2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு 2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு என்பது சூலை 30, 2012 அன்று வட இந்தியாவில் 14 இந்திய மாநிலங்களில் நிலவிய திடீர் மின்வெட்டும் மறுநாள் சூலை 31இல் 21 மாநிலங்களைப் பாதித்த மின்வெட்டையும் குறிக்கின்றது. இதுவே உலகளவில் மிகப்பெரும் இருட்டடிப்பாக 600 மில்லியன் (60 கோடி) மக்களை அதாவது இந்தியாவின் பாதி மக்கள்தொகையை பாதித்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூலை 31 மாலை நிலவரப்படி வட இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களுக்கும் தலைநகர் தில்லிக்கும் பாதிக்கும் மேற்பட்ட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கும் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்தடங்கலுக்கு முந்தைய வாரங்களில் புது தில்லியில் நிலவிய மிகுந்த வெப்பநிலையால் மின்தேவை எட்டியிராத அளவுகளுக்கு உயர்ந்திருந்தது. இந்தியாவில் பருவமழை வரத்தவறியதால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயத்திற்கான பாசன நீரேற்றிகளுக்காக கூடுதலான மின்சாரத்தை மின்வலையிலிருந்து (power grid) நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கதிகமாக உறிஞ்சிக் கொண்டன. பருவமழை தாமதத்தால் நீர் மின்நிலையங்களின் உற்பத்தியும் குறைந்திருந்தது. பொதுவாகவே, இந்திய மின் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சி வீதத்தை 1.2 % பாதிக்குமளவு பின்தங்கி வருகிறது. சிறுசில்லி வளைவரைகளின் வகையீட்டு வடிவவியலில் சிறுசில்லி ("Roulette") என்பது வளைவரைகளில் ஒரு வகையாகும். வட்டப்புள்ளியுருக்கள், வெளிவட்டப்புள்ளியுருக்கள், உள்வட்டப்புள்ளியுருக்கள், சில்லுருக்கள், வெளிச்சில்லுருக்கள், உட்சில்லுருக்கள் மற்றும் கூம்பிகள் ஆகிய வளைவரைகள் சிறுசில்லி வகையைச் சேர்ந்தவை. ஒரு வளைவரையானது மற்றொரு வளைவரை மீது நழுவாமல் உருளும் போது உருளும் வளைவரையின் மீதுள்ள ஒரு புள்ளியின் பாதையை வரைந்தோமானால் கிடைக்கும் வளைவரை சிறுசில்லியாகும். அப்புள்ளி சிறுசில்லியின் "உருவாக்கி" அல்லது "துருவப்புள்ளி" எனப்படும். படத்தில் நிலையான வளைவரை ஒரு பரவளைவு (நீலம்) உருளும் வளைவரையும் ஒரு சமமான பரவளைவு (பச்சை) உருளும் வளைவரையின் உச்சியின் பாதை (சிவப்பு) ஒரு சிறுசில்லி வளைவரை. இந்தச் சிறுசில்லி, டையோக்ளசின் சிசாய்ட் (cissoid of Diocles) ஆகும். நிலையான வளைவரை சங்கிலியமாகவும் உருளும் வளைவரை கோடாகவும் கொண்டால்: கீழுள்ளவாறு அமையும்படி கோட்டினை அளபுருவாக்கம் செய்ய: மேலுள்ள வாய்ப்பாட்டினைப் பயன்படுத்த: "p" = −"i" எனில், இதன் கற்பனைப் பகுதி மாறாத ஒன்றாகவும் சிறுசில்லி கிடைமட்டக் கோடாகவும் இருக்கும். சங்கிலிய வளைவுத் தொடர்களாலான பாதையில் ஒரு சதுரச் சக்கரம் எகிறாமல் உருள்வது இதன் ஒரு சுவாரசியமான பயன்பாடு. அசோக சென் அசோக சென், (অশোক সেন) (பிறப்பு 1956), வேந்தியக் குமுகப் பேராளர் (FRS), ஓர் இந்தியக் கருத்திய இயற்பிலாளர். இயற்பியலில் இழைக்கொள்கை (string theory) என்னும் துறையில் வல்-மென் பிணைப்பின் இருமைத்தன்மைக் கொள்கை (strong-weak coupling duality or S-duality), பற்றிய இவருடைய கருத்தாக்கம் புகழ்பெற்றது. 1975 ஆம் ஆண்டு அசோக சென் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார், அதன்பின்பு மூன்றான்டுகள் கழித்து கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் நியூ யார்க்கு மாநிலத்தில் உள்ள இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகத்தில் 1982 இல் பெற்றார். அதன் பின் மூன்றாண்டுகள் வெர்மி செய்களத்திலும் (Fermlab), மேலும் இரண்டரை ஆண்டுகள் இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகத்திலும் (SLAC) பணியாற்றினார். 1988 இல் இந்தியாவுக்குத் திரும்பி டாட்டா அடிப்படை ஆய்வுக்கானா கழகத்தில் சேர்ந்தார். 1995 இல் அரீசு சந்திரா ஆய்வுக் கழகத்தில் முழுப் பேராசிரியராகப் பணியேற்றார். 1988 உக்கும் 2003 உக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஐக்கிய இராச்சியத்தில் கேம்பிரிட்சில் உள்ள ஐசாக்கு நியூட்டன் கல்விக்கழகத்தில் இராத்துச்சைல்டு வருகைப் பேராசிரியராகவும், 2003, 2004 ஆம் ஆண்டுகளில் எம்.ஐ.டி-யில் மார்னிங்சிட்டார் வருகைப் பேராசிரியராகவும் (Morningstar Visiting Professor) இருந்தார். இவர் அரீசுச் சந்திரஆ கல்விக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் சுமதி இராவைத் திருமணம் செய்துள்ளார். அசோக சென் 1989 இல் அபுதுசு சலாம் கருத்திய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவத்தின் (Abdus Salam International Centre for Theoretical Physics) பரிசாகிய ஐ.சி.டி.பி பரிசை வென்றார், பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் பதுமசிரீ பெருமைப்பட்டமும், 1998 இல் ஐக்கிய இராச்சியத்தில் வேந்தியக் குமுகத்தின் பேராளர் (FRS) பட்டமும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு கணிதவியலுக்கான இன்போசிசுப் பரிசு (Infosys Prize) பெற்றார். உருசிய இயற்பியலாளரும் தொழில்முனைவோருமான இயூரி மில்னர் இயற்பியலுக்காக உருவாக்கிய அடிப்படை இயற்பியல் இயூரி மில்னர் பரிசை ஆகத்து 1, 2012 இல் வென்றார் ஆளோலை ஆளோலை என்பது பண்டைய தமிழகத்தில் இருந்த ஓர் அடிமை முறையாகும். அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் ஓலைக்கு ஆளோலை என்று பெயர். நானும், என் வழித் தோன்றல்களும் உங்களுக்கும் உங்கள் சந்ததியாருக்கும் அடிமை என்று ஒருவர் ஓலையில் எழுதித் தருதல் ஆகும். ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும். தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம். தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன. அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை. சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர். அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன". பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் கங்கையு மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல் வைத்த கங்கை, நிலா, பாம்பு, கொன்றை என்ற இவற்றைத் தம்முடியிலே வைத்த சிவபெருமானால் ஆளோலை காட்டி வலிய ஆட்கொள்ளப்பெற்றவராகிய ஆலாலசுந்தரர் என்பது இப்பாடல் பொருளாகும். சமூகத்தின் அடிமட்டத்தில் வலுவற்று இருந்தவர்களை ஆளோலை முறைப்படி அடிமைப்படுத்தும் வழக்கம் இக்காலத்தில் இருந்ததைச் சுந்தரரின் வரலாறு புலப்படுத்துகிறது. சுந்தரருக்குத் திருமணம் நிகழ இருக்கின்ற தருணத்தில் அங்கே வரும் வயது முதிர்ந்த ஒருவர், சுந்தரரின் பாட்டனார் தம்மையும், தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை எழுதிக் கொடுத்ததைக் கூறித் திருமணத்தைத் தடுத்து விடுகின்றார். சுசில்குமார் சிண்டே சுசில்குமார் சிண்டே ("Sushilkumar Shinde", , சுஷில்குமார் ஷிண்டே) (பிறப்பு: 4 செப்டம்பர் 1941; சோலாப்பூர், மகாராட்டிரம்) மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தற்போது மன்மோகன் சிங் தலைமையேற்கும் நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக உள்ளவரும் ஆவார். ஒற்றி வைத்தல் ஒற்றி வைத்தல் என்பது நிலத்தை அடமானம் வைத்துப் பணம் பெறும் முறை ஆகும் பணம் கிடைத்ததும் அதைத் தந்து மீட்க வேண்டும். ‘ஒற்றியூர்' என்ற இடத்துச் சிவனைப் புகழும் பதிகத்தில் இவ்வழக்கம் சொல்லப்பட்டுள்ளது. ஒற்றி வைத்தலை இந்நாளில் அடகு வைப்பதென்பர். அது பொருளாக எழுதப் படும் சாசனத்தை அடைமானம் என்பர். முன்னை நாளில் அடைமானத்தை ஒற்றிக் கலம் என்றனர். ஒற்றி வைத்தல், மக்களிடையே தாழ்வுடைச் செயலாகக் கருதப்பட்டது. விளைநிலத்தையோ வீட்டையோ பணம் பெற்றுக் கொண்டு வேறு ஒருவரின் பயன்பாட்டுக்கு விடுவதை வழக்கில் "ஒத்திக்கு விடுதல்" என்றும் சொல்லுவர். யாழ்ப்பாணத்து மரபுவழிச் சட்டமான தேசவழமையில் ஒற்றி குறித்து விபரமாக எடுத்தாளப்பட்டுள்ளது. இவ்வகை ஒற்றி தேசவழமைக்குத் தனித்துவமான ஒன்று. ஒற்றி வைத்தல், ஒற்றியை மீள்வதற்கான முறைகள், அதற்கான கட்டுப்பாடுகள், ஒற்றி கொள்பவனுக்கு உரிய கடமைகள், ஒற்றி வைப்பதற்கு உரிய சொத்துக்கள் போன்றவை குறித்த விபரங்களைத் தேசவழமை தருகின்றது. யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்தாவது வழக்கில் இருந்துவரும் இந்த ஒற்றி குறித்த வழமைகள், போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும் வழக்கில் இருந்து வந்தது. பிற்காலத்தில் தேசவழமையில் உள்ள இவ்விதிகளின் பயன்பாடு இல்லாமல் ஆக்கப்பட்டுப் பிற வழக்கில் உள்ள குடியுரிமைச் சட்டங்களின் அடிப்படையிலேயே ஒற்றி வைத்தலும், ஒற்றி கொள்ளலும் நடைபெற்று வருகிறது. சரக் கோட்பாடு இழைக்கொள்கை ("சரக் கோட்பாடு") என்பது இயற்பியலில் அடிப்படைத் துகள்களாகக் கருதப்படும் குவார்க்கு, எதிர்மின்னி போன்றவற்றுக்கும் புவியீர்ப்புப் போன்ற பொருளீர்ப்பு விசைக்கு அடிப்படையாகக் கருதும் ஈர்ப்பியான் (கிராவிட்டான், graviton) ஆகியவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத இழைபோன்ற அலைவுறும் ஒன்று என்று கருதபப்டுகின்றது. அணுவின் உள்ளே உள்ள பொருள்களையும் ஈர்ப்புவிசையையும் இணைக்கும் முகமாக, அல்லது அப்படி இணைத்துப் பார்க்ககூடிய வாய்ப்புக்கூறுகள் கொண்டதாக இந்த இழைக்கொள்கை இருப்பதால் இதனை எல்லாவற்றுக்குமான கொள்கை (theory of everything, TOE) என்னும் மிகப்பெரிய ஒன்றிணைப்புக் கொள்கைக்கு வழிகோலியாகக் கருதப்படுகின்றது. முதலானவற்றுக்கு அணுக்களுக்கு உள்ளே உள்ள அணுக்கருவுக்கு உள்ளேயுள்ள அடிப்படைத்துகளு அடிப்படையாக இருக்ககூடிய குவார்க்கு எதிர்மின்னிString இந்த இழைக்கொள்கையின்படி அணுவுக்குள் இருக்கும் குவார்க்கு, எதிர்மின்னி முதலானவை 0-திரட்சி (0-பரிமாணம்) கொண்ட பொருள்கள் அல்ல; அவை நூலிழை போன்ற மிக நுண்ணிய அலையக்கூடிய "பொருள்களால்" ஆனவை ஆகும். போசான் இழைக்கொள்கை என்பது போசான் புள்ளியியல் தன்மை கொண்ட பொருள்களுக்கும் மட்டுமானது, ஆனால் இதன் விரிவான மீயிழைக் கொள்கை (superstring theory) என்பது எதிர்மின்னிகள் போன்ற வெர்மியான்களையும் இணைக்க உதவியது. இழைக்கொள்கையின் பயன்பாட்டுக்கு இப்பொழுது அறியப்படும் இடங்காலவெளியையும் (spacetime) தாண்டி மிகுநுண் வெளித்திரட்சிகள் தேவைப்படுகின்றன. இக் கொள்கை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. கருத்தளவில் இழைக்கொள்கையின் அமைப்பை வலப்புறம் உள்ள படம் விளக்குகின்றது சுந்தர பாண்டியன் (1216-1238) பாட்டு சுந்தர பாண்டியன் (1216-1238) சோழமன்னன் மூன்றாம் இராசராசனை வென்றவன். இந்த வெற்றியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது. வெற்றியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும் தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே அனுராதா கொய்ராலா அனுராதா கொய்ராலா(Anuradha Koirala) பாலியல் தொழிலுக்கு அடிமையாக்கப்பட்ட ஏறத்தாழ 12 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்ட சமூகப் போராளி. கொய்ராலாவின் சமூகப் பணிகளுக்காக 2006, ஆகஸ்ட் 26-ல் உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார். சி.என்.என். இணையத்தளம் மூலமாக 2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக அனுராதா தேர்ந்தெடுக்கப்பட்டவர். "மைதி நேபாள்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் அனுராதா, இளம்வயதிலேயே ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் . அப்போது ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலம் போதித்துக் கொண்டிருந்தார். அந்த உறவிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து மூன்று முறை தோற்றார். யாரிடம் போய் இதையெல்லாம் புகார் தெரிவிப்பது, யார் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று திக்குத் தெரியாமல் தவித்தார். எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார். 1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது. கடந்த 1993-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்க உறுதுணை புரிந்துள்ளார். மீட்கப்பட்டவர்கள் புது வாழ்க்கையை அமைத்து தந்ததோடு, நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் பெற வழிவகை செய்து வருபவர். அனுராதா கொய்ராலாவும் அவரது மைதி நேபால் அமைப்பும், மிகப் பெரிய பாலியல் சந்தையாகக் கருதப்படும் இந்திய – நேபாள எல்லையில் விற்கப்படும் இளம்பெண்களை தடுத்து காப்பாற்றி வருகின்றனர். 1993-லிருந்து இவர்களால் இதுவரை 12000 பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.உலக ஹீரோவாக தேர்வு பெற்ற அனுராதாவுக்கு தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதற்காக 25,000 டாலர்கள் தொகையுடன், 1,00,000 டாலர்கள் பரிசு வழங்கப்படுகிறது. மைத்தி நேபாள் மைத்தி நேபாள் ("Maiti Nepal", நேபாளம்: माइती नेपाल) என்பது நேபாளத்திலுள்ள ஒரு சமூக சேவை அமைப்பாகும். இதனைத் தொடங்கியவர் சமூக சேவகரான அனுராதா கொய்ராலா என்பவர். நேபாளத்தில் இருந்து ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பெண்கள் வரை நைச்சியமாக ஏமாற்றப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாலியல் தொழில் செய்ய முறைகேடாக அனுப்பப்படுகிறார்கள் என்பது அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் ஒரு கணக்கெடுப்பு ஆகும். 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது 'மைத்தி – நேபாள்' அமைப்பு இதுவரை 12,000த்துக்கும் மேற்பட்ட நேபாளப் பெண்களை பாலியல் தொழிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. காப்பாற்றப்பட்ட பெண்கள் பலரையும் அவரவர் பெற்றோர் வசம் ஒப்படைத்துள்ளது. இந்த சேவைக்காக அனுராதா கொய்ராலா, 2006, ஆகஸ்ட் 26-ல் உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார். சி.என்.என். இணையத்தளம் மூலமாக 2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மைத்தி' என்ற நேபாளச் சொல்லுக்கு 'தாய்' என்பது பொருள். ஆங்கிலம்கற்பிக்கும் ஆசிரியராக இருந்த கொய்ராலா இளம் வயதில் ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இவர். எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார். 1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது. பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, தேவைப்பட்டால் சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது, பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பெண்களுக்கு மறுவாழ்வு என்று மைத்தி தனது செயற்பாடுகளை உருவாக்கிக் கொண்டது. காவல் துறையினர் துணைகொண்டு பாலியல் விடுதிகளை சோதனை செய்து பெண்களை மீட்பது, இந்திய-நேபாள எல்லையில் ரோந்து மூலமாக நடக்கும் மனித வணிகத்தை தடுப்பது போன்ற பணிகளில் மைத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மைத்திக்கு கிளைகள் இந்தியாவிலும், நேபாளத்திலும் ஏராளமாக உண்டு. மறுவாழ்வு முகாம், காத்மாண்டுவில் மட்டுமே இருக்கிறது. நம்பிக்கை மொத்தத்தையும் இழந்து, நோய்கண்டு, சிறுகுழந்தைகளோடு அல்லது கர்ப்பமடைந்த நிலையில் என்று பாலியல் முகாமிலிருந்து வெளியே வரும் பெண்கள் பலரும் நிச்சயமற்ற எதிர்காலத்தோடு வாழ வழியின்றி நிர்க்கதியாக தவிக்கிறார்கள். குறிப்பாக மனரீதியாக உடைந்துப்போயிருக்கிறார்கள். மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை, பழைய தொழிலில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டரீதியிலான அறிவுரை மற்றும் சட்ட நடைமுறைகள் என்று அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீட்கப்படும் பெண்களில் சிலரை மட்டுமே அவர்களது குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் இதர பாலியல் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபமானது. இவர்களுக்காகவே ஒரு சிறப்பு முகாம் மைத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று இங்கே கிட்டத்தட்ட 400 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மறுவாழ்வு வழங்கப்படுகிறது. நிறைய ஆசிரியர்களும், மருத்துவர்களும், பணியாளர்களும் இவர்களுக்கு சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். இங்கே பணிபுரியும் பணியாளர்களில் பலரும் 'மறுவாழ்வு' பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க இருந்து, இன்று மைத்திக்கு குவிந்துவரும் நிதியால் இவ்வமைப்பு இயங்க முடிகிறது. அமெரிக்கா அரசாங்கம் இந்நிறுவனத்திற்கு 2010 ஏப்ரல் மாதம் 500,000 டாலர் நிதி வழங்கியது. அனுராதா கொய்ராலாவும், மறுவாழ்வு வாழும் சுமார் ஐம்பது பெண்களும் அடிக்கடி சமூகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். பாலியல் கடத்தல் குறித்து நகர்ப்புற விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி இந்திய – நேபாள் எல்லையில் ரோந்து நடத்தி, கடத்தப்படும் குழந்தைகளில் ஒரு நாளைக்கு நான்கு பேரையாவது மீட்கிறார்கள். வீரப்ப மொய்லி மூடுபித்ரி வீரப்ப மொய்லி ("Moodbidri Veerappa Moily", ) (பிறப்பு: சனவரி 12, 1940) கருநாடக மாநில அரசியல்வாதியும் நடுவண் அரசின் முன்னாள் வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார். மொய்லி துளு இனத்தைச் சேர்ந்த முதல் கருநாடக முதலமைச்சராக நவம்பர் 19, 1992 முதல் திசம்பர் 11, 1994 வரை பணியாற்றி உள்ளார். உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆந்திர அரசியலை கண்காணித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார். செம்மலர் (இதழ்) செம்மலர் என்பது தமிழில் வெளிவரும் ஒரு இலக்கிய மாத இதழ். இது கடந்த நாற்பது ஆன்டுகளாக மதுரையிலிருந்து வெளிவருகிறது. நல்ல இலக்கியத்தை வளர்த்தெடுப்பது, நச்சு இலக்கியங்களை எதிர்ப்பது என்ற உயரிய கோட்பாடுகளுடன் பரவலான வாசகர்களைக் கொண்ட செம்மலர் இதழின் ஆசிரியராக எஸ்.ஏ.பெருமாள் பணியாற்றுகிறார். இன்று தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் பெரும்பாலோர் செம்மலரில் எழுதத்துவங்கியவர்கள்தான். புதிதாக எழுத ஆர்வம் கொண்ட இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முக்கிய இலக்கியப் பணியினையும் செம்மலர் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. கணேஷ் சங்கர் வித்யார்த்தி கணேஷ் சங்கர் வித்யார்த்தி ("Ganesh Shankar Vidyarthi", 26 அக்டோபர் 1890-25 மார்ச் 1931, கான்பூர்), ஓர் இந்திய இதழியலாளரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தலைவரும், விடுதலை இயக்கவாதியும் ஆவார். இந்தி மொழி செய்தித்தாளான பிரதாப்பின் நிறுவன ஆசிரியராகப் பெரிதும் அறியப்படுகிறார். நடுவண் அரசின் மைய இந்தி சன்சுதான் இவர் நினைவாக சிறந்த இந்தி மொழி இதழியலாளர்களுக்கு கணேஷ் இந்தி வித்யார்த்தி விருது வழங்கி வருகிறது. தொகையடியார் தொகையடியார் என்போர் திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரும் ஆவர். இவர்கள் பற்றிய தகவல்களைப் பெரியபுராணம் தருகிறது. அவர்கள் பின்வருவோராவர். பன்னிரண்டாம் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தை உள்ளடக்கியுள்ளது. சேக்கிழார் நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவராதலால், நம்பியாண்டார் நம்பியால் பகுக்கப்பட்ட ஆரம்பத் திருமுறைப் பகுப்பில் இது உள்ளடக்கப்படவில்லை. பிற்காலத்தில் இது பதினொரு திருமுறைகளுடன் பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது. செவிலியர் கல்லூரிகள் மனிதர்களுக்கான உடல் நலத்தில் நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவக்கூடிய கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் செவிலியர் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் செவிலியர் கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் செவிலியர் கல்விக்கான 125 சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. செவிலியர் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் இரு வகையாக உள்ளன. செவிலியர் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் அரசுக்கல்லூரி 1 மற்றும் 37 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது. இந்தப் பட்டப்படிப்புகள் பாடங்கள் மற்றும் இடங்கள் ஆகியவை கல்லூரிகளுக்கேற்ப மாறுபடுகின்றன. குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் ("Institution of Civil Engineers") என்பது இலண்டனின் நடுப்பகுதியில் பணித்தலைமையிடம் அமைந்துள்ள குடிசார் பொறியாளர்களுக்கான தொழில்சார் கழகம் ஆகும். சனவரி 2, 1818இல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தைப் போலவே, இப்போதும் இதன் உறுப்பினர்களுட்பெரும்பாலானோர் பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் ஆவர். ஆனாலும் இந்நிறுவனம் 150இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், 2008இல் மொத்தமாக 80000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவம்பர் 2011இலிருந்து குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவராக இரிச்சர்டு கோக்லி பொறுப்பேற்றுள்ளார். குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர்களாகச் சிறந்த பொறியாளர்கள் பலர் பதவியேற்றுள்ளனர். அவர்களுட்சிலர் பின்வருமாறு:- குடிசார் பொறியியலில் பல்லாண்டுகளாகப் பெறுமதி வாய்ந்த பங்களிப்புகளை வழங்கிய தனியாட்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. ஈடுபாட்டுடன் பெறுமதி மிக்க பணியைக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்துக்கு வழங்கிய குடிசார் பொறியாளர்கள் நிறுவன உறுப்பினர்களுக்குக் கார்த்து வாட்சன் பதக்கம் வழங்கப்படுகின்றது. குடிசார் பொறியியலில் அணிகள், தனியாட்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்குப் புருனெல் பதக்கம் வழங்கப்படுகின்றது. பொறியியற்றிட்டத்தில் படைப்புத் திறனுடனான வடிவமைப்புக்கு எட்மண்டு அம்பலிப் பதக்கம் வழங்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியில், குடிசார் பொறியியலில் ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய குடிசார் பொறியாளர்களுக்கு அனைத்துலகப் பதக்கம் வழங்கப்படுகின்றது. குடிசார் பொறியாளர்கள் நிறுவன உறுப்பினர்கள் அவர்களது இடங்களுக்குச் செய்த பெறுமதி மிக்க பணிகளுக்காக வாரன் பதக்கம் வழங்கப்படுகின்றது. குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தால் ஆய்வுக்காக வழங்கப்படும் உயர்விருது தெல்வோர்டு பதக்கம் ஆகும். கனேடிய வங்கி கனேடிய வங்கி (பிரெஞ்சு:Banque du Canada) கனடாவின் மைய வங்கியாகும். கனடாவின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சியில் இவ்வங்கி பெரும்பங்காற்றுகிறது. இதன் தலைநகரம் ஒட்டாவாவில் உள்ளது. இவ்வங்கியின் தலைவர் ஆளுனர் ஆவார். ஆளுனரின் பதவிக்காலம், ஏழாண்டுகளாகும். இயக்குனர்களின் குழு, ஆளுனரைத் தேர்வு செய்யும். அரசினால் இப்பதவி பறிக்கப்படலாம், என்றாலும், இதுவரை இவ்வாறு நடந்ததில்லை. ஆளுனர் பணக் கொள்கையை அமைப்பதில் முக்கிய பங்காற்றுவார். அசைவுப் பார்வையின்மை அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும். இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடு உடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், இந்நிலையில் குவளையின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ள தேநீரை நோயாளி பார்க்கின்றார். ஆனால், குவளை முழுவதும் தேநீர் நிரம்பிவிட்டதைப் பார்ப்பதற்கு தாமதம் ஏற்படுகின்றது, எனவே தேநீரை குவளையின் கொள்ளளவையும் விட மிகையாக நிரப்புவதால் குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுகின்றது. அதாவது, நோயாளி முதலில் பார்த்தது குவளையின் அரைவாசிப் பாகத்தில் உள்ள தேநீரை என்று கொண்டால், பின்னர் அவர் பார்ப்பது குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதை ஆகும். இந்நோய்க்கு இன்னமும் உகந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. எசு. நவராசு செல்லையா எசு. நவராசு செல்லையா (பிறப்பு 1937 - இறப்பு 2001) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது. விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார். முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். விளையாட்டு இசைப்பாடல்கள் என்னும் ஒலிநாடாவை 1978-ம் ஆண்டு வெளியிட்டார். விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் “ஒட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு தயாரிப்பு முதலிய பொறுப்புகளையும் ஏற்று திரையிட்டார். உடற்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு தமிழ்நாடு அளவிலே “உடற்கல்வி கலைமாமணி” என்ற விருதையும், ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்து விளங்கும் உடற்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு “உடற்கல்வி ஜீவ ஜோதி” என்ற விருதையும் வழங்கிப் பாராட்டி வந்தார். ஒலிம்பிக் பந்தயத்தின் கதை, விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும், விளையாட்டுக்களின் கதைகள் முதலிய நூல்களுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுத் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலகப் பொதுமறை திருக்குறளுக்கு புதிய சிந்தனைகளுடன் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் புதிய உரை என்ற நூலையும் எழுதியுள்ளார். 2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தட கள விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. தட கள விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுக்கள் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நீச்சல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. நீச்சல் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. சுந்தர பாண்டியன் (1251-1271) பாட்டு சுந்தர பாண்டியன் (1251-1271) தில்லை கோயிலில் துலாபாரம் செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் ஒன்று தில்லை கோயில் சுவரில் உள்ளது. தன் எட்டைக்கு எடை பொன்னும் முத்தும் இவன் கோயிலுக்குத் தானமாகத் தந்திருக்கிறான். இதனைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் இனவரிக் கிம்புரி வெண்பிறை கோட்டிகல் வெங்கடுங்கட் சினமதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில் வனசத் திருவுடன் செஞ்சொல் திருவை மணந்ததொக்கும் கனகத் துலையுடன் முத்தம் துவையில் கலந்ததுவே விக்கிரம பாண்டியன் (1248-1258) பாடல்கள் விக்கிரம பாண்டியன் (1248-1258) சுந்தர பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசனாக ஆட்சி புரிந்து வந்தான். புவனேக வீரன் என்பது இவனது பட்டப்பெயர். புவனகிரி என்னும் ஊர் இவன் பெயரால் தோன்றிய ஊர். இவனைப் பற்றிய ஆவணப் பாடல்கள் பல உள்ளன. காகதீய குல வீரகண்ட கோபாலனை வென்று அவனது நாட்டைக் கணபதி என்பவனுக்கு அளித்தது, மற்றொரு தெலுங்குப் பகுதியில் ருத்திராம்பா என்னும் அரசி ஆண்வேடம் பூண்டு அரசாண்டது போன்ற செய்திகள் இவனைப்பற்றிய ஆவணப்பாடல்களில் உள்ளன. அவற்றில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. புயலும் தருவும் பொருகைப் பவனேக வீரபுனல் வயலும் தானம்தரும் கொற்கைக் காவல வாரணப்போர் முயலும் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்திரண்டு கயலுண் டெனுமது வோமுனி வாறிய காரணமே வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே பொங்கி வடதிணையிற் போகாதே – அங்கிருப்பாள் பெண்ணென்று மீட்ட பெருமாளே பேரிசையாழ்ப் பண்ணொன்று வேய்வாய் பகை. கூம்பி (வளைவரை) ஒரு வளைவரையின் கூம்பி அல்லது உட்சுருள்வரை ("involute") என்பது சிறுசில்லி வகையைச் சேர்ந்த மற்றொரு வளைவரை ஆகும். இதில் "உருவாக்கும் புள்ளி"யைத் தன் மேல்கொண்ட ஒரு கோடு உருளும் வளைவரையாக இருக்கும். கூம்பி உருவாக்கப்படும் முறை: தரப்பட்ட வளைவரை மேல் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அப்புள்ளியில் ஒரு கயிற்ற்றின் ஒரு முனையை இணைக்க வேண்டும். பின் கயிற்றின் மறுமுனையைக் கயிறு தொய்வில்லாமல் இருக்குமாறு பிடித்துக் கொண்டபடியே வளைவரையின் மீது சுற்ற, கயிற்றின் மறுமுனையின் பாதையை வரைந்தோமானால் கிடைக்கும் வளைவரை தரப்பட்ட வளைவரையின் கூம்பியாகும். கூம்பியாக அமையும் வளைவரைக்கு முதலில் எடுத்துக்கொள்ளப்பட்ட வளைவரை மலரி எனப்படும். (, ) கூம்பியை வரையும் முறையில் கயிற்றுக்குப் பதிலாக வளைவரைக்குத் தொடுகோடாக இருக்கும் ஒரு கோட்டுத்துண்டை எடுத்துக் கொள்ளலாம். இக்கோட்டுத்துண்டின் ஒரு முனை வளைவரையின் மீது தொடுபுள்ளியாக இருக்கும். மற்றொரு முனையின் பாதை கூம்பியாக அமையும். இம்முறையில் தொடுபுள்ளி வளைவரை மீது நகரும் வில்லின் நீளத்தின் அளவில் தொடுகோட்டின் நீளம் மாறும். formula_2 ஒரு வட்டத்தின் கூம்பியின் வடிவம் ஆர்க்கிமிடியச் சுருள் போல இருக்கும். இங்கு formula_5 வட்டத்தின் ஆரம். formula_6 ரேடியனில் கோணத் துணையலகு (formula_7). இங்கு formula_11 வட்டத்தின் ஆரம். formula_12 இடைவெளியில் அமையும் துணையலகு formula_13 வட்டத்தின் கூம்பியின் வில்லின் நீளம்: பற்சக்கரத் துணைப்பொறியின் பற்களை வடிவமைப்பதில் வட்டத்தின் கூம்பி வடிவம் ஆய்லரால் பரிந்துரைக்கப்பட்டது. இன்றும் இவ்வடிவம் உள்சுருள்வரை பல்சக்கர அமைப்பில் பயன்பாட்டில் உள்ளது. சங்கிலியத்தின் உச்சி வழியே அமையும் அதன் கூம்பி ஒரு (tractrix). கார்ட்டீசியன் ஆள்கூறுகளில் அதன் சமன்பாடு: formula_20 formula_21 இங்கு "t" என்பது துணையலகு. ஒரு வட்டப்புள்ளியுருவும் அதன் கூம்பியும் ஒன்றுக்கொன்று வடிவொத்தவை. அப்பாச்சி கோர்டோவா அப்பாச்சி கோர்டோவா (ஆங்கிலம்: Apache Cordova) அல்லது போன்கேப் (PhoneGap) என்பது வெப்வியூ (webview), யாவாசிகிரிப்டு, எச்.டி.எம்.எல்(5) மற்றும் சி.எசு.எசு(3) பயன்படுத்தி மொபைல் சாதன பயன்பாடுகள் எழுத அப்பாச்சி மற்றும் நிடோபி (Nitobi) (இப்பொழுது அடோப் சிஸ்டம்ஸ்) வெளியிட்ட ஒரு மென்பொருள் உருவாக்கத் தொகுதியாகும். அப்பாச்சி கோர்டோவா பயன்பாடுகளை இலவசமாக கிடைக்கின்ற Eclipse அல்லது ஆப்பிள் xCode தொகுப்பியைப் பயன்படுத்தி எழுதலாம். குவைத் மீதான படையெடுப்பு குவைத் மீதான படையெடுப்பு அல்லது ஈராக்-குவைத் போர் என்பது ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையே இடம்பெற்ற பெரும் முரண்பாடாகும். இது ஏழு மாதங்கள் ஈராக் குவைத்தை ஆக்கிரமிக்க வழிகோலியது. பின்னர், இதுவே அமெரிக்கா தலைமையிலான படைகள் வளைகுடாப் போரை நடாத்த காரணமாகியது. வெந்நீரூற்று வெந்நீரூற்று என்பது புவியின் மேலோட்டில் உள்ள நிலத்தடிநீர் (groundwater), குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது. இந்த வெந்நீரூற்றுக்கள் வெவ்வேறு அளவான ஓட்டங்களைக் கொண்டிருக்கும். சில மிக மெதுவான ஓட்டத்தைக் கொண்ட ஊற்றுக்களாகவும், சில ஆறு போன்ற ஓட்டங்களைக் கொண்டனவாகவும் இருக்கும். சில வெந்நீரூற்றுக்களில் ஏற்படும் அமுக்கமானது பீறிடும் வெந்நீரூற்றுக்களை உருவாக்கக் கூடியளவு அதிகமாக இருக்கும். சூடான நீரில் திண்மப் பொருட்கள் இலகுவில் கரையக் கூடியனவாக இருப்பதனால், வெந்நீரூற்றுக்களில் அதிகளவில் கனிமங்கள் காணப்படும். இதனால் இந்த வெந்நீரூற்றுக்களில் உள்ள நீரில் பல மருத்துவ பயன்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பது மட்டுமல்லாமல், இயலாத்தன்மை உள்ளவர்களுக்கான உடலியக்க மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கும் நிலையங்களுக்கான இடங்களாகவும் அமைந்துள்ளன. ந. சஞ்சீவி பேராசிரியர் ந. சஞ்சீவி (1927 - 1988) இன உணர்வாளர்; மொழிக் காப்பாளர்; சமுதாயச் சிந்தனையாளர்; அறிவியல் கோட்பாட்டாளர்; பேராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி, 2.5.1927ஆம் நாள் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய மு. நடேசனார், கண்ணம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் திருச்சியில் உள்ள பள்ளிகளிலேயே படித்து முடித்தார். பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1941-43ஆம் கல்வியாண்டுகளில் பயின்று இடைக்கலைப் (Intermediate) பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1943-45 ஆம் கல்வியாண்டுகளில் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் (மு.வ) ஆகிய பேராசிரியர்களிடம் பயின்று சிறப்புத் தமிழில் இளங்கலைப் (Bachelor of Arts) பட்டமும் 1947-50 ஆம் கல்வியாண்டுகளில் பயின்று கீழ்த்திசை மொழிகளில் சிறப்பு இளங்கலைப் பட்டமும் (Bachelor of Oriental Language - Honours) பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் புறநானூற்று ஆராய்ச்சி என்னும் பொருளில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டமும் பேராசிரியர் மு.வ.வின் வழிகாட்டுதலில் சங்க நூல்களில் அடைவளம் என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1969ஆம் ஆண்டில் முனைவர் (Doctor of Philosophy) பட்டமும் பெற்றார். இவைதவிர மானுடவியல், அரசியல், ஆட்சியியல் ஆகியவற்றில் நிறைசான்றிதழ்களும் (Diplomas) மொழியியல், இயற்கை வைத்தியம், செர்மன், பிரஞ்சு, உளவியல் ஆகியவற்றில் சான்றிதழ்களும் (Certificates) பெற்றார். 1950 – 60 ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர்.
1960 – 65 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்விரிவுரையாளர்.
1965 -71 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இணைப் பேராசிரியர்.
1971- 76 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர்.
1976–80 ஆம் ஆண்டுகளில், இந்திராகாந்தியால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலை எதிர்த்ததால், பணி இடைநீக்கம்.
1980 – 87 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர். சேலம் பிசப்பு டாக்டர் கால்டுவெல் 1881ஆம் ஆண்டில் எழுதிய "History of Tinnaveli" என்னும் ஆங்கில நூலை ”தென்பாண்டித் திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு” என்னும் நூலை தம் மனைவியார் பேராசிரியர் கிருஷ்ணா சஞ்சீவியோடு இணைந்து 1977ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். • செந்தமிழ் இலக்கியச் செம்மல், தருமபுர ஆதினம், 1970
• நூலறிபுலவர், குன்றக்குடி ஆதினம், 1973
• சிந்தனைச் செம்மல் 1942ஆம் ஆண்டில் திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது நடைபெற்ற இந்தியாவைவிட்டு வெளியேறுக! (வெள்ளையனே வெளியேறு) இயக்கத்தில் பங்கேற்றார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்களாட்சி சமுதாய உடைமை தமிழகக் குடியரசு (Democratic Socialistic Republic of Tamilnadu ) என்னும் நோக்கில் ம.பொ.சிவஞானம் நடத்திய தமிழரசுக் கழகத்தில் உறுப்பினராக அதனுடைய தொடக்க நாள் முதல் தன்னுடைய இறுதிநாள் வரை இருந்தார். 22.8.1988ஆம் ஆண்டு சென்னையில் மரணமடைந்தார்
ஆலோஅல்கேன் ஆலோஅல்கேன் ("haloalkanes", "halogenoalkanes" அல்லது "alkyl halides") எனப்படுவது அல்கேன் ஒன்றுடன் உப்பீனிகள் (ஹாலஜன்) சேருவதன் மூலம் உருவாகும் கரிமச் சேர்மமாகும். ஹலோஅல்கேன்கள் வர்த்தகரீதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தீயணைப்புக் கருவியாகவும், குளிரூட்டி, கரைப்பான்கள், மருந்துகள் என்பனவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவை மிகவும் முக்கிய மாசுபடுத்தியாகவும் நச்சுப் பொருளாகவும் இனங்காணப்பட்டுள்ளன. உதாரணமாக, குளோரோஃபுளோரோ காபன்கள் ஓசோன் படைத் தேய்வுக்குக் காரணமாக இனங்காணப்பட்டுள்ளன. குளோரின், புரோமின் மற்றும் அயடின் ஆகியவற்றைக் கொண்ட ஹலோஅல்கேன்கள் மாத்திரமே ஓசோன் படை அழிவுக்குக் காரணமாகும். எவ்வாறாயினும், இயற்கையில் காணப்படும் மெதைல் அயடைட் ஓசோன் படை அழிவுக்குப் பங்களிப்புச் செய்வதில்லை. இதனால் ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகவரகம் இதனை ஓசோன் தேய்வுக்கு பங்களிக்காத சேர்வையாக வகைப்படுத்தியுள்ளது. ஹலோஅல்கேன் அல்லது அல்கைல் ஏலைட்டுக்கள் ″RX″ எனும் பொதுச் சூத்திரத்தை கொண்டன. இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமும் X என்பது ஒரு அலசனும் ஆகும். ஆலோஅல்கேன்கள் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டுள்ளது. 15ம் நூற்றாண்டில் எதைல் குளோரைட்டு செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் சேதன ரசாயனவியலின் வளர்ச்சியாலும், அல்கேன்களின் கட்டமைப்பு பற்றி அறிந்து கொண்டமையாலும், முறையான தயாரிப்புக்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட C-அலசன் பிணைப்பு உருவாக்கத்துக்கான வழிமுறைகளும் வளர்ச்சியடைந்தன. சிறப்பான பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள், அல்கீன்களுக்கு அலசன்களைச் சேர்த்தல், அல்கீன்களுக்கு ஐதரசன் ஏலைட்டுக்களைச் சேர்த்தல் மற்றும் அல்ககோல்களை அல்கைல் ஏலைட்டுக்களாக மாற்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இம் முறைகள் மிகவும் நம்பகரமானவையாக இருந்தமையால், ஹலோ அல்கேன்கள் கைத்தொழில் இரசாயனவியல் பயன்பாடுகளுக்கு இலகுவாகப் பெறக்கூடியதாக இருந்தன. மேலும், ஏலைட்டுக்கள் இலகுவாக வேறு தொழிற்படு கூட்டங்களாக மாற்றக்கூடியதாகவும் இருந்தன. பெரும்பாலான ஹலோஅல்கேன்கள் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டாலும், இயற்கையான முறையிலும் இவை வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் பக்டீரியா, ஃபங்கசு மற்றும் கடற்களைகள் ஆகியவற்றின் நொதியச் செயற்பாடுகளின் மூலம் இவை வெளியாகின்றன. 1600க்கும் மேற்பட்ட அலசனேற்றப்பட்ட சேதனப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் புரோமோஅல்கேனே முக்கிய சேர்வையாகும். உயிரியலில் புரோமினேற்றப்பட்ட சேதனப் பொருட்களாக உயிரியல் ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மெதைல் புரோமைட்டிலிருந்து அல்கேன் இல்லாத அரோமட்டிக்குகள் மற்றும் நிரம்பாச் சேர்வைகள் (இந்தோல்கள், தேர்ப்பீன்கள், அசெற்றோஜெனின்கள் மற்றும் பீனோல்கள்) வரை காணப்படுகின்றன. கட்டுமானத் தோற்றத்தின் அடிப்படையில் ஆலசன்கள் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவின் இணைப்பிற்கு ஏற்ப ஆலோ ஆல்க்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு ஒரேயொரு ஆல்க்கைல் குழுவுடன் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால் அது முதல்நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது. இதற்கு உதாரணம் குளோரோ ஈத்தேன் (CH3CH2Cl) ஆகும். ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு இரண்டு C–C பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது இரண்டாம் நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படும். ஆலசனை சுமந்துள்ள கார்பன் அணு மூன்று C–C பிணைப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் அது மூன்றாம் நிலை ஆலோ ஆல்க்கேன் எனப்படுகிறது. ஏழாவது குழுவில் இடம்பெற்றுள்ள ஆலசனின் தன்மைக்கு ஏற்பவும் ஆலோ ஆல்க்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கார்பனுடன் பிணைக்கப்பட்டுள்ள புளோரின், குளோரின், புரோமின், மற்றும் அயோடின் போன்ற ஆலசன்கள் அடிப்படையில் கரிமபுளோரின், கரிமகுளோரின், கரிமபுரோமின் மற்றும் கரிம அயோடின் சேர்மங்கள் என்றும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆலசன்களைப் பெற்றுள்ள சேர்மங்கள் உருவாகவும் சாத்தியங்கள் உள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணற்ற ஆலோ ஆல்க்கேன்கள் இவ்வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. குளோரோபுளோரோ கார்பன்கள், ஐதரோ குளோரோபுளோரோ கார்பன்கள், ஐதரோ புளோரோ கார்பன்கள் உள்ளிட்டவை இவ்வகைப்பாட்டில் அடங்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு விவாதங்களில் இந்த ஆலோ ஆல்க்கேன்கள் சுருக்கக் குறியீடுகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆலோ ஆல்க்கேன்கள் பொதுவாக தாய் ஆல்க்கேன்கள் போல நிறமற்றும், ஒப்பீட்டளவில் மணமற்றும் நீர் விலக்கிகளாகவும் காணப்படுகின்றன. குளோரோ-, புரோமோ- மற்றும் அயோடோ ஆல்க்கேன்களின் கொதிநிலை, உருகுநிலை போன்றவை ஒத்தவரிசை ஆல்க்கேன்களை விட அதிகமாக உள்ளன. அணு எடையையும் ஆலைடுகளின் எண்ணிக்கையும் இந்த அளவிடலில் பயன்படுகின்றன. மூலக்கூறிடை விசைகளின் வலிமை அதிகரிப்பு இதற்குக் காரணமாகும். இதனால் கார்பன் டெட்ரா அயோடைடு திண்மமாகவும் அதேவேளையில் கார்பன் டெட்ராகுளோரைடு நீர்மமாகவும் காணப்படுகின்றன. பல புளோரோ ஆல்க்கேன்கள் இப்போக்கிற்கு மாறாக செயல்படுகின்றன. புளோரினேற்றம் அடையாத அதனுடைய ஒத்தவரிசை சேர்மங்களைக் காட்டிலும் குறைவான உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டவையாக இவை உள்ளன. உதாரணமாக மீத்தேனின் உருகுநிலை -182.5 °செல்சியசு வெப்பநிலை ஆகும். ஆனால் டெட்ராபுளோரோமீத்தேனின் உருகுநிலை -183.6 ° செல்சியசு வெப்பநிலை ஆகும். குறைவான C–H பிணைப்புகள் கொண்டிருப்பதால் ஆலோகார்பன்கள் ஆல்க்கேன்களைக் காட்டிலும் குறைவான தீப்பற்றும் வெப்பநிலையைக் கொண்டுள்ளன. சில ஆலோகார்பன்கள் தீத்தடுப்பான்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகரித்த முனைவுத் தன்மையின் காரணமாக தொடர்புடைய ஆல்க்கேன்களைக்க் காட்டிலும் இவை சிறந்த கரைப்பான்களாகச் செயல்படுகின்றன. புளோரினைத் தவிர இதர ஆலசன்களைக் கொண்டிருக்கும் ஆலோ ஆல்க்கேன்கள் தாய் ஆல்க்கேன்களை விட அதிக வினைத்திறன் கொண்டவையாக உள்ளன. ஆலோ ஆல்க்கேன்கள் பரவலாக இருப்பதாலும் பல பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கும் பண்புகள் கொண்டிருப்பதாலும் கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன. கடல்கள் வருடந்தோறும் 1-2 மில்லியன் டன் புரோமோமெத்தேனை விடுவிக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் ஆலசன்களைக் குறிப்பாக புளோரினைக் கொண்டுள்ளன. பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஐந்தில் ஒரு பாகம் மருந்துகளில் புளோரின் இடம்பெற்று உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 5-புளோரோர்சில், புளோசெட்டின், பாரோசெட்டின், சிப்ரோபுளோவசின், மெப்ளோகுயின், புளோகோனசோல் உள்ளிட்ட மருந்துகள் இதற்கு உதாரணங்களாகும். C-F பிணைப்பு ஒப்பீட்டளவில் வினைத்திறன் அற்று இருப்பதால் சில நன்மைகள் ஏற்படுகின்றன. புளோரின் பதிலீடு செய்யப்பட்ட ஈதர்கள் ஆவியாகும் மயக்க மருந்துகளாகும். மெத்தாக்சிபுளோரேன், என்புளோரேன், ஐசோபுளோரேன், செவோபுளோரேன் மற்றும் டெசுபுளோரேன் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். புளோரோ கார்பன் மயக்கமருந்துகள் டை எத்தில் ஈதர் மற்றும் வளைய புரோப்பேன் ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் போது தீங்கு விளைவுகள் குறைகின்றன. பெர்புளோரினேற்ற ஆல்க்கேன்கள் இரத்த பதிலீடுகளாக பயன்படுகின்றன. குளோரினேற்றம் அல்லது புளோரினேற்றம் பெற்ர ஆல்க்கீன்கள் பலபடியாக்க வினைகளில் ஈடுபடுகின்றன. பாலிவினைல் குளோரைடு, டெப்ளான் போன்றன இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். ஆல்டிகைடு ஆல்டிகைடு (Aldehyde) என்பது –CHO என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கும். ஆல்கனால் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஒரு கார்பன் இரட்டைப் பிணைப்பால் ஆக்சிசனுடன் பிணைக்கப்பட்டுள்ள கார்பனைல் மையம் ஆல்டிகைடில் உள்ளது. இதிலுள்ள கார்பன் அணு ஐதரசன் அணுவுடனும் ஒரு R குழுவுடனும் பிணைக்கப்பட்டுள்ளது . இங்குள்ள R— எந்த இனமான ஆல்கைல் அல்லது பக்கச் சங்கிலியாகவும் இருக்கலாம். R குழு இல்லாத ஆல்டிகைடாக இருக்கும் பட்சத்தில் அதை பார்மைல் குழு என்பர். கரிம வேதியியலில் ஆல்டிகைடுகள் பொதுவானவையாகும். பல வாசனைத் திரவியங்கள் ஆல்டிகைடுகளாகும். சமதள கார்பன் மையம் ஓர் இரட்டைப் பிணைப்பால் ஆக்சிசனுடனும் ஒற்றைப்பிணைப்பால் ஐதரசனுடனும் இணைக்கப்பட்டு ஆல்டிகைடு sp2- கலப்பினமாகக் காட்சியளிக்கிறது. இணை காரத்தின் ஒத்திசைவு உறுதிப்பாடு காரணமாக C–H பிணைப்பு சாதாரணமாக அமிலத்தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஆல்டிகைடிலுள்ள் ஆல்பா ஐதரசன் 17 க்கு அருகிலான pKa மதிப்பைக் கொண்டு அமிலத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இதனுடைய ஆல்கேனின் அமிலத்தன்மை கிட்டத்தட்ட pKa 50 ஆகும். பார்மைல் மையத்தின் எலக்ட்ரான் விடுவிக்கும் பண்பிற்கும் ஈனோலேட்டு எதிர்மின் அயனியின் எதிர்மின் சுமை உள்ளடங்காத் தன்மைக்கும் இதுவே காரணமாகும். ஆல்டிகைடு குழு சற்று முனைவுத் தன்மை கொண்டதாகும். பார்மல்டிகைடு மற்றும் பென்சால்டிகைடு போன்ற ஆல்பா கார்பன் இல்லாத ஆல்டிகைடுகள் அல்லது ஆல்பா கார்பனின் மீது புரோட்டான் இல்லாத ஆல்டிகைடுகள் தவிர மற்ற ஆல்டிகைடுகள் கீட்டோ அல்லது ஈனால் மாற்றியங்களைக் கொண்டுள்ளன. அமிலம் அல்லது காரம் கீட்டோ-ஈனார்ல் மாற்றியத்தை உருவாக்குதலில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. பொதுவாக ஈனால் மாற்றியம் சிறுபான்மையானது என்றாலும் அதுவே வினைத்திறன் மிக்கது ஆகும். ஆல்டிகைடுகளுக்கான பொதுப்பெயர்கள் அதிகாரப்பூர்வமான ஐயுபிஏசி வழிகாட்டல் முறையில் பெயரிடப்படவில்லை. இருப்பினும் அவ்விதிகள் பயனுள்ளவையாகும். ஆல்டிகைடுகளுக்கான பெயர்களை ஐயுபிஏசி பின்வருமாறு பரிந்துரைக்கிறது :. யசுடசு வோன் லைபிக் என்பவர் ஆல்டிகைடு என்ற சொல்லைப் பரிந்துரைத்தார். ஐதரசன் நீக்கப்பட்ட ஆல்ககால் என்ற பொருள் கொண்ட இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து அவர் ஆல்டிகைடு என்ற பெயரை தருவித்திருக்கிறார் . ஒரு காலத்தில் தொடர்புடைய ஆல்ககாலை அடுத்து ஆல்டிகைடின் பெயர் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆல்டிகைடுகள் வேறுபட்ட பல பண்புகளை கொண்டிருக்கின்றன, குறைந்த கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்டிகைடுகள் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் நீரில் அதிகமாகக் கரையக்கூடியதாகவும் உள்ளன. பார்மால்டிகைடும் அசிட்டால்டிகைடும் முழுமையாக நீரில் கரைகின்றன. ஆவியாகும் ஆல்டிகைடுகள் காரநெடி உடையனவாக உள்ளன. சுற்றுப்புற ஆக்சிசனுடன் சேர்ந்து ஆல்டிகைடுகள் ஒடுங்குகின்றன. முக்கியமான ஆல்டிகைடுகளும் அவற்றுடன் தொடர்புடைய பிற சேர்மங்களும்: ஆல்டிகைடு குழு அல்லது பார்மைல் குழு சிவப்பு நிறத்தில். இடமிருந்து : 1.பார்மால்டிகைடு (2)இதன் முப்படி 1,3,5-டிரையாக்சேன் (3) அசிட்டால்டிகைடு (4) இதன் ஈனால் வினைல் ஆல்ககால் (5) குளுக்கோசு (பிரானோசு வடிவம் , α-D-குளுக்கோபிரானோசாக), (6) சின்னமால்டிகைடு (7) ரெட்டினால் (8) பிரிடாக்சால். சுவடு அளவிலான பல ஆல்டிகைடுகள் அத்தியாவசிய எண்ணெய்களில் காணப்படுகின்றன, மேலும் பெரும்பாலும் அவற்றின் சாதகமான வாசனைகளுக்கு பங்களிப்பு செய்கின்றன, எ.கா. சின்னமால்டிகைடு கிலாந்தரோ மற்றும் வனிலின். பார்மைல் குழுக்களின் அதிக வினைத்திறன் காரணமாக அமினோ அமிலஙகள், உட்கரு அமிலங்கள், லிப்பிடுகள் போன்ற இயற்கையான கட்டுறுப்பு தொகுதிகளில் ஆல்டிகைடுகளில் பல பொதுவானவைகளாக இல்லை. ஆல்டோசுகள் எமியசிட்டால்களாக உள்ளன. பல்கேரிய விக்கிப்பீடியா பல்கேரிய விக்கிப்பீடியா (பல்கேரிய மொழியில்: Българоезична Уикипедия) விக்கிப்பீடியாவின் பல்கேரிய மொழிப்பதிப்பு ஆகும் ஆகத்து 2012 இல் தொடங்கப்பட்டது. தற்போதைய கணக்கின்படி, ஒரு இலட்சத்திற்கு மேலான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அதிகக் கட்டுரைகளைக் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் 32வது இடத்தில் உள்ளது. சைரில்லிக் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பெற்றது. திப்பணம்பட்டி திப்பணம்பட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் தென் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம். இது கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். வளர்ந்து வரும் நகரமான பாவூர்சத்திரத்திலிருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இங்கிருந்து பாவூர்சத்திரம், கடையம்,தென்காசி, திருநெல்வேலி,சுரண்டை, அம்பை, சங்கரன்கோயில், கடையநல்லூர், பாபநாசம் போன்ற மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஒரு கிறித்தவ தேவாலயம் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. தேனி மாவட்டப் பொறியியல் கல்லூரிகள் தேனி மாவட்டத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அளிப்பதற்கான பொறியியல் கல்லூரிகள் ஆறு இருக்கின்றன. இவற்றில் ஒன்று அரசுப் பொறியியல் கல்லூரியாகும். மற்ற கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளாகும். வேங்கையின் மைந்தன் (புதினம்) வேங்கையின் மைந்தன், அகிலன் எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. அகிலன் கண்ணன் அவர்களால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர்நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது. இப்புதினம் முடிகொண்ட முடிவேந்தன், சோழபுரம் கண்டோன், கொடும்பாளூர்க் கோமான் என 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முறையே 36, 41, 43 அத்தியாயங்களைக் கொண்டுள்ளன. 