பொலிவியா பொலிவியா தென் அமெரிக்க நாடாகும். இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. வடக்கேயும் கிழக்கேயும் பிரேசில் நாடும், தென்கிழக்கில் பரகுவேயும் தெற்கில் அர்ஜென்டைனாவும், தென்மேற்கே சிலியும் வடமேற்கே பெருவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. இங்கு 2006இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் எவோ மொரல்ஸ் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். நாட்டின் மூன்றில் ஒரு பகுதி ஆந்திசு மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்நாட்டின் பெரிய நகரங்களும் வணிக நகரங்களும் பொலிவிய மேட்டுநிலப்பகுதியிலேயே அமைந்துள்ளன. பொலிவிய அல்லது ஆந்தீசு மேட்டுநிலமே உலகில் திபெத் மேட்டுநிலத்திற்கு அடுத்து உயரமான இடத்தில் உள்ள மேட்டுநிலமாகும். எசுப்பானிய காலணியாதிக்கத்திற்கு முன் பொலியாவின் ஆந்திசு பகுதி இன்கா பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது, வடக்கு கிழக்கு தாழ்நிலங்களில் பழங்குடியினர் வசித்தனர். குசுக்கோ, அசுன்சியோன் நகரங்களில் இறங்கிய எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் 16ஆம் நூற்றாண்டில் அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினார்கள். எசுப்பானிய காலனியாதிக்கத்தில் பொலிவியா "மேல் பெரு" என்றே அறியப்பட்டிருந்தது. பொலிவியா சார்கசு மன்னர் மன்றத்தால் நிருவகிக்கப்பட்டது. எசுப்பானிய பேரரசு உருவாக்கத்திற்கு இப்பகுதி சுரங்களில் கிடைத்த வெள்ளி தாதுக்களும் பெரும் பங்கு வகித்தன. எசுப்பானிய பேரரசுக்கு எதிராக விடுதலைக்கான முதல் குரல் 1809ஆம் ஆண்டு ஒலித்தது. 16 ஆண்டுகள் விடுதலைப்போர் நீடித்தது. வட பகுதியிலிருந்து சிமோன் பொலிவார் இப்போரில் பங்கெடுத்து எசுப்பானிய படைகளை பின்னுக்குத்தள்ளினார். ஆகத்து 6, 1825 அன்று பொலிவியா விடுதலை பெற்றது. சிமோன் பொலிவார் பொலிவியாவின் முதல் அதிபர் ஆனார். விடுதலைக்குப் பின் பல ஆண்டுகள் பொலிவியாவின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் நிலையற்ற தன்மை நீடித்தது. ஏக்லே, பெரும் சாக்கோ போன்ற நிலங்கள் பக்கத்து நாடுகளிடம் இழக்கப்பட்டன. சிலி நாட்டுடன் நடைபெற்ற பசிபிக் போரில் (1879-84) சிலி வென்றதையடுத்து பொலிவியா பசிபிக் பெருங்கடல் பகுதியையும் இழந்து நிலங்களால் சூழப்பட்ட நிலைக்கு ஆளாகியது. பக்கத்து நாடுகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டையடுத்து பசிபிக்கையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெற்றுள்ளது. பொலியாவின் மக்கள் தொகை தோராயமாக 10 மில்லியனாகும். ஐரோப்பியர், ஆசியர், ஆப்பிரிக்கர், அமெரிக்க முதற் குடிகள், மெச்டிசோ போன்ற பல் இனத்தவர் வாழும் நாடு பொலிவியாவாகும். எசுப்பானிய காலணி ஆதிக்கத்தில் இருந்த மற்ற இனத்தவர்களை ஐரோப்பியர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. எசுப்பானியம் அதிகாரபூர்வமான தலைமையிடத்திலுள்ள மொழியாகும். 36 உள்நாட்டு மொழிகளும் அதிகாரபூர்வ தகுதி நிலை பெற்றுள்ளன. அவற்றில் குவாரனி, ஐமர, கெச்வா அதிகம் பேசப்படுபவையாகும். பொலிவியா என்பது எசுப்பானிய அமெரிக்க விடுதலைப்போரின் தலைவர் சிமோன் பொலிவார் நினைவாக வைக்கப்பட்டது . புதிதாக உருவாக்கப்பட்ட பெரு குடியரசின் கீழ் மேல் பெரு என்று இப்பகுதியை வைத்துக்கொள்ளலாமா அல்ல புதிய விடுதலை பெற்ற நாடாக இப்பகுதியை அறிவிக்கலாமா என்ற முடிவை வெனிசுவேலேவின் தலைவர் அந்தோனியோ யோச் தே சுரே அவர்களிடம் பொலிவார் கேட்டபொழுது அந்தோனியார் விடுதலை பெற்ற நாடாக அறிவித்துவிடலாம் என்று கூறிவ புதிய நாட்டுக்கு பொலிவாரை சிறப்புவிக்கும் விதமாக பொலிவிய குடியரசு என்று பெயர் சூட்டினார். பல தேசிய இனக்குழுக்கள் நாட்டில் உள்ளது குறிக்கும்விதமாகவும் பொலிவிய முதற் குடி மக்களின் நிலையை உயர்த்தவும் 2009இல் அரசியல்யமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு நாட்டின் அதிகாரபூர்வ பெயர் பல்தேசிய இன பொலிவியா என மாற்றப்பட்டது. தற்போது பொலிவியா என அறியப்படும் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஐமாரா இனத்தவர்கள் குடியேறியிருந்தனர். தற்போதைய ஐமாரா இனத்தவர்கள் மேற்கு பொலிவியாவிலுள்ள தியாகுனாக்குவில் உள்ள முன்னேற்றமடைந்த நாகரிகத்தில் இருந்து வந்ததாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர். கிமு 1500 இல் சிறு கிராமமாக இருந்த தியாகுனாக்கு தியாகுனாக்கு பேரரசின் தலைநகரமாகவும் இருந்தது. கிமு 600 - 800 சமூகம் பெருமளவில் வளர்ந்தது. தியாகுனாக்கு பேரரசு தென் ஆந்திசு பகுதியில் பலம்மிக்கதாகவும் சிறப்பனாதாகவும் விளங்கியது. பழங்காலத்தில் தியாகுனாக்கு நகரத்தில் 15,000 முதல் 30,000 மக்கள் வாழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.1996இல் செயற்கைகோள் உதவியுடன் இப்பகுதியை ஆராய்ந்த போது தியாகுனாக்குவாவின் மூன்று முதன்மையான பள்ளத்தாக்குகளில் பயன்படுத்தப்பட்ட அதிகநீர் கொண்டு உயர்த்தி கட்டப்பட்ட வேளாண்மைக்கு உதவும் பாத்திகளின் விபரம் தெரிந்தது. அப்போது அப்பள்ளத்தாக்குகளில் 285,000 முதல் 1.482,000 மக்கள் வசித்திருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டது. கிமு 400 வாக்கில் தியாகுனாக்கு உள்ளூரில் மட்டும் அதிகாரம் கொண்ட அரசு என்ற நிலையிலிருந்து மாறி நாடு பிடிக்கும் அரசாக மாறியது. யுன்காசு பகுதிக்கு தன் அதிகாரத்தை விரிவாக்கியது. தன் பண்பாட்டை பெரு, சிலி, பொலிவியாவின் மற்ற பண்பாடுகளின் மீது திணித்தது. இருந்த போதும் தியாகுனாக்குகாக்கள் மோசமான பண்பாட்டு திணிப்பில் ஈடுபடவில்லை. பண்பாட்டு திணிப்புக்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள். அடுத்த பண்பாட்டு மக்களுடன் வணிக உடன்பாடு, அரசின் பண்பாடாக தியாகுனாக்கு பண்பாட்டை திணித்தது, அரசியல் ரீதியாக தங்கள் பண்பாட்டை புகுத்தியது, காலணிகளை உருவாக்கியது எனப்பல வழிகளை கையாண்டனர். பேரரசு முடிவில்லாமல் விரிந்து கொண்டிருந்தது. வில்லியம் இசபெல் தியாகுனாக்கு பேரரசு கிபி 600 முதல் 700 வரையான காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது என்கிறார். அக்காலகட்டத்திலேயே நினைவுச்சின்னங்களுக்கான கட்டடக்கலைக்கு வரையறை வகுக்கப்பட்டது என்றும் நிலையாக குடியிறுப்பவர் எண்ணிக்கை அதிகமானது என்றும் கூறுகிறார். தியாகுனாக்கு மற்ற பண்பாட்டை அழிக்காமல் அவற்றை தன்னுல் உள்வாங்கிக்கொண்டது. தியாகுனாக்குக்கள் பீங்கானை தங்கள் பண்பாட்டின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு இருந்ததை தொல்பொருளார்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தியாகுனாக்குக்கள் நகரங்களுக்கிடையேயான வணிகம் மூலமும் தங்கள் பேரரசின் பிடியை உறுதிப்படுத்தினார்கள். தியாகுனாக்குக்களில் மேட்டிமைவாதிகள் பெருமளவிலான உணவுப்பொருட்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம் பொதுமக்கள் மீது செல்வாக்கு செலுத்தினார்கள். வெளிப்புறப் பகுதிகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களை கையகப்படுத்தி பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தார்கள். மேட்டிமைவாதிகள் லாமா மந்தைகளின் உரிமையாளர்களாயிருந்தனர். லாமாக்களே பொருட்களை நகரின் மையத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்ட செல்ல உதவும் ஒரே முறையாகும். லாமா மந்தை உரிமையே பொதுமக்களுக்கும் மேட்டிமைவாதிகளையும் வேறுபடுத்தி காட்டிய குறியீடாக விளங்கியது. கிபி 950 வரை மேட்டிமைவாதிகளின் செல்வாக்கு வளர்ந்து கொண்டேயிருந்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் தியாகுனாக்குகளின் பகுதிகளில் மழைபொழிவு பெருமளவு குறைந்தது. அது பெரும் பஞ்சத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தொல்லியலார்கள் கருதுகின்றர். மழைபொழிவு மிகவும் குறைந்ததால் தியாகுனாக்கு ஏரியிலிருந்து தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து வரும் உணவுப்பொருட்கள் குறைவாக வந்தன இதனால் மேட்டிமைவாதிகள் உணவுப்பொருட்களை பகிர்ந்தளிக்க முடியாமல் தவித்தனர் இது அவர்களின் செல்வாக்கு குறைய காரணமாகவிருந்தது. பொது மக்கள் மேல் மேட்டிவாதிகளுக்கு இருந்த அதிகாரம் வீழத்தொடங்கியது. நுட்டபான முறையில் உயர்த்தி கட்டப்பட்ட பாத்திகள் மூலம் வேளாண்மை நடைபெற்றதால் உணவுப்பொருட்களுக்காக மக்களின் கடைசி புகலிடமாக தலைநகரமே இருந்தது. மேட்டிமை வாதிகளின் செல்வாக்கு காரணமான உணவு உற்பத்தி பற்றாக்குறை காரணமாக கிபி 1000 காலப்பகுதியில் தியாகுனாக்கு பேரரசு மறைந்தது. அதன் பின் பல நூற்றாண்டுகளுக்கு இப்பகுதி மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது. எசுப்பானியர்கள் இன்கா பேரரசை 1524இல் கைப்பற்ற தொடங்கி 1533இல் முழுவதும் கைப்பற்றினார்கள். தற்போது பொலிவியா என்றழைக்கப்படும் பகுதி மேல் பெரு என்றழைக்கபட்டது. லிமாவிலுள்ள வைசிராயின் கீழ் இப்பகுதி இருந்தது. உள்ளூர் நிருவாகம் சுகியுசா பகுதியிலிருந்த ஆடின்சியா டே சார்கசு கீழ் இருந்தது. 1545இல் உருவாக்கப்பட்ட பொட்டோசி என்ற நகரம் தன் பகுதியிலுள்ள சுரங்கத்தின் மூலம் ஏராளமான செல்வத்தை கொடுத்தது. புதிதாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தென் அமெரிக்காவில் விரைவில் இது பெரும் நகராக 150,000 மக்களுடன் உருவெடுத்தது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானியப் பேரரசுக்கு பொலிவியா சுரங்கங்களில் கிடைத்த வெள்ளி முதன்மையான வருமானமாக இருந்தது. தென் அமெரிக்காவின் தொல்குடிகள் மிக மோசமான சூழலில் அடிமைகளாக சுரங்கங்களில் வேலை வாங்கப்பட்டனர். மிடா என்றழைக்கப்பட்ட முன்-கொலம்பியக் கால இன்காக்களிடம் இருந்த அடிமை பண்பாட்டை எசுப்பானியர்கள் மாற்றி தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தினர். இன்கா முறையிலிருந்து எசுப்பானிய முறையை வேறுபடுத்தி காட்ட இதை என்கோமிஎன்டா என்பர். 1776இல் மேல் பெரு ரியோ டா லா பிலாடா வைசிராய் நிருவாகத்தின் கீழ் வந்தது. 1781 மார்ச்சு மாதம் தொல்குடிகள் எசுப்பானிய அரசுக்கெதிராக புரட்சியில் ஈடுபட்டு, டுபேக் கட்டரி என்ன தொல்குடியினத்தவர் தலைமையில் லா பாச் நகரை முற்றுகையிட்டனர். இதில் 20,000 பேர் பலியாயினர். எசுப்பானிய பேரரசு நெப்போலியன் போர்களால் வலுகுறைந்து இருந்தது. இந்நிலையால் காலணியாதிக்கத்துக்கு எதிர்ப்பு அதிகமாக வளர்ந்தது. சுக்ரே நகரிலிருந்து 1809 மே 25 அன்று தென் அமெரிக்காவின் விடுதலை என்று முதலில் விடுதலை போராட்டம் தொடங்கிற்று. இது உள்ளூர் ஆட்சியாளர்களால் தூண்டப்பட்டது. இதற்கு அடுத்து லா பாச் புரட்சி ஏற்பட்டது. அதன்போது பொலிவியா விடுதலையானதாக அறிவித்துக்கொண்டது. இப்புரட்சிகள் சிறிது காலமே நீடித்தது இவையிரண்டும் எசுப்பானிய ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டது. ஆனால் அதன் பின் எசுப்பானியர்களிடம் இருந்து விடுதலை கேட்கும் எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்கள் தென்னமெரிக்கா முழுவதும் பரவியது. பல முறை எசுப்பானிய அதிகாரிகளாலும் விடுதலை வேண்டுபவர்களாலும் பொலிவியா மாறி மாறி கைப்பற்றப்பட்டது. புவெனசு ஐரிசு பகுதியிலிருந்த எசுப்பானிய ஆட்சியாளர்களால் மூன்று முறை அனுப்பப்பட்ட. படைகள் தோற்கடிகப்பட்டன. இதனால் படைகன் அர்கெந்தீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சால்டா எல்லைப்புறத்தை பாதுகாப்பதுடன் நின்றுவிட்டன. பொலிவியாவானது அன்டானியோ யோசு சுக்ரே அவர்களால் எசுப்பானியர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. வடக்கு பகுதியில் படைகளுடன் சைமன் பொலிவார் உதவிக்கு வந்ததும் இவருக்கு உதவியது. 16 ஆண்டுகள் போருக்கு பின் ஆகத்து 6, 1825இல் பொலிவியா குடியரசு தோன்றியதாக அறிவிக்கப்பட்டது. 1839இல் பொலிவியா அதன் தலைவர் ஆண்டரசு சான்டா குருசு தலைமையில் பெருவின் மீது படையெடுத்து கைப்பற்றியது. அவர் ஆட்சியிலுருந்து அகற்றப்பட்டிருந்த பெருவின் அதிபர் லூயிசு யோசு தே ஆர்பிகோசாவை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பெருவும் பொலிவியாவும் ஆண்டரசு சான்டா குருசு தலைவராக கொண்ட பெரு-பொலிவிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இந்த கூட்டமைப்புக்கும் சிலிக்கும் பதற்றம் நிலவியது, சிலி 28 திசம்பர் 1836இல் இதன் மீது போர் தொடுத்தது. சிலியின் நட்பு நாடானா அர்கெந்தீனா 9 மே 1837இல் கூட்டமைப்பின் மீது போரை அறிவித்தது. இப்போரில் கூட்டமைப்பு பல பெரு வெற்றிகளை பெற்றது. சிலி கூட்டமைப்பிடம் உடன்பாடு கண்டது அதன்படி சிலி பெரு-பொலிவியா பகுதியிலிருந்து விலகிக்கொள்வதாகவும் சிலி கைப்பற்றிய கூட்டமைப்பின் கப்பல்களை திரும்ம ஒப்படைக்கவும் ஒப்புக்கொண்டது. பொருளாதார உறவுகள் பழைய படி சீரமைக்கப்பட்டது. பெரு சிலியிடம் பெற்ற கடன்களுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த உடன்பாடு சிலியில் கொந்தளிப்பை உருவாக்கியது. அதனால் சிலி இந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கி கூட்டமைப்பு மீது இரண்டாம் முறை படையெடுத்தது. யங்காய் என்னுமிடத்தில் நடந்த போரில் கூட்டமைப்பு தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின் சான்டா குருசு பதவி விலகி எக்குவடோர் நாட்டில் வாழ்ந்தார் பின் பாரிசுக்கு சென்றார். கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. பெருவுக்கு விடுதலை கிடைத்த பின்பு அதன் அதிபர் தளபதி அகுசுடின் காமார்ரா பொலிவியாவின் மீதி படையெடுத்தார். 20 நவம்பர் 1841 அன்று இன்காவி என்னுமிடத்தில் நடந்த போரில் பெருவின் படைகள் பெரும் தோல்விகண்ன, அங்கேயே அகுசுடின் காமார்ரா கொல்லப்பட்டார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் இருந்த நிலையற்ற தன்மையால் பொலிவியா வலுவிழந்து இருந்தது. 1876-93 காலத்தில் நடந்த பசிபிகிற்கான போரில் சிலி பொலிவியாவின் வளங்கள் நிறைந்த தென்மேற்கு பகுதியையும் கடற்கரை பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டது. தற்போதைய சுகிகேமாதா (Chuquicamata) பகுதியும் அந்தகோயாசுதா (Antofagasta) துறைமுக நகரம் போன்றவை பொலிவியாவின் பகுதியாக இருந்தவை. விடுதலை பெற்றதில் இருந்து பொலிவியா தன் நிலப்பகுதியில் பாதியை அருகாமை நாடுகளிடம் இழந்துவிட்டது. தற்போது பிரேசிலிடம் உள்ள ஆக்ரி (மாநிலம்) பொலிவியாவின் பகுதியா இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டின் பொருளாதார வளம் வெள்ளியியில் இருந்து வெள்ளீயத்துக்கு மாறியது.தொடர்ந்து வந்த அரசுகள் பொருளாதாரத்தாலும் மேட்டிமைவாதிகளாகளும் கட்டுப்படுத்தப்பட்டனர். முதலாளித்துவ கொள்கைகளில் ஒன்றான கட்டுப்பாடற்ற தனியார் மயம் (லேசிப்பியர் (Laissez-faire)) இங்கு நடைமுறையில் இருந்தது தனியார் நிறுவனங்கள் மேட்டிமைவாதிகளிடம் இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளுக்கு இந்நிலை நீடித்தது. நாட்டில் பெரும்பான்மையாக இருந்த அதன் தொன்குடிகளுக்கு கல்வி, பொருளாதாரம், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது. 1932-35 காலத்தில் பொலிவியாவுக்கும் பராகுவே நாட்டிற்கும் இடையே நடந்த சாகோ போரில் பொலிவியா தோற்று சாகோ பெருநிலப்பரப்பை இழந்தது. இது பொலிவியாவின் வரலாற்றில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. புரட்சிகர தேசிய இயக்கம் என்ற அரசியல் கட்சி பலதரப்பட்ட மக்களின் ஆதரவுடன் தோன்றியது. 1951ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போதும் இதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனுடை தொடர் போராட்டத்தின் காரணமாக 1952ஆம் ஆண்டு ஏஞ்சல் விக்டோர் எசுடைன்சுரோ தலைமையில் ஆட்சி அமைத்தது. இக்கட்சி பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நாட்டின் அனைத்து குடிகளுக்கும் வாக்குரிமையும் உள்ளூரில் இருப்பவர்களுக்கு கல்வியும் கிடைத்தது. நிலச்சீர்திருத்த சட்டத்துடன் பெரிய வெள்ளீய சுரங்கங்களை நாட்டுடமை ஆக்கியது. 12 ஆண்டு ஆட்சிக்குப்பின் புரட்சிகர தேசிய இயக்கம் பிளவுண்டது. 1964இல் ராணுவ அதிகாரிகள் அதிபர் ஏஞ்சல் விக்டோர் எசுடைன்சுரோ ஆட்சியை கவிழ்த்து அவர் மூன்றாம் முறை ஆட்சிக்கு வருவதை தடுத்தது. 1966இல் ஆட்சிக்கு வந்த இராணுவ அதிகாரி ரினே பாரின்டோசு ஓர்டுனோ (René Barrientos Ortuño) 1969இல் இறந்த பின்பு தொடர்ந்து வந்த அரசுகள் பலவீனமாகவே இருந்தன. மக்களின் அவையும் (Popular assembly) அதிபர் நுவான் ஓசு டோர்ரசும் (Juan José Torres) புகழ்பெறுவதைக் கண்டு கலவரமடைந்த இராணுவம், புரட்சிகர தேசிய இயக்கம் ஆகியவையும் மற்றவர்களும் சேர்ந்து கூகோ பன்சார் சுஅர் (Hugo Banzer Suárez) அவர்களை 1971இல் அதிபர் ஆக்கினர். 1960இல் ஐக்கிய அமெரிக்க உளவு நிறுவனம் பொலிவிய இராணுவத்துக்கு நிதியும் பயிற்சியும் கொடுத்து இராணுவ சர்வாதிகாரத்திற்கு துணை புரிந்தது. புரட்சிகர பொதுவுடமைவாதி சே குவேரா அமெரிக்க உளவு அமைப்பாலும் பொலிவிய இராணுவத்தாலும் 9 அக்டோபர் 1967 அன்று பொலிவியாவில் கொல்லப்பட்டார். சே குவேராவை கொன்ற அமெரிக்க உளவு அமைப்பின் அதிகாரி பெலிக்சு ரோடிரிக் (Félix Rodríguez) என்பவர் ஆவார். பெலிக்சு பொலிவிய அதிபரிடமிருந்து சே குவேராவை கொல்லும் ஆணையை பெற்ற பின்பு சே குவேராவை கொல்லும் இராணுவ வீரனிடம் கவனமாக இருப்பதோடுமல்லாமல் குறி தப்பக்கூடாது என்று கூறியதாகவும் பொலிவிய அரசு வெளியில் சொல்லும் சே குவேரா இராணுவ தேடுதல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார் என்று சொல்லுவதைப் போலவே எங்கும் சொல்லவேண்டும் என்று கூறியதாக கூறினார். தன்னால் பொய்யான உத்தரவுகளை சொல்லி அமெரிக்க அரசு விரும்பியது போல் சே குவேராவை பனாமா நாட்டுக்கு கொண்டு சென்றிருக்கு முடியும் என்றும் ஆனால் அவ்வாறு செய்யாமல் பொலிவியா விரும்பியதை போலவே செய்ததாக கூறினார். 1979, 1981 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல் மோசடி மிகுந்ததாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆட்சி கவிழ்ப்புகளும் ஆட்சி கவிழ்ப்புமூலம் அதிகாரம் பெற்றவர்களை எதிர்த்து எதிர் ஆட்சி கவிழ்ப்புகளும் தற்காலிக அரசுகளும் அக்காலத்தில் ஏற்பட்டன. 1980இல் லூயிசு கார்சியா மேசா (Luis García Meza Tejada) கடுமை நிறைந்த ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவருக்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு வேண்டி தான் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சியில் இருக்கப்போவதாக கூறி ஆதரவு திரட்டினார். ஆண்டு இறுதியில் தொலைக்காட்சியில் தோன்றி தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி தான் ஆட்சியில் நீடிக்கப்போவதாக கூறினார். இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அவர் 1981ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். அடுத்த 14 மாதங்களில் மூன்று இராணுவ அரசுகள் ஏற்பட்டும் அவைகளால் பொலிவியாவின் சிக்கலை தீர்க்கமுடியவில்லை. மக்களிடம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இராணுவம் நாட்டின் அவையை கூட்டியது. அந்த அவை 1980இல் புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது நாட்டு குழப்பங்களை தீர்க்க பணித்தது. 1982 அக்டோபர் மாதம் 1956-60இல் அதிபராக இருந்த எர்னன் சிலாசு யுவாயோ (Hernán Siles Zuazo) 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிபர் ஆனார். 1993இல் அதிபர் கான்சாலோ சென்சசு (Gonzalo Sánchez de Lozada) டுபக் கடரி புரட்சிகர விடுதலை இயக்கத்துடன் உடன்பாடு கண்டிருந்தார், அது தொல்குடிகளின் உணர்ச்சிக்கும் பல் இன விழிப்புணர்ச்சி கொள்கைக்கும் ஊக்கமூட்டியது. அவர் நடுவண் அரசிடம் இருந்த அதிகாரங்களை பல அமைப்புகளுக்கு பரவலாக்கி அதிகார குவியல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பல் இன மக்களுக்கு இருமொழிக் கொள்கையை நடைமுறைபடுத்தினார் வேளாண் சட்டத்தை அறிமுக்படுத்தினார், சுரங்கம் தவிர மற்ற அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். புதிய தனியார் மயகொள்கைப்படி அரசு குறைந்தபட்சம் 51% நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும். இதன் மூலம் நிறுவனங்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுவதும் போகாமல் இருக்கும். இந்த புது தாராளமயக் கொள்கை பொலிவியாவில் பலவகைப்பட்ட மக்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறது. சட்டமானது கல்வி, வேளாண் கட்டமைப்பு, நலத்துறை, உள் கட்டமைப்பு போன்றவற்றை மைய அரசிடம் இருந்து பிரித்து நகராட்சிகள் நிருவகிக்க வேண்டுமென்கிறது. இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பொருளாதார சீர்திருத்தங்கள் சமூகத்தின் சில பிரிவினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதை எதிர்த்து அடிக்கடி போராடினர், சிலமுறை போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. குறிப்பாக இப்போராட்டங்கள் 1994-96 காலப்பகுதியில் லா பாசு சாபாரே என்ற கோகோ வளரும் பகுதியிலும் நடந்தன. இக்காலகட்டத்தில் பொலிவியாவின் தொழிலாளர் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் திறன் அற்று வலுவிழந்து இருந்தது. 1995இல் நடந்த ஆசிரியர்களின் போராட்டம் தோற்றதற்கு இக்கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவாக ஆலை தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் போன்ற தன் உறுப்பினர்களை திரட்டாததே காரணம் 1997 தேர்தலில் வலதுசாரிக்கட்சியான தேசிய செயல்படும் சனநாயக கட்சி சார்பாக முன்னா் சர்வதிகாரி கூகோ பன்சார் 22% வாக்குகள் பெற்றார். புரட்சிகர தேசிய இயக்கம் 18% வாக்குகளை பெற்றது. பன்சார் சிறப்பு காவல் படைகளை கொண்டு சாபாரே பகுதியிலிருந்த சட்டத்திற்கு புறம்பான கோகோ பயிர்களை அழித்தார். புரட்சிகர இடது இயக்கம் கூட்டணியில் இறுதி வரை பங்குபெற்று பென்சாரின் கோகோ பயிர்களை அழிக்கும் செயலுக்கு துணை நின்றது. பென்சார் அரசு முந்தைய அரசுகளின் பொருளாதரக்கொள்கைகளை பின்பற்றியது.1990இன் நடுகாலம் வரை பொருளாதாரம் நன்கு வளர்ந்தது. 1990இன் இறுதி காலப்பகுதியில் உள்நாட்டு, பன்னாட்டு காரணிகளால் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. பிரேசில் அர்கெந்தீனா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் உலக அரங்கில் பொலியாவின் ஏற்றுமதிப் பொருட்களின் விலை வீழ்ந்தது, கோகோ விலை வீழ்ச்சியால் வேலைவாய்ப்பு குறைந்து பொலிவிய பொருளாதாரம் சிக்கலை சந்நித்தது. நகருங்களுக்கான நீர் வழங்கும் உரிமையை வெளிநாட்டு தனியாருக்கு விற்றதாலும் அதன்காரணமாக நீரின் விலை இருமடங்காக உயர்ந்ததாலும் 1999-2000 காலப்பகுதியில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரான கோச்சம்பாம்பா (Cochabamba) போராட்டம் வெடித்தது. ஆகத்து 2001 பென்சார் பதவி விலகினார். 2002ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் அதிபர் கான்சாலோ சென்சசு 22.5% வாக்குகளை பெற்றார் சோசலிசத்தை நோக்கிய இயக்கம் கட்சி சார்பில் போட்டியிட்ட கோகோ ஆதரவாளரும் தொன்குடிகளின் தலைவருமாகிய ஏவோ மொராலெசு 20.9% வாக்குகளைப்பெற்றார். நான்காம் இடம் பிடித்த புரட்சிகர இடது இயக்கமானது புரட்சிகர தேசிய இயக்கத்துக்கு ஆதரவு அளித்ததால் இரு வழிப்போட்டியில் கான்சாலோ சென்சசு அதிபர் பதவியை அடைந்தார். 2003ஆம் ஆண்டு பொலிவியாவில் இயற்கை எரிவளி போராட்டம் வெடித்தது. எல் ஆல்டோ நகரில் 16 பேர் காவல் துறை துப்பாக்கிச்சூடில் இறந்ததாலும் பலர் காயமுற்றதாலும் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. போராட்டம் அதிகரிக்கும் என்ற நிலையில் கான்சாலோ சென்சசு பதவி விலகினார்.துணை அதிபர் கார்லோசு மெச்சா அதிபர் பொறுப்பை ஏற்றார். 2005இல் மீண்டும் இயற்கை எரிவளி போராட்டம் வெடித்தது.கார்வ=லோசு 10 யூன் 2005 பதவி விலகினார். பொலிவிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடைக்கால அதிபராக செயல்பட்டார். 2005ஆம் நடந்த அதிபர் தேர்தலில் 53.7% வாக்குகளுடன் ஏவோ மொராலெசு வெற்றிபெற்றார். இப்பேராதரவு பொலிவிய அரசியலில் புதிதாகும். தன் பரப்புரையில் கூறியபடி 1 மே, 2006 அன்று நாட்டின் அனைத்து இயற்கை எரிவளி வளங்களையும் நாட்டுடைமை ஆக்கப்போவதாக அறிவித்தார். 6 ஆகத்து 2006 அன்று புதிய அரசியலமைப்பை வரையறுத்து அதில் தொல் குடிகளுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கப்போவதாக கூறினார். 2007இல் சுக்ரேவில் போராட்டங்கள் நடந்தன. இந்நகரத்திற்கு சட்டமன்றத்தில் இடம் வேண்டும் என கோரப்பட்டது.அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைப்பு பிரிவுகள் நகரக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடைமுறை நடைமுறைக்கு ஏற்றது அல்ல எனக் கூறி இக்க்கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. . 2009இல் நடந்த தேர்தலில் 64.22% வாக்குகளுடன் மொராலெசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் அமெரிக்காவின் நடு வட்டாரத்தில் ( 57°26'–69°38'மே & 19°38'–22°53'தெ. ) பொலிவியா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1,098,581 சதுர கிமீ (424,164 சதுரமைல்). சாகோ பெருநிலப்பகுதியின் பாகமாக உள்ள ஆந்தீசு மலைத்தொடரின் நடுப்பகுதியிலிருந்து அமேசான், வரை இருந்த பொலிவியா தென் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய நாடாகும். நாட்டின் நடுப்புள்ளி சான்டா குருசு துறையின் கீழ் இருந்த ரியோ கிரேனெடில் இருந்த போர்ட்டோ இசுரெல்லா ஆகும். இது பலவகையான நிலப்பரப்புகளையும் தட்பவெப்பத்தையும் அதிக அளவிலான பல்லுயிர்தன்மையும் உடைய நாடாகும். இதன் பல்லுயிர்தன்மை உலக அளவில் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது பல சூழ்மண்டலங்களையும் பொலிவிய மேட்டு நிலம், வெப்பமண்டல காடுகள் (அமேசான் காடுகளும் இதில் அடக்கம்), வறண்ட பள்ளத்தாக்குகள், வெப்ப மண்டல புல்தரைகள் போன்ற துணை சூழ் மண்டலங்களையும் கொண்டது. இப்பகுதிகளின் உயரம் மிகவும் வேறுபட்டது, நவாடொ சசாமா கடல் மட்டத்திலிருந்து 21,463 அடி உயரம் உடையது பராகுவே ஆற்றுப் பகுதி 230 அடி உயரமுடையது. பொலிவியா ஆந்திசு பகுதி, கீழ் ஆந்திசு பகுதி, சமவெளி பகுதி என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. பொலிவியா மூன்று வடிநிலங்களை கொண்டுள்ளது. ஏவோ மொராலெஸ் எவோ மொரல்ஸ் (பிறப்பு: அக்டோபர் 26, 1959) பொலிவியாவின் முதற் குடிமக்கள் தலைவர்களில் ஒருவர். அண்மைய பொலிவியா தேர்தலில் அந்நாட்டின் சனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கொக்கோ பயிரிடும் ஒரு விவசாயியாக இருந்தவர். ஐக்கிய அமெரிக்கா சார்பு அரசுகள், கொக்கோ பயிர் செய்கை தடுப்பை செயற்படுத்தியதை எதிர்த்தவர். தாம் கொக்கோ என்ற இயற்கை பயிரையே பயரிடுவதாகவும், கொக்கெயினாக உற்பத்தி செய்யவில்லை என்றும் வாதிடுபவர். இவர் இடது சாரி கொள்கைகள் உடையவர். ""முதலாளித்துவம் மனிதர்களின் மிககொடிய எதிரி...எந்த ஒரு அமைப்பு மனிதர்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி, உணவு ஆகிவற்றை நிறைவு செய்யவில்லையோ அவ்வமைப்பு மிகப்பெரிய மனித உரிமை மீறல்களை செய்கின்றது"" என்ற கருத்தினை உடையவர். டிசம்பர் 20 ராபர்ட் ஜெ. வான் டி கிராப் ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (டிசம்பர் 20, 1901 – ஜனவரி 16, 1967) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வான் டி கிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர் இவரேயாவார். ஒட்டிசுட்டான் தான்தோன்றீசுவரம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரத்தின் மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப் படாமால் தானே தோன்றியதால் தாந்தோன்றீஸ்வரம் என்றழைக்கப் படுகின்றது. 1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக ஒட்டிசுட்டானில் இருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் 2000 ஆம் ஆண்டில் மீள்குடியேறினர். சிதைவடந்திருந்த கோயிலானது புனருத்தாரணம் செய்யப் பட்டு 13 ஜூலை 2005 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது சிவாச்சாரியார்கள் தங்குவதற்கு விடுதியொன்றும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. மதியிறுக்கம் மதியிறுக்கம் ("Autism") அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு அல்லது தன்னுழப்பல் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்.. மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தன்மை, பருமை (magnitude), இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும் ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன. இவ்வேறுபாட்டின் பரம்பல் அமெரிக்காவில் 166 பேரில் ஒருவர் என்றும் ஆயிரத்தில் ஒருவர் என்றும் வெவ்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அறுதியிடல் (diagnosis) பொதுவாக உளவியல் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதற்கென மருத்துவப் பரிசோதனைகளும் உள்ளன. உடல்நிலைப் பரிசோதனையில் இது பொதுவாகத் தெரிய வருவதில்லை. இது ஒரு நோயல்ல மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர். இக்குறைபாடு பொதுவாகக் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன் ஏற்படும். 1943 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர். லியோ கேனர் என்பவர் குழந்தைப் பருவ மதியிறுக்கக் குறைபாடுடைய 11 குழந்தைகளை ஆய்வுசெய்து இவர்களிடம் சில வழமையில்லா நடத்தைகள் இருப்பதைக் கண்டார். இவரே இதனை "துவக்ககால மழலையர் ஆட்டிசம்" என அழைத்தார். இதே காலகட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரான ஹான்ஸ் அசுபெர்ஜர், இதேபோன்ற மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருந்தார். இவரது கண்டுபிடிப்பு இன்று "அசுபெர்கர் கூட்டறிகுறி" எனவும் லியோ கேன்னரின் கண்டுபிடிப்பு "மதியிறுக்க குறைபாடு", "மழலைக்கால மதியிறுக்கம்", அல்லது எளிமையாக "மதியிறுக்கம்" எனப்படுகிறது. ஹான்ஸ் அஸ்பர்ஜர் என்பவர் இக்குறைபாட்டின் கடுமை குறைந்த நிலையைக் கண்டறிந்தார். இந்த இருவகைகளோடு தற்போது 5 வகையான வளர்ச்சிக் குறைபாடுகளை வகைப்படுத்தி உள்ளார்கள். இந்த வகைப்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறருடனும் சமுதாயத்துடனும் தொடர்பு கொள்ளும் தன்மையின் நிலைகளையும் பண்புகளையும் வைத்து ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குறைபாட்டை முதன்முதலாகப் பெயரிட்டது 1943இல் ஆகும். விலங்கின நடத்தையியலில் நோபல் பரிசு பெற்ற நிக்கோ டின்பெர்ஜென் தமது நோபல் பரிசேற்பு உரையில் மதியிறுக்கம் குறித்து பேசியுள்ளார். மதியிறுக்கமுள்ள குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் இருக்காது. இவர்களின் நடத்தையை உற்று நோக்குதலின் மூலம் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாகப் பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் இருக்கும். கால் கட்டை விரல் நுனியில் நடப்பவர்களாக இக்குழந்தைகளில் சிலர் இருப்பர். இவர்களது நடத்தைகளில் அதிகமான வேறுபாடு இருப்பினும் ஒரு சில நடத்தைகள் மூலம் மட்டுமே குறைபாடுடைய குழந்தை என வகைப்படுத்த இயலாது. எனினும் சில குறிப்பிட்ட நடத்தைகள் மதியிறுக்கமுடைய குழந்தைகளைக் குறித்துக் காட்டும். பல்வேறு வகைப்பட்ட நரம்பியல் சார்ந்த நடத்தை இயல்புகள், சமூக நல்லுறவு மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனில் சிக்கல்கள், வரையறுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட கற்பனைத் திறனுடையவர்களாகவும், ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்பவர்களாகவும் (எ.கா. விரல்களை இடம், வலமாக ஆட்டுதல், விரல்களை ஆட்டிக்கொண்டே இருத்தல்), சில குறிப்பிட்ட நடத்தைகளை உடையவர்களாகவும், மிகச் சில விடயங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பவர்களை மதியிறுக்கம் உடையவர்கள் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடுடையவர்கள் எனலாம். இக்குறைபாட்டின் நிலையைக் கண்டறிய ஸ்பெக்ட்ரம் (spectrum)என்ற சொல் பயன்படுகிறது. எடுத்துக் காட்டாகக் கடுமை குறைந்த நிலைமுதல் தீவிரமான நிலை வரை. இக்குறைபாடு எந்த நிலையில் இருப்பினும் அடிப்படையாக மூன்று துறைகளில் பாதிப்பு காணப்படும். இவையன்றி ஐம்புலன்களின் ஒருங்கிணைப்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. மற்ற வளர்ச்சிக் குறைபாட்டு அறிகுறிகளுக்கும் மதியிறுக்க குறைபாட்டுத் தொகுதி அறிகுறிகளுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு சமூகத்துடன் தொடர்பற்று இருப்பது ஆகும். இந்தச் சமூகத்துடனான வளர்ச்சிக் குறைபாட்டைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கலாம். இந்தக் குறைபாடில்லாத ஓர் வழமையான குழந்தை, தன்னுடன் பேசுகின்றவர்களைப் பார்த்தும், அவர்களது முகத்தைக் கவனித்தும், திரும்ப அவர்களை நோக்கிச் சிரித்தும் சமூகத்துடன் தொடர்பு கொள்ளும். ஆனால் மதியிறுக்கம் உள்ள குழந்தைகள் முகங்களையும்,ப் மனிதர்களையும் விடப் பொருட்களாலேயே ஈர்க்கப்படுவர். ஒரு வினாடிக்கு மனிதர் முகத்தைப் பார்த்தாலும் உடனேயே வேறுபக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வர். புன்னகை புரியாமலோ அல்லது தாம் விரும்பும் பொருட்களைக் கண்டு புன்னகைக்கவோ செய்யலாம். மூன்றிலிருந்து ஐந்து வரையிலான சிறுவர்கள் மற்றவர்களைத் தன்னிச்சையாக அணுகவோ அவர்கள் செய்வதைத் திரும்பச் செய்யவோ செய்கைகள் மூலம் தொடர்பாடவோ இயலாமல் இருப்பார்கள்; ஆனால் தங்களைக் கவனிக்கும் நபர்களிடம் (பெற்றோர்கள்) மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வமிருக்காது. வளர்ந்த சிறுவர்கள் முகம் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் காண முடியாதவர்களாக உள்ளனர்; எடுத்துக்காட்டாகத் தங்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இருப்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. தவறான நேரங்களில் சிரிக்கவோ, அழவோ செய்வர். இவர்களின் அறிவு வளர்ச்சியில் முடிவு எடுத்தல், நம்பிக்கை, உணர்ந்துகொள்ளுதல், புலன் ஒருங்கிணைப்பு, மற்றவர்களின் ஆசைகள், தேவைகளைப்புரிந்து கொள்ளுதல் ஆகியன விடுபட்டுப் போகின்றன. இவர்களுக்குப் பிறரின் மனநிலை மற்றும் செயல்பாடுகளுக்கிடையேயான தொடர்பைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். இக்குறைபாடுள்ளவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை குறித்து சில நிகழ்வுகள் பதியப்பட்டிருந்தாலும் இவற்றைக் குறித்த ஆய்வுகள் எதுவுமில்லை. கிடைத்துள்ள குறைந்த தகவல்களின்படி மனவளர்ச்சிக் குன்றிய மதியிறுக்கக் குறைபாடுள்ள சிறுவர்களிடையே ஆக்கிரமிப்பு, பொருட்களைச் சிதைத்தல், கோப வெளியீடு ஆகியவை காணப்படுவதாகத் தெரிகிறது. 2007இல் 67 சிறுவர்களின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட நேர்முகங்களின் அடிப்படையில் அமைந்த ஓர் ஆய்வு, மற்றச் சிறுவர்களை விட மதியிறுக்கம் உள்ளவர்களில் மூன்றில் இருபங்கினர் தீவிரமான கோப வெளியீடுகளைக் கொண்டவர்களாகவும் மூன்றில் ஒருபங்கினர் ஆக்கிரமிப்பு வரலாறு உடையவர்களாகவும் இருந்தனர் என கண்டறிந்துள்ளது. 2008இல் நடத்தப்பட்ட ஓர் சுவீடிய ஆய்வு மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சைக்குப் பின்னர் திரும்பிய மதியிறுக்கச் சிறுவர்களில், வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மற்ற உளவியல் குறைபாடுகள்/நோய்கள் இருக்கக்கூடிய வாய்ப்பிருந்ததாகக் கூறுகிறது. மதியிறுக்கக் குறைபாடுடைய குழந்தைகள் சமூகத் தொடர்பு கொள்ளுதலின் தரம் மற்றும் அளவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் எவ்வித ஆர்வமோ அக்கறையோ காட்டாமல் தனிப்பட்டு இருப்பார்கள். ஒரு சில அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே தொடர்பு கொள்வார்கள். புதியவர்கள் யாரேனும் அருகில் வந்தாலோ, திடீரென்று பேச முற்பட்டாலோ ஆர்ப்பாட்டம் செய்து உடல் ரீதியான அணுகுமுறை மற்றும் சமூகத் தொடர்பைப் புறக்கணிப்பார்கள். யாரேனும் சமூக உறவுகள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வந்தால், எதிர்ப்பு கூறாமல் ஏற்றுக்கொள்வார்கள். தாங்களாகவே முன்வந்து தொடர்பு கொள்ள மாட்டார்கள் இவ்வகையினர் சுறுசுறுப்பாகவும், சமூகத் தொடர்பு கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அசாதாரண மற்றும் பொருத்தமற்ற வழிகளில் தொடர்பு கொள்வர். இவற்றில் அனைவரும் ஒரே மாதிரி இருப்பர் எனக் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் மிதமாகவோ, தீவிரமாகவோ பாதிக்கப்பட்டிருக்கலாம். மதியிறுக்கம் உள்ளவர்களுக்கு மொழிப்பயிற்சி மற்றும் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் இருக்கும். சிலர் பேசாமலேயே இருப்பர். சிலர் நன்றாகப் பேசும் திறன் பெற்றிருந்தாலும் சமூகச் சூழலில் பேசும் திறன் தெரியாமல் தேவையில்லாமலோ சம்பந்தமில்லாமலோ பேசுவார்கள். அவர்களால் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யமுடியாத நிலை அவர்களின் குறைபாட்டால் ஏற்பட்டதே தவிர வேண்டுமென்றே செய்யப்படும் செயல் அல்ல. மதியிறுக்கம் உள்ளோரில் மூன்றில் ஒரு பகுதியினரிலிருந்து பாதிப்பேருக்கு இயற்கையாகப் பேசுவதில் குறைபாடு காணப்படுகிறது. சிலருக்கு மொழி கற்பதில் சிரமம் இருக்கலாம். குழந்தையின் முதலாண்டிலிருந்தே பேச்சுத் திறனில் குறையிருக்கலாம். இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் சொற்களுடன் செய்கைகளைத் தொடர்புபடுத்துவதில் சிரமப்படலாம். மதியிறுக்கக் குழந்தைகள் தேவைகளைத் தெரிவிக்கவோ, பட்டறிவைப் பகிரவோ இயலாதவர்களாக இருப்பர். மற்றவர்கள் கூறியதையே எதிரொலியாகத் திரும்பக் கூறக் கூடிய வாய்ப்பு கூடுதலாகும். அல்லது இட மயக்கம் ஏற்படலாம் (காட்டாக, கே:"நீ என்ன செய்கிறாய்? ப: நீ விளையாடுகிறாய்") கூட்டுப் பயிற்சியினால் தேவையான அளவில் உரையாடப் பழக்கலாம். மதியிறுக்கக் குழந்தைகளுக்குக் கற்பனையுடன் விளையாடுவதும், செய்கைகளை மொழியாக மாற்றுவதும் கடினமாக இருக்கலாம். புலன் சார்ந்த உணர்வுகளை அனுபவிப்பதில் மற்றவர்களிடமிருந்து இக்குழந்தைகள் வேறுபட்டு இருப்பர். புலன் சார்ந்த தூண்டல்களுக்கு இவர்கள் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ (ஹைபோ) அதிகமாகவோ(ஹைபர்) தூண்டப்படும். சுற்றுப்புறச் சூழலில் உள்ள புலன் சார்ந்த விடயங்கள் ஒரு சிலரைக் கடுமையாகப் பாதிக்கும். சிலருக்கு அது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கும். இது எல்லா புலன் சார்ந்த தூண்டலுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு ஒலி, ஒளி, சுவை, மணம் மற்றும் தொடு உணர்வுகள் சராசரியை விட அதிகமாகவோ குறைவாகவோ செயல்படும். ஆகையால்தான் அவர்களில் பலர் மாற்றமில்லா ஒரேவகையான நடைமுறையை விரும்புகின்றனர். தொடு உணர்வு மண்டலத்தில் பாதிப்பு இருப்பின், மதியிறுக்கமுடைய குழந்தைகள், பிறர் தொட்டால், விலகி விடுவார்கள். பொருட்கள், உடை அல்லது உணவு ஆகியவற்றின் தொடு உணர்வை அதிகப்படியாகவே உணர்வார்கள். இதனால் இவர்களின் நடத்தைப் பிரச்சனைகள், கோபம், எரிச்சல் போன்ற செயல்களில் ஈடுபடுவர் அல்லது தனிமையை நாடுவர். சில தூண்டல்கள் அவர்களைத் தவிர்க்கச் செய்தாலும் பல தொடு உணர்வுத் தூண்டுதல்கள் அவர்களுக்கு அமைதி ஏற்படுத்தும். மதியிறுக்கமுடைய குழந்தைகளுக்குச் செவி உணர் மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டினால், காது மூலம் நரம்பு மண்டலத்துக்கும், மூளைக்கும் செல்லும் ஒலிகளை மூளையானது சொற்கள், இசை, பொருளுடன் கூடிய ஒலி எனச் சூழலுக்கு ஏற்ப பிரித்து அறியாது. எனவே இக்குழந்தைகள் சராசரியாகக் கேடு விளைவிக்காத ஒலிகளுக்குக் கூட அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக நாற்காலி இழுத்தல், மணியோசை, ஒலிப்பெருக்கி அறிவிப்புகள், மின்சாதனங்களின் இரைச்சல், அன்றாடம் கேட்கும் சில ஒலிகள் ஆகியவற்றால் மிகுந்த மன வேதனை அடைவர். கண்கள் மூலம் காணப்படும் வண்ணம், உருவம் அளவு ஆகியவற்றை நரம்பு மண்டலமும் மூளையும் ஒருங்கிணைந்து சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தி அக்காட்சிக்கு ஏற்ப செயல்பட ஆணையிடுகிறது. மதியிறுக்கக் குறைபாடுடையோருக்கு விழிசார் தகவல்களுக்கு வெவ்வேறு விதத்தில் செயல்படுவர். வெளிச்சம், பிரகாசமான விளக்குகள், ஒளி எதிரொளிப்புகள், பளபளப்பான பொருட்களைத் தவிர்க்கக் கண்களை மூடுவர் அல்லது சுருக்குவார்கள். சிலர் அவற்றை விரும்பி நாடுவர். மதியிறுக்கக் குறைபாடுடைய குழந்தைகள் நாவினால் உணரப்படும் சூடு அல்லது குளிர்ச்சி, காரம் அல்லது மிதம் இனிப்பு போன்றவற்றை அறிவதில் ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில உணவுகளைத் தவிர்ப்பார்கள் அல்லது அதனையே அதிகமாக விரும்புவார்கள். மூக்கின் வழியாக உணரப்படும் வியர்வை, வாசனைத் திரவியங்கள் ஆகியவை மதியிறுக்கமுடைய சிலருக்கு மிகுந்த தூண்டுதலை அளிக்கிறது. சிலர் எதிர்பாராத வகையில் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிய எல்லாவற்றையும் நுகர்வார்கள். சமநிலை உணர் மண்டலமானது உடலின் சீரான சமநிலைக்கும், தளம்சார் அங்க அசைவுகளுக்கும், சுழலும், திரும்பும், குனியும், செயல்களில் தடுமாறாமல் ஈடுபடுவதற்கும் மிக முக்கியமான புலன்சார் மண்டலமாகும். நமது காதின் உட்பகுதியில் உள்ள சவ்வு நரம்பு மண்டலத்துடன் இணைந்து நாம் நேராக நிற்கவும், அசைவுகள் அல்லது செயல்பாடுகளைச் செய்யவும் உதவுகிறது. மதியிறுக்கமுடைய சிலருக்கு தங்கள் உடலைத் தடுமாறாமல் செயல்படுத்துவதில் சிரமம் இருக்கும். அதனால் அவர்கள் படிகள், சரிவுப்பாதை (ramp) ஆகியவற்றில் நிலையாக இருக்கச் சிரமப்படுவர். சிலர் எவ்வித உடல் அசைவுக்கும் பயந்து மிக மெதுவாக நகர்வர். சிலர் மிகவும் அஞ்சுபவர்கள் போலவும், அசாதாரண நடத்தை உள்ளவர்களாகவும் தோன்றுவர். சிலர் இதற்கு நேர்மாறாகச் செயற்படுவர். அவர்கள் சுற்றுதல், சுழலுதல், போன்ற செயல்களில் மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத வேகத்தில் செயல்படுவர். தசைகள், நரம்புகள், மூட்டுகள், உட்காது ஆகியவற்றில் உள்ள புலன் உணர்வு உறுப்புக்கள், உடலின் நிலை, கைகால்களின் நிலை ஆகியற்றைக் கண்டறிகிறது. உள்ளுறுப்பு தூண்டல்களுக்கு ஏற்ப சில துலங்கல்களை வெளிக்காட்டுவதன் மூலம் செயல்படுகிறது. நமது புலன்களும் நமது உள்ளுறுப்புகளும் வெளியே இருக்கும் தகவல்களை மூளைக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் கண்களால் காணமுடியாத புலன் சார் தகவல்களைக் கூட மூளையால் ஒருங்கிணைக்க முடிகிறது. மதியிறுக்கமுடைய குழந்தைகளுக்கு இந்தப் புலன்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்சார் தகவல்கள் மூளைக்குச் சரியாகச் செல்வதில்லை. அல்லது மூளையால் சரியாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை. ஆகையால் புலன் சார் தூண்டுதலுக்கு அவர்களை நடத்தைகள் விநோதமாகவும், சமூகத் திறனில் குறைபாடு உடையவர்களாகவும் காட்டும். மதியிறுக்க நபர்கள் பல்வேறுவகையான தொடர் செய்கைகளை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட செய்கைகளை வெளிப்படுத்துகின்றனர். இதனைத் "தொடர் செய்கை நிலை-மாற்றியமைக்கப்பட்டது" (RBS-R) பின்வருமாறு வகைப்படுத்துகிறது: மதியிறுக்கத்திற்கென்று குறிப்பிட்டுக் கூறும்படியான தொடர் செய்கை எதுவும் இல்லை. இருப்பினும் இத்தகைய செயற்பாடுகளின் நிகழ்வுகளுக்கும் கடுமைக்கும் மதியிறுக்க குறைபாடுள்ளவர்களுக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது மதியிறுக்க குறைபாடுள்ளவர்களுக்கு இக்குறைபாடின் பொதுவான கூட்டறிகுறிகளை விட மாறுபட்ட அறுகுறிகள் இருந்து அவரையும் அவரது குடும்பத்தையும் பாதிக்கலாம். மதியிறுக்கம் உடையோரில் 0.5% முதல் 10% வரை மிக வழமைக்கு மேற்பட்ட திறன்களை வெளிப்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு துணுக்குத் தகவல்களை நினைவு கொள்வதிலிருந்து, மேதைகளைப் போன்ற மிக அபாரமான அறிவுத்திறன் உடையவர்களாக உள்ளனர். மற்றவர்களை விடக் கவனத்திலும் உய்த்துணர்தலிலும் மிகவும் திறனுடையவர்களாக உள்ளனர். 90%க்கும் கூடுதலான மதியிறுக்கம் கொண்டோருக்கு இயல்புக்கு மாறான உணர்வுகள் உள்ளன. இருப்பினும் இவற்றால் மட்டுமே மற்ற வளர்ச்சிக் குறைபாடுகளிலிலிருந்து மதியிறுக்கத்தைத் தனிப்படுத்த முடியாது. மதியிறுக்கம் கொண்டோரில் 60%–80% பேருக்குத் தசையியக்க அறிகுறிகளாக வலுவிழந்த தசைநார்கள், செயற்றிறன் குறைபாடு, முன்னங்கால் நடை (அல்லது கால்விரல் நடை) போன்றவற்றைக் கொண்டுள்ளனர். முக்கால்வாசி மதியிறுக்கக் குழந்தைகளுக்கு உணவருந்தும் பழக்கங்களில் வேறுபாட்டைக் காணலாம். இருப்பினும் இது ஊட்டக்குறைபாட்டில் முடிவதில்லை. சில குழந்தைகளுக்கு மனித இரையகக் குடற்பாதை (GI) அறிகுறிகள் இருப்பினும் இதற்கு சான்றாகப் பதிக்கப்பட்ட தரவுகள் இல்லை. நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் இந்தத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக இல்லை. மதியிறுக்க குழந்தைகளின் உடன்பிறப்புகளுக்கு அவர்களிடமிருந்து கூடிய பெருமை கிடைப்பதுடன் பிணக்குகளும் குறைவாக உள்ளன. இது டெளன் நோய்க்கூட்டறிகுறி உடையோரின் உடன்பிறப்புகளைப் போன்றே இருப்பினும் டெளன் நோய்க்கூட்டறிகுறியாளர்களின் உடன்பிறப்புக்களுக்கு இவர்களின் உடன்பிறப்புக்களை விடக் கூடுதலான அண்மையும் நெருக்கமும் கிடைத்தது. மதியிறுக்கம் உடையவர்கள் மூளையில் தகவல் பரிமாற்றம் செய்யும் பகுதிகளில் பாதிப்புக்களைக் கொண்டிருப்பதால், நடத்தைக் குறைபாடு, அறிவுத்திறன் வளர்ச்சியில் பாதிப்பு, மற்றும் நரம்பியலுடன் தொடர்புடைய பிற குறைபாடுகளும் இணைந்து காணப்படுபவர்களாக இருப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறையாலோ அல்லது குழந்தைகளைத் துன்புறுத்துவதாலோ, ஒதுக்குவதாலோ உண்டாகும் பிரச்சனையல்ல. இது நோயல்ல. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. இது வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு. குழந்தைகளின் முதல் 3 வயதிற்குள் வெளிப்படும். இந்தக் குறைபாடு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். மதியிறுக்கம் உண்டாவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சில நேரங்களில் பரம்பரையாக வருவதாக நம்பப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் மதியிறுக்கம் குறிப்பிட்ட குறைபாடாகக் கருதப்படுகிறது. மதியிறுக்கம் இளவயது மனச்சிதைவு என்றும் கூறப்பட்டது. மனச்சிதைவுக்கும், மதியிறுக்கத்திற்கும் இடையே வெளிப்படும் வயது, அறிவுத்திறன் அளவு மற்றும் குடும்பப் பின்னணி போன்றவற்றில் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுடைய இயல்புகள் மற்றும் செய்கைகளைத் தொடக்கக் காலத்திலேயே கண்டறிந்து சீர்படுத்தினால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். மதியிறுக்கக் குறைபாடு உடையவர்கள் மதியிறுக்கம் கொண்டவர்களைப் பற்றிச் சமூகத்தில் நிலவும் சில தவறான கருத்துகள்: 1000 பேருக்கு 1–2 பேருக்கு மதியிறுக்கமும் 6 பேருக்கு மதியிறுக்கத் தொகுதிக் குறைபாடும் உள்ளதாகச் சில மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. 2008 இல் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 1,000 சிறார்களில் 11 பேருக்கு மதியிறுக்கத் தொகுதி குறைபாடு உள்ளதாகவும், சரியான தகவல்கள் இல்லாமையால் இந்த அறிக்கைகள் மதியிறுக்கத் தொகுதிக் குறைபாடுகளைக் குறைவாக மதிப்பிடுவதாகவும் கூறப்படுகிறது. இத்தொகுதியில் உள்ள "குறிப்பிட்டுக் கூறவியலா பரந்த வளர்ச்சிக் குறைபாடு" (PDD-NOS) மட்டுமே 1,000 பேருக்கு 3.7 ஆகவும், அசுபெர்கர் கூட்டறிகுறி ஏறத்தாழ 1000க்கு 0.6 ஆகவும் "சிறுவயது சிதைவு குறைபாடு" 1000க்கு 0.02 ஆகவும் மதிப்பிடப்படுகிறது. இக்குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1990களிலும் 2000களின் துவக்கத்திலும் மிகக் கூடுதலாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த உயர்வு பெரும்பாலும் இக்குறைபாடுகளை அறியும் செய்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் மருத்துவ ஆலோசனைகளாலும், சேவைகள் கிடைப்பதாலும் குறைபாடு வெளிப்படும் அகவையினாலும் பொதுமக்கள் அறிதலாலும் ஏற்பட்டுள்ளன; இருப்பினும் அடையாளம் காணாத சுற்றுச்சூழல் தீவாய்ப்புக் காரணிகளைப் புறந்தள்ள இயலாது. உண்மையிலேயே இக்குறைபாடுள்ளோர் கூடியுள்ளனரா அல்லது மறைந்திருந்த குறைபாடுகள் இப்போதுதான் அடையாளம் காணப்படுகி்றனவா என்பதை தற்போதுள்ள சான்றுகளின்படி அறிய முடியாது உள்ளது. உண்மையிலேயே குறைபாடுகள் கூடினால் மரபியல் ஆராய்ச்சிகளில் முனைப்பு காட்டுவதை விடச் சுற்றுச்சூழல் காரணிகளை மாற்றியமைப்பதற்கான ஈர்ப்பிலும் நிதி திரட்டுவதிலும் முனைப்பு காட்ட வேண்டி இருக்கும். "மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி" என்ற தலைப்பில் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சிக்கான கையேடு. விழுக்காடு கணிதத்தில் விழுக்காடு அல்லது சதவிகிதம் ("percentage") என்பது 100 இன் பின்னமாக எழுதப்பட்ட ஒரு எண் அல்லது விகிதம். விழுக்காடு "%" என்ற குறியீட்டால் அல்லது, "pct.", "pct"; "pc" ஆகிய சுருக்கீட்டால் குறிக்கப்படுகிறது. ஒரு விகிதம் அல்லது பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த விழுக்காடு ஒரு வழியாகும். 