்ட்ரூ கோல்னசு தலைமையிலான ஜமைக்கா தொழிலாளர் கட்சி 33 இடங்களையும் பிரதம அமைச்சர் போர்டியா சிம்சன் மில்லரின் மக்கள் தேசிய கட்சி 30 இடங்களையும் பெற்றன. இத்தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்று இருந்தது. நாட்டின் பொருளாதாரம் சீராவதற்கு பணவுதவி செய்த அனைத்துலக நாணய நிதியம் பல சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியிருந்தது. அதை ஜமைக்கா அரசு கடைபிடித்ததால் மக்கள் துயருற்றனர். 2011ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மன்னன் கிறிசுடோபர் டியூட் கோக் ஐக்கிய அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து அப்போதைய பிரதமர் பதவி விலகியதையடுத்து ஆண்ரூ கோல்னசு சிறிது காலம் பிரதம அமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜமைக்கா தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் கட்சி சின்னமான மணியை பலமாக ஆட்டியபோது உரையாற்றிய ஆண்ரூ கோல்னசு ஜமைக்காவை ஏழ்மையிலிருந்து மீட்பதே தங்கள் அரசின் கொள்கை என்று கூறினார். ஆண்ரூ கோல்னசு பிரதம அமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு இணங்க, வாடிக்கையாளரின் அனுமதி தவிர்த்து வேறு யாருக்கும் கடவுச்சோல்லை தர முடியாது என்று கூறிவிட்டது. அமெரிக்காவில் நடந்த தொடர் கொலை வழக்கில் குற்றவாளிகளான தம்பதிகள் இருவரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுவிட்டனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆப்பிள் போனில் வேறு தகவல்கள் இருக்கிறதா என்று ஆராய ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் போனின் கடவுச்சொல்லை ஆப்பிள் நிறுவனத்திடம் கேட்டுப்பெற முயன்றது. இதன் காரணமாகப் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நடந்து முடிந்த இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளரின் அனுமதி பெற்றுத்தான் கடவுச்சொல்லை பயன்படுத்தலாம். அதனைத் தவிர்த்து வேறு யாருக்கும் கடவுச்சொல்லை கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. ஆப்பிள் போனைப் பொருத்தவரையில் கடவுச்சொல்லை பலமுறை தவறாகப் பயன்படுத்தினால் அப்போனில் உள்ள தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் தேடுபொறி இயங்கு தள நிறுவனத்தின் கண்டுபிடிப்பான ஆள் இல்லா இயங்கு வாகனம் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுன்ட் ஹில் பகுதியில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் திகதி அன்று 23 வாகனங்களை சோதனை ஓட்டத்தில் இந்த நிறுவனம் ஈடுபடுத்தியது. 2015 ஆம் ஆண்டு ஜூலை துவங்கி இதுவரை 14 முறை இந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதே போல் கூகுளின் லூம் திட்டம் என்ற இணைய தள சேவை திட்டத்திற்காக இலங்கையில் பறக்கவிடப்பட்ட மூன்று பலூன்களில் ஒன்று 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் திகதி அன்று வான்வெளியில் வெடித்து சிதறியது. இந்திய நாட்டின் ஒரு பகுதியான சிக்கிம் மாநிலத்திலிருந்து பிரிட்டனுக்கு தாவர விதைகளைச் சட்ட விரோதமாக ஒரு சிலர் கடத்துவதாக அந்நாட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வீட்டுத் தோட்டத்திற்கான விதைகளை விற்பனை செய்கிறது. ஆனால் நேபாள நாட்டிலிருந்து விதைகளை சட்டத்திற்க்கு உட்பட்டு இறக்குமதி செய்தாலும் இதன் நம்பிக்கைத் தன்மைமீதும் இந்த நிறுவனம் சந்தேகம் கொள்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 19 அன்று வாக்குகள் எண்ணப்படும். தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களில் ஏப்ரல் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். மனுக்களை பெற ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 30-ல் நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள மே 2-ம் தேதி கடைசி நாளாகும். மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனினும் அங்கு மொத்தம் 7 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்டத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நோட்டா என்பது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட முறை. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 22-ம் தேதி நிறைவடைகிறது. இதேபோல புதுச்சேரி ஜூன் 2, கேரளா மே 31, மேற்கு வங்கம்- மே 29, அசாம் ஜூன் 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முடிகிறது. அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, 700 கி.மீ 1,250 கி.மீ.க்கு இடைப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை, ஒடிஸா கடற்கரைப் பகுதியான பாலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் (முன்பு இது வீலர் தீவு ஆகும்) இப்பரிசோதனை தொடங்கியது. ஏவுகணை செலுத்திய 9 நிமிடங்கள் 26 வினாடிகளில் 700 கிமீ தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஏற்கெனவே, பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பின்னர், கடந்த 2004ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 12,000 கிலோ எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லது. இதற்கு முன்னர், கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, பாலாசோரில் அக்னி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உருசிய அதிபர் புதின் தங்கள் நோக்கங்களை நிறைவேரியதால் சிரியாவிலிருந்து பெருமளவிலான படைகள் விலகும் என அறிவித்துள்ளார் திங்கள் கிழமை இதை சிரிய அதிபர் ஆசாத்திடம் தொலைபேசியில் புதின் தெரிவித்தார். அறிவிக்கும் முன்பு உருசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களிடம் கிரம்லினில் புதின் பேசினார். செப்டம்பரில் சிரியா வந்த உருசிய படைகள் செவ்வாய்கிழமை முதல் விலகும் என எதிர்பார்க்கபடுகிறது. சிரிய அதிபர் ஆசாத்தின் அரசை குலைந்து போகாமல் உருசிய படைகள் காப்பாற்றிவிட்டதாக நம்புவதாலும் செனிவாவில் நடக்க இருக்கும் அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னிட்டும் இந்த விலகல் அறிவிப்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது. சிரிய உள் நாட்டு போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கமுடியும் என்று புதின் கூறினார். புதினின் இந்த எதிர்பாராத முடிவை மேற்குல நாடுகள் ஐயமாக நோக்குகின்றன. புதின் இதற்கு முன்பும் இதேபோல் அறிவித்தும் எதுவும் உருசியாவினால் காப்பற்றப்படவில்லையென்ற மேற்கிலகின் அதிகாரி இந்த அறிவிப்பு என்ன வகையாகனதான இருக்கும் என பொருத்திருந்து பார்த்தே கூறமுடியும் என்றார். படைவிலகல் நடவடிக்கை உண்மையாக நடைபெற்றால் அது ஆசாத் தரப்புக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் என்று பேச்சுவார்த்தை குழு அதிகாரி தெரிவித்தார். அரச எதிர்ப்பு படைகளின் உள்கட்டமைப்பை சிதைக்கவும் எதிர்ப்பு படைகளை எதிர்க்கவும் சில உருசிய வான் படைகள் சிரியாவில் இருக்க ஆசாத் ஒத்துக்கொண்டதாக புதின் தெரிவித்தார் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து ஆசாத் படைகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். உருசிய படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படவில்லை. உருசியா கடற்கரையோர மாகாணமான லக்குவியாவின் ஆமெய்மீம் வான்படைத் தளத்தையும் தார்தூசு துறைமுகத்தையும் தொடர்ந்து பயன்படுத்த சிரியா ஒத்துக்கொண்டது. ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டுமுயற்சியின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோளான எக்ஸோமார்ஸ் ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர் என்பதை கஜகஸ்தானில் உள்ள பைக்காரா விண்வெளி தளத்தில் இருந்து உருசியாவின் புரோட்டோன் எம் ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக் கோள் குறிப்பாக செவ்வாயில் உள்ள மீத்தேனையும் மற்ற அரிய வாயுக்களையும் ஆராயும். இசேப்அரெலீ என்ற ஆய்வுக்கலன் டிகேஆ என்ற டிஜிஓவில் பொருத்தப்பட்டுறள்ளது டிஜிஓ (ட்ரேஸ் கேஸ் ஆர்பிட்டர்) செயற்கைகோள் மட்டும் செவ்வாய் கிரகத்திற்க்கு மேல் பகுதியில் சுற்றிவந்து ஆய்வு செய்யும். இசேப்அரெலீ ஆய்வுக்கலம் நேரடியாக செவ்வாய் கோளில் தரையிறங்கி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் 2019லோ 2021லோ தலையிறங்கும் விண்கலனை பத்திரமாக மீட்க உதவும் கருவிகளை சோதிப்பது ஆகும். இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி மீத்தேன் வாயு இருந்தால் உயிரினங்கள் வாழ செவ்வாய் கோள் ஏதுவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள்னர். இந்த கூட்டு முயற்சி வெற்றியடைந்தால் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆய்வு கலன் ஒன்றை ரஷ்யாவும் ஐரோப்பாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும். இது 2018லோ, 2010லோ நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா இதற்கு முன்னர் செவ்வாய்கிரகத்துக்கு செல்ல மேற்கொண்ட 19 முயற்சிகளில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்தன. நாசாவே ஐரோப்பிய விண் ஆய்வகத்தின் உண்மையான கூட்டாளியாகும். நிதிநெருக்கடியால் இத்திட்டத்தில் இருந்து 2012 பிப்பரவரி மாதம் விலகிக்கொண்டது. அடுத்த ஆண்டு ஐரோப்பிய விண் ஆய்வகம் உருசியாவின் விண் ஆய்வகமான ராசுகாசுமாசு உடன் நாசாவின் இடத்திற்கு பதிலாக உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டது. துபாயிலிருந்து சென்ற பயணிகள் வானூர்தி ஒன்று உருசியாவின் ரோசுதோவ் ஆன் டான் நகரில் விபத்துக்குள்ளானதில் 55 பயணிகளும் 7 ஊழியர்களும் பலியாகியுள்ளனர் (62). ஃப்ளை துபாய் நிறுவனத்தின் 737-800 வானூர்தி (வானூர்தி எண் FZ981) தரையிறங்க முற்பட்டபோது ஓடுபாதையைத் தவறவிட்டதால் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவிட்டாலும், பனிமூட்டமும் காற்றும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. விமானம் தரையில் மோதி சுக்குநூறாக சிதறிப்போனது என உருசிய புலனாய்வுக் குழு தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது. முதலில் தரையிறங்க முயற்சித்து முடியாமல் போன நிலையில், இரண்டு மணி நேரம் வானத்தில் வட்டமிட்ட அந்த வானூர்தி இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோது இந்த விபத்து நேரிட்டது. ரோசுதோவ் நகரம் மாஸ்கோவுக்கு தெற்கில் 950 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த வானூர்தியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உருசியர்கள் என பிராந்திய ஆளுனர் தெரிவித்திருக்கிறார். இறந்தவர்கள் நால்வர் குழந்தைகள். ஃப்ளை துபாய் பயணிகளில் 44 பேர் உருசியர்கள், 8 பேர் உக்ரேனியர்கள், 2 இந்தியர்கள் ஒரு உசுபெக்கிசுத்தான் நாட்டவர் இருந்தனர் எனவும் அனைவரும் விபத்தில் இறந்துவிட்டார்கள் எனவும் தெரிவித்தது. வானூர்தி ஊழியர்கள் 7 பேரில் ஒருவர் உருசிய நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் வானூர்திகளை இயக்கும் ஃப்ளை துபாய் நிறுவனம் துபாயை மையமாகக் கொண்டு 2009ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 90 இடங்களுக்கு இந்த நிறுவனம் வானூர்திகளை இயக்கிவருகிறது. பெல்சியத் தலைநகர் பிரசெல்சில் உள்ள சாவுன்டெம் வானூர்தி நிலையத்தில் 2 குண்டுகளும் நகரின் மத்தியிலுள்ள மால்பீக் பகுதியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் வெடித்துள்ளன. நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. பாரிஸ் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபரான சாலக் அப்தச்லாம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெறுள்ளன. இத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு அதியுயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் எதிரொலியாக பிரசெல்சுக்கு வந்துசெல்லும் அனைத்து யூரோஇசுடார் ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வானூர்தி நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்கொலை பெல்ட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் சிலர் கருத்துக்களை கூறி வருவதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டிடியே ரெய்ண்டர் தெரிவித்துள்ளார். வானூர்தி நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் உடலுக்கு அருகில் கலாச்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இசுலாமிய நாடு என்னும் தீவிரவாத அமைப்பு இக்குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அது அதிகாரிகளால் உறுதிபடுத்தப்படவில்லை. 21 வெளிநாட்டவர், 15 ஊழியர்கள் என்று மொத்தம் 81 பேர்களுடன் பயணித்த எகிப்துஏர் வானூர்தியின் கடத்தல் கடத்தல்காரர் லார்னகா வானூர்தி நிலையத்தில் சைப்ரசு அதிகாரிகளிடம் தன்னை ஒப்புவித்ததை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. லார்னகா வானூர்தி நிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் வானூர்தியைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி வானூர்தியிலிருந்து வெளியே வந்த அவர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார் அலெக்சாண்டிரியாவிலிருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த இந்த எகிப்துஏர் வானூர்தி, தற்கொலை குண்டு பொருத்தப்பட்டிருந்த அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறிக்கொண்ட ஒருவரால் சைப்ரசுக்குக் கடத்திச் செல்லப்பட்டது. அவரது கோரிக்கைகள் என்ன என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. அவர் மன நலம் குன்றியவர் என்றும், அவருக்கு அரசியல் நோக்கங்கள் ஏதும் இல்லை என்றும் சைப்ரஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். சைப்ரசு அதிபர் நிகோசு அனத்தாசிட்சு செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த வானூர்தி கடத்தலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை என்றார். சில தகவல்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் சமஹா அல்லது எல்டின் முசுதப்பா என்பவர் தான் வானூர்தியைக் கடத்தியதாக தெரிவிக்கின்றன. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக் பேராசிரியரான இவர் சைப்ரசில் வசிக்கும் சைப்ரசு நாட்டைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியைப் பார்க்க விரும்புவதாக சைப்ரசு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறின. சைப்பிரசு என்பது சைப்ரஸ் Cyprus என்றும் கூறப்படுகிறது. மத்திய தரைக்கடலில் சைப்பரசு தீவில் இது கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் அருகில் உள்ளது. இதன் அதிகாரபூர்வ பெயர் சைப்ரசு குடியரசு என்பதாகும். சைப்ரசு குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடாகும். வடசைப்ரசை துருக்கி மட்டுமே ஒத்துக்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்ததில் 21 பேர் வரை உயிரிழந்தனர். 80 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அவைகளும் சேதமடைந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த 5 காவல்துறையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை. உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. ராணுவத்தின் பொறியாளர் பிரிவைச் சேர்ந்த 500 வீரர்கள் ராட்சத பழுதூக்கியுடனும் அதிநவீன கருவிகளுடனும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் இடிபாடு நடந்த இடத்தில் முகாமிட்டுள்ளனர். ரூ.164 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை 2010 ஆகசுட்டில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பணப் பிரச்சினையால் மேம்பாலப் பணி தாமதமானது. சுமார் 5 ஆண்டுகளான நிலையில் தற்போது 76 சதவீத கட்டுமானப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதையடுத்து மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அண்மைகாலமாக பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் தனது பயணத் திட்டங்களை முடிக்காமல் இவ்விபத்தின் காரணமாக கொல்கத்தாவுக்கு திரும்பினார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சில வாகனங்களின் பெட்ரோல் டேங்க் வெடித்து ஆங்காங்கே தீப்பிடித்தன. அவற்றை தீயணைப்புப் படை வீரர்கள் போராடி அணைத்தனர். கோவை அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு. கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் சாலையூர் அருகே கௌசிகா நதியின் வடக்கு கரையில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் மண்ணின் மேற்பரப்பில் ஏராளமான மட்பாண்ட ஓடுகள் காணப்படுகின்றன. கோவையை சேர்ந்த அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கச் செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் அப்பகுதியில் காணப்பட்ட மட்கல ஓடுகள் சிலவற்றை சேகரித்து, ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைத்தார். அவ்வோடுகளை முறையாக தூய்மை படுத்தப்பட்ட போது தாங்கியுடன் கூடிய உடைந்த குவளைப் போன்ற அமைப்பை கொண்ட மட்கலமொன்றின் உடைந்த பாகத்தில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. செங்காவி பூச்சுப்பூசப்பட்ட உடைந்த மட்கல பாகத்தின் கீழ் வட்ட வடிவிலான தாங்குப் பகுதியின் மேற் பகுதியில் நான்கு தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள் உள்ளன. இவ்வெழுதுக்களை ஆய்வு செய்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள் ‘’ அ – ந் –த ய் ‘’ என பொறிக்கப்பட்டிருப்பதாகவும். இவ்வேழுதுக்களின் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தை என்ற சொல் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சார்ந்த மாங்குளம் தமிழ் பிராமிக் கல்வெட்டில் காணமுடிகிறது. குறிப்பாக சங்க இலக்கியமான புறநானூறில் பிசிராந்தையார் என்ற புலவரைப்பற்றிய குறிப்புகள் அவரது பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதலே அந்தை பிசிராந்தையார் போன்ற பெயர்கள் வழக்கில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. எனவே கௌசிகா நதிக்கரையில் கிடைத்துள்ள ‘’ அந்தய் ’’ என்ற பெயர் பொறிக்கப்பட்டவனின் உரிமைப் பொருளாக இம்மட்கலன் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மேலும் இதே பகுதியில் இருந்து கடந்த ஆண்டு தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடு ஒன்று கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் கௌசிகா நதிப்பகுதியில் செகரிக்கப்பட்ட மட்கல ஓடுகளில் கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகள், செங்காவி பூச்சு பூசப்பட்ட மட்கல ஓடுகள் நன்கு மெருகேற்றப்பட்ட சிவப்பு நிற மட்கல ஓடுகளில் வெள்ளை நிற கோட்டு அலங்காரங்கள் கொண்ட மட்கல ஓடுகள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள், தானியங்கள் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த பாகங்கள், அகல் விளக்கின் உடைந்த பாகங்கள் சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட கழுத்தணிகள் போன்றவைகள் கிடைத்துள்ளன. மேலும் மட்பாண்டங்களின் உடைந்த கழுத்துப் பகுதிகளில் விரல்களால் அழகு படுத்தப்பட்ட பூவேலைப் பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் விளையாட பயன்படுத்திய சில்லுக்கருவிகளும் இப்பண்பாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளன. சாலையூர் பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள் இரும்பை பிரித்து எடுப்பதற்காக ஊதுலை தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். உதரணமாக 15 சே.மீ நீளம் கொண்ட குழாய்யின் நடுப்பகுதியில் 2 செ.மீ. விட்டம் கொண்ட சுடுமண் குழாய்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. இக்குழாய்கள் ஊதுலையினுள் காற்று செல்வதற்காக அதன் மேற் பக்கங்களில் போருத்தப்பட்டவைகலாகும். மேலும் இப்பகுதியில் இரும்பு உருக்கப்பட்ட கசடுகளும் எராளமாகக் கிடைகின்றன. எனவே கௌசிகா நதிக்கரையில் வாழ்ந்த பழங்கால மக்கள் விவசாய உற்பத்திக்கான இரும்பு தளவாடப் பொருட்களையும், வேட்டையடுவதற்கு தேவையான இரும்பாயுதங்களையும் தயாரித்திருக்க வேண்டும் காய்களில் இருந்து விதைகளை எடுக்கவும், தானியங்கள் மீது உள்ள தோள்களை நீக்குவதற்காகவும், அவைகளை அறைப்பதற்காகவும் இப்பகுதி மக்கள் கையடக்க உருளை வடிவ கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும் சுத்தியல் போன்ற பயன்பாட்டிற்காகவும் கற்கருவிகளை கௌசிகா நதிக்கரை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கற்கருவிகள் மக்கள் வாழ்விடப்பகுதியான மட்கல ஓடுகள் கிடைக்கக்கூடியப் பகுதியிலேயே கிடைத்துள்ளன. சாலையூர் அருகே செல்லும் கௌசிகா நதி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குருடி மலையில் உற்பத்தியாகி கோவைமாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் கோவில்பாளையம் தெக்கலூர் வழியாகச் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்நதியின் மொத்த நீளம் சுமார் 52 கி.மீ. ஆகும் மேலும் கௌசிகா நதிக்கரையில் சங்ககால மக்கள் பயன்படுத்திய தொல் பொருட்களோடு தமிழ்பிராமி பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்திருப்பதால் இப்பகுதி கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டில் சிறந்த நதிக்கரை நாகரிகத் தளமாக விளங்கியுள்ளது எனலாம் குறிப்பாக சங்ககால முதலே கொங்கு மண்டலம் கிரேக்க மற்றும் ரோமனியர்களோடு நேரடி வணிகத் தொடர்பு கொண்ட பெருமைக்குறியப் பகுதியாகும். இக்கொங்கு மண்டலத்தில் உள்ள கொடுமணல் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் பெருமளவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. தற்போது கௌசிகா நதிக்கரை பகுதியில் தமிழ் பிராமி கிடைத்திருப்பது அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கல்வியறிவு பெற்ற மேன்மக்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது என ஆத்தூர் அரசுக்கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார். வாசிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) ஞாயிற்றுக்கிழமை 'பனாமா பேப்பர்சு' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்து வெளியானதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் எப்படி தங்கள் செல்வத்தைப் பதுக்க, வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இச்சட்ட நிறுவனம் அமெரிக்க அரசு தடை செய்திருந்த 33 நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கும் வேலை செய்துள்ளது. பனாமாவில் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 500 செல்வாக்கு மிக்கவர்கள் அடங்கிய ரகசிய பனாமா பேப்பர்சு பட்டியலை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தீர விசாரிக்கும் என்று அதன் தலைவர் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தெரிவித்துள்ளார். கருப்புப் பண விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் அமலாக்க இயக்குனரகம், வருமானவரித் துறை மற்றும் வருவாய் உளவு இயக்குனரகம் ஆகியவை இந்த பனாமா பட்டியலை ஆராய்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை செய்துள்ளோம் என்றார். இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்சு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசுலாந்து பிரதமரும், பாக்கித்தான் அதிபர் நவாசு செரிப்பின் மகன்களும் மகளும், உருசிய அதிபரின் நெருங்கிய நண்பரும், சீன அதிபரின் உறவினரும், சீன பொதுவுடமை கட்சியின் 8 உறுப்பினர்களும் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூனின் தந்தையும் இதில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளவர்கள். இசிபேசு எக்சு நிறுவனம் தன்னுடைய பால்கன் 9 ஏவூர்தி மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு உப்பக் கூடிய நெகிழி அறையை வெற்றிகரமாக சேர்த்தது. விண்ணுக்கு சென்ற ஏவூர்தியின் முதன்மை ஏவு கலத்தை கடலிலுள்ள மிதக்கும் தளத்தில் வெற்றிகரமாக முதன்முறையாக தரையிறக்கியது. இதன் மூலம் அக்கலத்தை திரும்ப பயன்படுத்த முடியும் இதனால் விண்ணுக்கு ஏவூர்தியை அனுப்பும் செலவு குறையும். உப்பக் கூடிய நெகிழி அறை அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் சோதனை செய்யப்படும். இது செவ்வாய் கோளில் மனிதன் தங்க உதவக்கூடியதாக கருதப்படுகிறது. 2015 யூன் மாதம் நடந்த விபத்திற்கு பின் நாசாவினால் இசுபேசு எக்சு நிறுவனத்தால் விண்ணுக்கு அனுப்பப்படும் முதல் ஏவு முயற்சியாகும். பால்கன் ஏவூர்தி புளோரிடாவிலுள்ள கேப் கார்னிவல் வான் படை தளத்திலிருந்து ஏவப்பட்டது. நான்கு முறை ஏவூர்தியின் முதன்மை ஏவு கலத்தை கடலிலுள்ள மிதக்கும் தளத்தில் இறக்கமுயன்றது தோல்வியில் முடிந்தது இப்போதே வெற்றிகிடைத்துள்ளது. கடந்த ஆண்டு திசம்பர் தரையிலுள்ள தளத்தில் ஏவூர்தியின் முதன்மை ஏவு கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது 1400 கிலோ எடையுடையதாகும். ஒரு மாதகால அளவில் நெகிழி அறையை உப்பச்செய்வார்கள். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திணறி வருகிறது. ஏகப்பட்ட ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்களில் காயமடைந்தோர் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் பலருக்கும் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. 4 கூடுதல் அறுவை சிகிச்சை அறைகளைத் தவிர மூட்டு, எலும்பு சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அறைகளும் திறக்கப்பட்டும் சுமார் 100 காயமடைந்தோரை விரைவில் கவனிக்க முடியாமல் மருத்துவர்களும், துணை மருத்துவ ஊழியர்களும் திணறி வருகின்றனர். கடுமையான தீக்காயங்களுடன் ஏராளமானோர் வரும் அதே வேளையில், கோயிலில் தீயிலிருந்து தப்பிக்க மக்கள் ஓடும்போது நெரிசலில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவர்களும் அங்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். காயமடைந்தோரின் நிலை அபாயக் கட்டத்தில் உள்ளது, பலரும் கை கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரில் 50 சதவீத மக்கள் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, அந்தக் கோயில் அதிகாரிகள் 6 பேரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக குற்றப் பிரிவு போலீசு விசாரணைக்கும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணைக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதனிடையே, பரவூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பட்டாசு ஒப்பந்ததாரர்கள், அவர்களது உதவியாளர்கள் உட்பட சுமார் 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டாசு ஒப்பந்ததாரர்களின் உதவியாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த கோயில் அதிகாரிகளான பி.