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை இந்நூல் பெற்றுள்ளது. வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது. விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களில் புகழ்பெற்றவர்களான இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய மூவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்தப் பெரிதும் உதவின. முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாகக் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாடும் இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கத்துக்குள்ளானது இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் முதலாம் இராஜராஜ சோழர், முதலாம் இராஜேந்திர சோழர் மற்றும் அவரைத் தொடர்ந்தவர்கள் ஆவர். முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன் இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர். முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது. இந்தக் காலக்கட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானவன்மாதேவி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்புதினம் வரலாறு தழுவிய கற்பனைக் கதை என்பதால் இதில் வரும் மாந்தர்களில் சிலர் வரலாற்று நூல்களில் வாழ்பவர்கள். சிலர் இக்கதையில் மட்டுமே வாழ்பவர்கள். இப்புதினத்தில் உலா வரும் மாந்தர்கள் கீழே தரப்படுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல சிறுசிறு கதாபாத்திரங்களும் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது. வேங்கி நாட்டு இளவரசன்; வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் மற்றும் அரசி குந்தவை (இராஜராஜசோழனின் மகள்) - இணையரின் மகன்; சோழ இளவரசி அம்மங்கா தேவியை மணந்தவன். ஈழத்திலிருந்த பாண்டியர் முடியை, இராஜராஜ சோழன் காலத்தில் மீட்டுவர முடியவில்லை. அவர் இறக்கும் போது தனது வாழ்நாளில் தன்னால் செய்து முடிக்க முடியாத அக்காரியத்தைத நிறைவேற்ற வேண்டுமெனத் தன் மகன் இராஜேந்திர சோழனைக் கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் தனது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், தமிழர் மானம் காக்கப்படும் எனவும் உறுதியாய் இருந்த இராஜேந்திரர், தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதே குறிக்கோளுடன் செயல்பட்டார். அவர் ஈழத்தின் மீது படையெடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளையும் ஈழத்துப் போரையும் அதில் அவர் அடைந்த வெற்றியையும் ஈழத்து அரசர் மகிந்தரை சோழநாட்டிற்கு சிறைபிடித்து வந்ததையும் இப்புதினத்தின் முதல் பாகமான முடிகொண்ட மாவேந்தன் சுவையுடனும் விறுவிறுப்புடனும் விவரிக்கிறது. இச்சாதனையில் கதைநாயகன் இளங்கோவின் பங்கும் வீரமும், ஈழத்து இளவரசி ரோகிணி பகைநாட்டைச் சேர்ந்தவளாய் இருந்தும் இளங்கோவிற்கு உதவியதும் அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதலும் இப்பகுதியில் அழகுறப் புனையப்பட்டுள்ளது. ஈழத்திலிருந்து வெற்றியுடனும் பாண்டியர்களின் முடியுடனும் திரும்பிய இராஜேந்திர சோழன் ஈழப் படையெடுப்புக்கு வீரர்களைத் தந்த பழையாறை நகருக்குச் சென்று போரில் தமது உறவுகளை இழந்த மக்களிடம் தன்னையே அவர்களின் உறவாகக் கொள்ளும்படி ஆறுதல் கூறி, இனிமேல் தனது தலைநகரை தஞ்சையிலிருந்து அவர்கள் ஊருக்கே மாற்றப்போகும் ஆனந்தமான செய்தியையும் அவர்களுக்களிக்கிறார். சோழபுரம் என்றொரு பிரமாதமான ஊரும், அங்கு தஞ்சை பெரிய கோவிலை ஒத்த ஒரு பிரம்மாண்டமான சிவாலயமும் ஊருக்கு எல்லையில் கடலென ஓர் ஏரியும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார். பாண்டியர்களால் எழுந்த சலசலப்புகளையும் சதிகளையும் ஒடுக்கிய பின்னர் தன் இளைய மகனான சுந்தரசோழனுக்கு, சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரால் மதுரையில் முடிசூட்டி, புதியதொரு பாண்டியப் பரம்பரையை ஆரம்பித்து வைக்கிறார். ஈழத்தில் மீண்டும் முளைவிட்ட அமைச்சர் கீர்த்தியின் சதிகளை நாயகன் இளங்கோவை அனுப்பி முறியடிக்கிறார். இத்தொல்லைகளுக்கு முடிவு கட்டி முடிக்க, வடக்கே மேலைச் சாளுக்கியர் வாலாட்டுகின்றனர். அவர்களை முறியடிக்கப் படையெடுத்துச் செல்கிறார். தனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டு பெரியதொரு சிறப்பு விழா அமைய வேண்டும் என்ற நோக்கோடு நகர், கோவில், ஏரி இவற்றின் அமைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே படையெடுப்பைத் தொடங்குகிறார். அரசரின் வெற்றிகளில் எல்லாம் தோள்கொடுத்து நிற்கும் இளங்கோவின் வீரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டத்தில் இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே தோன்றிய காதல் தஞ்சையிலும் கொடும்பாளூரிலுமாக வளர்கிறது. ரோகிணி தன் பிறந்த நாட்டுப் பாசத்திற்கும் பகை நாட்டு இளவரசனிடம் மனதைப் பறிகொடுத்து விட்ட தனது காதலுக்கும் இடையிலான போராட்டத்தில் படும் அவதியும், அவளது மனப்போராட்டங்களால் அவளுக்கும் இளங்கோவிற்கும் இடையே நிகழும் கசப்பான அனுபவங்களும், இருவரது வேறுபட்ட குணாதிசியங்களால் எழும் முரண்பாடுகளையும் மீறி ஒருவரையொருவர் விட்டுவிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பும் வாசிப்போரையும் தவிப்புக்குள்ளாக்குகிறது. சாளுக்கியரை ஒடுக்குவதற்காக படையெடுத்துச் சென்ற இராசேந்திரர் சாளுக்கியரின் கொட்டத்தை அடக்கி வென்றபின், சாளுக்கிய நாட்டோடு நில்லாது மேலும் வடதிசை நோக்கிச் சென்ற சோழ படைகள் வடதிசை மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் தலைமையில் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டுவதும், கங்கை நீரைக் குடங்களில் அடைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு சோழ நாடு திரும்பிய வெற்றி ஊர்வலமும், புதிதாக அமைக்கப்பட்ட சோழபுர நகரம் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டப் பெருவிழாவும் இம்மூன்றாம் பாகத்தின் முக்கிய நிகழ்வுகள். இந்நிகழ்வுகளின்போது நடைபெறும் வீரதீரச் செயல்களும், நேர்கொள்ளப்பட்ட இன்னல்களும், அவற்றைச் சமாளித்த திறமையும் கற்பனை நயம் கலந்து விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் இளங்கோ ரோகிணி காதல் வளர்வும் ரோகிணியின் முடிவான மனப்பக்குவமும் தான் விரும்பும் நாயகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தும் அப்பெண்ணைத் தங்கையாக நினத்து அவர்கள் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அருள்மொழி நங்கையின் தியாகமும் நாட்டுப்பற்றும் அவர்களுக்கிடையேயான உறவுக்கு பெரியோர்களால் தரப்படும் தீர்வும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது. இராசேந்திரரின் கடாரத்தின் வெற்றியும் அதில் இளங்கோ ஆற்றலும் முடிவுரையில் தரப்பட்டுள்ளன. இப்புதினம் 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது. அகாதமியின் சின்னத்துடன் இந்தியப் பிரதமராக அப்போதிருந்த ஜவஹர்லால் நேருவின் கையொப்பம் பொறிக்கப்பட்டச் செப்பேட்டினை, மார்ச் மாதம் 1964 ஆம் ஆண்டு, 15 தேதியில் இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் கையால் பெற்றதைத் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக அகிலன் குறிப்பிட்டுகிறார். இது சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. மேலும் அகிலன் கண்ணனால் நாடக வடிவமைக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர்நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சி போன்றமையும் சிறப்பினையும் உடையது இப்புதினம். விஜய குமார் (விளையாட்டாளர்) விஜய குமார் (பிறப்பு 1986) இந்தியாவின் துப்பாக்கிச் சுடும் விளையாட்டு வீரர். 2012 ஒலிம்பிக்கில் 25 மீட்டர் தொலைவிலிருந்து கைத்துப்பாக்கியில் தொடர்ந்து குறிபார்த்துச் சுடும் போட்டியில் ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர். இவர் இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூர் மாவட்டத்திலுள்ள அர்சூர் சிற்றூரைச் சேர்ந்தவர். தற்போது இந்தியப் படைத்துறையில் காலாட்படையில் சுபேதாராகப் பணி புரிந்து வருகிறார். இவர் 2007ஆம் ஆண்டில் அருச்சுனா விருது பெற்றவராவார். மோகன் (நடிகர்) மோகன் (பிறப்பு: ஆகத்து 23, 1956, இயற்பெயர்: "மோகன் ராவ்") ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார். பொ. திருகூடசுந்தரம் பொ. திருகூடசுந்தரம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர், இதழாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். பொ. திருகூடசுந்தரம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) உள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் திருவைகுண்டத்தில் பொன்னம்பலம் பிள்ளை – சொர்ணாம்பாள் என்னும் இணையருக்கு 1891ஆம் ஆண்டில் பிறந்தார். திருவைகுண்டத்திலேயே தொடக்கக்கல்வி பயின்ற அவர்,5ஆம் படிவம் முதலே படிப்பில் முதலாமவராகத் திகழ்ந்தார். திருநெல்வேலியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்ற பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்து, கலைமுதுவர் (Master of Arts) தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். இவர் கமலம் என்பவரை சாதிமறுத்தும் புரோகிதச்சடங்குமறுத்தும் தாலிகட்டுதல் மறுத்தும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணம் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் 1931 அக்டோபர் மாதம் நடைபெற்றது. திருகூடசுந்தரம் சட்ட இளவர் பட்டம் பெற்றதும் நீதிமன்றத்தில் பதிந்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தார். 1921ஆம் ஆண்டில் ஆங்கிலேயே அரசிற்கு எதிராக அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடும்படி காந்தி அழைப்புவிடுத்தார். அதனையேற்று திருகூடசுந்தரமும் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1939ஆம் ஆண்டில் வேதாரண்யம் என்னும் மரைக்காட்டில் (மான்கள் நிறைந்த காடு) நடைபெற்றஉப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார். பின்னர் திருநெல்வேலி மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்தின் செட்டிநாட்டுப் பகுதியிலும் காந்திய இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். செட்டிநாட்டு இளைஞர்களைத் திரட்டி அப்பகுதியில் உள்ள ஊர்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். அப்பணியைப் பாராட்டி குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பா, தோட்டி மகாத்துமா என திருகூடசுந்தரத்தைப் புகழ்ந்து கட்டுரை எழுதினார். அப்பணியை மற்றவர்கள் எவ்வாறு எள்ளிநகையாடியவர்களைப் பற்றி ஊழியன் இதழின் திருகூடசுந்தரம் கட்டுரைகள் எழுதினார். தீண்டாமை ஒழிக்க சாதிகடந்த திருமணங்களை காந்தி ஊக்குவித்தார். எனவே, திருகூடசுந்தரமும் சாதிகடந்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் நாகர்கோவிலில் இவரும் இவர்தம் மனைவியாரும் தங்கி அப்பகுதியில் உள்ள கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இவர்களுக்கு பொன்னம்பலம் என்னும் மகனும் சொர்ணாம்பாள் என்னும் மகளும் பிறந்தனர். 1946ஆம் ஆண்டில் வெளிவந்த அப்பாவும் மகனும் என்னும் நூலில் இவர் பத்து நூல்களை சொந்தமாக எழுதவும் பத்து நூல்களை மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றுள் அறிய வந்துள்ள நூல்கள் வருமாறு: திருகூடசுந்தரம், மற்றவர்கள் எழுதிய சில நூல்களுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவற்றுள் சில: காந்தி நடத்திய அரிசன் இதழின் தமிழ்ப் பதிப்பான தமிழ் அரிசன் என்னும் இதழுக்கு இவரும் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கமும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்தியா நாடு விடுதலைபெற்ற பின்னர், தமிழக அரசு தமிழில் கலைக்களஞ்சியத் தொகுதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. அப்பணிக்கு ஆசிரியராக பெரியசாமி தூரன் பொறுப்பேற்றார். திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தார். காந்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாகக்கொண்ட திருகூடசுந்தரம் தான் வாழ்ந்த சென்னை, தியாகராய நகர், கோவிந்து தெரு வீட்டில் 1969ஆம் ஆண்டு மறைந்தார். காடித்தன்மை எண் காடிப்பிரிகை எண் "K" (இது காடித் தன்மை எண் என்றும் காடி-மின்மியாக்கு எண் என்றும் அறியப்படுகிறது) என்பது ஒரு காடிக் கரைசலின் காடித்தன்மை அல்லது காடித்தன்மையின் வலுவை அளவிட்டுக் காட்டும் எண். காடிப்பொருளுக்கும் காரப்பொருளுக்கும் இடையே நிகழும் வேதியியல் வினைகளில், அதாவது காடி-கார வேதிவினைகளில் மூலக்கூறுகள் பிரியும் நிகழ்ச்சியாகிய பிரிகை வினையின் சமநிலை எண் (equilibrium constant). சமநிலை இயக்கத்தைக் கீழ்க்காணுமாறு எழுதிக் காட்டலாம்: இதில் HA என்பது பொதுவாக ஒரு காடியைக் குறிக்கும். இது A என்னும் பகுதியாகவும் நீரிய மின்மி (அல்லது நேர்மின்மி, புரோட்டான்) ஆகவும், H பிரியும். இதனால் இவை நீரில் கரைந்திருக்கும் ஐதரோனியமாக (hydronium) இருக்கும். இங்குப் படத்தில் காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் HA என்பது அசிட்டிக் காடி, A என்பது அசிட்டேட்டு மின்மி (அயனி). வேதிப்பொருள்கள் HA, A and H ஆகியவை அவற்றின் மொத்த அடர்த்தி அளவுகள் ஒரு கால கட்டத்திற்குப் பிறகு மாறாத நிலையை எட்டும்பொழுது சமநிலை அடைந்ததாகக் கருதலாம். இப்பொழுது பிரிகை மாறிலி (பிரிகை எண்) என்பதை சமநிலை எட்டியபொழுது காணப்படும் அடர்த்தி அளவுகளின் அடிப்படையில் (ஒரு இலிட்டரில் உள்ள மோல் அளவில்) கீழ்க்காணும் விகிதமாக எழுதலாம். அடர்த்திகளை பகர அடைப்புக்குறிகளுக்குள் இட்டுக் காட்டுவது வழக்கம்: [HA], [A], [H]: இந்த விகிதம் பல பதின்ம அடுக்குகளான அளவில் (many orders of magnitude) மாறும் ஆகையால் "K" மதிப்புகளை மடக்கை அளவில் குறிப்பது வழக்கம். "மடக்கை காடித்தன்மை எண்," p"K" என்பது −log "K" என்பதற்கு ஈடாகும். ஆனால் இதனையே (தவறுதலாக சில நேரங்களில்) காடிப் பிரிகை எண் (மாறிலி) என்றும் அழைப்பர்: p"K" என்பதன் மதிப்பு அதிகமாக இருந்தால் பிரிகை குறைவு என்று பொருள். மென்காடிகளின் p"K" மதிப்புகள் ஏறத்தாழ −2 முதல் 12 வரை என்னும் விழுகளத்தில் இருக்கும், ஆனால் காடிகளின் p"K" மதிப்புகள் −2 உக்கும் கீழாக இருந்தால் அவை மிகவும் வலுவான காடிகள் ஆகும்; எடுத்துக்காட்டாக கந்தகக் காடியின் காடித்தன்மை - 3.0 ஆகும். இவற்றில் பிரிகை ஏறத்தாழ முழுமையாக நிகழ்ந்திருக்கும் என்று பொருள். பெரிய அளவில் பிரிகை நிகழ்ந்திருக்கும்பொழுது நீரில் பிரியாமல் இருக்கும் கூறுகள், அளவிடமுடியாத சிற்றளவாக இருக்கும். வலுவான காடிகளின் p"K" மதிப்புகளை அளவிட ஒரு கருத்திய முறையையும் கைக்கொள்ளலாம், அதாவது நீரல்லாத கரைப்பானில் பிரிகையை அளந்து (அவற்றில் பிரிகையின் அளவு சிறிதாக இருக்கும் ஆகையால்), எடுத்துக்காட்டாக அசிட்டோநைட்ரைல் அல்லது டை-மெத்தில்-சல்பாக்சைடு ஆகியவற்றில் அளந்து நீரில் பிரிகையின் அளவை அண்ணளவாக மதிப்பிடலாம். ஒரு வேதிப்பொருளின் மடக்கைக் காடி எண், p"K", ஐ அளக்க பல வழிகள் உள்ளன, ஆனால் அவற்றுள் சிறு மாறுபாடுகள் உண்டு. சரிவர அளந்த மதிப்புகளில் மாறுபாடு 0.1 அலகு மட்டுமே இருக்கக்கூடும். கீழ்க்காணும் தரவுகள் நீரின் வெப்பநிலை 25 °C இல் அளக்கப்பெற்றது சிங்கப்பூர் இந்தியர் சிங்கப்பூர் இந்தியர் எனப்படுவோர் சிங்கப்பூரில் வாழும் தெற்காசியர் (இந்தியர்) ஆவர். இவர்கள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 9 சதவிகிதத்தினர் ஆவர். சிங்கப்பூரில், சீனர்கள், மலேயர்களுக்கு அடுத்து உள்ள பெரிய இனம் இந்தியர் ஆவர். அதிக இந்தியர்கள் வாழும் நாடு மற்றும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ள ஓர் நாடாகும். கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியர்கள் தம் பங்கை ஆற்றியுள்ளனர். சிங்கப்பூரில் வாழும் இந்தியரில், இந்துத் தமிழரே பெரும்பான்மை ஆவர். தமிழருக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் பன்னெடுங்காலமாக தொடர்பு உள்ளது எனினும், 19ஆம் நூற்றாண்டின்போது பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இந்தியர்கள் மலேசிய தீபகற்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கையில் யூதரின் வரலாறு இலங்கையில் யூதரின் வரலாறு குறைந்தது 9ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகிறது. 10ம் நூற்றாண்டில், பேர்சியாவின் சிரப் எனுமிடத்திலிருந்த அபு செயிட் அல் கசன் எனும் அராபிய பயணி 'பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள்' செரண்டிப்பில் இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அக்கால அராபியர் இலங்கையை செரண்டிப் எனும் பெயரால் அழைத்தனர். 12ம் நூற்றாண்டில், டுடேலாவிலுள்ள பென்யமீன் எனும் யூதரின் அறிக்கையில் இலங்கையில் 3000 யூதர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வறிக்கை நம்பகரமானதென கருதவும் முடியாது. ஆரம்ப காலத்தில் இலங்கையிலிருந்த யூதர்கள் உள்ளூர் மக்களுடன் கலந்துவிட்டிருக்கலாம் அல்லது 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய வருகையுடன் அவர்களின் அடையாளத்தையும் நம்பிக்கையையும் கைவிட்டிருக்கலாம். போர்த்துக்கேய கடும் விசாரணைகளுக்கு உட்பட்டு அவர்கள் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. ஆப்பிரிக்க இலங்கையர் ஆப்பிரிக்க இலங்கையர், எனப்படுவோர் பொதுவாக இலங்கை காப்பிரி எனப்படுவர். இவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் சிறிய இனக்குழுவாகும். 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய காலணித்துவத்தின்போது ஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட அடிமைகளின் வாரிசுகளின் இனமாகும். தற்போது கிட்டத்தட்ட 1000 இலங்கை காப்பிரியர் காணப்படுகின்றனர். இவர்கள் இலங்கையின் கரையோரங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பகுதிகளில் சிறு குழுவாக வாழ்கின்றனர். போர்த்துக்கேயர் அவர்களை இலங்கை அரசர்களுக்கு எதிராகப் போரிடப் பயன்படுத்தினர். ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை (AFC Cup) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு அங்கத்து நாடுகளிலுள்ள கால்பந்துக் கழகங்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பெறும் போட்டியாகும். ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் விதிகளின்படி வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள கால்பந்துக் கழகங்கள் இப்போட்டிக்கு தகுதி பெறுகின்றன. வளர்ந்த நாடுகள் ஆசிய வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதிபெறும். கால்பந்து விளையாட்டில் தொடக்கநிலையில் உள்ள நாடுகளின் கழகங்கள் ஆசிய பிரசிடென்ட்சு கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படுவர். வளர்ந்துவரும் நாடுகள் என்பது ஆசிய கால்பந்துத் தரப்பட்டியலின்படி முதல் 14 இடங்களுக்கு வெளியேயுள்ள நாடுகளாகும். முதல் 14 நாடுகள் வாகையர் கூட்டிணைவு ஆடுவதற்குத் தகுதியுடையவை. 2009-ஆம் ஆண்டு மீள்சீரமைவுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்ததுபோல யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு போல ஆசிய வாகையர் கூட்டிணைவு மற்றும் ஏஎஃப்சி கோப்பை ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இல்லை. 2009-லிருந்து ஏஎஃப்சி கோப்பை வெல்லும் அணியும் மற்ற ஒருசில நிபந்தனைகளை நிறைவேற்றும் அணிகளும் ஆசிய வாகையர் கூட்டிணைவில் பங்குபெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடும். அத்தகுதிச் சுற்றப் போட்டிகளில் தோற்கும் அணிகள் ஏஎஃப்சி கோப்பையில் விளையாடுவர். வெல்வோர் வாகையர் கூட்டிணைவில் விளையாடுவர். புளிச் சோறு புளிச்சோறு என்பது உடனடி உணவுத் தயாரிப்புகளில் ஒன்றாகும். இது கட்டுச் சாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கெனத் தனியாகத் தயாரிக்கப்படும் புளிக்கரைசல் கொண்டு வேகவைத்த அரிசிச் சாதத்துடன் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்வின் போது தாய் வீட்டிலிருந்து சமைத்து எடுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் விருந்தளிக்கும் உணவுகளில் ஒன்றாகவும் உள்ளது. மீன் நெடிக் கூட்டறிகுறி மீன் நெடிக் கூட்டறிகுறி அல்லது மீன் துர்நாற்றக் கூட்டறிகுறி (Trimethylaminuria (TMAU), fish odor syndrome, fish malodor syndrome) என்பது பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் உண்டாகும் மிகவும் அரிதான வளர்சிதைமாற்றக் குறைபாடு ஆகும். சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் காணப்படும் டிரைமெதயிலமின் எனும் சேர்மத்தை டிரைமெதயிலமின் ஆக்சைடுவாக மாற்றும் செயற்பாட்டை இந்நொதி கொண்டுள்ளது, நொதி சரிவர இயங்காமல் அல்லது பற்றாக்குறையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் டிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், மூச்சு வழியே வெளியேறும், இதன்போது அக்குறிப்பிட்ட நபரில் துர்நாற்றம் உண்டாகும்; இது பொதுவாக மீன் நெடி போல வீசும். முதன் முதலாக அறியப்பட்ட மருத்துவ சம்பவம் 1970இல் விவரிக்கப்பட்டது. டிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், இனப்பெருக்கத் தொகுதி நீர்மங்கள், மூச்சு வழியே வெளியேறும், இது மீன் நெடி போன்ற நாற்றத்தை உருவாக்கும். சிலருக்கு எப்பொழுதுமே மிகையாக இத்துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும், ஆனால் பெரும்பான்மையினருக்கு குறைவான அளவில் நேரத்துக்கு நேரம் மாறுபட்டு நெடி உண்டாகும். இவர்களுக்கு வேறு ஏதேனும் குறிப்பிடும்படியான அறிகுறிகள் இருப்பதில்லை, பொதுவாக ஆரோக்கியமாகவே திகழ்கின்றனர். இந்நிகழ்வு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பொதுவாக உள்ளது; காரணம் அறியப்படவில்லை, எனினும் புரோகெசுட்டிரோன் அல்லது ஈசுத்திரோசன் முதலிய பெண் பாலிய இயக்குநீர்கள் அறிகுறியை தீவிரம் அடையச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். பூப்படையும் பருவத்தில் இது தீவிரமடைகின்றது எனக்கூறும் தகவல்கள் பதியப்பட்டுள்ளன. பெண்களில் மாதவிடாய்க்கு சற்று முன்னர் உள்ள நாட்களிலும் மாதவிடாய் நாட்களிலும் மற்றும் வாய்வழி கருத்தடை மாத்திரை உட்கொள்ளல், மாதவிடாய் நிறுத்தப் பருவம் போன்ற சந்தர்ப்பங்களிலும் தீவிரமடைகின்றது. இத்துர்நாற்ற அளவு பல்வேறு காரணிகளால் மாறுபடுகின்றது: உணவு, இயக்குநீர் மாற்றங்கள், குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் வேறு மணங்கள், ஒருவரின் மணநுகர்ச்சித் தன்மை. சிறுநீரில் டிரைமெதயிலமினுக்கும் டிரைமெதயிலமின் ஆக்சைடுக்கும் இடையேயான விகிதம் அளக்கப்படுகின்றது. இதற்கென மரபணுக் குருதிப் பரிசோதனை உண்டு. தற்பொழுது இதைக் குணமடையச் செய்யும் மருத்துவம் இல்லை. எனினும், மீன் நெடி உண்டாகாமல் இருப்பதற்கு சில உணவுப்பொருட்கள் உட்கொள்ளலைத் தவிர்க்கவேண்டும், அவையாவன: முட்டை மஞ்சட்கரு, அவரை, பட்டாணி வகை, செவ்விறைச்சி, மீன் போன்றவையும் கோலின், கார்னித்தின், நைதரசன், கந்தகம், லெசித்தின் அடங்கிய உணவுப் பொருட்களும். சிட்டி சிட்டி அல்லது செட்டி ("Chitty") எனப்படுவோர் முற்காலத்திலிருந்தே மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வாழும் தமிழர் ஆவர். இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டாயிரம் இருக்கக்கூடும். சிட்டி மக்கள் மலாய் மொழி பேசுகின்றனர். இவர்கள் பேசும் மலாயில் தமிழ்ச் சொற்கள் பல கலந்துள்ளன. இவர்களில் பெரும்பான்மையினர் தமிழில் சரளமாக பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.. ஆயினும், அடிப்படையான தமிழ்ச் சொற்களையும் தமிழ் பக்திப் பாடல்களையும் கற்கின்றனர். மலாக்கா சுல்தானிய காலத்தில், சிட்டிகள் தமிழ்நாட்டிலிருந்து மலாக்காவிற்கு வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மலாக்காவில் குடியேறியபின், மலாயர்களையும் சீனர்களையும், பிற இந்தோனேசிய, மலேசியத் தீவுகளில் வாழ்ந்த மக்களைத் திருமணம் செய்து கொண்டனர். மலாக்கா சுல்தானிய காலத்திற்குப் பிறகு, தங்கள் தாயகத்துடனான தொடர்பை இழந்தனர். ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தின்போது, சிட்டிகள் தங்களின் பழக்கவழக்கங்களை உள்ளூர் சமூகத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டனர். இதனை, 1781ஆம் ஆண்டின் போது, தெய்வனாயகர் சிட்டியால் கட்டப்பட்ட பொய்யாதமூர்த்தி கோவிலின் கட்டடக்கலையைக் கொண்டு அறியலாம். ஜலான் கஜா பெராங்கிலேயே சிட்டிகள் வாழ்ந்துவருகின்றனர். பலர், சிங்கப்பூரிலும், மலாக்காவின் பிற பகுதிகளிலும் வேலை செய்கின்றனர். சிட்டிகளின் இன அடையாளம் அழிந்தேவிட்டது. பெரும்பாலானோர், இந்திய, சீன, மலாய் பண்பாட்டுடன் கலந்து வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளாக தனித்து வாழ்ந்த இவர்களின் அடையாளம், தற்போது அழிந்து வருகிறது. சிட்டிகள் கலப்பினத்தவர் ஆவர். இவர்கள் மனதளவில் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும், உடல்தோற்றத்தில் வேறுபட்ட தெற்காசிய தோற்றத்தினைக் கொண்டுள்ளனர். இதன் மூலம், முதலில் குடியேறிய தமிழர்கள், தங்களுடன் மனைவியை அழைத்து வராததால் உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளதை அறியமுடிகிறது. காலப்போக்கில், தமிழ் அடையாளங்களிலிருந்து மாறுபட்டு, மலாய் அடையாளங்களுடன் வாழ்கின்றனர். சிட்டிகள் இந்து சமயத்தினர் ஆவர். வினாயகரும் சிவனும் இவர்களின் கடவுள்கள் ஆவர். இவர்களுக்கென்று மலாக்காவில் மூன்று கோவில்களை கட்டியுள்ளனர். இவர்களின் சடங்குகளில் சீன, இசுலாமியத் தொனியையும் காணலாம். இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை இலங்கைத் தமிழரின் கலாச்சாரத்தினதும் மொழியியலினதும் தனித்தன்மை, மரபியற் கற்கை என்பன தென்னிந்தியாவிலுள்ள இந்தியத் தமிழருடன் தொடர்பு கொண்டுள்ள அதேவேளை இலங்கை தீவிலுள்ள ஏனைய இனக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை தெரிவிக்கின்றது. வேறுபட்ட கற்கைகள் இலங்கைத் தமிழர், சிங்களவர், இந்திய இனக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பின் பல்வகைக் கோணங்களை காட்டுகின்றன. 1995இல் கலாநிதி. கெளதம் கே. சாட்ரியாவின் மரபியல் கூட்டுக்கலவை கற்கையின்படி, இலங்கைத் தமிழர் சிங்களவர்களுடன் நெருங்கிய தொடர்பும் குறைந்தளவு தொடர்பை வங்காளி மக்களுடனும் இந்தியத் தமிழர்களுடனும் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது. இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்குமான இந்த நெருங்கிய தொடர்பானது, இரு சனத்தொகைக்குமான வரலாற்று, மொழியியல், கலாச்சார நெருங்கிய தொடர்பானது 2000 வருடங்களுக்கு மேலானது. சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை என்பது இன்றுள்ள சிங்களவர் மக்கள் சனத்தொகையின் ஆரம்பம் பற்றிய விசாரணையின் சனத்தொகை மரபியல் பகுதியாகும். இக்கற்கை சிங்களவர் மூலம் பற்றிய வேற்றுமைகளைப் பார்க்கின்றது. பழைய கற்கை பெருமளவு தமிழ் மூல தொடர்பும், வடமேற்கு இந்தியத் தொடர்பற்று குறிப்பிட்டளவு வங்காளியினருடன் தொடர்பும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது. அதேவேளை தற்காலக் கற்கைகள் பெருமளவு வங்காளத் தொடர்பும் சிறியளவு தமிழ் மற்றும் வடமேற்கு இந்தியத் தொடர்பும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், எல்லாக் கற்கைகளும் சிங்களவர், தமிழர், வங்காளியினர் இடையே குறிப்பிடத்தக்களவு தொடர்பு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றன. இந்த மரபியல் தொலை கற்கை சிங்களவர், தமிழர், கேரளர் ஆகிய தொண்டர்களுக்கிடையில் பாரிய வேறுபாட்டு மரபியல் நெருக்கம் இல்லாது இருப்பதை வெளிப்படுத்தியது. மராத்தி விக்கிப்பீடியா மராத்தி விக்கிப்பீடியா (), விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சொந்தமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் மராத்தி மொழிப் பதிப்பு ஆகும். மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. இப்பதிப்பு தெற்காசிய மொழிப் பதிப்புகளில் பல்வேறு தர அளவுகளில் முதன்மையான ஒன்றாகும். தற்போது 34,000 கட்டுரைகளையும் 23000 பதிவுசெய்த பயனர்களையும் கொண்டுள்ளது. அலெக்சாவின் கணிப்பின்படி, மராத்தி மொழித் தளங்களில் தேடப்படும் வரிசையில் இப்பதிப்பு ஆறாவது இடத்தில் உள்ளது. மராத்தி மொழிப் பதிப்பு மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. 'வசந்த பஞ்சமி'() ' (), பாலகவி என்பவரால் எழுதப்பட்ட பாடலே இப்பதிப்பின் முதற்கட்டுரையாகும். மராத்தி மொழி விக்கிப்பீடியா 2006 ஆம் ஆண்டில் பெரு வளர்ச்சியைப் பெற்றது. ஏறத்தாழ 1500 கட்டுரைகளைக் கொண்டிருந்தது. அமில நீரிலி அமில நீரிலி என்பது ஒரே ஒட்சிசன் அணுவுக்கு இணைக்கப்பட்ட இரு ஏசைல் கூட்டங்களைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். பொதுவாக, ஏசைல் கூட்டங்கள் ஒரே காபொட்சிலிக் அமிலத்திலிருந்தே பெறப்படும். இதன் பொதுச் சூத்திரம் (RC(O))O ஆகும். இவ்வாறான சமச்சீரான அமில நீரிலிகளின் பெயரீடு, உரிய காபொட்சிலிக் அமிலப் பெயரின் "acid" எனும் சொல்லை "anhydride" எனும் சொல்லினால் பிரதியிடுவதன் மூலம் குறிப்பிடப்படும். உதாரணமாக, (CHCO)O என்பது "acetic anhydride" (அசெற்றிக் நீரிலி) எனப் பெயரிடப்படும். சமச்சீரற்ற அமில நீரிலிகளும் அறியப்பட்டுள்ளன. உதாரணமாக acetic formic anhydride (அசெற்றிக் ஃபோமிக் நீரிலி)யைக் குறிப்பிடலாம். அசெற்றிக் நீரிலி என்பது முக்கியமான கைத்தொழில் ரசாயனப் பொருளாகும். இது அசற்றேற்று எஸ்டர் (உ-ம்:செலுலோசு அசற்றேற்று) தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஈதர் ஈதர்கள் "(Ethers)" என்பவை ஈதர் என்றழைக்கப்படும் வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கின்றன. ஓர் ஆக்சிசன் அணு இரண்டு ஆல்க்கைல் அல்லது அரைல் குழுக்களுடன் இணைந்திருப்பதை ஈதர் குழு என்பர். R–O–R′ என்ற பொதுவாய்ப்பாட்டை ஓர் ஈதர் கொண்டிருக்கிறது. இங்கு இடம்பெற்றுள்ள R மற்றும் R′ என்பவை ஆல்க்கைல் அல்லது அரைல் குழுக்களைக் குறிக்கிறது. ஈதர்களை மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்க இயலும். ஆக்சிசனின் இரண்டு பக்கமும் இடம்பெற்றுள்ள ஆல்க்கைல் குழுக்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அந்த ஈத்தரை எளிய ஈதர் அல்லது சீரான ஈதர் என்கிறார்கள், ஒருவேளை இவை வெவ்வேறு வகையான ஆல்க்கைல் குழுக்களாக இருந்தால் அந்த ஈத்தரை கலப்பு ஈதர் அல்லது சமச்சீரற்ற ஈதர் என்கிறார்கள். ஈதர்களுக்கு எளிய உதாரணமாக டை எத்தில் ஈதர் என்ற சேர்மத்தைக் கூறுவார்கள், இது ஒரு கரைப்பானாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இதையே பொதுவாக ஈதர் (CH3–CH2–O–CH2–CH3). என்பார்கள். கரிம வேதியியலில் ஈதர்கள் பொதுவானவையாகும். அதிலும் குறிப்பாக உயிர் வேதியியலில் இவை பரவலாக எங்க்கும் நிறைந்திருக்கின்றன. கார்போவைதரேட்டுகளிலும் லிக்னின் எனப்படும் கரிம பலபடிகளிலும் ஈதர்கள் இணைப்புகளாக இருக்கின்றன. ஈதரின் கட்டமைப்பில் C–O–C இணைப்புகள் காணப்படும். இதன் பிணைப்புக் கோணம் 110° ஆகும். C–O பிணைப்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 140 பைக்கோ மீட்டர் ஆகும். C–O பிணைப்பின் சுழற்சிக்கு எதிரான தடை குறைவு. ஈதர்களில் உள்ள ஆக்சிசன், ஆல்ககால், மற்றும் தண்ணீர் ஆகியவற்றிலுள்ள பிணைப்புகள் ஒரே மாதிரியானவையாகும். இனைதிறன் பிணைப்புக் கொள்கையின் படி ஆக்சிசனில் தோன்றும் கலப்பினம் sp3 ஆகும். கார்பனைக் காட்டிலும் ஆக்சிசன் அதிக மின்னெதிர் தன்மையைக் கொண்டதாகும். இதனால் ஈதர்களுக்கான ஆல்பா ஐதரசன்கள் எளிய ஐதரோ கார்பன்களைக் காட்டிலும் அமிலத்தன்மை மிக்கவையாக உள்ளன. மேலும் இவை கீட்டோன்கள் மற்றும் ஆல்டிகைடுகள் போன்ற கார்பனைல் குழுக்களுக்கான ஆல்பா ஐதரசன்களைக் காட்டிலும் மிகக் குறைவான அமிலத்தன்மையையும் கொண்டவையாகவும் இவை காணப்படுகின்றன. R மற்றும் R′ நிலைகளில் இடம்பெற்றுள்ள குழுக்களின் அடிப்படையில் ஈதர்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன: 1. எளிய ஈதர்கள் சமச்சீர் ஈதர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணம் டை எத்தில் ஈதர், டை மெத்தில் ஈதர். 2. கலப்பு ஈதர்கள் அல்லது சமச்சீரற்ற ஈதர்கள் ஐயூபிஏசி முறை பெயரிடலில் ஈதர்கள் ஆல்காக்சி ஆல்க்கேன்கள் என்ற பொதுவாய்ப்பாட்டைப் பயன்படுத்தி பெயரிடப்படுகின்றன. உதாரணமாக CH3–CH2–O–CH3 என்ற ஈதர் மெத்தாக்சியீத்தேன் என பெயரிடப்படுகிறது. ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதியாக ஈதர் இருக்குமேயானால் அதை அந்த பதிலீட்டினுடைய ஆல்காக்சியாக அழைப்பார்கள். எனவே –OCH3 என்ற குழு மெத்தாக்சி என்று கருதப்படுகிறது. எளிய ஆல்க்கைல் தனி உறுப்பு முதலில் எழுதப்படுகிறது. எனவே CH3–O–CH2CH3 சேர்மத்தை மெத்தாக்சி(CH3O)ஈத்தேன்(CH2CH3) என்ற பெயரால் அழைக்கிறார்கள். எளிய ஈதர்களுக்குப் பெயரிடுகையில் பெரும்பாலும் ஐயூபிஏசி முறை பெயரிடல் பின்பற்றப்படுவதில்லை. பாரம்பரியமாக அவை கலந்து இடம்பெற்றுள்ள இரண்டு பதிலீடுகளைச் சொல்லி அதைத் தொடர்ந்து ஈதர் என்ற சொல்லைச் சேர்த்து அழைக்கப்பட்டு வந்தன. எத்தில் மெத்தில் ஈதர் (CH3OC2H5), டைபீனைல் ஈதர் (C6H5OC6H5) என்பன உதாரணங்களாகும். மற்ற கரிமச் சேர்மங்களின் பெயர்களைப் பொறுத்த வரையில், பொதுவான ஈதர்களின் பெயர் ஐயூபிஏசி பெயரிடலுக்கு முன்னர் அழைக்கப்படு வந்த பெயர்களை முறைப்படுத்தி அழைக்கப்படுகிறது. டை எத்தில் ஈதர் எளிமையாக ஈதர் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அது விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. மெத்தில் பீனைல் ஈதர் அதேபோல அனிசோல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அனிசு எனப்படும் சோம்பு விதைகளில் காணப்பட்டதால் அதை அனிசோல் என்று அழைத்தார்கள். பியூரான்கள் அரோமாட்டிக் ஈதர்கள் என்ரு வகைப்படுத்தப்படுகின்றன. அசிட்டால்கள் மற்றொரு வகையான ஈதர்களாகும். இவற்றின் பண்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட ஈதர் குழுக்களைக் கொண்டுள்ள ஈதர்கள் பாலி ஈதர்கள் அல்லது பல்லீத்தர்கள் எனப்படுகின்றன. கிரீடம் போன்ற தோற்றத்தைக் கொண்ட வளைய பல்லீத்தர்கள் எளிய பல்லீத்தர்களுக்கு உதாரணமாகும். சிலவகை நச்சுகள் மிகப்பெரிய பல்லீத்தர்கள் அல்லது ஏணி பல்லீத்தர்கள் எனப்படுகின்றன. பல்லீத்தர்கள் பொதுவாக பலபடிகள் எனப்படுகின்றன. அவற்றின் பிரதானமான சங்கிலியில் ஈதர் வினைக்குழுவை அவை பெற்றிருக்கும். குறைவு முதல் நடுத்தர மோலார் நிறை கொண்ட பலபடிகளுக்கு கிளைக்கால் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. C–O–C இணைப்புகள் கொண்ட பல வகையான சேர்மங்கள் ஈதர்கள் என வகைப்படுத்தப்படுவதில்லை. எசுத்தர்கள் (R–C(=O)–O–R′) , எமி அசிட்டால்கள் (R–CH(–OH)–O–R′), கார்பாக்சிலிக் அமில டை ஐதரைடுகள் (RC(=O)–O–C(=O)R′) போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஈதர் மூலக்கூறுகள் தங்களுக்குள் கூடி ஐதரசன் பிணைப்பை உண்டாக்குவதில்லை. இதனால் இவற்றுடன் தொடர்புடைய ஆல்ககால்களைக் காட்டிலும் குறைவான கொதினிலையைக் கொண்டுள்ளன. ஈதர்கள் மற்றும் அவற்றின் சமபகுதி சேர்மங்களான ஆல்ககால்களின் கொதிநிலைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் கார்பன் சங்கிலிகளின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க குறைகிறது. விரிவடைந்த கார்பன் சங்கிலியின் கார்பனில் இடம்பெற்றுள்ள ஐதரசன் பிணைப்பினால் வண்டர் வால் விசையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது இதற்கு காரணமாகும். ஈதர்கள் இலேசான் முனைவுத்தன்மை கொண்டவையாக உள்ளன. C–O–C பிணைப்பின் பிணைப்புக் கோணம் 110° ஆகும். C–O இருமுனையிகள் இதனால் இரத்து செய்யப்படுவதில்லை. ஆல்க்கீன்களைக் காட்டிலும் ஈதர்கள் அதிக முனைவுத் தன்மையும், ஆல்ககால்கள், எசுத்தர்கள் அல்லது அமைடுகளைக் காட்டிலும் குறைவான முனைவுத் தன்மையும் கொண்டவையாக உள்ளன, ஆக்சிசன் அணுக்களின் மீதுள்ள இரு தனி இணை எலக்ட்ரான்கள் நீர் மூலக்கூறுகளுடன் ஐதரசன் பிணைப்பை உருவாக்குகின்றன. கார்பாக்சிலிக் அமிலம் கார்பாக்சிலிக் அமிலம் "(carboxylic acid)" என்பது தன்னுடைய கட்டமைப்பில் குறைந்தது ஒரு கார்பாக்சில் குழுவையாவது (C(=O)OH) கொண்டுள்ள கரிமச்சேர்மம் கார்பாக்சிலிக் அமிலம் எனப்படுகிறது. இதனுடைய அமைப்பு வாய்ப்பாடு R–COOH, ஆகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள R என்பது ஆல்க்கைல் அல்லது ஓர் அரைல் மூலக்கூறைக் குறிக்கிறது. கார்பாக்சிலிக் அமிலங்கள் பரவலாகத் தோன்றுகின்றன. புரதங்களை உருவாக்கும் அமினோ அமிலங்கள், வினீகரின் ஒரு பகுதியாகவும் வளர்சிதை மாற்றத்தில் உருவாகக் கூடியதுமான அசிட்டிக் அமிலம் உள்ளிட்டவையும் கார்பாக்சிலிக் அமிலங்களே ஆகும். கார்பாக்சிலிக் அமிலத்தின் உப்புகளும் எசுத்தர்களும் கார்பாக்சிலேட்டுகள் எனப்படுகின்றன. ஒரு கார்பாக்சில் குழு புரோட்டான் நீக்கம் செய்யப்பட்டால் அதனுடைய இணை காரம் ஒரு கார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனியை உருவாக்குகிறது. கார்பாக்சிலேட்டு அயனிகள் ஒத்திசைவால் உறுதிப்படுத்தப்பட்டவை ஆகும். இந்த அதிகரிக்கப்பட்ட நிலைப்புத்தன்மை கார்பாக்சிலிக் அமிலங்களை ஆல்ககால்களைக் காட்டிலும் அதிக அமிலத்தன்மை கொண்டவையாக ஆக்குகின்றன. கார்பாக்சிலிக் அமிலங்கள் பொதுவாக அவற்றின் எளிய திட்டம் சாரா பெயர்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படுகின்றன. வழக்கமாக அவற்றின் பின்னொட்டு இக் அமிலம் என்று முடிவு பெறுவனவாக இருக்கும். இவற்ருக்கு ஐயுபிஏசி முறையில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களும் உள்ளன.இம்முறையில் கார்பாக்சிலிக் அமிலங்கல் ஆயிக் அமிலம் என்ற பின்னொட்டைக் கொண்டு முடிவனவாக இருக்கின்றன . உதாரணமாக எளிய முறையில் பியூட்டைரிக் அமிலம் (C3H7CO2H) என்று அழைக்கப்படும் கார்பாக்சிலிக் அமிலம் ஐயுபிஏசி முறையில் பியூட்டனாயிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கார்பாக்சிலிக் அமிலத்தைக் கொண்டிருக்கும் அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடும் போது வேறு பதிலீடுகள் இருந்தாலும் தாய்சங்கிலியில் கார்பாக்சிலிக் அமிலம் இணைந்துள்ள இடத்திற்கு முதலாவது எண் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக கார்பாக்சி அல்லது கார்பாக்சிலிக் அமிலம் என்று பெயரிடுவதற்குப் பதிலாக 3-குளோரோபுரோப்பியானிக் அமிலம் எனப்படுகிறது. வேறொரு தாய்கட்டமைப்புடன் கார்பாக்சில் குழு இணைந்திருந்தால் அதை 2-கார்பாக்சிபியூரான் என்று கார்பாக்சி குழு முன்னிலைப்படுத்தப்பட்டு பெயரிடப்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலத்தின் கார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனி (R–COO−) பொதுவாக ஏட்டு என்ற பின்னொட்டுடன் சேர்த்து பெயரிடப்படுகிறது. மேலும் பொது வழக்கில் இணை அமிலத்திற்கு இக் என்ற பின்னொட்டும் இணை காரத்திற்கு ஏட்டு என்ற பின்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுகிறது. உதாரணமாக அசிட்டிக் அமிலத்தின் இணை காரம் அசிட்டேட்டு எனப் பெயரிடப்படுகிறது. தனியுறுப்பு •COOH (CAS# 2564-86-5) நிலைப்புத்தன்மை குறைவாகக் கொண்டது ஆகும். எலக்ட்ரான் நிலைகாந்த ஒத்திசைவு நிறமாலை முறையில் அமிலப் பிரிகை மாறிலி கணக்கிடப்படுகிறது . கார்பாக்சில் குழு இருபடியாக்கலுக்கு உட்பட்டு ஆக்சாலிக் அமிலமாக உருவாகிறது. கார்பாக்சிலிக் அமிலங்கள் முனைவுற்றவை ஆகும். ஏனென்றால் அவை ஐதரசன் பிணைப்பு ஏற்பிகள் (கார்பனைல் -–C=O) மற்றும் ஐதரசன் பிணைப்பு வழங்கிகள் (ஐதராக்சில் –OH) ஆகிய இரண்டுமாகச் செயல்படுகின்றன. மேலும் இவை ஐதரசன் பிணைப்பில் பங்கேற்கின்றன. கார்பாக்சில் மற்றும் கார்பனைல் குழுக்கள் இரண்டும் சேர்ந்து கார்பாக்சில் வேதிவினைக் குழு உருவாகிறது. கார்பாக்சிலிக் அமிலங்கள் வழக்கமாக தன்னியக்கத்தைக் கொண்டிருப்பதால் பொதுவாக இவை இருபடி இணைகளாக முனைவற்ற ஊடகங்களில் கானப்படுகின்றன. 1 முதல் 5 வர கார்பன் எண்ணிக்கை கொண்ட சிறிய கார்பாக்சிலிக் அமிலங்கள் தண்ணீரில் கரைகின்றன. உயர் கார்பாக்சிலிக் அமிலங்கள் தண்ணீரில் குறைவாகக் கரைகின்றன. ஆனால் ஈதர், ஆல்ககால் போன்ற குறை முனைவு கரைப்பான்களில் இவை கரைகின்றன . கார்பாக்சிலிக் அமிலங்கள் தண்ணீரைவிட அதிக கொதிநிலையை கொண்டிருக்கின்றன, அவற்றின் அதிகரித்த மேற்பரப்புப் பகுதி மட்டும் இதற்கு காரணமல்ல அவை நிலையான இருபடிகளாக உருவாக்குகின்ற அவற்றின் போக்கும் ஒரு காரணமாக இருக்கின்றது. கார்பாக்சிலிக் அமிலங்கள் இந்த இருபடிகளாக ஆவியாகவோ அல்லது கொதிக்கவோ செய்கின்றன. கொதிநிலை ஏற்படுவதற்கு இவற்றி இருபடி பிணைப்புகளும் உடைக்கப்பட வேண்டும் அல்லது முழுமையான இருபடியும் ஆவியாக்கம் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டுமே ஆவியாதல் வெப்பத்தின் தேவைகளை அதிகரிக்கும். கார்பாக்சிலிக் அமிலங்கள் பிரான்சுடெட்டு-லவ்ரி அமிலங்களாகும். ஏனெனில் அவை புரோட்டான் (H+) வழங்கிகளாகும். இவை பொதுவான கரிம அமிலங்களாகக் கருதப்படுகின்றன. கார்பாக்சிலிக் அமிலங்கள் பொதுவாக பலவீனமான அமிலங்களாக இருக்கின்றன, அதாவது, அவை நடுநிலையான நீர்த்த கரைசல்களில் பகுதியாக மட்டுமே பிரிகை அடைந்து H + நேர்மின் அயனிகளாகவும் RCOO- எதிர்மின் அயனிகளாகவும் பிரிகின்றன. உதாரணமாக, அறை வெப்பநிலையில் 1-மோலார் அசிட்டிக் அமிலத்தின் கரைசலில், அமில மூலக்கூறுகளில் 0.4% அமில மூலக்கூறுகள் மட்டுமே பிரிக்கப்படுகின்றன. மின்னெதிர் பதிலீடுகள் வலுவான அமிலங்களை வழங்குகின்றன. கார்பாக்சிலிக் அமிலங்கள் குறிப்பாக ஆவியாகும் பெறுதிகள் பெரும்பாலும் கடுமையான நெடியைக் கொண்டுள்ளன. பொதுவாக அசிட்டிக் அமிலம் மற்றும் பியூட்டைரிக் அமிலம் போன்றவை உதாரணங்களாகும். கார்பாக்சிலிக் அமிலங்களின் எசுத்தர்கள் இனிமையான மணம் கொண்டவையாக உள்ளன. வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சிவப்பு நிறமாலையியல் ஆய்வு மூலம் கார்பாக்சிலிக் அமிலங்கள் உடனடியாக அடையாளம் காணப்படுகின்றன. 1680 மற்றும் 1725 சென்டிமீட்டர் அலைவரிசையில் அவை C-O அதிர்வு பிணைப்பு (νC = O) உடன் தொடர்புடைய ஒரு கூர்மையான கற்றையாக வெளிப்படுகின்றன. தனித்தன்மை மிக்க νO–H கற்றை 2500- 3000 செ,மீ−1 பகுதி மண்டலத்தில் வெளிப்படுகிறது. 1H அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையில் மில்லியனுக்கு 10-13 பகுதி மண்டலத்தில் ஐதராக்சிலின் ஐதரசன் தோன்றுகிறது. தொழில் முறையாக பல கார்பாக்சிலிக் அமிலங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையிலும் எங்கும் இவை பரவியுள்ளன. கொழுப்பு அமிலங்களின் எசுத்தர்கள் லிப்பிடுகளின் முக்கியமான பகுதிப் பொருளாகும். அமினோகார்பாக்சிலிக் அமிலங்களின் பாலி அமைடுகள் புரதங்களின் பிரதானமான பகுதிப் பொருளாகும். பலபடிகள், மருந்துகள், கரைப்பான்கள், உணவுகூட்டுப் பொருள்கள் போன்றவை தயாரிப்பில் கார்பாக்சிலிக் அமிலங்கள் பெரிதும் பயன்படுகின்றன. அசிட்டிக் அமிலம், அக்ரைலிக் அமிலம், மெத்தக்ரைலிக் அமிலம், அடிப்பிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கொழுப்பு அமிலங்கள், புரோப்பியானிக் அமிலம், ம்லேயிக் அமிலம் போன்ற பல கார்பாக்சிலிக் அமிலங்கள் வர்த்தக முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. அமைடு அமைடு "(Amide)" என்பது கரிம வேதியியலில் RnE(O)xNR'2 என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள சேர்மங்களைக் குறிக்கிறது. ஒரு நைட்ரசன் அணு கார்பனைல் குழுவுடன் இணைக்கப்பட்டு R–CO–NR′R″ என்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தால் அவ்வகை சேர்மங்கள் அமைடுகள் எனப்படுகின்றன. இவற்றை அமில அமைடுகள் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். அமைப்பில் இடம்பெற்றுள்ள R மற்றும் R' என்பவை ஐதரசன் அணு அல்லது ஆல்கைல் குழுக்களைக் குறிக்கின்றன. கார்பாக்சமைடுகள் எனப்படும் கரிம அமைடுகள் பொதுவான அமைடுகளாகும் (n = 1, E = C, x = 1). இவற்றைத் தவிர பாசுபோரமைடு (n = 2, E = P, x = 1), சல்போனமைடு (E = S, x= 2) போன்ற மேலும் பல முக்கிய அமைடுகளும் அறியப்படுகின்றன. சேர்மங்களின் வகைப்பாட்டியல் மற்றும் வேதி வினைக்குழுவின் வகை என்ற இரண்டு வழிமுறைச் சேர்மங்களையும் அமைடு என்ற சொல் குறிக்கிறது. எளிய அமைடுகள் அமோனியாவில் இருந்து தருவிக்கப்படும் வழிப்பொருள்கள் ஆகும். அனோனியாவில் உள்ள ஓர் ஐதரசன் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ஓர் அசைல் குழு மாற்றீடு செய்யப்பட்டால் அத்வோர் அமைடு ஆகும். அமைடுகளின் பொதுவாய்ப்பாட்டை RC(O)NH2 என்று எழுதுவார்கள். இவ்வகையில் அமையும் அமைடு முதல்நிலை அமைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. இதற்கு நெருக்கமான மேலும் பலவகையான அமைடுகள் முதல்நிலை அமீன்களில் (R'NH) இருந்து தருவிக்கப்படுகின்றன. . இவற்றின் பொது வாய்ப்பாடு RC(O)NHR' ஆகும். மூன்றாம்நிலை அமைடுகள் பொதுவாக இரண்டாம்நிலை அமீன்களில் (R′R″NH) இருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் பொது வாய்ப்பாடு RC(O)NR′R″. ஆகும். அமைடுகள் பொதுவாக கார்பாக்சிலிக் அமிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட வழிப்பொருள்கள் ஆகும். கார்பாக்சில் குழுவில் இருக்கும் ஒரு ஐதராக்சில் குழுவானது அமைடில் ஓர் அமீன் அல்லது அமோனியாவினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். நைதரசனின் மேலுள்ள தனி இணை எலக்ட்ரான்கள் உள்ளடங்காமையால் காபனைல் ஆகிறது. இதனால் நைட்ரசன் மற்றும் கார்பனைல் கார்பன் இடையில் பகுதியாக ஓர் இரட்டைப் பிணைப்பு உருவாகிறது. அதன் விளைவாக அமைடில் உள்ள நைட்ரசன் கூம்பக வடிவில் இருப்பதில்லை. அசிட்டமைடு 62% ஒத்திசைவுக் கட்டமைப்பு ஏ ஆகவும் 28% ஒத்திசைவுக் கட்டமைப்பு பி ஆகவும் விவரிக்கப்படுகிறது. கூடுதல் ஒத்திசைவு வடிவங்களுக்கு வாய்ப்பிருப்பதால் இக்கணக்கிடு 100% அளவை அடையவில்லை. வழக்கமான பொதுப் பெயரிடல் முறையில் தாய் அமிலத்தின் பெயருடன் அமைடு என்ற சொல் சேர்த்து அந்த அமைடு அழைக்கப்படுகிறது. உதாரணமாக, அசிட்டிக் அமிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட அமைடு அசிட்டமைடு (CH3CONH2) என்ற பெயரைப் பெறுகிறது. இதையே ஐயுபிஏசி முறை பெயரிடல் முறை எத்தனமைடு எனப் பரிந்துரைக்கிறது. ஆனால் இதுவும் இதைப்போன்ற முறையாகப் பெயரிடப்பட்ட பெயர்களும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமீன்களில் இருந்து தருவிக்கப்பட்ட அமைடுகளுக்குப் பெயரிடும்போது முதல் அதில் உள்ள நைட்ரசனுக்கு மேல் உள்ள பதிலியை முதலாவதாகக் குறிப்பிட வேண்டும். இதன்படி டைமெத்திலமீன் மற்றும் அசிட்டிக் அமிலத்திலிருந்து உருவாக்கப்படும் அமைடிற்கு N,N-டைமெத்திலசிட்டமைடு (CH3CONMe2, இங்கு Me = CH3) என்ற பெயர் வைக்கப்படுகிறது. எளிமையாக டைமெத்திலசிட்டமைடு என்ற பெயரால் வழக்கமாக அழைக்கப்படுகிறது. வளைய அமைடுகள் லாக்டம்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை கண்டிப்பாக இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை அமைடுகளாக இருக்கும். வேதி வினைக்குழு P(O)NR2 வைப் பெற்றுள்ள அமைடுகள் பாசுப்போனமைடுகள் என்றும் வேதி வினைக்குழு SO2NR2 வைப் பெற்றுள்ள அமைடுகள் சல்போனமைடுகள் என்றும் பெயரிடப்படுகின்றன . அமீன்களுடன் ஒப்பிடுகையில் அமைடுகள் மிகவும் வலிமை குறைந்த காரங்களாகும். ஓர் அமீனுடைய இணை அமிலம் 9.5 என்ற pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஓர் அமைடினுடைய இணை அமிலம் −0.5 pKa மதிப்பைப் பெற்றுள்ளது. ஆகையால் அமைடுகள் தண்ணீரில் தெளிவாக குறிப்பிடத்தக்க அளவில் அமில-காரப் பண்புகளுடன் இல்லை எனலாம். இந்தக் காரக் குறைவுத் தன்மை கார்பனைல் குழுவின் எலக்ட்ரானைத் திரும்பப்பெறும் தன்மையால் விவரிக்கப்படுகிறது. இங்கு நைட்ரசன் மேலுள்ள தனி இணை எலக்ட்ரான்கள் ஒத்திசைவால் உள்ளடங்காத் தன்மையைப் பெறுகின்றன. மறுபுறம் கார்பாக்சிலிக் அமிலங்கள், எசுத்தர்கள், ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களைக் காட்டிலும் அமைடுகல் வலிமையான காரங்களாக உள்ளன. அவற்றின் இணை அமிலங்களின் pKa மதிப்புகள் −6 மற்றும் −10 ஆக உள்ளன. ஆக்சிசனின் எலக்ட்ரான் கவர் தன்மை அதிகம் என்பதால் கார்பனைல் (C=O) பிணைப்பின் இருமுனைவுத் தன்மை N–C பிணைப்பின் இரு முனைவுத்தன்மையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. (C=O) பிணைப்பின் இருமுனைவுத் தன்மை இருப்பதால் அமைடுகள் ஐதரசன் பிணைப்பு ஏற்பிகளாகச் செயல்படுகின்றன. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைடுகளில் N–H பிணைப்பு இரு முனைவுத்தன்மை இருப்பதால் அவ்வமைடுகள் ஐதரசன் பிணைப்பு கொடையாளிகளாகத் திகழ்கின்றன. இதனால் நீர் மற்றும் பிற மூலோபாய கரைப்பான்களுடன் அமைடுகள் ஐதரசன் பிணைப்பில் ஈடுபட இயலும். ஆக்சிசன் அணுவானது ஐதரசன் பிணைப்பை தண்ணீரிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் N-H பிணைப்பு ஐதரசன் பிணைப்பை கொடையாக அளிக்க முடியும். இதுபோன்ற தொடர்புகளின் விளைவாக ஐதரோகார்பன்களை விட அமைடுகள் தண்ணீரில் அதிகமாக கரைகின்றன, டையால் கிளைக்கோல் ("glycol") அல்லது டையால் (Diol) என்பது இரண்டு ஐதராக்சைல் (-OH) கூட்டங்களைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும்.. இவை அல்ககோல்களின் ஒரு வகையாகும். இவற்றில் இரு அல்ககோல் வேதி வினைக்குழுக்கள் உண்டு. இவை இயற்கையில் வெல்லம் மற்றும் அவற்றின் பல்பகுதியங்களான செல்லுலோசிலும் காணப்படுகின்றன. பொதுவாகக் கிடைக்கும் தொழிலக டையால் எத்திலீன் கிளைக்கால் ஆகும். அமில ஆலைடு அமில ஏலைடு அல்லது ஏசைல் ஏலைடு, அசைல் ஆலைடு ("Acyl Halide") என்பது ஒட்சிஅமிலமொன்றின் -OH கூட்டத்தை எதாவதொரு அலசன் அணுவினால் பிரதியீடு செய்வதன் மூலம் உருவாக்கப்படும் சேதனச் சேர்வையாகும். அவ்வமிலம் ஒரு காபொட்சிலிக் அமிலமாயின், அச்சேர்வை ஒரு –COX தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டிருக்கும். இத்தொழிற்பாட்டுக் கூட்டம் ஒரு காபனைல் கூட்டத்தில் ஒற்றைப் பிணைப்பால் இணைக்கப்பட்ட அலசன் அணுவைக் கொண்டிருக்கும். அவ்வாறானதொரு அமில ஏலைட்டின் பொதுச் சூத்திரம் RCOX என எழுதப்படலாம். இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமாகவும், CO என்பது காபனைல் கூட்டமாகவும், X என்பது குளோரைட் போன்ற ஒரு ஏலைட்டாகவும் இருக்கலாம். அமில ஏலைட்டுக்களில் பெரும்பாலும் உருவாக்கப்படுபவை அமில குளோரைட்டுக்களாகும். எனினும், அசற்றைல் அயடைட்டே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அசெற்றிக் அமில உற்பத்திக்காக, இது வருடாந்தம் பல பில்லியன் கிலோகிராம்கள் உருவாக்கப்படுகின்றன. இதேபோல், சல்போனிக் அமிலத்தின் ஐதரொட்சில் கூட்டத்தை ஒரு அலசன் அணுவால் பிரதியிடுவதன் மூலம் உரிய சல்போனைல் ஏலைட்டை உருவாக்கலாம். பெரும்பாலும் இதில் குளோரைட் பயன்படுவதால் இவை சல்போனைல் குளோரைட்டு எனவே அழைக்கப்படுகின்றன. லிசா கெரார்டு லிசா கெரார்டு ("Lisa Gerrard", பிறப்பு ஏப்ரல் 12, 1961) ஆத்திரேலிய இசைக்கலைஞரும், பாடகரும் ஆவார்.தனது முந்தைய கூட்டாளி பிரென்டன் பெர்ரியுடன் உருவாக்கிய டெட் கேன் டான்சு என்ற இசைக்குழுவின் அங்கமாக பிரபலமானார். 2000ஆம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் "கிளாடியேட்டரில்" லிசா அன்சு சிம்மருடன் இணைந்து பாடிய பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் அகாதமி விருதுக்கான பரிந்துரையும் பெற்றது. கெரார்டின் குரல் சுருதி குறைந்த கட்டையில் (contralto) E3-F5 வீச்சில் உள்ளது.(பொதுவாக பாடகர்கள் Dயில் பாடுவார்கள்).இவரது குரல் ஆழமாக, கனமாக தனிப்பட்டு உள்ளதாக வர்ணிக்கப்படுகிறது. அதேநேரம் மேல் ஸ்தாயியில் பாடக்கூடியத் திறனையும் பெற்றுள்ளார். "த ஹோஸ்ட் ஆஃப் செரஃபிம்", "எலஜி", "ஸ்பேஸ் வீவர்", "கம் திஸ் வே" மற்றும் "ஒன் பெர்ஃபெக்ட் சன்ரைஸ் " போன்ற பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இவர் தமது பாடல்களை அவரே உருவாக்கிய மொழிவடிவத்தில் பாடுகிறார். வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் போரில் ஏவியவை எல்லாம் உடனடியாக வெடிப்பதில்லை. "வெடிக்காதது ஆனால் வெடிக்கும்" இவற்றைத்தான் நாம் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் என்போம். சில சமயங்களில் போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படாமலோ அல்லது போதிய வெப்பம் இல்லாததினாலோ இவை வெடிக்காமல் இருக்கலாம், இவை ஆபத்தானவை. இவை வெடிக்காதவை ஆனால் வெடிக்ககூடியவை. பழைய கம்பி மணிக்கூடுகள் சில குலுக்கினால் ஓட ஆரம்பிக்கும், இதுபோலத்தான் சில காரணங்களுக்காக வெடிக்காத இவை சிறு அசைவினாற் கூட வெடிக்கக்கூடியவை, சில வெப்பத்தில் வெடிக்கும் (யுத்த இடங்களில் வளவைத் துப்பரவு செய்யத் தீமூட்டும் போது நிகழலாம்) கைக்குண்டுகள், 40 மில்லிமீட்டர் ரைபிள் குண்டு, மோட்டார் ஷெல், ஆர்பிஜி (ராக்கெட்டின்னால் உந்தப்படும் கிரனைட்). அண்மைக்காலமாக வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களே கூடுதலான விபத்துக்களுக்குக் காரணமாக அமைகிறது. இதில் 40 மில்லிமீட்டர் ரைபிள் குண்டு "கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிசு" என்பதுபோல் இரும்பால் ஆன கவச வாகனத்தையே தகர்க்ககூடியது, என்பதால் வெடித்தால் அநேகமாக இறப்பே ஏற்படும். கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பைச் சேர்ந்த மிதிவெடி அகற்றும் வல்லுனாரான மமோவின் இறப்பிற்கும் 40 மில்லிமீட்டர் கிரைனைட்டே காரணமாக அமைந்தது. மிதிவெடி அபாயக் கல்வி சேதனப் பசளை இலங்கையிற் பெரும்பாலும் விளைச்சல் முடிந்ததும் தீவைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் தீவைத்தால் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருந்தால் அவை வெடிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். மிதிவெடி அபாயக் கல்வியில் தீவைப்பதை இயன்றவரை தவிர்த்துக் சேதனப் பசளை ஆக்கும் வண்ணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்குக் காரணங்களாவன, தோட்டம் அல்லது வயலில் உள்ளதை எரித்தால் பொட்டாசியம் மிஞ்சும். காலப்போக்கில் மக்னீசியம் குறைபாடும் பயிர்களுக்கு ஏற்படலாம். பயிர்களுக்கு வேண்டிய நைதரசனை மண்ணில் இருந்து பெற்றுக்கொள்ள மண்ணின் காபனுக்கும் நைதரனுக்கும் உள்ள விகிதாசாரம் பங்களிப்புச் செலுத்துகிறது. காபன் கூடினால் பயிர்கள் உள்ளெடுக்கும் நைதரனின் அளவு குறையும். எரிப்பதால் காபனின் அளவு கூடும், இலை குழைகளில் உள்ள நைதரசனும் ஆவியாகி விடும். செயற்கை பசளைகள் பாவித்தால் கூட காபன் கூடிய நிலைப்பகுதியில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதைக்குறைக்க சேதனைப் பசளைகள் தயாரித்துப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. கிரியா தீபிகை கிரியா தீபிகை என்பது ஒரு பத்ததி நூல். இது தமிழர் வடமொழியில் எழுதிய நூல். சிவாக்கிர யோகிகள் இதன் ஆசிரியர். இவர் வாழ்ந்த காலம் 16-ஆம் நூற்றாண்டு. இந்த நூல் எட்டு படலங்கள் கொண்டது. ஆசிரியரின் உரைநடை, ஆகம சுலோகங்கள், சில இடங்களில் பக்கம் பக்கமாக வடமொழி சுலோகங்கள் முதலானவற்றைக் கொண்ட நூல் இது. இந்த நூலில் கிரியைப் பகுதிகள் மிகுதியாக உள்ளதால் இதனை 'மந்திர சாத்திரம்' என்பர். (காலைக்கடன், பிராணாயாமம், தர்ப்பணம், நித்திய கருமம்) (சூரியபூசை, சிவபூசை, உணவு உண்ணும் சடங்குகள்) (பவித்திரம், சாதுரியம்) (நிவாரண தீட்சை, ஞான தீட்சை) (சன்னியாச விதிமுறைகள்) (ஆசிரியர், மாணவர் வழிபாட்டு முறை) (அந்திமக் கிரியை) (சமாதி விதிமுறை) முதலானவை இதில் கூறப்பட்டுள்ளன. வேல்சு விக்கிப்பீடியா வேல்சு விக்கிப்பீடியா ("வேல்சு மொழியில்": Wicipedia Cymraeg) விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் வேல்சு மொழிப் பதிப்பு ஆகும். இப்பதிப்பு சூலை 2003 இல் தொடங்கப்பட்டது. 