100ஐ பகுவெண்ணாகக் (பின்னக்கீழ் எண்) கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. "45%" என்பது ("45 விழுக்காடு") 45/100 அல்லது 0.45 என்பதின் சுருக்கமாகும். விழுக்காடுகள் பொதுவாக 0-100 க்குள் அமையும் என்றாலும் 100ஐக் காட்டிலும் பெரிய எண்ணாகவோ அல்லது எதிர்ம எண்களாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒப்பீடுகளிலும் மாற்ற விழுக்காடுகளிலும் 111% அல்லது −35% போன்றவை பயன்பாட்டில் உள்ளன. மேலும், 200 % என்பது ஒரு எண்ணை விட இரு மடங்கு கூடுதலான எண்ணை குறிக்கும். 100 விழுக்காட்டு உயர்வு இரு மடங்கு கூடுதலான எண்ணையும், 200 விழுக்காட்டு உயர்வு மூன்று மடங்கு கூடுதலான எண்ணையும் தரும். இதன் மூலம் விழுக்காட்டு உயர்வுக்கும் மடங்கு உயர்வுக்கும் உள்ள தொடர்பை அறியலாம். என்பது பின்வரும் இரண்டு சொற்றொடர்களுக்கும் சமமாகும்: பெரும்பாலும் விழுக்காடுகளின் மதிப்புகள் 0 - 100 ஆக இருந்தாலும், அவ்வாறுதான் இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை எடுத்துக்காட்டாக, 111% அல்லது −35%,போன்ற பயன்பாடுகளும் உள்ளன. பதின்ம எண்முறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, பண்டைய ரோமில் இன் மடங்காக அமையும் பின்னங்களைக் கொண்டு கணக்கீடுகள் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக அகஸ்ட்டசால் ஏலங்களில் விற்கப்படும் பொருட்கள் மீது பங்கு வரி விதித்தான். இப்பின்னத்தைக் கொண்டு கணக்கிடுவது விழுக்காட்டைக் கணக்கிடுவதற்குச் சமமாகும். நடுக்காலத்தில் பணத்தின் வகைப்பாடு அதிகரித்ததால், 100 ஐப் பகுதியாகக் கொண்ட கணக்கீடும் அதிகமானது. மேலும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளின் எண்கணிதப் பாடப்புத்தகங்களில் அக்கணக்கீடுகள் இடம்பெற்றன. அப்பாடப்புத்தகங்களில் இலாப-நட்டம், வட்டிவீதம், மூன்றாம் விதி கணக்கிடுவதில், இக்கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டுவாக்கில் வட்டிவீதங்களை நூறின் பங்காகக் குறிப்பது வழமையானது. "சதவீதம்" என்பதற்கான ஆங்கிலச் சொல் "per cent", "நூறின் பங்கு" என்ற பொருளுடைய ("by the hundred") இலத்தீன் சொல் "per centum" லிருந்து பெறப்பட்டதாகும். "ஒரு நூறுக்கு" ("for a hundred") என்ற பொருள்தரும் இத்தாலிய வார்த்தையான "per cento" என்பதன் சிறிதுசிறிதானக் சுருக்கமாக சதவீதத்தின் குறி உருவானது. "per" என்பது "p" ஆகச் சுருங்கி, இறுதியில் இல்லாமலே போய்விட்டது; ஒரு கிடைக்கோட்டுக்கு இடைப்பட்ட இரு வட்டங்களாக "cento" சுருங்கியது; பின் அவ்வடிவிலிருந்து தற்போது பயன்படுத்தப்படும் "%" உருவானது. ஒரு விகிதத்தின் விழுக்காடானது அதன் எண்மதிப்பை 100 ஆல் பெருக்குவதன் மூலம் பெறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1250 பழங்களில் 50 பழங்களின் விழுக்காடு காண முதலில் விகிதத்தின் மதிப்பு = 0.04 காணப்படுகிறது. அம்மதிப்பை 100 ஆல் பெருக்கி விழுக்காடு பெறப்படுகிறது. 0.04 x 100 = 4%. முதலில் 100 ஆல் பெருக்கி பின்னர் பகுதி எண்ணால் வகுத்தும் விழுக்காடு காணலாம். இந்த எடுத்துக்காட்டில், 50 ஐ 100 ஆல் பெருக்கக் கிடைப்பது 5,000. இதனை 1250 ஆல் வகுக்க விழுக்காடு 4% ஆகக் கிடைக்கும். ஒரு விழுக்காட்டின் விழுக்காடு காண, இரு விழுக்காடுகளையும் 100 இன் பின்னங்களாகவோ பதின்மங்களாகவோ மாற்றிக்கொண்டு அவற்றைப் பெருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: விழுக்காட்டை ஒரே சமயத்தில் 100 இன் பின்னமாகவும் விழுக்காட்டின் குறிடனும் எழுதுவது தவறு. இதேபோல என்பதும் தவறான எழுதுமுறையாகும். இது 100% ஐக் குறித்தாலும் உண்மையில் இதன் மதிப்பு 1% ஆக இருக்கும். விழுக்காட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அது எதனுடன் தொடர்பானது என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகும். அதாவது 100% க்கான மொத்த மதிப்பு என்ன என்பது குறிப்பிடப்பட வேண்டும். கீழுள்ள கணக்கின் மூலம் இதனை அறியலாம். கணக்கு: கணினிப் பொறியியல் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மாணவிகளின் விகிதம் காண வேண்டும்: கணினிப் பொறியியல் படிப்பவர்களில் மாணவிகளின் விழுக்காடு காண, மாணவிகளில் கணினிப் பொறியியல் படிப்பவர்களின் விழுக்காட்டினை, மொத்த கணினிப் பொறியியல் மாணவர்களின் விழுக்காடான 10% ஆல் வகுக்க வேண்டும் இந்த எடுத்துக்காட்டு நிபந்தனை நிகழ்தவு கருத்துருவுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. சதவீத மாற்றமானது, சதவீத வித்தியாசம் மற்றும் சதவீத முனைப்புள்ளி வித்தியாசம் என இருவகையாக உள்ளது. சதவீத வித்தியாசம் என்பது இரு கணியங்களின் சார்மாற்றத்தின் விழுக்காடாகும். சதவீத முனைப்புள்ளி வித்தியாசம் என்பது இரு விழுக்காடுகளின் வித்தியாசம் ஆகும். எடுத்துக்காட்டு: ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 30% குறைபாடுள்ளவை; ஆறுமாதங்களுக்குப் பின்னர் 20% பொருட்கள் குறைபாடுள்ளவை எனில், ஒரு கணியத்தின் "10% அதிகரிப்பு" அல்லது "10% குறைவு அல்லது வீழ்ச்சி" என்பது அக்கணியத்தின் துவக்க மதிப்பைச் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ஒரு கணியத்தில் ஏற்படும் மாற்றத்தின் அளவு % எனில், அக்கணியத்தின் இறுதி மதிப்பானது துவக்க மதிப்பில் 100 +  % ஆகும். (துவக்க மதிப்பில் 1 + 0.01 மடங்கு). பொதுவாக, ஒரு கணியத்தின் துவக்க மதிப்பு . அதன் மதிப்பு சதவீதம் அதிகரிப்பும் தொடர்ந்து வீழ்ச்சியும் அடையுமானால் அதன் இறுதி மதிப்பு: அதாவது நிகர மாற்றம் சதவீதத்தில் சதவீத அளவு வீழ்ச்சியாக அமைகிறது. மேலுள்ள எடுத்துக்காட்டில், துவக்க மதிப்பு: ரூ 200 முதல்மாத சதவீத அதிகரிப்பு = 10 அதிகரிப்பின் மதிப்பு = (10/100) x 200 = ரூ 20. முதல்மாத இறுதி மதிப்பு = 200 + 20 = ரூ 220. இதே எடுத்துக்காட்டில் முதல்மாத 10% அதிகரிப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10% வீழ்ச்சி ஏற்படுமானால், இந்த இறுதி மதிப்பு ரூ198 ஆனது துவக்க மதிப்பு ரூ200 ஐவிட 10% இல் 10%, அல்லது 1% குறைவு. இதேபோல சதவீத வீழ்ச்சியைத் தொடர்ந்து சதவீத அதிகரிப்பு நிகழ்ந்தால், இறுதி மதிப்பு: சிங்களம் மட்டும் சட்டம் சிங்களம் மட்டும் சட்டம் ("Sinhala Only Act") அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் ("Official Language Act") என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. 1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நவம்பர் 1936 இல், 'இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்' மற்றும் 'காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்' போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன. 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வமொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது. 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது. 1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, சூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர். இம்மசோதா 1956 சூலை 6 இல் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். சுதந்திர கட்சி ஒரு இடதுசாரி கட்சியாக இருந்தாலும் இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன. தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பண்டாரநாயக்கா அரசு 1958 செப்டெம்பர் 3 ஆம் நாள் 1958(28) என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 'நியாயமான தமிழ் மொழிப் பயன்பாட்டை' அங்கீகரித்தது. பின்வரும் சலுகைகளை விதந்துரைத்தது: ஆகியனவாகும். தமிழர் வாழ் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது. ஆதித்த சோழன் ஆதித்த சோழன் (கி.பி 871 - 907), பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது. மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. பலம் மிக்க பல்லவ மன்னன் அபராசித வர்மனை தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும். புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கர் மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது. சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் அவனுக்கு பள்ளிப்படை அமைத்தான் அது தற்காலத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்டுகிறது. பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான். மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல் முல்லைத்தீவு முல்லைத்தீவு ("Mullaittīvu") இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். ஈழப்போரின்போது மிகுந்த சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்த நகரமாக இது உள்ளது. உலர்வலயம் - பருவகால மழைவீழ்ச்சி முறைமை வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1300–2416 வெப்பநிலை 23.00oC – 39.30oC ஆகும். முல்லைத்தீவு மாவட்டம் பொதுவாக தட்டையான நிலப்பரப்பினைக் கொண்டதாகும். நிலமானது பொதுவாக கிழக்கு வடக்காக சீராக சரிந்து செல்வதோடு மேற்குப்பகுதி மேற்கு மற்றும் தெற்காக நாய்ந்தும் செல்கின்றது. இந்த மாவட்டமானது 70கிலோமீற்றர் நீளமான கடற்கரையினை கொண்டுள்ளதோடு இறால் உற்பத்தியாகும் கொக்கிளாய், நாயாறு, ந்ந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்டதாகும். இதன் நில உயரமானது கடல்மட்டத்திலிருந்து 36.5 மீற்றர் வரை வேறுபட்டுக்காணப்படுகின்றது. மண்ணின் தன்மையானது விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகாளாக அமைந்துள்ளது. எமது மாவட்டத்தில் காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர்நிலங்கள், விவசாயநிலங்கள், நீர்நிலைகள் போன்றவாறு மாவட்டத்தின் காணிப்பயன்பாடு 251,690 கெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதி வித்தியாசமான பொருளாதார வளங்களை கொண்டுள்ளது. இவற்றில் காட்டுப்பகுதி 167,850 கெக்டேயரும் மாவட்டத்தில் 64.1 வீதம் கொண்டது. நீர்நிலைகளும் தரவைக்காணியும் 21,390 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.2 வீதம் கொண்டதும், விவசாய நிலமாக 44,040 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.1 வீதமும் ஆகும். மற்றும் மக்கள் வசிப்பிடங்களாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் பொருளாதாரம் பிரதானமாக விவசாயம், மீன்பிடி என்பவற்றில் தங்கியுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு என்பனவும் பங்குவகிக்கின்றன. ஏறக்குறைய 4850 குடும்பங்களை சேர்ந்த 22,963 அங்கத்தவர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் வளமாக காணப்படுகின்றது. மொத்தமாக 80% விவசாயத்தில் தங்கியுள்ளனர். நெற்செய்கைக்கு சாதகமான 16,737 ஏக்கர் நிலத்தை இம் மாவட்டம் கொண்டுள்ளது. 3 பெரிய குளங்களும் 16 நடுத்தர அளவிலான குளங்களும் 7,109 ஏக்கர் பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுவதுடன் 220 சிறிய குளங்கள் 11,749 பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுகின்றன. மாவட்டத்தின் 70 கி.மீ நீளமான வளமான கடற்கரை படுக்கையும் நான்கு ஏரிகளான மாத்தளன், ந்ந்திக்கடல், நாயாறு, கொக்கிளாய் ஆகியவை மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்த்தாகவுள்ளன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்றவையாகும். பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியினை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித்தல் உள்ளதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியினையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவும். இம் மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும். டிசம்பர் 21 வடக்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் குளிர்காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். தெற்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் கோடை காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். ஜோசப் ஸ்டாலின் ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் ("Iosif Vissarionovich Stalin", ஜோர்ஜிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878 - மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய "திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை", புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை ("Great Purge") பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், "ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல்" என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார். இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பது இவருடைய இயற்பெயராகும். இவர் டிசம்பர் 6, 1878 இல் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் வளர்க்கப்பட்டு வந்தார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்து இவருடைய பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இவருடைய தாயார் கேகே இவரை நன்றாகப் படிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், இவருடைய தந்தை பெசோ கொடிய வறுமை காரணமாக, இவரை சுயமாக உழைக்கச் செய்து குடும்பத்தை வாழவைக்கப் பணித்திருக்கிறார். ஜார்ஜியன் மொழி இவருடைய தாய்மொழியாகும். இது ரஷிய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்நாட்களில் கற்றுக் கொண்ட போதிலும், அதனை இவர் ஜார்ஜிய மொழிச்சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். தாயின் அரவணைப்பில் கோரி நகரிலுள்ள ஒரு மடாலயப் பள்ளியில் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற்றுக்கொண்டு இவர் கல்வி பயின்றார். அங்குப் படிக்கும் காலத்திலேயே, தன்முனைப்பும், மிகுதியான துணிச்சலும் இருந்த காரணத்தினால் பல்வேறு சமூகக் குழுக்களின் தலைமைப் பண்பை ஏற்று வழிநடத்தி வந்திருக்கின்றார். இவரது தலைமையிலான குழு முதலிடத்தில் காணப்பட்டது. பதின் பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்விபயிலத் தொடங்கினார். அங்கு இவருக்கு, கார்ல் மார்க்ஸ்சின் சிந்தனைகளை கற்கும் சூழல் அமைந்தது. மார்க்சியக் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, உடன் அங்கிருந்த உள்ளூர் பொதுவுடைமைக் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். அக்காலக் கட்டத்தில் சோவியத் நாட்டை ஆட்சி புரிந்துவந்த சிஸர் நிக்கோலஸ்-II என்பவரின் ஆட்சிக்கு எதிராக, அப்போது ரஷ்யாவில் பல்வேறு குழுக்களின் மனநிலை நிலவியது. சிஸர் நிக்கோலஸ்-II வின் முதலாளித்துவம், தனியார்மயம் மற்றும் முதல் உலகப்போரில் ரஷ்யாவை வலிந்து ஈடுபடுத்திய செயல் போன்றவை மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியி இருந்திருக்கிறது. பட்டம் பெற சில மாதங்கள் இருந்த நிலையில், 1899 இல், புரட்சிக் கருத்துகளைப் பரப்புரை செய்ததற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேறும சூழ்நிலை ஏற்பட்டது. கி.பி. 1900 இல் ஸ்டாலின், ஒரு புரட்சியாளராக, சிஸர் நிக்கோலஸ்-II க்கு எதிராக தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதன்பின்னர், தலைமறைவு புரட்சிக்குழுவினருடன் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டாலின் முதன் முதலாகக் காவலர்களால் 1902 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 1903 ஆம் ஆண்டு வரை சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலைப் பெற்றதும் சிஸர் நிக்கோலஸ்-II க்கு எதிராக நடந்த ரஷ்யப்புரட்சி(1905) யின்போது புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் போல்ஷ்விக்சின் (Bolsheviks) தலைமைப் பணியைச செவ்வனே செய்தார் ஸ்டாலின். இதற்கிடையில், 1902-1913 காலக் கட்டத்தில் ஸ்டாலின் பலமுறை சிறைக்குச் சென்றும், அச்சிறையிலிருந்து ஆறு தடவைத் தப்பிப் பிழைத்ததும் நடந்தேறி உள்ளன. இதனிடையில், தன்னுடன் இறையியல் கல்விக் கூடத்தில் படித்த தனது நண்பன் ஒருவனின் சகோதரியான யெகேத்தரினா என்னும் பெண்ணைக் காதலித்து 1904 இல் திருமணம் புரிந்தார். கி.பி.1905 இல் லெனினை ஸ்டாலின் முதன் முதலில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் திறமைகல் பற்றி அறிந்துகொண்ட லெனின் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார். அதற்குப்பின் பல சமயங்களில் ஸ்டாலின் நடத்தி முடித்த கொள்ளைகள் மூலம் போல்ஷ்விக்சின் பொருளாதாரத்தை உயர்த்த உதவி உள்ளார். 1912 இல் லெனினின் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான ப்ரவ்டா (Pravda) வின் செய்தியாசிரியராக (Editor) நியமனம் செய்யப்பட்டார். அதன்பின், அதே 1912 ஆம் ஆண்டில் போல்ஷ்விக்சின் மத்தியக் குழுவில் ஸ்டாலின் உறுப்பினராக்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபராக உருவாக்கப்பட்டார். அவர் செய்தியாசிரியராக பணியாற்றியபோது தாம் எழுதிய முதல் புரட்சிக் கட்டுரையின் முடிவில் ஸ்டாலின் என்னும் புனைப்பெயரில் கையெழுத்திட்டதன் மூலமாக ஜோசப் ஸ்டாலின் எனும்பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது. 1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் ஸ்டாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். ஸ்டாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர சமூகத்தினரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை ஸ்டாலின் எதிர்த்ததுடன் "ஒரே நாட்டில் சமவுடைமை" என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார். ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி ஸ்டாலினே ஆட்சியை பிடித்தார். 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களின் விளைவாகப் பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் இரசியா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. மார்ச் 5,1953 ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார். ஸ்டாலின் ஸ்டாலின் என்ற பெயர் பின்வரும் தலைப்புகளைக் குறிக்கலாம். கடல் கடல் () அல்லது ஆழி("Sea"), உலகப் பெருங்கடல் ("World ocean"), அல்லது வெறுமனே பெருங்கடல் ("Ocean") என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட இணைந்த (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768க்கும் 1779க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்துதான் தொடங்குகிறது. "கடல்" எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது."கடல்" என்ற சொல்லாவது, கடத்தற்கு அரியதென்று பொருள்படும். ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முதலானும் குறிக்கப்படுகிறது. கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை (salinity) இடத்திற்கேற்றார்போல் வெகுவாக வேறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" வீதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன. இவை ஆழக்குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி (சுழலகற்சி விளைவு; "Coriolis effect") போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும் ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்வீழ்கற்களால் ஏற்படுகின்றன. வைரசுகள், பாக்டீரியங்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும். கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன. வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம் (power generation), போர், ஓய்வுநேரச் செயல்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு (surfing), பாய்மரப் பயணம் (sailing), கருவியுதவியுடன் குதித்தல் (scuba diving) போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் "ஒடிசி" போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கிறது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது. கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் "பெருங்கடல்கள்" என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும். "கடல்" எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை. தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் "கடல்" குறிப்பிடப்படுகிறது. சூரியக் குடும்பத்தில் நீர்ம நிலையில் (திரவ நிலை) புறப்பரப்பில் நீரைக் கொண்டுள்ள ஒரே கோள் புவியே ஆகும். ஆனால், சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள புவியை ஒத்த கோள்களில் பெருங்கடல்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. புவியின் புறப்பரப்பின் 70 விழுக்காட்டிற்கும் மேலாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் 97.2 விழுக்காடு நீரானது கடலிலேயே காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட என்ற அளவுக்குச் சமம். மீதி 2.15 விழுக்காடு நீரானது பனியாறுகளிலும், கடல் மேல் உறைந்த பனிக்கட்டியிலும் அடங்கியுள்ளது. 0.65 விழுக்காடு நீரானது நீராவி, பிற நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் காற்றிலும் உள்ளது. விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது கோள் "நீல நிற கோலி" போன்று காட்சியளிக்கும். அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் நமது புவியில் கடலே ஓர் ஆதிக்கமான அம்சமாக இருப்பதால் "புவி (Earth)" என்று அழைப்பதற்குபதில் "பெருங்கடல் (Ocean)" என்று இதனை அழைக்கலாம் என்று கூறினார். பெருங்கடல் இயற்பியல் (Physical Oceanography) அல்லது கடல் இயற்பியல், என்பது கடலின் புறவியல் (இயற்பியல்) பண்புகளான வெப்பநிலை-உவர்ப்புத் தன்மை கட்டமைப்பு, கலப்பு, அலைகள், உள்ளக அலைகள், புறப்பரப்பு ஓதங்கள். உள்ள்க ஓதங்கள், சுழற்சிகள் ஆகியவற்றைப் பற்றிய படிப்பு ஆகும். சுழற்சிகள் (currents), ஓதங்கள், அலைகள் வடிவிலான நீரின் இயக்கமானது கடற்கரையோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது. கடலின் புவியியல் என்பது பெருங்கடல் வடிகால்களின் வடிவத்தையும் அவற்றின் நீட்சியையும், மேலும் கடலில் முடியும் நிலப்பகுதியின் கரைகளையும் பற்றிய படிப்பாகும். கடல் படுகையின் வடிவமைப்பும் அதன் நீட்சியும் புவியிலுள்ள பொருட்கள் எதனால் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகின்றன. மேலும், இவற்றின் மூலம் கண்ட நகர்வு, நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள், எரிமலைப் பகுதிகளின் செயல்பாடுகள், படிவுப் பொருட்களின் மூலம் படிவுப் பாறைகள் உருவான விதம் ஆகியவற்றைப் பற்றி அறிய முடிகிறது. கடலிலுள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளினால் உருகிய பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருள்களினால் உருவானது என்று எண்ணப்பட்டது. ஆனால், அண்மைய ஆய்வுகள் புவியின் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றன. பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது. இதனால் கடல் நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது. உவர்ப்புத் தன்மை பொதுவாக ஆயிரத்தில் இத்தனை பகுதிகள் (parts per thousand - இது ‰ குறி கொண்டோ "/ மில்லியன்" என்றோ குறிப்பிடப்படுகிறது) என்று அளக்கப்படுகிறது. ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35 ‰ என்று குறிப்பிடப்படுகிறது. (பெருங்கடலின் 90% நீரானது 34‰ முதல் 35‰ வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன). நடுநிலக் கடல் சிறிது அதிகமாக 37 ‰ என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 விழுக்காட்டு அளவில் உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கால்சியம் ஆகியவற்றின் உலோக அயனிகளும், சல்ஃபேட், கார்பனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயனிகளும் கரைந்துள்ளன. பல்வேறு கடல்களில் வெவ்வேறு உவர்ப்புத் தன்மை காணப்பட்ட போதிலும் ஒப்புமை பங்கீட்டளவு உலகம் முழுதும் நிலையான ஒன்றாகவே உள்ளது. கடல் நீர் மனித சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலுள்ள அதிகப்படியான உப்பினை அவற்றால் சுத்திகரிப்பு செய்யமுடியாது. ஆனால், எதிர்மறையாக நிலம் சூழப்பட்ட அதிஉவர் ஏரிகள் (hypersaline lakes) சிலவற்றில், எடுத்துக்காட்டிற்கு சாக்கடல் ஆனது ஒரு லிட்டரில் 300 கிராம் கரைந்த திடப்பொருள்களைக் கொண்டுள்ளது (அதாவது 300 ‰) மேற்பரப்பு நீரின் ஆவியாதல் வீதம் (உயர் வெப்பநிலை, காற்று வீசும் வீதம், அலை இயக்கத்தினால் அதிகரிக்கும்), வீழ்படிவாக்கும் திறம், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உள்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்நிலைகளின் கலப்பு ஆகியவற்றால் கடலின் உவர்ப்புத் தன்மை மாறுகிறது. எடுத்துக்காட்டாக, பால்டிக் கடலின் குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, நிறைய ஆறுகளின் கலப்பு இவைமட்டுமன்றி, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் அடிக்கடி இக்கடலில் வந்து நிரம்புதல் போன்றவற்றால் இதன் அடி அடுக்கு அடர்வானதாக மாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் போகிறது. அதனால் மேல்மட்ட அடுக்கின் உவர்ப்புத் தன்மை 10இலிருந்து 15 ‰ வரை மட்டுமே உள்ளது. மேலும் அதன் கழிமுகப் பகுதிகளில் இன்னும் குறைவானதாக இருக்கிறது. வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும் ஆனால் குறைவான வீழ்படிவாதல் பண்பையும் பெற்றிருக்கிறது; சில ஆறுகளும் அதனுள் கலக்கின்றன. மேலும், ஆதாம் வளைகுடாவுடன் கலக்கும் பாப்-எல்-மாண்டெப் ஆனது மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதன் சராசரி உவர்ப்புத் தன்மை 40 ‰ என்ற அளவில் உள்ளது. கடலின் வெப்பநிலை அதன் பரப்பில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் உச்சியில் சூரியன் இருக்கும்பொழுது அதன் வெப்பநிலை 30 °C ஆக இருக்கும். ஆனால், துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை கடலிலுள்ள பனியுடன் ஒரு சமநிலையில் உள்ளது. அது எப்போதும் -2 °C என்ற அளவில் உள்ளது. பெருங்கடல்களில் தொடர்ச்சியான ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. வெதுவெதுப்பான பரப்பு நீரோட்டங்கள் வெப்பமண்டலத்தை விட்டு விலகுகையில் குளிர்கின்றன. குளிர்வதால் அந்நீரின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனால், அது கீழே செல்கிறது. அந்தக் குளிர் நீர் ஆழக் கடல் நீரோட்டத்தின் காரணமாக மீண்டும் நிலநடுக்கோட்டினருகில் வருகிறது. இந்த சுழற்சி முழுவதும் வெப்பநிலை அடர்த்தி மாற்றங்களால் நிகழ்கிறது. உலகம் முழுவதும் அடி ஆழக்கடல் வெப்பநிலை -2 °C முதல் 5 °C வரை இருக்கலாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப் பரப்பு 106,4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக இருபது சதவிகிதம் ஆகும். இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்கையில் ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும். அன்டார்க்டிக் நிலபரப்பைச் சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிபாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு பத்து டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 லட்சம் சதுர கி.மீ. ஆக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 லட்சம் சதுர கி.மீ ஆக ஆகி விடுகிறது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்க்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. 2000 - ஆம் ஆண்டில் சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்க்டிக்காவுடன் இணைத்தது. தற்போது இதன் மொத்த பரப்பளவு இரண்டு கோடியே மூன்று லட்சத்து இருபத்தியேழாயிரம் சதுர கி.மீ. ஆகும். 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகிறது. இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும். இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா - ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து - கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து - ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன. ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புகளும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது. ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது. ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது. உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன. இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் லத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது. மேற்கில் ஆஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பதினாறு கோடியே தொண்ணுத்திரெண்டு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62 புள்ளி 2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது. உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன. வடமேற்கு பசிபிக் கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 முதல் 4188 மீட்டர் ஆகும். இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகிறது. பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச் சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும். இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி அரபிக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பச்சிம் சமுத்திரம் என அழைக்கப்பட்டது. இக்கடலின் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் - ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரானும் - பாகிஸ்தானும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக அகலமான பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. ஆகும். தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங்கடலுடன் கலப்பதால் இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டு கூற இயலாது. சிந்து, நர்மதை, தபதி ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. ஓமன் வளைகுடா இதனை பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. இக்கடலின் கரையில் ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி போன்ற பெரிய துறைமுகங்களும், பல புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன. ஆரல் கடல் ( Aral sea ) என்பது துர்க்கிஸ்தான் பகுதியில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரி உலகிலேயே நில உட்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இதன் மொத்த பரப்பளவு 66,459 சதுர கி.மீ. ஆகும். இது 17 முதல் 68 மீட்டர் ஆழமுடையது. ஆரல் கடலில் பல தீவுகள் அமைந்துள்ளன. அமுதாரியா (Amu Darya), சைர் தாரியா ( Syr Darya ) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. அயோனியன் கடல் ( Ionian Sea ) என்பது மத்தியத் தரைக்கடலின் ஆழமிக்க பகுதியாகும். இக்கடல் இத்தாலியையும் - சிசிலியையும், அல்பேனியாவிலிருந்தும் - கிரீசிலிருந்தும் பிரிக்கிறது. இக்கடலையும் அட்ரியாடிக் (Adriatic) கடலையும் ஆட்ராண்டோ நீர்ப்பிரிவு ( Strait of Otranto ) இணைக்கிறது. இக்கடலின் அகலம் 676 கி.மீ. ஆகும். சில பகுதிகளில் இக்கடலின் ஆழம் 5093 மீட்டர் ஆகும். ஜப்பான் நாட்டில் பசிபிக் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது இன்லான்ட் கடல் (Inland sea). இது தென் ஜப்பானில் ஹான்சிகோக், கியூஸ் ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 9505 கி.மீ. ஆகும். இது குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் ஜப்பான் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்லான்ட் கடலின் கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இக்கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தியாவின் கிழக்கே எல்லையாக அமைந்திருப்பது வங்காள விரிகுடா (Bay of Bengal) ஆகும். இது 21 லட்சத்து 73 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கே இக்கடல் அமைந்துள்ளது. இதன் மேற்கே இந்தியாவும், இலங்கையும் எல்லையாக உள்ளன. வடக்கே பங்களாதேசமும், மியான்மரும் (பர்மா), கிழக்கே பெனின்சுலாவும், தெற்கே இலங்கையின் தென் முனையும், இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவு வரையிலான கடலும் வங்காள விரிகுடாவின் எல்லைகளாக உள்ளன. இக்கடலின் மேற்கே பல முக்கியமான ஆறுகள் கலக்கின்றன. மகாநதி, கோதாவரி, கிரிஷ்ணா மற்றும் காவேரி போன்றவையே அவையாகும். வடக்கே பிரம்மபுத்திரா ஆறும் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலில் அமைந்துள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 2,600 மீட்டர் ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 4,694 மீட்டர். வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகமான கனிமவளம் நிறைந்த மண் இக்கடலில் நிறைந்துள்ளது. இங்கு அதிகமான மீன் வளம் உள்ளதால் கடற்கரை நாடுகளும், ஜப்பான் நாடும் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன. இக்கடல் பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிகளைக் கொண்டுள்ளது. அவை பல சர்வதேச துறைமுகங்களை பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுடன் இணைக்கின்றன. கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை அல்லது கேண்டரின் கோணல்கோடு வாதம் (Cantor's diagonal argument) என்பது கியார்கு கேன்ட்டர் என்ற கணித அறிஞர் மெய்யெண்கள் (real numbers) "எண்ணவியலா முடிவிலிகள்" (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட நிறுவல் முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி கணங்களின் (sets) எண்ணவியலா தன்மையை நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "கோணல்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று. கேண்ட்டரின் சொந்த நிறுவல் [0,1] என்ற மெய்யெண் இடைவெளி எண்ணவியலா முடிவிலி என்பது தான். முரண்பாடு வகை நிறுவல் (proof by contradiction) பின்வருமாறு: மேலே நிறுவப்பட்ட முடிவின் நேரடி கிளைத்தேற்றம் (corollary) அல்லது துணை முடிவு மெய்யெண்கள் எண்ணவியலா முடிவிலிகள் என்பதாகும். ஏனெனில், மெய்யெண்களைக் கொண்ட கணத்தின் ஒரு சிறு உட்கணம் [0,1] என்ற இடைவெளி; இருந்தும் இந்த இடைவெளியே எண்ணவியலா முடிவிலி என்று நிறுவப்பட்டுள்ளது. தவிர, மெய்யெண்களின் கணத்திற்கும் [0,1] இடைவெளிக்கும் ஒரு இருவழிக்கோப்பு உறவு ஒன்றை ஏற்படுத்த முடியும். (0,1) என்ற திறந்த இடைவெளிக்கும் மெய்யெண் கணத்திற்கும் இடையே பின்வரும் உறவை ஏற்படுத்தலாம். formula_1 defined by formula_2. இதன் மூலம், இந்த இடைவெளியும் மெய்யெண் கணமும் ஒரே எண்ணிக்கையிலான உறுப்புக்களைக் கொண்டுள்ளன என நிறுவலாம். இதே நிறுவல் முறையில் ஏன் இயல்பெண்களின் கணத்தையும் எண்ணவியலா முடிவிலி என்று நிறுவ முடியாது என்ற கேள்வி பொதுவாக எழுவது. அவ்வாறு ஏன் நிறுவ முடியாதென்றால், சுழி (பூஜ்யம்) அல்லாத இலக்கங்களைக் கொண்ட எந்த ஒரு பதின்பகுப்பு விரிதலும் இயல்பெண்ணாகாது. உண்மையில், இயல்பெண்களின் கணம் "எண்ணக்கூடிய" முடிவிலியாகும். முதலாம் பராந்தக சோழன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான். இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர். இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும். தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான். இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது). கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர். கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் குடும்பத்தை சார்ந்த பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான். முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான. எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது. சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பிரிதிவீபதியின் தாயாதியான இரண்டாம் பூதுகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர். இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான். இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் "ஜகதேகவீரன்" என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் . இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது. டிசம்பர் 22 வவுனியா வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை. இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளன. வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் வவுனியா விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய பட்டயப் படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. வவுனியா தொடருந்து நிலையம் ஊடான தொடருந்து சேவைகள் காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குச் செல்கின்றன. இருபத்து நான்கு மணிநேரமும் போக்குவரத்து வசதியை பெற முடிதல் வவுனியா நகரின் சிறப்பாகும் வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன. டயலாக், மொபிடெல், ஹட்ச், எயார்டேல், எடிசலட் மற்றும் லங்காபெல் போன்ற தனியார் தொலைபேசி நிறுவங்களும் ஸ்ரீ லங்கா டெலிகொம்மும் தொலைபேசி மற்றும் 4G இணையத்தள சேவையினை வழங்குகின்றன அரச இலவச Wi-fi ( வயர்லெஸ் ) சேவையினை வவுனியா பேருந்து நிலையம், வவுனியா புகையிரத நிலையம், வவுனியா பொது நூலகம் ஆகிய இடங்களில் பெற முடிவதுடன் தனியார் சேவையினை அசிச்டியா ( Assistia ) நிறுவனம் வழங்குகிறது எட்வர்ட் ஜென்னர் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். இள வயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார். இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது. இங்கிலாந்திலுள்ள பெர்க்க்லி என்ற நகரில் 1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக எட்வர்ட் ஜென்னர் பிறந்தார். இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு மிகச் சிறந்த அடிப்படை கல்வி கிடைக்க வழிசெய்தது. ஜென்னர் வோட்டனிலும் சிரென்செஸ்டரிலும் பள்ளிக் கல்வியைப் பெற்றார். இச்சமயத்தில் தான் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆர்வமேற்பட்டது. தனது பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். ஏழாண்டுகள் பெற்ற இப்பயிற்சியின் காரணமாக ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுனராகத் தேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை ஜென்னருக்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. 'கௌபாக்சு' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க 'கௌபாக்சு' நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர் ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா? என்று ஆராயத் தொடங்கினார். சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார். இதனிடையில் 1770 இல்புனித ஜார்ஜ் மருத்துவ மனையில் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுனராகவும் உடற்கூறு அறுவையாளராகவும் பணியாற்றினார். ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான பணியின் காரணமாக இங்கிலாந்தின் ராயல் கழக உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பயற்சிக்குப் பின் 1773 இல் தனது சொந்த ஊரான பெர்க்கிலி திரும்பினார். அங்கும் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார். இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள் குஞ்சுகளுக்கு 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார். மற்ற பறவைகளின் கூட்டில் வைக்கப்படும் குயில் குஞ்சுவின் முதுகில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாகவே அது மற்ற பறவைக் குஞ்சுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவரது ஆய்வு 20 ஆம் நூற்றாண்டில் குயிலின் வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் வெளிவந்த பின்னரே உண்மையென ஒத்துக் கொள்ளப்பட்டது. 1788 இல் ராயல் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். எட்வர்சு ஜென்னர் 1788 மார்ச்சு மாதம் கேதரின் கிங்ஸ்கோட் என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். இவர் குளுசெஸ்டெர்சையர் என்ற இடத்திலுள்ள கிங்க்ஸ்கோட் பூங்கா உரிமையாளரான ஆந்தோனி கிங்ஸ்கோட் என்பவரின் மகளாவார். 1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். மார்பு முடக்குவலி (angina pectoris) பற்றி முதலில்ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் ஜென்னரைச் சேரும். ஹிபர்தீன் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வலியால் பாதிக்கப்பட்ட இதயத் தமனிகள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி முறை 1721 இலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் இதில் நோயைக் கட்டுப்படுத்தி முழுதுமாக போக்க முடியவில்லை. லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில் பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கனவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார். ஆனால் இம்முறையில் 60 % மக்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 60% மக்களில் 20% பேர் இறந்து போயினர்.<சிர்க்கான்சிய மக்களிடமிருந்த இம்முறையை துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். 1765 இல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர் பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை அவரால் அளிக்க இயலவில்லை. பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்ர்க்க எண்ணிய ஜென்னர் 1796-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தனது தோட்டக் காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கௌபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார்.எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கௌபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான். சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் சிறுவனின் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்த தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது.டூட்டிங்கில் புனித ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி நூலகத்திலுள்ள சுவரில் ஜேம்பிப்சும் இடம்பெற்றுள்ளார். அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். எட்வர்டு என்னருக்கு முன்னர் 1770 களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஐந்து கண்டுபிடிப்பாளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791 ) கௌபாக்சு நோயிலிருந்து தடுப்பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசியினை தானும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது. பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை ஐரோப்பாவெங்கும் பரவியது. ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து எட்வர்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். மூன்று வருடங்கள் இடைவிடாது பயணித்து அமெரிக்கா, பிலிப்பைன்சு, மக்காவ், சீனா, செயின்ட் ஹெலனா தீவு ஆகிய நாடுகளில் ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்தினார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன. 1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823 ஜனவரி 23 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமடையும் முன்பே இரண்டாவது முறையும் பக்கவாத நோய் தாக்கியது. 1823-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார். மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்குப் பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. தடுப்பு மருந்து தடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது. இந்த தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்போருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, வைரசு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன. இந்த தடுப்பு மருந்தானது தடுப்பு மருந்தேற்றம் மூலம் உடலினுள் செலுத்தப்படும் பெரியம்மை பெரியம்மை ("Smallpox"), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது வரியோலா மேசர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை. பெரியம்மையின் முதல் தோற்றம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக, இந்தக் கொடிய நோய், உலகின் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளது. இதற்கான காலவரிசை கீழே உள்ளது பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர், குணமடையும் முன் கீழ் காணும் கட்டங்களை கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளன. 1) நோயரும்பல் : இந்த காலக் கட்டத்தில், பெரியம்மையின் நோய்க்கிருமி மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது.
2) ஆரம்ப அறிகுறிகள் : இந்த கட்டத்தில், நோயுற்றவர்கள் எந்த வேலையும் செய்ய இயலாத அளவிற்கு, சோர்வு அடைந்திருப்பார்கள்.
3) முற்கால வேனற்கட்டி : சின்ன வேனற்கட்டிகள், முதலில் நாக்கிலோ அல்லது வாயினிலோ வரும். இந்த கட்டிகள் புண்னாகி வெடித்தப்பின், இந்த நோய்கிருமி பெரிய அளவில் உடம்பு முழுவதும் பரவும். முகத்தில் ஆரம்பித்து, 24 மணி நேரத்திற்குள், கை மற்றும் கால் வரை, உடம்பில் எல்லா இடங்களிலும் பருக்கள் தென்பட ஆரம்பிக்கும். இப்படி கட்டிகள் தென்படும் தருணத்தில் காய்ச்சல் சற்று தனிந்திருக்கும். நான்காம் நாளில், எல்லா கட்டிகளும் தடித்து புண்ணாகி விடும். இந்த புண்ணில் தடித்த, தெளிவற்ற திரவம் இருக்கும். இந்த தருணத்தில் காய்ச்சல் மீண்டும் அதிகரிக்கும் 4) சீழ் கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள் : இந்த கட்டத்தில், உடம்பில் உள்ள புண்கள், கொப்புளங்களாக மாறும். இந்த கொப்புளங்களின் தன்மை, சற்று எழுப்பப்பட்ட, வட்டமாகவும் தொடுவதற்கு தோலுக்குள் பட்டாணி இருப்பது போல தோன்றும். சுமார் 5 நாட்களுக்கு பிறகு, இந்த கொப்புளங்களின் மேல் ஓடுகள் போன்று உருவெடுக்கும், பின்னர் பொருக்களாகும். பொருக்கள் என்பது காய்ந்த புண்ணின் மேல் படிந்திருக்கும் ஓடு போன்றது. 5) பொருக்குகள் உதிர்வது : இந்த கட்டத்தில், காய்ந்த பொருக்கள் உதிர ஆரம்பிக்கும். காய்ந்த போதிலும், இன்னும் பரவும் தன்மை கொண்டது. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். உதிர்ந்தப் பின், உடம்பில் தழும்புகள் இருக்கும். 6) பொருக்கின்மை : எல்லா பொருக்குகளும் உதிர்ந்தப் பின், நோய் பரவாது. பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர், முழுவதும் குணமடைவதற்கான அறிகுறி இது. பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ஒன்றும் கிடையாது. எந்த ஒரு சிகிச்சையும் பயனளிக்காது. ஆயினும், சில சமயங்களில் நச்சுயிருக்கு எதிரான சில மருந்துகளும், நுண்ணுயிர்க்கு எதிரான சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம். இவை பெரியம்மையின் நச்சுயிரை எதிர்ப்பதற்காக இல்லை. பெரியம்மையால் பாதித்த போது மற்ற நோய்கள் தாக்கக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படலாம். பெரியம்மைக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், இதனை வருமுன் காப்பதே நல்லது. இதற்காக தடுப்பூசிகள் உள்ளன. பெரியம்மை தொற்றும் தன்மை கொண்டிருந்தமையால், இது மிகவும் கொடிய நோயாக கருதப்பட்டது. பெரியம்மைக்கு தடுப்பு ஊசிகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இருந்த போதிலும், ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது. 1959ம் ஆண்டில் தான், உலக சுகாதார மையம், பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது. நிதி பற்றாகுறையினாலும், போதுமான தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும், இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை. 1967ம் ஆண்டில், மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. பெரியம்மையின் கடைசி தோற்றங்கள், பெரியம்மை நோய் வேருடன் அழிக்கப்பட்டதாக, மே 8, 1980 அன்று, உலக சுகாதார் சட்டசபையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலகிலிருந்து பெரியம்மை நொய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாகிறது (2017ல்).
உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும். "உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்". இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சட்டத்தை உலகின் 61 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கையெழுத்திட்டன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதும் ஆகும். உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட், இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது. இதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் அஸ்லெப்பியசின் தடி ஏற்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. 1949 - 1952 ஆண்டுகளுக்கு இடையில், மண்டலப் பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவை இந்த அமைப்பின் 44வது பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு முடிவுகள் மண்டல அளவில் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டலத்திற்கு மண்டலக் குழு உண்டு. இது ஆண்டுக்கு ஒரு முறை கூடும். ஒவ்வொரு நாட்டு பிரிதிநிதியும் கலந்துகொள்வார். அங்கிகரிக்கப்படாத நாட்டின் பிரதிநிதிகளு பங்கேற்பர். மண்டலங்களுக்கு தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகத்தின் தலைவராக மண்டலக் குழுவால் ஒருவர் தெர்வு செய்யப்படுவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பனியில் இருப்பார். இந்த மண்டலக் குழுவிற்கு, ஒவ்வொரு உறுப்பு நாட்டின் உடல்நலத் துறைத் தலைவர்கள் பங்கேற்பர். உலக சுகாதார அவையின் திட்டங்களை மண்டல அளவில் செயல்படுத்துவதும் மண்டலக் குழுவின் பொறுப்பாகும். இதன் நோக்கம், “எல்லா மக்களுக்கும் முடிந்தவரையிலான உடல்நலத்தைப் பெற வழி வகுத்தல் ” இதன் நோக்கத்தை நிறைவேற்ற, கீழ்க்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன. இந்த அமைப்பு 147 நாடுகளில் இயங்குகிறது. . இது சில உதவி அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம். ஆகியவற்றிற்காக இவை செயல்படுகின்றன. கேன்சர் தடுப்பிற்கான சர்வதேச ஆய்வு மையம், பிரான்சில் லியோன் நகரில் உள்ளது. சுகாதார மேம்பாட்டிற்கான மையம், ஜப்பானின் கோபே நகரில் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு அலுவலகம் இருக்கும். சில நாடுகளில் மண்டலத்திற்கு துணை அலுவலகங்களும் உள்ளன. இந்த அமைப்பிற்கான நாட்டின் பிரதிநிதி, அந்த நாட்டின் அலுவலகத் தலைவராக இருப்பார். இது 147 நாடுகளில் 8,500 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. உலக சுகாதார அவை, இந்த அமைப்பின் உயரிய பொறுப்பைக் கொண்டதாகும். இதன் தலைமையகம், ஜெனிவா நகரில் உள்ளது. ஆண்டுக்கொருமுறை மே மாதம் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவையின் தலைவராக, ஐந்தாண்டு காலம் பதவி ஏற்பார். இந்த அவை செயலாக்க அவையின் செயற்பாடுகளை மீள்பார்வையிடுகிறது. சுகாதாரத்துறையில் சிறந்த 34 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயலாக்க அவையில் இடம்பெறுவார். சட்டசபையின் கொள்கைகளுக்கு உட்பட்டு திட்டங்களை வகுப்பது செயலாக்க அவையின் பொறுப்புகளில் ஒன்று. இந்த அமைப்பின் பதின்மூன்று கொள்கைகள் இதைச் சார்ந்தே உள்ளன. ”ஐக்கிய நாடுகள் சபை, நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, சுமுகமான உறவை மேம்படுத்தி, உலக சுகாதார மேம்பாட்டிற்கு உழைத்தல்” என்பது இதன் முதல் கொள்கை. "இந்த அமைப்பை சிறப்பாகச் செயல்படச் செய்ய ஏதுவாக இருத்தல்” என்பது இதன் இரண்டாவது கொள்கை. 2013 ஆம் ஆண்டு வரையில், இந்த அமைப்பிற்கு 194 உறுப்பு நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாக உள்ளன. லீச்டென்ஸ்டெயின், குக் தீவுகள், நியுவே ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர்கள் இல்லை. புவேர்ட்டோ ரிக்கோ, டோக்கெலாவ் ஆகியன இதன் துணை உறுப்பினர்களாக உள்ளன. பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக ஏற்கப்பட்டுள்ளன. இதன் சட்டத்தின்படி, அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் இதன் உறுப்பினராகத் தகுதி உடையன. ஐநா சபையில் இல்லாத பிற நாடுகளும், ஐநா சபையின் வாக்கெடுப்பில் தேர்வானால் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றன. கன்னிமாரா பொது நூலகம் சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது. 1948-ஆம் ஆண்டு மதராசு பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று. கட்டமைப்புக் கலைகளின் ஒருங்குமையைக் குறிக்குமாறு அமைந்த கட்டிடங்களோடு 1973-இல் மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இவற்றில், வார இதழ்கள்-நாளிதழ்கள் பிரிவு, பாடப்புத்தகப் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, வேற்றுமொழி இலக்கியங்கள் பிரிவு, காணொளி பிரிவு ஆகியவற்றோடு இந்திய ஆட்சிப் பணி தேர்வு ஆயத்தத்துக்கான தனித்துவ பிரிவு ஆகியவை இருக்கின்றன. நூலகம் முழுமைக்கும் கணினிமயப்படுத்தல் முடிவுறும் தறுவாயில் உள்ளது. இங்கு மொத்தம் ஆறு இலட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. 1981-ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமாரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது. நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. எனினும் கன்னிமாரா பொது நூலகம், நூலக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பில் பதிவுபெற்ற உறுப்பினராக இல்லை. கார்த்திக் ராஜா கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார். யுவன் சங்கர் ராஜா யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார். 100."பிரியாணி" (2013) 101.ஆரம்பம்(2013) 102.வடகறி(ஒரு பாடல்)(2014) 103.வானவராயன் வல்லவராயன் 104.திருடன் போலீஸ் 105.அஞ்சான் 106.பூஜை 107.வை ராஜா வை 108.இடம் பொருள் ஏவல் 109.மாஸ்(2015) 110.யட்சன் 111.தர்மதுரை(2016) 112.சென்னை600028-2 113.யாக்கை 114.நெஞ்ஞம் மறப்பதில்லை 115.தரமணி 116.சத்ரியன்(2017) 117.கடம்பன் 118.அன்பானவன் அசராதவன் அடங்காதவன் 119.செம்ம போதை ஆகாது 120.பலூன் 121.இரும்புதிரை(2018) 122.பியார் பிரேமா காதல் 123.ராஜா ரங்குஸ்கி 124.பேய்பசி 125.பேரன்பு 126.சண்டகோழி-2 127.ஜுனீயஸ் 128.மாரி-2 129.கண்ணே கலைமானே(2019) 130.கழுகு-2 சந்தனதேவன்(1 Song out) == இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள் 1.சந்தனதேவன் 2.சுப்பர்டீலக்ஸ் 3.கொலையுதிர்காலம் 4.மன்னவன் வந்தானடி 5.மடை திறந்து 6.NGK 7.மாமனிதன் 8.எரியும் கண்ணாடி 9.குருதியாட்டம் 10.சிந்துபாத் 11.ஆலிஸ் 12.மாநாடு 13.தல(59) 14.உயர்ந்த மனிதன் 16. டிசம்பர் 23 டிரில்லியன் மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக் (1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன், 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 12 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 10 என எழுதப்படும். ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் "மும்மடி ஆயிரம்" (1000 X 1000). இதே போல குவாட்ரில்லியன் என்பது ஓராயிரம் "நான்கு மடி ஆயிரம்" (1000 X 1000). குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் "ஐந்துமடி ஆயிரம்" (1000 X 1000). இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் இவ்வாறு ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள்ளன. முன்னொட்டுகளாகிய டிரி (tri), குவார்ட் (quart), குவின்ட் (quint) என்பன முறையே மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள். எண்களைப்பற்றி, அனைத்துலக முறைப்படி வழங்கும் முன்னொட்டு சொற்களை அறிய SI முன்னொட்டுச் சொற்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கலாம். பிலிப்பீன்சு பிலிப்பீன்சு (; ; பிலிப்பினோ: "பிலிப்பினாஸ்" [ˌpɪlɪˈpinɐs]), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு (பிலிப்பினோ: "ரீபப்பிலிக்கா இங் பிலிபினாஸ்") தென்கிழக்காசியாவிலுள்ள, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இறைமையுள்ள தீவு நாடாகும். லூசோன், விசயாஸ் மற்றும் மின்டனாவு எனப் பொதுவாக மூன்று பிரதான புவியியற் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சு 7,107 தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகராக மணிலாவும், அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகக் குவிசோன் நகரமும் உள்ளன. இவ்விரு நகரங்களும் மணிலா பெருநகரத்தின் பகுதிகளாகும் பிலிப்பீன்சின் எல்லைகளாக வடக்கே லூசான் நீரிணைக்கு அப்பால் தாய்வானும்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பால் வியட்னாமும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பால் புரூணை தீவுகளும்; தெற்கே இந்தோனேசியாவின் ஏனைய தீவுகளிலிருந்து பிலிப்பீன்சைப் பிரிக்கும் செலேபெஸ் கடலும்; கிழக்கில் பிலிப்பீன் கடலும் பலாவு எனப்படும் ஒரு தீவு நாடும் உள்ளன. பிலிப்பீன்சு பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும் நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும் பூகம்பங்களும் சூறாவளிகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இருந்தாலும், ஏராளமான இயற்கை வளங்களையும் உலகின் மிகப்பெரிய உயிரியற் பல்வகைமையையும் இந்நாடு கொண்டுள்ளமைக்கும் இவை காரணமாக அமைந்துள்ளன. அண்ணளவாக பரப்பளவைக் கொண்ட பிலிப்பீன்சு உலகில் 72 ஆவது-பெரிய நாடாக விளங்குகின்றது. அண்ணளவாக 100 மில்லியன் மக்கள்தொகையுடன் பிலிப்பீன்சு, ஆசியாவில் ஏழாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும், உலகில் 12 ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும் விளங்குகின்றது. மேலதிகமாக 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. தீவுகளெங்கும் பல்வேறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் காணப்படுகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலத்தில், தீவுக்கூட்டத்தின் ஆரம்பக்குடிகளுள் சிலராக நெகிரிட்டோக்கள் காணப்பட்டனர். அவர்களின் வருகைக்குப் பின்னர் ஆஸ்திரோனேசிய மக்கள் அலைஅலையாக வந்து குடியேறினர். சீன, மலாய, இந்திய மற்றும் இசுலாமிய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்தன. பின்னர், டாத்துக்கள், ராஜாக்கள், சுல்தான்கள் அல்லது லக்கன்களின் கீழ் பல்வேறு அரசுகள் நிறுவப்பட்டன. 1521 இல் பெர்டினென்ட் மகலன் ஹொமொன்கொன், கிழக்கு சமருக்கு வருகைதந்தமை எசுப்பானியக் காலனியாதிக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1543 இல், எசுப்பானிய நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு "லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ்" எனப் பெயரிட்டார். மெக்சிக்கோ நகரத்திலிருந்து மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பியின் வருகையுடன் 1565 இல் இத்தீவுக்கூட்டத்தின் முதலாவது எசுப்பானியக் குடியிருப்பு நிறுவப்பட்டது. பிலிப்பீன்சு 300 வருடங்களுக்கு மேலாக எசுப்பானியப் பேரரசின் பகுதியாக இருந்தது. இதன் விளைவாகக் கத்தோலிக்கம் நாட்டின் முக்கியமான சமயமானது. இந்தக் காலத்தில், ஆசியாவுடன் அமெரிக்காக்களை இணைத்த பசுபிக்கினூடான மணிலா - அகபல்கோ வணிகத்தின் மேற்கத்தைய மையமாக மணிலா உருவானது. 19 ஆம் நூற்றாண்டு நிறைவடைந்து 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பிக்கும் காலத்தில், குறுகியகாலமே நிலவிய முதலாவது பிலிப்பீன் குடியரசு தோன்றக் காரணமான பிலிப்பைன் புரட்சியும் அதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்–அமெரிக்கப் போரும் நிகழ்ந்தன. சப்பானியக் குடியேற்றக் காலத்தைத் தவிர்த்து இத்தீவுகள் மீதான இறையாண்மையை 1945 வரை ஐக்கிய அமெரிக்கா தக்கவைத்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிலிப்பீன்சு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதிலிருந்து, ஒரு சர்வாதிகாரத்தைத் தோற்கடித்த மக்கள் அதிகாரப் புரட்சி உள்ளடங்கலாக, மக்களாட்சி தொடர்பில் பல கொந்தளிப்பான அனுபவங்களை பிலிப்பீன்சு எதிர்கொண்டது. பாரிய மக்கள்தொகை அளவும், பொருளாதார உள்ளாற்றலும் இந்நாட்டை ஒரு இடைநிலை வல்லரசாக வகைப்படுத்தப்படக் காரணமாக அமைந்துள்ளன. இது ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, மற்றும் கிழக்காசிய உச்சிமாநாடு ஆகியவற்றை நிறுவிய உறுப்பு நாடுகளுள் ஒன்றாக விளங்குகின்றது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. பிலிப்பீன்சு ஒரு வளர்ந்து வரும் சந்தையாகவும் புதிதாகக் கைத்தொழில்மயப்பட்ட நாடாகவும் கருதப்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த பொருளாதாரம் தற்போது சேவை மற்றும் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றமடைந்து வருகின்றது. எசுப்பானிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் நினைவாக "பிலிப்பீன்சு" என்ற பெயர் இத்தீவுக் கூட்டத்திற்குச் சூட்டப்பட்டது. எசுப்பானிய நாடுகாண்பயணியான "ருய் லோபேஸ் டி வில்லாபோஸ்" தனது 1542 ஆம் ஆண்டு பயணத்தின் போது அன்றைய எசுப்பானிய முடிக்குரிய இளவரசரின் நினைவாக லெய்ட்டித் தீவு, சாமார்த் தீவு ஆகிய தீவுகளுக்குப் "பிலிப்பினாசு" என்ற பெயரைச் சூட்டினார். இறுதியாக "லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ்" என்ற பெயர் இத்தீவுக்கூட்டம் முழுவதுக்கும் பொதுவானதாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பெயர் பொதுவானதாக மலர்வதற்கு முன்னர், "ஐலாஸ் டெல் பொனியென்டே" (மேற்குத் தீவுகள்) என்றும் "சான் லாசரோ" தீவுகளை பேர்டினண்ட் மகலன் என்றும் எசுப்பானியர்கள் வழங்கி வந்தனர். பிலிப்பீன்சின் அதிகாரபூர்வப் பெயர் பலமுறை மாற்றத்திற்குள்ளானது. பிலிப்பீனியப் புரட்சியின் போது மலொலோஸ் காங்கிரஸ் "ரிப்புப்ளிக்கா பிலிப்பினா" அல்லது பிலிப்பீன் குடியரசை நிறுவுவதாகப் பிரகடனப்படுத்தியது. எசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898) மற்றும் பிலிப்பீன்-அமெரிக்கப் போர்க் (1899–1902) காலத்திலிருந்து பொதுநலவாயக் காலம் (1935–46) வரை அமெரிக்கக் காலனித்துவ அதிகாரிகள் எசுப்பானியப் பெயரின் மொழிபெயர்ப்பான "பிலிப்பீன் தீவுகள்" என இந்நாட்டைக் குறிப்பிட்டனர். 1898 பாரிசு உடன்படிக்கை ஏற்பட்டதிலிருந்து "பிலிப்பீன்சு" என்ற பெயர் தோன்றி நாட்டின் பொதுவான பெயராகவும் மாறியது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் "பிலிப்பீன்சு குடியரசு" என்பது அலுவல்முறைப் பெயராக வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை இத்தீவுக்கூட்டத்தில் கண்டறியப்பட்ட மனித எச்சங்களுள் கலாவோ மனிதனின் எச்சமே மிகப்பழமையானது. கலாவோ மனிதனின் கணுக்கால் எலும்புகளை யுரேனியத் தொடர் நாட்கணிப்பிற்கு உட்படுத்திய போது 67,000 ஆண்டுகள் பழமையானது என நம்பகமான முறையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இச்சிறப்பை, கார்பன் நாட்கணிப்பின் மூலம் 24,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்ட, பிலிப்பீன்சின் மாகாணமான பலாவனைச் சேர்ந்த, தபொன் மனிதன் பெற்றிருந்தான். நெகிரிட்டோக்களும் இத்தீவுக்கூட்டத்தின் முற்காலக் குடியேறிகளுள் ஒரு குழுவினராக இருந்த போதிலும் அவர்களின் முதல்குடியேற்றம் பிலிப்பீன்சில் எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் நம்பகமான முறையில் கணிக்கப்படவில்லை. பண்டைய பிலிப்பினோக்களின் மூதாதையர்கள் பற்றிப் பல வேறுபாடான கோட்பாடுகள் நிலவுகின்றன. "தாய்வானில் இருந்து வந்தோர்" என்னும் கருத்தே மொழியியல் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. இதன்படி தாய்வானிலிருந்து வந்த "ஆஸ்திரோனேசியர்கள்" முன்னர் வந்தவர்களை இடம்பெயரச்செய்து, கி.மு. 4000 இல் பிலிப்பீன்சில் குடியேறினர். கி.மு. 1000 அளவில், வேட்டையாடும் பழங்குடியினர், போர்வீரர்கள், மலைநாட்டின் பணம் படைத்த செல்வக்குழுக்கள் மற்றும் கடலோரத் துறைமுக ஆட்சிப்பகுதியினர் என நான்கு வகையான சமூகக் குழுக்களாக மக்கள் வாழலாயினர். தீவுகளில் பரவியிருந்த சில சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதிலும் அவற்றில் பல சமூகங்கள் அரசுகளாக மாற்றமடைந்து, புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சப்பான் மற்றும் ஏனைய ஆஸ்திரோனேசிய தீவுகள் உள்ளடங்கலாக கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுடன் கணிசமான வணிகம் முதலான தொடர்புகளை வளர்த்துக்கொண்டன. முதலாவது ஆயிரம் ஆண்டுகாலத்தில் கடலோரத் துறைமுக ஆட்சிப்பகுதிகள் எழுச்சியுற்று தன்னாட்சி கொண்ட பராங்கீசுகளை உள்ளடக்கிய கடல்சார் நாடுகளாக உருவெடுத்தன. இவை சுதந்திரமானவையாக அல்லது டாத்துக்கள் தலைமையிலான மலாய் கடலாதிக்க அரசுகள், குவாங்குகளால் ஆளப்பட்ட சீனத்தின் சிற்றரசுகள் அல்லது ராஜாக்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தியப்பண்பாட்டுச் சார்புடைய அரசகங்கள் போன்றவை பெரிய நாடுகளைச் சார்ந்தவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, அட்டியின் தலைவனான மரிகுடோவிடமிருந்து மட்ஜா-அஸ் -இன் கெடாத்துவானை டாத்து புட்டி மன்னர் விலைக்கு வாங்கி ஆட்சி செய்தார். மட்ஜா-அஸ், அழிக்கப்பட்ட அவர்களது தாயகமான பன்னய் அரசைத் தழுவிப் பெயரிடப்பட்ட பனய் தீவில் நிறுவப்பட்டது. புட்டுவான் இராச்சியம் ராஜா ஸ்ரீ பட ஷாஜாவின் ஆட்சியின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. டொண்டோ அரசகம் லகன்டுலா மரபு வழி அரசர்களாலும். செபு அரசகம் ராஜமுதா ஸ்ரீ லுமாயினாலும் ஆளப்பட்டது. இக்காலத்தில் காணப்பட்ட ஏனைய நாடுகளாக, குவாங் கட் சா லி-ஹானால் நிர்வகிக்கப்பட்ட சீனமயமாக்கப்பட்ட மா-இ இராச்சியம் மற்றும் இசுலாமியமயம் ஆவதற்கு முன்னர் இந்திய இராச்சியமாக முதலாவது ஆட்சியாளரான ராஜா சிபாட் தி ஓல்டரின் கீழ் இருந்த சூலு என்பன விளங்கின. மாபெரும் காப்பியங்களான ஹினிலவொட், டரங்கன் மற்றும் பியாங் நி லாம்-அங் என்பன இக்காலத்தில் தோன்றியவையாகும். 1300 களில் பிலிப்பைன் தீவுக்கூட்டத்தில் இசுலாம் நுழைந்து பரவியது. 1380 இல், கரிம் உல் மக்தும் சூலுவில் இசுலாத்தை அறிமுகப்படுத்தினார். ஜொகோரில் பிறந்த அராபிய வர்த்தகரான சையத் அபூ பக்கர் மலாக்காவிலிருந்து சுலுவிற்கு வந்து சுலுவின் ராஜாவை மதம் மாற்றியதுடன், அவரது மகளைத் திருமணம் செய்து சூலு சுல்தானகத்தை நிறுவி, ஷாரிபுல் ஹாசெம் என்னும் பெயருடன் அதன் முதல் சுல்தான் ஆனார். 15 ஆம் நூற்றாண்டின் முடிவிலே, ஜொகூரின் செரிப் முகமது கபங்சுவான் மின்டனவு தீவில் இசுலாமை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, இரனுன் இளவரசியான பரமிசுலியை திருமணம் முடித்து, அவர் மகுயின்டனவு சுல்தானகத்தை நிறுவினார். சுல்தானக வடிவிலான அரசாங்கம் லனவு வரை மேலும் விரிவடைந்தது. இறுதியில் இசுலாம் தெற்கில் மின்டனவுக்கும் வடக்கில் லூசோனுக்கும் பரவியது. 1485 முதல் 1521 வரை பொல்கியா சுல்தானின் ஆட்சிக்காலத்தில் மணிலா கூட இசுலாமிய மயமாக்கப்பட்டது. அதேவேளை புருணை பேரரசு ராஜா சலாலிலாவை இசுலாமிற்கு மாற்றியதன் மூலம் டொண்டோ இராச்சியத்தை அடிமைப்படுத்தியது. இருந்த போதிலும், விலங்குகளை வழிபடும் இகோரொட், மலாய மட்ஜா-அஸ், சீனமயமாக்கப்பட்ட மா-இ, மற்றும் இந்தியமயமாக்கப்பட்ட புட்டுவன் போன்ற அரசுகள் தமது பண்பாடுகளைத் தொடர்ந்து பேணினார்கள். சில இராச்சியங்களில் இசுலாமிய எதிர்ப்பு உணர்வு காணப்பட்டது. இதன் விளைவாக, டாத்துக்கள், ராஜாக்கள், குவாங்குகள், சுல்தான்கள், மற்றும் லக்கன்களுக்கிடையில் போட்டிகள் உருவாயின. இறுதியில் எசுப்பானியக் காலனியாக்கத்திற்கு இலகுவில் வழிகோலியது. எசுப்பானியப் பேரரசுக்குள் இவ்வரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு எசுப்பானிய மயமாக்கமும் கிறித்தவ மயமாக்கமும் நடைபெற்றன. 1521 ஆம் ஆண்டு, போர்த்துக்கேய தேசாந்திரியான பேர்டினண்ட் மகலன் பிலிப்பைன்சை வந்தடைந்து இத்தீவுக்கூட்டத்தை எசுப்பானியாவிற்கு உரித்துடையதாக்கினார். எசுப்பானிய தேசாந்திரியான "மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி" 1565 ஆம் ஆண்டு மெக்சிக்கோவிலிருந்து இங்கு வந்து, முதலாவது ஐரோப்பியக் குடியேற்றங்களை செபுவில் அமைத்தார். அப்பொழுதிலிருந்து காலனியாதிக்கம் ஆரம்பமானது. பனய் தீவுகளிற்கு எசுபானியர்கள் இடம் மாறினர். பிறகு உள்நாட்டு விசயன் தலைமையில் கூடிய கூட்டுப்படையையும் எசுப்பானிய படைவீரர்களையும் கூட்டணியாக ஒருங்கிணைத்தனர். அதற்குப்பின் எசுபானியர்கள் இசுலாமிய மணிலாவை நோக்கிப் படையெடுத்தனர். எசுப்பானிய ஆட்சியின் கீழ், 1571 ஆம் ஆண்டு எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைநகரமாக மணிலாவைப் பிரகடனப்படுத்தினார்கள். அங்கு டொண்டோ சதித்தி்ட்டத்தை முறியடித்து சீனக் கடற்கொள்ளைப் போர்ப் பிரபுவான லிமஹொங்கைத் தோற்கடித்தனர். எசுப்பானிய ஆட்சியானது இத்தீவுக்கூட்டத்தின் பிரிவுபட்ட பிராந்தியங்களின் மத்தியில் அரசியல் ஒற்றுமையைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. 1565 இல் இருந்து 1821 வரை பிலிப்பைன்ஸ் தீவானது புதிய எசுப்பானியாவின் உப அரசின் ஒர் பிரதேசமாக ஆட்சிசெய்யப்பட்டு, மெக்சிக்கோ சுதந்திரப் போரின் பின்னர் மட்ரிட்டிலிருந்து (எசுப்பானியாவிலுருந்து) நேரடியாக ஆட்சிசெய்யப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை "மணிலா கலியன்" என்ற கப்பலும் பெரிய கடற்படையும் மணிலாவிற்கும் அக்கபல்கோவிற்கும் இடையே ஒரு வருடத்தில் இருமுறை பயணித்தது. இவ்வர்த்தகம் சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், மிளகுத்தூள், அன்னாசி போன்ற அமெரிக்காவில் இருந்து வந்த உணவுகளை இங்கு அறிமுகப்படுத்தியது. உரோமன் கத்தோலிக்க மதப்பரப்புரையாளர்கள் பெரும்பாலான வறிய ஏழை மக்களை கிறித்தவத்திற்கு மதம் மாற்றியதுடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் வைத்தியசாலைகளையும் அமைத்தனர். எசுப்பானிய ஆணையின் மூலம் 1863 ஆம் ஆண்டு இலவசப் பொதுப்பள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கக் காலகட்டத்திலேயே வெகுசன பொதுக்கல்வி முறையின் முயற்சிகள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தன. எசுப்பானியா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு உள்ளூர் புரட்சிகளை எதிர்கொண்டதுடன் சீனக் கடற்கொள்ளையர்கள், டச்சுக்கள், போர்த்துகேயர்கள் முதலியவர்களிடமிருந்து பல்வேறு குடியேற்றச் சவால்களையும் எதிர்கொண்டது. ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழு ஆண்டுகள் போரின் ஒரு நீடிப்பாகப் பிரிட்டனின் படைகள் 1762 இல் இருந்து 1764 வரை மணிலாவைக் கைப்பற்றிக்கொண்டனர். 1763 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து எசுப்பானியாவின் ஆட்சி மீட்டெடுக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் துறைமுகங்கள் உலக வர்த்தகத்திற்காகத் திறந்துவைக்கப்பட்டதில் இருந்து பிலிப்பைன்ஸ் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பல எசுப்பானியர்கள் பிலிப்பைன்சில் பிறந்தனர் ("கிரியொல்லோ"). அத்துடன் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தோர் ("மெஸ்டிசோஸ்") செல்வந்தர்களாக மாறியதுடன், ஐபேரியன் குடாநாட்டில் ("பெனின்சுலரிஸ்") பிறந்த எசுப்பானியர்கள் பாரம்பரியமாக வகித்துவந்த அரசாங்கப்பதவிகள், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த குடியேற்றக்காரர்களும் திறந்துவிடப்பட்டது. புரட்சிக்கான சிந்தனைகளும் தீவுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தன. 1872 ஆம் ஆண்டு "கவைட் கலகத்தில்" ஏற்பட்ட "கிரியொல்லோ" அதிருப்தி பிலிப்பைன்ஸ் புரட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தது. மூன்று பாதிரியார்களான-மரியானோ கோமேஸ், ஜோஸ் பர்கோஸ் மற்றும் ஜாசின்டோ ஜமோரா (கூட்டாக "கொம்பர்சா" என அறியப்படுகின்றனர்) ஆகியோர் காலனித்துவ அதிகாரிகளால் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட பின்பு, புரட்சிகர உணர்வுகள் 1872 ஆம் ஆண்டில் தூண்டுதல் பெற்றன. இச்சம்பவம் மார்செலோ எச். டெல் பிலார், ஒசே ரிசால், மற்றும் மரியானோ பொன்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட எசுப்பானியாவிலுள்ள பரப்புரை இயக்கம், பிலிப்பைன்சில் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பரப்புரைசெய்ய ஊக்குவித்தது. இறுதியில் ரிசால் கிளர்ச்சிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு டிசம்பர் 30, 1896 அன்று தூக்கிலிடப்பட்டார். சீர்திருத்த முயற்சிகள் எதிர்ப்பைச் சந்தித்ததால், ஆயுதக் கிளர்ச்சி மூலம் எசுப்பானியாவிடமிருந்து சுதந்திரம் பெற முயன்ற ஆண்ட்ரஸ் பொனிபாசியோ, 1892 இல் கடிபுனன் என்ற இரகசிய அமைப்பை நிறுவினார். பொனிபாசியோவும் கடிபுனனும் பிலிப்பைன் புரட்சியை 1896 இல் ஆரம்பித்தனர். இறுதியில் கடிபுனனின் ஒரு பிரிவான, கவிட்டே மாகாணத்தின் மக்டலோவால் புரட்சியின் தலைவரான பொனிபாசியோவின் நிலைக்குச் சவால் விடப்பட்டதுடன் எமிலியோ அக்கினால்டோ அப்பதவியை எடுத்துக்கொண்டார். 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போர் கியூபாவில் ஆரம்பித்து பிலிப்பைன்சை வந்தடைந்தது. சூன் 12, 1898 இல் கவிட், கவிட்டே என்ற இடத்தில் அக்கினால்டோ எசுப்பானியாவிடமிருந்து பிலிப்பைன்சின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதுடன், அடுத்த வருடம் முதலாவது பிலிப்பைன் குடியரசு பரசோயின் தேவாலயத்தில் வைத்து நிறுவப்பட்டது. எசுப்பானிய அமெரிக்கப் போரில் எசுப்பானியா தோற்றதால் எசுப்பானியா இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது. 1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் இதற்கு இழப்பீட்டுத் தொகையாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிற்கு வழங்கியது. அப்போது புதிதாக உருவான முதலாவது பிலிப்பைன் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் முதலாவது குடியரசின்போது காணப்பட்ட உப-அரசுகளான: நலிவுறும் சூலு சுல்தானகம், கிளர்ச்சி கொள்ளும் தகலாகு குடியரசு, விசயாசிலுள்ள நெக்ரோக்களின் குடியரசு மண்டலங்கள், மின்டனவுவிலுள்ள சம்பொவங்கா குடியரசு என்பவற்றை அடக்கினார்கள். இந்தக் காலத்தில், பிலிப்பைன் பண்பாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன் பிலிப்பைன் திரைத்துறை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஒரு விரிவாக்கம் நிகழ்ந்தது. மணிலாவை நவீன நகரமாக மாற்றும் பொருட்டு "டானியல் பெர்ன்ஹாம்" ஒரு கட்டுமானத் திட்டத்தை வடிவமைத்தார். 1935 ஆம் ஆண்டு, மானுவல் குவிசோன் சனாதிபதிப் பொறுப்பை ஏற்றதுடன் பிலிப்பைன்சிற்குப் பொதுநலவாய அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர் தேசிய மொழியொன்றை நியமித்ததுடன் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் சப்பானியப் பேரரசு படையெடுத்தது. மேலும் "ஜோஸ் பி. லாரல்" தலைமையில் இரண்டாம் பிலிப்பைன் குடியரசு சப்பானின் கூட்டு நாடாக நிறுவப்பட்டது. ஆகவே இந்தக் காரணங்களால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்கள் தடைப்பட்டன. பட்டான் மரண அணிவகுப்பு மற்றும் மணிலாப் போரின் போது உச்சக்கட்டத்தை அடைந்த மணிலா படுகொலை போன்ற பல அட்டூழியங்களும் போர்க் குற்றங்களும் யுத்தத்தின் போது இழைக்கப்பட்டன. 1944 இல் அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் குவிசொன் இறந்ததுடன் "செர்ஜியோ ஒஸ்மெனா" அவரைத் தொடர்ந்து சனாதிபதி ஆனார். நேச நாடுகளின் படைகள் 1945 ஆம் ஆண்டு சப்பானியர்களைத் தோற்கடித்தனர். போரின் முடிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 24, 1945 இல், பிலிப்பைன்ஸ் ஐக்கிய நாடுகள் அவையினை நிறுவிய அங்கத்தவர்களுள் ஒருவரானதுடன், அடுத்த வருடம் சூலை 4, 1946 இல் மனுவேல் ரொக்சாசின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவால் சுதந்திர அரசாக அறிவிக்கப்பட்டது. பொதுவுடமை இயக்கமான குக்பலகப்பிடம் நடவடிக்கைகளில் பிரிந்தவர்கள் நாட்டுப்புறங்களில் கட்டுப்பாடின்றி உலவத் தொடங்கினர். அவர்கள் சனாதிபதி எல்பீடியோ குவிரினோவிற்குப் பின்வந்த ரமன் மக்சேசேயால் அடக்கப்பட்டனர். மக்சேசேக்குப் பின்வந்த கார்லஸ் பி. கார்சியா "பிலிப்பினோ முதன்மைக் கொள்கை"யை ஆரம்பித்தார். இது டியொஸ்டாடோ மகபகலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன் சுதந்திர விழாக் கொண்டாட்டம் சூலை 4 இல் இருந்து எமிலியோ அகுயினால்டோவின் பிரகடனத் திகதியான சூன் 12 இற்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில், வட போர்னியோவின் கிழக்குப் பகுதிக்கான உரிமை கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. 1965 இல், சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோசிடம் மகபகல் தோல்வியடைந்தார். மார்க்கோசு அவரது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் பல்வேறு பொதுத் திட்டங்களை ஆரம்பித்த போதிலும் பொது நிதிகளில் பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்தார். இதுபோன்ற பாரிய ஊழல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டார். பாரிய சமூகக் கொந்தளிப்பிற்கும் தனது ஆட்சி முடிவடைவதற்கும் இடையில் மார்க்கோஸ் இராணுவச் சட்டத்தை செப்டம்பர் 21, 1972 இல் பிரகடனம் செய்தார். அவரது இந்த ஆட்சிக் காலம் அரசியல் ஒடுக்குமுறை, தணிக்கை முறை, மற்றும் மனித உரிமை மீறல்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது. பெரும்பாலான பிலிப்பினோக்கள் வறுமையுடன் இருந்தபோது அவரது மனைவி இமெல்டா மார்க்கோசு ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். ஆகஸ்ட் 21, 1983 இல், மார்க்கோசின் முக்கியப் போட்டியாளரான எதிர்க்கட்சித் தலைவர் பெனிக்னோ அக்கீனோ இளையவர், மணிலா பன்னாட்டு விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். மார்க்கோஸ் இறுதியில் 1986 இல் முன்னறிவிப்பற்ற சனாதிபதித் தேர்தலுக்கு அக்கீனோவின் மனைவியான கொரசோனுக்கு எதிராக அழைப்பு விடுத்தார். இதில் மார்க்கோஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்திருக்கின்றது என்று பரவலாகக் கருதப்பட்டது. இந்நிலைமை மக்கள் அதிகாரப் புரட்சிக்கு வித்திட்டது. மார்கோசும் அவரது கூட்டாளிகளும் ஹவாய்க்குத் தப்பியோடியதுடன் அக்கினோ சனாதிபதியாக அங்கீகரிக்கப்பட்டார். மீண்டும் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சனநாயகப் பாதைக்குத் திரும்பும் முயற்சியும் அரசாங்கப் புதிய சீர்திருத்தங்களும் சில காரணங்களால் தடைப்பட்டன. தேசிய கடன், அரசாங்கத்தின் ஊழல், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், பேரழிவுகள், தொடர்ச்சியான பொதுவுடைமைக்காரர்களின் கிளர்ச்சி, மற்றும் மோரோ பிரிவினைவாதிகளுடனான இராணுவ மோதல் என்பனவே அந்தக் காரணங்கள் ஆகும். கொரசோன் அக்கினோவின் நிர்வாகம், சூன் 1991 இல் பினாடுபோ மலையின் வெடிப்புடன் முடிவடைந்தது. அமெரிக்கத் தளங்களின் நீட்டிப்பு உடன்படிக்கையை நிராகரித்ததன் காரணமாக அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. நவம்பர் 1991 இல் கிளார்க் வான் படைத் தளமும் டிசம்பர் 1992 இல் சபிக் குடாவும் அலுவல்முறையாக அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறாக அமெரிக்க இராணுவப் படைகள் நாட்டில் நிலைகொண்டிருந்ததை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதன் பொருளாதாரம் "ஆசியாவின் புலிப் பொருளாதாரம்" என அழைக்கப்பட்டது. மே 11 இல் நடைபெற்ற பிலிப்பைன் சனாதிபதித் தேர்தலில் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிடெல் வி. ராமோஸ் அவர்களின் நிர்வாகக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 6% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டது. இருந்தபோதிலும், 1996 இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியுடனான சமாதான உடன்படிக்கை, போன்ற அரசியல் உறுதிப்பாடும் பொருளாதார மேம்பாடுகளும் 1997 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாகக் கவனம் பெறாமல் போயின. ராமோசிற்குப் பின் வந்தவரான, ஜோசப் எஸ்திராடா சூன் 1998 இல் பதவியேற்றார். அவர் பொருளாதார வளர்ச்சியை -0.6% இல் இருந்து 3.4% ஆக 1999 அளவில் 1997 ஆசிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மீழெழச்செய்தார். மார்ச் 2000 இல் அரசாங்கம் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிக்கு எதிராகப் போர்ப் பிரகடனத்தை அறிவித்ததுடன் கிளர்ச்சியாளர்களின் தலைமையகம் உட்பட அனைத்து முகாம்களையும் இல்லாது அழித்தொழித்தது. அபு சயாப் கிளர்ச்சியாளர்களுடன் தொடரும் மோதலுக்கு நடுவில், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒரு முடக்கிவிடப்பட்ட பாரிய குற்ற பிரேரணையின் காரணமாக 2001 எட்சா புரட்சி மூலம் ஜோசப் எஸ்திராடாவின் நிர்வாகம் அகற்றப்பட்டது. சனவரி 20, 2001 இல் இருந்து அவரது உப சனாதிபதியான குளோரியா மகபகல்-அர்ரொயோ நிர்வாகத்தை ஏற்று தொடர்ந்து ஆட்சி செய்தார். அர்ரோயோவின் ஒன்பது ஆண்டு நிருவாகத்தில், பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2002 இல் 4% ஆக இருந்து 2007 இல் 7% ஆக வளர்ச்சியடைந்ததுடன், 2004 இல் எல்.ஆர்.டி லைன் 2 போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தைத் தவிர்க்க முடியும் படியும் இருந்தது. இருப்பினும், இக்காலத்தில் இலஞ்சமும் 2004 ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை மோசடி செய்தது தொடர்பான ஹெலோ கார்க்கி ஊழல் போன்ற அரசியல் ஊழல்களும் நிறைந்து காணப்பட்டன. நவம்பர் 23, 2009 இல் இடம்பெற்ற, மகுயின்டனவு படுகொலை 34 பத்திரிகையாளர்களின் இறப்புக்கு வழிவகுத்தது. 2010 தேசியத் தேர்தலில் பெனிக்னோ அக்கீனோ III வெற்றிபெற்றதுடன் பிலிப்பைன்சின் 15 ஆவது சனாதிபதியாகச் சேவைபுரிகின்றார். இவர் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது வயதுகுறைந்த நபராகவும் முதலாவது திருமணமாகாதவராகவும் விளங்குகின்றார். முன்னைய ஆண்டுகளின் போது, ஒக்டோபர் 15, 2012 இல் பாங்சமொரோ தொடர்பான கட்டமைப்பு உடன்பாட்டைக் கைச்சாத்திட்டதுடன், இது பாங்சமொரோ என்ற ஒரு தன்னாட்சி அரசியல் அமைப்பு உருவாக முதற்படியாக அமைந்தது. இருந்த போதிலும், கிழக்கு சபா மற்றும் தென் சீனக் கடற் பிராந்தியங்களில் மோதல்கள் தீவிரமடைந்தன. நாட்டின் பொருளாதாரம் குறிப்பாக 2013 இல் சிறப்பாகச் செயற்பட்டது. 2013 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% வளர்ச்சியடைந்ததுடன் ஆசியாவின் 2 ஆவது அதிவேகமானதாகக் காணப்பட்டது. நாட்டின் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட, பொதுவாக கே–12 நிகழ்ச்சித்திட்டம் (K–12 program) என அழைக்கப்படும் 2013 இன் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டத்தை, மே 15, 2013 இல் அக்கீனோ கைச்சாத்திட்டார். நவம்பர் 8, 2013 இல் சூறாவளி ஹையான் நாட்டைத் தாக்கியதுடன், நாட்டைக், குறிப்பாக விசயன் பிராந்தியத்தைப் பெரிதும் பேரழிவிற்கு உட்படுத்தியது. பிலிப்பைன்ஸ், ஜனாதிபதி முறையைக் கொண்ட, அரசியலமைப்புக் குடியரசு வடிவில் அமைந்த, ஒரு சனநாயக அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாகச் செயற்படும் முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதியைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள், ஓர் ஒற்றையாட்சி அரசாக நிர்வகிக்கப்படுகின்றது. ராமோசின் நிர்வாகத்தில் இருந்து கூட்டாட்சி, ஓரவை, அல்லது நாடாளுமன்ற அரசாங்கமாக அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நாட்டினுடைய தலைவராகவும் அரசாங்கதின் தலைவராகவும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் சனாதிபதி செயற்படுகின்றார். சனாதிபதி ஆறு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அவரது காலத்தில் அமைச்சரவையை நியமிப்பதுடன் அதற்குத் தலைமையும் வகிக்கின்றார். பிலிப்பைன்சின் இரு அவைகளைக் கொண்ட காங்கிரசில், ஆறு வருட காலத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செனட் சபை மேலவையாகவும், மூன்று வருட காலத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சபை கீழவையாகவும் சேவையாற்றுகின்றன. செனட் சபையின் உறுப்பினர்கள் (24 பேர்) நாட்டின் அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் சட்டமன்ற மாவட்டங்களிலில் இருந்தும் துறைவாரியான பிரதிநிதித்துவத்தின் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நீதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் தலைமையில் அதிகாரியான பிரதம நீதியரசரும், நீதித்துறை மற்றும் வழக்கறிஞர் மன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளிலிருந்து சனாதிபதியால் நியமிக்கப்பட்ட 14 இணை நீதிபதிகளும் அங்கம் வகிக்கின்றனர். பிலிப்பைன்சின் பன்னாட்டு உறவுகள், மற்றைய நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளையும், நாட்டின் வெளியே வாழும் 11 மில்லியன் வெளிநாட்டுப் பிலிப்பினோக்களின் நல்வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய மற்றும் அதன் செயற்படும் அங்கத்தவர் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அங்கத்தவர்களுள் ஒருவராகப் பிலிப்பைன்ஸ் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கார்லஸ் பி. ரொமுலோ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பிலிப்பைன்சானது மனித உரிமைகள் ஆணையத்தின் ஆர்வம்மிகு உறுப்பினராக உள்ளதுடன், குறிப்பாகக் கிழக்குத் திமோரில் சமாதானப் பாதுகாப்புப் பணிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் ஊறுப்பு நாடாக இருப்பதற்கு மேலதிகமாக, இந்நாடானது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை நிறுவிய மற்றும் அதன் தற்போதைய சுறுசுறுப்பான உறுப்பினராகவும் இருக்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தவும் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிலிப்பைன்ஸ் பல ஆசியான் மாநாடுகளை நடத்தியதுடன் இவ்வமைப்பின் வழிகாட்டல் மற்றும் கொள்கைகளை அமைப்பதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளராகச் செயற்படுகின்றது. பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவுடன் பெறுமதியான உறவுகளைக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் பனிப்போர் காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் ஐக்கிய அமெரிக்காவை ஆதரித்ததுடன் இது ஒரு முக்கிய நேட்டோ அல்லாத கூட்டணி ஆகும். இவ்வாறாக நல்லெண்ண வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும், சபிக் குடா, கிளார்க் விமான தளம் ஆகியவற்றில் தற்போதும் முன்னாள் அமெரிக்க இராணுவ தளங்கள் இருத்தல், மற்றும் அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள வருகை படைகள் ஒப்பந்தம், தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் அலுவல்முறையில் நிதி மற்றும் வளர்ச்சி உதவியில் பாரிய பங்களிப்புச்செய்கின்ற நாடான சப்பான், ஒரு நட்பு நாடாகக் கருதப்படுகின்றது. இருந்தபோதிலும் ஆறுதலளிக்கும் பெண்களின் அவல நிலை போன்ற வரலாற்று ரீதியான அழுத்தங்கள் இன்னமும் இருக்கின்றன. இரண்டாம் உலக போர் நினைவுகளால் ஏற்பட்ட பகையணர்வு தற்போது மிகவும் குறைந்துள்ளது. மற்ற நாடுகளுடன் உள்ள உறவும் பொதுவாக நல்ல நிலையில் இருக்கின்றது. மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஜனநாயக விழுமியத்துடனான எளிதான உறவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள அதேவேளை பொருளாதார அக்கறையுடன் உதவுதல் என்பவற்றின் மூலம் மற்றைய வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுடன் உறவைப் பேணுகின்றது. வரலாற்று ரீதியான பிணைப்புக்கள் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகள் என்பன எசுப்பானியாவுடனான உறவில் ஒரு பாலமாகச் செயற்படுகின்றன. உள்நாட்டு முறைகேடு மற்றும் வெளிநாட்டு பிலிப்பினோ தொழிலாளர்களைப் போர் பாதித்தல் போன்ற இடர்கள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் நட்பு ரீதியாக உள்ளன என்பது, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பிலிப்பினோக்கள் தொடர்ச்சியாக வேலைசெய்துகொண்டு அங்கு வாழ்வதிலிருந்து தெளிவாகின்றது. முன்பு இருந்தது போன்று இனிமேல் பொதுவுடைமை முறையில் அச்சுறுத்தல் இல்லை என்பதால், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையே 1950 களில் ஏற்பட்ட பகையுணர்வு குறைந்து உறவுகள் தற்போது பெரிதும் மேம்பட்டுள்ளது. தாய்வான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஸ்பிரட்லி தீவுகள், மற்றும் சீனாவின் செல்வாக்கு விரிவடைதல் தொடர்பான கவலைகள் போன்றவை இருப்பதால் சீனாவுடனான உறவை அதிக எச்சரிக்கையை கொண்டு பேணுகிறது. சமீபத்திய வெளிநாட்டு கொள்கைகள், அதன் தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆசிய பசிபிக் அண்டை நாடுகளுடனான பொருளாதார உறவுகளைப் பற்றியே பெரும்பாலும் இருந்து வருகின்றது. கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS), ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) இலத்தீன் ஒன்றியம், குழு 24, மற்றும் அணிசேரா இயக்கம் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸ் ஆர்வம் மிக்க உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றது. இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதன் மூலம், இசுலாமிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தப் பிலிப்பைன்ஸ் முயன்று வருகின்றது. பிலிப்பைன்சின் பாதுகாப்பு பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளின் மூலம் கையாளப்படுகிறது, இவ்வமைப்பு வான் படை, தரைப்படை, கடற்படை (கடற்படைச் சிறப்புப் பிரிவு உட்பட) என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தற்போது, தன்னார்வப் படைகளால் பிலிப்பைன்சின் ஆயுதப் படைகளின் மனித ஆற்றல் நிரப்பப்படுகிறது, அதாவது ஆட்சேர்ப்பு மூலம் தன்னார்வலர்களை அதன் சிப்பாய்களாகக் கையகப்படுத்துகின்றது. இருந்தபோதிலும், பிலிப்பைன்சின் அரசியலமைப்பின் விதி II இன் பிரிவு 4 இல் குறிப்பிட்டுள்ளபடி கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளல் சாத்தியமானது. குடிமக்கள் பாதுகாப்பானது, உள்துறை மற்றும் உள்ளூர் அரசாங்கத் திணைக்களத்தின் (DILG) கீழ் இயங்கும் பிலிப்பைன் தேசியக் காவல்துறையால் கையாளப்படுகின்றது. முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதியில் மிகப்பெரிய பிரிவினைவாத அமைப்பான மோரோ தேசிய விடுதலை முன்னணி தற்போது அப்பகுதியின் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் செயற்படுத்துகின்றது. குறிப்பாக மின்டனவுவின் தெற்குத் தீவுகளில் இதர போராளி குழுக்களான மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி, பொதுவுடைமை புதிய மக்கள் இராணுவம், மற்றும் அபு சயாவ் போன்றவை இன்னும் உலவிக்கொண்டிருப்பதுடன் பணத்திற்காக வெளிநாட்டவரைக் கடத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றன. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பாதுகாப்பின் காரணத்தால் அண்மைய ஆண்டுகளில் இவ்வியக்கங்களின் நடமாட்டம் இப்பகுதியில் வெகுவாகக் குறைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரிலிருந்து பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் நேச நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை 1951 இல் கைச்சாத்திடப்பட்டது. பிலிப்பைன்ஸ் பனிப்போர்க் காலத்தில் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவளித்ததுடன் கொரிய மற்றும் வியட்நாம் போர்களிலும் பங்கு பெற்றது. பிலிப்பைன்ஸ் தற்போது செயற்பாட்டிலில்லாத சீட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இவ்வமைப்பு நேட்டோவைப் போன்று சேவையாற்றியதுடன் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பாக்கிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்காவை உள்ளடக்கியிருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு ஆதரவான கூட்டணியின் ஒரு உறுப்பு நாடாக இருந்து ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது. பிலிப்பைன்ஸ் லூசோன், விசயாஸ், மற்றும் மின்டனவு என மூன்று தீவுக்கூட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை 17 பிராந்தியங்களாகவும், 81 மாகாணங்களாகவும், 144 நகரங்களாகவும், 1,491 நகரசபைகளாகவும், 42,028 பரங்கய்களாகவும் மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, குடியரசுச் சட்டம் எண். 