ta_1172654_0 Colombo (News 1st) இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. ta_1172654_1 இலங்கையின் பொருளாதார நடவடிக்கை தொடர்பான ஆறாவது மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ta_1172654_2 இந்த செயற்றிட்டத்தினூடாக இலங்கைக்கு இதுவரை 1.31அமெரிக்க டொலர் நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது. ta_1172654_3 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் தற்போது வழமைக்கு திரும்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் Nishu Hiro Furusawan அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார். ta_1172654_4 2019 ஆம் ஆண்டில் 2.7 வீதமாகக் காணப்படும் பொருளாதார வேகம் 2020 ஆம் ஆண்டில் 3.5 வீதமாக அதிகரிக்கக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.