4 ஆகத்து, 2012 இல் 36000 கட்டுரைகளையும், 21000 பயனர்களையும் கொண்டிருந்தது. கட்டுரைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் வரிசையில் 68வது இடத்தில் உள்ளது. இப்பதிப்பின் தளம் வேல்சு மொழியில் அதிகம் பார்க்கப்படும் தளம் ஆகும். மக்கதோனிய விக்கிப்பீடியா மக்கதோனிய விக்கிப்பீடியா (மக்கதோனியம்: "Википедија на македонски јазик"), விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் மக்கதோனிய மொழிப் பதிப்பு ஆகும். செப்தம்பர் 2003இல் தொடங்கப்பட்ட இப்பதிப்பு, தற்போது 55,653 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. . ஆகத்து, 2012 இல் 59,000 கட்டுரைகளைக் கொண்டு, 53வது இடத்தில் உள்ளது. சைவ சித்தாந்தப் பரம்பரை சைவ சித்தாந்தத்தை வளர்க்கத் தோன்றிய பரம்பரைகள் தசரத் மான்ஜி தசரத் மான்ஜி (Dashrath Manjhi 1934- 2007): இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர். "மலை மனிதன்" என்றழைக்கப்படுபவர். தனி ஒரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். Man. இச்சிற்றூர் மலையின் ஒரு பக்கத்தில் குடிசைகளில் வாழும் மக்களைக் கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி. மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில்,மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார். தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி தனி ஒரு ஆளாக சுத்தியலும் உளியுமாகக் களத்தில் இறங்கினார். இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதையை உருவாக்கினார். அதுவரை 80 கி. மீ மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் 13 கி. மீ தூரமானது. இதனால் அம்மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது. தனது மனைவி மீதுள்ள காதல் தான் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய மான்ஜியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது இந்திய அரசு " அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியது. ஆனால் அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் செய்யவில்லை என இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி பீகார் அரசு இவருக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கியுள்ளார். தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் பார்வை இவர்மீது திரும்பியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோய்க்கான செலவை அரசு ஏற்பதாகக் கூறியது. ஆனால் நோயின் தீவரம் காரணமாக 2007, ஆகஸ்ட் 18 அன்று மான்ஜ்ஜியின் உயிர் பிரிந்தது. ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மான்ஜி அமைத்த பாதை இன்றுவரை செப்பனிடப்படாமலேயே உள்ளது. தசரத் மான்ஜியின் கதை திரைப்படமாகத் தயாரிக்கப்படுவதாகவும் இப்படத்தினை மானிஷ் ஜா என்ற இயக்குநர் இயக்க, மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் மான்ஜியின் பாத்திரத்தில் நடிப்பதாகவும் உதான் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் சிங் இப்படத்தினைத் தயாரிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை, சமூக விழிப்புணர்வு வார இதழ், 09 ஆகஸ்ட் 2010 பக்கம்18-20 அம்மான் 2000 அம்மான் 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவச வாகனங்களுக்கு எதிரான மிதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மிதிவெடி என்பதால் கவசவாகனங்கள் மாத்திரம் இன்றி வாகனமோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும். ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது) ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகளை ஆப்கானித்தானியர்கள் தொடர்ச்சியாக அனுபவித்தனர். புதிய ஆட்சியை வலுப்படுத்த சோவியத் படையெடுப்பு 1979 டிசம்பரில் இடம்பெற்றது. முஜாஹிதீன் என அழைக்கப்பட்ட ஆப்கானித்தான் எதிர்ப்புப்படை சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டனர். சில பிரிவினர் பாக்கித்தானிய சேவைகளிடை உளவுத்துறை மற்றும் சவுதி அரேபிய ஆதரவுடன் அமெரிக்காவின் உதவியைப் பெற்றன. சோவியத் படைகள் 1989 பெப்ரவரியில் இல் பின்வாங்கின. எனினும் சோவியத் ஆதரவு ஆப்கானித்தான் பொதுவுடமை ஆட்சி 1992 இல் காபூல் வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்தது. அது, அகம், அதியகம் அது, அகம், அதியகம் அல்லது இச்சை உணர்ச்சி, தன்முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி ("Id, ego and super-ego") என்பன சிக்மண்ட் பிராய்டின் மனத்தின் கட்டமைப்பு மாதிரியை விளக்கும் உளச் செயற்பாட்டின் மூன்று பகுதிகள். அவை செயல் மற்றும் இடையூடாட்ட மன வாழ்வை விளக்கும் மூன்று கோட்பாட்டு அமைப்புக்களாகும். மன மாதிரியின்படி, "அது" ஒருங்கிணைக்கப்படாத உள நிகழ்வுகளின் போக்கின் அமைப்பாகவும், "அகம்" ஒருங்கிணைக்கப்பட்ட உண்மைப் பகுதியாகவும், "அதியகம்" முக்கிய மற்றும் நன்னெறிப்படுத்தும் பாத்திரமாகவும் இருக்கும். இவ்வாறு இருப்பினும் மாதிரியானது அமைப்பு மற்றும் கருவியை தொடர்பு கொள்ளச் செய்யும் ஒன்றாகும். அது, அகம், அதியகம் என்பன மூளையின் பகுதியாகவன்றி மனத்தின் செயற்பாடாகவும், நரம்புக் கூறு சரியான உடலியல் அமைப்பை செற்படுத்துவதுபோல் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தொடர்புபட்டுக் காணப்படுவதில்லை. சிக்மண்ட் பிராய்டின் சிந்தனை வளர்ச்சியின் பிற்பகுதியில் இவ்வெண்ணக் கருக்கள் உருவாகின. "அமைப்பு மாதிரி" அவருடைய கட்டுரையான "இன்ப கொள்கைக்கு அப்பால்" என்பதில் 1920இல் முதலில் கலந்துரையாடப்பட்டது. மூன்று வருடங்களின் பின் அவருடைய "அது, அகம், அதியகம்" என்பதில் வடிவமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பிராய்டின் முன்மொழிவு பல பொருள் பதமான "நனவிலி" மற்றும் அதனுடைய பல்வேறு முரண்பாடான பாவனை ஆகியவற்றால் செல்வாக்குப் பெற்றது. "அது" அடிப்படை ஊந்துதல்களைக் கொண்ட ஆளுமைக் கட்டமைப்பின் ஒருங்கிணையாத பகுதியாகும். "அது" சிற்றின்ப உணர்ச்சிகள் கொண்டது. இது உண்மைத்துவத்தின் தேவைக்கு பதிலளிக்காது உள நிகழ்ச்சிகளின் செயல்திற அடிப்படை மூலமாகும். இது "இன்பக் கொள்கைக்கு" ஏற்பவும், துன்பம் அல்லது இன்பமற்ற தூண்டல் உள நிகழ்ச்சிகளின் பதட்டத்தால் அதிகரிப்பதையும் தவிர்த்துச் செயற்படுகின்றது. அகம் உண்மைக் கொள்கைக்கு ஏற்ப செயற்படுகின்றது. எ.கா: இது 'அது'வின் தூண்டலின் விருப்புக்கு ஏற்ப தேடுகின்றது. அதனால், வேதனையைவிட நீண்டகால இலாபத்திற்கு ஏற்ற உண்மை நிலையை நோக்கியதாக இருக்கின்றது. அதே நேரம், பிராய்ட் அகமானது 'அது'விற்கும் உண்மை நிலைக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய முயல்கிறது எனவும், அது அடிக்கடி நனவிலி கட்டளைகளை அதன் முன் உணர்வுடன் மூடி கட்டுப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். பிராய்ட் தன் அதியக கருத்தினை முன்னைய அக தொடர்பிலிருந்து உருவாக்கினார். அவரின் கருத்துப்படி, அதியக நிறுவுதல் பெற்றோர் செயற்பாட்டுடன் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வெற்றியுள்ள ஒர் நிகழ்வாக விபரிக்க முடியும் என்கின்றார். அதேவேளை அதியகம், பெற்றோர் இடத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள், முன் மாதிரியான ஆட்கள் ஆகியோரை உள்வாங்க முடியும். நபர்: தொடர்புபட்ட தலைப்புக்கள்: எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் ("Hebrew University of Jerusalem", எபிரேயம்: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது. முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை பெற்றனர். உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடுபடி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது. வானிலையாலழிதல் வானிலை காரணிகளால் பாறை படிப்படியாகச் சிதைவடைந்து மண் மற்றும் கனியங்கள் தோன்றும் செயற்பாட்டுத் தொடர் வானிலையாலழிதல் (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், வேதியியல் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகளால் நிகழலாம். மண்ணரிப்பு நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை. பாறைகளில் அல்லது மண்ணில் ஏற்படும் வானிலையாலழிதலானது, பௌதீக வானிலையாலழிதல் மற்றும் வேதியியல் வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். வானியல் காரணிகளான வெப்பம், நீர், பனிக்கட்டி (Ice) மற்றும் அமுக்கம் என்பன நேரடியாக தாக்கம் செலுத்துவதால் பௌதீக வானிலையாலழிதல் நிகழ்கிறது. அமில மழை போன்ற நேரடி வேதியல் காரணிகளாலும், விலங்குகளின் சிறுநீர், எச்சம் போன்ற உயிரியல்சார் காரணிகளினால் ஏற்படும் சிதைவுகளின் வேதியியல் தாக்கங்களாலும் வேதியியல் வானிலையாலழிதல் நிகழும். உயிரியல் சார்ந்த காரணிகளால் ஏற்படும் வானிலையாலழிதல் சிலசமயம் உயிரியல் வானிலையாலழிதல் என்றும் அழைக்கப்படுவதனால், மூன்று வகையான வானிலையாலழிதலாகப் பிரிக்கப்படுவதுமுண்டு. சூரிய வெப்பம், நீர், காற்று முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும். பாறைகளின் மேற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வேறுபட்ட வேதியியல் பதார்த்தங்களின் தாக்கங்களால் வேதியியல் வானிலையாலழிதல் நிகழுகின்றது. நீர், ஒட்சிசன், அமிலங்கள் முதலானவை பாறை மேற்பரப்புடன் தாக்கமுறுவதானால் வேதியியல் வானிலையாலழிதல் நேருகின்றது. எ.கா: கல்சியம், சோடியம் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு முதலான மூலகங்கள் அடங்கிய கனியங்கள் இலகுவில் நீர்ப்பகுப்புக்கு உள்ளாகும். உதாரணம்: ஒத்டோகினேசுப் பாறை நீர்ப்பகுப்படைந்து பாற்களி உருவாகுதல். பாறைகளை அண்டி வாழும் தாவர விலங்குகள் தொடர்புகளால் ஏற்படும் வானிலையாலழிதல் உயிரியல் வானிலையாலழிதல் எனப்படும். தருமபுர ஆதீன பரம்பரை தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர். இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் புறச் சந்தான குரவர் என்றும் கயிலாயவாசிகள் என்றும் கூறுவர். இப்பரம்பரை புறச் சந்தான குரவர் அகச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது. இவர்கள் தொன்மச் சந்தானக் குரவர்கள் கார்பனைல் கரிம வேதியியலில், கார்பனைல் தொகுதி ("carbonyl group") என்பது ஒரு கரிம அணு ஆக்சிசன் அணுவுடன் இரட்டைப் பிணைப்பில் (C=O) இணைக்கப்பட்ட ஒரு வேதி வினைக்குழு ஆகும். சமபகுதியம் வேதியியலில் சமபகுதியம் அல்லது மாற்றியன் ("isomer") என்பது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும், வேறுபட்ட கட்டமைப்பு வாய்பாடையும் கொண்ட சேர்வைகளாகும். சமபகுதியங்கள் தம்மிடையே ஒரே இயல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சமபகுதியங்களில் பலவகைகள் உண்டு. இவற்றுள் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவையாவன: இவ்வகைச் சமபகுதியங்கள் அணுக்களும் அணுக்கூட்டங்களும் (தொழிற்படு கூட்டம்) வெவ்வேறு வழிகளில் ஒன்றிணைவதால் உருவாகின்றன. இவற்றுள் மூன்று வகைகள் உண்டு. அவையாவன: இவ்வகைச் சமபகுதியத்தில் சேர்வையின் சங்கிலி மாறுபடும். உதாரணமாக, பென்டேன் மூன்று சமபகுதியங்களைக் கொண்டுள்ளது. இவ்வகைச் சமபகுதியத்தில் பிரதான சங்கிலியில் தொழிற்படுகூட்டத்தின் நிலை மாறுபடும். உதாரணமாக, பென்டனோல் மூன்று சமபகுதியங்களை உடையது. இவ்வகைச் சமபகுதியத்தில் தொழிற்படு கூட்டம் வித்தியாசப்படும். இவ்வகைச் சமபகுதியங்களில் பிணைப்புக்கட்டமைப்பு ஒன்றாகவே காணப்படும். எனினும் வெளியொன்றில் இவற்றின் கேத்திரகணித நிலை வேறுபடும். இவற்றுள் இருவகைகள் உண்டு. அவையாவன: இவ்வகைச் சமபகுதியத்தில் கட்டமைப்பு ஒன்றாயிருப்பினும் கேத்திரகணித அமைப்பில் வேறுபாடு காணப்படும். உதாரணமாக, Dichloroethene பின்வரும் சமபகுதியங்களைக் கொண்டுள்ளது. இதனை சிசு-திரான்சு சமபகுதியம் எனவும் அழைப்பர். இங்கு பிணப்பு அச்சின் வழியே ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டுக்கு ஒரே பக்கத்தில் ஒரே இயல்புடைய அணு அல்லது அணுக்கூட்டங்கள் அமைந்திருந்தால் அது சிசு சமபகுதியம் எனவும், அவை எதிரெதிர்ப் புறங்களில் இருந்தால் அது திரான்சு சமபகுதியம் எனவும் அழைக்கப்படும். இச் சேர்வைகளில் சமச்சீரற்ற காபன் அணுவொன்று இருத்தல் வேண்டும். இச் சமபகுதியத்தில் ஒன்று தளமுனைவாக்கிய ஒளியை இடப்புறம் திருப்பின், மற்றையது அதனை வலப்புறம் திருப்பும். நாராயணவனம் நாராயணவனம் என்னும் ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாராயணவனம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. இது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ள ஊர். இது திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. நாராயணவனத்திலிருன்து கைலாசநாதர் நீர்வீழ்ச்சி 10 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 15 கிமீ தொலைவில் இராகு பரிகாரத்தலமான இராமகிரி கோயில் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ சென்றால் சுருட்டுப்பள்ளி என்னும் ஊரில் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளது. இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாராயணவனத்தின் மக்கள்தொகை 10,965 ஆக இருந்தது. இதில் 50% ஆண்களாகவும் 50% பெண்களாகவும் உள்ளனர். இவ்வூர் தேசிய சராசரியான 59.5% இனை விட அதிகமான 72% சராசரி எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது: ஆண்களின் எழுத்தறிவு 80%, பெண்களின் எழுத்தறிவு 63% ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 13% ஆனேர் 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள். நாராயணவனம் மண்டலத்தில் பதினாறு ஊர்கள் உள்ளன. இந்த மண்டலத்தின் எண் 24. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது. மலையனூர் மலையனூர் புகழ்பெற்ற கோயில்களையுடைய ஊர்களுள் ஒன்றாகும் இங்கு அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. குக்குரங்கு குக்குரங்கு ("Cebuella pygmaea") என்பது தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழும், மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், ஒரு குரங்கு. வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ கொண்ட சிற்றுருவம். இக்குக்குரங்கு அமேசான் மழைக்காடுகளில் கீழ்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றது. மேற்கு பிரேசில், தென்மேற்குக் கொலம்பியா, கிழக்கு ஈக்வெடார், கிழக்குப் பெரு நாடு, வடக்கு பொலிவியா போன்ற நாட்டுப்பகுதிகளில் உள்ள காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 200 மீ முதல் 940 மீ உயரமான பகுதிகள் வரையில் இவை பெரும்பாலும் வாழ்கின்றன. உயிரினப் பாகுபாட்டில் தென்னமெரிக்காவில் வாழும் குரங்குகளில் மார்மோசெட்டு (marmoset) எனப்படும் சிறு உருவம் உடைய பேரின வகைகளை "காலித்திரிக்சு" (Callithrix), "மைக்கோ" (Mico) என்னும் இரண்டு பேரினத்தின் கீழ் குறிப்பர். ஆனால் அவற்றில் இருந்து சிறிதே வேறுபடுமாறு குக்குரங்குகள், செபுயெலா அல்லது செபூயா (Cebuella) எனும் தனிப்பேரினமாக, காலித்திரிசிடே (Callitrichidae) என்னும் குடும்பவகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் உணவு மரப்பிசின் ஆகும். குக்குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11-12 ஆண்டுகளைத் தம் வாழ்நாளாகக் கொண்டுள்ளன, ஆனால் உயிர்க்காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. இது முதனிகளில் மிகவும் சிறிய உருவுடையவற்றுள் ஒன்று. இதன் உடல் அளவு வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் 14 முதல் 16 செமீ இருக்கும்; வால் மட்டுமே 15 முதல் 20 செமீ இருக்கும். ஆண் குக்குரங்குகளாகிய கடுவன்கள் ஏறத்தாழ 140 கிராம் எடையும், பெண் மந்திகள் 120 கிராம் எடையும் கொண்டிருக்கும். சிவக்கொழுந்து சிவாசாரியார் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்பவரைச் சிவாக்கிர யோகிகள் எனவும் வழங்குவர். இவரது காலம் 16-ஆம் நூற்றாண்டு. சிவக்கொழுந்து தேசிகர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ சித்தாந்த பரம்பரைகள் இரண்டில் ஒன்றான சிவாக்கிர யோகிகள் பரம்பரை இவர் பெயரை முன்னிலைப்படுத்துகிறது. இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர். சிவஞானபோத லகுடீகை சிவஞானபோத லகுடீகை என்னும் வடமொழி நூல் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்னும் வேளாளர் குடி தமிழ்மகனால் எழுதப்பட்டது. லகுடீகை என்பது எளிய உரை என்னும் பொருளைத் தரும். இவர் இந்த நூலைத் தனது குரு பிரகாச சிவாசாரியார் ஆணைப்படி இயற்றினார் எனக் கூறப்படுகிறது. இது மூல நூலாகவும் , தமிழ் மொழிபெயர்ப்போடு கூடியதாகவும் வெளிவந்துள்ளது. சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு ("Scrabble Letter Distributions") என்பது சொல்லாக்க ஆட்டத்தின் பல்வேறுபட்ட பதிப்புகளில் பயன்படுத்தப்படும் காய்களில் எழுத்துகள் பங்கிடப்பட்டுள்ள முறை ஆகும். ஒவ்வொரு மொழியிலும் எழுத்துகளின் பயன்படுத்தப்படும் விழுக்காடு வேறுபடுவதாலேயே சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடும் மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சொல்லாக்க ஆட்டத்தில் குறைவாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்குக் கூடிய புள்ளிகள் வழங்குதல் பொதுவான விதியாகும். பெரும்பாலான மொழிகளுக்கான சொல்லாக்க ஆட்டங்களில் 102 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலச் சொல்லாக்க ஆட்டக் காய்களின் தொகுதி 100 காய்களைப் பின்வருமாறு கொண்டிருக்கும். 1938இல் இவ்வாட்டத்தை ஆல்விரடு மோசெர் பட்சு கண்டுபிடித்ததிலிருந்து மேற்கூறிய பங்கீடு மாற்றமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2004இல் மேட்டலால் வெளியிடப்பட்ட மீச்சொல்லாக்க ஆட்டத்தில் 200 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பின்வருமாறு:- ஆபிரிக்கானப் பதிப்பில் பின்வரும் 102 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆபிரிக்கான மொழியில் "Z"உம் "X"உம் பயன்படுத்தப்பட்டாலும் அவை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுவதால் ஆபிரிக்கானச் சொல்லாக்க ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனாலுங்கூட, வெற்றுக் காயை "Z" ஆகவோ "X" ஆகவோ பயன்படுத்த முடியும். ஆபிரிக்கான மொழியில் கடன் பெற்றுப் பயன்படுத்தப்படும் ஒரு சில சொற்களைத் தவிர, ஏனைய சொற்களில் "C"உம் "Q"உம் பயன்படுத்தப்படாததால் அவ்வெழுத்துகளும் உள்ளடக்கப்படவில்லை. அரபுப் பதிப்பில் பின்வரும் 100 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994 இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தல் 1994 ஆகத்து 16 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1989-இல் நடத்தப்பட்டது. முன்னைய ஆட்சியாளர்களான ஜே. ஆர். ஜெயவர்தனா, ஆர். பிரேமதாசா ஆகியோரின் ஆட்சியில் இலங்கையின் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது. எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றிற்கு எதிரான போர்களில் ஊடகங்களுக்கு தணிக்கை, படுகொலைகள், சித்திரவதை போன்றவை பெருமளவு இடம்பெற்றன. 1983 இல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல்களை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவில்லை. உள்நாட்டுப் போரினாலும், அடக்குமுறையினாலும் மக்கள் களைப்படைந்திருந்தனர். அமைதி, விடுதலை, மக்களாட்சியை மக்கள் விரும்பினர். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிக்கா குமாரதுங்க சில இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை அமைத்தார். இலங்கைத் தமிழருடன் இணக்கப்பாட்டுக்கு வர அக்கட்சி தீர்மானித்து தேர்தலில் போட்டியிட்டது. மக்கள் கூட்டணி அரசு அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை, ஆனாலும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. கண்டிதம்பேட்டை கண்டிதம்பேட்டை (Kandithampettai) இது இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். மீமுரண் மயிர்நோய் மீமுரண் மயிர்நோய் (Hypertrichosis) அல்லது அம்ப்ராசு கூட்டறிகுறி (Ambras Syndrome) அல்லது ஓநாய் நோய் என்பது உடலெங்கும் அளவுக்கு அதிகமாக முடி வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் கொண்டுள்ளது தான் ஓநாய் நோய். ஓநாய் மனிதர் என்று கற்பனைக்கதைகளில் தோன்றுபவர்களின் முகத்தைப்போல இக்குறைபாடு உடையவர்கள் தோற்றப்பாடு கொண்டிருப்பதால் ஓநாய் நோய் என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்றது. இது பிறப்புக்குறையாக பிறப்பிலோ அல்லது அதற்குப் பின்னரோ ஏற்படலாம். இருவகையான மீமுரண் மயிர்நோய் ஏற்படலாம்: ஒன்று பரந்தது; உடலின் எல்லாப்பகுதிகளிலும் ஏற்படலாம், மற்றையது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மற்றும் ஏற்படும் நிலை. அம்ப்ராசு கூட்டறிகுறி பிறப்பிலேயே ஏற்படலாம், அல்லது பிற்கால வாழ்க்கைப் பகுதியிலும் ஏற்படலாம். பொதுவாக, ஆண்மை இயக்குநீரால் (ஆந்த்ரோசன்கள்) வயது செல்லச்செல்ல மீசை, தாடி நெஞ்சுப் பகுதிகளில் முடிவளர்ச்சி ஏற்படுகின்றது, ஆனால் அம்ப்ராசு கூட்டறிகுறியில் ஆண்மை இயக்குநீரால் முடிவளர்ச்சி ஏற்படக்கூடும் இடங்களில் முடிவளருவதில்லை, மாறாக ஏனைய பகுதிகளில் வளருகின்றது. ஆண்மை இயக்குநீரால் பெண்களுக்கு ஏற்படும் முடிவளர்ச்சி ஆண்மை இயக்குநீர் மயிர்மிகைப்பு (Hirsutism) எனப்படுகின்றது. முதன்முதலில் வரலாற்றில் இதனைப் பற்றிய பதிவு 1648இல் அல்ற்ரோவாண்டசு என்பவரால் இசுப்பானிய கனரித்தீவில் பெற்ரசு கொன்சலசு என்பவரில் அறியப்பட்டது, பெற்ரசின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே வழமைக்கு மாறான மயிர் வளர்ச்சி கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அல்ற்ரோவாண்டசு அவர்களை அம்ப்ராசுக் குடும்பம் என அழைத்தார், ஏனெனில் அவர்கள் வசித்த இடம் அம்ப்ராசுக் கோட்டையின் அருகாமையில் இருந்தது. அதன் பின்னரான 300 வருட காலப்பகுதிகளில் 50 சம்பவங்கள் அறியப்பட்டுள்ளது. மரபியல் வேறுபாட்டால் ஏற்படுபவை, பிறப்பின் போதே காணப்படும். இவற்றில் அரும்புமுடி மீமுரண் மயிர்நோய் (Hypertrichosis lanuginose) என்பது பிறந்த குழந்தையில், முகம் முழுவதும் மெல்லிய குறுகிய மென் அரும்பு மயிர் இருத்தல் ஆகும். மென் அரும்பு முடி(Lanugo) என்பது கருப்பையில் குழந்தை இருக்கும் போது வளர்ச்சியுரும் மயிர் ஆகும், பிறக்கமுன்னரே இவை உதிர்ந்து இயல்பான மயிர்களால் ஈடுசெய்யப் பட்டிருக்கும். ஒரு குழந்தை குறைப்பிரசவத்தால் பிறந்துள்ளது என்பதை மென் அரும்பு மயிர் காணப்படுதலைக் கொண்டு அறியலாம். ஈற்று மீமுரண் மயிர்நோய் எனும் நிலையில் உடல் முழுவதுமே மயிர் வளர்ச்சி ஏற்படும், இத்தகைய சந்தர்ப்பம் ஓநாய் மனிதர் என்பதற்குச் சாலப்பொருந்துகின்றது, இவர்களுக்கு பல்லின் முரசும் மிகை வளர்ச்சிக்கு உட்படும் என்பது அறியப்பட்டுள்ளது. பிறப்பின் பின்னர் ஏதோ ஒரு காலப்பகுதியில் ஏற்படும்; மருந்து வகைகள் போன்ற புறக்காரணிகளால் இவை ஏற்படலாம். சைவபரிபாஷை சைவபரிபாஷை என்பது தமிழர் எழுதிய வடமொழி நூல். சிவாக்கிர யோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியார் வேளாளர் குடி பெருமகனார் இதனை இயற்றினார். காலம் 16-ஆம் நூற்றாண்டு. இந்த நூல் சிவஞான போதத்திற்கு விளக்கமாக ஆகம அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் ஐந்து பரிச்சேதங்கள் உள்ளன. 13 உபநிடதங்களையும், 30 வடமொழிச் சாத்திரங்களையும் மேற்கோள் காட்டி உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. பரிசேதம், பதிலக்ஷணம், பசுலக்ஷணம், பாசலக்ஷணம், சாதனம் - என்ற முறையில் இதன் 5 பகுதிகளும் அமைந்துள்ளன. சைவ சந்நியாச பத்ததி சைவ சந்நியாச பத்ததி என்னும் பத்ததி வழிபாட்டு முறை நூல் சிவாக்கிர யோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியார் இயற்றிய வடமொழி நூல். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் வேளாளர் குடியில் பிறந்தவர். இளமை முதல் சந்நியாசம் மேற்கொள்ளும் நெறி சைவர்களுக்கு இல்லை என, பார்ப்பன சுமார்த்த சந்நியாசிகள் கூறிவந்தனர். அரசன் முன்னிலையில் சிவாக்கிர யோகிகள் வாதிட்டு சைவர்களும் இளமை முதலே சந்நியாசம் மேற்கொள்ளலாம் என்றும், சைவர்களுக்கும் ஆசாரியர் தகுதி உண்டு என்றும் ஆகம மேற்கோள்களைக் காட்டி நிறுவினார். அரசன் இவரது வாதங்களை நூலாகச் செய்துதருமாறு வேண்டினான். அதன்படி எழுதப்பட்டதே இந்த நூல். என இந்த நூலில் 8 படலங்கள் உள்ளன. தாமரை சூத்திரம் தாமரை சூத்திரம் (Lotus Sutra) என்பது புகழ்பெற்ற ஒரு மகாயான புத்த மத சூத்திரம். புத்தர் தனது வாணாளின் நிறைவுக் காலத்தில் வழங்கிய இந்தச் சூத்திரம் நாகர்களால் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாக மகாயானம் நம்புகிறது. காசுமீரத்தில் நடந்த நான்காம் புத்த சமய மாநாட்டில் இம் மந்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தர்மக்ஷர் (கி.பி.286), குமாரஜீவி (கி.பி.406), ஜனகுப்தா-தர்மகுப்தா (கி.பி.601) ஆகியோர் தாமரை சூத்திரத்தை சமசுகிருதத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்தனர். சுவாங் யீ சுவாங் யீ பதிப்பக தனியார் வரையறை நிறுவனம் ("Chuang Yi Publishing Pte Ltd.", எளிய சீனம்: 创艺, பின்யின்: "சுயாங்கீ", பொருள் "படைப்புக் கலைகள்") சிங்கப்பூரில் உள்ளதொரு பதிப்பகமாகும். ஆங்கிலத்திலும் எளிய சீனத்திலும் வரைகதைகளையும் தொடர்புள்ள வணிகப்பொருட்களையும் தயாரிப்பதிலும் இறக்குமதி செய்வதிலும் சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. சுவாங் யீ தனது படைப்புகளை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மற்றும் பிலிப்பைன்சில் விற்பனை செய்து வருகிறது, ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆத்திரேலிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை "மாட்மேன் என்டர்டெய்ன்மென்ட்" மூலமாக விற்று வருகிறது. சிவாக்கிர பாஷ்யம் சிவாக்கிர பாஷ்யம் 12 ஆயிரம் எழுத்துக்களைக் (கிரந்தம்) கொண்ட ஒரு பெருநூல். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் இதனை இயற்றினார். ஐகென் மதிப்பு நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஒரு எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும். ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் formula_1 எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க formula_2 இன் அணிக்கோவையைக் கருதவும். கோ கோ என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும். கோ என்ற தலைப்பிலுள்ள கட்டுரைகள் கோ (நிரலாக்க மொழி) கோ ("Go") என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருட்களை உருவாக்குவதற்கான கூகுளால் வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும். இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் செப்டம்பர் 21, 2007இலேயே கோவுக்கான தொடக்க வடிவமைப்பை உருவாக்கத் தொடங்கினாலும் நவம்பர் 2009இலேயே கோ அலுவல் முறையாக அறிவிக்கப்பட்டது. இயங்குநிலை மொழியின் எளிமையுடன் தொகுப்பிக்கும் மொழிகளின் வினைத்திறனையும் வழங்குதலே கோவின் நோக்கமாகும். கோவின் ஏனைய நோக்கங்கள் பின்வருமாறு:- கோவில் "உலகே, வணக்கம்" செய்நிரல் பின்வருமாறு:- package main import "fmt" func main() { கோவில் எதிரொலிக் கட்டளைக்கான செய்நிரல் பின்வருமாறு:- package main import ( var omitNewline = flag.Bool("n", false, "don't print final newline") const ( func main() { சங்கீதா கிரிஷ் (நடிகை) சங்கீதா கிரிஷ் (பிறப்பு: 21 அக்டோபர் 1978) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார். சங்கீதா சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார். இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர். பரதத்தை தனது பள்ளிக்காலத்தில் பயின்றார் இவர் பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார். 90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். விஜய் தொ.கா நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார். திரைத்துறையினர் திருமணத்திற்கு வந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல் உலக பாரம்பரியக் களம் ("World Heritage Site") என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.. இவை நமது கடந்த காலத்திலிருந்து நமக்கு மரபுவழி அளிக்கப்பட்டு, இன்று நாம் அவற்றுடன் வாழ்ந்த பின்னர், தொடர்ந்து வருங்காலத்தில் நமது சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய, மாற்றீடு செய்யப்பட முடியாத, சிறந்த, வாழ்வையும், மன ஊக்கத்தையும் தரக்கூடிய, இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளங்களாகும். இவை உலகின் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகக் கருதப்படுவதனால், இவை தனித்துவமானவையாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், இத்தகைய பாரம்பரியக் களங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்தலை ஊக்குவிக்கின்றது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும். இந்த உலகப் பாரம்பரியக் குழுவானது 21 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன், இந்தப் பிரதிநிதிகள் ஒரு ஆண்டில் ஒருமுறை ஒன்றாகக் கூடுவார்கள். இந்தப் பிரதிநிதிகள் ஆறு ஆண்டுகாலம் தொடர்ந்து குழுவில் இருக்க முடியும் என்றாலும், வேறு நாடுகளுக்கும் குழுவில் இருக்கும் சந்தர்ப்பத்தை அளிப்பதற்காக, பொதுவாக நான்கு ஆண்டுகளில் குழு உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பார்கள். 2014 இல் இருக்கும் 21 குழு உறுப்பினர்களும் அல்சீரியா, கொலொம்பியா, குரோவாசியா, பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, ஜமேக்கா, ஜப்பான், கசக்ஸ்தான், லெபனான், மலேசியா, பெரு, பிலிப்பீன்சு, போலந்து, போர்த்துகல், கத்தார், தென் கொரியா, செனிகல், செர்பியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள், உலகப் பாரம்பரியக் களங்களுக்கான சாசனத்தில் கையொப்பமிட்டு, ஏற்புறுதி அளித்தவையாக இருக்கும். இந்தக் குழுவே, பாரம்பரியக் களங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய புதிய களங்களைத் தெரிவு செய்வதற்குப் பொறுப்பாகவும், சாசனத்தின் உள்ள விடயங்கள் சரியானபடி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். 2014 ஆம் ஆண்டு, 25 ஆம் நாள் உள்ள நிலவரப்படி மொத்தமாக 1007 உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 161 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 779 பண்பாட்டுக் களங்களும், 197 இயற்கைசார் களங்களும், 31 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன. ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு களங்கள் நீக்கப்பட்டுள்ளன. பட்டியலில் இருக்கும் 46 களங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. கத்தார் இலுள்ள தோகா நகரத்தில் 2014 இல் நிகழ்ந்த உலகப் பாரம்பரியக் குழுவிற்கான 38 ஆவது கூட்டத்தொடரில், மியான்மர் இலிருந்து முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு களம் 1000 ஆவது தெரிவாக அமைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த கூட்டத்தில் மொத்தமாக 26 புதிய களங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. மேலும் நான்கு களங்களை குழு தெரிவு செய்து, அவை புதிதாக மேலதிகமாகச் சேர்க்கப்படலாம் என ஒப்புதல் அளித்துள்ளது. போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். உலக பாரம்பரியக் குழுவானது உலக நாடுகளை ஐந்து புவியியல் சார் வலயங்களாகப் பிரித்துள்ளது. அவையாவன: ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக்கும் ஓசியானியாவும், அரபு நாடுகள், லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும், வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் குறிப்பு: 10 உம் அதற்கு மேற்பட்ட பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடுகளே இங்கே காட்டப்பட்டுள்ளன. உரைதருநூல்கள் நூலை இயற்றியவரே உரையையும் சேர்ந்து எழுதித் தந்த நூல்களை உரைதருநூல்கள் எனக் குறிப்பிடுகிறோம். இலக்கணநூல் இயற்றிய சிலர் இந்த முறைமையைப் பின்பற்றியுள்ளனர். இவர்கள் தாமே சில இலக்கணப் பாகுபாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டனர். அவற்றில் சிலவற்றிற்கு முன்னோர் இலக்கியங்களில் மேற்கோள் இல்லை. எனவே அவற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செய்ய அவர்களே மேற்கோள் பாடல்களையும், அவற்றை விளக்கும் உரைகளையும் நூலோடு சேர்த்தே எழுதித் தந்துள்ளனர். இப்படிச் செய்யப்பட்டுள்ள உரைதருநூல்கள்: கரிம வேதி வினை கரிம வேதி வினைகள் அல்லது சேதன இரசாயனத் தாக்கங்கள் ("organic reactions") என்பது கரிமச் சேர்மங்களில் நடைபெறும் தாக்க வகைகளாகும். இவற்றை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: சேதனச் சேர்வையுடன் தாக்கி தாக்கத்திலீடுபட்டு அதனுடன் சேருமாயின் அது கூட்டல் தாக்கம் எனப்படும். சேதனச் சேர்வையுடன் தாக்கி தாக்கத்திலீடுபட்டு அதிலுள்ள ஒரு அணு அல்லது அணுக்கூட்டத்துக்குப் பதிலாக அது பிரதியிடப்படுமாயின் அது பிரதியீட்டுத் தாக்கம் எனப்படும். இவற்றை பின்வருமாறு மூன்றாகவும் வகைப்படுத்தலாம். அவையாவன: சேதனச் சேர்வையொன்றுடன் கருநாடியொன்று தாக்கமுற்று விளைவை உண்டாக்குமாயின் அது கருநாட்டத் தாக்கம் எனப்படும். இங்கு கருநாடி என்பது எதிரேற்றம் பெற்ற துணிக்கைகளாகும். சேதனச் சேர்வையொன்றுடன் இலத்திரனாடியொன்று தாக்கமுற்று விளைவை உண்டாக்குமாயின் அது இலத்திரனாட்டத் தாக்கம் எனப்படும். இங்கு இலத்திரனாடி என்பது நேரேற்றம் பெற்ற துணிக்கைகளாகும். சேதனச் சேர்வையொன்றுடன் சுயாதீன மூலிகமொன்று தாக்கமுற்று விளைவை உண்டாக்குமாயின் அது சுயாதீன மூலிகத் தாக்கம் எனப்படும். இங்கு சுயாதீன மூலிகம் என்பது தனியிலத்திரனைக் கொண்ட (சுயாதீன இலத்திரன்) துணிக்கைகளாகும். அவுமியா அவுமியா ("Haumea") ஞாயிற்றுத்தொகுதியில் நெப்டியூனுக்கு அப்பால் காணப்படும் ஓர் குறுங்கோள் ஆகும். இது அமெரிக்க அறிவியலாளரான மைக் பிரௌன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீள்வட்ட வடிவமுடையது என அனுமானிக்கப்படுகின்றது. இது சூரியனைச் சுற்றி வர 283 புவி ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். அவுமியா சூரியனில் இருந்து 35AU முதல் 50AU வரையிலான தொலைவில் காணப்படும். இக் குறுங்கோளுக்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன: ஈகா, நாமகா சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்(JAXA) என்பது சப்பானின் தேசிய விண்வெளி ஆய்வுக்கான நிறுவனமாகும். இது அக்டோபர் 1, 2003 அன்று மூன்று முன்னைய நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அவை, சப்பானிய விண்வெளி விஞ்ஞானத்துக்கான நிலையம்(ISAS), சப்பானிய தேசிய விண்வெளி ஆய்வகம்(NAL), சப்பானிய தேசிய விண்வெளி அபிவிருத்தி முகவரகம்(NASDA) என்பனவாகும். இந்நிறுவனம், அந்நாட்டு கல்வி, கலாசார, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. ஜக்சாவானது செயற்கைக்கோள்களை ஏவுதல், ஆய்வுசெய்தல், தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவுள்ளது. இவை தவிர விண்கல் ஆய்வு, சந்திரனுக்கான மனிதப் பயணங்கள் போன்ற முன்னேற்றகரமான செயற்திட்டங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது. அக்டோபர் 1, 2003 அன்று சப்பானிய விண்வெளி விஞ்ஞானத்துக்கான நிலையம்(ISAS), சப்பானிய தேசிய விண்வெளி ஆய்வகம்(NAL) மற்றும் சப்பானிய தேசிய விண்வெளி அபிவிருத்தி முகவரகம்(NASDA) ஆகியவற்றை இணைத்து ஜக்சா உருவாக்கப்பட்டது. இணைப்புக்கு முன், ISASஆனது விண்வெளி மற்றும் கோள்கள் பற்றிய ஆய்வுக்குப் பொறுப்பாகவும், NALஆனது பறத்தல் சம்பந்தமான ஆய்வுகளுக்குப் பொறுப்பாகவும் இருந்தன. அக்டோபர் 1, 1969 அன்று உருவாக்கப்பட்ட NASDAஆனது, ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை உருவாக்கியதோடு சப்பானிய பரிசோதனைக் கூறுகளையும் அமைத்தது. NASDAவின் பழைய தலைமையகம், தற்போது தனேகஷிமா விண்வெளி மையம் அமைந்துள்ள, தனேகஷிமா தீவில் அமைந்திருந்தது. இத்தீவு கியூஷூ தீவிலிருந்து 115கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க விண்வெளி ஓடங்களில் பயணித்த சப்பானிய விண்வெளி வீரர்கள் NASDAவிலேயே பயிற்சி பெற்றனர். ஜக்சா வானிலைச் செய்மதிகள், இயந்திரவியல் பரிசோதனைச் செய்மதிகள் போன்றவற்றை ஏவுவதற்கு NASDAவால் பயன்படுத்தப்பட்ட H-IIA (H "டூ" A) ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது. X-கதிர் வானியல் போன்ற விஞ்ஞான ஆய்வுகளுக்கு, ISASஆல் பயன்படுத்தப்பட்ட திண்ம எரிபொருள் ஏவுகணையான M-V ("மு-ஃபைவ்") ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது. மேல்வளிமண்டல ஆய்வுகளுக்காக, SS-520, S-520 மற்றும் S-310 எனப்படும் ஆய்வு ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது. ஜக்சா நிறுவப்படுவதற்கு முன், ISASஆனது , 1980கள் மற்றும் 1990களில் செயற்படுத்டப்பட்ட, x-கதிர் வானியல் துறையில் வெற்றி கண்டது. சப்பானின் இன்னொரு வெற்றிகரமான திட்டம் மிக நீண்ட அடிக்கோட்டுத் தலையீடு (Very Long Baseline Interferometry (VLBI)) மற்றும் HALCA திட்டம் ஆகும். மேலும், சூரிய அவதானிப்பு மற்றும் அதன் காந்தக் கோளம் பற்றிய ஆய்வுகளும் இதன் ஏனைய வெற்றிகளாகும். NASDAஆனது பெரும்பாலும் தொடர்பாடல் செய்மதித் தொழிநுட்பத் துறையில் செயற்பட்டது. எவ்வாறாயினும், சப்பானின் விண்வெளித்துறை ஆரம்பிக்கப்பட்ட பின், முதன்முதலில் சிவில் தொடர்பாடல் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான ஒப்பந்தத்தை, 2005ம் ஆண்டிலேயே சப்பானிய நிறுவனமொன்று ஏற்றுக்கொண்டது. NASDAவின் இன்னொரு முக்கிய நிகழ்வாக புவிக் காலநிலைச் செயற்கைக் கோள் ஏவுகையைக் குறிப்பிடலாம். 2008ம் ஆண்டுக்கான, விண்வெளி ஆய்வுக்காக வழங்கப்படும் இலாபநோக்கற்ற விண்வெளி நிறுவனத்தின்(Space Foundation) ஜோன் L. ஜக் ஸ்விஜெர்ட் விருது ஜக்சாவுக்குக் கிடைத்தது. டின்ட்டு லூக்கா டின்ட்டு லூக்கா (Tintu Luka, பிறப்பு 26 ஏப்ரல் 1989) ஓர் இந்திய இடைதூர விரைவோட்ட விளையாட்டாளர் ஆவார். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி என்ற சிற்றூரில் இருந்து வந்தவர். பி. டி. உஷாவினால் பயிற்றுவிக்கப்படும் இவர் கொயிலாண்டியில் உள்ள "உஷா தடகள விளையாட்டுப் பள்ளி"யில் பயிற்சி பெற்றவர். பெண்களுக்கான 800 மீட்டர் தொலைவு ஓட்டத்தில் தேசிய சாதனையளவிற்கு உரிமையாளராக உள்ளார். 2010 ஆசிய விளையாட்டுக்களில் 800 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இத்தாலியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மிக அதிகமான களங்கள் காணப்படுவது இத்தாலியிலாகும். இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. இங்கே 47 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. இவற்றில் 44 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும் இருக்கின்றன. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இத்தாலி ஜூன் 23, 1978 இல் ஏற்றுக் கொண்டது இத்தாலியிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள், பட்டியலில் இணைக்கப்பட்ட காலத்திற்கேற்ப இங்கே வரிசைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது) தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) () என்பது தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தாண்டல் உலோகம் தாண்டல் உலோகங்கள் ("Transition metals") என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை. IUPAC வரைவிலக்கணம்:- தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும். IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத ஸ்காண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. இங்கு d s இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத்தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. செப்பு மூலக நிலையிலும், +1 ஒக்சியேற்ற நிலையிலும் முழுமையான d-ஒழுக்கைக் கொண்டிருந்தாலும், +2 ஒக்சியேற்ற நிலையைக் கொண்டிருப்பதால் அது தாண்டல் உலோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தாண்டல் உலோகங்களின் விசேட பண்புகளில் ஒன்றாக பல ஒக்சியேற்ற நிலைகளைக் கொண்டிருத்தல் உள்ளது. உதாரணமாக மங்கனீசு 0, +2, +7 ஆகியவற்றைக் காட்டும்; இரும்பு பொதுவாக 0, +2, +3 ஆகிய நிலைகளைக் காட்டும்; எனினும் மங்கனீசு வரையான அனைத்து தாண்டல் மூலகங்களும் அவற்றின் இறுதி சக்திப்படியிலுள்ள இலத்திரன்களின் எண்ணிக்கைக்கு சமனானளவு உயர் ஒக்சியேற்ற நிலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக வனேடியம் 0 தொடக்கம் +5 வரையும், மங்கனீசு 0 தொடக்கம் +7 வரையும் காட்டுகின்றன. இதனால் தாண்டல் மூலகங்கள் பல்வேறு வலுவளவுகளுடன் சேர்வைகளை ஆக்குகின்றன. உதாரணமாக இரும்பு ஆக்சிசனுடன் தாக்கமடைந்து +2 ஒக்சியேற்ற நிலையுடன் FeO அல்லது +3 ஒக்சியேற்ற நிலையுடன் FeO ஆகிய இரு சேர்வைகளை உருவாக்கலாம். தாண்டல் உலோகங்களின் இலத்திரன்கள் இலகுவாக சக்தியை உறிஞ்சி அருகருகே உள்ள ஒழுக்குகளிடையே பரிமாற்றப்படுவதால் அவை உறிஞ்சும் சக்திக்கேற்றபடி நிறத்தைக் காலுகின்றன. குறிப்பாக தாண்டல் உலோகம் அதியுயர் ஒக்சியேற்ற நிலையில் இருக்கும் போது நிறத்தை இலகுவாக வெளிப்படுத்துகின்றன. பி. டி. உசா பரவலாக பி. டி. உஷா என அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா (, "Pilavullakandi Thekkeparambil Usha") (பிறப்பு சூன் 27, 1964) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் "உஷா தடகளப் பயிற்சிப் பள்ளி"யை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் சனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கைசிகப் புராண உரை கைசிகப் புராண உரை கன்னும் நூல் வைணவ இலக்கிய ஆசிரியர் பட்டர் என்பவரால் செய்யப்பட்டது. இதன் காலம் 12-ஆம் நூற்றாண்டு. கைசிகம் என்பது ஒருவகைப் பண். தமிழகத்தில் உள்ள திருக்குறுங்குடி என்னும் ஊரில் வாழ்ந்த பாணன் ஒருவன் அவ்வூர் நம்பி (திருமால்) கோயிலில் வழக்கமாக யாழிசை கூட்டிப் பண் பாடிவந்தான். ஒரு நாள் அவன் கைசிகப் பண்ணைப் பாடினான். அந்தப் பாட்டின் பலத்தால் அவன் 'பிரமராக்கதன் தேவன்' நிலை எய்தினான். வடமொழி வராக புராணத்தில் இந்தச் செய்தியைச் சொல்லும் பகுதி 92 சுலோகங்கள் கொண்டது. இதனைப் பட்டர் தமிழில் உரையாக எழுதியுள்ளார். இவர் உரையில் ஒரு பகுதி பட்டர் பட்டர் ஒரு வைணவ இலக்கிய ஆசிரியர். 1123-ஆம் ஆண்டு நம்மாழ்வார் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் பட்டர் பிறந்தார். தந்தை கூரத்தாழ்வார். தாயார் பெயர் "ஆண்டாள்" . பிறந்தது இரட்டைப்பிள்ளை. இவருடன் அடுத்துப் பிறந்தவர் "ஸ்ரீராமபிள்ளை" . இராமானுசர் தம் சீடரான 'எம்பார்' என்பவரை அனுப்பி, இரு குழந்தைகளையும் எடுத்துவரச் செய்து, மூத்தவருக்குப் பராசரப் பட்டர் என்றும், இளையவருக்கு வேதவியாச பட்டர் என்றும் பெயர் சூட்டிப் பெருமை செய்தார். பிற்காலத்தில் மூத்தவர் 'பெரிய பட்டர்' எனவும், இளையவர் 'ஸ்ரீராம பிள்ளை' எனவும் போற்றப்படலாயினர். பட்டர் என்றாலே பெரிய பட்டரைத்தான் குறிக்கும். பட்டர் தன் மனைவி இறந்தபின் மற்றொரு மனைவியை மணந்துகொண்டு வாழ்ந்த இல்லறத்தார். தம் 28-ஆம் அகவையில் மூளை வெடித்து மாண்டார். செயல்கள் இவர் பல வடமொழி நூல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்கள் பய்யோலி பய்யோலி ("Payyoli") கேரளாவின் வடக்கு மலபார் கடற்கரையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும். மேல்மலையனூர் மேல்மலையனூர் என்பது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம் ஆகும். இந்த வட்டத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,தமிழ்நாட்டில் இருக்கும் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை அன்றும், மாசி மாதத்திலும் சிறப்புப் பூசைகள் நடத்தப் பெறுகின்றன. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் இங்கு விசேட நாட்களாகக் கருதப்படுவதால் அத்தினங்களில் இங்கு பக்தர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.  Contact number: 09791911868. மேல்மலையனூருக்கு வேலூரிலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் நேரடியாக பேருந்துகள் முக்கியமான நாளன்று செல்கின்றன இதனால் எல்லா மாவட்டத்திலிருந்தும் மேல்மலையனூருக்கு எளிதாக சென்று வரலாம். இங்கிருந்து அரைமணி நேரத்தில் செஞ்சிக் கோட்டைக்கும் செல்லலாம் இங்கிருந்து ஆரணிக்கு ஒரு மணி நேரத்தில் வளத்தி வழியாக செல்லலாம். மிகைத்தளத்தாங்கு இயந்திரம் இயந்திரத் தற்கற்றலில் வகை அறிவதற்காக மிகைத்தளத்தாங்கு இயந்திரம் (Support Vector Machine) பயன்படுத்தப்படுகிறது. விளக்கத்தின் எளிமைக்காக முதலில் இருவகை வேற்றுமையைக் கருதவும். முதலில் கற்கும் கட்டத்தைக் காண்போம். வகை மாறியை formula_1 எனவும், பிற நோக்கத்தகு கணியங்களை திசையன் formula_2 எனவும் கூறுக. அடுத்து நோக்கத்தகு கணியங்களைக் கொண்ட நேரியல் சேர்வைக் கருதுக. லக்ரான்ஜ் சார்பிலிருந்து இருமம் உண்டாகிறது. உட்கருவைக்கொண்டு தீர்வை எளிதில் அறிய இயலும். எடுத்துகாட்டாக, கௌஸியன் உட்கருவை பயன்படுத்தலாம். இங்கு ஃபிரெட்ஹோம் தொகையீட்டுச்சமன்பாடு கேகிள் கேகிள் (Kaggle) அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் நிறுவனம் ஆகும். உலகமெங்கும் இயந்திர தற்கற்றலின் நுட்பங்களைக் கொண்டு அறிவியலாளர்கள் கேகிள் செயல்படுத்தும் போட்டிகளில் பங்கேற்று முன்கணிப்பு வினாக்களுக்கு சிறந்த விடைகளைத் தெரிவிப்பர். இப்போட்டிகளில் யாவரும் இலவசமாக பங்கேற்கக்கூடும். ஈழப் புலம்பெயர் இலக்கியம் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் மக்களின் ஆக்கங்கள் ஈழ புலம்பெயர் இலக்கியம் ஆகும். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் உள்ளது. ஈழத்தமிழ் இலக்கியம் மூலம் புலம் பெயர்தலின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் பிறந்த மண்ணின் மீதான ஏக்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும்அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்களே முக்கியமானவை. 1983இல்/ கறுப்பு ஜீலை கலவரம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்கள் அதிக அளவில் படைபாக்கத்தில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை. முக்கிய கவிஞர்களாக கவனப்படுத்தப்பட்டவர்கள், முக்கிய சிறுகதை ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள், முக்கிய நாவல் ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள், தாயகம் சார்ந்த படைப்புக்கள், புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என புகலிடப் படைப்புக்களின் உள்ளடக்கத்தை இரண்டாக வகுக்கலாம். நுண்ணுயிரி நுண்ணுயிரி ("Microorganism") அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும். பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும். கண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை ("Escherichia" "coli"), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர். ஒரு சிலர் வைரஸ்களுக்கு "வாழும் வேதிப்பொருள்" , அதாவது "The Living Chemical" என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இதன் அமைப்பில் உள்ளது. ஓரிரு வேதிப்பொருள்களின் சேர்க்கையே. நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம். நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. இந்நுண்ணுயிர்கள் அறியப்பட்டது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். 