இந்தியக் குடியரசின் வரலாறு இந்தியக் குடியரசின் வரலாறு ("history of the Republic of India") சனவரி 26, 1950இல் துவங்குகிறது. ஆகத்து 15, 1947இல் இந்தியா விடுதலை பெற்று பிரித்தானிய பொதுநலவாயத்தின் ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கியது. 1950இல் குடியரசாக அறிவிக்கப்படும்வரை பிரித்தானியாவின் "ஜார்ஜ் VI" (ஆல்பர்ட் பிரெடிரிக் ஆர்தர் ஜார்ஜ்) மன்னராக விளங்கினார். அதேநேரம் முசுலிம் பெரும்பான்மையராக விளங்கிய பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தான் டொமினியன் என்று பிரிந்தன. இந்தப் பிரிவினையின்போது உலக வரலாற்றிலேயே முதல்முறையாக பத்து மில்லியன் (ஒரு கோடி) மக்கள் இடம் பெயர்ந்தனர்; மற்றும் பத்து இலட்சம் மக்கள் இறந்தனர்." இந்தியத் தலைமை ஆளுனர்களாக மவுண்ட்பேட்டன் பிரபுவும் பின்னர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியும் பொறுப்பேற்றனர். சவகர்லால் நேரு முதல் பிரதராகவும் சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். பதவி எதுவும் ஏற்காத மகாத்மா காந்தி வங்காளம் மற்றும் பீகாரின் கலவரப் பகுதிகளுக்குச் சென்று சமயச் சண்டைகளை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.இப்பிரிவினையின் போது இணையாமல் சில பகுதிகள் வேற்று நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.அவற்றில் போர்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா,பிரான்சு நாட்டின் கீழ் இருந்த பாண்டிச்சேரி,மஹே போன்ற பகுதிகள் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டன.மேலும் இறுதியாக சிக்கிம் நாடானது இந்தியாவுடன் இணைய விரும்பி எழுபதுகளில் அதுவும் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது. விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டதுடன் பல சிக்கல்களையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளது. தொழில்துறையிலும் வேளாண் துறையிலும் பல இடர்களை வென்று தன்னிறைவுநிலை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடாக விளங்குகிறது. சமயச்சார்பு வன்முறைகளும் சாதி வன்முறைகளும் சமூகப் பிரச்சினைகளாக வளர்ந்துள்ளன. நக்சலிசமும் தீவிரவாதமும் குறிப்பாக சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைப் போராட்டங்களும் நாட்டின் ஆளுமைக்கு எதிராக எழுந்துள்ளன. முடிவுறாத எல்லைப் பிணக்குகளால் சீனாவுடன் 1962இல் இந்தியச் சீனப்போரும் 1947, 1965, 1971, 1999 ஆண்டுகளில் பாக்கித்தானுடன் போர்களும் நிகழ்ந்தன.மேலும் இது தனது அண்டைய நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது தனது படைகளை இலங்கை அரசுக்கு ஆதரவாய் அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தியா ஓர் அணுவாயுத நாடாகும்; தனது முதல் அணுவாயுதச் சோதனையை 1974இலும் தொடர்ந்து மேலும் ஐந்து சோதனைகளை 1998இலும் நடத்தியது. 1950களிலிருந்து 1980கள் வரை இந்தியா சோசலிசம்|சோசலிசக் கொள்கைகளை கடைபிடித்து வந்தது. இந்த நெறிமுறையின் கூடுதலான கட்டுப்பாடுகள், பாதுகாப்புவாதம் ஆகியவை ஊழலுக்கும் மந்தமான வளர்ச்சிக்கும் வழிகோலியதாக கருதப்படுகிறது. 1991ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருளியல் சீர்திருத்தங்கள்இந்தியாவை உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக ஆக்கி உள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் வீச்சு கூடுதலாகியுள்ளது.எனினும் 2௦12 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய பெருமளவு பொருளாதார வீழ்ச்சிகளையும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது.1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆரியபட்டா செலுத்தப்பட்டது.அதை தொடந்து வானிலை,கல்வி,வேளாண்மை என பல துறைகளுக்கும் பயன்படும் செயற்கைகோள்களை செலுத்தி வருகிறது.2008 ஆம் ஆண்டு சந்திராயன் செயற்கைகோளின் மூலம் நிலவின் ஆராய்ச்சியிலும் நுழைந்துள்ளது. இந்தியாவில் தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் கொண்டுள்ளது , மேலும் 40 பிராந்திய கட்சிகள் இருக்கின்றன.1950 ல் இந்தியா முதல் குடியரசு நாடாக மாறியபோதிலிருந்து பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தனித்தும் சக்தி வாய்ந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணிகளின் மூலமும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்திய குடியரசின் 1951, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த முதல் மூன்று பொது தேர்தல்களில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றது. 1964 ல் நேருவின் மரணதிற்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.எனினும் 1966 ல் அவரும் மரணமடைந்தார் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்திரா காந்தி தலைமையில் வெற்றி பெற்று அவர் இந்திய குடியரசின் முதல் பெண் பிரதமரானார்.1975 ல் அவசரகால பிரகடனத்தை தொடர்ந்து 1977 ல் புதிய ஜனதா கட்சியானது ஆட்சியில் அமர்ந்தது.அதன் அரசு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் "நீல நட்சத்திரம்" என்ற இராணுவ நடவடிக்கையால் சீக்கியர்கள் அதிருப்பதி அடைந்தனர்.அவரது சொந்த பாதுகாவலர்களாலே 1984 ல் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.அதன் பின்னர் வந்த பொது தேர்தலில்அவரது மகன் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றார். 1989 ல் புதிதாக அமைக்கப்பட்ட ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிவெற்றி பெற்றது.எனினும் இவ்வரசு இரு ஆண்டுகளுக்குள்ளேயே கலைந்ததை அடுத்து தேர்தல் 1991 ல் மீண்டும் நடத்தப்பட்டன எந்த கட்சியும் ஒரு அறுதி பெரும்பான்மை பெற்றவில்லை எனினும் காங்கிரஸ் மிக பெரிய ஒற்றை கட்சியாக பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் ஒரு சிறுபான்மை அரசை அமைத்தது. 1998 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 2004-2009, 2009-2014 ஆண்டு இந்திய பொது தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்தாா். 2014 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து திரு. நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. வங்காளப் பஞ்சம், 1770 வங்காளப் பஞ்சம், 1770 ("Bengal famine of 1770"), 1769-1783 காலகட்டத்தில் இந்தியாவின் வங்காளப் பகுதிகளைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். கீழ் கங்கைச் சமவெளிப் பகுதிகளைத் (தற்கால மேற்கு வங்காளம், வங்காளதேசம், ஒரிசா மற்றும் பீகார்) பாதித்த இப்பஞ்சத்தால் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் மாண்டனர். 18ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிளாசி மற்றும் புக்சார் சண்டைகளின் விளைவாக வங்காளம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சியின் கீழ் வந்தது. தனது வருவாயைக் கூட்ட கிழக்கிந்திய நிறுவனம், நிலவரியினைக் கூட்டியது. மேலும் உணவுப் பயிர்களுக்கு பதில் அவுரி போன்ற பணப்பயிர்கள் பயிரிடலை ஊக்குவித்தது. 1768-69 இல் அரிசி விளைச்சல் குறைந்தது, கடும் வறட்சியும் நிலவியது. ஆனால் கம்பனி நிருவாகிகள் இதனை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1770 இல் இந்நிலை பெரும் பஞ்சமாக மாறி மக்கள் லட்சக்கணக்கில் மடியத்தொடங்கினர். பஞ்சத்தை சமாளிக்க கம்பனி நிருவாகம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பட்டினியால் மாண்டனர். வங்காளத்தின் மொத்த மக்கள் தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். 1770 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்து, அதிகமான விளைச்சல் ஏற்பட்டதால் பஞ்சத்தின் கடுமை குறைந்தது. பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியர் ஆட்சி நடைபெற்ற போது அங்கு நிகழ்ந்த பஞ்சங்கள் காலவரிசைப்படி இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பிரித்தானியர் ஆட்சி காலம் 1765 முதல் 1947 வரை எனக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை ஆண்ட 1765-1857 காலகட்டம் கம்பெனி ஆட்சி எனப்படுகிறது. பிரித்தானியப் பேரரசு நேரடியாக இந்தியாவை ஆண்ட 1857-1947 காலகட்டம் பிரித்தானிய ஆட்சி எனப்படுகிறது. குறுக்கம் (இலக்கணம்) தமிழ் இலக்கணத்தில், ஓர் எழுத்து தனக்கு உரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கப்பெறுவது குறுக்கம் எனப்படும். பொதுச் சட்டம் பொதுச் சட்டம் ("Common law"), அல்லது வழக்குச் சட்டம் அல்லது முன்காட்டு) என்பது சட்டமன்றங்களால் இயற்றப்படாமலும் அரசாணைகளால் கட்டுப்படுத்தபடாதும் நீதிமன்றங்களின் அல்லது அவை போன்ற ஆணையங்களின் சட்டக் கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளிலிருந்து நீதிபதிகள் வரையறுக்கும் சட்டம் ஆகும். ஓர் "பொது சட்ட அமைப்பு" என்பது பொதுச் சட்டத்திற்கும் முன்காட்டுக்கும் கூடுதலான மதிப்பு வழங்கும் சட்டபூர்வ முறைமையாகும், ஒரே சிக்கலுக்கு வெவ்வேறு நேரங்களில் இருவித தீர்வுகள் அமைவது நீதியல்ல என்ற கொள்கையின்படி இந்த முறைமை இயல்பாக வளர்ந்துள்ளது. முன்காட்டின் உரையே "பொதுச் சட்டம்" எனப்படுகிறது; இதுவே அனைத்து எதிர்கால தீர்ப்புகளையும் பிணைக்கிறது. பொதுச் சட்ட நீதிமன்றங்களில் முந்தைய வழக்குகளில் எடுக்கப்பட்ட தீர்ப்புகள் கவனிக்கப்படுகின்றன. இதே போன்ற ஒரு சிக்கலுக்கானத் தீர்வு முன்பே வழங்கப்பட்டிருந்தால் அதே தீர்வை பின்பற்றுவது நீதிமன்றத்திற்கு கட்டாயமாகிறது. இருப்பினும் தற்போதைய பிணக்கு முந்தைய வழக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுமேயானால் (சட்ட வழக்காடலில் "முதல் தாக்கம்") நீதிபதிகளுக்கு முன்காட்டியை நிறுவவும் பொதுச் சட்டம் இயற்றவும் ஆதிகாரமும் கடமையும் உண்டு. இதன்பிறகு இந்த தீர்ப்பு முன்காட்டியாக எதிர்கால நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும். பொதுச் சட்டம் ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் குடியேற்றங்களாக இருந்த நாடுகளில், ஐக்கிய அமெரிக்கா உட்பட, கடைபிடிக்கப்படுகிறது. வேறு பல நாடுகள் "குடியியல் சட்டம்" எனப்படும் சட்டமன்றங்களால் ஆக்கப்பட்ட சட்டங்களே செல்லுபடியாகும் முறைமையை பின்பற்றுகின்றன. பொதுச் சட்ட நாடுகளில் குடியியல் சட்ட நாடுகளில் இருப்பதை விட நீதிமன்றங்களுக்கு கூடுதலாக அதிகாரம் கொண்டுள்ளன இங்கிலாந்தில் நீதிமன்றங்கள் முடிவுகள் எடுக்க மரபு, வழக்கம் மற்றும் முன்காட்டு இவற்றின் துணையை நாடியதிலிருந்து பொதுச்சட்டம் உருவாகத் துவங்கியது. "முன்காட்டு" என்பது கடந்தகாலத்தில் வேறொரு நீதிமன்றம் எடுத்த முடிவாகும். முந்தைய நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலிருந்து மக்களுக்கு வியப்பளிக்காத, அதே நேரம் மற்ற சட்டங்களுக்குட்பட்ட, தீர்ப்பை அடைய பொதுச் சட்ட நீதிமன்றங்கள் முயலுகின்றன. பொதுச் சட்ட நாடுகளில் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சட்டம் என்ன என்பதுடன் பிற நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன என்றும் ஆராய்கிறார்கள். ஒரு நீதிமன்றம் ஒரு வழக்கை முடிவு செய்கையில் தனது "தீர்ப்பை" வழங்குகிறது அல்லது சட்டம் குறித்தக் "கருத்தை" பதிகிறது. இந்தத் தீர்ப்பு அல்லது சட்டக்கருத்து அந்த நீதிமன்றம் எவ்வாறு தனது முடிவை எட்டியது என்பதை விளக்குகிறது. இந்த விளக்கமும் கருத்துமே பிற நீதிமன்றங்களுக்கு இதேபோன்ற வழக்குகளைத் தீர்மானிக்க வழிகாட்டுதலாக அமைகிறது. இந்த வழக்கு ஒரு முன்காட்டியை நிறுவுகிறது. முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வழக்கமாக கீழ் நீதிமன்றங்கள் இதேபோன்ற அல்லது ஒருமித்த ஒரு வழக்கை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை கூறுகின்றன. இந்த முன்காட்டுகள் "கட்டாயமானவை"யாக கருதப்படுகின்றன. வழக்கின் தரவுகள் வேறுபட்டிருந்தாலும் இந்த முன்காட்டின் அலசல் "வற்புறுத்தலாக" கருதப்படுகிறது. பொதுச் சட்ட நாடுகளில் முன்காட்டு பின்பற்றப்பட்டாலும் சட்டமன்றமாக்கிய சட்டம் முன்னுரிமை கொள்கிறது. ஒரு வழக்கில் இவை இரண்டும் வேறுபட்டால் நீதிமன்றங்கள் வழக்கமாக சட்டமன்ற சட்டத்தினையே பின்பற்றும். பொதுவான சட்டமானது அந்தந்த நடுக்களின் சட்ட அமைப்புகள் அடிப்படையில் அமையும்.மேலும் பெரும்பாலான நாடுகளில் சட்டங்கள் அந்தாத நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த நாடுகளின் சட்டத்தை ஒத்திருகிறது.மேலும் சில நாடுகளின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிறிது வேறுபட்ட சட்டங்களையும் கொண்டுள்ளது.எடுத்துக்கட்டாக இந்தியாவில் பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இருக்கும் சட்டமும் போர்ச்சுக்கீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்த கோவாவிலும் சட்டங்கள் வேறுபட்டிருக்கின்றது.எனினும் சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தை ஒத்தும் அமைக்கப்பட்டிகின்றது. ஸ்காட்லாந்து நாட்டில் பெரும்பாலும் சிவில் சட்டத்தை அடிப்படையாகவே கொண்டே அமைக்கப்பட்டிருக்கிறது.1707 ல் இங்கிலாந்து ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு நீண்ட கால உடன்படிக்கை மூலம் சட்டவரையரை மூலம் ஏற்படுத்தப்பட்டது.இது இயற்கை நீதி மற்றும் நேர்மை கொள்கைகளை நியாயப்படுத்தி சட்டங்கள் உருவாக்கப்பட்டது.இந்த பன்மைவாத சட்ட அமைப்புகள் கியூபெக், லூசியானா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் இயங்குகின்றன. இம்மாகாணத்தில் டச்சு காலனித்துவ நாட்களில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை அடிப்படையாக கொண்டது.அதற்கு அடுத்து இங்கிலாந் காலனி ஆதிக்கத்தின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட சட்டங்களையும் ஒன்றிணைத்து பொதுவாக உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் முதலில் ரோமானிய சட்டங்களை அடிப்படையாக சட்டங்கள் நடைமுறையில் இருந்தது.அதன் பின்னர் பிரெஞ்சு குடியேற்றங்களால் 1804 1804 ல் லூசியானா கைப்பற்றபட்ட பின்னர் நெப்போலிய சட்டங்களை அடிப்படையாக கொண்டது.இங்கு பெண்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் அதிகமாக கொடுக்கப்பட்டன கலிபோர்னியாவில் அமெரிக்க மாநில பொது சட்டத்தின் அடிப்படையிலான அமைப்பை கொண்டிருக்கிறது.19 ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இசுபானிய சட்டப்படி அமைந்திருந்தாலும் அதன் பின்னர் பொதுவான அமெரிக்க சட்டத்தின் படி மாற்றப்பட்டது இந்திய அரசியலமைப்பு 395 கட்டுரைகள் , 12 அட்டவணை , பல திருத்தங்களை மற்றும் 117.369 வார்த்தைகள் கொண்டஒரு நாட்டின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பாக உள்ளது. இந்திய சட்டம் பெரும்பாலும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆங்கில பொது சட்டதை அடிப்படையாக கொண்டது . 1857 இல் ஏற்பட்ட கலகத்திற்கு அடுத்து இது இயற்றப்பட்டது.அதன் பின்னர் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சமயத்திற்கும் ஏற்ப மறு படுகின்றது.எனினும் கோவாவில் மட்டும் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான உரிமைகளை கொண்டுள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (ஆங்கிலம்:Press Trust of India) பி.ட்டி.ஐ.என்பது இந்தியாவின் பெரிய செய்தி முகமை ஆகும். 1947 ஆம் ஆண்டு பதியப்பட்டு 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 450 க்கும் மேற்பட்ட இந்திய செய்தித்தாள்களின் கூட்டுறவு அமைப்பு. டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நாடு முழுவதும் 150 கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டு ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாவட்டங்களின் நிகழ்வுகளையும் கவனித்து செய்திகளாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் எல்லா செய்தித்தாள்களும், செய்திகள் வழங்கும் தொலைக்காட்சிகளும் பி.ட்டி.ஐ., இடமிருந்து செய்திகள் மற்றும் செய்திக்கான புகைப்படங்களைப் பெற்று அவற்றை மறுபதிப்பு செய்கின்றன. இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 செய்திகளையும் 200 செய்தி புகைப்படங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது . இது தவிர இந்திய சுதந்திரம் பெற்றதிலிருந்து உலகின் முக்கிய செய்தி முகமைகளுள் ஒன்றான "அஸ்ஸோஸியேட் பிரஸ்" மற்றும் "ராய்ட்டர்ஸ்" போன்ற நிறுவனங்களின் இந்திய செயல்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு இந்தியாவின் தனிப்பெரும் செய்தி முகமையக செயல்பட்டு வருகிறது. இந்திய தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளின் தலைநகரங்களிலும் மற்றும் உலகின் பிரபல நகரங்கள் பலவற்றிலும் தமது செய்தியாளர்களை பணியமர்த்தி தமது வாடிக்கையாளர்களுக்கு உலக செய்திகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக R.லக்ஷ்மிபதி என்பவர் உள்ளார். மாண்டு மாண்டு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர். மந்தாரி மந்தாரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். நாகபூசணி நாகபூசணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ ஔடவ" இராகம் என்பர். பிபன் சந்திரா பிபன் சந்திரா (1928 - ஆகத்து 30, 2014) நவீன இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்று அறிஞர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனையோட்டம் உடைய வரலாற்று ஆய்வாளர். பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் . இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர். லாகூரிலுள்ள போர்மேன் கிறித்துவக் கல்லூரியிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், கல்வி பயின்றார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். தில்லியில் உள்ள இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்துள்ளார். என்கொயரி என்னும் இதழிகையைத் தொடங்கி சில ஆண்டுகள் அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்தார். இந்திய வரலாற்று காங்கிரசின் தலைவராக 1985ஆம் ஆண்டு பதவி வகித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராகவும், நேசனல் புக் டிரஸ்டின் அவைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பத்ம பூசண் பெற்றார். 2013 ஆம் ஆண்டு திசம்பரில் பிகாரில் உள்ள ஆசியக் கழகத்தில் பிபன் சந்திராவுக்கு 'இதிகாச ரத்தினா' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவருடைய நவீன இந்திய வரலாற்றாய்வுகள் பல புத்தகங்களாக வந்துள்ளன. பலியா மாவட்டம் பலியா மாவட்டம் (, ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் ஆசம்கர் பிரிவின் கீழ் உள்ளது.இது உத்தரப் பிரதேசத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பலியா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் வணிகச் சந்தையாகும். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் போரின் நாயகருமான மங்கள் பாண்டே இவ்வூரில் பிறந்தவர் ஆவார். முன்னாள் இந்தியப் பிரதமர் சந்திர சேகரும் இம்மாவட்டத்தின் இப்ராஹிம்பட்டியில் பிறந்தவர். பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பலியா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,223,642. இது தோராயமாக மூரித்தானியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 108வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் பலியா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.73%.பலியா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர். மேலும் பலியா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.82%. ஐ-போன் 4எஸ் ஐ-போன் 4எஸ் ("iPhone 4S") ஆப்பிள் நிறுவனத்தின் என்பது இணையத் தொடர்பு உள்ள பல்லூடக வசதி கொண்ட நுண்ணறி பேசி. இந்த நகர்பேசி நவீன ரெடினா தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது. சிரீ என்பது ஒலிவடிவில் இடும் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கும் ஒரு புதிய தொழில் நுட்பம் ஆகும். இயல்பாகப் பேசும் மொழியில் பேசினாலே புரிந்துகொண்டு இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஒலிவடிவக் கேள்வி/ஆணைகள் எல்லா மொழிகளிலும் இப்பொழுது இயலுவதில்லை. சிரீ என்பது Siri என்று ஆங்கிலத்தில் முதலெழுத்துகளால் ஆன அஃகுப்பெயர் ( சுருக்கப்பெயர்). இந்த "Siri "என்பது, "பேச்சைப் பகுத்துப் புரிந்துகொண்டு இயங்கும் இடைமுகம்" என்று பொருள்படும் "Speech Interpretation and Recognition Interface" என்பதன் சுருக்கம் (அஃகம்). இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து கிடையாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது. வெளிச்சம் குறைவான இடத்தில் ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றாற் போல திரை மாறிவிடும். ஒரு அழைப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் காதின் அருகில் கொண்டு செல்லும் போது இதன் திரை தானாக அணைந்துவிடும்; இது மின்னாற்றலை சேமிக்க உதவும் விதமாக அமைந்துள்ளது. டப்பிளின் கருவம் டப்பிளின் கருவம் (Dublin Core) எனப்படுவது வளங்களை சேமிப்பதற்கும் கணடுபிடிப்பதற்கும் உதவும் மேல்நிலைக் கலைச்சொல் பட்டியல் ஆகும். இதனைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்படம், படம், வலைப்பக்கம் போன்ற இணைய வளங்களையும் நூல், பொருள் போன்ற பெளதீக வளங்களையும் விபரிக்க முடியும். டப்பிளின் கருவம் பல்வேறு அனைத்துல சீர்தரங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பட்டியலாக்கம் பட்டியலாக்கம் (cataloguing) என்பது நூல்கள், இதழ்கள் உட்பட்ட பல்வேறு நூலக வளங்களைப் பற்றிய தகவல்களை அட்டவணை வடிவில் ஒழுங்குபடுதி விபரநிரலை உருவாக்குதல் . தற்காலத்தில் இது மேனிலைத் தரவுகளின் ஓர் அங்கமாக கொள்ளப்படுகிறது. நூலகப் பயனர்கள் தமக்கு தேவையான வளங்களை இலகுவாக கண்டடைவதை நோக்கக் கொண்டும், இத்தகையை வளங்களையும் அவை பற்றிய தகவல்களைப் பராமரிப்பதை இலகுவாக்குவதை நோக்கக் கொண்டும் பல்வேறு அட்டவணைப்படுத்தல் சீர்தரங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது பல்வேறு சீர்தரங்கள் அனைத்துலக உசாத்துணைகள் விபரிப்பு சீர்தரத்தை (International Standard Bibliographic Description) ஒத்தவை அல்லது பின்பற்றுபவை. இவை ஒரு ஆக்கத்தைப் பற்றிய பின்வரும் தகவல்களை தொகுத்துத் தருகின்றன. ஆங்கில உலகில் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும் சீர்தரம் Anglo-American Cataloguing Rules, 2nd Edition, or AACR2 ஆகும். உலக அமைதி உலக அமைதி ("world peace") என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்தி, கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே. உலக அமைதி என்பது கருத்தளவில் நிகழலாம் என்றாலும், நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். மனிதர்கள் தம் இயல்பிலேயே வன்முறைச் சார்புடையவர்கள் என்றும், பகுத்தறிவு கொண்டவர்கள் என்னும் முறையில் சில சூழ்நிலைகளில் அவர்கள் வன்முறைச் செயலில் ஈடுபடுவார்கள் என்றும் இக்கருத்து உள்ளது. மேற்கூறிய கருத்துக்கு மாறான ஒரு கருத்தும் உள்ளது. அதாவது, போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும். இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது. உலக அமைதியை நடைமுறைக்குக் கொணர்வது எவ்வாறு என்பது குறித்து பல கொள்கைகள் எழுந்துள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன: உலகிலுல் உள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் மோதல் ஏற்படவில்லை என்றால் உலக அமைதி ஏற்படும் என்பது ஒரு கொள்கை. ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தியல் செயலாக்கப்பட்டால் அதன் கட்டாய விளைவாக உலக அமைதி தோன்றும் என்றொரு பார்வை உள்ளது. ஐக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் "உலகில் குடியரசு ஆட்சிமுறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி" என்று கூறினார் மார்க்சிய கருத்தியலாளர் லியோன் திரொட்ஸ்கி உலகப் புரட்சி நிகழ்ந்தால் அதன் விளைவாகப் பொதுவுடைமை அமைதி ஏற்படும் என்றுரைத்தார். குடியரசு ஆட்சி நிலவும் நாடுகள் அரிதாகவே ஒன்று மற்றொன்றுக்கு எதிராகப் போர்தொடுக்க முன்வருகின்றன என்பதற்குப் போதிய நடைமுறை ஆதாரம் உள்ளது என்று, குடியாட்சி வழி அமைதிக் கொள்கையினர் வாதாடுகின்றனர். இக்கொள்கைக்கு விதிவிலக்காக மூன்று "போர்கள்" மட்டுமே உள்ளன. அவைகூட, இரத்தம் சிந்தாத விதத்தில் நடந்தேறின. அப்போர்கள்: 1) ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐசுலாந்து நாட்டிற்கும் இடையே வட அட்லாண்டிக் கடலில் "காட்" மீன் பிடிக்கும் உரிமை பற்றி 1950களிலும் 1970களிலும் எழுந்த பிரச்சினை. 2) கானடாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே பன்னாட்டுக் கடல்நீரில் மீன் பிடித்தல் பற்றி 1995இல் எழுந்த பிரச்சினை . 3) இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்து போரில் ஈடுபட்டது (1940, மே 10).. ஜேக் லேவி என்பவர் 1988இல் கூறியது: "பன்னாட்டு உறவுகளைப் பொறுத்தமட்டில், ஏறக்குறைய ஒரு நடைமுறைச் சட்டம்போலக் "குடியாட்சி முறைவழி உலக அமைதி" என்னும் கொள்கை உள்ளது." தொழிற்புரட்சிக்குப் பிறகு, உலகின் பல நாடுகள் குடியரசு ஆட்சிமுறையைத் தழுவியுள்ளன. குடியரசு ஆட்சிமுறை பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றினால் உலக அமைதி ஏற்படும் என்பது எதிர்பார்ப்பு. ஆயினும், இக்கொள்கைக்கு விதிவிலக்குகள் பல எழக்கூடும். ஐன் ராண்ட் (Ayn Rand) என்னும் அறிஞர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கையை" ஆதரிக்கிறார். அக்கொள்கைப்படி, உலகில் இதுவரை நடந்துள்ள பெரும் போர்களில் பெரும்பான்மைப் போர்கள் "கட்டுப்பாட்டு பொருளாதார" அமைப்பு நிலவிய சூழ்நிலைகளிலேயே ஏற்பட்டுள்ளன. சுதந்திர பொருளாதார அமைப்பு நிலவிய நாடுகளில் பொதுவாக அமைதி நிலவி வந்துள்ளது. 1815இல் நடந்த நெப்போலியனிய போர்களுக்குப் பிறகு 1914 வரை (முதல் உலகப்போர்) நாடுகள் போரில் ஈடுபடவில்லை. இரு விதிவிலக்குகள் 1870இல் நிகழ்ந்த பிராங்கோ-புருச்சியப் போரும், 1898இல் நிகழ்ந்த எசுப்பானிய-அமெரிக்கப் போரும் ஆகும். 19ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவ அமைப்பு முற்றிலும் கட்டுப்பாடற்ற, சுதந்திர அமைப்பாக இருக்கவில்லை. மாறாக, கலப்புப் பொருளாதார அமைப்பாகவே இருந்தது. எனினும், அங்கே முதலாளித்துவம் சிறப்பிடம் வகித்தது. அரசுகள் பொருளாதார அமைப்பில் தலையிட்டு, பொருளாதாரப் போக்கை நெறிப்படுத்த முனைந்தன. அச்சூழலில்தான் 1914இல் முதல் உலகப்போர் வெடித்தது. மேற்கூறிய "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" மேற்கத்திய நாடுகள் ஐரோப்பாவுக்கு வெளியே குடியேற்ற ஆதிக்கத்தைப் போர்மூலம் பரப்பியதைக் குறிப்பிடத் தவறுகிறது. தவிர, இத்தாலியும் செருமனியும் நாட்டு ஐக்கியம் உருவாக்க மேற்கொண்ட போர்கள், பிராங்கோ-புருச்சியப் போர், கிரிமேயப் போர், ஐரோப்பாவில் நிகழ்ந்த பிற போர்கள் ஆகியவையும் "முதலாளித்துவ அமைதிக் கொள்கைக்கு" ஆதரவு அளிப்பதாகத் தெரியவில்லை. மேலும், உலக அமைதி என்பது "போரில்லாத நிலைமை" என்பதில் மட்டுமே அடங்கிவிட முடியாது என்பதும் கருதத்தக்கது. வர்க்கங்களுக்கிடையே மோதல் மனப்பான்மை தொடர்ந்து நிலவுவது அமைதியென அழைக்கப்பட முடியாதது. முதலாளித்துவம் உலக அமைதிக்குக் காரணமாக அமைந்தது என்னும் கொள்கை ஏற்புடையதென்றால், அரசுத் தலையீடு குறைவாகும்போது அமைதி நிலவும் என்றோ, ஒழுங்கற்ற நிலை ஏற்படும்போதும் அமைதி பிறக்கும் என்றோ கூட வாதிட முடியும். எனவே, பலர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" நிறைவுதருவதாக இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர். "ரிச்சர்டு கோப்டன்" (1804-1865) என்னும் பிரித்தானிய அறிஞர், "நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற வாணிகம் நடைபெறுவது அமைதிக்கு வழிகோலும்" என்னும் கொள்கையை எடுத்துரைத்தார். அரசியல் உறவுகள் குறைந்து, பொருளாதார உறவுகள் கட்டுப்பாடற்ற, சுதந்திர முறையில் வளரும்போது உலக அமைதியும் மக்களிடையே புரிதலும் உருவாகும் என்று அவர் கூறினார். அக்கொள்கைப்படி, வாணிகத்தைக் கட்டுப்படுத்துகின்ற அரசியல் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும். நாட்டு ஆட்சியாளர் தனி மனிதரின் சுதந்திர வணிகச் செயல்பாடுகளைத் தடுக்காமலும், சுங்கவரி விதித்துக் கட்டுப்படுத்தாமலும் இருக்க வேண்டும். சுதந்திர வணிகம் நடக்கும்போது எந்த நாடும் முற்றிலும் தன்னுரிமை கொண்டதாக மாறாது. எடுத்துக்காட்டாக, ஒரு நாடு துப்பாக்கி உற்பத்தி செய்கிறது, மற்றொரு நாடு வெடிமருந்து செய்கிறது என்றால் அந்த இரு நாடுகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட முடியாது. ஏனென்றால், துப்பாக்கி இருக்குமிடத்தில் வெடிமருந்து இராது, வெடிமருந்து இருக்கும் இடத்தில் துப்பாக்கி இராது. மேற்கூறிய கோப்டன் கொள்கையிலும் குறையுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நாடு போருக்குப் போகத் தீர்மானித்துவிட்டால், தற்காலிகமாக ஓரளவு தன்னிறைவை உருவாக்கிக் கொள்ள முடியும். அதுபோலவே, தனக்குத் தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை வேறு பல நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள முடியும். இரண்டாம் உலகப்போர் இதற்கு எடுத்துக்காட்டு. செருமனி போர்க்கால பொருளாதார அமைப்பை உருவாக்காமல் இருக்கும்போதே, போதிய அளவு தன்னிறைவு கொண்டதாக மாறியது. அதுபோல, பிரிட்டனும் போதிய தன்னிறைவு பெற்றது. போரும் நிகழ்ந்தது. கோப்டன் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் கூறுவது: கட்டுப்பாடற்ற, சுதந்திர வாணிகம் நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் போர்கள் எழவே செய்யாது என்று கூற முடியாவிட்டாலும், உற்பத்தி, ஆய்வு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபடுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்படும். செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அந்நிறுவனங்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும். இவ்வாறு, கட்டுப்பாடற்ற, சுதந்திர வணிகம் உலக அமைதிக்கு வழிவகுக்கும். "ஒருவரையொருவர் அழிக்கும் செயல்" என்பது ஒரு இராணுவக் கொள்கை ஆகும். அதன்படி, அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டுள்ள இரு நாடுகள் அந்த ஆயுதங்களை முழுப்போரில் பயன்படுத்தும்போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற முடியாது; மாறாக ஒரு நாடு மற்ற நாட்டை அழிக்கின்ற அதே வேளையில் தானும் அழிந்துபோகும். தாக்கிய நாடும் தாக்கப்பட்ட நாடும் அழிவதை இக்கொள்கை எடுத்துரைக்கிறது. இக்கொள்கைப்படி, அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் அனைவருக்கும் அழிவே என்னும் அடிப்படையானது உலக அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவித பனிப்போர் தொடர்ந்தாலும், போர் நடவடிக்கைகள் நிகழாமல் இருக்கும். இரண்டாம் உலகப்போருக்குப் பின், "பிற்காலத் தலைமுறைகளைப் போர் என்னும் கேட்டிலிருந்து காக்கும் பொருட்டு" 1945இல் உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய பன்னாட்டு நிறுவனமே ஐக்கிய நாடுகள் அவை ஆகும். இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் போர்கள் நிகழ்ந்து உலக மக்களுக்கு மாபெரும் இடர் விளைவித்த அனுபவம் கசப்பான ஒன்றாயிற்று. என்வே, உலக அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளை வலியுறுத்தி, பன்னாட்டுச் சட்ட அமைப்புக்கு இணங்கத் தனி நாடுகள் இயங்க வழிவகுக்கவும், பன்னாட்டுப் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்க்கவும் பன்னாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமாகிய ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் சாற்றுரையை உருவாக்கியது. அதன் முகப்புரையில்: என்னும் கூற்று உள்ளது. இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி, வாணிகம் தழைத்து, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழில்நுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலகமயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உறவு வளர்ச்சிகள் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு வழி என்னும் கருத்து உள்ளது. பிளவுபட்ட பகுதிகளாகக் கிடந்த நாடுகள் பல இன்று மைய அரசியல் அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நாடுகளாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தாலி, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், செருமனி, இந்தியா, ஐக்கிய இராச்சியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டலாம். படிப்படியாக, உலகளாவிய ஒன்றியம் பிறக்கவும் வழி திறந்துள்ளது. நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை "தலையீடு தவிர்க்கும் கொள்கை" எனப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது சொந்த ஆட்சிமுறையில் கவனம் செலுத்தி, நல்லாட்சியை ஏற்படுத்தும்போது அமைதி நிலவும் என்பது கருத்து. இத்தகைய "தலையீடு தவிர்க்கும் கொள்கை" "தனித்தியங்கும் கொள்கை"யிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும். தனித்தியங்கும் கொள்கை பிற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடலாகாது என்பதை வலியுறுத்துவதோடு, "பாதுகாப்பு வாதத்தையும்" (protectionism) முன்வைக்கின்றன. அதாவது, தமது சொந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மானியங்கள் போன்ற சிறப்புச் சலுகைகள் கொடுத்து, சுதந்திர முறை வாணிகத்துக்கு வரையறைகள் விதிக்கின்றன. கடந்த காலத்தில் "தனித்தியங்கும் கொள்கை"யைச் சப்பான் போன்ற நாடுகள் கடைப்பிடித்ததுண்டு. சப்பானின் இராணுவத் தளபதிகளாக ஆட்சிசெய்த தோக்குகாவா மரபினர் 1603-1868 ஆண்டுகளில் தனித்தியங்கும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர். உலக அமைதி ஏற்பட அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர வேண்டும் என்பது இன்னொரு கருத்து ஆகும் அதிகாரம் ஓர் இடத்தில், ஆளில், அமைப்பில் குவிவதற்கு மாறாக, பரவலாக விரியும்; அப்போது வன்முறையும் குறையும் என்பது இக்கருத்துக்கு அடிப்படை. முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் இங்குக் கிடையாது. மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரமோ, தெய்வீக அதிகாரமோ ஏற்கப்படுவதில்லை. மாறாக, தல அளவில், வலைப்பின்னல் போன்ற உறவுப் பரிமாற்றங்கள்மூலம் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் உறவுகள் வலுப்படும். சமய, இன, நாட்டு வேறுபாடுகளை வலியுறுத்தாமல், அனைவரும் பங்கேற்க வாய்ப்பளித்தல் இதன் ஒரு பகுதியாகும். மேலும், "சிந்தனைச் சோதனகள்" வழியாகவும், "பின்முறை உரை" (backcasting) வழியாகவும், இலட்சிய உலக அமைதி எவ்வாறிருக்கும் என்பதைக் கருத்தில் வரவழைத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியாக உறவு மேம்படுத்தலை இக்கருத்து முன்வைக்கிறது. இத்தகைய ஒத்துழைப்புத் திட்டங்களாக விக்கிப்பீடியா, "அமைதியின் தேவை" (Need4peace) மற்றும் சமூக வலைத்தளங்களைக் கருதலாம். மைக்கல் மூசோ (Michael Mousseau) என்னும் அறிஞர் உலக அமைதி பேணுதல் குறித்து "பொருளாதார நெறிக் கொள்கை" என்றொரு கருத்தியலை முன்வைக்கிறார். பொருளாதார முறைகள் ஒன்றில் "காவலர்-பெறுநர்" (patron-client) வகையதாக இருக்கலாம், அல்லது பொதுச் சந்தை சார்புடையதாக இருக்கலாம். காவலர்-பெறுநர் வகைப் பொருளாதாரம் உட்குழுக்கள் சலுகை பெற்று முன்னேறுவதைக் கருத்தில் கொண்டிருக்கும். அதில் தலைவர் கையில் அதிகாரம் இருக்கும். அவரிடமிருந்து பெறுநர்கள் சலுகைகள் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தங்கள் ஆதரவை அளிப்பார்கள். இவ்வகைப் பொருளாதாரம் நிலவும் சமூகங்களில் சமூக உடன்பாடு (social contract) வலுவோடு இராது. மாறாக, சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்களில் உட்குழு மனப்பான்மை என்னும் குறுகிய பார்வை இராது. சமூக உடன்பாட்டில் அன்னியரும் வெளிக்குழுவினரும் இருப்பதால் அவர்களும் பொருளாதாரச் செயல்பாட்டில் மைய இடம் வகிப்பர். சந்தைச் சார்புடைய பொருளாதாரம் தழைக்கும். இவ்வாறு, விரிந்த போக்கில் பொருளாதார நெறி அமையும்போது உட்குழுக்களுக்கும் வெளிக்குழுக்களுக்கும் இடையே உறவுகள் விரியும். ஒருவரின் நலன் வளரும்போது மற்றவரின் நலமும் வளரும். எனவே, ஆட்சியில் இழுபறி ஏற்படும்போது அதைத் தீர்த்துவைப்பதில் எல்லாத் தரப்பினரும் ஆவல் காட்டுவர். இவ்வாறு உலக அமைதி வளரும். இவ்வாறு சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்கள் "சுதந்திரக் குடியரசுகள்" (liberal democracies) ஆகும். இவையே அமைதியை வளர்க்கும் தன்மை கொண்டுள்ளன. ஆனால், காவலர்-பெறுநர் வகையில் அமைந்த பொருளுதார-அரசியல் அமைப்புகள் உட்குழுக்களின் முன்னேற்றத்தையே மையப்படுத்துவதால் பிற குழுக்களைப் புறக்கணிக்கும் போக்கு அங்கே தோன்றும். இதனால் குழுப் பகைமைகள் உருவாகும். இனங்களுக்கிடையே மோதல்களும் போர்களும் ஏற்படும். இனப்படுகொலை போன்ற கொடுமைகள்கூட நிகழும். சந்தைச் சார்புடைய பொருளாதார அமைப்புகள் தனிமனித உறவின் அடிப்படையில் எழாமல் பொதுவான பொருளாதார சக்திகளின் செயல்பாட்டால் உருவாகின்றன. அரசு வகுக்கின்ற சட்டங்களுக்கு உட்பட்டு, பொருளாதார உறவுகள் அன்னியரையும் வெளியாட்களையும் நம்பி ஏற்பதிலிருந்து எழுவதால், அங்கே உட்குழு வெளிக்குழு என்னும் வேறுபாடு எழுவதில்லை. ஒருதலை சார்பும் தோன்றுவதில்லை. மாறாக, சந்தையை மையமாகக் கொண்ட "நடுநிலை" (market neutrality) வெளிப்படும். எனவே, சந்தையை மையமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்ற நாட்டுப் பொருளாதார அமைப்புகள் அமைதிக்கு வழிகோலும் தன்மையன. அந்நாடுகள் எளிதாகப் போரில் ஈடுபட முன்வர மாட்டா. போர் என்பது "எதிரிக்குத்" தீங்கிழைப்பதை உள்ளடக்கும். அவ்வாறு தீங்கிழைப்பதால் போர் தொடுக்கும் நாடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். நாடுகள் இவ்வாறு தமக்குத் தாமே தீங்கு வருவிப்பதைத் தவிர்க்கப் பார்க்கும். மாறாக, ஒத்துழைப்பையும் கூட்டுச் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். எனவே, சந்தை மையப் பொருளாதாரங்கள் எங்கு உளவோ, அங்கு உலக அமைதிக்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே விளக்கப்பட்ட "பொருளாதார நெறிக் கொள்கை" தொழிற்புரட்சியைத் தொடர்ந்து வரலாற்றில் எழுந்த "கட்டற்ற முதலாளித்துவக் கொள்கை"யிலிருந்து மாறுபட்டது. சந்தை என்பது தன்னிலேயே "நடுநிலை" கொண்டது, கட்டுப்பாடற்ற சந்தையே செல்வம் உருவாகும்/உருவாக்கும் வழி என்பது கட்டற்ற முதலாளித்துவக் கொள்கையின் கருதுகோள். ஆனால், பொருளாதார நெறிக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்தை மனித உறவுகளின் வெளிப்பாடாகக் காண்கிறது. உட்குழுக்களும் வெளிக்குழுக்களும், உறவினரும் அன்னியரும் சமூக உடன்பாட்டின் வழி ஒருவர் ஒருவரின் வளர்ச்சியையும், அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் வாய்ப்பு இவ்வாறு எழுகின்றது. அங்கே அரசு கட்டுப்பாட்டுக்கு இடம் உண்டு; சமூக உறவுகளின் அடிப்படையில் "சமூகச் சந்தை" (social market) தோன்றும். இதுவே உலக அமைதிக்கும் வழியாகிறது. பொதுவாக, அனைத்து உலக சமயங்களும் உலக அமைதியை வலியுறுத்தி, கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே குடும்பம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும் என்பது சமயங்களின் பொதுவான அணுகுமுறை. பகாய் சமயம் 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லா என்பவரால் தொடங்கப்பட்ட மதம் ஆகும். உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பகாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இச்சமயத்தின் முக்கிய கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார்; உலக சமயங்கள் தனித்தனியாக வேறுபட்டு நின்றாலும், அவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றே; மனிதகுலம் பலவாகப் பிளவுண்டு நின்றாலும் அது அடிப்படையில் ஒன்றே. இவ்வாறு, பகாய் சமயம் உலக அமைதிக்கான அடிப்படைகளைத் தெளிவாகக் கொண்டுள்ளது. உலக அமைதி ஏற்படுவதற்கு உலகளாவிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஓர் பொது அமைப்பு வேண்டும் என்றும் பகாய் கூறுகிறது. உலக அமைதி ஏற்படுவதற்கான வழிகளைப் பகாய் மைய நிறுவனமாகிய "நீதியின் பொது இல்லம்" (Universal House of Justice) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. மனிதர் தம் உள்ளத்தில் அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே உலகில் அமைதி ஏற்பட முடியும் என்பது புத்த சமயக் கருத்து. புத்த சமயத்துக்கு அடிகோலிய கவுதம புத்தர் "அமைதி உள்ளத்திலிருந்து பிறக்கிறது. அதை வெளியில் தேடாதே" என்று போதித்தார். மனித உள்ளத்தில் இருக்கின்ற கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளே போர்களும் சண்டைகளும் உருவாகக் காரணமாய் உள்ளன. எதிர்மறை உணர்வுகளைக் களைந்துவிட்டு, அன்பு, இரக்கம் போன்ற ஆக்கமிகு உணர்வுகளை மனிதர் வளர்ப்பதே உலக அமைதிக்கு வழி. உலக அமைதி பற்றிக் கிறித்தவம் போதிக்கின்ற கருத்துகள் விவிலியத்திலும் வெவ்வேறு திருச்சபை அமைப்புகளின் போதனைகளிலும் காணக்கிடக்கின்றன. கிறித்தவத்தின் மூன்று முக்கிய பிரிவுகளாக விளங்குகின்ற கத்தோலிக்கம், மரபுவழி சபைகள், புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகிய அனைத்துமே சில பொதுவான கருத்துகளைக் கொண்டுள்ளன. அதாவது, கடவுள் உலக மக்கள்மீது அன்புகொண்டு, அவர்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, மீட்பளிக்கும் வண்ணம் தம் ஒரே திருமகனாகிய இயேசு கிறித்துவை உலகுக்கு அனுப்பினார். இயேசு சிலுவையில் அறையுண்டு, உயிர்துறந்து, தம் சிலுவைச் சாவின் வழியாக மனித குலத்தை மீட்டார். எனவே, இவ்வுலகும் இவ்வுலக மக்களும் கடவுளோடு ஆழ்ந்த உறவிலும் ஒன்றிப்பிலும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஒன்றிப்பின் வெளிப்பாடாக, மனிதர்களுக்கிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு, ஒன்றிப்பு, அமைதி நிலவ வேண்டும். மேலும், இயேசு அன்புக் கட்டளையை மிகவும் வலியுறுத்தினார். குறிப்பாக, பகைவர்களை மன்னித்து, அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள இயேசு போதித்தார் (மத்தேயு 5:43-48). எவ்வாறாயினும், உலக அமைதி நிறைவான விதத்தில் இவ்வுலகில் ஏற்படும் என்று கிறித்தவம் கருதுவதில்லை. மாறாக, விவிலியத்தில் குறிப்பிடப்படுவது போல (காண்க: திருவெளிப்பாடு 21), மனித வரலாற்றின் முடிவில், "புதிய உலகில்" அமைதி நிறைவாக நிலவும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் மனிதர் தனிப்பட்ட முறையிலும், குழுக்களாக, நாடுகளாக இணைந்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, கிறித்தவ சபைகளுள் பெரும் பிரிவாக விளங்குகின்ற கத்தோலிக்க திருச்சபை விரிவான போதனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, 1962-1965 காலக்கட்டத்தில் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உலக அமைதி பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தைக் கூட்டிய திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1960களில் ஐக்கிய அமெரிக்க நாடடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் முற்றிய நிலையில் அந்நாடுகளின் தலைவர்களோடு தொடர்புகொண்டு, அவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடாமல், அமைதிக்கான வழிகளைத் தேடுமாறு அறிவுறுத்தினார். குறிப்பாக, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் "அவனியில் அமைதி" (Peace on Earth) என்னும் தலைப்பில் 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் "நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்" ஒரு சுற்றுமடல் எழுதினார்.. அம்மடலில், அவர் உலக அமைதி ஏற்பட வேண்டும் என்றால் மனித உரிமைகள் எல்லா மட்டத்திலும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். உரிமைகளுள்ள இடத்தில் கடமைகளும் உண்டு என்பதால், தனிமனிதரும் நாடுகளும் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்புடையோராய்ச் செயல்பட வேண்டும். இவ்வாறு, உலக அமைதி என்பது மனித உரிமைகளை மதித்து, ஏற்று, மேம்படுத்துவதில் அடங்கும். அமைதியின் அடித்தளங்களாக இருப்பவை நான்கு: 1) உண்மை; 2) சுதந்திரம்; 3) அன்பு; 4) நீதி. பல்லாயிரமாண்டு வரலாற்றைத் தன்னுள் அடக்கி, பல பிரிவுகளாக விளங்கும் சமய மரபாகிய இந்து மதம் உலக அமைதி பற்றிக் கூறுவதைச் சுருக்கிக் கூறுவது கடினம். வேத கால சிந்தனைப்படி, எங்கும் பரவி நிற்கும் பிரமமும் மனிதரின் அகம் உறையும் ஆன்மாவும் ஒன்றே. உயிர்கள் தமக்குள் பிரிந்து நிற்பது போல் தோன்றினாலும், அடிப்படையாக உள்ள ஒன்றிப்பை உணர்வுகடந்த நிலையில் அனுபவிப்பதே விடுதலை ஆகும். பிற்காலத்தில் வளர்ச்சியுற்ற சைவமும் வைணவமும் இறைபணியையும் மனிதருக்கு ஆற்ற வேண்டிய சேவையையும் வலியுறுத்தின. அண்மைக் காலத்தில் இராமகிருசுண இயக்கம் போன்ற அமைப்புகள் பொதுநல சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவ்வாறு, மனிதரிடையே நல்லுறவுகளை உருவாக்கி, உலகில் அமைதி கொணரும் பணி சமயத்தின் ஒரு பெரும் பொறுப்பு என்பது ஏற்கப்படுகிறது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கருத்து வேரூன்றியுள்ளது. குறிப்பாக, மனிதர்கள் சமய வேறுபாடுகளை மறந்து, உலக அமைதிக்காக உழைத்தல் வேண்டும் என்றும், உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அகிம்சையே வழியாக அமைய வேண்டும், போரல்ல என்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கருத்துகள் இந்து சமய மற்றும் சமண சமயப் பின்னணியிலிருந்து எழுந்தனவென்பது பொதுவான கருத்து. இயேசு பகைவரையும் அன்புசெய்ய வேண்டும் என்று வழங்கிய போதனையும் தம் வாழ்வில் தாக்கம் கொணர்ந்ததாகக் காந்தியடிகள் கூறியுள்ளார். இசுலாம் சமயம் உலக அமைதியின் தேவையை எடுத்துரைக்கிறது. கடவுள் ஒருவராக உள்ளார். அல்லா என்னும் பெயர் கொண்ட அவர் மனித குலத்தை ஆதாம் ஏவா என்னும் முதல் பெற்றோரிடமிருந்து தோன்றச் செய்தார். இவ்வாறு மனிதர்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் ஆகின்றனர். தமக்குள் உடன்பிறப்புகளாகத் திகழ்கின்றனர். மனிதர்கள் இந்த உறவினை உணர்ந்து தம் வாழ்க்கை முறையை அமைதியான விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இசுலாம் சமயத்தின் திருநூலாகிய திருக்குர்ஆன் கூறுகிறது. "சொல்லாலோ செயலாலோ பிறருக்குத் தீங்கு இழைக்காதவனே முசுலிம்" என்பது குர்ஆனின் போதனை. அண்மைக் காலத்தில் இசுலாம் சமயத்தின் பெயரால் சிலர் வன்முறையில் ஈடுபட்டு உலக அமைதியைக் குலைத்தார்கள் என்பதால், இசுலாம் சமயம் தன்னியல்பிலேயே உலக அமைதிக்கு எதிராக உள்ளது என்னும் முடிவுக்கு வருதல் தவறு என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.. யூதம் எதிர்காலத்தில் "மெசியா" வருவார் என்றும், அவர் சகல யூதர்களையும் இசுரேலிய நிலத்திற்கு கொண்டு வருவார் என்றும், அதனைத் தொடர்ந்து உலகில் நிரந்தர நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவார் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்கள் யூதர்களின் தனாக்கில் இருந்தும் யூதப் போதகர்களின் விளக்கத்திலிருந்தும் பெறப்பட்டது. யூதர்களிடம் "உலகைத் திருத்துதல்" என்ற பொருளுடைய "டிக்குன் ஒலம்" என்ற கருத்தும் உள்ளது. அதன்படி, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்தல், சமூக நீதி ஆகியவற்றைச் செய்வதன் ஊடாக உலகை நீதிநெறியில் நடத்தலாமெனக் கருதுகின்றது. இது மெசியாவின் காலத்திற்கு ஆரம்பமாக இருக்குமென நம்பப்படுகின்றது. உலக அமைதியைப் பேணுவதில் சமண மதம் சிறப்புப் பங்கு அளிக்கிறது. எல்லா உயிர்களையும் போற்றும் பண்பைச் சமணம் ஊக்குவிக்கின்றது. பிற உயிர்களுக்குத் தீங்கு விளைப்பது பாவம் என்பது சமணக் கொள்கை. எனவே, அகிம்சை இச்சமயத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு மூலமாகச் சமணத்தின் தாக்கத்தைக் கருதலாம். மேலும், சமணம் "அனேகவாதம்" என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன்படி, எந்தவொரு சிக்கலும் ஒரே தீர்வுக்கு உட்பட்டது என்று கூற முடியாது, மாறாக, பல தீர்வுகள் இருக்கலாம். இதையே "பன்மைவாதம்" என்றும் கூறலாம். இந்த அணுகுமுறை உலக அமைதியைப் பேணுகின்றது. கருத்து வேற்றுமைகள் ஏற்படும்போது, பிறரது பார்வையிலும் உண்மை இருக்கலாம் என்று ஏற்கும் "சகிப்புத் தன்மை" வேண்டும். அது அமைதிக்கு வழியாகும். சீக்கிய சமயத்தில் உலக அமைதி பற்றிய கருத்துகள் குறிப்பாக மனிதரிடையே வேறுபாடுகள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் எழுகின்றன. சீக்கியம் ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிக்கிறது. சமபந்தி நடத்தி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஏழை-செல்வர் போன்ற வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே கடவுளின் மக்கள் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகிறது. சீக்கியத்தின் அடிப்படைக் கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார். மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புகள் என்பதால் தமக்குள் உடன்பிறப்புகள். நேர்மையான வழியில் செல்வம் ஈட்டுவதே முறை. தான் சேர்ப்பதைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். கடவுள் நினைவில் நிலைத்திருந்து, இயற்கையோடு இசைந்து வாழ்தல் வேண்டும். இக்கொள்கைகள் உலக அமைதியை வளர்க்க துணையாகும் எனச் சீக்கியம் கருதுகிறது. உலகில் அமைதி நிலவும்போது பொருளாதார வளர்ச்சியும் அதிகமாக நிகழ்கிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2011 மே மாதம் "உலக அமைதிக் குறிப்புகள்" (Global Peace Index) என்னும் ஆய்வின்படி, அதற்கு முந்திய ஓர் ஆண்டில் உலகம் 25% அதிகமாக அமைதியாக வாழ்ந்திருந்தால், உலகப் பொருளாதாரம் கூடுதலாக 2 த்ரில்லியன் டாலர்கள் பயன்பெற்றிருந்திருக்கும். அத்தொகை உலக மொத்த உற்பத்தியில் 2% ஆகும். அத்தொகையைக் கொண்டு, புவி சூடாதல் நிலையைச் சீர்படுத்தவும், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைய அனைத்துச் செலவுகளை ஏற்கவும், ஐரோப்பாவில் கிரீசு, அயர்லாந்து, போர்த்துகல் போன்ற நாடுகளின் கடன் பிரச்சினையைத் தீர்க்கவும், 2011இல் சப்பானில் நிகழ்ந்த ஆழிப்பேரலையால் உண்டான அழிவைச் சமாளித்து மறுவாழ்வு கொணரவும் முடிந்திருக்கும். உலகில் அமைதி நிலவும்போது மனிதரிடையே நல்லுறவுகள் வளரும். இயற்கை வளங்கள் காக்கப்படும். மனித இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடையின்றி நிகழும். உலக அமைதி மனித உள்ளத்திலிருந்து உருவாக வேண்டும் என்று சமயங்களும் ஆன்மிகவாதிகளும் கூறுவர். எனினும், நடைமுறையில் உலகளாவிய அமைதி ஏற்பட வேண்டும் என்றால், உலக நாடுகள் அரசியல், பொருளாதாரம், பண்பாடு தொடர்பான ஆதிக்கத்தைத் தம் நாட்டு எல்லைகளுக்கு அப்பால் விரிவடையச் செய்ய முனைகின்றன என்னும் உண்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்காக இன்று போர்கள் நிகழ்வது குறைவே. ஆனால், பொருளாதாரத்தை வளர்க்க, சக்திப் பொருள்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாடுகள் போரில் ஈடுபடுகின்றன. சில நாடுகள் நேரடியாகப் போரில் ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் தொடர்ந்து நிகழ ஆதரவு அளிக்கின்றன. போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து, இலாபம் ஈட்டுகின்றன. தமது ஆதிக்கத்தை (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம்) விரிவுபடுத்த மூன்றாம் கட்சியினரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இத்தகைய போர்கள் "பிறதரப்புப் போர்கள்" (proxy wars) எனப்படுகின்றன.. அதுபோலவே, அண்டை நாடு அணு ஆயுதம் உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தைப் பெற்று, தன்மீது தாக்குதல் நிகழ்த்திவிடுமோ என்னும் அச்சத்தில் அந்நாட்டின்மீது முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல் நிகழ்த்துவது நல்லது என்னும் கருத்தும் உள்ளது. மேலும், உள்நாட்டுப் போர்கள் இன்று உலக அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கின்றன. சில வேளைகளில், ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக மாபெரும் அநீதி இழைக்கப்படும்போது அச்சமுதாய மக்கள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடும். அந்நேரத்தில் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த நீதிப் போராட்டத்தின் நியாயமான குரலை அடக்கப்பார்க்கும். இந்த உள்நாட்டுப் போர்கள் உலக அமைதியைக் குலைக்கின்றன என்று கூற முடியாது. மாறாக, நீதியின் அடிப்படையில் அமைகின்ற உலக அமைதியைக் கட்டி எழுப்ப அத்தகைய போராட்டங்கள் தேவையாகலாம். எனினும், நீதிக்கான போராட்டமும் அகிம்சை முறையில் நிகழ வேண்டும் என்று சிலர் வாதாடுவர். வேறு சிலரோ, தற்பாதுகாப்புக்காக நாடுகளும் மக்களும் அகிம்சைப் போராட்டங்கள் வெற்றி கொணராத நிலையில், வன்முறையைப் பயன்படுத்துவது முறையே என்பர். ஏற்கெனவே வன்முறையும் போரும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், ஒடுக்கப்படுகின்ற குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கியும் வேறு விதங்களில் ஆதரவு அளித்தும், குறிப்பாக, உணவு மருந்து ஆகிய இன்றியமையாப் பொருள்களை வழங்கியும் உதவியளித்து, நிகழ்த்துகின்ற போர்முயற்சி "மனிதநலப் போர்" (humanitarian war) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு, இருபத்தோராம் நூற்றாண்டில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றில் செயலாற்றுகின்ற நேரடி மற்றும் மறைமுக சக்திகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, "உலக அமைதி" என்பது சிக்கல் நிறைந்த ஒரு பொருளாகவே உள்ளது. திறந்த ஆவணக்காப்பக முனைப்பின் மீதரவு அறுவடைக்கான நெறிமுறை திறந்த ஆவணக்காப்பக முனைப்பின் மேனிலைத்தரவு அறுவடைக்கான நெறிமுறை (Open Archives Initiative Protocol for Metadata Harvesting (OAI-PMH)) என்பது திறந்த ஆவணக்காப்பக முனைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நெறிமுறை ஆகும். இதைப் பயன்படுத்தும், அல்லது இதற்கு ஆதரவு தரும் ஆவணக் காப்பகங்களில் இருந்து மேனிலைத் தரவுகளைப் பெற்றுக் கொண்டு (அறுவடை) செய்து, அவற்றைப் பயன்படுத்தி வேறு பல சேவைகளை வழங்க முடியும், தகவல்களை ஒழுங்கமைக்க முடியும். மேலும் இதை பயன்படுத்தும் ஒரு மென்பொருளில் இருந்து இன்னுமொரு மென்பொருளுக்கு மாறுவது ஒப்பீட்டளவில் இலகுவானதாகும். திறந்த ஆவணக்காப்பக முனைப்பின் மேனிலைத்தரவு அறுவடைக்கான நெறிமுறை நிறுவும் ஒரு ஒருங்கியம் டப்பிளின் கருவத்துக்கு கட்டாயம் ஆதரவு தர வேண்டும். இந்த நெறிமுறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு எண்ணிம நூலக மென்பொருட்கள் இதற்கு ஆதரவு தருகின்றன. மவூ மாவட்டம் மவூ மாவட்டம் (, ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. மவூ நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஆசம்கர் பிரிவின் ஒரு பகுதியாகும். இம்மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் எல்லையாக தெற்கில் காசிப்பூர் மாவட்டமும், கிழக்கில் பலியா மவாட்டமும், மேற்கில் ஆசம்கர் மாவட்டமும்,வடக்கில் கோரக்பூரும் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மவூ மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,205,170. இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 206வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் மவூ மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.94%. மவூ மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் உள்ளனர். மேலும் மவூ மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 75.16%. மீதரவு குறியேற்ற பரிமாற்ற சீர்தரம் மெற்சு என அறியப்படும் மீதரவு குறியேற்ற பரிமாற்ற சீர்தரம் (Metadata Encoding and Transmission Standard (METS)) எனப்படுவது ஒரு எண்ணிம நூலகக வளங்களின் விபரிப்பு, நிரிவாக, கட்டமைப்பு மேனிலைத் தரவுகளை குறியேற்றிப் பகிர்வதற்கான ஒரு சீர்தரம் ஆகும். இது எக்சு.