வகையீட்டுச் சமன்பாடு கணிதத்தில் ஒரு வகைக்கெழுச் சமன்பாடு அல்லது வகையீட்டுச் சமன்பாடு ("differential equation") என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த, மதிப்பறியப்படாத ஒரு சார்பின் சமன்பாடாகும். இச்சமன்பாடு சார்பின் மதிப்பையும் அச்சார்பின் வெவ்வேறு வரிசை வகைக்கெழுக்களையும் தொடர்புபடுத்துகிறது. வகையீட்டுச் சமன்பாடுகளின் பயன்களில், சார்ப்புகள் இயல்பு அளவுகளைக் குறிக்கின்றன. வகைக்கெழுக்கள் அவற்றின் மாறுதல் விகிதத்தைக் குறிக்கிறது. மேலும் சமன்பாடானது அவை இரண்டுக்குமான தொடர்பை வரையறுக்கிறது. இவ்வகையான தொடர்புகள் பல துறைகளில் பொதுவாகக் காணப்படக்கூடியவை என்பதால், பொறியியல், இயற்பியல், பொருளியல், உயிரியல் போன்ற முக்கியமான பலதுறைகளில் வகையீட்டுச் சமன்பாடுகள் பெரிதும் பயன்படுகின்றன. தூய கணிதத்தில், வகையீட்டுச் சமன்பாடுகள் வெவ்வேறு கருத்தில் படிக்கப்படுகின்றன, அவற்றுள் முக்கியமானது தீர்வுகளை (சமன்பாட்டைத் தீர்க்கும் செயலியை) கண்டுபிடிப்பதாகும். எளிய வகையீட்டுச் சமன்பாடுகள் மட்டுமே தெளிவான சூத்திரங்கள் மூலம் தீர்க்கப்படக்கூடியன; இருப்பினும், ஒரு கொடுக்கப்பட்ட வகையீட்டுச் சமன்பாட்டின் தீர்வுகளின் சில பண்புகளை அவற்றின் சரியான வடிவத்தைக் கண்டுபிடிக்காமலே தீர்மானிக்க முடியும். தீர்வுக்கான ஒரு சுய வரையறுக்கப்பட்ட சூத்திரம் கிடைக்கவில்லையெனில், தீர்வானது கணினியைப் பயன்படுத்தி எண்ணியல்ரீதியாக தோராயமாகப் பெறப்படுகிறது. இயங்கு அமைப்புகள் பற்றிய கருத்தியலானது வகையீட்டுச் சமன்பாடுகளால் விவரிக்கப்படும் பண்பியல்ரீதியான பகுப்பாய்வை வலுயுறுத்துகிறது. அதேவேளையில், கொடுக்கப்பட்ட துல்லியத் தன்மையுடன் தீர்வினைக் காண்பதற்கு பல எண்ணியல் முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வகையீட்டுச் சமன்பாடுகள் முதன்முதலாக நியூட்டன் மற்றும் லிபினிட்சு நுண்கணிதத்தைக் கண்டறிந்ததில் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது. ஐசாக் நியூட்டன் "மெத்தேடசு பிலக்சியோனம் எட்டு சீரியரம் இன்பினிட்ரம்" என்ற தனது 1671 ஆம் ஆண்டு நூலின் இரண்டாவது அத்தியாயத்தில் மூன்று வகையான வகையீட்டுச் சமன்பாடுகளைப் பட்டியலிட்டுள்ளார்: அவர் இச்சமன்பாடுகளை முடிவிலாத் தொடர்களைப் பயன்படுத்தி தீர்த்து, தீர்வுகளின் தனித்துவமற்ற தன்மையினை விவரிக்கிறார். ஜேக்கப் பெர்னூலி 1695 ஆம் ஆண்டு தனது பெர்னூலி வகையீட்டுச் சமன்பாட்டினை முன்வைத்தார், இது சாதாரண வகையீட்டுச் சமன்பாடு வடிவம் கொண்டதாகும், இதற்கான தீர்வினை அடுத்த ஆண்டு லிபினிட்சு இதை எளிமைப்படுத்துவதின் மூலம் கண்டறிந்தார். இசைக் கருவிகளின் அதிர்வுறும் கற்றைகள் குறித்த கணக்குகளை ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், லியோனார்டு ஆய்லர், டேனியல் பெர்னூலி, ஜோசப் லூயி லாக்ராஞ்சி போன்றோர் ஆய்வு செய்து வந்தனர். 1746 இல், டெ' ஆலம்பார்டு ஒரு பரிமாண அலைச் சமன்பாட்டைக் கண்டறிந்தார். அதிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு லாக்ராஞ்சி முப்பரிமாண அலைச் சமன்பாட்டை கண்டறிந்தார். ஆய்லர்-லாக்ராஞ்சி சமன்பாடு 1750 இல் ஆய்லர் மற்றும் லாக்ராஞ்சியால் அவர்களின் சமநேரவளைவு (tautochrone) கணக்கு குறித்து உருவாக்கப்பட்டது. இது தொடக்கப்புள்ளியைச் சார்ந்திராமல், ஒரு எடையறிப்பட்ட பொருள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட புள்ளியை நோக்கி விழும் வளைவைத் தீர்மானிக்கும் கணக்காகும். லாக்ராஞ்சி இக்கணக்கினைத் தீர்த்து 1755 இல் ஆய்லருக்கு அனுப்பினார். பின்னர் இருவரும் லாக்ராஞ்சியின் முறையை மேம்படுத்தி அதனை இயக்கவியலில் நடைமுறைப்படுத்தினர். இது லாக்ராஞ்சியின் இயக்கவியல் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. ஃவூரியேயின் வெப்பப் பாய்வு குறித்தான தனது கண்டுபிடிப்புகளை "வெப்பத்தின் பகுப்பாய்வுக் கருத்தியல்" ("Théorie analytique de la chaleur", ஆங்கிலம்: The Analytic Theory of Heat) என்பதில் பதிப்பித்தார், அதில் அவர் நியூட்டனின் குளிர்வு விதி குறித்த தனது புரிதல்களை விளக்கினார். அதன்படி, இரண்டு அடுத்தடுத்த மூலக்கூறுகளுக்கு இடையேயான வெப்பப் பாய்வானது அவற்றிற்கு இடையே உள்ள மிகச் சிறிய வெப்பநிலை வித்தியாசத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். இந்நூல் வெப்பப் கடத்துகை விரவல் குறித்த ஃவூரியேயின் வெப்பச் சமன்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதி வகைக்கெழு சமன்பாடுகள் கணித இயற்பியல் மாணவர்களுக்கு அடிப்படைப் பாடங்களாக உள்ளன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாராமாறிகள், அதனைச் சார்ந்த மாறி மற்றும் அதன் வகையீடுகளில் அமைந்த சமன்பாடு, ஒரு வகையீட்டுச் சமன்பாடாகும். formula_3 சார்பின் வகைக்கெழு formula_4 -ஆனது x -ஐப் பொறுத்த y-ன் மாறுவீதம். அறிவியலின் அடிப்படைக் கருத்துக்களின்படி எந்தவொரு மாறும் கணியத்திற்கும் அதன் மாறுவீதத்திற்கும் தொடர்பு உள்ளது. அந்தத் தொடர்பைக் கணித முறையில் எழுதும்போது கிடைப்பதுதான் வகையீட்டுச் சமன்பாடுகள். எடுத்துக்காட்டு: s தொலைவிலிருந்து விழும் ஒரு பொருளின் வேகம், நேரம் t -க்கு நேர்விகிதத்தில் அமையும் என்பது இயற்பியலின் அடிப்படைக் கூற்று. இக்கூற்றை வகைக்கெழுச் சமன்பாடாக எழுத: இங்கு ds/dt -அப்பொருளின் திசைவேகம். வகைக்கெழுச் சமன்பாடுகள் இரு வகைப்படும். ஒரு வகைக்கெழுச் சமன்பாட்டில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரேயொரு சாராமாறி மட்டுமே இடம்பெறுமானால் அச்சமன்பாடு சாதாரண வகைக்கெழுச் சமன்பாடு எனப்படும். எடுத்துக்காட்டுகள்: கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில், "u" என்பது மாறி "x" -ல் அமைந்த ஒரு சார்பு மற்றும் "c" , "ω" மதிப்புத் தெரிந்த மாறிலிகள் என்க. ஒரு வகைக்கெழுச் சமன்பாட்டில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பல சாராமாறிகளும் அவற்றைப் பொறுத்த பகுதி வகைக்கெழுக்களும் இடம்பெறுமானால் அச்சமன்பாடு பகுதி வகைக்கெழுச் சமன்பாடு எனப்படும். எடுத்துக்காட்டுகள்: கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில், "u" என்பது சாராமாறிகள் "x" மற்றும் "t" அல்லது "x" மற்றும் "y"-ல் அமைந்த ஒரு சார்பு. சாதாரண மற்றும் பகுதி வகைகெழுச் சமன்பாடுகள் இரண்டுமே "நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள்" மற்றும் "நேரியலில்லா வகைக்கெழுச் சமன்பாடுகள்" என இரு பெரிய பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகின்றன. ஒரு வகைக்கெழுச் சமன்பாட்டிலுள்ள மதிப்பறியப்படாத சார்பு மற்றும் அதன் வகைக்கெழுக்களின் அடுக்குகள் ஒன்று எனில் அச்சமன்பாடு நேரியல் வகைக்கெழுச் சமன்பாடு எனவும் மாறாக அடுக்குகள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருப்பின் அச்சமன்பாடு நேரியலில்லா வகைக்கெழுச் சமன்பாடு எனவும் அழைக்கப்படும். சில வகையீட்டுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் குறிப்பிட்ட வடிவில் எழுதலாம். கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் "H"("x"), "Z"("x"), "H"("y"), "Z"("y"), அல்லது "H"("x","y"), "Z"("x","y") என்பவை சாராமாறிகள் "x" அல்லது "y" (அல்லது இரண்டிலும்) அமைந்த தொகையிடத்தக்க சார்புகள். "A", "B", "C", "I", "L", "N", "M" மாறிலிகள். பொதுவாக "A", "B", "C", "I", "L" -மெய்யெண்கள். எனினும் "N", "M", "P" மற்றும் "Q" கலப்பெண்களாகவும் இருக்கலாம். வகையீட்டுச் சமன்பாடுகள், தொகையிடத்தக்கச் சமான வடிவில் அமைந்துள்ளன. \frac{x}{2} \right )} + Q\cos{\left ( \sqrt{\left | I^2-4L \right |}\frac{x}{2} \right )} \right ] \,\! formula_14 இங்கு formula_15 "d" படி கொண்ட பல்லுறுப்புக்கோவையின் "d" தீர்வுகள்: formula_16 சாதாரண வகையீட்டுச் சமன்பாடு ஒரு சார் மாறியினது வகைக்கெழுக்களையும் செயலிகளையும் கொண்ட ஒரு வகையீட்டு சமன்பாட்டை சாதாரண வகையீட்டுச் சமன்பாடு என்பர். சாதரண வகையீட்டுச் சமன்பாடு கேத்திர கணிதம், இயக்கவியல், வானியல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. ஆல்வேறு கணிதவியலாளர்கள் சாதாரண வகையீட்டுச் சமன்பாட்டின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பங்களித்த போதிலும் நியூட்டன், கிளைரோட் மற்றும் எயூலர் போன்றோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றார்கள். நேர்கோடற்ற வகையீட்டுச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி எல்லா இடங்களிலும் உறுதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக மக்கள் தொகைக் கணிப்பீடு தொடர்பான பிரசினங்களின் தீர்வுகளுக்கு அண்ணளவான பெறுமானங்களையோ அல்லது எதிர்பார்க்கப்படும் பெறுமானங்களியோ மட்டுமே பெறமுடியும். ஜி. யு. போப் ஜி. யு. போப் ("George Uglow Pope", ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர். தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார் தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். போப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது. 1849 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட போப் பின் இங்கிலாந்து சென்றார். 1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். போப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது. தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார். உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார். 1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார். முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப். லயம் லயம் தாளத்தின் காலப் பிரமாணத்தை நிர்ணயிக்கும் அம்சம் ஆகும். அதாவது பாட்டின் காலப் பிரமாணத்திற்கேற்றவாறு சம அளவான வேகத்தில் தாளத்தின் அட்சரங்கள் விழுதலைக் குறிக்கும். தாளத்தை ஒரே காலப் பிரமாணத்திற்கமைய நடத்திச் செல்லுவது லயமாகும். சங்கீதத்தில் லயம் பிரதானமான இடத்தை வகிப்பதனால் இது "பிதா" எனப்படுகிறது. லயம் 3 வகைப் படும். அவையாவன: விளம்பித லயம் ஆறுதலாகத் (சௌக்கமாக) தாளம் போடுவதையும் துரித லயம் வேகமாகத் தாளம் போடுவதையும் குறிக்கும். இவை ஒவ்வொன்றும் மேலும் மும்மூன்றாகப் பிரிக்கப்பட்டு நுணுக்கமாகக் கணிக்கப் படுகிறன. அவையாவன: அட்சரகாலம் அட்சரகாலம் ஸ்வரங்களின் கால அளவைக் குறிப்பது ஆகும். "ஸ ரி க ம ப த நி" என்னும் கீல் ஸ்வரங்களுக்கு ஒவ்வொரு அட்சர காலமும், ஸா ரீ கா மா பா தா நீ என்னும் நெடில் ஸ்வரங்களுக்கு இவ்விரண்டு அட்சர காலமும் வரும். , எனும் காற்புள்ளி ஒரு அட்சர கால கார்வை ஆகும். ; எனும் அரைப் புள்ளி இரண்டு அட்சர கால அளவைக் கொண்டது. என்வே ஸா, என்பதன் அட்சர காலம் மூன்று ஆகும். மா; என்பதன் அட்சர காலம் நான்கு ஆகும். உ+ம் : ஸா ரீ கமா, பதா; என்பதன் அட்சரகாலங்கள் 12 ஆகும். கிருதி கிருதி இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதும் ஆகும். தற்காலத்து அரங்கிசை நிகழ்ச்சிகளில் கிருதிகளைப் பாடுவதற்கு அல்லது இசைப்பதற்குத் தான் அதிகமான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிருதிகளை அதிகம் பாடும் போது அவற்றைப் பாடுவோர்க்கும், அவற்றைக் கேட்போருக்கும் அரியதோர் இசையின்பம் ஏற்படுகின்றது. பல இசைவாணர்களும் கிருதிகள் வழியாகப் பல அரும்பெரும் கருத்துக்களையும் தங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். கிருதிகளில் கற்பனை சுரம், நிரவல் முதலியன பாடுவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளன. கிருதிகள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் பகுதிகளைக் கொண்டவை. சில கிருதிகளில் அனுபல்லவி இருக்காது. அப்போது சரணத்திற்கு "சமஷ்டி சரணம்" என்று பெயர். சில சமயங்களில் சரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையாகவும், ஒரே தாதுவால் (சுரக் கோர்வை) அல்லது வெவ்வேறு தாதுக்களால் அமைக்கப்பட்டோ இருக்கலாம். சாகித்தியம் இறைவனை பற்றியதாகவோ, உலகியலைப் பற்றியதாகவோ இருக்கலாம். கிருதியின் எல்லை 1 ½ ஸ்தாயி முதல் 2 ஸ்தாயி வரை உள்ளது. அனாகத, அதீத எடுப்புக்கள் கையாளப்படுகின்றன. கிருதிகள் எல்லா விதமான இராகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இராகங்களின் வடிவம் அழிந்து போகாமல் இருப்பதற்குக் கிருதிகள் தான் காரணம் என்று கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி வரைமுறையாக இயற்றப்பட்ட கிருதிகளின் தொகுப்பைச் சமுதாயக் கிருதிகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டுக்கள் : செப்டம்பர் 19 ஆசௌச தீபிகை ஆசௌச தீபிகை என்பது பிறப்புகளால் உண்டாகும் விலக்குகளை விளக்கும் நூல். இதனை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழாசுர முனிவர் இயற்றினார். இ. சி. இரகுநாதையர் இ. சி. இரகுநாதையர் 1667 இல் இலங்கையில் முதன்முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்து வெளியிட்டவரான இராமலிங்க முனிவரின் வழி வந்தவர். இவரது பாட்டனாரான சந்திரசேகர ஐயர் இரகுநாதையர் காலயுக்தி வருடம் (1858 - 1859) முதலும், பின்னர் இவரது தகப்பனார் இ. சிவராமலிங்கையர் ஜய வருடம் (1894 - 1895) முதலும் கணித்து வெளியிட்டுவந்த இப் பஞ்சாங்கத்தைப் பொறுப்பேற்று, விக்கிரம வருடம் (1940 - 1941) முதல் குரோதி வருடம் (1964 - 1965)வரை கணித்து வெளியிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் காலத்தில் நிறுவப்பட்ட சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலை மூலமாகப் பஞ்சாங்கத்தை அச்சிட்டு வெளியிட்டு வந்தது மட்டுமன்றி வேறு பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். சனவரி 25 [[பகுப்பு:ஜனவரி]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] தமிழர் தற்காப்புக் கலைகள் நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் ("Tamil martial arts") பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம். சுவீடன் சுவீடன் ("Sweden") ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு. தற்காலப்பெயரான சுவீடன், பழைய ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்பதலிருந்து உருவானது. இவ்வழக்குச் சொல்லானது, பியோவல்ப்பின் சுவியோரைசில் பதிவாகியுள்ளது). 17ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின் மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. உருவாகிய சில ஆண்டுகளில், ஐரேப்பாவின் மிகப்பெரும் சக்தியாக உருவானது. பெரும்பாலான மாகாணங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்திலிருந்து சுவீடனால் கைப்பற்றப்பட்டது. தனது கிழக்கு மாகாணமான பின்லாந்தை இரசியப் பேரரசிடம் 1809ம் ஆண்டு இழந்தது. 1814 ஆண்டில் நிகழ்ந்த தனது நேரடிப் போருக்குப் பின்னர், அமைதியை கடைபிடிக்கின்றது. சனவரி 1, 1995 நாள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினராக உள்ளது. ஸ்வீடன் "லான்" என்று அழைக்கப்படும் 21 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுவீடன் - தெற்கில் ஐரோப்பாவையும், நீண்ட கடற்பரப்பு கொண்ட கிழக்கில் பால்திக் கடலையும், மேற்கில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஸ்காண்டிநேவிய மலைத்தொடரானது, சுவீடனையும் நார்வேயையும் பிரிக்கின்றது. பின்லாந்தானது, நாட்டின் வடகிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும். ஒரிசன்ட் பாலத்தின் மூலம், டென்மார்க்குடன் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது ( நார்வேயுடன், நீளம் - 1,619 கிமீ ). அரசியலமைப்பு முடியாட்சியான சுவீடனின் காரல் 16ம் மன்னர் குஸ்தாப் தலைவராக உள்ளார். ஆனால், அதிகாரத்தை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பிரதிநிதித்துவம் வரையில் வரையறுக்கப்பட்டது. பொருளாதார புலனாய்வு பிரிவின்படி, 167 ஜனநாயக நாடுகளுடன் மதிப்பிடும் 2010 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் ஸ்வீடன் உள்ளது. சுவீடன் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - ரிஸ்க்ஸ்டேக். 349 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையே, நாட்டின் பிரதமரை தேர்வு செய்கின்றது. பாராளுமன்றத் தேர்தல், நான்காண்டிற்கு ஒருமுறை செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்கிறது. பிளேடைம் (திரைப்படம்) பிளேடைம் (Play Time) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு மொழித் திரைப்படமாகும்.ஜாக்குவஸ் டாத்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக்குவஸ் டாத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். கலைப்படம் / நகைச்சுவைப்படம் இத்திரைப்படத்தில் எம். கியுலொட் மற்றும் சில அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அதிநவீனமான பாரிஸில் நுழைகின்றனர்.மேலும் இவர்கள் கண்களால் நம்ப இயலாத விஞ்ஞான உலகமாக அதன் மாற்றம் இவற்றுடன் தொடரும் நகைச்சுவைக் காட்சியமைப்பு போன்றன திரைக்கதையில் ஒரு சிறப்பம்சமாகும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜாக்குவஸ் டாத்தி தனது செய்கை நடிப்புகள் மூலம் அவரது நகர மக்களை அசத்துகின்றார்.சலனப் படமாக எடுக்கப்பெற்றூக்கும் இத்திரைப்படத்தில் டாத்தி தனது குறும்புகளால் மக்களை சிரிக்க வைக்கின்றார். காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின் காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின் ஆங்கிலத்தில் (The Hidden Fortress) 1958 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.அகிரா குரோசாவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டோஷிரோ மிபூன்,மிசா யுஹெரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவைப்படம் / நாடகப்படம் மக்காபெ தனது நாட்டு இளவரசியாரைக் காப்பாற்றுவதே முக்கிய கொள்கையாக இருக்கும் ஒரு வீரன். மேலும் இவரது வழியில் தங்கம் கிடைக்கும் என வந்த இரு முட்டாள்கள் மாட்டிக்கொள்ளவே அவர்களிற்குத் தங்கம் இருக்கும் இடத்தை தெரிவிக்கப்போவதாக கூறிக்கொள்ளும் மக்காபெ அவர்கள் இருவரையும் அலைக்கழிக்கின்றார்.ஆரம்ப காலங்களில் மக்காபெ எனும் கொள்ளைக்காரனைத்தேடி வரும் அவ்விருவரும் வருகின்றனர் ஆனால் அவரிடமே கூலிகளாக வேலை செய்வதென்பதறியாது பின்பு அவ்வுண்மையத் தெரிந்து கொள்கின்றனர்.இவரிடமிருந்து தப்பிச்செல்ல பலமுறை முயன்றும் முடியவில்லை தோற்றுப்போகின்றனர்.இளவரசியார் ஒருவரை இவர் கடத்தி வந்ததாக தம் ஊரில் அறிந்து வந்த இவ்விரு முட்டாள்களும் அவ்விளவரசியாரைக் காப்பாற்றுவதற்காகவே மக்கபெ இவ்வாறு தலைமறைவான இடத்தில் தங்கியுள்ளார் என்பதனைப் அறியாது உள்ளனர்.இதற்கிடையில் இளவரசியாரை மக்கபே எவ்வாறு காப்பாற்றுகின்றார் என்பது திரைக்கதை முடிவு. மடடாயோ மடாடாயோ (Madadayo) 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் உலகின் அதிசிறந்த கலைப்பட இயக்குநர்களில் ஒருவரான அகிரா குரோசாவாவின் இயக்கத்தில் வெளிவந்த இறுதித் திரைப்படமாகும். கலைப்படம் பிரபல ஜப்பானிய எழுத்தாளரும் ஆசிரியருமான உச்சிடா கியகென் (1889-1971) ஜேர்மனிய ஆசிரியப் பதவியில் இருந்து விலகுவதிலிருந்து ஆரம்பிக்கும் இத்திரைப்படம் மேலும் அவரது பழைய மாணவர்கள் அவருக்கு வழங்கும் சிறப்பு விழாவொன்றில் கலந்து கொள்ளும் வரை காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.மடாடோயிவின் அர்த்தம் என்னவெனில் "இன்னமும் ஆயத்தமில்லையா" என்பது பொருள் இதனை இவரது மாணவர்கள் அவரது சிறப்பு விருந்தில் கேட்டனர்.அதாவது இன்னமும் சாவதற்கு ஆயத்தமில்லையா.அவ்வாசிரியரும் சாவு வெகு விரைவில் உள்ளது மேலும் வாழ்க்கை இன்னும் உள்ளது என உரக்கக் கூறுகின்றார்.மேலும் இத்திரைப்படம் அவரின் புதிய வீட்டு மாற்றம் மற்றும் தனது பூனையொன்றின் தொலைவு போன்றவற்றில் திரைக்கதை நகர்கின்றது. பகெலி பகெலி (paheli) திரைப்படம் ஹிந்தித்திரை நடிகர்களான ஷா ருக் கான் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காதல்படம் / பேய்ப்படம் கிஷனை மணம் செய்து கொள்வதற்காக ஆயத்தம் செய்யும் லச்சி தனது வருங்கால கணவரின் வியாபார விருப்பங்களுக்கிணைய பிரியும் பொழுது அவர் ஒரு ஆவியினை சந்திக்கின்றார் ஆரம்ப காலத்தில் அவரது கணவரின் உருவைப்பெற்ற அந்த ஆவி லச்சியின் மீது இருந்த காதல் காரணமாக அவரைப் பின் தொடர்கின்றது.லச்சியின் வருங்கால கணவரைப் போல உருவத்தினை பெறும் ஆவி தான் ஒரு ஆவியென்ற உண்மையை லச்சியிடம் மாத்திரமே கூறுகின்றது. தில் சே தில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது. காதல்படம் / நாடகப்படம் அமர்காந்த் வர்மா (ஷா ருக் கான்) பத்திகையாளராவார்.அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் இவர் மேக்னாவை (மனீசா கொய்ராலா) ஒரு புகையிரத சாலையில் சந்திக்கின்றார்.அவரிடம் காதல் வசப்படும் வர்மா பின் தொடர்ந்து சென்று காதலிப்பதையும் கூறுகின்றார்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் மேக்னா தனக்கு மணம் ஆகிவிட்டதென பொய் கூறுகின்றார்.ஒரு தீவிரவாதப் பெண்ணாகவும் காஷ்மீர் பகுதியிலிருந்து இந்தியப் படைகளினால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் அவல நிலைகளினால் தீவிரவாதியாக மாற்றப் படுகிறாள் எனவும் தெரிந்து கொள்ளும் வர்மா அவளிடம் நோக்கிச் செல்கின்றார்.இறுதியில் அவரைப் பார்க்கும் வர்மா அவள் தற்கொலைதாரியாக உடலில் வெடி மருந்துகளைச் சுமந்து செல்வதை உணராமல் அவள் அருகில் செல்கின்றார்.எதிர்பாராத விதமாக வெடித்த அவள் உடலில் சுமந்து சென்ற வெடிப்பொருளினால் இருவரும் இறக்கின்றனர். 1999 பெர்லின் உலகத்திரைப்பட விழா (ஜேர்மன்) 1999 தேசியத் திரைப்பட விருது (இந்தியா) 1999 பில்ம்பேர் விருதுகள் (இந்தியா) பைண்டிங் நீமோ ஃபைண்டிங் நீமோ (Finding Nemo) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஆண்ட்ரூ ஸ்டாண்ட்டொன் இயக்கத்தில் வெளிவந்த இது ஒரு 'இயக்கமூட்டிய திரைப்படம்' (Animation movie) ஆகும். பல திரைப்பட நடிகர்கள் இத்திரைப்படக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம் பசிபிக் கடலில் வாழும் மார்லின் என்ற மீன் தனது மனைவியை இழந்த பின்னர், தனது ஒரே மகனான நீமோவை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கின்றது. தந்தை மீனின் சொற்களைப் பொருட்படுத்தாத நீமோ, தான் வாழும் பகுதியில் இருந்து பல தூரம் கடந்து செல்லும் பொழுது மனிதர்களால் பிடிக்கப்படுகிறது. இதைக் கண்ட மார்லின் தனது மகனை மீட்க அந்த படகினை துரத்திச் செல்கிறது. நீமோ, சிட்னி துறைமுகம் அருகே ஒரு பல் வைத்தியரின் மீன் தொட்டியில் அடைக்கப்படுகின்றது. அங்கு வாழும் பிற மீன்களுடன் நட்புக் கொள்கிறது. இதற்கிடையே, நீமோவைத் தேடிச் செல்லும் மார்லினுக்கு, செல்லும் வழியில் பலரும் உதவி செய்கின்றனர். டோரி என்னும் மீனுடன் சிநேகிதம் கொள்ளும் மார்லின் தனது மகனைத் தேடி சிட்னி வரை செல்கின்றது. தனது தந்தை தன்னை மீட்க சிட்னி வருவதை அறியும் நீமோவும், மீன் தொட்டியிலிருந்து தப்பிக்க முற்படுகிறது. நீமோவால் தப்பிக்க முடிந்ததா, தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை. இத்திரைப்படம் 2003-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்கமூட்டிய திரைப்படம்' ('Best Animated Feature Film') என்ற ஆஸ்கார் விருதினைப் பெற்றது. இது தவிர 32 வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. குட்பெலாஸ் குட்பெலாஸ்ஸ்(ஆங்கிலம்:GoodFellas) 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். மார்டின் ஸ்கோர்சேசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரே லியோட்டா, ரோபேர்ட் டி நிரோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிட்டிசன் கேன் சிட்டிசன் கேன் (Citizen kane) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஓர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோசப் கோட்டன் டோர்த்தி கோமிங்கோர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மர்மப்படம் / நாடகப்படம் சார்ள்ஸ் ஃபோஸ்ட்டெர் கேன் ஒரு வியாபாரியின் மகனாவார் தனது சிறு வயதுமுதல் செல்வந்தராக இருக்கும் இவர் தனக்கென்ற ஒரு அரசியல் கட்சியை ஏற்படுத்திக்கொள்கின்றார்.பின்னர் அவ்வரசியலில் இருந்து படிப்படியே உயர்ந்து செல்லும் இவர் தனது காதலியைக் கண்டுகொள்ளாதுமிருக்கின்றார்.பணமே மிக முக்கியமானதாகக் கருதும் இவர் இறுதியில் தனது மிகப்பெரிய அரண்மனையின் தோற்றம் கொண்ட வீட்டில் தனியே இருக்கின்றார்.யாரின் உதவியுமின்றி தனியே இறந்தும் போகின்றார்.இவரின் வாழ்க்கையினை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ள முடியாத பத்திரிகையாளர் ஒருவர் அவரைப் பற்றிய தகவல்களை திரட்டிவருகின்றார்.இவரைப்பற்றி பலரும் பல கருத்துக்களைத்தெரிவிக்கும் பொழுது ரோஸ்பட் என்னும் பெயர் அடிபடுகின்றது அதென்ன ரோஸ்பட் என்ற ஆராய்வில் ஈடுபடுகின்றார் அப்பதிரிகையாளரும்.அச்சமயம் அவர் இறந்து போகும் பொழுது ரோஸ்பட் என்ற பெயரைக் கொண்ட பொருளை அவர் வாழ்ந்த மனையிலிருந்து கண்டெடுக்கின்றனர்.இதனைப் பற்றி பல விடயங்கள் ஆராய்ந்தும் அவர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை.அதே சமயம் அவர் இறக்கும் சமயமும் அந்த ரோஸ்பட் பெயரை உச்சரித்துவிட்டே இறக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் அப்பெயரானது அவர் சிறுவயதில் உள்ளபோது அவர்வைத்துவிளையாடிய பனிச்சறுக்கு விளையாட்டுப்பொருளாகும், அச்சிறுவாழ்க்கையினை அவர் இறக்கும் பொழுது விரும்பியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வென்ற விருது: பரிந்துரைக்கப்பட்ட விருது: அலெக்சாண்டர் (திரைப்படம்) அலெக்ஸாண்டர் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மாவீரன் அலெக்சாந்தரின் வார்க்கை வரலாற்றினைப் பிரதிபலிக்குமாறு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாமுராய் ஜாக் சாமுராய் ஜாக் (Samurai Jack) என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் ஆகஸ்டு 2001 இலிருந்து செப்டம்பர் 2004 வரை ஒளிபரப்பப்பட்டு வந்த ஒரு சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர். ஜெண்டி டாட்டாகோவ்ஸ்கி என்பவரின் உருவாக்கத்தில் வெளியிடப்பட்ட இத்தொடர் உலகெங்கிலும் பல பகுதிகளில் உள்ள கார்டூன் நெட்வொர்க் ரசிகர்களாலும் பார்த்து மகிழப்பட்டது குறிப்பிடத்தக்கது. 8½ (திரைப்படம்) 8½ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். பெடெரிக்கோ பெலினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மார்செல்லோ மாஸ்ரோலியானி, கிளௌடியா கார்டினேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். பைசிக்கிள் தீஃவ்ஸ் பைசிக்கிள் தீஃவ்ஸ் (Bicycle Thieves)திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலைப்படமாகும்.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொ டி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட இயக்குனரானசத்யஜித் ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைப்படம் இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த அந்தோனியோ சுவரொட்டிகள் ஒட்டும் வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டப்படி ஒரு மிதிவண்டியை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. அந்தோனியோவின் மனைவியும் இவருக்கு தம்மிடம் இருந்த பொருளை விற்று அவருக்கு மிதிவண்டியொன்றை வாங்கித் தருகின்றார். அவர் மிதிவண்டியை நிறுத்திவிட்டு சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருக்கும்போது அந்த மிதிவண்டியும் திருட்டுப் போய்விடுகின்றது. திருட்டுப் போன மிதிவண்டியினைத் தேடி அலைகின்றனர் அந்தோனியோவும் அவரின் மகனும். இவ்வாறு பல இடங்களில் தேடியும் கிடைக்கப் பெறாத அந்த மிதி வண்டிக்காக ஒரு மிதிவண்டியைத் திருட நினைத்து திருடவும் சென்றார் அந்தோனியோ ஆனால் அம்மிதிவண்டிக்குச் சொந்தக்காரனோ அதனைப் பார்த்து பின்னர் மன்னித்து அனுப்புகின்றார். இவ்வாறு நடக்கும் காலத்தில் தனது வேலையை திரும்பப் பெறவும் முயற்சிக்கின்றார் அந்தோனியோ. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் வாழ்க்கை அழகானது (இத்தாலிய மொழி: "La vita è bella", "Life is beautiful") 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். இருப்பினும் ஆஸ்கார் விருதுகள் பிரிவில் பலவற்றிற்கும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் "சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான" ஆஸ்கார் விருதையும், "சிறந்த இசையமைப்பு", "சிறந்த நடிகர்" போன்றவற்றிற்கான ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. நாடகப்படம் / நகைச்சுவைப்படம் கதையின் ஆரம்பத்தில் யூதரான கைடோ டோரா (ரோபேர்ட்டோ பெனிக்னி) தனது குறும்புத்தனமான விளையாட்டுகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கின்றார். நகைச்சுவை உணர்வுகளால் பிரதிபலிக்கும் இவர், பிறப்பால் யூதர் எனும் காரணத்துக்காக, தனது மகனான ஜோஷுவாவுடன் ஜேர்மனிய நாசிப்படைகளால், சிறைக்கு அனுப்பப்படுகின்றார். ஜோஷுவாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஆயத்தம் செய்யும் போது ஏற்படும் இந்நிகழ்வு பின்னர் அவர்களின் அழிவிற்கே என ஆரம்பத்தில் அறிந்து கொள்ளும் கைடோ தனது மகனிடம், "நாம் இப்பொழுது ஒரு விளையாட்டு விளையாடுகின்றோம் எனவும் மேலும் இச்சிறை மற்றும் அனைத்து காவலர்களும் ஒரு விளையாட்டே எனக் கூறுகின்றார்". மேலும் "ஒவ்வொரு காவலரும் தங்களிடம் கோபமாக உள்ளனர், ஏனெனில் அவர்களுக்கு வேண்டியதெல்லம் பீரங்கிதான், அப்பீரங்கிதான் நம்மிடம் வரப்போகின்றது என்னென்றால், யார் அதிகமாக புள்ளிகளை இவ்விளையாட்டில் பெறுகின்றாரோ அவருக்கே அப்பீரங்கி சொந்தமாகும்" எனவும் கூறிக்கொள்கின்றார் கைடோ. ஒரு கட்டத்தில் நேசப்படைகளால் ஜெர்மானிய படைகள் தாக்கப்படுகின்றன. அப்போது நடக்கும் குழப்பதில் தனது மனைவியைக் கைடோ காண முற்படும் பொது அவர் கொல்லப்படுகின்றார். இறுதியில் ஜோஷுவா தனது அம்மாவிடம் சேருகிறான். ஜோஷுவா தனது தந்தை தனக்காக செய்த தியாகத்தை சொல்லுவதோடு இத்திரைப்படம் முற்றுகிறது. இசுபைடர் மேன் (திரைப்படம்) இசுபைடர் மேன் திரைப்படம் பிரபல வரைபட நாயகனான இசுபைடர் மேனின் திரைப்படத்தழுவலாகும்.2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகளவில் 821 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.43.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரு நாள் வசூலில் பெற்றிருப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிசு க்ரிஷ், 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி பொழுதுபோக்குத் திரைப்படமாகும். ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கோயி... மில் கயா என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு தமிழிலும் வெளிவந்தது. எனினும், இந்தி மொழி வடிவம் பெற்ற வணிக வெற்றியைத் தமிழ் வடிவம் பெறவில்லை. குழந்தைகளை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும் படமாக்கமும் இருந்தன. த சாடோ த சாடோ (The Shadow) திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.1937 ஆம் ஆண்டு வால்டர் பி.கிப்சன் உருவாக்கிய கதாபாத்திரமான சாடோவே 1994 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கருவாகும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வரைபடக் கதைகள் பாணியில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாவல்படம் / தற்காப்புக்கலைப்படம் முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவீரனாகப் பணியாற்றும் லாமொண்ட் கிரான்ஸ்டொன் (அலெக் பால்ட்வின்) போரில் ஏற்படும் வெறுப்புணர்வாலும் அலுப்புகளினாலும் போரிலிருந்து விலகி திபெத்து நாட்டில் போதைப் பொருட்களை விற்பவனாகவும் மேலும் பல தீய செயல்களிலும் ஈடுபடுபவனாகவும் விளங்குகின்றான்.இதற்கிடையில் அங்கு ஒரு புத்த மதப் பிக்குவினைச் சந்தித்துக்கொள்ளும் அவன் அங்கிருந்து மனதை ஒருங்கு நிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தும் கொள்கின்றான்.அங்கிருந்து திருந்திய மனதுடையவனாகச் செல்லும் லாமொண்ட் அமெரிக்காவில் ஏற்படும் தீய சம்பவங்களையும் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக இரவு நேரங்களில் போராடவும் செய்கின்றான்.இச்சமயம் அங்கு வரும் ஜென்ஹிஸ் கானின் சீடனான ஷிவான் கானால் பலமுறை தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றான் லாமொண்ட்.பல தந்திர மாஜாயாலச் சக்திகளைப் பெற்றிருந்த ஷிவான் கான் லாமொண்டின் மனதினை அவன் கட்டுப்பாடிற்குள் கொண்டுவருவதற்காக முயற்சிகளும் செய்கின்றான்.இவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றான் லாமொண்ட் என்பதே திரைக்கதையின் முடிவாகும். பேட் மேன் (திரைப்படம்) பேட் மேன் (Batman)திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.சிறந்த கலை அமைப்பிற்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற திரைப்படம் பேட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.வோப் கேன் மற்றும் பில் பின்கெர் போன்றவர்களின் கண்டுபிடிப்பில் வெளிவந்த வவ்வால் மனிதன் இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் சிறுவர்களுக்கான நாவல் முறையில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது. கொலை கொள்ளைகள் என நிகழும் கோதாம் நகரத்தில் புதிதாக வந்த வௌவால் மனிதன் என்றழைக்கப்பட்டவனால் பொது மக்கள் காப்பாற்றப் படுகின்றனர்.இவ்வௌவால் மனிதன் யார் என்பதனை அறியப் பலரும் விருப்பம் கொண்டனர்.ஆனால் எவராலும் வௌவால் மனிதன் பற்றிய விடயங்கள் அறிய முடியாமல் இருந்தது.ஆனால் பிந்தைய காலங்களில் வௌவால் மனிதன் ஒரு சாதாரண மனிதனான புரூஷ் வேய்ன் என்பவர் என்பதனை அறிந்து கொள்கின்றாள் கோதாம் நகரப் புகைப்படம் எடுப்பவரான விக்கி வேல் என்னும் ஒரு பெண்.பின்னர் அங்கு பொதுமக்களின் அழிப்பிற்குக் காரணமாக விளங்குகின்றான் ஜோக்கர் என்றழைக்கப்பட்டவன் கோதாம் நகரின் அழிவைத் தானே ஏற்படுத்தப்போவாதாக அனைவரையும் பயமுறுத்துகின்றான்.மேலும் புகைப்படம் எடுப்பவளான விக்கி வேலை தன்னுடன் கடத்திச் செல்கின்றான். பேட்மேனை கோதாம் நகரத்தில் இருந்து அழித்து அந்நகரத்தினை தானே ஆளவேண்டும் என்ற அவாவினால் விக்கி வேலைக் கடத்திச் செல்கின்றான்.இதனை அறிந்த வவ்வால் மனிதனான புரூஷ் அவனை அழித்து விக்கியைக் காப்பாற்றுகின்றான். ரங் தே பசந்தி (திரைப்படம்) ரங் தே பசந்தி (இந்துஸ்தானி: रंग दे बसंती, رنگ دے بسنتى) திரைப்படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது இத்திரைப்படம் மேலும் இந்திய ரூபா 345.5 கோடி வரையிலான வசூல் சாதனையை இத்திரைப்படம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார்.அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர்.இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன.இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர்.வன்முறையில் ஈடுபட்டனரா மேலும் இதன் பின்னர் என்ன நடந்தது என்பது கதையின் முடிவாகும். தேவ்தாஸ் (2002 திரைப்படம்) தேவ்தாஸ் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் 10.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மேலும் இந்தியாவில் 2002 வரை அதிக பணம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமும் ஆகும். நாடகப்படம் / காதல்படம் லண்டனிலிருந்து இந்தியாவிற்கு புறப்படும் தேவ்தாஸ் (ஷா ருக் கான்) அங்கு சிறுவயது தோழியான அண்டை வீட்டுத் தோழியான பார்வதியைச் (ஜஸ்வர்யா ராய்) சந்தித்துக்கொள்கின்றார்.இவரை வரவேற்கும் பார்வதியின் பெற்றோர் பார்வதிக்கே தேவ்தாஸைத் திருமணம் செய்து வைப்பதென ஏற்பாடு செய்கின்றனர்.ஆனால் தேவ்தாஸின் சகோதரியோ பார்வதியின் தாயார் ஒரு கூத்தாட்டக்காரி என்றும் மேலும் பார்வதியத் திருமணம் செய்து கொண்டால் கௌரவம் குறைந்துவிடும் எனவும் கூறுகின்றார்.இதனைக் கேட்டு கோபம் கொள்ளும் பார்வதியின் தாயும் பார்வதிக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்க்கின்றனர்.தேவ்தாஸும் தனது இறுதி மூச்சுவரை பார்வதியை நினைத்து மது அருந்தியே தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றார். மதர் இந்தியா மதர் இந்தியா(இந்தியத் தாய்) இத்திரைப்படம் 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும்.மேலும் இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைக் இத்திரைப்படம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக திருமணமாகும் தம்பதியினர்களான ரதாவும் சாமுவும் தோட்ட வேலை பார்த்துக் கொள்ளும் தொழிலாளலர்களும் இருவரிடத்தும் மிகுந்த அன்பும் கொண்டவர்களாகவும் விளங்கினர்.ஆனால் அத்தோட்ட வேலைகளூக்கு உதவும் வகையில் அவர்கள் ஒருவனிடம் கடன் உதவி கேட்டுப் பெற்றிருந்தனர்.கடனுதவியை வழங்கியவனோ வட்டிப் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக சாமுவின் நிலத்தில் பல கால்வாசியைப் பெற்றான் வஞ்சகமாக.இதனை அறியாதவர்களாக படிப்பறிவு பெற்றிராத சாமுவும் அவன் மனைவியும் பின்னைய காலங்களில் பெரும் துயருக்கு உள்ளாகின்றனர். சிறிது காலங்களில் கணவனை இழக்கும் ராதா தன் பிள்ளைகளைப் பட்டினிப் பசியிலிருந்து காப்பாற்றுவதற்கு துயரங்களையும் பொருட்படுத்தாது உழைக்கின்றார்.பின்னர் அவரின் இரு மகன்களும் வளர்ந்து அவரை எந்த ஒரு குறையுமின்றி வைத்திருக்கின்றனர்.இரு மகன்களில் ஒருவன் மட்டும் எதற்கும் அஞ்சாதவனாகப் பிறந்தான்.அவன் தனது தாயை மதிக்காது தம் நிலச்சொத்துக்களை அபகரித்து குடும்பத்தினை ஏமாற்றிய கடனுதவி செய்தவனை கொலை செய்கின்றான்.இதனைப் பலமுறை தடுத்தும் ராதாவால் அவளிம் இரண்டாவது மகனை நல்லவனாக உயர்த்த முடியவில்லை.திடீரென ஒரு நாள் அவன் காதலித்திருந்த பெண் வேறொருவனுக்கு மணமாகப் போவது தெரிந்து மணப்பெண்ணாக கோலம் பூண்டிருந்த பெண்ணை அலாக்காகத் தூக்கிச் சென்றான் இதனைப் பார்த்த தாயார்.அவனைத் தன் கைகளினாலேயே சுட்டு வீழ்த்துகின்றார். தேவ்தாஸ் (1955 திரைப்படம்) தேவ்தாஸ் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். விமல் ரோய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலிப் குமார், சுசித்ரா சென் போன்ற பலரும் நடித்திருந்தனர். மேயின் ஹூன் நா மைன் ஹூ நா () 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும், ஃபராஹ் கான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷா ருக் கான், சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் (Mr. and Mrs. Iyer) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான அபர்ணா சென் இயக்கினார். நாடகப்படம் மீனாக்சி ஐயர் (கொங்கொன சென் சர்மா) தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார். மீனாக்சி தனது 9 மாத பிள்ளையுடன் பேருந்தில் நண்பரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் ராஜா சௌத்ரி (ராகுல் போஸ்) எனும் இஸ்லாமிய இளைஞரைச் சந்திக்கின்றார். ஆரம்பத்தில் அவர் ஒரு இந்துவென நினைத்துப் பழகும் பின்னர் ஒரு இஸ்லாமியர் எனத் தெரிந்து அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் காணப்பட்டார். அவர்கள் பயணம் செய்யும் பேருந்து திடீரென வரும் இந்துக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாக உள்ள அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறிக்கொள்ளும் அக்கும்பல் இஸ்லாமிய மதத்தவர்களை அழைக்கும் போது அங்கு தன்னுடன் இருந்த ராஜாவைக் மனிதாபிமான அடிப்படையில் காட்டிக் கொடுக்க மறுக்கின்றார் மீனாக்சி. அதே வேளை அக்கும்பல் அங்கு இஸ்லாமியர்களாக இருந்த முதியவர்களை வெளியே வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றது. சிறிது நேரங்களில் அருகில் இருக்கும் ஊருக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த விடுதியொன்றில் தங்குகின்றனர். பின்னர் அங்கு வரும் பலர் கேட்கும் போதெல்லாம் ராஜா தனது கணவர் என அவரைக் காப்பாற்றுவதற்காக கூறிக்கொள்ளும் மீனாக்சி இறுதியில் அவரை காப்பாற்றி பின்னர் புகையிரத நிலையத்திலிருந்து பிரிந்து செல்கின்றார். 2002 லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா (சுவிர்சலாந்து) 2002 ஹவாய் சர்வதேச திரைப்பட விழா (அமெரிக்கா) 2003 பிலடெல்பியா திரைப்பட விழா (அமெரிக்கா) 2003 தேசிய திரைப்பட விருது (இந்தியா) 2003 சினிமனிலா சர்வதேச திரைப்பட விழா (பிலிப்பைன்ஸ்) செப்டம்பர் 20 சனவரி 24 20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்) 20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (20,000 Leagues Under the Sea) திரைப்படம் 1870 களில் வெளியிடப்பட்ட ஜூல்ஸ் வெர்னியின் நாவலின் தழுவலிலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமாகும். 1868 களில் கடலின் நடுவில் இராட்சத மிருகமொன்று அலைவதாகக் கேள்விப்படும் ஆசிரியரான பியெரி அரோனாக்ஸ் மற்றும் அவரது உதவியாளரான கொன்சீலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசின் உதவியுடன் சைகோன் என்றழைக்கப்பட்ட பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு செல்லும் பொழுது இராட்சத விலங்கு ஒன்று அவர்களது படகினைத் தாக்குவதை உணர்கின்றனர். பின்னர் அது ராட்சத மிருகமல்லவெனவும் அது மனிதால் செய்யப்பட்ட இராட்சத மிருகம் போன்ற அமைப்பைக் கொண்ட போர்க்கப்பல் எனவும் புரிந்து கொள்கின்றனர். அக்கப்பலைத் தலைமை தாங்கிய கப்பல் படைத் தளபதி நீமொ அவர்களை பணயக் கைதிகளாக பிடித்து அவனது கண்டுபிடிப்பான அக்கப்பலுக்குள் அழைத்துச் செல்கின்றான். மேலும் அரோனாக்ஸிடம் தனது இந்தக் கண்டுபிடிப்பின் காரணம் ஏனெனில் அண்டை நாடுகள் பல மக்களை அழிப்பதற்காக வெடி மருந்துகளை ஏற்றிக்கொண்டு செல்வதைத் தடுப்பதற்காகவே தனது இந்தத் திட்டம் எனவும் அவ்வாறு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தனது புதிய கண்டுபிடிப்பான இக்கப்பல் மூலம் மோதி அழிப்பதே தனது லட்சியம் எனவும் கூறுகின்றார். பின்னடைவில் அவரது கப்பல் ஒரு ராட்சத கணவாயால் தாக்கப்படவே மூழ்கின்றது. அவர் அக்கப்பலிலேயே மாண்டு கொள்கின்றார். மேலும் அரோனாக்ஸ் மற்றும் அவருடன் கைதிகளாக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். "20,000 லீக்ஸ் அண்டெர் த சீ" "20,000 லீக்ஸ் அண்டெர் த சீ திரைப்படம்" ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்) ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (E.T the extra terrestrial) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானப்படம் / சிறுவர்படம் வேற்றுக்கிரகவாசிகளின் மகன் எனக் கருதப்படும் அந்நிய உருவம் ஒன்று பிரபஞ்சத்திலிருந்து பூமியில் ஒரு பகுதியில் தவறுதலாக வந்து விழுகின்றது. இவ்வுருவம் பூமியில் வாழும் குழந்தை ஒருவனால் அவதானிக்கப்பட்டு முதலில் பயத்தால் அங்கிருந்து ஓடிப் பின்னர் அவனின் வீட்டிற்குள்ளேயே ஒழிந்து கொள்ளவும் செய்தது. பின்னர் அச்சிறுவனுடனும் அக்குடும்பத்துச் சிறுவர்களுடனும் நண்பர்களாகும் அவ்வந்நிய நாட்டு உருவம் அவர்களுடன் கூடி வாழும்பொழுது அவ்வுருவத்தைத் தேடி அதன் பெற்றோர்கள் வந்து பூமியிலிருந்து அழைத்துச் செல்கின்றனர். இதற்கிடையில் நண்பனை விட்டுப் பிரிய மறுக்கும் அவ்வுருவம் பின்னர் அவர்களை விடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் கதைக்கருவானது சத்யஜித் ராய் 1960களில் எழுதிய (த ஏலியன்) (the alien) என்ற கதையிலிருந்து பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அதன் தழுவலே இத்திரைப்படமெனவும் சத்யஜித் ராயாலால் குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் இதனை மறுத்த ஸ்டீவன் ஸ்பில்பேர்க் அக்கதையின் கரு அமெரிக்க நகரங்களில் உலவப்பட்டிருக்கும்பொழுது தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. த டெர்மினேட்டர் த டெர்மினேட்டர்(The Terminator)1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்னோல்ட் ஸ்வார்செனேக்கர்,மைக்கேல் பியென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் படி ஆர்னோல் ஸ்வாஸ்நேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள். 2029 ல் உலகை இயந்திரங்கள் ஆழுகின்றன. இந்த எதிர்காலத்தில் இருந்து 1984, மே 12 க்கு ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. இதற்கான காரணம் 2029ல் இயந்திரத்திற்கு எதிராகப் போராடும் மனித குலத்தின் தலைவரான ஜோன் கானரின் தாயாரான சாரா கோணரை அழிப்பதன் மூலம் இவரின் பிறப்பைத் தடுப்பதற்காகவாகும். இதே நேரம் மனிதர்களும் கைல் ரீஸ் என்பவரை சாராவைக் காப்பாற்ற அனுப்புகின்றனர். இயந்திர மனிதனிடம் இருந்து சாராவைக் காப்பாற்றுவதுடன், தன் இன்னுயிரையும் மனித குலத்தின் விடிவுக்காகத் துறக்கின்றார். இக்காலப் பகுதியில் இவருக்கும், சாரா கோணருக்கும் உறவு விருத்தியடைவதன் மூலம், இவரே எதிர்காலத்தில் பிறக்கப்போகும் மனிதர்களின் தலைவரான ஜோன் கானரின் தந்தையும் ஆகின்றார். டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே (Terminator 2: Judgment Day) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், லிண்டா ஹாமில்டன் போன்ற பலர் நடித்துள்ளனர். விஞ்ஞானப்படம் / அதிரடிப்படம் டெர்மினேட்டர் என்ற புதுவகை தானியங்கி மனிதர்கள் உலகில் பிரவேசித்து நன்மைகளை வளர்ப்பதற்காக ஒன்றும் நல்லவர்களை அழிப்பதற்காக இன்னொன்றுமாய் பூமியில் தோன்றுகின்றன. அதில் நல்லவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் இயங்கும் தானியங்கி (அர்னோல்ட் ஸ்வார்சனேக்கர்) தீய தானியங்கியிடமிருந்து எவ்வாறு நல்லவர்களை காப்பாற்றுகின்றது என்பதே திரைக்கதை. ஃபாரஸ்ட் கம்ப் (திரைப்படம்) ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) 1994 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் 1984 இல் வெளிவந்த நாவல் பாரஸ்ட் கம்பின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் 13 ஆஸ்கார் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டு 6 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன. மன நோயாளியாகக் கருதப்படும் பாரஸ்ட் கம்ப் (டொம் ஹாங்) தனது சிறுவயதிலிருந்து காதலித்து வந்த ஜென்னி என்னும் பெண்ணைப் பற்றி பேருந்து நிலையத்தில் வந்து போகும் அனைவருக்கும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.சில பயனர்கள் இவரின் கதையைக் கேட்டு விட்டு செல்லவும் செய்கின்றனர்.மேலும் அவர் தனது சிறு வயது முதலே ஒரு பெண் தோழி இருந்தவரென்றும் தனக்கு இருந்து வந்த ஊனத்தை மறையச் செய்தவரும் தனது காதலி என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து கூறும் பாரஸ்ட் கம்ப் தனது காதலி அவரனின் வளர்ப்புத் தந்தையினால் கற்பழிக்கப்படுவது தெரிந்தும் அவரது காதலியின் மீதிருந்த காதல் காரணத்தால் அவரைப் பல முறை பின் தொடர்கின்றார்.இருந்தும் விலைமாதுவாக தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜென்னி பின்னர் வைரஸ் நோயால் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாது அவரின் அழைப்புற்கேற்ப அவரின் நலம் அறியப் புறப்படுகின்றார் பாரஸ்ட் கம்ப். மேலும் தங்களது குழந்தையினைப் பராமரிக்கும் பொருட்டு ஜென்னியினைத் திருமணம் செய்து கொள்கின்றார் பாரஸ்ட் கம்ப். பிற்பாடு ஜென்னி நோய் முற்றி இறப்பதும், அவரது கல்லறையில் பாரஸ்ட் ஏங்குவதும், தமது குழந்தையை நன்றாக வளர்ப்பதைப பற்றி பாரஸ்ட் தனியே உரையாடுவதுமாக திரைக்கதை நீள்கிறது. இறுதிக் காட்சியில் தன் மகனை பள்ளிப் பேருந்தில் அனுப்பி விட்டு பாரஸ்ட் சாந்தமாக அமர்ந்திருப்பதுடன் கதை இனிதே நிறைவடைகிறது. கிளாடியேட்டர் (திரைப்படம்) கிலாடியேட்டர்(Gladiator) 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ரிட்லி ஸ்கோட்டின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகழ் பல தவறாக காட்சியமைக்கப்பட்டதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறை கூறுகின்றனர்.இருப்பினும் இத்திரைப்படம் 73 ஆம் அகடமிய விருது வழங்கும் விழாவில் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார். ரோமர் அரசர் தன் மகனை விட அதிகமாக ஒரு படைத் தளபதியை நேசிக்கின்றார். அத்துடன் தனக்குப் பின்னர் அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் விரும்புகின்றார். இந்தத் தகவலை அறிந்துகொள்ளும் அவரது மகன் தந்தையைக் கொலை செய்து தான் ஆட்சிப் பீடம் ஏறுகின்றார் அத்துடன் அந்தத் தளபதியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றார். இதில் தப்பும் தளபதி பின்னர் மன்னரை எவ்வாறு எங்கு சந்திக்கின்றார் என்பதே மிகுதிக் கதை. பிலாடூன் (திரைப்படம்) பிலாடூன் (Platoon) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. போர்ப்படம் அமெரிக்க இராணுவ வீரரான கிறிஸ் டெய்லர் (சார்லி ஷீன்) கிழக்கு வியட்னாமில் கார்ட்னெர் மற்றும் 25 ஆம் படைப்பிரிவருடன் வந்திறங்குகின்றார்.அங்கு போர் புரிந்து கொண்டிருந்த தனது ஏனைய அமெரிக்கப் படையினரைச் சந்தித்துக் கொள்ளும் இவர்கள் பார்னெ என்பவன் தலைமைப் பீடத்தில் வியட்னாமிய கிராமங்களுக்குள் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.இவர்களை எதிரிகள் பலமுனைகளிலும் தாக்கி அழித்தனர்.