திருமணம் திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல. திருமணத்தைக் குறிக்கும் ' மணம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது. மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத்தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றதென்பது அறியலாம். சான்றாகக் ' கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம். 'கடி' என்பது பல பொருள் தரும் உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம். கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்து திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம். கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. என்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை. 'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளது. வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது. பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது. பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல் ,தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக ஆகிய மண முறைகளைக் காணலாம். இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர் மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம். பனை மடலைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மடலேறுதல் இல்லை. ஏனெனில் நாணம் துறந்து மடலேறுதல் என்பது காமம் மிக்க கழிபடர் தலைவனுக்கு உரிய ஒன்றாகும். மடலூரும் தலைவனே இச்செயலை நாணமிக்க செயலாகக் கருதுவதாக குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. இவ்வழக்கு தற்போது இல்லை. தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன. துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக்காலங்களில் துணங்கையும், மன்னர்ப்போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன.ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மகட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம். உறவு முறைத் திருமணம் மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை அகநானூறுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை. மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும். காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது. ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது. பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமணத்திற்குரிய பொருத்தங்களாக என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட்ட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது. தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் வல்லவரிடம் கேட்டு முடிவு செய்தனர். மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன் – கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" கம்ப ராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது. மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில் என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண்ச் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில் மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, ( காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது. மனன்ர் மண வினையில் மக்கள் பங்கு அதிகம் இருந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தம் கடமை ஆற்றிய நிலையைக் காண முடிகிறது. மேலும் முரசறைவோன் மக்களை அணிகலண்கள் பலவற்றை அணிந்து கொள்ளும்படியும் அவை அரச கட்டளைஆகையால் இனிய பால் சோற்றாஇயல்லாமல் பிறாவற்றை ஏழு நாட்கள் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக " என்று அறிவுருத்தி, பின்பு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செய்தியையும் கூறுகிறான். இதனால் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே இருந்த உறவும் மக்களின் மகிழ்ச்சியை நல்ல நாளில் விரும்பி கொல்லாமை முதலிய நோன்பு வலியுறுத்தப்ப்டுதலையும் அறியலாம். மண நாளின் போது இன்னா செயல்கள் எவையும் இடம் பெறாமல் அறவாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புலனாகிறது. பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர்.களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது. தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து காலகள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் கூலமுளைகளையுடைய நிறை குடங்கள் அழகுற அமைக்கப்படது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முழுத்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடி நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர். இவை தமிழரிடம் பிற மொழியினரின் தொடர்பு காரணமாக இடம் பெற்ற செயல்கள் எனலாம். தக்கோலம் , ஏலக்காய், கிராம்பு(லவங்கம்), சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மணப் பொருள்களுடன், வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர் மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழுமுறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர். சங்க இலக்கியங்களில் பந்தல் காலில் உறையும் தெய்வங்களின் பெயர் சுட்டப்படவில்லை. இடைக்காலத்தில் நான்முகக்கடவுள் எனப் பகுறிப்பிடப்படுதலைக் காணலாம் பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர். திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. கம்பராமாயணம் இதனை எனக் குறிப்பிடுகிறது. மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக அரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டனர். மணவறை எனப்படும் நிலத்தை திருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும் குவிக்கப்பட்டன. மங்கலகரமாக விளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன. பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது. இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன. இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடக்கின்றன. தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41 சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. சிந்துவெளி மொழி சிந்துவெளி மொழி என்பது, கிமு 1,500 ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்னர் இன்றைய பாகிசுத்தான், இந்தியா ஆகிய நாடுகளுள் அடங்கியுள்ள பகுதிகளில் செழித்திருந்த சிந்துவெளி நாகரிக மக்கள் பேசிய மொழியைக் குறிக்கும். இந்த நாகரிகத்தின் முக்கிய நகரங்களான அரப்பா, மொகெஞ்சதாரோ என்பவற்றின் பெயர்களைத் தழுவி இம் மொழியை அரப்பா மொழி அல்லது மொகெஞ்சதாரோ மொழி என்றும் குறிப்பிடுவது உண்டு. சிந்துவெளி நாகரிகம் அதன் காலத்தில் ஒரு பரந்த நிலப்பரப்பில் உன்னத நிலையில் இருந்த ஒரு நாகரிகமாக இருந்தும், நகர அமைப்பு முதலியவற்றை நோக்கும்போது அவர்கள் அறிவிற் சிறந்து விளங்கியிருப்பர் என்று சொல்லக்கூடியதாக இருந்தும், குறிப்பிடத்தக்க அளவில் எழுத்துவடிவில் எந்தத் தகவல்களையும் இந்த நாகரிகம் விட்டுச் செல்லவில்லை. எழுத்து என்று சொல்லக்கூடிய அளவுக்குக் கிடைத்தவை பெரும்பாலும், வணிக முத்திரைகள் என்று அடையாளம் காணப்பட்ட முத்திரைகளில் காணப்படுபவை மட்டுமே. இந்த முத்திரைகளில் காணப்படும் குறியீட்டுத் தொடர்கள் மிகவும் நீளம் குறைந்தவை. ஆகக் கூடிய நீளம் கொண்டது 14 குறியீடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இவை தவிரச் சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சிறிய அளவினதாக இருந்தும், பெரும் எண்ணிக்கையில் கிடைத்த இந்த முத்திரைகளை ஆதாரமாகக் கொண்டு சிந்து வெளி மக்களின் மொழிபற்றிய ஆய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு இந்த மொழியின் இயல்புகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் முயன்று வருகிறார்கள். உறவுமுறை தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் உறவுமுறை ஆகும். ஆரம்பத்தில் இது உயிரியல் மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன. ஒருவருடைய தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சகோதரர் ஆகியோர் உயிரியல் முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் இரத்த உறவு எனப்படுகின்றது. ஏற்கனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய கணவன் அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை மண உறவு ஆகும். அது மட்டுமன்றி மனைவி அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் புனைவியல் உறவு எனப்படும். நாம் முதல் தலைமுறை தந்தை/தாய்-இரண்டாம் தலைமுறை பாட்டன்/பாட்டி- முன்றாம் தலைமுறை பூட்டன்/பூட்டி- நான்காம் தலைமுறை ஒட்டன்/ஒட்டி- ஐந்தாம் தலைமுறை சேயோன்/சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்/பரை-ஏழாம் தலைமுறை "'தடித்த எழுத்துக்கள்'பரன்+பரை=பரம்பரை." இன்னொருவர் வழியாக அல்லாது ஒருவருடன் நேரடியாக உறவு உள்ளவர்கள் முதல் நிலை உறவினர்கள் ஆவர். பெற்றோர், உடன் பிறந்தோர், பிள்ளைகள் என்போர் முதல் நிலை உறவினர் தகுதியைப் பெறுகின்றனர். இந்த முதல் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் ஒருவருக்கு இரண்டாம் நிலை உறவினராவர். எடுத்துக்காட்டாகப் பேசுனரின் தந்தையின் முதல் நிலை உறவினரான அவருடைய தந்தை பேசுனருக்கு இரண்டாம் நிலை உறவினராகும். இம் முறையில் பெற்றோரின் பெற்றோர், பிள்ளைகளின் பிள்ளைகள், உடன் பிறந்தோரின் பிள்ளைகள் போன்றோர் பேசுனருக்கு இரண்டாம் நிலை உறவினர் ஆகின்றார்கள். இவ்வாறே பேசுனரின் இரண்டாம் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் பேசுனருக்கு மூன்றாம் நிலை உறவினர் ஆவர். இவ்வாறே உறவுமுறையில் நான்காம், ஐந்தாம் நிலைகளும் ஏற்படுகின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொதுவாகத் தூரத்து உறவினர்கள் என்று குறிப்பிடப் படுவார்கள். மேலே கண்டவாறு பல் வேறு விதமாகவும், பல மட்டங்களிலும் உறவுகள் அமைந்தாலும், இத்தகைய உறவுகளின் முக்கியத்துவம் வேறு பல அடிப்படைகளையும் சார்ந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களில் நிலவும் பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் குறிப்பிட்ட சில உறவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மரபு முறைமைகள் வழக்கத்தில் உள்ளன. இம் மரபு முறைகள் பொதுவாக நான்கு வகைகளாக வகுக்கப் படுகின்றன. இருவழி மரபைப் பின்பற்றும் சமுதாயங்களில், தாய்வழியையும், தந்தைவழியையும் சேர்ந்த உறவினர் அனைவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழியில் அல்லது தந்தைவழியில் மட்டுமே தங்களை இணைத்து இனங்காண்கிறார்கள். தாய்வழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி உறவினருக்கும், தந்தைவழிச் சமுதாயங்கள் தந்தைவழி உறவினருக்கும் கூடிய சிறப்பை அளிக்கின்றன. ஈரியல் மரபுச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் இரண்டில் ஒரு வழியில் தங்களை இனங்கண்டுகொள்வர். இணை மரபு முறையைக் கைக்கொள்ளும் சமுதாயத்தவர்களில் ஆண்கள் தங்கள் குடிவழித் தொடர்புகளைத் தந்தைவழியிலும், பெண்கள் தாய்வழியிலும் இனங்காண்பர். அலைக்கம்பம் அலைவழிப்படுத்தி அல்லது அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது. மின் கம்பத்தின் துணையுடன், அல்லது அலைவழிபடுத்தி ஊடாக பயணிக்கும் மின்காந்த அலைகள் வெறுவெளிக்கு வீசப்படுவதற்கு சில காரணிகள் ஏதுவாக வேண்டும். அதாவது எல்லாவித மின்காந்த அலைகளும் மின் கம்பத்தின் வழிப்படிதலில் இருந்தோ அல்லது அலைவழிப்படுத்தியிலிருந்தோ வெறுவெளிக்கு தாவுவதில்லை. மின்காந்த அலைகள் மின் கம்பத்தில் இருந்து அலைக்கம்பம் ஊடாக ஏன், எப்படி, எவ்வாறு வெறுவெளிக்கு வீசப்படுகின்றன, மற்றும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகளை அலைக்கம்பம் எவ்வாறு உள்வாங்குகின்றது என்பதை மக்ஸ்வெல் சமன்பாடுகளை அடிப்படையாக வைத்து இயற்பியல் கோட்பாடுகள் விளக்குகின்றன. அடிப்படையில் அலைக்கம்பம் சாதாரண மின் கடத்தியே ஆகும். மின் சுற்று பகுப்பாய்வில் அலைக்கம்பம் ஒரு இருமுனை கருவியாகும். மேலும் இதற்கு ஏற்றெதிர் தன்மையும் உண்டு. கதிர்வீச்சு செலுத்தி அல்லது அலை பெறுவி தேவைகளுக்கு ஏற்ப அலைக்கம்ப வடிவமைப்பு கூறுகள் வேறுபடும். பல கூறளவுகள் உள்ளன, எட்டு கூறளவுகள் கீழே தரப்படுள்ளன. அவற்றுள் கதிர்வீச்சு உருபடிமம், மின் எதிர்ப்பு ஆகியவை முக்கியமானதாகும். மின்மாற்றி மின்மாற்றி ("Transformer") என்பது உயர் அல்லது தாழ் மின்னழுத்ததில் உள்ள மின்னாற்றலை தேவைக்கேற்ப தாழ் அல்லது உயர் மின்னழுத்தத்தில் மாற்றும் ஒரு மின்கருவி. குறிப்பாக மின் ஆற்றல் உண்டாக்கும் நிலையங்கள் உயர் மின்னழுத்தில் நீண்ட தொலைவில் இருந்து செலுத்தும் மின் ஆற்றலைத் தேவைக்கேற்ற மின்னழுத்துக்கு மாற்ற மின்மாற்றிகள் பயன்படுகின்றன. மின்னாற்றலை உயர் மின்னழுத்தில் மாற்றிச் செலுத்தினால் மின்கம்பிகள், மின்வடங்களில் பாயும் மின்னோட்டம் குறைவாக இருப்பதால், மின்னாற்றலை இடத்து இடம் செலுத்தும்பொழுது ஆற்றல் வீணாவதை தடுக்கின்றது. ஒரு சுருளின் (சுருணையின்) வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அதனைச் சூழ்ந்துள்ள காந்த ஆற்றல், அச்சுருளின் அருகே காந்தப்புலத்தால் பிணைக்கப்பட்டுள்ள மற்றொரு சுருளில் (சுருணையில்)மின்னோட்டமாகத் தூண்டப்படுகின்றது. பொதுவாக, ஓர் இரும்பு உள்ளகத்தை இரு வேறு கம்பி சுருள்கள் சுற்றியதே மின்மாற்றியின் பொது அமைப்பு ஆகும். இரு கம்பி சுருள்களுக்கும் இடையே நேரடியான மின்னோட்டத் தொடர்பு இருக்காது,ஆனால் காந்த புலத்தின் ஊடாகவே தொடர்பு இருக்கும். மின்னழுத்தம் formula_1 சுருள்களின் எண்ணிக்கை மின்னழுத்தத்துக்கும் மின்சுருள்களின் எண்ணிக்கைக்கும் நேர் விகித தொடர்பு உண்டு. உதாரணமாக முதன்மை சுருணையில் 100 சுருள்களும் இணை சுருணையில் 10 சுருள்களும் இருக்குமானல், அவ் மின்மாற்றி 100:10 அல்லது 10:1 என்ற விகிதத்தில் மின்னழுத்த மாற்றம் செய்யும். ஒரு கருத்திய மின்மாற்றியில் மின்னழுத்த மாற்றத்துக்கு ஏற்ப மின்னோட்டம் மாறி, ஆற்றல் அல்லது சக்தி எதுவும் இழக்கப்படமாட்டாது. மின்னோட்டத்தின் காந்த தூண்டலைக் கண்டறிந்த போது, மாறுதிசை மின்னோட்ட இயற்றி அமைப்புகள் அதனுடைய எளிமையான வடிவத்தில் அறியப்பட்டன. ஆரம்பகால இயந்திரங்கள் மைக்கெல் ஃபாரடே மற்றும் ஹிப்போலைட் பிக்ஸி போன்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. பாரடே "சுழலும் செவ்வகம்" ஒன்றை உருவாக்கினார், இதனுடைய செயல்பாடானது "நேர்துருவ" வகையைச் சேர்ந்தது - அதாவது இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு கடத்தியும், தொடர்ந்து எதிரெதிர் திசையில் உள்ள காந்தப்புலங்கள் வழியாக நகர்த்தப்படும். 1886 ஆம் ஆண்டில், அதிக நிலைப்புத்தன்மைக் கொண்ட, ஒரு "மின்மாற்றி அமைப்பு" பொது இடத்தில் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. பெரிய, இரட்டை மின்முனை மாறுதிசை மின் இயற்றிகளை பிரிட்டிஷ் மின்னியலாளர், ஜே.ஈ.ஹெச். கார்டன் என்பவர் 1882 ஆம் ஆண்டில் உருவாக்கினார். லார்டு கெல்வின் மற்றும் செபாஸ்டியன் ஃபெர்ராண்டி ஆகியோரும் ஆரம்பகால மாறுதிசை மின்னியற்றிகளை உருவாக்கினர், இவர்கள் 100 மற்றும் 300 Hz அதிர்வெண் கொண்டவற்றை உருவாக்கினார்கள். 1891 ஆம் ஆண்டில், நிகோலா டெஸ்லா என்பவர் நடைமுறை "உயர் அதிர்வென்" மின்மாற்றிக்கு காப்புரிமை பெற்றார் (அது 15 kHz வரையிலான அதிர்வெண்ணைக் கொண்டிருந்தது). 1891 ஆம் ஆண்டுக்கு பின்னர், பல மின்முனை மின்மாற்றிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பலவகையான கட்டங்களைக் கொண்ட மின்னோட்டங்களை வழங்கத் தொடங்கின. பின்னாட்களில், பதினாறு முதல் நூறு வரையிலான வேறுபடக்கூடிய ஹெர்ட்ஸ்களில் மாறுதிசை மின்னோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை மின்னிழை, மின் ஒளிர்வு ஒளியூட்டல் மற்றும் மின்சாரா மோட்டார்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டன. நேர்திசை மின்னியற்றிகள் செயல்படும் அதே தத்துவத்தின் அடிப்படையிலேயே மின்மாற்றிகளும் மின்சாரத்தை உருவாக்குகின்றன, அதாவது, ஒரு கடத்தியைச் சுற்றியிருக்கும் காந்தப்புலம் மாறும்போது அந்த கடத்தியில் மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. பொதுவாக, சுழலும் காந்தமானது, ரோட்டார் என்றழைக்கப்படுகிறது, இதுவே, ஸ்டேட்டார் என்றழைக்கப்படும், இரும்பு உட்பொருளில் சுற்றப்பட்டிருக்கும் நிலையான கடத்திகளின் வழியாக சுழல்கிறது. இயந்திரவியல் உள்ளீட்டின் காரணமாக ரோட்டாரானது திரும்பும்போது, காந்தப்புலமானது, கடத்திகளை வெட்டிச்செல்கிறது, இதனால் ஒரு மின் திருப்பு விசை (EMF) தூண்டப்படுகிறது. சுழலும் காந்தப்புலமானது ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தை ஸ்டேட்டார் சுற்றுக்களில் தூண்டுகிறது. பொதுவாக மூன்று வகையான ஸ்டேட்டார் சுற்றுகள் காணப்படுகின்றன, இதனால் காந்தப்புலமானது, மூன்று கட்ட (three phase) மின்னோட்டத்தை உருவாக்குகிறது, இவை ஒன்றிலிருந்து ஒன்று மூன்றில் ஒரு பங்கு கால அளவு தள்ளியிருக்கின்றன. ரோட்டார் காந்தப்புலமானது, தூண்டலின் ("ப்ரஷ் அல்லாத" மின்மாற்றிகளில்) மூலமாகவோ, நிலையான காந்தங்களின் (மிகச்சிறிய இயந்திரங்களில்) மூலமாகவோ அல்லது நழுவு வளையங்கள் மற்றும் ப்ரஷ்கள் மூலமாக வழங்கப்படும் நேர்திசை மின்னோட்டத்தின் மூலம் திறனளிக்கப்பட்ட ரோட்டார் சுற்றுகளின் மூலமாகவோ உருவாக்கப்படும். ரோட்டார் காந்தப்புலமானது, ரோட்டாரில் நகரும் துருவங்களுடன், நிலையான புல சுற்றுகள் மூலமாகவும் உருவாக்கப்படக்கூடும். தானியங்கு மின்மாற்றிகள் அதிக அளவில், ரோட்டார் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன, இவை ரோட்டார் புல சுற்றுகளில் மின்னோட்டத்தை மாற்றுவதன் மூலமாக மின்மாற்றியில் உருவாக்கப்படும் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. நிலையான காந்த இயந்திரங்களில், காந்தமாத மின்னோட்டத்தின் காரணமாக ரோட்டாரில் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கின்றன, ஆனால் இவை காந்தப்பொருளின் விலையின் காரணமாக சிறிய அளவிலேயே உருவாக்கப்படுகின்றன. நிலையான காந்தப்புலமானது மாறாததாக இருப்பதால், முனை மின்னழுத்தமானது, மின்னியற்றியின் வேகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு மாற்றமடைகிறது. ப்ரஷ் இல்லாத மாறுதிசை மின்னியற்றிகள் பொதுவாக பெரிய அளவிலான இயந்திரங்களாக இருக்கும், இவை பொதுவாக தானியங்கு பயன்பாடுகளில் பயன்படுவதை விடவும் பெரிதாக இருக்கும். ஒரு மின்மாற்றியின் வெளியீட்டு அதிர்வெண் ஆனது, அதிலுள்ள துருவங்களின் எண்ணிக்கை மற்றும் சுழற்சி வேகம் ஆகியவற்றைச் சேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன் தொடர்புடைய சுழற்சிவேகமானது, அந்த அதிர்வெண்ணுக்கான "ஒத்திசைவு வேகம்" என்றழைக்கப்படுகிறது. இந்த அட்டவணை இன்னும் பொதுவாக கூறுவதானால், ஒரு முழுச்சுற்று மாறுதிசை மின்னோட்டமானது, ஒரு ஜோடி புல முனைகள் நிலையான கம்பிச்சுருளின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை கடந்து செல்லும்போது உருவாகிறது. வேகம் மற்றும் அதிர்வெண்ணுக்கு இடையேயான தொடர்பு formula_2 ஆகும், இதில் அதிர்வெண்ணானது ஹெர்ட்ஸ் அளவில் (ஒரு விநாடிக்கான சுழற்சிகள்) அளக்கப்படுகிறது. formula_3 என்பது முனைகளின் எண்ணிக்கையாகும் (2,4,6...) மற்றும் formula_4 என்பது, நிமிடத்துக்கான சுழற்சிகளில் (RPM) சுழற்சி வேகமாகும். மாறுதிசை மின்னோட்ட அமைப்புகளைப் பற்றிய மிகவும் பழமையான விளக்கங்கள் சிலவற்றில், அதிர்வெண் என்பது, ஒரு நிமிடத்தில் நடைபெறும் அசைவுகளின் அடிப்படையில் தரப்பட்டது, அதாவது ஒரு "அசைவு" என்பது, ஒரு அரைச் சுற்றாகும்; அதாவது நிமிடத்துக்கு 12,000 அசைவுகள் என்றால் 100 ஹெர்ட்ஸ் என்று பொருள். மின்மாற்றிகள் நவீன கால தானியங்கிகளில் மின்கலத்தை சக்தி ஏற்றவும் (சார்ஜ்), எஞ்சின் இயங்கிக் கொண்டிருக்கும்போது காரின் மின்சார அமைப்புகளுக்கு திறனளிக்கவும் பயன்படுகிறது. மின் திசைமாற்றிகள் எதையும் பயன்படுத்தாததால் நேர்திசை மின்னியற்றிகளை விடவும் மின்மாற்றிகள் சிறப்பான சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கின்றன, இதனால் இவை எளிமையானவையாகவும், எடையற்றவையாகவும், மலிவானவையாகவும் மற்றும் நேர்திசை மின்னியற்றியை விட அதிக கடினமானவையாகவும் இருக்கின்றன. மேலும் இவற்றில் உள்ள நழுவு வளையங்கள் காரணமாக இவை கூடுதலான ப்ரஷ் ஆயுளைப் பெற்றிருக்கின்றன. வலுவான மின்மாற்றிகள், தானியங்கிகளில் உள்ள இவற்றைக் கட்டமைக்கவும் சிறிய கப்பியைப் பயன்படுத்தி எஞ்சின் ஓய்வு நிலைக்கு வரும்போதும் கூட அதை விட வேகமாக மின்மாற்றி சுற்றுவதற்கும் ஏற்றவாறு அமைகிறது. 1960ஆம் ஆண்டுக்கு பின்பு கிடைத்து வந்த மலிவான, திண்ம நிலை இருமுனையம் (டையோடு)களின் காரணமாக, கார் உற்பத்தியாளர்கள், நேர்திசை மின்னியற்றிகளுக்கு பதிலாக மின்மாற்றிகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தானியங்கிகளில் உள்ள மின்மாற்றிகள், மின் திருத்திகளின் தொகுப்பைப் (டையோடு பிரிட்ஜ்) பயன்படுத்தி, மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றுகின்றன. குறைவான சிதைவுகளுடன் தானியங்கி மின்மாற்றிகள் நேர்திசை மின்னோட்டத்தை வழங்க அவற்றில், மூன்று கட்ட கம்பிச்சுருள்கள் இருக்கின்றன. பொதுவான பயணியர் வண்டி அல்லது மிதமான எடையிழுக்கும் ட்ரக் போன்றவை, லண்டில் அல்லது குளம்பு வடிவ புல கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இதில் வட மற்றும் தென் துருவ முனைகள் ஒரே சுற்றால் திறனளிக்கப்படும், இவற்றின் காந்த முனைகள் இரண்டு கைகளின் விரல்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். பெரிய வண்டிகளில், சிறப்பு-துருவ மின்மாற்றிகள் காணப்படும். தானியங்கிகளின் மின்மாற்றிகள் பொதுவாக பெல்ட்டால் இயக்கப்பட்டு எஞ்சினின் வேகத்தை விடவும் 2-3 மடங்கு அதிக வேகத்தில் சுழலுமாறு அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி மின்மாற்றிகள் எந்தவொரு நிமிடத்திற்கான சுழற்சி கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதல்ல, ஏனெனில் அவற்றின் மாறுதிசை மின்னோட்டமானது திருத்தப்பட்டு நேர்திசை மின்னோட்டமாக மாற்றப்படுகிறது, மேலும் எந்தவொரு நிலையான அதிர்வெண்ணின் அவசியமும் இல்லை. நவீனகால தானியங்கி மின்மாற்றிகளில் ஒரு மின்னழுத்த சரிப்படுத்தியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னழுத்த சரிப்படுத்தியானது, சிறிய புல மின்னோட்டத்தை மாற்றியமைப்பதன் மூலமாக ஸ்டேட்டார் வெளியீட்டில் நிலையான மின்னழுத்தம் உருவாக உதவுகிறது. இந்த புல மின்னோட்டமானது, மின்மாற்றியின் வெளியீட்டு மின்னோட்டத்தை விடவும் மிகவும் சிறிய அளவினுடையது; எடுத்துக்காட்டாக, ஒரு 70-ஆம்ப் மின்மாற்றிக்கு, வெறும் 2 ஆம்ப்கள் அளவிற்கு மட்டும் புல மின்னோட்டம் தேவைப்படும். புல மின்னோட்டமானது, ரோட்டார் சுற்றுகளுக்கு, நழுவு வளையங்கள் மற்றும் ப்ரஷ்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. குறைந்த மின்னோட்டமும், நழுவு வளையங்களும், ஒரு நேர்திசை மின்னியற்றியை விட நீண்டகால நம்பகத்தன்மையையும் ஆயுளையும் வழங்குகின்றன, நேர்திசை மின்னியற்றியில் உள்ள மின் திசைமாற்றியும் அதன் ப்ரஷ்கள் வழியே செல்லும் உயர் மின்னோட்டமும் இவற்றைக் குறைக்கக்கூடியவை. ஆனால் ஒரு நேர்திசை மின்னியற்றியில் உள்ள ப்ரஷ்களை அணுகுவதும், பரமாரிப்பதும் இடமாற்றுவதும் எளிதானது, ஆனால் மின்மாற்றியின் ப்ரஷ்களை அவ்விதம் அணுக முடியாது. ப்ரஷ்களை அணுகவும் அவற்றை மாற்றவும், மின்மாற்றியைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும். ஆனாலும், நழுவு வளையங்களின் காரணமாக இது மின்மாற்றியின் ஆயுள் முழுவதுமே தேய்மானம் அடைவதில்லை என்று கூறப்படுகிறது. தானியங்கி மின்மாற்றிகளின் பயனுறுதிறன், அவற்றின் குளிர்வித்தல் இழப்பு, பியரிங் இழப்பு, இரும்பு இழப்பு, தாமிர இழப்பு மற்றும் பகுதி சுமையின்போது டையோடு பிரிட்ஜ்களில் உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது, மின்மாற்றியின் அளவைப் பொறுத்து பயனுறுதிறன் 50-62% க்கு இடையே காணப்படுகிறது, மேலும் இது மின்மாற்றியின் வேகத்தைப் பொறுத்து மாறக்கூடும். ஒப்பீட்டளவில், மிகச் சிறிய உயர் செயல்திறன் நிலைத்த காந்த மின்மாற்றிகள் 60% வரையிலான பயனுறுதிறனை அடைகின்றன, அதாவது மிதிவண்டி விளக்கு அமைப்புகள் போன்றவை. பெரிய அளவிலான நிலைத்த காந்த மின்மாற்றிகள் இன்னும் மேம்பட்ட பயனுறுதிறனை அடைய முடியும். ஆனால், மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள மாறுதிசை மின்னியற்றிகள் மிகவும் கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் இவை அளவு அல்லது எடையைச் சார்ந்து எந்தவித கட்டுப்பாடுகளையும் பெற்றிருப்பதில்லை. அதேநேரத்தில், அவை மிகவும் உயர்ந்த பயனுறுதிறன்களைக் கொண்டிருக்கின்றன, அவற்றின் மாறுதிசை வெளியீட்டு திறனின் அளவு 98% என்ற அளவில் இருக்கிறது. புல சுற்றுகள் தொடக்கத்தில், இக்னிஷன் ஸ்விட்ச் மூலமாக இயக்கப்படுகின்றன, இவை எச்சரிக்கை விளக்கை ஒளிரவைக்கின்றன. இதனால்தான் இக்னிஷன் தரப்பட்டு எஞ்சின் இயங்காத நிலையில் அந்த விளக்கு ஒளிர்கிறது. எஞ்சின் இயங்க ஆரம்பித்து, மின்மாற்றி மின்னாற்றலை உருவாக்க தொடங்கிய பின்னர், டையோடு மின்மாற்றியிலிருந்து முதன்மை வெளியீட்டிற்கு புல மின்னோட்டத்தை வழங்குகிறது. இதனால் எச்சரிக்கை விளக்கில் உள்ள மின்னழுத்தம் சமப்படுத்தப்பட்டு அது அணைந்து விடுகிறது. புல மின்னோட்டத்தை வழங்கும் கம்பி, பொதுவாக "தூண்டி" கம்பி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பின் முக்கியமான பின்னடைவு என்னவென்றால், எச்சரிக்கை விளக்கு தோல்வியடைந்தால் அல்லது தூண்டுதல் கம்பி துண்டிக்கப்பட்டால், தூண்டுதல் மின்னோட்டம் எதுவும் மின்மாற்றியின் புல சுற்றுக்களை அடைவதில்லை எனவே, மின்மாற்றி ரோட்டாரில் உள்ள எச்ச காந்தத்தன்மையின் காரணமாக எந்த ஆற்றலையும் உருவாக்காமல் போகிறது. ஆனாலும், சில மின்மாற்றிகள், எஞ்சின் குறிப்பிட்ட வேகத்தில் சுற்ற ஆரம்பித்ததும், தானாகவே தூண்டுதலைப் பெறுகின்றன. எஞ்சின் நிறுத்தப்பட்ட நிலையில் எச்சரிக்கை விளக்கு எரிகிறதா என்பதை உறுதிசெய்வதன் மூலம் ஓட்டுநர் தவறான தூண்டுதல் மின்சுற்று எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம். பேருந்துகள், கனரக கருவிகள் அல்லது அவசரகால ஊர்திகள் போன்ற பெரிய அளவிலான தானியங்கிகளின் மின்மாற்றிகள் 300 ஆம்பியர்கள் மின்னோட்டம் வரை உருவாக்கக்கூடும். குறைவான ஒளியூட்டுதல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மட்டுமே கொண்டிருந்த பழங்கால தானியங்கிகளில், 30 ஆம்பியர் மின்மாற்றிகளே இருந்தன. பொதுவான பயணியர் கார் மற்றும் மித எடை ட்ரக் போன்றவற்றின் மின்மாற்றிகள் பொதுவாக 50-70 ஆம்பியர்கள் வரையிலான அளவீடுகளைக் கொண்டுள்ளன, ஆனாலும் அதிக மதிப்பீடுகள் பொதுவாக தற்போது வரத்தொடங்கியுள்ளன. மிகப்பெரிய தானியங்கி மின்மாற்றிகள் நீரால் அல்லது எண்ணையால் குளிர்விக்கப்படுபவையாக இருக்கலாம். பல மின்மாற்றிகளின் மின்னழுத்த சரிப்படுத்திகள், தற்போது வண்டியின் கணினி அமைப்புடன் இணைக்கப்படுகின்றன. சமீப காலத்தில், காற்றின் வெப்பம் (பல நிலைகளில் மொத்த காற்று போக்கு உணர்வியின் மூலம் அறியப்படுகிறது) மற்றும் எஞ்சின் மேலுள்ள சுமை ஆகியவையும் மின்மாற்றி அனுப்பும் மின்கலத்தைச் சார்ஜ் செய்யும் மின்னழுத்தத்தை மாற்றுகின்றன. கப்பல்களில் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளும், தானியங்கிகளின் மின்மாற்றிகளைப் போன்றவையே, ஆனால் அவற்றில் உப்புநீர் சூழல்களுக்கு ஏற்றவாறு முறையான பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கப்பல் மின்மாற்றிகள் வெடிக்காதவாறு வடிவமைக்கப்படுகின்றன, இதனால் அவற்றின் பிரஷ்களில் ஏற்படும் தீப்பொறிகளால் எஞ்சின் அறை சூழலில் இருக்கக்கூடிய வெடிக்கக்கூடிய வாயுக்கள் தூண்டப்படாது. நிறுவப்பட்ட அமைப்பைப் பொறுத்து இவை 12 முதல் 24 வோல்ட் அளவு கொண்டவையாக இருக்கலாம். பெரிய கப்பல்களில் இரண்டு அல்லது அதற்கு மேம்பட்ட மின்மாற்றிகள் இருக்கக்கூடும், இவை நவீனகால கப்பல்களின் அதிக மின் திறன் தேவையை சமாளிக்க உதவுகின்றன. ஒற்றை மின்மாற்றி சுற்றுகளில், ஆற்றலானது, எஞ்சினை தொடங்கும் மின்கலம் மற்றும் வீட்டுப் பயன்பாடு மின்கலம் (அல்லது மின்கலங்கள்) ஆகியவற்றுக்கு இடையே பிரித்து தரப்படுகிறது. இதற்கு பிரிப்பு டையோடு அல்லது இயந்திர ஸ்விட்ச் போன்றவைப் பயன்படுத்தப்படுகிறது. இயங்கும் போது மட்டுமே மின்மாற்றிகள் ஆற்றலைத் தருவதால், எஞ்சினின் கட்டுப்பாட்டு பேனல்களுக்கு, ஒரு துணை மின்முனையின் வழியாக மின்மாற்றியிலிருந்து ஆற்றல் தரப்படுகிறது. பிற சாதாரண இணைப்புகளுக்கு, சார்ஜ் கட்டுப்பாட்டு சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரஷ் இல்லாத மின்மாற்றி ஒன்றில், இரண்டு மின்மாற்றிகள், ஒரே மைய அச்சுடன் இரண்டு முனைகளில் இணைக்கப்பட்டிருக்கும். சிறிய பிரஷ் இல்லாத மின்மாற்றியில் இவை ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன ஆனால் பெரியவற்றில் பிரிவை எளிதாக காணமுடியும். இவை இரண்டில் பெரியது மின்மாற்றி ஆகவும் சிறியது, தூண்டியாகவும் செயல்படும். தூண்டியில் நிலையான புல சுற்றுகளும், சுழலும் ஆர்மெச்சூரும் (ஆற்றல் மின்சுற்றுகள்) காணப்படும். முதன்மை மின்மாற்றியில், சுழலும் காந்தப்புலம் மற்றும் நிலையான ஆர்மெச்சுர் என்ற முன்னதற்கு எதிர்நிலை அமைப்பு காணப்படும். சுழலும் மின் திருத்தி அமைப்பு எனப்படும், பிரிட்ஜ் மின் திருத்தியானது, ரோட்டாருடன் இணைக்கப்பட்ட தகட்டில் பொருத்தப்பட்டிருக்கும். பிரஷ்களோ அல்லது நழுவு வளையங்களோ பயன்படுத்தப்படுவதில்லை, இதனால் தேய்மானமடையும் பொருட்கள் குறைக்கப்படுகின்றன. முதன்மை மின்மாற்றியில் ஒரு சுழலும் காந்தப்புலமும் நிலையான ஆர்மெச்சூரும் (மின்னாற்றலை உருவாக்கும் மின்சுற்றுகள்) காணப்படும். நிலையான தூண்டியின் வழியாக செல்லும் மின்னோட்டத்தை மாற்றுவதால், தூண்டியிலிருந்து வரும் 3 கட்ட வெளியீடு மாற்றப்படுகிறது. இந்த வெளியீடு, சுழலும் மின் திருத்தி அமைப்பால் திருத்தப்பட்டு, வெளிப்படும் நேர்திசை மின்னோட்டம் முதன்மை மின்மாற்றியின் சுழலும் காந்தப்புலத்திற்கு தரப்பட்டு அதன் விளைவாக மின்மாற்றி வெளியீடு பெறப்படுகிறது. இவை அனைத்தின் விளைவாக, ஒரு சிறிய நேர்திசை தூண்டுதல் மின்னோட்டம் மறைமுகமாக முதன்மை மின்மாற்றியின் வெளியீட்டைக் கட்டுப்படுத்துகிறது என்று அறிகிறோம். தானியங்கு மின்னழுத்த கட்டுப்பாட்டு சாதனம் என்பது, வெளியீட்டு மின்னழுத்தத்தை மாறிலியாக வைப்பதற்காக புல மின்னோட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு மின்னழுத்தக் கட்டுப்பாட்டு சாதனம் ஆகும். கலவை தானியங்கிகளில், தனித்தனியான மின்மாற்றி மற்றும் தொடங்கி மோட்டார் ஆகியவை இணைக்கப்பட்ட மோட்டார்/மின்னியற்றி அமைப்புகளால் மாற்றீடு செய்யப்படுகின்றன, இவை இரண்டு செயல்பாடுகளையும் செய்யக்கூடியவையாக இருக்கின்றன. இதனால் உள்ளெரி இயந்திரத்தைத் தொடங்குதல், முடுக்கம் ஏற்படுத்த கூடுதல் இயந்திர திறனை அளித்தல் மற்றும் வண்டி நிலையான வேகத்தில் இயங்கும்போது பெரிய சேகரிப்பு மின்கலத்தை சார்ஜ் செய்தல் ஆகிய பணிகளை செய்கிறது. மேலே விவரிக்கப்பட்ட தானியங்கி மின்மாற்றிகளை விட இந்த சுழலும் இயந்திரங்கள் அவற்றின் கட்டுப்பாட்டு திறனின் காரணமாக கணிசமான அளவு அதிக திறன் கொண்டவையாக இருக்கின்றன. குறைந்த அதிர்வெண் ரேடியோ அலைவரிசைகளின் ரேடியோ கடத்துதலுக்கு உயர் அதிர்வெண் மாறும் மின்மறுப்பு வகையிலான மின்மாற்றிகள் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படுகின்றன. இவை மோர்ஸ் குறியீடு மற்றும் சோதனை ரீதியாக குரல் மற்றும் இசையை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டன. செப்டெம்பர் 2005



திரிகடுகம் திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் "இம்மூவர்" அல்லது "இம்மூன்றும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல் பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல் குடியிருப்புப் படிநிலையமைப்பு குடியிருப்புப் படிநிலையமைப்பு என்பது, மனிதக் குடியிருப்புக்களை மக்கள்தொகையையும் வேறு அம்சங்களையும் கருத்திலெடுத்து அவற்றை ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறையாகும். மக்கள்தொகை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு குடியிருப்பின் பரப்பளவு பெரிதாகவும், படிநிலையமைப்பில் உயர்ந்த நிலையிலும் இருப்பதுடன், குடியிருப்பில் கிடைக்கக்கூடிய வசதிகள் கூடுதலாகவும் இருக்கும். குடியிருப்புப் படிநிலையமைப்பில் ஒரு குடியிருப்பின் இடம் அதன் செல்வாக்கு மண்டலத்திலும் தங்கியுள்ளது. வசதிகள் கூடுதலாக இருக்கும்போது தொலைவிடக் குடியிருப்புக்களில் இருந்து மக்கள் இங்கே வருவர். அதனால் அக்குடியிருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அப்பகுதியின் குடியிருப்புப் படிநிலையமைப்பில் உயர்ந்த இடத்தையும் பெறும். இந்த எடுத்துக்காட்டில், தனியாக அமைந்துள்ள வீடுகள் படிநிலையின் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உலகநகரத்தொகுதி (ecumenopolis) மிகக்கூடிய மக்கள்தொகையுடன் மிகவுயர்ந்த நிலையில் உள்ளது. (இந்தக் குடியிருப்புப் படிநிலைகள் கான்சுடன்டினோசு அப்போசுட்டலோசு டொக்சியாடிசு என்பவரின் நூலைத் தழுவியது.) குடியிருப்பின் அளவைப் படிநிலைப்படி வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்துதல் எல்லா வேளைகளிலும் சரியாக அமைவதில்லை. சில மாநகரங்கள், சில நகரங்களிலும் குறைவான மக்கள்தொகை கொண்டனவாக இருக்கின்றன. அத்துடன் குடியிருப்புப் படிநிலையமைப்பில் எத்தனை படிநிலைகள் இருக்கவேண்டும் என்பது குறித்தோ அவற்றை எவ்வாறு அழைக்கவேண்டும் என்பது குறித்தோ இணக்கப்பாடு கிடையாது. குடியிருப்புக்களைக் குறிக்கும் பல சொற்களுக்குச் (எ.கா: ஊர், நகரம்) சட்ட அடிப்படையிலான வரைவிலக்கணங்கள் இல்லை, அல்லது வேறுபட்ட ஆட்சியெல்லைகளுக்குள் முரண்பாடான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றில், படிநிலையானது தகுதிநிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது. இது படிநிலையமைப்பில் குடியிருப்பொன்றின் நிலையை வலுவாக்குகின்றது. ஒரு குடியிருப்பின் தகுதிநிலை பல காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். அரசர் அல்லது ஒரு உயர்நிலைப் பிரபு ஒருவரின் இருப்பிடமாக அமைவதனால், அல்லது ஒரு முக்கிய மத நிறுவனம் ஒன்றின் அமைவிடமாக அமைவதன் மூலம் அக்குடியிருப்புக்களுக்கு உயர் தகுதிநிலை ஏற்படுவதுண்டு. மாநகரம் மாநகரம் என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான குடியிருப்பு ஆகும். இதை மாநகர், பெருநகரம், பெருநகர் போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய நகரமே பொதுவாக மாநகரம் (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, நகரத்திலிருந்து வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடு இல்லை. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக வரலாற்று, நிர்வாக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான மசச்சூசெட்சில் உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டிணைப்பு விதிகள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. ஐக்கிய இராச்சியத்திலும், சில பொதுநலவாய நாடுகளிலும் மாநகரம் என்பது அரச பட்டயத்துடன் கூடிய ஒரு குடியிருப்பு ஆகும். முற்காலத்தில் ஐரோப்பாவில் பேராலயம் ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது. மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன. மாநகரங்கள் இன்னொரு நகரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்தால் அந்நகரங்களை உள்ளடக்கிய பகுதி நகரக்கூட்டம் (conurbation) எனப்படும். முதல் மாநகரங்கள் தோன்றியமைக்கான நிலைமைகளை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மாநகரங்கள் தோன்றியமைக்கான முன்நிபந்தனைகள், இவ்வுருவாக்கத்துக்கு உந்து விசையாக இருந்திருக்கக்கூடிய அடிப்படையான பொறிமுறைகள் என்பன குறித்துப் பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமக்குச் சரியெனத் தோன்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர். புதியகற்காலப் புரட்சிக்குப் பின்பே முதல் மாநகரங்கள் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. புதியகற்காலப் புரட்சியின்போது வேளாண்மை அறிமுகமானது. இது மக்கள் அடர்த்தியாக வாழ்வதைச் சாத்தியமாக்கியதன் மூலம் மாநகரங்கள் வளர்வதற்கு உதவியது. வேளாண்மையின் அறிமுகம், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த மக்களைத் தமது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு வேளாண்மையைக் கைக்கொண்ட மக்களுக்கு அருகில் நிரந்தரமாக வாழ்வதற்கு ஊக்குவித்தது. வேளாண்மையினால் மக்கள்தொகை அடர்த்தி கூடியதும், ஓரலகு நிலத்தில் இருந்து பெறக்கூடிய உணவு உற்பத்தி அளவு கூடியதும் மாநகரங்களில் இடம்பெறுவன போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கின. "மாநகரங்களும் பொருளாதார வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதிய பால் பைரோச் என்பார் மேற் சொன்ன நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். இந்நூலில், உண்மையான மாநகரங்கள் உருவாவதற்கு முன் வேளாண்மை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வாதித்தார். ஒரு குடியிருப்பு மாநகரம் என்னும் தகுதியைப் பெறுவதற்கு, அது வணிகத்தை ஆதரிப்பதற்கான மிகையான மூலப்பொருட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது வேரே கோர்டன் சில்டே என்பவரது கருத்து புதிய கற்காலத்துக்கு முன்னர், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த சமுதாயங்களில், பெருமளவிலான மக்கள்தொகையைத் தாங்குவதற்குத் தேவையான உணவை வழங்குவதற்கு பெரிய நிலப்பரப்புத் தேவைப்பட்டது. இது வணிக ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதை இயலாதது ஆக்கியிருக்கும் என்கிறார் பைரோச். இதை விளக்குவதற்கு பைரோச் ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்துள்ளார்: "மேற்கு ஐரோப்பாவில், முன்-புதியகற்காலத்தில் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 0.1 ஆக இருந்திருக்கும்". இந்த மக்கள்தொகை அடர்த்தியைக் கணிப்புக்கான அடிப்படையாகக் கொண்டும், உணவு உற்பத்தியில் 10% வணிகத்துக்காக உபரியாக இருக்கும், மாநகரக் குடிமக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதில்லை என்னும் கருதுகோள்களின் அடிப்படையிலும், பின்வருமாறு கணிப்பிட்டார். "1000 பேரைக்கொண்ட ஒரு மாநகரைப் பேணுவதற்கு, போக்குவரத்துச் செலவைக் கருத்தில் கொள்ளாமல், 100,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புத் தேவைப்பட்டிருக்கும். போக்குவரத்துச் செலவையும் எடுத்துக்கொண்டால் தேவையான நிலப்பரப்பு 200,000 சதுர கிலோமீட்டர் ஆக இருக்கும்...". இது ஏறத்தாழ பெரிய பிரித்தானியாவின் பரப்பளவுக்கு ஈடானது என்று பைரோச் எடுத்துக் காட்டினார். யேன் யாக்கோப் என்னும் கோட்பாட்டாளர் நகர உருவாக்கம், வேளாண்மையின் அறிமுகத்துக்கு முந்தியது என்றும் அதனால் வேளாண்மை நகர உருவாக்கத்துக்கு உதவவில்லை என்றும் கூறுகிறார். தனது கோட்பாட்டை விளக்கும்போது மாநகரம் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொடுக்கவில்லை. ஆனால், அவரது விளக்கத்தின்படி, தொடக்ககால நகர்சார்ந்த நடவடிக்கை பற்றிய பொதுவான புரிதலுக்கும், யேன் எடுத்துக்காட்டும் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்வோரின் சுற்றாடலில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. தன்னுடைய கருத்தை விளக்குவதற்காக, யேன் ஒரு கற்பனையான நிலைமை ஒன்றை எடுத்துக்கொள்கிறார். இதன்படி பெறுமதி வாய்ந்த இயற்கை வளம் ஒன்று தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கைகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றது. எரிமலைக் கண்ணாடியை இவ்வாறான இயற்கை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் கொள்கிறார். எரிமலைக் கண்ணாடியைப் பயன்படுத்தி மிகவும் கூர்மையான ஆயுதங்களைச் செய்யமுடியும் என்பதால், இப்பொருள் கிடைக்கும் இடத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனைப் பண்டமாற்றுமூலம் பெற்றுக்கொள்வதற்குத் தொலை தூரங்களிலிருந்தும் பலர் வருவர். இது அவ்விடத்தில் பல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி வணிகத்தையும் விரிவடையச் செய்வதால் மேலும் பலர் அவ்விடத்தை நோக்கி வருவர். இவ்வாறு விற்பனையாகும் பண்டங்களுள் பல்வேறு வகையான விதைகளும் இருக்கும். இவ்விதைகள் பல வழிகளில், சில சமயம் எதிர்பாராத விதமாகவும், விதைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தியளவு கவனிக்கப்படும். காட்டுப் பயிராகத் தானே வளரும்போது கவனிப்பதை விட இது இலகுவாக இருக்கும். இது நல்ல விதைகளைத் தேர்வு செய்து விற்பனை செய்வதற்கும் வழி வகுக்கும். மக்கள் ஏன் தொடக்கத்தில் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்து அடர்த்தியாக வாழத் தலைப்பட்டனர் என்பதற்கு, கோட்பாட்டாளர்கள் பலவகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். பிரெண்டன் ஓ'பிளகேர்ட்டி என்பவர் தான் எழுதிய "நகரப் பொருளியல்" "(City Economics)" என்னும் நூலில், "அவற்றினது சாதகத் தன்மைகள், பாதகத் தன்மைகளைவிடக் கூடுதலாக இருந்தால் மட்டுமே, பல ஆயிரம் ஆண்டுகள் இருந்ததைப்போல, நகரங்கள் நிலைத்திருக்கும்" என்றார். ஓ'பிளகேர்ட்டி, கவரத்தக்க இரண்டு சாதக நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஒன்று, economies of scale மற்றது, உயரும் விகித அளவு விளைவு (increasing returns to scale). இக்கருத்துருக்கள் பொதுவாக நிறுவனங்களுடன் தொடர்புள்ளவை. எனினும், மிக அடிப்படையான பொருளாதார முறைமைகளில் கூட இவற்றின் பயன்பாட்டைக் காணலாம். எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காகக் கூட்டும்போது, விளைவு இரண்டு மடங்குக்கும் மேலாகக் கூடுமானால் அங்கே "உயரும் விகித அளவு விளைவு ஏற்படுவதாகக் கூறலாம். அதே வேளை விளைவு இரண்டு மடங்காகும்போது செலவு இரண்டு மடங்கிலும் குறைவாக இருக்குமானால் அந்நடவடிக்கை economies of scale ஐக் கொண்டிருக்கிறது எனக் கூறமுடியும். இந்தக் கருத்துருக்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதற்காக, ஓ'பிளகேர்ட்டி, நகரங்கள் உருவானதற்கான மிகப் பழைய காரணங்களுள் ஒன்றான "பாதுகாப்பு" என்பதைப் பயன்படுத்துகிறார். இந்த எடுத்துக்காட்டில், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுவும் எதுவும் (எகா. மதில் சுவர்) உள்ளீடு ஆகும். பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியும், அங்கேயுள்ள பெறுமதியானவை அனைத்தும் ஒருங்கே "விளைவு" என்பதற்குள் அடங்கும். பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பகுதி சதுரமானது என்றும், அதிலுள்ள ஒவ்வொரு எக்டெயர் நிலமும் ஒரேயளவு பாதுகாப்புப் பெறுமானம் கொண்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பின் சாதக விளைவு பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியின் பரப்பளவுக்கு விகித சமனாக இருக்கும். எனவே, இதைப் பின்வருமாறு குறிக்கலாம்: உள்ளீடு மதிற் சுவரின் நீளத்தில் தங்கியுள்ளது: இவற்றின்படி இதில் "உயரும் விகித அளவு விளைவு" உள்ளது: அத்துடன் economies of scale உம் இதில் காணப்படுகிறது. இதனால் நகரங்கள் பாதுகாப்பில் செலவுகளைக் குறைக்கின்றது. எனவே மக்கள் தம்மையும், தமது செல்வத்தையும் சூறையாடும் காட்டுமிராண்டிப் படைகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான தேவை, நகரங்கள் உருவானதற்கான ஒரு காரணம் எனலாம். பொருட்கள், மக்கள், எண்ணக்கருக்கள் போன்றவற்றுக்கான போக்குவரத்துச் செலவு குறைவது நகர உருவாக்கத்துக்கான காரணம் என்பதை எட்வார்ட் கிளீசர் என்பாரும் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். தூரம் குறைவதன் நன்மைகள் பற்றி விளக்கிய கிளீசர், மாநகரின் அளவு இரட்டிக்கும்போது, தொழிலாளர் 10% கூடுதலான கூலியைப் பெறுகின்றனர் என்கிறார். பெரிய மாநகரங்கள் ஒரே உற்பத்தித் திறனுக்கு சிறிய நகரங்களிலும் கூடுதலான கூலி கொடுப்பதில்லை எனக் கூறும் கிளீசர், தொழிலாளர்கள் பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது அவர்களுடைய செயற்றிறன் அதிகமாவதாலேயே அவர்களது வருமானம் கூடுகிறது என விளக்குகிறார். எனினும், இரண்டு மடங்கு பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது கிடைக்கும் 10% கூலி அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு அதிக பயனைக் கொடுப்பதில்லை. உயர்ந்த வாழ்க்கைச் செலவு கூடுதல் வருமானத்தை அவர்களிடன் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆனாலும், நகரத்தில் வசிப்பதால் வேறு பயன்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. நகரங்கள் எவ்வாறான வடிவங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதிலாக நகரத் திட்டமிடலில் பல்வேறு வகையான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. பொதுவாகப் பரவலாக அறியப்பட்ட வடிவங்களுள் ஒன்றாக "வலையமைப்புத் தளக்கோலம் கொண்ட நகரங்கள் விளங்குகின்றன. இத்தகைய நகருக்கான தளக் கோலம் சீனாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வருகின்றது. பேரரசர் அலெக்சாண்டரின் நகரத் திட்டமிடலாளரும், இவ்வாறான தளக்கோலத்தைத் தனியாக உருவாக்கினார். இவரது வடிவமைப்பை, உரோமர் விரும்பி ஏற்றுக்கொண்டனர். அயர்லாந்தின் திட்டமிடப்பட்டு 1613 இல் வேலைகள் துவக்கப்பட்ட முதல் நகரம் டெர்ரி ஆகும், இந்த நகர் கட்டுமானப் பணிகளில் சுவர்களை கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. நகரத்தைச் சூழ்ந்த இந்தச் சுவர்களில் நான்கு வாயில்களைக் கொண்டதாக மைய வைரம் போன்ற பாதுகாப்புமிக்க ஒரு நல்ல வடிவமைப்பு என்று கருதப்பட்டது. இவ்வடிவமைப்புகொண்ட கட்டடங்கள் பிரித்தானிய வட அமெரிக்காவின் காலனிகளில் பரவலாக பரவியது. பண்டைய கிரேக்கர்கள் பெரும்பாலும் மத்தியதரைக் கடல் பகுதியில் தங்கள் குடியிருப்பு கட்டங்களை திட்டமிட்ட வகையில் அமைத்தனர். இதற்க்கு பிரையன் நகரமானது ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நகரம் இன்றைய திட்டமிடப்பட்ட நகரங்களைவிட பல வகைகளில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முற்காலத்திய, சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் மொகெஞ்சதாரோ போன்ற நகர கட்டுமானங்களைப் பயன்படுத்தி வழ்ந்துவந்தனர். மத்திய காலங்களில் சிறந்த திட்டமிடலோடு கட்டப்பட்ட நகரங்கள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பிரான்சின் தெற்கே பல்வேறு ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட நகரங்களும், பழைய டச்சு மற்றும் பிளெமெய்ஷு நகரங்களின் நகர விரிவாக்கங்களும் இவற்றிர்க்கு நல்ல உதாரணங்கள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் திட்டமிடப்பட்ட நகரங்கள், குறிப்பாக பாரிஸ் நகரத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இவ்வாறான திட்டங்கள் பிரபலமாக உருவாயின. இவற்றின் காரணமாக பழைய பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் தனது புதிய நிலப்பகுதிகள் மற்றும் நகரங்களில் திட்டமிடப்பட்ட கட்ட அமைப்புகளை கட்டாயப்படுத்தியது, அமெரிக்காவின் மேற்க்குப்பகுதிகளான சால்ட் லேக் நகரம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் இவ்வாறு கட்டமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன. மற்ற வடிவங்களில் ஆரக்கால் கட்டமைப்பை உள்ளடக்கியிருக்கலாம், இதில் பிரதான சாலைகள் ஆரக்கால் போன்று மையப் புள்ளியில் இணைகின்றன. இது பெரும்பாலும் ஒரு வரலாற்று வடிவம் ஆகும், நகரம் வளரவளர நகர கட்டுமானம் நீண்ட காலமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்ததில் விளைவு ஆகும். அண்மைக்கால வரலாற்றில், இத்தகைய வடிவங்கள் நகரத்தின் புறநகர்பகுதிகளை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. பல டச்சு நகரங்கள் இவ்வாறான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன: செறிவான சாலைகளால் சூழப்பட்ட ஒரு மையச் சதுரம். அதிலிருந்து நகரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும் ஒரு புதிய வட்டமாக (நகர சுவர்கள் கொண்ட சாலை) குறிக்கப்படும். ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம் மற்றும் மாஸ்கோ போன்ற நகரங்களில், இந்த மாதிரியான இன்னும் தெளிவாக தெரியும் எடுத்துக்காட்டுகளாகும். ஊர் ஊர் அல்லது கிராமம் என்பது மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சி நிலையில் குடிசைகள் அல்லது வீடுகள் அமைத்து வாழும் ஒரு நிலப்பரப்பை அல்லது மக்கள் குடியிருப்பைக் குறிக்கும். அவ்வாறான ஊர்களில் சிறிய ஊர்கள் சிற்றூர் என்றும் பெரிய ஊர்கள் பேரூர் என்றும் அழைக்கப்படும். ஊர்களின் வளர்ச்சி நிலையே காலவோட்டத்தில் நாடுகளாகின. வணிகத் தொடர்பாடுகளை தொடர்ந்து ஊர்களின் நடுவே வணிக மையங்களாக வளர்ச்சி பெற்ற இடங்கள் நகரங்களாக மாற்றம் பெற்றன. ஊர்கள் பெரும்பாலும் சிற்றூர்களுக்கும், நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய நகரங்களிலும் அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, மீன்பிடித்தல் போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும். இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் நாயும் இருந்ததாகவும், அங்கே ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் போன்ற தகவல்கள், விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை தம்பபண்ணியில் மக்கள் குடியிருப்பு இருந்தது எனும் தகவலை தருகிறது. நாட்டுப்புறம் நாட்டுப்புறம் (rural) என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும். நாட்டுப்புறப் பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களையும், வெற்று நிலங்களையும், கட்டாந் தரைகளையும் மற்றும் காடுகளையும் கூடக் கொண்டிருக்கக் கூடும். நகர்ப்புறம் மாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் கூடிய குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன், வர்த்தகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன. மின்கம்பி மின்கம்பி மின்காந்த சத்தியை எடுத்துசெல்ல மின்சுற்றுகளில் பயன்படுகின்றது. மின்சுற்றுக்களில் உள்ள கூறுகள்|கூறுகளை இணைப்பது மின்கம்பி ஆகும். மின்கம்பி நீள் உருளை வடிவில் மின்கடதும் தன்மை உள்ள பொருள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. அடிப்படையில் மின்கம்பி ஒரு மின்கடத்தி ஆகும். ஓரச்சு வடம், இரு கம்பி வடம், நுண்கீற்று தடம் என பல வகை மின்கம்பிகள் மின்சுற்றுக்களில் பயன்படுகின. தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை என்பது கணினி சார் தேவைகளுக்கு தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு எழுத்து குறிமுறை நியமமாகும். இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக (திஸ்கீ) TSCII (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது. தமிழில் "திசுகி" எனவும் "தகுதரம்" (தமிழ் குறியீட்டுத் தரம்) எனவும் வழங்கப்படும் இதுவே முதன்முதல் தமிழில் உலகம் தழுவிய திறந்த இணைய உரையாடல் மூலம் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமமாகும். ASCII குறிமுறையில் அமைந்த ஆங்கில எழுத்துக்களின் மேலாக, எழுத்துரு ஒன்றினை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை கணினியில் பயன்படுத்திவந்த காலத்தில், தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்தி ஆவணமொன்றினை தொகுப்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. தமிழ் எழுத்து குறிமுறை வரலாற்றில், இவ்வாறான சிக்கல்மிக்க "ஒருமொழி" ASCII குறிமுறையின் போதாமையை களைந்து உருவாகிய அடுத்தக்கட்ட படிமுறை வளர்ச்சியே "தகுதரம்". ASCII குறிமுறை அட்டவணையில் ஆங்கில எழுத்துக்கள், இன்றியமையாக் குறியீடுகள் தவிர்ந்த ஏனைய இட ஒருக்கீடுகளில் தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்தலே "தகுதரம்" குறிமுறையின் அடிப்படையாகும். தொடக்கத்தில் ஆங்கில எழுத்துக்களுக்கான ஒதுக்கீட்டிலேயே தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்த முறைமையைக் காட்டிலும் இது முன்னேற்றகரமானதாகவும், இருமொழி கையாட்சிக்கு எளிமையானதாகவும் இருந்தது. இந்த இட ஒதுக்கீட்டினை கீழ்க்காணும் படம் தெளிவாக விளக்குகிறது. பல்வேறு தொழிநுட்ப சிக்கல்களையும் களைந்து தற்போது இக்குறிமுறையின் நடப்பு வெளியீடான "பதிப்பு 1.7" புழக்கத்திலிருக்கிறது. இக்குறிமுறையை பயன்படுத்தி தமிழை கணினியில் உள்ளிடுவதற்கு சிறப்பான உள்ளீட்டு முறைகளும் மென்பொருட்களும் தேவைப்படும். பின்வரும் உள்ளீட்டு மென்பொருட்கள் இதற்குப் புகழ்பெற்றவை: GNU/Linux இயங்குதளத்துக்கானவை Windows இயங்குதளத்துக்கானவை இக்குறிமுறைக்கான பல்வேறு வடிவங்களில் அமைந்த எழுத்துருக்களும் தற்போது இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. இவ்வகை எழுத்துருக்கள் TSC_ என்ற முன்னொட்டுடன் ஆரம்பிக்கும். பன்மொழி குறிமுறையான ஒருங்குறியின் வருகைக்குபிறகு இருமொழி குறிமுறையான "தகுதரத்தின்" பயன்பாடு அருகி வருகிறது. ஒருங்குறி முறையைக் கையாள முடியாத இயங்குதளங்கள், மென்பொருட்கள் போன்றவற்றில் தமிழை வினைத்திறனுடன் கையாள்வதற்கு இன்றும் "தகுதரமே" உதவி செய்து வருகிறது. தற்போது ஒருங்குறி முறைக்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடிய "தகுதரம்" எழுத்துருக்கள் கிடைப்பிலுள்ளன. இவ்வகை எழுத்துருக்கள் TSCu_ என்ற முன்னொட்டுடன் தொடங்கும். கனூ iconv கருவி வழியாக TSCII ஆவணங்களின் குறியீடை மாற்றுதல் எப்படி என்பதை கீழே காணலாம் எதிர் திசையில் குறியீடை மாற்ற -f <-> -t இடம் மாற்றவும். பொருள் பருப்பொருள் 3 வகைப் படும்.பருப்பொருள் நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் அனைத்தையும், இப்பொருள்களில் உண்டாகிற யாந்திரிக, பௌதிக, இரசாயன, உடலியல் வகைப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொருள்வகைப்புலப்பாடு ("Material phenomena") என்றும், அல்லது வெறுமே பருப்பொருள் ("Matter") என்று சொல்வது வழக்கம். இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பொருட்களால் ஆனவை. பொருள் அல்லது பொருள்கள் என்ற சொல்லுக்கு பதிலாக பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வண்டத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் தனிமங்களாலும்ம் அவற்றின் சேர்வைகளாலும் ஆனவை. ஒவ்வொரு தனிமமும் வேறுபட்ட அணுக் கட்டமைப்புக்களைக் கொண்ட அணுக்களால் ஆனது. அணுக்கள் இலத்திரன், புரோத்தன், நியூத்திரன் ஆகிய கூறுகளால் ஆனவை. அக்கூறுகள் குவார்க் எனப்படும் அடிப்படைக் கூறுகளால் ஆனவை. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு விசை அரங்கு செயற்படுகின்றது. பொருள் என்பது நிறை மற்றும் அளவை(இடங்களையும் நிரப்பும்) உடையவையாகும். எதற்குத் திணிவும் கனவளவும் இருக்கின்றதோ அது பொருள். பொருளை அணுக்களாகவும், அணுவை அணுக் கூறுகளாகவும், அணுக் கூறுகளை விசையாகவும் பகுத்தாயலாம். பொருளும் வலுவும் ஒன்றையே வெவ்வேறு நிலைகளிற் சுட்டி நிற்கின்றன. நிறை கொண்டவையே பொருட்களாகும்.இயற்பியலில் பலவற்றை பொருள்கள் என்று அழைக்கிறோம்.நாம் வெறுங்கண்ணால் பார்க்க்க்கூடிய அனைத்துமே பொருட்களாகும்.இயற்பியல் கூற்றுப்படி நிலையான நிறையும், அளவு உடையதுமே பொருட்களாகும். இவ்வணுக்கள் எப்போதும் நகர்ந்து கொண்டும், அதிர்ந்து கொண்டும் இருக்கின்றன. அனைத்து பொருட்களையும் ஆற்றலாக மாற்றமுடியும் என்று ஐன்ஸ்டின் கண்டுபிடித்தார். ஐன்சுரைனின் சமன்பாடு அவற்றின் ஒற்றுமைப் பண்பை பின்வருமாறு விளக்குகின்றது. formula_1 விஞ்ஞான நிலைப்பாட்டிற் பொருள் அல்லாத ஒன்று இல்லை. அது தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அப்படி இருந்தால் மட்டுமே பொருள் அடிப்படையிலேயே அதை நாம் அறிய முடியும். நிறை கொண்டவையே பொருள்கள் எனும் நிலையை குவாண்டம் இயற்பியலின் வளர்ச்சி தடை செய்தது.குவாண்டம் இயற்பியலின்படி எலக்தரான், புரோட்டான் ஆகியவும் பொருள்கள் பட்டியலில் இணைந்தன.இதன் படி ஐன்ஸ்டின், அனைத்து பொருட்களையும் ஆற்றலாக மாற்றமுடியும், சிறிய பொருளையும் மிகப் பெரிய ஆற்றலாக மாற்ற முடியும், எலக்தரான், புரோட்டான் ஆகியவற்றை ஒளித்துகளாக மாற்ற முடியும் போன்ற சில முடிவுகளையும் வெளியிட்டார். குவாண்டம் இயற்பியலின்படி பொருள்கள் அனைத்திற்கும் நிறை இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போனது.இதன் அடிப்படையில் பொருள் என்பது ஒரு மூடப்பட்ட பகுதியில் இருக்கும் பொழுது நேரத்தத்தை பொருத்து மாறாத்தே ஆகும். தாலஸ் (624 கி.மு – 546 கி. மு) என்பவர் முதன் முதலாக நீரே உலகத்திற்கு அடிப்படை பொருள் என்ற முடிவை வெளியிட்டார். அனெக்சிமென் (585 கி. மு, 528 கி. மு) என்பவர் காற்றே அடிப்படை பொருள் என்று கூறினார்.ஹெராக்லிடஸ் (535 கி. மு – 4 75 கி. மு) நெருப்பே அடிப்படை பொருள் என்று கூறினார். ஏனெனில் நெருப்பே அனைத்தையும் மாற்றும் திறன் உடையது என நம்பினார்.எம்பிடோகில்ஸ் (490–430 கி. மு) நீர், நிலம்,காற்று, நெருப்பு ஆகிய நான்கே அடிப்படை பொருள் என்று கூறினார்.இதே வேலையில் டெமாக்ரிட்டஸ் என்பவர் இவ்வுலகில் உள்ள அனைத்தும் அணு என்னும் கண்ணுக்குத் தெரியாத பொருட்களால் உருவானவை என்றார்.மேலும் அவர் ஆட்டமிஸம் எனும் தத்துவத்தையும் வெளியிட்டார். ரெனெ டெஸ்கார்ட்ஸ் (1596–1650) என்பரே நவீன பொருள்கள் பற்றிய தத்துவங்களை வெளியிட்டவர் ஆவார். பின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவற்றை விரிவுபடுத்தினார்.பத்தொண்பதாம் நூற்றாண்டிலேயே இவற்றை பற்றிய ஆய்வுகள் விரிவாகின. தனிம அட்டவணை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அணுக்களே பொருள்களின் அடிப்படை என்று கண்டரிந்தனர். மூலக்கூறுகள் பற்றியும் அவற்றின் பிணைப்பு பற்றியும் ஆராய்ச்சிகள் மெற்கொள்ளப்பட்டன.இருபதாம் நூற்றண்டுகளில் குவாண்டம் அளவில் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகள் விரிவடையத் தொடங்கின.இவற்றின் விளைவாக பொருள்கள் பற்றிய வகைகள் அதிகமாகின.அடர் பொருள்,பருப்பொருள்,அடிப்படை பொருள் என்று பல வகைகளில் பிரிக்கப்பட்டுவிட்டன. பொருள்கள் *நிறை ("Mass"), பொருள்கள் நிறம்,சுவை,மணம் போன்ற பண்புகளையும் கொண்டிருக்கும். பிரபஞ்சத்தில் உள்ள மண்டலங்கள், நட்சத்திரங்கள் ,கிரகங்கள், பாறைகள், தண்ணீர் மற்றும் காற்று ஆகிய உயிரற்ற பொருட்களும் தாவரங்கள், விலங்குகள் மனிதர்கள் போல வாழும் உயிரினங்கள் அனைத்துமே பொருட்களால் ஆனவையே ஆகும். இயற்பியலின்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொருட்களில் அடங்காது.நிலையான நிறையற்றவை பொருட்களில் சேரா. இதற்கு ஒளித்துகளே ("Photon") ஓர் உதாரணம் ஆகும்.ஏனெனில் ஒளித்துகளில் நிலையான நிறை,அளவு ஆகிய இரண்டுமே இடம்பெறவில்லை. இயக்க ஆற்றல் உள்ளவையும் பொருட்களுள் சேரா.இதற்கு வெப்பம், ஒலி, ஒளி ஆகியன உதாரணங்களாகும். பொருட்களின் கலவையை அறிய அவற்றை சிறு சிறு பகுப்புகளாக மாற்ற வேண்டும். உயிருள்ள பொருள்கள் உயிரணுக்களால் ஆனவையாகும். அவற்றை சிறிதாக பகுத்தால் மூலக்கூறுகள் தோன்றும்.மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை ஆகும். பொருட்களின் பண்புகளில் நிலைகளும் முக்கிய பண்பாகும்.நான்கு வகையான நிலைகள் பொருட்களுக்கு உண்டு. அவை, ’’திடநிலை’’ என்பது பொருட்களின் மூலக்கூறுகள் ஒன்றாக பிண்ந்திருப்பது ஆகும். இப்பொருள்கள் கடுமையான அழுத்தத்திற்கு உட்படுத்தும் போதும் தன் நிலையிலிருந்து மாறாதது ஆகும்.பாறை போன்றவை இந்திலையில் உள்ள பொருட்களே ஆகும். ‘’திரவ நிலை’’ என்பது அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் ஆகியவை பலவீனமாக பிணையப்பட்டிருக்கும் பொருட்களாகும்.இவற்றிற்கு சரியான வடிவங்கள் இருப்பதில்லை , இவை இருக்கும் திடப் பொருட்களின் வடிவத்தினை இவை பெரும்.திரவ நிலை பொருட்களில் இரண்டு வகைகள் உள்ளன. ‘’நீர்மநிலை’’ என்பது திரவ நிலை பொருட்களின் ஒரு வகையாகும்.இவை அருகிலிருக்கும் மூலக்கூறுகளுடன் பலவீனமாக பிணைந்துக்கொள்ளும்.இவற்றை பெற்றுக்கொள்ளும் திடப்பொருள்களின் வடிவத்தினை இப்பொருள்கள் பெரும்.இப்பொருள்கள் ஆவற்றின் அளவினுக்கேற்ப இடத்தை பிடித்துக்கொள்ளும். உதாரணங்கள்:நீர், எண்ணெய், எரிமலை குழம்பு, குளிர்பானங்கள். ‘’வாயு நிலை’’, இவ்வகை பொருள்கள் தன்னை பெற்றுக்கொள்ளும் திடப்பொருட்களின் முழு அளவிலும் பரந்து விரிந்துக் கொள்ளும்.’’நீர்ம நிலையினை விட இவை மிகவும் பலவீனமாக மூலக்கூறுகளுடன் பிணைந்து இருக்கும்.உதாரணம்:வாயு,நீராவி,ஹீலியம். ‘’பிளாசுமா நிலை’’ என்பது அயனியாக்கம் செய்யப்பட்ட பொருட்களின் தொகுப்பு ஆகும். பூமியின் அயனி மண்டிலம், சூரியனின் ஒளிவளைவு ஆகியன பிளாசுமா நிலக்கு எடுத்துக்காட்டுகளாகும்.இந்நிலையில் உள்ள பொருள்கள் நீர்ம நிலைக்கும்,வாயு நிலைக்கும் இடப்பட்ட பதத்தில் இருக்கும். இவற்றிற்கு அணுக்களை ஈர்க்கும் சக்தி குறைவாக இருக்கும். பொருட்களின் தன்மை ஒவ்வொரு நிலைக்கும் மாறுபடும். இவை அப்பொருள்கள் இருக்கும் இடத்தில் உள்ள தட்ப வெட்ப நிலையையும், அழுத்தத்தினையும் பொருத்து மாறுபடும்.உதாரணமாக நீர் இப்புவியின் வெவ்வேறு இடங்களில்,திட நிலை(பனிக்கட்டி),திரவ நிலை(நீர்),வாயு நிலை(நீராவி) ஆகிய வெவ்வேறு நிலையில் ஒரே நேரத்தில் காணப்படுகிறது.தற்போது அடிப்படை துகள்களைப் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் குவார்க்குகள்,குலுவான்களும் பொருட்களின் ஒரு நிலையாக இருக்கலாம் என ஆராயப்படுகிறது. துவாரகாதீசர் கோயில் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம் உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும். சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது. து. உருத்திரமூர்த்தி துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (சனவரி 9, 1927 - சூன் 20, 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன், முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மஹாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார் ஆகஸ்ட் 30, 1954ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் சேரன் ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார். நவம்பர் 20, 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார். பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1. பிரம்மா " பௌத்த மத பிரம்மாவுக்கு காண்க பிரம்மா (பௌத்தம்) " பிரம்மா (சமஸ்கிருதம்: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனுமாவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. இவர் அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையில் வேதன் என குறிப்பிடப்படுகிறார். இந்த தெய்வத்தை வேதாந்தத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் பிரம்மத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. நான்கு முகங்களை உடையவர் என்பதால் "நான்முகன்" என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் "பிரம்மா" என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்தரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது. கிரேத யுகம் , திரேதா யுகம், துவாபர யுகம் ,கலி யுகம் இந்த நான்கு யுகங்களும் கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று (43,20000) லட்சத்து இருபதாயிரம் மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது பிரம்மாவிற்கு பேராயுள் இந்த பேராயுள் நூறு சென்றால் பிரம்மாவிற்கு ஆயுள் முடியும். திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவுக்கும், பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவனும் லிங்கோத்பவர் என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, அன்னப் பறவை வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவானது அதன் பயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை. சில கதைகளில் முடிகாணத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக, சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் பிரம்மஹத்தி தோசம் பற்றியதால் , பிட்சாடனார் என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார். பிரம்மா தன்னைப்போலவே ஒரு மகனைப் படைக்கவிரும்பியதாகவும், அவருக்கு பிறந்தமகன் தனக்குப் பெயரிட வேண்டுமென அழுததாகவும், அதனால் பிரம்மா ருத்திரன் என்று பெயரிட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ருத்திரன் அழுகை நிற்காததால், பிரம்மா ருத்திரன், பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என அஷ்ட பெயர்களை ருத்திரனுக்கு சூட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன. மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம புராணம் பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்தமைக்கு வேறொரு கதையை கூறுகிறது. அதில் பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்று கழுதை முக வடிவில் இருந்தாக கூறப்பட்டுள்ளது. அந்த தலையானது தேவர்கள் மற்றும் அரக்கர்கள் போரில் அரக்கர்களுக்கு உதவி செய்வதாக கூறியதைக் கண்டு தேவர்கள் திருமாலிடம் அத்தலையை நீக்க வேண்டினர். ஆனால் திருமாலோ, அத்தலையானது பூலோகத்திலோ அல்லது வேறெங்கோ விழுந்தால் விபரீதம் நேரிடும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை சிவபெருமானிடம் கோரிக்கை வைக்கும்படி கூறினார். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பிரம்மாவின் கழுதை தலையை நீக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார். ஒரு சமயம் கிருஷ்ணர் கன்றுகளை மேய்துக்கொண்டு தமது நண்பர்களுடன் (கோபலர்கள்) யமுனை நதி கரையில் உணவருந்தி கொண்டிருந்தார். பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை சோதிப்பதற்காக அவருடைய கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். கன்றுகளை காணாது கோபாலர்கள் தேடிய பொழுது கிருஷ்ணர் தாம் தேடிவருவதாகப் புறப்பட்டார். அந்த சமயம் பிரம்மா அவருடைய நண்பர்களையும் திருடிப்போய் விட்டார். இதையறிந்த கிருஷ்ணர் தாமே கன்றுகளாகவும், இடை சிறுவர்களாகவும் மாறி சிறிது காலம் கோகுலத்தில் இருந்து வந்தார். இதையறிந்த பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை அறிந்து கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டு கோபாலர் களையும் கன்றுகளையும் திருப்பிக் கொடுத்தார். சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பிரம்மா கயிலை வரும்பொழுது, முருகனை வணங்க தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து யார் என வினவெழுப்பிய பொழுது, தான் பிரணவ மந்திரத்தினை கூறி படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைச்செய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிடமிருந்து பிரம்மாவிற்கு படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தல வரலாறு கூறுகிறது. அத்திரி முனிவரின் மனைவியான அனுசுயா கற்புக்கரசியாக திகழ்ந்தாள். அவளுடைய கற்பினைப் பற்றி மும்மூர்த்திகளிடமும் நாரதம் முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அவளை சோதிக்க துறவிகள் வேடத்தில் அனுசுயா குடிலுக்கு வந்தனர். துறவிகளை வரவேற்ற அனுசுயா, அவர்களுக்கு உணவினை தந்தாள். அதனை ஏற்காத மூன்றுதுறவிகளும், ஆடையில்லாமல் பெண்தருகின்ற உணவினையே ஏற்பதாக கூறினர். இதனைக் கேட்டு அனுசுயா திகைத்தாள். தன்னுடைய கற்புநெறியின் காரணமாக வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அறிந்தாள். அவர்களை குழந்தைகளாக்கி தான் தாயாக உணவமுதம் படைத்திட்டாள். முப்பெரும்தேவியர்கள் அனுசுயாவினை வணங்கி தங்களுடைய கணவன்களை திருப்பிதருமாறு கேட்டனர். மும்மூர்த்திகளுக்கும் பழைய உருவம் கொடுத்த அனுசுயாவிற்கும், அவளது கணவர் அத்திரி முனிக்கும் மூவரும் ஒருவராக இணைந்து காட்சியளித்தனர். இந்த மூர்த்தி தாணுமாலயன் எனப்படுகிறார். பிரம்ம புராணத்தின் படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி, பூமியையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் ஆகியவற்றை பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர், சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர்(அ) மானவர் என்றும் பெயர் வந்ததாக கூறுவர். மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். தேவலோகத்தில் ஆயிரம் அழகிகள் இருந்தும், நிகும்பன் என்ற அரக்க மன்னனின் மகன்களான சுந்தன், உபசுந்தன் ஆகியோரைக் கொல்ல, திலோத்தமை என்ற அழகியை பிரம்மா படைத்தார். அதனால் திலோத்தமையை அடைய முயன்று இருவரும் இறந்தார்கள். இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை பரவலாக அறியப்பட்டுள்ளது. இக்கதை இராமாயணத்தில் வருகிறது. இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாஸ்திரம் கருதப்பெறுகிறது. இந்த அஸ்திரத்தினை பிரம்மாவை நோக்கி தவமிருந்து அரக்கர்களும், தேவர்களும் பெற்றுக் கொள்வதாகவும், மந்திரத்தினை உச்சரித்து, பிரம்மாஸ்திரம் எய்துவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்காலக்கணிப்பின் படி, ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக கருதப்பெறுகிறது. மகாபுராணங்களான பதினெட்டு புராணங்களில் பிரம்மாவினை புகழ்ந்துரைப்பவை ராஜசிக புராணம் எனப்படுகின்றன. இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன. கடவுள் அல்லது பிரம்மம் குறித்த நிலைப்பாட்டை புத்தர் காலத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னாட்களில் புத்தரின் அவதாரங்களாக சில இந்துக் கடவுளர்கள் தேவதைகளாக வழிபட்டனர். அத்தேவர்களில் பிரம்மாவும் ஒருவர். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த கோயில்களில் பிரம்மாவிற்கு தனிச் சன்னதிகள் அமைத்து வழிபடுகிறார்கள். திறந்த ஆவண வடிவம் திறந்த ஆவண வடிவம் (OpenDocument Format/ ODF) என்பது, அலுவலகப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் ஆவணங்களான உரைக்கோப்புக்கள், விரிதாட்கள், அளிக்கைகள் போன்றனவற்றை சேமிக்கவும் பரிமாறவும் பயன்படுத்தப்படும் ஆவண வடிவமாகும் ( File Format) . இது ஓப்பன் ஆபீஸ் மென்பொருள் செயற்றிட்டத்தினரால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட XML ஐ அடிப்படையாக கொண்ட ஆவண வடிவத்திலிருந்து விருத்தி செய்யப்பட்டது. இவ்வடிவம் 2005 ம் ஆண்டு மே 1 இல் OASIS நிறுவனத்தால் நியமப்படுத்தப்பட்டது. இவ் ஆவண வடிவத்தின் மூல நிரல்கள் திறந்த ஆணைமூலமாக அமைவதோடு, இவ்வாவண வடிவத்தை எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி எவரும் பயன்படுத்த முடியும். இவ்வடிவத்தில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனத்திலும் தங்கியிருக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் பொதுவான, தளைகள் அற்ற, திறந்த ஆவண வடிவம் ஒன்றின் தேவை கருதி, OASIS என்கிற அமைப்பு இவ்வாவணத்தை உருவாக்கி அளித்துள்ளது. ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் மூடிய, உரிமச்சிக்கல்கள் உள்ள ஆவண வடிவங்களான மைக்ரோசொஃப்ட்அலுவலக ஆவண வடிவங்கள் (.doc, .rtf, .xls .ppt) pdf, ஏனைய தனியார் ஆவண வடிவங்கள், பயனர்களினதும், தொழிநுட்பத்தினதும் சுதந்திரத்தை பறிப்பதுடன், இலாப, மேலாதிக்க நோக்கங்களுக்காக தொழிநுட்ப வளர்ச்சி, சுதந்திரம் என்பவற்றுக்கு எதிராக செயல்படுவதாக தொழிநுட்பவியல் விமர்சகர்களும், சிந்தனையாளர்களும் நம்புகின்றனர். இக்காரணத்தினாலேயே, மாற்றுவடிவமான திறந்த ஆவண வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நியமத்தில் வெவ்வேறு வகையான ஆவணங்களை கையாள்வதற்கு அவற்றுக்கேயுரிய சிறப்பான கோப்பு அமைப்புக்கள் உண்டு. இத்துணை அமைப்புக்கள் அனைத்தும் திறந்த ஆவண வடிவ நியமத்தினுள் அடங்கும். சேரன் (கவிஞர்) உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன். 1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர், இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளவர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுபத்திரன் சுபத்திரன் (ஏப்ரல் 16, 1935 - அக்டோபர் 30, 1979, மட்டக்களப்பு) இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில், தன்னை முற்போக்கு இலக்கிய கவிஞராக அடையாளப்படுத்திக்கொண்ட கவிஞர் இவர். தங்கவடிவேல் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். தகப்பனார் பெயர் கந்தையா, தாயார் தெய்வானைப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்றுப் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். ஆரம்பத்தில் கொழும்பிலும் பின்னர் மட்டக்களப்பிலும் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். சுபத்திரனுடைய இலக்கிய ஆளுமை அவரை மட்டக்களப்பின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக ஆக்கியது. சாதி, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து அதன் போராட்டங்களில் தானும் ஒரு பங்காளியாக நின்று உழைத்தார். இந்தியாவில் இருந்து மட்டக்களப்பில் தங்கியிருந்த கிருஷ்ணர் குட்டியின் நட்பு சுபத்திரனுக்குக் கிடைத்தது. அவரின் உந்துதலால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மார்க்சிய சித்தாந்தங்களின் மூலம் அடக்குமுறைக்கெதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வைப் பெற்றார். தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து நின்று கவிதைகளைப் படைத்தார். `இரத்தக்கடன்' (சாதியத்திற்கு எதிரான கவிதைத் தொகுப்பு), `சுபத்திரன் கவிதைகள்' அதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு `கவிஞர் சுபத்திரன் கவிதைகள்' வெளிவந்தன. ஒடுக்குமுறைக்கெதிராக - ஆத்திரம், கோபம், கிண்டல் என்பவற்றை முன்னிறுத்திக் கவிதைகளை யார்த்தார். கருத்து நிலையில் ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்து எழுகின்றார். வெகுஜனப் போராட்டங்களில் உத்வேகத்துடன் ஈடுபட்டார். வன்முறைக்கு வன்முறை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மார்க்சிய எண்ணம் கொண்ட சுபத்திரன் ஆயுதப் புரட்சியை ஆதரித்தார். மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வெகுஜனப் போராட்டங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு அவற்றின் தாக்கத்தால் பல கவிதைகளை எழுதினார். 1969 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற `தீண்டாமை ஒழிப்பு வெகுஜன மகாநாட்டில்' வைத்து முழுக்க முழுக்க சாதிய எதிர்ப்புக் கவிதைகள் அடங்கிய சுபத்திரனின் `இரத்தக் கடன்' என்னும் கவிதைத்தொகுதி வெளியிட்டு வைக்கப்பட்டது. சுபத்திரன் ஏற்றுக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தமே இதற்குக் காரணமாக அமைந்தது. சொல்லிலும் செயலிலும் பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து காட்டினார். தான் இணைந்திருந்த கொம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள போலி இடதுசாரிகளுக்கு எதிராக அவருடைய அரசியல் கவிதைகள் 1970 களில் வெளிவருவதைக் காணலாம். சுபத்திரன் 1979 இல் அகால மரணமாகும் வரை கவிதைகளை எழுதினார். கொம்யூனிஸ்டாகவே இறக்கும் வரை பற்றுறுதியுடன் இருந்தார். ஜெனீவா உடன்படிக்கை "ஜெனீவா உடன்படிக்கை"' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறது இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற் (Jean Henri Dunant) இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது. ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும். இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது. உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது "கல்லறை மீறப்படுதல்"(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும். நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா ("Nelson Rolihlahla Mandela", 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தியதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார். அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார். அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர். தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றிக் கண்டார். 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்பிவில் நகரில் நடத்தினார். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு திசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். 1961 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார். 1961, திசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை சூலை, 2008 வரை நடைமுறையில் இருந்தது. 1962, ஆகத்து 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress) தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் "ரிவோனியா செயற்பாடு" (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு சூன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார். மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா தனது கோரிக்கைகள் தொடர்பாக டெக்ளார்க் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்து தனது பல கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டார். தென்னாப்பிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்தன. அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.. 1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்..விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே பெப்ரவரி 11, 1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலைச் செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:- 1994, மே 10 ஆம் தியதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனப்பின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடுச் செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். நீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 சூன் மாதம் 8 ஆம் தியதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 சூன் 23 ஆம் தியதி அறிவித்தது. மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 சூன் 27 ஆம் தியதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை இரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர். 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார். உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது. ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார். நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிமேற்கோள் விக்கி மேற்கோள் (Wikiquote), விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களஞ்சியமாகும். இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது. நகராக்கம் நகர்ப்புறத் (urban) தன்மையின் அளவு அல்லது அதன் அதிகரிப்பு நகராக்கம் எனப்படுகின்றது. இது ஒரு குறிக்கப்பட்ட பகுதி குறைந்த நகர்ப்புற இயல்பைக் கொண்டிருந்து கூடிய நகர்ப்புற இயல்புடையதாக மாற்றம் பெறுவதைக் குறிக்கும் அதே நேரம், கூடிய நாட்டுப்புறத் (rural) தன்மைகளைக் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதி ஒரு நகர்ப்புறப் பகுதியுடன் இணக்கப்படுவதன் மூலம் நகர்ப்புறமாகக் கருதப்படுவதையும் குறிக்கும். பொதுவாக நகராக்கத்தை அளவிடும்போது மொத்தக் குடித்தொகையின் எத்தனை விழுக்காடு நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகின்றனர் என்று குறிப்பிடப் படுகின்றது. உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 2050 ஆம் ஆண்டில் நகரமயமாதலால் நகரங்களில் வசிப்பர் என ஒரு நிபுனர்க்குழு ஆராய்ச்சி கூறுகிறது. பைஞ்சுதை பைஞ்சுதை (அ) சீமந்துக் கொங்கிறீற்று (அ) கற்காரை ("Concrete"; "காங்கிரிட்") என்பது சிமெண்ட், நுண் சேர்பொருள், பருமனான சேர்பொருள், நீர் மற்றும் பிற மூலப் பொருட்களைக் கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடபொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது மணலையும், பருமனான சேர்பொருள் என்பது சரளை அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது. காங்கிரிட் உடன் நீரை சேர்க்கும் போது வேதிவினையின் காரணமாக அது திடப்பொருளாகவும் மற்றும் கடினத்தன்மை உடையதாகவும் மாறுகின்றது. http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Voc-DC-TM.pdf http://www.valaitamil.com/tho-paramasivam-culture-life_12160.html http://tamildictionary.org/english_tamil.php?id=12502 வ. அ. இராசரத்தினம் வ. அ. இராசரத்தினம் (பி. ஜூன் 5, 1925, மூதூர்) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக "வ. அ." என அறியப்படுபவர். "ஈழநாகன்", "கீழக்கரை தேவநேயப் பாவாணர்", "வியாகேச தேசிகர்" என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். மூதூர், திருக்கோணமலையைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார். 1946 இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது "மழையால் இழந்த காதல்" என்ற சிறுகதையை எழுதினார். இது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து அ. செ. முருகானந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "எரிமலை" என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார். பெரு வெடிப்புக் கோட்பாடு பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே. பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருள்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருள்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை. இந்தப் பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்குப் பல முந்து கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து ஒண்முகில்களும் (இவை விண்மீன் பேரடைகள் அல்ல. விண்மீன் உருவாக்கத்துக்கான ஒளிவிடும் வளிம முகில்களே. அக்காலத்தில் நெபுலா என்பது விண்மீன் பேரடைகளையே குறித்தது. இப்போது இவை ஒண்முகில்கள் எனப்படுகின்றன) தொலைவாக நகர்ந்து செல்கின்றன என்பதை டாப்ளர் விளைவு மூலம் அறிந்தார். ஆனால் இவர் நமது பால் வழியின் உள்ளே உள்ள ஒண்முகில்களுக்கு மட்டுமே இந்த நிலைமையைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து பிரீடுமன் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார். அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார். அதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிகப் பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டுமென் சமன்பாட்டைத் தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களைக் கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன எனக் கண்டறிந்தார். விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார். அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால்வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால்வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார். விண்மீன் பேரடைகளுக்கான நகர்வைக் கணிக்கும் போது அப்பேரடை பால்வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும் ஆய்வுக்கருவியில் வரும். ஆனால் இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும்போது எல்லாப் பேரடைகளுமே கருவியில் சிவப்பு நிறத்தையே காட்டின. அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே உப்புகிறது என்னும் உப்பற் கோட்பாட்டை முன் வைத்தார். இதன்படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும். அந்த அனைத்துப் பொருள்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும். அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்துப் பெருவெடிப்புக்குக் காரணமானது என முடிவுக்கு வந்தார். பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே "பெரு வெடிப்பு" (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது. பெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது. கோட்பிரீடு இலைப்னிசு ஒரு கேள்வியை எழுப்பிப் பேசுகிறார்: ""இன்மைக்கு மாற்றாக, ஏன் ஏதோவொன்று இருக்க வேண்டும்? தன் இருப்பிற்கான காரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பொருளின் இருப்பே இதற்கான போதுமான அறிவார்ந்த பதிலைத் தரும்." " இயற்பியல் மெய்யியலாளராகிய டீன் இரிக்கிள்சு எண்களும் கணிதவியலும் அவற்றோடு அவற்றைச் சார்ந்த விதிகளும் கட்டாயமாக இருக்கின்றன என்கிறார். பெரு வெடிப்பின் தொடக்கத்தில் ஏற்பட்ட குவைய அலைவுகளோ அல்லது பிற இயற்பியல் விதிகளோ, பொருண்மம் தோன்றுதலுக்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம். கருப்பு ஆற்றலைக் கண்டுபிடிப்பதற்கு முன், புடவியின்வருங்காலம் பற்றி அண்டவியலாளர்கள் இருவகைக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். புடவியின் பொருண்மை அடர்த்தி, உய்யநிலைப் பொருண்மை அடர்த்தியை விட கூடுதலாக அமைந்தால், அப்போது புடவி தன் பெரும உருவளவை அடைந்ததும் குலைய தொடங்கும். மீண்டும் அது மேலும் அடர்ந்து மேலும் வெப்பம் கூடித் தொடக்கத்தில் இருந்த நிலைமைக்குச் செல்லும். இந்நிகழ்வு பெருங் குறுக்கம் எனப்படுகிறது. புடவித் தோற்றத்தின் விளக்கமாக அமையும் பெரு வெடிப்புக் கோட்பாடு சமயத்திலும் மெய்யியலிலும் கணிசமான இடத்தை வகிக்கிறது. இதனால், இது சமய அறிவியல் உறவு பற்றிய விவாதத்தில் உயிர்ப்புள்ள பகுதியாக விளங்குகிறது.சிலர் பெரு வெடிப்பு படைப்போன் இருப்பினைக் காட்டுகிறது என வாதிடுகின்றனர். எனவே பெரு வெடிப்பைத் தங்கள் புனித நூல்களில் குறிப்பிடுகின்றனர். ஆனால் பிறரோ பெரு வெடிப்பு அண்டவியலில் படைப்போனுக்கான இடம் வெறுமையாகிறது என வாதிக்கின்றனர். அண்டம் அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள் ("cosmic dust"), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி ("empty space"), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் ("galaxy") ஆகியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும். இத்துடன் காலம் என்ற கருத்தும் அது தொடர்பான முறைமைகளும் ("laws") இதில் அடங்கும். ஒரு புதிய ஆய்வு, அண்டம் வாழ்க்கைக்கு ஏற்ற நிலையைப்பெற தேவையான அளவு வேகமாக விரிவடைந்து வருவதை உறுதிசெய்கிறது. தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது 13.73 (± 0.12) பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அண்டம் ஒரு கோள வடிவில் இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. ஆனால் அண்டத்தின் எல்லையை நம்மால் இதுவரை காண இயலவில்லை. தொலை தூரத்தில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் கதிர் வீச்சுகள் இவற்றை வைத்துக் கொண்டு நம்மால் அறிந்து கொள்ள முடிந்த அண்டத்தின் பகுதியை அறியப்பட்ட அண்டம் ("observable universe") என்று சொல்லப்படுகின்றது. இந்த அறியப்பட்ட அண்டம் ஒரு கோள வடிவில் இருப்பது இயல்பு. இக் கோளத்தின் விட்டம் 92 பில்லியன் ஒளி ஆண்டுகள் ("light years") அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது (ஓர் ஒளி ஆண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் போகின்ற தூரத்தைக் குறிக்கும். ஒளி ஒரு நொடியில் 299,792,458 மீட்டர் தூரம் போகின்றது; ஓர் ஆண்டில், 9,460,730,472,580,800 மீட்டர் போகும். எனவே, ஒரு ஒளி ஆண்டு என்பது 9,460,730,472,580,800 மீட்டர் ஆகும். 92 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்பது ஏறத்தாழ 8.80 மீட்டர் என்றாகும்). அறியப்பட்ட அண்டம் உண்மையான அண்டத்தை விட மிகச் சிறியதாக இருக்கும் எனவும் எதிர் பார்க்கலாம்; ஆனால், எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை. அண்டத்தின் வயது 13.73 பில்லியன் ஆண்டுகள் என்றால், அண்டத்தின் ஆரம் ("radius") 13.73 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது, அண்டத்தை விட மிகச் சிறிதான அறியப்பட்ட அண்டம் விட்டம் எப்படி 92 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்றாக முடியும்? விட்டத்தின் அளவு 13.73 x 2 (அதாவது, 27.46) பில்லியன் ஒளி ஆண்டுகள் என்றுதானே இருக்க வேண்டும். இது எப்படி ஆயிற்று என்பதற்கு அறிவியல் அறிஞர்கள் ஒரு விளக்கம் கூறுகிறார்கள். அண்டம் தோன்றுவதற்கு முன்பு அண்டம் ஒரு நுண்ணிய புள்ளியாக இருந்ததாகவும், பின் அது "ஒரு நாள்" திடுமென மிகப் பெரிய முழக்கத்தோடு வெடித்துச் சிதற, அதிலிருந்து இப்போது நாம் காணும் எல்லாப் பொருட்களும் (விண்மீன்கள், விண்மீன் குழுக்கள் ஆகியன) தோன்றியதென்றும் கூறுகின்றனர். தோன்றிய இப்பொருட்கள் எல்லாதிசைகளிலும் சிதறிச் சென்றன. இந்நிலையில் இரண்டு வகையான நிகழ்வுகள் நடை பெறுகின்றன: 1) தோன்றிய பொருட்கள் வெவ்வேறு திசைகளில் செல்வதால் அவற்றுக்கிடையே உள்ள இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகின்றது. ஆனால், எப்பொழுதும் ஒரு பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதால், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவும் ஒளி செல்லும் தொலைவை விட குறைவாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இரண்டு விண்மீன்கள் 5 ஆண்டுகள் இரண்டு திசைகளில் சென்று இருந்தால், அந்த விண்மீன்களுக்கு இடையேயுள்ள தொலைவு 5 ஒளி ஆண்டுகளுக்கு மேலாக இருக்க முடியாது. 'space" என்று சொல்லப்படுகின்ற வெட்ட வெளியும் ஒரு ஊது பை ("balloon") போல விரிந்துகொண்டே செல்லுகின்றது. இதனால், பொருள்களுக்கிடையே உள்ள தொலைவு இன்னும் மிகுதி அடைகின்றது. அதனால் தான், அறியப்பட்ட அண்டத்தின் விட்டம் 27.46 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக 92 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்றாகி இருக்கின்றது. அண்டம் இப்படித்தான் தோன்றி இருக்க வேண்டும் என்று இப்போது பல அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த கோட்பாட்டுக்கு "big bang theory" (பேரிடித் தோற்றக் கோட்பாடு) என்று பெயரிட்டு உள்ளனர். அண்டம் தோன்றிய போது அது மிகப் பெரிய ஆற்றலோடு ("energy") தோன்றியது. அப்போதுதான் காலம் ("time") என்ற ஒரு கோட்பாடே உருவாகியது; அதுவே காலத்தின் தொடக்கம். அப்போது அண்டத்தின் ஆற்றல் அடர்த்தி ("energy density") மிக மிக அதிகமாக இருந்தது. அண்டத்தின் இந்த நிலை 10 நொடிகள் ("seconds") நீடித்தது. அண்டம் இவ்வாறு இருந்த காலக் கட்டத்தை "Planck epoch" (ப்ளாங்க் காலக் கட்டம்) என்று கூறுவர். இந்த ப்ளாங்க் காலக் கட்டத்தில் அண்டத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது புவி ஈர்ப்பு ("gravity") என்ற விசை (force) மட்டுமே. அதற்குப் பிறகு, அண்டம் திடுமென, 10 நொடிகளில் மிகப் பெரிதாக ஆயிற்று. இந்த நிகழ்வுக்கு "cosmic inflation" (அண்ட வீக்கம்)என்று பெயர். அண்ட வீக்கம் என்ற ஒன்று உண்மையில் நடந்ததே என்று பல செய்முறை ஆய்வுகளில் ("experimental research") தெரிய வந்துள்ளது. அண்ட வீக்கத்துக்குப் பிறகு, அன்று தொடங்கி இன்று வரை அண்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஊது பை ("balloon") போன்று விரிவடைந்து கொண்டிருக்கின்றது. பல செய்முறை ஆய்வுகள் அண்டம் விரிவடைந்து கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன. அண்டத்தில் உள்ள விண்மீன் குழுக்கள் ("galaxy") மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. நமக்கு அருகில் உள்ள விண்மீன் குழுக்களை விட மிகத்தொலைவில் உள்ள குழுக்கள் மிக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றன. இது மட்டுமன்றி, இந்த விண்மீன் குழுக்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதை எட்வின் அபள் ("Edwin Powell Hubble") என்ற அமெரிக்க வானியல் ஆய்வாளர் கண்டு பிடித்தார். விண்மீன் குழுக்கள் மிக வேகமாகப் போவதைப் பார்த்துத்தான் எட்வின் அபள் நம் அண்டம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னார். விண்மீன் குழுக்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதற்குக் காரணம் என்ன? அண்டம் வெடித்துச் சிதறும் போது விண்மீன் குழுக்களின் வேகம் நாள் தோறும் குறைந்து கொண்டே போக வேண்டுமே அல்லாது வேகம் அதிகரித்துக் கொண்டு போவது ஏன்? இதற்குக் காரணம் அண்டத்தில் மறைந்து கிடக்கும் ஒருவகையான எனப்படும் மறை ஆற்றல் (கருப்பு ஆற்றல்) காரணமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பற்றி சரிவரத் தெரியாததால், அண்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு விரிவடைந்து கொண்டு போகும், இறுதியில் அதன் முடிவுதான் என்ன, என்பன போன்ற கேள்விகட்கு இன்னும் விடை கிடைக்காமலேயே இருக்கின்றது. நம் அண்டத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளையும் நான்கு அடிப்படை விசைகளை வைத்துக்கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த நான்கு அடிப்படை விசைகளாவன: பொருள் ஈர்ப்பு விசை ("gravitational force"), மின்காந்த விசை ("electromagnetic force"), மென்விசை ("weak interactions"), அணுவின் கருப் பெருவிசை ("strong nuclear force") (பார்க்க: அடிப்படை விசைகள்). இதில் அண்டத்தின் இயக்கத்தைப் பேரளவில் கட்டுப் படுத்துவது "gravitational force" எனப்படும் பொருள் ஈர்ப்பு (புவி ஈர்ப்பு) விசையே. அண்டமானது அதன் அளவு மற்றும் வரலாறு முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகளாலும் மாறிலிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என சோதனைகளும் ஆய்வுகளும் கூறுகின்றன. அண்டவியல் தொலைவில் ஈர்ப்பு விசையே முதன்மையான விசையாகும், மேலும் தற்போது பொது சார்பு கொள்கையே புவியீர்ப்புக் கோட்பாடுகளுக்கான மிகத்துல்லியமானது ஆகும். மீதமுள்ள மூன்று அடிப்படை விசைகள் மற்றும் அவ்விசைகள் செயல்படும், அறியப்பட்ட அனைத்துத் துகள்கள் ஆகியவை தரநிலை மாதிரியின் மூலம் விவரிக்கப்படுகின்றன. அண்டமானது, குறைந்தபட்சம், வெளியின் மூன்று பரிமாணங்களையும் காலத்தின் ஒரு பரிமாணத்தையும் கொண்டுள்ளது, இருந்தபோதிலும் மிகச்சிறிய கூடுதல் பரிமாணங்களையும் கருத்தில் கொள்ளாமல் விட இயலாது. காலவெளி அமைப்பு, மென்மையாகவும் எளிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தோன்றுகிறது. விண்வெளி மிகச்சிறிய சராசரியான வளைவைக் கொண்டுள்ளது. ஆகவே அண்டம் முழுமைக்குமான "சராசரியை" யூக்ளிடியன் வடிவவியல் துல்லியமாகக் கணக்கிடுகிறது. மாறாக, குவாண்டம் அளவில் காலவெளி அமைப்பு மிகவும் சீரற்றதாக உள்ளது. "அண்டம்" என்ற சொல்லானது, பொதுவாக அனைத்தையும் கொண்டுள்ளது என்று வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், மாறுபட்ட வரையறையைப் பயன்படுத்தி, "அண்டம்" என்பது மொத்தமாக பல்லண்டம் என்று அழைக்கப்படும் பல தொடர்பற்ற "அண்டங்களில்" ஒன்று என நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குமிழ் அண்டக் கொள்கையில், எண்ணிலா வெவ்வேறுவிதமான "அண்டங்கள்" உள்ளன, அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட இயற்பியல் மாறிலிகளைக் கொண்டிருக்கின்றன. இதேபோல், பல உலகங்கள் கருதுகோளில், ஒவ்வொரு குவாண்டம் அளவீட்டிலும் புதிய "அண்டங்கள்" தோற்றுவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அண்டங்கள் நமது அண்டத்திலிருந்து முழுமையாக தொடர்பில்லாமல் இருப்பதாகக் கருதப்படுவதால், அவற்றை சோதனையின் மூலம் கண்டறிய இயலாது. பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும், சில அண்டவியல்கள் மற்றும் அண்டவியலாளர்கள் அண்டம் பற்றிய கருத்துக்களைக் கூற முயன்று வந்துள்ளனர். முந்தைய அளவுசார்ந்த புவிமைய மாதிரிகளை பண்டைய கிரேக்கர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் அண்டமானது முடிவிலா வெளியை எப்போதும் கொண்டிருக்கிறது, ஆனால் ஒரு பொதுமையம் கொண்ட அளவிடமுடிந்த கோளங்களை உள்ளடக்கியது எனவும் – நிலையான நட்சத்திரங்களைப் பொறுத்து சூரியன் மற்றும் பல்வேறு கோள்கள் – சுற்றி வருகின்றன ஆனால் பூமி நிலையானது, நகராமல் உள்ளது எனவும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக, மேலும் துல்லியமான ஆய்வுகளும் மேம்படுத்தப்பட்ட புவியீர்ப்புக் கொள்கைகளும் வந்ததன் காரணமாக, முறையே கோபர்நிக்கஸின் சூரியமைய மாதிரியும் நியூட்டனின் சூரியக்குடும்ப மாதிரியும் உருவாகின. வானவியலில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் பால்வழித்திரளின் பண்புரு விளக்கத்திற்கும், விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்புக்கும் மேலும் நுண்ணலை பின்புலக் கதிரியக்கத்திற்கும் வழிகோளியது; விண்மீன் திரள்கள் மற்றும் அவற்றின் நிறமாலை வரிகளின் பரவல் பங்கீடு பற்றிய கவனமான ஆய்வுகள் நவீன அண்டவியல் வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியது. "யுனிவெர்ஸ்" என்ற ஆங்கிலச் சொல்லானது பழைய ஃப்ரெஞ்சு சொல்லான "யுனிவெர்ஸ்" என்பதிலிருந்து வருகிறது, மேலும் இந்த ஃப்ரெஞ்சு சொல்லானது இலத்தீன் சொல்லான "யுனிவெர்ஸம்" என்ற சொல்லிலிருந்து உருவாகியுள்ளது. இந்த இலத்தீன் சொல்லானது சைசுரோ மற்றும் பின்னர் பல ஆசிரியர்களால் தற்கால ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படும் அதே பொருளில் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலத்தீன் சொல்லானது செய்யுள் சேர்ப்பான "யுன்வோர்ஸம்" என்பதிலிருந்து உருவாகியுள்ளது — இச்சொல் லுக்ரிடியஸ் என்பவரின் "De rerum natura" ("பொருட்களின் இயல்பு பற்றி" ) என்ற புத்தகத்தின் தொகுதி IV (வரி 262) இல் பயன்படுத்தப்பட்டுள்ளது — இது "யுன், யூனி" ("யூனுஸ்" அல்லது "ஒன்" ஆகிய சொற்களின் சேர்ப்பு வடிவம்) ஆகிய சொற்களையும் "வோர்ஸம், வெர்ஸம்" ("சுழலும், உருளும், மாறும் ஒன்று எனப் பொருள்படும்" "வெர்டெர்" என்ற சொல்லின் இறந்தகாலப் பெயரடைச் செயப்பாட்டு வினை) என்ற சொற்களையும் இணைக்கிறது. லுக்ரீஷஸ் இந்தச் சொல்லை "ஒன்றாகச் சுழலும் அனைத்தும், ஒன்றாகச் சேர்ந்த அனைத்தும்" என்ற பொருளில் பயன்படுத்தினார். "யுன்வோர்ஸம்" என்ற சொல்லுக்கு மாற்றுப் பொருள் புரிதல், "ஒன்றாக சுழலும் அனைத்தும்" அல்லது "ஒன்றால் சுழற்றப்படும் அனைத்தும்" என்பதாகும். இந்தப் பொருளில், அண்டம் என்ற பொருள் தரும் முந்தைய கிரேக்கச் சொல்லான περιφορα என்பதன் "வட்டத்தில் பயணிக்கும் ஒன்று" என்ற மொழிபெயர்ப்பைக் கருதலாம், உண்மையில் இது உணவு உட்கொள்ளும் நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது, அதாவது உணவு உண்ண அமர்ந்திருக்கும் விருந்தினர்களிடையே வட்ட வடிவில் உணவானது எடுத்துச் செல்லப்படுவதைக் குறிக்கப் பயன்பட்டது. இந்தக் கிரேக்கச் சொல்லானது அண்டத்தின் பண்டைய கிரேக்க மாதிரி ஒன்றைக் குறிக்கிறது. இந்த மாதிரியின் படி அனைத்துப் பொருள்களும் பூமியை மையமாகக் கொண்ட சுழலும் கோளங்களில் உள்ளன எனக் கருதப்பட்டது; அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, வெளியில் இருக்கும் கோளத்தின் சுழற்சியே உள்ளிருக்கும் அனைத்தின் சுழற்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாக உள்ளது. பூமி நிலையாகவும் சொர்க்கங்கள் பூமியைச் சுற்றி வருவதாகவும் கிரேக்கர்கள் நம்பியது இயல்பானதே, ஏனெனில் அப்படி இல்லை என்பதை நிரூபிக்க கவனமிக்க விண்வெளி மற்றும் இயற்பியல் அளவீடுகள் (ஃபோகால்ட் பெண்டுலம் போன்றவை) தேவைப்பட்டன. "யுனிவெர்ஸ்" என்ற சொல்லுக்கு, பழம் கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் பித்தாகோரஸிலிருந்து தொடர்ந்து பலர் பயன்படுத்திய சொல், το παν (அனைத்தும்) என்பதாகும், இது அனைத்துப் பொருட்கள் (το ολον) மற்றும் அனைத்து வெளி (το κενον) ஆகியவற்றைக் குறிக்கிறது. பழம் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் கருத்துப்படி, யுனிவெர்ஸ் என்ற சொல்லின் பொருள்களில் κοσμος (உலகம், அகிலம் எனப் பொருள்படும்) மற்றும் ஃபிஸிக்ஸ் என்ற சொல்லின் வேர்ச்சொல்லான φυσις (இயற்கை எனப் பொருள்படும்) ஆகியன அடங்கும். இதே பொருள் இலத்தீன் ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர் ("டாட்டம்", "முண்டுஸ்", "நேச்சுரா" ), மேலும் அண்டம் என்ற சொல்லுக்கான பொருள் கொண்ட சொற்கள் தற்கால மொழிகளிலும் உள்ளன, எ.