5446 இன் பகுதி 2, பிலிப்பைன் தீவுக் கூட்டத்தைச் சுற்றியுள்ள பிராந்தியக் கடல் வரையறை சபாவின் கிழக்கு பகுதி மீது தாக்கம் செலுத்தாது என்பதனை வலியுறுத்துகின்றது. பிலிப்பைன்சானது 7,107 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டமாகும். உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளடங்கலாக இதன் மொத்தப் பரப்பளவு அண்ணளவாக ஆகும். அத்துடன் நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட பிலிப்பைன்ஸ், உலகின் ஐந்தாவது நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இது 116° 40', மற்றும் 126° 34' கிழக்கு நெடுங்கோட்டிற்கும் 4° 40' மற்றும் 21° 10' வடக்கு அகலக்கோட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது. பிலிப்பைன்சின் எல்லைகளாக, கிழக்கே பிலிப்பைன் கடலும், மேற்கே தென் சீனக் கடலும், தெற்கே செலேபெஸ் கடலும் அமைந்துள்ளன. போர்னியோ தீவுகள் தென்கிழக்கில் சில நூறு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுடன் சரியாக வடக்குத் திசையில் தாய்வான் அமைந்துள்ளது. மொலுக்காஸ் மற்றும் சுலாவெசி ஆகிய தீவுகள் தென்-தென்மேற்கில் அமைந்துள்ளதுடன் பிலிப்பைன்சின் கிழக்கில் பலாவு அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பாங்கான தீவுகளில் பெரும்பாலானவை வெப்பமண்டல மழைக்காடுகளை உடையவை. ஆரம்பத்தில் அவை எரிமலையாக இருந்துள்ளன. இத்தீவுகளில் உள்ள மிக உயரமான மலையாக அப்போ மலை விளங்குகின்றது. இது கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தில், மின்டனவு தீவில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் ஆழியில் உள்ள கலத்தியா ஆழமே இந்நாட்டின் மிக ஆழமான இடமாகவும், உலகின் மூன்றாவது ஆழமான இடமாகவும் உள்ளது. இந்த ஆழி பிலிப்பைன் கடலில் அமைந்துள்ளது. மிக நீளமான ஆறாக வடலூசோனில் அமைந்துள்ள ககயான் ஆறு விளங்குகின்றது. தலைநகரான மணிலா அமைந்துள்ள மணிலா விரிகுடா, பிலிப்பைன்சின் மிகப்பெரிய ஏரியாகிய லகுனா டி பே உடன் பாசிக் ஆற்றினால் இணைக்கப்பட்டுள்ளது. சபிக் விரிகுடா, டவாவோ வளைகுடா, மற்றும் மோரோ வளைகுடா ஆகியவை இங்குள்ள ஏனைய முக்கிய விரிகுடாக்கள் ஆகும். சமர் மற்றும் லெய்ட்டி தீவுகளை பிலிப்பைன்சிலிருந்து சான் யுவானிக்கோ நீரிணை பிரிக்கின்ற போதிலும் அதன் குறுக்காக அமைந்துள்ள சான் யுவானிக்கோ பாலத்தின் மூலம் இவை இணைக்கப்பட்டுள்ளன. பசுபிக் நெருப்பு வளையத்தின் மேற்கு எல்லைப்புறத்தின் மீது அமைந்துள்ளமையால் பிலிப்பைன்சில் அடிக்கடி பூமியதிர்ச்சி மற்றும் எரிமலை வெடிப்புக்கள் நிகழ்கின்றன. பிலிப்பைன்சிற்குக் கிழக்கில் பிலிப்பைன் கடலில் அமைந்துள்ள பென்ஹாம் மேட்டுநிலம் துரிதமாக நில அடுக்குகள் கீழ் அமிழும் கடலுக்கடியிலுள்ள பிரதேசமாகும். கிட்டத்தட்ட 20 நிலநடுக்கங்கள் தினமும் பதிவு செய்யப்படுகின்ற போதிலும் பெரும்பாலானவை வலுவற்றவை ஆகையால் அவை உணர முடியாதவையாக உள்ளன. 1990 லூசோன் பூகம்பமே இறுதியாக ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியாகும். மயோன் எரிமலை, பினாடுபோ மலை, மற்றும் தால் எரிமலை ஆகியவை இன்றும் செய்யற்பாட்டிலுள்ள எரிமலைகளாக உள்ளன. 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் ஏற்பட்ட பினாடுபோ மலையின் எரிமலை வெடிப்பே 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பெரிய, தரையில் எற்பட்ட எரிமலை வெடிப்பாக உள்ளது. இங்குள்ள அனைத்துக் குறிப்பிடத்தக்க புவியியல் அம்சங்களும் அழிவை சார்ந்தவையாக இல்லை. புவியியல் தொந்தரவுகளற்ற அமைதியான மரபுரிமைத் தலமாக புவேர்டோ பிரின்செசா எனப்படும் பூமிக்கு அடியிலுள்ள ஆறு விளங்குகின்றது. இப்பிரதேசம் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்கும் ஒரு வாழ்விடமாக இருக்கின்றது. மேலும் ஒரு முழுமையான மலை முதல் கடல் வரை பல்வேறுவகையான சூழலமைப்பைக் கொண்டுள்ளதுடன் ஆசியாவில் மிக முக்கியமான காடுகள் சிலவும் இங்கு அமைந்துள்ளன. இத்தீவுகளில் உள்ள எரிமலைத் தன்மை காரணமாக இங்கு கனிமப் படிமங்கள் ஏராளமாக உள்ளன. தென்னாபிரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக தங்கப் படிமங்கள் கிடைக்கும் இடமாக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன் உலகின் மிகப்பாரிய செப்புப் படிமங்கள் உள்ள இடமாகவும் உள்ளது. இங்கு நிக்கல், குறோமைட்டு மற்றும் துத்தநாகம் ஆகியவையும் பேரளவில் கிடைக்கின்றன. இவ்வாறு இருந்த போதிலும்கூட மோசமான நிர்வாகம், அதிக மக்கள் தொகை மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வின்மை ஆகிய காரணங்களால் இக்கனிம வளங்கள் பாரியளவில் தோண்டி எடுக்கப்படாத நிலையில் உள்ளன. பிலிப்பைன்சில் எரிமலைகளின் விளைபொருளாகிய புவிவெப்பச் சக்தியைப் பயனுள்ள வகையில் வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய புவிவெப்பச் சக்தி உற்பத்தியாளராக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன், 18% வீதமான நாட்டின் மின்சாரத் தேவைகள் புவிவெப்பச் சக்தியின் மூலம் பூர்த்திசெய்யப்படுகின்றது. பிலிப்பைன்சின் மழைக்காடுகளும் அதன் தொடர்ச்சியான கடலோரப் பகுதிகளும், பலவிதமான பறவைகள், தாவரங்கள், விலங்குகள், மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் என்பவற்றிற்கு வாழ்விடமாக உள்ளன. பிலிப்பைன்ஸ், மிகவும் உயிரியல் பன்முகத்தன்மை மிக்க முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளதுடன் ஓரலகுப் பகுதியில் அதிக உயிர்ப் பல்வகைமை உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில், 100 வகையான பாலூட்டிகளும் 170 வகையான பறவைகளும் உள்ளடங்கலாகக் கிட்டத்தட்ட 1,100 வகையான தரைவாழ் முள்ளந்தண்டுளிகள் பிலிப்பைன்சில் இனங்காணப்பட்டுள்ளன. பிலிப்பைன்சானது உலகிலேயே மிக உயர்ந்த விகிதத்தில் உயிரினங்களின் கண்டுபிடிப்பு நிகழும் நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கடந்த பத்து வருடங்களில் பதினாறு புதிய பாலூட்டி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பிலிப்பைன்சிற்கு உரித்தான உயிரினங்களின் விகிதம் உயர்ந்துள்ளதுடன் இதே போன்று மேலும் உயரக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. மலைப்பாம்பு மற்றும் நாகம் போன்ற பாம்புகள், உவர்நீர் முதலைகள், தேசியப் பறவையாக விளங்கும் பிலிப்பைன் கழுகு போன்ற இரைதேடியுண்ணும் பறவைகள் என்பவற்றைத் தவிர்த்துப் பிலிப்பைன்சில் பெரிய இரைதேடியுண்ணும் உயிரினங்கள் இல்லை. பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மிகப் பெரிய சிறைப்பிடிக்கப்பட்ட முதலையாக, உள்நாட்டில் லொலொங் என அழைக்கப்படும், தெற்குத் தீவாகிய மின்டனோவில் பிடிக்கப்பட்ட முதலை விளங்குகின்றது. ஏனைய பூர்வீக விலங்குகளில் போகொலில் உள்ள ஆசிய மரநாய், ஆவுளியா, பிலிப்பைன் டார்சியர் போன்றவயும் உள்ளடங்குகின்றன. இங்குள்ள கிட்டத்தட்ட 13,500 வகையான தாவரங்களுள், 3,200 வகைகள் இத்தீவுகளுக்கு மட்டும் உரித்தானவை. பல்வேறு அரிய வகையான ஆர்க்கிட் மற்றும் ரபிளீசியா என்பவை உள்ளடங்கலாகப் பல்வேறு தாவர வகைகள் பிலிப்பைன் மழைக்காடுகளில் உள்ளன. பிலிப்பைன்சின் கடற்பரப்பானது அளவில் சூழ்ந்திருப்பதுடன் தனித்துவம் மிக்க மற்றும் பல்வேறுபட்ட கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் இடமாகவும், பவள முக்கோணத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பவளப்பாறைகளின் மொத்த எண்ணிக்கை அண்ணளவாக 500 எனவும், கடல் மீன் இனங்களின் மொத்த எண்ணிக்கை அண்ணளவாக 2,400 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய பதிவுகள் மற்றும் இனங்களின் கண்டுபிடிப்புகள் என்பன தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுதல், பிலிப்பைன்சின் கடல் வளங்களின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. சுலு கடலிலுள்ள துபட்டஹா பவளப்பாறை 1993 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிலிப்பைன் நீர்நிலைகளும் முத்துக்கள், நண்டுகள், மற்றும் கடற் தாவரங்களின் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக உள்ளன. அடிக்கடி சட்டவிரோதமாக மரம் அறுப்பதன் விளைவாக ஏற்படும் காடழிப்பு, பிலிப்பைன்சில் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு, நாட்டின் மொத்த நிலப் பரப்பளவின் 70% ஆக இருந்த காடுகள், 1999 ஆம் ஆண்டு 18.3% ஆகக் குறைவடைந்துள்ளன. பல உயிரினங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், பிலிப்பைன்சும் ஒரு அங்கமாக உள்ள தென்கிழக்காசியா, 21 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் 20% ஆன பேரழிவு மிக்க அழிவு விகிதத்தை எதிர்கொள்ளும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கொன்சர்வேசன் இன்டர்னசனல் என்ற அமைப்பு பாரிய உயிர்ப்பல்வகைமை கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ள பிலிப்பைன்சை, உலகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் ஒரு வெப்பமண்டல கடற் காலநிலையைக் கொண்டுள்ளதுடன் இது வழக்கமாக வெப்பமாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் உள்ளது. இங்கு மூன்று வகையான காலநிலைகள் காணப்படுகின்றன. அவையாவன: உலர் வெப்பப் பருவகாலமாகிய "டக்-இனிட்" அல்லது "டக்-அரோ" எனப்படும் மார்ச் தொடங்கி மே வரை இடம்பெறும் கோடைக்காலம்; "டக்-உலான்" எனப்படும் சூன் தொடங்கி நவம்பர் வரை இடம்பெறும் மழைக்காலம்; "டக்-லமிக்" எனப்படும் டிசம்பர் தொடங்கி பெப்ரவரி வரை இடம்பெறும் உலர் குளிர்காலம் என்பனவாகும். மேயில் இருந்து அக்டோபர் வரை வீசும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று ஹபகட் என்றும், நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை வீசும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றாகிய உலர் காற்று அமிஹான் என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்பநிலை பொதுவாக முதல் ஆகக் காணப்படுவதுடன் இது பருவத்தைப் பொறுத்துக் குளிர்ந்ததாக அல்லது சூடானதாக மாறும். மிகக் குளிர்ந்த மாதமாக சனவரியும், மிக வெப்பமான மாதமாக மேயும் காணப்படுகின்றன. சராசரி வருடாந்த வெப்பநிலை கிட்டத்தட்ட ஆக உள்ளது. இங்கு வெப்பநிலையைக் கருத்தில் கொள்ளும்போது, அகலக்கோடு மற்றும் நெடுங்கோடு என்ற அடிப்படையில் இட அமைவு குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தும் காரணியாக் காணப்படவில்லை. நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, அல்லது மேற்குப் பகுதியில், கடல் மட்டத்தில் உள்ள வெப்பநிலை ஒரேயளவாக உள்ளது. ஆனால் அமைவிடத்தின் உயரம் வெப்பநிலையில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றது. கடல் மட்டத்திலிருந்து உயரத்திலுள்ள "பாகியோ" என்ற இடத்தின் சராசரி வருடாந்த வெப்பநிலை ஆகக் காணப்படுவதுடன், வெப்பம் மிகுந்த கோடை காலத்தில் இது ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது. பிலிப்பைன்ஸ் சூறாவளிப் பட்டையில் அமைந்துள்ளதால், சூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பெரும்பாலான தீவுகளில் வருடாந்தம் பருவ மழை மற்றும் இடி மின்னல் என்பன ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட பத்தொன்பது சூறாவளிகள் பிலிப்பைன்சிற்கு உரித்தான கடற் பிராந்தியத்தில் ஏற்படுவதுடன், அவற்றுள் எட்டு அல்லது ஒன்பது சூறாவளிகள் கரையை அடைகின்றன. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியானது மலைப்பாங்கான கிழக்கு கடற்கரை பகுதியில் கிட்டத்தட்ட ஆகவும், சில மழைமறைவுப் பள்ளத்தாக்குகளில் குறைவாக என்ற அளவிலும் உள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் தாக்கம் செலுத்திய மிகவும் ஈரப்பதன் மிகுந்த வெப்ப மண்டலச் சூறாவளியாக சூலை 1911 சூறாவளி விளங்குவதுடன் இதன்போது பாகியோவில் 24 மணித்தியால நேரத்தில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. "பக்யோ" என்பது வெப்பமண்டலச் சூறாவளிக்குப் பிலிப்பைன்சில் வழங்கப்படும் பெயராகும். 2014 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியான $289.686 பில்லியனுடன், பிலிப்பைன்சின் தேசியப் பொருளாதாரம் உலகின் 39 ஆவது பாரிய பொருளாதாரமாக உள்ளது. குறை கடத்திகளும் மின்னணுத் தயாரிப்புகளும், போக்குவரத்துக் கருவிகள், ஆடையணிகள், செப்புத் தயாரிப்புக்கள், பெட்ரோலியப் பொருட்கள், தேங்காய் எண்ணெய், மற்றும் பழங்கள் ஆகியவை முதன்மையான ஏற்றுமதிப் பொருட்களுக்குள் உள்ளடங்குகின்றன. அத்துடன் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, ஹொங்கொங், செருமனி, தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முதன்மையான வர்த்தகப் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நாட்டின் நாணய அலகாகப் பிலிப்பைன் பெசோ (₱ அல்லது PHP) விளங்குகின்றது. பிலிப்பைன்ஸ் ஒரு நடுத்தர சக்தி மிக்க நாடாகும். புதிதாகத் தொழில்மயமாக்கப்பட்ட நாடு என்ற வகையில் பிலிப்பைன்சின் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாகக் கொணட பொருளாதாரத்திலிருந்து சேவைகள் மற்றும் உற்பத்திகளை அடிப்படையாகக் கொணட பொருளாதாரமாக மாறிவருகின்றது. கிட்டத்தட்ட 40.813 மில்லியனாகவுள்ள நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 32% ஆனோர் விவசாய துறையில் இருக்கும் போதிலும், இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% ஆன பங்களிப்பையே வழங்குகின்றனர். தொழில் துறையில் இருக்கும் 14% ஆன தொழிலாளர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆன பங்களிப்பை வழங்குகின்றனர். இதேவேளை 47% ஆன சேவைத் துறையைச் சார்ந்தோர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56% ஆன பங்களிப்பை வழங்குகின்றனர். டிசம்பர் 14, 2014 இல் வேலைவாய்ப்பின்மை 6.0% ஆக உள்ளதுடன் 1.05 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் தேவைப்படுவதுடன், சூலை 2014 இல் 6.7% இருந்து தற்போது குறைவடைந்துள்ளது. இதேவேளை அடிப்படைத் தேவைகளுக்குக் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் மாதமளவில் பணவீக்க வீதம் 3.7% ஆக உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் மொத்த சர்வதேச இருப்புக்கள் $83.201 பில்லியனாக (அமெரிக்க டாலர்) உள்ளது. 2004 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 78% என உயர்வாக மதிப்பிடப்பட்டு அதிலிருந்து குறைவடைந்து மார்ச் 2014 இல் 38.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நாடு ஒரு நிகர இறக்குமதியாளராக உள்ள போதிலும் கடன் வழங்கும் நாடாகவும் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஒரு முறை இந்நாடு கிழக்கு ஆசியாவில் சப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக செல்வம் நிறைந்த நாடாகக் கருதப்பட்டது. எனினும், 1960 களில் மற்ற நாடுகளின் பொருளாதாரம் பிலிப்பைன்சின் பொருளாதாரத்தை விட முன்னேற்றமடையத் தொடங்கியது. பிலிப்பைன்சின் பொருளாதாரம், சனாதிபதி பெர்டினாண்ட் மார்கோசின் சர்வாதிகாரத்தின் கீழ், தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் தேக்கம் கண்டது. மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளியல் பின்னடைவு ஆகிய காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் தேக்கநிலைக்கு போனது. 1990 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் திட்டத்திற்கு பின்னரே பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்பட்டது. 1997 ஆசிய நிதி நெருக்கடி பொருளாதாரத்தைப் பாதித்ததனால் பெசோவின் மதிப்பு நீடித்த சரிவைக் கண்டதுடன் பங்கு சந்தையும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் பிலிப்பைன்சின் சில ஆசிய அண்டை நாடுகள் பாதிக்கப்பட்ட அளவிற்கு அது ஆரம்பத்தில் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. இந்நிலை அரசாங்கத்தின் நிதித்துறைப் பழமைவாதத்தின் காரணத்தினாலும், பல தசாப்தங்களாக இருந்த கண்காணிப்பு மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி மேற்பார்வை என்பவற்றின் விளைவாகவும் ஏற்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சியின் விரைவான முடுக்கம் அதன் அண்டை நாடுகளின் பாரியளவு செலவினங்களுடன் ஒப்பிடுகையில் நன்னிலையில் உள்ளது. அதிலிருந்து முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருந்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% வளர்ச்சி கண்டுள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு 7.1% ஆக வளர்ச்சியடைந்தது, இதுவே மூன்று தசாப்தங்களில் வேகமான வளர்ச்சி ஆகும். 1966–2007 காலகட்டத்தில் தனிநபர் சராசரி வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.45% ஆக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தினை ஒரு முழுப் பிரதேசமாகக் கருதும் போது அது 5.96% ஆக உள்ளது. பிலிப்பைன்ஸ் மக்கள்தொகையில் 45% ஆனோரின் நாளாந்த வருமானம் $2 (அமெரிக்க டாலர்) இலும் குறைவாகவே உள்ளது. பிலிப்பைன்சிற்கு ஏனைய முரண்பாடுகள் மற்றும் சவால்கள் இப்போதும் இருந்து வருகின்றன. இதன் பொருளாதாரம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை வெளிநாட்டு நாணய மூலமாகப் பரிமாறும் பணம் அனுப்புதலிலேயே பெரிதும் சார்ந்துள்ளது. பணம் அனுப்புதல் மூலம் 2010 இல் 10.4% மற்றும் 2012 இல் 8.6% தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறப்பட்டுள்ளது. இங்கு பிராந்திய வளர்ச்சி சமநிலையற்றதாக உள்ளது. லுசான் மற்றும் மணிலா பெருநகருக்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான வேறுபாடு இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஏனைய பகுதிகளின் செலவில் பெரும்பாலான புதிய பொருளாதார வளர்ச்சியை மணிலா பெருநகரே பெற்றுக்கொள்கின்றது. என்றாலும் அரசாங்கம் நாட்டின் பிற பகுதிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், சுற்றுலாத்துறை மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் போன்ற சேவைத் தொழில்கள், நாட்டின் வளர்ச்சிக்குச் சிறந்த வாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. அடுத்த பதினொரு பொருளாதாரங்களுள் பிலிப்பைன்சையும் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளடக்கியுள்ளது. ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகியவை முக்கிய பொருளாதாரப் போட்டியாளர்களாக எழுச்சிபெற்றுள்ளன. 2050 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்ஸ் உலகின் 14 ஆவது பாரிய பொருளாதாரமாக உருவெடுக்குமென கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பிட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்சின் பொருளாதாரம் உலகின் 16 ஆவது பாரிய பொருளாதாரமாகவும், ஆசியாவின் 5 ஆவது பாரிய பொருளாதாரமாகவும், தென்கிழக்காசியாவின் மிகப் பாரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்குமென ஏச்.எஸ்.பி.சி யும் கணக்கிட்டுள்ளது. உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு (WTO), பிலிப்பைன்சின் நகரான மன்டலுயொங்கைத் தலைமையகமாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி, கொழும்புத் திட்டம், ஜி-77, மற்றும் ஜி-24 ஆகிய ஏனைய குழுக்கள் மற்றும் நிறுவனங்களில் பிலிப்பைன்ஸ் அங்கத்துவம் வகிக்கின்றது. பிலிப்பைன்சில் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஒப்பீட்டளவில் வளர்ச்சி குன்றியதாகக் காணப்படுகின்றது. இந்நிலை மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் சிதறிய புவியியல் அமைப்பைக் கொண்ட தீவுகளின் காரணமாக ஏற்பட்டுள்ள போதிலும், உட்கட்டமைபின் வளர்ச்சியில் அரசாங்கம் குறைவாக முதலீடு செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 2013 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செலவிடப்பட்டதுடன் இது மிகவும் குறைந்த அளவாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக, நீளமான வீதிகள் நாட்டில் உள்ள போதிலும் இவற்றுள் 25.56% ஆனவையே செப்பனிடப்பட்டுள்ளன. பெனிக்னோ அக்கீனோ III இன் கீழான தற்போதைய நிர்வாகம் பல்வேறு திட்டங்களின் ஊடாக நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்புக்களை மேம்படுத்த முனைகின்றது. இருப்பினும், குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் பயணம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. பிரதான நகரங்களிலும் பட்டணங்களிலும் பேருந்துகள், ஜீப்னிகள், வாடகை வண்டிகள், மற்றும் மோட்டார் இணைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் எனப் பல போக்குவரத்து முறைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. 2007 இல், 5.53 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் காணப்பட்டதுடன், பதிவுகள் வருடாந்தம் 4.55% இனால் அதிகரித்துச் செல்கின்றன. பிலிப்பைன்சில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல வான் வழிப் பயணம் முக்கியமான ஒரு தேர்வாக உள்ளது. பிலிப்பைன்சின் பொது வானூர்தி போக்குவரத்து ஆணையமானது வானூர்தி நிலையங்களை முகாமை செய்வதுடன், பாதுகாப்பான வான் பயணம் தொடர்பான கொள்கைகளைச் செயற்படுத்துகின்றது. 85 வானூர்தி நிலையங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. கிளார்க் சர்வதேச வானூர்தி நிலையத்துடன் நினோய் அக்கினோ சர்வதேச வானூர்தி நிலையம் (NAIA) மணிலா பெருநகரப் பகுதியில் சேவை செய்கின்றது. பிலிப்பைன் ஏர்லைன்ஸ், ஆசியாவிலுள்ள தற்போதும் உண்மையான பெயரில் இயங்கிவரும் மிகவும் பழமையான வணிக வானூர்தி நிறுவனமாக உள்ளதுடன், குறைந்த விலையில் சேவை வழங்கும் முன்னணி வானூர்தி நிறுவனமாக செபு பசுபிக் விளங்குகின்றது. இவ்விரு வானூர்தி சேவைகளுமே உள்ளூர் மற்றும் சர்வதேச பயணங்களுக்குச் சேவையாற்றும் முதன்மையான வானூர்தி சேவைகளாக விளங்குகின்றன. டிசம்பர் 2007 அளவில் பிலிப்பைன்சின் வீதிகளும் நெடுஞ்சாலைகளும் தேசிய மற்றும் மாகாண நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைகள், இரண்டாம் தர மற்றும் நகரசபை வீதிகள் என நீளமான வீதிகளை உள்ளடக்கியிருந்தன. நெடுஞ்சாலைகளும் அதிவேக நெடுஞ்சாலைகளும் அதிகமாக லூசோன் தீவுகளில் உள்ளன. இங்கு லூசோன், சமர், லெய்டே, மற்றும் மின்டனவுவை இணைக்கும் ஆசிய நெடுஞ்சாலை 26, வட லூசோன் அதிவேக நெடுஞ்சாலை, தென் லூசோன் அதிவேக நெடுஞ்சாலை, மற்றும் சுபிக்–கிளார்க்–டார்லக் அதிவேக நெடுஞ்சாலை என்பன அமைந்துள்ளன. பிலிப்பைன்சின் புகையிரதப் போக்குவரத்து, பயணிகள் மற்றும் சரக்குகளைப் முதன்மையான நகரங்களுக்கிடையில் பரிமாறவும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் மிக முக்கியமானதாக விளங்குகின்றது. பிலிப்பைன்சின் புகையிரத வலையமைப்பு, மணிலா பெருநகரப் பிராந்தியத்தில் சேவையாற்றும் மணிலா சிறிய புகையிரதப் போக்குவரத்து அமைப்பு (LRT-1 மற்றும் LRT-2) மற்றும் மணிலா மெட்ரோ புகையிரதப் போக்குவரத்து அமைப்பு (MRT-3), லூசோன் தீவுகளில் சேவையாற்றும் பிலிப்பைன் தேசிய புகையிரத சேவை (PNR), பனய் தீவுகளீல் முன்னர் சேவையாற்றித் தற்போது செயற்படாமல் இருக்கும் பனய் புகையிரத சேவை என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் முழுமையான தானியங்கிப் புகையிரதமான தானியக்க வழிகாட்டிப் போக்குவரத்து, நீண்ட இரு வகையில் அமைக்கப்படும் பேருந்தான கலப்பின மின்சார சாலைப் புகையிரதம், மற்றும் முழு அளவிலான பயணிகள் புகையிரதம் என மூன்று வகையான புகையிரத அமைப்புக்கள் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. தீவுக் கூட்டமென்ற வகையில், தீவுகளுக்கிடையிலான படகுகள் முலமான போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. மணிலா, செபு, இலொய்லோ, டவாவோ, ககயன் டி ஒரோ, மற்றும் சம்பொவங்கா ஆகியன மும்முரமான துறைமுகங்களாக விளங்குகின்றன. பயணிகள் கலத்தின் ஊடாக பல்வேறு நகரங்களையும் பட்டணங்களையும் இணைக்கும் 2கோ டிரவல் மற்றும் சல்பிசியோ லைன்சு ஆகியன மணிலாவில் சேவை புரிகின்றன. 17 நகரங்களை உள்ளடக்கிய நெடுஞ்சாலைப் பிரிவுகள் மற்றும் படகுப் பாதைகள் ஒருங்கிணைக்கப்பட்ட நீளமான வலுவான குடியரசு கடல் நெடுஞ்சாலை (SRNH) 2003 இல் நிறுவப்பட்டது. பசிக் ஆற்றின் படகுச்சேவை, பசிக் ஆற்றையும் மரிகினா ஆற்றையும் உள்ளடக்கி, மணிலா, மகட்டி, மண்டலுயொங், பசிக் மற்றும் மரிகினா போன்ற இடங்களில் தரிப்பிடங்களைக் கொண்டு, பெருநகரின் முதன்மையான ஆறுகளில் செவை புரிகின்றது. பிலிப்பைன்ஸ் அறிவியலிலும் தொழினுட்பத்திலும் முன்னேற்றமடையப் பல்வேறு முயற்சிகளைப் பின்பற்றுகின்றது. பிலிப்பைன்சில் அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான திட்டங்களின் ஒருங்கிணைப்புத் தொடர்பான வளர்ச்சிக்குப் பொறுப்பான நிறுவனமாக அறிவியல் மற்றும் தொழினுட்பத் திணைக்களம் விளங்குகின்றது. பிலிப்பைன்சில் அறிவியலின் பல்வேறு துறைகளில் பங்களித்தவர்களுக்கு பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளர் விருது வழங்கப்படுகின்றது. கல்மன்சி நிப், சொயாலக் மற்றும் வாழைப்பழ கெட்சப் போன்ற முறைப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் புகழடைந்த உணவுத் தொழினுட்ப வல்லுனரான மரியா ஒரோசா, எட்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து குழந்தை மருத்துவத்தில் முன்னோடியாகச் செயற்பட்ட துடிப்பான குழந்தை மருத்துவரான பே டெல் முண்டோ, அணுக்கரு மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை வழங்கியதால் ""பிலிப்பைன்சின் அணுக்கரு மருத்துவத்தின் தந்தை"" என அழைக்கப்பட்ட மருத்துவரான பவுலோ கம்போஸ், மா மரங்களில் மேலும் மலர்களை உருவாக்குவதற்கான முறையைக் கண்டுபிடித்ததற்காகப் புகழடைந்த கண்டுபிடிப்பாளரும் தோட்டக்கலை நிபுணருமான ரமொன் பர்பா போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பிலிப்பினோ அறிவியலாளர்களாக விளங்குகின்றனர். சூலை 1996 இல், மபுகே பிலிப்பைன்ஸ் செயற்கைக்கோள் கூட்டமைப்பிற்குச் சொந்தமான, நாட்டின் முதலாவது செயற்கைக்கோளான பலபா பி-2பி (Palapa B-2P) ஏவப்பட்டு ஆகஸ்ட் 1, 1996 இல் ஒரு புதிய சுற்றுவட்டப் பாதையை நோக்கி நகர்த்தப்பட்டதுடன் மபுகே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2016 அளவில் நாட்டின் முதலாவது நுண் செயற்கைக்கோளை ஏவுவதற்கான திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழினுட்பத் திணைக்களத்தால் சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. 1960 இல் நிறுவப்பட்ட, லொஸ் பனோஸ், லகுணாவில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு சர்வதேச சுயாதீன ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளடங்கலாகப் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இந்நிறுவனம் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உதவவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், புதிய நெல் இனங்கள் மற்றும் நெற்பயிர் முகாமைத்துவ நுட்பங்கள் தொடர்பான வளர்ச்சிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ், அதிநவீன கைப்பேசித் தொழிற்சாலையையும் மிகவும் அதிகமான பாவனையாளர்களையும் கொண்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்புதலானது ஒரு பிரபலமான தொடர்பாடல் வடிவமாகக் காணப்படுவதுடன், 2007 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தினமும் சராசரியாக ஒரு பில்லியன் குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டன. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கைப்பேசிப் பாவனையாளரகள் தமது கைப்பேசிகளை பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இதன் காரணமாகப் பிலிப்பைன்ஸ், நிதி பரிவர்த்தனைகளை கைப்பேசி வலையமைப்பினூடாக வழங்குவதில் வளரும் நாடுகளின் மத்தியில் முன்னணியில் உள்ளது. பி.எல்.டி.ரி (PLDT) என அழைக்கப்படும் பிலிப்பைன் தொலை தூர தொலைபேசி நிறுவனம் முன்னணி தகவற் தொடர்பாடற் சேவை வழங்குனராக விளங்குகின்றது. இதுவே இந்நாட்டிலுள்ள பாரிய நிறுவனமாகவும் விளங்குகின்றது. நாடெங்கிலுமுள்ள அனைத்துத் தொலைத்தொடர்பு சேவைகளின் மேற்பார்வை, வழக்குத்தீர்ப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பான நிறுவனமாகத் தேசியத் தொலைத்தொடர்பு ஆணையம் விளங்குகின்றது. பிலிப்பைன்சில் அண்ணளவாக 383 ஏ.எம் மற்றும் 659 எப்.எம் (பண்பலை) வானொலி நிலையங்களும், 297 தொலைக்காட்சி மற்றும் 873 கம்பி வட தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. மார்ச் 29, 1994 இல் நாட்டின் இணையம் பி.எல்.டி.ரி (PLDT) ஆல் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட திசைவியின் உதவியுடனும் 64 கிலோபிட்/நொடி இணைப்பின் வழியாகக் கலிபோர்னியா வேகத்தொடர்பாடல் திசைவியுடனும் நேரலையாக்கப்பட்டது. பிலிப்பைன்சில் இணைய ஊடுருவல்கள் அண்ணளவாகக் குறைந்தது 2.5 மில்லியனில் இருந்து கூடியது 24 மில்லியன் மக்கள் வரை பரவலாகக் காணப்படுகின்றது. சமூக வலைத்தளப் பாவனையும் காணொளிகளைப் பார்வையிடலும் அடிக்கடி இடம்பெறும் இணைய நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன. போக்குவரத்தும் சுற்றுலாத்துறையும் பிலிப்பைன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1% பங்களிப்பதுடன், பொருளாதாரத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகவும் உள்ளன. 2013 இல் மொத்த வேலைவாய்ப்பில் 3.2 சதவீதமான 1,226,500 வேலைவாய்ப்புக்கள் இத்துறையின் மூலம் கிடைக்கின்றன. சுற்றுலாத்துறை 2013 இல் $4.8 (அமெரிக்க டாலர்) பில்லியனாக வளர்ந்துள்ளது. 2,433,428 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் 2014 சனவரியிலிருந்து சூன் வரை வருகை தந்துள்ளதுடன், இவ்வெண்ணிக்கை 2013 இல் இதே காலப்பகுதியில் இருந்ததைவிட 2.22% அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தென் கொரியா, சீனா, மற்றும் சப்பானிலிருந்து 58.78% ஆகவும், அமெரிக்காவிலிருந்து 19.28% ஆகவும், ஐரோப்பாவிலிருந்து 10.64% ஆகவும் உள்ளது. சுற்றுலாத்துறைத் திணைக்களம் சுற்றுலாத்துறையின் முகாமைத்துவத்திற்கும் மேம்பாட்டிற்கும் பொறுப்பான ஆளுகைக் குழுவாக விளங்குகின்றது. சனவரி 6, 2012 இல் சுற்றுலாத்துறைத் திணைக்களத்தின் "பிலிப்பைன்சில் மேலும் கேளிக்கைகள் உள்ளன" (It's More Fun in the Philippines) என்ற புதிய முழக்கம் ("சுலோகம்") பெயரிடப்பட்டது. வார்க் 100 இன் படி இம்முழக்கம் சிறந்த சந்தைப்படுத்தல் பரப்புரைகளில் உலகின் மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டது. 7,107 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் என்ற வகையில், பிலிப்பைன்ஸ் பல்வேறு கடற்கரைகள், குகைகள், மற்றும் பாறை அமைப்புக்களைக் கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களுள், 2012 இல் டிரவல் + லெசர் (Travel + Leisure) சஞ்சிகையால் சிறந்த தீவாகப் பெயரிடப்பட்ட பொரகாயில் உள்ள வெள்ளை மணல் கடற்கரை, மணிலாவில் அமைந்துள்ள எஸ் எம் மால் ஒஃப் ஆசியா, விழாக்கால பெரும் வளாகம்("பெஸ்டிவல் சுப்பர்மால்") உள்ளிட்ட வணிகக்கடை வளாகங்கள், இபுகாவோவிலுள்ள பனவுவே நெல் விளைநிலம், விகனிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய நகரம், பொகோலிலுள்ள சாக்கலேட் குன்றுகள், செபுவிலுள்ள மகலனின் சிலுவை, விசயாசிலுள்ள துப்பட்டகா பவளப்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள ஏனைய இடங்களும் உள்ளடங்குகின்றன. 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்சில் மக்கள்தொகை அண்ணளவாக 28 மில்லியனால் அதிகரித்துள்ளது, இது 45% வளர்ச்சியாகும். பிலிப்பைன்சின் முதலாவது அலுவல்முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1877 இல் இடம்பெற்றதுடன் மக்கள்தொகை 5,567,685 ஆகப் பதிவாகியது. 2013 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் 100 மில்லியன் மக்கள்தொகையுடன், உலகின் 12 ஆவது மக்கள்தொகை கூடிய நாடாகவும் உள்ளது. கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சின் அரைவாசி மக்கள் லூசோன் தீவிலேயே வாழ்கின்றனர். 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரை 3.21% ஆகக் காணப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1.95% ஆகக் குறைவடைந்தமை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. மக்கள்தொகையின் சராசரி வயது 22.7 வருடங்களாக உள்ளதுடன் 60.9% ஆனோர் 15 இற்கும் 64 இற்கும் இடைப்பட்ட வயதினராகக் காணப்படுகின்றனர். பிறப்பின் பொது ஆயுள் எதிர்பார்ப்பு 71.94 வருடங்களாக உள்ளதுடன், பெண்களுக்கு 75.03 வருடங்களாகவும் ஆண்களுக்கு 68.99 வருடங்களாகவும் உள்ளது. கிட்டத்தட்ட 12 மில்லியன் பிலிப்பினோக்கள் பிலிப்பைன்சிற்கு வெளியில் வாழ்கின்றனர். 1965 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் குடியேற்ற சட்டங்கள் தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பினோ வம்சாவழியைக் கொண்ட அமெரிக்க மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 12 மில்லியன் பிலிப்பினோக்கள் கடல்கடந்த நாடுகளில் வாழ்கின்றனர். அலுவல்முறையான கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சின் மக்கள்தொகை சூலை 27, 2014 இல் 100 மில்லியனை எட்டியதுடன், இவ்வெண்ணிகையை அடைந்த 12 ஆவது நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது. மணிலா பெருநகரப் பகுதியே பிலிப்பைன்சிலுள்ள 12 வரையறுக்கப்பட்ட பெருநகரப்பகுதிகளில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாக உள்ளதுடன் உலக அளவில் 11 ஆவது அதிக மக்கள் தொகையைக் கொண்டதாக விளங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 11,553,427 ஆகக் காணப்பட்டதுடன், தேசிய மக்கள்தொகையில் 13% ஐ உள்ளடக்கியிருந்தது. மணிலா பெருநகரப் பகுதியின் புறநகரப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் மணிலாவுக்கு அடுத்துள்ள மாகாணங்களின் (புலக்கன், கவிட்டே, இலகுணா, மற்றும் றிசால்) பகுதிகளையும் உள்ளடக்கும்போது மக்கள் தொகை கிட்டத்தட்ட 21 மில்லியனாகக் காணப்படுகின்றது. மணிலா பெருநகரப் பிராந்தியத்தின் மொத்தப் பிராந்திய உற்பத்தி சூலை 2009 கணக்கெடுப்பின்படி ₱468.4 பில்லியனாக (நிலையான 1985 ஆம் ஆண்டு விலையில்) இருந்ததுடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33% ஆகவும் காணப்பட்டது. 2011 இல் மணிலா பெருநகரப் பகுதி உலகளவில் 28 ஆவது செல்வம் நிறைந்த நகர்புறக் குழுமமாகவும், தென்கிழக்காசியாவில் 2 ஆவதாகவும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் (PricewaterhouseCoopers) என்ற பன்னாட்டு தொழில்முறை சேவைகள் வலையமைப்பினால் தரப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 28.1% பிலிப்பினோக்கள் தகலாகு இனத்தவர்களாகவும், 13.1% செபுவானோ, 9% இலொகானோ, 7.6% பிசயா/பினிசயா, 7.5% ஹிலிகய்னொன், 6% பிகோல், 3.4% வராய், மற்றும் 25.3% ஏனையவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்த ஏனையவர்களுக்குள் மோரோ, கபம்பங்கன், பங்கசினென்ஸ், இபனக், மற்றும் இவட்டன் போன்ற பழங்குடி அல்லாத குழுக்கள் உள்ளடங்குகின்றன. இகொரொட், லுமட், மங்யன், பஜவு, மற்றும் பாலவான் பழங்குடியினர் போன்ற பழங்குடி மக்களும் ஏட்டா மற்றும் அட்டி போன்ற நெகிரிட்டோக்களும் இத்தீவுகளில் தொன்று தொட்டு வாழும் குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். பிலிப்பினோக்கள் பொதுவாக ஆஸ்திரோனேசிய அல்லது மலாய-பொலினீசிய மொழி பேசுபவர்கள் என்பவர்களுள் ஒரு பகுதியாக மொழிரீதியாகவும் இனவழியாக சில ஆசிய குழுக்களுக்களை சார்ந்தவர்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரோனேசிய மொழி பேசும் தாய்வான் பழங்குடியினர் தாய்வானிலிருந்து பிலிப்பைன்சிற்கு இடம்பெயர்ந்த போது விவசாயம் மற்றும் சமுத்திரப் பயணம் தொடர்பான அறிவை இங்கு கொண்டுவந்ததுடன், இறுதியில் முன்னர் இத்தீவுகளில் வசித்துவந்த நெகிரிட்டோ குழுக்களை இடம்பெயரச்செய்தனர் என நம்பப்படுகின்றது. மிகவும் முக்கியமான இரு பழங்குடியினர் அல்லாத இடம்பெயர்ந்தவர்களுக்குள் சீனர்களும் எசுப்பானியர்களும் உள்ளடங்குகின்றனர். பெரும்பாலும் 1898 ஆம் ஆண்டின் பின்னர் புஜியன்-சீனாவிலிருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களான சீனப் பிலிப்பினோக்கள் 2 மில்லியனாகக் காணப்படுவதுடன், 18 மில்லியன் பிலிப்பினோக்கள் பகுதியான சீன வழித்தோன்றலை உடையவர்களாக, முன்காலனித்துவ சீனப் புலம்பெயர்ந்தோரில் இருந்து கிளைத்தெழுந்தவர்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளனர். குழுக்களுக்கிடையிலான கலப்புத் திருமணம் பிரதான நகரங்களிலும், நகர்ப்புற பகுதிகளிலும் தெளிவாகத் தெரிகின்றது. லூசோனின் மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கினரும், விசயாஸ் மற்றும் மின்டானோவின் நகரான சம்பொவாங்காவிலுள்ள சில பழங்குடியேற்றத்தினரும் ஹிஸ்பானிய வம்சாவளியைக் (லத்தீன் அமெரிக்கா மற்றும் எசுப்பானியா வரையிலான பல்வேறு இடங்களில் தோற்றம் பெற்றவர்கள்) கொண்டுள்ளனர். இவ்வாறான கலப்பு தம்பதியினரின் வழிவந்தோர் மெஸ்ரிசொஸ் என அழைக்கப்படுகின்றனர். 175 தனிப்பட்ட மொழிகள் பிலிப்பைன்சை சார்ந்தவை என எத்னோலொக் பட்டியலிடுகின்றது. இவற்றுள் 171 மொழிகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளதுடன், ஏனைய நான்கு மொழிகளைப் பேசுவோர் தற்போது இல்லாததால் அவை பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தேசிய மொழிகள், ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தின் அங்கமாக உள்ள மலாய-பொலினீசிய மொழிகளின் ஒரு கிளையான பிலிப்பைன் மொழியின் பகுதியாக விளங்குகின்றன. பிலிப்பைன்சிலுள்ள, ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தினுள் அடங்காத, பிலிம்பைன்சுக்கு உரிய மொழியாக எசுப்பானிய அடிப்படை கிரியோலான சவகான மொழி விளங்குகின்றது. பிலிப்பினோ மற்றும் ஆங்கிலம் ஆகியவை பிலிப்பைன்சின் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன. பிலிப்பினோ மொழியானது தகலாகு மொழியின் தரப்படுத்தப்பட்ட பதிப்பாக உள்ளதுடன், மணிலா பெருநகர்ப் பகுதி மற்றும் ஏனைய நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமாகப் பேசப்படுகின்றது. பிலிப்பினோ மற்றும் ஆங்கில மொழிகள் அரசாங்கம், கல்வி, அச்சு ஊடகம், ஒலிபரப்பு ஊடகங்கள், மற்றும் வணிக நடவடிக்கைகள் என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. எசுப்பானிய மற்றும் அராபிய மொழிகள் ஒரு தன்னார்வ மற்றும் விருப்ப அடிப்படையில் முதன்மை மொழிகளாக உயர்த்தப்படலாம் என அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது. அக்லனொன், பிகோல், செபுவானோ, சவகானோ, ஹிலிகய்னொன், இபனக், இலோகானோ, இவட்டன், கபம்பங்கன், கினரய்-அ, மகுவின்டனவு, மரனவு, பங்கசீனன், சம்பல், சுரிகவுனொன், தகலாகு, தவுசக், வரே-வரே, மற்றும் யகன் ஆகிய பத்தொன்பது பிராந்திய மொழிகள் துணை அலுவல்முறை மொழிகளாகச் செயற்படுவதுடன் அறிவுறுத்தல் ஊடகங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய பழங்குடி மொழிகளான குயொனொன், இபுகவு, இட்பயாட், கலிங்கா, கமயோ, கன்கனேய், மஸ்படெனோ, ரொம்பிளொமனொன் மற்றும் சில விசயன் மொழிகள் தத்தமது மாகாணங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. எசுப்பானியாவிலிருந்து (மெக்சிகன் மற்றும் பெருவியன் திரிபு) பிறந்த ஒரு கிரியோல் மொழியான சவகான மொழி கவிட்டே மற்றும் சம்பொவாங்கா போன்ற இடங்களில் பேசப்படுகின்றது. இத்தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டிராத மொழிகளும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன. சீனப் பிலிப்பினோ சமூகத்தின் சீனப் பாடசாலைகளில் மாண்டரின் பயன்படுத்தப்படுகின்றது. மின்டனவுவிலுள்ள இசுலாமியப் பாடசாலைகள் பாடத்திட்டத்தில் அரபு மொழியை உள்ளடக்கிக் கற்பிக்கின்றன. வெளிநாட்டு மொழியியல் நிறுவனங்களின் உதவியுடன் பிரான்சியம், செருமானியம், சப்பானியம், கொரியன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. 2013 இல் கல்வித் திணைக்களம் மலாயு மொழிகளான இந்தோனேசிய மற்றும் மலேசிய மொழிகளைக் கற்பிக்க ஆரம்பித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தேவாலயம் மற்றும் அரசு என அரசியலமைப்புப் பிரிப்பினைக் கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடாகும். எசுப்பானியப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவாகப் பிலிப்பைன்ஸ், ஆசியாவிலுள்ள இரு பெரும்பான்மையான உரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இன்னோரு நாடாக முன்னாள் போர்த்துக்கேயக் காலனித்துவ நாடான கிழக்குத் திமோர் விளங்குகின்றது. 90% இற்கும் மேலதிகமான மக்கள் கிறித்தவர்களாக உள்ளனர். இவர்களுள் 80.6% ஆனோர் உரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தைச் சார்ந்தவர்களாகவும், 9.5% ஆனோர் சீர்திருத்தத் திருச்சபையின் பிரிவுகளான இக்லேசியா நி கிரிசுட்டோ, பிலிப்பைன் சுதந்திரத் திருச்சபை, பிலிப்பைன்சின் கிறித்தவ ஐக்கிய திருச்சபை மற்றும் யெகோவாவின் சாட்சிகள் போன்றவற்றை பின்பற்றுகின்றனர். முசுலிம் பிலிப்பினோக்களின் தேசிய ஆணையத்தின் (NCMF) படி 2012 இல் முசுலிம்கள் மக்கள்தொகையில் 11% ஐ உள்ளடக்கியவர்களாகக் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பான்மையானோர் மின்டானவுவின் பகுதிகள், பலாவன் மற்றும் பங்சமோரோ அல்லது மோரோ பிராந்தியம் எனப்படும் சுலு தீவுக்கூட்டம் ஆகிய பிராந்தியங்களில் வசிக்கின்றனர். இவர்களுள் சிலர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வந்து குடியேறியுள்ளனர். ஷாபி பாடசாலையின்படி பெரும்பாலான முசுலிம் பிலிப்பினோக்கள் சுன்னி இசுலாமை பின்பற்றுகின்றனர். அகமதியா முசுலிம்களும் இங்கு வசிக்கின்றனர். பிலிப்பைன்சின் பாரம்பரியச் சமயங்கள் தற்போதும் பூர்விக மற்றும் பழங்குடிக் குழுக்கள் போன்ற 2% ஆன மக்கள்தொகையினரால் பின்பற்றப்படுகின்றன. இந்தச் சமயங்கள் கிறித்தவ மற்றும் இசுலாமிய சமயங்களுடன் இணங்கிச் செல்கின்றன. ஆன்ம வாதம், நாட்டுப்புற மதம் மற்றும் சூனிய நம்பிக்கை ஆகியவை முதன்மை சமயங்களின் அடிப்படையாக "அல்புலார்யோ", "பபய்லான்", மற்றும் "மங்கிகிலொட்" என்பவற்றினூடாகத் தற்போது காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள்தொகையில் 1% மக்கள் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். அத்தோடு சீன சமூகங்களில் தாவோயியம் மற்றும் சீன நாட்டுப்புற சமயம் என்பன பிரதானமாகக் காணப்படுகின்றன. இந்து சமயம், சீக்கியம், யூத சமயம் மற்றும் பகாய் சமயம் போன்றவற்றை சிறு எண்ணிக்கையான மக்கள் பின்பற்றுகின்றனர். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 1% முதல் 11% வரையானோர் எந்தச் சமயத்தையும் சாராதவர்களாக உள்ளனர். 2008 ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் சாதாரண எழுத்தறிவு வீதம் 95.6% ஆகவும் இதில் ஆண்களுக்கு 95.1% ஆகவும் பெண்களுக்கு 96.1% ஆகவும் காணப்பட்டதுடன் பிலிப்பைன்சின் செயற்பாட்டு எழுத்தறிவு வீதம் 86.45% ஆகவும் இதில் ஆண்களுக்கு 84.2% ஆகவும் பெண்களுக்கு 88.7% ஆகவும் காணப்பட்டது. பெண்களின் எழுத்தறிவு வீதம் ஆண்களைவிட அதிகமாகக் காணப்படுகின்றது. முன்மொழியப்பட்ட 2015 ஆம் ஆண்டுதேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 16.11% செலவிடப்படுகின்றது. உயர் கல்வி ஆணையகம் (CHED) பிலிப்பைன்சில் 2,180 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளதாகப் பட்டியலிடுவதுடன், இவற்றுள் 607 பொது உயர் கல்வி நிறுவனங்களாகவும் 1,573 தனியார் உயர் கல்வி நிறுவனங்களாகவும் விளங்குகின்றன. வகுப்புக்கள் சூன் மாதத்தில் ஆரம்பித்து மார்ச்சு மாதத்தில் முடிவடைகின்றன. பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சூன் முதல் ஒக்டோபர் வரை மற்றும் நவம்பர் முதல் மார்ச்சு வரையெனக் காணப்படும் கல்வியாண்டு நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன. கற்கை நெறிகளைக் கொண்ட பல வெளிநாட்டுப் பாடசாலைகளும் இங்கு காணப்படுகின்றன. குடியரசுச் சட்டம் எண். 9155 பிலிப்பைன்சின் அடிப்படைக் கல்வி பற்றிய கட்டமைப்பைக் குறிப்பிடுவதுடன் 6-வருடம் ஆரம்பக் கல்வியையும் 4-வருடம் உயர் கல்வியையும் கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் திருத்தியமைக்கப்பட்ட குடியரசுச் சட்டம் எண். 10533 அல்லது மே 15, 2013 இல் கைச்சாத்திடப்பட்ட 2013 இன் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்விச் சட்டம் (பொதுவாக K-12 சட்டம் எனப்படுகின்றது) என்பன நாட்டின் அடிப்படைக் கல்வி அமைப்பில் இரண்டு வருடங்களை மேலதிகமாக இணைக்கின்றன. பல அரசாங்க துறைகள் கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கல்வித் திணைக்களம் ஆரம்ப, இடைநிலை மற்றும் முறைசாராக் கல்வி என்பவற்றைக் கையாள்கின்றது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகார சபை (TESDA) பிந்தைய இரண்டாம் இடைநிலைக் கல்விப் பயிற்சி மற்றும் அபிவிருத்தியை நிர்வகிக்கின்றது. உயர் கல்வி ஆணையகம் (CHED) கல்லூரி, பட்டதாரிக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பட்டப்படிப்பு என்பவற்றை மேற்பார்வை செய்வதுடன், உயர் கல்வியின் தரத்தினை ஒழுங்குபடுத்துகின்றது. 2004 ஆம் ஆண்டு மதராசா கல்வி நிறுவனங்கள் நாடளாவியரீதியில் முதன்மையாக மின்டனவுவிலுள்ள முசுலிம் பிராந்தியங்கள் உள்ளடங்கலாக 16 பிராந்தியங்களில் கல்வித் திணைக்களத்தின் ஆதரவுடனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் செயற்படுகின்றன. பொதுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மதச்சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுவதுடன், பொதுத்துறை பல்கலைக்கழகம் (SUC) அல்லது உள்ளூர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் (LCU) என மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்சின் தேசியப் பல்கலைக்கழகமாகப் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு பெரும்பாலும் தனியார் சுகாதாரச்சேவை வழங்குநர்களினால் கையாளப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு சுகாதாரத் துறையின் மொத்தச் செலவினங்கள் 3.8% ஆகக் காணப்பட்டதுடன் உலகச் சுகாதார அமைப்பின் இலக்கான 5% ஐ விடக் குறைவாகவே உள்ளது. 