இச்சம்பவத்திற்குப்பின்னர் ஆட்திரம் அடையும் பார்னெ மற்றும் பல அமெரிக்கப் படையினர் பொது மக்களை கொல்வத்ம் இளம் வயதுப் பெண்களை பாலியல் கொட்மைகளுக்கு உற்படுத்தவும் முயல்கின்றனர்.இவற்றைப் பார்த்து கோபம் கொள்ளும் கிறிஸ் டெய்லர் இவர்களை அவ்வாறு செய்ய விடாது தகுக்கின்றான்.இதன் பின்னர் பல எதிரிகளின் பாசறைகளைக் கைப்பற்றவும் செய்கின்றனர்.அங்கு காவலில் ஈடுபட்டிருக்கும் பொழுது இவர்களின் எதிரிப் படையான வியட்னாமின் மக்கள் படையான வடக்கு வியட்னாமியப் படையினரால் பலமுறை தாக்குதலுக்கு உற்படுத்தப்படுகின்றனர்.இதன் பின்னரும் பார்னே கோபம் கொண்டு வியட்னாமியப் பொது மக்கள் மீதான தனது தாக்குதல்களை நிறுத்தாது இருக்கும்பொழுது கிறிஸால் சுட்டு வீழ்த்தப்படுகின்றான்.இவர்களது படைப்பிரிவினர் பலரின் இழப்புகளிற்குப் பின்னர் கிறிஸும் இன்னொரு படை வீரனும் தப்பி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். த லாஸ்ட் எம்பெரர் (திரைப்படம்) த லாஸ்ட் எம்பெரர் (The Last Emperor) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பெர்னாடோ பெர்டோலுச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோன் லோன், ஜோன் சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காந்தி (திரைப்படம்) காந்தி திரைப்படம் 1982 இல் ஆங்கிலத்தில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும். காந்தியின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1982 ஆம் ஆண்டில் 8 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. இந்தத் திரைப்படம் ரிச்சர்ட் ஆட்டன்பரோவுக்கு உலகளாவிய புகழைத் தேடித்தந்தது. ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வாங்க அவர் மேடைக்குச் சென்றபோது பல மேற்கத்தியர்கள் ரசிக்கும்படியாக ரகுபதி ராகவ ராஜாராம் இசைக்கப்பட்டது. மேடையில் அவர் அப்போது கூறியதை எவரும் மறக்க முடியாது. ‘அன்பு நண்பர்களே, உண்மையில் இந்த விருதுகள் எனக்கோ, பென் கிங்ஸ்லிக்கோ அல்லது தொழில்நுட்பத்திற்காக வென்றவர்களுக்கோ அல்ல. இந்த விருதுகள் மூலமாக நீங்கள் மகாத்மா காந்திக்கும் நாம் அனைவரும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளுக்கும் மரியாதை செலுத்துகிறோம்‘. சாரியட்ஸ் ஆப் பயர் (திரைப்படம்) சாரியட்ஸ் ஆப் பயர் (Chariots Of Fire) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.கியூக் ஹட்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பென் குரோஸ்,ஜயான் சார்லர்சன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது தி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்) த இங்க்லிஷ் பேஷன்ட் (The English Patient) 1996இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது இலங்கையரான மைக்கல் ஒண்டாத்தி என்பவரால் 1992 இல் எழுதப்பட்ட புதினத்தின் திரைப்பட வெளியீடாகும். மேலும் இத்திரைப்படம் காட்சியமைப்புகள் எடுக்கப்பட்டபோது ஒண்டாத்தி திரைப்படக் காட்சிகளை தனது விருப்பத்திற்கிணைய எடுக்க உதவினார் என்பதும், இத்திரைப்படம் 9 ஆஸ்கார் விருதுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது. போர்ப்படம் / காதல்படம் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கனேடிய செஞ்சிலுவைச் சங்கப் பெண்மணியினால் பாதுகாக்கப்படுகின்றார் கவுண்ட் டி அல்மசி ("ரால்ப் பியெனேஸ்"). பின்னர் அவர் தனது வாழ்க்கை வரலாற்றை நினைத்துக் கொள்வது திரைக்கதை அவர் அவ்வாறு நினைக்கும் பொழுது அவருக்கு எவ்வாறு இக்காயங்கள் நேர்ந்ததெனவும் கூறுகின்றார். மேலும் வேறொருவரின் மனைவியாகப் போகும் ஒருவரிடம் ஏற்படும் காதல் காரணமாக அவரை தன்னுடன் அழைத்துச் செல்லும் பொழுது ஏற்படுகின்ற பல பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொண்டார் எனவும் தனது காயப்பட்ட காதலியினைக் இறுதியில் காப்பாற்ற முடியாத நிலையில் தத்தளிக்கின்றார். குகை ஒன்றினுள் அவரது காதலியினை வைத்து விட்டு உதவி தேடி பாலைவனங்களில் நடைபோட்டு அருகில் இருந்த பிரித்தானியப் படைத் தலைமைப் பீடத்திற்குச் செல்கின்றார். அங்கு உதவி கொடுக்க மறுக்கும் அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் ஜேர்மனிய நாசிப்படைகளால் உதவி வழங்கப்படுகின்றார். இதற்கிடையில் இறந்து போகும் அவரது காதலியின் உயிரை அவரால் காப்பாற்ற இயலவில்லை. இறுதியில் ஜேர்மனியர்களுக்கு பிரித்தானிய அரசுப் படைகளின் ரகசியங்களை விளக்குகின்றார். இதனை அறிந்து கொள்ளும் இவர் அவர்கள் வழங்கிய விமான ஊர்தியில் இற்ந்த காதலியின் உடலைக் கொண்டு வருகையில் பிரித்தானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்படுகின்றார். அவ்வாறு ஏற்பட்ட காயங்களே அவை என அவரிடம் கதை கேட்டவர்கள் புரிந்து கொள்கின்றனர். ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்) ஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் (One Flew Over the Cuckoo's Nest) இத்திரைப்படம் அதே பெயரில் 1962 இல் வந்த நாவலின் தழுவலாகும்.1972 இல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 5 ஆஸ்கார் விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. ராண்டல் பாற்ரிக் மக்மேர்ப்பி ஜாக் நிகோல்சன் சிறைக் கைதியாவான்.சிறையில் இருந்து தப்பி ஓட நினைக்கும் அவன் புத்திசாலித்தனமாக மனநோயாளி போல நடிக்கவே காவல்துறையினர் அவனை மனநோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு எந்த ஒரு சிரமமும் இல்லாது வாழும் அவன் அங்கு இருப்பவர்களை தனது பேச்சாலும் அறிவாலும் தன்வசம் பேசச் செய்கின்றான்.மேலும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக அவர்களை உபயோக்கவும் செய்தான் திடீரென அங்கு ஏற்படும் கலவரங்களின் காரணத்தினால் அவனது நண்பனாக இருந்தவனால் அங்கு பணி புரிபவள் அங்குள்ள நோயாளியினைத் தவறுவதலாகக் கொலை செய்யவே கோபம் கொள்கின்றான்.மேலும் அங்கிருக்கும் காவலாளியிடம் தன்னை மன நோயாளி இல்லையென விளக்கும் மக்மேர்ப்பி காவலாளிக்குப் பரிசாக மதுவைப் பரிசாகக் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றான். பிரேவ் ஹார்ட் (திரைப்படம்) பிரேவ் ஹார்ட் (Braveheart) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் ஆங்கிலத் திரைப்படமாகும். பிரபல ஹாலிவுட் நடிகரான மெல் கிப்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. வரலாற்றுப்படம் ரோபேர்ட் புரூஸ் தனது மகனுக்கு "மகனே வாலஸ் உலக வரலாறுகள் எழுதப்பட்டது ஆங்கிலேயர்களால் அவர்கள் என்னைப் பொய் கூறுபவனாக எழுத முடியும். ஆனால் அவர்கள் எழுதும் வரலாறு எனப்படுவது உரிமைக்காகப் போர் புரிபவர்களின் உயிரைப் பறித்த பின்னர் எழுதப்படுவது ஆகும்" என்ற வசனத்தின் மூலம் தாங்கள் அன்னியர்களுக்கு எதிராகச் செய்யும் உரிமைப் போரினை விளக்குகின்றார். இதனைக் கேட்ட சிறுவயதான வாலாஸ் மனதில் வாங்கிக் கொள்கின்றான். ஸ்காட்லாந்து நாட்டவரானவர்களின் உரிமைகளைப் பறித்து பின்னர் அவர்களின் சொந்த மண்ணைப் பிடிப்பதற்காக படை திரட்டி வருகின்றான் ஆங்கிலேய சக்கரவர்த்தியான எட்வார்ட் முதலாம் மன்னன். இதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக வெடிக்கின்றது மக்கள் புரட்சிப் படைகள். ஆங்கிலேயருக்கு எதிராகப் படைகள் பல திரட்டப்பட்டன. இப்போரே ஸ்கோட்லாந்து சுதந்திரப் போரின் ஆரம்ப காலகட்டமாகும். 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டின் இடையே நடைபெற்ற இப்போரானது ஆங்கிலேய அரசுக்கும் ஸ்காட்லாந்து மக்களாலும் போராட்ட வீரர்களாலும் புரியப்பட்டது. இப்போர் நிறைந்த சூழலில் வளர்ந்து வரும் வில்லியம் வேலசு அங்கு ஒரு பெண்ணைக் காதல் செய்து மணம் செய்து கொள்கின்றான். திருமணம் ஆகிய மறுநாளே காதலி ஆங்கிலேயப் பாகனால் கொள்ளப்படவே கோபம் கொள்ளும் வாலாஸ் அப்படை வீரர்களை அவ்விடத்திலேயே கொலை செய்கின்றான். பின்னர் பெரும் படை திரட்டி ஆங்கிலேய அரசாங்கத்தையே எதிர்த்துப் போரிட்டான். பின்னர் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டு மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். 1995 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப்புகள்: வென்ற விருதுகள்: பரிந்துரைக்கப்பட்டவை: உலகின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் 271 இடத்தில் உள்ளது பிரேவ் ஹார்ட் திரைப்படம். வெளியிடப்பட்ட ஒரு வார இறுதியில் பெற்ற வசூல்: அமெரிக்கா: $9,938,276 மில்லியன் அமெரிக்க டாலர்கள் த சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்) த சவுண்ட் ஆப் மியூசிக் (The Sound of Music) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத்திரைப்படமாகும்.ரோபேர்ட் வைஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜூலி ஆண்ட்ரூவ்ஸ்,கிறிஸ்தோபர் பிளமர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது. இசைப்படம் பென்-ஹர் (1959 திரைப்படம்) பென்-ஹர் (Ben-Hur) திரைப்படம் லியூவ் வாலெஸின் நாவலான பென்-ஹர்:எ டேல் ஆப் கிறைஸ்ட் (1880) இன் திரைப்பட வெளியீடாகும். பதினொரு ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் ஆகிய திரைப்படங்களுடன் இத்திரைப்படமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காப்பியப்படம் யூதா பென் ஹர் யூதனான இவன் ஜெருசலேமின் ஒரு பெரும் பணக்காரனாக விளங்கினான். இவனது சிறுவயது நண்பனான மெசாலா ரோமானியப் போர்த் தளபதியாக பென்ஹரிடம் வந்தான். சந்தித்துக்கொள்ளும் இரு நண்பர்களும் தங்களின் வெவ்வேறு கொள்கைகளினால் பிரிகின்றனர். யூதா தன்னுடைய யூத சமயத்தில் பற்றுள்ளவனாகவும் அதேசமயம் அவனது நண்பனோ உலகத்தினை அடைய வேண்டும் என்ற அவாவுடன் காணப்படுகின்றான். ஒரு சமயம் யூதாவினால் தவறுதலாக தள்ளிவிடப்பட்ட வீட்டின் ஓடு ரோமானிய தலைமைப் பொறுப்பில் இருந்தவனைத் தாக்கிப் பின்னர் அவனது இறப்பிற்கே காரணமாக அமைந்தது. இதனைத் தெரிந்து கொள்ளும் மெசாலா தவறுதலாகத் தான் யூதா அவ்வோட்டினைத் தள்ளியிருப்பான் என்று தெரிந்தும் யூதவைச் சிறையில் அடைக்கின்றான். பின்னர் மெசாலாவை பழி வாங்குவதாகச் சபதம் செய்யும் யூதா பல சிக்கல்களிற்குப்பிறகு கைதியாக்கப்பட்டு அரேபிய நாட்டிற்கு தப்பிச் செல்கின்றான். மேலும் அங்கிருந்த ஒரு அரேபிய மன்னனின் உதவியுடன் குதிரைச் சவாரியில் மெசாலாவை வெற்றி கொண்டு பழி தீர்க்கின்றான். த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்) த பிரிட்ச் ஆன் த ரிவர் குவாய் ("The Bridge on the River Kwai", "குவையாற்றின் மீதொரு பாலம்") என்பது 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும். டேவிட் லீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக் கின்னஸ், செஷியு ஹயகவா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரில் சப்பானால் தாய்லாந்தில் கட்டப்பட்ட சயாம் மரண இரயில்பாதை என்ற ஒரு தொடருந்துப் பாலத்திற்காக வேலை செய்த தமிழர்களை பற்றிக் கூறும் ஒரு ஆங்கில ஆவணப்படம் ஆகும் . இப்படம் பிரெஞ்சு புதின ஆசிரியர் பியர் போல்லே எழுதிய "த பிரிட்ஜ் ஓவர் த ரிவர் க்வாய்" என்னும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த படம், இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணியிசை, தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் விருதை வென்றதுடன் நிக்கல்சன் கதாபாத்திரத்தை ஏற்ற அலெக் கின்னஸுக்கும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் படையினரிடம் கைதிகளாகச் சிக்குகிறார்கள் ஆங்கிலேய ராணுவ வீரர்கள். இவர்களைக் கொண்டு ஒரு தொடர் வண்டித் தடம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது. மரண ரயில் தடம் என்று வரலாற்றில் குறிக்கப்படும் அந்த பர்மா தொடர் வண்டிப் பாதை உருவாக்கும் பணியின்போது அதிகப்படியான எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பொறியியலாளரான பிரெஞ்சு நாவலாசிரியரும் போர்க்கைதியாக ஜப்பான் ராணுவத்தினரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்துடன் புனைவைக் கலந்து படைத்த புதினம் இது. இத்திரைப்படத்தில் பர்மா தொடர் வண்டித் தடத்தில் க்வாய் நதிக்கு மேலே ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டி வருகிறது. இதை போர்க்கைதிகளைக் கொண்டு நிறைவேற்றும் பொறுப்பு ஜப்பானிய ராணுவப் படைத் தலைவர் சைட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர் புதிதாக வந்திருக்கும் போர்க்கைதிகளிடம் "அதிகாரிகள், வீரர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவரும் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டும்" என்று மிகக் கண்டிப்புடன் கூறுகிறார். இவரின் இந்தக் கூற்றை ஆங்கிலேயப் படைத் தலைவரான நிக்கல்சன், அதிகாரிகள் தொழிலாளர்களாகப் பணியாற்ற வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி கடுமையாக ஆட்சேபிக்கிறார். ஆனால், சைட்டோ இதை எதையும் ஏற்காமல் நிக்கல்சனை அவமானப்படுத்தி, கடும் தண்டனை விதிக்கிறார். ஆனாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கும் நிக்கல்சன் இதை சமாளிக்கிறார். பணியை முடிக்க வேண்டிய நெருக்கடி அதிகரிக்கும்போது, வேறு வழி இல்லாமல் சைட்டோ அதிகாரிகளை உடலுழைப்புப் பணியிலிருந்து விடுவிக்கிறார். இதன்பிறகு பாலத்தின் பணியை முடிக்கும் பொறுப்பை நிக்கல்சன் ஏற்றுக்கொள்கிறார். பாலம் சரியாக இல்லாததற்கு தொழில்நுட்ப கோலாறே காரணம் என்பதை உணர்ந்து புதிதாகப் பாலம் அமைக்க முடிவெடுத்து வேலையைத் தொடங்குகிறார். குறிப்பிட்ட கெடுவுக்குள் பாலத்தை அமைத்து முடித்துவிட கிட்டத்தட்ட சைட்டோவைப் போன்றே எல்லா உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளையும் நோயாளிகளையும்கூட உடலுழைப்பில் ஈடுபடுத்துகிறார். கடும் முயற்சியில் பாலத்தை கட்டி முடிக்கிறார். இன்னொரு புறம், இந்த பாலத்தை அழிக்க ஆங்கிலேய ராணுவம் திட்டம் தீட்டுகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஒரு படைத் தலைவர் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைகொள்ளாமல் துடிக்கிறார். இரு தரப்பிலும் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கதாபாத்திரங்கள் வழியே வேலை என்னும் பெயரில் மனிதர்கள் மோசமான விதிமுறைகளை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் இயக்குநர். குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (Crouching Tiger, Hidden Dragon) இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த சீனத் திரைப்படமாகும். தற்காப்புக்கலைப்படம் / நாடகப்படம் குயிங் அரச வம்சங்களில் நடைபெற்றிருப்பது போல நகரும் கற்பனைத்திரைக்கதையே இத்திரைப்படமாகும்.லி மு பாய் மற்றும் யு ஷு லியென் இருவரும் தற்காப்புக்கலைகளில் தேற்சிபெற்றவர்கள்.இருவரிடத்தும் காதல் மலர்கின்றது ஆனாலும் இருவரும் தங்கள் தற்காப்புப் பள்ளிகளின் குறிக்கோளுக்கிணைய தங்கள் காதலை பரிமாராமல் இருந்தனர்.அதெ சமயம் பிரபல வாள் ஒன்றைக் களவு செய்யும் ஜென் அதனைத் தன் வசம் கொண்டு சேர்க்கின்றாள். வாளைத் திருடிய திருட்டுக் கும்பல்களைத் தேடுகின்றனர் லி மு பாய் மற்றும் யு ஷீ லியென்.ஜென்னைப் பல முறைகளில் சந்தித்துக் கொள்ளும் லி மு பாய் அவளைக் கொல்ல பல அரிய வாய்ப்புகள் வரும் பொழுதும் கொல்ல மறுக்கின்றார்.பின்னர் நடைபெறும் பல சம்பவங்களில் பாய் காயப்படவே அவரை கண்கானித்துக் கொள்கின்றார் யு ஷு லியென்.இதற்கிடையில் வாளைத் திருடியவளான யென் ஒரு கொள்ளைக்காரனைக் காதல் கொள்கின்றாள்.அவனையே மணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றாள்.ஆனால் பல காரணங்களினால் அவனை அடையாது இருக்கும் யென் அவனை அடந்தாளா என்பதே திரைக்கதை. லகான் லகான் (Lagaan)(வரி) 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் பிரபல ஹிந்தி நட்சத்திரமான அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தது. 2002 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும். நாடகப்படம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய காலம்.வரிப்பணம் மிகவும் அதிக தொகையாக இருந்ததன் காரணமாக பெரும்பாலான ஏழைகளால் வரி செலுத்தப் போதிய பணம் இருக்கவில்லை.இதனை பிரித்தானியத் தளபதியான ஆண்ரூவிடம் பூரன்சிங் என்னும் மன்னன் எடுத்துக் கூறினார்.இதனைக் கேட்ட அவன் அப்படியானால் நீங்கள் அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் எனக் கூறினான் மாமிசம் உண்பதென்பது அக்காலத்தில் இந்து மதத்தினரால் பாவமாகக் கருதப்பட்டது.இத்தகைய வேண்டுகோளை மறுத்த மன்னர் அவ்வாறு செய்ய இயலாது எனக் கூறவே கோபம் கொண்ட பிரித்தானியத் தளபதி வரிப்பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான்.இதனைக் கேட்டுக் கோபம் கொண்ட பொதுமக்களை இவ்வாறு வரிப் பணத்தின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் எங்களுடன் மட்டைப்பந்து ஆடு மாறு கேட்டுக் கொண்டனர் பிரித்தானியர்கள்.புவன் என்னும் கிராமவாசி தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்கின்றான்.இதற்கிடையில் இவனைக் காணும் பிரித்தானியத் தளபதியின் தங்கையான எலிசபெத் புவன் மீது காதல் கொள்கிறாள்.ஆனால் புவனோ தனது கிராமவாசியான கௌரியின் மீது காதல் கொண்டிருப்பதனை எலிசபெத் தெரிந்து கொள்கிறாள் பின்னர் அவனை விட்டு விலகிச் செல்கின்றாள். பொமரில்லு பொமரில்லு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ராமதாஸு (திரைப்படம்) ஸ்ரீ ராமதாஸு (தெலுங்கு: శ్రీ రామాదాసు) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்) நுவோஸ்தனந்தே நெனோதந்தான(தெலுங்கு: నువ్వొస్తానంటే నేవొద్దంటానా) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகு.பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழில் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இலண்டன் வாழ் நபரான சந்தோஷ் (சித்தார்த்) தனது சொந்தக் கிராமத்தில் நடைபெறும் சொந்தக்காரர் திருமணத்திற்காக இந்தியா செல்கின்றார்.அங்கு ஸ்ரீ (த்ரிஷா)வைச் சந்திக்கின்றார்.ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொள்ளும் இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்ப்பிக்கின்றனர்.இவர்கள் காதலிப்பதைத் தெரிந்து கொள்ளும் ஸ்ரீயின் சகோதரனனான கிருஷ்ணனும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கின்றான்.ஆனால் அவன் கூறியது போல் விவசாய நிலத்தினை அதிகமாக யார் அறுவடை செய்கின்றாகள் என்ற போட்டியினையும் ஆரம்ப்பிக்கின்றான்.இவற்றை ஏற்றுக்கொள்ளும் சந்தோஷும் அப்போட்டியை வெல்கின்றான் அதே சமயம் ஸ்ரீ மீது காதல் கொள்ளும் கிருஷ்ணனின் நண்பனின் மகனும் அவளைத் தனக்கே திருமண்ம் செய்து தரும்படியும் கேட்கின்றான்.இதனைக் கிருஷ்ணன் மறுத்துக் கூறவே ஸ்ரீயைக் கடத்திச் செல்கின்றான் அவன்.இதனைத் தெரிந்து கொள்ளும் கிருஷ்ணாவும் சந்தோச்ஷும் அவளைக் காப்பாற்றுவதற்காகச் செல்கின்றனர்.அங்கு சந்தோஷ் எதிரியைக் கொல்லவே அப்பழியினை கிருஷ்ணன் ஏற்றுக்கொள்கின்றான்.பின்னர் ஸ்ரீ யும் சந்தோஷும் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒக்கடு ஒக்கடு (தெலுங்கு:ఒక్క డు) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் 175 நாட்கள் திரையில் காண்பிக்கப்பட்டு பல வரவேற்புகளைப்பெற்ற திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தின் கதைக்கருவில் வெளிவந்த திரைப்படமே நடிகர் விஜயின் திரைப்படமான கில்லி ஆகும். ஒக்கடு திரைப்படம் 175 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை செய்தது மேலும் உலகின் பல்வேறு பாகங்களிலும் திரையிடப்பட்டு இந்தியா ரூபா.34 கோடிகள் வரை வசூல் செய்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாஸ் (திரைப்படம்) மாஸ் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜூன்,யோதிகா,சர்மி,ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மசாலாப்படம் மாஸ் (நாகர்ஜூன்) ஒரு அனாதையாவான்.அதி என்பவனுடன் நெருங்கிய நண்பனாக இருக்கின்றான் மாஸ்.விசாக் நகரில் காடையர்களுக்குத் தலைவனாக இருக்கும் சத்யாவின் (ரகுவரன்) மகளின் மீது காதல் கொள்கின்றான் அதி.இதனை அறியும் சத்யா அவர்களின் காதலைச் சேர்த்து வைக்காது பிரித்து பின்னர் அதியைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றான்.பின்னர் கொலையும் செய்கின்றான்.இதனையறிந்து கொள்ளும் மாஸ் காடையர்களின் தலைவனைப் பழிவாங்குகின்றான்.சத்யாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி அவனது ஊரான விAசாக்கில் விடுதி ஒன்றி தங்கி பின்னர் கொலை செய்கின்றான். தேவதாசு (2006 திரைப்படம்) தேவ்தாசு 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். மசாலாப்படம் தேவ்தாசு (ராம்]] ஏழ்மையான வசதி கொண்டவர். பானுமதி நியூயார்க்கிலிருந்து இந்தியாவிற்கு நடனம் கற்றுக்கொள்ள வருகின்றார். தேவ்தாசை சந்திக்கும் இவர் அவர் மீது காதல் கொள்கின்றார். இதனை இவர் தனது தந்தையான கட்டம்ராஜுவிற்குத் தெரிவிக்கின்றார் வஞ்சகம் நிறைந்த இவரது தந்தை ஆரம்பத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதெனக் கூறுகின்றார் பின்னர் பிரித்துக் கொண்டு வெளி நாட்டிற்கு தனது மகளைக் கூட்டிச்செல்கின்றார். காதலியைத் தேடிச் செல்லும் தேவ்தாஸ் அவரது காதலில் வெற்றி கொள்கின்றாரா இல்லையா என்பதே திரைக்கதை. ஜானி (2003 திரைப்படம்) ஜானி, 2003 இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கிய பவன் கல்யாணே இத்திரைப்படத்தின் கதாநாயகனுமாவார். மேலும் இவரது மனைவி ரேனு தேசாய் இவருக்கு இணையாக இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜானி தனது சிறு வயதிலேயே தாயாரை இழந்தவனாவான். தனது தாயாரின் இழப்பிற்குப் பின்னரும் குடிகாரனாகவும், புகைப் பிடிப்பவருமாக இருக்கும் தனது தந்தையை விட்டு ஓடிச்செல்கி்றான். சிறிது காலம் கழித்து தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஜானி தற்செயலாக கீதாவைச் சந்திக்கின்றான். கீதாவை காதலித்து மணம் செய்து கொள்ளும் ஜானி கீதாவிற்கு புற்று நோய் இருப்பதனை அறிந்து கொள்கிறான். கீதாவின் வைத்தியச் செலவுகளுக்கு பணம் தேவைப்பட்ட காரணத்தின்படி, ஜானி குத்துச்சண்டை போட்டு அதில் வரும் பணத்தினைக் கொண்டு கீதவைக் காப்பாற்றுகின்றான். மல்லி (திரைப்படம்) மல்லி திரைப்படம் 1998 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரொறன்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும்,நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏழைப் பெண்ணான மல்லி P. சுவேதா தனது பெற்றோர்களுக்காக விறகுகளைச் சேகரித்து வருவாள்.மேலும் தனது வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத அவளின் நண்பியுடன் விளையாடி வருவாள்.அவள் வெகு நாட்களாக தனக்கு புதியதொரு ஆடை ஒன்றை உடுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தாள்.ஒரு முறை அவள் ஒரு கதை கூறுபவனைச் சந்திக்கும் பொழுது அவனும் ஒரு நீல நிற மாயக்கல் ஒன்று உள்ளது அதனை நீ பெற்றால் உன் தோழியின் ஊனங்கள் மாறிவிடும் என்று கூறுகின்றான்.அவளும் அந்நீல நிற மாயக் கல்லை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றாள் இதுவே கதையின் கருவாகும். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித்,ஐஸ்வர்யா ராய்,தபு,அப்பாஸ் போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா (மம்முட்டி) அங்கு நடக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையினருக்கும் ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காகப் போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாட்சியை விரும்புகின்றார். ஆனால் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் (அஜித்) சௌம்யாவிற்கும் (தபு) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது. நந்தா (திரைப்படம்) நந்தா (2001) ஆம் ஆண்டு வந்த தமிழ்த் திரைப்படம்.இத்திரைப்படத்தில் சூர்யா,லைலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் இயக்குனர் பாலா ஆவார். நாடகப்படம் சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடு செல்கின்றான். ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே,தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான். அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா. சமூகவியல் சமூகவியல் ("Sociology") என்பது மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆயும் ஓர் இயல் ஆகும். இது சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும், பகுப்பாய்வு முறைகளையும் பயன்படுத்தும் ஒரு சமூக அறிவியல் ஆகும். மனிதர்கள் சமூக விலங்குகள். அதாவது மனிதர்களின் அனேக செயல்பாடுகள் பிற மனிதருடன் சேர்ந்தே அமைகின்றன. ஆகையால் சமூகவியலின் முக்கிய ஆய்வுப் பொருளாக சமூகம் அல்லது மக்கள் குழு அமைகின்றது. சமூகம் தனிமனிதனை எப்படி பாதிக்கின்றது, தனிமனிதன் சமூகத்தை எப்படி பாதிக்கின்றான் என்பதும் சமூகவியலின் ஆய்வுக் களமே. சமூகவியலின் தந்தை ஆகஸ்ட் கோம்ட் ("Auguste Comte") என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார். சமூகவியலின் தோற்றம் மேற்கத்திய தத்துவத்திலிருந்து தொடங்குகிறது. கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவின் காலம் முதல் சமூகவியல் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கன்பூசியஸ் வகுத்த வாழ்க்கை முறை பற்றிய கொள்கைகள் சமூகவியல் வளரத் தொடங்கியதை காட்டுகிறது. மேலும் இடைக்கால இஸ்லாத்திலும் சமூகவியல் தோன்றியதற்கான ஆதாரங்களைக் காணலாம். ஐபன் கால்டுன் எனும் மெய்யியலாளர் தான் உலகின் முதல் சமூகவியலாளர் என்று சிலர் கருதுகின்றனர். அவர் எழுதிய மியூகாதிமா (Muqaddimah) எனும் நூலில் சமூக இணைப்பு மற்றும் சமூக முரண்பாடு பற்றி குறிப்பிடுகிறார். எனினும் முறையாக சமூகவியலை முதன் முதலாக விளக்கியவர் ஆகஸ்ட் கோம்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார். உலகமயமாதல் தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது. உலகமயமாதல் ஆங்கிலத்தில் பரவிய "globalization" என்ற கருத்துருவாக்கத்தின் தமிழ்ப்பதம் ஆகும். தமிழில் உலகமயமாக்கம் என்ற சொல்லும் சில வேளைகளில் "globalization" க்கு ஈடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் அச்சொற்களின் பொருள் வேறுபாடு கவனிக்கத்தக்கது. உலகமயமாதல் தனாக விரியும் ஒரு செயல்பாடு, அல்லது அதை நோக்கிய ஒரு கருத்துப்பாடு. உலகமயமாக்கம் என்பது யாரோ அதன் பின்னால் இருந்து ஆக்குவதா பொருள் தொனிக்கின்றது. உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ஆம் ஆண்டிலேயேயாகும். தியோடோர் லெவிட் (Theodore Levitt) என்பவர் எழுதிய "சந்தைகளின் உலகமயமாதல்" (Globalization of Markets) என்னும் நூலில் உலகமயமாதல் என்பது பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும், இது ஒரு பரந்த, அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக (phenomenon) உணரப்பட்டது. உலகமயமாதல் என்பது பல கோணங்களில் இருந்து நோக்கப்படுகின்றது: உலகமயமாதல் பலமான மொழி, பண்பாட்டு, அடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை இன - மொழி - பண்பாட்டு அழிவுக்கு அல்லது சிதைவுக்கு இட்டு செல்வதாக சிலர் வாதிக்கின்றனர். இக்கூற்றில் உண்மையுண்டு, எனினும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது உலகமயமாதல் இருக்கும் ஒன்றின் அழிவில் ஏற்படமால், இருக்கும் ஒன்றோடு அல்லது மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் பார்க்கலாம். உலகமயமாதல் பல முரண்பாடான விளைவுகளை உந்தக்கூடியது. ஒரு புறத்தில் மரபுவழி சாதிய-சமூக கட்டமைப்புக்களால் பிணைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட சமூகங்களை, குடுமங்களை, தனிமனிதர்களை விடுவிக்ககூடிய தொழில், தொடர்பு, போக்குவரத்து, கல்வி வாய்ப்புக்களை உலமயமாதல் முன்வைக்கின்றது. அதேவேளை பொருள் முதலாளித்துவ சுரண்டலுக்கும், அடிமைத்தனத்துக்கும், சமூக-குடும்ப சிதைவுக்குமான காரணிகளையும் உலகமயமாதல் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் தாமஸ் ப்ரீட்மன் உலகமயமாதல் பற்றி The World is Flat என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். 1955 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்திப் பொருட்களினது பன்னாட்டு வணிகம் 100 மடங்குகளுக்கு மேலாக (95 பில்லியன் ஐ.அ.டாலர்களில் இருந்து 12 டிரிலியன் ஐ.அ.டாலர்கள் வரை) அதிகரித்து உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், விரிவடைந்த வணிகம், முதலீடு என்பவை காரணமாக ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் இடம்பெற்றது. வணிகப் போட்டிகளுக்குத் தாக்குப் பிடித்து, உலக வணிகச் சந்தையில் நின்று நிலைப்பதற்கு நிறுவனங்கள், தமது உற்பத்திகளை மேம்படுத்த வேண்டி இருப்பதுடன், தொழில்நுட்பங்களையும் திறமையுடன் பயன்படுத்த வேண்டி உள்ளது. அளவு மீறிய விரைவான வளர்ச்சியினால் சில வெளிப்படையான பிரச்சினைகள் இருந்தாலும், பல நாடுகளை வறுமையில் இருந்து மீட்பதற்கு உலகமயமாதல் ஒரு நேர்நிலை ஆற்றலாக விளங்குவதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் உலகமயமாதல் தொடர்பான ஆலோசகரான ஜகதீசு பகவதி என்பார் குறிப்பிடுகிறார். அவருடைய கூற்றுப்படி, உலகமயமாதல், விரைவான பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய பொருளியல் சுழற்சியை உருவாக்குகிறது. உலகமயமாதலின் நன்மைகளும், தீய விளைவுகளும் நாடுகளிடையேயும் பிரதேசங்களிடையேயும் சமமாகப் பகிரப்படுவதில்லை. செல்வந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்கள் வறிய நாடுகளில் உள்ள திறன் பெற்ற தொழிலாளர்களைக் கவருவதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்படுகின்றது. எடுத்துக் காட்டாக, பல்வேறு வறிய நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற தாதிகள் வேலைக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு வருகின்றனர். இதனால், புதிய வெளிநாட்டுத் திறனாளர்களைப் பெறுவதற்கு ஆப்பிரிக்காவுக்கு மட்டும் ஆண்டு தோறும் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு ஏற்படுகிறது. இது போலவே மூளைசாலிகள் வெளியேற்றத்தின் மூலம் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம் என்பது பல்வேறு வணிகச் செயற்பாடுகளுக்காக சேவைகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். இது மலிவான சேவைகளை வழங்குவதற்கு உதவினாலும், சில இடங்களின் சேவைத்துறை வேலை வாய்ப்புக்களை வேறிடத்துக்கு மாற்றிவிடுகிறது. எனினும் மலிவான தொழிலாளர் கிடைக்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகள் இதனால் பெரிதும் பயன் அடைகின்றன. எதிர்வரும் சில பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான முதன்மை உந்து சக்தியாகத் திகழப்போவது புறத்திறனீட்டத் துறையே. இது பரவலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்புப் பெருக்கம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்குப் பங்களிப்புச் செய்கிறது". தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள், ஈருருளிகள், புடவை வகைகள் போன்றவற்றை ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, சப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் "ஆசியான் புலிகள்" எனப்பட்ட நாடுகளின் பொருளாதாரம் விரிவடைந்தது. அக்டோபர் 2011 ஆம் ஆண்டில் சீனாவின் ஏற்றுமதியின் பெறுமானம் 157.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதே ஆண்டில், சீனாவின், பொருட்களினதும் சேவைகளினதும் ஏற்றுமதி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 39.7% ஆக இருந்தது. சீனாவுடனான வணிகத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்கான வணிகப் பற்றாக்குறையினால், 2001 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 2.4 மில்லியன் பணி இழப்பு ஏற்பட்டதாக பொருளாதாரக் கொள்கைகள் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று காட்டுகிறது. 2000க்கும் 2007க்கும் இடையில் அமெரிக்கா மொத்தம் 3.2 மில்லியன் உற்பத்தித்துறைப் பணி வாய்ப்புக்களை இழந்துள்ளது. சீனாவின் பொருளாதார வெற்றிகளினால், மேற்கு நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சீன உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதால், தென்னாப்பிரிக்காவில் ஏறத்தாழ 300,000நெசவாலைத் தொழிலாளர் வேலை இழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டில், உலக போதைப்பொருள் வணிகம், ஆண்டொன்றுக்கு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதாக போதைப்பொருள்களுக்கும், குற்றச் செயல்களுக்குமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்தோடு உலக அளவில் 50 மில்லியன்களுக்கு மேற்பட்டோர் ஒழுங்காக எரோயின், கொக்கெயின், செயற்கைப் போதைப்பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான கடத்தல் தொழிலுடன் தொடர்புடைய வணிகங்களில் போதைப்பொருள் வணிகத்துக்கு அடுத்தபடியாக உள்ளது அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் தொடர்பான வணிகம் ஆகும். சில நாடுகளின் மரபுவழி மருத்துவத்தில் பல்வேறு தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் பல்வேறு பகுதிகள் பயன்படுகின்றன. இவற்றுள், அழியும் நிலையில் உள்ள விலங்குகளான கடற் குதிரைகள், காண்டாமிருகங்கள், புலிகள் போன்றவற்றின் உடற் பாகங்களும் அடங்கும். இதனால், சட்டத்துக்குப் புறம்பாக இவ்விலங்குகளை வேட்டையாடுவது, அவற்றின் பகுதிகளைக் கள்ளச் சந்தையில் விற்பது என்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. உலகமயமாதல், நாடுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கின்றது. பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்கள் மூலம், பல நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்களான ஐரோப்பிய ஒன்றியம், உலக வணிக அமைப்பு, ஜி8, உலகக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற அமைப்புக்கள் நாடுகளின் செயற்பாடுகள் சிலவற்றைப் பதிலீடு செய்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் வலிமை ஒப்பீட்டளவில் குறைந்ததற்கான காரணம் உலகமயமாதலும் அதன் வழியான வணிகப் பற்றாக்குறையுமே என்பது சில ஆய்வாளர்களுடைய கருத்து. இது ஆசியாவை நோக்கிய உலக அதிகாரப் பெயர்ச்சிக்கு வழி வகுத்துள்ளதாகவும் கருத்து உண்டு. குறிப்பாகச் சீனா பெரிய சந்தை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்தும் நிலையில் சீனா உள்ளது. மாண்டரின் மொழியே உலகின் மிகப் பெரிய மொழி. 845 மில்லியன் மக்கள் இதைப் பேசுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் 329 மில்லியன் மக்களுடன் எசுப்பானிய மொழி உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் உள்ளது. ஆனாலும் உலகமயமாதலின் மொழியாக இருப்பது ஆங்கிலமே. இதனால், உலக அளவில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. பண்பாட்டு உலகமயமாதல், பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரித்து இருக்கும் அதே வேளை, சமுதாயங்களின் தனித்துவங்களைக் குறைக்கிறது. உலகமயமாதல், தனிமனிதர்களை அவர்களது மரபுகளில் இருந்து தனிமைப்படுத்துகிறது என்றாலும், மேற்படி விடயத்தில் நவீனத்துவத்தின் தாக்கத்தோடு ஒப்பிடும்போது உலகமயமாதலின் தாக்கம் மிதமானதே என்றும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். உலகமயமாதல் மூலம், பொழுதுபோக்கு வாய்ப்புக்களும் விரிவடைந்துள்ளன. குறிப்பாக இணையம், செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றின் ஊடாக இது நடைபெறுகிறது. எந்த ஒரு நேரத்திலும் 500,000 பேர் வானூர்தியில் பறந்துகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுச் சுற்றுலாத்துறை 919 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது 2009 ஆம் ஆண்டைவிட 6.5% கூடுதலானது. 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உட்பட 200 மில்லியன் புலம் பெயர்ந்தோர் இருப்பதாக, புலப்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. இவர்கள் வளர்ந்துவரும் நாடுகளுக்கு அனுப்பும் பணம் அக்காலப் பகுதியில் 328 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆவர்த்தனம் கருநாடக இசையில், ஆவர்த்தமானது ஆவர்த்தனம் என்றும் சொல்லப்படும். இது தாள வட்டத்தைக் குறிக்கும். ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட லகு, திருதம் போன்ற அங்கங்களை ஒழுங்கு முறைப்படி ஒரு முறை போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும். எடுத்துக்காட்டு: ஆதி தாளத்திற்கு ஏற்பட்ட அங்கங்களான ஒரு சதுஸ்ர லகு, இரண்டு துருதங்களை (மொத்த அட்சரம் 08) ஒழுங்கு முறைப்படி போட்டால் அது ஒரு ஆவர்த்தனம் ஆகும். ஆவர்த்தன முடிவுக் குறி // ஆகும். மாறாச் சுரங்கள் மாறாச் சுவரங்கள் (பிரக்ருதி சுவரங்கள்) எனப்படுபவை "மாறுதல் அடையாச்" சுரங்களாகிய ஷட்ஜம், பஞ்சமம் என்னும் இரண்டும் ஆகும். இந்த இரண்டு சுவரங்களை அசைத்துப் பாடுதல் கூடாது. இதனால் இவை மாறாச் சுவரங்கள், அசையாச் சுவரங்கள் அசல சுவரங்கள் எனப்பலவாறு அழைக்கபடுகின்றன. இவை இயற்கையான சுவரங்கள் என்றும், மாற்றமடையாச் சுவரங்கள் அல்லது அவிக்ருதி சுவரங்கள் என்றும் அழைக்கப்படும். இவைகளுக்கு மாறாக ரி,க,ம,த,நி ஆகிய ஐந்து சுரங்களில் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று மாறுபட்ட வடிவங்கள் கொள்ளுகின்றன. மாறும் சுரங்கள் மாறும் சுவரங்கள் ("விக்ருதி ஸ்வரங்கள்" - விக்ருதி என்றால் மாறுவது என்று பொருள்) எனப்படுபவை இந்திய இசை மரபில் மாறுதல் அடையக்கூடிய (பேதமடையும்) சுவரங்கள் ஆகும்.இந்த சுவரங்களை அசைத்துப்பாடலாம். இந்திய இசையில் உள்ள ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு சுரங்களில் ஸ-வும் (சட்ஜம் அல்லது குரல்) என்னும் அடிப்படையான முதல் சுரமும், ப-வும் (பஞ்சமம் அல்லது இளி) என்னும் ஐந்தாவது சுரமும் மாறாச் சுவரங்கள். மீதம் உள்ள ரி, க, ம, த, நி ஆகிய ஐந்து சுரங்களும் மாறக்கூடிய சுவரங்கள். ரி என்பது ரி, ri என்று வெவ்வேறு ஒலிவடிவங்கள் கொள்ளக்கூடியன. எனவே இவைகளை மாறக்கூடிய (விக்ருதி) சுவரங்கள் எனப்படும். இவ்வாறு மாறக்கூடியதாக இச்சுவரங்கள் இருப்பதால், ஒலி அலைகளில் சிறிதளவு அசைவு தந்து, அழகூட்டுமாறு இசைத்து பல்வேறு இராக உருவங்கள் உண்டாக்க வழி வகுக்கின்றன. இந்த ஐந்து "மாறும் சுவரங்கள்" ஒவ்வொன்றும் இரு அடிபடையான மாறுதல்களான "கோமள, தீவிர" மாறுதல்கள் பெறும் (கோமள, தீவிர என்பது வட இந்திய சொல் வழக்கு). இதனால் இவை "கம்பித ஸ்வரங்கள்" எனப்படும். செயற்கை ஸ்வரங்கள் என்றும் அழைக்கப்படும். மாறா சுரங்களாகிய ஸ , ப இயற்கைச் சுவரங்கள். திரியாங்கம் (கருநாடக இசை) திரியாங்கம் எனப்படுபவை தாளத்தின் மூன்று அங்கங்கள் (உறுப்புக்கள்) ஆகும். அவையாவன: தாள நடைகள் ஒரு தாளத்தில் வரும் ஒவ்வொரு அட்சரமும் தன்னகத்தே கொண்டுள்ள அட்சர கால அளவைக் கொண்டு தாள நடைகள் அமைகின்றன. இவை 5 வகைப் படும். அவற்றின் விவரம் பின்வருமாறு: செப்டம்பர் 21 சனவரி 23 வீட்டுக் கருவிகள் வீட்டு வேலைகளை இலகுவாக்குவதற்கும் பிற வாழ்வியல் தேவைகளுக்கும் பல்வேறு வீட்டுச் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பல மின்சக்தியில் இயங்குகின்றன. ம. ச. சுப்புலட்சுமி எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - திசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். எம். எஸ். சுப்புலட்சுமி 1916 புரட்டாசி மாதம் 16 ஆம் திகதி அன்று தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார். அவரது தந்தையார் சுப்பிரமணியம் என்று பின்னாட்களில் பேட்டிகளில் சுப்புலட்சுமி தெரிவித்து இருக்கிறார். இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர். சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் ""மரகத வடிவம்"" என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்துக் கொண்டார். ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு ""பாடு"" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார். இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் "பண்டித நாராயணராவ் வியாசி"யிடமிருந்து கற்றார். "அப்துல் கரீம்கான்" மற்றும் "பாதே குலாம்கானின்" இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு. 1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல். பி இசைத்தட்டில் ""மரகத வடிவும் செங்கதிர் வேலும்"" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன. எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரை ""சேவாசதனம்"" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் ""ஆதரவற்றவர்க்கெல்லாம்"" என்ற ஜோன்புரி இராகப்பாடலும், ""இஹபரமெனுமிரு"" என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ்ப் பெற்றார். ""மிகக் குதூகலிப்பதும் ஏனோ"", ""எங்கும் நிறை நாதப்பிரம்மம்"", ""பிரேமையில் யாவும் மறந்தேனே"" ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் "கோகிலகான இசைவாணி" என விளம்பரம் செய்யப்பட்டார். சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 1941ம் ஆண்டு "சாவித்திரி" என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி "சாவித்திரி" படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. "சாவித்திரி" படத்தில் ""மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே"", ""மங்களமும்பெறுவாய்"" போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை. பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது. ""காற்றினிலே வரும் கீதம்"", ""பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"", ""கிரிதர கோபாலா"", ""எனது உள்ளமே"" போன்ற பாடல்கள் பிரபலமானவை. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு ""இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே"" எனப் பாராட்டினார். இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. 1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது. ""இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்"" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். பிறபண்பாட்டுமயமாதல் பிறபண்பாட்டுமயமாதல் (Transculturation) என்பது, பிற பண்பாட்டுக் கூறுகளின் அறிமுகத்தால் ஏற்படுகின்ற பண்பாட்டு மாற்றத்தைக் குறிக்கின்றது. இது பண்பாடுகள் இடையேயான கலப்பு மற்றும் ஒருங்கிணைவுத் தோற்றப்பாடுகளை விளக்குகின்ற ஒரு சொல்லாகவும் இருக்கின்றது. இது, காலப்போக்கில் மக்கள் தங்களிடையேயான முரண்பாடுகளைப் பெருப்பிக்காமல், தீர்த்துக் கொள்ளுகின்ற ஒரு இயல்பான போக்கை வெளிப்படுத்துகின்ற ஒன்று எனக் கருதப்படுகின்றது. பொதுவாக, ஒரு நோக்கில், பிறபண்பாட்டுமயமாக்கம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாடுகளோடு சம்பந்தப்பட்ட, போர், இன முரண்பாடுகள், இனவாதம், கலப்பு மணங்கள் போன்ற விடயங்களை உட்படுத்துகின்றது, இன்னொரு நோக்கில், முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தவிர்க்க முடியாதவை ஆகும்போது, ஏற்படுகின்ற நிகழ்வுகளின் ஒரு விரும்பத்தக்க அம்சமாக இது அமைவதாகக் கொள்ளப்படுகின்றது. தமிழர் கட்டிடக்கலை தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் "தமிழர் கட்டிடக்கலை" எனப்படலாம். வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: ""பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து"" என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை அறியலாம். வீடுகள் கட்டுவதற்கு கடைக்கால் (அத்திவாரம்) போடும் காலம் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயின் மாடங்களும், நிலாமுற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருந்தன. மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காற்று ஓட்டத்திற்காக வீட்டின் சுவர்களிற் பலவகைச் சாளரங்கள் வைப்பதுண்டு. இவை "காலதர்" என்று கூறப்படும். கால் = காற்று, அதர் = வழி. அதாவது "காற்றுப் போகும் வழி" என்று பொருள். தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் ( அல்லது கோபுரம் )ஆகும் . கனடியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் பட்டியல் கனடாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. http://www.mcquarrieweb.ca/canada/channel_list.asp சேய்வழிப் பெயரீடு சேய்வழிப் பெயரீடு (teknonymy) என்பது பிள்ளை பிறந்தபின், அப்பிள்ளையின் பெயர்க அடிப்படையில் பெற்றோர் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளும் ஒரு நடைமுறையாகும். இது உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல்வேறு சமுதாயத்தினரின் மத்தியில் காணப்படுகின்றது. சில சமுதாயங்களில் இது முறைசார்ந்த, சமுதாய நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களிலும் தாக்கத்தைக் கொண்டுள்ள ஒரு நடைமுறையாக இருக்கின்ற அதேவேளை வேறு சிலவற்றில் அந்தளவுக்கு முக்கியத்துவம் அற்ற ஒரு வழக்காக இருந்ந்து வருகின்றது. இது பற்றி ஆய்வுகள் செய்த "டைலர்" என்பவர் இது தாய்த்தலைமைக் குடும்ப முறைமையின் எச்சமாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஒரு காலத்தில் தாய்த்தலைமைக் குடும்ப முறைமை பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இம் முறையின் கீழ் மணம் செய்யும் ஆண்கள் தங்கள் மனைவியரின் குடும்பத்துடனேயே வாழ்ந்து வந்தனர். இத்தகைய குடும்பங்களிலே, பெண்களும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுமே குடும்பத்துடன் நெருங்கியவர்களாக இருந்த சமயத்தில், அக் குடும்பத்துள் மணம்முடித்து வரும் ஆண்களுக்கு முன்னுரிமைகள் கிடையாது. இதனால் அவ்வாறான ஆண்களை அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் மூலமே அடையாளம் காட்டும் மரபு ஏற்பட்டது என்பது அவர் வாதம். எனினும், இத்தகைய ஒரு கருத்துருவுக்கும் அப்பால் சமுதாக நடைமுறைகளிலும், அதன் நிறுவனங்களிலும் தாக்கங்களைக் கொண்ட அம்சமாகப் பல சமுதாயங்களிலே இம்முறை இருந்து வருவதைக் காணலாம். சமுதாயத்தில் மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டிராவிட்டாலும், இந்தியாவில் கிராமப் பகுதிகளிலும், சில பழங்குடியினர் மத்தியிலும் இத்தகைய ஒரு நடைமுறை இருந்து வருகிறது. சிறப்பாக இந்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரின் பெயர்களைக் கூறுவதில்லை. இதனால் கணவனைப் பற்றிப் பிறர் மத்தியில் குறிப்பிட வேண்டி ஏற்படுகின்ற போது தங்கள் பிள்ளையின் (ஆண் அல்லது பெண்) தந்தை என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டாக, பிள்ளையின் பெயர் சிவா" எனின், தந்தையை சிவாவின் அப்பா"' என்பார்கள். முறைசாராத இவ்வாறான வழக்குகள் பலநிலைகளிலும் நவீன சமுதாயங்களில்கூடக் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாகப் பாடசாலைகள் தொடர்பில் பெற்றோர்களின் உறவு நிலைகள் பிள்ளைகளை முதன்மைப்படுத்தியே இருப்பதன் காரணமாகப் பெற்றோர்கள் ஒருவரையொருவர் அவர்கள் பிள்ளைகளின் அம்மா என்றோ அப்பா என்றோ குறிப்பிட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு. சில சமுதாயங்களில் இது ஒரு முறை சார்ந்த நடைமுறையாக வழக்கில் இருப்பதைக் காண முடியும். முற்காலத்தில் அராபியர்கள் பரவலாக இந்த நடைமுறையைக் கைக்கொண்டிருந்தனர். அபு அலி, அபு ஹசன் போன்ற பெயர்கள் இதனை உணர்த்துவனவாக இருக்கின்றன. அரபி மொழியில் "அபு" என்பது "தந்தை" என்பதைக் குறிக்கும். பாலித்தீவிலுள்ள ஒரு சமூகத்தவரிடையே இவ்வழக்கமானது மிக விரிவான முறையிலே கைக்கொள்ளப்படுகின்றது. இங்கே முதற் குழந்தை பிறந்தவுடன் தாய் தந்தையரின் பெயர்கள் முறைப்படி மாற்றம் அடைகின்றன. அது மட்டுமன்றி, ஒரு தலைமுறையுடன் மட்டும் நின்றுவிடாது, பேரன், பேத்தி, பாட்டன், பாட்டி எனப்பல தலைமுறையினர் மத்தியிலும் இது தாக்கத்தைக் கொண்டுள்ளது. அதாவது, குழந்தையொன்று பிறக்கும்போது அதன் தாய் தந்தையர்கள் பெயர்கள் மட்டும் மாறுவதில்லை. அக் குழந்தையின் பேரன், பேத்தி பெயர்களும், பாட்டன், பாட்டி பெயர்களும் கூட மாறுகின்றன. இதன்படி ஒருவரின் பெயர் அவர் வாழ்க்கைக் காலத்தில் 4 முறை மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்த முறைமையின் கீழ் தலைமுறைகள் ஊடாகப் பெயர்கள் மாறுகின்ற விதத்தைக் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது. செப்டம்பர் 22 சனவரி 22 காசுமீர சைவம் காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள். காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது. அறிஞர்கள், உடல் வேறு, மனம் வேறு என்பதை ஒத்துக் கொள்ளாத கோட்பாடான பொருண்மை வாதத்துடன், காஷ்மீர சைவத்தை வகைப்படுத்துகிறார்கள். அனைத்துயிர்களின் உணர்வுகளுக்கு ஆதாரமான சிவனைத், "தான்" என உணர்வதே காஷ்மீர சைவத்தின் நோக்கமாகும். பொதுவாக காஷ்மீர சைவ சமயம் ஆகம சாஸ்திரம், ஸ்பந்த சாஸ்திரம் மற்றும் பிரத்தியவிஞ்ஞான சாஸ்திரம் எனும் மூன்று அடிப்படைப் பகுதிகளில் அடங்கும். முக்தி நிலை அடையதற்கு ஆன்மிகப் பயிற்சி அவசியம். காஷ்மீர சைவத்தில் உடல் தூய்மை, மனத்தூய்மை, மெய்யறிவு மற்றும் "முறைகள் அற்ற முறை" என நான்கு நான்கு ஆன்மிகப் பயிற்சி முறைகளை விளக்குகிறது. வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம் தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும். தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும். ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் வல்லெழுத்துகள் மிகும். புலி (அது)  தலை  புலித்தலை இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வரும் வல்லெழுத்துகள் மிகும். அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று; அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது. (விரியும்) இந்த இலக்கணக் குறிப்பில் வரும் உள்ளடக்கம் புலவர் அ.சா. குருசாமி அவர்களால் எழுதப்பட்ட "தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!" என்ற நூலையும், மயிலை சின்னத்துரை சண்முகம் அவர்கள் எழுதிய, "தமிழில் பிழையின்றி எழுதுவோம்" (சென்னை:1986) என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டவை. இங்கு குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டுகளும் அந்நூல்களில் இருந்து பெறப்பட்டவையே. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் இந்தத் தலைப்பின் கீழ் மிகத்தெளிவான, விளக்கமான, பயனுள்ள குறிப்புகள் இருக்கின்றன. தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ("South Asian Games") இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெற்காசிய நாடுகளிடையே நடைபெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகளை தெற்காசிய விளையாட்டுப் பேரவை (SASC) என்ற அமைப்பு நடத்துகிறது. இவ்வமைப்பு 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் ஆப்கானித்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கித்தான், இலங்கை ஆகிய எட்டு நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. முதலாவது தெற்காசியப் போட்டிகள் 1984 ஆம் ஆண்டில் நேபாளத்தின், காட்மாண்டு நகரில் இடம்பெற்றன. தெற்காசியக் கூட்டாட்சி விளையாட்டுகள் என அழைக்கப்பட்டுவந்த இப்போட்டிகள் 2004 ஆம் ஆண்டில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இவ்விளையாட்டுப் போட்டிகள் பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளின் தெற்காசிய வகை எனக் கூறப்படுவதுண்டு. 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் குவகாத்தி, சில்லாங் ஆகிய நகரங்களில் 2016 பெப்ரவரி 5 முதல் பெப்ரவரி 16 வரை நடைபெறுகின்றன. சொல் சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு "பொருளைத் தரும்" மொழிக்கூறு. சொல்லைக் "கிளவி", பதம் என்றும் கூறுவது உண்டு. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். "சொல் எனப் படுப பெயரே வினையே என்று" "ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே" என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்தொருமொழி என்று பெயர். வாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது. வாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது. எடுத்துக்காட்டுகள் சாய்ந்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன. பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல் பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். என்று ஆறு வகைப்படும். எடுத்துக்காட்டுகள் பொருட்பெயர் : , பசு, புத்தகம் இடப்பெயர் : தஞ்சாவூர் , தமிழகம் காலப்பெயர் : மணி, ஆண்டு , நாள் சினைப்பெயர் : கண், காது ,கை, தலை பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம் தொழிற்பெயர் : படித்தல், உண்ணுதல் , உறங்குதல் தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல் வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும் முற்று 1. தெரிநிலை வினைமுற்று செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும் எ.கா: கவிதா மாலை தொடுத்தாள் 2.குறிப்பு வினைமுற்று பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். எ.கா: அவன் ராஜா எச்சம் 1.பெயரெச்சம் பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும். எ.கா: படித்த பையன் 2.வினையெச்சம் வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச்சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும். எ.கா: படித்துத் தேறினான் அணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல் இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையோ வினையையோ சார்ந்து வருவது.ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும். மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும். எ.கா: அவன்தான் வந்தான் சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர் மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல். உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். ஒரு பொருள் குறித்த பல சொல் சாலப் பேசினான். உறு புகழ். தவ உயர்ந்தன. நனி தின்றான். சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன பல பொருள் குறித்த ஒரு சொல் கடிமனை - காவல் கடிவாள் - கூர்மை கடி மிளகு - கரிப்பு கடிமலர் - சிறப்பு கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும் பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது சேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். காட்டாக நாய், மரம், வா. தமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்: (1) பெயர்ப் பகாப்பதம்: பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும். எடுத்துக் காட்டுகள் : நெருப்பு, காற்று, நிலம், நீர்,என வரும் . (2) வினைப் பகாப்பதம்: வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும். எடுத்துக் காட்டுகள் : உண், தின் , நட, வா, முதலியன. (3) இடைப்பகாப்பதம் : இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும். எடுத்துக் காட்டுகள் : மன், கொல், போல், மற்று என்பன. (4) உரிப் பகாப்பதம் : உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும். எடுத்துக் காட்டுகள் : கூர், மிகு, உறு, தவ, நனி, கழி மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை . பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களை பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும். ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனலாம். இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் என்பனவாகும். இந்த ஆறு உறுப்புகளையும் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் பகுதி ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும். எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம். உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும். விகுதி பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு. உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டி நிற்கும். இடைநிலை முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும். உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் – உண் - முதனிலை ட் - இடைநிலை ஆன் - இறுதிநிலை ‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம். சாரியை இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும். சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது. வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘ வா - பகுதி த் - சாந்தி த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி ‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம். சந்தி இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி. நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும். நட - பகுதி த் - சந்தி தல் - விகுதி பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது. விகாரம் விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை. பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம். இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர். வந்தனன் - வா+த்+த்+அன்+அன் வா - பகுதி த் - சந்தி த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன பதம் (தமிழ் இலக்கணம்) சொல்லைப் பதம்பிரித்துப் பார்க்கும் அறிவியல் கண்ணோட்டத்தை நன்னூல் இலக்கணம் புதுமையாகப் புகுத்தியுள்ளது. இது சொல்லில் அமைந்துள்ள உறுப்புக்களை, roots of words பகுத்துப் பார்க்கிறது. மேலும் பகுத்தால் பயனில்லாதல் போகும் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களைப் பகாப்பதம் என்றும், பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்றெல்லாம் பிரிக்கக்கூடியதாக அமைந்துள்ள சொற்களை, பகுபதம் என்றும் அது குறிப்பிடுகிறது. சிச்சென் இட்சா சிச்சென் இட்சா ("Chichen Itza") என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரிகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரிகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் ("Quetzalcoatl") என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது. சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது. யுனெசுகோவின் பாரம்பரியச் சின்னமாக சிச்சென் இட்சா அறிவிக்கப்பட்டது. சிச்சென் இட்சா சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. களனி பல்கலைக்கழகம் களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது. 1875ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் 1959 இல் வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும் 1972 இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது. விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது. சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 23 கித்தார் கிற்றார் அல்லது கித்தார் அல்லது கிட்டார் ("Guitar") என்பது அதிர்கம்பிகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். கித்தாரில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மரபுவழி செவ்விசைக் கித்தார்கள் மற்றும் அக்குஸ்டிக் கித்தார்கள் (ஒலிமப்பெட்டிக் கித்தார்கள்) மரத்தினால் செய்யப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால் (steel) தயாரிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் நான்கு தொடக்கம் பதினெட்டு வரையிலான தந்திகளைக் (கம்பிகள்) கொண்டுள்ளன. ஆனால் பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது. அடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) நான்கு தந்திகளைக் கொண்டன. ஒலிமப்பெட்டிக் கித்தார்களது தந்திகள் மீட்டப்படும்போது, அவை அதிர்வடைவதால் வளியில் கலந்து ஏற்படும் ஒலி, பெரும் துவாரம் கொண்ட மரப்பெட்டியின் மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றது. இதற்கு மாறாக, மின்மக் கித்தார்களது (எலக்ட்ரிக் கித்தார்) ஒலி மின்னணு மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றது. ஒருகை விரல்கள் விரற்பலகையில் தந்திகளை அழுத்த மற்றைய கைவிரல்கள் ஒலித்துவாரத்தின் முன்னே வெறும் விரல்களால் பறித்தெடு அசைவு மூலம் தட்டப்பட்டு அல்லது கித்தார் மீட்டுமியைப் பயன்படுத்தித் தட்டப்பட்டு அக்குஸ்டிக் கித்தார் வாசிக்கப்படுகின்றது. கித்தார் இசைக்கருவி கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பா கண்டங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன் பின் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் சித்தார் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் கித்தார்கள் ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கின. மூவாயிரத்து முன்னூறு வருடங்கள் பழமையான கற்சிற்பங்களில் மூன்று தந்திகளை உடைய கித்தார் போன்ற சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன கித்தார்களின் வரலாறுகள் இடைக்கால இசுப்பெயினின் வரலாறுகளுக்கு முன் கிடைக்கப்பெறவில்லை. கித்தார் எனும் ஆங்கில வார்த்தை, கித்தாரே எனும் செருமன் மொழியிலிருந்து வந்துள்ளது.பிரெஞ்சு கித்தார் எனும் வார்த்தை ஸ்பானிய கித்தாரா என்பதிலிருந்து வந்துள்ளது, இது அரபு மொழியில் உள்ள கிட்டார (قيثارة) என்பதிலிருந்தும்,இது லத்தினில் உள்ள சித்தாராவிலிருந்தும், இது பண்டைய கிரேக்க மொழியில் இருந்த கிதாராவிலிருந்தும் ( κιθάρα) வந்துள்ளது கித்தார்களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம், அவையாவன அக்குஸ்டிக் கித்தார்கள் மற்றும் எலக்ட்ரிக் கித்தார்கள். இவை ஒவ்வொன்றும் தன்னகத்தே மேலும் உப பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர பண்டைய கால மரபு வழி வந்த செவ்விசைக் கித்தார் வகையும் உள்ளது, இது கிளாசிக்கல் கித்தார் (classical guitar) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. கித்தார் அதனது வடிவம், இசையின் வகை போன்ற காரணிகளைக் கொண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை எசுப்பானியக் கித்தார்கள் எனவும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக இவை நைலான் தந்திகளைக் கொண்டுள்ளன. மேல்நாட்டுச் செந்நெறி இசை இத்தகைய கித்தார்களைக் கொண்டு உட்கார்ந்த நிலையில் வாசிக்கப்படுகின்றது. கிளாசிக்கல் கித்தார்களின் பரந்த தட்டையான கழுத்து பல்வகை இசை நுட்பங்களை மற்றும் இசை நிரல்களை வாசிப்பதற்கு உதவி புரிகிறது. மெக்சிகோவில் மரபுவழி இசையைக் கித்தார் கொண்டு மீட்டுபவர்களை மரியாச்சி என்று அழைப்பர். மின் ஆற்றலால் இயக்கப்படுகின்ற கித்தார்கள் 1930 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.இதில் மின்காந்த ஆற்றலின் மூலமாக இசை பெருக்கப்படுகின்றது.பழங்காலத்தில் கித்தாரின் உடல் பகுதி வெற்றிடமாக்கப்பட்டிருக்கும். அதில் இசை அதிர்வலைகளின் மூலம் பெருக்கமடையும்.ஆனால் வெற்றிடம் இருப்பதைக் காட்டிலும் முழுமையான உடல் அமைப்பினை கொண்ட கித்தார்கள் வசதியானவை என்பதனால் எலக்ட்ரிக் கித்தார்களில் துளையிடுவதை தவிர்த்தனர்.மேலும் இவ்வகை கித்தார்கள் நவீன காலத்திற்கு ஏற்புடைய இசையைத் தருவிப்பதால், மேற்கத்திய இசைகளான புளூஸ், ஜாஸ்,சோலோ,ராக், பாப் போன்றவற்றில் அடிப்படை கருவியாக , இன்றியமையாத இடத்தை இவை பிடித்துள்ளன. மின்காந்த தூண்டல்கள் கம்பிகளில் உருவாகும் அதிர்வுகளைச் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன.பின் அந்தச் சமிக்ஞைகள் மின்காந்த முறையில் செறிவூட்டப்பட்டு இசையாக வெளிவருகின்றன.வெற்றிட குழாய்களின் (vacuum tubes) மூலமாக இசையின் அலைவெண்கள் செறிவூட்டப்படுகின்றன.முதன் முதலில் மேற்கத்திய இசையான ஜாஸில் எலக்ட்ரிக் கித்தார்கள் இடம்பிடித்திருந்தன.1880 முதல் 1990 வரை இவை மிகவும் பிரபலமான இசைக்கருவியாக உருப்பெற்றிருந்தது. பண்டைய முறை கித்தார்களின் நவீன வடிவமே அக்குஸ்டிக் கித்தார்கள் ஆகும்.இதில் நைலான் தந்திகளுக்குப் பதிலாக எஃகு தந்திகள் பயன்படுத்தப்படுகிறது.எஃகு தந்திகள் ஒலியினை அதிக படுத்துவதாக உள்ளதால் இவை பயன்படுத்தப்படுகின்றது.இதில் மின்சாரத்தை பயன்படுத்தி ஒலி பெருக்கும் வகையும் உள்ளது. மேல் வளைவு கித்தார் (archtop guitar) எஃகுத் தந்திகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி குடைந்து எடுக்கப்பட்டு ஒரு வளைவைக் கொண்டிருக்கும். வயலின்களைப் போன்ற இந்த அமைப்பை ஓர்வில் கிப்சன் (1856–1918) என்பவர் அறிமுகப்படுத்தினார். இது மேற்கித்திய இசையான ஜாஸ் இசைக்கு ஏற்ற இசைக்கருவியாகும். ஒத்ததிர்வுமி கித்தார் ( Resonator guitar) சிலாவாக்கிய-அமெரிக்க ஜோன் தோபையேரா (1893–1988) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தோபையேரா சகோதரர்கள் (Dopyera Brothers) எனும் சொல்லில் இருந்து தோப்ரோ பிறந்தது. இக் கித்தார் உருவாக்கத்தின் முக்கிய நோக்கம் மிகையான ஒலியை உண்டாக்குவதாகும். எலெக்ட்ரிக் கித்தார் வந்ததன் பின்னர், நோக்கத்தைப் பொறுத்தவரையில் இதன் பயன்பாடு மங்கியது. எனினும் இதனது தனித்துவமான ஒலி காரணமாக இன்றும் இது உபயோகத்தில் உள்ளது. இது எஃகுத் தந்திகளைக் கொண்டது. நாடோடிப் பாடல்கள், புளூஸ், ராக் அண்டு ரோல் இசைகளுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) ஒலிமப்பெட்டிக் கித்தார்களாகவோ அல்லது மின்மக் கித்தார்களாகவோ காணப்படலாம். பொதுவாக நான்கு தந்திகளைக் கொண்டுள்ளன. இவை க-த-ரி-ப (E-A-D-G) எனும் தந்திகளை மேலிருந்து கீழாகக் கொண்டுள்ளன. சாதாரண ஆறு தந்திக் கித்தார்களது நி-க (B-E) எனும் கீழிரண்டு மெல்லிய தந்திகள் இவ்வகையான அடித்தொனிக் கித்தார்களில் இருப்பதில்லை. பெரும்பாலான கித்தார்கள் மரத்தினால் செய்யப்படுகின்றன. இது தவிர நெகிழி, உலோகங்கள் போன்றனவற்றாலும் கித்தார்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால்(steel) தயாரிக்கப்படுகின்றது. கித்தாரில் நரம்புகளை அதிர்வுரச் செய்வதின் மூலம் இசை உருவாக்கப்படுகின்றது. நரம்புகளிலிருந்து வரும் அதிர்வு ஒலியினை கித்தாரின் உடல் பாகம் ஒலிபெருக்கி போல் செயல்பட்டு ஒலியினை மிகைப்படுத்துகின்றது. இடது அல்லது வலது கைப்பழக்கம் உடையோருக்கு ஏற்றவாறு கித்தார்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மனிதர்கள் வலது கையைப் பயன்படுத்தித் தட்டுவார்கள். சில சந்தர்ப்பங்களில் வலதுகைக் கித்தார்களது மேலிருந்து கீழான தந்திகள், கீழிருந்து மேலாக மாற்றி அமைக்கப்படும்போது இடதுகை ஆதிக்கம் கொண்டவர்கள் வலதுகைக் கித்தார்களை இலகுவில் வாசிக்கமுடிகின்றது. ஒரு கித்தாரில் தலை, கழுத்து, உடல் எனும் பிரதான பாகங்கள் உள்ளன. தலைப்பகுதியில் பிரடை அல்லது பிருடை எனும் கித்தார்த் தந்தியின் சுருதியைச் சரிசெய்யும் சுழலி உள்ளது. அடித்தொனிக் கித்தார்களில் நான்கு பிரடைகளும் ஆறு தந்தி உள்ள கித்தார்களில் ஆறு பிரடைகளும் உள்ளன. இவை "3+3" எனும் அமைப்பில் அல்லது "4+2" எனும் அமைப்பில் அமைந்திருக்கலாம். Steinbergers போன்ற சில கித்தார்கள் தலையைக் கொண்டிருப்பதில்லை. இவற்றின் சுருதி சேர்க்கும் பகுதி உடலில் அல்லது பாலத்தில் உள்ளது. தலைப்பகுதி நேராகவோ அல்லது சாய்வாகவோ அமைந்திருக்கலாம். இவற்றின் கோணம் 3° தொடக்கம் 25° வரை வேறுபடுகின்றது. கித்தார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அல்லது கித்தாரது வகையைப் பொறுத்து தலைக்கும் கழுத்துக்கும் இடையேயான கோணம் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, கில்ட் நிறுவனத்தின் கித்தார்கள் 4°, மார்ட்டின் நிறுவனத்தின் கித்தார்கள் 11° சாய்வைக் கொண்டன. விரற்பலகையும் தலையும் சந்திக்கும் இடத்தில் மேரு (nut) அமைந்துள்ளது. இது நெகிழி, பித்தளை, உருக்கு போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருக்கலாம். இதில் காணப்படும் வெட்டுக்களின் ஊடாக பிரடையில் பிணைக்கப்பட்ட தந்திகள் செல்கின்றன. இதுவே ஒரு தந்தியின் அழுத்தப்படாத நிலையில் உள்ள சுருதியைத் தீர்மானிக்கின்றது. ஒரு கித்தாரது மெட்டு, தாங்கு கோல், விரற்பலகை அனைத்தும் சேர்ந்து கழுத்து என அழைக்கப்படுகின்றது. விரற்பலகை சிறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பிரிக்கும் உலோகத்தாலான புடைப்பு மெட்டு என அழைக்கப்படுகின்றது. இரண்டு மெட்டுகளுக்கிடையே உள்ள பகுதியில் உள்ள தந்தியை அழுத்தும் போது சுருதி மாறுகின்றது. சாதாரண கித்தார்களில் 19 மெட்டுகள் அமைந்திருக்கும். தாங்கு கோல் என்பது உடற்பகுதி விரற்பலகையில் இருந்து தொடங்கி தலைப்பகுதி விரற்பலகையில் முடிவுறும் உள்ளே அமைந்துள்ள ஒரு நீண்ட கம்பியாலான அமைப்பாகும். ஈரப்பதன் வேறுபாடு, மரம் பழமையடைதல் போன்றனவற்றால் கழுத்தின் வளைவு காலப்போக்கில் மாறுபடும், இதனால் தந்திக்கும் விரற்பலகைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். இது விரலைத் தந்தி மீது அழுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும். விரற்பலகையின் உள் விளிம்பில் தாங்கு கோலைச சீர் செய்ய ஒரு திருகாணி காணப்படுகின்றது. ஒலித் துவாரம் ஊடாக இதனைச் சீர் செய்யலாம். கடிகாரத் திசையில் திருப்புவதன் மூலம் இது இறுக்கப்பட்டு கழுத்தின் வளைவு சீர் செய்யப்பட்டு கித்தார் இயல்புநிலைக்குத் திரும்பும். அக்குஸ்டிக் கித்தார்கள் உடற்பகுதியில் ஒலித்துவாரம் உள்ளது. இப்பகுதியில் விரல்களால் அல்லது கித்தார் மீட்டுமியைப் பயன்படுத்தித் தட்டப்பட்டு கித்தார் வாசிக்கப்படுகின்றது. ஒரு கித்தாரின் இசையின் தரத்தைத் தீர்மானிப்பது உடற்பகுதியாகும். இயல்பான ஆறு தந்திக் கித்தாரில் கீழிருந்து மேலாக தந்திகள் எண்ணப்படுகின்றன. இதன்படி, ஆறாவது தந்தியில் இருந்து முதலாவது தந்தி வரை ஒவ்வொரு தந்தியின் இயல்பான சுருதி க-த-ரி-ப-நி-க (E-A-D-G-B-E) எனும் சுர வரிசையில் அமைந்திருக்கும். இவை திறந்த ஒலித் தந்திகள் எனப்படுகின்றன. முதலாவது மற்றும் ஆறாவது தந்திகள் ஒரே சுரத்தைக் கொண்டிருந்தாலும் அவை உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலையில் ஒலிக்கின்றன. இதற்கு அவற்றின் தந்தியின் தடிப்பு காரணமாகின்றது. கித்தாருக்குச் சுருதி சேர்ப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. வழமையான முறையில் கித்தாரின் முதலாவது தந்தி (E) பியானோ அல்லது கிளபம் இசைக்கருவிகளில் உள்ள "E" உடன் ஒத்துப்போகும்படி பிரடையைத் திருப்பிச் சரிசெய்யப்படுகின்றது. பின்னர் இரண்டாம் தந்தியின் ஐந்தாவது மெட்டுப்பகுதியும் (E) முதலாவது தந்தியின் திறந்த ஒலியும் ஒன்றாக இருக்குமாறு தந்தி "B"யின் பிரடை திருப்பப்படுகின்றது. இவ்வாறு படத்தில் காட்டப்பட்டவாறு ஏனைய தந்திகளுக்கும் சுருதி சேர்க்கப்படுகின்றது. கித்தாரில் ஒரு உபகரணம் இணைக்கப்பட்டு கித்தாரின் ஒவ்வொரு தந்திகளும் தட்டப்படுகையில் அந்த உபகரணம் அது எந்தச் சுரத்தில் அந்தத் தந்தி உள்ளது எனும் தகவலைத் தரும். இது முற்றிலும் சுருதியை இழந்த நிலையில் உள்ள கித்தாருக்கு மிகவும் உபயோகமான முறையாகும். எனினும், எளிதில் கிடைக்கக்கூடிய செலவற்ற இன்னுமொரு முறை ஆண்ட்ராய்டு இயங்குதள செல்லிடப்பேசிகள் போன்றனவற்றில் இதற்கென பிரத்தியேகமாக அமைந்துள்ள மென்பொருட்களைப் பயன்படுத்திச் சுருதி சேர்த்தல் ஆகும். சுருதி சேர்க்கும் போது மெல்லிய தந்திகள் அறுந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் எச்சரிக்கையாக பிரடையைத் திருப்புதல் தேவையானது. சுருதி சேர்த்த பிற்பாடு அது சரியாக அமைந்துள்ளதா என்று பரீசீலிக்க ஏற்கனவே பரிச்சயமான பாடலை அல்லது ச-ரி-க-ம-ப-த-நி-ச எனும் சுர வரிசையை வாசித்துப்பார்க்கலாம். வலிக்கட்டுப்பலகையை அழுத்தும்போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். வாசிப்பவர்கள் தங்கள் வலது கையில் தந்தியை/தந்திகளைக் கிள்ளியவாறு இடது கையில் வலிக்கட்டுக்களை அழுத்தி இசைப்பர். ஒரு தந்தியினை அழுத்தாது வாசித்தால் அதன் இயல்பான சுருதியைத் தருகின்றது. இதன் அடிப்படையில் E-A-D-G-B-E எனும் ஆறு தந்திகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தந்தியும் கீழ்காணும் ஒழுங்கில் சுரத்தைக் கொண்டுள்ளன. இந்த ஒழுங்கின்படி, E யைத் திறந்த ஒலியாகக் கொண்ட முதலாவது தந்தியின் முதலாவது (வலிக்கட்டுப்பலகை) மெட்டுப் பலகையின் சுரம் "F" ஆகும், அதற்கு அடுத்தது "F#" ஆகும். இவ்வாறு கீழ்க்காணும் படத்தில் காட்டப்பட்டவாறு அமைந்துள்ளன. அபிமன்யு (மகாபாரதம்) அபிமன்யு மகாபாரதக் கதையில் வரும் ஒரு முக்கியமான கதைமாந்தர் ஆவார். இவர் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார்.அபிமன்யு - உத்தரை தம்பதியர்க்கு பிறந்தவர் பரிட்சித்து. அபிமன்யு தனது இளமைப்பருவத்தைத் தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது மாமன்களான கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் போர்ப்பயிற்சி பெற்றார். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். வில்வித்தையில் மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான். குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும்போர் புரிந்த அபிமன்யு, சக்கரவியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் எதிரிகளின் வாளுக்குப் பலியானான். துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், பிரஹத்பாலன், கிருதவர்மன் ஆகிய அறுவரால் தாக்கபட்டு நிலைகுலையும் அபிமன்யு, பின் துச்சாதனனின் மகன் துர்முகனோடு கதாயுத்தம் புரிந்து அவனைக் கொன்று தானும் மரணத்தைத் தழுவுகிறார். மேலும் சக்கரவியூகத்தில் அருச்சுனன் தவிர்த்த மற்ற பாண்டவர்களை உட்புக இயலாதபடி, ஜெயத்திரதன் ஒருவனாக தடுத்துவிட்டான். இதனால் அபிமன்யுவின் மரணத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஜெயத்திரதனை மறு நாள் போரில் கொல்வதாக அருச்சுனன் கொல்வதாக சபதம் ஏற்கிறான். காந்தாரி காந்தாரி மகாபாரதக் கதையில் வரும் ஒரு கதைமாந்தர் ஆவார். இவர் காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்) மன்னனான சுபாலனின் மகள் ஆவார். காந்தார நாட்டு இளவரசன் சகுனி இவரது சகோதரர் ஆவார். காந்தாரி குருவம்சத்தைச் சேர்ந்த திருதராஷ்டிரனை மணந்து கொண்டார். திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரியும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களே கௌரவர் எனப்பட்டனர். இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். தனது மகன்கள் அழியக் காரணமாக இருந்த கிருஷ்ணனை, இவர் கிருஷ்ணனின் குலம் அழிய சபித்தார். இதுவே கிருஷ்ணரின் யாதவ வம்சத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. நரம்புசார் உளவியல் நரம்புசார் உளவியல் ("Neuropsychology") மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணமாகின்றன, அவை எவ்வாறு சிந்தனைத்திறன், உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பனவற்றை உட்பொருளாகக் கொண்ட உளவியலின் கிளைத்துறை ஆகும் நரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது. நரம்புசார் உளவியல் என்ற துறை மிகவும் புதிய துறை என்றாலும் இதன் வரலாறு கி.மு 3500வில் எகிப்தின் இம்போடெப் என்ற பெயர் கொண்ட முன்னோடி மருத்துவர் எழுத்துக்களில் தொடங்குகிறது. இந்தப் பகுதியில் நரம்புசார் உளவியலின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்த சில முன்னோடிகள் பற்றிப் பார்க்க இருக்கிறோம் இம்போடெப் அவர்கள் மூளை பற்றியும், அது எவ்வாறு உடலின் மற்ற பாகங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் அறிவியல் பூர்வமான கருத்துக்களைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார். அவர் காலத்தில் எகிப்து நாட்டில், மூளை என்பது அவ்வளவு முக்கியமான உறுப்பாகக் கருதப்படவில்லை. இதயத்தையே ஆன்மா உறைந்திருக்கும் இடமாகக் கருதினர். கிரேக்கநாட்டிலும் மூளையே ஆன்மா உறைந்திருக்கும் இடமாகக் கருதினர் என்றாலும், கிரேக்கத்தை சார்ந்த இப்போக்கிரட்டீசு மூளையை ஒரு முக்கிய உறுப்பாகக் கருதி, மனிதன் மீது மிகப்பெரிய அதிகாரம் கொண்டது மூளை என்று கூறியிருக்கிறார். மனம் என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியது ஹிப்போகிரேட்டஸ் என்றாலும், மனம் என்று தனியாக ஓர் உறுப்புக் கிடையாது, மனம் என்பது மூளையின் செயல்பாடுகளே என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவரும் ஆன்மா என்ற கருத்தாக்கத்தையே நம்பினார்; எனினும் அந்தக் காலகட்டத்தில் மூளையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியது, அவருக்குப் பின்னர் வந்தவர்களை மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ஆராய வைத்தது. ரெனே டேக்கார்ட் என்ற தத்துவியலாளர் மனம்-உடல் பற்றிய தத்துவங்களுக்கு அதிகம் பெயர்போனவர். அவர் இப்போகிரட்டீசுவின் கருத்துக்களை விரிவுபடுத்தி, தலைப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை ஆன்மா இருக்கும் இடமாகக் கருதினார். அவரும் ஆன்மீகத்தின் அடிப்படையில் ஆன்மா என்ற கருத்தாக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார். மனமும், உடலும் சந்திக்கும் இடமாகப் பீனியல் சுரப்பியை குறிப்பிட்டார். மனம் உடலை கட்டுப்படுத்துவதாகவும், அதேபோல் உடலால் மனதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பினார். உடலிடம் மனதை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்ற கருத்து அப்போது பல உடற்செயலிலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவே பின்னர் உடல் பகுதியான மூளை எவ்வாறு மனதை கட்டுப்படுத்துகிறது என்று பலரை சிந்திக்கவைத்து, வெவ்வேறு வகைகளில் மூளையின் செயல்பாடுகள் பற்றிய கொள்கைகளை அறிமுகப்படுத்த வைத்தது என்று கூறலாம். 17-ம் நூற்றாண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த தாமஸ் வில்லிஸ், மூளைக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பை அறிய உடலியல் பூர்வமான (Physiological) அணுகுமுறையை கையாண்டார்¢. மூளைக்கு இரத்தம் அளிக்கும் இரத்த குழாய்களை அவர் கண்டுபிடிக்க, அந்த இரத்த குழாய்கள் வில்லிஸ்-ன் சர்க்கிள் (Willis’ Circle) என்று அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூளையின் அமைப்பினை ஆழமாக ஆராய்ந்து அவர் தந்த கொள்கை இன்று வழக்கற்று போனாலும், மூளையை அவர் ஆராய்ந்த விதம் அவருக்குப் பின்னால் வந்த ஆய்வாளர்களுக்கு மூளையைப் பற்றி முறையாய் புரிந்துகொள்ளவும், நரம்புசார் உளவியல் என்ற துறை உருவாகவும் வழிகாட்டியது. இவர் ஆளுமை என்பது மூளையின் அம்சங்களுடனும், அமைப்புடனும் தொடர்பு கொண்டது என்றும், முக்கியமாக மண்டையோட்டின் வடிவம் ஒருவரின் நுண்ணறிவுத்திறனையும், ஆளுமையையும் நிர்ணயிக்கிறது என்றும் நம்பினார். இவரின் கொள்கைகள், அறிவியல் பூர்வமாக நிருபிக்கபடாததால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகின. எனினும் ஆளுமையை நிர்ணயிக்கும் வகையில் மூளையில் 27 பகுதிகள் இருப்பதாகவும், ஒவ்வொரு பகுதியுடனும், ஒவ்வொரு நடத்தை சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இவர் அளித்த கருத்துக்கள் நரம்புசார் உளவியல் உருவாக ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. கால் அவர்கள் அளித்த கொள்கைகளின் அடிப்படையில், 19ம் நூற்றாண்டில் ஜீன் பாப்டைஸ்ட் பௌல்லாட் ("(Jean Baptiste Bouillaud") என்ற மருத்துவர் ஆராய்ச்சிகள் செய்து பெருமூளை பகுதி, தனிப்பட்ட செயல்பாடுகள் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். பேச்சு என்ற நடத்தை எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ந்த அவர் மூளையின் முன்புற பகுதியே அதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். ஒருவருக்கு மூளையின் முன்புற பகுதியில் காயம் ஏற்படும்போது, அவர் வார்த்தைகளை உருவாக்கும் திறனையும், அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறனையும் இழப்பதால் பேச முடியாமல் போவார் என்ற கருத்தை கூறினார். இவரின் கருத்துக்கள் மூலம் மூளையின் எந்ததெந்த பகுதிகள், எந்தெந்த நடத்தையுடன் தொடர்புகொண்டவை என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடங்கின. பௌல்லாட்-ன் கருத்துக்களால் உந்தப்பட்ட ப்ரோகா என்பவர் பேச்சு எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தார். மூளைக்காயத்தால் பேசமுடியாமல் போனவர்களின் இறப்பிற்குப் பிறகு அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனை செய்து, அவர்கள் பேச முடியாமல் போனதற்கு, பெருமூளையின் இடது புற முன்மடலின் (Frontal Lobe) ஒரு குறிப்பிட இடத்தில் ஏற்படும் சிதைவே காரணம் என்று கண்டறிந்தார். இவரின் கண்டுபிடிப்புக்கு பிறகு, பேச்சின் மையமான அந்தக் குறிப்பிட்ட இடம் ப்ரோகா பகுதி (Broca’s Area) என்று அழைக்கப்படுகிறது. இவரின் ஆய்வுகளின் மூலம் மூளை என்பது நுண்ணியச் செயல்பாடுகளைச் செய்யும் சிக்கலான உறுப்பு என்று புரிந்துகொள்ளப்பட்டது. இவரே மூளைக்கும், நடத்தைக்கும் உள்ள தொடர்பினை, இவருக்கு முன்னர் இருந்தவர்களை விட மிகவும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தவர் என அறியப்படுகிறார். இவர் 'என்கிராம்' (Engram) என்ற கொள்கையின் மூலம் நினைவாற்றல் மூளையில் உயிரி வேதிப் பொருளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படுகிறது என்று கூறினார். அதனை நிரூபிக்க எலிகளுக்குக் கற்றலை நிகழவைத்து பின்னர் மூளையில் அவர் குறிப்பிட்ட பகுதிகளை நீக்கி, கற்றவற்றை அவை மறந்துவிட்டனவா என ஆராய்ந்து பார்த்த போது, அவை கற்றவற்றை மறக்கவில்லை. இதனால் அவரின் கொள்கையை அவரே மாற்றிக்கொண்டார். இது ஏன் இவ்வாறு நடந்தது என்று ஆராய்ந்த போது, கற்றலில் பல்வேறு மூளைப்பகுதிகள் ஈடுபட்டு இருப்பதனால், ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் நீக்கினால், அவை கற்றவற்றை மறக்காது என்று மூளையின் பெரிய பகுதிகளை நீக்கினால் அவை அவற்றை மறக்கின்றன என்றும் கண்டறிந்தார். அதே போல், மூளையின் ஒரு குறிப்பிட்ட இடத்தை நீக்கிவிட்டாலும் கூட, அவற்றைச் சார்ந்த இடங்கள் நீக்கிவிட்ட இடத்தின் வேலைகளைச் செய்து கொள்கின்றன என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஜெர்மன் நரம்பியலாளரான இவர், பெருமூளை புறணியில் உள்ள நியூரான்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பதை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து, பெருமூளை புறணியின் நியூரான்களின் ஒழுங்கமைப்பை 52 பரப்புகளாகப் பிரித்தார். இந்த 52 பரப்புகளும் எந்ததெந்த நடத்தைகளுக்குப் பொறுப்பாக உள்ளன என்ற கொள்கையை வெளியிட்டார். இன்று அவர் தந்த கொள்கைகள் நடப்பில் இல்லாவிட்டாலும் கூட, எந்தெந்த நடத்தைகள் நரம்பு மண்டலத்தின் எந்தெந்த பகுதிகளோடு தொடர்பு கொண்டுள்ளன என்று ஆய்வு செய்யப் பெரிதும் உறுதுணையாய் இருந்தது பிராட்மேனின் 52 பரப்புகள் கொள்கைதான். இவரே நரம்புசார் உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வேறு பல கொள்கைகள் நிரூபணம் ஆகாத நிலையில், இவரின் ஹெப்பியன் கொள்கை மூளையின் செயல்பாடுகளை மற்ற கொள்கைகளை விடச் சிறப்பாக விளக்கியது. ஹெப்பியன் கொள்கையின் சாராம்சம்: நியூரான் 'ஏ'-வின் ஆக்சான், நியூரான் 'பி'-ஐ தூண்டும் அளவுக்கு மிக அருகில் இருந்து, அதனைத் தொடர்ந்து தூண்டி விட்டுக்கொண்டே இருந்தால், அந்த இரு நியூரான்களிலோ அல்லது ஒரு நியூரானிலோ மாற்றங்கள் ஏற்பட்டு அதன் திறன் அதிகரிக்கிறது. இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த நியூரான்கள், செல் அஸெம்பிளிஸ் (Cell Assermblies) என்று அழைக்கப்படுகின்றன. நியூரான்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பவை. அயனிகள் அடிப்படையில் நரம்பு இணைப்புப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன என்று இன்று நிருபிக்கபப்பட்டுள்ள மூளை செயல்பாட்டுக்கொள்கைகளுக்கு ஹெப் அவர்களின் கொள்கைகளே அடிப்படையாகும். இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தாண்டி பல்வேறு ஆய்வாளர்களும் நரம்புசார் உளவியலின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஸ்கேன் போன்ற அதி நவீன கருவிகளின் மூலம் நரம்புசார் உளவியல் ஓர் உச்சத்தைத் தொட்டு மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. நரம்புசார் உளவியலில் நரம்பு மண்டலத்திற்கும், நடத்தைக்கும் இருக்கும் தொடர்பை அறிய பயன்படுத்தப்படும் முறைகளை இங்குக் காண இருக்கிறோம். இன்று எந்தெந்த நடத்தைகள் எந்தெந்த நரம்பு மண்டலத்தின் பகுதியுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விட்டதன் காரணமாக, உளவியல் சோதனைகளை நிகழ்த்தி, அவற்றின் முடிவுகளை வைத்து நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதிகள் நோயினாலோ அல்லது காயத்தினாலோ பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறிய முடிகிறது. இவ்வாறு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் உளவியல் கருவிகள் நரம்புசார் உளவியல் கருவிகள் ("Neuropsychological Tools") என்று அழைக்கப்படுகின்றன. வெஷ்லர் நுண்ணறிவுத்திறன் (Weshler’s Intelligence) உளவியல் கருவி, நினைவுத்திறனை அறிய உதவும் பல்வேறு உளவியல் கருவிகள், மொழித்திறன், திட்டமிடுதல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற சிந்தனைத்திறன் சம்பந்தப்பட்டவற்றை அளவிடும் கருவிகள் அனைத்தும் நரம்புசார் உளவியல் கருவிகளே! சி.டி. (Computed-axial Tomography) ஸ்கேன், எம்.ஆர்.ஐ (Magnetic Resonance Imaging) ஸ்கேன், பெட் (Positron Emission Tomography) ஸ்கேன், எப்.எம்,ஆர்.ஐ (Functional Magnetic Resonance Imaging) ஸ்கேன் போன்ற படக்கருவிகள் மூளையையும், மற்ற நரம்பு மண்டல பகுதிகளையும் மிகத் துல்லியமாகக் காட்டுவதால், அவற்றின் மூலமும் பிரச்சனை மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் மின் அல்லது காந்த புலத்தை அளவிட்டு அதன் மூலம் மூளை செயல்பாடுகளை அறியும் வகையிலான ஈ.ஈ.ஜி (Electro Encephalo Graphy), எம்.ஈ.ஜி (Magneto Encephalo Graphy) கருவிகள் பெரிதளவில் இப்போது நரம்புசார் உளவியலில் பயன்படுத்தப்படுகிறது. கணினியால் கட்டுப்படுத்தப்படும் சில வேலைகளை அளித்து, அதற்கு மனிதர்கள் பதிலீடு அளிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு, துல்லியம் போன்றவற்றைக் கணிணியின் மூலமே பதிவு செய்து எந்த அளவுக்கு அவர்களின் சிந்தனைத்திறன் இருக்கிறது என்று அறியும் முறைகள் இன்று புழக்கத்திற்கு வந்துவிட்டன. தமிழர் சிற்பக்கலை சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன. அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார். "நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன." மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார். "நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்." சனவரி 21 சனவரி 20 பெர்ல் பக் பெர்ல் பக் ("Pearl S. Buck", ஜூன் 26, 1892 – மார்ச் 6, 1973) என்னும் பெண்மணி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் (நாவலாசிரியர்). இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர். இவர் 1892ல் பிறந்த பொழுது இவருடைய பெயர் பெர்ல் கம்ஃவொர்ட் சிடென்ஸ்ட்ரிக்கர் ("Pearl Comfort Sydenstricker") என்பதாகும். இவர் அமெரிக்காவில் உள்ள மேற்கு வர்ஜீனியாவில் ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் காரொலீன் சிடென்ஸ்ட்ரிக்கர். தந்தையாரின் பெயர் அப்சலோம் (ஆண்ட்ரூ) சிடென்ஸ்ட்ரிக்கர். பெற்றோர் இருவரும் கிறித்துவ மதத்தின் உட்பிரிவாகிய தென்பகுதிப் பிரெஸ்பிட்டேரியன் மதம் பரப்புவோர்களாக இருந்தனர். இவர்களின் குடும்பத்தை சீனாவில் ஜியாங்சு மாவட்டத்தில் உள்ள ஷென்ஜியாங்கு நகருக்கு அனுப்பி வைத்த பொழுது பெர்ல் அவர்கள் மூன்று மாத குழந்தையாக இருந்தார். இவர் திரு குங்கு என்னும் சீன ஆசிரியரிடம் இருந்து சீன மொழியை தாய்மொழி போலவே கற்று வந்தார். இவர் தம்து 18 ஆம் அகவையில் (வயதில்), அதாவது 1910ல், அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து, ராண்டால்ஃவ்-மக்கான் பெண்கள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பின் மீண்டும் சீனாவுக்குத் திரும்பினார். சினாவுக்குத்திரும்பிய பின் வேளாண்மைத்துறைப் பொருளாதார வல்லுநர் திரு ஜான் லாசிங் பக் (John Lossing Buck) என்பவரை மே 13, 1917 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காரொல் என்னும் ஒரு பெண்குழந்தைப் பிறந்தது, எனினும் இக்குழந்தைக்கு மூளை பற்றிய ஒரு கடும் நோய் (மரபணுவழித் தோன்றும் பிழையால் ஏற்படும் ஃவீனைல்-கீட்டோனூரியா, பி.கே.யூ, Phenylketonuria (PKU) என்னும் நோய்) ஏற்பட்டது. பின்னர் 1925ல் பெர்ல் பக் குடும்பத்தினர் ஜேனிஸ் (Janice) என்னும் பெண்ணைத் தத்து எடுத்துக்கொண்டனர். பெர்ல் பக் அவர்களின் குடும்பம் சீனாவில் உள்ள நான்ஜிங் மாவட்டத்திற்குக் குடி பெயர்ந்த பின் பெர்ல் பக் அவர்கள் அங்குள்ள நான்கிங் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்தார். 1926ல் மீண்டும் ஒருமுறை முதுகலைப் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கே நியூயார்க் மாநிலத்தில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் சீனாவுக்குத் திரும்பினார். பக் குடும்பத்தினர் 1934ல் சீனாவில் இருந்து வெளியேறினர். அக்காலத்தில் சீனாவில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களினால் இவ்வெளியேற்றம் நிகழ்ந்தது. சீனாவில் இருந்து திரும்பிய பின் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் வாழ்ந்தார். தன் கணவர் ஜான் பக் அவர்களுடன் மண முறிவு கொண்டு, பின்னர் 1935ல் ரிச்சர்ட் ஜே. வால்ஷ் (Richard J. Walsh) என்னும் புத்தக வெளியீட்டாரை மறு மணம் செய்து கொண்டார். இவ் விரண்டாம் கணவருடன் சேர்ந்து ஆறு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வந்தனர். பெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ல் தொடங்கியது. 1930ல் எழுதிய முதல் படைப்பானது கிழக்குக் காற்று, பேற்குக்காற்று என்னும் பொருள் படும் ஈஸ்ட் விண்ட் வெஸ்ட் விண்ட் (East Wind West Wind) என்பதாகும். ஆனால் 1931ல் எழுதிய த குட் எர்த் (The Good Earth) (நல்லுலகம்) என்னும் கதையே மிகப்புகழ் வாய்ந்தது. இவருடைய படைப்புகளிலேயே இதுவே தலைசிறந்ததாகக் கருத்தப்படுகின்றது. இக்கதையின் பின்னணி சீனாவில் நிகழ்வதாய் அமைந்துள்ளது. வாங் லுங் என்னும் உழவாளியைப் பற்றியது. வாங் லுங் அவர்களுக்கு மண்மீது இருந்த அன்பு பற்றியும், அவர் எவ்வாறு கடும் பஞ்சம் முதலிய இடர்ப்பாடுகளில் உழன்று பின் மீண்டுவருகிறார் என்பதைப் பற்றியும் மிக அழகாக எழுதியுள்ளார். இக்கதைக்காக பெர்ல் பக் அவர்களுக்கு 1932ல் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1938ல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பெர்ல் பக் அவர்கள் மாந்த உரிமைகளைக் காப்பது பற்றி மிகவும் உணர்வெழுச்சியுடன் பணியாற்றினார். (வளரும்). பேரேரிகள் உலகில் உள்ள மிகப்பெரிய ஏரிகள் பேரேரிகள் எனப்படுவன. இவற்றுள் அமெரிக்கப் பேரேரிகள், ஆப்பிரிக்க பேரேரிகள் முக்கியமானவை ஆகும். அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகள் பைக்கால் ஏரி பைக்கால் ஏரி (; , "Baygal nuur" சொற்பொருள் விளக்கம், மங்கோலிய மொழியில், "இயற்கை ஏரி" ) என்பது உருசியாவின் (ரஷ்யாவின்) தென் சைபீரியாவில் இர்கூத்க்க் மாகாணத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெரிய ஏரி) ஆகும். இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமான ஏரி. இதன் ஆழம் , மிக அதிகளவு 23,615.39 கிமீ 3 (5,670 cu mi) தூய நீரும் கொண்ட ஏரி இதுவே. இது உலகில் உள்ள ஏரிகள் யாவிலும் தெளிவான, உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும். இது - 25 மில்லியன் ஆண்டுகள பழமையானதாக கருதப்படுகிறது. இது பரப்பளவில் உலகின் ஏழாவது மிகப் பெரிய ஏரியாக உள்ளது. உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள தூய்மையான நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. உருசியாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் 1996இல் உலக பாரம்பரியக் களம் என்று அறிவித்து பாதுகாக்கப்படுகின்றது. . பைக்கால் ஏரியில் உள்ள நீரின் அளவானது அமெரிக்காவில் உள்ள ஐந்து பேரேரிகளில் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் அதிகமானது, ஆனால் அமெரிக்கப் பேரேரிகளின் ஆழம் குறைவானதால், அமெரிக்கப் பேரேரிகளை ஒப்பிடும்பொழுது பைக்கால் ஏரியின் நீர்ப்பரப்பின் அளவு குறைவு. பைக்கால் ஏரியானது 636 கிலோமீட்டர் நீளமும், அதிக அளவாக 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 31,494 சதுர கிலோ மீட்டர் கொண்டது. பெரிதும் சிறிதுமாய் சுமார் 300 ஆறுகள் இவ்வேரிக்கு நீர் கொண்டு வருகின்றன. இவற்றுள் ஆறு பெரிய ஆறுகள் குறிப்பிடத்தக்கன. அவையாவன: சிக்கோய் ("Chikoy"), கில்லோ ("Khiloh"), உடா ("Uda"), பார்குசின் ("Barguzin") வட அங்காரா ("Upper Angara"). இவ்வேரியில் சுமார் 22 சிறு தீவுகளும் உண்டு. இத்தீவுகளுள் பெரியது "ஒல்க்கோன்" என்னும் தீவு ஆகும். இத்தீவு 72 கி.மீ நீளம் கொண்டதாகும். பைக்கால் பேரேரி சுமார் 25-30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. டாங்கனிக்கா ஏரி போன்று பைக்கால் ஏரியின் 31,722 (12,248 சதுர மைல்) பரப்பு ஒரு நீண்ட பிறை வடிவம் கொண்ட, பண்டைய பிளவுப்பள்ளதாக்கால் உருவானது. பைக்காலில் , இவ்வேரியில் வாழும் உயிரினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. இங்குள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்க்கு மேல் வேறெங்கும் காண இயலாதன. இப் பேரேரியில் 1085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி இனங்களும் 1550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாக அறிந்துள்ளனர்.மேலும் இந்த ஏரியின் கிழக்குப் பகுதியானது பர்யாட் பழங்குடியினரின் வாழிடமாக உள்ளது, இவர்கள் ஆடுகள், ஒட்டகங்கள், கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கின்றனர். மிகப்பழைய ஏரியாகையால் உயிரின வளர்ச்சியின் வரலாற்றை அறிய பெருந்துணையாய் இருப்பது என்று பேணப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்ட. இப்பகுதியில் குளிர்காலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை -19 டிகிரி செல்சியஸ் (-2 ° F),கோடையில் அதிகபட்சமாக 14° சி (57 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவுகிறது. பைக்கால் ஏரி "ஏரிகளின் மூத்த சகோதரி" என்றும் அழைக்கப்படுகிறது. பைக்கால் பகுதி, சில நேரங்களில் பைக்காலியா என அழைக்கப்படுவதுண்டு, இப்பகுதி மனித வாழ்விடத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் அறியப்பட்ட ஒரு தொல்குடியான குரிஸ்கான்கள், இரண்டு இனக்குழுக்களான புரியாட்கள் மற்றும் யக்குட்ஸ் ஆகியோரின் முன்னோடியாக அறியப்படுகின்றனர். 1956 ல் அங்காரா (Angara) நதியின் இர்குட்ஸ்க் அணை உடைப்பின் மூலம் 1.4 மீ (4.6 அடி) ஏரியின் மட்டம் உயர்த்தது. ரயில்வே கட்டப்பட்ட போது ட்ரிசென்கோ (f.k.Drizhenko) தலைமையில் ஒரு பெரிய ஏரிப்படுகை நீரின் புவியியல் ஆய்வு மூலம் முதல் விரிவான எல்லைக்கோட்டு வரைபடம் உறுவாக்கப்பட்டது. ஜூலை 2008 ல், ரஷ்யா தனது தனிப்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய புவியியல் மற்றும் உயிரியல் சோதனைகள் நடத்த பைக்கால் ஏரியில் 1,592 மீ (5,223 அடி) ஆழத்தில் இறங்க, மீர்-1 மற்றும் மீர்-2 என்ற இரண்டு சிறிய நீர்மூழ்கிகள் அனுப்பப்பட்டது. உண்மையில் வெற்றிகரமான அறிக்கை எனினும், அவர்களின் 1.580 மீ (5,180 அடி) ஆழத்தையே அடைந்தனர், ஆனால் அதிகபட்ச நீர் ஆழத்தை அடையும் உலக சாதனையை நிகழ்த்த இயலவில்லை. அந்த சாதனையை தற்போது 1,637 மீ (5371அடி) வரை சென்று ரஷியன் விஞ்ஞானி அனடோலி சாகல்விச் அடைந்தார். 1966 ல் கட்டப்பட்ட பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலையானது குளோரின் கொண்டு காகித வெளுக்கும் கழிவுகளை நேரடியாக பைக்கால் கரையில் கொட்டியதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது பிறகு தொழில் நஷ்டம் காரணமாக 2008 நவம்பரில் மூடப்பட்டது.2009 இல் மார்ச் மாதம் ஆலை உரிமையாளர் காகித ஆலை மீண்டும் இயங்குவதாக அறிவித்தது இதற்க்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது எனினும் 2010 ஜனவரி 4 ஆம் தேதி உற்பத்தியை மீண்டும் தொடர்ந்தது. 13 ஜனவரி 2010 ல் அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு சிறிய நீர்மூழ்கி இருந்து ஏரியை பார்வையிட்டு பைக்கால் நல்ல நிலையில் உள்ளது என அறிவித்தார். ரஷிய அரசு எண்ணெய் குழாய்கள் நிறுவனமான ட்ரான்ஸ்னெஃப்ட்(Transneft) ஏரி கரையில் 800 மீட்டர் ( 2,600 அடி ) அழத்தில் தீவிர நிலஅதிர்வு செயல்பாட்டு அபாயம் உள்ள பகுதியில் ஒரு எண்ணெய் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதற்க்கு ரஷ்யாவில் சுற்று சூழல் ஆர்வலர்கள்,பைக்கால் குழாய் எதிர்ப்பு குழுவினர் மற்றும் உள்ளூர் குடிமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எண்ணெய் கசிவு சுற்றுசூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர்.ரஷியன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இது போன்ற சுற்று சூழல் ஆபத்துக்களை தவிர்க்க மாற்று வழியில் 40 கிலோமீட்டர் வடக்கில் ட்ரான்ஸ்னெஃப்ட் திட்டத்தை மாற்ற உத்தரவிட்டார். வேலை ஜனாதிபதி புட்டினின் ஒப்புதல் பெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு பைக்கால் ஏரியின் மாற்று பாதையில் இருந்து குழாயின் கட்டுமானம் தொடங்கியது. 2006 இல் , ரஷியன் அரசாங்கம் ஏரியின் கரையில் இருந்து 95 கி.மீ. ( 59 மைல்) தூரத்தில் அங்ரஸ்க் நகரில் ஏற்கனவே உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் சர்வதேச யுரேனியம் செறிவூட்டல் மையம் கட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தது.