எஸ்.ஜெயலால் (தலைவர் கிருஷ்ணன் குட்டி பிள்ளை (செயலாளர் ஜே.பிரசாத், சோமசுந்தரம் பிள்ளை மற்றும் ரவீந்திரன் பிள்ளை ஆகிய 5 பேரும் திங்கள்கிழமை இரவு போலீசில் சரணடைந்தனர். 6-வது அதிகாரியான சுரேந்திரன் பிள்ளையை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த 6 பேரையும் கொல்லம் காவல் துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து, துணை கண்காணிப்பாளர் (குற்றப் பிரிவு) ராதாகிருஷ்ணன் பிள்ளை தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துகுஷ் மலைப்பகுதியில், வடமேற்கு பாகிஸ்தான், ஆப்கான்-தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான், ஆப்கான் தலைநகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியிலும் இந்த நிலநடுக்க அலைகளால் அதிர்வு ஏற்பட்டதில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வானொலி நிலையச் செய்தியின் படி பெஷாவர், சித்ரல், ஸ்வாட், கில்ஜித், பைசலாபாத், லாகூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் வீடுகள், அலுவலகங்களை விட்டு பீதியில் வெளியேறிய மக்கள் சாலைகளிலேயே வழிபாடு செய்ததையும் பார்க்க முடிந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை (10, 04, 2016) உயிர்ச்சேத, பொருட்சேத விவரங்கள் எதுவுமில்லை. இமாலயப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்காரணம், இந்திய, யுரேசிய கண்டத்தட்டுகள் மோதிக்கொள்ளும் இடமாகும் இது. யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியில் இந்திய கண்டத்தட்டு செலுத்தப்படும் ஒரு சக்தி வாய்ந்த நடவடிக்கையே பயங்கர நிலநடுக்கப் பகுதியாக இமாலயம் திகழ்வதற்குக் காரணமாக உள்ளது. ஒரு நுண்ணிய விண்கலனை, ஒரு தலைமுறை காலத்துக்குள் மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு அனுப்பும் அதிரடியான திட்டம் ஒன்று தொடங்கப்படுகிறது. கணினிகளில் வைக்கப்படும் சில்லுகள் (சிப்ஸ்) போன்ற அளவுள்ள இந்த நுண்ணிய கலன்கள் சாதாரணமாக இது போல மற்றொரு சூரியக் குடும்பத்தை அடைய வேண்டுமானால், பல ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டியிருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பயணித்தால் இது போல மற்றொரு சூரியக் குடும்பத்துக்குப் போய்ச்சேர 30,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த சின்னஞ்சிறு கலன்கள் கொள்கையளவில், நமக்கு அருகேயுள்ள நட்சத்திரத்துக்கு 30 ஆண்டுகளுக்குள் சென்றடைந்துவிடலாம் என்று கூறுகிறார்கள். இந்தத் திட்டத்துக்கு உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆதரவு இருக்கிறது. இந்த கலன்கள் ஒவ்வொன்றும் சூரிய ஒளியால் இயங்கவல்ல இறக்கைகளைப் பெற்றிருக்கும். மேலும் அவை ஒளியாலும் உந்தப்படும். ஒரு பெரும் லேசர் கற்றையை உருவாக்கி, இந்தக் கலன்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. கியூசூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர். கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் சப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக சப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது. இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். சப்பானில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என அரசு கூறுகிறது. தென் தீவான கியூசுவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை உடனடியாக மக்களுக்கு வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஷின்சோ ஆபே உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இத்தாலிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அதிபர் ரஃபேயில் கொரேயா, தமது பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்புகிறார். நிலநடுக்கம் மையம்கொண்டிந்ருந்த பகுதிக்கு அருகிலுள்ள நகரான பெதர்னாலேவின் மேயர் தமது நகரம் முற்றாக அழிந்து போயுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 1979இக்கு பிறகு எக்குவடோரில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் இதுவாகும். 1979இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்தார்கள். குறிப்பாக பெதர்னாலேவுக்கு அருகில் 163 பின்னதிர்வுகள் உணரப்பட்டன என்று நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிறிய அளவிளான நிலநடுக்கம் 3 மாதங்களாக உணரப்படுவதாகவும் இதுவும் அது போல் தான் என்று நினைத்ததாகவும் 20 வினாடிகளுக்கு பின் இது மிகவும் பெரியதாக மாறியதாகவும் கிரிசுடியன் இபாரரா என்பவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு நிப்பானில் ஏற்றபட்ட நிலநடுக்கத்தை விட எக்குவடோரில் ஏற்பட்டது 6 மடங்கு கடுமையானது என தேவிது என்ற புவியியல் துறை பேராசிரியர் கூறுகிறார். இந்த நிலநடுக்கம் கொலம்பியா நாட்டிலும் உணரப்பட்டது. எக்குவரோர் நாசுக்கா நிலத்தட்டும் தென்னமெரிக்க நிலத்தட்டும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது. மின்கம்பங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை யும் அடியோடு சேதமடைந்துள்ளன. சுமார் 2 லட்சம் வீடுகள் மின் சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியிருப்பதாகவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் சப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குமாமோட்டோவின் மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் நிலச்சரிவு காரணமாக பிற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் குமாமோட்டோவில் உள்ள எரிமலையும் தற்போது குமுறி வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். முக்கிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டை ஆகியவையும் நில நடுக்கத்தால் கடுமையாக சேத மடைந்துள்ளன. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. குமாமோட்டோவில் உள்ள ஒரு அணையும் நிலநடுக்கத்தால் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத் துக்கு வெளியேற்றப்பட்டனர். சூரிய ஆற்றலில் இயங்கும் சூரிய ஆற்றல் (சோலார் இம்பல்சு) வானூர்தி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மவுண்டன் வியூ என்னுமிடத்தில் தரையிறங்கியுள்ளது. பசுபிக் கடல் பகுதியில் மூன்று நாட்கள் 21 மணி நேரம் பயணித்த பின்னர் இந்த விமானம் அங்கு தரையிறங்கியது. அவாயி தீவிலிருந்து புறப்பட்ட சூரிய ஆற்றல் வானூர்தியின் மெல்லிய மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள கலங்கள் சூரிய ஒளி மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்கின்றன. 17000 ஒளி மின்கலன்கள் இதில் உள்ளது இதன் மூலம் லானூர்தி தனக்கா ஆற்றலை சூரியனிடமிருந்து பெறுகிறது. பகலில் வானூர்தியின் உந்தி ஒளி மின்கலன்கள் மூலம் ஆற்றல் பெறுகிறகிறது இரவில் இதன் ஆற்றல் சேமிக்கப்பட்டடுள்ள மின்கலன்கள் வானூர்தியின் உந்திக்கு உதவுகிறது. சூரிய ஆற்றல் வானூர்தி 2015 ஏப்பிரல் மாதம் அமீரகத்திலுள்ள அபுதாபியிலிருந்து உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியது. அவசரகாலத்திற்கு வானூர்தியை தரையிறக்க இடமில்லாததால் எட்டாவது ஒன்பதாவது கட்டமான பசிபிக் கடலை கடப்பதே மிகக்கடினாமான ஒன்றாகும் உலகை வலம் வரும் முயற்சியை அபுதாபியில் ஆரம்பித்த இந்த சூரியசக்தி வானூர்தி, தற்போது அதன் பயணத்தின் ஒன்பதாவது கட்டத்தில் உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதமே சூரிய ஆற்றல் வானுர்தியின் (சோலார் இம்பல்ஸின்) பயணம் துவங்கியிருந்தாலும், அதன் மின்கலங்கள் அதிகம் வெப்பமடைந்த காரணத்தால் திருத்த வேலைகளுக்காக 9 மாதம் அவாய் தீவிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது. முன்னதாக (செப்டம்பர் 12, காலை) 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டதாக வந்த தவறானத் தகவல் என கர்நாடக காவல்த்துறை மறுத்திருந்த நிலையில், மாலையில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 20-ஆம் நாள் வரை தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட இந்திய உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில், கர்நாடாகாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இச்சூழ்நிலையில், கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழகத்துக்கான அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தி வைத்துள்ளதோடு, மைசூர் பகுதிகளில் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மைசூரு சாலையில் குழப்பமான சூழ்நிலை நீடித்ததால். தனியார் பள்ளிகள் குழந்தைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களை அறிவுறுத்தப்பட்டது. சில தனியார் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்வதை உறுதி செய்ய கூடுதல் ஆசிரியர்களை ஈடுபடுத்தப்பட்டனர். பி.இ.எச். கல்லூரி சுங்கச் சாவடி அருகே தமிழ்நாட்டு லாரி ஒன்றுக்கு தீவைக்கப்பட்டது. மகதி சாலையிலும் லாரி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது. சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வளாகம் சூறையாடப்பட்டு சேதமடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இராணுவ தளபதி தல்பிர் சிங் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் காசுமீர் பள்ளதாக்கு பகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், திங்கட்கிழமை சம்மு காசுமீர் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். புதன் கிழமை இரவு கூட்டப்பட்ட சிறப்பு கருநாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி செப்டம்பர் 23 வரை காவிரியில் நீர் விடப்போதில்லை என கருநாடகா அறிவித்துள்ளது. காவிரி தொடர்பாக விவாதிக்க சட்டமன்றம் விரைவில் கூட்டப்பட உள்ளது. இதன் மூலம் கருநாடகா உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 21 இலிருந்து 27 வரை 6,000 கன அடி நீரை திறந்துவிட ஆணையிட்டிருந்தது. அனைத்து கட்சியினரின் வழிகாட்டுதல் படி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கட்டதாக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். ஆனால் மாநில அரசு மீது பாசக நம்பிக்கையிழந்துவிட்டதாக கூறி பாசக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. அமைச்சரவை முடிவை பாசக வரவேற்றுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருநாடகத்தின் நான்கு அணைகளில் 28 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே உள்ளதாகவும் அதிலுள்ள 27 ஆயிரம் கன அடி நீர் மே 2017 வரை கருநாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே ஆகும் என கூறினர். 550 மக்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்ட படகு எகிப்து கடற்கரையிலிருந்து 12 கிமீ தொலைவில் கவிழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் தப்பித்தவர்கள் புதன்கிழமை படகு கவிழ்ந்ததாக கூறினர். இது வரை துறைமுக நகரான ரோசட்டாவுக்கு அருகிலிருந்து 163 பேரை அதிகாரிகள் காப்பாற்றி உள்ளனர். 42 உடல்களை மீட்டுள்ளனர். காப்பாற்றபட்டவர்களில் நூறு பேருக்கும் அதிகமானவர்கள் எகிப்தியர்கள். நான்கு கடத்தல்காரர்களை காவல்துறை கைதுசெய்துள்ளது. அவர்கள் மீது கொலை, மக்களை கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றம் 2014இக்கு பிறகு 10,000 மக்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் முயற்சியில் மத்திய தரைக் கடலில் இறந்துள்ளதாக ஐநா கூறியுள்ளது. அதிக மக்களை ஏற்றும் பொருட்டு இப்படகு ஐந்து நாட்கள் கடற்கரைக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தது என தப்பியவர்கள் கூறினர். பாதுகாப்பு உடை அணியவேண்டுமென்றால் அதிக பணம் தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 150 பேரை ஏற்றியதால் தான் படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து என தெரிகிறது. காப்பாற்றபட்டவர்கள் அனைவரும் உள்ளூர் மீன் பிடி படகுகளாயே காப்பாற்றபட்டனர் என மீனவர் அப்துல்ரகுமான் அல் முகமதி கூறினார். இது வரை இறந்தவர்களில் 10 பெண்கள் 31 இளைஞர்கள் 1 குழந்தை என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படகில் எகிப்தியர்கள், சிரியர்கள், சூடானியர்கள், சோமாலியர்கள், எரித்திரியர்கள் இருந்தனர். பன்னாட்டு புலம்பெயர்வோர் அமைப்பு இவ்வாண்டில் 3,000 பேர் புலம் பெயரும்போது மத்திய தரைக் கடலில் இறந்திருப்பதாக கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய எல்லைப்பாதுகாப்பு அமைப்பு இவ்வாண்டு எகிப்திலிருந்மது 12,000 பேர் இத்தாலிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளது. 2015இல் 7,000 பேரே வந்தனர் இந்திய விண்வெளி ஆய்வு மையம் சிறி அரிக்கோட்டாவிலுள்ள சதிசு தவான் ஏவுதளத்திலிருந்து முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி35 மூலம் 371 கிலோ எடையுடைய இசேகட்சாட்-1 என்ற செயற்கை கோளையும் மேலும் ஏழு சிறிய செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவியது. இது 730 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தப்படும். இசேகட்சாட்-1 என்பது காலநிலையை ஆராயும் செயற்கை கோள். இதைத்தவிர 10 கிலோ எடையுடைய 1 சதுர கிமீ அளவு நுணுக்கத்தில் உள்ள எதிர்மின்னியல் துகள்களை அளக்க மும்பை இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் பிராத்தம் என்ற செயற்கை கோளையும் 5 கிலோ எடையுடைய தொலையுணரத்தல் திறனை ஆராய பெங்களூரிலுள்ள மக்களின் சமூக கல்வி (பிஇஎசு) பல்கலைக்கழகத்தின் பிசாட் என்ற செயற்கை கோளையும் இந்திய விண்வெளி அமைப்பு அனுப்பியது. மேலும் அல்ஜீரியாவின் மூன்று செயற்கை கோளையும் கனடாவின் ஒரு செயற்கை கோளையும் ஐக்கிய அமெரிக்காவின் பாத்பைண்டர் என்ற ஒரு செயற்கை கோளையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி35 மூலம் ஏவுகிறது. இதற்கு முன்பு இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது முனைய துணைக்கோள் ஏவுகலத்தை ஏவியிறுந்தாலும் இப்போதைய செலுத்தி முதன் முறையாக இரண்டு வேறுபட்ட வட்டத்தில் செயற்கை கோள்களை நிலை நிறுத்துகிறது. இசேகட்சாட்-1 இனின் ஆயள் ஐந்து ஆண்டுகளாகும். திங்கள் கிழமை ஏவப்பட்டதையும் சேர்த்து இதுவரை இந்தியா 79 வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவுயுள்ளது. ஆண்டுக்கு பன்னிரண்டு முறை ஏவுகலன்களை செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய எல்லையோரம் பாக்கித்தான் கட்டுப்பாட்டு காசுமீரத்திலுள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா புதன் இரவு ஊடுறுவி தாக்கியது இதில் குறிப்பிடத்தக்க சேதம் தீவிரவாதிகளுக்கும் அவர்களை பாதுகாத்தவர்களுக்கும் ஏற்பட்டது என இந்தியா தெரிவித்தது. ஊடுறுவி இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என பாக்கித்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு இராணுவங்களும் சுட்டுக்கொண்டதில் இரு பாக்கித்தானிய இராணுவத்தினர் இறந்தனர் என்று கூறியது. இராணுவமும் வெளியுறவு அமைச்சகும் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் நடந்த இந்தியாவுக்குள் ஊருருவ திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது மட்டுமே இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது என்றனர். தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருந்த நிலையை நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அறிந்து அவர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினர். பாக்கித்தான் கட்டுப்பாட்டு பகுதிக்கு இராணுவம் சென்றதாகவோ எல்லை தாண்டி சுட்டதாகவோ இந்திய இராணுவம் தெரிவிக்கவில்லை. தாக்குதலுக்கு உள்ளான தீவிரவாத நிலைகள் இந்திய கட்டுப்பாட்டு காசுமீர எல்லையில் இருந்து இரண்டு முதல் மூன்று கிமீ தொலைவுக்குள் இருந்தன ஒரு வாரமாக இத்தளங்கள் கண்காணிப்பில் இருந்தன. இந்திய தரப்பில் உயிர் சேதம் இல்லை. பாக்கிதான் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் படி தாக்குதல்கள் பிம்பர், ஆட்இசுபிரிங், கேல் லிபா பகுதிகளில் நடந்தது. 10 கிமீ தூரத்துக்கு பஞ்சாபின் பாக்கித்தானின் எல்லையோரத்தில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். பாக்கித்தான் இராணுவம் வியாழன் அதிகாலையிலிருந்து ஆறு மணி நேரம் சண்டை நடந்ததாக தெரிக்கிறது. இந்திய கட்டுப்பாட்டு காசுமீரில் நடந்த யூரி தாக்குதலுக்கு பதில் அடியாக இது நடந்ததாக கருதப்படுகிறது. உலகில் உள்ள எதை பற்றி அறிவதாக இருந்தாலும் நம் கை தட்டுவது விக்கிபீடியா தான். இது 2001 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ் பதிப்பான தமிழ் விக்கிபீடியா இதே நாளில் தான் (செப்டம்பர் 30ஆம் தேதி 2003) மக்கள் பயன்பாட்டிற்கு உதயமானது. விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கணக்கை தொடங்கி கட்டுரைகளை எழுதும் வசதி தரப்பட்டுள்ளது. இதுவரை தமிழில் சுமார் 88 ஆயிரம் கட்டுரைகளும் 56 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனர் கணக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சென்ற வருடம் அறிமுகமான Cool Pad Note 3 வெற்றியை அடுத்து இன்று Cool Pad Note 5 என்னும் புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அமேசானில் ரூ. 10, 999 விலையில் விற்பனைக்கு வருகிறது. தேமுதிக சார்பில் போட்டியிட மனு செய்த திரு நங்கைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் ராதிகா என்ற திருநங்கை சேலம் மாநராட்சி 18 வது டிவிசனில் போட்டியிட வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. அவர் இன்று தாரை தப்பட்டை மேள தாளத்துடன் திருநங்கைகள் புடைசூழ நடனமாடியபடி வந்து மனுதாக்கல் செய்தார். தற்போது சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்கும் விதமாக திருநங்கைகள் அரசியல், அரசு வேலை என வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பிரித்திகா யாசினி என்ற திருநங்கை நீதிமன்றம் வரை சென்று போராடி உதவி ஆய்வாளராக காவல்துறையில் பணியில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை போட்டியிட்டார். அதேபோல் மதுரை கிழக்கு தொகுதியில் பாரதி கண்ணம்மாவும், மதுரை தெற்கு தொகுதியில் அனுஷ்யஸ்ரீ என்ற இரண்டு திருநங்கைகள் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 123 போகோ காரம் தீவிரவாதிகள் யூலை மாதத்திலிருந்து சாட், நைசர் நாட்டு படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதை நைசரின் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தெரிவித்தார். இதுவரை இக்காலகட்டத்தில் போகோ காரமுக்கு எதிரான இணைந்த நடவடிக்கையில் 14 படை வீரர்கள் கொல்லப்பட்டனர் 39 வீரர்கள் காயமுற்றனர் என்று நைசர் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தெரிவித்தார். யூன் மாதம் சாட், நைசர் நாட்டு படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 30 போகோ காரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். போகோ காரம் தீவிரவாதிகள் தோராயமாக 1,400 சதுர கிமீ அளவுள்ள சாட் ஏரியை சுற்றி இசுலாமிய காலிபத் அமைக்க அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். சாட் ஏரியை சுற்றி சாட், நைசர், கேமரூன், நைசீரியா ஆகிய நாடுகள் உள்ளன. அக்காலத்தில் நைசீரிய படைகள் போகோ காரம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நான்கு நகரங்களை மீட்டனர். இடது சாரி அமைப்பான பார்க் எனப்படும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுத படை கிளிர்ச்சியாளர்களுடன் கொலம்பியா செய்து கொண்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை. நான்கு ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தியின் விளைவாக 2016 சனவரி மாதம் பார்க் தலைவருக்கும் கொலம்பிய அதிபருக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை 50% கொலம்பிய வாக்காளர்கள் ஏற்றால் மட்டுமே செயல்பாட்டுக்கு வரும். இந்த அமைதி உடன்படிக்கையால் கிளர்ச்சியாளர்கள் அவர்கள் செய்த கொலைகளில் இருந்து தப்பிவிடுவர் என உடன்பாட்டை ஏற்காதவர்கள் கூறினர். இந்த உடன்பாட்டின் படி கிளர்ச்சி காலத்தில் நடந்த குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். குற்றங்கள் நிருபணமானால் கடும் தண்டனைக்கு பதிலாக குறைந்த அளவு தண்டனை தரப்படும். மேலும் ஆயதத்தை கைவிட்ட பார்க் கிளர்ச்சியாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை தரும் மேலும் வணிகம் செய்ய விரும்புபவர்களுக்கு அரசு நிதி உதவி செய்யும். இத்த உடன்படிக்கை 2018 முதல் 2022 வரை 10 இடங்களை நாட்டின் நாடாளுமன்றத்தில் தருவது என்றது உடன்பாட்டை ஏற்காத பலருக்கு பிடிக்கவில்லை. உடன்பாட்டை எதிர்த்த உரைபு குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் எந்த பதவிக்கும் போட்டியிடமுடியாது, பார்க் தலைவர்கள் குற்றங்களுக்கு கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டும், பார்க் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு தரவேண்டும், கொலம்பிய அரசியல் சாசனத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது போன்ற மாற்றங்கள் அமைதி உடன்படிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார். பொகொட்டாவில் உள்ள வாக்காளர்கள் இந்த உடன்பாட்டை ஏற்றனர் ஆனால் உரைபின் சொந்த மாகாணமான நாட்டின் மேற்கிலுள்ள காபி விளையும் அன்டிகுய்யா உடன்பாட்டை ஏற்கவில்லை. அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. செப்டம்பர் 26 அன்று தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவித்த அறிக்கை தமிழக உள்ளாட்சி சட்டம் விதி 24, 1995 ஐ மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. தடை விதிக்கவேண்டுமென திமுக வழக்கு தொடுத்து இருந்தது. திமுக மலைவாழ் மக்களுக்கு போதிய தகுந்த அளவில் இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் தராமல் அவசர கதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. நீதிமன்றம் புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் 31 ,2016 இக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு ஆணையிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பிரிவு 251ஐ பயன்படுத்த ஆணையிட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் மனு அளிக்கும் போது அவர்கள் மேல் காவல் துறையில் உள்ள குற்றங்கள் குறித்து தனியாக தெரிவிக்கவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்தது. அப்படி தனி அறிக்கை தராதவர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க ஆணையிட்டுள்ளது. இந்தியாவின் சிசாட்-18 ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியான்-5 விண்கலம் மூலம் பிரெஞ்சு கயானாவின் இக்குரவுலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது.. சிசாட்-18 3,404 கிலோ எடையுடைய தகவல் தொடர்பு செயற்கை கோளாகும். இதில் 48 அலை வாங்கி செலுத்திகள் உள்ளன. இது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஏரியான் ஏவுகலம் மூலம் செலுத்தும் 20 ஆவது செயற்கை கோளும் ஏரியானின் 280 ஏவுதலும் ஆகும். புதன்கிழமை ஏவ திட்டமிடப்பட்டு வானிலை சரியில்லாததால் 24 மணி நேரம் கழித்து வியாழக்கிழமை ஏவப்பட்டது. தற்போது இந்தியாவிற்கு 14 செயல்படும் தகவல் செயற்கை கோள்கள் உள்ளன. எடை கூடிய செயற்கை கோள்களுக்கு இப்போது ஏரியான் ஏவுகலத்தையே இந்தியா நம்பியுள்ளது இதை தவிர்க்க சிஎசுஎல்வி எம்கே III ஏவுகலத்தை இந்தியா உருவாக்குகிறது. காலை 2 மணிக்கு ஏரியான்-5 விஏ-231 ஏவப்பட்டது. ஆத்திரேலிய இசுக்கை முசுட்டர் 2 ஏவப்பட்ட பின் ஏவுகலம் ஏவப்பட்ட 32 நிமிடங்களில் சிசாட்-18 புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டது. அடுத்த ஆண்டு சிசாட்-17 சிசாட்-11 ஏரியான் மூலம் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் தெரிவித்தார். நம்பிக்கை என்பதை ஆங்கிலத்தில் "Trust" என்றும் விசுவாசம் என்பதை "Faith" என்றும் பொதுவாக கூறுவா். பைபிள் விசுவாசத்தை "நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது" என மேற்கோளிடுகிறது. நிச்சயமாகவே இருக்கிறது ஆனால் அது நம் கண்களுக்கு தொியாவிட்டாலும் உறுதியாக உண்டு என நாம் நம்பும் நம்பிக்கையே விசுவாசம் எனலாம். சான்றாக. இறைவன் ஒருவா் இருக்கிறாா் என நாம் நம்புகிறேம் ஆனாலும் நாம் அவரை காணவில்லை. விஞ்ஞானிகள் கூறும் வானியல் கருத்துக்களை நாம் பாா்க்காமலே விசுவாசிக்கிறோம். சீனாவின் வென்ஸோ பகுதியில் உள்ள லுச்செங் என்ற தொழிற்பேட்டையில் 6மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாயினர். இந்த தொழிற்பேட்டையில் பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 1970ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த 6 மாடி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருந்துள்ளது. வாடகை குறைவாக இருக்கும் காரணத்தால் பலர் இந்த கட்டிடத்தில் வசித்து வந்துள்ளனர். மீட்புப் படையினர் முதல்கட்டமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலரை வெளியேற்றியதுடன் 22 உடல்களையும் கண்டெடுத்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அமெரிக்கா செங்கடலிலுள்ள தனது யுஎசுஎசு மேசன் கப்பல் மீது தாக்குதல்கள் நடந்ததை அடுத்து யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது. ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க கப்பலை தாக்கின. கப்பல் பாதுகாப்பு முறைகளை கையாண்டதால் அதற்கு எச்சேதமும் ஏற்படவில்லை. ஏவுகணைகள் வந்த பகுதியில் இருந்த மூன்று தொலைக்கண்டுணர்விகள் அமெரிக்க யுஎசுஎசு நிமிட்சு கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட டாமஆக் சீர்வேக ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டன. இந்த தொலைக்கண்டுணர்விகள் அவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்த பகுதியில் இருந்தன. அவுதி கிளர்ச்சியாளர்களின் நிலை மீது அமெரிக்கா நேரடியாக நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். யெமனின் உள்நாட்டு போரில் அவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி அரேபியா தலைமையில் கூட்டுப்படைகள் வான் வழித்தாக்குதல்களை நடத்துகின்றன. அதற்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருகிறது. அவதி கிளர்ச்சியாளர்கள் தாங்கள் அமெரிக்க கப்பலை தாக்கவில்லை என மறுத்துள்ளனர். உலகில் அதிகநாள் மன்னராக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை மரணமடைந்தார். 