வித்யாராஜாக்கள் வஜ்ரயான பௌத்தத்தில், வித்யாராஜாக்கள் என்பது புத்தர்களையும் போதிசத்துவர்களையும் பாதுகாப்பவர்களை குறிக்கும். வித்யாராஜா என்றால் அறிவாற்றலின் அரசன் என்று பொருள். எனினும் இது சீனத்தில் "பிராகசமான அரசன்" என்ற மொழிபெயர்ப்பில் வழங்கப்படுகிறது. இவர்களை ஜப்பானிய மொழியில் ம்யொ - ஓ என அழைக்கப்படுகின்றனர். வித்யாராஜாக்களின் துணைகளை வித்யாராணிகள் என அழைப்பதுண்டு. எனினும் இப்பாகுபாடு பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. பொதுவாக, வித்யாராஜாக்கள் புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பாதுகாவலராக கருதப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக ஐந்து வித்யாராஜக்கள் ஐந்து தியானி புத்தர்களின் பாதுகாவலர்களாக கருதப்படுகின்றனர். பௌத்த மறைபொருள் தத்துவத்தின் படி , புத்தர்களும் போதிசத்துவர்களும் தர்மத்தை கருணையின் மூலமும் அன்பின் மூலமும் போதிப்பவர்கள். ஆனால் விதயாராஜாக்கள் பயத்தின் மூலமாக மற்றவர்களை தர்மத்தை பின் பற்ற செய்பவர்கள். வித்யாராஜாக்கள் பெரும்பாலும் உக்கிர மூர்த்திகளைப் போல் பல முகங்கள், கரங்கள் முதலியவற்றோடு சித்திரக்கப்படுகின்றனர். கையில் ஆயுதங்கள் ஏந்தியவாறும் சில சிமயங்களில் கபாலம் மற்றும் மிருக தோல்களை அணிந்தவர்களாகவும் தீப்பிழம்புகள் சூழ இருப்பவர்களாகவும் காட்சியளிக்கின்றனர். இதற்கு விதிவிலக்கு மகாமயூரி. இவர் எப்போது அமைதியான தோற்றத்தில் மயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். 1851 1851 (MDCCCLI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1915 1915 (MCMXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். ஆர்க்குட் புயுக்கோக்டன் ஆர்க்குட் புயுக்கோக்டன் (Orkut Büyükkökten) என்பவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இவர் உருவாக்கிய ஆர்க்குட் என்னும் இணையவழி நடத்தும் குமுகவலையால் (சமூக வலையால்) புகழ் பெற்றவர். இவர் துருக்கி நாட்டின் "கொன்யா" என்னும் இடத்தில் இருந்து வந்தவர். இவர் அங்க்காராவில் உள்ள பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல், தகவலியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது "கிளப்நெக்சஸ்" (ClubNexus) என்னும் பெயரில் தொடங்கி பின்னர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது ஆர்க்குட் என்னும் குமுகவலை அமைப்பை நிறுவினார். கூகுளில் பணி புரிவோர் பொதுவாக 70% நேரம் தம் நிறுவனத்தின் கருவாய குறிக்கோளுக்கான பணிகளிலும், 20% நேரம் தனக்கு விருப்பமான, ஆனால் கூகுள் நிறுவனத்திற்கு ஏதேனும் ஒருவாறு பயன் தர வாய்ப்புள்ள, பணிகளிலும், மீதம் இருக்கும் 10% நேரம் தனக்குப் பிடித்த எந்தத் துறையிலும் செலவிடலாம் என்னும் திட்டத்தின் பயனாக இந்த ஆர்க்குட் குமுகவலை உருப்பெற்றதாகக் கூறுவர். கூகுளில் சேர்வதற்கு முன்பு, பல்கலைக்கழக பழைய மாணவர்கள் தொடர்ந்த தொடர்பு கொண்டிருக்க ஏதுவாய் "உள்வட்டம்" அல்லது "வட்டத்திற்குள்" என்னும் பொருள் படும்படி "இன்சர்க்கிள்" ((InCircle) என்ற ஒரு குமுகவலை அமைப்பை அஃவ்வினிட்டி எஞ்சின்சு (Affinity Engines) என்னும் நிறுவனத்திற்காக உருவாக்கினார். பின்னர் 2004ல், அஃவ்வினிட்டி எஞ்சின், கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது. வழக்கு என்னவென்றால் ஆர்க்குட் புயுக்கோக்டனும் கூகுளும் சேர்ந்து அஃவ்வினிட்டி எஞ்சினுக்குச் சொந்தமான "இன்சர்க்கிள்" மென்பொருள் கூறுகளைப் பயன்படுத்தினர் என்பதாகும். ஆர்க்குட்டிலும் இன்சர்க்கிளிலும் ஒரே வகையான 9 மென்பொருட் பிழைகள் இருப்பதாகக் காட்டினர். பின்னர் கூகுள் நிறுவனமும் அஃவ்வினிட்டி எஞ்சின் நிறுவனமும் அறமன்றத்திற்கு வெளியே தங்களுக்குள் ஏற்புடைய ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர். டார்வின் டார்வின் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. பானுமதி பானுமதி என்பது இவற்றில் எதையாவது குறிக்கலாம், கடோலினியம் கடோலினியம் (ஆங்கிலம்: Gadolinium (gædəˈlɪniəm)) அணுவெண் 64 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Gd என்பதாகும் . இதன் அணுக்கருவில் 93 நொதுமிகள் உள்ளன. கடோலினியம் பார்ப்பதற்கு வெள்ளிபோன்ற வெண்மையாக இருக்கும் காரக்கனிம மாழை. இது வளைந்து நெளிந்து கொடுக்ககூடிய தன்மையும், தகடாகும் தன்மையும் கொண்டது. இத் தனிமம் அறை வெப்பநிலையில் ஆல்ஃவா (α) வடிவமாகிய (முதல் வடிவமாகிய) இறுக்க அடுக்க அறுகோணக பட்டகப் படிகமாக இருக்கும் திண்மம், ஆனால் வெப்பமூட்டினால், 1508 K வெப்பநிலையில், இப்படிகம் உருமாறி தன் பீட்டா வடிவமாகிய (இரண்டாம் நிலையாகிய) பருநடு அணுவுள்ள கனசதுர (கட்டக) (body-centred cubic) படிக நிலையை அடைகின்றது. மற்ற காரக்கனிமத் தனிமங்களைப் போல் அல்லாமல், கடோலினியம் ஈரப்பதம் இல்லா காற்றில் சிதைவடையாமல் நிலையாக உள்ள ஒன்று. ஆனால் ஈரப்பதம் உள்ள காற்றில் எளிதாக புறத்தே ஆக்ஸிஜனேற்றம் அடைந்து மங்கலாக தோற்றம் பெறுகின்றது. கடோலினியம் நீரில் மெதுவாக இயைபுறுகின்றது (வேதியியல் வினைப்படுகின்றது). நீர்த்த காடிகளில் கரையக்கூடியது. வெப்ப நொதுமி பற்றுறும் குறுக்களவில், கடோலினியம்-157 (அணுக்கருவின் எடை 157), செனான்-135 என்னும் அணுக்கரு சிதைபொருள் தவிர்த்த மற்ற யாவற்றினும் அதிக அளவான 49,000 பார்ன் (barn) குறுக்களவு கொண்டது. இது அணு உலைகளில் வெப்ப நொதுமிகளைப் பற்றி கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. கடோலினியம் தன் நிலைமாறும் வெப்பநிலையாகிய 1.083 Kல் மீகடத்தியாக மாறுகின்றது (மின் தடைமம் ஏதும் இல்லாதிருத்தல்). அறை வெப்பநிலையில் மென்காந்தத் தன்மை (paramagnetic) கொண்டது, ஆனால் அறை வெப்பநிலைக்குக் கீழே, இரும்புக்காந்தத்தன்மை கொண்டது. கடோலினியம் காந்தப்புலத்தில் நுழைந்தால் வெப்பமுறும் பண்பு (காந்தவெப்ப விளைவு) கொண்டது. அதே போல, காந்தப் புலத்தில் இருந்து வெளியேறும்பொழுது குளிர்ச்சி அடைகின்றது. இவ் விளைவானது கடோலினிய, சிலிக்கான், ஜெர்மானிய மாழைக்கலவையில் Gd(SiGe) இத் தனிமம் கடோலினியம் இயிற்றியம் கார்னெட் என்னும் லேசர் (சீரொளி மிகைப்பி) மற்றும் சில நுண்ணலைக் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகின்றது. தொலைக்காட்சிப் பெட்டித் திரைகளில் பாஸ்பரச ஒளிரியாகப் பயன்படுகின்றது. கணினி இறுவட்டுகள் செய்வதிலும் சில கணினி நினைவகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. அணு ஆற்றலால் இயங்கும் கடலூர்திகளில் நொதுமி பற்றிகளாகப் பயன்படுகின்றது. கனடிய அணுவுலையாகிய "காண்டு உலை"யில் (CANDU) திடீரென்று நிறுத்த வேண்டிய சூழல்களில் பயன்படும் பொருளாக உள்ளது. டிடிமியம் (didymium) கடோலினைட் (gadolinite) கனிமங்களில் கடோலினியத் தனிமம் இருப்பதால் தோன்றும் ஒளிநிறமாலை கோட்டை 1880ல் சுவிட்சர்லாந்து நாட்டு வேதியியலாளர் இழ்சான் சார்லசு கலிசார் டி மரின்யாக் (Jean Charles Galissard de Marignac) என்பவர் கண்டுபிடித்தார். 1886ல் பிரான்ஸ் நாட்டு வேதியியலாளர் பால் எமீல் லெக்கொக் டி புவாபௌட்ரான் (Paul Émile Lecoq de Boisbaudran) என்பவர் கடோலினிய ஆக்ஸைடாகிய கடோலினியாவை (கடோலினியம் (III) ஆக்ஸைடை) மோசாண்டரின் இயிற்றியா (Mosander's yttria) (இயிற்றியா = O) என்பதில் இருந்து பிரித்தெடுத்தார். இத் தனிமத்தை அண்மையில்தான் பிரித்தெடுத்துள்ளனர். இத் தனிமமும் இத் தனிமம் உள்ள கனிமமாகிய கடோலினைட்டும் பின்லாந்து நாட்டு புவியியலாளர் யோஃகான் கடோலின் என்பவரின் பெயரைப் பின்பற்றி சூட்டப்பட்டுள்ளன. கடோலினியம் தனித் தனிமமாக எங்கும் இயற்கையில் கிடைப்பதில்லை, ஆனால் அரிதில் கிடைக்கும் சில கனிமங்களாகிய மோனாசைட்டு (monazite), பாஸ்ட்னாசைட்டு் (bastnäsite) போன்றவற்றில் இருந்து மிகச் சிறிதளவு கிடைக்கின்றது. இன்று மின்மவணு பரிமாற்ற முறையிலும் கரைசல் பிரிப்பு முறையிலும் பிரித்தெடுக்கப்படுகின்றது. 1994ல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் மதிப்பில் ஒரு கிராம் $ 0.12 என்னும் வீதத்தில் கிடைக்கின்றது. அதன்பின் ஏறத்தாழ $ 0.01 கூடியுள்ளது: 2005 ஆண்டில் கடோலினியத்தின் விலை மதிப்பு ஒரு கிலோ கிராம் $130 (அல்லது ஒரு கிராம் $0.13) ஆகும். 1690 1690 (MDCXC) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1690கள் 1690கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1690ஆம் ஆண்டு துவங்கி 1699-இல் முடிவடைந்தது. பென்சைட்டென் பென்சைட்டென் ("Venzaiten") என்பது சப்பானில் இந்துக் கடவுள் சரசுவதிக்கு வழங்கும் சொல். பென்சைட்டென் சப்பானில் வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் ஒருவர். சப்பானில் சரசுவதியின் வழிபாடு சுவர்ணபிரபாச சூத்திரம் மூலமாக ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பரவியது. சுவர்ணபிரபாச சூத்திரத்தில் இவரை குறித்த ஒரு பிரத்யேக பகுதியே உள்ளது. மேலும் தாமரை சூத்திரத்திலும் இவரை குறித்த தகவல்கள் உள்ளன. இந்திர சரஸ்வதியை போலவே இவரும் கலை மற்றும் கல்வியின் அதிபதியாக வணங்கப்படுகிறார். ரிக்-வேதத்தில் சரஸ்வதி விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே தான் இவர் ஜப்பானில் பாம்புகள் மற்று டிராகன்களுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறார். இவருடைய முக்கியமான கோவில் டோக்யோ நகரில் இருநது 50 கி.மீ தெற்கே உள்ள எனோஷிமா தீவில் உள்ளது. ஜப்பானில் முழுக்க உள்ள பிற இடங்களிலும் இவருக்கு நிறைய கோவில்கள் காணப்படுகின்றன. எனோஷிமா தீவில் உள்ள கோவில்களை பற்றிய நூலில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த நூலின் படி இவர் அநவதப்தம் என்ற ஏரியின் டிராகன் அரசனுடைய மூன்றாவது மகள் ஆவார். சரஸ்வதி ஷிண்டோ மத பெண் தெய்வங்களுடன் ஒன்றிணைந்து வழிபடப்படுகிறார். இசநமி சப்பானிய புராணக்கதைகளில், இசநமி("Izanami") படைப்பு மற்றும் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் இசநகியின் மனைவி. இவரை இசநமி-நொ-மிக்கொட்டொ அல்லது இசநமி-நொ-கமி எனவும் அழைப்பர். பிரபஞ்சத்தின் மூத்த தெய்வங்களான "குனிதோகோதாச்சி" மற்றும் "அமெனோமினாகனுசி" ஆகியோர் இசநகி மற்றும் இசநமி என்ற இரண்டு இளம் கடவுள்களை படைத்தனர். அக்காலக்கட்டத்தில் பூமி நீரினால் மட்டும் நிரம்பிருந்தது. எனவே இவர்கள் இருவரும் நிலத்தை உருவாக்க பூமிக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் உதவுதற்காக அமெ-நொ-நுபொக்கொ என்ற விண்ணுலக ஈட்டியை அவர்களுக்கு அளித்தனர். இவர்கள் இருவரும் விண்ணுலகத்தையும் பூமியையும் இணைக்கும் பாலமான அமெ-நொ-உக்கிகசி என்ற மிதக்கும் பாலத்தின் மூலம் பூமியை அடைந்தனர். பாலத்தில் இருந்து கொண்டே தங்களுடைய ஈட்டியினால் கீழே உள்ள கடலை கடந்தனர். ஈட்டியில் இருந்த கீழே விழுந்த உப்பு நீர்த்துளிகளினால் ஒனோகோரோசிமா என்ற தீவு உருவாகியது. பாலத்தில் இருந்து இறங்கியவுடன் இருவரும் அத்தீவில் தங்களுக்கு ஓர் இல்லத்தை அமைத்துக்கொண்டனர். இருவரும் இணைய வேண்டி அமெ-நொ-மிகாசிரா என்ற விண்ணுலகத்தின் தூணை அமைத்தனர். அதனை சுற்றி "யஇரோ-டொனோ" என்ற மாளிகையையும் அமைத்தனர். இசநமியும் இசநகியும் தூணை எதிர் திசைகளில் சுற்றி வந்தனர். இருவரும் சந்தித்த போது, இசநமியே முதலில் பேசினாள். இசநகிக்கு இது சரியெனப்படவில்லை. எனினும் இருவரும் இணைந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு "இருக்கோ" மற்றும் "அவசிமா" என்ற இரண்டு குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் குறைபாடுள்ளவையாதலால் அவை தெய்வங்களாக கருதப்படவில்லை. இசநகியும் இசநமியும் அக்குழந்தைகளை ஒரு படகில் ஏற்றி கடலில் விட்டு விட்டனர். பிறகு அவர்கள் மற்ற தெய்வங்களிடம் சென்று தாங்கள் செய்த தவறை குறித்து வினவினர். அப்போது தான் இணையும் போது ஆண் கடவுள் முதலில் பேச வேண்டும் என அறிந்து கொண்டனர். பின்னர் மீண்டும் தூணைச்சுற்றி இணைய முற்பட்டனர், இருவரும் சந்தித்த வேளையில் இசநகி முதன் முதலில் பேசினார். பிறகு இருவரும் இணைந்தனர். இதனால் இவர்களுக்கு சப்பானின் எட்டு முக்கியமான தீவுகள் அல்லது "ஓயசிமா" தோன்றின. மேலும் அவர்கள் இன்னும் ஆறு தீவுகளையும் பல்வேறு தெய்வங்களையும் பெற்றெடுத்தனர். இசநமி நெருப்பின் தெய்வமான ககுட்சூசியை பெற்றெடுத்தவுடன் மரணம் அடைந்தார். இவள் உடல் இபா மலையில் அடக்கம் செய்யப்பட்டது. இவளுடைய இறப்பால் மிகுந்த கோபமுற்ற இசநகி ககுட்சூசியை தன் வாளால் பல துண்டுகளாக வெட்டிக் கொன்றார். அந்த துண்டுகளில் இருந்து பலவேறு தெய்வங்கள் தோன்றின. தன் மனைவியின் பிரிவை தாங்க இயலாத இசநகி இறந்தவர்களின் உலகமான யொமிக்குச் சென்றார். முதலில் பல நிழல்கள் மறைத்திருந்ததால் இசநாமியை காண இயலவில்லை. எனினும் பிறகு இசநமியை கண்டுகொண்டார். தன்னுடன் வருமாறு தன் மனைவியை கேட்டுக்கொண்டார். ஆனால் இசநகி மிகவும் தாமதமாக வந்துவிட்டதாக இசநாமி தெரிவித்தாள். மேலும் இசநமி ஏற்கனவே யொமி உலகத்தின் உணவை உட்கொண்டுவிட்டதால் அந்த உலகத்தில் ஒருவராக மாறிவிட்டார். எனவே மறுபடியும் பூமிக்கு திரும்ப இயலாமல் போனது. இதைக்கேள்விப்பட்டு இசநகி அதிர்ச்சியடைந்த போதிலும், அவர் இசநாமியை மீட்டுச்செல்வதில் உறுதியாக இருந்தார். இசநமி உறங்கிய வேளையில், இசநகி தன்னுடைய நீண்ட கூந்தலை வாரி முடித்து, அதில் தீ வைத்து அதையே விளக்காக பயன்படுத்தினார். இருண்ட உலகமான யொமியில் ஒளி புகுந்தவுடன், தன்னுடைய அழகான மனைவி இசநமியின் கோர உருவத்தை கண்டு அலறினார். இசநமியின் உடல் அழுகிய நிலையில் புழுக்களோடு இருந்தது. தனது பயத்தை கட்டுப்படுத்த இயலாமல் அவளை விட்டு நீங்கி, மீண்டும் பூமிக்கு திரும்ப நினைத்து அவ்விடத்தை விட்டு ஓடினார். இதனால் வெறுப்படைந்த இசநமி கோபத்துடன் இசநகியை பின் தொடர்ந்தார். யொமி உலகத்தின் "சிகொமே"க்களை அனுப்பி இசநகியை திரும்ப கொண்டுவருமாறு பணித்தார். இசநகி ஒருவழியாக "யொமொட்சுஇரசக்கா" என்றழைக்கப்படும் யொமி உலகத்தின் வாயிலை அடைந்தார். மேலும் அதை பெரிய பாறையின் மூலம் மூடினார். பாறையின் பின்னே இருந்த இசநமி, தன்னை விட்டு பிரிந்தால் ஆயிரம் உயிர்களை உலகத்தில் இருந்து பறித்து விடுவதாக கூறினார். இதற்கு பதிலாக இசநகி தான் 1500 பேருக்கு உயிரைத் தருவேன் என கூறினார். இந்த நிகழ்வில் இருந்து, இசநாகி இறப்பின் தெய்வமாக அறியப்பட்டார். 1850கள் 1850கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1850ஆம் ஆண்டு துவங்கி 1859-இல் முடிவடைந்தது. ககுட்சூசி ககுட்சூசி, , என்பவர் யப்பானியத் தொன்மவியலின்படி நெருப்பின் கமி (தெய்வம்) ஆவார். இவரை இனோககுட்சூசி அல்லது ஓ-மசுபி எனவும் அழைப்பர். ககு-ட்சூசியின் பிறப்பு அவரது தாய் இசநாமியை எரிந்து உயிரிழக்கச்செய்தது. இதனால் மிகுந்த கவலையுற்ற அவரது தந்தை இசநாகி ககு-ட்சூசியின் தலையைக் கொய்து, அவரது உடலை தன் வாளால் எட்டு துண்டுகளாக வெட்டினார். அந்த எட்டு துண்டுகளும் எட்டு எரிமலைகளாக உருமாற்றம் பெற்றன. இசநாகியின் வாளில் இருந்து வடிந்த ரத்தத்திலிருந்து எட்டு "கமி"க்கள் தோன்றின. யப்பானியத் தொன்மவியலின்படி ககு-ட்சூசியின் பிறப்பு உலக உருவாக்கத்தின் இறுதியில் நிகழ்ந்து இறப்பின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இசநாமியை அடுத்து ககுட்சுசியும் "யொமி"க்கு (பாதாள உலகம்) சென்றடைந்தார். "எங்கிசிகி" என்ற நூலில், இசநாமி மரண வேதனையில் இருக்கும் போது நீரின் "கமி"யான "மிசூவமெ"வை பெற்றெடுத்து, ககு-ட்ஸுசி ஆத்திரமுற்றால் அவரை அமைதிப்படுத்துப்படி பணிக்கிறார். இசநாகி இசநகி ("Izanagi") சப்பானியத் தொன்மவியல் மற்றும் சின்டோ மதத்தின் படி ஏழாவது தெய்வீக பரம்பரையை சார்ந்த ஒரு ஆண் தெய்வம் ஆவார். இவருடைய பெயருக்கு கொஜிக்கியில் அழைப்பவன் என பொருள் கூறப்பட்டுள்ளது. இசநமி என்பவர் இவரது சகோதரியும் மனைவியும் ஆவார். ஆதி கடவுள்களான குனிதோ-கொடாசி மற்றும் அமெ-னோ-மினா-கனுஷி ஆகியோர் இசநாகி மற்றும் இசநமி என்ற இரண்டு தெய்வீக பிறவிகளை உருவாக்கினர். அவர்கள் இருவருக்கும் சக்தி வாய்ந்த அமெ-னோ-ருபுகோ (விண்ணுலக ஈட்டி) வழங்கப்பட்டது. பிறகு இருவரும் அமெ-னோ-உகிகாசி (விண்ணுலக மிதக்கும் பாலம்) மூலம் மண்ணுலகம் வந்தனர். அங்கிருந்த கடலில் ஈட்டியை முக்கி எடுத்தனர். அப்போது ஈட்டியிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் மூலம் ஓனகோரோசிமா (தானாக உருவான தீவுகள்) உருவாயின. அந்த தீவுகளை இருவரும் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரும் சேர விரும்பினர். அதனால் அமெ-னோ-மிகாசிரா என்ற தூணை உருவாக்கி அதைச் சுற்றி யாகிரோ-தோனோ என்ற அரண்மனையை உருவாக்கினர். அவர்கள் இருவரும் எதிர் திசையில் தூணை சுற்றி வந்தனர். இறுதியில் ஒன்றாக சந்தித்த போது இசநாமி முதலில் அழைத்தார். பிறகு இருவரும் சேர்ந்து உறவாடினர். இதன் மூலம் ஹிருகோ மற்றும் அவாசிமா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் தீய கடவுள்களாய் இருந்ததால் வருத்தமடைந்த இசநாமி மற்றும் இசநகி அவர்களை படகில் வைத்து கடலில் அனுப்பிவிட்டனர். பிறகு இருவரும் சென்று ஆதி கடவுள்களிடம் தாங்கள் செய்த தவறு பற்றி கேட்டனர். அதற்கு அவர்கள் திருமணத்தின் போது முதலில் ஆண் கடவுள் தான் அழைக்க வேண்டும் என்றனர். இதனால் மீண்டும் இருவரும் தூணை சுற்றி வந்தனர். இந்த முறை சந்தித்த போது இசநாகி முதலில் அழைத்தார். இதனால் அவர்களது திருமணம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்களது சேர்க்கை மூலம் ஓயசிமா (எட்டு பெரும் தீவுகள்) பிறந்தன. பிறகு அவர்கள் சேர்க்கை மூலம் மேலும் ஆறு தீவுகள் மற்றும் பல கடவுள்கள் தோன்றினர். இறுதியாக நெருப்பு கடவுள் காக-சுச்சி பிறந்த போது இசநமி எரிந்து சாம்பலானார். அவரது உடல் இபா மலைச்சிகரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இசநமியின் இறப்புக்கு காரணமான காக-சுசியின் மேல் இசநாகி கோபம் கொண்டு அவரை தன் வாளால் பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். அந்த துண்டுகள் சப்பானில் பல பகுதிகளில் விழுந்து எரிமலைகளாக மாறின. இசநாகி இசநமியை சந்திக்க யோமி (பாதாளம்) சென்றான். அங்கு அவருக்கு இசநாமியின் நிழல் மட்டுமே தென்பட்டது. அவர் இசநமியிடம் தன்னுடன் திரும்பி வந்துவிடுமாறு அழைத்தார். ஆனால் இசநமி அவரிடம் தான் ஏற்கனவே பாதாள உணவை தின்று விட்டதால் இனி நிரந்தரமாக இங்கேயே இருந்தாக வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இசநாகி அவரை விட்டுச் செல்ல மறுத்தார். .பிறகு இசநமி தூங்கிய போது இசநாகி தன் சீப்பை எடுத்து அதன் மூலம் ஒளியை உருவாக்கி அவரது முகத்தை பார்த்தார். ஒரு காலத்தில் மிக அழகாக இருந்த இசநமியின் உடல் இப்போது அழுகிப் போய் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அதைக் கண்ட இசநாகி சத்தமாக அழுதார். பிறகு யோமியை விட்டு வேகமாக ஓடினார். அந்த சத்தத்தால் இசநமி எழுந்தார். இசநாகியைக் கொன்று அவரை மீண்டும் யோமிக்கு அழைத்து வருமாறு இருவரை அனுப்பினார். பிறகு இசநாகி பாதாள வாயிலை உடைத்துக் கொண்டு வெளியேறினார். இதைக் கண்ட இசநமி நீ என்னை விட்டுச் பிரிந்து சென்றதால் நான் தினமும் மண்ணுலகில் உள்ள 1000 மனிதர்களைக் கொல்வேன் என்று இசநாகியிடம் கூறினார். அதற்கு பதிலாக இசநாகியும் நான் 1500 மனிதர்களுக்கு வாழ்வளிப்பேன் என்று கோபமாகக் கூறினார். பாதாளத்திற்கு சென்று திரும்பியதால் இசநாகி சுத்தப்படுத்தும் சடங்கு செய்தார். அவர் இடது கண்ணைக் கழுவிய போது கதிரவ கடவுள் அமதெரசுவும் வலது கண்ணைக் கழுவிய போது நிலா கடவுள் சுக்குயோமியும் மூக்கைக் கழுவிய போது புயல் கடவுள் சுசானவோவும் பிறந்தனர். சுவர்ணபிரபாச சூத்திரம் சுவர்ணபிரபாச சூத்திரம்(金光明經; சீனம்: jin1 guang1 ming2 jing1; ஜப்பானியம்: Konkōmyō Kyō; தேவநாகரி: सुवर्णप्रभास सूत्रं) என்பது ஒரு மகாயான சூத்திரம் ஆகும். இது இந்தியாவில் எழுதப்பட்ட பௌத்த சூத்திரம் ஆகும். இந்நூல் பல முறை சீன மொழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் தற்காலத்தில் இந்த சூத்திரம் சீனாவில் வழக்கில் இல்லை. எனினும் சீனாவில் மூலமாக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சூத்திரம் ஜப்பானில் மிகவும் முக்கியமான மகாயான சூத்திரங்களுள் ஒன்றாக ஆகிவிட்டது. இந்த சூத்திரத்தில் சதுர்மகாராஜாக்கள் நாட்டை நன்முறையில் ஆளும் அரசனை காப்பதாக கூறப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த சூத்திரம் நட்டை காப்பதற்காக பொது இடங்களில் பாராயனம் செய்யப்பட்டது. முதன் முதலில் இந்த சூத்திரம் கி.பி 660 ஆண்டில் அரசவையில் பாராயனம் செய்யப்பட்டது. இந்த காலக்கட்டதில் சீனாவும் கொரியாவும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டன. கி.பி 741 இல் ஷோமு சக்கரவர்த்தி நாடு முழுவதும் பல பௌத்த மடங்களை நிறுவினார். அங்கு வசித்த 20 துறவிகளும் நாட்டை காப்பாதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த சூத்திரத்தை பாராயனம் செய்தனர். ஜப்பானில் சரஸ்வதியின் வழிபாடு இந்த சூத்திரத்தில் மூலமாக பரவியதாக கருதப்படுகிறது. இந்த சூத்திரத்தில் சரஸ்வதிக்கு ஒரு பிரத்யேக பகுதி உள்ளது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது சோசலிச, மார்க்சிய வேலைத்திட்டத்தினடிப்படையில் இலங்கை எழுத்தாளர்களை நிறுவனப்படுத்தும் நோக்குடன் உருவான அமைப்பே ஆகும். இவ்வமைப்பும் இயக்கமும் சோசலிச யதார்த்தவாதத்தை தமது செயற்பாடுகளின் இறுதி இலக்காக பிரகடனப்படுத்தியிருந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் பல்வேறு எழுத்தாளர் குழுக்களும் அமைப்புக்களும் இருந்துள்ளன. அவற்றுள் யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கிய ஈழகேசரி (அமைப்பாக இல்லாவிட்டாலும் இப்பத்திரிகையைச்சூழ எழுத்தாளர்கள் பலர் இயங்கிக்கொண்டிருந்தனர்), மறுமலர்ச்சி, இலங்கை எழுத்தாளர் சங்கம் ஆகியன பற்றிய தகவல்கள் கிடைப்பிலுள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததை உடனடுத்த காலப்பகுதிகளில் எழுந்த சோசலிச அலை காரணமாக இலங்கையில் சோசலிச இலட்சியங்களைக்கொண்ட பல எழுத்தாளர்கள் தோன்றினர். அவர்கள் முன்னர் தனித்தனியாக இயங்கிவந்தபோதும் காலப்போக்கில் நிறுவனமயமாகவேண்டிய தேவை வலுவாக உணரப்பட்டது. இதன் விளைவாக கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் இளங்கீரன், அ. ராகவன், எம். பி. பாரதி, எம். ஏ. அப்பாஸ் ஆகியோர் நடத்திய இலக்கிய கூட்டத்தில் இதற்கு அத்திவாரமிடப்பட்டது. அடுத்தவாரம் 1954 ஜூன் 27 ஆம் நாள் கொழும்பு மருதானை வீரரத்ன மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடக்கி வைக்கப்பட்டது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டதும் தனது இலட்சியங்களையும் நோக்கங்களையும் வேலைத்திட்டங்களையும் இலக்கிய உலகுக்கும் நாட்டுக்கும் 1954 ஒக்டோபர் 25ம் திகதி ஒரு பிரசுரத்தின் மூலம் பிரகடனப்படுத்தியது. 1955 இல் யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, திருக்கோணமலை போன்ற ஊர்களில் கிளைகள் அமையப்பெற்றன. இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு தெற்கிலும் (அக்கரைப்பற்று) பூண்டுலோயாவிலும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கை எழுத்தாளர் சங்கம் இலங்கை எழுத்தாளர் சங்கம் இலங்கையின் தமிழ் சிங்கள மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட எழுத்தாளர்களின் ஒன்றிணைந்த இயக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட ஓர் எழுத்தாளர் அமைப்பு ஆகும். ஈழத்தின் முதல் முற்போக்கு சஞ்சிகையான பாரதியினை நடத்திவந்த கே. கணேஷ், கே. இராமநாதன் ஆகியோர் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புகள் கொண்டிருந்தமையால் அதனைச்சேர்ந்த பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்திருந்தபோது அதனையொட்டி எழுத்தாளர் நிறுவனமொன்றினை ஆரம்பிக்க முயன்றனர். விபுலாநந்த அடிகளாரைத் தலைவராகவும், சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்கவை உப தலைவராகவும் கொண்டு 1947 இல் "இலங்கை எழுத்தாளர் சங்கம்" ஆரம்பிக்கப்பட்டது. 1950 க்கு முன்னமே இச்சங்கம் இயக்கமிழந்துபோனது. நாரோடாகினி நாரோடாகினி(नारोडाकिनि) திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி ஆவார். இவரது சித்தரிப்பு வஜ்ரயோகினியை ஒத்து காணப்படும். இவரை திபெத்திய மொழியில் "நாரோ கச்சோமா" என அழைக்கப்படுகிறார். பாய்வது போன்ற தோற்றம், கபாலம் ஆகியவற்றை வைத்து நாரோதாக்கினியை எளிதில் கண்டுகொள்ளலாம். இவரது முகம் மேல்நோக்கியவாறு காணப்படுகிறது. மேலும் இவரது வலது கரத்தில் குறுவாள் ஏந்தியவாறு உள்ளார். இவரது உடலியல்புகள் பௌத்த தத்துவங்களின் உருவகமாக கருதப்படுகின்றன. இவரது கரை புரண்டோடும் கூந்தல் பற்றற்ற மனம் எண்ணமில்லா நிலையில் நோக்கி செல்வதை குறிக்கிறது. இவரது மகுடத்தில் உள்ள ஐந்து மண்டை ஓடுகளும் தன்னலத்தில் ஐந்து கூறுகளை புத்தத்தின் ஐந்து விவேகங்களாக உருமாற்றுவதையும் மாலையாக அணியப்பட்டுள்ள 50 தலைகள் மொழியிலும் எண்ணத்திலும் தூய்மையை மேற்கொள்ளவேண்டிய 50 கூறுகளை குறிக்கிறது. இவருடைய எலும்பு அணிகலன்கள் புத்த நிலைக்கு தேவையான ஆறு பாரமிதங்களில்(முழுமைகள்) ஐந்தை குறிக்கிறது. இவரது உடலே ஆறாவது பாரமிதமாக கருதப்படுகிறது. வலது கரத்தில் கட்வங்கம் காணப்படுகிறது. 1796 1796 (MDCCXCVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. வேமசித்தன் வேமசித்தன்(वेमचित्रिन्) பௌத்தத்தில் அசுரர்களின் முக்கியமான தலைவர்களுள் ஒருவன். இவனை குறித்த செய்திகள் பல பௌத்த சூத்திரங்களில் காணப்படுகின்றன. இவன் பாளி மொழியில் வேமிசித்தி(वेमिचित्ति) என அழைக்கப்படுகிறான். தாவதிம்ச உலகத்தில் உள்ள தேவர்களுடன் போர் மூண்டபோது வேமசித்திரின் மிக முக்கியமான தலைவர்களுள் ஒன்றாக இருந்தான். இவ்வாறாக ஒரு போரின் பிறகு, சிறைப்படுத்தப்பட்டு ஒரு கைதியாக இந்திரன் முன் நிறுத்தப்பட்டான். அப்போது சக்ரனை நோக்கி கடும் சொற்களை வேமிசித்திரின் கூறினான். இருப்பினும் இந்திரன் அவன் செய்த அவமானங்களை பொறுத்துக்கொண்டு பொறுமையே பலத்தின் அடையாளம் என்று அவனிடம் கூறினார்.("வேபசித்தி சூத்திரம்") இன்னொரு முறை, வேமசித்தனக்கும் இந்திரனுக்கும் இடையே கவிப்போட்டி தேவர்கள் மற்றும் அசுரர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. ஒருவரின் கவிதைக்கு இன்னொருவர் பதில் கவிதை இயற்றினர். இரு சாராரும் சக்ரனுடைய கவிதைகளையே சிறந்த கவிதைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏனெனில் இந்திரனின் கவிதைகள் அறிவுறுத்தும் விதமாகவும் சமாதன போக்குடனம் இருந்தது. ஆனால் வேமசித்திரினின் கவிதைகளில் வாதமும் வன்முறையும் நிரம்பி இருந்ததாக கருதப்பட்டது ("சுபாசிதஜெய சூத்திரம்") வேமசித்தனின் மகளின் பெயர் சுயா ஆகும். பல வருடங்களாக இவளும் இந்திரனும் பல காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதன் விளைவாக வேமசித்திரின் தன்னுடைய எதிரியின் மாமனார் ஆனான். டாகினி டாகினி ("Dakini", வடமொழி: डाकिनी, சீன மொழி: 空行女,荼吉尼,狐仙,明妃) என்பது திபெத்தில் வணங்கப்படும் பௌத்த பெண் தேவதாமூர்த்திளைக் குறிக்கும். திபெத்திய மொழியில் டாகினி என்ற பதம் "கந்த்ரோமா" என உள்ளது. இதற்கு "வானத்தில் செல்பவள்" என்று பொருள். டாகினிகள் எப்போது நடன நளினமான கோலத்திலே சித்தரிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆற்றலின் உருவகமாக இருப்பதால் இவர்கள் நடன கோலத்தில் காட்டப்படுகின்றனர். டாகினில் அழகாகவும் ஆடையற்ற நிலையிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இது தடைகள் மற்றும் அழுக்க்கள் இல்லாத தூய மன நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் இவர்கள் வானத்தை ஆடையாக அணிந்தவர்களாக(திகம்பர) விவரிக்கப்படுகின்றனர். அவர்களின் அசைவுகள் மனதின் ஏற்படும் எண்னங்களை குறிப்பதாக அமைந்துள்ளது. வஜ்ரயான பௌத்ததில் அதுவும் இமாலயத்தை ஒட்டிய பகுதிகளில் டாகினிகள் ஆன்மீகத்தும் ஊக்கமளிக்கவராக கருதப்படுகின்றனர். டாகினிகள் எண்ணங்களின் ஆற்றலின் பெண் வடிவமாகவும் விண்ணில் ஆற்றலை தோற்றுவிப்பவர்களாகவும் வணங்கப்படுகின்றனர். மேற்கூறிய பொருளில் விண் என்பது சூன்யத்தன்மையின் உருவகம் ஆகும் டாகினிகள் சோதனை செய்வர்களாக இருக்கின்றனர். டாகினிகள் ஆன்மிக நிலையில் உயர விரும்பவர்கள் முன் தோன்றி அவர்களின் காம இச்சையை பரிசோதனை செய்வர். திபெத்தில் மகாசித்தர்களாக ஆவதற்கு நினைப்பவர்களின் முன் தோன்றி டாகினிகள் அவர்களை திசை திருப்ப முயற்சி செய்வர். அவர்கள் டாகினியின் சோதனையில் வெற்றியடைந்தாள் மகாசித்தராக ஏற்றுக்கொள்ளப்பட்டு டாகினியின் உலகில் ஏற்றுக்கொள்ளப்படுவர். பாரம்பர்யத்தின் படி, ஒரு டாகின் மூன்றாம் கர்மபாவுக்கு (1284 - 1339) கருப்பு தொப்பியினை கார்மபா மூன்று வயதாக இருக்கும் போது அளித்தாதக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இந்த கருப்பு தொப்பி கர்மபாக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. டாகினிகள் ஆற்றலுடன் தொடர்பு படுதப்படுவதால் இவர்கள் அனுத்தர தந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த தந்திரங்களில் தீய எண்ண (கிலேஷம்) ஆற்றல்களை ஞான ஆற்றலாக இவர்கள் மாற்றுகின்றனர். டாகினிகள் இளமையான ஆடையற்ற பென் நடன கோலத்தில் ஒரு கையில் கபாலத்துடனும் இன்னொரு கையில் குறுவாள் உடனும் சித்தரிக்கப்படுகின்றனர். டாகினிகள் மனித மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிந்து தோளில் திரிசூலம் சாய்ந்தவாறும் காட்சியளிக்கின்றனர். டாகினி கூந்தல் பெரும்பாலும் கரை புரண்டோடும் நிலையில் சவத்தின் மீது நடனமாடியவாறு இருப்பார். அறியாமை மற்றும் ஆணவத்தின் உருவகமாக சவம் கருதப்படுகிறது. டாகினியின் இந்த நடனம் ஆணவத்தையும் அறியாமையையும் ஆட்கொண்டதை காட்டுகிறது. 14-ஆம் நூற்றாண்டு கிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும். நேமிநாதம் நேமிநாதம் என்பது தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பழைய இலக்கண நூல்களைப் போலன்றி சுருக்கமாக எழுதப்பட்டது. குணவீர பண்டிதர் என்பார் இந்நூலை இயற்றினார். சமண சமயத்தைச் சேர்ந்தவரான இவர், 22 ஆவது நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர் இதனால் தனது நூலுக்கு "நேமிநாதம்" எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் சின்னூல் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது. இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும் பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை: சொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்நூல் வெண்பாக்களால் அமைந்தது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 24 செய்யுள்களும், சொல்லதிகாரத்தில் 77 வெண்பாக்களும் உள்ளன. பாயிரம், அவையடக்கம் ஆகியவை உள்ளிட்ட 4 பாடல்களையும் சேர்த்து மொத்தம் 99 வெண்பாக்களால் ஆனது இந்நூல். நூலாசிரியரே இதற்கு உரையும் எழுதியதாகவும், அவ்வாறு நூலாசிரியரே உரையையும் எழுதுவது இது முதல் முறை ஆகும் என்றும் சிலர் கருதுவர். ஆனால் உரையாசிரியர் யாரென அறிந்துகொள்ளத்தக்க வகையில் உரையில் குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. இது பிற்காலத்தில் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த உரை என்ற கருத்தும் நிலவுகிறது. விளக்கவுரை, எடுத்துக்காட்டுகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு விரிவான உரையாக இது அமைந்துள்ளது. குணவீர பண்டிதர் குணவீர பண்டிதர் 12 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்தவர். சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர். சமண சமயத்தைச் சேர்ந்தவர். நேமிநாதம் என்னும் இவரது தமிழ் இலக்கண நூல் நேமிநாத தீர்த்தங்கரர் என்னும் சமண தீர்த்தங்கரர் பெயரால் எழுதப்பட்டது. இவர் எழுதிய மற்றொரு நூல் வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூல். வச்சணந்தி முனிவர் இவரது ஆசிரியர். இவர் பெயரால் இந்த நூல் செய்யப்பட்டது. நாற்கவிராச நம்பி நாற்கவிராச நம்பி என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்தவர். சமண சமயத்தவரான இவர் பல பாவகைகளையும் திறமையாகப் பாட வல்லவர் என்பதால் இவருக்கு நாற்கவிராசர் என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவராக இருந்தார். தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அகப்பொருள் இலக்கணத்தை விளக்க நம்பி அகப்பொருள் எனப்படும் இலக்கண நூலை இவர் எழுதினார். நம்பி அகப்பொருள் நம்பி அகப்பொருள் என்பது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும். சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து பிரிவுகளாக இந் நூலை ஒழுங்கு படுத்தியுள்ளார் இதன் ஆசிரியர். பெருநான்கு (இந்தியப் பாம்புகள்) பெரும் நான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும். ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன. அப்பாம்புகள் கீழ்வருமாறு: தண்டியலங்காரம் தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவியதர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் (946-1070) பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. பொதுவியல், முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது. பொருளணியியலில், ஆகிய 37 அணிகளுக்காண இலக்கணம் கூறப்பட்டுளளது. சொல்லணியியல், மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. லோகபாலர்கள் லோகபாலர்கள் என்பதற்கு "உலகத்தை காப்பவர்கள்" என்று பொருள். எனினும் இந்து மதம் மற்று பௌத்த மதங்களில் வெவ்வேறு லோகபாலர்கள் வணங்கப்படுகின்றனர். திக்பாலர்கள் திக்பாலர்கள்(दिक्पाल) திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் "திக்"(दिक्) என்றால் திசை என்று பொருள், "பால"(पाल) என்றால் காப்பவர்கள் என்று பொருள். எனவே திசைகளை காப்பவர்கள் "திக்பாலர்கள்" என அழைக்கப்பட்டனர். எட்டுதிக்குகளை காப்பவர்களை மொத்தமாக அஷ்டதிக்பாலகர்கள் என அழைப்பர். எட்டுதிக்குகளுடன் ஊர்த்துவம்(மேல்) மற்றும் அதம்(கீழ்) திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலர்கள் எனவும் அழைப்பதுண்டு. இந்து மதத்தில், திக்பாலர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம். தசதிக்பாலர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: இந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது. இந்து மதத்தில் நான்கு பெரும் திசையை காப்பவர்கள் லோகபாலர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த லோகபாலர்களின் சிலைகளை கோபுரவாசல்களின் வைப்பது வழக்கம் சுவாகா சுவாகா என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும். சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. "சு" என்பது நன்மையை குறிக்கும் "ஆ" என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும். இந்த சொல்லை ஜப்பானியர்கள் சோஹா எனவும் திபெத்தியர்கள் சோவா எனவும் குறிப்பிடுவர். வடமொழியில் சுவாகா என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு அக்னி தேவனுக்கு இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது. சில புராணங்களில் முருகன் அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவர் ருத்திரனின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். 'ஸ்வத்வ-ஹனனம்' என்று வடமொழியில் இதற்குப்பொருள் சொல்லப்படுகிறது. 'ஸ்வத்வம்' என்றால் 'தான் என்ற தன்மை'; அதாவது, 'தான், தனது' என்று எதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அந்த பழக்கநடக்கை.நமது உடம்பு, மனது, புத்தி, இவைகளின் சேர்க்கையைத்தான் ஒவ்வொரு மனிதனும் 'தான்' அல்லது 'நான்' என்று பழகுகிறான். ஆனால் இந்த 'நான்' ஒரு வரையறைக்குட்பட்டது. வேதாந்தம் இதை மறுத்து, 'நான்' என்பது ஒரு வரையறைக்குட்படாத பரம்பொருள் என்று பறைசாற்றுகிறது. இப்படிச் சொல்லும்போது, எவ்விதம் நாம் இந்த வரையறுக்கப்பட்ட 'தான்' என்ற தன்னை, வரையறுக்கப்படாத பரம்பொருளாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வேதம் பல இடத்தில் மந்திரங்களை போதிக்கிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு: "ஆர்த்ரம்ஜ்வலதி ஜ்யோதிரஹம் அஸ்மி; ஜ்யோதிர்ஜ்வலதி பிரம்ம அஹம் அஸ்மி;" "யோஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;அஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;" "அஹம் ஏவ அஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா" இதன் பொருள்: நீரில் நனைந்தவிதை முளைப்பது போல் எந்த பரஞ்சோதியிலிருந்து இவ்வளவும் தோன்றிற்றோ அந்த சோதியே நான்.அந்த சோதியே என்னுள்ளும் விளங்குகிறது.அந்த வரையற்ற பரம்பொருள்தான் நான். இந்த சிறிய'நான்' என்ற என்னையே அந்த பெரிய 'நான்' என்ற சோதியில் இடுகிறேன். ஸ்வாஹா. மேற்குறித்த மந்திரம் ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரிக்கப்படவேண்டிய மந்திரங்களில் ஒன்று. இந்தமந்திரம் வேதத்தில் வரும் இடத்தில் அக்னி, யாகம், சடங்கு ஒன்றுமில்லை. வேதாந்தத்தில் இதைத்தான் ஸ்வாஹாவின் வரையறை (definition) ஆக எடுத்துக்கொள்கிறார்கள். கந்தரனுபூதியில் இந்த மந்திரத்தை அழகான தமிழில் சொல்லப்படுகிறது: ஹஃபிசுல்லா அமீன் ஹஃபிசுல்லா அமீன் ("Hafizullah Amin") (ஆகஸ்ட் 1, 1929 – டிசம்பர் 27, 1979) ஆப்கானிஸ்தானின் கம்யூனிச ஆட்சியில் இருந்த இரண்டாவது அதிபர் ஆவார். அமீன் 104 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆப்கானிய பாதுகாப்புக்குள் உட்படுத்த முனைந்தார். டிசம்பர் 27, 1979 இல் இவரது எதிர்ப்பாளர்கள் சோவியத் படைகளின் துணையுடன் இவரையும் இவரைச் சேர்ந்த 300 பேரையும் கொன்று சோவியத் சார்பான பப்ராக் கர்மால் என்பவரை பதவியிலமர்த்தினர். காபூல் பல்கலைக்கழகப் பட்டதாரியான அமீன் பட்டப்பின் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். பட்டம் பெற்றமலேயே நாடு திரும்பிய அமீன் அங்கு ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார். மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து அதன் மார்க்சிய மக்கள் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினரானார். 1978 இல் முகமது டாவூட் கான் தலைமையிலான அரசுக்கெதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார். ஏப்ரல் 28, 1978 இல் டாவூடும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி நூர் முகமது தராக்கி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அமீனும் பாப்ராக் கர்மாலும் துணைப் பிரதமர்களாயினர். கட்சியின் மார்க்சிய மக்கள் பிரிவு ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதனை அடுத்து கர்மால் ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார். மார்ச் 1979 இல் கட்சியில் அமீனின் செல்வாக்கு அதிகமாயிற்று. அமீனின் அதிபர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற கொலைமுயற்சி ஒன்றிலிருந்து அவர் தப்பினார். இதனையடுத்து அமீன் தனது ஆதரவாளர்களுடன் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதிபர் தராக்கியை சிறைப்பிடித்தார். செப்டம்பர் 14, 1979 அமீன் அரசைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சில நாட்களின் பின்னர் தராக்கி இனந்தெரியாத நோய் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அமீனின் ஆட்சியின் போது அவருக்கெதிராக சுமார் 18,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்குச் சரிந்தது. இவரது காலத்தில் பல ஆப்கானியர்கள் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்றனர். டிசம்பர் 27, 1979 இல் சோவியத் இராணுவம் அரச மாளிகையை முற்றுகையிட்டு அமீனையும் அவரது காவற்படையினர் 200 பேரையும் சுட்டுக் கொன்று காபூலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அன்றிரவு 7:15 மணிக்கு அரச வானொலியில் பாப்ராக் கர்மாலின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் ஆப்கானிஸ்தான் அமீனிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் பாப்ராக் கர்மால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி வித்தியானந்த கல்லூரி வன்னி, முல்லைத்தீவில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்று. இது 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் 1 ஆவது அதிபராக இருந்தவர் AFK ஞானப்பிரகாசம். இந்தக் கல்லூரியின் வளாகம் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு 6 தொடக்கம் உயர்தர வகுப்பு (ஆண்டு 12) வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பாடசாலையில் 702 மாணவர்கள் கல்வி பயின்றனர். டெர்பியம் டெர்பியம் (ஆங்கிலம்: Terbium (ˈtɝbiəm) அணுவெண் 65 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 94 நொதுமிகள் உள்ளன. டெர்பியத்தின் வேதியியல் குறியீடு Tb ஆகும். டெர்பியம் பார்ப்பதற்கு வெள்ளிபோன்ற வெண்மையாக இருக்கும் ஒரு காரக்கனிம மாழை. டெர்பியம் வளைந்து நெளிந்து கொடுக்ககூடிய தன்மையும், தகடாகும் தன்மையும் கொண்ட ஒரு மாழை. எளிதாக கத்தியால் நறுக்கும் அளவுக்கு மெதுவானது. காற்றில் ஓரளவிற்கு நிலையான (ஆக்ஸைடாகாத) தன்மை உடையது. இரு வேறு படைகவடிவுகள் கொண்ட பொருள். ஒரு படிகநிலையில் இருந்து மற்றதற்கு மாறும் வெப்பநிலை 1289 °C. கால்சியம் ஃவுளூரைடு, கால்சியம் டங்ஸ்டேட், ஸ்ட்ரான்சியம் மாலிப்டேட் ஆகிய பொருட்களால் செய்யப்படும் எதிர்மின்னிக்கருவிகளில் புறவூட்டுப் பொருளாக டெர்பியம் பயன்படுகின்றது. வேதியியல் வினையால் இடுபொருளைக் கொண்டு மின்னாற்றலாக மாற்றும் சில உயர்வெப்பநிலையில் இயங்கும் இடுமின்கலங்களில் (fuel cell) நிலைப்படுத்தும் பொருளாக சிர்க்கோனியம் ஆக்ஸைடுடன் (ZrO) டெர்பியம் பயன்படுகின்றது. டெர்பியம் ஆக்ஸைடு பச்சை நிறம் தரும் ஒளிரியாக புளோரசன்ட் விளக்குகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் பயன்படுகின்றது. 1843 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டு வேதியியலாளர் கார்ல் குஸ்டாஃவ் மோசான்டெர் (Carl Gustaf Mosander) இயிற்றியம் ஆக்ஸைடு (YO) -இல் ஒரு மாசுப் பொருளாக (புறப்பொருளாக) கண்டறிந்தார். தற்கால மின்மவணு பரிமாற்ற முறை கண்டுபிடிக்கும் வரையில் இது தனியாக பிரித்தெடுக்கப்படவில்லை. டெர்பியம் அரிதில் கிடைக்கும் தனிமம் என்னும் வகையை சேர்ந்ததென்று குறிப்பிட்டிருந்தாலும், வெள்ளி, பாதரசம் ஆகிய தனிமங்களைவிட அதிக அளவில் புவியில் கிடைக்கின்றது. அரிதில் பிரித்தெடுக்கப்பட்டு தனிமமாக உணர்ந்த பொருட்களில் ஒன்று என்று முன்காலத்து வேதியியலாலர் கருதினர் என்பர். . டெர்பியம் இயற்கையில் தனியாக தனிமமாகக் கிடைப்பதில்லை. ஆனால் பல கனிமங்களில் கலந்துள்ள ஒரு பொருளாகக் கிடைக்கின்றது. இவ்வகையான கனிமங்களில் சில செரைட்டு, கடோலினைட்டு, மோனாசைட்டு, செனோனைட்டு, யூக்செனைட்டு முதலியன சில. இவற்றிலும் 1% க்கும் குறைவாகவே டெர்பியம் உள்ளது. தெற்கு சீனாவில் கிடைக்கும் களிமன் பொருட்களில் கிடைக்கின்றது. குரோக்கொடைலின் குரோக்கொடைலின் ("Crocodilin") என்பது முதலையின் குருதியில் காணப்படும் பாக்டீரிய எதிர்ப்பொருள் ஆகும். இது ஒரு பெப்டைடு ஆகும். கில் டயமண்டு என்பவரால் இப்பொருள் முதலில் பிரித்தெடுக்கப்பட்டது. முதலைகள் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள இடத்தில் வாழ்வினும் அவை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இப்பொருளே காரணம் ஆகும். 1612 1612 (MDCXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது. அண்ணாமலை அண்ணாமலை என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: ஓரம் போ ஓரம் போ 2007ம் ஆண்டு வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.பி. ஃபில்ம் கார்டன் ஆல் தயாரிக்கப்பட்டு புஷ்கார், காயத்ரி ஆகியோரால் இயக்கப்பட்டது. ஜி. வி. பிரகாஷ் குமார் ஆல் இசையமைக்கப்பட்டது. ஆர்யா, பூஜா ஆகியோர் நடித்துள்ளனர். பெனசீர் பூட்டோ பெனசீர் பூட்டோ (, , ; 21 ஜூன் 1953 – 27 டிசம்பர் 2007), பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார். அவரின் குடும்பம் சிந்திகளின் பூட்டோ வம்சாவழியில் இருந்து வந்தது. முன்னாள் பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோவிற்கும், ஈரானிய-குர்திஷ் வம்சாவழியில் வந்த பேகம் நஸ்ரத் பூட்டோவிற்கும் மூத்த குழந்தையாக பெனசீர் பூட்டோ பிறந்தார். அவரின் தந்தைவழி தாத்தா சர் ஷா நவாஜ் பூட்டோ ஆவார். இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பட்டோ காலன் என்ற அவரின் சொந்த ஊரில் இருந்து சுதந்திரத்திற்கு முன்னாள் சிந்தில் உள்ள லார்கானா மாவட்டத்திற்கு வந்தவராவார். பூட்டோ, தமது 35வது வயதில், 1988ல் முதன்முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார், ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அப்போதைய பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் குலாம் இசாக் கானின் உத்தரவின் கீழ் 20 மாதங்களுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.1993ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதேபோன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, இந்த முறை ஜனாதிபதி பரூக் லெஹரியினால் மீண்டும் 1996ல் நீக்கப்பட்டார். அவர் 1998ல் தானே முன்வந்து நாடு விட்டு துபாய் சென்றார். பூட்டோ 18 அக்டோபர் 2007ல் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார், பின்னர் ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப்புடன் ஒரு புரிதலுக்கு வந்தவுடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது, அத்துடன் அவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டன. திட்டமிடப்பட்டிருந்த |2008 பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், அப்போது அவர் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தார், 27 டிசம்பர் 2007ல் பாகிஸ்தான் நகரமான ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் புறப்பட்ட போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.அதற்கடுத்த ஆண்டு, மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் சபை விருது|மனித உரிமைகளுக்கான துறையில் ஐக்கிய நாடுகள் சபையின் விருதை வென்ற ஏழு வெற்றியாளர்களில் ஒருவராக அவரின் பெயர் பட்டியலிடப்பட்டது. இவர் கராச்சியில் உள்ள லேடி ஜென்னிங்ஸ் நர்சரி ஸ்கூல் மற்றும் கான்வென்ட் ஆப் ஜீசஸ் அண்டு மேரி ஆகியவற்றில் படித்தார். ராவால்பிண்டி பிரசண்டே ஷன் கான்வென்ட்டில் இரண்டு ஆண்டுகள் படித்த பின்னர், அவர் முர்ரேயில் உள்ள ஜீசஸ் அண்டு மேரி கான்வென்ட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், தமது 15வது வயதில் சாதாரண தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். தமது ஆரம்ப கால பள்ளிக்கல்வியைப் பாகிஸ்தானில் முடித்த அவர், அவரின் உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்தார். 1969 முதல் 1973 வரை அவர் ஹேவர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள ரேட்கிளிப் கல்லூரியில் படித்தார். இங்கு அவர் அரசின் ஒப்பீட்டளவிலான கும் லாவ்டு விருதுகளுடன் இளங்கலை பட்டத்தைப் பெற்றார். அவர் ஃபீ பேட்டா காப்பாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹேவர்டில் இருந்த அவரின் காலத்தைப் பின்னர், "என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான நான்கு ஆண்டுகள்" என்று குறிப்பிட்ட பூட்டோ, அது "ஜனநாயகம் மீதான அவரின் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைத்ததாக" தெரிவித்தார்.பின்னர் 1995ல் பிரதம மந்திரியாக இருந்த போது, பாகிஸ்தான் அரசிடமிருந்து ஹேவர்ட் சட்ட கல்லூரிக்கு ஒரு பரிசை அவர் ஏற்பாடு செய்தார். 2006 ஜூனில், அவர் டொரொன்டோ பல்கலைக்கழகத்திலிருந்து மதிப்புமிக்க எல்எல்.டி பட்டம் பெற்றார். அவரின் அடுத்த கட்ட கல்வி இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது.பூட்டோ 1973க்கும், 1977க்கும் இடையில் லேடி மார்கரேட் ஹால், ஆக்ஸ்போர்டில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார். இக்காலகட்டத்தில் அவர் சர்வதேச சட்டம் மற்றும் இராஜாங்கம் குறித்த கூடுதல் பயிற்சிகளையும் முடித்தார். எல்எம்எச் -க்கு பின்னர் அவர் செயிண்ட் கேத்ரீன் கல்லூரி, ஆக்ஸ்போர்டிற்கு சென்றார். 1976 டிசம்பரில் அவர் ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதன் மூலம் கௌரவம் மிக்க விவாத சமூகத்திற்கு தலைமை தாங்கும் முதல் ஆசிய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். 18 டிசம்பர் 1987ல், கராச்சியில் அவர் ஆசீப் அலி ஜர்தாரியை மணந்தார்.இந்த தம்பதியருக்கு பிலாவல், பக்த்வார் மற்றும் ஆசீஃபா என்று மூன்று குழந்தைகள் உண்டு. பெனாசீரின் தந்தையான பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோ 1977ல் அப்போதிருந்த முதன்மை இராணுவ தளபதி முஹமது ஜியா-அல்-ஹக்கின் தலைமையில் நடந்த ஓர் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இராணுவ சட்டம் கொண்டு வந்த முஹமது ஜியா-அல்-ஹக், மூன்று மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.இருந்த போதினும், பொது தேர்தல்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மாறாக, கருத்து வேறுபாடு கொண்ட அரசியல்வாதி அஹ்மது ரஜா கசோரியின் தந்தையைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்காக திரு. பூட்டோவை தளபதி ஜியா சிறையிலடைத்தார்.திரு. ஜூல்பிகார் அலி பூட்டோ இராணுவ சட்ட நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்டார். இந்த குற்றச்சாட்டு "பொதுமக்களால் பரவலாக சந்தேகிக்கப்பட்ட" போதினும், வெளிநாட்டு தலைவர்களால் மிதமாக பல முறையீடுகள் இருந்த போதினும், ஜூல்பிகார் அலி பூட்டோ 4 ஏப்ரல் 1979ல் தூக்கிலிடப்பட்டார். அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதியான தளபதி ஜியாவால் இந்த மிதமான முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன.தூக்கிலிடப்பட்டதற்கு பின்னர், மே மாத இறுதி வரை பெனசீர் பூட்டோவும், அவரின் அன்னையும் ஒரு "போலீஸ் முகாமில்" தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். 1985ல், பெனசீர் பூட்டோவின் சகோதரர் ஷாநவாஜ் பிரான்சில் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டார்.பின்னர் 1996ல், அவரின் மற்றொரு சகோதரரான மிர் முர்தாஜாவின் கொலை, இரண்டாவது முறையாக பிரதம மந்திரியாக இருந்த பதவி காலத்தை ஸ்திரமின்மைக்கு கொண்டு வருவதில் பங்கு வகித்தது. தமது படிப்புகளை முடித்து கொண்டு பாகிஸ்தானுக்கு திரும்பிய பூட்டோ, அவர் தந்தையின் சிறைவாசம் மற்றும் அதைத் தொடர்ந்து தூக்கிலிடப்பட்டது ஆகியவற்றால் விழிப்படைந்து தாம் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார். ஜெனரல் முஹம்மது ஜியா-அல்-ஹக் இறக்கும் வரை பாகிஸ்தானில் அவர் தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்க முடியாமல் இருந்த போதிலும் , 1984ல் இங்கிலாந்திற்கு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த போதே அவர் தந்தையின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு தலைவரானார்.அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த தம் தாயாரின் பதவியையும், ஜியா-அல்-ஹக் ஆட்சிக்கு எதிராக ஜனநாயக முறையிலான எதிர்ப்பையும் ஏற்று கொண்டார். பிரதம மந்திரி பதவிக்கு பெனசீர் போட்டியிட்ட தொகுதி, அவரின் தந்தை முன்னர் போட்டியட்ட என்ஏ 207 என்ற அதே தொகுதியாகும்.1926ல் சிந்தில் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் மறைந்த சர்தார் வாஹித் பக்ஸ் பூட்டோ முதன்முதலில் அந்த தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தல்கள் இந்தியாவின் மத்திய சட்டமன்றத்திற்கானதாக இருந்தது.சர்தார் வாஹித் பக்ஸ் வென்றார், அவர் சிந்திலிருந்து ஒரு ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கான முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தார் என்பதோடு மட்டுமின்றி, மத்திய சட்டமன்றத்தின் 27 வயது நிரம்பிய இளம் உறுப்பினராகவும் இருந்தார்.அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பூட்டோ என்கிற வகையில் வாஹித் பக்ஸின் சாதனை நினைவுபேறுடையதாக இருந்தது, அந்த தொகுதி, அதற்கு பின்னர் அவரின் குடும்ப உறுப்பினர்களால் எப்போதும் போட்டியிடப்பட்டது. ஆகவே, அவர் ஒரு சுழற்சியின் தொடக்கத்தை அளித்தார்.சர்தார் வாஹித் பக்ஸ் பாம்பே கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.33 வயது இளமையிலேயே வாஹித் பக்ஸின் புதிரான மரணத்திற்கு பின்னர், அதே தொகுதியிலிருந்து போட்டியிட்ட அவரின் இளைய சகோதரர் நவாப் நபி பக்ஸ் பூட்டோ, ஓய்வு பெறும் வரை தோற்கடிக்க முடியாதபடிக்கு அங்கு நிலைத்திருந்தார்.இவர் தான் பின்னர் ஜூல்பிகார் அலி பூட்டோ போட்டியிட அத்தொகுதியை அளித்தார். 1988 நவம்பர் 16ல், ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு பின்னர் நடந்த முதல் பொது தேர்தலில், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தேசிய பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியது.பூட்டோ டிசம்பர் 2ஆம் தேதி, 35 வயதில் இளம் நபராகவும், முதல் பெண்மணியாகவும் நவீன காலத்தில் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட அரசை தலைமையேற்று நடத்த ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.1989ல், பெனாசீருக்கு லிபரல் இன்டர்நேஷனலினால் சுதந்திரத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தின் போது பூட்டோவின் தி்ட்டங்கள், தேசியவாத சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றைச் சார்ந்த முனைவுகளாக இருந்தன. இதை சில பழமைவாதிகள் மேற்கத்தியவாதம் என்று பாத்திரப்படுத்தினர்.அவர் ஒருபோதும் முயற்சி செய்திராத ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து 1990ல் பூட்டோ அரசாங்கம் நீக்கப்பட்டது.1990 அக்டோபர் தேர்தல்களுக்கு பின்னர் ஜியா ஆதரவிலான நவாஜ் ஷெரீப் அதிகாரத்திற்கு வந்தார்.நவாஜ் பிரதம மந்திரியாக பதவி வகித்த அதற்கடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பூட்டோ எதிர்கட்சி தலைவராக இருந்தார். 1993 அக்டோபரில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட்டன, அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் பதவிக்கு வந்த பூட்டோ, அவரின் சீர்திருத்த முனைவுகளைத் தொடர்ந்தார்.பத்திரிக்கையாளர் ஷியாம் பாட்டியாவின் கருத்துப்படி, ஓர் அரசு சுற்றுப்பயணத்தின் போது யுரேனியம் செறிவூட்டல் குறித்த தகவல்கள் கொண்ட சிடியை வடகொரியாவிற்கு பெனசீர் கடத்தினார், அதே ஆண்டு அதற்கு பதிலாக ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெற்றார். 1996ல், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இடையில், பூட்டோ அப்போதைய ஜனாதிபதி பரூக் லெஹரியினால் பதவி நீக்கப்பட்டார். ஜனாதிபதி பரூக் லெஹரி அரசாங்கத்தைக் கலைக்க எட்டாவது சட்டதிருத்த அதிகார மசோதாவைப் பயன்படுத்தினார்.6-1 சட்டத்தின்படி ஜனாதிபதி லெஹரியி்ன் பதவிநீக்கத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பூட்டோவுக்கு எதிரான விமர்சனம் பஞ்சாபி மேற்தட்டுக்களில் இருந்தும், பூட்டோவை எதிர்த்த அதிகாரம் மிக்க நிலச்சுவான்தார் குடும்பங்களில் இருந்தும் வந்தது.பாகிஸ்தானின் உறுதியைக் குலைக்கும் இந்த எதிர்ப்பிற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்."வெட்கக்கேடான ஜனநாயக யுகம்" என்று பூட்டோவின் பதவி காலத்தை முஷாரப் பாத்திரப்படுத்தினார். பிறர் அவரின் பதவி காலத்தை ஒரு ஊழல் மிக்க, தோல்வியுற்ற அரசாங்கங்களின் காலம் என்று பாத்திரப்படுத்தினர். தேர்தல் பிரச்சாரங்களின் போது, பூட்டோ அரசாங்கம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு பிரச்சனை உட்பட பெண்களின் சமூக மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கான அதன் கவலைகளுக்காக குரல் கொடுத்தது.பெண்கள் போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வங்கிகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பூட்டோ அறிவித்தார்.இந்த திட்டங்கள் இருந்த போதினும், பெண்களின் சுகாதார சேவைகளை அதிகரிக்க எவ்வித சட்டத்தையும் கொண்டு வரவில்லை.அவரின் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாகிஸ்தானில் பெண்கள் உரிமையைக் குறைக்கும் முரண்பாடு சட்டங்களை (ஹூதூத் மற்றும் ஜீனா சட்டங்கள் போன்ற) நீக்குவதாக அவர் உறுதியளித்தார். பூட்டோ கருக்கலைப்புக்கு எதிரானவர் என்பதுடன் கருக்கலைப்புக்கு எதிராக அவர் கடுமையாக பேசினார். குறிப்பாக கெய்ரோவில் நடந்த மக்கள்தொகை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச மாநாட்டில் பேசினார். "தமக்கென சொந்த சமூக பண்பாடுகளைக் கொண்டுள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் மதங்களின் மீது கட்டுப்பாடற்ற உடலுறவு, கருக்கலைப்பு, பாலியல் கல்வி மற்றும் இதுபோன்ற பிறவற்றை திணிக்க" மேற்கு விரும்புவதாக அவர் அந்த மாநாட்டில் குற்றஞ்சாட்டினார். ஜீனா சட்டம் இறுதியாக 2006 ஜூலையில் பர்வீஜ் முஷாரப்பினால் வெளியிடப்பட்ட ஜனாதிபதி உத்தரவால் நீக்கப்பட்டது. பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகளின் ஒரு வலையமைப்பான உலக பெண் தலைவர்களின் கழகத்தை நிறுவிய மற்றும் அதில் செயல்பட்டு வந்த ஒரு உறுப்பினராகவும் பூட்டோ இருந்தார். 1996 செப்டம்பரில் தாலிபான் காபூலை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.பூட்டோ ஆட்சியின் போது தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் முக்கியத்துவம் பெற்றது. தாலிபான்களை ஒரு குழுவாகவும், அது ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்தும் என்றும், அது மத்திய ஆசிய குடியரசுகளுக்கு வர்த்தக அனுமதியை வழங்கும் என்றும் அந்த காலத்தில் இருந்த பல தலைவர்களைப் போலவே அவரும் கருதினார் என்பது ஆசிரியர் ஸ்டீபன் காலின் கருத்தாகும். அமெரிக்காவைப் போன்றே, அவரின் அரசாங்கமும் தாலிபான்களுக்கு இராணுவத்தையும், நிதி உதவிகளையும் அளித்தது, அத்துடன் ஆப்கானிஸ்தானிற்குள் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறிய பிரிவு ஒன்றையும் கூட அனுப்பியது. மிக சமீபத்தில், தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அவர், தாலிபான்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றம்மிக்க பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டனம் செய்தார். பிரெஞ்சு, போலாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிஸ் ஆவணங்கள் பூட்டோவிற்கும், அவரின் கணவருக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எண்ணெய் வார்த்திருக்கின்றன.அவர்கள், சுவிஸ் வங்கி மூலமாக பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உட்பட, பல்வேறு சட்டரீதியிலான வழக்குகளைச் சந்தித்தார்கள்.ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்ற போதினும், அவரின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி, அதே போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். 2004ல் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், சிறையில் தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக முறையிட்டார்; அவரின் உரிமைகள் மீறப்பட்டன என்று அவரின் முறையீட்டிற்கு மனித உரிமைகள் குழுவும் ஆதரவு தெரிவித்திருந்தது. "நியூயார்க் டைம்ஸின்" ஒரு 1998 புலனாய்வு அறிக்கையானது, வங்கி கணக்குகளின் ஒரு வலையமைப்பை கொண்ட வெளியிடப்படாத ஆவணங்களைப் பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் கொண்டிருக்கிறார்கள், ஆசிப் ஜர்தாரியை முக்கிய பங்குதாரராக காட்டும் அவை அனைத்தும் சுவிட்சர்லாந்தில் உள்ள குடும்ப வழக்கறிஞரிடம் உள்ளன என்று குறிப்பிட்டது.அக்கட்டுரையின்படி, பிரெஞ்சு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஜர்தாரியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சுவிஸ் கார்பரேஷனுக்கு 5% கமிஷனுடன் விமானப்படையின் போர் விமானங்களை மாற்ற ஒரு பிரெஞ்சு விமான உற்பத்தியாளரான டாஸ்சால்டிற்கு ஜர்தாரி பிரத்யேக உரிமை வழங்கியதாக குறிப்பிட்டது.பாகிஸ்தானிற்குள் தங்கம் கொண்டு வர ஒரு துபாய் நிறுவனத்திற்கு பிரத்யேக உரிமம் வழங்கப்பட்டதாகவும், அதற்காக ஜர்தாரி அவரின் துபாயில் இருந்த சிட்டிபேங்க் கணக்கில் 10 மில்லியன் டாலருக்கும் மேலான தொகையைப் பெற்றதாகவும் அந்த கட்டுரை குறிப்பிட்டது.ஜர்தாரிக்கு தாம் தொகை எதுவும் அளிக்க வில்லை என்று மறுக்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், அந்த ஆவணங்கள் போலியானவை என்றும் முறையிடுகிறார். தமக்கும், தம் கணவருக்கும் எதிரான அனைத்து விதமான குற்றச்சாட்டுக்களும் துல்லியமாக அரசியல் நோக்கம் கொண்டவை என்ற வாதத்தையே பூட்டோ தக்க வைத்திருந்தார். பாகிஸ்தான் ஆடிட்டர் ஜெனரல் (ஏஜிபி) ஒருவரின் அறிக்கை பூட்டோவின் முறையீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. 1990ல், அப்போதைய ஜனாதிபதி குலாம் இஷ்க் கானால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாயவேட்டையின் விளைவாக பூட்டோ பதவியில் இருந்து இறக்கப்பட்டதாக கூறி அது தகவல்களை அளிக்கிறது.பூட்டோ மற்றும் அவர் கணவருக்கு எதிராக 1990-92ல் 19 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய சட்ட ஆலோசகர்களுக்கு கான் 28 மில்லியன் ரூபாய் அளித்ததாக ஏஜிபி அறிக்கை கூறுகிறது. பூட்டோ மற்றும் அவர் கணவரிடம் இருந்த சொத்துக்கள் தொடர்ந்து ஆராயப்பட்டும், யூகிக்கப்பட்டு்ம் இன்னும் முடிவாகாமல் இருக்கிறது.அவர்களின் சுவிஸ் வங்கி கணக்கில் £740 மில்லியன் இருப்பதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜர்தாரி ஒரு நவ-டூடர் மேன்சனையும், இங்கிலாந்தின் சுர்ரேயில் £4 மில்லியன் மதிப்பிலான எஸ்டேட்டையும் வாங்கி இருந்தார். பாகிஸ்தான் புலனாய்வுகள் ஜர்தாரி குடும்பத்திற்கு சொந்தமான பிற வெளிநாட்டு சொத்துக்களையும் இணைத்து கொண்டுள்ளன. ஜர்தாரியின் திருமணத்தின் போது மிதமான சொத்துக்கள் கொண்டிருந்த அவரின் பெற்றோர்களுக்கு சொந்தமான நார்மண்டேயில் உள்ள 2.5 மில்லியன் டாலர் மேனரும் இதில் உள்ளடங்கும். வெளிநாடுகளில் பிரத்யேக சொத்துக்கள் இல்லை என்று பூட்டோ மறுத்தார். 1998 ஜூலை 23ல், பெனசீர் பூட்டோ மற்றும் அவர் கணவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிற்கு சுவிஸ் அரசு அளித்தது. ஜர்தாரிக்கு எதிராக சுவிஸ் அதிகாரிகளால் அளிக்கப்பட்ட ஓர் உத்தியோகப்பூர்வ பணமோசடி குற்றச்சாட்டுக்கள் அந்த ஆவணங்களில் உள்ளடங்கி இருந்தன. 1997ல் சுவிஸ் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு, பூட்டோ மற்றும் அவர் கணவரால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 13.7 மில்லியன் டாலருக்கும் மேலான தொகைக்காக பாகிஸ்தான் அரசு ஒரு பரந்த-வகையிலான விசாரணையை நடத்தி கொண்டிருந்தது. பூட்டோவும், அவர் கணவரும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோத பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 1.5 பில்லியன் டாலர் என்று கணிக்கிடப்பட்ட தொகையைக் கண்டறிவதற்கான ஒரு முயற்சியில் பாகிஸ்தானிய அரசு சமீபத்தில் பூட்டோவிற்கு எதிராக கிரிமினல் குற்றங்களைப் பதிவு செய்தது. ஜர்தாரியினால் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பணம் பெனசீர் பூட்டோவாலும் அணுக கூடியதாகவே இருந்ததாகவும், அது 175,000 டாலருக்கும் அதிகமான தொகையில் வைர நெக்லஸ் வாங்க பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பாகிஸ்தான் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட தவறான ஆதாரங்களால் சுவிஸ் அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக கூறி, அந்த குற்றச்சாட்டுக்களை ஒரேயடியாக மறுத்ததன் மூலம் பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரதிபலிப்பைக் காட்டி இருந்தது. 2003 ஆகஸ்டு 6ல், பூட்டோ மற்றும் அவர் கணவர் இருவரும் பணமோசடியில் குற்றவாளிகள் என்று சுவிஸ் நீதிபதிகள் கண்டறிந்தனர். அவர்களுக்கு ஆறுமாத தற்காலிக சிறை தண்டனை விதித்ததுடன், ஒவ்வொருவருக்கும் $50,000 அபராதமும் விதித்தது. அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு அவர்கள் $11 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.பாகிஸ்தானில் ஓர் ஒப்பந்தத்திற்கு கைமாறாக ஒரு சுவிஸ் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட 10 மில்லியன் டாலரை பூட்டோவும், ஜர்தாரியும் சுவிஸ் கணக்கில் டெபாசிட் செய்தார்கள் என்று அந்த ஆறு-ஆண்டு காலவழக்கு தீர்மானித்தது. அந்த தம்பதியினர் தாங்கள் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்தார்கள்.1995ல் ஜெனிவாவில் ஜர்தாரி சிட்டிபேங்கில் ஒரு கணக்கு திறந்ததாகவும், பாகிஸ்தானில் தொழில் செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஜர்தாரி பெற்ற 100 மில்லியன் டாலரில் சுமார் 40 மில்லியன் டாலர் அந்த கணக்கு மூலம் அனுப்பப்பட்டதாகவும் பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2007 அக்டோபரில், ஜெனீவா மாகாணத்தின் முதன்மை வழக்கறிஞரான டேனியல் ஜாப்பெல்லி, முன்னாள் பாகிஸ்தானிய பிரதம மந்திரி பெனசீர் புட்டோவிற்கு எதிரான பண மோசடியில் அக்டோபர் 29ல் தாம் தீர்ப்புகளைப் பெற்றதாகவும், ஆனால் சுவிட்சர்லாந்தில் மேலும் ஏதேனும் சட்ட நடவடிக்கைகள் இருக்குமா என்பது தெளிவாக இல்லை என்றும் தெரிவித்தார். போலாந்து அரசாங்கம், பூட்டோ மற்றும் அவர் கணவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 500 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது.இந்த குற்றச்சாட்டுக்கள் 1997ல், 8,000 டிராக்டர்கள் வாங்கியது தொடர்பானதாகும். பாகிஸ்தான் அதிகாரிகளின் கருத்துப்படி, டிராக்டர் நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை ஏற்று கொள்வதற்கு கைமாறாக அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சட்டவிரோதமான கமிஷன்களின் விபரங்களை அந்த போலாந்து ஆவணங்கள் கொண்டிருந்தன. இலஞ்சங்களில் ரூ. 103 மில்லியன் ($2 மில்லியன்) "மழுப்பப்பட்டதாக" அது குற்றஞ்சாட்டியது. "ஆசீப் ஜர்தாரி மற்றும் பெனசீர் பூட்டோவினால் அவாமி டிராக்டர் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் இருந்த இலஞ்ச முறைகேடு திட்டத்தை போலாந்திடம் இருந்து பெறப்பட்ட ஆவண ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன", என்று ஏபிபி தெரிவித்தது.பூட்டோ மற்றும் ஆசீப் ஜர்தாரி அவர்களுக்கு முன்னின்ற மனிதர்களான, 5,900 அர்சஸ் டிராக்டர்களை வினியோகிக்க சுமார் $1.969 மில்லியன் பெற்ற ஜென்ஸ் ஸ்க்லிஜெல்மில்ச் மற்றும் டார்கல் எஸ்.ஏ. -வின் டீடியர் பிளான்டின் ஆகியோரிடமிருந்து சட்டவிரோதமாக 7.15% கமிஷன் பெற்றனர். முக்கியமாக, ஆவணங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட மிக ஆதாயகரமான உடன்படிக்கை, ஒரு பிரெஞ்சு இராணுவ ஒப்பந்ததாரரான டாஸ்சால்ட் ஏவியேஷனை உள்ளடக்கி இருந்தது.1998ல், ஜர்தாரியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சுவிட்சர்லாந்து கார்பரேஷனுக்கு ஐந்து சதவீத கமிஷனை அளிப்பதற்கு கைமாறாக விமானப்படை போர்விமானங்களை மாற்ற டாஸ்சால்டிற்கு அதிகளவிலான உரிமைகளை பூட்டோவின் கணவர் ஜர்தாரி வழங்கினார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அந்த நேரத்தில், பிரெஞ்சு ஊழல் விதிகள் பிரெஞ்சு அதிகாரிகளின் ஊழல்களைத் தவிர்த்தது, ஆனால் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு தொகைகளை அளித்தது, அத்துடன் பிரான்சில் அந்த தொகைகளுக்கு வரிச்சலுகைகளையும் அளித்தது.எவ்வாறிருப்பினும், பிரான்சு இந்த சட்டத்தை 2000ல் மாற்றிவிட்டது. 1998-1999ல், ஹெலிகாப்டர் வாங்குவது குறித்த விவகாரத்தை விசாரிக்க பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கணக்குகள் ஆணையத்தால் (பிஏசி) ஒரு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நிலையான கூட்டுத்தொகையாக $2.168 மில்லியன் பணமோசடியையும், $1.1 மில்லியன் பொதுமக்களின் பணத்தையும் உள்ளடங்கி உள்ளது.இந்த வழக்கு முறையாகவோ அல்லது அக்கறையோடோ அணுகப்படவில்லை என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.கேபினெட் பிரிவின் குற்றச்சாட்டின் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் ஸ்டேட் பேங்க் சர்க்கில் ராவல்பிண்டியில் 1998ஆம் ஆண்டின் முதன்மை புலனாய்வு அறிக்கை எண் 1 பதிவு செய்யப்பட்டது.சௌத்ரி முஹம்மது பார்ஜீஸ் தாஹிர் மற்றும் இரண்டு உறுப்பினர்களான பரீதுல்லாஹ் ஜமாலி மற்றும் ஜம்ஷயத் அலி ஷாவின் தலைமையிலான குழுவால் முழுமையான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த புலனாய்வின் போது குழுவின் சேர்மேன் பார்ஜீஸ் தாஹிர் , முன்னாள் ஜனாதிபதி பரூக் லெஹரிக்கும், முன்னாள் பிரதம மந்திரி பெனசீர் பூட்டோவிற்கும், அவர்கள் இருவருடன் மற்றவர்களுக்கும் குற்றப்பத்திரிக்கை அனுப்பினார், அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.இந்த வழக்கு பாகிஸ்தானின் உள்ளும், புறமும் பரந்தளவில் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது.ஆவணத்தில் இருந்து பெறப்பட்ட குழுவின் பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளன: 6.1: (1) காலாபாக்கின் மலிக் அல்லாஹ் யார் கான், (2) ஜியா பர்வீஜ் ஹூசைன் மற்றும் (3) டாக்டர் எம்.ஏ. கான் ஆகியவர்களுக்கு எதிராக முதன்மை புலனாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு எதிரான மோசடிக்காக அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. 6.2: இதற்காக மலிக் அல்லாஹ் யார் கான், ஜியா பர்வீஜ் ஹூசைன் மற்றும் டாக்டர் எம்.ஏ. கான் ஆகியோரிடம் இருந்து, பாகிஸ்தானில் அல்லது வெளிநாட்டில் உள்ள அவர்களின் சொத்துக்களையும், பிறவற்றையும் சேர்ப்பதன் மூலம், $2.168 மில்லியன் தொகை மீட்டெடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அனைத்துலக போலீஸ் மூலம் இந்த பணத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்பு எடுக்க வேண்டும்.இந்த மோசடியில் ஈடுபட்ட எந்த வங்கியாளரோ அல்லது வெளிநாட்டுவர்களோ கூட மத்திய புலனாய்வு அமைப்பால் உள்ளெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 6.3: இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்த வரை பெனாசீரின் ஒப்புதலுடனோ அல்லது அவரின் வழிகாட்டலின் அடிப்படையிலோ முன்னாள் ஜனாதிபதி, பிரதம மந்திரி(அஹ்மத் சாதிக்) மூலம் மந்திரிசபையில் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதால், கருவூலத்தின் இந்த இழப்பில் பெனசீர் பூட்டோவின் பொறுப்பு தெளிவாக இருப்பதால், பிரதம மந்திரியாக அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக மத்திய புலனாய்வு அமைப்பு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் மற்றும் கிரிமினல் வழக்குகளையும் தொடுக்கலாம். 6.4: இந்த வழக்கில் பரூக் லெஹரியின் பெயர் வெளிப்படையாக இருப்பதை அவர் அறிவார் என்றாலும் கூட, அவர் ஒன்றும் அறியாதவர் போல வாதமிட முயன்றுள்ளார். இந்த வழக்கில் செயல்பட்டுள்ளவர்கள் மிக எளிதாக அதிகாரத்துவத்தில் இருந்த கேபினெட் செயலாளர், பிரதம மந்திரிக்கான முதன்மை செயலாளர் மற்றும் பிரதம மந்திரியையே கூட, ஜனாதிபதியின் பின்புலத்துடனும், உதவியுடனும் அணுக முடிந்திருப்பது கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தாலும் கூட, அவருக்கு எதிராகவும் முதன்மை புலனாய்வு அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கிரிமினல் வழக்குகள் தொடரப்பட வேண்டும். 6.5: பிரதம மந்திரியின் பிரத்யேக முன்னாள் செயலரான அஹ்மது சதக், ஹூமாயூன் பெயிஜ் ரசூல் மற்றும் முன்னாள் கேபினெட் செயலரான சாஹிப்ஜதா இம்தியாஜ் போன்ற மூத்த உள்துறை சேவகர்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் ஏற்கனவே ஓய்வுபெற்றும்/வயதாகி விட்டதாலும் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை. இந்த வழக்கு 2000-2002ல் மீண்டும் தேசிய கணக்கியல் ஆணையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானின் நகைத்தொழில்துறையை நிலைநிறுத்திய தங்க இறக்குமதிகளின் மீது பெனசீர் அரசாங்கம் ஜர்தாரிக்கு ஒரு சுய அதிகாரம் அளித்ததற்கு பின்னர், மேற்காசியாவிலுள்ள ஒரு தங்கக்கட்டி வினியோகஸ்தர், குறைந்தபட்சம் 10 மில்லியன் டாலரை ஜர்தாரியின் கணக்கில் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். இதுவே புலனாய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ள ஒரேதவணையில் அளிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.இந்த பணம் துபாயிலுள்ள ஜர்தாரியின் சிட்டிபேங்க் கணக்கில் சட்டவிரோதமாக டெபாசிட் செய்யப்பட்டது.கராச்சி முதல் ஈரான் எல்லை வரை நீண்டிருக்கும் பாகிஸ்தானின் அரேபிய கடற்கரை, நீண்டகாலமாகவே தங்கம் கடத்துபவர்களின் சொர்க்கபூமியாக இருந்து வருகிறது.பூட்டோவின் இரண்டாவது பதவி காலத்தின் தொடக்கம் வரை, ஆண்டுக்கு நூறு மில்லியன் டாலர்களில் புரண்ட வர்த்தகம், நெறிப்படுத்தப்படாமல் இருந்தது. பிஸ்கட்கள் என்றழைக்கப்பட்ட தங்கத் துண்டுகளுடன், பெரிய எடையிலான கட்டிகள், பாரசீக வளைகுடாவிற்கும், பெருமளவில் பாதுகாப்பற்ற பாகிஸ்தான் கடற்கரைக்கும் இடையில் விமானங்களிலும், படகுகளிலும் கொண்டு செல்லப்பட்டன. 1993ல் பூட்டோ பிரதமமந்திரியான உடனேயே, துபாயிலுள்ள ஒரு பாகிஸ்தானிய மொத்த வர்த்தகரான அப்துல் ரஜ்ஜாக் யாகூப் ஓர் உடன்பாட்டை செய்து கொண்டார்: அதாவது, தங்கம் இறக்குமதி செய்வதற்கு பிரத்யேக உரிமை அளித்தால் அதற்கு பதிலாக வர்த்தகத்தை நெறிப்படுத்த ரஜ்ஜாக் அரசாங்கத்திற்கு உதவுவார்.1994 நவம்பரில், பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சகம் ரஜ்ஜாக்கிற்கு ஒரு கடிதம் எழுதியது. அதன்படி, குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அங்கீகரிக்கப்பட்ட தங்க இறக்குமதியாளராக இருக்க அவருக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது.துபாயில் அவரின் அலுவலகத்தில் செய்யப்பட்ட ஒரு நேர்காணலில், பாகிஸ்தானிற்குள் $500 மில்லியன் டாலருக்கும் மேலான தங்கத்தை இறக்குமதி செய்ய அந்த உரிமத்தைப் பயன்படுத்தியதாக ரஜ்ஜாக் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் பூட்டோ மற்றும் ஜர்தாரியைச் சந்திக்க பல முறை இஸ்லாமாபாத்திற்கும் பயணித்துள்ளார். ஆனால் அதில் எவ்வித ஊழலோ அல்லது இரகசிய உடன்படிக்கைகளோ இல்லை என்று அவர் மறுத்துள்ளார்."ஜர்தாரிக்கு நான் ஒரேயொரு செண்ட் கூட அளிக்கவில்லை," என்று அவர் தெரிவித்தார்.அவர் புகழை அழிக்க விரும்பிய யாரோ, அவரின் நிறுவனத்தை டெபாசிட்டர் என்று தவறாக அடையாளப்படுத்த முயற்சிப்பதாக ரஜ்ஜாக் முறையிடுகிறார்."வங்கியில் உள்ள யாரோ என் எதிரிகளுடன் சேர்ந்து தவறான ஆவணங்களை உருவாக்க ஒத்துழைத்துள்ளனர்," என்று அவர் தெரிவித்தார். 1996ல் பூட்டோ பிரதம மந்திரியாக இருந்த போது, சீருடை அணிந்த போலீஸால் அவரின் சகோதரர் முர்தாஜா பூட்டோ கொல்லப்பட்டதற்கு பெனசீர் உடந்தையாக இருந்தார் என்று பூட்டோவின் உறவினரும், பிறரும் வெளிப்படையாகவே பூட்டோவைக் குற்றஞ்சாட்டினார்கள். 2002ல், ஒருவரே இரண்டு முறைக்கு மேல் பிரதம மந்திரியாக பதவி வகிப்பதற்கு தடை விதி்த்து பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப் பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்தார்.இது மீண்டும் ஒருபோதும் பதவிக்கு வரமுடியாதபடி பூட்டோவைத் தகுதி இழக்கச் செய்தது. இந்த நகர்வு முன்னாள் பிரதம மந்திரிகளான பெனசீர் பூட்டோ மற்றும் நவாஜ் ஷெரீப் ஆகியோரின் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் என்று பரவலாக கருதப்பட்டது.2003 ஆகஸ்டு 3ல், சர்வதேச மின்ஹஜ் அல் குரானில் (கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேச முஸ்லீம் அமைப்பு) பூட்டோ ஓர் உறுப்பினரானார். பெனசீர் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் மற்றும் துபாயில் தங்கியிருந்த போது, அல்ஜீமெர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் அன்னையையும், அவரின் மூன்று குழந்தைகளையும் கவனித்து கொண்டிருந்ததுடன், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், அவர்களுடன் தொடர்புகளைத் தக்கவைக்கவும் பயணித்து கொண்டிருந்தார்.ஐந்திற்கும் மேலான ஆண்டுகளுக்கு பின்னர் 2004 டிசம்பரில் அவர் கணவருடன் அவர்கள் மீண்டும் ஒன்றுபட்டார்கள். 2006ல், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பெயரில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக பூட்டோவிற்கும், அவர் கணவருக்கும் சர்வதேச போலீஸ் கைது ஆணையைப் பிறப்பித்தது.பூட்டோக்கள் அந்த ஆணையின் சட்ட அடிப்படையின் மீது கேள்வி எழுப்பி இன்டர்போலுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். 2007 ஜனவரி 27ல், ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் காங்கிரஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் பேச அமெரிக்காவிற்கு அவர் அழைக்கப்பட்டார். 2007 மார்ச்சில், இங்கிலாந்தில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கேள்வி நேரத்தில்" பூட்டோ பேனலிஸ்டாக தோன்றினார்.அவர் பிபிசி தற்போதைய நிகழ்வுகள் பற்றிய நிகழ்ச்சியான "நியூஸ்நைட்" டிலும் பல முறை தோன்றியுள்ளார்.நைட்பட்டம் பெற்ற சல்மான் ருஷ்டி வெளிநாட்டு குடிமக்களின் படுகொலைக்கு அழைப்பு விடுக்கிறார் என்று குறிப்பிட்டு, அவரைக் குறித்து 2007 மே மாதத்தில் முஹ்மது இஜாஜ்-அல்-ஹக்கினால் தோற்றுவிக்கப்பட்ட கருத்துக்களை அவர் நிராகரித்தார். 2007க்குள் பாகிஸ்தானுக்கு திரும்பி வருவதற்கான தமது விருப்பத்தை பூட்டோ அறிவித்திருந்தார். 2007 இறுதியில் அல்லது 2008 தொடக்கத்தில் நடக்கவிருந்த நாட்டின் பொது தேர்தல்களில் அவரை அனுமதிக்க முடியாது என்று 2007 மே மாதம் முஷாரப்பின் அறிவிப்புகள் இருந்த போதினும், அவர் நாடு திரும்பினார். அவர் மீண்டும் பிரதம மந்திரியாக நியமிக்கப்படலாம் என்று வதந்திகள் உலாவின. பூட்டோவால் எழுதப்பட்ட ஜனாதிபதி மற்றும் அவரின் கொள்கைகள் குறித்த மிகவும் சிக்கலான ஒரு கட்டுரைக்கு பிரதிபலிப்பாக, 2007 ஜூன் 14ல் "தி வால்ஸ்ட்ரீட் இதழில்" வெளியான ஒரு முரண்பட்ட கடிதத்தில், ஓர் அமெரிக்க வரலாற்றாளரான ஆர்தர் ஹெர்மன், "தெற்காசியாவின் வரலாற்றில் போட்டியிட முடியாத பல தலைவர்களில் ஒருவராக" அவரை எடுத்துக்காட்டியிருந்தார். அத்துடன் அவரும், பாகிஸ்தானில் இருந்த பிற மேற்தட்டுக்களும் முஷாரப் ஒரு "முஹாஜிர்" , 1947 சுதந்திரத்தின் போது பாகிஸ்தானுக்கு பறந்து வந்த மில்லியன்கணக்கான இந்திய முஸ்லீம்களில் ஒருவரின் மகன், என்பதால் வெறுத்தார்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்."பாகிஸ்தான் உருவாக்கத்திற்காக முன்னணியில் நின்று முஹாஜிர்கள் போராடி இருந்த போதினும், சொந்த நாட்டில் இருந்த பாகிஸ்தானியர்களில் பலர் அவர்களை விரோதமாகவே பார்க்கிறார்கள் என்பதுடன் அவர்களை மூன்றாம்-தர குடிமக்களாகத் தான் நடத்துகிறார்கள்," என்றும் ஹெர்மேன் குறிப்பிட்டார். எவ்வாறிருப்பினும், 2007 மத்தியில், அமெரிக்கா ஓர் உடன்பாட்டிற்கு தள்ளி கொண்டிருப்பதாக தெரிந்தது. இதன்படி முஷாரப் ஜனாதிபதியாக இருப்பார், ஆனால் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலகிக் கொள்வார், அத்துடன் பெனசீர் அல்லது அவர் நியமனத்தில் ஒருவர் பிரதம மந்திரியாவார் என்பதாக இருந்தது. 2007 ஜூலை 11ல், அசோசியேடட் பிரஸ், செம்மசூதி சம்பவத்திற்கு பின்னர் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதியது: முன்னாள் பிரதம மந்திரியும், எதிர்கட்சி தலைவருமான பெனசீர் பூட்டோ மீண்டும் நாட்டிற்கு திரும்புவார் என்றும், ஆண்டு முடிவில் நடக்கவிருக்கும் பொது தேர்தல்களில் முஷாரப்புடன் ஒரு அதிகார-பகிர்வு உடன்படிக்கையை எட்டுவார் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. செம்மசூதி விவகாரத்தில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்ததற்காக பெனசீர் பூட்டோ அவரை பாராட்டினார். "மசூதியில் போராளிகளுடன் போர்நிறுத்தம் கிடையாது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் போர்நிறுத்தங்கள் போராளிகளைத் திடங்கொள்ளச் செய்யும்," என்று செவ்வாயன்று பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சிக்கு அவர் தெரிவித்தார்."அங்கு ஒரு பின்னடைவு இருக்கும், ஆனால் ஏதாவதொரு வேளையில் போராளிகள் தோன்றுவதை நாம் நிறுத்த வேண்டியுள்ளது." செம்மசூதி குறித்த இந்த கருத்து பாகிஸ்தானில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது, அறிவி்க்கப்பட்ட வகையில் நூற்றுக்கணக்கான இளம் மாணவர்கள் எரித்து கொல்லப்பட்டார்கள், மீதமிருந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. மேலும் காணாமல்போன நபர்களின் பிரச்சனைகள் குறித்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதுவும், இதை தொடர்ந்து முஷாரப்பிற்கான ஆதரவும் ஃகார் போன்ற பூட்டோவின் மூத்த தோழர்கள் அவர் மீது வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு அவர்களை இட்டு சென்றது. எவ்வாறிருப்பினும், பின்னால் ஏற்பட்ட முதன்மை நீதிபதியுடனான சச்சரவின் ஓர் ஆரம்ப கட்டத்தில் அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு பூட்டோ முஷாரப்பிற்கு அறிவுறுத்தினார்.அவரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதன் சிஈசி உறுப்பினரும், முதன்மை நீதிபதிக்கான முதன்மை வழக்கறிஞருமான ஆயிட்ஜாஜ் ஆஹ்சானை வெற்றிகரமாக மீண்டும் பதவியில் அமர்த்துவதில் ஒன்று கூடவில்லை.மாறாக, அவர் ஒரு விரோதியாகவும், விலக்கப்பட்டவராகவும் பார்க்கப்பட்டார். 2002 அக்டோபரில் நடைபெற்ற பொது தேர்தல்களில் தேசிய பாராளுமன்றத்தில் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மிக அதிகளவிலான வாக்குகளையும் (28.42%), எண்பது இடங்களையும் (23.16%) பெற்றது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ந) (பிஎன்எல்-என்) பதினெட்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது.தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களில் சிலர் தங்களுக்குள் ஒரு பிரிவை உருவாக்கினார்கள், பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான மக்தூம் பைஜல் சலீஹ் ஹயத்தின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த பிரிவு பாக்கிஸ்தான் மக்கள் கட்சி- தேசபக்தர்கள் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பின்னர் முஷாரப் கட்சியான பிஎம்எல்-க்யூ உடன் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கினார்கள். 2002 மத்தியில், ஒரேநபர் இரண்டு முறை மட்டுமே பிரதம மந்திரியாக பதவி வகிக்க கூடிய சட்டத்தை முஷாரப் கொண்டு வந்தார்.பூட்டோவும், முஷாரப்பின் மற்றொரு முக்கிய போட்டியாளரான நவாஜ் ஷெரீப்பும் ஏற்கனவே இரண்டு முறை பிரதம மந்திரியாக பதவி வகித்து இருந்தார்கள். பாராளுமன்றத்தில் முஷாரப்பின் கூட்டாளிகள், குறிப்பாக பிஎன்எல்-க்யூ, மூன்றாம் முறையாக பிரதம மந்திரி பதவி வகிப்பதை அனுமதிக்கும் மாற்றங்களைத் திரும்ப கொண்டு வரவோ அல்லது பூட்டோ அல்லது ஷெரீப்பிற்கு மட்டும் பிரத்யேகமாக அனுமதி வழங்கவோ விரும்பவில்லை. 2007 ஜூலையில், பூட்டோவின் முடக்கிவைக்கப்பட்ட நிதிகளில் சில வெளியில் அளிக்கப்பட்டன. பூட்டோ தொடர்ந்து கணிசமான ஊழல் குற்றங்களை முகங்கொடுத்து வந்தார்.2007 ஆகஸ்டு 8ஆம் தேதி, கனடியன் பிராட்காஸ்டிங் கார்பரேஷனுடனான நேர்காணலில், 2008 தேர்தல்களுக்காக பாகிஸ்தானுக்கு திரும்புவது குறித்த அவரின் விருப்பத்தின் மீது அந்த பேச்சுவார்த்தை இருந்ததாக பூட்டோ அறிவித்தார். மேலும் பூட்டோவை பிரதம மந்திரியாக கொண்டு முஷாரப் ஜனாதிபதியாக இருப்பார் என்பதாக அந்த பேச்சுவார்த்தை இருந்தது.2007 ஆகஸ்டு 29ல், முஷாரப் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பூட்டோ அறிவித்தார். 2007 செப்டம்பர் 1ஆம் தேதி, முஷாரப்புடன் ஓர் அதிகார-பகிர்வை அதற்கு முன்னர் அவர் எட்டி விட்டாரா இல்லையா என்ற விளக்கம் இல்லாமலேயே, பாகிஸ்தானுக்கு தாம் "வெகு விரைவில்" திரும்ப போவதாக பூட்டோ அறிவித்தார். தங்களின் கோரிக்கையான ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் அதிகார-பகிர்வை அனுமதிக்க மறுத்ததன் மூலம் பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளி விட்டதாக முஷாரப்பின் கூட்டாளிகளை 2007 செப்டம்பர் 17ல் பூட்டோ குற்றஞ்சாட்டினார்.பாகிஸ்தானின் ஜனாதிபதியாக தொடர முஷாரப் தகுதி இழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஆறு மனுக்களின் (பாகிஸ்தானின் மிகப் பெரிய இஸ்லாமிய குழுவான ஜமாத்-ஈ-இஸ்லாமியின் ஒரு மனுவும் இதில் அடங்கும்) மீது உச்சநீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்கள் குழு கலந்தாலோசித்தது.தமது கட்சி எதிர்கட்சி குழுக்களில் ஒன்றுடன், முக்கியமாக நவாஜ் ஷெரீ்ப்புடன் சேரக்கூடும் என்று பூட்டோ அறிவித்தார்.விசாரணை நடந்து வரும் வேளையில், ஜனாதிபதி வாக்கெடுப்புக்கான தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் ""விருப்பமில்லாமல்" " இருந்ததாக அட்டார்னி ஜெனரல் மலிக் முஹம்மது கய்யாம் குறிப்பிட்டார்.முஷாரப் ஏற்கனவே இராணுவ தளபதியாக இருப்பதால் அவர் மீண்டு்ம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாகிஸ்தான் அரசியல் அமைப்பு இடம் தராது என்று பூட்டோ கட்சியின் பர்ஹத்துல்லாஹ் பாபர் குறிப்பிட்டார்: "ஜெனரல் முஷாரப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தகுதி இழந்திருப்பதால், தேர்தல் ஆணையத்தின் மீது செல்வாக்கு செலுத்தி பாகிஸ்தான் அரசியல் அமைப்பை சட்டவிரோதமாகவும், விருப்பப்படியும் உடைக்க விருப்பம் கொண்டிருக்கிறார்." முஷாரப், இராணுவ படையின் முதன்மை தளபதி பதவியில் இருந்து விலகியதன் மூலம் ஒரு முழுமையான சராசரி குடிமகன் பாத்திரத்திற்கு மாற தயாரானார்.மறுதேர்தல் நடத்துவதற்கு தொடர்ந்து பிற சட்டப்பூர்வமான தடைகளையும் அவர் முகங்கொடுத்தார்.2007 அக்டோபர் 2ல், முஷாரப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவரின் இராணுவ பதவியை இராஜினாமா செய்தால், லெப்டினெண்ட் ஜெனரல் ஆஸ்பெக் கயானி இராணுவத்தின் முதன்மை தளபதியாக கூடும் என்ற திட்டத்துடன், ஜெனரல் முஷாரப் அக்டோபர் 8 முதல் பதவியேற்க கயானியின் பெயரை இராணுவ துணை தளபதி பதவிக்கு முன்மொழிந்தார்.இதற்கிடையில், பெனசீர் பூட்டோவிற்கு பொதுமன்னிப்பு அளித்து, அவர் மீதிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கைவிடவும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக மந்திரி ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்தார்.சுமூகமான பரிமாற்றத்தையும், மக்களாட்சிக்கு திரும்புதலையும் வலியுறுத்திய பெனசீர், பர்வீஜ் முஷாரப் தம் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2007 அக்டோபர் 5ல், பூட்டோவிற்கும், மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கும் (நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப் தவிர) அவர்களுக்கு எதிராக இருந்த ஊழல் வழக்குகள் உட்பட அனைத்து நீதிமன்ற வழக்குகளில் இருந்தும் பொதுமன்னிப்பு அளித்து, முஷாரப் தேசிய சமாதான உத்தரவில் கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு முக்கியமான ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நாளுக்கு ஒருநாள் முன்னதாக வெளிவந்தது.எதிர்கட்சியான பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎன்எல்-க்யூ இரண்டும் இந்த உடன்படிக்கையின் மீது நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இதற்கு பதிலாக, பூட்டோவும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஜனாதிபதி தேர்தலை புறகணிக்காமல் இருக்க ஒப்புக்கொண்டனர். 2007 அக்டோபர் 6ல், ஜனாதிபதிக்கான பாராளுமன்ற தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றார்.எவ்வாறிருப்பினும், முஷாரப் இராணுவ தளபதியாக இருந்து கொண்டே சட்டப்பூர்வமாக ஜனாதிபதியாகவும் இருக்க முடியுமா என்பதை முடிவு செய்யும் வரை வெற்றி பெற்றவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.தேர்தலை புறக்கணித்த பிற எதிர்கட்சிகளுடன் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சேரவில்லை, ஆனால் வாக்களிப்பதைத் தவிர்த்தது. பின்னர், பூட்டோ ஜனாதிபதிக்கு இணையான பாதுகாப்பு வளையம் தேவை என்று கோரினார்.பூட்டோ அவரின் பாதுகாப்பிற்காக வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களையும் ஒப்பந்தம் செய்து கொண்டார். தலைமை பதவிக்கான பிரச்சாரத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதன் விளைவாக பூட்டோ அவரின் சொந்த உயிருக்கு இருந்த அபாயங்களை நன்கு உணர்ந்திருந்தார்.சிஎன்என் செய்தியாளர் வோல்ப் பிலிட்ஜருடன் 2007 செப்டம்பர் 28ல் நடந்த ஒரு நேர்காணலில், அவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முன்கூட்டியே தெரிவித்தார். எட்டு ஆண்டுகள் துபாய் மற்றும் இலண்டனில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இருந்த பின்னர், 2008 தேசிய தேர்தல்களுக்கு தயாராவதற்காக 2007 அக்டோபர் 18ல் பூட்டோ கராச்சிக்கு திரும்பினார். 2007 அக்டோபர் 18ல் கராச்சியில் நடந்த ஒரு பேரணியின் வழியில், பூட்டோ ஜின்னாஹ் சர்வதேச விமானநிலையத்தை விட்டு நகர்ந்த பின்னர், குறுகிய நேரத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன.அவர் காயமடையவில்லை என்றாலும் அந்த குண்டுவெடிப்புகள் (பின்னர் அவை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்று அறியப்பட்டன) 136 மக்களைக் கொன்று குவித்தது, அதில் குறைந்தபட்சம் 450 பேர் காயமடைந்தனர்.பெனாசீரின் வண்டியை விட்டு குண்டுவெடிப்பாளர்களை தூரத்தில் நிறுத்தி வைக்க ஒரு மனிதசங்கிலியை உருவாக்கி இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு காவலர்கள் குறைந்தபட்சம் 50 பேர் இதில் கொல்லப்பட்டார்கள், அத்துடன் ஆறு போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டார்கள்.பல மூத்த அதிகாரிகள் காயமடைந்தார்கள்.கராச்சி வழியாக பத்து மணி நேர அண்மையில் அணிவகுப்பு நடத்திய பின்னர், குண்டு வெடிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர், பூட்டோ அவரின் வீங்கிய பாதங்களில் இருந்து அவரின் காலணிகளைக் கழற்ற ஸ்டீல் கமாண்டு மையத்திற்குள் இறங்கி இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து காயமின்றி அவர் காப்பாற்றப்பட்டார். பாகிஸ்தானுக்கு தாம் திரும்பி இருப்பதால் தற்கொலை படைகள் குறி வைக்க கூடும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தாம் எச்சரிக்கை அளித்திருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கேற்ப செயல்பட தவறிவிட்டதாகவும் பூட்டோ பின்னர் குறிப்பிட்டார்.அந்த தாக்குதல்களுக்காக பர்வீஜ் முஷாரப் மீது குற்றஞ்சாட்டாமல் இருப்பதில் அவர் கவனமாக இருந்தார், மாறாக இஸ்லாமிய போராளிகளின் செயல்களை முன்னெடுக்க "அரசாங்கத்திற்குள் இருக்கும் சில தனிநபர்கள் தங்களின் பதவிகளையும், தங்களின் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துவதாக" குற்றஞ்சாட்டினார்.அவர் உயிரைப் பறிக்க நடந்த முயற்சிக்கு சற்று பின்னர், அந்த தாக்குதலை நடத்தியவர்கள் என்று தாம் சந்தேகிக்கும் நான்கு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பூட்டோ முஷாரப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார். ஒரு போட்டி பிஎம்எல்-க்யூ அரசியல்வாதியும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான சௌத்ரி பெர்வியாஜ் இலாஹி, இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்சின் முன்னாள் இயக்குனர் ஹமீத் குல் மற்றும் நாட்டின் மற்றொரு புலனாய்வு அமைப்பான இன்டெலிஜென்ஸ் பீரோவின் இயக்குனர் ஜெனரல் இயாஜ் ஷா ஆகியோரின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டது.அந்த பெயர்களில் உள்ள அனைவரும் ஜெனரல் முஷாரப்பிற்கு மிக நெருக்கமானவர்கள்.அவருக்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தின் குற்றஞ்சாட்டும் பிரிவுகளின், குறிப்பாக பாகிஸ்தானின் முதன்மை இராணுவ புலனாய்வு அமைப்புகளின், ஒரு நீண்டகால வரலாற்றை பூட்டோ கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர்கள் அவரின் தாராளவாத, சமயசார்பற்ற திட்டத்தை எதிர்க்கிறார்கள்.காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஐஎஸ்ஐ பல தசாப்தங்களாக ஆதரவளித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். அவர் அவரின் வாகனத்தாலும், தற்கொலைப்படை தாக்குதலை எதிர்த்து, குண்டுவெடிப்பாளர்கள் அவருக்கு அருகில் வராமல் தடுக்க அவரைச் சுற்றி ஒரு சங்கிலியை உருவாக்கிய அவரின் ஆதரவாளர்களின் "மனித கேடயத்தாலும்" பாதுகாக்கப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களின் கருத்துப்படி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆகும், இறந்தவர்கள் குறைந்தபட்சம் 160 நபர்கள் ஆவார்கள் (134 நபர்கள் இறந்ததாகவும், சுமார் 450 பேர் காயமடைந்ததாகவும் "நியூயார்க் டைம்ஸ்" குறிப்பிடுகிறது). ஒரு சில நாட்களுக்கு பின்னர், பூட்டோவின் வழக்கறிஞர் பரூக் எச். நாயக், அவரின் வாடிக்கையாளர் கொல்லப்படுவார் என்ற அச்சுறுத்தலுடன் ஒரு கடிதத்தைப் பெற்றார். 2007 நவம்பர் 3ல், ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மற்றும் நாட்டில் உள்ள மத தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அவசரகால நிலையை அறிவித்தார்.துபாயில் குடும்பத்தைச் சந்திப்பதற்கான பயணத்தை வெட்டிவிட்டு பூட்டோ நாடு திரும்பினார்.விமான நிலையத்தில் கோஷங்கள் எழுப்பிய ஆதரவாளர்களுடன் அவர் வரவேற்கப்பட்டார்.பல மணி நேரம் அவரின் விமானத்திலேயே இருந்த பின்னர், அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் லாகூர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.பாகிஸ்தான் ஓர் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது என்பதை ஒப்புக்கொண்ட போதினும், முஷாரப்பின் அவசரகால நிலை நீக்கப்பட்டால் ஒழிய, நியாயமான தேர்தல்களை நடத்துவது மிகவும் சிரமம் என்று அவர் குறிப்பிட்டார்."தீவிரவாதிகளுக்கு ஒரு சர்வாதிகாரம் தேவைப்படுகிறது, சர்வாதிகாரத்திற்கு தீவிரவாதிகள் தேவைப்படுகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். 2007 நவம்பர் 8ல், அவசரகால நிலைக்கு எதிராக ஒரு பேரணியை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அமெரி்க்காவில் உள்ள நேஷனல் பப்ளிக் ரேடியோவுடனான ஒரு தொலைபேசி நேர்காணலின்போது, "எனக்கு வீட்டிற்குள் உலாவ சுதந்திரம் உள்ளது.வீட்டிற்கு வெளியே உலாவ எனக்கு சுதந்திரம் இல்லை.அவர்கள் வீட்டிற்குள் பலத்த போலீஸ் காவலை ஏற்படுத்தி உள்ளார்கள், என் வீட்டின் நான்கு சுவர்களைச் சுற்றி ஒவ்வொரு பக்கமும் 1,000 பேர் என்ற வகையில் 4,000 போலீஸ்காரர்களின் ஒரு மிக பெரிய போலீஸ் படை உள்ளது.அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களின் வீட்டிலும் கூட நுழைந்திருக்கிறார்கள்.நீங்கள் எங்களுக்காக இருக்கிறீர்களா?நீங்கள் ஒசாமா பின்லேடன் போன்று உங்களுக்கு தெரியவில்லையா? என்று நான் ஒரு போலீஸ்காரரிடன் கேட்டேன்."மன்னிக்க வேண்டும் மேம், இது எங்களின் வேலை.எங்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை நாங்கள் செய்கிறோம்." என்று அவர் தெரிவித்தார். அதற்கடுத்த நாள், பூட்டோவின் கைது ஆணை திரும்ப பெறப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. அவர் பயணிக்கவும், பொது பேரணிகளில் தோன்றவும் சுதந்திரம் அளிக்கப்பட்டார்.எவ்வாறிருப்பினும், பிற எதிர்கட்சிகளின் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேச தடைவிதிக்கப்பட்டு இருந்தார்கள். 2007 நவம்பர் 2ல், அல் ஜஜீரா தொலைக்காட்சிக்கு டேவிட் பிரோஸ்டுடனான நேர்காணலில் பங்கெடுத்த பூட்டோ, அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பியர்லைக் கடத்தி கொன்ற ஆட்களில் ஒருவரான அஹ்மத் ஓமர் சயீத் ஷேக்கால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.பின்லேடன் இறந்துவிட்டார் என்ற அந்த கருத்து குறித்து அதற்கடுத்து பிரோஸ்ட் ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை. 2007 நவம்பர் 24ல், ஜனவரி பாராளுமன்ற தேர்தல்களுக்கான வேட்பாளர் மனுவை பூட்டோ சமர்ப்பித்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர், எப்போதுமான இரண்டு இடங்களுக்கு லார்கானாவில் அவர் மனு தாக்கல் செய்தார்.ஏழு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு சவூதி அரேபியாவில் இருந்த முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப், பாகிஸ்தானுக்கு வந்தவுடன் வேட்பாளராக நிற்பதற்கு மனு தாக்கல் செய்தது போன்றே பூட்டோவும் செய்தார். 2007 நவம்பர் 30ல் மீண்டும் பதவியேற்ற போது, இந்த முறை இராணுவ தலைமை பதவியைக் கைவிட்டு விட்டு ஒரு நாட்டு ஜனாதிபதியாக முஷாரப், டிசம்பர் 16ல் பாகிஸ்தானில் இருந்த அவசரகால நிலையை நீக்குவதற்கான அவரின் திட்டத்தை அறிவித்தார்.அந்த அறிவிப்பை வரவேற்ற பூட்டோ, அவர் கட்சியின் உள்நாட்டு பிரச்சனைகளைப் பட்டியலிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டார்.அவர் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, வேலைவாய்ப்பு, கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவம் ஆகிய ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று இஸ்லாமாபாத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பூட்டோ தெரிவித்தார். 2007 டிசம்பர் 4ல், ஜனவரி பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்னால் நாட்டின் அவசரகால நிலையை நீ்க்குவதற்கான தமது வாக்குறுதியை முஷாரப் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும், அவ்வாறு செய்ய தவறினால் வாக்கெடுப்பு புறக்கணிக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் பிரபலப்படுத்த நவாஜ் ஷெரீப்பை பூட்டோ சந்தித்தார். அவர்களின் கோரிக்கை பட்டியலை முஷாரப்பிடம் அளிக்கும் ஒரு குழுவை அமைக்க அவர்கள் வாக்குறுதி முடிவெடுத்தார்கள். இந்த கோரிக்கைகள் மீது தான் தேர்தலில் அவர்களின் பங்கேற்பதன் நிச்சயத்தன்மை இருந்தது. 2007 டிசம்பர் 8ல், பலுசிஸ்தானின் தென்மேற்கத்திய மாகாணத்தில் உள்ள பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அலுவலகத்தை மூன்று அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் தாக்கினார்கள். அதில் பூட்டோவின் மூன்று ஆதரவாளர்கள் கொல்லப்பட்டார்கள். 2007 டிசம்பர் 27ல் (பாக்சிங் நாளுக்கு அடுத்த நாள், 2004 இந்திய பெருங்கடல் பூகம்பத்தின் மூன்றாமாண்டு நினைவுதினத்தின் போது), ஜனவரி 2008 பாராளுமன்ற தேர்தல்களுக்கான போட்டியில் கட்சி ஆதரவாளர்களுக்கு ஓர் உற்சாகமான உரையை அளித்த பின்னர், லியாகட் நேஷனல்பாக்கில் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கான ஒரு பிரச்சார பேரணிக்கு புறப்பட்ட போது பூட்டோ கொல்லப்பட்டார்.அவரின் குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறிய பின்னர், அதன் மேற்கூரையின் வழியாக கூட்டத்தை நோக்கி கையசைக்க பூட்டோ ஏறி நின்றார்.அந்த நிமிடம், ஒரு துப்பாக்கி ஏந்திய மனிதன் அவரை நோக்கி சுட்டான், அதன் தொடர்ச்சியாக வாகனத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன, இதில் சுமார் 20 மக்கள் கொல்லப்பட்டார்கள். மிகவும் கடுமையாக காயப்பட்ட பூட்டோ, ராவல்பிண்டி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.உள்ளூர் நேரம் 17:35க்கு அறுவை சிகிச்சைக்காக உள்ளே கொண்டு செல்லப்பட்ட அவர், 18:16க்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். பூட்டோவின் உடல் அவரின் சொந்த நகரமான சிந்த்தில் லார்கானா மாவட்டத்தில் உள்ள கார்ஹிகுடா பக் ஷிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்ப கல்லறையில் இடத்தில் அவர் தந்தைக்கு அருகில் எரிக்கப்பட்டார். இந்த இறுதி ஊர்வலத்தில் நூறு ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். அவர் இறப்பின் காரணத்தில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தன.