ta_3645980_0 நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ta_3645980_1 208 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தலை எதிர்வரும் 4 ஆம் திகதி அல்லது 5 ஆம் திகதி வௌியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். ta_3645980_2 எம். ta_3645980_3 மொஹமட் குறிப்பிட்டுள்ளார். ta_3645980_4 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகின. ta_3645980_5 இதன் பிரகாரம், எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ta_3645980_6 இம்முறை தேர்தலில் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்துதல் அவசியமாகும். ta_3645980_7 சுயேட்சை அணியில் களமிறங்கும் வேட்பாளர் 5 ஆயிரம் ரூபா வீதமும் கட்சியூடாகக் களமிறங்கும் ஒவ்வொரு வேட்பாளரும் 1500 ரூபா வீதமும் கட்டுப்பணம் செலுத்துதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.