கா., ஜெர்மன் மொழியிலுள்ள "டாஸ் ஆல்", "வெல்டால்" மற்றும் "நேச்சுர்" ஆகியன. எவெரிதிங் ("theory of everything" என்பதில் உள்ளதைப் போல), காஸ்மோஸ் ("cosmology" என்பதில் உள்ளதைப் போல), வேர்ல்ட் ("many-worlds hypothesis" என்பதில் உள்ளதைப் போல) மற்றும் நேச்சுர் (natural laws அல்லது natural philosophy என்பதில் உள்ளதைப் போல) போன்ற, இதே பொருள் கொண்ட சொற்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. அண்டத்தைப் பற்றிய பரந்த வரையறை, இடைக்கால தத்துவ அறிஞர் ஜொஹான்னெஸ் ஸ்காட்டஸ் எர்யுஜெனா என்பவரின் "De divisione naturae" என்ற பிரபலமான புத்தகத்தில் காணப்படுகிறது, அவர் அதை, அனைத்தும் என வரையறுக்கிறார்: இருக்கும் அனைத்தும் மற்றும் இல்லாத அனைத்தும். எர்யுஜெனாவின் வரையறையில் காலம் கருத்தில் கொள்ளப்படவில்லை; எனவே அவரது வரையறையில், இப்போது இருக்கும் அனைத்தும், இதுவரை இருந்த அனைத்தும் மற்றும் இனி இருக்கப்போகும் அனைத்தும் மற்றும் அதே போல, இப்போது இல்லாத அனைத்தும், இதுவரை இல்லாத அனைத்தும் மற்றும் இனி எதிர்காலத்திலும் இல்லாதவை அனைத்தும் என அனைத்தும் அடங்கும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வரையறையை, பின்னாளில் வந்த தத்துவ அறிஞர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் முழுவதும் வேறுபடாத ஒன்று குவாண்டம் இயற்பியலில் மீண்டும் உருவானது, அது பெரும்பாலும் ஃபெய்மெனின் பாதை-தொகுப்பு சமன்பாட்டில் உள்ளதாகும். அந்தச் சமன்பாட்டின் படி, அமைப்பின் தொடக்க நிலை முழுமையாக வரையறுக்கப்பட்ட நிலையில் நிகழ்த்தப்படும் சோதனைகளின் பல முடிவுகளின் நிகழ்தகவு வீச்சுகளானது, அந்த அமைப்பானது தொடக்க நிலையிலிருந்து இறுதி நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ள அனைத்துப் பாதைகளின் கூடுதலால் நிர்ணயிக்கப்படுகிறது. இயல்பாக, ஒரு சோதனைக்கு ஒரு முடிவே இருக்க முடியும்; வேறு விதமாகக் கூறுவதானால், இந்த அண்டத்தில் அலைச் சார்பின் தொகுப்பு எனப்படும் குவாண்டம் அளவீட்டின் மூலம் உண்மையான ஒரு முடிவே கிடைக்கச் சாத்தியக்கூறுள்ளது (ஆனால் கீழே பல்லண்டம் பகுதியில் உள்ள பல உலகங்கள் கருதுகோள் என்பதைப் பார்க்கவும்). நன்கு வரையறுக்கப்பட்ட இந்தக் கணித விளக்கப்படி, இல்லாத ஒன்றும் கூட (சாத்தியக்கூறுள்ள அனைத்துப் பாதைகள்) இறுதியில் என்ன இருக்கும் (சோதனையின் முடிவு) என்பதைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பிடும்படியான எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு எலக்ட்ரானும் மற்ற அனைத்து எலக்ட்ரான்களுடன் உள்ளார்ந்தப் பண்பில் ஒத்தவையாக உள்ளன; இதனால், சமச்சீர் பரிமாற்றம் எனப்படுகின்ற, அவை தங்கள் நிலையைப் பரிமாறிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டே நிகழ்தகவு வீச்சுகள் கணக்கிடப்பட வேண்டும். அண்டம் பற்றிய இக்கருத்து, இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் ஒருங்கே முன்வைக்கிறது, இது புத்த மதத்தின் தத்துவங்களான ஷூன்யத்தா, மெய்ம்மையின் சார்பற்ற உருவாக்கம், காட்ஃப்ரைட் லெய்ப்னிஸின் தற்செயல் நிகழ்வு மற்றும் உணர முடியாதவற்றின் அடையாளம் போன்ற நவீனக் கருத்துக்களுக்கும் இணையாக உள்ளது. பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தின் படி, அண்டம் என்பது இருக்கும், இருந்த மற்றும் இருக்கப் போகும் அனைத்தையும் உள்ளடக்கியது என வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறை மற்றும் நமது தற்காலப் புரிதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அண்டமானது பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது: வெளி மற்றும் காலம், இரண்டும் சேர்த்து கால-வெளி அல்லது வெற்றிடம் என அழைக்கப்படும்; பருப்பொருள் மற்றும் ஆற்றலின் பல வடிவங்கள் மற்றும் கால-வெளியை நிரப்பிக்கொள்ளும் உந்தம்; மற்றும் முதல் இரண்டையும் நிர்வகிக்கும் இயற்பியல் விதிகள். இந்தக் கூறுகளை பின்னர் கீழே உள்ள பகுதிகளில் விளக்கமாகக் காணலாம். "அண்டம்" என்ற சொல்லின் மற்றொரு தொடர்புடைய வரையறை, தற்போது என்பது போன்ற அண்டவியல் காலத்தின், ஒரு கணத்தில் இருக்கும் அனைத்துமாகும், அதாவது "அண்டம் இப்போது மைக்ரோ அலைகள் கதிர்வீச்சில் சீராகக் குளித்தது" என்ற சொற்றொடரில் உள்ளதைப் போன்று. அண்டத்தின் முன்று கூறுகளும் (காலவெளி, பருப்பொருள்-ஆற்றல் மற்றும் இயற்பியல் விதிகள் ஆகியவை) ஓரளவு அரிஸ்டாட்டில் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. அரிஸ்டாட்டிலின் "The Physics" ("பிசிக்ஸ்" என்ற சொல்லை நாம் பெற்றது Φυσικης என்னும் இந்தச் சொல்லிலிருந்தே) என்ற புத்தகத்தில், அவர் το παν ஐ (அனைத்தையும்) ஒத்த மூன்று கூறுகளாகப் பிரித்துள்ளார் அவை: "பருப்பொருள்" (அண்டம் உருவாக்கப்பட்டிருக்கும் பொருள்), "வடிவம்" (வெளியில் அந்தப் பருப்பொருளின் அமைப்பு) மற்றும் "மாற்றம்" (பருப்பொருளானது எவ்வாறு உருவாகிறது, அழிக்கப்படுகிறது அல்லது அதன் குணங்கள் எவ்வாறு மாறுகிறது மற்றும் அதேபோல் வடிவமானது எவ்வாறு மாற்றப்படுகிறது). இயற்பியல் விதிகள் எனப்படுபவை, பருப்பொருளின் பண்புகள், வடிவம் மற்றும் அவற்றின் மாற்றங்களை நிர்வகிக்கும் விதிகள் என அறியப்படுகின்றன. பிற்கால தத்துவ அறிஞர்களான லுக்ரிடியஸ், அவரோயீஸ், அவிசென்னா மற்றும் பேரக் ஸ்பினோஸா போன்றோர், இந்தப் பகுப்பை மாற்றியமைத்தார்கள் அல்லது சீர்ப்படுத்தினார்கள்; எடுத்துக்காட்டாக, அவரோயீஸும் ஸ்பினோஸாவும் "நேச்சுரா நேச்சுரன்ஸ்" (அண்டத்தை நிர்வகிக்கும் தற்போதைய கொள்கைகளை) முந்தைய செயலிலாக் கூறுகளின்மீது செயல்படும் "நேச்சுரா நேச்சுராட்டா" எனப்படும் கூறுகளை வேறுபடுத்தினர். இருக்கின்ற, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள முடியாத, தொடர்பில்லாத கால-வெளிகளைக் கருதுவது சாத்தியமானதே. எளிதான உருவகப்படுத்தலுக்கு, தனித்தனி சோப்புக் குமிழ்களின் தொகுப்பைக் கருதுவது எளிதாகும், இதில் ஒரு சோப்புக் குமிழின் மேல் இருக்கும் பார்வையாளரால் பிற குமிழ்களின் மீது இருக்கும் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது, கொள்கையளவிலும் கூட. ஒரு பொதுவான சொல்லியலின் படி, கால-வெளியின் ஒவ்வொரு "சோப்புக் குமிழும்" ஒரு அண்டமாகக் குறிக்கப்படுகிறது, இதில் நமது குறிப்பிட்ட கால-வெளியானது "அண்டம்" எனக் குறிக்கப்படுகிறது, இது நாம் நமது நிலாவை "நிலா" என அழைப்பது போலவே. இந்தத் தனித்தனி கால-வெளிகளின் மொத்தத் தொகுதியானது பல்லண்டம் எனக் குறிக்கப்படுகிறது. கொள்கையின் படி, தொடர்பில்லாத பிற அண்டங்கள் கால-வெளியின் வேறுபட்ட பரிமாணவியல்களையும் பிரதேசவியல்களையும், பருப்பொருள் மற்றும் ஆற்றலின் பல்வேறு வடிவங்களையும் மற்றும் வேறுபட்ட இயற்பியல் விதிகளையும் மற்றும் இயற்பியல் மாறிலிகளையும் கொண்டிருக்கலாம், எனினும் இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது உண்மையின் அடிப்படையில் இல்லை. இன்னுமொரு கட்டுப்படுத்தப்பட்ட வரையறையின் படி, அண்டம் என்பது நமது இணைக்கப்பட்ட கால-வெளியில் உள்ள அனைத்துமாகும், இதில் அதுவும் நாமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள முடியும். பொது சார்பு கொள்கையின் படி, வெளியின் சில பகுதிகள் நமது பகுதிகளுடன் அண்டத்தின் ஆயுள் முழுவதிலும் கூட எப்போதும் தொடர்பு கொள்வதில்லை, இதற்கு வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகமும் தொடர்ச்சியாக நிகழும் வெளியின் விரிவாக்கமுமே காரணம். எடுத்துக்காட்டுக்கு, அண்டமானது எப்போதும் அழியாமல் இருந்தாலும் கூட, பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ செய்திகள் வெளியின் சில பகுதிகளை ஒருபோதும் அடையாது; ஒளியானது வெளியில் பயணிக்கும் வேகத்தை விட மிக அதிகமான வேகத்தில், வெளியானது விரிந்துகொண்டே இருக்கலாம். இங்கு, வெளியின் அந்தக் குறிப்பிட்ட பகுதிகள் இருப்பவையாகவும் மேலும் நமது இருப்பைப் போலவே உண்மையாகவே இருப்பதன் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்; ஆனாலும் நாம் அவற்றோடு என்றும் தொடர்பு கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியில், நம்மால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் நம்மைப் பாதிக்கக்கூடிய பகுதியே காணக்கூடிய அண்டம் எனக் குறிக்கப்படுகிறது. சரியாகக் கூறினால், காணக்கூடிய அண்டமானது பார்வையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்தது. பயணிக்கும் ஒரு பார்வையாளர், நிலையாக இருக்கும் பார்வையாளரை விட அதிகமான கால-வெளிப் பகுதியோடு தொடர்பு கொள்கிறார், இதனால் பயணிப்பவர் காணக்கூடிய அண்டமானது நிலையானவர் காணக்கூடிய அண்டத்தை விடப் பெரியதாக இருக்கும். இருப்பினும், அதி வேகமாகப் பயணிக்கும் பயணரால் கூட வெளியின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடர்பு கொள்ள முடியாது. உண்மையில், காணக்கூடிய அண்டம் என்பது நமது பால்வெளி விண்மீன் திரளில் உள்ள, காண்பதற்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து நம்மால் அறியக்கூடிய அண்டத்தையே குறிக்கிறது. அண்டமானது மிகப் பெரியதும் அளவில் முடிவிலாததுமாகும்; நாம் காணக்கூடிய பருப்பொருளானது குறைந்தபட்சம் 93 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிற்குப் பரவியுள்ளன. இதனுடன் ஒப்பிடுகையில், ஒரு சராசரி விண்மீன் திரளின் விட்டம் வெறும் 30,000 ஒளியாண்டுகளே, மேலும் அடுத்தடுத்துள்ள உள்ள இரு விண்மீன் திரள்களுக்கிடையே உள்ள தொலைவு வெறும் 3 மில்லியன் ஒளியாண்டுகளே. எடுத்துக்காட்டில் உள்ளது போல நமது பால்வழித் திரளானது தோராயமாக 100,000 ஒளியாண்டுகள் விட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் நமது அருகாமையிலுள்ள விண்மீன் திரளான ஆந்திரோமெடா விண்மீன் திரளானது, தோராயமாக நமது விண்மீன் திரளிலிருந்து 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நமது காணக்கூடிய அண்டத்தில், தோராயமாக 100 பில்லியன் (10) விண்மீன் திரள்கள் உள்ளன . இவற்றில், தோராயமாக பத்து மில்லியன் (10) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் குள்ளர்கள் எனப்படும் திரள்கள் முதல் ஒரு டிரில்லியன் (10) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் பூதங்கள் எனப்படும் திரள்கள் வரையிலான அளவில் மாறுபடும் பல விண்மீன் திரள்கள் உள்ளன, இவை அனைத்தும் விண்மீன் திரளின் நிறை மையத்தைச் சுற்றி வருகின்றன. நாம் காணக்கூடிய பருப்பொருள், அண்டம் முழுவதும் சீராக ("ஒருபடித்தானதாகப்" ) பரவியுள்ளது, இந்தப் பரவலின் சராசரித் தொலைவு 300 மில்லியன் ஒளியாண்டுகளுக்கும் அதிகம். இருப்பினும் குறைந்த நீள-அளவீடுகளில் பருப்பொருளானது "தொகுப்புகளாக" இருப்பதாக அறியப்படுகிறது, அதாவது வரிசைவாரியான தொகுப்பாக உள்ளது; பல அணுக்கள் சேர்ந்து நட்சத்திரங்களாகவும் பல நட்சத்திரங்கள் சேர்ந்து விண்மீன் திரள்களாகவும், பல விண்மீன் திரள்கள் சேர்ந்து தொகுப்புகளாகவும், மீத்தொகுப்புகளாகவும் மேலும் இறுதியாக மிகப் பெரிய அளவிலான அமைப்பான விண்மீன் திரள் பெருஞ்சுவராகவும் அமைந்துள்ளன. அண்டத்தின் காணக்கூடிய பருப்பொருள், "திசை ஒருமியதாகவும்" பரவியுள்ளது, அதாவது நாம் காணக்கூடிய எந்த ஒரு திசையும் பிற திசையிலிருந்து வேறுபடுவதில்லை; விண்வெளியின் ஒவ்வொரு பகுதியும் தோராயமாக ஒரே உள்ளடக்கத்தையே கொண்டுள்ளது. அண்டமானது தோராயமாக 2.725 கெல்வின் வெப்பநிலையிலுள்ள ஒரு வெப்பச் சமநிலையிலுள்ள கரும்பொருள் நிறமாலையைச் சார்ந்து, மிக அதிக அளவில் திசை ஒருமிய நுண்ணலைக் கதிர்வீச்சிலும் குளித்துள்ளது . இவ்வாறு பெரிய அளவீட்டைப் பொறுத்த அண்டமானது ஒருபடித்தானதாகவும் திசை ஒருமியதாகவும் இருக்கிறது என்ற கருதுகோள், அண்டவியல் கொள்கை, எனப்படுகிறது, இது விண்ணியல் ஆய்வுகளாலும் ஆதரிக்கப்படுகிறது. அண்டத்தின் தற்போதைய ஒட்டுமொத்த அடர்த்தி மிகவும் குறைவானது, தோராயமாக இதன் அளவு 9.9 × 10 கிராம்கள்/கன செண்டிமீட்டர் ஆகும். இந்த நிறை-ஆற்றலானது 73% அறியப்படாத ஆற்றலையும் 23% குளிர்ந்த அறியப்படாத பருப்பொருளையும் 4% இயல்பான பருப்பொருளையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு, அணுக்களின் அடர்த்தியானது ஒவ்வொரு நான்கு கன மீட்டர் பருமனுக்கும், ஒற்றை ஹைட்ரஜன் அணுவின் மடங்கின் வரிசையில் உள்ளது. அறியப்படாத பருப்பொருள் மற்றும் அறியப்படாத ஆற்றலின் குணங்கள் பெரும்பாலும் அறியப்படாததாகவே உள்ளது. அறியப்படாத பருப்பொருளும் இயல்பான பருப்பொருள் போலவே ஈர்ப்பு விசைக்குட்படுகிறது. மேலும் இது அண்டத்தின் விரிவாக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது; மாறாக அறியப்படாத ஆற்றலானது அதன் விரிவாக்கத்தை முடுக்குகிறது. அண்டமானது மிகப் பழமையானது மற்றும் வளர்ந்துகொண்டே இருப்பது. அண்டத்தின் வயதைக் கூறும் அதிகபட்சத் துல்லியமான மதிப்பீடு 13.73±0.12 பில்லியன் ஆண்டுகளாகும், இது அண்டவியல் நுண்ணலைப் பின்புலக் கதிர்வீச்சின் அடிப்படையிலானது. தனிச்சார்புள்ள மதிப்பீடுகள் (ரேடியோக் கதிர்வீச்சு வயது கணிப்பு போன்ற முறைகளின் அடிப்படையில்) அதிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும், அவை அண்டத்தின் வயது 11–20 பில்லியன் ஆண்டுகள்[51] முதல் 13–15 பில்லியன் ஆண்டுகள் வரை என ஒப்புக்கொள்கின்றன. அண்டமானது வரலாறு முழுவதும் ஒரே விதமாக இருக்கவில்லை; எடுத்துக்காட்டுக்கு, குவாசார்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஆகியவை மாறிவிட்டன மேலும் வெளியும் விரிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. 30 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீன் திரளிலிருந்து வரும் ஒளியானது 13 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே பயணித்திருந்தாலும் பூமியிலுள்ள விஞ்ஞானிகள் அதை எப்படி அறிய முடியும் என்பதை இந்த விரிவாக்கமே விளக்குகிறது; அவற்றுக்கிடையே உள்ள வெளியானது விரிவடைந்துள்ளது. தொலைவிலுள்ள விண்மீன் திரள்களிலிருந்து வரும் ஒளியானது சிவப்பு நகர்வுக்குட்படுகிறது; அதாவது ஒளியின் பயணத்தின் போது, உமிழப்பட்ட போட்டான்களின் அலை நீளங்கள் அதிகரிக்கின்றது மற்றும் அதிர்வெண் குறைகின்றது என்ற கருத்தின் படி, இந்த விரிவாக்கமானது இசைவுள்ளதாக அறியப்படுகிறது. இந்த வெளியின் விரிவாக்கமானது முடுக்கப்படும் வீதமானது, டைப் லா சூப்பர் நோவா பற்றிய ஆய்வுகளின் அடிப்படையிலும் பிற தரவுகளின் ஆதரிப்பிலும் உள்ளது. வெவ்வேறு வேதியியல் தனிமங்களின் குறிப்பாக ஹைட்ரஜன், டியூட்டிரியம் மற்றும் ஹீலியம் போன்றவற்றின் ஒப்புமை விகிதங்கள் அண்டம் முழுவதும், அதே வேளையில் அவற்றின் அறியக்கூடிய வரலாறு முழுவதும் ஒரே சீராக ஒத்தவையாக உள்ளன. அண்டமானது எதிர்ப்பொருளை விட அதிக அளவு பருப்பொருளையே கொண்டுள்ளது இது CP மீறலின் ஆய்வுகளுக்குத் தொடர்புடைய சாத்தியக்கூறுள்ள ஒரு சமச்சீரின்மையாகும். அண்டத்திற்கு நிகர மின்னேற்றம் இல்லை என அறியப்படுகிறது, மேலும் இதனால் அண்டவியல் நீள அளவீடுகளில் ஈர்ப்பு விசையே முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அண்டத்திற்கு நிகர உந்தமும் கோண உந்தமும் இருப்பதாகத் தெரிகிறது. அண்டமானது வரையறுக்கப்பட்டதெனில், நிகர மின்னேற்றம் இல்லாமல் இருப்பதும், உந்தமும் ஒப்புக்கொள்ளப்பட்ட இயற்பியல் விதிகளைப் (முறையே காஸ் விதி மற்றும் தகைவு-ஆற்றல்-உந்த சூடோபண்புருவின் விரிவற்றக் கொள்கை) பின்பற்ற வேண்டும். அண்டமானது மென்மையான காலவெளித் தொடர்பத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, இது வெளி சார்ந்த மூன்று பரிமாணங்களையும் காலம் சார்ந்த ஒரு (காலப்) பரிமாணத்தையும் கொண்டுள்ளது. சராசரியாக வெளியானது மிகத் தட்டையானதாக இருப்பதாக அறியப்படுகிறது (கிட்டத்தட்ட பூச்சிய வளைவு கொண்டுள்ளது), அதாவது யூக்ளிடியன் வடிவியலே அண்டத்தின் பெரும்பாலான அளவீடுகளில் சோதனை முறைகளில் அதிகபட்சத் துல்லியமான கொள்கையாக உள்ளது. காலவெளியும், குறைந்தது காணக்கூடிய அண்டத்தின் நீள அளவீட்டில் ஒரு எளிதாக இணைக்கப்பட்ட பிரதேசவியலைக் கொண்டுள்ளது. இருப்பினும், தற்கால ஆய்வு முடிவுகள், அண்டம் பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதற்கும் அதன் காலவெளியானது உருளை அல்லது முடிவிலாச் சுருளின் இரு பரிமாண வெளியின் அமைப்பை ஒத்து, பலப்படித்தான இணைக்கப்பட்ட ஒட்டுமொத்த பிரதேசவியலைக் கொண்டிருப்பதற்குமான சாத்தியக்கூறுகளைப் புறக்கணிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. அண்டமானது முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகள் மற்றும் இயற்பியல் மாறிலிகளால் நிர்வகிக்கப்படுகிறதாகத் தெரிகிறது. பெரும்பாலான இயற்பியலின் நிலையான மாதிரிகளின் படி, அனைத்துப் பருப்பொருளும் லெப்டான்கள் மற்றும் குவார்க்குகள் மற்றும் அவற்றைக் கொண்டுள்ள ஃபெர்மியான்கள் ஆகிய மூன்று கூறுகளால் ஆனது. இந்த அடிப்படைத் துகள்கள் அதிகபட்சம் அடிப்படைத் தொடர்புகளின் மூலம் தொடர்பு கொள்கின்றன: அவை மின்காந்தவியல் மற்றும் வலிகுறை இடைவினை ஆகியவற்றை உள்ளடக்கிய மின்-வலுவிலா தொடர்பு; குவாண்டம் குரோமோடைனமிக்ஸ் விவரிக்கும் வலுவான அணுக்கரு விசை; மற்றும் தற்காலத்தில் பொது சார்பு கொள்கையின் மூலம் சிறப்பாக விவரிக்கப்படும் ஈர்ப்பியல் ஆகியனவாகும். முதல் இரண்டு தொடர்புகளும் மறு-சீர்ப்படுத்தப்பட்ட குவாண்டம் புலக் கொள்கையால் விவரிக்கப்படக்கூடும், மேலும் குறிப்பிட்ட வகை காஜ் சமச்சீர்மைக்குரிய காஜ் போஸோன்கள் இவற்றுக்கு இடை ஊடகமாக இருக்கக்கூடும். சரக் கொள்கையின் பல வடிவங்கள் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தினாலும், பொது சார்பு கொள்கையின் மறு-சீர்ப்படுத்தப்பட்ட குவாண்டம் புலக் கொள்கை ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. வெளி மற்றும் காலம் சார்ந்த நீள அளவீடுகள் போதுமான அளவு சிறியதாக இருக்கும்பட்சத்தில் சிறப்பு சார்பியல் கொள்கையானது அண்டம் முழுமைக்கும் பொருந்துவதாக நம்பப்படுகிறது; அவ்வாறு இல்லாவிட்டால் பொது சார்பியல் கொள்கையின் பொதுவான கொள்கையே பயன்படுத்தப்பட வேண்டும். பிளாங்கின் மாறிலியான "h" அல்லது புவியீர்ப்பு மாறிலியான "G" போன்ற இயற்பியல் மாறிலிகள் அண்டம் முழுவதிலும் கொண்டிருக்கும் குறிப்பிட்ட மதிப்புகளுக்கான விளக்கம் ஏதும் இல்லை. மின்சுமை, உந்தம், கோண உந்தம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அழிவின்மை விதிகள் போன்ற பல அழிவின்மை விதிகள் காணப்படுகின்றன; பெரும்பாலும் இந்த அழிவின்மை விதிகள் சமச்சீர் அல்லது கணிதவியல் ஒப்புமைகள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை எனக் கூற முடியும். அண்டம் (அண்டவியல்) மற்றும் அதன் தோற்றம் குறித்து பல மாதிரிகள் முன்மொழியப்பட்டுள்ளன, அந்த மாதிரிகள் அவை உருவான காலத்தில் கிடைத்த தரவு மற்றும் அண்டத்தின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தன. வரலாற்றின் படி அண்டவியல் மற்றும் அண்ட உற்பத்தியியல் ஆகியவற்றின் கொள்கைகள் பல விதமான கடவுள்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தன. இயற்பியல் விதிகளால் நிர்வகிக்கப்படும், அண்டத்தின் நடுநிலையான கொள்கைகளை முதலில் கிரேக்கர்களும் இந்தியர்களும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விண்வெளி ஆய்வுகள் மற்றும் இயக்கம் மற்றும் ஈர்ப்பியல் கொள்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நமக்கு அண்டத்தின் மிகத் துல்லியமான விளக்கங்கள் கிடைத்துள்ளன. அண்டவியலின் நவீன சகாப்தம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 1915 இல் வெளிவந்த பொது சார்புக் கொள்கையுடன் தொடங்கியது, அது மொத்த அண்டத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் முடிவு ஆகியவற்றை அளவிடும் தன்மையில் கணிப்பதைச் சாத்தியமாக்கியது. ஒப்புக்கொள்ளப்பட்ட மிக நவீன அண்டவியல் கொள்கைகள் பொது சார்புக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தவை, அதிலும் குறிப்பாக, கணிக்கப்பட்ட பெரு வெடிப்புக் கொள்கை; இருப்பினும் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் கவனமான அளவிடுகள் தேவை. பல கலாச்சாரங்களில் உலகத்தின் தோற்றத்தை விளக்கும் கதைகள் உள்ளன அவற்றை பொதுவான சில வகைகளில் பிரிக்கலாம். அப்படி ஒரு வகைக் கதையில் உலகமானது ஒரு உலக முட்டையிலிருந்து (ஹிரண்யகர்பன் - தங்கமுட்டை) தோன்றியதாகக் கூறப்படுகிறது; இது போன்ற கதைகளில் ஃபின்லாந்தின் காப்பியச் செய்யுளான "கலேவாலா" , சீனாவின் பாங்குவின் கதை அல்லது இந்தியாவின் பிரம்மானந்த புராணம் ஆகியவை அடங்கும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைகளில், உலகின் தோற்றமானது ஒற்றை முழுமையிலிருந்து தோற்றுவிக்கப்படுகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. திபெத்தின் ஆதி புத்தா என்ற கருத்திலும், பண்டைய கிரேக்கத்தின் கையா (பூமித் தாய்) என்ற கதையிலும், ஆஜ்டெக் கடவுளான கோட்ளிக்கியூ அல்லது பண்டைய எகிப்திய கடவுள் ஆட்டம் ஆகிய கதைகளிலும் உலகின் தோற்றம் இவ்வாறே விளக்கப்பட்டுள்ளது. மற்றொரு வகைக் கதையில், உலகமானது மாவோரி கதையில்வரும் ராங்கியும் பாப்பாவும் போன்ற ஆண் மற்றும் பெண் கடவுளின் சேர்க்கையால் உண்டானது எனக் கூறப்படுகிறது. பிற கதைகளில், அண்டமானது கடவுளின் பிணம் போன்ற, அதற்கு முன்பே இருந்த பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, பாபிலோனியக் காப்பியமான எனுமா எலிஷ் என்பதில் உள்ள டயாமட் என்னும் கடவுளிடமிருந்து அல்லது ஸ்காண்டிநேவிய புராணத்தில் ஈமிர் என்ற பூதத்திடமிருந்து அல்லது ஜப்பானிய புராணத்தில் உள்ள இஸனாகீ மற்றும் ஈஸனாமி போன்ற தெய்வங்களிடமிருந்து உருவானது. மற்றொரு வகைக் கதை ஒன்றில், ஒரு தெய்வத்தின் கட்டளையால் உலகம் உருவாக்கப்பட்டது எனக்கூறப்படுகிறது. இக்கருத்து, ப்டா என்ற பழங்கால எகிப்தியக் கதையிலும் விவிலியத்தின் ஆதியாகமத்தில் உள்ள விளக்கங்களிலும் உள்ளதைப் போன்றது. பிற கதைகளில் அண்டமானது பிரம்மன் மற்றும் ப்ரக்ருததி அல்லது தாவோ மார்க்கத்தின் இயின் மற்றும் யாங் போன்ற அடிப்படைக் கொள்கைகளிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. அண்டத்தின் முற்கால தத்துவவியல் மாதிரிகள் இந்தியத் தத்துவம் மற்றும் இந்து சமயத் தத்துவம் ஆகியவற்றின் நூல்களான "வேதங்களில்" காணப்படுகின்றன. இவை கடந்த கி.மு. 2 ஆம் ஆயிரமாண்டைச்(வெண்கலக் காலத்தின் இடைக் காலம் முதல் இறுதிக்காலம் வரை) சேர்ந்தவை. அவை விவரிக்கும் பண்டைய இந்து அண்டவியலில், அண்டமானது உருவாவதும் அழிவதும் தொடர்ந்து ஒரு சுழற்சியாக நிகழ்ந்துகொண்டே உள்ளது, மேலும் இந்த ஒவ்வொரு சுழற்சிக்குமான காலம் 4,320,000 ஆண்டுகளாகும். பழங்கால இந்து மற்றும் புத்தமதத் தத்துவவாதிகளும் ஐந்து பூதங்களின்(அடிப்படைக் கூறுகள்) அடிப்படையிலான கொள்கையை வழங்கினர் அவை, வாயு (காற்று), அப் (நீர்), அக்னி (நெருப்பு), ப்ரித்வி/பூமி (புவி) மற்றும் ஆகாஷா (வெளி) ஆகியவனவாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டில், வைஷேஷிகா பள்ளியின் நிறுவனரான கானடா என்பவர்அணுவியல்(ஆட்டோமிசம்) என்ற கொள்கையை உருவாக்கினார், அதில் ஒளி மற்றும் வெப்பம் ஆகியவை ஒரே பொருளின் இரு வகைகளே என முன்மொழிந்தார். கி.பி. 5ஆம் நூற்றாண்டில், புத்த அணுவியல் தத்துவவாதியான டிக்னாகா என்பவர் அணுக்கள் புள்ளியளவிலானவை, காலவரம்பற்றவை மற்றும் ஆற்றலால் ஆனவை என முன்மொழிந்தார். அவர்கள் உண்மையான பருப்பொருள் இருப்பதை மறுத்தனர், மேலும் இந்த நகர்வானது தொடர்ச்சியான ஆற்றலின் கண நேரப் பிரவாகத்தால்தான் நிகழ்கிறது என முன்மொழிந்தனர். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்ரட்டீஸிற்கு முந்தைய கிரேக்கத் தத்துவவாதிகள், மேற்கத்திய உலகில் முற்காலத்தில் அறியப்பட்ட அண்டத்தின் தத்துவவியல் மாதிரிகளை உருவாக்கினர். முற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் நாம் காணும் தோற்றம் தவறாக இருக்கலாம் என்று கருதினர், ஆகவே தோற்றத்திற்குப் பின்னாலுள்ள அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர். குறிப்பாக, பருப்பொருளானது வடிவம் மாறக்கூடிய (எ.கா., பனிக் கட்டியிலிருந்து நீர், நீரிலிருந்து நீராவி என) திறனைப் பெற்றுள்ளதை அவர்கள் கவனித்தனர், மேலும் சில தத்துவவாதிகள் உலகிலுள்ள (மரம், உலோகம் போன்ற) அனைத்துப் பொருள்களும் தோற்றத்தில் வெவ்வேறு போலத் தெரிந்தாலும் அவை அனைத்தும் ஆர்ச்சே எனப்படும் ஒற்றைப் பொருளின் பல்வேறு வடிவங்களே ஆகும் என முன்மொழிந்தனர். முதலில் இவ்வாறு செய்தவர் தாலேஸ் என்பவராவார் அவர் அந்தப் பொருளை நீர் என அழைத்தார். அவரைத் தொடர்ந்து, அனாக்ஸிமெனீஸ் அதைக் காற்று என அழைத்தார், மேலும் ஆர்ச்சே துகளானது பல்வேறு வடிவங்களில் ஒன்றுபட்டு வேறுபட்டு இருப்பதற்குக் காரணமாக கவர்ச்சி மற்றும் விலக்கு விசைகள் இருக்க வேண்டும் எனக் கூறினார். எம்படாக்ளீஸ் என்பவர், அண்டத்தின் வேறுபட்ட தன்மையை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்படைப் பொருள்களின் கருத்து அவசியம் என முன்மொழிந்தார், மேலும் அனைத்து நான்கு அடிப்படைக் கூறுகளும் (பூமி, காற்று, நெருப்பு மற்றும் நீர்) இருந்ததாகவும் ஆனாலும் அவை வெவ்வேறு சேர்க்கை மற்றும் வடிவங்களில் இருந்ததாகவும் முன்மொழிந்தார். இந்த நான்கு-பூதக் கொள்கையை அவரைத் தொடர்ந்த பல தத்துவவாதிகளும் ஏற்றுக்கொண்டனர். எம்படாக்ளீஸுக்கு முந்தைய சில தத்துவவாதிகள் ஆர்ச்சேவானது குறைவான பொருள்களைக் கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தனர்; ஹிராக்ளிட்டஸ் லோகோஸ் என்ற கருத்தை வலியுறுத்தினார், பித்தாகோரஸ் அனைத்துப் பொருள்களும் எண்களால் ஆனவை என்றும், தாலேஸின் மாணவாரன அனாக்ஸிமண்டர் எல்லாப் பொருளும் அப்பெய்ரான் எனும் கண்ணுக்குப் புலப்படாத பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என முன்மொழிந்தார், இது ஓரளவு குவாண்டம் ஃபோம் என்ற தற்காலக் கருத்தை ஒத்துள்ளது. அப்பெய்ரான் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டன, அவற்றில் பிரபலமானது அனாக்ஸகோரஸ் என்பவரின் கொள்கையாகும், அது உலகிலுள்ள பல்வேறுபட்ட பொருள்கள் அனைத்தும் வேகமாகச் சுழலும் அப்பெய்ரானிலிருந்து தோற்றுவிக்கப்பட்டன, அதன் இயக்கமானது நவுஸ் (மனம்) கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என முன்மொழிந்தது. இன்னும் சில பிற தத்துவவாதிகள் — குறிப்பாக லியூஸிப்பஸ் மற்றும் டிமாக்ரிட்டஸ் போன்றோர் — அண்டமானது வெற்றிடம் எனப்படும் வெளியில் நகரக்கூடிய மற்றும் பகுக்க முடியாத அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது; இயக்கத்திற்கான தடையானது அடர்த்திக்கு நேர் விகிதத்திலிருக்கும், ஆகவே வெற்றிடத்தில் இயக்கத்திற்குத் தடை எதுவும் இருக்காது, எனவே முடிவிலா வேகத்தில் பொருட்கள் நகரும் என்ற கருத்தின் அடிப்படையில் இக்கருத்தை ("இயற்கையானது வெற்றிடத்தைப் புறக்கணிக்கிறது") அரிஸ்டாட்டில் எதிர்த்தார். ஹிராக்ளிட்டஸ் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தைக் குறித்து விவாதித்தாலும், அவரது சம காலத்தவரான பார்மெனிடீஸ், புரட்சிகரமான ஒரு கருத்தை முன்வைத்தார், அதில் அனைத்து மாற்றங்களும் தோற்றமே, அடிப்படை உண்மையானது மாறாமலும் ஒற்றை இயல்புள்ளதாகவுமே உள்ளது என கூறினார். பார்மெனிடீஸ், இக்கருத்தை το εν (ஒன்று) எனக் குறிப்பிட்டார். பார்மெனிடெஸின் கொள்கை பல கிரேக்கர்களுக்குக் உண்மையற்றதாகத் தோன்றியது, ஆனால் அவரது மாணவரான ஜெனோ ஆஃப் இலீ பல பிரபலமான முரண்பாடுகளை முன்வைத்து அவர்களுக்குச் சவால் விடுத்தார். இந்த முரண்பாடுகளை அரிஸ்டாட்டில், முடிவிலா பகுப்புக்குட்படும் தொடர்பகத்தை விளக்கி, அதனை வெளிக்கும் காலத்திற்கும் பொருத்தி விளக்கினார். அண்டமானது தொடக்கமற்ற முடிவிலாக் கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என நம்பிய கிரேக்கத் தத்துவவாதிகளுக்கு முரணாக, இடைக்கால தத்துவவாதிகளும் சமயவியலாளர்களும் அண்டமானது தொடக்கத்துடன் கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தை உருவாக்கினர். இந்தக் கருத்தானது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியம் ஆகிய மூன்று ஆப்ரஹாமிய சமயங்களின் உருவாக்கக் கருத்துக்களிலிருந்து உருவானவை. கிறிஸ்தவ தத்துவவாதியான ஜான் ஃபிலோப்பனஸ் என்பவர், முடிவிலாக் கடந்த காலம் என்ற பண்டைய கிரேக்கக் கருத்துக்கு எதிரான இப்படிப்பட்ட முதல் விவாதத்தை முன்வைத்தார். இருப்பினும், முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிரான நுட்பமான விவாதங்கள் பண்டைய இஸ்லாமிய தத்துவவாதி, அல்-கிண்டி (அல்கிண்டஸ்); யூத தத்துவவாதி, சாடியா கோன் (சாடியா பென் ஜோஸப்); மற்றும் இஸ்லாமிய சமயவியலாளர், அல்-கஸாலி (அல்கஸேல்) போன்றோரால் உருவாக்கப்பட்டன. அவர்கள் முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிராக இரண்டு தர்க்கரீதியான விவாதங்களை உருவாக்கினர், முதலாவது "உண்மையில் முடிவிலாததான ஒன்றின் இருப்பு சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்ட விவாதம்", அது இவ்வாறு கூறுகிறது: இரண்டாவது விவாதம், "ஒரு உண்மையான முடிவிலியை தொடர்ச்சியான கூடுதலின் மூலம் நிறைவு செய்வது சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்ட விவாதம்", அது இவ்வாறு கூறுகிறது: இவ்விரண்டு விவாதங்களுமே பிந்தைய கிறிஸ்தவ தத்துவவாதிகள் மற்றும் சமயவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன, மேலும் இரண்டாவது விவாதத்தை இம்மானுவேல் காண்ட் என்பவர் காலம் பற்றிய தனது ஒன்றுக்கொன்று முரணான இரு நியாயமான கருத்துக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்திய பின்னர், அது மிகவும் பிரபலமானது. பாபிலோனிய வானியலாளர்கள், அண்டமானது கடலில் மிதக்கும் தட்டையான வட்டுப் போல உள்ளது என நம்பினர். இந்தக் கருத்தே அனாக்ஸிமண்டர் மற்றும் ஹெக்காட்டெஸ் ஆஃப் மிலேட்டஸ் போன்றோரின் பண்டைய கிரேக்க வரைபடங்களுக்கான அடிப்படையாக இருந்தது. இவ்வானியலாளர்களின் காலத்திய வானியலுக்குப் பிந்தைய வெகு குறுகிய காலத்தில், அண்டத்தின் பல வானியல் மாதிரிகள் முன்வைக்கப்பட்டன. விண்ணில் காணப்படும் பொருட்களின் இயக்கங்களைக் கண்ட பிற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் கூடுமான வரை உறுதியான சோதனை முடிவுகளின் அடிப்படையிலான அண்டத்தின் மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். தெளிவான நிலையான மாதிரியானது எடோக்ஸஸ் ஆஃப் ஸ்னிடோஸ் என்பவரால் முன்மொழியப்பட்டது. இந்த மாதிரியின் படி, காலமும் வெளியும் முடிவிலாததும் தொடர்ச்சியானதுமாகும், பூமியானது கோள வடிவிலானது மற்றும் நிலையானது, மேலும் மற்ற அனைத்துப் பருப்பொருளும் ஒற்றை மையக் கோளப் பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த மாதிரியானது கால்லிப்பஸ் மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரால் மேலும் சீர்ப்படுத்தப்பட்டு தாலமியின் வானியல் ஆய்வு முடிவுகளுடன் முழுமையான ஒத்தத் தன்மையுடன் இருக்கும் வகையில் மாற்றப்பட்டது. இந்த மாதிரியின் வெற்றிக்கு பெரும்பாலும் காரணமாக அமைந்தது, (ஒரு கோளின் நிலை போன்ற) எந்த ஒரு சார்பையும் வட்ட இயக்கச் சார்புகளின் (ஃபோரியர் வகைகள்) தொகுப்பாகப் பிரிக்க முடியும் என்ற கணிதவியல் விதியே ஆகும். இருப்பினும், அண்டத்தின் புவிமைய மாதிரியை கிரேக்க விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்க வில்லை. கிரேக்க வானியலாளர் அரிஸ்டாச்சஸ் ஆஃப் சாமோஸ் என்பவரே முதன் முதலில் ஒரு சூரியமையக் கொள்கையை முன்மொழிந்தவராவார். சூரியமையக் கொள்கைக்கான புத்தகத்தின் அசல் உரை கிடைக்காவிட்டாலும், ஆர்க்கிமிடீஸின் த சாண்ட் ரெக்கோனர் என்ற புத்தகத்தில் அரிஸ்டாச்சஸின் சூரியமையக் கொள்கையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆர்க்கிமிடீஸ் எழுதியுள்ளதாவது: (ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பொருளின் படி) கெலான் ராஜாக்களே, பெரும்பாலான வானியலாளர்கள் "யுனிவெர்ஸ்" என்ற பெயரால் குறிப்பிடுவது பூமியின் மையத்தை தன் மையமாகக் கொண்டிருக்கும் கோளத்தையே என்பதையும் அதன் ஆரமானது பூமியின் மையம் மற்றும் சூரியனின் மையத்தை இணைக்கும் நேர்க்கோட்டின் நீளத்திற்குச் சமம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வானியலாளர்கள் கூற்றிலிருந்து நீங்கள் அறிந்துள்ள பொதுவான விளக்கம் இதுவே. ஆனால், அரிஸ்டாச்சஸ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார், அதில் உருவாக்கப்பட்ட கருதுகோள்களின் அடிப்படையில் அண்டமானது "யுனிவெர்ஸ்" என்ற சொல் குறிக்கும் அண்டத்தைக் காட்டிலும் பன்மடங்குப் பெரியது எனத் தெரிகிறது. அவரது கருதுகோள்களாவன: நிலையான விண்மீன்களும் சூரியனும் நகராமலும் பூமியே ஒரு வட்டத்தின் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றுவதாகவும், சூரியன் ஒரு நீள்வட்டப் பாதையின் மையத்தில் இருப்பதாகவும், நிலையான விண்மீன்கள் அமைந்துள்ள கோளமும் சூரியனின் மையத்தையே மையமாகக் கொண்டுள்ளதாகவும், பூமி சுற்றிவரும் வட்டத்திற்கும் நிலையான விண்மீன்களுக்கும் இடையே உள்ள தொலைவுக்குமான விகிதம் அக்கோளத்தின் மேற்பரப்புக்கும் அதன் கோள மையத்திற்கும் உள்ள விகிதத்தின் அளவுக்கு உள்ளது. விண்மீன்கள் மிக மிகத் தொலைவில் உள்ளதாக அரிஸ்டாச்சஸ் நம்பினார், விண்மீன்களின் அறியப்பட்ட நகர்வானது பூமி சூரியனைச் சுற்றுவதைப் போல ஒன்றையொன்று சார்ந்தது என விளக்கும், கண்ணுக்குப் புலப்படும் இடமாறு தோற்றம் இல்லாததற்கு, அவை வெகு தொலைவில் இருப்பதே காரணம் எனக் கருதினார். பழங்காலத்தில் பொதுவாக விண்மீன்கள் இருப்பதாகக் கருதப்பட்ட தொலைவை விட உண்மையில் அவை மிக அதிகத் தொலைவில் உள்ளன, சூரியமைய நகர்வை தொலைநோக்கிகளைக் கொண்டே கண்டறிய முடியும் என்பதே, அவ்வாறு பண்டைய காலத்தில் கணித்தது தவறாக இருந்ததற்குக் காரணமாகும். புவிமைய மாதிரியானது கோள்களின் நகர்வைப் பொறுத்து இசைவுள்ளதாக உள்ளது, மேலும் அது கோள்களின் நகர்வை ஒத்த நிகழ்வான சூரியமைய நகர்வை அறிய முடியாததற்கான விளக்கமாகவும் உள்ளது. சூரியமையக் கொள்கையின் நிராகரிப்பு வலுவானதாக இருந்தது, பின்வரும் வரிகளில் (ஆன் த அப்பேரண்ட் ஃபேஸ் இன் தி ஆர்ப் ஆஃப் த மூன் என்ற புத்தகத்தில்) ப்ளூடார்ச் விளக்குவதைப் போல: அண்டத்தின் தீ மையத்தை [அதாவது பூமியை] நகர்வாதாகக் கூறி, தெய்வத்திற்கு எதிரான கருத்தைப் பரப்பியதற்காக அரிஸ்டாச்சஸ் ஆஃப் சாமோஸ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டியது கிரேக்கர்களின் கடமை என, கிளியாந்தஸ் [அரிஸ்டாச்சஸின் சமகாலத்தவரும் ஸ்டோயிக்ஸின் (உணர்வாய்வாளர்கள்) தலைவருமானவர்] நினைத்தார், . . . அவர் சொர்க்கமானது நிலையானதாகவும் பூமியே சரிவான வட்டப் பாதையில் அதனைச் சுற்றி வருவதாகவும் அதே நேரத்தில் அது தன்னைத் தானே அதன் அச்சைப் பற்றியும் சுழல்வதாகவும் கருதினார். [1] அரிஸ்டார்ச்சஸின் சூரியமைய மாதிரியை ஆதரித்த மற்றொரு பழங்கால பிரபல வானியலாளர், அரிஸ்டார்ச்சஸுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் வாழ்ந்த கிரேக்க நாகரீகவியல் வானியலாளரான செலியூகஸ் ஆஃப் செலியூஷியா என்பவரே. ப்ளூடார்ச்சைப் பொறுத்தவரை, செலியூகஸ் மட்டுமே முதன் முதலில் சூரியமைய அமைப்பை பகுத்தறிவுரீதியாக விளக்கியுள்ளார், ஆனால் அவர் பயன்படுத்திய சார்பின் மாறிகள் எவை என்பது தெரியாமலே உள்ளது. சூரியமையக் கோட்பாட்டிற்கு ஆதரவான செலியூகஸின் விவாதங்கள் சிறிதளவு அலைகள் ஏற்படும் நிகழ்வை ஒத்ததாகவே இருந்தது. ஸ்ட்ராபோவைப் (1.1.9) பொறுத்தவரை, அலைகள் உருவாகக் காரணம் நிலவின் ஈர்ப்பு விசையே எனவும் சூரியனைப் பொறுத்து நிலா இருக்கும் நிலையைப் பொறுத்தே அலைகளின் உயரம் இருக்கும் எனவும் கூறியவர் செலியூகஸ் மட்டுமே. மாறாக அவர், சூரியமையக் கோட்பாட்டுக்கான வடிவியல் மாதிரியின் மாறிலிகளைத் தீர்மானித்தும், பின்னர் 16ஆம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் செய்ததைப் போல இந்த மாதிரியைப் பயன்படுத்தி கோள்களின் நிலையைக் கணக்கிடுவதற்கான முறைகளை உருவாக்கியும் இந்த சூரியமையக் கோட்பாட்டை நிரூபித்திருக்கலாம். இடைக் காலத்தில், இந்திய வானியலாளர், ஆரியப்பட்டா, மற்றும் பாரசீக வானியலாளர்களான, அல்புமசார் மற்றும் அல்-சிஜ்ஜி ஆகியோராலும் சூரிய மைய மாதிரிகள் முன்மொழியப்பட்டது. கோப்பர்நிக்கஸ் அரிஸ்டாட்டிலின் மாதிரியை மறு ஆய்வு செய்து, பூமியானது தனது அச்சைப் பற்றிச் சுழல்வதாகவும் சூரியன் அண்டத்தின் மையத்தில் இருப்பதாகவும் கொண்டால் இந்த அண்டவியல் தரவை நம்பக்கூடிய வகையில் விவரிக்க முடியும் எனக் கூறும் வரை, அரிஸ்டாட்டிலின் மாதிரி மேற்கத்திய உலகில் ஒருவாறு ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. கோப்பர்நிக்கஸ் குறிப்பிட்டவாறு, பூமி சுழல்கிறது என்ற கருத்து மிகப் பழமையானது, குறைந்தது அது ஃபிலோலஸ் (c. 450 கி.மு.), ஹெராக்ளிடஸ் போண்ட்டிகஸ் (c. 350 BC) மற்றும் எக்ஃபாந்தஸ் த பித்தோகோரியன் ஆகியோர் காலத்தின் கருத்தாகும். தொராயமாக கோப்பர்நிக்கஸுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், நிக்கோலஸ் ஆஃப் கஸ்ஸா என்ற ஒரு கிறித்தவ அறிஞரும் அவரது "On Learned Ignorance" (1440) என்ற புத்தகத்தில், பூமி அதன் அச்சில் சுழல்கிறது என முன்மொழிந்துள்ளார். ஆர்யபட்டா (476–550), பிரம்மகுப்தா (598–668), அல்புமசார் மற்றும் அல்-சிஜ்ஜி, ஆகியோரும் பூமி அதன் அச்சில் சுழல்கிறது என முன்மொழிந்துள்ளனர். வால் நட்சத்திரங்களின் நிகழ்வின் மூலம் முதன் முதலில் பூமி அதன் அச்சைப் பற்றிச் சுழகிறது என்பதற்கான சோதனையியல் நிரூபணத்தை டூஸி (1201–1274) மற்றும் அலி குஸ்கு (1403–1474) ஆகியோர் வழங்கினர். இருப்பினும் டூஸி தொடர்ந்து அண்டம் பற்றிய அரிஸ்டாட்டில் கொள்கையையும் ஆதரித்து வந்தார், இவரே கோப்பர்நிக்கஸ் பின்னாளில் எவ்வாறு பூமியின் சுழற்சியை நிரூபித்தாரோ அவ்வாறு அரிஸ்டாட்டிலின் பூமி நிலையானது என்ற கருத்தை ஆய்வுகளின் அடிப்படையில் பொய்யென முதலில் நிரூபித்தார். கலிலியோ கலிலேய் நிரூபித்ததைப் போலவே அல்-பிர்ஜாண்டி (d. 1528) என்பவர், பின்னர் பூமியின் சுழற்சியை "வட்ட நிலைமம்" என்ற கருத்தைப் பயன்படுத்தி விளக்கினார். "முதலில் தாமஸ் டிக்கஸ் (1576) முன்மொழிந்து பின்னர் கோபர்நிக்கஸ் மறு ஆய்வு செய்து வடிவியல் விளக்கங்கள் ஏற்கப்பட்ட பெர்ஃபிட் டிஸ்க்ரிப்ஷன் ஆஃப் த கேலெஸ்டியல் ஆர்ப்ஸ் அக்கார்டிங் டு த மோஸ்ட் ஆன்ஷியண்ட் டாக்டரின் ஆஃப் பித்தோகோரியன்ஸ்" , என்ற கட்டுரையில் உள்ளது போல், விண்மீன்கள் (முடிவிலா) வெளி முழுவதும் பரவியுள்ளது என்ற கருத்தை கோப்பர்நிக்கஸின் சூரியமைய மாதிரி ஏற்கிறது. வெளியானது முடிவிலாதது மற்றும் நம் சூரியக் குடும்பத்தைப் போலவே பல சூரியக் குடும்பங்கள் அதில் உள்ளன ஆகிய கருத்துக்களை ஜியோர்டனோ ப்ரூனோ ஒப்புக்கொண்டார்; இவர் தனது கருத்தை வெளியிட்டதைக் குற்றம் எனக் 1600ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 17ஆம் தேதியன்று ரோமிலுள்ள கேம்போ டி ஃபியோரி என்ற இடத்தில் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த அண்டவியலில் பல முரண்பாடுகள் இருந்தன, அவை பின்னாளில் வந்த பொது சார்பியல் கொள்கையால் தான் தீர்க்கப்பட்டன எனினும், தற்காலிகமாக அதை ஐசக் நியூட்டன், கிறிஸ்டியன் ஹைகென்ஸ் மற்றும் பின்னர் வந்த விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். இவற்றில் முதல் கருத்துபடி, காலமும் வெளியும் முடிவிலாதன மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன எனப்படுகிறது; இருப்பினும், தொடர்ந்து இவை ஆற்றலை உமிழ்கின்றன எனில், ஒரு முடிவுள்ள நட்சத்திரம், முடிவிலாமல் ஆற்றலைத் தொடர்ந்து உமிழ முடியாது என்றாகிறது. இரண்டாவதாக, எட்மண்ட் ஹேல்லி (1720) மற்றும் ஜீன்-ஃபிலிப்பீ டி செஸியாக்ஸ் (1744) ஆகியோர், வெளியானது முடிவிலாதது எனக் கொண்டால் அது இரவிலும் பகலைப் போலவே நட்சத்திரங்கள் தோன்ற வேண்டும் என்ற முடிவை எடுக்க வழிவகுக்கும் எனக் கண்டனர்; இதை 19ஆம் நூற்றாண்டில் ஆல்பர்ஸ் முரண்பாடு என அழைத்தனர். மூன்றாவதாக நியூட்டனும், வெளியானது பருப்பொருள் சீராக நிரப்பப்பட்டு முடிவிலாததாக இருந்தால் முடிவிலா விசைகள் மற்றும் நிலையற்ற தன்மை ஆகிய காரணங்களால் பருப்பொருளானது தனது சொந்த ஈர்ப்பு விசையாலேயே அழிந்து போயிருக்கக்கூடும் என உணர்ந்தார். இந்த நிலையற்ற தன்மைச் சிக்கலானது 1902 இல் ஜீன்ஸ் நிலையற்ற தன்மைத் தேர்வளவையின் மூலம் தீர்க்கப்பட்டது. இந்த இரண்டு முரண்பாடுகளுக்குமான ஒரு தீர்வாக சார்லியர் அண்டக் கொள்கையே இருந்தது, இதில் அண்டத்தின் மொத்த அடர்த்தி புறகணிக்கத்தக்க அளவு குறைவாக இருக்கும்படி, பருப்பொருளானது வரிசைப்படி (தாமே சுழலும் பொருட்கள் தாமும் ஒரு பெரிய அமைப்பில் "முடிவிலா" அமைப்பில்) பின்ன அமைப்பில் உள்ளது; இது போன்ற ஒரு அண்டவியல் மாதிரி முன்னர் 1761ஆம் ஆண்டிலும் ஜோஹன்னன் ஹெயின்ரிச் லாம்பெர்ட் என்பவரால் முன்மொழியபட்டது. 18ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தது தாமஸ் ரைட், இம்மானுவேல் காண்ட் மற்றும் பிறர் நட்சத்திரங்கள் வெளி முழுவதும் சீராகப் பரவியில்லை; மாறாக விண்மீன் திரள்களாகத் தொகுதிகளாகவே உள்ளன என்பதை உணர்ந்ததே ஆகும். 1917 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதலில் அண்டத்தின் இயக்கவியல் மற்றும் கட்டமைப்பை விளக்க பொது சார்புக் கொள்கையைப் பயன்படுத்தியபோது இயல் அண்டவியலின் நவீன யுகம் தொடங்கியது. இந்தக் கொள்கை மற்றும் அதன் பயன்பாடு ஆகியவை பின்வரும் பிரிவில் விவரமாக விவாதிக்கப்படும். நான்கு அடிப்படை தொடர்பு விசைகளில், ஈர்ப்பியல் விசையே அண்டவியல் தொலைவுகளில் மிகுந்த பலமுள்ளது; அதாவது கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பெரிய அமைப்புகளின் கட்டமைப்பைத் தீர்மானிப்பதில் மற்ற பிற மூன்று விசைகளும் சிறிதளவே பங்களிக்கின்றன. அனைத்துப் பாருப்பொருளும் ஆற்றலும் ஈர்ப்பியல் விசையைக் கொண்டுள்ளதால், அதன் விளைவு குவியல் பண்புள்ளது; மாறாக, நேர் மற்றும் எதிர் மின்சுமைகள் ஒன்றின் விளைவை மற்றொன்று நடுநிலையாக்குகின்றன, இதனால் மின்காந்தவியலானது அண்டவியல் தொலைவுகளுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்க அளவே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மீதமுள்ள இரண்டு தொடர்பு விசைகளாவன, வலுவிலா மற்றும் வலுவான அணுக்கரு விசைகள் ஆகும் இவை தொலைவு அதிகமாக அதிகமாக மிக விரைவாகக் குறைபவை; இவற்றின் விளைவுகள் அணு அளவீடுகளில் மட்டுமே பாதிப்புள்ளவையாக இருக்கும். அண்டவியல் கட்டமைப்பை உருவாக்குவதில் ஈர்ப்பியல் விசையே மிக முக்கியக் காரணியாக உள்ளது என்ற நிலையில், அண்டத்தின் கடந்த கால மற்றும் எதிர்கால துல்லியக் கணிப்புக்கு ஈர்ப்பியல் விசைக்கான துல்லியமான கொள்கை தேவைப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள கொள்கைகளில் சிறப்பானதாகக் கருதப்படுவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கையே ஆகும், இது அனைத்து சோதனைகளிலும் வென்றதும் ஆகும். அண்டவியல் அளவீடுகளில் பெரிய சொதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் பொது சார்பியல் கொள்கையானது துல்லியமானதாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்கொள்கை வழங்கும் அண்டவியல் தீர்மானங்களும் கணிப்புகளும் சோதனை முடிவுகளுடன் இசைவுள்ளதாகவே இருப்பதால், வேறு கொள்கை தேவைப்படுவதற்கு முக்கியக் காரணம் எதுவும் இல்லாமல் போகிறது. பொது சார்பியல் கொள்கையானது காலவெளி அளவீட்டுக்கான (ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகள்) பத்து பகுதி வகைச் சமன்பாடுகளின் தொகுதியை வழங்குகிறது, இவை அண்டத்தின் மொத்த நிறை-ஆற்றல் மற்றும் உந்தம் ஆகியவற்றின் பரவலிலிருந்து தீர்க்க வேண்டியவை. இவை மிகத் துல்லியமாகத் தெரியாதவை என்பதால், அண்டவியல் மாதிரிகள் அண்டவியல் கொள்கைகளின் அடிப்படையில் இருந்தன, இக்கொள்கைகள் அண்டமானது ஒருபடித்தானதும் திசை ஒருமியதாகவும் உள்ளது எனக் கூறுகின்றன. இதன் விளைவாக இந்தக் கொள்கை, அண்டத்திலுள்ள பல்வேறு விண்மீன் திரள்களின் மொத்த ஈர்ப்பியல் விளைவானது அண்டம் முழுவதும் பரவியுள்ள மொத்தத் தூசுப்பொருட்களின் சராசரி அடர்த்திக்குச் சமமாக உள்ளது எனக் கூறுகிறது. ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாட்டைத் தீர்க்கவும் அண்டவியல் கால அளவீடுகளின் அடிப்படையில் அண்டத்தின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைக் கணிக்க, இந்த சீராகப் பரவியுள்ள தூசுப் பொருட்களின் கருத்து உதவுகிறது. ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாட்டில் ஒரு அண்டவியல் மாறிலி ("Λ") பயன்படுத்தப்படுகிறது, அது வெற்றிடத்தின் ஆற்றல் அடர்த்தியைக் குறிக்கிறது. அதன் குறியைப் பொறுத்து, அந்த அண்டவியல் மாறிலியானது அண்டத்தின் விரிவாக்கத்தை மட்டுப்படுத்தவோ (எதிர்க்குறி "Λ" ) அல்லது முடுக்கவோ (நேர்க்குறி "Λ") முடியும். ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகள் "Λ" என்பது பூச்சியம் என நினைத்தனர், இருப்பினும் சமீபத்திய சூப்பர் நோவா பற்றிய வானியல் ஆய்வுகள் அதிக அளவிலான "அறியப்படாத ஆற்றல்" அண்டத்தின் விரிவாக்கத்தை முடுக்குவதை உறுதிப்படுத்தியுள்ளன. முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இந்த அறியப்படாத ஆற்றலானது நேர்க்குறி "Λ" கொண்டது எனக் கூறினாலும், எதிர்க் கருத்துடைய கோட்பாடுகளையும் புறக்கணிக்க முடியாது. ரஷ்ய இயற்பியலாளரான ஸெல்'டோவிச், "Λ" என்பது குவாண்டம் புலக் கொள்கையின் மாயத் துகள்களுக்கான பூச்சியப் புள்ளி ஆற்றலின் அளவாகும், இது எங்கும், அதாவது வெற்றிடத்திலும் கூட நிறைந்திருக்கும், வெற்றிட ஆற்றலாகும் எனக் கூறினார். இது போன்ற புச்சியப் புள்ளி ஆற்றலுக்கான ஆதாரங்கள் காஸ்மிர் விளைவில் காணப்படுகின்றன. அண்டத்திற்கு குறைந்தது மூன்று வெளி சார்ந்த பரிமாணங்களும் ஒரு காலம் சார்ந்த (கால) பரிமாணமும் உள்ளது. நீண்ட காலமாக, இந்த காலம் சார்ந்த பரிமாணமும் வெளி சார்ந்த பரிமாணங்களும் ஒன்றையொன்று சாராத தனிப்பட்டவை எனக் கருதப்பட்டது. இருப்பினும், சிறப்பு சார்பியல் கொள்கையின்படி, இந்த காலம் சார்ந்த மற்றும் வெளி சார்ந்த பரிமாணங்கள் இரண்டில் ஒன்றின் இயக்கத்தை மாற்றுவதன் மூலம் இவை இரண்டும் பரிமாற்றக்கூடியவை (எல்லைக்குள்). இந்தப் பரிமாற்றத்தைப் புரிந்துகொள்ள, மூன்று வெளி சார்ந்த பரிமாணங்களில் உள்ள ஒத்த வெளி சார்ந்த பரிமாற்றங்களைக் கருதுவது உதவியாக இருக்கும். "L" நீளமுள்ள ஒரு கம்பியின் இரு இறுதி முனைகளைக் கருதுக. பைதகரசின் தேற்றத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ஆய்வு சட்டகத்திற்குள், Δx, Δy மற்றும் Δz என்ற மூன்று ஆய அச்சுக்களுக்கான இரண்டு இறுதி முனைகளின் வேறுபாடுகளைக் கொண்டு அதன் நீளத்தைக் கணக்கிடலாம் சுழலும் ஆய்வு சட்டகத்திற்குள், ஆய அச்சுக்களின் வேறுபாடு வேறுபடும், ஆனால் ஒரே நீளத்தையே தரும். இவ்வாறு, ஆய அச்சுக்களின் வேறுபாடுகள் (Δx, Δy, Δz) மற்றும் (Δξ, Δη, Δζ) ஆகியவை கம்பியின் உள்ளார்ந்தப் பண்புகளல்ல, மாறாக அதை விவரிக்கப் பயன்படுத்தும் ஆய்வு சட்டகத்தையே பொறுத்தது; மாறாக கம்பியின் நீளமான "L" என்பது அதன் உள்ளார்ந்தப் பண்பாகும். ஆய்வு சட்டகத்தை மட்டும் சுழற்றுவதன் மூலம், கம்பியைப் பாதிக்காமல் ஆய அச்சுக்களின் வெறுபாட்டை மாற்ற முடியும். காலவெளியில் உள்ள இந்த ஒப்புமையே இரு நிகழ்வுகளுக்கிடையே உள்ள இடைவெளி எனப்படுகிறது; ஒரு நிகழ்வு எனப்படுவது காலவெளியில் ஒரு புள்ளியாகவும், வெளியில் ஒரு குறிப்பிட்ட இடமாகவும் காலத்தில் குறிப்பிட்டக் கணமாகவும் வரையறுக்கப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கிடையே உள்ள காலவெளி இடைவெளியானது இச்சமன்பாட்டினால் வழங்கப்படுகிறது இதில் "c" என்பது ஒளியின் வேகமாகும். சிறப்பு சார்பியலின் படி, மாற்றத்தின் காலவெளி இடைவெளியான "s" இன் மதிப்பு மாறாமல் இருக்கும்பட்சத்தில் ஒருவரின் ஆய்வு சட்டகத்தை மாற்றுவதன் மூலம் ஒரு வெளி மற்றும் காலப் பகுப்பை ("L" , Δ"t" ) மற்றொரு வெளி மற்றும் காலப் பகுப்பாக ("L" , Δ"t" ) மாற்ற முடியும். ஆய்வு சட்டகத்தின் இப்படிப்பட்ட மாற்றமானது ஒன்றின் இயக்கத்தின் மாற்றத்தைப் பொறுத்தது; நகரும் ஒரு சட்டகத்தின் காலமும் நீளங்களும், நிலையாக உள்ள சட்டகத்தின் காலம் மற்றும் நீளங்களிலிருந்து வேறுபடும். இயக்கத்தைப் பொறுத்து ஆய அச்சுக்களும் கால வேறுபாடுகளும் மாறுவதைத் துல்லியமாக விளக்குவது லாரன்ஸ் நிலைமாற்றமாகும். சுழலும் விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ள தொலைவானது, காலம் அதிகரிக்கையில் அதிகரிக்கிறது. ஆனால் ஒவ்வொரு விண்மீன் திரளிலும் உள்ள விண்மீன்களுக்கிடையே உள்ள தொலைவு தோராயமாக மாறாமலே உள்ளது. அவற்றுக்கிடையே உள்ள ஈர்ப்பியல் விசையே இதற்குக் காரணமாகும். இந்த அசைவூட்டம் ஒரு மூடிய ஃப்ரைட்மேன் அண்டத்தை விளக்குகிறது, இதில் பூச்சிய அண்டவியல் மாறிலி Λ இடம்பெறுகிறது; இதுபோன்ற அண்டமானது பெருவெடிப்பு மற்றும் அண்டச் சுருக்கம் ஆகிய நிகழ்வுகளுக்கிடையே அலைகிறது. கார்ட்டீசியன் அல்லாத (சதுரவடிவற்ற) அல்லது வளைவான ஆய அச்சு அமைப்புகளில், பித்தாகோரியன் தேற்றமானது மிக மிகச் சிறிய நீள அளவுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது, ஆகவே அது இடத்திற்கு இடம் மாறும் மற்றும் குறிப்பிட்ட ஆய அச்சு அமைப்பில் அக வடிவியலை விவரிக்கும் பொதுவான அளவீட்டுப் பண்புருவான "g" ஐக் கொண்டு மேலும் விரிவாக்கப்பட வேண்டும். இருப்பினும், அண்டமானது ஒருபடித்தானதும் திசை ஒருமியதாகவும் உள்ளது என்னும் அண்டவியல் கொள்கையைக் கருதினால், வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் மற்றொரு புள்ளியைப் போன்றதே; ஆகவே அளவீட்டுப் பண்புருவானது எங்கும் மாறாமல் ஒரே மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கருத்து, அளவீட்டுப் பண்புருவின் ஒற்றை வடிவத்திற்கு வழி வகுத்தது, அது பிரீட்மேன்-லேமைட்ரீ-ராபர்ட்சன்-வாக்கர் அளவீடு எனப்பட்டது இதில் ("r" , θ, φ) ஆகியவை ஒரு கோள ஆய அச்சு அமைப்பைக் குறிக்கின்றன. இந்த அளவீட்டில் இரண்டு தீர்மானிக்கப்படாத அளவுருக்களே உள்ளன: காலத்தைப் பொறுத்து மாறக்கூடிய ஒட்டுமொத்த நீள அளவு "R" மற்றும் ஒரு தட்டையான யூக்ளிடியன் வடிவியல் அல்லது நேர்க்குறி அல்லது எதிர்க்குறி வளைவின் வெளியைப் பொறுத்து 0, 1, அல்லது -1 என்ற மூன்று மதிப்புகளையே கொண்டிருக்ககூடிய வளைவு எண் "k" ஆகியவையே. அண்டவியலில், அண்டத்தின் வரலாற்றைக் கணக்கிடுவதற்கு "R" என்பதை நேரத்தின் சார்பாகக் கணக்கிடுகின்றனர், இதில் "k" மற்றும் ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகளில் வரும் சிறிய அளவுருவான அண்டவியல் மாறிலி "Λ" ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. "R" என்பது காலத்தைப் பொறுத்து எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கும் சமன்பாட்டை, அதைக் கண்டறிந்தவரான அலெக்ஸாண்டர் ஃப்ரைடுமேன் அவர்களின் பெயரால் பிரீட்மேன் சமன்பாடு என அழைக்கின்றனர். "R(t)" க்கான தீர்வானது "k" மற்றும் "Λ" ஆகியவற்றைச் சார்ந்துள்ளது, ஆனால் அது போன்ற தீர்வுகளின் பண்பியல் அம்சங்கள் பொதுவானவை. முதலும் முக்கியமுமாக, முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதைப் போல, அண்டமானது முழுமையாக திசை ஒருமியதும், நேர்க்குறி வளைவைக் ("k" =1) கொண்டதுமாகவும் இருந்து அனைத்து இடங்களிலும் ஒரே துல்லியமான அடர்த்தியைக் கொண்டிருந்தால் "மட்டுமே" அண்டத்தின் நீள அளவான "R" மாறிலியாக இருக்க முடியும். இருப்பினும் இந்தச் சமநிலையானது நிலையற்றது, பொது சார்பியலின் படி, அண்டமானது அதன் மிகச் சிறிய அளவீடுகளில் ஒருபடித்தானதாக இல்லாததால் "R" இன் மதிப்பு மாறக்கூடியதாக உள்ளது. "R" இன் மதிப்பு மாறும் போது, அண்டத்தின் வெளி சார்ந்த அனைத்துத் தொலைவுகளுமே மாறக்கூடும்; வெளியானது தானே ஒட்டு மொத்த விரிவாக்கம் மற்றும் சுருக்கத்துக்குட்பட்டுள்ளது. விண்மீன் திரள்கள் தனித்தனியாக அந்தரத்தில் மிதப்பதாகத் தோன்றுவதை இது விளக்குகிறது; அவற்றுக்கிடையே உள்ள வெளியானது விரிவடைகிறது. இரண்டு விண்மீன் திரள்கள் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே புள்ளியில் தொடங்கினாலும், மேலும் ஒரு போதும் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் அவை பயணித்ததில்லை எனினும், அவை இரண்டும் ஒன்றுக்கொன்று 40 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் விந்தையையும் இந்த வெளி விரிவாக்கக் கருத்து விளக்குகிறது. இரண்டாவதாக, அனைத்து முடிவுகளுமே "R" இன் மதிப்பு பூச்சியமாக இருந்து பருப்பொருளும் ஆற்றலும் வரையறுக்கப்படாத அளவு அடர்த்தியைக் கொண்டிருந்த கடந்த காலத்தில் ஈர்ப்பியல் ஒருமைத்தன்மை ஒன்று இருந்ததாகக் கூறுகின்றன. இந்தக் கருத்தானது முழுமையான ஒருபடித்தான தன்மை மற்றும் திசை ஒருமிய தன்மை (அண்டவியல் கொள்கை) மற்றும் ஈர்ப்பியல் விசை மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கருத்து, ஆகிய கேள்விக்குட்பட்ட கருத்தியல்களின் அடிப்படையில் அமைந்திருந்ததால், இந்தக் கருத்து உறுதியற்றதாகத் தோன்றலாம். இருப்பினும், பென்ரோஸ்-ஹாகிங் ஒருமைத்தன்மை தேற்றங்கள் படி, மிகவும் பொதுவான நிபந்தனைகளுக்கு மட்டுமே ஒருமைத்தமையானது இருக்க வேண்டும். இதனால், ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகளின் படி, "R" இன் மதிப்பானது, ("R" இன் மதிப்பு மிகச் சிறியதும் வரையறுக்கப்பட்டதுமாக இருந்த) இந்த ஒருமைத்தன்மையிலிருந்த நிலையை அடுத்து, கற்பனைக்கும் எட்டாத வெப்பமான அடர்த்தியான நிலையிலிருந்து மிக அதிவேகத்தில் அதிகரித்துள்ளது; இதுவே அண்டத்தின் பெருவெடிப்பு மாதிரியின் அடிப்படையாகும். பருப்பொருளும் ஆற்றலும் காலம் மற்றும் வெளியின் ஒரு புள்ளியிலிருந்து வெடித்து உருவானது என்றே பெருவெடிப்பு மாதிரி கூறுகிறது என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும். இருப்பினும், வெளியானது பெரு வெடிப்பில் தோன்றி குறிப்பிட்ட அளவு பருப்பொருள் மற்றும் ஆற்றலால் நிரம்பியுள்ளது; வெளியானது விரிவடைவதால் ( அதாவது "R(t)" இன் மதிப்பு அதிகரிப்பதால்), பருப்பொருள் மற்றும் ஆற்றலின் அடர்த்தி குறைகிறது. மூன்றாவது, ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கும் அதிகமான நீள அளவீடுகளின் சராசரியான காலவெளியின் வெளி சார்ந்த வளைவின் சராசரியின் குறியை வளைவு எண் "k" இன் மதிப்பே தீர்மானிக்கிறது. "k" =1 எனில், வளைவு நேர்க்குறி கொண்டதாகும், மேலும் அண்டத்திற்கு வரையறுக்கப்பட்ட பருமனுள்ளது. இது போன்ற அண்டங்களை சில நேரம், நான்கு பரிமாணங்கள் கொண்ட வெளியில் பொதிக்கப்பட்ட முப்பரிமாணக் கோளமாக "S" காட்சிப்படுத்துகின்றனர். மாறாக, "k" என்பது பூச்சியம் அல்லது எதிர்க்குறி மதிப்பெனில், அண்டமானது அதன் ஒட்டு மொத்த பிரதேசவியலைச் சார்ந்து முடிவிலாப் பருமனைக் "கொண்டிருக்கலாம்" . முடிவிலாததும் முடிவிலா அடர்த்தி கொண்டதுமான அண்டமானது "R" =0 என்ற நிலையில் பெரு வெடிப்பின் போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் உருவாகியிருக்க முடியும் என்பது உண்மைக்கு எதிரானதாகத் தோன்றலாம், ஆனால் "k" இன் மதிப்பு 1 க்குச் சமமாக இல்லாதபட்சத்தில் கணிதவியலின் படி இவ்வாறே கணக்கிடப்படுகிறது. ஒப்பீட்டுக்கு, முடிவிலாத் தளமானது பூச்சிய வளைவும் முடிவிலாப் பரப்பும் கொண்டுள்ளது, முடிவிலா உருளையானது ஒரு திசையில் முடிவுள்ளதும் முடிவிலாச் சுருளானது இரு திசையிலும் முடிவுள்ளதுமாகவும் உள்ளது. முடிவிலாச் சுருள் அண்டமானது, ஆஸ்டிராய்ட்ஸ் போன்ற "உலகப் பயண" வீடியோ கேம்களில் உள்ளதைப் போன்ற கால இடைவெளிக்குட்பட்ட எல்லை நிபந்தனைகளைக் கொண்டு இயல்பான அண்டத்தைப் போலவே இருக்கும்; "வெளிநோக்கிச்" செல்லும் "எல்லையைக்" கடக்கும் ஒரு பயணி, "உள்நோக்கிச்" செல்லும் மற்றொரு எல்லையின் ஒரு புள்ளியில் மீண்டும் தோன்றுவார். அண்டத்தின் முடிவான விதியை இதுவரை அறிய முடியவில்லை, ஏனெனில் அது வளைவு எண் "k" மற்றும் அண்டவியல் மாறிலி"Λ" ஆகியவற்றையே வெகுவாகச் சார்ந்துள்ளது. அண்டமானது போதுமான அளவு அடர்த்தியுள்ளதாக இருப்பின், "k" இன் மதிப்பு +1 க்குச் சமமாக இருக்கும், அதாவது அதன் சராசரி வளைவானது நேர்க்குறி கொண்டது, மேலும் அண்டமானது மீண்டும் ஒரு அண்டச் சுருக்கத்தில் சுருங்கிவிடும் வாய்ப்புள்ளது, பின்னர் ஒரு பெருந்துள்ளல் நிகழ்வில் மீண்டும் ஒரு புதிய அண்டம் உருவாக வாய்ப்புள்ளது. மாறாக, அண்டத்தின் அடர்த்தி போதுமானதாக இல்லை எனக் கொண்டால், "k" இன் மதிப்பு 0 அல்லது −1 க்குச் சமமாகும், அதாவது அண்டமானது தொடர்ந்து விரிந்துகொண்டே செல்லும், அது குளிர்ந்து திடம் குறைந்து எந்த உயிரும் வாழ முடியாமல் சென்று, விண்மீன்களெல்லாம் அழிந்து பருப்பொருள் அனைத்தும் மீண்டும் கருந்துளையால் விழுங்கப்படும் (பேருறைவு மற்றும் அண்டத்தின் வெப்ப இழப்பு). மேலே குறிப்பிட்டது போல் அண்டத்தின் விரிவானது எதிர்பார்த்தபடி குறையவில்லை என சமீபத்திய தரவு கூறுகிறது, மாறாக முடுக்கப்படுகிறது; இது முடிவின்றித் தொடர்ந்தால், அண்டம் தானகவே உடைந்து சிதறும் (பெரு உடைப்பு). சோதனைகளின் படி, அண்டமானது அதன் மீண்டும் சுருங்கும் நிலைக்கும் உயர் விரிவாக்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு குறிப்பிட்ட அடர்த்தி மதிப்பைக் கொண்டுள்ளது; இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மேலும் கூடுதல் கவனமான வானியல் ஆய்வுகள் தேவை. பெரு வெடிப்பு மாதிரி மேற்குறிப்பிட்டுள்ள பெரும்பாலான ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்குகின்றது, அதாவது விண்மீன் திரள்களின் தொலைவு மற்றும் சிவப்புநகர்வு ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பு, ஹைட்ரஜன்: ஹீலியம் அணுக்களின் ஒட்டுமொத்த விகிதம், எங்கும் பரவியுள்ள திசைஒருமிய மைக்ரோ அலை கதிரியக்கப் பின்புலம் ஆகிய கருத்துகளை விளக்குகிறது. மேற்குறிப்பிட்டது போல, சிவப்புநகர்வு வெளியின் அளவியல் விரிவாக்கத்தினால் ஏற்படும் விளைவாகும், விண்வெளி தானாக விரிவடைவதனால், விண்வெளியில் பயணிக்கும் போட்டானின் அலைநீளம் அதிகமாகின்றது, இதனால் இதன் ஆற்றல் குறைகின்றது. போட்டான் பயணம் செய்யும் தொலைவுக்கேற்ப, அது அதிக விரிவடைதலுக்கு உள்ளாகிறது, மிக தொலைவிலுள்ள விண்மீன் திரள்களிலிருந்து வரும் பழமையான போட்டான்கள் அதிகமாக சிவப்புநகர்வுக்கு உள்ளாகின்றன. சிவப்புநகர்வு மற்றும் தொலைவுக்கிடையேயான தொடர்பைக் கண்டறிவது இயற்பியல் அண்டவியலில் மிக முக்கிய சிக்கலாக உள்ளது. விண்வெளியின் ஒட்டுமொத்த விரிவடைதலை, அணுக்கரு மற்றும் அணு இயற்பியல் ஆகியவற்றோடு இணைத்து, வேறு சில சோதனைகளின் மூலம் விளக்க முடியும். அண்டம் விரிவடைவதனால், மின்காந்தக் கதிர்வீச்சின் ஆற்றலின் அடர்த்தி, பருப்பொருள் ஆற்றலின் அடர்த்தி குறைவதைவிட மிக வேகமாக குறைகிறது, போட்டானின் ஆற்றலானது அதன் அலைநீளம் அதிகரிக்கையில் குறைவதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு அண்டத்தின் ஆற்றலின் அடர்த்தி பருப்பொருட்களால் ஆதிக்கம் செய்யப்படுகிறது, ஒரு காலத்தில் இது கதிர்வீச்சினால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தது; அழகாகச் சொன்னால், எல்லாமே ஒளியாகத்தான் இருந்தது. அண்டம் விரிவடைந்ததனால், அண்டத்தின் ஆற்றலின் அடர்த்தி குறைந்து, அது குளிர்ந்தது; இதனால் பருப்பொருளின் நுண்ணிய துகள்கள் ஒன்றிணைந்து நிலைத்தன்மையுள்ள மிகப் பெரும் தொகுதியாயின. இவ்வாறு பருப்பொருட்களின்-ஆதிக்க காலத்தில், நிலையான புரோட்டன்கள் மற்றும் நியூட்ரன்கள் தோன்றின, பின்பு இவை ஒன்றிணைந்து அணுக்கருவாக உருவாகின. இந்நிலையில், அண்டத்திலுள்ள பருப்பொருளானது, எதிர்ம எலக்ட்ரான்கள் நடுநிலையான நியூட்ரான்கள் மற்றும் நேர்ம- உட்கருக்கள் ஆகியவை கலந்த அதி வெப்பம் மற்றும் அடர்த்தி கொண்ட பிளாஸ்மாவாக இருந்தது. அணுக்கருகளுக்கு இடையே ஏற்படுகின்ற அணுக்கரு வினைகளால் லேசான அணுக்கருக்கள் அதிக அளவில் உருவாகியிருந்தன, முக்கியமாக ஹைட்ரஜன், டியூட்டிரியம் மற்றும் ஹீலியம் ஆகியன. இறுதியாக, எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்கருக்கள் இணைவதனால், நிலையான அணுக்கள் உருவாயின, இவ்வணுக்கள் கதிர்வீச்சுகளின் பெரும்பாலான அலைநீளங்களினால் ஊடுருவக்கூடியவையாக இருந்தன; இந்நிலையில் கதிர்வீச்சு பருப்பொருட்களிலிருந்து பிரிந்து, இன்று நாம் காணக்கூடிய, எங்கும் பரவும் தன்மையுள்ள, திசைஒருமிய பின்புலம் கொண்ட மைக்ரோஅலை கதிர்வீச்சாக உருவாகிவுள்ளது. நாம் அறிந்த இயற்பியலில், பிற ஆய்வுகள் யாவும் சரியாக விவரிக்கப்படவில்லை. மேலோங்கியிருக்கும் கொள்கையின் படி, அண்டம் உருவாகும்போதோ அல்லது அண்டம் உருவானவுடனேயோ, பருப்பொருள் மற்றும் எதிர்பருப்பொருள் அகியவற்றிற்கிடையே சமநிலையின்மை இருந்தது, இதற்கு CP மீறலே காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று துகள் இயற்பியல் வல்லுனர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் பருப்பொருளும், எதிர்ப்பொருளும் ஒன்றுடன் ஒன்று மோதி அழித்துக்கொண்டு போட்டான்களை உருவாக்குகின்றன, இந்த பருப்பொருளின் எஞ்சிய போட்டானே பருப்பொருள் அதிகமுள்ள அண்டத்தைக் கொடுக்கின்றது. அண்டத்தின் வேகமான அண்ட வீக்கம், அதன் வரலாற்றில் மிகவும் ஆரம்பகாலத்திலேயே, அதாவது அண்டம் தோன்றி (தோராயமாக 10 வினாடிகளில் நடந்திருந்தது) என பல்வேறு வகையான ஆதாரங்கள் தெரியப்படுத்துகின்றன. அண்டவியல் மாறிலி ("Λ" ) இன் மதிப்பு பூச்சியமில்லை என்றும், அண்டத்தின் நிகர நிறை-ஆற்றல் உள்ளடக்கத்தில், அறியப்படாத ஆற்றலும் அறியப்படாத பருப்பொருளுமே மேலோங்கி இருப்பதாகவும், இவை இன்னும் அறிவியல்பூர்வமாக விளக்கப்படவில்லை என்றும், அண்மையில் நடந்த பல்வேறு ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அவை தமது ஈர்ப்பியல் விளைவுகளில் வேறுபடுகின்றன. சாதாரண பருப்பொருளைப் போலவே அறியப்படாத பருப்பொருளும் ஈர்ப்பியல் விசை விளைவைக் கொண்டுள்ளன, இவ்வாறு அண்டம் விரிவடைதலின் வேகத்தை இவை குறைக்கின்றன; மாறாக அறியப்படாத ஆற்றல் அண்டம் விரிவடைதலின் வேகத்தை அதிகப்படுத்துகின்றது. சில ஊகத்தின் அடிப்படையிலான கொள்கைகள், அண்டம் என்பது, பல்லண்டம் என்று குறிப்பிடப்படுகின்ற, வெவ்வேறாக பிரிந்திருந்த அண்டங்களின் தொகுப்பு என்று கூறின, இது அண்டம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்ற கருத்தை மாற்றுவனவாக இருந்தன. இதை வரையறுக்கையில், ஒரு அண்டத்தில் உள்ள எதுவும் மற்றொரு அண்டத்தைப் பாதிக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை; அப்படி இரண்டு "அண்டங்கள்" ஒன்றை ஒன்று பாதிக்க முடிந்தால், அவை ஒரே அண்டத்தின் பகுதிகளாகவே இருக்கக்கூடும் எனவும் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு, மேலும் சில கதைகளில் வரும் பாத்திரங்கள் கற்பனை உலகங்களிடையே பயணிப்பதாகக் கூறப்படும், சரியாகச் சொன்னால், "அண்டம்" என்னும் வார்த்தை இங்கு முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரிந்திருந்த அண்டங்கள் இயற்பியல்ரீதியாக, ஒவ்வொன்றும் அதற்கே உரிய வெளி மற்றும் நேரத்தையும், பருப்பொருள் மற்றும் ஆற்றலையும் மற்றும் அதற்கே உரிய இயற்பியல் விதிகளையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அவை ஒவ்வொன்றும் இந்த அண்டங்கள் (அவற்றுக்கே உரிய தனி காலத்தைக் கொண்டிருப்பதால்) ஒத்திசைவில் இல்லாததால் அல்லது இவற்றுக்கிடையே (வெவ்வேறு அண்டங்களின் வெளி சார்ந்த நிலைகளுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பதால்) வடிவியல்ரீதியாக இணைத் தன்மையுள்ளதாக இல்லாததாலும், அவற்றின் இணைத் தன்மைக்குச் சவாலாக அமைந்தன. இத்தகைய இயற்பியல் ரீதியாகப் பிரிந்திருக்கும் அண்டங்கள், அறிநிலையின் வெவ்வேறு தளங்கள் என்னும் மெட்டா இயற்பியலின் கருத்திலிருந்து வேறுபடுத்தப்படவேண்டும், இவை இயல்பான இடங்களைக் குறிப்பவையல்ல, இவை தகவல்கள் மூலமாக ஒன்றிணைக்கப்பட்ட தளங்கள். பிரிந்திருந்த அண்டங்களான பல்லண்டம் பற்றிய கருத்து மிகப் பழமையானது; எடுத்துக்காட்டாக, 1277ஆம் ஆண்டில் பாரிசின் தலைமை குருவான ஈடீனி டெம்பயர் என்பவர், கடவுளால் அவர் விரும்புமளவு பல அண்டங்களை உருவாக்க முடியும் என்று கூறினார், இதைப் பற்றி பிரான்சு சமய அறிஞர்களிடையே சூடான விவாதங்கள் எழுந்தன. பல்லண்டங்களைப் பற்றிய விளக்கத்தை வழங்கும் இரண்டு விதமான அறிவியல் கோணங்கள் உள்ளன.முதலில், துண்டிக்கப்பட்ட காலவெளித் தொடர்பமானது இருந்திருக்கலாம்; அனைத்து நிலைகளிலுள்ள பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவை ஒன்றிணைந்து அண்டத்தில் இருக்கலாம் மற்றும் அவை ஒன்றை ஒன்று "துளைக்க" முடியாது. முந்தைய அண்டத்தின் முறையற்ற வீக்க மாதிரி, இது போன்ற கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இரண்டாவது, பல உலகங்கள் கருதுகோளின்படி, ஒவ்வொரு குவாண்டம் அளவிலும் ஒரு இணை அண்டம் பிறக்கிறது; அண்டம் பல நகல்களாகப் "பிரிகிறது", அவை ஒவ்வொன்றும் குவாண்டம் அளவின் வெவ்வேறு வெளியீடுகளுக்கு உரியன. இருப்பினும், "பல்லண்டம்" என்ற இந்தச் சொல்லின் இரண்டு புரிதல்களுமே ஊகத்தின் அடிப்படையிலானவை மேலும் அவற்றை அறிவியலடிப்படையற்றவை என்றே கருதலாம்; ஓர் அண்டத்தில் நிகழ்த்தப்படும் எந்த சோதனையும் அதனோடு தொடர்பில்லாத மற்றோர் அண்டம் இருப்பதையோ அல்லது அதன் குணங்களையோ உறுதிப்படுத்த முடியாது. புற ஊதாக் கதிர் புற ஊதாக் கதிர் "("ultraviolet light")" என்பது கண்களால் பார்த்து பெரும்பாலும் உணரமுடியாத மின்காந்த ஒளி அலைகள் ஆகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா வரையான கதிர்களின் ஒழுங்கில், ஊதாக்கதிர்களுக்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது. புற ஊதாக்கதிர் 10 நா.மீ முதல் 400 நா.மீ வரையிலான அலைநீளத்தைக் கொண்டுள்ளது. கண்களுக்குப் புலனாகும் ஓளி அலைகளைக் காட்டிலும் இது அதிகமாகவும் எக்சு கதிர்களைக் காட்டிலும் குறைவானதாகவும் உள்ளது. சூரியனிலிருந்து வரும் ஒட்டு மொத்த ஒளியில் 10% ஒளி புற ஊதாக்கதிரினால் ஆனதாகும். மின் விற்பொறி மற்றும் பாதரச ஆவி விளக்குகள், தோல் பதனிடு விளக்குகள், நீளலை புறஊதா விளக்குகள் போன்ற சிறப்பு விளக்குகளைப் பயன்படுத்தியும் புற ஊதாக்கதிர்களை உருவாக்கலாம். அணுக்களை அயனியாக்கும் ஆற்றல் இதன் ஒளியணுக்களுக்கு இல்லை என்பதால் ஓர் அயனியாக்கக் கதிர்வீச்சாக புற ஊதாக்கதிர் கருதப்படுவதில்லை. ஆனாலும் நீளலை புற ஊதா கதிர்வீச்சு இரசாயன வினைகளில் பங்கேற்கிறது. பல பொருட்களை ஒளிர அல்லது உடனொளிரச் செய்கிறது. இதன் விளைவாக, எளிமையான வெப்ப விளைவுகளைக் காட்டிலும் புற ஊதாக்கதிரின் உயிரியல் விளைவுகள் அதிகமானவையாக உள்ளன. மற்றும் இக் கதிர்வீச்சின் பல நடைமுறை பயன்பாடுகள் கரிம மூலக்கூறுகளுடன் கொண்ட தொடர்புகளிலிருந்து பெறப்படுகின்றன. தோலின் நிறம் கருத்தல், முகச்சுருக்கங்கள் வேனிற்கட்டிகள் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவை புற ஊதாக்கதிர் பாதிப்புகளாகும். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வரும் புற ஊதாக்கதிர் வடிகட்டப்படாவிட்டால், சூரியனின் புறஊதா கதிர்வீச்சால் வாழும் உயிர்னங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன . 121 நானோமீட்டருக்கும் குறைவான அலைநீளம் கொண்ட விளிம்புநிலை புற ஊதாக்கதிர் அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது. இது பூமியை அடைவதற்கு முன்னரே ஈர்க்கப்படுகிறது மனிதர்கள் உட்பட பெரும்பாலான முதுகெலும்பிகளின் எலும்பு வலுவடைவதற்கு காரணமான வைட்டமின் டி உருவாகுவதற்கு புற ஊதாக்கதிரும் காரணமாகும். புற ஊதாக்கதிர்களால் நமக்கு நன்மை, தீமை ஆகிய இரண்டு விளைவுகளும் ஏற்படுகின்றன. புற ஊதாக் கதிர்கள் பெரும்பாலான மனிதர்களின் கண்களுக்குத் புலப்படுவதில்லை. மனித கண்களில் உள்ள லென்சு பொதுவாக 320 முதல் 290 வரை அதிர்வெண் கொண்ட ஒளியலைகளை வடிகட்டுகின்றன. மேலும் மனிதர்களின் கண்களில் புற ஊதாக் கதிர்களின் வண்ணமேற்பு தகவமைப்புகள் இல்லை . குழந்தைகள் மற்றும் இளைஞர்களால் சில சிறப்பு நிகழ்வுகளில் சுமார் 310 நானோ மீட்டர் அலைநீள புற ஊதாக்கதிர்களை காணமுடிகிறது . விழிவில்லை இல்லாத மனிதர்கள் அல்லது மாற்று விழிவில்லை பொருத்தப்பட்ட மனிதர்களால் இக்கதிர்களைக் காணமுடிகிறது.. சில பூச்சிகள், பறவைகள், பாலுட்டிகளின் கண்களுக்கும் புற ஊதாக் கதிர்கள் புலப்படுகின்றன . சூரிய ஒளி படும்போது வெள்ளி உப்புக்கள் கருமையாக மாறின. புற ஊதா கதிர்வீச்சு கண்டுபிடிப்பு அந்த கவனிப்பு தொடர்புடையதாக இருந்தது. 1801 ல் , செருமன் இயற்பியலாளர் யோகன் வில்லெம் ரிட்டர் வெள்ளி குளோரைடு நனைத்த காகிதத்தை ஊதா நிறத்திற்கு அப்பால் உள்ள கதிர்கள் ஊதா நிறக்கதிரை விட வேகமாக கருமையாக்குவதாக கண்டுபிடித்தார். இவற்றின் வேதியியல் கூறுகளை வலியுறுத்த மற்றும் " வெப்ப கதிர்களில் " இருந்து வேறுபடுத்த இவற்றை அவர் "ஆக்சிசனேற்றக் கதிர்கள்" என்று அழைத்தார். எளிமையான " இரசாயன கதிர்கள் " என்ற பதம் விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது 19ஆம் நூற்றாண்டு முழுவதும் பிரபலமாக இருந்தது. பின்னர் இரசாயன மற்றும் வெப்ப கதிர்களுக்கு பதிலாக முறையே, புற ஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர் ஆகிய பதங்கள் உபயோகப்படுத்தப்படலாயின. 200 நானோமீட்டருக்கும் கீழே அலைநீளம் கொண்ட புற ஊதா கதிரின் கண்டுபிடிப்பு செருமன் இயற்பியலாளர் விக்டர் சூமானால் 1893 ல் செய்யப்பட்டது. இது கடுமையாக காற்று மூலம் உறிஞ்சப்படுவதால் வெற்றிட புற ஊதா என்று அழைக்கப்பட்டது. சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் மனித உடல்நலனில் பல்வேறு விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் ஒளிரும் விளக்குகளால் உண்டாக்கும் ஆரோக்கியக் கேடுகளுடனும் இது தொடர்பு கொண்டுள்ளது. அதிகப்படியான சூரிய வெளிச்சம் உடலின் மீது விழுவது தீங்கு விளைவிக்கும், ஆனால் இவ்வொளியை மிதமாக அளவுக்கு உடல் பெற்றால் நன்மை விளைகிறது. புற ஊதாக்கதிரின் மின்காந்த நிழற்பட்டையை பல்வேறு வகைகளில் பிரிக்கலாம். solar irradiances கண்டறிவதற்கான ஐ.எசு.ஓ (ISO-21348) பின்வரும் வரம்புகளை விவரிக்கிறது: காற்று மூலம் கடுமையாக உறிஞ்சப்படுவதால் வெற்றிட புற ஊதா கதிர்களுக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. இதனால் இது வெற்றிடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கதிர்களின் அலைநீளமான 150 – 200 நானோமீட்டரில் முக்கியமான உறிஞ்சி காற்றிலுள்ள ஆக்சிசன் தான். அதனால் ஆக்சிஜன் இல்லா சூழலில் (பொதுவாக சுத்தமான நைட்ரசன்), இது பயன்படுத்தப்படுகிறது. இரசாயன எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பொருட்களில் ஒளிர்வை தூண்டுவதாலும் புற ஊதா ஒளி, நவீன சமூகத்தில் பல பயனுள்ள பயன்பாடுகளை கொண்டுள்ளது. *"லேசர்கள்" தொடக்கக்கால இனப்பெருக்க புரதங்கள் மற்றும் நொதிகளின் பரிணாம வளர்ச்சி, பரிணாம கோட்பாட்டின் நவீன மாதிரிகளுக்கு புற ஊதா கதிர்வீச்சு காரணமாகிறது. அடர்த்தி இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி () ("density") என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட "பரும" அளவில் ("கன" அளவில்) எவ்வளவு "நிறை" அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும். SI அலகுகள்: நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு : கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ என எழுதுவது வழக்கம். பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்: மில்லிமீட்டர் மில்லிமீட்டர் (மில்லிமீற்றர்) என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் கண்ணாடித் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் சுவர்களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், அறைகளின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக மிமீ. என்று எழுதுவது வழக்கம். மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம். மீட்டர் அளவை முறையில் மில்லிமீட்டருக்கும் பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு: மில்லிமீட்டருக்கும் இம்பீரியல் அளவை முறையில் உள்ள பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு: மில்லிமீட்டரில் தரப்பட்டுள்ள சில தர அளவுகள் வருமாறு: சுவர் சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக நிலைக்குத்து அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள் கட்டிடங்களினுள் இடத்தைப் பல்வேறு அறைகளாகப் பிரிப்பதுடன், கட்டிடத்தின் உட்பகுதிகளை வெளிப்புறப் பகுதிகளினின்றும் பிரிக்கின்றது. கட்டிடங்களுக்குரிய அல்லது வேறு நடவடிக்கைகளுக்குரிய நிலப் பகுதிகளை வரையறுத்துப் பாதுகாப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. பெரிய நாடுகளின் பாதுகாப்புக்காக ஊடுருவல்களைத் தடுப்பதற்கும் சுவர்கள் அமைக்கப்படுவதும் உண்டு. புகழ் பெற்ற சீனப் பெருஞ் சுவர், இப்பொழுது அகற்றப்பட்டுவிட்ட பெர்லின் சுவர் என்பன இவ்வாறான சுவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். சுவர்களைப் பலவகைகளாகப் பிரிக்கலாம். என்பன இவற்றுள் முக்கியமானவை. கட்டிடங்களில் சுவர்கள் பல்வேறு செயற்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகக் கட்டப்படுகின்றன. கூரைகள் மற்றும் மேல் தளங்களினால் சுமத்தப்படும் சுமையைத் தாங்குதல், பல்வேறு செயற்பாடுகளுக்கான இடங்களைப் பிரித்து வேறுபடுத்துதல், மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்து கட்டிடங்களின் உட்பகுதிகளைப் பாதுகாத்தல், வெளியார் மற்றும் விலங்குகள் உட்புகுவதைத் தடுத்தல் என்பன அவற்றுட் சில. இவ்வாறு அவை நிறைவு செய்ய வேண்டிய தேவைகளைப் பொறுத்து அவற்றைக் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள், மற்றும் வடிவமைப்புகள் வேறுபடுகின்றன. சுமை தாங்குமாறு வடிவமைக்கப்படும் சுவர்கள் செங்கற்கள், காங்கிறீற்றுக் கற்கள், வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று என்பவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. பாதுகாப்புத் தேவைகளுக்கும் இத்தகைய சுவர்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. உள்ளக வெப்பக் கட்டுப்பாடு மற்றும் சக்தி மூலங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இக் காலத்தில் வெப்பத்தை அரிதிற் கடத்தும் தன்மையுள்ள வெளிச் சுவர்களுக்கான சிறப்புக் கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமை தாங்காத உள்ளகச் சுவர்கள் மற்றும் அறைகளுக்கிடையேயான பிரிசுவர்கள் என்பன வெளிச் சுவர்களைப் போன்ற பலம், வெப்பம் கடத்தும் தன்மை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எனினும் இன்றைய கட்டிடங்கள் பல்வேறு சிக்கல் தன்மை வாய்ந்த செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டியிருப்பதன் காரணமாக உட்புறச் சுவர்களும் பல்வேறு விதமான தேவைகளை நிறைவு செய்ய வேண்டியவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் சத்தம் கடத்தப்படுவதைத் தடுத்தல், தீத் தடுப்பு என்பன இன்று முக்கியத்துவம் பெறுகின்ற சில அம்சங்களாகும். உள்ளகச் சுவர்கள் பல தற்காலத்தில் உருக்குச் சட்டக அமைப்புக்களின் மீது இரண்டு பக்கமும் ஜிப்சம் தகடுகள் போன்றவற்றைப் பொருத்துவதன் மூலம் அமைக்கப்படுகின்றன. இவை உலர் சுவர்கள் என அழைக்கப்படுகின்றன. கட்டிடங்களில் அமையும் சுவர்கள் பல சந்தர்ப்பங்களில் அழகியற் கூறுகளாக அமைவதும் உண்டு. நவீன கட்டிடக்கலையின் அறிமுகத்துக்கு முன்னர் கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் பெருமளவு அழகியல் அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டன. நவீன கட்டிடங்கள் பெரும்பாலும் இத்தகைய மேலதிக சுவர் அலங்காரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனினும், கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தும் விதத்திலும், அழகூட்டும் மேற் பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பல்வேறு முடிப்புப் பொருட்களால் போர்த்துவதன் மூலமும் சுவர்கள் அழகு படுத்தப்படுகின்றன. உள்ளகச் சுவர்கள் சுவரோவியங்கள் போன்ற கலைப் படைப்புக்களைத் தாங்கியிருப்பதும் உண்டு. கட்டிடங்கள் அமைந்துள்ள நிலப்பகுதியின் எல்லைகளில் எல்லைச் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றைச் சுற்று மதில்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக வெளியார் ஊடுருவலைத் தடுப்பதற்காகவே கட்டப் படுகின்றனவாயினும், சுற்று மதில்கள் அழகியல் கூறுகளாகவும் அமைவதுண்டு. நீண்ட தூரம் சென்று தாக்கும் கனரக ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரு முன்னர் உலகின் பல நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்படி ஆயுதங்களின் அறிமுகம் சுற்று மதில்களின் பாதுகாப்புப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கியதனால், பிற்காலத்தில் நகரங்கள் சுவர்களுக்கு வெளியே விரிவடையத் தொடங்கியதுடன் பழைய சுவர்கள் பலவும் அழிந்து போய்விட்டதையும் காண முடியும். நிலத்துக்குக் கீழ் கட்டப்படும் அமைப்புக்களிலோ அல்லது நிலத்துக்கு மேலுள்ள அமைப்புக்களிலோ மண், கற்கள், நீர் முதலியவற்றின் நகர்வைத் தடுக்கும் விதத்தில் கட்டப்படும் சுவர்கள் அணை சுவர்கள்(Retaining wall) ஆகும். வெளிப்புறத்தில் நில மட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் காணப்படும் இடங்களில் அணை சுவர்கள் தேவைப்படுகின்றன. இதைவிட நிலக்கீழ் அறைகள், நீர்த் தாங்கிகள், பெரிய அணைகள் போன்றவைகள் கட்டப்படும்போதும் அணை சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கூரை மழை, வெய்யில் முதலியவற்றிலிருந்தும், விலங்குகள், பறவைகள், வெளி மனிதர்கள் ஆகியோரின் ஊடுருவல்களிலிருந்தும் கட்டிடத்தின் உட் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகக் கட்டிடத்தின் மேற்பகுதியை மூடி அமைக்கப்படும் கட்டிடக் கூறே கூரை எனப்படுகின்றது. கூரைகள் இன்று பல வடிவங்களிலும் பல்வேறு கட்டிடப் பொருள்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன. மழை மற்றும் பனிமழைகள் பெய்யும் இடங்களில் கட்டப்படும் மரபு சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் சரிவான கூரை அமைப்புக்களைக் கொண்டுள்ளன. இது கூரையில் விழும் மழை நீர் மற்றும் பனிக்கட்டிகள் முதலானவை இலகுவில் வழிந்தோடுவதற்கு இலகுவானது. கூரையின் வடிவம், பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருட்கள், அமைப்புத் தொழில் நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். என ஏராளமான கூரை வகைகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இவற்றுட் சில பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்பாட்டில் உள்ளவை. சில வகைகள் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவுகள். சிலவகையான கட்டிடங்களில் கூரை, சுவர் ஆகியவற்றுக்கு இடையே வேறுகாடு காண முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சில வகைக் கூடாரங்கள், [[இக்லூ] போன்றவற்றில் கூரைகளே நிலம் வரை நீள்வதனால் சுவர் என்று தனியாக அடையாளம் காணப்படக்கூடிய எதுவும் கிடையாது. [[படிமம்:Sydney Opera House Sails.jpg|thumb|250px|left|ஜோர்ண் அட்சன் என்னும் கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட "[[சிட்னி ஒப்பேரா மண்டபம்]]". இதன் [[முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்று|முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்றுக்]] கூரை உலகப் புகழ் பெற்றது.]] கூரைக்கான கட்டிடப் பொருட்களை அமைப்புச் சட்டகங்களுக்கான கட்டிடப் பொருட்கள், அவற்றின் மேல் மூடுவதற்குப் பயன்படும் பொருட்கள் என வகைப்படுத்த முடியும். மிகவும் அடிப்படையான புற்கள், இலை குழைகள், [[மண்]], கற்பலகைகள் என்பன தொடக்கம் [[காங்கிறீற்று]], [[உருக்கு|உருக்குத்]] தகடுகள், அலுமீனியம், [[ஈயம்]] வரையான பல்வேறு வகையான பொருட்கள் கூரையின் வெளிப்புற மூடல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமைப்புச் சட்டகங்களில், காட்டுத்தடிகள் மற்றும் [[மரம்|மரங்கள்]], செம்மைப் படுத்தப்பட்ட மரம், உருக்கு, [[அலுமீனியம்]] போன்ற பொருட்களைக் காண முடியும். சிலவகைக் கூரை அமைப்புக்கள் [[அமைப்புச் சட்டகம்]], மூடல் எனத் தனித்தனியாக அமையாமல் இரண்டும் ஒன்றாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக, குவிமாடங்கள், வளை கூரைகள்(Vaults), shells முதலியவற்றில் அமைப்புக் கூறும், மூடற் கூறும் ஒன்றே. [[பகுப்பு:கட்டிடக்கலை]] [[பகுப்பு:கட்டிடக் கூறுகள்]] வேலி (எல்லை) "வேலி" என்பது ஒரு நில அளவைக்கான அலகாகவும் தமிழ் நாட்டில் பயன்படுத்தப் படுகின்றது. ஆனால் இக்கட்டுரை நிலப் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்படும் வேலிகள் பற்றியதாகும். வேலி என்பது கட்டிடங்களுக்கு உரிய நிலம், பயிர்ச் செய்கைக்குரிய நிலம் மற்றும் பலவகையான நிலப் பகுதிகளைச் சுற்றியும், சில வேளைகளில் ஒரே நிலப்பகுதிக்குள் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது செயற்பாடுகளுக்கான பகுதிகளைப் பிரித்து ஒதுக்கும் வகையிலும், மறைப்புக்காகவும் அமைக்கப்படுவதாகும். எல்லைகளில் அமைக்கப்படும் வேலிகள் எல்லை வேலிகள் என அழைக்கப்படுகின்றன. மதில் அல்லது மதில் சுவர் என்பதும் எல்லைகளில் பாதுகாப்புக்காகக் கட்டப்படும் அமைப்பினைக் குறித்தாலும், நிரந்தரமான, திடப் பொருளால், அதனூடு பார்க்க முடியாதவாறு உள்ளவற்றையே இவ்வாறு அழைப்பது வழக்கம். வேலி பெரும்பாலும் நீடித்து உழைக்காத பொருட்களால் அமைக்கப்படுவதுடன், பொதுவாக இலகுவான கட்டுமானங்களாகவும், ஊடாகப் பார்க்கக்கூடிய தன்மை கொண்டவையாகவும் இருக்கும். வேலிகள் அமைப்பதற்கான செலவும், மதில்களோடு ஒப்பிடும் போது குறைவே. வேலிகள் பல்வேறுவகையான தேவைகளுக்காக அமைக்கப்படுகின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் முக்கியமான தேவையாகும். "வேலியே பயிரை மேய்வது போல" என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன. இலங்கையின் யாழ்ப்பாணக் கிராமங்கள் இத்தகைய வேலிகளுக்குப் பெயர் பெற்றவை. யாழ்ப்பாணத்தைப் பற்றி எழுதிய வெளிநாட்டார் பலர் அங்கிருந்த வேலிகள் பற்றிக் குறிப்பிடாமல் விட்டதில்லை. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன் படுத்துவார்கள். காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு. குவிமாடம் குவிமாடம் (dome) என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாழக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. எனினும் குவிமாடங்களின் வடிவங்களில் வேறுபாடுகளையும் அவதானிக்கமுடியும். சில கட்டிடங்களில் குவிமாடங்கள் அரைக்கோள வடிவில் அல்லாது அதனிலும் உயரம் குறைந்த கோளத் துண்டு வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. வெங்காய வடிவம் கொண்ட குவிமாடங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. மாஸ்கோவிலுள்ள புனித பசில் தேவாலயத்திலுள்ள குவிமாடங்கள் இவ்வகைக் குவிமாடங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இஸ்லாமியக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களிலும் இவ்வகைக் குவிமாடங்களைக் காண முடியும். கூரை தொடங்கும் இடத்திலிருந்து அமையும் குவிமாடங்களும், இவ்விடத்திலிருந்து உயர்த்தி அமைக்கப்படும் குவிமாடங்களும் உள்ளன. குவிமாடங்கள் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்ட கட்டட அமைப்பாக உள்ளன அவை சேறு, பனி, கல், மரம், செங்கல், கான்கிரீட், உலோகம், கண்ணாடி நெகிழி ஆகியவற்றால் பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன. குவிமாடக்கோபுரமானது அடக்குமறை, தெய்வீகம், வானக்கோளம் அரசாங்க மரபுகள் போன்றவற்றுடன் தொடர்படையவையாகக் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. துவக்கக்கால மெசொப்பொத்தேமியாவிலிருந்து குவிமாடங்கள் காணப்படுகின்றன, இவை இங்கிருந்தே பரவி இருக்கலாம். இவை பண்டைய பாரசீகம், ஹெலனியர், ரோமன், சீனக் கட்டிடக்கலை போன்றவற்றில் காணப்படுகின்றன, அத்துடன் பல நவீனகால கட்டிட வளாகங்களில் இவை காணப்படுகின்றன. இவை பைசண்டைன் மற்றும் இடைக்கால இஸ்லாமிய கட்டிடக்கலையில் பிரபலமாக இருந்தன என்பதற்கு, நடு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இருந்து பல உதாரணங்கள் உள்ளன. துவக்க நவீன காலத்தில் இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி பாணி பிற பகுதிகளுக்குப் பரவியது. கணிதத்தில் முன்னேற்றங்கள், பொருட்கள் மற்றும் உற்பத்தி நுட்பங்கள் வளர்ச்சி ஆகியவற்றால் புதிய குவிமாட வகைகள் உருவாயின. நவீன உலகின் கோபுரங்கள் சமயக் கட்டிடங்கள், சட்டமன்றக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற பல்வேறு செயல்பாட்டு கட்டமைப்புகளில் குவிமாடங்களைக் காணலாம். குவிமாடத்தைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான "டோம்" என்ற சொல் லத்தீன் மொழியின் டோம்ஸில் ("வீடு") என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் கூரை வடிவத்தைப் பொருட்படுத்தாமல், டோமஸ் டீ அல்லது "கடவுளின் வீடு" போன்ற புகழ்பெற்ற வீட்டின் பெயரில் இருந்து தோன்றியது. இது இத்தாலிய மொழியில் டூமொமோ (duomo) என்றும், ஜெர்மன் / ஐஸ்லாண்டிக் / டேனிஷ் மொழிகளில் dom ("கதீட்ரல்") என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் 1656 ஆம் ஆண்டின் பிற்பகுதிவரை dome என்ற ஆங்கிலச் சொல்லானது, நகரத்தில் உள்ள "டவுன்-ஹவுஸ், கில்ட்-ஹால், ஸ்டேட் ஹவுஸ், மீட்டிங் ஹவுஸ்" ஆகியவற்றை குறிக்கும் பொருளில் வழங்கப்பட்டது. பிரெஞ்சு மொழியில் 1660 வரை dosme என்ற சொல் கோபளா வால்ட் என்ற கட்டட அமைப்பைக் குறிப்பிடும் பொருள் பெற்று வந்தது, பதினேழாம் நூற்றாண்டில் இந்த பிரெஞ்சில் இச்சோல் படிப்படியாக ஆங்கிலத்தில் குறிப்பிடும்படக்கூடிய குவிமாடத்தை குறிப்பிடக்கூடிய சொல்லாக ஆனது, இவ்மைப்பில் மிகவும் சிறப்பு மிக்கதாக கடவுளுக்கான நினைவுச்சின்னங்கள் கோபுரங்களுடன் கட்டப்பட்டன,   மேலும் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றம் தேவையின் அறிவியல் பிரதிபலிப்பாக ஆனது. குவிமாடம் என்பது வளைந்த பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வட்டவடிவ வளைவு ஆகும், அதாவது அதன் மையச் செங்குத்து அச்சு சுற்றிய வட்டமாக இருக்கும். சில நேரங்களில் "தவறான" குவிமாடங்கள் என்று அழைக்கப்படுபவை, கட்டுமானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றும் கிடைமட்ட அடுக்குகளாக மேல்நோக்கி கட்டப்பட்டவையாக இருக்கும். "தவறான" குவிமாடம் மரக் குவிமாடம் என்றும் குறிப்பிடப்படுகிறது. "உண்மையான" குவிமாடங்கள் என்பவை ஆப்பு வடிவ கற்களை உறுப்புக் கூறுகளாகக் கொண்டு கட்டப்பட்டவை. குவிமாடமானது அதன் உயரம் செல்லச்செல்ல உள்ளபக்கமாக வளைந்து இறுதியில் கூடும். குவிமாடத்தின் உச்சிப்பகுதி "மகுடம்" (crown) எனப்படும். குவிக்கட்டுமானத்தின் உள் பக்கம் "கவானகம்" (intrados) என்று அழைக்கப்படுவதுடன் வெளிப்புறம் "கவான்புறம்" (extrados) என்றும் அழைக்கப்படுகிறது.   "விதான இடுப்பு" (haunch) என்பது குவிமாடத்தின் அடிப்பகுதி மற்றும் மேல்வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் ஒரு வளைவுப் பகுதியின் பெயராகும். குப்போலா என்ற சொல் "குவிமாடம்" என்பதற்கான மற்றொரு சொல்லாகும், இது பொதுவாக ஒரு கூரை அல்லது கோபுரத்தின் மீது உள்ள ஒரு சிறிய குவிமாடத்தைக் ( சிறுகோபுரம்) குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.   "கும்போலா" என்ற சொல்லானது உள் குவிமாடத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. "பறை" (Drums) அல்லது டோலோபேட் (Tholobate) என்று அழைக்கப்படுவது, குவிமாடத்தைத் தாங்கி நிற்கும் சன்னல்களைக் கொண்டோ அல்லது இல்லாமலோ உள்ள உருளை வடிவிலோ அல்லது பலகோண வடிவிலோ உள்ளச் சுவர்களைக் குறிப்பதாகும். டம்போர் அல்லது லாந்தரின் குவிந்தப் பகுதியை தாங்கியபடி உள்ள சமமான கட்டமைப்பைக் குறிப்பது ஆகும். குவிமாடத்தின் வளைந்த வடிவமே அதற்கு உறுதியைக் கொடுக்கிறது. இரு பரிமாண அமைப்பான கவானின் உறுதிக்கான அதே தத்துவத்தின் அடிப்படையிலேயே முப்பரிமாண அமைப்பான குவிமாடம் உறுதியுள்ளதாக இருக்கின்றது. கவான் அமைப்பை அதன் நிலைக் குத்து அச்சில் சுழற்றுவதன் மூலம் குவிமாட அமைப்புப் பெறப்படுவதாகக் கொள்ளலாம். தட்டையான கூரை அமைப்புக்களைப் போலன்றி, குவிமாடங்களின் வடிவம் காரணமாக, அவற்றின் எல்லாப் பகுதிகளிலும் அழுத்த விசையே தொழிற்படுவதனால் செங்கற் கட்டுமானத்தின் மூலம் கூடக் குவிமாடங்களை அமைக்க முடிந்தது. ஆரம்பகாலங்களில் குவிமாடக் கூரைகளைத் தாங்குவதற்காகச் சுவர்களை வட்டமாக வளைத்துக் கட்டவேண்டியிருந்தது அல்லது வட்டவடிவமாகத் தூண் நிரைகளை அமைக்க வேண்டியிருந்தது. இதனால் குவிமாடங்களுக்குக் கீழ் அமையும் இடம் அல்லது அறைகளின் தள வடிவம் வட்டமாகவே அமைய வேண்டியிருந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வாக பைசண்டைன் காலப் பகுதியில் புதிய அமைப்பு முறையொன்று அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் சதுரமான அறைகள், கூடங்கள் முதலியவற்றுக்குக் குவிமாடக் கூரைகளை அமைக்க வழியேற்பட்டது. இத்தகைய அமைப்பு பெண்டெண்டிவ் (pendentive) எனப்படுகிறது. பல விளையாட்டு அரங்கங்கள் குவிமாடங்கள் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக மாறுகின்ற தட்பவெட்ப சூழலைக் கொண்ட இடங்களில் இவை அமைக்கப்படுகின்றன. இவ்வகையில் கட்டப்பட்ட முதல் அரங்கம் ஒன்டோரியோவின் டொரென்டோ நகரில் கட்டப்பட்ட திறந்து மூடும் வசதி கொண்ட "ஸ்கை டோம்" ஆகும். கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது: இவை கிடைமட்டமாக பல்கோண வடிவத்தை கொண்ட குவிமாடமாகும் மேலும் இவை பகுதி குவிமாடம் அல்லது பலகோண குவிமாடம் என்று அழைக்கப்படும்.இந்தவகையில் புளோரன்ஸ் கதீட்ரல் மீது ஃபிலிப்போ ப்ருன்செலிசி என்ற இடத்தில் உள்ள எண்கோண குவிமாடம் மற்றும் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் அவரது தோட்ட வீட்டில் நிறுவப்பட்ட எண்கோண குவிமாடம். கோளப்பரப்பு குவிமாடங்களின் புவிப்பரப்பு கோளங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.அது வேறுபட்ட முக்கோணங்களை கொண்ட ஒரு கட்டமைப்பாகும். வெங்காயம் குவிமாடம் அல்லது குமிழ்க்கும்மட்டம் அதிகமாக ரஷ்யா, துருக்கி , இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.பொதுவாக ரஷியன் மரபுவழி தேவாலயங்கள் இத்தகைய குவிமாடத்தின் மீது அமைக்கப்படுகிறது.இதன் உயரம் பொதுவாக அதன் அகலம் அதிகமாக கொண்டுள்ளது.இதற்க்கு சிறந்த எடுத்துகாட்டு செயிண்ட் பசில் மாஸ்கோ கதீட்ரல் மற்றும் தாஜ் மஹால் ஆகும். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நெதர்லாந்து நாடுகளில் இவை அதிகமாக உருவாக்கப்பட்டன. முட்டை வடிவ குவிமாடங்கள் கி.மு. 4000 ஆம் முதலே ஆசியா மைனர் பகுதியில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.இவை மறுமலர்ச்சி மற்றும் பரோக் பாணியில் மிக பிரபலமானதாகும்.இம்முறையில் பிரான்செஸ்கோ மார்க் பசிலிக்கா இம்முறையில் கட்டப்பட்டது. பரவளைய குவிமாடம் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும் அதன் வளைவு அழுத்தமானது சமமாக பரவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அது வலிமையான அமைப்பாக உள்ளது. எனவே அது பரவலாக பண்டைய காலத்தில் பயன்பட்டது. ஒரு தட்டு குவிமாடமானது வடிவியல் ஒரு வட்ட அடித்தளத்தையும் உயரம் குறைந்த ஒரு அரைக்கோளத்தைக் கொண்டதாக உள்ளது.இவ்வமைப்பின் மூலம் குறைவான எதிரொலிப்பே உருவாகிறது.மேலும் மிகப்பெரிய குவிமாடங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாகவே உள்ளது. இவைபெரும்பாலும் பைசண்டைன் தேவாலயங்கள் மற்றும் ஒட்டோமான் மசூதிகளில் அரிதாக வெளிப்புறமாகக் காணப்படும்.