\id 2PE \ide UTF-8 \h 2 பேதுரு \toc1 2 பேதுரு \toc2 2 பேது \toc3 2பேது \mt 2 பேதுரு \is ஆசிரியர் \ip 1 பேது 1:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2 பேதுருவின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பேதுரு ஆவார். 2 பேதுரு 3:1 ல், 2 பேதுருவின் ஆசிரியர் இயேசுவின் மறுரூப நிலைக்கு சாட்சியாக இருப்பதாக கூறுகிறார் (1:16-18). ஒருநோக்கு சுவிசேஷ புத்தகங்கள் கூறுகிறபடி, பேதுரு, இயேசுவோடு இருந்த மூன்று சீடர்களில் ஒருவராக இருந்தார் (மற்ற இரண்டு பேரும் யாக்கோபும் யோவானும் ஆவர்). 2 பேதுருவின் ஆசிரியர், இரத்தசாட்சியாக மரிக்கவேண்டும் என்ற உண்மையை (1:14) அவர் குறிப்பிடுகிறார் என்பதையும்; யோவான் 21:18-19 ல் இயேசு, பேதுரு கைதியாகக் கட்டப்பட்டப்பின் இரத்தசாட்சியாக மரிப்பார் என்று முன்னறிந்தார். \is எழுதப்பட்ட காலம் மற்றும் இடம் \ip ஏறக்குறைய கிபி 65-68 க்கு இடையில் எழுதப்பட்டது. \ip இதை அப்போஸ்தலன் தன் வாழ்நாளின் இறுதி வருடங்களில் ரோமிலிருந்து எழுதியிருக்கலாம். \is யாருக்காக எழுதப்பட்டது \ip முதல் பேதுருவைப் போலவே இது வடக்கு ஆசியா மைனரிலிருந்த அதே வாசகர்களுக்கு எழுதப்பட்டிருக்கலாம். \is எழுதப்பட்ட நோக்கம் \ip கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையை நினைவூட்டுவதற்காக (1:12-13, 16-21), விசுவாசத்தின் எதிர்கால தலைமுறையினரை அறிவுறுத்துவதற்காக (1:15) அதன் அப்போஸ்தல பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதற்காக (1:13-14; 2:1-3) பேதுரு எழுதினார், தனது நாட்கள் குறுகியது என்று அவர் அறிந்ததினாலும், தேவ மக்கள் அநேக ஆபத்துக்களை சந்திக்கிறதினாலும் பேதுரு இதை எழுதினார். தேவனுடைய வருகையை மறுதலிக்கிற கள்ளப் போதகர்களின் வருகையைக் குறித்து தன்னுடைய வாசகர்களை எச்சரிக்கும்படி பேதுரு எழுதினார் (2:1-22) (3:3-4). \is மையக் கருத்து \ip தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை \iot பொருளடக்கம் \io1 1. வாழ்த்துரை — 1:1, 2 \io1 2. கிறிஸ்தவ நல்லொழுக்கங்களில் வளர்ச்சியடைதல் — 1:3-11 \io1 3. பேதுருவின் செய்தி நோக்கம் — 1:12-21 \io1 4. தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை — 2:1-22 \io1 5. கிறிஸ்துவின் வருகை — 3:1-16 \io1 6. முடிவுரை — 3:17, 18 \c 1 \cl அத்தியாயம் 1 \p \v 1 நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது: \v 2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும். \s தேவனுடைய அழைப்பும், தெரிந்துகொள்ளுதலும் \p \v 3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல், \v 4 இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. \v 5 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும், \v 6 ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும், \v 7 தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள். \v 8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள். \v 9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான். \v 10 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை. \v 11 இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். \s சத்தியத்தின் தீர்க்கதரிசனம் \p \v 12 இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். \v 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து, \v 14 நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன். \v 15 மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன். \v 16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். \v 17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, \v 18 அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். \v 19 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும். \v 20 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். \v 21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள். \c 2 \cl அத்தியாயம் 2 \s கள்ளப்போதகர்களும், அவர்களுடைய அழிவும் \p \v 1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். \v 2 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். \v 3 பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது. \v 4 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; \v 5 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி; \v 6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து; \v 7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, \v 8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; \v 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார். \v 10 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள். \v 11 அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே. \v 12 இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள். \v 13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; \v 14 விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள். \v 15 செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி, \v 16 தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. \v 17 இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. \v 18 வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள். \v 19 தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. \v 20 கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும். \v 21 அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும். \v 22 நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது. \c 3 \cl அத்தியாயம் 3 \s கர்த்தருடைய நாள் \p \v 1 பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். \v 2 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன். \v 3 முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து, \v 4 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள். \v 5 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும், \v 6 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். \v 7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது. \v 8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம். \v 9 தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார். \v 10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும். \v 11 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! \v 12 தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். \v 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். \v 14 ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள். \v 15 மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; \v 16 எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள். \v 17 ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து, \v 18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.