1946இல் பதவியேற்று 70 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இறந்ததிற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனினும் சென்ற ஆண்டு பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தார், உள்ளூர் நேரம் மாலை நான்கு மணி அளவில் மரணித்தார். பட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன் மன்னராக பொறுப்பேற்காமல் அடுத்த மன்னரை நியமிக்கும் சடங்கை தள்ளி போடச்சொல்லியுள்ளார். அதிகாரபூர்வமாக இவரது இறப்புக்கு அஞ்சலி ஓர் ஆண்டுக்கு கடைபிடிக்கப்படும். 1932இல் அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. இதை ஏற்க முடியாத அப்போதைய அரசர் பிரஜாதாய்போக் 1935இல் நாட்டை விட்டு வெளியேறினார். 1927இல் பிறந்த பூமிபால் 1946இல் மன்னராக பதவியேற்றார். இவர் மன்னராக இருந்த பொழுது தாய்லாந்து 32 பிரதமர்களை பார்த்துள்ளது. இளவரசர் துருகி பின் சௌட் அல்-கபிர் செய்த கொலை குற்றத்துக்காக அவருக்கு செவ்வாய் கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. சௌதி அரேபியாவில் 134 நபராக மரணதண்டனைக்கு ஆளானவர் இளவரசர் அல்-கபிர். அரச குடும்பத்தவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது அரிதாகும். 1975ஆம் ஆண்டு இளவரசர் பைசல் பின் முசையது அல் சௌத் தன் பெரியப்பா அரசர் பைசலை கொன்றதுக்காக நிறைவேற்றப்பட்டது தான் அரச குடும்பத்தினர் கடைசியாக பெற்ற மரணதண்டனையாகும். இளவரசர் அல்-கபிர் தன்னுடைய உதவியாளரை சுட்டதை ஒப்புக்கொண்டார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இவருக்கு எப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அமைச்சகம் தெரிவிக்கவில்லை. ஆனால் வாளால் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுவது தான் சௌதி அரேபியாவின் வழக்கம். வட கொரியா இந்த வாரத்தில் நடத்திய இரண்டாவது ஏவுகணை சோதனையும் தோல்வி அடைந்தது என தென் கொரிய அமெரிக்க இராணுவங்கள் தெரிவித்தன. சோதிக்கப்பட்டது நடுத்தர தொலைவு சென்று தாக்கும் முசுடான் ரக ஏவுகணையாகும். செயற்கோள் மூலம் ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததை கண்டதாக புதன்கிழமை அமெரிக்கா தெரிவித்தது (உள்ளூர் நேரம் வியாழக்கிழமை அதிகாலை) கொசாங் நகரில் இந்த ஏவுகணை சோதனையோட்டம் நடந்ததது. 2,500 மைல் செல்லும் நீண்ட தூர முசுடேன் ஏவுகணை இந்த வாரத்தில் சனிக்கிழமையன்று தோல்வியடைந்தது. இது குவாமிலுள்ள அமெரிக்க தளத்தை தாக்கும் வல்லமை உடையது. இந்த ஆண்டில் நடத்தப்பட்ட எட்டு சோதனைகளில் ஒன்று மட்டுமே வெற்றி பெற்றது. வல்லுனநர்கள் இப்போது நடத்தப்பட்ட ஏவுகணை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என அச்சப்படுகின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.500, ரூ.1‌000 போன்ற அதிக மதிப்பிலான கரன்சி நோட்டுக்களால் கள்ளநோட்டுகள் மற்றும் கருப்புப் பணம் அதிகரிப்பதால் அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்தசூழலில், ரூ.2,000 நோட்டு அச்சடிக்கப்பட்டு வருவது முக்கியத்துவம் பெறுகிறது ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படிரூ.2,000 நோட்டுக்கள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நோட்டுக்களை விரைவில் புழக்கத்துக்கு விட ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அவற்றை 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. அதன்பிறகு இப்போது அதிகபட்ச மதிப்பாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருவதாகத் தெரிகிறது. பாகித்தானில் பலுசித்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரிலுள்ள காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் 50இக்கும் மேற்பட்டோர் பலியாயினர். கிட்டத்தட்ட 200 பயிற்சி காவலர்கள் காயமுற்றனர். நூற்றுக்கணக்கான பயிற்சியர் தங்கியிருந்த இந்த காவலர் பயிற்சி கல்லூரியின் விடுதியின் உள்ளே நுழைந்த தாக்குதல்தாரிகள் அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இச்செய்தியறிந்த அரசுத் துருப்புக்கள் அங்கு விரைந்து ஒரு துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றனர். அண்டை நாடான ஆப்கானிந்தானில் இருந்து இந்த தாக்குதல்தாரிகள் இயக்கப்பட்டு இருக்கலாம் என்று தான் நம்புவுதாக, ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி கருத்து தெரிவித்தார். இசுலாமிய நாடு எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் தாங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறினர். எனினும் அரசு அதிகாரிகள் லக்சர் இ சாங்வி அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிறுக்க வேண்டும் என ஐயுறுகின்றனர். அனைத்து ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருவர் தற்கொலை அங்கிகளை வெடிக்கச்செய்து இறந்தனர், மூன்றாமவர் பாதுகாலர்கள் சுட்டதால் இறந்தார். இங்கு 600 பேர் தங்கி படிப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். 2008ஆம் ஆண்டும் இக்கல்லூரி தாக்கப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக படகில் செல்லும் அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவிலிருந்து இத்தாலி நேற்று புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அப்போது நடுவழியில் படகில் ஓட்டை விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தவேளை உயிர் பிழைப்பதற்காக சிலர், நடுக்கடலில் குதித்தனர். சற்று நேரத்தில் படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் பயணித்த 90 போரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பெரிய நகரமான டியர்பாகிர் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் பலியாயினர் 100இக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதற்கு தடை செய்யப்பட்ட குர்திசுத்தான் உழைப்பாளர்கள் கட்சி தான் காரணம் என துருக்கி கருதுகிறது. குர்திசுத்தான் இன மக்களுக்கு ஆதரவானதானதாக மக்கள் சனநாயக் கட்சி (HDP) பார்க்கப்படுகிறது. மக்கள் சனநாயக் கட்சியின் (HDP) இரு தலைவர்களை (செலாகாத்தின், பீசன்) தீவிரவாதத்த பரப்புரைக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க ஒத்துழைக்க மறுத்தனர் என துருக்கி கைது செய்தது. இவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்தது. மொத்தம் 13 நபர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் இருவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் கைதாகவில்லை என துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. மக்கள் சனநாயக் கட்சி துருக்கியின் மூன்றாவது பெரிய கட்சியாகும் இதற்கு 550 உறுப்பினர்கள் உடைய துருக்கி நாடாளுமன்றத்தில் 59 உறுப்பினர்கள் உள்ளனர். காவல்துறை அங்காராவிலுள்ள கட்சியின் தலையகத்தையும் சோதனை செய்தது. துருக்கியின் செயலை ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டித்துள்ளது. துருக்கியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிலக்களிக்கப்பட்டவர்கள். அவர்களை கைது செய்ய முடியாது. ஆனால் இவ்வாண்டு மே மாதம் மக்கள் சனநாயக் கட்சி உறுப்பினர்களுக்கும் மேலும் சில உறுப்பினர்குக்கும் இச்சலுகை நீக்கப்பட்டது. முகநூல், யூடியுப், என்னாப்பு போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும் இவ்வெடிகுண்டு தாக்குதல் பற்றிய செய்திகளும் இணைய வெளியில் தடை செய்யப்பட்டுள்ளன. புதன் கிழமை ஒரு நாள் என்டிடிவி இந்தியா ஒளிவிழியம் மீது விதிக்கப்படிருந்த தடையை இந்திய ஒன்றிய அரசு நீக்கியது. செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இம்முடிவை எடுத்ததாக என்டிடிவி தெரிவித்தது. பதன்கோட் வானூர்தி தளத்தை தீவிரவாதிகள் தாக்கியபோது என்டிடிவி இந்தியா அதை ஒளிபரப்பியதில் குற்றம் கண்டதால் அரசு இவ் ஒளிவிழியத்தை ஒரு நாள் தடை செய்ய முடிவெடுத்தது. சில யுத்தி முறையில் நுணுக்கமான விவரங்களை என்டிடிவி ஒளிவிழியம் ஒளிபரப்பியதாக அமைச்சகம் குற்றம் சாட்டியது. திங்கள் கிழமை அமைச்சகம் எடுத்த இம்முடிவை என்டிடிவி தன் இணையதளத்தில் வெளியிட்டது. இத்தடை தொடர்பாக என்டிடிவி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய் கிழமை விசாரிக்க இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தடை முடிவு எடுக்கப்பட்டதாக வெங்கய்யா நாயுடு கூறியிருந்தார். இந்திய செய்தியாளர் குழுமம் ஒளிவிழியத்தின் மீதான் இத்தடை தேவையற்றது என்றும் செய்திநிறுவனங்களின் செயலில் தலையிடுவது என்றும் கூறியிருந்தது ஒன்றிய அரசின் குற்றச்சாட்டுகளை என்டிடிவி மறுத்திருந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் செல்லாது என இந்திய பிரதமர் தொலைக்காட்சியில் அறிவித்தார். புதிதாக 500,2000 நோட்டுகள் நவம்பர் 10 முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்றும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே பகிரப்படும் என தெரிவித்தார். கருப்பு பணத்தை பதுக்கியுள்ளோருக்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. நவம்பர் 11 வரை இப்போதுள்ள 500, 1000 நோட்டுகள் மருத்துவமனைகளிலும் தொடருந்து நிலையங்களிலும் வானூர்தி நிலையங்களிலும் பாறைநெய் சில்லறை விற்பனை நிலையங்களான பங்குகளிலும் செல்லும். அடுத்த 50 நாட்களுக்குள் 500, 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம். வங்கிளும் ஏடிம்களும் புதன்கிழமை செயல்படாது. நவம்பர் 11 வரை ஏடிம்களில் 2,000 ரூபாயுக்கு மேல் எடுக்கமுடியாது. சில நாட்களுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணத்தை மாற்றமுடியாது என அரசு தெரிவித்தது. நவம்பர் 8 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனல்டு திரம்பு 276 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டொனல்டு திரம்பு 30 மாநிலங்களில் வெற்றி பெற்றார். இலாரி கிளிண்டன் 20 மாநிலங்களில் வெற்றி பெற்றார். அவரின் எதிர்ப்பாளர் இலாரி கிளிண்டன் 218 தேர்வாளர்கள் வாக்கு பெற்றார். ஒன்றிய அளவில் இலாரி கிளிண்டன் 58,875,708 வாக்குகளும் டொனல்டு திரம்பு 58,842,289 வாக்குகளும் பெற்றனர். இலாரி கிளிண்டன் தோல்வியை ஏற்றுக்கொண்டு திரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார். உலகத்தலைவர்கள் டொனல்டு திரம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். டொனல்டு திரம்பு வெற்றியால் உலகம் முழுவதிலுமுள்ள பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டன. நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை பேரலைகள் தாக்கும் என்று நியூசிலாந்தின் குடியியல் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது. மேலும், நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பின்னதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன. தெற்குத் தீவான வடக்கு கேண்டர்பரி பகுதியில், 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கிறைஸ்ட் சர்ச் நகருக்கு 91 கிமீ வடகிழக்கே இதன் மையம் இருந்ததாக அறியப்பட்டது. உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. எலிசபத் என்ற ஒரு பெண்மணி ரேடியோ நியூசிலாந்துக்குக் கூறும்போது, தன் வீடு பாம்பு போல் சுழன்றது, அதனால் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது என்றார். வெலிங்டன் நகரில் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள் டிசம்பர் 23, 2012 நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் சூன் 14, 2011 நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு பெப்ரவரி 22, 2011 இந்தூர்-பாட்னா விரைவு தொடருந்து கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 110 பேருக்கு மேற்பட்டோர் பலியாயினர் 150இ்க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லக்னோ, மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த கிருஷ்ண கேசவ் என்பவர் விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார். நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும் நான் விழித்துக்கொண்டேன் எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற அவர், மேலும்ம் நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம் என்றார். "அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர் என்றும் காவலர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர் என்றார். தொடருந்தில் 23 பெட்டிகள் இருந்தன. இதில் 12 தூங்கும் வசதியுடையனவாகும். 1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு! இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து சுருக்கமாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அவருடைய பார்வையில் இது கிராம மக்களை மிகவும் பாதிக்கும். இது ஒரு முறைப்படுத்தப்பட்ட கொள்ளை" எனவும் "சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்" எனவும் விமர்சித்தார். இதன் இறுதி விளைவு குறித்து நமக்கு எதுவும் தெரியாது என்றும் தேசத்தின் வருமானம் மற்றும் மொத்த உற்பத்தி விகிதம் 2 சதவிகிதம் குறையவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி மன்மோகன் சிங் பேசும் போது அவையில் இருந்தார். பிரேசிலின் சாப்பேக்யோன்சே (Chapecoense) கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி கொலம்பியாவில் விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி ஆகினர். மொத்தம் 81 பேர் இவ்வானூர்தியில் பயணம் செய்தனர். தனி வானூர்தியில் குழு பயணம் செய்தது இதில் இருந்தவர்கள் அனைவரும் இந்த கால்பந்தாட்ட குழுவை சேர்ந்தவர்கள். பிரேசிலின் சாவோ பாவுலோ நகரில் புறப்பட்ட இவ்வானூர்தி பொலியாவின் சான்டா குருசு வழியாக கொலம்பியாவின் மெடலின் நகருக்கு வந்து கொண்டிருந்தது. மெடலின் நகரை அந்த வானூர்தி அணுகிக் கொண்டிருந்த வேளையில், மோசமாக காலநிலையால் மலைப்பாங்கான இடத்தில் வைத்து விழுந்து நொறுங்கிய இந்த வானூர்தியில்கா ல்பந்து விளையாட்டு வீரர்கள், செய்தியாளர்கள், வானூர்தி ஊழியர்கள் என மொத்தம் 81 பேர் பயணம் செய்தனர். மின்சார கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் தெற்கு பகுதியை சேர்ந்த சிறியதொரு அணியான சாப்பேக்யோன்சே கால்பந்து அணி, அடிமட்ட நிலையிலிருந்து உயர்ந்து, தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய குழுப் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். மெடெலின் சர்வதேச வானூர்தி நிலையத்துக்கு தெற்கே முப்பது கிலோ மீட்டர்கள் தொலைவில், லா யூனியன் நகரை கடந்து சென்ற போது மின் கோளாறு குறித்து வானூர்தி அறிவித்துள்ளது. பின்னர் அது வீழ்ந்து நொருங்கியது. இவ்விபத்தில் இறந்தவர்களுக்காக பிரேசில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க போவதாக அறிவித்துள்ளது. தப்பிய இருவர் கால்பந்தாட்ட வீரர்கள் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னொரு கால்பந்தாட்ட வீரர் தப்பி மருத்துமனையில் உயிரிழந்ததாக தெரிகிறது. 1973இல் உருவாக்கப்பட்ட இவ்வணி 2014ஆம் ஆண்டை தவிர எல்லா ஆண்டும் பிரேசிலின் சீரியசு ஏ குழு ஆட்டங்களில் விளையாடி வருகிறது இந்த போட்டிக்கான கோப்பையை சாப்பேக்யோன்சே கால்பந்து அணிக்கே வழங்கலாம் என்று அந்த அணி மோதவிருந்த மெடெலின் நகரின் அலேடிகோ நேசனல் கால்பந்து அணியின் தலைவர் யோசனை கூறியிருக்கிறார். கயானா விடுதலை பெற்ற 1965ஆம் ஆண்டிலிருந்து எந்த ஆட்சி மாற்றமும் சுமுகமாக நடந்ததில்லை. நாட்டின் தலைவராக கடந்த 22 ஆண்டுகளாக பதவி வகித்த யாக்யா சமே தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அலியு மொம்மர் நிச்சி நிச்சி அறிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவு குறித்து இதுவரை யாகுயா சமேவிடமிருந்து எந்த கருத்தும் வெளிவரவில்லை. முன்னர், கடவுள் விருப்பப்பட்டால் தன்னால் ஒரு பில்லியன் ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியும் என்று கூறியிருந்தார். சமேவின் தோல்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆட்சி மாற்றம் சுமூகமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை. அல்லா மட்டுமே அதிபர் பதவியை தன்னிடமிருந்து பறிக்கமுடியும் என்று இவ்வாரம் சமே கூறியிருதந்தார். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி மூலம் அதிகாரத்திற்கு வந்த சமே, செய்தியாளர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒருபாலுறவுக்காரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மனித உரிமை குழுக்களால் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மூலிகைகளை கொண்டு தன்னால் எயிட்சை குணப்படுத்த முடியும் என்று சமே கூறியிருந்தார் ஏழு எதிர்கட்சிகளின் கூட்டணியில் பாரோ போட்டியிட்டார். வெற்றி பெற்ற ஆடமா பாரோ 1965இல் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் இலண்டனில் படித்தவர். தற்போது ஏவப்பட்டிருக்கும் ரிசோர்சுசாட் 2ஏ செயற்கைக்கோளின் எடை 1235 கிலோவாகும். ஏவப்பட்டதிலிருந்து 18 நிமிடங்களில் பூமியிலிருந்து 822 கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைக் கோள் அதன் சுற்றுப்பாதையில் தள்ளப்பட்டது. இந்த முறை ஏவிகலனில் ஒரு நிழற்படக்கருவி பொருத்தப்பட்டு செயற்கைக் கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் காட்சியையும் இசுரோ அறிவியலாளர்கள் கண்டனர். ஏற்கனவே இந்தியாவால் செலுத்தப்பட்டுள்ள ரிசோர்சுசாட்-1, ரிசோர்சுசாட்-2 ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த செயற்கைக்கோள் செயல்படும். இந்த ரிசோர்ஸ்சாட் செயற்கைக்கோள்கள் புவியைத் தொடர்ந்து படம் எடுப்பதன் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும். இசுரோவின் மிகப் பிரபலமான பிஎஸ்எல்வி ஏவுகலன் இதுவரை 38 முறை ஏவப்பட்டிருக்கிறது. அதில் 36 முறை வெற்றி கிடைத்திருக்கிறது. 1994-2016 காலகட்டத்தில் பிஎஸ்எல்வி மூலம் 121 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன. இவற்றில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினருக்காக ஏவப்பட்டவை. 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இயங்கும் தேனி குரு கிருஷ்ணா துணி மில்லில் தங்கி பணிபுரிய ஆட்கள் தேர்வுச் செய்யப்படுகிறார்கள். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் பிற வசதிகள் தங்குமிடம், உணவு வழங்கப்படும். ஏசியன் மேன்பவர் ஸ்டாப்பிங் சொலுயூசன் (AMSS) சேலம் மெயின் ரோடு, இந்தியன் வங்கி எதிரில், பொம்மிடி அஞ்சல், தருமபுரி மாவட்டம் 635301 அலெப்போ நகரின் கிழ புறத்தை விட்டு கிளர்ச்சியாளர்கள் முழுவதும் வெளியேறியதை தொடர்ந்து அந்நகரம் சிரிய இராணுவத்தின் வசமாகியது. அலெப்போ நகரின் மேற்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டிலும் கிழ புறம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தன. கிழ புறத்தை பிடிக்க இராணுவம் இரசிய வான் படை உதவியுடனும் ஈரானிய உதவியுடனும் இசுபுல்லா சியா கிளர்ச்சியாளர்களை கொண்டும் தீவிர தாக்குதல் நடத்தியது. அலெப்போ சிரியாவின் மிகப்பெரிய நகராகவும் அதன் வணிக தலைநகராகவும் இருந்தது. உள்நாட்டு போரினால் அலெப்போ கடும் சேதமுற்றதுடன் அதன் மக்களில் பெரும்பாலோர் வெளியேறி விட்டனர். கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய அரசுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அலெப்போ நகரின் கிழ புறத்தில் இருந்த சில கிளர்ச்சியாளர்களும் வெளியேறினர். கிளர்ச்சியாளர்களும் அவர்கள் இருந்த பகுதி மக்களும் பாதுகாப்பாக வெளியேற இவ்வுடன்பாடு வழி செய்கிறது. அவர்கள் திட்டமிட்டப்படி இட்லிப் நகருக்கு செல்வார்கள் என்றும் அவர்களை துருக்கி ஏற்பதாக திட்டம் இல்லை என்று துருக்கி அதிகாரி கூறினார். ஐநா அலெப்போவில் நடந்த அவலங்களுக்கு சிரிய அரசும் அதன் கூட்டாளிகளான இரசியாவும் ஈரானும் தான் காரணம் என்று கூறியுள்ளது. அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிசுடைன் லாகர்டே பிரேஞ்சு நிதியமைச்சராக இருந்த போது நடந்த மோசடி புகார் காரணமாக பிரான்சில் வழக்கை எதிர்கொள்கிறார். கிறிசுனைன் லகார்மடேவை அனைத்துலக நாணய நிதியம் இவ்வழக்கில் ஆதரிக்கிறது. 1990ஆம் ஆண்டு வணிகர் பெர்னார்டு டாப்பி பிரான்சின் சோசலிச அரசில் அமைச்சராவதற்காக நிறுவனங்களிலுள்ள தன் பங்குகளை 320 ஈரோ மில்லியன் மதிப்புக்கு விற்றுவிட்டார் அடிடாசு என்ற விளையாட்டு கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை அரசு வங்கி கிரேடிட் லியோனிசு 320 மில்லியன் ஈரோவுக்கு 1993இல் வாங்கியது. பின்பு அதை 560 மில்லியன் ஈரோவுக்கு விற்றது. தாப்பி அடிடாசு நிறுவனத்தை குறைத்து மதிப்பிட்டு வங்கி தன்னை மோசம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். வங்கியின் மேல் வழக்கு தொடர்ந்தார். 2007இல் அவருக்கும் வங்கிக்கும் தொடக்க தீர்வு ஏற்பட பங்காற்றினார். அப்போது அவர் நிதி அமைச்சராக இருந்தார். 2014இல் பிரான்சின் மிகப்பெரிய நீதிமன்றம் இவர் மீது சுமத்தப்பட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகளை நீக்கி விட்டாலும் இவர் மூவர் அமர்வு தீர்ப்பாய வழக்கில் தன் கடமையை சரிவர நிறைவேற்றாமல் இருந்தார் என்றது. இந்த சொல் தற்போதைய வழக்கிற்கு இது அடிகோலியது. இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும் படி இவர் அளித்த முறையீட்டு மனுவை டிசம்பரில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இவர் வழக்கில் நேரில் தோன்ற வேண்டும் என்றது. கத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறை யை ஒழித்துள்ளது. தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்வதாக இருந்தாலோ நாட்டை விட்டு வெளியேறவோ அவர்களின் முதலாளியின் அனுமதி இம்முறையில் தேவை. காப்லா முறைக்கு பதில் வேறு ஒப்பந்த தொழிலாளர் சட்டம் இயற்றப்படும் என்றும் அது அதிக நெகிழ்வு தன்மையுடனும் தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதாகவும் இருக்கும் என கத்தார் கூறியுள்ளது. மனித உரிமை அமைப்புகள் காபலா முறை நவீன கால அடிமை முறையாகும் என்று குற்றம் சுமத்தின. பன்னாட்டு அம்னிசுட்டி அமைப்பு புதிய சட்டம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உருவாக்காது என்கிறது. புதிய சட்டம் ஆதரவு வேண்டும் என்ற சொல்லை மட்டுமே நீக்கி இருக்கும் என்றும் பழைய முறையின் அடிப்படை அப்படியே இருக்கும் என்றும் அம்னிசுட்டியின் சேம்சு லைன்ச் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ செயற்கைகோள் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது உலகின் மிக துல்லியமான செய்மதி இடஞ்சுட்டலாக இருக்கும் என நம்பப்படுகிறது. பணபற்றாக்குறை முதலான பல்வேறு இடைஞ்சல்களை தாண்டி 17 ஆண்டுகள் கழித்தே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கலிலியோ அமைப்பு முழுமையாக செயல்பட 24 செயற்கைகோள்கள் தேவை. இப்போது 18 செயற்கைகோள்கள் மட்டு்மே ஏவப்பட்டுள்ளது. இதன் செயற்கை கோள்கள் உருசியாவின் சோயசு ஏவுவூர்தி மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டன. இறுதி 4 செயற்கை கோள்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏரியான்-5 ஏவூர்தி மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டன. குடிசார் அமைப்புகளால் இது இயக்கப்படும், அமெரிக்காவினதும் உருசியாவினதும் இராணுவத்தால் இயக்கப்படுபவை. இராணுவத்தால் இயக்கப்படுபவையால் சேவை பாதிக்காது என்பதற்கு உறுதி இல்லை. ஏனென்றால் போர்களின் போது மற்றவர்களின் சேவை தடுக்கப்படலாம். கலிலியோ அமைப்பு 2008ஆம் ஆண்டு செயற்பாட்டுக்கு வரும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வமைப்பு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மூலம் உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்தியா, இசுரேல், சௌதி அரேபியா, தென் கொரியா போன்ற பல்வேறு ஐரோப்பிய ஒன்றியத்தி்ல் இல்லாத நாடுகளும் இத்திட்டத்திற்கு உதவியுள்ளன. அமெரிக்காவின் ஆளில்லாமல் இயக்கும் ஆராய்ச்சி நீர்மூழ்கியை தென்சீனக் கடலில் சீன கடற்படை கப்பல் கைப்பற்றியது. தென்சீனக் கடலில் பன்னாட்டு கடற்பரப்பில் தங்கள் நீர்மூழ்கி இருந்ததாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க கடல் நிலப்பரப்பு மதிப்பீட்டு கப்பல் போடிச் இம்நீர்மூழ்கியை நீருக்கடியில் இருந்து எடுப்பதற்குள் சீன கப்பல் இம்நீர்மூழ்கியை கைப்பற்றியது. சீனாவின் தாலாங் 3 ஆம் வகை கப்பலான ஏஎசுஆர்-510 போவிச்சின் 500 யார்டு தூரத்துக்கு வந்து நீர்மூழ்கியை கைப்பற்றியது. இச்செயலால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் நிலையற்றதன்மையையும் இறுக்கத்தையும் விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. கடல்மிதவை என்று பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கி கடலின் அமிலத்தன்மையையும் வெப்பத்தையும் கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. சீனா தென் சீனக்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளதோடு அதில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிறுவியுள்ளது. அதன் நிழற்படத்தை அமெரிக்கா வெளியிட்டது மேலும் சீனா தென் சீனக் கடலை இராணவ மையமாக்கியுள்ளதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு திரம்பு கூறியிருந்தார். இந்நிகழ்வு தென் சீனக்கடலில் பிலிப்பைன்சு நாட்டின் வடமேற்கிலுள்ள சுபிக் பே என்னும் இடத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் நடந்தது. துருக்கியின் உருசிய தூதர் ஆண்ரே கார்லோவ் துருக்கியின் தலைநகர் அங்காராவில் கலை கண்காட்சியை பார்த்துவிட்டு அங்கு பேசும் போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதை செய்தவர் துருக்கியின் கலவர தடுப்பு காவலாளி 22 வயதுடைய மெவ்லுட் பெர்ட் அல்டின்டசு என்று தெரியவந்துள்ளது. கலவர தடுப்பு காவலாளி இல்லையென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. கொலையாளி அங்கேயே மற்ற காவலர்களால் சுடப்பட்டு இறந்தார். தூதரை சுட்டுவிட்டு சிரியாவில் உருசிய நடவடிக்கைக்கு எதிராக கொலையாளி குரல் கொடுத்தார் துருக்கியர் பார்வையில் உருசியா' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட நேரத்தில் உருசிய தூதர் சுடப்பட்டார் என உருசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் காணொளி ஒளிப்பதிவைப் பார்த்தபோது, கார்லோவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது எட்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது. கார்லோவ் 1976இல் தூதரக பணிக்கு வந்தார் 2013 யூலை மாதம் துருக்கியின் தூதராக அறிவிக்கப்பட்டார். 