மற்றும் இந்தியா, பாக்கிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள பெரும்பாலான மசூதிகள் இவ்வகையைச் சேர்ந்ததாக உள்ளது. இவ்வகை பூசணிவடிவம்,முலாம்பழ வடிவம், பாராசூட் வடிவம் மற்றும் பிரிவுகளையுடைய வடிவம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த வகையில் குவிமாடமானது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அப்பிரிவுகளில் அதன் எடையை தாங்குவதற்கான அமைப்பை உடையதாக கட்டப்பட்டுள்ளது. "ஹேகியா சோபியா" குவிமாடத்தில் இந்த அமைப்புகளுக்கிடையே ஜன்னல்கள் உடையதாக இதன் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செயின்ட் பீட்டர் பசிலிக்காவின் மத்திய குவிமாடம் இந்த முறை பயன்படுத்தி கட்டப்பட்டதாகும். ஆப்கானித்தான் ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான் (ஆப்கானிஸ்தான், "Afganistan") என்னும் நாட்டின் முழுப்பெயர் "ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு" ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு ஆசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானை எல்லையாக உடையது; வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர். "ஆப்கானித்தான்" என்பதன் நேரடிப்பொருள் – மொழிபெயர்ப்பு – ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். இது "அஃப்கான்" என்ற சொல்லில் இருந்து – தற்கால வழக்கு – மருவி வந்துள்ளது. பழ்சுட்டுன்-கள்(பட்டாணியர்கள்) இசுலாமியர் காலத்தில் இருந்து, இந்த "அப்கான்" என்ற பதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு. கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி சில்லட் மற்றும் சில துறைசார் அறிஞர்களின் கருத்துப்படி, "அப்கான் என்ற சொல் முதன்முதலாக வரலாற்றில் கி.பி. 982 இல் "அதூத்-அல்-அலாம்" என்ற கி பி 10ஆவது நூற்றாண்டு வரலாற்று நூலில்தான் காணப்படுகின்றது. இறுதிச் சொல்லான "-த்தான்" (ஸ்தான்; நாடு, நிலம்) என்பது பாரசீக மொழியில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் ("Afghanland") என்ற ஆங்கிலச்சொல், 1781 முதல் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட "குவாச்சார்" அரசவம்சத்திற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ஆம் நூற்றாண்டில் அகமது ஷா துரானி என்பவர் துராணிப் பேரரசு என்ற அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் "அப்துர் ரகுமான் கான்" என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானித்தான் பெயர் "குராசான்" என்றே வழங்கப்பட்டது. இன்றைய ஆப்கானித்தானின் பெரும் நிலப்பகுதி குராசானையே மையமாகக் கொண்டுள்ளது. ஆப்கானித்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. ஆரியர், ("Indo-Iranians": "Indo-Aryans", "Medes", பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் ("Mauryans", "Kushans", "Hepthalites"), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும் , துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. கி. மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு ("Achaemenid") பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. கிமு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா ("Seleucids", "Bactria"), அத்துடன் இந்தியாவின் மௌரியப் பேரரசுபோன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மௌரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள் ("Tocharian Kushans)" போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர், சித்தியர் ("Parthians", "Scythians"), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும் ("Eurasian tribes"), சாசானியர்கள் ("Sassanian") போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் ("Hindu Shahis") போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர். ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு 652 இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706–709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முசுலிம்களாக மாறினர். 19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் (பேரரசின்) வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானித்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 இல் அரசர் `அமனுல்லா கான்' அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானித்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானித்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. அப்போது பிரித்தானிய இந்தியாவிற்கும், ஆப்கானித்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது. நட்புக்கொண்டவர்.ஆப்கானித்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாஃகிர் சாவின் ஆட்சிக் காலமே ஆகும். எனினும் 1973 இல் சாஃகிர் சாவின் மைத்துனன் சர்தார் தாவூத் கான் புரட்சிமூலம், பதவியைக் கைப்பற்றிக்கொண்டான். ஆயினும் தாவூத் கானும் அவரது மொத்த குடும்பமும் 1978இல் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானித்தான் மக்கள் மக்களாட்சிக்கட்சி ("People's Democratic Party of Afghanistan") ஆல் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, இக்குழுவினர் பட்டாளப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். இது ("Great Saur Revolution") "மாபெரும் சவுர் புரட்சி" என்று அழைக்கப்படுகின்றது. இந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. உருசியா – அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் "சிக்னீவ் பிரசின்கி" ("Zbigniew Brzezinski") – அவர்களின் ஆலோசனையினால் பாக்கித்தானின் ஐ. எசு. ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது. பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களுக்குப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அமெரிக்காவிற்கு ஆப்கானித்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது. பல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின. இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் ("Pashtuns") ஆவர். தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை "வடக்கு முண்ணனி" எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், ஷரீஆ எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், "அல்-காயிதா" தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர். தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் "ஆப்கானின் அபின்" எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும். செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. தாலிபானைத் தோற்கடிக்க வடக்கு முன்னணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. 2001 டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் "பொன்" நகரில் கூடி ஆராய்ந்து, ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பட்டாணிய (பாஸ்துன்) இனத்தவருமான "ஹமீது கர்சாய்" ஆப்கானிய இடைக்கால அரசின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார். 2002 இல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர்க், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 இல் நாட்டுக்குப்ப புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 இல் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலின் மூலம் ஹமீது கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 இல், சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 1973ஆம் ஆண்டுக்குப்பின்னர்ச் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட "சட்டவாக்க சபை" இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும். நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், கணிசமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம்குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, அபின் வியாபாரம் போன்றவற்றைக்குறிப்பிடலாம். இதைவிட அந்நாட்டில் மிஞ்சியிருக்கும் அல்-காயிதா உறுப்பினர்கள் மற்றும் தாலிபான் போராளிகளின் தாக்குதல்கள் வேறு தொடர்ந்து நடக்கின்றன. மேலும், வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை கொடுத்து வருகின்றனர். ஆப்கானித்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழப்பங்கள் நிறைந்தது. உதாரணமாக, பல்வேறுபட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், நிலையற்ற ஆட்சி அதிகார மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடைமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சிமுறைகளின்கீழ் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம், லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன்படி ஆப்கானித்தான் ஓர் இசுலாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; அவை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவாகும். ஆப்கானின் தற்போதைய அதிபராக ஹமீது கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபரில் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணுவத் தலைமைகளால் கொஞ்சம் கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 இல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் உள்ளடங்குவர். இவர்களுள் 28% பெண்கள் ஆவர்; இதன் மூலம் தாலிபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், "அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானித்தானும் ஒன்று" என்ற நிலையையும் பெற்றது. ஆப்கனிஸ்தான் நாட்டின் "மீயுயர் நீதிமன்றம்" ("Supreme Court of Afghanistan") தற்போது தலைமை நீதிபதி "அப்துல் சலாம் அசினி"யால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அதிபரின் சட்ட ஆலோசகரும் ஆவார். முன்பிருந்த நீதி மன்றம், இடைக்கால அரசின்போது நியமனம் செய்யப்பட்டது. ஆயினும் இதில் பைசல் அஹமட் ஷின்வாரி போன்ற பழமைவாதிகள் இருந்தனர். அதனால், அப்போதைய நீதிமன்றம் பல்வேறு தனிநபர் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்களை உருவாக்கியது; உதாரணமாகக் கேபிள் தொலைக்காட்சியைத் தடைசெய்தமை, பெண்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றமை, மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதன்அதிகார வரம்புக்கு அப்பால் பாவிக்க முயன்றமை என்பவற்றைக் கூறலாம். ஆயினும் தற்போதைய நீதிமன்றம் சரியான நபர்களால் வழிநடத்தப்படுகின்றது. "முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்" ஆப்கானித்தான்,முப்பத்தொரு (31) மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்கள் மேலும், மாவட்டங்கள் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. "முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்" ஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று (3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆப்கானித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அபின், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப்பொருள்கள் மூலமே கிடைக்கின்றது. மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானித்தானைக் கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு, ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 இல் உருவாகிய பின் "டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில்" 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், லண்டன் மாநாட்டின் மூலம் 2006 இல் ஆப்கானுக்குக் கிடைத்தது. வளர்ச்சித்திட்டத்தில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயிர்ச் செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான 'ஆசிய அபிவிருத்தி வங்கி'யின் அறிக்கையின்படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு முக்கிய கிளைகளைக் கொண்டுள்ளன. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும், இரண்டாவதாக நவீன பொதுக் கட்டமைப்பை ("Modern Public Sector") ஏற்படுத்துவதும் அடங்கும். 2006 இல் இரண்டு அமெரிக்கக் கம்பெனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காகத் தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன. தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீளவும் இங்கு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும், பொருளாதாரத்திற்குச் சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார்துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். துபாயில் வசித்துவரும் ஆப்கானியக் குடும்பம் ஒன்று, ஆப்கானில் ஒரு கொக்கா – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும். நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியே உள்ளது. மிகச் சிறிய பகுதியே அதாவது, 15% அளவே உள்ளுர் அரசின் மூலம் "வரவுசெலவு திட்டப்" பணிக்குக் கிடைக்கின்றது. மீதி ஐக்கிய நாடுகள் அவையின் மூலமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 இல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 இல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது. நாட்டின் சனத்தொகை பல்வேறு இனக்குழுக்களாக உள்ளது. நாட்டில் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு பல பத்தாண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆகவே, ஆப்கானிய மக்கள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தோராயமாக மதிப்பிட்ட எண்ணிக்கையேயாகும். 2006 இல் பிபிசி செய்தி நிறுவனம், சிஐஏ புத்தகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பற்றில் இருந்து மக்கள்தொகைக் கணக்கை கீழே உள்ளபடி இருக்கலாம் என்று கணிக்கப்டுகின்றது. சிஐஏ புத்தகத்தின் தகவலின்படி கீழுள்ளவாறு மக்களின்பரவல் உள்ளது. கலைக்களஞ்சியம் பிருட்டானிகா பின்வருமாறு, சிறிது வேறுபட்ட தகவலைத் தருகின்றது. 1960 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் எடுத்த உத்தியோக பூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பு பின்வரும் முடிவைக்காட்டுகின்றது. இது இரானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள முடிவு, பின்வருமாறு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளினதும், பாரசீக மொழிக் குடும்பத்தின் உப பகுதியுமான பாஷ்தூ 35% விழுக்காடும், பாரசீக மொழி (தாரி) 50% விழுக்காடும் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப் புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிடத் துருக்கி மொழிகளான உஸ்பெக், துர்க்மெனி 9% விழுக்காடும், அவி 30 சிறுபான்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% விழுக்காடு வீதமும் பேசப்படுகின்றன. இரு மொழி பேசும் தன்மையை இங்கே பரவலாக அவதானிக்கலாம். மத ரீதியாக, 99% விழுக்காட்டினர் இசுலாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 விழுக்காடு வரையானோர் 'சுன்னி' முஸ்லிம்களாகவும் 9-25 விழுக்காட்டினர் "சியா" முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்குக் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும், எண்ணிக்கை தெரியாத அளவில் சீக்கியர் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிய அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும், ரசிய ஆக்கரமிப்புக்குப் பின்னர் 1979 இல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனி நபரான 'சப்லோன் சிமின்டோவ்' மீதமாக அந்நாட்டில் உள்ளார். ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான "காபூல்" ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹெரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும். ஆப்கானியர் தமது மதம், நாடு, தம்முடைய பழைமை, தம் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகளால் அந்நாட்டைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. ஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு. அதன் வரலாறு, தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது. ஆனால், நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன. கந்தகார், ஹீரத், கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம். 'முகம்மது நபி' அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று, இன்றும் கந்தகார் நகரில் உள்ள "கால்கா ஷரிஃபா"வில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள "மின்னரட் ஒப் ஜாம்" யுனெஸ்கோவினால், உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானியர், பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகள்; இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆனால், பந்துக்குப் பதிலாக ஓர் இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர். கல்வியறிவு வீதம் மிகக் குறைவாக இருந்தபோதும், பாரசீக கவிதைகள் நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கவிதையானது, ஈரானிலும் ஆப்கானித்தானிலும் கல்வியின் தூண்களாக இருந்துள்ளது. பாரசீகத்தின் கலாச்சாரங்களின் தாக்கம் இன்றும் ஆப்கானில் தொடர்வதை அவதானிக்கலாம். “முஸ்ரா எரா” என்ற பெயரில் அழைக்கப்படும் கவிதைப்போட்டி நாட்டில் மிகச் சாதாரணமாக நடைபெறுவதாகும். கிட்டத்தட்ட வீடுகள் எல்லாவற்றிலும், தம் வீட்டில் உள்ளோர் வாசிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையான கவிதைத் தொகுதி வீட்டில் கட்டாயம் இருக்கும். தாரி என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும். இன்றய ஆப்கானித்தான், அன்று "குராசான்" என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக "மெளலானா றூமி" என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் "கோன்யா" (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத் (15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் "Jam-e-Herat", மேற்கு ஆப்கானித்தான்), "Nizām ud-Dīn Alī Sher Navā'ī", நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் ("Ustad Betab", "Khalilullah Khalili", "Sufi Ghulam Nabi Ashqari", "Qahar Asey, Parwin Pazwak") ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான "அவிசென்னா" என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான "Noah Gordon" இன் "The Physician" இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றும் முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர். பழங்குடியினரின் முறைப்படி, ஆண்கள் அவர்களது இனத் தலைவருக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தலைவர் கோரினால் ஆயுதமேந்த வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது. ஆப்கானித்தான் தொடர்பாடற் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் என்பன விரிவடைந்து வருகின்றன. ஆப்கானித்தானின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஆப்கான் வயர்லெஸ், றோசான், அறீபா போன்றன செல்லிடத் தொலைபேசிப் பாவனையை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. 2006 இல் ஆப்கானித்தானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், நாடுமுழுவதும் பரந்துபட்டதான ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஆப்கானின் வர்த்தக நோக்கிலான விமான சேவை நிறுவனமான 'அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ்' இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி. எம். டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. ஆப்கானித்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்காவிட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்பதாக "சேவ் த சில்ரன் நிதியம்" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும். நாட்டின் எழுத்தறிவு வீதம் 36%விழுக்காடு ஆகும்; இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடும் ஆகும். உயர்கல்வி ஆப்கானினிஸ்தானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்து வருகின்றது. தாலிபான்களின் வீழ்சிக்குப் பின்னர்க் "காபூல் பல்கலைக்கழகம்" மீளத் திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்குக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2006 இல் ஆப்கானித்தானின் "அமெரிக்கப் பல்கலைக்கழக"மும் இங்கே அதன் கதவுகளைத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகமானது ஆங்கில மொழி மூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்குவதை இங்குக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது. மசார்-ஏ-ஷரீப் இல் புதிதாக அமைய உள்ளதான பல்க் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பிரான்சு பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது. கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது. பிரெஞ்சுக் குடியரசானது, ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. இந் நாட்டின் முக்கியமான குறிக்கோள்கள் மனிதரினதும் குடிமக்களதும் உரிமைகள் சாற்றுரையில் அடங்கியுள்ளன. பிரான்சின் அரசியலமைப்பு, அந்நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. வாங்கு திறன் சமநிலை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது நிலையில் உள்ள இதன் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரியது. திரட்டிய வீட்டுச் செல்வ அடைப்படையில் பிரான்சே ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது. பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று. பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது. பிரான்சு என்பது, "பிராங்க் மக்களின் நாடு" என்னும் பொருள்தரும் "பிரான்சியா" "(Francia)" என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. பிராங்க் என்னும் சொல்லின் பிறப்புக் குறித்துப் பல்வேறு கொள்கைகள் நிலவுகின்றன. ஒரு கொள்கையின்படி, பிராங்க் மக்கள் பயன்படுத்தியதும் முன்-செருமானிய மொழியில் "பிராங்கோன்" என்று வழங்கியதுமான எறிகோடரியின் பெயரில் இருந்து பிராங்க்குகளுக்குப் பெயர் ஏற்பட்டது. பண்டைச் செருமானிய மொழியில் பிராங்க் என்பது அடிமைகள் அல்லாத விடுதலை கொண்ட மக்களைக் குறித்தது என்றும், இதுவே பிராங்குகளுக்கு அப்பெயர் ஏற்படக் காரணமாகியது என்றும் இன்னொரு கொள்கையின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பிரான்சு அகலக்கோடுகள் 41° வ, 51° வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 6° மே, 10° கி ஆகியவற்றுக்கும் இடையில் ஐரோப்பாவின் மேற்குப்பகுதி விளிம்போரமாக அமைந்துள்ளது. இது வட மிதவெப்ப வலயம் ஆகும். பிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதி (பிரான்ஸ் பெருநிலப்பரப்பு) மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போதும், பிரான்ஸ் வடக்கு அமெரிக்கா, கரிபியா, தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம், அந்தார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஆட்சிப் பகுதிகள் பல்வேறு அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன. ஐரோப்பாவில் 547,030 ச. கிலோமீட்டர் (211,209 ச. மைல்) பரப்பளவு கொண்ட பிரான்சின் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான பிளாங்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது. பிரான்சின் வெளி ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை). மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடற் காலநிலை நிலவுகிறது. மேற்கில், கடும் மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும் கூடிய பெருங்கடற் காலநிலை காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும் கொண்ட கண்டக் காலநிலை உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும். சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்றாகப் பிரான்சு விளங்குகிறது. பிரான்சின் சூழல் அமைச்சு 1971 ஆம் ஆண்டில் உருவானது. பிரான்சு பெருமளவு தொழில்மயமானதும், வளர்ச்சியடைந்ததுமான நாடாக இருந்தும், காபனீரொட்சைடு வெளியேற்றுவதில் இது 17 ஆவது நிலையிலேயே உள்ளது. இது, கனடா, சவூதி அரேபியா, ஆசுத்திரேலியா போன்ற குடித்தொகை குறைவான நாடுகளைவிடக் குறைவான காபனீரொட்சைடையே வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர், அணுவாற்றலில் முதலீடு செய்வதற்குப் பிரான்சு அரசு எடுத்த முடிவே இதற்குக் காரணம். தற்போது பிரான்சின் 78% மின்சாரம் அணுவாற்றல் மூலமே கிடைக்கிறது. இதனாலேயே பிரான்சு, அதனோடு ஒப்பிடத்தக்க பல நாடுகளைவிடக் கூடிய அளவு சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த முடிகிறது. பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் போலவே, பிரான்சும், 2020 ஆம் ஆண்டளவில், காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டின் நிலையில் 20% ஐக் குறைப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா 4% குறைப்பதற்கே சம்மதித்து உள்ளது. 2009 ஆம் ஆண்டில், ஒரு தொன் காபனீரொட்சைடு வெளியேற்றத்துக்கு 17 யூரோக்கள் வீதம் கரிம வரி ஒன்றை விதிப்பதற்கும் பிரான்சு திட்டமிட்டு இருந்தது. இதன் மூலம் 4.3 பில்லியன் யூரோக்கள் வருமானமாகக் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவ்வரியினால், பிரான்சு நாட்டு நிறுவனங்கள் பிற அயல் நாட்டு நிறுவனங்களுடன் சமநிலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் பிற காரணங்களினாலும் இந்த வரி விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக் கழகத்திலும், கொலம்பியாப் பல்கலைக் கழகத்திலும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கூடிய சூழல் உணர்வு கொண்ட நாடுகள் வரிசையில் பிரான்சுக்கு ஏழாவது இடம் கிடைத்தது. பிரான்சின் நிலப்பரப்பில் காடுகள் 28% ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடிய காடுகளைக் கொண்ட நாடுகளில் பிரான்சு இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரான்சின் காடுகளிற் சில ஐரோப்பாவில் கூடிய பல்வகைமை கொண்ட காடுகளுள் அடங்குகின்றன. இவற்றில் 140க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மர வகைகள் உள்ளன. பிரான்சில் 9 தேசியப் பூங்காக்களும், 46 இயற்கைப் பூங்காக்களும் உள்ளன. பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணளவாக ஒத்துப்போகிறது. கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் (இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி தமது நாட்டை "அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரான்ஸ்" என அழைத்தனர். பிரான்சு ஜெர்மனி உறவு பன்னாட்டு அணுசக்தி முகமையகம் பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency) என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் ஐசனோவர் அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய "அமைதிக்கான அணுக்கள்" எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்.இது ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு மட்டும் பதிலளிக்க கடமைப்பட்டது. 2005-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் மொகம்மது எல்பரதேய் என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் வியன்னா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ளது.மேலும் இது ஜப்பானின் டோக்கியோ மற்றும் கனடாவின் டொராண்டோ நகரங்களில் இரண்டு பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.இதன் இரண்டு தகவல் தொடர்பு அலுவலகல் நியூயார்க் மற்றும் ஜெனீவா நகரங்களில் அமைந்துள்ளது.மேலும் இதற்கு வியன்னா, செய்பர்ஸ்டோர்ப், ஆஸ்திரியா மற்றும் மொனாகோ நகரில் ஆய்வகங்களை கொண்டுள்ளது. பன்நாட்டு அணு ஆற்றல் முகைமை (International atomic energy agency-IAEA ) ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1957 சூலை மாதம் 29 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட அழிவினைக் கண்ட மக்கள் அணு ஆற்றலைப் பற்றி பெரிதும் அச்சம் கொண்டனர். இந்நிலையில் தான் ஆக்கத்திற்கே அணு (ATOM FOR PEACE ) எனும் கோட்பாட்டுடன் IAEA தொடங்கப் பெற்றது.இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அணு ஆற்றறலை அமைதி, மருத்துவம், வளமை முதலியவைகளை உலகம் முழுவதும் பரவலாக்கவும் அதனை விரைவுபடுத்தவும் விரிவு படுத்துவதுமாகும். இவ்வமைபின் உறுப்பு நாடுகள் அணு ஆற்றலை இராணுவத்திற்காக பயன் படுத்துவதை கட்டுப்படுத்துவதுமாகும். UNO, WHO போன்று இது ஒரு பன்நாட்டு நிறுவனம்.தன்னாடச்சிப் பெற்ற அமைப்பாக இருந்தாலும் இது தனது வருட வரவு செரவு மற்றும் நடவடிக்கைப் பற்றி UNO விற்கும் பொதுசபைக்கும் அனுப்புகிறது. 35 நாடுகள் கொண்ட குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட இயக்குனர்,அனைத்து உறுப்பு நாடுகளின் பொதுசபையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.செலவுகளை உறுப்பு நாடுகள் ஏற்கின்றன. பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள "வியன்னா பன்னாட்டு மையத்தில்" தலைமை கொண்டுள்ளது. இத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா, அமெரிக்க ஒன்றியத்தின் நியு யார்க், கனடா நாட்டின் டொரொன்டோ மற்றும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் மொனாகோ அரசகத்திலும், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மற்றும் சைபெர்ஸ்டோர்ஃப் நகரங்களிலும், இத்தாலி நாட்டின் திரெஸ்தே நகரிலும் உள்ளன. ப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான மொகம்மது எல்பரதேய்-இன் கீழ் ஆறு துணை இயக்குனர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர். பன்னாட்டு அணுசக்தி முகமையகமானது அணுத்தொழில்நுட்பத்தை அமைதிவழியில் பயன்படுத்தும் பொருட்டு அரசுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் மன்றமாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் "முப்பெரும் தூண்கள்" என்று போற்றப்படும் முதன்மை கடமைகள் இவைகளே: 1. வரைமுறைகளை பேணுதல் மற்றும் சோதித்தல்: ப.அ.மு. கிட்டத்தட்ட 140 நாடுகளுடன் கொண்டுள்ள வரைமுறை உடன்பாடுகளின்படி அந்நாடுகளின் அணு மற்றும் அணு சார்ந்த நிலையங்களில் சோதனை மேற்கொள்கிறது. ஏறத்தாழ அனைத்து உடன்பாடுகளும் அணு ஆயுதங்களைப் பெறோம் என்று உறுதி பூண்ட நாடுகளுடனேயே உள்ளன. 2. காவல் மற்றும் பாதுகாப்பு பேணுதல்: உலக நாடுகளின் அணு கட்டுமானம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் காவலை மேம்படுத்தவும், இடர் வருங்கால் சரியான முறையில் எதிர்கொள்ளவும் ப.அ.மு. உதவுகிறது. கேடு விளைவிக்கும் அணுக்கதிர் வீச்சிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் காப்பது முதன்மைக் குறிக்கோளாகும். 3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பேணுதல்: வளரும் நாடுகளின் இன்றியமையா தேவைகளுக்கு அமைதிவழியில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக ப.அ.மு. திகழ்கிறது. இப்பணியானது வறுமை, நோய்நொடிகள், சுற்றுச்சூழற்கேடு போன்றவற்றை எதிர்த்து போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது. பன்னாட்டு அணுசக்தி முகமையகத்துடன் இணைந்துகொள்வது ஓரளவு இலகுவாகும். இதில் உறுப்பினராக சேர்வதற்கு முதலில் அதன் பொது செயலாளரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அவரின் பரிசீலனைக்கு பின்னர் அது பாதுகாப்பு சபையின் வாக்களிப்பிற்கு அனுப்பப்படும் அதில் ஏற்ற்று கொள்ளப்பட்டால் அந்நாடு அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NPT) கையோப்பமிடல் வேண்டும் அதன் பின்னர் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அந்நாடு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும். இதில் மொத்தம் 159 உறுப்பு நாடுகள் உள்ளன.பெரும்பாலான ஐ.நா. உறுப்பினர்கள் இதிலும் உறுப்பினராக உள்ளனர். இதுவரை 2 நாடுகள் விலக்கப்பட்டுள்ளன அவை வட கொரியா மற்றும் கம்போடியா ஆகும். இதில் வட கொரியா 1974 இருந்து 1994 வரை உறுப்பினராக இருந்தது ஆனால் அது பாதுகாப்பு ஒப்பந்ததின் படி நடக்காததால் விலக்கப்பட்டது. கம்போடியா 1958 இல் ஒரு உறுப்பினராக இணைந்த அது 2003 இல் விலக்கிகொண்டது எனினும் 2009 இல் மீண்டும் உறுப்பினராக இணைந்தது. கோளப்பரப்புக் குவிமாடம் கோளப்பரப்புக் குவிமாடம் ("geodesic dome") என்பது கோள மேற்பரப்பு ஒன்றின் பெரு வட்டங்களின் மேல் கிடக்கும்படி ஒழுங்கமைக்கப்பட்ட, ஏறத்தாளக் கோளவடிவமான, உதைகால்களின் வலையமைப்பு ஆகும். இவ் வலையமைப்பில் ஒன்றையொன்று வெட்டுகின்ற பல பெரு வட்டங்களினால் உருவாக்கப்படும் முக்கோண அமைப்புகள் முழுக் கோள வடிவ அமைப்பினதும் உறுதிக்குப் பங்களிப்புச் செய்கின்றன. அளவு அதிகரிக்கும்போது மேலும் பலமுள்ளதாக அமையும், மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரே அமைப்பு இது என்று சொல்லப்படுகிறது. மனிதரால் அறியப்பட்ட எல்லா அமைப்புக்களுடனும் ஒப்பிடும் போது கோள வடிவக் குவிமாடமே ஒரு குறிப்பிட்ட நிறைக்கான அதி உயர்ந்த கன அளவைத் தருகிறது. இவ்வமைப்பை உருவாக்கும் தனித்தனி உதைகால்களிலும் பார்க்க மொத்த அமைப்பாக நோக்கும்போது இக் குவிமாடங்கள் அதிக பலம் கொண்டவையாக விளங்குகின்றன. வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று இழுவிசைகளின் கீழ் கூடிய பலம் கொண்ட உருக்குக் கம்பிகள் முதலானவற்றை உரிய முறையில் சாதாரண காங்கிறீற்றுக்குள் வைத்துக் கட்டுவதன் மூல காங்கிறீற்றின் இழுவைப் பலம் அதிகரிக்கப் படலாம். இவ்வாறான காங்கிறீற்றே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று ("reinforced concrete") எனப்படுகின்றது. சாதாரண காங்கிறீற்று அதிக அழுத்த விசைகளைத் ("compression force") தாங்கும் வலிமை பெற்றது. ஆனால் இழுவிசைகளைத் ("tensile force") தாங்கும் வலிமை குறைந்தது. இதனால் பெரும் இழுவிசைகளைத் தாங்கவேண்டிய கட்டிடக் கூறுகளில் சாதாரண காங்கிறீற்றைப் பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகவே வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று உருவாக்கப்பட்டது. மரத்தினால் செய்யப்பட்ட ஒரு உத்தரமொன்று அதன் இரண்டு முனைகளில் தாங்கப்பட்டால், அது கீழ்முகமாகச் சிறிது தொய்ந்த நிலையில் ஓய்வடையும். இந் நிலையில் உத்தரத்தின் மேற்பகுதியின் நீளம் குறுக்கமடைவதையும், கீழ்ப்பகுதியின் நீளம் அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்கலாம். இது அதன் மேற்பகுதியில் அழுத்தவிசையும், கீழ்ப்பகுதியில் இழுவிசையும் தொழிற்படுவதைக் குறிக்கிறது. மர உத்தரத்தின் இடத்தில் சாதாரண கொங்கிறீற்றினால் செய்யப்பட்ட உத்தரமொன்று இருப்பதாக வைத்துக்கொண்டால், உத்தரத்தின் கீழ்பகுதிகளில் உருவாகும் இழுவிசை அப்பகுதிகளில் வெடிப்பை ஏற்படுத்தி, உத்தரம் முறிந்து விழ ஏதுவாகும். வலுவூட்டப்பட்ட காங்கிறீற்றுக் கூறுகளில், உருக்குக் கம்பிகளோ, அல்லது கண்ணாடி இழைகள் முதலிய இழைப் பொருட்களோ வைத்துக் கட்டபடுவதன் மூலம் காங்கிறீற்றின் இழுவைப்பலம் அதிகரிக்கப் படுகின்றது. கலித்தொகை கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம். கலித்தொகை நூலை முதன்முதலில் சி. வை. தாமோதரம்பிள்ளை 1887 ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக "நல்லந்துவனார் கலித்தொகை" என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன் பின்னர், பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும், வேறு நூல்களை ஆராய்ந்தும், உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ. வை. அனந்தராமையர் 1925இல் பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம். கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது என் கீழ் வரும் இரு பாடல்களின் உதவியுடன் அறியலாம். இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது: பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி, மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன் நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல் கலவிவலார் கண்ட கலி. கலித்தொகை நூலில் உள்ள இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை. ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல் போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல் புல்லும் கலிமுறைக் கோப்பு. இதில் சொல்லப்பட்டவை: தலைவன், தலைவி பிரிதல் போக்கு - பாலை புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம் நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை இரங்கிய போக்கு - நெய்தல் கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள்,பாலைக்கலியில் 35 குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், பாடல்களும் பாடப்பட்டுள்ளன. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ஆகும். குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வலியுறுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டவை குறிஞ்சிக்கலிப் பாடல்களாகும். கபிலரின் பாடல்களில் நகைச்சுவை உணர்வும் நாடகப் பாங்கிலான பாக்களும் அமைந்து படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளன. "சுடர்த்தொடீஇ கேளாய்" என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் 51 ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் பயப்பதாகும். இப்பாடல் பிற்காலச் சிறுகதைகளின் முன்னோடியாகக் கூறப்படுகிறது. முல்லைக்கலிப் பாடல்கள், நோக்கம் ஒன்றுபட்டு இல்லிருக்கும் தலைவி ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன. கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன. ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும், அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும், தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும். பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும் பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும், தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும். 'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல் செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது. கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. பதிற்றுப்பத்து பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர். இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞ்ர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்கவாய்ப்பில்லை. பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது. இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.முதன் முதலாக கி.பி.989ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவதே அந்தாதியாகும். ஏடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி வரி போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32 வது பாடல் முதல் வரி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை. கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி) இந்நூலிலுள்ள பாடல்களின் தலைப்பாக விளங்குவன அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களேயாவன. இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு "புண்ணுமிழ் குருதி"யாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு "மறம் வீங்கு பல்புகழ்" என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு "பூத்த நெய்தல்" ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14ம் பாட்டின் தலைப்பு "சான்றோர் மெய்ம்மறை". இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு "நிரைய வெள்ளம்". இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன. பதிற்றுப்பத்து பாடல்களில் சில சொற்களின் பயன்பாடுகள்: சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்." வாஸ்கோ ட காமா வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார். வாஸ்கோ ட காமா 1460இலோ அல்லது 1469இலோ போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும். வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார். டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார். எஸ்டெவா ட காமா டோனா இசபெல் சாட்ரெவை மணந்தார். இவர் ஜாவோ சாட்ரெவின் மகள் ஆவார். ஜாவோ சாட்ரெ இங்கிலாந்து அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார். வாஸ்கோ ட காமாவின் ஆரம்ப கால வரலாறு மிகவும் குறைவாக மட்டுமே தெரிந்திருக்கிறது. போர்ச்சுக்கீசிய வரலாற்றறிஞர் டெய்க்செய்ரா டி அரகாவோவின் கூற்றுப்படி வாஸ்கோ ட காமா உள்ளூர் நகரான எவோராவில் கணிதவியலும் பயணவியலும் படித்ததாகக் கூறுகிறார். இது காமாவிற்கு வானியல் நன்றாகத் தெரிந்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வானியலாளர் ஆபிரகாம் சாகுட்டோவிடம் வாஸ்கோ ட காமா வானியல் பயின்றிருக்ககூடும். 1492இல் போர்ச்சுகல் அரசர் ஜான் II காமாவை செட்டுபால் துறைமுகத்திற்கும், லிஸ்பனின் தென்பகுதிக்கும் அல்கார்வேக்கும் ஃபிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்றுவதற்காக அனுப்பி வைத்தார். இப்பயணத்தின் போது காமா சிறப்பாகச் செயலாற்றினார். பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஹென்றி த நேவிகேட்டரின் கடல்சார் பள்ளி (Nautical school) ஆப்பிரிக்கக் கடற்கரைப்பகுதியைக் குறித்த தனது பார்வையை அதிகரித்து வந்தது. 1460களில் இருந்து இதன் முதன்மைக் குறிக்கோளானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையைத் தாண்டி இந்தியாவின் வளங்களை (முதன்மையாக மிளகு இதர பிற மசாலா வகைகள்) எளிமையாக அணுகுவதே ஆகும். மேலும் அதற்கேற்றாற்போல் ஒரு நம்பக்கத்தகு கடல் வழியைக் கண்டறிவதிலேயே கவனம் செலுத்தினர். ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெரும் கட்டுப்பாட்டை வெனிஸ் குடியரசே பெற்றிருந்தது. போர்ச்சுக்கல் பார்த்தலோமியா டயாசின் மூலம் கண்டறியப்பட்ட வழியை வெனிசின் ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தத் திட்டமிட்டது. வாஸ்கோ ட காமா பத்து வயதாக இருந்த பொழுது இந்த நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பார்த்தலோமியா டயாஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்து மீண்டும் ஐரோப்பா திரும்பினார். அவர் அங்கு மீன் ஆற்றையும் நவீன கால தென்னாப்பிரிக்காவையும் கண்டறிந்து தெரியாத மற்றொரு கடற்கரை வடகிழக்காகச் செல்வதை அறிந்து வந்தார். மேலும் இந்தியாவை அட்லாண்டிக் கடல் மூலம் அடைய முடியும் என்ற கொள்கை ஜாவோ IIஇன் ஆட்சிக்காலத்தில் ஆதரிக்கப்பட்டது. பெரோ ட கோவில்காவும் அஃபோன்சோ டி பைவாவும் பார்சிலோனா, நேப்பிள்ஸ், ரோட்ஸ் வழியாக அலெக்சாண்டிரியாவிற்கும் பிறகு ஏடெனுக்கும் ஆர்மசு துறைமுகத்திற்கும் பின் இந்தியாவிற்கும் அனுப்பப்பட்டனர். அது அவர்களது கொள்கைக்கு மேலும் வலுவூட்டியது. ஆனால் பார்த்தலோமியா டயாஸ் கண்டறிந்த வழித்தடத்திற்கும் மேற்குறிப்பிட்ட இருவர் கண்டறிந்த வழித்தடத்திற்கும் இடையிலிருந்த தொடர்பை இந்தியப் பெருங்கடல் வழியே கண்டறிவதிலேயே அனைவரும் முனைப்புடன் இருந்தனர். அப்பணியானது உண்மையில் வாஸ்கோ ட காமாவின் தந்தைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மானுவெல் I இப்பணியை வாஸ்கோ ட காமாவிற்கு வழங்கினார். இதனை அவர் ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையங்களை ஃப்ரெஞ்சுக் காரர்களிடமிருந்துக் காப்பதில் காமாவின் சிறந்த பணியைக் கருத்தில் கொண்டு வழங்கினார். 1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார். மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் வணிகக் காற்றையும், அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று.வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கோடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச் செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். இதனால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வர விரும்பினர். வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. வாஸ்கோடகாமா 1501-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தலம் ஒன்றை நிறுவினார். இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது. வாஸ்கோ ட காமாவின் இந்தியப் பயணத்தின் விளைவாக,ஐரோப்பா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கிடையேயான ஒரு நேரடி கடல்வழித் தடம் அமைந்தது.இதன் காரணமாக,எண்ணற்ற நாடுகள் பெரும் பயனடைந்தன.இதுவே வாஸ்கோ ட காமா கடல்வழிப் பயணத்தின் அடிப்படை முக்கியத்துவமாக இருந்தது.இந்தப் பயணத்தால் போர்ச்சுக்கல் நாட்டிற்கு குறுகிய காலத்தில் அதிகம் பயன் கிடைத்தது.கீழை நாடுகளுக்கான புதிய கடல் வாணிக வழித் தடத்தைப் போர்ச்சுகல் கட்டுப்படுத்தியது.அதன் மூலம், நாகரிக உலகின் எல்லையோரத்தில் மிகவும் ஏழை நாடாக இருந்துவந்த இந்த நாடு, ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் முன்னேறியது.அத்துடன் இந்தியப் பெருங்கடலைச் சுற்றிக் கணிசமான எண்ணிக்கையில் குடியேற்றங்களையும் துரிதமாகப் போர்ச்சுக்கல் நிறுவியது. இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், மடகாஸ்கரிலும், ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலும், வேறு பல பகுதிகளிலும் போர்ச்சுக்கலுக்குப் புறக் காவற்படைத் தளங்களும் நிறுவப் பெற்றன.இவை தவிர, பிரேசிலும் மேற்கு ஆப்ரிக்காவிலும் போர்ச்சுகலுக்குக் குடியேற்றங்கள் இருந்து வந்தன. இக்குடியேற்றங்களை இவரது பயணங்களுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர் நிறுவியிருந்தார். இந்தக் குடியேற்றங்களில் பெரும்பாலானவற்றை இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதி வரையிலும் போர்ச்சுகல் விடாது வைத்திருந்தது.இந்தியாவுக்கு வாஸ்கோ ட காமா புதிய கடல் வாணிக வழித் தடத்தை ஏற்படுத்தியதன் விளைவாக,இந்தியப் பெருங்கடலின் வாணிக வழித்தடங்களில் அதுநாள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமியர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இஸ்லாமிய வாணிகர்கள் ஒடுக்கப்பட்டனர். மேலும்,அவர்களுடைய இடத்தைப் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றி கொண்டனர்.அது மட்டுமின்றி,இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நிலவழி வாணிகத் தடங்கள் பயனற்றுப் போயின.ஏனெனில்,ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும் போர்ச்சுக்கீசிய கடல் வழித்தடம் எளிதாகவும் மலிவாகவும் இருந்தது. இது, கீழை நாடுகளுக்கான வாணிக வழித் தடங்களைக் கட்டுப்படுத்தி வந்த ஆட்டோமான் துருக்கியர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. ஏனென்றால், எஞ்சிய ஐரோப்பியப் பகுதிகளுக்குப் புதிய கடல் வாணிக வழித்தடம் மூலம் தூர நாடுகளிலிருந்து சரக்குகள் வருவது முன்பை விட மலிவாக இருந்தது. எனினும்,வாஸ்கோ ட காமாவின் பயணத்தினால்,இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.1498 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா ஐரோப்பாவின் தொடர்பின்றி தனிமைப்பட்டுக் காணப்பட்டது.உண்மையைக் கூறின்,வரலாற்றின் பெரும் பகுதியில் ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகவும் இந்தியா இயங்கிவந்தது.அவ்வப்போது,வடமேற்கிலிருந்து மட்டுமே சில அயல்நாட்டுப் பாதிப்புகள் ஏற்பட்டன.ஆயினும்,வாஸ்கோ ட காமாவின் பயணத்தால் ஏற்பட்ட கடல்வழித்தடத்தின் வாயிலாக, ஐரோப்பிய நாகரிகத்துடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு உண்டாயிற்று. ஐரோப்பியரின் செல்வாக்கும், வலிமையும், இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் குடியரசின் கீழ் அடிமைப்பட்டது.