1675 ஆம் ஆண்டு ஆண்டன் வான் லீவனாக், என்னும் டச்சு துணிவணிகர், இந்நுண்ணுயிரிகளை தான் உருவாக்கிய எளிமையான நுண்நோக்கியால் கண்டதாக உலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் இவைகளை முதலில் ”அனிமல்க்யூல்ச்” என விவரித்தார். இவரே நுண்ணுயிரியல் என்னும் படிப்புத்தோன்ற காரணமாயுமிருந்தார். இதன் பிறகு 19ம் நூற்றாண்டில் தான் நுண்ணுயிரியின் கண்டுபிடிப்புகளும் அதன் குறித்த ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளும் அடைந்தன. நுண்ணுயிர்களின் வகைப்பாடு பரவலாக காணப்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் ஆர்கியா என்னும் முழுநுண்ணுயிராகவும், நுண்பாசி, நுண்பூஞ்சை என்னும் மெய்க்கருவுயிர்களும் இதில் அடங்கும். இதன் அளவை எடுத்துக்கொள்ளும் போது, 100μm மிகுந்தும் குறிப்பாக "எபுலோபிசியம் பிசல்சோனி" என்னும் பாக்டீரியா கண்ணால் காணக்கூடியவை. இதுவும் ஒரு கல உயிரியே ஆகும். இவை மெய்கருவிலி செல்களைவிட பெரிதாகும். அதிலே, ’’மைக்கோப்ப்லாசமா’’ என்னும் பாக்டீரியா மைக்ரோதுளைகளைக்கொண்ட வடிகட்டிகளில் கூட புகக்கூடியது. இதன் அளவு 200 nm (நானோமீட்டர்)களாகும். இது வைரசுகளுக்கு நிகரான உருவ அளவாகும். இந்நுண்ணுயிர் வகைப்பாட்டில் வைரசுகள் என அழைக்கப்படும் தீநுண்மமும் அடங்கும். இவைகளுக்குள்ளும் கருஅமிலங்கள் மற்றும் உயிர்களில் உள்ளதுப்போல் புரதங்கள் பெற்றிருந்தாலும் அவை உயிரென்பதில் பல ஐயங்களும் சிக்கல்களும் உள்ளன. இவைப்பற்றிய படிப்பு தீநுண்மயியல் (Virology) ஆகும். இதில் பல அறியப்பட்டவை தீங்கிழைப்பவனையே. ஆயினும் சில நன்மை உண்டு பண்ணுவனவும் உண்டு. எடுத்துக்காட்டாக, பாக்டீரியோபாச்கள்/பாக்டீரியாஉண்ணி (Bacteriophage) என்னும் தீநுண்மமானது தனது கருஅமிலத்தை பாக்டீரியாக்களுள் செலுத்தி அவை பல்கிப்பெருகி அப்பாக்டீரியாக்களை சிதைக்கின்றன. இதனால், பல தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை அழித்து உதவுகின்றன. கங்கை நதியில் குளித்தால் பிணிகள் தீரும் என்பதற்கு காரணம் அவை மிகுதியான பாக்டீரியாஉண்ணி கொண்டதால் என சிறு வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை நானோமீட்டர் அளவுகளில் காணப்படுகிறது. பாக்டீரியாக்கள் நுண்ணுயிரிகளில் பெருங்குடும்பமாகும். இது நிலைக்கருவிலிகளின் முக்கிய அங்கமாகும். இவை 200nm முதல் 100μm வரை அளவில் வேறுபடுகின்றன. பாக்டீரியாக்களில் பல பேரினங்கள் உண்டு. இவைகளில் குறிப்பிடத்தக்கவை '’பாசில்லசு’’ (கோலுரு நுண்ணுயிர்), ’’விப்ரியோ’’ என்னும் பல. இது பல நன்மை விளைவிப்பனவாகவும் சில தீமை விளைவிப்பனவும் உண்டு. இதில் மெய்பாக்டீரியாக்கள் மற்றும் ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் இரு பிரிவு உண்டு. ஆர்கிப்பாக்டீரியாக்கள் நிலைக்கருவிலிகளுக்குள் வரும் சிறப்பு வாய்ந்த பாக்டீரியாக்களாகும். இவைகள் வாழ்வதற்கு சிரமிகுந்த இடங்களிலும் வாழ்கின்றன. ஆகையால் இவைகளை ஆங்கிலத்தில் ’’’எக்ச்ட்ரிமோபைல்கள்/உச்சவிரும்பிகள்’’’ என அழைக்கப்படுகிறது. இவ்வுச்சவிரும்பிகளே இவ்வார்க்கி குடும்பத்தில் மிகுந்து காணப்படுகிறது. இவ்பாக்டீரியாக்களில் டி.என்.ஏ என்னும் கருஅமிலங்கள் ஒரு தலைமுறையில் இன்னொரு தலைமுறைக்கு தகவல் கடத்தியாக பயன்படுகிறது. சில பாக்டீரியாக்களில் நகரிழை எனப்படும் ஒரு உறுப்பு அதன் நகர்விற்கு பயன்படுகிறது. இவைகளில் ஆக்டினோபாக்டீரியாக்கள் பூஞ்சைகள் போல உருவமைப்பும் பாக்டீரியாக்களைப்போல் உடல்செயல்பாடுகளும் உள்ளவை. நீலப்பச்சைப்பாக்டீரியாக்கள் பாசிகளைப்போல் செயல்பாடு மற்றும் உருவமைப்பைக்கொண்டாலும் அடிப்படைக்கட்டமைப்புகள் பாக்டீரியாக்களை ஒத்திருக்கும். பாசிகளில் சில நுண்நோக்கியால் காணக்கூடியவையாகும், அவைகளை நுண்பாசிகள் என்கிறோம். இவை பச்சைப்பாசிகள், பழுப்புபாசிகள், இருநகரிழையுயிரி (டினோப்ளாசல்லேட்டுகள்) என்னும் பெரும் பங்கு உண்டு. இந்நுண்பாசிகள் அளவில் சிறியதாயினும் செயல்பாடுகள், கட்டமைப்புகள் மெய்கருவிலிகளான பாசியை ஒத்திருக்கும். இவை பூஞ்சை இனத்தில் குறிப்பிடத்தக்கவை. இவைகளில் ஒரு செல் உயிர்களான யீச்டுகளும் (yeast) (தனிப்பூஞ்சை), பலசெல் உயிர்களான பட்டி பூஞ்சைகளும் அடங்கும். இவைகளில் மிகவும் அறியப்படுவது ரொட்டி செய்ய பயன்படும் தனிப்பூஞ்சையான ‘’சசேரோமைசிச் சரவேசியே’’ ஆகும். இவை முதற்றோன்றி பிராணிகள்/முதற்கலவுரு எனவும் அழைக்கலாம். இவை ஆங்கிலத்தில் ப்ரோட்டசோவன் என அறியப்படுகின்றது. இவைகள் நுண்ணோக்கியால் கானப்படக்கூடிய புழுப்போன்ற அமைப்புடையவை. இவைகளில் பரவலாக அறியப்பட்டவை அமீபாக்களாகும். மேலும் நோய்களை உண்டுச்செய்யும் குடற்புழுக்கள், கொக்கிபுழுக்கள் இவைகளையே சாரும். நுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒரு கலம் அல்லது உயிரணு மட்டுமே கொண்ட உயிரினங்கள் (கண்ணறை, திசுள் என்னும் பெயர்களும் செல் என்பதைக் குறிக்கும்). எனினும், பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்கள் சிலவும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் அதிநுண்ணுயிரி போன்ற ஒரு கல உயிரினங்களும் உண்டு. கடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீரூற்றுக்கள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத்தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன. வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. பேருயிரிகள் அனைத்தும் இவ்வுலகில் இருந்தாலும் அவைகளின் வாழ்விற்கு ஆதாரமாய் இருப்பது நுண்ணுயிர்களேயாகும். இவைகள் வாழும் உயிர்களுக்கும், அவை இறந்த பிறகு கனிம மறுசுழற்சிக்கும் அத்தியாவசியம். இவைகளில் நிலைக்கருவிலிகள் மற்றும் மெய்க்கருவுயிரிகள் ஆகிய இருப்பிரிவுகளை சார்ந்த உயிர்களும் அடங்கும். உதாரணத்திற்கு பாக்டீரியாக்கள், சயனோபாக்டீரியாக்கள், ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் நிலைக்கருவிலிகளும், பூஞ்சை, பச்சைப்பாசி, பழுப்புபாசிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளும் இருக்கின்றன. இவை உணவுச் சங்கிலி மற்றும் தனிம சுழற்சியில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனுக்கு சில பொருள்களை உற்பத்தி செய்து மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. சில நுண்ணுயிர்கள் நைதரசன் நிலைப்படுத்தலில் பங்கெடுப்பதனால், நைதரசன் சுழற்சியில் முக்கிய பங்கெடுக்கின்றது. அத்துடன் சில நுண்ணுயிர்கள் மழை வீழ்ச்சியிலும், காலநிலையிலும் பங்கு வகிப்பதாக அண்மைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன.. அதேவேளை இவையே சில இடங்களில் நோய்க்காரணிகளாவும் திகழ்கிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. இவற்றினால் ஏற்படும் தொற்றுநோய்களாகும். இதன் பயன்கள் அளவிட முடியாதவையாக உள்ளது. இவைகளைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமும், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தவண்ணமும் உள்ளன. மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் என்னும் நூல் பட்டர் என்பவரால் எழுதப்பட்டது. வடநாட்டு வேதாந்தி ஒருவர் திருவரங்கம் வந்தார். பட்டர் அவருடன் வாதிட்டு, திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகம் 21-ஆம் பாடலாகிய 'மைவண்ண நறுங்குறிஞ்சிக் குழல்பின் தாழ' என்னும் பாடலுக்கு விரிவுரை கூறி வேதாந்தியை வென்றார். பட்டர் வாதிட்டு வென்ற அந்த விரிவுரை இந்த நூலாக உருப்பெற்றுள்ளது. தோற்ற வேதாந்தி பட்டரின் சீடர் ஆனார். இந்த வேதாந்தியே நஞ்சீயர் எனப் போற்றப்படுபவர். இந்த விரிவுரை 800 எழுத்துக்கள் (கிரந்தங்கள்) கொண்டது என்பர். இது டெம்மி தாள் அளவில் 38 பக்கங்களாக அச்சிடப்பட்டுள்ளது. இவரது விரிவுரை எவ்வாறு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு: இடைத்தொலைவு ஓட்டம் இடைத்தொலைவு ஓட்டம் (Middle distance) தட கள ஓட்டப் போட்டிகளில் விரைவோட்டத் தொலைவை விடக் கூடுதலாக, உயர்ந்த நிலையாக 3000 மீ வரையான, தொலைவுகளுக்கு நடத்தப்படும் போட்டிகளைக் குறிக்கும். சீர்தரப்படுத்தப்பட்ட போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் மைல் ஓட்டம் என்பனவும் 3000 மீட்டர் ஓட்டமும் இடைத்தொலைவு ஓட்டங்களாக வகைபடுத்தப்படுகின்றன. 800 மீட்டர் ஓட்டத்திற்கு 1830களில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த 880 கெஜ ஓட்டம், அல்லது அரை மைல், போட்டிகள் முன்னோடியாக இருந்தன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவலாக இருந்த 500 மீ ஓடுகளத்தில் மூன்று முறை ஓடுவது 1500 மீ போட்டிகளுக்கு வழிவகுத்தது.ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர். அங்கம் அங்கம் ( "") என்பது கி. மு. 6ஆம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஓர் இராச்சியமாகும். இவ்விராச்சியம் அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. அங்குத்தர நிக்காய போன்ற பௌத்த நூல்களிலும் வியாக்கியபிரசினபதி என்னும் சமணநூலிலும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாக அங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய பீகாரிலுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார், ஜமுய் ஆகியவற்றையும், ஜார்க்கண்டிலுள்ள தியோகார், கொட்டா, சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். பிற்பகுதியில் இதன் எல்லைகள் வங்காளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. சம்பா நதி மகதத்தையும் அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின்படி துரியோதனன் கர்ணனை அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான். மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம், வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. எனவே, அங்கத்தின் எல்லைகள் கிழக்குப்பகுதியின் கரையோரம் வரை வளர்ந்திருந்ததென அறியலாம். அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது (திக நிக்காய). பீகாரிலுள்ள பகல்பூரே சம்பா என கருதப்படுகிறது. இங்குள்ள இரண்டு கிராமங்களின் பெயர்கள் "சம்பா நகரம்" மற்றும் "சம்பா புரம்" என்பனவாகும். சம்பா அதன் செல்வம் மற்றும் வணிகத்துக்காக புகழ்பெற்றது. இது ஒரு வணிக நிலையமாக காணப்பட்டதோடு இதன் வணிகர்கள் சுவர்ணபூமி எனுமிடத்துக்கு வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி சென்று வந்துள்ளனர். 4ம் நூற்றாண்டின் இறுதியில் சீனத் துறவியான ஃபக்சான் தனது யாத்திரிகையின்போது சம்பாவில் பல பௌத்த கோயிகள் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்நகரை சீன மொழியில் சான்போ(瞻波 ) எனக்குறிப்பிட்டுள்ளார். அங்க தேசம் அதன்பின் பலகாலம் இருக்கவில்லை;இது பின்னர் சீனமொழியில் யாங்ஜியா(鴦伽) என வழங்கப்பட்டது. சம்பா ராச்சியம்(இன்றைய வியட்நாமில்) என்பதும் இவ் கிழக்கிந்திய சம்பா நகரிலிருந்தே ஆரம்பமானதாக எண்ணப்படுகிறது. என்னும் மானிடவியல் ஆதாரங்களின்படி இவ்விராச்சியத்தைத் தோற்றுவித்தவர்கள் கிழக்கிந்தியாவின் எதிர்ப்புறமாகவுள்ள இந்தோசீனக் குடாவிலுள்ள போர்னியோவிலிருந்தே வந்துள்ளனர். அங்கத்தின் ஏனைய முக்கிய நகரங்களாக அஸ்ஸபுரம் மற்றும் பத்திரிகா என்பவற்றைக் குறிப்பிடலாம். மகாபாரதம் (I.104.53-54) மற்றும் புராண இலக்கியங்கள் அங்கம் எனும் பெயர் அதனைத் தோற்றுவித்த இளவரசர் அங்கன் பெயரால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன. ராமாயணம், (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது. மகாபாரத காவியத்தில் அங்க நாட்டிற்கு கர்ணனை மன்னராக, துரியோதனன் பட்டம் சூட்டியதாக ஆதி பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்க நாட்டின் தலைநகராக சம்பாபுரி நகரம் விளங்கியது. மகத நாட்டு மன்னர் ஜராசந்தன் "மாலினிபுரி" எனும் நகரத்தை அங்க மன்னர் கர்ணனுக்குப் பரிசாக அளித்தான். அங்க நாட்டு மன்னன் கர்ணன், குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக போரிட்டார். குருச்சேத்திரப் போரின் 16 மற்றும் 17வது நாள் போரின் போது, கௌவரப் படைகளுக்கு தலைமை ஏற்றார். போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டார். போருக்குப் பின்னர் கர்ணனின் மகன் இந்திரப்பிரஸ்தம் நாட்டிற்கு மன்னராக, பாண்டவர்களால் முடிசூட்டப்பட்டான். மிகமுந்தைய குறிப்பு அதர்வ வேதத்தில் (V.22.14) காணப்படுகிறது. புராண நூல்கள் அங்கம், கலிங்கம், வங்கம், விதர்பம், விந்தியம் போன்ற நாடுகளை "பூர்வ தட்சிண" பிரிவுகள் எனக் குறிப்பிடுகிறது. புராண நூல்கள் அங்கத்தின் மன்னர்கள் சிலரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. "மகாகோவிந்த சுத்தந்த" எனும் நூல் அங்க மன்னனான தத்தாரத்தனைக் குறிப்பிடுகிறது. சமணக் குறிப்புகளில் தாதிவாகனன் என்பவன் அங்கத்தின் ஆட்சியாளனாகக் குறிப்பிடப்படுகிறான். புராணங்களும் ஹரிவம்சம் எனும் நூலும் அவனை அங்கத்தின் ஸ்தாபகரான அங்கனின் மகனாகக் குறிப்பிடுகின்றன. சமண சமயக் குறிப்புகளில் இவனது ஆட்சிக்காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கத்துக்கும் மத்ச தேசத்துக்கும் இடையில் மகதம் காணப்பட்டது. ஆரம்பத்தில் மகத தேசத்தினர் மிகவும் பலவீனர்களாயிருந்தனர். அங்கத்துக்கும் அதன் கிழக்கேயிருந்த நாடுகளுக்குமிடையில் பெரும் மோதல் ஏற்பட்டிருந்தது. "விதுர பண்டித ஜாதக" எனும் நூலில் ராஜக்கிருகம் (மகதத்தின் தலைநகர்) அங்கத்தின் ஒரு நகரமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் அங்கத்தின் மன்னனால் விஷ்ணுபாத மலையில் (கயையில்) செய்யப்பட்ட ஒரு தியாகத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இதன் படி அங்கதேசம் மகதத்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றதோடு அதன் எல்லைகளை மத்சய தேசம் வரை விஸ்தரித்துக் கொண்டமையும் தெளிவாகிறது. அங்கத்தின் இவ் வெற்றி நீண்டநாள் நீடிக்கவில்லை. கி.பி. 6ம் நூற்றாண்டின் இறுதியில் மகதத்தின் மன்னனான பிம்பிசாரன், அங்கத்தின் இறுதி மன்னனான பிரம்மதத்தனைக் கொன்றதோடு சம்பாவையும் முற்றுகையிட்டான். பிம்பிசாரன் அதனை தன் தலைமையிடமாக ஆக்கிக்கொண்டு தன் தந்தையின் பிரதிநிதியாக ஆட்சிபுரிந்தான். அதன்பின், அங்கதேசம் மகதப் பேரரசின் ஒரு பகுதியாக ஆனது (PHAI, 1996). உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2018 வரை இந்தியாவில் உலகப் பாரம்பரியக் களங்களாக 37 இடங்கள் யுனெசுகோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யுனெசுகோ உலக பாரம்பரிய நெறிமுறையில் வரையறுக்கப்பட்டபடி பண்பாடு அல்லது இயற்கைச் சிறப்புமிக்க இடங்களாகும். இந்தியாவின் முதல் இரண்டு பாரம்பரியக் களங்களாக ஆக்ரா கோட்டையும் அஜந்தா குகைகளும் 1983ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியத்தின் ஏழாவது மாநாட்டில் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 27 இடங்கள் பாரம்பரியக் களங்களாக ஏற்கப்பட்டுள்ளன. கடைசியாக இந்தப் பட்டியலில் 2012ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் 29 பாரம்பரியக் களங்களில் 23 பண்பாட்டு பாரம்பரிய இடங்களாகவும் ஏனைய ஆறு இயற்கை பாரம்பரியங்களாகவும் உள்ளன. இந்தப் பட்டியலில் இணைக்கத் தகுதி வாய்ந்ததாக மேலும் 34 இடங்களுக்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது. காசி (திரைப்படம்) காசி திரைப்படம், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். காசி என்ற கண் தெரியாத கதாநாயகனாக விக்ரம் நடித்துள்ளார். அவரது மனைவி லட்சுமியாக காவ்யா மாதவன் நடித்துள்ளார். இவரது தங்கையாக காவேரியும், அம்மாவாக பார்வதியும் கொடுமை செய்யும் அண்ணனாக தலைவாசல் விஜய்யும் வில்லன்களாக ராஜீவும்,தினேசும் நடித்துள்ளனர். இப்படம் முதலில் சுமாராக ஓடினாலும் பிறகு இசையினாலும், கதையினாலும் நன்றாக ஓடியது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மண்டயம் வீரம்புடி சீனிவாசன் மண்டயம் வீரம்புடி சீனிவாசன் ("Mandyam Veerambudi Srinivasan", பிறப்பு: செப்டம்பர் 15, 1948) இந்தியாவில் புனே நகரில் பிறந்த ஆத்திரேலிய உயிரியல் வல்லுநர் ஆவர். தேனீக்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவர் பெரும்பங்கு ஆற்றி வருகிறார். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் அறிவியலுக்கான ஆத்திரேலியப் பிரதமர் பரிசு பெற்றுள்ளார். ஆத்திரேலிய ராயல் சொசைட்டி உறுப்பினராகவும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. கடற்கரை கைப்பந்தாட்டம் கடற்கரை கைப்பந்தாட்டம் ("Beach volleyball", அல்லது "Sand volleyball"), என்பது இரண்டு அணிகளுக்கிடையே மணற்தரையில் நடைபெறுகின்ற ஒரு குழு விளையாட்டு ஆகும். பொதுவாகக் கடற்கரைகளில் ஓரணிக்கு இரண்டு விளையாட்டு வீரர்கள் வீதம் இரண்டு அணிகளுக்கிடையே இவ்விளையாட்டு விளையாடப்படும். அளவிடப்பட்ட மணல் அரங்கின் குறுக்கே வலை ஒன்று போடப்பட்டிருக்கும். 1996 ஆம் ஆண்டு முதல் இவ்விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டு விளையாடப்படுகிறது. உள்ளக கைப்பந்தாட்ட விளையாட்டுப் போலவே கைப்பந்தை எதிராளியின் ஆடுகளத்தினுள் விழத்தக்கவாறு வலையின் மேலாக செலுத்த வேண்டும். அது போலவே எதிராளி போடும் பந்து தனது ஆடுகளத்தினுள் விழாதவாறு பாதுகாக்க வேண்டும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, இந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக அங்காளபரமேசுவரி உள்ளார். அங்காளம்மன் சிவனின் மனைவி பார்வதியாவார். மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்து புராணப்படி, முன்பு பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். பார்வதி சிவன் என்று நினைத்து பிரம்மன் காலில் விழுந்தார். பின்பு பிரம்மனின் உண்மையான முகம் அறிந்த பார்வதி சிவனை அழைக்கவே சிவன் பிரம்மனின் ஒரு தலையை துண்டித்தார். இதனால் கோபமுற்ற பிரம்மனது தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. சிவன் பசியால் சாப்பிடும்போது அவ்வுணவில் பாதியை பிரம்மனின் தலை சாப்பிட்டது இதனை விஷ்ணுவிடம் முறையிட்டார் பார்வதி. விஷ்ணு சாபவிமோசனம் அடைய வழி சொன்னார். இதனை பின்பற்றிய பார்வதி சிவனை அழைத்துக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்தார். அங்கு உணவை தானே செய்து கீழே போட்டார் பிரம்மனின் தலை உண்டது சிவனின் கையை புனித ஆற்றில் கழுவினார் இச்செயலால் பிரம்மன் தலை சிவனின் கையில் ஒட்டவில்லை பதிலாக பார்வதியின் காலில் ஒட்டிக் கொண்டது. பார்வதி ஆங்காரமாக நடனமாடினார் தலையுடன் காலும் சிதறுண்டது .பார்வதியம்மாள் தனது உருவத்தில் பாதியை இக்கோயிலுக்கு நோய் தீர்க்க வேண்டிவரும் பக்தர்களுக்காக இவ்விடத்திலேயே அமைந்துவிட்டார். ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி, கார்த்திகை, தைப் பொங்கல், மாசி மாதத் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலின் நடைபெறுகின்றன. எசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் இரண்டாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது எசுப்பானியாவிலாகும். இங்கே 44 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 39 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும், 2 கலப்பும் இருக்கின்றன. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை எசுப்பானியா மே 4, 1982 இல் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டு, தமது நாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த அவ்வாறான களங்களை அடையாளம் கண்டு பட்டியலை உருவாக்கியது. Comisión Nacional Española de Cooperación con la UNESCO என். எம். நம்பூதிரி டாக்டர் என்.எம். நம்பூதிரி (17 ஏப்ரல், 1943 - 30 மார்ச் 2017) ஒரு பேராசிரியரும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமாவார். தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். என்.எம். நம்பூதிரி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் 1943 ஏப்ரல் 17-ஆம் தேதி பிறந்தார். பி.எஸ்.ஸி. இயற்பியல், மலையாளம் எம்.ஏ. ஆகிய பட்டப்படிப்புகளுக்கு பிறகு, டாக்டர் கெ.ஏ. எழுத்தச்சன் மற்றும் டாக்டர் சி.பி. அச்சுதனுண்ணி ஆகியோரின் வழிகாட்டுதலில் இடப்பெயர் அடிப்படையில் கோழிக்கோடு "(Toponomy)" என்ற விஷயத்தில் பி.எச்.டி. எடுத்தார். செங்ஙன்னூர் கிறிஸ்தவ கல்லூரி, தலச்சேரி அரசு பிரண்ணன் கல்லூரி, கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழிக்கோடு மாலைக் கல்லூரி, பட்டாம்பி அரசு ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். கேரளாவில் முதன்முதலாக இடப்பெயர்களின் மூலம் "(Toponomy)" கோழிக்கோடு நகரத்தின் வரலாற்றை ஆய்வு செய்தார். கோழிக்கோடு சாமூதிரி மன்னர் பரம்பரையின் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து ஆய்வு செய்தார். நிளா ஆற்றுப்படுகை (பாரதப்புழா) ஆய்வு என கேரளாவின் வரலாற்று, சமூக, பரிணாமங்கள் குறித்து வெகு விமரிசையாக ஆய்வுகளை மேற்கொண்டார். 1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஹெர்மன் குண்டர்ட் மாநாட்டில் பங்கேற்றார். இவர் 2017 மார்ச் 30-ம் தேதி ஆலப்புழாவில் காலமானார். http://www.malabarandkeralastudies.net/downloadfiles/pdf/culturaltraditionsinmedeivalkerala.pdf http://www.thehindu.com/todays-paper/tp-national/article2561478.ece http://en.wikipedia.org/wiki/Synod_of_Diamper ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (Rajalakshmi Engineering College - "REC"), சென்னைக்கருகேயுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி 1997 இல் ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களை நவரத்தின நிறுவனங்கள் என்பர். நவரத்தின நிறுவனங்களை மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது. 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர். = இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் = இந்த பொதுத்துறை அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் செய்ய தனியார் மயமாக்கப்பட்ட அல்லது விற்கப்படுகின்றன தனியார் நிறுவனங்களின் பட்டியல் கூரத்தாழ்வார் கூரத்தாழ்வார் இராமானுசரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய் செய்துவந்தவர். ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம் பெருந்தேவி தாயார் (காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளின் மனையாள் - லட்சுமிதேவி) கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து வியப்பு மேலிட உரையாடியமைக் கேட்டு அதனால் தனக்கு அகங்காரம் உண்டாகிவிடுமோ என அஞ்சி தன்னுடைய பெருஞ்செல்வமனைத்தும் அறச்செயல்களுக்கு தானமாக வழங்கி, தன் குருவாகிய இராமானுசரையே அடிப்பணிந்தார். இராமானுசரைவிட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியாசப்பட்டர், பராசரப்பட்டர் எனும் இவருடைய இரண்டு குமாரர்களில் பராசரப்பட்டர் பிற்காலத்தில் புகழ்ப்பெற்ற வைணவ ஆச்சாரியனாகி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு இன்றும் புகழப்படும்படியான ஓர் உரை எழுதியுள்ளார். புகழ்ப்பெற்ற இராமானுச நூற்றந்தாதி இயற்றிய திருவரங்கத்தமுதனார் கூரத்தாழ்வாரின் மாணாக்கருள் ஒருவர். திருவரங்கத்தில் இருந்த இராமானுசருக்கு மாணாக்கனாகும் பொருட்டு, கூரத்திலிருந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு திருவரங்கம் செல்லும் வழியில் காட்டிடையே திருடர் பற்றிய அச்சத்தில் வந்த மனையாளை நோக்கி "மடியில் கனம் இருந்தாலன்றோ வழியில் பயம். ஏதாவது வைத்திருக்கிறாயா" என்றார். அதற்கு சிறுவயது முதலே கூரத்தாழ்வார் உண்பதற்கு பயன்படுத்திய தங்கவட்டிலை திருவரங்கத்தில் கணவருக்கு (கூரத்தாழ்வாருக்காக) பயன்படுத்துவதற்காக வைத்திருப்பதாகச் சொல்லவே அதனை வாங்கி விட்டெறிந்துவிட்டுச் சென்றாராம். திருவரங்கத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வார் தம்பதிகள் ஒருநாள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தனர். மனைவி ஆண்டாள் இறைவன் அரங்கநாதனிடம் வேண்டிட, அரங்கநாதன் கோயில் ஊழியர்கள் மூலம் உணவு தந்தருளினார். நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுசரை கைது செய்ய ஆணையிட்டான். கூரத்தாழ்வார் தம் குருவைப்போல் வேடம் தரித்துக்கொண்டு அரசனிடம் சென்று முடிவில், அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன. 12 ஆண்டுகள் இதே நிலையிலேயே திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்ந்துவந்தார். ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம், சுந்தரபாஹூ ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், வைகுண்ட ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம், தாடீபஞ்சகம் மற்றும் ப்ரார்தனபஞ்சகம் என ஏழு வடமொழி நூல்களை இயற்றியுள்ளார். இவரின் உதவியினாலேயே சுவாமி இராமானுசர் தன் குருவாகிய ஆளவந்தாருக்கு செய்துகொடுத்த மூன்று சபதங்களை நிறைவேற்றினார்.அன்னமிடுவதோடு நில்லாது, இராமானுசருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார். திருமங்கையாழ்வார் பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் தனியன் பாடிய புலவர். கட்டளைக் கலித்துறையால் அமைந்துள்ள அந்தப் பாடல் சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுசரின் வேண்டுதலுக்கிணங்க காஞ்சி வரதராசப்பெருமாளிடம் வேண்டி இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி வேண்ட இறைவன் அருளினார். மகிழ்ச்சியோடு திருவரங்கம் திரும்பி மீண்டும் ஆசாரியன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்திக் கொண்டு தன்னுடைய 123ம் அகவையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். வருத்தமுற்ற இராமானுசருக்கு ஆசாரியனை வரவேற்கவே முன்னரே திருநாடு செல்வதாக முகமன் கூறிச் சென்றார். மேலப்பாளையம் மேலப்பாளையம் (ஆங்கிலம்: Melapalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இவ்வூர் கீழவீரராகவபுரம் என்று முன் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது, மேலப்பாளையம் எனும் இந்தப் பகுதி திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. இப்பகுதி பாளையங்கோட்டை பகுதியின் மேற்கில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்த பகுதியின் வடக்கு திசையில் திருநெல்வேலி சந்திப்பும் (சுமார் 5கி.மி), கிழக்கில் பாளையங்கோட்டையும் (சுமார் 4கி.மி) வடமேற்கில் நெல்லை நகரம் (சுமார் 5 கி.மி) பகுதியும் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை பாபநாசம் சாலை இவ்வூரின் வழியாகத்தான் கடந்து செல்கிறது. கன்னியாகுமரி நெல்லை பைபாஸ் சாலை இப்பகுதியை தொட்டுத்தான் செல்கிறது, மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும் (சுமார் 1.5 கி.மில்) இப்பகுயில்தான் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகமும் நெருக்கமும் உள்ள ஊர் மேலப்பாளையம். இங்கே தலைமுறை தலைமுறையாயக நெசவுத் தொழில் இருந்து வந்தது ஆனால் பிற்காலத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன் நெசவுத் தொழில் நலிவடைந்து தற்போதுவரை பிரதானமான தொழிலாக பீடி சுற்றுதல் இருந்து வருகிறது. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான பீடி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இங்கேதான் அமைந்துள்ளது. பெண்கள் வீட்டில் அமர்ந்தபடியே பீடி சுற்றும் தொழிலை மேற்கொள்கிறார்கள். இங்கே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கிறது அது போக பாளையங்கால்வாய் என்ற பெயர் கொண்ட வாய்க்காலும் விவசாய நீர்த்தேவைக்கும் வடிகாலாக அமைந்துள்ளது. மேலப்பாளையத்தில் கீழாப்பாளையம், மேத்தமார் பாளையம், பஜார், கொடிமரம், வாய்க்கால் பாலம், நத்தம். குறிச்சி, கொட்டிகுளம், கருங்குளம், முன்னீர்பள்ளம், பீடிக்கம்பெனி காலனி, ஹாமீம்புரம், சந்தை, ரோஸ்நகர், தாய்நகர், ஹக் காலனி, ஹஜிரா நகர், கரீம்நகர், அமுதாபீட் நகர், ஞானியரப்பா நகர், பங்களாப்பா நகர், ரகுமானியாபுரம், வீரமானிக்கபுரம், குலவனிகர்புரம், சேவியர்ஸ் காலனி போன்ற பகுதிகள் அமைந்துள்ளது இங்கே ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது. இங்கு சந்தை எனும் பகுதியில் பயோலைன் இரத்த பரிசோதனை நிலையம் (LAB.ASRAF) அமைந்துள்ளது.இங்கு கீழாப்பாளையம் எனும் பகுதியில் அரசினர் மருத்துவமனையும், பெரிய தபால் நிலையமும் அமைந்துள்ளது. கொட்டிகுளம் எனும் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது, சந்தையிலிருந்து நெல்லை சந்திப்பு போகும் நேதாஜி சாலையில் மேலப்பாளையம் முனிசிபல் ஆபிஸ் அமைந்துள்ளது அதே சாலையில் மின்சார வாரிய அலுவலகமும் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. முனிசிபல் ஆபிஸின் தெற்கே பஜார் செல்லும் நேருஜி ரோட்டில் காவல் நிலையம் அமைந்துள்ளது அதனை ஒட்டியே நகராட்சி திருமண மண்டபமும்.மஸ்ஜீதூர்ரஹ்மான் பள்ளி(TNTJ) வாசல் அமைந்துள்ளது. சந்தை எனும் பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது. ஹாமீம் புரம் பகுதியில் அன்னை ஹாஜிரா பெண்கள் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. மேலப்பாளையம் வாய்க்கால் பாலம்,எனும் பகுதியில்.முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.அமைந்துள்ளது துள்ளாத மனமும் துள்ளும் துள்ளாத மனமும் துள்ளும் எழில் இயக்க்கத்தில் 1999 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் ஆங்கில வருடம் 1999ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில்மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் வெள்ளிவிழா கொண்டாடியது. ஆழ்வார்தோப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அருகில் சுற்றுலும் மரங்கள் சுழ உள்ள அழகான கிராமம் ஆழ்வார்தோப்பு வரலாறு :- ஆழ்வார்தோப்பு என்ற பெயர் இடப்பட்ட பெயர் அல்ல. தானாகவே அமைந்த பெயராகும்.பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதன்மையான ஆழ்வாரான சுவாமி நம்மாழ்வார் பெருமாளின் அம்சமாகத் தோன்றியவர். ஸ்ரீவைகுண்டதிலிருந்து ஏரல் வரையான பகுதி திருவழுதி நாடு என அழைக்கபட்டது.அதனை காரிமாறன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.அவருக்கு திருமணமானது நாகர்கோவிலுக்கு வடக்கை உள்ள திருவேன்பதிசாரம் என்ற ஊராகும். இப்போது திருபதிசாரம் என்று அழைக்கபடுகிறது. காரிமாறன் தம்பதினருக்கு அவர்தம் அருள்தவதால் சடகோபன் என்ற நம்மாழ்வார் அவதரித்தார்.அவரது காலம் கி.பி எட்டாம் நுட்ரு ஆண்டு என ஆரசியாளர் கணிக்கின்றனர். தமது தாய் ஊரான திருபதிசரத்தில் அவதரித்த நம்மாழ்வார் தனது தந்தை ஊரான திருவழுதி நாட்டில் வளர்ந்து வந்தார். தான் பிறந்த பயனான ஆதினாதபெருமனை அடையும் நோக்கில் திருக்குருகூர் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய ஆழ்வார்திருநகரிக்கு செல்லும் வழியில் ஆற்றின் வடபகுதியில் இருந்த தோப்பில் நம்மாழ்வார் தங்கி சென்றனர். அன்று முதல் இந்தபகுதி ஆழ்வார்தோப்பு என அழைக்கப்பட்டது. அதாவது 1200 ஆண்டுகளாக இப்பகுதி இப்பெயருடன் வழங்கி வருகிறது. அதே காலகட்டத்தில் திருக்குருகூர் ஆழ்வார்திருநகரி எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஆக 1200 ஆண்டு பழமையான வரலாறு ஆழ்வார்தோப்புக்கு உண்டு. கரூர் சித்தரால் வணங்கபட்ட சிவ லிங்கம், திருச்செந்தூர் கோவில் கட்டிய ஞான தேசிக மூர்த்தி ஸ்வாமிகளின் சமாதி, ஆழ்வார் தோப்பு நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இராமசுவாமி திருகோயில். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமை கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெரும். இந்த திருவிழாவை காண அனைத்து ஆழ்வார்தோப்பு வெளியூர்வாசிகளும் குடும்பத்தாருடன் வந்து இந்த திருவிழாவை தவறாமல் கண்டுகளித்து எம்பெருமான் ராமனின் அருளை பெற்று செல்வார்கள். மானசு தேசியப் பூங்கா மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம்(Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானஸ் நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன. இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபத்தான நிலையிலுள்ளவை உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபத்தான நிலையிலுள்ளவை என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெசுகோ) உலகப் பாரம்பரியக் களங்களில் "உதவி நாடப்படும்" பாதுகாப்புக்குறைவு உள்ள களங்களை பட்டியலிட்டு வெளியிடுகின்றது. உலக பாரம்பரியக் களங்களை பராமரிக்கும் பணியை 1972ஆம் ஆண்டில் உருவான "உலக பாரம்பரிய மரபொழுங்கு" யுனெசுகோவிடம் அளித்துள்ளது. இந்த மரபொழுங்கின் 11.4வது விதியின்படி யுனெசுகோ உருவாக்கிய "உலக பாரம்பரியக் குழு" இந்தக் களங்களை அழியாது பாதுகாக்க கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்ற இடங்களை இந்தப் பட்டியலில் வெளியிடுகிறது. இத்தகைய அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளாகவோ அல்லது அந்தக் களத்தின் தன்மையை மாற்றக்கூடிய வாய்ப்புள்ள ஆபத்துகளாகவோ இருக்கலாம். இயற்கை சார்ந்த களங்களில் எதிர்நோக்கும் ஆபத்துக்களாக தீவாய்ப்புள்ள அல்லது மதிப்புமிக்க இனங்களின் தொகை அருகுதல், இயற்கை அழகு சிதைதல், அல்லது மனித வினைகளால் மதிப்பிழத்தல் ஆகியன உள்ளடங்கும். பண்பாட்டுக் களங்களில் எதிர்நோக்கும் ஆபத்துகளாக கட்டிடப் பொருட்கள், கட்டமைப்பு, சிதைவேலைகள் மற்றும் கட்டிட வடிவமைப்பின் சீரொழுங்கு இவற்றில் ஏற்படும் சிதைவுகளும் வரலாற்று அல்லது பண்பாட்டுச் சின்னங்களாக இருப்பதற்குரிய நம்பகத்தன்மை குறைதலும் ஆகும். இருவகை களங்களிலுமே தீவாய்ப்புள்ள ஆபத்துகளாக மேம்பாட்டுத் திட்டங்கள், ஆயுதச் சண்டைகள், மேலாண்மை அமைப்புக் குறைபாடுகள், மற்றும் சட்டபூர்வ தகுநிலை மாற்றங்கள் உள்ளன. பண்பாட்டுக் களங்களில் புவியியல், வானியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களும் தீவாய்ப்புள்ள ஆபத்துகளாகக் கருதப்படுகின்றன. 2012இல், 38 களங்கள் (17 இயற்கை, 21 பண்பாடு) ஆபத்தான நிலையிலுள்ளவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை வளரும் நாடுகளில் உள்ளன; ஆபிரிக்காவில் 15உம் ஆசியாவில் 10உம், வட,தென் அமெரிக்காக்களில் ஏழும் ஐரோப்பாவில் மூன்றும் உள்ளன. பெரும்பாலான தீவாய்ப்புள்ள இயற்கை களங்கள் (12) ஆபிரிக்காவில் உள்ளன. இந்தப் பட்டியல் உருவாக்கத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்திய மலைப்பாதை தொடருந்துகள் இந்தியாவின் மலைப்பாதைத் தொடருந்துகள் என்பவை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்ட ஐந்து தொடருந்துப் பாதைகளைக் குறிக்கும். இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை இவை இயக்கப்படுகின்றன. 2005 முதல் இந்தியன் இரயில்வே இயக்கும் காஷ்மீர் ரயில்வேயும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மலைத் தொடருந்துகளில் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே [1881],கால்கா-ஷிம்லா இரயில்வே [1898],காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே [1924],மற்றும் காஷ்மீர் ரயில்வே [2005] ஆகிய நான்கும் வட இந்தியாவில் கரடுமுரடான இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மற்ற இரண்டும் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மலை இரயில் பாதை மற்றும் மகாராஷ்டிராவின் மாதெரன் மலை இரயில்பாதை ஆகியவையாகும். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, நீலகிரி மலை ரயில் மற்றும் கால்கா-ஷிம்லா இரயில்வே எனக்கூட்டாக "இந்தியாவின் மலைத் தொடருந்துகள் " என்ற பெயரில்யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை உலக அளவில் அறிவிக்கப்பட்ட அகல மற்றும் குறுகிய இருபது தொடருந்துப் பாதைகளில் ஐந்தாகும். இந்த மலைப்பாதை தொடருந்துகள் இன்றும் நல்ல நிலையில் இயங்குவதுடன் அடிவாரத்தில் உள்ள முக்கிய இடங்களைத் தொடர்புப்படுத்துகின்றன. சிறந்த பொறியியல்தொழினுட்பம் மற்றும் கட்டுமானத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கின்றன. 1844 ல் என்ற பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரான சர் ஜான் லாரன்ஸ் என்பவரால் இந்தியாவில் மலைகளில் மலைப்பாதைத் தொடருந்துகள் அமைக்கும் பணி தொடங்கியது. குறிப்பாக இமயமலை மற்றும் இந்தியாவின் மற்ற மலைத்தொடர்களில் பிரித்தானியர்களின் காலனியாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் படைத் தளத்தை அமைக்க வேண்டியும் இந்தியாவின் முக்கியமான மலைப்பகுதிகளில் தொடருந்துப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதற்காக டார்ஜிலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, உதகமண்டலம், மாதெரன் மலை ஆகிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த தொடருந்து இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் 'டாய் டிரெய்ன்' என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் 86 கி. மீ பயணத்தில் டார்ஜிலிங்கை அடைகிறது. குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவிப் பொறி இழுத்துச் செல்கிறது. இந்த ரயில்பாதை 1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு, தொடருந்துப் போக்குவரத்து தொடங்கியது. இது முதலில் சரக்குப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் தொடருந்து மலைப் பாதை 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது தொடருந்துப் பாதை ஆகும். முதல்தொடருந்துப் பாதை ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில் ஆகும். தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைத் தொடருந்து இயக்கப்படுகிறது. 1845 ஆம் ஆண்டில் தொடருந்து மலைப்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899 ஆம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களைப் பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவிப்பொறியும் பின்னர் டீசல் இயந்திரப் பொறியும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கை மனதைத் தாலாட்டும் நீலகிரி மலைரயில் 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இம்மலைப்பாதை தொடருந்து அமைக்கப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா. கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயர் சிம்லாவில் நிலவும் குளிர் தட்ப வெப்பநிலை காரணமாக பிரித்தானிய இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். படைத் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு தொடருந்தில் செல்வது சுகமான அனுபவமாகும். கல்கா - சிம்லா மலைப்பாதைத் தொடருந்து 2008 ஆம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. பழைய கோவா பழைய கோவா (Old Goa, கொங்கணி:पोरणें गोंय – "Pornnem Goem") அல்லது வெல்கா கோவா ("வெல்கா" போர்த்துக்கீசிய மொழியில் "பழைய" என்ற பொருளுடையது) இந்திய மாநிலம் கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகரத்தை 15ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான்கள் கட்டினர்; 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டில் பிளேக் நோய்த்தொற்றால் புறக்கணிக்கப்படும்வரை இது போர்த்துகேய இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. பிளேக் நோய் பரவுவதற்கு முன்னர் இங்கு 200,000 பேர் வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் எச்சங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய கோவா தற்போதைய தலைநகரம் பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக கோவா இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. பழைய கோவாவில் பல்வேறுத் திருச்சபைகளுக்கு இணைக்கப்பட்ட மாதாகோவில்கள் உள்ளன. கோவாவின் பேராயர் அமரும் சான்டா கேதரீனா செ தேவாலயம், புனித அசிசியின் பிரான்சிசு தேவாலயம், எஸ். கேடனோ மாதாப்பள்ளி, லேடி ஆப் ரோசரி தேவாலயம், புனித அகஸ்டின் தேவாலயம் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. குழந்தை இயேசு தேவாலயம்(பாம் இயேசு பசிலிக்கா), ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது.இங்கு பிரான்சிஸ் சவேரியாரின் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 3 அன்று இவை வெளியே எடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த தேவாலயங்கள் 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன. தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு ("Tamil Eelam Supporters Organization") அல்லது டெசோ ("TESO") தமிழீழ ஆதரவு அமைப்பாகும். இது இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்க கோரும் போராளிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சென்னையில் 1985ல் துவக்கப்பட்டது. இதில் மு. கருணாநிதி, கி. வீரமணி மற்றும் பழ. நெடுமாறன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மு. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்ததோடு, 2009ல் இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது தி.மு.க. அரசின் நிலைப்பாடு கடுமையாக விமரிசிக்கப்பட்டது. சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா ("Champaner-Pavagadh Archaeological Park") குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும். சுமார் 800 மீட்டர் உயரம் கொண்ட பாவாகேத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகேத் என்றழைக்கப்படுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள காளிகா மாதா கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மலை அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம் சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484 ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23 ஆண்டுகள். மேலும் இந்தப் பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தைச் சாம்பனாருக்கு மாற்றியிருக்கிறார். சாம்பனார் பகுதி, 1535 ஆம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றது. சாம்பனார்- பாவாகேத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிகாமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக்கலைப் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகேத் தொல்லியல் பூங்கா 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. ஆளவந்தார் வைணவ ஆசாரியனாகிய ஆளவந்தார் பிரபந்தத்தை மீட்டெடுத்த நாதமுனிகளின் பேரனாக ஈசுவரமுனிக்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார்கோயிலில்) கிபி.912 ஆம் ஆண்டு (கிபி918 என்றும் கிபி976 என்றும் சொல்லப்படுகிறது) ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால் யமுனைத்துறைவன் என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். இராமானுசரின் முதன்மை குரு இவர் என்பதும், திருமலையில் திருவேங்கடவனுக்குண்டான கட்டிய பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரைக்கொண்டே இன்றும் "யமுனாத்துறை" என்று அழைக்கப்பட்டுவருகிறது என்பதும் இவரின் சிறப்பாகும். நாதமுனிகள்,தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு நாதமுனிகள் திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார். மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார். மகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்தே பட்டருக்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்தே இக்கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன் தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாகவும் ஆயினும் உரிய மரியாதை அளித்தால் ஒழிய தான் அரசவைக்கு வரவிரும்பவில்லை என்றும் அரசவைக்கு மறுவோலை அனுப்பினார். செய்தி அறிந்த அரசன் பல்லக்கு அனுப்பி அவரை அவைக்கு அழைத்துவந்தான். அவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்குமிடையே சொற்போர் நடந்தது. அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் அழகில் மயங்கி, இவர் ஆணவம்கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார் என்று அரசனிடம் கூறினார். மறுதளித்த அரசன் மிகுந்த அறிவாளியாகிய ஆக்கியாழ்வான் தோற்றால் தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக அரசன் அரசியிடம் கூறினான்.அரசியோ ஒருவேளை இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி எனும் நிலையைவிட்டு அந்தப்புரத்தில் ஒரு சேடிப்பெண்ணாக இருந்து உமக்கு சேவை செய்வேன் என்றாள். சொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடைபகன்ற யமுனைத்துறைவன், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளை கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் அறிவித்து "உமது தாய் மலடி அல்லள், இந்த அரசன் தர்மவான், அரசபத்தினி பதிவிரதை" என்று கூறி மறுக்கச் சொன்னார். ஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இக்கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்கமுடியுமோ என்று அரசன் வேண்ட யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார். 1.ஆக்கியாழ்வான் தன்தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி. எவ்வாறெனில் அக்குழந்தைக்கு துர்மரணம் நேர்ந்தால் அவளை தாயென்று கொண்டாட மற்ற பிள்ளைகள் இல்லையாதாலால் மலடி என்று முதலாவது கூற்றை மறுத்தார். 2.அரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் அல்லன் என்று சொல்லி இரண்டாவது கூற்றை மறுத்தார். 3.ஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மணமகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று "இவளை சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்" என்பதாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது. அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் கற்புக்கரசி அல்லள் என்று மூன்றாவது கூற்றையும் மறுத்தார். சொற்போரில் வென்றார். இவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ? என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார். ஆளவந்தார் அரசப் போகத்தில் திளைத்து வழிபிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி தன் குருவின் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார். ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால் ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக ஆறுமாத காலம் தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார். சின்னாட்கள் கீரையை உணவில் காணாத அரசனான ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் யாரோ ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூற, இதில் ஏதோ நுட்பம் இருப்பதை உணர்ந்த ஆளவந்தார் அடுத்த முறை அப்பெரியவர் வருவாறாயின் தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார் உமக்கு என்ன வேண்டுமோ கேள் என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பின்னர் குருகை காவலப்பனிடமும் யோகசாத்திரங்கள் பயின்று அரச பதவியை துறந்து தன் கருணையால் வைணவ சமயத்திற்கு ஆளவந்தவரும் ஆனார். ஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள் எட்டு. அவையாவன: இவற்றுள் சித்தி த்ரயம், கீதார்த்த சங்கிரகம் என்னும் இரண்டு நூல்கள் முறையே இவரது மாணவர் இராமானுசர் செய்த ஸ்ரீ பாஷ்யத்துக்கும், கீதா பாஷ்யத்துக்கும் ஆதாரமாக அமைந்தவை. பிறவற்றுள் சில தோத்திரம். சில கண்டணம். மணக்கால் நம்பி தன்னிடம் ஒப்படைத்த திருவரங்கச் சொத்தைத் தனக்குப் பின்னர் காக்கவல்லவர் இராமானுசர் என உணர்ந்தார். காஞ்சிபுரம் சென்று அவருக்குத் தெரியாமல் அவரைப் பார்த்து மகிழ்ந்தார். திருவரங்கம் திரும்பித் தொண்டாற்றும் காலத்தில் தமது முடிவுநாள் நெருங்கும்போது தமது மாணவர் பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன்னர் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார். ஆளவந்தார், ஆண்டாள் பாசுரங்களைப் போற்றி இரண்டு தனியன்கள் பாடியுள்ளார். அவை: 1 2 தனியன் பாடிய புலவர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள ஆழ்வார்களைச் சிறப்பித்து அவர்களது பாடல்களுக்கு எழுதப்பட்ட சிறப்புப் பாயிரம் போலத் 'தனியன்' பாடல்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. அவை வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்தவை. அவை அந்தந்த ஆழ்வாரின் பாடல்கள் தொடங்கும் இடத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட தனியன் பாடல்களைப் பாடிய புலவர்கள்: யோகேசுவர் தத் யோகேசுவர் தத் (योगेश्वर दत्त, பி. நவ. 2, 1982), ஓர் இந்திய மற்போர் விளையாட்டு வீரர். இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கட்டற்ற நடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.. இவருக்கு 2013 ஆம் ஆண்டில் விளையாட்டிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு. கட்டற்ற நடை = freestyle மெத்தில் மலோனிக் அமிலம் மெத்தில் மலோனிக் அமிலம் "(Methylmalonic acid)" என்பது மெத்திலேற்றம் செய்யப்பட்ட மலோனிக் அமிலம். இது ஓர் இரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகும். உயிர்ச்சத்து பி-12 குறைபாட்டில் குருதி மெத்தில் மலோனிக் அமிலம் மிகும். அத்துடன் மெத்தில் மலோனிக் அமில மிகை எனும் வளர்சிதை மாற்ற நோய்நிலையிலும் இந்த அமிலம் அதிகரிக்கும். இலைக்கன் இலைக்கன்கள் ("lichen", , சிலவேளை ) என்பது பங்கசு மற்றும் ஒளித்தொகுப்பு செய்யும் உறுப்பினரான பச்சை அல்கா (பொதுவாக "ரெபொக்சியா" (Trebouxia))அல்லது நீலப்பச்சைப்பாசி (பொதுவாக "நொசுடொக்" ("Nostoc") என்பவற்றுக்கிடையே காணப்படும் ஒன்றிய வாழ்வுத்தொடர்புடன் அமைந்த கூட்டு உயிரி ஆகும். இலைக்கன்களின் உருவவியல், உடற்றொழிலியல் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் மற்றைய பூஞ்சை மற்றும் அல்காக்களில் இருந்து வேறுபட்டது. இலைக்கன்கள் சூழல் மிகைமாற்றங்களையும்-அதாவது, ஆர்ட்டிக் முனைவுகள், சூடான பாலைவனம், மலைப் பாங்கான பகுதி மற்றும் நச்சுத்தன்மையான சூழல் என்பவற்றையும்- தாக்குபிடித்து வாழக்கூடியவையாக உள்ளன. அதே நேரம் மழைக்காடுகள், அயன மண்டலப்பகுதி, முதலானவற்றிலும் வளரும். கொரோனா கொரோனா ("Corona") என்பது சூரியன் மற்றும் புவி உட்பட்ட ஏனைய வானுலகங்களை சூழவுள்ள பிளாசுமா வகை ஆகும். இது விண்ணில் பல கோடி கிலோமீட்டர்கள் வரை பரந்துள்ளது. இதனை முழுமையான சூரிய கிரகணத்தின் போது இலகுவாகக் காணலாம். ஆனாலும் இதனை ஒளிவளைய வரைவி ("coronograph") மூலமும் பார்க்கலாம். கொரோனா என்ற சொல் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான κορώνη (கொரோனி, மலர்வளையம், மலர்மாலை) என்ற சொல்லில் இருந்து பிறந்தது. கொரோனா பல வகைக் கதிர்களை வெளியிடும். சூரியனின் கொரோனா உயர் வெப்பநிலையில் காணப்படுவதால் இது அசாதாரண நிறமாலை பண்புகளைக் கொண்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5800 K ஆகக் காணப்படும் போது அதன் மேல் காணப்படும் கொரோனாவின் வெப்பநிலை 1000000 K தொடக்கம் 3000000 K வரை உள்ளது (சிலவேளைகளில் 10000000K வரை உயரலாம்). பீம்பேட்கா பாறை வாழிடங்கள் பீம்பேட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka rock shelters: தேவநாகரி: भीमबेटका पाषाण आश्रय) என்பவை இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும். பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன.இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால(பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. பீம்பேட்கா என்றால் "பீமன் அமர்ந்த இடம்" என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர். வைணவ இலக்கியங்கள் திருமாலை முதற்கடவுளாக வணங்கும் வைணவத்தினைப் பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் பரிபாடலில் திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற சங்கப் பாடல்களிலும் திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் உள்ளன. சில வைணவ இலக்கியங்கள் மகாபாரதம் இராமாயணம் மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005 இளங்கோ (வேங்கையின் மைந்தன்) இளங்கோ அகிலனின் வேங்கையின் மைந்தன் புதினத்தின் கதாநாயகன். கொடும்பாளூர் குலத்தில் தோன்றியவன். கொடும்பாளூரை ஆண்ட வேளிர்கள் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் காலத்தில் சோழ நாட்டிற்கு உறுதுணையாய் நின்றவர்கள். அவர்கள் வீரமும் கடமையுணர்வும் உணர்ச்சிகளுக்கு இடங்கொடாத உறுதியான மனமும் உடையவர்களாய் சித்தரிக்கப்படுகின்றனர். அத்தகைய கொடும்பாளூர் சிற்றரசர் மதுராந்தக வேளாளரின் மகனாக ஆசிரியர் இப்புதினத்தில் இளங்கோவை அறிமுகம் செய்கிறார். ஈழத்திலிருந்து பாண்டிய நாட்டு முடியை மீட்ட இராஜேந்திரரின் வெற்றியை மையமாகக் கொண்டு எழுப்பப்பட்ட இக்கதையில் அம்மன்னனின் ஒவ்வொரு சாதனையிலும், வெற்றியிலும் பெரும் பங்காற்றும் வீரக் கதாநாயகனாக இப்புதினத்தின் மூன்று பாகங்களிலும் உலா வருகிறான் இந்த கொடும்பாளூர் இளவரசன். ஒரு வரலாற்றுப் புதினத்தின் நாயகனாக விளங்கத் தேவையான அனைத்து குணாதிசியங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் இளங்கோ. இளங்கோவின் சிறப்புக் குணங்களாகக் இக்கதையில் ஒரு வாசகர் காணக்கூடியவை: வீரம் விளையும் மண்ணில் தோன்றிய இளங்கோவின் வீரம் அவன் இராஜேந்திர சோழருக்காகப் பங்குகொண்ட ஒவ்வொரு போரிலும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்குள் புகுந்ததும் அக்களம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டு போர்புரிவதும் தனது படையை ஒரு சிறந்த தலைவனாக வழி நடத்தும் திறனும் வெற்றி அல்லது வீர மரணம் என்ற அவனது கொள்கையும் இக்கதையில் தரப்பட்டுள்ள விதம் வாசிப்போரைக் கதாநாயகன்பால் ஈர்க்கிறது. பாண்டியன் முடி மீட்ட ஈழத்துப் போர், ஈழத்தில் மீண்டும் தலைதூக்கிய கலகங்கள், கடாரம் வென்ற கடற்போர் ஆகியவற்றில் இந்நாயகனின் வீரச் செயல்களும் வெற்றியும் மூன்று பாகங்களிலும் முக்கியக் கருத்துக்களாக அமைந்துள்ளன. கடமை என வந்துவிட்டால் அதைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாத குணம் இந்த கொடும்பாளூர் வேளிர்களுக்கு. அவ்வழியில் வந்த இளங்கோவும் கடமையை நிறைவேற்றுவதில் உயிரைக்கூட துச்சமாகக் கருதுபவன். இவன், அனைத்து போர்களிலும் கலந்து கொண்டு எதிரிகளை வென்று புலிக்கொடியை நாட்டுவதையேத் தனது தலையாயக் கடமையாகக் கொண்டவனாய் கதைக்குள் வலம் வருகிறான். இக்கதையில் இவனுக்கு காதலிகள் இருவர். ஒருத்தி இராசேந்திர சோழரின் மூத்த பெண் அருள்மொழிநங்கை; மற்றொருத்தி ஈழநாட்டு மன்னன் மகிந்தரின் பெண் ரோகிணி. முன்னவள் தன் மீது அன்பு செலுத்துகிறாள் என்பது இவனுக்குக் கதையின் மூன்றாம் பாகத்தில் தான் தெரிய வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி நங்கை தன் மீது காட்டும் அன்பை ஒருவித மரியாதையாகவும் பரிவாகவும் நினைத்து விடுகிறான். பாண்டியன் முடிமீட்க ஈழத்தின் மீது படையெடுத்த போது அங்கு ரோகிணியைச் சந்திக்க நேர்கிறது. அவர்கள் இருவருக்கிடையில் அன்பும் காதலும் மலர்ந்தாலும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கிடையே பூசலையும் போராட்டங்களையும் வளர்க்கின்றன. இளங்கோவின் கடமைக்குப் பின்புதான் வேறெதுவும் என்ற முரட்டுத்தனமும் பிறந்த நாட்டின் மீது கொண்ட பற்றுக்கும் தான் காதலிப்பவன் நாட்டின் நன்மைக்கும் இடையே ஊசலாடும் ரோகிணியின் தெளிவின்மையும் இருவரையும் பலமாக அலைக்கழிக்கின்றன. ஆனால் அனைத்து இடர்களையும் தாண்டி அவர்களிடையே மலர்ந்த காதல் பலமாக வேரூன்றி விடுகிறது. இராஜேந்திர சோழரும் வல்லவரையரும் அரசியல் லாபத்திற்காக இவர்கள் நெருங்கிப் பழகுவதை மறைமுகமாக ஆதரிக்கின்றனர். கடமையைக் கண்ணாகக் கருதும் இளங்கோவின் இதயத்துக்குள்ளும் காதல் என்னும் மெல்லுணர்வு அவனை வலுவாக ஆட்டி வைப்பதை இக்கதை முழுவதும் உணரலாம். இப்புதினத்தில் வீரமல்லன், மாங்குடி மருதன் என இருவர் இளங்கோவின் நெருங்கிய நண்பர்களாய் வருகின்றனர். ஆபத்தான ஒரு சமயத்தில் தன் உயிரைக் காத்த காரணத்தால் வீரமல்லன் மேல் இளங்கோ கொண்ட நட்பு நெருக்கமாகிறது. பழம்பெரும் குடியான முத்தரையர் வம்சத்தில் தோன்றிய வீரமல்லன் நாடில்லா வீரனாக இருப்பது அவன் மேல் அதிகப் பரிவைத் தூண்டுகிறது இளங்கோவுக்கு. சோழமன்னரிடம் பரிந்துரைத்து அவனது நாட்டைப் பெற்றுத்தருவதாகவும் அதுவரை பொறுமையாகவும் பொறுப்புடனும் இருக்கும்படியும் வீரமல்லனுக்குக் கூறுகிறான். தங்களுடையதைப் போல் ஒரு சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த இளங்கோவின் மேம்பட்ட நிலையையும் தனது நாடற்ற நிலையையும் எண்ணி வீரமல்லன் அசூயை கொண்டு எதிரிகள் பக்கம் மாறிவிட்டாலும் இளங்கோவின் மனதில் அவன் தனது நண்பன் என்ற எண்ணம் மாறவில்லை. அவன் மேல் வெறுப்பு ஏற்படுவதற்குப் பதில் அவனது அவசரபுத்தியை நினைத்து வருத்தம்தான் அடைகிறான். இராமருக்கு அனுமன் துணை போன்று இளங்கோவிற்கு அவனது நண்பன் மாங்குடி மருதன். தனது நிழல் போல் தன்னைப் பாதுகாத்துத் தொடரும் தன் நண்பன் மாங்குடி மருதனிடமும் இளங்கோ கொண்டுள்ள நட்பு ஆழமானது. வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலைக்கு முன்) வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் வைணவ ஆசாரிய பரம்பரை இறைவன் 'பெரிய பெருமாள்' என்பவரை ஆதியாகக் கொண்டு தொடங்குகிறது. இப்பகுதி 11ஆம் நூற்றாண்டில் தென்கலை-வைணவம் பிரிவதற்கு முன் உள்ள பரம்பரையைக் கூறுவது. வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, நூற்றாண்டு முறை, 9 முதல் 16, தொகுதி 14, பதிப்பு 2005 வைணவ ஆசாரிய பரம்பரை (வடகலை) வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் வடகலை வைணவ ஆசாரிய பரம்பரையும் கருத்தில் கொள்ளத்தக்கது. வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர். இவர்களது பரம்பரையை அட்டவணையில் காணலாம். மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, நூற்றாண்டு முறை, 9 முதல் 16, தொகுதி 14, பதிப்பு 2005 நீலக்கழுத்துப் பச்சைக் குருவி நீலக்கழுத்துப் பச்சைக்குருவி அல்லது நீலத்திண்டைப் பச்சைக்குருவி என்பது இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் காணப்படும் ஒரு பறவை. பச்சைக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி ஆகியவை அடங்கிய பறவைப் பேரினத்தில் உள்ள ஒரு குருவி. இதற்கும் அலகுகளை ஒட்டி நுண்ணிய முடிகள் இருக்கும்; இவ்வகைப் பறவைகளை அலகுமயிர்ப் பறவைகள் என்றும் கூறலாம் (ஆங்கிலத்தில் இவ்கையான பறவைகளைப் "பார்பெட்டு" (barbet) என்று குறிப்பர்; இச் சொல் குறுந்தாடி என்னும் பொருள் தருவது என்பதை இங்கு நினைவு கூரலாம்). இக்குருவி பழங்களையும், பூச்சிகளையும் உண்ணுகின்றது. வினு சக்ரவர்த்தி வினு சக்ரவர்த்தி (டிசம்பர் 15, 1945 - ஏப்ரல் 27, 2017) மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, படகா போன்ற 4 மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, கெட்ட குணமுடைய (எதிர்நாயகன்) வேடங்களிலுமே நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மேல்புதூரில் ஆதிமூல தேவருக்கும் மஞ்சுவாணி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு பிரேமகாந்தன் என்ற இளைய சகோதரரும், குண்டலகேசி என்ற இளைய சகோதரியும் உள்ளனர். இவரின் மனைவி கர்ண பூ ஆவார். இவரின் மகள் சண்முக பிரியா பேராசிரியையாக அமெரிக்காவில் உள்ளார். மகன் சரவண பிரியன் இலண்டனில் மருத்துவராக உள்ளார். இவர் இராயப்பேட்டை வெஸ்லே பள்ளியிலும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டார். வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி நடித்து, இயக்கி உள்ளார். இவர் இருப்பு துணை ஆய்வாளராக 6 மாதம் ஐஸ் அவுஸ் பகுதியில் பணியாற்றிவிட்டு தென்னக இருப்புப்பாதையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் கன்னட இயக்குனர் "புட்டண்ணா கனகலிடம்" கதையாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய "பரசக்கே கண்ட தின்மா" என்ற படம் வெற்றிபெற்றதையடுத்து அதை திருப்பூர் மணி தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டார். அதன் பொருட்டு இவர் தமிழ் திரையுலகுக்கு வந்தார். "பரசக்கே கண்ட தின்மா" என்ற படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று தமிழில் சிவகுமாரை கொண்டு எடுக்கப்பட்டது. இவர் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சிலுக்கு என்ற பாத்திரத்தில் ஸ்மிதாவை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமான தி டர்ட்டி பிக்சர்சில் சில்க் ஸ்மிதாவை தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சித்தரித்த விதத்தை இவர் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் சில்க் ஸ்மிதா பாத்திரத்துக்கு வித்யா பாலன் சரியான தேர்வல்ல என்றும் தெரிவித்தார் . உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் ஏப்ரல் 27, 2017 அன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். சங்கீதா (நடிகை) சங்கீதா (English:sangita) ஒரு இந்திய நடிகை. இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி (திரைப்படம்) படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலமும் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானவர் இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார். தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில் தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும் இத்திருத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது. இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் திருதலைச்சங்க நான்மதியம் எனப்படும் இத்திருத்தலம் உள்ளது. சங்காரண்யேசுவரர், சங்கவனேஸ்வரர், சங்கருணாதேஸ்வரர்., நாண்மதியப்பெருமாள் , வெண்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம். தாயார் தலைச்சங்க நாச்சியார் (சவுந்தர நாயகி) ஆவார். சங்கு தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) . புரசு சந்திர விமானம். பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும்அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. திருமால் இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் எனும் சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். முன்பு, 40 ஆண்டுகாலம் வழிபாடின்றி இருந்த இத்திருத்தலத்தை வடுக நம்பி சீரமைக்க முயன்று, அவருக்குப் பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணி செய்து அமைத்த திருக்கோயிலே இப்போதுள்ளது. 11 நவம்பர் 2014இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது. திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி 2 பாசுரங்கள் இயற்றி உள்ளார். சம்பந்தரும் பாடியுள்ளார். நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்தோர் நால்வேதம் சொலச்சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக்குயிலாலும் தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத்தாழ்ந்தீர். (சம்பந்தர்) இக்கோயிலின் அருகே தேவாரப்பாடல் பெற்ற சங்காரண்யேசுவரர் கோயில் எனும் கோயில் அமைந்துள்ளது. ஆதிபகவன் ஆதிபகவன் () என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார். திருமந்திரம் ஆதிபரன் ஆதி பராபரம் ஆதிப்பிரான் ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது. குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் 'ஆதி' எனக் குறிப்பிடுகிறார். பகவு என்னும் சொல்லால் திருவள்ளுவர் தமக்குத் தெரியாமல் பகுதிபட்டிருக்கும் பொருளைக் குறிப்பிடுகிறார். அந்தப் பகவு எள்ளுக்குள் எண்ணெய் போலப் பகவுபட்டிருக்கும் என்பது அவர் விளக்கம். இவற்றால் நாம் அறிவது என்ன? தொடர் விளக்கம் உவமை விளக்கம் ஆதிபகவன் என்னும் தொடருக்கு அறிஞர் கண்ட விளக்கங்கள் தொடக்க மெனு தொடக்க மெனு அல்லது துவங்கு மெனு ("Start Menu") என்பது மைக்ரோசாப்டு விண்டோசு இயங்குதளங்களிலும் (விண்டோசு 95இலிருந்து விண்டோசு சர்வர் 2008 ஆர்2 வரை) சில எக்சு விண்டோ மனேசர்களிலும் பயன்படுத்தப்பட்ட பயனர் இடைமுக மூலகம் ஆகும். விண்டோசு விசுட்டாவுக்கு முந்தைய விண்டோசுப் பதிப்புகளில் இடம்பெற்ற தொடக்க மெனுவில் "துவங்கு" என்ற சொல்லும் விண்டோசின் அடையாளச் சின்னமும் காணப்பட்டன. பின்னர், விண்டோசு விசுட்டாவிலும் விண்டோசு 7இலும் விண்டோசின் அடையாளச் சின்னம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனாலுங்கூட, கருப்பொருளை விண்டோசு கிளாசிக்குக்கு மாற்றுவதன் மூலம் "தொடங்கு" என்ற சொல்லைக் காண்பிக்கச் செய்ய முடியும் (ஆங்கில மொழி விண்டோசில் "துவங்கு" என்பதும் "தொடங்கு" என்பதும் "Start" என்றே அமைந்திருக்கும்.). தொடக்க மெனுவானது கணினி, ஆவணங்கள், படங்கள், இசை, விளையாட்டுகள், கட்டுப்பாட்டுப் பலகம், சாதனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள், இயல்புநிலை நிரல்கள், உதவி மற்றும் ஆதரவு ஆகிய இடங்களுக்குச் செல்லவும் மென்பொருட்களைத் திறக்கவும் கோப்புகளையும் கோப்புறைகளையும் தேடவும் கணினியை நிறுத்தவும் தேவையான பயனர் இடைமுகத்தை வழங்குகின்றது. விண்டோசு 8இலிருந்து தொடக்க மெனுவின் பயன்பாடு கைவிடப்பட்டதுடன், தார்ட்டு கிரீன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் மகான் அல்ல நான் மகான் அல்ல என்ற தலைப்பிலுள்ள கட்டுரைகள் இறைவன் (திருக்குறள்) திருவள்ளுவர் தம் திருக்குறளில் தாம் கண்ட இறைவனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஐம்புலனுக்கும் எட்டாமல் பொறிவாயில் ஐந்தும் அவித்து ஆளும் இறைவனை முதல் பத்துப் பாடல்களில் குறிப்பிடுகிறார். நம் கண்ணுக்குத் தெரிந்து நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கி உதவும் மழையை அடுத்த பத்துப் பாடல்களில் தெய்வமாகத் திறந்து வைக்கிறார். நம் கண் முன்னே நம்மோடு வாழ்ந்து நாம் வாழ வழிகாட்டும் நீத்தாரை மனித உருவில் வாழும் தெய்வமாக மூன்றாவது பத்துப் பாடல்களில் காட்டுகிறார். தனி மனிதன் நெறியில் நில்லாமல் சமுதாயம் இயங்கும் ஆறாகிய அறநெறியை நான்காவது தெய்வமாக நான்காவது பத்துப் பாடல்களில் வலியுறுத்துகிறார். கண் முன்னே நம்மை ஆளும் அரசாகிய 'இறை' போன்று, நம் புலன்களுக்குத் தெரியாமல் நம்மையும், நாம் அல்லாத அனைத்தையும் ஆள்வது 'இறை'. இறைவன் (அகப்பார்வை) இறை, இறைவன் என்னும் சொற்களைக் கையாண்டு திருக்குறள் விளக்கும் கருத்துகளை மட்டும் தொகுத்துப் பார்ப்பது அகப்பார்வை. இறைவன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பவன். காலத்தாலும் இடத்தாலும் நமக்குள்ளும், நம்மைக் கடந்தும் இறைந்துகிடப்பவன் இறைவன். கண் முன்னே ஆளும் அரசனாகிய இறைவன் போலக் கண்ணுக்குத் தெரியாமல் தலைமை தாங்கி ஆள்பவன் இறைவன். ரோகிணி (வேங்கையின் மைந்தன்) ரோகிணி, அகிலனின் வேங்கையின் மைந்தன் புதினத்தின் இரு கதாநாயகியருள் ஒருத்தி. இவள், ஈழத்து அரசன் ஐந்தாம் மகிந்தனின் மகளாக இக்கதையின் ஆசிரியரால் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். இராஜேந்திர சோழன், பாண்டிய நாட்டு முடியை மீட்டு வென்ற ஈழத்துப் போரில் ஈழத்து அரசனையும் அவனது குடும்பத்தையும் சிறைப்பிடித்து சோழநாட்டிற்கு அழைத்து வந்ததாக வரலாறு கூறுகிறது. இப்புதினத்தில் அப்போரிலும் அதற்குப் பின்னும் இச்சோழமன்னரின் பல வெற்றிகளில் முக்கிய பங்குபெறும் கொடும்பாளூர் குல இளவல் இளங்கோ நாயகனாகவும் அவனிடம் தன் மனதைப் பறிகொடுத்த ஈழத்து இளவரசியாக ரோகிணியும் காட்டப்பட்டுள்ளனர். தங்கள் எதிரி நாட்டு இளவரசனான இளங்கோவிடம் அன்பு தோன்றிய ஆரம்பக் கட்டத்திலிருந்து கதையின் சில இறுதி அத்தியாயங்களுக்கு முன்வரை, ரோகிணி இருவகையான குணங்களை வெளிப்படுத்தும் பெண்ணாக உள்ளாள். தன் பிறந்த நாடு மற்றும் குடும்பத்தினரிடம் கொண்ட அளவற்ற பாசத்தை உதறமுடியாமலும் தன்னையறியாமலே இளங்கோவின் வசப்பட்டுவிட்ட தன் மனதை மீட்க முடியாமலும் மனப்போராட்டங்களுக்கு உள்ளாகிறாள். இதனால் ஒரு சமயம் இளங்கோவிடம் பாடி ஆடி மகிழும் இவள் அவன் ஈழநாட்டின் மீதான போர்ச் செயல்களில் ஈடுபடும்போது கோபங்கொண்டு தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவனைக் காயப்படுத்துகிறாள். இப்போராட்டத்திலிருந்து அவள் மீளும்விதம் கதையின் முக்கிய முடிச்சுகளுடன் இணைக்கப்பட்டுச் சுவையாகக் சொல்லப்பட்டுள்ளது. வாசிப்போரின் மனதைக் கவரும் கதாபாத்திரங்களில் ரோகிணியும் ஒன்றாகும். ஆம்பூர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்பது வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியாகும். அசைவ உணவான இந்தப் பிரியாணி உணவில் கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி அல்லது மாட்டுக் கறி என்று சேர்க்கப்படும் இறைச்சிக்கேற்ப பிரியாணியின் பெயரும் மாறுபடுகிறது. ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாலறிவன் நமது அறிவு வலிமை பெற்று வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருடைய அறிவும் அவரவர் முன்னோர் விதையிலிருந்து சூழல் தரும் உரத்தால் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த அறிவு வாலிபத் தன்மை கொண்ட வாலறிவு. வெளிச்சத்தால் கண் தெரிவதையும், காற்றலையால் காது கேட்பதையும் நமது அறிவு கண்டுபிடித்துக்கொள்கிறது. நம் அறிவு இத்தகைய வலிய வாலிபத் தன்மை பெற்று நம் மனத்தில் வளர்வது போல, இறையறிவு வாலிதாக (transparent) சரியோ தவறோ, நல்லதோ கட்டதோ எப்படிப்பட்டதாயினும் தாங்கிக்கொண்டு சரியாக இயங்கும் ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது. இறைவன் அறிவு நம் அறிவுக்குள் இருப்பினும் அது வேறுபட்டதாகவும் விளங்குகிறது. அது வானவெளிபோல் தூய்மையானது. வானவெளி அண்டங்களையும், ஆற்றல்களையும், தோன்றி மறையும் அறிவாற்றலையும் சுமந்துகொண்டு இயங்கும் பேராற்றல் மிக்கது. இந்த வாலறிவை வள்ளுவர் வாலறிவு என்கிறார். வாலறிவாக விளங்கும் வாலறிவனை அறிஞர்கள் பல்வேறு கோணகோணங்களில் பார்க்கின்றனர். மணக்குடவர் இந்த வாலறிவனை "விளங்கிய அடிவினை உடையவன்" என்கிறார். பரிமேலழகர் "மெய்யறிவினை உடையான்" என்கிறார். பரிதியார் "மேல் அறிவாளனான சிவன்" என்கிறார். காலிங்கர் "மாசற்ற அறிவுருவாகிய இறைவன்" என்கிறார். புலவர் குழந்தை – உண்மையறிவு உடையவன் மலர்மிசை ஏகினான் இறையறிவு வாலறிவு. அது மனமாகிய மனத்தில் நடந்தது. (இறைவன் ஏகினான்). வாலறிவு நம் மனத்தில் நடந்துகொண்டிருந்தால் அது மெய்யறிவு. மனத்தில் பெய்யறிவு நடந்து மனத்தைக் கடந்துவிட்ட நிலையில் மனத்தில் எஞ்சி நிற்பது உவகியலறிவு. வாலறிவு மனத்தில் நடந்த சிறந்த அடிச்சுவடுகளை நாம் பின்பற்ற வேண்டும். வேண்டுதல் வேண்டாமை இலான் நமக்கு இது வேண்டும், இது வேண்டாம் என்னும் பாகுபாடு உண்டு. இறைத்தன்மைக்கு. (இறைவனுக்கு) இப்படிப்பட்ட பாகுபாடு இல்லை. பொறிவாயில் ஐந்து அவித்தான் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன நமது அறிவை இயக்கும் பொறிகள். இந்த அறிவுகளை இறைவன் நமக்குள் இயங்க வைத்துவிட்டு, தனக்குள் அவித்து வைத்துக்கொண்டான். அவித்த கரிக்கட்டை போலவும், அவித்த பயறு போலவும் வைத்துக்கொண்டுள்ளான். உலகைப் பார்ப்பது பொய்-ஒழுக்கம். உலகைக் கண்டும் காணாமல் இருப்பது ‘பொய்தீர் ஒழுக்கம்’. இறைவனையும், மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுகிறது, இந்தக் குறள். தனக்கு உவமை இல்லாதான் ‘பொன்னார் மேனியனே’ என்னும்போது சிவபெருமான் நிறமும், ‘பச்சைமா மலைபோல் மேனி’ என்னும்போது திருமாலின் நிறமும் நம் மனக்கண்ணுக்குத் தெரிகிறது. ‘விறகில் தீயினன் பாலில் படு நெய்யன்’ என்னும்போது இறைவன் இருப்பு எப்படி இதுக்கும் என உணரமுடிகிறது. இப்படிப்பட்ட உவமைகளால் இறைவனை உணரச்செய்ய முடியுமா? முடியாது. எனவே இறைவனைக் காட்ட முடியாது. காண முடியும். உயர்வு அற உயர்நலம் உடையவன் எனத் திருவாய்மொழி கூறுவதும் இதுதான். அறவாழி அந்தணன் அறவழிதான் உலகை வாழவைக்கிறது. அன்பு, இன்மொழி, அடக்கம், பொறுமை, நடுவுநிலைமை, ஈகை முதலானவை அறவழிகள். இந்த வழிகள் அறக்கடலில் கலக்கின்றன. மறமும் அறக்கடலில்தான் கலக்கிறது. யார் எந்த வழியைப் பின்பற்றினாலும் உலகம் இயங்குவது அறவழியில்தான். அந்த அறவழி கலக்குமிடம் அறக்கடல். அறக்கடல்தான் ‘அறவாழி’. இந்த அறவாழியாக இருப்பவன் இறைவன். அவன் அந்தணன். அந்தணன் என்பவன் அறவழியைப் பின்பற்றுபவன். (பிறப்பால் கூறிக்கொள்ளும் அந்தணன் அல்லன்) அவன் வைத்துக்கொண்டிருப்பதெல்லாம் ‘செந்தண்மை’ (செம்மையான, ஒழுங்கான ஈரம் என்னும் அன்பு) இறைவன் அறக்கடல். இறைவன் அந்தணன். எண்குணத்தான் இறைவனுக்குக் குணம் உண்டு. நம் எண்ணந்தான் அவன் குணம். எப்படி இருப்பான், எப்படி நடந்துகொள்வான் என நாம் எண்ணுகிறோமோ அப்படி இருப்பான். அப்படி நடந்துகொள்வான். கண் தெரியாத ஒருவனுக்கு வெள்ளைநிறம் என்பது என்ன என்று தெரியாது. காது கேளாத ஒருவனுக்கு ஆங்கிலமோ, தமிழோ எந்த மொழி பேணினாலும் தெரியாது. இவை ‘கோள்-இல் பொறி’கள் . என் மனத்துக்குத் தெரியும் இறைவன் இன்னொருவர் மனத்துக்குத் தெரிவதில்லை. இப்படித்தான் இறைவனைப்பற்றிய எண்ணங்களும் அவரவர் எண்ணத்தின் அளவினவே. கோட்பாட்டு இயற்பியல் கோட்பாட்டு இயற்பியல் இயற்பியலின் ஒருபகுதியாகும். கணித மாதிரிகள், இயற்பியல் பொருள்கள் மற்றும் அமைப்புகளின் இயற்கை நிகழ்வுகளை பகுத்தறிய, விளக்க மற்றும் கணிக்க கருத்தியல் கோட்பாடுகளை பயன்படுகின்றனர். சோதனையை அடிப்படையாக கொண்ட இயற்பியலில் இயல்நிகழ்ச்சியை ஆய்வு செய்ய சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அறிவியல் வளர்ச்சி பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன. சிலவேளைகளில் கோட்பாட்டுவாத இயற்பியல் சோதனை மற்றும் அவதானிப்புகளை குறைவாகவும் , கடினமான கணித முறைகளை அதிகளவிலும் பயன்படுத்துகின்றது. உதாரணமாக சிறப்புச் சார்புக் கோட்பாடு விருத்தி நிலையில் இருந்த போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மேக்ஸ்வெல் சமன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், லாரன்ஸ் நிலைமாற்றத்தையே அதிகம் கருத்தில் கொண்டார் .ஆனாலும் அவர் மைக்கல்சன்-மார்லே சோதனையில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளை, முன்னர் வரை கோட்பாட்டு அடிப்படையில் விளக்கப்படாமல் இருந்த ஒளிமின் விளைவை விளக்கி கூறியதால் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1. Physics Education Research | Physics Education Group 2. http://www.esotericka.org/cmc/tth.html 3. http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1921/index.html சின்னதச்சூர் சின்னதச்சூர் என்பது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் விழுப்புரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், விக்கிரவாண்டியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் மற்றும் நெசவு தொழில் உள்ளது அசைவ உணவு அசைவ உணவு என்பது விலங்குகளின் இறைச்சியை கொண்ட உணவாகும். அது பெரும்பாலும் வீட்டுவளர்ப்பு விலங்காகவே இருக்கும். சீனாவில் பெரும்பாலான விலங்குகளை உணவாக உட்கொள்கின்றனர். இந்தியாவில் கோழிக் கறி, மாட்டுக் கறி, ஆட்டுக் கறி, மீன் மற்றும் பன்றிக் கறி இவற்றை உண்ணுகின்றனர். அருள்மொழி நங்கை (வேங்கையின் மைந்தன்) அருள்மொழி நங்கை, அகிலனின் வேங்கையின் மைந்தன் புதினத்தில் வரும் இரு கதாநாயகிகளில் ஒருத்தி. இக்கதையில் இவள், இராஜேந்திர சோழரின் மூத்தமகளாக வருபவள். கதையின் நாயகனான இளங்கோவிற்கு உறவுமுறைப்படி முறைப்பெண். அவளது மனம் இயல்பாகவே இளங்கோவின் பால் ஈர்க்கப்பட்டாலும், பெரியவர்களின் எண்ணம் எதுவென்று தெரியுமுன் அதைப் வெளிப்படையாகக் காட்டாமல் கட்டிக் காக்கும் பண்பு கொண்டவள். தனது சோழ நாட்டின் மீதும் தந்தையின் மீதும் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவள். ஆழமான கடல் போன்று, இவள் இளங்கோவிடம் கொண்ட காதல் ஆழமான, அமைதியான, விவேகமானதாக ஆசிரியரால் சித்தரிக்கப்படுகிறது. தன் நாயகனுக்காக எதையும் செய்யத் துணியும் இவள் இளங்கோ மற்றொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது துயரை அப்படியே மனதுக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, அவன் விரும்பிய பெண்ணைத் தன் சொந்தத் தங்கையாக சுவீகரித்துக் கொள்கிறாள். தனது தலைவனின் நல்வாழ்வும் வெற்றியுமே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழும் அடக்கமும் அறிவும் விவேகமும் நாட்டுப்பற்றும் கொண்ட கதாபாத்திரமாக அருள்மொழி நங்கை புதினத்தின் மூன்று பாகங்களிலும் வலம் வருகிறாள். அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி சாரநாத்தில் மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், அசோகச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரையின் உருவங்களை கொண்டது அசோகத் தூண். முண்டக உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்ட, “வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும், "ஸத்யமேவ ஜயதே" என்ற சமக்கிருதச் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்திய அரசின் இலச்சினையாகவும் உள்ளது. இறை வணக்கம் இறைவனை வணங்குவதற்குத் திருவள்ளுவர் எந்த ஒரு முறையையும் குறிப்பிடவில்லை. இறைவனின் தாள் தொழு, தாள் சேர், தாளை வணங்கு, அடி சேர், பொருள்சேர் புகழ் புரி, பொய்தீர் ஒழுக்கநெறி நில் எனப் பொதுப்படக் கூறுகிறார். இவற்றை விளங்கிக்கொள்வோம். என்றெல்லாம் குறிப்பிடும்போது இறைவன் மனித உருவில் வாழும் தெய்வம் எனக் காட்டுகிறார். இறைவனுக்குத் தாள் என்னும் முயற்சி உண்டு. இறைவன் அடி எடுத்து நடக்கிறான் (ஏகினான்). இறைவன் பொய்தீர் ஒழுக்க நெறியில் நிற்கிறான். அதனால் அவனைச் சேரும் புகழே பொருள் புகழ். - என்றெல்லாம் கூறுகிறார். இறைநிலையின் பாங்குகளை அறிவியல் கண்கொண்டு அவர் கூறியிருப்பதை அவர் கூறியுள்ள தொடர்களைக்கொண்டு பல தலைப்புகளில் விளங்கிக்கொண்டோம். வள்ளுவர் காட்டும் இறைநிலைகள் நான்கு எனவும் கண்டோம். அவை நமக்குத் தெரியாமல் நம்மோடு இருக்கும் புதிர்நிலை, மழையாக வழங்கும் கொடைநிலை, வாழ்ந்து காட்டும் நீத்தார்நிலை, கூடிவாழும் அறநிலை என்பன. இறை என்னும்போது புதிர்நிலை. இறைவன் என்னும்போது தெரிநிலை. ஆதிபகவு என்னும்போது புதிர்நிலை. ஆதிபகவன் என்னும்போது தெரிநிலை. தெரிநிலைக்குத் தாள் உண்டு. அடி உண்டு. ஒழுக்கநெறி உண்டு. புகழ் உண்டு. தெரிநிலை என்பது வாழ்ந்து வழிகாட்டிய தெய்வம். அந்தத் தெய்வ நெறியைக் காட்டிக்கோண்டு வாழும் தெய்வம் (நீத்தார்). தெய்வப் படிமைகளுமாம். கொரோனாவின் வளைவுகள் கொரோனாவின் வளைவுகளானது (Coronal loop) சூரியனின் கொரோனாவில் நடைபெறும் ஓர் காந்தப்புலம் சார்ந்த நிகழ்வாகும். இது சூரிய நிகழ்ச்சி வட்டதுடன் நேரடியாகத் தொடர்புபட்டது. இது சூரியக் கரும் புள்ளிகளோடு தொடர்புபட்டது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்... இந்நூலில் ம. பொ. சி.யைப் பற்றிய தன்னுடைய நினைவலைகளோடு இணைத்து, 1927 முதல் 1995ஆம் ஆண்டு வரையிலான தமிழக வரலாற்றை; தமிழ் மண்ணில் இயங்கிய இயக்கங்களின் வரலாற்றை வாழ்ந்த, வாழ்கின்ற தலைவர்களின், தொண்டர்களின் வரலாற்றை தன்னுடைய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு உள்ளேயே தமிழ்ப்பண்பாட்டு இயக்கமாக ம. பொ. சி.யால் தொடங்கப்பட்டது தமிழரசுக் கழகம். இக்கழகம் 1947ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை மொழிவழி சோசலிசக் குடியரசுகளும் அவற்றின் கூட்டரசாக இந்திய ஒன்றியமும் உருவாக வேண்டும் என ஒருபக்கம் போராடிக் கொண்டிருந்தது. மறுபக்கம், மொழிவழி மாநிலப் பிரிவினையால் தமிழகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளைக் காக்க அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் தலைவர்களைக் கொண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. அப்போராட்டங்கள் மதுரை நகரிலும் எதிரொலித்தன. அந்த எதிரொலிகளால் ஈர்க்கப்பட்ட அந்நாளைய கல்லூரி மாணவரான நூலாசிரியர், அவற்றிற்கு காரணராக இருந்த ம. பொ. சியின் பெயரை 1956ஆம் ஆண்டில் முதன்முதலிற் கேட்டிருக்கிறார்; பின்னர் அவருடைய புகழைக் கேட்டு இருக்கிறார்; பின்னர் அவருடைய உரைகளைக் கேட்டு இருக்கிறார்; அதன் பின்னர் அந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 1956-59ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தன்னிடம் ஏற்பட்ட இந்த நிலைமாற்றத்தையே இந்த இயலில் பதிவு செய்திருக்கிறார். நூலாசிரியர் 1959ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியில் தங்கியிருந்த படித்தார். அங்கு அவரோடு தங்கியிருந்து படித்தவர் கோவை சு. வெங்கட்ராமன் என்பவர். ம. பொ. சி.க்கு இவர் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர். எனவே இவரது உதவியோடு ம. பொ. சி.யின் இல்லத்திற்குச் சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இந்நிகழ்வு தொடங்கி, 1961ஆம் ஆண்டில் திருத்தணி தமிழகத்தோடு இணைக்கப்பட்டு, ம. பொ. சி.க்கு அப்பகுதி மக்கள் "தணிகைகொண்டான்" என்னும் பட்டம் வழங்கி மகிழ்ந்தது வரையுள்ள பல நிகழ்வுகள் இந்த இயலில் விவரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, தெலுங்குநாடு என்னும் ஆந்திரம், கருநாடகம் என்னும் கல்நாடு, கேரளம் என்னும் சேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணம், மொழிவழி பிரிக்கப்பட்டு தமிழகமாக 1956ஆம் ஆண்டில் மலர்ந்தது. ஆயினும் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம், சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. எனவே இதனை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் எனக் கோரி 1961ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் போராட்டம் நடத்தியது. இதன் ஒரு பகுதியாக, திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியின் வாயிலில் இருந்து நடிகமேதை ஔவை தி. க. சண்முகம் தலைமையில் போராடக் கிளம்பினார்கள். அவர்களை வழியனுப்பி வைத்த நிகழ்வு தொடங்கி, தமிழரசுக் கழகம் தோன்றியதற்கான காரணத்தை விவரிக்கும் பகுதி இந்த இயலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நீதிக்கட்சியால் தொடங்கி வைக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் நிலைப்பாடு. இது இந்திய தேசிய காங்கிரசின் தமிழகக் கிளையில் தன்னுடைய செல்வாக்கைச் செலுத்தியது. அச்செல்வாக்கை எதிர்த்த ம. பொ. சி.யை அன்றைய தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த கு. காமராசர் அக்கட்சியிலிருந்து வெளியேற்றினார். அதற்கான காரணத்தை விளக்கி, 1962ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் வேலூரில் நடைபெற்ற தமிழரசுக் கழக மாநாட்டில் முதன்முறையாக தான் உரையாற்றிய நிகழ்வு வரையிலான தன்னுடைய நினைவலைகளையும் திராவிட இயக்கங்கள் பற்றிய தன்னுடைய மதிப்பீட்டையும் இந்த இயலில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். நூலாசிரியர், 22.1.1962ஆம் நாள் சென்னையில் தன்னை வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டது தொடங்கி, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக, சுதந்திராக் கட்சி, முசுலீம் லீக், தமிழரசுக் கழகம் ஆகியன போன்றவை இணைந்து, கூட்டணி அமைத்து, காங்கிரசுக் கட்சியைத் தோற்கடித்தது வரையிலான காலப்பகுதியின் நினைவலைகளை இந்த இயலில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். ம. பொ. சியும் தமிழரசுக் கழகத்தின் அன்றைய மதுரை நகரத் தலைவரான இந்நூலாசிரியரும் மதுரைப் பல்கலைக் கழகம் 1.2.1966ஆம் நாள் தொடங்கபட்டபொழுது, அதன் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் அம்மன்றத்தில் தமிழ்மொழியில் பேசி, அங்கே தமிழை அலுவல்மொழியாக ஆக்கினர். பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கறுப்புடை அணியும் ஆங்கிலேயே மரபினை தாமும் துறந்து, தமிழக முதல்வரும் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினருமான கா.ந. அண்ணாதுரையையும் அவ்வுடையைச் துறக்கச் செய்தனர். இந்நிகழ்வுகளையும் "காந்தியடிகள் காலத்திற்கு முற்பட்ட விடுதலைப் புரட்சி" என்னும் தலைப்பில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் முனைவர் மு.வரதராசனார் தலைமையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ம. பொ. சி. நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு பற்றிய நினைவலைகளையும் தந்து இந்த இயல் நிறைவடைகிறது. திராவிடநாடு வேண்டும் கோரிக்கைக்கு மாற்றாக தமிழரசுக் கழகத்தால் முன்வைக்கப்பட்ட, "மாநிலத் தன்னாட்சி" என்னும் கோரிக்கை, "மாநிலத்தில் தன்னாட்சி; மத்தியிற் கூட்டாட்சி" என்னும் முழக்கம் ஆகியவற்றின் சுருக்கமான வரலாற்றோடு தொடங்குகிறது இந்த இயல். ம. பொ. சி. தமிழக மேலவையின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்று தமிழை அதன் அலுவல் மொழியாக மாற்றியதைக் குறிப்பிட்டு, இந்திராகாந்தி இந்தியாவில் அவசரநிலையை அறிவித்த காலகட்டம் வரையுள்ள பல நிகழ்வுகள் இதில் பதியப் பட்டுள்ளன. சோசலிசத் தலைவரான மக்கள் தலைவர் செயப்பிரகாசு நாராயணனோடு தமிழக சர்வோதய மண்டலின் செயலாளராக இருந்த க. மு. நடராசனார் வழியாக மு. மாரியப்பனுக்கு தொடர்பு ஏற்பட்டது. 1973ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தப் போராட்டத்தில், செ. பி.யின் சட்ட ஆலோசகராக பணியாற்றும் வாய்ப்பு இந்நூலாசிரியருக்குக் கிடைத்தது. அவசரநிலைக் காலத்தில் ம. பொ. சி.யின் கருத்தோடு தான் முரண்பட்டு, செ. பி.யோடு இணைந்து அவசரநிலையை எதிர்த்து இவர் போராடியிருக்கிறார். அவசரகாலத்திற்குப் பின்னர் அரசியல் மாற்றம் நடைபெற்றது. ம. பொ. சி. தமிழக மேலவையின் தலைவரானார். இந்நிகழ்வுகள் அனைத்தையும் பதிவுசெய்யும் இந்த இயல், 1986ஆம் ஆண்டில் ம. பொ. சி. தன் ஒரே மகனான திருநாவுக்கரசை இழந்து, கையறுநிலை அடைந்த தகவலோடு நிறைவடைகிறது. சுவாமி சச்சிதானந்தாவின் அழைப்பை ஏற்று, அவர் அமெரிக்காவில் அமைத்திருந்த தாமரைக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு ம. பொ. சி., எழுத்தாளர்களான சாவி, பகீரதன். நூலாசிரியர் ஆகிய நால்வரும் சென்றனர். அதற்கு அன்றைய முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) உதவிகள் செய்தார். இவற்றைப் பற்றிய பதிவே இந்த இயலாகும். 1986ஆம் ஆண்டில் ம. பொ. சி. தலைவராக இருந்த தமிழக மேலவைக் கலைக்கப்பட்டது. அவர் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நூலாசிரியரின் தலைமகள் காயத்திரி தேவியின் திருமணம் ம.பொ.சி.யின் தலைமையில் நடைபெற்றது. இத்தகவல்களைக் கொண்டதே இந்த இயலாகும். திராவிட இயக்கங்களின் பார்ப்பனிய எதிர்ப்பைப் பற்றிய ம.பொ.சி.யின் கண்ணோட்டத்தின் பதிவே இந்த இயலாகும். 1972ஆம் ஆண்டில் சென்னை சங்கர சமிதியில் ஆதிசங்கரின் அத்வைதக் கோட்பாட்டைப் பற்றி ம. பொ. சி. ஆற்றிய உரையாற்றினார். அதன் ஆழத்தை எடுத்துரைத்து, அவரது ஆன்மீக நாட்டத்தை விளக்கி, அவரது மறைவோடு நூலாசிரியர் தன்னுடைய ஆதனியத் தொடர்பு அறுந்ததாக குறிப்பிடுவதோடு, நூலின் இறுதி இயல் நிறைவடைகிறது. தேசிய நெடுஞ்சாலை 52 (இந்தியா) தேசிய நெடுஞ்சாலை 52 (NH 52) இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களன அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை. 850 கி.மீ.(530 மைல்) தொலைவுள்ள தே.நெ 52ல் 540 கி.மீ. (340 மைல்) அசாமிலும் மீதமுள்ள நெடுஞ்சாலை அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது. உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரியக் குழு ("World Heritage Committee") என்பது உலகின் பல பாகங்களிலும் காணப்படும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களங்கள் எவை எனத் தீர்மானிப்பதற்கும், அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், உலக பாரம்பரிய மரபொழுங்குகளைச் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும் ஒரு குழுவாகும். 21 நாட்டு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. உலக பாரம்பரிய மரபொழுங்கின்படி குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு தமது பணியில் இருக்கலாம். ஆயினும், பல நாடுகளும் தமது நாட்டின் குழு உறுப்பினரை நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தாமாகவே விலக்கிக் கொன்டு, ஏனைய நாடுகளுக்கு உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கி வருகின்றன.. 2005 ஆம் ஆண்டு, 15 ஆவது பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, இக்குழுவிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது ஆறு ஆண்டு பணிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர். இக்குழுவின் பொறுப்புகள் உலகப் பாரம்பரியக் குழு, ஏற்கனவே உள்ள பாரம்பரியக் களங்களின் மேலாண்மை குறித்தும் நாடுகளிலிருந்து பெறப்பட்ட புதியக் களங்களுக்கான பரிந்துரைகளை ஏற்பது குறித்தும் கலந்துரையாட ஆண்டுக்கொருமுறை கூடுகிறது. 2016ல் துருக்கியில் நடைபெற உள்ள 40ம் ஆண்டுக் கூட்டத்தில் பங்குபெறும் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் குழு உறுப்பினர்கள். தேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா) தேசிய நெடுஞ்சாலை 31 அல்லது தேநெ 31 என்பது, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழரிபக்ஹ என்னும் இடத்தையும், அசாமின் குவஹாத்தி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். வட கிழக்கு இந்தியா மாநிலங்களில் நுழைவாயிலக தேநெ 31 விளங்குகிறது. தேநெ 31 மொத்த நீளம் 1125 கி.மீ. (699 மைல்). ரூபெல் பிணந்தின்னிக் கழுகு ரூபெல் பிணந்தின்னிக் கழுகு ("Rüppell's Vulture") என்பது மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு பெரும் பிணந்தின்னிக் கழுகு ஆகும். இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 30,000 ஆக குறைவடைவதற்கு, அவற்றின் வாழ்விட இழப்பும் பிற அழுத்தங்களும் காரணங்களாகும் இதனுடைய பெயர் 19ம் நூற்றாண்டு செருமனிய ஆய்வுப் பயணியும், மாவட்ட ஆட்சியாளரும், விலங்கியல் ஆய்வாளருமான எடியுட் ரூபெல் என்பவரை மதிப்பளிக்கும் விதமாக சூட்டப்பட்டது. ரூபெல் பிணந்தின்னிக் கழுகு மிகவும் அதி உயரத்தில் பறக்கும் பறவையாக கருதப்படுகின்றது. இதன் நிச்சயிக்கப்பட்ட பறப்பு உயரம் கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) ஆகும். வளர்ந்த கழுகுகள் 85-97 செ.மி (33-38 அங்குலம்) நீளமும், இறக்கைவிரிப்பு அகலம் 2.26 முதல் 2.6 மீட்டர் ((7.4 - 8.5 அடி)) வரையும், நிறை 6.4 முதல் 9 கி.கி. வரையும் காணப்படும். இருபால் பறவைகளும் (ஆணும் பெண்ணும்) ஒரே மாதிரியானவை. பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகளை முழுவதும் கொண்டு, வெண்மையான பழுப்பு நிறத்தினை வயிற்றின் கீழும், அழுக்கான வெள்ளை நிற மென்பரப்பு தலையிலும் கழுத்திலும் அமைந்து காணப்படும். கழுத்தின் அடிப்பகுதி வெள்ளைப் பட்டியாகவும், கண் மஞ்சளாகவும், தொண்டைப்பகுதி ஆழ் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அமைதியாக காணப்படும் இவை கூட்டில் சத்தத்தினை எழுப்பும், விலங்குகளின் பிணத்தை பங்கிட்டுக் கொள்ள முயலும்போது இவை கீச்சிடும். மங்கைமடம் நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில், சீர்காழி பூம்புகார் பேருந்து தடத்தில் மங்கைமடம் எனும் சிற்றூர் அமைத்துள்ளது. பல சிறு கிராமங்களை இணைக்கும் இந்த ஊர் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகச் சிறியதே. திருநகரி, கீழமூவர்கரை, பெருந்தோட்டம், பூம்புகார் ஆகிய ஊர்களுக்கு இவ்வூர் வழியே தான் செல்ல முடியும் பெலே பெலெ(Pelé)என்றழைக்கப்படும் எடிசன் அரன்டெஸ் டொ நாசிமென்டோname="birth_certificate">Official forename and birth date, as written on his birth certificate, are "Edison" and "21 October 1940": ஊழ் ஊழ் என்பதைத் தலைவிதி என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிறக்கும்போதே பிரமன் தலையில் எழுதிவிட்டான் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. வள்ளுவர்கூட இதனை ‘வகுத்தான் வகுத்த வகை’ எனக் குறிப்பிடுகிறார். ஊழ் என்னும் சொல் ஊழ்வினையை உணர்த்தும் நிலைக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது. காதல் மெய்ப்பாடுகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் ‘ஊழணி தைவரல்’ என்பதைக் குறிப்பிடும்போது ஊழ் என்னும் சொல் ‘நழுவுதல்’ என்னும் பொருளைத் தருகிறது. ஊழ்க்கும், ஊழிற்று, ஊழ்த்தல், ஊழுறு தீங்கனி, ஊழ்த்த, ஊழுறுபு, ஊழ்த்து, ஊழ்ப்ப, ஊழ்த்தும், ஊழ்த்தன, ஊழ்த்தனன், ஊழ்முகை அவிழ, எனச் சங்கப்பாடல்களில் பயின்றுவரும் சொல்லாட்சிகள் தோன்றுதல் என்னும் பொருளையும், ஊழுறு பூ, ஊழ்கழி பன்மலர், ஊழ்கோடு, என்னும் சொல்லாட்சிகள் ‘வீழ்தல்’ பொருளையும், ஊழ்மாறு உய்க்கும், ஊழ்மாறு பெயர என்னும் சொல்லாட்சிகள் தோன்றுதலும் மறைதலும் மாறிமாறி நிகழ்வதையும் உணர்த்துகின்றன. ஒவ்வொருவருடைய உடலிலும், உயிரிலும் ஊழ்த்திருப்பது ஊழ். காயில் விதை. விதையில் அதன் மலர், காய் இருப்பது போன்றது ஊழ். இவை ஒன்றுக்குள் ஒன்று என பால்பட்டு (பகுதியாக) இருபதால் பால் எனவும் கூறப்படும். ஆண்பாலில் ஆண்மை பால்பட்டு இருப்பது போன்றது இது. இது இயற்கை. இது செயற்கையால் வந்தது அன்று. ஊழினால் தோன்றி மறைவது ஊழி திருக்குறளில் இடம் பெற்ற ஊழ் என்னும் அதிகாரச் சொல் தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டில் 262 ஆம் நூற்பாவில் " ஊழணீ தைவரல் " என்ற செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. திருக்குறளிலுள்ள ஊழ் என்னும் அதிகாரத்தில் 10 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஊழைக் குறிக்க இயற்கை, உண்மை, வகுத்தான் வகுத்த வகை என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஊழானது ஆகூழ் – போகூழ் எனவும், இழவூழ் – ஆகலூழ் எனவும் வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. அரால்டு இயூரீ அரால்டு கிளேட்டன் இயூரீ (Harold Clayton Urey) வேந்தியல் குமுகப் பேராளர் (ஏப்பிரல் 29, 1893 – சனவரி 5, 1981) ஓர் அமெரிக்க இயற்பியல் வேதியியல் அறிவியலாளர். இவர் ஐதரசனின் ஓரிடத்தானாகிய தியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாகுவதைச் செய்து காட்டிய மில்லர்-இயூரீ செய்முறைக்காட்டுக்கும் புகழ் பெற்றவர் இயூரீ அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் இயூரீ என்பாருக்கும் கோரா இரெபெக்கா இரைநோல் (Cora Rebecca Reinoehl) என்பாருக்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் அறிவுத்தாக்கம் பெற்று பின்னர் கோப்பனாகனில் நீல்சு போருடன் சேர்ந்து அணுக்கட்டுமானம் பற்றி ஆய்வு செய்தார். அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் 1924 முதல் 1928 வரை வேதியியல் துணையாளராக ( 'Associate in Chemistry' ) இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கினார். பின்னர் ஆர்தர் உருவார்க்கு (Arthur Ruark) என்பாருடன் சேர்ந்து ""அணுக்கள், குவாண்டாக்கள், மூலக்கூறுகள்"" ("Atoms, Quanta and Molecules") என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இது ஆங்கிலத்தில் உருவான குவாண்டம் இயங்கியல் பற்றியும் அதன் பயன்பாடுகளும் பற்றியுமான முதல் நூல்களில் ஒன்று. இயூரீயுக்கு அணுக்கருவியலில் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஆய்வு செய்ததின் விளைவாய் தியூட்டிரியம் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது ("National Film Award for Best Feature Film in Tamil") ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்று. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்களின் இயக்ககத்தால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறை தொடர்பான பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிக்கும் விருதுகளில் முதன்மையானவையாகும். ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ராஜத் கமல் எனப்படும் வெள்ளித் தாமரை அளிக்கப்படுகிறது. டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. "சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்", "இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", "மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. 1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது. கியூரி கியூரி (Curie) (குறியீடு Ci) என்பது கதிரியக்கச் சிதைவில் நொடிக்கு எத்தனை சிதைவுகள் ஏற்படுகின்றன என்னும் அளவைக் குறிக்கும் அலகு. இது அனைத்துலக முறை அலகுகள் "அல்லாத" மெட்ரிக்கு அலகு. இவ்வலகு நோபல் பரிசாளர்கள் மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோரைப் பெருமைப்படுத்து முகமாக சூட்டப்பட்டது இதனைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கிறார்கள்: இவ்வலகின் தொடர்ந்த பயன்பாட்டை இப்பொழுது ஊக்குவிப்பதில்லை ஒரு கியூரி என்பது ஏறத்தாழ ஒரு கிராம் இரேடியம் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) Ra என்பதின் கதிரியக்கச் செயற்பாடு ஆகும். கதிரியக்கச் செயற்பாட்டுக்கு அனைத்துலக முறை அலகுகள் வழி வந்த அலகு பேக்குரெல் (குறியீடு: Bq) ஆகும். ஒரு கியூரி என்பது 37 கிகா பேக்குரெல் ஆகும், அதாவது: அதே போல ஒரு பேக்குரெல் என்பது, கதிரியக்கத்தைக் குறிக்கப் பயன்படும் மற்றொரு அலகு "மைக்குரோ கியூரி" (microcurie): ஒரு கதிரியக்க மருத்துவமுறை இயந்திரம் ஏறத்தாழ 1000 Ci அளவு கதிரியக்கத்தை சீசியம்-137 அல்லது கோபால்ட்டு-60 போன்ற கதிரியக்க ஓரிடத்தான்களில் இருந்து வெளியிடும். இந்த அளவு கதிரியக்கச் செயற்பாடு ஒருசில மணித்துளிகளிலேயே உடலுக்கு மிகவும் தீங்கு தரும் அளவாகும். சராசரியான ஒரு மாந்த உடலில் ஏறத்தாழ 0.1 μCi அளவு இயற்கையான பொட்டாசியம்-40 கதிரியக்கச் செயற்பாடு நிகழும். கியூரிகள் சில நேரங்களில் ஒரு நொடிக்கு ஏற்படும் கதிரியக்கச் சிதைவுகளைக் குறிப்பதற்கு மாறாக கதிரியக்கப் பொருளின் அளைவைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர், எடுத்துக்காட்டாக சீசியம்-137 1 Ci. இப்படிச் சொல்லும் பொழுது 1 Ci கதிரியக்கம் உருவாக்கத் தேவைப்படும் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் கதிரியக்கச் சிதைவு வீதத்தைக் கொன்டு இந்த அணுக்களின் எண்ணைக் கணக்கிடலாம்: ஆகவே, இதில் λ என்பது அடுக்கேற்ற முறையில் உள்ள படி அல்லது மேலெண் சிதைவைக் குறிக்கும் (s). காதல் மெய்ப்பாடு விரும்பும் காதலனைக் கண்டதும் பெண்ணுக்கு எத்தகைய மெய்ப்பாடுகள் தோன்றும் எனத் தொல்காப்பியம் விளக்குகிறது. இங்கு இது ஒரு மனநூல் போலப் பெண்ணின் உள்ளத்தைப் படம்பிடிக்கிறது. இவற்றை வடநூலார் ‘அவத்தை’ என்று சொல்லிப் பத்து எனக் காட்டுவர். தொல்காப்பியம் ஆறு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இவை அமத்திணை ஒழுக்கத்தில் நிகழ்வன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருபிதம், வெகுளி, உவகை - இவை எட்டும் புறத்திணையில் நிகழும் மெய்ப்பாடுகள். ஒரும எண் முறைமை ஒரும எண் முறைமை ("Unary Numeral System") என்பது ஒன்றை அடியாகக் கொண்ட எண் முறைமை ஆகும். இயற்கை எண்களைக் காட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய மிக எளிய எண் முறைமை ஒரும எண் முறைமையே ஆகும். ஒரும எண் முறைமையில் "N" என்ற எண்ணைக் காட்டுவதற்கு, குறியீடொன்று "N" தடவைகள் எழுதப்படும். | என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, ஆறானது |||||| என்றவாறு காட்டப்படும். ஒரும எண் முறைமையில் எண்களைக் கூட்டலும் கழித்தலும் இலகுவான செயற்பாடுகளாகும். ஒரும எண் முறைமையில் எண்களைக் கூட்டுவது, ஒன்றிணைப்பை ஒத்தது (எ-டு: ||| + ||||| = ||||||||). ஆனால், ஒரும எண் முறைமையில் அமைந்துள்ள எண்களைப் பெருக்குவதும் பிரித்தலும் சிக்கல் நிறைந்த செயற்பாடுகளாகும். பண்டைய எண் முறைமைகளைப் போல ஒரும எண் முறைமையிலும் சுழியம் இல்லை. ஒரும எண் முறைமையில் சுழியத்தையும் இணைத்தால், அது இரும எண் முறைமை ஆகிவிடும். நேர்விளிம்பு நேர்விளிம்பு ("Straightedge") என்பது நேர்கோடுகளை வரையவோ கோடுகளின் நேர்த்தியைச் சரிபார்க்கவோ பயன்படுத்தப்படும் வளைவுகளற்ற நேரான கருவியாகும். சம நீள ஆயிடைகளில் அடையாளங்குறிக்கப்பட்ட நேர்விளிம்பானது அளவுகோல் என அழைக்கப்படும். அளவுகோல்களும் நேர்விளிம்பாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஒளியியல் நேர்விளிம்பான சீரொளிக் கோட்டுமட்டத்தின் மூலமும் கோடுகளின் நேர்த்தி சரிபார்க்கப்படுவதுண்டு. கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகளில் நேர்விளிம்பானது பின்வருவனவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகள் அனைத்தையும் கவராயத்தை மட்டும் பயன்படுத்தியும் செய்ய முடியும். ஆனால், கவராயத்தின் மூலம் புள்ளிகளை மட்டுமே காண முடியும். நேர்கோடுகளைப் பெறுவதற்கு நேர்விளிம்பு இன்றியமையாததாகும். ஆனால், நேர்விளிம்பை மட்டும் பயன்படுத்தி கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகள் அனைத்தையும் செய்ய முடியாது. அழிப்பான் அழிப்பான் ("Eraser") என்பது கரிக்கோலால் எழுதப்பட்டவற்றை அழிக்க உதவும் பொருள் ஆகும். அழிப்பான்கள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்திலோ வெள்ளை நிறத்திலோ அமைந்திருக்கும். சில கரிக்கோல்கள் அவற்றின் பின் முனையில் அழிப்பானைக் கொண்டிருக்கும். அவ்வாறான அழிப்பான்கள் கரிக்கோல் அழிப்பான்கள் எனப்படும். பொதுவாக, அழிப்பான்கள் செயற்கை மீள்மத்தின் மூலம் ஆக்கப்படும். ஆனால், விலையுயர்ந்த அழிப்பான்கள் வினைல், நெகிழி ஆகியவற்றின் மூலமும் ஆக்கப்படுவதுண்டு. மென்மையான, உருநயமற்ற மீள்மத்தால் ஆக்கப்பட்ட ஓவியக் கோந்து அழிப்பான்கள் ஓவியர்களால் பயன்படுத்தப்படுகின்றது. பாரிய பரப்பில் பயன்படுத்த இவ்வகை அழிப்பான்கள் உகந்தவை. அத்தோடு, ஓவியக் கோந்து அழிப்பான்கள் தாள்களைச் சேதப்படுத்துவதில்லை. ஆனால், இவை துல்லியமாக அழிப்பதில்லை. மென்னழிப்பான்களும் ஓவியர்களால் பயன்படுத்தப்படும் அழிப்பான்களாகும். இவ்வகை அழிப்பான்கள் சிறிய பரப்பில் பயன்படுத்தப்படுவதுடன், துல்லியமாக அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அழிப்பதன் மூலம் இழையமைப்புகளை உருவாக்கவும் மென்னழிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கோடுகளின் கடுமையைக் குறைப்பதற்கும் மென்னழிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை அழிப்பான்கள் காரீயத்தைத் தமக்குள் உள்வாங்குவதன் மூலம் அழிக்கின்றன. மின்னழிப்பான்கள் அவற்றின் முனையில் குமிழ் வடிவில் அழிப்பானைக் கொண்டிருக்கும். அக்குமிழ் வடிவ அழிப்பான் இயக்கியின் மூலம் சுற்றப்படுவதால் தாளிலுள்ள கரிக்கோல் அடையாளங்களை அழிக்கும். இவ்வகை அழிப்பான்கள் விரைவாக அழித்தலை மேற்கோள்ளும். மென்வினைல் அழிப்பான்கள் நெகிழியைப் போன்ற இழையமைப்பைக் கொண்டிருப்பதுடன், இளஞ்சிவப்பு நிற அழிப்பான்களை விடத் தூய்மையாக அழிக்கும். மென்வினைல் அழிப்பான்கள் மென்மையாக இருப்பதனால் தாள்களுக்குக் குறைவான சேதத்தையே ஏற்படுத்துகின்றன. இவ்வகை அழிப்பான்கள் மெல்லிய அடையாளங்களை அழிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. வினைல் அழிப்பான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும். நெய் நெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். நெய் என்பதன் ஆங்கிலச் சொல்லான "Ghee" என்பது வடசொல்லான "घृत" என்பதிலிருந்து வந்தது. பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் கொண்டது நெய் ஆகும். தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும்போது நெய் உருவாகின்றது. வெண்ணெய்யை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது. நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில் காணப்படும். நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெய்யிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது. ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால் வெல்லம் போன்ற சத்துகள் கிடையா. நெய்யில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு மிகுதியாக இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்கள் நெய்யை ரசாயனம் என்றே அழைக்கிறார்கள். முழு உடல் நலம் கொடுத்து நீண்ட வாழ்நாளைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்து சமயத்தில் பசுவின் பாலில் இருந்து பெறும் நெய் முக்கிய இடம் வகிக்கிறது. இந்து சமய மறைகளில் நெய் தொடர்பான பாடலொன்று உள்ளதுடன், விளக்குகளை ஏற்றுவதற்கும் எரிபொருளாக நெய் பயன்படுகின்றது. மேலும் வேள்விகள் செய்வதற்கு நெய் அடிப்படைப் பொருளாகும். திருமால், சிவபெருமான் போன்ற இந்துக் கடவுள்களை வணங்கும் சமய நிகழ்வுகளிலும் இந்து சமய வழிபாடுகளின் போதும் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் தேன், வாழைப்பழம், பால், தயிர் என்பனவற்றுடன் நெய்யையும் சேர்க்கிறார்கள். மாச்சில்லு மாச்சில்லு, ஈரட்டி அல்லது விசுக்கோத்து ("Biscuit") என்பது சுடப்பட்ட, உண்ணக்கூடிய, மாவால் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் ஈரட்டி ("Biscuit") என்பது சிறிய, மென்மையான வெதுப்பியைக் குறிக்கும். பொதுநலவாய நாடுகளில் ஈரட்டி ("Biscuit')' என்பது சிறிய, கடினமான, பெரும்பாலும் இனிப்பான, சுடப்பட்ட உணவாகும். நீண்ட பயணங்களின்போது, குறிப்பாகக் கடற்பயணங்களின்போது சத்தான, இலகுவில் கொண்டு செல்லக்கூடிய, இலகுவாகச் சேமித்து வைக்கக்கூடிய, நீண்ட நாட்கள் பழுதடையாமல் இருக்கக்கூடிய உணவுப் பண்டங்களுக்கான தேவை எழுந்தது. இதனால் மாவினைச் சுடுவதன் மூலம் மாச்சில்லு என்ற உணவுப் பண்டம் தயாரிக்கப்பட்டது. எகிப்திய மாலுமிகளும் உரோமர்களும் பயணங்களின்போது மாச்சில்லுகளைப் பயன்படுத்தினார்கள். இன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் மாச்சில்லுகள் பெரும்பாலும் காரச் சுவையுடையதாக அல்லது இனிப்புச் சுவையுடையதாகத் தயாரிக்கப்படுகின்றன. அநேகமான மாச்சில்லுகள் ஏறத்தாழ இரண்டு அங்குல விட்டமுடையதாகவும் தட்டையானதாகவும் தயாரிக்கப்படுகின்றன. சில மாச்சில்லுகளின் நடுவில் பழப்பாகு அல்லது பாலேடு வைக்கப்படுவதுண்டு. இலங்கையில் மலிபன், மஞ்சி, லக்கிலேன்ட் முதலிய நிறுவனங்கள் மாச்சில்லுகளைத் தயாரித்து விற்று வருகின்றன. நானி நவீன் பாபு காண்ட அல்லது நானி ("Naveen Babu Ghanta" அல்லது "Nani") என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பிறகு, "அட்டா சம்மா" என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். நானி ஐதராபாக்கத்தில் பிறந்து வளர்ந்தார். ஆகத்து 12, 2012இல் இவருக்கு அஞ்சனாவுடன் திருமண உறுதி இடம்பெற்றது. கலன் இழையம் கலன் இழையத் தாவரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கலங்களால் ஆன, முக்கியமாகக் கடத்தும் தொழிலைச் செய்யும் இழையமே கலன் இழையம் ஆகும். இது மிகவும் சிக்கலான மற்றும் விருத்தியடைந்த தாவர இழையம் ஆகும். இது காழ் மற்றும் உரியக் கலங்களால் ஆனது. காழ் நீர் மற்றும் கனியுப்புக்களைக் கடத்தும். உரியம் உணவை கரைசலாகக் கடத்தும். க. நா. கணபதிப்பிள்ளை சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (மார்ச் 30, 1936 - பெப்ரவரி 4, 2015) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செல்லையாவிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட சின்னமணி, அவரின் வழிகாட்டலுடன் 1949 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார். 1951 ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார். வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும், காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர் சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார். துப்பதாகே துக்க என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்களிலும், பொதுக் கலை நிகழ்வுகளிலும் இடம்பெறும் சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சிகளைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர். 1954 ஆம் ஆண்டு இரத்மலானை, கொத்தலாவை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அச்சுவேலியில் வாழ்ந்து வந்தார். கணபதிப்பிள்ளை, பெப்ரவரி 4, 2015 அன்று காலமானார். ஆட்டுக் கறி ஆட்டுக் கறி (en:"Mutton") என்பது ஆட்டிலிருந்து பெறப்படும் இறைச்சியாகும். ஆடுகள் பெரும்பாலும் வீட்டு விலங்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆட்டுக் கறி தனியாக வறுத்தோ அல்லது குழம்பாகவோ சாதத்துடன் உண்ணப்படுகிறது. மூலம்: ஹெல்கி நூலகம், உலக வங்கி, FAOSTAT மீநிறை நீர் திரிட்டியம் நீர் அல்லது மீநிறை நீர் என்பது நீரின் மூலக்கூற்றில் உள்ள ஓவ்வொரு ஐதரசனுக்கு மாற்றீடாகத் திரிட்டியம் என்னும் ஐதரசன் ஓரிடத்தான் உள்ள நீராகும். நீரில் உள்ள எல்லா நீர் மூலக்கூறுகளும் இப்படி மாற்றப்பட வேண்டும் என்பதல்ல, சிலவே அப்படி மாற்றப்பட்டிருக்கும். திரிட்டியம் என்பது இரண்டு நொதுமிகளும் ஒரு நேர்மின்னியும் சேர்ந்து மூன்று அணுக்கருனிகள் அணுக்கருவினுள்ளே கொண்ட ஐதரசன் ஓரிடத்தான். கனநீர் போல் அல்லாமல், இந்த மீநிறை நீர், கதிரியக்கம் கொண்டதாகும். மீநிறை நீர் என்பது திரிட்டியம் ஆக்சைடு (TO அல்லது HO) என்றும் அழைக்கப்படும். இது கதிரியக்கத்தால் சிதைவுறுவதால், அரிக்கும் பண்பு கொண்டது. பெரிதும் "நீர்த்துப்போன" திரிட்டியம் கலந்த நீர் பெரும்பாலும் HO என்பதோடு சிறிதளவு HTO (HOH) கொன்டதாக இருக்கும். இயற்கையில் திராட்சைக் கள் முதலியவற்றிலும் நீர்மங்களிலும் மிக மிகச்சிறிதளவு (இம்மியளவு) திரிட்டியம் கலந்திருக்கும் ஆதலால், அதனை அளப்பதன் மூலம் ஒரு பொருள் இருப்பின் காலத்தை அளவிட முடியும் திரிட்டியம் நீரில் கதிரியக்க ஐதரசன் கலந்திருப்பதால் ஆற்றல் குறைவான பீட்டா துகள்கள் உமிழப்படுகின்றன.இவற்றின் அரையாண்டுக் காலம் 12 ஆண்டுகளாகும். இதனால் உடம்புக்கு அதிகபட்ச பாதிப்பு இல்லையென்றாலும் சுவாசிக்க நேர்ந்தாலோ உடலுக்குள் எப்படியாவது புக நேர்ந்தாலோ கதிரியக்கத்தின் ஆபத்து உண்டு. திரிட்டியம் கலந்த நீரை உடலில் செலுத்தினால், உடலின் எல்லா பாகங்களுக்கும் விரைவாக ஒரே சீராகப் பரவிவிடும் என்பதால், சிறுநீரை அளந்து அதில் உள்ள திரிட்டியம் அளவை அளப்பது மூலம் உடலில் எவ்வளவு (கனவளவு) நீர் உள்ளது என்று அறிய முடியும் (முதலில் கலந்த திரிட்டியத்தின் அளவை அளந்திருக்க வேண்டும்) மும்மைப் புள்ளி வெப்பவியக்கவியலில், ஒரு பொருளின் மும்மைப் புள்ளி ("Triple point") என்பது அப்பொருளின் மூன்று கட்டங்கள் (வாயு, திரவம், திண்மம்) வெப்பச் சமநிலையில் ஒன்றுசேர்ந்தமையும் வெப்பநிலை, அழுத்தம் ஆகும். எடுத்துக்காட்டாக, பாதரசத்தின் மும்மைப் புள்ளி −38.8344 °C என்ற வெப்பநிலையிலும் 0.2 MPa அழுத்தத்திலும் ஏற்படும். திண்ம, திரவ, வாயு இடையேயான மும்மைப் புள்ளிகளைத் தவிர, பல்லுருவப் பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திண்ம நிலைகளினைக் கொண்ட மும்மைப் புள்ளிகள் இருக்கலாம். கீலியம்-4 ஒரு சிறப்பு வகையாகும், இது இரண்டு வெவ்வேறு திரவ நிலைகளைக் கொண்ட ஒரு மும்மைப் புள்ளியை தருகிறது. பொதுவாக "p" சாத்தியமான நிலைகளைக் கொண்ட தொகுதியில் formula_1 அளவு மும்மைப்புள்ளிகள் உண்டு நீரின் மும்மைப் புள்ளியானது கெல்வின் எனப்படும் வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் அடிப்படை SI அலகினை வரையறுப்பதற்கு பயன்படுகிறது. ஒரு குறித்த அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் திரவ நீர், திண்ம பனி, நீராவியின் கலவை நிலையான சமநிலையில் ஒன்றுசேர்ந்தமைவது சரியாக 273.16 K (0.01 °C) வெப்பநிலையிலும் 611.73 பாசுக்கல் (ca. 6.1173 மில்லிபார், 0.0060373 atm) பகுதி ஆவியழுத்தத்திலும் ஏற்படுகிறது. அந்த நிலையில், அதன் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் தன்னிச்சையான சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் முழுவதையும் பனிக்கட்டியாக, நீராக, அல்லது நீராவியாக மாற்றலாம். * கவனிக்கவும்: ஒப்பீட்டுக்காக, பொதுவான வளிமண்டல அமுக்கம்= 101.325 kPa (1 atm). பாகவதம் (வடமொழி நூல்கள்) வைணவ இலக்கியங்களாகப் பாகவதக் கதை எழுதப்பட்ட வடமொழி நூல்கள் ஏழு உள்ளன. அவற்றில் பகவத் துதிகள் உள்ளன. இவற்றில் முதல் இரண்டு பாகவதங்களை இயற்றியவர் வியாசர். பிறவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவற்றைப்பற்றி அறிய உதவும் அட்டவணை: மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005 பனி நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் திண்மப் பொருளே பனி (Ice) ஆகும். இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும். பனியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து வளிமண்டலத்தினூடாக விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் பனித்தூவி (Snow or Snowflakes) எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை (Hail) எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் கூரான ஈட்டி போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை பனிக்கூரி (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனி சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை பனியாறு (Glacier) என்பர். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனியாக (Sea ice) மாறும். நீராவியானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனித்தூளாக உறைந்த நிலையில் காணப்படும்போது அதனை பனிப்பூச்சு (Frost) எனலாம். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் பனிவிரிப்பு (Ice sheet) எனவும் அழைக்கப்படும் . பனியானது புவியின் காலநிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர குளிர்கால விளையாட்டுக்கள், குளிர்பானங்கள் தயாரிப்பு, பனிச் சிற்பம் செய்யும் கலை போன்ற பல பண்பாட்டுசார் பயன்களைத் தருகின்றது. பனியிலிருந்து பெறப்படும் பனி உள்ளகங்கள், நீண்டகால அடிப்படையில் புவியில் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றங்களை அறியவும், அதன்மூலம் காலநிலையின் காலவரிசையை அல்லது வரலாற்றை அறியவும், அதனை ஆய்வு செய்வதனால், தற்கால அல்லது எதிர்கால காலநிலையை விளைவு கூறவும் உதவுகின்றது. வைணவ புராண ஆசிரியர்கள் தமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம். ஒரு இந்திய கனவு (திரைப்படம்) ஒரு இந்திய கனவு, 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் சுஹாசினி, ராஜீவ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. சுஹாசினி மற்றும் ராஜீவ் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பூர்ணம் விஸ்வநாதன், வாத்தியார் ராமன், சாமிக்கண்ணு இன்னும் பல குணசித்திர நடிகர்கள் நடித்தனர். கல்லூரியிருந்து கல்விச் சுற்றுப்பயணமாக ஆதிவாசிகள் வாழும் இடத்துக்கு ((ஜவந்தி மலை) செல்லும் அனாமிகா (சுஹாசனி), அங்கு வாழும் ஆதிவாசிகளின் மோசமான வாழ்நிலையைக் கண்டு வேதனைப்பட்டு அவர்களின் நலனுக்காகப் போராடுவதுதான் இத்திரைப்படத்தின் கதை. அப்போராட்டத்தில் அவள் சந்திக்கும் இடையூறுகளும், அவளது மனிதாபிமானமும் தைரியமும், அவளுக்கு எதிராகவும் துணையாகவும் நிற்கும் காதாபாத்திரங்களின் செயல்களும் கதையை வளர்த்துச் செல்கின்றன. குறளடி குறளடி என்பது இரண்டு சீர்கள் அமைந்த ஓரடியைக் குறிக்கும் பாக்களுக்கான அடியாகும். என்ற பாடலில் ஓரடியில் இரண்டே சீர்கள்வந்துள்ளன. எனவே குறளடியாகும். என்னும் இப்பாடல் வஞ்சித்துறைப் பாடலாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ‘திரைத்த சாலிகை’ முதலடி; ‘நிரைத்தபோல் நிறைந்’-இரண்டாம் அடி; ‘இரைப்ப தேன்களே’- மூன்றாம் அடி; ‘விரைக்கொள் மாலையாய்’- நான்காம் அடி. ஒவ்வொரு அடியும் இரு சீர்களைக்கொண்டு இயங்குகின்றது. இரு சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, குறளடி. மேற்கண்ட பாடலில் பயின்று வரும் தளை நேரொன்றிய ஆசிரியத் தளையாகும். நேரொன்று ஆசிரியத்தளை என்ற ஒரு தளை தோன்ற இருசீர்கள் தேவைப்பட்டன. இருசீர்களும் இணைந்து ஓரடியாய் நின்றன. செய்யுள் இலக்கணத்தில் மிகக்குறைந்த அடி இதுவே. ஆகையால் குறளடி எனப்பெற்றது. எனவேதான், ஒருதளையான் வந்த அடியினைக் குறளடி என்று கூறுவர். சிந்தடி சிந்தடி என்பது மூன்று சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, அளவடியின் நான்கு சீரில் ஒன்று சிந்தி(குறைந்து), மூன்று சீரில் இயங்குவதால் இதன் பெயர் சிந்தடி எனப்பெற்றது. இதனை "முச்சீர் அடி" என்றும் கூறுவர். என்னும் இப்பாடல் வஞ்சிவிருத்தமாகும். இதன்கண் நான்கு அடிகள் உள்ளன. ஒவ்வொரு அடியும் மூன்று சீர்களைக் கொண்டுள்ளது. இப்பாடலில் நேரொன்று ஆசிரியத்தளை, இயற்சீர்வெண்தளை ஆகிய இரண்டு தளைகள் உள்ளன இவ்விரு தளைகளும் தோன்ற மூன்று சீர்கள் தேவைப்படுகின்றன. எனவே, சிந்தடி அமைய இருதளைகள் தேவை. இதையே இலக்கணம் ‘இருதளை சிந்தாம்’ என்கின்றது. பிள்ளை லோகாசாரியார் பிள்ளை லோகாசாரியார் (Pillai Lokacharya) கிபி 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு திருவரங்கத்தில் பிறந்தார். வடக்கு திருவீதி பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் (வடமொழியில் லோகாச்சாரியா) மீது கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் (தமிழில் உலகாசிரியன்) என்றானது. அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் இவரின் உடன் பிறந்தவராவர். கிபி 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, அரங்கநாத கோயில் உற்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உற்சவரோடு திருவரங்கத்தைவிட்டு வெளியேறியவர் தன்னுடைய 106 ஆம் அகவையில் மதுரை அருகே யானைமலை கிராமத்தினருகே உள்ள "ஜோதிஷ்குடி" எனுமிடத்தில் கி பி 1311ல் பரமபதமடைந்தார். இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துக்களில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும். அளவடி அளவடி என்பது நான்கு சீரால் ஆன அடியாகும். இது "நேரடி" எனவும் கூறப்படும். செய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி நேரடி. (நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல்) எதுகை மோனை முதலிய தொடை விகற்பங்களை அறிந்து கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி. எனவே கணக்கிடுவதற்குப் புலவர் எல்லோரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது. என்னும் இப்பாடல் கலிவிருத்தமாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களால் அமைந்துள்ளது. நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம். முத்தளையால் வந்த அடி, அளவடி/நேரடி. இதனையே ‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம். நெடிலடி நெடிலடி என்பது ஐந்து சீர்களால் அமைந்த அடி. சீர் எண்ணிக்கையைக் கருதி "ஐந்து சீரடி நெடிலடி" எனப்படுகின்றது. அதாவது இயல்பான அடியாகிய நான்குசீர் அடியாகிய அளவடியின் ஓர் சீர் மிகுந்து வருவது நெடிலடியாகும். இக் கட்டளைக் கலித்துறை எனும் செய்யுளில் உள்ள நான்கு அடிகளும் ஐந்து சீர்களும் உள்ள நெடிலடிகளாகும். இது கலித்துறைப்பாடல். நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்களால் நிரம்பியுள்ளது. எனவே, நெடிலடி நான்கிளைக் கொண்டு வந்துள்ள பாடல் இந்தக் கலித்துறை. இதன் முதலடியை மட்டும் கொண்டு ஐந்து சீர்களைக் கொண்ட இயற்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்தளை, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை என்று நான்கு தளைகள் அமைகின்றன. ஆதலால், நான்கு தளைகளால் அமைவது நெடிலடி என்று கூறலாம். யாப்பிலக்கணமும் ‘நால்தளை நெடிலடி’ எனக் குறிக்கின்றது கழி நெடிலடி கழி நெடிலடி என்பது ஆறு, ஏழு, எட்டு என ஐஞ்சீரின் மிக்குவரும் அடிகள் ஆகும். கழி-மிகுதி. ‘கழிபெருங்காதல்’, ’கழிபேர்இரக்கம்’ என்பவற்றை நோக்கியும் கழி என்பதன் பொருளை உணரலாம். இயல்பான நான்குசீர்களை உடைய அடி, அளவடி; அளவடியின் ஒருசீ்ர் மிக்கது நெடிலடி; நெடிலடியின் ஒன்றோ பலவோ ஆகிய சீர்கள் மிக்கது கழி நெடிலடி. கழி நெடிலடி ஒன்று, எத்தனை சீர்களால் நிரம்பியது என்பது தோன்ற அதன் எண்ணிக்கையை உள்ளடக்கி அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க் கழிநெடிலடி என்று வழங்கப்பெறுவது உண்டு. இது அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழி நெடிலடி. இதுபோல் ஏழு சீர்கள் மற்றும் எட்டு சீர்கள் வரை கழி நெடிலடி அமைவது சிறப்பு. பன்னிரண்டுக்கு மேல் சீர்கள் ஓர் அடியில் வரினும் அதற்கும் கழி நெடிலடி என்றே பெயர். ஆயினும் பன்னிரண்டு சீர்க்கு மேல் வருவன சிறப்பில என்பர். இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழி நெடிலடி. இப்பாடலின் ஓர் அடியில் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரை ஒன்றாசிரியத் தளை, கலித்தளை என்றாக ஐந்து தளைகள் இடம் பெறுகின்றன. ஆதலால் ஐந்து தளைகளால் அமைவது கழி நெடிலடி என்கின்றனர். ஜான் டென்வர் ஜான் டென்வர் என அறியப்படும் ஜான் டச்சென்ட்ராப் (Henry John Deutschendorf, Jr. டிசம்பர் 31, 1943 – அக்டோபர் 12, 1997), ஓர் அமெரிக்க இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், சூழலியல் போராளி, மனிதாபிமானப் போராளி என்ற மிகவும் அபூர்வமான கலவை கொண்ட ஆளுமைகள் நிறைந்தவர். அவரது பாடல்கள் மனதிற்கு உவகையளிப்பதாகவும் மிகுந்த நேசத்தோடு நெய்யப்பட்டதாகவும் இருக்கும். பெரும்பாலான பாடல்கள் அவரது இயற்கையின் மீதான காதலையும் இயற்கையோடு இணைந்த தூய்மையான வாழ்வையும் வெளிப்படையாகப் பேசுபவை. இயற்கையுலகின் கொடைச் செல்வங்களையும் அழகுகளையும் புகழ்பவை. சன் ஆன் மை சோல்டர்ஸ், ஆனிஸ் சாங், தாங்க் காட், ஐயாம் எ கண்ட்ரி பாய், ஐயாம் சார் போன்றவை முதலிடம் பிட்டித்த பாடல்களாகும். ராக்கி மவுண்டன் ஹை, ஜாண்டென்வர்ஸ் கிரேட்டஸ்ட் ஹிட், விண்ட் சாங் போன்ற இசைத்தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையானவை. புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை ஐந்து முறை தொகுத்து வழங்கியவர்; தனது 53 ஆம் வயதில் தனியாக விமானம் ஓட்டிச்சென்று பசிபிக் கடலுள் விழுந்து இறந்து போனார். ஜான் டென்வர் நியூமெக்சிகோ மாநிலத்தின் ரோஸ்வெல் என்ற நகரத்தில் 1943 இல் பிறந்தார். ஜான் டச்சென்ட்ராப் என்ற அவரது இயற்பெயரின் பொருள் ‘ஓர் ஜெர்மானியக் கிராமம்’ என்று தான். அவரது தந்தை ஜெர்மானிய வழித்தோன்றல்களைச் சேர்ந்தவ ரென்பதாலும், தாயின் பின்புலம் ஸ்காட்டிஷ்-ஐரிஷ்-ஜெர்மன் கலவை என்பதாலும் இப்பெயர் வைக்கப்பட்டது. தந்தை விமானப்படையில் விமான ஓட்டியாக இருந்தார். அடிக்கடியான வேலைமாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும், ஜப்பானிலும் கூட சிறிது காலம் வசிக்க நேர்ந்தது. நிரந்தரமாக ஓரிடத்தில் வாழாததால் தொடர்ந்த நண்பர்கள் யாருமில்லாமல் தனிமையில் வளர்ந்தார் ஜான். குழந்தைகளிடம் அன்பு காட்டாத தனது தந்தையோடு அடிக்கடி சண்டை வந்தது. அவரது தாயின் வீட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியானவராக இருந்தார். அக்காலத்தைய நாட்டுப்புற இசையை அங்குதான் கேட்டார். அவரது தாய்வழிப்பாட்டி ஜானின் இசையார்வத்தை ஒழுங்குபடுத்தியதோடு 40வருட பழமையான தனது கிப்ஸன் கித்தாரை பேரனுக்கு வழங்கினார். அப்போது ஜானுக்கு 11 வயது. ஜானின் தந்தை இசையை அறவே வெறுத்தார். இசை போன்ற பொழுதுபோக்கில் காலத்தை வீணடிக்காமல் வயலில் வேலைசெய்து சொந்தமாக ஜான் சம்பாதிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். வீட்டில் சச்சரவுகள் அதிகமானதால் தனது பதினாறாவது வயதில் ஜான் டெக்ஸாஸில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டை விட்டு தந்தையின் காரை எடுத்துக் கொண்டு கலிபோர்னியாவுக்கு ஓடிப்போனார். அங்குள்ள அவரது குடும்ப நண்பர்கள் சிலர் இசையில் வளர உதவுவார்கள் என்று எண்ணியிருந்தார். அவர் சென்று சேர்வதற்கு முன்பாகவே அங்கு பறந்து சென்ற தந்தை பிடித்து இழுத்துவந்து பள்ளியில் மீண்டும் சேர்த்தார். சிலவருடம் கழித்து, 1964 இல் கட்டடக்கலைப் படிப்பைப் பாதியில் விட்டு மீண்டும் கலிபோர்னியாவுக்குச் சென்றார். நாட்டுப்புற, ராக் இசைப்போக்குகள் கலிபோர்னியாவில் வேகமாக வளர்ந்து வந்த காலம் அது. உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த டச்சென்ட்ராப் என்ற பெயரை விடுத்து, அவர் விரும்பும் மலைகளின் மாநிலமான கொலராடோவின் தலைநகரான டென்வர் என்பதைத் தன் பெயரில் இணைத்துக் கொண்டார். இப்பெயர் மலைகள் சூழ்ந்த அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளின் மீதான அவரது ஈர்ப்பைக் குறிப்பதாகவும் இருந்தது. இரவு விடுதிகளிலும் சிறிய இசைக்குழுக்களிலும் இணைந்து இசையமைத்துப் பாடினார். இரண்டு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, வாஷிங்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மூவர் இசைக்குழு Chad Mitchel Triவில் பாடுவதற்கான குரல் சோதனைத் தேர்வில் பங்குபெறும் வாய்ப்புக்கிட்டியது. அக்காலத்தில் அந்தக் குழு கல்லூரி வளாகங்களிலும் இசைநிகழ்ச்சி நடக்கும் உணவகங்களிலும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தார்கள். கலந்து கொண்ட 250 போட்டியாளர்களிலிருந்து ஜான் டென்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இசைக்குழுவைத் தோற்றுவித்த சாட் மிச்செல் என்பவர் விலகிச் செல்ல டென்வர் பாடகராக, கிதார் மற்றும் பாஞ்சோ வாசிப்பவராக அக்குழுவில் இணைந்தார். அவர்களோடு இரண்டு வருடங்கள் இணைந்திருந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு மேடைப்பாணிகளையும் கற்றுக்கொண்டார். அக்காலகட்டத்தில்தான் ‘ஒரு ஜெட்விமானத்தில் விடைபெறுகிறேன்’ (Leaving on a Plane) என்ற தனது முக்கியமான முதல்பாடலை எழுதி இசையமைத்திருந்தார். குழுப்பாடராகக் கிடைத்த சொற்பப் பணத்தைச் சேர்த்து தனது முதலாவது இசைத்தொகுப்பைப் பதிவு செய்தார். 250 பிரதிகள் எடுத்து தனக்குத் தெரிந்த எல்லா முகவரிகளுக்கும் அஞ்சல் செய்தார். இசை விரும்பிகளாக அவர் அறிந்து வைத்திருந்தவர்களிடம் நேரில் வழங்கினார். நியூயார்க்கைச் சேர்ந்த மற்றொரு புகழ்பெற்ற மூவர் நாடோடி இசைக்குழுவான பீட்டர், பால் மற்றும் மேரி அத்தொகுப்பைக் கேட்டு Leaving on a Jet Plane பாடலை வெகுவாக விரும்பினர். அப்பாடலை அவர்கள் பதிவுசெய்து வெளியிட்ட போது அது புகழ்பெற்ற பில்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றது. வியட்நாம் போர் நடந்துவந்த அக்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் விடை பெறும் பாடலாக பலர் அந்தப் பாடலைக் கண்டடைந்தார்கள். ஆனால் ஜான் டென்வருக்கு வெற்றி அப்போதும் ஒரு தொலைதூரக் கனவாகத்தான் இருந்தது. குவாசு குவாசு (கிரந்தம்:"குவாஸ்"; உருசியம்:"Квас"; ஆங்கிலம்:"Kvass") என்பது கருப்பு அல்லது கம்பு ரொட்டியில் (இலங்கை வழக்கு:பாண்) இருந்து நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் சிலாவியர்களின் மரபார்ந்த பானம் ஆகும். ரொட்டியின் நிறம் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே நொதித்தல் மூலம் கிடைக்கும் பானத்தின் நிறமும் அமையும். இதில் அல்ககோல் அளவு 1.2%க்கும் குறைவாகவே உள்ளது, இதனால் உருசிய தரத்தின் படி குவாசு மதுபான வகைகளுக்குள் அடக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக நோக்கின் அல்ககோல் அளவு மிகவும் குறைவானது.(0.05% - 1.0%). வழமையாக இது பழங்கள், மூலிகைகள் போன்றன சேர்க்கப்பட்டும் உருவாக்கப்படுகின்றது. சிலாவிய நாடுகளான உருசியா, பெலாருஸ், உக்ரெய்ன், லிதுவேனியா, லாட்வியா போன்ற நாடுகளிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற ஏனைய நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றது. கோடை காலத்தில் ஒவ்வொரு தெருக்களின் ஓரத்தில் குவாசு விற்பனை செய்யும் சிறுவிற்பனைக்கூடத்தைக் கண்ணுறலாம். உலகளந்தான் கோல் உலகளந்தான் கோல் என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான ஒரு கருவியாகும். நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது. சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணியாகும். 33”அங்குலம்(இஞ்ச்)ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும். இந்திய மலைகளின் பட்டியல் இந்தியாவிலுள்ள மலைகள் மற்றும் மலைத்தொடர்களின் பட்டியல் இந்தியப் பள்ளத்தாக்குகளின் பட்டியல் இந்தியாவிலுள்ள பள்ளத்தாக்குகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்குகளில் பெரும்பானமையானவை, அவற்றின் வழிப் பாயும் ஆறுகளின் பெயர்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன. இந்தியத் தீவுகளின் பட்டியல் This is a partial list of தீவுs of இந்தியா. முழக்கோல் கோல் என்பது இரண்டு முழம் நீளமோ அல்லது எட்டு முழம் நீளமோ உடைய ஒரு குச்சி ஆகும். இது பண்டைத் தமிழர் அளப்பதற்காகப் பயன்படுத்திய கோல் ஆகும். முழக்கோல்கள் இரு வகைப்படும். அவை இரு முழம் நீளம் கொண்ட சிறுகோலும், எட்டு முழம் நீளம் கொண்ட பெருங்கோலும் ஆகும். தற்போதையக் கோல்கள் என்பது குச்சிகளுக்கு பதிலாக மரப்பலகை, கண்ணாடிப் பொருட்கள், நெகிழிகள் போன்றவற்றில் இருந்து உலக அளவையான மி.மீ, செ.மீ, அங்குலம் போன்ற குறிப்புகளுடன் அடங்கிய அடிக்கோல்களாக பயன்படுத்தப்படுகிறது. குலதெய்வம் (திரைப்படம்) குலதெய்வம், 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கிருஷ்ணன்-பஞ்சுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்கரநாமமும் பண்டரிபாயும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஆர். சந்தானலட்சுமி, எம். என். ராஜம், எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, குலதெய்வம் ராஜகோபால் ஆகியோரும் இதில் நடித்தனர். இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நகைச்சுவை நடிகர் ராஜகோபாலன், குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார். இத்திரைப்படம் 1956 ஆம் ஆண்டிற்கானச் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதுக்குரிய தகுதிச் சான்றிதழ் பெற்றது. ஏவி மெய்யப்பனால் இத்திரைப்படம் இந்தியில் "பாபி" என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1856 ஆம் ஆண்டே "இந்து விதவைகள் மறுமணச் சட்டம்" அமுலுக்கு வந்திருந்தாலும் சமுதாயரீதியாக இந்து விதவைகளின் மறுமணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், இக்கருத்தை ஆதரித்தவர்களும் செயல்படுத்தியவர்களும் சமுதாயத்தில் கடுமையாகச் சாடப்பட்டனர். ஆனால் இந்தப் பிரச்சனை திரைப்படங்களுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது. பல திரைப்படங்கள் வெவ்வேறு பல மொழிகளில் இக்கருத்தை மையமாகக் கொண்டு வெளிவந்தன. இத்திரைப்படத்தின் கதை, எழுத்தாளர் பிரபாவதி தேவி சரஸ்வதி எழுதிய வங்காளக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் முரசொலி மாறன். இக்கதை கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் விதவை மறுமணக் கருத்தையும் கொண்டுள்ளது. தனது தந்தையின் மரணப்படுக்கையில் தனது சகோதர சகோதரியரைப் பார்த்துக் கொள்வதாகத் தான் செய்து கொடுத்த சத்தியத்தினைக் காப்பாற்ற பாடுபடும் மூத்த மகனாக சகஸ்கரநாமமும் அவரது மனைவியாக பண்டரிபாயும் நடித்துள்ளனர். கால்நடையாக துணி வியாபாரம் செய்யும் சகஸ்கரநாமம் தனது உழைப்பால் சொந்த ஊரிலேயே ஒரு சொந்தமாக ஒரு துணிக் கடை தொடங்கும் அளவுக்கு முன்னேற்றம் காண்கிறார். தனது மூன்று சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்த பின் அவர்களது மனைவியரால் குடும்பத்தில் ஏற்படும் தகராறுகளை அவரும் அவர் மனைவியுமாகச் சமாளித்துக் குடும்பத்தை மீண்டும் ஒன்றுபடுத்துகிறார்கள். பால்ய விவாகத்தில் விதவையானத் தனது இளைய சகோதரிக்கு (மைனாவதி) மறுமணம் செய்து வைக்கிறார். சமுதாய முக்கியத்துவம் கொண்ட இத்திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே. பி. காமாட்சி, ஆதமநாதன் ஆகியோர் எழுதிய பாடல்களையும் கொண்டுள்ளது. செந்தூரப் பாண்டி செந்தூரப் பாண்டி திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். மனோரமா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர். செபதேயுவின் மகன் யாக்கோபு செபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார். யாக்கோபு இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி நூல்களின் படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு பெறும் போது தங்களின் தந்தையோடு கடர்கறையில் இருந்தனர். இயேசுவின் தோற்றம் மாறியதை (Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார். சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபும் யோவானும் இயேசுவிடம், ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். திருத்தூதர் பணிகள் 12:2 இன் படி ஏரோது அரசன், யாக்கோபை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது. இவர் எசுப்பானியா நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயர்ச்சி "புனித யாக்கோபுவின் பாதை" என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி -முயற்சி நடுக் காலம் முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது. இவரின் விழா நாள் 25 ஜூலை அன்று கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் 30 ஏப்ரலில் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரியப்படி சனவரி 2, 40 (கி.பி) இவருக்கு ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக்கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி கிடைத்ததாகவும் அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது. மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம் அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர். மூர் இணத்தவர்களை வெல்ல துவங்கப்பட்ட பிரிவான "கபலேரோஸ் சான்டியாகுஸ்தாஸ்" பின்நாட்களில் ஒரு பெரும் மதிப்பிற்குறிய பிரிவாக விளங்கியது, டியேகோ வெலாஸ்க்குவெஸ் போன்றோர் இப்பிரிவின் சின்னமான புனித யாக்கோபுவின் சிலுவையை தங்களின் உடையில் பொறிக்கும் மரியாதையினைப்பெற ஆவலாயிருந்தனர். புனித யாக்கோபுவிற்க்கு நடு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ பேரரசில் சிறப்பு பக்தி முயர்ச்சிகள் உள்ளது. 1483ஆம் ஆண்டு போர்த்துகீசியர் இங்கு வந்து இறங்கிய போது, இவரின் பக்தி முயர்ச்சிகளை கொண்டு வந்தனர். இந்நாட்டின் பேரரசம் முதலாம் அல்போன்சோ இவரால் தனக்கு போரில் வெற்றி கிடைத்தது என்று கூறி இவரின் விழாநாளை தேசிய விடுமுறை நாள் ஆக்கினான். காலப்போக்கில் புனித யாக்கோபுவின் நாள் காங்கோ பேரரசில் தேசிய விடுமுறை நாள் வழக்கமாகிப் போனது.. அன்று வரிகளை அன்று சேகரிக்கப்பட்டன. இராணுவ பணிக்கு தகுதி உள்ள ஆண்கள் ஆயுதமேந்தி தோன்ற பணிக்கப்பட்டனர். பொதுவாக வட்டார கொண்டாட்டங்களும், தலைநகரில் பெருவிழாவும் கொண்டாடப்பட்டன. பின் நாட்களில் இங்கிருந்த அடிமைகள் புதிய உலகிற்கு கொண்டு செல்லப்பட்டபோது இக்கொண்டாட்டங்களை உடன் எடுத்துச்சென்றனர். இந்நாள் அளவும் ஹெய்டி மற்றும் போர்த்தோ ரிக்கோவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. திருக்குரானுக்கு உரை எழுதிய பலர் இவரை இயேசுவின் சீடரெனக்கொள்கின்றனர். அவர்கள் இவரை يعقوب என அழைக்கின்றனர். மொர்மனிய கொள்கயை உடையவர்கள் இவர் பேதுருவுடனும் யோவானுடனும் 1829-ஆம் ஆண்டு உயிர்பெற்று வந்து இக்கொள்கயின் பரப்புணரான ஜோசப் ஸ்மித்தை குருவாக திருநிலைப்படுத்தி அப்போஸ்தலிக்க வழிமரபை தொடரச்செய்ததாக நம்புகின்றனர். த. நா. குமாரசாமி தண்டலம் நாராயண சாசுதிரி குமாரசாமி என்னும் த. நா. குமாரசாமி (T N Kumarasamay) வங்க மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். இதழாளர். த. நா. குமாரசாமி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாசுதிரி என்பவருக்கு 1907ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. சேனாபதி இவர்தம் அண்ணன் ஆவார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கலை இளவர் (பி.ஏ.) பட்டம் பெற்றார். சமசுகிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று அவற்றில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். தன் அண்ணன் த. நா. சேனாதிபதியின் தாக்கத்தால் இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். கலைமகள் இதழில் கி. வா. சகந்நாதன், கா. ஸ்ரீ. ஸ்ரீ ஆகியோரோடு பணியாற்றினார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், தாராசங்கர் பந்தோபாத்தியாய், நேதாசி சுபாசு சந்திர போசு உட்பட பல வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவருடைய படைப்புகளைத் தமிழக அரசு 2006-07ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கியிருக்கிறது. இவருடைய படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சில: 1940ஆம் ஆண்டில் உலகம் சுற்றும் தமிழன் எனப் புகழப்பட்ட அ. கருப்பண் செட்டியார் (ஏ. கே. செட்டியார்) எடுத்த மகாத்மாகாந்தி என்னும் ஆவணப்படத்திற்கு இவர் உரையாடல் எழுதினார். 1962ஆம் ஆண்டில் "தாகூர் அறிஞர்" எனச் சிறப்பிக்கப்பட்டார். அதனால் சோவியத் ரஷ்யாவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இவர் 1982ஆம் ஆண்டில் சென்னையில் காலமானார். ஈரளவு வெளி ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி ("Two-dimensional Space") என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும். ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும். ஈரளவில் ஒழுங்கான பல்கோணிகள் முடிவில்லாதுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:- சிலவ்லிக் குறியீடு "{p}" என்பது ஒழுங்கான "p"-கோணியைக் குறிக்கும். ஒழுங்கான ஒருகோணியையும் இருகோணியையும் ஒழுங்கான வட்டப் பல்கோணிகளாகக் கொள்ள முடியும். ஈரளவில் அமைந்த மிகுகோளம் வட்டம் ஆகும். இதனுடைய பரப்பளவு formula_1 ஆகும். இங்கு formula_2 என்பது வட்டத்தின் ஆரை ஆகும். ஈரளவில் அமைந்த ஆள்கூற்று முறைமைகளுள் சில பின்வருமாறு:- சில்லுந்தம் சில்லுந்தம் ("Wheelie") என்பது ஊர்தியின் பின்சில்லில் அல்லது பின்சில்லுகளில் ஏற்படும் கூடிய விசைத் திருப்பத்தால் முன்சில்லு அல்லது முன்சில்லுகள் நிலத்தை விட்டு மேலேழுகின்ற ஊர்தி நழுவியக்கம் ஆகும். சில்லுந்தங்கள் பெரும்பாலும் உந்துருளிகளிலும் ஈருருளிகளிலும் மேற்கொள்ளப்பட்டாலும் தானுந்து, உழுவுந்து போன்ற ஊர்திகளிலும் சில்லுந்தத்தை மேற்கொள்ள முடியும். 1943ஆம் ஆண்டிலேயே ஐக்கிய அமெரிக்கக் குதிரைப் படையினர் சில்லுந்தங்களை மேற்கொள்ளும் படம் இலைவு இதழில் வெளியிடப்பட்டது. மேலும் எவல் நியெவெல் தனது உந்துருளிச் சாகசக் நிகழ்ச்சிகளில் சில்லுந்தங்களையும் மேற்கொண்டார். சில்லுந்தமானது பின்வரும் முறைகளில் மேற்கொள்ளப்படும். சில்லுந்தம் ஒரு பொதுவான உந்துருளிச் சாகசமாகும். உந்துருளியில் சில்லுந்தத்தை மேற்கொள்வதற்கான கொள்கையும் ஈருருளியில் சில்லுந்தத்தை மேற்கொள்வதற்கான கொள்கையை ஒத்ததெனினும் உந்துருளியில் சில்லுந்தத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பின்தடுப்புகளும் முடுக்கியும் பயன்படுத்தப்படுகின்றன. உலகிலேயே விரைவான சில்லுந்தமானது மணித்தியாலத்துக்கு 307.86 கிலோமீற்றர் கதியில் பேட்ரிக்கு உவுர்ச்டேன்கொவ்வால் ஏப்பிரல் 18, 1999 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஒரு கிலோமீற்றரை விடக் கூடிய தூரம் மேற்கொள்ளப்பட்ட சில்லுந்தங்களுள் விரைவான சில்லுந்தமானது மணித்தியாலத்துக்கு 278.3 கிலோமீற்றர் கதியில் தெர்ரி கல்கோத்தால் செப்டெம்பர் 2006இல் இங்கிலாந்தின் யார்ட்சயர்ப் பகுதியிலுள்ள எல்விங்டன் வானூர்தித் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பொதுச் சாலையில் சில்லுந்தத்தை மேற்கொள்ளும் உந்துருளி ஓட்டுநர்கள் மீது பேரிடர் விளைவிக்கும் ஓட்டத்தை மேற்கொண்ட குற்றத்தின் காரணமாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேரளவிலான ஒறுப்புப் பணம் அறவிடப்பட்டுச் சிறிது காலத்துக்கு ஊர்திகளை ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்படுகின்றது. பாக்கித்தான், இந்தியா போன்ற சில நாடுகளிலோ பொதுச் சாலையில் சில்லுந்தத்தை மேற்கோள்ளும் உந்துருளி ஓட்டுநர்களின் உந்துருளிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. நேர்ப்பந்தயங்களின்போது தானுந்துகளைப் பயன்படுத்திச் சில்லுந்தங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஈருருளிகளை உள்ளரங்குகளில் ஓட்டும்போதும் கட்டற்ற பாணி ஈருருளி ஓட்டத்தின்போதும் ஈருருளியில் சில்லுந்தங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஊர்தியொன்றில் சில்லுந்தத்தை மேற்கொள்ளும்போது அதன் முன்பகுதி கூடிய உயரத்துக்கு உயர்த்தப்பட்டுப் பின்னோக்கிச் சரிவதைத் தடுக்கும்பொருட்டுச் சில்லுந்தப் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. விண்வெளியின் வானிலை சூரியன் மற்றும் புவிக்கு அண்மித்த விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களே விண்வெளியின் வானிலை என்பதால் குறிக்கப்படும். இது புவியின் வானிலையிலிருந்து வேறுபட்டது. விண்வெளி வானிலையானது அதில் உள்ள பிளாஸ்மா, காந்தப்புலம், கதிர்வீச்சு மற்றும் ஏனைய பொருட்களில் நடைபெறும் மாற்றங்களை விபரிப்பதாகும். மில்கா சிங் மில்கா சிங் (Milkha Singh : அக்டோபர் 8, 1935) இந்திய தடகள விளையாட்டு வீரர். 1958 ஆம் ஆண்டு கார்டிப்பி்ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங். ஒலிம்பிக் தடகளத்தில் 1960 ரோமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் 1964 இல் டோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் மில்கா சிங். மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் "பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்டார். இத்தாலியின் தலைநகர் ரோமில் 1960ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். 400 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற இவர் நான்காவதாக (45.6 வினாடி)வந்தார். குறைந்த நேரம் ( 0.1 வினாடி) வித்தியாசம் என்பதால் வெண்கலப்பதக்கம் யாருக்கு என்ற அறிவிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.‘போட்டோ பினிஷ்’ மூலம் வெற்றியாளர் நிர்ணயிக்கப்பட்டதில் தென் ஆப்ரிக்காவின் மால்கம் ஸ்பென்ஸ் 3வது இடத்தை பிடித்தார். நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை மில்க்கா சிங் பறிகொடுத்தார், . இவரது குடும்பத்தினரும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்களே. மனைவி நிர்மல்கவுர், சர்வதேச கைப்பந்தாட்ட வீராங்கனை. மகன் ஜீவ் மில்கா சிங், மிகச்சிறந்த கோல்ப் வீரராகத் திகழ்கிறார். இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க நடந்ததுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி. தினமும் 20 கிமீ நடந்து சென்று கல்வி பயின்றார். 15 வயதில், இந்தியப் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள். கூடப் பிறந்த மூன்று பேரையும் கலவரத்தில் இழந்தபோது செய்வதறியாமல் தவித்தார். 'ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்' என்று இறக்கும் தறுவாயில் தந்தை சொன்னதைக் கேட்டு பதைபதைத்துப் போனார் மில்கா சிங். அந்தச் சமயம், கலவரக்காரர்கள், கண்ணில் படும் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள். உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார், அங்கிருந்து டெல்லியில் உள்ள தன் சகோதரியிடம் அடைக்கலமானார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மிக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400 மீ ஓட்டப்பந்தயமொன்றில் ஜெயித்தபோதுதான் தன் திறமையை அறிந்தார் மில்கா. 1956 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட மில்கா சிங், 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அமெரிக்கரின் டைமிங்கைத் தாண்டிக் காண்பித்தார். அதன்பிறகு, உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார் மில்கா சிங். ஆனால், 1960 ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டதுதான் பெரிய சோகம். காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன்தான். 1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் வெர்ஸஸ் மில்கா சிங் என்று அப்போட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார் மில்கா சிங். பரிசளிப்பு விழாவில், 'நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்' என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான். அங்குதான் அவருக்கு 'ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)' என்கிற பட்டமளிக்கப்பட்டது. 'பாகிஸ்தானில் ஓடும்போது, சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு வந்தது' என்கிறார் மில்கா சிங். மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, 'ரேஸ் ஆஃப் மை லைஃப்' என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை அறிந்த பல ஹிந்தி தயாரிப்பாளர்கள் மில்கா சிங்கிடம், படத்துக்கான அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி வரைக்கும் தரத் தயார். ஆனால், மில்கா சிங்கின் மகனும் கோல்ஃப் வீரருமான ஜீவ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு, 'ரங் தே பசந்தி' படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாய்ப்பை அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங். படத்தின் லாபத்தில் கிடைக்கும் 15 சதவிகிதத்தை மில்கா சிங் தொண்டு நிறுவனத்துக்குத் தர ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தில் மில்கா சிங்காவாக நடித்துள்ள ஃபர்ஹான் அக்தர், அச்சு அசலாக மில்கா சிங் போலவே இருப்பது படத்துக்குக் கூடுதல் பலம். 'இந்தியாவில் இப்போது என்னை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது' என்று படத்தின் வெற்றி குறித்துப் பெருமைப்படுகிறார் மில்கா சிங். நமிதா கபூர் (நடிகை) நமிதா (, பிறப்பு:மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குப் பெற்றுள்ளார். நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார். நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். நமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார். இவர் அரசியலுக்கு வரப்போவதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தார். மங்கலம் (சொல்விளக்கம்) அமங்கலமான வார்த்தையை தவிர்க்கும் பொருட்டு அத்தகைய அமங்கலப் பொருள்களையும் நிகழ்வுகளையும் மங்கலமாகக் கூறுவது மங்கலம் எனப்படும். எ.கா: செத்தார் என்பதை "காலமானார்", "இறையடி சேர்ந்தார்" என்பது தாலி அறுந்ததை "தாலி பெருகிற்று" என்பது பி. ஆர். பழனிச்சாமி பி. ஆர். பழனிச்சாமி என்பவர் தமிழ்நாட்டில் மதுரையில் வசித்து வரும் ஒரு தொழில் அதிபர் ஆவார். இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தில் பிராதுக்காரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் கிரானைட் எனப்படும் விலை உயர்ந்த கருங்கல் வணிகத்தில் ஈடுபட்டு வருபவர். வைகை பிரதான கால்வாய் ஒப்பந்ததாராக இருந்த பி. ஆர். பழனிச்சாமி, தனது கட்டுமானப் பணிகளுக்கான் கற்கள், மற்றும் உடை கற்கள் தேவைக்காக, திருச்சியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்த கல் தோண்டும் நிலத்தை விலைக்குப் பெற்றார். இந்நிலத்தில் தோண்டிய போது கிடைத்த கற்கள் விலை உயர்ந்த கருங்கற்களாக (கிரானைட்) இருந்தன. இதனால் இவர் விலை உயர்ந்த கற்களைத் தோண்டி எடுத்து விற்பனை செய்யத் தொடங்கினார். நாளடைவில், இந்த கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினார். இதற்காக மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதியில் பல்வேறு நிலங்களை விலைக்குப் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்தினார். மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் மக்கள் இவரது கல் தோண்டும் தொழிலால் தங்களின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இச்சூழலில், அரசு நிலங்களில் அனுமதியின்றி முறைகேடாகக் கற்கள் தோண்டி எடுக்கப்படுகிறது என்று தினபூமி நாளேடு 2011 ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையீட்டை தொடர்ந்தது. இதன் பின்னனியில் எழுந்த விசாரணையைத் தொடங்கிய, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், "மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் அரசு அனுமதி பெற்று குவாரிகள் நடத்தி வரும் பலர் அரசு புறம்போக்கு, பொதுப்பாதைகள்,கண்மாய்கள், குளங்கள், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும், கிரானைட் கற்கள் கடத்தலால் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்தநிலை தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் திருடப்பட்ட கற்களைக் கைப்பற்றி பொது ஏலம் விட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாடு கனிமவள நிறுவனமே கிரானைட் கற்களை எடுத்து விற்பனை செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட பறக்கும்படை அமைத்து கிரானைட் குவாரிகளை சோதனை செய்ய வேண்டும்" என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ. சகாயம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதன் பிறகு உ. சகாயம் மே மாதம் அரசுக்கு அனுப்பிய அறிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்த செய்திகள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, இது குறித்து விசாரணை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட 18 குழுக்களை அமைத்தார். இக்குழுவினர் மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் பி.ஆர்.பழனிச்சாமியின் பி. ஆர்.பி. நிறுவனம் மற்றும் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருக்கும் ஒலிம்பஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 35 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணையின் போது பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது மகன்கள், மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் முன் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றன. இந்நிலையில் பி. ஆர். பழனிச்சாமி ஆகஸ்ட் 18 அன்று மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார்., இருந்தையூர் இருந்தையூர் வையை ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளதோர் ஊர். கூடல் அழகர் கோயில் இங்கு உள்ளது. இதனால் ‘திருவிருந்த நல்லூர்’ என்னும் பெயரை இவ்வூர் பெற்றிருந்தது. இந்தப் பெயரின் மரூஉமொழி ‘இருந்தை’. இருந்தையூர்க் கொற்றன் புலவன் இவ்வூரில் வாழ்ந்தவர். பெரியாழ்வார் மதுரை வந்து பாண்டியனின் பொற்கிழி அறுத்த இடம் எனக் கருதப்படுகிறது. மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இருந்தையூரின் ஒரு பகுதி. திருவாதவூர் திருமறைநாதர் கோயில் சென்றடையும் முன்பு சற்று தொலைவில் உள்ளது மாணிக்கவாசகப்பெருந்தகையார் திருக்கோவில்... திருவாதவூர் திருவாதவூர் மதுரையை அடுத்த இருந்தையூர் என்பதன் ஒரு பகுதி. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில், மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர் பிறந்த ஊர். இவ்வூரில் திருமறைநாதர் கோயில் அமைந்துள்ளது. இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன, இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை. நான்மாடக் கூடல் நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம். ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள். கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும். புசி றயற் புசி றயட் (உருசியம்: Пусси Райот;) என்பது மாசுகோவில் இயங்கும் ஓர் உருசிய பெண்ணிய பங்க்-ராக் இசைக் குழுமம். இது உருசியாவில் அரசியல் தூண்டல் மிக்க முன்னேற்பாடற்ற நிகழ்த்தல்களை எதிர்பார்க்காத இடங்களில் செய்வதற்காக அறியப்பட்டது. யோனிக் கலகம் என்ற பொருள் தரும் இதன் ஆங்கில பெயர் கூட விமர்சிக்கப்பட்ட பெயர் ஆகும். பெப்ரவரி 21, 2012 இந்தக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் "மீட்பர் கிறித்து பேராலயத்தில்" உருசியப் குடியரசுத் தலைவர் விளாதிமிர் பூட்டினுக்கு எதிராகவும், "உருசிய பழமைக்கோட்பாடு கிறித்தவ அவையின்" பூட்டின் சார்பு, அரசு சார்பு அரசியலுக்கு எதிராகவும் ஒரு நிகழ்த்தலை நடத்தினர். இதனை தேவாலய காவலாளிகள் தடுத்தபோது அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மார்ச் 3 இந்த நிகழ்த்தல் தொடர்பான ஒரு நிகழ்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆகத்து 17, 2012 இல் இவர்கள் குண்டர்த்தனம் செய்தாதாக குற்றம் காணப்பட்டு இக் குழுவின் மூன்று பேருக்கும் ஒவ்வொருவருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கடும் தட்டணையைக் கண்டித்தும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் உலகின் பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கூடல் அழகர் கோவில் கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது. சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார். இருந்தையூரில் ‘இருந்தையூர் இருந்த செல்வ’ என்னும் பரிபாடல் தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும்போது ‘இது வைகைக்கரைக் கண்ணது’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில். அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார். உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள். பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. "ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச : கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர" என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது. யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் சர்ச்சை யிலாண்ட்-போசுரென் முகமட் கேலிச்சித்திரம் சர்ச்சை ("Jyllands-Posten Muhammad cartoons controversy") டானிசுப் பத்திரிகையான யிலாண்ட்-போசுரென் (Jyllands-Posten) 2005, செப்டம்பர் 30 இல் இசுலாமிய இறைதூதர் முகமது நபியை சித்தரித்து வெளியிட்ட 12 கேலிச் சித்திரங்களின் பின் தொடங்கியது. இக்கேலிச்சித்திரங்களை இசுலாமை விமர்சனத்துக்கு உட்படுத்துவதற்கான உரையாடலுக்கும், தன் தணிக்கை (self-censorship) தொடர்பான உரையாடலுக்கும் உதவும் வகையில் வெளியிட்டதாக அப்பத்திரிகை கூறியது. குர்ஆன் உருவ வழிபாட்டை கண்டிக்கிறது. படங்கள் உருவ வழிபாட்டுடன் தொடர்புடையதால், அவையும் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக முகமது நபியின் தோற்றத்தை சித்தரிப்பது இசுலாமிய சமயத்தில் ஏற்புடையது இல்லை. முகமது நபியை சித்தரித்து கேலிச்சித்திரங்களை வரைந்ததால் "யிலாண்ட்-போசுரென்" இது தொடர்பான இசுலாமிய நெறியை மீறியதாகக் இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இது இசுலாமியர்களைப் பாதிக்கும் எனத் தெரிந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர நோக்கிலும், மேற்குநாட்டு விழுமியங்கள் நோக்கிலும் இவற்றை வெளியிடுவது நியாயப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கூடற்புராணம் கூடற் புராணம் என்னும் நூல் மதுரையை அடுத்த இருந்தையூர் கோயிலில் உள்ள பெருமாள்மீது பாடப்பட்டது. இதனை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. எனினும் 16ஆம் நூற்றாண்டு புரூரவ சரிதை நூலிலுள்ள சில புதிய கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருத்தலையும், நூலிலுள்ள பாடல் நடையையும் கருத்தில் கொண்டு இந்தக் கூடற்புராணம் 16ஆம் நூற்றாண்டு நூல் எனக் கொள்ளப்பட்டுள்ளது. 