எனினும் எதிர்ப்பாளர்கள் அந்த பகுதியில் இது ஒரு பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனவே இத்திட்டதை மறுபரிசீலனை செய்ய அரசை வலியுறுத்தி வருகின்றனர். செறிவூட்டலின் பின்னர் ,பெறப்பட்ட கதிரியக்க பொருள் மட்டும் 10 சதவிகித யுரேனியம் மட்டுமே சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும், மீதமுள்ள 90 சதவீத யுரேனியம் பைக்கால் ஏரியின் சேமிப்பு பகுதியில் விட்டுவைக்கப்படும். http://www.lakebaikal.org/ http://www.britannica.com/EBchecked/topic/49177/Lake-Baikal மீனவர் தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.) , தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும். தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின் படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும். தமிழ்நாட்டின் கடலோர நீளம்: கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அமெரிக்கப் பேரேரிகள் அமெரிக்கப் பேரேரிகள் என்பன வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஐந்து மிகப்பெரிய நன்னீர் ஏரிகளைக் குறிக்கும். இது அட்லாண்டிக் பெருங்கடலோடு செயிண்ட் லாரன்ஸ் ஆற்றின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. நில உலகில் உள்ள நன்னீர் ஏரிகள் யாவற்றினும் பரப்பளவால் மிகப்பெரிய ஏரிக் கூட்டம் இவையே. செயற்கைத் துணைக்கோள் (செயற்கைமதி) வழி பெற்ற ஒளிப்படத்தில் இவ்வேரிகளின் அமைப்பைப் பார்க்கலாம். இவை, 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உறைபனிக் காலத்தின் இறுதியில் இப் பேரேரிகள் உருவாயின, பனிப்பாறைகள் நகரும்போது அதோடு நிலப்பகுதியும் அரிக்கப்பட்டு ஆழாமான நிலப்பகுதி உருவாகி இப்பள்ளங்களில் பனிப் படலங்கள் உருகிய நீர் நிரப்பப்பட்டு உருவானது. இந்த ஏரிகள் நீர் போக்குவரத்து, குடிபெயர்வு போன்றவற்றிற்கு பெருமளவில் ஆதாரமாக உள்ளது. இதனால் இந்தப் பகுதி வர்த்தகத்தில் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. 1909ன் எல்லை-நீர் ஒப்பந்தப்படி இதன் எல்லை நெடுகிலும் வலுவூட்டல்கள் அல்லது போர்க் கப்பல்கள் ஆக்கிரமிப்புக்கள் இருக்காது என ஒத்துக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஏரிகள் பெருமளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இடமாக உள்ளன. வர்த்தகத்தின் காரணமாக இப்பகுதியில் பல ஆக்கிரமிப்பு உயிரினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் சில பிராந்தியத்தின் பல்லுயிரியலை அச்சுறுத்துகின்றன. அந்த 5 ஏரிகளின் பெயர் எர்ஐ, ஹியூரோன்ஸ், மிச்சிகன், ஒண்டாரியோ, சுப்பீரியர் என்பன ஆகும். இந்த ஏரிகளின் நடுவே சுமார் 35,000 தீவுகள் அமைதுள்ளன. இதுமட்டுமல்லாது பல ஆயிரம் சிறிய ஏரிகளும் உள்ளன, இவை பெரும்பாலும் "நிலப்பகுதி ஏரிகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஹியூரான் ஏரியில் உள்ள மானிட்டோலின் தீவு உலகில் உள்ள உட்பகுதித் தீவுகளிள் யாவற்றினும் மிகப்பெரியதாகும்.  இந்த ஏரிகளின் கடல் போன்ற பண்புகள் காரணமாக (சுழலும் அலைகள், நீடித்த காற்று, வலுவான நீரோட்டங்கள், பெரும் ஆழம், தொலைதூர எல்லைகள்), ஐந்து பெரிய ஏரிகளும் நீண்ட காலமாக உள்நாட்டு கடல் என குறிப்பிடப்படுகின்றன. சுப்பீரியர் ஏரி பரப்பளவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும், மிச்சிகன் ஏரி என்பது ஒரே நாட்டு எல்லைக்குள் இருக்கும் ஏரிகளில் மிகப்பெரிய ஏரி ஆகும்.   கிரேட் ஏரியின் தென் பாதி பகுதியானது பெரிய ஏரி மெகாலோபோலிசின் எல்லையாக உள்ளது. உலகில் உள்ள நன்னீரில் சுமார் 21% இந்த ஐம்பெரும் ஏரிகளில் உள்ளது இந்த ஏரிகளின் மொத்த பரப்பளவு 94,250 சதுர மைல்கள் (244,106 கிமீ 2), மற்றும் மொத்த அளவு (குறைந்த நீர் தரவரிசையில் அளவிடப்படுகிறது) 5,439 கன மைல் (22,671 கிமீ 3). அதாவது 22.81 குவாட்ரில்லியன் லீட்டர் நீர் ஆகும். இவ் வேரிகளில் உள்ள நீரை அமெரிக்காவில் தொடர்ச்சியாய் உள்ள 48 மாநிலங்களில் ஊற்றினால் 2.9 மிட்டர் உயரம் (9.5 அடி உயரம்) நீர் நிற்கும் என்று கூறலாம். ஐந்து ஏரிகளின் மொத்தப் பரப்பு 244,100 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப் பரப்பளவானது அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட், ரோடே ஐலண்ட், மாசாச்சுசெட், வெர்மாண்ட் மற்றும் நியூ ஹாம்ஷயர் ஆகிய மாநிலங்களின் மொத்தப் பரப்பை விட அதிகமாகும்.மேலும் இந்த ஐந்து ஏரிகளின் பரப்பளவு ஐக்கிய நாடுகளின் மொத்த பரப்பளவுக்கு இணையானது. பேரேரிகள் பகுதியில் இந்த ஐந்து பெரிய ஏரிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு ஏரிகளும் உள்ளன. இந்த ஐந்து பெரிய ஏரிகளும் தனித்தனிப் பகுதிகளில் இருந்தாலும் இவை நீர்வழிகளால் இணைந்திருக்கின்றன. சுப்பீரியர் ஏரியில் இருந்து நீர் உரான் மற்றும் மிச்சிகன் ஏரிக்கும் தெற்கில் ஏரீ ஏரிக்கும் பின்னர் கடைசியாக வடக்கில் ஒண்ட்டாரியோ ஏரிக்கும் செல்கிறது. இந்த ஐந்து ஏரிகளுள் மிச்சிகன் ஏரி மட்டுமே ஐக்கிய அமெரிக்காவுக்குள் முழுவதுமாக உள்ளது. மற்ற நான்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொதுவான எல்லைகளாக உள்ளன. இந்த ஏரிகள் வட அமெரிக்காவின் கிழக்கு-மைய உள்பகுதியை அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கும் ஒரு சங்கிலி போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. எர்ஐ பழங்குடி, இரோகோயியன் வார்த்தை எர்ஐகோனின் ஒரு சுருக்கப்பட்ட வடிவம் ஆகும். வெய்ன்டாட் அல்லது ஹியூரோன்ஸ் என்பது இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு பிரஞ்சு கண்டுபிடிப்பாளர்கள் வைத்த பெயர் ஓஜிபவா வார்த்தையான மிக்சிகாமியிலிருந்து (பெரிய நீர் அல்லது பெரிய ஏரி) இருந்து வந்தது. பளபளப்பான கடல் என பொருட்படும் வையான்டட் வார்த்தையான ஆண்டடரியோல் இருந்து வந்தது பிரஞ்சு கால அரசுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பான சுப்பீரியர் ஆகும். பேரேரிகளின் வயது இன்னும் உறுதியாக அறியப்படவில்லை.7,000 முதல் 32,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.தண்ணீர், 14,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி விலகும்போது நிரம்பத் தொடங்கியது. பொதுவாக ஏரி எர்ஐ 7,000 ஆண்டுகளுக்கு முன்பும், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒண்டாரியோ ஏரியும் அது அதன் தற்போதைய நிலையை அடைந்தது.மற்றும் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹியூரோன்ஸ், மிச்சிகன், மற்றும் சுப்பீரியர் ஏரிகள் உருவானது. வரலாற்று ரீதியாக,பேரேரிகள் பல்வேறு வன சுற்றுப்புறப்ப்றத்தால் சூழப்பட்டுள்ளது.தற்போது நகரமயமாக்கல், மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு எற்றார் போல் அதன் நிலை மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுப்பீரியர் ஏரியின் கரைகளில் 91% காட்டுப்பகுதியாக இருந்தது.ஹியூரோன்ஸ் ஏரி 68%, ஒண்டாரியோ ஏரி 49%, மிச்சிகன் ஏரியில் 41%, மற்றும் எர்ஐ ஏரி 21% என நகரமயமாக்கலால் மிக சுருங்கிவருகின்ட்றது.இந்த காடுகளில் குறைந்தது 13 வன உயிரினங்கள் ஐரோப்பியர்கள் வருகைக்கு பின் இருந்து அழிந்து விட்டது அல்லது ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையில், கவர்ச்சியான மற்றும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை அறியப்பட்டுள்ளன. மாசுபடுதலால் இங்குள்ள நீர்வாழ் உணவு சங்கிலிகள், மீன் மக்கள், மற்றும் மனித உடல் பாதிக்கப்பட்டுள்ளது. பேரேரிகளின் சூழலியல் மேலாண்மை மேம்பாடு 1960 மற்றும் 1970 களில் தொடங்கியது. 1960 களில், கிளவ்லேண்ட், ஓஹியோவில் கைஹோஹா நதி மீது எண்ணெய்,இரசாயனங்கள், மற்றும் குப்பை கலவையை கொண்ட ஒரு எரியக்கூடிய பழுப்பு படலம் கலந்தது. 1972 ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் முதல் அமெரிக்க சுத்தமான நீர் சட்டம் கையெழுத்திடப்பட்டது.இச்சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக கனடா மற்றும் அமெரிக்கா இணைந்து 1980ல் இரு தேசிய கிரேட் லேக்ஸ் நீர் தர ஒப்பந்தம் மூலம் தொழில்துறை மற்றும் நகராட்சி மாசு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இப்பேரேரிகள் பெருமளவிலான சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கிய நீர்வழிகளாக உள்ளன. பேரேரிகள் நீர்வழி என்பது இந்த ஏரிகள் அனைத்தையும் இணைக்கிறது. சிறிய அளவிலான செயிண்ட் லாரன்சு கடல்வழியானது இவ் ஏரிகளை அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது. 2002-ஆம் அண்டில் 162 மில்லியன் டன் சரக்கானது இந்த ஏரிகளின் வழியே கொண்டு செல்லப்பட்டது. இரும்புத்தாது, உணவு தானியங்கள், பொட்டாஷ் ஆகியனவே அதிகளவு கொண்டசெல்லப்பட்ட பொருட்களாகும். சிறிதளவு நீர்மங்களும் பெட்டகங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இவ் ஏரிகள் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவையை தீர்க்கின்றன. இந்நீர் ஏரிகளை ஒட்டியுள்ள மாநில அரசுகள் மற்றும் நகராட்சிகள் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ள தீர்மானங்களின் படி பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இந்த ஏரிகள் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றன. படகோட்டுதல், சொகுசுக் கப்பல் பயணம் முதலியன முக்கியமானவை. பேரேரிகள் மிதிவண்டிச் சுற்றுலா என்பது ஐந்து ஏரிகளையும் இணைக்கும் அழகிய காட்சிகள் நிறைந்த சாலைகளின் வழியாகச் செல்வதாகும். செப்டம்பர் 24 நுளம்பு நுளம்பு ("Abricta curvicosta", பொதுவாக "floury baker", அல்லது "floury miller") என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் கொசுவைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் ("semantics") என்கின்றனர். உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீட்டில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம். அ. இராகவன் சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் (1902 - 1981), நுண்கலை ஆய்வாளர் வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம், இஸ்லாமிய மக்கள் மீதான ஈடுபாடு, பெண் கல்விக்கான பள்ளிகள் ஆகியவற்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்; சிப்பிகள், சங்குகள், படிமங்கள், விளக்குகள், இசை கருவிகள், கப்பல் தொடர்பான பொருட்கள் மற்றும் வரைபடங்கள், ஆடைகள், மூலிகைகள் இவை தொடர்பான விவரங்கள், படங்கள், பொருட்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்; இராகவன், தமிழ்நாட்டில் மிக அதிகமாக பழங்காசுகள் சேகரித்தவர். கவிராயர் குடும்பத்தில் 1902 ஏப்ரல் 22 அன்று பிறந்தவர் இராகவன். ஆசிரியப் பயிற்சி பெற்று 1924 முதல் 1930 வரை சாத்தான்குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலங்களில் பெரியார், கா. சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.க., பா. தாவூத்ஷா ஆகியவர்களோடு இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டார். 1930-இல் ஈரோட்டில் நிறுவப்பெற்ற பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரது மேற்பார்வையில் குடியரசுப் பதிப்பகம் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. 1935இல் இராகவனது "பெண்ணுரிமையும் மதமும்" என்ற சிறு நூல் வெளிவந்தது. மதங்கள், பெண்களை எவ்வாறு நடத்துகின்றன என்ற விவாதத்தை முதன்முதலில் இந்நூல் முன் வைத்தது. மறுமணம், காதல்மணம், சொத்துரிமை, விவாகரத்து, குழந்தைமண மறுப்பு போன்றவை குறித்தும் இந்நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். இராகவனது "கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?" என்ற நூலில் "கடவுளர் கதைகள்" எவ்வகையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புகின்றன என்பது குறித்து கூறியுள்ளார். இராகவன் எழுதப்பட்ட நூல்கள் தமிழர்களின் புழங்குபொருள் பண்பாட்டை அறிவதற்கு உதவுகின்றன. தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, தொல்பொருள் ஆய்வு வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்து விரிவாக நூல்கள் எழுதியவர். கலைத்துறையில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நூல்களை எழுதியவர். உறுகுணை பல்கலைக்கழகம் உறுகுணை பல்கலைக்கழகம் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலியிலும் அமைந்துள்ளது. 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது 7 பீடங்களைக் கொண்டுள்ளது. தென்னிலங்கை மக்களின் அபிலாசையான தெற்கில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக இலங்கை அதிபரின் ஆணைப்படி செப்தெம்பர் 1, 1978 இல் தொடங்கப்பட்டது. இது இன்றுவரை 10,000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகள், 75 மேற்பட்ட பட்டப்பின் பட்டதாரிகளை உருவாக்கியதோடு தற்போது பல்வேறு துறைகளில் 100இற்கு மேற்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களையும் கொண்டுள்ளது. இது இலங்கையில் பெரிய பேராதனைப் பல்கலைக் கழகம் போன்று 7 பீடங்களைக் கொண்டுள்ளது. இதன் பிரதான வளாகமானது மாத்தறை நகரின் வெல்லமடமவில் அமைந்துள்ளது. இதன் விவசாய பீடம் கம்புறுப்பிட்டியில் அமைந்துள்ளது பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் காலியின் கராப்பிட்டிய, மாப்பலான ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் நிருவாகத் தலைநகர் ஸ்ரீ ஜெயவர்தனபுரத்திற்கு அருகில் நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1873 இல் கிக்கடுவை சிறீ சுமங்கள தேரர் வித்தியோதய என்ற பிரிவெனாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1958 இல் இலங்கை வித்தியோதயா பல்கலைக்கழகம் என பெயர்மாற்றஞ் செய்யப்பட்டது. 1978 இல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் என்ற தற்போதைய பெயர் இடப்பட்டது. சனவரி 19 எனிக்மா (இசைத் தொகுப்பு) எனிக்மா என்றழைக்கப்பட்ட குழுவின் இசைத் தொகுப்புக்கள் பிரபல இசையமைப்பாளர்களான மைக்கேல் கிரெது இவர்தம் மனைவி சாண்ரா கிரெது மற்றும் இவரது நண்பர்களான டேவிட் பேர்ஸ்டீன்,பிராங் பீட்டர்சன் போன்றவர்களின் கூட்டு முயற்சியில் 1990 களில் வெளிவந்தது.இதன் இசை வடிவத்தினையும் தயாரிப்பு நிர்வாகங்களினையும் மைகல் கிரெதுவும் ஏற்றுக்கொண்டனர். சாண்ரா இவ்விசைத் தொகுப்புகளில் வரும் பல பாடல்களைப் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாண்ரா குழு என்ற குழுவில் இருவரும் இதற்கு முந்தைய காலங்களில் பங்காற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எனிக்மா இசைத்தொகுப்புகளில் இதுவரை ஜந்து இசைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன மேலும் ஆறாவது இசைத் தொகுப்பு 22,செப்டம்பர் மாசம் 2006 இல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 1970 ஆம் ஆண்டுகளிலிருந்து இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுவந்த மைக்கேல் கிரெது தனது வெகுநாள் கனவான புதிய வகியிலான இசையமைப்பொன்றினை 1990 ஆம் ஆண்டில் உருவாக்கத்திட்டமிட்டார் அத்திட்டன்பேரில் வெளிவந்த இவ்விசைத்தொகுப்பு இதுவரை காலங்களும் அவர் வெளியிட்டிருந்து இசைத்தொகுப்புக்களின் சாதனைகளை முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜரோப்பிய நடன இசை,உலக கலாச்சார இசை வடிவங்கள் மற்றும் புதிய கால இசை போன்ற பல வகைகளின் கலவைகளினால் உருவாக்கப்பெற்ற எனிக்மா இசைத்தொகுப்பு உலகின் பல பாகங்களில் உள்ள மக்களாலும் ரசித்துக் கேட்கப்பட்டது பல விருதுகளையும் அள்ளிச் சென்றது இவ்விசைத்தொகுப்புகள். எனிக்மா இசைத்தொகுப்புகளின் பல பாடல்கள் பலதரப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள்,திரைப்படங்கள் மற்றும் அதன் முடிவுகளின் பயன்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தரவு தரவுகள் (Data)என்பன பயனுடையதாகக் கருதப்படும் குறிப்புகளாகும். அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். ஏதொன்றையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் எனில் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவைகள் "தரவுகள்" எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள், கண்டுபிடிப்புகள் முதலியன பெற இயலும். இலத்தீன் மொழியில் "dare" (தர்) எனில் "தா" என்று பொருள், அதன் வழி "தரப்பட்டது" என்னும் பொருள் படும் datum என்னும் சொல் 2,300 ஆண்டுகளாக மேற்குலகில் பயன்பாட்டில் உள்ளது. கி.மு. 300ல் யூக்ளிட் என்னும் கிரேக்க அறிஞர் ஆக்கிய நூல்களில் ஒன்று "Dedomena டெடோமெனா" (இலத்தீனில் Data) என்பதாகும். வடிவ கணிதம் போன்ற துறைகளில் தரப்பட்ட செய்திகளை data (தரவுகள்) என்று குறிப்பது வழக்கம். தரப்பட்டதை சரியானது, உண்மையானது என்று கொள்வதும் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. இன்று கணினியியல், அறிவியல், பொறியியல், மருத்துவ இயல், போன்ற அறிவியல் துறைகளில், எண்கள், சொற்கள், அளவீடுகள் என பலவும் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இலத்தீனில் இருந்து பெற்ற இன்றைய ஆங்கிலச் சொல்லாகப் பயன் படும் data (டேட்டா) என்பது பன்மை, datum (டேட்டம்) என்பது ஒருமை. எனினும் ஒற்றைக் குறிப்புதனையும் data என்று சொல்வது் இன்று சரியென ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. தமிழில் தரவு, தரவுகள் என வழங்கப்படும். செப்டம்பர் 2006 செப்டம்பர் 2006 ("September 2006"), 2006 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் இந்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட குழுவொன்றினால் ஆராயப்பட்டு பின்னர் ஆஸ்கார் விருது பெறத் தகுதி பெற்ற திரைப்படங்கள் வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படங்களிற்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிடம் பரிந்துரைக்கப்படுகின்றன. திருக்கை திருக்கை ("Batoidea") என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை மீன் என்று அழைப்பர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக சுறா மீனைப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் (நீண்மையுடைய) குருத்தெலும்பு கொண்டது. இவற்றுள் சில மின்சாரம் பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லவை இவை மின்திருக்கை எனப்படுகின்றன. சில திருக்கைகள் மாந்தனைக் கூட கொல்லும் அளவுக்கு வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி தமிழில் நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று உயிரியல் அறிஞர்கள் அண்ணளவாக 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர். மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் (உகைத்துச் செல்லும்) தன்மை கொண்டது. பிற உயிரினங்களை வேட்டையாடும் மீன் இனங்களில் ஒன்றாகக் திருக்கைகள் கருதப்படுகின்றன. திருக்கை தான் செல்ல நினைக்கும் இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது நீண்ட வாலை பயன்படுத்துகிறது. திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள். திருக்கையின் வால் உடலைவிட நீளமாகவும் இருக்கும். அந்த வாலில் மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். நம் கையில் வைத்து இழுத்தால் அறுத்துவிடும். ஆகவே அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் சிலர். கைப்பிடியில் பொருத்திவைத்து சவுக்காகப் பயன்படுத்தினார்கள் என்றும் கூறுவார்கள். அதை வைத்து அடிக்கும்போது தோலையும் சதையையும் பிய்த்துக்கொண்டு வரும். இந்தச் சவுக்கைத் 'திருக்கை வார்' என்றும் சொல்வார்கள். மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடாவில் ஆர்வத்தைத்தூண்டும் ஓர் உயிரினமாக கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இவை உலா வருவதைக் காணலாம். உடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடும். கடல் அடியில் இருந்து பெருகும் உயிரினங்களை கட்டுப்படுத்துவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது. மன்னார் வளைகுடாவில் முள், வவ்வால், புள்ளி ஆகிய மூன்று வகை திருக்கைகள் உள்ளன. இவை, மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகிறது. இதை பிடிக்க தடை உள்ளது. இவற்றை பிடிப்பவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு. இறால்களுக்கு விரிக்கப்படும் மடிவலைகளிலும், ஆழமான கடலில் நடக்கும் மீன்பிடியிலும் திருக்கைகள் அதிகம் பிடிபடுகின்றன. தமிழில் கூறப்பட்டுள்ள திருக்கைகள் வகைகளில் சில: 2014 பிப்ரவரி மாதம் கோடியக்கரை கடலில் 1.75 டன் எடை கொண்ட பெருந்திருக்கையை மீனவர்கள் பிடித்துள்ளனர். உடை மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை () ("clothing", "clothes", "attire") எனலாம். சில வேளைகளில், காலணிகளும், அணிகலன்களும் உடை என வகைப்படுத்தப்படுவது உண்டு. உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய இரண்டும் உணவு, உறையுள் என்பன. உடை உடுக்கப்படுவதற்கு தொழிற்பாட்டுக் காரணிகளும், சமூகக் காரணிகளும் உண்டு. உடை உடலை வெளிச் சூழலில் இருந்து பாதுகாக்கின்றது. வெளி மாசுகளில் இருந்தும், காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றில் இருந்தும் உடலைக் காப்பாற்றுவதில் உடைக்கு முக்கிய பங்கு உண்டு.கொசு போன்ற பூச்சிக் கடிகளில் இருந்தும், கேடு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களில் இருந்தும் உடை உடலை காக்கின்றது. கரடுமுரடான மேற்பரப்புகளால் உடலில் காயங்கள் ஏற்படாதிருக்க, தோலுக்கும் அத்தகைய மேற்பரப்புக்களுக்கும் இடையே ஒரு தடுப்பாகவும் உடை செயல்படுகின்றது. கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதையும் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் உடை, புறவூதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்தும் மனிதருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது. தீ, ஆயுதங்கள் போன்றவற்றில் இருந்தும், கதிர்வீச்சு போன்றவற்றிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பதற்காக சிறப்பு உடைகளும் உள்ளன. உடை அணியும் வழக்கம் எப்போது தோன்றியது என்பதை அறிந்து கொள்வது கடினமானது. எனினும் மறைமுகமான வழிகளில், எடுத்துக்காட்டாகப் பேன் வகைகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம், மனிதர் ஏறத்தாழ 107,000 ஆண்டுகளுக்கு முன் உடை அணியத் தொடங்கியிருக்கலாம் என்கின்ற கருத்தைச் சிலர் முன்வைத்துள்ளனர், உடையின் முதன்மைச் செயற்பாடு, அதை அணிபவருக்கு உடல் வசதியைக் கொடுப்பது ஆகும். வெப்பமான காலநிலைகளில் சூரிய வெப்பத்திலிருந்தும், காற்றில் இருந்தும் உடலைப் பாதுகாக்க வேண்டும். குளிரான காலநிலைகளில் உடையின் வெப்பக் காப்பு இயல்பு முக்கியமானது. இதன்மூலம், உடல், வெப்பத்தைச் சூழலுக்கு இழப்பதை உடை தடுக்க முடியும். உறையுள் (வீடு), உடையின் தேவையைப் பெருமளவு குறைக்கிறது. இதனாலேயே வீட்டுக்குள் நுழையும்போது, மேலாடை, தொப்பி, கையுறைகள். காலுறைகள், காலணிகள் போன்றவற்றைக் கழற்றிவிட முடிகிறது. பருவகாலங்களையும், புவியியல் அமைவிடங்களையும் பொறுத்து உடையின் தன்மைகள் மாறுகின்றன. சூடான பருவங்களிலும், வெப்பப் பகுதிகளிலும் மெல்லியனவும், குறைந்த அடுக்குகளைக் கொண்டனவுமான உடைகள் பயன்படுகின்றன. உடை பல வகையான சமூக, பண்பாட்டுச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. தனிமனித வேறுபாடுகள், தொழில் அடைப்படையிலான வேறுபாடுகள், பால் அடிப்படையிலான வேறுபாடுகள், சமூகத் தகுதி, அதிகார நிலை என்பவற்றைப் பொறுத்து வெவ்வேறு வகையான உடைகள் அணியப்படுகின்றன. சமுதாயங்களில் உடை தொடர்பான நெறிமுறைகள் அடக்கம், வெட்கம், சமயம், பால், சமூகத் தகுதி போன்ற அம்சங்கள் குறித்த அச்சமூகத்தின் உலக நோக்கின் வெளிப்பாடாக அமைகின்றன. இவை தவிர, அலங்கார அணியாகவும், தனிப்பட்ட ரசனைகளுக்காகவும் உடைகளை அணிகின்றனர். இவையும் உடைகள் அணிவதன் முக்கிய நோக்கங்களுள் அடங்குகின்றன. உடையற்ற நிர்வாணமான மனிதன் வெட்கம் அடைவதாகவும், உடை வெட்கத்தை நீக்குவதாகவும் கருதப்படுகின்றது. இந்தக் கருத்தை கிறிஸ்தவ தொன்மவியலில் காணலாம். ஏவாள் கடவுளின் சொல்லைக் கேளாமல் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்டதால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வெட்கம் வந்து தமது பாலுறுப்புகளை இலைகளால் மறைத்தனர் என்று கிறித்தவ வேதம் கூறுகிறது. பாலியல் உறுப்புக்களை மறைப்பது நற்பழக்கமாக அனேக சமூகங்களினால் கருதப்படுகின்றது. உடை பாலியல் நோக்கில் மனிதன் தூண்டப்படாமல் இருப்பதற்கு உதவுவதாகவும் கருதப்படுகின்றது. சில முஸ்லீம் பெண்கள் முகம் உட்பட உடலை மறைத்து உடையணிவதற்கு ஆண்களை பாலியல் உணர்ச்சிக்கு உந்தாமல் தடுப்பதற்கே எனப்படுகின்றது. சூழல் இடர்களிலிருந்து காத்துக்கொள்வதற்குத் தேவையான உடைகளை உருவாக்குவதில் மனிதர் தமது கண்டுபிடிப்புத் திறனைப் பெருமளவில் வெளிப்படுத்தி உள்ளனர். விண்வெளி உடை, காற்றுப்பதன உடை, போர்க் கவசம், நீர்மூழ்கு உடை, நீச்சல் உடை, உயர் கட்புலப்பாட்டு உடை போன்ற பல்வேறு வகையான உடைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள். உடைகள், அவற்றின் செயற்படுதன்மை என்பவை தொடர்பான கட்டுரைகள் 19 நூற்றாண்டில் இருந்தே காணப்பட்டாலும், உளம்சார் சமூகவியல், உடற்றொழிலியல், மேலும் இது போன்ற துறைகளில் அறிவியல் அடைப்படையிலான ஆய்வுகள் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்தே தொடங்குகின்றன. 1930 ஆம் ஆண்டில் வெளியான புளூகெல் என்பவரின் "உடை உளவியல்" "(Psychology of Clothes)", 1949 ஆம் ஆண்டில் வெளியான நியூபர்க்கின் "வெப்பச்சீரமைப்பு உடற்றொழிலியலும் உடை அறிவியலும்" "(Physiology of Heat Regulation and The Science of Clothing)" போன்ற நூல்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். 1968 ஆம் ஆண்டளவில், சூழல்சார் உடற்றொழிலியல் துறை பெருமளவு முன்னேற்றம் கண்டு விரிவடைந்த போதும், சூழல்சார் உடற்றொழிலியல் தொடர்பிலான உடை அறிவியல் போதுமான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை. அதன் பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, இது குறித்த அறிவுத் தளமும் வளர்ந்துள்ளது. எனினும், அடிப்படையான கருத்துருக்கள் மாற்றம் அடையவில்லை. உண்மையில், வெப்பச்சீரமைப்பு உடைகளை உருவாக்க முயல்பவர்கள் உட்படத் தற்கால நூலாசிரியர்கள் பலரும் இன்றும் நியூபர்க்கின் நூலையே மேற்கோள் காட்டுகின்றனர். பெரும்பாலான சமூகங்களில், உடைகளில் பால் வேறுபாடு காட்டுவது உகந்ததாகக் கருதப்படுகிறது. பாணி, நிறம், துணிவகை என்பவற்றில் இவ்வேறுபாடு வெளிப்படுகின்றது. மேலேநாட்டுச் சமூகங்களில், பாவாடை, குதி உயர்ந்த காலணிகள் போன்றவை பெண்களுக்கு மட்டுமே உரியனவாகக் கருதப்படுகின்றன. அதுபோல் ஆண்களுக்கு மட்டுமே உரியதாகக் கழுத்துப் பட்டியைக் கூறலாம். இச் சமூகங்களில் ஆண்களுக்கான உடைகள் நடைமுறைக்கு உகந்தவையாகவும், பல்வேறுபட்ட நிலைமைகளில் சிறப்பாகச் செயற்படக் கூடியனவாகவும் உள்ள அதேவேளை, பெண்களுக்கான உடைகள் பல வகைகளாகப் பெருமளவு பாணிகளில் கிடைக்கின்றன. பல வேளைகளில், ஆண்கள் திறந்த மார்புடன் இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆண்களுக்கான மரபுவழி மேல்நாட்டு உடைகளைப் பெண்கள் அணிவது தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், பெண்கள் உடைகளை ஆண்கள் அணிவது வழக்கம் இல்லை. தற்காலத் தமிழர், ஆண்களும் பெண்களும், மேல்நாட்டு உடைகளையும் அணிகின்றனர். அவ்வாறான நிலைமைகளில் மேற்குறித்தவை தமிழருக்கும் பொருந்துகின்றன. ஆனாலும் மரபு வழி உடைகளைப் பொறுத்தவரை ஆண், பெண் பாலாரிடையே பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. சேலை பெண்களுக்கு உரியது, ஆண்கள் வேட்டி உடுத்துவர். ஒரு காலத்தில் ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணிவதில்லை எனத்தெரிகிறது எனினும், தற்காலத்தில் ஆண்கள் மட்டுமே மேற்சட்டை அணியாமல் இருப்பது உண்டு. நாட்டுப்புறங்களில் பொது இடங்களில் பெருமளவு ஆண்கள் மேற்சட்டை அணியாமல் இருப்பதைக் காணலாம். உண்மையில், பல இந்துக் கோயில்களில் ஆண்கள் மேற்சட்டை அணிந்து செல்வதற்குத் தடை உள்ளது. மரபு வழி உடைகள் தற்கால நிலைமைகளில் வசதிக் குறைவானவை என்பதால், நகரப் பகுதிகளில் வசதியான பிற பண்பாட்டினர் உடைகளை அணிகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் மேல்நாட்டு உடைகளுக்கு மாறுகின்றனர். பெண்கள் மேல்நாட்டு உடைகளுடன், சுடிதார் போன்ற பிற கீழ்நாட்டு உடைகளையும் அணிகின்றனர். எனினும், மரபுவழிச் சேலைகள் இன்னும் தமிழ்ப் பெண்களிடையே பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலான பண்பாடுகளில் பெண்கள் அணியும் உடைகள் ஆண்களுடையவற்றை விடக் கவர்ச்சியாக இருப்பது வழக்கம். பெண்களுடைய உடைகளுக்கு நிறம், கோலம், பாங்கு போன்ற அம்சங்கள் தொடர்பில் தேர்வுகளுக்கு எல்லை கிடையாது. ஆனால் ஆண்கள் உடைகளுக்கு மேற்படி அம்சங்களில் தேர்வு அதிகம் இல்லை. சில சமூகங்களில் பெரும்பாலும் பெண்கள் உடை அணிவது குறித்து இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இசுலாம் மதம் சார்ந்த சமூகங்களில் பெண்கள் அணியும் உடை தொடர்பாகக் கட்டுப்பாடுகள் உண்டு. அடக்கமாக உடை அணிய வேண்டும் என்பதே அடிப்படையான நோக்கம் எனினும், வெவ்வேறு இசுலாம் சமூகக் குழுக்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில நாடுகளில் இசுலாம் மதப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது உடலின் எந்தப் பகுதியுமே வெளியே தெரியாமல் கருநிற உடையால் மூடிக் கொள்கின்றனர். சில சமூகங்களில், உடைகள், சமூகத்தில் ஒருவருடைய தரநிலையையோ, சமூகத் தகுதியையோ குறிக்கின்றன. பண்டை உரோமில், செனட்டர்கள் மட்டுமே தைரியன் ஊதா எனப்படும் சாயத்தினால் சாயமூட்டப்பட்ட உடைகளை அணிய முடியும். அவாய் சமூகத்தில் உயர்நிலைத் தலைவர்கள் மட்டுமே இறகு உடையையும், செதுக்கிய திமிங்கிலப்பல் அணியையும் அணியலாம். இந்தியாவின் தற்போதைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் திருவிதாங்கூர் அரசில் வரி செலுத்தினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலாடை அணிவதற்குத் தகுதி உடையவர்கள். சீனக் குடியரசு நிறுவப்படுவதற்கு முந்திய சீனாவில், பேரரசர் மட்டுமே மஞ்சள் நிற உடை அணிய முடியும். மக்கள் என்னென்ன உடைகளை அணியலாம் என்பது தொடர்பில் ஆக்கப்பட்ட சட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகளை மனித வரலாறு முழுவதிலும் காணலாம். தற்காலச் சமூகமும் உள் அடங்கலாக, மேற்படி சட்டங்கள் இல்லாத சமூகங்களில், கீழ்நிலைகளில் உள்ளவர்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்த உடைகளை அணிவது சமூகத் தகுதியைக் குறிப்பதாக அமைகின்றது. அத்துடன், இணைநிலையினர் அழுத்தமும் உடைத் தெரிவில் செல்வாக்குச் செலுத்துகிறது. சமயம் சார்ந்த உடைகளைத் தொழில் சார்ந்த உடைகளின் ஒரு சிறப்பு வகையாகக் கொள்ள முடியும். சில வேளைகளில் இந்த உடைகளைச் சமயக் கிரியைகளை நிகழ்த்தும்போது மட்டுமே அணிகின்றனர். எனினும், சிறப்புத் தகுதியை வெளிப்படுத்த அன்றாடம் இத்தகைய உடைகளை அணிவதும் உண்டு. சமணம் உட்பட்ட சில மதத்தவர் சமயக் கிரியைகளை நிகழ்த்தும்போது தைக்கப்படாத உடைகளையே உடுத்துகின்றனர். தைக்கப்படாத உடை, கையில் உள்ள பணி தொடர்பில், ஒருமனப்பட்டதும் முழுமையானதுமான பக்தியைக் குறிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். சில இந்துக் கோயில்களிலும், பக்தர்கள் தைத்த உடைகளான சுடிதார், காற்சட்டை போன்ற உடைகள் அணிந்து உட்செல்வதை அனுமதிப்பது இல்லை. தைக்கப்படாத சேலை, வேட்டி போன்றவற்றை மட்டுமே உடுத்த முடியும். இந்துசமயத் துறவிகளும், புத்த பிக்குகளும் தைக்கப்படாத உடைகளையே உடுத்துகின்றனர். இந்துத் துறவிகளின் உடை காவி நிறத்தில் இருப்பது வழக்கம். தற்காலத்தில் இந்துத் துறவிகள் பலர் இக் காவி நிறத்தில் வேட்டியும் தைக்கப்பட்ட மேலாடையும் அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இலங்கையில் புத்த பிக்குகளின் உடை மஞ்சள் நிறமானது. சீக்கியர்கள் தமது சமயத் தேவையின் ஒரு பகுதியாகத் தலையில் தலைப்பாகை அணிகின்றனர். முசுலிம்களும் தொழுகையின் போது தொப்பி அணிகின்றனர் அல்லது தலையை வேறு விதமாக மூடிக் கொள்கின்றனர். ஆனால், இந்துக் கோயில்கள் சிலவற்றில், குறிப்பாகத் தென்னிந்தியக் கோயில்களில் தொப்பியோ முக்காடோ அணிந்து வழிபடுவது குற்றமாகக் கருதப்படுகிறது. மனித வரலாற்றில் நீண்ட காலமாகவே சில குறிப்பிட்ட தொழில்களைச் செய்பவர்கள் இன்னின்ன மாதிரியாக உடை அணிய வேண்டும் என்ற ஏற்பாடு இருந்துள்ளது. நாட்டுக்கு நாடு, சமூகத்துக்குச் சமூகம் வேறுபாடுகள் இருந்தாலும், சமயம் சார்ந்த கிரியைகளை நடத்துவோர், போர்வீரர் போன்றோர் ஒரு குறிப்பிட்ட விதமாகவே உடைகளை அணிந்து வந்துள்ளனர். தமிழ் நாட்டிலும், சிற்பிகள், பூசகர்கள், வேறும் பிற தொழில்களைப் புரிவோர் எவ்வாறு உடை அணியவேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்கள் அத்தகைய தொழில் சார்ந்த நூல்களில் காணப்படுகின்றன. தற்காலத்தில், படைத்துறை, காவல்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு அவரவர் தரநிலையைப் பொறுத்துச் சீருடைகள் உள்ளன. இவற்றை விட வானூர்திப் பணியாளர், தொழில்நுட்பப் பணியினர்; சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், அங்காடிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணி புரிவோர், பேருந்துப் பணியாளர் எனப் பலவகைத் தொழில் புரிவோருக்கும் சீருடைகள் உள்ளன. மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்றோரும் தமது வழமையான உடைகளுக்கு மேல் சீரான மேலாடை ஒன்றை அணிகின்றனர். பல வேளைகளில் இத்தகைய சீருடைகள் அரசினாலோ, உள்ளூராட்சிச் சபைகளினாலோ கட்டாயம் ஆக்கப்படுகின்றன. ஜிஸ்மோ திட்டம் ஜிஸ்மோ திட்டமானது இணையமூடாகவும் வேறுவலையமைப்புகளூடாகவும் ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் இலவசமான மென்பொருட் தொலைபேசியாகும். ஜிஸ்மோ திட்டமானது மைக்கேல் ராபட்ஸ்சனினால் ஆரம்பிக்கப் பட்டது. இதனுடன் போட்டியிடும் ஸ்கைப் போன்றல்லாமல் ஜிஸ்மோதிட்டமானது அழைப்புக்களைக் கையாள்வதற்குத் திறந்த மூலநிரல்களைப் பாவிக்கின்றது. ஜபர் தொழில்நுட்பத்துடன் (கூகிள் டாக் இதைப் பாவிக்கின்றது). முறைகளையும் கையாள்கின்றது. எனினும் இது தனக்கேயுரிய பதிப்புரிமையுடைய மென்பொருட் பாகங்களையும் கொண்டுள்ளது. ஜிஸ்மோ கிளையண்டானது முற்றிலும் மூடியநிரலிலேயே ஆக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களிலான அரட்டை அரங்கானது ஜபர் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இதில் ஏதேனும் ஜபர் கிளையண்டில் (எடுத்துக் காட்டாக கெயிம்) ஊடாக உள்நுளையலாம். உள்நுளையும் போது பயனர் கணக்கானது username@chat.gizmoproject.com என்றவாறு அமையும். இது சோதனை முயற்சியாக பயனர்களிற்கு 60 நாடுகளிற்கு இலவச அழைப்பை ஏற்படுத்த உதவுகின்றது. இது பதிவு செய்யப் பட்ட பயனர் ஒருவரை பிறிதொரு பயனர் தொலைபேசிக்கு இலவச அழைப்பொன்றை ஏற்படுத்த முடியும். முன்தகைப்புக் காங்கிறீற்று வழமையான வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று என்பது, வலுவூட்டற் கம்பிகளை சாதாரண நிலையில், காங்கிறீற்றுக்குள் வைத்து வார்ப்புச் செய்வதை அடிப்படையாகக் கொண்டது. இங்கே, குறிப்பிட்ட காங்கிறீற்றுக் கட்டிடக் கூறுகளிலுள்ள வலுவூட்டற்கம்பிகள், சுமையேற்றப்பட்ட பின்பே விசைகளை உணரத் தொடங்குகின்றன. தூண்கள், உத்தரங்கள், தளங்கள் போன்ற கட்டடக் கூறுகளை, அவை சுமைதாங்கத் தொடங்க முன்பே வலுவூட்டற் கம்பிகளை இழுவிசைக்கு உட்படுத்தி கட்டிடக் கூறுகளில் தகைப்பை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதே முன்தகைக்கப்பட்ட காங்கிறீற்று ஆகும். முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்று மூன்று வகைகளாக உள்ளன. மாயா நாகரிகம் மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது. அப்பகுதியில் இலட்சகணக்கான மக்கள் இன்று மாயன் மொழிகளில் பேசுகின்றனர்.2005 ஆம் ஆண்டு ராபினல் அச்சி என்ற அச்சி மொழி நாடகம் யுனெஸ்கோ மூலம் பாரம்பரிய வாய்வழி காவியமாக அங்கீகரிக்கப்பட்டது. அறிஞர்கள் மாயா நாகரிகத்தின் நினைவுச்சின்ன கட்டமைப்புகளை காபன் தேதியிடல் மூலம் ஆராய்ந்த போது இவர்களின் நாகரிகமானது கி.மு. 2600 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. மீசோ அமெரிக்கன் எனும் நீண்ட எண்ணிக்கை கொண்ட மாயா நாட்காட்டியானது கி.மு. 3114 ஆகஸ்ட் 11ம் திகதியில் இருந்து தொடங்குகின்றது. மாயன்களின் குடியேற்றங்கள் பசுபிக் கடற்கரையில் உள்ள் சொகொநுஸ்கோ எனும் கடற்கரைப் பகுதியில் பகுதியில் சுமார் கி.மு. 1800 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில், உடல் உழைப்பு தேவைப்படாத வேலைகள் மற்றும் மட்பாண்ட அறிமுகம் மற்றும் களிமண் சிலைகள் நிரம்பியிருந்தன. இடைக் காலத்தில் (கி.பி.250-900) தெற்கு தாழ்நில பகுதிகளில், பெரிய அளவிலான கட்டுமான மற்றும் நகரமயமாக்கல் நடைபெற்றது. இக்காலத்தில் கல்வெட்டுகளில் பதிவு மற்றும் அறிவுசார் மற்றும் கலை வளர்ச்சியின் பொற்காலமாக இருந்தது. மேலும் இந்த காலத்தில் மாயா மக்கள் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் பெருகினர் அவர்கள் நினைவுச்சின்னங்கள் அரண்மனைகள் மற்றும் கோயில்களினை கட்டினர்.மற்றும் ஒரு விரிவான பழங்கால சித்திர எழுத்து அமைப்பை உருவாக்கினார். மாயா நாகரிகமானது மெக்சிகன் மாநிலங்களான சியாபஸ்,டபாஸ்கொ மற்றும் குய்ன்டானா ரோ, காம்பெசி மாநிலங்களிலும் இன்றைய குவாதமாலா, பெலிஸ், மேற்கு ஹோண்டுராஸ் மற்றும் வடக்கு எல் சால்வடோர் நாடுகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. "முதன்மைக் கட்டுரை : மாயர் எண் முறைமை" 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது. அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நவீன வரலாறு, தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாசாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலேயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாசார சின்னங்களாகக் காணலாம். மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர். ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம். இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். கணையாழி (இதழ்) கணையாழி (() என்னும் இதழ் 1965ல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தார். தொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார "அறிவிஜீவி"களுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது. தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன. தி. ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கணையாழி, இப்பொழுதும் தொடர்ந்து வெளிவரும் ஒரு மாதாந்த இலக்கிய இதழாகும். இப்பொழுது, தசரா அறக்கட்டளையினரால் கணையாழி வெளியிடப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளாக வெளியிடப்படாதிருந்த கணையாழி இதழ் 2011, ஏப்ரல் 14 முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. இதன் புதிய ஆசிரியர் குழுவில் ம. இராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு. ராமசுவாமி, ட்ராட்ஸ்கி மருது, கி. நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினி ட்ரெம்மல் ஆகியோர் உள்ளனர். நிறுவனர் : கி. கஸ்தூரி ரங்கன் , பதிப்பாளர்: ம. இராசேந்திரன், ஆசிரியர்: மய்திலி ராசேந்திரன், நிருவகை ஆசிரியர்: உரு. அரசவேந்தன், துணை ஆசிரியர்கள்: வேல் கண்ணன், ஜீவ கரிகாலன், ஆசிரியர் குழு: மு. ராமசாமி, ட்ராஸகி மருது, கி. நாச்சிமுத்து, சுபாஷிணி, நா. கண்ணன், சாந்தி சித்ரா, க. முத்துக்கிருஷ்ணன். ஆலோசகர்கள்: கே. எஸ். சுப்பிரமணியன், வ. ஜெயதேவன், ரெ. பாலகிருஷ்ணன், சு. சங்கரவடிவேலு, நா. சுவாமிநாதன், தமன் பிரகாஷ், கவிதா சொக்கலிங்கம். அயலக ஆலோசகர்கள்: எம். ஏ. முஸ்தபா(சிங்கப்பூர்), கார்த்திகா பார்த்திபன் (கனடா). உதவி ஆசிரியர்: ரமேஷ் ரக்சன். இதழழகு; கோபு ராசுவேல், சட்ட ஆலோசகர்: வழக்கறிஞர் அ. பன்னீர்செல்வம். மேலாளர் இரா; ஜெகன். தமிழர் உடை தமிழரின் உடை நோக்கிய அழகியல், தத்துவம், நெசவுத் தொழில்நுட்பம், காலங்காலமாக உடுத்த உடைகள், இன்றைய உடைகள் ஆகியவை தமிழர் உடை என்ற கருத்தியலில் கருப்பொருள் ஆகின்றன. தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்து தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. பெரும்பாலான நகரவாழ் தமிழ் ஆண்கள் நீள்சல்லடம் மற்றும் மேற்சட்டை உடுத்தும் வழக்கம் உடையவர்கள். பெண்களும் அவ்வாறு உடுத்தும் வழக்கம் பரவி வந்தாலும், தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் இளம்பெண்கள் சுடிதார், சல்வார்-கமீஸ் அல்லது "பஞ்சாபி உடை" எனப்படும் வட இந்திய உடை உடுத்துவதே அதிகம் எனலாம். திருமணமான பெண்கள் பொது இடங்களுக்குப் பெரும்பாலும் புடவை அணிவர். சிற்றூர்களில் வாழும் ஆண்கள் பெரும்பாலும் வேட்டியும், பெண்கள் பெரும்பாலும் புடவையும் அணிவர். வயது வந்த இளம்பெண்கள் ஏறத்தாழ 20 வயது வரை தாவணி அணியும் வழக்கமும் உண்டு. சிறுமிகள் பாவாடை-சட்டை அணிவதும் வழக்கம். வேட்டியும் புடவையும் தமிழ் நிலப்பகுதிகளில் பொது இடங்களில் ஏற்புடைய கண்ணியமான உடையாக விளங்குகிறது. ஆண்கள் அலுவல் அல்லாத நேரங்களில், இரவில், ஓய்வு நேரங்களில் லுங்கி அணிவதுண்டு. "பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் தோன்றுகின்றது. உயர்குடிப் பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே. மற்றைய பெண்களில் ஒரு பகுதியினர் மேல் சட்டையின்றி தாவணிச் சேலையால் மார்பை மறைப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மார்பை மூடத்தக்கதாக நெஞ்சோடு மட்டும் சேலை கட்டுவதும் வழக்கமாக தொடர்ந்தது. இப்போக்கை இன்றும் கிராமங்களில் காணலாம்." "இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்க உதவுவது; இளமையாகக் காட்டுவது. இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டுச் சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது." "ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது." ஒரு 1 செ.மீ அகலலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளைநிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப்பட்டியோடு கூடிய திறந்த முழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (1 செ.மீ. அகலமுள்ள இருகோடுகள் இருக்கலாம்) 7 செ.மீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரைபோட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்குநிற இரவிக்கையும். சின்சோ அபே ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo பிறப்பு: செப்டம்பர் 21 1954) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார். இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார். இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார். திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார். 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார். செப்டம்பர் 25 பத்மினி பத்மினி (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். "நாட்டியப் பேரொளி" எனப் பெயர் எடுத்தவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி "ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார். பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர். கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி "நாட்டியப் பேரொளி" என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். 17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது "கல்பனா" என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார். ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார். இவை தவிர சிலோன் தியேட்டர்சின் "கபாடி அரட்சகாயா" என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். "தில்லானா மோகனாம்பாள்", இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் "சிக்கல் சண்முகமாக" சிவாஜி கணேசனும், "மோகனாங்கியாக" பத்மினியும் நடித்தனர். "வஞ்சிக்கோட்டை வாலிபனில்" பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது. பத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார். இன்கா நாகரிகம் இன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது. சூரியனே இன்காக்களின் முதன்மையான கடவுள். இன்கா இனத்தவர் போருக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில கடவுளருக்கு படையல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். இன்கா மக்கள் வேளாண்மைக்கு ஒவ்வாத மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள் பயிர் செய்வதற்கேற்ப மலைச்சரிவினை வெட்டிப் பயிர் செய்தனர். அவர்கள் நீர்ப்பாசன வசதிகளையும் செய்திருந்தனர். சோளம், உருளைக்கிழங்கு, பருத்தி, தக்காளி முதலியவற்றைப் பயிர் செய்தனர். இன்காக்களுடைய முதன்மையான உணவு உருளைக்கிழங்கு ஆகும். இன்கா நாகரிகமே உருளைக்கிழங்கை பயிர்செய்த முதல் நாகரிகம். இன்காக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் மற்ற நாகரிகங்களுடன் போரிலும் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இன்காப் படையே மிகவும் வலிமையனதாக இருந்தது. ஏனெனில் அவர்களால் எந்த ஒரு உழவனையோ அல்லது குடிமகனையோ போர் வீரனாக மாற்ற முடிந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது ஒரு போரிலாவது பங்கேற்றிருக்க வேண்டுமென்ற ஒரு விதி இருந்தது. இன்காக்கள் போருக்குச் செல்லும் போது முரசு கொட்டி கொம்பூதிச் சென்றனர். தலை, மார்புப் பகுதிகளுக்கு கவசங்களைப் பயன்படுத்தினர். கோடாரிகள், ஈட்டிகள், இரம்பம் போன்ற மரத்தாலான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இன்காக்களின் சிறந்த சாலையமைப்பு போர்வீரர்கள் விரைவாக நகர்வதற்கு உதவியது. மேலும் ஒரு நாளில் செல்லக்கூடிய தொலைவில் நிறைய தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நல்ல சாலைகளின் காரணமாக செய்தி கொண்டு செல்வோரும் விரைவாகச் சென்று வேகமான தகவல் தொடர்பு இருந்தது. சேவகர்கள் ஓடிச்சென்று தகவலை அடுத்தவரிடம் தர அவர் சிறு தொலைவு ஓடி அவருக்கு அடுத்தவரிடம் சேர்ப்பார். இவ்வாறு தகவல் சென்று சேர்க்கப்பட்டது. ஒரு நாளில் 240 கி.மீ வரை தகவல் கொண்டு செல்லப்பட்டது. பூனைக் குடும்பம் பூனைக் குடும்பம் என்பது புலி, பூனை, சிங்கம், வேங்கை, மலையரிமா, காட்டுப் பூனை உள்ளிட்ட சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரியலில் இப்பிரிவை "Felidae" என்று அழைப்பர். பூனைக் குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.. பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து இனங்களும் தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும். ஈழத்து இலக்கியம் நிலப்பிரிப்பு அமைவிடம் சார்ந்து இலக்கியங்களை வகைப்படுத்தும் போது இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் இலக்கியங்கள் இலங்கையின் பண்டைய காலத்துத் தமிழ்ப் பெயரான ஈழம் என்னும் பெயரால் ஈழத்து இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஈழத்து இலக்கியமானது இனக்குழுக்கள் வதிவிடங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பாகுபடுத்தப் படக்கூடியது. இனக்குழும அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பேச்சு/ எழுத்து மொழி தமிழாக இருப்பினும் தங்களை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதால் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றாக அமையும். நிலவியல் சார்ந்து வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் என்றவாறான பிரிப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் வடக்கு, கிழக்கு, மேற்கிலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் போன்று தெளிவான நிலவியல் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. வெளிப்பாட்டு மொழி சார்ந்தும் கலாச்சாரப் பின்புலங்கள் சார்ந்துமே வேறுபாடுகளைக் காணலாம். இதைத்தவிர விடுதலைப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த ஈழப் போராட்ட இலக்கியம், சாதி ஒழிப்புப் போராட்டத்தை அடியொற்றி எழுந்த பஞ்சமர் இலக்கியம் என்பனவும் தம்மளவில் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன. இலங்கை இனப்பிரச்சனை காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிருந்து வெளிப்படும் இலக்கியம் ஈழப் புலம்பெயர் இலக்கியம் இதே வெளிப்பாட்டு மொழி,கலாச்சாரப் பின்னணியில் ஈழத்து இலக்கியமாகவே அழைக்கப்படுகின்றது. காலப்போக்கில் புலம்பெயர் நாட்டின் கலாச்சாரத் தாக்கங்கள் காரணமாக இவ்வாறான இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்பதிலிருந்து அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியங்களாக பரிணமிக்கலாம். உதாரணமாக மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது. பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது. தமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது. கிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகிறார்கள். ஈழத்தின் இலக்கிய வரலாற்றினை பல்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஆ. சதாசிவம் அவர்கள் பின்வருமாறு வகுக்கிறார். எப்.