2009 இல் 67.1% ஆன சுகாதாரப் பராமரிப்பு தனியார் செலவீனங்களிலிருந்து பெறப்பட்டதுடன் 32.9% அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தத்தில் 2.9% ஆனவை வெளிப்புற வளங்களால் பூர்த்திசெய்யப்பட்டன. மொத்த அரசாங்கச் செலவுகளில் சுகாதார செலவினங்கள் 6.1% ஆகக் காணப்படுகின்றன. தனிநபரொருவருக்கான மொத்தச் செலவினம் சராசரிப் பரிமாற்ற வீதத்தில் $52 ஆகக் காணப்படுகின்றது. 2010 இல் சுகாதாரப் பராமரிப்பிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு ₱28 பில்லியன் (அண்ணளவாக $597 மில்லியன்) அல்லது நபரொருவருக்கு ₱310 ($7) ஆகக் காணப்படுகின்றது. ஆனால் கீழவைச் சட்டமூலம் 5727 (பொதுவாகச் சின் வரி சட்டமூலம்) இலிருந்து வரி அறவீட்டினால் 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு அதிகரித்தது. கணக்கெடுப்பின்படி 90,370 மருத்துவர்கள் அல்லது 833 பேருக்கு ஒரு மருத்துவர் இங்கு உள்ளதுடன், 480,910 தாதியர்கள், 43,220 பல் மருத்துவர்கள், மற்றும் 769 பேருக்கு ஒரு மருத்துவமனைப் படுக்கை இங்கு காணப்படுகின்றன. திறமையான மருத்துவர்களைத் தக்க வைத்தல் ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. 70% ஆன தாதியர் பட்டதாரிகள் வேலை செய்வதற்கு வெளிநாடு செல்கின்றனர். பிலிப்பைன்ஸ் உலகின் மிகப்பெரிய தாதியர் வழங்குநராகக் காணப்படுகின்றது. 2001 இல் 1,700 மருத்துவமனைகள் காணப்பட்டதுடன், இவற்றுள் 40% ஆனவை அரசாங்கத்தாலும் 60% ஆனவை தனியாராலும் நடாத்தப்படுகின்றன. மொத்த இறப்பின் 25% இற்கும் மேலதிகமான இறப்புக்கள் இதயக் குழலிய நோயால் ஏற்படுகின்றன. அலுவல்முறைக் கணக்கெடுப்பின்படி 2003 இல் 1,965 எச்.ஐ.வி (HIV) நோயாளர் பதிவுசெய்யப்பட்டதுடன், இவர்களுள் 636 பேர் எய்ட்சு (AIDS) நிலையை அடைந்தனர். இருந்தபோதிலும் 2005 இல் 12,000 ஆக இருந்து ஏப்ரல் 2014 இல் 17,450 ஆக எச்.ஐ.வி/எய்ட்சு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்ததுடன் 5,965 எச்.ஐ.வி/எய்ட்சு நோய் எதிர்ப்பு சிகிச்சை எடுத்தனர் கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சில் வயது வந்த மக்களில் 0.1% ஆனோர் எச்.ஐ.வி-நேர்மறையைக் கொண்டுள்ளமையால், குறைந்த எச்.ஐ.வி நோய்த்தாக்கம் கொண்ட நாடாகப் பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது. பிலிப்பைன்சின் பண்பாடு கீழைத்தேய மற்றும் மேலைத்தேயப் பண்பாடுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் ஏனைய ஆசிய நாடுகளில் காணப்படும் அம்சங்களை மலாய மரபினூடாக வெளிப்படுத்துகின்றது. ஆனாலும் இதன் பண்பாட்டில் எசுப்பானிய மற்றும் அமெரிக்கப் பண்பாடுகளின் தாக்கத்தினைக் காணக்கூடியதாக உள்ளது. புனிதத் துறவிகளின் திருவிழா நாட்களை நினைவுகூர்வதற்காகக் கொண்டாடப்படும் "பரியோ பியெஸ்டாஸ்" (மாவட்டத் திருவிழாக்கள்) எனப்படும் பாரம்பரியத் திருவிழாக்கள் இங்கு பொதுவாகக் காணப்படுகின்றன. மோரியோன்ஸ் திருவிழாவும் சினுலொக் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களாகத் திகழ்கின்றன. இந்த சமூகக் கொண்டாட்டங்கள் விருந்து, இசை, மற்றும் நடனம் என்பவற்றிற்கான நேரமாகக் காணப்படுகின்றன. நவீனமயமாக்கலின் காரணமாகச் சில விழாக்கள் மாற்றத்திற்குள்ளாவதுடன் படிப்படியாக மக்களால் மறக்கப்பட்டும் வருகின்றன. பிலிப்பைன்ஸ் எங்கும் பரந்து காணப்படும் பல்வேறுபட்ட மரபுசார்ந்த கிராமிய நடனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பயனிஹன் பிலிப்பைன் தேசிய கிராமிய நடன நிறுவனம் உருவாக்கப்பட்டது. "ரினிக்லிங்" மற்றும் "சிங்கில்" போன்ற மூங்கில் தடிகளை அடித்து ஆடப்படும் நடனங்களில் இவர்களது குறிப்பிடத்தக்க செயற்பாட்டினால் இவர்கள் புகழ்பெற்றுள்ளனர். பிலிப்பினோ மக்களிடையே எசுப்பானியப் பெயர்களும் குடும்பப் பெயர்களும் பயன்படுத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிகின்ற ஹிஸ்பானியப் பாரம்பரியங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இருந்த போதிலும் எசுப்பானிய வம்சாவளியைக் கொண்ட மக்கள் மட்டுமல்லாது பிறரும் எசுப்பானியப் பெயர்களையும் குடும்பப் பெயர்களையும் பயன்படுத்தினர். இந்த விசேட தன்மை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவாக ஆசிய மக்களிடையே தனித்துவமாகக் காணப்படுவதுடன், கவ்வேரிய அரசாணை மக்களின் மீது எசுப்பானியப் பெயரிடும் முறையைச் செயற்படுத்தியதுடன் திட்டமிட்டு எசுப்பானியக் குடும்பப் பெயர்களைப் பரவலாக்கம் செய்தது. பல வீதிகள், நகரங்கள், மற்றும் மாகாணங்கள் என்பவற்றின் பெயர்களும் எசுப்பானிய மொழியில் அமைந்துள்ளன. பிலிப்பைன்சில் பல நகரங்கள் ஒரு மத்திய சதுரத்தை சுற்றி அமைந்துள்ளமை எசுப்பானியக் கட்டடக்கலையின் அடையாளமாக அமைந்துள்ளது. ஆனால் எசுப்பானியக் கட்டடக்கலை மூலம் அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் இரண்டாம் உலகப் போரின் போது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. பிலிப்பைன்சின் தேவாலயங்கள், அரசாங்கக் கட்டடங்கள், மற்றும் பல்கலைக்கழகங்கள் எசுப்பானியக் கட்டடக்கலைக்குச் சில எடுத்துக்காட்டுகளாக எஞ்சியுள்ளன. மணிலாவிலுள்ள சான் அகஸ்டின் தேவாலயம், இலோகொஸ் நோர்டேயிலுள்ள பவோவா தேவாலயம், இலோகொஸ் சர்ரிலுள்ள நுவெஸ்திரா செனோரா டி லா அசுன்சியொன் (சான்டா மரியா) தேவாலயம், இலொய்லோவிலுள்ள சான்டோ தோமஸ் டி வில்லானுவேவா தேவாலயம் ஆகிய நான்கு பிலிப்பைன் பரோக் தேவாலயங்கள் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலோகொசிலுள்ள விகன் நகரம், ஹிஸ்பானியப் பாணியிலான வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதுகாக்கப்படுவதால் புகழ்பெற்று விளங்குகின்றது. ஆங்கில மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுவது பிலிப்பீனியச் சமூகம் மீதான அமெரிக்கத் தாக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது அமெரிக்கப் பொப் பண்பாட்டுப் போக்குகள் ஏற்றுக்கொள்ளப்படவும் தாக்கம் செலுத்தவும் பங்களித்துள்ளது. இந்த நாட்டத்தைப் பிலிப்பினோக்களின் துரித உணவு, மேற்கத்தேயத் திரைப்படம் மற்றும் இசை மீதான நாட்டத்தின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. துரித உணவு விற்பனை நிலையங்கள் பல வீதியோரங்களில் காணப்படுகின்றன. பிரபல அமெரிக்க உலகளாவிய துரித உணவுச் சங்கிலி பிலிப்பைன்சின் சந்தைக்குள் நுழைந்த போதிலும், உள்ளூர் துரித உணவுச் சங்கிலிகளான கோல்டிலொக்ஸ் மற்றும் நாட்டின் முன்னணி துரித உணவுச் சங்கிலியான ஜொல்லிபீ ஆகியன, தங்கள் வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராக வெற்றிகரமாகப் போட்டியிடவும் நிலைத்து நிற்கவும் முடியுமாயிருந்தன. பிலிப்பைன்சின் சமையல் முறை அதன் மலாய-பொலினீசிய மூலத்திலிருந்து சில நூற்றாண்டுகளாக மாற்றமடைந்து வருவதுடன் ஹிஸ்பானிய, சீன, அமெரிக்க, மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் தாக்கத்திற்குள்ளாகி கலப்புச் சமையல் முறையாக உருவானதுடன், உள்ளூர் சமையற் பொருட்கள் மற்றும் பிலிப்பினோக்களின் சுவையைத் தழுவித் தனித்துவமான உணவுகள் உருவாகியுள்ளன. மிகவும் இலகுவான உணவான பொரித்த மீன், சோறு, விழாக்களில் செய்யப்படும் "பெல்லாக்கள்" "கொசிடோஸ்" போன்ற பல்வேறுபட்ட உணவு வகைகள் இங்குக் காணப்படுகின்றன. "லெசோன்", "அடொபோ", "சினிகாங்", "கரே-கரே", "டப்பா", மொறுமொறுப்பான "பட்டா", "பஞ்சிட்", "லும்பியா", மற்றும் "ஹாலோ-ஹாலோ" போன்ற உணவுகள் புகழ்பெற்ற உணவு வகைகளாகத் திகழ்கின்றன. கலமொன்டின்கள் (கலப்பின பழவகை, இது பிலிப்பினோ எலுமிச்சை, சீன ஆரஞ்சு என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது) தேங்காய்கள், "சபா" (ஒரு வகையான சிறிய அகலமான வாழைப்பழம்), மாம்பழங்கள், பால் மீன், மற்றும் மீன் சுவைச்சாறு ("சோஸ்") என்பன சமையலில் பயன்படுத்தப்படும் பொதுவான உள்ளூர் சமையற் பொருட்களுள் சிலவாகும். பிலிப்பினோக்களின் சுவை மொட்டுகள் வலுவான சுவைகளுக்குச் சாதகமாக உள்ளபோதிலும், பிலிப்பைன் சமையல் அதன் அண்டை நாடுகளைப் போலக் காரமான உணவாக இருப்பதில்லை. கிழக்கு ஆசிய நாட்டவரைப் போலப் பிலிப்பினோக்கள் ஒரு சோடிக் குச்சிகளின் உதவியுடன் உண்ணாமல், மேற்கத்திய உபகரணங்களின் உதவியுடனேயே உண்கின்றனர். இருந்த போதிலும் முதன்மை உணவாக சோறு இருப்பதன் காரணமாகவும், பெரும் எண்ணிக்கையிலான கஞ்சி வகைகள் மற்றும் குழம்புடன் கூடிய முதன்மை உணவுகள் பரவலாக உண்ணப்படுவதால் பிலிப்பினோக்கள் உணவு உண்ணும்போது கத்தியைப் பயன்படுத்துவதில்லை. மாறாக சிறுகரண்டியையும் முள்கரண்டியையும் கொண்டு பெரும்பாலோர் உண்ணுகிறார்கள். "கமயான்" என்று அழைக்கப்படும் கைகளின் மூலம் உணவு உண்ணும் மரபு சார்ந்த முறை சிறிய நகரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. பிலிப்பைனின் தொன்மவியல் முதன்மையாக பிலிப்பினனோ மக்களின் மரபுசார்ந்த வாய்வழி நாட்டுப்புற இலக்கியங்களின் வழியாகவே தற்காலத் தலைமுறைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒவ்வொரு தனித்துவமான இனக்குழுவினரும் தமது சொந்தக் கதைகளையும் தொன்மங்களையும் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்து மற்றும் எசுப்பானியத் தாக்கங்களைப் பல சந்தர்ப்பங்களில் பரவலாகக் காண முடிகின்றன. பிலிப்பைனின் தொன்மவியல் பெரும்பாலும் படைப்புக் கதைகள் எனப்படும் "அஸ்வாங்", "மனனங்கல்", "டிவட்டா/எங்கன்டோ" போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் மற்றும் இயற்கை பற்றிய கதைகளைக் கொண்டுள்ளது. மரியா மகிலிங், லம்-அங், மற்றும் சரிமனொக் போன்றவர்கள் பிலிப்பைனின் தொன்மவியல்களிலுள்ள சில புகழ்பெற்ற நபர்களாக விளங்குகின்றனர். பிலிப்பினோ, எசுப்பானியம், ஆங்கில மொழி போன்ற மொழிகளில் எழுதப்பட்ட படைப்புக்களைப் பிலிப்பைனின் இலக்கியம் பொதுவாகக் கொண்டுள்ளது. சில பிரபலமான படைப்புக்கள் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. "புளோரன்டே அட் லவுரா" என்ற காவியத்தை எழுதிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பினோ மொழியில் முன்னணி எழுத்தாளராகத் திகழ்கின்றார். "நொலி மீ தாங்கெரே" ("என்னைத் தொடாதே") மற்றும் "எல் பிலிபஸ்டெரிஸ்மோ" ("காலங் கடத்துதல்", "பேராசையின் ஆட்சிக்காலம்" என்றும் அழைக்கப்படுகின்றது) போன்ற நாவல்களை எழுதிய ஒசே ரிசால் தேசிய நாயகனாகக் கருதப்படுகின்றார். எசுப்பானிய ஆட்சியின் அநீதி தொடர்பான அவரது எழுத்துச் சித்தரிப்பும், அரசின் துப்பாக்கி வீரர்கள் அடங்கிய குழுவால் சுடப்பட்டு அவர் மரண தண்டனை பெற்ற நிகழ்வும், சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஏனைய பிலிப்பீனியப் புரட்சியாளர்களுக்கு உந்துதலாக அமைந்தது. என். வி. எம். கொன்சலேஸ், அமடோ வி. ஹெர்னான்டெஸ், பிரான்சிஸ்கோ ஆர்செல்லனா, நிக் ஜொகுவின் மற்றும் பல பிலிப்பினோ எழுத்தாளர்களுக்குப் பிலிப்பைன்சின் தேசியக் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன் ஊடகங்கள் முதன்மையாக பிலிப்பினோ மற்றும் ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு விசயன் மொழிகள் உள்ளடங்கலாக ஏனைய பிலிப்பைன் மொழிகள், விசேடமாகப் பிற ஊடக சேவைகள் இல்லாத, வெகு தொலைவிலுள்ள கிராமப்புறங்களை அடையக்கூடியதாக உள்ளபடியினால் வானொலிகளில் பயன்படுத்தப்படுகின்றன. புகழ்பெற்ற தொலைக்காட்சி வலையமைப்புக்களான ஏபிஎஸ்-சீபிஎன் (ABS-CBN), ஜீஎம்ஏ (GMA), டிவி5 (TV5) ஆகியன விரிவான வானொலி அமைப்பையும் கொண்டுள்ளன. பொழுதுபோக்குத் துறை துடிப்பாக உள்ளதுடன் சஞ்சிகைகளும் சிறு பத்திரிகைகளும் புகழ்பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் பரபரப்பான ஊழல்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ச்சியாக வழங்குகின்றன. நாடகங்கள் மற்றும் கற்பனை நிகழ்ச்சிகளில் இலத்தீன் டெலினொவெலாஸ், அசியமொவெல்லாஸ், மற்றும் அனிமே என்பவற்றை எதிர்பார்க்கலாம். பகல் நேரத்தில் தொலைக்காட்சிகளில் குழு விளையாட்டு நிகழ்ச்சிகள், வேறுபட்ட நிகழ்ச்சிகள், மற்றும் "ஈட் புலகா" மற்றும் "இட்ஸ் ஷோடைம்" போன்ற பேச்சு நிகழ்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பிலிப்பைன் திரைத்துறை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதுடன் உள்நாட்டில் புகழ்பெற்று உள்ளது. ஆனால் அமெரிக்க, ஆசிய, மற்றும் ஐரோப்பியத் திரைப்படங்கள் மூலம் அதிகரித்த போட்டித்தன்மையை எதிர்நோக்கியுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுள் "மய்னிலா: சா ம்கா குகோ ங் லிவனக்" ("மணிலா: ஒளியின் கால்களில்") மற்றும் "ஹிமலா" ("அதிசயம்") போன்ற திரைப்படங்களுக்காகப் பாராட்டப்பட்ட லினோ புரொக்கா மற்றும் நோரா அவுனோர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். அண்மைய ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வலம் வரும் புகழ்பெற்றவர்கள், பின்னர் அரசியலில் நுழைந்து சர்ச்சைக்களை தூண்டுவது கவலைக்குரியதாக உள்ளது. கூடைப்பந்து, குத்துச்சண்டை, சேவல் சண்டை, கைப்பந்தாட்டம், காற்பந்து, இறகுப்பந்தாட்டம், கராத்தே, டைக்குவாண்டோ, பில்லியார்ட்ஸ், பத்துப்பின் பௌலிங், சதுரங்கம், மற்றும் சிபா உள்ளடங்கலாகப் பல்வேறு விளையாட்டுக்களும் பொழுதுபோக்குகளும் பிலிப்பைன்சில் புகழ்பெற்றுள்ளன. மோட்டர் கிராசு, சைக்கிளோட்டம், மற்றும் மலையேற்றம் என்பனவும் புகழடைந்து வருகின்றன. கூடைப்பந்து தொழில்முறையற்றவர்களாலும் தொழில்முறை சார்ந்தவர்களாலும் விளையாடப்பட்டு பிலிப்பைன்சில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக விளங்குகின்றது. 2010 இல், மன்னி பக்குவியோ 2000களின் (தசாப்தம்) பத்தாண்டின் சிறந்த சண்டைக்காரராக அமெரிக்காவின் குத்துச்சண்டை எழுத்தாளர்கள் கூட்டமைப்பு (BWAA), உலக குத்துச்சண்டை சபை (WBC), மற்றும் உலக குத்துச்சண்டை அமைப்பு (WBO) என்பவற்றால் குறிப்பிடப்பட்டார். பிலிப்பைன்ஸ் 1924ஆம் ஆண்டிலிருந்து கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்குபெற்று வருவதுடன், முதன் முறையாகப் போட்டிகளில் பங்குப்பெற்று பதக்கத்தை வென்ற முதலாவது தென்கிழக்காசியா நாடாகத் திகழ்கின்றது. பிலிப்பைன்ஸ் அனைத்து கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் பங்குபெற்று வந்த போதிலும் 1980 கோடைகால ஒலிம்பிக்கிக்கை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் புறக்கணித்த போது மட்டும் பங்கு பெறவில்லை. பிலிப்பைன்ஸ் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் போட்டியிடும் முதலாவது வெப்பமண்டல நாடாக விளங்குகின்றது. "லக்சங் பகா", "படின்டெரோ", "பிகோ", மற்றும் "டும்பங் பிரெசோ" போன்றவை மரவு வழி பிலிப்பைன் விளையாட்டுக்கள் ஆகும். இவை சிறுவர்களின் விளையாட்டுகளாக இளைஞர் மத்தியில் பெரும்பாலும் தற்போது விளையாடப்படுகின்றன. "சுங்கா" என்பது பிலிப்பைன்சைச் சேர்ந்த மரபு சார்ந்த பிலிப்பைன் பலகை விளையாட்டாகும். விழாக்காலங்களில் சீட்டாட்டம் புகழ்பெற்று காணப்படுவதுடன், "புசோய்" மற்றும் "டொங்-இட்ஸ்" என்பன சட்டவிரோத சூதாட்டத்தின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில பிலிப்பைன் சமூகங்களில் மஹ்ஜொங் விளையாடப்படுகின்றது. பிலிப்பைன்சில் புகழ்பெற்ற விளையாட்டுப் பொம்மையாக யோ-யோ விளங்குவதுடன், பெட்ரோ புளோரெசால் இலோகானோ மொழியில் இது பெயரிடப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டது. "அர்னிஸ் (சில பிராந்தியங்களில் எஸ்கிர்மா அல்லது காளி எனப்படுகின்றது)" என்பது தேசிய தற்காப்புக் கலையாகவும் விளையாட்டாகவும் விளங்குகின்றது. டிசம்பர் 24 ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் (டிசம்பர் 24,1818 - அக்டோபர் 11,1889) இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இயற்பியல் அறிவியலாளர் ஆவார். இவர் வெப்பவியலில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். வெப்பத்திற்கும் இயந்திர வேலைக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். இவருடைய ஆய்வுகளே ஆற்றல் அழிவின்மை விதி கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. இவருடைய நினைவாக வேலையின் அலகு ஜூல் என்று அழைக்கப்படுகிறது. பெஞ்சமின் ஜூலின் (1784-1858) மகனாக பிறந்தார். பெஞ்சமின் ஒரு பணக்கார மது தயாரிப்பாளர், மற்றும் அவரது மனைவி ஆலிஸ் பிரஸ்காட், ஜூல் சால்ஃபோர்டில் புதிய பெய்லி தெருவில் பிறந்தார். ஜூலின் இளம் வயதில் அவருக்கு பிரபலமான விஞ்ஞானி ஜான் டால்ட்டன்னால் பயிற்சி அளிக்கப்பட்டது, பின் வேதியியலாளர் வில்லியம் ஹென்றி மற்றும் மான்செஸ்டர் பொறியாளர்களான பீட்டர் எவர்ட் மற்றும் ஈடன் ஹோட்கின்சோன் ஆகியோர் ஜூலுக்கு பயிற்று வித்தனர். அவர் மின்சாரத்தை பார்த்து ஆச்சரியத்துக்குள்ளானார், மேலும் அவர் தனக்கும் மற்றும் அவரது சகோதரருக்கும் ஒருவருக்கொருவரும் மற்றும் குடும்ப ஊழியர்களுக்கும் மின் அதிர்ச்சி கொடுத்து சோதனை செய்து பார்த்தார். உரிய வயது வந்தவுடன், ஜூல் மது தயாரிக்கும் ஆலையை நிர்வகித்தார். அப்போது அறிவியல் வெறுமனே ஒரு தீவிர பொழுதுபோக்காக இருந்தது. 1840 ஆம் ஆண்டு, சில நேரங்களில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மின் மோட்டார் மூலம் மதுபானம் தயாரிக்கும் நீராவி இயந்திரங்களை மாற்றுவதற்கான சாத்தியத்தை ஆராயத் தொடங்கினார். அறிவியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாக விஞ்ஞானி வில்லியம் ஸ்டர்ஜனின் மின்சாரத்திற்க்கான அறிவியல் இதழில் தனது ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுப் பங்களித்தார். ஜூல் லண்டன் எலக்ட்ரானிக் சொசைட்டி உறுப்பினராக இருந்தார், இது ஸ்டர்ஜன் மற்றும் பலரால் நிறுவப்பட்டது. 1841 ஆம் ஆண்டில் ஜூல் முதல் விதி கண்டுபிடித்தார், ""எந்தவொரு வால்டிக் மின்னோட்டத்தின் சரியான நடவடிக்கை மூலம் உருவான வெப்பம் அந்த மின்னோட்டத்தின் தீவிரத்தின் சதுர விகிதத்திற்கு மற்றும் எதிர்ப்பின் பெருக்கம் ஆகியவற்றின் விகிதாசாரமாகவும் கடத்தல் வெப்பம் கொண்டதாகவும் இருக்கும்"". ஒரு நீராவி எஞ்சினில் எரியும் ஒரு பவுண்டு அளவுள்ள நிலக்கரி ஒரு எலக்ட்ரிக் பேட்டரி ஒன்றில் உட்கொண்டிருந்த விலையுயர்ந்த ஒரு பவுண்டு அளவுள்ள துத்தநாகத்தை விட சிக்கன்மானதாகவும் மலிவானதாகவும் இருப்பதாக ஜூல் உணர்ந்தார். ஜூல், பொதுவான தரநிலை, ஒரு பவுண்டு, ஒரு அடி உயரம், கால்-பவுண்டு ஆகியவற்றை உயர்த்தும் திறன்களின் மாற்று வழிமுறைகளின் வெளியீட்டை கைப்பற்றினார். இருப்பினும், ஜூலினுடைய ஆர்வம் குறுகிய நிதிப்பற்றிய கேள்வியில் இருந்து திசை திருப்பப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்து எவ்வளவு ஆற்றல் எடுக்கப்படும், அந்த ஆற்றல் மாறும் தன்மை பற்றி ஊகிக்கவும் வழிவகுத்தது. 1843 ஆம் ஆண்டில் அவர் வெப்ப விளைவு என்று காட்டும் பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட்டார், இதற்கு அவர் 1841 ஆம் ஆண்டில் செய்த ஒரு சோதனை, கடத்தியில் வெப்ப உற்பத்திக் காரணமாக இருந்தது மற்றும் உபகரணத்தின் மற்றொரு பகுதிக்கு அதன் ஆற்றல் பரிமாற்றம் செய்யப்படவில்லை. இந்த முடிவுகள் கலோரிக் கோட்பாட்டிற்கு நேரடி சவால் ஆகும் என்னெனில் அது வெப்பம் உருவாக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாது என்று கூறியது. 1783 இல் ஆன்டெய்ன் லாவோசியரால் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கலோரிக் கோட்பாடு வெப்ப விஞ்ஞானத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஜூல் மின்சார மோட்டார் கொண்டு மேலும் சோதனைகள் மற்றும் அளவீடுகள் பல செய்ததன் மூலம் அவரால் வெப்பம் இயந்திரவியல் சமமான மதிப்பீட்டை மதிப்பீடு செய்ய முடிந்தது. ஒரு பவுண்ட் அளவுள்ள தண்ணீர் ஒரு டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை அதிகரிக்க 4.1868 joules ஒரு கலோரி அளவிலான வேலை தேவைப்படுகிறது என்றார். ஆகஸ்ட் 1843 ஆண்டில் கார்க் நகரில் அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் அசோசியேஷனின் இரசாயன பிரிவின் கூட்டத்தில் அவர் தனது முடிவுகளை அறிவித்தார், அப்போது அங்கு ஒரு மயான அமைதி நிவவியது. ஜூல், வேலையை வெப்பமாக மாற்றுவதற்கு முற்றிலும் இயந்திரவியல் சோதனைகளைத் தொடங்கினார். ஒரு சிறு துளைகளிடப்பட்ட உருளை உள்ளே நீரைக் கட்டாயப்படுத்தி செலுத்துவதன் மூலம், திரவத்தின் சிறிய பிசுபிசுப்பான வெப்பத்தை அவர் அளவிட்டார். மேலும் வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு 770 ft·lbf/Btu (4.14 joule/calorie (J/cal) ஆக இருந்தது. மின்சார வழிமுறையாலும், முற்றிலும் இயக்க வழிமுறையாலும் பெறப்பட்ட மதிப்புகள் வேலை வெப்பமாக மாற்றப்படுவதை அவருக்கு உறுதி செய்தது. ஜூல் இப்போது மூன்றாவது வழியைத் தேடினார். வாயுவை அதிக அழுதத்திற்கு உள்ளாகும் போது உருவாக்கப்பட்ட வெப்பத்தை அவர் அளந்தார். அவர் 798 ft·lbf/Btu (4.29 J/cal) இயக்கச் சமமான மதிப்பைப் பெற்றார். பல வழிகளில், இந்த பரிசோதனையானது ஜூலிலின் விமர்சகர்களுக்கான எளிதான இலக்கை வழங்கியது, ஆனால் ஜூல் புத்திசாலித்தனமான பரிசோதனையால் எதிர்பார்த்திருந்த எதிர்ப்பை ஒழித்தார். சூலை 20, 1844 அன்று ராயல் சொசைட்டிக்கு தனது ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்பினார், எனினும், அவரது கட்டுரை ராயல் சொசைட்டி வெளியிடாமல் நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் 1845 இல் தத்துவ ஞானி பத்திரிகையில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையில் அவர் கார்னாட் மற்றும் எமிலி கிளாப்பிரோரின் கலோரிக் காரணங்களை நிராகரித்தார், ஆனால் இதில் அவருடைய இறையியல் நோக்கங்களும் தெளிவாகத் தெரிந்தது: இயக்கவியல் என்பது இயக்கத்தின் அறிவியலாகும். ஜூல் டால்டனின் மாணவர் என்பதால் இயல்பாகவே அவர் அணு கோட்பாடு மீது ஒரு உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருந்தது ஆச்சரியமானதாக இல்லை, மேலும் அவரது காலத்தில் பல விஞ்ஞானிகள் இருந்தபோதிலும் இந்தக் கோட்பாட்டின் மீது இன்னும் சந்தேகம் கொண்டிருந்தனர். ஜான் ஹெராபத்தின் வாயுக்களின் இயக்கவியல் கோட்பாட்டு பலரால் புறக்கணிக்கப்பட்ட போதும் அவரது வேலையை ஏற்றுக்கொள்ளும் சிலரில் ஜூலும் ஒருவராக இருந்தார். 1813 ஆம் ஆண்டின் பீட்டர் எவார்ட்டின் இயங்கு விசைத் தாளில் மீது அவருக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜூல், அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் வெப்ப இயக்கவியல் கோட்பாட்டிற்கும் இடையிலான உறவை உணர்ந்தார். அவரது ஆய்வக குறிப்பேடுகள் அவர் வெப்பம் ஒரு சீரான வடிவ இயக்கம் அல்ல, மாறாக சுழற்சியின் வடிவம் என்று நம்புவதாக வெளிப்படுத்தியது. ஜூல், அவரது கண்டுபிடிப்புகளுக்கு எதிரான கருத்துக்களை, பார்வையை தனது முன்னோடிகளான பிரான்சிஸ் பேக்கன், ஐசாக் நியூட்டன், ஜான் லாக், பெஞ்சமின் தாம்சன் (கவுண்ட் ரம்ஃபோர்ட்) மற்றும் சர் ஹம்பிரி டேவி ஆகியோரிடம் காணமுடியவில்லை. அத்தகைய பார்வைகள் நியாயமானவை என்றாலும், ரம்ஃபோர்ட்டின் பிரசுரங்களிலிருந்து 1034 அடி பவுண்டுகள் வெப்பமான இயந்திர சமமான மதிப்பை மதிப்பீடு செய்ய ஜூல் முயன்றார். சில நவீன எழுத்தாளர்கள் இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளனர், ரம்ஃபோர்டின் சோதனைகள் எந்த வகையிலும் முறையான அளவு அளவீடுகளைக் குறிப்பிடவில்லை. தன்னுடைய தனிப்பட்ட குறிப்புகளில் ஒன்றில், ஜூல் மேமரின் அளவீடு ரம்போர்ட்டை விட துல்லியமானது அல்ல என்று வாதிடுகிறார், ஒருவேளை மேயர் தனது சொந்த வேலையை எதிர்பார்த்திருக்கவில்லை என்ற நம்பிக்கையில் கூறினார். ஜூல் சேல்லில் உள்ள வீட்டில் இறந்தார், அங்கு ப்ரூக்லாண்ட்ஸ் கல்லறையில் புதைக்கப்பட்டார். இந்த கல்லறை "772.55" என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது, இது அவரது climacteric 1878 இயக்கச் சமமான வெப்பம் அளவாகும், அதில் அவர் ஒரு அடி பவுண்டுகள் வேலை அளவு என்பது 60 முதல் 61 F வரை ஒரு பவுண்டு தண்ணீர் வெப்பநிலையை உயர்த்த கடல் மட்டத்தில் செலவிடப்பட வேண்டும் என்று கண்டுபிடித்தார். ஜான்னின் நற்செய்தியில் இருந்து ஒரு மேற்கோள் இவ்வாறு உள்ளது, "என்னை அனுப்பினவருடைய கிரியைகளை நான் செய்யவேண்டும், இரவும் பகலும் பாராது. எந்த மனிதனும் வேலை செய்ய இயலாது என்ற போதும் செய்யவேண்டும்"(9:4). ஜூல் அவரகள் மரணம் எய்திய விஸ்டர்ஸ் ஸ்பூன் விற்பனை நிலையத்திற்கு, அவரது நினைவாக "J. P. ஜூல்" என்ற பெயரிடப்பட்டது. இன்றும் ஜூலின் குடும்ப மதுபான உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது ஆனால் இப்போது ஆலை சந்தை தெருவில், டிரேடனில் அமைந்துள்ளது (மேலும் தகவலுக்கு joulesbrewery.co.uk இனைய தலத்தை பார்க்கவும்) 1847 ஆண்டில், அவர் அமெலியா கிரிம்ஸ்ஸை மணந்தார். அவர்களது திருமணம் குறுகிய காலம் தான் நீடித்தது, 1854 ஆண்டில் அவர் மனைவி இறந்தார். அவர்களுக்கு ஒரு மகன், பெஞ்சமின் ஆர்தர் ஜூல் (1850-1922), ஒரு மகள் ஆலிஸ் அமெலியா (1852-1899) மற்றும் இரண்டாவது மகன், ஹென்றி (1854 ஆம் ஆண்டு பிறந்தார், பிறந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் இறந்துவிட்டார்). அர்கெந்தீனா அர்கெந்தீனா அல்லது அர்ஜெந்தீனா (அர்ஜென்டினா, "Argentina") தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் "ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா" (எசுப்பானிய மொழியில் "República Argentina", ஒலிப்பு: "reˈpuβlika aɾxenˈtina"). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன. இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, "மெர்கோசுர்" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (ஜி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர். "ஆர்கெந்தீனா" என்னும் சொல், "வெள்ளி" என்னும் பொருள் தரும் "ஆர்கென்டும்" "(argentum)" என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. லா பிளாட்டா வடிநிலம் எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம் என்றும் விடுதலைக்குப் பின்னர் ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள் என்றும் அழைக்கப்பட்டது. இச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், "ஆர்கெந்தீன் குடியரசு", "ஆர்கெந்தீன் நாடு" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன. இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, "ஆர்கெந்தீன் கூட்டமைப்பு" என வழங்கியது. இது பின்னர் 1859ல் "ஆர்கெந்தீன் நாடு" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் "ஆர்கெந்தீன் குடியரசு" எனவும் மாற்றப்பட்டது. ஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் "பார்ட்டிடோசு" என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், குகூய் மாகாணம், சால்ட்டா மாகாணத்தில் இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது. 1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய ஆளுனரகங்கள் நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், குகூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது. ஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அன்டெசு மலைத்தொடர் இதன் மேற்கிலும், தென் அத்திலாந்திக் பெருங்கடல் இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் ஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான பம்பாசு நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. மெசொப்பொத்தேமியா என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. பரானா, [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. [[கிரான் சாக்கோ]] என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. [[கூயோ]] என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், [[ஆர்கெந்தீன வடமேற்கு]] என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. [[பட்டகோனியா]] பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளிலும் மிகவும் உயர்ந்த பகுதியாக உள்ளது. மிகவும் தாழ்வான பகுதி, சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள [[லகுனா டெல் கார்பொன்]] ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) கீழே அமைந்துள்ளது. தென்னமெரிக்காவின் மிகத் தாழ்வான இடமும் இதுவே. கிழக்கு அந்தலை மிசியோனெசில் உள்ள பர்னார்டோ டி இரிகோயெனுக்கு வடகிழக்கிலும், மேற்கு அந்தலை சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள பெரிட்டோ மொரேனோ தேசியப் பூங்காவிலும் உள்ளன. வடக்கு அந்தலை, குகூய் மாகாணத்தில் கிரான்டே டெ சான் யுவான் ஆறும், மொகினேத்தே ஆறும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு அந்தலை, தியேரா டெல் புவெய்கோ மாகாணத்தில் உள்ள சான் பியோ முனை ஆகும். ஆர்கெந்தீனாவின் மிகப் பெரிய ஆறு [[பரானா ஆறு|பரானா]]. பில்க்கோமாயோ, [[பராகுவே ஆறு|பராகுவே]], பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ, [[உருகுவே ஆறு|உருகுவே]] என்பன பிற முக்கியமான ஆறுகள். பரானா, உருகுவே ஆகிய ஆறுகள் இணைந்து ரியோ டி லா பிளாட்டா [[கழிமுகம்|கழிமுகத்தை]] உருவாக்குகின்றன. 4,725 கிலோமீட்டர் (2,936 மைல்) நீளமான அத்திலாந்திக் கடற்கரை, மணல் குன்றுகள் தொடக்கம் மலை முகடுகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. கண்டத்திட்டு பெரும்பாலும் அகலமானது.அத்திலாந்திக்கின் இந்த ஆழம் குறைந்த பகுதியை ஆர்கெந்தீனக் கடல் என்கின்றனர். கரைப் பகுதியைப் பாதிக்கும் மிக முக்கியமான பெருங்கடல் நீரோட்டங்கள் இரண்டு. ஒன்று சூடான பிரேசில் நீரோட்டம், மற்றது குளிரான போக்லாந்து நீரோட்டம். [[பகுப்பு:அர்ஜென்டினா| ]] [[பகுப்பு:தென் அமெரிக்க நாடுகள்]] [[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]] மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் மக்கள் தொகை அடர்த்தி வரிசையில் நாடுகள்/குடியிருப்புகள் பட்டியல்-குடியிருப்போர்/கிமீ² அடிப்படையில். இங்கு குறிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, ஆறுகள், ஒடைகள், ஏரிகள் போன்ற உள்நாட்டு நீர்நிலைகளின் பரப்பையும் உள்ளடக்கியது. ஜுலை 2005கான மக்கள் தொகை மதிப்பீடு. இறையாண்மை வாய்ந்த நாடுகள் மட்டுமே இலக்கம் இடப்பட்டுள்ளன; ஆனால், இறையாண்மையற்ற பகுதிகளும் உவமி நோக்கும்கால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன. பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலகநாடுகளின் பட்டியலாகும். அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, "சாய்வெழுத்துக்களில்" தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. நீரியம் ஐதரசன் "(Hydrogen)" என்பது H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதை நீரியம், நீரகம், ஐதரோசெனியம் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள். இத்தனிமத்தின் அணு எண் 1, அணு எடை 1.008. தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசான தனிமமாகக் கருதப்படுவது ஐதரசனாகும். பிரபஞ்சத்தில் அதிக அளவிலுள்ள ஒற்றை அணு தனிமம் ஐதரசனேயாகும். அண்டத்தில் மொத்த அணுக்கூறு நிறையில் 75% ஐதரசனாகிய ஒற்றையணு நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது . சில விண்மீன்கள் பெருவாரியாக பிளாசுமா நிலை ஐதரசன் நிரம்பிய விண்மீன்கள்களாகக் கருதப்படுகின்றன. 1H என்ற குறியீட்டால் குறிக்கப்படும் புரோட்டியம் என்ற ஐசோடோப்பு பெரும்பாலாகக் காணப்படும் ஐதரசனின் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) ஆகும். இதன் உட்கருவில் நொதுமி அல்லது நியூட்ரான் என்பது எதுவும் இல்லாமல் ஒரு நேர்மின்னி (புரோட்டான்) மட்டுமே இருக்கும். ஐதரசனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமம் ஆகும். இத்தனிமம் மாழையல்லா (உலோகமற்ற) வகையைச் சேர்ந்தது. இது ஒற்றை இயைனியப் ("univalent") பண்பும், இரண்டு நீரிய அணுக்கள் இணைந்து, ஈரணு (H) வடிவு கொள்ளும் பண்பும் கொண்ட தனிமம் ஆகும். நீரியம், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றிலும் எடை குறைவானதும், கூடிய அளவு கிடைக்கக்கூடியதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும் நீரியம் தனித்துக் காணப்படுகிறது. புவி வளிமண்டலத்தில் மில்லியனில் 0.5 பங்கு என்ற அளவில் செழுமை பெற்றுள்ளது. ஆர்கான், நியான்,ஈலியம், கிரிப்டான் போன்ற மந்த வளிமங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 விழுக்காடும் நீர்மண்டலத்தில் 10.82 விழுக்காடும் நீரியம் சேர்ந்துள்ளது. அண்டத்தின் 75% தனிமத் திணிவு நீரியத்தாலானது. அதாவது, அண்டப் பெருவெளியில், நாள்மீன்கள் போன்ற யாவும் உள்ளடக்கிய பேரண்டத்தில் உள்ள பொருள்களில் 75% ஐதரசன் தான் இருப்பதாகக் கணித்துள்ளார்கள். இது நீர், அனைத்து உயிரகச் ("organic") சேர்மங்கள், (கூண்டு மூலக்கூறுகளாகிய பக்மினிசிட்டர் புல்லரீன் ("buckminsterfullerene") போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) மற்றும் அனைத்து உயிரினங்களிலும் இடம் பெற்றுள்ளது. விலங்கினங்கள், தாவரங்களில் நீர் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், ஐதரசனின் சேர்மானம் இல்லாத உயிரினமே இல்லை எனலாம். கார்பனுடன் சேர்ந்து எண்ணிலா கரிம வேதிப்பொருட்களை ஐதரசன் தந்துள்ளது. இது வேதியியல் வினைவழி பெரும்பாலான பிற தனிமங்களுடன் வினையாற்றவல்லது. ஐதரசன் அம்மோனியா உண்டாக்காகவும், எடைகுறைவானதால் காற்றில் மேலுந்தும் வளிமமாகவும், தானுந்து போன்ற ஊர்திகளுக்கு மாற்று எரிபொருளாகவும், எரிபொருள் கலன்களுக்கான வளிமமாகவும் பயன்படுகின்றது. தனிம அட்டவணையில் முதலாவதாக இருப்பது ஹைட்ரஜனாகும். இது தனிமங்களுள் லேசானது,வளிம நிலையில் உள்ளது. கிரேக்க நாட்டில் பாராசெல்சஸ்(Paracelsus)என்பவர் 16-ஆம் நூற்றாண்டிலேயே ஹைட்ரஜனைக் கண்டறிந்திருந்தாலும் பிற எரியக் கூடிய வளிமங்களுடன் குழம்பிப் போயிருந்தார். 1671 ஆம் ஆண்டில், ராபர்ட் பாயில் என்பவரால் ஐதரசன் கண்டுபிடிக்கப்பட்டது 1766 இல் ஹென்றி காவெண்டிஷ் ("Henry Cavendish") என்பவர் முதன் முதலாக ஐதரசனின் பண்புகளை அறிந்து தெரியப்படுத்தினார். இதை எரி வளிமம் ("highly combustible") எனக் குறிப்பிட்டார். அந்துவான் இலவாய்சியர் இதற்கு ஹைட்ரஜன் என்று பெயரிட்டார். "ஹைட்ரோ" என்றால் கிரேக்க மொழியில் நீர் என்றும் "ஜன்" என்றால் "உண்டாக்குதல்" என்றும் பொருள். ஹைட்ரஜன் ஆக்ஜிசனுடன் சேர்ந்து நீரை உண்டாக்குவதால் அதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. ஐதரசன் வாயு வேதியியல் மற்றும் உயிரியியல் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது, பெரும்பாலும் பிற தயாரிப்புகளின் பொது ஒரு உடன் விளைபொருளாக ஐதரசன் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் நிறைவுறாத தளப்பொருள்களின் ஐதரசனேற்றத்திற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றும் இயற்கையில் உயிர்வேதியியல் வினைகளில் ஒடுக்கும் முகவருக்குச் சமமானப் பொருள்களை வெளியேற்றும் பொருளாகப் பயன்படுகிறது. நீரை மின்னாற்பகுத்தல் மூலமாக எளிய வழியில் ஐதரசனை தயாரிக்கலாம். குறைந்த அளவு மின்சாரம் நீரின் வழியாகச் செலுத்தப்படுகிறது. நேர்மின் முனையில் ஆக்சிசன் வாயு உருவாகிறது. அதேபோல எதிர்மின் முனையில் ஐதரசன் வாயு உருவாகிறது. பொதுவாக உற்பத்தியாகும் ஐதரசன் வாயுவை சேமிப்பதற்காக பிளாட்டினம் அல்லது வேறொரு மற்றொரு மந்த உலோகத்திலிருந்து எதிர்மின்வாய் தயாரிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஐதரசன் வாயு ஓர் எரிபொருளாக எரிக்கப்பட வேண்டும் என்றால், எரிதலுக்கு உதவுவதற்கு ஆக்சிசன் விரும்பத்தக்கதாகும். எனவே இரண்டு மின்வாய்களும் மந்த உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக இரும்பினால் மின்வாய்கள் தயாரிக்கப்பட்டால் அது ஆக்சிசனேற்றமடைந்து வெளிப்படும் ஆஅக்சிசனின் அளவை மட்டுப்படுத்தும். அதிகபட்ச செயல்திறன் கோட்பாட்டின் படி உற்பத்தி செய்யப்படும் ஐதரசனின் உற்பத்தித் திறன் 88-94% ஆகும் புரோட்டான் பரிமாற்ற சவ்வின் மின்னாற்பகுப்பு மின்னாற்றல் செயல் திறனை உறுதிப்படுத்த அதிக வெப்ப மதிப்பு பயன்படுத்தப்படுகிறது . ஏனெனில் இந்த வினையூக்க அடுக்கு தண்ணிருடன் நீராவியாக இடைவினை புரிகிறது. இச்செய்ல்முறை 80° செல்சியசு வெப்பநிலையில் நிகழும்போது புரோட்டான் பரிமாற்ற சவ்வு மின்பகுப்பி உபரி வெப்பத்தை நீராவி உற்பத்திக்கு திருப்பி விடுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக உயர் மின் செய்ல்திறன் விளைகிறது. கார மின்பகுப்பிகளைப் பயன்படுத்தும்போது தாழ் வெப்ப மதிப்பு பயன்படுத்த வேண்டும். இம்மின்பகுளிகளுக்கு தண்ணிர் நீர்ம வடிவிலேயே தேவைப்படுகிறது. காரத்தன்மை இங்கு ஐதரசன் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கு இடையிலான பிணைப்பை உடைக்க தேவையாகிறது. தாழ் வெப்ப மதிப்பு எரிபொருள் மின்கலன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நீராவி உள்ளிடப்படுவதற்குப் பதிலாக வெளியிடப்படுகிறது. பெரும்பாலும் ஐதரசன் இயற்கை எரிவாயுவையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் ஐதரோகார்பன்களில் இருந்து ஐதரசன் வாயுவை நீக்குவது இத்தயாரிப்பு முறையின் தத்துவமாகும். 2000 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 95% ஐதரசன் நீராவி மறு உருவாக்கச் செயல்முறையின் மூலமே தயாரிக்கப்பட்டது இயற்கை வாயுவிலிருந்து வர்த்தக ரீதியாக பேரளவில் ஐதரசன் தயாரிக்கவும் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது... உயர் வெப்பநிலையில் (1000-1400 கெல்வின், 700-1100 ° செல்சியசு அல்லது 1300-2000 பாரன்கீட்டு), நீராவி மீத்தேனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரச வாயுவை உற்பத்தி செய்கிறது. இந்த வினை குறைவான அழுத்தத்தில் நிகழ சாதகமானது ஆகும். ஆனால் இருப்பினும் உயர் அழுத்தத்தில் (2.0 மெகாபாசுக்கல், 20 வளிமண்டல அழுத்தம் அல்லது 600 மி. மீ. பாதரசம்) நடத்தப்படுகிறது. ஏனெனில் உயர் அழுத்த ஐதரசன் வாயுவை சந்தைப்படுத்துதல் இலாபகரமானது. தயாரிப்பு மற்றும் அழுத்தம் ஊசலாலம் (PSA) சில வகையான சுத்திகரிப்பு அமைப்புகள் அதிக அழுத்த ஐதரசன் வாயுவில் சிறப்பாக செயல்படுகின்றன. உற்பத்தியாகும் தயாரிப்புக் கலவை தொகுப்பு வாயு எனப்படுகிறது. இவ்வாயு நேரடியாக மெத்தனால் மற்றும் தொடர்புடைய சேர்மங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. மீதேன் தவிர இதர ஐதரோகார்பன்கள் வேறுபட்ட தயாரிப்பு விகிதங்களைக் கொண்டு தொகுப்பு வாயுவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படலாம். இந்த உகந்த தொழில்நுட்பத்திற்கு நேரிடக்கூடிய பல சிக்கல்களில் ஒன்று நிலக்கரி அல்லது கார்பன் உருவாவதே ஆகும். CH4 → C + 2 H2 நீராவி மறு உருவாக்கச் செயல்முறையில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலான ஐதரசன் வாயுவை நீராவி மற்றும் கார்பனோராக்சைடைப் பயன்படுத்தி இரும்பு ஆக்சைடு வினையூக்கி முன்னிலையில் தயாரித்துக் கொள்ள முடியும். இம்முறை கார்பனீராக்சைடு தயாரிப்பதற்கும் ஆதார மூலமாகும் : ஐதரோ கார்பன்களை பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்வது மற்றொரு தயாரிப்பு முறையாகும் : நிலக்கரியைப் பயன்படுத்தியும் ஐதரசன் வாயுவை தயாரிக்கிறார்கள் : ஒரே செயல்முறையில் ஐதரசன் தயாரிக்கப்பட்டு, பிரிக்கப்படாமல் அதை பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. அமோனியா தயாரிக்கப்படும் ஏபர் செயல்முறை இதற்கு உதாரணமாகும் உப்பு நீரை மின்னாற்பகுப்பு செய்து குளோரின் தயாரிக்கும் போதும் ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக விளைகிறது . ஹைட்ரஜன் வளிமம் மணமற்றது, சுவையற்றது, நிறமற்றது. இது மிகவும் இலேசானது. இதன் அணு மிகவும் எளிமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அணுக் கருவில் ஒரே ஒரு நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான் மட்டும் உள்ளது. மின்னூட்டமற்ற நியூட்ரான் இல்லாத ஒரே ஒரு தனிமம் ஹைட்ரஜன் என்று கூறலாம். புரோட்டானைச் சுற்றி ஒரு எதிர் மின்னூட்டம் கொண்ட எலெக்ட்ரான் ஒரு வட்டப் பாதையில் இயங்கி வருகிறது. ஹைட்ரஜனின் எளிமையான கட்டமைப்பு, அண்டத்தில் இதன் செழுமை மிக அதிகமாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது. அண்டவெளியில் ஹைட்ரஜன் 93 விழுக்காடு உள்ளது. சூரியன் மற்றும் விண்மீன்களில் இதன் பங்கு முக்கியமானது. அதில் ஹைட்ரஜனே முதல் மற்றும் முக்கியமான அணு எரிபொருளாக ("atomic fuel") உள்ளது. அண்டத்தில் மிகுந்திருக்கும் ஹைட்ரஜன் பூமியில் குறைவாக இருப்பதற்குக் காரணம் அதன் வெப்ப இயக்க ஆற்றலால் பெறும் இயக்க வேகம், தப்புதல் வேகத்தை ("escape velocity") விட அதிகமாக இருப்பது தான். சனி, வியாழன் போன்ற பெரிய கோள்களில் ஈர்ப்புக் கவர்ச்சி அதிகம். அதனால் அவற்றின் வளி மண்டலத்தில் ஹைட்ரஜன் கூடுதலாக உள்ளது. மேலும் தாழ்ந்த வெப்ப நிலையும் உயரளவு அழுத்தமும் இருப்பதால் இந்த ஹைட்ரஜன் உறைந்து கோளின் உட்புறத்தில் உலோக ஹைட்ரஜனாக ("Metallic hydrogen") இருக்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். உலோக ஹைட்ரஜன் மீக்கடத்தும் தன்மைப் பெற்றுள்ளது என்பதால் அது பற்றிய ஆய்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. H - என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஹைட்ரஜனின் அணு எண் 1,அணு நிறை 1.008,அடர்த்தி ௦.089 கிகி /க.மீ.இதன் உறை நிலையும்,கொதி நிலையும் முறையே 13.95 மற்றும் 20.35 K ஆகும். சாதாரண சூழலில் ஹைட்ரஜன் வளிமம் ஈரணு மூலக் கூறுகளால் ஆனது. இதை H 2 என்று குறிப்பிடுவர். இது மிகவும் எளிதாக தீப் பற்றி எரியக் கூடியது என்பதால் கவனமாகக் கையாளவேண்டும். காற்றில் எரியும் போது, அதிலுள்ள ஆக்சிஜனுடன் வீரியமாக இணைந்து நீராக மாறுகிறது. அப்போது பெருமளவு ஆற்றல் வெளிப்படுகிறது. ஹைட்ரஜன் மிகச் சிறிதளவே நீரில் கரைகிறது. பெரும்பாலான அலோகங்கள் ("non-metals") மற்றும் சில உலோகங்களுடன் சேர்ந்து ஹைட்ரைடுகளைக் ("hydrides") தருகிறது. ஆக்சிஜன்-ஹைட்ரஜன் கலந்த கலவைக்கு நெருப்பூட்டினால் வெடிக்கிறது. புளூரினுடன் ("Fluorine") இணையும் போது இருட்டில் கூட வெடிக்கிறது. குளோரினுடன், சாதாரண வெப்ப நிலையிலும் புரோமின், அயோடின், ஆக்சிஜன், கந்தகம் ஆகியவற்றுடன் உயர் வெப்ப நிலையிலும் இது நிகழ்கிறது. பழுக்கச் சூடுபடுத்தப்பட்ட கார்பனுடன் சேந்து சிறிதளவு மீத்தேனை உண்டாக்குகின்றது. ஹைட்ரஜன் சேர்மங்களில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து அதனுடன் இணைவதால் இது ஒரு ஆக்சிஜனீக்கி ("Oxidising agent") எனக் கூறப்படுகிறது. ஹைட்ரஜன் மிகவும் லேசானது என்பதால் அதை பலூன்களில் நிரப்பி, வானத்தில் மிதக்கவிட்டு காடுகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் பயணித்து மனிதர்கள் நுழைய முடியாத இடங்களையும் வளி மண்டலத்தில் அதிக உயரங்களில் இருந்து கொண்டு ஆய்வுசெய்கிறார்கள். 