எம்.எல் மொழியில் வெளிப்படுத்தப்படுகிறது. இது நூலக எண்ணிம நூலக அறக்கட்டளையின் முனைப்பில் ஐக்கிய அமெரிக்க காங்கிரசு நூலகத்துடன் இணைந்து விருத்தி செய்யப்படுகிறது. எந்தவொரு மெற்சு ஆவணமும் பின்வரும் பண்புகளைக் கொண்டு இருக்க வேண்டும். தளவம் சங்ககாலத்தில் தளவம்[பிச்சிப்பூ] என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுவந்த மலர் இக்காலத்தில் செம்முல்லை என வழங்கப்படுகிறது. இதனைச் சாமந்தி என வழங்குகின்றனர். செவ்வந்தி எனப்படும் பூ வேறு. மேலும் குறிப்புகள் பெக்கெரல் பேக்குரெல் அலல்து பெக்கெரல் ( becquerel (குறி Bq) என்பது கதிரியக்கத்தின் அளவை அளவிடப் பயன்படும் அனைத்துலக முறை அலகுகள் வழி தருவித்த ஓர் அலகு. ஒரு பெக்கெரல் என்பது ஒரு நொடியில் ஓர் அணுக்கருத் துகள் சிதையும் விளைவால் ஏற்படும் கதிரியக்க விளைவைக் குறிக்கும். எனவே இதன் பண்பலகு நொடி (தலைகீழ் நொடி அல்லது நொடி கீழ்வாயாக இருத்தல்) ஆகும் . இந்த பெக்கரல் என்னும் அலகின் பெயர் பியர் கியூரி, மாரீ கியூரியுடன் தானும் 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற என்றி பெக்கரல் என்பவரின் பெயரால் வழங்குகின்றது. கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நிறை (திணிவு) உள்ள கதிரியக்கப் பொருளில் இருந்து வெளியாகும் பெக்கரல் அளவு காலத்தால் மாறுபடும். எனவே குறைந்த நேரமே இயங்கும் ஓரிடத்தான்கள் (ஐசோடொப்புகள்) நேரம் பதிவிட்டுக் குறிப்பிடப்பெறும், இதைக்கொண்டு முன்போ பின்போ தேவைப்படும் காலத்தைக் கணக்கிடலாம். சராசரி மாந்த உடலில் இருந்து பொட்டாசியம்-40 என்னும் கதிரியக்க ஓரிடத்தாலில் இருந்து 4400 பெக்கரல் வெளியாகின்றது. இது இயற்கையாகக் கிடைக்கும் கதிரியக்க ஓரிடத்தான் (இதன் அரைவாழ்வு 1.248 ஆண்டுகள் ஆகும்) SI அலகு Bq என்பதோடு வழக்கமான முன்னொட்டுகள் சேர்க்கலாம். எ. கா kBq (kilobecquerel) என்பது ஆயிரம் பெக்கரல் (10 Bq), மெகா பெக்கரல் MBq (megabecquerel, 10 Bq), கிகா பெக்கரல் GBq (gigabecquerel, 10 Bq), டெரா பெகக்ரல் TBq (terabecquerel, 10 Bq), and பீட்டா பெக்கரல், PBq (petabecquerel, 10 Bq). பொது வழக்கில் 1 Bq என்பது மிகவும் சிறிய அளவு, எனவே முன்னொட்டுகள் மிகவும் பயனபடுவன. மேலே குறிப்பிட்டவாறு இயற்கையில் இருக்கும் பொட்டாசியம்(K) என்பது மாந்த உடலில் இருந்து வெளிவருவது. இது நொடிக்கும் 4000 சிதைவுகள் என்பதைக் காட்டுகின்றது இரோசிமா நாகாசாகியில் வெடித்த அணுகுண்டின் விளைவால் வெளியானது () என்பதாகும். இது 8x10 Bq ( அதாவது 8 Y Bq = 8 யோட்டா பெக்கரல் (yottabecquerel). ஒரு கியூரி(Ci) என்பது SI அலகு சாராத பழைய அலகாகும். இது ஒரு கிராம் அளவு ரேடியம்-226 என்னும் ஓரிடத்தானின் கதிரியக்கம் ஆகும். ஒரு கியூரி என்னும் அலகு பெக்கரல் அளவைவிட மிகப்பெரியது. ஒரு கியூரி என்னும் கதிரியக்கம் 37 பில்லியன் பெக்கரலுக்கு ஈடு (37 கிகா பெக்கரல்). அலகு மாற்ற வாய்பாடுகள்: 1 Bq = 1 s formula_1 (கிராம்/மோல், g/mol அளவில்) அணுநிறையும், formula_2 (நொடிகளில்) அரைவாழ்வும் கொண்ட, formula_3 (கிராம் கணக்கில்) நிறை அளவான ஓரிடத்தானின் கதிரியக்கம் கீழ்க்காணுமாறு அளவிடப்படும்: இதில் formula_5=6.022 141 79(30) mol என்பது அவோகாடரோ எண். எடுத்துக்காட்டாக , ஒரு கிலோகிராம் பொட்டாசியம் 0.12 கிராம் K கொண்டிருக்கும் (all மற்ற எல்லா ஓரிடத்தான்களும் நிலையானவை), இதன் அரைவாழ்வு formula_2 = 1.248years=39.38388 நொடிகள், இதன் அணுநிறை 39.96399848 g/mol, எனவே இதன் கதிரியக்கம் 31.825 kBq. அட்டவணைப்படுத்தல் ஒரேதளஅமைவு வடிவவியலில் ஒரேதளஅமைவு ("Coplanarity") என்பது ஒரே தளத்தில் அமையும் புள்ளிகள், கோடுகள், திசையன்கள் போன்றவற்றின் நிலையைக் குறிக்கிறது. இடவெளியில் அமைந்த ஒரு கணத்திலுள்ள புள்ளிகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்தால் அவை "ஒரேதளஅமைவுப் புள்ளிகள்" என அழைக்கப்படுகின்றன. இதேபோல ஒரே தளத்தில் அமையும் கோடுகள் "ஒரேதளஅமைவுக் கோடுகள்" என்வும் ஒரே தளத்தல் அமையும் திசையன்கள் "ஒரேதளஅமைவுத் திசையன்கள்" எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரே கோட்டில் அமையாத மூன்று வெவ்வேறான புள்ளிகள் ஒரு தளத்தை அமைக்கும் என்பதால் அவை மூன்றும் எப்பொழுதுமே ஒரேதளஅமைவுப் புள்ளிகளாகவே இருக்கும். மூன்றுக்கும் அதிகமான, அதாவது 4, 5... புள்ளிகளை எடுத்துக் கொள்ளும்போது அவை அனைத்தும் ஒரேதளஅமைவுப் புள்ளிகளாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஒரு புள்ளி, தரப்பட்ட ஒருதளத்தில் அமையுமா என்பதைக் காண, அப்புள்ளிக்கும் தளத்திலுள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இடையில் அமையும் திசையனுக்கும் அத்தளத்தின் செங்குத்துத் திசையனுக்கும் புள்ளிப் பெருக்கம் காண அம்மதிப்பு பூச்சியம் எனில் தரப்பட்ட புள்ளி அத்தளத்தில் அமையும். மூன்று திசையன்கள், formula_1 மற்றும் formula_2 ஒரேதளஅமைவுத் திசையன்கள் மற்றும் formula_3 எனில்: இங்கு formula_5 என்பது formula_6 திசையனின் திசையில் அமையும் அலகுத்திசையனைக் குறிக்கிறது. ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாமலும் இணையாகவும் இல்லாமலும் அமையும் இரு கோடுகள் -அதாவது இரு வெட்டாக் கோடுகள் ஒரேதளஅமைவிலாக் கோடுகள் ஆகும். நான்கு புள்ளிகள் ஒரேதளஅமைவுப் புள்ளிகள் எனில் அந்நான்கு புள்ளிகளைக் கொண்டு அமையும் இரண்டு கோடுகள் வெட்டாக் கோடுகளாக இருக்க முடியாது. ஒரேதளஅமைவு கொண்ட நான்கு புள்ளிகளால் ஆன நான்முகியின் கனஅளவு பூச்சியமாகும். தமிழக சரணாலயங்கள் பட்டியல் தமிழகத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் மொத்தம் 17 உள்ளன. இவற்றில் பறவைகளுக்காக 7, விலங்குகளுக்காக 8 மற்றும் ஆராய்ச்சிப் பூங்காக்கள் இரண்டும் அட்ங்கும். அவை, காலடி (ஊர்) காலடி கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஓரு ஊர் ஆகும். ஆதிசங்கரர் பிறந்த ஊரான இது இந்து மத மக்களின் ஒரு முக்கிய புனித யாத்திரை வழிபாட்டு தலமாக விளங்குகிறது. இங்கு ஆதிசங்கரர் பிறந்த இடமான பூர்ணா நதிக்கரையில் ஒரு மடமும், காலடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒரு ஸ்தம்ப மண்டபமும் உள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் "காலடி" என்கிற வார்த்தைக்கு "பாதச்சுவடு" என்று பொருள். பழஞ்சோறு பழஞ்சோறு அல்லது பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்கின்றார்கள். நொதித்த உணவு வகைகளுள் ஒன்றான இது பொதுவாக, உழவர்கள், பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாகவும் உள்ளது. இதனால், சமூகத் தகுதியில் உயர்ந்தவர்களும், பணக்காரர்களும், நகரங்களில் வாழ்வோரும் பழஞ்சோற்றைத் தாழ்வாகப் பார்க்கும் நிலை உள்ளது. நொதிக்கவைத்தல், உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் அவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குமான மிகப் பழைய முறைகளுள் ஒன்று. பழஞ்சோறு மனிதருடைய உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான பல கனிமப் பொருட்களை அதிக அளவில் கொண்ட காலை உணவாகப் பயன்படலாம் என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. பழஞ்சோற்றில், சோடியம், பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்களைக் கொண்ட கனிமப்பொருட்கள் அடங்கியுள்ளன. அத்துடன், மனிதரின் தைராயிட் சுரப்புநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கும், வளர்சிதைமாற்றத்துக்கும் உதவும் செலெனியம் என்னும் தனிமமும் சிறிய அளவில் பழஞ்சோற்றில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சோற்றை நீரில் இட்டு வைக்கும்போது இலக்டிக் அமில பக்டீரியாக்களினால் நொதித்தல் இடம்பெறுகிறது. நொதித்தலின்போது சோற்றின் சுவை சற்று இனிப்பும், புளிப்பும் கொண்டதாக மாற்றமடைகின்றது. எனினும் பெரிய அளவில் சோற்றின் சுவை மாறுபடுவதில்லை. பழஞ்சோற்றில் பெருமளவு உடல்நலத்துக்கான பயன்கள் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இலக்டிக் அமில பக்டீரியாக்கள் சோற்றில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்புக் காரணிகளை உடைத்து உடல் உறிஞ்சக்கூடிய நுண்ணூட்டங்களையும்; இரும்பு, பொட்டாசியம், கல்சியம் போன்ற கனிமங்களையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக 12 மணிநேரம் நொதிக்கவிடப்பட்ட 100 கிராம் சோற்றில், உறிஞ்சக்கூடிய இரும்பின் அளவு 3.4 மில்லிகிராமில் இருந்து 73.91 மில்லிகிராமாக அதிகரிப்பதாகக் காணப்பட்டுள்ளது. மேற்படி பக்டீரியாக்களின் தாக்கத்தினால் விட்டமின் B12 உம் வெளிவிடப்படுகின்றன. இதனால் முற்காலத்தில் பழஞ்சோறு சைவ உணவு உட்கொள்வோருக்கான முக்கிய விட்டமின் B12 மூலமாக விளங்கியது. பெருங்குடலில் இருக்கக்கூடிய உடல்நலத்துக்கு உதவக்கூடிய பக்டீரியாக்களையும் பழஞ்சோறு தருவதால், பலவகையான வயிறு, குடல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க முடிகிறது. ஆனந்தவாடி ஆனந்தவாடி என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உள்ள ஒரு ஊராட்சியாகும். இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக பார்வதி வெங்கடாசலம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த ஊரைச் சுற்றி எட்டு ஏரிகள் உள்ளன. இந்த ஊரில் செங்கமுத்தையா கோயில் ஒன்றுள்ளது. இந்த ஊரில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் ஒன்று உள்ளது. அது மட்டுமல்லாமல் பெரிய பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் வருடந்தோறும் சுமார் 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பயண இலக்கியம் பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற்சிகள் படிப்படியாக செம்மைபெற்று பயண இலக்கியமாக வடிவம் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் எந்த கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தது என்பது அறுதியிட்டுக் கூற முடியாத செய்தியாகும். பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்கு புதியது அன்று. பயண இலக்கியம் என்ற பொருளில், ஆனால் வேறு பெயர்களில், தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவற்றை இவ்வகைப்பாட்டில் அடக்கலாம். பயணம், சுற்றுலா, செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்னும் பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும். தமிழ் மொழி அகராதி, செலவு என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடிவு, வழி என்று பொருள் தருகிறது. நிலப்படங்களும் நிலப்பட வரைவியலும் இல்லாத அக்காலத்தில் பயணிகள் பாதை கண்டறிவதும் அதன் வழி செல்வதும் அவர்களுக்கு பெரும் இடையூறு தரும் செயல்களாகவே அமைந்தன. எனினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே அவர்கள் சென்று வந்து, அந்த அறிவை தமக்குப் பின்பு வருவோர் பயன்படுமாறு பயண இலக்கியம் படைத்தனர். 19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நூல்களை வகைப்படுத்தி பட்டியலிடும் முறைக்கு இவரே தந்தை எனலாம். பயண நூல் பட்டியலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பயண இலக்கியம் பற்றிய முழுமையான சித்திரிப்பை நம்மால் பெற இயலும். 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி இந்திய இலக்கிய உலகிலும் புதிய திசைகளைத் தேடிய நேரம். இந்திய விடுதலை இயக்கம் தமிழ் நாட்டில் காந்திய வழியில் போராடிய நேரம். ஜேம்ஸ் ஆகுஸ்டுஸ் ஹிக்கி வங்காளத்தில் புதிய அச்சு இயந்திரத்தை இந்தியருக்கு அறிமுகப்படுத்தினார். நவீன அச்சு இயந்திரத்தின் வரவால் புத்தகங்கள் கிடைப்பது எளிதானது. புத்தகங்களின் வரவால் மேலை, கீழை நாட்டு இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. படித்த நடுதர வர்கம் என்று சமூகத்தில் ஒரு புதிய வகை மக்கள் தோன்றினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய திசையை கண்டறிவது அவசியம் ஆனது. புதிய இலக்கிய வகை அறிமுகம் அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது. 1888 ஆம் ஆண்டு சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம் என்ற நூலே புதிய தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. 1886 ஆம் ஆண்டில் கல்கட்டா நகரில் சர்வ ஜன மாநாடு நடைபெற்றது. அதில் அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பாக சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு கலந்து கொண்டார். அப்பயண அனுபவத்தை ஆரிய திவ்ய தேச யாத்திரையின் சரிதம் என்னும் பெயரில் 528 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் தக்சின இந்திய சரித்திரம் என்னும் தலைப்பில் இன்னுமொரு பயண இலக்கிய நூலையும் வெளியிட்டார். கிராண்ட் சென்ட்ரல் முனையம் கிராண்ட் சென்ட்ரல் முனையம் (Grand Central Terminal or Grand Central Station) அல்லது கிராண்ட் சென்ட்ரல் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். 67 ரயில் பாதைகள் மற்றும் 44 நடைபாதை மேடைகளுடன் உலகின் மிகபெரிய ரயில் நிலையமாக இயங்கி வருகிறது. இவற்றில் 41 பாதைகள் முதல் அடுக்கிலும் 26 கீழ் அடுக்கிலும் உள்ளன. டிராவல் + லெய்சர் இதழ் இந்த ரயில் முனையத்தை உலகின் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட சுற்றுலா தளம் வரிசையில் ஆறாவதாக குறிப்பிடுகிறது. பல்லவராயர் பங்காளிகளின் கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில் கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில் அய்யம்பாளையம் கள்ளர் தெருவில் உள்ளது. இதன் பரம்பரை பரம்பரையாக பல்லவராயர் பங்காளிகள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலின் பரம்பரை ட்ரஸ்ட்டி அசோகன் பல்லவராயர் அவர்களது முயற்சியால் தற்போதுள்ள கோவில் கட்டி முடிக்கப்பட்டது. கூரில் தீவுகள் கூரில் தீவுகள் ("Kuril Islands", , "குரீல்ஸ்கியே ஓஸ்த்ரவா", சப்பானியம்: , என்பது உருசியாவின் சக்காலின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவுக்கூட்டம் ஆகும். இது 1300 கிமீ நீளத்துக்கு சப்பானின் ஹொக்கைடோ வின் தென்கிழக்கில் இருந்து 300 கிமீ நீளத்திற்கு உருசியாவின் கம்சாத்கா வரை 300 கிமீ நீளத்திற்கு நீண்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் வடக்கே அக்கோத்ஸ்க் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 56 தீவுகளும், பல சிறிய பாறைகளையும் கொண்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 15,600 சதுர கிமீ (6,000 சதுர மைல்கள்) ஆகும், மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 19,000. இத்தீவுக்கூட்டத்தின் அனைத்துத் தீவுகளும் உருசியாவின் ஆட்சி எல்லைக்குள் உள்ளதானாலும், சப்பான் இங்கு தெற்கேயுள்ள இரண்டு தீவுகளுக்கும், ஷிக்கோட்டான், மற்றும் ஹபோமாய் ஆகிய சிறுதீவுகளுக்கும் உரிமை கோருகிறது. பழங்குடிகளான ஐனு மக்கள் கூரில் தீவுகளின் ஆரம்பகாலக் குடிகள் ஆவர். சப்பானியர்கள் ஏடோ காலப்பகுதியில் (1603-1868) இத்தீவுகளைக் கைப்பற்றினர். 1644 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சப்பானிய வரைபடத்தில் ஷிரெட்டோக்கோ குடாவின் வடகிழக்கே 39 தீவுகள் காட்டப்பட்டுள்ளன. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் பேரரசு கூரில் தீவுகளுக்குள் ஊடுருவியது. 18ம் நூற்றாண்டில் உருசியக் குடியேற்றம் கூரில் தீவுகளின் மிகப்பெரும் தீவான இத்தூருப் வரை பரந்திருந்தது. இத்தூருப்பின் தெற்கே உள்ள சில தீவுகள் சப்பானிய தோக்குகாவா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது. 1811 ஆம் ஆண்டில் உருசியக் கடற்படைத் தளபதி வசீலி கலோவ்னினும் அவனது மாலுமிகளும் இங்கு வந்தபோது குனாஷிர் தீவில் வைத்து சப்பானிய நம்பு வம்சத்தின் படையினரால் கைப்பற்றப்பட்டனர். அதே வேளையில் சப்பானிய வணிகர் ஒருவர் 1812 ஆம் ஆண்டில் உருசியர்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளை நிர்ணயிப்பதில் உடன்பாடு ஏற்பட்டது. 1855 ஆம் ஆண்டில் "வணிகம், கடல்வழிப் போக்குவரத்து, மற்றும் எல்லைகளை வரையறுத்தல்" என்ற உடன்பாடு எட்டப்பட்டு, இத்தூருப், உரூப் ஆகியவற்றிற்கிடையில் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, இத்தூருப்பிற்கு தெற்கே சப்பானியப் பிரதேசம் எனவும், உரூப்பின் வடக்கே உருசியப் பிரதேசம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சக்காலின் இரு நாட்டு மக்களும் வாழக்கூடிய இடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சென் பீட்டர்ஸ்பர்க் உடன்பாட்டின் படி, கம்சாத்காவின் தெற்கே கூரில் தீவுகள் அனைத்தையும் சப்பானுக்கு விட்டுக் கொடுத்து, பதிலாக சக்காலின் பிரதேசத்தை உருசியா ஏற்றுக் கொண்டது. 1904-1905 இல் இடம்பெற்ற உருசிய சப்பானியப் போரின் போது குஞ்சி என்ற இளைப்பாறிய சப்பானிய போர் வீரனும், சும்சு தீவில் வசித்து வந்தவனுமான குஞ்சி என்பவனின் தலைமையில் சென்ற கூட்டம் ஒன்று கம்சாத்கா கரையைக் கைப்பற்றியது. இவர்களைக் கலைப்பதற்காக உருசியா அங்கு தனது படைகளை அனுப்பியது. போர் முடிவுற்றவுடன் ஏற்படுத்தப்பட்ட உருசிய-சப்பானிய மீன்பிடித்தல் உடன்பாட்டின் சப்பானியர்கள் உருசியப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமைஅயை 1945 வரையில் பெற்றிருந்தனர். 1918-1925 காலப்பகுதியில் சப்பானியர்கள் சைபீரியாவில் இராணுவ ஊடறுப்பு நிகழ்த்திய போது வடக்கு கூரில்களில் நிலைகொண்டிருந்த சப்பானியப் படையினர் ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பியப் படையினருடன் இணைந்து தெற்கு கம்சாத்கா பகுதியைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியம் தெற்கு சக்காலின், மற்றும் கூரில் தீவுகளைக் கைப்பற்றியது. ஆனாலும், சப்பானியர்கள் கூரில் தீவுகளில் உள்ள குணாசிர், இத்தூருப், சிக்கோட்டான், ஹபொமாய் ஆகிய தீவுகளுக்கு உரிமை கோருகின்றனர். இந்த நான்கு தீவுகளும் இணைந்த பகுதியை அவர்கள் "வடக்குத் தீவுகள் பிரதேசம்" என அழைக்கின்றனர். ஜெய்ப்பூர் கால் ஜெய்ப்பூர் கால் அல்லது ஜெய்ப்பூர் புட் (Jaipur Foot) என்பது ரப்பர் முதலிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒருவகை செயற்கை கால்கள் ஆகும். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில இது உருவானதால் அந்த நகரத்தின் பெயரிலேயே இது ஜெய்பூர் கால் என அறியப்படுகிறது. இது விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், போலியோ நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்பு செயல்படாமல் போனவர்கள், கண்ணிவெடித் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் போன்றோரை மனதில் வைத்து பி.கே. சேத்தி என்ற இந்திய மருத்துவரால் 1969 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மிக குறிந்த விலையில் உருவாக்கக் கூடிய, நீரில் பயன்படுத்தக்கூடிய மற்றும் எளியவர்கள் வாங்கும் வண்ணம் இவ்வகை செயற்கை கால்கள உருவாக்கப்படுகிறது. இந்தியால் கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு சில தன்னார்வ நிறுவனங்கள் இலவசமாகவே இந்த கால்களை பொருத்தி உதவுகின்றன. கென் சுவாபர் கென் சுவாபர் (Ken Schwaber) ஒரு மென்பொருள் உருவாக்குநர், தயாரிப்பு மேலாளர் மற்றும் மென்பொருள் தொழில் ஆலோசகரும் ஆவார். தற்போது மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வழிமுறையான இசுக்கிரம் முறையியலை ஜெஃப் சதர்லேண்டு (Jeff Sutherland) அவர்களுடன் இணைந்து 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தினார். OOPSLA'95 -ல் இசுக்கிர முறையியலை ஒரு முறையான வழிமுறையாக முன்வைப்பதற்காக ஜெஃப் சதர்லேண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றி இசுக்கிர முறையியலின் முதல் பதிப்புகளை வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். இவர்கள் இருவரும் பல மென்பொருள் நிறுவனங்களில் இசுக்கிர முறையியலை நடைமுறைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்தியுள்ளனர். Scrum Guide எனப்படும் இசுக்கிர கையேட்டின் இணை ஆசிரியர். இவரால் நடத்தப்பட்டு வரும் Scrum.org என்ற நிறுவனம், மென்பொருள் வல்லுனர்களுக்கும், மென்பொருள் நிறுவனங்களுக்கும் இசுக்கிர முறையியல் பயிற்சிகளை அளித்து, தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மை பைர் லேடி (திரைப்படம்) மை பைர் லேடி (My Fair Lady) 1964 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஜாக் வார்னர் ஆல் தயாரிக்கப்பட்டு ஜார்ஜ் குகோர் ஆல் இயக்கப்பட்டது. ஆட்ரி ஹெப்பர்ன், ரெக்ஸ் ஹாரிசன், ஸ்டேன்லி ஹல்லோவே, வில்பிரேட் ஹைட்-வைட், கிளாடிஸ் கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரெண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது. ஜெஃப் சதர்லேண்டு முனைவர் ஜெஃப் சதர்லேண்டு ஒரு மென்பொருள் மேம்பாட்டு வல்லுனரும், ஆலோசகரும் ஆவார். மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் வழிமுறையான இசுக்கிரம் முறையியலை கென் சுவாபர் (Ken Schwaber) அவர்களுடன் சேர்ந்து 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தினார். OOPSLA'95 -ல் இசுக்கிர முறையியலை ஒரு முறையான வழிமுறையாக முன்வைப்பதற்காக கென் சுவாபர் அவர்களுடன் இணைந்து பணியாற்றி இசுக்கிர முறையியலின் முதல் பதிப்புகளை வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். இவர்கள் இருவரும் பல மென்பொருள் நிறுவனங்களில் இசுக்கிர முறையியலை நடைமுறைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்தியுள்ளனர். ஜெஃப் அவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புகளையும், கொலராடோ மருத்துவப் பள்ளியில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். Scrum Guide எனப்படும் இசுக்கிர கையேட்டின் இணை ஆசிரியர். தற்போது அவர் Scrum Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஒபன்வியூ வெஞ்சூர் பார்ட்னர்ஸ் (OpenView Venture Partners) என்ற நிறுவனத்தின் மூத்த ஆலோசகராகவும் உள்ளார். இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்) இன் த ஹீட் ஒப் த நைட் (In the Heat of the Night) 1967 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். வால்டர் மிரிஷ் ஆல் தயாரிக்கப்பட்டு நார்மன் ஜெவிசன் ஆல் இயக்கப்பட்டது. சிட்னி போய்டியார், ராட் ச்டீகர், வார்ரன் ஓட்ஸ், லீ கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது. கியூபா ஏவுகணை நெருக்கடி கியூபா ஏவுகணை நெருக்கடி ("Cuban Missile Crisis", அக்டோபர் நெருக்கடி என கியூபாவிலும், கரீபிய நெருக்கடி () என சோவியத் ஒன்றியத்திலும் அறியப்படுவது) எனப்படும் பதிமூன்று நாட்கள் ஆனது சோவியத் ஒன்றியமும், கியூபாவும் சேர்ந்த அணிக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே அக்டோபர் 1962ல் பனிப்போரின் போது நிகழ்ந்த மோதல் ஆகும். ஆகஸ்ட் 1962ல் கியூப ஆட்சியை வீழ்த்த ஐக்கிய அமெரிக்கா செய்த பன்றிகள் விரிகுடா படையெடுப்பு, மங்கூஸ் செயற்பாடு போன்ற வெற்றியடையாத செயற்பாடுகளுக்கு பிறகு கியூப அரசாங்கமும் சோவியத் ஒன்றிய அரசாங்கமும் சேர்ந்து இரகசியமாக ஏவுகணைத் தளங்களை அமைக்க ஆரம்பித்தன. இந்த தளங்களில் பல நடுத்தர மற்றும் இடைப்பட்ட தரத்தில் உள்ள அணு ஏவுகணைகள் (MRBMs and IRBMs) அமெரிக்க கண்டம் முழுவதையும் தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயல் ஆனது 1958ல் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் ஐக்கிய ராச்சியத்திலும், 1961ல் இத்தாலி மற்றும் துருக்கியிலும் மாஸ்கோ வரை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகே ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பு உளவுத்துறை அக்டோபர் 14, 1962ல் ஐக்கிய அமெரிக்க வான் படையின் லாக்ஹெட் யு-2 விமானம் கியூபாவில் சோவியத் ஒன்றிய ஏவுகணைத் தளங்கள் கட்டுமானத்தில் இருப்பதை படமெடுத்தது. பெர்லின் முற்றுகை, சூயஸ் நெருக்கடி மற்றும் யோம் கிப்பூர் போர் போன்ற முக்கிய பனிப்போர் நிகழ்வுகளுடன் இந்த நெருக்கடியும் சேர்ந்து பனிப்போரானது அணு ஆயுத போராக மாறும் அளவிற்கு திருப்பிவிட்டது எனலாம். மேலும் இது முதல் முதாலாக ஆவணமாக்கப்பட்ட ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்வதற்கான (mutual assured destruction) அச்சுறுத்தல் ஆகும். இதுவே சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது. ஐக்கிய அமெரிக்கா கியூபாவை வான் மற்றும் கடல் மார்க்கமாக தாக்க நினைத்தது, ஆனால் அதற்கு பதிலாக இராணுவ முற்றுகையிட முடிவு செய்தது. சட்ட மற்றும் பிற காரணங்களுக்காக இதனை "தனிமைப்படுத்ததல்" என அமெரிக்கா அழைத்தது. ஐக்கிய அமெரிக்கா கியூபாவிற்கு ஆயுதம் வழங்குவதை அனுமதிக்க முடியாது என அறிவித்தது. அதே நேரத்தில் சோவியத் ஒன்றியம், கியூபாவில் ஏற்கனவே அமைத்துள்ள மற்றும் அமைத்துக்கொண்டிருக்கும் ஏவுகணைத் தளங்களை அழிக்க வேண்டுமென வற்புறுத்தியது. இதற்கு கேர்ம்ளின் ஒத்துக்கொள்வார் என கென்னடி நிர்வாகம் மெலிதான நம்பிக்கையையே வைத்திருந்தது. மேலும் ஒரு இராணுவ மோதலை எதிர்பார்த்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் நிக்கிட்டா குருசேவ் கென்னடிக்கு எழுதிய கடிதத்தில் உங்களின் சர்வதேச கடல் மற்றும் வான் வெளி முற்றுகையானது மனித குலத்தை அணு ஆயுதப் போர் எனப்படும் நரகத்தில் தள்ள வழிவகுக்கிறது என எழுதியிருந்தார். அவர்களின் ஏவுகணைத் தளங்களைப் பற்றித் தெரிந்தவுடன் அமெரிக்கா மிகக் கோபம் கொண்டது. கென்னடியின் ஆலோசகர்கள் ஏவுகணைகளின் படங்களை முதலில் பார்த்த வேளையில் அவை முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்று நம்பவில்லை, ஆனால் அவர்களின் ஏவுகணைகள் இரண்டு வாரங்களில் தயாராகிவிடும் என்று ஊகித்துக் கொண்டன்ர். அதனால் கென்னடி தான் வேகமாகச் செயற்படவேண்டும் என்று உணர்ந்து கொண்டார். அவரின் தேர்வுகள் முதலில் தெளிவாக இருக்கவில்லை. அதனால் அவர் தேர்வுகளைக் கொடுப்பதற்காக EXCOMM (தேசிய பாதுகாப்புச் சபையின் நிர்வாக குழு) தொடங்கினார். பிரித்தானிய அலகுகள் இம்பீரியல் அலகுகள் ("imperial units") அல்லது இம்பீரியல் முறைமை (பிரித்தானிய இம்பீரியல் என்றும் அழைக்கப்படுகின்றது) முதன்முதலாக 1824 ஆம் ஆண்டில் பிரித்தானிய எடைகளும் அளவுகளும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டது. இது பின்னர் (1959இல்) சீர்திருத்தப்பட்டு சில குறைக்கப்பட்டன. இது பிரித்தானியப் பேரரசு முழுதும் அலுவல்முறையாகக் கடைபிடிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முன்னாள் பேரரசில் அங்கமாக இருந்த பல நாடுகள் தங்கள் முதன்மை அளவீடு முறைமையாக மெட்ரிக் முறைமைக்கு மாறிவிட்டன. ஐக்கிய இராச்சியம் மட்டும் 2011 நிலவரப்படி பத்துகளின் மடங்குகளில் பகுதியாக மாறியுள்ளது. 1870இல் இயற்றப்பட்ட இந்திய எடைகளும் அளவுகளும் சட்டம் பிரித்தானிய இம்பீரியல் முறைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தவிர வட்டார அளவீடு முறைமைகளும் நடப்பில் இருந்தன. இந்திய விடுதலை|விடுதலைக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டில் மெட்ரிக் முறைமைக்கு மாற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 1962 வரை இரு முறைமைகளும் இணையாக பயன்படுத்தப்பட்டாலும் ஏப்ரல் 1962 முதல் அலுவல் முறையாக பிற அளவீடு முறைமைகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் இவை அலுவல்சாரா அளவீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அடுக்கக முதலீட்டாளர்கள் பரப்பளவை இன்னமும் ஏக்கர் மற்றும் சதுர அடிகளில் விவரிக்கின்றனர். ஒருவரின் உயரத்தை அளவிட அடி மற்றும் அங்குலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரிக் அலகுகளுடன் இணையாக அடி, அங்குலம், கசம், பாரன்ஹீட் மற்றும் ஏக்கர் என்பன பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள் வடிவவியலில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கோடுகள் ஒரே புள்ளியில் சந்தித்தால் அவை ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள் ("concurrent lines") எனப்படும். ஒரு முக்கோணத்தில் குத்துக்கோடுகள், கோண இருசமவெட்டிகள், நடுக்கோடுகள், நடுக்குத்துக்கோடுகள் எனநான்கு வகையான ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள் உள்ளன குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி -செங்குத்து மையம். கோண இரு சமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி -உள்வட்ட மையம். நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி -நடுக்கோட்டுச்சந்தி. நடுக்குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி -சுற்றுவட்ட மையம். முக்கோணத்துடன் தொடர்புள்ள மற்ற ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு நடுக்கோடு, (நடுக்கோடு முக்கோணத்தின் பரப்பை இருசமக் கூறிடும்) முக்கோணத்தின் பக்கங்களுக்கு இணையாகவும் முக்கோணத்தின் பரப்பை இருசமக்கூறிடுவையுமான இருகோடுகளுடன் ஒரே புள்ளியில் சந்திக்கும். கிரகணம் கிரகணம் ("eclipse") என்பது வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்லுவதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ, அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும் போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆகியவற்றை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், பூமி-சந்திரன் தவிர்ந்த வேறு தொகுதிகளுக்கும் கிரகண நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது: எடுத்துக்காட்டாக, கோள் ஒன்று தனது நிலாக்களில் ஒன்றின் நிழலினுள் செல்லுவது, நிலா ஒன்று தனது கோளின் நிழலினுள் செல்லுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரும விண்மீன் தொகுதி ஒன்றிலும் இவ்வாறான கிரகணம் ஏற்படும். குடிசார் உரிமைகள் இயக்கம் குடிசார் உரிமைகள் இயக்கம் என்பது சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமை கோரிய உலகளாவிய அரசியல் இயக்கங்கள் பலவற்றை ஒருங்கே குறிப்பது. இத்தகைய இயக்கங்கள் ஏறத்தாழ 1950களுக்கும், 1980களுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின. பெரும்பாலான வேளைகளில், மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அமைதி வழியில் இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பியக்கங்களாகக் காணப்பட்டன. வேறு சில சமயங்களில், இதனுடன் சேர்ந்தோ அல்லது அதைத் தொடர்ந்தோ குடிமக்கள் கிளர்ச்சிகளும், ஆயுதப் போராட்டங்களும் இடம் பெற்றன. பல நாடுகளில் இது நீண்டதாகவும், பலம் குன்றியதாகவும் இருந்ததுடன், இவ்வாறான பல இயக்கங்கள் தமது நோக்கங்களை முழுமையாக அடையவும் முடியாமல் போயிற்று. இருந்தாலும், இவ்வியக்கங்களின் முயற்சிகளினால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலரது சட்ட உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற வேறுபாடுகளையும், புவியியற் பகுதி சார்ந்த வேறுபாடுகளையும் தாண்டி எங்கெல்லாம் தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாக மக்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் குடிசார் உரிமைகள் இயக்கங்கள் தோன்றலாயின. இனவொதுக்கல், சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, ஊழல் போன்றவற்றுக்கான எதிர்ப்பு முதல் ஓரினச் சேர்க்கைக்கான உரிமை கோருவது வரை குடிசார் உரிமைகள் இயக்கங்களின் நோக்கங்கள் வேறுபட்டுக் காணப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் குடிசார் உரிமைகள் இயக்கங்களின் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குடிசார் உரிமைகளுக்கான போராட்டங்கள் நீண்டகால வரலாறு கொண்டவை எனினும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் குடிசார் உரிமைகள் குறித்து உலகளாவிய வகையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், அக்கால அரசியல் நிலைமைகளும் குடிசார் உரிமைகள் தொடர்பான போராட்டங்களுக்கும், அவற்றை முன்னெடுத்துச் சென்ற இயக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன எனலாம். இந்தப் பின்னணியிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவின் ஒரு பகுதியில் தோன்றிய இயக்கம் நாடு தழுவிய அளவில் வளர்ந்ததுடன், உலகின் கவனத்தையும் ஈர்த்தது. குடிசார் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்கள் அனைத்துக்கும் "குடிசார் உரிமைகள் இயக்கம்" என்னும் பெயர் பொருந்துமாயினும். சிறப்பாக 1954க்கும் 1965க்கும் இடையில் நிகழ்ந்த அமெரிக்கக் கறுப்பு இனத்தவரின் போராட்ட இயக்கத்தையே இது சிறப்பாகக் குறிக்கும். குடிசார் உரிமைகள் இயக்கம் ஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் ஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் என்னும் இப்பட்டியலில் ஆங்கிலத்தில் பயன்படும் கிரேக்க இலத்தீன் மொழி வழி வந்த அடிச்சொற்களும், முன்னொட்டுகளும் பின்னொட்டுகளும் பிற சொற்கூறுகளும், இவற்றுக்கான தமிழ்ப்பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மருத்துவம் சார்ந்த கலைச்சொற்கள் அடங்காது. இவற்றைக் காண மருத்துவம் சார்ந்த அடிச்சொற்கள், முன்னொட்டுகள் பின்னொட்டுகள் பட்டியல் என்னும் பக்கத்தைக் காணவும். ராம் பிரசாத் பிசுமில் ராம் பிரசாத் பிசுமில் (, 11 சூன் 1897 - 19 டிசம்பர் 1927) 1918ல் நடந்த மனிப்பூரி ரயில் கொள்ளை மற்றும் 1926ல் நடந்த ககோரி ரயில் கொள்ளை போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஒரு இந்திய விடுதலைப் போராளியாவார். அதேபோல் ராம், அகாயத், பிசுமில் போன்ற பெயர்களில் இந்தி மற்றும் உருது மொழிகளில் அறியப்பட்ட ஒரு நாட்டுப்பற்று மிகுந்த கவிஞர். ஆனால் அவர் பிசுமில் என்ற தன் கடைசிப் பெயரிலேயே அதிகம் அறியப்பட்டார். சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாசு என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் இயக்கத்தில் இணைந்தார். அங்கு லாலாகர் தயால் என்பவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். மேலும் இவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். பகத் சிங்கால் உருது மற்றும் இந்தி மொழியின் மிகச்சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்று பாராட்டப்பட்ட இவர் ஆங்கிலப் புத்தகமான "காதரின்" மற்றும் வங்காளிப் புத்தகமான "போல்சேவிகான் கர்தூத்" ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்தவர். மேலும் பல நாட்டுப்பற்று மிக்க பாடல்களை எழுதிய இவர், தானெழுதிய சர்வரோசி கி தமன்னா என்ற இந்தி பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்டவர். பிசுமில் 11 சூன் 1897ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் முரலிதர் மற்றும் மூலமதி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படையில் இவரது பாட்டனார் மத்திய பிரதேச மாநில பார்பாய் நகரை சேர்ந்தவராயினும் பின்பு சாசகான்பூரிற்கு குடிமாறினார். பிசுமிலின் தந்தை பிசுமிலை சாசகான்பூர் உள்ளூர் முதல் நிலைப் பள்ளியில் சேர்த்தார். அங்கே இந்தி மொழியில் "வு" உச்சரிப்பு ஆந்தையை குறித்தால் பிசுமில் இந்தி மொழி கல்வியை கற்பதற்கு பிடிவாதமாக மறுத்தார். அதனால் அவர் உருது மொழிப்பள்ளியில் பிசுமிலைச் சேர்த்தார். அங்கே தீய நண்பர்களின் சகவாசத்தால் பிசுமில் காதல்சார் கவிதைகளை படித்ததால் கல்வியில் ஆர்வம் குன்றியது. அதனால் ஏழாம் வகுப்பில் இரு முறை தோல்வி கண்டதால் அவரது தந்தை பிசுமிலை ஆங்கிலப் பளியில் சேர்த்தார். எட்டாம் வகுப்பிற்குப் பிறகு சாசகான்பூர் அரசுப்பள்ளியில் பயின்றார். அங்கே அவரது எழுது பெயரை பிசுமில் என்றே வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றுக் கவிதைகளை அதிகம் எழுதிய இவர் அதன் பிறகு ராம் பிரசாத் பிசுமில் என்றே அறியப்பட்டார். பிசுமில் அவரின் வாழ்க்கை வரலாற்றை தான் கொரக்பூர் சிறையில் இறப்பதற்கு மூன்று நாள் முன்பு சர்வ ரோசி கீ தமனா என்ற பெயரில் எழுதினார். பிசுமிலின் வாழ்க்கை வரலாறு நூல் 1928ல் கனேசு சங்கர் வித்யார்த்தி என்பவரால் எழுதப்பட்டு அப்போதைய ஐக்கிய மாகாண அரசின் சிஐடி காவல்துறையால் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.. இது தற்போது லக்னவ் சிஐடி தலைமை செயலகத்தில் உள்ளது. ககோரி ரயில் கொள்ளையில் பிசுமில், சந்திரசேகர ஆசாத் போன்றவர்கள் பங்கு கொண்டதன் நினைவாக அவர்களுக்கு ககோரியில் ஒரு நினைவகம் உள்ளது. ககோரி ரயில் கொள்ளையை அடுத்து அவர்களின் நினைவாக செவ்வாய் கிரக குழி ஒன்றிற்கு ககோரியின் பெயர் 1976ல் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் இருப்பிடம் . இந்தியக் கவிஞரான எம். எல். வர்மா "பண்டிட் ராம் பிரசாத் பிசுமில் - எழுதுகோல் மற்றும் துப்பாக்கிப் போராளி" என்னும் இலக்கிய கட்டுரையை இந்திய சர்வதேச இசை அரங்கத்தில் 27 பிப்ரவரி 1985ல் வெளியிட்டார். தில்லி பல்கலைக்கழகத்தின் நவீன ஐரோப்பிய மொழித்துறை வெளியிட்ட இவ்விலக்கியத்தில் பிசுமில் இயற்றிய 4 பாடல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. அவை, தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் மற்றும் ரங்தே பசந்தி ஆகிய திரைப்படங்களில் முறையே கனேசு யாதவ் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் பிசுமில் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் பிசுமில் இயற்றிய பாடல்கள் சாகீத் மற்றும் சில திரைப்படங்களில் பாடப்பட்டுள்ளது. மஞ்சள் காய்ச்சல் மஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும். மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதல் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை. டெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசை கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர். இக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது. மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் (Flaviviridae ) சார்ந்த ஆர்.என்.ஏ கொண்டுள்ள தீநுண்மம் இக்காய்ச்சலுக்குக் காரணமான நுண்ணுயிரி ஆகும். இது 38 நானோமீட்டர் அகலமுள்ள சுற்றுறையைக் கொண்டுள்ளது. இவை வழங்கியின் உடலுக்குள் கொசு மூலம் செலுத்தப்பட்ட பின்னர் வழங்கியின் உயிரணுவின் மேற்பரப்பில் ஏற்பி ஒன்று மூலம் இணைக்கப்படுகின்றது; பின்னர் உயிரணுக்களுக்குள் அகவுடல் நுண்குமிழி (endosomal vesicle) மூலம் எடுக்கப்படுகின்றது; இறுதியில் குழியமுதலுருக்குள் தீநுண்மத்தின் மரபணுக்கூறுகள் வெளிவிடப்படுகின்றது; இவை அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலையுள் பல்கிப்பெருகுகின்றன. மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் முதன்மையாக ஏடிசு எகிப்திப் பெண் கொசுவின் கடி மூலம் பரப்பப்பட்டாலும், வேறு இன வகை கொசுக்களும் இந்நோயைப் பரப்புவதுண்டு. அவற்றுள் புலிக் கொசு என அழைக்கப்படும் ஏடிசு அல்போப்டிக்கசுவும் அடங்குகின்றது. நோயுற்ற குரங்கு அல்லது மனிதரைக் கடிக்கும் பெண் கொசு அவர்களின் தீநுண்மம் கொண்ட இரத்தத்தை உறிஞ்சுகின்றது, கொசுவின் இரைப்பையை அடைந்த தீநுண்மங்கள் மேலணி இழையங்களில் பெருகுகின்றன, ஒரு குறிப்பிட்ட தொகையை அடைந்ததும் அங்கிருந்து கொசுவின் சுற்றோட்டத்தொகுதியை அடைந்து அங்கிருந்து உமிழ்நீர்ச சுரப்பியை அடைகின்றன. மீண்டும் இவை மனிதரைக் கடிக்கும் போது முதலில் குத்திய காயத்துள் உமிழ்நீரைச் செலுத்துகின்றன, அதனுடன் செலுத்தப்பட்ட தீநுண்மங்கள் கடிவாங்கியவரின் குருதியை அடைகின்றன. மருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல் இப்பட்டியலில் ஆங்கில, ஐரோப்பிய மொழிகளில் உள்ள மருத்துவக் கலைச்சொற்களில் பயன்படும் அவற்றின் வேராக இருக்கும் இலத்தீன், கிரேக்க மொழிச்சொற்களின் பொருள்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னொட்டுகளிலும் பின்னொட்டுகளிலும், குறிப்பாக கிரேக்கத்திலும், ஆனால் இலத்தீனிலும் கூட, "-o-" என்று வருவதை விட்டுவிடலாம். பொது விதியாக இந்த "-o-"ஏறத்தாழ எப்பொழுதுமே மெய்யெழுத்துகள் நிலைமொழியின் கடைசியிலும் வருமொழியின் முதலிலும் வரும்பொழுது அவற்றை இணைக்கப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக "arthr-" + "-o-" + "logy" = "arthrology". ஆனால் வருமொழியின் முதலில் உயிரெழுத்து இருந்தால் இந்த "-o-" வருவதில்லை. எடுத்துக்காட்டாக "arthr-" + "itis" = "arthritis" ("arthr-o-itis" என்று வராது). அடுத்ததாக மருத்துவச் சொற்கள் சேரும்பொழுது அவ்வவ் மொழியோடு ஒத்துப்போகும். அதாவது கிரேக்க முன்னொட்டுகள், கிரேகக்ப் பின்னொட்டுகளுடன் ஒத்து இயங்கும், இலத்தீன் முன்னொட்டுகள் இலத்தீன் பின்னொட்டுகளுடன் சேர்ந்தியங்கும். என்றாலும் அனைத்துலக அறிவியற் கலைச்சொற்களில் இதனை இறுக்கமாகப் பின்பற்றுவதில்லை. பொதுவாக புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது மொழிக்கலப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்பர். கீழே உள்ளது ஆங்கில அகரவரிசைப்படி அமைந்த மருத்துவக் கலைச்சொற்களின் முன்னொட்டு பின்னொட்டுகளும் அவற்றின் தமிழ், ஆங்கில பொருள்களும், எடுத்துக்காட்டுகளுடன். This section contains lists of different root classification (e.g. body components, quantity, description, etc.). Each list is alphabetized by English meanings, with the corresponding Greek and Latin roots given. தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல் தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல் (Viral hemorrhagic fever) என்பது பொதுவாக தீநுண்மங்களால் ஏற்படும், குருதிப் போக்கை உண்டாக்கக்கூடிய நோயாகும். இது ஆர்.என்.ஏ கொண்டுள்ள நால்வகை தீநுண்மக் குடும்பங்களால் ஏற்படுகின்றது: சிறுமணித் தீநுண்மம் (Arenaviridae), இழைத் தீநுண்மம் (Filoviridae), புனியாத் தீநுண்மம் (Bunyaviridae), மஞ்சட் தீநுண்மம் (Flaviviridae). அனைத்து தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சலிலும் கடும் காய்ச்சல், குருதிப்போக்கு, அதிர்ச்சி போன்ற விளைவுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறப்பும் ஏற்படும். சில தீநுண்மங்களால் சிறியளவு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு சில தீநுண்மங்களால் உயிராபத்து ஏற்படக்கூடிய விளைவுகள் உண்டாகும். தோன்றி (மலர்) தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர். மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது. குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இதனைச் ‘சுடர்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது. இப்பெயர் ‘நள்ளிருள் நாறி’ என்னும் பெயருக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் போல் உள்ளது. தோன்றி < தோன்றிப்பூ < சுடர்பூந்தோன்றிப்பூ – என இந்தப் பூவின் விளக்கம் அமைகிறது. மருதோன்றி, மருத்தோன்றி, மருதாணி, அழகணம் என்றெல்லாம் கூறப்படும் பூவின் பெயரே தோன்றி என வழக்காறு நோக்கிக் கொள்வது பொருத்தமானது. அதுபோல ‘மருத்தோன்றி’ என்னும் சொல்லிலுள்ள ‘மரு’ என்னும் முதல் மறைந்து ‘தோன்றி’ என நின்று மருதாணிப் பூவை உணர்த்துகிறது எனல் பொருத்தமானது. இதனை இப்படிப் பார்க்கவேண்டும். தோன்றி என்பது பழந்தமிழ். மரு = மணம். தொலை தூரம் மணக்கும் பூ என விளக்கும் விளக்கப்பெயராக அமைந்துள்ளது ‘மருத்தோன்றி’. தோன்றி (மலை) தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது. இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். மியூன்ச்சென் நடவடிக்கை மியூன்ச்சென் நடவடிக்கை ("Operation München") என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் நாசி ஜெர்மனி, ருமேனியா ஆகிய அச்சு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு படைமோதல். இது சோவியத் ஒன்றியத்தின் ஜெர்மானிய படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். ஜூலை 2-24, 1941 காலகட்டத்தில் நடைபெற்றது. ஒராண்டுக்கு முன்னால் ருமேனியா சோவியத் ஒன்றியத்திடம் ஒப்படைத்திருந்த பெசரேபியா பகுதியைக் கைப்பற்றுவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று வார கால சண்டைக்குப் பின்னர் பெசரேபியா பகுதியை ருமேனியப் படைகள் கைப்பற்றின. தேனீ கொட்டு தேனீ கொட்டு "(Bee sting)" என்பது தேனீ தனது கொடுக்கினால் மனிதர் அல்லது விலங்குகளைக் கொட்டுவது. கொட்டும் போது தேனீயின் கொடுக்கு மூலம் நச்சுப் பொருட்கள் மனித உடலுள் செலுத்தப்படுகின்றன. ஒரு தேனீ ஒரு மனிதனையோ அல்லது விலங்கையோ கொட்டும் போது அது எச்சரிக்கை ஃபெரமோன்களை வெளியிடுகிறது. இதனால் மற்ற தேனீக்களும் ஃபெரமோன்களால் கவரப்பட்டு அங்கே வந்து கொட்ட ஆரம்பிக்கின்றன. கூட்டுக்கு வெளியே மகரந்தச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தேனீக்கள் பொதுவாக கொட்டுவதில்லை. கூட்டிற்கு அச்சுறுத்தல் வரும் போது மட்டுமே அவை கொட்டுகின்றன. ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு இல்லாததால் அவை கொட்ட இயலாது. பெண் தேனீக்களே கொட்டும். இராணி தேனீ பொதுவாக கூட்டை விட்டு வெளியே வராது. ஆனால் அது பல முறை கொட்டும் வல்லமை பெற்றது. மற்ற தேனீக்கள் ஒருமுறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில் அவற்றின் கொடுக்கு எதிரியின் உடலில் சிக்கிக் கொள்ளும். உடனடியாக கொடுக்கை அகற்ற வேண்டியது மிக மிக முக்கயமான ஒன்றாகும். இது நச்சு மேலும் உடலினுள் உட்செலுத்தப்படுவதைத் தடுக்கும். மருத்துவ உதவி உடனே நாடப்பட வேண்டும். தேனீ கொட்டுக்கு சில பாரம்பரிய வைத்தியமுறைகளும் முன்வைக்கபடுகின்றன. தேனீ நச்சு தேனீ நச்சு "(Apitoxin)" என்பது தேனீ ஒரு விலங்கைக் கொட்டும் போது கொடுக்கின் மூலம் செலுத்தப்படும் நச்சு. இது நிறமற்றது; கசப்புச் சுவையுடையது; அமிலத் தன்மை கொண்டது. வேதியியல் அடிப்படையில் இது பல்வேறு புரதங்கள் சேர்நத ஒரு கலவை. இது அழற்சி தடுக்கும் பண்பும் குருதி உறைதல் தடுக்கும் பண்பும் கொண்டுள்ளதால் சில வாத நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கம்சாத்கா தீபகற்பம் கம்சாத்கா தீபகற்பம் ("Kamchatka Peninsula", , "பலுஓஸ்திரொவ் கம்சாத்கா") என்பது உருசியாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது 1250 கிமீ (780 மைல்) நீளமும் 472,300 சதுரகிமீ (182,400 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. இப்பிராந்தியம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஓக்கோத்ஸ்க் கடலுக்கும் இடையில் உள்ளது. கம்சாத்கா தீபகற்பம், கொமாண்டர் தீவுகள், கரகின்ஸ்கி தீவு ஆகியவை சேர்ந்த பிரதேசம் உருசியக் கூட்டமைப்பின் நிருவாக அலகுகளில் ஒன்றான கம்சாத்கா கிராய் என அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் 322,079 மக்களில் பெரும்பான்மையோர் உருசியர்கள். இவர்களை விட 8,743 பேர் (2002) கோரியாக்கள் ஆவர். அரவாசிக்கும் மேற்பட்டோர் (179,526 பேர் 2010) பெத்ரொபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி பகுதியிலும், 38,980 பேர் அருகில் உள்ள யெலிசோவோ நகரிலும் வசிக்கின்றனர். கம்சாத்கா தீபகற்பத்தில் கம்சாத்காவின் எரிமலைகள் அமைந்துள்ளன. இவை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. அநாதை மருந்து அநாதை மருந்துகள் "(Orphan drug)" என்பவை அரிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது உற்பத்திச் செலவு அதிகமுள்ள மருந்துகள் ஆகும். அரிய நோய்கள் உடையோர் உலகில் வெகு சிலரே இருப்பதால் அந்நோய்கட்கு மருந்து தயாரிப்போர் இல்லை. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அநாதை மருந்துகளைத் தயாரிக்க அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனந்தமைடு "ஆனந்தமைடு"' "(Anandamide)" என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி. இதன் வேதிப்பெயர் N-அரக்கிடானோயில் எத்தனால் அமைடு "(N-arachidonoylethanolamide)" என்பதாகும். ஆனந்தமைடு எனும் பெயர் ஆனந்தா என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஆனந்தமைடு N-பாஸ்ஃபட்டைடில் எத்தனாலமைன் இல் இருந்து பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. விரோதமைன் விரோதமைன் "(Virodhamine)" என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி ஆகும். இதன் வேதிப்பெயர் O -அரக்கிடானோயில் எத்தனால் அமைன் "(O-Arachidonoyl ethanolamine)" என்பதாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு C22H37NO2. விரோதமைடு எனும் பெயர் "விரோதா" எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. அமைலின் அமைலின் ("Amylin, or Islet Amyloid Polypeptide)" என்பது கணையத்தால் சுரக்கப்படும் புரத இயக்குநீர்களுள் ஒன்று. இது 37 அமினோ அமிலங்களால் ஆனது. இன்சுலின் சுரக்கப்படும் போது இதுவும் உடன் சுரக்கப்படுகிறது. அமைலின் இரைப்பை இயக்கத்தைக் குறைக்கிறது. பசியாறும் உணர்வை "(satiety)" உண்டாக்குகிறது. இதன் மூலம் உணவு உண்டதும் உருவாகும் இரத்த சர்க்கரை உயர்வைக் குறைக்கிறது. அமைலினை ஒத்த வேதிப்பொருளான ப்ராம்லினிடைடு சர்க்கரை நோய் மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) இன்சுலின் சாராத நீரிழிவு (அல்லது) முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவு (Diabetes mellitus type 2), இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும், ஒரு வளர்சிதைமாற்ற நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும் (90%), மற்ற பத்து சதவிகிதத்தினர் (10%) முதன்மையாக முதலாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1), கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நோய் உருவாவதற்கு, மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில், உடற் பருமன் ஒரு முதன்மைக் காரணியாக விளங்குகிறது. உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் இரத்த குளுக்கோசு அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின், இன்சுலின் போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்ஙனம், இன்சுலினை உபயோகிப்பவர்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் கண்காணிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் உடற்பருமன் உடையவர்கள் அதிகரித்ததைப்போல நீரிழிவு நோயாளிகளும் குறிப்பிடும்வண்ணம் அதிகரித்துள்ளனர். தோராயமாக 1985-ஆம் ஆண்டு கணக்கின்படி 30 மில்லியன் மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2010-ஆம் ஆண்டில் இத்தொகை 285 மில்லியனாக உயர்ந்துள்ளது. நீண்டகாலம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், கூழ்மப்பிரிப்புத் தேவைப்படும் சிறுநீரகச் செயலிழப்பு, விரல்களில் குருதியோட்டம் குறைவதால் உறுப்பு நீக்கம் செய்தல், நீரிழிவுசார் விழித்திரை நோய் (diabetic retinopathy) ஆகியவை ஏற்படுகிறது. நீரிழிவு முதலாம் வகையிலுள்ள தீவிரச் சிக்கலான கீட்டோ அமிலத்துவம் (ketoacidosis), நீரிழிவு இரண்டாம் வகையில் ஏற்படுவது வழக்கமில்லாதது என்றாலும், கீட்டோன்-சாரா இரத்த சர்க்கரை மிகைப்பு (nonketonic hyperglycemia) இந்நோயாளிகளில் ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அதிகமாகப் பசியெடுத்தல் (polyphagia), எடை குறைதல் ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். இரண்டாம் வகை நீரிழிவு நாம் வாழும் காலத்தை பத்தாண்டு குறைக்கவல்ல ஒரு நாள்பட்ட நோயாகும். இது பகுதியாகக் கீழ்காணும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுடன் தொடர்புடையதால் விளைவதாகும்: இதயக்குழலிய நோய், பக்கவாதம் ஆகியவை நிகழ இரண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகமான இடரினைக் கொண்டிருப்பது, கீழ்விரலை நீக்குவது இருபது மடங்கு அதிகரிப்பது, அதிக அளவு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவேண்டியக் கட்டாயம் ஆகியவற்றைக் கூறலாம். வளர்ந்த நாடுகளிலும், மிகுதியாகப் பிற இடங்களிலும் நீரழிவு நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது நீரழிவு இரண்டாம் வகை உள்ளவர்களில் இந்நோய் காயமில்லாத குருட்டுத் தன்மை, நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு நிகழப் பெருங்காரணியாக விளங்குகிறது. நீரழிவு இரண்டாம் வகையானது மூளையசதி நோய் (Alzheimer's disease), இரத்தநாளம் சார்ந்த அறிவாற்றல் இழப்பு (vascular dementia) முதலிய நோய்களின் செயல்முறைகள் மூலம் உணரறிவிய செயல் பிறழ்ச்சி (cognitive dysfunction), உளக்கேடு (dementia) ஆகிய இடர்கள் அதிகம் நிகழ்வதுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கிருமிகளால் தாக்கப்படுதல், பால்வினை செயல் பிறழ்ச்சி முதலியன பிற சிக்கல்களாகும். வாழும் முறை, மரபியல் காரணிகள் ஆகியவைகளின் இணைவினால் இரண்டாம் வகை நீரிழிவு உருவாகிறது. இவற்றில் உணவு முறை, உடல் பருமன் போன்றவைத் தனிப்பட்டவரின் கட்டுபாட்டிற்குள் இருந்தாலும் வயது, பாலினம், மரபியல் ஆகியவை ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவையாகும்.. தூக்கக் குறைவு, கரு வளரும்போது உள்ள ஊட்டச்சத்து நிலைமை ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வாழும் முறைக் காரணிகள் இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன: உதாரணமாக, உடல் பருமன், தேவையான உடல் உழைப்பு இல்லாதது, உணவுக் குறைபாடுகள், மன இறுக்கம், நகரமயமாதல் ஆகியவற்றைக் கூறலாம். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு 64% ஆண், 77% பெண் நோயாளிகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. பல உணவுகள், உதாரணமாக இனிப்பூட்டப்பட்ட பானங்களை அளவுக்கு அதிகமாக பருகுதல், உணவில் உள்ள கொழுப்பு வகைகள் ஆகியவை இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதில் பங்காற்றுவதாகத் தெரிகிறது. பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளில் பல மரபணுக்கள் தொடர்புடைவையாக உள்ளன. ஒவ்வொரு மரபணுவும் சிறிய அளவு பங்களித்து இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கின்றன. 2011-ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி முப்பத்தியாறுக்கும் அதிகமான மரபணுக்கள் இரண்டாம் வகை நீரழிவு உருவாவதற்கான சூழ் இடருக்கு பங்களிக்கின்றன. என்றாலும், இந்நோயின் மொத்த மரபுப் பொதிவுகளைக் கணக்கில் கொள்ளும்போது, இதுவரைக் கண்டறியப்பட்ட அனைத்து மரபணுக்களின் பங்கு பத்து சதவிகிதமேயாகும். அரிதாக, ஒரேயொரு மரபணு முறைபிறழ்வினால் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றது (ஒற்றைப்பரம்பரையலகு நீரிழிவு வடிவம்). உதாரணங்கள்: இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரிழிவு [maturity onset diabetes of the young (MODY)], டோனஃகு கூட்டறிகுறி, ராப்சன்-மென்டென்ஹால் கூட்டறிகுறி. இளைய நீரிழிவு நோயாளிகளில் ஒன்றிலிருந்து-ஐந்து சதவிகிதத்தினர் இளையவர்களில் காணப்படும் முதிர்ச்சி-தொடக்க நீரிழிவினைக் கொண்டவர்களாக உள்ளனர். பல மருந்துகளும் உடல்நலக் குறைபாடுகளும் நீரிழிவு நோய் உண்டாவதற்கான முன்னிணக்கத்தைத் தூண்ட முடியும். உதாரணமாக கீழ்வரும் மருந்துகளைக் கூறலாம்: சிறுநீரகமுனைச்சுரப்பு இயக்க நீர்ப்பொருள்கள் (குளுக்கோக்கார்டிகாய்டுகள்), தையசைடுகள், பீட்டா-அண்ணீரக இயக்கிகள், ஆல்ஃபா-நச்சுயிரிப் பெருக்கத் தடுப்பிகள் (இன்ட்டர்ஃபெரான்கள்). முன்பு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய்க்குட்பட்டவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளாக உருவாவதற்கான சாத்தியங்கள் அதிக அளவு உள்ளன. இந்நோயுடன் தொடர்புடைய பிற உடல் நலக்கேடுகள்: அங்கப்பாரிப்பு (acromegaly), குஷிங் கூட்டறிகுறி (Cushing's syndrome), மிகை தைராய்டு சுரப்பிச் செயலாக்கம் (hyperthyroidism), பியோகுரோமோசைடோமா மற்றும் குளுக்ககோனோமா போன்ற சில புற்று நோய்கள். விரையில் உற்பத்தியாகும் இயக்கு நீர் (டெஸ்டோஸ்டிரோன்) குறைபாட்டுடனும் இரண்டாம் நிலை நீரிழிவு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை நீரிழிவானது முதன்மையாக தசைகளிலும், கொழுப்புத் திசுக்களிலும் உள்ள இன்சுலின் எதிர்ப்புத் தன்மையினால் விளைவதாகும். இதுவே, தீவிரமடைந்து வரும் நோயாளிகளில் ஈடுசெய்ய போதுமான இன்சுலின் உற்பத்தியினை பீட்டா செல்கள் செய்ய முடியாத நிலை விளைகிறது. இத்துடன் சேர்த்து, இரத்த இன்சுலின் அளவுகளால் கட்டுப்படுத்தப்படும், கல்லீரலிருந்து வெளிப்படும் முறையற்ற குளுக்கோசு ஆகியவற்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் உயர்ந்து காணப்படுகின்றது. மற்ற சாத்தியமான முக்கிய செயல்படுமுறைகளாக கொழுப்பு திசுக்களில் கொழுமியங்கள் அதிகமாக சிதைவடைவது, இன்கிரடின் (இரையக குடலிய இயக்குநீர்) குறைபாடு மற்றும் எதிர்ப்புத்தன்மை, இரத்தத்தில் அதிக குளூக்கொகான் அளவுகள், சிறுநீரகங்களில் அதிக அளவு நீர்மங்கள் உறிஞ்சப்படுதல், மைய நரம்பு மண்டலம் வளர்சிதைமாற்றத்தை சரியாக நெறிப்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றைக் கூறலாம். நோய் அறிகுறிகளுடன், ஒரேயொரு அதிக அளவிலான இரத்த நீர்ம குளுக்கோசு அளவுகளைக் கொண்டிருப்பவரை நீரிழிவு கொண்டவர் என வரையறுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அப்படியில்லையென்றால், இரத்த நீர்ம குளுக்கோசு அளவுகள் ஒன்று அல்லது இரண்டு முறை உயர்ந்திருப்பதை வைத்தும் கணக்கிட முடியும்: நீரிழிவு நோயாளிகளை உலகளாவிய பிரித்தறியும் சோதனைகளைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்பது நோய்க்கண்டறிதலை மேம்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் எந்தவொரு பெருங்குழுமமும் இவற்றைப் பரிந்துரை செய்யவில்லை. பெரியவர்களில் நோய் அறிகுறிகளில்லாத ஆனால் இரத்த அழுத்தம் 135/80 மில்லிமீட்டர் பாதரசம் (mmHg) அளவுகளுக்கு மேல் இருப்பவர்களுக்குப் பிரித்தறியும் சோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்கத் தடுப்பு சிறப்புப் பணிப்பிரிவு பரிந்துரைக்கின்றது. இந்த அளவுகளுக்கு கீழ் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, பிரித்தறியும் சோதனைகளைச் செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்று பரிந்துரைக்க போதிய ஆதாரங்கள் இல்லை. அதிக அளவு நீரிழிவிற்கான இடரினைக் கொண்டவர்களில் மட்டும் இச்சோதனைகளைச் செய்யலாமென உலக சுகாதார அமைப்பு பரிந்துரைச் செய்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் நீரிழிவிற்கான அதிக இடரினைக் கொண்ட குழுக்கள்: நாற்பத்தியைந்து வயதிற்கும் மேற்பட்டவர்கள், நீரிழிவு சொந்தங்களைக் கொண்டவர்கள், சில இனக் குழுக்கள் (இஸ்பானிக்குகள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், அமெரிக்கப் பழங்குடியினர்), கர்ப்பகால நீரிழிவு வரலாற்றினைக் கொண்டவர்கள், பலவுறை அண்ட நோய்கூட்டறிகுறி (polycystic ovary syndrome) கொண்டவர்கள், அதீத எடை உள்ளவர்கள், வளர்சிதைமாற்ற நோய்கூட்டறிகுறி உள்ளவர்கள். சரியான சத்துணவு, சீரான உடற்பயிற்சிகள் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிப்பதைத் தடுக்கவோ அல்லது காலதாமதம் செய்யவோ முடியும். தீவிர வாழும் முறை மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் இந்நோய் வருவதற்கான இடரினைப் பாதிக்கும் மேல் குறைக்க முடியலாம். ஒருவரின் முதலில் உள்ள எடை அல்லது பின்வரும் எடைக் குறைவைக் கணக்கிடாமலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும். உணவு பழக்க முறை மாற்றங்களினால் மட்டும் விளையும் நோய்க்குறைப்பு ஆதாயங்களுக்கான ஆதாரங்கள் குறைவே; பச்சைக் காய்கறிகள் அதிக அளவு உள்ள உணவிற்கும், இனிப்பூட்டப்பட்ட பானங்களை பருகுவதைக் குறைப்பதனால் விளையும் நன்மைகளுக்கும் சில ஆதாரங்கள் உள்ளன. குறையுடைய குளுக்கோசு சகிப்புத்தன்மை உள்ளவர்களில், உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சி, மெட்ஃபார்மின்/அகார்போசு ஆகியன நீரிழிவு உருவாவதிற்கான இடரினைக் குறைக்கலாம். ஆனால், வாழும் முறை மாற்றங்கள் மெட்ஃபார்மினைக் காட்டிலும் அதிகப் பயனுள்ளதாகும். வாழும் முறைகளில் குறுக்கிட்டு செய்யும் மாற்றங்கள், இதயக்குழலிய நோய் இடர் காரணிகளைக் குறைத்தல், இரத்த குளுக்கோசு அளவுகளை சாதாரண அளவில் வைத்திருத்தல் போன்றவை இரண்டாம் நிலை நீரிழிவைச் சமாளிப்பதற்கான வழி முறைகளின் ஒருமுகப்படுத்திய நோக்கமாகும். புதிதாகக் கண்டறியப்பட்ட இரண்டாம் வகை நோயாளிகள் தங்களின் இரத்த குளுக்கோசு அளவுகளைச் சுயப்பரிசோதனைச் செய்துக் கொள்வதை 2008-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய தேசிய நலச் சேவை மையம் பரிந்துரைச் செய்திருந்தது, என்றாலும் இன்சுலின் பன்முகச் சிகிச்சைக்கு உட்படாதவர்கள் சுயப் பரிசோதனை செய்துக்கொள்வதன் பயன் கேள்விக்குரியதே. பிற இதயக் குழலிய நோய் இடர் காரணிகளை உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொலஸ்டிரால், சிறுநீரில் நுண்ணியவெண்புரத (ஆல்புமின்) அளவுகள்] சமாளிப்பது ஒருவரின் வாழ்நாளைக் கூட்டுகிறது எனலாம். செந்தர இரத்த சர்க்கரையைக் குறைப்பதுடன் ஒப்பீடு செய்யும்போது, தீவிரமாக இரத்த சர்க்கரையைக் குறைப்பது மரணத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை. சிகிச்சையின் இலக்கானது குறிப்பாக கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமோகுளோபின் (HbA1C) அளவுகளை ஏழு சதவிகிதத்திற்கும் கீழாகக் குறைப்பது அல்லது உண்ணாநிலை குளுக்கோசு [6.7 மில்லிமோல்/லிட்டர் (120 மில்லிகிராம்/டெசிலிட்டர்)] அளவுகளுக்குக் கீழாகக் குறைப்பதென்றாலும் இத்தகு இலக்குகள் தாழ்நிலை இரத்தச் சர்க்கரை அளவினால் ஏற்படும் குறிப்பிட்ட இடர்கள், வாழும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாற்றப்படலாம். சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவையே நீரிழிவினை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தேவையான அடிப்படைகளாகும். அதிக அளவு உடற்பயிற்சி செய்தல் நல்ல, சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும். நடத்தல், ஓடுதல், நீந்துதல் முதலிய இதயம், நுரையீரல் முதலியவற்றுக்கு நன்மை பயக்கும் காற்றுப்பயிற்சி உடற்பயிற்சிகளைச் செய்வது கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமொக்லோபின் அளவுகளைக் குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனைக் கூட்டுகிறது. உடல்வலு ஏற்றும் உடற்பயிற்சிகளும் உபயோகமானதே என்றாலும் இந்த இருவித உடற்பயிற்சிகளையுமே செய்வது மேலும் சிறப்பானதாக இருக்கலாம் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு எடைக் குறைப்பதை அதிகப்படுத்துவதாக இருப்பது மிக அவசியம். எனினும், இவ்வித சிறந்த உணவு எது என்றுத் தீர்மானிப்பது மாறுபட்டக் கருத்துகளைக் கொண்டது. குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு உள்ள உணவு இரத்தச் சர்க்கரை அளவுகளைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பண்பாட்டிற்கு உகந்தக் கல்வியினைக் கொடுப்பது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தச் சர்க்கரை அளவுகளைக் குறைந்தப்பட்சம் ஆறுமாதக் காலத்திற்காவது ஒரு கட்டுபாட்டில் வைத்திருக்க உதவக்கூடும். மிதமான அளவு இரத்தச் சர்க்கரை அளவு உயர்ந்தவர்களில் இத்தகு வாழ்க்கை முறை மாற்றங்களினால் எந்தவொரு மேம்பாடும் ஆறு வாரங்களுக்குள் ஏற்படாவிட்டால், இந்நோயாளிகள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். நீரிழிவிற்கு எதிரான பல்வேறு வகை மருந்துகள் உள்ளன. மெட்ஃபார்மின் மரணவீதத்தைக் குறைப்பதற்கான நல்ல ஆதாரங்கள் இருப்பதால், பொதுவாக முதலில் பரிந்துரைக்கப்படுகிறது. வாய்வழி மருந்துகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாம் வகை நீரிழிவை குணப்படுத்த உபயோகிக்கப்படும் பிற மருந்து வகைகள் பின்வருமாறு: சல்போனைல்யூரியாக்கள், சல்போனைல்யூரியா இல்லாத சுரப்புத் தூண்டிகள், கிளைக்கோசைல் நீராற்பகுப்பித் தடுப்பிகள் (கிளைக்கோசைடு நீராற்பகுப்பித் தடுப்பிகள்), தியசோலிடின்டையோன்கள். இருந்தபோதிலும், சிறுநீரக, கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மெட்ஃபார்மினை உபயோகிக்கக் கூடாது. வாய்வழி மருந்துகளைத் தொடரும்போதும், இன்சுலினை உபயோகிக்க நேர்ந்தால் இரவில் நெடுநேரம் செயல்புரியும் தயாரிப்பைச் சேர்க்கிறார்கள் மருந்து அளவுகள் அதற்கேற்றார்போல் அதிகப்படுத்தப்படுகிறது. இரவில் கொடுக்கும் இன்சுலின் போதுமான விளைவை ஏற்படுத்தாதபோது, ஒரு நாளைக்கு இருமுறை இன்சுலினைப் பயன்படுத்துவது மேம்பட்ட நோய் கட்டுபாட்டினைக் கொண்டுவரலாம். நெடுநேரம் செயல்புரியும் இன்சுலின்கள் (கிளார்ஜின், டெடமிர் போன்றவை), என்.பி.எச் (NPH) இன்சுலினைக் காட்டிலும் மேம்பட்டவை இல்லையென்றாலும், இவற்றைத் தயாரிக்கும் செலவு மிக அதிகமாக உள்ளதால் திறம்பட்ட விலை இவைகளுக்கு 2010-ஆம் ஆண்டு வரை இல்லை. கர்ப்பிணிகளுக்கு இன்சுலின் சிகிச்சையே பொதுவாகச் சிறந்ததாகும். அழற்சிக்கெதிரான மருத்துகள் இவ்வகை நீரிழிவைத் தடுப்பதில் பயன் தரக்கூடியச் சாத்தியங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. பருமனாக இருப்பவர்களில் நீரிழிவைக் கட்டுபடுத்த/சிகிச்சையளிக்க இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது பயனுள்ள நடவடிக்கையாகத் தெரிகிறது. இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் பலரும் சாதாரணமான இரத்த சர்க்கரை அளவுகளை மருந்துகளின் துணைக் கொண்டோ அல்லது துணை இல்லாமலோ பேண முடிகிறது. இதனால், நீண்ட நாள் மரணவீதம் குறைந்துள்ளது என்றாலும், அறுவைச் சிகிச்சைக்குப்பின் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான சில குறைந்த-நாள் மரண இடர் உள்ளதெனலாம் . அறுவைச் சிகிச்சை செய்ய சரியான உடல் பருமயெண் பகுப்பளவுகள் எவை என்பதுக் குறித்த விவரங்கள் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. உலக அளவில் 2010- ஆம் ஆண்டில் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க் கொண்டவர்கள் 285 மில்லியன் என மதிப்பீடுச் செய்யப்பட்டது. இது மொத்த நீரிழிவு நோயாளிகளில் தொண்ணூறு சதவிகிதமாகும் (90%). இது உலகத்தில் உள்ள மொத்த பெரியவர்கள் தொகையில் ஆறு சதவிகிதத்திற்கு (6%) சமமானதாகும். நீரிழிவானது வளர்ந்த, வளரும் நாடுகளில் காணப்படும் ஒரு பொதுவான நோயாகும். சில இனக் குழுக்களைப் (பசுபிக் தீவினர், எசுப்பானியர்கள், அமெரிக்கப் பழங்குடியினர்) போலவே பெண்களும் நீரிழிவிற்கான அதிகமான இடரினைக் கொண்டுள்ளார்கள். இது மேற்கத்திய வாழும் முறைகளுக்குச் சில இனக் குழுக்கள் கொண்டிருக்கும் உணர்வுகள் காரணமாக இருக்கலாம். சம்பிரதாயமாகப் பெரியவர்களுக்குத்தான் இரண்டாம் வகை நீரிழிவு வரும் என்று கருதப்பட்டாலும், தற்போதைய குழந்தைகளின் பருமன் கூடுவதற்கு இணையாக இந்நோய் அவர்களில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது. நீரிழிவு நோய் விகிதம் 1985-ல் 30 மில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டது 1995-ல் 135 மில்லியனாக உயர்ந்து பின் 2005-ல் 217 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த அளவு அதிகரித்திருப்பதற்கான முதன்மைக் காரணங்களாக உலகளாவிய மக்கள்தொகை முதுமையடைவது, உடற்பயிற்சி செய்வதுக் (உடல் உழைப்பு) குறைந்துபோனது, பருமனாவது அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம். 2010-ஆம் ஆண்டு கணக்கின்படி, நீரிழிவு நோயாளிகள் பெருமளவு உள்ள ஐந்து நாடுகள்: இந்தியா (31.7 மில்லியன்), சீனா (20.8 மில்லியன்), ஐக்கிய அமெரிக்கா (17.7 மில்லியன்), இந்தோனேசியா (8.4 மில்லியன்), ஜப்பான் (6.8 மில்லியன்). உலக சுகாதார நிறுவனம் நீரிழிவை உலக அளவில் கொள்ளை நோயாக அங்கீகரித்துள்ளது.. நீரிழிவு நோய் முதலில் விவரிக்கப்பட்ட நோய்களுள் ஒன்றாகும். எகிப்திய பழங்காலத்துச் (தோராயமாக கி.மு. 1500-ல்) சுவடிகளில் பெருமளவு சிறுநீர் போவதுக் குறித்துக் குறிப்பிட்டுள்ளது. இங்ஙனம் முதன்முதலில் குறிப்பிடப்பட்டவை முதலாம் வகை நீரிழிவாகக் கருதப்படுகிறது. சமகாலத்தில், இந்திய மருத்துவர்களும் இந்நோயினைக் கண்டறிந்து, சிறுநீரில் எறும்புகள் மொய்ப்பதை வைத்து, மதுமேகம் அல்லது சிறுநீரில் தேன் எனப் பாகுபாடு செய்தார்கள். "நீரிழிவு" அல்லது "போதல்" என்னும் சொற்றொடர் முதலில் கி.மு. 230-ல் அபோல்லோனியசு என்னும் கிரேக்க மருத்துவரால் உபயோகப்படுத்தப்பட்டது. காலென் என்னும் மருத்துவர் தன் பணிநாளில் இரண்டே இரண்டு நோயாளிகளைப் பார்த்ததாகக் கூறியதிலிருந்து ரோமப் பேரரசின்போது இந்நோய் மிக அரிதாக இருந்ததாகத் தெரிகிறது. முதலாம் வகை, இரண்டாம் வகை நீரிழிவுகள் தனித்தனியான நோய்களாக முதன் முதலில் இந்திய மருத்துவர்களான சுஷ்ருதா, சாரகா ஆகியோரால் கி.பி. 400-500 -ல் முதலாம் வகை நீரிழிவு இளையவர்களுடனும், இரண்டாம் வகை அதிக உடற்பருமன் உடையவர்களுடன் தொடர்புள்ளதாகப் பாகுபாடுச் செய்யப்பட்டன. "மதுமேகம்" அல்லது "தேனிலிருந்து" என்னும் சொற்றொடர் பிரித்தானியர் ஜான் ரோலே என்பவரால் அடிக்கடிச் சிறுநீர் போவதுடன் தொடர்புடைய வெற்று நீரிழிவு (Diabetes insipidus) நோயிலிருந்து வேறுபடுத்த 1700-ஆம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்டது. பிரெடெரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய கனேடிய மருத்துவ அறிவியலாளர்களால் 1921-1922-ல் இன்சுலின் உருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரைத் திறம்பட்டச் சிகிச்சை முறைகள் இந்நோய்க்கு உருவாக்கப்படவில்லை. இதன் பிறகு, 1940-ஆம் ஆண்டில் நீள்வினை இன்சுலின் (long acting insulin) என்.பி.எச். உருவாக்கப்பட்டது. பார்த்திபேந்திரச் சோழன் பார்த்திபேந்திரச் சோழன் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு புதினத்தில் கூறப்படும் ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் காலத்தில் சோழ அரசு பல்லவர் அரசுக்கு அடங்கிய ஒரு குறுநில அரசாக விளங்கியது. அதன் பழைய புகழை மீட்குமாறு தன் மகனான விக்கிரமன் என்பவனிடம் கூறுகிறான். பல்லவர் அரசுக்கு பார்த்திபன் கப்பம் கட்ட மறுத்ததால் இரு அரசுகளுக்கும் போர் மூழ்கிறது. அதில் வீரமரணம் அடையும் தருவாயில் ஒரு சிவனடியாரிடம் தன் மகனை பேரரசனாக்குமாறு வேண்டுகிறார். அதற்கு சிவனடியார் நீ இறக்கும் தருவாயில் கேட்டதால் நீ கேட்டதைச் செய்கிறேன் எனக்கூறுகிறார். தாங்கள் யார் என்று பார்த்திபன் கேட்க சிவனடியார் தன் வேசத்தை கலைக்கிறார். அவரே பல்லவர்களின் பேரரசரான முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற மாமல்லன். பார்த்திபன் கனவு முடிவில் சோழர்கள் பார்த்திபன் கூறிய "இழந்த புகழை மீட்டல்" என்ற கொள்கையின் படியே பிற்காலத்தில் பேரரசாக விழங்கினார்கள் என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. அரபு-இசுரேல் முரண்பாடு அரபு - இசுரேல் முரண்பாடு (, , "Al-Sura'a Al'Arabi A'Israili"; , "Ha'Sikhsukh Ha'Yisraeli-Aravi") என்பது நடு கிழக்கில், அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையிலான அரசியல் மோதல்களும் பொது பகையுமாகும். இம்முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சீயோனிச எழுச்சியும் அராபிய தேசியவாதமுமாகும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்ட இம் முரண்பாடு, 1948இல் இசுரேல் ஒரு தனி நாடாக உருவாகியதும், முழு அரபு நாடுகள் கூட்டமைப்புக்குமாக விரிவடைந்தது. யூதர்களின் கருத்துப்படி, அவர்கள் குறிப்பிடும் நிலப்பரப்பானது வரலாற்று தாயகமாகவும், அதே நேரத்தில் ஒன்றிணைந்த அராபிய இயக்கத்தின்படி அது வரலாற்று நோக்கில் பாலத்தீன அராபியர்களுக்கு உரியதென்றும், ஒன்றிணைந்த இசுலாமியவாதத்தின்படி அந்நிலப்பரப்பானது இசுலாமிய நிலமாகவும் நோக்கப்படுகிறது. உதுமானியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியுடன் ஏற்பட்ட அரசியல், தேசிய முரண்பாடு இங்கு முக்கிய காரணமாகும். இது பாரிய அளவிலான பிராந்தியத்தில் நிலவிய அரபு - இசுரேல் முரண்பாட்டிலிருந்து உள்ளக இசுரேல் - பாலத்தீனிய முரண்பாடாக மாற்றம் பெற்றது. 1979இல் இசுரேலுக்கும் எகிப்துக்கும், 1994இல் இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இருந்தபோதிலும் அரபு நாடுகளும் இசுரேலும் குறிப்பிட்ட நிலப்பரப்பு தொடர்புபட்ட விடயத்தில் ஒத்துப் போகாத தன்மையினையே கொண்டுள்ளன. யூத, இசுலாமிய, கிறித்தவ குழுக்கள் தங்களுக்குள் கருத்து ஒற்றுமை கொள்ளாமைக்குத் தங்கள் சமய வரலாற்றுக் கருத்துகளைத் துணையாகக் கொள்கின்றனர். அரபு-இசுரேல் முரண்பாட்டின் தற்கால வரலாறானது கிறித்தவ, யூத, இசுலாமிய சமயங்களின் நம்பிக்கைகளால் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளானது. "தெரிவு செய்யப்பட்ட மக்கள்" பற்றிய விளக்கம், "வாக்களிக்க நாடு" மற்றும் "தெரிவு செய்யப்பட்ட நகர்" – யெரூசலம் பற்றிய அவர்களின் கொள்கை என்பதற்கேற்ப அவர்களின் விளக்கம் இதில் குறிப்பிடத்தக்கது. யூதர்களின் புனித நூலாகிய தோராவின்படி கானான் அல்லது இசுரவேல் தேசம் இசுரவேலர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்டது. விவிலியத்தின்படி இசுரவேலர் அதை கி.மு 13 -ஆம் அல்லது 14 -ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். கி.பி. 7 -ஆம் நூற்றாண்டு வரை யூதர் இனத்தவர் மிகப்பலரும் அங்கு வாழ்ந்திருந்தனர். தியோடர் ஃகெர்ல் 1896ஆம் ஆண்டு வெளியிட்ட கொள்கை அறிக்கையில் விவிலியம் கூறும் வாக்களிக்கப்பட்ட நாடு தொடர்பான எண்ணக்கருவை எடுத்துக் காட்டினார். தற்போதைய இசுரேலிய முன்னனி அரசியல் கட்சியான லிக்குடுக் கட்சி, தன் அரசியல் கொள்கையில் இசுரேல் தேசம் பற்றிய கருத்தைக் கொண்டுள்ளது. இசுலாமியர்களும் தங்களுக்கு அங்கு திருக்குர்ஆனின்படி உரிமை உள்ளதென்கிறார்கள். இசுரேலியர்கள் கூறிப்பிடும் ஆபிரகாமின் இளைய மகனாகிய ஈசாக்குவின் சந்ததியினருக்கே அந்நிலம் வாக்களிக்கப்பட்டது என்பதை மறுத்து, கானான் பூமி ஆபிரகாமின் எல்லா சந்ததியினருக்கும் ஆபிரகாமின் மூத்த மகனாகிய இசுமாவேல் உட்பட அவரின் சந்ததியினராகிய அராபியர்களுக்கும் வாக்களிக்கப்பட்டது என இசுலாமியர்கள் எதிர்வாதம் செய்கின்றனர். மேலும், இசுரேலியர்கள் புனிதமாகக் கருதும் இடங்களை இசுலாமியர்களும் புனிதமாகக் கருதுகின்றனர். பிதாக்களின் குகை, கோவில் மலை, 1400 ஆண்டுகளாக யூத புராதன பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இசுலாமிய கட்டுமானங்களான பாறைக் குவிமாடம், அல் அக்சா பள்ளிவாசல் என்பன குறிப்பிடத்தக்கனவாகும். முகம்மது நபி சுவர்க்கம் செல்லும் வழியில் யெரூசலம் ஊடாகத்தான் சென்றார் என்று இசுலாமியர் நம்புகின்றனர். காசா கரையை ஆட்சி செய்யும் ஹமாஸ் முழு பாலத்தீனமும் (தற்போதைய இசுரேலும் பாலத்தீனமும் சேர்ந்த பகுதி) இசுலாமியர்களாலேயே ஆளப்பட வேண்டுமென்று கருதுகின்றனர். கிறித்தவ சையோனியர்கள் இசுரவேலை ஆதாரிக்கின்றார்கள். யூதர்களுக்கு அங்கு முதாதையர்கள் மூலமான உரிமை உண்டு என்கின்றனர். சிலர் கிறித்துவின் இரண்டாம் வருகைக்கும் யூதர்கள் இசுரவேலுக்கு மீண்டும் வருவதற்கு காரணம் உண்டென்கின்றனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சையோனியத்தின் கீழ், அதிகளவாக ஐரோப்பிய யூதர்கள் உதுமான் சுல்தான் மற்றும் அவருடைய பிரதிநிதிகளிடமிருந்து நிலங்களை வாங்கினர். அக்காலத்தில், யெரூசலம் அந்நகரை சுற்றியிருந்த மதில்களைத் தாண்டி வியாபித்திருக்கவில்லை. மக்கட் தொகையும் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தது. சையோனியர்களின் கீழ் கிப்புட்சிம் எனப்படும் கூட்டுப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. டெல் அவீவ் நவீன கால முதலாவது யூத நகராகியது. முதல் உலக போருக்கு முன்னர், ஏறக்குறைய 500 வருடங்கள் பாலத்தீனம் உட்பட்ட மத்திய கிழக்கு உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிற்காலப் பகுதியில் உதுமானியர் மேற்கொண்ட துருக்கி இனத்தவர்களுக்கான ஆதரவு, பேரரசிற்குள் துருக்கியருக்கான முன்னுரிமைப் போக்கு என்பன அராபிரை ஓரங்கட்டியது. உதுமானியரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியினால் அதிகளவில் யூதர்களும் அராபியர்களும் நேச நாடுகளுக்கு தம் ஆதரவை முதல் உலக போரில் வழங்கினர். இச்சம்பவம் அராபிய தேசியவாதம் பரவ வழிகோலியது. எகிப்திலிருந்த பிரித்தானிய உயர் ஆணையாளர் சேர் ஹென்றி மக்மகோன் இரகசிய தொடர்பு மூலம் குசைன் அரபு புரட்சியை உதுமானிய பேரரசுக்கு எதிராக மேற்கொள்ள வைத்தார். இச் செயல் உதுமானிய பேரரசு முதல் உலக போரில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் எதிராக சேர்மனியுடன் அணி சேர வைத்தது. போரில் பிரித்தானியாவிற்கு அராபியர்கள் உதவினால், பிரித்தானிய அரசாங்கத்தினால் உதுமானிய பேரரசின் பாலத்தீனம் உட்பட அராபிய மாகாணங்கள் அராபிய அரசாக மாற உதவி செய்யப்படும் என மக்மகோன் உறுதியளித்தார். லாரன்ஸ் மற்றும் குசைனின் மகன் பைசாலினால் நடத்தப்பட்ட அரபு புரட்சி வெற்றி பெற்று, பிரித்தானியா பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. போரை வெல்ல யூதர்களின் உதவி அவசியம் என்றுணர்ந்த பிரதமர் டேவிட் லொயிட் ஜோர்ச் உட்பட்டவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், 1917இல் பிரித்தானியா வெளியிட்ட பல்போஃர் பிரகடனம் யூதரின் தேசிய தாயகமாக பாலத்தீனம் இருக்கும் என்றது. இது அரபு உலகை கவலை கொள்ளச் செய்தது . போரின் பின்னர், தற்போதைய இசுரேல், ஜோர்தான், மேற்குக் கரை, காசா என்பன பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் பிரித்தானிய பாலத்தீனமாக இருந்தன. அக்காலகட்டத்தில் யூதர்களுடைய குடியேற்றம் பாலத்தீனத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 1931இல் 17 வீதமாகவிருந்த யூதர்களின் எண்ணிக்கை 1922இல் 6 வீதமாக அதிகரித்தது. சேர்மனியில் நாசிகள் அதிகாரத்திற்கு வந்ததும் யூதர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இது பாலத்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது . தொடர்ச்சியான யூதர்களின் வரவு பாலத்தீன அராபியர்களை அவர்கள் தாய்நாட்டிற்கும், இன அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாக பார்க்கத் தூண்டியது. நிலம் வாங்குதல், யூத நிறுவனங்களில் அராபியர்களை வேலைக்கு அமர்த்தாமை என்பன பாலத்தீன அராபியர்களை கோபம் கொள்ளச் செய்தது. 1920 தொடக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறலாயின. பாலத்தீன அராபியர்கள் தாங்கள் அநீதியாக நடாத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வன்முறைக்கும் காரணமாகியது. பங்குனி 1920இல் முதலாவது வன்முறை டெல் ஹாயில் வெடித்தது. பின் குழப்பம் யெரூசலேமிற்கும் பரவியது. 1922இல் வின்சன்ட் சார்ச்சில், யூத அரசு அமைத்தல் என்பதை மறுத்து அராபியர்களை மீள் நம்பிக்கையூட்ட முயன்றார். பெத்தார் அரசியல் கட்சி 1929இல் மேற்கு சுவரில் நடாத்திய ஆர்ப்பாட்டம் குழப்பத்தை ஏற்படுத்த முழு பாலத்தீனத்திற்கும் குழப்பம் பரவியது. அராபியர்கள் 67 யூதர்களை எபிரோனில் படுகொலை செய்தனர். குழப்பம் ஆரம்பித்த வாரத்தில் குறைந்தது 116 அராபியர்களும் 133 யூதர்களும் கொல்லப்பட்டு 339 பேர் காயப்பட்டனர். 1930களில் யூத எதிர்ப்பு, பிரித்தானிய எதிர்ப்பு ஆயதக்குழு கருப்புக் கை எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 1935இல் ஆயதப் பயிற்சி பெற்ற 200 – 800 ஆண்கள் இருந்தனர். இவர்கள் யூத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். பதட்டமானது 1936இல் பாலத்தீனத்தில் 1936–1939 அராபிய புரட்சிக்கு வித்திட்டது. அராபியர்களின் அழுத்தத்தினால், பிரித்தானியா பாலத்தீனத்திற்கான யூத குடியேற்றத்தை அதிகளவில் குறைக்கலாயிற்று. இதனால் யூதர் சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள். இது பிரதேசத்தில் மேலும் பதட்டத்ததை அதிகரித்தது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீராதிருக்க, புதிதாகத் தோன்றிய ஐக்கிய நாடுகள் அவையிடம் பிரித்தானிய உதவி கோரியது. 15 மே 1947இல், 11 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (UNSCOP) ஐ.நா ஆரம்பித்தது. சபை நடுநிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் பெரிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கவில்லை. 5 வாரங்களின் பின், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் என வெவ்வேறு நிலப்பகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென கண்டு கொள்ளப்பட்டது. ஐ.நாவின் பொது சபையின் 181 தீர்மானமான 'இரு-நாடு தீர்வு' 1947 நவம்பரில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு 33 நாடுகள் விருப்பு வாக்களித்தும் 13 நாடுகள் எதிர் வாக்களித்தும் 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தன. அரபு லீக்கின் அங்கத்துவ நாடுகள் எதிராக வாக்களித்தன. இது இவ்வாறு இருக்க, அராபியர்களும் யூதர்களும் முக்கிய இடங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பகிரங்கமாக சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர். இருதரப்பினராலும் மேசமான பாரிய அசம்பாவிதங்கள் சில நிகழ்த்தப்பட்டன. பிரித்தானிய காலணிக்கம் முடிவதற்கு முன், ஐ.நாவினால் யூத அரசுக்கென ஒதுக்கிய பகுதிகள் முழுவதிலும் யூத ஆயுத படையான ஹகானா தாக்குதல்களை நடாத்தியது. அது பல அகதிகள் திபேரியா, கய்ஃபா, சபாட், பெய்சான், யாப்பா போன்ற நகர்களில் குவிய வழிகோலியது. 1948 தொடக்கத்தில், பிரித்தானியா பாலத்தீனத்தைவிட்டு மே 14இல் வெளியேறும் என அறிவித்தது. அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஹரி எஸ் ட்ரூமன் ஐ.நா பொறுப்புத் தன்மை பற்றி முன்மொழிந்தார். 14 மே 1948இல், பிரித்தானியா நிர்வாகம் உத்தியோக பூர்வமாக முடிந்து, படைகள் வெளியேறு முன், இசுரேல் அதன் சுதந்திரப் பிரகடணத்தையும் ஆட்சியுடைமையையும் எல்லைகளை குறிக்காது வெளியிட்டது. அடுத்த நாள், அரபு லீக்; 'இரண்டு-நாடு தீர்வு' என்பதை மறுத்து ஐ.நாவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. அதே நாளில் எகிப்து, லெபனான், சிரியா, யோர்தான், ஈராக் படைகளில் இசுரேல் மீதான படையெடுப்பு அராபிய-இசுரேல் போரை ஆரம்பித்து வைத்தது. புதிதாக உருவெடுத்த இசுரேலிய பாதுகாப்புப் படைகள் அராபிய லிக் நாடுகளின் படைகளை பின் வாங்க வைத்து, ஐ.நா பிரித்த எல்லைக் கோட்டிற்கு அப்பால் தன் எல்லைகளை விரிபுபடுத்தியது. 1948 மார்கழியில் யோர்தான் ஆற்றின் மேற்கு வரை பல பகுதிகளை இசுரேல் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேற்குக் கரை யோர்தானின் கட்டுப்பாட்டிலும், காசா எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தன. இம் முரண்பாடு 713,000 பாலத்தீன அராபியர்கள் அகதிகளாக்கியது. யூத ஆயுதக் குழுக்களான இர்குன், ஸ்டென் குழு ஆகியவற்றின் அராபியர்களுக்கெதிரான படுகொலைகள் பாலத்தீனர்களை இடம் பெயரச் செய்தது. 1949 இடைக்கால சமாதான உடன்பாடு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஐ.நா. தீர்வு திட்டம் 181க்கு முன்னமும் இசுரேலின் சுதந்திர நாட்டு பிரகடனத்திற்கு முன்னமும், சில அராபிய நாடுகள் அந்நாடுகளில் உள்ள யூதர்களுக்கெதிராக ஓரங்கட்டலை மேற்கொண்டனர். 1948 அரபு-இசுரேல் முரண்பாட்டைத் தொடர்ந்து அவ் யூதர்களின் நிலை மோசமாகியது. 1947 மார்கழியில் அரபு உலகில் யூத சமூகத்தினருக்கெதிரான பாரிய யூத எதிர்ப்பு உருவாகியது. குறிப்பாக சீரியாவிலும் அதெனிலும் மிக மோசமாகி நூற்றுக் கணக்கில் மரணமும் உடற் சேதமும் ஏற்படலாயின. 1948 நடுப்பகுதியில் அராபிய நாடுகளில் இருந்த ஏறக்குறைய முழு யூதர்களும் தாக்குதலுக்குள்ளாகி அவர்களின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. அரபு-இசுரேல் முரண்பாட்டின் விளைவு நீண்ட காலமாக அராபிய நாடுகள் மற்றும் இசுலாமிய நாடுகளில் இருந்த யூதர்களை அரசியல் பணயக் கைதிகளாக்கி, அவர்கள் அந்நாடுகளைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. லிபியாவில் யூதர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. ஈராக்கில் உடமைகள் பறிக்கப்பட்டன. எகிப்து அதிகளவான யூதர்களை 1956இல் வெளியேற்றியது. அல்ஜீரியா பிரஜாவுரிமையை பறித்தது. அதிகளவானோர் அரசியல் காரணங்களினாலும் சிலர் தாயக நோக்கோடும் வெளியேறினர். 1948–1952 காலப் பகுதியில், 700,000 மேற்பட்ட யூதர்களில் ஏறக்குறைய 285,000 பேர் அராபிய நாடுகளிலிருந்து இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர். 1960களில் பிற்பகுதியில் 850,000க்கு மேற்பட்ட யூதர்கள் சில 10 அராபிய நாடுகளிலிருந்து பிறந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இன்று 7,000க்கு குறைவானோர் அந்நாடுகளில் உள்ளனர். சொத்துக்கள் நட்டஈடு இன்றி பறிமுதல் செய்யப்பட்டன. இன்றைய இசுரேலின் சனத்தொகையில் 41 வீதமானோர் இடம்பெயர்ந்தோரும் அவர்களின் வாரிசுகளுமாவர்.. இசுரேலின் 1948 சுதந்திரப் போர் வெற்றியின் விளைவு மறுபக்கத்தில் அகப்பட்ட அராபியர்கள் இசுரேலின் புகமுடியாது சொந்த இடத்தை இழக்கச் செய்தது. அதுபோலவே, மேற்குக் கரையிலும் காசாவிலும் அகப்பட்ட யூதர்கள் வீட்டையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு இசுரேல் வரவேண்டியதாயிற்று. 1956இல் எகிப்து டிரான் நீரிணையை இசுரேல் கப்பல் போக்குவரத்திற்கு மூடி, அகாஃபா குடாவையும் இசுரேலுக்கு நிறுத்திவிட்டது. பின்னர் சுயஸ் கால்வாயை தேசிய உடமையாக்கி இசுரேல் கப்பல் போக்குவரத்திற்கு தடைவிதித்தது. இதற்கு பதிலடியாக பிரித்தானிய, பிரான்சு உதவியுடன் இசுரேல் சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமித்தது. சுயெஸ் கால்வாய் சண்டையில் காசா, சினாய் தீபகற்பத்தை இசுரேல் கைப்பற்றிக் கொண்டது. ஐ.நாவும் அமெரிக்காவும் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தன. இசுரேல் எகிப்தின் பகுதிகளில் இருந்து விலகிக் கொள்ள உடன்பட்டது. எகிப்தும் இசுரேல் போக்குவரத்திற்கு வழிவிட்டு சினாய் தீபகற்பத்தை இராணுவமற்ற பிரதேசமாக்கியது. இராணுவமற்ற பிரதேசத்தை கண்கானிக்க ஐ.நா. அவசரகால படை நிறுத்தப்பட்டது. ஐ.நா. அவசரகால படை எகிப்தின் பகுதிகளில் மட்டும் இருந்தனர். இசுரேல் தன் பகுதியில் ஐ.நா. அவசரகால படையை அனுமதிக்கவில்லை. பலஸ்தீன விடுதலை இயக்கம் 1964இல் உருவாக்கப்பட்டது. இது சையோனியர்களையும் ஏகாதிபத்தியையும் அழிப்பதுதான் பாலத்தீன விடுதலை எனும் கொள்கையினைக் கொண்டது. 19 மே 1967இல் எகிப்து ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிவிட்டு, 100,000 படையினரை சினாய் தீபகற்பத்தில் நிறுத்தியது. மீண்டும் டிரான் நீரிணையை இசுரேலுக்கு மூடிவிட்டது. 19 மே 1967இல் யோர்தான் எகிப்துடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிய எகிப்து ஐ.நா. எல்லையைத் தாண்டி தென் இசுரேலிய எல்லைக்கு முன்னேறியது. 5 ஜூன், இசுரேல் எகிப்தை தாக்கியது. இசுரேலிய விமானப்படையின் எதிர்பாராத தாக்குதலில் அதிகளவு எகிப்து வான்படை அழிவுற்றது. இசுரேல் யோர்தான், சிரியா, ஈராக் வான் படைகளை அழிக்கத் தொடங்கியது. இசுரேலின் இத்தாக்குதல் ஆறு நாள் போரில் அது வெற்றியடைய முக்கிய காரணமாகியது. போரின் முடிவில் இசுரேல் சினாய் தீபகற்பம், காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம், சேபா பண்னைகள், கோலான் குன்றுகள் என்பனவற்றை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. போரின் விளைவு அப்பிரதேசத்தின் புவியியல் அரசியலில் தாக்கம் செலுத்தியது. ஆகஸ்து 1967இல், அராபிய தலைவர்கள் இசுரேல் பற்றிய அராபியர் நிலைப்பாடுபற்றி கலந்துரையாடினார்கள். அவர்கள் இசுரேல் அரசுக்கு அங்கீகாரம் இல்லை, அதனுடன் சமாதானம் இல்லை, பேச்சுவார்த்தை இல்லை என்ற 'மூன்று இல்லை(கள்)' என்ற முடிவுக்கு வந்தனர். 1967இல், சினாய் தீபகற்பத்தை இசுரேல் கைவிட்டுவிடும் நோக்காகக் கொண்டு தேய்வுப் போரை எகிப்து ஆரம்பித்தது. 1970 இல் கமால் நாசீரின் மரணத்துடன் அப்போர் முடிவுக்கு வந்தது. 6 அக்டோபர் 1973இல் சிரியாவும், எகிப்தும் எதிர்பாராத தாக்குதலை யூதர்களில் புனித நாளாகிய யோம் கிப்பூரில் ஆரம்பித்தது. இசுரேல் படைகள் தயாரற்ற நிலையிலிருந்து மீள 3 நாட்கள் எடுத்தது. யோம் கிப்பூர் போர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் மறைமுகமாக ஒன்றையொன்று எதிர்க்க வழியமைத்தது. இசுரேல் போரை தீவிரப்படுத்த, சோவியத் ஒன்றியம் இராணுவ நடவடிக்கை பற்றி அச்சுறுத்தல் விடுத்தது. அமெரிக்காவின் அணு ஆயுத போர் பற்றிய முன்னெச்சரிக்கை 25 அக்டோபரில் போர் நிறுத்தத்திற்கு வழிவிட்டது. 1970களின் பிற்பகுதியில் டேவிட் முகாம் உடன்பாட்டைத் தொடர்ந்து இசுரேலும் எகிப்தும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதனால், சினாய் தீபகற்பம் எகிப்துக்கு கையளிக்கப்பட, காசா இசுரேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஓப்பந்தம் மூலம் இசுரேலின் கப்பல் போக்குவரத்தும் அப்பகுதியில் சுமூகமானது. 1994இல் இசுரேலும் யோர்தானும் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இவற்றுக்கிடையேயான முரண்பாடு ஏறக்குறைய 18.3 பில்லியன் டாலர்களை இழக்கச் செய்தது. சமாதான உடன்படிக்கை மூலம் யோர்தான் இசுரேலுடன் உறவு ஏற்படுத்திய எகிப்துக்கு அடுத்த இரண்டாவது அராபிய நாடாகியது. 1948 இலிருந்து இசுரேலும் ஈராக்கும் ஜென்ம விரோதிகளாகவே காணப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நடந்த அராபிய-இசுரேலிய போரில் ஈராக் தன் படைகளை அனுப்பியது. பின்னர், 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரிலும், 1973ஆம் ஆண்டு நடந்த யோம் கிப்பூர் போரிலும் எகிப்துக்கும் சிரியாவிற்கும் உதவியது. ஜூன் 1981இல், ஒபரா இராணுவ நடவடிக்கை மூலம் ஈராக் புதிதாக நிர்மானித்த அணு உலைகளை இசுரேல் தாக்கியழித்தது. 1991 வளைகுடா போரின்போது, ஈராக் 39 ஸ்கட் ரக ஏவுகணைகளை இசுரேல் மீது ஏவியது. ஆயினும் அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இசுரேல் பதில் தாக்குதல் நடத்தாமல், போர் வேறுவடிவம் எடுக்கவிடாமல் மௌனமாக இருந்தது. யோர்தானில் 1970இல் ஏற்பட்ட உள்ளூர் கலவரத்தைத் தொடர்ந்து, யோர்தான் மன்னர் ஹசைன் பாலத்தீன விடுதலை இயக்கத்தை வெளியேற்றினார். இதனால் ஆயிரக் கணக்கான பாலத்தீன விடுதலை இயக்க உறுப்பினர்கள் லெபனானில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தினர். 1981இல் சிரியா பாலத்தீன விடுதலை இயக்க உதவியுடன் ஏவுகணைகளை லெபனானில் நிறுத்தியது. 1982இல் லெபனான் மீது இசுரேல் போர் தொடுத்தது. இரு மாதங்களில் பாலத்தீன விடுதலை இயக்கம் அங்கிருந்து வெளியேறும் உடன்பாட்டிற்கு வந்தது. 1983இல் இசுரேலும் லெபனானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். சிரியாவின் அழுத்தத்தினால் ஒப்பந்தம் 1984இல் செல்லுபடியற்றதாகியது. முரண்பாட்டின் அளவு குறைந்ததும் 1985இல் இசுரேல் லெபனானின் 15கி.மி அகல பரப்பளவில் இருந்து பின்வாங்கியது. 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவினருக்கு எதிராக இசுரேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிரியாவுடனான சமாதான உடன்படிக்கை திட்டத்தின்படி, 2000 ஆம் ஆண்டில் தென் லெபனான் பகுதிகளிலிருந்த பாதுகாப்பு வலயங்களை இசுரேல் அகற்றியது. 2006இல் ஹஸ்புல்லாவின் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து தென் லெபனானிலிருந்த ஹஸ்புல்லாவின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதும் 2006 லெபனான் போர் உருவாகியது. 34 நாட்கள் நீடித்த இப்போரின் விளைவாக, தடுப்பு வலயம் தென் லெபனானில் உருவாக்கப்பட்டது. ஹிஸ்புல்லாவின் பின்வாங்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. அமைதிப் படைக்கு லெபனானின் பகுதிகளை இசுரேல் கையளித்தது. இரு தரப்பும் தமக்கே வெற்றியென அறிவித்தன. 1970களில் பாரியளவில் சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. லெட் விமான நிலைய படுகொலை, முனிச் ஒலிம்பிக் படுகொலை, என்டபே பயணக்கைதிகள் ஆகியன குறிப்பிடத்தக்கன. 1987 மார்கழியில் முதலாவது இன்டிபாடா ஆரம்பித்தது. ஜபய்லா அகதிகள் முகாமிலிருந்து ஆரம்பித்து காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம் வரை பரவியது. பொது ஆர்ப்பாட்டத்தோடு இசுரேல் பொருட்களுக்கெதிரான புறக்கணிப்பு, வீதி மறியல், இசுரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிதல் என்பன இடம் பெற்று சர்வதேச கவனத்தைப் பெற்றது. இசுரேலிய பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு, பாரிய கைது போன்ற பதில் நடவடிக்கைகள் சர்வதேச விமர்சனத்திற்குள்ளானது. அதுவரை பாலத்தீன மக்கள் தலைமையாக கருதப்படாத பாலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலை அங்கீகரித்து பயங்கரவாத செயல்களை கைவிட்டதும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. 1993 மத்தியில் இசுரேலிய, பாலத்தீன பிரதிநிதிகள் நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். இதன் விளைவாக இசுரேலும் பாலத்தீன விடுதலை இயக்கமும் செப்டெம்பர் 1993இல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இசுரேல் பாலத்தீன விடுதலை இயக்கத்தை பாலத்தீன மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டனர். பாலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலிய அரசின் இருப்பை ஏற்றுக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளை விட்டு, அதன் விருப்பமாகிய இசுரேலின் அழிவு என்ற கொள்கையை கைவிட்டது. 1995இல் ஒஸ்லோ 2 என்ற உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டது. இதன்படி மேற்குக் கரையில் அ, ஆ, இ என்ற பிரிவுகள் காணப்பட்டன. பிரிவு அ பாலத்தீனத்தினத்தின் முழு சிவில் கட்டுப்பாட்டில் இருக்கும், அதன் உள்ளக பாதுகாப்பிற்கு பாலத்தீனியர்களே பொறுப்பானவர்கள். இரண்டாவது இன்டிபாடா பாலத்தீனத்துடனான அரசியல் உறவு பற்றி இசுரேலை மீள யோசிக்க வைத்தது. தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இசுரேல் இராணுவம் ஆறு நாள் போரின் பின் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இசுரேல் மேற்குக் கரையின் பல பகுதிகளை மீளவும் கைப்பற்றிக் கொண்டது. இருந்தபோதிலும், 2008இல் மெதுவாக அதிகாரத்தினை பாலத்தீன அதிகார சபைக்குக் கையளித்தது. இசுரேலிய பிரதமர் ஏரியல் சரோன் 2003இல் காசாவிலிருந்து பின்வாங்குதல் என்ற முடிவை ஒருதலைப்பட்சமாக எடுத்தார். இது 2005இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜூன் 2006இல் ஹமாஸ் இசுரேலிய படைவீரர் கிலாத் ஷாலித்தை கடத்தியது அச்சந்தர்ப்பத்தில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்ட படைவீரைத் தேடி இசுரவேல் படையினர் இராணுவ நடவடிக்கையினை மேற் கொண்டனர். 2011 இல் அப்படைவீரர் 1027 பாலத்தீன கைதிகள் பறிமாற்றத்தின்போது விடுதலை செய்யப்பட்டார். ஜுலை 2006இல் ஹிஸ்புல்லா லெபனானைக் கடந்து தாக்கியதில் 8 இசுரவேலிய படையினர் கொல்லப்பட்டும் இருவர் கடத்தப்பட்டனர். இது 2006 லெபனான் போருக்கு வித்திட்டு, லெபனானில் பெரும் அழிவு ஏற்பட்டது. ஐ.நா. அணுசரனையுடன் ஆகஸ்து 2006இல் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதில் பெருமளவு லெபனானிய பொதுமக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். லெபனானின் உட்கட்டமைப்பு பாரதூரமாக சேதத்திற்குள்ளானது. ஏறக்குறைய ஒரு மில்லியன் லெபனானிய பொதுமக்களும் 300,000 – 500,000 இசுரேலிய பொதுமக்களும் இடம் பெயர்ந்தனர். காசா உள்ளூர் போரின் பின், ஃபதஹ்விடமிருந்து ஹமாஸ் காசாவை கைப்பற்றியது. இதனால் எல்லையில் இசுரேல் கட்டுபாடுகளை விதித்தது. 2007இல் இருந்து இசுரேலும் எகிப்தும் அங்கு பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தின. 2007இல் இசுரேல் இராணுவ நடவடிக்கை மூலம் வடகெரியாவின் உதவியுடன் சிரியாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அணு ஆலையை தாக்கியழித்தது. 2003 இலும் சிரியாவிலிருந்த ஆயுதக் குழுவின் தளத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கது. இசுரேல்-ஹமாசுக்கிடையிலான உடன்படிக்கை 2008 டிசம்பரில் முடிவுற்றது. இதற்கு இருதரப்பினருமே காரணம். இதைத் தொடர்ந்து இசுரேல் கடத்தல் சுரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலாக ஹமாஸ் 60க்கு மேற்பட்ட ஏவுகணைகளால் இசுரேலிய நகரங்களைத் தாக்கியது. விளைவு இசுரேல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வைத்தது. மனித உரிமை அமைப்புக்கள் இரு தரப்பும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டின. இசுரேல் படையினருக்கும் காசாவுக்கு உதவி செய்ய முனைந்த ஆர்வலர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு, 9 ஆர்வலர்கள் கொல்லப்பட்டும் 7 படைவீரர்கள் காயமடைந்தனர். ஹமாஸ் தலைமையிலான 13 ஆயுதக்குழுக்களின் பயங்கரவாத செயற்பாடுகள் பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டன. இசுரேலியர்கள் மீதான தாக்குதல்கள் 2010க்குப் பின்னர் அதிகரித்துக் காணப்பட்டது. இதில் ஹமாசின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை. தந்திரோபாய மதிநுட்ப குழுவின் அறிக்கையின்படி, 1991–2010 வரையான மத்திய கிழக்கு முரண்பாட்டினால் ஏற்பட்ட சந்தர்ப்பச்செலவு 12 ட்ரில்லியன் டாலர்கள் என கூறப்படுகின்றது. இராம. அரங்கண்ணல் இராம. அரங்கண்ணல் (மார்ச் 31, 1928 - ) ஓர் தமிழக எழுத்தாளார், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரங்கண்ணல் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கோமல் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராமகிருஷ்ணன் - ருக்மணி. இவர் பள்ளி நாட்களில் காங்கிரசு ஆதரவாளராக இருந்தவர். பின் திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டார். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் (இண்டர்மீடியேட்) சேர்ந்தார். ஆனால் அதனை முடிக்கவில்லை. பதினெட்டாவது வயதில் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ ஏடான "முஸ்லிம்" இதழில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். 1949 முதல் திராவிடநாடு இதழில் பணியாற்றினார். பின் ”அறப்போர்” என்ற இதழை 1961 மார்ச் 10ஆம் நாள் தொடங்கி நடத்தினார். 1950களிலும் 60களிலும் இவர் எழுதிய சிறுகதைகள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவற்றுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதினார். அவ்வாறு வெளியான திரைப்படங்கள்: செந்தாமரை, மகனே கேள், பொன்னு விளையும் பூமி, பச்சை விளக்கு மற்றும் அனுபவி ராஜா அனுபவி. இவை தவிர கா. ந. அண்ணாதுரை எழுதிய கதையொன்று தாய் மகளுக்குக் கட்டிய தாலி என்னும் திரைப்படமாக உருவானபொழுது, அதற்கு உரையாடல் எழுதினார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து, அண்ணாதுரை வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அவரை ஆதரித்த முக்கிய தலைவர்களுள் அரங்கண்ணலும் ஒருவர். 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப்பெற்றார். 1967 தேர்தலில் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1976 இல் திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்தார். 1984இல் மீண்டும் திமுகவில் சேர்ந்தார். 2007-08 ஆம் ஆண்டு இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது. கலைமாமணி விருது வழங்கியும் சிறப்பித்துள்ளது. டைஃபஸ் டைஃபஸ் "(Typhus)" என்பது ரிக்கெட்சியே வகை பாக்டீரியங்களால் உண்டாகும் நோய்களைக் குறிக்கும் பொதுவான பெயர். பல வகை டைஃபஸ் நோய்கள் உள்ளன. இவற்றின் வேறுபாடு கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. கூட்டுசேரா இயக்கம் கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் ("Non-Aligned Movement", NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் 17வது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது. இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார். தற்போதைய உறுப்பினர்கள்=== ஆபிரிக்கா ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும். பின்வரும் நாடுகளும் நிறுவனங்களும் அவதானிப்பு நிலையிலுள்ளன: சிலப்பதிகார நடனங்கள் சிலப்பதிகாரத்தில் மொத்தம் 11 வகை நடனங்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது. அவற்றில் ஆறு வகைகள் நின்று கொண்டு ஆடுவனவாகவும் ஐந்து வகைகள் வீழ்ந்து ஆடுவதாகவும் உள்ளன. பகுதிப்பொருள் தடுப்பு மருந்து பகுதிப்பொருள் தடுப்பு மருந்து "(subunit vaccine)" என்பது ஒட்டு மொத்த பாக்டீரியா அல்லது வைரசை உடலுக்குள் செலுத்தும் அபாயத்தைச் செய்யாமல் நுண்ணுயிரிப் புரதம் அல்லது நுண்ணுயிரிச் சர்க்கரையின் ஒரு பகுதியை மட்டும் மனித உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்பு முறைமையைத் தூண்டும் தடுப்பு மருந்தேற்ற முறை. ஹெப்படைடிஸ் பி தடுப்பு மருந்து ஈஸ்ட் உதவியுடன் பெறப்படும் புரதப் பகுதிப் பொருள் தடுப்பு மருந்து. இவற்றை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தரலாம். டைஃபாய்டு காய்ச்சலுக்கான Vi உறைப் பல்சர்கரை தடுப்புமருந்து, நூமோ காக்கசு பல்சர்க்கரை தடுப்பு மருந்து ஆகியன கார்போஹைட்ரேட் (சர்க்கரை) பகுதிப் பொருள் தடுப்பு மருந்துகள். இவற்றுக்கு மனித உடலில் நினைவு இருக்காது. மேலும் இவற்றை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தர இயலாது. எ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்) எ மேன் பார் ஆல் சீசன்ஸ் (A Man for All Seasons) 1966 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிரெட் சின்மேன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பவுல் ஸ்கோபீல்ட், வெண்டி ஹில்லர், லியோ மெக்கேர்ன், ஆர்சன் வெல்ஸ், ராபர்ட் ஷாவ், சூசன்னாஹ் யார்க் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இந்தியாவில் 2011 நிலவரப்படி மொத்தம் 21 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனுக்காக பொதுத் துறையில் 17, தனியார் துறையில் 3 மற்றும் ஓமன் எண்ணெய் குழுமம் ஒன்றும் உள்ளன. அவற்றை கீழ்வரும் பட்டியலில் காணலாம். இந்தியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அசாம் மாநிலத்திலுள்ள திக்பாய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். ஜாம்நகர் ஆலை அதிக சுத்திகரிப்பு திறன் வாய்ந்தது. இந்தியாவும் கூட்டுசேரா இயக்கமும் புதியதாக விடுதலை பெற்ற மற்றும் குடிமைப்பட்ட நாடுகள் பன்னாட்டு பன்முகப்பட்டகூட்டுசேரா இயக்கத்தை உருவாக்கிட இந்தியா முதன்மை பங்களித்தது. அணி சேராமை இந்தியாவின் குடிமைப்பட்ட கால பட்டறிவினாலும் வன்முறையற்ற விடுதலை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் அமைந்தது; பன்னாட்டளவில் பனிப்போரால் பாதிக்கப்பட்டிருந்த உலக சூழலில் தனது எதிர்காலத்தை தானே முடிவெடுக்கும் திண்மை உடையதாக இருந்தது. மேற்கத்திய முதலாளித்துவத்திற்கும் கிழக்கத்திய பொதுவுடமைக்கும் இடைப்பட்ட நிலையை விரும்பியது. ஜவஹர்லால் நேருவும் அவருக்குப் பின் வந்தோரும் பன்னாட்டளவில் எந்தவொரு அதிகார மையத்துடனும் அணி சேராது, முக்கியமாக ஐக்கிய அமெரிக்காவுடனும் சோவியத் உருசியாவுடனும், சுதந்தரமாக செயல்பட கூட்டுசேராக் கொள்கையை பரிந்துரைத்தனர். பன்னாட்டுப் பிணக்குகளைத் தீர்க்க வன்முறை தவிர்த்தலையும் பன்னாட்டு கூட்டுறவையும் பரிந்தனர். 1940களிலிருந்தே இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் சிறப்பியல்பாக அணி சேராமை இருந்து வந்துள்ளது. "அணி சேராமை " ("Non-Alignment") என்ற சொல்லாடல் 1953ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையில் வி. கே. கிருஷ்ண மேனன் உரையாற்றியபோது பயன்படுத்தினார். இதனையே பின்னர் இந்தியப் பிரதமர் நேரு 1954ஆம் ஆண்டில் இலங்கையில் கொழும்புவில் நிகழ்த்திய உரையொன்றில் குறிப்பிட்டார். இந்த உரையின்போது இந்திய-சீன உறவுகளுக்கு வழிகாட்டுதலாக சீனப் பிரதமர் சூ என்லாய் பரிந்துரைத்த "பஞ்சஷீல்" எனப்பட்ட ஐந்து தடுப்புக்காப்புகளைக் குறிப்பிட்டார். இந்த ஐந்து கூறுகளே பின்னர் கூட்டுசேரா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாகவும் அமைந்தது. அவை: ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கள் புதியதாக விடுதலை பெற்ற நாடுகளிடையே பன்னாட்டளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. கூட்டுசேரா இயக்கத்தின் மூலம் மூன்றாம் உலகின் புதிய தலைமையாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அன்பர்கிவன் (திரைப்படம்) அன்பர்கிவன் (Unforgiven) 1992 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜீன் ஹாக்மேன், மார்கன் ஃபிரீமன், ரிச்சர்ட் ஹாரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது. மாற்றுவெளி மாற்றுவெளி என்பது தமிழகத்திலிருந்து வெளியாகும் ஓர் ஆய்விதழாகும். பரிசல் புத்தக நிலையத்தினால் 2009 இலிருந்து வெளியிடப்படும் இந்த ஆய்விதழின் சிறப்பாசிரியர் வீ. அரசு ஆவார். மாற்றுவெளி ஆய்விதழ் குறிப்பாக ஒரு துறைசார்ந்து வெளிவரும் ஆய்விதழாக இல்லாமல் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு பொருண்மை சார்ந்து வெளிவருவதாக உள்ளது. ஒவ்வொரு பொருண்மை சார்ந்த இதழ்களுக்குக் குறித்த பொருண்மைத் துறைசார் அழைப்பாசிரியர்கள் பங்களிப்புச் செய்யும் வழக்கமும் காணப்படுகிறது. கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி, ரோஜா முத்தையா நூலகம், நாவல்கள், மாற்றுப் பாலியல், தமிழ்ச் சமூக வரலாறு, போருக்குப் பிந்தைய ஈழம், தமிழ்ச் சித்திரக் கதைகள் ஆகிய தலைப்புக்களில் முதல் 9 இதழ்கள் வெளிவந்துள்ளன. சமூக விஞ்ஞானம் (இதழ்) சமூக விஞ்ஞானம் என்பது தமிழகத்திலிருந்து வெளியாகும் ஒரு காலாண்டு ஆய்விதழாகும். இது தென்னக ஆய்வு மையத்தினால் 2003 இலிருந்து வெளியிடப்படுகிறது. இதன் நிர்வாக ஆசிரியர் தேவ. பேரின்பன். சமூக அறிவியல்களுக்கென தமிழில் வெளிவரும் ஒரே ஆய்விதழ் எனக் குறிப்பிடப்படும் இந்த ஆய்விதழ் பல சமூக அறிவியற்துறைகள் சார்ந்தும் கட்டுரைகளை வெளியிடுகிறது. அவ்வப்போது சிறப்பிதழ்களும் வெளியாகின்றன. (எ-டு:செம்மொழிச் சிறப்பிதழ்) ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்) ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (How Green Was My Valley) 1941 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் போர்ட் ஆல் இயக்கப்பட்டது. வால்டர் பிட்ஜியன், மரின் ஒ'ஹாரா, அன்னா லீ, டொனால்ட் கிரிஸ்ப், ராட்டி மெக்டோவால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சி இந்தியாவின் பசுமைப் புரட்சி என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள், மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றதே பசுமைப் புரட்சி ( Green Revolution) என்று அறியப்படுகிறது. அடிக்கடி பஞ்சங்களுக்கு பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறையும் பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1963ஆம் ஆண்டில் முனைவர் நார்மன் போர்லாக் இந்தியாவில் மரபுமாற்ற வீரிய கோதுமை விதைகளை அறிமுகப்படுத்தினார். இவரே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என கருதப்படுகிறார். பல்வேறு வீரிய விதைகளில் கோதுமை சிறந்த ஈட்டைத் தந்தது. மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் அனைத்திந்திய வானொலியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்திய வேளாண் அறிவியலாளர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் இந்திய நடுவண் அமைச்சில் வேளாண் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் ஆகியோரின் கூட்டு முயற்சியும் பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வழி வகுத்தது. வேதிய பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதால் மண்ணின் தரம் குறைந்ததாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. இது எதிர்கால வேளாண்மையை பாதிக்கும் என்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பரவக் காரணமாக அமைந்ததாகவும் இயற்கை அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலங்களில் கரிமக் கிளைக்கொல்லிகளும் இயற்கை உரங்களும் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். தந்தி தந்தி "(Telegraph)" எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. முன்னதாகக் கொடிகளை அசைத்தோ தீப்பந்தங்கள் மூலமாகவோ அனுப்பப்படுவது ஒருவகை தந்தியே ஆகும்; ஆனால் புறாக்கள் மூலமாகத் தூது விடுதல், அவை மடல்களைத் தாங்கிச் செல்வதால், தந்திமுறை இல்லை. இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்தக் குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். புகை குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள்மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப் பட்டு வந்தன. 19ஆம் நூற்றாண்டில் மின்சாரம் கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை மின்சாரத் தந்திமூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் வானொலி கண்டுபிடிப்பு வானொலித் தந்தியையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. இணையம் வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட மின்னஞ்சல்கள் , குறுஞ் செய்திகள், உடனடி செய்திகள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்துள்ளது. மின்சாரத் தந்தியில் கருவிகள் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகின்றன. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவிமூலம் ஓர் முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவிமூலம் பெறப்படுகிறது. தந்தி முறைகள் ஐரோப்பாவில் 1792இலிருந்தே கொடிகள் மூலமாகவும் தீப்பந்தங்கள் மூலமாகவும் பயன்பாட்டில் இருந்தன. இவை பார்வைக்கோட்டில் இருக்கும் பெறுநருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டன. 1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த சாமுவெல் மோர்சு கண்டுபிடிப்பாளராக முதன்முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார். ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவை நிறுவனம், எலெக்ட்ரிக் டெலிகிராஃப் நிறுவனம், 1846இல் நிறுவப்பட்டது. 1850இல் இந்தியாவில் சோதனைமுறையில் மின்சாரத் தந்தி கொல்கத்தாவிற்கும் டயமண்டு துறைமுகத்திற்கும் இடையே நிறுவப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மோர்சு தந்திக் கருவியில், செய்தி அனுப்பும் 'மோர்சு சாவி'க் கருவியில் குத்து வசமாக இயங்கக்கூடிய ஒரு நெம்புகோல் அமைப்பு இருக்கும். இதன் மேற்புறமுள்ள எபனைட் என்னும் குமிழை விரலால் அழுத்திக் கீழேயுள்ள பித்தளைக் குமிழைத் தொடுமாறு செய்ய வேண்டும். இக்குமிழ் மின்கலத்தில் உள்ள நேர்முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்கலத்தின் எதிர் முனையானது பூமியுடன் இணைக்கப்பட்டிருக்கும். செய்தி பெறும் இடத்திலுள்ள 'மோர்சு ஒலிப்பான்' கருவியில் இருக்கும் மின்காந்தத்தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச்சட்டம் இருக்கும். இதன் ஒரு முனை மேற்பகுதியில் அமைந்துள்ள இரு பித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத் திருகைத் தொட்ட வண்ணம் இருக்கும். மின் காந்தத்துடன் சுற்றப்பட்டுள்ள கம்பிச்சுருளின் மற்றொரு முனை பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பியோடு இணைந்திருக்கும். இதுவே தந்திக் கருவியின் அமைப்பு ஆகும். தந்திக்கருவியில் அமைக்கப்பட்டுள்ள குமிழ் அழுத்தப்படும் போது மின்சாரம் பாய்கிறது. அதனால் செய்தி பெறும் இடத்தில் உள்ள ஒலிப்பான் காந்த சக்தி பெறுகிறது. அக்காந்த சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழாக இழுக்கிறது. அதன் விளைவாகச் சட்டத்தின் ஒருமுனைக் கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலி எழுப்புகிறது. அப்போது செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்துவதை விட்டுவிட்டால் மின்சாரம் பாய்வதும் நின்றுவிடும். இதன் மூலம் மின்காந்தம் தன் சக்தியை இழப்பதால் ஓசை எழுப்புவதையும் நிறுத்திவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலெழுந்து திருகின் மேல் மோதி அடுத்தடுத்து ஒலி எழுப்பும். இந்த ஒலிகளின் தன்மைக்கேற்ற ஒலிக்குறியீடுகளை மோர்சு வகுத்தளித்துள்ளார். அவ்வொலிக் குறியீடுகளை எழுத்துகளாக மாற்றுவதன் மூலம் செய்தியைப் பெறலாம். நிக்கோலா தெஸ்லாவும் பிற அறிவியல் அறிஞர்களும் கம்பியில்லாத் தந்தி, வானொலித் தந்தி, அல்லது வானொலியின் பயன்பாட்டை 1890களின் துவக்கத்தில் வெளிப்படுத்தினர். மே 5, 1895இல் பொதுமக்களுக்கு அலெக்சாண்டர் பப்போவ் தனது கம்பியில்லா பெறும் கருவியைப் பறைசாற்றினார். இது ஒரு மின்னல் உணரியாகவும் செயல்பட்டது. குறிப்பலைகளைப் பெறும் வகையில் இது 30 அடி கம்பின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்தது. 1895இல் ஆல்பர்ட் துர்பெயின் பிரான்சில் முதன்முதலாக மோர்சு குறிமுறையை பயன்படுத்தி வானொலி அலைகள் மூலமாகக் குறிப்பலைகளை அனுப்பி 25 மீ தொலைவில் பெற்றுக் காட்டினார். மார்க்கோனி இத்தாலியில் தனது முதல் வானொலி 6 கிலோமீட்டர்களுக்கு அனுப்பினார். மே 13, 1897இல் மார்க்கோனி, கார்டிஃப் அஞ்சல்முறை பொறியாளர் ஜார்ஜ் கெம்ப்பின் உதவியுடன், முதன்முதலில் நீரின் மீது கம்பியில்லா குறிப்பலைகளை வேல்சின் இலாவர்நாக்கிலிருந்து பிளாட் ஹோமிற்கு அனுப்பினார். இத்தாலிய அரசின் ஆதரவு கிடைக்காததால், 22-அகவை-நிரம்பிய மார்க்கோனி பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். அஞ்சல்துறை முதன்மை பொறியாளர் வில்லியம் பிரீசின் ஆதரவுடன் 34 அடி உயரமுள்ள இரு கம்பங்களை நட்டு இந்தச் சோதனையை நடத்தினார். 1901இல் மார்க்கோனி ஆங்கில எழுத்து "S" என்பதை அத்திலாந்திக்குப் பெருங்கடலைக் கடந்து கார்ன்வாலிலிருந்து நியூபவுண்டுலாந்தில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தார். வானொலித் தந்தி கப்பல்களுக்கு இடையேயும் கப்பல்களிலிருந்து கடலோர நிலையங்களுக்கு நெருக்கடிக்கால செய்தி பரிமாற்றங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இன்றைய அறிவியல் துறையின் பெருவளர்ச்சியின் விளைவாகப் பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை: என்பவையாகும். டெலி பிரிண்டர் எனப்படும் 'தொலை அச்சடிப்பு முறை' செய்தித் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படங்களை உள்ளது உள்ளவாறே நெடுந்தொலைவு 'ஒளிநகல்'(Fax) முறையில் அனுப்பவும் முடிகிறது. இந்தியாவில் தந்தி சேவை சூலை 14 - 2013 இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது. மின்சாரத் தந்திக்கு முன்னதாக அனைத்து செய்தி பரமாற்றங்களும் ஒரு மனிதர் அல்லது மிருகத்தின் பயண விரைவிலேயே நடந்தன. செய்தித் தொடர்பை இடம், நேரத் தடைகளைக் கடந்து தந்தி மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. 1870இல் ஐக்கிய அமெரிக்காவின் தந்தி பிணையம் 9,158,000 செய்திகள் கையாண்டது; இது 1900இல் 63,168,000 ஆக உயர்ந்தது. தந்திச் சேவையால் "தொடர்வண்டி நிறுவனங்கள், பங்கு/நிதிச் சந்தைகள்,பண்டச் சந்தைகள், மேம்பட்டன; நிறுவனங்களுக்கிடையேயான மற்றும் உள்ளே தகவல் பரிமாற்றச் செலவு குறைந்தது." இந்தியாவில் அடித்தள மக்களும் செலவிடக்கூடிய சேவையாக விளங்கியது. வேலை நியமனங்கள், உடல்நிலை/மரணச் செய்திகள், வங்கி நிதிநிலைகள் ஆகியவற்றிற்கு தந்திச்சேவை முதன்மையாக இருந்தது. சிற்றாறு சிற்றாறு என்பது தென்காசி நகராட்சியிலுள்ள குற்றால மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இது தாமிரபரணி ஆற்றின் முக்கிய துணை ஆறு. 80 கிலோமீட்டர்கள் நீளமும், 1,722 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட இந்த ஆறு தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி என்னும் ஊரில் இணைகிறது. இவ்வாற்றுக்கு ஐந்து முதன்மைத் துணையாறுகள் உள்ளன. இதன் துணையாறுகளான ஐந்தருவி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, அழுதகன்னியாறு ஆகியவை முறையே சிற்றாற்றில் கசமோட்சபுரம், தென்காசி, வீரகேரளம்புதூர், கடப்பாகொத்தி ஆகிய ஊர்களில் இணைகின்றன. இதைத்தவிர உப்போடை என்ற துணையாறும் உண்டு. சிற்றாற்றுக்கு மொத்தம் ஐந்து துணையாறுகளும் அத்துணையாறுகளின் 3 துணையாறுகளும் உள்ளன. சிற்றாற்றிலிருந்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம்,வீராணம் வட்டம் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மேலும் இப்பகுதிகளில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் சிற்றாறு விளங்குகிறது. அவற்றின் விவரம், சிற்றாற்றின் மீது பாசனவசதிக்காக 17 அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆற்றின் இணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன. தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் சிற்றாறு பாய்ந்தோடியது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு வேண்டினார். அதற்கு முன் சிற்றாறு, தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்திலும் மற்றும் இலஞ்சியிலுள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்தின் வழியாகவும் சென்றது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவன் கூறிய இடமோ சிற்றாறு செல்லும் இடத்தில் அமைந்தது. அதனால் அதை தெற்கு நோக்கி திசை திருப்பினான் பாண்டியன். அந்த தடுத்து நிறுத்தப்பட்ட பழைய சிற்றாறு சென்ற இடங்களில் கட்டப்பட்டதே இந்த 2 கோயில்களும் ஆகும். இக்கோயில்களிலுள்ள அம்மன் சிற்றாறு திருப்பிவிட்டதால் ஏற்படும் வீரிய விளைவுகளை தடுப்பதன் காரணத்தினால் கட்டப்பட்டதாக நம்பிக்கை வைத்ததால் இக்கோயில்கள் சிற்றாற்று வீரியம்மன் கோயில் என பெயர் பெற்றன. சிற்றாற்றின் மூலமும் அவற்றின் இணையாறுகளின் மூலமும் பல இயற்கை அருவிகள் பல தென்காசியை சுற்றி விழுகின்றன. அவை, சமூக விஞ்ஞானம் திலகம் (நெற்றிப்பொட்டு) மகளிர் நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டைத் திலகம் என்பர். அது நெற்றிக்கு எடுப்பைத் தருவதால் மக்களில் எடுப்பாக விளங்குபவர்களையும் ‘மக்கள் திலகம்’, ‘மங்கையர் திலகம்’ என்றெல்லாம் வழங்குகிறோம். புத்தர் பெருமானை மகதநாட்டுத் திலகம் என்றனர். காசறை என்னும் கஸ்தூரியைக் குழைத்துக் கன்னங் கரேர் எனத் திலகமிட்டுக்கொண்டு கண்ணாடி பார்க்கும் பழக்கமும் உண்டு. திலகம் (மலர்) திலகம் என்பது ஒரு மலர். இது மரத்தில் பூத்தது. கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில் கப்பித்தாவத்தை கைலாசநாதர் சுவாமி கோயில் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான மருதானையில் கப்பித்தாவத்தையில் அமைந்திருக்கிறது. இவ்வாலயம் வரலாற்றுப் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வசித்து வணிகத்தில் ஈடுபட்ட திருவிளங்க நகரத்தார் என்ற அழைக்கப்படும் வணிக வைசியச் செட்டியார்களால் இவ்வாலயம் கட்டப்பட்டது. அக்காலத்தில் இக்கோயில் முற்றிலும் நீரினால் சூழப்பட்டு இயற்கைச் சூழலில் இந்திய ஆலயங்களை ஒத்ததாகவும் அமையப் பெற்றிருந்தது. புராதன சிவன் கோயிலின் சிவ சின்னங்களையும் சிவனின் சந்நிதி, அம்மன் சந்நிதி ஆகியவற்றின் அடித்தளத்தில் பழைமை வாய்ந்த கருங்கற்களையும் இங்கு காணக் கூடியதாக உள்ளது. அம்மன் சந்நிதியில் உள்ள கோமுகியும் பழைய ஆலயத்தின் சின்னமாகத் தெரிகிறது. இலங்கையில் ஒல்லாந்தர்களுடைய ஆட்சியில் அந்நிய வாணிய செட்டியார் இங்கு வந்த சேர்ந்தனர். டச்சுக்காரர்கள் கரையோரப் பிரதேசங்களில் காலூன்றிக்கொண்டு தமது வணிகத்தைக் கவனித்து வந்தனர். கொழும்பு கப்பித்தாவத்தையிலுள்ள “கில்மபூதத்தை” அல்லது “கதுறுகாவத்தை” என்ற இடத்தில் வந்திறங்கிய வணிகர்கள் அதனைத் தங்கள் வணிக மையமாகக் கொண்டார்கள். இங்கு தான் கருவாப்பட்டை, மிளகு, கொப்பரா, தேங்காய், எண்ணெய், கயிறு முதலியவைகளின் பண்டகசாலைகள் இருந்தன. ஓல்லாந்த வியாபாரிகள் கருவாப்பட்டையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். அவ்விடம் இருந்த பண்டகசாலைகள் ஒல்லாந்தரால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியால் பார்வையிடப்பட்டன. திருவிளங்க நகரத்தார் என்ற வாணிய செட்டிமார் இங்கு வியாபாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் இவ்விடத்தில் மேற்பார்வையாளராக இருந்த ஒல்லாந்த அதிகாரியைக் “கப்டன்” என்ற அழைத்தார்கள். அவரின் நிர்வாகத்தில் இருந்த இடம் முழுவதையும் “கேப்டன் கார்டன்ஸ்” ("Captain Gardens") என்ற பெயரிட்டார்கள். அதுவே இன்று கப்பித்தாவத்தை எனப்படுகிறது. உள்நாட்டு விளை பொருள்களெல்லாம் பாதைகள் மூலம் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு முதலிய இடங்களிலிருந்து கப்பித்தாவத்தைக்கே வந்து சேரும். இவ்விடம் ஓர் உள்நாட்டு துறைமுகம் போன்றது. திருவனந்தபுரம், நாகப்பட்டணம், காரைக்கால், கோவா முதலிய இடங்களுக்கு இங்கிருந்து தான் மேற்படிப் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படும். இங்கு வணிகம் செய்துவந்த வணிக வைசியச் செட்டியார்கள். அவர்களிருந்த தோட்டத்தில் மாலை வேளைகளில் ஒன்று சேர்ந்து ஒரு மரத்தின் கீழ் பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி வந்தனர். கொழும்பு மாநகரில் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செட்டியார்களிடமிருந்து கோயிலுக்காக நன்கொடை பெற்று 1783 ஆம் ஆண்டில் வீரபத்திரன் செட்டியாருக்குச் சொந்தமான இடத்தில் சிவன் கோயிலைக் கட்ட அத்திவாரமிடப்பட்டது. வீரப்பத்திரன் செட்டியாரே சிவாலயம் கட்ட நிதி திரட்டும் பொறுப்பும் ஏற்று அக்கோயிலைக் கட்டும் திருப்பணியையும் ஏற்றுக்கொண்டார். அச்சிவன் கோயிலே இன்று ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சைவ விதிப்படி குடமுழுக்கு முதலியன செய்யப்பட்டது. 1828ல் வீரபத்திரன் செட்டியார் காலமானார். அவர் சகோதரனின் மகன் சிதம்பரம் ராமையா செட்டியார் ஆலய நிருவாகத்தை நடத்தி வந்தார். வைசியச் செட்டியார்களிடம் நன்கொடை பெற்று அப்பணத்தைக்கொண்டு ஆலயத்துக்கு பக்கத்து நிலங்களையும் வேறு இடங்களில் தென்னந் தோட்டம் முதலியவற்றையும் வாங்கினார். அங்கே முன் இருந்த மலையாள மொழிபெயர்ப்பாளரின் வம்சாவழியினரின் காணிக்களையும் ஆலயத்துக்காக பொருள் கொடுத்து வாங்கினார். 1851 ஆம் ஆண்டில் திருவிளங்க நகரத்தார் ஒன்று சேர்ந்து கோயிலின் நித்திய நைவேத்திய பூசைகளை நிறைவேற்ற அறங்காவலரைத் தெரிவு செய்தனர். முத்தையா குமாரசாமி செட்டியார், முத்துவீரன் தூண்டி செட்டியார், கல்யாண குப்பமுத்து செட்டியார், சிதம்பர காளியப்பா செட்டியார், சுப்பன் கோவிந்தன் செட்டியார் ஆகியோர் முதல் நியமனம் பெற்ற அறங்காவலர் ஆவர். இவர்களுக்குப் திருவிளங்க நகரத்தார் (வாணிய செட்டியார்) சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்து அறங்காவல சபையினர் கோவிலைப் பொறுப்பேற்று நடத்தி வந்தனர். 1938-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நிர்வாகம் தடைப்பெற்றிருந்தது. இதன் பின் பி.சி. கதிர்வேல் செட்டியார் தலைமையில் 1949-ம் ஆண்டு கைலாசநாதப் பெருமானுக்கும் கருணாகடாட்சி அம்மனுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் சூலை 15, 1983 இல் குடமுழுக்கு எஸ். இராஐரட்ணம் செட்டியார் தலைமையிலும், 1994 ஆகத்து 24 இல் நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலும், 2010 சூன் 4 இல் நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலும் குடமுழுக்குகள் நடைபெற்றன. வான் போர் வான் போர் எனப்படுவது போர்க்காலத்தில் படைத்துறை வானூர்திகளையும் பிற பறக்கும் சாதனங்களையும் பயன்படுத்துவதாகும். நாட்டுநலனுக்காக பொருட்களை வான்வழி கொண்டுசெல்வதும் இதன்பாற்படும். சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது. அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்) அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (An American in Paris) 1951 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மின்னேல்லி ஆல் இயக்கப்பட்டது. ஜீன் கெல்லி, லெஸ்லி கேரன், ஆஸ்கார் லேவாந்த், ஜார்ஜ் கட்டாரி, நீனா பாச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது. பத்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் பத்தாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. பத்தாம் நாள் வீடுமர்- அருச்சுனன் இடையே பெரும்போர் நடந்தது. போர்க்களத்தில் சிகண்டியை முன்னிறுத்தி அருச்சுனன் போர் செய்தான். பெண் பிறப்பாகிய சிகண்டியை வீடுமர் எதிர்க்கவில்லை. பீஷ்மர் அமைதியாக இருந்த சமயத்தில் அவரை அருச்சுனன் குறிபார்த்து தாக்கினான். பீஷ்மர் எறிந்த சக்தியாயுதத்தை அருச்சுனன் தனது அம்புகளால் சிதைத்தான். இதைத் தொடர்ந்து வீடுமர் கத்தியும் கேடயமுமாக தேரிலிருந்து இறங்க முயற்சித்தார். ஆனால் அந்த ஆயுதங்களை அருச்சுனன் தனது அம்புகளால் துண்டு துண்டாக்கினான். அவரின் உடல் முழுவதும் அருச்சுனனின் அம்புகள் பாய்ந்தன. தேரிலிருந்து வீடுமர் தரையில் வீழ்ந்தார். உடலின் எல்லா பாகங்களிலும் அம்புகள் குத்திக்கோர்த்து இருந்ததால், வீடுமரின் உடல் தரையைத் தீண்டவில்லை. அம்புப்படுக்கையில் உடல் கிடக்க, தலை தொங்கிக்கிடந்தது. தன் தலையை தாங்கிப் பிடிக்கும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை வைக்குமாறு வீடுமர் கேட்டபோது, பலரும் பஞ்சு அடைக்கப்பட்ட தலையணைகளை கொண்டு வந்தனர். அவைகளை மறுத்த வீடுமர், அருச்சுனனை உதவுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அருச்சுனன் தனது மூன்று அம்புகளை எடுத்து, கூர்மையான பக்கம் வீடுமரின் தலைப்பக்கம் வரும்படி அம்புகளை தரையில் ஊன்றினான். தான் மிகவும் களைப்படைந்துள்ளதால் தண்ணீர் தருமாறு வீடுமர், அருச்சுனனை கேட்டார். அருச்சுனன் ஒரு அம்பினை எடுத்து நிலத்தை நோக்கி எய்தவுடன், நிலத்தடியிலிருந்து நீர் பாய்ச்சலாய் வெளிவந்தது. தனது புதல்வனின் தாகத்தை தீர்க்க கங்கை நதியே அங்கு வந்ததாக வியாசர் தனது உரையில் எழுதியுள்ளார். தண்ணீரை அருந்தியபிறகு வீடுமர், "இனிமேலும் போர்புரிய வேண்டாம்; பாண்டவர்களுடன் சமாதானமாக போகவும்" என துரியோதனனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் அந்த அறிவுரை துரியோதனனுக்குப் பிடிக்கவில்லை. வீரர்கள் அனைவரும் தத்தம் பாசறைகளுக்கு வெவ்வேறான மனநிலைகளுடன் திரும்பினர். சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009. ஆசியக் கிண்ணம் 2012 ஆசியக் கிண்ணம் 2012, ("2012 Asia Cup") துடுப்பாட்டப் போட்டிகள் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் மார்ச் 22 வரை வங்காளதேசத்தில் இடம்பெற்றன. இது ஆசியக்கிண்ணத்தின் 11வது போட்டித் தொடர் ஆகும். ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தை 2 ஓட்டங்களால் வென்றது. 2010 ஆம் ஆண்டு போட்டித்தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டித்தொடரை நடத்துவதற்கு சீனா குனாங்சூ மாகானத்தில் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது, ஆனாலும் ஆசியத் துடுப்பாட்ட வாரியம் வங்காளதேசத்தில் இப்போட்டித் தொடரை நடத்தத் தீர்மானித்தது. 1988 இலும் 2000 ஆம் ஆண்டிலும் வங்காளதேசத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இப்போட்டித்தொடரின் அனைத்து 7 போட்டிகளும் மிர்ப்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெறுகின்றன. "அனைத்தும் உள்ளூர் நேரப்படி (ஒசநே+06:00)" முத்தாரம் (இதழ்) முத்தாரம் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது பொது அறிவுச் செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகும் ஒரு வணிக இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். ஆன்மிக பலன் (இதழ்) ஆன்மிக பலன் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல இதழாகும். இது ஆன்மிகம் மற்றும் ஜோதிடச் செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகும் ஒரு இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது. குங்குமச் சிமிழ் (இதழ்) குங்குமச் சிமிழ் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல இதழாகும். இது நாவல் ஒன்றுடன் சில திரைப்படச் செய்திகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகும் ஒரு வணிக இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது. குங்குமம் தோழி (இதழ்) குங்குமம் தோழி என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் பிரபல மாதம் இருமுறை வெளிவரும் இதழாகும். இது மகளிருக்கான பல்வேறு செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகின்றது. இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் (திரைப்படம்) ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் (Gentleman's Agreement) 1947 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டேரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா காசான் ஆல் இயக்கப்பட்டது. கிரெகொரி பெக், டோரோதி மெக்குவையர், ஜான் கார்பில்ட், செலேஸ்ட் ஹோல்ம், ஜூன் ஹவாக், அன் ரெவியர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது. ஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்) ஆல் அபவுட் ஈவ் ("All About Eve") 1950 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜோசப் .எல். மன்கீவிக்ஸ் ஆல் எழுதி இயக்கப்பட்டது. பெட் டேவிஸ், அன் பாக்ஸ்டர், ஜார்ஜ் சாண்டர்ஸ், செலேஸ்ட் ஹோல்ம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது. த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்) த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth) 1952 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். செசில் பி. டேமில் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பெட்டி ஹட்டன், கார்னல் வில்ட், சார்ல்டன், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், டோரோதி லமூர், குலோரியா கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது. கிகி (திரைப்படம்) கிகி (Gigi) 1958 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மினேல்லி ஆல் இயக்கப்பட்டது. லெஸ்லி காரன், லூயிஸ் ஜார்டன், மரிஸ் செவாலியர், ஹெர்மாயினி கிங்கோல்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஒன்பது அகாதமி விருதுகளையும் வென்றது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விருதுகளையுமே வென்றது அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் (திரைப்படம்) அரவுன்ட் த வோர்ல்ட் இன் 80 டேய்ஸ் (Around the World in 80 Days) 1956 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கெவின் மெக்குலோரி, வில்லியம் மென்சீஸ், மைக்கேல் டாட் ஆகியோரால் தயாரித்து மைக்கேல் ஆண்டர்சன் ஆல் இயக்கப்பட்டது. டேவிட் நிவென், கண்டின்பிலாஸ், ராபர்ட் நியூடன், ஷிர்லி மெக்லேயின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது. மார்ட்டி (திரைப்படம்) மார்ட்டி (Marty) 1955 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஹாரோல்ட் ஹெக்ட் ஆல் தயாரிக்கப்பட்டு டெல்பர்ட் மேன் ஆல் இயக்கப்பட்டது. எர்னெஸ்ட் பார்க்னின், பெட்சி பிளார், ஜோ மாந்தல், பிரான்க் சட்டன், கேரன் ஸ்டீல், எஸ்தர் மின்சியொட்டி, அகஸ்தா சியோலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது. ஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்) ஆல் த கிங்ஸ் மென் (All the King's Men) 1949 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் ராஸ்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ப்ரோடேரிக் கிராபோர்ட், ஜான் ஐயர்லாண்ட், ஜோயான் துரு,ஜான் டேரேக், மேர்செடிஸ் கேம்பிரிட்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது. ஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்) ஆன் த வாடர்பிரன்ட் (On the Waterfront) 1954 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா கசான் ஆல் இயக்கப்பட்டது. மார்லன் பிராண்டோ, ராட் ஸ்தீகர், லீ காப், இவா மரீ செயின்ட், கார்ல் மால்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது. பிரம் ஹியர் டு இடர்னிட்டி (திரைப்படம்) பிரம் ஹியர் டு இடர்னிட்டி (From Here to Eternity) 1953 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பட்டி அட்லர் ஆல் தயாரிக்கப்பட்டு பிரெட் சின்மேன் ஆல் இயக்கப்பட்டது. பர்ட் லண்காஸ்தர், மான்ட்கொமேரி கிளிப்ட், டெபோரா கேர், டான்னா ரீட், பிரான்க் சினாத்ரா, எர்னெஸ்ட் போர்ஜ்னின், பில்லிப் ஒபர், ஜாக் வார்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது. அல்பா குடியரசு (1944) அல்பா குடியரசு என்பது இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 முதல் நவம்பர் 2 வரையான காலப் பகுதியில் இத்தாலிய பாசிசத்துக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக வட இத்தாலியின் அல்பாவில் உருவான பிரிவினைக் குடியரசாகும். அதற்கு 1796 முதல் 1801 வரையிலிருந்த நெப்போலியனின் அல்பா குடியரசின் பெயரையே இடப்பட்டிருந்தது. த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (திரைப்படம்) த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (The Best Years of Our Lives) 1946 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாமுயேல் கோல்ட்வின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. பிரெடெரிக் மார்ச், மிர்ணா லாய், டானா அண்ட்ரூ, தெரேசா விரைட், வர்ஜினியா மேயோ, ஹாரோல்து ரஸ்ஸல் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது. பரேலி மாவட்டம் பரேலி மாவட்டம் (, )இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. பரேலி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 4120 கிமீ². மகாபாரதத்தின் படி பரேலி பகுதி (பாஞ்சாலா)பாஞ்சாலியின் எனப்படும் திரௌபதியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,465,344. இது தோராயமாக குரோவாசியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 39வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் பரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 23.4%.பரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் உள்ளனர். மேலும் பரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 60.52%. ஹாம்லெட் (திரைப்படம்) ஹாம்லெட் (Hamlet) 1948 இல் வெளியான பிரித்தானியத் திரைப்படமாகும். லாரன்ஸ் ஆலிவர் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. லாரன்ஸ் ஆலிவர், பேசில் சிட்னி, ஐலீன் ஹெர்லி, ஜீன் சிம்மன்ஸ், ஸ்டான்லி ஹொல்லோவே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது. மிசஸ் மினிவர் (திரைப்படம்) மிசஸ் மினிவர் (Mrs. Miniver) 1942 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பிராங்க்ளின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. கிரீயர் கார்சன், வால்டர் பிட்ஜியன், தெரேசா விரைட், டேம் மே விட்டி, ரெஜினால்ட் ஓவன், ஹென்றி திராவர்ஸ், ரிச்சர்ட் நே, ஹென்றி வில்கொன்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது. த லொஸ்ட் வீக்கென்ட் (திரைப்படம்) த லாஸ்ட் வீக்கென்ட் (The Lost Weekend) 1945 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சார்ல்ஸ் பிராக்கேட் ஆல் தயாரிக்கப்பட்டு பில்லி வில்டர் ஆல் இயக்கப்பட்டது. ரே மில்லன்ட் ஜேன் வைமேன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது. கோயிங் மை வே (திரைப்படம்) கோயிங் மை வே (Going My Way) 1944 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். லியோ மெக்கேரி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பிங் கிராஸ்பி, பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட், பிரான்க் மேக்ஹக், ஜேம்ஸ் பிரவுன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது. டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்) டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (Dances with Wolves) 1990 இல் வெளியான அமெரிக்க வரலாற்றுத் திரைப்படமாகும். ஜிம் வில்சன், கெவின் காஸ்ட்னர், ஜேக் எப்பர்ட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கெவின் காஸ்ட்னர் ஆல் இயக்கப்பட்டது. கெவின் காஸ்ட்னர், மேரி மெக்டோன்னல், கிரஹாம் கிரீன், ராட்னி கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து அகாதமி விருதுகளை வென்றது. த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்) த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (The Silence of the Lambs) 1991 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கேன்னேத் உட், எட்வர்ட் சாக்ஸ்சன், ரான் ரோஸ்மேன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோனதன் டேம் ஆல் இயக்கப்பட்டது. ஜோடி பாஸ்டர், அந்தோணி ஹாப்கின்ஸ், ஸ்காட் கிலன், டெட் லெவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது. தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் 2002ல் இந்தி மொழியில் வெளிவந்த பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இதற்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. பிரித்தானிய இந்தியாவில் மார்சு 23, 1931ல் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரை லாகூர் சிறையில் தூக்கிலிடுகின்றனர். காந்தியிடம் தங்களுக்கு அவர்களை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு வழியிருந்தும் ஏன் தூக்குத்தண்டனை ஒப்புதல் அளித்து காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று கேட்கிறார்கள். அவரை அங்கே சந்திக்கும் பகத்சிங்கின் தந்தையின் பார்வையில் பகத்சிங்கின் வரலாறு விரிகிறது. அதில் அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தது, காந்தி ஒத்துழையாமையை கைவிட்டவுடன் அவர் காந்தியை வெறுத்தது, அவரது கல்லூரி வாழ்க்கையில் சுக்தேவுடன் நட்பானது, இந்துசுத்தான் குடியரசு அமைப்பு இணைந்தது, சந்திரசேகர ஆசாத்துடன் அவரின் நட்பு, லாலா லசுபதி ராயுடன் சிமான் கமிசன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது, லாலாலசுபதி ராயை அடித்துக்கொன்ற சான்டர்சு என்ற பிரித்தானிய அதிகாரியை கொலை செய்தல், அதற்க்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தூக்கிலிடப்பட்டது போன்ற காட்சிகளுடன் படமாக்கி இருக்கின்றனர். மருத்துவப் படிமவியல் மருத்துவப் படிமவியல் "(Medical imaging)" என்பது மருத்துவமனை ஆய்வுக்காகவும் மருத்துவ இடையீட்டிற்காகவும் உடலகப் பகுதிகளையும் உடல் உறுப்புகள், இழையங்கள் (திசுக்கள்) ஆகியவற்றின் உடலியக்கங்களையும் காட்சி உருவகிப்புகளாகத் தரும் நுட்பமும் செயல்முறையும் ஆகும். மருத்துவப் படிமவியல் தோலாலும் எலும்புகளாலும் மறைந்துள்ள அக்க் கட்டமைப்புகளைக் காட்டுவதோடு, நோய் அறியவும் தை ஆற்றவும் உதவுகிறது. இப்புலம் இயல்பு உடற்கூற்று, உடலியக்கத் தரவுத்தளத்தை உருவாக்கவுமதவற்றில் அமையும் இயல்பிகந்த மாற்றங்களை இனங்காட்டவும் உதவுகிறது. மருத்துவக் காரணங்களுக்காக நீக்கப்பட்ட உறுப்புகள், இழையங்கள் ஆகியவ்ற்றின் படிமங்களும் எடுக்கப்படுகின்றன,னைச்செயல்முறைகள் நோயியலின் பகுதியாகவே கருதப்படும். இது மருத்துவப் படிமவியலின் பணியல்ல. மருத்துவப் படிமவியல் உயிரியல் படிமவியலின் ஒரு புலமாகும். இது கதிரியல் (இதில் X-கதிர் வரைவியல் காந்த ஒத்திசைவுப் படிமவியல், மருத்துவப் புறவொலி வரைவியல் ஆகியன அடங்கும்) அகநோக்கியல், மீண்மைவரைவியல், தொடுகை வரைவியல், வெப்ப வரைவியல், மருத்துவ ஒளிப்படவியல், அணுக்கரு மருத்துவம் ஆகியனவும் நேர்மின்னன் உமிழ்வுத் பிரித்துவரைவியல் (positron emission tomography)(PET) தனி ஒளியன் உமிழ்வு கணிப்புத் பிரித்துவரைவியல் (Single-photon emission computed tomography( (SPECT) ஆகிய உடலியக்க ஆய்வு நுட்பங்களும் உள்ளடங்கும். படிமம் உருவாக்காத ஆனால் தரவுகளை வரைபடமாகத் தரவல்ல அளவுக்கருவிகளும் பதிவுத் தொழில்நுட்பங்களும், மின்மூளை வரைவியல், காந்த மூளை வரைவிய்ல், இதய மின்துடிப்புப் பதிவியல் போன்றவையும் மருத்துவப் படிமவியலின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன. உலகளவில் 2010 ஆண்டு வரை 5 பில்லியன் மருத்துவப் படிம ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 2006ஆம் ஆண்டில் மொத்த கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தியமையில் 50%க்கும் கூடுதலாக மருத்துவ படிமவியலால் ஆட்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிமவியல் ஊடுருவாதன எனக் கருதப்படும் நுட்பங்களால் உடலின் உட்கூறுபாடுகளைப் படிம மாக்குவதாக்க் கொள்ளப்படுகிறது. இந்தக் குறுகிய நோக்கில், மருத்துவப் படிமவியலைக் கணிதவியல் தலைக்கீழ் சிக்கல்களோடு ஒப்பிடலாம்மதாவது, காரணத்தை ஈழையங்களின் இயல்புகளை) விளிவில் இருந்து (நோக்கிய குறிகையில் இருந்து) உய்த்தறிகிறோம். மருத்துவ புறவொலி வரைவியலில், உள்ளிழையத்தில் ஆய்கோல் அனுப்பிப் பெறும் புறவொலி அழுத்த அலைகளையும் எதிரொலிகளையும் சார்ந்து உட்கட்டமைப்பைக் காட்டுகிறது. உட்செலுத்து கதிர்வரைவியலில், ஆய்கோல் X-கதிர். மின்காந்தக் கதிர் ஆகியவற்றை அனுப்பி, அக்கதிரை எலும்பு, தசை, கொழுப்புசார் இழையங்களின் உறிஞ்சளவுகளால் அகக் கட்டமைப்பை வரைகிறது. ஊடுருவாத எனும் சொல் உடலுக்குள் கருவி ஏதும் உள்நுழைக்காத செயல்முறைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. எனவே படிமவியல் நுட்பங்கள் அனைத்தும் ஒருவகையில் ஊடுருவாத வகையினவே. மருத்துவ மனைச் சூழலில், "கட்புலப்படாத ஒளி" சார்ந்த மருத்துவப் படிமவியல் பொதுவாக கதிரியலுக்குச் சம மாக்க் கருதப்படுகிறது அல்லது "மருத்துவ நோயறி படிமவியல் எனப்படுகிறது, கதிரியலாளர் இவ்வகைப் படிமங்களைப் பெற்று விளக்கும் பொறுப்பை ஏற்கிறர். "கட்புல ஒளி" மருத்துவப் படிமவியல் இலக்கவியல் ஒலிஒளிக் காணியையோ இயல்பு ஒளிப்படக் கருவியையோ பயன்படுத்துகிறது. தோலியலும் காயவியலும் கட்புல ஒளிப் படிமவியலைப் பயன்படுத்துகின்றன. நோய்நாடல் கதிர்வரைவியல் மருத்துவப் படிமவியலின் தொழில்நுட்பக் கூறுபாடுகளை, குறிப்பாக, நோய்நாடல்தர மருத்துவப் படிமங்களை பெறுகிறது. "கதிர்வரைவால்ர்'ரல்லது "கதியியல் தொழில்நுட்பர்" வழக்கமாக நோய்நாடல்தர மருத்துவப் படிமங்களைப் பெறும் பொறுப்பை ஏற்கிறார்; என்றாலும் சில கதிரியல் இடையீட்டுப் பணிகலை கதிரியலாளர்கள் செய்வதுண்டு. சூழலைப் பொறுத்து அறிவியல்முறைப் புலனாய்வில், மருத்துவப் படிகமவியல் உயிர்மருத்துவப் பொறியியலின் துணைப் புலமாகவோ, மருத்துவ இயற்பியலின் துணைப் புலமாகவோ மருத்துவத்தின் துணைப் பொலமகவோ கொள்ளப்படுகிறது: கருவியியல், படிமம் பெறல், கணிதவியல் படிமங்கள், அளவுகாணல் சார்ந்த ஆராய்ச்சியும் உருவாக்கமும் உயிர்மருத்துவப் பொறியியல், மருத்துவ இயற்பியல், கணினியியல் ஆகிய புலங்களின் பணிகளாக அமைகின்றன; மருத்துவப் படிமங்களை விளக்குதலும் பயன்படுத்தலும் பற்ரிய ஆராய்ச்சி கதிரியலின் பணியாகவும் நரம்பியல், இத்யவியல், உளநோயியல் போன்ற மருத்துவ நிலைமையைச் சார்ந்த மருத்துவயத் துணைப் புலத்தின் பணியாகவும் அமையும். மருத்துவப் படிமவியலில் உருவாகும் பல நுட்பங்கள் பொதுவான அறிவியல், தொழிலகப் பயன்பாடுகளுக்கும் பயன்படுகின்றன. மருத்துவப் படிமவியலில் இருவகை கதிர்வரைவியல் படிமங்கள் பயன்படுகின்றன.னாவை, வீச்சுமுறை கதிர்வரைவியல், தன்னொளிர்வு நோக்கியல் என்பனவாகும்.பின்னது குழற்செருகி வழிகாட்டலுக்குப் பயன்படுகிறது. இந்த இருபருமான நுட்பங்கள் அவற்றின் குறைந்த விலை, உயர் பிரிதிறன், குறைவான கதிர்வீச்சு ஆட்படுகை ஆகியவற்றினால் முப்பருமானப் பிரித்துவரைவியல் அலகீடு உருவாகிய பின்னரும் பரவலான பயன்பாட்டில் உள்ளன. படிமத்தைப் பெற, இந்தப் படிமவியல் அகற்கற்றை எக்சுக் கதிர்களைப் பயன்படுத்துகிறது. மேலும், புத்தியல் மருத்துவத்தில் இதுவே முதன்முதலில் உருவாகிய படிம நுட்பம் ஆகும். காந்த ஒத்திசைவு படிமவியல் கருவி (காஒப அலகிடுவான்), அல்லது "அணுக்கருக் காந்த ஒத்திசைவு(அகாஒ) படிமவியல் அலகிடுவான் (இப்படித் தான் இக்கருவி முதலில் அழைக்கப்பட்டது) மாந்த உடலின் இழைய நீர் மூலக்கூற்றில் உள்ள நீரக அணுக்கருவை அதாவது நீரின் தனி முதன்மிகளைக் கிளரச் செய்து ஒத்திசைய வைக்க வலிமை வாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. இக்காந்தங்கள் தம் புலத்தால் வெளியிடையே உருவாகும் குறிமுறை வழியாக உடலின் படிமங்களைத் தரும் குறிகையை உருவாக்குகிறது. இந்த அலகிடுவான் வானொலி அலைவெண் துடிப்பை நீர் மூலக்கூறுகளில் உள்ள நீரக அணுக்களின் ஒத்திசைவு அலைவெண்ணில் வெளியேற்றுகிறது . வானொலி அலைவெண் அலைவாங்கிகள் இத்துடிப்பை குறிப்பிட்ட உடலின் பகுதிக்கு அனுப்புகிறது. இத்துடிப்பை முதன்மிகள் உறிஞ்சுகின்றன, உறிஞ்சியதும் அவை தம் திசையை முதன்மை காந்தப் புலத் திசஐக்கு மாற்றிக் கொள்கின்றனறீந்த வானொலித் துடிப்புகளை அனுப்புதலை நிறுத்தியதும், முதன்மிகள் முதன்மைக் காந்த்த் திசைவைப்பில் ஓய்வுகொள்கின்றன. அவை இச்செயல்முறையின்போது வானொலி அலைவெண்களை வெளியிடுகின்றன. இந்த நிரில் உள்ள நீரக அணுக்கள் வெளியிடும் வானொலி அலைவெண் உமிழ்வு கருவியால் பெறப்பட்டு படிம மாக மீளாக்கம் செய்யப்படுகின்றன. ஜார்ஜ் ஜோசப் ரோசாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப் (George Joseph, சியார்ச்சு சோசப்பு 5 சூன் 1887 – 5 மார்ச்சு 1938) கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர் ; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர். 1887ம் ஆண்டு கேரளாவின் திருவாங்கூர் பகுதியின் செங்கானூரில் சிரியன் மரபுவழிக் கிறித்தவப் பிரிவில் (ஆர்த்தடாக்சு) பிறந்தவர் பின்னர் கத்தோலிக்க கிறித்தவ சபைக்கு மாறினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளத்திற்கு திரும்பியபோது ஆங்கிலேய அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில் தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி அந்தப் பதவிகளை ஏற்க மறுத்தார். அவரின் திருமணமும் ஆங்கில அரசில் உயர்பதவி வகித்த குடும்பத்தில் நடந்தேறியது. அப்போதும் அவர் ஆங்கிலேயர் தந்த பதவிகளை ஏற்க மறுத்தார். கிறித்தவராகப் பிறந்தாலும் காந்தியின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர். தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். பின்னர் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடலாம் எனத் தமிழகத்திற்கு வந்தவருக்குச் சென்னை போதிய ஒத்துழைப்பைத் தராத நிலையில் மதுரையில் தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கத் திட்டமிட்டு 1909 -இல் மதுரையில் குடியேறினார். மதுரையில் நடைபெற்ற பல வழக்குகளின் போது குறுக்கு விசாரணைகளில் சிறந்து விளங்கினார். 1918களில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரைக் குறிவைத்து ஆங்கிலேயர் குற்றப்பரம்பரைச் சட்டத்தைச் செயல்படுத்தி அம்மக்களை கொடுமைப் படுத்தி வந்தனர். வழக்கின் கொடுமைகளைச் சம்பந்தப்பட்டவர்களே சரிவர உணரமுடியாத காலத்தில் ஜார்ஜ் ஜோசப் எதிர்ப்பு தெரிவித்து பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டார். எப்போதும் தனது சட்டையில் ரோசாப்பூவை ஜார்ஜ் இடம்பெறச் செய்திருந்த நிலையில் கள்ளர் சமூக மக்கள் அவரை ரோசாப்பூதுரை என்று செல்லமாக அழைத்து வந்துள்ளனர். பின்னாளில் இவரைப் பார்த்தே ஜவஹர்லால் நேரு சட்டையில் ரோசாப்பூவைச் சேர்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். 1918ஆம் ஆண்டில் சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை கொண்டதால் மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன் பல வழக்கினையும் நடத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்கினை எதிர்த்து வாதாடி வெற்றிபெற்றார். அந்நாளில், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைக் காண அதிகளவில் தொழிலாளர்கள் கூடிய நிலையில் காவலர்கள் கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி 2 தொழிலாளர்களைத் துப்பாக்கி சூட்டின் மூலம் கொன்றனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரைத் தலைமை ஏற்று நடத்து முன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாகச் சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்ற மூன்று பேர் உறுப்பினர்கள் சேலம் பி.வி.நரசிம்மையர், மாஞ்சேரி ராமையா, மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோராவர். இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டுக் கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது. ஜார்ஜ் மதுரையிலிருந்து கொண்டே கேரளத்தில் நடைபெற்ற பல போராட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தினார். பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில் இந்திய விடுதலைப் போராட்டக்களத்திலும் இறங்கினார். பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோரின் ஹோம்ரூல் இயக்கத்தில் மாணவர்கள் சேரக் கூடாது என்று ஆங்கில அரசு சட்டம் இயற்றியபோது துணிச்சலுடன் அதை எதிர்த்துப் போராடினார். அப்போது தான் சுயநிர்ணயக் கொள்கையில் இந்தியாவின் கருத்தைத் தெரிவிக்கும் ஹோம்ரூல் இயக்கத்தின் குழுவில் இடம்பெறுமளவிற்கு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த இடத்திற்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்துகொண்டிருந்த தனது வழக்குரைஞர் தொழிலை உதறித் தள்ளினார். ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். கேரளம், தமிழ்நாடு என இருமாநிலங்களின் போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நிலையில் தான், காந்தியின் நட்பும், தோழமையும் ஜார்ஜ் ஜோசப்புக்குக் கிட்டியது. 1919 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ரௌலட் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தமிழில் வ. உ. சி யும், தெலுங்கில் ஹரிலோத்தமராவும் பேச, ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஜோசப் பேசினார். 1920 களில் கிலாபத் இயக்கத்தில் இந்தியா முழுதும் சிறுபான்மைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்து, மிகப்பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டினார். மோதிலால் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜார்ஜ்ஜோசப் மோதிலாலின் மூத்தமகள் விஜயலட்சுமி - சையத் உசேன் காதல் விவகாரத்தில் தலையிட்டுச் சமாதானப்படுத்தும் அளவுக்கு மோதிலாலின் குடும்பத்தினருடன் நல்ல உறவில் இருந்தார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து "தி இண்டிபென்டன்ட்" எனும் பெயரில் ஒரு இதழ் நடத்தினார். அதற்கு ஜார்ஜ் ஜோசப் சில காலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவரிடம் மன்னிப்புக் கேட்குமாறு கூறப்பட்டது. தான் எழுதிய கட்டுரைக்காக மன்னிப்பு கேட்க மறுத்ததால் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு 18 மாதம் சிறை தண்டனையையும் அனுபவித்தார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்களில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார். அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர். மேலும் தி சவுத் இந்தியன் மெயில், சத்தியார் கிரதி என்ற கையெழுத்து இதழ் , தேசபக்தன் போன்ற பல சுதந்திர போராட்ட கால இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்தார். சீரிய புரட்சிக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை. எந்த ஒரு கருத்தினையும் துணிச்சலுடன் தெரிவிப்பவராக இருந்ததனால் பல நேரங்களிலும் எதிர்க் கருத்து கொண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளார். ஒரு முறை காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகியபோது காந்தி வருந்திக் கடிதம் எழுதியுள்ளார். ஜவஹர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு நிலை மற்றும் விதிகளை உருவாக்கிட அமைக்கப்பட்ட பல குழுக்களிலும் இடம்பெற்றார். 1929ல் மதுரை நகர சபைத் தேர்தலில் ஜார்ஜ் ஜோசப் போட்டியிட்டபோது உள்ளுர் காங்கிரசுக்காரர்களே இவரைத் தோற்கடித்த வரலாறும் உண்டு. காந்தி அந்நியப் பொருட்களை வாங்கக் கூடாது என்றபோது அதில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்த ஜார்ஜ், கதர்த் துணி வாங்க அதிக செலவாகும், அதனால் உள்ளுர்த் தயாரிப்பான காக்கியை வாங்கலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி எப்போது மதுரை வந்தாலும் இவரது வீட்டிலேயே தங்கினார். காங்கிரசை விட்டு ஜோசப் விலகியிருந்த நிலையிலும் மதுரை வந்த காந்தி இவரது வீட்டில் தான் ஓய்வெடுத்தார். குறிப்பாகக் காந்தி அரை நிர்வாண ஆடைக்கு மாறியபோது அருகிலிருந்து ஏழை மக்களின் நிலையையும் இவரே எடுத்துரைத்தார். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டபோது "நீங்கள் நிச்சயமாகச் சத்தியாகிரகத்தில் ஈடுபடக் கூடாது, இயக்கத்தை உருவாக்கக் கூடாது, பேனா மூலம் மட்டுமே அனுதாபத்தை வெளிக்காட்ட வேண்டும்" என்று ஜோசப்பிற்கு காந்தி கடிதம் எழுதினார். ஆனால் ஜார்ஜ்ஜோசப் "தீண்டாமை என்பது மதத்தின் உள்பிரச்சனை அல்ல, அரசியல் உரிமைக்கான மறுப்பு" என்று கூறி தொடர்ந்து போராடினார். 1932 இல் யங் இந்தியாவில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார்..."கோயில் நுழைவு என்பது மத உரிமை ஆகையால் இதில் வேறு யாரும் (மற்ற மதக்காரர்கள்) நுழைவது சத்தியாகிரகம் என்று சொல்ல முடியாது. வைக்கம் சத்தியாகிரக காலத்தில், ஜார்ஜ் ஜோசப் சிறைக்கு சென்ற பொழுது, அவர் செய்தது தவறு என்று சொல்லியனுப்பினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு, உடனே மன்னிப்புக்கோரி, வெளியே வந்தார். கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது ஜாதி இந்துக்களுக்கு ஒரு தபசு போன்றது" அதற்கு ஜார்ஜ் ஜோசப் பின்வருமாறு பதில் எழுதினார்,அவரின் பதில் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer என்ற பத்திரிகையில் பிரசுரம் ஆனது. "வைக்கம் சத்தியாகிரகத்திற்கும் கோயில் நுழைவிற்கும் சம்பந்தம் கிடையாது. பொதுப் பணத்தால் நிர்வகிக்கக்கூடிய ஒரு பொதுத்தெருவில் 'தீண்டத்தகாத' மக்கள் நடப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்பதே பிரச்சினை. அந்தத் தெரு கோயிலுக்கு அருகாமையில் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை, இதை திரும்பத் திரும்ப நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். நாங்கள் போராடியது குடியுரிமைக்கு மட்டுமே!போராட்டம் நீண்ட காலம் நடந்தது, இறுதி வெற்றி தீண்டத்தகாதவர்களுக்கு கிடைத்தது. நான் ஒரு கிறித்துவன் என்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று காந்தியார் சொன்னது உண்மை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லியனுப்பியதும் உண்மை, ஆனால் நான் மன்னிப்பு கேட்கவில்லை" எனத் தனது கருத்தை வெளியிட்டார். 1937ம் ஆண்டு ஜார்ஜ் ஜோசப் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் காப்பீட்டுச் சட்டம், முஸ்லீம் சரியத் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களின் மீது அதிகளவில் விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட இவரை அப்போதைய சென்னை மாகாணச சட்ட சபை உறுப்பினராகத் திருவரங்கம் தொகுதி (காங்கிரசு) சட்ட மன்ற உறுப்பினர்.கே.வி. ரங்கசாமி அய்யங்கார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதுடன் ராஜாஜி, பெரியார், வ. உ. சிதம்பரம்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார், என். எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட 12 தமிழ்ப் பெரியார்களின் வரிசையில் ஜார்ஜ்ஜோசப்புக்கும் இடம் அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார் பல்வேறு புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரரான விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப்பின், தியாகமும், வீரமும் மறைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரே இவரது வளர்ச்சியையும், உண்மையையும் விரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தீவிர அரசியல் பணியில் இருந்து விலகிக் கிறித்தவத்தில் தனது கவனத்தைச் செலுத்திய நிலையில் இந்திய விடுதலையைக் காணாது 1938-ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார். மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோசாப்பூதுரைக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார். ஜார்ஜ் ஜோசப் பிறந்தநாள், நினைவுதினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழ்நாடு சிறுபான்மைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2018 ஜூன் 9-ஆம் தேதி மதுரைக்கு வந்திருந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் முன்னாள் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். எதிரொலிமுறைத் தூரமறிதல் எதிரொலிமுறைத் தூரமறிதல் (Echo sounding) என்பது, ஒலித் துடிப்புகளைப் பயன்படுத்தி கடலின் ஆழம் அறியும் ஒரு நுட்ப முறையைக் குறிக்கும். ஒலித் துடிப்புக்கள் புறப்படுவதில் இருந்து கடலின் அடியில் தெறித்து மீண்டும் தொடங்கிய இடத்தை அடைவதற்கான நேரம் பதிவு செய்யப்படும். கடல் நீரில் ஒலியின் வேகம் தெரிந்ததே. எனவே அவ்வேகத்தையும், ஒலி தெறித்து மீண்டுவர எடுக்கும் நேரத்தையும் பயன்படுத்திக் கடலின் ஆழத்தைக் கணிக்க முடியும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் கப்பலோட்டுதல், வரைபடங்கள் தயாரித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுகின்றன. இதே முறையை மீன்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான நீரொலியியல் கணிப்பீடுகளைச் செய்வதற்கு படகுகளிலிருந்து நகரும் அளவைமுறை மூலம் மீன் உயிர்த்திரள் இருக்கும் இடங்களைக் கண்டறிவதுடன், அவற்றின் பரம்பலையும் மதிப்பிடுவர். எதிரொலிமானிகளை நிலையாக ஓரிடத்தில் வைத்து அவ்வழியாகச் செல்லும் மீன்களைக் கண்காணித்து ஆய்வு செய்வதும் உண்டு. ஒலித்துடிப்புக்கள் புறப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே ஒலி திரும்பிவர எடுக்கும் நேரத்தின் அரைப்பங்கை நீரில் ஒலியின் வேகத்தினால் பெருக்கும்போது தூரம் அல்லது ஆழம் கிடைக்கும். நீரில் ஒலியின் வேகம் அண்ணளவாக ஒரு செக்கனுக்கு 1,5 கிலோமீட்டர்கள். இம்முறை மூலம் அச்சொட்டாகத் தூரத்தை அளக்கவேண்டின், நீரில் ஒலியின் வேகத்தையும் அவ்விடத்தில் அளந்து பெறுவர். மீட்டர் அளவை முறை பயன்பாட்டுக்கு வரமுன்னர் கடலின் ஆழம் ஃபாதம் என்னும் அலகில் குறிப்பிடப்பட்டது. இதனால் கடலின் ஆழத்தை அழப்பதற்கான கருவியை ஃபாதமானி எனவும் அழைப்பது உண்டு. தில்லை (மலர்) தில்லை என்பது ஒரு மரம். நரந்தம் நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறூகாயாக செய்து சாப்பிடுகின்றனர். இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. சிட்டு சிட்டு என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: வீற்றிருக்கும் எருது வீற்றிருக்கும் எருது ("Sitting Bull", சிட்டிங் புல்) என்பது 19ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய புகழ்மிக்க அமெரிக்க-இந்தியத் தலைவரின் பெயர் ஆகும். இவர் சுமார் 1831இல் பிறந்தார். 1890, திசம்பர் 15ஆம் நாள் இறந்தார். "வீற்றிருக்கும் எருது" என்னும் பெயர் அமெரிக்க-இந்திய மொழியாகிய "லக்கோட்டா"வில் "Tȟatȟáŋka Íyotake" என்று எழுதப்படும். அவருக்கு "Slon-he" ("மெதுவாகச் செல்பவர்") என்றொரு பட்டப்பெயரும் இருந்தது. அவர் அமெரிக்க-இந்திய இனமாகிய லக்கோட்டா சீயூ குலத்தின் கங்க்பாப்பா பிரிவைச் சார்ந்த சமய-அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தார். வீற்றிருக்கும் எருது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் டக்கோட்டா மாகாணத்தில் பேராறு என்றழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். அவர் ஐக்கிய அமெரிக்க கொள்கைகளை எதிர்த்த "ஆவி நடனம்" (Ghost Dance) என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று பயந்து, அவரைக் கைதுசெய்யப் போனவிடத்தில், "அமெரிக்க-இந்திய காவல் துறை"யினர் அவரை "நிலைக்கல் இந்தியக் காப்பிடம்" என்னும் பகுதியில் சுட்டுக் கொன்றனர். வீற்றிருக்கும் எருது டகோடா எல்லைக்குள் பிறந்தவராவார். 2007இல் வீற்றிருக்கும் எருதுவின் பெயரன் அவர்களின் குடும்பத்தில் செவிவழிச்செய்தியாக வீற்றிருக்கும் எருது யெல்லோ ஸ்டோன் ஆறுக்கருகே பிறந்தார் என்றார். He was named Jumping Badger at birth. இவரின் குல மரபுப்படி இவரின் தந்தையின் பெயர்களுல் ஒன்றான "வீற்றிருக்கும் எருது" என்னும் பொருள்படும் "Tȟatȟaŋka Iyotȟaŋka" என்னும் பெயர் அளிக்கப்பட்டது. 1862ஆம் ஆண்டு நடைபெற்ற டகோடா போரில் இவரின் குலத்தினர் பங்கேற்கவில்லை. ஆயினும் இப்போரில் கிழக்கு டகோடாவில் இருந்த பல பழங்குடியினர்களும் மைய தெற்கு மினசோட்டாவில் இருந்த போர்வீரர்களுமாக மொத்தம் 300 முதல் 800 வரை கொல்லப்பட்டிருக்கலாம். இப்போரானது அரசு பழங்குடியினரை நடத்தும் விதத்திற்கு எதிராகவும் அவ்விடத்தை விட்டு வெள்ளையர்களை ஓட்டும் முயற்சியாகவும் இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போர் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையுடனும் போரில் இருந்ததோதும் அமெரிக்க அரசு 1863இலும் 1864இலும் இப்போரில் ஈடுபடா இனக்குழுக்களின் மீதும் கூட அமெரிக்க அரசு பதில் தாக்குதல் நடத்தியது. 