எக்சு.சி நடராஜா அவர்கள் பின்வருமாறு அமைக்கிறார்: ஈழத்து வன்னியர் ஆரியச்சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண அரசுக் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டிலிருந்து வன்னியர்கள் இலங்கைக்கு வந்தமை பற்றிய குறிப்புகள் யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலும், கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலும் காணப்படுகின்றன. வையாபாடலிலே வன்னியர் குடியேற்றம் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. இவ்வாறு வந்த வன்னியர்களின் பரம்பரையினர், ஈழத்து வரலாற்றிலே, சிறப்பாக ஈழத்தமிழர் வரலாற்றிலே முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். இந்த ஈழத்து வன்னியர் பற்றியே இக்கட்டுரையில் எடுத்தாளப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே இவர்களால் ஆளப்பட்டுவந்த தலைநிலப்பகுதி வன்னி என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. தன்னைப் பீடித்திருந்த நோயொன்றைத் தீர்ப்பதற்காக இலங்கையின் வடபகுதிக்குத் தமிழ் நாட்டிலிருந்து வந்த "மாருதப்பிரவை" என்னும் இளவரசி, நோய் தீர்ந்தபின், உக்கிர சிங்கசேனன் என்பவனை மணந்து இங்கேயே தங்கிவிட்டதாகவும், இன்று வன்னி என அழைக்கப்படும் அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்டுவந்த உக்கிரசேனனுக்கும், மாருதப்பிரவைக்கும் பிறந்த மகனின் திருமணத்துக்காக, மதுராபுரியில் இருந்து பெண் அழைத்துவந்தபோது அவளுடன் 60 வன்னியர்கள் வந்ததாகவும், வையாபாடல் கூறுகின்றது. அடங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்ட அவர்கள் அப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மேலும் பல வன்னியர்களை இலங்கைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. இவர்களுள், முல்லைத்தீவில் குடியேறிய "முல்லைமாலாணன்", "சிவலை மாலாணன்", "சருகி மாலாணன்", "வாட்சிங்கராட்சி" ஆகிய வன்னியர்களின் பெயர்கள் வையாபாடலில் தரப்பட்டுள்ளன. அடங்காப்பற்றிலே வாழ்ந்த பூர்வகுடிகளினால் ஏற்பட்டு வந்த தொல்லைகளின் காரணமாக, அவர்களை அடக்குவதற்காகவும், பல வன்னியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். இவ்வாறு வந்தவர்களில், "கறுத்தவராயசிங்கம், தில்லி, திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன், கேப்பையினார், யாப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார்" ஆகிய 24 பேர் வையாபாடலில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்களிற் சிலர் கணுக்கேணி, முல்லைத்தீவு, தனிக்கல்லு, கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய இடங்களில் ஆட்சிசெலுத்திவந்த பல்வேறு பூர்வகுடிச் சாதியினரைத் தோற்கடித்து, அப்பகுதிகளைத் தாங்களே ஆண்டுவந்தனர். இவை தவிர, கச்சாய், பழை, கரைப்பற்று, கருவாட்டுக்கேணி, கட்டுக்குளம், போன்ற இடங்களிலும், பல வன்னியர் குடியேறியதாகத் தெரிகிறது. வேறு சிலர், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளிலும் குடியேறினர். சிலர் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தனர். சல்வார்-கமீஸ் சல்வார்-கமீஸ் என்பது சல்வார், கமீஸ் என்னும் இரு பகுதிகளாலான பெண்கள் அணியும் தைக்கப்பட்ட ஒரு உடையாகும். பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் போன்ற தெற்காசியாவிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் உடையாக இது உள்ளது. சல்வார் என்பது நீளமான ஒரு காற்சட்டை ஆகும். கமீஸ் என்பது முழந்தாள்களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் ஒரு வகை மேற்சட்டையாகும். இவ்விரண்டுமே பல்வேறு வடிவங்களிலும் பாணிகளிலும் தைக்கப்படுகின்றன. இவற்றுடன் பெரும்பாலான சமயங்களில் துப்பட்டா எனப்படும் நீளமான சால்வையும் அணியப்படுவது உண்டு. சல்வாரின் மேல் கால்பகுதி அகலம் கூடியதாக மிகவும் தளர்வாகக் காணப்படும். அடிப்பகுதி ஒடுங்கியதாக இருக்கும். இந்த அடிப்பகுதி சுருக்கு வைத்துத் தைக்கப்பட்டதாகவோ அல்லது நாடாக்களுடன் கூடியனவாகவோ இருக்கும். சல்வார் தளர்வாக இல்லாமல் ஓரளவு காலோடு ஒட்டியபடி இருப்பதும் உண்டு. இந்த அமைப்புடன் கூடிய சல்வார்-கமீசை, சுடிதார் என அழைப்பர். சுடிதார் மத்திய ஆசியப் பகுதியில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது 20ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும். எக்ஸ் பாக்ஸ் 360 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360 ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 ஜ.பி.எம், எ.டி.ஜ, சாம்சங், எஸ்.ஜ.எஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியந்திரத்தைப் பற்றிய முதல் முறையான அறிவிப்பு எம்.டி.வி தொலைக்காட்சியில் மே 12, 2005 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இயற்பியல் பொழுதுபோக்கு வெளியீட்டு விழாவில் எக்ஸ் பாக்ஸ் 360 பற்றிய முழு அறிவித்தல்களும் வெளியிடப்பட்டது. எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரமே உலகின் மூன்று கண்டங்களில் ஒரே சமயத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஏழாம் தலைமுறைக்குரிய இயந்திரமாகும். மேலும் இவ்வியந்திரத்திற்குப்போட்டியாக சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் 3 மற்றும் நின்டென்டோ நிறுவனத்தின் விய் போன்ற ஏழாம் தலைமுறை இயந்திரங்களின் வெளியீட்டுகளின் விற்பனைகளில் முன்னேற்றமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெற்றிருக்கின்றது எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரம். மேலும் எச்.டி கண்டுபிடிப்புகளின் மூலமும் இவ்வியந்திரத்தில் சிறப்பான முறையில் விளையாடமுடியும் என்ற சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசியக் கொடி இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும். இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பத்ருதின் தியாப்ஜி ஆவார்.. ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாக சொல்லப்படும் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும் . அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், "இந்திய கொடிச் சட்டத்தால்" ஆளப் படுகிறது. தேசியக்கொடியின் வண்ணங்கள், வெவ்வேறு வண்ணக் குழுக்களின் கீழ், பின்வருமாறு வெளிப்படுத்தப்படும். Chakra.svg|right|thumb|200px| அசோகச் சக்கரம்]] இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது. விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார். சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துறப்பதை குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துறந்து, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்ட "பேரிடி"யை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்தன. முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது. அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன. பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா என்ற அம்மையார், ஜெர்மனியின் "ஸ்டுட்கார்ட்" என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடியில், பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை, பக்கஜி காமா அம்மையார், வீர சவார்கர், சியாம்ஜி கிருட்டின வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்திற்கு பிறகு, பெர்லின் குழுமக் கொடி என பெயர் கொண்டது. முதல் உலகப் போரின் போது, மெசப்படோமியாவிலும், அமேரிக்காவின் காதர் கட்சியிலும், இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது. பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய "சுயாட்சிப் போராட்ட"த்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறவில்லை. ஒரு வருடம் கழித்து, 1916ல், மச்சிலிப்பட்டினத்தின் (இன்றைய ஆந்திர பிரதேசம்) பிங்கலி வெங்கய்யா அவர்கள், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசிய கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தை கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார். அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களை சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப் பட்டது. ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை. 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை நிறங்களுடன் நடுவில் இராட்டையுடன் கூடிய கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன. அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாகக் கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது. இதனை வடிவமைத்தவர் பத்ருதின் தியாப்ஜி ஆவார் இதன் வடிவமைப்பை குழுவின் முன் சமர்ப்பித்த பின் இதன் மாதிரியை தனது மனைவி சுரையா தியாப்ஜியின் மூலம் கதர் துணியில் உருவாக்கி ஒப்படைத்தார்.. இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது. கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது. காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர். சுதந்திர இந்திய தேசியக் கொடியில் கைராட்டைக்கு இடம் இல்லாதது குறித்த மனத்தாங்கலை காந்திஜி தமது அரிஜன் பந்து" (3-8-1947) இதழில் பதிவு செய்திருக்கிறார். வர்ணம் (இசை) வர்ணம் என்னும் பாட்டு வகை பாடல் பயிற்சிக்கும் பாடல் அரங்க நிகழ்ச்சிகளுக்கும் (கச்சேரிகளுக்கும்) பொதுவாக இருக்கும் ஒரு பாடல் வகையாகும். குறிப்பாக இது பாடல் பயிற்சிக்கு மிக முக்கிய உருப்படியாகும். ஏனெனில் இதில் இராகங்களின் இலக்கணங்கள் தெளிவாக அமைந்திருக்கும். தான வர்ணங்கள், கச்சேரிகளின் தொடக்கத்திலேயே பாடப்படுகின்றன. பத வர்ணங்கள், நாட்டிய நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறுகின்றன. இராகங்களின் சிறப்பியல்பைக் (பாவத்தைக்) காட்டுகின்ற மனதை ஈர்க்கும் (ரஞ்சகப்) பிரயோகங்களை அந்தந்த இராகங்களில் அமைந்துள்ள வர்ணங்களில் காணலாம். வர்ணத்தின் பாடல் வரிகள் (சாகித்தியம்) குறைவாகவே காணப்படும். சாகித்தியமானது பக்தி விடயமாக, சிருங்கார விடயமாக, சங்கீதத்தை ஆதரித்த பிரபுக்களைப் பற்றியதாக அமைந்திருக்கும். வர்ணத்தை பூர்வாங்கம், உத்தராங்கம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பூர்வாங்கப் பகுதியில் பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம் என்னும் அங்கங்களும், உத்தராங்கப் பகுதியில் சரணம், சிட்டை ஸ்வரம் என்பனவும் இடம் பெறும். சரணத்திற்கு உபபல்லவி, எத்துக்கடைப்பல்லவி, சிட்டைப்பல்லவி என்னும் மறு பெயர்களும் உண்டு. சிட்டைச் சுரங்களுக்கு சரண சுரங்கள், எத்துக் கடை சுரங்கள் என்னும் மறு பெயர்கள் உண்டு. சிட்டை சுரத்தில் ஒரு வரிசைக் கிரமம் அமைந்துள்ளது. சரணத்தை அடுத்து வரும் முதலாவது சிட்டை சுரத்தின் ஸ்வரங்கள் நெடில் சுரங்களாக அமைந்திருக்கும். முதல் 2, 3 சிட்டை சுரங்கள் ஒற்றை ஆவர்த்தனமாகவும் பின்னர் வருபவை 2, 4 ஆவர்த்தனங்களாகவும் அமைந்திருக்கும். சில வர்ணங்களில் மூன்று ஆவர்த்தனங்களைக் கொண்ட சிட்டைச் சுரங்களும் உண்டு. இராகமாலிகையாக அமைந்த வர்ணங்களும் உண்டு. இவற்றின் அங்கங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இராகங்களில் அமைந்திருக்கும். வர்ணங்களை அப்பியாசம் செய்வதனால் உருப்படிகளை அழகுபடுத்தி மெருகுடனும், கமகத்துடனும் பாடுவதற்கும், வாசிப்பதற்கும் திறமை உண்டாகின்றது. வர்ணங்களை இயற்றுவதற்கு விஷேட திறமையும் கற்பனா சக்தியும் வேண்டும். வர்ணம் இரு வகைப்படும். அவையாவன: தான ஜாதி சஞ்சாரங்களுடன் பிரகசிக்கும் உருப்படியே தான வர்ணம் ஆகும். இவற்றில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்கங்களுக்கு மட்டும் சாகித்தியம் உண்டு. இவற்றை இரண்டு காலங்களிலும் பாடலாம். இவற்றைக் கச்சேரியின் ஆரம்பத்தில் பாட கச்சேரி சீக்கிரம் களை கட்டும். இவை ஆதி, அட, ஜம்பை தாளங்களிலே உண்டு. இது நாட்டிய இசையில் முக்கிய இடம் பெறுகிறது. இவை சௌக்க காலத்திலேயே அமைந்துள்ளன. எனினும் சில மத்திம காலத்திலும் அமைந்துள்ளன. இதன் எல்லா அங்கங்களுக்கும் சாகித்தியம் உண்டு. இது "சௌக்கவர்ணம்" என்றும் "ஆடவர்ணம்" என்றும் அழைக்கப்படும். ஸ்வரம் ஆடத் தகுந்ததாகவும் சாகித்தியம் அபிநயத்திற்குத் தகுந்ததாகவும் அமைந்திருக்கும். பெரும்பாலும் ஆதி, ரூபக தாளங்களில் அமைந்திருக்கும். ஜதிகள் உள்ள பத வர்ணங்களும் காணப்படுகிறன. இவை "பதஜதி வர்ணங்கள்" எனப்படும். தான வர்ணங்களை விட பத வர்ணங்களில் சாகித்தியம் கூடுதலாகக் காணப்படும். செப்டம்பர் 26 தமிழர் கப்பற்கலை தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற "கடலோடி" நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றிலிருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம். சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள்பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம் (Tide towards the Shore - High tide), கடல் ஓதம் (Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறிக் கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு. மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியைக் கலம் ஓட்டத் தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம். முன்துறை என்பது சங்ககாலத்தில் கழிமுகங்களின் வெளிப்பகுதியில் காணப்படும் துறைமுகமாகும். இது கழிமுகத்தின் வெளிப்பகுதியை குறிக்கிறது என்பதை ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில் கூறப்படும் "முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்" என்னும் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் இம்முன்துறையில் நாவாய் நங்கூரமிட்டு பாய்மரத்தை மடக்கி வைத்திருக்கும் என்பதை "தூங்கு நாவாய், துவன்று இருக்கை" என்று பட்டினப்பாலை குறிக்கிறது. நீர்க்கலங்களிலிருந்து நிறை அதிகமான பொருட்கள் இறக்கப்பட்டவுடன் தன் பாய்மரங்களை மீண்டும் உயர்த்தி நீரோட்டம் அதிகமாக இருக்கும் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறைக்கு செல்லும். இதையே புறம் "கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்" என்று குறிப்பிடுகிறது. மேற்குறித்த சங்கப்பாடல்கள் கழிமுகங்களில் வெளிப்பகுதியில் நீரோட்டம குறைவு என்பதால் அங்கே உள்ள முன்துறையில் நங்கூரமிட்டு பாய்மரம் இறக்கி நிறை அதிகம் கொண்ட பொருட்களை இறக்கிவிட்டு, கழிமுகத்தின் வாய்ப்பகுதியில் நீரோட்டம் அதிகம் என்பதால் அங்கே பாய்மரத்தை ஏற்றி மிக வேகமாகக் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையை அடையுமாம் தமிழர் கலங்கள் என்பதையே குறிக்கின்றன. சங்ககால தமிழர் கலங்கள் வேந்தர்களால் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தப் பட்டதோடு நில்லாமல் இலங்கையை போரில் வெல்லுவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர். முதலாம் பாண்டியப் பேரரசு (கி.பி. 550 - 950), சோழப் பேரரசு (கி.பி. 850 - 1250), இரண்டாம் பாண்டியர் பேரரசு (கி.பி. 1150 - 1350) போன்ற காலங்களில் தமிழர் கப்பல்கள் வணிகத்தில் சிறப்புற்றதோடு நில்லாமல் கடல் கடந்து இலங்கை, கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நாடுகளின் மீது படை எடுத்து வென்றனர். அதிலும் பாண்டியர் ஆட்சியின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் செயல்பட்டு வந்தன. "எங்கோ நடுவில் ஆங்கிலேயர் வருவதற்குச் சற்று முன்பிருந்தே நம் கப்பற்கலை சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு, ஆங்கிலேயரின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் தமது வாணிபம் பொருட்டு எத்துணை அக்கிரமும் செய்வதில் தயங்கவில்லை என்பதை பிறகு வாழ்ந்து மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கையிலிருந்து அறிகின்றோம்" (நரசய்யா, 140). "1789 இல், கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாகக் கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" (நரசய்யா, 154) 1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. "பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அடிவருடி அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது." மேலும், "சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது" (நரசய்யா, 155). நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் எழுதிய "நம் நாட்டுக் கப்பற்கலை" என்னும் நூலில் பண்டைய தமிழரின் கப்பற்கலை பற்றிய பல தகவல்கள் உள்ளன. 1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையிலிருந்து "அன்னபூரணி" என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது. பாய்மரக்கப்பலாக ஆரம்பத்தில் இது கட்டப்பட்டாலும் இதை வாங்கிய அமெரிக்கர் பின்னர் இந்தக் கப்பலை நீராவிக்கப்பலாக மாற்றித் தரும்படி கேட்டதற்கிணங்க நீராவிக்கப்பலாக மாற்றிக் கொடுக்கப் பட்டது. - (ஆதாரம் - " வல்வெட்டித் துறையிலிருந்து வட அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் " ) பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று தற்சமயம் நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன் அருங்காட்சியகத்தில் "தமிழ் மணி" ஆக உள்ளது. லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார். 'பிரிட்டிஷ் காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை." பார்க்க - தமிழர் கப்பற்கலை கலைச்சொற்கள் தொழிலும் தொழில் வல்லுனர்களும் (தமிழ்ப் பெயர்கள்) "இப்பட்டியல் சாதிகளின் பட்டியல் இல்லை. சாதிப்பெயர்களும் தொழில் பெயர்களும் ஒன்றாக இருப்பது தமிழ் சமூகத்தில் காணக்கூடிய ஒரு இயல்பு. குறிப்பிட்ட இடுகைகளுக்கு ஆட்சோபனை இருக்கும் பட்சத்தில் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி." சனவரி 18 தீபக் சோப்ரா தீபக் சோப்ரா, எம்.டி., (பிறப்பு 1947 புதுடில்லி,இந்தியா) மருத்துவரும் எழுத்தாளருமான இவர் எழுதிய தலைப்புகளாவன அமெரிக்காவும் ஆன்மீகமும், நிகழ்வுகளின் ஒற்றுமை, மாற்று வைத்திய முறைகள் மற்றும் ஆயுர் வேதம்போன்றவற்றின் பின்னணியில் பெரும்பாலும் இருக்கும்.இந்துசமயத்தினாலும் மற்றும் வேதாந்தத்தின் சிறப்பாலும் ஈர்க்கப்பட்ட இவர் பகவத் கீதையினாலும் ஈர்க்கப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் மைக்ரொசாப்ட் மேப்பாயிண்ட் மென்பொருளானது மைக்ரோசாப்டினால் தேசப்படங்களை பார்த்து மாற்றங்களைச் செய்து மற்றும் தேசப்படங்களை ஒருங்கிணைக்கும் மென்பொருளாகும். இந்த புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருளானது ஏற்கனவே இருக்கின்ற தேசப்படங்களுடன் புவியியல் ரீதியாக ஏற்கனவே இருக்கின்ற தகவல்களைச் சேர்த்துக் கொள்ளவும் இயலும், வர்தகப் பாவனையாளரையே இந்த மென்பொருளானது இலக்கு வைத்தபோதும் போட்டியில் மிகவும் குறைந்தளவே இம்மென்பொருளானது பாவிக்கப் படுகின்றது. மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுடன் குறிப்பாக எக்ஸ்ஸெல்லுடன் ஒருங்கிணைந்து வேலைசெய்கின்றது. அத்துடன் பிரயோகங்களுக்கான விஷ்வல் பேசிக்கும் பாவிக்கப்படுகின்றது. மேப்பாயிண்ட் தொழில்நுட்பமானது மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு வருக்கின்றது. இதன் பிந்தைய பதிப்பு மேப்பாயிண்ட் 2006. இம்மென்பொருளானது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வசதி குறைவான பதிப்பு விண்டோஸ் CE மற்றும் பாக்கட் கணினி, ஸ்மாட்போன் (Smart phone) மற்றும் விண்டோஸ் ஆட்டோமேட்டிவ் போன்றவற்றிலும் பயன் படுத்தப் படுகின்றது. மேப் இன்போ மேப்பின்போ நிறுவனமானது அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் புவியியல் தகவற் தொழில் நுட்பம் சம்பந்தமான மென்பொருள் நிறுவனமாகும்். 1986 களில் முதலாவது கணினிகளுக்கான புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இது இலகுவாக சாதாரண கணினிகளில் பாவிக்கக் கூடியதாக மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் அவர்களின் மென்பொருட்களில் பாவிக்கக் கூடியதாக பல கருவிகளையும் முதலில் உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 95 இல் மைக்ரோசாப்ட் எக்ஸ்சலில் பாவிக்க் கூடியதாக மென்பொருள் நீட்சியொன்றை அறிமுகம் செய்தனர். இது பின்னாளில் மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து ஸ்பாசல் (Spatical) தரவுகளைக் கையாளக் கூடியதாக ஆரக்கிள் 8i தகவற் தளத்தை உருவாகுவதற்குக் கூட்டிணைந்து உதவினார்கள். மேப்பின்போ ஸ்பாசல் மற்றும் ஸ்பாசல் அல்லாத தரவுகளைக் கையாள்வதற்காக மேபின்போ புரபெசனல் பதிப்பை வெளியுட்டுள்ளனர். தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு . 2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின் போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர். ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது. மெய்யியல் மெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது இயற்கை விஞ்ஞானம் மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது. மெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையைப் புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யறிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்) மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் ("philosophy") என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும். தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும், சீனர்களும், செருமானியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக, அடிப்படையாகச் சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃபிலாசஃபி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும். மெய்யியல் என்ற துறை சார்ந்த ஆய்வு செருமானியர் தொடக்கம் மேற்குலகிலேயே தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவை காலனித்துவ ஆட்சி செய்த போது அவர்கள் சீன இந்திய சிந்தனைகளில் பலவற்றை மெய்யியல் சிந்தனைகளாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறே பின்னர் ஆப்பிரிக்க, அமெரிக்க முதற்குடிமக்கள் சிந்தனைகளில் இருந்தும் மெய்யியல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் காலனித்துவத்துக்கு உட்பட்டவர்களும் தமது சிந்தனைகளை இவ்வாறு அடையாளப்படுத்தியும், இத் துறை சார்ந்தும் செயற்படத் தொடங்கினர். காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள், எகிப்தியர்கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று நடுகிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை. சீன மெய்யியல் சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட மெய்யியல் சிந்தனைகளைக் குறிக்கின்றது. 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துழைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம். மெய்யியல் இருவகைப் படுகின்றது. அவையாவன, கிழக்கத்திய மெய்யியல் மற்றும் மேற்கத்திய மெய்யியல் என்பனவாகும். கருத்தளவிலும் விளக்கமுறையிலும் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கின்றது. கிழக்கத்திய மெய்யியல் ("Eastern philosophy") என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு. கிழக்கத்திய மெய்யியலுக்குள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது. மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது. அழகியல் மெய்யியலின் ஒரு பிரிவாகத் தொன்றுதொட்டு வளர்ச்சியுற்று வந்துள்ளது. கிரேக்க இலக்கியத்தில் உள்ள மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. மகிழ்ச்சியை ஒரு பொருளிலோ, எழுத்திலோ அல்லது ஒலியிலோ சித்திரிப்பது என்பது கலைஞனின் குறிக்கோளாக உள்ளது. பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் முதலானவற்றை நுட்பமாக உண்மையாகப் படைப்பதற்கு கலை என்று பெயர். இதில் போலச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமையான மெய்யியல் கலையில் இருத்தல் அவசியம். இக்கருத்தையே அரிஸ்டாட்டில் (384-322 BC) வலியுறுத்தி வந்துள்ளார். காண்ட் (1724-1804) போன்ற மெய்யியல்வாதிகள்,அழகியலானது பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதாகும். அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்தவல்ல பொருள்களே அழகுடையனவாகக் கருதப்பட வேண்டும் என்றனர். ஹெகல் முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லாட்சியைக் கையாளுவதற்கு முன்னர், காண்ட் ‘அழகியல்’ என்ற இச்சொல்லை ‘புலனறிவு’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தினார். எனினும், ஹெகல் என்பார் அழகியலைக் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார். காண்ட்டின் மெய்யியல் கோட்பாடுகள் பலவும் அழகியல் வரலாற்றில் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. அவர் தமது ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற புத்தகத்தில் எடுத்துரைக்கும் பல்வேறு கருத்துக்களை மேலும் தெளிவாகவும் ஆழமாகவும் ஹெகல் அதை முன்வைக்கின்றார். உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை ஹெகல் பயன்படுத்திக் கொண்டார். காண்ட்டின் அழகியல் கோட்பாடுகள் அகவயப்பட்ட அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படும். இருப்பினும், அறிவியல் அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபாடு காட்டினார். ஹெகலோ அதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் கொள்கை அடிப்படையில் வெளிப்படுத்தினார். காண்டின் அகவய புலனனுபவ முறையானது ஹெகலின் இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறவயக் கருத்தியலாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளடக்கமாக அழகியல் விளங்குகிறது. தமிழ் மொழியில் தொல்காப்பியர் உலகின் தோற்றத்தை ஐம்பூதங்களின் உறவு என்று குறிப்பிடுகிறார். திணையியலின் மையமாக விளங்கும் பொருளுக்கும் கருத்துக்கும் இடையேயான உறவுநிலையினைத் தொல்காப்பியம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டி உள்ளது. நிலமும் பொழுதும் உடைய முதற்பொருள் கருப்பொருள்களுடன் உறவுபூண்டு உரிப் பொருளாக மாற்றம் பெறுகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள உறவு வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது எனவும் உயிருக்கும் மெய்க்குமான உறவு இயக்கத்தைத் தீர்மானிக்கிறது எனவும் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது ‘மெய்யோடு இயையினும் உயிரியல்திரியா’ என்னும் எழுத்ததிகார நூற்பா (10) வில் மெய்யுடன் உயிர் உறவு கொள்வதை நுட்பமாகத் தொல்காப்பியம் வெளிப்படுத்துகிறது. ‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’ என்ற வரி (எழுத்.18) களில் மெய்யின் மூலமாக உயிர் தோன்றுவதை விளக்குகிறது. இவ்வாறு உயிருக்கும் மெய்யுக்குமான திணையியல் சார்ந்த மெய்யியல் உறவைத் தொல்காப்பியம் விளக்கியுரைக்கின்றது. கருநாடக இசைச் சொற்கள் விளக்கம் உதாரணம்: சங்கீத ரத்னாகரம். உதாரணம்: நாததரங்கிணி, செஞ்சு காம்போஜி உதாரணம்: மோகனம். உதாரணம்: கல்யாணி - மாலை நேரம். தகதிமி, தகஜொனு, ததிங்கிணதொம் போன்ற தாள சம்பந்தமான சொற்கட்டுக்கள். உதாரணம்: சிம்மேந்திரமத்திமம் ராகத்தில் ரி, க, ம, நி உதாரணம்: பிலகரி இராகத்தில் ரி, த, நி. உதாரணம்: ரீகாமா உதாரணம்: ஆனந்தபைரவியில் காந்தாரம், நிஷாதம். உதாரணம்: ஆரபியில் காந்தாரம். உதாரணம்: சங்கராபரணத்தில் காந்தாரம். உதாரணம்: சங்கராபரணத்தில் காந்தாரம். உதாரணம்: பிலகரி இராகத்தில் காகலிநிஷாதம் ஸ்வகீய ஸ்வரமாகவும் கைசிகிநிஷாதம் அன்னிய ஸ்வரமாகவும் கருதப்படும். உதாரணம்: சங்கராபரணத்தில் ஸ்தாபா உதாரணம்: மோகனம். உதாரணம்: சங்கராபரணம் உதாரணம்: மோகனம். உதாரணம்: மோகனத்தின் ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் மத்தியமாவதியையும், காந்தாரம் இந்தோளத்தையும், பஞ்சமம் சுத்தசாவேரியையும், தைவதம் உதயரவிச்சந்திரிக்காவையும் கொடுக்கும். செப்டம்பர் 27 சனவரி 17 டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் (DBN) இலங்கை முழுவதுமான டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் ஆகும். இலங்கை 2 வது மிகப்பெரிய நிலையான தொலைபேசி ஆபரேட்டர் இருந்தது. நிறுவனத்தின் குடியிருப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் ஆயிரக்கணக்கான இணைக்க, இது போன்ற CorDECT முதலியன சிடிஎம்ஏ 2000 ஆம் ஆண்டு 1x, டெக்ட், மின்-1 R2/PRI, போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகிறது. டயலொக் அக்ஷிஅட பீஎல்சீ கீழ் 2012 ல் சண்டெல் வாங்கியது, இப்போது அதை அதன் துணை டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் இயக்குகிறது. லங்கா பெல் லங்கா பெல், CDMA தொழில் நுட்பத்தை இலங்கையில் முதன் முறையாக அறிமுகப் படுத்திய நிறுவனமாகும். இது மே 1, 2007 இன்படி 500,000 இற்கும் மேற்பட்ட CDMA வாடிக்கையாளர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையில் இதுவே வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 150 மணித்தியாலங்களுக்கு இணைய இணைப்பை வழங்கிவருகின்றது. அத்துடன் கம்பியற்ற அகனற அலை இணைப்புக்களை கொழும்பு கண்டி ஆகிய பகுதிகளில் வழங்கிவருகின்றபோதிலும் இதன் ஆதிக்கம் இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் அகன்ற அலை (அகலப் பட்டை) இணைப்புடன் போட்டியிட முடியாமலே உள்ளது. லங்காபெல்லின் விளம்பரப்படி 153 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்தில் CDMA தொலைபேசிகளுக்கு இணைப்பானது வழங்கப் படுகின்றது. லங்காபெல் சண்டெல் போன்றல்லாது ஒரு பிரதேசத்தில் இருந்து பிறிதோர் பிரதேசத்திற்குச் CDMA தொலைபேசியை எடுத்துச் சென்றால் வாடிக்கையாளர் சேவையிற்கு கையொப்பமிட்ட கடிதம் அனுப்பினால் அன்றி வேலை செய்யாது. எனவே இது வாகனங்களில் பாவிப்பதற்குப் பொருத்தமானதல்ல. எனினும் இது ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவானது என்பதால் கூடுதலான CDMA வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மகாகவி மகாகவி எனப்படுபவர் பின்வருவோரில் ஒருவராக இருக்கலாம். யோன் சிலம்புவே அருட்திரு. யோன் சிலம்புவே ("John Chilembwe", 1871 – பெப்ரவரி 3, 1915) ஆபிரிக்க விடுதலைப் போராளியும், பாப்திஸ்து சபை போதகரும் ஆவார். இவரது தலைமையில் ஜனவரி 15, 1915 இல் நயாசலாந்தில் வெள்ளையினக் குடியேற்றவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவரது திட்டம் விரிவானதாக இருந்தாலும் வெற்றி பெறவில்லை. இவரும் இவருடன் சென்ற 40 பேரும் கொல்லப்பட்டதுடன் 300 பேர் பிடிபட்டார்கள். குடியேற்றவாத ஆதிக்கத்துக்கு எதிராக நேரடி போராட்டத்தில் முதலில் இறங்கிய ஆபிரிக்க விடுதலைப் போராளிகள் என்பதால் இவருக்கு வரலாற்றில் முக்கிய இடம் இருக்கின்றது. இவரது நினைவாக இன்று மலாவியில் ஜனவரி 15 ஆம் நாள் யோன் சிலம்புவே நாள் என நினைவு கூரப்பட்டு வருகிறது. மசாலாப்படம் இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, நடனம், நகைச்சுவை, நாடகம், சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் கூட்டுறவு தொழிலாளர் கூட்டுறவு (Worker cooperative) என்பது தனது தொழிலாள-உரிமையாளர்களால் நிர்வகிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் கூட்டுறவு நிறுவனம் ஆகும். மரபான கூட்டுறவு கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த அமைப்புக்கான கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கூட்டுறவில் வெளியாள், நுகர்வோர் எவருக்கும் நிர்வாக உரிமையோ, சொத்துரிமையோ கிடையாது. அங்கு பணியாற்றும் தொழிலாளர் மட்டுமே அத்தொழிற்றுறையின் பங்குகளை வைத்திருப்பர். உறுப்பினர் ஒருவருக்கு ஒரேயொரு உறுப்புரிமைப் பங்கே வழங்கப்படக்கூடும். ஒரு உறுப்புரிமைப் பங்கு = ஒரு வாக்கு. நிறுவனத்தில் தொழிலாற்ற உறுப்புரிமை ஒரு நிபந்தனை அல்ல. ஆனால், உறுப்புரிமை பெறுவதற்கு, அந்நிறுவனத்தின் தொழிலாளியாக இருப்பது கட்டாய நிபந்தனை. இத்தகைய தொழிலாளர் கூட்டுறவு இயக்கங்களுக்கு உதாரணங்களாக, என்பனவற்றை கூறலாம். ஆணிவேர் (2006 திரைப்படம்) ஆணிவேர் திரைப்படம் செப்டம்பர் 23, 2006 ஆம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படமாக விளங்கும் ஆணிவேர் இலங்கைத் தமிழர்களின் நிலைமையை உலகினிற்கு எடுத்துக் கூறும் வகையில் வெளிவந்திருக்கின்றது. தமிழீழத் திரைப்படத்துறை தமிழீழத் திரைப்படத்துறை தமிழீழத்தில் படமாக்கப்படும் திரைப்படங்கள் தொடர்பானதாகும். தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரதேசங்களிலிருந்து இத்திரைப்படங்கள் வெளிவருகின்றன. தமிழீழத் தேசிய எழுச்சி திரட்சியடைந்ததன் பிற்பாடு, தேசிய உணர்வின் அடிப்படையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்ந்து வெளிவரும் திரைப்படங்கள் கூட தமிழீழ திரைப்படங்களாகவே ஒரு சாரரால் வகைப்படுத்தப்படுகின்றன. தமிழீழ திரைப்படங்கள் பருமட்டாக பின்வரும் வகைப்பாடுகளுள் அடங்குகின்றன. இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் நிகழ்படங்களாகும் இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் விடுதலைப் புலிகளால் திரைப்படமான பாணியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் தத்ரூபக் காட்சியமைப்புகளைக் கொண்ட இத்திரைப்படங்கள் தமிழீழ மக்களால் ஈழத்திலும், வெளி நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவையாகும். முழுமையான திரைப்படத்துக்குரிய இலக்கணங்களுடன் அமைக்கப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் இந்த வகையை சேரும். அண்மையில் தென்னிந்திய கலைஞர்களையும் உள்ளடக்கி முழுநீள தமிழீழ திரைப்படங்கள் வெளிவரும் செல்நெறி இனங்காணப்படுகிறது. ஆணிவேர் இவ்வாறானதொரு திரைப்படமாகும். மாதங்கி அருள்பிரகாசம் எம்.ஐ.ஏ. ("MIA") என அழைக்கப்படும் மாதங்கி 'மாயா' அருள்பிரகாசம் (பிறப்பு: சூலை 18, 1975, லண்டன், இங்கிலாந்து) ஒரு ராப் இசைப் பாடகர். இவரது மேடைப் பெயரான எம்.ஐ.ஏ. என்னும் இவரது உருவாக்கமான இசைக் குழுவின் பெயரால் அழைக்கப்படுகிறார். எம்.ஐ.ஏ. என்பது Missing In Action என்ற ஆங்கில சொற்பதத்தில் இருந்தும் அவரது முழுப்பெயரை குறிப்பதுமாக அமைகிறது. மாதங்கி அருள்பிரகாசம் 2002 இல் தனது இசையமைப்பு, பாடல் ஒலிப்பது போன்றவற்றில் ஆர்வம் செலுத்த தொடங்கி இருந்தாலும் லண்டனின் மேற்கு பகுதிகளில் இவர் 2000 ஆம் ஆண்டு முதல் ஓவியத்துறைகளிலும் திரைப்படத் துறைகளிலும் தனது ஆர்வத்தை காட்ட தொடங்கியிருந்தார். இவரது இசைகள், பாடல்கள் பெரும்பாலும் மின்னணு இசை, நடனம், ஹிப் ஹொப், சொல்லிசை, உலகப் பாடல் வகையை சார்ந்தனவாக இருக்கிறது. இவர் 2008 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மாதங்கியின் பாடல்களில் பெரும்பாலானவை இலங்கையின் விடுதலைப் போராட்டங்களின் ஒலிப்புகள் அதிகமாகவே காணப்படும். விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அங்கம் வகித்த இவரின் தந்தையான அருள்பிரகாசம் ஆரம்ப காலங்களில் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதங்கியின் பாடல்கள் விடுதலைப்புலிகளை அங்கீகரிப்பதாக இருப்பதாக அமெரிக்காவிற்கு இசைப் பயணத்திற்காக செல்லவிருந்த மாதங்கி தடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை கனடா வாழ் தமிழர்களால் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் தமிழர்களின் பண்பாடுகளைப் பேணும் வகையிலும் கனடாவின் இளம் சமூகத்தினூடே தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு போன்றவற்றினை வளர்ப்பதற்காகவும் தமிழ்த் திரையரங்குகளிலும் திரைப்பட விழாக்களிலும் கனேடியத் தமிழ் சமூகத்தினால் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.மேலும் திரைப்படங்களன்றி விபரணப் படங்கள்,குறும்படங்கள் போன்றவையும் வெளியிடப்படுவது குறியிடத்தக்கது. சி.எம்.ஆர் 101.3 சி.எம்.ஆர் 101.3 பண்பலை ஒலிபரப்பு சேவை கனடாவில் வாழும் பல்லின சமூகத்திற்காக கனேடியத் தெற்காசிய மக்களால் தொடங்கப்பட்ட வானொலி சேவையாகும்.இச்சேவையில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, உருது, வியட்னாம் மொழிச் சேவை, சிந்தி, அரபு மொழிச் சேவை,போன்ற இருபது மொழிச் சேவைகளினை சி.எம்.ஆர் பண்பலை வானொலி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மூர்ச்சனாகாரக மேளம் மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது. செப்டம்பர் 28 சகா (திரைப்படம்) சகா திரைப்படம் இயக்குனர் திவ்வியராஜனின் இயக்கத்தில் கனடாவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தில் கே. எஸ். பாலச்சந்திரன் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். உண்மைப்படம் நண்பர்களான மூன்று இளைஞர்களின் கதை. அன்பான தாத்தாவுடனும் (பாலச்சந்திரன்), விதவைத் தாயாருடனும் படிப்பும், விளையாட்டுமாக இருக்கும் ஒரு இளைஞன் (பாரத் ஜெயம்). கண்டிப்பான தாய், செல்லம் கொடுக்கும் தகப்பன் (நவம்) இணைந்த ஒரு குடும்பத்தின் மகன் (கீர்த்தனன்). இவர்களின் கல்லூரி நண்பனான இன்னுமொரு இளைஞன் (தர்ஷன்). இந்த மூவரும் தங்களோடு படிக்கும் சில மாணவர்களின் வழி நடத்தலுக்கு இரையாகிப் போவதுடன், ஈற்றில் ஏற்படும் வன்முறைக்கு, விதவைத் தாயின் மகன் அநியாயமாக பலியாகிறான். இந்தவகையான இளைஞர் வன்முறைகளால் ஏற்படும் மரணங்களுக்கு யாது காரணம், இவற்றை தடுக்க முடியாதா என்று தாத்தா கதறி அழுவதோடு திரைப்படம் முடிவடைகிறது. கனடாவில் "நான்காவது பரிமாணம்" என்ற சிற்றிதழை வெளியிட்ட எழுத்தாளர் - நாடக இயக்குனர் க. நவரத்தினம் (நவம்) இத்திரைப்படத்தில் ஓர் இளைஞனின் தந்தையாக நடித்திருந்தார். பூக்கள் (திரைப்படம்) பூக்கள் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழர்கள் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வெளிநாடுவாழ் சமூகத்தினர் பலரும் நடித்துள்ளனர். தமிழிச்சி (திரைப்படம்) தமிழிச்சி திரைப்படம் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.புலம்பெயர் ஈழத்து இளம் சமூகத்தினரிடையே தொடரும் மோதல்களினை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ஈழத் தமிழ்க்கலைஞர்கள் பலரும் நடித்துள்ளது சிறப்பாகும். சுதன்,சஞ்சீவ் குமார், சசிகலா பி. எஸ். சுதாகர், சுப்புலட்சுமி காசிநாதன் முதலானோர் நடித்துள்ள இந்தத்திரைப்படத்தின் இயக்கம், படப்பிடிப்பு, தொகுப்பு ஆகிய பொறுப்புகளை தயாரிப்பாளரான இந்திரசித்து ஏற்றுள்ளார். தன் அண்ணனோடும் (சுதாகர்), அண்ணியோடும் (தர்சினி) நெருக்கமான உறவு இல்லாமல் நண்பர்களுடன் கும்மாளம் அடித்துத் திரியும் ஒரு இளைஞன் (சுதன்), அவனுக்குப் பின்னால் ஒரு இளைஞர் குழு. அன்பான அக்கா (ரூபி), பொறுமை இழக்கும் அத்தான் (ரவீந்திரன்) - இவர்களை மதிக்காமலே தன் பரிவாரங்களுடன் திரியும் இன்னுமொரு இளஞன் (சஞ்சீவ் குமார்). இந்த இரண்டு குழுக்களிடையே வலுவான காரணம் எதுவும் இல்லாமலே சண்டை முளைக்கிறது. துரத்தி, துரத்தி மோதிக் கொள்கிறார்கள். தன் காதலியின்(சசி) வற்புறுத்தலினால் முதல் இளைஞன் வன்முறைகளை கைவிட்டு வேலை தேடிக்கொண்டு வாழ்க்கையை ஒழுங்காக நடத்தும் போது, மற்றக் குழுவினர் அவனைக் கொல்ல முற்படுகின்றனர். அவர்களை பிடித்துக் கொடுத்து மீண்டும் வன்முறையை தொடரக் கூடாது என்பதற்காக அவன் பொலிசாருக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறான். ஆனல் அவனது நண்பர்கள் பொலிஸுக்கு எல்லாவற்ரையும் சொல்ல, கொலைமுயற்சியில் சம்பந்தப்பட்ட மற்ற இளஞனும், அவனது நண்பனும் நாடு கடத்தப்படுகின்றார்கள். ஐரோப்பாவில் பல நாடுகளிலும், அவுஸ்திரேலியாவிலும் தமிழிச்சி திரையிடப்பட்டிருக்கிறது. சலனம் வலைத்தளத்தில் விமர்சனம் மண் (திரைப்படம்) மண் திரைப்படம் இந்திய, இலங்கை, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர்.புதியவன் இயக்கியுள்ளார். சனவரி 16 யுனிவேர்சல் சோல்ட்யர் (1992 திரைப்படம்) யுனிவேர்சல் சோல்ட்யர் (Universal Soldier )இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் அதிரடி நாயகனான ஜான் கிலௌட் வான் டாமின் நடிப்பில் வெளிவந்த இந்த விஞ்ஞானக் கற்பனைக் கதையான இத்திரைப்படம் சி.டி.எஸ்(CDS) தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்ட இறுதித் திரைப்படமாகும். இந்திய பாப் இந்தியாவில் தோன்றப்பட்ட இசை வடிவமே இந்தியப் பாப் இசையாகும் அதாவது புகழ்பெற்ற மேற்கத்திய பாப் இசை வகையின் இசைத்தொகுப்பு வெளியீடுகள் போலவே இந்தியாவிலும் தோன்றியுள்ள இசை வடிவம் எனவும் இந்தியப் பாப் எனக் கூறலாம். 1970 மற்றும் 1980 போன்ற ஆண்டுகளில் தோற்றம் பெறாத இந்தியப் பாப் இசை வடிவம் இன்று இளவயதினரால் பெரிதளவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தியத் திரைப்பட இசைகளைப் போலவும் மேற்கத்திய இசை வடிவமைப்புகளையும் கலந்து ஒரு கலவைகளாக இப்பாப் இசை வடிவ இசைத் தொகுப்புகள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. சார் மாறியும் சாரா மாறியும் ஒரு மாறியின் பெறுமானம் பிற மாறி அல்லது மாறிகளில் சார்ந்து இருக்கும்பொழுது அதை சார் மாறி (dependent variable) எனலாம். ஒரு சோதனையில் மாறியின் பெறுமானம் எப்படி வேறு மாறிகளில் சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வதே நோக்கமாகும். ஒரு மாறியின் பெறுமானம் பிற மாறிகளை சாராமல் அல்லது கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் பொழுது அதை சாரா மாறி (independent variable) எனலாம். ஒரு சோதனையில் சாரா மாறி மாறும்பொழுது அதனுடன் தொடர்புடைய சார் மாறி எப்படி மாறும் என்று அவதனாக்கப்படும். ஆட்களம் (கணிதம்) கணிதத்தில் ஒரு செயலி (சார்பு) அதன் தன்மை காரணமாக ஒரு வரையறை செய்யப்பட்ட சாரா மாறிகளையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக formula_1 என்ற செயலியை கருதுக. அச்செயலி பூச்சியம் தவிர்ந்த ஏனைய மெய்யெண்களில் எல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு செயலிக்கும் அதன் சாரா மாறிகள் எடுக்கக்கூடிய பெறுமானங்களின் வரையறை அச்செயலியின் ஆட்களம் ("Domain") ஆகும். ஒரு சார்பு "f":"X"→"Y" கொடுக்கப்பட்டதாகக்கொள்வோம். இங்கு "f" இனுடைய உள்ளீடுகளின் கணம் " X". இதற்கு "f" இன் ஆட்களம் எனப்பெயர். வெளியீடுகள் எந்த கணத்தில் போய்ச்சேருகிறதோ அந்த கணம் "Y". அதற்கு "இணையாட்களம்" எனப்பெயர். வெளியீடுகளின் கணம் வீச்சு எனப்படும். f இன் வீச்சு , இணையாட்களம் Y இன் உட்கணமாகும். எப்பொழுது f இன் வீச்சு Y ஆகவே இருக்கிறதோ அப்பொழுது f ஒரு முழுக்கோப்பு அல்லது முழுச்சார்பு எனப்படும். சரியான முறையில் வரையறுக்கப்பட்ட ஒரு சார்பு ஆட்களத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் இணையாட்களத்திலுள்ள ஒரு உறுப்புக்குக்கொண்டு செல்லவேண்டும். என்ற சார்பு "f"(0) க்கு ஒரு மதிப்பையும் கொடுக்கமுடியாது. அதனால் R அதன் ஆட்களமாக இருக்கமுடியாது. இந்தமாதிரி சூழ்நிலையை இரண்டுவிதமாகக் கையாளலாம். ஒன்று, சார்பின் ஆட்களத்தை R\{0} என்று விதித்து விடலாம். அல்லது, இரண்டாவது வகையாக, "f"(0) வை தனிப்படியாக வரையறுத்து இந்த 'ஒழுக்கை' அடைத்துவிடலாம். அதாவது, என்று "f" இன் வரையறையிலேயே விதித்துவிட்டால், அப்பொழுது "f" எல்லா மெய்யெண்களிலும் வரையறுக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. f இன் ஆட்களத்தை இப்பொழுது R என்றே கொள்ளலாம். எந்த சார்பும் அதன் ஆட்களத்தின் ஒரு உட்கணத்திற்கு கட்டுப்படுத்தப்படலாம். என்ற சார்பை A இன் ஒரு உட்கணம் "S" க்கு கட்டுப்படுத்தப்பட்டால், அது "g" | : "S" → "B". என்று குறிக்கப்படும். வகுதிக்கோட்பாட்டில் ("Category theory") சார்புகளுக்கு பதில் அமைவியங்கள் ("morphisms") பேசப்படுகின்றன. அமைவியங்கள் என்பவை ஒரு பொருளிலிருந்து இன்னொன்றுக்குப் போகும் அம்புக்குறிகளே. அப்பொழுது ஒரு அமைவியத்தின் ஆட்சி அந்த அம்புக்குறிகள் எங்கு தொடங்குகின்றனவோ அந்தப் பொருள் தான். கேம்ஸ்பொட் இணையத்தளம் கேம்ஸ்பொட் இணையத்தளம் (Gamespot) நிகழ்பட ஆட்டங்களைப்பற்றிய பல உள்ளடக்கங்களையும் பலதரப்பட்ட தகவல்களையும் கொண்ட பயனுள்ள இணையத்தளமாகும்.மேலும் புதிய பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான நிகழ்பட ஆட்டங்களைப்பற்றிய புள்ளிகளை வழங்கி அவ்விளையாட்டினை பிரபலமாக்கச் செய்யலாம். ஐ.எம்.டி.பி இணையத்தளம் ஜ.எம்.டி.பி (i.m.d.b) இவ்விணையத்தளம் ஆனது உலக திரைப்படங்களினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது.மேலும் இவ்விணையத்தளத்தினை இலவசமாகப் பயனர் பகுதியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உண்டு.உலகளவில் திரைப்படங்களிற்காகப் பார்க்கப்படும் தளங்களில் இத்தளம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவுத் தளத்தில் உள்ளீடு செய்வார்கள். சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்தப் படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும். புதிதாகப் பயனர் கணக்கை ஏற்படுத்திய பின்னர்: சர்வதேச சந்தைப்படுத்துதலை இந்தத் தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் இறுவட்டு விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது அல்லது இறுவட்டு வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. ஐ.எம்.டி.பி தூக்கான் தூக்கான் அல்லது பேரலகுப் பறவை (இலத்தீன் பெயர்:Ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் பறவைகளைக் கொண்ட ஒரு குடும்பமாகும். இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கின்றன. இக்குடும்பம் 5 பேரினங்களும் 40 இனங்களையும் கொண்டது. டுப்பி மொழியிலிருந்து இப்பெயர் மருவி வருகின்றது. நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் குயிலும் பறவை இனத்தைச் சேர்ந்தது. உயிரினவியலில் இப்பறவை ராம்ஃபாசிட்டிடே (Ramphastidae) என்னும் பறவையின உட்பிரிவைச் சேர்ந்தது. ஏறத்தாழ 41 உள் இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 21 இனம் கொலம்பியா நாட்டிலும், சுமார் 17 இனங்கள் பிரேசில், வெனிசூலா, ஈக்வெடார் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிகக் கனம் கொண்டதன்று. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கிறது. இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கின்றன. இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கிறது. ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கின்றன. தூக்கான் பறவைகள் பழந்தின்னிப் பறவைகள் எனினும் சிறு பூச்சிகளையும், சிறு பல்லி போன்ற ஊர்வன விலங்குகளையும் உண்ணும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இறைச்சல் எழுப்புகின்றன. உறங்கும்போது தம் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும்போது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்குகொள்கின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொகுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு வலசையாகப் போவதில்லை. ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட "ராம்ஃபசுட்டோசு தோக்கோ" (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் அகச்சிவப்புக் கதிர்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர். இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. தூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை. செப்டம்பர் 29 யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்று கூறுவதனால், யாழ்ப்பாணத்தவர் அனைவரும் ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறுவதற்கில்லை. ஏனைய பல சமுதாயங்களின் உணவுப் பழக்கங்களைப் போலவே யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமும், அச்சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பல அடிப்படைகளில், வேறுபடுவதைக் காணலாம். ஆனாலும், இவை அனைத்தையும், ஒன்றாகவே இயங்குகின்ற முழு யாழ்ப்பாணச் சமுதாய அமைப்பினதும் கூறுகளாகப் பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளமுடியும். யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களின் தோற்றுவாய் பண்டைக்காலத் தமிழர் உணவுப் பழக்கங்களாகவே இருக்கும் எனலாம். இது குறித்த ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும், பல நூற்றாண்டுகளாகவே யாழ்ப்பாணத்துக்கு, தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நேரடிக் குடியேற்றங்கள் இருந்து வந்துள்ளதுடன், பண்பாட்டுத் தொடர்புகளும், வணிகத் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. இதனால், தமிழ் நாடு தவிர்ந்த பிற தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளையும், யாழ்ப்பாண உணவுப் பழக்கங்களில் காண முடிகின்றது. இதைவிட, இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்களவரின் பண்பாட்டுத் தாக்கங்கள் சிலவும் இருக்கவே செய்கின்றன. பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்த போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றவர்களின் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு வகைகளும், பழக்க வழக்கங்களும் கூட யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களில் கலந்துள்ளதைக் காணமுடியும். இவற்றைவிட யாழ்ப்பாணத்துப் புவியியல் அமைப்பு, வளங்கள், பல்வேறு வகையான வேளாண்மை உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருள் தொடர்பான வணிகம் என்பனவும், யாழ்ப்பாணத்து நில உடைமை மற்றும் நிலப்பயன்பாட்டு நிலைமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இவற்றுடன், சமய நம்பிக்கைகளும் இன்னொரு முக்கிய காரணியாகும். காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆட்சியாளர்களின், வேளாண்மை மற்றும் வணிகம் தொடர்பான கொள்கைகளும், போர் முதலியவற்றினால், ஏற்றுமதி செய்யும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதிருந்த நிலைமைகளும்கூட உள்ளூர் உணவுப் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. முன்னர் எடுத்துக்காட்டியவை சமுதாயத்தில், பரந்த அடிப்படையில், எல்லாப் பிரிவினரையும் பாதிக்கின்ற காரணிகளாக உள்ளன. அதே வேளை, சமூகப் பிரிவுகள் மட்டத்தில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அடிப்படையாகப் பின்வரும் காரணிகள் அமைகின்றன. யாழ்ப்பாணத்தில் மூன்று நேர உணவு உட்கொள்ளுவதே பொதுவான வழக்கு. பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக மூன்று முறைகளிலும் குறைவாக உணவு உண்ணுபவர்களும் இருக்கிறார்கள். இந்துக்கள் சிலர் விரத நாட்களில் காலை உணவைத் தவிர்த்துவிடுவது உண்டு. மூன்று நேர உணவுகளும், எனப்படுகின்றன. காலை உணவுக்கு முன்னரும், மேலும் மூன்று உணவு நேர இடைவெளிகளில் இருமுறையும் தேநீர் அல்லது காப்பி அருந்துகிறார்கள். யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளும், அலுவலகங்களும் 8.30 அல்லது அதற்கு முன்னரே பெரும்பாலும் திறந்து விடுவதால், மாணவரும், அலுவலகங்களில் வேலை செய்வோரும் அந்த நேரத்துக்கு முன்னரே காலை உணவு உண்டு விடுகிறாகள். அலுவலகங்களில் 12.00 க்கும் 1.00 மணிக்கும் இடையில் மதிய உணவு நேரம். பாடசாலைகள் 2.00 மணிக்கே மூடப்படுவதால் மாணவர்கள் அதன் பின்னரே மதிய உணவு உட்கொள்ளுகிறார்கள். யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது. உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசு, கோதுமையை அறிமுகப்படுத்தியது. இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் யாழ்ப்பாண உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தவர்களால் "பாண்" (bread), பிட்டு, இடியப்பம், தோசை என்று அழைக்கப்படும் கோதுமை உணவு அப்பிரதேச உணவில் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும். அது மட்டுமன்றி, சிற்றுண்டிகள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், குரக்கன் முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது. யாழ்ப்பாணத்து முதன்மை உணவு சோறும் கறியும் ஆகும். யாழ்ப்பாணத்தவர், நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு வகைகளாகவோ இருக்கலாம். சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள், இலைவகைகள், மீன், மாமிசம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கப்படுபவை கறிகள் எனப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் கறிவகைகளைப் பலவகையாகப் பகுத்துக் காணமுடியும். இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு. ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு. எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு. கறிகள் ஆக்குவதில், யாழ்ப்பாணத்தவர் தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். அநேகமாக எல்லாக் கறிகளிலும், தேங்காய்ப்பூவோ, தேங்காய்ப் பாலோ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடும், தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம். தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் "சாம்பார்" யாழ்ப்பாணத்துச் சமையலில் இடம்பெறுவதில்லை. கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில், பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்காக எல்லாக் காய்களையும் சேர்த்துச் சாம்பார் செய்வது உண்டு. காலைச் சாப்பாட்டிற்கும், சில சமயங்களில் இரவுச் சாப்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்ற உணவு வகைகள் துணை உணவு வகைகள் அல்லது சிற்றுண்டிகள் எனப்படலாம். இந்த விடயத்திலும் தமிழ் நாட்டுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலே, இட்லி, தோசை முதலியன முக்கியமான காலை உணவாக இருக்கும் அதே வேளையில், யாழ்ப்பாணத்தில் இடியப்பம், பிட்டு முதலியவையே பெரும்பாலும் உண்ணப்படுகின்றன. அப்பம், தோசை முதலியவற்றையும் யாழ்ப்பாணத்தவர் இடையிடையே உண்பது உண்டு. இட்லி மிக அரிதாகவே உட்கொள்ளப்படுகின்றது. பனம் பண்டங்கள் நீண்டகாலமாக யாழ்ப்பாண மக்களின், சிறப்பாகச் சமுதாயத்தின் மத்தியதர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் உணவுப் பழக்கங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. எவரும் நட்டுப் பராமரித்து வளர்க்காத பனைகள் தாமாகவே வளர்ந்து பயன் தருவதன் மூலம், உணவுக்கான ஒரு மலிவான மூலமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. பனையிலே உணவுப் பொருள்களுக்கான மூலங்களாக இருப்பவை பனம்பழமும், பனங்கிழங்கும் ஆகும். பனம்பழப் பிழிவை வெயிலில் காயவைப்பது மூலம் பனாட்டு ஆக்கி நீண்டகாலப் பயன்பாட்டுக்காக வைத்திருக்க முடிந்ததும், பனங்கிழங்கையும் அவ்வாறே காயவைத்து, ஒடியலாக்கி வருடக் கணக்கில் பயன்படுத்த முடிந்ததும் அவற்றின் உணவுப்பெறுமானத்தை மேலும் அதிகரித்தன. தென் கடல் முத்தும் குண கடல் துகிலும் கங்கைவாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுக ராமப்பிரியா ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது. ராமப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. அக்டோபர் 2 சனவரி 15 மங்கை மேஜர் மங்கை (16 டிசம்பர், 1965 - 19 செப்டம்பர், 1994; வடமராட்சி, கிழக்கு யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட கணபதிப்பிள்ளை புவனேஷ்வரி தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். 19-09-1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடலில் சிறீலங்கா கடற்படையினரின் 'சாகரவர்த்தனா' போர்க்கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார். தமிழக வரலாற்றுக் காலக்கோடு களப்பிரர் களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. மதுரையில் வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார். மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலுக்குச் சந்தனக் காப்பு செய்வதற்கான சந்தனத்தை அரைத்து அவர் நாள்தோறும் வழங்கிவந்தார். இவரது திருப்பணிக்கு இடையூறு செய்தவர் அப்போது மதுரையை ஆண்ட மன்னன். அவன் சமண மதத்தைச் சேர்ந்தவன். இவர்கள் வடுகர், கருநாடர் இனத்தவர். தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தனர். மதுரையை வென்று ஆளத் தொடங்கினர். மதுரை மக்கள் அடிமை ஆயினர். அப்போது மதுரையை ஆண்ட அரசன் வடுகக் கருநாடர் மன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இந்தக் குறிப்புகள் களப்பிரர் என்போர் கருநாடக வடுகர் என்றும், சமண சமையத்தவர் என்றும் காட்டுகின்றன. திருஞான சம்பந்தர் சமணர்களோடு போராடி வென்ற செய்தியும் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. வேங்கட நாட்டை ஆண்ட அரசன் புல்லி. இவன் கள்வர் கோமான் எனக் குறிப்பிடப்படுகிறான். குல்லைப் பூ மாலை சூடியவர்கள் வடுகர். இவர்கள் நாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது கட்டி நாடு. இவற்றை எண்ணிப்பார்க்கும்போது கள்வர் (களவர்) என்போர் களப்பாளர் ஆயினர் எனக் கொள்ளல் ஏற்புடைத்து. களப்பிரர் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன்(அச்சுத விக்கந்தக் களப்பாளன்). இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே. 1. நாகார்ச்சுனரால் (கி. பி 3 ஆம் நூற்றாண்டு) பின்பற்றப்பட்டது மகாயான கருத்துகள், ஆனால் மணி மேகலை ஹீனயான கருத்துகளை உடையது . அசோகர் காலத்திலேயே ஹீனயான கருத்துகள் தமிழகத்தில் நுழைந்தாலும் மக்கள் தமிழரின் தொன்மையான ஆசீவகத்தையும் அதன் தொடர்ச்சியான சமனத்தையும் பின்பற்றியதால் ஏற்கவில்லை , சங்கம் மருவிய காலத்தில் தான் ஏற்க்கின்றனர். 2. கிருதகோடி ஆசிரியரை குறிப்பிடும் மணிமேகலை பெரும்பாலும் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு எழுத -பட்டிருக்க வேண்டும் என்பது கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி.இராச மாணிக்கனார் முடிவு. 3. கனிஷ்கர் கி. பி 78 ல் அரியனை ஏறுகிறார். இவர் காலத்தில் ஹீனயானத்தில் இருந்து மகாயானம் உருவாகிறது . 4. சங்க புலவர் மாமூலனார் கி. மு 4 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் என்பது கல்வெட்டு குறிப்புகள், சங்க புலவர்களின் ஓலை சுவடிகள் போன்றவை மூலம் பல தமிழ் ஆர்வளர்களால் தற்காலத்தில் உறுதி படுத்தப்பட்டு உள்ளது. 5. மாமூலனார் காலத்தின் மூலம் நாம் கணக்கிட்டதில் மணிமேகலை எழுதி முடிக்கப்பட்ட காலம் கி.பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம். சி.இராசமாணிக்கனார் கணக்கீடும் இக்காலத்தையே வலியுருத்துகிறது. இக்காலகட்டத்தில் நுழைந்தவர்களே களப்பிரர். 6. களப்பிரர் என்பவர் வடுகர்களே (கன்னடர்) என்றும், தமிழ் அரசர்களோடு ஒன்று இணைந்தவர்கள் ,(அதாவது சங்க காலம் முடிவு பெற்ற பிறகு) என பேராசிரியரும் ஆராய்ச்சியாளரும் ஆன பத்மாவதி கூறியுள்ளார். 7. சிலப்பதிகாரமும் மணி மேகலையும் ஒரே காலத்தில் எழுதப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல வருடத்திற்கு முன்பே தமிழ் ஆர்வளர்கள் இருவரும் வெவ்வேரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று சான்றுகளுடன் விளக்கியுள்ளனர். பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது. சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் "கலிகுலன்", "கலிதேவன்" போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.இருப்பினும் இன்று (களப்)பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருதுவோரும் உண்டு. மேலும் இவர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும், உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருத்துகள் நிலவுகிறது.(கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பிரர் என்று மறுவியது பின்னர் களப்பறையர் என மாறியது) தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த "களவர்" என்னும் இனத்தவரே "களப்பாளர்" எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர். களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. "அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம்." அதே வேளை இக்காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். இக்காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. எனினும், களப்பிரர்கள் ஆதரித்த பெளத்த சமய நூல்களும் பிற பல நூல்களும் பாலி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன. களப்பிரர்கள் வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள். இதர வைதீக எதிர்ப்புச் சமயமாகிய சைன சமயமும் இக் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும் இவர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு. வரலாற்றாளர் அலைசு ஜஸ்டினா தினகரன் அவர்கள் இந்து சைவர்கள், சைனர் அல்லது பௌத்த சமயத்தினராக இவர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள். சிலேடை ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு. தமிழிலும் பல பிற மொழிகளிலும் சிலேடைப் பயன்பாடு காணப்படுகின்றது. 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் சிலேடையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: "ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்" "அதுவே, செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்" "ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோதம் அவிரோதம்
எனவெழு வகையினும் இயலும் என்ப" தொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை, என்பனவாகும். "செம்மொழிச் சிலேடை" என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும். நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகந்நாதன் அவர்களுக்குக் கொடுத்த பாலிலே இறந்த எறும்பு மிதப்பதைக் கண்டு, என்றாராம். இத்தொடர் எவ்விதமான மாற்றமும் இன்றியே இரண்டு விதமாகப் பொருள் தரக்கூடியது. ஒருவகையில், சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது எனவும், இன்னொரு வகையில், சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார் எனவும் பொருள்படுகின்றது. இங்கே, தொடர்சொல் எவ்வித மாற்றத்துக்கு உள்ளாகாமலேயே இரு பொருள் தருவதால் இது செம்மொழிச் சிலேடை ஆகும். ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும். ஒரு சிலேடைச் சிறுவன் அவன். அன்று அந்திசாய்ந்த நேரம். மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. வீட்டாரின் நச்சரிப்பினால் மண்ணெய் வாங்கிவர, அருகிருந்த கடைக்குச் சென்றான். அங்கு கடைச்சொந்தக்காரனிடம், ஐயா, “கொஞ்சலாம்பெண்ணை தாருங்கள்“ என்றான். கடைக்காரன் மண்ணெய் கொடுக்க குவளையைக் கேட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரன் சீறிப்பாய, அவன் அமைதியாய் “மண்ணெய்யும் தாருங்கள், கொஞ்சலாம் பெண்ணையும் தாருங்கள்“ என்று போட்டானே ஒருபோடு. "சென்னை வரவேற்கிறது" என்பதை ஆம், "சென்னை வர வேர்க்கிறது" (வியர்க்கிறது என்பதன் பேச்சு வழக்கு) என்று சிலேடை மூலம் பகடியாகச் சொல்லலாம். வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத, சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் வேரகத்துச் செட்டியாரே இந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது. வேரகச் செட்டியாரே! சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை. ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும். வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே! என்று பொருள்படுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்டத்தின் ஊர் பெயர்களை வைத்து வரும் கவிதை வடிவிலான சிலேடை. இங்கே உள்ள ஊர்ப் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் யாரென்பது தெரியவில்லை. முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து ஆனைக் கோட்டை வழி கட்டுடை விட்டாள் உடுவிலான் வர பன்னாலையான் மிக உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில் இடை விடாது எனை அணையென பலாலி கண் சோர வந்தாள் ஓர் இளவாலையே இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்)... மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்... நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண். முழுமையான அர்த்தம்: இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்... "நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண். முகம்மது நபியின் தோற்றத்துக்கு முன்னர் அரபிகள் சிலேடையாகப் பேசுவதை உயர்வாகக் கருதியும் அதைத் தங்களது மொழிப் புலமை என்று கருதியும் வந்தனர். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசி வந்தனர். யூதர்களும் அவ்வாறே சிலேடையாகப் பேசுவோராக இருந்தனர். ஒருவரை மேன்மையாகப் பேசுவது போலும் இழிவாக்குவதை மறைத்தும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தெளிவான பொருள் கொண்டு பேசுவதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. எனவே, சிலேடையாகப் பேசுவதை இஸ்லாம் தடை செய்தது.
தனிமங்களின் எண் பட்டியல் தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, நிலையான் மாறுரு, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்தோர் பெயர் அகியவை கொடுக்கப்பட்டுள்ளன. காத்தவராயன் (திரைப்படம்) காத்தவராயன் தமிழில் 1958 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். நாடகப்படம் செய்வினை (சடங்கு) செய்வினை என்பது பழங்காலந்தொட்டு இலங்கை,கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் பூசை முறையினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது. இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது. இச்செய்வினை செய்யும் முறையினைப் பலர் உணமையெனவும் சிலர் செய்வினையை ஒரு மூட நம்பிக்கை எனவும் கூறுவர். இருப்பினும் செய்வினை எனப்படுவது மனிதர் ஒருவரின் சாதகக் குறிப்பின்படி அவருக்குப் பகையாக உள்ள கோள்களிற்குப் பலமுறைகள் பூசை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளே ஆகும். செப்டம்பர் 30 ஓஷோ ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார். ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர். 1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார். 1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார். 1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். 1970 ஜூலையில் மும்பைக்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார். தரிசு நிலமாக பாழடைந்த மத்திய ஓரேகானின் பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது. 1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர், அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அக்டோபர் 28 - எந்தவித கைதி ஆணையின்றி மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். அங்கே சிறையில் இருந்த போதுதான் அவருக்கு ‘தாலியம்' என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார். பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன. இதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார். 1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது. ஈலியம் ஈலியம் ("Helium") என்பது He என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தனிமமாகும். நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற, கூடிய அளவில் வேதி வினையில் ஈடுபடாத ஒரு வளிமமுமாகும். இத்தனிமம் (மூலகம்) தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதன் உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும். இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும். பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவதாக, நைதரசன், ஒட்சிசன், ஆர்கான், காபனீரொட்சைட்டு, நியானுக்கு அடுத்ததாகச் செறிவுற்றுள்ளது. இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும். இதன் பங்கு 7%. நீரியமும் ஈலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது. ஈலியம் பூமியில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் அது இருப்பதாக ஒருவாறு உணரப்பட்டது. 1868 ல் பிரான்சு நாட்டின் வானவியலாரான பியர் இழோன்சன் ("Pierre Jonsson") என்பார் பிரித்தானிய இந்தியாவில் குண்டூர் பகுதியில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ந்த போது எதிர்பாராத விதமாக ஒளியுமிழ் நிறமாலை வரிசையில் மஞ்சள் பகுதியில் ஒரு புதிய வரியைக் கண்டார். அது அப்போது கண்டறியப்பட்ட எந்தத் தனிமத்திற்கும் அக்கோடு ஒத்துப் போகவில்லை என்பதால் அவ்வரி புதிய ஒரு தனிமத்தாலோ மூலக்கூறாலோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அப்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளி வந்த "இயற்கை" என்ற அறிவியல் இதழின் ஆசிரியரான "லாக்கியர்" என்பாரும் "பிராங் லாண்டு" என்பாரும், இதற்கு ஈலியம் எனப் பெயரிட்டனர். கிரேக்க மொழியில், எலியோசு என்பது சூரியனைக் குறிக்கும் கடவுளாகும். ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1895 ல் இசுகாட்லாந்தின் வில்லியம் இராம்சே ("William Ramsay") என்பார், தோரியம், யுரேனியத்தின் ஒரு சில கனிமங்கள் மந்த வளிமங்களை வெளியிடுவதாகக் கண்டறிந்தார். கதிரியக்கத் தனிமங்கள் உமிழ்ந்த மந்த வளிமங்களை நிறமாலைக்கு உட்படுத்த அது ஈலியம் என்று உறுதி செய்தார். அதன் நிறமாலை பியரி இழோன்சன் இனமறிந்த நிறமாலையின் வரிகளோடு ஒத்துப் போயிற்று. பூமியில் ஈலியம் தனிமத்தை முதன் முதலாக உறுதியுடன் அறிவித்ததால், அதை கண்டுபிடித்த பெருமை இராம்சேக்குக் கிடைத்தது. 1907 ல் இரதர்போர்டு கதிரியக்கக் கதிர்களைப் பற்றி ஆராய்ந்து அயனியாக்கப்பட்ட ஈலியமும், ஆல்பாக் கதிரும் ஒன்றே என்று நிறுவினார். உண்மையில் ஈலியம் அணுக்கரு என்பதை முதலில் அறியாததால் இதற்கு ஆல்பாத் துகள் எனப் பெயரிட்டார். இயற்கை எரி வளிமத்தில் மீதேன் முக்கியமாக இருந்தாலும் அதில் 0.3% ஈலியமாகும். பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் ஈலியத்தை மீத்தேனிலிருந்து பிரித்தெடுக்கின்றார்கள். பகுதி காய்ச்சி வடித்தலின் நுட்பம், கொதி நிலையில் உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி நீர்மக் கலவையிலிருந்து நீர்மங்களைப் பிரிப்பதாகும் ஈலிய வளிமத்தை எளிதில் குளிர்வூட்டி நீர்மமாக்க முடிவதில்லை. அதன் கொதி நிலை மிகவும் தாழ்ந்த -268.9 பாகை செல்சியசு ஆகும். இது பிற வளிமங்களைக் காட்டிலும் குறைவானது. காற்றைக் குளிர்வூட்டி நீர்மமாக்கும்போது அதிலுள்ள எல்லா வளிமங்களும் நீர்மமாக்கப் பட்டாலும், ஈலியம் மட்டும் நீர்மமாக நிலை மாறாமல் வளிமமாகவே எஞ்சி நிற்கும் ஈலியத்தை இப்படியும் மீட்டுப் பெறமுடியும். 1908 ஆம் ஆண்டில், ஈலியம் முதல் இடச்சு இயற்பியலாளர் எய்க்கு காமர்லிங் ஆன்சு என்பவர் முதன் முதலில் ஒரு கெல்வினுக்கும் குறைவான வெப்பநிலையில் ஈலியத்தைக் குளிர்வித்து நீர்ம ஈலியத்தைப் பெற்றார். நிறமாலை மூலம் இன்றைக்கு விண்மீன்களில், குறிப்பாக வெப்ப நிலை மிக்க விண்மீன்களில், ஈலியம் அதிகமுள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். உண்மையில் அங்கு ஈலியம் ஐதரசனை மூலப்பொருளாகக் கொண்டு தொகுப்பாக்கம் ("Synthesis") மூலம் உண்டாக்கப்படுகிறது. இது அவற்றின் ஆற்றல் மூலமாக விளங்குகின்றது. உயர் வெப்ப நிலையில் ஏற்படும் இரு விதமான வெப்ப அணுக்கரு வினைகளை "நேர்மின்னி-நேர்மின்னித் தொடர்" ("புரோட்டான்-புரோட்டான் தொடர்"), என்றும், "கார்பன்-நைதரசன் சுற்று" என்றும் குறிப்பிடுவர். இதில் நான்கு நேர்மின்னிகள் இணைந்து ஒரு ஈலியம் அணுக்கருவாக மாறுகின்றது. ஐதரசன் குண்டிலும் இவ்வினையே தூண்டப்பட்டு ஆற்றல் வெளிப்படுகின்றது. He என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஈலியம் இயல்பான சூழலில் வளிமமாக இருக்கின்றது. இதன் அணு வெண் 2, அணு நிறை 4 .003, அடர்த்தி 0.166 கிகி /க மீ .இதன் உறை நிலையும், கொதி நிலையும் முறையே 1.72 K, 4.22 K ஆகும். நீர்ம ஈலியம் தாழ்ந்த வெப்ப நிலையில் மற்றொரு நிலை மாற்றம் பெறுகிறது. இதன் லாம்டா நிலை மாற்றம் என்பர். சாதாரண நீர்ம ஈலியத்தை நீர்ம ஈலியம் – I என்றும், லாம்டா நிலை மாற்றம் பெற்ற நீர்ம ஈலியத்தை நீர்ம ஈலியம் –II என்றும் கூறுவர். 2.174 டிகிரி K வெப்ப நிலையில் நிகழும் இந்த லாம்டா நிலை மாற்றத்தினால் நீர்ம ஈலியத்தின் சுய வெப்பம், பாய் திறன் வெப்பங் கடத்தும் திறன் போன்றவற்றில் முரண்பாடான மாற்றங்கள் ஏற்படுகின்றன நீர்ம ஈலியம் -II, நீரூற்று விளைவு, உயரளவு பாகு நிலைத் தன்மை, கூடுதலான வெப்பங் கடத்தும் திறன் போன்ற வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. பூமியில் அரிதானது என்றாலும் புவியில் அறியப்பட்ட வாயுக்களில் இரண்டாவதாக மிக அதிகமான அளவில் (பேரியான் நிறை அளவில் 23% அளவு) காணப்படுவது ஈலியம் ஆகும் . ஐதரன் வாயு முதல் இடத்தைப் பிடிக்கிறது. பெரு வெடிப்புக்குப் பின்னர் ஒன்று முதல் மூன்று நிமிடங்கள் வரை பெருவெடிப்பு உட்கரு தொகுப்பு மூலம் பெரும்பாலான ஈலியம் உருவானது. அதனுடைய அளவின் அளவுகள் அண்டவியல் மாதிரிகளின் அளவிடலில் இது பங்களிக்கிறது. விண்மீன்களில், புரோட்டான்-புரோட்டான் சங்கிலி வினைகளைக் கொண்ட ஐதரசன் அணுக்கரு இணைவு மற்றும் கார்பன் நைட்ரசன் ஆக்சிசன் சுழற்சி மூலம் ஈலியம் உருவாகிறது . புவியின் வளிமண்டலத்தில் ஈலியம் வாயுவின் அடர்த்தி ஒரு மில்லியனுக்கு 5.2 பாகங்களை மட்டுமே கொண்டது ஆகும். பூமியின் வளிமண்டலத்தில் பெரும்பாலான ஈலியம் பல செயல்முறைகள் வழியாக விண்வெளிக்கு சென்று விட்டாலும் கூட புதிய ஈலியம் வாயு தொடர்ச்சியாக உற்பத்தியாவதால் குறைவான இந்த அடர்த்தியானது மாறாமல் நிலையாக உள்ளது. வளிமண்டலத்தின் ஒரு பகுதியான பூமியின் வெப்ப மண்டலத்தில் ஈலியம் மற்றும் மற்ற இலேசான வாயுக்கள் மிக அதிகமான அளவில் உள்ளன. கதிரியக்கச் சிதைவு மூலமும் ஈலியம் உற்பத்தியாகிறது. கிளிவெய்ட்டு, பிட்சுபிளண்டு, கார்னோடைட்டு மற்றும் மோனசைட்டு உள்ளிட்ட யுரேனியம், தோரியத்தின் கனிமங்களில் ஈலியம் கலந்து காணப்படுகிறது. ஏனெனில் இவை ஆல்பா கதிர்களை உமிழ்கின்றன. இவ்வழிமுறையில் இக்கற்கோளத்தில் ஆண்டுக்கு 3000 மெட்ரிக் டன் ஈலியம் உற்பத்தியாகிறது . புவி மேலோட்டில் ஈலியத்தின் அடர்த்தி பில்லியனுக்கு 8 பகுதிகள் ஆகும். கடல் நீரில் ஈலியத்தின் அடர்த்தி பில்லியனுக்கு 4 பகுதிகள் ஆகும். கனிம நீரூற்றுகள், எரிமலை வாயு மற்றும் விண்கல் இரும்பு போன்ற பகுதிகளிலும் ஈலியம் சிறிய அளவில் காணப்படுகிறது. நிலத்தடியில் இயற்கை வாயு சிக்கியிருப்பது போல ஈலியமும் சிக்குகிறது. இதனால் இயற்கை வாயுவில் ஈலியத்தின் அடர்த்தி அதிகமாகும். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்குரிய ஈலியம் இயற்கை வாயுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நியூ மெக்சிகோ போன்ற இடங்களில் ஈலியம் வாயுவின் அடர்த்தி மில்லியனுக்கு 5 முதல் 7 பகுதிகள் வரை மாறுபடுகிறது . 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக ஈலியம் இருப்பு 40 பில்லியன் கனமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கால் பாகம் கத்தார் மற்றும் ஈரான் நாடுகளில் காணப்படுவதாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன . வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஈலியம் மேலும் இருப்பு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வாயுவிலிருந்து பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் ஈலியம் பேரளவில் தயாரிக்கப்படுகிறது. இயற்கை எரிவாயுவில் ஈலியம் 7% காணப்படுகிறது. ஈலியம் வேறு எந்த தனிமத்தையும் விட குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால், குறைந்த வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில் கிட்டத்தட்ட மற்ற அனைத்து வாயுக்களையும் விட இதை திரவமாக்கலாம். இதன் விளைவாகத் தோன்றும் கச்சா எண்ணெய் படிப்படியாக வெப்பநிலைகள் குறைக்கப்பட்டு ஈலியம் தூய்மையாக்கப்படுகிறது. மீதமுள்ள நைட்ரசன் மற்றும் பிற வாயுக்கள் வாயு கலவையிலிருந்து வீழ்படிவாக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. கிளர்வூட்டப்பட்ட கரியானது இறுதி சுத்திகரிப்பு படிநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் பொதுவாக 99.995% தூய தரம் மிக்க ஈலியம் உருவாகிறது. நியான் ஈலியத்தின் முதன்மையான மாசாக கலந்திருக்கிறது. குளிரூட்டும் முறையில் திரவமாக்கி ஈலியம் இறுதிபடிநிலையில் தயரிக்கப்படுகிறது. சில பயன்பாடுகளுக்கு நீர்ம ஈலியம் அவசியமாகிறது. ஈலியம் எல்லாத் தனிமங்களைக் காட்டிலும் மிகத்தாழ்ந்த உறைநிலையைத் தனிச் சுழி வெப்பநிலைக்கு மிக அருகாமையில் கொண்டுள்ளது. அதனால் இது தாழ்ந்த வெப்பநிலை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்துக்குப் பெரிதும் உதவியாய் இருக்கின்றது. மீக்கடத்தும் காந்தங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும்,விண்வெளியில் அணுக் கதிர் ஆய் கருவிகளை குளிர் வூட்டுவதற்கும், தாழ்ந்த வெப்ப நிலை ஆய்வுகளுக்கும், நீர்ம ஈலியம் பயன் தருகிறது. வெப்பஞ் சார்ந்த அதிர்வுகளால் உண்டாகும் தாறுமாறான மின் சமிக்கைகள் (செய்தி தராத வெறும்) இரைச்சலாகக் கருதப்படும். அவற்றை நீர்ம ஈலியம் மூலம் குறைப்பதால் புள்ளி விவரங்களைத் துல்லியமாகப் பெறமுடிகிறது. வெப்பநிலையைத் தனிச் சுழி வெப்பநிலை வரை குறைத்தாலும் வளி மண்டல அழுத்தத்தில் ஈலியம் நீர்மமாக மட்டுமே மாறும், திண்மமாக உறைவதில்லை. செயல்படும் சூழ் அழுத்தத்தை அதிகரித்து இதைச் செய்யமுடியும். இவ் அழுத்தத்தைச் செயல்படுத்தி அதன் பருமன் 30 %. அளவு மாறுபடுமாறு செய்ய முடிகிறது. ஈலியம் இலேசான வளிமமாக இருப்பதாலும், காற்றை விட அடர்த்தி குறைவாக இருப்பதாலும், மந்த வளிமமாக இருப்பதாலும், பலூன்களில் இட்டு நிரப்பி வானவெளியில் பறந்து அதிக உயரங்களில் இருந்து கொண்டு வளி மண்டல ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது. எனினும் ஐதரசனை விட அடர்த்தி மிக்கதாய் இருப்பதால் 98 % மிதவைத் திறனையே ஈலியம் பெற்றுள்ளது. நீர் நிலைகளில் அதிக ஆழங்களில் உள்ள அதிகமான புற அழுத்தத்தில் செயல்படும் முத்துக்குளிப்பவர்கள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றில் ஆக்சிசன் 20 % உம், ஈலியம் 80 % உம் கலந்திருக்கும். இதில் நைதரசனை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக ஈலியத்தைச் சேர்த்திருப்பார்கள். ஈலியம், நைதரசனை விடக் குறைவாக நீரில் கரைகிறது. அதனால் இரத்தத்திலும் குறைவாகக் கரைந்து உறைகிறது. இது காற்றழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. நீரில் மூழ்கியவர் நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன், தாழ்ந்த அழுத்தத்தினால் இரத்தத்தில் கரைந்த வளிமம் குமிழ்களாக வெளியேறும் (சோடா பாட்டிலின் மூடியைத் திறந்தவுடன் அதில் கரைந்துள்ள காற்று குமிழ்களாக வெளியேறுவதைப் போல) இப்படி உடலுக்குள் வெளியேறும் வளிமம் மூட்டுகளில் உறையும் வாய்ப்பைப் பெறும். இது மூட்டுவலியைத் தரும். இதனால் நீரில் மூழ்கி வேலை செய்வவர்கள் விரைவில் சோர்ந்து விடுவர். காற்றை விட அடர்த்தி குறைவான ஈலியத்தை மூச்சிழுப்பதால், குரலின் சுரமும், தரமும் குறிப்பிடும் படியாக மாறிப்போகின்றன. இதனால் திடீரென்று ஒருவர் உரத்த குரலில் பேசுவது போலத் தோன்றும். ஈலியத்தில் ஒலியின் வேகம் காற்றில் இருப்பதை விட 3 மடங்கு அதிகம். அடைக்கப்பட்ட ஒரு வளிமத்தில் அடிப்படை அதிர்வெண் அந்த வளிமத்தில் ஒலியின் வேகத்தைப் பொருத்தது. அதனால் ஈலியத்தை மூச்சிழுக்க குரலின் சுரம் மாறிப் போகிறது. ஈலியத்தின் இணைதிறன் சுழி என்றாலும், இயல்பான சூழலில் அது எவ்விதமான வேதிச் சேர்மத்தையும் தோற்றுவிப்பதில்லை. ஈலியம்-டை-புளூரைடு தோற்றுவிப்பதற்கான ஆய்வுகள் தொடருகின்றன. ஈலியம்-நியான், ஈலிய அயனி மூலக் கூறுகள், He 2 +, மற்றும் He2 ++ போன்றவைகள் கண்டறியப் பட்டுள்ளன. பற்றவைப்பு முறையில், மந்த வெளிச் சூழலை நிறுவ ஈலியம் பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காக தைட்டானியம் சிர்க்கோனியம் உற்பத்தி முறையிலும், சிலிக்கான், செருமானியம் படிகங்களை வளர்க்கும் வழி முறையிலும் அணு உலைகளில் குளிர்வூட்டியாகவும் ஒலியை விஞ்சும் வேகத்தில் இயங்கும் வானவூர்திகளில் உந்திச் செல்ல பின்னால் எக்கித் தள்ளப்படும் வளிமமாகவும், ஈலியம் பயன்படுகிறது. ஈலியத்தின் மற்றொரு முக்கியமான பயன்பாடு ஈலியம்-நியான் வளிம சீரொளியாகும் (இலேசராகும்). இது அலி சாவன் என்ற அமெரிக்க அறிவியலாளரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒன்றுக்கொன்று நெருக்கமான உயர் ஆற்றல் நிலைகளைக் கொண்ட இரு வளிமங்களுக்கிடையே இடையீட்டுச்செயல் ("interaction") காரணமாக கிளர்வூட்டப்பட்ட ஈலியத்தின் செழுமையை அதிகரித்து வளிம ஊடகத்தில் தூண்டல் உமிழ்வை ("stimulated emission") ஏற்படுத்த முடிகிறது. இதன் ஒளி, ஓரலைநீளத் தன்மை ("Monochromatic") சிதறாமல் நெடுந்தொலைவு கடந்து செல்லுமாறு ஒருதிசை போக்குத்தன்மை (directonality), ஒத்த அலைமுகம் ("coherence") இவற்றைப் பெற்றிருந்தாலும் திறன் வெளிப்பாடு மில்லி வாட் நெடுக்கையில் இருக்கின்றது. ஈலியம்-நியான் சீரொளி கீற்றணி போல பல வரிக்கோடுகளால் சுட்டுக் குறியிடப்பட்ட பொருட்கள், புத்தகங்கள், மாணவர்கள் எழுதும் விடைத் தாள்கள், பல் பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் போன்றவற்றை இனமறியப்பயன்படுகிறது. விளம்பரத் தட்டிகளில் நியான் விளக்குகள் பயன்படுகின்றன, இது விளம்பரத்தை நெடுந்தொலைவு தெரியுமாறு செய்ய உதவுகிறது. ஈலியம் ஆக்சிசனை இடப்பெயர்வால் நீக்கம் செய்கிறது, அதனால் நச்சுத் தன்மையற்ற ஈலியத்தை தொடர்ந்து சுவாசித்தால், ஆக்சிசன் போதாமையால், உடல் நலம் பாதிக்கப்படவும் மரணமும் நிகழ வாய்ப்புள்ளது. புறச் சூழல்களாலும் வில்லைகளில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களாலும் ஒளியியல் கருவிகளில் விளையும் பிறழ்ச்சியை ஈலியத்தினால் குறைக்க முடிகிறது. இதற்குக் காரணம் ஈலியம் குறைந்த ஒளிவிலகல் எண்ணைப் பெற்றுள்ளது. இது விண்வெளி ஆய்வுகளுக்காக எடுத்துச் செல்லப்படும் தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படுகிறது. வெற்றிடத்துடன் கூடிய தொலை நோக்கிகள் அதிக எடையுள்ளவை என்பதால் அவற்றை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது உதவியாக இராது. மீக்கடத்தும் காந்தங்களைக் குளிர்விக்க நீர்ம ஈலியம் பயன்தருகிறது. மீக்கடத்தும் காந்தங்கள் இன்றைக்கு காந்த ஒத்ததிர்வுப் பட (MRI) வரிக் கண்ணோட்டக்கருவிகள் அதி வேக ஒற்றைத் தண்டவாள இரயில் வண்டிகள் , நுண் அளவில் சுருக்கப் பட்ட, மின் காந்தங்களால் செயல்படும் சாதனங்களில் பயன்படுகின்றன., ஏவூர்திகளில் எரிபொருளாகப் பயன்படும் ஐதரசன் மற்றும் ஆக்சிசனை குளிர்வித்து நீர்ம நிலையில் வைத்துக் கொள்ள ஈலியம் பயன் படுகிறது. யுரேனியமும் தோரியமும் கொண்ட பழம் பாறைப் படிவுகளின் வயதை ஈலியத்த்தால் அளக்க முடிகிறது. பிளேஸ்டேசன் பிளேஸ்டேசன் (Playstation)நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1990 ஆம் ஆண்டு சோனி நிறுவனத்தின் கணிணிப் பொழுதுபோக்கு குழுவின் தயாரிப்பில் வெளிவந்த இயந்திரமாகும். இவ்வியந்திரத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சோனி நிறுவனம் தயாரித்த போக்கெட்ஸ்டேசன், பிளேஸ்டேசன் 2, பிளேஸ்டேசன் 3 போன்ற இயந்திரங்களை சோனி நிறுவனத்தினால் பல வருடங்கள் கழித்து வெளியிடப்பட்டது.பிளேஸ்டேசன் ஒன் என பெருவாரியாக அழைக்கப்படும் இவ்வியந்திரம் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் வரவேற்பைப் பெற்றது. மார்ச் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி அதிகளவு மக்களால் வாங்கப்பட்ட நிகழ்பட ஆட்ட இயந்திரமாக விளங்குகின்றது பிளேஸ்டேசன். மார்ச்,2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி சுமார் 100.49 மில்லியன் இயந்திரங்கள் இதுவரை விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2001 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்க வீடுகளில் மூன்றில் ஒரு வீட்டினுள் வாழ்பவர்களால் இவ்வியந்திரம் உபயோகிக்கப்படுவது என்பதத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. உடற் பருமன் கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் ("obesity") அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்துவைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.. ஆனாலும் இதனை ஒரு நோய் என்று அடையாளப்படுத்துதல் சரியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது. 2016 இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த உடல் பனுமனுள்ளோரின் அண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளது எனவும், உடல்நிறை குறைவினால் ஏற்படும் இறப்பை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ள நாடுகளிலேயே, உலகின் சனத்தொகையின் கூடிய பங்கு வசிக்கிறது எனவும், உடற் பருமன் ஒரு தடுக்கப்படக்கூடிய நிலைமையே என்கிறது. ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு (] என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் (இரட்டிப்பு எண்ணால்) பிரிப்பதால் பெறப்படுகின்றது (formula_1).) பின்னர் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப் பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பதில் இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருபாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்டக் கூடும். தற்போதைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது குறைந்து வருகிறது. உடற்பருமனில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுமைக்கும் தற்போது தொழிநுட்பம் அதிகம் பயன்படுத்தி, குறைவான உடல் உழைப்பையே செய்கின்றனர். மேலும் தற்போது 30 சதவீத மக்கள் குறைவான உடற்பயிற்சியை செய்கின்றனர். சிறுகுழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இதன் காரணமாகவும் உடற்பருமன் ஏற்படுகிறது. 73 பேரில் 63 பேருக்கு குழந்தைப் பருவத்திலேயே உடற்பருமன் வந்ததாகவும் அதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததே காரணமாகவும் இருந்தது. அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உலக அளவில் தடுக்கக்கூடிய நோயினால் இறப்பதில் உடற்பருமன் முதன்மையாக உள்ளது. உடற்பருமன் சுட்டானது யாருக்கு அதிகம் (20-25) உள்ளதோ அவருக்கு இறப்பு விகிதம் அதிகம் உள்ளது. எவர் ஒருவர் உணவு எடுத்துக்கொள்ளும் விகிதமானது அதிகமாகவும், உடலுழைப்பு குறைவாகவும் உள்ள மனிதர்களுக்குத் தான் உடற் பருமன் அதிகம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. மிகச் சிலருக்குத்தான் அது மரபுவழியாகவும், சில மருத்துவ காரணங்களினாலும், சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுகின்றன. 2006 ஆம் ஆண்டின் ஆய்வின்படி மற்ற 10 காரணங்கள் உடற்பருமனுக்காக கூறப்படுகிறது. உடற்பருமன் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.மேலும் இவற்றால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவைகளு,ம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பிளேஸ்டேசன் 2 பிளேஸ்டேசன் 2 (ஜப்பானிய மொழி: プレイステーション2) சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் இயந்திரத்தின் அடுத்த தலைமுறைக்கான தயாரிப்பான பிளேஸ்டேசன் 2 நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1999 ஆம் ஆண்டு ஆரம்பத் தயாரிப்பில் இருந்தது. ஜப்பானில் முதன்முறையாக மார்ச் 4, 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டைத் தொடர்ந்து வட அமெரிக்காவில் அக்டோபர் 26, 2000 மற்றும் ஐரோப்பாவில் நவம்பர் 24, 2000 அன்றும் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆறாம் தலைமுறையினருக்கான நிகழ்பட ஆட்டத் தயாரிப்பான பிளேஸ்டேசன் உலக வரலாறுகளில் அதிகளவு விற்பனையான இயந்திரம் என்ற சாதனையைப் பெற்றது. மார்ச் 31, 2006 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சுமார் 120 மில்லியன் இயந்திரங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சாதனையானது சேகா நிறுவனத் தயாரிப்பான ட்ரீம்கேஸ்ட் நிகழ்பட ஆட்ட இயந்திரத்தின் விற்பனை சாதனை முறியடித்திருப்பதாக உள்ள சாதனையாகும். மேலும் ஜூலை 2006 கணக்கெடுப்பின்படி பிளேஸ்டேசன் இயந்திரம் தனது போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளான எக்ஸ் பாக்ஸ், கேம்கியூப், எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற இயந்திரங்களின் விற்பனையைக் காட்டிலும் பெரிதளவு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சண்முகப்பிரியா சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது. சண்முகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: கூகிள் டெஸ்க்டாப் கூகிள் டெஸ்க்டாப் கூகிளின் டெக்ஸ்டாப் தேடலாகும். இது விண்டோஸ் XP, விண்டோஸ் 2000 சேவைப் பொதி 3 உள்ள கணினியில் உள்ள கோப்புக்களைத் தேட உதவும். டெஸ்டாப் தேடலானது பயனரின் மின்னஞ்சல், கணினிக்கோப்புக்கள், பாடல்கள், படங்கள், உரையாடலகள் மற்றும் பார்க்கப் பட்ட இணையத்தளங்களைத் தேடப் பயன்படுகின்றது. கூகிள் தேடலை கணினியில் நிறுவும் போது.இருக்கின்ற எல்லாக் கோப்புக்களையும் சுட்டியிடும் (index). ஆரம்பச் சுட்டியலிடல் முடிவுற்றதும் தேவைக்கேற்றவாறு சுட்டியலிடும். கூகிள் தேடல்போன்று தேடல்கள் மற்றும் தேடல்முடிவுகள் உலாவியில் காட்டப்படும். அந்தரங்கத் தன்மை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் தேடல்கள் வன்வட்டில் இருந்து மிக இலகுவாகப் பிரதிசெய்யக் கூடியவை எனபதுடன் வலையமைப்பூடாகவும் தேடல்கள் செய்யலாம் என்பதே யாகும். கனேடியன் (திரைப்படம்) கனேடியன் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு கனடாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், சஞ்சீவ் குமார்,மணிமாறன் முதலிய பல கலைஞர்கள் நடிதிருந்தனர். ரவி அச்சுதன் பட்ப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். இத்திரைப்படத்தை ரவி அச்சுதன் இயக்கியிருந்தார். ருபி யோகதாசன் படத்தை தயாரித்தார். முக்குவர் சட்டம் முக்குவர் சட்டம் என்பது மட்டக்களப்பு பகுதியில் வழங்கப்பட்ட வழக்கங்களை முதன்மையாக வைத்து ஆதிக்க வர்க்க ஆளுமைகளைக் கொண்டு ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட சட்டம் ஆகும். பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டது போல் சமூகத்தில் மக்கள் நடத்தைக்கான முழுமையான விதிகளாக இச்சட்டங்களை விளங்கிக்கொள்வதனால் இவை ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத்தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியை கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்கமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய மட்டக்களப்பு ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் மட்டக்களப்பில் பின்பற்றியதாக தெரியவில்லை. இரகசிய சமூகம் யார் எதற்காக என்பதை வெளிப்படுத்தாமல் மறைவில் இயங்கும் சமூகம் அல்லது குழுவை இரகசிய சமூகம் அல்லது இரகசியக் குழு எனலாம். சில இரகசிய சமூகங்களில் சில தகவல்கள் அல்லது செயல்பாடுகள் அறியப்படக்கூடியதாக இருந்தாலும் அவர்களின் முக்கிய செயல்பாடுகள் மறைக்கப்படிருக்கும். ஒரு நாட்டின் புலனாய்வுத் துறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தாலும், இரகசிய சமூகம் என்னும்பொழுது விடுதலைக் கட்டுநர், இல்லுமினாட்டி போன்ற சமூகங்களையே சிறப்பாக குறிக்கும். இளகிய நோக்கங்களுக்காக அமைக்கப்படும் சில மாணவ அமைப்புகளும் இரகசியமாக செயல்படுவதுண்டு. பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட் (Brothers In Arms: Earned in Blood) நிகழ்பட ஆட்டம் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் அதன் இரண்டாவது ஆட்டமாகும். வரலாற்று ஆட்டம்/தந்திர சூட்டாளன் இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற பல உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்பட விளையாட்டு மனித உருவங்களை மிகவும் தத்ரூபமாக அன்ரியல் என்ஜின் 2.0 (Unreal Engine 2.0) உதவியுடன் வடிமைத்த பெருமையினைக் கொண்ட நிகழ்பட ஆட்டமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 1 ஐபிஎம் ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி,இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது.2012 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31 வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது (அதிக வருவாய் உள்ள நிறுவனங்களின் பட்டியல்). இதே காலகட்டத்தில் (2011/2012)பின் வரும் மதிப்பீடுகளை இந்நிறுவனம் பெற்றது.அடைப்புக்குறிக்குள் மதிப்படுகளை வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது. ஐபிஎம் நிறுவனம் உலக அளவில் 12 ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.2013 ஆம் ஆண்டு நிலவரப்படி தொடர்ந்து 20 வருடங்களாக அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இதன் பணியாளர்கள் கீழ்க்கண்ட விருதுகளையும் பரிசுகளையும் வென்று இந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐந்து நோபல் பரிசுகள் ஆறு டுரிங் விருதுகள் பத்து தேசிய தொழில்நுட்ப பதக்கம் ஐந்து தேசிய அறிவியல் பதக்கம் ஆகியவை. ஐ பி எம் நிறுவனத்தின் வரலாறு 1885 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. 1885 ஆம் ஆண்டு ஜூலியஸ் இ.பிட்ராப் என்பவர் கணினி அளவி என்னும் சாதனத்திற்கு காப்புரிமையை பதிவு செய்தார். அதன் பின் அலக்ஸாண்டர் டை என்பவர் சுழல் பதிவு கருவியை காப்புரிமை பதிவு செய்தார்.(1888 ஆம் ஆண்டு).1889 ஆம் ஆண்டு ஹெர்மன் ஹோலேரித் என்பவருக்கு மின்பட்டியல் சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.வில்லியர்ட் பண்டி என்பவர் தொழிலாளர்கள் வருகைப் பதிவை பதிவு செய்யும் கருவியை கண்டுபிடித்தார்.1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினாறாம் நாள் மேற்க்கண்ட கண்டுபிடிப்பாளர்களை சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் என்பவர் ஒன்றிணைத்து கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்) என்ற பெயரில் நிறுவினார்.நியூயார்க் மாகாணத்தை அடிப்படையாக கொண்டிருந்த இந்நிறுவனத்திற்கு அப்போது சுமார் 1300 பணியாளர்கள் இருந்தனர்.நியூயார்க், ஓஹியோ,டேய்டன்,டெட்ராய்ட்,வாஷிங்டன் டி சி,மற்றும் கனடாவின் டொராண்டோ,ஆண்ட்ரியோ முதலிய இடங்களில் ஆலைகளும் அலுவலகங்களும் இயங்கின.வணிக ரீதியான அளவீட்டுக்கருவிகள் முதல் நேரப் பதிவுகருவிகள்,பட்டியல் தயாரிக்கும் சாதனங்கள்,மற்றும் துளையிடப்பட்ட அட்டைகள் முதலியவற்றை தயாரித்து விற்பனை செய்தது. சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் ,தேசிய நிதி பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய தாமஸ் ஜே. வாட்சன் சீனியர் என்பவரை தமது நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்க வருமாறு பணித்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் இந்த CTR நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. பணியாளர்களுக்கு உபகாரச் சம்பளம், வாடிக்கையாளர்களுக்கு குறித்த சேவை முதலிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.கம்பெனியின் பெருமையையும்,விசுவாசத்தையும் ஒவ்வொரு பணியாளர் மனதிலும் விதைத்தார்.இவர் அறிமுகப் படுத்திய தின்க் ( THINK - யோசிப்போம் அல்லது யோசி) என்னும் ஸ்லோகன் பணியாளர்கள் மத்தியில் மந்திர வார்த்தையாக ஆனது. இவர் பொறுப்பேற்ற பதினோரே மாதங்களில் இந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தார்.இவரது முதல் நான்கு வருட பணிக்காலத்தில் இந்நிறுவனம் சுமார் 9மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனை ஈட்டியது.மேலும் இந்நிறுவனம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா,தென் அமெரிக்கா,ஆசியா முதலிய கண்டங்களில் தனது இயக்கத்தை நீட்டித்தது.பிப்ரவரி 14 ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது. 2011 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் என்னும் பத்திரிக்கை ஐபிஎம் நிறுவனத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 18 வது பெரிய நிறுவனமாக மதிப்பளித்துள்ளது.உலக அளவில் 31 வது பெரிய நிறுவனமாக போபர்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.டிசம்பர் 2011 ன் படி இந்நிறுவனத்தில் 4,26,751 பணியாளர்கள் உள்ளனர்.உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளில் அலுவலகங்களை அமைத்து உள்ளது. இந்நிறுவனப் பணியாளர்களில் ஆராய்சியாளர்கள்,பொறியாளர்கள்,விற்பனை நிபுணர்கள்,முனைவர்கள்,ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகளும் அடக்கம். கனேடியத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள் "The Sri Lankans had all been living in Germany as refugees and had paid $3,450 for passage to Canada on a freighter. Their journey at sea had lasted 11 days, and they had been in the lifeboats for two nights and three days. The landed Tamils received one-year ministerial permits to stay in Canada, which allowed them to work. All were eventually allowed to stay in Canada. The majority of the refugees settled in Montreal, which already had a well-established Tamil community. The rest went to Toronto. The Tamils' landing set off a nationwide debate about how Canada treats refugee claims. In response, the Mulroney government enacted an overhaul of the refugee system in 1988. " கணினியின் "ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது."