1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார். 2001-ல் வடகொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார் 2006 வரை அப்பொறுப்பில் இருந்தார். 1979 முதல் 1991 வரை வடகொரியாவுக்கான சோவியத் ஒன்றிய தூதராக பணியாற்றினார். சிரியாவுக்கு வந்துகொண்டிருந்த ரஷ்ய இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் ரஷ்ய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது. மாசுக்கோவில் இருந்து புறப்பட்ட இந்த வானூர்தி தென் ரஷ்யாவின் சோச்சி நகரில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றது. சோச்சி நகரிலிருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குள் வானூர்தி டியு-154 டுபோலவ்) ரேடாரில் இருந்து மறைந்தது. சிரியாவின் லடாக்கியா நகருக்கு சென்ற இதில் பயணித்த பெரும்பாலானவர்கள், ரஷ்ய ராணுவத்தின் (செம்படை) புகழ் பெற்ற இசைக்குழுவான அலெக்சாண்ட்ரோவ் என்செம்பிள் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இவ்விபத்து பற்றி விசாரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்திரவிட்டுள்ளார். இவ்விபத்துக்கு திங்கள் கிழமை தேசிய அளவில் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றார். 1960இல் வடிவமைக்கப்பட்ட டியு-154 டுபோலவ் வானூர்தி 1972இல் பயன்பாட்டுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யாவின் பெரும்பலமாக இது உள்ளது. இது வரை இவ்வகையான வானூர்திகள் 39 விபத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கு ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் போலந்து நாட்டின் அதிபர் உயிரிழந்தார். துரத்த பூத்தின் அதிகாரிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருமையான விமான விபத்தை மிகுந்த செயல்திறன் வாதிங்கர் குழுவின் மூலம் பரப்பியது உட்கின், அவர் "வாக்னர்" என்ற அழைப்பு மூலம் குழுவின் செயல்பாடுகள், அதன் கட்டளை அமைப்பு மற்றும் போர் தரக்கதிபரவுகளில் முக்கிய பங்கு வாய்ந்தது. செக்காலவ் அலுவலர் பார்ப்பனின் கைவழியில் உள்ளது, அப்படியும் வாக்னர் கதையில் முக்கிய பங்குள்ள பெருமையான கூட்டணிக்கு இணைந்தார், அது உக்ரைன் உள்நாட்டுக் கோரிக்கைகளை ரஷிய பொறியியல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொள்கைகளை குறித்து முக்கியப் படிகளைக் கொண்டுள்ளது. விமான விபத்துக்கு அடிப்படையில், ரஷிய பரப்பு பரப்பப்பட்டுள்ள பெருமையான ஆக்கிரமிப்பு பொறியியலில் உள்ள உத்கின் குழுவில் சிலோ தீவுப்பகுதியில் குவல்லோன் நகருக்கு தென் மேற்கே 40 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி நிறுவனமையமான சாலமன் மீன் பிடிப்புத் தொழிலுக்கு புகழ் பெற்றது, இங்கு பல தேசிய பூங்காக்கள் உள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை மீன் பிடி கருவிகளுக்கும் பாதிப்பில்லை. இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக ஒடிசாவிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) சோதித்தது. இது பெரும்பான்மையான சீனாவை தாக்கும் வல்லமை கொண்டது. இதன் சிறப்பு என்னவெனில் இது டாட்ரா என்னும் சுமையுந்தில் இருந்து ஏவப்பட்டது. இதனால் அக்னி-5 ஐ நகரத்தின் ஓரத்திலிருந்து செலுத்தமுடியும். இந்த ஏவுகணை 50 டன் எடையுடையது, 17 மீட்டர் நீளமுடையது, 2 மீட்டர் தடிமன் (சுற்றளவு) உடையது. மூன்று அடுக்குகளை உடைய இது திட எரிபொருளால் செல்லும். அக்னி-1 700 கிமீ உம் அக்னி-2 2,000 கிமீ உம் அக்னி-3 3,000 கிமீ உம் அக்னி-4 4,000 கிமீ உம் செல்லக்கூடிய ஏவுகணைகளை இந்தியா வைத்துள்ளது. இலக்கை மிக துல்லியமாக அடைய உதவும் சீரோளி சுழல் காட்டி தொழில்நுட்பத்தில் இயங்கும் உட்புற இடமறியும் அமைப்பு இதில் உள்ளது மட்டுமல்லாமல் நுண்ணிய இடமறியும் அமைப்பும் இதில் உள்ளது. அதனால் ஏவுகணை இலக்கை சில மீட்டர் துல்லியத்தில் தாக்கமுடியும். இதுவே இறுதி சோதனை என்று கருதப்படுகிறது. ஆனால் இராணுவத்திடம் ஒப்படைக்கும் முன் அவர்களை கொண்டு சில சோதனைகள் நடத்தப்படும். இசுத்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 இசுரேல், துனிசியா, லெபனான், சோர்டான், சௌதி அரேபியா, இந்தியா, பிரான்சு, பெல்சியம் ஆகிய வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த சமயம் இரவு விடுதியில் 700 பேர் இருந்தனர். தாக்குதல்தாரி விடுதி காவலாளியையும், காவல் துறையை சேர்ந்த ஒருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு விடுதியில் நுழைந்துள்ளார். பலியானவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்; அந்தத் தாக்குதலுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இரவு விடுதியிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தனி நபரை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுச்மா சுவராச் கீச்சு மூலம் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், இந்த தாக்குதல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று தெரிவித்துள்ளார். இது கற்பனை செய்ய முடியாத ஒரு இழிந்த குற்றம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என்று அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது. உலகை அச்சம் மற்றும் அதிர்ச்சி என்ற நிழலால் சூழுகின்ற இம்மாதிரியான வன்முறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று போப் ஃபிரான்சிசு வலியுறுத்தியுள்ளார். பிரேசில்நாட்டின் அமேசானா மாநிலத்தின் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இக்கலவரம் திங்கட்கிழமை ஆயுதமற்ற 12 சிறைக் காவலர்களை கைதிகள் ஒப்படைத்ததும் முடிவுக்கு வந்தது. இரு போதை கடத்தல் குழுக்கள் சிறையில் மோதிக்கொண்டதால் இக்கலவரம் மூண்டதாக சிறை அதிகாரி கூறினார். பல கைதிகள் தப்பிச்சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலவரம் தொடங்கிய உடன் தலைகளற்ற ஆறு உடல்கள் சிறைக்கு வெளியில் தூக்கி விசப்பட்டது. இச்சிறை 454 கைதிகளை அடைக்கும் அளவுக்கு கட்டப்பட்டது, அக்டோபர் மாதம் கிடைத்த தகவலின் படி 585 கைதிகள் இதிலிருந்தனர். அமேசேனா மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய சிறைக்கலவரம் இது என அதிகாரிகள் தெரிவித்தனர். புர்கா தயாரிப்புக்கும் இறக்குமதிப்கும் முசுலிம் நாடான மொராக்கோவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தடை குறித்த கடிதங்கள் கடந்த திங்கள்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தம்மிடமுள்ள புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அரச தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த முடிவு "பாதுகாப்பு காரணங்களுக்காக" எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், இப்போது மொராக்கோ புர்காவை முற்றாக தடைசெய்யவுள்ளதா என்பது குறித்து தெளிவாக்கப்படவில்லை. கொள்ளையர்கள் குற்றச்செயல்களை புரிவதற்கு புர்காக்களை பயன்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உள்ளூர் செய்தி இணையத்திடம் கூறியுள்ளார். முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் புர்கா, மொராக்கோவில் பரவலாக அணியப்படுவதில்லை. அங்குள்ள பெண்கள் முகத்தை மறைக்காத இசாபையே விரும்புகின்றனர். ஆனால் நாட்டின் வடபகுதியிலுள்ள பழைமைவாத பிரதேசங்களில் சலாபிசுட் சிந்தாந்தங்களை பின்பற்றும் பெண்கள், கண்களைத் தவிர முகத்தின் இதர பகுதிகளை மறைக்கும் நிகாபை அணிகின்றனர். புர்கா முற்றாகத் தடை செய்யப்படக்கூடும் என்கிற தகவல் வட ஆப்ரிக்க முடியரசு நாடான மொராக்கோவில் முரண்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மன்னர் ஆறாவது முகமது, மிதவாத இசுலாமையே ஆதரிக்கிறார். ஆனால் இது ஏற்புடையதல்ல என்று மதப்பிரச்சாரகரும் ஆம்மாத் கப்பாச் கூறுகிறார். அவரது தீவிரவாதத் தொடர்புகள் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது. புர்காவை தடை செய்வது, மொராக்கோவின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மீறும்செயல் என்றும், மேற்கத்திய பாணியில் நீச்சல் உடை அணிவது தடுக்க முடியாத உரிமையாக அரசு கருதுகிறது என்றும் தீவிரவாதத் தொடர்புகள்க உடைய ஆம்மாத் கப்பாச் கூறுகிறார். அதேபோல் வடமொராக்கோ தேசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் எனும் அமைப்பும் அரசின் முடிவு "தன்னிச்சையானது, அது பெண்களின் கருத்துரிமையில் நேரடியாக தலையிடுகிறது" எனக்கூறி அவர்கள் தமது மதம், அரசியல் மற்றும் சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் உடை அணிவதற்கு உரிமை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டின் குடும்ப மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான முன்னாள் அமைச்சர் நௌசா இசுகாலி மதத் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில், புர்கா தடை முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும் என்று புர்கா தடையை வரவேற்றுள்ளார். 2016 செப்டம்பர் மாதம் இவ்வேவுவூர்தி இலியம் அழுத்த கலன்கள் வடிவமைப்பில் இருந்த கோளாறு காரணமாக வெடித்த பின் செல்லும் முதல் ஏவுதல் இதுவாகும். இவ்வேவூர்தியின் முதல் பாகம் பசிபிக் பெருங்கடலில் உள்ள தளத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. வர்சீனியாவின் இரிடியம் செயற்கைகோள் குரல் மற்றும் டேட்டா நிறுவனத்திற்காக 10 செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. ஐரோப்பிய (பிரான்சு) தாலசு அலெனியா நிறுவனம் தன் பழைய செயற்கை கோள்களை மாற்றுவதற்காக 81 செயற்கை கோள்களை ்பால்கன்-9 மூலம் ஏவ முடிவு செய்துள்ளது. கப்பல்கள் வானூர்திகள் கட்டுப்பாட்டு அறையுடன் உள்ள தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டால் அக்கப்பல்களையும் வானூர்திகளையும் கண்டுபிடிக்க இரிடியம் நிறுவனம் உதவும். சனவரி 9 அன்று ஏவ திட்டமிடப்பட்டிருந்த இவ்வேவூர்தி காலநிலை சரியில்லாததால் இன்று சனவரி 14 அன்று ஏவப்பட்டது. சிரியா, ஈரான், ஈராக், லிபியா, லெபானான், சூடான், சோமாலியா ஆகிய ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 90 நாட்கள் அமெரிக்கா வர தடை விதித்து அமெரிக்க அதிபர் தொனல்ட் திரம்பு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இத் தடை உடனடியாக நடைமுறைக்கு வந்தது. சிரியாவில் இருந்து வருபவர்களை அடுத்த உத்தரவு வரும் வரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். முன்பே நுழைவு அனுமதி பெற்றவர்களும் அமெரிக்காவை விட்டு வணிக காரணங்களுக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ வெளியே சென்றிந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா வர முடியாது. நிரந்தர வசிப்பிடம் அனுமதி பெற்றவர்களும் வெளியே சென்றிருந்தால் மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இத்தடையால் வானூர்தி நிலையங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தடையை கூகுள், மைக்ரோசாப்ட், பேசுபுக் போன்ற பல நிறுவனங்கள் எதிர்க்கின்றன. இத்தடையால் நியூசிலாந்து சென்ற தன் பணியாளரை உடனடியாக திரும்பி வருமாறு கூகுள் உத்தரவிட்டுள்ளது. இச்சட்டம் மூலம் வரும் 120 நாட்களுக்கு எந்த அகதிகளையும் ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது. குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் வரை சிரியாவில் இருந்து வரும் அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். 2017ஆம் ஆண்டு 25,000 அகதிகளை மட்டும் அமெரிக்கா ஏற்கும். மத காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டவர்களின் அகதி மனுக்கள் முதலில் கவனிக்கப்படும். ஆனால் அம்மதம் அந்நாட்டில் சிறுபான்மை மதமாக இருக்க வேண்டும். இத்தடையால் கோபமடைந்த ஈரான் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்துள்ளது. இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் தன்னுடைய பிஎசுஎல்வி-37 ஏவுகலம் மூலம் விண்ணுக்கு ஏவியது இதற்கு முன் உருசியா 2014ஆம் ஆண்டு யூன் மாதம் 37 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியதே சாதனையாக இருந்தது. கார்ட்டோசாட் எனப்படும் செயற்கை கோளை இந்தியா ஏவியதுடன் 103 செயற்கை கோள்களையும் அதனுடன் சேர்த்து ஏவியது. ஏவப்பட்டதில் மொத்தம் மூன்று இந்திய செயற்கை கோள்கள், 96 அமெரிக்க செயற்கை கோள்கள், தலா ஒரு செயற்கை கோள்கள் இசுரேல், நெதர்லாந்து, அமீரகம், கசகசுத்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவை. அமெரிக்காவினதும் மற்ற நாடுகள் உடையதும் மிகச்சிறிய செயற்கை கோள்கள்.ஏவப்பட்ட செயற்கை கோள்களில் பெரும்பாலானவை பிளேணட் என்ற அமெரிக்க நிறுவனத்தினுடையது. சாம்சங் குழும அதிபர் சே-ஒய்-லீ ஊழல் குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை கைதானார். இவர் சாம்சங் குழுமத்தை நடத்தும் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர். தென் கொரிய அதிபர் பார்க் குயுன் கு நாடாளுமன்றத்தால் குற்றப்பழிச்சாட்டுக்கு ஆளான ஊழலில் இவர் பங்கும் இருந்ததால் கைது செய்யப்பட்டார். பார்க் நடத்தும் அமைப்புகளுக்கு சாம்சங் குழுமத்தில் தான் தலைமை பதவிக்கு வர அரசின் உதவி வேண்டி பணம் கொடுத்தார் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு. சாம்சங் குழும அதிபர் தனி அறையில் சியோலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரின் வழக்கறிஞர்கள் கைது தொடர்பாக ஏதும் சொல்ல மறுத்துவிட்டனர். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் மண முறிவு பெற்றவர். மற்ற சிறைக்கைதிகளுக்கு இல்லாத வகையில் இவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவரின் கைதால் சாம்சங் நிறுவனத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சே-ஒய்-லீயின் நம்பைக்கு உரிய அறிவுரையாளரும், குருவுமான இச்சோய்-கீ-சங் குழுமத்தை ஏற்று நடத்துகிறார். வியாழக்கிழமை சிந்து மாகாணத்திலுள்ள பள்ளிவாசல் தற்கொலை தாக்குதலில் 80இக்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து அடுத்த நாள் பாக்கித்தான் நடத்திய தாக்குதலில் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் செவான் நகரிலுள்ள புகழ்பெற்ற சுபி அறிஞர் லால் இச்சபாச் குலான்டர் புதைக்கப்பட்ட தர்காவிலேயே இத்தற்கொலை தாக்குதல் நடந்தது. இசுலாமிய அரசு என்னும் அமைப்பு இத்தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக கூறியது. 18 தீவிரவாதிகள் சிந்து மாகாணத்திலும் 13 தீவிரவாதிகள் வட மேற்கு மாகாணத்திலும் கொல்லப்பட்டனர்.பஞ்சாப் மாகாணத்திலும் தீவிரவாதிகளின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள் என்றும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எனவும் உறுதியாக தெரியவில்லை. ஆப்கானிசுத்தான் பாக்கித்தான் எல்லை மூடப்பட்டு ஆப்கானித்தானின் இரு மாகாணங்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. இத்தாக்குதலை பாக்கித்தான் அதிபரும் ஆப்கானித்தான் அதிபரும் கண்டித்துள்ளார்கள். சிந்து மாகாண அரசு தர்காவில் இறந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்கம் கடைபிடிக்கிறது. பக்தர்கள் வெள்ளிக்கிழமையும் தர்காவுக்கு அதிகம் வருகை புரிந்தனர். நக்காரா எனப்படும் மேள சத்தத்தை ஒலித்தும் அந்த இசைக்கு ஏற்ப ஆடும் தமால் எனப்படும் புனித ஆட்டமும் மாலை நடைபெற்றது. இத்தர்கா 1356 ஆம் ஆண்டு சையது முகமது உசுமான் மார்வான்டி என்பரால் கட்டப்பட்டது பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் ஓர் விண்மீனை சுற்றி வருவதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அக்கோள்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏழு கோள்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது. பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் விண்மீன் தான் டிராபிசுட்-1. நிறை குறைந்த இந்த விண்மீனை இந்த ஏழு கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த கோள்கள் நாசாவின் இசுபிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக நேச்சர் என்ற இதழில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பெல்சியம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிக்கெல் கில்லான் கூறுகையில், கோள்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், நட்சத்திரத்தோடும் மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விண்மீன் மிகவும் சிறியது மற்றும் குளிர்ச்சியானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக கிரகங்களும் மிதமான தட்ப வெட்ப நிலையில் இருக்கும் என்றும், திரவ தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், மேற்பரப்பில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆய்வின் துணை ஆசிரியரான ஐக்கிய ராச்சியத்தின் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமோரி ட்ரியாட் கூறுகையில், தங்கள் குழு மிதமான என்பதற்கு விளக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது உயிர்களின் வாழ்வியல் குறித்த கருத்துக்களை விரிவுபடுத்த உதவும் என்றும் கூறியுள்ளார். டிராபிசுட்-1 விண்மீன் வெளிச்சம் குறைவானதும் சிறியதும் ஆகும் வெளிச்சம் மிகுந்த விண்மீன்களை ஆராய்வதை விட வெளிச்சம் குறைவான விண்மீனை ஆராய்வது எளிது. TRAPPIST-1 என்று சிலியில் பெயர் வைக்கப்பட்டது. * அவசரப்படாமல் நன்கு திட்டமிட்டு இந்த திட்டத்தை செயலாக்கம் செய்ய வேண்டும் * அதிகம் cut and paste செய்து விட்டு, திக்கு முக்காடமல் இருப்பது நன்று குறிப்பாக தொகுத்தல் தொடர்பாக விக்கிபீடியாவில் பெறக்கூடிய தகவல்களை இங்கேயும் பிரதி செய்வது தேவையற்றது * செய்திக் கட்டுரை என்றால் என்ன அதை எப்படி எழுதுவது ஒரு நிகழ்வு குறிப்பிடத்தக்க செய்திதான் என்று எப்படி வரையறை செய்வது? போன்ற விடயங்களை முதலில் வரையறை செய்ய வேண்டும் * செய்திக் கட்டுரை பொதுக் கட்டுரையில் இருந்து வேறுபட்டது வடிவத்தில், நோக்கத்தில், நடையில் வேறுபட்டது என்ன, எவர், எங்கே, எப்பொழுது, ஏன் போன்ற கேள்விகளுக்கு சுருக்கமாக முதல் பத்தியிலேயே பதில் தந்து பின்னர் விரித்து சொல்வது மரபு திகதி, இடம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். * ஆங்கில முன்மாதிரிகளை ஆய்ந்து எமக்குரிய வரையறைகளை நாம் வகுக்கலாம் * நிதானமாக செய்ய வேண்டும், இங்கு இழுப்பறிகள் வர கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு * உலகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், இந்திய செய்திகள், தமிழ்நாட்டு செய்திகள் என்று வகைப்படுத்த வேண்டி வரும் என நினைக்கின்றேன். * முதற் பக்கத்தை ஆங்கில விக்கிசெய்தியை ஒத்தபடி செய்திருக்கிறேன், பயனர்கள் சரிபார்க்கவும். தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது இணைய வானொலி பெரியார் குரல் எனது பங்களிப்பு மிகக் குறைவே, அதனால் சற்றே அவசரப்பட்டுவிட்டோமோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் விக்கி செய்திகள், நேரடியான நிகழ்வுகளையே பகிர்ந்துகொள்ள வலியுறுத்துகின்றன. வலைப்பதிவு செய்திகளிலிருந்து வெட்டி ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆங்கில விக்கிசெய்திகளின் நிபந்தனையாகவுள்ளது. இது அனைத்து விக்கி செய்திகளுக்கும் பொருந்தும்தானே. நான் நேரடியாக என்னால் முடிந்த அளவில் விழாக்களில் பங்கு பெற்று செய்திகளை, புகைப்படங்களை சேகரித்து வழங்க முடியும். நேரடிப் பங்களிப்பாளர்கள் (first hand journalist) இருப்பது விக்கி செய்தியின் நன்பகத்தன்மையையும், வாசகர் வட்டத்தையும் வளர்க்கும். Reason: with this accreditation can directly attend govt events and meet people in various personalities என்று குறிப்பிட்டுள்ளதால் இது கிட்டத்தட்ட ஒரு இதழாளர் அடையாள அட்டைக்கு ஈடான ஒப்புதல் எனக் கருதலாமா? எனில், இது குறித்து மிக விரிவாக விக்கி செய்திகளிலோ இங்கோ உரையாடி கொள்கை முடிவு எடுத்துத் தான் செயல்பட வேண்டி இருக்கும். இது கிட்டத்தட்ட ஒரு இதழாளர் அடையாள அட்டைக்கு சமமானது தான் என்றாலும், இலவசப் பயணம் முதல் இலவச வீடு வரை கிடைக்க முடியாது என்றே தோன்றுகிறது. இங்குள்ள பத்திரிக்கையாளர் சங்கங்களில் சேர்ந்திருக்க வேண்டும் என்று விதிகள் இருக்கலாம் ஓருவேளை விக்கமீடியா இந்திய அலுவலகத்திலிருந்து கொடுக்கப்படும் அடையாள அட்டை இதுபோன்ற சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யலாம். இந்த அடையாள அட்டை மூலம் மிகச்சிறப்பாக அதிக ஆர்வத்துடன் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. மூத்த விக்கிபீடியர்களின் ஆலோசனையின் பேரில் இந்த accreditation முடிவை விட்டுவிடுகிறேன். நேர்மாறான முடிவு பற்றி கவலையில்லை, தொடர்ந்து பங்களிக்க முடிவுசெய்துள்ளேன். தமிழ் விக்கி ஊடகப் போட்டி முடிவுகள் [[வான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் மே 12 அன்று தொடங்கி, இதுவரை 230000க்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார் இவர் இசுடேண்டர் ஆயில் நிறுவன தலைவர் இச்சான் டி ராக்பெல்லரின் பேரன். இசுடேண்டர் ஆயில் அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மின் எக்சான் செவ்ரான் என பல எண்ணெய் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. இவர் இச்சான் டி ராக்பெல்லர் இளையவரின் ஐந்து மகன்களில் இளையவர். இவரின் மற்ற இரு அண்ணன்கள் நியுயார்க் நெல்சன் ராக்பெல்லர் ஆர்க்கென்சாசு (வின்திராப் ராக்பெல்லர்) மாநில ஆளுநர்களாக பதவி வகித்தனர். நெல்சன் ராக்பெல்லர் போர்டு அதிபராக இருந்தபோது துணை அதிபராக பதவி வகித்தார். தேவீது ராக்பெல்லர்ஆ 1936இல் ஆர்வர்டில் பட்டம் பெற்றார் 1940இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப்போருக்கு பின் சேசு வங்கியில் தலைவராக இருந்தார். இது பின்பு சேபி மார்கன் சேசு என்று மாறியது. நியு யார்க்கில் உலக வர்த்தக கட்டடம் வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1981ஆம் ஆண்டு வணிகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தன்னூடைய வள்ளல் தன்மைக்காக அறியப்படுகிறார். தன் 100வது பிறந்த நாளின் போது மெய்ன் மாநில அரசுக்கு தேசிய பூங்காவை ஒட்டியுள்ள தன் 1000 ஏக்கர் நிலத்தை அளித்தார். இவரிடம் உள்ள கலைப் படைப்புகளின் மதிப்பு 500 மில்லியன் டாலர் இருக்கும். நவீன கலை காட்சியகத்திற்கு 100 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் இவர் மனைவி மார்கரெட்1996ஆம் ஆண்டு இறந்தார். நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையில் மத்திய அரசு முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலையை ஆய்வு செய்ய அமைத்த உயர் நிலைக் குழுவின் அறிக்கையும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமும் தமது அறிக்கைகளை சமர்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இக்கருத்தரங்கில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்  க. பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்  தொல். திருமாவளவன்,  காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்   உ வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி. மகேந்திரன் ஆகியோர் பங்கு கொண்டு கருத்துரையாற்றினர். இக்கருத்தரங்கையொட்டி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995 முதல் நடத்திய போராட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தனது உரையில் குறிப்பிட்டதாவது. பத்தாண்டுகள் கடந்த பிறகும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக நிறை வேற்றப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது. சிறுபான்மையினருக்கான வாய்ப்புகள் சரியான முறையில் அவர்களை அடைய செய்வதற்காக சம வாய்ப்பு ஆணையம் (ணிஹீuணீறீ ளிஜீஜீஷீக்ஷீtuஸீவீtஹ் சிஷீனீனீவீssவீஷீஸீ) அமைக்கப்பட வேண்டுமென்று சச்சார் குழு பரிந்துரைத்தது. இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை. இந்த ஆணையத்தை மதசார்பற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மதவழி சிறுபான்மையினருக்கு பரிந்துரைத்த இடஒதுக்கீடும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.  சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் உறுதியான அழுத்தம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசினார்; வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது இந்த அதிகாரம் நாடாளுமன்றத்திடமே இருந்தது. நாட்டின் அதிபர் நிக்கோலசு முர்டோ நிறைய அதிகாரங்களை தன்னிடம் குவித்ததிற்கு ஒரு மாதம் கழித்து இந்த ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. எப்போது இந்த அதிகாரத்தை திரும்ப நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க போகிறோம் என்று நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. இதை பல்வேறு நாடுகள் அமைப்புகள் கண்டித்துள்ளன. அமெரிக்கா, மெக்சிக்கோ, பிரேசில், பெரு, சிலி போன்ற நாடுகள் இது சனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறியுள்ளன. இவ்வத்தரவை திரும்ப பெறுமாறு நீதிமன்றத்தை கேட்டுள்ளன. அந்நாட்டின் தலைமை வழக்கறிஞரும் இதை கண்டித்துள்ளார். வெனிசுவேலேவின் பெரிய ஆதரவு நாடான உருசியா இதை கண்டிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாததா்ல் அதிபர் நிக்கலோசு அதிகாரங்களை தன்னிடம் குவிக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது தென் மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 200 பேர் உயிரிழந்துள்ளர். அந் நாட்டின் அதிபர் யூவான் மானுவெல் சான்டோசு அப்பகுதிக்கு விரைந்துள்ளார் மொகோவா ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, புடுமயோ மாகாணத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சிக்கிய பல பேரைக் காணவில்லை. சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்தும் மண்சரிவில் புதைந்திருப்பதாக அப்பகுதியின் ஆளுநர் சொரேல் ஆரோகா தெரிவித்திருக்கிறார். சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் பயணித்தால்தான் மண்சரிவு நடந்த இடத்தை அடைய முடியும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நகரம், மின்சாரம், தண்ணீர் வசதியின்றி முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதாக மொகோவா மேயர் யோசு அந்தோனியோ காசுட்ரோ தெரிவித்துள்ளார். தன் வீடும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் அந்தோனியா தெரிவித்தார். ஆற்றின் கரைகள் உடையும் அபாய நிலையை அறிந்ததும் மக்கள் எச்சரிக்கப்பட்டதால், பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என உள்ளூர் பத்திரிகை தெரிவிக்கிறது. மண்சரிவு ஏற்பட்ட பகுதி, ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கனமழைக்கு இந்த ஆண்டு மட்டும் 90 பேருக்கு மேல் பெருவில் பலியாகி உள்ளனர். சோசயலிச வேட்பாளர் லெனின் மொரிடோ திங்கள் கிழமை தேர்தல் வெற்றியை கொண்டாடினார். இவர் முன்னாள் துணை அதிபர் ஆவார். இவர் வெளியேறும் அதிபர் ரவெல் பெரிராவின் நண்பர், பெரிரா இத் தேர்தலில் லெனின் மொரிடோவை ஆதரித்தார். சுமார் 99% வாக்குகள் எண்ணப்பட்டதில் சோசியலச கட்சியின் லெனின் மொரினோ 51 வாக்குகளும் அவரை எதிர்த்த குலிர்மோ லாசோ 49% வாக்குகளும் பெற்றனர். இது 230,000 வாக்கு வேறுபாடு ஆகும். லாசோ தேர்தலில் குழறுபடி நடந்துள்ளதாகவும் மீண்டும் வாக்குகளை எண்ணவேண்டும் எனவும் கூறியுள்ளார். லாசோ தான் வெற்றி பெற்றால் விக்கிலீக்சு நிறுவனர் அசான்சேவை 30 நாட்களில் இலண்டனில் உள்ள தூதரகத்தில் இருந்து வெளியேற்றுவதாக கூறியிறுந்தார். லெனின் வெளியேற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. லெனின் முன்னிலையில் உள்ளார் என்று தெரிந்ததும் அசான்சே லாசோ நாட்டை விட்டு வெளியேற 30 நாட்கள் உள்ளதாக கீச்சினார். இருபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வழிப்பறியில் சுடப்பட்டதில் லெனின் தன் கால்களை இழந்தார் அது முதல் சக்கர நாற்காலியில் தான் நடமாடுகிறார். இவர் ஐநாவின் ஊனமுற்றோருக்கான சிறப்பு தூதரவும் இருந்துள்ளார். ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் 22,000 பவுண்டு (9,800 கிகி) எடையுடைய பெரும் வெடிகுண்டை வியாழக்கிழமை மாலையில் போட்டது. எம் சி -130 வானூர்தியில் இருந்து நன்கர்கார் மாகாணத்திலுள்ள ஆச்சின் மாவட்டத்தில் இசுலாமிய அரசு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தில் வீசப்பட்டது. வீசப்பட்ட இடம் மலைகள் நிறைந்ததும் குறைந்த மக்கள் உடையதும் ஆகும். இசுலாமிய அரசு அமைப்பினர் இங்குள்ள குகைகளில் இருந்து அரசு படையினரை தாக்கிவிட்டு தப்பி விடுகின்றனர் என்று பென்டகன் அறிவித்துள்ளது. தாக்குதல் நடந்த இடம் பெசாவருக்கு அருகில் ஆப்கானித்தான் பாக்கித்தான் எல்லையில் உள்ளது. இந்த குண்டு இசிபியு-43 என்று அழைக்கப்படும் இதை விட பெரிய குண்டு 30,000 பவுண்டு எடையுள்ள இசிபியு-57 அமெரிக்க படையிடம் உள்ளது. ஆனால் இசிபியு-43 குண்டு அதிக வெடிமருந்தை கொண்டது. இக்குண்டு இது வரை போர்களத்தில் பயன்படுத்த பட்டதில்லை. இது 9 மீட்டர் நீளம் உடையது. இசிபியு-43 புவியிடங்காட்டி மூலம் வழிநடத்தப்படுகிறது. இது 15,000 பவுண்டு எடையுடைய பிஎல்யு-82 என்ற குண்டின் முன்னேறிய வடிவமாகும். பிஎல்யு-82 முதன் முதல் வியட்நாம் போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டது, ஆப்கானித்தானில் போரின் தொடக்க காலத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டது. மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த முத்தரையன் இதுகுறித்து, தொல்லியல் ஆய்வுக் கழகம் கூறியதாவது நொடியூர்பட்டிணம் என்ற இவ்வூர், கீழ்செங்கிளி நாடு என்ற துணை நிர்வாக மண்டலமாக, 17ம் நூற்றாண்டு வரை விளங்கியது. இவ்வூர் ஏரியில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஆதித்த சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில், கீழ்செங்கிளி நாட்டைச் சேர்ந்த, மங்கலத்து விலக்க ஏரன் ரணசிங்க முத்தரையன் என்பவர், நீர் திறப்பை கட்டுப்படுத்தும் குமிழியை அமைத்து கொடுத்தார் என்ற தகவல் உள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள், 1,100 ஆண்டுகள் பழமையானவை. மேலும், ஏரன், சிங்கன், விலக்கன் என்ற அடைமொழிகளோடு முத்தரையன் பெயர் அமைவதால், பல்லவர்களுக்கும், உழவர்களுக்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது. காடுகளை அழித்து மருத நிலம் உருவாக்கிய பின், விவசாயத்திற்காக ஏரி நீர் பயன்படுத்தப்பட்டது என்பதை மருதன் ஏரி' என்ற, பெயர் உணர்த்துகிறது. குமிழியின் அவசியம்தமிழகத்தின் பல பகுதிகள், வடகிழக்கு பருவமழை காலமான, இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். அந்த நீரை கொண்டு தான், ஆண்டின் நீர்த்தேவையை சமாளிக்க வேண்டும். அதற்காக, பழந்தமிழர்கள், ஆயிரக்கணக்கான ஏரி, குளங்களை வெட்டியதோடு, குமிழிகளையும் அமைத்தனர். அவற்றின் பராமரிப்புக்காக, பாசன வரியையும் வசூலித்துள்ளனர். ரணசிங்க முத்தரையன் பல்லவ, சோழர்களின் கூட்டுப் படைகள், பாண்டியர்களை வெற்றிகண்ட பின், பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான முத்தரையர்கள், சோழர்களின் நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டனர்.அதற்கு சான்றாக, ஆதித்த சோழன் காலத்திய, ரணசிங்க முத்தரையன் கல்வெட்டு விளங்குகிறது. இதுவே, இப்பகுதியில் கிடைத்த, மிகப் பழமையான கல்வெட்டு. இவ்வாறு அவர் கூறினார். ==நாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம் பராமரிப்பின்றி சேதமடைந்து இருந்த மன்னர் காலத்துகல் மண்டபம், மாநகராட்சி சாலை விரிவாக்கத்தால்தொல்லியல் துறை பொறியாளர்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றி, வேறு இடத்தில்அமைக்கப்பட்டுசீரமைக்கப்பட்டது. பின், திருவிழா காலத்தில், திருவீதி உலா வரும் சுவாமியை, அங்கு வைத்து மக்கள் தரிசனம் செய்வதும் வழக்கமானது. மேலும், கால்நடையாக, நீண்ட துாரம் பயணம் மேற்கொள்ளும்பக்தர் மற்றும் வழிப்போக்கர் ஓய்வெடுப்பது, அவர்களுக்கான அன்னதானம், மருத்துவ உதவி ஆகியவை வழங்குவது உள்ளிட்ட பொது நல உதவிகள் வழங்கும் மையமாகவும், இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு தங்குவோரின் குடிநீர் வசதிக்காக, மண்டபத்திற்கு பின்புறம், பெரிய நன்னீர் குளம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாளடைவில், பராமரிப்பின்றியும், இயற்கை சீற்றங்கள், கனரக வாகனங்களின் அதிர்வு போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மண்டபம் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது; குளமும் வற்றி வறண்டது.இந்த நிலையில் மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணியால், பழமையான இந்த மண்டபம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சாலையில் இருந்து, 40 அடி துாரத்தில், உட்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது. அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவரக்காத்திருந்தார். இந்நிலையில் முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் இன்றைய திருக்கோகர்ணம் கோயிலுக்கு வடபுறத்தில் வாழ்ந்து வந்தனர் இவர்கள். கண்ணப்பர் குலத்தை சேர்ந்தவர்கள். கண்ணப்பர் வேட்டையாடி உணவு தேடும் பழக்கமும், வேட்டைப்பொருட்களை ஆண்டவனுக்கு படையலிட்டு மகிழும் குணமும், உடையவராய் பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். தினம் தினம் தான் வேட்டையாடி கொணர்ந்த மாமிசத்தை சுட்டுப் படையலிட்டு மகிழ்ந்தார். ஆண்டவனும் வனவாசியான வேடன் கண்ணப்பரின் அன்புப்படையலை ஏற்றுக்கொண்டார். ஒருநாள் தனது பாசமிகு பக்தனை சோதித்து புடம்போட ஆண்டவன் எண்ணினார். வேடன் கண்ணப்பர் தன்னை நாடிவரும் சமயம் தனது ஒரு கண்ணில் ரத்தம் வருமாறு செய்தார். பக்தர் கண்ணப்பர், இதனைக்கண்டு பதறினார். செய்வதறியாது, தனது கண்ணைத் தனது அம்பாலேயே தோண்டி எடுத்தார். இருகண்களும் எடுத்த நிலையில் ஆண்டவனின் கண்ணைப் பார்த்தால் மூடி ஒட்ட வைத்தார். இத்தகைய பாசமிகு பக்தன் கண்ணப்பரின் கருணையை மெச்சி கண்ணப்பரை கண்ணப்ப நாயனராக ஏற்று முக்தியளித்தார். அன்னையின் திருவிளையாடலின் படி முத்தரைய வேட அடியார்களாகிய கருப்பன், சுப்பன், காத்தமுத்து ஆகியோர் முன் உடும்பு உருவத்தில் காணப்பட்டார். தக்கதொரு வேட்டைப்பொருள் வாய்த்தது எனக்கருதி வேட அடியார்கள் உடும்பைப் பிடிக்க முயன்றனர். மறைந்து மறைந்து உடும்பு ஓட வேட அடியார்களும் பின்தொடர்ந்து ஓடினர். தொடர்ந்து ஓடிய உடும்பு அடர்ந்த காடுகளில் வெகுதூரம் ஓடி, வேடர்களின் கண்ணுக்கு தெரிந்த நிலையில் ஒரு பொந்துக்குள் புகுந்தது. அன்னை புண்ணிய பூமியில் தோன்றக் காத்திருந்து இடத்திலேயே அந்தப்பொந்து இருந்தது. இந்த இடம் அக்காலத்தில் காளிக்கோட்டை என்ற பெயரில் வழங்கி வந்தது. இந்த இடத்திலிருந்து கோட்டைப் பிற்காலத்தில் தொண்டைமான்களின் போரின்போது இடித்து அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கவினாட்டு கண்மாயில் நடைபெற்ற பல போர்களை வரலாறு தெரிவிக்கிறது. இன்றும் முத்தரையர் நாட்டு வேட அடியார் குலத்தவர் தான் வணங்கும் தெய்வங்களுக்கு சூட்டாங் கறி படைத்து மகிழ்வித்தும், பிற இனத்தவர்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களை ஆண்டவனுக்கு தாங்களே படைப்பம் படைப்புப் பொருள்களை தாங்களே புசிப்பதுமான வழக்கம். இத்தகைய படையல் பொருள்கைள வேறு இனத்தவர் எவருமே புசிப்பதில்லை. உண்பதுமில்லை, மாறாக மாற்று இனத்தவர் தெய்வங்களை வணங்கி, அருள்பெற்று முத்தரைய நாட்டு வேடர் பூசாரிகளிடம் தீர்த்தம், திருநீர், பிரசாதங்களைப் பெற்று செல்கின்றனர். வேறு படைப்புப் பொருள்களை பெற பிற இனத்தவர்கள் ஆசைப்படுவது இல்லை. மழை, நாட்டு நலம், மக்களின் நல்வாழ்வு வேண்டியும் நாட்டு வேட்டை எனும் பாரிவேட்டை என்றும் குறிப்பிட்ட காலங்களில் வேட்டையாடி தெய்வத்திற்கு படைத்து தெய்வங்களை மகிழ்வித்து வருகின்றனர். வேட்டையின்போது ஒன்றும் கிடைக்காத நிலையில் தெய்வபக்தி காரணமாக மனம் நோகாது வேட்டைக்கருவிகளை கழுவிப்படைத்து மகிழ்கின்றனர். இத்தகைய பக்திமிகு முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கைப்பட்ட அன்னை முத்துமாரியம்மன் அருள்வாக்காக அடியார்மேல் அருள்வந்து தக்கதொரு இடத்தில் தன்னை அமர்த்திப் பூசித்து வரும்படி கூறினார். ==த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளி== திருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. ==ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் திருக்காட்டுப்பள்ளி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் தெரிவித்தது: இப்பகுதியில் உள்ள ஊர்கள் அனைத்துமே பல்லவர் முத்தரையர் சோழர், நாயக்கர், மராத்தியர் எழுப்பிய, மறுநிர்மானித்த கோயில்களே. இங்கு மறுநிர்மானிக்கப்பட்டு வரும் கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால சிவலிங்கம், அம்மன் சிலைகளைக் காணமுடிந்தது. சோழர்கள், நிர்வாக வசதிக்காக நாடு, வளநாடு, கூற்றம், ஊர் என பல பகுதிகளாகப் பிரித்திருந்தனர். ஆற்காட்டுக்கூற்றம் ஆயிரத்தளி, ஓடவெளி (ஒன்பத்துவேலி பெருமங்கலம், பிரம்பில், சந்திரலேகை (செந்தலை பேராற்காடு (ஆற்காடு) போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் ஒன்பத்துவேலி ஓடவெளி என்று அழைக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. இவ்வூர் சோழர்க்குரிய பழைய ஊர்களில் ஒன்றாகும். திருக்கோவிலூர் கல்வெட்டில் “அன்பதுவேலியின் அடைகுநர் காக்கும் ஒன்பதுவேலி உடைய உரவோன்” என சோழன் புகழப்படுகின்றான். தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 3-ல் மதுரை கொண்ட கோவிராச கேசரிவர்மனின் ஏழாவது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “சோழநாடு ஆற்காட்டுக் கூற்றம் ஒன்பத்துவேலியைச் சார்ந்த இந்திரன் பழநாட்டடிகள் அவரது தம்பி அண்ணாமலை ஆகிய இருவரும் புலியூர் கூற்றத்து வெளிச்சேரி (வேளச்சேரி) திருத்தாண்டீஸ்வரம் மகாதேவர் கோயிலுக்கு” நிலத்தை தானமாக அளித்த செய்தி காணப்படுகிறது. ஒன்பத்துவேலியில் உள்ள வன்மீகநாதர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையைக் குறிக்கும் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள மராத்தி மொழி செப்பேடு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளது. இச்செப்பேட்டின் நகலாக ஓலையில் எழுதப்பட்ட மராத்தி மொழி ஓலையும் இதன் மொழிபெயர்ப்பாக தமிழில் எழுதப்பட்ட ஓலையும் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ளது. இவை ஐரோப்பிய அறிஞர் லெப்டினென்ட் கர்னல் காலின் மெக்கன்சியால் தொகுக்கப்பட்டது. 1983-ல் இந்த ஓலைப் பட்டயம் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பெற்றது. இச்செப்பேடு (கி.பி.1763 மராத்திய மன்னர் பிரதாப சிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதில் வடக்கே காவிரி, மேற்கே திருக்காட்டுப்பள்ளி, தெற்கே வெண்ணாறு, கிழக்கே தஞ்சாவூர் இந்த எல்லைகளைப் பெற்று அரிகரபுரமான ஒன்பத்துவேலி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செப்பேட்டில் ஒன்பத்துவேலியில் உள்ள அக்கிரகாரத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கில்) சோம கமலாம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோயிலின் மாலை நேர பூஜைக்காக திருக்காட்டுப்பள்ளி கில்லேதார் பீமராயர் பிரதாமசிம்மனின் உத்தரவுப்படி புன்செய்யாக இருந்து நன்செய்யாக மாற்றிய நிலத்தில் 14 அடி கோலால் அளந்து கால் வேலியைக் கொடையாக அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புமிக்க ஒன்பத்துவேலியில் 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமும் நின்ற கோலத்தில் அம்மன் சிலையும் காணப்படுகின்றன. ==தமிழ் சமுதாயத்தில் மே மாதம் 'முத்தரையர் மாதம் தமிழ் சமுதாயத்தில் மே மாதம் 'முத்தரையர் மாதம்'.மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் அதன் முன்னும் பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் நடைபெறுகின்றன. திருச்சிராப்பள்ளியை சுற்றி இவரின் ஆட்சி இருந்தது. ==பாபநாசத்தை அடுத்த உத்தாணியில் 9-ம் நூற்றாண்டின் அபூர்வ சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன== சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தஞ்சை பக்கமுள்ள பாபாசத்தை அடுத்த உத்தாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த வாயிற் காப்பாளர் சிற்பம் உள்ளது. இதனைச் சேர்ந்த பிற சிற்பங்கள், ஆலயத்தை தேடி உத்தாணியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது ஒரு தோப்பினில் கோவில் முற்றிலும் அழிந்து போன நிலையில் தனிச் சிற்பங்களாக அம்மன், மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, லிங்கம் மற்றும் இரு அபூர்வ சிலைகள் கிடைத்தன. அந்த சிலைகளில் ஒன்று உச்சியில் சுடர் கொழுந்துகள் முடியாக ஒன்றிணைந்த நிலையில், 3 திருமுகங்களுடன் வலது முன் கரம் அபய முத்திரையிலும், வலது பின் கரத்தில் சத்தியும், இடது முன்கை தொடை மீது வைத்துள்ள நிலையிலும், இடது பின் கை வச்சிரப் படையும் கொண்டு சுகாஹசனமிட்ட நிலையில் தாமரை பீடத்தின் மீது விளங்குகிறார்.இது எரியங்கி, ஈஸ்வரர், வேலனார், ஆகியோரின் அம்சங்களைக் கொண்ட ஓர் புதுமைப் படைப்பாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறெங்கும் இது போல் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றொரு தெய்வச் சிலையும் வெகு அபூர்வமாக ஓரிரு ஊர்களில் மட்டும் காணக் கூடியது. ஜடாபாரம் தலை மீது திகழ, பின் கரங்களில் மழுவும், மூவிலைச் சூலமும், முன் வலது காக்கும் கரமாகவும், முன் இடது கை தொடை மீது ஏந்தும் நிலையிலும் வைத்து இலகு இருக்கையில் பத்ம பீடத்தின் மீது காட்சியளிக்கிறார். இது சுஹாசன சிவன் மற்றும் ஏக முக சதுர்புஜ சண்டீசருக்கு உரிய அம்சங்களை தாங்கியதாக படைக்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தை வைத்து இத் தெய்வம் எது என்பதனை கணிக்க இயலும். ஆலயம் அழிந்துப் போன நிலையில் அது சாத்தியமில்லாது போய் விட்டது. சுமார் 3 அடி உயரமுள்ள இவை அனைத்தும் கி.பி 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மருவி வழங்கும் உத்தாணி என்பது உத்தமதாணி என்ற பெயரில் அந்நாளைய முத்தரையர் மன்னர் ஏற்படுத்திய ஊர் என்பதை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான நேற்று மாலை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையொட்டி, நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின்னர் சிற்றரசரான திருமங்கைமன்னன் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் மதில்சுவர், கோபுரம் உள்பட பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். அவர் கோயிலில் திருப்பணியை மேற்கொண்டு இருந்தபோது போதுமான நிதியில்லாமல் திருமங்கைமன்னன் கவலையடைந் தார். இதற்காக அவர் வழிப் பறி கொள்ளையில் ஈடுபட்டு அதனால் வரும் பொருளைக் கொண்டு திருப்பணிகளை செய்து வந்தார். தன்னுடைய பக்தனாக இருந்தாலும் தவறான வழியில் வரும் பணத்தை கொண்டு திருப்பணிகள் செய்வதை தடுத்து நிறுத்த பெருமாள் மாறுவேடத்தில் வருகிறார். இதை அறியாமல் திருமங்கை மன்னன் வழக்கம் போல் வழிப்பறியில் ஈடுபடுவது போல பெருமாளையும் வழிமறித்தார். அப்போது பெருமாள் மன்னனின் செயல்களை தடுப்பதற்காகவும், திருத்துவதற்காகவும் திருமங்கை மன்னன் காதில் 'ஓம் நமோ நாராயணா' என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஓதினார். இந்த மந்திரத்தின் மகிமையால் திருமங்கைமன்னன் திருந்தி பெருமாள் அருளாசியுடன் திருமங்கையாழ்வாராக மாறினார். ஆழ்வாராக மாறியதும் வாடினேன் வாடி என்ற பாடலை பாடினார். இதனை கேட்ட பெருமாள் மகிழ்ச்சி அடைந்தார் என புராண வரலாறு கூறுகிறது. 8ம் நாள் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி இந்த நிகழச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாள் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறுகிறது. அதுசமயம் திருமங்கைமன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் முத்துராஜா குடும்பத்தினர் மற்றும் அவர்கள் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது.அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சேர்ந்தார். அதன்பின் அரையர் சேவைக்கு பின்னர் நம்பெருமாள் இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். வேடுபறி உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல் வெளிக்கு வந்ததால் நேற்று பரமபதவாசல் திறப்பு இல்லை. ==ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த மஹாவீரர் சிலை வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த, துரைபெரும்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த மஹாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த நெமிலி தாசில்தார் சிலையை கைப்பற்றி, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் ஆய்வுக்கு அனுப்பினார். ஆய்வுக்கு பின் அருங்காட்சியக காப்பாட்சியாளர் கூறியது: பல்லவர், சோழர் காலத்தில், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள், வேலூர் மாவட்டத்தில் அதிகளவு வாழ்ந்துள்ளனர். இதனால், இதுவரை சமண மதத்தைச் சேர்ந்த, எட்டு தீர்த்தங்கரர்களின் கற்சிலைகள், பல காலகட்டத்தில் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. துரைபெரும்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மஹாவீரர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கற்சிலையின் உயரம், மூன்று அடியாக உள்ளது. கலெக்டரின் ஒப்புதலுக்கு பின், அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தெலுங்கில் அந்தப் பக்திப் படம் வந்த போது அந்த அழகான கரகர வில்லன் நடிப்பு உருவம், மிரட்டும்  குரல் இதெல்லாம் கண்டு நடுங்கிப் போனார்கள் தெலுங்கு ரசிகர்கள். படம் பட்டையைக் கிளப்பியது.விமான விபத்தில் இறந்து போன ஹீரோயின் தான் அதில் பக்தை வேடம் செய்தார். தமிழகத்தில் மறைந்த இயக்குனர் ராமநாராயணன் தெலுங்கு உரிமையை வாங்கி தமிழில் டப் செய்து வெளியிட இங்கும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் நாட்டிலும் அந்த வில்லனுக்கு அமோக வரவேற்பு என்ன உருவம்டா சாமி. என்று மிரண்டார்கள். அப்படி ஒரு வில்லனுக்கு இரண்டு குறைகள் இருந்தது. ஒன்று பயந்த சுபாவம். இரண்டு அளவிற்கு அதிகமான குடிப் பழக்கம். இதனால் மனைவிக்கும் வில்லனுக்கும் தினமும் சண்டை. வாரத்தில் ஒரு நாள் குடிக்காமல் என்னோடு சந்தோசமாக இருக்கக்கூடாதா..நானும் பெண் தானே என்று அழுதிருக்கிறார். இவ்வளவிற்கும் மளமளவென்று படங்கள் கமிட்டாகி, கார் பங்களா என்று வசதியாகத் தான் மனைவியை வைத்திருந்தார் வில்லன். ஆனால் பெண்களுக்கு அது மட்டுமே போதுமா என்ன வில்லன் நடிகர் தூங்கவே நேரமின்றி நடித்துக் கொண்டிருந்தார். தனக்கு நெருக்கமான ஒரு ஹீரோவிடம் மனைவியின் புலம்பல்கள், சண்டை என அனைத்தையும் வருத்தத்தோடு பகிர்ந்தார். ஹீரோ கடுமையாக அட்வைஸ் செய்துள்ளார். வில்லன் ஒரு முடிவிற்கு வந்தார் குடிப்பதை நிறுத்தி விடுவது என்று மனைவியிடம் இரவு சொல்ல அவரோ நம்பவில்லை. மூன்றே நாட்கள் தான் குடியை நிறுத்தினார். அவரால் முடியவில்லை. அதே நட்பு ஹீரோவிடம் கண்ணீர் விட்டு அழுதார் வில்லன். நீ ஆம்பளையா என்று மனைவி கேட்டு விட்டார் என்பதைக்கூறி   மீண்டும் அழ ஹீரோவிற்கு விஷயம் புரிந்து போனது. நல்ல  மருத்துவரை பார்ப்போம் என்றார். அன்று முழுக்க கலங்கிய நிலையில் தான் நடித்துக் கொண்டிருந்தார் வில்லன். ஹீரோ ஆறுதல் சொல்லியபடியே இருந்தார். சூட்டிங் முடிந்து கிளம்பினார் வில்லன். ஹீரோ தைரியம் சொன்னார். வில்லன் தனக்கு மட்டுமே கேட்பதைப் போல “டிரைவர்களை மட்டும் நம்பவே கூடாது” என்று சொல்ல  ஹீரோவிற்கு கேட்டு விட்டது பதறிப்போனார் ஹீரோ. அன்று இரவு மூன்று மணி இருக்கும் ஹீரோவிற்கு போன் வந்தது. மனைவி ஹீரோவை எழுப்பினார். போனைக் கொடுத்தார். வில்லன் மனைவி அலறியபடி சொன்னார் “எம்புருஷன் தூக்கு போட்டுக்கொண்டு இறந்து விட்டார்” என்று. இடிந்து போய் உட்கார்ந்தார் ஹீரோ. அந்த வில்லன் எவ்வளவு நல்லமனிதர்..எவ்வளவு இரக்க குணம் உள்ளவர். ஆனால் அளவுக்கு அதிகமான குடியால்…… ஹீரோ அழுதபடி கிளம்பினார். தோனியை விட ஸ்டீவ் ஸ்மித் தான் அறிவாளி என்று பேசிய புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு தோனி சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை  இழந்து  வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய அதிரடி வீரர் பொலார்டு எதிர்கொண்ட முதல் பந்தை இமாலய சிக்ஸர் பறக்கவிட்டார், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார், அதற்கடுதத்தாக புனே கேப்டன் ஸ்மித்தை செய்கையால் அழைத்த தோனி பீல்டர் ஒருவரை லாங்க் ஆஃப் திசையில் நிற்க வைக்குமாறு அறிவுறுத்தினார், தோனியின் வகுத்த வியூகத்தின் படியே பொலார்டு மிட் லாங்க் ஆஃப் திசையில் நிற்கவைக்கப்பட்ட மனோஜ் திவாரியிடம் கேட்ச் கொடுத்து மூன்றாவது பந்திலேயே வெளியேறினார். இதற்கு முன்னதாக கடந்த 7 வருடங்களுக்கு முன்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடிய போதும் இதே போல் பொலார்ட்டை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆறு நாட்களில் 60 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த புஸ்பா சேல்ஸ் தனியார் நிறுவனத்துக்கு பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது.இதனால் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 தாண்டியுள்ளது. nowiki ஹார்வி' புயல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அதில் ஹுஸ்டன் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக 2 மாகாணங்களுக்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இர்மா புயலின் வரும் வெள்ளிக் கிழமையன்று மத்திய பகாமாஸ் மற்றும் கியூபாவின் வடக்கு கடற்கரை பகுதியில் 155 கி.மீ வேகத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் என நம்பப்படுகிறது. சோமாலிய தலைநகர் மொகடிசுவில் சுமையுந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 137 பேர் இறந்தனர். இந்த சுமையுந்து சபாரி விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் வெடி விபத்தில் விடுதி உருக்குலைந்து விட்டதாகவும் பிபிசி நிருபர் தெரிவிக்கிறார். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 2007 இல்அல் சபாப் குழு அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து இதுவே மோசமான தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் அல்-சபாப் ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டாவது வெடி நகரின் மதினா வட்டாரத்தில் நடந்தில் இருவர் இறந்தனர் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அன்றைய காலத்திலிருந்து இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னிலையில் ஒரு பிரபல நடிகர் மொட்டமாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இச்செயல்களுக்கு தொக்காவில் ஒளிபரப்பப்பட்ட நேரலை காட்சிகள் காரணம் என்பதால் அரசு தொக்காவைத் தவிர மீதி அனைத்து தொக்காக்களும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. பாக்கித்தானின் தேர்தல் சீரமைப்பு சட்டத்தில் காடம்-இ-நபுவட் Khatam-e-Nabuwat) பிரிவை நீக்கிவிட்டதாக அவை கூறுகின்றன. ஆனால் அப்பிரிவை நீக்கவில்லை என்றும் எளிமை படுத்துவதற்காக மீது முழுபற்றுடன் ஆணையிட்டு (I solemnly swear) என்பதற்கு பதில் நான் நம்புகிறேன் (I believe) என்று சொல் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். செருசலேம் மீது இசுரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுவரை அனைத்து நாடுகளும் டெல் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன. யூத, இசுலாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் செருசலேம் நகரில் அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனல்ட் திரம்பு இசுரேலின் தலைநகராமாக செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 6, 2017இல் அறிவித்தார். தான் தேர்தல் வாக்குறிதியில் இதை கூறியிருந்ததாகவும் இப்போது அதை நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நாட்டுகளின் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது. தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் செருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் டொனல்ட் திரம்பு அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டொனல்ட் திரம்பு நம்பிக்கை தெரிவித்தார். பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு செருசலேத்தை 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இசுரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக ஏற்கப்படவில்லை. டொனல்ட் திரம்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இசுரேல் அதிபர் டொனல்ட் திரம்பிர்க்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று மேலும் தெரிவித்தார். இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாசு தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் செருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2017 ஏப்பிரல் மாதம் உருசியா மேற்கு செருசேலத்தை இசுரேலின் தலைநகராமாக ஏற்றுக்கொண்டிருந்தது. கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலை செல்லாததாக்க தேர்தல் ஆணையத்திற்கு எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூறப்பட்டதால் தெருக்களில் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்க நாடுகளின் அமைப்பின் (OAS) வேண்டுதலின் படி 5,000 வாக்கு பெட்டிகள் மீண்டும் எண்ணப்படுகின்றன. மீண்டும் எண்ணப்படுவதின் முடிவு திங்கள் கிழமைக்குள் வெளியிடப்படவேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நவம்பர் 26இக்கு முன்பு தில்லுமுல்லு அரங்கேறியதாக எதிர்கட்சி கூறுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இது வரை 14 பேர் இறந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியதாக தெரிகிறது. இறுதி முடிவு டிசம்பர் 26இக்குள் வெளியிட தலைமை தேர்தல் ஆணையத்திற்கு காலம் உள்ளது. * தி இந்து நாளிதழ், 182 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல்: குஜராத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் முடிவு தெரியும், டிசம்பர் 18, 2017 * புதிய தலைமுறை, குஜராத்தில் சதத்தை தவற விட்ட பா.