(வரலாற்றில் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியாளரின் கீழ் ஒரு குடையில் இருந்தது.இந்தக் காலத்தின்போதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).இந்தோனேசியாவைப் பொறுத்த வரையில் முதலில் அது ஐரோப்பியச் செல்வாக்குக்கு ஆட்பட்டது.பிறகு,அது முழுமையாக ஐரோப்பிய் ஆதிக்கத்தின்கீழ் வந்தது.இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இந்தப் பகுதிகள் யாவும் சுதந்திரம் பெற்றன. 1524 இல் இந்தியாவின் வைசிராயாக ஆக்கப்பட்ட பின்பு தனது மூன்றாவது கடல் பயணத்தை இந்தியாவுக்குத் துவக்கினார். 1524 செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். அச்சமயத்தில் கழுத்தைச் சுற்றிக் கொப்புளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். 1524 திசம்பர் 25 இல் கொச்சியில் இறந்தார். பட்டகம் ஒளியியலில், பட்டகம் அல்லது அரியம் என்பது ஒளியை அதனுள் அடங்கியிருக்கும் பல நிறங்களாக முறிவடையச் செய்வதற்கு, அல்லது அதனைத் தெறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். பொதுவாகப் புழங்கும் பட்டகம் முக்கோணப் பட்டகம் அல்லது முப்பட்டகம் எனப்படும். இது முக்கோண அடியையும் நீள்சதுரப் பக்கங்களையும் கொண்டது. சில பட்டகங்கள் மேற்படி வடிவத்தில் இருப்பதில்லை. இலங்கைப் பாடசாலைகளில் "பட்டகம்" என்ற சொல்லுக்குப் பதிலாக "அரியம்" என்ற கலைச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள். ஒளி ஒரு ஊடகத்திலிருந்து (எகா: வளி) இன்னொரு அடர்த்தி கூடிய ஊடகத்துக்குள் அதன் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இல்லாத கோணத்தில் நுழையும்போது அது முறிவடைகிறது அல்லது தெறிக்கப்படுகிறது. ஒளிக்கதிர் மேற்கூறிய இரண்டு ஊடகங்களினதும் இடைமுகத்துடன் ஆக்கும் கோணத்திலும் (படு கோணம்), இரண்டு ஊடகங்களினதும் முறிவுக் குணகங்களினது அளவிலுமே ஒளி தெறிக்கப்படுமா அல்லது முறிவடையுமா என்பதும், எவ்வளவு முறிவு அல்லது தெறிப்பு நடைபெறும் என்பதும் தங்கியுள்ளது.முப்பட்டகம் , துருவப்படுத்துவதினால் ஒளிக்கதிர்களைச் சிதறச்செய்கிறது. "தெறிப்புப் பட்டகம்" ஒளியைத் தெறிப்படையச் செய்யப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆடிகளை விடப் பட்டகங்கள் இலகுவாகத் தயாரிக்கப்படக் கூடியவை என்பதனால் தூர நோக்கிகளில் (binoculars) பயன்படுத்தப்படுகின்றன. "பரவச் செய்யும் பட்டகங்கள்" ஒளியை அது கொண்டிருக்கும் பல்வேறு நிறங்களாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. வெண்ணிற ஒளி பல்வேறு அதிர்வெண்களைக் கொண்ட அலைகளின் கலவையாக இருக்கின்றது. பட்டகத்தினால் ஒளி முறிவடையும் அளவு வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஒளிக் கூறுகளுக்கு வெவ்வேறாக இருப்பதால் பட்டகத்தினால் ஒளிக்கூறுகள் அவற்றின் அதிர்வெண்களுக்கு ஏற்பப் பிரிக்கப் படுகின்றன. நீல ஒளியில் சிவப்பு ஒளியிலும் கூடுதலாக வேகக் குறைவு ஏற்பட்டுக் கூடுதல் முறிவு ஏற்படுகின்றது. முனைவாக்கும் பட்டகங்கள் என அழைக்கப்படும் பட்டகங்களும் உள்ளன. இவை ஒளிக் கற்றைகளை வெவ்வேறு முனைவாக்கம் கொண்ட கூறுகளாகப் பிரிக்கின்றன. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குள் செல்லும் பொழுது அதன் வேகம் குறைக்கப்படுகின்றது.அப்போது அவ்வொளியானது ஹய்ஜன் கோட்பாட்டின்படி தனது வழியிலிருந்து விலகி வேறு ஒரு கோணத்தில் பட்டகத்தினுள் புகும். ஒளியின் விலகல் கோணம் , ஒளி பட்டகத்தில் படும் கோணத்தைப் பொருத்து மாறுபடும்.வெள்ளொளி பல வண்ண ஒளிகளின் கலவையாகும்.ஒவ்வொரு ஒளிக்கும் வேவ்வேறு அலைநீளங்கள் இருப்பதால் அவை ஒளி பட்டகத்தில் படும் கோணமும் மாறுபடுகின்றது.அதனால் ஒளி முறிவு ஏற்படுகின்றது. ஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்.ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. முப்பட்டகத்திலும் சில வகைகள் உள்ளன.அவை, சில பிரதிபலிப்பு கனப்பட்டைகள் ஒளியிணை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒளிவீச்சுகளாக பிரிக்க பயன்படுத்தப்படுகின்றன.அவை, துருவமுனைப்படும் கனப்பட்டைகளும் ஒளியிணை சிதறச் செய்யும்.அவை, நிகோல் முப்பட்டை கண்ணாடி வோல்ஸ்டன் முப்பட்டக கண்ணாடி நோமர்ஸ்கி முப்பட்டக கண்ணாடி - மைக்ரோஸ்கோப்பி நன்மைகள் Wollaston முப்பட்டை கண்ணாடி ஒரு மாறுபாடு ரோஹன் முப்பட்டக கண்ணாடி செனர்மொன்ட் முப்பட்டக கண்ணாடி கிலன்-ஃபூக்கோ முப்பட்டக கண்ணாடி கிலன்-டெய்லர் முப்பட்டக கண்ணாடி கிலன்- தாம்சன் முப்பட்டக கண்ணாடி பட்டகங்கள் கண்பரிசோதனைகளுக்கு பயன்படுகின்றன்.பார்வைக் கோளாறுகளை கண்டரியவும், சரி செய்யவும் பட்டகங்கள் பயன்படுகின்றன.ஒளியின் அளவை பெறுக்க பட்டகங்கள் பெரிதும் உபயோகப்படுகின்றன.இக்காரணத்திணால் இவை தொலைநோக்கி உட்பட பல சாதனங்களில் பயன்படுகின்றன.பட்டகம் ஆய்வுக்கூடங்களில் ஒளியினைப்பற்றி ஆராயவும்,அவற்றின் இயல்புகள் பற்றி படிக்கவும் உதவுகின்றன.பட்டகம் வெள்ளொளியில் உள்ள நிறங்களின் அலைநீளங்கள் ஆகியவற்றை கணக்கிட பெரிதும் உதவுகின்றன. ஐம்பட்டகம் ஐம்பட்டகம் என்பது ஐந்து பக்கங்கள் கொண்ட தெறிக்கும் பட்டகம் ஆகும். இது ஒளிக் கதிர் ஒன்றைத் 90° ஆல் திசை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஒளிக்கதிர் பட்டகத்தினுள் இரு முறை தெறிப்பதன் மூலம் ஒரு ஒரு பொருளின் விம்பத்தை,அதன் பக்கத்தை மாற்றாமல் செங்கோணத்தால் ("right angle") திருப்பிவிடுகிறது. ஒளிக்கதிர் அவதிக் கோணத்திலும் ("critical angle") குறைவான கோணமொன்றில் இடைமுகத்தில் படுவதன் காரணமாக, பட்டகத்துள் நடைபெறும் தெறிப்பு முழுவுட் தெறிப்புக் ("total internal reflection") காரணமாக ஏற்படுவதில்லை. தெறிப்பு ஏற்படும் பக்கங்கள் இரண்டும் பூச்சுக்கள் மூலம் தெறிக்கும் மேற்பரப்புகளாக ஆக்கப்படுவதனாலேயே தெறிப்பு உண்டாக்கப்படுகிறது. தேவையற்ற தெறிப்ப்பைத் தடுப்பதற்காக, ஒளியை உட்செல்லவிடும் பக்கங்கள் இரண்டிலும், வழக்கமாக தெறிப்புத் தடுப்புப் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். ஐந்தாவது பக்கம் ஒளியியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஒற்றை வில்லைத் தெறிப்பு நிழற்படக் கருவிகளில் ("single-lens reflex camera") பயன்படும் கூரை ஐம்பட்டகம், இந்தப் பட்டகத்தின் ஒரு வேறுபாடு ஆகும். இங்கே நிழற்படக் கருவியிலுள்ள தெறிக்கும் ஆடி மூலம் கருவியின் குவியத் திரையில் உருவாக்கப்படும் விம்பமே பட்டகத்தினூடாகத் தெறிக்கப்படுவதால் விம்பம் இடம் வலமாக மாற்றப்படவேண்டியுள்ளது. பட்டகத்தின் தெறிக்கும் பக்கமொன்றை ஒன்றுக்கொன்று 90° கோணத்தில் அமைந்த இரண்டு பக்கங்களாக மாற்றுவதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படுகிறது. போரோ பட்டகம் ஒளியியலில் போரோ பட்டகம் என்பது, இதனை உருவாக்கிய இக்னாஸியோ போரோ (Ignazio Porro) என்பவரின் பெயரால் அறியப்படும் ஒரு வகைத் தெறிப்புப் பட்டகம் ஆகும். இது ஒரு விம்பத்தின் திசையை மாற்றுவதற்கு, ஒளியியல் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது, செங்கோண முக்கோண வெட்டுமுகத்துடன் கூடிய, செங்கோண வடிவவியல் பட்டகத்தின் (geometric prism) வடிவில் அமைந்த ஒரு கண்ணாடிக் குற்றியாகும். பட்டகத்தின் பெரிய நீள்சதுரப் பக்கத்தின் வழியாக உட்செல்லும் ஒளி, ஏனைய இரண்டு பக்கங்களில் முழுவுட் தெறிப்படைந்து (total internal reflection) மீண்டும் உட்புகுந்த பக்கம் வழியாக வெளியேறும். ஒளி பக்கத்துக்குச் செங்குத்தாகவே உட்புகுந்து, வெளியேறுவதன் காரணமாகப் பட்டயம் ஒளியைச் சிதறச் செய்வதில்லை. போரோ பட்டகத்தினூடாகச் செல்லும் விம்பம்மொன்று 180° ஆல் சுழற்றப்படுவதுடன், உட்புகுந்த திசைக்கு எதிர்த் திசையாகச் சென்று புகுந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியுள்ள புள்ளியூடாக வெளியேறுகிறது. விம்பம் இருமுறை தெறிக்கப்படுவதனால் விம்பம் பக்கம் மாறாமல் இருக்கும். போரோ பட்டகங்கள் பெரும்பாலும் "இரட்டைப் போரோ பட்டக" வடிவில் சோடியாகவே பயன்படுத்தப் படுகின்றன. முதலாவது பட்டகத்துக்குச் சார்பாக 90° ஆல் சுழற்றப்பட்ட இரண்டாவது பட்டகம், ஒளி இரண்டு பட்டகங்களின் ஊடாகவும் செல்லத்தக்க வகையில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டுப் பட்டகத்தின் இறுதி விளைவானது, ஒளி உள்ளே சென்ற அதே திசையில் அதற்குச் சமாந்தரமாக ஆனால் சற்று விலகிச் செல்லும். அத்துடன் விம்பம் முன்னைப் போலவே பக்கமாற்றம் இல்லாமல் 180° சுழற்றப்பட்டிருக்கும். இரட்டைப் போரோ பட்டயங்கள் சிறிய ஒளியியல் தொலை நோக்கிகளில் தலைகீழான விம்பமொன்றை தலைமேலாகச் செய்வதற்குப் பயன்படுகிறது. பொதுவாக இரட்டைப் போரோ பட்டகத்தின் இரண்டு கூறுகளும் ஒன்றுடனொன்று பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் அளவையும் நிறையையும் குறைப்பதற்காக தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டிருக்கும் போரோ - அபே பட்டகம், இரட்டைப் போரோ பட்டகத்தின் ஒரு வேறுபாடாகும். பாலைவனம் புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை விட அதிகமாக நீர் வெளியேறும் புவியியற் பிரதேசங்களே பாலைவனம் எனக் கருதப்படும். தனியே மழைவீழ்ச்சியை மாத்திரம் கொண்டு பாலைவனங்களை வரையறுக்க முடியாது. இவ்வரையறை வெப்பநிலையாலும் ஈரப்பதத்தாலும் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது. சில வேளைகளில் பாலைவனங்களை குளிர்ப் பாலைவனங்கள் என்றும் சூடான பாலைவனங்கள் என்றும் பாகுபடுத்துவர். குளிர்ப் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினார். தற்போது அங்கீகரிக்கப்படும் பாகுபாடு யாதெனின் வரண்ட வலயம், அரையுலர் வலயம் எனப் பிரிக்கும் பாகுபாடாகும். வரண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 250 mm (10 அங்குலங்கள்) விடக் குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250–500 mm (10–20 அங்குலங்கள்) வரை இருக்கும். புவியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (33%) பாலைவனங்களாகும். சூடான பாலைவனங்களின் பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். இவற்றின் குளிர்கால-கோடைகால வெப்பநிலை வேறுபாடும் அதிகமாகக் காணப்படும். சூடான பாலைவனங்களின் கோடைக்கால வெப்பநிலை 45 °C/113 °F வரை உயரும் அதே வேளை குளிர்கால வெப்பநிலை 0 °C/32 °F அல்லது அதை விடக் குறைவடையும். இங்கு ஈரப்பதம் குறைவென்பதால் இதனைச் சுற்றியுள்ள வளி சூரியனால் பகலில் வேகமாக சூடாக்கப்படுவதுடன் இரவு வேளையில் வேகமாகக் குளிர்வடைந்து விடும். எனவே இங்கு பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். பாலைவனங்களின் காலநிலை தாவரங்களுக்கு ஏற்றதல்லவென்றாலும், உண்மையில் பாலைவனங்களின் உயிர்ப்பல்வகைமை அதிகமாகும். இங்கு வாழும் தாவரங்கள் ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் வகையில் இசைவாக்கமடைந்துள்ளன. கள்ளி போன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக் கூடியன (அடகாமா, அன்டார்க்டிக்கா போன்றவற்றைத் தவிர்த்து). இவற்றின் வேர்த்தொகுதி அரிதாகக் கிடைக்கும் நீரை சரியான முறையில் விநியோகிக்கக் கூடியவாறு விருத்தியடைந்துள்ளன. தாவரங்களைப் போலவே விலங்குகளிலும் பாலைவனச் சூழலுக்கு சிறப்பாக இசைவாக்கம் அடைந்தவை உள்ளன. "பாலைவனக் கப்பல்" எனப்படும் ஒட்டகம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். புவியிலே வரண்ட இடமாக அட்டகாமா பாலைவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஏனைய பாலைவனங்களில் சிறிதளவேனும் மழை பொழியும். இங்கு சிலவேளைகளில் அடைமழை கூடப் பொழிந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும். பாலைவனங்களிலுள்ள தாதுப்பொருட்களையும், அதன் ஆற்றலையும் வெளிக்கொண்டு வர, அங்கு மனிதன் தான் வாழ நன்கு பழக்கப்படுத்திக் கொண்டான். இவ்வாறாக மனித கலாச்சாரத்தில் பாலைவனங்கள், ஓர் விரிவான இலக்கியத்தைக் கொண்டுள்ளது. மனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். கலஹாரி பாலைவனப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள், வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர். பாலைவன நாடோடிகளும் வணிகர்களும் இருந்தனர். சஹாரா பாலைவனமானது அட்லாண்டிக் விளிம்பிலிருந்து எகிப்து வரை நீண்டு பரந்த பரப்பளவு கொண்டதாக உள்ளது. சகாராவின் வடக்கில் உள்ள வளமான மத்தியதரைக் கடல் பகுதியுடன் தெற்கில் சஹெலை இணைக்கும் வணிக பாதைகள் வளர்ச்சியடைந்தன இவற்றின் வழியாக, பாலைவத்தில் மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச்செல்ல பெருமளவிலான ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. துவாக்கு வணிகர்களால் வழக்கமாக பாரம்பரியமாக அடிமைகள், தந்தம், தங்கம் போன்றவற்றை வடக்கு நோக்கி எடுத்துச் சென்றும், தெற்குநோக்கி உப்பை வணிகத்துக்காக கொண்டு சென்றனர். இந்த வணிகர்களால் பல்வேறு பாலைவனச் சோலைகள் மற்றும் கிணறுகளுக்கு இடையில் பயணிக்க ஏதுவாக வழிகாட்டுவதற்கு இப்பகுதியின் நிலவியல் அறிவைக் கொண்ட பெர்பர்கள் பயன்படுத்தப்பட்டனர். 8 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சஹாரா முழுவதும் பல மில்லியன் அடிமைகள் வடக்கு நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். மோட்டார் வாகனங்கள், கப்பல் மற்றும் வான் சரக்கு போக்குவரத்து சாதனங்களின் வருகைக்குப்பின் பாரம்பரிய தரைவழிப் போக்குவரத்துகள் குறைந்துவிட்டன, ஆனால் வணிகர்கள் இன்னும் அகடெஸ் மற்றும் பில்மாவிற்கும், பாலைவனத்திற்கு உள்பகுதியில் உள்ள சமூக மக்களுக்கு உப்பு கொண்டு செல்ல திம்புக்டுவிற்கும் டவுடுனிக்கும் இடையில் செல்லும் வழிகளிலும் பயணம் செய்கின்றனர். பாலைவனப் பகுதி விளிப்புப் பகுதிகள் சிலவற்றில், மழைப்பொழிவு ஏற்பட்டும் பொருத்தமான சூழல்கள் ஏற்படும்போது, சில குழுக்கள் பயிர்களை பயிரிட்டன. கால்நடை மந்தைகள் வறட்ச்சியால் இறந்து இழப்புகளைச் சந்தித்தபோது, மேய்ச்சலுடன் சாகுபடி செய்யவும் நிர்பந்தம் ஏற்பட்டு, இது நடந்தது இருக்கலாம். அவர்கள் பயிரிடப்பட்ட நிலப்பகுதியால், நாடோடி மேய்பர்களுக்கு மேய்சலுக்கான இடப் பகுதி குறைத்து, அதனால் நிலப்பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. பாலைவனத்தின் அரை வறண்ட நிலப்பகுதிகள் 1930 களில் அமெரிக்க டஸ்ட் பவுல் பகுதியில் நடந்தது போல, மண் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து நிறைந்த மண் வகைகள் இவையாகும். புற்கள் உள்ள இடத்தின் தரைமண் அரித்துசெல்லப்படுதல், மற்றும் தொடர்ச்சியான வறண்ட ஆண்டுகளில் பயிர் விளைச்சல் தோல்வியடைதல், பிரமாண்ட தூசுப் புயல்களால் மேல் மண் பறத்தல் போன்ற பேரழிவில் பாதி மில்லினுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற சேதங்களால் அரை வறண்ட பகுதிகளில் ஆண்டுக்கு பன்னிரண்டு மில்லியன் ஹெக்டேர் நிலப் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக மாறி வருகின்றன. காலநிலை மாற்றங்கள், விவசாய உழவு, மிகையான மேய்ச்சல், காடழிப்பு, வறட்சி போன்ற காரணிகளால் பாலைவனம் உருவாகிறது. மண்ணின் நிலையைத் தீர்மானிப்பதில் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன. பல சூழ்நிலைகளில், மண் அரிப்பு விகித்த்தை தாவரங்களின் பரப்பளவு குறைக்கின்றன. தாவரங்கள் இல்லாததால் பாதுகாப்பற்று உள்ள வறண்ட மேற்பரப்பு மண் காற்றால் வீசியடிக்கப்படுகின்றன அல்லது வெள்ளப் பெருக்குகளால் அரிக்கப்பட்டு விடுகின்றன, இதனால் கீழே மிஞ்சும் வளமற்ற மண் அடுக்குகள், சூரிய வெப்பத்தால் மோசமான நிலப்பகுதியாக மாறும். அதிகப்படியான மேய்சலே வரலாற்று ரீதியாக நிலம் பாலைவனம் ஆவதற்கான காரணம் எனக் கருதப்பட்டாலும், காட்டு விலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகள் போன்றவை தாவர வளர்ப்பு மேம்படுத்துவதற்க்கு காரணம் என்று சில சான்றுகள் உள்ளன, புவியைத் தவிர சூரியக்குடும்பத்தில் செவ்வாயிலேயே பாலைவனம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உள்ள பாலைவனங்கள் புவி யில் உள்ளவற்றை விடப் பெரியனவாகும். பாலைவனமாதல் என்பது, வரண்ட, ஓரளவு வரண்ட அல்லது ஈரப்பதன் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும். உயிரியற் பல்வகைமை இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். மடகாஸ்கரில், அதன் மத்திய உயர்நிலப் பகுதிகளில், உள்ளூர் மக்களின் "வெட்டி எரித்தல்" முறைப் பயிர்ச்செய்கையின் காரணமாக நாட்டின் 10% அளவுக்கு ஈடான நிலம் பாலைவனமாதல் மூலம் இழக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிலை உள்ளது. பாலைவனங்களை பற்றி விரிவாகக் கூறும் இலக்கியங்களும் உள்ளன. சில நாடுகாண் பயணிகளால் நேரடியாக பார்த்து எழுதப்பட்டவையாகும். அவற்றில் 1888ல் சார்லசு மொன்டகு தௌடி எழுதிய "எனார்மசு டிராவல்சு இன் அராபியன் டெசர்டா", மத்திய கிழக்கு பாலைவனங்களில் அதிக பயணங்களை மேற்கொண்ட ஃப்ரேயா சுடார்கு எழுதிய இருபது நூல்களும் முக்கியமானவை. மேலும் செர்மானிய இயற்கை ஆர்வலர் எழுதிய ஆய்வுக்கட்டுரையான "இன் தி டெசர்ட் ஆஃப் திசு எர்த்", ரால்ப் பேக்னால்டு இரண்டாம் உலகப்போரின் போது செய்த ஆய்வுக் குறிப்புகள் போன்றவையும் முக்கியமானவை. மேலும் மார்க்கோ போலோ மத்திய ஆசியாவில் இருந்து சீனா செல்லும் போது எழுதிய குறிப்புகளும் பாலைவனங்களை பற்றிக் குறிப்பிடுகின்றன. தமிழில் சங்ககால நூல்களில் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர மன்னன் கலித்தொகை நூலில் தொகுத்த பாலைக்கலி என்னும் பிரிவில் வரும் 35 பாடல்களும் மற்ற சங்க நூல்களில் வரும் பாலைத் திணை பற்றிய பாடல்களும் சங்க கால பாலை நில மக்களின் வாழ்வியலையும் சேர்த்தே கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பாலை நிலமானது தற்காலிக பாலைவனங்களே ஆகும். பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" – சிலப்பதிகாரம். மார்க்கோ போலோ மார்க்கோ போலோ "(Marco Polo)" என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8–9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும், பிற ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒரு இத்தாலிய வணிகரான இவர். மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. தந்தை, மாமா நிக்கோலோ மற்றும் மாஃபியோ ஆகியோரிடமிருந்து போலோ வர்த்தக வியாபாரத்தை கற்றுக்கொண்டார். இவர்கள் ஆசியா வழியாகப் பயணம் மேற்கொண்டு குப்ளாய்கானை சந்தித்தனர். 1269 ஆம் ஆண்டில் அவர்கள் வெனிசுக்குத் திரும்பி வந்து முதன்முறையாக மார்கோபோலோவைச் சந்தித்தனர். ஆசிய சாதனைப் பயணத்திற்காக கப்பல் ஏறிய இவர்கள் 24 ஆண்டுகள் கழித்து வெனிசு திரும்பியபோது அந்நகரம் கெனோவாவுடன் போருக்கு ஆளாகியிருந்தது. சிறையில் அடைபட்டிருந்த மார்கோபோலோ சிறைத்தோழரிடம் தன்னுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருப்பார். 1299 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர் மிகப்பெரிய வியாபாரியாக வளர்ச்சி கண்டார். திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். 1324 இல் மரணமடைந்த போலோ வெனிசு நகரிலுள்ள சான் லொரென்சோ பேராலயத்தில் புதைக்கப்பட்டார். இவரின் பிறப்பிடமான வெனிசு நகரத்தில் இவரின் குடும்பம் மிகுந்த செல்வாக்கினை அக்காலத்தில் பெற்றிருந்தது. அதன் காரணம் இவரின் தந்தையான நிக்கோலோ போலோவும், சிறிய தந்தையான மஃபெயா போலோவும் வெனிசு நகரின் முக்கிய வணிகர்களாவர். மேலும் வெனிசு நகர பெருஞ்சபையில் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தனர். மார்க்கோ போலோவின் மற்றொரு சிறிய தந்தை கான்சுடன்டீனோபிலிலும் கிரிமியாவிலும் முக்கிய வணிகராய் இருந்தவர். 1271 இல் இவர் தனது தந்தை நிக்கோலா, உறவினர் மாப்பியோ ஆகியோருடன் பட்டுப் பாதை வழியே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா கடும் பாலைவனங்கள் மலைகள் போன்றவற்றைக் கடந்து சீனா சென்று செங்கிசுக்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார். குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோ போலோ பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. ஏனையோருக்குச் செப்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் முத்திரை வழங்கப்பட்டாலும் மார்க்கோ போலோவிற்குக் குப்ளாய்கான் தங்கத்திலான அரச முத்திரையை வழங்கினான். இந்த முத்திரையின் உதவியுடன் மார்க்கோ போலோ மங்கோலியப் பேரரசின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருந்தது. பெரும் செல்வம் ஈட்டிய மார்க்கோ போலோ மற்றும் அவர் தந்தையார் முதலியவர்கள் மொங்கோலியப் பேரரசில் இருந்து புறப்பட்டு தமது நகரமான வெனிசிற்குச் செல்ல முற்பட்டாலும் இவர்கள் மீண்டும் அவர்களது ஊருக்குச் செல்வதை மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கான் விரும்பவில்லை. ஆயினும் 1292 ம் ஆண்டு அரைமனதுடன் இவர்களை தமது நாட்டிற்கே திரும்பிச் செல்ல அனுமதி வழங்கினான். பேரரசனின் ஆணைப்படி இவர்களுடன் ஒரு இளவரசியும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவளை ஈரான் நாட்டில் திருமணத்திற்காக ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது. இவர்களின் தாய் நாடு நோக்கிய பயணம் மிகவும் சிரமமானதாக அமைந்ததுடன் இவர்களுடன் பயணித்த பலரும் வழியிலேயே மாண்டு போயினர். இதைவிட மங்கோலியப் பேரரசின் எல்லையைத் தாண்டி ட்ரிபிசாண்ட் பேரரசின் எல்லையில் வழிப்பறிக் கொள்ளையரிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். தாம் மங்கோலியப் பேரரசில் சேகரித்த செல்வத்தில் அனேகமானவற்றை இந்த வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுத்தனர். இவர்கள் தாம் பயணித்த பாதையில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தனர். இதன் படி இலங்கையின் இரத்தினக் கற்களைப் போற்றும் மார்க்கோ போலோ இலங்கையின் அரசனிடம் மிகவும் பெரிய உள்ளங்கை அளவான இரத்தினக் கல் இருந்ததாகக் கூறுகின்றார். அதன் பிறகு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் நியமித்த இலங்கையின் இளவரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டிநாட்டிற்கு வந்தார். இவர் பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் இக்குலசேகரனே ஐந்து பாண்டியர்களில் மூத்தவன் எனவும், இவனது ஆட்சியில் பாண்டி நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைவிட இந்தியாவின் கோரமண்டல் கரையில் உள்ள மக்கள் தமது வலக்கையாலே எந்த வொரு சுத்தமான செயலையும் செய்வதாகவும் இடக்கை அசுத்தமான காரியங்களைச் செய்யப்பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார். மேலும் தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர் வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார். 1298 இல் நடந்த போர் ஒன்றின் விளைவாக மார்க்கோ போலோ சிறை பிடிக்கப்பட்டார். இந்தப் போர் இவரின் நகரமான வெனிசிற்கும் வெனிசின் வர்த்தகத்தில் போட்டி நகரமான ஜினோவா விற்கும் இடையில் நடைபெற்றது. இவர் தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் தனது சிறை அறையைப் பகிர்ந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதினார். பலரும் இவரின் பயணக் கதைகளை நம்பவில்லை ஆனாலும் மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. பலரும் இந்தப் புத்தகத்தால் கவரப்பட்டனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிரிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார். இறுதியாக 1295 இல் தனது சொந்த பூமியான வெனிஸ் நகரத்தை மார்க்கோ போலோ அடைந்தார். இவர் வெனிசை வந்தடைந்த போது இவரது உறவினர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தனர். மொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும். 1299 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மார்க்கோ போலோ தனது நகரமான வெனிசிற்கு மீண்டு வந்தார். அவர் வெனிசில் பின் நாட்களின் பெரும் செல்வந்த வணிகராக இருந்தார். பல்வேறு நாடுகாண் பயனங்களை ஊக்குவித்தார் ஆயினும் அவர் அதன் பின்னர் எந்தவொரு பயண நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறையில் இருந்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ 1300 இல் பிரபல வணிகர் ஒருவரின் மகளான டொஆண்டா எனும் பெண்ணை மணம் செய்துகொண்டார். அத்துடன் அவரிற்கு மூன்று பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றது. 1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ சனவரி 8, 1324 இல் ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தார். வைத்தியர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் மரணப் படுக்கையில் இருந்து மார்க்க போலோவைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதி நாட்களில் தனது அடிமையாக இருந்த தட்டார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் மார்க்க போலோ விடுதலை செய்தார். தனது வணிகத்தை மகள் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்ததுடன் தேவாலயத்திற்கும் தனது செல்வத்தில் கணிசமான பங்கை வழங்கினார். மார்க்க போலோவின் இறுதி நாள் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும் சூரியன் மறைந்த பின்னர் சனவரி 8 மற்றும் 9, 1324 இடையில் அவர் மறைந்ததாக கூறப்படுகின்றது. கியோவானி டா பியன் டெல் கார்பைன் போன்ற பிற சிறிய அளவில் அறியப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே சீனாவுக்குப் பயணம் செய்திருந்தனர். ஆனால் போலோவின் புத்தகமே பரவலாக அறியப்பட்ட முதல் பயணமாக இருந்தது. தூர கிழக்கு பற்றி போலோவின் விவரங்களை அறிந்த கிறிசுடோபர் கொலம்பசு அந்த நிலங்களை பார்வையிட விரும்பினார். கிழக்கில் கிறித்துவ பேரரசு என்ற போலோவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெண்டோ டி கோய்சு மத்திய ஆசியா முழுவதும் மூன்று ஆண்டுகளில் 4,000 மைல்கள் (6,400 கி.மீ) பயணம் செய்தார். அவர் அப்பகுதியை ஒருபோதும் கண்டுபிடித்துவிடவில்லை என்றாலும் 1605 இல் சீனப்பெருஞ் சுவருடன் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. கத்தாய் என்று அறியப்பட்டிருந்த பகுதியைத்தான் மத்தேயோ ரீச்சி (1552-1610) சீனா என்று அழைத்தார் என்பது தெளிவு படுத்தப்பட்டது . 1721 இல் போலோ பாமீரைக் கடந்த பொழுது விவரித்த சிற்றினமான ஓவிசு அம்மான் மார்கோ போலோ செம்மறியாடு எனப்பெயரிடப்பட்டது. 1851 ஆம் ஆண்டில், செயிண்ட் சான், நியூ பிரன்சுவிக் நகரில் கட்டப்பட்ட ஒரு மூன்று முனைக் கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ; ஆறு மாதங்களுக்குள் உலகெங்கிலும் பயணம் செய்த முதல் கப்பல் இதுவாகும் வெனிசு நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு வெனிசு மார்க்கோ போலோ விமான நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது . மார்கோ போலோவின் பயணமானது ஐரோப்பிய வரைபடத்தின் வளர்ச்சியில் சிறிதளவு தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாம், ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆராய்ச்சிகளுக்கு இவரது பயணம் வழிவகுத்திருப்பதாகக் கொள்ளலாம். 1453 இல் உருவாக்கப்பட்ட வரைபடத்தின் ஒரு பகுதி கத்தாயில் இருந்து மார்க்கோ போலோவால் வரையப்பட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது ஆகும். மார்கோ போலோ தனது பயணத்தை விவரித்துக் காட்டிய ஒரு வரைபடத்தை ஒரு போதும் அவர் தயாரிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பம் தூர கிழக்குக்கு தொடர்பான பல வரைபடங்களை கொடுத்து உதவியது. இந்த வரைபடங்களின் தொகுப்பை போலோவின் மூன்று மகள்களான பேண்டினா, பெல்லிலா மற்றும் மோர்ட்டா ஆகியோர் கையெழுத்திட்டனர் இத்தொகுப்பில் போலோவின் பயண வழிகள் மட்டுமின்றி சப்பான், சைபீரியாவின் கம்சட்கா தீபகற்பம், பேரிங் நீரிணை மற்றும் அலாசுகாவின் கரையோரப் பகுதிகளுக்குகான கடல் வழிகளும் காணப்பட்டன. முகம்மது அல்-பராதிய் முனைவர் முகமது முசுதபா எல்பரதேய் ("Mohamed ElBaradei", , எழுத்துப்பெயர்ப்பு: "") (பிறப்பு சூன் 17, 1942, கெய்ரோ, எகிப்து) பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (IAEA) நான்காவது தலைமை இயக்குநர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியரான இவருக்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்கும் கூட்டாக வழங்கப்பட்டது. பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் இந்தியா அணு சக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை 2008ஆம் ஆண்டு மேற்கொண்டபோது எல்பராதே மிக முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டது.அணுசக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்துவதற்காக அயராமல் உழைத்து வருபவர் என எல்பரதேயுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா 2008ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசை அவருக்கு அளித்தது. 2009ஆம் ஆண்டிலிருந்தே ஹொஸ்னி முபாரக்கிற்கு மாற்றாக எகிப்தின் ஆட்சித்தலைவர் பதவிக்கு எல்பரதேயின் பெயர் எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டது. எல்பரதேய் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாவிட்டாலும், நியாயமான முறையில் தேர்தல்கள் நடந்தேற சில விதிமுறைகளும் அரசியல் சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுயேட்சை வேட்பாளர்கள் சுதந்திரமாகப் போட்டியிடும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலே தாம் வேட்பாளராக நிற்பது குறித்து சிந்திக்க முடியும் எனவும் கூறினார். பல எதிர்கட்சிகளும் அமைப்புகளும் நடுநிலையான எல்பரதேய் மக்களாட்சிக்கு வழியமைக்கும் ஓர் இடைக்கால அரசிற்கு தலைமை ஏற்கக்கூடியவராக ஏற்றுக்கொண்டுள்ளன. 24 பிப்ரவரி 2010 அன்று எல்பரதேய் கெய்ரோவில் உள்ள தம் வீட்டில் பல அரசியல் கட்சித்தலைவர்களையும் குறிப்பிடதக்க அறிவுசீவிகளையும் அழைத்து உரையாடினார். இதன் முடிவில் புதிய கட்சியமைப்பில்லாத அரசியல் இயக்கமாக மாற்றத்திற்கான தேசிய சங்கம் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முதன்மை குறிக்கோளாக அரசியல் நிலையில் பொது சீர்திருத்தங்களையும் குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் உண்மையான, சுதந்தரமான முறையில் நடைபெறுவதை தடுக்கும் எகிப்து அரசியல்சட்டத்தின் 76வது பிரிவை நீக்குவதையும் கொண்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள "முசுலிம் சகோதரத்துவம்" (Muslim Brotherhood) கட்சி சார்பாக முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டனர்; இருப்பினும் தங்கள் கட்சி உறுப்பினரல்லாத ஒருவரை வேட்பாளராக அக்கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பதில் தெளிவில்லை. மேலும் இந்தச் சந்திப்பிற்கு முதல்நாள் எல் பரதேயைச் சந்தித்த அராபிய அணி (அரப் லீக்)கின் தலைவர் அமர் மௌசாவின் ஆதரவும் இந்த இயக்கத்திற்கு உள்ளதா எனத் தெரியவில்லை. ஆர்வர்டில் கென்னடி அரசாளுமைப் பள்ளியில் 27 ஏப்ரல் 2010 அன்று பேசும்போது தான் "ஓர் வேலையைத் தேடு"வதாகவும், எகிப்திய அரசியலில் "மக்களாட்சிக்கான வழக்கறிஞராகவும் மாற்றத்திற்கான முகவராகவும்" இருக்க முற்படுவதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அதேநேரம் தமது மனைவிக்கு தாம் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில் விருப்பமில்லையென்றும் விளக்கினார். முப்பதாண்டுகளில் கண்டிராத வண்ணம் எகிப்து போராட்டம் உச்சமடைந்த நேரத்தில் 27 சனவரி 2011 அன்று தாய்நாடு திரும்பினார். மக்களின் விருப்பம் ஓர் இடைக்கால அரசு அமைய வேண்டுமென்றால் தாம் அதனை முன்னின்று நடத்தத் தயங்கவில்லை எனக் கூறினார். வெள்ளி தொழுகையில் போராட்டக்காரர்களுடன் அவர் இணைந்திருந்தபோது அவர்மீது தண்ணீர் பீரங்கி செலுத்தப்பட்டது. அவரைக் காக்கும்விதமாக சுற்றியிருந்த ஆதரவாளர்களின் மேல் தடியடி நடத்தப்பட்டது. 28 சனவரி 2011 அன்று எல்பரதேய் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. ஆயினும் அடுத்தநாள், அல் ஜசீராவிற்கு கொடுத்த நேர்முகத்தில் தாம் கைது செய்யப்படவில்லை எனக் கூறினார். செப்பு செப்பு "(Copper)" எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இத்தனிமம் செம்பு எனவும் தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும். மிகவும் மென்மையானதாக, தகடாக அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் விளங்குகிறது. இந்த மாழையின் புத்தம்புதிய மேற்பரப்பு சிவந்த நிறத்தில் இருப்பதால் இதை செம்பொன் என்றும் அழைக்கிறார்கள். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு கடத்தியாக மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டுமானப் பொருளாகவும் பல்வேறு கலப்புலோகங்களின் பகுதிப் பொருளாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் வெப்ப மின்னிரட்டை போன்ற வெப்ப அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பிலும் தாமிரம் பயன்படுகிறது. தாமிரம் இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. தாதுவிலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியமேதுமில்லாமல் நேரடியாகவே இது கிடைக்கிறது. அதன் கனிமங்களிலிருந்தும் மிக எளிதாக இதைப் பிரித்தெடுக்க முடியும். இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரத்தைப் பயன்படுத்தி வெண்கலம் என்ற கலப்புலோகம் செய்யவும் மக்கள் அறிந்திருந்தனர் . உரோமானிய காலத்தில் தாமிரம் சைப்பிரசு எனப்படும் தீவுநாட்டில் வெட்டி எடுக்கப்பட்டது. சைப்பிரசின் உலோகம் என்ற பொருள் கொண்ட ஏயிசு சைப்பிரியம் என்ற சொல் பின்னாளில் குப்ரம் என்றானது. இதிலிருந்து காப்பர் என்ற ஆங்கில சொல்லும், கியுவர் என்ற பிரஞ்சு மொழி சொல்லும், கோபெர் என்ற டச்சு மொழி சொல்லும், குப்பெர் என்ற செருமானிய மொழி சொல்லும் உருவாகின . பொதுவாக தாமிரம்(II) உப்புகள் பரவலாகக் கிடைக்கின்றன. அசுரைட்டு, மாலகைட்டு, டர்கியோயிசு போன்ற கனிமங்களில் நீலம் அல்லது பச்சை வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. வரலாற்றில் இவை நிறமிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கூரை வேயவும், இதன் ஆக்சைடுகள் பசுங்களிம்பாகவும் பயன்படுகின்றன. தனிமநிலை தாமிரம் சில வேளைகளில் அலங்கரிக்கும் கலைப் பொருளாகவும், இதன் சேர்மங்கள் நிறமிகளாகவும் , பாக்டீரியா தடுப்பிகளாகவும், பூஞ்சைக் கொல்லிகளாகவும், மரப்பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒரு தனிமம் ஆகும். ஏனெனில் உணவுப் பட்டியலில் உள்ள கனிமங்களில் தாமிரத்தின் சுவடுகள் இருப்பதால் இது அவசியமான கனிமமாகிறது. சுவாச நொதித் தொகுப்பான சைட்டோகுரோம் சி ஆக்சிடேச்சின் முக்கியமான பகுதிப்பொருள் தாமிரமாகும். மெல்லுடலிகளிலும், கணுக்காலிகளிலும் தாமிரம் ஏமோசயனின் என்ற இரத்த நிறமியின் பகுதிப்பொருளாக உள்ளது. மீன் மற்றும் முதுகெலும்பிகளில் உள்ள ஈமோகுளோபின் என்ற இரத்தநொதியிலுள்ள இரும்பு இங்கு தாமிரத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களில் கல்லீரல், தசைகள், எலும்புகள் போன்றவற்றில் தாமிரம் காணப்படுகிறது . நன்கு வளர்ச்சியடைந்த மனித உடலில் ஓர் கிலோகிராம் உடல் எடைக்கு 1.4 முதல் 2.1 மில்லி கிராம் வரை தாமிரம் காணப்படுகிறது . அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும், உருசியாவில் சில இடங்களிலும், ஆத்திரேலியாவின் தென் பகுதிகளிலும், பொலிவியா நாட்டிலும் செம்பு தனித்த வடிவில் கிடைக்கின்றது. உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது. குப்ரைட், மாலகைட்டு, அசுரைட், சால்கோ பைரைட்டு, டெனொரைட்டு, போர்னைட்டு போன்றவை சில முக்கியமான கனிமங்களாகும். தனிமவரிசை அட்டவனையின் 11 ஆவது தொகுதியில் தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று தனிமங்களும் ஒரு எசு ஆர்பிட்டால் எலக்ட்ரானுடன் டி எலக்ட்ரான் கூடு நிரப்பப்பட்ட மேல் வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை கடினமானவை, தகடாக்கத்தக்கவை, கம்பியாக நீட்டப்படும் தன்மை உடையவை ஆகும். இந்த உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தும். டி-கூடுகள் நிரம்பியுள்ள இத்தனிமங்கள் அணுக்களிடையிலான செயல்பாட்டிற்கு சிறிதளவே பங்களிக்கின்றன. இவற்றில் எசு- எலக்ட்ரான்கள் உலோகப்பிணைப்பு வழியாக ஆதிக்கம் செலுத்துகின்றன. டி- கூடுகள் நிரப்பப்படாத தனிமங்கள் போலன்றி, தாமிரத்தில் உள்ள உலோகப் பிணைப்புகளில் சகப்பிணைப்புத் தன்மை குறைவாகவும் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தும் காணப்படுகின்றன. தாமிரத்தின் உயர் கம்பியாக நீளும் தன்மைக்கும் குறைவான கடினத்தன்மைக்கும் இதுவே காரணம் ஆகும் . படிக அணிக்கோவையின் பரல் எல்லைகள், அழுத்தத்தின் கீழ் பொருட்களின் ஓட்டம் போன்ற பேரளவு அளவீடுகளில், நீட்டிக்கப்பட்ட குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் போது அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, செப்பு வழக்கமாக நுண்பல்படிக வடிவத்தூளாக வினியோகிக்கப்படுகிறது. ஒற்றைப்படிகங்களை விட பல்படிக வடிவம் அதிக வலிமை கொண்டதாக உள்ளது . தாமிரத்தின் உயர் மின்கடத்துத் திறனையும் (59.6×106 வி/மீ), உயர் வெப்பக் கடத்துத் திறனையும் அதன் மென் தன்மை சிறிதளவு விளக்குகிறது. அறை வெப்பநிலையில், தூய உலோகங்கள் வெளிப்படுத்தும் இப்பண்பில் வெள்ளி உலோகம் முதலிடத்தையும் தாமிரம் இரண்டாம் இடத்தையும் பிடிக்கின்றன . ஏனென்றால், அறை வெப்பநிலையில் எலக்ட்ரான் போக்குவரத்துக்கான எதிர்ப்பானது, அணிக்கோவையின் வெப்ப அதிர்வுகளால் எலக்ட்ரான்கள் சிதறல் அடைவதிலிருந்து உருவாகிறது. மென் உலோகங்களில் இவ்வெதிர்ப்பு பலவீனமாக இருக்கிறது The maximum permissible current density of copper in open air is approximately 3.1×10 A/m of cross-sectional area, above which it begins to heat excessively.. தாமிரத்தில் அதிகபட்சமாக அணுமதிக்கத்தகு மின்சார அடர்த்தி தோராயமாக அதன் குறுக்கு வெட்டுப் பரப்புக்கு 3.1×106 ஆ/மீ2 ஆகும். இதற்கும் அதிகமான அளவெனில் தாமிரம் சூடேற்றம் அடைகிறது . சாம்பல் அல்லது வெள்ளி நிறம் தவிர வேறு சில இயற்கை நிறத்தில் காணப்படும் தனிமங்களில் ஒன்று தாமிரமாகும் . தூயநிலையிலுள்ள தாமிரம் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும். காற்றில் படும்போது செந்நிறமாக மங்குகிறது. நிரம்பியுள்ள 3டி மற்றும் பாதியாக நிரம்பியுள்ள 4எசு அணுக்கூடுகள் இடையே நடைபெறும் எலக்ட்ரான் பரிமாற்றமே தாமிரத்தின் இத்தனித்துவ நிறத்திற்கான காரணமாகும். இவ்விரு கூடுகளுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு ஆரஞ்சு நிற ஒளிக்கு காரணமாகிறது. தாமிரம் மற்ற உலோகங்களுடன் இணைக்கப்படும்போது கால்வானிக் அரித்தல் உண்டாகிறது . தாமிரம் தண்ணிருடன் வினைபுரிவதில்லை. ஆனால் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிந்து கரும்பழுப்பு நிறத்திலான தாமிர ஆக்சைடு அடுக்காக உருவாகிறது. ஈரக்காற்றில் இரும்பு துருப்பிடித்தலைப் போல அல்லாமல் இவ்வடுக்கு தாமிரம் மேலும் அரித்தலுக்கு உட்படாமல் பாதுகாக்கிறது. சுதந்திரச் சிலை போன்ற பெரும்பாலும் பழமையான கட்டிடங்களின் கூரைப் பகுதிகளில் தாமிரக் கார்பனேட்டின் பசுமை நிற அடுக்கு தாமிரப்பைந்துருவாக காணப்படுகிறது. மங்கிய தாமிரம் சில கந்தக சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவற்றுடன் வினைபுரிந்து தாமிர சல்பைடுகளை உருவாக்குகிறது . தாமிரம் உலோகத்திற்கு 29 ஐசோடோப்புகள் உள்ளன. 63Cu மற்றும் 65Cu ஐசோடோப்புகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். 63Cu ஐசோடோப்பில் தோராயமாக இயற்கையாகத் தோன்றும் தாமிரம் 69% அளவில் உள்ளது. இரண்டுமே  3⁄2. சுழற்சிகளைக் கொண்டவையாக உள்ளன . மற்ற ஐசோடோப்புகள் யாவும் கதிரியக்கத்தன்மை கொண்டவை. இவற்றில் 67Cu ஐசோடோப்பு 61.83 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்டு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக உள்ளது. சிற்றுறுதி ஐசோடோப்புகளாக ஏழு ஐசோடோப்புகள் இனங்காணப்பட்டுள்ளன . இவற்றில் 68mCu ஐசோடோப்பு 3.8 நிமிடங்கள் அளவிற்கு நீண்ட நேரம் நிலையாக இருந்துள்ளது. அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு அதிகமான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β− என்ற அலவுக்கு சிதைவடைகின்றன, அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு குறைவான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β+.அளவுக்கு சிதைவடைகின்றன. 12.7 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்ட ஐசோடோப்பு இவ்விரு முறைகளிலும் சிதைவடைகிறது . 62Cu மற்றும் 64Cu ஐசோடோப்புகள் இரண்டும் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. 62Cu-PTSM (தாமிர-பைருவால்டிகைடு-பிசு(என்4-மெத்தில்தயோசெமிகார்பசோன்) இல் பாசிட்ரான் உமிழ்வு கணிணிவழி வரைவியலுக்கான ஒரு கதிரியக்க சுவடறிவானாக 62Cu ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது. பெரிய நட்சத்திரங்களில் தாமிரம் காணப்படுகிறது.புவியின் மேலோட்டில் மில்லியனுக்கு 50 பகுதிகள் என்ற அளவில் தாமிரம் காணப்படுகிறது. இயற்கையில் இது சால்கோபைரைட்டு, சால்கோசைட்டு என்ற தாமிர சல்பைடாகவும், அசூரைட்டு, மாலகைட்டு என்ற தாமிர கார்பனேட்டுகளாகவும், குப்ரைட்டு என்ற தாமிர(1) ஆக்சைடு சேர்மமாகவும் தாமிரம் காணப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கீவீனாவ் தீபகற்பத்தில் 420 டன்கள் எடையுள்ள தனிமநிலை தாமிரம் 1857 இல் கண்டறியப்பட்டது. 4.4×3.2×3.2 செ.மீ அளவுள்ள மிகப்பெரிய ஒற்றைப் படிகத்துடன் பல்படிகமாக இயற்கைத்தாமிரம் விவரிக்கப்படுகிறது. அதிக அளவிலான தாமிரம் தாமிர சல்பைடுகளாக வெட்டியெடுக்கப்படுகிறது அல்லது பிரித்து எடுக்கப்படுகிறது. 0.4 முதல் 1.0% தாமிரத்தைக் கொண்ட கலவைப் பாறை படிவுகள் திறந்தவெளி பள்ளங்களில் இவை வெட்டப்படுகின்றன. சிலி நாட்டிலுள்ள சுகுயிகாமட்டா, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள பிங்காம் கேன்யோன் சுரங்கம், புது மெக்சிகோவிலுள்ள எல் சினோ சுரங்கம் போன்ற தளங்களில் இம்முறையில் தாமிரம் கிடைக்கிறது. பிரித்தானிய நிலவியல் அளவைத் துறையின் 2005 ஆம் ஆண்டு கருத்துப்படி, தாமிர உற்பத்தியில் சிலி உலகின் மூன்றாவது பெரிய நாடாக திகழ்கிறது. அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பெரு ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலக மொத்த தாமிரத் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கை சிலி நாடு உற்பத்தி செய்கிறது. கள ஊடுறுவல் செயல்முறையிலும் தாமிரம் நிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசோனா மாநிலத்தின் பல தளங்களில் இம்முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது . பயன்பாட்டில் தாமிரத்தின் அளவு அதிகரித்து வந்தாலும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தக் கூடிய வகையில், உலக அளவிலான பயன்பாட்டை அனுமதிக்கும் அளவுக்கு தாமிரம் தயாரிக்கப்பட்டு வருகிறது . குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகளாக தாமிரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் பயன்படுத்தப்பட்ட தாமிரத்தின் அளவில் 95% தாமிரம் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாதிக்கு மேலான தாமிரம் கடந்த 24 ஆண்டுகளில் வெட்டப்பட்டுள்ளது. பல இயற்கை வளங்களைப் போலவே, பூமியிலுள்ள செப்பின் அளவும் மொத்தத்தில் பரவலாக உள்ளது, பூமியின் மேற்பரப்பில் சில கிலோமீட்டருக்கு அடியில் 10 டன் அளவுக்கும் அதிகமாக புதைந்துள்ளது. தற்போதைய வெட்டியெடுக்கும் விகிதத்தில் நோக்கினால் ஏராளமான மதிப்புள்ள தாமிரம் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது . இருப்பினும், இந்த இருப்புக்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்றைய விலை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ரீதியாக வெட்டியெடுப்பது சாத்தியமாக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் 25 முதல் 60 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கும் அளவுக்கு தாமிரத்தின் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மறுசுழற்சி முறையில் தாமிரம் தயாரிப்பது நவீன உலகில் ஒரு பெரும் மூலமாக கருதப்படுகிறது.. இவ்வகையான மற்றும் பிற காரணிகளின் காரணமாக, தாமிர உற்பத்தி மற்றும் விநியோகித்தல் என்பது விவாதத்திற்கு உட்படுகிறது. உச்ச எண்ணெய் தத்துவத்தை ஒத்த உச்ச தாமிரம் உள்ளிட்ட தத்துவமும் இவ்விவாதத்தில் இடம் பெறுகிறது. வரலாற்றில் தாமிரத்தின் விலை நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறுபட்டு வருகிறது. .. தாதுக்களில் சராசரியாக தாமிரத்தின் அடர்த்தி 0.6% மட்டுமே ஆகும். பெரும்பாலான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தாமிரத் தாதுக்கள் சல்பைடுகளாகும். குறிப்பாக சால்கோபைரைட்டு (Cu2S) என்னும் தாது சல்பைடு தாதுவேயாகும். நன்றாகத் தூளாக்கப்பட்ட தாதுவிலிருந்து நுரைமிதப்பு முறை அல்லொஅது உயிரினப் பிரிப்பு முறைகளால் 10-15% தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இம்முறையில் பிரிக்கப்பட்ட தாமிரத்துடன் சிலிக்காவைச் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். சல்பைடுகளை ஆக்சைடுகளாக மாற்றுவதன் மூலம் இரும்பு மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மேற்புறத்தில் மிதக்கும் சிலிக்கா கசடும் நீக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கலவையை வறுத்தல் மூலமாக அனைத்து சல்பைடுகளும் ஆக்சைடுகளாக மாற்றப்படுகின்றன: குப்ரசு ஆக்சைடு சூடுபடுத்தப்படுவதால் கொப்பள தாமிரமாக மாற்றப்படுகிறது. இச்செயல்முறையில் ஆக்சைடாக மாற்றப்படாத சல்பைடு, இதில் உருவான ஆக்சைடைப் பயன்படுத்தி கந்தகம் முழுவதையும் ஆக்சைடாக மாற்றுகிறது. பின்னர் மின்னாற் பகுப்பு முறையில் தாமிரமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாய்வை கொப்பள தாமிரத்தின் வழியாகச் செலுத்தும் போது ஆக்சிசன் முழுவதுமாக நீக்கப்பட்டு தூய்மையான தாமிரம் பெறப்படுகிறது: Cu + 2 e → Cu. அலுமினியம் உலோகத்தைப் போலவே தாமிரத்தையும் மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம். இதுவரை தயாரிக்கப்பட்ட தாமிரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தாமிரம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. சர்வதேச உலோக இருப்பு ஆதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமுதாயத்தில் பயன்படுத்தும் செப்பு அளவின் உலக தனிநபர் மதிப்பு 35-55 கிலோ ஆகும். இது மிகவும் வளர்ந்த நாடுகளில் குறைந்தது 140-300 கிலோவாகவும், அவ்வளவாக வளர்ச்சியடையாத நாடுகளில் ஒரு நபருக்கு 30-40 கிலோவாகவும் உள்ளது. தாமிரத்தை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே முறைகளே மறுசுழற்சி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட உயர்-தூய்மையான தாமிர துண்டுகளை உலைகளில் இட்டு உருக்கி, பின்னர் கட்டிகளாகவும் பாளங்களாகவும் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட குறைந்த-தூய்மை தாமிரத்துகள்களை கந்தக அமிலக் குளியல் மூலம் மின்னாற்பகுப்பு செய்து சுத்திகரிக்கப்படுகிறது . முக்கிய பயன்பாடுகளுடன் கூடிய பல செப்பு உலோகக் கலவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செம்பு மற்றும் துத்தநாகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது பித்தளை என்ற உலோகக் கலவை ஆகும். வெண்கலம் பொதுவாக செப்பு-வெள்ளீயம் கலந்து உருவாக்கப்படும் உலோகக் கலவைகளை குறிக்கிறது, ஆனால், அலுமினிய வெண்கலம் போன்ற தாமிர உலோகக் கலவைகள் எதையும் வெண்கலம் என்றே கருதுகிறார்கள். வெள்ளி மற்றும் தங்க அணிகலன்கள் தயாரிப்பில் கடினத்தன்மையையும் உருகுநிலையையும் மாற்ற தாமிரம் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக உள்ளது . ஈயம் இல்லாத பற்றவைப்புகளில் வெள்ளீயத்துடன் தாமிரமும் வேறு சில உலோகங்களும் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப் படுவதுண்டு . தாமிரமும் நிக்கலும் கலந்து தயாரிக்கப்படும் குப்ரோநிக்கல் உலோகக் கலவை நாணயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாணயங்கள் 75% தாமிரமும் 25% நிக்கலும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. 