சிம்மேந்திரமத்திமம் சிம்மேந்திரமத்திமம் கருநாடக இசையின் 57வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் ஜன்யமான (வழி இராகமாகிய) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது. சிம்மேந்திரமத்திமத்தின் ஜன்ய இராகங்கள் இவை. ஹேமவதி ஹேமவதி கருநாடக இசையின் 58வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த மேளத்திற்கு தேசிஸிம்ஹாரவம் என்று பெயர் ஹேமவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு. குமுதம் (இதழ்) குமுதம் தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. 2001, 2002 காலப்பகுதியில் குமுதம் யாழ்மணம் என்ற இணைய இதழும் வெளியானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் படைப்புகளும், இந்தியத் தமிழர்களின் படைப்புகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. குங்குமம் (இதழ்) குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விற்பனையில் தாண்டி விட்டது என்று ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது. இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது. பரராசசேகரன் பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும். யாழ்ப்பாண வைபவமாலையோ, வையாபாடலோ கைலாயமாலையோ யாழ்ப்பாணத்து அரசர்களின் அரியணைப் பெயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பின்வந்த ஆய்வாளர்கள், மேற்படி நூல்களையும், பிற்காலத்தில் போத்துக்கீசரால் எழுதப்பட்ட நூல்களையும் வேறு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்து அரசர்கள் அரியணைப்பெயர்களைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வந்தனர். இக்குடியின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை எழுதிய செ. இராசநாயகம். பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இக்குடி ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை ஆட்கொள்ளும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர். இராசநாயகத்தின் குறிப்பிட்டபடி, பரராசசேகரன் என்னும் பெயர்கொண்ட யாழ்ப்பாண மன்னர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. யமத்தா நோ ஒரொச்சி யமத்தா நோ ஒரொச்சி ஜப்பானியத் தொன்மவியில் இடம்பெறும் ஒரு இராட்சத எண்தலை பாம்பு ஆகும். ஜப்பானிய மொழியில் இதை ヤマタノオロチ என்று அழைப்பர். இது, 八俣—の--大蛇 முன்று பகுதிகளாக பிரித்து நோக்கப்படல் வேண்டும். இது "யமத்தா நோ ஒரொச்சி" என வாசிக்கப் பட வேண்டும். சுருக்கமாக இராட்சத எண்தலை பாம்பு எனலாம். இதை ஒரு டிராகன் விவரிக்கப்படுவது உண்டு. இந்த கொடிய விலங்கை சுசனோ என்ற கடவுள் கொன்றதாக பிரபல கதையாடல் ஒன்று தெரிவிக்கின்றது. இக்கதையாடல் மிக தத்ரூபமாக மேடையேற்றப்படுவது வழக்கம். நோம் சோம்சுக்கி நோம் சோம்சுக்கி (பிறப்பு: டிசம்பர் 7, 1928) அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். இவருடைய முழுப்பெயர் "ஆவ்ரம் நோம் சோம்சுக்கி" ("Avram Noam Chomsky") ஆகும். பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள மாசாச்சுசெட்சு இன்சிட்டிட்யூட் ஆஃவ் டெக்னாலச்யில் ("MIT") பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மொழியியல் துறையில் தோற்றுவாய் இலக்கணம் ("generative grammar") என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர். மொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாகப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980-1992 ஆம் காலப்பகுதியில், மேற்குலக வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர். சோம்சுக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்ஃவியா நகரத்திலே வில்லியம் சோம்சுக்கிக்கும் எல்சீ சோம்சுக்கிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையார் வில்லியம் சோம்சுக்கி யுக்ரேன் நாட்டிலிருந்து குடியேறிய ஈபுரு மொழி அறிஞர். தாயார் இன்றைய பெலாரசு நாட்டிலிருந்து வந்தவர். இவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் (1930களில்) இவருடைய யூதர் பின்னணியினால் கத்தோலிக மதத்தவர்களாலும் பிறராலும் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டிருக்கின்றார். சோம்சுகி தன் 10 ஆவது அகவையிலேயே ஸ்பானிய உள்நாட்டுப்போரில் பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதை அடுத்து பாசிசக் கொள்கைகள் பரவும் அச்சம் இருப்பதாக எழுதினார். தம் 12-13 ஆவது அகவையிலேயே அரசியல் கருத்துக்களில் ஈடுபாடு காட்டினார். பிலடெல்ஃவியா மைய உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றபின், 1945ல் பிலடெல்ஃவியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல், மொழியியல் பற்றி பயிலத் தொடங்கினார். வெஸ்ட் சர்ச்மன் (West Churchman), நெல்சன் குட்மன் (Nelson Goodman) ஆகிய மெய்யியல் அறிஞர்களிடமும், செல்லிக் ஹாரிஸ் (Zellig Harris) என்னும் மொழியியல் அறிஞரிடமும் பயிற்சி பெற்றார். ஹாரிஸ் அவர்களுடைய பாடங்களில் அவர் கண்டுபிடித்த மொழியியல் பற்றிய கணித வழி ஆய்வுகளும் இருந்தன. இக்கருத்துக்களைப் பின்னர் சோம்சுகி வேறுகோணத்தில் எண்ணி இடம்-சாரா இலக்கணம் பற்றிய கருத்துக்களைப் படைத்தார். 1949ல் சோம்சுகி காரொல் ஷாட்சு (Carol Schatz) என்னும் மொழியியலாளரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவிவா (பி.1957), டயான் (பி.1960) ஆகிய இரு மகள்களும், ஹாரி (பி.1967) என்னும் மகனும் உள்ளார்கள். சோம்சுகி 1955ல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வை ஹார்வர்டு ஜூனியர் ஃவெல்லோ வாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். இவருடைய ஆய்வின் அடிப்படையில் எழுந்த கருத்துக்களைத் தொகுத்து சொற்றொடரியல் அமைப்புகள் என்னும் பொருள்படும் "Syntactic Structures" என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் மிகவும் பரவலாக அறியப்பட்ட மொழியியல் வெளியீடு ஆகும். சோம்சுக்கி அவர்கள் மாசாச்சுசெட் தொழில்நுட்பக் கல்விக்கழகம் என்னும் MIT (எம் ஐ டி) யில் 1955ல் சேர்ந்து 1961ல் பேராசிரியராகத் தேர்வு பெற்றார். பின்னர் 1966-1976ஆம் காலப்பகுதியில் ஃவெராரி வார்டு பேராசிரியர்ப்பதிவி பெற்றார். பின்னர் 1976ல் எம்.ஐ.டியின் தனிச்சிறப்பு வாய்ந்த இன்ஸ்டிட்யூட் பேராசிரியராக அமர்த்தப்பட்டடர். எம் ஐ டியில் இவர் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து விரிவுரையாற்றி வந்திருக்கின்றார். சோம்சுக்கியின் மொழிக் கோட்பாட்டின் அடிப்படை ஒரு மொழியின் வடிவத்தினைத் தீர்மானிக்கும் கொள்கைகள் உயிரியியல் ரீதியாக மனித மனத்தில் தீர்மானிக்கப்படுகின்றது, எனவே இது மரபு வழியாக கடத்தப்படுகிறது என்கிறது. இக்கொள்கையின் படி இவர் எல்லா மனிதர்களும் அவர்களது சமூக கலாசார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டிருகிறார்கள் என வாதிடுகிறார். இவர் பி.எப்.ஸ்கின்னரின் புரட்சிகர நடத்தைக் கொள்கையை எதிர்க்கிறார். மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல் தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார் சாம்ஸ்கி. சோம்சுக்கி தனது வாழ்நாளில் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டிருக்கிறார். அமெரிக்காவில் இவரது அரசியல் சாய்வு பொது நடப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர் தனது கருத்துக்கள் பொதுவாக "பதவியிலிருப்பவர்களும் ஆளுமை அதிகாரம் கொண்டவர்களும் கேட்க விரும்பாதவைகளாக" இருப்பதால் தம்மை ஒரு அரசியல் மறுப்பாளராகக் காட்டுகின்றனர் என்கிறார். சோம்சுக்கி அவர்கள் 1969ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழத்தில் (Oxford University) ஜான் லாக் (John Locke) விரிவுரை நிகழ்த்தினார். 1970ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெர்ட்ரண்டு ரஸ்ஸல் (Bertrand Russel) நினைவு விரிவுரை நிகழ்த்தினார். 1972ல் புது தில்லியில் நேரு நினைவு விரிவுரை நிகழ்த்தினார். 1988ல் டொராண்ட்டோ பல்கலைக்கழகத்தின் மாஸ்ஸி விரிவிரை நிகழ்த்தினார். நோம் சோம்சுக்கி அவர்கள் மிகப்பல கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவற்றுள் லண்டன் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோவின் லயோலா பல்கலைக்கழகம், ஸ்வாத்மோர் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம், மாசாச்சுசெட்சு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜியார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், புயுனோஸ் ஏரிஸ் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், டொராண்ட்டோ பல்கலைக்கழகம், ப்ரஸ்செல் விரியே பல்கலைக்கழகம், மேற்கு ஒண்ட்டாரியோ பல்கலைக்கழகம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவர் பெற்ற பரிசுகளில் கியோட்டோ பரிசு, பென் பிராங்க்கலின் பதக்கம், இருமுறை ஆர்வெல் பரிசு, ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதக்கம், டோரொத்தி எல்ட்ரிட்ஜ் பீஸ்மேக்கர் பரிசு முதலியன குறிப்பிடத்தக்கன. தம் அறிவு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே மெக்கார்த்தர் பரிசு பெற்றார். பிரித்தானிய இதழ் Prospect (ப்ராஸ்பெக்ட்) நிகழ்த்திய 2005க்கான உலகளாவிய அறிவாளி பற்றிய கருத்துத் தேர்தலில் (poll), வாழும் அறிஞரில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க இதழ் New Statesman 2006ல் நிகழ்த்திய வாக்கெடுப்பில் ‘’Heros of our time’’ (தற்கால சூரன் (ஏறோன்)) வரிசையில் ஏழாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு விவரங்களும் சோம்சுக்கியின் எம்.ஐ டி வலைத்தளத்திலே பார்க்கலாம். இசாமு நொகுச்சி இசாமு நொகுச்சி|野口 勇| (நவம்பர் 17, 1904 – டிசம்பர் 30, 1988 அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் குறிப்ப்பிடத்தக்க சிற்பக் கலைஞராகவும் கட்டடக் கலைஞராகவும் கருதப்படுகின்றார். இசாமு நொகுச்சி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் அமெரிக்க எழுத்தாளராகிய லியோனி கில்மோரும் ஜப்பானிய கவிஞர் யோனெ நோகுச்சியும் ஆவார்கள். இசாமு நொகுச்சி அவர்கள் 1906ல் தன் தந்தையுடன் வாழ்வதற்காக தாயாருடன் ஜப்பானுக்குக் குடியேறினார். சனவரி 14 பிறள்பகர்வு ஒப்பந்தச்சட்டத்தில் பிறள்பகர்வு (Misrepresentation) என்பது ஒரு திறத்தவர்(party) மறு திறத்தவரை நோக்கி உண்மைக்கு புறம்பான கூற்றுக்களைக் கூறி அத்திறத்தவர்களை தூண்டச்செய்து ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தலைக்குறிக்கும். வியாபாரி ஒருவர் தனது விற்பனைப்பண்டத்தின் தன்மை,தரம்,உற்பத்திமுறை பற்றி வாடிக்கையாளரிடையே கூறுகின்ற பொய்யான கூற்றுக்களும் பிறள்பகர்வாகும்.நடத்தைமூலமோ அல்லது வார்த்தைமூலமோ பிறள்பகர்வு தோன்றுவிக்கப்படலாம்.அதாவது, உணமையினை பிறள்வாககூறுவது மட்டுமல்லாது அதனை தெரிந்திருந்தும் மறத்தலையும் குறிக்கும். பிறள்பகர்வால் பாதிக்கப்பட்ட திறத்தவர்கள் நீதிமன்றினை நாடி தமக்கான குறைதீர்பினை பெறலாம். நீதிமன்றானது கூற்றுக்களை ஆராய்ந்தும் அக்கூற்றுக்கள் பாதிக்கப்பட்ட திறத்தவரை ஒப்பந்தத்திற்கு தூண்டியிருந்ததா எனவும் பரீசிலனை செய்தும் பிறள்பகர்வா என கண்டறிகின்றது. அவ்வாறு பிறள்பகர்வென காணுமிடத்து நீதிமன்றானது ஒப்பந்தத்தினை ரத்து செய்வதுடன் பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈட்டினையும் பெற்றுத்தரும். செகராசசேகரன் செகராசசேகரன் என்ற பெயர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களில் ஒன்று. இவ்வாறு அரியணைப் பெயர்கள் இருந்தது பற்றிய தகவல், யாழ்ப்பாண வரலாறு கூறும் பழைய நூல்களான கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்றவற்றில் காணப்படவில்லை. ஆனாலும், இந்த் நூல்களிலும், பிற்காலத்தில் போத்துக்கீசர் எழுதிவைத்த தகல்வல்களையும் ஆராய்ந்த வரலாற்றாய்வாளர்கள், இந்த அரியணைப் பெயர்கள் பற்றி எடுத்துக்கூறியுள்ளார்கள். செகராசசேகரன் என்ற அரியணைப்பெயர் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியுடன் ஆரம்பித்ததாக "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்னும் நூலின் ஆசிரியரான முதலியார் செ. இராசநாயகம் அவர்கள் கருதுகிறார்கள். செகராசசேகரன் என்ற அரியணைப்பெயர் தாங்கியிருந்த மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு: நாடம் மொங்கோலியாவின் மிகப்பெரிய விழா நாடம் விழா (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒன்றுபடுத்துவது, வரலாற்றை நினைவு கூருவது, பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் மல்யுத்தம் ("wrestling"), குதிரையேற்றம், வில் வித்தை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மற்போரைத் தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர். இசுக்கொட்லாந்து ஸ்காட்லாந்து (ஸ்காட்லாந்து, ஸ்கொட்லாந்து, "Scotland") வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் ஸ்காட்லாந்தில் அடங்கும். நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் ஸ்காட்லாந்திய அறிவொளி நிகழ்ந்தது. ஸ்காட்லாந்தின் பெரிய நகரமான கிளாசுக்கோ முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. ஸ்காட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் ஸ்காட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான அபர்தீனுக்கு "ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர்" என்ற பட்டம் கிடைத்துள்ளது. துவக்க நடுக் காலத்தில் தனியான இறையாண்மையுள்ள ஸ்காட்லாந்து இராச்சியம் உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் ஜேம்சின் முடிசூடலை அடுத்து இங்கிலாந்துடனும் அயர்லாந்துடனும் விரும்பிய ஒன்றிணைப்பு செய்துகொண்ட ஸ்காட்லாந்து மே 1,1707இல் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது. இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது. பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு "பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை" உருவாக்கியது. ஸ்காட்லாந்தின் சட்ட முறைமை இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து சட்ட முறைமைகளிலிருந்து வேறுபட்டே இருந்து வந்துள்ளது. ஸ்காட்லாந்தில் பொதுச் சட்டத்திற்கும் தனிச் சட்டத்திற்கும் தனித்தனி நீதிபராமரிப்பு இருந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட சட்ட, கல்வி, சமய நிறுவனங்களை தொடர்ந்து வருவதால் ஸ்காட்டிய பண்பாடும் தேசிய அடையாளமும் 1707 ஒன்றிணைப்பிற்குப் பிறகும் காக்கப்பட்டுள்ளது. 1999இல், ஒப்படைப்பு சட்டமன்றமான ஸ்காட்டிய நாடாளுமன்றம் உருவான பிறகு உள்துறை விவகாரங்களில் பலவற்றில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மே 2011இல் ஸ்காட்டிய தேசியக் கட்சி ஸ்காட்டிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2014இல் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. தர்மவதி தர்மவதி கருநாடக இசையின் 59வது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர். தர்மவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு. தர்மவதி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: ரிஷபப்பிரியா ரிஷபப்பிரியா கருநாடக இசையின் 62வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர். ரிஷபப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. அக்டோபர் 3 கலிங்க மாகன் கலிங்க மாகன் 1215 ஆம் ஆண்டளவில் அதாவது 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்கு எதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் கலிங்க நாடு அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன் என்றும் விசயனின் உடன் பிறந்தானின் வழிவந்தவன் என்றும் அறியப்படுகிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு அமையப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக, கலிங்க மரபு இளவரசனும் இலங்கையின் மன்னனுமான நிசங்க மல்லன் தன் கல்வெட்டுக்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் சிம்மபுரம் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். இன்றைய ஒரிசாவின் பண்டைய தலைநகரம் சிம்மபுரம் என்றே குறிப்பிடப்படுகிறது. கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான "மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள்" என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் தமிழரும், கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஆரிய சக்ரவர்த்திகளின் முதல் அரசனான கூழங்கை சக்கரவர்த்தியை காலிங்க மாகனோடு சிலர் ஒப்பிடுவது , ஆரிய சக்ரவர்த்திகள் கீழைக் கங்கர் மரபு என்று பலர் கருதுவதாலும், குலச் சின்னம், இலட்சினை போன்றவை ஒத்துவருவதாலும் தான். இந்த குழப்பத்திற்கு மூல காரணமான கலிங்க மாகன் = கீழைக் கங்கர் என்ற தவறான புரிதலை அடுத்த பத்தி தெளியப்படுத்தும். நிசங்க மல்லன் காலகட்டம் 1187–1196. இவனது அக்காள் / தங்கை மகனான சோடகங்கன் வேறு அனந்தசோடகங்கன் வேறு என்பது சூளவம்சம் மூலமாகவும், கிடைத்த இவனது காசுகள் மூலமாகவும் தெளிவாகிறது. அதேபோல, வங்காள சிங்கபாகுக்கு பிறந்த விஜயனின் பரம்பரை கலிங்கமாண்ட பரம்பரையில் ஒன்று என்று கொண்டு, இந்த பரம்பரையே கலிங்கமாண்ட கீழைக் கங்கர்களுக்கு பெண் கொடுத்து பெண்ணெடுத்த சம்பந்திகளாக சில தலைமுறை இருந்தனர் என்பதும், கலிங்க மாகன் நிஸ்ஸங்க மல்லனின் பங்காளியாக வேண்டுமானால் இருக்கலாம் என்பதும், ஆனால் கீழைக் கங்கன் அல்ல என்பதும் தெளிவாகிறது. கிபி 4 ஆம் நூற்றாண்டிலேயே தங்களை காங்கேயன் வழிவந்த சூரிய வம்சம் என்று செப்பேட்டில் குறித்து வைத்த மேலைக் கங்கர் மன்னன் மாதவனும் சரி, இக்ஷ்வாகு பரம்பரையில் வந்த சூரிய வம்சத்து காங்கேயன் வழியினரான மேலைக் கங்கன் கோலாஹலனிடம் இருந்து 80 தலைமுறை தாண்டி 4ஆம் நூற்றாண்டில் பிரிந்து வந்த முதல் கீழைக் கங்க மன்னன் இந்திரவர்மன் என்று விழியநகரம் கல்வெட்டு கூறுவதாலும், கண்கர்களோடு சம்பந்தம் செய்துவந்த காரணத்தால், கலிங்கர் தங்களை இக்ஷ்வாகு பரம்பரை என்று கூறிக்கொள்வது ஆச்சரியம் இல்லை. இதனால்தான் நிசங்க மல்லன் தன்னை கலிங்க நாட்டின் சிங்கபுரத்து, விஜய மன்னரின் பரம்பரை என்ற சொல்லோடு, சூரிய வம்சத்து இக்ஷ்வாகு வழியினன் என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளான். மேலும் நிசங்க மல்லனின் இரு மனைவியரில் ஒருவர் கீழைக் கங்க வம்சத்து கல்யானமாலை என்பவர் ஆவார். ஆக கீழைக் கங்கர் காலிங்க மாகன் அல்ல என்பது இவ்வாறு தெளியலாம். சனவரி 13 பிளேஸ்டேசன் 3 பிளேஸ்டேசன் 3 (ஆங்கிலம்:PlayStation 3) சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் தயாரிப்புகளின் ஏழாம் தலைமுறையினருக்கான தயாரிப்பான இந்நிகழ்பட ஆட்ட இயந்திரம் ஏழாம் தலைமுறையினருக்கான தயாரிப்புகளான மைக்ரோசாப்ட் நிறுவனத் தயாரிப்பான எக்ஸ் பாக்ஸ் 360,மற்றும் நின்டெண்டோ நிறுவனத் தயாரிப்பான விய் போன்ற இயந்திரங்களுக்குப் போட்டியாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரமாகும்.நவம்பர் 11, 2006 ஆம் ஆண்டில் யப்பானிலும்,நவம்பர் 17, 2006 அன்று வட அமெரிக்காவிலும் மார்ச், 2007 ஐரோப்பாவிலும் வெளியிடப்பட்டது. இவ்வியந்திரத்தின் உள்தாங்கி 20 GB மற்றும் 60 GB போன்ற அளவுகளிலும் கிடைக்கப்பெறுகிறது. மே 16, 2005 இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டுத்தகவல்களை இயற்பியல் பொழுதுபோக்கு வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது. கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர். இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது. விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஜான் மேத்தர் ஜான் குரோம்வெல் மேத்தர் (பி. ஆகஸ்ட் 7, 1946) அவர்கள் ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் பரிசை பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். ஜான் மேட்த்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) அறிவியல் அறிஞராக பணியாற்றி வருகின்றார். மேத்தர் அவர்களும் ஸ்மூட் அவர்களும் கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி) (Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்க்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது. இவர், "ஆதி முதல் ஒளி: பேரண்டத்தோற்றத்தின் அதிகாலை (வைகறை)ப் பொழுத்துக்கு பின்னோக்கிப் பயணம்(செலவு) செல்லும் அறிவியல் உண்மைக் கதை" (The Very First Light: The True Inside Story of the Scientific Journey Back to the Dawn of the Universe,) என்னும் நூலை ஜான் போஸ்லோ (John Boslough) என்பாருடன் சேர்ந்தெழுதி 1996ல் வெளியிட்டுள்ளார். பள்ளிப்படிப்பு: நியூ ஜெர்சியில் உள்ள நியூட்டன் என்னும் ஊரில் உள்ள நியூ ஜெர்சி உயர்நிலைப்பள்ளியில் (Newton High School, Newton, New Jersey) 1964ல் தேர்ச்சி பெற்ரார். ஜியார்ஜ் ஸ்மூட் ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III (George Fitzgerald Smoot) (பிறப்பு:பெப்ரவரி 20, 1945) ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை நாசாவைச் சேர்ந்த ஜான் மேத்தர் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி யாற்றுகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி) (Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது. ஸ்மூட் அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஃவுளோரிடா (புளோரிடா) மாநிலத்தில் யூக்கான் (Yukon) என்னும் ஊரில் பெப்ருவரி 20, 1945ல் பிறந்தார். இவர் மாசாச்சுசெட்சு இன்ச்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜி (எம் ஐ டி, MIT) யில் படித்து கணிதத்திலும் இயற்பியலிலும் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு அணுவுட்துகள்கள் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றர். அதன் பின்னர் தன் ஆய்வுத்துறையை மாற்றிக்கொண்டு பேரண்டம் பற்றி ஆராயத்தொடங்கினார். லாரன்ஸ் பெர்க்கிலி நாட்டு ஆய்வுச்சாலையில் 1968ல் நோபல் பரிசு பெற்ற லூயி ஆல்வாரஸ் என்னும் அறிஞருடன் கூட்டாக சேர்ந்து ஆய்வு நடத்தினார். அவ் ஆய்வானது நிலவுலகின் காற்றுமண்டலத்தின் மிகப்புறத்தே இருக்கும் மேலடுக்குப் பகுதிக்கு கருவிகள் பொருத்திய பலூன் (நொய்ம்பை) ஒன்றை அனுப்பி அதன் துணையால் எதிர்ப்பொருள் (antimatter) (பலூன்) இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும். அன்றிருந்த பேரண்டக் கொள்கைகள் அப்படி ஒரு நிலையைச் சுட்டியது. பின்னர் ஸ்மூட் அவர்களின் ஆர்வம் பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சைப் (பே நு கவீ) (CMB) பற்றிய கருத்தில் வலுப்பெற்றது. பேரண்டத்தில் பின்புலமாக நுண்ணலைக் கதிர் வீச்சு இருப்பதை ஆர்னோ ஆலன் பென்சியாஸ் என்பவரும் ராபர்ட் வுட்ரோ வில்சன் என்பவரும் தற்செயலாய் 1964ல் கண்டு பிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்காக இவ்விரௌவர்ம் 1978ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். இந்த பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசைகளிலும் உள்ளனவா என்பது தெரியாமல் இருந்தது. பேரண்டத்தின் கட்டமைப்பும் அது சுழன்றுகொண்டு வருகின்றதா என்பதும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. பேரண்டத்தைப் பற்றிய கருத்துருக்களின் ஒன்று பேரண்டம் சுழலுவதாயின் இந்தப் பின்புல கதிர்வீச்சில் ஒருவர் காணும் திசைக்கு ஏறார்போல சிறு வேறுபாடுகள் இருக்குமெனவும், அதனைத் துல்லிய வெப்ப வேறுபாடுகளால் கண்டறியலாம் எனவும் அறிந்திருந்தனர். ஸ்மூட் அவர்கள் ஆல்வாரஸ், ரிச்சர்ட் முல்லர் ஆகியோரின் துணையுடன் 60 பாகை திசை வேறுபாட்டில் அறியக்கூடிய மிகத்துல்லிய நுண்ணலை வேறுபாட்டை அளக்கும் ரேடியோ அளவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். அதன் விளைவாக பேரண்டத்தில் நுண்ணலை கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசையிலும் இல்லை என்று கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பு பேரண்டத்தின் ஆதிமூலத் தோற்றத்திற்குக் காரணமான பெரும்பிறக்கம் (Big Bang) (பெருவெடி) என்னும் கொள்கைக்கு வலு சேர்க்கும் அடிப்படையாக உள்ளதாகக் கண்டுள்ளனர். கோபெ செயற்கைமதி பேரண்டத்தின் பின்புலத் தேடி என்னும் பொருள்படும் COBE (Cosmic Background Explorer) செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) தேடி-66 (Explorer 66) என்றும் அழைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் பேரண்டத்தில் பின்புலமாய் இருக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சைப் பற்றி துல்லியமாய் ஆய்வதாகும். இவ்வளவீடுகளின் துணையால் பேரண்டத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி அறிய இயலும் என்று அறிஞர்கள் கருதினார்கள். 1974ல் நாசா ஓர் அறிவிப்பு செய்திருந்தது. அதில் சிறிய அல்லது நடுத்தர அளவுள்ள விண்கலங்கள் செலுத்த இருப்பதாகவும், பொருத்தமான வான் - விண்ணியல் அறிவியல் சோதனைகள் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர். வந்த 121 முன்வைப்புகளில், 3 கருத்து முன்வைப்புகள் பேரண்டத்தின் பின்புல கதிர்வீச்சைப் பற்றி அறிவது பற்றி இருந்தது. கடைசியில் இவையும் ஏற்கப்படவில்லை. ஆனால் 1976ல் இந்த 3 முன்வைப்புகளின் ஆசிரியர்களை கூட்டாக சேர்ந்து ஒரு புதிய செயற்கைமதி செய்யப் பரிந்துரைகளைத் தரக் கோரியிருந்தார்கள். அதில் கீழ்க்காணும் அமைப்புகள் கூறுகள் இருந்தன. நாசா இந்த கூட்டு முன்வைப்பை 30 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறைவாக ஆகுமெனில் ஒப்புக்கொள்ள முடிவெடுத்தது. பல்வேறு இடர்ப்பாடுகளால், 1981 ஆம் ஆண்டு வரை இப்பணி துவங்க வில்லை. கடைசியாக நவம்பர் 18, 1989ல் சூரியனோடு ஒத்த சுழல்நேர சுற்றுப்பாதையில் செலுத்தி சீர் ஓட்டம் பெற்றது. ஏப்ரல் 23, 1992ல் பேரண்டதின் ஆதிமூலமான கூறுகளைக் கண்டறிந்ததாக அமெரிக்க அறிஞர்கள் அறிவித்தார்கள். இக்கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக, பேரண்டத்தின் பின்புலத்தில் அறியப்படும் நுண்ணலை வீச்சானது எல்லாதிசைகளிலும் ஒரே சீராக இல்லாமல் இருக்கும் பண்பைக் கொண்டு அறியப்பட்டது. 2006ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு இக்கண்டு பிடிப்புக்காக ஜான் மேத்தர் அவர்களுக்கும், ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது. கட்புலத் தொடர்பாடல் எண்ணக்கருக்களை கண்களால் பார்த்து புரியக்கூடியவாறு படமாக தகவல்களை ஒருங்கிணைத்து தருவதை கட்புலத் தொடர்பாடல் ("visual communication") எனலாம். ஓவியம், புகைப்படம், வரைபடம் போன்றவை கண்ணியத்தொடர்பாடல் கருவிகள் எனலாம். இணையத்தளங்களை வடிவமைப்பதில் கண்ணியத்தொடர்பாடல் தொடர்பான அறிவு பயன்படுகின்றது. கணிதக் குறியீடுகள் கணித தகவல்களை வெளிப்படுத்த கணிதக் குறியீடுகள் பயன்படுகின்றன. எழுத்துக்கள் எப்படி மொழியூடாக தகவல்களை வெளிப்படுத்த அவசியமோ அதேபோல் குறியீடுகள் கணிதத்தினூடாக தகவல்களை வெளிப்படுத்த அவசியம். ஒரு மொழியை அறிய, பயன்படுத்த எப்படி அதன் எழுத்துக்களை அறிவது அவசியமோ அதேபோல் கணிதத்தை அறிய, பயன்படுத்த கணிதக் குறியீடுகளை அறிவது அவசியம். எண்கள், செயற்பாட்டுக் குறியீடுகள், கருத்துருக் குறியீடுகள், சமன்பாடுகள் என பலநிலையிலான குறியீடுகள் கணிதத்தில் உண்டு. இரைபோசு ரைபோஸ் (Ribose) என்பது எல்லா உயிரினங்களிலும் அடிப்படியாக உள்ள ஒரு வேதிப்பொருள். இது ஐந்து கரிம (கார்பன்) அணுக்களும் 10 ஹைட்ரஜன் அணுக்களும், ஐந்து ஆக்ஸிஜன் அணுக்களும் கொண்ட ஒரு வேதிப் பொருள். டி-ரைபோஸ் என்பது ஐந்து கரிம அணுக்கள் கொண்ட ஒற்றைச்சர்க்கரைப் பொருள் (சருக்கரை) (monosaccahride) ஆகும். ரைபோஸை சுருக்கமாக ஓர் "ஐந்து கரிம இனியம்" (பெண்ட்டோஸ், pentose) எனலாம். இதன் வேதியியல் மூலக்கூறு வாய்பாடு CHO ஆகும். இதனை 1905 ஆம் அண்டு ஃவேபஸ் லெவீன் (Phoebus Levene) என்பார் கண்டுபிடித்தார். இந்த ரைபோஸானது ஆர் என் ஏ (RNA) என்னும் ரைபோ-நியூக்லிக்-ஆசிடின் ஒரு கூறு ஆகும். ஆர் என் ஏ என்பது உடலியக்கத்திற்கு அடிப்படைத் தேவையான உயிர்வேதிப்பொருள்களை உருவாக்கத் துணையாக இருக்கும் நீள்மான ஓரிழை மூலக்கூறு ஆகும். லதாங்கி லதாங்கி கருநாடக இசையின் 63வது மேளகர்த்தா இராகம். இரவில் பாடுவதற்கு ஏற்றது. அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு கீதப்பிரியா என்று பெயர். லதாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை. லதாங்கி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்: வாசஸ்பதி வாசஸ்பதி கருநாடக இசையின் 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது. அசம்பூர்ண (குறையேழு) மேளபத்ததியில், முத்துசாமி தீட்சதர் மரபில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர். இந்த இராகம் மற்ற இராகங்களைப் போல வட இந்திய இசையில் எடுத்தாளப்படுகின்றது. வாசஸ்பதியின் ஜன்ய இராகங்கள் இவை. மேசகல்யாணி மேச கல்யாணி (அல்லது கல்யாணி) கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.இந்துஸ்தானி இசையில் இவ்விராகத்திற்கு "யமன் தாட்" என்று பெயர். மேசகல்யாணியின் ஜன்ய இராகங்கள் இவை. மேசகல்யாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் ரசிகப்பிரியா ரசிகப்பிரியா கருநாடக இசையின் 72வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரசமஞ்சரி என்று பெயர். அக்டோபர் 4 கோபால் (நிரலாக்க மொழி) கோபோல் ("COBOL") கணினியில் வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் COmmon Business Oriented Language சுருக்கமாக கோபால் அல்லது கோபோல் (இலங்கை வழக்கு) என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய நிரலாக்கல் மொழிகளில் உள்ள வசதிகள் சேர்க்கப்பட்டன. 1959 ஆம் ஆண்டு CODASYL (COnference on DAta Systems Languages) குழு மூலமாக் இம்மொழியானது ஆரம்பிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய நியமக் குழு கோபால் மொழியின் நியமங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதன் சீர்தரம் (நியமம்) விருத்திக்கு அமெரிக்க தேசிய நியமக் குழுவே முன்னெடுத்து வந்துள்ளது. கோபால் மொழி ஆங்கிலத்தைப் போன்றுள்ளதால் அவை தாமாகவே ஆவணப்படுத்தும் வசதியுள்ளவை ஆகும். கோபால் மொழியில் சீர்தரமாக A இல் இருந்து Z வரையான பெரிய எழுத்துக்களுடன் (சிறிய எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது) 0 இலிருந்து 9 எண்களுடன் விசேட எழுத்துக்களான ( , ; , . , < , > , $ ,…… உடனான 51 எழுதுக்களை ஆதரிக்கின்றது. எழுத்துக்களிலான தொடர்கள் சொற்களை தோற்றுவிக்கும். கோபால் மொழியில் ஏனைய நிரலாக்கம் போலவே இரண்டு வகையான சொற்கள் உண்டு. கோபால் மொழியில் இலக்கணப்படி சீர்தரமாக ஏற்கனவே சில சொற்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை கோபால் மொழியில் தமக்கென ஓர் விசேட கருத்தினைக் கொண்டுள்ளன. ஓர் நிரலாக்கர் இவ்வாறாக வரையறை செய்யப்பட்ட சொற்களை அவ்வரையறக்கு உட்பட்டே பயன்படுத்தல் வேண்டும் மாறாக நிரலாக்கர் விரும்பிய வண்ணம் எதேச்சையாகப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ACCEPT, DIVISION, DIVIDE மற்றும் VALUE போன்றவை. இது கோபால் நிரலாக்கர்கள் உருவாக்கும் ஓர் தரவு ஒன்றையோ, பந்தியையோ, கோப்பு, ரெக்காட் (Record) குறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இவையெல்லாம் பயனர்கள் (நிரல்லாக்கர்கள்) உருவாக்கிய சொற்கள் எனப்படும். எடுத்துக்க்காட்டுகள் ஆவன: AMT, REG-NO, AGE. பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் வரலாறு பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் ("Bandaranaike International Airport") இலங்கையில் இருக்கும் பிரதான முக்கிய பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்.இரண்டாம் உலகப்போரில் இது ராயல் வானூர்திப் படையின் தளங்களில் ஒன்றாக அமைந்தது.இன்றளவும் இதில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான வானூர்திப் படைத் தளமும் அமைந்துள்ளது. இது 1970இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டது. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயர்மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப்பட்டது.இலங்கையில் உள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் தெற்கு நகரான அம்பாந்தோட்டையில் அமைந்துள்ளது. ஜூன் 24, 2001 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் விமான நிலையத்தில் உள்ள கடுமையான பாதுகாப்புக்களை மீறி நுழைந்து 26 வர்த்தக மற்றும் போர் வானூர்திகளைச் சேதப்படுத்தினர். பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய ஒரேயொரு ஓடுபாதை (04/22) ஆனது 3,350 மீ நீளமானது . மேல்எழுதல் மற்றும் இறங்கும் தூரம் முறையே 3.441 மீ மற்றும் 3,350 மீ ஆகும். கூடுதலாக நவீனரக விமானமான ஏர்பஸ் ஏ 380 செயல்படுத்த விமான நிலையத்தில் 4000 மீ நீள இரண்டாவது ஓடுபாதை மீது முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏ 380 கையாள மற்றொரு நடையோடுபாதை[டாக்சி வே ] உருவாக்க ஒரு திட்டமும் உள்ளது. கூடுதலாக பி.ஐ.ஏ விரிவாக்கம் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது இது செயற்படுத்தப்படும் . புதிய முனையத்தின் கட்டுமானம் செப்டம்பர் / அக்டோபர் 2017 முதல் தொடங்கி 2020 இல் பூர்த்தி செய்யப்படும். எயார்பஸ் ஏ380 மங்கோலியப் பேரரசு மங்கோலியப் பேரரசு (1206 - 1368 ) (மங்கோலியன்: "ஆங்சின்ட் குர்ரம்" ; மங்கோலிய கியல்லிக்: Монголын эзэнт гүрэн) மத்திய ஆசியாவின் புல்வெளியில் உருவான பேரரசு ஆகும். இரு நூற்றாண்டுகள் மட்டுமே இது இருந்தது. இதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மிகப்பெரிய தொடர்நிலப்பரப்பு பேரரசும், மொத்த பரப்பளவு அடிப்படையில் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தாக இரண்டாவது பெரிய பேரரசும் ஆகும். இப்பேரரசு அதன் உச்சநிலையில் யப்பான் கடல் பகுதியிலிருந்து மத்திய ஐரோப்பா வரை பரந்து காணப்பட்டது. 1227 இல் செங்கிஸ் கான் மரணித்த பின்னர் யுவான் அரசமரபு இல்-கான் அரசு, இச்சாகடாய் கான் அரசு, பொற்குழு ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு செங்கிஸ் கானின் மகன்களான தனித்தனிக் கானினால் ஆட்சி செய்யப்பட்டது. 1350 களில் இப்பிரதேசங்களின் ஒற்றுமை முற்றாகச் சீர்குலைந்த நிலையில் அவை தனித்தனியாயின. மங்கோலிய பகுதியிலிருந்த நாடோடி பழங்குடிகளை ஒன்றிணைத்து செங்கிஸ் கான் தலைமையின் கீழ் மங்கோலிய அரசு உருவாக்கப்பட்டது. நாடோடி இனத்தின் அமைச்சர்கள்\மூத்தோர்கள் குழு செங்கிஸ்கானையும் அவர் வழித்தோன்றல்களையும் மங்கோல்களின் அரசனாக 1206 இல் தேர்ந்தெடுத்தது. செங்கிஸ் கான் பல இடங்களுக்கு மங்கோலியப் படைகளை அனுப்பி அரசை விரிவுபடுத்தினார். இரு கண்டங்களில் பரவியிருந்த இப்பேரரசு மேற்கு பண்பாட்டையும் கிழக்கு பண்பாட்டையும் இணைத்தது இது மங்கோலிய அமைதி எனப்பட்டது. இரு பண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கவும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படவும் தொழில்நுட்பம் பரிமாறிக்கொள்ளப்படவும் வியாபாரம் செழிக்கவும் மங்கோலிய அமைதி பயன்பட்டது. மங்கோலியப் பேரரசுக்கு செங்கிஸ் கானின் மகன்களில் முதலில் செங்கிஸ் கானின் மரணத்துக்கு பின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஒகோடி கானுக்கும் செங்கிஸ் கானின் மற்ற மகன்கள் டொல்சிக்கும் செகடாய் கானுக்கும் டோச்சிக்கும் பிறந்த குழந்தைகளில் எவர் அரச பதவி ஏற்பது என்பது குறித்து கருத்து வேறுபாட்டதால் பேரரசு பிளவுபட அடிகோலியது. இம்மூவருக்குள் நடந்த சண்டையில் டோல்சி பிரிவு வேற்றி பெற்றது. ஆனால் டோல்சி பிரிவுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றன. செங்கிஸ் கானுக்கு பின் ஒகோடி கானும் பின் அவர் மகன் கயுக் கானும் பின் டொல்சி பிரிவை சேர்ந்த டொல்சியின் மூத்த மகன் மாங்கி கானும் அரசாண்டார்கள். மாங்கி கானுக்கு பின் அவர் தம்பிகள் குப்லாய் கானுக்கும் ஆரிக் புகாவுக்கும் வாரிசு சண்டை ஏற்பட்டது. எதிர் எதிர் குறுல்தாய் அணிகள் இருவரையும் ஒரே சமயத்தில் மங்கோலிய பேரரசின் பேரரசனாக அறிவித்தன. இதனால் அரச பதவியை அடைய சகோதர சண்டை மூண்டது, அவர்கள் சண்டையுடன் செங்கிஸ் கானின் மற்ற மகன்களின் வழித்தோன்றல்களின் எதிர்ப்பையும் அவர்கள் முறியடிக்க வேண்டியிருந்தது. இப்போரில் குப்லாய் வெற்றி பெற்றார். ஆனால் செகடாய் கான் & ஒகோடி கான் குடும்பங்களின் அதிகாரத்தை முற்றும் முறியடிக்க முடியவில்லை, 1260இல் கலிலேயாவில் நடந்த அயின் சாலுட் போர் மங்கோலிய ஆக்கிரமிப்பு போரில் திருப்பு முனையாக இருந்தது. அப்போரிலேயே முதன்முறையாக மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இருந்தபோதிலும் மங்கோலியர்கள் கிழக்கு மத்திய கிழக்கு நிலப்பரப்பில் பல தாக்குத்தல்களை மேற்கொண்டனர், 1299இல் நடந்த மூன்றாம் ஓம்சு போரில் வெற்றி பெற்றபின் சிறிது காலம் காசாவையும் கட்டுக்குள் வைத்திருந்தனர். பல்வேறு நிலம்சார்ந்த அரசியல் காரணங்களால் அந்பகுதிகளை விட்டு விலகிச் சென்றனர். 1294இல் குப்லாய் கான மறையும் காலத்தில் மங்கோலியப் பேரரசு நான்கு பாகமாக பிளவுபட்டது. வடமேற்கில் பொற் குழு கான் நாடும் நடு ஆசியாவில் செகடாய் கான் நாடும் தென் மேற்கில் இல்க் கான் நாடும் தற்போதுள்ள பெய்ஜிங் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பகுதியில் யுவான் அரசமரபும் தோன்றின. 1304இல் மூன்று மேற்கு பகுதிகளில் உள்ள கான் நாடுகளும் யுவான் அரசமரபின் ஆளுமையை ஏற்றுக்கொண்டன. ஆனால் 1368இல் ஆன் சீனர்களின் மிங் அரசமரபு மங்கோலியர்களின் தலைநகரை கைப்பற்றியது. மங்கோலிய இனத்தவர்களான யுவான் அரசர்கள் மங்கோலிய நாட்டுபகுதிக்கு பின்வாங்கி அப்பகுதியை ஆண்டார்கள். இது வடக்கு யுவான் அரசமரபு என அழைக்கப்படுகிறது. யுவான் அரசமரபு வீழ்ந்த பின் மற்ற கான் நாடுகள் சில நூற்றாண்டுகள் தாக்கிப்பிடித்து இறுதியில் 1335-1353 காலகட்டத்தில் முழுவதுமாக வீழ்ந்தன. 10ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியா, மஞ்சூரியா, வட சீனாவின் சில பகுதிகள் லிஓ அரசமரபு கட்டுப்பாட்டில் இருந்தது. 1125 இல் சுர்சென் பழங்குடிகளால் உருவாக்கப்பட்ட சின் அரசமரபு (1115-1234) லிஓ அரசமரபின் மங்கோலியா பகுதிகளை கைப்பற்றியது. 1130இல் பொன்வேந்தன் என அறியப்படும் சின் அரசமரபு ஆட்சியாளர்கள் கமங் மங்கோல் பழங்குடியினர் தாக்குதலை தாக்குப்பிடித்தார்கள், இந்த மங்கோல்களுக்கு செங்கிஸ் கானின் முப்பாட்டன் கபுல் கான் தலைமை வகித்தார். மங்கோலிய மேட்டு நிலத்தில் ஐந்து ஆற்றல்மிக்க பழங்குடியினர் கூட்டமைப்பு இருந்தது. கமங் மங்கோல், டாட்டர், நைம்மன், கெராய்ட்டி, மெர்கிட் ஆகியவை அவை. சின் அரசர்கள் மங்கோல் பழங்குடிகள் இடையே மோதலை உருவாக்குது என்ற கொள்கை வைத்திருந்தார்கள், குறிப்பாக கமங் மங்கோல்களுக்கும் டாட்டர்களுக்கும் மோதலை மூட்டியிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒற்றுமையில்லாமல் மோதிக்கொண்டு இருந்தால் தான் தங்களுக்கு ஆபத்தில்லை என்று கருதினார்கள். கானுக்கு அடுத்து தலைமை பொருப்பை ஏற்ற அபகை கானை டார்ட்டர்கள் வஞ்சித்து சின்களிடம் ஒப்படைக்கிறார்கள். சின்கள் அபகை கானை கொலை செய்து விடுகிறார்கள். இதனால் கமங் மங்கோல்கள் சின் அரசின் பகுதிகளை தாக்குகிறார்கள், ஆனால் சின்களின் எதிர் தாக்குதலில் கமங் மங்கோல்கள் தோற்றுவிடுகிறார்கள். 1147இல் சின்கள் கொள்கையை மாற்றிக்கொண்டு கமங் மங்கோல்களுடன் அமைதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு பல கோட்டைகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்கிறார்கள். மங்கோல்கள் அபகை கானை வஞ்சித்தற்காக வஞ்சம் தீர்க்க டார்டர்களை தாக்குகிறார்கள். இரு பழங்குடிகளுக்கும் மோதல் முற்றுகிறது. டார்டர்கள் சின் படைகளின் துணையுடன் 1161இல் மங்கோல்களை வெற்றி கொள்கிறார்கள்.. மங்கோல் இனத்தலைவரின் மகனான தமுஜின் என்ற இயற்பெயர் கொண்ட செங்கிஸ் கான் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அனாதையானார். பின்பு கெராய்ட் இன தலைவனான தொகுருல் கானின் கீழ் பணிபுரிந்தார், தொகுருல் சின் அரசமரபு அளித்த வாங் கான் என்ற பட்டத்தால் அழைக்கப்படுகிறார், தமுஜினின் மனைவியை மெர்கிட் இனத்தவர்கள் கவர்ந்து சென்றபோது தொகுருல் பெரும் படையை கொடுத்து உதவியதுடன் சமுகாவை இணைந்துக்கொண்டு போரிட கூறினார்.சிறந்த நண்பனாக இருந்த சமுகாவுக்கும் இவருக்கும் பின்பு பகை ஏற்படுகிறது. தமுஜின் வளர்ச்சியால் அச்சம் கொண்ட வாங் கான், அவரது வளர்ச்சியை சமுகாவுடன் இணைந்து தடுக்க நினைத்த போது தமுஜின் சமுகாவையும் வாங் கானையும் தோற்கடிக்கிறார். அதன் பின் அவர் தன் பெயரை செங்கிஸ் கான் என்று வைத்துக்கொள்கிறார். கான் மற்ற மங்கோலிய பழங்குடியினரை தோற்கடித்து மங்கோல் நாட்டை விரிவாக்குகிறார். செங்கிஸ் கான் சட்ட முறை சிறந்த யாசாவை அறிமுகப்படுத்துகிறார். யாசா வரிவிதிப்பை முறைபடுத்துகிறது. அனைத்து திடகாத்திரமான மனித்தர்களும் குளிர் காலத்தில் வேட்டைக்கு செல்லலாம் என்கிறது. யாசா என்ற சொல்லே கானுக்கு கீழ் இருந்த அனைத்து மங்கோலியர்களையும் குறிக்க மங்கோலியர்களால் பயன்படுத்தப்பட்டது. கானின் படைப்பிரிவு அர்பன் (10 பேர்), சூனு (100), மின்ங்கன் (1000 பேர்), டுமன் (10,000 பேர்) என பிரிக்கப்பட்டிருந்தது. மெய்காவல் படை பகலுக்கு ஒன்று (கொர்ச்சின் டாகுத்) இரவுக்கு ஒன்று (கேசிங்) என பிரிக்கப்பட்டிருந்தது.தாழ்ந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விசுவாசிகளுக்கு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தனக்கு நெருக்கமான உறவுகளின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட படை வீரர்களை விட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட படை வீரர்கள் குறைவு. யாசா சட்டம் அப்போதைய மங்கோலியர்களின் தினசரி அரசியல் குடும்ப வாழ்வில் பங்கு பெற்றிருந்தது. பெண்களை விற்பதையும் திருட்டையும் மங்கோலியர்களுக்குள் சண்டையிடுவதையும் விலங்குகள் கருவுறும் காலத்திலான வேட்டையையும் செங்கிஸ் கான் தடை செய்திருந்தார் கான் ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கும் மத குருமார்களுக்கும் வரி விலக்கு அளித்தார்.இவர் கல்வியை ஆதரித்தார், உய்குர் வரி வடிவத்தை ஏற்றுக்கொண்டார் இது உய்குர்-மங்கோலிய வரிவடிவத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. முன்பு நைமன் கான்களுக்கு பணியாற்றிய உய்குர் டடங்குகாவை தன் மகன்களுக்கு படிப்பு சொல்லித்தர ஆசிரியராக நியமித்தார். செங்கிஸ் கான் சர்சென்களின் சின் அரசமரபுடனும் வட சீனாவிலிருந்த மேற்கு சியா அரசமரபுடனும் மோதினார் பின்பு பலமிக்க அரசுகளான திபெத்துடனும் காரா கைடய் உடனும் மோதினார் இவர்கள் அனைவரையும் வெற்றி கொண்ட பின்பு மேற்குலுள்ள நடு ஆசியாவை நோக்கி தன் படையெடுப்பை நகர்த்தினார். ஏரல் கடலில் பாயும் அமு தாரியா ஆற்று பகுதியிலுள்ள பண்டைய காலத்தில் டிராண்சுஓக்சினா என அழைக்கப்பட்ட பகுதியிலும் கிழக்கு பாரசீக பேரரசின் பகுதியிலும் பேரரழிவை ஏற்படுத்தினார். பின்பு கிவ்வன் ரசு எனப்பட்ட (உருசியா, பெலாரசு, உக்ரைன் நாடுகளுக்கு முன்பிருந்தது) நாட்டையும் காக்கேசியாவையும் தாக்கினார். இறப்பதற்கு முன்பே பேரரசை தன் மகன்களுக்கு பங்கு போட்டு கொடுத்து பேரரசானது அரசு குடும்ப சொத்து போல் ஆக்கினார். செங்கிஸ் கானும் பின் வந்த யுவான் அரசமரபு பேரரசர்களும் இசுலாமிய முறைப்படியான அலால் முறைப்படி இறைச்சி வெட்டுவதை தடை செய்து முசுலிம்கள் மங்கோலிய முறைப்படியே இறைச்சியை வெட்ட வேண்டும் என்றார்கள். அதனால் முசுலிம்கள் யாருக்கும் தெரியாமல் ஆட்டை வெட்டினார்கள். முசுலிம்களையும் யூதர்களையும் செங்கிஸ் கான் அடிமைகள் என்றார். விருத்த சேதனம் தடை செய்யப்பட்டு இருந்தது. யூதர்கள் மத முறைப்படியான உணவான கசுருத்தை உண்ண தடை விதிக்கப்பட்டிருந்தது. செங்கிஸ் கான் ஆகத்து 18, 1227 அன்று இறக்கிறார் அப்போது மங்கோலியப் பேரரசு அமைதி (பசுபிக்) பெருங்கடலில் இருந்து காசுப்பியன் கடல் வரை பரவியிருத்தது. உரோமைப் பேரரசு & முசுலிம் காலிப்பத் அரசை விட இருமடங்கு பெரியதாக இருந்தது. செங்கிஸ் கான் தனது மூன்றாவது மகன் ஒகோடி கானை வாரிசாக நியமித்தார். மங்கோலிய வழக்கப்படி யாருக்கும் தெரியாத (இரகசிய) இடத்தில் கான் புதைக்கப்பட்டார். ஒகோடி கானை குறுதளாய் மூலம் முறையாக தேர்ந்தெடுக்கும் வரை பேரரசை 1229 வரை மற்றொரு மகன் தொல்சி கவனித்துக்கொண்டார். பதவியேற்ற உடன் ஒகோடி கான் தன் படைகளை காசுப்பியேன் பகுதி புல்வெளிப்பகுதியில் உள்ள பாசுக்கிர் பல்கர் ஆகிய இனத்தவரை தன் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பினார். கிழக்கில் மங்கோயர்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த மஞ்சூரியை ஆண்ட கிழக்கு சியா அரசையும் துங்குசிக் மொழி பேசும் இனத்தையும் முற்றாக தோற்கடித்தார். 1230இல் ஒகோடி கான் சின் அரசமரபுக்கு எதிரான படைகளுக்கு தலைமை ஏற்றார். ஒகோடியின் படைத் தளபதி சுபுடாய் சின் அரசமரபு அரசர் வான்யங் சோலி அவர்களின் தலைநகரை 1232இல் கைபெங் முற்றுகையின் போது கைப்பற்றினார் வான்யங் சோலி தப்பிச்சென்ற கைசூ நகரை மங்கோலியர்கள் கைப்பற்றிய உடன் 1234இல் சின் அரசு முற்றாக ஒழிந்தது. 1234 இல் ஒகோடியின் மகன்கள் கோசு, கோடென் டான்குட் இன தளபதி சேகன் ஆகியோர் சொங் அரசமரபு உதவியுடன் தென் சீனத்தை கைப்பற்றினார்கள். பல ஆன் சீனர்களும் கைடான் இன மக்களும் சின் அரசுக்கு எதிராக மங்கோலியர்களுடன் இணைந்துகொண்டனர். அதனால் அவர்கள் ஒகோடியின் நன்மதிப்பை பெற்று சிலர் 10,000 கொண்ட துமென் படைப்பிரிவை வழி நடத்தும் உரிமையை பெற்றார்கள். மேற்கு சியாக்களுக்கு எதிராக லியு எயிமா(ஆன் சீனர்), சி தியன்சியங் தலைமையில் மங்கோலியர்கள் போரிட்டனர். மேற்கில் ஒகோடியின் படைத்தளபதி சோர்மாகுன், இக்வரிச்மிஅன் பேரரசின் கடைசி அரசர் சலால் அட்-டின் மின்ங்புநுவை தோற்கடித்தார். தென் பாரசீகத்தில் இருந்த சிறிய அரசுகள் மங்கோலியர்களின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கீழ் நடந்தன. கிழக்கில் பல முற்றுகைக்களுக்கு பின்னும் கொரிய மூவலந்தீவை ஒகோடியால் முழுவதும் கைப்பற்ற முடியவில்லை. வடமேற்கு மங்கோலியாவில் உள்ள காரகோரத்தை பேரரசின் தலைநகராக ஒகோடி உருவாக்கினார். பொலன்னறுவை இந்துக் கோயில்கள் இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலன்னறுவை. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில், அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காகக் கட்டப்பட்டனவே பொலன்னறுவை இந்துக் கோயில்கள். இங்கே பத்துச் சிவன் கோயில்களும், ஐந்து விஷ்ணு கோயில்களும், ஒரு காளி கோயிலுமாகப் பதினாறு இந்துக் கோயில்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை. ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை. பாண்டியர் காலத்திலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கலிங்க மாகனின் காலத்திலும் இவற்றுட் சில கட்டப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன் அந்நாட்டின் தலைநகரமாக இருந்த அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வடபகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது "மும்முடிச் சோழ மண்டலம்" என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது. போரில் அழிந்துபோன அனுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை தலைநகரம் ஆக்கப்பட்டது. 1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது. சோழர் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பதாலும், சிங்களவர்களுக்கும், சோழர்களுக்கும் நீண்டகாலப் பகை இருந்ததாலும், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர், ஏராளமான தமிழ்நாட்டுப் படைகளையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் இலங்கையில் வைத்திருக்கவேண்டி இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருந்திருப்பார்கள். இப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்கள் பௌத்தர்கள் என்பதால், இந்துக்களின் வழிபாட்டிடங்கள் இங்கே இருந்திருக்க முடியாது. எனவே சோழர் ஆட்சிக்காலத்தில் பல இந்துக் கோயில்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டன. முன் குறிப்பிடப்பட்ட பதினாறு கோயில்களுக்கும், பெயர்கள் இருந்திருக்கும் எனினும், இவை அனைத்தும் அறியப்படவில்லை. இலங்கைத் தொல்பொருள் துறையினர் இவற்றை எண்கள் மூலம் அடையாளம் காண்கின்றனர். சிவ தேவாலயங்களுக்கு, முதலாம் சிவ தேவாலயம், இரண்டாம் சிவ தேவாலயம் என்றவாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் சோழர் காலத்தில் வானவன் மாதேவி ஈச்வரம் என அழைக்கப்பட்ட இரண்டாம் சிவ தேவாலயமே முழுமையாகப் பேணப்பட்ட நிலையில் உள்ளது. இது தவிர ஐந்தாம் சிவ தேவாலயமும் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. ஏனையவற்றுள் பெரும்பாலானவை அடித்தளம் முதலான குறைந்தளவு தடயங்களையே கொண்டுள்ளன. முழுமையாகப் பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரமும், குறிப்பிடத்தக்க கட்டிடப்பகுதிகள் எஞ்சியுள்ள வேறு சில கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலைப் பாணியை ஆதாரமாக வைத்துச் சோழர் காலக் கோயில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டின் துணை கொண்டு அது முதலாவது இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதலாவது சிவ தேவாலயம் பாண்டியர் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. இது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. போதிய சான்றுகள் காணப்படாமையால் ஏனையவற்றின் காலத்தை அச்சொட்டாக அறியக் கூடவில்லை. இங்கே கட்டப்பட்ட பெரும்பாலான இந்துக் கோயில்கள் அளவிற் சிறியன. இங்கே வாழ்ந்த இந்துக்களிற் பலர் இவ்விடங்களில் நிரந்தரமான ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்க முடியாது. அத்துடன், உள்ளூர் மக்களை மதம் மாற்றும் முயற்சியிலும் சோழர்கள் ஈடுபடவில்லை இதனால், தமிழ் நாட்டில் கட்டப்பட்டது போன்ற பெரிய கோயில்கள் இலங்கையில் சோழர்களால் கட்டப்படவில்லை. வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைச் சேர்ந்தது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும், இப்பாணியையே பின்பற்றியிருக்கும் எனலாம். நியூயார்க் பங்குச் சந்தை நியூயார்க் பங்குச் சந்தை (இலங்கை வழக்கு: நியூயோர்க் பங்குச் சந்தை) பண அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள இப்பங்குச் சந்தை நிரற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாமிடம் வகிக்கிறது. இது 1792-லிருந்தே செயற்படுவதாக அறியப்படுகிறது. மார்ச் 8, 1817 இல் நிறுவனமயப் படுத்தப்பட்டது. 