பூட்டோவின் கணவர் ஒரு பிரேத பரிசோதனைக்கோ அல்லது அறுவை சிகிச்சை ஆய்விற்கோ உட்படுத்த அனுமதி மறுத்து விட்டார். 2007 டிசம்பர் 28ல், பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், "வாகனத்திற்குள் குனிய முயன்ற போது, பூட்டோ கொல்லப்பட்டார், குண்டுவெடிப்பின் அதிர்வலைகள் மேற்கூரையில் இணைந்திருந்த ஒரு லீவரை அவர் தலை மேல் விழச்செய்தது, இதனால் அவர் மூளைஓடு உடைந்தது." என்று அறிவித்தது. எவ்வாறிருப்பினும், அவர் தலையில் உலோகத்துண்டு காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதுவே அவர் மரணத்திற்கான காரணம் என்றும் ஒரு மருத்துவமனை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். பூட்டோவின் உதவியாளர்களும் உள்துறை அமைச்சகத்தின் கருத்தையே வழிமொழிந்தார்கள். டிசம்பர் 31ல், சந்தேகத்திற்குரிய அவசர சிகிச்சை அறை நுழைவு அறிக்கையை சிஎன்என் ஒரு பிடிஎப் கோப்பாக வெளியிட்டது.சிகிச்சைக்கு சேர்த்த அனைத்து மருத்துவர்களாலும் கையெழுத்திடப்பட்டிருந்த அந்த ஆவணம், காயத்திற்குள் எந்த பொருளும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடுகிறது. அல்-கொய்தா கமாண்டர் முஸ்தபா அபு அல்-யாஜித், பூட்டோவை "ஒரு மிக மதிப்புமிக்க அமெரிக்க சொத்தாக" எடுத்துரைத்து, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தார். இந்த படுகொலைக்கு பின்னால் அல்-கொய்தா இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கமும் அறிவித்தது.சிஎன்என் அறிக்கை குறிப்பிட்டதாவது: "தற்கொலைப்படை குண்டுவெடிப்பாளர், நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதாக அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு போராளி குழுவான லஸ்கர் ஐ ஜஹான்ங்வியைச் சேர்ந்தவர் என்று முன்னதாக உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அறிவித்தது". இந்த படுகொலைக்கு பின்னால் பெய்துல்லாஹ் மெஹ்சூத்தின் மூளை இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது. 54 வயதான பெனாசீரையும், அவருக்கருகில் இருந்த சுமார் 20 பார்வையாளர்களையும் கொல்வதில், 1999ல் முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப்பைக் கொல்ல முயன்ற, அல்-கொய்தாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வஹாபி முஸ்லீம் தீவிரவாத அமைப்பான லஸ்கர் ஐ ஜஹான்ங்வி முழு பொறுப்பாகும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், பூட்டோ குடும்பத்தாலும், பூட்டோவால் தலைமை தாங்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியாலும், பெய்துல்லாஹ் மெஹ்சூத்தினாலும் இது கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது. 2008 ஜனவரி 3ல், பெனசீர் பூட்டோவின் படுகொலையில் பங்களிப்பளிக்கவில்லை என்றும், அவருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க தவறவில்லை என்றும் ஜனாதிபதி முஷாரப் உத்தியோகப்பூர்வமாக மறுத்தார். படுகொலைக்கு பின்னர், ஆரம்பத்தில் அங்கு பல கலகங்கள் தோன்றின, இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட தோராயமாக 20 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.சுமார் 250 கார்கள் எரிக்கப்பட்டன; கோபமும், ஆத்திரமும் கொண்டிருந்த பூட்டோவின் ஆதரவாளர்கள், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியிலிருந்து கற்களை வீசினார்கள். 2007 டிசம்பர் 29 முதல், கலகக்காரர்கள் ஒன்பது தேர்தல் அலுவலகங்களையும், 176 வங்கிகளையும், 34 எரிவாயு நிலையங்களையும், 72 இரயில் கார்களையும், 18 இரயில் நிலையங்களையும், நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் கடைகளையும் சிதைத்து விட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது. போட்டி எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ந) -இன் தலைவர் நவாஜ் ஷெரீப், "இது அவர் கட்சிக்கும், நம் கட்சிக்கும் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஏற்பட்டிருக்கும் சோகம்" என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி முஷாரப் மூன்று நாட்களைத் துக்க நாளாக அறிவித்தார். 2007 டிசம்பர் 30ல், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களின் ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில், 19 வயது நிரம்பிய பெனாசீரின் மகன் பிலாவல் அவர் அன்னை வகித்த கட்சியின் தலைமை பதவியை வகிப்பார் என்றும், அவர் மகன் ஆக்ஸ்போர்டு கிறிஸ்ட் சர்ச்சில் அவர் படிப்புகளை முடிக்கும் வரை கட்சியை அவர் தந்தை நடத்துவார் என்றும் மனைவியை இழந்திருந்த பெனாசீரின் கணவர் ஆசீப் அலி ஜர்தாரியும், மகன் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும் அறிவித்தார்கள். "நான் திரும்பும் போது, என் அன்னை விரும்பியவாறே கட்சியின் தலைமை ஏற்று நடத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்." என்று பிலாவல் தெரிவித்தார்.2008 ஜனவரி 8ல் திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்ற தேர்தல்கள் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட பாகிஸ்தான் மக்கள் கட்சி அழைப்பு விடுத்தது, மேலும் துணை தலைவர் மக்தூம் அமீன் பாஹிம் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக இருக்க கூடும் என்று ஆசீப் அலி ஜர்தாரி அறிவித்தார். (பாராளுமன்ற தேர்தலில் நிற்க பிலாவல் சட்டரீதியாக வயது பூர்த்தி அடையாமல் இருந்தார்.) பெனாசீரின் படுகொலை குறித்து விசாரணை நடத்துவதில் இங்கிலாந்து அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் உதவ வேண்டும் என்று டிசம்பர் 30ல், பூட்டோவின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கேட்டுக் கொண்டது. பிலாவல் பூட்டோ ஜர்தாரி மறைந்த எதிர்கட்சியாக இருந்த அவர் அன்னையின் பாகிஸ்தான் அரசியல் கட்சியின் சேர்மேனாக நியமிக்கப்பட்டார். பிலாவல் 19 வயது மட்டும் நிரம்பி இருந்தார். பாகிஸ்தான் திரும்புவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது அவர் கொல்லப்படுவதற்கு வெறும் 12 வாரங்களுக்கு முன்னர், பெனசீர் எழுதிய திருமதி. பூட்டோவின் அரசியல் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சி 2008 பிப்ரவரி 5ல் வெளியிட்டது. கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் கணவர் ஆசீப் அலி ஜர்தாரி கட்சியின் தலைவராக இருப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பூட்டோவின் படுகொலைக்கு சர்வதேச எதிர்வினை, சர்வதேச சமூகத்திடையே மிக வலுவான கண்டனத்தைக் கொண்டிருந்தது.ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, அந்த படுகொலைக்கு ஒருமனதாக கண்டனம் தெரிவித்தது. அரேபிய லீக்கின் ஜெனரல் செக்ரட்டரி அமர் மௌஸ்சா, "நாங்கள் இந்த படுகொலையையும், பயங்கரவாத நடவடிக்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம், அவரி்ன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்." என்று தெரிவித்தார். இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் கூறுகையில், "திருமதி. பெனாசீரின் பூட்டோவின் கொடுமையான படுகொலையைக் கேட்டு தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும்... ஒரு பயங்கரமான வீச்சை சந்தித்திருக்கும் அவர் குடும்பத்திற்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்" அறிவித்தார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஜோர்டான் பிரௌன், "பெனசீர் பூட்டோ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் பாகிஸ்தானில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய பயங்கரவாதிகளை அனுமதிக்க கூடாது. மேலும் இங்கோ, அங்கோ அல்லது உலகின் எங்குமே பயங்கரவாதிகள் வெற்றி பெற முடியாது என்ற நமது உறுதிப்பாட்டை இந்த கொடூரம் மேலும் பலப்படுத்துகிறது." என்று தெரிவித்தார். "பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் நடத்தப்பட்டது" என்று இந்த படுகொலையைக் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோசோ, "பாகிஸ்தான் அதன் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப அதன் பாதையில் உறுதியாக நிற்கும் என்று நம்புவதாகவும்" குறிப்பிட்டார். "கொலைகார தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான நடவடிக்கை" என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ், "ஜனநாயக நிகழ்முறைக்காக தைரியமாக பெனசீர் பூட்டோ தம் வாழ்வையே அளித்தார். ஜனநாயக நிகழ்முறையை தொடர்வதன் மூலம் அவர் நினைவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று பாகிஸ்தானை அவர் ஊக்குவித்தார். "அவரின் குடும்பத்திற்கும், மற்றும் மொத்த பாகிஸ்தான் தேசத்திற்கும் புனித தந்தை அவரின் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆன்மீக ஆசிகளைத் தெரிவிக்கிறார்." என்று கூறி, வாடிகன் வெளியுறவுத்துறை செயலாளர் டார்சியோ பெர்டோன், போப் பெனிடெக்ட் XVI -இன் வருத்தத்தை தெரிவித்தார். "பாகிஸ்தானின் எதிர்கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது" என்றும், "இந்த பயங்கரவாத தாக்குதலை சீனா பலமாக கண்டிக்கிறது" என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குன் கேங்க் தெரிவித்தார். அந்த படுகொலை குறித்து விசாரிக்க பிரிட்டிஷ் புலனாய்வாளர்களைப் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.குற்ற சம்பவங்கள் நீண்டிருப்பதாலும், ஆசீப் ஜர்தாரி பிரேத பரிசோதனைக்கு மறுக்கும் காரணத்தாலும் புலனாய்வில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கான தடைகளை வெளியிட்டிருந்த போதினும், 2008 பிப்ரவரி 8ல், வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேற்கூரையில் இருந்த பிடியால் ஏற்பட்ட விளைவால் பெனசீர் பூட்டோ கொல்லப்பட்டதாக அவர்கள் அறிவித்தார்கள். கராச்சி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ் விஷன் மற்றும் லீசெஸ்டர் அடிப்படையிலான சன் பிலீம்ஸ் முறையே ஜெயத் ஆஜீஜ் மற்றும் ஹென்னா ராய்யால் இணைந்து தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தில் பெனசீர் பூட்டோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் நடிப்பார் என்று கூறப்பட்டது.உறுதியாக கூறப்படாத வகையில், "பெனசீர் பூட்டோ: தி மோவி" என்று தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், பூட்டோ மாணவியாகவும், நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகள் செலவிட்டிருந்த பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருந்தது.இந்த பெரிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறித்து சுஸ்மிதா சென்னிடம் கேட்கப்பட்ட போது, "ஆம், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்." என்று உற்சாகமாக தெரிவித்தார். ஓர் இந்திய பத்திரிக்கையாளரான ஷியாம் பாட்டியா, அவரி்ன் "குட்பை ஷெஹ்ஜாதி" புத்தகத்தில், மேம்பட்ட தாக்குதல் ஏவுகணைகள் பற்றிய தகவல்களுக்கு மாற்றாக வடகொரியாவிற்கு யூரேனியம் செறிவூட்டும் தகவல்களை இரகசியமாக பதிவிறக்கம் செய்தார் என்று குற்றஞ்சாட்டினார். பூட்டோ, அவர் உயிர் வாழும் போது இந்த கதையை வெளியிட வேண்டாம் என்று தம்மை கேட்டுக் கொண்டதாக பாட்டியா பூட்டோவைக் குற்றஞ்சாட்டுகிறார்.இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டியின் அணுசக்தி வல்லுனர் டேவிட் ஆல்பிரைட் கூறுகையில், வடகொரியாவின் அணுசக்தி அபிவிருத்திக்கு கால அவகாசம் அளிப்பதில் இந்த குற்றச்சாட்டுக்கள், "முக்கிய பங்கு வகித்தன" என்று கூறினார்.உலக அமைதிக்கான கார்னிக் எண்டோவ்மெண்ட்டின் ஜார்ஜ் பெர்கோவிச், பாட்டியாவை ஒரு "மென்மையான மற்றும் சீரியஸான நபராக" குறிப்பிட்டார்.சென்டர் ஃபார் இன்டர்நேஷனல் பாலிசியின் செலிங் ஹேரீசன், பாட்டியாவை "பூட்டோ விஷயத்தில் நம்பிக்கைக்குரியவர்" என்று குறிப்பிட்டார். இந்த முறையீடுகளை வாஷிங்டனில் டி.சி. -இல் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்தது, வடகொரியாவிற்கு இரகசியங்களைக் கசிய விட்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் கதார் கான் தான் இதற்கான மூலநபர் என்று கூறி, அமெரிக்க அதிகாரிகள் அவற்றை புறக்கணித்தார்கள்.(பாட்டியாவின் புத்தகத்திற்கு முன்னதாகவே அவர்களின் மறுப்பு இருந்தது.) பெனாசீரின் பிறந்தநாளன்று, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு பூட்டோவின் பெயரைச் சூட்டியதன் மூலம் பாகிஸ்தான் அரசு அவரை கௌரவித்தது.பூட்டோவிற்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரின் பிறந்தநாளில் மரண தண்டனை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஓர் உறுப்பினரான பிரதம மந்திரி யூசப் ரஜா கிலானி ஜனாதிபதி முஷாரப்பைக் கேட்டுக் கொண்டார். "டாட்டர் ஆப் தி ஈஸ்ட்" புத்தகமும் பின்வருமாறு வெளியிடப்பட்டது: பூட்டோ மரணத்தின் போது, "சமரசம்: இஸ்லாமும், ஜனநாயகமும், மேற்கும்" என்று அழைக்கப்பட இருந்த அவரின் மூன்றாம் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி, ஹார்பர்கொல்லின்சால் பெறப்பட்டது. மார்க் ஷேகெலினால் எழுதப்பட்ட இந்த புத்தகம் பிப்ரவரி 2008ல் பிரசுரிக்கப்பட்டது. சிசிலி சிசிலி ("Sicily", இத்தாலிய மொழி: Sicilia) இத்தாலி நாட்டின் ஒரு சுயாட்சி பிரிவாகும். இதுவே மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவாகும். 5 மில்லியன் மக்கள் வாழும் இத்தீவின் மொத்தப் பரப்பளவு 25,708 km² ஆகும். சிசிலி இன்றைய நிலையில் இத்தாலியின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது முன்னர் ஒரு முழுமையான விடுதலை பெற்ற நாடாக சிசிலி பேரரசு என்ற பெயரில் இருந்தது. இது சில காலம் தெற்கு இத்தாலி, மோல்ட்டா ஆகியவற்றின் பாகுதியாகவும் இருந்தது. இது பின்னர் போர்பன்களின் ஆட்சியில் நேப்பில்ஸ் நகரில் இருந்து ஆளப்பட்டது. அன்றிலிருந்து சிசிலி இத்தாலியின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சீமான் (அரசியல்வாதி) சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத் தலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று பிரபாகரன் வழியில் நடத்துபவர். தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருபவர். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருபவர். நைடதம் நிசாத நாட்டை ஆண்டு வந்த மன்னனான நளன் என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே நைடதம் ஆகும். மகாபாரத்தில் வரும் ஒரு துணைக் கதையான நளன் - தமயந்தி துன்பியல் வரலாற்றை ஸ்ரீஹர்ஷர் என்பவரால் சமசுகிருத மொழியில் நைடதம் என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது. அதிவீரராம பாண்டியர் மற்றும் புகழேந்திப் புலவர்கள், ஸ்ரீஹர்ஷரின் நூலை, தமிழில் நைடதம் மற்றும் நளவெண்பா எனும் பெயர்களில் மொழி பெயர்த்துள்ளனர். நளன் நளன் என்பவன், இந்தியாவின் பழைய கதை ஒன்றின் கதைத் தலைவன் ஆவான். இக் கதை, புகழ் பெற்ற வடமொழி இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள துணைக் கதைகளுள் ஒன்று. மகாபாரத்தின் வன பருவம் அத்தியாயம் 53 முதல் 78 முடிய நளன் - தமயந்தி தம்பதியரின் காதல், திருமணம், சூதாட்டம், தமயந்தியை பிரிதல் போன்ற சோதனைகளுக்குப் பின் மீண்டும் இருவரும் இணைவது குறித்து விளக்கப்படுகிறது. இக் கதை பின்னர் பல மொழிகளிலும் தனி நூல்களாக எழுதப்பட்டன. ஸ்ரீஹர்ஷரின் "நைஷதம்" என்னும் வடமொழி நூலும், புகழேந்திப் புலவரால் நளவெண்பா என்னும் பெயரிலும், அதிவீரராம பாண்டியரால் நைடதம் என்னும் பெயரிலும் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் குறிப்பிடத் தக்கவை. இக் கதைகளின்படி, நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பிடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும். நளவெண்பா மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்தது. மகாபாரதத்திலே கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டை விட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அவர்களைப் பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். தமக்கு நிகழ்ந்தவற்றையிட்டுக் கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இந் நூல் அமைந்துள்ளது. நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவி தமயந்தி நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனை தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன் மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனை பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டு, பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை. சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 405 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 147 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 90 வெண்பாக்களும் உள்ளன. மகாவாக்கியங்கள் மகாவாக்கியங்கள் என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மகாவாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மகாவாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு: மேலே கூறப்பட்டுள்ள பிரம்மன்(ब्रह्मन्), பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் 'பிரம்மனை' குறிக்கிறது இந்த நான்கு மகாவாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது. பிரம்மன் படைப்பின் அடிப்படை தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமயம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் "தான்" என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது அதே போல் பிரம்மனும் அழிவற்றது. யோகத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும். காஞ்சி பராமாச்சாரியர் தன்னுடைய புத்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: உபநிடதங்களில் குறிப்பிடப்படும் வேறு சில முக்கியமான வாக்கியங்கள்: ரதி ரகசியம் ரதி ரகசியம் என்பது கோக்கோகரால எழுதப்பட்ட காம சாஸ்திரம் தொடர்புடைய நூலாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த புத்தகம் அவ்வப்போது காம சூத்திரத்துடன் ஒப்பிடப்படுவது உண்டு. இது 12ஆவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த நூலுக்கு சிலரால் உரை எழுதப்பட்டுள்ளது. "கல்லரசரின் ஜனவசியம்" என்ற நூல் கோக்கோகரின் ரதி ரகசியத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த நூல் பழைய கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது அனங்கரங்கம் அனங்கரங்கம் 15ஆம் அல்லது 16ஆம் நூற்றண்டுகளில் கல்யாண மல்லரால் இயற்றப்பட்ட ஒரு காம சாஸ்திர நூல் ஆகும். இந்நூலும், ரதி ரகசியம் என்ற நூலும் காம சூத்திரத்துடன் அவ்வப்போது ஒப்பீடு செய்யப்படும் நூல்களாகும். இந்நூல் கணவன் - மனைவி இடையில் நிகழும் பிரிவினை தடுக்கப்படுவதற்காகவே குறிப்பாக எழுதப்பட்டது. அனங்கரங்க நூலின் சில பகுதிகள் காம சூத்திரத்தைத் தழுவி எழுதப்பட்டவை. இந்நூல் அஹமது கான் லோதி என்ற 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட லோதி வம்ச மன்னனின் மகன் லாத் கான் என்பவனுக்காக எழுதப்பட்டது. இந்நூலின் படி ஆண்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் அழகான பெண்களை அடைவதால் மட்டுமே ஏற்படுகிறது. எனவே இன்பத்தை எய்துவதற்காக ஆண்கள் பெண்களை மணக்கின்றனர். எனினும் அவர்கள் பெண்களை முழுவதுமாக திருப்திப்படுத்துவது இல்லை. இதற்குக் காரணம் காம சாஸ்திரத்தை குறித்த அறியாமையும் பெண்களை குறித்த இகழ்ச்சியும் ஆகும். எனவே தான் ஆண்கள் பெண்களை விலங்குகளை போலவே நடத்துகின்றனர். கல்யாண மல்லர் ஆணுக்கு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல் போதும் என்பதை நிலை நிறுத்த விரும்பினார். இந்நூலின் மூலம் கணவன் மனைவுக்கு இடையில் உள்ள பாலியல் உறவு மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பல பாலியல் நிலையிலான வேறுபாடுகள் மூலம், தன் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பம் 32. பெண்களுடன் பாலியல் உறவு கொள்வதால் கிடைக்கும் இன்பத்தினை அதிகப்படுத்த இயலும் என இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரே விதமான பாலியல் வெளிப்பாட்டால் கணவன் மனைவி இடையில் ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டு விடுகிறது, அதனால் பிரிவும் ஏற்படுகிறது. எனவே பல வேறுபாடுகள் மூலம் இந்த சலிப்பை தடுக்க முடியும். மேலும் இந்நூலில் முற்பாலுறவு செய்லபாடுகளும், வசியம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணின் பாலியல் ஈடுபாடு மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் அதிகமாக இருக்கும் என கல்யாண மல்லர் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க டாலர் அமெரிக்க டாலர் ("dollar", "USD") என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 (சென்ட்) சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் கட்டுரை 1,பிரிவு 8 இல் கூறியுள்ளபடி ஐக்கிய மாநில காங்கிரஸ்க்கு பணம், நாணயம் உருவாக்க அனுமதித்துள்ளது.இந்த அதிகாரத்தைச் செயல்படுத்தும் சட்டங்கள் தற்போது USC | 31 | 5112 இல் குறியிடப்பட்டுள்ளன. பிரிவு 5112 அமெரிக்க டாலர்கள் வெளியிடப்பட வேண்டிய படிவங்களைக் குறிப்பிடுகிறது.இந்த நாணயங்கள் பிரிவு 5112 இல் கடன்களை செலுத்துவதில் "சட்ட ஒப்பந்தம்" என்று குறிப்பிடப்படுகின்றன. வழிவகை வழங்குகிறது, இவை ஒரு சென்ட் இருந்து 50 டாலர்கள் வரை மதிப்புகள் உள்ளன.இந்த நாணயங்கள் முழுமையாக அமெரிக்காவின் நாணயங்கள் என்ற அரசியலமைப்பு கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன. "அனைத்து பொது பணத்தின் ரசீதுகள் மற்றும் செலவினங்களின் வழக்கமான அறிக்கை மற்றும் கணக்கு அவ்வப்போது வெளியிடப்படும்" என்று அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது . அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 33 வது பிரிவு 331 ன் கீழ், அந்த அரசியலமைப்பின் குறிப்பிட்ட விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது."அறிக்கைகளில்" குறிப்பிடப்பட்டுள்ள பணத்தின் தொகை தற்போது அமெரிக்க டாலர்களில் வெளிப்படுகிறது (உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 2009 நிதி அறிக்கையை பார்க்கவும்).எனவே அமெரிக்காவில் அமெரிக்க டாலர் கணக்குகளின் அளவீட்டு அலகு என விவரிக்கப்படலாம். "டாலர்" என்பது அரசியலமைப்பின் 1 வது கட்டுரையில் பகுதி 9 முதல் பத்தியில் உள்ள வார்த்தைகளில் ஒன்றாகும். அங்கு, "டாலர்கள்" என்பது ஸ்பானிஷ் மிளிரும் டாலர் ஆகும், இது 8 ஸ்பானிஷ் நாணய மதிப்பைக் கொண்ட நாணயம், அல்லது ரியல்ஸ். 16 ஆம் நூற்றாண்டில், போஹேமியாவின் கியெரிகோனஸ் ஸ்க்லிக் கவுண்ட் (Count Hieronymus Schlick of Bohemia ), ஜோக்கோமிஸ்டல் (Joachimstal) என்ற பெயரிலிருந்து ஜோக்கோமிஸ்டாலர்ஸ் (Joachimstalers) என அழைக்கப்படும் நாணயங்களைத் தயாரிக்கத் தொடங்கியது,(ஜெர்மன் thal தால், அல்லது இப்போதெல்லாம் Tal, valley "பள்ளத்தாக்கு", ஆங்கிலத்தில் "dale" உடன் தொடர்பு).ஜோக்கோமிஸ்டல்,இந்த பள்ளத்தாக்கில் தான் வெள்ளி வெட்டப்பட்ட சுரங்கமுள்ளது(செயின்ட் ஜோக்கீமின் பள்ளத்தாக்கு, இப்போது ஜாக்கிமோவ்; பின்னர் செக் குடியரசின் பகுதியாக இருந்த போஹேமியா இராச்சியத்தின் ஒரு பகுதி).ஜொச்சிம்ஸ்டெர்ர் பின்னர் ஜெர்மன் டாலர் என்ற வார்த்தையை சுருக்கிக் கொண்டு, கடைசியாக டேனிஷ் மற்றும் சுவிடிஸ் டால்லராக அழைக்கப்பட்டது, டச்சுக்காரர் daler அல்லது (daalder) டால்டர் போன்ற டச்சு, எத்தியோப்பியன் ஷ் தில்லி (தாலரி), ஹங்கேரிய (tallér) டால்ரெர், இத்தாலியன் (tallero) டால்ரோரோ, மற்றும் ஆங்கிலத்தில் (dollar) டாலர். மாற்றாக, ஜெர்மனி நாணயத்தின் Guldengroschen (வெள்ளி இருப்பது போல ஆனால் ஒரு தங்க கில்டர் மதிப்பிற்கு சமமாக) "ஜோக்கோமிஸ்டல் வெள்ளியில் இருந்து தயாரிக்கப்பட்டது" ஜோக்கோமிஸ்டல் அச்சிடப்பட்ட நாணயங்கள் விரைவில் தங்கள் நாணயங்களை ஒத்த அளவு மற்றம் எடை கொண்ட மற்ற இடங்களிலிருந்து நாணயங்களும் இந்தப் பெயரைப் பெற்றது. இது போன்ற ஒரு எடுத்துக்காட்டு, சிங்கத்தை சித்தரிக்கும் ஒரு டச்சு நாணயம், எனவே அதன் டச்சு பெயரான leeuwendaalder (ஆங்கிலத்தில்: " சிங்கம் " டாலர்). .75 வெள்ளி நாணயத்தின் 427.16 grains கொண்டிருப்பதற்கும், 36 மற்றும் 42 (ஸ்டுவீவர்) க்கும் இடையில் உள்நாட்டிற்கும் இடமளிப்பதற்கும் உரிமையாளர் அனுமதிக்கப்பட்டார். பெருமளவிலான புழக்கத்தில் உள்ள நாணயங்களை விட இந்த நாணயங்கள் இலகுவாக இருந்தது, இதனால் ஒரு டச்சு வணிகர் வெளிநாட்டுக் கடன்களை வரி செலுத்துவோருக்கு செலுத்த மிகவும் சாதகமாக இருந்தது, அது வெளிநாட்டு வர்த்தகத்தினரின் தேர்வுக்கான நாணயமாக ஆனது. leeuwendaalder டச்சு கிழக்கு இந்தியாவிலும் மற்றும் டச்சு புதிய நெதர்லாண்ட் காலனி (நியூயார்க்), மிகவும் பிரபலமாக இருந்தது.   17 வது மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதின்மூன்று காலனிகளில்மு ழுவதும் விநியோகிக்கப்பட்டன. இது கிழக்கு ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்தது, தற்போதைய ருமேனிய மற்றும் மொல்டோவ நாணயத்திற்கு லியூ (அதாவது "சிங்கம்") என்று அழைக்கப்பட்டது. ஆங்கில மொழி பேசும் சமுதாயத்தில், நாணயம் லயன் டாலர் என்று பிரபலமாக அறியப்பட்டது - அது "டாலர்" என்ற பெயரின் தோற்றம் ஆகும்."டாலர்" என்ற நவீன அமெரிக்க-ஆங்கில உச்சரிப்பு 17 ஆம் நூற்றாண்டு டால்னர் என்ற டச்சு உச்சரிப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. சொல் வழக்கில் "பக்" (buck) (பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கான பிரிட்டிஷ் வார்த்தையான "quid" (s, pl) போன்றவை   அமெரிக்க டாலர் உட்பட பெரும்பாலும் பல நாடுகளின் டாலர்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.இந்த வார்த்தை, 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த காலனித்துவ தோல் வியாபாரத்துடன் தோன்றியிருக்கலாம். இது ஒரு போக்கர் காலத்திலிருந்து தோன்றியிருக்கலாம். "Greenback-பசுமை பேக்" என்பது இன்னொரு புனைப்பெயர் ஆகும், இது குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் தேவைக்காக வடகிழக்கு உள்நாட்டுப் போர் செலவினங்களுக்கு ஆபிரகாம் லிங்கன் உருவாக்கிய டாலர்கள் குறிப்பு அசல் குறிப்பு பின்புறத்தில் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டது. இது அமெரிக்க டாலரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது (ஆனால் மற்ற நாடுகளின் டாலர்கள் அல்ல). டாலரின் மற்ற நன்கு அறியப்பட்ட பெயர்கள் "பச்சைமலை", "பச்சை" மற்றும் "இறந்த ஜனாதிபதிகள்" (இறந்தவர்களின் ஜனாதிபதிகள் பெரும்பாலான பில்கள் மீது படம்பிடிக்கப்பட்டவை) ஆகியவற்றில் அடங்கும். அமெரிக்க டாலருக்கு (அதேபோல பல நாணயங்களுக்கும்) குறியீட்டு $ பொதுவாக எண்ணியல் அளவுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது.ஸ்பானிஷ் டாலர்கள் பொதுவான பெயர் பெசோ "[pseo]] " [scribal abbreviation]] இன் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் பரிணாமத்தின் விளைவாக இருந்தது. 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து புதிய உலகில் பரந்த அளவில் பரவியது. இந்த ஸ்பானிஷ் பெசோஸ் அல்லது டாலர்கள் ஸ்பானிய அமெரிக்கா, மெக்ஸிகோ நகரில்; போடோசி, பொலிவியா; மற்றும் லிமா, பெரு."p" மற்றும் "s" என்ற எழுத்துக்கள் இறுதியில் $ என்று எழுதப்பட்டது. ஸ்பானிஷ் டாலர் ஸ்பெயினின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் இல் ஹில்ல்கூல்ஸ் ஆஃப் ஹெர்குலஸ் இருந்து பெறப்பட்ட மற்றொரு பிரபலமான விளக்கமாகும். வெள்ளி ஸ்பானிஷ் டாலர் நாணயங்களில் இந்த தூண்கள் ஹெர்குலூஸ் இரண்டு செங்குத்துப் பட்டைகளின் வடிவத்தையும், ஒரு "S" வடிவத்தில் ஒரு ஊஞ்சலாடும் துணி இசைக் குழுவையும் போல இருக்கிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் நாணயம் ஆரம்பத்தில் ஸ்பானிஷ் டாலரின் மதிப்பு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, இது 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பரவலாக பயன்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா, 1792 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் டாலர் நாணயங்கள் மெக்சிகோ மற்றும் பெருவில் தயாரிக்கப்பட்ட ஸ்பெயினின் டாலருக்கு அளவு மற்றும் கலவை போன்று இருந்தது.ஸ்பானிஷ், அமெரிக்க வெள்ளி டாலர்கள், பின்னர் மெக்சிக்கோவின் வெள்ளி பெசோஸ் ஆகியவை அமெரிக்காவிலும், ஸ்பெயினின் டாலர் மற்றும் மெக்ஸிகன் பெசோ, 1857 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் வரைக்கும் சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டன.பல்வேறு ஆங்கில காலனிகளின் நாணயங்களும் விநியோகிக்கப்பட்டன. "லயன் டாலர்" டச்சு நியூ நெதர்லாண்ட் காலனி (நியூயார்க்) இல் பிரபலமாக இருந்தது, ஆனால் லயன் டாலர் 17 ஆம் நூற்றாண்டிலும், 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கில காலனிகளிலும் பரவப்பட்டது. காலனிகளில் எடுத்துக்காட்டுகள் சுற்றும் வழக்கமாக அணிந்திருந்தன, அதனால் அந்த வடிவமைப்பு முழுமையாக வேறுபடவில்லை, இதனால் அவை சில நேரங்களில் "நாய் டாலர்கள்" என்று குறிப்பிடப்பட்டன. அமெரிக்கப்புரட்சி காலத்தில் பதின்மூன்று காலனிகள் சுதந்திரமான நாடுகள் ஆனது. பிரிட்டிஷ் நாணய விதிமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர், அவர்கள் ஒவ்வொரு £ sd காகித பணத்தையும் இராணுவ செலவினங்களுக்காக செலுத்தினர். கான்டினென்டல் காங்கிரசு "கான்டினென்டல் நாணயத்தை" ஸ்பானிஷ் டாலர்களில் குறிக்க ஆரம்பித்தது. பின்வரும் விகிதங்களில் டாலரின் மதிப்பானது மாநில நாணயங்களுக்கு ஒப்பானது: போரின் போது மோசமான முறையில் கான்டினென்டல் நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. வில்லிபுத்தூரார் வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. வில்லிபுத்தூரார், தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர், பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் என்பதை இவருக்கு இட்டனர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இவர் அருணகிரிநாதருடன் வாதங்களில் ஈடுபட்டவர் என்பதால் அவர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டே வில்லிபுத்தூராரது காலம் என்று கணிக்கப்படுகின்றது. குமரகுருபரர் குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார். இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர், காசிக்குப் பயணமானார். அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார். கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக 31.8.1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார். மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும். குமரகுருபரர் கற்பனை. டாக்டர் ஆ.கந்தசாமி : முதல் பதிப்பு டிசம்பர் 1999 மணிவாசகர் பதிப்பகம். கந்தர் கலிவெண்பா கந்தர் கலி வெண்பா என்பது திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனைப் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார். கலி வெண்பா எனப்படும் பாடல்களினால் ஆக்கப்பட்ட இந்நூல், அப்பாடல் வகைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூல், முருகப் பெருமானின் தோற்றத்தை வருணித்து, அவரிடமிருந்து கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளவும், துன்பங்கள் அனைத்தையும் போக்கவும் வேண்டுகிறது. இந்நூலைச் சைவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்துவர். பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1 நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் - ஆதிநடு 2 அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த 3 குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு 4 அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் 5 பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத 6 பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாதித் - தாரணியில் 7 இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல் - முந்தும் 8 கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 9 ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து 10 உருவம் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் 11 மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 12 தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பத்து - மந்த்ரமுதல் 13 ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் 14 ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய 15 கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய 16 சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 17 தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் 18 விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு 19 சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் 20 சத்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த 21 மலபரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது 22 அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் 23 கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் 24 ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக 25 ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் 26 அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது 27 தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 28 வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக் 29 கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப் 30 பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 31 கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு 32 மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி ஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் 33 யானெனதென்று அற்ற இடமே திருவடியா மோனபரா னந்தம் முடியாக - ஞானம் 34 திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே 35 சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் 36 தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 37 துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட 38 பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி 39 பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் 40 புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் 41 வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் 42 ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் 43 வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தலாகப் 44 பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம் வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் 45 போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் 46 வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த 47 வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 48 தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர் வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 49 மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 50 வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த 51 சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் 52 அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத 53 கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் 54 புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் 55 நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி 56 இளம்பருதி நூறா யிரங்கொடி போல வளந்தரு தெய்வீக வடிவம் - உளந்தனில்கண்டு 57 ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து 58 ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய 59 மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 60 ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த 61 கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி 62 அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 63 ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 64 வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து 65 அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 66 பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் 67 எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 68 ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் 69 தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ 70 பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 71 ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரகம் - சந்ததமும் 72 நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 73 வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 74 பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 75 வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து 76 திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் 77 எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் 78 எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 79 பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று 80 அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில் சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர் 81 அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் 82 கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் - தன்னிரண்டு 83 கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய 84 முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த 85 வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி 86 மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் 87 விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலிதித்து 88 அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன் 89 விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா - படைப்போன் 90 அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 91 சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 92 பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல் 93 தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 94 தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 95 கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனால் 96 சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 97 வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு 98 பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த 99 வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் 100 அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் 101 சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு 102 சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன மேவத் தனித்துயர்ந்த மேலோனே - மூவர் 103 குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம் 104 சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு 105 காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு 106 கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் 107 தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து 108 ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க் 109 கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் 110 பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 111 பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல் பூதமுதீ நீரும் பொருபடையும் - தீது அகலா 112 வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும் எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில் 113 பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் 114 திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம் 115 சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் 116 எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 117 ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப் பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை 118 எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் 119 இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து 120 ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய 121 கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள். 122 திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று நன்றி - ப்ராஜெக்ட் மதுரை (https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0034_01.html) 1879 1879 (MDCCCLXXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும். 1599 1599 (MDCCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும். 1590கள் 1590கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1590ஆம் ஆண்டு துவங்கி 1599-இல் முடிவடைந்தது. ஹாசன் மாவட்டம் ஹாசன் (ஆங்கிலம்: "Hassan", கன்னடம்: ಹಾಸನ) இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹாசன் சிட்டி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த போசளப் பேரரசின் முக்கிய மாகாணமாக விளங்கியது ஹாசன். ஹாசனிலுள்ள போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹோய்சாலேஸ்வரர் கோவில் மற்றும் கேதாரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இவைகள் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இங்குள்ள சரவணபெலகுளா என்ற இடத்தில் அமைந்த பாகுபலி சிலை சமணர்களின் புகழ்பெற்ற தலம் ஆகும். ஹாசன் மாவட்டம் இன்று நவீன தொழில்நுட்பத்திலும் முன்னேறிவருகிறது. இந்திய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமைக் கட்டுப்பாட்டு மையம் ("Master Control Facility") இங்கு அமைந்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் மொத்தம் எட்டுத் தொகுதிகள் உள்ளன, அவை: ஹாசன் மாவட்டத்தின் வரலாறு, கர்நாடகத்தை ஆண்ட இரண்டு பேரரசுகளான "மேற்குக் கங்கப் பேரரசு" (350 – 999 கி.பி) மற்றும் "போசளப் பேரரசுடனும்" (1000–1334 கி.பி) தொடர்புடையது. பின்பு 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசை ஆண்ட விஜயநகர அரசர்கள் பேளூரிலுள்ள சென்னகேசவ பெருமாளைக் குலத்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக அந்நகரம் விஜயநகர அரசர்கள் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஹாசன் "ஷிமொகாவின்" கெலடி நாயகர்கள் மற்றும் மைசூர் பேரரசிற்கும் இடையே ஒரு சிக்கலுக்குரிய ஊராகவே இருந்தது. இவ்வூர் இறுதியில் மைசூர் பேரரசுடன் இணைந்தது. கிமு 300 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஹாசன் மாவட்டம் மௌரியப் பேரரசில் ஓர் அங்கமாக இருந்தது. மேலும் கிமு 3ம் நூற்றாண்டுகளில் பத்ரபாஹு முனிவருடன் வந்த பல துறவிகளால் சமண மதம் கர்நாடகத்தில் காலடி பதித்தது. மன்னர் அசோகரின் பாட்டனாரான சந்திரகுப்த மௌரியர் பத்ரபாஹு முனிவரின் சீடர் என்றும் அவர் ஆட்சியைத் துறந்து துறவற வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு பத்ரபாஹு முனிவருடன் ஷரவணபெலகொலாவில் தங்கினார் என்றும் ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மற்றைய தரப்பினர் இதற்கு மாறாகப் பத்ரபாஹு முனிவருடன் வந்தது மன்னர் அசோகரின் பேரன் என்றும் கூறுகின்றனர். இவ்விடத்தில் சந்திரகுப்தரின் நினைவாகச் சந்திரகுப்த பாசடி என்ற சமணர்களின் கோவில் உள்ளது. ஓரு சில வரலாற்று வேற்றுமைகள் இருந்தாலும்கூட இருபத்து மூன்று நூற்றாண்டுகள் சமணர்களின் வழிபாட்டுத்தலமாக ஹாசன் மாவட்டத்திலுள்ள ஷரவனபெலகொலா விளங்கியதற்கு இதுவே சான்றாகும். இம்மாவட்டம் இடைப்பட்ட காலத்தில் அதாவது கிபி 350 – கிபி 550 வரை கங்கப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முதலில் கங்கப் பேரரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் காலப்போக்கில் சாளுக்கியரிடமும் மற்றும் இராஷ்டிரகூடரிடமிருந்தும் கப்பம் வசூலித்து மறைமுகமாக ஆட்சி செய்தது. சுமார் 10ம் நூற்றாண்டில் கங்கப் படைத் தளபதி சமுன்தரயரால் ஷ்ரவனபெலகொலாவில் பல சமணக் கோவில்கள் கட்டப்பட்டன. இதில் ஒரே பாறையில் (Monolithic) செதுக்கப்பட்ட கோமதிஷ்வரரின் சிலையும் அடங்கும். சுமார் 800க்கும் மேல் கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், மராட்டி, மார்வாரி மற்றும் மஹாஜனி ஆகிய மொழிகளில் ஏட்டுச்சுவடி மற்றும் கல்வெட்டுக்களில் ஒவ்வொரு கன்னடப் பேரரசின் ஆட்சியைப் பற்றியும் சமண மதத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. புகழின் உச்சியில் இருந்த கங்கப் பேரரசை கிபி 1000ஆம் ஆண்டு சோழப் பேரரசின் அரசனான முதலாம் இராசராச சோழனால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின் மேற்கு கங்கப் பேரரசு இம்மாவட்டத்தின் வரலாற்றிலிருந்து மறைந்துபோனது. ஹாசன் மாவட்டத்தைச் சோழப் பேரரசிடமிருந்து 1118 ஆம் ஆண்டு போசளப் பேரரசு கைப்பற்றியது. போசளப் பேரரசு ஆட்சியின் கீழ் இம்மாவட்டம் வளர்ச்சி அடைந்தது. ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது ஹாசன் மாவட்டத்திலுள்ள பேளூர். போசள மன்னன் விஷ்ணுவர்தனனால் கீர்த்தி நாராயண கோவில் மற்றும் புகழ் பெற்ற சென்னகேசவப் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. பின்பு 1343 ஆம் ஆண்டு போசள மன்னன் மூன்றாம் வீர பல்லாலாவின் மரணத்திற்கு பிறகு போசளப் பேரரசு விஜயநகரப் பேரரசுடன் இணைந்தது. விஜயநகரப் பேரரசு முடிவுக்குவரும் வேளையில் இம்மாவட்டம் 1565 ஆம் ஆண்டு மைசூர்ப் பேரரசுடன் இணைந்தது. இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் நாள் இந்திய நாட்டுடன் இணைந்தது. ஹாசனின் வரலாற்று ஏடுகளில் ஹொய்சாலர்கள் சகாப்தம் முடிந்திருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற கன்னடக் கலாச்சாரம், கன்னட இலக்கியம் மற்றும் வேசர பாணியிலுள்ள கட்டிடக்கலை இன்றும் என்றும் காலத்தால் அழிக்க முடியாத அத்தியாயமாகவே உள்ளது. பதமி சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டுப் பின்பு கல்யாணி சாளுக்கியர்களால் மேலும் மெருகேற்றப்பட்ட வேசர பாணியில் ஹோய்சாலர்களின் கற்கோவிற் கட்டிடக்கலை அமைந்துள்ளதாக வரலாற்று வல்லுனர்களான "ஹென்றி கௌசென்ஸ்" மற்றும் "ஜேம்ஸ் ஃபெர்கூசன்" ஆகியோர் கூறுகின்றனர். இக்கோவில்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மிக மென்மையான சோப்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. போசளர் கட்டிடக்கலையின் மாட்சியைப் பேளூர், ஹளபீடு, மற்றும் சோமநாதபுரம் ஆகிய ஊர்களில் காணலாம். இம்மாவட்டம் இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இதன் அமைவிடம் சுமார் 12° 13´ இருந்து 13° 33´ வரையிலான வடக்கு அட்சரேகைக்கும் (North latitude) மற்றும் 75° 33´ இருந்து 76°38´ வரையிலான கிழக்கு தீர்க்கரேகைக்கும் (East Longitude)இடையில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை உள்ள தூரம் சுமார் 129 கிமீ, மேற்கு முனையிலிருந்து கிழக்கு முனை வரை உள்ள தூரம் சுமார் 116 கிமீ ஆகும். மொத்த பரப்பளவு 6826.15 சதுர.கி.