ta_4831129_0 கொழும்பின் சில பிரதேசங்களில் நாளை காலை 9 மணியிலிருந்து 36 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ta_4831129_1 கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், பத்தரமுள்ள, மாலம்பே, தலங்கம, கொஸ்வத்தை, கலபழுவாவ, ஹல்பராவ, தலவத்துகொட, கலல்கொட, ஹோகந்தர மற்றும் ஜயவடனகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ta_4831129_2 மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கெஸ்பேவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளது. ta_4831129_3 இதேவேளை கொழும்பு 05, ஹைலெவல் வீதியின் ரயில் நிலைய சந்தியிலிருந்து கிருலப்பனை வரையுள்ள பிரதான மற்றும் குறுக்கு வீதிகள், பேஸ்லைன் வீதி ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் நாளை காலை 9 மணியிலிருந்து தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ta_4831129_4 கின்ஸி வீதி, கொட்டா வீதி, காசல் வீதி பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. ta_4831129_5 இதேவேளை வெள்ளவத்தை பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ta_4831129_6 பத்தரமுல்லை, பொல்தூவ புதிய பாலம் நிர்மாணிக்கப்படும் இடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள நீர்க் குழாய்களை, அம்பத்தலேயில் இருந்து கோட்டே வரையான நீர்விநியோக நிலையத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதே நீர் விநியோகம் தடைப்படுவதற்கான காரணம் என நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.