ஜ.க, டிசம்பர் 18, 2017 சௌதி அரேபியாவிலும் அமீரகத்திலும் இது வரை மதிப்பு கூட்டல் வரி இல்லை.பாறை நெய் விலை குறைந்ததால் பொருளாதாரம் நலிவடைந்து விட்டது அதனால் வருமானத்தை கூட்டல் வரியை முதன்முறையாக கொண்டுவந்துள்ளன. சனவரி 1, 2018 முதல் இவ்வரி நடைமுறைக்கு வருகிறது. 5% மதிப்பு கூட்டல் வரி பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல, டீசல் போன்ற எரிபொருட்களுக்கும் இவ்வரி உள்ளது. ஆனால் மருத்துவ சிகிச்சை, நிதி சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு மதிப்பு கூட்டல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வருமான வரியை அமல்படுத்தும் எந்தவொரு திட்டங்களும் இருநாடுகளிடமும் இல்லை. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு 0 சதவீதம் வருமான வரியாக செலுத்துகின்றனர். செளதி அரேபியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருவாய் எண்ணெய் தொழிலிலிருந்து கிடைக்கிறது. ஆனால், அமீரகத்தில் அந்த வருவாய் என்பது தோராயமாக 80 சதவீதமாக உள்ளது. வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது. வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளான பகுரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் மதிப்பு கூட்டல் வரி விதிப்புமுறையை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளன. ஆனால், அதில் சில நாடுகள் 2019 வரை இதுகுறித்த திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன. பாக்கித்தான் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடமிருந்து, பல பில்லியன் டாலர்களை உதவியாக பெற்றபோதிலும் பாகித்தான் அமெரிக்காவிடம் தொடர்ந்து பொய் கூறுவதாக அமெரிக்க அதிபர் திரம்பு தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை குறை கூறியுள்ளார். மேலும் ஆப்கானித்தானில் தாங்கள் வேட்டையாடும் தீவிரவாதிகளுக்கு பாக்கித்தான் புகலிடம் அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். திரம்பின் கருத்தை மறுத்துள்ள பாக்கித்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அசிப் இது குறித்து ஜியோ தொக்காவிடம் பேசியபோது இதற்கு மேல் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று அமெரிக்காவிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். அதனால், அவர்கள் குறிப்பிட்டுள்ள நோ மோர்` என்ற வார்த்தைகளுக்கு முக்கியதுவம் இல்லை" என்று தெரிவித்துள்ளார். "அமெரிக்கா அளித்த உதவித்தொகை குறித்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் அளிக்க பாக்கித்தான் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். திரம்பின் பதிவிற்கு எதிரான கருத்தை தெரியப்படுத்துவதற்காக, பாக்கித்தானிற்கான அமெரிக்க தூதர் டேவிட், திங்கட்கிழமையன்று வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, பாக்கித்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், குர்ராம் அமெரிக்கா, பாக்கித்தானிற்கு கடுஞ்சொற்களையும், அவநம்பிக்கையையுமே" அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். ஆஃப்கானித்தானில், தாலிபனுக்கு ஆதரவாக பாக்கித்தான் செயல்படுவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான டில்லர்சன் அழுத்தமளித்திருந்தார். "பாக்கித்தானில் பாதுகாப்பான புகலிடம் தேடும், பல பயங்கரவாத இயக்கங்களை கையாள்வது குறித்து, பாக்கித்தானின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்றால், அமெரிக்காவின் உதவித்தொகை குறித்த விவகாரங்கள் மீண்டும், பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்திருந்தார். தாலிபனுடன் கூட்டணியில் உள்ள அக்குவனி குழுவிற்கு எதிராக பாக்கித்தான் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டிற்காக, பாக்கித்தானிற்கு வந்துசேரவேண்டிய, பல பில்லியன் டாலர் உதவித்தொகை அமெரிக்காவிலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால், பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிணைக்கைதி குறித்து தகவல்கள் அளிக்கும் திறன் உள்ளதாக, அமெரிக்கா நம்பிய ஒரு நபருடன், அந்நாட்டு அதிகாரிகள் பேசுவதற்கு பாக்கித்தானால் அனுமதி மறுக்கப்பட்டது என்று தி நியூயார்க் டைம்சு நாளேடு தெரிவிக்கிறது. திரம்பின் பதிவை, ஆஃப்கானின் முன்னாள் அதிபரான அமீத் கர்சாயும், அமெரிக்காவிற்கான ஆஃப்கான் தூதரான அம்துல்லா மொகிபும் வரவேற்றுள்ளனர். வியாழக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9 மணி அளவில் போர்ட் எலிசபெத்திலிருந்து சோகன்சுபர்க் நகருக்கு சென்று கொண்டிருந்த சோசொலோசா மேய்ல் தொடருந்து நிறுவனத்துக்கு சொந்தமான தொடருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 14 பேர் பலியானார்கள். இவ்வி்பத்தில் சுமையுந்து ஓட்டுநர் பலியாகவில்லை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடருந்து நிறுவனம் விபத்து நடந்த சமயத்தில் தொடருந்தில் 429 பேர் இருந்தார்கள் என்றது ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் 730 பேர் இருந்தனர் என்றார். குரூன்சேட்க்கு அருகில் விபத்து ஏற்பட்டது, இது சோகன்சுபர்க் நகரிலுருந்து தோராயமாக 106 மைல் தொலைவில் உள்ளது, போர்ட் எலிசபெத்திலிருந்து 430 மைல் தொலைவில் உள்ளது. ஈரானிய எண்ணெய் கப்பல் கீழை சீனக்கடலில் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த ஊழியர்கள் 32 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களில் 30 பேர் ஈரானியர் இருவர் வங்காள தேசத்தவர். இம்மோதலால் ஈரானிய எண்ணெய் கப்பல் எரிகிறது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட ஈரானிய கப்பல் சான்சி ஈரானிலிருந்து தென் கொரியாவுக்கு 136,000 டன் பாறை எண்ணெயை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த எண்ணெய் 1 மில்லியன் பீப்பாய் எண்ணெய்க்கு சமமானது. உலக எண்ணெய் நிலவரப்படி இது 60 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. சான்சி 2008ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சான்சி ஆங்காங்கைச் சேர்ந்த சிஎப் கிரிசுடல் கப்பலுடன் சாங்காய் நகரக்கு 160 நாட்டிகல் மைல் தொலைவில் மோதியது என சீன போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது. காணாமல் போன 32 ஊழிர்களைப்பற்றி எத்தகவலும் இல்லை. சரக்கு கப்பலில் இருந்த 21 பேரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சீனர்கள் என்றும் சீன போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது. எட்டுக் கப்பல்களை மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் ஒன்றையும், உலங்கு ஊர்தி ஒன்றையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளது. ஆங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சிஎப் கிரிசுடல் 64,000 டன் தானியங்களுடன் அமெரிக்காவிலிருந்து சீனாவின் குவாங்டோங் மாகாணத்துக்கு மோதலின் போது பயணித்துக்கொண்டிருந்தது. இக்கப்பல் 2011லில் கட்டப்பட்டது. சான்சி ஈரானின் கார்க் தீவிலிருந்து தென் கொரியாவின் டாசன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. இதற்கு முன்பு 2002இல் எசுப்பானியாவின் கடல் பகுதியில் 77,000 டன் பாறை எண்யெய் ஏற்றி வந்த கப்பல் மோதியதே பெரிய விபத்தாக இருந்தது. இதனால் 63,000 டன் எண்ணெய் அட்லாண்டிக் கடலில் கலந்தது. அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியாவும் தென் கொரியாவும் ஒரே கொடியின் கீழ் கலந்து கொள்கின்றன. இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்த ஒரே பெண்கள் வளைபந்தாட்ட அணியை அனுப்பவும் ஒத்துக்கொண்டுள்ளன. பிப்ரவரி 9 முதல் 25 வரை தென் கொரியாவின் பியியோங்சாங் நகரில் குளிர் கால ஒலிம்பிக் நடைபெற உள்ளது. வட கொரியா வீரர்கள் பங்குபெற்றால் வட கொரிய வீரர்கள் நில எல்லையை கடந்து வருவார்கள். மார்ச்சு மாதம் நடைபெறும் குளிர்கால மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கிற்கு வட கொரியா 150 பேர் கொண்ட சிறிய குழுவை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது. வட, தென் கொரியாக்கள் இணைந்த குழுவின் காரணமாக தென் கொரியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தென் கொரியாவின் வளைபந்தாட்ட அணியின் பயிற்சியாளுரும் பழமைவாத இதழ்களும் கவலை தெரிவித்துள்ளன. இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்காணோர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர். சனிக்கிழமை சுவிர்ச்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெறும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை அனுமதிக்கவேண்டும். ஏனென்றால் வடகொரியா கலந்து கொள்ளுவதற்கான இறுதி தேதிக்குள் பதிவு செய்யவில்லை. நிப்பான் இந்த முயற்சியை ஐயத்துடனே பார்க்கிறது. அதன் வெளியுறவு துறை அமைச்சர் வடகொரியாவின் இந்த நல்லெண்ண தாக்குதலில் வீழ்ந்துவிடக்கூடாது என்கிறார். நிப்பானின் வெளியுறவு அமைச்சர் கோனோ வடகொரியாவின் மீதான தடைகளை தளர்த்த இது நேரமல்ல என்கிறார். அதன் மீதான தடை வேலை செய்வதால் தான் இப்போ அது தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்கிறார். ஆனால் தென் கொரிய அதிபர் அந்நாட்டு ஒலிம்பிக் வீர்களிடம் பேசும் போது வட கொரியான் பங்கேற்பால் இரு கொரியாக்களின் உறவு பலப்படும் என்றார். பின்னால் அணுஆயுதம் பற்றி பேசுவதற்கும் அமெரிக்காவுடன் வடகொரியா பேசவும் இது பயன்படும் என்பதாக யோன்ஏப் செய்தி நிறுவனம் கூறியது. நவம்பர் 28ம் தேதி வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் மாமன்றம் அதன் மீது புதிய தடைகளை விதிக்க காரணமாகியது. அதன் பின்னர், பெட்ரோல் ஏற்றுமதிகள் மற்றும் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை எனப்படும் மேலவை ஏற்றுக்கொள்வது தோல்வியடைந்ததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடைசி நிமிடம் வரை இருகட்சி கூட்டம் நடந்தபோதிலும், அரசுக்கு பிப்ரவரி 16-ம் தேதி வரை நிதியளிக்கும் இந்த மசோதா, தேவையான 60 ஓட்டுகளைப் பெறவில்லை. குடியரசுக் கட்சியே கீழவையான காங்கிரசில் (நாடாளுமன்றம்) பெரும்பாண்மை வகிக்கும் நிலையில், அதே கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. பொறுப்பற்ற கோரிக்கைகளுக்காக சனநாயக கட்சியினர் குடிமக்களை பணையக்கைதிகளாக வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது. 'தேசியப் பாதுகாப்பு, ராணுவ குடும்பங்கள், பாதிக்கப்படும் குழந்தைகள், எல்லா அமெரிக்கர்களுக்கும் சேவை செய்வதற்கான நமது நாட்டின் திறன் ஆகியவற்றுக்கும் மேலாக இவர்கள் தங்களது அரசியலை வைத்துள்ளனர் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்சு கூறியுள்ளார். இரண்டு முறை இரு கட்சி சமரச உடன்பாடுகளை அதிபர் திரம்ப் மறு நிராகரித்ததாகவும், நாடாளுமன்றத்தில் தன் கட்சிக்கு அழுத்தம் தரவில்லை என்றும் ஜனநாயக கட்சியின் மேலவை தலைவர் சக் இசுகுமர் கூறியுள்ளார். கடந்த முறை இது போல அரசுப் பணிகள் நிறுத்தப்பட்ட நிகழ்வு 2013ல் 16 நாள்கள் நடந்தது. அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்க பிரதிநிதிகள் அவையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், மேலவையில் 50 வாக்குகள் எதிராகவும் 49 வாக்குகள் ஆதரவாகவும் இருந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியான சனநாயக கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் தங்கள் அணியை உடைத்துவிட்டு இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், திரம்பின் கட்சியை சேர்ந்த ஐந்து குடியரசு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர். நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால், அரசு நிறுவனங்களை மூட வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தின்படி பல அரசு அலுவலகங்கள் மூடப்படும். தேசிய பூங்காக்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் மூடப்படலாம், மூடப்பட்டால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாது .அமெரிக்கா வரும் வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டு விசா மற்றும் கடவுச்சீட்டு நடைமுறைகள் இதனால் தாமதமாகும். ஆனாலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். தேசியப் பாதுகாப்பு, தபால் சேவைகள், வானூர்தி போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சார உற்பத்தி போன்ற சேவைகள் தொடர்ந்து இயங்கும். வாக்கெடுப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு அதிபர் திரம்ப் நம்பிக்கையற்ற வகையில் இருந்தார். கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்காக சனநாயக கட்சியின் மேலவை தலைவரை அதிபர் திரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்தார். ஆனால், அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை ஆப்கானித்தானின் தலைநகர் காபூலில் தற்கொலைதாரி மருத்துவ முதலுதவி வண்டியில் கொண்டு வந்த வெடிகளை வெடிக்கச்செய்ததில் குறைந்தது 95 பேர் பலியானர்கள். இதைச் செய்தது தாலிபான் தீவிரவாதிகள் என அறியப்படுகிறது. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, காவல் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மருத்துவ முதலுதவி வண்டி ஒன்றை ஓட்டிச் சென்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவலர்கள் இவ்வண்டியை இரண்டாவது சோதனை சாவடியில் நிறுத்தியுள்ளனர் என்றும் உடனள அவ்வண்டி ஓட்டுநர் தவறான பாதையில் வண்டியை ஓட்டிச்சென்றாரதாகவும் அங்கும் காவலர்கள் அவ்வண்டியை நிறுத்த முயன்றதாகவும் உடனே தற்கொலைதாரி வெடி குண்டு நிரப்பப்பட்ட வண்டியை வெடித்துவிட்டதாகவும் காபுல் காவல்துறை பேச்சாளர் கூறினார். ஒரு வாரத்துக்கு முன்பு காபுல் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொன்ற தாலிபன் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது. அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இதற்கு முன்பு இயங்கி வந்த கட்டமும், ஆப்கானிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் ஆஃப்கன் உயர் அமைதி கழகம் (Afghan High Peace Council) எனும் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கான அமைப்பின் அலுவலகம் ஆகியவை சம்பவ இடத்துக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் உண்டான புகை மூட்டத்தை நகரம் முழுவதும் இருந்து காண முடிந்தது. அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலைத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலையைப் அறிவித்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவை, அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. தலைமை நீதிபதி அப்துல்லா சையத் மற்றும் மற்றொரு நீதிபதியான அலி அமீத்தும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர். திங்கட்கிழமை மாலை நீதிமன்றத்தை போலீஸார் சுற்றி வளைத்தது முதல், மற்ற நீதிபதிகள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக நீதிமன்றத்திற்குள்ளே இருக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாலைத் தீவு அரசு ஏற்கனவே 15 நாட்கள் அவசர நிலையை அறிவித்துள்ளதுடன் முன்னாள் அதிபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அவசர நிலை அறிவிப்பானது பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களைத் தருவதோடு சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யவும் உதவும் என செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிநீக்கம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் அந்த 12 உறுப்பினர்களோடு எதிர் கட்சி பெரும்பான்மை பெரும் நிலை ஏற்பட்டது. அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பில் வெளிநாட்டில் உள்ள முன்னாள் அதிபர் முகமது நசீத் மீதான விசாரணை அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டது உச்சநீதிமன்றம். வெள்ளிக்கிழமை வெளியான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நடைமுறைபடுத்த உறுதிமொழி தந்த காவல்துறை ஆணையரை அரசு பதவி நீக்கம் செய்தது. மேலும் மாலைத் தீவுக்கு திரும்பிய இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறை வைக்க உத்தரவிட்டுள்ளது. நாட்டுபுறவியல் துறை உதவி பேராசிரியர் பணிக்கு தமிழ் பட்டதாரிகளையும் தேர்வு செய்வதை எதிர்த்து தொடுக்கபட்ட வழக்கில் நாட்டுபுறவியல் மாணவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம். விதிமுறையின்படி நாட்டுபுறவியல் துறை உதவி பேராசிரியருக்கான கல்வித் தகுதியாக நாட்டுபுறவியல் பட்டப்படிப்பு இருந்து வந்துள்ளது. இப்பணிக்கான சேர்க்கை குறித்தான அறிவிப்பை கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் பதினோராம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைகழகம் வெளியிட்டது. அதில் நாட்டுபுறவியல் பட்டப்படிப்புடன் தமிழ் எம்.ஏ பட்டபடிப்பையும் கல்வித் தகுதியாக குறிக்கபட்டிருந்த்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. "நாட்டுபுறவியல் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களின் உழலுக்கு எதிராக போராடி வென்றிருக்கிறார்கள்" என்று மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டுபுறவியல் துறைத் தலைவர் முனைவர் தர்மராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "உண்மையில் இது நான்காவது முறை. நாட்டுப்புறவியல் மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களின் ஊழலுக்கு எதிராகப் போராடி வென்றிருக்கிறார்கள். இதற்கு முன் ஒரு முறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையிலும் (2010 ஒரு முறை தமிழ் பல்கலைக்கழகத்திலும் (2014 மூன்றாவது முறை தூய சவேரியார் கல்லூரியிலும் (2016) விதிமுறைகளுக்கு புறம்பாக பணி நியமனம் செய்ய முயற்சித்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரே காரணம் தான் சொல்லப்படும். நாட்டுப்புறவியல் துறை காலியிடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வராது. இதிலொரு சூட்சுமம் இருக்கிறது. அதிக விண்ணப்பங்கள் வந்தால் மட்டுமே, அதிக பேரத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே, நிறுவனங்கள் எப்பொழுதும் போட்டிகள் அதிகரிக்க எல்லா வேலைகளையும் செய்யும். இதனால், தமிழ், வரலாறு, மானிடவியல் பயின்றவர்களும் நாட்டுப்புறவியல் துறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்வார்கள். ஒவ்வொரு முறையும் எனது நாட்டுப்புறவியல் மாணவர்களே இதை எதிர்த்து நீதிமன்றங்களில் போராடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நாட்டுப்புறவியலுக்கு உயிரைக் கொடுப்பேன் என்று மார்தட்டிக் கொள்ளும் பலரும், இந்த ஊழலுக்குத் துணை நிற்பது தான். நா. வானமாமலை பெயரைச் சொல்லி பிழைப்பவர்கள் கூட தமிழ் பல்கலைக்கழகத்தின் இந்த அராஜகத்திற்கு துணை நின்றார்கள். மானிடவியல் அறிஞர்கள் பலரும் உள்ளடி வேலை பார்த்தார்கள். மூத்த (அதாவது ரிட்டையர்டான) நாட்டுப்புறவியல் அறிஞர்கள் திரைமறைவு சதிகளில் கலந்து கொண்டார்கள். பாதிரியார்கள் ரகசிய கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். ஒரு கட்டத்தில் பேரம் கூட பேசினார்கள். நாட்டுப்புறவியலுக்கு தமிழ் படித்தவர்கள் வரலாம் என்று ஒத்துக் கொள்ளுங்கள். தமிழ் துறைகளுக்கு நாட்டுப்புறவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்க நாங்கள் ஏதாவது செய்வோம் என்று ஆசை காட்டினார்கள். இதற்கு, நிறைய போட்டியாளர்கள் பலியாகி, போராட்டத்திலிருந்து பின்வாங்கினர். தலித்தியம், அடித்தளமக்களியம், மள்ளரியம், மார்க்சியம், விடுதலை இறையியல் என்று புரட்சி பேசிய அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஊழலின் பக்கமே நின்றார்கள். இவர்கள் அத்தனை பேரையும் எதிர்த்தே எனது மாணவர்கள் இந்த வழக்கை நடத்தி, உரிமையை மீட்டிருக்கிறார்கள். வெற்றி செய்தியை சொன்னவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் நான் இப்படித்தான் சொன்னேன் - இனியும் இது ஓயப்போவது இல்லை. அடுத்த வழக்கிற்கு தயாராக இருங்கள்!" இசுபேசு எக்சு நிறுவனம் தன்னுடைய ்பால்கன் கனரக விண்கலம் மூலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது. இந்நிறுவனத்தின் தலைவர் எலோன் முசுக் அவர்களின் செர்ரி சிவப்பு பந்தைய காரை விண்கற்கள்(சிறுகோள்கள்) சுழுலும் வட்டபாதைக்கு புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து அனுப்பினார். செவ்வாய்க்கும் சூபிட்டர் விண்கோள்கள்களுக்கும் இடையில் இது நிலை நிறுத்தப்படும். இந்த விண்கலன் 64 டன் எடையை புவி கீழ் வட்டப்பாதைக்கு கொண்டு செல்லும் திறனுடையது. கனரக பால்கன் இதற்கு முந்தைய அதிக எடையை ஏற்றிச்செல்லும் டெல்டா 4 விண்கலனைவிட இருமடங்கு எடையை ஏற்றிச்செல்ல வல்லது. உருசிய தலைநகர் மாசுக்கோவில் இருந்து கிளம்பிய ஒரு பயணிகள் வானூர்தி, சில நிமிடங்களில் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் இறந்துள்ளனர். இதில் 65 பேர் பயணிகள், 6 பேர் வானூர்தி பணியாளர்கள். சரடோவ் ஏர்லைன்சின் ஏஎன்148 என்ற இந்த வானூர்தி, கசகசுத்தான் உடனான உருசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்சுக் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. வானூர்தி ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. மாசுக்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், வானூர்தி எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர். இந்த வானூர்தி ஒரு நிமிடத்திற்கு 3,300 அடிகள் கீழ் இறங்கியதாக வானூர்தி கண்காணிப்பு தளமான ப்ளைட்ரேடார்' கீச்சு செய்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில், வானூர்தி்யின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. வானூர்தில் 65 பயணிகள் மற்றும் ஆறு வானூர்தி குழுவினர் இருந்துள்ளனர். உருசிய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். தற்போது விபத்தில் சிக்கியுள்ள வானூர்தி சரடோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமானது. வானூர்தில் வானூர்தி ஓட்டுநர்கள் இருக்கும் பகுதியில், வானூர்தி ஓட்டுநர் அல்லாத ஒருவர் இருந்ததை திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சரடோவ் ஏர்லைன்சின் சர்வதேச வானூர்தி சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த நிறுவனம், 2016-ம் ஆண்டு மீண்டும் தனது சர்வதேச சேவையை தொடங்குவதற்கு முன்பு தனது கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இது உருசிய நகரங்களுக்கு இடையே சேவையாற்றுகிறது. அத்துடன், ஆர்மீனியா மற்றும் இச்சோர்சியாவிற்கு சேவை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள புரோவார்ட் கவுண்டி பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாசு குரூசு என்று கூறப்படுகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கூடத்தின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பள்ளி வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர். புரோவார்ட் கவுண்டியின் செரிப்பான இச்காட் இசுரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூசு தாக்குதல் நடந்து அவர் பள்ளி வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிசுரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை வழங்குவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிசுரா, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்று கூறினார் மேலும் மத்திய அரசு உடனடியாக காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்றும் இந்தத் தீர்ப்பு அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்குமென்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய தீர்ப்பில் கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. மேலும் காவிரி நீர் தொடர்பாக மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1892லும் 1924லும் இரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1924ஆம் வருட ஒப்பந்தம் 1974ல் காலாவதியானதாக சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம் தற்போது காவிரி நீரை இரு மாநிலங்களும் தகுந்த முறையில் பிரித்துக்கொள்வதே சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகள் அனைத்தும் தேசிய சொத்துகள் என்று சுட்டிக்காட்டியிருக்கும் நீதிமன்றம் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தமிழகத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நெபதே, காவரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் அடிப்படையிலேயே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றும் இந்த விவகாரத்தைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே விருப்பம் இருக்கிறதா என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார். 