மீ. புவியியல் ஆசிரியர்கள் ஹாசன் மாவட்டத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஆவை, இம்மாவட்டம் ஹேமாவதி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சக்லெஷ்புர் வட்டத்திலுள்ள மன்ஜாராபாத் என்ற ஊர் வழியாக இம்மாவட்டதிற்குள் நுழையும் இவ்வாறு பின் கிழக்கு நோக்கிச் சென்று ஹாசன் மற்றும் அரகல்கூடு வட்டங்களூடு சென்று பின் ஹொலென்னரஸிபுரா வழியாக இம்மாவட்டத்தை விட்டு மைசூரை நோக்கிச் செல்கிறது. இறுதியில் ஹேமாவதி ஆறு காவிரி ஆற்றுடன் மைசூரில் சேர்கிறது. ஹேமாவதி ஆற்றின் முக்கிய துணைநதி ("tributary") பேளூரில் உற்பத்தியாகும் யகசி ஆறாகும். யகசி ஆறு ஹாசன் வட்டத்திலுள்ள கோரூர் என்னும் ஊரில் ஹேமாவதி ஆற்றுடன் கலக்கின்றது. இம்மாவட்டத்தின் தெற்கில் அதாவது அரகல்கூடு வட்டத்தின் தெற்கு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இதுதவிர நேத்திராவதி மற்றும் வேதவதி ஆறுகளின் பல சிரிய துணை நதிகள் இம்மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உருவாகின்றன. ஹாசனின் காலநிலையானது வெயில் காலங்களில் மிதமான வெப்பமுடனும் மழைக்காலங்களில் மிதமான குளுமையுடனும் இருக்கும். இங்கு ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிக அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இம்மாதத்தில் வெப்பநிலையின் அதிகளவு சுமார் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த அளவு சுமார் 20 டிகிரி செல்சியஸ் ஆகும். ஒரு ஆண்டின் சராசரி மழையளவு 700 மில்லி மீட்டராகும். இதில் மலைநாடு பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 17,21,669 மக்கள் வசிக்கின்றார்கள் இவர்களில் 3,04,673 மக்கள் நகரங்களிலும் 14,16,996 மக்கள் கிராமபுரங்களிலும் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தில் பாலின சதவிகிதம் 1,004 ஆகும் மற்றும் மக்களின் சராசரி கல்வியறிவு 60.67% ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 251 மக்கள் வசிக்கின்றனர். மேலும் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் 9.66 % அக உள்ளது. இம்மாவட்டத்திற்கு சுற்றுலா மற்றும் காபி சாகுபடியிலிருந்து வருமானம் கிடைக்கிறது. மலைநாடுப்பகுதியான சக்லேஷ்புரில் காபி விளைகிறது. இது தவிர கருப்பு மிளகு, நெல் மற்றும் கரும்பு இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஹாசன் மாவட்டத்தில் மொத்தம் 45 வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்ஹ் தலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தொல்பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கபடுகிறது. இதில் 24 சுற்றுலாத் தளங்களை கர்நாடக மாநில தொல்பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தாலும் மீதம் உள்ள 21 சுற்றுலா தளங்களை இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சி நிறுவனத்தாலும் பாதுகாக்கப்படுகிறது. காலப்போக்கில் சமண மதத்தின் ஆதிக்கம் குறைந்திருந்தாலும், இம்மாவட்டத்தில் சமண மற்றும் இந்து சமயத்தின் கலாச்சாரம் பழக்கத்தில் உள்ளன. இம்மாவட்டத்தின் மத சகிப்புதன்மைகான அடையாளம் இம்மாவட்டத்தில் கோமதேஸ்வரருக்கு நடக்கும் மகாமச்டகப்திஷேகம் ஆகும். இன்று ஒரு பெரிய விவசாய சமூகமாக ஹாசன் இருந்தாலும், இது ஒரு காலத்தில் இருப்பெரும் பேரரசின் தலைநகரமாக விளங்கியதற்கு இவ்வூரிலுள்ள பழங்கால கோவில்களும் வரலாற்று சிறப்புமிக்க ஹோய்சாளர் கட்டிடகலைகளே சான்றாகும். இவ்வூரின் சமையல் மைசூர், குடகு மற்றும் தட்சிண கன்னட சமயர்கலைகளின் கலவை ஆகும். மேலும் ஹாசன் ஏழைகளின் உதகை என்றும் அழைக்கப்படுகின்றது. தசபூமிக சூத்திரம் தசபூமிக சூத்திரம்(दशभूमिकसूत्र) என்பது வசுபந்துவால் எழுதப்பட்ட ஒரு முக்கியமான மகாயான பௌத்த சூத்திரம் ஆகும். இதை "தசபூமிகசூத்திர-சாஸ்திரம்" என்றும் "தசபூமிகபாஸ்யம்" எனவும் அழைப்பர். இந்நூலை போதிருசி என்பவரால் ஆறாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. தசபூமி என்பது ஒருவர் போதிசத்துவ நிலையை அடைவதற்காக கடக்க வேண்டிய பத்து பூமிகளை குறிக்கும். இந்த சூத்திரம் அந்த பத்து பூமிகளை விவரிக்கிறது. இந்த சூத்திரத்தை மையமாக கொண்டு சீனாவில் ஒரு காலத்தில் தசபூமிக பிரிவு உருவானது. பின்னர் எழுந்த அவதாம்சக பிரிவு(சீனம்:ஹூவாயான்) அதை தன்வயப்படுத்தியது. பிறது தசபூமிக சூத்திரம் அவதாம்சக சூத்திரத்தின் 26ஆம் அதிகாராமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 39வது அதிகாரத்தில் இதன் மாறுபட்ட வடிவத்தை போதிசத்துவர் சுதானரின் கடந்த பாதையை குறிப்பிடுகையில் காணலாம். தசபூமிக பிரிவு தசபூமிக பிரிவு என்பது சீனாவில் ஒருகாலத்தில் பரவலாக இருந்த ஒரு பௌத்த பிரிவாகும். இது வசுபந்துவின் தசபூமிக சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த ஒரு பௌத்த பிரிவாகும். பிற்காலத்தில் இது அவதாம்சக பிரிவுடன் இது ஒன்றிணைந்து விட்டது. தாவதிம்ச உலகம் தாவதிம்ச உலகம் (பாளி: त्रायस्त्रिंश लोक, தமிழ்: முப்பத்து முக் கோடி) என்பது பௌத்த அண்டவியலில் தேவர்கள் வசிக்கும் ஒரு முக்கியமான உலகமாகும். "தாவதிம்ச" என்றால் வடமொழியில் முப்பத்தி மூன்று என்று பொருள். எனவே தாவதிம்ச உலகம் என்பது "முப்பத்துமுக்கோடி"(இங்கு கோடி என்பது எண்ணைக்குறிக்காமல் மிக உயரிய என்ற பொருளை கொண்டதாகும்) என்று அழைக்கப்படும் 33 தேவர்கள் வாழும் உலகம் என்று பொருள் கொள்ளலாம். தாவதிம்ச உலகம் என்பது காமதாதுவின் ஐந்தாவது உலகம் ஆகும். நம் உலகத்தோடு நேரடி தொடர்புடைய உச்ச நிலையில் உள்ள உலகம் தாவதிம்ச உலகமே என்று கூற்ப்படுகின்றது. தாவதிம்ச உலகம் மேரு மலையின் உச்சியில் 80,000 யோஜனைகள் உயரத்தில் (இது ஏறத்தாழ 40,000 அடி என ஊகிக்கப்படுகிறது). இந்த உலகத்தின் மொத்த பரப்பளவு 80,000 சதுர யோஜனைகள். வசுபந்துவின் படி, இவ்வுலகங்களில் வாழ்வோர் அரை குரோசங்கள் (ஏறத்தாழ 1500 அடிகள்) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 1000 ஆண்டுகள். தாவதிம்ச உலகத்தின் ஒரு நாள் மனித உலகத்தில் 100 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி அவர்களின் ஆயுள் 3.6 கோடி மனித வருடங்கள் தாவதிம்ச உலகத்துக்கும் நமது உலகத்துக்கும் சுமேரு மலையின் மூலம் நேரடித்தொடர்பு உள்ளதென்று கூறப்படுவதால், தாவதிம்ச உலகத்து தேவர்கள் நம் உலத்து நிகழ்வுகளுடன் தொடர்பு கொள்ளுகின்றனர். ஒரு காலத்தின் அரக்கர்கள் தாவதிம்ச உலகத்திலேயே வாழ்ந்தனர். எனினும் அவர்களின் தவறான செயல்பாடுகளுக்காக அவ்வுலகில் இருந்து இந்திரனால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது சுமேரு மலையின் அடித்தளத்தில் வசிக்கின்றனர். இந்திரன், விவகருமன், இந்திரனின் தேரோட்டி மாதாலி, இந்திரனின் மனைவியும் அரக்கர் தலைவர் வேமசித்திரின் மகள் சுயா ஆகியோர் இந்த உலகிலேயே வசிக்கின்றனர். பல பௌத்த கதைகளில் தாவதிம்ச உலகத்து தேவர்கள் புத்தரை தரிசிக்க நம் உலகத்துக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புத்தரும் தேவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்க தாவதிம்ச உலகத்துக்கு சென்றுள்ளார். தாவதிம்ச அல்லது முப்பத்தி மூன்று என்பது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 33 தேவர்களைக் குறிக்கும். சதுர்மகாராஜாக்கள் சதுர்மகாராஜாக்கள் என்பவர்கள் பௌத்தத்தில் நான்கு திக்குகளின் பாதுகாவலர்கள் ஆவார். இவர்கள் நால்வரும் முறையே நான்கு திசைகளை பாதுகாக்கின்றனர். அவர்களின் பெயர் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு அறியப்படுகிறது. இவர்கள் நால்வரும் சாதுர்மகாராஜிக(चातुर्महाराजिक) உலகில் வாழ்கின்றனர். இந்த உலகம் சுமேரு மலையின் கீழ்ப்பகுதியில் உள்ளது. தேவர்கள் வசிக்கும் ஆறு உலகங்களின் மனித உலகத்துக்கு மிகவும் அருகாமையில் உள்ளது இந்த உலகமே. சதுர்மகாராஜாக்கள் தீயதை எதிர்த்து போரிட்டு நமது உலகத்தை காப்பாற்றுபவர்கள். அவர்களின் வெவ்வேறு கூறுகள் பின்வருமாறு இவர்கள் நால்வரும் திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் தலைவனான இந்திரனின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொரு சந்திர மாதத்தின் எட்டாவது, பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நாட்களில் நால்வரும் நேரடியாகவோ அல்லது தூதுவர்கள் மூலமோ மனிதர்களின் உலகத்துக்கு சென்று தர்மமும் நியாயமும் எவ்வாறு உள்ளது என தெரிந்து கொள்கின்றனர். பின்பு தாங்கள் தெரிந்து கொண்டதை திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் அவையில் நிலைமையை தெரிவிக்கின்றனர். இந்திரனின் உத்தரவின் படி, அசுரர்கள் தாக்குதல்களில் இருந்து திராயஸ்திரிம உலகத்தை காக்கின்றனர். மேலும் புத்தரையும் தர்மத்தையும் புத்தரை பின்பற்றுபவர்களையும் காப்பதாக இவர்கள் உறுதி பூண்டுள்ளனர். வசுபந்துவின் படி, சாதுமகாராஜிக உலகில் வசிக்கும் தேவர்கள் கால் குரோசம்(சுமார் 750 அடி) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 500 வருடங்கள். அவர்களின் ஒரு நாள் மனித உலகத்தின் 50 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி இவர்களின் ஆயுள் 90 லட்சம் வருடங்கள். மனிதச் சூழல் மண்டலம் மனிதச் சூழல் மண்டலம் (Human ecosystem) என்பது, மனித சமுதாயங்களின் சூழலியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக, சூழலியல் மானிடவியலாளராலும், பிற அறிஞர்களாலும் பயன்படுத்தப்படும் சிக்கலான முறைமை ஆகும். இது குறிப்பிட்ட சூழலுடன் தொடர்புடைய பொருளியல், சமூக-அரசியல் அமைப்புக்கள், உளவியற் காரணிகள், இயற்பியற் காரணிகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. மனிதச் சூழல் மண்டலம் எனும்போது இது ஒரு வீடு போன்ற சிறிய அலகையோ அல்லது பெரிய ஒரு நாட்டையோ கருத்துக்கு எடுக்கலாம். இவை மேற் சொன்னவாறு வரையறுக்கப்பட்டுத் தனித்தனியாக விளக்கப்படலாம் ஆயினும், மனிதச் சூழல் மண்டலங்கள் தனித்தனியாக இயங்குவதில்லை. அவை எல்லாச் சூழல் மண்டலங்களையும் இணைக்கும், மனித மற்றும் சூழலியற் தொடர்புகளைக் கொண்டதொரு சிக்கலான வலையமைப்பின் வழியாக ஊடுதொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. சூழலியல், மானிடவியல், சமூகவியல், தத்துவம், அரசறிவியல், உளவியல் போன்ற துறைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள மனிதச் சூழல் மண்டலம் என்னும் கருத்துரு, மனிதர்கள் ஊடுதொடர்புகளைக் கொண்டுள்ள சிக்கலான தொடர்பு முறைமைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறது. மனிதச் சூழல் மண்டலம் தொடர்பான பெரும்பாலான பகுப்பாய்வுகள் உயிரியல், சமூக-பண்பாடு, சூழல் என்பவை சார்ந்த குறிப்பிட்ட சூழல்களின்மீதே கவனம் செலுத்துகின்றன. கலப்பு கை பழக்கம் கலப்புக் கைப்பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance) என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு, கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளைப் பயன்படுத்துவர். இருகைப்பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரிசமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்புக் கைப்பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒருகைப் பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாகக் கண்டுகொள்வர். இந்த கலப்பு ஆதிக்கம் கண், காது, கால்கள் போன்ற இட-வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம் கண் நிறம் கண் நிறம் ஒரு பலஜீன்(Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில்(Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மணிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது. மணிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் யூமெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.பறவையின் கண்களின் நிறம் பியூரின்கள்(Purine),டெரிடின்கள்(Pteridine) போன்ற நிறப்பொருட்களினால் ஏற்படுகின்றது. கண்களின் நிறம் ஒன்றும் மேற்பட்ட ஜீன்களால் நிர்ணயிக்கப்படும் மரபுரீதியான குணம் ஆகும். இரு பெரும்பாண்மையான ஜீன்களும் ஒரு சிறுபாண்மை ஜீனும் சேர்ந்து கண்களில் நிறத்தை நிர்ணயக்கின்றன. மனிதர்களின் இந்த மூன்று ஜீன்களும் முறையே EYCL1, EYCL2, மற்றும் EYCL3 என அழைக்கப்படுகின்றனர். இந்த மூன்று ஜீன்களும் முறையே பழுப்பு,பச்சை மற்றும் நீல நிறத்தை நிர்ணயிப்பவை. குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாத காலத்துக்குள் கண்களின் நிறம் நிலையாக நிர்ணயக்கப்பட்டுவிடுகிறது. கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கண்களின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது. கண்களின் வெவ்வேறு நிறங்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேது சமுத்திரம் திட்டத்தை, 2,427.40 கோடி ரூபாய் மதிப்பில், நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. 2009, ஜூலை, 27ம் தேதி வரை, 831.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆதாம் பாலம் அல்லது இராமர் பாலத்தில் காணப்படும் மணற்திட்டுகள் அன்றி சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ரீதியிலும் பலன்தராது என உயர்மட்ட நிபுணர் குழு முடிவுதெரிவுத்துள்ளதாக இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி என்பது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் அங்கக்கல்லூரி (Constituent College) தற்போதைய கல்லூரி வளாகமும் ஆகும். இதை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி எனவும் அதன் ஆங்கில பெயர் சுருக்கத்தைக் கொண்டு ஏ.சி.டெக் (Alagappa College of Technology) எனவும் அழைப்பர். இதன் முந்தைய பெயர் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி. அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே இதை ஏ.சி.டெக் என்றே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இதன் பழைய சுருக்கமான ஏ.சி.காலேஜ் என்னும் பெயர் இன்னும் பரவலாய் அறியப்படும் ஒன்று. சென்னைப்பல்கலைக்கழக்கத்தில் இருந்து அண்ணா பலகலைக்கழகம் உருவாக்குவதற்கு முற்பட்ட காலமான 1974க்கு முன்னர், அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னரே அப்போதைய ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகச் சீர்திருத்தத்தில் நான்கு அங்கக்கல்லூரிகளும் அங்கக்கல்லூரி என்ற நிலையை இழந்து அவை நான்கு பல்கலைக்கழக வளாகங்கள்(University Campus) என அழைக்கப்படுகின்றன. எனவே அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி தற்போது அழகப்பர் தொழிநுட்ப கல்லூரி வளாகம்(A.C.Tech Campus) என அழைக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பர் கல்லூரி வளாகத்தில் வேதிப்பொறியியல், உயிரித்தொழில்நுட்பம், தோல் தொழிநுட்பம், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ-ரசாயன தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், மருந்துத் தொழில்நுட்பம்,துணித் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் வழங்கப் பெறுகின்றன். டிராகன் (இராசி) டிராகன் சீன வருட இராசிகளில் உள்ள ஒரு விலங்கு ஆகும். டிராகன் மட்டுமே சீன ராசிகளில் உள்ள ஒரே மாய விலங்கு ஆகும். மற்ற மிருகங்கள் அனைத்தும் உண்மையில் இருப்பவை. சீன சோதிடத்தில் ஒவ்வோரு வருடமும் ஒவ்வொரு விலங்கின் ஆண்டாக கருதப்படுகிறது. சீனாவில், டிராகன்கள் வலிமை, உடல்நலம், அதிர்ஷ்டம் மற்றும் அமைதியோடு தொடர்பு படுத்தப்படுபவை. எனவே டிராகன் படங்கள் கதவுகளுக்கு மேலும் கூரைகளுக்கு மேலும் தீய சக்திகளை விரட்ட வைக்கப்படுகின்றன. சீன நம்பிக்கையின் படி, டிராகன் வருடத்தில் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றனர். கீழ்க்கண்ட வருடங்களில் பிறந்தவர்களில் பிறந்தவர்கள் டிராகன் வருடங்களில் பிறந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் டிராகனின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் ஆகையால் டிராகனின் குணநலன்களை பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். அந்த டிராகன் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சீன ஐம்பூதங்களுள் ஒன்றுடன் தொடர்புடையன. டிராகன் அனைத்து அறிந்தது. டிராகன் பகட்டானது, வசீகரமானது, தன்னுள் அளவற்ற வீரியத்தையும் வலிமையை யும் கொண்டது. சீனாவில் டிராகன் சீன சக்கரவர்த்தியின் சின்னமாக கருதப்படுகிறது. மேலும் டிராகன் யாங் தத்துவத்துடன் தொடர்புடையது. பொதுவாக டிராகன் அதிகாரம் மற்றும் செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே டிராகன் வருடத்தில் பிறந்தவர்கள் இந்த குணநலன்கள் அனைத்து உடையவராக கருதப்படுகிறார்கள். டிராகன் வருடத்தில் பிறந்தவர்கள் அதிகாரமும் அதிர்ஷ்டமும் வாய்ந்தவர்கள், அவர்களிடத்தில் ஒரு இயல்பான வசீகரம் இருக்கும். எனவே மக்கள் கூடுமிடத்தில் இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க இயலாது. டிராகன் வருடத்தவர்கள் ஒரு சுறுசுறுப்பான உள்ளம் உடையவர்கள். மேலும் மற்ற விஷயங்களில் பாசாங்கு இல்லாத ஈடுபாட்டை காட்டுபவர்கள். இவர்கள் தன்னம்ம்பிக்கை மிக்கவர்களாக இருப்பர். மேலும் அனைத்தையும் ஆடம்பரமாக செய்வதில் விருப்பமுடையார்களாக இருப்பர். கொஞ்சம் தற்பெருமை கொண்டவர்கள். தான் நினைத்ததை எவ்வாறேனும் சாதிக்க நினைப்பவர்கள். டிராகன் வருடத்தவர்கள் அளவில்லாத ஆற்றலையும் அறிவையும் தக்கவாறு பயன்படுத்த அறிந்து கொண்டால் அனைத்தையும் சாத்தித்து விதியை வெற்றிக்கொள்பவர்கள். தன்னை அனைவரும் கவனிக்க வேண்டுமென விரும்பினாலும் தைரியமும் ஈகை குணமும் உடையவர்கள். டிராகன் வருடத்தவர்களின் நண்பர்கள் ஏதேனும் சிக்கலில் இருந்தால் அவர்களாகவே முன் வந்து சிக்க்லை தீர்த்து வைப்பர். மற்ற அனைவரும் ஒரு பிரச்சினையை விட்டு விலகிய நிலையில் டிராகன் வருடத்தவர்கள் முன்நின்று பிரச்சினையை அதிகாரத்துடன் தீர்ப்பர். டிராகன் வருடத்தவர்கள் தங்களுக்கென்றும் மற்றவர்களுக்கென்றும் ஓர் உயரிய அளவுகோலை வைத்திருப்பர். எனினும் இந்த காரணத்தில் மற்றவர்களுடைய பலமின்மையை இவர்களாக அறிய இயலாது டிராகன் வருடத்த்வர்களான சிறந்த துறைகள், அரசர், ராணுவம், அரசியல், இசைக்க்லை, கவி, கலைஞன், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல், ஓட்டம், தலைவர், நிறுவன அதிகாரி, ஆய்வு மற்றும் வழக்காடுதல் டிராகன் வருடங்களில் பிறந்த்வர்கள் எலி, குரங்கு மற்றும் பாம்பு வருடங்களில் பிறந்தவர்களோடு மிகவும் ஒத்துப்போவர் எயிட்டி எயிட்டி அல்லது ஹெயிட்டி ("Haiti"), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது இஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது. முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான எயிட்டி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: எயிட்டி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் எயிட்டியப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது. எயிட்டி பாரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹையிட்டி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சனவரி 13,2010 அன்று எயிட்டியில் உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கானவர் உயிரிழந்தனர். இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர். பெரும்பான்மையானோர் (80-85%) ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும். 15-20% மக்கள் புரட்டஸ்தாந்து மதத்தினராவர். 1804 1804 (MDCCCIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. தொடையெலும்பு தொடையெலும்பு (Femur) என்பது உடலுக்கு அருகாமையில் இடுப்பெலும்புடன் இணைத்து கொண்டிருக்கும் மேற்கால் எலும்பு. நடு உடலுடன், இடுப்பெலும்புடன், தொட்டுக்கொண்டிருப்பதால் மேற்கால் பகுதிக்குத் தொடை என்று பெயர். தொடையெலும்பு மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் குறுக்கு வெட்டு விட்டம் சராசரியாக 2.34 செமீ (0.92 in) இருக்கும். மாந்தரின் தொடை எலும்பு முழுவளர்ச்சி அடைந்த ஓராளின் எடையைப் போல 30 மடங்கு எடையைத் தாங்கும் மிகு வலுவுடையது. நடக்கவல்ல, குதிக்கூடிய, பாலூட்டிகள், பறவைகள் போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளிலும், பல்லி போன்ற ஊர்வன இனங்களிலும் தொடையெலும்பே உடலுக்கு மிக அருகாமையில் உள்ள (most proximal) கால் அமைப்புப் பகுதியாகும். நகர்ப்புறச் சூழல் மண்டலம் நகர்ப்புறச் சூழl மண்டலங்கள் (Urban ecosystems) என்பன மனிதனால் அமைக்கப்பட்ட நகரங்கள், பெருநகரங்கள் போன்றனவாகும். நகப்புற மக்கள்தொகையினதும், உட்கட்டுமானங்களினதும் வளர்ச்சிகள், நகர்ப்புறச் சூழலை மட்டுமன்றி அவற்றைச் சூழவுள்ள பகுதிகள் மீதும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. இப் பகுதிகள், குறை நகர்ப்புறச் சூழல்கள், விளிம்பு நகரங்கள், வேளாண்மைப் பகுதிகள் மற்றும் இயற்கை நிலத்தோற்றப் பகுதிகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றன. மனித மற்றும் சூழற் சுகாதாரத்தின் மீது நகராக்கத்தின் தாக்கங்களை அளவிடுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நகர்ப்புறங்களைப் பரந்த சூழl மண்டலத்தின் ஒரு பகுதியாகக் கொள்வதன்மூலம் நகர்ப்புற நிலத்தோற்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்றும், அவற்றோடு தொடர்பு கொண்டுள்ள பிற நிலத்தோற்றங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் ஆராய முடியும். நகர்ப்புறங்கள் பிற பகுதிகள் மீது தாக்கம் உண்டாக்குவது மட்டுமன்றி, அப்பிற பகுதிகளினால் தாக்கத்துக்கும் உள்ளாகின்றன. இவற்றை ஆராய்வதன் மூலம், எவ்வகையான வளர்ச்சிகள் மிகச் சிறந்த சூழல்களை உருவாக்கக் கூடும் என்று அறிய முடியும். கல்லீரல் கல்லீரல் "(English: Liver) (ஈரல் - இலங்கை வழக்கு)" என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் வேறு சில விலங்குகளின் உடலிலும் காணப்படும் ஒரு முக்கிய உள் உறுப்பாகும். மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றன. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது, வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன. வளர்சிதை மாற்றம், கிளைக்கோசன் சேமிப்பை முறைப்படுத்துதல், இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவு மற்றும் ஆர்மோன் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் ஒரு சுரப்பியாகும். ஒரு துணை செரிமான சுரப்பியாக கல்லீரல் பித்தநீரை உருவாக்குகிறது, பால்மமாக்குதல் வழியாகக் கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பை, கல்லீரலின் கீழ் அமைந்திருக்கும் நார்த்திசுவால் ஆன ஒரு சிறிய பையாகும். கல்லீரல் மூலம் உற்பத்தி செய்யப்படும் பித்தநீர் இங்கு சேமிக்கப்படுகிறது. எப்பாட்டோசைட் எனப்படும் கல்லீரல் செல்லால் கல்லீரலின் மிக உயர்ந்த சிறப்பு திசு ஆக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைத் தொகுத்தல் மற்றும் சிதைத்தல் உள்ளிட்ட பலமுக்கியமான உயர்-அளவு உயிர்வேதியியல் வினைகளை இது ஒழுங்குபடுத்துகிறது .கல்லீரலின் மொத்தச் செயல்பாடுகளின் எண்ணிக்கைத் தொடர்பான மதிப்பீடுகள் வேறுபடுகின்றன, ஆனால் பாடநூல்கள் பொதுவாக 500 செயற்பாடுகளை மேற்கோள் காட்டுகின்றன . கல்லீரல், தான் இழந்த இழையங்களை இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது. சிலவகையான குருத்தணுக்கள் இவ்வுறுப்பில் காணப்படுவதே இவ்வியல்புக்குக் காரணமாகும் ஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, ஈடுசெய் வளர்ச்சி () மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது. ஒரு உறுப்பில் உண்மையான மீளுருவாக்கம் நடைபெறுமாயின், அதன் மூலமான தொழில்கள் நடைபெறுவது மீளப்பெறப்படுவதுடன், அதன் அமைப்பும் பழைய நிலைக்கு மீளும். ஆனால் கல்லீரலில் ஒரு சோணை அகற்றப்படுமாயின், அது மீளவும் உருவாவதில்லை. ஆனால் அதன் தொழில்கள் ஈடுசெய்யப்படும் வளர்ச்சி நடைபெறும். மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்ற சிகிச்சைக்கு உதவும் வகையில், கல்லீரல் குருத்தணுவைப் பயன்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும். கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை "உடலின் வேதிப்பொருள் தொழிலகம்" என்று கருதுவது பொருந்தும். மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரலே ஆகும். கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது. கல்லீரல் வலது இடது இழைகள் என இரண்டு பங்காகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரு இழைகளும் மேலும் எட்டுப் பகுதி இழைகளாக அல்லது துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது.இவை ஒவ்வொன்றும் திசுவியல் அலகுகளான அலகிழைகளால் ஆக்கப்பட்டுள்ளன. எப்பாட்டிக் தமனி மற்றும் போர்டல் சிரை என்ற இரண்டு பெரிய இரத்த நாளங்களுடன் கல்லீரல் இணைக்கப்பட்டுள்ளது. போர்டல் பாதை திசுக்களே கல்லீரலின் முக்கிய இணைப்புத்திசுவாக விளங்குகிறது. எப்பாட்டிக் தமனி ஆக்சிசன் நிறைந்த இரத்தத்தை பெருந் தமனியிலிருந்து கொண்டு செல்கிறது. இதேபோல போர்டல் சிரையானது இரைப்பைக் குழாயிலிருந்தும், மண்ணீரல் மற்றும் கணையத்தில் இருந்தும் செரிமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதனால் உடலின் பொது இரத்த ஓட்ட சுழற்சிக்குள் காணப்படும் ஊட்டச்சத்துப் பொருட்களின் அளவினை தீர்மானிப்பதில் கல்லீரல் முக்கியப்பங்கு வகிக்கின்றது. மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது . பித்தநீர் சுரக்கவும், ஈமோகுளோபினின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, ஏனைய சில தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொலஸ்டிரால், கிளைகோஜன் வடிவில் காபோவைதரேட்டு, சில இயக்குநீர்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், யூரியா உற்பத்தி, பிளாசுமா புரத உற்பத்தி போன்ற உற்பத்திகளில் ஈடுபடுவதும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும், வேறு பல நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது. கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு கொழுப்பு உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் பித்தப்பையில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். உணவு சமிபாட்டின் பின்னர் உருவாகும் எளியவடிவிலான ஊட்டக்கூறுகள், தேவைக்கு அதிகமாக இருக்கையில் வேறு வடிவுக்கு மாற்றப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். பின்னர் உடலுக்கு ஊட்டக்கூறுகளின் தேவை ஏற்படுகையில், எளிய வடிவில் மாற்றப்பட்டு, குருதியினூடாக தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும். பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும் உடலுக்குள் நுழையும் வெளிப்பொருட்கள் யாவற்றையும் போர்டல் இரத்த ஓட்டம் மூலமாகத் தன்னுள் கல்லீரல் இழுத்துக் கொள்கிறது. இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன.கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. இரத்தத்தில் இவற்றின் அளவை அளந்தறிதல் மூலம் கல்லீரல் நோய்களைப் பற்றி அறிய இயலும். கேளா ஒலி அலைப் பகுப்பாய்வு மூலம் கல்லீரல் நோய்கலைக் கண்டறியலாம். கல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை hepatitides ) என்பது உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இந்த பெயரானது பண்டைய கிரேக்கமொழி சொல்லான "ஹெபர்" (ἧπαρ) என்பதிலிருந்து வந்ததாகும், இதன் மூலச்சொல் "ஹெபட்" -(ἡπατ-) ஆகும், அதாவது "கல்லீரல்" என்ற பொருள் தருகிறது, மற்றும் பின் ஒட்டுச்சொல்லான "-இடிஸ் (-itis)" என்பது "அழற்சி அல்லது வீக்கம்" என்ற பொருள் கொண்டதாகும், இச்சொல் இவை இரண்டும் கலந்ததாகும் (c. 1727). இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை கடுமையான பாதிப்பை குறிக்கும் ஆனால் அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும். உலகளவில் உடல் நலத்தை மிகையாக பாதிக்கும் இவ்விதமான கல்லீரல் சேதாரத்திற்கு ஒரு குழுவை சார்ந்த கல்லீரல் அழற்சி தீநுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளே காரணமாகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சி () என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைமப் பெருக்கம் , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்), போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய மூலமறியா தான்தோன்றியானவை. கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் "ஈரல் ஆழ்துயில்" அல்லது "கோமா ஹெப்பாடிகம்" என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம். கிருட்டிணராச சாகர் அணை கிருட்டிணராச சாகர் அணை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு மீது கட்டப்பட்ட பெரிய அணையாகும். மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டதால் கண்ணம்பாடி அணை என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராச உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை வடிவமைத்து கட்டியவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா. ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன இவ்வணை மைசூரிலிருந்து கிட்டதட்ட 20 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு புகழ் பெற்ற பிருந்தாவன் பூங்கா உள்ளது. 13-ஆம் நூற்றாண்டு கிபி 13ம் நூற்றாண்டு 1201 இல் ஆரம்பித்து 1300 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும். வரலாற்றில் இக்காலப் பகுதியில் ஆசியாவைக் கைப்பற்றிய மங்கோலியப் பேரரசு தனது எல்லையை கொரியா முதல் கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரித்தது. 1757 1757 (MDCCLVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது. 1750கள் 1750கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1750ஆம் ஆண்டு துவங்கி 1759-இல் முடிவடைந்தது. சேக்கிழார் சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் "உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்" போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன. சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது. கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாதி சிவாச்சாரி என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார். சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார். சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார். இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார். மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார். புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும். சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார். மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியை படித்ததும், அதற்கு சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளை பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார். சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார். இக்காலம் கிபி. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு. விண்டோசு என். டி. 3.51 வின்டோஸ் என்டி 3.51 விண்டோஸ் எண்டி பரம்பரையில் வந்த 3ஆவது பதிப்பாகும். இது வின்டோஸ் 3.5 வெளிவந்து 9 மாதங்களின் பின்னர் 30 மே 1995 இல் வெளிவிடப்பட்டது. இது கொஞ்காலமாகக் கணினி உலகில் கலக்கிக் கொண்டிருந்த பவர்பிசி புரோசர்களை ஆதரித்த முதலாவது இயங்குதளமாகும். இது வெளிவந்து மூன்றே மாதத்தில் வெளியான வின்டோஸ் 95 இற்கு ஓர் வழங்கியாகச் (சேவர்) செயற்பட்ட ஓர் இயங்குளமாகும். இது வெளிவந்து ஒரு வருடத்தின் பின்னர் வின்டோஸ் 4.0 வெளிவிடப்பட்டது. மைக்ரோசாப்ட் 31 டிசம்பர் 2001 ஆம் ஆண்டுவரை இயங்குதள ஆதரவை அளித்து வந்தது. கப்பூது காட்டுக்கந்தன் கப்பூது காட்டுக்கந்தன் இலங்கைத்தீவின் வட முனையில் அமைந்துள்ள கப்பூது என்னும் பழம்பெரும் சிற்றூரில் அமைந்தூள்ள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். கப்பூது வடமராட்சி-தென்மராட்சிகளின் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது. (இதன் அயற் கிராமங்களாக சரசாலை, வாதரவத்தை அமைந்துள்ளன). இந்த கப்பூது முருகன் ஆலயவரலாறானது போத்துக்கீயர், ஒல்லாந்தர்களின் படையெடுப்புக்கு முன்பில் தோன்றியதற்கான வரலாற்றுச்சான்றுகள் முன்னோர்களால் செவிவழியாக சொல்லப்பட்டு இன்று வரை பேணிவரப்படுகின்றது. ஆரம்பகாலம் 1800ம் ஆண்டாகவும் அன்றிலிருந்து அன்னியர்களால் இடித்து மறைக்கப்படும் வரை அக்கால மக்களால் பெரிதும் பூசிக்கப்பட்டு பூஜைகள் நிகழப்பெற்றுவந்துள்ளது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் காலத்தில் அவ்வூர் மெய்யடியார் ஒருவர் கனவில் தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள குளத்தில் முருகன் ஆலயமொன்றை ஒல்லாந்தர்கள் இடித்து விக்கிரகங்களை மறைப்பதாக கண்டதாக தன் ஊர்மக்களிடம் கூறினார். கனவின் வெளிப்பாடாக அவ்வூர் மக்கள் உதவியுடன் குளத்தை அகழ்ந்து பார்க்கும்போதே கனவில் சொல்லப்பட்ட விக்கிரகங்கள் காணப்பட்டதானது அற்புத நிகழ்வாக இன்றும் போற்றப்படுகின்றது அன்றைய மெய்யடியார்களினால் சிறிதாக பக்தி சிரத்தையுடன் அழகுற ஆரம்பிக்கப்பட்ட முருகன் ஆலயமானது நாளடைவில் பக்தர்களின் அயராத முயற்சியினால் 1914ம் ஆண்டு கற்களால் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் கால ஓட்டத்தில் இவ்வாலயம் 1926, 1938ம் ஆண்டுகளில் புனருத்தாரனப்பணிகள் செய்யப்பட்டு கும்பாவிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அன்று தொட்டு வைகாசி மாத அமாவாசையை அடுத்து சதுர்த்தியில் உற்சவம் ஆரம்பமாகி பூரணையில் தீர்த்தமுடன் நிறைவாவது வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து 1959இல் மீள் புனருத்தானமுடன் கும்பாவிஷேகமும், 1976 ஆம் ஆண்டு பாலஸ்தானமும் செய்யப்பட்டது. மேலும் 1980களில் மிகவும் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்ட திருப்பணியாக ஆரம்பித்து (இரு கேணிகள், அன்னதானமடம், அம்பாள் ஆலயம், வைரவர் ஆலயத்துடன்) 1989 ம் ஆண்டு மகாகும்பாபிஷேகத்துடன் நிறைவுகண்டது. ஆலயத்திற்கு மேலும் மெருகூட்டும் விதமாக சித்திரத்தேர் சிறப்புற பெரும் பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டது. நொய்யல் ஆறு நொய்யல் ஆறு தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர்,சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கிலோ மீட்டர் பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் "காஞ்சியாறு" என்பதாகும். கோவையில் நொய்யல் ஆறு என நாம் குறிப்பிட்டால் இப்போது இருக்கும் மக்களுக்கு அது சிறுவாணி அணை நீர் என நினைக்கின்றனர். பலரும் நொய்யல் என்றால் தண்ணீரே வராத ஒரு ஆறு என நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. எத்தனையோ தடைகளை கடந்து கோவையை நோக்கி வரும் நொய்யலுக்கும் ஒரு பின்னணி உண்டு. நொய்யல் ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது என தெரிந்துகொண்டால் அதை நாம் போற்றத் துவங்கி விடுவோம். கோவைக்கு மேற்கே, மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பல்வேறு சிறு ஓடைகள் உருவாகிறது. இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று மலைகளில் இருந்து பெரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் நீங்கள் சிறுவாணி அடிவாரத்தில் காணும் இதை பெரியாறு. இதில்தான் கோவை குற்றாலம் அருவி உள்ளது. வடபுரத்தில் ஏறத்தாழ வெள்ளிங்கிரி மலையிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும் மழை, 5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாறுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது. இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை. இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு சாடி வயல் வழியாக நாம் ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது. பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்துவரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது. இந்த தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஆற்றில்தான் வைதேகி அருவி உள்ளது. தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது. பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலின் நீளம் 180 கிலோ மீட்டர். இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32. நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறைாக பயன்படுத்தினால் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வராது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த நீரை குளங்களுக்கு திருப்பினால் ஒரு சில மணி நேரங்களில் குளம் நிரம்பிவிடும். பின்னர் இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்று நீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மனிதகுலம் ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரீகம் வளர முக்கிய காரணமாக இருந்தவை ஆறுகளே. உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் முக்கிய அடையாளமாக அங்கு பாயும் ஆறு விளங்குகிறது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும், அங்கு விவசாயம் வளமாக அமையக் காரணமாகவும் இருந்தது நொய்யல் ஆறு. தொல்லியல் பழமைவாய்ந்த கொடுமணல் இவ்வாற்றின்கரையில்தான் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுக்கும் நொய்யல் ஆற்றின் நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் விதமான நீர் மேலாண்மைத் திட்டத்தை 800 ஆண்டுகளுக்கு முன்பு(கி.பி.1000-1300) கொங்கு மண்டலத்தை ஆண்ட சோழர்கள் உருவாக்கி வைத்தனர். நொய்யலை ஆதராமாகக் கொண்டு 32 அணைக்கட்டுகளும், 40 க்கும் மேற்பட்ட குளங்களும் கட்டமைக்கப்பட்டன. ஆனால் தற்போது உள்ள குளங்களின் எண்ணிக்கை 19 மட்டுமே. மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீரானது முழுவதும் வீணாகாமல் இடை இடையே தடுக்கப்பட்டு அணைக்கட்டுகளிலும் அதன் வழியாக குளங்களிலும் சேமிக்கப்பட்டது. அணைக்கட்டுகளில் இருந்து ஒரு சங்கிலித் தொடர் போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் மட்டுமல்லாது தொலைவில் இருந்த மக்களும் விளை நிலங்களும் பயனடையும் விதத்தில் நீர் மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.இதன் மூலமாக குடிநீர், பாசனம், நிலத்தடிநீர் போன்ற பயன்களை மக்கள் அடைந்தனர். பின்னர் நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேய அரசும் சோழர்கள் கட்டமைத்த நீர் மேலான்மைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தனர். மூன்று மாவட்டங்கள் வழியாக 180 கிலோ மீட்டர் தூரம் எந்த தடையும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி தற்போது பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளால் கோவையின் எல்லையை கடக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்று. கோயம்புத்தூர் நகரைக் கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. திருப்பூரை கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடையச்செய்கின்றன. சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறைக் கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு வேளாண்மைக்கும் குடிப்பதற்கும் ஆகாத நிலை உள்ளது. மனிதர்களுக்கும், மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இக்கழிவுகள் எல்லாம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளன. அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர். ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்சநீதி மன்றம், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு வசதி இல்லாத ஆலைகளின் உரிமம் பறிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன. உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் உள்ளது.அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை,இரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள். பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலை மீட்டெடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், ஆலைகளில் இருந்து நேரடியாக கலக்கும் ரசாயானக் கழிவுகளை தடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர் பெறும். நூற்றாண்டுகளாக அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது. டிசிப்ரோசியம் டிசிப்ரோசியம் (Dysprosium) என்பது Dy என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியிஅல் சேர்மமாகும். இதனுடைய அணு எண் 66 ஆகும். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 97 நொதுமிகள் உள்ளன. அருமண் உலோகமான இது வெள்ளி தனிமத்தின் தோற்றத்தைப் போல வெண்மை நிறம் கொண்டதாக உள்ளது. டிசிப்ரோசியம் இயற்கையில் தனித்த உலோகமாக இதுவரை கிடைத்ததில்லை. இருப்பினும் செனோடைம் போன்ற கனிமங்க்களில் இதுன் காணப்படுகிறது. இயற்கையாகத் தோன்றும் டிசிப்ரோசியம் ஏழு ஐசோடோப்புகளால் உருவாக்கப்படுகிறது. இவற்றில் 164Dy ஐசோடோப்பு இயற்கையில் அதிகமாகக் கிடைக்கிறது. டிசிப்ரோசியம் முதன் முதலில் 1886 ஆம் ஆண்டு பால் எமில் லிகாக் டி பாய்சுபவுத்ரன் என்பவரால் கண்டறியப்பட்டது. ஆயினும் அயனிப் பரிமாற்ற நுட்பங்கள் 1950 களில் செயல்படத் தொடங்கும் வரை தூய டிசிப்ரோசியம் பிரித்தெடுக்கப்படவில்லை. ஒப்பீட்டளவில் டிசிப்ரோசியம் அதற்கென தனித்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இக்குறிப்பிட்ட பண்புகளுக்காக வேறு தனிமங்கள் எதையும் இதற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. உயர் வெப்ப நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் கட்டுப்பாட்டு கழிகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இதன் உயர் காந்த மாறுபடும் தன்மை தரவு சேமிப்பகப் பயன்பாடுகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. டெர்பினால் டி என்ற சேர்மத்தின் பகுதிப்பொருளாக டிசிப்ரோசியம் காணப்படுகிறது. கரையக்கூடிய டிசிப்ரோசியம் உப்புகள் நச்சுகளாகவும் கரையாத டிசிப்ரோசியம் உப்புகள் நச்சுத்தன்மை அற்றவையாகவும் கருதப்படுகின்றன. டிசிப்ரோசியம் லாந்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இதனை அருமண் உலோகம் என்று வகைப்படுத்துகிறார்கள். டிசிப்ரோசியம் மற்றும் ஓல்மியம் என்ற இரண்டு தனிமங்களும் குறிப்பாக தாழ் வெப்பனிலைகளில் தனிமங்களில் உயர் காந்த வலிமை கொண்ட தனிமங்களாகக் கருதப்படுகின்றன. 85 கெல்வின் வெப்ப நிலைக்கு கீழ் எளிய பெர்ரோகாந்தப் பண்பு வகையைக் கொண்டதாக உள்ளது. இதைக்காட்டிலும் அதிக வெப்ப நிலையில் திருகு சுழலான எதிர்பெர்ரோ காந்தத்தன்மையைக் கொண்டுள்ளது. டிசிப்ரோசியம் உலோகம் காற்றில் மெதுவாக நிறம் மங்குகிறது, பின்னர் தீப்பிடித்து எரிந்து டிசிப்ரோசியம்(III) ஆக்சைடாக மாறுகிறது. டிசிப்ரோசியம் மின்னேரானது என்பதால் குளிர் நீருடன் மெதுவாகவும் சூடான நீருடன் வேகமாகவும் வினைபுரிந்து டிசிப்ரோசியம் ஐதராக்சைடைக் கொடுக்கிறது. 200 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேற்பட்ட வெப்ப நிலைகளில் டிசிப்ரோசியம் அனைத்து ஆலசன்களுடனும் தீவிரமாக வினைபுரிகிறது. நீர்த்த கந்தக அமிலத்தில் டிசிப்ரோசியம் உடனடியாகக் கரைகிறது. இக்கரைசலில் மஞ்சள் நிறத்தில் Dy(III) அயனிகள் காணப்படுகின்றன. இவை இங்க்கு [Dy(OH)] அணைவுச் சேர்மமாகக் காணப்படுகிறது. : இவ்வினையில் உருவாகும் டிசிப்ரோசியம்(III) சல்பேட்டு பாரா காந்தப் பண்பு கொண்டதாக உள்ளது. DyF3 மற்றும் DyBr3 ,போன்ற டிசிப்ரோசியம் ஆலைடுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. டிசிப்ரோசியம் ஆக்சைடு டிசிப்ரோசியா என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இது வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. இரும்பு ஆக்சைடைக் காட்டிலும் அதிக காந்தப் பண்பை இது கொண்டுள்ளது. 1878 ஆம் ஆண்டில் எர்பியம் தாதுக்களில் ஓல்மியம் மற்றும் துலியத்தின் ஆக்சைடுகளைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. பிரஞ்சு வேதியியலாளர் பால் எமில் லிகோக் டி பாய்சு பவுத்ரன் என்பவர் ஓல்மியம் ஆக்சைடை ஆய்வு செய்து கொண்டிருந்தபொது டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கண்டறிந்தார். ஓர் அமிலத்தில் டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கரைத்து பின்னர் அதனுடன் அமோனியாவைச் சேர்த்து ஐதராக்சைடை வீழ்படிவாக்குவதாக இவருடைய செயல்முறை அமைந்திருந்தது. ஐதராக்சைடிலிருந்து டிசிப்ரோசியத்தை தனித்துப் பிரிக்க இவர் 30 முறைகளுக்கு மேல் முயற்சித்து இறுதியாக வெற்றிபெற்றார். இதற்கு டிசிப்ரோசியம் எனப்பெயரிட்டார். 1950 களில் அயனிப் பரிமாற்ற முறை கண்டறியப்படும் வரை தூய டிசிப்ரோசியத்தை இவரால் தனித்துப் பிரிக்க இயலவில்லை. டிசிப்ரோசியம், வனேடியம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்ந்து லேசர் (சீரொளி மிகைப்பி) செய்யும் பொருட்களில் பயன்படுகின்றது. வெப்ப நொதுமி பற்றுறும் குறுக்களவு அதிகமாக இருப்பதால் இது அணு உலைகளில் வெப்ப நொதுமிகளைப் பற்றிக்கொண்டு கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. இதன் உருகு வெப்பநிலை அதிகமாக உள்ளதால் (1407 °செ), இவ்வகைப் பயன்பாட்டுக்கு ஏற்றாதாகக் கருதப்படுகின்றது. டிஸ்ப்ரோசியம் குறுவட்டுகளிலும் பயன்படுகின்றது. இதன் மென்காந்தப் பண்புகளால் அணுக்கரு ஒத்ததிர்வுப் படம்பிடிப்புக் கருவிகளில் நிறவேறுபாடு காட்ட உதவும் பொருளாகப் பயன்படுகின்றது. டிசிப்ரோசியம் முதன்முதலாக 1886இல் பாரிசில் பிரெஞ்சு வேதியலாளர் பால் எமீல் லெக்கொ டெ புவாபூட்ரான் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால் 1950களுக்குப் பிறகே மின்மவணு பரிமாற்றிகளின் துணையால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது. டிசிப்ரோசியம் தனியாக எங்கும் கிடைப்பதில்லை. பிற கனிமங்களில் சேர்துள்ள ஒரு பொருளாகவே கிடைக்கின்றது. அப்படிக் கிடைக்க்கும் கனிமங்களில் சில: செனோட்டைம் (xenotime), ஃவெர்குசொனைட் (fergusonite), கடோலினைட் (gadolinite), யூக்சோனைட் (euxenite), மோனாசைட் பாஸ்ட்னைட் புலோம்சுட்ரான்டைன் (blomstrandine). அணுநிறை மிகுந்த லாந்த்தனைடுகளில் அதிகமாகக் கிடக்கும் பொருள்களில் இது ஒன்றாக உள்ளது ( 7-8%). சென்னகேசவர் கோயில், பேளூர் விஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. "சென்னகேசவர்" என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, ஹாசன் நகருக்கு 40 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேளூர், போசளர் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த பல சிறப்புவாய்ந்த கோயில்களுக்குப் புகழ் பெற்ற இடமாகவும், வைணவர்களின் யாத்திரைக்குரிய இடமாகவும் விளங்குகிறது. இக் கோயில் கி.பி 1117 ஆம் ஆண்டில் ஹோய்சால மன்னனான விஷ்ணுவர்த்தனனால் கட்டுவிக்கப்பட்டது. இம்மன்னர் பஞ்ச நாராயண ஆலயங்கள் அமைத்தவர். இது கட்டப்பட்டதன் காரணம் தொடர்பாக வரலாற்றாளர்களிடையே பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. விஷ்ணுவர்தனனின் போர் வெற்றியைக் குறிக்கவே இது கட்டப்பட்டது என்னும் கருத்தே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்தாக உள்ளது. எனினும், ஹோய்சாலர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய சாளுக்கியர்களை வென்ற பின்னர், கட்டிடக்கலையில் அவர்களிலும் மேம்பட்ட திறமையை வெளிப்படுத்துவதற்காகவே இக் கோயில் கட்டப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். இன்னொரு சாரார், சோழருக்கு எதிராக ஹோய்சாலர்கள் நடத்திய தலைக்கோட்டைப் போரில் பெற்ற வெற்றியைக் குறிக்கவே இக்கோயில் கட்டப்பட்டதாக எண்ணுகின்றனர். விஷ்ணுவர்த்தனன் சமணசமயத்தில் இருந்து வைணவத்துக்கு மாறியதைக் குறிக்கவே வைணவக் கோயிலான இது கட்டப்பட்டதாக நம்புவோரும் உள்ளனர். பஸ்மாசுரன் பொசுங்கிய தலம் என்பது தல வரலாறு. மூலவர் கேசவநாராயணன் கல்லால் ஆன பீடத்தின் உயரத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவர் பெண் உருவில் காட்சி தருகின்றார். இக் கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட இராசகோபுரம் அமைந்துள்ளது. இவ் வளாகத்தின் மையப் பகுதியில் சென்னகேசவர் கோயில் கிழக்கு நோக்கியபடி உள்ளது. இதன் இரு மருங்கிலும், வலது பக்கத்தில், காப்பே சான்னிக்கிரயர் கோயிலும், ஒரு சிறிய இலக்குமி கோயிலும், இடது புறத்திலும், பின்புறத்திலும் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளன. இங்கு காணப்படும் இரண்டு தூண்களுள் ஒன்று விஜயநகரக் காலத்தையும் மற்றது போசளப் பேரரசுக் காலத்தையும் சேர்ந்தது. இதுவே முதல் போசளக் கோயிலாக இருந்தபோதும் இதன் கட்டிடக்கலை சாளுக்கியக் கலைப் பாணியைச் சேர்ந்ததாகவே உள்ளது. ஹளபீட்டில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் மற்றும் சோமநாதபுரத்து கேசவர் கோயில் ஆகியவை போன்ற பிற்கால போசளக் கோயில்களைப் போல் அளவுக்கு அதிகமான அலங்கார வேலைப்பாடுகள் இக் கோயிலில் இல்லை. இக் கோயிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. இவற்றின் கதவுகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வாயிற்காவலர் சிற்பங்களோடு அமைந்துள்ளன. காப்பே சன்னிக்கிரயர் கோயில் சென்னகேசவர் கோயிலிலும் சிறிதாக இருந்த போதிலும், கட்டிடக்கலை அடிப்படையில் அதேயளவு முக்கியத்துவம் கொண்டது. ஆனாலும், இதில் சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. பிற்காலத்தில் இன்னொரு கர்ப்பக்கிருகம் சேர்க்கப்பட்டதுடன் இது இரட்டைக் கோயிலாக ஆனது. முன்னையது நட்சத்திர வடிவில் அமைந்திருக்கப் பின்னது எளிமையான நாற்பக்க வடிவுடையதாக இருக்கிறது. இரண்டாவது கோயிலிலும் கேசவருடைய சிலையே இருக்கிறது. இது விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலா தேவியினால் கட்டுவிக்கப்பட்டது. ஆலயத்தின் கட்டட நுணுக்கத்தை வெளிப்படுத்தும் தூணாக இது உள்ளது. நாற்பது அடி உயர கற்கம்பம், பீடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. கற்கம்பத்திற்கும் பீடத்திற்கும் இடையே இடைவெளியுள்ளது. ஒரு பக்கமிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும். ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அம்மூலையிலும் எடுக்க முடியும். ஆனால் கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத விதமாக உள்ளது. இத்திருக்கோயிலின் முன்மண்டபத்தில் கண்ணாடி அலமாரியில் பசவபட்டணர், சஸ்லே ஹள்ளி எனும் ஊர் செருப்பு தைப்பவர்கள் காணிக்கையாக வைத்துள்ள செருப்பு உள்ளது. இந்த செருப்பு நாலடி நீளத்தில் இரண்டடி உயர்த்தில் உள்ளது. இவர்கள் கனவில் பெருமாள் வந்து செருப்பு தேய்ந்து விட்டது வேறு செருப்பு தைத்துத் தர வேண்டும் என்று கூறும் போது கிராம மக்கள் ஊரில் பொது இடத்தில் குங்குமத்தைப் பரப்புவார்கள். அதில் பெருமாளின் பாதம் பதியும் எனவும் அந்த அளவுக்கு செருப்பு தைத்துக் கொணர்ந்து பெருமாளுக்கு காணிக்கையாக வைப்பார்களாம். இவ்வாறு அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட செருப்புகள் இன்னமும் உள்ளன. பேலூர் பேலூர் (, Belur) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஊர். ஹௌரா மாவட்டத்தில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகமான பேலூர் மடமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வுடன் தொடர்புடைய தட்சிணேசுவரர் காளி கோயிலும் அமைந்துள்ளது. தியாகராஜா மகேஸ்வரன் தியாகராஜா மகேஸ்வரன் (ஜூன் 18 1960 - ஜனவரி 1, 2008] ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமாவார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் தமிழருக்கெதிரான மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இவர் ஜனவரி 1, 2008 இல் கொழும்பில் இந்துக் கோயில் ஒன்றில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்தார். யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ் பரி யோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பெரும்பான்மை சிங்கள் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தாலும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கெதிரான கட்சியின் நிலைப்பாடுகளை என்றுமே எதிர்த்தே வந்திருந்தார். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் இவர் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுத்து வந்தார். தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்ப்பிக்க உள்ளதாகவும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் எண்ணிக்கை 11 இலிருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2008 இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்தார்.. மகேஸ்வரனை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பாகக் கைதான முக்கிய நபரான வசந்தன் என அழைக்கப்படும் ஜோன்சன் வலன்டைன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2012 ஆகத்து 27 ஆம் நாளன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளும் விசாரணை அறிக்கைகளும் உறுதி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை என்பது தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் படுகொலையைக் குறிக்கும். ஜனவரி 1, 2008 அன்று கொழும்பில் இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2008 இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது., விண்டோசு என். டி. 4.0 விண்டோஸ் எண்டி 4.0 29 ஜூலை 1996 இல் வெளிவந்தது. இந்த 32பிட் வரைகலை இயங்குதளச் சூழல் ஆனது வழங்கி (சேர்வர்) மற்றும் வாங்கிகளாகவும் (கிளையண்ட்) கிடைக்கின்றது. இதில் வரும் எண்டி என்பதன் ஆங்கிலச் சொல்லான பில்கேட்சின் கருத்துப்படி புதிய தொழில்நுட்பம் (NT - New Techonology) என்பதைச் சுட்டியபொழுதும் இதில் பெரிதாகக் கருத்தளவில் புதிய கொள்கைகள் கிடையாது. விண்டோஸ் எண்டி 4.0 வழிவந்த இயங்குதளமாக விண்டோஸ் 2000 பெப்ரவரி 2000 இல் அறிமுகம் செய்யப்பட்டது. கலாப்ரியா கலாப்ரியா (பிறப்பு: சூலை 30, 1950) தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சிறு வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி. மு. க தொண்டனாக தீவிரமாக இயங்கினார். அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான "பொருநை"யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் "கசடதபற"வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். "கசடதபற"விற்கு பின் "வானம்பாடி", "கணையாழி", "தீபம்" ஆகிய இதழ்களில் எழுதினார். கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு{பேராசிரியர் தமிழவன் படிகள் இதழில் எழுதிய கட்டுரை, ஜெயமோகன், கலாப்ரியா கவிதைகள் தொகுப்புக்கு எழுதியுள்ள முன்னுரைகள்}. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர். தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'. நா. சுகுமாரன் சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957; கோவை, இந்தியா) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். விற்பனை பிரதிநிதி, மொழி பெயர்ப்பாளர், பத்திரிக்கையாளர் , தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் என்று பல்வேறு பணிகளில் செயல்படுபவர் சுகுமாரன். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 'காலச்சுவடு' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். வின்டோஸ் நெப்டியூன் வின்டோஸ் நெப்டியூன் ("Windows Neptune") என்பது 1999 முதல் 2000 இன் முற்பகுதி வரை உருவாக்கத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் ஒரு பதிப்பாகும். விண்டோஸ் நெப்ட்யூன் விண்டோஸ் என்டியை அடிப்படையாக கொண்ட விண்டோஸ் 2000 இன் இல்ல பதிப்பாக வெளி வர இருந்தது. இது முன்னிருந்த விண்டோஸ் 98 இன் அடுத்த மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் பதிப்பாக வெளி வர உருவாக்கப்பட்டு கொண்டிருந்தது. எனினும் விண்டோஸ் 2000இன் வெளியீட்டுக்கு பின்னர் விண்டோஸ் விஸ்லர் திட்டப்பணி குழுவுடன் ஒன்றினைக்கப்பட்டது. இந்த விண்டோஸ் விஸ்லரே பின்னர் அதிகாரப்பூர்வமாக விண்டோஸ் எக்ஸ்பி ஆக வெளியிடப்பட்டது. நெப்ட்யூன் குழு விஸ்லர் குழுவுடன் ஒன்றினைக்கப்பட்டவுடன் விண்டோஸ் நெப்ட்யூனின் உருவாக்கம் உட்கட்டசோதனை(ஆல்ஃபா) நிலையிலேயே கைவிடப்பட்டது. பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸ்'ஐ அடிப்படையாக கொண்ட விண்டோஸ் மில்லேனியம் வெளியிட்டது விண்டோஸ் நெட்ப்யூனில் இணைய மற்றும் வலைய பாதுகாப்புக்காக ஆரம்பநிலை பாதுகாப்புச்சுவர்(Firewall) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அம்சம் பின்னர் விண்டோஸ் XPயுடன் ஒன்றிணைக்கப்பட்டு விண்டோஸ் ஃபயர்வால் என மறுபெயரிடப்பட்டது நெப்ட்யூன் ஆல்ஃபா(உட்கட்ட சோதனை) பதிப்பாதலால், இதை பொது பயன்பாட்டிற்கோ அல்லது பீட்டா(வெளிப்புற சோதனை) பதிப்பாகவோ மைக்ரோசாஃப் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனவே உட்கட்டச் சோதனைக்காக சிலரிடம் தரப்பட்ட பதிப்பே தற்போது இணையத்தில் புழக்கத்தில் இருக்கிறது. அதிலும் கட்டுமானம்(Build) 5000 பெரும்பாண்மையாக இருக்கிறது.. கட்டுமானம் 5111 அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. விண்டோஸின் இந்த உட்கட்டச் சோதனை வெளியீடு மற்ற விண்டோஸ் 9X பதிப்புகளை ஒத்து 5111 என்ற கட்டுமான எண்ணை கொண்டிருந்தது ஏனெனில் இது விண்டோஸ் 9X அடுத்த தொடர்பதிப்பாக(Successor) விண்டோஸ் வெளியிட உத்தேசிக்கப்பட்டது. எனவே தான் விண்டோஸ் நெப்ட்யூன் என்.டி அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பினும் விண்டோஸ் என்.டியின் கட்டுமான எண்ணை பின் பற்றாமல் விண்டோஸ் 9Xஇன் கட்டுமான எண் தொடரை பின்பற்றி கட்டுமான எண் இடப்பட்டது. விண்டோஸ் நெப்ட்யூனை விண்டோஸ் XPஇல் நிறுவ இயலாது, ஏனெனில் நெப்ட்யூன் பதிப்பு 1999ஆம் ஆண்டு XP வெளியிடுவதற்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை மைக்ரோசாஃப்டின் வர்ச்சுவல் பி.சி(Virtual PC) மூலம் நிறுவிக்கொள்ள இயலும். விண்டோஸ் 98 மற்றும் அதன் முந்திய பதிப்புகளின் உயர்த்தலாக(Upgrade) இதை பயன்படுத்தலாம். எனினும் இது சோதனை கட்டத்திலேயே கைவிடப்பட்ட பதிப்பு என்பதால் இந்த பதிப்பில் உள்ள அளவற்ற பிழைகளை கருத்தில் கொண்டு, இந்த உயர்த்தல் பரிந்துரைக்கப்படுவதில்லை. எனினும் மேற்கூறியவாறு வர்ச்சுவல் பி.சி மூலம் எந்தவித பயமுமின்றி சோதனைக்காக நிறுவிக்கொள்ளலாம். தரவுப்பொதி நிலைமாற்றம் இந்த தொழில் நுட்பமானது தகவல் பரிமாறிகளிடையே நெரிசல்காரணமாக தகவல் சென்றடைவதில் உண்டாகும் தாமதங்களை குறைப்பத்ற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.பொதுவாக ஓர் இடத்திற்கு உள்வரும் அல்லது வெளிச்செல்லும் தகவலானது முடிச்சுக்கள்(தகவல் பரிமாற்றிகள் பல சந்திக்கும் இடம்) உதவியுடனேயே பரிமாறப்படுகின்றன. ஆரம்ப தொழில்நுட்பத்தி ஒரு தகவலானது இரு முடிச்சுக்கள் இடையில் பயணிக்கும் போது ஒரு பாதையை மட்டும் பாவிப்பதன் காரணமாக தாமதம் ஏற்பட்டது. ஆனால் தரவுப்பொதி நிலைமாற்றம் மூலமாக ஒரு தகவல் இரு முடிச்சுக்களை பல பாதைகளினூடு பயணித்தபின் அடைவதன்மூலமாக தாமதம் தவிர்க்கப்படுகின்றது. ஒரு முடிச்சிலிருந்து அணிவகுக்கப்பட்ட ஒழுங்கமைப்பு மூமாக இடையறாத தொடரணியாக பல பாதையூடு பயணித்த தகவல்பொதிகள் மீண்டும் முடிச்சுக்களில் உருக்குலையாது ஒன்றுசேரும் முறையானது (தரவுப்பொதி நிலைமாற்றம்) தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு திருப்பு முனையாகும். பொருளாதாரம் பொருளாதாரம் ("economy") என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ அல்லது இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது. இத்தகைய காரணிகள் ஒரு பொருளாதாரம் செயல்படும் இடத்தில் சூழல், உள்ளடக்கம் மற்றும் பொருளாதார நிலைகள் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல வரலாற்றின் கிளைகளான (பொருளாதார வரலாறு) அல்லது புவியியல் (பொருளாதாரப் புவியியல்) ஆகியன அடங்கியுள்ளன. மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள நடைமுறைக் களங்களில், உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ளவற்றில் பொறியியல்லிருந்து மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்திலிருந்து செயல்முறை அறிவியல் மற்றும் நிதி வரை விரிந்துள்ளன. அனைத்து வகையான தொழில்கள், வேலைகள், பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும். மேலும் அவை சந்தைச் சமநிலையைத் தீர்மானிக்கின்றன. பொருளாதார நடவடிக்கையில் மூன்று முக்கியத் துறைகளுள்ளன, அவையாவன: விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை ஆகும். ஆங்கிலச் சொற்களான "பொருளாதாரம்" மற்றும் "பொருளியல்" ஆகியவை கிரேக்க சொற்களான "οἰκονόμος" "குடும்பத்தை நிர்வகிப்பவர்" ("οἴκος" "வீடு, மற்றும் "νέμω" "விநியோகம் (குறிப்பாக நிர்வகிக்க)"), "οἰκονομία" "குடும்ப மேலாண்மை", மற்றும் "οἰκονομικός" "குடும்பத்தின் அல்லது இல்லத்தின்" ஆகியவற்றில் தடம் பொதிந்துள்ளது. "பொருளாதாரம்" எனும் சொல்லின் பதிவு செய்யப்பட்டப் பொருள் 1440 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டத்திற்கு சாத்தியமுடைய படைப்பில் காணப்பட்டது. அது "பொருளாதார விஷயங்களின் மேலாண்மை", எனும் பொருளில் இருந்தது. அது குறிப்பிட்டதொரு துறவியில்லத்தையாகும். பொருளாதாரம் பின்னர் அதிகளவில் "சேமிப்பு" மற்றும் "நிர்வாகம்" உள்ளிட்ட பொதுப்படையான பொருள்களில் பதிவுசெய்யப்பட்டன. தற்போது பெரும்பாலும் பயன்படும் "நாடு அல்லது ஒரு பகுதியின் பொருளாதார அமைப்பு", என்பது 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டு வரை மேம்படுத்தப்படாததாகக் காணப்படுகிறது. யாரேனும் ஒருவர் பொருட்கள் அல்லது சேவைகளைக் செய்தும் விநியோகித்து வரும் வரை அங்கு சில வகையான பொருளாதாரம் இருக்கும்; பொருளாதாரங்கள் சமூகங்கள் வளர்கையில் பெரிதாகின்றன. மேலும் மிகச் சிக்கலாக மாறுகின்றன. சுமேரியர்கள் பேரளவிலான பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் அவருடைய அருகாமை நகர அரசுகளும் பின்னர் நாம் நினைக்கின்ற வகையில் துவக்கக்கால பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர். இன்று விலையமைப்பு என அறியப்படுவதின் துவக்கம் அது முறைமையாக்கப்பட்டபோது ஏற்பட்டதாகும். பாபிலோனியன்கள் மற்றும் அவரது அருகாமை நகர அரசுகளும் பொருளாதார வடிவங்களை தற்போது பயன்படுத்தப்படும் குடி சமூக (சட்ட) கருத்துருவங்களுடன் ஒப்பிடக்கூடியவற்றை உருவாக்கினர். அவர்கள் வரலாற்றில் முதலாவதாக அறியப்பட்ட அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்களை நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆகியவற்றோடு முழுமையாக உருவாக்கினர். முக்கோண குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய எழுத்துக்களை கண்டுபிடித்து பல நூற்றாண்டுகள் கழிந்தப் பிறகு எழுத்தின் பயன்பாடு கடன்/பணமளிப்பு சான்றுகள் மற்றும் கணக்கு புத்தகப் பட்டியல் ஆகியவற்றைக் கடந்து முதல் முறையாக சுமார் கி.மு.2600 ஆம் ஆண்டில் செய்திகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, வரலாறு மூத்தோர்/மரபுத் தகவல், கணிதம், வானவியல் ஆவணங்கள் மற்றும் இதர முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. தனியார் சொத்தைப் பிரிக்கும் வழி, கடன் மீது வட்டி வாதிக்கப்பட்டப் போதும்..., ஒரு நபருக்கு ஏற்படும் பொருள் அல்லது சொத்து பாதிப்புகளுக்கு சொத்து, பண இழப்பீடு விதிகள்... 'தவறான செயல்களுக்கு' அபராதம் மேலும் அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்டத்திற்கு மாறாய் நடந்த பல்வேறு சிறு குற்றங்களுக்கு பண இழப்பீடு ஆகியன வரலாற்றில் முதல் முறையாகத் தரநிலைப்படுத்தப்பட்டன. பண்டைய பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஷெகல் பண்டைய எடை மற்றும் நாணய அளவாகக் குறிக்கப்படுகிறது. அவ்வரையறையின் முதல் பயன்பாடு கி.மு. 3000 ஆம் வருடத்தில் மெசொபோடாமியாவிலிருந்து வந்தது. மேலும் குறிப்பிட்ட அளவு பார்லியை இதர மெட்ரிக் மதிப்பீடுகளில் வெள்ளி, வெண்கலம், செம்பு முதலியவை போன்றதன் தொடர்பில் குறித்தது. பார்லி/ஷெகல் துவக்கத்தில் நாணய அலகு மற்றும் எடையலகு ஆகிய இரண்டுமாகும்... பிரிட்டிஷ் பவுண்ட் துவக்கத்தில் ஒரு பவுண்ட் வெள்ளியளவு மதிப்பலகு என்பது போன்றதாகும். மிக நவீன அறிஞரான ஹிரோடோடுஸ்சிற்கு இணங்க, லிடியன்ஸ் மக்களே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் பயன்பாட்டை முதல் முறையாகப் அறிமுகப்படுத்தினர். அவர்களின் முதல் முத்திரையுடைய அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் கி.மு. 650-600 வாக்கில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஒரு கிரேக்க நாணயம் கிரேக்க (பலமுறை மீண்டும் வருவது) கிரேக்க மதிப்புக்களில் தயாரிக்கப்பட்டது. நாணயத்திற்கு எண் மதிப்புத் தர, பின்னங்கள் உருவாக்கப்பட்டன அவை: திரைட் (மூன்று), ஹெக்டெ (ஆறு) மற்றும் அதற்கு கீழான மதிப்புக்களில் ஆனவையாகும். பெரும்பாலான மக்களுக்கு பொருட்களின் பரிமாற்றம் சமூகத் தொடர்புகளால் நிகழ்ந்தது. சந்தைப் பகுதிகளிலும் வணிகர்கள் பண்ட மாற்று வணிகம் செய்தனர். பண்டைய கிரேக்கத்தில், தற்போதைய ஆங்கில சொல்லான 'பொருளாதாரம்' உருவானது, பல மக்கள் சுதந்திரநபர்களால் பிணை அடிமைகளாகப்பட்டு இருந்தனர். பொருளாதார விவாதங்கள் பற்றாக்குறையால் முன் செலுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டிலே (கி.பி.384-322) முதல் முறையாக பொருட்களின் பயன் மதிப்பு மற்றும் பரிமாற்ற மதிப்பு ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாட்டை வகைப்படுத்தினார். (அரசியல், புத்தகம் I.) அவர் விவரித்த பரிமாற்ற விகிதாச்சாரம் பொருட்களின் மதிப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தொடர்புகளையும் கூட வெளிப்படுத்துகிறது. ஆகவே பொருளாதாரம் "நிலைத்த" மாற்று விகிதங்களை உருவாக்கும் நிறுவனங்களான ஆட்சி, அரசு, மதம், பண்பாடு, மற்றும் மரபு ஆகியவற்றிற்கு எதிராக நின்றது. இடைக் காலங்களில், நாம் இப்போது பொருளாதாரம் என அழைப்படும் சுயத் தேவைகளிலிருந்து மிகவும் விலகி இருக்கவில்லை. பெரும்பாலான பரிமாற்றங்கள் சமூக குழுக்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. இதன் மீதே, பெரிய வெற்றியாளர்கள் செயல் மூலதனத்தை ("வென்சூரா" , இத்தாலி; "இடர்" ) தங்களின் பிரதேச கைப்பற்றல்களுக்கு நிதியுதவியளிக்க திரட்டினர். மூலதனமானது அவர்கள் புதிய உலகிலிருந்து கொண்டு வரும் பொருட்களின் வாயிலாக திரும்ப அளிக்கப்படும். ஜாகோப் ஃபூகர் (1459-1525) மற்றும் ஜியோவானி டி பிக்கி டெ' மெடிசி (1360-1428) போன்றோர் முதல் வங்கியை நிறுவினர். மார்கோ போலோ (1254-1324), கிறிஸ்டபர் கொலம்பஸ் (1451-1506) மற்றும் வாஸ்கோ டா காமா (1469-1524) ஆகியோரின் கண்டுபிடிப்புகள் முதல் உலக பொருளாதாரத்திற்கு வழியேற்படுத்தியது. முதல் தொழில்கள் வணிக நிறுவனங்களாகும். 1513 ஆம் ஆண்டில் முதல் பங்குச் சந்தை ஆண்டெவெர்ப்பில் நிறுவப்பட்டது. பொருளாதாரம் முதன்மையாக அக்காலத்தில் வணிகம் என பொருள் கொள்ளப்பட்டது. ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டவை ஐரோப்பிய அரசுகளின் கிளைகளாக ஆயின, அவை காலனிகள் என அழைக்கப்பட்டன. எழுகின்ற தேச-அரசுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன் மற்றும் நெதர்லேண்ட்ஸ் ஆகியன அவர்களின் தேசிய பொருளாதாரத்தை காக்க வணிகத்தை சுங்க வரிகள் மற்றும் வரிகள் மூலம் கட்டுப்படுத்த முயன்றனர். மெர்கண்டலிசம் ("மெர்கேடார்" , லத்தீன்: வணிகர்) தனியாரின் செல்வம் மற்றும் பொது நலன்கள் இடையே நடுவராக செயல்படுவதற்கான முதல் அணுகுமுறையாகும். ஐரோப்பாவை மதச்சார்பற்றதாக ஆக்கிய முயற்சி அரசுகளை நகரங்களின் உருவாக்கத்திற்கு சர்ச்சுகளின் ஏராளமான சொத்துக்களைப்பயன்படுத்த அனுமதித்தது. பிரபுக்களின் செல்வாக்கு குறைந்தது. முதலாவது பொருளாதாரத்திற்கான அரசுச் செயலர்கள் தமது பணிகளைத் துவங்கினர். அம்ஸ்ஷெல் மேயர் ரோத்ஸ்சைல்ட் (1773-1855) போன்ற வங்கி அதிபர்கள் போர்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற தேசிய செயல்திட்டங்களுக்கு நிதியளிக்கத் துவங்கினர். பொருளாதாரம் அது முதல் தேசியப் பொருளாதாரம் என நாட்டின் குடிமக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான தலைப்பாகியது. பொருளாதாரவாதி எனும் சொல்லின் உண்மையான பொருளுக்கானவர் ஸ்காட்லாந்து நாட்டின் ஆடம் ஸ்மித் (1723-1790) ஆவார். தேசியப் பொருளாதாரத்தின் கூறுகளை அவர் விவரித்தார்: உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இயல்பான விலையில் போட்டியைப் பயன்படுத்தி - அளிப்பு மற்றும் தேவை - மற்றும் வேலை பகுப்பு முறை இவற்றால் அளிக்கப்படுகின்றன. சுதந்திர வர்த்தகத்தின் அடிப்படை நோக்கம் மனிதர்களின் சுய நலன்களே என அவர் வாதிட்டார். சுய நலன் கருத்தியல் பொருளாதாரத்தின் மானுடவியல் அடிப்படையாக ஆகியது. தாமஸ் மால்தஸ் (1766–1834) அளிப்பு மற்றும் தேவை சிந்தனையை மிகை மக்கள் தொகை பிரச்சினைக்குக் கடத்தினார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் குடியேறிகளின் இடமாக சுதந்திரமான[[பொருளாதார வளர்ச்சி]]க்கு ஆட்படுவதற்கு தேடுதலாக அமைந்தது. ஐரோப்பாவில் கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் மெர்கண்டலிச அமைப்பை மாற்றியமைக்கத் துவங்கி (இன்று: பாதுகாத்தலியம்) பொருளாதார வளர்ச்சிக்கு வழிவிட்டது. இன்று அந்தக் காலம் தொழிற் புரட்சி என அழைக்கப்படுகிறது; ஏனெனில் உற்பத்தியமைப்பும் வேலை பகுப்பு முறையும் பொருட்களின் பேரளவு உற்பத்தியை சாத்தியமாக்கின. இங்கிலாந்தில் துவங்கி, ஒரே சமயத்தில் தொடர்புடைய இயந்திரமயமாக்கலின் வழிமுறையும் பொதுமக்களின் ஆற்றலை அடைத்துவைத்ததும் மூலதனத்தைக் கட்டுபடுத்துபவர்களின் செல்வத்தின் வளர்ச்சிக்கு வழிவிட்டது. அத்தோடு, பேரளவு வறுமை, பட்டினி, நகரமயமாக்கல் மற்றும் திவாலாகுதல் ஆகியவற்றை மக்கள் தொகைக்கு ஏற்படுத்தியது. இது கார்ல் மார்க்ஸ் (1818-1883) மற்றும் ஜெர்மானிய தொழிலதிபர் மற்றும் தத்துவவாதி பிரெடரிக் ஏங்கெல்ஸ் (1820-1895) போன்றவர்களை பொருளாதாரத்தை "முதலாளித்துவ அமைப்பு" என விவரிக்க ஏதுவாக்கியது. முதலாளித்துவம் வேலைப் பிரிவினையை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான குணாம்சமாகக் கொண்டது, அதில் உற்பத்தி வழிமுறைகள் நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கத்தால் சொந்தமாக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாளர் வர்க்கம் உபரி மதிப்பை உற்பத்திச் செய்கிறது; அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தொழிலாளர்களுக்கு கூலி வடிவில் அவர்களின் குறைந்தப் பட்ச வாழ்க்கைக்கு திரும்ப அளிக்கப்படுவதாக நம்பினர். மீதமுள்ள உபரி மதிப்பு இலாபமாக வைக்கப்படுகிறது. மேலும் முதலாளியால் பொருட் சுழற்சி நடவடிக்கையில் மறு முதலீடு செய்யப்படுகிறது. சந்தையின் போட்டி சக்திகள் மூலதனத்தை "கூடுதல் மூலதன சேர்க்கையின் நலனுக்கு" தொடர்ச்சியாகச் சேகரிக்க உந்துகின்றன. விளைவாக ஏகபோகம், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்துவத்தை, நிலப்பிரத்துவம் மற்றும் வேட்டையாடும் சமூகங்கள் என்பவற்றுடன் அதன் சொந்த உள் முரண்பாடுகளை பினைத்துக் கொண்டதொரு வரலாற்று ரீதியிலான- குறிப்பிட்ட உற்பத்தி முறையாகப் பார்த்தனர். முதலாளித்தும் அதில் ஈடுபட்டுள்ள நேரடி உற்பத்தியாளர்கள் அவற்றின் மீதான வேலைச் சூழல் அல்லது உற்பத்தி வழிமுறைக் கட்டுப்பாடுகளைக் கொள்ளாதவாறு ஓர் உற்பத்தி வழிமுறையாகும். அதுவே அவ்வாறு முதன் முறையாக அமைந்த உற்பத்தி வழிமுறையாகும். தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலின் வீழ்ச்சி தொழிலாளர்களை ஒன்றாக இணைந்து வர்க்கப் போராட்டமாக எதிர்த்துப் போராட வைக்கும், விளைவாக முதலாளித்துவ அரசை உழைப்பாளர்கள் வர்க்கப் புரட்சியில் தூக்கியெறிந்து, ஜனநாயக ரீதியிலான திட்டமிட்ட பொருளாதாரத்தை நிறுவி, அதில் நேரடி உற்பத்தியாளர்களாக தாங்களே - உழைப்பாளிகளே - மனிதத் தேவைகளை தீர்க்க, இலாபத்தைச் சேர்க்க அல்லாமல் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவர். ஆகையால் பொதுவுடைமைப் பிரகடனத்தில், மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்தும் நகர்மயமாக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை இருத்தலுக்கு கொண்டுவருகிறது. அவர்களே முதலாளித்துவத்தின் 'சவக்குழியை தோண்டுபவர்களாக ஆகின்றனர். அதற்கு உறுதுனையாக பொருளியல் சூழல்களும், பெரும் செல்வக் குவிப்பும் வர்க்க பேதமற்ற சோஷலிச சமுதாயத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைகின்றன. முதலாவது மையப்படுத்தப்பட்ட திட்டமிட்டப் பொருளாதாரம் 1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், போல்ஷெவிக் கட்சியினால் நிறுவப்பட்டது, அதில் உற்பத்தி சோவியத் என அழைக்கப்பட்ட தொழிலாளர் குழுக்களைச் சுற்றி அமைக்கப்பட்டது. அதே போன்ற ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரும்ப அழைக்கப்படக்கூடிய தொழிலாளர் பிரதிநிதிகளின் குழு பின்னர் வந்த புரட்சிகளிலும், புரட்சிகர சூழல்களிலும், 20 ஆம் நூற்றாண்டு முழுதும், 1936 ஸ்பானிஷ் புரட்சி, 1974 போர்ச்சுகலின் கார்னேஷன் புரட்சி, 1979 இரானியப் புரட்சி மற்றும் போலந்தின் 1980 சாலிடாரிட்டி எழுச்சி உள்ளிட்டவைகளில் இருந்தது. இரு உலகப் போர்கள் மற்றும் பேரழிவை உண்டாக்கிய பொருளாதார மந்தநிலை பெருங் குழப்பங்களுக்குப் பிறகு, கொள்கை வகுப்பாளர்கள் பொருளாதாரத்தின் போக்கினை கட்டுப்படுத்த புதிய வழிகளைத் தேடினர். இது பிரெடெரிக் அகஸ்ட் வான் ஹயேக் (1899-1992) மற்றும் மில்டன் ஃபிரீட்மேன் (1912-2006) ஆகியோரால் தேடப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தது, அவர்கள் உலக சுதந்திர வர்த்தகத்திற்கு பரிந்துரைத்தனர் மேலும் புதிய தாராளவாதம் என அழைக்கப்படுதின் தந்தையர்கள் எனக் கருதப்பட்டனர். இருப்பினும், ஜான் மேனார்ட் கீன்ஸ் (1883-1946) என்பவர், அரசினால் வலுவான கட்டுப்பாடுகளைச் சந்தையில் கொண்டுவர வாதிட்டார். அதுவே மேலோங்கியிருந்தப் பார்வையாகும். அக் கருத்தியலானது பொருளாதாரப் பிரச்சினைகளை நீக்க, பொருளாதார வளர்ச்சியை அரசின் மொத்தத் தேவையை திறமையாகக் கையாண்டு தூண்டலாம் என்பதேயாகும். அது 'கீனீசயனியம்' என அவரைக் கௌரவப்படுத்த அழைக்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அமெரிக்க ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி விர்ச்ஷாஃப்ஸ்வுண்டர் எனும் (ஜெர்மனி: "பொருளாதார அதிசயம்" )- புதிய வடிவிலான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தது, அது: பேரளவு நுகர்வு பொருளாதாரம் என்பதாகும். 1958 ஆம் ஆண்டில் ஜான் கென்னத் கால்பிரியத் (1908-2006) முதலாவதாக செல்வ வளமிக்க சமூகத்தைப் பற்றி பேசுகிறார். பெரும்பாலான நாடுகளில் பொருளாதார அமைப்பானது ஒரு சமூகப் பொருளாதாரச் சந்தையென அழைக்கப்படுகிறது. பொருளாதார நிபுணர் ராபர்ட் ரீச் வரையறுக்கிறார், பொருளாதாரம் "முற்றிலும் பொற்காலமாக இல்லாதது" (இரண்டாம் உலகப் போரிலிருந்து 1970 களின் மத்தி வரை)தற்போதைய உலகப் பொருளாதாரத்திற்கு அல்லது "பேரியல் முதலாளித்துவத்" திற்கு வழிவிட்டது. இந்தப் பொருளாதார புரட்சி மேனாட்டு பண்பாடுகளின் அடிப்படை மாற்றங்களுக்கும், மேனாட்டு ஜனநாயக அரசியலிற்கு உள்ளடங்கிய ஆளும் வர்க்கத்தினர்/செல்வராட்சி வளர்ச்சிப் போக்குகளுக்கு இணையாக ஏற்பட்டது. அத்தகைய விஷயங்களை உலக வங்கி, உலக வர்த்தக மையம் மற்றும் உலக பொருளாதார அமைப்பிற்குள்ளான உலகளவிலான பங்கேற்பாளர்களின் அரசியல் என்பதாக விவாதிப்பதும், அதே போல உலக வாழ்க்கைச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சி போன்ற அனைத்தும் "பொருளாதாரம்" என்பதின் விளக்கத்தை செல்வாக்கிற்குட்படுத்தியது. ஜோசப் ஈ. ஸ்டிக்லிட்ஸ் பொருளாதாரத்தை "உலகப் பொதுச் சரக்காக" விவரித்தார். பீட்டர் பார்ன்ஸ் மற்றும் அலெக்ஸாண்டர் டில் போன்ற பொருளாதார நிபுணர்கள் பொதுப்படையானவற்றை மீண்டும் சீர்த்திருத்துகின்றனர் மற்றும் இலவச மென்பொருள் போன்ற புதிய விஷயங்களை தழுவுகின்றவாறான விளக்கங்களையும் கொடுக்கின்றனர். எர்னெஸ்ட் ஃபெகர் மற்றும் கிளாஸ் எம். ஷூமிட் போன்ற கேம் கருத்தியல்வாதிகள் எங்கும் நிறைந்திருக்கிற பொருளாதார தன்னல எண்ணத்துடன் முரண்படுகின்றனர். அருந்திற பொருளாதாரத்தின் கீழ் விரிவான கீழ்மட்ட இயக்கங்கள் எழுந்துள்ளன; கூடவே நோபல் பரிசுப் பெற்ற முகம்மது யூனூஸ் ஆகியோரின் கடன் திட்டங்களும் வளர்ந்துள்ளன. 2006 ஆம் ஆண்டில் உலக வங்கி அதன் "வெல்த் ஆஃப் நேஷன்ஸ்" அறிக்கையினைச் சமூக மற்றும் மனித மூலதனத்தைத் தடமறிய வெளியிடத் துவங்கியது. பொருளாதாரம் பின் வந்த காலங்களில் ஏற்பட்ட பல துறைகளை (தொழில்கள் எனவும் அழைக்கப்படுபவை) உள்ளடக்கியது. நவீனப் பொருளாதாரங்களில் நான்கு முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் உள்ளன: பொருளாதார மேம்பாட்டின் பல்வேறு கட்டங்களைப் பற்றிய அதிகமான விவரங்கள் இக் கட்டுரையின் வரலாற்றுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. புவிவியல் ரீதியாக இந்த வழிமுறை ஒரே மாதிரியானத் தன்மையுடனிருப்பதில் தூர விலகியிருந்தாலும், இந்தத் துறைகளினிடையேயான சமநிலை உலகின் பல்வேறுப் பகுதிகளின் மத்தியில் விரிந்து வேறுபட்டுள்ளது. இதர துறைகளில் உள்ளடங்கியவை தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை: மொத்த உள்நாட்டு உற்பத்தி - ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் பொருளாதாரத்தின் அளவின் அளவீடாகும். ஒரு நாட்டின் மிக மரபுச் சார்ந்த பொருளாதார அலசல்கள் பொருளாதார அறிகுறிகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி போன்றவற்றை அதிகமாகச் சார்ந்துள்ளது. அதேபோல பலமுறை பயன்படுவதால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட பொருளாதார நடவடிக்கையை மட்டுமே உள்ளடக்கியது என்பதைக் குறிக்க வேண்டும். ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் என்பது வரிகளுக்கு உட்படாததும் அரசினால் கண்காணிக்கப்படாததும் முறையான பொருளாதாரத்துடன் முரண்பட்டதுமானது ஆகும். ஆகையால், ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் அரசின் மொத்த தேசிய உற்பத்தியில் (GNP) யில் உள்ளடக்கப்படவில்லை. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் வளரும் நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் அனைத்து பொருளாதார அமைப்புகளும் சில விகிதாச்சாரங்களில் ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதார நடவடிக்கை ஒரு சுறுசுறுப்பான வழிமுறை. அதில் பல பொருளாதார மற்றும் சமூக கருத்தியல் அம்சங்களான பரிமாற்றம், கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. அதன் இயல்பில், அதை நோக்குவது, ஆராய்வது, விளக்குவது மற்றும் அளப்பது இன்றியமையாத தேவையாய் கடினமாயுள்ளது. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தை ஆய்வுக்கான அலகாக எந்தவொரு தனித்த ஆதார மையங்களும் தயாராகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ விளக்குவதில்லை. இது போன்ற பொருளாதார வகையை "மேஜைக்கு அடியில்" மற்றும் "புத்தகத்தில் இடம்பெறாத" போன்ற வழக்கமான வரையறைகள் குறிக்கின்றன. கருப்புச் சந்தை எனும் வரையறை ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பொருளாதார உட் பகுதியைக் குறிக்கிறது. "ஒழுங்கு முறைச் சாராத" எனும் வரையறை பல முன்னாள் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது, மேலும் சமீப ஆய்வுகளில் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டது. அது புதிய வரையறையைப் பயன்படுத்துகிறது. நுண்ணியல் பொருளாதாரம் குறிப்பிட்ட பொருளாதார சமூகத்தில் தனி நபர் மீது கவனம் கொள்கிறது. மேலும் பேரியல் பொருளாதாரம் பொருளாதாரம் முழுமையையும் காண்கிறது. (நகரம், மாநகரம், பிரதேசம்). பொட்டல நிலைமாற்றல் பொட்டல நிலைமாற்றல் (ஆங்கிலம்: "Packet Switching") என்பது கணினி வலையமைப்புகளில் தரவுகளைப் பரிமாறுவதற்கு உதவும் வழியாகும். இந்த முறை மூலம் தரவுகளைப் பரிமாறுவதற்குப் பொட்டலங்கள் பயன்படுகின்றன. அதாவது, பொட்டல நிலைமாற்றலின்போது பரிமாறப்படும் தரவுகள் பொட்டலங்களாகப் (சிறு பகுதிகளாக) பிரித்து அனுப்பப்படும். பொட்டலம் என்பது சில அல்லது பல கூறுகளைக் கொண்ட சீரிய அமைப்பாகும். இந்த முறை மூலம் தரவுகளைப் பரிமாறுகையில் சமிக்ஞைகள் உருக்குலையாது பயணிக்கும். ஆனாலும் இணைய இணைப்பிலுள்ள கோளாறுகள் காரணமாகச் சில சந்தர்ப்பங்களில் பொட்டலங்கள் அனுப்பப்படாது விடலாம். இந்நிலை பொட்டல இழப்பு எனப்படும். தரவுகளைச் சிறு பொட்டலங்களாகப் பிரித்து அனுப்பலாம் என்ற எண்ணக்கரு முதன்முதலாக 1960களின் முற்பகுதியில் போல் பாரன் என்ற விஞ்ஞானியால் முன்வைக்கப்பட்டது. பின்னர், இலியோனாட் கிளின்ரொக் என்பவர் பொட்டல நிலைமாற்றல் சேவையைப் பயன்படுத்துவதற்கான இணைப்புத் தொகுப்பொன்றை அமைத்தார். இதனை அமைப்பதற்காக 1959ஆம் ஆண்டில் ஆய்வொன்றை ஆரம்பித்தார். இவர் இதற்காகவெனவே கலாநிதிப் பட்டத்தை 1962ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரே பொட்டல நிலைமாற்றல் சேவையின் தந்தை என அழைக்கப்படுகின்றார். வலையமைப்புகளில் பாதைக் கொள்ளளவின் பயனை உச்ச அளவில் பெறுவதற்கும் தரவுகள் வலையமைப்பைக் கடப்பதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைப்பதற்கும் தொடர்பாடலின் உரன் உடைமையை அதிகரிப்பதற்கும் பொட்டல நிலைமாற்றல் சேவை பயன்படுத்தப்படுகின்றது. பொட்டல நிலைமாற்றல் சேவையானது இணையத்திலும் பெரும்பாலான இடத்துரி வலையமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. புதிய நகர்பேசித் தொழினுட்பங்களிலும் (உ-ம்: பொதுச் சிறு பொதி அலைச் சேவை) பொட்டல நிலைமாற்றல் சேவை பயன்படுத்தப்படுகின்றது. 1740 1740 ((MDCCLII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி 3 இலிருந்து சனவரி 9 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது. மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன. பிருட்டே கால்டிகாசு பிருட்டே கால்டிகாசு (ஆங்கிலம்:"Biruté Marija Filomena Galdikas") (பிறப்பு:மே 10, 1946 செர்மனி) முதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண் ஆய்வாளர் ஆவார். நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான் பற்றிய ஆய்வில் முதன்மையானவர் ஆவார். மேலும் இவர் ஒராங்குட்டான்களைப் பற்றி பல நூல்களும் எழுதியுள்ளார். இளவயது முதலே இயற்கை, மனிதத் தோற்றம் பற்றி ஆர்வம் கொண்டிருந்த கால்டிகாசு, உயிரியல், உளவியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் மாந்தவியல் பற்றிய முதுகலைப்படிப்பின் போது புகழ்பெற்ற தொல்லுயிர் ஆய்வாளரான முனைவர். லூயிசு லீக்கியைச் சந்தித்தார். பின்னர் லீக்கி நேசனல் சியாகிரபிக் சொசைட்டி என்ற அமைப்பின் உதவியுடன் ஒராங்குட்டான்களைப் பற்றி ஆராய போர்னியோவில் ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவ கால்டிகாசுக்கு உதவினார். இவர் 34 ஆண்டுகள் காடுகளில் ஒராங்குட்டான்களைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார். கால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார். கால்டிகாசும் முதனியியல் துறையில் லீக்கி அவர்களின் கீழ் ஆய்வு செய்த மற்ற இரு பெண்களான சேன் குட்டால், மற்றும் டயான் வாசி ஆகியோரும் தற்காலத்தில் "லீக்கியின் தேவதைகள்" என்று அழைக்கப்படுகின்றனர். தங்கனீக்கா ஏரி டாங்கனிக்கா ஏரி (அல்லது தங்கனீக்கா ஏரி) ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரி ஆகும். இவ்வேரி கொள்ளளவில் உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியும் உலகின் இரண்டாவது ஆழமான ஏரியும் ஆகும். இவ்விரு கூறுகளிலும் சைபீரியாவின் பைக்கால் ஏரி முதலிடத்தில் உள்ளது. இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு (கா.ம.கு), தான்சானியா, சாம்பியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. எனினும் ஏரியின் பெரும்பகுதி கா.ம.கு (45%), தான்சானியா (41%) ஆகிய நாடுகளிலேயே அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் காங்கோ ஆற்றில் கலந்து இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்கிறது. "டாங்கனிக்கா" என்ற சொல்லுக்கு "சமவெளி போன்று பரவியிருக்கும் மிகப்பெரிய ஏரி" அல்லது "சமவெளி போன்ற ஏரி" என்பது பொருளாக குறிப்பிடப்படுகிறது." தங்கனிக்கா ஏரியானது கிழக்கு ஆப்பிரிக்க பிளவின் மேற்கு கிளைக்கும், அல்பெர்டைன் பிளவுக்கும் இடையில் மலைச்சுவற்றின் பள்ளத்தாக்கில் அடைபட்டுள்ள நீரினைக் கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பிளவு ஏரியாகவும்,கொள்ளவில் உலகின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது. இது ஆப்பிரிக்காவின் ஆழமான ஏரியான இது உலகிலுள்ள மொத்த நன்னீரில் 16% அளவைக் கொண்டுள்ள மிகப்பெரிய ஏரியாகும். தங்கனிக்கா ஏரியானது வடக்கு தெற்கு திசையில் 676 கி.மீ (420 மைல்கள்) நீளமும் சராசரியாக 50 கி.மீ அகலத்திலும் (31 மைல்கள்) பரவியுள்ளது. இந்த ஏரி 32,900 கிமீ (12,700 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. 1,828 கிமீ (1,136 மைல்) தொலைவிலான கரையோர தொலைவினைக் கொண்டுள்ளது. சராசரி ஆழம் 570 மீட்டராகவும் (1,870 அடி) மற்றும் உச்ச ஆழம் 1,470 மீட்டர் (4,820 அடி) (வடக்கு பகுதி) ஆழத்தைக் கொண்டுள்ளது. இந்த ஏரியானது 18,900 கன கிலோமீட்டர் (4,500 கன மில்லியன்) கொள்ளளவைக் கொண்டுள்ளது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி 231,000 கிமீ 2 (89,000 சதுர மைல்) ஆகும். இரண்டு முக்கிய ஆறுகள் ஏரிக்குள் பாய்கின்றன அத்துடன் பல சிறிய நதிகளும் நீரோடைகளும் (அதன் நீளமானது ஏரி முழுவதும் செங்குத்தான மலைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது) பாய்கின்றன. ஒரு பெரிய வெளியேறும் நதியானது லுகாகா நதி ஆகும். இது காங்கோ ஆற்று வடிநிலப் பகுதிக்குள் நுழைகிறது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ரூசிசி நதி ஏரியில் பாயும் முக்கிய நதி ஆகும், இது கியுவா ஏரியிலிருந்து ஏரிக்கு வடக்கே நுழைகிறது. தான்சானியாவின் இரண்டாவது பெரிய ஆறான மலகாரசி நதி, டங்கானிக்கா ஏரியின் கிழக்குப் பகுதியில் நுழைகிறது. மலகராசி ஏரி தங்கனீக்காவை விடவும் பழமையானது இந்த ஏரி தோன்றுவதற்கு முன்பு காங்கோ நதியுடன் நேரடியாக கலந்து கொண்டிருந்தது. இந்த ஏரியானது அதன் உயரமான அமைவிடம், பெரிய ஆழம், காலநிலை மாற்றங்கள் நிறைந்த கொந்தளிப்பான எரிமலை நிலப்பகுதி, மெதுவாக நிரம்பும் ஏரி அமைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் ஆகியவற்றின் காரணமாகவும் மாறுபடும் பாய்வுப் பாங்கு ஆகியவற்றால் ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது. கடந்த காலங்களில் அரிதாகவே கடலுக்கு செல்லும் வழிந்தோட்டம் நிகழ்வுகள் இருந்தன. கடலுக்கான இந்த இணைப்பு, ஏரியானது உயர் மட்டளவைத் தாண்டும் போது லுங்காங்காவின் வழியாக காங்கோவிற்குள் ஏரியிலிருந்து நீரைக் கடக்க அனுமதிக்கிறது. ஏரி உயர்ந்த ருக்வாவிலிருந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது, ஏரி மலாவிக்கு அணுகல் மற்றும் நைலை நோக்கி ஒரு வெளியேறும் பாதை அனைத்தும் ஏரியின் வரலாற்றில் சில இடங்களில் இருந்திருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது.சில நேரங்களில் வெவ்வேறு உட்பாயும் மற்றும் வெளிச்செல்லும் நீர்ப்பாதைகளைக் கொண்டுள்ள தங்கனீக்காவிற்கு உயர் மட்டத்தில் இருக்கும் ருக்வா ஏரியிலிருந்து நீர் வரத்து உள்ளது. இது மலாவி ஏரிக்கான அணுகல் மற்றும் நைல் நதியை நோக்கி ஒரு வெளியேறும் பாதையும் ஒரு சில இடங்களில் இருந்திருக்ககூடும் என்பது போன்றவை ஏரியின் வரலாராக முன்மொழியப்படுகிறது. தங்கனீக்கா ஏரியானது ஒரு பழமையான ஏரியாகும். மிகக் குறைவான நீரின் அளவுகளில் தனித்தனி ஏரியாகக் காணப்படுகின்றன. இவை மூன்றும் வெவ்வேறு வயதுடையவை. மையத்திலுள்ள ஏரியின் பகுதியானது சுமார் 9-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், வடக்கு பகுதியானது 7-8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் மற்றும் தெற்குப் பகுதியானது 2-4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றியதாக அறியப்படுகிறது. தங்கனீக்கா ஏரியில் பல தீவுகள் அமைந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை தங்கனீக்கா ஏரியின் நீரானது காரத்தன்மை வாய்ந்தது.பூச்சியம் முதல் நூறு மீட்டர் (0-330 அடி) ஆழத்தில் ஏரி நீரின் அமில காரத் தன்மையானது 9 ஆகும். அதற்குக் கீழே கிட்டத்தட்ட 8.7 என்ற அளவில் உள்ளது. இந்த அளவானது படிப்படியாக குறைந்து ஏரியின் ஆழமான பகுதிகளில் 8.3-8.5 ஆக உள்ளது. மின் கடத்துத்திறன் இந்த நீரில் காணப்படுகிறது. இந்த அளவானது உயரமான பகுதியில் 670 μS/செ.மீ என்ற அளவிலும் ஆழமான பகுதியில் 690 μS/செ.மீ என்ற அளவிலும் உள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏரியின் தென்பகுதி மேற்பரப்பு வெப்பநிலை வீச்சு பொதுவாக 24 °C (75 °F) தொடங்கி பிந்தைய மார்ச்-ஏப்ரல் மழைக்காலங்களில் 28–29 °C (82–84 °F) வரை உள்ளது. 400 மீட்டர் (1,300 அடி) மிகையான ஆழத்தில் வெப்பநிலையானது 23.1–23.4 °C (73.6–74.1 °F) என்ற அளவில் மிகவும் நிலையாக உள்ளது. இந்த ஏரியில் பருவகால கலவை பொதுவாக 150 மீ (490 அடி) ஆழத்திற்கு அப்பால் நீடிப்பதில்லை. பருவ கால மாற்றங்கள் 490 அடியைத் தாண்டி தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. இந்த பருவகால கலப்பு நிலை முக்கியமாக தெற்கில் மேல்நோக்கிய காற்று-உந்துதல் செயல்பாடு குறிப்பிட்ட அளவிலும் கீழ்ப்பகுதி ஏரியில் நீட்சியடைகிறது. ஏரியின் அடிப்பகுதியில் "புதைபடிம நீர்" காணப்படுகிறது. ஏரியின் ஆழப்பகுதிகளில் உயிர்வளி (ஆக்சிசன்) காணப்படுவதில்லை (உயிரகக் குறைபாடுடைய). இத்தகைய தகவமைப்புகளால் மீன் உள்ளிட்ட காற்றுச் சுவாச நீருயிரிகள் ஏரியின் மேல் மட்டத்தில் வாழ கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இது ஏறக்குறைய 100 மீட்டர் (330 அடி) ஏரிகளின் வடக்கு பகுதியிலும் மற்றும் 240-250 மீ (790-820 அடி) தெற்கிலும் இந்த வரம்பில் சில புவியியல் மாறுபாடுகள் கானப்படுகின்றன. ஆக்ஸிஜன் குறைபாடுள்ள ஆழ்ந்த பகுதிகள் அதிக அளவு ஹைட்ரஜன் சல்பைடு நச்சு வாயுக்கள் காணப்படுகின்றன. இது பாக்டீரியாவைத் தவிர மற்ற உயிரிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும். தங்கனீக்கா டீரி மற்றும் அதனோடு தொடர்புடைய ஈரநிலப்பகுதிகள் நைல் முதலைகள் வாழும் பகுதிகளாக உள்ளன. பல்வேறு வகையான நன்னீர் ஆமை இனங்கள் கானப்படுகின்றன. இந்த ஏரியில் வாழும் மீன்களை உண்ணும் இயல்புடைய இந்த ஏரியில் மட்டுமே வாழக்கூடிய தண்ணீர் நாகப்பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் இந்த ஏரியில் இருக்கும் கரையோர பாறைகளில் வாழக்கூடியதாக இப்பாம்புகள் உள்ளன. கடல் அட்டைகள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட மற்றும் பல அறியப்பெறாத முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் இந்த ஏரியில் காணப்படுகின்றன. கடற்பாசிகள், கடற்பஞ்சுகள், சொறிமுட்டை போன்ற உயிரினங்களும் காணப்படுகின்றன. ஏரியைச் சுற்றிலும் உள்ள பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் 25-40% புரதத் தேவைகளை இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் பூர்த்தி செய்கின்றன. தற்பொழுது கிட்டத்தட்ட 800 மீன்பிடித் தளங்களில் இருந்து சுமார் 100,000 பேர் மீன்படித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஏரியானது சுமார் 10 மில்லியன் மக்களின் வாழ்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. தங்கனிக்கா ஏரியின் மீன்களானது கிழக்கு ஆப்ரிக்கா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1950 களின் நடுப்பகுதியில் வணிகரீதியான மீன்பிடி தொழில் இப்பகுதியில் தொடங்கியது இதனால் கடலின் மீன் வகைகளில் மிக அதிக தாக்கத்தை உள்ளூர் மீன்பிடித் தொழில் ஏற்படுத்தியது; 1995 ஆம் ஆண்டில் இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்களின் மொத்த எடையானது 180,000 டன்களாக இருந்தது. தங்கனீக்கா ஏரியின் கிழக்கு கரையில் இரண்டு விசைப்பொறி படகுப்போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. லியெம்பா படகானது கிகோமா முதல் புளுங்கா இடையிலும் ம்வொன்கோசோ படகுப்போக்குவரத்தானது கிகோமா முதல் புஜூம்புரா வரையிலும் நடைபெறுகிறது. கங்கோமா துறைமுக நகரம் தான்சானியாவில் தார் எஸ் சலாம் தொடருந்து நிலையத்திலிருந்து தொடங்கும் தண்டவாளத் தலையாகும். கலாமி துறைமுக நகரம் (முன்பு ஆல்டிபர்ட்வில்லி என்றழைக்கப்பட்டது) டி. ஆர் காங்கோ தொடருந்து வலைப்பின்னலுக்கான தண்டவாளத் தலையாகும்.சாம்பியாவின் துறைமுக நகரமான முப்புளுங்கு ஒரு உகந்த பாதையாக உள்ளது.2014 ஆம் ஆண்டு திசம்பர் 12 ஆம் நாள் முட்டம்பலா விசைப்பொறி படகானது தங்கனீக்கா ஏரியில் மூழ்கியதில் 120க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயினர். அணுக்கரு ஆயுதங்கள் அணுகுண்டு () என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு திணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்திருந்து அதைப் பெருவேகத்தில் வெளிப்படுத்துவதே அணுகுண்டின் தத்துவமாகும்.முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. முதல் ஐதரசன் குண்டின் பரிசோதனையின் போது அண்ணளவாக 10 மில்லியன் தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. இரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, "சின்னப் பையன்" எனப் பெயரிடப்பட்ட யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு சப்பானிய நகரமான இரோசிமாவில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று "குண்டு மனிதன்" எனப் பெயரிடப்பட்ட புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு சப்பானிய நகரான நாகசாகியில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர். சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது. இரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அணுவாயுதத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. அவை அணுக்கருப் பிளவின் மூலம் மட்டும் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியன மற்றும் அணுக்கரு இணைவின் மூலம் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியனவாகும். இவற்றுள் அணுக்கரு இணைவின் மூலம் இயங்கும் அணுவாயுதத்தில் தாக்கத்தை ஆரம்பிப்பதற்கான சக்தி அணுக்கருப் பிளவின் மூலம் வழங்கப்படும். இதன் விளைவாக உருவாகும் அணுக்கரு இணைவுத் தாக்கம் அதிகளவிலான சக்தியை வெளிப்படுத்தும். பாவனையிலுள்ள அனைத்து அணுவாயுதங்களும் தமது வெடிப்புச் சக்தியில் சிறியளவான பகுதியை அணுக்கருப் பிளவுத் தாக்கங்களினால் பெறுகின்றன. தனியே அணுக்கருப்பிளவுச் சக்தியை மாத்திரம் வெளியிடும் ஆயுதங்கள் "அணுகுண்டு" எனப்படும். அணுக்கருப் பிளவு ஆயுதங்களில் பிளவுறு பொருளொன்று (செறிவாக்கப்பட்ட யுரேனியம் அல்லது புளூட்டோனியம்) அவதித் திணிவிலும்-அடுக்குக்குறி வளர்ச்சியுடைய கருச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திணிவு-சிறிது கூடியளவில் சேர்க்கப்படும். இதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வகையில் அவதித் திணிவிலும் குறைந்த பிளவுறு பொருளின் மீது இன்னொரு சிறு திணிவுடைய பிளவுறு பொருள் பாய்ச்சப்படும். மற்றைய வகையில் இரசாயன வெடிபொருள்களைப் பயன்படுத்தி பிளவுறு பொருள் நெருக்கப்பட்டு அதன் அடர்த்தி மிக அதிகமாக்கப்படும். இரண்டாவது முறையானது முதலாவது முறையிலும் மிகவும் சிக்கலானது என்பதுடன், புளூட்டோனியம் வகை ஆயுதங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படும். அணுக்கரு ஆயுத உருவாக்கத்தில் உள்ள பாரிய சவால் அணுவாயுதம் தானாக அழிவதற்கு முன் குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதாகும். பிளவு ஆயுதங்களினால் வெளியிடப்படும் சக்தி ஒரு தொன் TNT அளவு சக்தியிலிருந்து 5லட்சம் தொன் TNT அளவு வரை வேறுபடும். அனைத்து பிளவுத் தாக்கங்களும் பிளவுப் பொருட்கள் எனப்படும், அணுக்கருவின் கதிர்த் தொழிற்பாடுடைய துகள்களை உருவாக்குகின்றன. பல பிளவுப் பொருட்கள் உயர்கதிர்த் தொழிற்பாடு (குறுகிய வாழ்காலம்) அல்லது நடுத்தரக் கதிர்த் தொழிற்பாடு (உயர் வாழ்காலம்) கொண்டன. இவை கட்டுப்படுத்தா நிலையில் கடும் கதிர்த்தொழிற்பாடு மாசுபாட்டை ஏற்படுத்தும். பிளவுப் பொருட்கள், கட்டுப்படுத்தா அணுக்கருத் தாக்கங்களின் முக்கிய கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களாகும். அணுவாயுதங்களில் முக்கிய பிளவுப் பொருளாகப் பயன்படுவது யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம்-239 என்பனவாகும். மிகவும் குறைந்தளவில் பயன்படுவது யுரேனியம்-239 ஆகும். நெப்டியூனியம்-237 மற்றும் அமெரீசியத்தின் சில சமதானிகளும் பயன்படுத்தப்படலாம். எனினும் இச் சமதானிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. அணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் "வெப்ப அணுவாயுதங்கள்" அல்லது "ஐதரசன் குண்டுகள்" எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக "ஐதரசன் குண்டுகள்" எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும். ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் மாத்திரமே இதுவரை வெப்ப அணுக்கரு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன. (இந்தியா இவ்வாறான ஆயுதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.) வெப்ப அணுவாயுதங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்தலும் அணுக்கருப் பிளவு ஆயுதங்களிலும் சிக்கலானதாகும். எனினும் இன்று உருவாக்கப்படும் பெரும்பாலான அணுவாயுதங்கள் வெப்ப அணுவாயுத வடிவமைப்பையே பயன்படுத்துகின்றன. ஏனெனில் இது மிகவும் வினைத்திறனுடையதாகும். வெப்ப அணுகுண்டுகள், இணைவு எரிபொருளை நெருக்குவதற்கும் வெப்பப் படுத்துவதற்கும் அணுக்கருப் பிளவு ஆயுதச் சக்தியைப் பயன்படுத்துகின்றன. மெகா தொன் சக்தியை வெளிப்படுத்தும் ஐதரசன் குண்டுகளில் பயன்படுத்தப் படும் "டெல்லர் உலம் வடிவமைப்பில்" கருப்பிளவு ஆயுதமும், இணைவு எரிபொருளும் (டிரிடியம், டியூட்டிரியம் அல்லது லிதியம் டியூட்டிரைட்) விசேடமான கதிர்ப்புத் தெறிப்பு கொள்கலன் ஒன்றினுண் அருகருகே வைக்கப்படும். பிளவு ஆயுதம் வெடிக்கும் போது வெளியாகும் காமாக் கதிர்களும் X-கதிர்களும் முதலில் இணைவு எரிபொருளை நெருக்கிப் பின்னர் அதன் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உருவாகும் கரு இணைவுத் தாக்கம் பெரும் எண்ணிக்கையான அதிவேக நியூத்திரன்களை உருவாக்கும். இந் நியூத்திரன்கள் வறிதாக்கப்பட்ட யுரேனியம் போன்ற வலுக்குறைந்த பிளவுப் பொருட்களில் பிளவுத்தாக்கத்தைத் தூண்டும். பிளவு ஆயுதத் தாக்கம் "முதற் படி" எனவும் இணைவுத் தாகம் "துணைப் படி" எனவும் அழைக்கப்படும். பெரியளவிலான மெகா தொன் சக்தி கொண்ட ஐதரசன் குண்டுகளில் வெளிப்படும் சக்தியில் அரைப்பங்கு வறிதாக்கப்பட்ட யுரேனியம் மூலமான பிளவுத் தாக்கத்திலிருந்தே பெறப்படும். இண்று உருவாக்கப்படும் பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் மேற்கூறப்பட்ட "இரு படி" ஒழுங்கமைப்பையே பயன்படுத்துகின்றன. ஆயினும் மேலதிக தாக்கப் படிகளையும் சேர்க்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு படியும் அடுத்த படிக்கான எரிபொருளை வெடிக்கச் செய்யும். இதன் மூலம் பெரும் சக்திக் கொள்ளளவு கொண்ட வெப்ப அணுவாயுதங்களை உருவாக்க முடியும். இதுவரை வெடிக்க வைக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது சோவியத் ஒன்றியத்தின் "சார் குண்டு" ஆகும். இதன் வெடிப்பின் போது 50 மெகா தொன் TNT சக்தி வெளியிடப்பட்டது. இது ஒரு மூன்று படி ஆயுதமாகும். பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் இதனிலும் சிறியன. இதற்குக் காரணம், ஏவுகணைகளின் இடப் பற்றாக்குறை மற்றும் நிறை என்பனவாகும். "முதன்மைக் கட்டுரை: மன்காட்டன் திட்டம்" முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது "Manhattan Project" என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான இரோசிமா, நாகசாகி மீது பிரயோகிக்கப் பட்டது. உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில், அமெரிக்கா தன்னை தாக்கிய ஜப்பானை, தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் ("Little boy") என்று பெயரிடபட்டு, ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது போடப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் ("fat man") நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இரோசிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஐதரசன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) ஐக்கிய அமெரிக்க நாடுகள், இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, இஸ்ரேல் அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக வரலாற்றில், அணுவாயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காவுக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதப் பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஒப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியமையால், இந்த ஒப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஒப்பந்தத்தை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன. 2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வளர்ந்த நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியலையை உருவாக்கியது. அக்டோபர் 9, 2005ல், வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. சோப்புக்கல் சோப்புக்கல் என்பது ஒரு உருமாறிய பாறை ஆகும். மிகவும் மென்மையான இது, கனிம டால்க் (talc) இனால் ஆனது, அதிக அளவில் மக்னீசியத்தைக் கொண்டுள்ளது. இது இயங்குவெப்ப வளருருமாற்றத்தினால் (dynamothermal metamorphism) உருவாக்கப்படுகின்றது. இக் கல் நீண்டகாலமாகவே சிற்பங்களைச் செதுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டளவில் இது மிகவும் மென்மையான பொருள் ஆகும். மோசின் கடினத்தன்மை அளவீட்டில், மிகக் குறைவான அளவீடான 1 ஐக் கொண்டுள்ள "டால்க்" என்னும் பொருளைப் பெருமளவில் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். தொடும்போது சவர்க்காரம் (சோப்பு) போன்ற வளவளப்பான தன்மையைக் கொண்டுள்ளதால் இதற்கு "சோப்புக்கல்" என்னும் பெயர் ஏற்பட்டது. இது நுணுக்கமான செதுக்கு வேலைகளைச் செய்வதற்கு இடங்கொடுக்கும் என்பதால் பலவிதமான சிற்பவேலைகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். சமையலறைகளில் உள்ள வேலை மேசைகள், கழுவு தொட்டிகள் (sinks) என்பனவும் சோப்புக்கற்களைக் கொண்டு செய்யப்படுவது உண்டு. இது வேதியியல் அடிப்படையில் உறுதியான ஒரு பொருளாதலால் வேதியியல் ஆய்வுகூடங்களின் மேசைகளின் மேற்பரப்புக்கள் செய்வதற்கு இக் கல் விரும்பப்படுகிறது. இலிங்கம் இலிங்கம், லிங்கம் () ("lingam"), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான "அருவம், உருவம், அருவுருவம்" என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன. லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், "வளம்" என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், லிங்கம் பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது என்பனவும் அடங்கும். லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும். இலிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகிறன. இறந்தோர்களை புதைக்கும் போது, அவர்களின் நினைவாக நடுகல் வைத்து வணங்கும் வழக்கும் உள்ளது. அவ்வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும், பெண்குறியை வழிபாடுவதைப் போல ஆண்குறியை வழிபடும் வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர். பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகல் கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது. பெண்குறி வழிபாடு போன்று இந்து சமயத்தில் ஆண்குறி வழிபாடு இருந்துள்ளமையும், அதுவே லிங்க வழிபாடாகவும் மாறியதாக கொள்ளப்படுகிறது. லிங்கம் வானத்தைக்குறிக்கும்.ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது.மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக்குற்க்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர். மற்றோரு கருத்தின்படி இலிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம். ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். இந்த ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன. இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி தாராபாத்திரம் அமைக்கப்படுகிறது. வெப்பம் குறைவான காலங்களில் நாகாபரணம் சூட்டப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர். சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து இலிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச இலிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், இலிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன, இவை தவிர பரார்த்த இலிங்கம். சூக்கும இலிங்கம்,ஆன்மார்தத இலிங்கம், அப்பு இலிங்கம், தேயு இலிங்கம், ஆகாச இலிங்கம், வாயு இலிங்கம், அக்னி இலிங்கம் என எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. டால்க் டால்க் ("Talc") என்பது மக்னீசியமும் சிலிக்கானும் சேர்ந்துள்ள ஒரு மென்மையான (மெதுமையான) கனிமம். பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும். வேதியியலில் இதனை "நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு" என்று கூறுவர். இதன் வேதியியல் வாய்பாட்டை இரண்டு விதமாக எழுதலாம்.:HMg(SiO) அல்லது MgSiO(OH). ஒப்பனைக்காக மக்கள் தங்கள் முகத்துக்கோ வேறு உறுப்புகளுக்கோ டால்க்கின் பொடியை பூசிக்கொள்வர். இது "டால்க்கம் பவுடர்" என்று வழங்குகின்றது. டால்க்கின் முதன்மையான பயன்பாடு வெள்ளைத் தாள்கள் (காகிதம்) செய்வதிலாகும். இது தவிர நெகிழிகள், சுட்டாங்கல் (செராமிக்), மின்கடத்தாப்பொருளாகிய போர்சலீன் (ஸ்டெயாட்டைட்) போன்ற பொருள்களிலும் பயன்படுகின்றது. டால்க் என்னும் சொல் அரபு மொழி அல்லது பாரசீக மொழியில் உள்ள talq என்னும் சொல்லில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்குகின்றது. இது மிக மிக மென்மையான பொருளாதலால், மோ கெட்டிமை எண் அளவீட்டில் 1 முதல் 10 வரை உள்ள அளவுக் கூறுகளில் இதன் மோ எண் 1 ஆகும். (யாவற்றினும் கெட்டியான வைரம் 10 ஆகும்). டால்க்கின் ஒப்படர்த்தி 2.5–2.8 ஆகும். நீர் ஒப்படர்த்தி நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை ("ஒப்பெடை") என்பது ஒரு பொருளின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியோடு ஒப்பிடும் பொழுது எத்தனை (எவ்வளவு) மடங்காக உள்ளது என்பதாகும். ஒரு பொருளின் ஒப்படர்த்தி ஒன்று என்றால் அப்பொருள் நீரின் அடர்த்தியே கொண்டுள்ளது என்று பொருள். ஒப்படர்த்தி எண் ஒன்றைக் காட்டிலும் பெரியதாயின், அப்பொருள் நீரை விட அடர்த்தி அதிகமானது என்று பொருள்; ஒன்றை விட குறைவாயின் நீரைவிட அடர்த்தி குறைந்தது என்று பொருள். ஒப்படர்த்தியின் வரையறை : formula_1 மேலே உள்ளதில் SG = நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை formula_2 = பொருளின் அடர்த்தி