90% தாமிரமும் 10% நிக்கலும் கலந்த உலோகக் கலவை கடல்நீரால் உண்டாகும் அரித்தலை எதிர்க்கும் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன , 7% அலுமினியத்துடன் தாமிரம் சேர்த்து தயாரிக்கும் கலவை பொன் நிறத்துடன் அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது ref name=emsley/>. 4-10% தங்கம் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் உலோகக் கலவையை அடர் நீல அல்லது கருப்பு நிற பசுங்களிம்பாக சப்பானில் பயன்படுத்துகிறார்கள் . தாமிரம் பல்வேறு வகையான ஏராளமான சேர்மங்களை உருவாக்குகிறது, பொதுவாக ஆக்சிசனேற்ற நிலை எண் +1 மற்றும் +2 மதிப்புள்ள சேர்மங்களாக இவை உருவாகின்றன. இவற்றை முறையே குப்ரசு சேர்மங்கள் என்றும் குப்ரிக் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள். மற்ற தனிமங்களுடன் சேர்ந்து தாமிரம் இரண்டு தனிமங்கள் கொண்ட எளிய இரட்டை சேர்மங்களாக உருவாகிறது, ஆக்சைடுகள், சல்பைடுகள், ஆலைடுகள் என்பவை முதன்மையான உதாரணங்களாகும். ஆக்சைடுகளில் குப்ரசு ஆக்சைடுகள் மற்றும் குப்ரிக் ஆக்சைடுகள் இரண்டும் அறியப்படுகின்றன. பல்வேறு தாமிர சல்பைடுகளில் தாமிர(1) சல்பைடும் தாமிர(II) சல்பைடும் முக்கியமானவையாகும். குளோரின், புரோமின், அயோடின் தனிமங்களுடன் தாமிரம் சேர்ந்து உருவாகும் குப்ரசு ஆலைடுகள் அறியப்படுகின்றன. தாமிர(II)அயோடைடு தயாரிக்கும் முயற்சியில் தாமிர(I) அயோடைடும் அயோடைடும் மட்டுமே உருவாகின்றன ஈனிகளுடன் சேர்ந்து தாமிரம் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. நீரிய கரைசல்களில் தாமிரம்(II) ஆனது, [Cu(H2O)6]2+ ஆகக் காணப்படுகிறது. விரைவான நீர் மாற்று விகிதத்தை (வேகமாக நீர் ஈனிகளை இணைத்தல் மற்றும் நீக்குதல்) இந்த அணைவுச் சேர்மம் வெளிப்படுத்துகிறது : நீரிய அம்மோனியா அதே வீழ்படிவில் விளைகிறது. மேலும் அதிகமான அமோனியாவை சேர்த்ததன் பின்னர், டெட்ராமீன்தாமிரம்(II) உருவாகிறது Cu(HO)(OH) + 4 NH → [Cu(HO)(NH)] + 2 HO + 2 OH, தாமிர(II) அசிட்டேட்டு, தாமிர(II) நைட்ரேட்டு, தாமிர(II) கார்பனேட்டு உள்ளிட்ட ஆக்சோ எதிர்மின் அயனி அணைவுச் சேர்மங்களும் உருவாகின்றன. தாமிர(II) சல்பேட்டு நீலநிற படிகங்களாக ஒரு ஐந்து நீரேற்றாக உருவாகிறது. ஆய்வகங்களில் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் மயில்துத்தம் என்ற சேர்மம் இதுவாகும். இதைப் பயன்படுத்தி போர்டோக் கலவை எனப்படும் பூஞ்சைக் கொல்லி தயாரிக்கப்படுகிறது ஒன்றுக்கு மேற்பட்ட ஆல்ககால் தொகுதிகளைக் கொண்டு ஆல்ககால்கள் (பல்லால்ககால்கள்) பொதுவாக குப்ரிக் உப்புகளுடன் வினைபுரிகின்றன. உதாரணமாக தாமிர உப்புகள் ஒடுக்கும் சர்க்கரைகளின் சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பென்டிக்டு வினைபொருள் மற்றும் பெய்லிங்கு கரைசல் போன்றவை இச்சொதனையில் பயன்படுத்தப்படும் போது சர்க்கரையின் இருப்பு நிறமாற்றத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. நீலநிறமான Cu(II) சிவப்பு நிற தாமிர(I) ஆக்சைடாக மாறுகிறது . எத்திலீன்டையமீனும் பிற அமீன்களும் சேர்ந்த இசுகீவர் வினைப்பொருளும் அதனுடன் தொடர்புடைய பிற அணைவுச் சேர்மங்களும் செல்லுலோசைக் கரைக்கின்றன . அமினோ அமிலங்கள் தாமிர(II) உப்புகளுடன் சேர்ந்து மிகவும் நிலையான இடுக்கி இணைப்பு அணைவுச் சேர்மங்களைத் தருகின்றன. தாமிர அயனியின் இருப்பைக் காண பல ஈர வேதியியல் சோதனைகள் உள்ளன. உதாரணமாக பொட்டாசியம் பெர்ரோசயனைடுடன் தாமிர(II) உப்புகளுடன் சேர்கையில் பழுப்பு நிறமான வீழ்படிவு உருவாகிறது. கார்பன்-தாமிரம் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்கள் யாவும் கரிமத்தாமிர சேர்மங்கள் எனப்படும். இவை ஆக்சிசனுடன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு தாமிர(I) ஆக்சைடை உருவாக்குகிறது. வேதியியலில் இச்சேர்மம் பல பயன்களைத் தருகிறது. தாமிர(I) சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருள், விளிம்புநிலை ஆல்க்கைன்கள் அல்லது கரிம இலித்தியம் வினைப்பொருள்கள் சேர்த்து சூடுபடுத்துகையில் கரிமத்தாமிர சேர்மங்கள் உண்டாகின்றன;. அதிலும் குறிப்பாக இவ்வகை வினையில் கில்மான் வினைப்பொருள் உற்பத்தியாகிறது. இவை ஆல்க்கைல் ஆலைடுகளுடன் பதிலீட்டு வினைகளில் பங்கேற்கின்றன. இதனால் கரிமத் தொகுப்பு வினைகளில் கரிமத்தாமிரப் பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. தாமிர(I) அசிடிலைடு ஓர் உயர் அதிர்வு உணரியாகும். ஆனால் கேடியோட்டு-சோட்கிவிக்சு பிணைப்பு வினை, சோனோகாசுகிரா பிணைப்பு வினைகளில் இடைநிலையாக உள்ளது. மேலும் கரிமத்தாமிர சேர்மங்களைக் கொண்டு ஈனோன் கூட்டு வினைகள், கார்போதாமிர ஏற்றவினை போன்றவற்றையும் அடைய முடிகிறது. ஆல்க்கீன்கள் மற்றும் கார்பன் ஓராக்சைடுகளுடன் அமீன் ஈனி முன்னிலையில் தாமிர(I) உப்புகள் வினைப்பட்டு பலவீனமான அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன. தாமிரம்(III) பெரும்பாலும் ஆக்சைடுகளில் காணப்படுகிறது. நீலகருப்பு நிறத்தினாலான பொட்டாசியம் குப்ரேட்டு, KCuO2 திண்மம் ஒர் எளிய உதாரணமாகும் . குப்ரேட்டு மீக்கடத்திகள், இட்ரியம்பேரியம்தாமிர ஆக்சைடு (YBa2Cu3O7) போன்றவை விரிவாக ஆராயப்பட்ட தாமிரம்(III) சேர்மங்களாகும். ஆக்சைடு போலவே புளோரைடும் உயர்கார எதிர்மின் அயனியாகும். இவை உலோகங்களை உயர் ஆக்சிசனேற்ற நிலைக்கு நிலைப்படுத்துகின்றன K3CuF6 மற்றும் Cs2CuF6, போன்ற தாமிர(III) மற்றும் தாமிர(IV) புளோரைடுகள் அறியப்படுகின்றன. சிலவகையான தாமிர புரோட்டீன்கள் ஆக்சோ அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. இவையும் தாமிர(III) சேர்மங்களாகும். டெட்ராபெப்டைடுகளுடன் தாமிர(III) உப்புகளின் செவ்வுதா நிற அணைவுச் சேர்மங்களை புரோட்டாஅன் நீக்க ஈனிகள் நிலைப்படுத்துகின்றன . கரிமத்தாமிர வினைகளில் இடைநிலை விளைபொருளாகவும் தாமிர(III) உப்புகள் காணப்படுகின்றன.. செப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். செப்பு இயல்பாகவே இயற்கையில் தோன்றுகிறது, மிகப்பழமையான நாகரிகங்கள் சில செப்பை அறிந்திருந்ததாக பதிவுகள் வழியாக அறியப்படுகின்றன. வரலாற்றில், மத்திய கிழக்கில் கி.மு. 9000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது . வட ஈராக்கில் கி.மு. 8700 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது . தங்கம் மற்றும் இரும்பு மட்டுமே தாமிரம் உலோகத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன . தாமிரத்தின் உலோகவியல் இங்கு தரப்பட்டுள்ள தொடர்ச்சி முறையைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது: 1) இயற்கையான செப்பு, 2) பதனாற்றல் 3) உருக்கிப் பிரித்தல் 4) இழந்த-மெழுகு வார்ப்பு. தென்கிழக்கு அனடோலியாவில், இந்த நுட்பங்கள் அனைத்தும் புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் கி.மு 7500 இல் இருந்ததாக அறியப்படுகின்றது . ஆங்காங்கே விவசாயம் கண்டறியப்பட்டது போல தாமிரத்தை உருக்கிப் பிரித்தலும் ஆங்காங்கே தனிநபர்களால் கண்டறியப்பட்டது. அநேகமாக இக்கண்டுபிடிப்பு கி.மு 2800 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் சுமார் கி.மு 600 மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் கி.மு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்திருக்கலாம். இழப்பு மெழுகு வார்ப்பு செயல்முறை கி.மு 4500 – 4000 காலப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டுள்ளது . இங்கிலாந்தில் கி.மு 2280- 1890 காலகட்டத்தில் தாமிரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கதிரியக்கக்கரிம காலக்கணிப்பு தெரிவிக்கிறது. கி.மு 3300-3200 கால இறந்த ஆண் உடலின் கையிலிருந்த கோடாலியின் முனையில் இருந்த வெட்டி 99.7% தூய்மையான தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவ்வுடலின் தலையிலிருந்து முடியில் அதிக அளவு ஆர்சனிக் கலந்திருப்பது அவன் செப்பை உருக்கிப் பிரித்தலில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் கூற முடிகிறது. செப்பு உருக்குப் பிரித்தல் தொழில் நுட்ப அனுபவம் இதர தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் வழிவகுத்தது. இதனால் இரும்பு பிரித்தெடுத்தல் தொழில் நுட்பமும் கண்டறியப்பட்டது. செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் கி.மு 6000- 3000 காலத்திலேயே கண்டறியப்பட்டிருக்கலாம். கி.மு 5700-4500 காலகட்டம் விங்கா கலாச்சாரக் காலத்தை வெண்கலக் காலம் என்பர் . சுமேரியர்களும் எகிப்தியர்களும் செப்பு, வெண்கலம் போன்றவற்றை கி.மு. 3000 ஆண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர் . வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டமாக இருந்திருக்கலாம். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலத்திற்கும், மூன்றாவது இரும்புக் காலத்திற்கும் இடையில் இந்த வெண்கலக் காலம், புதிய கற்காலமாக வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. வெண்கலக் காலத்தில் உலோகவேலைத் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. செப்பு, தகரம் போன்றவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்தனர். உரோமானியர்கள் காலத்தில் உருக்குதல், உலோகங்களைக் கலத்தல் முறையில் வெண்கலம் என்ற உலோகக் கலவை தயாரிக்கப்பட்டது . கிரேக்கத்தில் செப்பு சால்கோசு (χαλκός) என்ற பெயரால் அறியப்பட்டது. உரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் பிற பண்டைய மக்களுக்கு செப்பு ஒரு முக்கிய ஆதாரப் பொருளாக இருந்தது. உரோமானியக் காலங்களில், ஏயிசு சைப்ரியம் என்ற பெயரில் அவர்களால் அறியப்பட்டது, ஏயிசு என்ற சொல் செப்பு உலோகக்கலவைகளுக்கான பொதுவான இலத்தீன் வார்த்தையாகும், மற்றும் சிரியாவின் சைப்ரசில் இருந்து செப்பு வெட்டியெடுக்கப்பட்டது என்பதைக் குறிக்க சைப்ரியம் என்ற சொல்லும் சேர்ந்துள்ளது. நாளடைவில் இந்த சொற்றொடர் கப்ரம் என்று சுருங்கி எளிமையானது, எனவே ஆங்கிலத்தில் அஃப்ரோடைட் (உரோமில் வீனசு) என்ற சொல்லிலும், இதன் பளபளப்பான அழகு மற்றும் கண்ணாடியை உற்பத்தி செய்வதில் இதன் பழமையான பயன்பாடு காரணமாக இரசவாதத்திலும் செம்பு என்ற சொல் பயன்பாடு இருந்தது. பண்டைய காலங்களில் அறியப்பட்ட ஏழு பரலோக உடல்கள், பழங்காலத்தில் அறியப்பட்ட ஏழு உலோகங்களோடு தொடர்புபடுத்தப்பட்டன, வீனசு செம்புடன் தொடர்பு படுத்தப்பட்டது . தாமிரம் முதன்முதலாக பண்டைய பிரிட்டனில் கி.மு.மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கர்களால் தாமிர சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. 800 மற்றும் 1600 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழமையான கல் கருவிகளைக் கொண்டு இசுல் ராயல் என்ற தளத்திலிருந்து தாமிரம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது . தென் அமெரிக்காவில், குறிப்பாக பெருவில் தாமிரத் தொழில்நுட்பம் தழைத்திருந்தது. எனினும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இவ்வுலோகத்தின் வர்த்தக உற்பத்தி தொடங்கவில்லை. செப்புகளின் கலாச்சார பங்களிப்பு குறிப்பாக நாணயப் பயன்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. உரோமானியர்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் செப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தியுள்ளனர். முதலில் செப்பு மதிப்பு மிக்க ஒரு பொருளாக கருதப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் வடிவம் மற்றும் தோற்றம் முக்கியத்துவம் பெற்றது. யூலியசு சீசர் வெண்கலத்தால் ஆன நாணயங்களை சொந்தமாக வைத்திருந்தார். அதே வேளையில் அகசுடசு சீசர் செப்பு. ஈயம், தகரம் ஆகியவற்றின் உலோகக்கலவையால் ஆன நாணயங்களைப் பயன்படுத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்னரே உரோமானியர்கள் ஆண்டுக்கு 15000 டன்கள் செப்பை உற்பத்தி செய்கின்ற அளவுக்கான நடவடிக்கைகளில் இசுபானியா, சைப்ரசு, மத்திய ஐரோப்பா பொன்ற நாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் . பண்டைய இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பில் தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பண்டைய எகிப்தியர்களும் காயங்களை ஆற்றவும், குடிநீர் அருந்தவும், தலைவலி, தீக்காயங்கள், சிகிச்சைக்காக தாமிரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். 10 ஆம் நூற்றாண்டு முதல் 1992 வரை சுவீடனில் இருந்த ஒரு சுரங்கத்திலிருந்து தாமிரம் வெட்டியெடுக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் செப்பு நுகர்வுகளில் மூன்றில் இரண்டு பங்கை இச்சுரங்கம் அளித்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற பல போர்கள் பலவற்றிற்கும் இது நிதி உதவியை அளித்தது. சுவீடன் நாட்டின் தேசியக் கருவூலமாக இச்சுரங்கம் கருதப்பட்டது. செப்பு பூசப்பட்ட நாணயங்கள் சுவீடனில் வழக்கில் இருந்தன. கூரை வேய்வதற்கும், நாணயமாகவும் டேகியுரியோவகை புகைப்பட நுட்பத்திலும் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்கும், அமெரிக்காவின் சுதந்திர சிலை உருவாக்கத்திற்கும் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. கட்டிடக் கலையின் பல்வேறு அம்சங்களில் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. நீருக்கடியில் கப்பலைப் பாதுகாக்க தாமிர முலாம் பூசுதல் மற்றும் சூழுறையிடல் போன்ற முன்னோடித் திட்டங்களை பிரித்தானிய ஆட்சிக்குழு 18 ஆம் நூற்றாண்டில் செயல்படுத்தியது 1876 இல் முதலாம் மின்முலாம் பூசும் தொழிற்சாலை செருமனியில் தோற்றுவிக்கப்பட்டது.. 1830 இல் செருமனி விஞ்ஞானியால் தூள் உலோகவியலும், 1949 இல் பின்லாந்தில் விரைவு உருக்கிப் பிரித்தல் செயல்முறையும் கண்டுபிடிக்கப்பட்டதால் தாமிர உற்பத்தியின் வேகம் மேலும் அதிகரித்தது. நாடுகளிடை தாமிர ஏற்றுமதி நாடுகளின் கழகம் 1967 இல் உருவாக்கப்பட்டது. சிலி, பெரு, சாம்பியா, சாயிர் போன்ற நாடுகள் இதை தொடங்கின. தாமிர உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்கா இக்கழகத்தில் உறுப்பினராக சேராத காரணத்தால் 1988 இல் கலைக்கப்பட்டது . மின்சார கம்பியாக (60%), கூரை மற்றும் குழாயமைத்தல் (20%), மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் (15%). பித்தளை மற்றும் வெண்கல உலோகக் கலவையாக பயன்படுவது தாமிரத்தின் முக்கியப் பயன்பாடுகள் ஆகும். சமையல் பாத்திரங்கள், கொதிகலன்கள், நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவைகள் செய்யவும் செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது பெரும்பாலும் தாமிரம் தூயநிலை உலோகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கடினத்தன்மை மாற்றம் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கலப்புலோகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகளின் அடிப்பகுதியைப் பாதுகாக்க தாமிரச் சாயம் பூசி பாதுகாக்கிறார்கள். உணவு கூட்டுப்பொருளாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது . செம்பின் மின்கடத்துத் திறன் இரும்பை விட 5 மடங்கும், அலுமினியத்தை விட 1.5 மடங்கும், துத்தநாகத்தை விட 3 மடங்கும், டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது. இதனால் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது. பிற தனிமங்களைக் காட்டிலும் தாமிரம் சிறந்த மின்கடத்தியாக தேர்வு செய்யப்பட்டு அனைத்து வகையான மின் விநியோகத்திற்குமான மின் கம்பிகளிலும் பயன்படுத்தப்படுகிறது . தலைக்குமேல் வான்வழியாக செல்லும் மின்கம்பி, மின்சுற்றுகளுக்கு மட்டும்அலுமினியம் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன . மாங்கனின், கான்சுடன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை, மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது. மின் மாற்றிகள், மின் மோட்டார்கள், மின்னியற்றிகள், மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது. செம்பின் மின்தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது. மின்கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை . 1960 களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரையிலான குறுகிய காலத்தில்,அமெரிக்க வீடுகளில் மின் விநியோகத்திற்கான செப்பு பயன்பாடு அலுமினியத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அலுமினியப் பயன்பாட்டால் பல வீடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டதால் மீண்டும் அவர்களும் செப்புக்கு திரும்பினர் . செம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வண்ணத்திற்குப் பயன் தருகின்றது. 'வோல்டாமானி' போன்ற மின்னாற்பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருளாகும். செம்பை முதல் நிலை மின்னாற்பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள். மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு ஆகும். செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற்பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும். ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் போன்றவற்றில் அலுமினியத்திற்குப் பதிலாக தாமிரம் இதனுடைய மீக்கடத்துத்திறனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப ஈர்ப்பிகள் மற்றும் வெப்ப பரிமாற்றிகளும் தாமிரத்தின் மீக்குறை ஆற்றலிழப்பு பண்பினால் இதைப் பயன்படுத்துகின்றன. மின்காந்தங்கள், வெற்றிடக் குழாய்கள், நேர்மின் கதிர்க் குழாய்கள், நுண்ணலை அடுப்புகள் போன்ற கருவிகள் நுண்ணலைக் கதிவீச்சு தன்மைக்காக தாமிரத்தைப் பயன்படுத்துகின்றன. தாமிரத்தின் உயர்ந்த கடத்துத்திறன் மின்சார மோட்டார்களின் செயல்திறனை அதிகரிக்கிறது . அனைத்து உலகளாவிய மின்சார நுகர்வு மற்றும் 69% மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் மின்சக்தி அமைப்புகளும் மோட்டார்கள் மற்றும் மோட்டார் உந்துதல் அமைப்புகள் 43% -46% அளவிற்குப் பயன்படுத்துகின்றன . மோட்டார் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் சேமிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு மின்மோட்டார்கள் வடிவமைக்கப்படுகின்றன . தேசிய மின்சார உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்திறன் தரங்களைக் கண்காணிக்கிறது . செம்பிலிருந்து பலதரப்பட்ட கலப்பு உலோகங்களைப் பெறலாம். செம்பும்(99-70%) தகரமும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும். இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானதாகவும் எளிதில் வார்த்தெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அதனால் சுழல் வட்டுக்கள், ஒருவழிச்செலுத்திகள் இயந்திர உறுப்புக்கள், அணிகலன்கள் ,உலோக ஆடிகள், சிலைகள், கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம், அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள், உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள், சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன்படுகின்றன. பெல் கலப்பு உலோகம் பாசுபரசு வெண்கலம், துப்பாக்கி உலோகம் செருமானிய வெள்ளி, பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது. பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும். அதற்கேற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும். துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பாபித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டாபித்தளை என்றும் கூறுவர். இது பட்டறைப் பயன்களுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது. ஒரு நீடித்த, அரிப்பு எதிர்ப்பியாகவும், தட்பவெப்ப மேற்கூரைப் பூச்சாகவும் தாமிரம் ஒரு கட்டிடக்கலைப் பொருளாக பண்டைய காலங்களில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது . தாழ்வாரம், கூரை, மழைப்பாதுகாப்பு, கோபுரங்கள், மற்றும் கதவுகள் போன்ற கட்டிடக்கலைப் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்துள்ளன. உட்புற மற்றும் வெளிப்புற சுவர் உறைப்பூச்சு, கட்டிட விரிவாக்கம், இணைப்புகள், ரேடியோ அதிர்வெண் பாதுகாப்பு, மற்றும் கவர்ச்சிகரமான கைவேலைப்பாடுகள், குளியலறை சாதனங்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அலங்கார உட்புற பொருட்கள் ஆகியனவற்றை உள்ளடக்கி செப்புக் கட்டடக்கலை நவீன காலபகுதியில் விரிவடைந்தவண்ணம் உள்ளது. கட்டிடக் கலைப்பொருள், குறைந்த வெப்ப இயக்கம், இலேசான எடை, மின்னல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி முதலானவை தாமிரத்தின் மற்ற முக்கிய நன்மைகள் ஆகும். இவ்வுலோகத்தின் தனித்துவமான பச்சைக்களிம்பு நிறம் நீண்ட காலமாக வடிவமைப்பாளர்களாலும்,கட்டிடக் கலை வல்லுநர்களாலும் விரும்பப்படுகின்றது. பசுக்களிம்பின் நீடித்துழைக்கும் அடுக்கு வளிமண்டல அரிப்பை மிகவும் எதிர்க்கும் தன்மையுடையது ஆகும். இதன் மூலம் இவ்வடுக்கு தொடர்ந்து உலோகத்தைப் பாதுகாக்கிறது. கந்தகம் அடங்கிய அமில மழை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து தாமிரம் பல்வேறு அளவுகளில் கார்பனேட் மற்றும் சல்பேட் சேர்மங்களின் கலவையாகக் காணப்படுகிறது. கட்டடக்கலைக்குரிய செப்பும் அதன் உலோகக் கலவைகளும் குறிப்பிட்ட ஒரு தோற்றம், நிறம், உணர்தல் ஆகியவற்றை எதிர்நோக்கியே தொடங்கப்பட்டு முடிவை எட்டுகின்றன. இம்முடிவுகள் பெரும்பாலும் இயந்திர மேற்பரப்பு சிகிச்சைகள், இரசாயன வண்ணம் மற்றும் இரசாயண பூச்சுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. தாமிரம் மிகச்சிறந்த பற்றவைத்தல் பண்புகளைப் பெற்றுள்ளது. வாயு உலோக வில்சுடர் பற்றவைப்பு சிறந்த முடிவுகளைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது . பாக்டீரியா மற்றும் பல வகையான உயிரினங்கள் எதுவும் தாமிரத்தின் மீது வளர்வதில்லை. இந்த காரணத்திற்காகவே நீண்ட காலமாக கப்பல்களின் அடிப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. மீன்பிடி தொழிலில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் மீன்வலைகள் செய்யப் பயன்படுகின்றன . தாமிரத்தின் கரைசல்கள் மரப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிர் பாதுகாப்புப் பொருள்களை உருவாக்குவதற்காக சில நூலிழை இழைகளுடன் தாமிரம் கலக்கப்படுகின்றது. சில இசைக்கருவிகளில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் முலாம் பூசுகையில் தாமிரம் ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகங்களில் ஈயம், வெள்ளி உலோகங்களுடன் சேர்த்து பரிசோதனையின் மூலம் குளோரைடு, சல்பைடு, ஆக்சைடு போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. கோளவடிவ பாக்டீரியாவும், சூடோமோனாசு புளூரசன்சு என்ற குச்சிவடிவ பாக்டீரியாவும் திண்ம நிலையிலுள்ள தாமிரத்தை சயனைடு தாமிரமாக தரம் குறைக்கின்றன . தாமிரம் கலந்துள்ள மண்ணில் சில வகை பூஞ்சைககள் வளர்கின்றன. இளம் பைன் மரங்களை தாமிர நச்சிலிருந்து சில வகைப் பூஞ்சைகள் காக்கின்றன . தங்கம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களில் உள்ள கரைசல்களில் ஆசுபெர்கில்லசு போன்ற பூஞ்சைகள் காணப்படுகின்றன. மேலும் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களின் சயனோ அணைவுச் சேர்மங்களைக் இக்கரைசல் கொண்டுள்ளது. கன உலோகங்களை இப்பூஞ்சைகள் கரைத்துவிடுகின்றன . உயிரியல் எலக்ட்ரான் போக்குவரத்திலும், ஆக்சிசன் போக்குவரத்திலும் தாமிரப் புரோட்டீன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. தாமிரம் (I) வகை சேர்மங்களை தாமிரம்(II) வகை சேர்மங்களாக இவை இடைமாற்றுகின்றன . பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசனைத் தோற்றுவிப்பதன் மூலம் செப்புக்கான உயிரியல் பங்களிப்பு தொடங்குகிறது . மைட்டோகாண்டிரியாவிலுள்ள சகல யூகாரியோட்டுகளின் காற்றுச் சுவாசத்திற்கு தாமிரம் அவசியமாகும். ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினையில் கடைசி புரதமான சைட்டோகுரோம் சி ஆக்சிடேசில் இது காணப்படுகிறது. இப்புரதம் ஆக்சிசனை தாமிரம் இரும்பு போன்ற தனிமங்களுடன் இணைக்க உதவுகிறது. மேலும் இப்புரதம் எட்டு எலக்ட்ரான்களை ஆக்சிசன் மூலக்கூற்றுக்கு இடம் மாற்றுகிறது. பல மிகை ஆக்சைடுகளில் காணப்படும் தாமிரம் அவை சிதைவடைவதற்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது. இச்சிதைவு வினையில் ஆக்சிசனும் ஐதரசன் பெராக்சைடும் உருவாகின்றன. விலங்கினங்களுள் ஆக்டோபசு, கணவாய் மீன், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இரத்தத்தில் செம்பு ஈமோசையனின் எனும் நிறமியாக உள்ளது. இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஈமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போல இவற்றில் செம்புச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிசனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது. இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன. உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது . பொதுவாக நகைகள் செய்வதற்கு தாமிரம் பயன்படுத்தப்படுகிறது, செம்பு வளையல்கள் கீல்வாதம் அறிகுறிகளைத் தடுக்கின்றன என்று சில நாட்டுப்புற மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இச்சிகிச்சையால் கீல்வாதம் குணமடைந்ததாக நிருபணம் ஏதும் ஆகவில்லை. மருத்துவக் குணம் எதுவும் தாமிரத்திற்கு இருப்பதாக மருத்துவத்துறையின் பரிந்துரைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை, சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள். சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் தீங்கானது. இதை எதிர் சுறாப் பொருள் என்று குறிப்பிடுகின்றார்கள். கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ்வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தோலின் வழியாக தாமிரம் ஈர்க்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை அவ்வாறு ஈர்க்கப்பட்டால் அது ஒரு நச்சு ஆக செயல்படும் . தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துக்கும் தாமிரம் இன்றியமையாத ஒரு கனிமமாக உள்ளது ஆனால் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இதன் அவசியம் இருப்பதில்லை. மனித உடலில் அவன் உடல் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு 1.4 முதல் 2.1 மில்லி அளவு தாமிரம் காணப்படுகிறது . மனிதக்குடலால் ஈர்க்கப்படும் தாமிரம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது , கல்லீரல் செயல்முறைகளைத் தொடர்ந்து தாமிரம் பல்வேறு திசுக்களும் அனுப்பப்படுகிறது. தேவைக்கு அதிகமான தாமிரம் உடலில் இருந்தால் அது கல்லீரலை விட்டு வெளியேற்றப்படுகிறது . செப்பு குறைபாடு காரணமாக இரத்த சோகை, எலும்பு அசாதாரண மாறுபாடுகள், மயக்கம், வளர்ச்சிக் குறைபாடு , தொற்றுநோய்கள், எலும்பு இயக்கக் குறைபாடுகள் மற்றும் குளுக்கோசு மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரணங்கள் ஆகியவவை உருவாகின்றன. வில்சன் நோய் காரணமாக உடல் திசுக்களில் தாமிரம் கூடுகிறது. தொழில்களின் பட்டியல் இது தொழில்களின் பட்டியல் ஆகும். __NoTOC__ air hostess [Lathman] [[பகுப்பு:தொழில்கள்]] சொற்பிறப்பியல் சொற்பிறப்பியல் (etymology) என்பது சொற்களின் மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற மொழிகளுடன் ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின, எந்த மூலத்திலிருந்து அறிமுகமாயின, எவ்வாறு அவற்றின் வடிவமும் பொருளும் மாற்றமடைந்தன போன்ற கோள்விகளுக்கு விடைகாண்பதன் மூலம், சொற்களின் வரலாற்றை மீளமைக்க முயல்கிறார்கள். நீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது மொழிநூலைத் (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், ஒப்பீட்டு மொழியியல் முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற்றொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் வேர்ச் சொற்கள் அறியப்படுவதுடன் அம்மொழிக் குடும்பத்தின் மூல மொழியிலிருந்து அச்சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும். சொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பொறிமுறைகள் மூலமே சொற்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு: புதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள், என்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், சொற்பொருள் மாற்றமும் கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன. அகராதியியல் "'அகராதியியல்" என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும். அகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார். பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது. அகராதியியல் தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்: நூலின் பெயர் : அகராதியியல் ஆசிரியர் : பெ . மாதையன் பதிப்பு : முதற்பதிப்பு 1997 வெளியீடு : தமிழ்ப் பல்கலைக்கழகம், வெளியீட்டு எண் . 194 இந்நூல் தமிழ் அகராதியியல் கலைச்சொல் உருவாக்க வரலாறு , அகராதி வரலாறு , அகராதி வகைகள் , சொல் வகைகள் , சொற் பொருள் உறவுகள் பற்றி கூறுகின்றது . பண்பாட்டுப் பரிணாமம் பண்பாட்டு பரிணாமம் (Cultural Evolution) உயிரின பரிணாம (biological evolution) கோட்பாட்டுக்கு ஒப்பான ஒரு பண்பாட்டு வளர்ச்சி, மாற்றம், அல்லது மருவலை பண்பாடும் கொண்டிருக்கின்றது என்ற ஒரு உத்தேச கோட்பாடு. பண்பாட்டு பரிணாமம் வளர்ச்சி பாதையில் அமைந்திருக்கின்றதா, அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு வெறுமே மருவி நிற்கின்றதா என்பது பண்பாட்டு பரிணாம இயலில் ஒரு முக்கிய கேள்வி. பல்லினப்பண்பாடு பல்லினப்பண்பாடு (Multiculturalism) பல பண்பாட்டு கூறுகளின் பேணலில், பகிர்தலில் உருவாகும் ஒரு பண்பாட்டு சூழலை குறிக்கும். பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும். பல்லினப்பண்பாட்டின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக காரணம் உலகமயமாதல் ஆகும். பல்லினப்பண்பாடு உலக பண்பாட்டின் ஒரு கூறு அல்லது அதன் வெளிப்பாடு. பல்லினப்பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடுகளாக ரொறன்ரோ, மும்பாய், நியு யோர்க் போன்ற நகரங்கள் விளங்குகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் அரச கொள்கையாவும் பல்லினப்பண்பாடு இருக்கின்றது. உரல் உரல் () என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும். உரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப்படும். அதன் பின்னர் சுளகு (முறம்) பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வேறாக்குவர். பண்டைய தமிழர் வாழ்க்கையில், இயந்திரங்களின் வரவின் முன்னர் உரல் வீடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் ஒரு பொருளாக இருந்து வந்தது. இன்றும் சிற்றூர்களில் சிறு அளவில் நெல் குற்றவும் பலகாரங்கள் செய்வதற்காகத் தானியங்களை இடிப்பதற்கும் உரல் பயன்படுத்தப்படுகிறது. இப்படி உரலில் இடித்து உருவாக்கப்படும் மாவு கைப்பக்குவம் மிகுந்து சுவையான பலகாரங்களைச் செய்வதற்கு உதவுவதாகக் கருதுகின்றனர். பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் யாழ் பரி. யோவான் கல்லூரி ("St. John's College, Jaffna") யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது. பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன. மின் விளக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒளித் தேவைக்காக ஒளியை உருவாக்கும் சாதனமே மின் விளக்கு ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய நேரத்தை இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது. மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், மின் முனைகள் மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர், மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தொமஸ் அல்வா எடிசனுக்குக் கிடைத்தது. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வகையான மின் விளக்குகள் இன்னும் சில முன்னேற்றங்களுடன் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு பல வகையான மின் விளக்குகளும் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமான சில மின்விளக்கு வகைகள் வருமாறு: ஆஸ்திரியா ஆஸ்திரியா அல்லது ஆத்திரியா ("Austria" ) அல்லது ஆஸ்திரியக் குடியரசு ("Republic of Austria") என்பது ஐரோப்பாவில் உள்ள நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடு ஆகும். இங்கு 8.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கே ஜெர்மனி, செக் குடியரசு, கிழக்கே சிலோவாக்கியா, ஹங்கேரி, தெற்கே சுலோவீனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, லீக்கின்ஸ்டைன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா ஆகும். ஆல்ப்சு வானிலை உள்ள இந்நாடு பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் பல உள்ள ஒரு அழகான நாடு ஆகும். நாட்டின் 32% நிலப்பகுதியே கீழாக உள்ளது; மிக உயரமான சிகரம் உள்ளது. பெரும்பாலான மக்கள் இடாய்ச்சு மொழியின் உள்ளூர் பவேரிய வழக்குமொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆத்திரிய இடாய்ச்சு மொழி நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. மற்ற உள்ளூர் அலுவல் மொழிகளாக அங்கேரிய, பர்கென்லாண்ட் குரோசிய, சுலோவேனிய மொழிகள் உள்ளன. ஆஸ்திரியாவின் பெரும்பகுதி புனித உரோமைப் பேரரசு ஆளுகையில் ஆப்சுபர்கு மன்னர்களின் கீழ் இருந்தது. கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் போது பேரரசரின் அதிகாரத்தை எதிர்த்து பல வடக்கத்திய செருமன் இளவரசர்கள் சீர்திருத்தத் திருச்சபையை ஆதரித்தனர். முப்பதாண்டுப் போர், சுவீடன் பிரான்சு, பிரசியாவின் எழுச்சி, நெப்போலியப் போர்கள் ஆகியனவற்றால் பேரரசின் அதிகாரம் வடக்கு செருமனியில் வெகுவாகக் குறைந்தது; ஆனால் தெற்கும் செருமனியல்லாத பகுதிகளும் பேரரசு மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்தன. 17வது,18வது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் உலக வல்லமைகளில் ஒன்றாக ஆஸ்திரியா இருந்தது. பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு பேரரசராக முடி சூடியபோது அதற்கு எதிர்வினையாக ஆஸ்திதிரிய பேரரசு 1804இல் நிறுவப்பட்டது. நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு ஆஸ்திதிரியா செருமனியின் பெரும்பகுதியை கட்டுப்படுத்த பிரசியா முதன்மை போட்டியாளராக இருந்தது. 1866இல் ஆஸ்திதிரிய-பிரசியாப் போரில் தோற்றதால் பிரசியா செருமனியின் பெரும்பகுதியை கையகப்படுத்தியது. 1867இல் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஆஸ்திரியா-அங்கேரி உருவானது. 1870இல் பிரசியாவுடனான போரில் பிரான்சு தோற்றபிறகு புதிய செருமானியப் பேரரசு உருவாக்கப்பட்ட போது ஆஸ்திதிரியா சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பிந்தைய ஆண்டுகளில் ஆஸ்திதிரியாவின் அரசியலும் வெளியுறவுக் கொள்கையும் பிரசியாவுடன் இணைந்திருந்தது. 1914ஆம் ஆண்டில் பிரான்ஸ் பேர்டினண்டின் கொலையை அடுத்த சூலை சிக்கலின்போது செருமன் அரசு வழிகாட்டுதலில் செர்பியாவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது; இதுவே முதல் உலகப் போர் மூளக் காரணமாயிற்று. முதல் உலகப் போரின் முடிவில் 1918இல் ஆப்சுபர்கு பேரரசு குலைந்த பிறகு ஆஸ்திரியா வீமார் குடியரசின் செருமனியுடன் இணையும் எண்ணத்துடன் "செருமன்-ஆஸ்திரியா குடியரசு" (', பின்னர் ') எனப் பெயர் சூட்டிக்கொண்டது. ஆனால் 1919இல் செயின்ட்-செருமைன்-ஆன்-லாயெ உடன்பாட்டின்படி இது தடை செய்யப்பட்டது. 1919இல் முதல் ஆஸ்திரிய குடியரசு நிறுவப்பட்டது. 1938இல் நாட்சி ஜெர்மனி ஆஸ்திரியாவைக் கைப்பற்றியது. 1945இல் இரண்டாம் உலகப் போர் முடியும்வரை இந்நிலை நீடித்தது. செருமனியை கைப்பற்றிய நேசநாடுகள் ஆஸ்திரியாவின் முந்தைய குடியரசு அரசியலமைப்பை மீள்வித்தது. 1955இல் ஆஸ்திரியா இறையாண்மையுள்ள நாடாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் ஆஸ்திரிய நாடாளுமன்றம் நடுநிலை சாற்றுரையை நிறைவேற்றியது; இதன்மூலம் இரண்டாம் ஆஸ்திரியக் குடியரசு நிரந்தரமாக நடுநிலை நாடாக உருவானது. இன்று ஆஸ்திரியா ஒன்பது கூட்டாண்மை மாநிலங்களைக் கொண்ட நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி ஆகும். 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வியன்னா தலைநகராகவும் மிகப் பெரும் நகருமாகவும் உள்ளது. $46,330 (2012 மதிப்பீடு) ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி கொண்ட ஆஸ்திரியா உலகின் செல்வமிக்க நாடுகளில் ஒன்றாகும். நாட்டின் வாழ்க்கைத்தரம் மிக உயர்ந்ததாக உள்ளது; 2011இல் மனித வளர்ச்சிச் சுட்டெண்சில் உலகில் 19வது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் 1955 முதல் உறுப்பினராக உள்ளது; 1995இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது; பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நிறுவன நாடாக உள்ளது. ஆஸ்திரியா 1995இல் செஞ்சென் உடன்பாட்டிலும் கையொப்பிட்டுள்ளது. 1999இல் ஐரோப்பிய நாணயமாற்றான ஐரோவை ஏற்றுக் கொண்டது. இலங்கை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. பண்டைய காலத்தில் நீண்ட காலத்துக்கு முன் பல மனிதக் குடியிருப்புக்கள் இருந்த இடமே தற்போது ஆஸ்திரியாவாக உள்ளது. முதல் குடியேறிகள் குடியேறியது பழைய கற்காலத்திலேயே ஆகும். அது நியண்டர்தால் மனிதனின் காலம் ஆகும். கற்காலத்தில் மக்கள் அங்கு செப்பு போன்ற கனிய வளங்களை தோண்டுவதற்காகவே வாழ்ந்து வந்தனர். பண்டைய ஆஸ்திரியாவில் ஏட்சி எனும் ஒருவகை பனிமனிதன் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் ஒடும் பனியாற்றில் கண்டுபிடிக்கப்பட்டான். வெண்கலக் காலத்தில் மக்கள் பெரிய குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் கட்டினர், குறிப்பாக கனிய வளங்கள் எங்கு அதிகமாகக் காணப்பட்டதோ அவ்விடங்களுக்கு அருகில் குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் அமைத்துக்கொண்டனர். அவர்கள் ஆஸ்திரியாவின் மேல்பகுதியில் உப்புச் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர். ரோமானியர்கள் ஆஸ்திரியாவுக்கு கி.மு. பதினைந்தாம் ஆண்டில் வந்தார்கள், இவர்களின் வருகையின் பின் ஆஸ்திரியா மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நவீன ஆஸ்திரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன, நவீன காலங்களில் ஆஸ்திரியா "ஆஸ்திரிய பேரரசால்" ஆளப்பட்டு வந்தது. இக்காலம் கிமு 800க்கும் 1918க்கும் இடைப்பட்ட காலமாகும். இது அக்காலங்களில் ஆஸ்திரியா பேரளவாக ஹப்ஸ்பர்க் அரச வம்சத்தினாலேயே ஆளப்பட்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் எழுபத்து நான்கு வீதமான மக்கள் சனத்தொகை ரோமன் கத்தோலிக்கமாகவே காணப்பட்டது. ஆஸ்திரியா ஏழு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. வடக்குத் திசையில் செக் குடியரசும், கிழக்குத் திசையில் சிலோவாக்கியா மற்றும் ஹங்கேரியும், தெற்குத் திசையில் சிலோவேனியா மற்றும் இத்தாலியும் மேற்கு வடமேற்குத் திசைகளில் முறையே சுவிஸ்ர்லாந்தும், செருமனியும் உள்ளன. ஆஸ்திரியா ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்பது பிரிவுகளும் மாவட்டங்களாகவும் சட்டரீதியான நகரங்களாகவும் (statutory cities) பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் நகராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாமசு ஆல்வா எடிசன் தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது. தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார். பவன் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் அரியலூரில் என்னும் ஊரில் பிறந்தார். பவனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை ரவி ஓர் இந்தியர்ர; தாயார் சோபனா பரம்பரையில் வந்த காடூர் பெண். அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11. தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார். 1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, பவனின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பறிபோனது. அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று ("மின் வாக்குப்பதிவி") முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று. 1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகைவண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் . எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது! எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின. எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது. எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள். 1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது. இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும். விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1898 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது. அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர். 1. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. 2. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. 3. மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது. வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார். கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது. பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.” எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார். ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. வைக்கோல் நெற் பயிர் அறுவடைக்குப் பின் அதன் தாள் உலர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு (குறிப்பாக மாடுகளுக்கு) உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வைக்கோல் என்று அழைக்கப்படுகிறது. வைக்கோல், அதன் உலர்ந்த நிலையிலேயே கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகையால், உழவர்கள் வைக்கோல் ஈரப்படாமலும் மழையில் நனையாமலும் காக்க முயல்வர். அப்படி ஈரப்பட்டாலும் வெயிலில் ஓரிரு நாட்கள் காய வைப்பதன் மூலம் வைக்கோலை உலர வைத்து கால்நடைகளுக்கு உண்ணத் தர முடியும். ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்ட வைக்கோலை வைக்கோல் போர் அல்லது வைக்கோல் படப்பு என்பர். அவ்வாறு குவித்து வைத்த வைக்கோல் காற்றில் பறந்து விடாமல் காக்க, வைக்கோல் போரை சுற்றி வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியை சுற்றி வைப்பர். வைக்கோல் போர்களை, தானிய மூட்டைகளை பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் கிடங்காகவும் உழவர்கள் பயன்படுத்துவர். இது தவிர வைக்கோலை குடிசைகளின் மேலும் இட்டு கூரை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவதும் உண்டு. அறுவடை செய்யப்பட்ட நெற் பயிரை உரல்களில் அடித்து நெல் மணிகளை பிரித்தெடுப்பர். இவ்வாறு அடித்த பிறகும் நெற் பயிரில் எஞ்சி ஒட்டிக் கொண்டுள்ள நெல் மணிகளை பிரித்தெடுப்பதை போரடித்தல் என்பர். சோழர்கள் "யானை கட்டி போரடித்தவர்கள்" என்ற கூற்றும் இங்கு நினைவுகூரத்தக்கது. இவ்வாறு போரடிப்பதற்கு தற்பொழுது பெரும்பாலும் காளை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இயன்ற சிலர், இயந்திரங்களை பயன்படுத்துவதும் உண்டு. அறுவடை செய்யப்பட்டு பெரும்பாலான நெல் மணிகள் உதிர்க்கப்பட்ட நெற் பயிர் வட்ட வடிவில் பரப்பப்படும். அதன் மீது இணை மாடுகள் சுற்றி சுற்றி வந்து நையப் புடைப்பதின் மூலம் மீதமுள்ள நெல் மணிகளை உதிரச்செய்யும். அதன் பிறகு நெற் தாள்கள் வெட்ட வெளியில் பரந்த நிலப்பரப்பில் பரப்பப்பட்டு ஓரிரு நாட்களில் உலர்த்தப்பட்டு வைக்கோலாக மாற்றப்படுகின்றன. "அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனிவீட்டுக்கு" என்ற பழமொழியில் நடு மாட்டுக்கு என்பது வைக்கோலைக் குறிக்கிறது. உயிர்வாயு ஆலைகளில் வைக்கோலைப் பயன்படுத்த ஆர்ஃபசு பல்கலைக்கழகம் டென்மார்க்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வைக்கோலை கட்டிகளாகத் தயாரித்து உயிர்வாயு ஆலைகளுக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அதிகமான அளவுக்கு உயிர்வாயு கிடைக்குமா என்றும் சோதிக்கப்பட்டது. இயங்குபடம் இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகும். இயங்குப்படங்களை தயாரிக்க இன்று பல மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு 24 சட்டங்கள் (frames) தேவைப்படுகின்றன. இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன. இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation), அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாகும். இயங்குபடத்தில் அதன் காலகட்டத்திற்கு ஏற்ப பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. பாரம்பரிய இயங்கு படங்கள் கையால் வரையப்பட்ட படங்கள் என்றும் கூறப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டுகளின் திரைப்படங்கள் பலவற்றில் இந்த வகையான தொழினுட்பம்களை பயன்படுத்தினர். இவ்வகையான படங்கள் முதலில் தாளில் வரையப்பட்டன. பின்பு மாய உணர்ச்சி தோற்றத்தை அதில் உருவாக்கினர். அதில் ஒவ்வொரு இயங்குபடங்களிலும் சிறிய முன்னேற்றங்களை செய்தனர். பின்பு வரைந்ததை செல் என்று கூறப்படும் உப்புத்தாளில் அதில் வைத்து அதனை வண்ணங்கள் கொண்டு நிரப்புவர். நிறுத்தும் இயக்க இயங்கு படங்கள் என்பது நிஜ உலகில் உள்ள பொருட்களை புகைப்படங்களின் சட்டகங்களாக வைத்து அதனை மாயத்தோற்றத்தில் அசையும் வகையில் வைக்கப்படுவது ஆகும். பல வகையான நிறுத்தும் இயங்குபடங்கள் உள்ளன. இன்றைய நவீன காலங்களில் கணிப்பொறியின் உதவியுடன் இவ்வகையான இயங்குபடங்களை உருவாக்கலாம். ஆனால் பாரம்பரிய இயங்குபடங்களும் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. கணிப்பொறியுடன் ஒப்பிடுகையில் பாரம்பரிய நிறுத்தும் இயங்குபடங்கள் செலவு குறைவானதும், நேரங்களை மிச்சப்படுத்தவும் செய்கின்றன. கைப்பாவை இயங்குபடம் கைப்பாவை இயங்குபடம் தான் நிறுத்தும் இயங்குபடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வைகையான இயங்குபடங்களில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அதனுடைய மூட்டுகளில் கட்டுப்படுத்தும் வகையிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக தி டேல் ஆஃப் த ஃபாக்ஸ் (பிரான்ஸ், 1937), த நைட்மேர் பிஃபோர் கிறிஸ்துமஸ் (யு.எஸ்., 1993), கார்பஸ் ப்ரைட் (யு.எஸ்., 2005), கோரலின் (யு.எஸ்., 2009).களிமண் இயங்குபடம் களிமண் கொண்டு நிறுத்தும் இயங்குபடங்கள் உருவாக்கப்படுகின்றன. பொம்மை இயங்குபடத்தைப் போன்றே இதற்குள்ளும் மூட்டில் வயரினால் இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தி கும்பி ஷோஸ் (யு.எஸ்.1957-1967), மோர்ப் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து 1977-2000), வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ் (இங்கிலாந்து, 1989) வாலஸ் அண்ட் க்ரோமிட் ஷார்ட்ஸ், தெ ட்ராப் டோர் (இங்கிலாந்து, 1984) சிக்கன் ரன், தி அட்வென்சர்ஸ் ஆஃப் மார்க் ட்வைன். வால்ட் டிஸ்னி நிறுவனம் இயங்குபடத்திற்கான கொள்கைகளை அதன் இயங்குபட உருவாக்குநர்களான ஆல்லி ஜான்சன், ஃப்ரான்க் தாமஸ் ஆகியோர் 1981 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் மாயத்தோற்றம் ( தி இல்லுயூசன் ஆஃப் லைஃப்) என்ற நூலில் வரையறை செய்தனர். நசுக்குதல் மற்றும் நீட்டுதல் என்ற கொள்கை மிக முக்கியமானதாக உள்ளது. ஒரு வரையப்பட்ட பொருளின்எடை மற்றும் நெகிழ்வுத்தன்மைகளுக்கு உணர்ச்சிகளைக் கொடுப்பதில் இதன் பங்கு முக்கியமானது ஆகும். மேலும் பௌன்சிங் பால் (bouncing ball) போன்ற சிறிய பொருள்களை விளக்குவதற்கும், அல்லது முகத்தின் தசைகள் போன்ற சிக்கலானவற்றிற்கும் இந்த வகையான கொள்கைகள் பயன்படுகின்றன. பார்வையாளார்களின் எண்ணத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உண்மையான உனர்வுகளை கொடுக்க இந்த கொள்கைகள் உதவுகிறது.