1937ல் ஜெர்மன் நாட்டில் ஹைட்ரஜன் பலூனில் ஏற்பட்ட ஒரு சிறிய தீப்பொறி பலூன் கப்பலை எரித்துவிட்டது. அதன் பிறகு பலூன் கப்பலுக்கு ஹீலியத்தைப் பயன்டுத்துவதே பாதுகாப்பானது என்பதை அறிந்து கொண்டனர். தாவர எண்ணெய்களின் ஊடாக ஹைட்ரஜனைச் செலுத்தும் போது, அது மார்கரின் (Margarine)எனப்படும் திண்மமாக உறைகிறது. இதை "ஹைட்ரஜனூட்டம்" ("hydrogenation") என்பர். இரத்தக் குழாய்களில் படிந்து பாய்வுக்குத் தடை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புப்பொருள் இதில் குறைவாக இருப்பதால் வெண்ணைக்குப் பதிலாக மார்கரினைப் பயன்படுத்துகிறார்கள். இதில் நிக்கல் வினை ஊக்கியாகக் கொள்ளப்படுகிறது. வேதியியல் தொழிற்சாலைகளில் அமோனியா(Ammonia) உற்பத்திக்கு ஹைட்ரஜன் வளிமம் பயன்படுகிறது. இது அமோனியா சல்பேட் என்ற முக்கிய உரத்திற்கு மூலப் பொருளாக உள்ளது. ஹைட்ரஜனின் ஒரு முக்கியமான,பொதுவான சேர்மம் நீராகும். விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களுக்கு நீர் இன்றியமையாதது. நீரில் மட்டுமின்றி பல கரிமச்சேர்மங்களிலும், உயிர் வேதிச் சேர்மங்களிலும் ஹைட்ரஜன் நிறைந்துள்ளது. இதில் பெரும்பாலும் கார்பனுடன் நேரடியாக இணைந்துள்ளது. இவற்றுள் ஹைட்ரோ கார்பனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இயற்கை எரிவளிமம் பெட்ரோல் போன்றவற்றில் நீண்ட சங்கிலித் தொடராக மூலக்கூறு அமைந்துள்ளது. இத் தொடரைப் பிரித்து விடுவிக்கும் போது பெருமளவு ஆற்றல் வெளிப்படுகிறது. இன்றைக்கு மின்உற்பத்தி நிலையங்களிலும், தானியங்கு உந்து வண்டிகளிலும் இது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. நீரைப் பகுத்து வர்த்தக ரீதியில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறார்கள். நீராவி வினையாக்கம் ("Watergas reaction") என்ற வழிமுறையில் நீராவியைச் சூடான நிலக்கரியில் பீச்சியடிக்கின்றார்கள். சில சமயங்களில் நிலக்கரிக்குப் பதிலாக மீத்தேன் வளிமத்தையும் பயன்படுத்துவார்கள். மீவெப்ப மேற்றிய நீராவியைப் பயன்படுத்தும் போது மீத்தேன் மற்றும் நீரவியிலுள்ள மூலக் கூறுகளிலுள்ள ஹைட்ரஜன் விடுவிக்கப்படுகிறது. இவை ஹைட்ரஜன் மூலக் கூறுகளாக உருவாக்கம் பெறுகின்றன. நிலக்கரியில் நீராவி வினை புரிந்து ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கின்றன. இந்த இரு வளிமங்களையும் இயற்பியல் முறைப்படி பிரித்தெடுக்கலாம். சில சமயங்களில் இந்த இருவளிமங்களின் கலவையை அப்படியே பயன்படுத்துவார்கள். இதுவே நீர்ம வளிமம் எனப்படுகிறது. இது தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. ஏவூர்தியைச் செலுத்துவதற்கு நீர்ம ஹைட்ரஜன் ஓர் எரிபொருளாகப் பயன்படுகிறது. இதை ஆக்சிஜனுடன் கலந்து எரிவறைக்குள் செலுத்த, அவை எரிந்து சூடான நீராவியை உற்பத்தி செய்கின்றது. இது ஏவூர்தியை இயக்குவதற்குத் தேவையான உந்தலைத் தருகிறது. ஹைட்ரஜனின் மற்றொரு வகையான சேர்க்கைத் தொகுதி கார்போ ஹைட்ரேட்டுகளாகும். இது ஹைட்ரஜன், கார்பன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் சேர்கையால் ஆனதாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் நீரையும்,கார்பன்டை ஆக்சைடையும் ஒருங்கிணைத்து கார்போ ஹைட்ரேட்டுக்களை உற்பத்தி செய்கின்றன. அதனால் தாவர உணவுப் பொருட்களில் இதன் செழுமை அதிகமாக இருக்கின்றது. இது மனிதர்களுக்கும், தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்கினங்களுக்கும் தேவையான ஆற்றலைத் தருகிறது. ஹைட்ரஜனின் மற்றொரு பயன்பாடு அணுக்கருப் பிணைப்பு ("Nulcear fusion") வினைக்கான மூலப் பொருளைப் பெறுவதாகும். ஹைட்ரஜன், டியூட்டிரியம் ("deuterium") மற்றும் டிரைட்டியம் ("tritium") என்ற இரு அணு எண்மங்களை ("isotope") பெற்றுள்ளது. டியூட்டிரியம் நிலையானது, டிரைட்டியம் கதிரியக்கத்தால் சிதையக் கூடியது. டியூட்டிரியம் இயற்கையில் நீரில் கன நீராக உள்ளது. இயற்கையில் இதன் செழுமை 1 /200 %. அதாவது 6000 நீர் மூலக் கூறுகளில் ஒரு மூலக் கூறு கனநீராகும். மின்னாற் பகுப்பு மூலம் கனநீரைப் பிரித்தெடுக்கின்றார்கள். சாதாரண நீரில் 40% மேல் கனநீர் இருப்பின் அது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். கன நீர் அணு உலையில் நியூட்ரான்களை மட்டுப்படுத்தவும் (வேகத்தைக் குறைக்கவும்) குளிர்வூட்டி ஆற்றலை அப்புறப்படுத்தவும் செய்கின்றது. யுரேனியம் அணுக்கரு குறைந்த வேகத்துடன் இயங்கும் நியூட்ரானால் பிளவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகிறது. இந்த அணுக்கரு வினையின் பயனுறு திறனை கனநீர் பெரிதும் தூண்டுகிறது. டிரைட்டியம் ஓர் எலெக்ட்ரான் உமிழ்வானாகும். இதன் அரை வாழ்வுக்காலம் ("Half life period") 12.26 ஆண்டுகள். பூமியின் வளி மண்டலத்தில் அண்டக் கதிர்கள் ("Cosmic rays") ஊடுருவும் போது டிரைட்டியம் ஒரு சீரான வீதத்தில், ஆனால் மிக மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. டியூட்ரியமும், டிரையட்டியமும் அணுக்கருப் பிணைப்பு வினைக்குத் தேவையான மூலப் பொருள்களாயிருக்கின்றன. கதிரியக்கக் கழிவு ஏதுமின்றி ஆற்றலைப்பெற முடிவதாலும், மூலப்பொருள் எளிதாகவும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும், இது எதிர்காலத்தின் ஆற்றல் மூலம் எனப்படுகின்றது. பல்மநீர் ("Poly water") என்ற நீர்மம் நீரிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் அடர்த்தி, பாகு நிலையில் குறிப்பிடும் படியான மாற்றம் பெற்றிருப்பதால், இதை முரணிய நீர் ("anomalous water") என்றும் கூறுவர். இதற்கு நீர் மூலக்கூறில் ஏற்படும் மாற்றம் காரணமில்லை நீரில் இருக்கும் மிதவல் ("Coloidal") துகள்களின் பங்களிப்பே என்று ஒரு பகுதியினரும், ஹைட்ரஜன் பிணைப்பின் கட்டமைப்பில் ஏற்படும் வேறுபாடுகள் என்று மற்றொரு பகுதியினரும் கூறுகின்றனர். ஹைட்ரஜன் சேர்ந்த சேர்மங்கள் எண்ணற்றவை. வாசனைத் திரவியங்கள், சாயங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகள், மரபணு மூலக்கூறுகள், புரோட்டீன் என ஹைட்ரஜனின் பயன்பாடு நீளுகிறது. ஹைட்ரஜனில் ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ரஜன் என இரு வகையுண்டு. அறை வெப்ப நிலையில் இயற்கை ஹைட்ரஜனில் 25% பாராவும், 75% ஆர்த்தோவும் உள்ளன . பாராவில் புரோட்டான் எலெக்ட்ரானின் தற்சுழற்சி ஒன்றுக்கொன்று எதிராகவும், ஆர்தோவில் இணையாகவும் உள்ளன. இவற்றின் ஆற்றல் வேறுபட்டிருப்பதால், இயற்பியல் பண்புகளும் மாறுபட்டிருக்கின்றன. பாரா ஹைட்ரஜனின் உறை மற்றும் கொதி நிலைகள் சாதாரண ஹைட்ரஜனை விட 0.1 டிகிரி செல்சியஸ் தாழ்வாக இருக்கிறது. இரு வேறு ஆற்றல் நிலைகளுக்கு இடையே ஏற்படும் நிலை மாற்றத்தினால் உமிழப்படும் ஆற்றலின் அலைநீளம் வானவியலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஹைட்ரஜன், வேதிவினைகளில் ஈடுபடும் போது ஹைட்ரஜன் பிணைப்பை ஏற்படுத்தி ஒரு வழக்கமான எலெக்ட்ரான் பகிர்வுப் பிணைப்புடன், வலுவற்ற புரோட்டான்-எலெக்ட்ரான் பிணைப்பையும் உண்டாக்குகின்றது. இது உயிரியல் மூலக் கூறுகளில் பேரியல் மூலக் கூறுகளை உருவாக்கும் முறைக்கு பயனுடையதாக இருக்கின்றது. யோசப் பரராஜசிங்கம் படுகொலை இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் அவர்கள் டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராவும் இருந்தவர். இறப்பின்பின் யோசப் பராஜசிங்கத்துக்கு விடுதலைப் புலிகளால் "மாமனிதர்" பட்டம் வழங்கப்பட்டது. அவரது உடல் கிளிநொச்சிக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிரபாகரன் உட்பட முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள், மலையக தமிழர் தலைவர்கள், பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். யோசப் பரராஜசிங்கம் யோசப் பரராஜசிங்கம் (நவம்பர் 26, 1934 - டிசம்பர் 24, 2005) இலங்கை, மட்டக்களப்பு பகுதியை சார்ந்த முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது. மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டார். ஜோசப் பரராஜசிங்கத்துக்கு மரணிக்கும்போது வயது 71. மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் இவருக்கு; இவரது ஒருமகன் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே. 1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருந்தபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் நியமிக்கப்பட்டார். அதனை அடுத்த தேர்தல்களில் ஜோசப் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார். கே. எஸ். ரவிக்குமார் கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். டிசம்பர் 25 பி. வாசு பீ. வாசு என்பவர் பி. வாசு என அறியப்படுபவர். இவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார். மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கண்டிய நடனம் கண்டிய நடனம் ("Kandyan dance") சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியமிக்க கலை வடிவமாகும். பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது. இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். 16-19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனத்தின் இந்து புராணக் கதை, புராண நாயகர்கள், மிருகங்களின், நடத்தைகள் ஆடப்படுகின்றது. கண்டி பெரஹரவில் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும். கண்டி நடனமாடுபவர்கள் தலையில் குஞ்சத்துடன் கூடிய முடியும், உடலெங்கும் பலவிதமான நகைகள் அணிந்திருப்பர். செவிவழிக் கதைகளின்படி, கண்டி நடனம் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்த மந்திரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கிலிருந்து தோன்றியது ஆகும். இலங்கை அரசன் ஒருவனுடைய கனவில் சிறுத்தை ஒன்று அடிக்கடி வரலாயிற்று. சிங்களவர்களின் முதல்வன் எனக் கருதப்படும் முதல் மனைவியாகிய குவேனி என்பவள் வைத்த சூனியம் காரணமாக ஏற்பட்ட ஒரு நோய் இது எனக் கருதப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக இம் மந்திரவாதிகளை இலங்கை அரசன் இலங்கைக்கு அழைப்பித்தான். கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கு செய்த பின்னர் அரசன் இந் நோயிலிருந்து மீண்டான். இதைத் தொடர்ந்து பல இலங்கையர் இந்தச் சடங்கை நிகழ்த்தலாயினர். பிற்காலத்தில் சிங்கள நிலவுடைமை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களே இந் நடனத்தை ஆடினர். ஆண்கள் மட்டுமே இந் நடனத்தை ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். புத்தர் பற்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்த இச் சாதியினர் அக்கோயிலில் நிகழும் தலதா பெரகரா என அழைக்கப்படும் ஊர்வலத்தில் முக்கிய பங்கு வகித்தனர். கண்டி அரசர்களின் காலத்தில் இந்த நடனம் அரசின் ஆதரவுடன் வளர்ந்தது. கண்டி அரசு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த நடனம் செல்வாக்கு இழந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்நடனம் புத்துயிர் பெற்றுள்ளதுடன் மேடைகளில் ஆடத்தக்க வகையில் வளர்ச்சியும் அடைந்துள்ளது. இலங்கையின் பண்பாட்டு அடையாளமாகவும் இது இன்று விளங்கிவருகிறது. கண்டி நடனக் கலைஞர்கள் வேலைப்பாடுகளுடன் கூடிய உடைகளை அணிந்து ஆடுவர். இது "வெஸ் உடை" எனப்படுகிறது. ஆண்கள் தலைப்பாகை அணிவதுடன், மேற்சட்டை எதுவும் அணியாமல், மணிகளால் இழைத்து வலைபோல் செய்யப்பட்ட மார்பணி ஒன்றை அணிவர். தலைப்பாகையின் முன்புறம் உலோகத்தால் ஆன அமைப்பைக் கொண்டது. இடுப்புக்குக் கீழ் கணுக்கால் வரை நீண்ட உடை அணிவர். இடுப்பில் ஒட்டியாணம் போல் அமைந்த இடுப்புப் பட்டியின் முன்புறம் முக்கோண வடிவில் அமைந்து முழங்காலுக்குச் சற்று மேல் வரை நீண்டிருக்கும். இவற்றைவிட கைகளில் தோள்பட்டைக்குக் கீழ் மேற்கையிலும், முழங்கைகளுக்குச் சற்றுக் கீழும் அணிகள் அணிந்திருப்பர். காலில் சலங்கையும் அணிவது உண்டு. கண்டி நடனக் கலைஞர் முதன் முதலாகத் தலை அணி அணிவது ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது. இது "வெஸ் மாங்கல்யம்" என அழைக்கப்படுகிறது. கண்டி நடனத்தைத் தாளக் கருவிகளுடன் ஆடுவதே மரபு. "கெத்த பெர" எனப்படும் ஒருவகை மத்தளம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டி நடனத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். இந்த மத்தளம் வாசிப்பவரும் இதற்கென உள்ள சிறப்பு உடைகளுடன் நடனக் கலைஞருக்கு அருகில் நின்று வாசிப்பார். "தாளம்பொத்த" எனப்படும் சல்லாரியையும் பயன்படுத்துவர். சிலவகைக் கண்டி நடனங்களில் பாடல்களுடன் கூடிய இசையும் பயன்படுகின்றது. முற்காலத்தில் பெண்கள் கண்டி நடனங்களில் இடம்பெறுவதில்லை. தற்போது பெண்களும் இந் நடனங்களை ஆடுவதற்குப் பயில்கின்றனர். எனினும் பெண்களுக்கு என அமைந்த "வெஸ் உடை" கிடையாது. எனவே ஆண்களுக்கான உடைகளில் வெவ்வேறு வகையான மாற்றங்களைச் செய்து பெண்கள் உடுத்துகின்றனர். 1970 களில் சித்திரசேன டயஸ் என்பவர் கண்டிய நடனத்தை மேடைகளில் ஆடுவதற்கு ஏற்றவாறு அமைத்தார். தான் உருவாக்கிய மேடை நடன நிகழ்ச்சிகளில் கண்டிய நடன அசைவுகளையும் அம்சங்களையும் பயன்படுத்தினார். இவரது புகழும், இந்த நடனம் தொடர்பாக இருந்துவந்த சாதித் தடைகளை உடைப்பதற்கு உதவியதுடன், கண்டிய நடனத்தை நகர்ப்புற மக்களும், தற்காலத்துச் சுவைஞர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் ஆக்கியது. இன்றுவரை இலங்கையில் கண்டி நடனத்தைப் பயிற்றுவிப்பதற்காக இயங்கும் பள்ளிகளில் பெரியது சித்திரசேன நடனப் பள்ளியே. அமேசான் டிசம்பர் 26 ஒருங்குறி ஒருங்குறி அல்லது யுனிகோட் (Unicode) என்பது, எழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும். இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருகளும் அடங்கியுள்ளன. கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள் இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல. ஒருங்குறி, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. (எ+கா) XML ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது. இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இஸ்கீ ("Indian Script Code for Information Interchange", ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி (பங்களா) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், மற்றும் தெலுங்கு. ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள் மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. கணினி இயங்குதளங்களும் (operating system) பயன்பாட்டு மென்பொருட்களும் படிப்படியாக ஒருங்குறிக்கான முழுமையான ஆதரவை வழங்கத்தொடங்கியுள்ளன. ஒருங்குறிப் பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் கனூ/லினக்ஸ் இயங்குதளமும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி கனூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியைக் கையாளு முறைமையிலிருந்து கனூ/லினக்ஸ் இணை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருள்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற பழசோடும் ஒத்திசைதல் எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது. கனூ/லினக்ஸில் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினைக் கொண்டிருந்தது. ஆரம்பகால கனூ/லினக்ஸ் இடைமுகப்பு தமிழாக்கத்தின்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும். விண்டோஸ் இயங்குதளங்களில் விஸ்டாவில் தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.தமிழை உத்தியோகப்பூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டோஸ் பதிப்பு விண்டோஸ் 2000 ஆகும். எ-கலப்பை மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் விண்டோஸ் 98 இயங்குவேண்டும். உங்களிடம் விண்டோஸ் XP சேவைப் பொதி 2 இருந்தால விண்டோஸ் மொழி இடைமுகப் பொதியை நிறுவிக் கொள்ளலாம். செல்பேசிகளில் ஜாவா தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை வழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டாட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் சண்ரெல் மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா எ-கலப்பை மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளை தயாரிக்க முடியும். முன்னிறுத்தல் சிக்கலான கருத்தையும்கூட எளிமையாகவும் தெளிவாகவும் வெற்றிகரமாகச் சொல்லுங்கள் பலர் கூடியிருக்கும் அவையில் பேசும்போது விறுவிறுப்பாகவும், அவையோருக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் பேசவேண்டும். சரியான முறையில் தயார் செய்யப்படாத அல்லது நமது குறிக்கோளைப்பற்றிய தெளிவற்ற நிலையில் பேசும்போது மிகச் சிறந்த, நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் முன்னிறுத்தம் (presentation) அல்லது நமது உரையளிப்பு முற்றிலும் வீணாகப் போய்விடும். தயார் படுத்துதல்: வெற்றிகரமாக உரையளிப்பிற்கு முக்கியமான காரணி. உங்களது உரையளிப்பு ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் குறிக்கோளில் தெளிவான முடிவுடன் இருங்கள். உங்கள் முன்னிருக்கும் கேள்விகள்: அடுத்து எப்படிப்பட்ட பார்வையாளர்களுக்கான உரையளிப்பை நீங்கள் அளிக்கப்போகிறீர்கள், அவர்களுக்கு இந்த உரையளிப்பின் தலைப்பு மற்றும் சாரத்தைப் பற்றி எந்த அளவுக்கு விவரம் தெரியும் என்பதைப் பொருத்து உங்களின் உரையளிப்பு அமையவேண்டும் முன்னிருத்தலின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்? உங்களது முன்னிருத்தலின் குறிக்கோளையும், நோக்கத்தையும் அதற்கானப் பார்வையாளர்களையும் நீங்கள் முடிவு செய்தப்பிறகு இப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான வேலை முன்னிருத்தலின் அமைப்பு. முதலாவதாக இந்த முன்னிருத்தலுக்கு எவ்வளவு நேரம் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை பல சிறிய பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகமும் உங்களது முன்னிருத்தலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விளக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும், அதே சமயத்தில் உங்களது முக்கியமான குறிக்கோளிலிருந்து வெளியில் செல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக முதல் பகுதி அறிமுகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதியில் நீங்கள் உங்களது முன்னிருத்தலைப் பற்றிய சுருக்கமான நோக்கம், அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பிற்கான காரணம், அதன் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீகள்.போன்றவற்றைச் சுருக்கமாக விளக்கவேண்டும். அடுத்தப் பகுதியில் உங்கள் நிகழ்வுப் பட்டியலின் (Agenda) முதலில் உள்ள தலைப்பு இடம்பெற வேண்டும். அதைத் தொடர்ந்து நிகழ்வுப் பட்டியலின்படி மற்றத் தலைப்புகள் வரிசைப் பிரகாரம் அமையவேண்டும். உங்களின் அறிமுகம் மற்றும் மற்றப்பகுதிகளைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு ஏற்பட்ட பிறகு நீங்கள் சிறிது நேரம் செலவழித்து உங்களது முன்னிறுத்தலின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கவேண்டும். பொதுவாக ஒரு முன்னிருத்தலில் அறிமுகம் மற்றும் முடிவுரைப் பகுதிகள்தான் மிக முக்கியமானப் பகுதிகளாகக் கருதப்படுகிறது. அவைதான் உறுதியான, அழுத்தமானத் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் முன்னிறுத்தல் தெளிவாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இருக்க நீங்கள் செய்யவேண்டியது: சில சமயம் பார்வையாளர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும். அப்போது நீங்கள் செய்யவேண்டியது: காட்சி சார்ந்த உபகரணங்களின் (visual aids) மூலம் உங்களின் முன்னிறுத்தலை பலப்படுத்தவேண்டும்: அரங்கத்தைத் தயார் செய்தல் பொதுவாக முன்னிறுத்தல் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னதாகவே அரங்கைச் சென்று பார்க்கவேண்டும். இருக்கைகள் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் (நீள் வட்ட அல்லது அரை வட்ட வடிவில் இருக்கைகள் அமைந்திருப்பது கருத்தாடலுக்கு நல்லது. இருக்கைகள் வரிசைகளில் அமைந்திருந்தால் கருத்தாடலுக்கு இடைஞ்சலாக இருக்கும்). உங்களுடைய காட்சி சார்ந்த உபகரணங்கள் எவ்விதம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். வெளிச்சம், இடவசதி மட்டுமல்லாது அரங்கின் தட்பவெட்ப நிலையையும் ஆரம்பத்திலேயே சரிப்பார்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு இருக்கையாளரும் உபயோகிக்கும் வகையில் கையேடு, எழுதுகோல் முதலியவற்றை எல்லா இருக்கைகளுக்கு அருகிலும் வைக்கவேண்டும். குடிதண்ணீர் மற்றும் டம்ளர்களை மேசையில் சரியானப்படி வைக்கவேண்டும். நிகழ்ச்சி அரைமணி நேரத்திற்கு மேல் ஆகுமென்றால் சிறிய இடைவேளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கழிவறை வசதிகள் அருகிலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும். உங்களது முன்னிறுத்தல் முழுவதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய தேவையில்லை. ஆனால் அதைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும் விதத்தில் பலமுறை ஒத்திகை ஓட்டம் செய்துப்பார்த்துக்கொள்வது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை முழு முன்னிறுத்தலையும் வெள்ளோட்டம் பார்ப்பது மிகவும் பயன் தரும். எவ்வளவுகெவ்வளவு அதிகமாக நீங்கள் ஒத்திகை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு மிக நம்பிக்கையுடன் உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் அளிக்க இயலும், உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் கையாளும் விதத்தைப் பார்த்து அவையோருக்கும் ஒரு நல்ல ஈடுபாடு வரும். உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் சரியான படியும் முறையாகவும் தெரிந்திருக்கும் பட்சத்தில் உங்களால் மிகவும் நம்பிக்கையுடனும், உரக்கவும், தெள்ளத் தெளிவாகவும் விளக்கமுடியும். அவையோருக்கு சந்தேகங்களோ அல்லது மன ஈடுபாடோ ஆர்வக் குறைவோ உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். உங்கள் குறிக்கோளில் நீங்கள் உறுதியாக இருங்கள். அவையோருக்கு நீங்கள் சொல்வதை நன்றாகப் புரியும்படி விளக்குங்கள். நீங்கள் சொல்ல விரும்புவதை ஆணித்தரமாக எடுத்துச்சொல்லுங்கள் அதன் மூலம் அவையோருக்கு அதிக ஈடுபாடு ஏற்படும், உங்கள் முன்னிறுத்தலும் வெற்றியடையும். சில முக்கியமான பயன் தரும் குறிப்புகளும், தொழில் நுணுக்கங்களும்: உங்கள் முன்னிறுத்தல் வெற்றிகரமாக அமைய: காட்சி வில்லைகளை (slides) பயன்படுத்தும் முறை: மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை: முடிவுரை: முன்னிறுத்தல் பற்றி ஏற்கனவே நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். நான் ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறேன். ஏதாவது குறைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். உங்கள் ஐயங்களையும் எழுதவும். எனக்குத் தெரிந்தவரை விளக்க முயற்சிக்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி. இந்தியாவில் வெளியூர்களில் முன்னிறுத்தல் அளிக்கப் போகும்போது மறக்காமல் கீழ்க்கண்ட பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். பொருத்துக்குழி, தாங்கு குழி (Socket) செருகி (Plugs) ஊசி, பொருதிக்கம்பி, செருகாணி (செருகி ஆணி), ஆணி (Pin) மின்வடம், மின்கம்பி (cable, wire) வெண்திரை (white screen) ஒளிப்படக் காட்டி: (Projector) சார்புக் கோட்பாடு ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இரு பெரும் கோட்பாடுகளான சிறப்புச் சார்புக் கோட்பாடு ("Special Relativity") மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு ("General Relativity") ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து பொதுவாக சார்புக் கோட்பாடு ("Theory of Relativity") என்று கூறப்படுகிறது. சார்புக் கோட்பாடு பின்வரும் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது: சார்புக் கோட்பாடு அல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார். சிறப்புச் சார்புக் கோட்பாடு (special theory of relativity) என்னும் கொள்கை ஆல்பர்ட் ஐன்ஸ்டினால் 1905ல் வெளியிடப்பட்ட கருத்தாக்கமாகும். இது துகள்களின் இயக்கம் தொடர்பானது. இது எந்தவொரு இயக்கமும் சார்பானது என்றும், எதுவும் தீர்க்கமானதாக இருக்காது என்றும் ஒரு கருத்தை முன் வைத்தது. இதற்கு முன்னரே 1687 ஆம் ஆண்டில் சர். ஐசக் நியூட்டன் பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான விதிகளை வெளியிட்டிருந்தார். இவ்விதிகள் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபட்ட இயக்கங்களுக்குப் பொருத்தமாக அமைந்தது. சிறப்புச் சார்புக் கோட்பாடு இரண்டு கருதுகோள்களைக் கொண்டுள்ளது. பொதுச் சார்புக் கோட்பாடு என்பது 1916ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் வெளியிடப்பட்ட ஈர்ப்புக்கான வடிவவியல் கோட்பாடு ஆகும். பொதுச் சார்பின் மையக் கருத்து வெளியும் நேரமும் வெளிநேரம் எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும். வெளிநேரம் அதில் இருக்கும் பொருள், ஆற்றல், உந்தம் என்பவற்றின் காரணமாக வளைந்து காணப்படுகிறது இதைப் போன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாததாய் ஐன்சுடீன் தந்த விளக்கங்கள் அமைந்ததால் இவருடைய இந்தக் கோட்பாடுகளுக்கு எதிர்ப்பும் வந்தன. நியூட்டனின் விதிகளின் படி குறைவான வேகத்தையும் குறைந்த ஈர்ப்பு விசையையும் கொண்ட அண்டப் பொருட்களின் தன்மைகளையே கண்டறிய முடியும். வேகமாகவோ அதிக ஈர்ப்பு விசையோடு இயங்கும் அண்டப் பொருட்களின் தன்மைகளையோ நியூட்டன் விதிகளின் படி கணிப்பதில் பிழைகள் நேரலாம். இதற்கு உதாரணமாக புதன் கோளின் சுற்றுப் பாதையிலும் இரட்டை மீயொளிர் விண்மீன்களின் சுற்றுப்பாதைகளிலும் உள்ள தன்மைகளை கணிப்பதில் உள்ள பிழைகளைக் கூறலாம். ஆனால் இதை ஐன்சுடீனின் சார்ப்புக் கோட்பாட்டின் படி பிழையில்லாமல் கணிக்க முடியும். அதன் காரணம் இங்கு அதனால் நியூட்டனின் விதிகள் பெருமளவு புவியின் உள்ளும் ஐன்சுடீனின் சார்புக் கோட்பாடு வானியல் ஆராய்ச்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு சார்புக்கொள்கை பெரிய புகழை பெற்றுத் தந்தது. அவர் இதை கண்டறிந்ததற்காக நிகோலஸ் கோபர்நிகஸ், கெப்லர், ஐசக் நியூட்டன் போன்றவர்களோடு ஒப்பிடப்பட்டார். சார்புக்கொள்கை கண்ட அல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு யூத மதத்தவர் என்பதால் அவரை நேரடியாக விமர்சிக்காமல் சார்புக் கொள்கையை புரிந்து கொள்வதில் இருந்த இடர்களை காட்டி விமர்சித்தனர். சார்புக் கொள்கை அனைத்து நவீன கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இக்கொள்கையே நவீன இயற்பியலுக்கு மாதிரியாய்க் கருதப்படுகிறது. ஐன்சுடீன் தான் சார்புக் கொள்கையை கண்டறிந்தவர் என்று பலர் கூறினாலும் சிலர் இவருக்கு முன்னரே தாங்கள் சார்புக் கொள்கையை கண்டுள்ளோம் என்றும் கூறியிருக்கின்றனர். எண்சட்டம் எண்சட்டம் அல்லது அபக்கசு (Abacus) என்பது, முக்கியமாக ஒரு சில ஆசிய நாடுகளில் எண்கணித செயற்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும். தற்காலத்தில், இந்த எண்சட்ட கருவியானது மூங்கிலாலான செவ்வக வடிவ சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புக்களில், மணிகளைக் கோர்த்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் இது மண், கல், மரம் அல்லது உலோகத்தில் ஏற்படுத்தப்படும் நீண்ட, குறுகிய பள்ளமான அமைப்புக்களில், பயற்றம் விதைகள் அல்லது சிறிய கற்களை வைத்து நகர்த்துவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. தற்கால எண்களுக்குரிய எழுத்து வடிவம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த எண்சட்ட முறையானது தோன்றியிருந்தபோதிலும், தற்காலத்திலும், பல ஆசிய, ஆபிரிக்க பிரதேசங்களில் வியாபாரிகள், வர்த்தகர்கள், எழுத்தர்களால் இம்முறை பரந்தளவில் பயன்பட்டு வருகிறது. அபக்கஸ் (Abacus) என்பது Abq (மிருதுவான மணல் என்பது பொருள்) என்ற அரேபிய சொல்லில் இருந்தோ, அல்லது Abax (table, frame) என்ற கிரேக்க வார்த்தையில் இருந்தோ வந்திருக்க முடியும் என்பது ஆராச்சியாளர்களின் கருத்து. அபக்கஸ் என்ற சொல்லானது கி.பி. 1387 இல் பாவனைக்கு வந்ததாகவும், மணல் எண்சட்டத்தை குறிக்க லத்தீன் மொழியிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டதாக அறியப்படுகிறது. கணிதம் (Math அல்லது Maths) என்று நாம் பொதுவாக நோக்கும்போது எமக்கு உடனடியாக தோன்றுவது இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும்தான் (shapes). ஆனால் கணிதம் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். இதனால்தான் கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார். ஆரம்ப காலங்களில் கணிதம் என்பது எண்கணிதம் (arithmetic) (எண்களின் உபயோகம், அதன் அடிப்படை இயல்புகள், செய்முறைகள்) என்ற அடிப்படை தொகுதியாக இருந்த போதிலும், தொடர்ந்த காலங்களில் மேலும் பல தொகுதிகளாக (அட்சர கணிதம் (algebra), கேத்திர கணிதம் (geometry), நுண்கணிதம் (calculus) இப்படி பல பிரிவுகளாக) பிரிக்கப்பட்டு அறிவியல் சார் வல்லுனர்களுக்கு மிகவும் பயனுடையதாக பரிணமித்து விட்டது. இவ்வுலகத்தில் இருந்த பண்டைய நாகரீகங்கள் (ancient civilizations) யாவும் தமது காலங்களில் ஓரளவுக்கு கணிதத்தை வளர்த்து விட்டுள்ளன. சில காலங்களில் கணித வளர்ச்சியானது ஒரு நாகரீகத்தில் இருந்து வேறொரு நாகரீகத்துக்கு பரவியுள்ளது. உதாரணமாக, ஆரம்ப கணித செயற்பாடுகள் கி.மு 20 ஆம் நூற்றாண்டில், எகிப்து (Egypt), பபிலோன் (Babylon) போன்ற இடங்களில் ஆரம்பித்து, பின்பு கிரேக்கத்தில் (Greece) தொடர்ச்சியாக வளர்ச்சியுற்றது. கணித சம்பந்தமான ஆவணங்கள் அரபு மொழியில் (Arabic) இருந்து கிரேக்க மொழிக்கும் (Greek), மற்றும் கிரேக்க மொழியில் இருந்து அரேபிய மொழிக்கும் மொழி பெயர்க்கப்பட்டன. அதே நேரம் இந்திய மொழியில் இருந்தும் அரபு மொழிக்கு கணித ஆவணங்கள் மொழி பெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இதன்பின்பு கணித ஆவணங்கள் யாவும் லத்தின் (Latin) மொழியில் வாசிக்க கூடியவாறு மாற்றப்பட்டது. இப்படியாக வளர்ச்சியடைந்த கணிதம்தான் பல நூற்றாண்டுகளின் பின்பு மேற்கு ஐரோப்பாவில் மேலும் பல விதமான வளர்ச்சிகளைக் கண்டு தற்போது சர்வதேச கணிதமாக பரிணமித்துள்ளது. இக்கால கட்டங்களில் ஒரு சில கணிதத்துறைகளில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கீழைத்தேய நாடுகளில், குறிப்பாக சீனா, தென்னிந்தியா, யப்பான் போன்ற நாடுகளில் நடை பெற்றுள்ளது. இவற்றின் பயன்கள் தற்போதுள்ள சர்வதேச கணிதத்தில் மறைக்கப்பட்டு விட்டாலும், அவை இன்றும் அந்த நாடுகளில் அவர்களுடைய பாரம்பரிய கணிதமாக கருதப்பட்டு, நடை முறையில் இருக்கின்றது. எண்களுக்குரிய எழுத்து வடிவம் அறியப்படாமல் இருந்தபோது எவ்வாறு எண்கணித மதிப்பீடுகளை கணித்திருக்கமுடியும் என்பது தற்போது சிந்திப்பதற்கு சிறிது கடினமான விடயம். ஆனால் இப்படியான வசதிகள் மற்றும் எழுத்து வடிவம் என்பன இல்லாதபோது மனிதன் தனது கை விரல்களை உபயோகித்து எண்களை இனம் கண்டான். விரல்களின் எண்ணிக்கையை விட கூடுதலான பொருட்கள் தென்பட்டபோது கற்கள், மணிகள், உலோகங்கள் என்பவற்றின் உதவியை நாடினான். பெரும்பாலும் ஒப்பீட்டு முறையிலேயே அவன் எண்களை தரம்பிரித்தான். இதன் தொடர்ச்சியாகத்தான் இவ்வாறான மதிப்பீடுகள் செய்வதற்கு ஒரு கருவியின் அவசியம் அவனுக்குத் தேவைப்பட்டது. அவ்வாறான காலத்தில் தோன்றியதுதான் அபக்கஸ் (Abacus) எனப்படும் எண்கணிதக் கருவியாகும். இதுதான் முதன் முதலில் தோன்றிய ஒரு கணிப்பொறி ஆகும். கி.மு. 500 ஆம் ஆண்டில் சீன நாகரீகத்தின்போது இது பாவனைக்கு உகந்ததாக இருந்தபோதும், கி.மு. 400 ஆம் ஆண்டில் மெசபதோமியா (Mesopotamia) நாகரீகத்தில் உருவாகிய 'மணல் அபக்கஸ்'தான் (sand abacus) அக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. இது பலகையால் அல்லது களி மண்ணினால் ஆன ஒரு செவ்வக வடிவான தட்டு ஆகும். இதன்மீது மிருதுவான மணலை நிரப்பி, அதில் பல கோடுகளை வரைவதன் மூலம் அம்மணல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டது. அதில் உள்ள நிரல்கள் யாவும் வெவ்வேறு எண் நிலைகளைக் குறித்தது. இதில் வியாபாரத்தின் நிமித்தம் சந்தைக்கு கொண்டு வரப்படும், விற்கப்படும் பொருட்களின் எண்ணிக்கைகள் வெவ்வேறு வடிவங்களாக அல்லது உருவங்களாக மணற்கோடுகளிடையே வரையப்பட்டு கணக்கிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கி.மு. 300 ஆம் ஆண்டில் சலவைக்கல்லால் (marble) ஆன கணிதப்பலகை ஒன்று பபிலோனியரால் (Babilonians) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பலகையில் சமாந்தரமாக பல கோடுகள் வரையப்பட்டு, அக்கோடுகளுக்கிடையில் சிறு கோலிகளை (marble balls) உபயோகித்து கணித அளவீடுகளைக் கணித்தார்கள். இக்கருவியானது பரவலாக எகிப்து, ரோம், கிறீஸ், இந்தியா உட்பட பல பண்டைய நாகரீகங்களால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை நாம் இப்போதும் ஏதன்ஸ் (Athens) நகரில் உள்ள அரும்பொருட்காட்சிச்சாலையில் பார்க்க முடியும். பிரபலமான இந்தக் கணிப்பொறியை "சலாமி அபக்கஸ்" (Salami abacus) என்று அழைத்தனர். இது 1846 ஆம் ஆண்டில் சலாமித்தீவில் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது. சலாமி அபக்கஸ் பாவனையில் இருந்த காலத்தில், அதனை விட சிறந்த அமைப்புடைய செப்பு உலோகத்தாலான கணிதப்பொறி (Hand abacus, Grooved abacus) ஒன்றை ரோமானியர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இது கிட்டத்தட்ட கி.பி. 500 ஆம் ஆண்டுவரை பாவனையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. இதன் பின்புதான் சீனர்களின் மணிகள் பாவித்து கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அம்முறையே மணிக்கணிதம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கருவியும் ஓரளவு ரோமானியர்கள் பாவித்த கணிப்பொறி போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், பல மாற்றங்களையும் கொண்டிருந்தது. முக்கியமாக இது பலகைச் சட்டங்களாலும், மணிகளாலும் ஆக்கப்பட்டு இருந்ததால் இதன் நிறை மற்றைய கருவிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருந்தது. இதனைச் சீனர்கள் சுயன் பான் (Suan-pan) என அழைத்தனர். இது ஒரு செவ்வக வடிவமுடைய சட்டமொன்றில் மணிகளைக் கோர்த்து அமைக்கப்பட்ட உருவமாகும். இங்கு மணிகளை நாம் நிரல்களாக அவதானிக்க முடியும். நிரல்களாக உள்ள மணிகள் ஒரு குறுக்குச் சட்டத்தால் (cross bar) இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மேற்பாகத்திலும் (upper deck), கீழ் பாகத்திலும் (lower deck) முறையே 2 மணிகள், 5 மணிகள் என்ற விகிதத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இதனை பொதுவாக 2/5 அபக்கஸ் என்று அழைத்தனர். இந்த 2/5 அபக்கஸ் இல் 1650 ஆம் ஆண்டுவரை மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்த போதும், 1/5அபக்கஸ் (அதாவது 1 மணி மேற் பகுதியிலும், 4 மணிகள் கீழ் பகுதியிலும்) சீனாவில் நடை முறைக்கு வந்தது. ஆனாலும் 1/5 அபக்கஸ் முறை சீனாவில் மிகவும் அரிதாகவே பாவிக்கப்பட்டது. இந்த 1/5 அபக்கஸ் ஆனது கொரியாவினூடாக யப்பானுக்கு (Japan) சென்று அங்கு சொறோபான் (Soroban) என்ற பெயரில் பிரபல்யமாகியது. பின்பு யப்பானியர் 1930 ஆம் ஆண்டளவில் அதனை 1/4 அபக்கஸ் ஆக மாற்றி, அதற்கும் சொறோபான் என்று பெயரிட்டார்கள். யப்பானியர்களின் அபக்கஸ் (soroban) அமைப்பு மிகவும் இலகுவானதாகும். இதனை நாம் விளையாட்டுப் பொருட்களைக்கொண்டு உருவாக்கிவிடமுடியும். ஒரு செவ்வக வடிவான சட்டத்தில் குறுக்காக 13 நேரிய, மெலிதான, உருளை வடிவான தடிகள் பொருத்தப்பட்டு, அவற்றில் மணிகள் அடுக்கப்படுகின்றன. ஆரம்ப நாட்களில் 9 அல்லது 13 தடிகள் பாவிக்கப்பட்டு வந்திருந்தாலும், தற்போது, பெருக்கல் (multiplication), பிரித்தல் (division), தசமதானங்களில் கணிதச் செயல்முறைகளைச் செய்வதற்கும், மற்றும் இலக்கமொன்றுக்கு வர்க்க மூலம் (square root), கனமூலம் போன்றவற்றை கணிப்பதற்கும் இலகுவாக 13 - 25 நிரல்கள் பாவிக்கப்படுகிறது. இந்த நிரல் மணிகளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கு, ஒரு குறுக்குச் சட்டம் (cross bar) உபயோகப்படுகிறது. குறுக்குச் சட்டத்தின் மேற்பாகத்தில் நிரலுக்கு ஒரு மணியும், கீழ்ப் பாகத்தில் நிரலுக்கு 4 மணிகளும் கோர்க்கப்பட்டு உள்ளன. மணிகளை மேல்பாகத்தில் இருந்தும், கீழ் பாகத்தில் இருந்தும், குறுக்குச் சட்டத்திற்கு அருகாக கொண்டு வருவதன் மூலம் இலக்கங்கள் குறிக்கப்படுகின்றன. மணிகளை குறுக்குச் சட்டத்தின் அருகாக கொண்டு வருவதை அடுக்குதல் (stacking) என்றும், குறுக்குச் சட்டத்தில் இருந்து தூரமாக தள்ளி வைப்பதை மீளப்பெற்றுக் கொள்ளல் (withdrawing) என்றும் அழைக்கலாம். 17 ஆம் நூற்றாண்டில் ரஷ்யரும் Stschoty என்ற அபக்கஸ் ஐ அறிமுகப்படுத்தினார்கள். உலகெங்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியில் எண்களின் பயன்பாட்டுக்கும், எண்கணிதக்கல்விக்கும் எண்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. மேலைத்தேய நாடுகளில் நிலைக்குத்தான சட்டங்களில் குறுக்காக செல்லும் கம்பிகளில் கோர்க்கப்பட்டிருக்கும் மணிகளைக் கொண்டதே இவ்வமைப்பாகும் (படத்தைப் பார்க்கவும்). இது பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான விளைய்யாட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது. இங்கு மணிகள் அமையப்பட்டிருக்கும் இடத்திற்கான பெறுமைதியைக் காட்டாமல், வெறும் எண்களையே குறிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 வரையான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் அபக்கஸ் முறையானது மக்களால் பாவிக்கப்படுகின்றது. சீனாவில் 2/5 அபக்கஸ் (suan-pan) பாவனையில் இருந்தாலும், சீனாவிற்கு வெளியே, குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில் 1/4 அபக்கஸ் (soroban) பிரபல்யமாக இருக்கிறது. சீனா, யப்பான் போன்ற நாடுகளில் வியாபார நிலையங்களில், வங்கிகளில், பாடசாலைகளில் எண்கணிதச் செய்முறைகளைச் செய்வதற்கு இதனை உபயோகிக்கின்றார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் இது எண்கணிதம் படிப்பதற்கு ஒரு கருவியாகப் பாவிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் முதலாம் வகுப்பில் இருந்தே அபக்கஸ் முறையில் எண்கணித செயற்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. அபக்கஸ் படிப்பதன் மூலம், மாணவர்கள் தமது கணிதத் திறனையும், புத்தி சாதுரியத்தையும் மேம்படுத்தலாம் என்பது அறிஞர்களின் கருத்து. இம்முறையில் பயில்வதற்கு எமக்கு 0 முதல் 10 வரையிலான எண்களுக்குள் எவ்வாறு கூட்டல், கழித்தல் செய்ய முடியும் என்பது தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. அதைக் கொண்டே மிகப் பெரிய எண்களையும் நாம் கையாள முடியும். அபக்கஸ் முறையை ஐந்து வயதிலிருந்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்குவது அவர்களது மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் எனவும், எண்களைப் பற்றிய அறிவு உள்ளுணர்விலேயே அதிகரிக்கும் எனவும் தனது மதிப்பீடுகள் பற்றிய அவர்களது நம்பிக்கையை வளப்படுத்தும் எனவும் அறிஞர்கள் நம்புகின்றனர். கூட்டல், கழித்தல் கணக்குகளை இலகுவாக செய்யவும், மிகப் பெரிய எண்களை எளிதில் கையாளவும் முடியும். இதனால் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். டி. எஸ். சேனநாயக்கா டி. எஸ். சேனநாயக்கா ("Don Stephen Senanayake", , அக்டோபர் 20, 1884 - மார்ச் 22, 1952) இலங்கையின் முதலாவது பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். பௌத்தரான இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார். 1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனாநாயக்க இலங்கையின் பிரதமரானார். கோலுயிரி கோலுயிரி அல்லது கோலுரு பாக்டீரியா அல்லது கோலுரு நுண்ணுயிர் (Bacillus) என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு (Bacillus) எனும் பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள் ஆகும். இவை கட்டாயமான காற்றுவாழ் (Aerobic organism), அல்லது அமையத்துக்கேற்ற காற்றின்றிவாழ் (Anaerobic organism) உயிரினமாக இருக்கும். பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோலுயிரி () என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் கோளவுயிரி, சுருளியுயிரி என்பனவாகும். பொதுக் கருத்தைக் கொள்கையில், உருவவியல் அடிப்படையில், அனைத்து கோல் வடிவ உயிரினமும் கோலுயிரிகளே. எனவே கோல் வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும், பொதுவில் கோலுயிரி என்று அழைக்கப்பட முடியுமென்பதனால், இந்தச் சொல் சிலசமயம் கருத்து மயக்கத்தைத் தரக் கூடும். எடுத்துக் காட்டாக எசரிக்கியா கோலை என்ற கிராம்-எதிர் பாக்டீரியா கோல் வடிவில் இருப்பதனால், பொதுக் கருத்தில் கோலுயிரி என அழைக்கப்பட முடியுமாயினும், இந்த பாக்டீரியா பசிலசு பேரினத்தைச் சார்ந்ததல்ல. பாக்டீரியா பாக்டீரியா (இலங்கை வழக்கு: பற்றீரியா, ஆங்கிலம்: Bacteria) என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பொதுவாகச் சொல்வதென்றால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் வகைகளில் ஒரு பிரிவுக்கு பாக்டிரியாக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனக் கூறலாம். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள் போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண்ணுறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. தாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச்சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன. மனித உடலில், மனித உயிரணுக்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தோலும், குடலுமே மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட உடல் பகுதிகளாகும்.. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் விளைக்கும் நுண்ணுயிரிகளாகவும் இருக்கும். நோய் விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். ஊட்டச்சத்து மீள்சுழற்சியிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகின்றன. 1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார். அவர் தான் அவதானித்ததை "animalcules" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர், 1838 இல் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார். இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் "Thiomargarita namibiensis", "Epulopiscium fishelsoni" போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3 µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும். பக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன. பாக்டீரியக் கலங்கள் ஏனைய அனைத்துக் கலவகைகளைப் போல பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றில் மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவது போல மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் மென்சவ்வால் சூழப்பட்ட கருவோ, இழைமணியோ, பச்சையுருமணியோ காணப்படுவதில்லை. எனவே இவை அர்க்கியாக்களுடன் இணைந்து நிலைக்கருவிலி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. ஒளித்தொகுப்பில் ஈடுபடும் பாக்டீரியாக்களில் ஒளித்தொகுப்புப் புடகங்கள்/ தைலக்கொய்ட் மென்சவ்வு எனப்படும் கலத்தக மென்சவ்வுக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஏனைய பக்டீரியாக்களிலும் இதற்கு ஒப்பான கலத்தக மென்சவ்வுகள் காணப்படுகின்றன. ஆனால் டி.என்.ஏயைச் சூழ எந்தவொரு மென்சவ்வும் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் திட்டமான கரு காணப்படுவதில்லை. டி.என்.ஏ சுயாதீனமாகக் கலத்தின் குழியவுருவில் வளைய நிறமூர்த்தம்/ வளைய டி.என்.ஏயாகக் காணப்படும். டி.என்.ஏயுடன் ஹிஸ்டோன் புரதம் சேர்ந்து மெய்க்கருவுயிரிகளை ஒத்த நிறமூர்த்தக் கட்டமைப்பை உருவாக்குவதில்லை. பாக்டீரியாக்களில் மெய்க்கருவுயிரிகளினதை விடச் சிறிய இரைபோசோம் காணப்படுகின்றது. இவை 70S வகை இரைபோசோம்களாகும். பாக்டீரியாக்களில் கிளைக்கோஜன் போன்ற சேதனச் சேர்வைகளின் உணவொதுக்குகளும் காணப்படுகின்றது. சயனோபாக்டீரியாக்களில் ஆக்சிசன் வாயுவைச் சேமிக்கும் வாயுச் சேமிப்புகளும் உள்ளது. சேமித்துள்ள ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி சயனோபாக்டீரியாக்களால் நீரில் மிதக்கக்கூடியதாக உள்ளது. பாக்டீரியாக்களின் கலச்சுவர் மிகவும் தனித்துவமானது. பாக்டீரியக் கலச்சுவரைக் கொண்டே அவை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்தறியப்படுவதுடன் அவற்றினுள்ளும் வகைப்படுத்தப்படுகின்றன. அனைத்து பக்டீரியாக்களிலும் பெப்டிடோகிளைக்கனாலான (peptidoglycan) கலச்சுவர் காணப்படுகின்றது. கலச்சுவரின் கட்டமைப்பு வேறுபாட்டால் பாக்டீரியாக்களின் இரு வகைகளும் கிராம் சாயமேற்றலுக்கு வெவ்வேறு விளைவைக் கொடுக்கின்றன. கிராம் நேர் பக்டீரியாக்களில் தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவர் உள்ளது. கிராம் எதிர் பாக்டீரியாக்களில் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரும் அதற்கு வெளியே இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வும் காணப்படுகின்றன. பாக்டீரியாக்கள் பிரதானமாக இருகூற்றுப் பிளவு மூலம் இனம்பெருகுகின்றன. இதன் போது பாக்டீரியாவின் டி.என்.ஏ இரட்டிப்படைந்து இரு வளைய டி.என்.ஏக்கள் உருவாக்கப்படும். இதன் பின் மிக எளிமையாக கலம் இரண்டாக பிளக்கப்படுகின்றது. இவ்விருகூற்றுப் பிளவு கலம் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த பின்னரே நடைபெறும். சரியானளவுக்குப் போசணை வழங்கப்பட்டால் அல்லது தற்போசணை பாக்டீரியா ஆயின் சரியான வளர்ச்சி நிபந்தனைகள் காணப்பட்டால் பாக்டீரியாக்கள் மிக வேகமாக இரட்டிப்படைகின்றன. இருகூற்றுப் பிளவு மிகவும் எளிமையான இனப்பெருக்க முறையென்பதால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க வேகம் மிக அதிகமாகும். எனினும் இயற்கையில் உணவுத் தட்டுப்பாடு, போட்டி காரணமாக பாக்டீரியாக்கள் அவ்வளவு வேகமாக இனம்பெருகுவதில்லை. பக்டீரியாக்களில் அனுசேப முறையில் மிகப்பாரியளவான பல்வகைமை காணப்படுகின்றது. இதனாலேயே கடலின் அடிப்பகுதி முதல் நாம் உண்ணும் உணவிலும், எம் குடலிலும் மேலும் நாம் அவதானிக்கும் அனைத்து இடங்களிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில தற்போசணிகளாகவும், சில பிறபோசணிகளாகவும் உள்ளன. சில தம் சக்திக்காக சூரிய ஒளியையும், சில இரசாயனங்களையும், சில சேதனச் சேர்வைகளையும் நம்பியுள்ளன. பல பக்டீரியாக்களின் டி.என்.