1864இல், தலபதி ஆல்ஃபிரட் சுல்லியின் 2200 வீரர்களைக்கொண்ட இரண்டு படை பிரிவுகள் இவரின் கிராமத்தை தாக்கினர். இப்படையினருக்கு எதிராக வீற்றிருக்கும் எருது, கால் மற்றும் இன்காபுதுத்தா ஆகியோர் இருந்தனர். இவர்கள் இப்போரில் தோற்கடிக்கப்படு அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் ஆகஸ்ட் வரை பாடைப்பிரிவினர் அங்கேயே தொடர்ந்தது நிலைகொண்டிருந்தனர். செப்டம்பர் மாதத்தில், வீற்றிருக்கும் எருது 100 அன்குபாபா பழங்குடியினரோடு இப்போது மார்மத், வடக்கு டகோடா அருகே தலபதி ஜேம்ஸ் ஃபிஸ்கை எதிர்கொன்டார். இப்போரின்போது வீற்றிருக்கும் எருது சுடப்பட்டாலும் உயிர்தப்பினார். அவரின் இடுப்பில் குண்டடிப்பட்டது. 1883இல் இவர் கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார் என செய்திகள் பரவின. ஆயினும் அவ்விடத்தில் இருந்த ஜேம்ஸ் மெக்லாக்லின் என்னும் இந்திய இடைத்தரகர் இதனை வதந்தி மறுத்துள்ளார். ஆயினும் 1883க்குப்பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வீற்றிருக்கும் எருது கழுத்தில் கத்தோலிக்க சிலுவையுடன் காட்சியளிக்கின்றார். இயேசுவின் உடலோடு வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய சிலுவைகளை கத்தோலிக்கரும் மரபுவழித்திருச்சபையினரும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும் மரபு வழி சபைகள் அமெரிக்காவில் அன்நாட்களில் கால்பதிக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது. 1890ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்லாகின் லகோடா தலைவரை கைது செய்ய எண்ணினார். பேய் நடனம் இயக்கதினரோடு அவர் சேரப்போகின்றார் என அஞ்சியதே இதற்கு காரணம். முன் கூட்டி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி டிசம்பர் 15ஆம் நாள் காலை ஐந்து மணியளவில் வீற்றிருக்கும் எருதுவின் வீட்டினை உடைத்து அவரையும் புல்ஹெடையும் கைது செய்தனர். இதனால் அவர்களின் குழுவினரோடு நடந்த சில நிமிட சண்டையில் 6 காவலாளிகள் உட்பட பலர் இறந்தனர். வீற்றிருக்கும் எருது தலையினும் மார்பிலும் சுடப்பட்டு இறந்தார். மதியம் 12 முதல் 1க்குல் இவர் இறந்திருக்கக்கூடும். இவரின் உடல் ஃபோர்ட் ஏட்சுவில் இரானுவத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது 1953இல் இவரின் குடும்பத்தினர் இவரின் உடலை இவரின் பிறந்த ஊரில் அடக்கம் செய்தனர். துடரி துடரி ("Ziziphus rugosa") அல்லது "காட்டு இலந்தை" என்பது இலந்தையினத் தாவரமொன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்துக்கு மேற்பட்ட மலைப் பகுதிகளிலேயே வளர்கிறது. இத்தாவரம் சீனா (ஹைனான், யுன்னான்), இந்தியா, இலங்கை, பர்மா, லாவோசு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. லாவோசு நாட்டில் இதன் பட்டையும் கட்டையும் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சாண்டோக்கான் சாண்டோக்கான் ("Sandokan ") என்பவர் இத்தாலியப் படைப்பாளர் "எமீலியோ சால்கரி" 1883இல் வெளியிட்ட ஒரு புதினத்தில் வருகின்ற கடற்கொள்ளைக்காரர் ஆவார். சாண்டோக்கான் பதினொரு சாதனைப் புதினங்களில் முதன்மைக் குணச்சித்திரமாகத் தோன்றுகிறார். தெற்குச் சீனக் கடல் பகுதிகளில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் "மலேசியப் புலி" என்பதாகும். இத்தாலியப் படைப்பாளராகிய எமீலியோ சால்கரி என்பவர் பல புதினங்கள் எழுதியுள்ளார். அப்புதினங்களில் அவர் அறிமுகப்படுத்திய தலைசிறந்த இரு குணச்சித்திரங்கள் "சாண்டோக்கான்", "யானெசு" என்போர். இந்த இருவரும் கடற்கொள்ளைக்காரர்கள் ஆவர். சால்கரியின் "மோம்ப்ராசெம் புலிகள்" ("The Tigers of Mompracem") என்னும் புதினத்தில் மேற்கூறிய இரு கடற்கொள்ளைக்காரர்களும் நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய கப்பற்படையினரை இடையறாது தாக்குகின்றனர். நெதர்லாந்தியரும் பிரித்தானியரும் அவர்களை அழித்தொழிக்க வழிதேடுகின்றனர். பின்னர் வெளியான புதினங்களில் சாண்டோக்கானும் யானெசும் சாரவாக அரசராகிய சேம்சு புரூக் என்பவரை எதிர்த்துப் போராடுகின்றனர். பின்னர் இருவரும் இந்தியாவுக்குப் பயணமாகி, அங்கே காளியை வழிபடுகின்ற வழிப்பறிக்கொள்ளைக்காரர்களாகிய தக்கர்களோடு மோதுகின்றனர். இறுதியாகக் குறிப்பிட்ட இரு நூல்களும் சால்கரியின் மறைவுக்குப் பின் வெளியாயின. சாண்டோக்கானின் சாதனைகளை விவரிக்கின்ற பிற புதினங்கள் இத்தாலிய படைப்பாளர்களாகிய லூயிஜி மோட்டா, எமீலியோ ஃபான்செல்லி, மற்றும் சால்கரியின் மகன் ஓமார் என்பவர்களால் வெளியிடப்பட்டுள்ளன. 1960களில் அமெரிக்க நடிகர்கள் நடித்த பல சாண்டோக்கான் படங்கள் இத்தாலியில் உருவாக்கப்பட்டு, பன்னாட்டு வெளியீடுகளாக வழங்கப்பட்டன. முதல் படத்திலும் மூன்றாவது படத்திலும் சாண்டோக்கானாக ஸ்டீவ் ரீவ்சு (Steve Reeves) நடித்தார். இரண்டாவது படத்திலும் நான்காம் படத்திலும் ரே டாண்டன் (Ray Danton) நடித்தார். 1976இல் இந்தியத் திரைப்பட நடிகர் கபீர் பேதி சாண்டோக்கானாக நடித்த ஆறு பகுதி தொலைக்காட்சித் தொடர் வெளியானது. அது ஐரோப்பிய தொலைக்காட்சிக்காக "செர்ஜியோ சொல்லீமா" என்ற இயக்குநரால் உருவாக்கப்பட்டது. தொலக்காட்சித் தொடரில் கீழ்வரும் பகுதிகள் ஒளிபரப்பாயின: செருமானிய மீளிணைவு செருமானிய மீளிணைவு (); (ஆங்:German reunification) என்பது 1990இல் செருமானிய மக்கள் குடியரசு (கிழக்கு செருமனி) செருமனி கூட்டாட்சிக் குடியரசோடு (மேற்கு செருமனி) இணைந்ததையும், பெர்லின் நகரம் ஒரே நகரமாக மீண்டும் இணைந்ததையும் குறிக்கின்ற நிகழ்ச்சி ஆகும். இந்த மீளிணைவுச் செயல்பாட்டின் தொடக்கத்தை செருமானியர் "திருப்புமுனை" () (ஆங்:The Turning Point) என்று அழைக்கின்றனர். அதன் இறுதி விளைவை "செருமானிய ஒற்றுமை" () (ஆங்:German unity) என்று கூறி, அதை அக்டோபர் 3ஆம் நாள் கொண்டாடுகின்றனர். அங்கேரியின் எல்லை வேலிகள் நீக்கப்பட்டு இரும்புத் திரையில் துளை விழுந்த மே 1989இல் கிழக்கு செருமனியின் ஆட்சி ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான கிழக்கு செருமானியர்கள் அங்கேரி வழியாக ஆத்திரியாவிற்கும் மேற்கு செருமனிக்கும் இடம் பெயரத் தொடங்கினர். கிழக்கு செருமானியர்களின் தொடர்ந்த போராட்டங்கள், அமைதியான புரட்சி, மார்ச்சு 18, 1990இல் கிழக்கு செருமனியில் முதன்முறையாக பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு/மேற்கு செருமனிகளுக்கிடையே ஏற்பட்ட உரையாடல்களின் பயனாக "ஒன்றிணைப்பு ஒப்பந்தமும்" இரு செருமனிகளுக்கும் அவற்றை ஆக்கிரமித்திருந்த நான்கு அரசுகளுக்குமிடையே "இரண்டுடன் நான்கு ஒப்பந்தமும்" கையொப்பமாயின. இவை ஒன்றிணைந்த செருமனிக்கு முழு இறையாண்மையை வழங்கின. ஒன்றிணைந்த செருமனி ஐரோப்பிய சமூகத்திலும் (பின்னர் ஐரோப்பிய ஒன்றியம்) நேட்டோவிலும் உறுப்பினராக தொடர்ந்தது. 1990இல் செருமனி ஒன்றுபடுதல் குறித்த நிகழ்வுகளை "மீளிணைவு" (reunification) என்று அழைப்பதா "ஒன்றிணைவு" (unification) என்று அழைப்பதா என்பதைப் பற்றி விவாதம் உள்ளது. "மீளிணைவு" என்று அழைப்பதே சரி என்போர் பின்வருமாறு கூறுகின்றனர்: பல பகுதிகளாகச் சிதறிக்கிடந்த செருமனி ஏற்கெனவே 1871இல் "ஒன்றிணைந்தது". மேலும், 1957, சனவரி முதல் நாள் சார்லாந்து பிரதேசம் மேற்கு செருமனியோடு சேர்ந்தபோது, அது "சிறு ஒன்றிணைவு" என்று அழைக்கப்பட்டது. மக்கள் வழக்கில், "மீளிணைவு" என்பதற்கு பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த சுவர் தகர்க்கப்பட்டதும், 1945லிருந்து பிளவுபட்டிருந்த அந்த நகர் ஒன்றாக இணைக்கப்பட்டதும் முக்கிய காரணிகள் ஆயின. மறுதரப்பினரின் வாதம் இது: செருமனி நாட்டு வரலாற்றில் இதுவரையிலும் இந்த அளவிலான "ஒன்றிணைவு" நிகழ்ந்தது கிடையாது. ஆக, 1990இல் நிகழ்ந்த ஒன்றிப்பு நிகழ்வை "ஒன்றிணைவு" என அழைப்பதே பொருத்தம். மேற்கு மற்றும் கிழக்கு செருமனி இணைந்ததை செருமன் மக்கள் "திருப்புமுனை" (die Wende = The Turning Point) என்கின்றனர். இணைப்புக்கான முயற்சிகள் நடந்த காலக்கட்டத்தில், அரசியல் மற்றும் அரசு உறவுக் காரணங்களுக்காக மேற்கு செருமனி நாட்டு அரசியல்வாதிகள் "மீளிணைவு" என்ற சொல்லை மிகுந்த கவனத்தோடு தவிர்த்துவந்தார்கள். மாறாக, "செருமன் ஒற்றுமை" (German unity) என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தினர். 1990இல் பன்னாட்டு செய்தியாளர்கள் "செருமனி மீளிணைவு" பற்றிக் கேள்வி கேட்ட போது பதிலளிக்கையில் மேற்கு செருமனியின் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமாக இருந்த கான்சு டீட்ரிச் கென்ஷெர் "செருமன் ஒற்றுமை" பற்றியே குறிப்பிட்டார். 1990க்குப் பிறகு, "திருப்புமுனை" என்னும் சொல் மக்களிடையே புழக்கத்தில் வந்தது. இச்சொல், மேற்கு செருமனியும் கிழக்கு செருமனியும் "மீண்டும்" இணைவதற்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகளை (குறிப்பாக, கிழக்கு செருமனியில் நிகழ்ந்தவற்றை) குறிக்கிறது. செருமனியில் (குறிப்பாக கிழக்கு செருமனியில்) ஒரு பெரிய "திருப்பம்" நிகழ்ந்தது. ஆனால், "திருப்பம்" என்ற சொல்லைக் கிழக்கு செருமனியைச் சேர்ந்த அரசியல்வாதி ஏகோன் கிரென்சு (Egon Krenz) என்பவர் அறிமுகப்படுத்தியதால், அந்நாட்டைச் சார்ந்த குடிமைசார் உரிமைப் போராளிகள் அச்சொல்லை ஏற்க மறுத்தனர். 1945ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது நாசி செருமனி தோல்வியடைந்தது. நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செருமனி இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி பொதுவுடைமைக் கட்சி நிலவிய சோவியத் கூட்டோடு சேர்ந்த நாடாகவும், மேற்குப் பகுதி முதலாளித்துவ ஐரோப்பியப் பகுதியைச் சேர்ந்த நாடாகவும் உருவாக்கப்பட்டன. மேலும், கிழக்கு செருமனி வார்சா உடன்பாடு என்னும் இராணுவக் கூட்டமைப்பின் கீழும், மேற்கு செருமனி நேட்டோ (NATO) என்னும் இராணுவக் கூட்டமைப்பின் கீழும் வந்தன. தலைநகராகிய பெர்லின் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு அமைந்து செயல்பட்டது. பனிப்போர் காலம் முழுவதும் செருமானியர் இத்தகைய கட்டுப்பாடுகள் அடங்கிய பிரிவுக்கு உட்பட்டு வாழ்ந்துவந்தனர். 1980களில் சோவியத் யூனியனில் பொருளாதார மற்றும் அரசியல் தேக்கநிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் தன் தலையீட்டைக் குறைத்துக்கொண்டது. 1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரானல்டு ரேகன் பெர்லின் நகரத்து ப்ராண்டன்புர்க் வாயிலில் ஒரு பேருரை ஆற்றினார். அதில் அவர் சோவியத் அதிபர் மிக்காயில் கோர்பசோவுக்குச் சவால் விடுத்து, பெர்லின் நகரைப் பிளவுபடுத்திய "இச்சுவரை இடித்துத் தள்ளுக!" என்று கூறினார். பெர்லின் சுவர் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையே நிலவிய அரசியல்-பொருளாதாரப் பிளவைப் பறைசாற்றிய குறியீடு போல அமைந்திருந்தது. அப்பிளவைத் தான் வின்ஸ்டன் சர்ச்சில் இரும்புத் திரை என்று குறிப்பிட்டிருந்தார். 1989ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், சோவியத் யூனியனின் அரசியல்-பொருளாதார அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதிபர் கோர்பசோவ் திறந்த அணுகுமுறை ("glasnost" - ), சீரமைப்பு ("perestroika" - ) என்னும் கொள்கைகளை அறிமுகம் செய்தார். அதன் பின்னணியில் சோவியத் கூட்டமைப்போடு சேர்ந்த போலந்து நாட்டில் "சாலிடாரிடி" இயக்கம் (Solidarity movement) தொழிலாளர்களிடையே சுதந்திர வேட்கையைத் தட்டி எழுப்பியது. போலந்து நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இரண்டாம் யோவான் பவுல் பதவி ஏற்று, போலந்துக்கு பயணமாகச் சென்று உரைகள் ஆற்றியதும் சாலிடாரிடி இயக்கத்துக்கு ஊக்கமளித்தது. மேற்கூறியவை தவிர, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திய பொதுவுடைமை ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 1989இல் நிகழலாயின. 1989, மே மாதம் அங்கேரி நாடு தன் எல்லை வேலியை அகற்றியது. உடனே, ஆயிரக்கணக்கான கிழக்கு செருமனி மக்கள் மேற்கு செருமனிக்குத் தப்பியோடினர். இந்த விழிப்புணர்வில் "திருப்புமுனை" (), (ஆங்:The Turning Point) என்று அமைந்தது அமைதியாக நிகழ்ந்த ஒரு புரட்சி. அப்புரட்சி பெர்லின் நகரச் சுவரை இடித்துத் தள்ள வழிகோலியது. கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தம்மேல் திணிக்கப்பட்டிருந்த பிளவுகளையும் வேறுபாடுகளையும் ஒழித்திட உரையாடலில் ஈடுபட்டன. சுதா மூர்த்தி சுதா குல்கர்ணி மூர்த்தி (Sudha Murthy; ,பி:ஆகத்து 19, 1950) இந்திய சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆவார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நா. ரா. நாராயண மூர்த்தியின் மனைவி. சுதா தனது பணிவாழ்வை கணினியியலாளராகத் துவங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர கேட்சு அறக்கட்டளையின் பொதுமக்கள் நல்வாழ்வு செயலாக்கத்தில் உறுப்பினராக உள்ளார். மேலும் சுதா பல அனாதை இல்லங்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்கு பங்களித்துள்ளார். கருநாடக அரசுப் பள்ளிகளில் மடிக்கணினி வழங்கவும் நூலக வசதிகளை அமைக்கவும் உருவான இயக்கத்திற்கு உறுதுணையாயுள்ளார். இவரது உடன்பிறப்புகளான மரு.சுனாந்தா குல்கர்ணி, ஜெயஸ்ரீ தேஷ்பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் குல்கர்ணியும் பரவலாக அறியப்பட்டவர்கள்; மரு. சுனந்தா பெங்களூருவின் முன்னணி குழந்தைப்பேறு மருத்துவர்; ஜெயஸ்ரீ தொலைதொடர்பு முனைப்பாளரும் பெருஞ்செல்வருமான அமெரிக்கர் குருராஜ் தேஷ்பாண்டேயின் மனைவியாவார்; ஸ்ரீனிவாஸ் கால்டெக்கின் வானியல் அறிவியலாளராவார். சுதா மூர்த்தி ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் பல புதினங்களை எழுதியுள்ளார். அவரது சில நூல்கள்:
"ஹௌ ஐ டாட் மை கிராண்ட்மதர் டு ரீட் & பிற கதைகள்"
"வைஸ் & அதர்வைஸ்: வாழ்விற்கொரு வணக்கம்"
"த பேர்ட் வித் த கோல்டன் விங்ஸ்"
"ஜென்ட்லி ஃபால்ஸ் த பகூலா"
"டாலர் பகு"
"மகாஸ்வேதா"
"தி ஓல்டு மேன் & ஹிஸ் காட்"
"மாஜிக் டிரம் & அதர் ஃபேவரைட் ஸ்டோரீஸ்"
"பாசல் கட்"
"எ வெட்டிங் இன் ரஷ்யா"
"ஸ்வீட் ஹாஸ்பிடாலிடி"
ஸ்மோலென்ஸ்க் சண்டை (1941) ஸ்மோலென்ஸ்க் சண்டை ("Battle of Smolensk") என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு கவச படைமோதல். இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும். இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்றன. ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் ஆர்மி குரூப் நடு இன் ஒரு பகுதியான 2வது, 3வது பான்சர் குரூப் படைப்பிரிவுகள் மூன்று வார இடைவிடா முன்னேற்றத்துக்குப் பின் ஸ்மோலென்ஸ்க் நகரை அடைந்தன. இரு கிடுக்கிகளாக டினீப்பர் ஆற்றைக் கடந்து ஸ்மோலென்ஸ்க் நகரை சுற்று வளைக்க ஜெர்மானிய தளபதிகள் திட்டமிட்டனர். அதுவரை தொடர்ந்து பின்வாங்கி வந்த சோவியத் படைகள் ஸ்மோலென்ஸ்க்கில் ஜெர்மானியர்களை எதிர்த்துத் தாக்கின. நான்கு சோவியத் களப் படைப்பிரிவுகள் இத்தாக்குதலில் ஈடுபட்டன. ஜுலை முதல் வாரத்தில் துவங்கிய இத்தாக்குதல் ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தியது ஆனால் தடுத்து நிறுத்தவில்லை. வடக்கில் ஹெர்மன் ஹோத் தலைமையிலான 3வது பான்சர் குரூப்பும் தெற்கில் ஹெய்ன்ஸ் குடேரியன் தலைமையிலான 2வது பானசர் குரூப்பும், கிடுக்கியின் இரு கரங்களாக செயல்பட்டு தாக்கும் சோவியத் படைகளை சுற்றி வளைக்க முயன்றன. ஜூலை மாத இறுதிக்குள் சோவியத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு, ஜெர்மானியப் படைவளையம் இறுகத் தொடங்கியது. ஒரு இறுதி கட்ட தாக்குதல் மூலம் பல சோவியத் படைப்பிரிவுகள் ஜெர்மானியக் கிடுக்கியிலிருந்து தப்பினர். எனினும் ஏறத்தாழ மூன்று லட்சம் சோவியத் வீரர்கள் அவ்வளையத்தில் சிக்கிக் கொண்டு சரணடைந்தனர். இவான் பாவ்லோவ் இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் ("Ivan Petrovich Pavlov", ; பெப்ரவரி 27, 1936) ஓர் புகழ்பெற்ற உருசிய உளவியலாளரும் உடலியங்கியலாளரும் ஆவார். 1860களின் சிறந்த உருசிய இலக்கிய விமரிசகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட திமித்ரி இவானோவிச் பிசாரெவ்வின் முற்போக்கான கருத்துக்களாலும் உருசியாவின் மருத்துவத்துறைக்கு தந்தை என அறியப்படும் இவான் செசேனோவ் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவ்லோவ் தாம் எடுக்கவிருந்த சமயப் பணியைக் கைவிட்டு அறிவியல் தேடலில் தம் வாழ்நாளை செலவழிக்கத் தீர்மானித்தார். 1870இல் சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயல்பியலையும் கணிதத்தையும் படிக்கத் தேர்ந்தெடுத்தார். இவான் தம் வாழ்நாளை உடலியங்கியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவழித்தார். இதனால் பல வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு வழங்கினார். அவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்) அவுட் ஆப் ஆப்பிரிக்கா (Out of Africa) 1985 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பொல்லாக்கால் தயாரித்து இயக்கப்பட்டது. ராபர்ட் ரெட்போர்ட், மெரில் ஸ்ட்ரிப், கிளாஸ் மரிய பிராண்டொயர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினோறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது. இராபர்ட் பிகோ இராபர்ட் ஃபிகோ (Robert Fico, பிறப்பு 15 செப்டம்பர் 1964) ஓர் சிலோவாக்கிய அரசியல்வாதி. இவர் இசுலோவாக்கிய பிரதமராக சூலை 4, 2006 முதல் சூலை 8, 2010 வரை ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். மார்ச்சு 10, 2012இல் நடந்த தேர்தல்களில் 150 உறுப்பினர் கொண்ட தேசிய மன்றத்தில் இவரது கட்சி, டைரக்சன் - சமூக மக்களாட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பதிவான வாக்குகளில் 44.85% பெற்றதால் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை. 2006ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சி 30% வாக்குகளைப் பெற்றதால் தீவிர தேசியவாத "சிலோவக் தேசியக் கட்சி"யுடனும் "மக்கள் கட்சி- மக்களாட்சி சிலோவாக்கியாவிற்கான இயக்கம்" கட்சியுடனும் கூட்டணி அமைத்தார். டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்) டுரைவிங் மிஸ் டைசி (Driving Miss Daisy) 1989 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். ரிச்சர்ட் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு புரூஸ் பெரெஸ்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. மார்கன் ஃபிரீமன், ஜெசிகா டாண்டி, டேன் ஐக்ராய்டு, எஸ்தர் ரோல், பட்டி லுபோன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது. அமாதியஸ் (திரைப்படம்) அமாதியஸ் (Amadeus) 1984 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சால் சயின்ட்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மிலோஸ் பார்மன் ஆல் இயக்கப்பட்டது. முர்ரே ஆபிரகாம், டாம் ஹல்ஸ், எலிசபெத் பெர்ரிஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது. நிரஞ்சனி நிரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. பூர்வவராளி பூர்வவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10வது மேளகர்த்தா இராகமாகிய, "இந்து" என்றழைக்கப் படும் முதலாவது சக்கரத்தின் 3வது மேளமாகிய கானமூர்த்தியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகளி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. பிரமோதினி பிரமோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். லே லே அல்லது லெஹ் ("Leh") என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ள பெரிய நகரம். லே நகரம் அதன் பெயரில் அமைந்துள்ள லே மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். 45,110 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக லே மாவட்டம் விளங்குகிறது. இங்குள்ள லே மாளிகை முன்பு லடாக் அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துவந்தது. லே கடல்மட்டத்திலிருந்து 3524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 1டி லே நகரத்தை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. சிந்து ஆறு லே நகருக்கு அண்மையில் பாய்கிறது. சங்கரி சங்கரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் தொ. மு. பாஸ்கர தொண்டைமான் (சூலை 22, 1904 - மார்ச் 31, 1965) ஒரு தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் ரா. பி. சேதுப்பிள்ளையின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்ப இராமாயணம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ”வட்டத் தொட்டி” என்றழைக்கப்பட்ட இலக்கிய வட்டத்தில் ஒருவரானார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார். 2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது. அமிர்தபுரி இந்தியாவில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் பறையகடவு என்ற கடற்கரை கிராமம் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படுகின்றது. உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் ஆன்மீக பெண் துறவி சற்குரு மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் ஆசிரமம் இங்கு அமைத்துள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் வருகைதரும் பயணத் தலமாக, புனிதத்தலமாக இது விளங்குகிறது. நறவம் நறவம் என்பது ஒரு மலர். நறவம் மலரை நறை எனவும் வழங்கிவந்தனர். நறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகளுக்கு ஏற்பச் சிறப்பு எய்தும். தாமஸ் பெய்ன் தாமஸ் பெய்ன் ("Thomas Paine") என்பவர் (பிறப்பு: சனவரி 29, 1737; இறப்பு: சூன் 8, 1809) புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார். தாமஸ் பெய்ன் இங்கிலாந்து நாட்டில் நோர்ஃபோக் மாவட்டத்தில் தெட்ஃபட் என்னும் நகரில் பிறந்தார். அவர் தம் 37ஆம் வயதில் பிரித்தானிய அமெரிக்க குடியேற்றத்திற்குப் பயணமானார். அங்கு 1774இல் அமெரிக்க புரட்சிப் போரில் கலந்துகொண்டார். பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்கா போராடி, சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து, பெய்ன் "பகுத்தறிவு" ("Common Sense") என்னும் தலைப்பில் ஒரு சிற்றேட்டினை 1776ஆம் ஆண்டு வெளியிட்டார். அது பலராலும் படிக்கப்பட்ட, புகழ்பெற்ற வெளியீடாயிற்று. அவர் எழுதிய இன்னொரு சிற்றேட்டுத் தொடர் "அமெரிக்க நெருக்கடி" ("The American Crisis") என்பதாகும் (1776–1783). பெய்ன் எழுதிய "பகுத்தறிவு" என்னும் சிற்றேட்டின் தாக்கம் எவ்வளவு என்றால், அமெரிக்க நாட்டுக்கு அடித்தளம் இட்டவர்களுள் ஒருவரும் அந்நாட்டின் இரண்டாம் அதிபருமாயிருந்த ஜாண் ஆடம்சு என்பவர், என்று கூறியுள்ளார். 1770களில் பெய்ன் பிரான்சு நாட்டில் வாழ்ந்தார். அப்போது அவர் பிரஞ்சு புரட்சியில் தீவிரமாகப் பங்கேற்றார். பிரஞ்சு புரட்சியை எதிர்த்தவர்களுக்குப் பதில்மொழி கொடுக்கும் வகையில் அவர் "மனிதரின் உரிமைகள்" ("Rights of Man") என்னும் நூலை 1791இல் எழுதினார். பிரித்தானிய எழுத்தாளராகிய எட்மண்ட் பர்க் ("Edmund Burke") என்பவருக்கு எதிராகவும் தாமஸ் பெய்ன் எழுதினார். இதனால் அரசு துரோகம் என்னும் குற்றம் சாட்டப்பட்டார். பிரஞ்சு அவருடைய தாய்மொழியாக இல்லாதிருந்த போதிலும் அவர் 1792இல் பிரஞ்சு தேசியப் பேரவை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரான்சில் இருந்தபோது பெய்ன் அரசியல் எதிரிகளைச் சம்பாதித்துக்கொண்டார். அதனால் 1793 திசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு, பாரிசில் சிறையில் அடைக்கப்பட்டார். 1794இல் விடுவிக்கப்பட்டார். பெய்ன் 1793-1794ல் "பகுத்தறிவுக் காலம்" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். அந்நூலில் அவர் நிறுவனமாக்கப்பட்ட மதத்திற்கு எதிராகப் பேசினார். கிறித்தவக் கொள்கைகளைத் தாக்கினார். பகுத்தறிவையும் சுதந்திர சிந்தனையையும் உயர்த்திப் பேசினார். பொதுவான கடவுள் நம்பிக்கையே போதும் என்றார். அவர் 1795இல் எழுதிய "வேளாண்மை நீதி" ("Agrarian Justice") என்னும் நூலில் சொத்துரிமையின் தோற்றம் குறித்து விவாதித்தார். எல்லா உழைப்பாளருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான குறைந்த ஊதியமாவது கிடைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். 1802இல் பெய்ன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு 1809, சூன் 8ஆம் நாள் உயிர்துறந்தார். அவர் கிறித்தவத்துக்கு எதிராக எழுதியிருந்ததால், அவரது அடக்கத்தின்போது வெறும் ஆறு பேரே பங்கேற்றனராம். கோ. சண்முகநாதன் கோ. சண்முகநாதன் (K. Shanmuganathan) தமிழ்நாடு காவல் துறையில் சுருக்கெழுத்தாராக பணியாற்றியவர். எதிர்க்கட்சியினர் மற்றும் பலரின் பேச்சுக்களை சுருக்கெழுத்தில் எழுதி பின் அதை தமிழக அரசுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார். பின் ஒருநாள் அந்த கோப்புகளை தி.மு.க தலைவர் கருணாநிதி பார்வையிட்டு மிகவும் வியந்து தன் உதவியாளராக 1967 முதல் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இவர் தற்பொழுது வரை தி.மு.க தலைவர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக செயல்பட்டுவருகிறார். திருப்பூங்குடி ஆறுமுகம் திருப்பூங்குடி ஆறுமுகம் இலங்கையில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர். புங்குடுதீவில் கிழக்கூர் பகுதியில் பெரும் வணிகர் கந்தப்பு, அன்னப்பிள்ளை ஆகியோருக்கு மூத்த புத்திரனாகத் தோன்றியவர் திருப்பூங்குடி ஆறுமுகம் எனப் பின்பு பெயர் விளங்கிய கந்தப்பு ஆறுமுகம். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த இவர், தனது அயராத உழைப்பினாலும், மனம் தளராத உறுதியினாலும், கல்வியில் உயர்ந்து, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் பயின்று, ஆசிரியராகப் பரிணமித்தார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சித்திரக்கலையினையும், கட்டிடக்கலையினையும் கற்றுத்தேர்ந்தார். இவர் கொழும்பு விவாகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன் சிறுவயதிலேயே நாடக்கலையில் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்தார். தன் தாய்மாமனாராகிய பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலில் பல நாடகங்களில் நடித்தார். இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, எனத் தூரதேசங்களிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர். வில்லுப்பாட்டு என்னும் கிராமியக் கலைவடிவத்தை முதல்முதல் ஈழப்பெருமண்ணில் புதுமெருகோடு அரங்கேற்றி விரிவுபடுத்தியர் “திருப்பூங்குடி” என்று தன் தாயூரின் பெயரால் பெருமையுடன் அழைக்கப்படும் திருப்பூங்குடி ஆறுமுகம். இன்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பிரபலமாக பிரகாசித்துகொண்டிருக்கும் சின்னமணி, நாச்சிமார் கோவிலடி இராஜன், போன்றவர்கள் திருப்பூங்குடி அவர்களிடம் வில்லிசை பயின்றவர்கள். இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம், பொன் சுபாஸ் சந்திரன் ஆகியோர் திருபூங்குடி அவர்களின் மைத்துனர்கள் ஆவர். திருப்பூங்குடி அவர்களின் சைவத்தமிழ் பணியைப் பாராட்டி சுத்தானந்தபாரதி அவர்கள் “அன்புக்கடல்” என்ற போற்றிப் புகழ்ந்துள்ளார். தமிழிசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் இவருக்கு “வில்லிசைமழை” எனப் பட்டமளித்துக் கெளரவமளித்துள்ளார். இருப்புப்பாதை இருப்புப் பாதை ("track") என்றும் நிலைத்த வழி என்றும் தொடர்வண்டிப் போக்குவரத்தில் இரும்புத் தண்டவாளங்கள், இணைப்பான்கள், குறுங்கட்டைகள் மற்றும் சரளை அடங்கிய கட்டமைப்பும், அதனடியே பதப்படுத்தப்பட்ட நிலத்தடமும் குறிப்பிடப்படுகின்றன. நிலைத்த வழி என்பது இருப்புப் பாதையுடன் அதனருகே அமைக்கப்படும் வேலிகள் போன்ற பிற தடவழி அமைப்புக்களையும் குறிக்கும். பிணக்கூறு ஆய்வு பிணக்கூறு ஆய்வு ("autopsy", சவப் பரிசோதனை, பிரேதப் பரிசோதனை) —மேலும் இறப்பிற்கு பிந்தைய சோதனை ("post-mortem examination"), மரித்த திசு ஆய்வு ("necropsy", குறிப்பாக மனிதரல்லா பிணங்களுக்கு), "autopsia cadaverum", அல்லது சட்டம்சார் பிணக்கூறாய்வு ("obduction") — மிகவும் தனித்தன்மையுடைய அறுவை மருத்துவமுறையாகும். பிணத்தை நன்கு ஆராய்ந்து இறப்பின் காரணத்தையும் ஏற்பட்ட விதத்தையும் அறிவதும் உடலிலிருந்த நோய் அல்லது காயத்தினை மதிப்பிடுவதும் ஆகும். இந்த மருத்துவமுறையை பொதுவாக நோயியலில் சிறப்பான பயிற்சி பெற்ற மருத்துவர் மேற்கொள்வார். இது உயிர்த்திசு சோதனைக்கு எதிரானது. பிணக்கூறு ஆய்வுகள் சட்ட அல்லது மருத்துவக் காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன. ஓர் குற்றம் நிகழ்ந்தநிலையில் தடவவியல் பிண ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காரணமறியா இறப்புக்களின்போது மருத்துவ அறிவிற்காக ஏன்,எப்படி என அறிய மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கல்விக்காகவும் சில பிண ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிண ஆய்வை மேற்புற ஆய்வு மட்டுமே போதுமானவை என்றும் முறையாக உடலை அறுத்து உட்புறச் சோதனைகள் நடத்தப்பட வேண்டியவை இருவகையாகப் பிரிக்கலாம். உட்புறச் சோதனைகளை நடத்த அண்மித்த உறவினரின் அனுமதி தேவையாக இருக்கும். உட்புறச் சோதனைகள் முடிவுற்ற பின்னர் உடல் மீண்டும் திறந்த காயங்கள் மூடப்பட்டு பழையநிலைக்கு வருமாறு தைக்கப்படும். கொடிவேரி அணைக்கட்டு கொடிவேரி அணைக்கட்டு (Kodiveri Dam) பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள பெரியகொடிவேரியில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில்; சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 1125ஆம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. கொடிவேரியில் பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலிருந்து 10 கி.மீ வடக்கே உள்ள கல்கடம்பூரில் (கம்பத்ராயன் மலையில்) இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் (போய இன மக்களின் ஒரு துணை பிரிவு) சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற்பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடி யும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம். இந்த முறை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், "‘‘பண்ணாரி அம்மனும் நஞ்சுண்டேஷ்வரரும் நான் அவ்விடம் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ அங்கே வர மாட்டோம்’’" என்று சொல்கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்பெயர் மருவி கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது. 'கொடிவரி' என்னும் சொல் மருவி கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது. 'கொடிவரி' என்றால் வரிப்புலி என்ற பொருள்படும். இந்த அணை அமைந்த காட்டுப்பகுதியைச் சுற்றி புலிகள் பல வாழ்ந்ததால் இந்தப்பெயரால் அழைக்கப்படுகிறது.சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் வரும் பாடலில் கொடுவரி பற்றி கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது. ""கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி"" பொருள்: கொங்குநாட்டின் ரத்தம் தோய்ந்த போர்க்களத்தில் போரிட்ட சோழர், புலி கொடியையும் (கொடுவரி); பாண்டியர், மீன் கொடியையும் (கயற்க்கொடி) போரில் தோல்வியுற்று விட்டுவிட்டு சென்றனர். கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை. அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன. உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி (Helsinki Rules), ஆனால், அன்றைக்கே தமிழ் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள். தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று; அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன. மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங்கராயன் அணைக்கட்டு. தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்று சேர்கிறது. அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத்துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது. இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு தூர்த்து வைத்திருக்கிறார்கள். இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. தமிழ் திரைப்படங்கள் இங்கு பல காட்சிகளை படமெடுத்துள்ளனர். தமிழ் மொழித் திரைப்படமான சின்னத் தம்பியின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. இங்கு எமரால்டு விருந்தினர் விடுதி, சத்தியமங்கலம் சாலையில் உள்ளது. பவள மலை கோவிலில் திருமணங்கள் நடைபெறுகின்றன. பி. கே. ஆர் மகளிர் கல்லூரி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொடிவேரி அணைக்கட்டில் குளித்துவிட்டு சாப்பிட அங்கு மீன் உணவு சமைத்துத் தருகிறார்கள். பாந்தா மாவட்டம் பாந்தா மாவட்டம் () இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் பாந்தா நகரம். இது சித்திரக்கூட பிரிவின் கீழ் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ் மிக்க கலிஞ்சர் கோட்டை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கோதுமை, காய்கறிகள் போன்றவை இம்மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படுகின்றன. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பாந்தா மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பாந்தா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,799,541. இது தோராயமாக காம்பியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 265வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் பாந்தா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.06%.பாந்தா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 863 பெண்கள் உள்ளனர். மேலும் பாந்தா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.11%.. நாகம் (சொல்) நாகம் என்னும் பெயர்ச்சொல் தரும் பொருள்களை ஆசிரிய நிகண்டு பட்டியலிலுகிறது. இதனை வைத்துக்கொண்டு கம்பன் தன் கம்பராமாயணத்தில் விளையாடுகிறான். நாகம் என்னும் மலையானது, நாகம் வாழும் பாதாள உலகை அடையும்படி, நாகம் என்னும் விசும்பாகி நின்றான் – என்கிறான். பிராங்க் செர்வுட் ரோலண்ட் பிராங்க் செர்வுட் ரோலண்ட் ("Frank Sherwood Rowland", சூன் 28, 1927 – மார்ச் 10, 2012) என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். வளிமண்டல வேதியியல், மற்றும் வேதி வினைவேக இயல் ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. ஓசோன் குறைபாட்டில் குளோரோபுளோரோகார்பன்களின் பங்கு பற்றிய இவரது ஆய்விற்காக 1995 ஆம் ஆண்டில் இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனால் உருவாக்கப்படும் கரிமச் சேர்ம வளிமங்கள் சூரியக் கதிர்வீச்சுடன் இணைந்து அடுக்கு வளிமண்டலத்தில் சிதைவடைவதால், குளோரீன் அணு, மற்றும் குளோரீன் ஓரொக்சட்டு ஆகியவற்றை வெளியிடுகின்றது, இவை பெருமளவு ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கக்கூடியவை என்பதை ரோலண்டு அவரது உதவியாளர் மரியோ மொலினா ஆகியோர் கண்டுபிடித்தனர். இது பற்றிய முதலாவது ஆய்வுக்கட்டுரை "நேச்சர்" ஆய்விதழில் 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு அது குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. நடுக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த செர்வுட் சிலகால சுகவீனத்திற்குப் பின்னர் 2012 மார்ச் 10 இல் கலிபோர்னியாவில் காலமானார். ரோமன் போலான்ஸ்கி ரோமன் போலான்ஸ்கி (Roman Polanski) (பிறப்பு: 18 ஆகஸ்ட் 1933) ஓர் பிரெஞ்சு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். ஐரோப்பிய வரலாறு ஐரோப்பிய வரலாறு ("History of Europe") என்பது வரலாற்றுக் காலத்துக்கு முன்பே, கிமு 45,000 ஆண்டுக்கும் கிமு 25,000 ஆண்டுக்கும் இடையே மக்கள் குடியேற்றம் நடைபெற்று இன்றைய காலம் வரை நீடித்திருக்கின்ற ஐரோப்பிய பெருநில மக்களினங்களின் வரலாற்று வளர்ச்சியைக் குறிக்கும். ஐரோப்பாவின் செழிமைமிகு கலாச்சாரத்தின் தொடக்கம் கிரேக்க-உரோமை செவ்விய காலம் என்று பொதுவாக ஏற்கப்படுகிறது. பண்டைய கிரேக்க கலாச்சாரம் மேலைநாட்டுக் கலாச்சாரத்துக்கு அடிப்படை ஆயிற்று. ஐரோப்பாவின் மொழி, அரசியல், கல்வி முறைகள், மெய்யியல், அறிவியல், கலைகள் போன்றவை கிமு 700 அளவில் தோன்றிய கிரேக்க செவ்விய இலக்கியமாகிய "இலியட்" என்னும் காப்பியக் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. அச்செல்வங்களை கிமு 509இல் நிறுவப்பட்ட உரோமைக் குடியரசு தனதாக்கியது. உரோமைக் குடியரசு முதலில் இத்தாலியிலும் பின்னர் மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் பரவியது. அது தன் உச்ச வளர்ச்சியை ஏறக்குறைய கிபி 150இல் எட்டியது. பல ஆண்டுகள் உள்நாட்டுப் போர்களுக்குப் பின் முதலாம் காண்ஸ்டண்டைன் பேரரசர் தன் தலைநகரை உரோமையிலிருந்து பிசான்சியம் என்னும் கிரேக்க நகருக்கு கிபி 313இல் மாற்றினார். புதிதாக நிறுவப்பட்ட தலைநகர் "காண்ஸ்டண்டைனின் நகர்" எனப் பொருள்படுகின்ற "காண்ஸ்டாண்டிநோபுள்" என்று பெயர் பெற்றது. கிபி 395இல் உரோமைப் பேரரசு இரண்டாகப் பிளவுண்டது. ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வெளியிலிருந்து வந்த குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது. கிபி 410இல் விசிகோத்து பிரிவினர் உரோமையைச் சூறையாடினர். செருமானிய இனத்தைச் சார்ந்த அவர்கள் உரோமைப் பிரதேசங்களில் முதன்முதலாகக் குடியேற வந்தவர்கள். மேற்கு உரோமைப் பேரரசின் கடைசி பேரரசர் 476இல் தம் பதவியை இழந்தார். அதன் பின் தென் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளும், மத்தியதரைக் கடல் பகுதிகள் சிலவும் பிசான்சியப் பேரரசு என்று அழைக்கப்பட்ட கிழக்கு உரோமைப் பேரரசின் கீழ் வந்தன. இந்நிலை கிபி 6ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது. 1453இல் ஓட்டோமான் துருக்கியர் காண்ஸ்டாண்டிநோபுள் நகரத்தைக் கைப்பற்றினார்கள். துருக்கி மொழி முறைக்கு ஏற்ப அந்நகர் "இஸ்தான்புல்" என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர் "ஸ்தாம்போல்" என்பதிலிருந்து பிறக்கிறது. அதற்கு மூலமாக இருப்பது "இஸ்திம்பொலின்" (istimbolin" [εις την Πόλιν அல்லது "στην Πόλη]) என்னும் சொல்வடிவம் ஆகும். அதன் பொருள் "நகரத்தில்", "நகருக்கு" என்பதாகும். இப்படையெடுப்புக்குப் பின், உரோமைப் பேரரசு பலம் இழந்தது. உரோமைப் பேரரசின் வடகிழக்கு எல்லையை அடுத்து "புல்கார்" இன மக்கள் முதல் புல்கேரியப் பேரரசை நிறுவினார்கள். செருமானிய இன மக்கள் உரோமைப் பேரரசின் வடக்குப் பகுதியில் அரசுகளை நிறுவினார்கள். புதிதாக நிறுவப்பட்ட இப்பேரரசுகளில் இலத்தீன் மொழி பொது மொழியாக ஏற்கப்பட்டது. எஞ்சியிருந்த உரோமை கலாச்சாரம் பரவியது. கிறித்தவ சமயம் பேரரசின் சமயமாகத் தொடர்ந்தது. பிராங்கு இனத்தவர் சார்லிமேன் மன்னரின் தலைமையில் தங்கள் நாட்டை விரிவுபடுத்தினார்கள். கிறித்தவ சமயத்தில் தலைமைப் பொறுப்புடைய திருத்தந்தைதான் கிபி 800இல் சார்லிமேனைப் பேரரசராக அறிவித்து மகுடம் சூட்டினார். ஆனால் வைக்கிங் இனத்தவர், வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முசுலிம்கள், அங்கேரியின் மாக்யார் இனத்தவர் போன்றவர்கள் பேரரசைத் தாக்கியதால் அது பிளவுண்டது. 10 நூற்றாண்டின் நடுக்காலத்தின் போது, அவர்களின் அச்சுறுத்தல் நின்றது. இருப்பினும், வைக்கிங் இனத்தவர் பிரிட்டனையும் அயர்லாந்தையும் அச்சமுறுத்திக் கொண்டே இருந்தார்கள். காண்ஸ்டாண்டிநோபுள் நகரம் உருவாக்கப்பட்டதோடு அங்கு கிறித்தவ திருச்சபையும் வளர்ந்தது. அத்திருச்சபை அதற்கு முன் அருகே இருந்த ஹெராக்ளேயா என்னும் மறைமாவட்டத்தின் இடத்தில் புதிதாக, ஊக்கத்தோடு தழைக்கலாயிற்று. விரைவில், காண்ஸ்டாண்டிநோபுள் சபைக்கும் பேரரசின் மேற்குப் பகுதியில் தலைமை இடமாக இருந்த உரோமைத் திருச்சபைக்கும் இடையே இழுபறி எழுந்தது. குறிப்பாக, கிறித்தவப் போதனை பற்றிய கருத்து வேறுபாடுகள் அவ்விரு திருச்சபைத் தலைமை இடங்களுக்கும் இடையே தோன்றின. எடுத்துக்காட்டாக, உரோமைத் திருத்தந்தையின் பதிலாளாக 1054இல் காண்ஸ்டாண்டிநோபுளுக்குச் சென்ற கர்தினால் ஹும்பெர்ட் என்பவர் காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதுவரைச் சபைவிலக்கம் செய்தார். அடுத்த நாளே, காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் கர்தினால் ஹும்பெர்ட்டைச் சபைவிலக்கம் செய்தார். இருந்தாலும், மேற்கு ஐரோப்பிய கிறித்தவ நாடுகளின் இராணுவ உதவியை பிசான்சியப் பேரரசு நாடியபோது அவர்கள் உதவிசெய்தார்கள். குறிப்பாக, 1095இலிருந்து முசுலிம் படையெடுப்பு காண்ஸ்டாண்டிநோபுளுக்கு எதிராக நிகழ்ந்தபோது, மேலைக் கிறித்தவ நாடுகள் பிசான்சியத்துக்குப் பலமுறை படைகளை அனுப்பி ஆதரவு அளித்தன. எசுப்பானியா, தெற்கு பிரான்சு, முதல் புல்கேரிய பேரரசு, லித்துவேனியா, மற்றும் பேகனியப் பகுதிகள் ஒன்றிணைந்து வருவதற்கு 1396இல் நிகழ்ந்த நிக்கோப்பொலிசு சண்டை காரணமாயிற்று. அதுவே ஐரோப்பிய நடுக்காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரியதும், இறுதியாக நிகழ்ந்ததுமான சிலுவைப்போர் ஆகும். அதைத் தொடர்ந்து பெரும் நிலக்கிழார் உறவுகளும், பிரபுக்கள் ஆட்சியும் உருவாயின. மேல்தட்டு ஆட்சிக் குடும்பங்கள் திருமண உறவுகளை ஏற்படுத்தித் தங்களைப் பலப்படுத்திக்கொண்டன. 13ஆம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் மங்கோலியர் ஐரோப்பா மீது படையெடுத்தனர். 1347-1353 காலத்தில் ஐரோப்பாவில் கறுப்புச் சாவு என்ற பயங்கர கொள்ளைநோய் பரவி சுமார் 25 மில்லியன் மக்களைக் கொன்றது. அதாவது அன்றைய ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு மக்கள் மடிந்துபட்டனர். இதைத் தொடர்ந்து, பெரும் நிலக்கிழார் ஆட்சிமுறை சிதையத் தொடங்கியது. 14ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்படத் தொடங்கியது. செவ்விய காலத்து கிரேக்க-உரோமை அறிவுக் கருவூலங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவில் கலாச்சாரப் புத்துணர்வு ஏற்படத் தொடங்கியது. முதலில் புளோரன்சு நகரிலும் பின்னர் ஐரோப்பா முழுவதிலும் மறுமலர்ச்சி பரவியது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் அறிவு விரிவாக்கத்துக்குத் துணை ஆனது. புதிய அறிவியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் மரபுவழி வந்த கிறித்தவ சமயக் கொள்கைகளுக்கு சவாலாக அமைந்தன. 16ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சபையில் சீர்திருத்தம் கொணர புரட்டஸ்தாந்து சபைகள் எழுந்தன. செருமனியில் மார்ட்டின் லூதர் திருத்தந்தையின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார். அதுபோல, மன்னர் எட்டாம் ஹென்றி இங்கிலாந்து திருச்சபை மீது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று, திருச்சபையைப் பிளவுபடுத்தினார். எசுப்பானியாவுக்கும் செருமனிக்கும் இடையே போர்கள் நிகழ்ந்தன. 15ஆம் நூற்றாண்டிலேயே போர்த்துகல் மற்றும் எசுப்பானியா நாடுகள் தங்கள் வணிகத்தை விரிவாக்க கடல்வழி காண்பதில் முனைந்தன. ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் கடல்வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு ஐரோப்பா உலகத்தின் பிற பெரும் நிலப்பகுதிகளோடு நேரடி தொடர்பு கொண்டது. அதே நேரத்தில் கத்தோலிக்க நாடுகளும் புரட்டஸ்தாந்து நாடுகளும் ஐரோப்பாவில் ஒன்றுக்கொன்று போர்களில் ஈடுபட்டன. இறுதியில் 1648இல் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஐரோப்பியர்கள் தங்கள் ஆதிக்கத்தை அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பெரும் நிலப்பகுதிகளுக்குப் பரப்பியதைத் தொடர்ந்து குடியேற்ற ஆதிக்கப் பேரரசுகள் (colonial empires) உருவாயின. பழைய உலகிலிருந்து (ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா) புதிய உலகுக்கு (வட, நடு, தென் அமெரிக்கா பகுதிகள்) விலங்குகள், செடிகொடிகள் (நோய்களும் கூட) கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறே புதிய உலகப் பயிர்கள், செடிகள், விலங்குகள் போன்றவை பழைய உலகுக்குக் கொண்டுவரப்பட்டன. ஆசியாவிலிருந்தும் அமெரிக்க கண்டங்களிலிருந்தும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்ட பொருள்வளங்களைக் கொண்டு முதலில் இங்கிலாந்திலும் பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தொழிற்புரட்சி முன்னேறிச் சென்றது. இவ்வாறு, நிலம் சார்ந்த வேளாண்மைத் தொழிலிலிருந்து பொருள் உற்பத்திப் பொருளாதாரம் வளர்ந்தது. 1775இலிருந்து தொடங்கி, அமெரிக்காவில் அமைந்த பிரித்தானிய குடியேற்றப் பகுதிகள் தமக்கு நேர் ஆட்சி உரிமையும் விடுதலையும் வேண்டும் என்று கோரி, போராடத் தொடங்கின. 1789-1799இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்னும் விழுமியங்கள் அடிப்படையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட வழியாயிற்று. பிரான்சின் முதலாம் நெப்போலியன் (1769-1821) ஆட்சியைக் கைப்பற்றி, பல மாற்றங்களைக் கொணர்ந்தார். 1815-1871 காலக்கட்டத்தில் பல புரட்சிகளும் விடுதலைப் போர்களும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் சோசலிசக் கொள்கைகளும் தொழிற்சங்க அமைப்புகளும் பரவின. நிலக்கிழார் ஆட்சிமுறையின் கடைசி அடையாளங்கள் 1861இல் உருசியாவிலிருந்து மறைந்தன. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பால்கன் நாடுகள் ஓட்டோமான் ஆட்சியிலிருந்து ஒவ்வொன்றாக விடுதலை பெறத் தொடங்கின. 1870-1871இல் பிராங்கோ-புருச்சிய போர் நிகழ்ந்ததைத் தொடர்ந்து செருமனியும் இத்தாலியும் தன்னுரிமை கொண்ட நவீன நாடுகளாக உருப்பெற்றன. அதுபோலவே, பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளும் சட்ட அமைப்பு கொண்ட முடியாட்சியின் கீழ் வரத் தொடங்கின. ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிட்டு பேரரசுகள் அமைக்க முனைந்தன. அதன் விளைவாக முதலாம் உலகப் போர் 1914இல் வெடித்தது. அப்போரும் அதன் விளைவாக ஏற்பட்ட வறுமையும் 1917இல் உருசியப் புரட்சி எழக் காரணமாயின. அதன் விளைவாக சோவியத் யூனியன் உருவாகியது. அங்கு பொதுவுடைமை ஆட்சி ஏற்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின் 1919இல் கையெழுத்தான வெர்சாய் ஒப்பந்தம் போரில் தோற்ற செருமனியால் அநீதியான செயலாகக் கருதப்பட்டது. 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் இத்தாலி, செருமனி, எசுப்பானியா ஆகிய நாடுகளில் பாசிச ஆட்சிப்போக்கு தலைதூக்கியது. தீவிர தேசியவாதத்தை முன்வைத்து, செருமனியின் எல்லைகளை விரிவுபடுத்த நாசிக் கட்சி முனைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் (1939-1945) வெடித்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், ஐரோப்பா கண்டம் அமெரிக்க ஆதரவு பெற்ற முதலாளித்துவ நாடுகள் ஒருபக்கம் என்றும், சோவியத் யூனியனின் ஆதரவு பெற்ற சோசலிச நாடுகள் மறுபக்கம் என்றும் இரு பெரும் பகுதிகளாகப் பிரிந்து, இழுபறி நிலை உருவானது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைக் கொண்ட பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவின் கீழ் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு என்னும் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொண்டன. பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனின் ஆதரவின் கீழ் வார்சா உடன்பாடு செய்தன. இந்த இரு அமைப்புகளுக்கும் நாட்டுக் கூட்டுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவவில்லை. மாறாக, பனிப்போர் நிலைமையே தொடர்ந்தது. 1989ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை ஆட்சி ஆட்டம் கண்டது. சோவியத் யூனியனின் ஆதரவின் கீழ் இருந்த போலந்து, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகளில் அரசியல் சுதந்திரம் கோரி இயக்கங்கள் எழுந்தன. பொதுவுடைமை ஆட்சி வீழ்ச்சியுற்றது. சோவியத் யூனியனிலும் 1990-1991இல் பொதுவுடைமை ஆட்சி கவிழ்ந்தது. சோவியத் யூனியனைச் சார்ந்திருந்த நாடுகள் முழுச் சுதந்திரம் பெற்றன. இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பொருளாதார ஒருங்கிணைப்பு அதிகரித்தது. மேற்கு ஐரோப்பா முன்னாள் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் 2004, 2007 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கத் தொடங்கின. ஔசா சுல்தானகம் ஔசா சுல்தானகம் அல்லது அஃபர் சுல்தானகம் (ஆட்சி: 1734-தற்காலம்) எனப்படுவது எத்தியோப்பியாவின் கிழக்கில் எரித்திரியா, ஜிபூத்தி ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்து ஆட்சி செலுத்திய முடியரசு ஆகும். அஃபர் இனத்தினரின் முதன்மையான முடியரசாக ஔசா சுல்தானகம் விளங்கியது. இவ்வரசின் அதிகாரத்தை ஏனைய அஃபர் ஆட்சியாளர்கள் மேலேற்றிருந்தனர். மரபு வழியாகவே அஃபர் இனத்தினர் பல்வேறு சுதந்திரமான அரசுகளாகப் பிரிந்திருந்தனர். அவர்களில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சுல்தான் இருந்தார். ஔசா சுல்தானகமானது அதற்கு முன்னிருந்த ஔசா இமாமகத்தின் தொடர்ச்சியாகும். அதற்கு முன்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த அதல் சுல்தானகமானது 1577 இல் அஃபர், ஔசா நகர அரசுகளாகப் பிளவுற்ற போது ஔசா அரசின் இமாம் முகம்மது ஜசா தன் தலைநகரை ஹரார் நகரிலிருந்து ஔசா நகருக்கு மாற்றினார். 1672 ஆம் ஆண்டு இமாம் உமருத்தீன் இப்னு ஆதம் என்பவர் அரியணையேறியதுடன் அவ்வரசு வீழ்ச்சியுற்றது. அதனைத் தொடர்ந்து, 1734 இல் கிதாஃபு என்பவரால் ஔசா சுல்தானகம் மீள்நிறுவப்பட்ட பின்னர் அவருத முதைத்தோ அரச மரபு இதனை ஆளத் தொடங்கியது. ஔசா சுல்தானின் முதன்மையான சின்னமான கைக்கோல் மந்திர வலிமை கொண்டதாகக் கருதப்பட்டது. 1875 இல் எத்தியோப்பியாவின் மீது எகிப்தியப் படையை வழிநடத்திய வேர்னர் முன்சிங்கர் என்பவரால் இதன் சுல்தான் முகம்மது இப்னு ஹன்ஃபளி தோற்கடிக்கப்பட்டார். 1865 இல், புதிதாக ஒன்றுபடுத்தப்பட்ட இத்தாலி அரசு ஔசாவின் அப்போதைய சுல்தான் முகம்மதிடம் இருந்து அசபு எனப்பட்ட பகுதியை விலைக்கு வாங்கியதுடன் சுல்தானுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. அந்த அசபு பகுதியே பிற்காலத்தில் 1890 ஆம் ஆண்டு எரித்திரியா என்ற பெயரில் இத்தாலிய முடிக்குரிய ஆட்சிப் பகுதியானது. மேற்படி ஒப்பந்தங்களின் விளைவாக, முதலாவது இத்தாலிய-அபிசீனியப் போர் நிகழ்ந்த வேளை "ஔசாவின் சுல்தான் இத்தாலிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில்" எத்தியோப்பியப் பேரரசர் இரண்டாம் மெனெலிக்கு என்பவர் ஔசாவுக்கு அருகில் ஒரு நிலையான படைத்தளத்தை நிறுவினார். இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் நடைபெற்ற போது சுல்தான் முகம்மது யையோ இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 1943 இல் மீள்நிறுவப்பட்ட எத்தியோப்பிய அரசு படையனுப்பி சுல்தான் முகம்மதைக் கைது செய்ததுடன் அவரது உறவினருள் ஒருவரைச் சுல்தானாகப் பதவியில் அமர்த்தியது. ஏப்ரல் 2011 இல் தான் இறக்கும் வரையிலும் அஃபர் இனத்தினரின் சுல்தானாக இருந்தவர் அலிமீரா ஹன்ஃபிரி என்பவராவார். 1975 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் இராணுவ ஆட்சியாளர்களால் அவர் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த போதிலும், 1991 இல் தெர்கு அரசு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் திரும்பி வந்தார். உயில் உயில் () (Will and testament) என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப் படி, தனக்குப் பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம் ஆகும். சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, தனி நபர், அறக்கொடை நிறுவனத்திற்கும், அறக்கட்டளைகளுக்கும், எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம். உயிலை பதிவு செய்வது என்பது கட்டாயமில்லை. இரண்டு சாட்சிகளோடு சார்பதிவாளர் முன்னிலையில் உயிலை பதிவு செய்து விட்டால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துவிடும். இந்த ஆவணத்தை ஆவணப் பதிவு அலுவலகத்தில் (சார்- பதிவாளர் அலுவலகம்) உரிய முத்திரைக்கட்டணம், பதிவுக்கட்டணம் செலுத்தி அரசின் முத்திரைத்தாளில் எழுதி பதிவு செய்ய வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டபடி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும். உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களது கையெழுத்து இருக்க வேண்டும். வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. அவர்களது நிரந்தர முகவரியை குறிப்பிட வேண்டும். ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது. நிர்மலாங்கி நிர்மலாங்கி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். உலக சட்ட முறைமைகளின் பட்டியல் உலக சட்ட முறைமைகள் (legal systems of the world) தற்காலத்தில் பொதுவாக மூன்று அடிப்படை முறைமைகளில் ஒன்றாக உள்ளது; குடிமையியல் சட்டம், பொதுச் சட்டம், மற்றும் சமயச்சார்பு சட்டம் – அல்லது இவற்றின் கலப்பாக உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நாட்டின் சட்ட முறைமையும் அதன் வரலாற்று நிகழ்வுகளால் கூர்ந்துள்ளதால் அந்நாட்டிற்கான தனித்த வேறுபாடுகளையும் கொண்டுள்ளன. பிரணவப்பிரியா பிரணவப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 57 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சிம்மேந்திரமத்திம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். பூந்தளிர் (சிறுவர் இதழ்) பூந்தளிர் என்பது ஒரு சிறுவர் இதழ் ஆகும். இது 1984 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்தது. இவ்விதழ் அதிகம் படக்கதைகளை உள்ளடக்கியது. இப்படக்கதைகளில் ஒரு சில அக்காலத்தில் மிகவும் பிரபல்யமானவை. குடிமையியல் சட்டம் குடிமையியல் சட்டம் ("Civil law" அல்லது "civilian law") (இந்திய வழக்கு:உரிமையியல்) என்பது இரு பொருள்படும். முதன்மையாக உலக சட்ட முறைமைகளில் ஒன்றாக மேற்கு ஐரோப்பாவில் உருவான ஒரு சட்ட முறைமை ஆகும். பழமை வாய்ந்த உரோமானியச் சட்டத்தின் கட்டமைப்பினுள் இந்த முறைமை அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பியல்பு மேற்கோளிடும் வகையில் கருக் கொள்கைகளை சட்டத்தொகுப்பாக வெளியிட்டுள்ளதுதாகும். இதுவே சட்டத்திற்கான முதன்மை வளமாகும். இதற்கு எதிராக பொதுச் சட்டத்தில் சட்டக் கட்டமைப்பு நீதிபதிகள் உருவாக்கிய தீர்ப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுச் சட்டத்தில் ஒரே போன்ற வழக்குக்கு இருவேறு தீர்ப்புகள் இருக்க இயலாது என்ற கொள்கையின் அடிப்படையில் "முன்காட்டு" முன்னுரிமை பெறுகிறது. குடிமையியல் சட்ட முறைமை செருமனி, பிரான்சு, ஐரோப்பிய நாடுகளின் குடிமைப்பட்டிருந்த நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் உள்ள சில நாடுகள் இந்த முறைமையைப் பின்பற்றுகின்றன. இரண்டாவது பொருளாக குடிமையியல் சட்டம் என்பது அனைத்து நாடுகளிலும் உள்ள சட்ட முறைமைகளில் ஒரு பகுதியாகும். இது குற்றவியல் சட்டத்திற்கு மாறானது. இரு நபர்களுக்கு அல்லது அமைப்பு/நிறுவனங்களுக்கு இடையே உள்ள பிணக்குகளைத் தீர்ப்பது குறித்ததாகும். காட்டாக, எல்லைத் தகராறுகள், விபத்து நட்ட ஈடுகள் போன்றன. ஒரு சாலை விபத்தில் தமது கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்தியக் குற்றத்திற்காக காவல்துறையினர் குற்றவியல் சட்டத்தினைப் பயன்படுத்துவர்; விபத்தில் ஊனமுற்றவர்/இறந்தவர் குடும்பம் நட்ட ஈடு பெறுவது குடிமையியல் சட்டத்தின்படி ஆகும். அவிடின் அவிடின் என்பது பயோட்டினுடன் இணையக்கூடிய, நான்கு துணை அலகுகளைக் கொண்ட நாற்படிப் புரதம் ஆகும். இது பறவைகள், ஊர்வன, ஈரூடக வாழிகள் போன்றனவற்றின் சூலகக்கானில் தொகுக்கப்பட்டு முட்டையின் வெள்ளைப் பகுதியில் சேர்க்கப்படுகின்றது. இப்புரதத்தின் ஒவ்வொரு துணை அலகும் பயோட்டினுடன் (உயிர்ச்சத்து பி 7, உயிர்ச்சத்து H) உயர் வலுக் கவர்ச்சிப் பிணைப்பு மூலம் இணையக்கூடியது. அவிடினின் பிரிகை மாறிலி "K" ≈ 10 M ஆக இருப்பதன் மூலம் இது ஒரு வலுவான சமவலுப் பிணைப்பு அல்லாத சேர்க்கை என அறியக்கூடியதாக உள்ளது. பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் அவிடினும் மஞ்சள் கருவில் பயோட்டினும் இயல்பு நிலையில் காணப்படுகின்றன. சமைக்காத பச்சை முட்டையின் வெண்கருவை மிகையாக நாளாந்தம் பெரியளவில் உட்கொண்டால் அவற்றில் காணப்படும் அவிடின், பயோட்டினுடன் சேர்ந்து வலுவான பிணைப்பை ஏற்படுத்த, ஈற்றில் பயோட்டின் அகத்துறிஞ்சல் தடைப்படும். முட்டையைச் சமைப்பதன் மூலம் அவிடினின் மூலக்கூறுகள் சிதைக்கப்படுகின்றன, எனவே முட்டையில் உள்ள பயோட்டினைப் பெற்றுக்கொள்ளலாம். அம்பேத்கர் நகர் மாவட்டம் அம்பேத்கர் நகர் மாவட்டம் (இந்தி अंबेडकर नगर ज़िला, உருது امبیڈکر نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1995ல் அப்போதைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதியால் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் பீமாராவ் அம்பேத்கர் பெயரால் அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது. இம்மாவட்டத்தின் பொருளாதாரம் விசைத்தறி மற்றும் விவசாயத்தைச் சார்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தாமான 1760 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின்நிலையம் ஒன்று உள்ளது. மேலும் ஒரு தனியார் சிமென்ட் தொழிற்சாலையும், ஒரு சர்க்கரை ஆலையும் இம்மாவட்டத்தில் உள்ளன. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,398,709. இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 186வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.35%.அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் உள்ளனர். மேலும் அம்பேத்கர் நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.37%. காட்டியல் வனவியல் என்பது காடுகளையும், அதோடு சார்ந்த வளங்களையும் மனிதருக்குப் பயன்தரத்தக்க வகையில் பேண்தகுமுறையில் உருவாக்குவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், பாதுகாப்பதற்குமான அறிவியல், கலை, கைவினை என்பவற்றைத் தழுவிய பல்துறைசார் தொழிற் துறை ஆகும். இயற்கைக் காடுகளிலும், வளர்ப்புக் காடுகளிலும் காட்டியல் செயல்படுகின்றது. காடுகள், பேண்தகு முறையில், சூழல்சார் பொருட்களையும், சேவைகளையும் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்வதற்கு வேண்டிய முறைமைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே காட்டியலின் முக்கிய நோக்கம். காட்டு வளங்களையும் அதனால் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடிய பிற வளங்களையும், பேண்தகு நிலையில் வைத்திருக்கும் அதே வேளை சமூக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான முறைமைகளை உருவாக்குவதே காட்டியலின் முன்னுள்ள சவால் ஆகும். தற்காலக் காட்டியல், காடுகள் மரப்பொருட்களை வழங்குவதற்கு உதவுதல், காட்டுயிர் வாழிடங்கள், இயற்கை நீர்த் தர மேலாண்மை, பொழுதுபோக்கு, நிலத்தோற்றத்தையும் சமூகத்தையும் பாதுகாத்தல், வேலைவாய்ப்பு, அழகுணர்ச்சியைக் கொடுக்கும் நிலத்தோற்றங்கள், உயிரியற் பல்வகைமை மேலாண்மை, நீர்ப்பிடிப்பு மேலாண்மை, மண்ணரிப்பைக் கட்டுப்படுத்துதல், போன்ற பரந்துபட்ட விடயங்களில் கவனம் செலுத்துகிறது. இன்று காட்டுச் சூழல் தொகுதியானது, உயிர்க் கோளத்தின் மிக முக்கியமான ஒரு கூறாக நோக்கப்படுவதுடன், முக்கியமான அறிவியல், பயன்படு கலை, தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த ஒரு துறையாகவும் வளர்ந்துள்ளது. 5 ஆம் நூற்றாண்டில், அட்ரியாட்டியக் கடற்கரையில் அமைந்துள்ள பைசன்டிய ரொமாக்னா பகுதியில், மத குருமார்கள், விறகுத் தேவைக்காகவும், உணவுக்காகவும் ஒரு வகைப் பைன் மரக் காடு வளர்ப்பை மேற்கொண்டிருந்தனர். தாந்தே அலிகியேரி என்னும் கவிஞர் 1308ல் எழுதிய "தெய்வீக நகைச்சுவை" (Divine Comedy) என்னும் கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகப் பெரிய காட்டின் தொடக்கம் இதுவே. முறையான காட்டியல் நடவடிக்கைகள், 7 ஆம் நூற்றாண்டில் மரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட போது விசிகோத்தியர்களால் தொடங்கப்பட்டது. ஆக், பைன் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளின் பாதுகாப்புக் குறித்த விதிகளையும் இவர்கள் உருவாக்கினர். சீனாவில், காட்டு வளங்களின் பயன்பாடும் மேலாண்மையும் நீண்டகால வரலாறுடையன. வாசுதேவ் பல்வந்த் பட்கே வாசுதேவ் பல்வந்த் பட்கே (Vasudeo Balwant Phadke (Marathi: वासुदेव बळवंत फडके.4 நவம்பர் 1845 – 17 பிப்ரவர் 1883) இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர், இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மராட்டிய மாவீரர். ஆங்கிலேய ஆட்சியால் சீர்குலையும் இந்தியப் பொருளாதாரம் கண்டு பொருமிய அவர், ஆயுதக் குழுக்களை உருவாக்கி வெள்ளையர் கஜானாவைக் கொள்ளையடித்து ஆதிக்க ஆட்சியை அதிர வைத்தார். மராட்டியத்தின் ராமோஷி, கோலிஸ், பில்ஸ், தாங்கர்ஸ் ஜாதி மக்களை திரட்டிய பட்கே, அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 இளைஞர்களைக் கொண்டு ஒரு தாக்குதல் படையை உருவாக்கினார். அவர்களுக்கு துப்பாக்கியால் சுடுதல், குதிரையேற்றம், தற்காப்பு உத்திகளைப் பயிற்றுவித்தார். இந்தப்படை முதன்முதலாக ஆங்கிலேய அரசுக்கு செலுத்துவதற்காக வசூலித்து வைக்கப்பட்டிருந்த கப்பப் பணம் ரூ. 400 ஐ ஒரு வணிகர் வீட்டிலிருந்து கொள்ளை அடித்தது. அந்தப் பணம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டம், பன்வேல் வட்டம், ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில், மராட்டிய சித்பவன் பிராமண வகுப்பில், 4.11.1845 ல் பிறந்தார் வாசுதேவ் பல்வந்த் பட்கே. சிறுவயதிலேயே மல்யுத்தம் உள்ளிட்ட உடற்பயிற்சி சாகசங்களில் நாட்டம் கொண்டிருந்த பட்கே, உயர்நிலைப் பள்ளியில் இடைநின்றார். எனினும், புனாவில் இருந்த ராணுவ கணக்குத் துறையில் எழுத்தராகப் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது ஆங்கிலேயே ஆட்சியின் அநியாயங்களை நேரில் காணும் வாய்ப்பு பெற்றார். அப்போது புரட்சிவீரர் லாஹுஜி வஸ்தாத் சால்வே உடன் பட்கேவுக்கு தொடர்பு ஏற்பட்டது. சால்வே நடத்திய உடற்பயிற்சிசாலை சென்ற பட்கே, அங்கு தேசபக்திப் பிரசாரங்களை அறிந்தார். அதே சமயம் மராட்டியத்தில் புகழ் பெற்று விளங்கிய மகாதேவ கோவிந்த ரானடேவின் சொற்பொழிவுகளையும் அவர் கேட்டார். அப்போது, நமது நாட்டின் பொருளாதார வளம் ஆங்கிலேய அரசால் கொள்ளையடிக்கப்படுவது பட்கேவுக்குப் புரிந்தது. இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையில், 'ஐக்கிய வர்த்தினி சபா' என்ற அமைப்பை 1870 ல் நிறுவினார் பட்கே. அதன்மூலமாக இளைஞர்களை பட்கே ஒருங்கிணைத்தார். சால்வே உடனான் தொடர்பால், பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த மக்களுடன் இணைந்து பணி புரிவதன் வாயிலாகவே ஆங்கிலேயரை எதிர்க்க முடியும் என்று உணர்ந்தார் பட்கே. ‘சுதந்திர ரகசிய சங்கம்’ என்ற ஒன்றை நிறுவி மல்யுத்தம், வாள் சண்டை, கத்திச் சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகளை இளைஞர்களுக்கு கொடுத்தார். சுதந்திரப் போராட்டத்திற்கு உதவிடவும் ஏழைகளுக்கு அளித்திடவும் தேவைப்பட்ட பணத்தை, வாசுதேவ பல்வந்த் பட்கேயின் கிராம மக்கள் அடங்கிய படை ஒன்று பணக்காரர்களிடமிருந்து சூறையாடியது . ஆங்கிலேய அரசின் பெயரை கெடுப்பதாக இவரது செயல்களை அமைந்தன. பால கங்காதர் திலகர் இவருடைய பாசறையில் பயிற்சி எடுத்தார் இந்நிலையில் தான் பட்கேயின் வாழ்வில் திருப்புமுனையான சம்பவம் நடந்தது. அவரது தாய் மரணத் தறுவாயில் இருந்தபோது அவரைக் காண விடுமுறைக்கு விண்ணப்பித்தார் பட்கே. ஆனால், விடுமுறை மறுக்கப்பட்டது. அதனால் தாயின் இறுதிக்கணத்தில் அவரால் உடனிருக்க முடியாமல் போனது. இதனால் மனம் வெகுண்ட பட்கே அரசுப் பணியிலிருந்து விலகினார். ஏற்கனவே அவரது நெஞ்சில் கனன்ற சுதந்திர தாகம், எரிமலையாய் வெடித்தது. 1875 ல் பரோடா சமஸ்தானத்தின் கெய்க்வாட் மன்னர் ஆங்கிலேய அரசால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து பட்கே மக்களிடம் தீவிரமாக பிரசாரம் செய்தார். அந்த சமயத்தில் தக்காணப் பீடபூமியில் கடும் பஞ்சம் நிலவியது. ஆங்கிலேய அரசு நாட்டை சுரண்டுவதில் காட்டிய அக்கறையை நாட்டு மக்களைக் காப்பதில் காட்டுவதில்லை என்பதை உணர்ந்த பட்கே, பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் துடித்தார். அதற்காக ஆங்கிலேய அரசின் கருவூலங்களைக் கொள்ளையடிக்கவும் துணிந்தார். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் மீது அரசு தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. ஆனால், உள்ளூர் மக்களின் ஆதரவு காரணமாக, பட்கே குழுவினரைப் பிடிக்க முடியவில்லை. பல இடங்களில் அரசு பணத்தைக் கொள்ளையடித்த பட்கே குழு ஆங்கிலேய அரசுக்கு பெரும் இடராக ஆனது. பட்கேவின் தளபதியான தவுலத்ராவ் நாயக் என்னும் ராமோஷி இனத்தலைவர் சிக்காலி என்ற இடத்தில் அரசுக் கருவூலத்தில் ரூ. 1.5 லட்சம் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பியபோது அரசுப் படைகளால் சூழப்பட்டார். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தவுலத்ராவ் நாயக் கொல்லப்பட்டார். பட்கேவின் முயற்சிகளுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. கொள்ளைக் கும்பலின் தலைவனான பட்கேவுக்கு ஆங்கிலேய அரசு வலை விரித்தது. அவர்களிடமிருந்து தப்பி ஸ்ரீசைலம் சென்ற பட்கே, மல்லிகார்ஜுனர் கோயிலில் தலைமறைவாக சில நாட்கள் இருந்தார். அங்கிருந்தபடி, மீண்டும் 500 இளைஞர்கள் கொண்ட மற்றொரு படையை உருவாக்கினார் பட்கே. எனினும் பெரும் ஆயுத பலம் கொண்ட ஆங்கிலேய அரசு முன் பட்கேவின் முயற்சிகளுக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை. கானூர் என்ற இடத்தில் பிரிட்டீஷ் ராணுவம் மீது பட்கே குழு நடத்திய நேரடித் தாக்குதல், அரசுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. ஆங்காங்கு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வாசுதேவ் பல்வந்த் பட்கேவைப் பிடித்துத் தருவோருக்கு வெகுமதி அழைப்பதாக அரசு அறிவித்தது. இதற்கு பதிலடியாக, பம்பாய் மாகாண ஆளுநரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசளிப்பதாக பட்கே அறிவித்தார்! ஆங்கில அரசின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிய பட்கே, ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு சென்றார். அங்கும் அவர் புரட்சிப் படைக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். ஆனால், இரவும் பகலும் பலநூறு ஆங்கிலேய போலீசார் பட்கேவை வலைவீசித் தேடி வந்தனர். நிஜாம் அரசின் காவலர்களும் அவர்களுக்கு உதவியாக பட்கேவைத் துரத்தினர். இறுதியில் பந்தர்ப்பூர் செல்லும் வழியில் கோவிலில் மறைந்திருந்த பட்கேவை கலாட்சி என்ற இடத்தில் 20.7.1879 ல் ஆங்கிலேயக் காவலர் கைது செய்தனர். புனா கொண்டுசெல்லப்பட்ட பட்கேவும் அவர்தம் தோழர்களும் ஆங்கிலேய அரசின் விசாரணைக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். பட்கே அடேன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சிறைக்கதவை உடைத்து தப்பினார் பட்கே (13.2.1883). அதன்மூலமாக மராட்டியம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் மிகக் குறுகிய காலத்தில் பட்கேவை மீண்டும் கைது செய்த பிரிட்டீஷ் போலீசார், மீண்டும் சிறைக்கு அனுப்பினர். சிறையில் அவருக்கு பயங்கர கொடுமைகள் இழைக்கப்பட்டன. அவற்றைக் கண்டித்து, சிறைக்குள் உண்ணாவிரதத்தைத் துவக்கினார் வாசுதேவ் பல்வந்த் பட்கே. தொடர் உண்ணாவிரதத்தின் முடிவில், 17.2.1883 ல் உயிர்நீத்தார் பட்கே. பட்கேவின் உயிர்த்தியாகம் ஆங்கிலேய அரசுக்கு ஒருவாறாக அமைதியை அளிப்பதாக அமைந்தது. ஆயினும் பிற்காலத்தில் நாட்டில் தோன்றிய புரட்சிப் படைகளுக்கு பட்கேவின் வீரம் உந்துசக்தி அளிக்கும் காவியமாக மாறியது. நாகநாடு புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூற்றப்படும் தெய்வம் இது. நாகநாட்டின் தலைநகர் நாகநீள்நகர். நாகமரம் ஓங்கியிருந்ததால் இந்த நகர் இப் பெயரைப் பெற்றது. மணிபல்லவத் தீவிலிருந்த அரியணை ஒன்றை நாகநாட்டை ஆண்ட இரண்டு அரசர்கள் தமது தமது என உரிமை கொண்டாடி எடுத்துச்செல்லப் போரிட்டனர். அப்போது தரும்பீடிகையில் தோன்றிய புத்தத் துறவி ஒருவர் அதனைத் தனதெனக் கூறி அதன்மேல் அமர்ந்து அவர்களுக்கு அறவழி புகட்டினார். புகார் நகரத்துக்கு அப்பால் நாகநாடு 400 யோசனை தூரம் பரந்திருந்தது. இது பூமி நடுங்கும் காலத்து அழியும். இன்றைக்கு ஏழாம் நாள் அழியும். புத்தமுனிவர் ஒருவர் இதனை நாகநாட்டு அரசனுக்கு எடுத்துரைத்தார். அவன் தன் நாட்டு மக்களுடனும், ஆடுமாடுகளுடனும் அவந்தி நாட்டுக் காயங்கரை என்னும் ஆற்றங்கரைக்குச் சென்று தங்கினான். புத்தமுனிவர் சொன்னவாறே புகார் நகரமும், அதனை அடுத்திருந்த தீவாகிய 400 யோசனை நாகநாடும் நிலநடுக்கத்தால் அழிந்துபோயிற்று. நாகநாட்டை வளைவணன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் மனைவி வாசமயிலை. இருவருக்கும் பிறந்த மகள் பீலிவளை. பீலிவளையைச் சோழ இளவரசன் துய்த்தான். சோழனுக்கும் பீலிவளைக்கும் பிறந்த குழந்தையை, புத்தமுனிவன், புகாரிடமிருந்து நாக நாட்டுக்கு வந்து தன்னை வழிபட்ட கம்பளச்செட்டி என்னும் வணிகனிடம் கொடுத்து, இக்குழந்தை சோழன் குழந்தை என்னும் வரலாற்றையும் கூறி, சோழனிடம் கொடுக்கச் சொன்னான். வணிகன் கம்பளச்செட்டி குழந்தையுடன் தாயகம் மீளும்போது அவனது மரக்கலம் புயலில் சிக்கிக் கவிழ்ந்துபோக, குழந்தை மாண்டது. நீந்திப் பிழைத்து வந்த வாணிகன், சோழ அரசன் வடிவேற்கிள்ளி என்பவனிடம் நிகழ்ந்தது கூறினான். சோழன் குழந்தையைக் கடலிலும், கடற்கரையிலும், காடுகளிலும் தேடித் திரியும் துக்கத்தில் இந்திரவிழா கொண்டாட மறந்துவிட்டான். இந்திர விழா புகார் நகரிலும், நாகநாட்டு மணிபல்லவத் தீவிலும் கொண்டாடப்படும். இது கொண்டாடப்படாததால் மணிபல்லவத் தீவிலிருந்த மணிமேகலைத் தெய்வம் சாபமிட்டது. சாபத்தால் புகார் நகரமும், நாகநாட்டு 400 யோசனை நிலப்பரப்பும் கடற்கோளுக்கு இரையானது. மைக்கேல் தோப்பிங்கு மைக்கேல் தோப்பிங்கு (Michael Topping , மைக்கேல் டொப்பிங்(கு) )(1747–1796) மதராசில் (இப்பொழுதுள்ள சென்னையில்) செங்கோட்டையின் தலைமைக் கடல் அளவையராக இருந்தார். ஐரோப்பாவுக்கு வெளிய, இன்று மிகப்பழமையான ஒரு தொழிற் கல்லூரியாக அறியப்படும் கிண்டி பொறியியற் கல்லூரியை இவர் மே 17, 1794 -இல் நிலவளவைக்கான கல்லூரியாக நிறுவினார். அப்பொழுது இக்கல்லூரியில் எட்டு மாணவர்களே இருந்தனர். 1858 -இல், இது குடிசார் பொறியியல் கல்லூரியாகவும், பின்னர் 1861 -இல் பொறியியற்கல்லூரியாகவும் உருப்பெற்றது. தோப்பிங்கு, இந்தியாவின் முதல் முழுநேர தொழில்சார் நில அளவையாளராகப் பணிபுரிந்தார். இந்தியாவின் தென்கிழக்கே உள்ள தொண்டைமண்டலக் கரையோரக் கடல்பகுதிகளில் நில அளக்கைகள் மேற்கொண்டார். வில்லியம் பெற்றி (William Petrie) என்னும் வானவியலாளரை உந்தி அவருடைய கருவிகளைக் கல்லூரிக்கு நன்கொடையாகத் தரச்செய்தார். இதைக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் 1792 இல் ஒரு வானவியல் கூர்நோக்ககம் (observatory) அமைக்க உதவினார். தோப்பிங்கு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கும்பெனியின் வானவியலாளராக அமர்த்தப்பெற்றார். இவர் 1796 -இல் இயற்கை எய்தினார். வெட்டாக் கோடுகள் வடிவவியலில் வெட்டாக் கோடுகள் ("skew lines") என்பவை யூக்ளிடிய முப்பரிமாண வெளியில் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாமலும் அதே சமயம் ஒன்றுக்கொன்று இணையாக இல்லாமலும் அமையும் இரு கோடுகளைக் குறிக்கும். அதாவது வெட்டாக் கோடுகள் இரண்டும் ஒரே தளத்தில் அமையாது. இக்கோடுகளுக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாக ஒரு ஒழுங்கு நான்முகியின் எதிர் விளிம்புகளைக் கூறலாம். ஒரே தளத்தில் அமையும் இரு கோடுகள் கண்டிப்பாக ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் அல்லது ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும். எனவே வெட்டாக் கோடுகள் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களில் மட்டுமே வரையறுக்கப்படுகின்றன. ஒரு சோடி வெட்டாக் கோடுகளில் ஒவ்வொரு கோட்டையும் வரையறுக்கும் இரண்டிரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டால் அவை நான்கும் பூச்சியமில்லாக் கனஅளவுடைய ஒரு நான்முகியை வரையறுக்கும். மறுதலையாக பூச்சியமில்லாக் கனஅளவுடைய ஒரு நான்முகியின் நான்கு உச்சிகளாக அமையும் இரு சோடிப் புள்ளிகள் ஒரு சோடி வெட்டாக் கோடுகளை வரையறுக்கும். எனவே தரப்பட்ட இரு சோடிப் புள்ளிகள் மற்றும் வெட்டாக் கோடுகளை வரையறுக்குமா இல்லையா என்பதைக் காண அப்புள்ளிகளால் அமையும் நான்முகியின் கனஅளவு காண வேண்டும்: இக்கனஅளவு பூச்சியமில்லை எனில் எடுத்துக்கொண்ட நான்கு புள்ளிகளும் இரு வெட்டாக் கோடுகளைத் தரும். இரு கோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் காண அக்கோடுகளின் திசையன் சமன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன: b மற்றும் d -இரண்டிற்கும் செங்குத்தான அலகுத்திசையன் ( |b × d| பூச்சியம் எனில் இரு கோடுகளும் வெட்டாக் கோடுகள் அல்ல மாறாக அவை இணைகோடுகளாக இருக்கும்.) தரப்பட்ட இரு கோடுகளுக்கு இடையேயுள்ள தூரம்: பிலாசுப்பூர் பிலாசுப்பூர் / பிலாஸ்பூர் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: தெருப் பாடகர் தெருப் பாடகர் என்பவர் தமது பாடல் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள அமைப்பின் கொள்கைகளைக் கொண்டு செல்லும் நோக்கத்திலோ தெருக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாடிக் கொண்டிருப்பவர்களைக் குறிக்கும். இப்பாடகர்களில் சிலர் தங்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக தெருக்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் பாடல்களைப் பாடி பொருள் ஈட்டுவதுமுண்டு. பெரும்பாலும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் இத்தொழிலைச் செய்கின்றனர். இவர்கள் தனியாகவோ, தன் துணையுடன் இணைந்தோ, தனது உறவினர்களுடன் இணைந்தோ அல்லது நண்பர்களுடன் இணைந்தோ பாடுகிறார்கள். சிலர் இசையின்றி பாடலை மட்டும் பாடுவர். பெரும்பாலானோர் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இசைக்கருவிகளை உபயோகித்து இசையுடன் பாடலைப் பாடுகின்றனர். பெரும்பாலும் திரையிசைப் பாடல்களையும், மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பக்திப் பாடல்களையும் பாடுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், தொடர்வண்டிகள் மற்றும் சந்தைகளில் இப்பாடகர்கள் தமது பாடும் தொழிலைச் செய்கின்றனர். உமான் சண்டை உமான் சண்டை ("Battle of Uman") என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் எதிராக நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் இடையே நடந்த ஒரு படைமோதல். பர்பரோசா நடவடிக்கையின் பகுதியான இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்றன. ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றுள் தெற்கு ஆர்மி குரூப்பு ஃபீல்டு மார்சல் ரன்ஸ்டெட் தலைமையில் உக்ரைன் பகுதிகளைத் தாக்கியது. ஜூலை மாதம் நடுப்பகுதியில் கீவ் நகர் வரை ஜெர்மானியப் படைகள் முன்னேறிவிட்டன. கீவ் நகர் அருகே அவற்றை எதிர்த்து சோவியத் தென்மேற்குக் களம் படைப்பிரிவு ஒரு எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதனை ஜெர்மானியப் படைகள் எளிதில் முறியடித்துவிட்டன. கீவ் நகரைச் சுற்றி ஜெர்மானியப் படை வளையம் மெல்ல இறுகத் தொடங்க்யது. சோவியத் தென்மேற்குக் களத்தின் உட்பிரிவுகளான 6வது மற்றும் 12வது ஆர்மிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ஜெர்மானியக் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொண்டனர். உமான் நகருக்கு வடக்கிலிருந்து ஜெர்மானிய 1வது பான்சர்குரூப் படைப்பிரிவும் தெற்கிலிருந்து 17வது ஆர்மியும் கிடுக்கியில் இரு கரங்களாக சோவியத் படைகளை சுற்று வளைத்தன. ஆகஸ்ட் 2ஆம் தேதி படைவளையம் இறுகி சோவியத் படைகள் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டுவிட்டன. ஆகஸ்ட் 8ஆம் தேதி உமான் வளையத்தில் சிக்கிக் கொண்ட சோவியத் படைகள் சரணடைந்தன. ஏறத்தாழ 103,000 சோவியத் படைவீரர்கள் போர்க்கைதிகளாயினர். விஜய் பகுகுணா விஜய் பகுகுணா, உத்தராகண்டத்தின் மார்ச்சு 13, 2011 அன்று பதவியேற்ற புதிய முதலமைச்சராவார். இவர் மறைந்த புகழ்பெற்ற விடுதலை இயக்கத் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சரும் ஆன ஹேமவதி நந்தன் பகுகுணாவின் மகனாவார். விஜய் பகுகுணா 15வது மக்களவை உறுப்பினராக உள்ளார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். சியாமலி சியாமலி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். நாகபுரம் நாகபுரம் என்பது ஓர் ஊர். புகார் நகரத்து அரசி, சித்திராபதி, அவளது ஆயம், மணிமேகலை ஆகியோர் அறவண அடிகளிடம் நல்லறம் கேட்டனர். பின்னர் மணிமேகலை புத்தத் துறவிக் கோலத்தில் அந்தரம் வழியாகப் பறந்து சென்றாள். வழியில் ஓர் ஊரின் பொழிலில் இறங்கி இளைப்பாறினாள். அங்கு மாதவ முனிவனை வணங்கி அந்த ஊரைப் பற்றி வினவினாள். மாதவ முனிவன் அந்த ஊரைப்பற்றிச் சொன்னான். இந்திரன் கால்வழியினர் (மருமான்) இந்த ஊரை ஆள்கின்றனர். இந்த ஊரின் பெயர் நாகபுரம். இப்போது ஆள்பவன் பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் (ஆபுத்திரன்). இவன் பிறந்த நாளிலிலிருந்து இவ்வூரில் மழைவளம் பொய்த்ததில்லை. மக்கள் நோயின்றி வாழ்கின்றனர் – என மாதவன் கூறினான். அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் ("All India N.R. Congress" (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி மாநில முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. 2006இல் தனித்து போட்டியிடுகிறது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் வேட்பாளர் இராதாகிருட்டிணன் வெற்றி பெற்றார். தமிழ் கம்ப்யூட்டர் உண்மையின் முகவரி உண்மையின் முகவரி என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு சமுதாய மாத இதழாகும். இதை மு. அஸ்ஸாதிக் என்பவர் வெளியிடுகிறார். அவரே ஆசிரியராகவும் உள்ளார். இவர் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார். நல்ல சமூக சிந்தனை கொண்ட இதழ் சமுதாய மாற்றத்திற்கு தேவை என உணர்ந்து உண்மையின் முகவரி என்ற மாத இதழை வெளியிட்டு வருகிறார். மு. அஸ்ஸாதிக் என்பவர் பாத்திமா என்கிளேவ், எண்.3, இராமகிருஷ்ணாபுரம் 3வது தெரு, மேற்கு மாம்பலாம், சென்னை - 600 033 என்ற முகவரியிலிருந்து வெளியிடுகிறார். பள்ளிவாசல் டுடே பள்ளிவாசல் டுடே என்ற இஸ்லாமிய செய்தி வார இதழ் தமிழகத்திலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் இசுலாமிய சமுதாயத்திற்கு ஒரு இணைப்பு பாலமாக செயல்படும் நோக்கில் இந்த வார இதழை ஆலீம் மு. அகமதுஷா என்பவர் சென்னையில் இருந்து வெளியிடுகிறார். பள்ளிவாசல்.காம் என்ற பெயரில் இது மின்னிதழாகவும் வெளிவருகிறது. பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) பிலாசுப்பூர் (ஆங்கிலம் - Bilaspur, Himachal Pradesh)என்ற நகரம், இந்திய மாநிலமான இமாசலப் பிரதேசத்தின், பிலாஸ்ப்பூர் மாவட்டத்திலுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2208 அடிகள் உயரமுடையதாக உள்ளது. கோடைகாலத்தில் வெயில் கடுமையாகவும், குளிர்காலத்தில் பனி அதிகமாகவும் இருக்கும் காலநிலைச்சூழலைப் பெற்றிருக்கிறது. சத்லெச்சு ஆறும், கோபிந்து சாகர் (Gobind Sagar) அணையும் இங்கு இருக்கிறது.ஒவ்வொரு வருடமும், அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அணை நிரம்பி காணப்படும். அதனால், அம்மாவட்ட சுற்றுலாத் துறையினர் பல்வேறு நீர்சறுக்கு விளையாட்டுகளை நிகழ்த்துவர். இதன் மக்கள் தொகை , 2005 கணக்கின்படி, 13058 ஆகும். அதில் 50.07% ஆண்கள், 49.93%. பெண்கள் அடங்குவர். 7 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர், தலைநகராக திகழ்ந்தது. இதனை காலுர்(Kahlur) என்றும் அழைப்பர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்த ஊர், பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது.1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அக்டோபர் 12 ஆம் நாளன்று, 1948 ஆம் ஆண்டுஇதனை ஆண்ட அரசர் (ler, HH Raja Sir Anand Chand) ,இந்திய அரசோடு, தன் நிலப்பகுதிகளை இணைத்தார். இந்திய தலைமை ஆளுநரால் இது தனிமாநிலமாக சூலை1ஆம் நாளன்று,1954 ஆம் வருடத்தில் இருந்தது.பின்னர், இந்திய நாடளுமன்றத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டப்பகுதியாக அறிவிக்கப்ப்பட்டது. கோபிந்து சாகர் அணை உருவாக்கலின் போது, இந்த பண்டைய ஊர், சத்லஜ் ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் அருகே இந்த புதிய நகரம் உருவானது. இரண்டாம் உலகம் (திரைப்படம்) இரண்டாம் உலகம் = செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா செட்டி நடித்து 2013 நவம்பர் 22 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்.. இப்படத்திற்கு ஹாரிஷ் ஜயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார். இருவேறு இணை உலகுகளில் நடக்கும் கதையே இரண்டாம் உலகம். பூமிக்கு இணையான வேறொரு உலகில் காதல் அறவே இல்லை. ஆதலால், அங்கே பூக்கள் பூப்பதே இல்லை. இவ்வுலகிற்குக் காதல் மீண்டும் வர, பூக்கள் பூக்க ஏங்குகிறாள் அம்மா எனும் மந்திர சக்தி மிகுந்த பெண். பூமியில் நடக்கும் கதையில் மது பாலக்ருஷ்ணன் (ஆர்யா) எனும் இளைஞனை ரம்யா(அனுஷ்கா செட்டி) எனும் பெண் மருத்துவர் காதலிக்கிறார். தன காதலை அவள் அவனிடம் சொல்ல, அவன் அதை மறுக்கிறான். பின்பு அவளது பணிகளைக் கண்டு காதல் கொள்ளும் மது, அவளிடம் தன காதலையும் சொல்கிறான். இதற்குள் தனக்கு நிச்சயம் ஆனதை அவள் சொல்ல, மது விரக்தியடைகிறான்.கோவாவிற்குக் கல்லூரி சுற்றுலா செல்லும் ரம்யாவை பின்தொடரும் மது, அங்கே அவளைக் கவர்கிறார். ரம்யா மதுவின் காதலை ஒப்புக்கொண்ட அன்றே திடீரென இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் இருக்கும் மதுவை ஓர் நாய் அவள் இறந்த இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறது. அங்கே மதுவின் ஊனமான தந்தை அவனிடம் ரம்யாவைத் தேடிச் செல்ல சொல்லி மறைந்து விடுகிறார். அக்கணமே தன் தந்தை இறந்த செய்தியை மது அறிகிறான். சோகத்தில் மூழ்கி நாடோடி போல் வாழும் அவனை, ஓர் ஆளில்லா மகிழுந்து மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே, அந்த வண்டியை ஓட்ட முயலும் மது படுகாயம் அடைந்து மயக்கத்திற்குச் செல்கிறான். பூமியின் இணை உலகில் நடக்கும் நிகழுவுகள் இக்கதையுடன் பிணைந்து நடக்கின்றன. அம்மா எனும் தெய்வத்தை வணங்கும் அந்த இணை உலகில், மறவான் (ஆர்யா) என்ற இளைஞன் , வர்ணா (அனுஷ்கா செட்டி) என்ற பெண்ணை மணம் புரிய எண்ணுகிறான். படைத் தளபதியின் மகனான மறவான் நண்பர்களுடன் குடித்து மகிழ்ச்சியாக திரிகிறான். மற்றும், அவனிடம் தான் எதிர்ப்பார்த்த வீரம் இல்லையென தந்தை வேதனைப்படுகிறார். வர்ணா காளான்களை அறுவடை செய்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் ஓர் வீரப்பெண். அம்மா தெய்வத்தை காக்க வீரர்ப்படை தேர்ச்சி நடக்கும் பொழுது வர்ணா அதில் பங்கேற்க முயல்கிறாள். அவளைக் கண்ட அரசன் அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கிறான். வர்ணாவை விடுவிக்க அரசனிடம் கோருகிறான் மறவான். அதற்கு, அரசன் காட்டில் வாழும் சிங்கத்தின் தோலை கேட்கிறான். வீழ்த்த முடியாத அந்த சிங்கத்துடன் போரிட்டுத் தோலுடன் திரும்பிய மறவானுக்கு, வர்ணாவை அரசக்கட்டளைக்கு இணங்க மணமுடிக்கின்றனர். சுதந்திரமாக இருக்க விரும்பும் வர்ணா அரசரை கொள்ள முயல்கிறாள். ஆதலால், அவளை வனவாசத்திற்கு அனுப்புகின்றனர். இதனால் விரக்தியடைந்து குடிக்கும் மறவான், நண்பர்களின் சவாலை ஏற்று, சுவாமிமலை எனும் ஆபத்தான மலையை ஏறுகிறான்.இதற்கிடையே இரண்டு உலகையும் இணைக்க முயற்சிக்கும் அம்மா, மலை உச்சியில் இருக்கும் மறவானின் கண்களுக்கு கோவாவில் இருக்கும் மதுவை தெரிய வைக்கிறாள். மாயவலையின் மூலம் பூமிக்கு வரும் மறவான் மதுவை காப்பற்றிக் கொண்டு அவன் உலகிற்கே திரும்ப செல்கிறான். மதுவிற்குச் சிகிச்சை அளித்து அவனை ஊருக்கு அறிமுகப் டுத்திகிறாள் அம்மா. அங்கே ரம்யாவைப் போல உருவம் கொண்ட வர்ணாவை காணும் மது, அவள் மீது காதல் கொள்கிறான். இதனால் அந்த உலகெங்கிலும் பூக்கள் மலர்கின்றன. இதனிடையே வர்ணாவை வீட்டில் தங்கவைத்ததற்காக மரவானுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. அம்மாவை எதிரி நாட்டு படைகள் கடத்தவே, அவளைக் காப்பாற்ற மறவான் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான். ஆனால், எதிரிப்படையிடம் மாட்டிக்கொள்கிறான். அம்மா மற்றும் மறவானை காப்பாற்ற மது மற்றும் வர்ணா செல்கின்றனர். இறுதியில், மது மற்றும் மறவான் இருவரில், யாரை வர்ணா காதலிக்கிறாள் என்பதே படத்தின் முடிவு. "இரண்டாம் உலகம்" - இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். இப்படத்தின் ஏழு பாடல்களும் கவிஞர் வைரமுத்து எழுதினார். படத்தின் காட்சியமைப்புகள் அனைத்தும் காதலை மையக் கருவாக் கொண்டுள்ளதால், பாடல்களும் அதற்கேற்ப அழகு சேர்த்துள்ளது. இப்படத்தில், திரு.எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய "என் காதல் தீ" என்ற பாடலை 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டது. மேலும், இப்படத்தில் தனுஷ் பாடிய "பழங்கல்லா" என்ற பாடல் 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 4ம் நாள் சூரியன் பண்பலை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. படத்தின் பாடல்கள் அனைத்தும், 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 13ம் நாள் வெளியாயின. சில காரணங்களால், ஹாரிஸ் ஜெயராஜ் படத்திலிருந்து விலக, படத்தின் பின்னணி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார். இத்திரைப்பட பாடலின் தெலுங்கு பதிப்பு ("வர்ணா") 2013, அக்டோபர் 26ம் தேதி வெளியாகி. இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு பதிப்பின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் சந்திரபோசு எழுதினார். லிட்டில் மிஸ் சன்ஷைன் (திரைப்படம்) லிட்டில் மிஸ் சன்ஷைன் (Little Miss Sunshine) 2006 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும்.ஆல்பர்ட் பர்கர், டேவிட் பிரேன்ட்லி, பீட்டர் சராப், மார்க் தர்டில்டாப், ரான் எர்க்ஸ்சா ஆகியோரால் தயாரித்து ஜோனதன் தேடன் மற்றும் வாலறி பாரிஸ் ஆல் இயக்கப்பட்டது. கிரேக் கின்னர், டோனி கொல்லேட், அபிகெயில் பிரெஸ்லின், சுடீவ் கேர், பவுல் தானோ, ஆலன் ஆர்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டு அகாதமி விருதுகளை வென்றது. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினைந்து வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டுள்ளது.12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது.புதிய திருப்பம் பேகுவ சட்டம் இயற்றபட்டது. இந்தச் சட்டத்தை மராட்டியத்தைச் சேர்ந்த முனைவர் (டாக்டர்) பண்டார்க்கர் போன்றவர்கள் ஆதரித்து கருத்து வெளியிட்டனர். நீதிபதி ராணடே, இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஆதரவாகத் தன்னுடைய சர்வஜன சபாவில் தீர்மானமே நிறைவேற்றினார். இவர்கள் சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். இவர்களையும் திலகர் கடுமையாக விமர்சித்தார். சுவாமி விவேகானந்தர் இந்த சட்டத்திற்கு ஆதரவான சீர்திருத்தக் கருத்தைக் கொண்டிருந்தார். தமது கடிதங்களில் உறுதியான தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களுக்கு பதினொரு வயது ஆனதும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டுப் போவார்களாம். நண்பா, நாம் என்ன மனிதர்களா? மனு என்ன சொல்கிறார்? ’கன்யாப்யேவம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத:’ [-பெண்களையும் மிகுந்த முயற்சியுடன் வளர்க்க வேண்டும், கல்வியளிக்க வேண்டும்.]ஆண்கள் எப்படி முப்பது வயது வரையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறார்களோ கல்வி பெறுகிறார்களோ, அதேபோல் பெண்களுக்கும் செய்விக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உங்கள் பெண்களின் நிலையை உயர்த்த முடியுமா? அப்படியானால் நம்பிக்கை உண்டு. இல்லாவிட்டால் மிருக நிலையில் அப்படியேதான் இருப்பீர்கள். ...பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக்கும் இதுதான் ஆணிவேர். நண்பரே, இது ஒரு மாபெரும் பாவம். சிறுவயது திருமணத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஒரு சட்டம்போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் எழுப்பிய கூச்சலை நினைத்துப் பாருங்கள், என்ன கேவலம்! நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் தலையிடவே செய்யும், அதைத்தான் அரசாங்கம் விரும்பவும் செய்கிறது...10 வயது பெண்ணிற்கு, தொப்பை பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்து, பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். என்ன பயங்கரம்!.. ...எட்டு வயது சிறுமி முப்பது வயதான ஒருவனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்; சிறுமியின் தாய்தந்தையர் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். இதை எதிர்த்து யாராவது வாய் திறந்தால் போதும், ’ஆ, நமது மதம் போய்விட்டது’ என்று கூக்குரலிடுகின்றனர். 8 வயது சிறுமியைத் தாயாக்கி, அதற்கு விஞ்ஞான விளக்கமும் கூற முற்படுவோரிடம் என்ன மதத்தை எதிர்பார்க்க முடியும்? இளமை மணம் என்ற இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை என் வலிமை கொண்டமட்டில் நான் நசுக்கி ஒழிப்பேன்...குழந்தைகளுக்குக் கணவனைத் தேடித் தருவதாகிய இத்தகைய செயல்களில் நான் எவ்வித பங்கும் கொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது. இறையருளால், நான் அதைச் செய்ததுமில்லை, செய்யப் போவதும் இல்லை...குழந்தைக்குக் கணவனைத் தேடித் தருகின்ற ஒருவனை நான் கொல்லவும் செய்வேன். அன்றைய கால கட்டத்தில் பாலகங்காதர திலகர் தன்னுடைய கேசரி இதழில் இது குறித்த மிகக் கடுமையான கண்டனங்களையும், கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட ஆங்கிலேயர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். அவருடைய எழுத்துகளுக்கு, அன்று இந்தியாவில் இருந்த இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. இது போன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார் திலகர். மலபாரி, பார்சி மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்துமதப் பண்பாடுகளில் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்ற திலகரின் கூற்றுக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது. இச்சட்டத்துக்கு ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. மீண்டும் 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற இந்து மதவாதிகள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். 'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’ என்றார் ஆச்சார்யா. அச்சட்ட முன்வடிவை, மெய்யறம் என்னும் தனது நூலில் வ. உ. சிதம்பரம்பிள்ளை வரவேற்று எழுத, அதே நூலின் முன்னுரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண்டித்து எழுதினார். இப்படிப் பல்வேறு ஆதரவு, எதிர்ப்புகளுக்குப்பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றோரும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற கவிஞர்களும் பெண் விடுதலைக்காக எழுதினர். 1926 அதன் பிறகு இந்தியாவில் பெண் விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன. அதன் விளைவாக, பெண்கள் பலர் எழுச்சி பெற்றனர். சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையை தடை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பினர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினர். இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929-இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ' ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா' என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் 'சார்தா சட்டம்' என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பர் 28-ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு, 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும். நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை. பிசுமில் மாவட்டம் பிசுமில் என்பது துருக்கி நாட்டில் தியார்பகிர் மாகாணத்திலுள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராம் பிரசாத் பிசுமில் காலத்தில் துருக்கியின் முதல் அதிபராக இருந்த கலி முகமத் கேமல் பசா அலியாசு என்பவரை பற்றி "பிரபா" என்ற இந்தி இதழில் "விசயி கேமல் பசா" என்ற கட்டுரை எழுதினார். அதை கௌரவப்படுத்தும் விதமாக கேமல் 1936ல் துருக்கி நாட்டில் தியார்பகிர் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திற்கு பிசுமில் மாவட்டம் என்று பெயர் வைத்து அதன் கீழ் இந்தியாவின் உன்னத போராளி மற்றும் தேசபக்தியுடைய கவிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தார் பிசுமில் பிசுமில் என்ற பெயரிலுள்ள கட்டுரைகள் இரவுக் காவல் (ஓவியம்) இரவுக் காவல் (Night Watch) என்பது, ஒல்லாந்த ஓவியர் ராம்பிராண்ட் வான் ரீன் (Rembrandt van Rijn) என்பவரால் வரையப்பட்ட புகழ் பெற்ற ஓவியம் ஆகும். இது தற்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்சுடர்டாமில் உள்ள "ரீக்சுமியூசியம்" என்னும் அரச அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம் இதுவே. அத்துடன் உலகின் மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் இது மதிக்கப்படுகின்றது. இவ்வோவியத்தின் புகழுக்கு மூன்று விடயங்கள் முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஒன்று, இதன் அளவு. இரண்டாவது, ஒளியையும் நிழலையும் ஓவியத்தில் கையாண்டிருக்கும் விதம். மூன்றாவது, நிலையான படம் என்பதற்குப் புறம்பாக இதில் காணப்படும் இயக்க உணர்வு. மிகவும் பெரிய ஓவியமான இதன் அளவு 363 சமீ x 437 சமீ (11 அடி 10 அங். x 14 அடி 4 அங்.). இந்த ஓவியம் 1642 ஆம் ஆண்டில், ஒல்லாந்தரின் பொற்காலம் என்று சொல்லப்படும் ஒரு காலப் பகுதியில் வரைந்து முடிக்கப்பட்டது. இவ்வோவியத்தின் பெயர் வரக் காரணமான நகர் காவலர் பிரிவை அதன் தலைவரான பிராண்சு பானிங் கோக், லெப்டினன்ட் வில்லெம் வான் ரூய்ட்டென்பர்க் என்போர் வெளியே நடத்திச் செல்வதை இவ்வோவியம் காட்டுகிறது. ஒளியையும் நிழலையும் திறமையாகப் பயன்படுத்தி ஓவியத்தில் காணும் முக்கியமான பாத்திரங்கள் மீது ஓவியர் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவ்வோவியம் வரையப்பட்டதற்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியிலும் இதன் மீது சற்று மங்கல் நிறமான "வார்னிசு" எனப்படும் ஒளிபுகவிடும் பூச்சு பூசப்பட்டிருந்தது. இதனால், இப்படத்தில் காணப்படுவது ஒரு இரவுக் காட்சி என்பது போன்ற பிழையான தோற்றம் இருந்துவந்தது. 1940 ஆம் ஆண்டில் இப் பூச்சு அகற்றப்பட்டது. 1715 ஆம் ஆண்டில் இது அதன் முன்னைய இடத்திலிருந்து அம்சுட்டர்டாம் நகர மண்டபத்துக்கு இடம் மாற்றப்பட்டபோது இதன் நான்கு பக்கங்களிலும் இருந்து பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டன. புதிய இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் பொருந்துமாறு அதன் அளவைக் குறைப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வாறு செய்வது வழமையாக இருந்தது. இதனால் ஓவியத்தின் வலப் பக்கத்தில் இருந்த இரண்டு மனித உருவங்களும்; மேற்புறத்தில் வளைவின் மேற்பகுதி, கைப்பிடிச்சுவர், படிக்கட்டின் விளிம்பு என்பனவும் அகற்றப்பட்டன. கைப்பிடிச் சுவரும், படிக்கட்டும், ஓவியத்துக்கு முன்னோக்கிய இயக்க உணர்வைக் கொடுப்பதற்காக ஓவியரால் பயன்படுத்தப்பட்டவை. இப்போது இலண்டன் தேசிய ஓவியக் கூடத்தில் உள்ள இவ்வோவியத்தின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்று இவ்வோவியத்தின் பழைய நிலையைக் காட்டுகிறது. இந்த ஓவியத்தைக் குடிமக்கள் காவல் படையின் தலைவரும் அதன் 17 உறுப்பினர்களும் சேர்ந்து வரைவித்தனர். எனினும், ஓவியத்தின் பின்னணியில் படைத் தலைவர் தவிர்ந்த 18 பெயர்கள் உள்ளன. ஓவித்தில் காணப்படும் தோற்கருவி வாசிப்பவர் காவற்படையைச் சேராதவர். ஊதியம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தப்பட்டவர். இதனால் பணம் எதுவும் கொடுக்காமல் இலவசமாகவே ஓவியத்தில் இடம் பெற்றார். ஓவியத்தில் மொத்தமாக 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஓவியத்தை வரைந்த ரெம்பிரான்டுக்கு 1,600 கில்டர்கள் பணம் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இது ஒரு பெரிய தொகை. அக்காலத்தில் வெவ்வேறு ஓவியர்களால் ஆயுதப் படையினரை மையப்படுத்தி வரையப்பட்ட ஏழு ஓவியங்களுள் இதுவும் ஒன்று. பொதுமக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக, இதன் புகழ் சரியத் தொடங்கியது. கே.எல்.எம் என்ற ஒரு விளம்பர நிறுவனமானது 1967ம் ஆண்டு, இரவுக்காவல் ஓவியத்தை மையப்படுத்தி ஓவியம் ஒன்றை வரைந்தது. அதில், இரவுக்காவல் என்ற ஒப்பற்ற ஓவியத்தை வரைந்த ரெம்பிராண்ட் என்பவர், ஓவியத்திற்காக தான் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் கடைசி வரை வாழ்ந்தார் என சித்தரித்தது. ஆனால் ரெம்பிராண்டின் வாழ்க்கையில், அவரது ஓவியத்தை விமர்சித்ததாக எந்த ஒரு பதிவும் காணப்படவில்லை. இந்த ஓவியத்தினால் அவருக்கு பெரும் சரிவு ஏற்படுத்தினாலும், அவர் உபயோகப்படுத்திய வண்ணக்கூறுகள் யாவும் பிற ஓவியர்களால் பின்பற்றப்பட்டது. 1640க்குப் பின்னர், பளிச்சென்ற நிறங்கள் மற்றும் தெய்வீகமான முறையில் வரையப்படும் ஓவியங்களையே அதிகமானோர் விரும்பினர். 1911ம் ஆண்டு சனவரி மாதம் 13ம் நாள் ஒரு மனிதன், தச்சரின் கத்தியைக் கொண்டு ஓவியத்தை கிழித்தெறிந்தான். 1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் நாள், வேலையிழந்த பள்ளி ஆசிரியர் ஒருவரால் ரொட்டியை வெட்டும் கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டது. இதனை சரி செய்ய நான்கு ஆண்டுகளாயிற்று.ஆனாலும் ஓவியத்தில், ஒட்டுப்போட்ட அடையாளங்கள் தெரியவே செய்தன. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் நாள் ஒரு மனிதன், ஒரு புட்டியில் மறைத்து கொண்டு வந்த அமிலத்தை ஓவியத்தின் மீது தெளித்தான். காவலர்கள் உடனடியாக வந்து ஓவியத்தின் மீது தண்ணீரை தெளித்தனர். அமிலமானது, ஓவியத்தின் வெளிப்புறத்தை மட்டும் பாதித்திருந்ததால், அதை சுலபமாக மீட்டெடுத்தனர் அக்டோபர் 26ம் தேதி 2011ம் ஆண்டன்று, ரீச்சு அருங்காட்சியகத்திலுள்ள இந்த ஓவியத்திற்கு புதிய ஒளிகாலும் இருமுனையம் விளக்குகள் பொருத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஓவியத்தின் நுணுக்கங்கள் தெளிவாக வெளிப்பட்டது. பிலிப்ஸ் லைட்டிங் என்பவர் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கத்தை, அருங்காட்சியக இயக்குனர் விம் பிஜ்பெஸ், தலைவர் பிலிப்ஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் ப்ரான்ஸ் வேன் ஹூடன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)), "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ)" (Defence Research and Development Organisation (DRDO) இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இது இந்தியாவில் சென்னையை அடுத்த ஆவடியில் அமைந்துள்ளது. இந்த முதன்மை ஆய்வகம் கவச போர் ஊர்திகள் (Armoured fighting vehicles) மற்றும் பீரங்கி வண்டிகளின் வளர்மானத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்பு, பாகிஸ்தானில் "சக்லாலா" என்ற இடத்தில் அமைந்திருந்த "பொறிமுறை போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் அலுவலகம்" (Chief Inspectorate of Mechanical Transport Establishment (MTE) மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அஹமதுநகருக்கு இடம் பெயர்ந்தது. இது "ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், அகமதுநகர்" (Vehicle Research & Development Establishment (VRDE), Ahmednagar) என்று பெயர் மாற்றப்பட்டது. சென்னை ஆவடியில் 1965 ஆம் ஆண்டு "விசயந்தா" (Vijayanta MBT) போரூர்தியினை உற்பத்தி செய்வதற்காக "கனரக போரூர்தித் தொழிற்சாலை" (Heavy Vehicles Factory (H.V.F) தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து "ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக" ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஒரு "பிரிகை" (detachment), அகமதுநகரிலிருந்து பிரிந்து ஆவடியில் தொடங்கப்பட்டது. ஆவடியில் இயங்கிய இந்தப் பிரிகை 1976 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முழுமையடைந்த ஒரு டி ஆர். டி. ஒ ஆய்வமாக வளர்ச்சி பெற்று "போரூர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்" (Combat Vehicles Research and Development Establishment) என்று பெயர் மாற்றம் பெற்றது. கவச போரூர்திகளை வடிவமைக்கும் பொறுப்பும் பெற்றது. பாதையிடு போரூர்திகள் (tracked combat vehicles) மற்றும் சிறப்புப் பாதையிடு ஊர்திகளையும் (specialized tracked vehicles) வடிவமைத்து முன் மாதிரிகளை (prototypes) உருவாக்கும் பணியினை சி.வி.ஆர்.டி.இ பெற்றது. சி.வி.ஆர்.டி.இ குறிப்பிட்ட வானூர்தி துணையமைப்புகளான வானூர்தி பொறி (எஞ்சின்) மற்றும் நீர்மவியல் பொறிகளையும் (hydraulic systems) வடிவமைத்துள்ளது. மற்ற டி.ஆர்.டி.ஒ ஆய்வகங்களைப் போல "படைத்துறை சார்ந்த ஆயுதங்கள் வடிவமைப்பு" மட்டுமல்லாமல் "படைத்துறை சாராத தொழில் நுட்பங்களையும்" சமுதாயம் பயனுறும் வகையில் மேம்படுத்தியுள்ளது. இந்த ஆய்வகத்தின் அன்மைய திட்டம் "ஆளில்லா பாதையிடு நிலவூர்திகளை" (Unmanned Ground Vehicles of the tracked category). வடிவமைப்பதாகும் சி.வி.ஆர்.டி.இ ஆய்வகத்தின் முதன்மையான பணி அர்ஜுன் என்ற பெயரில் முதன்மைக் கவச போரூர்திகளை உருவாக்குவதாகும். [[[[இந்திய தரைப்படை|இந்தியப் தரைப்படைத்துறை]] 248 அர்ஜுன் ஊர்திகளுக்கு "வழங்கீட்டு ஆணை" (supply order) பிறப்பித்துள்ளனர். இந்த நிறுவனம் உருவாக்கிய சில ஊர்திகளிவை: கவச போரூர்த்திகளுடன் தொடர்புடைய பல தொழில்நுட்பங்களில் சி.இ.வி.ஆர்.டி.இ பங்காற்றி வருகிறது. இந்த ஆய்வகத்தில் கவச போரூர்திகளுக்கான "தன்னியக்கச் செலுத்தம்" (Automatic transmissions for Armored Fighting Vehicles) பற்றி ஒரு தனி துறை நிறுவி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தன்னியக்கச் செலுத்தம் 1500, 800, 150 "குதிரைத்திறன்" (horsepower) அளவுகளில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனோடு தொடர்புடைய துணையமைப்புகளான: போன்ற பலவற்றையும் வடிவமைத்துள்ளனர். [[பகுப்பு:இந்திய அரசு அமைப்புகள்]] [[பகுப்பு:இந்திய படைத்துறை]] பாரிஸ் ஒப்பந்தம் (1814) பரிஸ் ஒப்பந்தம் 1814 என்பது 1814 பிரான்ஸ் நாட்டிற்கும் ஆறாவது கூட்டணிக்கும் இடையே 1814 ஆம் ஆண்டு மே மதம் 30 ஆம் நாள் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் மூலம் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் புருசியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் மீது தொடுத்த போரில் அமைதி ஏற்பட்டது. ஆறாவது கூட்டணியின் போர் என்பது நெப்போலியனுக்கு எதிராக நடந்த நெப்போலியப் போர்களில் ஒன்றாகும். முகமது அலி முகமது அலி என்ற பெயரிலுள்ள கட்டுரைகள் முதலாம் பிரஞ்சு பேரரசு முதலாம் பிரஞ்சு பேரரசு அல்லது பிரஞ்சு பேரரசு அல்லது நெப்போலியனின் பேரரசு (French: Empire Français) என்பது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கங்களில் நெப்போலியன் பொனபார்ட் எனப்படும் முதலாம் நெப்போலியனால் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட பேரரசு ஆகும். நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாளில் முடி சூட்டிக்கொண்டார். 1803 முதல் 1815 ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பிராஞ்சு பேரரசிற்கும் இடையே பலமுறை போர் மூண்டது. நெப்போலியப் போர்கள் நெப்போலியப் போர்கள் என்பது நெப்போலியன் தலைமையிலான பிரான்சிற்கும் கூட்டணி நாடுகளுக்கும் இடையே 1803 ஆம் ஆண்டிலிருந்து 1815 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த பல்வேறு போர்களைக் குறிக்கும். நெப்போலியனுக்கு எதிரான கூட்டணியில் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் பிரசியா முதலிய நாடுகள் இருந்தன. உமறு இப்னு அல்-கத்தாப் உமர் இப்னு அல்-கத்தாப் (அரபி: -عمر بن الخطّاب) எனும் இயற்பெயர் கொண்ட உமர்(ரலி) கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களுள் முக்கியமானவரும் ஆவார். உமர்(ரலி) முகம்மது நபி(சல்)யின் ஆலோசகரும் தோழருமாவார். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவரது மகளை மணந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கு மாமனார் முறையுமாவார்கள். அஸ்ரதுல் முபஸ்ஸிரீன்கள் எனப்படும் சுவர்க்கத்துக்கு நன்மாராயங் கூறப்பட்ட பதின்மருள் ஒருவராவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவர் கிபி 634 முதல் கிபி 644 வரை ஆட்சி செய்தார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இசுலாமியக் கலீபகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து, இவரது ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் அதன் கீழ் வந்தன. முஹம்மது நபியை விட வயதில் இளையவரான உமர்(ரலி) மக்காவிலே பிறந்தவர். அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. கி.பி. 586-ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பர். துவக்கத்தில் உமர்(ரலி), முகமதின் புதிய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். நபியின் ஆலோசகர்களில் ஒருவராகித் தன் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார். இவர் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தில் கந்தமா,கத்தாப் ஆகியோருக்கு மகனாக கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்ததாக கூறப்படுகிறது. முகமது நபியை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூன்று மனைவிகள் முதலாவது மனைவியின் பெயர் கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன். இவருக்கு அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய். இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார். முகமது நபி(சல்) தமக்குப் பின்னால் யார் பதவிக்கு வர வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே கி.பி. 632-ல் காலமானார். உடனேயே தயக்கம் எதுவும் இன்றி முகம்மதின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர்(ரலி) பதவி ஏற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் பதவி போட்டி தவிர்க்கப்பட்டது. அபூபக்கர்(ரலி) முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். கலீபா அபூபக்கர்(ரலி) வெற்றிமிக்க தலைவராக விளங்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் பணி புரிந்துவிட்டு அவர் காலமானார். எனினும் அவர் நோயுற்றிருக்கும் பொழுது மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்.. அதன்படி இவர்ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல்ஆகிர் 23-ந்தேதி (கி.பி:633 ஆகஸ்ட் 23ந்தேதி) பதவியேற்றார். அபூபக்கரைப் போலவே உமரும் நபிகளின் மாமனார் ஆவார். முதலில் இவர் முஹம்மது நபியை இறைத்தூதர் என அங்கீகரிக்கவில்லல முஸ்லிம்களின் பெரும் விரோதியாக இருந்தார். .முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துன்பங்களை தந்துவந்தார். ஒருநாள் நபியை கொன்று விடுவதாக உருவியவாளுடன் சென்றவர் .வழியில் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்த தனது சகோதரியிடமிருந்த குர்ஆன் வசனங்கள் எழுதியிருந்த காகிதத்தை வாசித்ததும் உண்மை உணர்ந்து இஸ்லாத்தை தழுவினார். இவர் இஸ்லாத்தை தழுவிய பின்னர் இஸ்லாமியருக்குப் பலம் அதிகரித்தது உமறு கி.பி. 634-ல் பதவியேற்று 644 வரை ஆட்சி செய்தார். அவரைப் பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் கத்தியால் குத்திவிட்டான். மரணப் படுக்கையில் இருந்த உமறு தமக்குப் பின் பதவிக்கு வருவோர்களை தேர்ந்தெடுக்க ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ஆறு பேர்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஏற்பாடு செய்தார். இவ்வாறாகப் பதவிக்கான போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலிபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார். உமறுடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான் அராபியர்களுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமறு பதவியேற்ற சிறிது காலத்தில் அப்போது பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றிகண்டார். அதே ஆண்டு தமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப்[ பின்னர் ஜெருசலம் சரணடைந்தது. கி.