நடனக் கலைஞர்கள் முதலில் முழங்காலகளை மடக்க வேண்டும். சிறிய செயல்களை செய்வதற்கு இவைகள் பயன்படுகின்றன. உதாரணமாக யாரோ ஒருவரின் வருகையை எதிர்பார்ப்பது, அல்லது ஏதேனும் ஒரு பொருளை உற்று நோக்க்குவது போன்றவை ஆகும். நாடக அரங்கேற்றம் என்பது மேடைகளில் அரங்கேற்றப்படும் நாடகங்களைப் போன்றது ஆகும். இதனை திரையரங்கு மற்றும் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் பார்வையாளர்களை ஒரு காட்சியில் அவர்களின் முழுக் கவனத்தையும் வைத்திருப்பது ஆகும். ஜான்ஸ்டன் என்பவர் அரங்கேற்றம் என்பதனை நடிகர்கள் தாங்கள் கூற வந்த கருத்தினை எந்த விதமான பிழைகளுமின்றி தெளிவாக கூற விளைவது ஆகும் என்று வரையறை செய்துள்ளார். இருபரிமாணங்கள்(x,y) கொண்டது.இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக பிளாஷ் (flash), டுன் பூம் (toonboom) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. முப்பரிமாணங்கள் (x,y,z) கொண்டது. முப்பரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக மாயா maya) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றை குகைகளிலும், பழங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும். இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது. இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்றமே காரணம். திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி (Projector), அச்சுப்பொறி (Printer), புகைப்படக்கருவி (Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும். இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதரர்கள் ஆவர். உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும். ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832), ஜோட்ரோப்(1834), பிராக்ஸினோ ஸ்கோப் (1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார். இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்படச் சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார். 1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும். தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர். ஊடகவியல் துறையில் உள்ள மற்ற பிரிவிகளுக்கு வழங்கப்படுவதைப் போல இந்தத் துறைக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இயங்குபடத்திற்கான விருதுகளை கலை மற்றும் இயங்குபட நிறுவனமானது 1932 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இதன் முதல் விருது சிறிய பூக்கள் மற்றும் மரங்கள்(short "Flowers and Trees)" என்பதனை தயாரித்ததற்காக வால்ட் டிஸ்னிக்கு வழங்கப்பட்டது. இதே போன்றே மற்ற நாடுகளிலும் சிறந்த இயங்குபடத்திற்கான விருதினை வழங்கி வருகிறது. அன்னீ விருதானது இயங்குபட துறையில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக்கூடிய ஒரு விருது ஆகும். 1990 களில் இந்த விருதினை பெரும்பாலும் வால்ட் டிஸ்னி, ட்ரீம் ஒர்க்ஸ், நியூயர் ஸ்டுடியோஸ் ஆகியவை தான் வென்றன. சும்மாடு தலையில் சுமை தூக்கும் போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது "சுமடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று வழங்குகிறது. முக்காடு முக்காடு, தலை மற்றும் முகத்தின் சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது. சமயத் தொடர்புள்ள ஒன்றாக, இது ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ மதிப்புக் கொடுப்பதற்காக அணியப்படுவதாகக் கருதப்படுகிறது. முக்காட்டின் உண்மையான சமூக பண்பாட்டு, உளவியல், மற்றும் சமூக பால்சார் செயற்பாடுகள் குறித்து பரந்த அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆனாலும், சமூகத் தொலைவைப் பேணுதல், சமூகத் தகுதியைக் காட்டுதல், பண்பாட்டு அடையாளம் என்பன முக்காட்டில் செயற்பாடுகளுக்குள் அடங்கும் எனலாம். அறியப்பட்ட வரலாற்றின்படி கி.மு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசிரியச் சட்டத்தில் முக்காடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் பண்பாட்டுத் தாக்கத்தால், வட இந்தியாவில் பெண்கள் முக்காடு இடும் வழக்கம் கிபி 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் பரவலாயிற்று. ஆனால் சீக்கியப் பெண்கள் முக்காடு அணியும் வழக்கத்தை, சீக்கிய சமய குரு அமர் தாஸ் கடுமையாக எதிர்த்தார். வரப்பு விளை நிலங்களுக்கு இடையே உள்ள மண் தடுப்புகள் வரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஓர் ஆள் நடந்து செல்லத்தக்க அகலத்தில் அமைந்திருக்கும். பயிர் சாகுபடிக்கு முன் வரப்பு வெட்டித் திருத்துவது முக்கியப் பணியாகும். அதுமட்டுமல்லாமல் நீர் நிலைகளில் நீரைத் தேக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சரிவுப்பகுதிகளில் வி வடிவ வரப்புகள் 5 மீ - 5 என்றஅளவில் அமைத்து மரங்கள் அதன் நடுவில் நடப்படுகிறது. வரப்புகளின் உயரம் மழை அளவு, சரிவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மேலும் சரிவுக்கு குறுக்கே அரை வட்ட வடிவ வரப்புகள் 2 மீ விட்டத்தில் 15.20 செ.மீ உயரத்தில் அமைக்கப்படுகிறது. இவை மழைக்கலங்களில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வரப்புகளை உட்புறமாக அதிகமாக வெட்டுவதன் மூலம் வரப்பை நகர்த்தி அண்டை நிலத்தை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் வரப்புகள் நில உரிமை தகராறுகளுக்கு காரணமாய் அமைவதும் உண்டு. வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியுள்ளார் சித்தூர் "மாவட்டம் தொடர்பான தகவலுக்கு சித்தூர் மாவட்டம் பக்கத்திற்கு செல்லவும்." சித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இவ்வூரிலுள்ள திருப்பதி மற்றும் காளஹஸ்தி போன்றவை மிகப் புகழ் பெற்றவை. இந் நகரின் மக்கள்தொகை 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 133,462 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன. சித்தூர் பற்றிய வலைத்தளம் கடப்பா ஒய். எஸ். ஆர். கடப்பா மாவட்டம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகவும் விளங்குகிறது. இது ஆந்திராவின் இராயலசீமை பகுதியில் உள்ள இது ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெண்ணாறு ஆற்றின் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடப்பா மாவட்டத்தின் பெயரை, ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஓய். எஸ். இராஜசேகர ரெட்டியின் நினைவைப் போற்றும் விதமாக, கடப்பா மாவட்டத்தின் பெயரை, ஒய். எஸ். ஆர். கடப்பா மாவட்டம் என பெயரிடப்பட்டது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 325,725. பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1565-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். 1800 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. புஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும். அனந்தபூர் அனந்தபூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தின் தலைநகராகும். நெல்லூர் நெல்லூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மாநகராட்சியாகும். இது சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டத்தின் தலைநகராகும். மக்கள்தொகை அடிப்படையில் இது ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும். பெண்ணாற்றின் (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி. நெல்லூர் ஐதராபாத்திலிருந்து தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாக செல்லுகிறது. மைக்கா உற்பத்தி, எழுமிச்சை, வேளாண் பொருட்களான அரிசி போன்றவற்றிற்கு நெல்லூர் புகழ் பெற்றது. .. 2011ம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்நகரின் மக்கள்தொகை 505,258 ஆகும். நகரை ஒட்டிய பகுதிகளையும் சேர்த்தால் இதன் மக்கள் தொகை 564,168 ஆகும். வெள்ளொளிர்வு விளக்கு நுண்ணிழை ஒன்றினூடு மின்சாரத்தைச் செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மின் விளக்கு, வெள்ளொளிர்வு விளக்கு (Incandescent Lamp) எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது சடத்துவ வாயுக்களால் (Inert Gas) நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் பொருத்தப்பட்ட நுண்ணிழை ஒன்றைக் கொண்டது. இந்த நுண்ணிழையினூடாக வெளியிலிருந்து மின்சாரம் பாய்ச்சுவதற்கு ஏதுவாக இழையின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்ட மின் கடத்திகள் குமிழுக்கு வெளியே முடிவடைகின்றன. ஆரம்ப காலங்களில், 1879 தொடக்கம் 1905 வரை இந்த நுண்ணிழைகள் பெரும்பாலும் காபனினாலேயே செய்யப்பட்டன. பின்னர் இது உலோகத்தினால் செய்யப்பட்டது. இக்காலத்தில் தங்ஸ்தன் உலோகமே இதற்குப் பயன்படுகின்றது. நுண்ணிழையூடு மின்சாரம் பாயும்போது அது சூடாகி ஒளிர்கின்றது. இதன் மூலம் அது வெப்பத்தையும் ஒளியையும் வெளிவிடுகின்றது. ஆரம்ப கால விளக்குகளைவிட இக்காலத் தங்ஸ்தன் இழை விளக்குகள் முன்னேற்றமானவையாக இருந்தும், இவற்றால் வெளியிடப்படும் சக்தியில் 5% மட்டுமே ஒளிச் சக்தியாகும். இதனால் செலுத்தப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்பமாக வீணாகி விடுகின்றது. இதனால் வெள்ளொளிர்வு விளக்கு செயல்திறன் மிகவும் குறைந்த ஒரு விளக்காகும். நுண்ணிழையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது கூடிய ஒளி வெளிவிடப்படுமாயினும், தங்ஸ்தன் ஆவியாகி நுண்ணிழை மேலும் மெல்லியதாகி விரைவிலேயே அறுந்து விடுகிறது. இதனால் மின் விளக்கின் ஆயுட் காலமும் குறைவதற்கு ஏதுவாகின்றது. இன்று பல புதிய வகை விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பல கூடிய செயல்திறனும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை. எனினும், வெள்ளொளிர்வு விளக்குகள் இன்னும் பிரபலமாகவே உள்ளன. இவற்றுக்கான ஆரம்பச் செலவுகள் குறைவாக இருப்பதும், வேறு சில ஒளியியல் இயல்புகளும் இதற்குக் கரணங்களாகும். இன்றும் உலகில் மிக அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள மின் விளக்குகள் வெள்ளொளிர் விளக்குகளே. வெப்பவெளியீட்டு விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது யார் என்ற கேள்வி முகவரி உள்ள, வரலாற்று ராபர்ட் ஃப்ரெய்டெல் மற்றும் பால் இஸ்ரேல் [3] பட்டியலில் முன் ஒளிர்வு விளக்குகள் 22 கண்டுபிடிப்பாளர்கள் ஜோசப் ஸ்வான் மற்றும் தாமஸ் எடிசன் . ஒரு பயனுள்ள: அவர்கள் எடிசன் பதிப்பு ஏனெனில் மூன்று காரணிகள் கலவையை மற்றவர்கள் விஞ்ச முடிந்தது என்ற முடிவிற்கு வெப்பவெளியீட்டு பொருள், அதிக வெற்றிடம் மற்றவர்கள் அடைய முடிந்தது விட (பயன்படுத்தி Sprengel பம்ப் ) மற்றும் ஒரு உயர் எதிர்ப்பு சக்தியை விநியோகம் செய்த சிக்கனமாய் நிலைத்திருக்கத்தக்கதாகவும் ஒரு மையப்படுத்தப்பட்ட மூல. மற்றொரு வரலாற்று, தாமஸ் ஹக்ஸ், வளர்ச்சி அவரது பாணியில் எடிசன் வெற்றி காரணம். எடிசன் முதல் வெற்றிகரமான விளக்கை மின்சார விளக்குகள் ஒரு அமைப்பு இணைந்து ஒரு துணை அமைப்பு இருந்தது. 1802 இல், ஹம்ப்ரி டேவி பின்னர் மிக சக்திவாய்ந்த என்ன இருந்தது மின்சார பேட்டரி உலகில் ராயல் நிறுவனம் கிரேட் பிரிட்டன். அந்த ஆண்டில், அவர் ஒரு மெல்லிய ஆடை அவிழ்ப்பு மூலம் தற்போதைய தேர்ச்சி முதல் வெப்பவெளியீட்டு ஒளி உருவாக்கப்பட்ட பிளாட்டினம் உலோக ஒரு மிக உயர்ந்த ஏனெனில் தேர்வு, உருகுநிலை . இது போதுமான பிரகாசமான இல்லை அல்லது அது நீண்ட போதும் நடைமுறையில் நீடிக்கும், ஆனால் அடுத்த 75 ஆண்டுகளில் பரிசோதனைகளுக்கு மதிப்பெண்களை முயற்சிகளை பின்னால் முன்னோடி இருந்தது. [7] 1809 இல், டேவி முதல் உருவாக்கப்பட்ட வில் விளக்கு இரண்டு கார்பன் கரி தண்டுகள் ஒரு 2000-செல் பேட்டரி இணைக்கப்படும்; அது 1810 ல் ராயல் நிறுவனம் நிரூபிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பல பரிசோதனைகளுக்கு பிளாட்டினம் அல்லது உறுதியம் கம்பிகள், கார்பன் தண்டுகள், மற்றும் காலி அல்லது அரை காலி இணைப்புகள் பல்வேறு சேர்க்கைகளை பணியாற்றினார். இந்த சாதனங்கள் பல ஆர்ப்பாட்டம் மற்றும் சில காப்புரிமை இருந்தன. [8] 1835 இல், ஜேம்ஸ் போமேன் லிண்ட்சே டண்டீ, ஸ்காட்லாந்து ஒரு பொது கூட்டத்தில் ஒரு நிலையான மின் ஒளி நிரூபித்துள்ளது. அவர் "ஒரு தூரத்தில் ஒரு புத்தகம் மற்றும் ஒரு அரை அடி வாசிக்க" என்று கூறினார். எனினும், அவரது சொந்த திருப்தி சாதனத்தை perfected நிலையில், அவர் பிரச்சினையை திரும்பி கம்பியில்லா தந்தி மற்றும் எந்த மேலும் மின்சார ஒளி உருவாக்க வில்லை. அவர் Challoner பலர் உள்ள வரவு என்றாலும் அவரது கூற்றுக்கள் நன்றாக, ஆவணங்கள் இல்லை. [9] "ஒளிரும் லைட் பல்பு" கண்டுபிடிப்பாளர் உடன். 1840 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விஞ்ஞானி வாரன் டி லா Rue ஒரு இணைக்கப்பட்டுள்ளது சுருண்ட ஒரு பிளாட்டினம் இழை வெற்றிட குழாய் மற்றும் அது மூலம் மின்சார நிறைவேற்றியது. வடிவமைப்பு உயர் கருத்தை அடிப்படையாக கொண்டது உருகுநிலை பிளாட்டினம் இது உயர் வெப்பநிலையில் இயங்க மற்றும் காலி அறை அதன் ஆயுளை மேம்படுத்துவது, பிளாட்டினம் செயல் படும் குறைவான வாயு மூலக்கூறுகள் உள்ளன என்று அனுமதிக்கும். ஒரு திறமையான வடிவமைப்பு என்றாலும், பிளாட்டினம் செலவு வணிக பயன்பாட்டிற்கு இது சாத்தியமற்றதாக இருந்தது. 1841 ஆம் ஆண்டில், இங்கிலாந்து ஃபிரடெரிக் டி Moleyns ஒரு வெற்றிடம் விளக்கை அடங்கியுள்ள பிளாட்டினம் கம்பிகளை பயன்படுத்தி ஒரு வடிவமைப்பு, ஒரு வெப்பவெளியீட்டு விளக்கு முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. [10] 1845 இல், அமெரிக்க ஜான் டபிள்யூ ஸ்டார் [11] கார்பன் இழைகளை பயன்பாடு தொடர்புடைய அவரது ஒளிரும் லைட் பல்பு ஒரு காப்புரிமை வாங்கியது. [12] அவர் விரைவில் காப்புரிமை பெறுவதற்கான இறந்தார், அவரது கண்டுபிடிப்பு வர்த்தக ரீதியாக உற்பத்தி இல்லை. வேறு லிட்டில் அவரை பற்றி அழைக்கப்படுகிறது. [13] 1851 இல், ஜீன் யூஜின் ராபர்ட்-Houdin பகிரங்கமாக Blois, பிரான்ஸ் தனது எஸ்டேட் அன்று வெப்பவெளியீட்டு லைட் பல்புகள் நிரூபித்துள்ளது. அவரது ஒளி விளக்குகளின் அருங்காட்சியகத்தில் நிரந்தர காட்சி இருக்கும் நாட்டுப்புற வீடு டி Blois . [14] 1872 ஆம் ஆண்டில், ரஷியன் அலெக்சாண்டர் Lodygin ஒரு ஒளிரும் லைட் பல்பு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1874 இல் ஒரு ரஷியன் காப்புரிமையை பெற்றார். அவர் ஒரு கண்ணாடி பெறுபவரின் குறைக்கப்பட்ட பிரிவின் ஒரு பர்னர் இரண்டு கார்பன் கம்பிகள் பயன்படுத்தப்பட்டது, காற்றுப்புகா முத்திரையிடப்பட்ட, மற்றும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட, மின்சார தற்போதைய முதல் நுகரப்படும் இருந்த போது இரண்டாவது கார்பன் அனுப்ப வேண்டும் என்று ஏற்பாடு. [15] பின்னர் அவர் வாழ்ந்தார் ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அலெக்சாண்டர் டி Lodyguine மற்றும் கொண்ட ஒளிர்வு விளக்குகள் விண்ணப்பித்திருந்தார் பெறப்பட்ட காப்புரிமை தனது பெயரை மாற்றினார் குரோமியம் , இரிடியம் , ரோடியம் , ருத்தேனியம் , கருநீலீயம் , மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் நாரிழைகளின், [16] மற்றும் ஒரு மாலிப்டினம் இழை பயன்படுத்தி ஒரு குமிழி உள்ள நிரூபிக்கப்பட்டது உலகம் நியாயமான பாரிசில் 1900 இன். [17] ஹென்ரிச் Göbel 1893 இல் அவர் ஒரு மெல்லிய காபனாக்கிய கொண்டு, 1854 முதல் ஒளிரும் லைட் பல்பு வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிவித்தார் மூங்கில் உயர் எதிர்ப்பு இழை, பிளாட்டினம் முன்னணி-ல் அனைத்து கண்ணாடி உறையின், மற்றும் ஒரு உயர் வெற்றிடத்தில் கம்பிகள். நான்கு நீதிமன்றங்களின் நீதிபதிகள் கூறப்படும் கோபெல் எதிர்பார்ப்பு பற்றி சந்தேகம் எழுப்பி, ஆனால், எடிசன் காப்புரிமை காலாவதியாகும் தேதி காரணமாக ஒரு இறுதி விசாரணைக்கு ஒரு முடிவை அங்கு இல்லை. 2007 வெளியான ஒரு ஆய்வு பணி 1850 ல் கோபெல் விளக்குகள் கதை ஒரு புராணக்கதை என்று முடித்தார். [18] ஜூலை 1874 24, ஒரு கனடிய காப்புரிமை தாக்கல் ஹென்றி உட்வர்ட் மற்றும் மேத்யூ எவன்ஸ் ஒரு நைட்ரஜன்-நிரப்பப்பட்ட கண்ணாடி உருளையில் ஏற்றப்பட்ட கார்பன் கம்பிகள் கொண்ட ஒரு விளக்கு வேண்டும். அவர்கள் விளக்கு வர்த்தகத்திற்குள் தோல்வியடைந்தது இருந்தனர், அவர்களின் காப்புரிமை (உரிமைகளை விற்பனை ஐக்கிய அமெரிக்க காப்புரிமை 0,181,613 1879 ல் தாமஸ் எடிசன் வேண்டும்). உடனொளிர்வு விளக்கு மின்சாரத்தின் மூலம் அருட்டப்படுகின்ற பாதரச அயன்கள் புற ஊதாக்கதிர்களை வெளிவிடுகின்றன. இக் கதிர்கள் பொஸ்பர் போன்ற உடனொளிர் பூச்சுக்களில் படும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளியாக மாற்றப்படுகின்றது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடனொளிர்வு விளக்கு ("fluorescent lamp") வகையாகும். ஆரம்பகால இவ்வகை விளக்குகள், ஆர்கன், அல்லது நியான் வாயுவுடன் பாதரச ஆவி நிரப்பப்பட்ட நீண்ட குழாய் அமைப்புக் கொண்டவை. இதனாலேயே இவ் விளக்குகள் பொதுவாக "குழாய் விளக்குகள்" (Tube Lights) எனப்படுகின்றன. இக் குழாய்களின் உட் பகுதியில் பொஸ்பர் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது குழாயின் முழு நீளத்திலிருந்தும் ஒளி வெளிவிடப்படுகின்றது. உடனொளிர்வு விளக்குகள் கூடிய செயல் திறன் கொண்டவை. வெள்ளொளிர்வு விளக்குகளுடன் ஒப்பிடும்போது, சம அளவு மின்சாரத்தைப் பயன்படுத்திப் பல மடங்கு ஒளிச் சக்தியை இவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். சீம்பால் கடும்புப்பால் என்றும் அழைக்கப்படும் சீம்பால் (colostrum) என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் பொதுவாக மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீம்பால் மனிதர்களிலும், மாடுகளிலும் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் கன்றுகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் செரிமான முறைமை வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு வயிற்றுப்போக்கு ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட இரத்த சிவப்பணுக்களை உடைப்பதால் உருவாகும்) "பைலிருபின்" போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும், இதிலுள்ள நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் கன்றின் தொண்டை, நுரையீரல் மற்றும் குடல்களைப் பாதுகாக்கின்றன. சில நன்மை பயக்கும் கோலுரு நுண்ணுயிர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இதன் நோய் எதிர்ப்புப் பண்பின் காரணமாக, பசுவின் சீம்பாலை சமைத்து உட்கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் ஏலக்காய், கருப்பட்டி அல்லது வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்வதும், இட்லி செய்வதுபோல ஆவியில் வேகவைத்து உட்கொள்வதும் பொதுவானது. அலசன் விளக்கு அலசன் விளக்கு ("Halogen lamp") அல்லது தங்குதன்-அலசன் விளக்கு (" tungsten halogen lamp") என்பது அடிப்படையில் வெள்ளொளிர் விளக்குப் போன்றதே. எனினும் இவ்வகை விளக்கின் குமிழினுள் நிரப்பபடும் வாயுக்களுடன் அலசன்களும் உள்ளன. தங்ஸ்தன் நுண்ணிழையாலான வெள்ளொளிர் விளக்குகளில், இழை சூடாகி ஒளிரும்போது தங்ஸ்தன் ஆவியாகி குமிழின் உட் பகுதியில் படிகின்றது. இது குமிழை மங்கச் செய்வதுடன், விளக்கிலிருந்து கிடைக்கும் ஒளியின் அளவும் குறைகின்றது. அத்துடன் இழையும் மெல்லியதாகி விரைவில் அறுந்து விடுகிறது. தங்ஸ்தன் - அலசன் விளக்கு இதற்கு ஒரு தீர்வாக அமைகின்றது. இங்கே வெப்பத்தினால் இழையிலுள்ள தங்ஸ்தன் ஆவியாகும் போது குமிழினுள் உள்ள அலசன்கள் அதனுடன் தாக்கமுறுவதனால் அது குமிழ்ச் சுவரில் படிவது தடுக்கப்படுகின்றது. இதனால் விளக்கின் வாழ்க்கைக் காலம் முழுதும் அதிலிருந்து ஏறத்தாள ஒரேயளவு ஒளியே கிடைக்கிறது. இது மட்டுமன்றி தங்ஸ்தனும், அலசனும் சேர்ந்து உருவாகும் சேர்வைகளின் (Compounds) மூலக்கூறுகள் (Molecules) சூடாக இருக்கும் நுண்ணிழைக்கு அருகில் செல்லும்போது மீண்டும் பிரிவடைந்து, தங்ஸ்தன் உலோகம் நுண்ணிழையில் மீண்டும் படிகின்றது. இதன் காரணமாக ஆவியாதல் மூலம் தங்ஸ்தன் இழை மெலிந்து அறுந்து போவதற்குக் கூடிய காலம் எடுக்கும். எனவே விளக்கின் ஆயுட் காலமும் அதிகரிக்கின்றது. இவ்விளக்கின் ஒளியில் நிறங்கள் கூடிய ஒளிர்வு (vibrant) பெறுவதுடன், மேற்பரப்புகள் ஒருவித மினுங்கல் தன்மையுடனும் தோற்றமளிக்கின்றன. சாதாரண வெள்ளொளிர்வு விளக்குடன் ஒப்பிடும்போது தங்ஸ்தன் - அலசன் விளக்குகள் கூடிய ஒளிதருகின்றன. ஒப்பீட்டளவில் குறைந்த வாட்டளவு (Wattage) கொண்ட விளக்குகளிலிருந்து கூடிய ஒளிப் பாயத்தைப் (Luminous Flux) பெறமுடிகின்றது. ஒளிப் பாயம் ஒளிப்பாயம் அல்லது தன்னொளிர்வு (luminescence) என்பது ஒரு ஒளிமூலத்தினால் வெளிவிடப்பட்டுக் கண்களால் பார்க்கப்படுகின்ற ஒளிச் சக்தியின் அளவைக் குறிக்கும். இன்னொரு வகையில் இதனைப் பார்வைத் தாக்கத்தின் அடிப்படையில் அளவீடு செய்யப்படும், ஒளிமூலமொன்றால் வெளியேற்றப்படுகின்ற, ஒளிச்சக்தியின் அளவு என்று கூறலாம். இதன் அலகு " லுமென் " ஆகும். ஒரு பொருள் வெப்பத்தினாலல்லாத ஒளி உமிழும் தன்மையைத் தன்னொளிர்வு எனலாம். எனவே, இதனை குளிர் நிலை கதிர்வீச்சென்றும் கூறலாம். வேதிவினைகள், மின்னாற்றல், அணுவக அசைவுகள் அல்லது படிகத்தின் மீதான அழுத்தங்கள் ஆகியவற்றால் தன்னொளிர்வு ஏற்படுகிறது. இதனால், வெப்பத்தினால் ஒளி உமிழும் வெள்ளொளிர்வு (incandescence) நிகழ்விலிருந்து ஒளிப்பாயம் வேறுபடுகிறது. முதலில் கதிரியக்கம், கதிரியக்கத் தன்னொளிர்வாகக் கருதப்பட்டதென்றாலும், மின்காந்தக் கதிர்வீச்சைத் தவிர மற்ற நிகழ்வுகளும் கதிரியக்கத்தில் நடைபெறுவதால், தற்பொழுது கதிரியக்கம் தன்னொளிர்விலிருந்து வேறாகப் பிரித்தறியப்படுகிறது. தன்னொளிர்வு என்னும் சொல் செருமானிய இயற்பியலாளரான எயிலார்ட் வீடெமான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது, . மின்னூல் மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும். மின்னூலானது பொதுவாக பதிப்பாளர்களால், மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. இவை வெற்று உரை வடிவமாகவோ, நூல் சம்பந்தப்பட்ட சிறப்பு தகவல்களை தம்மகத்தே கொண்டவையாகவோ இருக்கும். மின்னூல் சமுதாயமானது ஏகப்பட்ட மின்னூல் வடிவத் தெரிவுகளை கொண்டிருக்கிறது. எந்தவடிவம் சிறந்தது, வடிவங்களிலுள்ள குறைபாடுகள் எவை, நிறைகள் எவை என்பதுபற்றியெல்லாம் ஏகப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளது. எவ்வாறாயினும், கடைக்கோடிப்பயனாளரைப் பொறுத்தவரையில் புத்தகத்தை படிக்கவேண்டும் என்பதே முதன்மையான தேவையாகும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு மின்னூல் வடிவங்களும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கின்றன. பிம்ப (பட) கோப்புத்தொடர்கள் மூலம் மின்னூல் ஒன்று உருவாக்கப்படலாம். எத்தகைய பிம்பக்கோப்பு வடிவமும் இதற்கென பயன்படுத்தப்படலாம். இவ்வாறாக உருவாக்கப்படும் மின்னூல்கள் ஏனைய வடிவங்களை விட அதிக மின்கனத்தை கொண்டிருக்கும். அத்தோடு பயனர் அதன் உரைப்பகுதியினை தெரிவுசெய்ய, நகலெடுத்து வேறிடத்தில் உரையாக பயன்படுத்த முடியாது. உரத்துப்படிக்கும் செயலிகள் இதனை படிக்க முடியாது. இத்தகைய மின்னூல் வடிவங்கள் சித்திரக் கதை நூல்களுக்கே மிக பொருத்தமானதாகும். இது, நிறம், தடிப்பு, எழுத்துரு போன்ற உரை வடிவமைப்பு தகவல்களை தன்னகத்தே கொண்ட கோப்பமைப்பாகும். இது பொதுவில் HTML என அழைக்கப்படுகிறது. உரையின் செழிய வடிவமைப்புக்கள், பிம்பங்கள் , தொடுப்புக்கள் போன்ற பல தகவல்களை இவ்வடிவத்தில் உள்ளடக்கலாம். இவ்வடிவமைப்பிலுள்ள மின்னூல் ஒன்றினை படிக்க சாதாரண வலை உலாவி ஒன்றே போதுமானது. சிறப்பான செயலிகள் எதுவும் தேவைப்படாது. காகம் (பேரினம்) காகம் அல்லது காக்கை (உயிரியல் வகைப்பாடு: "Corvus ") என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமான இது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இலத்தீன் மொழியில் 'கார்வுச்' என்ற சொல்லுக்கு 'பெரிய உடலமைப்பு கொண்டவை' என்று பொருள். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. சிறிய புறா அளவிலிருந்து பெரிய 'ஜாக்டா' எனப்படும் இனம் வரை இவற்றில் அடங்கும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது. இவற்றை மிக இலகுவாகப் பயிற்றுவிக்க முடியும். காகங்களைப் பழக்கி இலகுவாகச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றைச் செல்லப்பறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும். காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன.. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும். உலகெங்கும் உள்ள மக்களின் பண்பாட்டில் காகத்திற்கு ஓர் இடமுண்டு. காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவர் என்பது தமிழர் நம்பிக்கை ஆகும். மேலும் ஒற்றுமைக்கும் பகிர்ந்து உண்ணலுக்கும் காக்கை எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பூர்வகுடிமக்களின் கருத்துப்படி காக்கைகள் கலாச்சாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதப்படுகிறது. காகங்களைப் பற்றி எழுதப்பட்ட 'கில்காமேஷ்' என்ற நூல் உலகின் பழைமையான இலக்கியங்களில் ஒன்றாகக் கருந்தப்படுகிறது. இந்நூல் மெசபடோமிய நாகரிகத்தைப் பற்றிக் கூறும் ஐந்து கவிதைகள் கொண்ட இதிகாசம் ஆகும். திபெத்திய கலாச்சாரத்தில் 'தருமபாலா' பூமியில் எடுத்துள்ல அவதாரங்களில் ஒன்றாகக் காகம் கருதப்படுகிறது. ஐரிஷ் புராணங்களின்படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகிறது. பழம்பெரும் இந்து மத வேத தத்துவ நூலாகக் கருதப்படும் 'யோகவசிஷ்டா' வில் மிக வயதான ஞானி ஒருவர் காகவடிவில் குறிப்பிடப்படுகிறார். இந்துமத நம்பிக்கையின் படி காகங்கள் மூதாதையரின் வடிவமாகக் கருதப்படுகிறது. அதனால் சிறப்பு நாள்களில் அமாவாசை, திதி, தீபாவளி போன்ற நாள்களில் முதலில் காக்கைக்கு உணவு படைக்கப்படுகிறது. பல வீடுகளில் காகத்திற்கு படைப்பது ஓர் அன்றாட நிகழ்வாகவும் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆறிவியல் ஆய்வாளரான கரோலஸ் லின்னேயஸ் எழுதிய 'இயற்கை முறை எனும் நூலில் காகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். The name is derived from the Latin "corvus" meaning "raven". காக்கைகள் எந்தப் பருவ நிலை உள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை. தென் அமெரிக்கா மற்றும் பெருங்கடல்களுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காக்கைகள் காணப்படுகின்றன. மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் காகங்கள் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாகக் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண்காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதில் பருவத்தை அடைந்து விடுகின்றன. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இதுவரை உலகில் அதிக வருடம் உயிர்வாழ்ந்த காகமாகக் கருதப்படுவது அமெரிக்காவின் காடுகளில் வாழ்ந்த காகம் ஆகும். அது 30 வருடம் வரை வாழ்ந்துள்ளது. காகங்கள் சேர்ந்திருக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்தின் அலகு, உடல் போன்ற பகுதிகளில் உள்ள கடினமான ஓடு உடைய பேன்களைச் சுத்தம் செய்யும். இச்செயல் ஆண் காகங்களுக்கும், பெண் காகங்களுக்கும் இடையேயான ஒரு ஈர்ப்பு நிகழ்வாகும். அண்மையில் காகங்களைக் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் அவை முக வடிவமைப்பைக் கொண்டு ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காணக்கூடிய திறன் படைத்தவை என்பதை மெய்ப்பிக்கின்றன. மேலும் கிளிகளைப் போல காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை என்று சொல்லப்படுகின்றன. இவ்வாறு பேசுவதற்குப் பழக்கப்பட்ட காகங்கள் கிழக்கு ஆசியாவில் நல்வாய்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து 1500 கி. மீ தொலைவில் மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூகலிடோனியா என்ற தீவில் வாழ்கின்ற காகங்கள் தன் அலகையும் பிற உடல் உறுப்புகளையும் பயன்படுத்தி தன் இரையை மிகத் திறமையாகப் பெறுகின்றன. கடினத்தன்மையுள்ள பற்களை இலையைக் கத்தரிப்பதற்கும் இரையைக் குத்திக் கிழிப்பதற்கும் பயன்படுத்துகிறது. Another skill involves dropping tough nuts into a trafficked street and waiting for a car to crush them open. மேலும் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்துவில் உள்ள ஒரு வகைக் காக்கை நச்சுத்தன்மையுள்ள தேரைகளைப் பிடித்து அவற்றின் தொண்டையைக் கிழித்து அதன் நஞ்சை நீக்கிவிட்டு மற்ற பகுதிகளை உணவாக உட்கொள்கின்றன. காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு போன்றவற்றையும் உண்ணும். வயல்களில் உள்ள பூசிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்த உடல்களையும் தின்னும். அறிஞர்களின் கருத்துப்படி பறவைகளில் அதிக அறிவு த்திறன் பெற்ற பறவை காகம் ஆகும். இவற்றின் அறிவுத்திறனுக்குக் காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நிடோபோடாலியம் ஆகும். ஜாக்டா எனப்படும் அமெரிக்க மற்றும் கன்டாவில் காணப்படும் காக்கை இனம், சிம்பன்சி மற்றும் மனிதனின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நியோகார்டெக்ஸ்' பகுதிக்குக் கிட்டத்தட்ட சமமானதாகவும் சிம்பன்சிகளில் உள்ள நியோகார்டெக்ஸ்' பகுதியை விட பெரிய அளவிலும் நிடோபோடாலியத்தைப் பெற்றிருப்பதே ஆகும். நிடோபோடாலியம் என்பது பறவைகளின் அறிவுத்திறனுக்குக் காரணமாக உள்ள மூளையின் செயல்பாட்டுப் பகுதியாகும். ஜொஷா கிளெயின் என்ற அறிவியல் அறிஞர் காகங்களை நாம் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் பழக்கப்படுத்தலாம் என ஆய்வு மேற்கொண்டார். அதில் காகங்களைத் தானியங்கி இயந்திரங்களின் துணைகொண்டு தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளைப் பொறுக்க வைக்கலாம் என்பதே அதுவாகும். இயந்திரத்தில் குப்பையைப் பொறுக்கிப் போட்டவுடன் அவைகளுக்கு விருப்பமான உணவு வகைகள் இயந்திரத்திலிருந்து வருமாறு செய்யலாம். அமெரிக்க மீன் மற்றும் வன உயிரினங்கள் சேவை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி “ஹவாயன் காகம்’(Hawaiian Crow) மரியனா காகம்’(Mariana Crow) ஆகிய இனங்கள் உலகில் அழிந்துவிட்ட உயிரினங்களின் வகைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஹவாய்த் தீவுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் கி.பி. 2002 வரை அங்கு காணப்பட்டன. ஆபத்தான நிலையில் உள்ளதாக அமெரிக்கக்காகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இந்த இனத்தில் 45 விழுக்காடு காகங்கள் 'வெடிசனல் வைரஸ் என்னும் ஒருவகை நுண்ணுயிர் நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டன. பனையோலை பனை மரத்தின் இலை பனையோலை (பனை + ஓலை) எனப்படும். பனையோலை விசிறி போன்ற வடிவத்தையுடையது. ஏறத்தாழ ஐந்து அடி விட்டம் கொண்டதாக இருக்கும். பனம் மட்டை அல்லது பனை மட்டை என்று அழைக்கப்படும் இதனுடைய காம்பு உறுதியானது, அரை வட்ட வடிவமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டது. அத்துடன் இதன் விளிம்புகளில் கருநிறமான, வாளின் பற்கள் போன்ற அமைப்பு உள்ளது இது "கருக்கு" எனப்படும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சோமசுந்தரப் புலவர் இந்தக் கருக்கை மன்னர்களின் வாளுக்கு ஒப்பிட்டு என்று இலக்கியச் சுவையுடன் பாடியுள்ளார். ஒவ்வொரு நிலையிலும் இவ்வோலைக்கு வெவ்வேறு பயன்கள் உள்ளன. குருத்தோலைகளை வெட்டிக் காய விட்டு அதனைப் பயன்படுத்திப் பல விதமான கைப்பணிப் பொருட்கள் செய்யப்படும். பச்சை ஓலைகள் மாடுகளுக்கு உணவாவதுடன், வேலியடைத்தல், கூரை வேய்தல், முறம் செய்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. மட்டைகளும், வேலியடைத்தல், குடிசைகள் அமைத்தல், பலவகை நார்களின் உற்பத்தி ஆகியவற்றில் உதவுகின்றன. காய்ந்து விழும் ஓலைகளும் பயிர்களுக்கு உரமாகின்றன. லினக்சு குனூ/லினக்ஸ் (GNU/Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும். இவ்வியக்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் குனூ/லினக்ஸ் என்பதேயாகும்.லினக்ஸ் பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் பறவைச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் மாக்கின்டோஷ், யுனிக்ஸ், சொலாரிஸ், பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. குனூ/லினக்ஸ் இயக்கத்தளம் கட்டற்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதன் மென்பொருட் பகுதிகள் யாவும் திறந்த ஆணைமூலமாக, பொதுமக்கள் உரிமத்தின்அடிப்படையில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் ஆணைமூலத்தினை அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாணை மூலத்தை கற்றுக்கொண்டு, அதனை மேம்படுத்துவதன் மூலம் இவ்வியக்குதளத்தின் பகுதிகளில் மாற்றங்களை மேம்பாடுகளை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மேற்கொள்ளலாம். இதனை எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி நகலெடுத்து பொதுமக்கள் உரிம அடிப்படையில் வழங்கலாம் (பகிர்ந்துகொள்ளலாம்) அல்லது பொதுமக்கள் உரிம ஒப்பந்தத்தின்படி பணத்துக்கு விற்கலாம். இவ்வியக்குதளதளம், லினக்ஸ் கரு, குனூ திட்ட மென்பொருட்கள், ஏனைய திறந்த ஆணைமூல மென்பொருட்கள் என்பவற்றின் தொகுப்பாகும். "தனிக் கட்டுரை: லினக்ஸ் வழங்கல்கள்" குனூ/லினக்ஸ் பற்றி முதன்முதல் அறிந்துகொள்பவர்களுக்கு பெரும் விளக்கப் போதாமையை கொடுக்கும் எண்ணக்கரு வழங்கல்கள் என்பதாகும்.. இவ்வியக்குதளம் பொதுவாக பயனர்மட்டத்தில் வழங்கல்களாகவே கொடுக்கப்படுகிறது. வழங்கல்களை பெற்று க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதே வசதியானதாகும். தேர்ந்த பயனர் ஒருவரே க்னூ/லினக்ஸ் இயக்குதளத்தை அடிப்டையிலிருந்து நிறுவிக்கொள்ள முடியும். யூனிக்ஸ் இயக்குதளம் கென் தாம்சன் , டென்னிஸ் ரிட்சி , டக்ளஸ் மேக்ள்ராய் மற்றும் ஜோ ஒச்சன்னா மூலம் அமெரிக்காவில் AT&T பெல் ஆய்வகத்தில் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.அது 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஆரம்பத்தில் முற்றிலும் சில்லு மொழியில் (அசெம்பிளி) எழுதப்பட்டது. பின்னர் , 1973 ஆம் ஆண்டு ஒரு முன்னோடியான அணுகுமுறையில் , யூனிக்ஸ் டென்னிஸ் ரிச்சி மூலம் சி நிரலாக்க மொழியில் மீண்டும் எழுதப்பட்டது. ஒரு உயர் மட்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு இயக்க அமைப்பு கிடைக்கும் பல்வேறு கணினி தளங்களில் எளிதாக பெயர்வுத்திறன் அனுமதித்தது.1984 இல் , AT&T பெல் லேப்ஸ் என்ற தாமாகவே விலகிய பின் இலவச உரிமம் தேவைப்படும் தனியுரிம மென்பொருளாக யூனிக்ஸின் விற்பனை தொடங்கியது. 1983 ல் ரிச்சர்ட் ஸ்டால்மேன் தொடங்கிய குனு திட்டம்,முற்றிலும் இலவசமான மென்பொருளாக " யுனிக்ஸ் இணக்கமான மென்பொருள் அமைப்பு " உருவாக்கும் நோக்கத்துடன் 1984 இல் தொடங்கியது. பின்னர்,1985 ஆம் ஆண்டு, ஸ்டால்மேன் இலவச மென்பொருள் அறக்கட்டளை தொடங்கி 1989 இல் பொது மக்கள் உரிம குனு-ஐ( குனு ஜிபிஎல் ) எழுதினார். 1990 ல் குனூ செயல் திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையை அண்மித்தது. ஓர் இயக்குதளத்துக்கு தேவையான செயலிகள், காம்பைலர்கள், உரைத்தொகுப்பிகள், யுனிக்சை ஒத்த ஆணைமுகப்பு (command shell) போன்றவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மிக அடிப்படை நிலையில் இருக்கும் கரு (கருனி) ( kernel) ஒன்றை உருவாக்கும் பணி மட்டுமே முற்றுப்பெறவில்லை. அப்போது GNU Hurd என்ற கரு (கருனி) வடிவமைக்கப்பட்ட வண்ணமிருந்தாலும், அது போதாததாகவே உணரப்பட்டது. இணைய பி.எஸ்.டி , ஓப்பன் பி.எஸ்.டி மற்றும் ஃப்ரீ லினக்ஸ்லிருந்து உருவாக்கப்பட்டது.சட்ட சிக்கல்கள் காரணமாக 1992 வரை இது வெளியிடப்படவில்லை.லினஸ் டோர்வால்ட்ஸ் 386BSD உரிய நேரத்தில் கிடைக்க இருந்திருந்தால் , அவர் ஒருவேளை லினக்ஸ் உருவாக்கிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மினிக்ஸ் என்பது ஆண்ட்ரூ எஸ் தனென்பாம் எழுதிய ஒரு மலிவான யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு ஆகும்.2005 ஆம் ஆண்டு இதன் 3 பதிப்புலிருந்து,மினிக்ஸ் இலவசமாக மாறியது. 1991-ல் லினக்ஸ் ஸ்டோவாட்ஸ் என்பவர், மினிக்ஸ் என்ற மென்பொருளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். இதற்கான அனுமதி மறுக்கப்படவே, மினிக்சை ஒத்த இயக்குதளம் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார். இதன் படிவளர்ச்சி நாளடைவில் ஒரு முழுமையான இயக்குதள கருவைத் (கருனியைத்) தந்தளித்தது. அக்காலத்தில் லினக்சை செயற்படுத்த மினிக்ஸ் தொகுதி தேவைப்பட்டது. லினக்ஸ் கருவினை (கருனியை) செயற்படுத்த ஒரு சிறந்த இயக்குதளத்தின் தேவை உணரப்பட்ட நிலையில் லினக்ஸ்ஸும் அவருடன் பணியாற்றிய ஏனைய நிரலாளர்களும் க்னூ செயற்றிட்டத்தின் மென்பொருட்களுடன் லினக்சை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு வந்தனர். இது பொது நோக்கத்திற்காக பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயக்குதளமயினும் இதன் கணினி கட்டமைப்பு ஆதரவு, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு,பல்வேறு மொழி ஆதரவு ஆகியவற்றிக்காக மீத்திறன் கணினிகள் மற்றும் வழங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பயனரின் சூழலில் நிபுணத்துவத்திர்க்காக சில வழங்கல்களுக்கென்றே பிரத்யேக இலவச மென்பொருள் உள்ளன. தற்போது, முன்னூறு வழங்கல்கள் உருவாக்கப்பட்டாலும் ஒரு டஜன் வழங்கல்கள் மிகவும் பிரபலமாக பயன்படுத்துப்படுகிறது. லினக்ஸ் பரவலாக ஏற்கப்பட்ட இயங்குதள கர்னலாக உள்ளது.லினக்ஸ் கர்னல் கணினி கட்டமைப்புகள் மிகவும் பலவித பயன்பாடுகளை கொண்டது. கையடக்க ARM,அடிப்படை ஐபெக் மற்றும் IBM இன் z9,Z10 மைய கணினிகள்,அலைபேசிகளில் இருந்து மீக்கணினிகள் வரை பல சாதனங்களில் விசேஷ வழங்கல்களக உள்ளன. தனிநபர் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் தரத்தினால் லினக்ஸின் பயன்பாடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தற்போது மிகவும் பிரபலமாக 2 வழங்கல்கள் உள்ளன அவை க்னோம், மற்றும் KDE பிளாஸ்மா இயக்குதளம் லினக்ஸ் வழங்கி இயக்க அமைப்புகள் நீண்ட காலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, Netcraft அமைப்பின் செப்டம்பர் 2006 அறிக்கையில் உலகின் பத்து மிகவும் நம்பகமான இணைய நிறுவனங்களில் எட்டு தங்கள் இணைய வழங்கிகளில் லினக்சை பயன் படுத்துவதாக கூறியது. ஜூன் 2008 ல் பத்தில் ஐந்து லினக்ஸ்,மூன்று ஃப்ரீ பி.யஸ்.டி , மற்றும் இரண்டில் மைக்ரோசாப்ட் பயன்படுவதாகவும்,பிப்ரவரி 2010 ல் இருந்து, பத்தில்சிறந்த பத்தில் ஆறு பத்தில்,இரண்டு ஃப்ரீ பி.யஸ்.டி, மற்றும் ஒன்று மைக்ரோசாப்ட் இயக்குதளம் என் குறிப்பிட்டது. லினக்ஸின் குறைந்த விலை மற்றும் எளிமை காரணமாக, உட்பொதிக்கப்பட்ட சாதனஅமைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.லினக்ஸ் கர்னல் அடிப்படையிலான அண்ட்ராய்டு பதிப்பு நோக்கியாவின் பழைய சிம்பியன் திறன்பேசி இயக்குதளத்தை பின் தள்ளியது.2013 ஆம் வருட இரண்டாவது காலாண்டில்,உலகளவில் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் 79.3%, அண்ட்ராய்டு ஆகும்.லினக்ஸ் தளங்களில் இயங்கும் அலைபேசிகள் மற்றும் பிடிஏ 2007 இருந்து மிகவும் அதிகரித்தது. உதாரணங்கள்: நோக்கியா N810, ஓப்பன்மோக்கோ இன் Neo1973, மற்றும் மோட்டோரோலா ROKR E8 குத்துவிளக்கு குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும் இந்தவகை விளக்கு, சமய சார்பான சடங்குகளுக்கும், மற்றும் பொது விழாக்களிலும் இடம் பெறுகின்றன. வட்ட வடிவமான அடியில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரங்களைக் கொண்ட தண்டு குத்து விளக்கின் தலைப்பகுதியைத் தாங்கியுள்ளவாறு அமைந்ததே குத்து விளக்கின் அமைப்பாகும். தலைப் பகுதியும் வட்ட வடிவமானதே. இவ் வட்ட வடிவத்தின் மையப் பகுதியில் கலசம் போன்ற உச்சிப் பகுதி பொருத்தப்பட்டிருக்கும். இக் கலச வடிவம் வட்டத் தலைப் பகுதியுடன் பொருந்தும் இடத்தைச் சுற்றிய பகுதி குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவே இவ்விளக்கின் எண்ணெய் தாங்கியாகும். இதன் வட்ட வட்ட வடிவான விளிம்பிலிருந்து சமமான இடை வெளிகளில் அமைக்கப்பட்ட ஐந்து நீட்சியான அமைப்புக்கள் இருக்கும். இவையே விளக்கின் சுவாலையை ஏற்றுவதற்கான திரிகளைக் கொண்டிருக்கும் இடமாகும். முன்னர் குறிப்பிடப் பட்ட கலசம் போன்ற உச்சியமைப்பில் சில சமயங்களில் பலவகையான அலங்கார வடிவங்களும், உருவங்களும் பொருத்தப்படுவதுண்டு. பொதுவாகப் பெரிய அளவிலான விளக்குகள், அன்னப் பட்சி, மயில் போன்ற உருவங்களையும், சில விளக்குகளில், தெய்வ உருவங்களையும் இவ்விடத்தில் கொண்டிருப்பதைக் காணலாம். குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும். பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். இவ்வுலோகம் வேண்டிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் உருக்கி வார்க்கப்பட்டுப் பின்னர் அதனை வெளியில் எடுத்துக் கண்ணுக்குத் தெரியக் கூடிய பகுதிகள் மினுக்கம் செய்யப் படுகின்றன. சுலபமாக உருக்கி வார்க்கக் கூடிய தன்மையும், தங்கத்தை ஒத்த அதன் நிறமும் இவ்வுலோகம் விரும்பப் படுவதற்கான காரணங்களாகும். இக் காலத்தில் துருவேறா உருக்கையும் குத்து விளக்குகள் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சிறிய விளக்குகளே இவ்வாறு செய்யப்படுகின்றன. இவ்வுலோகத்தைப் பயன்படுத்தும் போது, உருக்குத் தகடுகளையே பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய விளக்குகள் விலை குறைவானவையாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகா. குத்து விளக்கில் தாவர நெய்களே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில்களில் முற்காலத்தில் பசு நெய்யையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. சோமசுந்தரப் புலவர் சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 – சூலை 10, 1953) "தங்கத் தாத்தா" என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். "ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய "கதிரைச் சிலேடை வெண்பா" புகழ் பெற்றவை. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர். க. வேலுப்பிள்ளை இவருக்கு உடன்பிறந்தவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள். நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார். "பதிகம்", "ஊஞ்சல்" என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் "கலம்பகம்", "நான்மணி மாலை", "அட்டகம்", "அந்தாதி", "சிலேடை வெண்பா", "திருப்பள்ளியெழுச்சி" ஆகிய பிரபந்தங்களையும் பாடினார். சைவத் தலங்களை மையமாக "அட்டகிமுக் கலம்பகம்", "தில்லை அந்தாதி", "கதிரைச் சிலேடை வெண்பா" போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார். நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது. நவாலி நவாலி ("Navaly") என்பது இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஏறத்தாழ 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு ஊராகும். மதில் ஒரு நிலப் பகுதியைச் சுற்றி, அதன் எல்லை வழியே அமைக்கப் படும் சுவரே மதில் ஆகும். இது மதிற்சுவர் என்றும் அழைக்கப் படுவதுண்டு. மதிற்சுவர்கள் பல்வேறு கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்படுகின்றது. கிடுகு கிடுகு எனப்படுவது, தென்னையின் ஓலையை நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் படல்கள் போல் உருவாக்கப்படுவது ஆகும். கிடுகு கூரை வேய்வதற்கும், வேலிகள் அடைப்பதற்கும் பயன்படுகின்றது. தென்னையின் ஓலை மிகவும் பெரிதாக இருப்பினும், அது ஒரு நடுத்தண்டின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள ஒடுக்கமான பகுதிகளாக அமைந்துள்ளதால் அதை அப்படியே கூரை வேய்வதற்கோ வேலிகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றைப் பின்னுவதன் மூலம் மறைப்பாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற தட்டையான பெரிய அளவு உடையதாக ஆகின்றது. தென்னை அதிகம் வளரும் பகுதிகளின் நாட்டுப்புறங்களில் கிடுகு ஒரு முக்கியமான கட்டிடப் பொருள் ஆகும். சுற்றாடலிலேயே கிடைப்பதனால் இது பொதுவாக மலிவானது. நகரப் பகுதிகளிலும் கூடத் தற்காலிகமான அமைப்புக்களுக்குக் கூரை அமைப்பதில் கிடுகுக்கான தேவை உண்டு. இதனால் நாட்டுப் புறங்களில் பின்னப்படும் கிடுகுகள் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுவது உண்டு. கிடுகு விரைவில் அழிந்துவிடக்கூடிய ஒரு பொருள். ஆகவே, இதனால் அமைக்கப்படும் கூரைகளோ, வேலிகளோ நீண்ட நாள் நிலைத்திருப்பது இல்லை. இதனால் அடிக்கடி அவற்றைப் புதுப்பிக்க வேண்டியிருப்பது இதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்று. எனினும் இது சூழலை மாசுபடுத்தாத ஒரு கட்டிடப்பொருள் ஆகும். தென்னை விளையும் பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கிடுகு பின்னுதல் ஒரு வருமானம் தரும் ஒரு தொழிலாகவும் உள்ளது. ஆங்காங்கே இது ஒரு குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது. தென்னோலைகளைத் தண்ணீரில் சில நாட்கள் ஊறவிட்டுப் பின்னர் நெடுக்குவாட்டில் இரண்டாகப் பிளந்து கிடுகு பின்னப்படுகிறது. ஒவ்வொரு ஓலையிலிருந்தும் இரு கிடுகுகள் இழைக்கலாம். கிடுகு பொதுவாகக் குந்தியிருந்தே இழைக்கப்படுகிறது. பாலக்காடு மாவட்டம் பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும். முற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் (பாலை நிலம்) என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்("Alstonia") நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு. பாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது. இந்த மாவட்டத்தை ஆலத்தூர், சிற்றூர், மண்ணார்க்காடு, ஒற்றப்பாலம், பாலக்காடு, பட்டாம்பி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர். பாலக்காடு, ஷொர்ணூர், சிற்றூர்-தாத்தமங்கலம், ஒற்றப்பாலம் ஆகியவை நகராட்சிகளாகும். இது கேரள சட்டமன்றத்திற்கான் 12 தொகுகளைக் கொண்டுள்ளது. தர்மபுரி தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன. 1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகஸ்ட் 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவி இங்கிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. சேலத்திலிருந்து பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. நீலமலை நீலகிரி என்றழைக்கப்படும் நீலமலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இது "மலைகளின் ராணி" என்று போற்றி அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத் தலைநகர் "ஊட்டி" என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும். நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளயத்தையும் ஊட்டியையும் நீலகிரி மலை இரயில் பாதை இணைக்கிறது. நீலகிரி மாவட்டம் பற்றிய வலைத்தளம் ஆதிலாபாத் ஆதிலாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலகளவில் ஏற்றுமதி செயாப்படுகின்றன. தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர். வாரங்கல் வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது. இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது. விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும். ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது. இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.