ஏயில் மிகவும் சிக்கலான உயிரிரசாயனச் செயன்முறைகளை நிகழ்த்துவதற்கான பாரம்பரியத் தகவல் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தயிருற்பத்தி, சேதனப் பசளை உற்பத்தி, பாற்கட்டி உற்பத்தி, சூழல் மாசுக்களை நீக்கல், செம்பு,தங்கம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு கைத்தொழில் உற்பத்திகளில் பயன்படுத்த முடியும். இவ்வனைத்து உபயோகங்களுக்கும் பாக்டீரியாக்களில் உள்ள அனுசேபப் பல்வகைமையே காரணமாகும். பல்வேறு உணவு மற்றும் குடிபான உற்பத்திகள் பக்டீரியாக்களின் செயற்பாட்டால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலுற்பத்திப் பொருட்களான தயிர், யோகர்ட், பாற்கட்டி, சீஸ் போன்றவை பாக்டீரியாக்களின் நொதித்தல் செயற்பாடு மூலமே சாத்தியமாகின்றன. வினாகிரி உற்பத்தியில் "Acetobactor" பாக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. சில பாக்டீரியாக்களால் ஐதரோகார்பன்களையும் பிரிகையடையச் செய்ய முடியும். எனவே சமுத்திரங்களில் கப்பல்கள் மூழ்குவதால் ஏற்படும் மசகெண்ணைக் கசிவை நீக்க பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில பாக்டீரியாக்களை பூச்சிகொல்லிகளாகவும் பயன்படுத்த முடியும். இரசாயன் பூச்சிகொல்லிகளால் சூழற்சமநிலை பாதிக்கப்படும் ஆனால் அவற்றிற்குப் பதிலீடாக பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினால் உயர் விளைச்சல் கிடைப்பதுடன் சூழற்சமநிலையும் பேணப்படுதல் பக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். "Bacillus thuringiensis" எனும் மண்ணிலுள்ள பாக்டீரியாவே பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி பாக்டீரியாவாகும். கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர். இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது பாக்டீரியாக்கள் மனிதர்களின் பிரதான நோய்க்காரணிகளாகும். எனினும் இதுவரை அறியப்பட்ட பக்டீரிய இனங்களில் அனேகமானவை நோயைத் தோற்றுவிப்பதில்லை. பல பக்டீரிய இனங்கள் மனிதர்களின் குடலிலும், தோலிலும் ஒரு விதத் தீங்கும் புரியாமல்/ ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. ஏற்பு வலி, நெருப்புக் காய்ச்சல், டிப்தீரியா, குடற் காய்ச்சல், கொலரா, தொழு நோய், சிபிலிஸ், காச நோய், உணவு நஞ்சாதல் போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் நோய்கள் பாக்டீரியாக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்கு வேளான்மை மற்றும் விவசாயத்திலும் பக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் பாரிய சேதத்தையும் நட்டத்தையும் தோற்றுவிக்கின்றன. இவற்றினால் ஏற்படும் சேதத்தை/ நோய்களைத் தடுப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் அவற்றிற்கு எதிர்ப்புத்தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன. இதனாலேயே தகுந்த மருந்துகள் காணப்பட்டாலும் பாக்டீரிய நோய்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. நோயேற்படுத்தும் பாக்டீரியாக்கள் நேரடியாக இழையங்களை உணவுக்காகத் தாக்குவதாலும், உணவுக்காகப் போட்டியிடுவதாலும், நஞ்சைச் சுரப்பதாலும் நோயைத் தோற்றுவிக்கின்றன. புனித பிரிஜட் கன்னியர் மடம் புனித பிறிஜட் கன்னியர் மடம் கொழும்பில் இருக்கும் பிரபல பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாகும். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இத்திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் பழைமையான ஒன்றாகும். இங்கு சிங்கள மொழி மூலமும், தமிழ் மொழி மூலமும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 1902 ஆம ஆண்டு அதி வணக்கத்துக்குரிய Dr. T. A. Melizan கொழும்பு பேராயராக இருந்தபோது அவரது வழிநடத்தலின் கீழ் நல்லாயன் கன்னியர்கள் புனித பிறிஜட் கன்னியர் மடம் பாடசாலையை ஆரம்பித்தனர். நேர் மின்னோட்டம் மின்னணுக்கள் ஓடும் வேக விகிதமே மின்னோட்டம் ஆகும். மின்னணுக்கள் ஒரே சீரான வேகத்தில், ஒரே திசையில் பயணம் செய்தால் அம்மின்னோட்டம் நேர் மின்னோட்டம் எனப்படும். சில சந்தர்ப்பங்களில் நேர் மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தையும் குறித்து நிற்கும். நேர்மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தை குறித்து நிற்கும் பொழுது நேர் மின்னோட்ட அழுத்த வீச்சு சீராக அமைய வேண்டியதில்லை, துருவம் ஒரே நோக்கில் இருந்தால் சரி. வலைப்பதிவு வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும். பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன. அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும். தொழிநுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும். வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப்பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக்கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம். இச்செய்தியோடை வசதியே, வலைப்பதிவுத் திரட்டிகளையும், வலைப்பதிவர் சமுதாயங்களையும் சாத்தியப்படுத்தியுள்ளது. வலைப்பதிவொன்றில் பொதுவாக இருக்கக்கூடிய பகுதிகள் அல்லது உறுப்புக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும் வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன. வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விவரிக்கும் ஓரிரு சொற்களை, வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக, நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட இது அமையலாம். ஒவ்வொரு பதிவும் (அல்லது பதிப்பிக்கும் ஆக்கங்களும்) தலைப்பொன்றினைக் கொண்டிருக்கும். வலைப்பதிவுத் திரட்டிகளில் உறுப்பினராக உள்ள வலைப்பதிவர்கள், இத்தலைப்புக்களை மிக கவர்ச்சிகரமாகவும், பதிவின் உள்ளடக்கத்தை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தும் விதமாகவும் அமைப்பர். இதுவே வலைப்பதிவில் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் பகுதியாக இருக்கும். இவ்வுள்ளடக்கம் எழுத்தாக்கமாகவோ, ஒலி வடிவமாகவோ, சலனப்படக் காட்சியாகவோ, படமாகவோ அமையலாம். இவ்வுள்ளடக்கம் இணையத்தின் பொதுவான உள்ளடக்கங்களைப் போன்று மீயுரை வடிவங்களுக்கே உரித்தான பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கலாம். பதிவின் உள்ளடக்கத்தைப் படிக்கும் வாசகர்கள் வலைப்பதிவொன்றில் பதிவுசெய்த மறுமொழிகள் இங்கே காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள மறுமொழிகளோடு, புதிதாக மறுமொழி இடுவதற்கான தொடுப்பும் அங்கே இருக்கும். வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் இடுகைகளை விட, ஒவ்வொரு இடுகைக்கென்றும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவ்விடுகைகளுக்கான மறுமொழிகளையும் அப்பக்கங்களில் காணலாம். அனைத்துப் பக்கங்களும் தமக்கெனத் தனியான முகவரிகளைக் கொண்டிருக்கும். இப்பக்கங்கள் வலைப்பதிவொன்றின் முகப்பில் தொடுப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக அண்மையில் எழுதிய பத்து, இருபது இடுகைகளின் தொடுப்புக்கள் தலைப்புக்களோடு முகப்பில் பட்டியலிடப்பட்டிருப்பதை வலைப்பதிவுகளில் காணலாம். வலைப்பதிவு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தபட்டு வருவதால், முன்னர் எழுதிய பதிவுகள் முகப்புப்பக்கத்தில் இடம்பெறாமலோ, பட்டியலிடப்படும் தனிப்பக்கங்களில் கூட இடம்பிடிக்காமலோ போகலாம். அவற்றை வாசகர்கள் பார்ப்பதற்கும், வலைப்பதிவொன்றின் அத்தனை ஆக்கங்களும் பட்டியலிடப்படுவதற்கும் இத்தகைய சேமிப்பகங்கள் உதவுகின்றன. சேமிப்பகம் ஓர் அவிழ் பட்டியலாகவோ தனிப்பக்கமாகவோ, சாதாரண பட்டியலாகவோ இருக்கலாம். சேமிப்பகத்தில் பதிவுகள் மாதவாரியாகவோ, வார வாரியாகவோ பட்டியற்படுத்தப்பட்டிருக்கலாம். வலைப்பதிவரது விருப்பங்களுக்கு ஏற்ப, வெளி இணையத்தளங்களுக்கான தொடுப்புகள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும். வலைப்பதிவரின் நிரலாக்க அறிவு, தேவை என்பவற்றைப் பொறுத்து பல சிறப்பான பணிகளை ஆற்றக்கூடிய நிரல் துண்டுகள் வலைப்பதிவொன்றில் சேர்க்கப்பட்டிருக்கலாம். வருனர்களின் எண்ணிக்கையை அறியவோ, அல்லது எழிலூட்டுவதற்காகவோ இவை பொருத்தப்பட்டிருக்கலாம். சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்களில் பலர், தமது வலைப்பதிவிலே அத்திரட்டியினால் வழங்கப்படும் சிறப்புப் பட்டை ஒன்றினைப் பொருத்தியிருப்பர். [[படிமம்:Thamizmanam.png|thumbnail|தமிழ் வலைப்பதிவுத் திரட்டி ஒன்று... வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் ஓரிடத்தில் திரட்டப்படுதலைக் காண்க... நன்றி: தமிழ் மணம் திரட்டி பதிவுகளை வலைப்பதிவுகளில் இருந்து திரட்டும் திரட்டிகள் போன்று அல்லாமல், "தமிழ் விருப்பப் பகிரவுகள்" எனும் வசதியானது, இணையத்தில் தமிழில் காணக்கிடைக்கும் தகவல்களை, செய்திகளை, நிழல் படத் தொகுப்புகளை, விரும்புவோர் இணைத்து பகிரவுதவும் தளங்களாகும். [[பகுப்பு:வலைப்பதிவு]] [[பகுப்பு:வலை 2.0]] மின்னழுத்த ஒழுங்காக்கி சீரான மின்னழுத்தத்தை தரவல்ல இலத்திரனியல் சுற்று அல்லது கருவி மின்னழுத்த ஒழுங்காக்கி (Voltage Regulator) ஆகும். குறிப்பாக சுமை மாறினாலும் வெளிப்பாட்டில் சீரான மின்னழுத்தை தரவேண்டும். இக்கருவியை மின்னழுத்த சீர்படுத்தி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. வெளிப்படும் மின்னழுத்தத்தை தேவைப்படும் மின்னழுத்துடன் ஒப்பிட்டு அவ்வித்தியாசத்திற்கேற்ப கட்டுப்பாட்டை சீர்படுத்தி அல்லது ஒழுங்காக்கி சீரான மின்னழுத்தத்தை மின்னழுத்த ஒழுங்காக்கி தரும். ஒரு எளிய மின்னழுத்த ஒழுங்காக்கி சேனர் இருமுனையம் ஆகும். சேனர் இருமுனையம் ஒரு குறிக்கப்பட்ட மின்னழுத்தத்தில் கடத்த ஆரம்பிக்கும், அதன்பின்னர் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களுக்கும் அக்குறிக்கப்பட்ட அளவை விட்டு சேனர் இருமுனையம் மாறாது. சேனர் இருமுனையங்களின் பயன்பாட்டு மின்னோட்ட அளவுக்குள் இலத்திரனியல் சுற்று அமையவேண்டும். நேரோட்ட - நேரோட்ட மாற்றி மின் திறனை ஒரு அளவு நேரோட்ட மின்னழுத்தத்தில் இருந்து வேறொரு அளவு நேரோட்ட மின்னழுத்திற்கு மாற்றும் ஒரு கருவி நேரோட்ட - நேரோட்ட மாற்றி அல்லது நேர்-நேர் மாற்றி (DC to DC Converter) ஆகும். மின் கருவிகள் அல்லது கருவிகளின் உபசுற்றுக்கள் வெவ்வேறு மின்னழுத்த தேவைகளை கொண்டிருக்கும். ஆனால், பொதுவாக ஒரு தரப்பட்ட நேரோட்ட மின்னழுத்தமே கிடைக்ககூடியதாக இருக்கும். அச்சமயங்களில் நேர்-நேர் மாற்றிகள் கிடைக்கும் மின்னழுத்தம் அளவில் இருந்து தேவைப்படும் அளவுக்கு மாற்ற பயன்படுகின்றன. மின்ழுத்தப் பங்கிடுவி ஒரு அளவில் இருந்து இன்னொரு அளவுக்கு மாற்ற பயன்படலாம். ஆனால், இவ்வழிமுறைக்கு பாரிய குறைபாடுகள் உண்டு. அவை: மின்கடத்தி மின்கடத்தி (Conductor) அல்லது கடத்தி என்பது மின்னோட்டத்தை இலகுவாக அனுமதிக்கும் பொருள் ஆகும். அனேக உலோகங்கள் நல்ல கடத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி, செப்பு, பொன், அலுமினியம், இரும்பு, இரசம் ஆகிய உலோகங்கள் கடத்திகள் ஆகும். மின்கம்பிகளும் கடத்திகளால் ஆனவையே. பொருட்களின் கடத்தல் தன்மையை அல்லது மின்கடத்து திறனை ஓம் விதி விபரிக்கின்றது. ஓம் விதி ஒரு கடத்தியின் மின்னோட்டத்திற்கும் பிரயோகிக்கப்படும் மின்புலத்திற்கும் நேர் விகித தொடர்பு உண்டு என்கின்றது. அந்நேர் விகித தொடர்பை சமனாக்கும் காரணியே மின்கடத்து திறன் எனப்படும். மின்னோட்டம் (j), மின்புலம் (E), கடத்துதிறன் ("σ") ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது: தலைகீழாக தடுதிறனை (ρ) பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது: எளிய உலோகங்களின் கடத்து திறனை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது: τ - தணிவுறு காலம் - Relaxation time
n - சுயாதீன இலத்திரன்களின் அடர்த்தி - density of conduction electrons
e - இலத்திரன் மின்னணு அளவு - electron charge
m - இலத்திரன் மெதுகை - electron mass
சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் (Subcomandante Marcos) மெக்ஸிகோவில் இயங்கும் தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அவ்வியக்கத்தின் ஊடகத் தொடர்பாளரும் ஆவார். 2006 ஆரம்பத்தில் அவர் தன் பெயரை டெல்காடொ சீரோ என்று மாற்றிக்கொண்டார். இவர் ஒரு இடதுசாரி போராளி ஆவார். இவரது போராட்டங்கள் மெக்சிகோவின் முதல் குடிமக்கள் உரிமைகளை முன்வைத்து அமைகின்றன. இவரின் போராட முறை பின் நவீனத்துவ கூறுகளை அல்லது நுட்பங்களை கொண்டுள்ளது என்பர். வேலுப்பிள்ளை பிரபாகரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது . மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை. பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார். பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தெற்குப்பொய்கைநல்லூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. 2015 ஜூலை மாதம் இந்த சிலை இரவில் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் போடப்பட்டது. ஊர்மக்கள் இவ்வாறு காவல் துறையினரே செய்தனர் என தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம் சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள ஐயனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரனின் சுதை சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 2010ல் கட்டப்பட்ட ஐயனார் கோயிலில் இவ்வாறு சிலைகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் மக்களிடம் அவற்றை அகற்ற கூறியுள்ளனர். தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது குறித்து ஜூன் 2015ல் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில் பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ நாம் தமிழர் கட்சி முயலும் என்றார். வைகோவும் இந்த சிலை உடைப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது. வேலுபிள்ளை பிராபாகரன் தீவிரவாதம் , கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 முதல் பன்னாட்டுக் காவலகம் அமைப்பால் தேடுப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. சதாம் உசேன் சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 , இறப்பு: டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார். அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது. மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர். ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். ஊகோ சாவெசு ஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் ("Hugo Rafael Chavez Frias", ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 53வது அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார். 1954-ல் இடதுசாரி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா நாட்டின் சபேனட்டா என்ற கிராமத்தில் ஒரு‍ பள்ளி ஆசிரியர் ஒருவரின் 7 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சாவெசு. சாவேஸ், வெனிசுலாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில், ஆசிரியர் தம்பதியருக்குப் பிறந்தார். வறுமையின் காரணமாக சாவெசையும் அவரது‍ சகோதரரையும் பெற்றோர்கள் பாட்டி‍ வீட்டிற்கு‍ அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியாருக்கு‍ உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது‍ அவருக்கு. தனது கல்வித் திறனால் 17 வயதில் வெனிசுவேலா இராணுவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவப் பாடத் திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சே குவேராவின் டைரி, அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோவை ஒரு தோழனாக அந்த டைரியே சாவெசுவைக் கருத வைத்தது. மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த் தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின. ராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். இராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுவேலா அரசியலமைப்பு உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதைக் கண்டார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எசுப்பானிய மன்னரின் ஆதிக்கத்திலிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்திப் பேராடிய சிமோன் பொலிவார் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களைக் காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து "புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் - 200" என்ற இரகசிய அமைப்பை உருவாக்கினார். ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். சைமன் பொலிவார் கருத்துக்களால் உத்வேகம் பெற்று 1982ல் ராணுவத்தில் “புரட்சிகர சோசலிச இயக்கம்” எனும் ரகசியக் குழுவினை உருவாக்கினார். இராணுவ வீரர்களைக் கொண்டு‍ அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார். 23 ஆண்டு காலமாக உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை வெறியுடன் அமல்படுத்திய அதிபர் கார்லோஸ்-க்கு எதிராக 1992ல் ராணுவப் புரட்சி செய்தார். ஆனால் ராணுவப் புரட்சி தோல்வியுற்றது. அவருக்கும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை. இதன் மூலம் வெனிசுலா மக்களிடம் புகழ்பெற்றார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். 1994 தேர்தலில், ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ரஃபேல் அரசு அவரை விடுதலை செய்தது. வெனிசுலாவிற்கு ராணுவக் குழுவினரின் புரட்சி பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சாவேஸ். பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்ட்ரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார். 1997ல் 5 வது குடியரசுக் கட்சியைத் துவக்கினார். வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து‍ நீக்கினார். சாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படு‍ம் ஜனாதிபதியை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார். தான் வாக்களித்தவாறு புதிய அரசியல் சட்டத்தினை உருவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்தி லிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார். முற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார்.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர். வெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்து வர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண் ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன.இன்று வெனிசுலாவின் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அள வில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது. சாவேசுக்கு முந் தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. சாவேஸ் மக்களின் கனவுகளை நனவாக்கினார். சைமன் பொலிவார் இன் கனவு தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். பொலிவாரின் கனவை சாவேஸ் நிறைவேற்றும் முயற்சியில் வெகுதூரம் முன்னேறினார். சாவேஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பினை வலிமைப்படுத்தினார். ஒரு காலத்தில் உலக வங்கி, சர்வதேச நிதியம் அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ‘சர்வதேச மனிதநேய உதவிக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யூரோ பொது நாணயம் போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொது நாணயம் உருவாக்கப்பட வேண்டும் என்பேத சைமன் பொலிவாரின் கனவாகும். உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கியூபா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார். கொல்கத்தா வருகை அவர் இறப்பதற்கு (2013 மார்ச் 5) சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு (2005 மார்ச் 5) வருகை தந்தார். கொல்கத்தாவுக்கும் பயணம் செய்தார். அவர் மறக்க முடியாதபடி மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர் கொல்கத்தா மாநகர மக்கள். வெனிசுலாவுக்கு வெளியே, பிரேசில் தலைநகர் போர்ட்டே அலெக்ரே நகர மக்களுக்கு அடுத்து, கொல்கத்தா மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்ததாக சாவேஸ் மகிழ்ச்சியடைந்தார். கொல்கத்தாவில் இருப்பதை தமது காரகசில் இருப்பதைப் போலவே உணர்வதாகக் கூறினார். அன்று உணர்ச்சி ததும்பும் உரையாற்றினார். “நான் உங்களை எல்லாம் நேசிக்கிறேன்” என்று வங்கமொழியில் தனது பேச்சைத் துவக்கினார். அவரது இயல்புக்கு ஏற்றவாறு அவர் தாகூரின் பாடலையும் பாடினார். இந்தியாவுடன் உறவைப் பலப்படுத்த சாவேஸ் ஆவலாக இருந்தார். தன்னைப் பாதித்த இடுப்பு புற்று நோயுடன் இரண்டு ஆண்டு காலமாக தைரியத்துடன், நம்பிக்கையுடன் போராடினார். உலகப் புகழ்பெற்ற கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் மருத்துவமனையிலிருந்து நாடு திரும்பி வருவதுமாக இருந்தார். இளம் வயதிலேயே (54) உலகிற்கு தேவைப்படும் நேரத்தில் மரணமடைந்து விட்டார் சாவேஸ். புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சாவேசின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் கூட்டம் 8 கி.மீட்டருக்கு மேல் நீண்டது. இது போன்றதொரு இரங்கல் ஊர்வலத்தை லத்தீன் - அமெரிக்க கண்டம் இதுவரை கண்டதில்லை. 20 லட்சம் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து, தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தலைவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.லத்தீன்-அமெரிக்க நாடுகள், ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் நாடு களில் அரசுப்பூர்வ துக்கம் அறிவித்தன. உலகம் முழுவதிலும் இருந்து, 55 நாடு களின் தலைவர்களும், உயர்மட்டக் குழுக் களும் சாவேசுக்கு இறுதி மரியாதை செலுத்த வெனிசுலாவில் திரண்டனர். லத்தீன் -அமெரிக்க -கரீபியன் நாடுகளின் ஒன்றியத்தை (ECLAC) உருவாக்கிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்து லத்தீன் அமெரிக்க அதிபர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். லுலா ட சில்வா லுயிஸ் இனாசியோ லுலா ட சில்வா (Luiz Inácio Lula da Silva) (பிறப்பு அக்டோபர் 6, 1945) பிரேசில் நாட்டின் சனாதிபதியாக 2002 தேர்வுசெய்யப்பட்டு 2010 டிசம்பவர் வரை பணியாற்றினார். இவர் ஏழ்மை பின்புலத்தில் இருந்து போராடி முன்வந்தவர். இவர் தொழிலாளர் சங்கங்களில் அடிமட்ட நிலையிலும் தலைமைத்துவ மட்டத்திலும் செயலாற்றியவர். இவர் இடது சாரி மற்றும் மாற்று சிந்தனை அரசியல் தத்துவத்தை கொண்டவர். முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள ஒரு அரச பாடசாலையாகும். இது 1956ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையின் மகுடவாக்கியம் "கல்வியே கற்று ஒழுகு" என்பதாகும். எண்ணுறா முடிவிலிகள் கணிதத்தில் எண்ணுறா முடிவிலிகள் அல்லது எண்ணவியலா முடிவிலிகள் (Uncountable set) என்பன எண்ணிக்கையிட முடியாத அளவிலான உறுப்புக்களைக் கொண்ட கணங்களாகும். அனைத்து முடிவுள்ள கணங்களும் இயலெண் கணம் முதலிய பல முடிவிலிக் கணங்களும் எண்ணக்கூடியவையே. மாறாக, அனைத்து எண்ணவியலாக் கணங்களும் முடிவிலிகளே. முடிவிலிகளில் எண்ணிக்கையிடக் கூடிய தன்மை சற்று விந்தையாகத் தெரியலாம். எண்ணிக்கையிடக் கூடியவை என்று கூறுகையில், ஒரு கணத்தின் எல்லா உறுப்பினர்களையும் எண்ணி முடித்து இறுதியாக ஒரு எண்ணிக்கையைத் தரக்கூடியவை என்று பொருளல்ல. ஒவ்வொரு உறுப்பினருடன் ஒரு இயலெண்ணைத் தொடர்புபடுத்தி வரிசையிடப் படக்கூடியவை என்பதே பொருள். இவ்வாறு எண்ணிக்கையிடக் கூடியவை முடிவிலிகளாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக முழு எண்களைக் கொண்ட கணம் முடிவிலியாக இருப்பினும் எண்ணக்கூடியதே. இக்கணத்தில் சுழி என்பதை முதலாம் உறுப்பினராகவும், ஒன்று என்பதை இரண்டாம் உறுப்பினராகவும், எதிர்ம ஒன்று (-1) என்பதை மூன்றாவதாகவும், இரண்டு என்பதை நான்காவதாகவும், எதிர்ம இரண்டை ஐந்தாவதாகவும் குறிப்பிட்டு, பிற உறுப்பினர்களையும் இதே அடிப்படையில் இயலெண்களுடன் தொடர்வு ஏற்படுத்த முடியும். இவ்வாறாக, இத்தகைய கணங்கள் முடிவிலிகளாக இருந்தும் விரல் விட்டு எண்ணப்படக் கூடியவை (முடிவுள்ள நேரத்தில் எண்ணிமுடிக்கப்பட முடியாதவையாயினும்). சில முடிவிலி கணங்களை மேற்கூறிய முறையில் இயலெண் கணத்துடன் தொடர்வு ஏற்படுத்த முடிவதில்லை. எடுத்துக்காட்டாக மெய்யெண் கணத்தைக் கொள்ளலாம். கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறையில் மெய்யெண் கணம் மற்றும் வேறுசில கணங்களையும் எண்ணவியலாக் கணங்கள் என்று நிறுவ முடியும். எண்ணுறுமையும் எண்ணுறாமையும் கணம் (கணிதம்) கணிதத்தில், கணம் (() அல்லது தொடை ("set") என்பது பல்வேறு பொருள்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஆழம் உடைய ஓர் அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருள்களை "உறுப்புகள்" என்பர். எடுத்துக்காட்டாக, 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக, C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்டவையும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்குக் கணக் கோட்பாடு என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது. கணக் கோட்பாடு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இது தொடக்க வகுப்புக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, கணிதக் கல்வியில் எங்கும் காணப்படும் ஒரு பகுதியாக ஆகியுள்ளது. தற்காலக் கணிதக் கல்விக்குப் பயன்படும் அடிப்படைக் கணித மொழிகளில் இது முக்கியமான ஒன்றாகும். கணம் அல்லது தொடை என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் ஒரு தொகுப்பு ஆகும். கணமொன்றிலுள்ள பொருள்கள் உறுப்புகள் (elements) எனப்படுகின்றன. கணமொன்றின் உறுப்புகள், எண்கள், மக்கள், எழுத்துகள், வேறு கணங்கள் என எதுவாகவும் இருக்கலாம். கணங்களை "A", "B", "C", முதலிய ஆங்கில அகர வரிசையின் பெரிய (தலைப்பு) எழுத்துக்களினால் குறிப்பது மரபு. "A" யும் "B" யும் ஆகிய இரண்டு கணங்களும் ஒரே உறுப்புக்களைக் கொண்டிருப்பின், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று ஈடாகும் (சமனாகும்). அதாவது "A" யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் "B" யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஈடு (=சமம்) எனின் "A" = "B" எனக் குறிக்கப்படும். அன்றாட வாழ்க்கையின் பொருட்தொகுப்புகள் அல்லது பல்கு கணங்களில் உள்ளதைப் போல ஒரு கணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் ஒத்ததாக இருத்தல் கூடாது. வாய்ப்பாடு கணங்களை விவரித்தல் முறை, பட்டியல் முறை, கணக் கட்டமைப்பு முறை ஆகியவற்றின் மூலம் குறிக்கலாம். கணங்களை அவற்றின் உறுப்புகளின் பண்பினை விளக்கும் சொற்களைக் கொண்டு குறிக்கும் முறை விவரித்தல் முறை அல்லது வருணனை முறை (Desciption Methed) எனப்படும். நெளிந்த அடைப்புக் குறிக்குள் உறுப்புகளைப் பட்டியலிடுவதன் மூலம் (Listing Method) கணங்களை விளக்கலாம். ஏராளமான உறுப்புகளைக் கொண்ட பெரிய கணங்களைப் பொறுத்தவரை, அத்தனை உறுப்புகளையும் ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியலிடுதல் செயல்முறையில் மிகவும் கடினமானது. எடுத்துக்காட்டாக, "E" = {முதல் ஆயிரம் நேர்ம முழு எண்கள்} என்பதைப் பட்டியல் இடுவதென்பது எழுதுபவருக்கும், அதனை வாசிப்பவருக்கும்கூட மனச்சோர்வூட்டுகின்ற வேலையாகும். எனினும் ஒரு கணிதவியலாளர் இவ்வாறு பட்டியலிடுவதில்லை என்பதுடன், சொற்களாலும் விரித்துரைப்பதில்லை. மாற்றாகச் சுருக்கமான குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதுவர்: வாசிப்பவருக்குப் புரியக்கூடிய வகையில் ஒழுங்குமுறையில் அமைந்த உறுப்புக்களைக் கொண்ட "E" போன்ற கணமொன்றைப் பொறுத்தவரை, பட்டியலைச் சுருக்கக் குறியீடாக எழுதி விளக்க முடியும். முழுப் பட்டியலும் எச்சப்புள்ளி (...) குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கப்பட்டுள்ளது. முடிவுறாக் கணங்களையும் முப்புள்ளியைப் பயன்படுத்தி விளக்கலாம். அனைத்து இரட்டை முழுவெண்களின் கணம்: இக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது, ஒழுங்குமுறை தெளிவாகப் புரியும் வகையில் போதிய அளவு உறுப்புகள் காட்டப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள கணம் முதல் பதினாறு முழு எண்களையோ அல்லது இரண்டின் முதல் ஐந்து அடுக்குகளையோ குறிக்கக் கூடும்: அமைந்திருக்கும் ஒழுங்குமுறை இலகுவில் புரிந்துகொள்ள முடியாதபடி அமையுமாயின், மேற்காட்டிய சுருக்கிய பட்டியலின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, என்பதை வாசிக்கும்போது இக்கணமானது, என்பது வெளிப்படையாகவோ தெளிவாகவோ தெரியவில்லை. இக்குறைபாட்டைக் கணக்கட்டமைப்பு முறை நிவர்த்தி செய்கிறது. ஒரு கணத்திலுள்ள அனைத்து உறுப்புகளின் பண்புகளை நிறைவு செய்யும் வகையில் அமைவது கணிதக்கட்டமைப்பு முறையாகும் (Set Builder Notation). கணிதக்கட்டமைப்பு முறையில் கணத்தை விளக்குவதற்கு கணிதக் குறியீடுகளும் சில மரபான குறிப்பு மொழிகளும் பயன்படுத்தப்படுகிறது. கணக்கட்டமைப்பு முறையில் பயன்படுத்தப்படும் முக்கால் புள்ளி அல்லது விளக்கக்குறி (:) என்பதனை "எப்படி எனில்" அல்லது ஆங்கிலத்தில் such that என்று படிக்க வேண்டும். “மேற்கண்ட F என்னும் கணத்தின் உறுப்புகளாவன formula_1 – 4 என்னும் வகையான எண்களாகும் - எப்படி எனில் n என்னும் முழு எண்ணானது 0 முதல் 19 வரை, இவ்விரு எண்களும் உட்பட, உள்ள எண்களாகும்”. இதேபோல, "B" , "D" இரண்டும் ஒரே கணத்தின் இரு வெவ்வேறான உருவகிப்புகளாகும். ஒரு பொருள் ஒரு கணத்தினுள் உள்ள ஓர் உறுப்பு என்றோ அல்லது ஓர் உறுப்பு அல்ல என்றோ குறிக்கக் கீழ்க்காணும் குறிவடிவுகளை முறையே பயன்படுத்துவர். formula_3 and formula_4. எடுத்தக்காட்டாக, மேலே A என்னும் கணத்தைப் பார்த்தால் அதில் 4 என்பது A யில் உள்ள ஓர் உறுப்பு என அறியலாம். எனவே அதனைக் கீழ் காணுமாறு குறிப்பர். அதே போல 285 என்னும் எண் F என்னும் கணத்தில் உள்ள ஓர் உறுப்பு. அதனைக்காட்ட ஆனால் ஒரு பொருள் உறுப்பு அல்ல என்பதைக் கீழ்க்காணுமாறு குறிப்பர் "S" கணத்தின் எண்ணளவை (Cardinality of a set), | "S" | என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். மேலே விரித்துரைக்கப்பட்ட கணங்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள உறுப்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு கணம் உறுப்புகள் எதுவுமற்ற கணமாகவும் இருத்தல் கூடும். அத்தகைய கணம் வெற்றுக் கணம் எனப்படும். இது ø என்ற குறியீட்டால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மூன்று பக்கங்களையுடைய சதுரங்களின் கணம் "A" என்று கூறினால் "A" என்பது உறுப்புகள் எதுவுமற்ற கணம் ஆகும். "A" = ø ஆகும். வெற்றுக் கணத்தின் எண்ணளவை பூச்சியமாகும். ஒரு கணம் முடிவிலி எண்ணிக்கையான உறுப்புகளையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, எல்லா இயல்பெண்களினது கணம் ஒரு முடிவிலியாகும். முடிவுறாக் கணங்கள் முடிவிலி எண்ணளவை கொண்டவை. n உறுப்புகள் உள்ள ஒரு கணத்தை n-கணம் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. A என்னும் கணத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் B என்னும் வேறு ஒரு கணத்தின் உறுப்புகளாக இருப்பின், A என்னும் கணமானது B என்னும் கணத்தின் உட்கணம் (Subset) எனப்படும். இதனைக் கீழ்க்காணுமாறு குறிவடிவில் குறிப்பர். formula_9. இதனைப் படிக்கும் பொழுது A ஆனது B யுள் அடங்கும். அல்லது A ஆனது B யின் உட்கணம். வெற்றுக்கணம் எல்லா கணங்களின் உட்கணம் ஆகும். அதேபோல எல்லாக் கணங்களும் அதனதனுடைய உட்கணமும் ஆகும். "A" என்னும் கணம் "B" யின் உட்கணமாக இருந்து B -க்கு ஈடாக (சமமாக) இல்லாமல் இருந்தால், "A" ஆனது B யின் தக்க உட்கணம் அல்லது தகு உட்கணம் (proper subset) என்பர். இதனை கீழ்க்காணுமாறு எழுதுவர். formula_12 ("A என்பது B யின் தக்க உட்கணம்") அல்லது formula_13 ("B ஆனது A யின் தக்க கொள்ளும் கணம்"). என்றாலும் சில கணித எழுத்துக்களில் இக்குறியீடுகள் ஒரே மாதிரியாகவே படிப்பர். formula_14 மற்றும் formula_15, எனவே தக்க உட்கணங்களைத் தெளிவாக உணர்த்துவதற்கு பிரித்தறியும் குறியீடுகளைப் பயன்படுத்தல் நலம். formula_16 மற்றும் formula_17 எடுத்துக்காட்டுகள்: வேறொரு ஈடான (சமமான) முறையில் சொல்வதானால் formula_20; அதாவது இதனைப் படிக்கும் பொழுது 'B" ஆனது "A" யைக் "கொள்ளும் கணம்" .", அல்லது 'B" ஆனது "A" யைச் "சூழும் கணம்" " அல்லது " "B" ஆனது "A" யை "அடக்குக் கணம்" " என்று படித்தல் வேண்டும். இந்த கணிதத் தொடர்பை "உட்கொள்ளுமை" அல்லது "அடக்குமை" என்று குறிப்பர். "B" யை "A" யின் "மேற்கணம்" (Superset) என்றும் சொல்வதுண்டு. ஒரு கணத்தின் அனைத்து உட்கணங்களையும் கொண்ட கணமானது, (வெற்றுக்கணத்தையும் அதே கணத்தையும் சேர்த்து) அக்கணத்தின் அடுக்கு கணம் ("Power set") என அழைக்கப்படுகிறது. கணம் formula_21 ன் அடுக்கு கணத்தினை formula_22, "P"("S"), ℘("S") என்ற குறியீடுகளால் குறிக்கலாம். இயல் எண் கணிதத்தில், இயல் எண் ("natural number") என்பது முதல் வரிசை நேர்ம முழு எண்கள் (, , , , ...) ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை (, , , , , ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. அதாவது, இயலெண் குறித்த சில வரையறைகள் இயலெண்களை இலிருந்து தொடங்குகின்றன. இவ்வரையறைகளில் இயலெண்கள் எதிர்மமில்லா முழு எண்களோடு ஒத்ததாக அமைகின்றன (). மேலும், இயலெண்கள் 1 இலிருந்து துவங்குவதாகக் கொள்ளும் வரையறைகளில் இயலெண்கள் நேர்ம முழுவெண்களை ஒத்து அமைகின்றன (). முந்தைய வரைவிலக்கணம் எண் கோட்பாட்டிலும், பிந்தையது கணக் கோட்பாட்டிலும் கணினி அறிவியலிலும் விரும்பப்படுகிறது. இயல் எண்களின் கணத்தை formula_1 என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது இயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. பொருட்களை எண்ணப் பயன்படுத்தலாம் (எ-கா:"தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன"). மேலும் எண்ணிக்கை அளவில் எத்தனையாவது என்று வரிசைமுறைமையைக் காட்டலாம் (எ-கா:"சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்"). எண்ணுதலின் போது இயலெண்கள் "முதலெண் அல்லது கார்டினல் எண்"கள் முதலெண்கள் எனவும், வரிசையைக் குறிக்கும்போது அவை "வரிசை எண் அல்லது ஆர்டினல் எண்"கள் எனவும் அழைக்கப்படுகின்றன. எண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் வகுமைப் பண்புகள் பற்றியும், பகா எண்கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது. இயலெண்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நீட்சியாக ஏனைய எண்கள் வரையறுக்கப்படுகின்றன: இச்சங்கிலித் தொடர் நீட்சிகளால் பிற எண்களுக்குள் உட்பொதிவாக இயலெண்கள் அமைகின்றன. இயலெண்களின் கணத்தை N அல்லது என்ற குயீடுகளால் கணிதவியலாளர்கள் குறிக்கின்றனர். பழைய புத்தகங்களில் அரிதாக "J" என்ற குறியீடும் இயலெண்கள் கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இயலெண்களின் கணம் முடிவுறா கணமாகவும். அதே சமயத்தில் எண்ணத்தக்க கணமாகவும் உள்ளது. இக்கணம் எண்ணத்தக்கது என்பதைக் குறிக்கும்வகையில் இதன் முதலெண் என்ற குறிக்கப்படுகின்றன. "0" சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத இயலெண்கள் கணமா என்பதைத் தெளிவுபடுத்தும்வகையாக பின்னதற்கு "" அல்லது என்ற ""மேலொட்டும், முன்னதற்கு "" என்பது மேலொட்டு அல்லது கீழொட்டாகச் சேர்க்கப்படுகிறது. மாறாக, நேர்ம முழுஎண்களிலிருந்து இயலெண்களை சுட்டெண் குறியீடு மூலம் வேறுபடுத்திக் காட்டலாம். ஆனால் இரு குறியீடுகளுமே பயன்படுத்தப்படுவதால் அந்தந்தச் சூழலைக் கொண்டே புரிந்து கொள்ளல் வேண்டும். இயலெண்களில் கூட்டல் செயலைக் கீழ்வருமாறு வரையறுக்கலாம்: இதில் என்பது ஒரு இயலெண்ணின் தொடரியெண்ணைக் குறிக்கிறது. இதனால் இயலெண்கள் கணம் ஒரு பரிமாற்று ஒற்றைக்குலம்; அதன் முற்றொருமை உறுப்பு  0. இந்த ஒற்றைக்குலம் நீக்கல் விதிகளை நிறைவு செய்யும்; மேலும் இந்த ஒற்றைக்குலத்தை ஒரு குலத்தில் உட்பொதிவு செய்யலாம். இயலெண்களைக் கொண்ட மிகச் சிறிய குலம் முழு எண்களாகும். அதாவது என்பது இன் தொடரி (அடுத்த எண்) ஆகும். கூட்டல் வரையறையுடன் ஒத்ததாகப் பெருக்கல் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது: இந்த வரையறையால் இயலெண்களின் கணம் ,  1 ஐ பெருக்கல் சமனியாகக் கொண்ட பரிமாற்று ஒற்றைக்குலமாகிறது. இக்குலத்தின் பிறப்பாக்கி பகா எண்களின் கணமாகும். கூட்டல் மற்றும் பெருக்கலின் ஒத்தியங்கும் தன்மை, பங்கீட்டுப் பண்பால் விளங்கும்: இப்பண்பினால் இயலெண்களின் கணம் ஒரு பரிமாற்று அரைவளையமாகும். இயலெண்களின் கணத்தில் கூட்டல் நேர்மாறு (எதிர்ம எண்கள்) கிடையாதென்பதால் இயலெண்களின் கணம் வளையமாக முடியாது; அது ஒரு அரைவளையம் மட்டுமே ஆகும். "0" ஐத் தவிர்த்துவிட்டு, "1" இலிருந்து துவங்கும் இயலெண்களுக்கும் கூட்டல் மற்றும் பெருக்கல் வரையறைகள், ; என்பதைத் தவிர மேலுள்ளவாறே அமையும். இப்பகுதியில் என்பது ஐக் குறிக்கும். இயலெண்களின் முழுவரிசைமுறையின் வரையறை: இந்த வரிசைமுறை இயலெண்களில் எண்கணிதச் செயல்களோடு ஒத்தியங்கக் கூடியது: இப்பகுதியில் என்பது ஐக் குறிக்கும். மேலும் வழக்கமான செயலியை அமல்படுத்தும் வரிசை முறை பின்பற்றப்படும். ஒரு இயலெண்ணை மற்றொரு இயலெண்ணால் வகுத்து ஒரு இயலெண்ணை விடையாகப் பெறுவதென்பது, எல்லா இயலெண்களுக்கும் பொருந்தாது. அதற்குப் பதிலாக மீதிவரக்கூடிய "வகுத்தல்முறை உள்ளது. அனைத்து இயலெண்கள் , என்பனவற்றுக்கு, ஜி. திலகவதி கோ. திலகவதி (பிறப்பு:1951 - )தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட "கல்மரம்" என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். திலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார். அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்: காவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே. தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவர் ஆவார். காவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி 2011 மார்ச் 31 ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார். திலகவதி தான் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்பொழுது தன்னைப் பின்தொடர்ந்து வந்து தன் காதலைத் தெரிவித்த இளங்கோ என்பவரை தன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தனது படிப்பிற்கு தடைபோட்ட தன் மாமியாரோடு ஏற்பட்ட பிணக்கால் ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மணவிலக்குப் பெற்றார். திலகவதி ஐ. பி. எஸ். தேர்வில் வெற்றி பெற்று, ஐதராபாத் நகரில் உள்ள தேசிய காவல் கழகத்தில் (National Police Academy) பயிற்சி பெற்றபொழுது உடன் பயிற்சி பெற்ற காவல் துறை அலுவலர் நாஞ்சில் குமரன் என்பவரை 1982ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் பிறந்தார். பின்னர் கருத்துவேற்றுமையின் காரணமாக 29.5.1987ஆம் நாள் திலகவதி தான் குமரனோடு குடும்பம் நடத்திய வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் மணவிலக்குப் பெற்றார். அளவீடு அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும்.. அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயலை அளவியல் ( எனலாம். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிபரவியல் சமூக அறிவியல் மற்றும் நடத்தை அறிவியலில் அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன. வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், அளவுசார் ஆய்வு ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே அனைத்துலக முறை அலகுகள் முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது. அளவீடு என்பதற்கான மரபுசார் வரையறையானது இயன் அறிவியலில் உள்ள அனைத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இது எண்ணிக்கைகளுக்கான விகிதங்களின் எண் கணிப்பீடு அல்லது தீர்மானத்தைக் குறிக்கிறது. எண்ணிக்கை, மற்றும் அளவீடு என்பதற்கான வரையறைகள் ஒன்றையொன்று ஒத்தவையாகும். கொள்கை அடிப்படையில் எண்ணிக்கைக்கான பண்புகளை அளவிட முடியும். எண்ணிக்கை என்பதற்கான மரபுசார் கருதுகோளானது , ஐசாக் நியூட்டன் ஆகியோர்கள் காலத்திலேயே எடுத்தாளப்பட்டு, பின்னர் யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ் என்பதில் முன் குறித்துக்க்காட்டப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவக் கோட்பாட்டில், அளவீடு என்பது எண்களற்ற தனி உருக்களுக்கும் எண்களுக்கும் ஏற்படும் தொடர்பு இக்கோட்பாட்டின்படி எண்ணியல் அமைப்புக்களும், பண்பியல் அமைப்புக்களும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும். சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும். நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும். அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிலோகிராம், மீட்டர், கேண்டெலா, நொடி (கால அளவு), ஆம்பியர், கெல்வின், மோல் என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, பாரிஸில், Sèvres இலுள்ள, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின் தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ. என்ற முறையின் அடிப்படை அலகை, எந்தவொரு ஆணையையும் சார்ந்திராத ஒரு தரப் பரிசோதனையுடன் சமன் செய்யும் முன்மொழிவை வைத்தார். இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான மீட்டர் என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார். இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர். உலகில் சில வேறுபட்ட அளவீட்டு முறைகளும், அவ்வாறு அளப்பதற்கான அலகுகளும் காணப்படுகின்றன. மெட்ரிக் முறை என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும். மெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். அனைத்துலக முறை அலகுகள் (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - "Système International d'Unités") சுருக்கமாக எஸ்.ஐ., (SI) என குறிக்கப்படுகிறது. முதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ் (CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்: இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும். மீட்டர் அலகுக்கான வரையறை: கிரிப்டான் மின்னிறக்க விளக்கில், அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம். பொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும். கிலோகிராம் அலகுக்கான வரையறை: பிரான்சில், பாரீசில் உள்ள சவரெசு (Sèvres) என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையான கை வண்ணப் பொருளின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம் 1960-ஆண்டு வரை படித்தர காலம் என்பது, சராசரி சூரிய நாளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அதாவது, தீர்க்கரேகை வழியாக, மிக உயரமான புள்ளியில் சூரியன் கடக்கக்கூடிய அடுத்தடுத்த இரு நிகழ்வுகளுக்கான கால இடைவெளியைக் கொண்டு, ஒரு ஆண்டின் சராசரியாக காலம் கணக்கிடப்பட்டது. காலத்தின் எஸ்.ஐ., அலகான நொடி, 1967-ஆம் ஆண்டு அணுவின் படித்தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நொடி எனும் அலகுக்கான வரையறை: ஒரு படித்தர நொடி என்பது, அணுநிறை 133 கொண்டுள்ள சீசியம் அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்நிகழ்வால் ஏற்படும் மீநுண்ணிய சீரான பரிமாற்ற கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலம் ஒரு நொடி ஆகும். மின்னோட்டத்தை அளக்கும் அலகாக ஆம்பியர் என்பது இருக்கிறது. வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. வெப்பநிலையை அளக்க கெல்வின் என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. கெல்வின் என்பது நீரின் முப்புள்ளியில் (triple point) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்னப்பகுதி ஒரு கெல்வின் என்று வரையறுக்கப்படுகிறது. ஒளிச்செறிவை அளக்க கேண்டெலா என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒளிமூலம் ஒன்று உமிழும் 540×10 எர்ட்சு அதிர்வெண் உடைய ஒற்றை நிறக் கதிர்வீச்சின் செறிவு, ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு ஸ்டேரிடியனுக்கு 1/683 வாட் எனில், அத்திசையில் ஒளிச்செறிவு ஒரு கேண்டிலா என வரையறுக்கப்படுகிறது. வேதிப்பொருளொன்றின் அளவை அளக்க மோல் என்ற அலகு பயன்படுகின்றது. 0.012 கிலோகிராம் கார்பனில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும். அணுவின் அடிப்படையிலான படித்தர நிறை, இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெரிய அளவுகோல் போன்று, துல்லியமாக அணுவின் அளவுகோலில் நிறைகளை அளந்தறிய முடியவில்லை. சில அலகுகளின் மடங்குகளைக் குறிப்பதற்காக சில முறையற்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. = 1 குவிண்டால்; = 1 மெட்ரிக் டன்; = 1 தசாப்தம் / பதிகம் = 1 நூற்றாண்டு / சதம் = 1 பத்தாயிரம் ஆண்டு 1966 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கட்டிட வர்த்தகங்கள், மெட்ரிக் முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டன. நீளத்தை அளவிடுவதற்கு மீட்டர் (மீ), செண்டிமெட்டர் (செ.மீ.), மில்லிமீட்டர் (மிமீ) எனும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, கட்டிட திட்டங்களைத் தயாரிக்கும்போதும், படிக்கும்போதும் மிகுந்த குழப்பங்களை விளைவிப்பதால் தவிர்க்கப்படுகின்றன. உதாரணமாக, இரண்டு மீட்டர்களும், ஒரு அரை மீட்டரும் இணைந்த நீளம் வழக்கமாக 2500 மிமீ அல்லது 2.5 மீ என பதிவு செய்யப்படுகிறது. 250 செ.மீ என பதிவு செய்வது தரமற்றதாக கருதப்படுகிறது. கணக்கெடுப்பு ஆராய்ச்சி துறையில், தனிப்பட்ட மனஅணுகுமுறை, மனோநிலை, சான்றாண்மை, தோரணை, நடத்தை, ஒழுக்கம் போன்றவை, ஆளுமை வினவல் பட்டியல், அமைப்பற்ற வினாப்பட்டியல், ஆய்வு வினாப்பட்டியல், அமைப்புடைய வினாப்பட்டியல் எனும் பலவகையான வினவுதாள் ஆதாரங்களை ஆய்வு அளவீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன. அளவீடுகளீன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அளவீடுகளைப் போல, கணக்கெடுப்பு ஆராய்ச்சி அளவீடுகளும் அளவீட்டு பிழைகளால் பாதிக்கப்படக்கூடியவை ஆகும். அதாவது, அளவீட்டு கருவியின் மூலம் பெறப்படும் மதிப்பானது அதன் உண்மையான மதிப்பிலிருந்து மாறுபடுகின்றது..