பி. 641-க்குள், பாலஸ்தீனம் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றிகொண்டு இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர். 639 -ல் பைசாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது. எத்தகைய சணடையிலும் அரபிய முஸ்லிம்கள் 50,000 நபர்களுக்குமேல் பங்கேற்க வில்லை. ஆனால் எதிரிகளின் படையில் 2 லட்சத்துக்குமேல் குழுமியிருந்த யுத்தங்களிலும் சொற்பகாலத்தில் பெரும் வெற்றி பெற்றது ஒரு அற்புதச்செயலாகும். உமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது அராபியர்கள் தாக்குதல் தொடங்கியிருந்தனர். கி.பி. 641-க்குள் ஈராக் முழுவதும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுப்பைத் தீவிரப்படுத்தியது. நஹாவந்துப் போரில் கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமறு 644-ல் காலமான போது கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டிருந்தது. உமரின் பத்தரை வருட ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் 22,51,030 சதுர மைல் பரப்பளவுள்ள நாடுகளை கைப்பற்றியது. அக்கால கட்டத்தில் உலகில் இஸ்லாமிய அரசாங்கமே மிகப் பெரிய அரசாங்கமாக திகழ்ந்தது.. உமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்பிரிக்கா நோக்கி முன்னேறின. உமறுவின் வெற்றிகள் பரந்ததாக மட்டுமல்லாமல் அவை நிரந்தரமானதாகவும் இருந்தன. ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்ற போதும் இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் அவ்வாறு மீட்டுக்கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையான அரபு மயமானதுடன் இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன. தமது அரபியப் படைகள் வெற்றிகொண்ட இந்தப் பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்யத் தக்க சட்ட திட்டங்களை உமறு வகுத்தார். அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகிக் கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டுமென்றும் உமறு முடிவெடுத்தார். பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும். இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேறுமாறு செய்யக்கூடாது என்றும் வழி செய்தார். எனினும் முஹம்மது நபி அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமறு ஒரு முக்கியக் காரணமானவராக விளங்கினார். கிபி 644-ம் ஆண்டு காலை நேரத் தொழுகையை நடத்திகொண்டிருந்த போது முஸ்லிம் போல் வேடம் தரித்த பைரோஸ் என்ற பாரசீக அடிமையால் குருவாளால் ஆறுமுறை குத்தப்பட்ட உமர் மூன்று நாட்களுக்கு பின் மரணமானார்.. இறக்கும் முன் இவர் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப் பிந்திய கலீபாவாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் பணித்தார். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான் அவர்கள் அடுத்த கலீபாவாக அந்தக் குழுவினராற் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இறந்த பின்னர் இவரின் உடல் மதீனாவில் முகம்மது நபியின் கல்லறைக்கும் அபூபக்கர் (ரலி)யின் கல்லறைக்கும் அருகே அடக்கம் செய்யப்பட்டது. தனது ஆட்சிகாலத்தில் கூபா,புஸரா உள்ளிட்ட நகரங்களை நிர்மாணித்தார். அனைத்து நகரங்களிலும் நீதிபதி (காஜி‌‌‌‌‌‌‌)களை இவரே முதன்முதலில் நியமித்தார். கடிதங்களை எடுத்துச்செல்ல உதவியாக அஞ்சலகங்களை ஏற்படுத்தினார். ஹிஜ்ரி 18-ல் பாரசீகர்களில் நாணய வடிவில் நாணயங்களை வெளியிட்டார். இவரின் ஆட்சியில் வேத வசனங்கள் மறைச் சட்டங்கள் முழு மலர்ச்சி பெற்றன. சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களும் இறைநீதியின் நிழலில் நிம்மதியான வாழ்வை அனுபவித்தனர். இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மைக்கேல் ஹெச். ஹார்ட், அவர்கள் எழுதிய "நூறு பேர்".(புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை) மீரா பதிப்பகம்- 2008 இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு 1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன. நேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" ("instrument of surrender") கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது. பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" ("Potsdam Statement") வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று. இந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. "மான்ஹாட்டன் செயல்திட்டம்" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. "சிறு பையன்" ("Little Boy") என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், "பருத்த மனிதன்" ("Fat Man") என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன. இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன. ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” ("little boy") என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” ("Fat man") என்ற குறுப்பெயர் சூட்டினர். ‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை. ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது. ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது. மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் "சரண் ஆவணத்தில்" ("Japanese Instrument of Surrender") கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் "அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்" ("Three Non-Nuclear Principles" - சப்பானிய மொழியில்: "Hikaku San Gensoku") என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு: இக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், "தீர்மானங்களாக" ("Resolutions") நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. 1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது. 1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான். அதே காலக்கட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு, பிலிப்பீன்சுக்குச் சென்று, அதன்பின் போர்னியோவைத் தாக்கின. சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின. 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. 1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன. "வீழ்ச்சி நடவடிக்கை" ("Operation Downfall") என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) "ஒலிம்பிக் நடவடிக்கை"; 2) "மகுட நடவடிக்கை". "ஒலிம்பிக் நடவடிக்கை" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் "மகுட நடவடிக்கை" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி ("Kantō Plain") என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, "ஒலிம்பிக் நடவடிக்கை" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது. நேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு "கெத்சுகோ நடவடிக்கை" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது. There is an extensive body of literature concerning the bombings, the decision to use the bombs, and the surrender of Japan. The following sources provide a sampling of prominent works on this subject matter. நெய்தல் மலர் நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. நீர்நிலை மலர் வயல்வெளி மலர் தோல் புற்றுநோய் தோற் புற்றுநோய் அல்லது தோல் புற்றுநோய் என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோய்களைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. தோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும். நுரையீரல், மார்பக, குடல், சுக்கிலவக புற்றுநோய்களை விட மெலனோமா மற்றும் ஏனைய தோல் புற்றுநோய்கள் பொதுப்படையில் நோக்குகையில் கூடுதலாகக் காணப்படுகின்றன. தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது. பொதுவாக உண்டாகும் தோல் புற்றுநோய்கள் எனப்படுமிடத்து அவை மெலனோமா அல்லாத தோற் புற்றுநோய்களாகவே உள்ளன. சிலருக்கு பிறப்பில் அல்லது பின்னர் கரிநிறமி உயிரணுக்களால் (melanocyte) தோன்றும் பெரிய பிறப்புப் புள்ளியில் (பெரும் மச்சம்) பிற்காலத்தில் மெலனோமா உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய் (melanoma). வெய்யில் படும் தோற் பகுதிகளில், முக்கியமாக முகப்பகுதிகளில் அடிக்கலப் புற்றுநோய் உண்டாகின்றது. இவை வேறு இடங்களுக்குப் பரவுதல் (மாற்றிடம் புகல்) அரிது, மேலும் இவற்றால் இறக்கும் வீதமும் மிக அரிது. இவை அறுவைச்சிகிச்ச மூலம் அல்லது கதிரியக்கம் மூலம் இலகுவில் குணப்படுத்தப்படலாம். செதிட்கலப் புற்றுநோய் பொதுவாகக் காணப்படும் ஒன்று, எனினும் அடிக்கலப் புற்றுநோயை விடக் குறைவாகவே காணப்படுகின்றது. இவை ஓரளவு மாற்றிடம் புகலுபவை; ஆனால் கரிநிறமிப் புற்றுநோய் அனைத்து தோற்புற்றுநோயிலும் அரிதாகத் தோன்றினாலும் ஆபத்தானதும் மாற்றிடம் புகல் மிகையனதாகவும் உள்ள தீவிரமான புற்றுநோயாகும். மிகக் குறைவாகக் காணப்படும் தோற் புற்றுநோய்கள்: தோல்நார்ச்சதைப்புற்றுப் புடைப்பு, மேர்கேல் உயிரணுப் புற்றுநோய், காபோசியின் சதைப்புற்று, கதிர்க்கலக் கட்டி, கொம்புமுட்கட்டி, மார்பக பகட் நோய் போன்றன. வெவ்வேறு விதமான அறிகுறிகளும் உணர்குறிகளும் உள்ளன. தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் குணமடையாது இருப்பது, தோலில் ஏற்படும் புண்கள், நிறமாற்றம், ஏற்கனவே உள்ள மச்சத்தில் மாறுபாடு ஏற்படுவது போன்றன தோல் புற்றுநோய் எனச் சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகளாகும். ஏற்கனவே உள்ள மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப்போவது, அல்லது மச்சம் பெரிதாகிக்கொண்டே போவது என்பன புற்றுநோயின் அடையாளங்களாகும். சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களே தோல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணமாகும்.எனினும் வேறு சில காரணிகளும் உள்ளன அவை: சூரிய கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுதலே கரிநிறமிப் புற்றுநோய் மற்றும் செதிள்கல புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துகொள்ளும் வழி ஆகும்.தோல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உச்சி வேளைகளில் சூரியகுளியலை தவிர்க்கவும், பாதுகாப்பு ஆடை பயன்படுத்தவும், கருப்பு கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தபடுகிறது.அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவை பணிக்குழு 9 முதல் 25 வயதுடைய மக்கள் புற ஊதா ஒளிகதிர்கள் படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. தோல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் குறையும். தூள் புற்று நோயை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மருந்துகலோ தவிர்க்கும் என்று நம்ப தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை ஐஒஎஸ்-ஜெயில்பிறேக் ஐஓஎஸ் சிறை முறித்தல் ("iOS jailbreaking") அல்லது ஐஓஎஸ் ஜெயில்பிறேக் என்று ஐஓஎஸ் இயக்குதளத்தில் இயங்கும் சாதனங்களில் தனிப்பட்ட கருவக மென்பொருட்கள் மூலம் இச்சாதனங்களின் உருவாக்குனர் ஆப்பிள் செயல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்ற செயல்பாட்டைக் குறிக்கிறோம். ஐஒஎஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நவீன இலத்திரனியல் சாதனங்களான ஐ-போன், ஐபாட் டச், ஐ-பேடு, ஆப்பிள் டி.வி ஆகிய சாதனங்களின் இயக்கு தளமாகவுள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் வரையறைக்குள் இயங்கவேண்டிய கட்டாயமுள்ளது. அதாவது ஏதாவதொரு மாற்றங்கள் செய்ய வேணடிருப்பின் ஆப்பிளின் இணையத்தளத்தினூடாகவே அம்மாற்றங்களை செய்யவேண்டும். தேவையானவைகள் சில வேளைகளில் இத்தளத்தில் கிடைக்காது. ஆனால் மாற்றுத்தளங்களில் கிடைக்ககூடியதாகவிருக்கும். ஆனால் ஐஒஎஎஸ் அவைகளை தரவிறக்க அனுமதிக்காது. இக்கோட்பாடானது எல்லோருக்கும் பொருந்தாது. ஆகவே இவ் வரையறை மீறும் செயல்பாட்டினை சிறை முறித்தல் என்கிறோம். சிறை முறித்தல் ஐஓஎஸ் பயனர்களுக்கு இயக்குதளத்திற்கான அடிவேர் அணுக்கத்தை வழங்குகிறது. இதனால் ஆப்பிள் ஸ்டோரில் இல்லாத கூடுதல் பயன்பாட்டுச் செயலிகள், விரிவுச் செயலிகள், வார்புருக்கள் போன்றவற்றை தரவிறக்க முடிகிறது. சிறை முறித்தல் ஒரு வகையான உரிமை ஏற்றமாகும். இப்பொருளில் இச்சொல் மற்ற கணினி அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சாதனைத்தை அதன் "சிறையிலிருந்து" விடுவிப்பதால் இது சிறை முறித்தல் எனப்படுகிறது. யூனிக்சு அமைப்புகளில் சிறை என்ற சொல் தொழில்நுட்பச் சொல்லாகப் பயனில் உள்ளது. ஓர் சிறை முறிக்கப்பட்ட ஐ-போன், ஐபாட் டச், அல்லது ஐ-பேடிலிருந்து ஆப்பிள் ஸ்டோரை அணுகவும் பிற வழமையான செயல்பாடுகளை இயக்கவும் முடியும். அடிவேர் அணுக்கம் பெற்ற அண்ட்ராய்டு சாதனங்களைப் போலன்றி, ஆப்பிளால் அனுமதிக்கப்படாத மென்பொருளை பயன்படுத்த சிறை முறித்தல் தேவையானதாகும். இது அமெரிக்க சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனமானது தனது பொறுப்புறுதியை உடனடியாக இரத்துசெய்துவிடும் என அறிவித்துள்ளது. இவற்றின் மூலம் ஜெயில்பிறேக் பண்ணப்பட்ட பின் சிடியா (ஆப்பிள் களஞ்சிய தளற்திற்கு சமமான வேற்றுத் தளமாகும்) மூலம் இலவசமாக மென்பொருள்களை தரவிரக்கிக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்யலாம். ஜி. எச். ஹார்டி ஜி.எச். ஆர்டி ("Godfrey Harold “G. H.” Hardy") (பிறப்பு: பிப்ரவரி 7, 1877; இறப்பு: திசம்பர் 1, 1947) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர். இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார். மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணிதவியல் மேதையான சீனிவாச இராமானுசன் அவர்களுடன் நட்பு பூண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார். பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார். சி.எச். ஆர்டி இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் 1877 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாளில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது நாட்டம் இருந்தது. பள்ளி கல்விக்கு பின்னர் ஆர்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு அவர் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார் இரண்டு ஆண்டு கல்விக்குப்பின் அவர் நான்காவது இடம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் பயின்ற போது ஆர்டி "கேம்பிரிட்ச் திருத்தூதர்கள்" என்று அழைக்கப்பட்ட அறிவார்ந்த கமுக்கக் குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தார். 1900 ஆம் ஆண்டில் அவர் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக இறுதி தேர்வில் (ட்ரப்போஸ் II) தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றார். 1903 ஆம் ஆண்டில் அவர் அந்த காலகட்டத்தில் ஆங்கில பல்கலைக்கழகங்களில் உயர்ந்த முதுகலை பட்டத்தை பெற்றார். 1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலத்தில் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் அவரின் வாழ்க்கை, இராமானுசனுடனான அவரின் நட்பு முதலியவறை இடேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு "தி இந்தியன் கிளார்க்" என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார். கணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் அவர் சற்று கூச்சமும் மென்மையான குணமும் உடையவராவார். ஒரு சில நண்பர்களை மட்டுமே உடைய அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். 1947 ஆம் ஆண்டில் அவர் மரணத்தை தழுவினார். கணிதத் துறையில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதோர் நடுவே, சி.எச். ஆர்டி தாம் 1940 ஆம் ஆண்டில் கணித அழகியல் பற்றி எழுதிய "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" ("A Mathematician's Apology") என்னும் கட்டுரையின் பொருட்டு அறியப்பட்டுள்ளார். கணிதத்தில் சிறந்த அறிவு இல்லாதோரும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இக்கட்டுரையில், ஒரு கணித மேதையின் உள்மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அரிய சிந்தனைகளை ஆர்டி வழங்கியுள்ளார். 1914 ஆம் ஆண்டிலிருந்து ஆர்டி, இந்தியக் கணித மேதையான சீனிவாச இராமானுசனுக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். அந்த இரு பேரறிஞர்களுக்கும் இடையே முகிழ்த்த நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்தது. இராமானுசனைச் சந்தித்த முதல் நாளிலியே ஆர்டி அவருடைய மிகச்சிறந்த கணித அறிவைக் கண்டு மலைத்துப்போனார். இத்தனைக்கும் இராமானுசன் கணிதத் மெய்யியல் பற்றிக் கல்விக்கூடங்களில் பயின்றதில்லை. பின்னர் ஆர்டியும் இராமானுசனும் கணித ஆய்வில் நெருங்கிய ஒத்துழைப்பாளர் ஆயினர். பால் ஏர்டோசு ("Paul Erdős") என்பவர் ஒருமுறை ஆர்டியோடு நிகழ்த்திய நேர்காணலின்போது, கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்டார். அதற்கு ஆர்டி அளித்த பதில், "இராமானுசனைக் கண்டெடுத்ததே நான் கணிதத் துறைக்கு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு" என்பதாகும். மேலும், இராமானுசனும் அவரும் கணித ஆய்வில் இணைந்து ஈடுபட்டது அவர்தம் "வாழ்வில் நிகழ்ந்த இன்பமிகு ஒரு நிகழ்ச்சி" என்று ஆர்டி கூறியுள்ளார்." பீ (ஆவண நிகழ்படம்) பீ என்பது "மறுபக்கம்" படைப்புக் குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு குறு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இது மதுரை மாநகராட்சிக்கு வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் (தலித்) சேர்ந்த ஒரு பெண் துப்பரவுத் தொழிலாளியான மாரியம்மாளின் ஒரு நாள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தப் பெண் மதுரைக்கு அருகே இருக்கும் ஒரு கோயில் புற வீதியில் மக்கள் கழித்த மலங்களை கூட்டி அள்ளித் துப்புரவு செய்பவர். மனிதர்கள் இவ்வாறு செய்வது இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது. இந்தக் குறு ஆவணப் படம் கையால் மலம் கூட்டுவதற்கு எதிராக சமூக மட்டத்தில் எதிர்ப்பு பலமாவதற்கு உதவியது. இயந்திர மனிதன் இயந்திர மனிதன் அல்லது மனித உருக்கொண்ட தானியங்கி ("Humanoid robot") என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் தானியங்கி அல்லது எந்திரன் ஆகும். இவை மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு. ஆன்ட்ராய்டு எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை. இயந்திர மனிதரைத் தற்போது பல அறிவியல் பகுதிகளில் ஓர் ஆராய்ச்சிக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இயந்திர மனிதனை உருவாக்கவும், ஆய்வு செய்யவும் மனித உடல் அமைப்பையும், நடத்தையையும் (உயிர் இயந்திரவியல்)புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மறுபுறம், மனித உடலை உருவகப்படுத்துதலின் முயற்சியால் அதனைப் பற்றி ஒரு நல்ல புரிதல் ஏற்படுகிறது. மனித அறிவாற்றல் என்னும் ஆய்வுத்துறை, உணர்வுத் தகவல் மூலம் புலனுணர்வையும், மோட்டார் திறன்களையும் பெறுவதற்காக மனிதன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான் என்று கவனிக்கிறது. இந்த அறிவு மனித நடத்தையின் கணக்கீட்டு மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் அது மேம்பட்டும் வருகிறது. மிகவும் முன்னேறிய இயந்திரவியல் எளிய மனிதரை மேம்படுத்துவதை எளிதாக்கிறது எனப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்க்க மீவுமனிதத்துவம். ஆராய்ச்சியைத் தவிர, இயந்திர மனிதர் தனிப்பட்ட உதவியைப் போன்ற மனிதப் பணிகளை செய்ய உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய இயந்திர மனிதரால் நோயாளிக்கும் முதியவருக்கும், மாசடைந்த வேலைகளுக்கோ அல்லது பேரிடர்மிக்க வேலைகளுக்கோ உதவ முடியும். வழக்கமான வேலைகளைப் போன்ற வரவேற்பாளராக இருப்பதும், ஒரு வண்டி உற்பத்தி தொழிலாளியாக இருப்பதும் இயந்திர மனிதருக்குப் பொருந்தும். பொழுபோக்கை வழங்குதற்காகவும் இயந்திர மனிதர்கள் பிரபலமடைந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, உர்சுலா எனும் இயந்திர மனிதப் பெண் பாடுகிறாள், இசையை இசைக்கிறாள், நடனமாடுகிறாள், யுனிவர்சல் ஸ்டுடியோஸி்ல் தனது பார்வையாளரிடம் பேசுகிறாள். இயந்திர மனிதர்களது செயற்கை அறிவுத்திறனின் படிமுறைத் தீர்வுகளைக் கொண்டு எதிர்காலத்தில் பேரிடர்மிக்க தொலைதூர விண்வெளி ஆய்வுப் பயணங்களுக்குச் செல்ல பயனுள்ளதாக அமைவர்; மீண்டும் திரும்பி வர வேண்டும் என்றில்லாமல் மீண்டும் விண்வெளியில் சுற்றியும், பணி நிறைவடைந்தவுடன் பூமிக்குத் திரும்புவர். உணரி என்பது உலகின் சில பண்பை அளவீடும் ஒரு கருவியாகும். இயந்திரவியலில் மூன்று மூலங்கள் ஒன்றாக உணர்தல், தானியங்கி கட்டளைப்படிவ வாய்ப்பாட்டில் ஒரு முதன்மை பங்கு வகிக்கிறது. உடற்செயற்பாடு படி வேலை செய்வதைப் பொறுத்தோ, வெளியீடும் அளவீட்டுத் தகவல் வகையைப் பொறுத்தோ உணரிகள் வகைப்படுத்தப்படுகிறன. மனித இயந்திரங்களில், இரண்டாம் அணுகுமுறையையே பயன்படுத்தப்படுகிறது. சீர்செய்யும் உணரிகள் இயந்திர மனிதன் உடல், மூட்டுகள் ஆகியவற்றின் நிலையையும், நோக்குநிலையையும், அசைவு வேகத்தையும் உணரும். மனிதர்களின் உட்காதில் மூன்று திரவம் நிரப்பப்பட்ட எலும்பாலான கால்வாய்கள் சமநிலையையும், நோக்குநிலையையும் பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக மனிதர்கள் நோக்குநிலையைப் பராமரிக்க தங்களின் சொந்த சீர்செய்யும் உணரிகளைப் (எ.கா. தொடுதல், தசை நீட்டிப்பு, மூட்டு நிலை) பயன்படுத்துகின்றனர். இயந்திர மனிதர்களின் முடுக்கத்தை அளப்பதற்கு முடுக்கமானியைப் பயன்படுத்தப்படுகிறது. சாய் உணரிகளைக் கொண்டு சாய்வை அளவிடப்படும், ஆற்றல் உணரிகள் இயந்திர மனிதனின் கைகளிலும் கால்களிலும் சுற்றுச்சூழலுடன் தொடுதல் ஆற்றலை அளவிட வைக்கப்பட்டிருக்கும், நிலை உணரிகள் இயந்திர மனிதனின் உண்மையான நிலையைக் குறிப்பிடும் (இதில் இருந்து திசைவேகத்தை மூலத்தோற்றைத்தின் மூலம் கணக்கிட முடியும்) விரைவு உணரிகளும் இதை செய்யும். இத்தகைய உணரிகள் ஒருங்கிணைந்திருப்பதால் திசைவேகத்தைக் கணக்கிட முடியும். அணிவரிசையாக அமைந்திருக்கும் தொட்டுணரக்கூடிய உணரிகள் எதை தொட்டதென்று தரவுகளை வழங்க பயன்படுகின்றன. தொட்டறி உணரிகள் ஆற்றல்களையும், திருகுவிசைகளையும் தனியங்கிக்கும், பிற பொருள்களுக்கும் இடையே இடமாற்றம் அடையும் தகவலை வழங்குகிறன. ஒலி உணரிகள் பேச்சையும், சுற்றுச்சூழல் ஒலியையும் மனித இயந்திரங்களுக்குக் கேட்க அனுமதிக்கின்றன. அவை மனிதனின் காதுகளைப் போன்று செயல்படுகின்றன. வழக்கமாக இந்தப் பணியைச் செய்ய ஒலிவாங்கிகளைப் பயன்படுத்தப்படுகின்றன இயக்கிள் விசைப்பொறியாகத் தானியங்கி இயந்திரத்தில் அசைவு ஏற்படுவதற்குப் பொறுப்புவகிக்கிறது. மனித உடலைப் பிரதிபலிக்கும் வகையில் இயந்திர மனிதர்களைக் கட்டமைக்கப்படுகின்றன. ஆதலால், தசைகளையும் மூட்டுகளையும் போல் செயற்பட இயக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். மனித இயக்கத்தைப் போன்று அதே விளைவை அடைவதற்காக இயந்திர மனிதருக்குச் சுழற்முறை இயக்கிகளை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன; அவை மின்சாரமாகவும், காற்றழுத்தியாகவும், நீரியலாகவும், அழுத்தமின் விளைவாகவும், மீயொலியாகவும் இருக்க முடியும். திட்டமிடுதல், கட்டுப்படுத்துதலில் இயந்திர மனிதனுக்கும், மற்ற வகை தானியங்கிகளுக்கும் அடிப்படை வேறுபாடாக அவற்றின் இயக்கத்தை மனிதனைப் போன்று கால்கலால் இடம்பெயர, அவற்றின் இரு கால் நடை தோற்றவிதம் மூலம் காட்டப்படுகிறது. சிறந்த திட்டமிடலால் இயந்திரமனிதனின் வழக்கமான நடை இயக்கங்கள் மனித உடலில் போலவே குறைந்தபட்ச ஆற்றலை நுகர்கிறது. ஆகவராமன் ஆகவராமன் தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர் வம்சத்திலுள்ள ஒரு இளவரசன் ஆவான். புதுக்கோட்டை செப்பேடு அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனுக்கு அபிராமபராக்கிரம பாண்டியன் ,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுவதைக் கொண்டு இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னனின் மகன் இவன் என்பதை அறியலாம். தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இதற்கு ஆகவராமன் என்னும் இவனது பெயர் பொறித்த நாணயங்களையே இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். மாற்றத்திற்கான முகவரி மாற்றத்திற்கான முகவரி என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு சமுதாய மாத இதழாகும். நல்ல சமூக சிந்தனை கொண்ட இதழ் சமுதாய மாற்றத்திற்கு தேவை என உணர்ந்து உண்மையின் முகவரி என்ற மாத இதழை வெளியிட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 2011லிருந்து இந்த இதழ் வெளிவருகிறது. ஆலீம் மு.அஹமதுஷா என்பவர் “மாற்றத்திற்கான முகவரி” இதழை சென்னை, சைதாப்பேட்டையிலிருந்து வெளியிடுகிறார். பகன்றை பகன்றை அல்லது கிலுகிலுப்பை ("Crotalaria verrucosa") வெண்ணிற மலர். கருவிளை என்பது இதைப் போன்று நீல நிறத்தில் பூக்கும் மலர். பகன்றைக் கொடி கொழுகொழுப்பாகச் செந்நிறம் கொண்டிருக்கும். மகளிரும் மைந்தரும் பகன்றை மலரைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். பகன்றை மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் சுவையானவை. பிலாசுப்பூர் (சத்தீசுகர்) பிலாசுப்பூர் என்ற (ஆங்கிலம்:Bilaspur இந்தி: बिलासपुर ) நகரம், இந்திய மாநிலங்களில் ஒன்றான சத்தீசுகரின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 111 கி.மீ தூரத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக, இப்பகுதியில் சில மீனவக்குடிசைகளே இருந்தன. 17 ஆம்நூற்றாண்டில் அப்பொழுது அங்கு வாழ்ந்த மீனவப் பெண்ணின் பெயரான (பிலாசா)என்பதிலிருந்து, இந்த ஊருக்கு இப்பெயர் வந்தது என அரசு இதழ் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காலநிலை குளிர் (குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், 50 டிகிரி பாரன்ஹீட்) உள்ள அழகான மற்றும் மிதமான உள்ளது. பருவ காலத்தில் நடுத்தர மழை உள்ளன. கோடை வெப்பம் மற்றும் உலர் அதிகபட்ச வெப்பநிலை 45 ° C முதல், 113 டிகிரி பாரன்ஹீட், அதிகபட்ச ஈரப்பதம் பசும்பிடி பசும்பிடி ("Garcinia xanthochymus") என்னும் மலரின் இளமுகிழ் சுவைக்காகவும், நறுமணத்துக்காகவும் வாயில் போட்டு மெல்லப்படும் என்பதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஒன்று பசும்பிடி. ஜான் போர்டு ஜான் போர்டு (John Ford) (பெப்ரவரி 1, 1894 – ஆகஸ்ட் 31, 1973) ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்கிய ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. இவர் நான்கு சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுகளை வென்றுள்ளார். இவரது திரைப்பட வாழ்க்கை இரண்டாம் உலகப்போருக்கு முன் பின் என்று பிரிக்கலாம். இவர் ஆகஸ்ட் 31 1973 இல் இறந்தார். பயினி பயின் என்பது அரக்கு. பயின் மரத்தைப் பயினி ("Vateria indica") என்றனர். குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பயினி. நாவாய்க்கலக் கப்பலில் ஓட்டை விழும்போது பயின் என்னும் அரக்கால் ஓட்டையைப் பழங்காலத் தமிழர்கள் அடைத்தார்களாம். வயிரத்துக்குப் பட்டை தீட்டும் சிறுகாரோடன் குச்சி நுனியையும் வயிரக் கல்லையும் பயின் (அரக்கு) வைத்து இணைத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு சாணைக்கல்லில் பட்டை தீட்டுவான். இந்த வயிரக்கல் போல என்ன துன்பம் வந்தாலும் பிரியமாட்டோம் என்கின்றனர் ஒரு காதலர். பட்டை தீட்டும் வயிரக்கல் போலத் துன்புறும்போதும் தன் காதலைத் தாயிடம் கூறமுடியவில்லையே எனக் கவலைப்படுகிறாள் ஒரு தலைவி. த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்) த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (The Lord of the Rings: The Return of the King) 2003 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து பதினொன்றையுமே வென்றது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விருதுகளையுமே வென்றது. ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (டி.ஆர்.டி.சி) (Documentation Research and Training Centre (DRTC), பெங்களூருவில் அமைந்துள்ள "இந்திய புள்ளியியல் நிறுவனத்தின்" (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute) நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சார்ந்த துறைகளின் "ஆய்வு மையம்" (ஒரு துறையும்) ஆகும். "பேராசிரியர் பி.சி.மகாலநோபிசின்" ஊக்குவிப்பு மற்றும் இந்தியாவின் நவீன நூலகம் மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று அறியப்படும் பேராசியர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் ஆதரவுடன் டி.ஆர்.டி.சி 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப்பட்டது. டி.ஆர்.டி.சி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute), கொல்கத்தா வழங்கும் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமான "எம்.எஸ்-எல்.ஐ.எஸ்" (Master of Science in Library and Information Science' (MS-LIS) என்ற பட்டப்படிப்பிற்கு பயிற்சி அளிப்பதுடன், "கல்வி சார்ந்த ஆய்வு நிறுவனம்" (academic and research center) என்ற முறையில் "முனைவர்" (டாக்டர்) பட்டத்திற்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு பதிவு செய்து கொள்ளப்படுகிறார்கள். டி.ஆர்.டி.சி இந்தியாவின் வலுவான ஆராய்ச்சி திட்டங்கள் அடங்கிய "பயிற்சிப் பள்ளி" எனலாம். டி.ஆர்.டி.சி இல் ஆய்வு என்பது பயனுறு "தகவல் தொழில் நுட்பத்துறை"யுடன் (application of information technology) ஒருமுகப்படுத்தி இணைத்த "நூலகம்" மற்றும் "தகவல் அறிவியல்" துறை சார்ந்தது ஆகும். டி.ஆர்.டி.சி இந்தியாவில் "நூலக அறிவியல்" மற்றும் "தகவல் அறிவியல்" துறைகளுக்கான சிறந்த ஆய்வு மையம் என்பது பரவலான கருத்தாகும். இந்த மையம் வலுவான ஆய்வுத் திட்டங்களுடன் முனைவர் பட்டத்திற்கு இத்தாலியிலுள்ள "திரேண்டோ பல்கலைக்கழகத்துடன்" (University of Trento, Italy.) அயல்நாட்டு இணைவாக்கமும் (PhD collaboration) கொண்டுள்ளது. நடப்பு ஆண்டான 2012 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.சி "பொன்விழா" ஆண்டாகும். இந்த பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், "சிறப்பறிவு மற்றும் தகவல் இயக்க இயல்கள் பற்றிய நவீனப் போக்குகள்" (International Conference on Trends in Knowledge and Information Dynamics) என்ற தலைப்பில் "பன்னாட்டுக் கருத்தரங்கு" ஒன்று நடக்கவுள்ளது. 'International Conference on Trends in Knowledge and Information Dynamics' (ICTK-2012). சுல்தான்பூர் மாவட்டம் சுல்தான்பூர் மாவட்டம் (, ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சுல்தான்பூர் நகரம் ஆகும். இது பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. கங்கையின் கிளைநதியான கோமதி ஆறு இம்மாவட்டத்தின் நடுவே செல்கிறது. ஜகதீஸ்பூர் இம்மாவட்டத்தின் தொழில் நகரம் ஆகும். இங்கு பாரத மிகுமின் நிறுவன தொழிற்சாலையும், ஒரு உரத் தொழிற்சாலையும் மற்றும் சில தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் முன்சிகஞ் அருகேயுள்ள கோர்வாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையமும், கௌரிகஞ்ல் ஏசிசி நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலையும் அமைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுல்தான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,790,922. இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 69வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் சுல்தான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.92%.சுல்தான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் உள்ளனர். மேலும் சுல்தான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 71.14%. வர்க்கமூலம் கணிதத்தில் "a" என்னும் எண்ணின் வர்க்கமூலம் என்பது, y = a என்னும் சமன்பாட்டில் அமைந்த எண் "y" ஆகும்; formula_1. இன்னொரு வகையில் சொல்வதானால், "வர்க்க மூலம்" என்பது, எதன் வர்க்கம் "a" ஆக அமையுமோ அது ஆகும். எடுத்துக்காட்டாக 4 என்பது 16 இன் வர்க்கமூலம். ஏனெனில், 4 = 16. ஒவ்வொரு எதிரெண் அல்லாத உண்மை எண்ணுக்கும், "முதன்மை வர்க்கமூலம்" என அழைக்கப்படும், ஒரு தனித்துவமான எதிரெண் அல்லாத வர்க்கமூலம் உண்டு. இதை formula_2 எனக் குறிப்பது வழக்கம். இங்கே formula_3 என்பது மூலக்குறி எனப்படும். எடுத்துக்காட்டாக, , ஆகவும், 3 எதிரெண் அல்லாத எண் ஆதலாலும், 9 இன் முதன்மை வர்க்க மூலம் 3 என்பதை formula_4 எனக் குறிப்பர். ஒவ்வொரு நேரெண் "a" யும் இரண்டு வர்க்க மூலங்களைக் கொண்டிருக்கும். இவை formula_2 யும், formula_6 யும் ஆகும். இவற்றுள் முதலாவது நேரெண், மற்றது எதிரெண். இவ்விரண்டையும் ஒரே குறியீடாக formula_7 எனக் குறிப்பர். நேரெண் "a" இன் வர்க்க மூலத்தை அடுக்குக் குறி முறையில் "a" எனவும் குறிப்பது உண்டு. https://mangoten.blogspot.com/2017/10/2.html பலாசம் பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) ( "butea frondosa" ) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்கள் 99-ல் ஒன்று பலாசம். வீட்டுக்கு நிலை, கதவு, சன்னல் போன்ற பொருள்கள் ‘பலாசு’ என்னும் மரத்தால் செய்யப்படுகின்றன. இது லேசு தன்மையும், வழவழப்பும், மஞ்சள் நிறமும் கொண்ட மரம். கல்யாண முருங்கை அன்று. பாங்கர் (மரம்) பாங்கர் என்பது ஒரு கொடி. வீட்டுத்தோட்டத்தில் இதனை வளர்ப்பர். முல்லைப்பூவைப் போலத் தலையில் சூடிக்கொள்வர். த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (திரைப்படம்) த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (The Lord of the Rings: The Fellowship of the Ring) 2001 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது. பாரம் (மலர்) பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும். பாரம் என்பது பருத்தி. மிகவும் லேசான பொருளைப் பாரம் எனல் மங்கலவழக்கு. அது கொடிய நஞ்சு கொண்ட பாம்பை நல்லபாம்பு எனவும், கருநிற ஆட்டை வெள்ளாடு எனவும் வழங்குவது போன்றது. பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். என்னும் ஊர்களும் உள்ளன. பாரம் என்னும் மலரையும் சேர்த்து 99 மலர்களைக் குவித்து மகளிர் விளையாடிய செய்தி குறிஞ்சிப்பாட்டில் உண்டு. த ஏவியேட்டர் (திரைப்படம்) த ஏவியேட்டர் (The Aviator) 2004 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். மைக்கேல் மேன், சாண்டி கிளிமேன், கிரஹாம் கிங், சார்லஸ் எவன்ஸ் ஜூனியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் பிளான்செட், ஆலன் ஆல்டா, அலெக் பால்ட்வின், கேட் பெக்கின்சேல், ஜான் ரேய்ல்லி, குவென் ஸ்டெபானி, ஜூட் லா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது. நெடும்பார தாயனார் நெடும்பார தாயனார் ஒரு பார்ப்பன முனிவர். நெடும்பாரம் (பாரம்) என்னும் ஊரினர். சேர அரசன் மூன்றாம் பதிற்றுப்பத்துத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலை வழிநடத்திச் சென்று இருவருமாகத் தவம் மேற்கொண்டனர். பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். பனம்பாரம் (பாரம்) என்னும் ஊரினர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியவர். பிடவம் பிடவம் (Randia malabarica) என்னும் மலர் பிடவு என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. பிடவ மலரைப்பற்றிச் சங்கப்பாடல்களில் உள்ள குறிப்புகள் இதன் தன்மையை உண்ணர்த்துகின்றன. கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர். மெட்ரிக் முறை மெட்ரிக் முறை ("Metric system") என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும். இந்த முறை, 1799 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்ட mètre des archives மற்றும் kilogramme des archives போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாளடைவில் மீட்டர் மற்றும் கிலோகிராம் போன்ற அலகுகளுக்குரிய வரையறை நுண்ணியமாக திருத்தப்பட்டதோடு, மெட்ரிக் முறையின் கீழ் மேலும் பல அலகுகள் கொண்டுவரப்பட்டன. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு மாற்றுருவங்கள் மெட்ரிக் முறையில் வெளிப்பட்டாலும், ‘அனைத்துலக முறை அலகுகள்’ என்பதன் ஒத்தசொல்லே ‘மெட்ரிக் முறை’ என்பதாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். மெட்ரிக் முறையை உபயோகிக்கலாம் என்பது 1866 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பளிக்கப்பட்டது. ஆனாலும் இன்னமும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மெட்ரிக் முறையை ஒரு அதிகாரப்பூர்வமான அளவு முறையாக பயன்படுத்தவில்லை. ஐக்கிய இராச்சியம் மெட்ரிக் முறையை அதிகாரப்பூர்வமான அளவு முறையாக பின்பற்றினாலும்கூட, அங்கு 'இம்பெரியல் முறை' (imperial system) எனும் அளவு முறையும் பரவலாக உபயோகத்தில் உள்ளது. மெட்ரிக் முறை அது தோன்றிய தொட்டு பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படைக்கூறுகளை இன்னமும் தக்கவைத்துள்ளது. பிரெஞ்சு தத்துவியலாளர் Condorcet சொன்னது போல, “மெட்ரிக் முறை அனைத்து மக்களுக்கும் அனைத்து நேரங்களுக்கும் உரியது’’. சாதாரண மனிதர்கள், பொறியாளர்கள், வானியல் வல்லுனர்கள், இயற்பியல் அறிஞர்கள் முதலானோர் பயன்படுத்தும் வகையில் பெருவாரியான முன்னொட்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசாங்கம் தனது அளவீட்டு முறையை செப்பனிட முடிவு செய்தது. 1780 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தல்லிராண்ட் (Talleyrand) என்பவர் ரிக்ஸ் (Riggs, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்), ஜெபர்சன் (Jefferson, அமெரிக்க அரசுச் செயலர்) போன்றோருக்கு அழைப்பு விடுத்தார். உலகம் முழுமைக்கும் பொதுவானதொரு வரையறையை பிரெஞ்சு நாட்டுடன் இணைந்து உருவாக்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் இம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1875 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு அரசாங்கத்தின் வசமே மெட்ரிக் முறை இருந்து வந்தது. உலகமயமாக்கும் ஒரு முயற்சியாக, ‘பொது அலகுக் குறியீடுகள்’ உருவாக்கப்பட்டன. உதாரணமாக, நீளத்தை அளப்பதற்கு km எனும் அலகு கீழ்க்காணும் மொழிகளில் வழங்கப்படுவதற்கென உருவாக்கப்பட்டது:. நேரம் மற்றும் தளக்கோணத்திற்குரிய 'SI அல்லாத அலகுகள்' மட்டுமே தசமத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. மெட்ரிக் முறையில் மற்ற எல்லா அலகுகளும், தசமத்தை அடிப்படையாகக் கொண்டவை. தசம அலகுகளின் பன்மடிகளும், வகுத்தல்களும் பத்தின் காரணிகளாகும் (factors of the power of ten). ப்ளெமிஷ் கணிதவியலாளர் சைமன் ஸ்டீவின் (Simon Stevin) என்பவர், இந்த யோசனையை 1586 ஆம் ஆண்டு தெரிவித்து அறிமுகப்படுத்தினார். பதின்ம முறை (base 10 arithmetic), அலகு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தசமப்புள்ளியை நகர்த்துவதன் மூலமோ, அடுக்குக்குறியை மாற்றுவதன் மூலமோ அலகுகளை வேறுபடுத்திக் காட்ட இயலும். உதாரணம்: ஒளியின் வேகம் = 299792.458 கிலோமீட்டர்/நொடி எனக் குறிப்பிடப்படலாம்; அல்லது 2.99792458 x 10 மீட்டர்/நொடி எனவும் குறிப்பிடப்படலாம். டன் (1000 கிலோ கிராம்கள்), லிட்டர் (௦துல்லியமாக 0.001 மீ) மற்றும் ஹெக்டர் (10000 மீ) போன்ற SI அலகு முறைக்குள் வராத அலகுகள், SI அலகு முறைக்குள் வர சிஜிபிஎம் அனுமதி வழங்கியது. அடிப்படை அலகுகளின் முதலுருக்களை உருவாக்கி அவற்றின் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு அனுப்புதலே தரப்படுத்துதலாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இவ்வகையான நடைமுறை, பல சிக்கல்களை தோற்றுவித்தது. ஒவ்வொரு நாடும், முதலுருக்களை ஒவ்வொருமுறையும் சரிபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு அலகுக்கும் உரிய வரையறை, முறைப்படி உருவாக்கப்பட்டது; தேவைப்படும் அனைத்து உபகரணங்களையும் கொண்ட எந்த ஒரு ஆய்வகமும் தனக்குரிய தர ஆவணத்தை உருவாக்கிக் கொள்வதே இதன் நோக்கமாகும். கலைப் படைப்புகளைக் கொண்டு விளக்காமல் புரிந்துகொள்ளத்தக்க வகையில் அடிப்படை அலகுகள் அளக்கப்பட வேண்டும் என்பதும் மெட்ரிக் முறையின் நோக்கம் ஆகும். 1799 ஆம் ஆண்டு மீட்டர் மற்றும் கிலோகிராம்களுக்குரிய முதலுருக்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு 1889 ஆம் ஆண்டு புதிய முதலுருக்கள் இவ்வலகுக்களுக்காக உருவாக்கப்பட்டன. இப்புதிய முதலுருக்கள், அக்காலத்தைய சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. நிலைத்தன்மையை உறுதி செய்ய, பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. 18 Germinal, Year III (7 ஏப்ரல் 1795 ) எனும் சட்டம், ஐந்து அளவீட்டு அலகுகளை கீழ்க்காணுமாறு வரையறுத்தது: ஆரம்பகால மெட்ரிக் முறை, சில முன்னொட்டுக்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. அவை: மில்லி (milli -ஆயிரத்தில் ஒரு பங்கு) முதல் மைரியா (myria - பத்தாயிரம்) வரை. ஆரம்பகால மெட்ரிக் முறை, 'பத்தின் மடங்குகள்' என்பதனை அடிப்படையைக் கொண்டிருந்தது. கிலோகிராம் என்பது ஆரம்பத்தில் கிரேவ் (grave) என்றழைக்கப்பட்டது. கிரேவின் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கு கிராம் (gram) எனும் பெயர் வழங்கப்பட்டது. 1799 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 அன்று பிரான்ஸ் நாடு, மெட்ரிக் முறையை உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டது; ஆரம்பத்தில் பாரிஸ் நகரத்திலும் பின்னர் நாடு முழுவதும் பயன்படுத்தியது. மெட்ரிக் முறையில் பல்வேறு மாற்றுருவங்கள், Mètre des Archives மற்றும் Kilogramme des Archives போன்றவற்றின் அடிப்படை அலகுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. அந்த மாற்றுருவங்கள், வருவிக்கப்பட்ட அலகுகளின் வரையறையைப் பொறுத்து வித்தியாசப்படுத்தப்பட்டன. கீழ்காணும் அட்டவணை, SI மற்றும் பாரம்பரிய அலகுகளுக்கிடையேயான தொடர்பினைக் காட்டுகிறது. மாற்றல் காரணிகளும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. டைனமைட்டு டயனமைட்டு ("Dynamite") என்பது "தழைமவீருயிரகக் களிக்கரை" ("நைட்ரோகிளிசரின்") என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ஆல்பிரட் நோபல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன், செருமனி) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெறப்பட்டது. இந்த வெடி வகை பொருளின் பெயர் "டயனமிஸ்" என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் "ஆற்றலுடன் தொடர்புடையது" என்பதாகும். டயனமைட்டு வழக்கமாக 8 அங்குலம் (20 செ.மீ) நீளமும் 1 1/2 அங்குலம் (3.2 செ.மீ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) அளவுகளில் குச்சியாக விற்கப்படுவதுண்டு. வேறு சில அளவுகளும் உள்ளன. நைட்ரோகிளிசரின் சார்புடைய டயனமைட்டின் தேக்க ஆயுள் ("shelf life"), தகுதியான தேக்க வரையறைகளுக்கு ("storage conditions") உட்பட்டு அது உருவாக்கிய நாள் ("date of manufacture") முதல் ஒரு ஆண்டு எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்.. டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் ("high explosive"), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது ("detonates") அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை ("deflagrates") கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் ("trinitrotoluene") அல்லது டி.என்.டி ("TNT") என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம். நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட், cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. "படைத்துறை டயனமைட்டு" ("Military Dynamite") நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது.. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற உருவகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது. டயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: சுரங்கத் தொழில், கல் வெட்டி எடுத்தல், கட்டுமானம், மற்றும் தகர்த்தல் பணிகள். போர்முறைகளில் இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைட்ரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை. டயனமைட்டு, அல்பிரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபல், இங்கிலாந்தில் 1867 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து சுவீடனில் 1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார் இவர் டயனமைட்டை ”நோபலின் வெடி திறன்” என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைட்ரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர். இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது. தரமான டயனமைட்டு மூன்று பங்கு நைட்ரோகிளிசரின், ஒரு பங்கு டயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைட்ரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால் (degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். டயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைட்ரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைட்ரோகிளிசரினை வியர்த்து ("weep" or "sweat") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயத்தப் படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் (crystal formations) இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு மிகவும் ஆபத்தானது. தென்னாப்பிரிக்க குடியரசு தான், 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் "மேற்கு சாமேர்செட்டில்" 1902 ஆம் ஆண்டு "தே பீர்ஸ்" (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் "ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி") என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் "விட்வாட்டார்ஸ்ரண்டு"என்னுமிடத்தில் மிகுந்திருந்த தங்கச்சுரங்கங்களிலிருந்து டயனமைட்டுக்கான தேவை ஏற்பட்டது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலை 1903 ஆண்டு உற்பத்தி தொடங்கி 1907 ஆண்டு அளவில் 340,000 கொள்கலப்பெட்டிகள் (ஒவ்வொன்றும் 22 கி.கிராம் (50 பவுண்டுகள்) அளவு கொண்டது) ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் "மோடர்போண்டின்" என்ற போட்டி நிறுவனம் 200,000 கொல்கலப்பெட்டிகளை ஆண்டுதோறும் உற்பத்தி செய்தது. டயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் கட்டக வடிவமைப்பும் ("modular design"), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். "மோடர்போண்டின்" தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத, கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு "எ.இ.சி.ஐ" படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது.. அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு ரஸ்ஸல் எஸ். பென்னிமன் என்ற வேதியல் வல்லுநர் "அம்மோனியம் டயனமைட்டு" என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் அம்மோனியம் நைட்ரேட்டு என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் "எக்ஸ்ட்ரா" என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. "இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ்" நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: "ஹெர்குலிஸ்", "கலிபோர்னியா", "அட்லாஸ்", "ட்ரோஜன் யு.எஸ் பவுடர்", "ஆஸ்டின்", மற்றும் சில நிறுவனங்கள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான நீர்க்கூழ்ம வெடிபொருள் ("water gel explosives") உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச் செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது.. ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு "வேதிக் கூட்டுப்பொருள்" இதன் பெயர் "2,4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன்". படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % "ஆர்.டி.எக்ஸ்", 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது.. ஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்J சக்தியுள்ளது . டயனமைட்டு வெடி ஆற்றலின் செறிவை (ஜூல்ஸ்/ கிலோகிராம் அல்லது ஜே/கி.கிராம்) டி.என்.டி, உடன் தோராயமாக ஒப்பிட்டால் என்று விடை வரும் பா. கா. மூக்கைய்யாத்தேவர் பா. கா. மூக்கைய்யாத்தேவர் (ஏப்ரல் 4 , 1923 - செப்டம்பர் 6 , 1979) ஒரு இந்திய அரசியல்வாதி, இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1957,1962 , 1967 , 1971 மற்றும் 1977 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பாக உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து தொடர்ச்சியாக ஐந்துமுறையும்,இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காட்டமுத்து ஒச்சாத்தேவர்-செவனம்மாள் தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் 1979ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் மறைந்தார்.இவரின் சமாதி உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் உள்ளது. புரோக்பேக் மவுண்டன் (திரைப்படம்) புரோக்பேக் மவுண்டன் ("Brokeback Mountain") 2005 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ஷாமஸ், லாரி மெக்மர்திரி, டயானா ஒசானா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஆங் லீ ஆல் இயக்கப்பட்டது. ஹீத் லெட்ஜர், ஜேக் கில்லேன்ஹா, ஆன் ஹாத்வே, மிச்சேல் வில்லியம்ஸ், ராண்டி குவேத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது. மனிதக் கூர்ப்பு மனிதக் கூர்ப்பு (ஆங்கிலம்:Human Evolution) எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ (Homo) பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் (Hominids) ஒரு இனமாக ஓமோ சப்பியென்சுகளின் (Homo Sapiens) தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் இயற்பிய மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், கருவியல், மரபியல் என்பன அடங்குகின்றன. உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மிமு (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இலும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மிமு இலும், தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். ஒமினிடே குடும்பம் 15-20 மில்லியன் ஆண்டுகள் முன்பு ஐலோபட்டிடே குடும்பத்திலிருந்து, பிரிந்துபோனது. 14 மிமு அளவில், "பொங்கினே", அல்லது ஒராங்குட்டான்களும், ஒமினிடே குடும்பத்தில் இருந்து விலகிச் சென்றன. பின்னர் 5-6 மிமு அளவில் கொரில்லா, சிம்பன்சி என்பன ஓமோ பேரினத்தை நோக்கிக் கூர்ப்பு அடைந்த கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டன. 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது. ஒமினினி கூட்டத்தில் (tribe) ஓமோ பேரினத்தின் பல்வேறு இனங்களும், துணை இனங்களும் தோன்றின. ஆனால் இன்று ஒன்று தவிர ஏனையவை முற்றாக அழிந்துவிட்டன அல்லது பிற இனங்களுடன் கலந்துவிட்டன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த "ஓமோ இரக்டசு" (Homo erectus), ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்ந்த நீன்டர்தால்கள் ("ஓமோ நீன்டர்தாலென்சிசு" அல்லது "ஓமோ சப்பியென்சு நீன்டர்தாலென்சிசு") இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதனின் முன்னோடியான தொடக்கநிலை ஓமோ சப்பியென்சு 400,000 தொடக்கம் 250,000 ஆண்டுகள் முன்னர் வரையிலான காலப் பகுதியில் தோன்றின. தொடக்க நிலை மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுகளுள் "ஓமோ எய்டெல்பெர்கென்சிசு", "ஓமோ ரொடெசியென்சிசு", "ஓமோ நீன்டர்தாலென்சிசு" என்பனவும், சில வேளைகளில் "ஓமோ அன்ட்டெசெசர்", "ஓமோ எர்காசுட்டர்" என்பனவும் அடங்கும். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தொடக்கநிலை ஓமோ சப்பியென்சில் இருந்து, நடுப் பழையகற்காலத்தில், ஏறத்தாழ 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். நடத்தை அடிப்படையிலான தற்கால மனிதர் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினர் என்பது பலருடைய கருத்து. வேறு சிலர், தற்கால மனித நடத்தைகள், உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தோன்றியபோதே உருவாகிவிட்டதாகக் கருதுகின்றனர் உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்று, தற்கால மனிதனின் அண்மை ஆப்பிரிக்கத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இதை "அண்மை ஓரிடத் தோற்றக் கருதுகோள்" என்றும் "ஆப்பிரிக்காவிலிருந்து அண்மைக்கால வெளியேற்ற மாதிரி" என்றும் அழைப்பது உண்டு. இக் கருதுகோளின்படி "ஓமோ சப்பியென்சு" இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் 50,000 - 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஆசியாவில் வாழ்ந்த "ஓமோ இரக்டசு" இனத்தையும், ஐரோப்பாவில் வாழ்ந்த நீன்டர்தால்களையும் பதிலீடு செய்துவிட்டது. இக்கருதுகோளுக்கு மாற்றீடாக பல்லிடத் தோற்றக் கருதுகோள் என்னும் ஒரு கருதுகோளும் உள்ளது. இக்கருதுகோள், "ஓமோ இரக்டசு" இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிப் பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததன் மூலம் "ஓமோ சப்பியென்"கள் பல்வேறு புவியியல் பகுதிகளிலும் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர் என்கிறது. மரபியல் அடிப்படையிலான சில ஆய்வுகளின்படி, ஆப்பிரிக்கரல்லாத மக்களில் நீன்டர்தால்களின் கூறுகள் இருப்பதும், நீன்டர்தால்களும், "டெனிசோவா ஒமினின்" போன்ற ஒமினிட்டுகளும் தமது மரபுப்பதிவுகளில் 6% வரையில் தற்கால மனிதருக்கு வழங்கியுள்ளதும் தெரியவருகிறது. மனிதக் கூர்ப்புக்கான சான்றுகள் இயற்கை அறிவியலின் பல துறைகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகளில் பெரும்பாலானவை புதைபடிவப் பதிவுகளாகவே காணப்படுகின்றன எனினும் தற்காலத்தில் இவ்விடயத்தில் மரபியலின் பங்களிப்பும் கூடிக்கொண்டு வருகிறது. முதுகெலும்பிகள், முதுகெலும்பிலிகள் ஆகிய இருவகை விலங்குகள் தொடர்பிலும் உயிர்வளர்ச்சி (ontogeny), உயிரினத் தோற்ற வரலாறு (phylogeny), குறிப்பாகக் கூர்ப்பு அடிப்படையிலான வளர்ச்சிசார் உயிரியல் போன்ற துறைகளில் நிகழும் ஆய்வுகள் இன்று எல்லா உயிரினங்களதும் கூர்ப்புக் குறித்த பல விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. ஒமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக்கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக்கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. மேல்நிலை உயர் விலங்கினங்களில் வால், இடுப்பெலும்பில் முக்கோண எலும்பாக மாறிவிட்டது. எல்லா முதுகெலும்பிகளும் தமது உயிர்வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் வாலைக் கொண்டிருக்கின்றன. மனிதரைப் பொறுத்தவரை, மனிதக் கருவளர்ச்சியின் 14 முதல் 22 வரையான 4 வாரக் காலப்பகுதியில் வால் இருப்பதைக் காணலாம். மனிதரில் இப்போது பயன்பாடற்றுப் போய்விட்ட மூன்றாவது கண்மடல் இருப்பதையும் காணமுடியும். மனிதனுக்குக் கீழ்நிலையில் உள்ள விலங்குகளின் புறக் காதில் தசைநார்கள் உள்ளன. இவை புற ஒலிகளைக் குவிப்பதற்காகக் காதைத் தனியே அசைப்பதற்குப் பயன்படுகின்றன. இத் தசைநார்கள் மனிதனில் வலுவிழந்த நிலையில் உள்ளன.. அங்கால் தசைநார்களும் மனிதக் கூர்ப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. சில விலங்குகள் பொருட்களைக் காலால் பிடிப்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் அங்கால் தசைநார்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதக்குரங்கு பற்றிப் பிடிப்பதற்குக் கைகளைப் போலவே கால்களையும் பயன்படுத்த வல்லது. மனிதனிலும் இத் தசைநார்கள் காணப்பட்டாலும், இவை வளர்ச்சியடையாத நிலையில் பயன்படாமல் உள்ளது. இதனால் சில வேளைகளில், உடலின் பிற பாகங்களை மீட்டுருவாக்குவதற்குத் திசுக்கள் தேவைப்படும்போது, மருத்துவர்கள் இந்தத் தசைநார்களை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் 9% குழந்தைகள் இந்தத் தசைநார்கள் இல்லாமலே பிறப்பது, மனிதருக்கு இதன் தேவையின்மையைக் காட்டுகிறது. கூர்ப்புக்குச் சான்றாக அமையும் இன்னொன்று சேக்கப்சனின் உறுப்பு ஆகும். விலங்குகளின் உடற்கூற்றின் ஒரு பகுதியாகிய இவ்வுறுப்பு மூக்கறையில் அமைந்துள்ளது. இவ்வுறுப்பு பாலுணர்வுக்கான விருப்பு, எச்சரிக்கை உணர்வு போன்றவற்றைத் தூண்டும் வேதிப்பொருளை உணர உதவுகிறது. இது விலங்குகள் பாலியல் தேவைக்காகப் பிற விலங்குகள் இருக்கும் இடத்தை அறியவும், ஆபத்துக்களை உணர்ந்து கொண்டு எச்சரிக்கை அடையவும், உணவு இருக்கும் இடத்தைக் கண்டுகொள்ளவும் பயன்பட்டது. மனிதர் பிறக்கும்போது இந்த உறுப்புடனேயே பிறக்கிறார்கள். எனினும் வளர்ச்சியில் தொடக்கக் கட்டத்திலேயே இதன் வல்லமை குறைவடைந்து பயனற்ற நிலைக்கு வந்துவிடுகிறது. சிலவேளைகளில், முன்னைய உறுப்புக்களின் எச்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சில அமைப்புக்கள் முன்னர் இன்னும் அறியப்படாத தேவைகளுக்குப் பயன்பட்டு இருக்கலாம். ஞானப்பற்களும் கூர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. மனிதனின் மூதாதையர்கள் ஏராளமான தாவரப் பொருட்களை உணவாகக் கொண்டனர். கிடைக்கும்போது தேவையான அளவைச் சாப்பிட்டுவிடுவதற்கு இவ்வுணவை இவர்கள் விரைவாகச் சாப்பிடவேண்டும். இதனால், அவர்களது பெரிய வாய்கள் கூடிய திறன் கொண்டவையாக இருப்பதற்கு கூடுதலான அரைக்கும் பற்கள் (கடைவாய்ப் பற்கள், ஞானப் பற்கள்) தேவைப்பட்டன. அத்துடன், மனிதரின் மூதாதைகளின் உடலுக்கு செலுலோசைச் செரிக்கும் தன்மை போதிய அளவு இருக்காததால், உணவை வாயில் கூடுதலாக அரைத்துக் கொள்வதற்கும் இது தேவையாக இருந்தது. கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது. தாடைகள் சிறியன ஆகிவிட்டன. இதனால் மூன்றாவது சோடி அரைக்கும் பல்லும் தேவையற்றது ஆகிவிட்டது. உயர் விலங்கினங்களின் கூர்ப்பு வரலாறு 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடங்குகிறது, அறிந்தவற்றுள் மிகப் பழைய உயர்விலங்குகளை ஒத்த பாலூட்டி இனமான "பிளெசியாடெப்பிசு" "(Plesiadapis)" வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. எனினும், பலியோசீன், இயோசீன் காலங்களின் வெப்பமண்டல நிலைமைகளில் இவ்வினம் யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் பரந்து வாழ்ந்தது. 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட முந்திய ஒலிகோசீன் காலத்தில் உருவாகிய முதல் அன்டார்ட்டியப் பனி தற்காலக் காலநிலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இக் காலத்தைச் சேர்ந்த ஒரு உயர்விலங்கினம் "நாதார்க்டசு" ஆகும். 1980ல் செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டு, 16.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்ட புதைபடிவச் சான்றுகள் இதுபோல் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைவிட ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆண்டுகள் முற்பட்டது. இது, மனித இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தோன்றியது என்னும் கொள்கைக்குச் சவாலாக உள்ளது. "டிரையோபத்தேக்கசு" உள்ளிட்ட ஆப்பிரிக்க மனிதக்குரங்கு, மனிதர் ஆகிய இனங்களின் தோற்றத்தை நோக்கிய கால்வழியைச் சேர்ந்த இந்த உயர் விலங்கினம் ஐரோப்பா அல்லது மேற்காசியாவில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்ததாக டேவிட் பேகன் என்பவர் கூறுகிறார். அறிந்தவற்றுள் மிகவும் பழமையான கட்டரைன், மிகமேல் ஒலிகோசீன் காலத்தைச் சேர்ந்ததும், வட கெனியப் பிளவுப் பள்ளத்தாக்கிலுள்ள எராகலியட்டைச் சேர்ந்ததுமான "காமோயாபித்தேக்கசு" ஆகும். இது 24 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூதாதைகள், "ஏசிப்டோபித்தேக்கசு", "புரொப்பிலியோபித்தேக்கசு", "பராபித்தேக்கசு" ஆகியவற்றுக்கு உறவுடையவை என்று கருதப்படுகிறது. இவை 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன. "சாடனியசு" போரினம், கிரவுன் கட்டரைன்களின் கடைசிப் பொது மூதாதைக்கு உறவுடையது என 2010 ஆண்டில் விபரிக்கப்பட்டது. இது 29-28 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தற்காலிகமாகக் கணித்துள்ளனர். இதன் மூலம் புதைபடிவப் பதிவுகளில் காணப்பட்ட 11 மில்லியன் ஆண்டுக்கால இடைவெளி நிரப்பப்பட்டது. 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், முந்திய மயோசீன் காலத்தைச் சேர்ந்த, மரத்தில் வாழும் தகவடைந்த பல வகைகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததானது இனங்கள் பிரிவடைந்ததன் நீண்ட வரலாற்றைக் காட்டுகிறது. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிவங்களில், "விக்டோரியாபித்தேக்கசு" என்னும் மிக முந்திய பழைய உலகக் குரங்குகளுக்கு உரியதாகக் கருதப்படும் பகுதிகள் இருந்துள்ளன. 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை செல்லும் மனிதக் குரங்குகளின் கால்வழியைச் சேர்ந்தவை என நம்பப்படும் பேரினங்களுள் "புரோக்கான்சல்", "ரங்வாபித்தேக்கசு", "டென்ட்ரோபித்தேக்கசு", "லிம்னோபித்தேக்கசு", "நாச்சோலாபித்தேக்கசு", "ஈக்குவாட்டோரியசு", "நியான்சாபித்தேக்கசு", "ஆப்பிரோபித்தேக்கசு", "எலியோபித்தேக்கசு", "கென்யாபித்தேக்கசு" என்பன அடங்குகின்றன. இவையனைத்தும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தனவாகும். நமீபியாவின் குகைப் படிவுகளில் கிடைத்த "ஒட்டாவிப்பித்தேக்கசு"; பிரான்சு, எசுப்பெயின், ஆசுத்திரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த "பியெரோலாபித்தேக்கசு", "டிரையோபித்தேக்கசு" போன்ற பொதுமைப்படுத்திய செர்க்கோபித்தேசிடுகள் அல்லாதவை கிழக்காப்பிரிக்காவில் இருந்து தொலைவில் உள்ள களங்களில் கிடைத்திருப்பது அக்காலத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், நண்ணிலக்கடல் பகுதியிலும் பல்வேறு வகை இனப் பிரிவுகள் வாழ்ந்ததற்கான சான்றாகும். மியோசீன் ஓமினிடுகளுள் காலத்தால் பிற்பட்ட "ஒரியோப்பித்தேக்கசு" இத்தாலியில் நிலக்கரிப் படுகைகளில் இருந்து பெறப்பட்டது. இதன் காலம் 9 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கிப்பன்களின் கால்வழி ("ஐலோபட்டிடே" குடும்பம்) பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது சுமார் 18-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும், ஓரங்குட்டான்கள் பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது ஏறத்தாழ 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்றும் மூலக்கூற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. கிப்பன்களின் வழிமரபைத் தெளிவாகப் பதிவு செய்யும் புதைபடிவச் சான்றுகள் எதுவும் கிடையா. இது இதுவரை அறியப்படாத தென்கிழக்காசிய ஒமினிடுவில் இருந்து தோன்றியிருக்கக்கூடும். கொரில்லாக்கள், சிம்பன்சிகள், மனிதர் ஆகியவற்றின் கடைசிப் பொது மூதாதைக்குக் கிட்டியதாகக் கருதப்படக் கூடியவை, கெனியாவில் இருந்து கிடைத்த "நாக்காலிப்பித்தேகசு", கிரீசில் இருந்து கிடைத்த "ஓரானோபித்தேகசு" என்பனவாகும். மூலக்கூற்றுச் சான்றுகளின்படி 8 தொடக்கம் 4 மில்லியன் ஆண்டுகள் முன் வரையான காலப்பகுதியில், முதலில் கொரில்லாக்களும், பின்னர் சிம்பன்சிகளும் (பான் பேரினம்) மனிதனின் தோற்றத்தை நோக்கிச் சென்ற மரபுவழியில் இருந்து பிரிந்தன. மனிதனுடைய டி.என்.ஏ, சிம்பன்சிகளுடையவற்றுடன் ஏறத்தாழ 98.4% ஒத்துள்ளது. கொரில்லாக்கள், சிம்பன்சிகள் ஆகியவற்றின் புதைபடிவப் பதிவுகள் குறைந்த அளவே கிடைக்கின்றன. மழைக்காட்டு மண் அமிலத்தன்மை கொண்டதால் எலும்புகள் கரைந்துவிடுவதால் அவை புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட முடிவதில்லை என்பது ஒரு காரணம். மாதிரி எடுத்தல் குறைபாடுகளும் இதற்கு ஒரு காரணமாகலாம். பிற ஓமினைன்கள்; ஆன்டிலோப்புகள், கழுதைப்புலிகள், நாய்கள், பன்றிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றுடன் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு வெளியேயுள்ள வரண்ட சூழலுக்குத் தகவு பெற்றிருக்கக்கூடும். இற்றைக்கு 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்குப் பின்னர், நிலநடுக்கோட்டு பகுதி சுருங்கியது. சிம்பன்சிகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்த பின்னர் உருவான அக் கால்வழியைச் சேர்ந்த பல ஓமினைன் இனங்களின் புதைபடிவங்கள் ஒப்பீட்டளவில் பெரிதும் அறியப்பட்டவை. இவற்றுள் காலத்தால் முந்தியது "சகெலந்திறோப்பசு சண்டென்சிசு" இது 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது (மிமு). இவ்வாறான ஓமினின்கள் பின்வருமாறு: ஓமோ பேரினத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே இனம் "ஓமோ சப்பியென்சு". அழிந்துபோன ஒரு "ஓமோ" இனம் "ஓமோ சப்பியென்சு" இனத்தில் மூதாதையாக இருக்கக்கூடும். அதே வேளை பெரும்பாலான இத்தகைய இனங்கள் "ஓமோ சப்பியென்சுக்கு" ஒன்றுவிட்ட உடன்பிறப்புக்கள் போன்றவை. இவை மனித மூதாதையரின் கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டவை. இவற்றுள் எவையெவை தனி இனங்கள் எவை இன்னொரு இனத்தின் துணையினம் என்ற விடயங்கள் குறித்து ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. போதிய அளவு புதைபடிவங்கள் கிடைக்காதது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதைவிட, ஓமோ பேரினத்தில், இனங்களை வகைப்படுத்துவதில் காணப்படும் சிறிய வேறுபாடுகளும் மேற்படி கருத்தொற்றுமைக் குறைவுக்கு இன்னொரு காரணம். ஓமோ பேரினத்தில் காணப்பட்ட தொடக்ககால வேறுபாடுகளுக்கான காரணமாகக் கொள்ளத்தக்க விளக்கங்களுள் ஒன்றை சகாரா வெளியேற்றிக் கோட்பாடு (Sahara pump theory) முன்வைக்கிறது. ஒருகாலத்தில் ஈரலிப்பான பகுதியாக இருந்த இன்றைய சகாரப் பாலைவனப் பகுதி உயிரினங்கள் ஆப்பிரிக்காவுக்கும், யூரேசியாவுக்கும் இடையே பரவுவதற்கு உதவியது என்பது இக் கோட்பாட்டின் சாரம். தொல்லியல், தொல்லுயிரியல் ஆகிய துறைகள் தரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு ஓமோ இனங்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி உய்த்துணர முடிவதுடன், ஓமோக்களின் உடல்சார் கூர்ப்பு, நடத்தைசார் கூர்ப்பு என்பவற்றில் உணவுப் பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வுகள் செய்யவும் முடிகிறது. "ஓமோ அபிலிசு" மிமு 2.4 தொடக்கம் 1.4 வரை வாழ்ந்தன. இவை பிளியோசீன் காலப் பிற்பகுதியில் அல்லது மிமு 2.5 - 2 வரையிலான பிளீசுட்டோசீன் கால முற்பகுதியில் ஆசுத்திரலோபித்தேசைனில் இருந்து பிரிந்து, ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் கூர்ப்படைந்தன. ஓமோ அபிலிசுக்கள், ஆசுத்திரலோபித்தேசைன்களுடன் ஒப்பிடும்போது சிறிய அரைக்கும் பற்களையும், பெரிய மூளையையும் கொண்டிருந்தன. இவை கற் கருவிகளைச் செய்தன. விலங்குகளின் எலும்புகளிலும் கருவிகளைச் செய்திருக்கக்கூடும். இவற்றின் எலும்புக்கூடு, இரண்டு கால்களால் நடப்பதைவிட, மரத்தில் வாழ்வதற்கே கூடிய தகவு பெற்றிருப்பதனால் இவற்றை "ஓமோ" பேரினத்தில் இருந்து "ஆசுத்திரலோபித்தேக்கசு" பேரினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானது எனச் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். மே 2010ல் "ஓமோ கோட்டென்சென்சிசு" என்னும் புதிய இனம் ஒன்றைத் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பதற்கு முன்னர் "ஓமோ அபிலிசு"க்களையே "ஓமோ" பேரினத்தின் முதல் இனமாகக் கருதி வந்தனர். இப்போது, பெரும்பாலும், "ஓமோ கோட்டென்சென்சிசு" "ஓமோ அபிலிசு"க்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்கின்றனர். இவை, மிமு 1.9 - 1.6 காலப் பகுதியைச் சேர்ந்த புதைபடிவங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். "ஓமோ அபிலிசு"க்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் தெளிவாகவில்லை. "ஓமோ இரெக்டசு"வின் முதல் புதைபடிவத்தை ஒல்லாந்த மருத்துவரான இயூசீன் துபோய்சு என்பவர், 1891 ஆம் ஆண்டில், இந்தோனீசியத் தீவுகளில் ஒன்றான சாவாவில் கண்டுபிடித்தார். அதன் உருவவியலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அதற்கு "பித்தேகாந்திரோப்பசு இரெக்டசு" எனப் பெயரிட்டார். இதை அவர் மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் இடைப்பட்டதாகக் கருதினார். "ஓமோ இரெக்டசு" மிமு 1.8 தொடக்கம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வரையான காலப் பகுதியில் வாழ்ந்தது. இது, இவ்வினம் தோபோ பேரழிவினால் முற்றாகவே அழிந்திருக்கலாம் எனக் காட்டுகிறது. எனினும், "ஓமோ இரெக்டசு சொலோவென்சிசு", "ஓமோ புளோரசியென்சிசு" ஆகிய இனங்கள் இப் பேரழிவில் இருந்து தப்பிவிட்டன. மிமு 1.8 - 1.25 காலப்பகுதியைச் சேர்ந்த "ஓமோ இரெக்டசு", "ஓமோ எர்காசுட்டர்" என்னும் தனி இனமாக அல்லது "ஓமோ இரெக்டசு எர்காசுட்டர்" என்னும், "ஓமோ இரெக்டசு" இனத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது. மிமு 1.5 - 1 காலப்பகுதியான, பிளீத்தோசீன் கால முற்பகுதியில், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் "ஓமோ அபிலிசு" இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதி பெரிய மூளையைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்ததோடு, நுணுக்கமான கற்கருவிகளையும் செய்தன. இவ்வியல்புகளும், வேறு சிலவும் இவற்றை "ஓமோ இரெக்டசு" என்னும் புதிய இனமாக வகைப்படுத்தப் போதியதாக இருந்தது. அத்துடன், உண்மையாக நிமிர்ந்து நடந்த முதல் மனித மூதாதை "ஓமோ எரெக்டசு" ஆகும். தளரா முழங்கால் பொருத்து வளர்ச்சியும், மண்டையோட்டுப் பெருந்துளையின் அமைவிட மாற்றமும், இது சாத்தியமாகக் காரணமாயிற்று. இவ்வினம், இறைச்சியைச் சமைப்பதற்கு நெருப்பையும் பயன்படுத்தி இருக்கக்கூடும். "ஓமோ இரெக்டசு"வுக்குப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு பீக்கிங் மனிதன் ஆகும். இதன் பிற எடுத்துக்காட்டுகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கிடைத்தன. இவற்றில் ஆசியா அல்லாத பிற பகுதிகளைச் சேர்ந்தவற்றை, தற்காலத்தில் தொல்மானிடவியலாளர் பலர், "ஓமோ எர்காசுட்டர்" என அழைக்கின்றனர். ஆசியாவைச் சேர்ந்தனவும், மண்டையோடு, பற்கள் என்பவை தொடர்பில் சில சிறப்பியல்புகளைக் கொண்டவை மட்டுமே தற்போது "ஓமோ இரெக்டசு" என்னும் இனத்துள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வியல்புகள் "ஓமோ எர்காசுட்டர்" இனத்தில் இயல்புகளில் இருந்து வேறுபடுகின்றன. இவை, இனங்களாக முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். "ஓ. இரெக்டசு", "ஓ. எய்டெல்பர்கென்சிசு" ஆகிய இனங்களுக்கு இடைப்பட்டதாக இவை இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். "ஓ. எய்டெல்பேர்கென்சிசு", எய்டெல்பேர்க் மனிதன் எனவும் அழைக்கப்படுகிறது. இது, 800,000 - 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலப் பகுதியில் வாழ்ந்துள்ளது. "ஓமோ சப்பியென்சு எய்டெல்பேர்கென்சிசு", ""ஓமோ சப்பியென்சு பலியோகங்கேரிகசு" ஆகிய பெயர்களும் இதற்கு முன்மொழியப்பட்டு உள்ளன. பிண்டி (மரம்) பிண்டி Caesalpinioideae என்னும் மரத்தை இக்காலத்தில் அசோகமரம் என்பர். பிண்டி பரம், மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன. அவை அவற்றின் தோற்றம் பற்றியும், பயன்பாடு பற்றியும் விளக்குகின்றன. இந்த மரத்தின் இனம் காண்க சேனல் 4 சேனல் 4 ("Channel 4") என்பது பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு பொதுத் தொலைக்காட்சி சேவையாகும். இச்சேவை 1982 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம், மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆரம்பத்தில் இச்சேவை சுயாதீனத் தொலைக்காட்சி ஆணையத்தினால் நிருவகிக்கப்பட்டுப் பின்னர் 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சேனல் 4 தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தினால் 1993 ஆம் ஆண்டு முதல் நிருவகிக்கப்பட்டு வருகிறது. வணிக விளம்பரங்கள் மூலம் தனது நிதியைத் திரட்டி வந்தாலும், இது ஒரு பொது நிறுவனம் ஆகும். பிபிசியின் இரண்டு தொலைக்காட்சி சேவைகள், மற்றும் ஐடிவி என்ற ஒரேயொரு வர்த்தக சேவையுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தின் நான்காவது தொலைக்காட்சி சேவையாக சேனல் 4 இணைந்து கொண்டது. கீவ் சண்டை (1941) கீவ் சண்டை ("Battle of Kiev") என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். ஆகஸ்ட் 23 - செப்டம்பர் 26, 2011 காலகட்டத்தில் நடைபெற்ற இச்சண்டை பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். ஜெர்மனியப் படைகளுக்கு பெருவெற்றியாக முடிந்த இது, போர் வரலாற்றில் மாபெரும் சுற்றிவளைப்புச் சண்டையாகக் கருதப்படுகிறது. சோவியத் போர்வரலாற்றுத் தரவுகளில் இது கீவ் பாதுகாப்பு நடவடிக்கை ("Kiev Defensive Operation. Киевская оборонительная операция") என்றழைக்கப்படுகிறது. ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் தெற்கு ஆர்மி குரூப் உக்ரைன் பகுதியைத் தாக்கியது. முதலிரு மாதங்கள் இதன் முன்னேறறம் மந்தமாக இருந்தது. ஆகஸ்ட் முதல்வாரம் ஆர்மி குரூப் நடுவிலிருந்து பல கவசப் படைப்பிரிவுகள் தெற்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டன. இதனால் மீண்டும் வேகமாக முன்னேறிய ஜெர்மானியப் படைகள் ஆகஸ்ட் பின்பகுதியில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறி விட்டன. இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சோவியத் தென்மேற்குக் களம் படைப்பிரிவினை கீவ் நகர் அருகே சுற்றி வளைக்க ஜெர்மானியப் படைகள் முயன்றன. வடக்கிலிருந்து 2வது பான்சர்குரூப்பும், 2வது ஆர்மியும் தென்கிழக்கிலிருந்து தெற்கு ஆர்மி குரூப்பும் கிடுக்கியின் இரு கரங்களாக செயல்பட்டு சோவியத் படைகளை சுற்றி வளைத்தன. ஜெர்மானியப் படைவளையத்துக்குள் சுமார் ஏழு லட்சம் சோவியத் வீரர்கள் சிக்கிக் கொண்டனர். செப்டம்பர் மாதம் ஜெர்மானியப் படைவளையம் இறுகத் தொடங்கியது. கீவ் பகுதியில் சிக்கிக்கொண்ட சோவியத் படைகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டாலும் 26 செப்டம்பரில் கீவ் நகரம் வீழ்ந்தது. எஞ்சிய சோவியத் படைகள் சரணடைந்தன. சோவியத் தரப்பில் ஆறு லட்சம் வீரர்கள் மாண்டனர் அல்லது போர்க்கைதிகளாயினர். உலகப் போர் வரலாற்றில் மாபெரும் சுற்றிவளைப்புச் சண்டையாக இது கருதப்படுகிறது. மயிலை சீனி. வேங்கடசாமி மயிலை சீனி. வேங்கடசாமி (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். "திருக்குறள் காமத்துப்பால் நாட்கள்", "திருமயிலை நான்மணி மாலை" ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய "திராவிடன்" இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்: தமிழையே வணிகமாக்கித் தன்வீடும் மக்கள் சுற்றம் தமிழிலே பிழைப்பதற்கும் தலைமுறை தலைமுறைக்குத் தமிழ் முதலாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச் சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன்” 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது. டைனமைட்டு (தொடர்புடைய பக்கம்) டைனமைட்டு ஓர் மிகு ஆற்றல் வெடிபொருளாகும். டைனமைட் என்பது இவற்றையும் குறிக்கலாம்: மிர்சாபூர் மாவட்டம் மிர்சாபூர் மாவட்டம் (, ) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மிர்சாபூர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 4521 km. இம்மாவட்டம் மிர்சாபூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மிர்சாபூர், லால்கஞ், மரிஹன், சுனர் என நான்கு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வட்டங்களும் பனிரெண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மிர்சாபூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மிர்சாபூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,494,533. இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 174வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி . மேலும் மிர்சாபூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.89%.மிர்சாபூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர். மேலும் மிர்சாபூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 70.38%. ஞா. பொன்னு பிள்ளை ஞா. பொன்னு பிள்ளை என்பவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தேனி அருகிலுள்ள உப்பார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் உப்பார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பல வருடங்கள் இருந்திருக்கிறார். என். ஆர். அழகராஜா என். ஆர். அழகராஜா என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் அதிகம் வசிக்கும் ராஜூக்கள் சமூகத்தைச் சேர்ந்த இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள சண்முகசுந்தரபுரம் எனும் ஊரில் நூற்பாலை ஒன்றை நிறுவி அதை நடத்தி வருகிறார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பின்ராகப் பணியாற்றி இருக்கிறார். 1989 ஆண்டு இதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி - அல்லிநகரம் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து வருடங்கள் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார். வி. ஆர். ஜெயராமன் வி. ஆர். ஜெயராமன் என்பவர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தேனி அருகிலுள்ள தாடிச்சேரி எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அ. இ. அ. தி. மு. க சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இதற்கு முன்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். ஆர். டி. கணேசன் ஆர். டி. கணேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேனி மாவட்டத்திலுள்ள, குப்பிநாயக்கன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவராவார். இவர் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு முறை தேனி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் கவரா நாயுடு சாதியைச் சேர்ந்தவர். வம்சம் =வம்சம்= ஒரு வம்சம் (இங்கிலாந்து: / dɪnəsti /, அமெரிக்க: / daɪnəsti /) என்பது ஒரு குடும்பத்தின் ஆட்சியாளர்களின் வரிசைமுறையாகும், [1] வழக்கமாக ஒரு நிலப்பிரபு அல்லது முடியாட்சிக்கான அமைப்புமுறையின் பின்னணியில் உள்ளது, ஆனால் சில சமயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுகளில் தோன்றும். மரபுவழி குடும்பம் அல்லது பரம்பரையானது "வீடு" என்று அழைக்கப்படலாம்; [2] "அரச", "இளவரசன்", "காமிலிட்டல்" போன்றவற்றை வடிவமைக்கலாம். பண்டைய எகிப்து, கரோலீயியன் பேரரசு மற்றும் இம்பீரியல் சீனா போன்ற தொடர்ச்சியான வம்சாவளிகளின் கட்டமைப்பைப் பயன்படுத்தி வரலாற்றாளர்கள் பல இறையாண்மை கொண்ட நாடுகளின் வரலாற்றை காலந்தாழ்த்துகின்றனர். "வம்சத்தை" என்ற வார்த்தை காலத்தின் காலப்பகுதி, நிகழ்வு, போக்குகள் மற்றும் அந்தக் காலப்பகுதிகளை ("ஒரு மிங்-வம்ச வாஸ்") விவரிக்கிறது மற்றும் விவரிக்கின்ற சகாப்தத்தை வரையறுக்க பயன்படுகிறது. "வம்சத்தை" என்ற சொல்லை பெரும்பாலும் இத்தகைய பெயரளவிலான குறிப்புகள் ("ஒரு மிங் குடு") இருந்து கைவிடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் வரை, ஒரு மன்னரின் சட்டபூர்வமான செயல்பாடு அவரது வம்சத்தை பெருமளவில் அதிகப்படுத்தியது, அதாவது அவருடைய குடும்ப உறுப்பினர்களின் நிலப்பரப்பு, செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை அதிகரிப்பது என்று வழங்கப்பட்டது. [3] உலகின் மிக நீளமான உயிர் வம்சம் ஜப்பானிய இம்பீரியல் ஹவுஸ் ஆகும், யமடோ வம்சத்தைச் சார்ந்தது, இதன் ஆட்சி பாரம்பரியமாக 660 கி.மு. உலகெங்கிலும் உள்ள வன மரபுகள் பாரம்பரியமாக ஃபிராங்க் சாலிக் சட்டத்தின் கீழ், வழக்கமாக மரபார்ந்த முறையில் கணக்கிடப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட போது ஒரு மகள் மூலம் அவரது கணவர் ஆளும் வீட்டில் ஒரு புதிய வம்சத்தை நிறுவ கருதப்பட்டது. இருப்பினும், ஆபிரிக்காவின் சில மாநிலங்கள் (Balobedu), நிர்ணயிக்கப்பட்ட வம்சாவளியை முத்திரையாக, ஆட்சியாளர்கள் மற்ற சமயங்களில் தங்கள் தாயின் வம்சத்தின் பெயரை அவரின் சுதந்தரத்திற்குள் கொண்டுவந்தனர். குறைந்த பட்சம், ஒரு முடியாட்சியை மாற்றியமைக்கலாம் அல்லது சுழற்சி செய்யப்படுகிறது, ஒரு பல்லுயிர் (அல்லது பாலிடைனாஸ்டிக்) அமைப்பில் - அதாவது, இணையான வம்சத்தின் மிகவும் மூத்த வாழ்க்கை உறுப்பினர்கள், எந்த நேரத்திலும், அடுத்தடுத்த வரிசை வரிசையாக உள்ளனர். "வம்சம்" என்ற வார்த்தை சில நேரங்களில் ஆட்சியாளர்களல்லாதவர்களுக்கென்று முறையாக பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனத்தின் தொடர்ச்சியான உரிமையாளர்களின் தொடர்ச்சியான பிற பகுதிகளில் செல்வாக்கையும் சக்தியையும் கொண்ட ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள். அதே பள்ளியின் முக்கிய கவிஞர்களோ அல்லது ஒற்றை விளையாட்டுக் குழுவின் பல்வேறு நபர்களையோ இது தொடர்பில்லாத நபர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. [1] =மேற்கோள்கள்= http://www.cultural-china.com/chinaWH/html/en/History1766bye3553.htm இக்கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. உறவினர் உறவினர் என்பவர், ஒருவருடைய குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது ஒரே குடும்பத்தில், பெண் எடுத்தவராகவோ அல்லது பெண் கொடுத்தவர்களாகவோ இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில், இரத்த பந்தம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும். உறவுமுறை பற்றி மேலும் பார்க்க "உறவுமுறை" ஒரு மனிதன் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அந்த மனிதன் மணம் செய்யும்போது அவனின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும், ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. வேறு சில உறவுகள்மே ம்போக்கானவையாக இருக்கின்றன. நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் பற்றி மேலும் பார்க்க "நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்" ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள், குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலைகளில் பகுத்துக்காண இயலுகின்றது. மரபு வழி மரபு வழி என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர். பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் தமிழக அரச மரபுகள் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் சேரர், பாண்டியர் சந்திர வம்சம் எனவும் சோழர் சூரிய வம்சம் பல்லவர் பரத்துவாசர் வம்சம் எனவும் கூறப்படுகின்றனர். ஆட்சிமுறை அல்லது தலைமைமுறை வரிசையைக் குறிக்க மரபு, பரம்பரை என்னும் சொற்களைக் கையாளுகின்றனர். இது வழிவழியாக இவருக்குப் பின்னர் இவர் மகன் என வருவது அன்று. இவருக்குப் பின்னர் இவரது மாணாக்கர் என வருவது. கந்தகார் படுகொலை கந்தகார் படுகொலை என்பது ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்ச்சு 11, 2012 அன்று விடியற்காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வை குறிக்கிறது. இப்படுகொலையில் பதினாறு குடிமக்கள் (ஒன்பது சிறார்களும் நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்) கொல்லப்பட்டனர். சில உடல்கள் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொறு உறுப்பினர்கள் அடங்குவர். இப்படுகொலையை செய்ததாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த செர்ஜியன்ட் ஒருவர் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டார். அவ்வீரர் குவைத்திற்கு மார்ச்சு 13, 2012 அன்று கொண்டு செல்லப்பட்டு பின்னர் கான்சாசில் உள்ள இராணுவ தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.. மார்ச்சு 16,2012 அன்று அவரது பெயர் அடையாளம் காணப்பட்டது. காலை பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உதிக்கின்ற நேரம் அவ்விடத்தில் காலை ("morning") அல்லது விடியல் எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் உச்சத்திற்கு வரும் நேரம் வரை உள்ள காலம் பொதுவாகக் காலை எனப்படும். thanks மாலை பித்திகம் பித்திகம் (காட்டு மல்லிகை) என்னும் மலரைப் பித்திகை என்றும் வழங்கினர். அந்தப் பூவின் வெரிந் (முதுகு) பகுதி சிவப்பாக இருக்கும். இந்தப் பூ மாலையில் மலரும். ஆடவர் பித்திக மாலையைச் சூடிக்கொள்வர். சங்கப்பாடல்கள் இந்தச் செய்திகளை நமக்குத் தருகின்றன. ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்) ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (Harry Potter and the Deathly Hallows – Part 2) 19 இல் வெளியான அமெரிக்க கற்பனை திரைப்படமாகும். இது ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் ஒன்றின் தொடர்ச்சியாகும். ஜே. கே. ரௌலிங் எழுதிய புதினத்தினை சார்ந்து இயக்கப்பட்டது. டேனியல் ராட்க்ளிஃப்ரூபர்ட் கிரின்ட்எம்மா வாட்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. வசுமதி இராமசாமி வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைக் கழக பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தவர். 12 வயதில் திருமணம் ஆன வசுமதியின் கணவர் இராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார். "அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேசசாயி இவரது புதல்வர். தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள். எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர். வை. மு. கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. தினமணிக் கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான "காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் "அலை ஓசை' போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் "காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது. "தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?" என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது ஆசான் என்று குறிப்பிடுவார். "தேவியின் கடிதங்கள்" என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜிதான். வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இன்று ஐநூறு மாதக் கூட்டங்களை ஒரு மாதம் கூட விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டிருக்கும் "இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது "சிவன் சொத்து' என்ற கதையைப் பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுத்தவர் அகிலன். "ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியராகவும், பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றார். முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய "இந்திய மாதர் சங்கம்' என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார்கள். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார். சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் சிறப்பை உணர்ந்து ஔவை தி. க. சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு. லால்பகதூர் சாஸ்திரியிடம் போர் நிதியாக அக்காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றார். காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் கட்டளைப்படி, "ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். இத்தொண்டு இவரது மகளால் இன்றும் தொடர்கிறது. வசுமதி இராமசாமி ஜனவரி 4, 2004-ஆம் ஆண்டு தனது 86 ஆம் வயதில் மறைந்தார். பாறைக் குவிமாடம் பாறைக் குவிமாடம் ("Dome of the Rock") என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதத் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது. இதன் இதயப் பகுதியாகிய அத்திவாரப் பாறை சமயங்களின் பாரம்பரியங்களிற்கு முக்கிய அடிப்படையாகவுள்ளது. பாறைக் குவிமாடம் கோவில் மலை எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது கி.பி. 70 இல் உரோமப் படை மேற்கொண்ட எருசலேம் முற்றுகையின்போது அழிக்கப்பட்ட இரண்டாம் கோவில் (யூதம்) அமைந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. கி.பி. 637 இல் யெரூசலேம் கலிப்பா படையிடம் வீழ்ச்சியடைந்தது. இக் கட்டடம் கலிபா ஒமர் இபின் அல் கட்டாப்பினால் யூத போதகராக இருந்து மதம் மாறிய காஃப் அல் அக்பரின் ஆலோசனையுடன் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 689 – 691 காலப் பகுதியில் இது கட்டப்பட்டது. யசிட் இபன் சலாம் மற்றும் ராஜா இபன் கேவா ஆகியோர் பொறியியலாளர்களாக இருந்தனர். இக் கட்டடம் எண்கோண வடிவம் உடையது. ஏறக்குறைய 20 மீட்டர் விட்டமுடைய மரத்தினால் ஆன குவிமாடம் 16 தூண்கள் மேல் உள்ளது. வெளிப் பக்கச் சுவர் பீங்கானிலால் ஆக்கப்பட்டு எண்கோணத்தை பிரதிபலிக்கச் செய்கிறது. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 60 அடி அகலமும், 36 அடி உயரமும் கொண்டது. குவிமாடமும் வெளிச்சுவரும் பல யன்னல்களையுடையன. குவிமாடம் வடிவம் பைசாந்திய வேத சாட்சிகளில் கல்லறை வடிவத்தை ஒத்தது. சுலைமான் காலத்தில் குவிமாடத்தின் வெளிப்புறம் மட்பாண்டம் செய்யப் பயன்படும் ஒருவித பொருளின் ஓடுகளினால் மூடப்பட்டிருந்தது. இதை முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆயின. பின்னர், பிரித்தானியாவினால் ஹச் அமின் அல் குசைன் பாறைக் குவிமாடத்தை புணருத்தாரனம் செய்ய நியமிக்கப்பட்டார். 1955 இல் அராபிய அரசாங்கங்கள் மற்றும் துருக்கியின் நிதியுதவிடன் யோர்தான் அரசாங்கம் புதுபித்தலை மேற்கொண்டது. இவ் வேலையானது சுலைமான் காலத்து ஓடுகளை மாற்றுவதாக இருந்தது. ஏனென்றால் அவை பெரு மழையினால் நகரத் தொடங்கின. 1965 இல் புணருத்தானத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் தயாரிக்கப்பட்ட உறுதியான அலுமியம் மற்றும் வெண்கலம் கலப்பு உலோகத்தினால் குவிமாடம் மூடப்பட்டது. 1993 இல் 80 கிலோ தங்கத்தினால் குவிமாடம் மூடப்பட்டது. இதற்காக யோர்தானிய மன்னர் குசைன் அவருடைய இலண்டன் வீடுகளை விற்று 8.2 மில்லியன் டாலர் அன்பளிப்பு செய்தார். உட்புறம் அதிகளவு சித்திர வேலைப்பாடுகள், பீங்கான் மட்பாண்டம், சலவைக் கல் என்பனவற்றைக் கொண்டு காணப்படுகிறது. இவை கட்டி முடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளின் பின்னரே சேர்க்கப்பட்டன. இங்கு குரான் எழுத்துக்களும் காணப்படுகின்றன. பாறைக் குவிமாடம் கோவில் மலையின் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சாலமோனின் கோவில் மற்றும் யூதர்களின் இரண்டாம் கோவில் என்பன காணப்பட்டன. இதில் இரண்டாம் கோவில் முதலாம் ஏரோது காலத்தில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் பாரிய வரிவாக்கலுக்கு உள்ளானது. ஏரோதின் கோயில் உரோமர்களால் கி.பி. 70 இலும் கி.பி 135 இல் இடம்பெற்ற புரட்சியின் பின்னும் அழிக்கப்பட்டு, உரோமர்களின் கோயில் அவ்விடத்தில் யூலியஸ் கபிடோலினசினால் கட்டப்பட்டது. எருசலேம் கிறிஸ்தவ பைசாந்தியப் பேரரசுவினால் 4 முதல் 6 வரையான காலப்பகுதியில் ஆளப்பட்டது. இக்காலத்தில் கிறிஸ்தவ யாத்திரிகள் எருசலேமுக்குச் செல்வது வளர்ச்சியடைந்தது. திருக்கல்லறைத் தேவாலயம் கொண்டான்டைனினால் 320 களில் கட்டப்பட்டது. ஆனால் கோவில் மலை யூலியன் பேரரசர் காலத்தில் புணரமைக்கும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யாமல் கைவிடப்பட்டது. சிலுவைப் போர் வீரர்கள் காலத்தில் பாறைக் குவிமாடம் கிருத்தவ துறவிகளிடம் கொடுக்கப்பட்டு கிருஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டிருந்தது. பாறைக் குவிமாடம் சலமோன் கட்டிய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என நைட் டெம்பிளர் நம்பினர். 12ம் நூற்றாண்டில் நைட் டெம்பிளருடைய தலைமையகமாக அல் அக்சா பள்ளிவாசல் காணப்பட்டது. இதற்கு முன் அல் அக்சா பள்ளிவாசல் அரச குதிரைகளின் இலாயமாக இருந்தது. சலமோன் கட்டிய யூத தேவாலய மாதிரி ஐரோப்பாவிலிருந்த தேவாலயங்களின் கட்டிட மாதிரியாக அக்காலத்தில் அமைந்தது. சலாதீனால் 1178 இல் மீண்டும் யெரூசலேம் கைப்பற்றப்பட்டது. பாறைக் குவிமாடம் மேல் இருந்த சிலுவைக்குப் பதிலாக பொன் பிறை வைக்கப்பட்டது. பாறைக்கு கீழ் மர யன்னல்கள் வைக்கப்பட்டன. பாரியளவிலான புணருத்தானம் மகமட் காலத்தில் 1817 இல் மேற் கொள்ளப்பட்டது. பாறைக் குவிமாடத்துடன் இணைந்தாற்போல் தனியான தீர்க்கதரிசி குவிமாடம் 1620 இல் உதுமானால் கட்டப்பட்டது. 11. சூன் 1927 அன்று பாலஸ்தீனத்தை தாக்கிய பூமியதிர்ச்சியில் பாறைக் குவிமாடம் பலத்த சேதத்திற்குள்ளாகி, அதற்கு முன்னைய ஆண்டுகளில் செய்த திருத்தங்கள் பயனற்றுப் போயின. 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வெற்றியின்போது இசுரேல் பாறைக் குவிமாடத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இசுரேலிய பாதுகாப்பு படைகளின் யூத போதகரான ஸ்லோமோ கெரென் தோராவுடனும் சோபாருடனும் பாறைக் குவிமாடத்தினுள் சென்றார். ஆறு நாள் போரின்போது பாறைக் குவிமாடத்தில் ஏற்றப்பட்ட இசுரேலிய தேசியக் கொடி சில மணித்தியாலங்களில் மோசே டயானின் உத்தரவின்படி இறக்கப்பட்டது. சமாதனத்தை பேணும் விதமாக அப் பகுதியின் அதிகாரம் முசுலிம்களுக்கு கொடுக்கப்பட்டது. சில யூத குழுக்கள் பாறைக் குவிமாடத்தை மக்காவிற்கு நகர்த்திவிட்டு மூன்றாவது யூத தேவாலயத்தை கட்ட விரும்புகின்றன. பாறைக் குவிமாடத்தை புனிதமாக முசுலிம்கள் கருதுவதனால் இச் செயல் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனலாம். யூத குழுக்களின் விருப்பு பற்றி இசுரேலியர்கள் இருவித கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றார்கள். சில சமய பற்றுள்ள யூதர்கள், யூத ஆலயம் மெசியாவின் காலத்தின் கட்டப்பட வேண்டும் என்கின்றனர் சில சுவிசேச கிருஸ்தவர்கள் கருத்துப்படி, யூத ஆலயம் கட்டும் செயல் கடைசி காலத்திற்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் முன் நிகழ வேண்டிய நிகழ்வு என்கின்றனர். பாறைக் குவிமாடத்தின் படம் ஈரானிய 1000 ரியாலின் பின் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. சில எண்கோண தேவாலயங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம் கிருஸ்தவர்களின் யெரூசலேம் தேவலயம் பற்றிய நம்பிக்கையே இப் பிரதிபலிப்பிற்கு முக்கிய காரணம். ஓவியர் ரபாயலின் ஓவியங்களில் இது பிரதிபலிப்பதையும் காணலாம். அணுகுகோடு பகுமுறை வடிவவியலில் ஒரு வளைவரையின் அணுகுகோடு ("asymptote") என்பது அவ்வளைவரையும் ஒரு கோடும் முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள தூரமானது பூச்சியத்தை அணுகும் விதத்தில் அமைந்த கோடாகும். சில ஆதாரங்கள் வளைவரையானது அணுகுகோட்டை முடிவிலா எண்ணிக்கையில் சந்திக்காது என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும் தற்கால எழுத்தாளர்கள் அவ்விதம் கருதுவதில்லை. இயற்கணித வடிவவியல் போன்றவற்றில் அணுகுகோடுகள் வளைவரையை முடிவிலியில் தொடுகின்ற தொடுகோடுகளாக (தொலைத் தொடுகோடுகள்) வரையறுக்கப்படுகின்றன. "ஒன்றாகச் சேராத" என்ற பொருளுடைய கிரேக்க மொழி வார்த்தையான ἀσύμπτωτος ("asímptotos") -லிருந்து ஆங்கிலத்தில் அணுகுகோட்டிற்கு "asymptote" என்ற பெயர் உருவானது. "பெர்காவின் அப்பலோனியசால்" அவரது படைப்பான " கூம்பு வெட்டுகள்" -ல் (conic sectins) இப்பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய பயன்பாடு போலல்லாமல், அவர் இப்பெயரை, "தரப்பட்ட வளைவரையை வெட்டாத கோடு" என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். கிடையான, நிலைக்குத்தான மற்றும் சாய்ந்த அணுகுகோடுகள் என மூன்று வகையான அணுகுகோடுகள் உள்ளன. என்ற சார்பின் வரைபடத்திற்கு "x" ஆனது -ஐ நெருங்கும்போது வளைவரையின் வரைபடம் எந்த கிடையான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அவை வளைவரையின் கிடையான அணுகுகோடுகள். இதேபோல வளைவரையின் வரைபடம் எந்த நிலைக்குத்தான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அவை வளைவரையின் நிலைக்குத்தான அணுகுகோடுகள். இரு வளைவரைகள் முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல அவற்றுக்கு இடையேயுள்ள தூரம் குறைந்து கொண்டே வந்து பூச்சியத்தை அணுகுமானால் அவ்விரண்டு வளைவரைகளும் ஒன்றுக்கொன்று வளைந்த அணுகுகோடுகளாக அமையும். ஒரு சார்பின் வரைபடம் வரைவதற்கு அதன் அணுகோட்டினைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம். "y"=1/"x" சார்பின் வரைபடம் வலப்புறத்திலுள்ள படத்தில் தரப்பட்டுள்ளது. "x" -ன் மதிப்பு அதிகமாக அதிகமாக (100, 1000, 10,000 ...,) அவற்றுக்குரிய "y" மதிப்புகள் (.01, .001, .0001, ...,) மிகவும் நுண்ணியமாகக் குறைந்து கொண்டே போகும். ஆனால் "x" -ன் மதிப்பு எவ்வளவுதான் அதிகரித்தாலும் எந்நிலையிலும் 1/"x" -ன் மதிப்பு 0 ஆகாது. அதாவது வளைவரை "x"-அச்சைச் சந்திக்கவே சந்திக்காது. மாறாக "x" -ன் மதிப்பு குறைந்து கொண்டே போகும் போது (.01, .001, .0001, ...) அவற்றுக்குரிய "y" மதிப்புகள் கூடிக்கொண்டே போகும் (100, 1000, 10,000 ...) எனவே "y"-அச்சுக்கு அருகில் நெருங்கி வரவர வளைவரை மேல்நோக்கி நீண்டு கொண்டே போகும். எனவே "x" மற்றும் "y"-அச்சுகள் இரண்டும் வளைவரையின் அணுகுகோடுகளாக இருக்கும். அணுகுகோடு கணிதத்தின் எல்லை-கருத்துருவின் அடிப்படையில் அமைகிறது. பொதுவாக நுண்கணிதத்தில் சார்புகளின் அணுகுகோடுகளைப் பற்றிய விவரங்கள் கண்டறியப்படுகின்றன. முதலில் எல்லை-கருத்தைப் பயன்படுத்தி அணுகுகோடுகளைக் கண்டுபிடித்துக் கொண்டு பின் அவற்றின் திசைப்போக்கைப் பொறுத்து அவற்றைக் கிடையான, நிலைக்குத்தான அல்லது சாய்ந்த அணுகுகோடுகள் என வகைப்படுத்தலாம். "x" ஆனது -ஐ நெருங்கும்போது வளைவரையின் வரைபடம் எந்த கிடையான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அவை வளைவரையின் கிடையான அணுகுகோடுகள். இவை "x"-அச்சுக்கு இணையாக அமையும். கோடு "y" = "c" , "y" = "ƒ"("x") சார்பின் கிடையான அணுகுகோடாக அமைய: முதலாவதில் "x" -ன் மதிப்பு −∞ -ஐ நெருங்கும்போது "ƒ"("x") -ன் அணுகுகோடு: "y" = "c" இரண்டாவதில் "x" -ன் மதிப்பு +∞ -ஐ நெருங்கும்போது "ƒ"("x") -ன் அணுகுகோடு "y" = "c" எடுத்துக்காட்டு: "x" -ன் மதிப்பு −∞ -ஐ நெருங்கும்போது "ƒ"("x") -ன் கிடையான அணுகுகோடு: "x" -ன் மதிப்பு +∞ -ஐ நெருங்கும்போது "ƒ"("x") -ன் கிடையான அணுகுகோடு: ஏதாவது ஒருபுறத்தில் அல்லது இருபுறமும் கிடையான அணுகுகோடுகள் இல்லாத அல்லது ஒரே கோட்டை இரண்டு திசைகளிலும் கிடையான அணுகுகோடாகக் கொண்டதுமான சார்புகள் உள்ளன. எடுத்துக்காட்டு: ஏனெனில்: வளைவரையின் வரைபடம் எந்த நிலைக்குத்தான கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ அக்கோடுகள் வளைவரையின் நிலைக்குத்தான அணுகுகோடுகள். இவை "x"-அச்சுக்குச் செங்குத்தாக அமையும். கோடு "x" = "a" , சார்பின் நிலைக்குத்தான அணுகுகோடாக அமைய கீழேயுள்ள கூற்றுகளில் குறைந்தது ஒன்றாவது உண்மையாக இருக்க வேண்டும். சார்பு "ƒ"("x"), "a"-ல் வரையறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது வரையறுக்கப்படாமலும் இருக்கலாம். "x" = "a" -ல் சார்பின் துல்லிய மதிப்பு அணுகுகோட்டைப் பாதிக்காது. எடுத்துக்காட்டாக: இச்சார்புக்கு எனும்போது +∞ எல்லமைதிப்பாகக் கிடைக்கிறது. "ƒ"(0) = 5 ஆக இருந்தாலும் இச்சார்பின் வளைவரையின் நிலைக்குத்தான அணுகுகோடு: . வளைவரை இந்த அணுகுகோட்டை ஒருமுறை (0,5) புள்ளியில் சந்திக்கிறது. ஒரு நிலைக்குத்தான அணுகுகோட்டை ஒரு சார்பின் வரைபடம் ஒரு முறைக்கு அதிகமாக வெட்டாது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு சார்பின் நிலைக்குத்தான அணுகுகோடுகள் காண அச்சார்பின் சமன்பாட்டின் பகுதியின் தீர்வுகளைக் காண வேண்டும். "x" ஆனது -ஐ நெருங்கும்போது வளைவரையின் வரைபடம் எந்த குறுக்குக் கோடுகளுக்கு அருகாமையில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறதோ (குறுக்குக் கோட்டிற்கும் வளைவரைக்கும் இடையேயுள்ள தூரம் பூச்சியத்தை நெருங்கும்.) அக்குறுக்குக் கோடுகள் வளைவரையின் சாய்ந்த அணுகுகோடுகள். சாய்ந்த அணுகுகோடுகள் "x" அல்லது "y" -அச்சுகளுக்கு இணையாக இருக்காது. முதல் கட்டுப்பாட்டின்படி "x" -ன் மதிப்பு +∞ ஐ நெருங்கும்போது "ƒ"("x") சார்பின் சாய்ந்த அணுகுகோடு இரண்டாவது கட்டுப்பாட்டின்படி "x" -ன் மதிப்பு -∞ ஐ நெருங்கும்போது "ƒ"("x") சார்பின் சாய்ந்த அணுகுகோடு எடுத்துக்காட்டு: "f"("x"), சார்பின் சாய்ந்த அணுகுகோட்டின் சமன்பாடு "y"="mx"+"n" எனில்: முதலில் "m" -ன்மதிப்புக் காணப்படுகிறது: இங்கு "a" -ன் மதிப்பு, formula_16 அல்லது formula_17 ஆக இருக்கும். இந்த எல்லையின் மதிப்பு இல்லாத திசைப்போக்கில், (formula_16 அல்லது formula_17) சார்புக்கு சாய்ந்த அணுகுகோடு இருக்காது. இந்த "m" மதிப்புடன் "n" -மதிப்புப் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: இங்கும் "a" -ன் மதிப்பு, formula_16 அல்லது formula_17 ஆக இருக்கும். "m" -ஐ வரையறுக்கும் எல்லை மதிப்புக் காணமுடிந்தாலும் "n" -ஐக் காணும் எல்லைமதிப்பு இல்லையென்றால் சார்புக்குச் சாய்ந்த அணுகோடுகள் கிடையாது. இரண்டு எல்லை மதிப்புகளும் காண முடிந்தால் "x" -ன் மதிப்பு "a" -ஐ நெருங்கும் போது "ƒ"("x") -ன் சாய்ந்த அணுகுகோடு . எடுத்துக்காட்டுகள்: எனவே "x" -ன் மதிப்பு +∞ -ஐ நெருங்கும் போது, "ƒ"("x") -ன் சாய்ந்த அணுகுகோடு எனவே இச்சார்புக்கு "x" -ன் மதிப்பு, +∞ -ஐ நெருங்கும்போது சாய்ந்த அணுகுகோடு இல்லை . எந்தவொரு விகிதமுறு சார்புக்கும் குறைந்தது ஒரு கிடையான அல்லது சாய்ந்த அணுகுகோடும் உண்டு. நிலைக்குத்தான அணுகுகோடுகள் பல இருக்கலாம். விகிதமுறு சார்பின் தொகுதி மற்றும் பகுதியின் அடுக்குகள்தான் அச்சார்பின் கிடையான அல்லது சாய்ந்த அணுகுகோடுகளைத் தீர்மானிக்கின்றன. பின்வரும் அட்டவணை இதற்கான எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. விகிதமுறு சார்பின் பகுதி பூச்சியமாக இருக்கும்போது நிலைக்குத்தான அணுகுகோடுகள் இருக்கும். எடுத்துக்காட்டு: ஒரு விகிதமுறு சார்பின் பகுதியின் அடுக்கைவிட தொகுதியின் அடுக்கு சரியாக ஒன்று அதிகமாக இருந்தால் அச்சார்புக்கு ஒரு சாய்ந்த அணுகுகோடு இருக்கும். இச்சார்பின் தொகுதியைப் பகுதியால் வகுத்தபின் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவை அந்தச் சாய்ந்த அணுகுகோட்டைத் தரும். எடுத்துக்காட்டு: "x" -ன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க 1/("x"+1) -ன் மதிப்பு சிறிதாகிக் கொண்டே செல்வதால், "x" -ன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க "f" -ன் வரைபடம், அணுகுகோடு "y" = "x" -ஐ நெருங்கும். (படத்தில் காட்டப்பட்டுள்ளது போல). தொகுதியின் அடுக்கு பகுதியின் அடுக்கைவிட ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால் தொகுதியைப் பகுதியால் வகுத்தபின் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவையின் அடுக்கு ஒன்றுக்கும் அதிகமாக இருக்கும். எனவே அச்சார்புக்கு சாய்ந்த அணுகுகோடு கிடையாது. அணுகுகோடுடைய ஒரு சார்பின் ("f"(x)="e"-ன் அணுகுகோடு "y"=0) இடப்பெயர்ச்சிச் சார்புகளுக்கும் அணுகுகோடுகள் உண்டு. ஒரு சார்பின் வளைவரை வரைதலில் அதன் அணுகுகோடுகள் பெரிதும் பயன்படுகின்றன. முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல சார்பின் தன்மையைப் பற்றி அறிந்துகொள்ள அணுகுகோடுகள் வழிகாட்டுகின்றன. ஒரு சார்புக்கு அணுகுகோடுகளாக அமையும் வளைவரைகளும் அச்சார்பின் வரைபடம் வரையப் பயன்படுகின்றன. அத்தகைய வளைவரைகள் அணுகுவளைவரைகள் எனப்படும். அதிபரவளையங்கள் இவற்றின் அணுகுகோடுகள்: இவ்விரண்டு கோடுகளின் சேர்ந்த சமன்பாடு: இதேபோல அதிபரவளையத் திண்மங்கள்: இவற்றின் அணுகுகூம்பு ஆதிப்புள்ளியிலிருந்து முடிவிலியை நோக்கிச் செல்லச் செல்ல அதிபரவளையத்திண்மத்திற்கும் இக்கூம்பிற்கும் இடையேயுள்ள தூரம் பூச்சியத்தை நெருங்குகிறது. General references: Specific references: பகீரதன் (எழுத்தாளர்) பகீரதன் எழுத்தாளர். இதழாசிரியர். புதினங்கள். சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் எழுதியவர். விடுதலைப் போராட்ட வீரர். பகீரதன் தொடங்கிய "சத்திய கங்கை' என்ற இதழ் தொடர்ந்து 33 ஆண்டுகள் வெளிவந்து சாதனை படைத்தது. 18 ஆண்டுகள் கல்கியில் துணையாசிரியராகவும், "ஓம் சக்தி' மாத இதழில் 14 ஆண்டுகள் ஆசிரியராகவும், "கிசான் வர்ல்ட்' என்ற ஆங்கில வேளாண்மை இதழில் 4 ஆண்டுகள் இணையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 14 புதினங்கள், 4 சிறுகதைத் தொகுதிகள். தவிர, தாம் சென்ற இடத்தைப் பற்றியெல்லாம் அவர் எழுதிய எண்ணற்ற பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.இராமலிங்கர் பணிமன்றம், பாரதியார் சங்கம் ஆகிய இலக்கிய அமைப்புகளில் பல்லாண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் பகீரதன். கல்கியில் வெளிவந்த இவருடைய பயணக் கட்டுரைகளை வாசித்த அறிஞர் அண்ணாதுரை."திராவிட நாடு' இதழில் இவரது எழுத்தை மனமாரப் பாராட்டினார். பகீரதனின் நூல்களில் மிகுந்த மதிப்போடு பேசப்பட்ட நூல்கள் என்று "சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாறு', "ஜோதி வழியில் வள்ளலார்', "முல்லை வனத்து மோகினி', "கல்கி நினைவுகள்' முதலியவற்றைச் சொல்லலாம். எதை எழுதினாலும் ஆதாரங்களைத் தேடி, கடுமையாக உழைத்து எழுதுவது பகீரதனின் பாணி. அவர் எழுத்தைப் படிக்கும் போதே தகவல் திரட்டுவதில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பு வாசகர்களுக்கு நன்கு புரியும். இவர் எழுதிய புத்தகங்கள் விற்பனையிலும் பெரும் சாதனை படைத்தவை. அழகப்ப செட்டியார் பற்றி இவர் எழுதிய "அதிசய மனிதர் அழகப்பர்' என்ற வாழ்க்கை வரலாற்று நூல் 30,000 பிரதிகளும், சுதந்திரப் போராட்ட வீரர் "சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்று' நூல் 25,000 பிரதிகளும் விற்று சாதனை படைத்தன. தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பொன்றை (ஆயிரம் பக்கங்களுக்கு மேல்) வெளியிட்டு இலக்கண உலகிலும் முத்திரை பதித்தார். வள்ளலாரின் தீவிர அடியவர். சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ஆங்கில நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஆன்மிக உலகிற்கும் தொண்டாற்றியுள்ளார். இவர் எழுதிய "தேன்மொழியாள்' என்ற புதினம், அதே தலைப்பில் நாடகமாக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சுமார் இருநூறு தடவைகளுக்கு மேல் மேடையேறியது. அதில் ராமசாமி என்ற நடிகர் ஒருவர் ஒரு நகைச் சுவைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் "சோ'. பிறகு அதுவே அந்த நடிகருக்குப் பெயராக மாறிவிட்டது.அந்த நடிகரின் பெயர் ராமசாமி இப்பெயர் பெயர் மக்களுக்கு மறந்தே போய்விட்டது. பத்திரிகையாளர் "சோ'வுக்குப் பெயர் பெற்றுத்தந்தது பகீரதனின் "தேன்மொழியாள்' நாடகம். இளம் வயதிலேயே காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தன் மனைவி சரோஜாவைக் கைப்பிடித்தபோது பெற்ற சீதனங்கள், மனைவிக்கான கதர்ப் புடவையும், மஞ்சள் சரடும் மட்டுமே. அவ்விதம் சொந்த வாழ்விலும் காந்தியத்தை அனுசரித்து வாழ்ந்தவர். சுதந்திரப் போரில் ஈடுபட்ட பகீரதன், எப்போதும் கதராடைகளையே அணிந்தார். வார்தாவில் மகாத்மாவிடம் மூன்று மாதம் லோகசேவா சங்கப் பயிற்சி பெற்ற பகீரதன், இறுதிவரை காந்தி அன்பராக வாழ்ந்தவர். 'காந்தியம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கே நல்லது' என்ற தீவிரமான கருத்துடையவர். ராஜாஜி, பெரியார், காமராஜ், திரு.வி.க., டி.கே.சி., கல்கி போன்றவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்ச் செல்வர், கலைமாமணி, ஞான பாரதி முதலிய பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமையுடையவர். காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த, காந்தி யுக எழுத்தாளர்கள் வரிசையில் சி. சு. செல்லப்பா, கல்கி, ஆர்.வி., அ. கி. கோபாலன், அ. கி. ஜெயராமன் போன்ற சுதந்திரத் தியாகிகளோடு சேர்த்து பகீரதனையும் வரிசைப்படுத்துவர். "சத்திய கங்கை'யை மண்ணுலகுக்கு வழங்கிய பகீரதன், 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி காலமானார். திருப்பூர் கிருஷ்ணன் 'எழுத்துலகில் ஒரு "சத்திய கங்கை'