formula_3 = நீரின் அடர்த்தி. நீரின் அடர்த்தி formula_4 = 1000 kg·m (at 4°C/39.2°F) SI அலகில். நீர் ஒப்படர்த்தி என்பது பண்பலகு அற்ற எண் ஆகும். ஒரு கரைசலை குலுக்கும்போது அதிலுள்ள பொருள்களில் ஒப்படர்த்தி மிகுதியானவை முதலில் கீழே படியத்துவங்குகின்றன. இவ்விளைவின் துணைகொண்டு பொருள்களைப் பிரிக்கவும் அவை கலந்துள்ள விகிதத்தை அளக்கவும் முடியும். நீர்மங்களில் கலந்துள்ள மாசுப்பொருள்களை நீக்குவதற்கு இப்பண்பைப் பயன்படுத்துகின்றனர். சிறுநீர், குருதி போன்றவற்றை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்யவும் இவ்வளவை பயன்படுகிறது.
ஓல்மியம் ஓல்மியம் ("Holmium", ஹோல்மியம்) அணுவெண் 67 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 98 நொதுமிகள் உள்ளன. ஓல்மியத்தின் வேதியியல் குறியீடு Ho ஆகும். இத் தனிமம் லாந்த்தனைடுகள் வரிசையைச் சேர்ந்த மெதுமையான, வளைந்து ஒடுங்கக்கூடிய வெள்ளிபோன்ற வெண்மையான மாழை. காற்றில் ஆக்சைடாகி சிதைவடையாமல் இருக்கும் தன்மை கொண்டது. மோனாசைட் (monazite), கடோலினைட் (gadolinite) ஆகிய கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. இந்த அரிதில் கிடைக்கும் தனிமம் மூன்று இயைனி (trivalent) மாழை. தனிமமாகக் கிடைக்கும் பொருட்கள் யாவற்றினும் அதிக காந்தத் திருப்புமை கொண்ட பொருள் ஓல்மியம். இதன் காந்தத் திருப்புமை (10.6µB). இயிற்றியம் என்னும் தனிமத்துடன் சேர்ந்து பலவகையான காந்தப் பண்புகள் கொண்ட கலவைகளில் பயன்படுகின்றது. ஓல்மியம் மெதுமையான வளைந்து நெளிந்து ஒடுங்கக்கூடிய மாழை. இது காற்றில் நிலையாக இருக்கக்கூடிய அவ்வளவாக அரிப்பு அடையாப் பொருள். காற்றில் ஈரப்பதம் இருந்தால் உயர் வெப்ப நிலைகளில் ஆக்ஸைடாக மாறி விடுகின்றது. இதன் காந்தப் பண்புகளால், மிகுவலிமை கொண்ட காந்தங்கள் செய்யப் பயன்படுகின்றது. அணு உலையிலும் அணுக்கரு பிளவில் தோன்றும் நொதுமிகளை பற்றுவதற்குப் பயன்படுகின்றது. நீல பத்மநாபன் நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: ஏப்ரல் 26, 1938, கன்னியாகுமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். "இலை உதிர் காலம்" புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன. நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் நீலகண்டப்பிள்ளை - சானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார். கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் (BSc.) பட்டம் பெற்றார். பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றவர். நீல பத்மநாபன் கல்லூரியில் இளவர் பட்டத்திற்குப் பயிலும்பொழுதே, கேரள பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். எனவே கல்லூரிக் கல்வி முடிந்ததும் திருச்சூரில் அரசு அலுவலகம் ஒன்றில் சில காலம் பணியாற்றினார். தந்தை வற்புறுத்தலினால் அவ்வேலையைத் துறந்து பொறியியல் படிக்கச் சென்றார். 1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து 1993 ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார். நீல பத்மநாபன் கிருட்டிணம்மாள் என்பவரை மணந்து சானகி, உமா, நீலகண்டன், கவிதா என்னும் நான்கு மக்களை ஈன்றார். ""கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்"" என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு. 2004 ஆம் ஆண்டில் மேற்கண்ட அனைத்துப் புதினங்களும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் நாவல்கள் என்னும் தலைப்பில் வெளிவந்தது. 2000 ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபன் கதைகள் என்னும் பெயரில் (2000ஆம் ஆண்டு வெளிவந்தது. 2003ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் 148 கவிதைகள் என்னும் தலைப்பில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2005 ஆம் ஆண்டு வரை இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் கட்டுரைகள் என்னும் தலைப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாறையியல் பாறையியல் (Petrology) என்பது நிலவியலின் ஒரு பகுதியாகும். இது பாறைகள், அவை உருவாவதற்கான நிலைமைகள் போன்றவற்றை ஆராயும் ஒரு துறை. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை ஆகிய பாறைகளின் அடிப்படையில் பாறையியல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கனிமவியல், ஒளியியற் கனிமவியல் மற்றும் வேதியியற் பகுப்பாய்வு முறைகளைப் பாறையியல் தனது தேவைக்குப் பயன்படுத்துகிறது. தற்காலப் பாறையியலாளர்கள், நிலவேதியியல் முறைகள் முதலியவற்றுடன், வெப்ப இயக்கவியற் தரவுகள், சோதனைகள் முதலியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். புவியின் பாறைகளை ஆராய்வதன் மூலம் புவியின் தோற்றம் பற்றிய வரலற்றுச் சுவடுகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது பாறை அடுக்குகளின் அமைப்பு, காலம் மற்றும் கூட்டுப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய்ப் படிவுகளைக் கண்டறிகிறார்கள். தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பாறைப் படிமங்களைக் கொண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்திருந்த உயிரின வகைகளைப் பற்றி ஆராய்கிறார்கள் தீப்பாறை தீப்பாறை (இக்னீயஸ் பாறை) 'இக்னீயஸ்' என்ற சொல் "தீ" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து வந்ததாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது. தீப்பாறைகளே முதலில் தோன்றியவை ஆகும். உருகிய பாறைக் குழம்பு பளிங்காக்கத்துடனோ அல்லது பளிங்காக்கம் இல்லாமலோ இறுகித் திண்மம் ஆவதால் தீப்பாறை உருவாகின்றது. இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும். உந்துதலின் காரணமாக புவி மேற்பரப்பில் மாக்மா (பாறைக் குழம்பு) வழிந்தோடுகிற பொழுதோ அல்லது பெருங்கடல் தரையில் வழிந்தோடுகிற பொழுதோ, குளிர்ந்து திடமாகிற பாறை "உந்துப்பாறை" எனப்படும். பசால்ட் எனப்படும் எரிமலைப்பாறைகள் உந்துப்பாறை வகையைச் சார்ந்தவை. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மதிய அட்லாண்டிக் தொடர், பசால்ட் பாறையினால் ஆனவை.ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் பாறைகளால் ஆனவையே. புவியின் உள்ளேயேவழிந்து குளிர்ந்து திடமாகிற மாக்மா "தலையீடு பாறை" எனப்படும். இப்பாறைகள் ஏற்கனவே அமைந்துள்ள படிவுப்பாறைகளின் அடுக்குகளுக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற மாக்மாவால் உருவாகின்றன. இவை உருவத்தில் மிகப் பெரியதாகவும் , விரிப்பு போன்ற அமைப்பிலும் இருக்கும். 'கிரானைட்' பாறைகள் தலையீடு பாறை வகையைச் சார்ந்தவை. மூடகம் (நிலவியல்) மூடகம் (mantle) என்பது புவி போன்ற வானியற் பொருட்களின் ஒரு பகுதியாகும். இது பொதுவாக அப்பொருட்களின் மையப் பகுதியைச் சுற்றி அவற்றின் மேல் ஓட்டுக்குக் கீழே அமைந்திருக்கும். புவியின் மூடகம் ஏறத்தாழ 2,900 கிமீ தடிப்புள்ள பாறைகளாலான ஓடு ஆகும். இது பூமியின் கனவளவில் 70% ஐ உள்ளடக்குகின்றது. இது பெரும்பாலும் திண்மமானது, புவியின் இரும்புச் சேர்வைகளை அதிகம் கொண்ட மையப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இம் மூடகத்தின் குறைந்த ஆழத்தில் நடைபெற்ற உருகல் மற்றும் எரிமலைச் செயற்பாடுகளினால் புவி மேற்பரப்போடு ஒட்டி, உருகியநிலையில் இருந்து பளிங்காக்கம் அடைந்த பொருட்கள் புவியோட்டை உருவாக்கியுள்ளன. இது ஒப்பீட்டளவில் மிகவும் மெல்லிய ஓடாகும். புவியின் மூடகம் உருகியபோது உருவான வளிமங்கள் (வாயுக்கள்), புவியின் வளிமண்டலத்தின் சேர்மானம், அதன் அளவு என்பவற்றில் பாரிய தாக்கத்தைக் கொண்டிருந்தன. மூடகம் அதன் வேதியியல் தன்மையை ஒட்டிப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு: உருமாறிய பாறை உருமாறிய பாறை என்பது பாறைகளின் ஒரு வகையாகும். இது "முதல்நிலைப்பாறை (protolith)" எனப்படும் ஏற்கனவே உள்ள பாறைகள் வளருருமாற்றம் (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அமுக்கநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை படிவுப் பாறையாகவோ, தீப்பாறையாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். புவியோட்டின் பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் மேற்பரப்புத் தன்மை, வேதியியல் மற்றும் கனிமச் சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை அடுக்குப்பாறைகள் எனவும் அழைக்கப்படும். புவி மேற்பரப்புக்குக் கீழ் ஆழத்தில் உள்ள பாறைகள் அவற்றுக்கு மேலுள்ள பாறைகளால் ஏற்படும் உயர் அமுக்கத்தினாலும், உயர் வெப்பநிலையாலும் உருமாறிய பாறைகளாக மாறக்கூடும். இது தவிரக் கிடைத்திசையான அழுத்தத்தைக் கொடுக்கும் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதுதல் போன்ற புவிப்பொறைச் (tectonic) செயற்பாடுகளினாலும், உராய்வு, உருத்திரிபு போன்றவற்றாலும் உருமாறிய பாறைகள் உருவாகலாம். புவியின் ஆழத்தில் இருந்து அதிக வெப்பநிலையில் உள்ள உருகிய பாறைக் குழம்பு பிற பாறைகளூடு செல்லும் போது அவை வெப்பம் ஊட்டப்படுவதாலும் இவ்வகைப் பாறைகள் உண்டாகின்றன. அரிப்பினாலும், மேலெழுவதாலும் தற்போது புவி மேற்பரப்புக்கு அண்மையில் காணப்படும் உருமாறிய பாறைகளை ஆராய்வதன் மூலம், புவியின் மூடகத்தில் இருக்கக்கூடிய வெப்பநிலை, அமுக்கம் முதலியவை பற்றி அரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. சிலேட் (slate), சலவைக்கல் (marble), களி உருமாற்றப்பாறை (schist) என்பன உருமாறிய பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். வளருருமாற்றம் வளருருமாற்றம் (Metamorphism) என்பது, வெப்பம், அமுக்கம், வேறு நீர்மங்கள் (திரவம்) உட்செல்லல் முதலியவை தொடர்பான மாற்றங்களால், ஏற்கனவே உள்ள பாறைகளில் திண்ம நிலையில் ஏற்படும் மீள்பளிங்காதல் (recrystallisation) எனலாம். இங்கே கனிமவியல், வேதியியல் மற்றும் படிகவுருவியல் (Crystallographic) மாற்றங்கள் ஏற்படக்கூடும். வெப்பநிலை மற்றும் அமுக்க உயர்வினால் உண்டாகும் வளருருமாற்றம், முன்நோக்கிய (prograde) வளருருமாற்றம் எனவும், வெப்பநிலை, அமுக்கம் என்பவை குறைவதன் மூலம் உண்டாகும் வளருருமாற்றம் பின்நோக்கிய (retrograde) வளருருமாற்றம் எனவும் அழைக்கப்படுகின்றது. வளருருமாற்றத்திற்கான வெப்பநிலைக் கீழ் எல்லை 100 - 150°C ஆகும். அமுக்கத்தின் கீழ் எல்லை தொடர்பில் உடன்பாடு எதுவும் இல்லை. வளியமுக்கத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வளருருமாற்றங்கள் அல்ல என ஒருசாரார் வாதிக்கின்றனர். எனினும் சிலவகை வளருருமாற்றங்கள் மிகக் குறைந்த அமுக்க நிலைகளிலும் ஏற்படக்கூடும். வளருருமாற்ற நிலைகளின் மேல் எல்லைகள் பாறைகளின் உருகும் தன்மைகளில் தங்கியுள்ளன. வெப்பநிலை எல்லை 700 தொடக்கம் 900°C வரை ஆகும். அமுக்கம் பாறைகளின் சேர்மானங்களில் தங்கியுள்ளது. மிக்மட்டைட்டுகள் என்னும் பாறைகள் வளருருமாற்றத்திற்கான மேல் எல்லை நிலைகளில் உருவாகின்றன. இவை திண்மநிலை மற்றும் உருகல் நிலை ஆகிய இரண்டு நிலைகளுக்கும் உரிய அம்சங்களைக் காட்டுகின்றன. படிகவியல் படிகவியல் அல்லது படிகவுருவியல் ("crystallography") என்பது, திண்மங்களில் அணுக்களின் ஒழுங்கமைப்புக்களை ஆராயும் அறிவியற் துறை ஆகும். முன்னர் படிகங்கள் பற்றிய அறிவியல் என்ற பொருளிலேயே இச் சொல் பயன்படுத்தப்பட்டது. ஊடுகதிர் விளிம்பு வளைவுப் படிகவுருவியல் (X-ray diffraction crystallography) வளர்ச்சியடைவதற்கு முன்னர், படிகங்கள் பற்றிய ஆய்வு அவற்றின் வடிவவியல் தன்மைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இது, அவற்றின் முகங்கள் அமைந்துள்ள கோணங்களை அவற்றின் அச்சுக்கள் தொடர்பில் அளத்தல், படிகங்களின் சமச்சீர்த் தன்மைகளை நிறுவுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. படிக முகங்களின் கோணங்கள் கோனியோமானி (goniometer) என்னும் கருவியினால் அளக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிகத்தினதும் முகங்களின் இடங்கள் வுல்ஃப் வலை (Wulff net) அல்லது லம்பர்ட் வலை (Lambert net) போன்ற ஒரு முப்பரிமாண வலையமைப்பில் வரையப்படுகின்றன. தற்காலத்தில் படிகவுருவியல் முறைகள், மாதிரிப் படிகம் ஒன்றின்மீது செலுத்தப்படும் ஏதாவது ஒருவகைக் கற்றையில் ஏற்படும் விளிம்பு வளைவுகளைப் பகுத்தாய்வதில் தங்கியுள்ளது. ஊடுகதிர்களே (X-rays) பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன எனினும், இக் கற்றை எப்பொழுதுமே மின்காந்தக் கதிர்வீச்சாக இருப்பதில்லை. சில தேவைகளுக்கு இலத்திரன்களும், நியூத்திரன்களும் பயன்படுத்தப்படுகின்றன. துகள்களின் அலைப் பண்புகளினால் இது சாத்தியமானதாக உள்ளது. பயன்படுத்தப் படும் முறைகளுக்கு ஏற்ப அவற்றின் பெயர்களை, ஊடுகதிர் விளிம்புவளைவு என்றோ, நியூத்திரன் விளிம்புவளைவு என்றோ, இலத்திரன் விளிம்புவளைவு என்றோ படிகவுருவியலாளர்கள் விளக்கமாகக் குறிப்பிடுவர். கருங்கல் கரங்கல் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். தமிழ்நாட்டின் 234 வது தொகுதியில் உள்ள கிள்ளியூர் நகரிலுள்ள முக்கிய நகரான கருங்கல் ஆகும். இப்பகுதிக்கு அருகே மார்த்தாண்டம் என்ற நகரக்கு பிறகு, அடுத்த நன்கு அறியப்பட்ட நகரம் . இது 19 சதுர கிலோமீட்டர் (7.3 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தென்கிழக்கு, வடகிழக்கில் பள்ளியாடி, கிழக்கில் திருவிதாம்கோட்டை மற்றும் தென்கிழக்கில் திக்கணம்கோடு தென் மேற்கில் கீள்குளம் ஆகிய ஊா்கள்  அமைந்துள்ளது. ஏரிசு (குறுங்கோள்) ஏரிஸ் ("Eris", கிரேக்கம்: "Έρις") சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் (dwarf planet) ஆகும். இது முன்னர் "136199 ஏரிஸ்" என அழைக்கப்பட்டது. இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள 9வது பெரிய பொருள் ஆகும். 2,500 கிலோ மீட்டர் விட்டமும் புளூட்டோவை விட 27% அதிக திணிவையும் கொண்டது. ஏரிஸ் முதன் முறையாக 2003 இல் "மைக்கல் பிரவுண்" தலைமையிலான வானியல் ஆய்வுக்குழு கலிபோர்னியாவின் பலோமார் விண்வெளி ஆய்வு மையத்தில் அவதானித்தது. ஆனாலும் இது 2005 வரையில் இனங்காணப்படவில்லை. ஏரிஸ் "டிஸ்னோமியா" என்ற ஒரேயொரு சந்திரனைக் கொண்டுள்ளது. மேலதிகமாக எவ்வித செய்மதிகளையும் இது கொண்டிருக்கவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியனிலிருந்து ஏரிசின் தற்போதைய தூரம் 96.7 வானியல் அலகு ஆகும். இது புளூட்டோவினதை விட மூன்று மடங்காகும். சில வால்வெள்ளிகளைத் தவிர்த்து சூரியக் குடும்பத்தில் உள்ள மிகத் தொலைவான பொருள் இதுவேயாகும். புளூட்டோவை விட ஏரிஸ் பெரிதாக இருந்தமையினால் இது கண்டறியப்பட்டபோது சூரியக் குடும்பத்தின் "பத்தாவது கோள்' என்று அதனைக் கண்டுபிடித்தவர்களாலும் நாசாவினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2006 ஆகஸ்ட் 24 இல் செக் குடியரசின் பிராக் நகரில் நடந்த மாநாட்டில், பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏரிஸ், புளூட்டோ, செரெஸ் போன்றவையெல்லம் கோள்கள் எனக் கருதக் கூடிய அளவில் இல்லாத சிறிய கோள்கள்; "கோள்களைப் போன்ற சிறுகோள்கள்" (dwarf planets), கோள்கள் அல்ல என்று வரையறுத்து, நிராகரித்து விட்டது. ஏரிசு மைக் புரோன் (Mike Brown), சட் டுரிஜில்லோ (Chad Trujillo), மற்றும் டேவில் ரபினோவிட்ஸ் (David Rabinowitz) போன்றோரால் 2005 ஆம் ஆண்டு சனவரி ஐந்தாம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே கண்டுபிடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் திகதி இக்கண்டுபிடிப்பும் மைக்மைக் குறுங்கோளின் கண்டுபிடிப்பும் இரு நாட்களின் பின் அவுமியாக் குறுங்கோளுடைய கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது. கெபிதிகொல்லாவை கெபிதிகொல்லாவை இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.கெபிதிகொல்லாவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான அனுராதபுரம் நகரத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. கெபிதிகொல்லாவை அண்சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 104 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. எல்லோரா எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 30 கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும். எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும் . பௌத்தக் குகைகளே இங்கு முதலில் அமைக்கப்பட்டவையாகும். இவை ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றுள் பெரும்பாலானவை பௌத்தத் துறவிகளுக்கான மடங்கள். பல அடுக்குகளைக் கொண்ட இம்மடங்களில் துறவிகள் தங்கும் விடுதிகள், படுக்கையறைகள், சமையற்கூடங்கள் முதலான அறைகள் உள்ளன. இக்குகைகள் சிலவற்றில் புத்தர், போதிசத்துவர் போன்றோரின் உருவங்கள் மரத்தால் செய்தாற் போன்று தோற்றமளிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இந்துக் குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத் திறனையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால் இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் கைலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக் குடைவரை, பல மாடிகளைக் கொண்ட கோயில் வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ள இக் கோயில் ஏதென்ஸில் உள்ள பார்த்தினனிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும். சமணக் குகைகள் சமணத் தத்துவங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை மற்ற குகைகளைப் போன்று பெரிதாக இல்லாவிடினும் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. சோட்டா கைலாசு, இந்திர சபா, சகன்னாத சபா ஆகிய கோவில்கள் இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை. புனித ஜார்ஜ் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ("Fort St. George"), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும். 1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு "புனித ஜார்ஜ் கோட்டை" எனப் பெயரிடப்பட்டது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது. 1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றம் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன. அவை: நிறமாலையியல் இயற்பியலில் நிறமாலையியல் ("Spectroscopy") என்பது ஒரு பொருளுக்கும் ஒளிக்கும் இடையே உள்ள நிகழ் உறவுகளைப் பற்றி ஆயும் அறிவுத்துறை. அதாவது ஒரு பொருள் வெப்பமுறும் பொழுது வெளிவிடும் ஒளியின் பண்புகளைப்பற்றியோ, அல்லது ஒரு பொருள் மீது வீசப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகின்றது, அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன போன்ற எல்லா ஒளி - பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் ஆயும் துறை. நிறமாலை என்னும் இச்சொல்லில் உள்ள “நிறம்” என்பது மாந்தர்களின் கண்களுக்கு புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாமல் எல்லா அலைநீளங்களையும் கொண்ட மின்காந்த அலைவரிசையைக் குறிக்கும். வரலாற்று நோக்கில், கண்ணுக்குப் புலப்படும் ஒளியைத்தான் முதலில் குறித்து வந்தது இச்சொல். கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர, ஆற்றல் அலைகளானது துகள்கற்றையாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறையுள் அடங்கும். ஒரு பொருளோடு தொடர்புறும் ஒளியின் பண்புகளைத் துல்லியமாய் அளவிட்டு அதன்வழி அப்பொருளைப் பற்றிய பண்புகளை அறியும் துறைக்கு நிறமாலை அளவையியல் அல்லது "நிறமாலை அளவீட்டியல்" எனப் பெயர். ஆனால் பொதுவாக அத்துறையும் நிறமாலையியல் என்னும் இத்துறையிலேயே அடங்கும். ஒரு கண்ணாடி முக்கோணப் பட்டகத்தின் வழியாகப் பாயும் வெண்ணிற ஒளி எப்படி நிறப்பிரிகை அடைகிறது என்பதை இப்பக்கத்தில் உள்ள கருத்துப் படம் காட்டுகின்றது. ஒளி கண்ணாடியின் ஊடே பாயும் பொழுது வெவ்வேறு அலைநீள ஒளியலைகள் வெவ்வேறு அளவு விலகுகின்றன. குறைந்த அலைநீளம் கொண்ட, ஆனால் மிகுந்த ஆற்றலுடைய நீல/ஊதா நிறக்கதிர்கள் அதிகம் விலகுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட, ஆனால் ஆற்றல் குறைந்த சிவப்பு நிறக்கதிர்கள் குறைவாக விலகுகின்றன. துல்லியமாய் நிறுவப்பட்ட ஒளி உள்வாங்கு (பற்றும்) பண்புகள், ஒளியுமிழ் பண்புகள் முதலிவற்றால், இயற்பியல், வேதியியல், மற்றும் பல்வேறு அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஒரு வேதிப்பொருளை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுகின்றது. மிகு தொலைவில் உள்ள விண்மீன்களில் இருந்து வரும் ஒளியலைகளை அலசுவதன் வழியாக அங்கே என்னென்ன வேதிப்பொருள்கள் உள்ளன என்றும் அறிய உதவுகின்றது. ஒளிச்சிதறல் வழி பொருளுள் அணுக்கள் அமைந்துள்ள ஒழுங்கு முறையையும் அறிய இயலுகின்றது. இராமன் விளைவு போன்றவை இவற்றுக்குப் பயன்படுகின்றன (பார்க்க: இராமன் நிறமாலையியல்). மேனகா மேனகா என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: செஞ்சிக் கோட்டை செஞ்சிக் கோட்டை ("Gingee Fort", "Senji Fort") (இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன. வரலாற்றறிஞர் திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தன்னுடைய சோழர்கள் நூலில் "விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான்" எனக் குறிப்பிடுகிறார். விக்கிரம சோழன் உலாவில், என்றுள்ளது. செஞ்சிக்கோட்டையைப் பற்றி கிடைக்கும் இந்தச் சான்றே மிகப் பழமையான சான்றாகும் என்பதாக அவர் தெரிவிக்கிறார். ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் காலத்திலும் தொடர்ந்து அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும், அவன் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன், சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்த செய்தி வயலூர் கல்வெட்டின் மூலம் நமக்கு தெரியவருகிறது. மூன்றாம் ராஜராஜனை செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்ததற்கு ஆதாரமாக அக்குகையில் காணப்படும் சிற்பமும் அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் உறுதிபடுத்துகின்றன. எனவே செஞ்சிக்கோட்டையைக் கட்டிய செஞ்சியர் கோன் காடவனின் 12 நூற்றாண்டு மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்காலமான 13 நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாராயணன் என்ற வரலாற்று ஆய்வாளர் கருத்தின்படி செஞ்சிக்கு அருகிலுள்ள மேலச்சேரி கிராமத்தில் கி.பி. 1200ஆம் ஆண்டருகில் அனந்த கோன் என்னும் இடையர் குலத்தை சேர்ந்தவர் தன் ஆடுகளை மேய்க்கையில் மேற்கு மலைகளில் இருந்த பொந்துகளில் புதையலை கண்டறிந்ததாகவும் அதன்பிறகு அதைச்சுற்றிய பல கிராமங்களில் உள்ள சிறு ஆட்சியாளர்களை தோற்கடித்து கமலகிரி என்னும் கோட்டையை கட்டியதாகவும் கூறுகிறார். பின்னர் தன் பெயரில் அதை அனந்த கிரி என்று பின்னர் பெயர் மாற்றியதாகவும் கூறுகிறார். கோனார் குலத்தவர்கள் 1190 முதல் 1130 வரை செஞ்சியை ஆண்டதாகவும் பின்னர் குறும்பர் குலத்தைச்சேர்ந்த கோபலிங்க கோன் சோழர்களின் கீழ் இந்த பகுதியை ஆண்டதாகவும் வரலாற்று நூல்களில் தகவல்கள் உள்ளன.. செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன இராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது, போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர். இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது. தலைச்சேரிக் கோட்டை தலைச்சேரிக் கோட்டை, இந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலைச்சேரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மலபார் கரைப்பகுதியில் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காகப் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் இக் கோட்டையை 1708 ஆம் ஆண்டில் கட்டினர். 1781 ஆம் ஆண்டில் மைசூர் அரசின் ஆட்சியாளனாக இருந்த ஹைதர் அலி, தனது மலபாரைக் கைப்பற்றும் படை நடவடிக்கையின்போது இதனைக் கைப்பற்ற முயற்சி செய்தானாயினும் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான், மூன்றாவது ஆங்கிலேய-மராட்டியப் போர் முடிவுக்கு வந்த பின்னர், 1792 ஆம் ஆண்டில் மலபார் பகுதியை பிரித்தானியருக்கு விட்டுக் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. பாரிய மதிற் சுவர்களையும், கடலுக்குச் செல்வதற்கான இரகசியச் சுரங்கங்களையும், நுணுக்கமான செதுக்கு வேலைப்பாடுகளோடு கூடிய பெரிய கதவுகளையும் கொண்டு சதுர வடிவானதாக இக் கோட்டை விளங்குகிறது. ஒரு காலத்தில் தலைச்சேரியின் வளர்ச்சியின் மையமாக விளங்கிய இக் கோட்டை இன்று ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது. உதயகிரிக் கோட்டை உதயகிரிக் கோட்டை இந்தியாவின் தற்காலத் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது. 90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு. டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவரது அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி "தில்லானைக் கோட்டை" (டி லனோய்ஸ் கோட்டை - De Lennoy's Fort) என அழைக்கப்பட்டு வந்தது. இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில மான்கள் வேலியிடப்பட்ட சிறிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் காதற்பறவைகளும் கினி பன்றிகளும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. கினிக் கோழிகள் தன்னிச்சையாயத் திரிகின்றன. மீன் காட்சியத்தில் சில வகை மீன்கள் உள்ளன. அத்தோடு பர்மா பாலத்தில் நடத்தல், மரக் குடிலில் ஏறுதல் போன்றவற்றுக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப் பூங்காவில் குடும்பத்துடன் வருவோர், தனியாய் வரும் ஆடவர், தனியாய் வரும் பெண்டிர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காதலர்களாய் அல்லது நண்பர்களாய் வரும் ஆண்‌ - பெண்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இராகமாலிகை இராகமாலிகை எனப்படுவது கருநாடக இசையில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு இராகங்களில் பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது ஆகும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 'மாலை போல் தொடுக்கப்பட்ட இசைப்பாடல்' என்று பொருள்படும். 'இராக கதம்பம்' எனவும் இடைக்காலத்தில் அழைக்கப்பட்டது. கதம்பம் எனும் சமசுகிருத சொல், 'கலவை' என்று பொருள்படும். உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு பல்லவியின் கடைசியில் இராகமாலிகையாக கல்பனாசுரம் பாடப்படுவதும் வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும். இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது. இராகமாலிகையை சிறப்பான முறையில் வடிமைத்த குறிப்பிடத்தக்கவர்கள்: 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 24, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம். திருவிதாங்கூர் திருவிதாங்கூர் நாடு, இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் (princely state) ஆகும். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது. 1 ஜூலை 1949 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மர் ஆவார். திருவிதாங்கூர் புவியியல் ரீதியாக தற்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம். மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. மேற்கே அரபிக்கடலும், கிழக்கில் மேற்கு தொடர்ச்சி மலையும், தெற்கே இந்திய பெருங்கடலும் எல்லைகளாக இருந்தது. சேரநாட்டின் தென்பகுதியில் ஆய் நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது. இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன. சேர மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார். கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் அகதிகளாக வந்து தங்கியிருந்த யூதர்களுக்கு குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார். நடுக் கால வரலாற்றில் (கி.பி 650 முதல் 966 வரை) இப்பகுதி பாண்டியர்களின் படையெடுப்புக்கு உட்பட்டிருந்தது. கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளினி என்பார், பாண்டியனின் பிரதிநிதிகள் வாசனைத் திரவியங்கள் தருவதாகக் கூறி அவ்வரசனின் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சூருக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்குத் தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார். ஆய் வேளிர் எனப்பட்டோர் பாண்டிய அரசர்களுக்குக் கீழ்ப்பட்டு இப்பகுதிகளை ஆண்டுவந்தனர். இவ்வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு பின்பு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் ராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட யோகக்காரர்களும் மாடாம்பிகளும் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை அனத்தன் என்னும் அனந்தபத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். இவர் அரசனின் சகோதரி மகன். திற்பாப்பூர் பரம்பரையில் வந்தவர். இவர் மருமக்கள் வழி வந்தவர் என்ற கூற்றுமுள்ளது. இவருக்கு முன் வந்த வேணாட்டு அரசர்கள் யாரும் மருமக்கள் வழியில் பதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இவர் சிறந்த போர் வீரர். இவருக்கு அந்தரங்க ஆலோசகரும் முதன்மை தளபதியுமான அனந்தபத்மநாபன் நாடாரின் கீழ் அனைத்து களரி ஆசான்களும் ஆதரவு தெரிவித்தனர். இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு கொச்சி வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர். யோகக்காரரை அடக்கி நாட்டை வழிநடத்த எட்டுதுரம் நாடார்களை திருவனந்தபுரத்தில் குடியமர்த்தினார்[6]. மார்த்தாண்டவர்மன் நாட்டை பத்மநாபசாமிக்கு அர்பணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மன்னர் காலத்தில் நாட்டின் தலைநகர் கல்குளம் ஆகும். தான் ஆட்சிக்கு வர உதவியதற்காகவும், நாட்டை விரிவாக்க உதவியதற்காகவும் தலைநகரின் பெயரை பத்மநாபன் நாடாரை கௌரவிக்கும் பொருட்டு பத்மநாபபுரம் என்று மாற்றினார். கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் வணிகக் குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் ஆங்கிலேயர், போர்ச்சிகீசியர், டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர். ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் குளச்சல் சண்டையில் தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர். கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கி.பி 10 ம் நூற்றாண்டளவில் சேரநாட்டின் வடபகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாயர்-நம்பூதிரி கூட்டணி பால மார்த்தாண்டவர்மன் காலம் வரை கொச்சிக்கு தெற்கே காலூன்றவில்லை. கி.பி 1758ம் ஆண்டு மார்த்தாண்டவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் தலைநகரை கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இவர் திற்பாப்பூர் பரம்பரையில்லை. ஆட்சியதிகாரம் நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் திருவாங்கூர் என பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீ கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா) திருவிதாங்கூரின் முதல் அரசராவார். கி.பி 1758 முதல் 1798 ஆண்டு வரை அரசாட்சி செய்தார். 1791-ஆம் ஆண்டு, மைசூர் மன்னன் திப்புசுல்தான், திருவிதாங்கூர் மீது படை எடுத்தார். திருவிதாங்கூர் படைவீரர்கள், சுல்தானின் படைபலத்தாக்குதலை ஆறு மாத காலம் எதிர் கொண்டு, அன்னாரை 2 முறை தோற்கடித்த பிறகு மகாராஜா, பிரிட்டீஷ் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு முறையிட்டு உதவி கோரியதால், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது. அவர், பத்மநாபபுரத்திலிருந்த தலைநகரை, திருவனந்தபுரத்திற்கு 1795-ல் மாற்றினார். 1758ல், ஸ்ரீ பாலராமவர்மா அரியாசனத்தில் அமர்ந்தார்.இவரே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரை 1795'ம் ஆண்டு பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றியவர்.இவரது காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலம் ஆகும்.1799ம் ஆண்டு வேலுத்தம்பி திவானாக (முதல் மந்திரி) பதவி பெற்றார். 1809-ஆம் ஆண்டு, வேலுத்தம்பி மற்றும் கொச்சின் அமைச்சர் பாலியத் அச்சன், ஆங்கிலேயர்களை எதிர்த்து, புரட்சி நடத்தினர், அதில் வெற்றி கிட்டவில்லை. ஆங்கிலேயர், வேலுத்தம்பியை, நாகர்கோயில் மற்றும் கொல்லம் ஆகியவற்றில் நடந்த சண்டையில், தோற்கடித்தனர். திருவிதாங்கூரின் படையணியின் நாயர் பிரிவு, படைக்கலன்களை இழக்க நேரிட்டது. 1810-ல் மீதியிருந்த படையும், வேலுத்தம்பியின் விவேகமற்ற புரட்சிக்குப் பின்னர் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் நிராயுதபாணியாக ஆக்கப்பட்டது. இராணி கெளரி லட்சுமி பாய், 1810 ல், ஆங்கிலேயரின் ஆசியுடன் அரியணையில் அமர்ந்தார், அவருக்கு ஒரு மகன் பிறக்கவே, 1813-ல் அரசராக பிரகடனப்படுத்தப்பட்டு, 1815-ல் இராணி கெளரி லட்சுமி பாய் இறந்த பின்னர், மகாராணி கெளரி பார்வதி பாய், அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலிக்கு ஆள்பவர் என்ற முறையில் தொடர்ந்து ஆட்சி செய்தார். 1829-ஆம் ஆண்டு, ஸ்ரீ சுவாதி திருநாள் இராமவர்மா, அரியாணையில் அமர்ந்து 1846-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அடுத்தாற் போல், மகாராஜா உத்திராடம் திருமால் மார்த்தாண்ட வர்மா (1847–1860), 1853-ம் ஆண்டு தனது ஆட்சியில் தனது நாட்டில் அடிமைத் தனத்தை ஒழித்தார். மற்றும், சில வகுப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உடையணியும் கட்டுப்பாட்டினையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆயில்யம் திருநாள் (1860–1880) ஆண்டு வரையும், மற்றும் ஸ்ரீ இராமவர்மா விசாகம் திருநாள் (1880–1885) ஆண்டு முடிய சிறப்பாக ஆட்சி செய்தார். இவர் 1857 செப்டம்பர் 25'ம் தேதி சங்கனேசரி ராஜ குடும்பத்தை சேர்ந்த,ராஜ ராஜ வர்மா தம்புரான் மற்றும் மகாராணி லட்சுமி பாய் அவர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.இளவயதிலேயே தாயையும் சகோதரனையும் இழந்த இவர் அன்னாஜி ராவ்(BA) மற்றும் ரகுநாத் ராவ்(BA) ஆகியோரிடம் கல்வி பயின்றார். ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885–1924 வரை ஆட்சி செய்த போது, பல கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன.இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி,மருத்துவம்,சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.பெண்கள் கல்வியும் அனுமதிக்கப்பட்டது.ஆயுள் காப்பீடும் இவரது காலத்தில் கொண்டு வரப்பட்டது.இவரது சேவைகளை பாராட்டி 1898 ஆண்டு முதல் ஆங்கிலேய அரசு இவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளித்து கவுரப்படுத்தியது. இவருக்கு இரு மனைவிகள் ஆவர்.முதலாமானவர் நாகர்கோயில் அம்மவீட்டைச் சேர்ந்த அனந்தலட்சுமி பிள்ளை கொச்சம்மா ஆவார்.1882'ம் ஆண்டு ஒரு மகனைப் பெற்ற பிறகு இவர் மரணம் அடைந்தார்.இரண்டாமானவர் வடசேரி அம்மவீட்டைச் சேர்ந்த கார்த்தியாயினி கொச்சம்மா ஆவார். மருமக்கதாய முறைப்படி இவருக்கு பெண் பிள்ளைகள் இல்லாதபடியால், மாவேலிக்கரை வீட்டைச் சேர்ந்த இரு ராஜகுமாரிகளான சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகிய இருவரையும் தத்தெடுத்தார். மூலம் திருநாள் இராமவர்மாவிற்கு பின்னர், சேதுலட்சுமி பாய், ரீஜெண்டாக 1924–1931 வரை, ஆட்சி செய்தார். இவர் 12.11.1936ம் நாள், இந்துக்கள் அனைவரும் கோயிலில் நுழைந்து வணங்கிட (Temple Entry Proclamation) அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்தார். இதனால் கேரளாவில் இருந்த அனைத்து இந்து கோயில்களும், அதுவரை உயர்வகுப்புச் சாதி மக்களுக்கு மட்டுமே இருந்த உரிமை, இந்துக்கள் அனைவருக்குமே திறந்து விடப்பட்டன. ஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அளிக்க முடிவு செய்த போது, திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இருக்கும் என்று விளம்புகை செய்தார். இந்திய தேசீய காங்கிரஸ் மற்றும் திவான். சர்.சி.பி.இராமசாமி அய்யர், ஆகியோரிடையே இருந்த, கடுமையான மனத்தாக்கின் காரணமாக, நாட்டில் பலவிடங்களில் புரட்சி ஏற்படலாயிற்று. இத்தகைய புரட்சி ஒன்று. புன்னப்பரா - வயலாறு எனும் இடத்தில் 1946-ல் வெடித்தது, அதில் கம்யூனிஸ்டுகள் தமது சொந்த அரசை அந்தப்பகுதியில் ஏற்படுத்தினர். இது, திருவிதாங்கூர் படையினரால் மிருகத்தனமாக நசுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தனர். இது, மேலும் அமைதியின்மைக்கு வழிவகுத்ததில், சர்.சி.பி. இராமசாமி அய்யரின் தவறான போக்கு என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் விளைவாக சர்.சி.பி. இராமசாமி ஐயரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே, அதைத் தொடர்ந்து திரு. P.G.N.உன்னித்தான் திவான் (முதல் மந்திரி) ஆனார். அதன்பிறகு, மகாராஜா. இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள இணக்கம் தெரிவிக்கவே, திருவிதாங்கூர், இந்திய யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1949, ஜூலை 1-ஆம் நாள், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் ஏற்படுத்தப்பட்டு திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா புதிய மாநிலத்தின் "இராஜப்பிரமுக்", பதவி ஏற்றார். அப்போது "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்" குமரித்தந்தை திரு. மார்ஷல் நேசமணி என்பவரால், உருவாக்கப்பெற்று, அவர்தம் தலைமையில், தென் திருவிதாங்கூர் தமிழ் பேசும் பகுதி, அருகிலுள்ள சென்னை மாநிலத்தோடு இணைந்திட இயக்கம் நடைபெற்றது. இந்தப்போராட்டம், வன்முறைக் கலவரமாக மாறிடவே, காவலர்கள் மற்றும் பல உள்ளூர் மக்கள், மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில், கலவரத்தின் போது கொல்லப்பட்டனர்.மாநில மறுமுறை திருத்தி அமைத்தல் சட்டம், (State Re-organisation Act of 1956) கீழ், திருவிதாங்கூரின் நான்கு தாலுகா பகுதிகளாம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒருபகுதி, சென்னை மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. 1971, ஜூலை 31, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 26-வது திருத்தத்தின்படி மகாராஜாவிற்கிருந்த, மன்னர் மானியம் (தகுதி மற்றும் சலுகைகள்) பறிக்கப்பட்டு விட்டது. இம்மன்னர் 1991-ஜூலை 19-ஆம் நாள் காலமானார். ஸ்ரீ உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, (1922–2013) 1991-ஆம் ஆண்டிலிருந்து இவர் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவருமாவர், இவர் இரண்டு வயதிலேயே இளையராஜாவாக, திருவிதாங்கூர் வாரிசுச்சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டார். பாரசீகப் பண்பாடு பாரசீகப் பண்பாடு தொன்ம நாகரிகங்களில் சிறந்து விளங்கியவற்றில் ஒன்று. இன்றைய ஈரானை மையமாக வைத்து சிறப்புற்றிருந்த பாரசீகப் பேரரசின் பண்பாடே பாரசீகப் பண்பாடு ஆகும். இந்தப் பண்பாட்டின் தோற்றமும் எழுச்சியும் ஈரானின் இஸ்லாமியபடுத்தலுக்கு முந்தையது. நிலத்தாலும், மக்கள் பண்பாட்டுக் கலப்பாலும், அரசியல் பொருளாதார ரீதியிலும் இந்தியா தொன்று தொட்டு பாரசீகத்துடன் தொடர்பு கொண்டு இருந்தது. அரேப்-இஸ்லாமிய படையெடுப்பின் பின் குறிப்பிடத்தக்க பாரசீக மக்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். உலகில் சோறாஸ்ரியனிசம் சமயம் இன்னும் பேணப்படும் இடங்களில் ஒன்றாக இந்தியா - குறிப்பாக குஜராத் - பம்பாய் இருக்கின்றது. இந்திய நவீனத்துவத்தில் பல முன்னோடி தொழிலதிபர்கள் ஆக பாரசீகப் பண்பாட்டில் இருந்து வந்தோர் இருக்கிறார்கள். திபெத்தியப் பண்பாடு திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு மலைச் சுற்றாடலால், திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்தைய தாக்கங்கள், இசுலாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு ஆகும். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமய லாமா தலாய் லாமா ஆவார். 1950களில் திபெத் நிலப்பரப்பு சீனப் பொதுவுடமை அரசால் உள்வாங்கப்பட்ட போது, அப்போதைய திபெத் சமய அரசியல் தலைமையும் குறிப்பிடத்தக்க பொதுமக்களும் அகதிகளாக இந்தியா வந்தனர். இந்திய அரசு அவர்களுக்கு வாழ, அவர்களுடைய சமய பண்பாட்டைப் பேண வசதி செய்து கொடுத்தது. இன்றும் திபெத் சமூகத்தின் தலைவராகக் கொள்ளப்படும் தலாய் லாமா நாடு கடந்த நிலையில் இந்தியாவிலேயே வாழ்கின்றார். தமிழர் கைவேலைப் பொருட்கள் பட்டியல் தமிழர்களால் செய்யப்படும், குறிப்பாக தமிழ்நாடு இலங்கை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் சிறு கைவேலைப் பொருட்களை இந்தப் பட்டியல் தொகுக்கும். கீழ்கண்டவற்றுள் பெரும்பாலானவை தென்னை, பலை மற்றும் பிற மரப் பொருகளால் ஆனவை. மண்பாண்டங்களும் அடங்கும். பௌத்த அண்டவியல் பௌத்த அண்டவியல் ("buddhist cosmology") என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். பௌத்த அண்டவியல் கருத்துகள் பௌத்த சமய சூத்திரங்களிலும் இவற்றில் உரைகளிலும் விரிவாக காணப்படுகின்றன. பௌத்த அண்டவியல் குறித்த விவரங்கள் அபிதர்மம் குறித்த அனைத்து தேரவாதம் மற்றும் மகாயான பிரிவு நூல்களிலும் உரைகளிலும் காணப்படுகின்றன. எனவே பௌத்த அண்டவியல் குறித்த கருத்துகள் அனைத்தும் மேற்கூறிய நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆய்வினால் பெறப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டவை. ஏனெனில் எந்த ஒரு சூத்திரத்திலும் அண்டத்தை குறித்த முழுமையான கருத்துகள் இல்லை, அனைத்து கருத்துகளும் வேவ்வேறு சூத்திரங்களில் சிதறி உள்ளன. சில பௌத்த சூத்திரங்களில் புத்தர் பிற உலகங்களை குறித்தும் அங்குள்ள உயிர்களின் நிலைமைகளை குறித்தும் விரித்துரைக்கின்றார். வேறு சில சூத்திரங்கள் அண்டத்தின் பிறப்பு மற்றும் அழிவை குறித்து கூறுகின்றன. இவை அனைத்தும் சேர்க்கப்பட்டு விபஜ்யவாத பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது போன்ற ஒன்றிணைந்த இயலாக உருமாற்றம் அடைந்தது பௌத்த வரலாற்றின் மிக முற்காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். விபஜ்யவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் சர்வாஸ்திவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் பெயரளவிலே வேறுபாடுகள் காணப்படுகின்றன. பௌத்த அண்டவியல் விவரங்களை, அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல்/இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் ("திவ்யாக்ஷுஸ்" - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. பௌத்தத்தின் உயிர்களின் பத்து நிலைகள் என்பது பௌத்த அண்டவியலை நேரடிப் பொருளைக் கொள்ளலாமல் அவற்றின் மனோதத்துவரீதியான (உளவிய நோக்கில்) புரிதலால் உருவானது. பௌத்த அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்: உலக அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்: சக்ரவாட அண்டவியல், அண்டத்தை பல்வேறு உலகங்களாக பிரிக்கின்றது. இவ்வுலகங்கள் அனைத்தும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுள்ளன. ஒவ்வோர்உலகமும் ஒவ்வொரு மன நிலையை குறிப்பது. ஓர் உலகம் என்பது அவ்வுலகில் உள்ள உயிர்களால் தான் ஆனது. அந்த உயிர்களில் கர்மங்களினால் நிலை நிறுத்தப்படுவது. ஓர் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் நிலையில் அவ்வுலகமும் மறைந்து விடுகிறது. இதே விதமாக ஓர் உலகில் முதல் உயிர் பிறக்கும் போது அவ்வுலகம் உருவாகிறது. உலகங்கள் அண்டத்தில் உள்ள புற இடத்தை விட அவ்வுலகில் வசிப்பவர்களின் (அக) மன நிலையைப் பொருத்தே வேறுபடுத்தப்படுகிறது. மனிதர்களும் விலங்குகளும் ஒரே இடத்தில் இருந்தாலும் இருசாராரின் உலகங்களும் இரு வேறு உலகங்களாக விரிதுரைக்கப்படுகின்றன. "ஆரூப்யதாதுவுக்கு" அண்டத்தில் இடமே இல்லை, இருப்பபினும் அதுவும் ஓர் உலக அமைப்பாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. சக்ரவாடத்தின் படி, இந்த அண்டம் 31 பிரிவாகவும் , இப்பிரிவுகள் மூன்று தாதுக்களாக அந்தந்த உலகத்தின் மன நிலையை பொருத்து குழுப்படுத்தப்பட்டுள்ளது. இதை திரிதாது (மூன்று தாது) என அழைப்பர். அந்த திரிதாதுக்கள் பின் வருமாறு ஆரூப்யதாது (आरूप्यधातु), ரூபதாது (रूपधातु) மற்றும் காமதாது (कामधातु) ஆகும். பவசக்கரத்தில் கூறப்ப்டும் ஆறு நிலைகளிள்(தேவ,அசுர,மனுஷ்ய,பஷு,பிரேத,நரக) ரூபதாது அரூபதாது உலகத்தவர்களும் தேவர்களாகவே இங்கு கருதப்படுகின்றனர். எனினும் ரூபதாதுவின் உள்ளவர்களின் மனநிலையும் காமதாதுவினரின் மனநிலையும் வெவ்வேறு தாதுக்கள் என்ற நிலையில் மிகுந்த வேறுபாடுடையது. எனவே சரியாக கூறவேண்டுமெனில் காமதாதுவின் மேலுலகத்தை சேர்ந்தவர்களையே தேவர்கள் என அழைக்கவேண்டும். காமதாதுவில் உள்ள தேவர்களே மனித உலகத்துடன் (இந்திரன்,குபேரன் முதலியோர்) நெருக்கமுடையவர்கள். மற்ற இரண்டு தாதுக்களில் பிரம்மாக்கள் மட்டும் பூமிக்கு எப்போதாவது வருவதுண்டு. ஆனால் தர்மபாலர்கள் மற்றும் லோகபாலர்கள் என்ற முறையில் இங்கு நடக்கு அனைத்து நிகழ்வுகளிலும் காமதாது தேவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிரம்மா என்பது உயர்நிலை உலகில் வசிக்கும் தேவர்களுக்கான அடைமொழிப்பெயராகும். பரந்த பார்வையில், ஆரூப்யதாது மற்றும் ரூபதாதுவில் வசிப்பவர்கள் அனைவரையும் பிரம்மா என அழைக்கலாம். ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட நிலையில், ரூபதாதுவில் உள்ள கீழ்நிலையுள்ள 9 உலகில் இருப்பவர்களையும், முற்றிலும் வரையறுக்கப்பட்ட நிலையில் ரூபதாதுவின் கீழ் மூன்று உலகங்களை உள்ளவர்களை பிரம்மா என அழைக்கலாம். பல தேவர்கள் "பிரம்மா" என்ற அடைமொழியை பயன்படுத்துகின்றனர். (எ.டு) பிரம்மா சஹம்பதி, பிரம்மா சனத்குமாரன், பக பிரம்மா முதலியவை. எனினும் இவர்கள் எவ்வுல்கத்தை சேர்ந்தவர்கள் என தெளிவாக தெரியவில்லை. எனினும் இவர்கள் ரூபதாதுவில் சுத்தாவாச உலகங்களுக்கு கீழ் உள்ள உலகங்களில் இருப்பவர்களாக இருக்கக்கூடும். ஆரூப்யதாது அல்லது அரூப (அருவ) உலகம் என்பது உருவமற்ற உலகங்களை குறிப்பது. அண்டத்தில் அவற்றுக்குத் தனி வடிவமோ இடமோ ஏதும் இல்லை. இந்த உலகங்கள் முழுக்க முழுக்க மன நிலையை சார்ந்து எழும் உலகங்களாகும். ஆரூப்யதாதுவில் உள்ள உலகங்களில் இருப்பவர்களுக்கு உருவம் ஏதும் இல்லை. உருவமற்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இந்த அரூப்யதாது என்பது முற்காலத்தில் அரூபதியானங்களை வசப்படுத்தியவர்கள், தங்களுடைய நற்கர்ம பலன்களுக்காக இந்த உலகங்களில் பிறக்கின்றனர். எனினும் போதிசத்துவர்கள் ஆரூப்யதியானங்களை வசப்படுத்தினாலும் இவர்கள் ஆரூப்யதாதுவில் மறுபிறப்பு எய்துவதில்லை. நான்கு அரூபதியானங்களுக்கு முறையே நான்கு விதமான ஆயதனங்கள் உள்ளன. ரூபதாது அல்லது ரூப உலகம் என்பதற்கு "உருவ உலகம்" என்று பொருள். பெயரின் படியே ரூபதாதுவின் உலகங்களுக்கும் அவ்வுலகங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடமும் உருவமும் உண்டு. எனினும் இவ்வுலகத்தவர்களின் உருவம் மிகவும் நுணுக்கமான பொருட்களால் ஆனது. அதனால் சாதரணமாக காமதாது உலகத்தவர்களின் பார்வையில் ரூபதாதுவினர் தெரிவது இல்லை. ஜானவாசப சூத்திரத்தின் படி, ரூபதாதுவின் பிரம்ம உலகத்தில் இருந்து ஒருவர் காமதாதுவில் உள்ள திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களை சந்திக்க வேண்டுமெனில் மிகவும் "அடர்த்தியான" உருவத்தை தரித்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் அப்போதே பிரம்ம உலகத்தவர்கள் "திராயஸ்திரிம்ச" உலகத்து தேவர்களின் கண்களில் தென்படுவர். காமதாது உலகத்தவர்களைப்போல் இவ்வுலகத்து தேவர்களுக்கு இன்பமோ துன்பமோ இல்லை. மேலும் இவர்கள் புலன்களை திருப்திபடுத்தக்கூடிய ஆசைகளும் அற்றவர்கள். ரூபதாதுவில் உள்ளவர்களுக்குள் பால் பேதம் (பால் வேற்றுமை) கிடையாது. ஆரூப்யதாது உலகத்தவர்கள் போலவே, ரூபதாதுவில் உள்ளவர்களின் மனம் தியானங்களை அடிப்படையாக கொண்டவையே. ஆரூப்யதாது உயர்நிலை அரூபதியானங்களை வசப்படுத்தியவர்க்கெனில் ரூபதாது கீழ்நிலை ரூபதியானங்களை வசப்படுத்தியவர்களுக்கு. ரூபதாது உலகங்களை நான்கு ரூபதியானங்களை அடிப்படையாக கொண்டு நான்கு விதமாக பிரிக்கலாம். மேலும் சுத்தாவாச (शुद्धावास) உலகங்களும் இந்த வகைப்படுத்தலுக்குள் அடங்காது. எனவே ஒவ்வொரு ரூபதியான வகைப்படுத்துலுக்குள் மூன்று பிரிவுகளும், சுத்தாவாசத்துக்கு ஐந்து பிரிவுகள் என, ரூபதாதுவை மொத்தமாக 17 பிரிவுகளாக பிரிக்கலாம்.(தேரவாதத்தின் படி 16 பிரிவுகள்) ரூபதாது உலகங்கள் ஒன்றின் மீது ஒன்று செங்குத்தாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகங்களின் அளவுகள் கீழிருந்து மேலாக முந்தைய உலகத்தை விட இரட்டிப்பு பரப்பளவை உடையவை. எனவே ரூபதாதுவின் மேலுலகங்களில் உள்ளவர்க்ள் கீழுலகங்களில் உள்ளவர்களை விட உருவத்தில் பெரிதாக இருப்பர். மேலுலகங்கள் கீழுள்ள உலகங்களை விட அகலமானவை. இந்த உலகங்கள் யோஜனை என்ற அலகை பயன்படுத்தி அளக்கப்படுகின்றன. ஒரு யோஜனை என்பதன் அளவு சரியாக தெரியவில்லை, எனினும் ஒரு சராசரி மனிதனின் உயரத்தில் 4000 மடங்கு ஒரு யோஜனையாக கொள்ளப்படுகிறது. ஆகவே யோஜனை என்பது தோராயமாக 4.34 மைல்கள் (அ) 7.32 கி.மீ இருக்கலாம். சுத்தாவாசம் என்பது "தூய வாசம்" என்று பொருள். சுத்தாவாசம் ரூபதாதுவின் மற்ற உலகங்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் ரூபதாதுவின் மற்ற உலகங்களை போல் அல்லாமல் சுத்தாவாச உலகத்தில் தியான பலன்களின் மூலமாகவோ நற்கர்மங்களின் மூலமாகவோ அடைய இயலாது. அருக நிலையை அடைய வேண்டிய அருக பாதையை தேர்ந்தடுத்தவர்களும்(அனாகாமின்) சுத்தாவாச உலககில் இருந்து கீழுலகங்களில் பிறக்காது நேரடியாகவே போதியை அடைந்து விடுவபவர்கள் மட்டுமே சுத்தாவாச உலகில் பிறக்கின்றனர். சுத்தாவாச தேவர்கள் அனைவரும் பௌத்தத்தின் பாதுகாவலர்கள் ஆவர். ஞானம் பெற்றவுடன் கௌதம புத்தரிடம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரம்மா சஹம்பதி முற்காலத்து புத்தரை பின்பற்றிய அனாகாமின் ஆவார். சுத்தாவாச தேவர்கள் கீழுலகங்களில் பிறக்க மாட்டார்கள் என்பதால் போதிசத்துவர்கள் இவ்வுலகில் பிறப்பது கிடையாது. ஏனெனில் போதிசத்துவர்கள் உயிர்கள் உய்ய வேண்டி கீழுலகில் பிறக்க வேண்டு இருக்கிறது. சுத்தாவாச தேவர்கள் புத்தரின் போதனையினால் இந்த உலகத்தின் பிறப்பெய்துவதால், பூலோகத்தில் புத்தர்கள் தோன்றாதிருக்கும் காலக்கட்டத்தில் சுத்தாவாச உலகங்கள் வெறுமையாகவே இருக்கும். மற்ற உலகங்களை போல் சுத்தாவாச உலகங்கள் பிரளயத்தால் அழியாதவை. சுத்தாவாச தேவர்கள் புத்தரின் பிறப்பை முன் கூட்டியே அறிந்து பூமியில் பிராமணர்களாக உருவம் தரித்து மனிதர்களிடம் புத்தரை எவ்வாறு கண்டுகொள்வது என விவரிப்பர். மேலும் ஒரு போதிசத்துவரின் வாழக்கையின் இறுதியில் புத்த நிலையை எய்த காரணமாக இருக்கும் நான்கு சம்பங்களை காண வைப்பர். ஐந்து சுத்தாவாச உலங்களை பின்வருமாறு: பிருஹத்பல(बृहत्फल) உலகங்கள் நான்காம் தியானமான உபேக்‌ஷத்துடன் தொடர்புடையது. பிருஹத்பல உலகங்கள் மகாகல்பத்தின் இறுதியில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கின்றன. அதாவது இவ்வுலகம் காற்றினால் அழிக்கப்படமாட்டாது. சுபகிருத்ஸ்ன(शुभकृत्स्न) உலகத்தவர்களின் மனநிலை மூன்றாம் தியானமான முதிதத்துடன் தொடர்புடையது. எனவே இந்த உலகத்து தேவர்கள் சுகத்துடன் தொடர்புடையவர்கள். சுபகிருத்ஸ்ன உலகங்கள் மகாகலப்த்தின் முடிவில் நீரால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கிறது. எனவே இவ்வுலகங்கள் நீரினால் அழிக்கப்படாது, அதாவது வெள்ளம் இவ்வுலகங்களை அழிக்கும் அளவுக்கு மேலே எழும்பாது. ஆபாஸ்வர(आभास्वर) உலகத்தவர்களின் மனநிலை இரண்டாம் தியான நிலையான பிரீத்தியுடன் தொடர்புடையது. இவ்வுலகத்தவர்கள் மூன்றாம் தியான நிலையான சுகத்தின் மனநிலையையும் கொண்டுள்ளனர். ஆபாஸ்வர தேவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாது "அஹோ சுகம்" என மிகுந்த ஒலியெழுப்புவார்கள் என கூறப்படுகின்றது. இவர்களுடைய உடலில் இருந்து மின்னல் போன்ற ஒளி வெளிவருகிறது. இந்த உலகத்தவர்களிடன் ஒரே விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் அந்தந்த உடலின் உணர்ச்சிகள் வேறுபடுகின்றன. ஆபாஸ்வர உலகங்கள், நெருப்பினால் அழிக்க்படும் உலகங்களில் உச்ச எல்லை குறிக்கிறது. கீழுலகங்களை சுட்டெரிக்கும் நெருப்பு ஆபாஸ்வர உலகங்களை சுட்டெரிக்கும் அளவுக்கு மேலே எழும்புவதில்லை. கீழுலகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, ஆபாஸ்வர உலகத்த்வர்களே அவ்வுல்கங்களில் மறுபிறப்பெய்துவர்களால் முதன் முதலில் நிரம்புகிறது. பிரம்ம உலகத்தவர்களின் மன நிலை முதல் தியானமான மைத்ரீயுடன் தொடர்புடையது. இது விதர்கத்தை சார்ந்தது. மேலும் அவர்களுடைய மனம் விசாரத்துடனும் அதேவேளை மகிழ்ச்சி மற்றும் சுகத்துடனும் தொடர்புடையது. பிரம்ம உலக்ங்கள் மற்ற கீழ் நிலை உலகங்களை போலவே, மகாகல்பத்தின் முடிவில் நெருப்பினால் அழிக்கப்படுகிறது. இந்த உலகம் பாளி மொழியில் காம உலகம் என அழைக்கப்படுகிறது. காமதாதுவின் உலகங்களில் உல்ளவர்கள் வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அருகன்களையும் புத்தர்களையும் தவிர காமதாதுவினர் அனைவரும் மாரனின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் எனவே அதன் மூலமாக துன்பததையும் அனுபவிக்கின்றனர். கீழ்க்கண்ட நான்கு உலகங்களும் 80,000 சதுர யோஜனைகள் பரப்பளவு உள்ளன. இவை சுமேரு மலையின் மீது மிதந்த வண்ணம் உள்ளன. பூமியின் நடுப்பகுதியில் மிக உயர்ந்த சிகரத்தை கொண்ட மிகப்பெரிய மலையான சுமேரு மலை விளங்குகிறது. இந்த சுமேரு மலையை சுற்றியே சூரியனும் சந்திரனும் சுழல்கின்றன. இந்த சுமேரு மலையின் அடித்தளத்தில் மகாசமுத்திரம் இருக்கின்றது. மேலும் இதை சுற்றி பல சிறிய அளவு மலைகளும் சமுத்திரங்களும் விளங்குகின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மூன்று உலகங்கள் உள்ளன: சுமேருவின் உச்சியில் திராயஸ்திரிம்சம், சுமேருவின் சரிவுகளில் சாதுர்மகாராஜிகாயிகம், சுமேருவின் அடித்தளத்தில் அசுர உலகம். நரகம் என்பது தீய கர்மங்களின் விளைவாக அக்கர்மங்களுக்கு தண்டனை பெறும் விதமாக மிகுந்த துன்பம் உடைய உலகங்களை குறிக்கும். நரகங்களில் தங்களுடைய தீயகர்மங்களினால் பிறக்கின்றனர். அவர்களுடைய கர்மங்கள் தீரும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நரகங்களில் வசிப்பர். தீயகர்மங்கள் தீர்ந்தவுடன் இன்னும் பலன் தராத நற்கர்மங்களுக்காக மேலுலங்களில் மீண்டும் பிறப்பர். இங்குள்ள உயிர்களின் மனநிலை மிகுந்த பயத்தையும் பொறுக்க இயலாத மனவேதனையையும் குறிக்கும். நரங்கள் ஜம்புத்தீவின் அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. நரகங்களின் தரப்படும் வெவ்வேறு தண்டைகளின் படி, நரகங்களை எட்டு கடுங்குளின் நரங்களாகவும், எட்டு கடும்வெப்ப நரகங்கள் எனவும் பிரிக்கலாம். ஒவ்வொரு நரகத்தின் உள்ளவர்களின் ஆயுள் முந்தைய நரகத்தின் ஆயுளை விட இருபது மடங்கு அதிகம் பூமியின் மீதுள்ளனைத்தும், சுமேருவும் பிறவும் கடல்மட்டத்தில் இருந்து 80,000 யோஜ்னைகள் ஆழம் வரை கீழே ஊடுறுவுகின்றன. இந்த ஆழத்துக்கு பிறகு "தங்க மண்" என்ற ஒரு சிறந்த வகை மண், சுமேருவின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. இந்த மண் 32,000 அடி ஆழம் கொண்ட படுகையாக கடல்மட்டத்தில் இருந்து 400,000 யோஜனைகள் ஆழம் வரை ஊடுறுவுகிறது. இந்த தங்க மண் படுகை 80,000 யோஜனைகள் கொண்ட நீர் படுகையின் மீது அமைந்துள்ள நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 8,400,000 யோஜனைக்ள் ஆழத்தில் உள்லது. இந்த நீர் படுகை, 16,000,000 யோகனைகள் ஆழம் உடைய காற்று படுகைமீது உள்ளது. இந்த காற்று படுகை 1000 உலகங்களை தாங்குகிறது. சக்ரவாட அண்டவியல் பலவேறு உலகங்கள் செங்குத்தாக எவ்வாறு அடுக்கப்பட்டுள்ள அமைவுகளை குறித்து கூறிகிறது. சஹஸ்ர அண்டவியல் இவ்வுலங்கள் கிடைமட்டமாக எவ்வாறு குழுப்படுத்தப்படுகின்றன என்பதை விவரிக்கிறது. காமதாதுவின் நான்கு சொர்க்கங்களும் சுமேருவின் சிகரத்தின் பரப்பளவை கொண்டன. மூன்று பிரம்ம உலகங்களும் சக்ரவாடம் வரை விரியக்கூடிய அளவுக்கு அகலம் உடையவை. மகாபிரம்ம உலகத்தில் இருந்து நீர் படுகை வரை ஒரு உலக குழுமம் ஆகும். இந்த குழுமம் ஒரு மகாகல்பத்தின் முடிவில், நெருப்பினால் அழிக்கப்படும் உலகங்களை குறிக்கின்றன. மகாபிரம்ம உலகங்களுக்கு மேலே ஆபாஸ்வர உலகங்கள் உள்ளன். இவரை கீழ்நிலை உலங்களை விட அதிகமான அகலம் கொண்டவர். மேலும் ஆபாஸ்வர உலங்கள், 1000 உலக குழுமங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு உலக குழுமம் தனக்கென பிரத்யேகமான சுமேரு, சக்ரவாட மலை, சூரியன், சந்திரன் மற்றும் நான்கு மகாகண்டங்கள் ஆகியவையை கொண்டுள்ளன. இதை 1000 உலக குழுமம் சஹஸ்ர சூடிக லோகதாது(सहस्र चूडिक लोकधातु) என அழைக்கப்படுகிறது. இந்த சஹஸ்ர சூடிக லோகதாது நீரினால் 8 மகாகலபங்களின் முடிவில் அழிவுறும். ஆபாஸ்வர உலகங்களுக்கு மேலுள்ள சுபகிருத்ஸ்ன உலகங்கள் தன்னுள் 1000 சஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளது. இதை திவிசஹஸ்ர மத்யம லோகதாது(द्विसहस्र मध्यम लोकधातु) என அழைக்கின்றனர். இந்த குழுமம் 64 மகாகல்பங்களின் முடிவில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களை கொண்டுள்லது. இதே போல்,சுபகிருத்ஸ்ன உலக்ங்களுக்கு மேலுள்ள சுத்தாவாச மற்றும் பிரஹத்பல உலங்கள் தன்னுள் 1000 திவிசஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளனர். இதை மகா குழுமம் திரிசஹஸ்ர மஹாசஹஸ்ர லோகதாது(त्रिसहस्र महासहस्र लोकधातु) என அழைக்கப்படுகிறது. பௌத்த கால அண்டவியல் அண்டத்தின் தோற்றம், நீடிப்பு, அழிவு ஆகியவற்றை விளக்குகிறது. மற்ற இந்திய அண்டவியல்கலை பொலவே பௌத்த அண்டவியலும் காலத்தை காலச்சக்கரமாக கருதுகிறது. அதாவது காலம் என்பது சுழற்சி பண்பை கொண்டதாக கருதப்படுகிறது. அண்டங்கள் உருவாவதும் அழிவதும் ஒரு சுழற்சியாக என்றும் நடைபெற்றுக்கொண்டிருப்பவை. இந்த கால சுழற்சிக்கு ஒரு ஆரம்பவோ முடிவோ இல்லை. எப்படி பகல் - இரவு மாறி மாறி வருகிறது அவ்வாறே அண்டங்களின் பிறப்பும் அழிவும் நடைபெறுகின்றன. பௌத்த அண்டவியலில் காலத்தின் அடிப்படை அலகு மகாகல்பம். இந்த மகாகலபம் நான்கு கல்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: இந்த ஒவ்வோரு கல்பமும் சமமான கால அளவுடைய இருபது அந்தரகல்பமாக பிரிக்கப்படுகின்றது. சம்வர்தஸ்தாயிகல்பத்துக்கு இந்த பிரிவு பெயரளவில் மட்டுமே. ஏனெனில் இந்த கல்பம் முழுவதும் அனைத்து சூன்யமயமாக இருப்பதால் இப்பிரிவினால் குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் கூற இயலாது. எனினும் மற்ற மூன்று கல்பங்களுக்கு இந்த பிரிவினை அந்தந்த கல்பத்துக்குண்டான உட்சுழற்சியை குறிக்கிறது. விவர்தகல்பம் மூலமுதல் காற்று வீசுவதுடன் தொடங்குகிறது. இந்த மூலமுதல் காற்று சென்ற மகாகல்பத்தில் அழிக்கப்பட்ட அண்ட அமைப்புகளை மீண்டும் உருவாக்கிறது. பலவேறு உலகங்களின் அழிவுமுறைகள் வேறுபடுவதால், இந்த அண்ட அமைப்பின் மீட்பும் வேறுபடலாம். எனினும் பொதுவான கீழ்க்கண்ட முறையை பின் பற்றுகிறது. மேலுலகங்களில் இருந்து தொடங்கி கீழுலகங்கள் உயிர்களால் நிரப்பப்படுகிறது. உதாரணமாக பிரம்ம உலகத்தில் ஆபாஸ்வர தேவர் மறுபிறப்பின் தொடங்கி தொடர்ந்து நரகம் வரை உயிர்கள் நிரப்பபடும் வரை இது அணட மறு மீட்பு நடைபெறும். விவர்தகலப்த்திலே முதல் மனிதர்கள் தோன்றுவர். எனினும் தற்கால மனிதர்களை போலல்லாது ஒரு கீழ்நிலை தேவர்களை போன்று அவர்கள் தோற்றம் இருக்கும். அவர்கள் உடல் பிரகாசிக்கும், அவர்களால் எந்த்வித உபகரணங்களின் உதவியுடன் காற்றில் நடமாட இயலும், நீண்ட ஆயுளை கொண்டிருப்பர் மேலும் உயிர் வாழ்வதற்கு எவ்வித புற உணவுதேவையும் இருக்காது. காலம் செல்ல செல்ல அவர்களுக்கு புற உணவுகளௌ உண்ண ஆசை தோன்று, அதை உண்ட பிறகு அவர்களின் உடல் பருமன் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாகும். பிறகு தங்களுடைய பிரகாசத்தை இழந்து அவர்கள் முழுமையாக தற்கால மனிதர்களை போன்ற உடலமைப்பை, உடலளவில் வேறுபாடுகளும் நிகழும். அவர்களின் ஆயுள் குறைந்து விடும். அதன் பின்னர் அவர்களுக்கு பால் வேறுபாடு தோன்றிய பிறகு அவர்களுக்குள் பாலியல் ஈடுபாடுகள் ஏற்படும். பிறகு ஆசை, பொறாமை, திருட்டு போன்ற தீய குணங்கள் தோன்றி தங்களுக்கு வகுப்பு பேதங்களை ஏற்படுத்தி மகாசம்மதன்(महासम्मत) என்ற அரசனை தங்களை ஆள தேர்ந்தெடுப்பர். அதில் சிலர் சில காலங்களுக்கு முன்பே தோன்றிய மிருகங்களை வேட்டையாடி புலாலுணவை உண்ண ஆரம்பித்திருப்பர். இது அக்கஞ்ஞ சூத்திரம் என்ற நூலில் விவரமாக கூறப்பட்டுள்ளது. முதல் உயிர் நரகத்தில் பிறந்தவுடன் விவர்தஸ்தாயியக கல்பம் ஆரம்பிக்கிறது. ஆக அனைத்து உலங்களும் உயிர்க்ளால் நிரம்பி விடுகிறது. இந்த மகாகலபத்தின் முதன் அந்தர்கல்பத்தில், மனிதர்களின் ஆயுள் கண்க்கற்ற நிலையிலிருந்து நூற்றுக்கும் குறைவான ஆண்டுகளை கொண்டதாக ஆகிறது. அந்தர்கல்பத்தில் ஆரம்ப காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனே இருக்கின்றனர். அவர்கள் ஒரே ஒரு "சக்ரவர்தி"யின் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மஹாசுதஸ்ஸன சூத்திரம் இவ்வாறான, 336,000 ஆண்டுகள் மஹாசுதர்சன சக்ரவர்தியை குறித்து விளம்புகிறது. சக்கவத்தி சிஹனாத சூத்திரம் திருடனேமியில் இருந்து ஐந்து வம்ச சகரவர்த்திகளை பற்றி கூறுகிறது. இவர்கள் 80,000 வருட ஆயுட்காலம் கொண்ட்வர்களாக இருந்தனர். பிறகு வந்த ஏழாவது சக்ரவர்த்தி மரபை பின்பற்றாது தன்னுடைய முடியை தன் மகனுக்கு அளித்து, துறவு நிலையை எய்த மறுத்தார். இவருடைய தவறான ஆட்சியினால், வறுமை அதிகரித்தாது, அதனால் திருட்டு தோன்றியது. திருட்டை தடுக்க மரண தண்டனை கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக வாழ்க்கையின் மீது கொண்ட வெறுப்பணர்ர்சியினால் கொலைகளும் பிற பாதகமான செயல்கள் அவ்வப்போது நடைபெற துவங்கின அடுத்த தலைமுறை சென்ற தலைமுறையின் பாதி ஆயுளை மட்டுமே கொண்டிருந்தது. இவ்வாறாக மனிதர்களின் ஆயுள் வெகு சீக்கிரமாக 80,000 ஆண்டுகளில் இருந்து 100 ஆண்டுகள் என குறைந்தது. ஒவ்வொரு தலைமுறையுடன் பொறாமை, வெறுப்பு, தவறான கண்ணோட்டம் என அனைத்து விதமான தீய செயல்கள் அதிகரித்தன. மஹாபதான சூத்திரத்தில் இந்த அர்ந்தர்கல்பத்தில் தான் மூன்று புத்தர்கள் வாழந்ததாக கூறுகிறது. கிரகுச்சண்ட புத்தர் 30,000 வருடங்களும், கனகமுனி 30,000 வருடங்களும், காசியப புத்தர் 20,000 வருடங்களும் வாழ்ந்தனர். தற்காலம் முதல அந்தரகலப்த்தின் இறுதிக்காலமாகும். இந்த காலக்கட்டதி ஆயுள் 100 ஆண்டுகளுக்கு குறைவாக ஆனது. கௌதமரான சாக்கியமுனி புத்தர் இவ்வுலகில் 80 ஆண்டுகாலமே வாழ்ந்தார். இந்த அந்தரகல்பத்தின் இறுதிகாலம் மோசமாக இருக்கும் கூற்ப்படுகிறது. மனிதர்களின் ஆயுள் தொடர்ந்து குறைந்து கொண்டுவரும். அவர்களின் தீய செய்லகலே அவர்களின் அழிவுக்கு வழிகோலும். மனிதர்கள் பத்து வருடங்களுக்கு அதிக்மாக வாழமாட்டனர்.உணவுகள் சுவையில்லாமல் போகும். நற்செயலகளுக்கு நன்றி தெரிவிக்கப்படாது. ஆசைமிக்கவர்களும் வெறுப்பை கொண்டவர்களும் மக்களை ஆளுவர். மனிதர்களின் மத்தியின், குடும்பத்துக்குள்ளேயே கூட வெறுப்பு தோன்றும். இந்த வெறுப்பு சக மனிதர்களை வேட்டையாடி திண்ணும் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இந்த காரணங்களினால் ஒரு பெரும்போர் தோன்றும். இந்த போரின் மோதல் போக்குடைவர்களும் விரோதத்தை உடைவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிவர். ஓரளவுக்கு அமைதியான போக்கை நாடுபவர்கள் காடுகளிலும் பிற ரகசிய இடங்களிலும் ஒளிந்து கொள்வர். இந்த போர் முதல் அந்தர்கல்பத்தின் முடிவை குறிக்கிறது. பெரும்போருக்கு பிறகு போரில் இருந்து பிழைத்தவர்கள் தங்களுடைய மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தங்களுடைய தீய பண்புகளுக்காக வருந்துவர். அவர்கள் நன்மை புரிய ஆரம்பித்தவுடன், அவர்களது ஆயுள் அதிகமாகும். அதோடு சேர்ந்து உடல்நிலையும் மனிதகுலத்தின் நன்மையும் பிறகும். பல காலங்களுக்கு பிறகு பத்து வருடமாக இருந்து மனிதர்களின் ஆயுள், 80,000 ஆண்டுகளாக உயரும். அந்த நேரத்தில் சங்கன்(शङ्ख) என்ற சக்ரவர்த்தி தோன்றுவார். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் துஷித உலகத்தில் இருந்து நாததேவ போதிசத்துவர் கீழிறங்கி அஜீதம் என்ற பெயருடன் பிறவியெடுத்து பிறகு போதி நிலை எய்து மைத்திரேய புத்தராக ஆவார். மைத்திரேயரின் காலத்துக்கு பிறகு மீண்டும் நிலைமை மோசமடையும், மெதுவாக ஆயுட்காலம் 80,000 வருடங்களில் இருந்து 10 வருடங்களாக மீண்டும் குறையும். பின் வரும் அந்தர்கல்பமும் ஒரு பெரும்போர், பிறகு மீண்டும் உய்ர்வு நிலை என தொடர்ந்து நிகழும். இது தொடர, 19வது அந்தர்கல்பத்துக்கு பிறகு ஆயுட்காலம் 80,000 வரை நீளும் பிறகு அது குறையாது. அத்துடன் விவர்தஸ்தாயிகலபம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் நரகங்களில் உயிர்கள் பிறப்பது நிற்பதுடன் சம்வர்த கல்பம் தொடங்குகிறது. பிறகு இந்த நிகழ்வு மேல் நோக்கி நடக்கும். அதாவது, முதலில் பிரேதங்களின் பிறப்பு நடக்காது, பிறகு விலங்குகள், பிறகு மனிதர்கள் என தேவ உலகங்கள் வரை இது தொடரும் பிரம்ம உலகம் வரை அனைத்தும் உயிர்களற்ற நிலை எய்தும் போது, ஒரு பெருந்தீ தோன்றி அனைத்து அண்டத்தையும் விழுங்கும். இந்த தீ ஆபாஸ்வ்ர உலகங்களுக்கு கீழுள்ள அனைத்து உலகங்களையும் அழித்து விடும். அனைத்தும் அழிந்தவுடன் சம்வர்தஸ்தாயி கலபம் துவங்குகிறது. சம்வர்தஸ்தாயிகலப்த்தை குறித்த கூற ஏதும் இல்லை. ஏனெனில் ஆபாஸ்வர உலகங்களுக்கு கீழே ஏதும் நடப்பதில்லை. மூலமுதல் காற்று வீச ஆரம்பித்து அது முடிவடையும் வரை சம்வர்தஸ்தாயி கல்பம் தொடரும். ஒவ்வொரு சம்வர்தகல்பத்தின் முடிவிலும் நெருப்பால் அழிவு நிகவும். எட்டு மகாகல்பத்தின் முடிவில், அதாவது நெருப்பினால் ஏழு அழிவுகள் நிகழ்ந்த பின்னர், நீரினால் அழிவு நிகழும். நீர் பிரம்ம உலகங்களை மட்டும் அழிக்காது, ஆபாஸ்வ்ர உலகங்களையும் சேர்த்து அழித்து விடும். 56 நெருப்பு அழிவுகளுக்கு பிறகு, 7 நீர் அழிவுகளுக்கு பிறகும், அதாவது 64ஆவது மகாகல்பத்தில் காற்றினால் அழிவு ஏற்படும். இதுவே மிகப்பெரிய அழிவாகும் இதனால் சுபகிருத்ஸ்ன உலகங்கள் வரை உள்ள அனைத்து உலகங்களும் அழிக்கப்படும். இதற்கு மேலுள்ள உலகங்களில் அழிவு நடை பெறுவது இல்லை. யூத பண்பாடு யூத மக்களின் பண்பாடு யூத பண்பாடு ஆகும். எண்ணிக்கையில் சிறிய அளவு மக்கள் தொகுதி என்றாலும், உலக வரலாற்றில் முக்கிய திருப்பங்களின் மத்தியில் யூத மக்களும் அவர்களின் பண்பாடும் இருந்து வருகின்றது. இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, உருசியா எனப் பல நாடுகளில் பரந்து வாழும் யூத மக்களின் பண்பாட்டில் யூத சமயமும், வரலாற்று நிகழ்வுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றன. யூத மக்களின் பண, அறிவு, அரசியல் செல்வாக்குக்கு அவர்களின் பண்பாடும் ஒரு முக்கிய காரணம் ஆகும். யோசனை (நீள அலகு) யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) அமைப்பின் ஸ்தாபக ஆச்சாரியரான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஒரு யோசனை என்பதை 8 மைல்கள் எனக் கருதினார். இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய் (Eustachius Benedictus de Lannoy, 1715 – ஜூன் 1, 1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்டார். ஆனால், இம் முயற்சியின்போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க்கைதி ஆனார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போர் குளச்சல் போர் என்று அழைக்கப்படுகிறது. டி லனோய் சிறைக் கைதியாக இருந்த போது அரண்மனைப் பணியில் இருந்த நீலகண்ட பிள்ளை என்பவரின் நண்பரானார். பின்னர் நீலகண்ட பிள்ளை கத்தோலிக்கராக மதம் மாறினார். இந்த நீலகண்ட பிள்ளையே கோட்டாறு மறைமாவட்டத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆவார். டி லனோயின் திறமைகளை அறிந்த மார்த்தாண்ட வர்மா மன்னர் அவரைத் திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக நியமித்தார். திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக இவர் ஆற்றிய பணிகள், மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் பிற்காலப் போர் வெற்றிகளுக்குப் பெரிதும் துணை புரிந்ததாகக் கருதப்படுகிறது. டி லனோயின் மறைவிற்குப் பிறகு அவரது உடல் நாகேர்கோவிலுக்கு அருகிலுள்ள உதயகிரிக் கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பவணந்தி பவணந்தி அல்லது பவணந்தி முனிவர் என்பவர், இடைக் காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பது சில வரலாற்றாய்வாளர் கருத்தாகும். இவரது பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துக்களையும் சான்றாகக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது. என்பது நன்னூலுக்கு இவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தின் இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. "பொன்மதிற் சனகை" என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள "சன்மதி முனி" என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது. இவர் எழுத்துபடிவத்தைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரசோழியம் வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும். புத்த மித்திரர் என்ற பதம் புத்தரின் நண்பர் என்ற கருத்துடையதகும். இந்நூலுக்குப் பாயிரம் இயற்றிய பெருந்தேவனார் புத்த சமயத்தை விதந்து எழுதியுள்ளமையால் அக்காலத்தில் புத்த சமயத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதற்காக அன்றேல் சமஸ்கிருத மொழி வழியாகத் தமிழை வடமொழிப் பரிச்சியம் உள்ளவர்களுக்கு கற்பிப்பதற்காக இந்நூல் எழுதபட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு என கனடாவிலுள்ள பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் தொல்காப்பிய மாநாடு ஒன்றில் கருத்துத் தெரிவித்தார். வீர ராசேந்திர சோழனின் நிதியுதவியில் இதனைப் புத்தமித்திரர் யாத்திருக்கலாம் எனவே வீரசோழியம் எனப் பெயர் பெற்றது என்று கருத இடமுண்டு. எனினும் இந்நூல் இயற்றப்பட்ட சொற்ப காலத்திலேயே வழக்கிழந்து போய்விட்டதாகவும், தமிழ் மரபுக்கு மாறான வடமொழி இலக்கண விதிகளைப் புகுத்தியதனாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தை அரங்கேற்றும்போது அதன் காப்புச் செய்யுளின் முதற் சொல் தொல்காப்பியத்தின்படி இலக்கண வழுவுள்ளதாகக் கூறப்பட, வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இறைவன் அதனை நியாயப் படுத்தியதாகக் கதை உண்டு. ஆனால், தமிழ் இலக்கியங்கள் எதிலும் முன்னுதாரணம் இல்லாமல் தமிழ் மரபுக்கு மாறான புதிய இலக்கண விதிகள் வீரசோழியத்தில் புகுத்தப்பட்டிருப்பது குறித்துக் குற்றச்சாட்டுகள் உண்டு. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை எழுத இறைவனே அடியெடுத்து கொடுத்ததாக செய்தியுண்டு. அதாவது "திகட சக்கர செம்முகம்.. என்பதே அவ்வடியாம். ஆனால், கந்த புராணத்தை அவையில் அரங்கேற்றுங் கால், அவையோர் யாவரும் 'திகட சக்கரம்' என்பதிற்கு விளக்கம் கேட்டனர். கச்சியப்பரும், திகழ்+தசக்கரம்(திகழ்- விளங்குகின்ற; தசக்கரம்- பத்து கரங்கள்) என்பன புணர்ந்து திகடசக்கரம் ஆயிற்று என்றார். ஆனால் அறிஞரோ, 'ழ்'உம் 'த்'உம் சேர்ந்து "ட்" ஆகாது என மொழிந்தனர். பின்னர் முருகனே வந்து வீரசோழியத்தை மேற்கோள்காட்டி அவ்விதப் புணர்ச்சி அமையுமே என்றார் என்பதே அக்கதையாகும். வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும் 1929 1929 (MCMXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். இலரி கிளின்டன் இலரி டயான் ரோட்டம் கிளின்டன் (ஹிலாரி கிளின்டன்; ஹிலாரி கிளிண்டன்)(Hillary Diane Rodham Clinton) ஐக்கிய அமெரிக்காவின் முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்னால் அமெரிக்க மேலவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக ஆவதற்குப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் சீமாட்டி" என்னும் பட்டத்துடன் இருந்தார். இலினொய் மாநிலத்தவரான இலரி 1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் 1979 ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். 1983, 1992 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். 1979 முதல் 1981 வரையும் 1983 முதல் 1992 வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் வோல் மார்ட் உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார். ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்ணாக கொள்கை விடயங்களில் முன்னணியில் இருந்து செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். ஆனால் 1997 ஆம் ஆண்டு அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் (Adoption and Safe Families Act) என்பவற்றை நிறுவினார். 1996 ஆம் ஆண்டு வைட்வாட்டர் சர்ச்சையின் காரணமாக நீதிமன்றில் தோன்றும் படி நீதிமன்றம் ஆணை பிறபித்திருந்தது. இவ்வாறு கோரப்பட்ட ஒரே அமெரிக்க முதன் பெண் இவராவார். கணவரான பில் கிளின்டனின் அதிபர் பதவிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சில சீர்கேடுகள் தொடர்பாக இவர் விசாரிக்கப்பட்டாலும் ஒன்றிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு லெவீன்ஸ்கி சர்ச்சையின் போது இவரது மணவாழ்க்கை கேள்விக்குறியாக காணப்பட்டது. 2000 ஆம் நியூ யார்க்க்குக்கு இடம் பெயர்ந்து 2000 ஆம் அம்மாநிலம் சார்பான முதல் பெண் மேலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்க முதல் பெண்ணொருவர் பெரிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதும் இதுவே முதல் முறையாகும். மேலவை உறுப்பினராக இச்யார்ச் புச்சின் ஆட்சியில் சில வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார். ஈராக் போர்த் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலரி பின்னர் அதனை எதிர்த்தார். மேலும் இச்யார்ச் புச்சின் உள்நாட்டுக் கொள்கைகளை இவர் பலமாக எதிர்த்தார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் மேலவைக்கு தெரிவுச் செய்யப்பட்டார். 2008 அதிபர் தேர்தலின் போது மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளாராக வரும் வாய்ப்பு இலரிக்கு காணப்படுவதாக நாடு தழுவிய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும் பராக் ஒபாமாவால் தோற்கடிக்கப்பட்டார். 2009 ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிரம்மா (பௌத்தம்) பிரம்மா என்பது பௌத்தத்தில் மேலுலகங்களில் உள்ள உயர் நிலை தேவர்களை குறிக்கும். பொதுவாக பௌத்த அண்டவியலில் ரூபாதாதுவின் கீழுலகங்களில் வாழ்பவர்களை குறிப்பாக பிரம்ம உலகங்களில் இருப்பவர்களை "பிரம்மா" என அழைப்பர். பிரம்மா என்ற பெயர் வேத பாரம்பர்யத்திலும் காணப்படுகிறது. எனினும் இந்து மதத்தில் பிரம்மா என்பது ஒரே ஒரு படைப்புக்கடவுளையே குறிக்கிறது. எனினும், பௌத்த சூத்திரங்களில் தன்னையா படைப்பின் அதிபதியாக கருதிக்கொள்ளும் பல பிரம்மாக்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் அனைவரிடமும் புத்தர் அவர்களின் உண்மையான நிலையை உணர்த்துகிறார். பௌத்த பிரம்மாக்களும் இந்து மத பிரம்மாவுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன எனினும் பௌத்த சூத்திரங்கள் ஒருப்பிடப்படும் பிரம்மாக்களை ஏதேனும் ஒரு பிரம்மாவை பிரமாணர்கள் வழிபட்டதாக கருதலாம். பிரம்மஜால சூத்திரத்தின்படி, பிரம்ம உலகங்களில் தங்களது முற்பிறவியினை கழித்தவர்கள், அந்த பிறவியின் நினைவினால் இந்தப்பிறவியில் பிரம்மாவை படைப்பின் கடவுளாக கருதி அதையே உண்மை பிறருக்கும் அறிவித்தனர். பிரம்மா என்பது கீழ்க்கண்டவற்றுள் ஏதாவதை ஒன்றை குறிப்பிடலாம். பௌத்த நூல்களில், பல்வேறு பிரம்மாக்கள் பெயருடன் குறிப்பிடப்பெறுகின்றனர். அனைவரும் பிரம்மா எனவே குறிப்பிடப்படுவதால், அவர்கள் எந்த உலகத்தை சார்ந்தவர்கள் என்ற தெளிவாக தெரியவில்லை. . "பக பிரம்மா" மஜ்ஜிம நிகாயத்தில் குறிப்பிடப்படுகிறார். இந்த சூத்திரத்தின் படி, இவர் தனது உலகம் அழிவற்றதெனவும் அதன் மூலம் இவர் அழிவற்றவர் எனவும் நம்புகிறார். மேலும் இவரது உலகமே உச்ச உலகமெனவும் இதற்கு மேலும் உலகம் இல்லையெனவும் நம்புகின்றார். ஆனால் புத்தர் இதை மறுத்து "அநித்யத்தை"(நிலையான்மை) குறித்து உபதேசிக்கின்றார். எனினும் பக பிரம்மாவுடன் உடனிருக்ககும் ஒருவர் மாரனின் தூண்டுதலினால் மக பிரம்மாவை படைப்பின் அதிபதி எனவு, அவரை போற்றுபவர்கள் நற்பலன்கள் கிடைக்கும் எனவும், அவரது ஆற்றலை மறுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறுகிறார். புத்தர் உண்மையில் பேசுவது மாரனே என கண்டு கொண்டு, தான் மாரனின் ஆளுமைக்கு அப்பற்பட்டவர் என கூறுகிறார். இதன் பிறகு கூட, பக பிரம்மா புத்தரிடம் அவர் தன்னுடைய உலகத்தில்(படைப்பு அனைத்தும் இவரது உலகம் என பக பிரம்மாவின் கருத்து) இருப்பதாகவும், எனவே பிரம்மாவின் அறிவுக்கு உட்பட்ட பொருட்கள் மீது புத்தர் சார்ந்திருக்க நேரின், தான் புத்தர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறார். அதற்கு புத்தர், பக பிரம்மாவுக்கு அவ்வளவு ஆற்றல் இல்லையென்றும், பக பிரம்மாவின் உலகத்துக்கு மேலே அவருடைய அறிவுக்கு எட்டாத பல உலகங்கள்(சுத்தாவாச மற்றும் ஆரூப்யதாது உலகங்கள்) உள்ளதென்று தெரிவிக்கிறார். எனவே புத்தரின் அறிவு புத்தரை பக பிரம்மாவை விட உயரிய நிலையில் வைப்பதாகவும் பிரம்மாவிடம் கூறுகிறார். புத்தரின் தனது உயரிய மாய சக்திகளையும், பக பிரம்மாவின் தற்கால நிலையை பிரம்மாவின் முற்பிறவிகளை கொண்டு சொல்லியதை கண்டும், இறுதியில் புத்தரின் கூற்றை பக பிரம்மா ஒப்புக்கொள்கிறார். பக பிரம்மா ஒரு முற்பிறவியல் கேசவன் என்ற துறவியாக இருந்தார். தன்னுடைய செய்லக்ளின் மூலம் பல மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினார். அவர் தியான நிலைகளை வசப்படுத்தியதன் மூலம் மறுபிறவிய பிரஹத்பல உலகங்களில் மறுபிறப்பெய்தினார். பின்னர் ரூபதாதுவின் ஒவ்வொரு நிலையாக கீழிறங்கு இறுதியில் அற்ப பிரம்ம நிலையை எய்தினார். இன்னொரு நிகழ்வில், பக பிரம்மா, தன்னுடைய உலகத்துக்கு எந்த துறவியும் வர இயலாது எனக்கருதினார். ஏனெனினும் புத்தரும் அவரது சீடர்களும் பல முறை பிரம்ம உலகத்துக்கு சென்று அவருடைய கூற்றை பொய்யாக்கினர். பக பிரம்மா "பக பிரம்ம சூத்திரம்" மற்றும் "மரம்மனிமந்தனிக சூத்திரம்" ஆகிய சூத்திரங்களில் குறிப்பிடப்பெறுகிறார். "'பிரம்மா சஹம்பதி" பிரம்மாக்களில் மிகவும் மூத்தவராக கூறப்படுகிறார். இவர் கௌதம புத்தர் போதி நிலை அடைந்த போது, இவர் அங்கு இருந்தார். பிறகு கௌதம புத்தர் உருவேளாவில் தியானம் செய்த போது, இவரே புத்தரை மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும் படி அறிவுறுத்தினார். சில உரைகளின் படி இவர் சுத்தாவாச உலகத்தை சார்ந்தவராக கூறப்பெறுகிறார். இவர் முற்காலத்து புத்தரான காசியப புத்தரின் சங்கத்தில் "சஹகன்" என்ற துறவியாக முற்பிறவியில் இருந்தார் இன்னொரு நிகழ்வில், ஒரு பெண்ணிடம், தனக்கு நிவேதனங்கள் அளிக்க வேண்டாமென்றும், துறவியாகிய அவளது மகனுக்கு தானம் அளிக்கும்படியும் வலியுறுத்தினார். சம்யுத்த நிகாயத்தில் பிரம்மா சஹம்பதி கூறியதாக பல வரிகள் உள்ளன. இவை அனைத்தும் இவரும், இந்திரனும் புத்தரை சந்தித்த போது கூறியவை. மேலும் இவர் புத்தர் இறக்கும் தருவாயிலும் புத்தரை சந்தித்தார். அப்போது கூறப்பட்டவை மகாபரிநிர்வான சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளத்து. அனைத்து பிரம்மாக்களிலும், இவரே புத்தருக்க் மிகவும் நெருக்கமுடையவராக கருதப்படுகிறார். பிரம்மா சனத்குமாரன் குறித்து ஜானவாசப சூத்திரத்தில் கூற்ப்பெற்றுள்ளது. அந்த சூத்திரத்தின் படி, இவர் திராயஸ்திரிம்ச தேவர்களின் முன் தெரிவதற்காக ஒரு "அடர்த்தியான" உருவத்தை எடுத்துக்கொண்டார். பிறகு அனைத்து தேவர்களின் முன் பிரத்யேகமாக இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தினார். அந்தந்த தேவர்களோடு மட்டும் உரையாடுவது போல் இன்னொரு மாயத்தை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் புத்தரையும் அவரது போதனைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தி அவ்வாறு செய்வதினால் நல்ல பலன்கள் விளையும் எனவும் விவரித்தார். உரையாசிரியர்கள் "சனத்குமாரன்"(என்றும் இளைமயானவன்) என்ற அடைமொழி, இவர் எப்போதும் ஒரு இளைஞனின் உருவத்தை தரிப்பதால் என விளக்கினர். மகாபிரம்மா என்பது, ஒரு பெயர் என்பதை விட இதை ஒரு பட்டமாகவே, பல பௌத்த சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. முறையாக மகாபிரம்மா என்பது ரூபதாதுவில் உள்ள பிரம்ம உலகத்தில் முதலில் தோன்றியவர்களையே குறிக்கும். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா,மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்தும் முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்ப்வர்ன், இது வரைந்த இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர். பிரம்மஜால சூத்திரத்தின் படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்கு கூட தனத் உல்கத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. பிரம்ம உலகங்களில் உள்ளவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புகின்றனர். கேவத்த சூத்திரத்தில், மகாபிரம்மாவால் ஒரு துறவின் தத்துவரீதியான கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் தவிக்கிறார். துறவியின் கண்களுக்கு தென்படாத தேவர்கள் பிரம்மாவின் அருகில் இருந்ததால் இதை மறைத்து தொடர்பில்லாத பதில்களை கூறினார். பிறகு தனிமையில் அந்த துறவியிடம், தேவர்கள் தன்னை அனைத்தும் அறிந்தவராக கருதுவதாகவும் அதனாலேயே நேரடி பதில் கூற இயலாமல் போனதாகவு, தனக்கு விடை தெரியாததால் இதற்கான பதில்களை புத்தரிடம் கேட்க சொன்னார். 1610 1610 (MDCX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1610கள் 1610கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1610ஆம் ஆண்டு துவங்கி 1619-இல் முடிவடைந்தது. லகு லகு என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு பாகம் ஆகும். லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும்.இதன் அடையாளம் | ஆகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும். வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன. இவை, அனுதிருதம் அனுத்திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் முதலாவது அங்கம் ஆகும். அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. மூன்றாவது அங்கமாகிய லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும். அனுத்திருதத்தின் அட்சர காலம் ஒன்று ஆகும். இதன் குறியீடு "U" ஆகும். சப்த தாளங்களில் அனுத்திருதமானது ""ஜம்பை"" தாளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜம்பை தாளத்தின் குறியீடு பின்வருமாறு அமைகின்றது. " | U O ". தேவர் தேவர் என்ற தலைப்பினை தொடர்புடைய கட்டுரைகள்: பகவதி பகவதி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: பைரவி (ராகம்) பைரவி 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஒரு பழைமையான இராகம். குடியரசு குடியரசு ("Republic") என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும். குடியரசுத் தலைவருக்கு விதிக்கப் கடமைகளைப் பொறுத்தும், மரபுகளை ஒட்டியும், அப்பதவி வெறுமனே ஒரு அரசியல் சாராத சடங்கு சார்ந்த பதவியாகவோ, அல்லது பெரும் செல்வாக்குள்ளதும், பெருமளவு அரசியல் சார்ந்ததுமாகவோ இருக்கக்கூடும். தற்காலக் குடியரசுகளில் அதன் தலைவர் குடியரசுத் தலைவர் அல்லது சனாதிபதி எனப்படுவார். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் குடியரசுகளில், குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் நான்கு தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை வேறுபடலாம். இவ்வாறான குடியரசுகள் சிலவற்றின் அரசியல் சட்டங்கள், ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகளுக்கு மேல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படக்கூடாது என விதிப்பதும் உண்டு. ஒரு நாட்டின் தலைவர் அந் நாட்டு அரசின் தலைவராகவும் இருப்பின், அது குடியரசுத் தலைவர் முறை (சனாதிபதி முறை) எனப்படும். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். குறைக் குடியரசுத் தலைவர் முறை உள்ள நாடுகளிலும், நாடாளுமன்றக் குடியரசுகளிலும், நாட்டுத் தலைவரே அரசுத் தலைவராகவும் இருப்பதில்லை. இவ்வாறான நாடுகளில் அரசுத் தலைவர் பிரதம அமைச்சர், பிரதம மந்திரி அல்லது பிரதமர் என அழைக்கப்படுவார். அரசின் கொள்கைகளையும், அரசையும் மேலாண்மை செய்யும் பொறுப்பு பிரதம அமைச்சருக்கு உரியது. சில நாடுகளில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் தேர்வதற்கான விதிகள், அவ்விருவரும் வேறுவேறான கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் இடமளிக்கின்றன. பிரான்சில், ஆட்சியிலிருக்கும் அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை "ஒத்துவாழ்தல்" (cohabitation) எனப்படுகிறது. ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும். சுவிட்சர்லாந்து, சான் மரீனோ போன்ற சில நாடுகளில் நாட்டின் தலைமை ஒருவரிடம் இருக்காமல், பலரைக் கொண்ட ஒரு குழு அல்லது அவையிடம் இருக்கும். முற்காலத்தில் ரோமக் குடியரசு "கொன்சல்" எனப்படும் இரண்டு நாட்டுத் தலைவர்களைக் கொண்டிருந்தது. நாட்டின் ஆட்சிச் சபையினால் ஓர் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்படும் இவர்கள், மாதத்துக்கு ஒருவராக மாறிமாறிப் பதவியில் இருப்பர். பதவியில் இருப்பவர் அதிகாரத்தில் இருக்கும் கொன்சல் எனவும், மற்றவர் துணைக் கொன்சல் ஆகவும் இருப்பர். எனினும் துணைக் கொன்சலுக்கு, ஓரளவு சுதந்திரமாக இயங்கக்கூடிய உரிமையும், தடுப்புரிமையும் இருந்தது. சில குடியரசுகளில், நாட்டுத் தலைவருக்கு சில அம்சங்களில் மன்னர்களை ஒத்த அதிகாரங்கள் இருப்பதும் உண்டு. சில குடியரசுகள், நாட்டுத் தலைவரை அவர் வாழும் காலம் வரைக்கும் பதவியில் இருத்துவது மட்டுமன்றி, வழமையான சனநாயக அமைப்பில் இருப்பதிலும் பார்க்க, கூடிய அதிகாரங்களை அவருக்கு அளிக்கின்றன. சிரிய அரபுக் குடியரசு இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும். பண்டைய இந்திய துணைக்கண்டத்தில் மகாஜனபதம் என்ற பெயரில் பல அரசுகள் இருந்தற்கான சான்றுகள் உள்ளன. மகாஜனபதம் என்பது பண்டைய இந்தியாவில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். "அங்குத்தர நிக்காய" போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு குடியரசுகளாகும். கே.பீ. ஜெயஸ்வால் போன்ற சில இந்திய அறிஞர்கள், பூர்வீக இந்தியாவில் குடியரசு வடிவிலான பல அரசுகள் இருந்ததாக வாதிடுகின்றனர். குடியேற்றமாக இருந்த நாடு தன்னை அத்தகைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு விடுதலை பெறுவதே குடியேற்ற விலக்கம் ஆகும். எனவே குடியேற்ற விலக்கம் என்பது குடியேற்றவாதத்திற்கு நேரெதிரானது. சிலசமயங்களில் குடியேற்ற நாடு ஒன்றிற்கு முழுமையான தன்னாட்சி கிடைக்காது; மற்றொரு நாட்டின் அங்கமாகவோ அல்லது தன்னை குடிப்படுத்திய நாட்டுடன் இணைந்து அதன் அங்கமாகவோ ஆகலாம். இத்தகைய விலக்கம் அமைதியான உரையாடல்களின் தொடர்ச்சியாக நிகழலாம். சில நாடுகளுக்கு ஆயுதப் புரட்சிகள் மூலம் விடுதலை கிடைத்துள்ளது. இருப்பினும், குடியேற்ற விலக்கம் கைப்பற்றப்பட்ட புவியியல் பகுதிகளிலும் நிறுவனங்களிலும் "உள்நாட்டு இறையாண்மையில் வெளிநாட்டு ஆதிக்கத்தை நீக்குவது" மட்டுமல்லாது குடிபடுத்தப்பட்ட நாடு தாங்கள் கீழானவர்கள் என்ற குடியேற்றவாத நாட்டின் கருத்தியலை "உள்ளங்களிலிருந்து அகற்றுவதும்" இதன்பால் அடங்கும். குடியேற்ற விலக்கம் என்பது மங்கோலியப் பேரரசு அல்லது உதுமானியப் பேரரசு போன்ற வழமையான பெரும் பேரரசுகள் உடைந்து உருவாகும் அங்கநாடுகளிலிருந்து மாறானது. பொதுவாக ஐரோப்பியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது குடியேற்ற விலக்கம் எனப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான குடியேற்ற விலக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இது 1947இல் இந்தியாவும் பாக்கித்தானும் பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதை யடுத்து தொடங்கியது. தொடர்ந்து ஆப்பிரிக்காவில் ஐரோப்பாவின் குடியேற்றங்களாக இருந்த பல நாடுகள் விடுதலைப் பெறத் தொடங்கின. சோசலிசக் குடியரசு அல்லது சமதர்மக் குடியரசு (socialist state" அல்லது "socialist republic"), என்பது சமத்துவ சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசமைப்புச் சட்டப்படி நடத்தப்படும் ஓர் அரசு ஆகும். ஒரு தனிப்பட்ட நாட்டில் கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என கார்ல் மார்க்ஸ் வரையறுக்கிறார். சோசலிசம் அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தை சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும். சோவியத் ஒன்றியம் உலகின் முதல் சோசலிச குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த பாரிஸ் கம்யூன் சோசலிச குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் கலைக்கப்பட்டது. ஆகிய நாடுகள் சமகால சோசலிச குடியரசுகளாக அறியப்படுகின்றன. தாராண்மை குடியரசு (Liberal democracy) என்பது மக்களாட்சி முறையின் ஒரு வடிவம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் இவ்வகை குடியரசு உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், பொதுவுடமை மக்கள் குடியரசு அல்லது மக்கள் "மக்களாட்சி" போன்ற அரசாட்சி முறை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சி, பங்கேற்பு மக்களாட்சி போன்ற வடிவங்களில் இருந்தும் இது பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாராண்மை மக்களாட்சி, பல்வேறு அரசியலமைப்பு வடிவங்களில் அமையக்கூடும். இது, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரான்சு போன்ற நாடுகளைப்போல் ஒரு குடியரசு அமைப்பில் அமையலாம். அல்லது ஐக்கிய இராச்சியம், எசுப்பெயின் போன்ற நாடுகளில் உள்ளது போல் அரசியல்சட்ட முடியாட்சி வடிவிலும் அமையலாம். இது, சனாதிபதி முறை, நாடாளுமன்ற முறை அல்லது இரண்டும் கலந்த முறை போன்ற அரசு முறைகளின் கீழும் அமைய முடியும். தாராண்மை குடியரசு என்பதில் உள்ள "தாராண்மை" என்பது, ஆட்சியில், அரசியல் தாராண்மையியம் என்னும் கருத்தியலைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது. தாராண்மை மக்களாட்சிகளில், அரச அதிகாரத்திடம் இருந்து தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இது முதன்முதலாக அறிவொளிக் காலத்தில் ஓப்சு (Hobbes), ரூசோ (Rousseau) போன்ற சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது. மணற்கல் "'மணற்கல்" (Sandstone) என்பது, மணல் அளவுள்ள கனிமம் அல்லது பாறைத் துகள்களினால் உருவான படிவுப் பாறை ஆகும். புவியோட்டில் படிகப்பாறை (quartz), ஃபெல்ஸ்பார் (feldspar) ஆகிய கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பெரும்பாலான மணற்கற்கள் இவ்விரு கனிமங்களில் ஒன்றாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஆனவையாக இருக்கின்றன. மணலைப் போலவே மணற்கல்லும் பல நிறங்களில் உள்ளனவாயினும், பொதுவாக இவை பழுப்பு, மண்ணிறம், மஞ்சள், சிவப்பு, சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. மணற்கற் படிவுகள் குத்துப் பாறைகளாகவும், பிற நிலவுருவியல் அம்சங்களாகவும் வெளியே தெரியும்படி அமைந்திருப்பதால், மணற்கற்களின் சில நிறங்கள் குறிப்பிட்ட புவியியற் பகுதிகளோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. சிலவகை மணற்கற்கள் காலநிலைத் தாக்கங்களுக்கு நிலைத்து நிற்கும் தன்மையைக் கொண்டிருப்பினும், அவற்றில் வெட்டுதல், செதுக்குதல் போன்ற வேலைகளைச் செய்வது இலகுவானது. இவ்வியல்பு மணற்கற்களைக் கட்டுமானம், பாவுதல் (paving) போன்றவற்றுக்கு உகந்தவையாக ஆக்குகின்றது. மணற்கல்லிலுள்ள தனித்தனித் துகள்கள் கடினமானவையாகவும், ஒருசீரான பருமன் உடையவையாகவும் இருப்பதால், இக்கல் கத்தி முதலிய ஆயுதங்களைத் தீட்டுவதற்கு உரிய சாணைக்கற்கள் செய்வதற்கு உதவுகிறது. மணற்கற்களைப் பெரும்பாலும் கொண்டிருக்கும் பாறைப் படைகள் நீரை ஊடுசெல்ல விடுவதாலும், அவற்றில் உள்ள துளைகள் அதிக நீரைச் சேமிக்கக்கூடியவையாக இருப்பதாலும் இவை சிறந்த நீர்கொள்படுகைகளாக அமைகின்றன. சாணைக்கல் சாணைக்கல் என்பது, கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். கார்போரண்டம் என்று ஆங்கிலத்தில அழைக்கப்படும் சாணைக்கல், கார்போரண்டம் என்ற பொருளால் ஆனது.இதன் வேதிப்பெயர் சிலிக்கன் கார்பைடு ஆகும். இது சிலிக்கனையும் கார்பனையும் சேர்த்து செய்யப்படும் சேர்மமாகும் . சிலிக்கன் கார்பைடு மிகவும் கடினத்தன்மை உடைய பொருளாகும். எந்தவித வினைப்பன்களாலும் பாதிக்கப்படாதவை. அதிக வெப்பத்தைத் தாங்கும் பண்புடையது.சாணைக்கல்லை வேகமாகச் சுழலச் செய்து, அதன் மீது கூர்மையாக்க வேண்டிய பொருளை வைக்கும் பொது எதிர் உராய்வின் மூலம் அப்பொருள் கூர்மை பெருகிறது. சிலிக்கன் டை ஆக்ஸைடு எனப்படும் வெண் மணலையும் கார்பன் எனும் கல்கரியையும் சேர்த்துக் கலவையாக்கி உயர் வெப்பத்தில் மின் உலையில் வைத்துச் சூடாக்கி சாணைக்கல் தயரிக்கப்படுகிறது. முற்காலத்தில் சாணைக்கல் செய்வதற்கு மணற்கற்களைப் பயன்படுத்தினர். சுழற்றுவதன் மூலம் கருவிகளைக் கூராக்குவதற்கு வசதியாகச் சாணைக் கற்கள் சில்லுகள் போல் வட்டவடிவமாகச் செய்யப்பட்டன. தற்காலத்தில் மணற்கற்களுக்குப் பதிலாக வேறு பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்களால் மிதித்துச் சாணைக்கல்லைச் சுழற்றும் வகையிலான பொறிமுறையுடன் கூடிய சாணைபிடிக்கும் கருவிகளும் உள்ளன. 1891 ஆம் ஆண்டில் அமெரிக்கரான அச்சஸன் என்பவர், மிகுந்த கடினத்தன்மை கொண்ட வைரத்திற்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தார். அதன் பயனாக உருவானது தான் சாணைக்கல் ஆகும். பொள்ளாச்சி நசன் பொள்ளாச்சி நசன் (பிறப்பு: செப்டம்பர் 15, 1952) என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். 1985 இலிருந்து ஈடுபட்டு இணையத்திலும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் தமிழை வளர்க்க தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியையும் நடத்தி வருகிறார். 2003 முதல் தமிழின் பல்வேறு கூறுகளுக்கான தமிழம்.வலை ( http://www.thamizham.net ) என்கிற இணையதளத்தினையும் நடத்தி வருகிறார் இவர் சிதம்பரத்தில் பிறந்தார். சிதம்பரம் (தென்னாற்காடு மாவட்டம்) வரவரமுனி பாடசாலையில் தொடக்கக்கல்வியைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் 1974 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியருக்கான பட்டப்படிப்பை 1980 இல் முடித்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி ஏற்றார். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். விடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழைத் தொடங்கினார். சிற்றிதழ்ச் செய்தி என்ற இருமாத இதழை ஆரம்பித்து தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார். • 2009 இல் பணி ஓய்வு பெற்ற இவர், தான் சேசரித்த இதழ்களையும், நூல்களையும் படவடிவக்கோப்புகளாக்கி வருகிறார். • 50,000 க்கு மேற்பட்ட கோப்புகளைத் திரட்டி உள்ள இவர், உலகம் முழுவதும், படவடிவக்கோப்புகளாகி உள்ள இதழ்கள் மற்றும் நூல்களைப் பற்றிய குறிப்புகளையும் திரட்டி இணையத்தில் வரிசைப்படுத்தி உள்ளார். உலக அளவில் பாதுகாக்கப்பட்ட தமிழ் நூல்களுக்கான இந்தப் பட்டியல் இனி படவடிவக்கோப்புகளாக்குபவர்களுக்கு எவற்றை படவடிவக்கோப்புகளாக்க வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும். மேலும் விரும்புகிறவர்களுக்கு படவடிவக்கோப்புகளை ஆக்குவதற்கான பயிற்சியும் கொடுத்து வருகிறார். • இவரது வழிகாட்டுதலில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டிலுள்ள தமிழப்பள்ளிகளும் பயனடைந்து வருகின்றன. • உலக மக்கள் அனைவரும் தமிழை எளிமையாகப் படிப்பதற்காக 32 அட்டைகளை உருவாக்கி அவற்றை 14 வகையான உலக மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் தமிழ் படிக்க இணையத்தில் வைத்துள்ளார். • திருக்குறளை எளிய முறையில் மாணவர்களும் மக்களும் உணர 303 எளிமையான குறட்பாக்களை வரிசைப்படுத்தி இணையத்தில் வைத்துள்ளார். • திருக்குறளை இசைவடிவில் கேட்கவும், தமிழின் பல்வேறு கூறுகளை இசைவடிவில் வெளிப்படுத்தவும் தமிழம்.பண்பலை தொடங்கித் தொடருகிறார். தமிழம்.பண்பலை 1782 1782 (MDCCLXXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1838 1838 (MDCCCXXXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். பங்காரசு வாசியேட்டசு பங்காரசு வாசியேட்டசு (அறிவியல் பெயர்: "Bungarus fasciatus") தமிழில் : கட்டுவிரியன் பாம்பு. இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் எலாப்பிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சுப்பாம்பு இனமாகும். இதன் உடலில் கருப்பிலும் மஞ்சளிலுமாக வளையங்கள் மாறிமாறி காணப்படுகின்றன. கிராமங்களில் முன்பு இப்பாம்பு கடிக்கு போடப்படும் 'பாடம்(மந்திரம்)' ஒவ்வொரு கட்டுக்கு ஒவ்வொரு பாடம் என்று போடப்படும். விஷம் இறங்க நேரம் ஆகும் . தெலுங்கில் "பங்காரம் பாம்பு" என்று அழைக்கப் படுகின்றது. இதன் பொருள் தங்கப்பாம்பு என்பதாகும். இப்பாம்பின் மஞ்சள் வளையங்கள் தங்கம் போன்று தோன்றுவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயரான பங்காரசு ("Bungarus") என்பது இத்தெலுங்குச் சொல்லில் இருந்தே பெறப்பட்டுள்ளது. இப்பாம்புகள் இந்திய-சீனப்பகுதிகளிலும் மலேசியத் தீவக்குறையிலும் தென்சீனத்திலும் காணப்படுகின்றன. வடகிழக்கு இந்தியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, லாவோசு, வியட்நாம், சாவா, சுமத்திரா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் இவை பொதுவாக வடகிழக்கிலும் பீகார், ஒரிசாவிலும் உள்ளன. மேலும் தமிழகத்தின் பரவலான பகுதிகளிலும், ஐதராபாத்தின் மேற்கு, தெற்குப் பகுதிகளிலும் கோதாவரி, மகாநதிப் பள்ளத்தாக்குகளிலும் இவை உள்ளன. காடுகள், வேளாண்நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான இடங்களில் இவை வாழ்கின்றன. கரையான் புற்றுக்களிலும் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள கொறிணிகளின் வங்குகளிலும் இவை வாழ்கின்றன. இப்பாம்பு உடல் முழுதும் கருப்பு, மஞ்சள் நிறப்பட்டைகள் கொண்டது. உடலின் குறுக்குவெட்டுத்தோற்றம் முக்கோணவடிவுடையது. அகலமான தலையையும் கருப்பான கண்களையும் கொண்டது. இப்பாம்புகளின் பொதுவாக அறியப்பட்ட நீளம் 1800 மி.மீ அல்லது அதற்கும் குறைவானதாகும். இப்பாம்புகள் பொதுவாக மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்கின்றன. எனினும் இவை மீன்கள், தவளைகள், அரணைகள், பாம்பு முட்டைகள் போன்றவற்றையும் தின்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் நஞ்சு நரம்புகளைத் தாக்கிக் கொல்லக்கூடியது. நாகப்பாம்பின் நஞ்சைவிட 7 முதல் 14 மடங்கு குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. இதற்கான குறிப்பிட்ட எதிர்நச்சு இந்தியாவில் கிடைப்பதில்லை. 1830கள் 1830கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1930ஆம் ஆண்டு துவங்கி 1839-இல் முடிவடைந்தது. மு. சிவசிதம்பரம் மு. சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் (சூலை 20, 1923 - சூன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர். நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியின் நிறுவனர் சித்தமணியம் என்ற இராசவாச முதலியார் மகன் முருகேசு உடையாரின் ஒரே மகன் சிவசிதம்பரம். கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சிவசிதம்பரம், விக்னேசுவரா கல்லூரியில் மெட்ரிக்குலேசன் வரை பயின்று சித்தியடைந்தார். கரவெட்டியைச் சேர்ந்த பிரபல பொதுவுடமைவாதியான பொன். கந்தையாவினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தலைமையில் இயங்கிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், பருத்தித்துறைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதித்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 1960 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன் பருத்தித்துறைத் தொகுதி, பருத்தித்துறை, உடுப்பிட்டி என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சிவசிதம்பரம் தனது பிறந்த ஊரை உள்ளடக்கியிருந்த உடுப்பிட்டித் தொகுதியில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்த ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வந்தபோது, முன்னரிலும் அதிக வாக்குகள் பெற்று சிவசிதம்பரம் வென்றார். அக்காலத்தில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் இவரே. எனினும், இவரது ஆளுமையும், பேச்சுத் திறனும் தமிழ் மக்களின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இவரை இனம்காட்டின. அப்போது தமிழ்ப் பகுதிகளில் மக்களின் பேராதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோதக் கொள்கைகளை எதித்து தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டம் நடத்தியபோது கட்சி வேறுபாடுகளை மறந்து சிவசிதம்பரமும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் இவருக்கு மதிப்பு இருந்தது. 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றினார். 1970 இல் நடைபெற்ற தேர்தலில் இவர் தமிழரசுக் கட்சி வேட்பாளரிடம் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தார். இவர் நாடாளுமன்றத்தில் இல்லாத இக் காலத்திலேயே இலங்கை அரசியலில், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வந்த அக் காலத்தில், இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தித் தமிழர் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் சிவசிதம்பரமும் ஒருவர். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒன்றுபட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்க ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டுப் பெரு வெற்றி பெற்றன. நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் காலமான பின்னர் தமிழர் கூட்டணியின் தலைமைப் பதவியை இவர் ஏற்றார். எனினும் தமிழர் அரசியலில் தீவிரவாதப் போக்கு வலுவடைந்து வந்ததால் மக்கள் மத்தியில் சிவசிதம்பரம் போன்ற மிதவாதிகளில் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. எனினும் அவ்வப்போது சிவசிதம்பரத்தின் பணி தொடர்ந்தே வந்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமன உறுப்பினராக இவர் நாடாளுமன்றம் சென்றார். இவர் 05.06.2002 இல் காலமானார். தற்காலத் தமிழ்ச் சங்கங்களின் பட்டியல் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தங்கள் வாழிடத்திற்கேற்ப பாதுகாத்துப் பேணவும், தம் மொழி, பண்பாடு ஆகியவற்றை வளர்க்கவும் தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர். சமய வேறுபாடின்றி இந்து, இசுலாம், கிறித்தவம் என வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றினாலும், தங்கள் தாய்மொழியான தமிழைப் பேணிக் காப்பதில் உறுதியாயிருந்து தமிழ்ச் சங்கங்களை நடத்தி வருகின்றனர். கனடா தமிழ்ச் சங்கம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. தமிழ்த் தேசியத் தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார் பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார். பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கொடிவழியில் வந்த அறிஞர் ஆவார். அவரது இதழ்கள், உரைவீச்சு ஆகியவை முழுக்கவும் தனித்தமிழிலேயே அமைந்திருந்தன. மறைமலையடிகள் தொடங்கிப் பாவாணர் ஈறாக தனித்தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட பெருஞ்சித்திரனார் அரசியல் சார்ந்து அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்கினார். நேரடியாக மக்களிடம் தனித்தமிழ்க்கொள்கை வேர்கொள்ளவேண்டி அவர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும். இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணரின் மாணவரான பெருஞ்சித்திரனார் அவரது பல்வேறு தூய தமிழ்ப்பணிகளுக்குத் துணையாய் நின்றார். பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார். பள்ளென்போம்; பறையென்போம்; நாட்டா ரென்போம்! பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்! பிள்ளையென்போம்; முதலியென்போம்; நாய்க்கர் என்போம்! பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்! - எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக் கின்றோம்! எண்ணுங்கள், நமைத் தமிழர் என்கின் றோமா? குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும் கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டாரே! தென்மொழி, இயல்-1, இசை-13 (1960) சாதியை ஒழிப்பது குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த பெருஞ்சித்திரனார் அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்ககாலத்திலிருந்து தனித்தமிழ்நாட்டுக்கொள்கையைக் கொண்டிருந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுரை வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்திவந்தார். தென்மொழி இதழின் முகப்பில் நம் மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில் "இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கு்ம்இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமை யிலினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல் களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்." எனும் தன் கொள்கை அறிவிக்கையே இவரது கண்ணோட்டத்தை அறியப் பயன்படுகிறது. பெருஞ்சித்திரனார் தன்னுடைய கொள்கையுடைய எவருடனும் இணைந்து அரசியல் பணியாற்றினார். தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா இலெ) மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை ஆகிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்ட தோழர் தமிழரசன் பெருஞ்சித்திரனாருடன் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். பெருஞ்சித்திரனார் வெளிப்படையாகவும் தமிழரசன் தலைமறைவாகவும் இருந்த காலத்திலும் அரசு ஒடுக்குமுறை மிகுந்திருந்த காலத்திலும் பெருஞ்சித்திரனார் தன் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையில் பின்வாங்காமல் தொடர்ந்து ஈடுபட்டார். பெருஞ்சித்திரனாரின் ஆதரவாளர்கள் தமிழரசனுக்கு நெருக்கமாகிச் செயல்பட பெருஞ்சித்திரனார் உதவினார். தமிழரசன் கூட்டிய கூட்டங்களிலும் கூட்டமைப்புகளிலும் பெருஞ்சித்திரனார் பங்கேற்றார். பெருஞ்சித்திரனார் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை ஆதரவாளராக இயங்கிவந்தார். தமிழீழ அரசியலில் ஆர்வமும் உண்மையான ஈடுபாடும் கொண்டவராக அவர் இருந்தார். அமர்தலிங்கம், வே.பிரபாகரன், முகுந்தன் அனைவரையும் வரவேற்பவராக அவர் செயல்பட்டார். தொடக்கத்தில் அனைத்து இயக்கத்தவரையும் ஒரே வகையில் ஆதரித்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராக இறுதிவரை இருந்தார். புலிகள் மீதான இந்திய அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் இவர் கடுமையாக அதனை எதிர்த்துப் பரப்புரை செய்தார். அக்காலத்தில் இவர் எழுதிய ”இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன் எனைச்சிறை செய்யினும் செய்க! ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன் என் தலை கொய்யினும் கொய்க” எனும் வரிகள் புகழ்பெற்றவையாகும். பெருஞ்சித்திரனார் தடா,மிசா போன்ற இந்தியச் சட்டங்களின்கீழ் பல்வேறுமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச்சென்றவர். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார். ஐயை , திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆகியவை புகழ்பெற்ற ஆக்கங்களாகும். பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார். பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கி தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர். பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர். பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர், சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர். கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு. பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படுபவர். பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்து கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் இதழை1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார். தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார். பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர். தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது. திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர். பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார். "என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!" என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார். 1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும். பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார். 1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார். 1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார். இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும். இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர். பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார். பெருஞ்சித்திரனார் அவர்களின் குடும்பம் தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத குடும்பமாக திகழ்கிறது. முதுபெரும்புலவர்.இறைக்குருவனார், தமிழ்மொழியின் தொன்மையை ஆய்ந்து உலகுக்குணர்த்திய சொல்லாய்வறிஞர்.ப.அருளியார், தமிழ்வழிப்பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய திருவாட்டி.இறை.பொற்கொடி, பகுத்தறிவுக் குமுகாயம் ஆக்கம் செய்யும் பெண்ணியப்போராளி தழல்.தேன்மொழி, பேராசிரியர்.மா.பூங்குன்றன், முனைவர்.கி.குணத்தொகையன், அறிஞர்.ஆறிறைவன், தமிழ்த்தேசியப்போராளி மா.பொழிலன், வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி, வரலாற்றறிஞர் தெள்ளியன் உள்ளிட்ட குடும்பமே இனத்தையும் மொழியையும் வழிநடத்துகின்றது. தென்மொழி, தழல், தமிழ்நிலம், மாணவர்களம் என்ற இதழ்களும் பல்வேறு இயக்கங்கள், கல்வி அறக்கட்டளைகளும் இக்குடும்பத்தால் நடைபோடுகிறது. பெருஞ்சித்திரனாரின் சில கவிதைக்கீற்றுகள் கீழே தரப்படுகின்றன. உனக்கு மட்டும் நீ உழைத்தால் உலகம் உன்னை நினைக்குமா? தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த தனியன் வாழ்வை மதிக்குமா? உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள் என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்துவிடாதே! நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! சொந்தம் பேசி சொந்தம் வாழ சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே! நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே! அன்னை நிலமும் அன்னை மொழியும் அனைத்து மக்கள் வாழ நினைக்கும் உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே! நீ உழைக்கும் உழைப்பில் உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே! முகம்மது நபி முகம்மது நபி அல்லது முகம்மது ("Muḥammad", , பிறப்பு கிபி 570, இறப்பு 8 ஜூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் ("Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim", ) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என நம்புகின்றனர். முகம்மது நபி ஒரு கணிப்பின் படி கிபி 570இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் முகம்மது நபி. மக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர், அவை: முகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவர் இசுலாமிய நாட்காட்டியின் முன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார். . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பனு ஹாஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை யானை ஆண்டு என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது நபி பிறந்ததாக கூறப்படுகிறது. 105:1 யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 105:2 அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா? 105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4 அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன. 105:5 பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான். முகமதின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார். பாலைவனமே குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகம்மதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.செவிலித்தாய் "ஹலிமா பின்த் அபு துயப்" மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை முகம்மது வளர்ந்தார். ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர்.ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகம்மது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தந்தை வழி தாத்தா அப்துல் முத்தலிப் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். .தாத்தாவின் மரணத்திற்குப்பின் பனு ஹாஷிமின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபுதாலிப் மேற்பார்வையில் வளர்ந்தார்,சொந்த மகன் போல கொண்டாடினார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகம்மது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'. பதினம் வயதில் முகம்மது, அவரது சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாகச் சென்றுள்ளார். இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகம்மது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிகப் பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகம்மது சந்தித்துள்ளார். அந்த துறவி முகம்மது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். முகம்மதின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிபுரிந்துள்ளார். நடுநிலக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. முகமதுவை 'பேதமற்ற நடுவர்' என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர்.. அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகம்மது "கதீஜா"வை மணம் முடித்த பின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது. வரலாற்றாசிரியர் இப்னு இஷாக் விவரிக்கையில், கிபி 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகம்மது அவர்களின் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்யத் தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகம்மது நபி வந்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார். மக்காவில் உள்ள ஹிரா எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம்.கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, கபிரியேல் 96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். . காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான "வரக்கா இப்னு நஃபல்" இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை." எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார். "மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்" என்று அவரது மனைவி ஆயிஷா கூறினார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகம்மது அவர்களே நம்பிக்கைக் கொண்டார். குர்ஆனின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகம்மது இறைத்தூதராக வந்ததாகக் கருதப்படுகிறது. சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளைப் பற்றி நேரடியாகச் சொல்லாதபோதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகம்மது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார். ஓரிறைவாதமே முகமதின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிப்படுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகம்மது அவர்களுக்கு கட்டளை இடுகிறது. தன்னைப் படைத்தவரிடம் காட்டவேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் அத்தனைக் கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறைநம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்குத் தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார். கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சைத் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர். கிபி 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran ). மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர். சிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார். ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது.அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றுவதை முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்.வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார். முகம்மது நபி மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தினர். அபு ஜஹ்ல் எனும் மக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார். இசுலாத்தைத் துறக்கக் கூறி அவளை ஈட்டியால் குத்திக் கொன்றனர். இசுலாத்தில் இருந்து மதம் மாற வற்புறுத்தி வேறொரு அடிமையான பிலால் இப்னு ரிபாவின் மார்பில் கல்லை வைத்துக் கொடுமை படுத்தினார் உமையா இப்னு கலப். முகம்மது நபி பனு ஹாஷிம் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை கிபி 615-ஆம் ஆண்டில் முகம்மது நபியைப் பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்குப் புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்துவ பேரரசர் ஆஷாமா இப்னு அப்ஜர் பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தலை "இப்னு சாத்" கூறுகிறார். அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்குத் திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன. அல்-தபாரியில் பாதுகாக்கப்பட்ட உர்வாவின் கடிதத்தின்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்குத் திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை "அல்-வகிடி", "இப்னு சாத்" மற்றும் "தபரி" கூறுகின்றனர், ஆனால், "இப்னு ஹிஷம்" மற்றும் "இப்னு இஷாக்" கூறவில்லை. 53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ; 53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? 53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா? 53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்! 53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது. ." இந்த "நாரைகளின் கதை"(மொழிபெயர்ப்பு: , "Qissat al Gharaneeq") எனும் நிகழ்வு தான் "சாத்தானிக் வெர்சஸ்" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது. குறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர்.பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன. 617ஆம் ஆண்டு, "மக்ஸும்" மற்றும் "பனு அப்து-ஷம்ஸ்" எனும் இரு முக்கிய குரைஷ் குலத்தின் தலைவர்கள், தங்களது வணிகரீதியான எதிரியான "பானு ஹஷிம்" குலத்திற்கு எதிராகப் புறக்கணிப்பு நிகழ்த்தினர். முகமதுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை "பனு ஹாஷிம்" திரும்பப் பெறவே இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்தது. இந்தப் புறக்கணிப்பு மூன்று வருடங்கள் நீடித்தது, எனினும், இதன் கொள்கையில் வெற்றிபெறாமல் சரிந்தது. இந்தக் காலக்கட்டத்தில் முகமது புனித பயண மாதங்களில் மட்டுமே அறவுரை கூற முடிந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் மட்டுமே அரேபியர்கள் மத்தியில் சண்டைகள் நிறுத்திவைக்க பட்டிருந்தன. இசுலாமிய வரலாற்றின்படி, "இஸ்ரா மற்றும் மிஃராஜ் என்னும் இனிய இரவு பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பார்வையிட்டார் முகம்மது நபி(சல்). 17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 17: முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார். முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த "அல்-தபரி" மற்றும் "இப்னு கதிர்" போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர். மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து "அல்-பைது ல-மமூர்" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர். முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார். முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார். மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்குத் தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களைச் சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார். 48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். முகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது. மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மதீனா திரும்பினார். அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது காய்ச்சல், தலைவலி மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்.அவர் கி.பி.632 ஆம் வருடம் ஜூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில் 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். 33:28 நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். 33:29 ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான். 1924 ஆண்டு 1924 (MCMXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது. கார்ட்டர் பாம்பு கார்ட்டர் பாம்பு என்பது தம்னோபிஸ் ("Thamnophis") இனத்தின் கீழ் வரும் வடஅமெரிக்கப் பாம்பினமாகும். சாதாரணமாக கனடாவில் இருந்து நடு அமெரிக்கா வரை காணப்படுகின்றன. இப்பாம்புகளின் முதுகுப்புறத்தில் நெடுக்குவாட்டில் ஒன்று அல்லது மூன்று வரிகள் (அல்லது பட்டைகள்) பொதுவாக சிவப்பு, மஞ்சள், அல்லது வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. மேலும் ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த பாம்புகள் வெவ்வேறு நிற வரிகளைக் கொண்டிருப்பதும் உண்டு. பெரும்பாலான கார்ட்டர் பாம்புகள் 60 செ.மீ நீளத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனினும், இதனை விட நீளமாகவும் வளரக்கூடும். த.கிகாசு ("T. gigas") என்னும் சிற்றினம் 160 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. கார்ட்டர் பாம்புகள் ஊனுண்ணிகள் ஆகும். இவை தங்களால் வெல்லப்படக்கூடிய விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. மண்புழு, பூச்சிகள், அட்டைகள், நிலநீர் வாழிகள், மீன், ஊர்வன, கொறிணிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். சிலவேளைகளில் இவை முட்டைகளையும் உட்கொள்கின்றன. இரையை கார்ட்டர் பாம்புகள் முழுதாக விழுங்குபவையாகும். வேணாடு வேணாடு பண்டைச் சேர நாட்டில் அமைந்திருந்த 18 நாடுகளில் ஒன்றாகும். பாண்டியநாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.இதனை ஆயர் குல மன்னர்கள் ஆயக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.சங்க காலம் முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை ஆய் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் ஆய்நாடு நீங்கலான உட்பகுதிகளை உள்ளடக்கிய கொல்லத்திற்கு அப்பால் வரை அரச குடியினரின் வலிமையான ஆட்சி நிலவிய நாடாக வேணாடு விளங்கியது. கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது. இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன. சேர மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார். கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் அகதிகளாக வந்து தங்கியிருந்த யூதர்களுக்கு குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார். நடுக் கால வரலாற்றில் (கி.பி 650 முதல் 966 வரை) இப்பகுதி பாண்டியர்களின் படையெடுப்புக்கு உட்பட்டிருந்தது. கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளினி என்பார், பாண்டியனின் பிரதிநிதிகள் வாசனைத் திரவியங்கள் தருவதாகக் கூறி அவ்வரசனின் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சூருக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்குத் தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார். ஆய் வேளிர் எனப்பட்டோர் பாண்டிய அரசர்களுக்குக் கீழ்ப்பட்டு இப்பகுதிகளை ஆண்டுவந்தனர். இவ்வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு பின்பு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் ராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. . இவர் வேணாட்டுடன், தென் கேரளத்தில் கொச்சி வரை அமைந்திருந்த பல நாடுகளைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டு திருவிதாங்கூர் அரசை உருவாக்கினார். வேளிர் நாடு ஆகையால், வேள் நாடு எனப்பட்டு வேணாடு ஆனதாகக் கருதப்படுகிறது. தமிழில் யானை வேழம் என்றும் அழைக்கப்படும். எனவே யானைகள் நிறைந்த பகுதியாகிய இந்நாடு வேழ நாடு எனப்பட்டு வேணாடு ஆகியதாகக் கூறுவோரும் உளர். வேணாட்டை திருவடி என்ற பட்டபெயருடன் கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1758 வரை 42 அரசர்கள் தன்னாட்சியோடு ஆண்டுள்ளனர். கி.பி 849 இல் வாழந்த ஐயனடிகள் திருவடி என்ற மன்னன் துரிசாப் பள்ளிக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். இவர்கள் திற்பாப்பூர் பரம்பரையினராகும். இவர் சிறந்த போர் வீரர். கி.பி. 1102 இல் குலோத்துங்க சோழன் பெரும்படையுடன் வேணாட்டை தாக்கினான். இராமர் திருவடி நாட்டை காப்பாற்றிப் பனங்காவூர் மாளிகையிலிருந்து அரசாண்டார். சோழர்களை விரட்ட சாவேறு படை என்னும் தற்கொலைப் படையையும் அமைத்தார். களரி ஆசான்கள்  தலைமையில் நாடார்களை தெக்கன் களரியும், ஈழவர்களைத் தலைமையாகக் கொண்டு வடக்கன் களரியும் செயல்பட்டன. சாவேறுப் படைகளுடன் இணைந்து சோழர்படையை வேணாட்டினின்று முழுமையாக விரட்டினார். ஆரல்வாய்மொழி வரை வேணாட்டின் இறையாண்மை நிலை நிறுத்தப்பட்டது. பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகளைத் திருமணம் செய்து பாண்டியருடன் உறவை வலுப்படுத்தினார். இக்காலத்தில் தான் டில்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் மதுரையை தாக்கி பாண்டிய நாட்டை அலைக்கழித்தான். வேணாட்டு அரசர் பெரும் படையுடன் (களரி நாடார் ஆசான்களின் படை) மதுரையை முற்றுகையிட்டு மாலிக்காபூரை தோற்கடித்து மதுரையை மீட்டார் (கி.பி. 1313). இவர் வேகவதி ஆற்றங்கரையில் மும்மண்டலாதிபதி என முடிசூட்டிக்கொண்டமையால் காஞ்சிபுரம் வரை படையெடுத்து வந்தார் என்பதில் ஐயமில்லை. இவர் கலைகளைப் போற்றினார். கல்குளம் கோட்டையினுள் தாய்க் கொட்டாரம் கட்டினார். இது வேணாட்டுப் பாரம்பரியமான நாலுகட்டு வீடு மாதிரி அமைந்துள்ளது. அரண்மனையிலும் பத்திரகாளியம்மனுக்கு 41 நாட்கள் விழா நடத்தப்பட்டது. இவர் மிகச்சிறந்த போர்வீரர். இவர் காலத்திலே வேணாடு சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதி வரை பரவியது. சுசீந்திரம், தோவாளை, தாழக்குடி, ஊர்களின் கோயில்களுக்கு நிலக்கொடை அளித்தார். கோட்டிற்றிலிருந்த சமணப்பள்ளிக்கு (தற்போதைய நாகராஜா கோயில்) நிலதானமளித்தார். குமரி முட்டம் கிறித்தவர்கள் மீதிருந்த தண்டவரிகளை நீக்கினார். உமையம்மை ராணியின் கணவர் ஆதித்தியவர்மன் விடம் வைத்து கொல்லப்பட்டார். ஐந்து குழந்தைகளும் களிப்பான் குளத்தில் மூழ்கடித்து பகைவர்களால் கொல்லப்பட்டார்கள். இந்நிலையிலும் துணிச்சலுடன் ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்தினார். இதனால் வேணாடு தமிழர் கட்டிப்பாட்டுக்குள் தொடர்நதது. இவர் முகலாயர் படையைத் தோற்கடித்து படைத்தளபதி முகிலனைத் திருவட்டாற்று போரில் கொன்று ஒழித்தார். இதனால் வேணாடு முகலாயர் ஆட்சிக்குட்படவில்லை. நாயர் சமுதாயத்தை அழுத்திய சமூக கொடுமையான புலைப் பேடி, வெண்ணான் பேடி வழக்கத்தை தடை செய்தார். 1696ல் இதை குறிப்பிடும் கல்வெட்டு ஆணை பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது. வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட யோகக்காரர்களும் மாடாம்பிகளும் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை அனத்தன் என்னும் அனந்தபத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். இவர் அரசனின் சகோதரி மகன். திற்பாப்பூர் பரம்பரையில் வந்தவர். இவர் மருமக்கள் வழி வந்தவர் என்ற கூற்றுமுள்ளது. இவருக்கு முன் வந்த வேணாட்டு அரசர்கள் யாரும் மருமக்கள் வழியில் பதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இவர் சிறந்த போர் வீரர். இவருக்கு அந்தரங்க ஆலோசகரும் முதன்மை தளபதியுமான அனந்தபத்மநாபன் நாடாரின் கீழ் அனைத்து களரி ஆசான்களும் ஆதரவு தெரிவித்தனர். இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு கொச்சி வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர். யோகக்காரரை அடக்கி நாட்டை வழிநடத்த எட்டுதுரம் நாடார்களை திருவனந்தபுரத்தில் குடியமர்த்தினார். மார்த்தாண்டவர்மன் நாட்டை பத்மநாபசாமிக்கு அர்பணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மன்னர் காலத்தில் நாட்டின் தலைநகர் கல்குளம் ஆகும். தான் ஆட்சிக்கு வர உதவியதற்காகவும், நாட்டை விரிவாக்க உதவியதற்காகவும் தலைநகரின் பெயரை பத்மநாபன் நாடாரை கௌரவிக்கும் பொருட்டு பத்மநாபபுரம் என்று மாற்றினார். கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். வேணாடு, "நாடு" என்ற பெயரில் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. நாஞ்சில் நாடு, குறுநாடு, முதலநாடு, தொங்கநாடு, படப்பநாடு, வள்ளுவநாடு ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நாஞ்சில் நாட்டில் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கவும், நிர்வாக உதவிக்காகவும் பாண்டியர் ஆட்சி கலத்தில் மதுரை, திருநெல்வேலி பகுதிகளிலிருந்து வெள்ளாளர்கள் இப்பகுதியில் குடியேற்றப்ட்டனர். நிர்வாக பிரிவுகள் கரை என அழைக்கப்ட்டன. அவற்றை நிர்வகித்தோர் கரைகாரர் எனப்பட்டனர். இவர்கள் வரிவசூல் மற்றும் பொது நிர்வாகத்தினை கவனித்தனர். மேல்மட்டத்தில் அரசருக்கு ஆலோசனைக்கூற துரத்துக்காரர் எனும் எண்பர் குழு இருந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலம்வரை இவர்கள் எட்டுதூரம் நாடார்கள் எனப்பட்டனர். படைப்பிரிவுகளை களரி ஆசான்கள் நிர்வகித்தனர். நாடார்களை தலைமையாக கொண்டது தெக்கன் களரி என்றும், ஈழவர்களை தலைமையாக கொண்டது வடக்கன் களரி என்றும் அழைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் களரி ஆசான்கள் வர்மக்கலை மற்றும் வர்ம வைத்தியம் ஆகியவற்றில் நிபுணர்களாக விளங்கினர். வேணாட்டு மன்னர்கள் சமயப் பொறையுடையவர்களாகத் திகழ்ந்துள்ளனர். சமண சமயம் கி.பி 17ம் நூற்றாண்டு வரை மக்கள் ஆதரவுடன் செல்வாக்கோடு திகழ்ந்தது. சைவ, வைணவ கோயில்களுக்கு பெரிய அளவு நிலக்கொடை அளித்துள்ளனர். 1554ம் ஆண்டு குமரி மாவட்டத்துக்கு மறை பரப்பிற்காக வந்த புனித பிரான்சிஸ் சவேரியார் கிறித்தவ கோயில் கட்ட மற்றும் மறை பரப்பிற்கு வேணாட்டு அரசர் அனுமதியும், உதவியும் வழங்கியுள்ளார். இங்குள்ள ஊர்பெயர்கள் விளை என்னும் விகுதியுடன் அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வேணாடு விரிவடைந்த போது அங்கும் மக்கள் குடியிருப்புகள் விளை என்னும் பெயருடன் உருவாக்கப்பட்டன. எ.கா; திசையன் விளை, பேயன்விளை. முத்தாரம்மன் வழிபாடு வேணாட்டின் தனிச்சிறப்பு. முத்தாரம்மனையும், முப்புராதிகளையும் பிராதான தெய்வமாக வணங்குவது தமிழகத்திலேயே வேணாட்டு பகுதியில் தான். ஏற்றுக்கொள்ளாத தமிழர் தாம் என்பதை வேணாட்டு மக்களும் இன்றைய கன்னியாகுமரி மாவட்ட மக்களும் உறுதிபடுத்துவது இவ்வழிபாடு ஆகும். வேணாடு ஆட்சிக்குட்பட்ட நெல்லை பகுதியிலும் முத்தாரம்மன் வழிபாடு தொடர்கிறது. கி.பி 9ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேரநாடு சிதைவுண்டதால் சோழ. பாண்டிய மன்னர்கள் அப்பகுதிகளை கையகப்படுத்த எண்ணி வேணாட்டில் பலமுனை தாக்குதல் நடத்தினர். பாண்டியர்கள் கன்னியாகுமரி, தோவாளை, பகுதிகளை தவிர மேற்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியவில்லை. சோழ மன்னன் முதலாம் பராந்தகன் (கி.பி. 907- 953) தொடங்கி முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1120) வரை பல படையெடுப்புக்கள் நடத்திய போதும் வேணாட்டு அரசர்கள் தொடர்ந்து போராடி தம் இறையான்மையை தக்க வைத்துக் கொண்டனர். விசயநகர பேரரசர்களும், மதுரை நாயக்கர்களும் பலமுறை படை நடத்தியுள்ளனர். ஆயினும் வேணாட்டின் குமரி பகுதிகளில் பாளையங்களோ, நாயக்கதானங்களோ நிறுவப்படவில்லை. டில்லி முகலாயர் தமிழகத்தை ஒரு மாநிலமாக அறிவித்த போதும் வேணாடு அதற்கு அடிபணியவில்லை. குமரி மாவட்ட பகுதிகளில் மதராசாக்கள் இல்லாமையும் உருது முஸ்லீம்களின் குடியேற்றம் இல்லாமையும் இதனை உறுதிபடுத்தும். வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் வணிகக் குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் ஆங்கிலேயர், போர்ச்சிகீசியர், டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர். ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் குளச்சல் சண்டையில் தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர். கி.பி 10 ம் நூற்றாண்டளவில் சேரநாட்டின் வடபகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாயர்-நம்பூதிரி கூட்டணி பால மார்த்தாண்டவர்மன் காலம் வரை கொச்சிக்கு தெற்கே காலூன்றவில்லை. கி.பி 1758ம் ஆண்டு மார்த்தாண்டவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் தலைநகரை கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இவர் திற்பாப்பூர் பரம்பரையில்லை. ஆட்சியதிகாரம் நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் திருவாங்கூர் என பதிவு செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மர் மார்த்தாண்டவர்மா (1706–1758) திருவிதாங்கூர் அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்டவர்மா, இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். ராஜா ராம வர்மரின் பிள்ளைகளும், குஞ்சுத் தம்பிமார் என அழைக்கப்பட்ட, பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி ஆகியோரும் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்ற பிரபுக்களோடு சேர்ந்துகொண்டு மார்த்தாண்டவர்மாவைக் கொல்லச் சதி செய்தனர். இதனால் இவர் தலைநகரமான பத்மநாபபுரத்தில் இருந்து தப்பியோடித் நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். தனது எதிரிகளை வென்ற மார்த்தாண்டவர்மா 1729 ஆம் ஆண்டில் அரசனானார். வலுவுள்ள படையொன்றைத் திரட்டிய மார்த்தாண்ட வர்மர் அயல் நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வேணாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவற்றுள் பல டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியாரின் கூட்டாளிகளாக இருந்தனர். இதனால் டச்சுக் கம்பனியார் மார்த்தாண்ட வர்மர்மீது போர் தொடுத்தனர். 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர் தோல்வியைத் தழுவினர். டச்சுத் தளபதியான யுஸ்ட்டாக்கியஸ் டி லனோய் ("Eustachius De Lannoy") பிடிபட்டான். மார்த்தண்ட வர்மருடைய படையில் சேர்ந்து வீரர்களுக்கு நவீன போர்முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவன் கொல்லாமல் விடப்பட்டான். நவீனப் படுத்தப்பட்ட படைகள் கொச்சி வரை சென்று எல்லாச் சிறிய அரசுகளையும் கைப்பற்றின. பின்னர் கொச்சி அரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நாட்டின் வடக்கு எல்லையில் அமைதி நிலவச் செய்தார் மார்த்தாண்ட வர்மர். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலைத் திருத்தி அமைத்த இவர், தனது அரசை அங்குள்ள இறைவனுக்கே காணிக்கையாக்கித தன்னை ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார். இவர் 1758 ஆம் ஆண்டில் காலமானார். மன்னர் மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தை நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியுடன் இணைக்கும் வகையில் கால்வாய் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். மன்னருக்குப் பின் அவரது வாரிசுகள் இப்பணியைத் தொடர்ந்தாலும் மண்டைக்காடு வரை மட்டுமே கால்வாய்ப்பணி அமைக்க முடிந்தது. மு. மேத்தா மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ""தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார். "நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை" போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும். ""வானம்பாடி"" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர். 1761 1761 (MDCCLXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. 1760கள் 1760கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1760ஆம் ஆண்டு துவங்கி 1769-இல் முடிவடைந்தது. கருமுத்து தியாகராசர் கருமுத்து தியாகராஜன் செட்டியார், (சூன் 16, 1893 - சூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர். கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார். தமிழ் பற்றில் இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். இந்து நாளிதழ் உரிமையாளர்கள் மதுரைப் பதிப்பு வெளியிட விரும்பி அதனோடு ,அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்பாடமாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்தவர்களுள் இவரும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார். சோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இலங்கை கொழும்பு மாநகரிலிருந்து வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியப் பிரிவில் இளமையில் பணிபுரிந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசியும் எழுதி வந்தார். இராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி,ப‌ண்டித‌ ம‌ணி,பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங‌க‌ளை விலைக்கு வாஙகிக் கொண்டார். ஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் நெருஙகிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார். அவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி.ஏ.வி.நாத‌ன், ஒள‌வை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி.ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள். 1917ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், சில முறை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருநதார். நூற்பாலை தொடங்கிய போது ஆந்திரகேசரி டி.பிர‌காச‌ம் போன்ற‌ தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள் மீனாட்சி ஆலையின் ஆர‌ம்ப‌ கால‌ இய‌க்குன‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார். அப்போது காந்தியடிகள் விரிவான உடைகளையும் தலைப்பாகையையும் சட்டையையும் கைவிட்டு ஆடைகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தார்.தமிழ்நாடு நாடு அரசு கதர்க்கடை ஒன்றினை இப்பொழுது அவ்வீட்டில் நடத்தி வருகின்றது.அதன் மாடியில் பொதுமக்கள் காண ஒரு மகாத்மா காந்திஜி சிலையினை நிறுவி புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகின்ரது.அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அரசாங்க அதிகாரிகள் அங்கு வருகின்றனர். 23.7.2008 தினமலர் மதுரை மலரில் புகைபடத்டுடன் செய்தி வெளியாகியுள்ளது. 28.7.2008 தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பாலாஜி அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்.20.7.1976 இல்லஸ்ட்ரடெட் வீக்லி இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. கலைத்தந்தை சைவசமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்தார்.தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார். நாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர். அக்கோயில் திருப்பணி 1972 ல் மிகவும் சிறப்பாக நிறைவேறக் காரணமாக இருந்தார். வள்ளலாருடைய கொள்கைகளிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. புலால் மறுத்தல், அவருடைய தலையாய பண்பாக இருந்தது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் புலால் உணவு வேண்டிக் கிளர்ச்சி செய்தனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் சென்னையில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆதரவாக இருந்தனர். சமணர்கள் நடத்தும் கல்லூரிகளில் உங்களால் உயிரின இயல் போன்ற‌ பாடத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியுமா? என்று 7தியாகராசச்செட்டியார் கேட்டதும் அதிகாரிகள் வாயடைத்துப் போயினர். சைவ உணவின் பெருமையைப் பரப்ப நடைபெறும் மாநாடுகளில் ஆண்டுதோறும் இவர் கலந்து கொண்டார். இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதில் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907ல் இங்கிலாந்துக்குச் சென்றார். நகரத்தாருள் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் அவரே ஆவார். இந்தப் பரம்பரையில் வந்த தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளுள் ஒருவரானார். குணாதிசயங்கள். இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார். ஆதாரம்: மதராஸ் மாகாணகவர்னர் பெண்ட்லாண்ட் பிரபுவிற்கு 1916ல் கருமுத்து தியாகராசர் எழுதிய கடிதம் இன்றும் சென்னை எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது. நகரத்தார் சமூகத்தில் திருமணம் நடந்தால் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கம் கருமுத்து தியாகராசர் குடும்பம் செல்வாக்கு பெறுவதற்கு முன்பு இருக்கவில்லை என்று ஆலை அரசர் கருமுத்து தியாகராசர் நூலில் திருமதி இராதா தியாகராசன் அவர்கள் கூறுகின்றார்கள்.வானதி பதிப்பகம் வெளியீடு.7.3.1994ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டார்கள். தனது துணவியாரை தமிழில் அரிச்சுவடியில் ஆரம்பித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதச்செய்து சொற்பொழிவாற்றச் செய்து ஒரு கணவர் தனது மனைவியை அழகப்ப பல்கலைக்கழகத்துணைவேந்தர் ஆக்கி மகிழ்ந்த துணைவர். இறக்கின்ற தருவாயில் தமிழ்ப்புலவர்களை நெஞ்சில் நிறுத்தி விண்ணகம் சென்றவர்.கருமுத்து தியாகராசர் தமிழ்க்கொடி ஏற்றியவர். இயேசுவின் புதுமைகள் இயேசுவின் புதுமைகள் அல்லது இயேசுவின் அரும் அடையாளங்கள் பல விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ள நிகழ்வுகளாகும். இவை நோய்களை சுகப்படுத்தல், இயற்கையின் மீதான அதிகாரம், இறந்தோரை உயிர்ப்பித்தல், பேய்களை விரட்டல், வலு குறைந்தவர்களை சீர் செய்தல் என பொதுவாக வகைப்படுத்தலாம். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் இப்புதுமைகளை உண்மை நிகழ்வுகளாக நம்பினாலும், சில புதுமைவாத கிறிஸ்தவர்கள் இவை படிப்பினைக்காக கூறப்பட்ட கதைகள் என்கின்றனர். ஒத்தமை நற்செய்தி நூல்களில் இயேசு தன் அதிகாரத்தை நிருவ மட்டும் புதுமைகள் செய்ய மறுப்பதாக விவரிக்கப்படுள்ளது.யோவான் நற்செய்தி, தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாறியது முதல் இறந்த இலாசரை உயிர்ப்பித்தது வரை ஏழு புதுமைகள் குறிக்கப்பட்டுள்ளன. இசுலாமியர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இயேசுவின் புதுமைகளை நம்புகின்றனர்.