ta_1327263_0 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ta_1327263_1 ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ta_1327263_2 ஜனாதிபதி சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ta_1327263_3 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் 14 கட்சிகள் தற்போது இணைந்துள்ளதாக இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். ta_1327263_4 கட்டுப்பணம் செலுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அனுர பிரியதர்ஷன யாப்பா, பெசில் ராஜபக்ஸ, ஏ.எச்.எம்.பௌசி ஆகிய அமைச்சர்கள் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.