1 கண்ணன் கீர்த்தியும் கண்ணுதல் சீர்த்தியும் விண்ணின் மீனமும் தேவரும் மேதினிக்கு எண்ணர் எண்ணும் என்றிட்ட உரைகள் போல் தண்ணெனும் மழைத் தாரைகள் வீழுமால் 2 பதின்மர் பாடலுக்கு முற்பதிகமாகவே புதுவையாசிரியனார் புகல் பல்லாண்டு தான் மதுரைமா நகர்தனில் பிறந்த வாய்மையால் இதனை நேர் தலம் நிலத்து இயம்ப வல்லதோ 3 ஆக மாக வளாகம் கலக்குமே யாக மாக வளாகம் கலக்குமே நாக நாகமை நாகம் புரையுமேல் நாக நாகமை நாகம் புரையுமே மலேசிய நடுவண் வங்கி பேங்க் நெகரா மலேசியா (BNM; "Central Bank of Malaysia"), என்பது மலேசியாவின் நடுவண் வங்கியாகும். இது 1959 ஆம் ஆண்டு, சனவரி 26 ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. பணத்தை அச்சடித்தலும், மலேசிய அரசுக்கு ஆலோசகராகவும் வைப்பகமாக இருத்தலும், இதன் பணிகள் ஆகும். இதன் தலைமையகம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ளது. பழனிச்சாமி பழனிச்சாமி என்பது தமிழில் பரவலான பெயர். இப்பெயரில் தலைப்பைக் கொண்டுள்ள கட்டுரைகள் கீழே. முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை) திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் ("Pope Sylvester I") உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 314 சனவரி 31ஆம் நாளிலிருந்து 335 திசம்பர் 31ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் மில்த்தியாதேஸ் என்பவர். திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் கத்தோலிக்க திருச்சபையின் 33ஆம் திருத்தந்தை ஆவார். இத்திருத்தந்தையின் ஆட்சிக் காலத்தில் உரோமை நகரில் பேரரசன் காண்ஸ்டண்டைன் வலிமை மிக்கவராக விளங்கினார். அவர்களின் ஆட்சியின்போது உரோமை நகரில் தலைசிறந்த பெருங்கோவில்கள் பல கட்டப்பட்டன. அவற்றுள் சிறப்பாக, புனித பேதுரு பேராலயம், புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், எருசலேம் திருச்சிலுவைக் கோவில், புனித பவுல் பெருங்கோவில் ஆகியவையும், பிற பல மறைச்சாட்சியரின் கல்லறைகள்மீது கட்டப்பட்ட கோவில்களும் உள்ளடங்கும். முதலாம் சில்வெஸ்தரின் ஆட்சியின்போது, கி.பி. 325இல் நிசேயா பொதுச் சங்கம் நிகழ்ந்தது. அச்சங்கத்தைக் கூட்டியது சில்வெஸ்தர் அல்ல, மாறாக காண்ஸ்டண்டைன் மன்னன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சங்கத்தில் சில்வெஸ்தர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவருடைய பதில் ஆள்களாக வீத்துஸ், வின்சென்சியுஸ் என்னும் இரு மூப்பர்-குருக்கள் ("presbyters") கலந்துகொண்டனர். சங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் கோர்தோபா ஆயர் ஓசியுஸ் என்பவர். சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை சில்வெஸ்தர் ஏற்று, ஒப்புதல் வழங்கினார். சில்வெஸ்தரின் வாழ்க்கையில் நடந்ததாக சில நிகழ்வுகள் பிற்காலத்தில் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) புனையப்பட்டன. காண்ஸ்டண்டைன் மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டதாகவும், சில்வெஸ்தர் அவருக்குத் திருமுழுக்கு அளித்ததும் மன்னரின் நோய் நீங்கியதாகவும் புனைவுகள் உருவாகின. கொடிய நோயிலிருந்து விடுதலை பெற்ற மன்னர் சில்வெஸ்தருக்குத் தலைவணங்கினார். சில்வெஸ்தர் ஒரு மணிமுடியை எடுத்து காண்ஸ்டண்டைன் மன்னனின் தலையில் சூடினார். பிற்காலத்தில் எழுந்த இப்புனைவு வலியுறுத்திய கருத்து இது: மன்னருக்கு அதிகாரம் வழங்கியவர் திருத்தந்தையே. எனவே திருத்தந்தைக்கு ஆன்மிக அதிகாரமும் உலக ஆட்சி அதிகாரமும் உண்டு. இக்கருத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் திருத்தந்தையர் ஆன்மிகத் தலைவர்களாக மட்டுமன்றி, அரசியல் ஆட்சியாளர்களாகவும் தங்கள் பதவியை நியாயப்படுத்தினர். மேலும் ஆட்சியாளர்களை நியமிக்கவும் பதவிநீக்கம் செய்யவும் தமக்கு அதிகாரம் உண்டு என்றும் உரிமைகொண்டாடினர். மற்றொரு புனைவுப்படி, சில்வெஸ்தர் ஒரு பறவைநாகத்தைக் கொன்று, அந்த விலங்கின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்தவர்களுக்கு அற்புதமாக மீண்டும் உயிர்கொடுத்தார். சில்வெஸ்தரைச் சித்தரிக்கும் ஓவியங்களில் பறவைநாகம் இடம்பெறுவது இப்புனைவின் அடிப்படையில்தான். சில்வெஸ்தரின் ஆட்சிக்காலம் ஏறக்குறைய 22 ஆண்டுகள் நீடித்தது. அவர் 335, திசம்பர் 31ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமை நகரை அடுத்த சலாரியா சாலையில் அமைந்த புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலில் மீபகுதிகளை 762ஆம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் பவுல் உரோமை நகருக்கு உள்ளே அமைந்த சில்வெஸ்தர் கோவிலில் மீள் அடக்கம் செய்தார். கத்தோலிக்க திருச்சபை சில்வெஸ்தரின் திருவிழாவை திசம்பர் 31ஆம் நாள் கொண்டாடுகிறது. கிழக்கத்திய மரபுவழி சபைகளும் கீழ் மரபு கத்தோலிக்க சபைகளும் சனவரி 2ஆம் நாள் சிறப்பிக்கின்றன. கொழுப்புமிகு ஈரல் கொழுப்புமிகு ஈரல் (Fatty Liver) எனப்படும் கொழுப்புமிகு ஈரல் நோயானது (Fatty Liver Disease, FLD) டிரைகிளிசரைடு கொழுப்பானது பெரும் நுண்குமிழிகளாக கல்லீரல் செல்களில் திரள்வதைக் குறிக்கும். இந்நோயின்போது, உயிரணுக்களில் கொழுமியங்களை அசாதாரணமாகத் தக்கவைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் (ஸ்டியடோசிஸ்) இது ஒரு மீளக்கூடிய நிலையேயாகும். பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டாலும், கொழுப்புமிகு ஈரல் நோயானது ஒரே நோயாகக் கருதப்படுகின்றது. இந்நோயானது, அதிகளவு மது அருந்துபவர்களிலும், இன்சுலின் எதிர்ப்புடனோ அல்லது இல்லாமலோ உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களிலும் உலகளாவிய அளவில் நிகழ்கிறது. கொழுப்பு வளர்சிதைமாற்றத்தில் தாக்கமேற்படுத்தும் பிற நோய்களுடனும் இந்நிலையானது தொடர்புடையதாகும். உருவமைப்புப்படி மதுசார்ந்த கொழுப்புமிகு ஈரல் நோயையும், மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோயையும் வேறுபடுத்தி அறிவது கடினமாகும். இவ்விரண்டு நிலைகளிலும் பல்வேறு கட்டங்களில் நுண்குமிழ்கள் மற்றும் பெருங்குமிழ்களில் கொழுப்பினால் உண்டாகும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்திய எண்கள் இந்திய எண்கள் ("Indian Numerals") என்பவை இந்திய மொழிகளின் எண்கள் ஆகும். எண்களுக்கான வடமொழிப் பெயர்களுக்கும் கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எண்களுக்கான பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுழியத்துக்கான வடமொழிச் சொல்லான சூனியம் அரபு மொழியில் சிவிர் என மொழிபெயர்க்கப்பட்டு, நடுக்கால இலத்தீனில் செவிரம் எனப் பெயர் பெற்றது. தேவநாகரி எழுத்து முறையை ஏற்றுக் கொண்ட இந்தி, மராத்தி, கொங்கணி, நேப்பாளி, வடமொழி ஆகிய மொழிகள் தேவநாகரி எண்களைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு மொழியிலும் எண்களின் பெயர்கள் வேறுபடுகின்றன. பின்வரும் வரிசைப் பட்டியலில் ஏனைய இந்திய மொழிகளின் எண்கள் காட்டப்பட்டுள்ளன. மெட்டி மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும். ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.மெட்டி அணிதல் இந்தியாவின் சில பகுதிகளில் திருமணமான பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கியச் சடங்கு. பணக்கார குடும்பங்களில் பெண்கள் வெள்ளியால் செய்த அழகுபடுத்தப்பட்ட விலையுயர்ந்த மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மெட்டிகளை அணிவர். பித்தளை, நிக்கல் அல்லது துருப்பிடிக்காத எஃகு முதலியவற்றிலும் மெட்டி தயாரிக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் தங்கத்தால் செய்த மெட்டிகளை பெரும்பாலும் அணிவதில்லை. உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் பொதுவாக பிச்சியா (bichiya) என்று அழைக்கப்படும் மெட்டிகளை அணிவர். தென்னிந்தியாவில் பெண்கள் தங்களது கால்விரல்களில் (முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) மெட்டிகளை அணிகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. உணவுக்குழாய் நோய் உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த நெஞ்செரிவு, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் காரணமாக ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியினால் ஏற்படுவதாகும், உணவுக்குழாய் நோய்களுள் இந்த நோய் பொதுவான இடத்தைப் பிடித்துள்ளது. உரிய சிகிச்சை இன்றிய இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், பின்னர் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாவதற்கு வழிகோலுகின்றது. இந்திய எண் முறைமை இந்திய எண் முறைமை ("Indian numbering system") என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக) பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் முறை பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் தென்னாசிய எண் முறைமையில் பயன்படுத்தப்படும் Lakh, Crore முதலிய சொற்கள் இந்திய ஆங்கிலத்திலும் பாக்கித்தானிய ஆங்கிலத்திலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 30 மில்லியன் (மூன்று கோடி) உரூபாய் என்பது இந்திய உரூபாய் 30,000,000 என்பதற்குப் பதிலாக 3,00,00,000 அல்லது இந்திய உரூபாய் 3,00,00,000 என்று ஆயிரம், நூறாயிரம், கோடி ஆகிய நிலைகளில் காற்புள்ளிகள் இடப்பட்டு எழுதப்படுகின்றது; ஒரு பில்லியன் (100 கோடி=நூறு கோடி) என்பது 1,00,00,00,000 என்று எழுதப்படுகின்றது. தென்னாசிய எண் முறைமையிற் பெரிய தொகை பெரும்பாலும் நூறாயிரத்திலும் கோடியிலுமே குறிப்பிடப்படும். இந்திய எண் முறைமையானது அராபிய எண் முறைமையிலிருந்து வேறுபட்ட முறையில் பிரிப்பான்களைப் பயன்படுத்துகின்றது. முழுவெண் பகுதியில் மூன்று குறைந்த மதிப்புறு இலக்கங்களையடுத்து, ஒவ்வொரு மூன்று இலக்கங்களுக்கும் பதிலாக ஒவ்வோர் இரண்டு இலக்கங்களுக்கும் இடையில் பின்வருமாறு காற்புள்ளி இடப்படுகின்றது. ஆயிரம், நூறாயிரம், பத்து மில்லியன் போன்றவற்றிற்கு அலகுகளைக் கொண்ட இந்திய எண் முறைமையை இது ஒத்துள்ளது. கீழேயுள்ள வரிசைப் பட்டியலில் ஒரு பில்லியனானது ஆயிரம் மில்லியனுக்குச் சமனாக உள்ள குறுகிய அளவைப் பின்பற்றுகின்றது. இந்தியாவிலோ, பண்டைய பிரித்தானியப் பயன்பாட்டைப் பின்பற்றியபடி, ஒரு பில்லியனானது மில்லியன் மில்லியனுக்குச் சமனாக உள்ள நீண்ட அளவு பின்பற்றப்படுகின்றது. சூரியக் காற்று சூரியக் காற்று ("solar wind") என்பது சூரியனின் மேல் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஏற்றமுள்ள துணிக்கைகளின் கூட்டம் ஆகும். இது பொதுவாக இலத்திரனாலும், புரோத்திரனாலும் ஆனது. இதன் சக்தி 1.5 தொடக்கம் 10 keV வரை வேறுபடும். சூரிய உட்கருவின் (Corona) அதிகமான வெப்பத்தாலும், அதிகமான இயக்க ஆற்றலாலும் இத்துணிக்கைகள், சூரியனின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்லக் கூடியவை இயல்புடையவை ஆகும். இக்காற்றில் கொண்டு வரப்படும் துணிக்கைகளே, வடமுனை ஒளியைத் தோற்றுவிப்பவை ஆகும். ஹாமில்டன் நாகி ஹாமில்டன் நாகி (Hamilton Naki; 26 ஜூன் 1926–29 மே 2005): ஒரு கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிகாவின் வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுனரான கிறிஸ்டியான் பெர்னார்ட் என்பவரது மருத்துவ உதவியாளர். முறையான மருத்துவமோ உயர்நிலைக்கல்வியோ கூட படிக்காத நிலையில் தனது அறுவை சிகிச்சைத் திறமை மூலம் மட்டுமே மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பாடம் கற்பித்தவர்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் விலங்குகள் குறித்த ஆய்வுகளில் குறிப்பிட்ட பங்காற்றியவர். 1926 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஹாக்-கேன்(Ngcingane) என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஹாமில்டன் நாகி. தொடக்கப்பள்ளி கல்வியை மட்டுமே முடித்த ஹாமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. எனவே தனது 14 ஆவது வயதில் வேலை தேடி கேப்டான் நகருக்கு வந்தார். கேப்டான் பல்கலைக்கழகம் ஹாமில்டனை தோட்ட ஊழியராக பணியில் சேர்த்துக்கொண்டது. அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் பராமரித்து வந்தார். துப்புரவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் ஹாமில்டன். 1954ல் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் உதவுமாறு ஹாமில்டனைக் கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் என்ற மருத்துவதுறைத் தலைவர். ஹாமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்படிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ஓர் ஒட்டகசிவிங்கியை அறுத்து பரிசோதிக்கும்போது தனக்கு உதவுமாறு ஹாமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ். அப்போது ஹாமில்டனின் செயல்பாடுகளைக் கவனித்து வியந்த கோட்ஸ் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். அந்த ஆய்வுகூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு ராபர்ட் கோட்ஸ் சென்ற பிறகு கிறிஸ்டியான் பெர்னார்ட் என்பவருக்கு ஆய்வக உதவியாளராகப் பணி புரிந்தார். பெர்னார்டு அமெரிக்காவில் இதய அறுவை சிகிச்சை குறித்த கல்வி கற்றவர். அதன் தொழில் நுட்பங்களைத் தென்னாப்பிரிக்காவிற்குக் கொணர்ந்தவர். தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹாமில்டன் அந்த பரிசோதனைக்கூடத்தில் கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார். வெகுவிரைவில் மருத்துவதுறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார். அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுமார் 5000 மருத்துவ மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவதுறையில் சிறந்த நிபுணர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இதய மற்று அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப் போக, அதில் ஹாமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது; மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே ஹமில்டனை அந்த அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தது அந்த மருத்துவமனை நிர்வாகம். உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹாமில்டன். அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்குத் துப்புரவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறிச் சமாளித்தது மருத்துவமனை நிர்வாகம். கறுப்பர்- வெள்ளையர் இனவெறி இருந்த காலத்தில் இச்செய்தி இவர் இறந்த பிறகே வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் விவாதங்களுக்குட்பட்டது. இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹாமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹாமில்டன் என்னைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட். ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹாமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, மரியாதையோ, கவுரமோ வழங்கப்படவில்லை. பல்கலைகழக பதிவேட்டில் ஹாமில்டன் ஒரு துப்புரவு ஊழியர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு கிடைத்த மாதாந்திர ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான். பட்டயப் படிப்பு கூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் ஊதியம் கொடுக்க முடியும் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பல அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹாமில்டனால் தனது ஐந்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். மிகவும் எளிய வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ஹாமில்டன். வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றைய தினம்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹாமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. கிடைத்த சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதியைத் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹாமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு பைபிளை வாசித்துக்காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப்பற்றி எச்சரிப்பதிலும் செலவிட்டார். ஓய்வுபெற்ற பிறகு சொற்ப சொத்தே இருந்தபோதும் ஹாமில்டன் பழைய பஸ் ஒன்றை நடமாடும் மருந்தகமாக மாற்றி தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தார். இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் மூலம் ஹாமில்டனின் மருத்துவ பங்களிப்பு உலகுக்கு தெரிய வந்தது. வாழ்ந்த காலம் முழுவதும் அங்கீகாரம் பெறாத ஹாமில்டன் சிறப்பான அந்த இரண்டு அங்கீகாரங்களைப் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அதாவது 2005 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம்தேதி தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார். குத்துக்கல் வலசை பெருங்கல் குத்துக்கல் வலசை பெருங்கல் என்பது தென்காசியிலுள்ள குத்துக்கல் வலசை கிராமத்திலுள்ள ஒரு கல்லாகும். இது இயற்கையாய் உருவானதாகவும் இதை முன்னோர் காலத்தில் வழிபட்டதாகவும் இந்த கிராம மக்கள் கூறுகின்றனர். ஸ்காட் ஹாமில்டன் ஸ்காட் ஹாமில்டன் (Scott Scovell Hamilton, ஆகஸ்ட் 28, 1958): ஓர் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர். 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றவர்; உடல்வளர்ச்சிக் குறைபாடு என்ற நோயால் பாதிக்கப்பட்டும் கூட 1981 -1984 வரை நான்கு முறை உலக சாதனை நிகழ்த்தி அமெரிக்க சாதனையாளர் பட்டத்தையும் மேலும் நான்கு முறை (1981 -1984) உலக சாதனையாளர் பட்டத்தை வென்றவர். 1958 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 28 ஆம் தேதி அமெரிக்காவில் ஓஹையோவில் பிறந்தார் ஸ்காட் ஹமில்டன். அவர் பிறந்து ஆறே வாரங்களில் எர்னஸ்ட் ஹாமில்டன், டார்த்தி ஹலில்டன் என்ற தம்பதியினர் தத்தெடுத்துக் கொண்டனர். இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. இரண்டு வயதானபோது ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்காட். அந்த நோய் உடல் வளர்ச்சியைத் தடுக்கும் ஓர் நோய். அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவமனைதான் ஹாமில்டனின் இரண்டாவது இல்லமாக இருந்தது.பலவிதமான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஹாமில்டனுக்கு இருப்பது சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்று தவறுதலாக கணித்த மருத்துவர்கள் ஹாமில்டன் இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்வார் என்றும் கெடு கொடுத்தனர். பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன்தான் அது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோய் (Shwachman-Diamond syndrome) என்பது தெரிந்தது. சிறப்பான உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம்பெற தொடங்கினார் ஸ்காட். ஹமில்டனின் சகோதரி சூசன் பனிச்சறுக்குப் போட்டியில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த ஹாமில்டனுக்கு தானும் சறுக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஒருமுறை சறுக்கிப்பார்த்த ஹாமில்டனுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்திலிருந்தே தைரியமாகவும் மிகுந்த வேகத்துடனும் சறுக்கத் தொடங்கினார் ஹாமில்டன். குளிர்ச்சியான சூழ்நிலையில் அவர் செய்த கடுமையான சறுக்குப் பயிற்சியால் அவரது உடல் அதிசய வேகத்தில் குணமடையத் தொடங்கியது. ஹமில்டன் மீண்டும் வளரத் தொடங்கினார். இருப்பினும் ஒரே ஒத்த வயதுடைய பையன்களுடன் ஒப்பிடும்போது அவரது உயரம் குறைவாகவே இருந்தது. தனது 13 ஆவது வயதில் ஹமில்டன் தேசிய உள்ளரங்கு போட்டியில் கலந்துகொள்வதற்காக பயிற்சி செய்யத் தொடங்கினார். அந்தப் பயிற்சிக்கு செலவு அதிகம் என்பதால் அதிக பணம் சம்பாதிக்க தனக்கு புற்றுநோய் இருந்ததையும் பொருட்படுத்தாமல் அவரது தாயார் சிரமப்பட்டு கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கினார். தன் முன்னேற்றத்திற்காக உழைத்த அந்த தாய் புற்றுநோயால் மரணமடைந்தபோது கலங்கிய ஹமில்டன், பனிச்சறுக்குப் போட்டியில் உலக விருதை வெல்வதே தன் தாய் தன்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு தான் செய்யக்கூடிய கைமாறு என்று உறுதி பூண்டார். வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு தன் உடலை வருத்தி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். பனிச்சறுக்குப் போட்டிகளில் நடுவர்களாக இருந்த சிலர் ஹமில்டனைப் பார்த்து உலக அரங்கில் சறுக்குவதற்குரிய உயரமும், கம்பீரமும் அவருக்குக் கிடையாது என்றும் எனவே அந்த விளையாட்டை மறந்துவிடுமாறும் கூறினர். ஏற்கனவே வளர்ச்சிக் கோளாறைக் கடுமையாகப் போராடி வென்ற ஸ்காட் நடுவர்களின் கூற்றை பொய்யாக்கிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இன்னும் கடுமையாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அதற்கான உழைப்பு வீண்போகவில்லை. 1980 ஆம் ஆண்டு ஸ்காட்டிற்கு 22 வயதானபோது தேசிய அளவிலான உள்ளரங்கு பனிச்சறுக்குப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று அமெரிக்க ஒலிம்பிக் குழுவிலும் ஓர் இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு லேக் பிளஸிடில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவது இடத்தை வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற பனிச்சறுக்குபோட்டியில் முதல் இடத்தை வென்ற ஹாமில்டன் தான் கனவு கண்டதைப் போலவே உலக பனிச்சறுக்குப் போட்டியிலும் முதல் இடத்தை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அடுத்த நான்கு ஆண்டுகள் நடைபெற்ற அனைத்து தேசிய மற்றும் உலகப் போட்டிகளிலும் ஹாமில்டனுக்கே முதலிடம். தொடர்ந்து எட்டு விருதுகளை வென்ற அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. தனது பனிச்சறுக்குச் சாதனைகளின் உச்சகட்டமாக 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றார் ஸ்காட் ஹாமில்டன். உள்ளரங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் பெண்களே சிறக்க முடியும் என்றும், அவர்களாலேயே ரசிகர்களைக் கவர முடியும் என்று கூறி ஹாமில்டனைத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயங்கின. இரண்டு ஆண்டுகள் ஐஸ்கபேப்ஸ் என்ற பனிச்சறுக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்றார் ஸ்காட். அதில் தலைமை மாற்றம் ஏற்பட்டபோது ஸ்காட் வெளியேற்றப்பட்டார். ஆண் பனிச்சறுக்கு வீரர்களுக்கும் குறிப்பாக தனக்கும் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் வெறுப்படைந்த ஹாமில்டன், "ஹாமில்டனின் அமெரிக்கச் சுற்றுலா" (The Scott Hamilton America Tour) என்ற தனது சொந்த பனிச்சறுக்கு சாகசங்களை நிகழ்த்தி அமெரிக்கா முழுவதும் அதனைக் கொண்டு சென்றார். மிகவும் புகழடைந்த அந்த நிகழ்ச்சிதான் பின்னர் உலக புகழ்பெற்ற 'ஸ்டார்ஸ் ஆன் ஐஸ் (Stars on Ice)' என்ற நிகழ்ச்சியாக மாறியது. உள்ளரங்கு பனிச்சறுக்கில் ஹாமில்டன் கொண்டு வந்த நளினமும், கம்பீரமும் பல புதிய பார்வையாளர்களை அந்த விளையாட்டிற்கு ஈர்த்தது. 12 ஆண்டுகள் அவரை ஒதுக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்னர் அவரைத் தேடி வந்தன. 1984 மற்றும் 1986 ஆம் ஆண்டிலும் உலக 'பனிச்சறுக்கு சாதனையாளர்' விருதை வென்ற ஸ்காட்டின் பெயர் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒலிம்பிக் சாதனையாளர்களில் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1997 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி ஹாமில்டனுக்கு ஆண்விரையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போராட்டத்திற்குப் பழக்கப்பட்டுப்போன ஸ்காட் தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு (The Only Disability in Life is a Bad Attitude )என்று கூறி அந்த புற்றுநோயையும் போராடி வென்றார். வெற்றிகரமான அறுவை சிகிச்சை மற்றும் மூன்றுமாத சிகிச்சைக்குப் பிறகு ஹாமில்டன் மீண்டும் பனிச்சறுக்கில் சாகசம் காட்டத் தொடங்கினார். அதோடு நின்றுவிடவில்லை 'ஸ்காட் ஹாமில்டன் கேர்ஸ் (Scott Hamilton CARES)' என்ற புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தி அந்த நோய்க்குத் தீர்வு காணும் எல்லா முயற்சிகளுக்கும் உதவி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் அந்த அறநிதி அமைப்பு புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், ஆராய்ச்சிக்காவும் சுமார் பத்து மில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலர் நிதி திரட்டியிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு 'லேண்டிங் இட் (Landing It)' என்ற தனது தன்வரலாற்று நூலை எழுதி வெளியிட்ட ஸ்காட், 2001 ஆம் ஆண்டில் நிபுணத்துவ பனிச்சறுக்கிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் மேக் எ விஷ் ஃபவுண்டேஷன் (Make a wish Foundation), ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் (Special Olympics), எயிட்ஸ் அறக்கட்டளை, ஆகிய சமூக அமைப்புகளுக்கு உதவி வருகிறார். குணநூல் குணநூல் என்பது ஒரு நாடகத் தமிழ்நூல். சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது, அடியார்க்கு நல்லார் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த நூல் பற்றி வேறு எந்தச் செய்தியும் தெரியவில்லை. சிலப்பதிகாரம், பாவமைதி சிலப்பதிகாரம் 12 கலிப்பாக்களும், 18 ஆசிரியப்பாக்களும் கொண்ட நூல். இவற்றை வகைப்படுத்திக் காணலாம். சூலமங்கலம் சகோதரிகள் இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் ("Soolamangalam Sisters") என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர். இச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும். இவர்களது தாய்-தந்தையர்: கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள். இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர். தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி [ 1937-2017], ராஜலஷ்மி [1940-1992] ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள். 1.டைகர் தாத்தாச்சாரி-இயக்கம்:வி.டி.அரசு. 2.தரிசனம்-இயக்கம்:வி.டி.அரசு. 3.மகிழம்பூ- இயக்கம்: வி.டி.அரசு. 4.பிள்ளையார்-இயக்கம்: வி.டி.அரசு. 5. அப்போதே சொன்னெனே கேட்டியா - இயக்கம் : வி.டி.அரசு. 6.பால்குடம்-இயக்கம்: பட்டு. 7.சண்முகப்ரியா-இயக்கம்: கே.கிருஷ்ணமூர்த்தி. 8.பாதபூஜை- இயக்கம்:பீம்சிங். ‘டைகர் தாத்தாச்சாரி’ மேடை நாடகத்தை திரைப்படமாக்கி இருக்கிறார்கள். ‘கல்யாணம் ஒரு விழா,இல்வாழ்க்கை திருவிழா,என் வீடு ஆலயம்,நீ அங்கே தேவதை’ என்ற பாடலை டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியிருக்கிறார்கள். எழுபதுகளில் பிரபலமாய் இருந்த பாடல் இன்று கேட்பாரில்லாமல் கிடக்கும் பொக்கிஷங்களில் ஒன்றாகி விட்டது. ‘ஏழுமலைவாசா வெங்கடேசா,அந்த இதயந்தனில் வாழும் சீனிவாசா’ என்ற பக்தி பரவசமூட்டும் பாடல் இப்போதும் திருப்பதி லட்டாய் இனிக்கிறது. ‘கண்ணாலே பார் கனி’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘கிளப் டான்ஸ்’ பாடல் கிளுகிளுப்பூட்டுகிறது. ‘மை சாயர் தும் நஹி’ என்ற இந்தி பாடலின் காப்பி என்பது கிறுகிறுக்க வைக்கிறது. தரிசனம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் கவிதையில் இரண்டு சூப்பர்டூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றது. ‘கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்’- டி.எம்.எஸ்.&பி.சுசிலா. இது மாலை நேரத்து மயக்கம்,இதை காதல் என்பதில் தயக்கம் - டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி. தரிசனம் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஆர்.கே.சேகர். ‘சண்முகப்ரியா’ என்ற திரைப்படத்தில், ‘காலம் வந்ததும் நான் வருவேன் என கருணை காட்டும் வேலய்யா’ என டி.எம்.எஸ் உருகிப்பாடும் பாட்டு மட்டுமே காணொளியில் காணக்கிடைக்கிறது. இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. இவர்கள் பாடியுள்ள, கந்த சஷ்டி கவசம் (முருகக் கடவுளின் மீது இயற்றப்பட்டது) அனைத்து பக்தர்களாலும் விரும்பப்பட்ட ஒன்றாகும். சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான சூலமங்கலம் ராஜலட்சுமி 1992 மார்ச் 1 இல் காலமானார். மூத்தவர் சூலமங்கலம் ஜெயலட்சுமி 2017 சூன் 29 அன்று சென்னை, பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது 80வது அகவையில் காலமானார். இசை, கூத்து நூல்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதுகையில் கானல்வரி பகுதியில் இசை, கூத்து பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன. மூவர்கோட்டை மூவர்கோட்டை தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவாரூரில் இருந்து 31.9 கிலோமீட்டர் தொலைவிலும்,மூவர்கோட்டை நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருந்து 10.5 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 277 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மூவர்கோட்டையில் வேளாண்மைத் தொழில் முதன்மையான தொழிலாக செய்யப்படுகிறது. அதற்கடுத்தாற்படி மீன் வளர்ப்பும், மீன்பிடி தொழிலும் ஆறுகள் குளங்களில் செய்யப்படுகிறன. வேளாண்மைத் தொழிலுக்கு வடவாற்று பாசனத்தையே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். அடுத்தாற்போல் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனமும் செய்யப்படுகிறது. பெருமளவில் நெற் பயிறும், ஆலைக் கரும்பும், கோடைப் பயிராக வேர்கடலையும் பயிரிடப்படுகிறது. மூவர்கோட்டையின் மேற்கில் வடவாறு ஓடுகிறது, அந்த ஆறானது தெற்கில் திரும்பி கிழக்கு நோக்கி வடுவூர் வழியாக ஓடுகிறது. இவ்வாற்றின் கிளை ஆறுகளாக இலுப்படி வாய்க்கால், செட்டிவாய்க்கால், வடிவாய்க்கால், காட்டு வாய்க்கால் என பிரிந்து மூவர்கோட்டையை வளப்படுத்துகிறது. மூவர்கோட்டையின் நடுவில் எல்.எப் குட்டை ஒன்றும், வயல் வெளியில் பெரிய குளம் ஒன்றும், பெரியகுளம் அருகில் இடுகாடும் அமைந்துள்ளது. மூவர்கோட்டையில் ஆணைமேல் அழகையனார் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த கோயில் மூவர்கோட்டை ஊர் மக்களின் மிக முக்கிய கோயிலாகும். இந்த கோயில் சித்திரை பவுர்ணமி அன்று காவடியாட்டம், பால்குடம், அன்னதானம், மொட்டைபோட்டுக்கொள்ளுதல், கலை நிகழ்ச்சிகள் என விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர்களில் வசிக்கும் மூவர்கோட்டையை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்றுகூடும் நாளாகவும் இந்த கோயில் திருவிழா அமைந்திருக்கின்றது. அய்யனார் கோயிலுக்கருகில் பிடாரி அம்மன் கோயிலும், அய்யனார் கோயில் நேர் மேற்கில் வீரனார் கோயிலும் அமைந்துள்ளது. மூவர்கோட்டையின் ஊருக்குள் மேற்கில் காத்தாயி அம்மன் கோயிலும் ஒன்றும், வடக்கில் பிள்ளையார் கோயிலும் ஒன்றும், கிழக்கில் சிவன் கோயிலும் ஒன்றும் காமாச்சி அம்மன் மேடும் அமைந்துள்ளது. தெற்கில் காத்தாயி அம்மனுக்கு புதிய கோயிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மூவர்கோட்டையின் தெற்கில் எட்டாம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியும், மேற்கில் நியாயவிலை கூட்டுறவு பண்டகசாலையும், வடவாற்றாங்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகமும், வடக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையமும், ஊரின் நடுப்பகுதியில் நூலகமும், வடுவூர் அஞ்சல் நிலையத்தின் கிளை அஞ்சலகம் ஒன்றும், அய்யா தந்தை பெரியார் சிலையும், அதன் அருகில் ஊராட்சி அலுவலகமும் அமைந்திருப்பது மூவர்கோட்டையின் சிறப்பாகும். மலைச்சிங்கம் (பேரினம்) மலைச்சிங்கங்கள் ("Puma") என்பன பூனைக்குடும்பத்தை சேர்ந்த ஒரு பாலூட்டி பேரினமாகும். மலையரிமா, "ஜாகுவாரன்டி" ஆகிய இனங்கள் இதனுள் அடங்கும். மேலும் இவை வெவ்வேறு இடங்களில் கிடைத்த தொல்லெச்சங்களின்படிக்கு "பூமா பாடோய்டஸ்" எனப்படும் பெரிய பூனையும் இதனுள் அடங்கும். கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் கிராமத்தில் இணுவில் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் மிக்க ஒரு பிள்ளையார் கோயில். உரும்பிராயில் பரத்தைப்புலம் என அழைக்கப்படும் குறிச்சியில் இக்கோயில் அமைந்துள்ளதால், இக் கோயிலை உரும்பிராய் பரத்தைப்புலக் கருணாகரப் பிள்ளையார் கோயில் எனவும் அழைப்பர். பலவித மரங்களும் அடர்ந்து சூழ்ந்து இருந்த இவ்விடத்தில் ஓர் அரச மரத்தின் கீழே ஒரு பிள்ளையார் லிங்கம் இருந்ததாகவும், தோன்றிய காலம் எது என்று தெரியாத அந்த இலிங்கத்தை வழிப்போக்கர்களும், ஊர் மக்களும் வழிபட்டு வந்தனர் என்றும் செவிவழிக் கதைகளை மேற்கோள் காட்டி அ. பஞ்சாட்சரம் கூறுகிறார். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தின் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தி இவ்வழியாகச் சென்றபோது இந்த இலிங்கத்தைக் கண்டு அதை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும், அதனால் அரசர், அங்கே செங்கல்லால் ஒரு கோயிலைக் கட்டுவித்ததாகவும் செவிவழிக் கதைகள் உள்ளனவாம். தமிழகத்தில் இருந்து வந்த கருணாகரத் தொண்டைமான் என்பவன் யாழ்ப்பாணத்தில் இருந்து உப்பு எடுத்துச் செல்வதற்காகத் தொண்டைமானாற்றை வெட்டுவித்தான் என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது இணுவிலில் தங்கியிருந்த தொண்டைமான் கருணாகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்திருக்கலாம் என்று செ. இராசநாயகம் கருதுகிறார்.. இவை தவிர, கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகரத் தொண்டைமானின் ஆட்சிக்குத் துணையாகவிருந்த கருணாகரர் என்பவரால் கட்டப்பட்டது, கருணாகர ஐயர் என்பவரால் பூசிக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தமையால் கருணாகரப்பிள்ளையார் என்ற பெயர் வந்தது போன்ற கருத்துக்களும் உண்டு. இக்கோயில் கட்டியவர் யார் என்பது குறித்தோ எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்றோ தெளிவாகக் கூறுவதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், இக்கோயிலில் கிடைத்த கல்வெட்டுக்கள் இரண்டு இதன் பழமைக்குச் சான்றாக அமைகின்றன. யாழ்ப்பாணத்துக் கோயில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இவை மட்டுமே. பெருமளவுக்குச் சிதைந்த நிலையில் காணப்படும் இந்தக் கல்வெட்டுக்களை கல்வெட்டாய்வாளரான கலாநிதி கா. இந்திரபாலா ஆய்வு செய்துள்ளார். அவர் அதனைப்பற்றிக் கூறும்போது கோயிலைக் கட்டியவரின் பெயரோ ஆண்டோ தெரியவில்லை யெனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், செ. இராசநாயகம் தனது நூலில் தந்துள்ள குறிப்புக்களையும், கல்வெட்டில் காணப்படும் பிற தகவல்களையும், எழுத்தமைதியையும் சான்றாகக் கொண்டு முதலாவது கல்வெட்டு 1567 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இந்திரபாலா கூறுகின்றார். இது, இக் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானம் ஒன்று பற்றிக் குறிப்பிடுவதால், இக் கோயில் இதற்கு முன்னரே இருந்து வந்தது வெளிப்படை. ஐரோப்பியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் இருந்த கோயில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டபோது, செங்கல்லால் கட்டப்பட்டிருந்த கருணாகரப் பிள்ளையார் கோயிலும் இடிக்கப்பட்டது. பிற்காலத்தில், கருணாகரர் என்னும் அந்தணர் ஒருவர் குழை மண்ணால் இக்கோயிலை மீளவும் கட்டி வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. நாயன்மார் நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர். இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது. நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார். காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன. நாயன்மார்களின் வரலாறுகளை ஆய்வு செய்யவும், அவற்றில் உள்ள சேர்க்கைகளையும், உண்மைகளையும் புரிந்து நோக்கவும் இவ்வாறான வகைப்பாடு உதவுகின்றன. நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார். நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர். நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள். நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள். நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன. நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும். 54-நெம்மேலி 54-நெம்மேலி (ஆங்கிலம்:54-nemmeli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இவ்வூரின் அமைவிடம் 10.67ஊ N 79.43ஊ E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் மன்னார்குடியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரின் பொருளாதாரம் முழுவதும் விவசாயத்தை சார்ந்தது. 54-நெம்மேலியில் குண்டு முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் நெம்மேலி ஊர் மக்களின் மிக முக்கிய கோயிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். அப்பொழுது காவடியாட்டம், பால்குடம், பூக்குழித் திருவிழா ,மொட்டை போட்டுக்கொள்ளுதல், கலை நிகழ்ச்சிகள் என விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர்களில் வசிக்கும் இவ்வூர் மக்கள் ஒன்றுகூடும் நாளாகவும் இந்த கோயில் திருவிழா அமைந்திருக்கின்றது. சென்ற 2014 வருடம் மற்றொரு கோயிலான பச்சை காளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது. சார்லசின் விதி சார்லசின் விதி (கனவளவு விதி என்றும் அறியப்படுகிறது) ஒரு பரிசோதனை வாயு விதி ஆகும். இது வாயுக்களை வெப்பமாக்கும் போது எவ்வாறு விரிவடைய முனைகின்றன என்பதை விளக்குகிறது. சார்லசின் விதியினைப் பற்றிய தற்காலத்தைய கூற்று: நிலையான அமுக்கத்தில் குறித்த திணிவு வாயுவின் கனவளவானது, தனிவெப்பநிலை அளவுகோல் வெப்பநிலையின் அதே காரணியினால் அதிகரிக்கும் அல்லது குறைவடையும் (அதாவது வெப்பநிலை அதிகரிப்பிற்கேற்ப வாயு விரிவடையும்). இது பின்வருமாறு எழுதப்படலாம்: இங்கு "V" என்பது வாயுவின் கனவளவு; "T" என்பது தனிவெப்பநிலை. இவ்விதியினை பின்வருமாறும் வெளிப்படுத்தலாம்: இச்சமன்பாடானது தனிவெப்பநிலை அதிகரிக்கும் போது அதற்கு நேர்விகித சமனாக வாயுவின் கனவளவும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம் ("Directorate of Film Festivals") என்பது இந்தியாவில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். இது இந்திய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த படம், பாடல், நடிப்பு, பாடுபவர், ஒலிப்பதிவு...எனப் பல பிரிவுகளில், இந்தியாவிலேயே உயர்ந்த விருதான தேசிய திரைப்பட விருதுகள் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் சர்வதேச திரைப்பட விழா, (இந்தியா) தேசிய திரைப்பட விருதுகள், இந்தியன் பனோரமா ஆகியவையாகும். விருதுகளுக்கான நடுவர் குழு உறுப்பிவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கும் இவ்வமைப்புக்கு, தன்னால் நடத்தப்படும் விழாக்களில். விருதுக்கு பரிசீலனை செய்யப்படும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதிலும் இறுதியாக விருதுக்குரியதாக வெற்றிப்படத்தைத் தீர்மானிப்பதிலோ எந்தவொரு பங்கும் கிடையாது. இந்த இயக்ககம் 1973 இல் இந்திய அரசால் அமைக்கப்பட்டு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.. இந்திய திரைப்படங்களை வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் பங்கு பெறச் செய்வதற்கும் வெளிநாட்டு திரைப்பட நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெறுவதற்குமான ஏற்பாடுகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. ஏழாவது மனிதன் ஏழாவது மனிதன், 1982 ஆம் ஆண்டு கே. ஹரிகரனின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன். நடிகர் ரகுவரன் முதலாவதாக திரையுலகுக்கு அறிமுகமான படம் இது. இத்திரைப்படத்தின் பல பாடல்கள் பாரதியாரின் பாடல்களாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை 1983 ஆம் ஆண்டு பெற்றுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி பட்டதாரி ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லத் தீர்மானிக்கிறான். அங்கு வேலை செய்யும் தொழிலாளர் நலனில் அவன் காட்டும் அக்கறை தொழிலாளர்களின் போராட்டத்தில் கொண்டுபோய் விடுகிறது. ஒரு வழக்குரைஞரின் உதவியால் அத்தொழிற்சாலையின் முதலாளிகளின் திட்டங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. இசைத்தமிழ் தமிழை இயல், இசை, கூத்து (நாடகம்) என மூன்றாகப் பகுத்து முத்தமிழ் எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ். இசைத்தமிழ் பண்ணிசைத்துப் பாடும் தமிழ். கூத்து ஆடிப் பாடும் தமிழ். தொல்காப்பியம் இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது. இயற்றமிழ்ப் பாடல்களில் தொல்காப்பியம் காட்டும் வண்ணங்களும் இசைத்தமிழே. பரிபாடல் நூலிலுள்ள பாடல்களுக்கு இசையும் இசையமைத்துத் தந்தவரும் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்குப் பண்ணிசைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோயில்களில் ‘ஓதுவார்’ எனப்படுவோர் இவற்றைப் பண்ணிசையுடன் இசைத்தமிழாகப் பாடிவருகின்றனர். அருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே தொல்காப்பியத்தில் தமிழிசை பஞ்சபாரதீயம் பஞ்சபாரதீயம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. செயிற்றியம் செயிற்றியம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. பதினாறு படலம் இசைத்தமிழ் நூல்களில் ஒன்றான பதினாறு படலம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. பரதம் (நூல்) பரதம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. சயந்தம் சயந்தம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. இது அடியார்க்கு நல்லார் காலத்திலேயே இல்லாமல் போயிற்று. இதனைக் கடல் கொண்ட தென்மதுரையில் தலைச்சங்கத்தில் இருந்த நூல் என அவர் குறிப்பிடுகிறார். முறுவல் முறுவல் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. ப. கிருட்டிணமூர்த்தி பத்திரிராசு கிருட்டிணமூர்த்தி ("Bhadriraju Krishnamurti", பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி, தெலுங்கு: భద్రిరాజు కృష్ణమూర్తి; சூன் 19, 1928 - ஆகத்து 11, 2012) புகழ்பெற்ற திராவிட மொழியியல் ஆய்வாளரும் அறிவியலாளரும் ஆவார். பெருமை மிக்க எடின்பரோ வேந்தியக் குமுகத்தின் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு இந்தியர்களுள் இவரும் ஒருவர் (2004). அமெரிக்க மொழியியல் குமுகத்தின் பெருமைய உறுப்பினராக, சுனிதக்குமார் சட்டர்ச்சிக்கு அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆய்வாளர் இவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தில், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோலு (ఒంగోలు) என்னும் ஊரில் பிறந்தார். ஐதராபாத்து நடுவண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 1986 முதல் 1993 வரை இருந்தார். ஒசுமானியா பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையை இவர் முதன்முதலாக தொடக்கி வைத்து அங்கேயே 1962 முதல் 1986 வரை பேராசிரியராக இருந்தார். இவர் இயற்றிய பெருநூலாகக் கருதப்படுவது, "திராவிட மொழிகள்" ("Dravidian Languages") என்பதாகும். இதனைக் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2003 இல் வெளியிட்டது. இவர் புகழ்பெற்ற திராவிட மொழியியல் அறிஞர் மரே எமெனோவின் மாணவராகவும் அவருடன் பணியாற்றிய உடன் ஆய்வாளராகவும் இருந்தார். கிருட்டிணமூர்த்தி தம் முதுகலைப் பட்டத்தையும் (A.M) முனைவர் பட்டத்தையும் (Ph.D) பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து முறையே 1955 இலும் 1957 இலும் பெற்றார். கிருட்டிணமூர்த்தி தான் முதன்முதலாக தற்கால ஒப்பீட்டு மொழியியல் கோட்பாட்டை முறைசார்ந்து பயன்படுத்தி திராவிட மொழிகளை ஆய்வு செய்தார் என்பர். இவருடைய "தெலுங்கு வினையடிகள்" (1961) ("Telugu Verbal Bases") என்னும் ஆக்கமே தற்கால முறைப்படி திராவிட மொழிகளின் வினை வடிவங்களை வருவித்துத் தந்தது, குறிப்பாக தெலுங்கின் நோக்கில் இருந்து, எனக் கருதப்படுகின்றது. திராவிட மொழியாகிய கோண்டு (கொண்டா) மொழியின் இலக்கணத்தை இவர் ஆய்ந்து பதிவு செய்தது, இலக்கிய எழுத்து வடிவு பெறாத திராவிட மொழிகளுள் குறிப்பிடத்தகுந்ததாகும். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் அடிப்படையான ஒலியனியல் (phonology) சொல்வடிவு, தொடரியல் கருத்துகளைப் பற்றியதாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த திராவிட மொழிகளின் ஒப்பீட்டு மொழியியல், வரலாற்று மொழியியல் ஆகிய துறைகளுக்கு அரும்பங்கு ஆற்றினார். இவர் 1955-1998 ஆகிய காலப்பகுதியில் வெளியிட்ட, இருபத்தியொரு கட்டுரைகளின் தொகுப்பாகிய "Comparative Dravidian Linguistics: Current Perspectives" என்னும் நூல், திராவிட மொழியியலில் பல கேள்விகளுக்கு விடை பகர்ந்து நின்றது. பின்னர் 2003 ஆம் ஆண்டு கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட "திராவிட மொழிகள்" (Dravidian Languages) என்னும் நூல் இவருடைய ஐம்பதாண்டு ஆய்வுகளின் பயனாக உருவாகியது. இராபர்ட்டு கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்துக்கு அடுத்து, அதனைவிட சிறந்த, தற்கால படைப்பாகச் சிலர் கருதுகின்றனர். 1960-61 ஆகிய காலப்பகுதியில் சிறிது காலம் இவர் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்தார், பின்னர் இந்தியா திரும்பியபின் ஒசுமானியா பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையைத் தொடங்கினார். தெலுங்குக் கிளை மொழிகளில் தொழில்சார் கலைச்சொற்கள் அகராதித் தொகுப்பில் இவர் ஊட்டிய ஊக்கம் பெரிது. இந்த அகராதி வரிசையில் இப்பொழுது 12 தொகுதிகள் வெளிவந்துள்ளன. கிருட்டிணமூர்த்தி ஆந்திரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு விரிவுரையாளராக இருந்தார் (1949–61); பின்னர் துணைப்பேராசிரியராக கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்கிலி) யில் இருந்தார் (1960-61); தெலுங்கு இரீடர் (Reader), சிரீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் (S. V. U).(1961–62); மொழியியல் பேராசிரியர், ஒசுமானியா பல்கலைக்கழகம் (1962–88), கலையியல் துறைத் தலைவர் (1973–76), சிண்டிக்கேட்டு உறுப்பினர் (1971–75); இயக்குநர், தென் மண்டல மையம், இந்தியக் குமுக அறிவியல் ஆய்வுக் குழுமம் (Indian Council of Social Science Research) (1978–82); துணை வேந்தர், ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் (1986–93), பெருமையப் பேராசிரியர், ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் 1993-99; ஆந்திரா பல்கலைக்கழகம் 2003-2012. கிருட்டிணமூர்த்தி பல மேற்கு நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கின்றார். செங்குறுமீன் செங்குறுமீன் "(red dwarf)" என்பது சிறிய, குளிர்ந்த K அல்லது M கதிர்நிரல் அமைந்த முதன்மை வரிசை விண்மீனாகும். இதன் பொருண்மை 0.075 முதல் 0.50 பகுதி சூரியப் பொருண்மையுடன் அமைகிறது. வெப்பநிலை 4,000 பாகை K அளவினும் குறைவாக அமைகிறது. இவை பால்வழியில் சூரியனுக்கு அருகே பரவலாக பரவியுள்ளவையாகும். இவை ஒளிர்மைகுன்றியுள்ளதால் இவற்றை எளிதாகக் காணமுடிவதில்லை. வெற்றுக்கண்ணால் இவற்றில் ஒன்றைக்கூட புவியில் இருந்து பார்க்கமுடிவதில்லை. பிராக்சிமா செண்டாரி சூரியனுக்கு மிக அருகில் உள்ள செங்குறுமீன் ஆகும். இது M5 வகையினதாகும். இதன் பொலிவு 11.05 . அடுத்து, இதேபோல 20 விண்மீன்கள் சூரியனுக்கு நெருக்கமாக உள்ளன. இவற்றுக்கும் அடுத்தபடியாக, மேலும் 30 விண்மீன்கள் சூரியனுக்கு நெருக்கமாக உள்ளன சில மதிப்பீடுகளின்படி, நம் பால்வழியில் இவை முக்கால் பகுதியாக அமைகின்றன. விண்மீன் படிமங்கள் 0.35 சூரியப் பொருண்மை உள்ள செங்குறுமீன்கள் முழுமையாக வெப்பச் சுழற்சி கொண்டவை எனக் காட்டுகின்றன. எனவே நீரகத்தின் வெப்ப அணுக்கருப் இணைவால் உருவாகும் எல்லியம் வெப்பச் சுழற்சியால் விண்மீனின் முழுவதிலும் தொடர்ந்து கலந்திடுவதால் அதன் நடுவில் அகடேதும் உருவாவது தவிர்க்கப்படுகிறது.இதனால் இவை முதுவாக வளர்கின்றன. எப்போதும் நிலையான பொலிவையும் கதிர்நிரலையும் பெற்றுள்ளன. கோட்பாட்டளவில், இவை தம் எரிபொருள் தீரும்வரை சில டிரில்லியன் ஆண்டுகள் வரை நீடித்து வாழவல்லன. ஒப்பீட்டளவில் புடவியின் அகவை சிறிதாக அமைவதால், மிக முழுவளர்ச்சி பெற்ற கட்டச் செங்குறுமீன்கள் இப்போது நிலவவில்லை. செங்குறுமீன்கள் மிக குறைந்த பொருண்மை உள்ளவை.இதனால் அதன் அகட்டில் குறைந்த வெப்பநிலையே நிலவும். எனவே முன்மி-முன்மி தொடர்வினையால் நிகழும் நீரகத்தில் இருந்து எல்லியம் உருவாகும் அணுப்பிணைப்பு ஆற்றல்வீதம் மிகவும் குறைவான வேகத்திலேயே நிகழும். எனவே இவை அருகலான ஒளியையே உமிழும். சிலவேளைகளில் இது சூரிய ஆற்றலில் 10,000 இல் ஒரு பகுதியளவுக்குக் குறையும். மிகப்பெரிய செங்குறுமீன்களான HD 179930, HIP 12961, Lacaille 8760) போன்றவைகூட சூரிய ஒளிர்மையில் 10% ஒளிர்மையே பெற்றுள்ளன. பொதுவாக 0.35 சூரியப் பொருண்மையினும் குறைந்த பொருண்மையுள்ள செங்குறுமீன் ஆற்றலை அகட்டில் இருந்து மேற்பரப்புக்கு வெப்பச் சுழற்சியால் கடத்துகின்றன. ஒப்பீட்டளவில் வெ ப்பநிலையை விட உயர் அடர்த்தி வாய்ந்த உட்பகுதியின் ஒளியூடுறுவாமையால் வெப்பச் சுழற்சி ஏற்படுகிறது. எனவே கதிர்வீச்சால் நிகழும் ஆற்றல் கடத்தல் குறைவதால், வெப்பச் சுழற்சி அகட்டில் இருந்து மேற்பரப்புக்கு ஆற்றல் கடத்தும் முதன்மை நிகழ்வாகிறது.இப்பொருண்மை அளவுள்ள செங்குறுமீன்களின் அகட்டின் ஒருபகுதியில் வெப்பச் சுழற்சி நிகழாது. சூரியனைப் போன்ற பெரிய விண்மீன்களோடு ஒப்பிடும்போது, பிந்திய கட்டச் செங்குறுமீன்கள் முற்றிலும் வெப்பச் சுழற்சி கொண்டுள்ளதால் அதன் அகட்டில் எல்லியம் திரள்வதில்லை . இவை தம் முதன்மை வரிசையை விட்டு வெளியேறுவதற்குள் பேரளவு நீரகத்தை எரிக்கலாம்.இதனால் இவற்றின் வாழ்நாள் புடவியின் அகவையை விட கூடுதலாக அமைகிறது.