2007ல் வெளியான தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடவே 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நீதிமன்றம் நீதித்துறை சார்ந்த உத்தரவை வெளியிட வேண்டுமென்றும் மத்திய அரசை தங்களால் சார்ந்திருக்க முடியாது என்றும் தமிழ்நாடு கூறியது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் செனரல் ரஞ்சித் குமார் வாதாடினார். 1956ஆம் வருட மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பகிர்வு சட்டப்படி, நாடாளுமன்றம்தான் இதில் முடிவெடுக்க முடியும் என அவர் கூறினார். ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு பங்கு இருக்கிறது என்றும் தங்களுடைய தீர்ப்பே அதற்கு சாட்சியாக அமையும் என்றும் கூறியது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாததற்காக மத்திய அரசையும் நீதிமன்றம் கண்டித்ததோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் ஏன் தயக்கம் என்றும் கேள்வியெழுப்பியது. இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், தாங்கள் தற்போது காவிரி நதி நீர் ஆணையத்தையும் கண்காணிப்பு கமிட்டியையும் அமைத்திருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இறுதி வாதங்களின்போது கர்நாடகத்தின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்பதை மனதில் கொள்ளாமல் மாதாமாதம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகக் கடுமையானது என்று கூறியது. இந்த மாநிலத்தில் மழைபெய்ய வேண்டுமென கடவுளுக்கு நடுவர் மன்றம் கட்டளையிடுவதைப் போன்றது இது என வாதாடினார். கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நடுவர் மன்றம் நீர் ஒதுக்கீடு செய்தபோது, பெங்களூரின் தண்ணீர் தேவை குறித்து கருத்தில்கொள்ளவில்லை என்றும் நாரிமன் கூறினார். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரியில் பாயும் மொத்த நீரானது குறைந்தபட்சமாக 740 டிஎம்சி என்று கணக்கிடப்பட்டது. இதில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி என்றும் கர்நாடகத்திற்கு 270 டிஎம்சி என்றும் கேரளாவுக்கு 30 டிஎம்சி என்றும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சியென்றும் மீதமுள்ள 14 டிஎம்சி இயற்கை வளத்திற்காக என்றும் பிரித்தளிக்கப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகம் பெறும் ஒட்டுமொத்த நீரான 419 டிஎம்சி தண்ணீரில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டுமென்றும் நடுவர் மன்றம் கூறியது. இந்த 192 டிஎம்சி தண்ணீரை மாதவாரியாக எவ்வளவு பிரித்தளிக்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் வரையறுத்தது. யூன் மாதத்தில் 10 டிஎம்சி, காவிரி விவகாரம் தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சத்தில் இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து காலை முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. தொழில் அதிபர் நிரவ் மோதி பஞ்சாப் தேசிய வங்கியில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11,400 கோடி மோசடி செய்தார் என்று சிபிஐயிடம் பஞ்சாப் தேசிய வங்கி புகார் செய்துள்ளது. அதற்குமுன், கடன் வாங்கிய வகையில் ரூ. 280 கோடியும் மோசடி செய்ததாகவும் புகார் தரப்பட்டு இருந்தது. இந்த இரு புகார்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிரவ் மோதியின் வீடுகள், நகைக்கடைகள், அலுவலகங்களில் அமலாக்கப்பிரிவினர் நேற்று சோதனை நடத்தி, ரூ.5,400 கோடிக்கு அதிகமான சொத்துக்களை முடக்கினர். மேலும்,நிரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. வார்ட்டன் வணிக பள்ளிக் கல்வியை 19 வயதில் கைவிட்ட நீரவ் மோதி, இந்தியா திரும்பி குடும்பத்தின் வைர வியாபாரத்தில் ஈடுபடலானார். கீதாஞ்சலி ரத்தின கற்கள் (Gitanjali Gems) என்ற பெயரில் வைர வியாபாரம் செய்துவந்த நீரவின் உறவினர் மெகுல் சோப்சியுடன் இருந்து 10 ஆண்டுகள் தொழில் கற்றுக் கொண்டதாக அவரே பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு 15 தொழிலாளர்களுடன் Firestar Diamond International நிறுவனத்தை தொடங்கிய நீரவ், படிப்படியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் நீரவ் மோதியின் நிறுவனம் ஆங்காங்கில் இருந்து வைரம் இறக்குமதி செய்யவுள்ளதாகக் கூறி பஞ்சாப் தேசிய வங்கியிடம் LoU ஆவணம் பெற்றுள்ளது. ஆங்காங்கில் உள்ள அலகாபாத் வங்கி கிளையிடம் பணம் பெற LoU அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீரவ் மோதிக்கு குறிப்பிட்ட பணத்தை ஆங்காங்கில் உள்ள அலகாபாத் வங்கிக் கிளை அளிக்கும். இறக்குமதி பொருள் இந்தியா வந்ததும், நீரவ் மோதி பஞ்சாப் தேசிய வங்கி அப்பணத்தை திருப்பி செலுத்திவிட வேண்டும். அப்பணத்தை பஞ்சாப் தேசிய வங்கி அலகாபாத் வங்கிக்கு செலுத்தும். இந்த நடைமுறையில்தான் சுமார், 11,380 கோடி ரூபாய் அளவு மோசடி நடைபெற்றுள்ளது. தனது வங்கி அதிகாரிகள் சிலர் விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக போலியான LoU அளித்துள்ளதாகவும், அதை வைத்து வெளிநாட்டு வங்கிக் கிளைகளிடம் வெளிநாட்டு பணமாக பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் தேசிய வங்கி தற்போது குற்றம்சாட்டியுள்ளது. இந்த முறைகேடு வெளிப்பட்டுள்ளதை அடுத்து, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நீரவ் மோதிக்கு சொந்தமாக மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள நகை கடைகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 17 இடங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 60 பயணிகள் மற்றும் ஆறு வானூர்திப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் வானூர்தி இரானில் உள்ள இச்சாகுரோசு மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக வானூர்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக" அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு உலங்கூர்தி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வானூர்தி ஏசெமன் வானூர்தி நிறுவனத்தின் ATR 72-500 25 ஆண்டுகள் பழைமையான இவ்வானூர்தி பிரெஞ்சு இத்தாலிய தயாரிப்பாகும். ஏசெமன் ஈரானின் மூன்றாவது பெரிய வானூர்தி நிறுவனமாகும், கடந்ந ஆண்டு 30 போயிங் 737 வானூர்திகளை வாங்க உடன்பாடு போட்டிருந்தது. வானூர்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு வானூர்தி ஊழியர்கள், வானூர்தி ஓட்டு இருவர் செய்திகள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று வானூர்தி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரான குளிவந்த் கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் இரானில் பல வானூர்தி விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. அந்நாட்டிலுள்ள பல வானூர்திகள் நீண்ட காலத்திற்கு முன்னர் வாங்கப்பட்டவையாக உள்ளது. இரானின் அணுசக்தித் திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளின் காரணமாக இரான் தனது வானூர்திகளை சரிவர பராமரிப்பதற்கு போராடி வருகிறது. பிரழல தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் மதுரையில் 21/02/2018 அன்று தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக கடந்த 1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13ந் தேதி மீனம்பட்டியில் (சிவகாசிக்கு அருகில் உள்ளது) பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் 'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவரின் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் 1996ம் ஆண்டு தாய் ராஜேஸ்வரி புற்று நோயாலும் மரணமடைந்தனர், பின் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் போட்டியிட்டார் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். அப்போது, தனது தந்தையுடன் ஒரு வார காலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரீதேவி. 1989 தேர்தலில் அவரது தந்தை தோல்வியடைந்தாலும் முன்னதாக அவரது பெரியப்பா ராமசாமி 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக 10 ஆண்டுகளும், அனுப்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக 20 ஆண்டுகளும் இருந்துள்ளார். அவரது தங்கை லதாவின் கணவரான சஞ்சய் ராமசாமி 1991ல் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது தந்தையும் பெரியப்பா ராமசாமியும் இணைந்து மீனம்பட்டி கிராமத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் வகையில் பாரதி துவக்கப்பள்ளி துவக்கினர். அப்பள்ளி இன்று வரை செயல்பட்டு வருகிறது. ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் அவரது உறவினர் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சதிஷ் மற்றும் ஆனந்தன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். சதிஷ் இறந்த விட்டார். தற்போது ஆனந்தன் மட்டும் சிவகாசியிலேயே வசித்து வருகிறார். இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதன் பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தியிலும் 1970களின் பிற்பாதியிலும், 1980களிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீதேவி, 2013இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான 'ஜூடாய்' எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து, இந்தி மற்றும் தமிழில் வெளியான 'இங்கிலீசு விங்கிலீசு திரைப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றது. 2017இல் வெளியான 'மம்' எனும் இந்தி திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அது அவரது 300வது திரைப்படமாகும் செளதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர் இராணுவ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தமதுர் பின்ட் யூசப் அல் ராமா என்ற பெண்மணி துணை தொழிலாளர் துறை அமைச்சராகியுள்ளார். இது ராணுவப் பணி, விருப்பம் இருக்கும் பெண்களுக்கு மட்டுமானது. அதாவது ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை. செளதி பிரசு ஏஜென்சி (SPA) வெளியிட்டுள்ள செய்திகளின்படி, பொது பாதுகாப்பு இயக்குநரகம், ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிக்கையை ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிட்டது. அதன்படி, ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், ஆசிர், அல் பகா மற்றும் சர்க்கியா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். செளதி அரசின் சூரா ஆணையத்தின் ஒரு உறுப்பினரின் சார்பில் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின்படி, ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ஆண்டில் மூன்று மாதங்கள் கட்டாயம் பணிபுரியவேண்டும். ஆனால், இதுதொடர்பாக ஆணையத்திலும், சமூக ஊடகங்களிலும் வெவ்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. செளதி அரசின் ராணுவத்தில் சேர்வதற்கான அடிப்படை தகுதி விண்ணப்பிப்பவர்கள் அந்த நாட்டின் குடிமகளாக இருக்கவேண்டும். கல்வித் தகுதியாக, உயர்நிலை பள்ளிப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்கவேண்டும். குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானால் வெளியிடப்பட்ட `விசன் 2030’ என்ற சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று. இவரே நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராவார். பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் செளதி அரேபியா மன்னர் சல்மான் ஆணை பிறப்பித்தார். 2018 யூன் மாதத்துக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும் அறி்விக்கப்பட்டது. அண்மையில் பெண்கள் கால்பந்து போட்டிகளை பார்க்க விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவதாகவும் செளதி அரேபிய அரசு அறிவித்தது. சௌதி அரேபியாவின் அரச குடும்பம் மற்றும் மத அமைப்பு சன்னி இசுலாத்தின் ஒரு கடினமான வடிவமான வகாபிசத்தையும் தீவிரமாகக் கடைபிடிக்கின்றன. இந்த இசுலாமிய சட்டங்களின்படி, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செளதி அரேபியாவில் பெண்கள் தனியாக பயணிக்க அனுமதி கிடையாது. பெண்களுடன் ஒரு குடும்ப உறுப்பினர் செல்லவேண்டும். அந்நாட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்களில், ஆடவர்களுக்கான பிரிவு ஒன்று, குடும்பத்தாரோடு வருபவர்களுக்கு ஒன்று என இரண்டு பிரிவுகள் உள்ளன. கணவனுடன் அல்லது குடும்பத்துடன் வரும் பெண்களே உணவகங்களில் அனுமதிக்கப்படுவார்கள் உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்திரவிட்டிருந்த நிலையில், மத்திய அரசு அதனை செய்யத்தவறியதால் இன்று தமிழகத்தில் எதிர்கட்சிகள் முழுஅடைப்பு நடத்தியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 11 பேர் இதுவரை இறந்துள்ளதாக தூத்துக்குடி காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து நடந்த வன்முறையில், போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர்தான் ஆண்டனி செல்வராஜ். இவருக்கும் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆண்டனி செல்வராஜின் குடும்பத்தினர்.தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது.மணல் தட்டுப்பாட்டை போக்க தனியார் நிறுவனம் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படும்; மணல் தரமாக இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை. நான் விக்கிசெய்தியில் இலக்கணம் அறிவோம் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். அந்த விக்கிபீடியாவால் ஏற்றுக்கொள்ளப்படுமா? முதன்முறையாக மாற்றம் செய்ய முயல்கிறேன், பிழை ஏதேனும் இருப்பின் வழிகாட்டவும்/சரி செய்துகொள்ளவும். இக்கட்டுரையில் வருடம் தவறாக 2018 என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சரியான வருடம் 2016 போல் தெரிகிறது. ராவணர் என்றால் பிறர்க்கில்லா அழகன் என்பது பாெருள்.இவர் தாய்லாந்து ராமாயணத்தில் தசகந்தா என்று அழைக்கப்படுவதும் கந்தா என்றால் அழகன் என்பதும் இதனை மெய்பிக்கின்றது.இவர் தசாநந்தா என அழைக்கப்படுவதும் நந்தா என்றால் செல்வம் என்பதும் இவர் பத்து வகையான செல்வங்களை உடைய குபேரர் ஆவார்.சூரிய குலத் தாேன்றலான சுக்ரீவரான இவர் தசம் எனும் பத்து கலைகளில் ரதன் எனும் செலுத்தக்கூடிய ஆற்றல் உடையவராகையால் தசக்ரீவன் என புகழப்படுகிறார். வணக்கம்.எனக்குத் தெரிந்தவற்றை இங்கு செய்திகளாக வெளியிட உள்ளேன்.எனது உள்ளடகத்தில் பிழை எதுவும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்,அதனை நான் திருத்தி விடுகின்றேன். இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டிசம்பர் 26 இல் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்ரி பெற்றது. 9 இலக்குகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேவானார். இயகக்குனர் சிவாவின் விஷ்வாசம் படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.இசையமைப்பாளர் 🎶டி.இமானின் இசையிலும் 🎵பாடலாசிரியர் யுகபாரதி,தாமரை போன்றவர்களின் பாடல்களிலும் அஜித்தின் விஷ்வாசம் வெளியாகிறது. மாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு 19 பிப்ரவரி 2019 அன்று கோயிலில் பூச்சாட்டுவேன் தொடங்கியது. கோயமுத்தூரில் பிரசித்தி பெற்ற இக்கோயில், நகரின் மையப்பகுதியான டவுன் ஹாலில் உள்ளது. இக்கோயிலின் தேர், ராஐவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை மக்கள் அனைவரும் வந்து தேரின் மீது கல் உப்பு மற்றும் மிளகு வீசுவர். மதியம் 1 மணியளவில் தேர் உலா செல்ல புறப்படும். பக்தர்கள் அனைவரும் சேர்ந்து தேர் இழுத்து நான்கு வீதிகளில் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியால் வீதி, கருப்ப கவுண்டர் வீதியாக வந்து மீண்டும் ராஜ வீதி, தேர் முட்டியில் வந்து சேர்ந்து விடும். தேர் பார்க்க வரும் மக்களுக்கு விலையின்றி நீர் மோர், பானகம், உணவு போன்றவை பொதுமக்கள் பலரால் கொடுக்கப்படும். கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை லாஸ் ஏஞ்சல்ஸில் பெயிண்ட்பால் துப்பாக்கிகளுடன் இருபத்தி எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றும் பொதுவாக பொழுதுபோக்கு ஆயுதத்தின் முறையற்ற பயன்பாட்டை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வியாழக்கிழமை செய்தியாளர் மாநாட்டில், இரண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் லெப்டினென்ட்கள் இந்த ஆண்டு நிகழ்ந்ததாக கூறப்படும் தாக்குதல்களில் சிலவற்றை விவரிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் 12 முதல் 80 வயது வரை உள்ளனர். நான்கு சம்பவங்களில், மக்கள் கொள்ளையடித்தனர். அந்த தாக்குதல்களில் தொடர்பில் ஐந்து கைதுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு கடந்த வருடம், 5 வயது சிறுவன் முகத்தில் அடித்து கிட்டத்தட்ட கண் இழந்தார். ஜூலை 2017 ல், அதிகாரிகள் இதே மாத செய்தி மாநாட்டை நடத்தினர், அந்த மாதத்தில் 49 பேர் பெயிண்ட்பால் துப்பாக்கிகளுடன் இருந்தனர். சுண்ணாம்பு துப்பாக்கிகள் மற்றும் பிபி துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் சிறிய அளவிலான அதிகரிப்பு இருப்பதாக LAPD அதிகாரிகள் தெரிவித்தனர். பெயிண்ட்பால் துப்பாக்கிகளுடனான தாக்குதல்கள் கடுமையான குற்றங்கள் என்று சிறைச்சாலை நேரத்திற்கு வழிவகுக்கலாம் என்று லெப்டினென்ட் ஜெஃப் பிரேட்சர் கூறினார். "அப்பாவி குடியிருப்பாளர்கள் பள்ளிக்கு நடைபயிற்சி நடத்தினர், தங்கள் சைக்கிள்களை சவாரி செய்தனர் அல்லது கடைக்குச் சென்றனர் என்று பிராட்டர் செய்தி மாநாட்டில் தெரிவித்தார் சோகமான பகுதி பல சந்தேக நபர்கள் வீடியோ டேப் இது, அல்லது சமூக ஊடகத்தில் பதிவு மற்றும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சந்தேக நபர்கள் சிரிக்க கேட்க முடியும்." சில பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சாயம் பூசப்பட்ட உடையில் நிற்கும் போதும், மற்றவர்கள் உணர்ச்சி ரீதியிலான காயம், வரவேற்பு அல்லது மயக்கங்கள் ஆகியவற்றை பாதிக்கலாம். அந்த வரவேற்புகளில் சில ஆழமானவை, பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் காயமடைவதில்லை, அது முற்றிலும் குணமடையாது. ஒரு வழக்கமான பெயிண்ட்பால் துப்பாக்கியை 20 ஓவியங்கள் வரை வைத்திருப்பதாக லெப்டினென்ட் பெர்ரி க்ரிஃபித் விளக்கினார், இன்னும் ஒரு பெல்ட்டில் வைக்கப்படலாம். துப்பாக்கிகள் பொதுவாக அரை தானியங்கி, ஆனால் முழுமையாக தானியங்கி இருக்க சரிசெய்ய முடியும், அவர் விளக்கினார். பந்துகள் உறைந்திருக்கும் மற்றும் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்படலாம். கூடுதலாக, துப்பாக்கிகள் பெரும்பாலும் உண்மையான துப்பாக்கிகளைப் போல் காணப்படுகின்றன. வண்ணப்பூச்சு-பந்துவீச்சு என்பது ஒரு "களிப்பூட்டும்" அனுபவம் என்று வலியுறுத்தினர், துப்பாக்கிகள் ஒழுங்காக பரிசோதிக்கப்பட்டு கையாளப்பட்ட கட்டுப்பாட்டு சூழலில் விளையாடுவதற்கு மட்டுமே முக்கியம். பெயிண்ட்பால் துப்பாக்கிகள் சொந்தமாக வைத்திருக்கும் அன்பானவர்களிடமோ அண்டைவீட்டார்களிடமோ தெரிந்தவர்கள், தங்கள் சரியான பயன்பாட்டை அவர்களுக்கு நினைவூட்டுமாறு கேட்டார்கள். காசுமீர் மாநிலத்தின் அந்துவாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் கர்னல் ஒருவர், மேஜர் ஒருவர் உட்பட 5 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகள் சங்கிமுல் என்னும் சிற்றூரில் உள்ள குடிமக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் நடத்தப்பட்ட சண்டையில் குடிமக்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். அந்த இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையில் நால்வரும் காவல் துணை ஆய்வாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டை 18 மணி நேரம் நீடித்தது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட இடத்தில் இரண்டு ஆயுதங்களும் போர்க்கருவிகளை சேர்ந்து வைக்கும் இடமும் கண்டறியப்பட்டது. பிரான்ஸிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. முதற்கட்டமாக 5 விமானங்கள் திங்கட்கிழமை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. ஐந்து விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா புறப்பட்டன ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பலுடன் விமானங்களின் தொடர்பு இணைக்கப்பட்டது. சுகாய் விமானங்கள் புடைசூழ இந்திய வான் எல்லையில் ரஃபேல் விமானங்கள் சீறிப்பாய்ந்து வந்தன. ஐந்து விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் தரை இறங்கின. இதற்கு வாழ்த்து தெரிவித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் இந்திய ராணுவத்தின் புது சகாப்தம் தொடங்கியுள்ளது என கூறி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ பறவைகள் (ரபேல் விமானங்கள்) பத்திரமாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன. ரபேல் விமானங்களின் வருகை இந்தியாவின் ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்துள்ளது. அம்பாலா விமானப்படை தளத்தில் தரை இறங்கிய ரஃபேல் விமானங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது ரபேல் விமானங்கள் தரை இறங்கிய உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையின் இந்த புதிய திறனைப்பற்றி யாராவது கவலையோ அல்லது விமர்சமங்களோ வைத்தால் அவர்கள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புவவர்களாகத்தான் இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார். ஆகஸ்ட் 1 2020 முதல் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் என்றும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெர்முடா டிரையாங்கிள் என்னும் பெரிதாக்கப்பட்ட பிம்பம் எல்லா இடத்திலும் நடப்பதுதன் அங்கேயும் நடக்குது பெர்முடா டிரையாங்கிள் பத்தி நாம புதுசா சொல்வதற்கு எதுவுமே இல்லைங்க கடந்த எழுபது வருஷமா இத பத்தி நிறைய புத்தகங்கள் வந்துருச்சு வீடியோக்கள் வந்துருச்சு ஏன் சினிமாவே எடுத்துட்டாங்க மர்மமான விஷயங்கள விரும்பர மக்களுக்கு இந்த பெர்முடா டிரையாங்கிள் போதும் போதும் என்கிற அளவுக்கு எல்லோருக்கும் தீனி போட்டுறுச்சு இந்த கட்டுரையில நாம பெர்முடா டிரையாங்கிள் என்றால் என்ன அதுல நடந்த விபத்துக்கள் என்னென்ன அப்படின்னெல்லாம் பாக்கப் போறதில்லங்க பொதுவா, பெர்முடா டிரையாங்கிள்ள என்ன நடந்திருக்கும், மற்ற பகுதிகள்ள நடந்த விபத்துகள விட அங்க நடந்த விபத்துகள் எண்ணிக்கையிலும், தன்மையிலும் வித்தியாசமானதா அப்படின்னு அறிவியல் பூர்வமா பாக்க போறோம் தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்துல விமானங்கள் கப்பல்கள் இவற்றுல ஏற்படும் தொழில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மோசமான வானிலை காரணமாகவும், மனித தவறுகளாலயும் ஏற்பட்ட விபத்துக்கள ரொம்பவும் பெரிதுபடுத்தி ஏலியன்ஸ் அட்டாக் பண்றாங்க கடலுக்குள்ள காந்தம் இருக்கு அப்படினு ஏகத்துக்கு கதை கட்டி காசு பார்த்தாங்க… 1074 ல சார்லஸ் பெர்லிட்ஸ் அப்படிங்கிறவரு ‘தி பெர்முடா டிரையாங்கிள்’ அப்டின்னு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் உலகம் முழுக்க முப்பது மொழிகளில் 2 கோடி காப்பி அந்த புத்தகம் வித்திருக்கு… இது ஒரு சின்ன சாம்பிள் தான் இது மாதிரி பல புத்தகங்கள் பல வீடியோ ஆவணங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சினிமாக்கள் இந்த விபத்துக்கள இன்னும் பெரிதுபடுத்தி லாபம் பார்த்தார்கள். முதல்ல நாம தெரிஞ்சுக்க வேண்டியது பெர்முடா டிரையாங்கிள் அப்படிங்கிறது ரொம்ப பிஸியான ஒரு ஏரியா தமிழ்நாட்டை எடுத்துக்கங்க மற்ற மாவட்டங்களில் நடக்கும் விபத்துகளை விட சென்னையில் அதிக விபத்துக்கள் நடக்கும் ஏன்னா மக்கள் நெருக்கம் ஜாஸ்தி அதேபோல பெர்முடா டிரையாங்கிளும் ரொம்ப பிஸியான ஏரியா ஈக்வேடருக்கு அருகில் இருக்கு அப்புறம் உலகத்தின் மிக வளமையான ஒரு தேசத்துக்கு ரொம்ப அருகில் இருக்கு அது எந்த தேசம் அமெரிக்கா அப்ப அதிகப்படியான கப்பல்களும், விமானங்களும் போக வர இருக்கும்தானே இரண்டாவது பெர்முடா டிரையாங்கிளில் மறைந்து போகும் விமானங்களின், கப்பல்களின் எண்ணிக்கையானது, உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் விபத்துகளின், காணாமல் போகும் விமானம் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கைக்கு எந்த விதத்திலும் அதிகமில்லை. அதாவது சராசரியா உலகில நடக்கிற விபத்துகளின் எண்ணிக்கைகு எந்த விதத்திலும் அதிகமில்லாத எண்ணிக்கைலதான் அங்கயும் விபத்துகள் நடக்குது. ஆனா நம்ம மர்ம விரும்பிகள் பெர்முடா டிரையாங்கிளில் நடக்கும் விபத்துகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, இத ஒரு பூதாகரமான, அமானுஷ்யமான விஷயமா மாத்திகிட்டு இருக்காங்க பெர்முடா டிரையாங்கிள் மர்மங்கள் பற்றி பேசுறவங்க முக்கியமாக குறிப்பிடுவது பிளைட் 19 அப்படிங்கிற விமானம் மறைந்து போனதைப் பத்தி தான். இந்தப் பிளைட் 19 அப்படிங்கிற விமானம் ஏற்கனவே தொடர்புள இருந்து காணாமல் போன யுஎஸ் நேவிய சேர்ந்த 5 பயிற்சி விமானங்களை கண்டுபிடிக்க போன ஒரு விமானம் ஆகும். 1945 டிசம்பர் 5ஆம் தேதி இந்த ஐந்து விமானங்களும் இரண்டு மணிநேர பயிற்சிக்காக அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து போனது. ரேடியோ தொடர்புகள் அறுந்து போனதால, இந்த ஐந்து விமானங்களும், மற்றும் அதிலிருந்த 14 பேரும் காணாம போயிட்டாங்க அன்னைக்கு ராத்திரியே இந்த ஐந்து விமானங்களும் கண்டுபிடிப்பதற்காக கிளம்பின பிளைட் 19 விமானமும், அதில இருந்த 13 பேரும் காணாம போயிட்டாங்க உண்மையிலேயே அன்னைக்கு வானிலை ரொம்ப மோசமா தான் இருந்ததாம் அதோடு அந்த மொத்த குரூப்ல இருந்த பைலட் எல்லாருமே பயிற்சிக்காக வந்தவங்கதான் அதில் இருந்த ஒரே ஒரு அனுபவமிக்க பைலட் சார்லஸ் டெய்லர் அப்படிங்கிறவர்தான் ஆனால் அவரும் முதல் நாள் கடுமையாக குடிச்சிட்டு அந்த போதை இறங்காமல் இருந்தாராம் அவர் அந்த தேடுதல் பணிக்கு போதையோடு தான் வந்திருக்கிறார் அவருடைய கடிகாரத்த கூட மறந்து தான் போயிருக்காரு அப்புறம் இதுக்கு முன்னாடியே இரண்டு தடவை தான் ஓட்டிட்டு போன விமானத்தை வழி தெரியாம தொலச்ச வரலாறு உள்ளவராம். அதனால 1945 ல 6 விமானங்கள் காணாமல் போன அந்த சம்பவம் முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மனித தவறுகள் மூலமா நடந்தது என்பது உறுதியாகிறது. இன்னும் பலபேர் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பெர்முடா டிரையாங்கிள் பகுதியில் நடந்த விபத்துக்களின் எண்ணிக்கை மற்ற பகுதியில் நடந்த விபத்துக்கள் விட எந்த விதத்திலும் அதிகமாக இல்லை அப்டிங்கரதும் இன்சுரன்ஸ் கிளைம் மற்றும் இன்சூரன்ஸ் பிரிமியம் போன்ற விஷயங்களும் பெர்முடா டிரையாங்கிள் கடல் பாதைக்கு மற்ற பகுதிகள விட் அதிகமில்ல அப்டிங்கரதும் தெரியவருது. மற்ற பகுதிகளில் இல்லாத ஒரு வித்தியாசமான ஒரு விஷயம் பெர்முடா ட்ரையாங்கிள் இருக்கு அப்படின்னா இந்த மீத்தேன் கேஸ் உருவாகிறதுதான் இந்தப் பகுதிகளில் இருக்கிற கடலிலிருந்து அதிகமான மீத்தேன் வாயு அதன் அடித்தளத்தில் இருந்து உருவாகி மேல வருது அதனால ஏற்படுற நுரை போன்ற ஒரு மேல்பரப்பில் கப்பல்கள் வரும்போது அவை முழுகற சூழ்நிலை ஏற்பட்டது அது மீத்தேன் வாயு மேலெழுந்து திரண்டு நிற்கும் போது 5 லிருந்து 15 பேர்செண்டேஜ் அளவிலான மீத்தேன் வாயுவும் காற்றும் கலந்த கலவை சூடான விமானங்கள் உடைய என்ஜின் பகுதியில் படும்போது ஒரு வெடிப்பு நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜியாலஜிக்கல் சர்வே சயின்டிஸ்ட் இந்த மாதிரி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ஒத்துக்கிறாரு. ஆனா இதுவுமே தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருந்த பழங்கால கப்பல்கள் விமானங்கள் போன்றவற்றுக்கு மட்டுமே பொருந்தும் அப்டின்னு சொல்லி இருக்கிறார். மேலும் பெர்முடா டிரையாங்கிள்ள கானா போனதா சொல்லப்படற பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் அந்த பகுதியை விட்டு ரொம்ப தூரம் தள்ளி தான் மூழ்கி இருக்கிறதை பார்க்க முடியுது. இந்த மாயக் கதை எழுத்தாளர்கள் மர்ம விரும்பிகள் இந்த கப்பல்கள் விமானத்தையும் பெர்முடா டிரையாங்கிள் கணக்கிலேயே எழுதிட்டாங்க. மொத்த இலங்கையையும் கைப்பற்றிய ராஜபக்சே குடும்பத்தினர் அண்ணன் பிரதமர், தம்பி அதிபர் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினரின் லங்கா மக்கள் கட்சி, மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 22 மாவட்டங்களில், 225 இடங்களில், கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. துவக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் கட்சி, அதிகமான இடங்களில் முன்னணியில் இருந்தது. சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் தெற்கு பகுதியில் 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்று, இலங்கை மக்கள் கட்சி, அபார முன்னணியை பெற்றது. மொத்தம் 145 இடங்களை கைபற்றி ராஜபக்சே கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இலங்கை முழுவதும் ராஜபக்சே குடும்பத்தின் வசமாகி இருக்கிறது. முன்னமே, மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக இருக்கிறார். தற்போது மகிந்த ராஜபக்சேவும் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். இவருடைய வெற்றிக்கு நேற்றிரவே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு இடத்தில் கூட இது வெற்றி பெறவில்லை. இரண்டாக பிளந்த ஏர் இந்தியா வந்தே பாரத் விமானம் இதுவரை 17 பேர் பலி கொரோனாவிலிருந்து தப்பி விபத்தில் இறந்த பரிதாபம்.. வெளிநாடு வாழ் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் விமானம், நேற்றிரவு வந்தது. இதில், 174 பயணியர் உட்பட, 191 பேர் இருந்தனர். இந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று இரவு, 7:40 மணிக்கு தரைஇறங்கியபோது விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது. இந்த விபத்து பொலவே 2010ல் கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்தை இது நினைவு படுத்துகிறது. 2010-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி, துபையில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நொறுங்கி விபத்துக்குள்ளானது. போயிங் ரகத்தை சேர்ந்த அந்த விமானம், விழுந்ததில் 152 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அதில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். திரைப்பட பிண்ணணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், எனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மிகவும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். அதனால் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் வீட்டில் குடும்பத்தினர் இருப்பதால் நான் மருத்துவமனையிலேயே அனுமதி ஆகியுள்ளேன் சளி, காய்ச்சலை தவிர மற்றபடி நான் நன்றாக உள்ளேன். நான் ஓய்வு எடுப்பதால் நிறைய கால்கள் எடுக்கமுடியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் நலமாக உள்ளார். எங்களது மருத்துவ குழு அவருக்கு சிறப்பான சிகிச்சை கொடுத்து வருகிறது. இயற்கையான முறையிலேயே அவர் மூச்சு விடுகிறார். தனக்காக பிரார்த்தனை செய்த தனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் எஸ்.பி.பி. நன்றி தெரிவித்துள்ளார், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு ஒரே குழியில் புதைக்கப்படும் சடலங்கள் கொரோனா வழிகாட்டுதலாம்.. மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது கேரளாவின் இடுக்கி மாவட்ட தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 78 தமிழர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் அங்கேயே உள்ள 20 வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். கடந்த 7ம் தேதி அதிகாலையில் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், அந்த20 வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 16 பேர் படுகாயங்களுடனும், 17 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தொடர்மழை மற்றும் இருள் சூழ்ந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று காலையில் மீட்பு பணி தொடங்கியது மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மழை பெய்து கொண்டே இருந்ததால் அவ்வப்போது மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இருள்சூழ்ந்து காணப்பட்டதால் மாலை 6 மணியோடு மீட்பு பணி நிறுத்தப்பட்டது. அனைத்து உடல்களும் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை. தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடத்தில் ராட்சத குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் அனைத்து உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எஸ்.ஐ கொரோனாவால் பலி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரை, கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில், வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பெனிக்ஸ், ஆகியோர் இறந்தனர். வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எஸ்.எஸ்.ஐ பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த 24ம் தேதி, எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பு!! துாத்துக்குடியில் வேதாந்தா குரூப்' நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை கட்டமைத்து நடத்தி வந்தது. தாமிர உருக்காலையான இதற்கு 1994ல் 'சிப்காட் நிலம் ஒதுக்கி உத்தரவிட்டது. 1995ல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 1997 ஜனவரியில் ஸ்டெர்லைட் உற்பத்தியை துவங்கியது. இந்த ஆலையால், சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாகவும், பொது மக்கள் உடல் நிலை பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும், 2018ல் மக்கள் போராட துவங்கினர். கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த பொது மக்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாயினர். இதையடுத்து, ஆலையை மூடி சீல்' வைக்க, 2018 மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு தூத்துக்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அரசு எடுத்த முடிவு நியாயமானது. அபாயகரமான கழிவு குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கு, ஆலை நிர்வாகம் எடுத்துச் செல்லாதது, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலானது என்பது, உண்மை தான். கழிவு மேலாண்மைக்கு உரிய வசதிகளை, ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. ஆலையை முறையாக கண்காணிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறி விட்டது. ஆலையை மூடி விட்டால், தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது; பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்ற, வாதத்தை ஏற்க முடியாது. பொருளாதார பாதிப்பை விட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியமானது. அரசியல் காரணங்களுக்காக, ஆலையை மூடியதாக, மனுதாரர் தரப்பில் கூறினால், 20 ஆண்டுகளுக்கு முன், ஆலையை துவங்க அனுமதி வழங்கியதும், அரசியல் காரணங்களுக்காகத் தான் என, கூற வேண்டியது வரும். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ளார் • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம். • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள். • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து • மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மாநில அரசு அமல்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது இதனால் நோய்ப்பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும் எனவே, பொதுமக்கள் அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன் நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொது ஊரடங்கு செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு முதல்வர் அறிவிப்பு அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அகாதமி ஆஃப் சயின்சஸ், பால் மில்கிரோம் மற்றும் இராபர்ட் வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்க கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன. இந்த உலகத்தை மறுபடியும் படைத்துவிடலாம் ஏழு அதிசயங்கள் அல்ல பல நூறு அதிசயங்களை கூட உருவாக்கி விடலாம் ஆனால் திருக்குறள் போல் வேறு ஒரு திருக்குறளை உருவாக்க முடியாது சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் தென்னிந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுலா தளம். இங்கு பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்து காணப்படும். இவற்றை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் பல் நாடுகளில் இருந்தும் வருவது வழக்கம். இந்த நகரின் சிறப்பை கருதி சமீபத்தில் மத்திய அரசு சர்வதேச சுற்றுலா தரத்திற்கு ஈடு செய்யும் வகையில், இந்த நகரத்திற்கு "ஐகோனிக் நகரம்" என்ற சிறப்பு அந்தஸ்தை கொடுக்கும் முடிவை எடுத்தது. இதற்கிடையில், ரெனால்ட் நிசான் என்ற தனியார் கார் தயாரிப்பு நிறுவனம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலமாக இருபது பாட்டரி வாகனங்களை முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் வழங்க உள்ளது. இது மட்டும் அல்லாமல், சிற்ப வளாக மின் விளக்குகளின் மின்சார தேவைக்காக சோலார் அமைப்பு, குடிநீர் வசதி போன்றவற்றையும் தர முடிவு செய்தது. இந்த திட்ட அறிக்கையை பெற்ற தொல்லியல் துறை, இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. இது சம்பந்தமாக தொல்லியல் துறை நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது. பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திருலோகச்சந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவர் தமிழ்நாட்டில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆற்காடு நகரத்தில் 1930ம் வருடம் ஜூன் 11ந்தேதி பிறந்தார். சினிமா துறையில் ஆர்வம் கொண்டு, இளம் வயதிலேயே சினிமா துறையில் உதவி இயக்குனராக நுழைந்தார். இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் வாளும் விழியும் இந்த படம் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. மனம் தளராமல் வீரத்திருமகன், நானும் ஒரு பெண், அதே கண்கள், ராமு, எங்க மாமா" என பல வெற்றிப்படங்களை தந்தார். நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து 25 படங்கள் வரை பணி புரிந்தார். மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து "அன்பே வா" என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கி வெளியிட்டார். இவர் இயக்கிய "தெய்வமகன்" என்ற திரைப்படம் பிரபலமான ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் வெளியாகி முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்ட படம் இது தான். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்கள் வரை இவர் இயக்கியுள்ளார். திருலோகச்சந்தர் 2016ம் வருடம் ஜூன் 15ந்தேதி தனது 86வது வயதில் காலமானார். திரு மீ. ப. சோமசுந்தரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1921ம் வருடம் ஜூன் மாதம் 17ந்தேதி பிறந்தார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் வித்வான் பட்டம் பெற்றவர். அகில இந்திய வானொலியில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் பணியாற்றினார். பிரபல பத்திரிகையான கல்கி இதழின் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். நண்பன் என்ற மாத இதழையும் நடத்திவந்தார். சர்வதேச அமைப்புகளில் பங்காற்றி தமிழின் பெருமையை உலகறியச்செய்தவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகம், கவிதைகள், பயணம் மற்றும் இசை ஆய்வு கட்டுரை என இலக்கியத்தின் அணைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்து வந்தார். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சித்தர் பாடல்கள் மற்றும் இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் 1999ம் வருடம் ஜனவரி 15ந்தேதி காலமானார். இந்தாண்டு பிப்ரவரியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் முதல்முறையாக ஒரு புகார் முழுமையாக விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் வெப் சீரிஸாக உருவாகியிருக்கும் தொடர் 'கிரஹான் 1984 இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நிகழ்ந்த சீக்கிய கலவரங்களை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், இந்த வெப் சீரிஸ் தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தன சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் விதமானக் காட்சிகள், 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரங்களைப் பற்றி ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஒரு மோசமான மனநிலையில் தவறாக இந்தக் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதக் கொள்கைக்கு எதிராக இந்த ட்ரெய்லரில் சீக்கியர் ஒருவர் கொள்ளையடிப்பது, தீக்குளிப்பது போன்ற காட்சிகளைக் காட்ட திரைக்குழு முயன்று இருக்கிறது. அதுனால் இதனை திரும்பப் பெற வேண்டும்' என்று டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்ததுடன், டிஜிட்டல் மீடியா உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சில் (டி.எம்.சி.ஆர்.சி)-லிலும் ட்ரெய்லருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. இந்த கவுன்சிலானது, இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். அதேநேரம், இந்திய ஒலிபரப்பு கூட்டமைப்பால் இந்த கவுன்சில், தொலைக்காட்சி ஒலி பரப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பாகவும் கருதப்படுகிறது. டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை உள்ளடக்கும் ஒரு பகுதியாக இந்த அமைப்பு விரைவில் இந்திய ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை (ஐபிடிஎஃப்) என புதிய பெயரிடப்பட இருக்கிறது என்பது எக்ஸ்ட்ரா தகவல். இந்நிலையில்தான் இந்த அமைப்பில் 'கிரஹான்' வெப் தொடருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரின் விசாரணை நடந்துச்சு. விசாரணையில் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, டி.எம்.சி.ஆர்.சி புகாரை தள்ளுபடி செய்துவிட்டது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் எட்டு எபிசோடுகள், பல மணி நேரங்கள் என ஓடும் ஒரு பெரிய தொடரை வெறும் 2 நிமிடம் 24 விநாடிகள் கொண்ட ட்ரெய்லரின் அடிப்படையில் தீர்மானிப்பது நியாயமற்றது. இந்த ட்ரெய்லர் எட்டு எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸின் ஒரு சிறிய பார்வை மட்டுமே. எந்தவொரு சமூகமும் இழிவான முறையில் இந்த ட்ரெய்லரில் மோசமாக சித்தரிக்கப்படவில்லை என்பதை கவுன்சில் ஏகமனதாக கண்டறிந்துள்ளது. புகாரில் சொல்லப்பட்டுள்ளபடி ஒரு சீக்கிய நபர் கலவரத்தை கட்டமைக்க முயற்சிப்பதாக எந்தவிதமான அனுமானமும் இதில் இல்லை. இந்த ட்ரெய்லர் சட்டத்தின் வரையறைக்குள் உள்ளது. எனவே, இந்த புகார் தகுதி இல்லாமல் உள்ளது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. காவிய பாடல்கள் படைத்த கவிஞர் கண்ணதாசன் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் 1930ம் ஆண்டில் பிறந்தார் தந்தை, கிராம அதிகாரி. அதே ஊரில் பள்ளிப் படிப்பு பயின்றார். சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 12 வயது முதலே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். இதனால் சினிமா ஆசை விழுதுவிட்டது. ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது நீர்க்குமிழி நாணல் விநோத ஒப்பந்தம்' உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. எம்.ஜி.ஆர். நடித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை 1964-ல் தொடங்கினார். அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது. 1981-ல் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறைந்த செலவில் நிறைவானப் படங்களைக் கொடுத்தவர். ரஜினி, நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்.பி.பி சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் பொய் ரெட்டைச் சுழி உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையேயான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் கருப்பொருளாக விளங்கின. கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கை தேர்ந்தவர் தண்ணீர் தண்ணீர் அபூர்வ ராகங்கள் எதிர் நீச்சல் வறுமையின் சிறம் சிவப்பு அக்னி சாட்சி வானமே எல்லை உன்னால் முடியும் தம்பி சிந்துபைரவி' உள்ளிட்ட ஏராளமான படங்கள் இவரைப் புகழேணியின் உச்சியில் ஏற்றின. 'இயக்குநர் சிகரம்' எனப் போற்றப்பட்டார். திரைத் துறையில் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் இவரை குருவாகப் போற்றினர் ரயில் சிநேகம் கை அளவு மனசு' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். சின்னத்திரையில் நெடுந்தொடர் முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான். இயற்கையை நேசித்தவர். மலையருவியும் கடற்கரையும் இவரது படங்களில் நிச்சயம் இடம்பெறும். 1995-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010-ல் தாதா சாகேப் பால்கே விருது, எட்டு முறை தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்ம அண்ணா விருது, கலைமாமணி, 12 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்றவர். அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்தவரும், திரைப்பட 'உலக பிரம்மா கலையுலக பாரதி' என்றெல்லாம் போற்றப்பட்டவருமான கே.பாலசந்தர் 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 84-வது வயதில் மறைந்தார். பாரத மக்கள் சமூக சேவை மையத்தின் நிறுவனர் தலைவர் சமூகசேவகி திருமதி.வெண்ணிலா அவர்கள் பாரத மக்கள் சமூக சேவை மையம் என்பது நலிவடைந்த மக்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் ஆகியோர்க்கு அடிப்படை தேவை மற்றும் உதவி செய்யும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும் மரக்கன்று நடுதல், மரக்கன்று நடுதலை ஊக்குவிப்பது அதன் பயன்களைப்பற்றி பொது மக்களுக்கு விளக்குதல் சாலை ஒரங்களில் இருக்கும் மக்களுக்கு பசிக்கு உணவு வழங்குதல் கொரோணா கால கட்டத்தில் தொடர்ந்து 60 நாட்களாக தினமும் 200 க்கு மேல் உணவு வழக்கப்பட்டது (சென்னை மற்றும் வடலுார் பகுதிகளில்) பெரும்பாக்கத்தில் உள்ள கவுசிங்போர்டுல் மட்டும் 1000 பேர்க்கு உணவு வழங்கப்பட்டுள்ளது மற்றும் கடலுார் மாவட்டத்தில் (60 நாட்களாக) இரவு உணவு மற்றும் காய்கறிகள், கபசுர நீர் போன்றவை வழங்கப்பட்டது முதியவர்களுக்கு முதல் உதவி செய்யப்பட்டு மிகவும் முடியாதவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறோம். மற்றும் சேலைகள், வேஸ்ட்டிகள் வழங்கப்பட்டது முதல் முறையாக மற்றும் கன்னியாகுமாி மாவட்டத்தில் உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கபசுர நீர் வழக்கப்பட்டது மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் காலை உணவு வழக்கப்பட்டது மற்றும் இன்று 13-07-2021 முதல் நாகப்பட்டினத்தில் ஆரம்பம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதற்கட்டமாக நலிவடைந்த மக்கள் மற்றும் நாட்டுப்புற கலை குழுவினரின் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டது நமது பாரத மக்கள் சமூக சேவை மையத்தில் சேர வேண்டும் என்றால் இது நமது அமைப்பின் வாட்ஆப் நம்பர் 7200040425 சமுகசேவையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் சேரலாம். எங்களது இணையவழி செய்திதாள் பக்கத்தில் அன்றாட நடைபெறும் அனைத்து பகுதி செய்திகள் உள்ளடக்கம் ஆகும் எங்கள் செய்தியாளர்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் துள்ளியமாகவும் மக்கள் எளிமையான வகையில் அனைவரும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இந்திய குடியரசு தினம் இன்று இதற்கான எல்லா ஏற்பாடுகளும் தீவிரம் ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதி விபத்து புகைப்படங்கள் சார்கண்டு மாநிலம் தியோகர் மாவட்டம், திரிகூட மலையில் அமைந்துள்ள பாபா வைத்தியநாத் மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற சென்ற வ்டவூர்த்திகள் (ஆங்கிலம்: Rope Car தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே மீிக நீண்ட செங்குத்தான வடவூர்த்தி பாதை இது என சார்கண்ட் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல்படையினர், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சப்பானின் முன்னாள் பிரதமராகப் பதவி வகித்த சின்சோ அபே இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சப்பானின் நாரா நகரிலமைந்துள்ள யமாடோ-சாய்தாய்சி தொடருந்து நிலையத்துக்கண்மையில் உரையாற்றிக்கொன்டிருந்த வேளையில் துப்பாக்கிதாரியொருவரின் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இறக்கும்போது இவருக்கு வயது 67. சப்பானின் மேலவைக்கான தேர்தல் வரும் சூலை 10, 2022 அன்று நடத்தப்படவுள்ள நிலையில், சப்பானின் தாராளமய மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரான கெய் சாதோவை ஆதரித்து உரையாற்ரிக்கொண்டிருந்த வேளையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நாரா நகரைச் சேர்ந்த தெத்சுயா யாமகாமி எனும் 42 வயதுடைய நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் உலங்கு வானூர்தி மூலமாக மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும் அம்முயற்சி பலனளிக்கவில்லை. சப்பானில் 1930களில் இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நிலவிய ஆயுதக்கலாச்சாரக் காலப்பகுதிக்குப் பின்பு, கொலைசெய்யப்பட்ட முதலாவது முன்னாள் அல்லது பதவியிலிருக்கும் பிரதமர் சின்சோ அபேயாவார். சின்சோ அபே சப்பானில் நீண்டகாலம் பதவிவகித்த பிரதமர் எனும் பெருமைக்குரியவராவார். சிகரம் தொட்ட ஆசிரியர், விவேகானந்தர் தேடிய கனவு இளைஞர், மகாத்மா காந்தி விருது, ஒளிரும் நேர்மறைச் சிந்தனையாளர் விருது, சமூகச் செயற்பாட்டாளர் விருது. தமிழனென்ற கர்வம் எனக்குண்டு, இந்தப்புத்தகம், இப்படிக்கு நான் குழந்தை தொழிலாளியின் மரண வாக்குமூலம், எல்லாமானவள், பூமியை வாழ விடு, இது காளைக்கான போராட்டம் அல்ல, என்னும் இவரது கவிதைகள் சிறப்பானவை. இப்படிக்கு நான் எனும் நூலிலுள்ள அவளும் நானும் கவிதை குமுதம் சினேகிதி இதழிலும் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. *பூமியை வாழ விடு* கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் பாராட்டினைப் பெற்றது குமுதம் சிநேகிதி இதழில் கனவு ஆசிரியர்கள்- தொடர் கட்டுரை. புதுவிழுது இதழில் கனவு மெய்ப்பட வேண்டும்- தொடர் கட்டுரை. மேன்மை,இனிய நந்தவனம்,புதுவரவு உள்ளிட்ட இதழ்களில் 100 க்கும் மேற்பட்ட சிறப்புக்கட்டுரைகள். ஆகியவற்றுடன் இணைந்து கல்வியின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நிகழ்வுகளை நடத்துபவர். கோடை பண்பலை மற்றும் இலங்கை வானொலி ஆகியவற்றில் இவரின் பல்வேறு கவிதைகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. தந்தி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விவாத மேடைகளிலும் உரையாற்றுபவர். அமெரிக்கா தொலைக்காட்சியான TET -இல் சிறப்பு விருந்தினர் பகுதியில் மனம் திறந்து என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார். *இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்* என்பது இவரது கொள்கை. தமிழ் INFOABLE ஒரு செய்திகள் இணையதளமாகும். இந்த இணையதளத்தில் கல்வி செய்திகள் மற்றும் தொழில்நுட்ப செய்திகள் மேலும் பொழுதுபோக்கு செய்திகளை வெளியிடும் ஒரு செய்தி வலைதளம். ஹஜ்ரத் சைதானி பி தர்கா மற்றும் அரபி உருது மதரஸா இது திருச்சிராப்பள்ளி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டை மெயின் ரோட்டில் போலீஸ் காலனி அருகில் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது. இந்த தர்கா வில் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஹஜ்ரத் சைதாபி என்ற பெண் இறை நல்லடியார் நல்அடக்கம் செய்யப்பட்டு அவருடைய அடக்கஸ்தலத்தை அப்போது இருந்த மக்கள் பாதுகாத்து அதன் மேல் கட்டிடம் கட்டி அதில் பாத்தியாக்கள் சந்தனக்கூடு வைபவங்கள் செய்து வந்துள்ளனர். அதன்பின் உள்ள மக்களும் இன்று வரை அவற்றை பாதுகாத்து வந்துள்ளனர். இந்த தர்காவிற்கு திருச்சியை ஆண்ட மங்கம்மா ராணி மற்றும் சில சிற்றரசர்கள் இந்த தர்காவிற்கு ஏராளமான சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது தற்போது இந்த தர்கா ஒரு கமிட்டி நிர்வாகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. தற்போது இந்த தர்காவில் அரபி மற்றும் உருது மதரசாவில் ஏராளமான ஆண் பெண் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காலை மாலை இருவேளையும் ஓதிக் கொடுக்கப்பட்டு பயனடைந்து வருகிறார்கள். இந்த தர்காவிற்கு சொந்தமாக இப்போது உள்ள மொத்த இடம் 2999 சதுர அடிகள் மட்டுமே. இப்போது இந்த தர்கா உடைய இடத்தை கட்டிடம் கட்டி அரபி உருது மதரசாவையும் பள்ளிவாசலாகவும் கட்டி அங்குள்ள மக்கள் பயனடைய நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.