1863 இல் தற்போதைய பெயர் பெற்றது. வணிக வல்லுனர்கள் பட்டியல் அக்கென்சர் நிறுவனம் (Accenture consulting company) 2002 இல் உலகின் முதன்மை வணிகவியல் வல்லுனர்களின் பட்டியலொன்றைத் தயாரித்தது. அப்பட்டியல் வருமாறு: டோக்கியோ பங்குச் சந்தை டோக்கியோ பங்குச் சந்தை பண அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். இதன் தொடக்க நிறுவனம் ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. இது மே 15, 1978 இல் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1 இலிருந்து சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1949 இல் தற்போதைய பெயரில் இது மீளத் தொடங்கப்பட்டது. அங்கயற்கண்ணி கப்டன் அங்கயற்கண்ணி (10, மே, 1973 - ஆகஸ்ட் 16, 1994, கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆவார். கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரமரணமடைந்த நாளில் விடுதலைப் போராட்டத்தில் இவர் இணைந்தார். அங்கயற்கண்ணி ஆகஸ்ட் 16, 1994 இல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடலில் இலங்கைக் கடற்படையினரின் கப்பல் படை மீதும் 'டோறா' விசைப்படகின் மீதும் கரும்புலித் தாக்குதல் வீரச்சாவடைந்தார். . பொட்டு அம்மான் பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர். இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன. வானவன் மாதேவி ஈச்வரம் வானவன் மாதேவி ஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள்,முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும். இக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டு சான்றைக் கொண்டு, இக்கோயில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி என அறியப்படுகின்றது. எனவே தனது தாயின் பெயராலேயே இந்தக் கோயிலை அவன் அமைத்திருக்கக்கூடும். வானவன் மாதேவி ஈஸ்வரம், திராவிடக் கட்டிடக்கலையின், சோழர் பாணியின் ஆரம்பகாலத்தைப் பிரதிபலிக்கின்றது. சோழர்களின் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைப் படைப்புகளில் இக் கோயிலையும் சேர்த்துக்கொள்ளலாம். இக் கட்டிடம் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட கோயில்களைப் போலன்றி அளவில் சிறியதாகக் காணப்படுகின்றது. கருவறையையும், அதன் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்ட இக்கோயிலின் கருவறையின் வெளிப்புறம், 20 அடி 6 அங்குல அளவு கொண்ட சதுர வடிவமானது. உட்புறம், 9 அடி 4 அங்குலச் சதுரம் ஆகும். இதிலிருந்து அதன் கருவறைச் சுவர் 5 அடி 6 அங்குலத் தடிப்புக் கொண்டது என அறிய முடிகின்றது. இதன் முன் மண்டபம் 16 அடி நீளமும், 9 அடி 4 அங்குல அகலமும் கொண்டது. கருவறையின் மீது அமைந்துள்ள விமானம், நிலத்திலிருந்து 31 அடி 9 அங்குல உயரம் கொண்டதாக உள்ளது. கொலின்ஸ் கப்டன் கொலின்ஸ் (12/05/1969 - 10/07/1990; நறுவிலிக்குளம், மன்னார்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பர்ணாந்து சில்வஸ்டார் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். 10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார். முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத் ஆகியோருடன் கப்டன் கொலின்சும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெயந்தன் கப்டன் ஜெயந்தன் (05/01/1972 - 04/05/1991; முறக்கொட்டான்சேனை, மட்டக்களப்பு) எனும் இயக்கப்பெயர் கொண்ட சம்புக்குட்டி பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் ஆவார். கடற்கரும்புலியாக 04/05/1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல் 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார். சுற்றளவு வடிவவியலில், ஏதேனும் ஒரு பரப்பைச் சுற்றி அமையும் பாதை, அப்பரப்பின் சுற்றளவு ("perimeter") எனப்படும். "பெரி" (சுற்றி) மற்றும் "மீட்டர்" (அளவு) என்ற கிரேக்கமொழிச் சொற்களிலிலிருந்து ஆங்கிலத்தில் "பெரிமீட்டர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுற்றளவு என்ற சொல் ஒரு பரப்பைச் சுற்றி அமைந்த பாதையை அல்லது அப்பாதையின் நீளத்தைக் குறிப்பதற்கு பயன்படுகிறது. வட்டமான பரப்பின் சுற்றளவு அதன் பரிதி (circumference) எனப்படும். சுற்றளவு காணல், நடைமுறையில் நிறைய பயன்பாடுகளுடையது. n-பக்க பலகோணத்தின் சுற்றளவு அப்பலகோணத்தின் (1st, 2nd, 3rd,4th... n-th) பக்கங்களின் நீளங்களின் கூடுதலாகும். பொதுவான வடிவங்களின் சுற்றளவு காணும் வாய்ப்பாடு: இங்கு formula_2 , பாதையின் நீளம். formula_3 நுண்ணிய சிறுகோட்டின் அளவு. ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் சுற்றளவு காணும்போது இவற்றின் மதிப்புகள் இயற்கணித வடிவில் இருத்தல் வேண்டும் formula_4 பரிமாண யூக்ளிடின் வெளியில், கனஅளவுகளைச் சுற்றியமையும் மீமேற்பரப்புகளின் சுற்றளவு போன்ற உயர் அளவிலானவைகளை "காக்கியோபோலியின் கணக் கோட்பாடில்"(Caccioppoli set) காணலாம். கப்டன் சிதம்பரம் கப்டன் சிதம்பரம் (26/12/1972 - 04/05/1991; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பெரியதம்பி சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். கடற்கரும்புலியான இவர் 04-05-1991 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பலான 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார். சாய்வு ஒரு நேர்கோடு எப்படி சாய்ந்துள்ளது அல்லது சரிந்துள்ளது என்றதன் அளவே சாய்வு (slope) எனப் பொதுவாக அழைக்கப்படும். சாய்வை ஏற்றம்/ஓட்டம் அல்லது இறக்கம்/ஓட்டம் என்று வரையறுக்கலாம். சாய்வின் அளவு அதிகமானால் அதன் சரிவு அதிகமாய் உள்ளதை குறிக்கும். பொதுவாக சாய்வு "m" எனக் குறிக்கப்படுகிறது. "x" , "y" அச்சுக்களைக் கொண்ட தளத்திலமைந்த ஒரு கோட்டின் சாய்வின் குறியீடு "m" . அக்கோட்டின் மீதமைந்த இரு வெவ்வேறான புள்ளிகளின் "y" அச்சுச் தூரங்களின் வித்தியாசத்திற்கும் ஒத்த "x" அச்சுத் தூரங்களின் வித்தியாசத்திற்குமான விகிதமே அக்கோட்டின் சாய்வு. இச் சாய்விற்கான கணித வாய்ப்பாடு: ("x","y"), ("x","y") என்பன கோட்டின் மீதமைந்த இரு புள்ளிகள் எனில், சாய்வு காணும் வாய்ப்பாடு: "xy" தளத்திலுள்ள செங்குத்துக் கோடுகளுக்கு ("y" அச்சுக்கு இணையான கோடுகள்) இவ்வாய்ப்பாட்டினைப் பயன்படுத்த இயலாது. ஏனென்றால் அக்கோடுகளின் மீதுள்ள எல்லாப்புள்ளிகளுக்கும் "x" அச்சு தூரங்கள் சமம். சாய்வின் வாய்ப்பாட்டின் பகுதியின் மதிப்பு பூச்சியமாவதால் பின்னத்தின் மதிப்பைக் கணக்கிட முடியாது. எனவே செங்குத்துக்கோடுகளின் சாய்வின் மதிப்பு முடிவிலி, அதாவது வரையறுக்கப்படாதது ஆகும். (2,8), (3,20) என்ற இரு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டின் சாய்வு: எனவே கோட்டின் சமன்பாடு புள்ளி-சாய்வு வடிவில்: இக்கோடு "x" அச்சுடன் உண்டாக்கும் கோணம் θ எனில்: "y" = -3"x" + 1, "y" = -3 "x" - 2 என்ற இரு கோடுகளின் சாய்வுகள் சமமாக ("m" = -3) உள்ளன. மேலும் அவையிரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும் கோடுகளும் அல்ல என்பதால், இரண்டும் ஒன்றுக்கொன்று இணைகோடுகள். வகை நுண்கணிதத்தில் சாய்வு முக்கியமான ஒரு கருத்துரு. நேரியலற்ற சார்புகளுக்கு அதன் மாறுவீதம் வளைகோட்டின் மீது மாறுபடுகிறது. ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழுவானது, அப்புள்ளியில் வளைகோட்டிற்கு வரைப்படும் தொடுகோட்டின் சாய்விற்குச் சமம். எனவே ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழு, அப்புள்ளியில் வளைக்கோட்டுச் சார்பின் மாறுவீதமாகும். வளைகோட்டின் மீதுள்ள இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட "x" , "y" -அச்சுக்களின் வழியான தூரங்கள் முறையே Δ"x" , Δ"y" எனில் அவ்விரு புள்ளிகளை இணைக்கும் வெட்டுக்கோட்டின் சாய்வு: எடுத்துக்காட்டாக, "y" = "x" என்ற வளையின் புள்ளிகள் (0,0) , (3,9) இரண்டையும் இணைக்கும் வெட்டுக்கோட்டின் சாய்வு 3. இடைமதிப்புத் தேற்றப்படி, இவ்வளைகோட்டிற்கு புள்ளியில் தொடுகோட்டின் சாய்வும் 3.) Δ"y" , Δ"x" இன் அளவுகள் பூச்சியத்தை அணுகுமாறு, இரு புள்ளிகளையும் ஒன்று மற்றொன்றை நெருங்குமாறு நகர்த்தும்போது வெட்டுக்கோடு கிட்டத்தட்ட ஒரு தொடுகோடாக மாறும். எனவே அந்நிலையில் வெட்டுக்கோட்டின் சாய்வும் தொடுகோட்டின் சாய்வை அணுகும். வகை நுண்கணிதத்தைப் பயன்படுத்தி Δ"y" , Δ"x" இன் மதிப்புகள் 0 ஐ அணுகும்போது Δ"y"/Δ"x" எல்லை மதிப்பைக் காணலாம். இந்த எல்லையின் மதிப்பே தொடுகோட்டின் சாய்வு. "y" இன் மதிப்பு "x" ஐச் சார்ந்தது எனில், Δ"x" மட்டும் 0 ஐ அணுகுவதாகக் கொண்டு Δ"y"/Δ"x" இன் எல்லை மதிப்பைக் கணக்கிட்டால் போதுமானது. எனவே Δ"x" பூச்சியத்தை அணுகும்போதான Δ"y"/Δ"x" இன் எல்லை மதிப்பு தொடுகோட்டின் சாய்வு ஆகும். வகையிடல் எனப்படும் இவ்வெல்லை மதிப்பு "dy"/"dx" எனக் குறிக்கப்படுகிறது. ஒவுனென் மட்சுறி ஒவுனென் மட்சுறி (豊年祭, Hounen Matsuri) மார்ச் 15 திகதி ஜப்பானில் கொண்டாப்படும் ஒரு புத்தியிர்ப்பு, இயற்கைசார் வீழாவாகும். 豊年祭 ஒனென் மட்சுறி என வாசிக்கப்பட வேண்டும். இந்த விழா கொமைகியில் (Komaki) உள்ள Tagata Jinja என்ற ஆலயத்தை பிரதானமாக வைத்து கொண்டாடப்படுகின்றது. இவ்விழா ஜப்பானிய விழாக்களில் தனித்துவமானது. இந்த விழாவில் சடங்குகள், மது அருந்துதல், சிறப்பு உணவுவகைகள் என பல அம்சங்கள் இருந்தாலும், ஒரு பெரிய "மர ஆண்குறி"யை சுமந்து வீதி உலாவருவதே இவ்விழாவின் சிறப்பம்சம். Shinto சமயத்தில் இவ்வழக்கத்தை புத்தியிர்ப்புடனும் இயற்கையுடனும் இணைத்து பார்க்கின்றனர். இதை சிவலிங்கத்தை திருவிழாக்காலங்களில் தமிழர்கள் கோயில்களில் வீதி உலா எடுத்துவருவதுடன் ஒப்பிடலாம். இவ்விழாவை காணவென பல்லாயிரக்கணகான உல்லாசப்பயணிகள் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது. ரோஜர் கோர்ன்பெர்க் ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் (பி. ஏப்ரல் 24, 1947) அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிசு என்னும் ஊரில் பிறந்தார். இவர் 2006ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்று புகழ் படைத்த அறிஞர். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டன்போர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் செய்த ஆய்வுகளின் பயனாய் எவ்வாறு பல கண்ணறைகள் (செல், cell) கொண்ட யூகார்யோட் (Eukaryotic) வகை உயிரினங்களில், ஈரிழை டி என் ஏ (DNA) வானது ஓரிழை ஆர் என் ஏ (RNA)வாக, அடிப்படை மூலக்கூறு இயல்பின் அடிப்படையில் மாறுகின்றது என்று அறிய இயன்றது. இவ்வாய்வுகளுக்காக 2006ஆம் ஆண்டுக்கான வேதியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பேராசிரியர் ரோஜர் கோர்ன்பெர்க்கின் தந்தையார் ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் 1959ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. தந்தை ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1967ல் பட்டம் பெற்றார். பின்னர் 1972ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில், மருத்துவ ஆய்வுக் குழுவில் மேல்முனைவர் நிலை ஆய்வுகள் நடத்தினார். 1976ல்ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியல் துறையில் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1978ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் கட்டமைப்புத் துறையில் பேராசிரியராக மீண்டு வந்து சேர்ந்தார். 1984-1992 காலப்பகுதியில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் துறைத்தலைவராகப் பணியாற்றினார். மதன் (விடுதலை புலி) கடற்கரும்புலி கப்டன் மதன் (07/09/1975 - 26/08/1993; எல்லை வீதி, மட்டக்களப்பு) எனும் இயக்கப் பெயர் கொண்ட சீனிவாசகம் சிவகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். கடற்கரும்புலியான இவர் 26 ஓகஸ்ட், 1993 அன்று கிளாலி நீரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்) உடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர். கப்டன் மதனின் நினைவுநாள் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜிம்மி வேல்ஸ் ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் (பிறப்பு ஆகஸ்டு 7, 1966) இலாபநோக்கற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களை நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும் வேறுபல விக்கிதிட்டங்களை முன்னின்று நடத்துபவரும் ஆவார். இவர் இலாபநோக்கிற்கான விக்கியா திட்டத்தையும் மே 2006 முதல் கொண்டு நடத்துகின்றார். பிரத்தியேக வாழ்க்கையும் கல்வியும் === வேல்ஸ் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தையார் காய்கறிக் கடை ஒன்றின் நிர்வாகியாயிருந்தார். இவரது தாயார் டொறிஸ் மற்றும் அம்மம்மா இர்மா தனியார் பாடசாலையொன்றை நடத்தி வந்தனர். இப்பாடசாலையிலேயே ஜிம்மிவேல்ஸ் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். விக்கியைப் பாவித்துக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 11, 2001 "லாரி சாங்கர்" முன்வைத்திருந்தார். ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா விக்கி முறையில் நிர்வாகிக்கப்பட்டது. இது முன்னைய நீயூபீடியா கட்டுரைகளின் தரங்களை கண்காணிக்கவெனத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் இதன் மிதமான வளர்ச்சி விக்கிப்பீடியாவை முன்னெடுத்ததோடு 2002 இல் நியூபீடியா கைவிடப்பட்டது. அக்டோபர் 5 பெப்ரவரி 1 சனவரி 12 ஜாவளி ஜாவளி ("javali", "jhāwli") என்பது நாட்டிய இசைக்குப் பயன்படுத்தப்படும் இசை வடிவம் ஆகும். சிருங்கார சாகித்தியத்தை உடையவையாதலால் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையில் அமைந்திருக்கும். கேட்டவுடனேயே மனதைக் கவரும் இசையில் அமைந்திருப்பதால் யாவராலும் விரும்பப்படுகின்றது. ஜாவளிகளின் அமைப்பு விறுவிறுப்புள்ளதாக அமைந்திருக்கும். பச்சை சிருங்காரத்தை நாயகன், நாயகி, சகி பாவத்தை வெளிப்படுத்தும் ரீதியில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய உருப்படிகளே ஜாவளிகள். இது நாட்டிய இசையில் உபயோகிக்கப்படுகின்றது. இதன் அமைப்பானது உற்சாகம் ஊட்டக்கூடியதாகவும் சுலபமானதாகவும் இருக்கும். இதன் நடை சாதாரணமாக மத்திம காலத்தில் அமைந்திருக்கும். ஜாவளிகளின் கானக்கிரமம் கிருதியைப் போன்றது. பேச்சு வழக்கமுள்ள மொழியிலேயே இவை இயற்றப்பட்டுள்ளன. தாதுக்கள் சாதாரணமாக மத்திம கால நடையில் இருக்கும். சில ஜாவளிகள் சங்கதிகளுடன் காணப்படுகின்றன. இந்துஸ்தானி இசையில் உள்ள "கஜல்" என்னும் உருப்படி ஜாவளியைப் போன்றதே ஆகும். தெலுங்கு, கன்னடம், முதலிய மொழிகளில் ஜாவளிகள் உள்ளன. ஜாவளியானது பல்லவி, அனுபல்லவி, சரணம் முதலிய அங்கங்களைப் பெற்றுள்ளது.சில ஜாவளிகள் அனுபல்லவி இல்லாமலும் இருக்கின்றன. சாதாரண இராகங்களிலும் ஜாவளிகள் அமைந்துள்ளன எனினும் தேசிய இராகங்களிலும் கவர்ச்சிகரமாக ஜாவளிகள் அமைந்துள்ளன. ஜாவளி என்னும் இச்சொல் கன்னடச் சொல்லான "ஜாவடி" என்பதிலிருந்தே உதித்துள்ளது. இதன் விளக்கம் என்னவெனில் "ஒரு வகையான தூரசாரமான கவிதை" என்பதாகும். தில்லானா தில்லானா ஹிந்தி வழிப் பாட்டு வகையைச் சேர்ந்த ஓர் உருப்படி ஆகும். இது மத்திம காலத்தில் அமைந்துள்ளதுடன் இதன் தாது விறுவிறுப்புள்ளதாகவும் உணர்ச்சி உள்ளதாகவும் இருக்கும். இதன் சாகித்தியத்தில் முக்கியமாக "திரனா", "தில்லில்லானா", "தொந்திரனா", "தனம்" என்பவை போன்ற சொற்கட்டுக்களை சேர்த்து இராக, தாள பொருத்தத்துடன் அமைந்துள்ளது. இந்த உணர்ச்சிவசப்பட்ட உருப்படியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசம் உண்டு. ஒவ்வோர் அங்கமும் வெவ்வேறு தாதுவில் அமைந்திருக்கும். சில தில்லானாக்களில் அனுபல்லவி இல்லாமலும் இருக்கும். அம்மாதிரித் தில்லானாக்கள் தவித்தாதுக்கள், உபயோகங்கள், சமஷ்டி, சரணங்கள் போன்றவைகளுடைய தாதுக் கிருதிகளுக்குச் சமமாக இருக்கின்றன. பல்லவியும் அனுபல்லவியும் ஜதிகளாகவும், சரணத்திலுள்ள வார்த்தைகள் சொற்கட்டு ஸ்வரங்களாகவும் இருக்கும். சில தில்லானாக்கள் சங்கதிகளுடன் அமைந்துள்ளன. இம்மாதிரியான உருப்படிகள் பாட்டுக் கச்சேரிகளில் பல்லவி (இராகம், தானம், பல்லவி) பாடிய பிறகு பாடுவார்கள். நாட்டியக் கச்சேரிகளிலும் பாட்டுக் கச்சேரிகளிலும் முதலில் இதைப் பாடுவது வழக்கம். ஹரிகாலாட்சேபங்களிலும் கதை ஆரம்பிக்க முன்னரும் பூர்வீகப் பிடிகை முடிந்த பின்னும் தில்லானாக்களைப் பாடுவது வழக்கம். இதன் கானக்கிரமம் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடுவதேயாகும். மகாவைத்தியநாதையருடைய தில்லானா "கௌரி நாயக" மிகவும் உயர்ந்த நீண்ட உருப்படி ஆகும். அந்த உருப்படி முழுவதும் இரண்டே ஆவர்த்தனத்தில் அமைந்துள்ளது. முதல் ஆவர்த்தனம் வார்த்தைகளுடனும், இரண்டாவது ஆவர்த்தனம் ஜதிகளுடனும் அமைந்துள்ளது. குன்றக்குடி கிருஷ்ணய்யருடைய "கம்பராமாயணத் தில்லானா" ஒரு சிறந்த உருப்படி. ஜாவளிகளும் தில்லானாக்களும் உருப்படியில் சிறந்ததாகவும், கானக்கிரமம் நான்கு நிமிடங்களுக்குள் அடங்கியதாகவும் அமைந்துள்ளன. ஒப்பந்தப்பிழைகள் ஒப்பந்தச்சட்டத்தில் ஒப்பந்தப் பிழை (Mistake) என்பது விடயப் பொருள் தொடர்பில் பிழையான எண்ணத்துடன் திறத்தவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தமாகும்.இத்தகைய ஒப்பந்தங்கள் சட்ட வலிமையினைக் கொண்டிருக்கா. சட்டமானது ஒப்பந்தப்பிழையினை 3 வகையாக பிரித்து வரையறுத்துள்ளது.அவையாவன: ஒருபக்கப்பிழை என்பது ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு திறத்தவர் மாத்திரம் விடயப்பொருள் தொடர்பாக பிழையான எண்ணத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபடலைக்குறிக்கும்.பிழைவிடாத திறத்தவர் அப் பிழையினை அறிந்திருந்தார் என்றும் இதன் மூலம் அவர் நன்மைகளைப் பெற்றுக்கொண்டார் எனவும் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிருபிக்க வேண்டும்.அவ்வாறு செய்ய தவறின் அது வலிதான ஒப்பந்தமாக கருதப்படும். இத்தகைய ஒப்பந்தத்தில் 4 வகையான கூறுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அடையாளத்தை தவறாக வேறோர் அடையாளம் என கருதி பிழையான எண்ணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும். Error in Corpore உரையாடலின் போது ஏற்படுகின்ற பிழையான எண்ணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும். Error in Negotio ஆள் பற்றிய பிழையான எண்ணத்துல் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும்.இத்தகைய ஒப்பந்தங்கள் வறிதாகும். Error in persona ஒருவரின் தகைமை பற்றிய பிழையான எண்ணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற ஒப்பந்தமாகும். Error in Contitate ஒப்பந்த திறத்தவர் இருவரும் ஒரே சமயத்தில் விடயபொருள் தொடர்பில் வேறு வேறான எண்ணத்தில் ஒப்பந்ததில் ஈடுபலைக் குறிக்கும். ஒப்பந்த திறத்தவர் இருவரும் விடயப்பொருள் தொடர்பில் ஒரே விதமான பிழையான பிழையான எண்ணத்துடன் ஒப்பந்ததில் ஈடுபலைக் குறிக்கும். ஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் நோஸ்ராடாமஸ் மைக்கேல் டி நோஸ்திரதாம் ("Michel de Nostredame"), சுருக்கமாக நோஸ்திரதாமுஸ் (திசம்பர் 14, 1503 - சூலை 2, 1566), உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார். இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர். நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்கத் திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாகப் பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களைக் குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகிறது. நோஸ்ராடாமஸ் பிரான்ஸ்வடக்கில்செயின்ட்-ரெமி-டி-பகுதியில் டிசம்பர் 14 1503,அன்று பிறந்தார் என்பதும் அவர் வாழ்ந்த பிரதேசப் பகுதி இன்றளவும் காணப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது,யூத வம்சாவளியினர்களான "ரெய்னியெர் டி செயிண்ட் ரெமி" மற்றும் "நொடாரி ஜௌமெ டி நோஸ்ரடேம்" ஆகியோரின் எட்டுப்பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார் நோஸ்ராடாமஸ். ஜௌமேயின் தந்தையான "கசோனெட்" 1455 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் தன்னை ஒரு கத்தோலிக்க மதத்தவராகத் தம்மை மாற்றிக்கொண்டார். கண்டி விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் கண்டி விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலம் இலங்கையில் கண்டி நகரப்பகுதியில் ராஜா வீதிக்கு அருகில் உள்ள தேவாயலத்தின் அடுத்தாகவுள்ளது. இப்பாடசாலை கண்டியில் 170 வருடங்களுக்கு மேலாக சேவையில் உள்ளது. 2000 ஆண்டு முதல் கல்விப் பொதுச் சாதார உயர் தரப் பாடநெறிகளும் நடத்தப் படுகின்றன. 2006ஆம் ஆண்டின்படி இப்பாடசாலையில் 22 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனார். 1998 ஆம் ஆண்டு முதல் திருமதி இராஜேஸ்வரி அதிபராகக் கடமையாற்றுகின்றார். ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி இலங்கையின் திருகோணமலை நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அதிபராக திருமதி சந்திரா பாலசுப்பரமணியம் கடமையாற்றுகின்றார். இது நகரின் பிரபலமான பெண்கள்பாடசாலையாகவும் இந்துப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் பாடசாலையாகவும் திகழ்கின்றது. கொழும்பு இந்துக் கல்லூரி கொழும்பு இந்துக் கல்லூரி ("Colombo Hindu College") அல்லது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி இலங்கை தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையாகும். மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில (அண்மையில்) மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு. 2006ஆம் ஆண்டின் படி 4,500 மாணவர்களும் 120 ஆசிரியர்களும் இப்பாடசாலையில் பணியில் உள்ளனர். கொழும்பு இந்துக் கல்லூரி, 1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி "பிள்ளையார் பாடசாலை" என்ற பெயருடன் கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபையினால் தொடங்கப்பட்டது. நீதியரசர் செல்லப்பா நாகலிங்கம் தலைமையில் 24 அங்கத்தவர்களைக் கொண்டு இச்சபை ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி இப்போது இயங்கிவரும் காணி சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் கோயில், மற்றும் கதிரேசன் கோயில் தர்மகர்த்தாக்களால் வழங்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபராக இருந்தவர் கார்த்திகேசு பத்மநாபன். ஆரம்பப்பிரிவு அதிபராக ரி. சதாசிவம் பணியாற்றினார். உயர் வகுப்புகள் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கொழும்பின் புறநகரான இரத்மலானையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதனை அடுத்து ஐந்தாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகள் 1955 ஆம் ஆண்டு இரத்மலானைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இரத்மலானை பாடசாலை "கொழும்பு இந்துக் கல்லூரி' என்றும், தற்போதைய பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி "இந்து கனிஷ்ட பாடசாலை' எனவும் பெயர் மாற்றங்கள் பெற்று இயங்கிவரத் தொடங்கின. 1966 ஆம் ஆண்டு முன்னாள் செனட்டர் ரி. நீதிராஜா முதலாவது மூன்று மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1974, பெப்ரவரி 6 ஆம் திகதி மூன்றாவது மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் நாட்டினார்கள். இதனை அடுத்து கல்விப் பொதுத்தராதர உயர்வகுப்பு 1976 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1976 சனவரி 1 ஆம் நாள் "கொழும்பு இந்துக் கல்லூரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஓமந்தை மத்திய கல்லூரி ஓமந்தை மகாவித்தியாலம் வவுனியாவில் யாழ்சாலையில் (கண்டி - யாழ்ப்பாணம் வீதியில்) ஓமந்தைச் சந்தியில் அமைந்துள்ளது. இதனருகில் அரச மத்திய மருந்தகமும் முன்னால் இந்துக் கோயிலும் உள்ளது. போரினால் பெரிதும் சேதமடைந்திருந்த இக்கல்லூரி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் NECORD உதவியுடனும் மீளக் கட்டியமைக்கப் பட்டது. தரு கல்பித சங்கீதத்தில் ஒரு வகையைச் சேர்ந்தது தரு ஆகும். இசை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்களில் இவ்வுருப்படிகள் இடம் பெறுகின்றன. இவ் உருப்படியை கதைப்பாட்டு எனவும் அழைப்பர். தரு என்ற உருப்படியின் சாகித்தியம் சரித்திர சம்பந்தமானதாக அல்லது காதல் பாட்டாகவாவது இருக்கும். சில சமயங்களில் பிரபுக்களைப் புகழ்ந்து பாடுவதாகவும் இருக்கும். இதில் அதிக சாகித்தியங்கள் மத்திம கால நடையில் காணப்படும். இதில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய அங்கங்கள் காணப்படும். எனினும் சாதாரணமாக எல்லாத் தருக்களிலும் பல்லவி, அனுபல்லவி என்னும் இரு அம்சங்கள் மட்டுமே வருவதுண்டு. சரணங்கள் பலவற்றைக் கொண்டிருப்பது தருவின் மற்றொரு அம்சமாகும். தருக்களில் சிலவற்றில் இரண்டு அடிப் பாட்டுக்களாகவும், நான்கு அடிப் பாட்டுக்களாகவும் சொற்கட்டு சேர்ந்தவைகளாகவும் இருக்கின்றன. அருணாச்சலக் கவிராயரின் "இராம நாடகத்தில்" பல மொழிகளில் அமைகின்ற பல தருக்கள் காணப்படுகின்றன. தருக்களில் ஜதிகள் பொருத்தப்படுவதுண்டு. தருக்களில் பல வகைத் தருக்கள் உண்டு. 1. பிரவேசிக்க தரு :- நாட்டிய நாடகத்தின் ஆரம்பத்தில் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் வகையில் அமையும் பாடல். 2.வர்ணனைத் தரு :- ஒரு நிகழ்ச்சி, இயற்கைக் காட்சி, ஒருவரின் பண்பு, ஆகியவற்றில் ஒன்றை வர்ணிப்பதாக அமைந்துள்ள பாடல். உ+ம் : "இராம நாடகத்தில்" மோகன இராகத்தில் அமைந்துள்ள "கல்யாணத் தோகை அடித்த" எனத் தொடங்கும் பாடல் சீதா தேவியின் திருமண நிகழ்ச்சிகளை சித்தரித்துக் காட்டுகின்றது. 3. சம்வாதத் தரு :- இருவருக்குள் நடக்கும் வாக்குவாதத்தை சாகித்தியத்தில் கொண்டிருக்கும் பாடல். உ+ம் : "இராமநாடகத்தில்" கல்யாணி இராகத்தில் "மண்ணில் மெத்த அரசக்கோன்" எனத் தொடங்கும் பாடல். இதில் இராமனுக்கும் பரசுராமனுக்கும் நடக்கும் தர்க்கத்தை விவரிக்கின்றது. 4. ஸ்வாகதத் தரு :- தனக்குத் தானே உரையாடிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ள பாடல். 5. உத்தர பிரதி உத்தர தரு :- இருவருக்குள் நடக்கும் உரையாடலை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 6. ஜக்கினித் தரு :- சாகித்தியத்தின் முதல் பகுதியில் ஜதிகளையும் அடுத்த பகுதியில் வார்த்தைகளையும் கொண்டு மத்திம காலப் பிரயோகங்களையும் கொண்டு அமைந்துள்ள தருக்கள் ஆகும். 7. கோணங்கித் தரு :- தெய்வீகக் கோமாளி இசைக்கும் பாடல் கோணங்கித் தரு ஆகும். உ+ம் : "தெய்வீகக் கோமாளி" 8. கோலாட்டத் தரு :- கோலாட்டம் ஆடும் போது இசைக்கும் பாடல் கோலாட்டத் தரு ஆகும். பெப்ரவரி 2 கட்டிடக்கலை மானிடவியல் கட்டிடக்கலை மானிடவியல் (Architectural Anthropology) என்பது கட்டிடக்கலையை மானிடவியல் நோக்கில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். 1960 களுக்குப் பின்னர், கட்டிடக்கலைத்துறையில் நவீனத்துவப் பாணி (modern) தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து கட்டிடக்கலை அறிமுறை மற்றும் செயற்பாட்டுத் தளங்களில் மாற்றுச் சிந்தனைகளுக்கான தேவை இருந்தது. ஒரு புறம் ஐரோப்பியமையவாதச் சிந்தனைகளின் (Eurocenric) அடிப்படையின் தொடர்ச்சியாக "நவீனத்துக்குப் பிந்திய" (post-modern) கட்டிடக்கலைப் பாணி உருவானது. இன்னொரு புறம், இப்பாணியின் அடிப்படைகளை மறுதலித்த இன்னொரு பிரிவினர், கட்டிடக்கலையானது மேலும் பரந்த அடிப்படையில் ஆய்வு செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். ஐரோப்பிய மரபுவழி ஆய்வாளர்கள் கட்டிடக்கலையின் வளர்ச்சியை ஒரு கலை வரலாறாகவே நோக்கி, அவற்றின் சிறப்புக்களைத் தனிப்பட்ட கட்டிடக் கலைஞர்களின் திறமைகளுக்குச் சமர்ப்பணம் செய்வதிலேயே ஈடுபட்டிருந்ததை எதிர்த்த அவர்கள் கட்டிடக்கலையை ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்த்தனர். சிலர் கட்டிடக்கலையை மானிடவியல் நோக்கில் ஆராய்வது தொடர்பான கொள்கையை முன்வைத்ததுடன், கட்டிடக்கலை அறிமுறையானது இதன் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும் எனவும் வாதித்தனர். ஐரோப்பியமையவாதக் கருத்துக்களில் இருந்து விலகிய புதிய சிந்தனைகளுக்குப் புறம்பான புதிய கருத்துக்கள் உருவாவதற்கான சில ஆய்வுகள் தொடர்பான வெளியீடுகள் இக்காலப்பகுதியில் வெளியிடப்பட்டன. இவற்றுள், அமொஸ் ராப்பப்போர்ட் (Amos Rappoport) என்பவர் எழுதிய "வீடு, வடிவம், பண்பாடு" (House, Form and Culture) என்ற நூல் பிரபலமானது. இந் நூலில் வீடுகளின், சிறப்பாக நாட்டுப்புற வீடுகளின் வடிவங்கள், பண்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றன என, உலகம் முழுவதும் பரந்துள்ள பல சமுதாயங்களின் வீடுகளை ஆராய்ந்து நிறுவ அவர் முயல்கிறார். போல் ஒலிவர் என்பவரின், "ஆபிரிக்காவிலுள்ள உறையுள்கள்" (Shelters in Africa) என்னும் நூலை உள்ளிட்ட பல வெளியீடுகளும், ஐரோப்பாவுக்கு வெளியிலுள்ள, இனக்குழுக்கள் பலவற்றின் உறைவிடங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஆய்வாளர்களுக்குத் தந்தது. இத்தகைய மரபு சார்ந்த கட்டிடச் சூழல்கள் பற்றி உலகளாவிய அளவில் ஆராய்ந்த நிறுவனங்களில் IASTE, UC பேர்க்லி என்பவை குறிப்பிடத் தக்கவையாகும். கட்டிடக்கலை மானிடவியல் என்னும் கருத்துருவுக்கு அறிமுறை அடிப்படையை வளங்கியதில் முக்கியமானது, ஒட்டோ எஃப். பொல்னோ (Otto F. Bollnow) என்னும் ஜெர்மானிய தத்துவவியலாளரின் வெளி (space) பற்றிய மானிடவியல் கொள்கைகளாகும். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய "மனிதனும் வெளியும்" (1963) என்னும் நூலில், பண்டைக்கால மனிதருடைய "வெளி" பற்றிய கருத்துரு, அவர்களின் வீடு மற்றும் குடியேற்றங்களுடன் தொடர்பு பட்டிருந்ததை விளக்கிய அவர், தற்காலத்தின், எங்கும் பரந்த, ஒருதன்மைத்தான வெளி தொடர்பான கருத்துரு, 14 ஆம் நூற்றாண்டின் பின்னரே ஏற்பட்டது என எடுத்துக்காட்டினார். கட்டிடக்கலை மானிடவியலின் ஆய்வுப் பரப்பு, மனிதப் படிமுறை வளர்ச்சியில் மனிதனையும் தாண்டி, படிமுறையில் மனிதனுக்குக் கீழுள்ள மனிதக் குரங்குகள் போன்ற விலங்குகளின் கூடு கட்டும் நடத்தைகளையும் தழுவியுள்ளதுடன், தற்கால நகர்ப்புறக் கட்டிடக்கலையையும் உள்ளடக்கியுள்ளது. கட்டிடக்கலை மானிடவியல் ஐந்து பிரிவுகளாக ஆராயப்படுவதாக, இத் துறையின் முன்னோடியான நோல்ட் எஜெண்ட்டர் என்பவர் கூறுகின்றார். கொல்லர் இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு. கருங்கொல்லர் என்ற பெயரும் வழக்கில் உள்ளது. பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைப் தட்டார் என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியை குறிக்கும். நாற்காலி போன்ற மரவேலைகளை செய்பவரை தச்சர் என்றும், கல்லால் ஆன உரல், ஆட்டுக்கல், அம்மி, திருகை போன்ற வேலைக்களைச் செய்பவரை கல்தச்சர் என்றும் அழைப்பர். பெப்ரவரி 3 அக்டோபர் 6 சனவரி 11 நுரையீரல் நுரையீரல் (Lung) என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம். மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் "பல்மோ-" (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய "பல்மொனாரியசு" (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற "நியுமோ-" (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் "ப்நியுமோன்" (πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது. மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் ("பிரான்கியல்" குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகிய "அல்வியோல்" எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும். பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும். நுரையீரலைச் சுற்றி வெளிப்படலம் உள்படலம் என இரண்டு உறைகள் உள்ளன. இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை. மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர். காற்றில் உள்ள ஆக்சிசனை (ஆக்சிசன் = உயிர்வளி, பிராணவாயு) இரத்ததில் சேர்ப்பதும் இரத்ததில் உள்ள காபனீரொக்சைடை (க ரிமக்காடி வளிமம் அல்லது கரியமிலவாயு)வை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும். இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.பிறக்கிற குழந்தைகளில் சிலருக்கு நுரையீரலில் நீர்க் கட்டிகள் (பிரான் கைடிஸ் ஸிஸ்டிக்ஸ்) வரலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறக்கிறபோதே நுரையீரலில் சிறுபகுதி பிரிந்திருக்கும். இதற்கு "ஸ்குவாட்ராஸ்டேசன்" என்று மருத்துவப்பெயர். இந்த பிறவி நுரையீரல் பாதிப்புகளை குணப் படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற அளவிற்கு இன்றைய நவீன மருத்துவம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமெந்து உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது முகத்துக்கு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.இதனைத் தடுக்க பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம். தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் முக மூடி அணிவது நல்லது.பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிக்கலாம். புகைப் பிடிப்பதை தவிர்ப்பது முக்கியமாகும்உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடலாம்.துளசி இலை சிறிதளவு, இரண்டு சிட்டிகை - மிளகு தூள், சுக்கு தூள், மல்லித்தூள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை 400 மில்லி தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக 200 மில்லியாக வற்றியதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறும். பிராங்கோஸ்கோபி எனப்படுவது நுரையீரல் பாதிப்புகளுக்கான அதி நவீன சிகிச்சை சாதனம் ஆகும்.இந்த அதிநவீன சாதனத்தின் மூலம் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்த முடியும். நுரையீரலில் வருகின்ற பாதிப்புகளை மிக துல்லியமாக கண்டறியவும் இச்சாதனம் பயன்படுகிறது.. இந்த பிராங்கோஸ்கோபி மூலம் நுரையீரல் புற்றுநோய், பிற நோய்களால் நுரையீரல் பாதிப்படைவது, இண்டஸ்டிரியல் நுரையீரல் நோய்கள், நுரையீரலில் அந்நிய பொருட்கள் இருப்பது, போன்றவற்றை கண்டறிந்து குணப்படுத்தலாம். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் சளியால் அவஸ்தைப்பட்டால் அவர்களின் சளியை இச்சாதனத்தின் மூலம் பிரித்து எடுக்கலாம். நுரையீரலில் கட்டிகள் இருந்தால் பயாப்ஸி எடுக்கவும் இது பயன்படுதப்படும். நுரையீரலில் இருந்து நீரை எடுத்து புற்றுநோயாளிகளுக்கு பரிசோதிக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. குரல்நானில் பிரச்சினை இருந்தாலும் சரியாக பரிசோதனை செய்து சிகிச்சை செய்ய உதவுகிறது. வாயுப் பரிமாற்றம் தவிர நுரையீரல் வேறு சில பணிகளையும் செய்கிறது பெப்ரவரி 4 மருத்துவர் மருத்துவத் தொழிலை செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர்(Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம். முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. சித்த வைத்தியம், ஆயூர்வேத வைத்தியம் மற்றும் ஓமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆங்கில மருத்துவம் படிக்க இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இதில் நான்கரையாண்டுகள் பல்வேறு மருத்துவ கல்வியும் நேரடியாக நோயாளிகளை பயன்படுத்தியும் படித்து முடித்த பின்னால் ஒரு வருடம் பயிற்சி மருத்துவமும் முடித்ததும் எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்படும். பண்டைய தமிழ் மருத்துவ முறையைப் பின்பற்றியவர்கள் சித்த வைத்தியர் எனப்பட்டனர். இடையர், எயினர், போன்றோர் போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியவர்களாவர். இந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.S.M.S) முடித்தவர்கள் சித்த மருத்துவர்களாகப் பணிபுரியலாம். வடமொழி (சமசுகிருதம்) மருத்துவ முறைமை ஆயுர்வேதம் எனப்பட்டது. ஆயுர்வேத வைத்தியர்கள் இந்தியாவின் தக்காணப்பகுதியில் அதிகம் காணப்பட்டனர். இந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.A.M.S) முடித்தவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகப் பணிபுரியலாம். இனமுறை அல்லது மாற்று முறை அல்லது ஒத்த மருத்துவம் என ஆங்கில மருத்துவத்திற்கு இணையான சாமுவேல் ஹேனிமேன் என்பவரால் கண்டறியப்பட்ட மேற்கத்திய மருத்துவ முறை ஓமியோபதி மருத்துவம் ஆகும். இந்தியாவில் இளங்கலை ஓமியோபதி (B.H.M.S) முடித்தவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகப் பணிபுரியலாம். ஆடியாலஜிஸ்ட்(Audiologists) என்பவர்கள் காது பிரச்சினைகள் மற்றும் செவிடு அல்லது ஊமையாக உள்ள குழந்தை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர். இவர்கள் செவிடு மற்றும் ஊமைகளுக்கு முறையே செவித்திறன் மற்றும் வாய்மொழிப் பயிற்சிகளை மேம்படுத்துபவர்களாவர். காது, மூக்கு, தொண்டை ஆகிய மூன்றும் ஒன்றனுக்கொன்று தொடர்புள்ளது. இதன் அன்றாட செயல் பாட்டில் ஏற்படும் மாறுதல்கள் அல்லது நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்களாவர்(ENT specialists). கண்கள் சம்பந்தமான கண்புரை, பார்வை இழப்பு, பார்வை மங்குதல், பார்வைக்கோளாறு போன்ற கண் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கண் அறுவை சிகிச்சைகள் புரிகிற மருத்துவர்கள் கண் மருத்துவர்களாவர். பல் மருத்துவர்கள் (Dentist), சொத்தைப் பல் பிடுங்குதல், பல் சுத்தம் செய்தல், பற்கள், துவாரங்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்ற பல் பிரச்சினைகள், பல் வேர்க்கால்கள் முதலியன முன்னெடுத்தல், மற்றும் பற்களை நேராக்குதல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர். இதயநோய் மருத்துவர்கள் (Cardiologist), இதய மாற்று, இதய அடைப்பு, போன்ற இருதய நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்களாவர். நுரையீரல் சம்பந்த சுவாச நோய்களுக்கு சிகிச்சை மருத்துவர்கள் (Pulmonologist). உணவுச்செரிமான அமைப்பு நோய்கள், இரைப்பை, குடல் தொடர்பான சிகிச்சை கொடுக்கிற மருத்துவர்கள் இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள் (Gastroenterologists) எனப்படுவர் . கல்லீரலியல் மருத்துவர்கள் (Hepatologists), கால்சியப்படிவு, மஞ்சள் காமலைப் போன்ற கல்லீரல் சம்பந்த நோய்களைக் குணப்படுத்துபவர்களாவர். உடற்கூறு செயற்பாடு மற்றும் அதன் உள்ளார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து உடலியல் நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். மனித உடலிலுள்ள எலும்பு அமைப்புகளின் கோளாறுகளை சரி செய்யும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள், எலும்பு முறிவு அல்லது மூட்டு நகர்வு போன்ற எலும்பு சம்பந்த பிரச்சனைகளை சரி செய்கின்றனர். இரத்தவியல் மருத்துவர்கள் (Hematologists), குருதி நோய்கள், வெள்ளை(அ)சிவப்பு இரத்தணுக்கள் அதிகம்/குறைவு, அரிவாள்செல் சோகை முதலிய இரத்த சோகைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களாவர். நாளமில்லாசுரப்பு (அ) அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள் (Endocrinologists), அகச்சுரப்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். சான்றாக, தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை, அதிக/குறைந்த ஹார்மோன்கள் சுரத்தல், போன்ற நாளமில்லா அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்பவர்களாவர். முடவியல் மருத்துவர்கள் (Rheumatologsists), உடல் ஒவ்வாமை நிலைகளுக்கு மற்றும் உடற் தாங்குதிறன் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். தோல்நோய் மருத்துவர்கள் (Dermatologists), தோல் கட்டமைப்பு, செயல்பாடுகள், மற்றும் நோய்கள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பவர்கள். அத்துடன் இணைந்த உறுப்புகள் (நகங்கள், முடி, வியர்வை சுரப்பிகள்) தொடர்புடைய நோய்களுக்கும் ஆராய்ந்து ஆலோசனை வழங்குபவர்கள். தோல்மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள் (Plastic Surgeon) தீ மற்றும் விபத்தினால் புறவமைப்பில் ஏற்படும் ஒவ்வாத மாற்றங்களை தோல்மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றமேற்படுத்தும் அறுவை மருத்துவர்கள். தோல் மற்றும் தோல் கட்டமைப்பு பிரச்சினைகளை சரிசெய்து அழகுக்கான அறுவை சிகிச்சை முறையிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். இதன் மூலம் இம்மருத்துவர்களால் நோயளியின் புற ஆளுமையில் மாற்றம் கொணர இயலும். ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அலர்ஜிஸ்ட் (Allergist)(அ) ஒவ்வாமை மருத்துவர்களாவர். சான்றாக இவர்கள் தும்மல் காய்ச்சல், ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை, விலங்கு ஒவ்வாமை, போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். அடிக்கால் மருத்துவர்(Podiatrists), கால் மற்றும் கணுக்கால் கோளாறுகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர் . மனநலம் சார்ந்த நோயுள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவம் மூலம் புனர்வாழ்வு வழங்கும் மருத்துவர்களாவர். உளவியல் நிபுணர்கள் (Psychiatrists) மன நோய், நடத்தை கோளாறுகள், கவலை, தன்னம்பிக்கை இழத்தல், தற்கொலை முயற்சி, போன்ற உளப்பிரச்சனைகள் உள்ளவர்களை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குபவர்களாவர். பாலியல் சம்பந்தமான சந்தேகங்களைக் களைந்து ஆலோசனை வழங்குதல் மற்றும், பாலியல் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பவர்கள் பாலியல் மருத்துவர்களாவர்(Sexologist). ஆன்ட்ராலஜிஸ்ட்(Andrologist) எனப்படும் மருத்துவர்கள், ஆண் இனப்பெருக்கத் தொகுதி தொடர்பான பாலியல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். கரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் . புதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர். குழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர். வயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் இண்டர்னிஸ்ட் (Internists) எனப்படுவர். குடும்ப நலமருத்துவர்கள் (Family Practician), சிறிய ஆரம்ப சுகாதார மனைகளிலும், குடும்பத்திலுள்ள அனைத்து வயதினருக்கும் அவர்களது நோய் வரலாற்றை நன்குணர்ந்த பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் நோயாளிகளைத் தங்களின் நட்பு வட்டத்துள் வைத்திருப்பர். அவசர சிகிச்சை மருத்துவர்கள் (Emergency Doctors), எந்நிலையிலும் தயாராக இருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர்கள். இவர்கள் தம் சேவை வழங்க 24/7 கால அளவில் எப்போதும் மாற்றுவேளைப் பணிகள் தயாராக இருக்கும். இவர்கள் நச்சுக்கடி, தீ விபத்து, சாலை/ஆலை விபத்துக்கள், போன்ற பல்வேறு அவசர நேரங்களில் சிகிச்சை அளிப்பர். பெரும்பாலும் உடைந்த எலும்புகளை இணைத்தல், தீக்காயங்கள், மாரடைப்பு சிகிச்சை, நச்சு முறிவு அளித்தல் போன்றவை தலையானதாகும். மயக்கவியல் மருத்துவர்கள் (Anesthesiologists) மயக்க மருந்து அளித்தல், மயக்க ஊசி குத்துதல் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முன் மயக்க ஊசியின் வலியைத்தவிர மற்ற வலியை உணரச்செய்யாது மயக்கமளிக்கும் வல்லுநர்களாவர். அறுவை சிகிச்சையின் மூலம் உடலிலுள்ள நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons)ஆவர். இவர்கள் மருத்துவத்தின் பல்வேறு துணைப்பிரிவுகள் தொடர்பான அறுவை சிகிச்சைகளான நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , முக அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை, வாய்வழி அறுவை சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, முதலிய பொது அறுவை சிகிச்சைகளைச் சிறப்பாக செய்பவர்களாவர். கதிரியக்கம் (எக்ஸ்-கதிர், அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர்) மூலம் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கதிரியக்க மருத்துவர்கள்(Radiologists) ஆவர். நோயறி மருத்துவர்கள் (Epidemiologists), நோய்களின் காரணிகளை ஆய்ந்து அதற்கான தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் மற்றும் முறைகளைக் கண்டறிபவர்களாவர். நோயெதிர்ப்புசக்திசார் மருத்துவர்கள் (Immunologists), அனைத்து உயிரினங்களிலும் நோயெதிர்ப்பு சக்தியின் அனைத்து அம்சங்களையும் ஆய்ந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சை குறைவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர் . தொற்று நோய் நிபுணர்கள் (Infectious Disease Specialists), வைரசுகள், பாக்டீரியங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படும் நோய்களை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள் கிருமிகளின் திறத்தை ஆய்ந்து அதற்கான சரியான மாற்று நுண்ணுயிர்க் கொல்லியை வழங்குகின்றனர். ஒட்டுண்ணியியல் மருத்துவர்கள் (Parasitologist), வைரசு, பாக்டீரியா, ப்ளாஸ்மோடியம், அமீபா போன்ற ஒருசெல் உயிரிகளின் ஒட்டுண்ணித்திறத்தை ஆய்ந்து ஒட்டுண்ணி நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர். நகம், முடி, இரத்தம், அல்லது திசு மாதிரிகளிலிருந்து நோய்கள் மற்றும் நோய்க்காரணிகளைக் கண்டறிபவர்கள் தடய நொயியல் மருத்துவர்களாவர். இவர்கள் குற்றப்புலனாய்வில் குற்றங்கள் (அ) மரணத்திற்கு காரணமான சூழல், மற்றும் காரணிகளைக் கண்டறிதல், பிரேதப் பரிசோதனை, ஆராய்தல் மற்றும் ஆய்வறிக்கை வழங்குதல் போன்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த மருத்துவர்கள் பொதுவாக தங்கள் ஆய்வுப்பணியை நேரடியாக ஆய்வுக்களத்தில் நிகழ்த்துகின்றனர். தடயவியல், நோயியல் நிபுணத்துவம், மற்றும் குற்றப்புலனாய்வு போன்ற அரிய ஆய்வுகளைச் செய்ய உதவுகின்றனர். நுண்ணுயிரியியல் வல்லுநர்கள்(Microbiologists) நுண்ணுயிரி சம்பந்த நோய்க் காரணிகளைக் கண்டறிந்து தொற்று நோய் சிகிச்சைக்குப் பரிந்துரை அளிப்பவர்கள். ஆய்வுகள் மற்றும் மேலாண்மை பணிக்காக, அசாதாரண அல்லது தீவிர தொற்று நோய்கள், அறுவை அல்லாத சிகிச்சை அளிக்க பொதுவாக உள் ஆய்வு மருத்துவர்(intensivists) என ஆராய்ச்சி & சிகிச்சை மருத்துவ மையங்களில் இருப்பார்கள். மரபியல் மருத்துவர்கள் (Medical Geneticist)மரபியல் சார்ந்த மரபணு நோய்களை ஆய்வுகள், சோதனைகள், மூலம் கண்டறிந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கும் மருத்துவர்கள். புற்று நோயாளிகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிப்பவர்கள், புற்று நோய் மருத்துவர்களாவர் (Oncologist). தொன்மநோயியல் மருத்துவர்கள் (அ) பேலியோபேதாலஜிஸ்ட்(Paleopathologist) பண்டைய நோய்களைப் பற்றி ஆய்ந்து சிகிச்சை அளிப்பவர்கள். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து துறைகளும் மனிதநலனில் அக்கறை கொண்ட மருத்துவ துறைகள். மனிதன் அல்லாத ஏனைய விலங்குகளின் மருத்துவ சேவை வழங்குபவர்கள் கால்நடை மருத்துவர்களாவர். இவர்கள் விலங்கினங்களின் பல்வேறு நோய்கள், நோய்ப்பரவல், மற்றும் காரணிகளை ஆய்ந்து சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நல முன்மாதிரியாக விளங்க வேண்டும். சான்றாக புகை மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல். இதன் மூலம் பெறப்படும் சுவாசக் கோளாறுகள், கல்லீரல் பழுதடைதல், உணவு செரிமான பிணிகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் தங்களைத் தற்காத்துக் கொள்வதாகும். உடல் மற்றும் உள்ளத்தை நலமாக வைத்திருப்பதன் மூலம் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 வருடங்கள் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் உள்ளன. இருந்த போதும் வேலைப்பளுவால் சரிவர உடல் நலத்தைப்பேணாது, மருத்துவர்களே மோசமான நோயாளிகள் எனக் குறிப்பிடப்படுவதுமுண்டு. உடல்நலக் கோளாறு அல்லாது தற்கொலைகள், விபத்துக்கள், இதயநோய்கள் இவர்களது ஆயுட்காலச் சவால்களாக உள்ளன.