டிசம்பர் 2005 வேதியியல் தலைப்புகள் பட்டியல் ஐங்குறுநூறு ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்: மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு. ஆகியோர் பாடியுள்ளனர். இதனைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்". தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை". எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும். நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, நெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும், பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது. அன்னாய் பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன. குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன. உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்." அகநானூறு அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை. இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான். நின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண் அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5) ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய இன்பப் பகுதி இன்பொருட் பாடல் நானூறு எடுத்து நூல்நவில் புலவர் களித்த மும்மதக் 'களிற்றியானை நிரை' (10) மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை என்றாங்கு அத்தகு மரபின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக் மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15) அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக் கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையால் கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20) வளவர் காக்கும் வளநாட்டுள்ளும் நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின் கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத் தீதில் கொள்கை மூதூருள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொப்மை சான்ற நன்மையோனே. இது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன. 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது. 301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது. அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர் நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து இவர்திரை பத்தா இயற்பட யாத்தான் தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான் வகையின் நெடியதனை வைப்பு. இரண்டாம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்திதான் இந்தப் பாடலிலும் கூறப்பட்டுள்ளன. எனினும், இதில் திணையின் விளக்கங்கள் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன. வெண்தேர் என்னும் கானல்காற்று ஓடுவது பாலை தாமரை என்பது ஆகுபெயராய் அது பூத்திருக்கும் மருத நிலத்தைக் குறிக்கும் காமம் உண்டாக்கக் கூடிய முல்லைப்பூ பூத்திருக்கும் நிலம் முல்லை. இதுவும் ஆகுபெயர். வெறி என்பது மணத்தையும், வெறியாட்டத்தையும் குறிக்கும். இந்த இரண்டும் உள்ளது குறிஞ்சி. குட்டத்தில்(உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல் ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூறா தவைகுறிஞ்சிக் கூற்று. பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) - பாலைத் திணை பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) - முல்லைத் திணை பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) - மருதத் திணை பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) - நெய்தல் திணை பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல் நாலு நளிமுல்லை நாடுங்கால் - மேலையோர் தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின் ஆறு மருதம் அகம். பாட்டு 2-ல் கூறப்பட்டுள்ள செய்தியே இந்தப் பாட்டிலும் வேறு வகையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றையெல்லாம் 'செந்தமிழின் ஆறு(நெறி)' என்று குறிப்பிடுவது பிற மொழிகளில் இல்லாத தமிழ்நெறி இந்தத் திணைப் பாகுபாடு என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நெறி என்பது தமிழிலக்கிய நெறியாகும். பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். "உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்" எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலை பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தை கைக்கிளை என்றும் கூறுகின்றன. அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது. அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது. இந் நூல் உரையுடன் முதற் பகுதி 'மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர்' என்றவர்களால் 1918ல் முதலில் பதிப்பிக்க பட்டது.ஆனால்,இப்பதிப்பின் முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் பார்க்கக் கிடைக்கவில்லை, அகநானூற்றின் இரண்டாம் பகுதி 1920இல் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலைத் தவிர இப்பதிப்பும் பார்க்க கிடைக்கவில்லை.இந்நூலின் முழு பதிப்பானது 1923இல் 'அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் பெயரில் ரா.இராகவையங்கார் பதிப்பிக்க,கம்பர் விலாசம் இராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடபட்டது." புறநானூறு புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது. இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது. பாடல்: இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது. புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம். பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும், 30 படைக்கலக்கருவிகளையும், 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என புறநானூறு விளங்குகிறது. புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டையப் போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கமுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன. போராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு "The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்." பதினெண் கீழ்க்கணக்கு தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. "பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:" "நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும். நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும். இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பன்னிரண்டு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஐந்து நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை. நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது "நாலடி நானூறு" எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும். இந்நூல் முத்தரையர் எனும் பிரிவினைப் பற்றி கூறும் நூல் ஆகும். வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும். நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்). "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன. நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்) காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்) 2. பொருட்பால், 2.14 கல்வி, 132) ஆங்கிலத்தில் ஜி.யூ.போப்பால் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடையது இந்நூல். அகத்திணை அகத்திணை என்பது உலகியல் வழக்கத்துக்கும், நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம். பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன. இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது. அகத்திணை என்பது நாடக வழக்கிலும்,உலகியல் வழக்கிலும் உள்ள செய்திகளைக் கூறும். இதில் யாருடைய பெயரையும் சுட்டிக் கூறும் பழக்கம் இல்லை. இவற்றில் தமிழரின் வாழ்க்கைப் பாங்குகளும், பண்புகளும் இழையோடிக் கிடக்கும். அகத்திணை மாந்தர் அகப்பொருளின் உறுப்பினர்கள். தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது. இவை, என்பனவாகும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும். இதனை விளக்கும் வாய்பாட்டுப் பாடல் போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கம் அளி ஊடல் அணி மருதம் - நோக்கு ஒன்றி இல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல் புல்லும் கவிமுறைக்கு ஒப்பு புறப்பொருள் வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும் தொல்காப்பியம் என்னும் பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும். புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன. பழந்தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறப்பொருள் என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும் இலக்கியங்களைப் புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவது தமிழ் இலக்கிய மரபு. புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத் தொல்காப்பியர் ஏழு எனக் காட்டுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை 12 எனப் பகுத்துக் காட்டுகிறது. பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது. புறம் 12 எனில் அகமும் 12 என மாட்டேறு பெறுதல் வேண்டும். அங்ஙனம் பெறாமையின் இப்பாகுபாடு மரபு-வழு ஆகும் என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார். திவாகர நிகண்டு புறப்பொருளின் திணைகள் கூறும் செய்திகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறது. 1 வெண்பாச் சூத்திரம் 2 ஆசிரியப்பாச் சூத்திரம் விக்கிரம சோழன் விக்கிரம சோழன் (1122-1135) முதலாம் குலோத்துங்கனுக்கும் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூடப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம். சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனின் மறைவுக்கு பின் சாளுக்கிய அரசர்கள் வலுவிழந்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் மரபு வழி பூமியாகிய வேங்கியை இழக்க விக்ரம சோழனும் விரும்பவில்லை ஆதலால் தனது மகன் அபயகுலோத்துங்கனின் தலைமையில் ஒரு படையினை வெங்கிக்கு அனுப்பி வைத்தான். சோழர்களுக்குத் துணையாக சோட நாட்டுத் தலைவர்களாகிய கொனகண்டேஸ்வரனும் கிரிபச்சிமாவும் துணை இருந்தனர். இந்த போரின் மூலம் சோழ தேசம் எந்த எல்லையையும் விக்கிரம சோழனின் காலத்தில் இழக்காமல் இருந்தது. குலோத்துங்கனின் காலத்திற்கு பின்பு இவன் காலத்திலும் கலிங்கப் போர் நடைபெற்றதாக குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் காலத்திலும் விக்கிரம சோழனே படைகளுடன் சென்றுள்ளான். கருணாகரப் பல்லவன் விக்ரம சோழனின் காலத்திலும் துணை இருந்துள்ளதாக இந்த போரின் குறிப்புகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இந்தப் போரினை அடுத்து நிகழ்ந்த கங்காவடி போரினிலும் கலந்து கொண்டுள்ளான். ஆதலால் கருணாகரன் குலோத்துங்கன் காலத்திலும் விக்கிரமன் காலத்திலும் சோழர்களுக்கு துணை இருந்துள்ளான் என்பதனை அறிந்துக் கொள்ளலாம். விக்கிரம சோழன் கலிங்கத்தின் மீது படை எடுத்தமையை ஒட்டக்கூத்தர் உலா மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்த கலிங்கத்து போரிலும் சோழர்கள் வெற்றி பெற்றமையால் சோழ நாடு சுருங்காமல் இருந்தது. இந்தக் காலக் கட்டமே ஹோய்சாளர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற காலம் ஆகும். சாளுக்கியர்களின் காலம் முடிந்து, ஹோய்சாலர்களின் ஆட்சிக் காலம் ஆரம்பம் ஆகிய காலத்தே நிகழ்ந்த இந்தப் போரின் கங்காவாடிப் பகுதியை சோழர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர். ஆதலால் விக்கிரம சோழன் ஹோய்சாளர்கள் மீது போர் தொடுத்து கங்காவாடிப் பகுதியை மீட்டான். தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். இலங்கை தேசம் புலனருவா பகுதி வரை சோழ அரசு விரிந்து இருந்தது. விக்கிரம சோழன் தீவிர சிவ பக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான். விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் மழை இல்லாமல் சிறிது வறுமை தலை தூக்கியது. ஆதலால் விக்கிரமன் தனது மக்களுக்கு பற்பல தானங்கள் வழங்கி வறுமை களைந்தான். ஆதலால் அவனுக்கு இந்தப் பெயர் கிடைத்தது. இங்கிலாந்து இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும். மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலைத் தென் மேற்கிலும் வடகடலைக் கிழக்கிலும் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது. பெரிய பிரித்தானியாவின் தென், நடுவண் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் சில்லி தீவுகள் போன்ற நூற்றுக்கும் மேலான சிறுசிறு தீவுகளையும் அடக்கி உள்ளது. ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும். இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது. தற்போது இங்கிலாந்தாக அறியப்படும் பகுதியில் பிந்தைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இருப்பினும் ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இங்கு குடிபுகுந்த செருமானிய பழங்குடிகளில் ஒன்றான ஆங்கில்களைக் கொண்டே இது ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் "இங்கிலாந்து" என அறியப்படலாயிற்று. இங்கிலாந்து முற்றிலுமாக கிபி 927இல் ஒன்றிணைக்கப்பட்டது; 15வது நூற்றாண்டிலிருந்து உலகெங்கும் சட்ட, பண்பாட்டு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கில மொழி, ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் ஆங்கிலச் சட்டம்—பல நாடுகளில் நடப்பில் இருக்கும் பொதுச் சட்டத்திற்கான சட்ட அடிப்படை—இங்குதான் உருவானது. இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறைமை உலகின் பலநாடுகளின் அரசியலமைப்புக்களில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியால் உலகின் முதல் தொழில்மயமான நாடாக விளங்கியது. இங்கிலாந்தின் புவிப்பரப்பு பெரும்பாலும் சிறு குன்றுகளும் சமவெளிகளாகவும் உள்ளது. இருப்பினும் வடக்கிலும் தென்மேற்கிலும் சில உயரமான மலைப்பகுதிகளைக் காணலாம். இங்கிலாந்தின் முன்னாள் தலைநகரமாக வின்செஸ்டர் இருந்தது; 1066இல் தலைநகர் இலண்டனுக்கு மாற்றப்பட்டது. இன்றைய நாள் இலண்டன் ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கிலாந்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 53 மில்லியனாகும்; இது ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்தொகையில் 84% ஆகும். வேல்சு அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக இசுகாட்லாந்துடன் இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது. 1801இல், பெரிய பிரித்தானியா அயர்லாந்து இராச்சியத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது. 1922இல், அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள "பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம்" நிலைபெற்றது. இங்கிலாந்து "England" என்ற பெயர் பழைய ஆங்கிலத்தின் இங்கலாந்து (Englaland) என்பதில் இருந்து தோன்றியதாகும். இதற்கு ஆங்கில்களின் நிலம் என்று பொருள் . ஆங்கில்கள் செருமானிய பழங்குடிகள் ஆவார்கள். இவர்கள் வரலாற்றின் இடைக்காலத்தின் போது இங்கு குடியேறினார்கள். ஆங்கில்கள் பால்டிக் கடல் பகுதியில் அமைந்த ஆங்கில் மூவலந்தீவின் இருந்து வந்தவர்கள் . ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலியின் படி இங்கிலாந்து என்ற சொல் முதலில் பிரிந்தானிய தீவின் தென் பகுதியை குறிக்க 897 ல் குறிபிடப்பட்டதாக தெரிகிறது. இங்கிலாந்திற்கு அல்பியன் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு. ஆரம்ப காலத்தில் அல்பியன் என்ற சொல் பிரித்தானிய தீவு முழுவதையும் குறிப்பதாக இருந்தது. கிமு 4ம் நூற்றாண்டில் அரிசுடோடலியன் கார்பசு முதலில் இச்சொல்லை குறித்துள்ளார் . தற்பொழுது அல்பியன் என்பது கவிதைகளில் இங்கிலாந்தை குறிக்க பயன்படுகிறது . 780,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் இங்கிலாந்தில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் மண்டையோடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .. தற்கால மனிதர்கள் கற்காலத்தின் இறுதியில் இங்கு இருந்தாலும் நிலையான குடியிறுப்புகள் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏற்பட்டன .. கடைசி பனி யுகத்தின் பின்பு பெரிய உருவமுடைய மாமூத், காட்டெருது (பைசன்) முடியுடைய மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகள் மட்டும் தப்பி இருந்தன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் குறைவாக இருந்த பொழுது இங்கிலாந்து இருக்கும் பெரிய தீவான பிரிட்டனும், அயர்லாந்தும் ஐரோவாசியாவுடன் இணைந்திருந்தது.. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்த பொழுது அயர்லாந்து தனி தீவாகவும் 8000 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தனி தீவாகவும் ஐரோவாசியாவில் இருந்து பிரிந்தன. இப்பகுதியில் மிகுதியாக செப்பும் வெள்ளீயமும் கிடைத்தது அதைக்கொண்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கலக் காலத்தின் போது ஸ்டோன் ஹெஞ்ச் போன்றவை கட்டப்பட்டன. ஐந்தாம் நூற்றாண்டில் "ஆங்கிள்கள்" எனப்படும் ஜெர்மானிக் பழங்குடிகள் தற்போதைய இங்கிலாந்தின் நடு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். இவர்களை ஒத்த "சாக்சன்கள்" எனப்படும் பிரிதொரு பழங்குடியினர் இங்கிலாந்தின் தென்பகுதியில் குடியேறினர். வரலாற்றின் இந்தக் காலகட்டம் "ஆங்க்லோ-சாக்சன்" காலகட்டம் எனப்படுகிறது. துவக்கத்தில் ஒரு ஒன்றிணைந்த நாடாக இல்லாது பல குறுமன்னர்களால் ஆளப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த காலகட்டத்தில் மெதுவே ஒன்றிணையத் தொடங்கியது. இந்த ஒன்றிணைவு 937இல் நிறைவடைந்து முதல் இங்கிலாந்து மன்னராக ஏதெல்சுதான் ஆட்சி ஏற்றார். இவரது காலத்தில் டென்மார்க் நாட்டவர் படையெடுத்து கிழக்கிலும் வடக்கிலும் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு உருவாக்கினர். இப்பகுதியில் உள்ள பல ஊர்களும் நகரங்களும் இன்றும் டேனிசு பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. பல சண்டைகளுக்குப் பிறகு வெசெக்சின் மன்னர் ஆல்பிரெட் முழுமையான இங்கிலாந்தை மீண்டும் கையகப்படுத்தி இங்கிலாந்து மன்னரானார். பழைய குறுநாடுகள் "எர்ல்கள்" (Earldoms) என அழைக்கப்பட்டன. மன்னர் ஆல்பிரெட்டின் மறைவிற்கு பின்னர் டென்மார்க் மன்னர் இங்கிலாந்தை ஆண்டார். எட்வர்டு மன்னரின் மறைவிற்கு பின்னர் மீண்டும் வெசக்சின் மன்னர் ஹெரால்டு இங்கிலாந்தின் மன்னரானார். ஆனால் வடக்கு பிரான்சில் நார்மண்டியின் மன்னராக இருந்த வில்லியம் ஹெரால்டு தம்மை மன்னராக்குவதாக உறுதி கொடுத்ததை மீறியதாக அவர்மீது 1066இல் ஹேஸ்டிங்ஸ் சண்டையில் போரிட்டார். இதில் வெற்றி பெற்ற வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். அடுத்த 300 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பிரெஞ்சு பேசும் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. (தற்போதைய அரசி, இரண்டாம் எலிசபெத் வில்லியமின் வழிவந்தவராக கருதப்படுகிறார்). 13வது நூற்றாண்டில் இங்கிலாந்து வேல்சு நாட்டை இணைத்துக் கொண்டது. இசுக்காட்லாந்தையும் கைப்பற்ற பல போர்கள் பிரான்சிற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே நிகழ்ந்தவண்ணம் இருந்தன. இங்கிலாந்து உரோமன் கத்தோலிக்க கிறித்தவத்தை பின்பற்றி வந்தது. இங்கிலாந்திலிருந்த பல ஆயர்களும் திருத்தந்தையின் ஆணைகளைப் பின்பற்றினர். 1500இல் மன்னராக இருந்த ஹென்றி VIII மணமுறிவை வேண்டியபோது அதனை திருத்தந்தை மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னர் சீர்திருத்தத் திருச்சபையாக இங்கிலாந்து திருச்சபையை நிறுவி தமது மணமுறிவை நிறைவேற்றிக் கொண்டார். சீர்திருத்த கிறித்தவமே அலுவல்முறை சமயமாகவும் அறிவித்தார்.அடுத்த 200 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அரசர் (அரசி) "உரோமன் கத்தோலிக்கராக" இருக்க வேண்டுமா அல்லது "சீர்திருத்த கிறித்தவராக" இருக்க வேண்டுமா என்ற சண்டை இருந்து வந்தது. முதலாம் எலிசபெத் ஹென்றியின் இரண்டாம் மகள். இவர் இங்கிலாந்தை 40 ஆண்டுகள் ஆண்டுவந்தார். இவருக்கு மக்கள் இல்லாமையால், இவர் மறைந்தபோது இசுக்காட்லாந்தின் ஜேம்ஸ் (இசுக்காட்லாந்து அரசி மேரியின் மகன்) 1603இல் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரே இருநாடுகளையும் அடங்கிய பகுதியை "பெரிய பிரித்தானியா" எனப் பெயரிட்டார். இவரது காலத்தில் இரு நாடுகளும் தங்களுக்கென தனித்தனி நாடாளுமன்றங்களுடனும் சட்டங்களுடனும் ஒரே மன்னரின் கீழ் தனித்தனி நாடுகளாக இருந்தன. ஜேம்சின் மகன் சார்லசும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் பிணக்கு கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டன. இதில் இசுக்காட்லாந்தும் அயர்லாந்தும் பங்கேற்றன. நாடாளுமன்றப் படையின் தலைவராக பொறுப்பேற்ற ஆலிவர் கிராம்வெல் அரசப் படைகளை தோற்கடித்தார். 1649ஆம் ஆண்டில் முதலாம் சார்லசு மன்னரின் தலையைக் கொய்து தாம் ஆட்சியாளராக (பாதுகாப்பு பிரபு) அறிவித்துக் கொண்டார். இவரது மறைவின் பின்னர் இவரது மகன் ரிச்சர்டுக்கு ஆட்சி செய்ய திறன் இல்லாதமையால் கொலையுண்ட மன்னர் சார்லசின் மகன் இரண்டாம் சார்லசை இங்கிலாந்து மன்னராக முடிசூட அழைக்கப்பட்டார். 1660இல் இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரை அடுத்து இவரது உடன்பிறப்பு இரண்டாம் ஜேம்ஸ் முடி சூடினார். இவர் உரோமன் கத்தோலிக்கராக இருந்தது மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. நெதர்லாந்தின் குறும்பகுதி ஒன்றின் மன்னராக இருந்த வில்லியம் (மன்னர் ஜேம்சின் மகள் மேரியின் கணவர்) இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். இவர் ஒரு சீர்திருத்த கிறித்தவராக இருந்ததால் மக்கள் இவரை ஆதரித்தனர். இதனால் ஜேம்சு சண்டை எதுவும் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வில்லியத்தையும் மேரியையும் இணையாக அரசர் அரசியாக முடிசூட அழைத்தனர். மேரி இறந்தபிறகு வில்லியம் தனியே ஆண்டுவந்தார். அடுத்த மன்னராக மேரியின் உடன்பிறப்பு ஆன் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் 1707இல் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றாக சட்டப்படி இணைந்தன. இரண்டு நாடாளுமன்றங்களும் இணைந்து இலண்டனில் இருந்த நாடாளுமன்றம் "பிரித்தானிய நாடாளுமன்றம்" என அழைக்கப்பட்டது. புதியதாக உருவான பெரிய பிரித்தானிய இராச்சியத்தில் அறிவியலும் பொறியியலும் தழைத்தோங்கியது. இவை பிரித்தானியப் பேரரசை உருவாக்க உதவின. உள்நாட்டில் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் சமூகப்பொருளியல் மாற்றங்களும் பண்பாட்டு சீர்திருத்தங்களும் ஏற்பட்டன. வேளாண்மை, தயாரிப்பு, சுரங்கத்துறை தொழில்மயமாயின. சாலைகள், இருப்புப் பாதைகள், நீர்ப் போக்குவரத்து வசதிகள் கட்டமைக்கப்பட்டன.. 1825இல் உலகின் முதல் பயணியர் நீராவி உந்து இழுத்த தொடர்வண்டி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின்போது இங்கிலாந்தில் அமைதி நிலவியது. நெப்போலியப் போர்களின்போது, நெப்போலியன் இங்கிலாந்தின் தென்கிழக்கில் படையெடுக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் இத்திட்டத்தை நிறைவேறவிடாது கடலில் பிரித்தானியக் கடற்படை நெல்சனின் தலைமையிலும் தரையில் வெல்லிங்டன் பிரபுவின் தலைமையிலும் முறியடித்தன. இப்போர்களினால் இசுக்காட்லாந்தியரும் வேல்சு மக்களும் இங்கிலாந்து மக்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து உண்மையான "பிரித்தானிய நாட்டுப்பற்று" உருவானது; அனைவரும் பிரித்தானியர்களாக தங்களை அடையாளப்படுத்தினர். தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன; ஜெட் உந்துகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானது. தனிநபர் தானுந்து பயன்பாட்டால் நகர அமைப்புக்கள் மாற்றங்களைக் காணத் தொடங்கின. 1948இல் தேசிய நலச் சேவை துவங்கப் பட்டது. இதன்மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிட்சை வழங்கப்படது. இருபதாம் நூற்றாண்டில் பிற பிரித்தானியத் தீவுகளிலிருந்தும் பொதுநலவாய நாடுகளிலிருந்தும், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தும், கணிசமான மக்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர். 1970களிலிருந்து தயாரிப்புத் தொழிலில் இருந்து விலகி சேவைத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சந்தைக் கொள்கையில் பங்கேற்கிறது. அதிகாரப் பரவல் கொள்கைகளின்படி இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கிலாந்தும் வேல்சும் ஒரே ஆட்புலமாக விளங்குகிறது. இந்த அதிகாரப் பரவலினால் ஆங்கிலம் சார்ந்த அடையாளமும் நாட்டுப்பற்றும் வலியுறுத்தப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் பெறும் மற்ற நாடுகளுக்கு தனி நாடாளுமன்றம், அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் இங்கிலாந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடி ஆட்சியிலேயே உள்ளது. மற்றவற்றைப் போன்ற உள்நாட்டு அமைப்புகளை உருவாக்கிட ஏற்ப்பட்ட முயற்சிகள் பொது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன. புவியியல்படி இங்கிலாந்து பெரிய பிரித்தானியத் தீவின் மூன்றில் இரண்டு பங்கு மத்திய,தென்பகுதிகளை உள்ளடக்கியது. கடல்கடந்த பகுதிகளாக வைட்டுத் தீவு, சில்லி தீவுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக ஐக்கிய இராச்சியத்தின் மற்ற இரு நாடுகள், வடக்கில் இசுக்காட்லாந்தும் மேற்கில் வேல்சும், அமைந்துள்ளன. பிரித்தானியாவின் வேறெந்த பகுதியைவிட ஐரோப்பாவிற்கு இங்கிலாந்தே அண்மையில் உள்ளது. பிரான்சிலிருந்து தொலைவுள்ள கடல்பிரிவால் பிரிக்கப்பட்டுள்ளது; தற்போது இருநாடுகளும் கால்வாய் சுரங்கத்தால் பிணைக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு ஐரிஷ் கடல், வடகடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் கடற்கரைகள் உள்ளன. தேம்சு, மெர்சி மற்றும் டைன் ஆற்று பொங்குவடித வெள்ளத்தில் முறையே இலண்டன், லிவர்ப்பூல், நியூகாசில் துறைமுகங்கள் அமைந்துள்ளன. நீளமுள்ள செவர்ன் ஆறு இங்கிலாந்தில் ஓடுகின்ற மிகநீளமான ஆறாகும். இந்த ஆறு பிரிஸ்டல் கால்வாயில் சேர்கிறது; இங்குள்ள செவர்ன் போர் பொங்குவடிதல் அலைகள் குறிப்பிடத்தக்கன. இவை வரை உயரக் கூடியவை. ஆனால், இங்கிலாந்திற்குள்ளேயே ஓடும் மிக நீளமான ஆறாக தேம்சு தொலைவு ஓடுகிறது. இங்கிலாந்தில் பல ஏரிகள் உள்ளன; ஏரி மாவட்டத்தில் உள்ள வின்டர்மேர் ஏரி மிகப் பெரியதாகும். புவியியல் கூற்றில், "இங்கிலாந்தின் முதுகெலும்பு" என அறியப்படும் பெனைன்சு மலைத்தொடர் நாட்டின் மிகத் தொன்மையான மலைகளாகும்; இவற்றின் துவக்கம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. இவற்றின் புவியியல் கூறுகளாக மணற்கல், சுண்ணக்கல், மற்றும் நிலக்கரி உள்ளன. இத்தொடரில் மூன்று தேசியப் பூங்காக்கள், யார்க்சையர் டேல்சு, நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்கா, பீக் மாவட்டம் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரம் உயரமுள்ள "இசுகாஃபெல் பைக்" ஆகும். இங்கிலாந்திற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே எல்லையாக "செவியட் மலைகள்" உள்ளன. பெனைன்சு மலைகளின் தெற்கே "ஆங்கில தாழ்நிலங்களில்" பசுமையான மலைக்குன்றுகள் உள்ளன. டோவரில் இவை கடலை சந்திக்குமிடத்தில் வெள்ளைநிற செங்குத்துப் பாறைகள் உள்ளன. தென்மேற்குத் தீபகற்பத்தில் உள்ள டார்ட்மோர் மற்றும் எக்சுமோர் தேசியப் பூங்காக்களாகும். இங்கிலாந்தில் கடலோர மிதமான காலநிலை நிலவுகிறது: வெப்பநிலை குளிர்காலத்தில் 0 °Cக்கு கீழே தாழ்ந்து செல்லாமலும் கோடைகாலத்தில் க்கு மிகாமலும் உள்ளது. காலநிலை ஈரப் பதத்துடன் அடிக்கடி மாறும் தன்மையுடையதாக உள்ளது.சனவரியும் பெப்ரவரியும் மிகவும் குளிர்ந்த மாதங்களாகவும் சூலை மிகவும் வெப்பமான மாதமாகவும் உள்ளன. மே, சூன்,செப்டம்பர் மற்றும் அக்டோபர் மிதமான காலநிலையுடன் உள்ளன. ஆண்டு முழுவதும் பரவி மழை சமமாக பெய்கிறது. இங்கிலாந்தின் காலநிலையில் அட்லாண்டிக் பெருங்கடல் அருகாமை, புவியின் வடக்குப் பகுதியில் அமைவு மற்றும் வளைகுடா ஓடையால் கடல் வெப்பமடைதல் ஆகியன தாக்கமேற்படுத்துகின்றன. மழைப்பொழிவு மேற்கில் கூடுதலாக உள்ளது. இதுவரையான மிகக்கூடுதலான வெப்பநிலை ஆகத்து 10, 2003இல் 38.5|°ஆக கென்ட்டில் பதிவாகியுள்ளது; மிகவும் குறைந்த வெப்பநிலை சனவரி 10, 1982இல் 26.1 °Cஆக எட்ஜ்மோன்டில் பதிவாகியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக உள்ள இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு நாடாளுமன்ற முறைமையும் அரசியலமைப்பின்படியான முடியாட்சியும் அடிப்படையாகக் கொண்டது. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவையான பொதுமக்கள் அவையில் மொத்தமுள்ள 650 இடங்களில் இங்கிலாந்திற்கு 532 இடங்கள் உள்ளன. ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு இங்கிலாந்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு 55 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 2010இல் நடந்த பொதுத்தேர்தல்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இங்கிலாந்தில் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருந்தும் மக்கள் அவையில் பெரும்பான்மை பெறாததால் மூன்றாவதாக வந்த லிபரல் டெமக்கிராட்சுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் டேவிட் கேமரன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இங்கிலாந்திற்கான தனி நாடாளுமன்றம் எதுவும் இல்லை; நேரடியாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஆளப்படுகிறது. அதிகாரப் பரவலிற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் மற்ற அங்க நாடுகளுக்கு—இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்து —தங்கள் உள்நாட்டுப் பிரசினைகளுக்கு தீர்வுகாண தனித்தனி சட்டப்பேரவைகள் உள்ளன.இங்கிலாந்தின் பல்வேறு மண்டலங்களுக்கு இத்தகைய அதிகார பரவலை வழங்க முன்மொழியப்பட்ட திட்டம் பொதுவாக்கெடுப்பில் வடகிழக்கு இங்கிலாந்து ஏற்காததால் கைவிடப்பட்டது. இதனால் இங்கிலாந்தின் உள்நாட்டு பிரச்சினைகளிலும் பிறநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; மாறாக அவர்களுடைய பிரச்சினைகளில் இங்கிலாந்தின் எம்பிக்கள் தலையிட முடியாது. இது "மேற்கு லோத்தியன் வினா" என குறிக்கப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் புற்றுநோய்க்கு இலவச சிகிட்சை, முதியோருக்கு வீட்டுக் கவனிப்பு, பல்கலைக்கழக கட்டண சலுகைகள் போன்றவை இல்லாதநிலையில் "ஆங்கில தேசியம்" வளர்ந்தோங்கி வருகிறது. பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ள ஆங்கிலச் சட்ட முறைமையே பெரும்பான்மையான பொதுநல வாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் (லூசியானா மட்டும் விலக்கு) நடைமுறையில் உள்ள பொதுச் சட்டத்திற்கு அடிப்படையானது. இங்கிலாந்திலும் வேல்சிலும் உள்ள நீதிமன்றங்களுக்கு மேல்நிலையில் குடிமையியல் வழக்குகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உள்ளன; குற்றவியல் வழக்குகளுக்கு "கிரௌன் நீதிமன்றம்" உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் குடிமையியல், குற்றவியல் இருதரப்பட்ட வழக்குகளுக்கும் இவற்றிற்கெல்லாம் உயரிய நீதிமன்றமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த நீதிமன்றம் 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதற்கு முன்னதாக பிரபுக்கள் அவை இந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் கீழுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்; இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அவை ஏற்க வேண்டும். 1981க்கும் 1995க்கும் இடையே குற்றங்கள் மேலோங்கியபோதும் 1995-2006 பத்தாண்டுகளில் 42% குறைந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பாவில் மிகக் கூடுதலானோர் சிறையில் அடைக்கப்பட்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது. இங்கிலாந்து மத்திய காலத்தில் 39 கௌன்டிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. நகரமயமாக்கலை அடுத்து இவற்றின் பல இன்று சீரமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் இந்த மரபுவழி கௌன்டி பெயர்களை இன்றும் பயன்படுத்துகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்புக்களின்படி நாடு நான்கு நிர்வாக நிலைகளில் அமைந்துள்ளது. முதல்நிலையில் 9 மண்டலங்களாகவும் அடுத்த இரண்டாம் நிலையில் கௌன்டிகளாகவும் மூன்றாம் நிலையில் மாவட்டங்களாகவும் நான்காம் அடிமட்ட நிலையில் கோவிற்பற்றுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நகரமயமாக்கலை ஒட்டி நகர்ப்புற கௌன்டிகள் எனவும் நகர்புறமல்லா கௌன்டிகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் சில கௌன்டிகளில் கௌன்டி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒற்றை ஆட்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் "சிட்டி" என்பதற்கும் "டௌன்" அல்லது "டவுன்" என்பதற்கும் வேறுபாடு உள்ளது. "சிட்டி" என்பது அரசரால் பட்டியலிடப்பட்ட நகரமாகும். வரலாற்றுப்படி இங்கு ஒரு கதீட்ரல் அமைந்திருக்கும். மற்றவை டவுன் ஆகும். காட்டாக, 2000 பேரே உள்ள வேல்சின் "செயின்ட்.டேவிட்" ஒரு சிட்டி ஆகும்; ஆனால் 135,600 மக்கள் வாழும் "இசுடாக்போர்ட்" ஒரு டவுன் ஆகும். இங்கிலாந்தின் 200,000 மக்கள்தொகை கொண்ட பத்து பெரிய நகர்புற கௌன்டிகளாவன (2001 ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பின்படி): சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி £22,907 அளவிலுள்ள இங்கிலாந்தின் பொருளாதாரம் உலகில் மிகப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். கலப்புப் பொருளாதாரமாகக் கருதப்பட்டாலும் பல திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. மேம்பட்ட சமூகநல கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளது. அலுவல் நாணயமாக பவுண்டு இசுடெர்லிங் விளங்குகிறது. ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் வரிவீதம் குறைவானதே; 2009இல் தனிநபர் வரிவீதம் £37,400 வருமானம் வரை 20%ஆகவும் இதற்கு கூடிய வருமானத்திற்கு 40% ஆகவும் உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு இங்கிலாந்திற்கு உள்ளது. இங்கிலாந்து வேதியியல் மற்றும் மருந்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் முதன்மையான விண்வெளித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள்போன்றவற்றில் முன்னணியில் உள்ளது. மென்பொருள் துறையின் தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரும் பங்குச் சந்தையான இலண்டன் பங்குச் சந்தை உள்ள இலண்டன் இங்கிலாந்தின் மிகப்பெரும் நிதிய மையமாகும் — ஐரோப்பாவின் 500 பெரிய நிறுவனங்களில் 100 இலண்டனில் உள்ளன. இலண்டன் உலகின் மிகப்பெரும் நிதிய மையமாகவும் விளங்குகிறது. 1694இல் இசுகாட்லாந்து வங்கியாளர் வில்லியம் பேட்டர்சன் நிறுவிய இங்கிலாந்து வங்கி ஐக்கிய இராச்சியத்தின் நடுவண் வங்கி ஆகும். இங்கிலாந்து அரசுக்கான தனியார் வங்கியாகத் துவக்கப்பட்ட இது 1946இல் தேசியமயமாக்கப்பட்டு அரசுத்துறை வங்கியாக உள்ளது. இந்த வங்கியே இங்கிலாந்திலும் வேல்சிலும் நாணயத்தாள் அச்சடிக்க இயலும்; இருப்பினும் இந்த தனியுரிமை ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளுக்கு இல்லை. நாட்டின் நாணயக் கொள்கையை மேலாண்மை செய்யவும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கவும் வங்கியின் நாணயக் கொள்கை குழுவிற்கு பிரித்தானிய அரசு பொறுப்பு வழங்கி உள்ளது. இங்கிலாந்து மிக்க தொழில்மயமான பொருளாதாரமாக இருந்தபோதும் 1970களுக்குப் பிறகு வழக்கமான கனரக மற்றும் தயாரிப்பு தொழில்களில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. சேவைசார் தொழில்கள் வலுவடைந்து வருகின்றன. சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க தொழிலாக இங்கிலாந்திற்கு ஆண்டுதோறும் பல மில்லியன் பயணிகளை ஈர்க்கிறது. மருந்துகள், தானுந்துகள், பாறை எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், வானூர்தி பொறிகள் மற்றும் மதுபான வகைகளை ஏற்றுமதி செய்கிறது. வேளாண்மை மிகவும் தானியங்கிமயமாக உள்ளது; 2% தொழிலாளர்களுடன் இத்துறை 60% உணவுத்தேவையை நிறைவு செய்கிறது. வேளாண்மை உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு கால்நடைகளிலிருந்து பெறப்படுகிறது; மிகுதி பயிரிடப்படக்கூடிய தானியங்களிலிருந்து பெறப்படுகின்றன. இங்கிலாந்தை தாய்நாடாக கொண்ட விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமான சிலர் சர் ஐசக் நியூட்டன், ஜே. ஜே. தாம்சன், மைக்கேல் பாரடே, ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டார்வின், ஆலன் டியூரிங், டிம் பேர்னேர்ஸ்-லீ. அரசின் போக்குவரத்துத் துறை இங்கிலாந்தின் போக்குவரத்து தேவைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பின்னிப் பிணைக்கும் மோடார்வேக்களும் நெட்சாலைகளும் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இங்கிலாந்தில் உள்ள மிக நீளமான விரைவுச் சாலை M6 ஆகும். இது வார்விக்சையரின் ரக்பியிலிருந்து வடகிழக்கு இங்கிலாந்து வழியாக ஆங்கிலோ-இசுகாட்டிஷ் எல்லை வரைச் செல்கிறது. மற்ற விரைவுச்சாலைகள்:இலண்டன் – லீட்சு (எம் 1), இலண்டனைச் சுற்றியுள்ள எம்25, மான்செஸ்டரைச் சுற்றியுள்ள எம் 60, இலண்டனிலிருந்து தென் வேல்சிற்குச் செல்லும் எம்எம் 4, லிவர்பூல் – மான்செஸ்டர் – கிழக்கு யார்க் சையர் எம்62, பர்மிங்காம் – பிரிஸ்டல் எம் 5. நாடெங்கும் பேருந்து போக்குவரத்து பரவியுள்ளது; முதன்மையான நிறுவனங்களாக தேசிய எக்ஸ்பிரெஸ், அர்ரைவா, கோ-அகெட் பேருந்து சேவைகளை இயக்குகின்றன. சிவப்பு வண்ண இரட்டை அடுக்கு பேருந்துகள் இலண்டனின் அடையாளமாகவே உள்ளன. இங்கிலாந்தின் இரண்டு நகரங்களில் விரைவு தொடர்வண்டி சேவைகள் நகர்ப்புறப் போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன; இலண்டன் அண்டர்கிரவுண்டு, டைன் அன்டு வியர் மெட்ரோ. பல ஒற்றைத் தண்டூர்தி அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன:பிளாக்பூல் டிராம்வே, மான்செஸ்டர் மெட்ரோலிங்க், செபீல்டு சூப்பர்டிராம், மிட்லாந்து மெட்ரோ, மற்றும் தென் இலண்டனின் கிராய்டனை மையமாகக் கொண்ட டிராம்லிங்க்அவற்றில் சிலவாகும். இங்கிலாந்திலுள்ள இருப்புப் பாதை போக்குவரத்து உலகின் மிகத் தொன்மையானதாகும். 1825இல் பயணியர் தொடர்வண்டி இங்கிலாந்தில் தொடங்கியது. பிரித்தானியாவிலுள்ள இருப்புப் பாதைகளில் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே உள்ளன; இருப்பினும் இவற்றில் பல பாதைகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூடப்பட்டு விட்டன. பிரான்சிற்கும் பெல்ஜியத்திற்கும் 1994ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கால்வாய் சுரங்கம் மூலம் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இங்கிலாந்தின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துக்கான வான்வழித்தடங்கள் மிகவும் பரவலானவை. நாட்டின் பெரிய வானூர்தி நிலையமான இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விட பன்னாட்டு பயணியர் போக்குவரத்து கூடுதலாக உள்ள ஒன்றாகும். மற்ற பெரிய வானூர்தி நிலையங்கள்: மான்செஸ்டர் வானூர்தி நிலையம், இலண்டன் இசுடான்சுடெட் வானூர்தி நிலையம், லூட்டன் வானூர்தி நிலையம்மற்றும் பர்மிங்காம் வானூர்தி நிலையம். கடல்வழிப் போக்குவரத்தில், பெரும்படகுகள் உள்ளூர் மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பன்னாட்டுப் போக்குவரத்துக்காக இயக்கப்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் தொலைவிற்கு நீர்வழிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் தேம்ஸ் இங்கிலாந்தின் முக்கிய நீர்வழியாகும்; இதன் கழிமுகத்தில் அமைந்துள்ள தில்பரி துறைமுகம் இங்கிலாந்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் முதன்மையானதாகும். 53 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட இங்கிலாந்தே ஐக்கிய இராச்சியத்தின் நாடுகளில் மிகவும் பெரியதாகும்; மொத்த மக்கள்தொகையில் இது 84% ஆகும. இங்கிலாந்தை மட்டும் தனியாக கருத்தில்கொண்டால் மக்கள்தொகைப்படி இது ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது இடத்திலும் உலகளவில் 25ஆவது இடத்திலும் உள்ளது. சதுர கிமீக்கு 407 நபர்கள் உள்ள இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் மக்கள் அடர்த்தி மிக்க நாடுகளில் மால்ட்டாவிற்கு அடுத்து இரண்டாவதாகும். 1086இல் இரண்டு மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை, 1801இல் 8.3 மில்லியனாகவும் 1901இல் 30.5 மில்லியனாகவும் வளர்ந்தது. குறிப்பாக தென்கிழக்கு இங்கிலாந்தில் பொருளாதார முன்னேற்றத்தினால் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறினர். 1950களிலிருந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளிலிருந்து புலம்பெயர் மக்கள் வரத் துவங்கினர். இங்கிலாந்தில் 6% மக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களாவர். மக்கள்தொகையில் 2.90% பேர் பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளாயிருந்த கரிபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த கருப்பின மக்களாவர். சீனர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். 2007 துவக்கப்பள்ளி மாணவர்களில் 22% சிறுவர்கள் சிறுபான்மை இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும். 1991இலிருந்து 2001 வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தில் 50% புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் ஏற்பட்டதாகும். இதனால் புதிய குடியேற்றத்தை தடுக்கவேண்டும் என்ற அரசியல் கருத்தாக்கம் வலுவடைந்து வருகிறது. இங்கிலாந்து கல்வி துறை 3 வயது முதல் 4 வயது வரை மழலை கல்வியும் பின்னர் 4 வயது முதல் 11 வயது வரை ஆரம்ப கல்வியும் 11 வயது முதல் 16 வயது வரை இடைநிலை கல்வியும் (ஆரம்ப கல்வியும் மற்றும் இடைநிலை கல்வியும் இங்கிலாந்து நாட்டில் கட்டைய கல்வியாகும்) கட்டைய கல்வியை முடித்த பின் 2 ஆண்டு வரை கல்வியை தொடர்ந்து ஜீ. சி. எஸ். ஈ பரீட்சைக்கு தோன்ற முடியும்.பரீட்சை முடிவுகளை தொடர்ந்து கல்லூரிகளில் அனுமதியினை பெறமுடியும். இங்கிலாந்து நாட்டில் 90 மேற்பட்ட பல்கலைகழகங்கள் உள்ளன இவற்றில் உலக பிரபல்யம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி இங்கிலாந்து நாட்டில் தான் உள்ளது. பற்பல விளையாட்டுக்கள் இங்கிலாந்தில் காலாகாலமாக ஆடப்பட்டு வருகின்றன. இக்காலத்தில் உலகத்தில் விளையாடப்பெறும் பல விளையாட்டுக்கள் 19-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் இங்குதான் தோற்றுவிக்கப்பட்டு, விதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளினும் புகழ்பெற்று விளங்குவது கால்பந்து ஆகும். இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அணியின் மைதானமான வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் 1966-ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையை மேற்கு செருமனியை 4-2 என்ற இலக்கு கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது. அவ்வருடம் மட்டுமே இங்கிலாந்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தியுள்ளது, இங்கிலாந்தின் ஒரே கால்பந்து உலகக் கோப்பை வாகையும் அதுவேயாகும். இங்கிலாந்தில் செஃபீல்டு கால்பந்துக் கழகம் 1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது(உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம்). ஆகையால், ஃபிஃபாவினால் கழகக் கால்பந்தின் பிறப்பிடமாக இங்கிலாந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டமைப்பே உலகின் மிகப் பழமையான காலபந்துக் கூட்டமைப்பாகும். கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை மற்றும் கால்பந்துக் கூட்டிணைவு ஆகியவை முறையே உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கோப்பை மற்றும் கூட்டணைவுப் போட்டித் தொடர்களாகும். தற்போதைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் உலகின் கவர்ச்சிகரமான, புகழ்வாய்ந்த கால்பந்து கூட்டிணைவுத் தொடராகும். and amongst the elite. ஐரோப்பியக் கோப்பையை (தற்போது யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு என்று அறியப்படுகின்றது) இங்கிலாந்தின் கால்பந்துக் கழகங்களான லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட், நாட்டிங்காம் ஃபாரஸ்ட், அஸ்டன் வில்லா, செல்சீ ஆகிய அணிகள் வென்றுள்ளன; மேலும் ஆர்சனல் லீட்சு யுனைடெட் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன. துடுப்பாட்டத்தின் (மட்டைப்பந்து,கிரிக்கெட்) தாயகம் இங்கிலாந்து. மேலும் அந்நாட்டின் தேசிய விளையாட்டும் இதுவே. இங்கிலாந்து முதல் மூன்று துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளையும் (1975, 1979, 1983) அதன் பிறகு 1999-ம் ஆண்டும் நடத்தியது. பதுஅ உலக இருபது20 போட்டிகளை 2009இல் நடத்தியது. இதுவரை இங்கிலாந்து மூன்றுமுறை(1979, 1987, 1992) துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும் ஒருமுறை கூட வென்றதில்லை. இலண்டனிலுள்ள இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் "துடுப்பாட்டத்தின் மெக்கா"எனப்படுகிறது. இலண்டன் மூன்றுமுறை கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்களை 1908, 1948, 2012 ஆண்டுகளில் நடத்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டுக்களில் இங்கிலாந்து பங்கேற்கிறது. இங்கிலாந்தின் விளையாட்டுக்களை வழிநடத்தவும் நிதிகளை வழங்குவதற்கும் "இசுபோர்ட் இங்கிலாந்து" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்டு பிரீ தானுந்து போட்டிகள் சில்வர்சுடோன் என்றவிடத்தில் நடத்தப்படுகின்றன. உலக ரக்பி யூனியன் கோப்பையை 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து வென்றது. 1991இல் இந்த போட்டிகளை ஏற்று நடத்திய இங்கிலாந்து மீண்டும் 2015இல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரக்பி கால்பந்து விளையாட்டின் மற்றொரு வடிவமான ரக்பி லீக் விளையாட்டு 1895இல் அட்டர்சுபீல்டில் பிறந்தது. ரக்பி லீக்கில் இங்கிலாந்தின் அணி உலகளவில் மூன்றாவது நிலையிலும் ஐரோப்பாவில் முதல்நிலையிலும் உள்ளது. பெரிய பிரித்தானியாவின் அணி மூன்று உலகக்கோப்பைகளை வென்றபிறகு ஓய்வுபெற்றநிலையில் இங்கிலாந்தின் அணியே 2008 முதல் நாட்டு அணியாக பங்கேற்கிறது. 2013இல் நடக்கவுள்ள ரக்பி லீக் உலக்க் கோப்பை போட்டிகளை ஐக்கிய இராச்சியம் ஏற்று நடத்த உள்ளது. டென்னிசில், விம்பிள்டன் கோப்பை மிகவும் பழைமையான போட்டியாகவும் உலகின் மதிப்புமிக்க ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கிலாந்தில் பலர் பெரும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருசிலர்: பழமொழி நானூறு பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது. இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் வரலாற்று நிகழ்ச்சிகள் பழமொழி நானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது: பின்வரும் புராணக் குறிப்புகள் பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ளன: மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் சிறுபஞ்சமூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது. காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன. தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்' உள்ளது. இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21 வதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப்பட்ட 37வது பாடல் பகுதி பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் …' என்ற 37வது பாடல் மட்டும் இருக்கிறது. அந்த 37வது பாடலும், அதற்கு பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது. இப்பாடல்,'மனிதன் சாதரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது. புத்தளம் புத்தளம் (ஆங்கிலம்: "Puttalam", ) இலங்கையின் மேற்குக் கடற்கரையை அண்டியுள்ள ஒரு நகரம் ஆகும். இது வடமேல் மாகாணத்தில் நகர சபை ஆட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது. இது அதே பெயரையுடைய புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி 130 வது கி.மீ (81 மைல்) தூரத்தில் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 28 கி.மீ (17 மைல்) நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது. புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு. உள் நாட்டிற்குள் அமைந்த மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் காலத்தின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து கல்பிட்டி வரை தரைப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர்தான் இந்நீர்ப் போக்குவரத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது. புத்தளம் நகரின் பெயர் தான் மாவட்டத்தின் பெயருமாகும். புத்தளம் என்பது நகரையும் குறிக்கிறது மாவட்டத்தையும் குறிக்கிறது. சிலாபம், குருநாகல் நகரங்கள் பெற்றுக்கொள்ளாத பல முக்கியத்துவம் நவீன வரலாற்றில் புத்தளம் பெறக்கூடியதாக இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன. 14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த இப்னு பதூதா இந்நகரை "பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார். ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும், அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முஸ்லிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘ரேஹ்லா’ எனும் பிரயாணக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன. இலங்கையில் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முதல்வராக இருந்த விஜயன் மற்றும் அவனுடைய சகாக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கியது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்ப பன்னி பிரதேசத்திலேயேயாகும். மேலும் விஜயன் அரசனாவதற்கு உதவிபுரிந்ததாக கூறப்படும் குவேனி என்பவளின் இருப்பிடமும் இப்பிரதேசத்திலேயே இருந்துள்ளது. பிற்காலத்தில் விஜய அரசர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 'புத்தகச்சான' எனும் இளவரசியை திருமணம் செய்ததால் அங்கிருந்து சென்ற குவேணி தோணிகல எனும் பிரதேசத்தில் வாழ்ந்ததாக கதைகளில் கூறப்படுகின்றது. இப் பிரதேசத்திலேயே இலங்கையின் மிக நீண்ட கல் வெட்டும் காணப்படுகின்றது. இது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய மலை நாட்டிலும் குருநாகல் இராச்சியத்திலும் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கும் குருநாகல் உட்பட மத்திய மலை நாட்டிற்குத் தேவையான கடல் வழிப்பாதை, துறைமுகம், பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், சிங்கள அரசர்களுக்கும் மக்களுக்கும் தேவையான ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், உணவுப்பதார்த்தங்கள், உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், வெளி நாடுகளுக்கு அனுப்புதல், வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய பல தேவைகளை புத்தளமும் கல்பிட்டியும் தான் நிறைவேற்றின. புத்தளம் உள்துறைமுகமாகச் செயற்பட்டது. கல்பிட்டி கிட்டத்தட்ட சர்வதேசத் துறைமுகமாக இருந்தது. இவற்றிற்கு சுமார் 20 அல்லது 30 மைல் தொலைவில் இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த குதிரை மலைத் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த இரு நகரங்களினதும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகளும், கடல் வாணிபத்திற்கான வசதியும், புவியியல் ரீதியான அமைவிடமும், கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றில் எப்போதுமே உரோமர், பாரசீகர், பீனிஷியர், சபாயியர், அரேபியர் போன்றோரையும் பின்னர் போர்த்துக்கேயரையும், டச்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும் கவரத்தூண்டிய விடயங்களாக இருந்தன. ஜனவரி முதல் மார்ச் வரையும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான ஒரு குறுகிய உலர் பருவத்தில் மற்றும் இரண்டாவது உலர் பருவத்தில் வெப்பமான நிலவியல் காலநிலை உள்ளது. மழைக்காலத்துக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை முக்கியமாக உள்ளது. வெப்பநிலை இடையே உள்ள சிறிய வேறுபாடுகள் ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கிறது. தெங்கு முக்கோண பிரதேசத்திற்குட்பட்ட தெதுறு ஓயா மற்றும் மா ஓயா வரையிலான பிரதேசமானது தெங்கு உற்பத்தியில் சிறந்து விளங்குவதடன் அதற்கான சிறந்த மண்வளமும் இங்கு காணப்படுகிறது. புராதன அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தப்போவ, தினிபிட்டிய, கரவிட்ட, கட்டுப்பொத, கொட்டுக்கச்சிய மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்பாசன முறைமையின் கீழ் இன்றும் கூட நெற் செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதோடு நீர்பாசன முகாமைத்துவ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கபட்ட நீலபெம்ம மற்றும் ரதவிபெந்தி கால்வாயினைச் சார்ந்தும் நெற்ச் செய்கை செய்யப்படுகிறது. உப்பு உற்பத்தியும் இம்மாவட்டதத்தில் சிறந்து விளங்குவதோடு இறால் வளர்ப்பும் பொருளாதார ரீதியாக இலாபமீட்டக்கூடிய தொழிலாக காணப்படுகிறது. புத்தளம் மாவட்டத்திட்குட்பட்ட சிறுகடலானது இறால் வளர்ப்பிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதால் பெருமளவிலான அந்நிய செலாவணியை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது. வென்னப்புவையிலிருந்து கற்பிட்டி வரையான கடல் பிரதேசத்தில் மீன்கள், அட்டைகள், சிப்பிகள், போன்ற கடல் சார் வளங்கள் நிறைந்து காணப்படுவதோடு, மீன்பிடித் தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் இப்பிரதேசத்திலுள்ள மண்வளம் மரக்கறிச்செய்கைக்கு உகந்ததாக காணப்படுகிறது. வனாத்தவில்லு பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை பெருமளவில் மேற் கொள்ளப்படுகிறது. இப்பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள எலுவன்குளம் பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான சுண்ணாம்பு மூலப் பொருட்கள் காணப்படுகின்றன. HOLCIM சீமெந்து தயாரிப்பு புத்தளம் நகரின் மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலைகளில் ஒன்று. புத்தளம் மாவட்டதின் முக்கிய நகரங்களுக்கு என்று மூன்று அகன்ற நெடுஞ்சாலைகள் உள்ளன. நீர்கொழும்பு வழியாக கொழும்பு உடன் புத்தளம் இணைக்கும் A3. குருநாகல் வழியாக கண்டி உடன் புத்தளம் இணைக்கும் A10, மற்றும் அனுராதபுரம் வழியாக திருகோணமலை உடன் புத்தளம் இணைக்கும் A12. தினசரி பேருந்து போக்குவரத்து வசதிகள் தலைநகர் கொழும்பு, குருநாகல், கண்டி, மற்றும் அனுராதபுரம் போன்ற நகரங்கழுக்கு கிடைக்கின்றன. நீர்கொழும்பு வழியாக இருந்து கொழும்பு புத்தளம் இடையே ஒரு தொடருந்து சேவையும் உள்ளது. புத்தளத்தில் உள்ள பாடசாலைகள்: ஒரு திறந்த பல்கலைக்கழகமும், மஹிந்தோதய விஞ்ஞான கல்லூரியும் உள்ளது. சேகுவந்தீவு லிமிட்டெட், விடத்தமுனை வின்ட் பவர் நிறுவனமும் சேர்ந்து $ 55 மில்லியன் முதலீட்டில் புத்தளம் பகுதியில் 20 மெகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்வற்கு 25 காற்றாலைகளைப் பராமரிக்கிறது. நுரைச்சோலை முன்னுற்பத்தி நிலையம் இலங்கையில் ஒரு பெரிய அனல் மின் நிலையமாக உள்ளது. கட்டுமான அமைப்பு வசதி முதலில் 2006 மே 11 இல் தொடங்கியது முதல் 300 மெகாவாட் உற்பத்தி கட்டம் முடிந்ததும், 2011 மார்ச் 22 அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செயட்பாட்டை நியமித்தது. இலங்கை மின்சார சபையின் தகவல் படி, அமெரிக்க $455 மில்லியன் மதிப்பீட்டில் முதல் கட்டமாக ஆண்டுதோறும் 1.7 TWh (TeraWatt Hour) மின்சாரம் உருவாக்குகிறது; 2011இன் மதிப்பின் படி 11.5 TWh மின் உற்பத்தி இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது. எல்லா உற்பத்தியும் ஆலையில் இருந்து 115 கி.மீட்டர் (71 மைல்) தொலைவில் உள்ள வேயாங்கொடையின் சேமிப்பு தளத்துக்கு 220-கிலோவுவோற்று கம்பியின் வழியாக அனுப்பப்படுகிறது. புத்த மற்றும் கிறித்தவ மதத்தவர்கள் அதிகமானோர் நகரின் வெளியே வசிக்கும் வேளை, நகர்ப்புற பகுதிகளில் முஸ்லிம்கள் (95%) செறிந்து வாழ்கின்றனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நகர எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடக் கலையழகுடன் கூடிய புத்தளம் முஸ்லிம்களின் பெரிய பள்ளிவாசல் நூற்றாண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. துடுப்பாட்டம் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. கால்ப்பந்து உள்ளூரில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது, பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு அணிகளாக உருவாக்கப்பட்டு நகர சபைக்கு சொந்தமான மைதானத்தில் தேசிய மட்டத்தில் போட்டிகள் நடைபெறும். மேலும், கைப்பந்து நகரத்தில் உள்ள புகழ்பெற்ற மற்றுமொரு மாலை நேர பொழுது போக்காக நகர சபைக்கு சொந்தமான சங்க மைதானத்தில் விளையாடப்பட்டு வருகின்றன. வல்லிபுரம் வல்லிபுரம் என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊராகும். இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, சிங்கைநகர் என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு. வெலிங்டன், நியூசிலாந்து வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது பெயர் காரணம் :- வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது. சிறப்பு :- வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது. தருமர் (உரையாசிரியர்) தருமர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நூல் உரையாசிரியர்களில் ஒருவர். திருக்குறள், நாலடியார் பாடல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார். திருக்குறளில் “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு குறட்பாக்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன. நாலடியார் பாடல்கள் 400-க்கும் இவரது உரை உள்ளது. நாளந்தா நாளந்தா இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். இது மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து 90 கி. மீ தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இங்கு தான் பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. 14 ஹெக்டேர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டிடம் செங்கற்களால் ஆனது. திபெத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், அறிஞர்களும் இந்த பல்கலைக்கழகத்தால் ஈர்க்கப்பட்டனர். 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் இராணுவத்தால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இவர்களால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலகம் தீயிட்டு மூன்று மாதங்களாக எரிந்ததாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையை மதிப்பிடலாம். பெய்ஜிங் பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது "வட தலைநகரம்") சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும். கடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, பீக்கிங் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது. பல்வேறு சீன ஆட்சியாளர்களால் பெயர் மாற்றங்களுக்குள்ளான இந்நகரம் 1949 அக்டோபர் முதலாம் திகதி மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது மீண்டும் பெய்ஜிங் என பெயரிடப்பட்டது. கிட்டத்தட்ட முக்கோண வடிவம் கொண்ட வட சீன சமவெளியின் வடக்குக் கோணத்தில் பெய்ஜிங் அமைந்துள்ளது. இது வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கே மலைகளால் சூழப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாநகராட்சி சீனப் பொதுவுடமைக் கட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன. பெய்ஜிங்கில் பல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானது. இது தவிர 2001இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் 1990இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பனவும் இங்கு நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாகும். வட சீனாவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக பெய்ஜிங் விளங்குகின்றது. இது ஒன்பது அதிவேக நெடுஞ்சாலைகள், பதினொரு தேசிய நெடுஞ்சாலைகள், இரு அதிவேக புகைவண்டிப் பாதைகள் மற்றூம் ஒன்பது சாதாரண புகைவண்டிப் பாதிகள் ஒன்றிணையும் இடமாக இந்நகரம் திகழ்கின்றது. பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் நகர மத்தியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இது உலகில் அதிகளவு பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது. சீனாவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் விளங்குகின்றது. இந்நகரின் முக்கிய பொருளாதார முறையாக சேவைக்கைத்தொழில் திகழ்கின்றது. பெய்ஜிங்கிலுள்ள பேரரண் நகரம் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டையகால அரண்மனை மற்றும் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. மேலும் பெய்ஹாய், சிச்சஹாய், சொஞ்சன்ஹாய், ஜிங்சான், சொங்சான் ஆகிய இடங்கள் உட்பட இந்நகரிலுள்ள பல பூங்காக்கள் சீனத் தோட்டக்கலை மிளிரும் பூங்காக்களாக விளங்குகின்றன. பெய்ஜிங் பல இரட்டை நகரங்கள் அல்லது சகோதர நகரங்களைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களாக விளங்குகின்றன. நுண்கணிதம் நுண்கணிதம் ("Calculus") என்பது நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு-உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும் ஒரு கணிதத் துறை. பொதுவாக ஒன்று (காலத்தாலோ இடத்தாலோ) மாறும்பொழுது அது எந்த விகிதத்தில் மாறுகின்றது எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை நுண்ணிய பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதைப்பற்றியும் அதன் மாற்றத்தைப் பற்றியும் பல பண்புகள் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட பற்பல ஆய்வுகளுக்கு இத்துறை பயன்படுகின்றது. இயற்கையில் உள்ள பல அறிவியல் விதிகள் மற்றும் இயக்கங்கள் இவ்வகை நுண்ணிய பகுப்பாய்வால் கண்டறியப்பட்டுள்ளன. நுண்கணிதத் துறையில் வகைநுண்கணிதம், (பகுப்பாய்வின் அடிப்படையில்) தொகைநுண்கணிதம் என்னும் இரு பிரிவுகள் உண்டு. இத்துறையில் அடைவெல்லை ("Limits"), நுண்மாறுவிகிதம் ("derivative"), நுண்தொகுமுறை ("integration"), முடிவிலி அடுக்குவரிசை ("infinite series") முதலிய தலைப்புகள் அடங்கும். நுண்கணிதத்தின் வரலாறு தொல்பழங்காலத்தில் இருந்து தொடங்குகின்றது. பழங்கால எகிப்தியர் கி.மு 1800 இலேயே இணைவெட்டுக் கூம்புப்படிகம் (pyramidal frustrum) போன்ற திண்மவடிவங்களின் பரும அளவை (கன அளவை) கணிக்க பகுப்பாய்வு முறைகளைக் கையாண்டனர். (பார்க்க எகிப்திய மாஸ்க்கோ பாப்பிரசு ). யூடோக்ஸஸ் (Eudoxus)(கி.மு. 408-355) என்னும் கிரேக்க அறிஞர் முடிவற்ற பல்கோணக நுண்பகுப்பு முறை என்னும் முறையைப் பயன்படுத்தி பல வடிவங்களின் பரப்புகளைக் கணித்தார். இது தற்கால முடிவிலி அடைவெல்லை முறைக்கு இனமான முன்கருத்து. இதே கருத்தை சீனாவில் லியு ஹுயி (Liu Hui) என்பார் கி.பி 3 ஆவது நூற்றாண்டில் கண்டுபிடித்து, அதன்வழி வட்டத்தின் பரப்பளவைக் கணக்கிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி சு சோங்சி என்னும் சீனர் உருண்டையின் பரும அளவை (கன அளவை)க் கண்டுபிடித்தார். இடைக்காலத்தில் இந்திய கணித இயலர் ஆர்யபட்டா கி.பி. 499 ல் முடிவிலிநுண்ணி (infinitesimals) என்னும் கருத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் விண்ணியலில் பயன்படும் சில கருத்துக்களை நுண்கணித சமன்பாடுகளாகக் கொடுத்தார் . இதன் அடிப்படையில் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் பாஸ்கரா-2 என்னும் இந்திய அறிஞர் முடிவிலிநுண்ணி அடிப்படையில் நுண்மாறுவிகிதம் (derivative) என்னும் கருத்தை முன்னமே அடைந்து ரோலின் தேற்றம் என்னும் வடிவத்தின் முன்வடிவை அடைந்தார். கி.பி 1000 ஆம் ஆண்டின் அண்மையில், இபுன் அல்-ஹய்தம் (அல்ஹசன்) என்னும் இராக்கிய அறிஞர் முதன்முதலாக, நான்மடிகளின் வரிசையின் கூட்டுத்தொகையை கணிதத்தூண்டுகோள் (mathematical induction) என்னும் கருத்தை முன்வைத்துக் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் எந்த முழு எண்மடிகளின் கூட்டுத்தொகையையும் கண்டுபிடிக்க ஒரு பொது வாய்பாடு கண்டுபிடித்தார். இம்முறை தொகுநுண்கணித முறைக்கு அடிப்படையான ஒரு கருத்து . கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரானிய கணித இயலர் ஷ்ராஃவ் அல்-டின் அல்-துசி என்பவர் மும்மடியத் தொடரின் நுண்மாறுவிகிதத்தைக் கண்டுபிடித்தார். இது பகுநுண்கணிதத்தில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் . 14 ஆவது நூற்றாண்டில் கேரளாவில் உள்ள சங்கமகிராமா என்னும் இடத்தைச் சேர்ந்த மாதவா என்னும் கணித அறிஞர் தம் கேரள வானியல் கணிதவியல் அறிஞர் குழுவுடன் சேர்ந்து தற்காலத்தில் டெய்லர் வரிசை என்று அழைக்கப்படும் ஒரு வரிசையின்வகையில் ஒரு தனி வகையைப் பற்றி யுக்திபாஷா என்னும் நூலில் விளக்கியுள்ளார் .