மேலும் 0.80 சூரியப் பொருண்மையை விடக் குறைந்த பொருண்மயுள்ள விண்மீன்கள் முதன்மை வரிசையில் இருந்து வெளியேற நேரமே கிடைப்பதில்லை. இவற்றின் பொருண்மை குறையும்போது வாழ்நாள் கூடுகிறது. சூரியப் பொருண்மைக்கும் இவற்றின் பொருண்மைக்கும் உள்ள விகிதத்தின் நாற்படியாக இவற்றின் வாழ்நாள் மாறுவதால் இவை சூரியனின் வாழ்நாளான 10 பில்லியன் ஆண்டுகளை விடக் கூடுதலாகி விடுகிறது. எனவே 0.10 சூரியப் பொருண்மைகொண்ட செங்குறுமீன் 10 டிரில்லியன் ஆண்டுகள் வரை வாழும் வாய்ப்புள்ளது. செங்குறுமீனின் நீரகம் எரிய எரிய, அணுப்பிணைப்பின் வீதமும் குறையும். எனவே அதன் அகடு சுருங்கி ஈர்ப்பலைகளை வெளியிடுவ்தால் அளவுச்சுருக்கம் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும். இவ்வெப்பம் விண்மீன் முழுவத்ற்கும் வெப்பச் சுழற்சியால் கடத்தப்படும். கணினி ஆய்வுகளின்படி செங்குறுமீனாக அவை சூரியப் பொருண்மையில் 9.25 பகுதி பொருண்மை கொண்டனவாக அமையவேண்டும்; இதைவிட குறைந்த பொருண்மையுள்ளவை அகவை முதிரும்போது அவற்றின் மேற்பரப்பு வெப்பநிலை கூடி ஒளிர்மையில் நீலக் குறுமீன் (செங்குறுமீன் கட்டம்) ஆகிறது. மேலும் கடைசியாக வெண் குறுமீன் ஆகிவிடும். விண்மீனின் பொருண்மை குறையும்போது அதன் படிமலர்ச்சிக் காலம் கூடும்; எடுத்துகாட்டாக, 0.16 பங்கு சூரியப் பொருண்மை கொண்ட செங்குறளி, அருகில் உள்ள பர்னார்டு விண்மீன் நிகர்த்த செங்குறுமீன் முதன்மை வரிசையில் 2.5 டிரில்லியன் ஆண்டுகளும் பின்னர் நீலக் குறளியாக ஐந்து பில்லியன் ஆண்டுகளும் நிலவும். நீலக் குறுமீனின் பொலிவு சூரியனின் பொலிவில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 6,500 முதல் 8,500 பாகை கெல்வின் அமையும். கூடுதல் பொருண்மையுள்ள விண்மீன்கள் முதன்மை வரிசையை விட்டு விலகிய பிறகும் குறைந்த பொருண்மைகொண்ட செங்குறுமீன்கள் முதன்மை வரிசையிலேயே இருப்பதால் விண்மீன் கொத்துகளின் அகவை, விண்மீன்கள் முதன்மை வரிசையை விட்டு அகலும் பொருண்மையை வைத்தேமதிப்பிடப் படுகின்றன. இது விண்மீன் கொத்துகளின் அகவையை மிகவும் குறைவாக்க் கணிக்கிறது. எனவே புடவிய்ன் அகவையும் குறைகிறது. மேலும் பால்வழிக்குள்ளான கட்டமைப்புகளின் கால அளவுகோலையும், அதவது பால்வழிக் கோளகம், பால்வழி வளிம வட்டம், பால்வழி வட்டு ஆகியவற்றின் கால அளவுகோலையும் குறைக்கிறது. பொன்மத் தன்மையுள்ள தனிமங்கள் கொண்ட செங்குறுமீன்கள் நிலவாமை 2009 இல் இருந்து இதுவரை தீர்க்கபடவில்லை என்பது மருமமாகவே இதுவரை உள்ளது. (வானியலில் பொன்மத்தன்மை நீரகம், எல்லியம் தவிர்த்த பிற உயர்தனிமங்களைக் குறிப்பிடும்.) பெருவெடிப்பு அண்டப் படிமத்தின்படி, முதல் தலைமுறை விண்மீன்கள் நீரகமும் எல்லியமும் ம்ட்டுமே பெற்றிருக்கும். வேண்டுமால் அவற்றில் சற்றே கல்லியம் அருகலாக நிலவலாம். இவை செங்குறுமீன்களையும் உள்ளடக்கினால் அவை இன்று கட்புலனாக வேண்டும். ஆனால், இதுவரை ஏதும் இனங்காணப்படவில்லை. பொன்மத்தன்மையற்ற விண்மீன்களே பேரளவில் உருவாகி அவை வேகமாக எரிந்து எச்சமாக உயர்தனிமங்களுடன் செங்குறுமீன்களாக எஞ்சலாம் என்பதே பெரிதும்வ்ரும்பும் விளக்கம் ஆகும். மாற்று விளக்கங்கள், சுழி பொன்மத்தன்மை செங்குறுமீன்கள் மங்கலானவை. எனவே அவை எண்ணிக்கையில் சிலவாகவே அமையலாம். இவையும் உடுக்கணப் படிமலர்ச்சிப் படிமங்களுக்கு முரண்பட்டு அமைவதால் அவை உருவாக வாய்ப்பே இல்லாமலும் போகலாம் எனத் தரப்படுகின்றன பல செங்குறுமீன்களைச் சுற்றிப் புறவெளிக்கோள்கள் வட்டணைகளில் வலம் வருகின்றன என்றாலும் வியாழன் அளவு பெரிய கோள்கள் அருகியே காணப்படுகின்றன. பல்வேறுவகை விண்மின்களின் டாப்ளர் அளக்கைகள் வழியாக சூரியனைப் பொன்று இரட்டை மடங்கு பொருண்மைகொண்ட விண்மீன்காலில் ஆறில் ஒன்றில் மட்டுமே ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வியாழன் அளவு கோள்கள் அமைந்துள்ளன. சூரியன் நிகர்த்த கோள்களில் 16 இல் ஒன்றிலும் செங்குறுமீன்களில் 50 இல் ஒன்றிலும் இந்நிலைமை அமைகிறது. ஆனால் செங்குறுமீன்களின் நுண்வில்லை முறை அளக்கைகளில் நெப்டியூன் நிகர்த்த பொருண்மையுள்ள கோள்கள் மூன்றில் ஒன்றில் காணப்படுகின்றன. HARPS வழி நோஈடுகளில் இருந்து செங்குறுமீன்களில் 40% அளவு விண்மீன்களில் மீப்புவி வகை கோள்கள் வாழ்தவு மண்டலத்தில் சுற்றிவருவது அறியப்பட்டுள்ளது. இவற்றின் மேற்பரப்பில் நீர்ம நிலைத் தண்ணீர் நிலவும் வாய்ப்புள்ளது. கிளீசு581 எனும் செங்குறுமீனில் 4 முதல் 6 வரையிலான புறக்கோள்கள் சுற்றிவருதல் 2000 முதல் 2010 வரையிலான கால இடைவெளியில் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோள் நெப்டியூன் அளவு பொருண்மையும் அதாவது, புவியைப்போல 16 மடங்கு பொருண்மையும்கொண்டுள்ளது|link=y}}).இது தனது விண்மீனில் இருந்து 6 மில்லியன் கி.மீ தொலைவில் அதாவது, 0.4 வானியல் அலகு தொலைவில் சுற்றிவருகிறது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 150 பாகை செல்சியசு ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் இது மங்கலான பொலிவோடே அமைகிறது. மேலும் 2006 இல் 5.5 புவிப்பொருண்மைகொண்ட இதைவிடச் சிறிய புறக்கோள் ஓகிள்-2005-BLG-390L செங்குறுமீனைச் சுற்றி வருதல் கண்டறியப்பட்டுள்ளது; இது தன் விண்மீனில் இருந்து 390 மில்லியன் கி.மீ தொலைவில் அதாவது, 2.6 வானியல் அலகு தொலைவில் சுற்றிவருகிறது இதன் மேற்பரப்பு வெப்பநிலை −220°C (56 K) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கிளிசு 581 விண்மீனைச் சுற்றிவரும் கிளீசு 581 c எனும் புறவெளிக்கோள் 2007 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புவியைப் போல 5.36 மடங்கு சிறுமப் பொருண்மை கொண்டதாக இதன் கண்டுபிடிப்பாளர்களான இசுடீபன் உத்ரி குழுவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.இதுவே முதன்மை வரிசையில் நிலவும் விண்மீனினைச் சுற்றிவரும் முதல் மிகச் சிறிய புறச்சூரியக் கோளாகும் . பின்னர் கிளீசு 581 d எனும் வாழ்தகவுள்ள கோள் கண்டறியப்பட்டுள்ளது. (மேலும் சிறிய கோள்கள் PSR B1257+12 எனும் ஒரு நொதுமி விண்மீனைச் சுற்றிவருகின்றன.) இதன் ஆரம் புவியைப் போல 1.5 மடங்காகும் என்று இதன் கண்டுபிடிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கிளீசு 581 c, கிளீசு d ஆகிய கோள்கள் தம் விண்மீனின் வாழ்தகவு மண்டலத்திலேயே அமைந்துள்ளன. இவையே இதுவரை கண்டறியப்பட்டுள்ள வாழ்தகவு மண்டலத்தில் உள்ள புறக்கோள்கள் ஆகும். கிளீசு 581 g, 2010 இல் கண்டறியப்பட்டுள்ளது இது வாழ்தகவு மண்டலத்தில் வட்ட்த்துக்கு அணுக்கமான வட்டணையில் சுற்றிவருகிறது. என்றாலும் இந்தக் கோளின் நிலவல் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. செங்குறுமீன்களின் கோளமைப்புகளின் வாழ்தகவு வாய்ப்பு விவாதத்தில் உள்ளது. இவை பேரெண்ணிக்கையில் இருந்தாலும் நீண்ட வாழ்நாளைப் பெற்றிருந்தாலும், இவற்றில் உயிரினம் வாழத்தகும் வாய்ப்பு பல காரணிகளால் அரிதாகிறது. முதலாவதாக, வாழ்தகவு மண்டலக் கோள்கள் தம் தாய்விண்மீனுக்கு மிக அருகில் அமைவதால் அவை ஓங்கலான ஓதவிசையால் ஒரே புறமாக விண்மீனை நோக்கியுள்ளபடி கட்டிப் பிடிக்கப்படும். எனவே கோளின் ஒருபாதி பகலாகவும் மறுபாதி இரவாகவும் எப்போதும் அமையும். எனவே இருபக்கங்களுக்கும் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் பேரளவாக இருக்கும். இந்நிலைமை புவியில் உயிர்தோன்றிப் படிமலர்ந்து வாழ்வதைப் போல அங்கு நிகழ்தலை அரிதாக்கும்.. இத்தகைய கோள்களில் வளிமண்டல நிலவலிலும் பல சிக்கல்கள் உள்ளன: தொடர் இரவுப் பகுதி அவற்றின் வளிமண்டல வளிமங்களை உறையவைக்கும். தொடர் பகல் பகுதி கட்டாந்தரை போல உலர்ந்து விடும். மாறாக, அண்மைக் கோட்பாடுகள் தடித்த வளிமண்டலமே கடலோ நிலவும்போது அது கோளைச் சுற்றி வெப்பத்தைக் கடத்திப் பரவவிடும் என முன்வைக்கின்றன. மேலும் அதைச் சுற்றிவரும் நிலா அமைந்தால் அவ்விடம் வாழ்தகவுடையதாக இருக்க வாய்ப்புண்டு. இது கோளுடன் கட்டுண்டு சுற்றுவதால் கோளின் ஓதவிசைக் கட்டுறுதலை புறந்தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நிலா அதைச் சுற்றிவருவதால் அந்தக் கோளில் இரவு பகல் சுழற்சி ஏற்பட்டு அதனால் கோள்முழுவதிலும் வெப்பம் பரவிவிடும் எனவும் கூறப்படுகிறது. செங்குறுமீன்கள் தம் கதிர்வீச்சை அகச்சிவப்புக் கதிரொளியாகவே வெளியிடுகின்றன. ஆனால் புவி நிலைத்திணைகள் (தாவரங்கள்) கட்புலனாகும் கதிர்நிரல் சார்ந்த ஒளிப்பகுதியையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. மேலும் இவை புற ஊதாக் கதிர் ஒளியை வெளியிடுவதில்லை. உயிர் நிலைத்து வாழ இப்பகுதி ஒளி தேவைப்படும்போது இதுவும் ஒரு சிக்கலாகும். மேலும் உடுக்கண ஆற்றல் வெளியீட்டின் வேறுபடுந்திறமும் உயிர் உருவாக்கத்திற்கு எதிர்நிலை தாக்கங்களை விளைவிக்கலாம். அதோடு இவை கரும்புள்ளிகளால் கவிந்துள்ளதால் 40% கதிர்வீச்சை ஒரேநேரத்தில் ஒரு மாதம்வரை கூட மறைத்துவிடும் வாய்ப்புள்ளது. மாறாக, இவற்றில் சுடர்தெறிப்பு வகைச் செங்குறுமீன்கள் சில மணித்துளிகளிலேயே இருமடங்கு பொலிவார்ந்த கதிர்வீச்சை உமிழவல்லனவாக அமைகின்றன. எனவே இக்கதிர்வீச்சு வேறுபாடும் கூட செங்குறுமீன் அருகில் உள்ள கோளில் உயிர்தோன்றி நிலைக்க குந்தகமாகி விடலாம். பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கிபோர் பாசுரிஎன்பார் இவற்றின் விண்மீன் சுடர்தெறிப்புகள் நடுவிலும் செங்குறுமீன் அருகில் உள்ள கோள்களில் வளிமண்டலம் நிலவ வாய்ப்புண்டு என்கிறார். என்றாலும் அண்மை ஆய்வுகள் இவ்வகை விண்மீன்களில் தொடர்ந்த உயர் ஆற்றல் சுடர்தெறிப்புகளும் மீஉயர் காந்தப் புலங்களும் அமையப் பெறுவதால் உயிர்வாழ்தகவு வாய்ப்பைக் குறைத்துவிடுவதாக அறிவிக்கின்றன. ஆனால் இந்நிலை கருதப்படும் குறிப்பிட்ட விண்மீனைச் சார்ந்ததா அல்லது இவ்வகை விண்மீன்கள் அனைத்துக்கும் பொதுவாகப் பொருந்துவதா என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டியதாகவே உள்ளது. M-வகை விண்மீன்களின் கதிர்நிரல் செந்தரம் மாறிவந்தாலும் 1990 களில் நிலையானது. இதற்கான காரணம் மிக அருகில் உள்ள M வகைக் குறுமீன்களின் பொலிவும் மங்கலாக இருப்பதே ஆகும். இடைநிலை, பிந்தைய M வகைக் குறுமீன்கள் மட்டுமே கடந்த பத்தாண்டுகளில் ஆய்வில் கருதப்பட்டன. இந்நிலை வானியல் நுட்பங்களின் வளர்ச்சியால் அதாவது, ஒளிப்பட நுட்பங்களில் இருந்து மின்னூட்டப் பிணிப்பு கருவிகள் ஊடாக அகச்சிவப்புக் கதிர் அணிகள் வரையிலான வளர்ச்சியால் கட்டுப்படுத்தப் பட்டதாலேயாகும். திருத்திய யெர்க்கேசு வான்வரைபடம் (Johnson & Morgan 1953) 2 M-வகை கதிர்நிரல் செந்தர விண்மீன்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது: HD 147379 (M0 V) and HD 95735/இலாலண்டே 21185 (M2 V). பிந்தைய செந்தர பெருந்தொகுப்புகளில் வகைபாட்டு வல்லுனர்களால் HD 147379 செந்தர வகையில் கருதப்பட்டாலும், இலாலண்டே 21185மட்டுமே இன்னமும் M2 V வகைக்கான முதன்மையான செந்தரமாகக் கொள்ளப்படுகிறது. இராபர்ட் கேரிசன் M குறுமீன்களுக்கு செந்தரமெதையும் சுட்டுவதில்லை; ஆனால் இலாலண்டே 21185 மடுமே M2 V வகைக்கான செந்தரமாக பல தொகுப்புகளிலும் சுட்டப்படுகிறது. மார்கனும் கீனானும் 1973 இல் மீள்பார்வையிட்ட மார்கன் - கீனான் வகைபாட்டில் M வகைக் குறுமீன்களுக்கான செந்தரங்கள் தரப்படவில்லை. செங்குறுமீன்களுக்கான செந்தரங்களை இவர்கள் 1979 களின் இடைப்பகுதியிலேயே வெளியிட்டனர்.(1976). போயெழ்சாரும் இவற்றுக்கான செந்தரங்களை வெளியிட்டார் (1976). ஆனாலும் இச்செந்தரங்களுக்கிடையில் ஒற்றுமை எதும் நிலவவில்லை. பின்னர் 1980 களில் மேலும் குளிர்வான விண்மீன்கள் இனங்கணப்பட்டுள்ளன. எனவே M வகைக் குறுமீன்களின் செந்தரங்களைத் திருத்தப்படவேண்டிய தேவை நிலவுவது தெளிவாகிறது. Building primarily upon the Boeshaar standards, a group at Steward Observatory (Kirkpatrick, Henry, & McCarthy 1991) filled in the spectral sequence from K5 V to M9 V. It is these M type dwarf standard stars which have largely survived intact as the main standards to the modern day. There have been negligible changes in the M dwarf spectral sequence since 1991.கூடுதல் M வகைக் குறுமீன்களின் செந்தரங்கள் 2002 இல் என்றி குழுவினரால் த்குக்கப்பட்டுள்ளது. அண்மையில் டி. கிர்க்பாட்ரிக் M வகைக் குறுமீன் விண்மீன்களின் வகைபாட்டையும் செந்தர விண்மின்களையும் கிரே, கார்பல்லி ஆகியோரின் 2009 தனிவரைவு நூலில் மீள்பார்வையிட்டுள்ளார். M-வகைக் குறுமீனின் கதிர்நிரல் செந்தரங்களாவன: GJ 270 (M0 V), GJ 229A (M1 V), இலாலண்டே 21185 (M2 V), கிளீசு 581 (M3 V), GJ 402 (M4 V), GJ 51 (M5 V), வுல்ஃப் 359 (M6 V), வான் பீசுபுரோயெக் 8 (M7 V), VB 10 (M8 V), LHS 2924 (M9 V). முகலிங்க மூர்த்தி முகலிங்க மூர்த்தி என்பது 64 சிவ திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை "முகலிங்கேஸ்வரர்" என்று அழைப்பர். லிங்கத்திருமேனியில் சிவ முகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம். முகலிங்க மூர்த்தியில் ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என நான்கு வகைபாடு உண்டு. இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களை கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களை கொண்டது சுரேட்டியம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 )சர்வசம் - இவ்வடிவ வகையில் ஒரு முகம், இரு முகம், மும் முகம், நான் முகம், ஐ முகம் என்று ஐந்து உள் வகைகள் உள்ளன. திருவக்கரை, கச்சபேஸ்வரர், கொட்டையூர் என்று மூன்று இடங்களில் இந்த திருமூர்த்தியை தரிசிக்கலாம். கால்குலேட்டர் (விண்டோசு) கால்குலேட்டர் அல்லது விண்டோசுக் கால்குலேட்டர் ("Calculator") என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசு இயங்குதளப் பதிப்புகள் அனைத்திலும் உள்ளடக்கப்பட்ட கணித்தல் மென்பொருள் ஆகும். பெரும்பாலான விண்டோசு முறைமைகளில் calc என்ற கட்டளையின் மூலம் கால்குலேட்டரைச் செயற்படுத்தலாம். கால்குலேட்டரானது முதன்முதலில் விண்டோசு 1.0உடன் எளிய எண்கணிதக் கணிப்பானாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், விண்டோசு 3.0இல் கால்குலேட்டரில் அறிவியலியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு 3.0இலும் விண்டோசு 3.1எக்சிலும் கால்குலேட்டரானது வெள்ளைப் பின்னணியுடன் ஈரளவு ஆளிகளையும் கொண்ட இடைமுகத்தைக் கொண்டிருந்தது. பின்னர், விண்டோசு 2000இல் இலக்கங்களைக் குழுவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு 7இல் கால்குலேட்டரில் நிரலாக்குநர், புள்ளிவிவரங்கள், அலகு மாற்றம், தேதி கணக்கீடு, பணித்தாள்கள் ஆகிய முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், நிரலாக்குநரைத் தவிர்ந்த எந்தவொரு எந்தவொரு முறையிலும் கணித்தல் வரலாற்றைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது. மேலும் பல்தொடுகை முறையையும் விண்டோசு 7இலிருந்து கால்குலேட்டர் ஏற்கின்றது. இக்கால்குலேட்டரில் நிலையான முறையானது எளிய கணிப்பானைப் போல் 6 * 4 + 12 / 4 - 4 * 5 என்று உள்ளிட்டால் 25 என்னும் பெறுமானத்தையே வருவிளைவாகத் தருகின்றது. ஆனால், அறிவியலியல் முறையோ அறிவியலியற்கணிப்பானைப் போன்று, 6 * 4 + 12 / 4 - 4 * 5 என்று உள்ளிட்டால் 7 என்னும் பெறுமானத்தையே வருவிளைவாகத் தருகின்றது. பெயின்ட் பெயின்ட் அல்லது மைக்குரோசாபுட்டு பெயின்ட் அல்லது எம். எசு. பெயின்ட் அல்லது பெயிண்டுபிரசு ("Paint" அல்லது "Microsoft Paint" அல்லது "MS Paint" அல்லது "Paintbrush") என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசின் அனைத்துப் பதிப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள எளிய வரைகலைப் பூச்சு மென்பொருள் ஆகும். விண்டோசு இருமி வரைபடம் (ஒரு நிற இருமி வரைபடம், 16 நிற இருமி வரைபடம், 256 நிற இருமி வரைபடம், 24-இருமி இருமி வரைபடம் ஆகிய சேமிப்பு வகைகளில் .bmp, .dib ஆகிய நீட்சிகளுடன்), ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம் (பெயின்ட் மென்பொருளில் அசைவூட்டம், ஒளி புகாநிலை ஆகியவை இன்றியே வரைகலைப் பரிமாற்ற வடிவத்தைத் திறக்கவோ சேமிக்கவோ முடியும். அத்துடன், பெயின்ட் மென்பொருளின் விண்டோசு 98 பதிப்பு, விண்டோசு 95 நிகழ்நிலைப்படுத்தற்பதிப்பு, விண்டோசு என். தி. 4.0 பதிப்பு ஆகியவை கூட வரைகலைப் பரிமாற்ற வடிவத்தை ஏற்பதில்லை.), பெயரத்தகு வலையமைப்பு வரைகலை (ஒளிக்கசிவு அலைவரிசையின்றி), இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு (பல்பக்க ஏற்பின்றி) ஆகிய சேமிப்பு வகைகளில் அமைந்த கோப்புகளைப் பெயின்ட் திறக்கவுஞ்சேமிக்கவுஞ்செய்யும். பெயின்ட் மென்பொருளை நிற முறையிலோ இரு நிறக் கறுப்பு வெள்ளை முறையிலோ பயன்படுத்த முடியும். இம்மென்பொருளில் சாம்பலளவீட்டு முறையில்லை. பெயின்ட் மென்பொருள், அதனுடைய எளிமை காரணமாக, விரைவாக விண்டோசின் தொடக்கப் பதிப்புகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் செயலிகளுள் ஒன்றாக இடம்பெற்று, கணினியொன்றில் வரைவதைப் பலருக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. விண்டோசின் முதற்பதிப்பான விண்டோசு 1.0இலேயே பெயின்ட் மென்பொருளின் முதற்பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அது சீசாவுட்டுக் கூட்டு நிறுவனத்தின் பி. சி. பெயிண்டுபிரசு மென்பொருளின் உரிமம் பெற்ற பதிப்பாக இருந்தது. பின்னர், விண்டோசு 3.0இல் இம்மென்பொருளின் பெயர் பெயிண்டுபிரசு என்று மாற்றப்பட்டாலும் விண்டோசு 95இலும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் மறுபடியும் இதனுடைய பெயர் பெயின்ட் என்றே பயன்படுத்தப்படுகின்றது. மேற்கூறிய பதிப்பு மைக்குரோசாபுட்டு பெயின்ட் கோப்புகளையும் இருமி வரைபடக் கோப்புகளையும் மட்டுமே ஏற்றது. விண்டோசு 95இல் பெயின்ட் மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு எக்கு. பி. வரை அப்பதிப்பின் படவுருக்களும் நிறத்தட்டுமே பயன்படுத்தப்பட்டன. விண்டோசு 95இலும் விண்டோசு என். தி. 4.0இலும் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் பதிப்பில் Colors எனும் பட்டியில் Save colors, Get colors ஆகிய தெரிவுகளைப் பயன்படுத்தி நிறத்தட்டுக் கோப்புகளைச் (.pal) சேமிக்கவோ நிறங்களின் தனிப்பயன் தொகுதியை ஏற்றவோ கூடியதாகவிருந்தது. படிமங்களின் நிற ஆழம் படவணுவுக்கு 16 இருமிகளாகவோ உயர்நிறமாகவோ (64 கிலோ நிறங்கள்) இருந்தால் மட்டுமே இத்தெரிவுகளைப் பயன்படுத்தக் கூடியதாகவிருந்தது. விண்டோசு 98, விண்டோசு 2000, விண்டோசு மில்லேனியம் ஆகிய இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் மைக்குரோசாபுட்டு ஆபிசு அல்லது மைக்குரோசாபுட்டு உவோட்டோடிரா போன்ற இன்னொரு மைக்குரோசாபுட்டுச் செயலியால் தேவையான மைக்குரோசாபுட்டு வரைகலை வடிகட்டிகள் நிறுவப்பட்டிருந்த நிலையிலே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளிலே கோப்புகளைச் சேமிக்கக்கூடியதாகவிருந்தது. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு மில்லேனியம் (விண்டோசு 2000 பதிப்பு விண்டோசு மில்லேனியத்திற்கு முதலே வெளியிடப்பட்டது.) பதிப்பிலிருந்து பெரிய படிமங்கள் திறக்கப்பட்டாலோ ஒட்டப்பட்டாலோ பயனரைக் கேட்காமலேயே வடிவமைக்கும் திரையின் அளவு தானியங்கு முறையில் பெரிதாகும் வசதி சேர்க்கப்பட்டது. விண்டோசு எக்கு. பி. இயங்குதளத்திலும் அதற்குப் பிற்பட்ட விண்டோசு இயங்குதளங்களிலும் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் பதிப்புகள் வரைகலைக் கருவி இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், பெயின்ட் மென்பொருளிலேயே இன்னுங்கூடிய வரைகலை வடிகட்டிகளை வேண்டாமல் ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு, பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளில் படிமங்களைச் சேமிக்க முடிகிறது. மேலும் படிம வருடியிலிருந்தோ இலக்க முறைப் படக்கருவியிலிருந்தோ படிமங்களை உள்ளிடும் வசதியும் பெயின்ட் மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெயின்ட் மென்பொருளின் வரைகலைக் கருவி இடைமுகப் பதிப்பால் 24-இருமி ஆழமுள்ள படிமங்களையே கையாள முடியுமென்பதால் ஒளிக்கசிவு அலைவரிசை ஒளிபுகாநிலைக்கான ஏற்பு இன்னும் வழங்கப்படவில்லை. விண்டோசு விசிட்டாவில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் கருவிப் பட்டைப் படவுருக்களும் நிறத்தட்டும் மாற்றப்பட்டன. அத்துடன், 10 தடவைகள் வரையில் செயல்தவிர்த்தற்செயன்முறையையும் செய்யும் வசதி வழங்கப்பட்டதுடன், நுனிவெட்டுதல் வசதி, பெரிதாக்கும் வழுக்கி ஆகிய வசதிகளும் இணைக்கப்பட்டன. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு விசிட்டாப் பதிப்பு இயல்பாகவே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு வடிவமைப்பில் படிமங்களைச் சேமித்தது. அத்துடன் அப்பதிப்பிற்பயன்படுத்தப்படும் இழப்புச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வசதியைத் தரப்படாததால் படிமத்தின் தரம் நயநுணுக்கமாகக் குறையும் வாய்ப்பும் உள்ளது. விண்டோசு 7இல் பெயின்ட் மென்பொருளின் இடைமுகம் ஆபிசு 2010 பாணியிலமைந்த நாடா வரைகலைப் பயனர் இடைமுகமாக மாற்றப்பட்டது. அத்துடன், மேலும் இயல்பான ஓவியத்தைத் தருவதற்காகப் பெயின்ட் கருவிகளில் பல்வேறு சாயல்களில் வேறுபட்ட ஒளிபுகாநிலைகளைக் கொண்ட பல்வகைப்பட்ட கலைநயத் தூரிகைகளும் இணைக்கப்பட்டுள்ளன. பெயின்ட் மென்பொருளின் இப்பதிப்பில் உண்மைநிலையை மேம்படுத்துவதற்காக, எண்ணெய்த் தூரிகையும் நீர்நிறத் தூரிகையும் பயனர் மீண்டும் ஒரு முறை சொடுக்கும் வரை சிறிது தூரத்துக்கே வரையும் தன்மை கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன (ஓவியத் தூரிகையில் நிறப்பூச்சு முடிந்ததாக ஒரு மாய உணர்ச்சியை இது உருவாக்குகின்றது.). அத்துடன், வேறொரு கருவி தெரிவு செய்யப்பட்டு, வரைகலை பரவப்படும் வரையில் தன்விருப்பமாக மறு அளவிடக்கூடிய வடிவங்களையும் கொண்டுள்ளது. இப்பதிப்பில் ஒளிபுகா பெயரத்தகு வலையமைப்பு வரைகலை, படவுரு ஆகிய கோப்பு வடிவங்களைத் திறக்கக்கூடியதாக (மேற்கூறிய வடிவங்களிற்சேமிக்க முடியாது.) உள்ளதுடன், இப்பதிப்பு அவற்றைப் பெயரத்தகு வலையமைப்பு வரைகலை வடிவமாக இயல்பு நிலையிற்சேமிக்கிறது. ஒரு வடிவத்தை வரைந்த பின்னர், அதனைப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்குவதற்கான தெரிவும் விண்டோசு 7இன் பெயின்ட் மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் குறிப்பிட்ட உரையைக் காட்டுவதற்குப் போதிய இடமில்லாத உரைப் பெட்டிகளினுள்ளும் பெரிய உரையை ஒட்ட முடிகின்றது. தேவைப்பட்டால் உரைக்குப் பொருத்தமான அளவில் உரைப் பெட்டியைப் பெரிதாக்குவதன் மூலமோ மறு அளவிடுவதன் மூலமோ உரைப் பெட்டியினுள் உரையைப் பொருத்த முடியும். ஆனால், விண்டோசு 7இற்கு முந்தைய பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் மென்பொருட்களோ பயனரொருவர் உரைப் பெட்டியினுளுள்ள இடத்தை விடக் கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளும் உரையை ஒட்ட முயன்றால் பிழைச் செய்தியொன்றைக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய பதிப்புகளில் 100%இலும் கூடுதலாகக் காட்சியைப் பெரிதாக்கியவுடன் சாளரத்தை உருட்ட முடியாமல் நீண்ட காலமாக இருந்து வந்த பாதிப்பை விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பு ஓரளவு சரிசெய்திருக்கின்றது. ஆனாலும் பெருப்பித்த காட்சியில் உரையை உள்ளிடும்போது பெருப்பித்த காட்சிக்கு அப்பாலுள்ள பகுதிக்குச் சுட்டி மூலமோ விசைப்பலகை மூலமோ திரையையோ உரையையோ நகர்த்த முடியாது. ஏனெனில், அப்போது உரைச் சாளரம் தொகுத்தல் முறையில் உள்ளதால் உருள்பட்டிகள் செயலிழந்திருக்கும். விண்டோசு விசிட்டாவின் பெயின்ட் பதிப்பு அதற்கு முந்தைய பதிப்புகளைப் பெரிதும் ஒத்திருந்தாலும் அப்பதிப்பில் "செயல்தவிர்" ஆளியை பத்துத் தடவைகள் வரையில் சொடுக்க முடியும் (முன்பு மூன்று தடவைகளே சொடுக்க முடியும்.). அத்துடன், அப்பதிப்பு நிறத்தட்டில் இடமிருந்து வலமாகப் பின்வரும் 28 நிறங்களைக் கொண்டுள்ளது: கறுப்பு, சாம்பல்-80%, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், தங்கம், மஞ்சள், எலுமிச்சை, பச்சை, நீலப் பச்சை, நீலம், கருநீலம், நாவல், தாழை மலர், நீலம்-சாம்பல், நீலம் (மெல்லியதாகச் சாம்பல்), வெளிர் நீலப் பச்சை, இடலைப் பச்சை, வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் (வெளிர் நிறம் கூட), வெளிர் மஞ்சள், வெளிர் செம்மஞ்சள், குருதிச் செந்நிறம், பழுப்பு, சாம்பல்-25%, சாம்பல்-25% (வெளிர் சாம்பல்), வெள்ளை விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பானது முகப்பு, காட்சி, உரை ஆகிய தத்தல்களின் கீழ் இடமிருந்து வலமாகப் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெயின்ட் மென்பொருளில் படிமங்களை ஆக்கவோ படிமங்களில் மாற்றங்களைச் செய்யவோ முடியும். விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பின் பணியிடத்தில் 20 நிறங்கள் உள்ளன. "முகப்பு" என்ற தத்தலின் கீழ் "வண்ணங்கள்" பகுதியில் அமைந்துள்ள இயல்புநிலை நிறங்கள் இடமிருந்து வலமாகப் பின்வருமாறு: கறுப்பு, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலப் பச்சை, கருநீலம், நாவல், வெள்ளை, சாம்பல்-25%, பழுப்பு, குருதிச் செந்நிறம், தங்கம், வெளிர் மஞ்சள், எலுமிச்சை, வெளிர் நீலப் பச்சை, நீலம்-சாம்பல், தாழை மலர். அத்துடன், "வண்ணங்களைத் திருத்து" என்னும் பகுதியிலுள்ள நிறத் தட்டிலுள்ள நிறங்களை உள்ளிடுவதனூடாக மேற்கூறிய நிறங்களுக்குக் கீழேயும் மேலும் பத்து நிறங்களைக் கொண்டு வர முடியும். மேலும் கட்டுப்பாட்டு விசையுடனும் மாற்று விசையுடனும் பேரெழுத்து Iஐ அழுத்துவதனூடாகப் படிமத்தின் நிறங்களை நேர்மாறாக்க முடியும். உதவிக் கோப்பிற்குறிப்பிடப்படாத முத்திரை முறை, செல்தட முறை, ஒழுங்கான வடிவங்கள், படங்களை நகர்த்துதல் ஆகிய சில மறைக்கப்பட்ட செயற்பாடுகளையும் பெயின்ட் கொண்டுள்ளது. முத்திரை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயனர் "தேர்ந்தெடு" என்ற தெரிவின் மூலம் படிமத்தின் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டு விசையை அழுத்திக் கொண்டு, திரையின் இன்னொரு பகுதிக்கு நகர்த்திப் படியெடுக்க முடியும். இதன்போது குறிப்பிட்ட பகுதி வெட்டப்படுவதில்லை; படியொன்று உருவாக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டு விசை அழுத்தப்பட்டிருக்கும் வரை இச்செயன்முறையை விரும்பிய எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் செய்ய முடியும். செல்தட முறையையும் முத்திரை முறையைப் போலவே செயற்படுத்தலாம். ஆனால், செல்தட முறையில் கட்டுப்பாட்டு விசைக்குப் பதிலாக மாற்று விசை பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பயனரொருவர் "தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது" என்ற கருவியைப் பயன்படுத்துவதற்கான தேவையின்றியே "பென்சில்" என்ற தெரிவை மாற்று விசையை அழுத்திக் கொண்டு பயன்படுத்தி (வலது சொடுக்கலுடன் இழுத்து) நேராக, கிடையாக, செங்குத்தாகச் சீரான கோடுகளை வரைய முடியும். மேலும் "பென்சில்" என்ற கருவியின் மூலம் கோட்டை வரைய முன்போ வரைந்து கொண்டிருக்கும்போதோ அக்கோட்டைத் தடிப்பாக்கவோ (கட்டுப்பாட்டு விசை + எண் விசைத்தள +) மெல்லியதாக்கவோ (கட்டுப்பாட்டு விசை + எண் விசைத்தள -) முடியும். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியம் திருவாரூர் மாவட்டத்தில் (தமிழ்நாடு) அமைந்துள்ள அழகிய கிராமம். இவ்வூரில் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிகளின் திருக்கோவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லவேண்டும், பின்பு அங்கிருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுததத்தில் இறங்கவேண்டும். தடம் எண்: 430 (கும்பக்கோனத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகபட்டினம் செல்லும் பேருந்துக்கள்) தடம் எண்: 28, 335 (கும்பக்கோனத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பேருந்து) நம்மவர் நம்மவர், ("Nammavar") 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தை கே. எஸ். சேதுமாதவன் இயக்க கமலஹாசனும் கௌதமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் மகேஷ் மாதவன். இப்படம் வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் நல்லதொரு படமென பலராலும் பாராட்டப்பட்டது. செல்வம் (கமலஹாசன்) கல்லுரியின் புதிய வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் துணை முதல்வர். அக்கல்லூரியின் செல்வாக்கு படைத்த ஒரு பெரிய மனிதனின் மகன் ரமேஷ் (கரண்). பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் சரியான முறையில் கிடைக்காத ரமேஷ் கல்லூரியில் பாதை மாறிச் செல்லும் ஒரு முரட்டு மாணவன். தன்னோடு போகாமல் தனது பணத்தாலும் செல்வாக்காலும் பிற மாணவர்களையும் கெடுக்கிறான், தனக்குப் படியாதவர்களைப் பாடாய்படுத்துகிறான். செல்வத்திற்கும் ரமேஷுக்கும் நடக்கும் மோதல்களும் இறுதியாக செல்வம் அவனை வழிப்படுத்தி, கல்லூரியை எப்படி சரிப்படுத்துகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தின் முதல் காட்சியாக, கரண் கல்லூரி மாணவனாகவும் கமலகாசன் ஆசிரியராகவும் வரும் வகுப்பறைக் காட்சி விஜயவாகினி ஸ்டியோவில் படமாக்கப்பட்டது. , தமிழ்நாட்டின் மாநில விருதின் சிறப்புப் பரிசும் கிடைத்தன. இப்படத்தின் 6 பாடல்களும் இசையமைப்பாளர் மகேஷ் மாதவனால் இசையமைக்கப்பட்டது. இப்படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏற்றுக் கொள்வதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் மகேஷுக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் புற்றுநோய் உள்ளவராக கமலஹாசனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவியது. மகேஷ் தான் இறந்து போவதற்கு முன் (2002), கமலஹாசனின் குருதிப்புனல், ஆளவந்தான் படங்களிக்காக இசையமைத்தார். பின்னணிப் பாடகர் சீனிவாஸ் இவரது இசையில்தான் அறிமுகமானார். வீடு (திரைப்படம்) வீடு 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் கதை, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு ஆகிய நான்கு பொறுப்புகளையும் பாலுமகேந்திரா ஒருவரே ஏற்றுக்கொண்டு திறம்பட செயலாற்றியுள்ளார். இப்படத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்ட முயற்சிக்கும் நடுத்தர வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிகை அர்ச்சனா நடித்திருக்கிறார். இதற்கு இசை அமைத்திருப்பவர் இளையராஜா. இது பாலுமகேந்திராவின் சிறந்த படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது இத்திரைப்படம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் ஒரு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அவள் வசிக்கும் வாடகை வீட்டைக் காலி செய்ய வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். சுதா வீடு தேடி அலைந்து சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்டக் கடன் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். பல சிக்கல்களுக்கு இடையில் செயலில் இறங்கி, வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப் பிரச்சினை, மனப் பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மாநகர நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். தனது தாய்க்கு அளிக்கும் அஞ்சலியாக வீடு திரைப்படத்தை பாலு மகேந்திரா கருதுகிறார். தனக்கு எட்டு வயதாக இருக்கும் போது தனது தாய் ஒரு வீடு கட்டுவதில் பட்ட கஷ்டங்களையும் அதனால் அவளது குணமே சற்று மாறுபட்டதையும் குறித்து பாலு மகேந்திரா கூறுவது: "அதற்குப் பின் அவள் அவளாக இல்லை. அடிக்கடி பொறுமையிழந்து கோபப்பட்டாள். எங்களுக்குப் பாடம் சொல்லித்தரவோ எங்களுடன் விளையாடவோ அவளுக்கு நேரமிருக்கவில்லை. அவளது இந்த மாற்றங்கள் என்னைக் குழப்பமடையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு படம் இந்த மாற்றங்களை உயிர்ப்பித்திருக்கிறது." பாலு மகேந்திரா, வீடு மற்றும் சந்தியா ராகம் ஆகிய இரு படங்களையும் தனது படங்களிலேயே தனக்குத் திருப்தி அளித்த படங்கள் எனக் கூறுகிறார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. இப்படத்தில் பாடல்களே கிடையாது. இதன் திரையிசை முழுவதும் இளையராஜாவின் "ஹவ் டு நேம் இட்" (How To Name It?) ஆல்பத்திலிருந்து அமைந்துள்ளது. இந்திய-பாகிஸ்தானிய எல்லை இந்திய-பாகிஸ்தானிய எல்லை (, ), உள்ளூரில் சர்வதேச எல்லை (IB) எனப்படுவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடைப்பட்ட சர்வதேச எல்லைக்கோடாகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தையும் பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப் மற்றும் சிந்துவையும் பிரிக்கிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து இந்தியா, (மேற்கு மற்றும் கிழக்கு) பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் உருவான போது இந்த எல்லைக்கோடு உருவானது. கட்டுப்பாட்டு கோடு (LoC) இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீரையும் பிரிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைக் கடக்கும் முக்கிய சம்பிரதாய புள்ளியாக உள்ள வாகா ( ) ஆனது இந்த எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது. சிம்போரசோ (எரிமலை) சிம்போரசோ ("Chimborazo") என்பது தற்போது இயங்காத நிலையில் உள்ள ஓர் எரிமலை ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ளது. அந்தீசு மலைத் தொடரில் உள்ள புகழ் வாய்ந்த மலை இதுவாகும். புவியின் நடுவிலிருந்து கூடிய தூரத்தில் உள்ள இடம் இம்மலையின் உச்சியே ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே. நிலநடுக்கோட்டுக்கு அருகில் இருந்தாலும் இதன் உச்சியானது ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். இவ்வெரிமலை கடைசியாக கி. பி. 550 ஆம் ஆண்டு வெடித்தது. உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசம் வாழ்தகமைப் பிரதேசம் என்பது, ஒரு நட்சத்திரத்தைச் சூழ உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும் விண்வெளிப் பகுதியாகும். சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. சிப்பாங் சிப்பாங், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள நகரமும் மாவட்டமுமாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 612 சதுர கிலோமீட்டர்கள், இங்கே 212,050 மக்கள் வாழ்வதாக, 2010 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே அமைந்துள்ளது. மலேசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா நகரம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிப்பாங் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. சிப்பாங் மாவட்டத்தினை பாராளுமன்றத்தில் பிரதினிதித்துவப்படுத்துபவர்கள்: சிப்பாங் மாவட்டத்தினை மாநில அவையில் பிரதினிதித்துவப்படுத்துபவர்கள்: மேம்பட்ட கரண இயக்க ஓட்டத்தை தூண்டும் தொழில்நுட்பம் இன்றய உலகில் இருசக்கர வாகனம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு சாதனமாக மாறிவிட்டது. மேலும் பெட்ரோலின் விலைஏற்றத்தின் காரணமாக மக்கள் குறைந்த எரிபொருளை கொண்டு அதிக சக்தியை வெளிபடுத்தும் விதமான வாகனங்களை விரும்புகின்றனர். அந்த வரிசையில் அணைத்து இருசக்கர வாகன தயாரிப்பாளர்களும் புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தங்களது வாகன தயாரிப்பில் புகுத்தி தனது நிறுவனத்தின் நற்பெயரை நிலை நிறுத்த மிகுந்த சிரத்தை எடுத்து உழைத்து வருகின்றனர். தற்பொழுது மிகவும் பெயர்பெற்ற நிறுவனங்களான யமஹா,ஹீரோ ஹோண்ட,பஜாஜ் மற்றும் டிவிஎஸ் தயாரிப்புகள் மிகவும் அதிகமாக இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இதில் பஜாஜ் டிச்கோவேர் 100 கன ஏற்புத்திறன் கொண்ட வாகனம் அதிக பட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தை தரவல்லதாக அமைந்தது. ATFT தொழில்நுட்பம் என்றால் என்ன? இந்த ATFT Technology தொழில்நுட்பம் ஹீரோ ஹோண்ட நிறுவனத்தின் கங்க் 150 கன ஏற்புத்திறன் கொண்ட வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேம்பட்ட மற்றும் அதி நவீன கரண இயக்கம் ஓட்டத்தை தூண்டும் தொழில்நுட்பம்.மேம்பட்ட மற்றும் அதி நவீன கரண இயக்கம் ஓட்டத்தை தூண்டும் தொழில்நுட்பத்தின் காரணமாக எரிபொருலானது முழுமையாக எரிந்து அதிக திறனை வெளிபடுத்தும்.இதன் மூலமாக குறைந்த எரி பொருள் மூலமாக அதிக ஓட்டத்தையும் இழுவை திரனனையும் வழங்குகிறது. ATFT தொழில்நுட்பத்தின் பயன்கள்: Advance Tumble Flow Induction Technology என்ற ஆங்கில விரிவாக்கத்தின் சுருக்க பெயரே ATFT என்பது ஆகும்."மேம்பட்ட மற்றும் அதி நவீன கரண இயக்கம் ஓட்டத்தை தூண்டும் தொழில்நுட்பம்" என்பதே முழுமையான தமிழ் பொருள். முழுமையான எரிபொருள் பயன்பாடு குறைந்த எரிபொருளில் அதிக திறன், இயற்கை சூழ்நிலையை மாசுபடுத்த நவீன தொழில்நுட்பம், முழுமையான எரிபொருள் எரிக்கும் திறன் காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயு வெளி வருவதை குறைக்கிறது. ஹீரோ நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக தனது கங்க் 150 கன ஏற்புத்திறன் கொண்ட வாகனத்தில் பயன்படுத்தியது தனது பெயரை இருசக்கர வாகன சந்தையில் நிலைநிறுத்த ஒரு காரணமாக அமைந்தது. மேலும் 150 கன ஏற்புத்திறன் கொண்ட வாகன சந்தையில் கங்க் தனக்கென தனி மதிப்பையும் இடத்தையும் பெற்றது. இந்த தொழில்நுட்பத்தை பற்றி விரிவான கட்டுரைகளோ கலந்துரையடல்களோ வெளிவரவில்லை. இதே போன்று மற்ற தயாரிப்பாளர்களும் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை புதிய தயாரிப்புகளில் புகுத்தி வாடிக்கையாளர்களை கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகின்றன. தொகுப்பு மேம்பட்ட கரண இயக்க ஓட்டத்தை தூண்டும் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிச்சயமாக பூர்த்தி செய்யும். இந்த தகவல் ஒரு ஆங்கில இனைய தளத்தின் வலை பக்கத்தில் இருந்து மொழி பெயர்க்க பட்டது. வேட்பேடு வேட்பேடு அல்லது வேர்ட்பேட் ("WordPad") என்பது விண்டோசு 95இலிருந்து அனைத்து மைக்குரோசாபிட்டுப் பதிப்புகளுடனும் உள்ளடக்கப்பட்டு வரும் அடிப்படைச் சொற்செயலி ஆகும். இது நோட்பேட்டை விட மேம்பட்டதும் மைக்குரோசாபிட்டு வேர்டை விட எளியதுமான மென்பொருள் ஆகும். மைக்குரோசாபிட்டு இரைட்டிற்குப் பதிலீடாகவே விண்டோசு 95இலிருந்து வேட்பேடு அறிமுகப்படுத்தப்பட்டது. வேட்பேட்டு மென்பொருளில் உரையை வடிவமைக்கவும் அச்சிடவும் முடியும். ஆனாலும் சொற்றிருத்தி, நிகண்டு, வரிசைப் பட்டியல்களுக்கான ஏற்பு முதலிய வசதிகளை வேட்பேடு கொண்டிருக்கவில்லை. வேட்பேடானது மடல்களையும் சிறு துண்டுகளையும் எழுதுவதற்குப் பொருத்தமானது. ஆனால், வரைகலையிலும் அச்சமைப்பிலும் கூடியளவு தங்கியுள்ள வேலைகளை வேட்பேட்டின் மூலம் வினைத்திறனுடன் செய்ய முடியாது. வேட்பேடானது வேட்பேட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் உரை வடிவமைப்பை ஏற்றாலும் வேடு 2007இன் உயர் உரை வடிவமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் ஏற்காது. விண்டோசு 95, விண்டோசு 98, விண்டோசு 2000 ஆகிய இயங்குதளங்களில் வேட்பேட்டு மென்பொருளில் மைக்குரோசாபிட்டின் இரிச்செடிட்டு கண்டுரோலின் பதிப்புகளான 1.0, 2.0, 3.0 ஆகியவை முறையே பயன்படுத்தப்பட்டன. பின்னர், விண்டோசு எட்சு. பி. பணிப் பொதி 1இற்குப் பிறகு வெளிவந்த மைக்குரோசாபிட்டு இயங்குதளங்களில் (விண்டோசு 7 உள்ளடங்கலாக) இரிச்செடிட்டு 4.1ஏ பயன்படுத்தப்படுகின்றது. விண்டோசு எட்சு. பி. இயங்குதளத்துக்கான வேட்பேட்டில் முழு ஒருங்குறி ஏற்பு இருந்தாலும் அப்பதிப்பு 16-இருமி ஒருங்குறி நிலைமாற்ற வடிவமைப்புப் பெருமுடிவை ஏற்கவில்லை. மேலும் வேட்பேட்டின் முன்னைய பதிப்புகளில் ஆவண வடிவில் கோப்புகளைச் சேமிக்கக் கூடியதாக இருந்தாலும் அப்பதிப்பில் அவ்வாறு சேமிக்க முடியாது (உரை ஆவணமாகவும் உயர் உரை வடிவமைப்பாகவும் மட்டுமே சேமிக்க முடியும்.). பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்டோசு எட்சு. பி. பணிப் பொதி 2இலிருந்து இரைட்டுக் கோப்புகளையும் வேட்பேடு ஏற்பதில்லை. விண்டோசு எட்சு. பி. கைக் கணினிப் பதிப்பும் விண்டோசு விசிட்டாவும் பேச்சுணரியைக் கொண்டுள்ளன. அவ்வேட்பேட்டுப் பதிப்புகளில் பேச்சின் மூலம் உரையை உள்ளிட முடியும். மேற்கூறிய இயங்குதளப் பதிப்புகளிலும் அவற்றுக்குப் பிந்தைய விண்டோசுப் பதிப்புகளிலும் உள்ள வேட்பேடு மென்பொருள் உரைப் பணிகள் கட்டமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட நீட்டுறு மூன்றாந்தரப்புப் பணிகளை (எ-டு: இலக்கண, சொற்றிருத்தி) ஏற்கின்றது. பின்னர், வேட்பேட்டின் விண்டோசு விசிட்டாப் பதிப்பானது தவறான மீடருகை, தவறான வடிவமைப்பு முதலிய சிக்கல்களினால் மைக்குரோசாபிட்டு வேட்டு ஆவணக் கோப்புகளை வாசிக்க முடியாதவாறு மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன், வேட்பேட்டில் வேட்டுக் கோப்புகளைத் திறப்பதில் பாதுகாப்பு வழுவொன்று காணப்படுவதாகவும் ஒரு மைக்குரோசாபிட்டுப் பாதுகாப்பறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், பழைய ஆவணங்களையும் (97-2003) புதிய ஆவணங்களையும் (ஆபிசுத் திறந்த நீட்டுறு குறிமொழி) திறப்பதற்கு மைக்குரோசாபிட்டு வேடு வியூவர் என்ற இலவச மென்பொருளைப் பரிந்துரைக்கின்றது. ஆனால், விண்டோசு 7உடன் இணைத்து வழங்கப்படும் வேட்பேடானது வேட்பேட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆபிசுத் திறந்த நீட்டுறு குறிமொழியையும் திறந்த ஆவண உரையையும் ஏற்கின்றது. விண்டோசு 7இல் மைக்குரோசாபிட்டு, வேட்பேட்டின் வடிவமைப்பை ஆபிசு 2010 பாணி நாடா வரைகலைப் பயனர் இடைமுகமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் பட்டிப் பட்டையும் கருவிப் பட்டைகளும் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. வேட்பேட்டைப் போலவே விண்டோசுடன் இணைத்து வழங்கப்படும் பெயிண்டு போன்ற செயலிகளும் அவற்றின் இடைமுகத்தில் மாற்றத்தைப் பெற்றுள்ளன. விண்டோசு 7இன் வேட்பேட்டுப் பதிப்பானது முகப்பு, காட்சி ஆகிய தத்தல்களின் கீழ் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வேட்பேட்டு மென்பொருளில் தொகுத்தலையும் வடிவமைப்பையும் மேற்கொள்ள முடியும். வேட்பேட்டு மென்பொருளானது முன்னைய விண்டோசுப் பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட மைக்குரோசாபிட்டு இரைட்டுக்கான பதிலீடாக விண்டோசு 95இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், விண்டோசு 95 வெளிவிடப்படுவதற்குச் சிறிது முன்னதாக மைக்குரோசாபிட்டினால் வேட்பேட்டு மென்பொருளுக்கான மூல நிரலும் மைக்குரோசாபிட்டு பவுண்டேசன் கிளாசசு மாதிரிச் செயலியாக மைக்குரோசாபிட்டு பவுண்டேசன் கிளாசசு 3.2உடனும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுடனும் வழங்கப்பட்டது. இப்போதுங்கூட மைக்குரோசாபிட்டு உருவாக்குநர் வலையமைப்பின் இணையத்தளத்திலிருந்து அதனைத் தரவிறக்க முடியும். இம்மென்பொருளில் விண்டோசு 95இலிருந்து விண்டோசு விசிட்டா வரை இயல்புநிலை எழுத்துருக் குடும்பமாக ஏரியல் எழுத்துரு அளவு 10இல் பயன்படுத்தப்பட்டது. விண்டோசு 7இலோ இயல்புநிலை எழுத்துருக் குடும்பமாகக் கலிபிரி எழுத்துரு அளவு 11இல் பயன்படுத்தப்படுகின்றது. வேட்பேட்டை ஒத்த ஒரு மென்பொருள் வேட்பேடு எனும் பெயரிலேயே சில வணிகர்களால் விண்டோசு எம்பெடடு காம்பாக்கிட்டு முன்னிறுவலுடன் வழங்கப்படுகின்றது. அம்மென்பொருளும் திரைப்பலகத்தில் இயங்கும் வேட்பேடு போலவே எளிய செயற்பாட்டைக் கொண்டது. அதனுடைய படவுரு மைக்குரோசாபிட்டு வேட்டின் தொடக்க காலப் படவுருவை ஒத்துள்ளது. அன்ட்ரேசபிள் (திரைப்படம்) அன்ட்ரேசபிள் (Untraceable) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமாகும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் இணையத்தைப் பயன்படுத்தி நடத்தும் தொடர்கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். கிரிகோரி ஹாப்ளிட் இயக்கிய இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களாக டயான் லேன், காலின் ஹாங்க்ஸ், பில்லி பர்க் போன்றோர் நடித்துள்ளனர். பிறருக்கு நேரும் துயரைக் காண மக்கள் காட்டும் மித மிஞ்சிய ஆர்வத்தினைச் சாடி எடுக்கப்பட்ட படம். அமெரிக்காவின் ஓரிகன் மகாணம் போர்ட்லாண்டு நகரில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தனது தந்தையின் தற்கொலையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் ஊடகத்தின் மீது கோபம் கொள்கிறான். தந்தையின் தற்கொலையைச் செய்தியாக வழங்கிய செய்திக் குழுவை சேர்ந்தவர்களை ஒவ்வொருவராகக் கடத்துகிறான். ஒரு இணைய தளம் ஒன்றைத் தொடங்கி அதில் தாம் கடத்திய நபர்களைத் துன்புறுத்தி அதை நேரடி ஒளிபரப்பு செய்கிறான். பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும் போது அதுவே கடத்தப்பட்டவர்கள் இறப்பதற்குக் காரணமாகும்படி கருவிகளை ஒரு பொறிபோல் வடிவமைக்கிறான். இணைய தளத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதைப் பொறுத்து அவன் வடிவமைத்த கருவிகள் செயல்படுகின்றன. இதனால் கடத்தப்பட்டவர்கள் சிறிது சிறிதாக கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். முடிவில் இணைய குற்றங்களைத் துப்பறியும் பெண் அதிகாரி டயான் லேன் இவரைக் கண்டுபிடிக்கிறார். ஆனால் டயான் லேனும் கடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படுகிறார். போராடித் தன்னைக் காத்துக்கொள்வதுடன் இளைஞரையும் சுட்டுக் கொள்கிறார். ஹவுஸ்புல் (திரைப்படம்) ஹவுஸ்புல் ("Housefull") 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இது ரா. பார்த்திபன் இயக்கிய படம். இப்படத்தில் ரா. பார்த்திபன், விக்ரம், சுவலட்சுமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களுக்கு இசையும் பின்னணி இசையும் இளையராஜாவால் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளது. பார்த்திபன் ஒரு திரைப்பட அரங்கத்தின் சொந்தக்காரர் அய்யாவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது அரங்கினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் செய்தி தெரியவருகிறது. காவல் அதிகாரிகள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அறியாமலேயே வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நினைக்கின்றனர். அரங்கினுள் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக விக்ரமும் அரங்குக்கு வெளியே செய்தி அறிந்து தவிக்கும் அவரது காதலியாக சுவலட்சுமியும் நடித்திருக்கிறார்கள். அய்யாவின் முன்னாள் மனைவி (நடிகை ஜெயந்தி) காவல்துறையினரின் ஆலோசனைக்கு எதிராக அரங்கினுள் உள்ள மக்களை வெளியேற்றி விடும்படி அய்யாவிடம் மன்றாடுகிறாள். அய்யா ஒரு முடிவுக்கு வரும் தருணத்தில் சுவலட்சுமியால் விக்ரமுக்கு செய்தி தெரிய எல்லா மக்களுக்கும் தெரிந்து விடுகிறது. அரங்கத்திலிருந்து வெளியேற கதவை நோக்கி ஒரே தள்ளு-முள்ளு நெரிசல். இப்பிரச்சனை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதுதான் கதையின் உச்சகட்டம். இப்படத்தில் ரோஜா பத்திரிக்கை நிருபராக வருகிறார். ஏ. எஸ். கே. ஏ. எஸ். கே. ("A.S.K.", இயற்பெயர்: ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி,) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர். தமிழகப் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் சிறந்தவர். ஆங்கில மொழிக் கவிஞர். தொழிற்சங்கத் தலைவர். விடுதலைப் போராட்ட வீரர். எழுத்தாளர். இறைமறுப்பாளர். 1969, சூன் 6 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் 692ஆம் பக்கத்தில் அறிவித்து தன்னுடைய பெயரை ஏ. எஸ். கே. என மாற்றிக்கொண்டவர். ஆவியூர் என்னுமிடத்திலிருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத் நகரில் வாழ்ந்து வந்த சீனிவாச அய்யங்கார், தங்கம்மாள் இணையருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் ஏ. எஸ். கே. இவருடன் இராசம்மாள், பங்கசம் என்னும் இரு அக்காக்களும் இராமசாமி, துரைசாமி, பார்த்தசாரதி என்னும் மூன்று அண்ணன்களும் அரங்கனாதன் என்னும் தம்பியும் பிறந்தனர். ஏ. எஸ். கே. விற்கு மூன்று வயதாகும்பொழுது அவர்தம் அம்மா தங்கம்மாள் இயற்கை எய்திவிட்டார். எனவே, இவர்கள் அனைவரும் தம் பெரியம்மாவாகிய பொன்னம்மாளிடம் வளர்ந்தனர். ஏ. எஸ். கே.தம் தம்பியான அரங்கநாதன், ரெங்காச்சாரி என்னும் பெயரில் படித்துப் பட்டம்பெற்று, மும்பய்க்குச் சென்றார். இவர்தான் பின்னாளில் பொதுவுடைமைக் கட்சியின் வழக்கறிஞராகத் திகழ்ந்து புகழ்பெற்ற ஏ. எஸ். ஆர். சாரி ஆவார். இவர் தில்ஷாத் சையத் என்னும் மும்பை நகரைச் சேர்ந்த முசுலீம் பெண்ணை மணந்து கொண்டார். ஏ. எஸ். கேக்கு அண்ணன்களான துரைசாமி சாதி கடந்த திருமணமும் பார்த்தசாரதி மதம் கடந்த திருமணமும் செய்துகொண்டனர். ஏ. எஸ். கே. திருமணமே செய்துகொள்ளவில்லை. ஏ. எஸ். கே. தன்னுடை பட்டப்படிப்பு முடிந்ததும் ஐதராபாத் நகரிலிருந்த கிறித்துவப் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பள்ளியில் ஏற்கனவே கிருஷ்ணமாச்சாரி என்னும் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், அப்பள்ளின் தலைவராக இருந்த பாதிரியார், இவரை ஏ. எஸ். கே. அய்யங்கார் என அழைக்கத் தொடங்கினார். இப்பெயரே, தன்னுடைய பெயரை சட்டப்படி மாற்றிக் கொண்ட பின்னரும், ஏ. எஸ். கே.வின் பெயராக நிலைத்துவிட்டது. அப்பள்ளியில் ஏ. எஸ். கே. சில மாதங்களே வேலை பார்த்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்னைக்குச் சென்றார். ஏ. எஸ். கே. தாம் மாணவராக இருந்த பொழுதே, மீரத்து பொதுவுடைமையாளர் சதி வழக்கு பற்றிய செய்திகளைப் படித்ததால் பொதுவுடைமைக் கோட்பாட்டின் மீது ஆர்வம் கொண்டார். காரல் மார்ச்சு எழுதிய நூல்களைப் படித்தார். எனவே 1934 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த ஏ. எஸ். கே., அப்பொழுது தடைசெய்யப்பட்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1935ஆம் ஆண்டில் ம. சிங்காரவேலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1937 ஆம் ஆண்டில் பெரியார் ஈ. வெ. இரா. வுடம் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1937ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் எஸ். வி. காட்டே தொழிற்சங்க இயக்கத்திற்கும் பொதுவுடைமைக் கட்சிக்கும் வழிகாட்டுவதற்காக சென்னைக்கு வந்து தங்கியிருந்தபொழுது அவருடன் இணைந்து பணியாற்றினார். 1937ஆம் ஆண்டில் சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ஏ. எஸ். கே. பதவி வகித்தார். விடுதலைப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னருமாக ஏ. எஸ். கே தனது அரசியல் போராட்டங்களால் பதினைந்தரை ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார். தேச விடுதலைப் போராட்டங்களிலும் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் ஈடுபட்ட அவர், சென்னை துறைமுகத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொடுத்த தொழிற்சங்கங்கள், கூட்டுறவுப் பண்டகசாலை, பயிற்சிப்பள்ளிகள் ஆகியன அவரது பெயரை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஏ. எஸ். கே.வின் வாழ்க்கை வரலாற்றை தொழிற்சங்க மேதை ஏ. எஸ். கே. அய்யங்கார் என்னும் தலைப்பில் முத்து குணசேகரன் எழுதியிருக்கிறார். இந்நூலை சென்னையில் உள்ள சேகர் பதிப்பகம் 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது. ஊருக்கு நூறு பேர் ஊருக்கு நூறு பேர் ("Oorukku Nooru per") 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஜெயகாந்தனின் "ஊருக்கு நூறு பேர்" (ஆண்டு-1976) என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி. லெனினால் இயக்கப்பட்ட படம். ஒரு இளங்கலைஞன் பாலன் (கௌஷிக்) சமுதாயத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, ஊருக்கு நூறு பேர் என்ற புரட்சி அமைப்பில் சேர்கிறான். அதில் ஒரு மதகுருவை தற்செயலாகக் கொல்ல நேரிடுகிறது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இப்படம் மரணதண்டனை குறித்த விஷயங்களை அலசுகிறது. இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடத்தது. 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற 49 ஆவது திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்தன. இராகுல கல்லூரி இராகுல கல்லூரி ("Rahula College", , இராகுல வித்தியாலயம்) இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையாகும், இது துவக்கத்தில் ஒரு பௌத்த பாடசாலையாக இருந்தாலும், தற்போது இலங்கை அரசினால் நடத்தப்படும் ஒரு தேசியப் பாடசாலை ஆகும். இது தேசிய பாடசாலையாக மாற்றப்பட்ட முதல் பாடசாலைகளுள் ஒன்றாக இருந்தது. ராகுல கல்லூரியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆரம்ப பிரிவில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களும் இரண்டாம் நிலை பிரிவில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான மாணவர்களும் கற்கின்றனர். கல்லூரி இல்லங்களும் அவற்றின் நிறங்களும்: