இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம் இந்து சமயத்தில் வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினைத் தத்துவம் எனப்படும். இது பிராரப்த கர்மம் என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் கருமம் அல்லது வினைப்பயன் என்பர். இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரம்மாவால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான். ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று இராமன் இலக்குவனுக்குச் சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான். ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் சஞ்சித கருமம் என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்த ஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான் தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில். வடமொழியில் ஆகாமிய கருமம் எனப்படும் வரும் வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள். திருவள்ளுவர் ஊழ்வினை என்று ஒரு அதிகாரமே பாடியுள்ளார். பொருள்: ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை எவை? ஊழ்வினையிலிருந்து தப்ப வேறு வழியை நாடிச் சென்றாலும் ஊழானது முற்பட்டு வந்து முதலில் நிற்கும் என்கிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்ற கோட்பாட்டினை வழிமொழிகிறார். கம்பராமாயணத்தில் கம்பர் இராமன் வனவாசம் மேற்கொள்ள அவனின் ஊழ்வினையே காரணமென்கிறார். ஜோகானஸ்பேர்க் ஜோகார்னஸ்பேக் (Johannesburg) தென்னாபிரிக்காவின் மிகப்பெரியதும் மக்கள்தொகை கூடந்துமான நகரமாகும். இது கௌடெங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.ஜோகானர்னஸ்பேக் உலகில் 40வது பெரிய கூட்டுநகரமாகும். இது பிழையாக தென்னாபிரிக்காவின் தலை நகரமாக கருதப்படுவதுண்டு. தென்னாபிரிக்காவின் உச்சநிலை நீதிமன்றமான யாப்பு நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது. கனிமவளங்கள் நிறைந்தப் பகுதியில் அமைந்துள்ளமையால் ஜோகார்னஸ்பேக் பாரிய தங்க, வைர வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு தெற்கு ஆபிரிகாவின் பெரியதும் வேலைப்பழு கூடியதுமான ஓ. ஆர். தம்போ பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது. தென்னாபிரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இங்கு 3 மில்லியனுக்கதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஏனைய நகரங்களைவிட ஜோகார்னஸ்பேக் பரப்பளவில் கூடியதாகும். இது பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை அடர்த்தி பாரிய ஜோகார்னஸ்பேக்கின் மக்கள்தொகை 8 மில்லியன் ஆகும். ஜோகானஸ்பேர்கின் இரட்டை நகரங்கள்: திருவள்ளுவர் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.பி 2018ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி 2049ஆம் ஆண்டு ஆகும். மதம் சாராத வள்ளுவப்பிரானை, தமிழின் மிகச்சிறந்த வரலாற்று ஆளுமையாக முன்வைப்பதில் தமிழறிஞர்கள் ஒருமித்த முடிவெடுத்தனர். இதன் பயனாக அவரை முன்னிறுத்தி "திருவள்ளுவர் திருநாள்" என்னும் பண்டிகையை தமிழர் யாவரும் கொண்டாடவேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 1935 சனவரி 17ஆம் தேதி, இதற்கான கால்கோள் இட்டவர்கள், காழி சிவகண்ணுசாமிப்பிள்ளையும், பத்மஸ்ரீ திரு.வ.சுப்பையாவும். அவர்களின் முயற்சியில் "திருவள்ளுவர் திருநாட் கழகம்" எனும் கழகமொன்று அமைக்கப்பட்டு, தமிழகம், அயல் மாநிலங்கள், அயல் நாடுகளில் அதைக் கொண்டாடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. திருவள்ளுவர் பிறந்த தினமான வைகாசி அனுடத்தை மையமாக வைத்து, 1935 மே 17,18 ஆகிய தேதிகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகள், தெ.பொ.மீ, திரு.வி.க முதலான ஏராளமான தமிழறிஞர் முன்னிலையில் திருவள்ளுவர் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகத் துவங்கிய நிலையில், ஈழத்தமிழ் அறிஞர் கா. பொ. இரத்தினம் 1954இல் எடுத்த முயற்சிகளின் பயனாக, தமிழகத்திலும் இலங்கை, மியன்மார் உள்ளிட்ட அயல் நாடுகளிலும், திருவள்ளுவர் திருநாள் மீண்டும் கொண்டாடப்பட ஆரம்பித்தது. வைகாசி அனுடமான 22 மே 1959இலும் இது இடம்பெற்றதை அறியமுடிகின்றது. தைப்பொங்கலை நீண்ட நாளாகவே 'தமிழர் திருநாள்' என்று போற்றும் வழக்கம், தமிழர் மத்தியில் உண்டு. தமிழர் திருநாள் தைப்பொங்கல் என்பதால், அன்றே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படவேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் சொன்னவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம். இதை முன்மொழிந்து 1954இல், அவர் திருச்சி வானொலி நிலையத்துக்கும் கா.பொ.இரத்தினத்துக்கும் எழுதிய கடிதத்துக்கு, கா.பொ.இரத்தினம் கடும் கண்டனம் தெரிவித்தார். வைகாசி அனுடம் ஆண்டுக்காண்டு மாறுபடலாம் என்பதால் 1966இல், சூன் இரண்டாம் தேதியை, ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடுவதற்கான அரச விடுமுறை அளிக்கப்பட்டது. எவ்வாறெனினும் இது 1971இல் தை முதலாம் தேதிக்கு மாற்றப்பட்டது. தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத்தொடர்கள் பயன்பட்டுள்ளன. சக ஆண்டு, விக்கிரம ஆண்டு, கலி ஆண்டு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் பண்டு தொட்டே கொல்லம் நாட்காட்டி பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயே தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது. மறைமலையடிகள் ஏற்கனவே திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்று கணித்திருந்தார். சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ, கலைஞர் கருணாநிதி, வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடி வந்த கா.பொ.இரத்தினம் உட்பட பெரும்பாலான தமிழறிஞர்கள் சித்திரைப்புத்தாண்டு ஆரியர் திணித்தது என்ற கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்தப்பின்னணியில் கருணாநிதியின் தி.மு.க அரசு, தைத்திருநாளிலேயே ஆரம்பமான திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அந்நாளில் "திருவள்ளுவர் ஆண்டு" எனும் ஆண்டுத்தொடரை அறிமுகப்படுத்தியது. 1971இல் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், அதை சகல அரச ஆவணங்களிலும் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார். தையே தமிழர் புத்தாண்டு என்ற குரல் 2000களில் மிக வலுவாக எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்கள், தை புத்தாண்டு என்று பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலையடிகள் முதலான நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் முன்மொழிந்தார்கள் என்று ஆதாரம் சொன்னார்கள். பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று. தமிழறிஞர்கள் ஒன்றுகூடி ப்ரவலான ஆதரவு தெரிவித்தது, 1935இலும் 1954இலும் இருதடவை இடம்பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம். தமிழக அரசின் அரசாணையுடன் 2008இல் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டு, 2012 ஆட்சிமாற்றத்தில், மீண்டும் சித்திரைக்கே தமிழ்ப்புத்தாண்டு மாற்றப்பட்டது. எனினும் சமகாலத்தில், தைப்புத்தாண்டு எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ் சார்ந்த தேவைகளின் போது, திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றிய திருத்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலும், இலக்கிய அரசியல் சார்ந்த தன்னிச்சையான முடிவுகளாலும், அது முன்மொழியப்படுவதன் படி, தை ஒன்றே இன்றும் திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது. அணி இலக்கணம் அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில, ஊர்க்காடு ஊர்க்காடு (ஆங்கிலம்:Urkad ) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது அம்பாசமுத்திரம் நகரத்தின் ஒரு பகுதி. இங்கு பழமையான சிவன்(கோட்டியப்பர்) கோவில் உள்ளது. இங்கு 3 ஜமீன்கள் ஆண்டதாக கூறப்படுகிறது. இன்றும் பழமையான கட்டட இடிபாடுகளைக் காணலாம். இங்கு விவசாயம், மற்றும் பீடி சுற்றும் கைத்தொழில் முக்கியமானதாகும். 50% மக்கள் இங்கு ஏழ்மையானவர்கள். இங்கு தாமிரபரணி ஆறு ஓடுகிறது. கணபதிபாளையம் கணபதிபாளையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டதில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். இச்சிற்றூர், காட்டுப்புத்தூரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு மொத்தம் 130 குடும்பங்கள் வசிக்கின்றன். இம்மக்களின் ஒரே தொழில் விவசாயம். இவ்வூர் தனது அனைத்து தேவைகளுக்கும் காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கிறது. இங்குள்ள அனைவரும் சிறு விவசாயிகள் ஆவர். அனைவரும் கிணற்றுடன் கூடிய மூன்று போகமும் விளையக்கூடிய விளைநிலங்களை வைத்துள்ளனர். இது ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி உள்ள பகுதியாகும். வாழை, கரும்பு, நெல், மரவள்ளிக்கிழங்கு, கடலை மற்றும் காய்கறிகள் வருடந்தோறும் பயிரிடப்படுகின்றன. கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு, அனைத்து விவசாயிகளும் தமிழக அரசின் இலவச மின்சார வசதி பெற்றுள்ளனர். இவ்வூர் மக்களின் வாழ்க்கை உயர்வுக்கு இக்கூட்டுறவு நிறுவனம் மிகுந்த உறுதுணையாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இங்குள்ள மக்கள் உற்பத்தி செய்யும் பாலை காலையும் மாலையும் சேகரித்து, தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்புவதே இந்நிலையத்தின் பணியாகும். பின், அவற்றிக்கான தொகையை 14 நாட்களுக்கொரு முறை பட்டுவாடா செய்கிறது. பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்கிறது. இவ்வூர் மக்களின் தினசரி சில்லரை செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்விச்செலவுகளுக்கும் இத்தொகையே பெரிதும் பயன்படுகிறது. இவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்குகிறது. மேற்ப்படிப்புக்கு காட்டுப்புத்தூரில் உள்ள ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2 வருடமாக குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர் (கிட்டத்தட்ட 15 குழந்தைகள் தற்போது ஆங்கில வழி கல்வியில் படித்து வருகின்றனர்.) காட்டுப்புத்தூரிலிருந்து மோகனூர் வரை, இவ்வூர் வழியாக மணிக்கொருமுறை சிற்றுந்து (மினிபஸ்) இயக்கப்படுகிறது. காட்டுப்புத்தூரிலிருந்து, சுற்றியுள்ள அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் உள்ளன. aafdasf ஓலந்து தீவுகள் ஓலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு ) அல்லது பொதுவாக ஓலந்து தீவுகள் பால்டிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது பின்லாந்தின் சுவீடிய மொழி பேசும் சுயாட்சி மாகாணமாகும். இத்தீவுக்கூட்டங்களில் பஸ்டா ஓலந்து மிக முக்கிய தீவாகும். இங்கு மொத்த மக்கள் தொகையில் 90% மக்கள் வாழ்கிறார்கள். இதைத் தவிர கிழக்கில் மேலும் 6,500 பாறைத்தீவுகளைக் கொண்டுள்ளது. பஸ்டா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.; இது மார்கெட் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும். அல்டேர்னி அல்டேர்னி (பிரெஞ்சு: "Aurigny"; அரேக்னைஸ்: "Aoeur'gny") ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்துள்ள தீவாகும். ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய ஆட்சிப்பகுதியான இது குயெர்ன்சி பலிவிக்கின் ஒரு பகுதியாகும். இது 3 மைல் (5 கி.மீ.) நீளமும் 1.5 மைல் (2.5 கி.மீ) அகலமும் கொண்டது. மொத்தப் பரப்பளவு 3 சதுரமைல் (8 சதுர கிலோ மீட்டர்). இது ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவாகும். இது பிரானிசின் கொன்டென்டின் தீபகற்பத்தில் இருந்து மேற்காக 10 மைல் (16 கி.மீ.) தொலைவிலும் இங்கிலாந்தின் தென் முனையில் இருந்து 60 மைல் (97 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ளது.இத்தீவில் 2400 பேர் வசிக்கின்றார்கள். இங்கு புனித அன்னம்மாள் பங்கு அமைந்துள்ளது இது இத்தீவில் காணப்படும் ஒரே பங்காகும். 1752 1752 ((MDCCLII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது. லூனா திட்டம் லூனா திட்டம் ("Luna programme") என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் "லூனிக்" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின. . பீட்டர் டி. டேனியல்ஸ் பீட்டர் டி. டேனியல்ஸ் (பி. டிசம்பர் 11, 1951) உலகமொழிகளின் எழுத்துக்கள் பற்றிய ஆய்வில் தேர்ந்த அறிஞர். இவர் வில்லியம் பிரைட் என்பாருடன் சேர்ந்து "உலகின் எழுத்து முறைகள்" ("The World's Writing Systems" என்னும் நூலை 1996ல் எழுதியுள்ளார். அதில் "அபுஜாடு" ("abjad") எழுத்து முறை, "அபுகிடா" (abugida) எழுத்து முறை என்னும் முறைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளார். "அபுஜாடு" என்னும் முறை மெய்யெழுத்துக்கள் மட்டும் அடங்கிய அகரவரிசை (நெடுங்கணக்கு) கொண்டது. இதில் உயிரெழுத்துக்களுக்குத் தனி எழுத்துக்கள் கிடையாது. "அபுகிடா" எழுத்து முறை என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து, மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் கொண்ட அகரவரிசை. தமிழ், மற்றும் இந்திய மொழிகள் பலவற்றிலும் இந்த அபுகிடா எழுத்து முறைதான் பயன்பாட்டில் உள்ளது. இவைதவிர, "ஆல்ஃவபெட்" (alphabet) முறை என்பது உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் மட்டுமே (உயிர்மெய் எழுத்துக்கள் கிடையாது) கொண்ட முறை. அதாவது உயிர்மெய்யற்ற அகரவரிசை. இவர் தெளிவுபடுத்திய இம்முறைகளும் அதற்கான கலைச்சொற்களும் இன்று மொழியியலில் பரவலாக எடுத்தாளப்பட்டு வருகின்றன. ரூவால் டால் ரூவால் டால் () (ஆங்கிலம்: Roald Dahl) (செப்டம்பர் 13 1916 – நவம்பர் 23 1990) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வேல்ஸில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராவார். இவரது புதினங்கள், சிறு கதைகள் மற்றும் திரைக்கதைகள் எல்லோராலும் குறிப்பாக குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. முப்படியச் சமன்பாடு கணிதம் தோன்றிய காலத்திலிருந்து சமன்பாடுகளை விடுவித்துத் தீர்வு காணும் பிரச்சினை தலையாய பிரச்சினையாக இருந்து வருகிறது. காலம் செல்லச்செல்ல கணிதம் எடுத்துக்கொள்ளும் சமன்பாடுகளின் தரத்தில் உயர்வும் பின்னலும் காணப்படுகிறதே தவிர பிரச்சினை ஒன்றுதான். 15 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கணித மலர்ச்சியில் முதன் முதலில் முப்படியச் சமன்பாடு களைத் தாக்க முயன்று 16 வது நூற்றாண்டில் வெற்றியும் கண்டனர். முப்படியச் சமன்பாட்டில் சாரா மாறி யின் உயர்ந்த அடுக்கு மூன்றாக இருக்கும். அதை என்று எடுத்துக்கொள்வதில் பொதுத்தன்மைக்கு ஒரு குந்தகமும் இல்லை. ஏனென்றால், formula_2 இன் கெழு 1 ஆக இல்லாவிட்டால், முழு சமன்பாட்டையும் அக்கெழுவால் வகுத்து (*) காட்டும் உருவத்திற்குக் கொண்டுவந்துவிடலாம். அக்கெழு 0 வாக இருந்தால் சமன்பாடே இருபடியம் ஆகி விடும். 1504 இல் டெல் ஃபெர்ரோ என்ற பொலோனா பல்கலைக்கழகக்கணித ஆசிரியர் , முப்படியத்தில் formula_3 இன் கெழுவை formula_4 வாக வைத்துக்கொண்டு முப்படியச் சமன்பாட்டிற்கு 'ஒரு' தீர்வு கண்டுபிடித்தார். அதாவது, அவர் எடுத்துக் கொண்ட சமன்பாடு இதற்கு 'குறைக்கப்பட்ட முப்படியம்' (Depressed Cubic) என்று பெயர். டெல்ஃபெரோ ஏதோ ஒர் உள்ளுணர்வில் formula_6 என்று வைத்துக்கொண்டார். இதை சமன்பாட்டில் பதிலீடு செய்தால், நமக்குக் கிடைப்பது மேலும் ஓர் உள்ளுணர்வில், டெல்ஃபெரோ, இதை இரண்டு சமன்பாடாகப் பிரித்தார். அதாவது இவையிரண்டிலிருந்து, இது formula_11 என்ற மாறியில் ஒரு இருபடியம். அதனால், இதில் நேர்ம மூலத்தை எடுத்துக் கொண்டு, formula_13 வைக் கணித்தால், இப்பொழுது, formula_15 என்பதைப் பயன்படுத்தி ஆக, நாம் எடுத்துக்கொண்ட முப்படியத்திற்குத்தீர்வு மாறாக, formula_18 என்பதால், இக்கோவையிலுள்ள இரண்டாவது உறுப்பில் ஒரு -1 ஐ மூலக்குறிக்கு வெளியில் எடுத்த பிறகு நமக்குக் கிடைப்பது, இதே formula_19 க்கு இன்னொரு சமானமான கோவை: கார்டானோ ஜெரோலாமோ கார்டானோ (1501-1576) (ஆங்கிலத்தில் Jerome Cardan) ஒரு இத்தாலியக் கணித இயலர். இயற்கணிதத்தைச் சார்ந்த முப்படியச் சமன்பாட்டிற்கு முதன்முதலில் இயற்கணிதத் தீர்வு கொடுத்தவர். கார்டானோ ஒரு அறிவியலாளர். அவர் பாடுவாவில் தன் 22வது வயதில் கற்ற கணிதத்தை மட்டும் தன் தொழிலாகக் கொள்ளவில்லை. 1526 இல் பாடுவாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். டென்மார்க், ஸ்காட்லாந்து முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அவருடைய புயல் போன்ற வாழ்க்கையில் எப்பொழுதும் பணத்தட்டுப்பாடு கொண்டு இருந்திருக்கிறார். ஒரு முறை பொலோனாவில் கடன் அடைக்காததால் சிறையிலும் இருந்திருக்கிறார். இவர் தன் பணத்தட்டுப்பாட்டைப் பெரும்பாலும் சூதாட்டத்திலும் சதுரங்க ஆட்டத்திலும் வென்று ஒருவாறு ஈடுகட்டியிருக்கிறார். விளையாட்டுகளில் வாய்ப்பு, நிகழ்தகவு போன்றவற்றைப் பற்றி லீபர் டெ லூடோ அலியே ("Liber de ludo aleae") என்னும் இவர் 1560ல் எழுதிய நூல் இவர் இறந்தபிறகு 1663ல் வெளியாகியது. இதுவே முதன்முறையாக சீராக நிகழ்தகவு பற்றி எழுதிய நூல் ஆகும். இதில் ஏமாற்றும் முறைகள் பற்றியும் எழுதியுள்ளார். இவர் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். சில குறிப்பிடத்தக்க கணித வெளியீடுகளைத் தவிர, தத்துவம், மருத்துவம் இவையிரண்டிலும் வெளியீடுகள் செய்திருக்கிறார். டெல் ஃபெர்ரோ (1465-1526)வும், (பொலொனா பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்), ஃபெர்ராரி (1522- 1565) ("Luigi Ferrari") இருவரும் கார்டானோவின் மாணவர்கள். 15வது நூற்றாண்டின் நான்காவது பாகத்திலும் 16 வது நூற்றாண்டின் முற்பாதியிலும் முதன்முதல் கணித புத்தகங்கள் அச்சில் வரத் தொடங்கின. அதற்கு முன் கையால் எழுதப்பட்ட சில பிரதிகளே கையாளப்பட்டுவந்தன. பல ஆசிரியர்கள் தங்களுடைய நிறுவல்களை வெளியிட்டுவிடாமல் ரகசியமாகவே வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கணிதப் பிரச்சினைக்கு தீர்வுகள் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் சவால்கள் ஏற்றுக்கொண்டு பொது அரங்கில் விவாதிப்பது வழக்கம். தீர்வுகளை ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றால் அவர் அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்று சபதம் செய்துகொடுப்பதும் உண்டு. 1545 இல் நியூரென்பெர்க்கில் பிரசுரமான Ars Magna de Regulis Algebraicis என்ற கார்டானோவின் நூலில் முதன் முதல் முப்படியச் சமன்பாட்டிற்குத் தீர்வு வெளியாயிற்று. ஆனால் மேலே கொடுக்கப்பட்ட முறையில் அல்லாமல் formula_8 என்று வைத்துக்கொள்ளப்பட்ட சமன்பாட்டிற்குத் தீர்வு கொடுக்கப்பட்டது. அதையும் கார்டானோ தன்னுடைய தீர்வாக உரிமை கொண்டாடாமல் 1515 இல் டெல் ஃபெர்ரோ என்பவர் கொடுத்த தீர்வாகக் காட்டினார். சிறிது காலத்திற்குப் பிறகு அதை டார்ட்டாக்ளியாவினுடையது என்றார். இது டார்ட்டாக்ளியாவுக்கும் இவருக்கும் ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இந்த காரசாரமான உரிமைப் போரில் கார்டானோவின் மாணவர் ஃபெர்ராரிக்குப் பெரும் பங்கு உண்டு. கார்டாவோவின் பெயர் குவைய இயக்கவியலில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவர் பங்களிப்புகள் பின்னரான 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்தது. டார்ட்டாக்ளியா டார்ட்டாக்ளியா ("Niccolò Fontana Tartaglia", 1499 - டிசம்பர் 13, 1557) வெனிசு, ப்ரெஸ்சியா ஆகிய இத்தாலிய நகரங்களில் கணித ஆசிரியராக இருந்தவர். எண் கணிதம், வடிவவியல், இயற்கணிதம் மூன்றிலும் பாடபுத்தகங்கள் எழுதியவர். அவை 1556 இலிருந்து 1560 வரையில் பல மறுபதிப்புகளைப் பார்த்தன. அக்காலத்தில், அதாவது, 15வது நூற்றாண்டின் நான்காவது பாகத்திலும் 16 வது நூற்றாண்டின் முற்பாதியிலும் முதன்முதல் கணித புத்தகங்கள் அச்சில் வரத் தொடங்கின. அதற்கு முன் கையால் எழுதப்பட்ட சில பிரதிகளே கையாளப்பட்டுவந்தன. பல ஆசிரியர்கள் தங்களுடைய நிறுவல்களை வெளியிட்டுவிடாமல் ரகசியமாகவே வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கணிதப் பிரச்சினைக்கு தீர்வுகள் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் சவால்கள் ஏற்றுக்கொண்டு பொது அரங்கில் விவாதிப்பது வழக்கம். தீர்வுகளை ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றால் அவர் அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்று சபதம் செய்துகொடுப்பதும் உண்டு. அப்படித்தான் கார்டானோ (1501-1576) என்ற இன்னொரு இத்தாலியக் கணித இயலர் தன்னிடமிருந்து முப்படியச் சமன்பாட்டின் தீர்வைப் பெற்றதாகவும் ஆனால் அவருடைய Ars Magna என்ற நூலில் (1545 இல் நியூரென்பெர்க்கில் பிரசுரிக்கப்பட்டது) அதைப் பிரசுரித்து தான் கொடுத்த சொல்லையே மீறிவிட்டதாகவும், டார்ட்டாக்ளியா 1546 இல் வெனீஸ் நகரில் அச்சாகிய தன் நூலில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இரு கணித ஆசிரியர்களுக்கும் நடந்த வாக்குவாதமும், தரக்குறைவான பேச்சுகளும் கணித வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாகி விட்டன. மேடைகளில் இதற்காக பட்டிமன்றங்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டார்ட்டாக்ளியாவுக்கு ப்ரெஸ்சியாவில் கிடைக்க இருந்த கணித ஆசிரியர் வேலையில் ஒரு கண் இருந்ததால் அதை மனதில் கொண்டு ஒரு பொதுச் சொற்போருக்கு ஒப்புக்கொண்டார். அச்சொற்போருக்கு கார்டானோ தன் மாணவரான ஃபெறாரியை அனுப்பி சொற்போரில் வென்றார். இருந்தும், இதன் காரணமாகவோ என்னவோ, சில காலம் கணிதப் பொது மக்கள் டார்ட்டாக்ளியாவைத் தான் அத்தீர்வின் உரிமையாளர் என்று மதித்து வந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல கார்டானோ தான் அதன் உரிமையாளர் என்று கணித உலகம் மதிக்கத் தொடங்கியது. எனினும் 20வது நூற்றாண்டில் எழுதப்பட்ட , நூலில் டார்ட்டாக்ளியாவை ஆதரித்து எழுதப்பட்டிருக்கிறதும் உண்மையே. டார்ட்டாக்ளியாவின் சொந்தப்பெயர் ஃபாண்ட்டானா (Fontana). அவர் 12வது வயதில் ஒரு பிரென்சு போர்வீரனால் அவருடைய தாடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு கத்திக்காயத்தால் அவருடைய பேச்சுத்திறனில் மாசு படிந்ததால், 'திக்குவாயன்' என்று பொருள் தரும் 'டார்ட்டாக்ளியா' என்ற பெயர் அவருக்கு நிலைத்து விட்டது. லியூஜி ஃபெறாரி லியூஜி ஃபெறாரி ("Luigi Ferrari"; பெப்ரவரி 2, 1522 – அக்டோபர் 5, 1565) கணிதத்தில் நாற்படிச் சமன்பாட்டிற்கு இயற்கணிதத் தீர்வு கண்டுபிடித்த இத்தாலி நாட்டுக் கணித ஆய்வாளர். இவர் 15வது வயதில் கார்டானோவின் மாணவரானார். 17வது வயதில் ஒரு சண்டையில் தன் வலது கை விரல்களை எல்லாம் இழந்தார். 1549 இலிருந்து ஏழு ஆண்டுகள் மிலான் நகரில் நிலச்சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி புரிந்தார். உடல்நிலை காரணமாக அங்கிருந்து ஓய்வு பெற்று தன் சொந்த ஊரான பொலோனாவுக்கே திரும்பி 1565 வரையில் கணிதப் படிப்பில் காலம் கழித்தார். நடு வயதிலேயே இறந்தார். அவர் உடன் பிறந்தவள் அவரை நஞ்சு வைத்துக் கொன்றுவிட்டதாக ஒரு வதந்தியும் உலவியது. கார்டானோ முப்படிச் சமன்பாட்டிற்குத்தீர்வு கண்டுபிடித்ததை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு நாற்படிச் சமன்பாட்டிற்குத் தீர்வு கண்டுபிடித்தார். இத்தீர்வு கார்டானோவின் Ars Magna என்ற நூலில் உரிய இடத்தில் பங்கு பெற்றது. வசம்பு வசம்பு ("Acorus calamus", பொதுவாக "Sweet Flag" அல்லது "Calamus") ஒரு மூலிகை ஆகும். இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. வசம்பு அரபு நாடுகளையோ இந்தியாவையோ சேர்ந்ததாக இருக்கலாமெனக் கருதப்பட்டாலும், அவை தவிர ஐரோப்பா முழுவதிலும், தென் உருசியாவிலும், சின்னாசியாவின் வடக்கிலும், தென் சைபீரியா, சீனா, இந்தோனேசியா, யப்பான், மியான்மர், இலங்கை, அவுத்திரேலியா, தென் கனடா, ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களிற் பரவலாகக் காணப்படுகிறது. வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. இதன் பிறப்பிடம் தென்கிழக்கு அமெரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேரளாவிலும் அதிகமாக வளர்கிறது. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை. இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது. நட்ட ஒரு ஆண்டில் பயிர் மூதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அதாவது ஒரு ஆண்டில் கிழங்கை வெட்டி எடுக்க வேண்டும். இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறுது. சிறுசெருப்படை சிறுசெருப்படை என்பது வெயில் காலத்தில் பயிராகும் ஒரு படர்கொடி. இதன் வேறு பெயர்கள் செருப்படி, சிறுசெருப்படி ஆகியன ஆகும். இதன் தாவரவியல் பெயர் "Mollugo lotoides". பற்பாடகம் பற்பாடகம் ("Mollugo cerviana") என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். குறிப்பாக குடிநீரில் இது ஒரு கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எல்லாக் கண்டங்களிலும் வளரக் கூடியது. தினகரன் தினகரன் என்னும் தலைப்புகளில் உள்ள கட்டுரைகள்: 1835 1835 (MDCCCXXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. மிக்-27 மிக்-27 அல்லது மிகோயன் குருவிச் மிக்-27 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்றப் பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இலங்கை வான்படை 2000 ஆம் ஆண்டு முதல் ஈழப் போரில் இதைப் பயன்படுத்தி வந்தது. இலங்கை விமானப்படை மிக்-27 போர் விமானங்களை தரைத்தாக்குதல், மற்றும் வான் உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் இவை இலங்கையில் சேவைக்கு விடப்பட்டன. ஈழப்போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மிக்-27 போர் விமானம் ஒன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீழ்ந்து நொறுங்கியதில் உக்ரேனிய விமானி ஒருவர் கொல்லப்பட்டார். 2001 சூலையில், விடுதலைப் புலிகளினால் மிக்-27 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 2004 சூன் மாதத்தில் வேறொரு மிக்-27 விமானம் கட்டுநாயக்காவிற்கு அருகில் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 2012, பெப்ரவரி 13 இல் மிக்-27 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வழமையான பயிற்சிக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் 17 மைல் தொலைவில் புத்தளம் நாத்தாண்டியா தும்மலசூரிய பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது. விமானி உயிர் தப்பினார். மிக்-23 மிக்-23 அல்லது மிகோயன்-குருவிச் மிக்-23 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இதுவே முதலில் கீழே தரையில் உள்ள இலக்கைப் காணக்கூடிய ராடாரை கொண்டதும் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய எறிகணைகளைக் கொண்டதுமான முதல் விமானமாகும். 1970 இல் இதன் உற்பத்தி தொடங்கியது. இன்று மிக் இரசியா தவிர்ந்த வெளிநாடுகளில் மாத்திரமே பாவனையில் உள்ளது. இலங்கை வான்படை இவ்விமானங்களைத் தனது விமானிகளைப் பயிற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது. எல் சால்வடோர் எல் சல்வடோர் (ஸ்பானிய மொழி: "República de El Salvador") மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கு பசிபிக் கடலில் குவாத்தமாலா மற்றும் ஹொண்டூராஸ் ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன் ஆகும். அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடாகும். இதன் தலைநகரம் சான் சல்வடோர் மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும். இங்கு 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்நாட்டின் பெயர் இயேசு கிறிஸ்துவின் மறு பெயரான "சேவியர்" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். குவாத்தமாலா குவாத்தமாலா குடியரசு ("Republic of Guatemala", ஸ்பானிய மொழி: República de Guatemala), நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே மெக்சிக்கோ, தென்மேற்கே பசிபிக் கடல், வடகிழக்கே பெலிஸ் மற்றும் கரிபியன் கடல், தென்கிழக்கே ஹொண்டூராஸ் மற்றும் எல் சல்வடோர் ஆகியன அமைந்துள்ளன. 1996 இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன. நடு அமெரிக்கா நடு அமெரிக்கா அல்லது மத்திய அமெரிக்கா ("Central America", அல்லது América Central) என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்டமாக இருப்பதாலும், இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும், இதனை "இருவலஞ்சூழ் இடைநிலம்" அல்லது இடைநிலம் (isthmus) என்று அழைக்கப்படும். நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன: பெலீசு, கோஸ்ட்டா ரீக்கா, குவாத்தமாலா, எல் சல்வடோர், ஒந்துராசு, நிக்கராகுவா, பனாமா. மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் (202,000 சதுர மைல்), அதாவது பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 0.1% ஒரு பகுதியில் உள்ளது. 2009இல் அதன் மக்கள் தொகை 41.739.000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சதுர கிலோமீட்டருக்கு 77 பேர் அல்லது ஒவ்வொரு சதுர மைலுக்கு 206 பேர் என மக்கள் அடர்த்தி உடையது. மத்திய அமெரிக்கா 524.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. பசிபிக் பெருங்கடல் இதன் தென்மேற்கில் உள்ளது, கரீபியன் கடல் வடகிழக்கில் உள்ளது, மற்றும் மெக்ஸிக்கோ வளைகுடா வடக்கில் உள்ளது. பெரும்பாலான மத்திய அமெரிக்கா கரீபியன் படுகை மீது உள்ளது. மத்திய அமெரிக்கா தற்பொழுது, அரசியல், பொருளாதார, மற்றும் கலாச்சார மாற்றத்திற்க்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது. இது மத்திய அமெரிக்க நீதிமன்றம் உருவாகிய 1907 ல் தொடங்கியது. மத்திய அமெரிக்காவில் மத்திய அமெரிக்க பாராளுமன்றம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மத்திய அமெரிக்க வங்கி மற்றும் மத்திய அமெரிக்க பொது சந்தை போன்ற பல நிறுவனங்கள் உள்ளன. மத்திய அமெரிக்கா மெசோமெரிக்கன் பல்லுயிரிய முக்கியத்தலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது உலகின் பல்லுயிர்களில் 7% கொண்டுள்ளது.. இந்த அட்டவணை ஏழு நாடுகளில் தற்போதைய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது: மீரா ஜாஸ்மின் மீரா ஜாஸ்மின் () என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் "அனில் ஜாண் டைடஸ்" என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. நயன்தாரா நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு "மனசினகாரே" என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மிக்-17 மிக்-17 அல்லது 'மிகோயன் குருவிச் மிக்-17" சண்டை விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. 1952 முதல் பயன்பாட்டில் உள்ளது. புரோமின் புரோமின் "(Bromine)" என்பது Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 35 ஆகும். ஆலசன்களில் புரோமின் மூன்றாவது இலேசான ஆலசன் ஆகும், அறை வெப்பநிலையில் செம்பழுப்பு நிற பொங்கும் திரவமாக புரோமின் காணப்படுகிறது. அதே நிறமுடைய வாயுவாக உடனடியாக புரோமின் திரவம் ஆவியாகிறது. புரோமினின் பண்புகள் குளோரின் மற்றும் அயோடின் ஆலசன்களின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளாக உள்ளது. 1825 இல் கார்ல் யாக்கோப் லோவிக் மற்றும் 1826 இல் அன்டோயின் செரோம் பலார்ட் ஆகிய இரு வேதியியலாளர்கள் புரோமினைத் தனித்துப் பிரித்தனர். புரோமின் என்ற பெயர் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இதன் கூர்மையான மற்றும் விரும்பத்தகாத மணம் இப்பெயருக்கு காரணமாயிற்று. தனிமநிலை புரோமின் மிகவும் வினைத்திறன் மிக்கது ஆகும். எனவே இது இயற்கையில் தனியாகக் கிடைப்பதில்லை. ஆனால் நிறமற்ற கரையக்கூடிய படிகக் கனிமமாக சாதாரண உப்பைப் போல ஆலைடு உப்புகள் என்ற பெயரில் காணப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் புரோமின் அரிதானதாக இருந்தாலும், புரோமைடு அயனி (Br-) கடல்நீரில் மிகுதியாக கரையக்கூடியதாக உள்ளது. வணிக ரீதியாக இந்தத் தனிமம் எளிதில் உப்புநீர் குளங்களிலிருந்து உறிஞ்சப்படுகிறது, குறிப்பாக அமெரிக்கா, இசுரேல் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்நிகழ்வு எளிதில் நடைபெறுகிறது. வில். கடல்களில் உள்ள குளோரின் போல புரோமின் முந்நூறு பங்கில் ஒரு பங்காக காணப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் கரிமபுரோமின் சேர்மங்கள் உடனடியாக தனித்த புரோமின் அணுக்களை வழங்குகின்றன. தனி உறுப்பு சங்கிலி வினைகளை தடுக்கின்ற ஒரு செயல்முறையாக இது கருதப்படுகிறது. இதன் விளைவாக கரிமபுரோமின் சேர்மங்கள் தீத்தடுப்பு வேதிப்பொருள்களாக மிகுந்த பயனளிக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படும் உலகளாவிய புரோமின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட புரோமின் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எதிர்பாராத விதமாக புரோமினின் இப்பண்பு வளிமண்டலத்தில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிமபுரோமின் சேர்மங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரிகையடைகின்றன. இவ்வாறு பிரியும் புரோமின் அணுக்கள் ஓசோன் குறைவுக்கு காரணமாகின்றன. இதன் விளைவாக பூச்சிக்கொல்லியான மெத்தில் புரோமைடு போன்ற பல கரிமபுரோமின் சேர்மங்கள் அதிக அளவில் இன்று பயன்படுத்தப்படுவதில்லை. புரோமின் சேர்மங்கள் இன்னும் கிணறு தோண்டும் திரவங்களில், புகைப்படம் மற்றும் திரைப்பட சுருள்களில், கரிம வேதிப்பொருட்களின் உற்பத்தியில் இடைநிலைகளாக பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு நச்சுத்தன்மைக்கும் புரோமியத்திற்கும் காரணமாக இருந்தாலும், புரோமைடு மற்றும் ஐபோபுரோமசு அமிலத்திற்கான ஒரு தெளிவான உயிரியல் செயல்பாடு சமீபத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது, தற்போது புரோமினும் ஓர் அத்தியாவசியமாக தெவைப்படும் ஒரு தனிமமாக கருதப்படுகிறது. ஒரு மருந்தாக, எளிய புரோமைடு அயனி (BR-) மத்திய நரம்பு மண்டலத்தில் சில தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது, புரோமைடு உப்புக்கள் ஒரு காலத்தில் பெரிய மயக்கமருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. குறுகிய கால செயல்திறன் மருந்துகளாக இவை பயன்படுத்தப்பட்டன. புரோமின் தனித்தனியாக இரண்டு வேதியியலாலர்களால் கண்டறியப்பட்டது. யாகோபு லோவிக் 1825 ஆம் ஆண்டிலும் அண்டோயின் பலார்டு 1826 ஆம் ஆண்டிலும் இதைக் கண்டறிந்தனர். லோவிக் 1825 இல் தனது சொந்த ஊரான பேட் கிரூசுநாக்கில் இருந்த ஒரு நீரூற்றில் இருந்து புரோமினை தனிமைப்படுத்தினார். குளோரினின் நிறைவுற்ற கனிமக் கரைசலை லோவிக் இதற்காகப் பயன்படுத்தினார். டை எத்தில் ஈதருடன் புரோமினைப் பிரித்தெடுத்தார். ஈதர் ஆவியானபிறகு புரோமின் நீர்மமாக எஞ்சியது. இந்த திரவ மாதிரியைக் கொண்டு இவர் புரோமின் கண்டுபிடிப்பை சமர்ப்பித்தார். இவருடைய ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பலார்டின் முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டன மாண்ட்பெல்லியர் நகரிலிருந்த உவர்சதுப்பு நிலத்தில் கிடைத்த கடற்பாசிகளின் சாம்பலில் புரோமின் இரசாயனங்களை பலார்டு கண்டறிந்தார். கடற்பாசி அயோடினை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதில் புரோமின் உள்ளடங்கியிருந்தது. குளோரின் உப்பால் நிரைவுற்ற கரைசலாக இருந்த கடற்பாசியின் சாம்பல் கரைசலை காய்ச்சி வடித்து பலார்டு புரோமினைத் தயாரித்தார். இதன் பண்புகள் குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட பண்புகளாக இருப்பதை உணர்ந்தார்.இதனால் அவர் அயோடின் மோனோகுளோரைடாக அவ்வுப்பு இருக்கலாம் என சந்தேகித்து அதை நிருபிக்க முயன்றார். நிருபிக்கும் அம்முயற்சி தோல்வி அடைந்ததால் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு புதிய தனிமமே என்று முடிவுக்கும் வந்தார். இலத்தின் பெயரின் அடிப்படையில் அவ்வுப்பிற்கு முரைடு எனப் பெயரிட்டார். பலார்டின் கண்டுபிடிப்பு பிரெஞ்சு வேதியியலர்களான லூயிசு நிக்கோலசு வாகுவலின், லூயிசு யாக்குவசு தெனார்டு, யோசப் லூயிசு கே லூசக் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது . முடிவுகள் அறிவியல் அறிஞர்களின் அவையில் முன்மொழியப்பட்டது. பலார்டு முறைடு என்ற பெயரை புரோமின் என்று மாற்றினார். இப்பெயர் மாற்றம் கே லூசக்காலும் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1858 ஆம் ஆண்டு வரையில் புரோமின் பெருமளவில் தயாரிக்கப்படவில்லை. பொட்டாசின் உப்புப் படிவுகள் கண்டறியப்பட்ட பின்னர் உற்பத்தி பெருகியது . சில முக்கியமான சிறிய மருத்துவப் பயன்கள் தவிர்த்து புரோமின் முதன்முதலாக வணிகப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. பாதரச ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் முறையில் புரோமின் அறிமுகப்படுத்தப்பட்டது. அயோடின் ஆவியைக் காட்டிலும் புரோமின் ஆவி கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளதென 1840 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு புகைப்படத் தொழிலில் பயன்பாட்டுக்கு வந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொட்டாசியம் புரோமைடும் சோடியம் புரோமைடும் வலிப்பு மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் குளோரால் ஐதரேட்டும் பார்பிட்யுரேட்டுகளும் இவற்றை இடப்பெயர்ச்சி செய்தன . முதலாம் உலகப் போரின் தொடக்கக் காலத்தில் சைலைல் புரோமைடு போன்ற புரோமின் சேர்மங்கள் நச்சு வாயுவாகப் பயன்படுத்தப்பட்டன . புரோமின் என்பது மூன்றாவது ஆலசன் ஆகும், இது தனிமவரிசை அட்டவணையின் 17 வது குழுமத்தில் ஓர் அலோகமாக இடம்பெற்றுள்ளது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற தனிமங்களின் பண்புகலையே புரோமினும் பெற்றுள்ளது. இரண்டு பக்கத்திலும் இதற்கு அடுத்துள்ள ஆலசன்களான குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைக் கொண்டதாக புரோமின் திகழ்கிறது. புரோமினின் எலக்ட்ரான் அமைப்பு [Ar]3d4s4p ஆகும். நான்காவதாகவும் வெளிக்கூடாகவும் உள்ள சுற்றுப்பாதையில் 7 எலக்ட்ரான்களைப் பெற்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் செயல்படுகிறது . மற்ற ஆலசன்களைப் போல எட்டு எலக்ட்ரான் கூட்டை நிறைவு செய்ய புரோமினுக்கு ஒரு எலக்ட்ரான் குறைவாக உள்ளது. இதனால் இதுவொரு வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராகும். பல தனிமங்களுடன் வினைபுரியும் எலக்ட்ரான் அமைப்பையும் இது பெற்றுள்ளது. தனிமவரிசை அட்டவணையின் போக்கிற்கு தக்கவகையில் புரோமினுடைய எலக்ட்ரான் ஏற்புத்தன்மை குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட மதிப்பை கொண்டுள்ளது. (F: 3.98, Cl: 3.16, Br: 2.96, I: 2.66) குளோரினைவிட குறைவான வினைத்திறனும் அயோடினை விட அதிக வினைத்திறனையும் புரோமின் பெற்றுள்ளது. இதேபோலவே ஆக்சிசனேற்றும் பண்பிலும் குளோரினைவிட வலிமை குறைந்தும் அயோடினைவிட வலிமை மிகுந்தும் காணப்படுகிறது. ஒடுக்கும் பண்பில் அயோடைடை விட வலிமை குறைந்தும் குளோரினைவிட வலிமை மிகுந்த நிலையையும் புரோமின் பெற்றுள்ளது. குளோரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் இத்தகைய ஒற்றுமைகள் ஒரு புதிய வகைப்பாட்டுக்கு அடிப்படையாய் அமைந்தன. யோகான் உல்ப்காங்கு டோபரினர் இவற்றை மும்மைகள் என்று வகைப்படுத்தினர். தனிமங்களுக்கான தனிமவரிசை விதியை உருவாக்கினார். புரோமினின் அணு ஆரம் குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் அணு ஆரங்களுக்கு இடைப்பட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இதனால் எலக்ட்ரான் நாட்டம், அயனியாகும் ஆற்றல், பிரிகை என்தால்ப்பி, போன்ற பல்வேறு அணு பண்புகளிலும் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடைப்பட்ட தன்மையையே புரோமின் வெளிப்படுத்துகிறது. புரோமினின் ஆவியாகும் பண்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வேகமான ஊடுறுவலும் அடைக்குந்தன்மையும் விரும்பத்தகாத நெடியையும் கொண்டிருக்கிறது. சோனியா அகர்வால் சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28, 1982, பஞ்சாப்), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. நடித்த சின்னத்திரை தொடர்கள் புரோமினின் ஓரிடத்தான்கள் புரோமின் (Br) தனிமம் Br, Br ஆகிய இரண்டு நிலையான ஓரிடத்தான்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 30 தெரிந்த கதிரியக்க ஓரிடத்தான்களையும் கொண்டுள்ளது. இவற்றில் Br இன் அரைவாழ்வுக் காலம் 57.036 ஆகும். புளோரினின் ஓரிடத்தான்கள் ஃப்ளூரினானது பல ஓரிடத்தான்களைக் கொண்டிருந்த போதிலும் அவற்றுள் ஒன்று மட்டுமே நிலையானது ஆகும். இதன் படித்தர அணு நிறை : 18.9984032(5) அணு நிறை அலகு ஆகும். F என்ற ஃப்ளூரினின் அணுக்கருவானது அதிகபட்சமாக 110 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் என்ற அளவிலான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளது. இது பாசிட்ரான்களின் முதன்மையான மூலம் ஆகும். இது பாசிட்ரான் உமிழ் வெட்டுவரைவு வருடலில் (Positron Emission Tomography scanning) பயன்படுகிறது. அகளங்கன் அகளங்கன் வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு என்ற சிறுகிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. 1970களில் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் 2005 வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, நாடகம், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற காலத்திலேயே கலை இலக்கியச் செயற்பாடுகளில் நாட்டம் ஏற்பட்டது. வில்லுப்பாட்டு, பேச்சு முதலானவற்றிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபடத் தொடங்கினார். பின் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் க.பொ.த. உயர் தரம் கற்கும் பொழுது கவியரங்குகளில் பங்குபற்றும் வாய்ப்பும் கிட்டியது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, பேச்சு ஆகிய துறைகளில் ஈடுபட்டார். கணித விஞ்ஞானத்துறையில் கற்று அத்துறையில் ஆசிரியப்பணி புரிந்தபோதும், சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில் சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி. சிவஞானசுந்தரம் அவர்களின் ஆலோசனையின்படி "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார்.தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார். வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கியவர். எழுபதுகளின் பிற்பகுதியிலேயே இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார். இவரின் ஜின்னாவின் "இரட்டைக்காப்பிய ஆய்வு" என்ற நூல் தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீபியால் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள் ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. வாலி ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணைப்பாடநூலாக பயன்படுகின்றது. ஏற்கனவே வெளியிடப்பட்ட இவரது 30 நூல்களோடு, - கம்பனில் நான்- கட்டுரைகள்,`தமிழர்- கட்டுரைகள்,`பாரதியாரும் பாவையரும்'-ஆய்வு ஆகிய மூன்று நூல்கள் அச்சில் உள்ளன, அவற்றை விரைவில் வெளியிடவுள்ளார். காரக்கனிம மாழைகள் காரமண் உலோகங்கள் "(Alkaline earth metals)" என்பவை தனிம வரிசை அட்டவணையில் 2ஏ தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்க்களைக் குறிக்கிறது. காரக்கனிம மாழைகள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கிறார்கள். பெரிலியம் (Be), மக்னீசியம் (Mg), கால்சியம் (Ca), இசுட்ரோன்சியம் (Sr), பேரியம் (Ba), ரேடியம் (Ra) உள்ளிட்ட தனிமங்கள் கார மண் உலோகங்க்கள் எனப்படும் இப்பிரிவில் அடங்க்கியுள்ளன. இத்தனிமங்கள் அனைத்துமே உலோகங்க்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான பண்புகளைப் பெற்றுள்ளன. அனைத்தும் வெள்ளியைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்டவையாக உள்ளன. சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வினைத்திறன் கொண்டவையாக உள்ளன. கட்டமைப்பின் படி இக்குழுவில் உள்ள தனிமங்கள் அனைத்தும் வெளிக்கோள வட்டத்தின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பில் பொதுவாக எசு எலக்ட்ரான் கூட்டைப் பெற்றுள்ளன. இக்கூடுகள் முழுமையாக நிரப்பப்பட்டும் உள்ளன. அதாவது இச்சுற்றுப்பாதைக்கு உரிய இரண்டு எலக்ட்ரான்களையும் இவை பெற்றுள்ளன. இத்தனிமங்கள் தங்கள் வெளிக்கூட்டு இரண்டு எலக்ட்ரான்களை இழந்து +2 என்ற மின் சுமையுடைய நேர்மின் அயனிகளாகவும், +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையை அடையவும் தயாராக இருக்கின்றன. கண்டறியப்பட்ட அனைத்து கார மண் உலோகங்க்களும் இயற்கையில் கிடைக்கின்றன. இக்குழுவில் இடம்பெறலாம் என்று கருதப்படுகிற அணு எண் 120 கொண்ட ஒரு தனிமத்தைக் கண்டறிய பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மற்ற குழுக்களைப் போலவே இக்குடும்பத்தில் உள்ள தனிமங்களும் ஒரே மாதிரியான எலக்ட்ரான் ஒழுங்கமைவையே கொண்டுள்ளன. குறிப்பாக வேதி வினைகளில் தொடர்புடைய வெளிவட்டப்பாதைகளின் எலக்ட்ரான் கூடுகளில் ஒரேமாதிரியான தன்மையை கொண்டிருக்கின்றன. இதனால் இக்குழுவில் உள்ள தனிமங்களின் வேதிப் பண்புகளில் ஒற்றுமை காணப்படுகிறது. இக்குழுவின் முதல் ஐந்து தனிமங்களின் பண்புகளை ஒப்பிட்டே அனைத்து வேதிப்பண்புகளும் ஒப்பு நோக்கப்படுகின்றன. ரேடியம் தனிமத்தின் பண்புகள் அதனுடைய கதிரியக்கத்தன்மை காரணமாக இன்னும் முற்றிலுமாக வரையறுக்கப்படவில்லை. எனவே அதனுடைய பண்புகளை இந்த ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. காரமண் உலோகங்கள் அனைத்தும் வெள்ளி தனிமத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்டவையாகும். மென்மையானவை மற்றும் குறைவான அடர்த்தி கொண்டவையாகும். உருகுநிலை மற்றும் கொதி நிலையும் இவற்றுக்கு குறைவு. cலசன்களுடன் வினை புரிந்து காரமண் உலோக ஆலைடுகளை உருவாக்குகின்றன. பெரிலியம் குளோரைடைத் தவிர இதர ஆலைடுகள் அனைத்தும் அயணிப் பிணைப்பைக் கொண்ட படிகச் சேர்மங்களாக உள்ளன. பெரிலியம் குளோரைடு மட்டும் சகப்பிணைப்புடன் காணப்படுகிறது. பெரிலியத்தைத் தவிர இக்குழுவிலுள்ள இதர தனிமங்கள் யாவும் தண்ணீருடன் வினைபுரிந்து வலிமையான கார ஐதராக்சைடுகளைக் கொடுக்கின்றன. எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். கனமான காரமண் உலோகங்கள் இலேசான காரமண் உலோகங்களைக் காட்டிலும் தீவிரமாக வினைபுரியும் தன்மையைக் கொண்டுள்ளன. கார உலோகங்க்களின் அணுக்களைக் காட்டிலும் இவற்றின் அணுக்கள் சிறியவையாக இருப்பதாலும், அணுக்கருக்களின் மின் சுமை கூடுதலாக இருப்பதனாலும் காரமண் உலோகங்களின் எலக்ட்ரான்கள் மிகவும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே முதல் எலக்ட்ரானை நீக்குவதற்குத் தேவையான முதல் அயனியாக்கும் ஆற்றல் கார உலோகங்களுக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிகமாகும். முதல் எலக்ட்ரான் நீக்கப்பட்டவுடன் முடிவான மின் சுமை கூடுகிறது. எனவே இரண்டாவது எலக்ட்ரானை நீக்குவதற்குத் தேவையான இரண்டாவது அயனியாக்கும் ஆற்றல் முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டு மடங்காகும். தொகுதியில் பெரிலியத்திலிருந்து பேரியத்திற்குக் கீழிறங்கும் போது முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல்கள் குறைகின்றன. அணு ஆரங்க்கள் அதிகரிப்பதும் இதன் காரணமாக வெளி எலக்ட்ரான்களுக்கும் உட்கருவிற்கும் இடையே உள்ள தூரம் அதிகரிப்பதும் இதற்கு காரணங்களாகும். பெரிலியம் மட்டும் விதிவிலக்காக தண்ணிர் மற்றும் நீராவியுடன் வினைபுரிவதில்லை. இதனுடைய ஆலைடுகளும் சகப்பிணைப்பும் கொண்டவையாக உள்ளன. ஒருவேளை பெரிலியம் +2 ஆக்சிசனேற்ற விலை கொண்ட தனிமங்க்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கினால் அவை அவற்ருக்கு அருகிலுள்ள எலக்ட்ரான் மேகத்தை முனைவுறச் செய்து விரிவான ஆர்பிட்டல் மேற்பொறுந்தலைச் செய்கின்றன. ஏனெனில் பெரிலியத்தின் மின் சுமை அடர்த்தி அதிகமாகும். பெரிலியத்தைக் கொண்டுள்ள எல்லா சேர்மங்க்களும் சகப்பிணைப்பைக் கொண்டுள்ளன. பெரிலியத்தின் அயனிச் சேர்மமாகக் கருதப்படும் பெரிலியம் புளோரைடும் கூட குறைந்த உருகு நிலையும், குறைந்த மின் கடத்துத் திறனும் கொண்டதாக உள்ளது. கிடைக்குழு 5 தனிமங்கள் தனிம அட்டவணையில் கிடைக்குழு 5 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 5 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். அவையாவன: உபபாண்டவர்கள் உபபாண்டவர்கள் மகாபாரதத்தில் வரும் பாண்டவர் ஐவருக்கும் திரௌபதைக்கும் பிறந்தவர்கள் உபபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் பீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மா சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள். இவர்கள் ஐவரின் தாய் திரௌபதி ஆவாள். குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் இரவில் துரோணரின் மகன் அசுவத்தாமன் இவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டார். குருச்சேத்திரப் போர் எஸ். ராமகிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணன் (ச. இராமகிருட்டினன்) (பிறப்பு: ஏப்ரல் 13, 1966) என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். "சஞ்சாரம்" என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார். தற்சமயம் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய "துணையெழுத்து", "கதாவிலாசம்", "தேசாந்திரி", "கேள்விக்குறி" ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார். "இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று ஜெயமோகனும், "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர். புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார். வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011ஆம் ஆண்டுக்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்திய அகாதமியும் இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது "யாமம்" புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது. இவர் எழுதிய "அரவான்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன: சஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது. பிதின் (2017) ===குழந்தைகள் நூல்கள்=== கள் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது. பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு. சண்டக்கோழி படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார். ரமேஷ் - பிரேம் பின் – நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் – பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். பாண்டிச்சேரி அரசின். ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரமேஷ், முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பிரேம், டெல்லி பல்கலைக்கழகத்தில் ”Indian languages and Literary Studies” துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். கலாபகசுத் தீவுகள் கலாபகசுத் தீவுகள் ("'Galápagos Islands", Archipiélago de Colón; வேறு ஸ்பானியப் பெயர்கள்: "Islas de Colónumio" அல்லது "Islas Galápagos") என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் (). கிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்காவின் எக்குவாடோர் நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் "புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ" ("Puerto Baquerizo Moreno"). சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன. இங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் 2007 இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின. கலாபகசுத் தீவுகளுக்கு ஐரோப்பியரின் வருகை மார்ச் 10, 1535 இல் ஆரம்பமானது. பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. 1593ல் ஆங்கிலேயர் "ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக 19ம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்கு பொன், வெள்ளி போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது. 1793இல் ஜேம்ஸ் கோல்நெட் என்பவர் பசிபிக் கடலில் திமிங்கில வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான ஆமைகளை அவற்றின் கொழுப்புகளுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முற்றாக அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் எக்குவாடோர் கலாபகசுத் தீவுகளை பெப்ரவரி 12, 1832இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவை எக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்பட்டன. இதன் முதலாவது ஆளுநர் ஜெனரல் ஜோசே டெ வில்லாமில் என்பவர் பல சிறைக்கைதிகளை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார். அதன்பின்னர் பல அக்டோபர், 1832இல் பல விவசாயிகளும் குடியேறினர். உப பாண்டவம் உப பாண்டவம் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நவீன நாவல் ஆகும். இந்த நாவல் மகாபாரதத்தின் மீதான ஒரு புனைவாகும். இந்நாவல் மகாபாரதக்கதையில் வரும் துணைக் கதாபாத்திரங்களின் வழியாக பாரதத்தைச் சொல்லும் கதையாகும். "வார்த்தைகள் தன் நாவில் புரண்டு விடக்கூடாது என்பதற்காக கூழாங்கற்களை நாவினடியில் வைத்தபடி நிர்வாணியாக நிற்கிறான் விதுரன். யுதிஷ்ட்ரன் யாசிக்கிறான். விதுரன் கூர்மையான ஈட்டியைப் போல ஒரேயொரு பார்வை பார்க்கிறான். பின்பு மரங்களுக்கு இடையே மறைந்துவிடுகிறான். விதுரனின் கூழாங்கற்கள் தெறித்துவிழுகின்றன. அது பாஷையை விழுங்கிவிட்டது." "கங்கையில் யாத்ரீகர்களின் கூட்டம். படகில் யாரோ பாடுகிறார்கள். வேடர்கள் மானைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். மீன்கள் நதியினுள் ஒளிந்து கொண்டுவிட்டன. வானம் ரத்தநிறம் கொள்கிறது. குதிரைகளில் வீராதிவீரர்கள் சண்டையிடுகிறார்கள். கங்கைதான் சாட்சியாக இருக்கிறாள். கங்கையின் கண்களைப் பாருங்கள். அதில் உங்கள் மூதாதையர்களின் சாடை ஒளிந்து கொண்டிருக்கும். பாடல் நதியில் மிதந்து போய்க் கொண்டேயிருக்கிறது." "உப பாண்டவம் நவீன நாவல். மஹாபாரதத்தின் மீதான புனைவு. இது விதுரனின் நாவில் அடக்கிய கூழாங்கல்." பூஜா (நடிகை) பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 1810 1810 (MDCCCX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது. 1916 1916 (MCMXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. கொழும்பில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கையின் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் சேகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்புவதற்கு இந்திய அரசிடம் அனுமதி வேண்டி, அந்த கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் பழ. நெடுமாறன் செப்டம்பர் 12, 2007 அன்று காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கினார். தமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி செப்டம்பர் 14, 2007 அன்று பழ. நெடுமாறனுக்கு ""தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன். ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்"." என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், பழ. நெடுமாறன் அந்த இரு நாட்கள் வரைக்கும் உண்ணாநோன்புப் போராட்டம் தொடரும் என்று பதில் அனுப்புனார். இதன் பின்னர் செப்டம்பர் 15, 2007 அன்று மதியம் பா.ம.க. நிறுவனர் இராமதாசு மு. கருணாநிதி வழங்கிய உறுதிமொழியைத் தெரிவித்து விளக்கியதை அடுத்து பழ. நெடுமாறன் தனது போராட்டத்தை பழச்சாறு உட்கொண்டு முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த உண்ணாநோன்புப் போராட்டம் நான்கு நாட்கள் நீடித்தது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்ப்பட நடிகர் சரத் குமார் தலைமையில் ஆகஸ்ட் 31, 2007 தொடக்கப்பட்ட இந்திய-தமிழக அரசியல் கட்சியாகும். அப்துல் கலாம், காமாராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார். க. கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி ("K. Krishnasamy") ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். கிருஷ்ணசாமி பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர் எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம் நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி குடும்பனார் ஒரு விவசாயி. தாய் தாமரையம்மாள் ஒரு இல்லத்தரசி. உயர்நிலை பள்ளிப்படிப்பினை பூளவாடிஎன்ற ஊரிலும், புகுமுக வகுப்பினை அரசினர் கலைக்கல்லூரியிலும் முடித்தார். பின்னர் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் வேளாண் படிப்பில்சேர்ந்தார். அங்கே 45-நாட்கள் மட்டுமே கல்வி பயின்றார். வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுறுத்தலின்படி வேளாண்மைக் கல்வியைத் தொடராமல் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1972–75) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கே இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயின்று, கல்லூரி இடமாறுதல் அனுமதி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் (1975–78) மூன்றாம் ஆண்டு துவங்கி பயிற்சி மருத்துவர் பணி வரை இங்கேயே மருத்துவ கல்வி கற்றார். முதுநிலை மருத்துவத்தை கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் (1982–84) முடித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்களுக்காக வாதாடியவர். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். இவர் 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். , அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார் தேவேந்திர குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன. அமெரிக்க சமோவா அமெரிக்க சமோவா தெற்கு பசிபிக் பெருங்கடலில் சுதந்திர நாடான சாமோவாவுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உள்ளிணைக்கப்படாத ஆட்சிப் பகுதியாகும். இதன் முக்கிய தீவு துதுய்லா வாகும் இதனோடு மனுவா, ரோஸ் பவளத்தீவுகள், சுவானிஸ் தீவுகள் என்பனவும் இவ்வாட்சிப் பகுதியில் அடங்குகின்றன. குக் தீவுகளுக்கு மேற்காகவும், டொங்காவுக்கு வடக்காகவும் டொகெலாவுவில் இருந்து சுமார் 300 மைல் (500 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ள அமெரிக்க சமோவா,சமோவா தீவுத் தொடரின் ஒரு பகுதியாகும். அமெரிக்க சமோவாவுக்கு மேற்கில் வலிசு-புடானா தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பீட்டின் படி ஆட்சிப் பகுதியின் மொத்த 200.22சதுர கிலோமீட்டர் பரப்பில் 57,291பேர் வசிக்கின்றார்கள். கியார்கு கேன்ட்டர் கியார்கு கேன்ட்டர் (Georg Cantor) (மார்ச் 3, 1845 - ஜனவரி 6, 1918) வரலாற்றுப் புகழ்மிக்க கணிதவியல் கருத்துக்களை முன் வைத்த செர்மன் கணிதவியலாளர் ஆவார். இவர் முன்வைத்த கணக் கோட்பாடுகள் கணிதவியலுக்கே அடித்தளம் தரும் அடிப்படைக் கொள்கை என்று போற்றப்படுகின்றன. இவருடைய முழுப்பெயர் "கியார்கு ஃவெர்டினாண்டு லூடுவிக் ஃவிலிப் கேன்ட்டர்" (Georg Ferdinand Ludwig Philipp Cantor) என்பதாகும். இவர் கணங்களுக்கு இடையே தனித்தனியாய் ஒன்றுக்கு-ஒன்றாக தொடர்பு பார்ப்பது பற்றிய சிறப்பை நிலைநாட்டினார், முடிவிலி மற்றும் சீரடுக்குக் கணங்களை வரையறுத்தார், மெய் எண்கள், இயல் எண்களைக் காட்டிலும் அதிகமானவை என்று நிறுவினார். கேன்ட்டரின் தேற்றத்தின் நீட்சியின்படி "முடிவிலா (எண்ணற்ற) முடிவிலிகள்" உள்ளன. கேன்ட்டரின் கள் (transfinite numbers) என்னும் கோட்பாடு கணிதவியலாளர்கள், மெய்யியலாளர்கள், மற்றும் சமயவாதிகளிடமிருந்து மிகுந்த எதிர்ப்பைச் சந்தித்தது. புகழ்மிக்க கணிதவியலாளர்களாகிய லியோபோல்டு குரோனெக்கர் (Leopold Kronecker), என்றி பாயின்க்கரே (Henri Poincaré) முதலானோரும் , பின்னர் எர்மன் வெய்ல் (Hermann Weyl), புரௌவெர் (L.E.J. Brouwer) முதலானோரும் இக்கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தனர். லூடுவிக் விட்கென்சுட்டைன் (Ludwig Wittgenstein) என்னும் மெய்யியலாளரும், கிறித்தவ மதத்தினரும் எதிர்த்தனர் ஒருமுறை வரைமீறு எண்களின் கோட்பாட்டை எல்லாக் கடவுள்களையும் ஏற்கும் மதத்துக்கு (pantheism) ஒப்பாகக் கூறினார் . பாயின்க்கரே கேன்ட்டரின் கருத்தை கணிதவியலில் "பெரும் நோய்" ("grave disease") என்றும், குரோனெக்கர், கேன்ட்டரை "அறிவியல் ஏமாற்றுக்காரர்" ("scientific charlatan"), "இளைஞர்களை கெடுப்பவர்" ("corrupter of youth.") என்றெல்லாம் கூறி கடுமையாக தாக்கினர். கேன்ட்டர் இறந்து பல பத்தாண்டுகள் கழித்தும் விட்கென்ஸ்ட்டைன் கடுமையான சொற்களால் அவருடைய கணிதவியல் கருத்துக்களைத் தாக்கினார் ("முற்றிலும் பொருளற்றது", "ridden through and through with the pernicious idioms of set theory," , "utter nonsense", "laughable" and "wrong".) ஒருபுறம் இப்படிக் கடுமையாக தாக்குண்டாலும், அனைத்துலகப் புகழும், பரிசுகளும் அவருக்கு கிடைத்தன. இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டி 1904ல் சில்வெசுட்டர் பதக்கம் தந்து பெருமை படுத்தியது . இன்று கணிதவியலாளர்கள் கேன்ட்டரின் கோட்பாடுகள் கணிதவியலுக்கே அடித்தளம் தரும் முதன்மைப் படைப்புகள் என்று பாராட்டுகின்றனர். ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலமான 15ஆம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டின் முன்பாதி வரையில் கணிதம் வளர்ந்துவந்த விதத்தில் மூன்று சிக்கல்கள் கணிதவியலாளர்களின் ஓயாத தலைவலியாகவே இருந்து வந்தன. அவை: இம் மூன்றும் அடிக்கடி ஒன்றுக்கொன்றுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு குழப்பத்தை உண்டாக்கின. நுண்ணளவுக் கருத்தை நியூட்டனும் லைப்னிட்சும் அவர்களிடைய நுண்கணிதத்தில் உண்டாக்கிய எல்லை(வரை) என்ற கருத்தினால் விளக்கம் கொடுக்க முயன்றனர். பிறகு அக்கருத்தே 19ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பகுவியல் நிபுணர்கள் காழ்சி, (Cauchy) காஸ், வியர்சிட்ராசு முதலியோரால் விளக்கப்படும் வரையில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. அவர்களுடைய 'எல்லை'க்கருத்தும், 'தொடர்ச்சி' என்ற கருத்தும் 19ஆம் நூற்றாண்டில் பகுவியலில் ஏற்பட்ட 'கண்டிப்பு' (Rigour) என்ற சீராக்கத்தினால் பல விதமாகத் துடைத்து மெருகு கொடுக்கப்பட்டது. ஆனால் இவ்விரண்டு கருத்துகளும் சீராக்கப்பட்டபின்பும் 'முடிவிலி' என்ற கருத்தில் ஒரு முக்கியமான பாகம் விளக்கப்படாமலே இருள் படர்ந்திருந்தது. இவ்விருளிற்குக் காரணம், முடிவிலி என்ற கருத்தின் கருவில் இரண்டு வேடங்கள் உள்ளன என்பது. இவ்விரண்டு வேடங்களில் முதல் வேடத்தின் சிக்கல்களை 19ஆம் நூற்றாண்டின் பகுவியல் சிங்கங்கள் அவிழ்த்து விட்டு விட்டன. ஆனால் இரண்டாவது வேடத்தின் நிழல்கள் அத்துடன் கலக்கப்பட்டு பல குழப்பங்களுக்குக் காரணமாயிருந்தன. இதை போக்கியவர் கேன்ட்டர். அதில் வரலாற்றுச் சிறப்பு என்னவென்றால், கேன்ட்டரின் முடிவுகளால், இக்குழப்பம் தீர்ந்த சிறப்பு சிறப்பல்ல; அவரின் தேற்றங்களால், இருபதாம் நூற்றாண்டின் கணிதத்தில் ஒரு புது சகாப்தமே தோன்றியதுதான் சிறப்பு. அதனால் கேன்ட்டரின் கணக்கோட்பாடு கணிதத்தின் மேகங்கள் படிந்த பழைய கோட்டையையே இடித்துவிட்டு புதிதான கணிதச் செயல்பாடுகளுக்கு ஒரு அடித்தளக் கோட்பாடாக அமைந்தது. கியார்கு கேன்ட்டர் யூதர் குடும்பத்தில் உருசியாவில் செயின்ட் பீட்டர்சுபர்க்கில் பிறந்தார். அவர் தந்தை டென்மார்க் நாட்டில் பிறந்து உருசியாவில் வணிகத் தொழில் புரிந்துகொண்டிருந்தார். உடல்நிலை காரணமாக 1856 இல் செருமனியில் பிரான்க்ஃபர்ட் நகருக்குக் குடிபெயர்ந்தார். கியார்குவின் குடும்பத்தில் தாய் வழியில் கலை உணர்வும் இசைத் திறன்களும் நிறைய இருந்தன. கியார்குவின் கலை ஆர்வம் அவருடைய கணித ஆய்வுகளில் மலர்ந்தன. 15 வயதுக்கு முன்னரே அவருடைய கணித ஆர்வமும் திறமையும் அவருடைய ஆசிரியர்களுக்கு வெளிப்பட்டுவிட்டன. ஆனால் அவர் தந்தை அவரை பொறியியலில் மேற்படிப்பு படிக்கவைக்க முயன்று நல்ல பிராட்டெசுட்டெண்ட் கிறித்தவனாகவும் தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்றும் இருந்த மகனை அத்திசையிலேயே இரண்டாண்டுகள் இயக்கிவிட்டார். இவ்வியக்கம் பலனில்லாமல் போகவே கியார்கு மறுபடியும் கணிதப் படிப்புக்கே வந்தார். ஆனால் இவ்விரண்டாண்டுகளில் அவருடைய தன்னம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டது. இதுவே பிற்காலத்தில் அவரால் கிரானெக்கர் முதலியோரின் கணிதத்தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் செய்துவிட்டது. 1862 இல் இசூரிக் நகரில் பல்கலைக்கழகப் படிப்பைத்தொடங்கினார். அடுத்த ஆண்டே பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். கணிதம், தத்துவம், இயற்பியல் இவை மூன்றும் முக்கிய பாடங்கள். கணிதத்தில் அவருடைய ஆசிரியர்களில் இருவர் கம்மர், வியர்சிட்ராசு ஆகிய இரு தலைசிறந்த கணிதவியலாளர்கள். மூன்றாமவரும் (கிரானெக்கர்) தலைசிறந்தவர்தாம்; ஆனால் பிற்காலத்தில் கேண்ட்டரின் முழு எதிரியாகப் போகிறவர். 1867 இல் காசின் Disquisitiones Arithmeticae வைப்படித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். முப்பதாவது வயது வரையில் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. 30ஆம் வயதில் (1874 இல்) கிரெல்சு ஆய்வுப்பத்திரிகையில் அவருடைய பெயரில் வெளியான கட்டுரை கணித உலகில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. அவ்வாண்டிலிருந்து 1897 வரையில் பல கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. இவைகளின் நுணுக்கங்களை எண்ணுறுமையும் எண்ணுறாமையும் என்ற கட்டுரையில் பார்க்கவும். முக்கியமாக முடிவிலி என்ற எண்ணளவை 'ஒன்றுக்கொன்றான இயைபு' (one-one correspondence) என்ற கருத்தை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்ட கருத்து; அதை சாதாரண இயலெண்கள் போல் செயல்படுத்தமுடியாது. இவ்விதம் தொடங்கி அவருடைய முடிவுகள் ஒரு நீண்ட கோட்பாடாகவே மலர்ந்தன. அவருடைய தேற்றங்களில் மிகவும் புரட்சிகரமாகத் தோன்றிய ஒன்று: எல்லா இயற்கணித எண்களின் கணமும் எல்லா விகிதமுறு எண்களின் கணமும் ஒரே முடிவிலா எண்ணளவையைக்கொண்டவை என்பது. கிரானெக்கர் இதற்கு அடியோடு மறுப்பு தெரிவித்தார். பெர்லினில் கேன்ட்டர் எதிர்பார்த்த பேராசிரியர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை. ஃகால் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். 1872 இல் அங்கு துணைப்பேராசிரியரகவும், 1879 இல் முழுப்பேராசிரியராகவும் ஆனார். கேண்ட்டருடைய தேற்றங்களில் பல "இருப்புத் தேற்றங்களே" (Existence Theorems). கிரானெக்கரும் இன்னும் சிலரும் இருப்புத் தேற்றங்கள் எவற்றை 'இருப்பதாகச்' சொல்கின்றனவோ அவற்றைப் படைக்க (construct) அவை வழிகோலவில்லை யென்பதால் இருப்புத் தேற்றங்களை மாத்திரம் வைத்து செயல்படக்கூடாது என்று வாதித்தனர். இந்த வாதத்தை கேண்ட்டரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1884 இலிருந்து, அதாவது அவருடைய 40ஆம் வயதிலிருந்து அடிக்கடி அவருக்கு மனச்சோர்வு (depression) ஏற்பட்டு அது ஒரு பிணியாகவே அவரைத் துன்புறுத்தி கடைசியில் அவரை மனநல மருத்துவ மனையில் கொண்டு சேர்த்துவிட்டது. இருப்பு, படைப்பு, ஆகிய இருமுனைக்கருத்துகளும் இருபதாம் நூற்றாண்டில் கணிதவியலாளர்களையே இரு சாராராக வகுக்கும் நிலையை உண்டாக்கியது. கணக்கோட்பாடு துவக்கிய வாக்குவாதங்களும், குறிப்பாக கிரானெக்கருடைய மறுப்புகளும் கேன்ட்டரை செருமானிய கணித ஐக்கியத்தை (Deutsche Mathematiker Vereinigung) நிறுவுவதில் கவனம் செலுத்தத் தூண்டியது. 1890 இல் கேன்ட்டர் தான் அதன் தலைவராக இரூந்தார். அவைக்கியத்தின் குறிக்கோள் அது ஒரு பன்னாட்டு விவாத மேடையாக இருக்கவேண்டும் என்பதே. கேன்ட்டரின் பெருந்தன்மை அவர் அதன் முதல் சொற்பொழிவையே கிரானெக்கரைக் கொண்டு நடத்த முயன்றதுதான். ஆனால் கிரானெக்கர் உடல்நலம் சரியில்லாததாகச் சொல்லி அழைப்பை மறுத்து விட்டார். முடிவுறா கணங்களின் எண்ணளவைகள் பற்றி 1904 இல் அவ்வைக்கிய மேடையில் விரிவாகப் பேசப்பட்டது. மிக அபூர்வமாகக் கொடுக்கப்படும் பிரித்தானிய ராயல் சொசைட்டி இன் சில்வெசிட்டர் மெடல் கேன்ட்டருக்குக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வெண்கலப் பதக்கத்தை ராயல் சொசைட்டியினர் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்குகின்றனர். சைதாப்பேட்டை சைதாப்பேட்டை ("Saidapet") சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கிய பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாக செல்கிறது. கிடைக்குழு 6 தனிமங்கள் தனிம அட்டவணையில் கிடைக்குழு 6 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 6 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இவற்றுள் லாந்தனைடுகளும் அடங்கும் அவையாவன: கிடைக்குழு 7 தனிமங்கள் தனிம அட்டவணையில் கிடைக்குழு 7 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 7 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இக் கிடைவரிசையில்தான் நில உருண்டையில் கிடைப்பவற்றிலேயே நிறைமிகுந்த யுரேனியம் என்னும் தனிமமும் உள்ளது. இவ்வரிசையில் ஆக்டினைடுகளும் அடங்கும். யுரேனியத்தைவிட அதிகமான அணுநிறை (அணுத்திணிவு) கொண்ட செயற்கையாக செய்யப்பட்ட புதுத் தனிமங்கள் உள்ளனவென்றாலும், புளூட்டோனி்யத்தைத் தவிர மற்றவை மிக மிக சிறிதளவே உருவாக்கப்பட்டுள்ளன (சில ஒரு சில அணுக்கள் மட்டுமே!!). புளூட்டோனியம் டன் அளவில் உற்பத்தி செய்யபட்டுள்ளன. கொதிநிலை வாரியாக தனிமங்களின் பட்டியல் இப்பட்டியலில் கொதிநிலை வாரியாக வேதியியல் தனிமங்கள் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த கொதிநிலைகள் சீரழுத்த வெப்பநிலையில் அளக்கப்பட்டவை. The boiling points of these elements are not yet known ₩”Ŏ அந்தோரா அந்தோரா (காத்தலான் மொழி: :"Andorra") உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது. அதிகாரப் பூர்வமாக ஸ்பெயின் நாட்டின் பிஷப்பும், மற்றும் பிரான்ஸ் நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள். அந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும். மில் எம்.ஐ.-24 மில் எம்.ஐ.-24 பெரிய தாக்குதல் உலங்கு வானூர்தியும் சிறிய கொள்ளளவைக் கொண்ட படையினர் காவும் வானூர்தியுமாகும். 1976 ஆம் ஆண்டு சோவியத் வான்படைக்காக மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. சோவியத் பிளவின் பின்னர் தோன்றிய நாடுகளில் வான்படைகளும் மேலும் வேறு நாடுகளும் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன. எம்.ஐ.-25, எம்.ஐ.-35 என்பன ஏற்றுமதிக்கான சில வேறுபாடுகளாகும். இலங்கை வான் படை ஈழப்போரில் பயன்படுத்தி வருகின்றது. ஜோர்தான் ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடாகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும். ராய் இசை ராய் இசை (Raï) அல்ஜீரியாவின் ஒரான் பிரதேசத்திலிருந்து தோன்றிய பாரம்பரிய இசை வடிவமாகும். ராய் என்ற அரபுச் சொல் கருத்து என்று பொருள்படுவதாகும். ஸ்பானிய, பிரெஞ்சு, ஆபிரிக்க, அரேபிய இசை வடிவங்களும் கலந்த இவ்விசை வடிவம் 1930களில் தோன்றியதாகும். பாரம்பரியமாக ஆண்களால் பாடப்பட்டபோதும் இருபதாம் நூற்றாண்டிலிருந்து பெண்களாலும் பாடப்படுகிறது. 1980களில் ராய் மிகுந்த பிரபலமடைந்தது. 1986 இல் அல்ஜீரியாவிலும் பிரான்சிலும் ராய் விழாக்கள் நடைபெற்றன. 1990களில் ராய் சர்வதேச அளவில் பிரபலமடைந்தது. 1862 1862 (MDCCCLXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். ஹிப் ஹாப் ஹிப் ஹாப் (இலங்கை வழக்கு ஹிப் ஹொப்) ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹாப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. ஹிப் ஹாப் பண்பாட்டில் உள்ள ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன. ஆபிரிக்க அமெரிக்கர் ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர். 1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார். மல்கம் எக்ஸ் மல்கம் எக்ஸ் ("Malcolm X", மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு ஆப்ரிக்க அமொிக்க முஸ்லிம் சமயஅமை ச்சரும் மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவாா். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உாிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்தவா், வெள்ளை அமொிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காக கடுமையான சொற்களால் இடித்தவா் என அறியப்படுகிறாா். எதிா்பாளா்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவா் என அவா் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவா் மிகப்பொிய செல்வாக்குமிக்க ஆப்ரிக்க அமொிக்க தலைவா்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறாா். அவருக்கு ஆறு வயது இருக்கையில் அவருடைய தந்தை கொல்லப்பட்டாா். பதிமூன்று வயதில் அவாின தாய் மனநல மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதன் பிறகு அவா் பல அனாதை இல்லங்களில் வாழ்ந்தாா். 1946ல், தன் இருபதாவது வயதில், திருட்டு மற்றும் உடைத்து அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களு்ககாக சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் அவா் இஸ்லாமிய தேசியஇனம் என்ற அமைப்பில் உறுப்பினராகி, மால்கம் லிட்டில் என்ற தன் பெயரை மால்கம் எக்ஸ் என மாற்றிக்கொண்டாா். பின்னாளில் அதன் காரணத்தை அவா் எழுதும்போது, லிட்டில் என்ற பெயா் " வெள்ளை அடிமைமுதலாளிகளால்...என் தந்தைவழி முன்னோா்கள் மீது சுமத்துப்பட்டது". 1952ல் அவர் பரோலில் வந்தவுடன், மிக விரைவிலேயே இஸலாமிய தேசியஇனம் என்ற அமைப்பின் செல்வாக்குமிக்க தலைவா்களில் ஒருவராகவும். கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் சா்ச்சைக்குாிய அந்த அமைப்பின் அறியப்படும் பொதுமுகமாகவும் ஆனாா். தன்னுடைய சுயசாிதையில் மால்கம் எக்ஸ் அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமூக சீா்திருத்த நடவடிக்கைகளை குறிப்பாக இலவச போதையடிமைகள் மறுவாழ்வு திட்டம் பற்றி பெருமையோடு குறிப்பிட்டாா். அந்த அமைப்பு கருப்பின மேட்டிமைவாதத்தை முன்னிலைப்படுத்தியது, கறுப்பின வெள்ளைஇன மக்கள் பிாிந்து வாழ்வதை வலியுறுத்தியது மற்றும் சமூக உாிமைகள் இயக்கத்தை வெள்ளைஇன மக்களோடு சோ்ந்து வாழ வலியுறுத்தியதற்காக நிராகாித்தது. 1964 மாா்ச் காலகட்டத்தில், இஸ்லாமிய தேசியஇனம் அமைப்பின் மீதும், அதன் தலைவா் எலியா முகம்மது மீதும் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவா்களோடு இருந்து தன்னுடைய நேரம் வீணடிக்கப்பட்டதாக அவா் நினைத்தாா், அதற்காக பலமுறை வருந்தி பின்னா் சன்னி இஸலாத்தில் இணைந்தாா். ஆப்ரிக்காவிலும். மத்திய கிழக்கிலும் பயணம் மேற்கொண்டு ஹஜ் செய்தது உட்பட தன் பயணக்காலத்திற்குப்பின தன் பெயரை அல்ஹாஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டாா்.அவா் இஸலாமிய தேசியஇனத்தை மறுத்து, நிறவெறியை நிராகாித்து முஸ்லிம் மசூதி மற்றும் ஆப்ரிக்க அமொிக்க ஐக்கியத்திற்கான அமைப்பை தோற்றுவித்தாா். அவா் ஆபாிக்க தொடா்புடையவை, கறுப்பின சுயநிா்ணயம் மற்றும் கறுப்பின தற்காப்பு குறித்து தொடா்ந்து வலியுறுத்தினாா். 21 பிப்ரவாி 1965ம் ஆண்டு. அவா் இஸ்லாமிய தேசியஇனத்தைச் சாா்நத மூன்று உறுப்பினா்களால் படுகொலை செய்யப்பட்டாா். மால்கம் லிட்டில் மே 19, 1925ல் நெப்ரஸ்கா மாநிலத்திலுள்ள ஒமாஹாவில் கிரானாடாவைச் சோ்ந்த ஹெலன் லுாயி லிட்டில் மற்றும் ஜாா்ஜியாவின் ஏா்ல் லிட்டில் தம்பதிகளின் ஏழு பிள்ளைகளில் நான்காவதாக பிறந்தாா். ஏா்ல் லிட்டில் பாப்டிஸ்ட் இயக்கத்தின் வெளிப்படையான பேச்சாளராக இருந்தாா். அவரும் லுாயியும் ஆப்ரிக்க செயற்பாட்டாளரான மாா்கஸ் காா்வியினால் ஈா்க்கப்பட்டனா். ஏா்ல் உலகளாவிய நீக்ரோ முன்னேற்ற சங்கத்தின்(UNIA)  உள்ளூர் தலைவராக செயல்பட்டாா். அவா் மனைவி லுாயி அச்சங்கத்தின் செயலாளராகவும் "கிளை செய்தியாளராகவும்" செயல்பட்டு, சங்கத்தின் உள்ளூர் செயல்பாடுகளை நீக்ரோ உலகம் என்னும் வாரப் பத்திாிக்கைக்கு செய்தி அனுப்பினாா். அத்தம்பதியினா் தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் கறுப்பின பெருமையையும் ஊட்டினா். பின்னாளில் மால்கம் எக்ஸ் கூறுகையில், வெள்ளையினத்தின் வன்முறை தன் தந்தையின் மூன்று சகோதரா்களை கொன்றுவிட்டது என்றாா். மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம் பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார். இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார். மல்கம் எக்சு 1965 இல் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது தன் வரலாறு நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது. 1964 மார்ச்சு 26 ஆம் பக்கலில் மார்டின் லூதர் கிங் சூனியரை மல்கம் எக்சு சந்தித்தார். இருவரும் சமூக உரிமைகளுக்கான விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார்கள். இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார். 1992 இல் "மல்கம் எக்ஸ்" என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் "மால்கம் எக்ஸ்" எனும் நூலைத் தொகுத்துள்ளார். அத்திலாந்திக் அடிமை வணிகம் அத்திலாந்திக் அடிமை வணிகம் ("Atlantic slave trade") எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் அத்திலாந்திக் பெருங்கடலை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர். 9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃபா என்பதன் கருத்து "பெரும் அழிவு" என்பதாகும். பழ. நெடுமாறன் பழ. நெடுமாறன் (10 மார்ச் 1933, மதுரை தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். அதனால் இந்திரா காந்தியால் “என் மகன்" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி "தமிழர் தேசிய இயக்கத்தை" தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார். 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி, பழ. நெடுமாறன், கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையைச்சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார். மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரிப்படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அண்ணாதுரையை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் எசு.டி.சோமசுந்தரத்துடன் இணைந்து ரூ.10,000 பணம் திரட்டி அளித்தார். "முதன்மைக் கட்டுரை: பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்" "(எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)" அங்கியுலா அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும். டாக் ஹமாஷெல்ட் டாக் ஜால்மர் அக்னி கார்ள் ஹமாஷெல்ட் ("Dag Hjalmar Agne Carl Hammarskjöld", , ஜூலை 29, 1905 – செப்டம்பர் 18, 1961) சுவீடனைச் சேர்ந்த தூதுவர், ஐக்கிய நாடுகள் அவையின் இரண்டாவது பொதுச் செயலராக ஏப்ரல், 1953 இலிருந்து 1961இல் விமான விபத்தொன்றில் இறக்கும்வரை பணியாற்றியவர். ட்றைகுவே லை ஐநா அவையின் பொதுச் செயலர் பதவியை 1953இல் துறந்ததும் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் தீர்மானப்படி டாக் இப்பதவியில் அமர்ந்தார். 1957ல் மீண்டும் இவர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் ஹமாஷெல்ட் இசுரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தார். சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 ஐக்கிய அமெரிக்க விமானிகளை விடுவிக்க 1955இல் சீனா சென்றார். 1960இல் முன்னாள் பெல்ஜியக் குடியேற்ற நாடும் புதிதாக விடுதலை அடைந்ததுமான கொங்கோவிக்கு உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முடிவு காண அங்கு 4 முறை சமாதானத் தூதுவராகச் சென்றார். செப்டம்பர் 1960இல் ஐநாப் படைகள் அங்கு செல்ல எடுத்த முடிவை சோவியத் ஒன்றியம் நிராகரித்தது. அத்துடன் டாக் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியது. . கட்டாங்கா மாநிலத்தை கொங்கோவுடன் மீண்டும் இணைக்க உதவி செய்யுமாறு பத்திரிசு லுமும்பாவின் கோரிக்கையை டாக் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் லுமும்பா சோவியத் நாட்டிடம் உதவி கோர முடிவு செய்தார். செப்டம்பர் 1961இல் கட்டாங்காப் படையினருக்கும் ஐநாப் படையினருக்கும் இடையில் போர் நிறுத்ததைக் கொண்டுவர அங்கு செல்லும் வழியில் வடக்கு ரொடீசியாவில் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் மோதியதில் அவரும் அவருடன் பயணம் செய்த 15 பேரும் கொல்லப்பட்டனர். இவ்விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.' ஹமாஷெல்ட் அமைதிக்கான நோபல் பரிசை 1961இல் இறந்த பின்னர் பெற்றார். ஆனாலும் இவரது பெயர் இவர் இறக்கும் முன்னரே பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மூங்கில் அணத்தான் மூங்கில் அணத்தான் அல்லது மூங்கணத்தான் என்பது தென் இந்தியாவில் உள்ள மலைக் காடுகளில் காணப்படும் ஒருவகை கொறிணி ஆகும். அணத்தானா இனத்தின் ஒரே சிறப்பினம் இதுவாகும். இவற்றின் அறிவியல் பெயர் "அணத்தானா எல்லியாட்டி" என்பதாகும். "அணத்தானா" என்ற சாதிப்பெயர் "மூங்கில் அணத்தான்" என்ற இதன் தமிழ்ப்பெயரிலிருந்து பெறப்பட்டது. இனப்பெயரின் இரண்டாம் பகுதி சர் வால்டெர் எல்லியாட் என்ற பெயர் கொண்ட மெட்ராஸில் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இவ்விலங்கு இந்தியத் துணைக்கண்டத்தில் கங்கையாற்றிற்குத் தெற்கே காணப்படுகிறது. இவற்றின் மூன்று சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பிலிகிரிரங்கன், சேர்வராயன் மலை மற்றும் தென்னிந்தியாவின் பிற குன்றுகளில் காணப்படும் "அ. எ. எலியாட்டி", மத்தியப் பிரதேசம் மற்றும் ராய்பூரில் காணப்படும் "அ. எ. பல்லிடா", மும்பை அருகிலுள்ள சாத்புரா மலை மற்றும் தாங் மலைகளில் காணப்படும் "அ. எ. ராட்டோனி" ஆகியவை அச்சிற்றினங்கள். இவற்றின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இல்லை. இது 16 செ.மீ. நீளம் முதல் 18.5 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் வால் நீளம் 16.5 செ.மீ முதல் 19.5 செ.மீ. வரை இருக்கும். இதன் பல்வரிசை அறிவியல் குறியீட்டில் "I 2/3 C 1/1 P 3/3 M 3/3" என்பதாகும். இதன் பல் அமைப்பு தாவர மற்றும் விலங்கு இரைகளை உண்பதற்கு ஏற்றதாகும். இவ்வகை treeshrewக்கள் குறிப்பிடத்தக்க வகையில் மரவாழிகளாக இல்லை. மாறாக இவை கூடுதல் நேரம் தரையிலோ அல்லது பாறைகளின் மீது தவழ்ந்தேறியோ பூச்சிகளையும் விதைகளையும் தேடுகின்றன. இவற்றின் வால் நிறம் வடிவம் மற்றும் இவை நடந்து செல்லும்போது வால் மேல்நோக்கி வளையும் பாங்கு ஆகியவற்றின் மூலம் இவற்றை அணில்களிடம் இருந்து எளிதில் வேறுபடுத்தி அடையாளம் காணலாம். இவை தாழ்ந்த கிளைகளின் மீது ஏறி தலைமுதலாக சறுக்கும் வழக்கமுடையவை. இப்பழக்கம் தனது வாசனையை விடுக்கவும் கிளைகளில் விடப்பட்டுள்ள மற்ற அணத்தான்களின் வாசனையை நுகர்வதற்குமாக இருக்கலாம். இவை சார்ந்துள்ள உயிரியல் குடும்பத்தில் தொண்டையில் வாசனைப்பொருள் சுரப்பிகள் பொதுவாக காணப்படுபவை. பைங்கள உபநிடதம் பைங்கள உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 60வது உபநிஷத்து. நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. பன்னிரண்டாண்டுகள் பணிவிடை செய்த பைங்களருக்கு யாஜ்ஞவல்கியரால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. பற்பல வேதாந்தக் கருத்துக்களை ஆணித்தரமாகவும் சுருக்கமாகவும் எளியநடையிலும் போதிக்கும் உபநிடதம் என்று சொல்லலாம். இவ்விதம் தொடங்கி, இவ்வுபநிடதம், ஜீவர்கள் படைக்கப்பட்டதையும், தூல சூட்சும உடல்களைப்பற்றியும், பந்தம், மோட்சம் இவைகளைப்பற்றியும் பேசுகிறது. டெல் ஃபெர்ரோ இயற்கணிதத்தில் எல்லா முப்படியச் சமன்பாடுகளுக்கும் தனிமன்களால் (Radicals) தீர்வு சொல்லும் முறையை முதன் முதல் கண்டுபிடித்தவர் பொலோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டெல் ஃபெரோ (பெப்ரவரி 6, 1465 - நவம்பர் 5, 1526)என்ற இத்தாலியர் ஆவர். ஆனால் அவர் அதை எங்கும் பிரசுரிக்காததால் அதை முதலில் தன் நூலில் பிரசுரித்த கார்டானோவின் பெயரில் அஃது இன்றும் புழங்குகிறது. 1504 இல் டெல் ஃபெர்ரோ முப்படியத்தை என்று எடுத்துக்கொண்டு அதற்குத் தீர்வு காண்பித்தார். முழு விபரங்களை முப்படியச் சமன்பாடு கட்டுரையில் பார்க்கவும். இக்காலத்தைப்போல் அக்காலத்தில் கணித ஆய்வு முடிவுகளை கணிதப் பத்திரிகைகளில் பிரசுரித்து தங்கள் தொழில் முன்னேற்றத்திற்காக நற்சான்றுகளைக் குவித்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததில்லை. டெல் ஃபெரோவும் அவரைப் போன்ற ஆசிரியர்களும் தங்கள் ஆய்வுகளை வணிக முறையில் ரகசியமாக வைத்திருந்து, பொதுமேடைப் போட்டிகளில் வென்று பணம் பண்ணுவதைக் குறியாகக் கொண்டிருந்தனர். இப்போட்டிகளில் வெல்லுவதெல்லாம் மற்றவர்கள் தீர்வு காணமுடியாத புதுப்புதுக் கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனைப் பொருத்ததாகையால் எப்பொழுதெல்லாம் தனக்குத் தீர்வுகள் தெரியவந்தனவோ அப்பொழுதெல்லாம் அதை ரகசியமாக வைத்திருப்பதில் மிகக்கவனமாக இருந்தனர். டெல் ஃபெரோவும் அப்படித்தான் தன் தீர்வை ஒரு சிலர் தவிர மற்ற எவருக்கும் சொல்லாமல் வைத்திருந்தார். அச்சிலரில் ஒருவர் அந்தோனியோ மெரியா ஃபியோர். இவர் ஒன்றும் பெரிய கணித இயலரல்ல. ஆனாலும் இம்மாதிரி கணிதப்பிரச்சினைகளின் தீர்வைத் தெரிந்து வைத்திருப்பதிலுள்ள வணிகப்பயன்களை அறிந்தவர். 1535 இல் டார்ட்டாக்ளியா என்ற செல்லப்பெயருள்ள நிக்கோலோ ஃபோண்டானா (1500-1577) என்ற கணித ஆசிரியரை வம்புக்கிழுத்தார். ஏனென்றால் டார்ட்டாக்ளியா சற்று முன்தான் போன்ற சமன்பாடுகளுக்குத் தனக்கு தீர்வு தெரியும் என்று பிரகடனப்படுத்தியிருந்தார். டார்ட்டாக்ளியாவுக்கு டெல் ஃபெரோவுக்குத் தெரிந்த தீர்வு எப்படி இந்தச்சாதாரண ஆசாமிக்குத் தெரியவந்தது என்று ஆச்சரியமும் கோபமும் பொங்க தானே ஒருநாள் இரவு முழுதும் யோசித்து டெல் ஃபெரோவின் தீர்வைத்தானும் கண்டுபிடித்தார். இதனாலும், formula_2 போன்ற சமன்பாடுகளுக்குத் தனக்கு ஏற்கனவே தெரிந்த தீர்வைக்கொண்டும், போட்டியில் ஃபியோரை சந்தேகத்திற்கிடமில்லாமல் வென்று விட்டார். ஒருவருக்கொருவர் 10 கணக்குகளைப் போட்டனர். டார்ட்டாக்ளியா போட்ட 10 கணக்கில் ஒன்று கூட ஃபியோரால் போடமுடியவில்லை. ஆனால் ஃபியோர் போட்ட 10 கணக்கையும் டார்ட்டாக்ளியா போட்டுவிட்டார். கார்டானோ (1501-1576) சிறந்த கணித ஆற்றல் படைத்தவர். கூடவே மனிதகுணத்திலும் மேம்பட்டவர். டார்ட்டாக்ளியாவை அணுகி குறைக்கப்பட்ட முப்படியத்திற்கு அவருக்குத்தெரிந்த தீர்வைக் கேட்டுப்பெற்றார். தீர்வைத்தான் பெற்றாரன்றி அதை எப்படி முறையாக நிறுவமுடியும் என்ற வழியைப் பெறவில்லை. அத்தீர்வைத் தான் ரகசியமாக வைத்திருப்பதாகவும் சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் நாளாவட்டத்தில் டெல் ஃபெரோவின் கைப்பிரதிகளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்ததின் பேரில், இத்தீர்வு அவரதுதான் என்று அறிந்து, இனிமேல் தன் சத்தியத்தைக் காக்க எந்த அவசியமுமில்லை என்று நினைத்து 1545 இல் தான் எழுதிய நூலில் டார்ட்டாக்ளியா, டெல் ஃபெரோ இருவருக்குமே தீர்வின் உரிமை கொடுத்து அதைப் பிரசுரித்தார். சில்வெஸ்ட்டர் பதக்கம் சில்வெஸ்ட்டர் பதக்கம் என்னும் பரிசை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் சொசைட்டி என்னும் அறிவியல் கழகம் கணிதவியலுக்காக 1901ல் இருந்து வழங்குகின்றது. இப்பரிசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1880களில் "சாவிலியன் வடிவவியல் சிறப்புப் பேராசிரியராக" இருந்த ஜேம்ஸ் சில்வெஸ்ட்டர் (1814 - 1897) என்பாரின் நினைவாக நிறுவப்பட்டது. இப் பதக்கம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கணிதவியலில் சிறந்தவர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. இப்பரிசு பெறுபவருக்கு வெண்கலத்தால் ஆன ஒரு பதக்கமும், 1000 பிரித்தானிய பவுண்டு பணமும் தரப்படுகின்றது. வெண்கலம் வெண்கலம் என்பது ஒரு செப்பு மாழைக் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு (கீழே பார்க்கவும்). இம் மாழைக் கலவை மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது. இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு. செப்பு என்பதற்கு பாரசீகச் சொல்லாகிய `பிரிஞ்ச் ("birinj,") என்பதில் இருந்து ஆங்கிலச் சொல்லாகிய "`பிறான்ஸ்" (Bronze) என்னும் சொல் உருவாகியது. மாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது. ஈரான் நாட்டில் உள்ள சுசா என்னும் இடத்திலும் இன்றைய ஈராக் நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே வெள்ளீயம் கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோசா பார்க்ஸ் ரோசா பார்க்ஸ் ("Rosa Parks", றோசா பார்க்ஸ், பெப்ரவரி 4, 1913 - அக்டோபர் 24, 2005) ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர். 1955 டிசம்பர் 1-இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக ஆசனத்தைத் தர மறுத்தார். இதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது. இவர் அமெரிக்க மாநிலமான அலபாமாவிற்கு உட்பட்ட டஸ்கிகீ நகரில் பிறந்தார். ஜேம்ஸ் மெக்காலி, லியோனா ஆகியோர் இவரது பெற்றோர். இவர் கலப்பு இனத்தவர் ஆவார். இளவயதில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். பெற்றோரின் மணமுறிவால் தாய்வழி உறவினர்களுடன் வாழ நேரிட்டது. ரோசா லூசி மெக்காலி என்பது இவரது இயற்பெயர் ஆகும். இளவயதில் பள்ளிகளில் படித்தார். தாய், தாய்வழி பாட்டி ஆகியோரின் உடல்நலக் குறைவால் கல்லூரி கல்வியை பாதியில் நிறுத்திக்கொள்ள நேரிட்டது. அந்த காலத்தில் இன வேறுபாட்டு சட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து வண்டிகளில் கருப்பர்களுக்கு தனியான இடங்கள் வழங்கப்பட்டன. கருப்பர்களுக்கான கல்வியும் மட்டுப்படுத்தப்பட்டது. 1932 இல், ரேமண்ட் பார்க்ஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர் காலத்தில் கல்வி கற்ற கருப்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. 1900இல், மாண்ட்கோமெரி பேருந்துகளில் இனவாரியாக இருக்கைகள் பிரிக்கப்பட்டன. பேருந்தில் கூட்டம் மிகுந்தால் எழுந்து நிற்கத் தேவையில்லை என்றும், பிறருக்காக இடத்தை விட்டுத்தர வேண்டியதில்லை என்றும் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், காலப்போக்கில், விதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியாக இருந்தாலும், கருப்பர்கள் அனுமதிக்கப்படவில்லை. பேருந்துகளின் முதல் நான்கு வரிசையில் இருந்த இருக்கைகள் வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்டவை. பின்னிருக்கைகள் கருப்பர்களுக்கு ஒதுக்கப்பட்டன. கருப்பர்களே அதிகளவில் பயணித்தனர். வெள்ளையர்கள் அதிகளவில் இருந்தால், கருப்பர்கள் பின்னிருக்கைகளுக்கு நகர்ந்து உட்கார வைக்கப்பட்டனர். இது குறித்து பல முறை புகார்கள் அளிக்கப்பட்டன. ஒரு முறை பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அமர்ந்தார். ஆனால், இவரை வலுக்கட்டாயமாக இறங்குமாறு பணித்தார் ஓட்டுனர். இறங்கி பின்கதவு வழியாக ஏறுமாறு செய்தார். இவர் இறங்கும் முன்னரே பேருந்து புறப்பட்டது. ஒரு முறை அதே பெருந்தில் பயணித்த போது, அதிகளவில் வெள்ளையர்கள் ஏறினர். இதனால், அவரை பின்னிருக்கைக்கு நகருமாறு சொன்னார் நடத்துனர். இவர் உட்பட நால்வரின் இடம் வெள்ளையருக்கு தேவைப்பட்டது. மற்ற கருப்பர்கள் இடம் தந்து எழுந்து நின்றனர். இவர் மட்டும் எழ மறுத்தார். நகரத்தின் சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுக்கு உள்ளானார். இதைத் தொடர்ந்து பேருந்தை புறக்கணிக்க பலர் கிளம்பினர். பெரும்பாலான கருப்பர்கள் மற்ற வாகனங்களிலும், நடந்தும் பயணத்தை மேற்கொண்டனர். இவர் கைதானதைத் தொடர்ந்து குடிமக்கள் உரிமை இயக்கத்தின் சின்னமாகப் போற்றப்பட்டார். கைதானதால் இவரது வேலை பறிக்கப்பட்டது. இவரும் இவர் கணவரும் விர்ஜீனியாவில் உள்ள ஹாம்டன் நகரத்திற்கு சென்றனர். அங்கு வேலை கிடைக்கவில்லை. டெற்றாய்ட்டில் உள்ள ஆப்பிரிக்க அரசு அதிகாரியிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. பிற்காலத்தில் இவரது குடும்பத்தினரில் பலர் நோயினால் பாதிக்கப்பட்டனர். குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறந்தனர். 1992 இல், ”ரோசா பார்க்ஸ்: மை ஸ்டோரி” என்ற தன்வரலாற்று நூலை வெளியிட்டார். இவர் இறப்பதற்கு முன்பு வரையிலும் டெற்றாய்ட் நகரில் வாழ்ந்தார். 92 வயதில் இயற்கை மரணம் எய்தினார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. இவரது உறவினர்கள் மிச்சிகனிலும், அலபாமாவிலும் வாழ்ந்தனர். இவரது இறுதிச் சடங்கின்போது டெற்றாய்ட், மாண்ட்கோமெரி நகர அரசுகள் மரியாதை செலுத்தின. இந்த இரண்டு நகரங்களில் ஓடிய பேருந்துகளின் முன்னிருக்கைகளில் கருப்பு நிற ரிப்பன்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன. கேண்டலீசா ரைஸ் இவரைப் புகழ்ந்து உரையாற்றினார். அரசு அதிகாரியாக இல்லாதவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது குறைவு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இவர். இவர் புதைக்கப்பட்ட வழிபாட்டுத் தலத்திற்கு இவரது பெயர் இடப்பட்டது. ஒரு அவலம் கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான்,கூடவே பதினான்கு டாலர் அபராதம் விதித்தார்கள். ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள் )அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள் .சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது. தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவுதினம் இன்று .”அன்று அவர் எழ மறுத்த்தால் தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நிற்கவும்,தன்மானத்தோடு நடக்கவும் முடிகிறது !” என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள் பழைமையான இசை நூல்களும் காலங்களும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள். வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். "பசிக்குதே! வயிறு பசிக்குதே" என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார். 1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார். மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார். 1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர். பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின. 1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது. அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார். தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார். தொடர்ந்து ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார். மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை (பாலசன்யாசி) உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார். காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரபலமான வில்லுப்பாட்டுக் கலைஞர் ஆவார். ஓர் ஆசிரியரான இவர் 1948ல் இருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை ஏறக்குறைய 2000 தடவைகளுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் நடத்தியிருக்கிறார். மலையகத்தில் உள்ள இராகலை என்ற இடத்தில் தனது முதலாவது வில்லிசை நிகழ்ச்சியை நடத்தி ஆரம்பித்த இவர் இலங்கைக்கு வெளியேயும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். இவர் 2003இல் காலமானார். லோட்டஸ் சிம்பொனி ஐபிம் லோட்டஸ் சிம்பொனி என்பது ஐபிஎம் நிறுவனத்தால் அலுவலக உரையாவணங்கள், விரிதாள்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை உருவாக்கி, மேம்படுத்திப் பகிர்வதற்கென உருவாக்கப்பட்டதாகும்.. இது ஆரம்பத்தில் 1985 இல் டொஸ் இயங்குதளத்தில் பல பிரயோகங்களை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளாகும். ஐபிஎம் மீளவும் 2007 ஆம் ஆண்டில் அலுவலக மென்பொருளை இந்தப் பெயரில் மீள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி கீழ்வரும் பிரயோகங்களை உள்ளடக்கியுள்ளது. சுற்றுப்பாதை வீச்சு வானியலில், சுற்றுப்பாதை வீச்சு ("Apsis") என்பது விண்பொருளின் சுற்றுப்பாதையில் அதன் ஈர்ப்புமையத்திலிருந்து மிகவருகிலோ அல்லது வெகுத்தொலைவிலோ அமையும் புள்ளியாகும், பொதுவில், அவ்வீர்ப்புமையம் என்பது அம்மண்டலத்தின் திணிவு மையமே யாகும். ஈர்ப்பு மையத்திலிருந்து மிகவருகில் அமையும் புள்ளி நடுவிருந்து சிறுமவீச்சு அல்லது சிறும வீச்சு அல்லது அண்மைநிலை எனவும், மிகத்தொலைவில் அமையும் புள்ளி நடுவிருந்து பெருமவீச்சு அல்லது பெரும வீச்சு அல்லது சேய்மைநிலை எனவும் அழைக்கப்பெறும். இவ்விரு வீச்சுப் புள்ளிகளை இணைத்து வரையப்படும் நேர்க்கோடு வீச்சுகளின் கோடு என அழைக்கப்படும். இஃது (சுற்றுப்பாதை) நீள்வட்டதின் பெரும் அச்சாகும். சுற்றிவரப்படும் பொருளை (ஈர்ப்பு மையத்தை) அடையாளப்படுத்தும் வகையில் நிகர்ப்பதங்கள் பயன்படுத்தப்படும். அவற்றுள் பொதுவானவை, பூமியை சுற்றும் பொருள்களின் சுற்றுப்பாதை வீச்சுகளை குறிக்கும் புவியிலிருந்து சிறுமவீச்சு, புவியிலிருந்து பெருமவீச்சு என்பனவும், சூரியனை சுற்றும் பொருள்களின் சுற்றுப்பாதை வீச்சுகளை குறிக்கும் பகலவனிலிருந்து சிறுமவீச்சு, பகலவனிலிருந்து பெருமவீச்சு என்பனவுமாகும். சிறும மற்றும் பெரும வீச்சுகளைக் காண வாய்ப்பாடுகள் உள்ளன. இங்கு, என்பதனை எளிதில் நிறுவலாம். இவையிரண்டும் இரண்டு வீச்சுப்புள்ளிகளுக்கும் ஒன்றே, சுற்றுப்பாதை முழுமைக்கும் கூட. (கெப்லரின் விதிகளுக்கும் (கோண உந்தக் காப்பாண்மை விதி) ஆற்றல் காப்பாண்மை விதிக்கும் உட்பட்டு இவ்வாறு உள்ளது.) இங்கு: பண்புகள்: மையப்பொருளின் பரப்பிலிருந்தான உயரங்களை தொலைவுகளாக மாற்ற, மையப்பொருளின் ஆரத்தையும் கூட்ட வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்க. இவ்விரு வீச்சுகளின் கூட்டல் சராசரி அரை பெரும் அச்சாகவும், formula_7, பெருக்கல் சராசரி அரை சிறு அச்சாகவும், formula_14, இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வேகங்களின் பெருக்கல் சராசரி formula_15 என்பதாகும், இஃது ஒரு இயக்க ஆற்றலுக்குரிய வேகமாகும், சுற்றுப்பாதயின் எந்த ஒரு புள்ளியிலும் அவ்விடதிற்கான இயக்க ஆற்றலோடு இவ்வியக்க ஆற்றலையும் கூட்டினால் அப்பொருள் மைய ஈர்ப்பிலிருந்து தப்ப தேவையான ஆற்றலை தரும். சுற்றுப்பாதை வீச்சு மற்றும் சிறும அல்லது பெரும வீச்சு போன்ற பதங்களுடன் ஈர்ப்புமையமாய் திகழும் பொருளின் பெயரையும் (அஃதில், அப்பொருளை குறிக்கும் ஒரு பதத்தையும்) சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படுகையில் அவ்விலக்கங்கள் அமைந்த சுற்றுப்பாதையின் ஈர்ப்புமையம் தெள்ளென புலனாகும். பின்வரும் அட்டவனை அவற்றுள் சிலவற்றை தருகின்றது பூமி (தன் சுற்றுப்பாதையில்) சூரியனுக்கு மிகவருகில் ஜனவரி முன்திங்களிலும், சூரியனுக்கு வெகுத்தொலைவில் ஜூலை முன்திங்களிலும் இருக்கும். சிறும வீச்சு, பெரும வீச்சு மற்றும் பூமியின் பருவங்கள் இவற்றிக்கிடையிலான சார்பு ஒரு 21,000 ஆண்டு சுழற்சியைப் பொறுத்து மாறுபடுகின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கான இவற்றின் பட்டியல் பின்வருமாறு: 1519 1519 (MDXIX) ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். அசர்பைஜான் அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: "Azərbaycan Respublikası")) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணை மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது. பெலீசு பெலீசு (IPA: ), முன்னர் அறியப்பட்ட பெயர்: பிரிட்டிஷ் ஹாண்டுராஸ்), நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும். பெலீசு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும். 1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் என அறியப்பட்டது. இந்நாடு 1981ல் விடுதலை பெற்று காமன்வெல்த் கூட்டுநாடுகளுக்குள் ஒன்றாகவுள்ளது. பெலீசு கரீபிய குமுகாயம் (CARICOM) என்னும் குழுவையும் நடு அமெரிக்கக் கூட்டு (Sistema de Integración Centroamericana (SICA)) என்னும் இயக்கத்தையும் சேர்ந்த நாடு. இந்நாடு தம் மக்களில் பழக்க வழக்கங்களாலும் பண்பாட்டாலும் தன்னை கரீபிய இன நாடு மற்றும் நடு அமெரிக்க நாடு என்று கருதுகின்றது. 22, 960 சதுர கி.மீ (8,867 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 294,385 மக்களே வாழ்கின்றனர் (பெலீசிய 2007 ஆம் ஆண்டு இடைக்கால கனக்குப்படி). மக்கள் அடர்த்தி, நடு அமெரிக்காவிலேயே மிகக்குறைவானது. ஆனால் இந்நாட்டின் மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் 3.5% ஆகும் (2006 தோராய மதிப்பீட்டின் படி). கோஸ்ட்டா ரிக்கா கோஸ்ட்டா ரிக்கா ("செல்வக் கரை" என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: "Costa Rica" (அல்) "República de Costa Rica", IPA: ) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான். லித்துவேனியா லித்துவேனியா (), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: "Lietuvos Respublika"), வடக்கு ஐரோப்பாவில் உள்ள. நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும். கிரேக்கம் (மொழி) கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா "(Greek)" என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும்.உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழி கிரேக்கம் ஆகும். உலகில் மனிதன் தோன்றிய ஆப்பிரிக்க கண்டத்தில் மாந்தன் பேசிய முதலில் பேசிய மொழி கிரேக்கம். ஏறத்தாழ 6,746 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க மொழியாகும். வாழும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலேயே மிகநெடிய வரலாறு கொண்ட மொழியும் கிரேக்க மொழியேயாகும். மேலும் இம்மொழியில் 74 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. . இம்மொழியின் எழுத்து முறை மொழி கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலீனியர் பி மற்றும் சைப்ரியாட் அசையெழுத்துகள் போன்ற பிற எழுத்துமுறை அமைப்புகள் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன . கிரேக்க எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களிலிருந்து உருவானவையாகும். லத்தீன், சிரிலிக், ஆர்மீனியன், காப்டிக், கோதிக் மற்றும் இது போன்ற பல எழுத்து முறை எழுத்தமைப்புகளுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது. மேற்கத்திய உலகம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வரலாற்றில் கிரேக்க மொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இலியட் , ஒடிசி போன்ற மேற்கத்திய காவியங்களின் நெறிமுறைகள் பண்டைய கிரேக்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. விஞ்ஞானம், வானியல், கணிதம், தர்க்கம், அடித்தள உரையாடல்கள் போன்ற மேற்கத்திய தத்துவம் அரிசுடாட்டிலின் படைப்புகள் போன்றவற்றை எல்லாம் தொகுக்கவும் கிரேக்க மொழி ஏற்புடையதாக உள்ளது. கிறித்துவ பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்கத்திப் கொய்யென் மொழியில் எழுதப்பட்டது. ரோமானிய உலகின் மரபுகளுடன் இலத்தீன் எழுத்துகளையும் சேர்த்து, கிரேக்க நூல்களையும் பழங்கால சமுதாயத்தையும் ஆய்வு செய்வதே பாரம்பரிய ஒழுக்கமாகும். தொல்பழங்காலத்தின்போது மத்தியதரைக் கடல் உலகிலும் அதற்கு அப்பால் இருந்த பல இடங்களிலும் கிரேக்க மொழி பரவலாக ஓர் இணைப்பு மொழியாகப் பேசப்பட்டது. இறுதியாக இம்மொழி பைசான்டைன் பேரரசின் அதிகாரப்பூர்வ பேச்சுமொழிப் பாணியாக இடைக்கால கிரேக்கத்திற்குள் உருவானது . கிரீசு, சைப்ரசு ஆகிய இரண்டு நாடுகளுக்கு கிரேக்கமொழி அதன் நவீன வடிவத்தில் அலுவலக மொழியாக விளங்குகிறது. ஏழு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மொழியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இடம்பிடித்தும் சிறப்புப் பெற்றுள்ளது. கிரேக்க மொழி உலக அளவில் சைப்ரசு, இத்தாலி, அல்பேனியா, துருக்கி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் கிரேக்க புலம்பெயர்ந்தோர் என இன்று 13.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. கிரேக்க மொழியின் வேர்கள் பெரும்பாலும் பிற மொழிகளுக்கு புதிய சொற்களைத் தருகின்றன. கிரேக்கமும் இலத்தீனும் சர்வதேச அறிவியல் சொற்களுக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கு முன்னரே பால்கன் குடாவில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய அசையெழுத்து வடிவம் கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதனடிப்படையில் எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப்பழைய வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழியின் தொன்மைக்கு சான்றாகக் கிடைத்துள்ள எழுத்துப்பூர்வ ஆவனம் இப்போது அழிந்துவரும் அனடோலியன் மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும். மரபு வழியில் கிரேக்க மொழி பின்வரும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கிரேக்க மொழி சுமார் 13 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மயோர் கிரேக்கம், அல்பேனியா, சைப்பிரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். புலம்பெயர் கிரேக்கர்களாலும் கிரேக்கம் பேசப்படுகிறது. பாரம்பரிய கிரேக்கக் குடியேற்றங்கள், அல்பேனியா, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களிலும் கருங்கடல் பகுதி நாடுகளான உக்ரைன், இரசியா, உரோமானியா, சியார்சியா, ஆர்மேனியா, அசர்பைசான் ஆகிய நாடுகளிலும் மத்திய தரைக்கடலை அண்டிய தென் இத்தாலி, சிரியா, இஸ்ரேல், எகிப்து, லெபனான், லிபியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. மேலும் ஐக்கிய இராச்சியம், செருமனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் கிரேக்க மொழி பேசும் புலம்பெயர் கிரேக்கர்கள் வாழ்கின்றனர். கிரேக்க மொழி கிரேக்க நாட்டில் அலுவல் மொழியாக உள்ளது. இது ஏறத்தாழ கிரேக்கத்தின் மொத்தச் சனத்தொகையாலும் பேசப்படுகிறது. மேலும் இது துருக்கி மொழியுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது. இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. இத்தாலியின் சில பகுதிகளிலும் அல்பேனியாவிலும் இது சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நவீன சகாப்தத்தில் கிரேக்க மொழியானது இரட்டைநடை வழக்கிற்குள் நுழைந்தது. பேச்சு மொழியியல் நிலைத்தும் எழுத்து மொழி வழக்கொழிந்தும் உள்ள மொழியாக இம்மொழியின் நிலை மாறியது. . கிரேக்க மொழியின் ஒலியனியல், உருபனியல், சொற்றொடரியல் மற்றும் சொற்றொகுதி என்பவற்றின் அடிப்படையில், இம்மொழி பண்டைய காலத்திலிருந்து தற்காலம் வரை பழைமையைப் பேணும் அதேவேளை புதுமையைப் புகுத்த இடம் கொடுப்பதாகவும் உள்ளது. மைசீனிய கிரேக்க காலத்தினதான அசையெழுத்து முறையான நேரான பி (Linear B) என்ற எழுத்துமுறை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இம்முறையிலான எழுத்துக்களைக் கொண்ட மைசீனிய கிரேக்கம், கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.ஏறத்தாழ நேரான பி எழுத்துமுறையை ஒத்த சைபீரிய அசையெழுத்து முறை கி.மு. பதினோராம் நூற்றாண்டளவில் சைபீரியாவில் கிரேக்க மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை, தமிழக மக்களைக் கொண்டு அமையும் தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும். எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம். அது தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ளும் நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் ஆகும். இது தமிழர்களின் நிலப்பரப்பு, மொழி, சமூகம் ஆகியவற்றின் இணைவினைக் குறிக்கும் கோட்பாடாக அமைந்துள்ளது. தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கிறது. தேயம் எனும் சொல் நாட்டைக் குறிக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய சொல்லாகும். கழக(சங்க) இலங்கியங்கள் பலவற்றுள் தேயம் எனும் சொல் மொழிவழியில் தம் நாட்டையும் பிறநாட்டையும் குறித்து நிற்கின்றன. மொழிபெயர் தேயம் என்கிறது அகநானூறு 295 பாடல். தமிழ்த்தேசியம் என்கிற சொல் தமிழக அரசியல் உலகில் ம.பொ.சி அவர்களின் கட்சியான தமிழரசுக் கட்சிக்காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு சொல்லாகும். இந்தியாவின் பல்வேறு இனங்களை தேசிய இனங்கள் என்று விளித்துப் பேசினார். அவர் சிலப்பதிகாரத்தை தமிழ்த்தேசியக் காப்பியம் எனக் கூறிப் பரப்பினார். அவ்வப்போது ம.பொ.சி உள்ளிட்டோரால் தமிழ்த்தேசியம் எனும் சொல் பொதுவாக ஆளப்பட்டது. திமுகவிலிருந்து பிரிந்து ஈ.வெ.கி சம்பத் தொடங்கிய தமிழ்த்தேசியக் கட்சி இச்சொல்லை தேர்தல் அரசியலில் அறிமுகம் செய்தது. ஆயினும் தமிழ்த்தேசியம் எனும் சொல்லுக்குப் பல காலமாக அரசியல் உலகில் நிலைத்தன்மை கிடைக்கவில்லை. 1980களில் தமிழகத்தில் தோன்றிய தமிழ்த்தேசிய இயக்கங்கள், தமிழ்த்தேசியத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரால் இச்சொல் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டது. 1990களில் பொது அரசியல் வெளியில் வேர்கொள்ளத் தொடங்கியது. 2009 காலகட்டத்தின் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ்த்தேசியம் தமிழர்களின் அறியப்பட்ட பொது அரசியல் கருத்தியலாக வளர்ந்தது. இவ்வாறாக தற்காலத்தில் தமிழர்கள் தமிழ் என்னும் தங்களின் தேசிய மொழியாலும் நிலப்பரப்பாலும் தம்மை அணிதிரட்டிக்கொள்ள ஊக்குவிக்கும் ஒரு கருத்தியலைச் சுட்டுவதாகவும் தமிழ்த்தேசியம் எனும் சொல் முதிர்ச்சியடைந்துள்ளது. தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். ம.பொ.சியின் செங்கோல் ஏடு தமிழ்த்தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது தமிழர் இனப்பெருமை பேசுவதோ, தமிழ்மொழிப் பெருமை பேசுவதோ மட்டும் தமிழ்த்தேசியம் ஆகாது. தமிழ்த்தேசியத்தின் உட்பிரிவுகளாக தமிழகத் தமிழ்த்தேசியம், தமிழீழத் தேசியம் ஆகியன உள்ளன. இவற்றுள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதிலும் மெய்யியல் நோக்கில் தமிழ்த்தேசியம் எளிமையானதாக இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம் எனக்கூறலாம். மேலும் தமிழ்த்தேசியம் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும் விளக்கப்படுத்தப்படுகிறது. தமிழ்த்தேசியம் சாதியொழிப்பிற்கும் பெண் விடுதலைக்குமான உயர்நுட்பக்கருவி எனலாம். மொழிவாரித்தேசியர்கள் சாதிய முரணைப் பின்னுக்குத் தள்ளி மொழி மற்றும் தேசி இன அடிப்படையிலான முரண்களை முதன்மைப்படுத்த முனைந்தனர். இவ்வாறு திரட்டிக்கொள்வதற்கு அவர்களுக்கு இரு பற்றுக்கோடுகள் நடைமுறையில் உள்ளன. நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவனவே அவையாகும். தமிழ்த்தேசியம் தனக்கு முன் அரசியல் களத்தில் முதன்மையாக நின்று நிலவிய திராவிடம், இந்தியத்தேசியம், தலித்தியம் ஆகிய கருத்தோட்டங்களிலிருந்து வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. தமிழ்த்தேசம் உருவாகுமுன்பே தமிழ்த் தேசியம் முகிழ்த்துவிட்டது. அது தேசம் இல்லாத தேசியமாகத்தான் இருந்தது. அது உணர்வாக, பண்பாடாக, அறநெறியாக இருந்தது. தேச உள்ளடக்கத்தைப் பெற்ற பின் ஒரு முழுமைப்பட்ட அரசியல் கருத்தியலாக மலர்ந்தது. தேச உருவாக்கத்துக்கு தேசியம் உதவிற்று. தேசியத்தின் வளர்ச்சிக்குத் தேச உருவாக்கம் பொருத்தமான அடித்தளத்தை வழங்கிற்று. தமிழ்த்தேசியத்தின் வரலாறு இந்தியத்தேசியத்தின் வரலாற்றுக்கும் முன் தொடங்குகிறது. தமிழர்கள் தொடக்கக் காலங்களில் மொழியை வைத்தே ஒரு தேசத்தை, நாட்டை அடையாளம் கண்டுவந்தனர். இதனைத் தமிழர்களின் பழம் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பிழிஆர் மகிழ்நர். கலிசிறந்து ஆர்க்கும் மொழிபெயர் தேயம் இறந்தனர் ஆயினும் (அகநானூறு 295) விலங்கிருஞ் சிமையக் குன்றத்து உம்பர் வேறுபல மொழிய தேயம் ஆயினும் (அகநானூறு 215) என்பதாக மொழியைச் சுட்டியே தேசம் அடையாளம் காணப்பட்ட செய்திகளை தமிழரின் பழைய இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. தமிழகத்தை ஒரு நாடாகவும் தமிழ்நிலமாகவும் கண்ட தொன்மையான குறிப்புகள் தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. தமிழ்மொழியைத் தம் அடையாளமாக க் கூறுவதும், தமிழ்நாட்டின் நில ஓர்மையை விளக்குவதும் தமிழ்த்தேசியத்தின் படிவுகளாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள் வழி பண்டைத் தமிழ்ச்சமூகம் பற்றி நாம் அறியத்தக்க செய்திகள் குறிப்பாக இரண்டு. ஒன்று, பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் பிறப்பு அடிப்படையில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ நோக்கும், இயற்கையோடு இயைந்த சமயச் சார்பற்ற பண்பாட்டு நெறியும் கொண்டதாக விளங்கி வந்திருக்கிறது. மற்றொன்று, அவர்கள் தங்கள் தாயகம் பற்றிய தெளிவான புரிதலுடன் “ வடவேங்கடம் தென்குமரி ஆயிடை” என அதன் எல்லை அறிந்து அதைத் “ தமிழ் கூறும் நல்லுலகு என்றோ, தமிழகம், தமிழ்நாடு, தென்னாடு என்றோ பலவாறு பெயரிட்டு அழைத்துத் தாய்மண் மீது பற்று , பெருமிதம் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு எனும் வரிகள் தமிழர்கள் வாழும் நில எல்லைகளைக் குறித்தன. இதுபோன்ற நில எல்லை வரையறுப்புகளும் தமிழர்கள் வாழும் நிலத்தை பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம் முதற்கொண்டு பாரதியார்வரை தொடர்ச்சியாக தமிழ்நாடு, தமிழகம் என அழைத்து வந்ததும் தமிழ்த்தேசியத்தின் நிலவியல் வரலாற்றுக்கான இலக்கிய சாட்சியமாக உள்ளன. தமிழ்நாடு சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்திலும் அறிவர் உலகில் தமிழ்நாடு எனச் சுட்டப்பட்டது. இது தமிழ்த்தேசியத்தின் தோற்றக்காலப் படிவாகும். தமிழ்நாடு எனும் சொல் பலகாலமாக தமிழ் அறிவுத்துறையில் ஆளப்பட்டமை தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை தங்களின நாடாக, தேசமாக உணர்ந்திருந்த அறிந்துணர்வின் (பிரக்ஞையின்) வெளிப்பாடாகும். இது தமிழத்தேசியத்தினைப் பிற்காலத்தில் உருவாகிடச் செய்த காரணிகளில ஒன்றாக உள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்க நாட்டு அரசன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுச் செய்திகளிலிருந்தும், அக்காலத்தமிழ் இலக்கியப் பதிவுகளிலிருந்தும் மூவேந்தர்களின் ஒருங்கிணைவுச் செய்திகளை அறியலாம். ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவரும் உடனிலை திரியீராயின் திரைப் பௌவம் உடுதவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவுத பொய்யா காதே அதனால், நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும் காதல் நெஞ்சின்நும் இடைபுகழ் கலமரும் ஏதின் மக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்க நும் உணர்ச்சி -என்ற (புலவர் காரிக்கண்ணனாரின் புறநானூற்றுப் பாடல் எண் 58)புறநானூற்றுப் பாடல்வழி, அன்றைய மூவேந்தர்களும் ஒன்றிணைவு குறித்த குறிப்பினை அறியலாம். வரலாற்றில் தமிழ்த்தேசியம் கடந்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையில் தன்னாளுமையுடன் (சுய அதிகாரத்ததுடன்) இருந்த காலம் மிகவும் குறைவு. களப்பிரர், பல்லவர், நாயக்கர், முஸ்லீம்கள், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகிய வேற்று மொழி மக்கள் ஆண்ட காலங்களில் தமிழர்கள் தம் அடையாளத்தைக் கலாச்சாரத்தைப்பேணிக் காத்துக்கொள்ள முயன்றனர். வேற்றுச்சமயங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் அந்த சமயங்களை எதிரப்பதற்காகத் தமிழ் மொழியை, எதிர்ப்புணர்வுக்குரிய கருவியாகவும் பயன்படுத்தும் போக்கு இருந்ததையும் காண நேரிடுகின்றது. நவீனத் தமிழ்த்தேசியம் ஓர் அரசியல் கருத்துருவாக உருவாகி ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகின்றன. தமிழரின் அடையாளங்கள் எவை? தமிழ்மொழியே தமிழரின் முதன்மையான அடையாளம் என்ற ஒரு பதிலை 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்தே உருவாக்கி வந்தனர். வேதங்களே இந்தியரின் அடையாளம். வேதாந்தமே இந்தியரின் ஆகப்பெரும் த த்துவம் , இந்து மதமே இந்தியரின் பேரடையாளம் என்ற அலை வேகமாக வீசி அடித்த காலத்தில் சமயம் சாராத, சாதி சாராத, மொழியை அடையாளமாக்கியவர்கள் தமிழர்கள் என்பது ஒரு சாதனையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதர் தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்தார். சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர் ஒரு பைசாத் தமிழன், தமிழன் என இதழ்கள் தொடங்கி நடத்தினார். ‘தமிழன்’ என்ற தேசிய இனப்பெயரை அதன் அரசியல் சமூகப் பொருளோடு பயன்படுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவர். அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களைத் தமிழன் என்று பதிவுசெய்திடக் கோரிக்கை விடுத்தார். இந்திய மண்ணில் சாதி அமைப்பின் மூலமாகத்தான் (பூர்வ) அறம் அழிந்து போனது என்பது அவரின் வாதம். அயோத்திதாசப்பண்டிதர் அன்று நசிந்துகொண்டிருந்த விவசாய உழைப்பாளிகளை மையப்படுத்தினார். இது தமிழ் அடையாள உருவாக்கத்தில் அவரது தனிப்பெரும் பங்களிப்பாகும். அயோத்திதாசருக்கு முன்போ பின்போ இவ்வளவு தெளிவாகத் தமிழ் அடையாளத்தை விவசாயிகளோடு தொடர்பு படுத்தியவர்கள் எவரும் இலர். பண்டிதரில் நிலம், உழைப்பு, அறம், பூர்வத்தொன்மை, தமிழ்மொழி, பௌத்தம் ஆகியவை இணைந்து நிற்கின்றன. இவர் போன்ற அறிஞர்களின் செயற்பாடுகள் தமிழர்கள் தங்களின் தேசிய அடையாளத்தைக் கண்டடையும பயணத்தின் விளைபொருட்களாகும். அதன்பின் வரதராசல நாயுடு தொடங்கிய தமிழ்நாடு இதழ், மொழிவாரியாகக் காங்கிரசு தன்னை அமைத்துக்கொண்டபோது உருவான தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி எனும் பெயர்தோன்றிய நிகழ்வு இவையனைத்தும் உருவாகிவந்த தமிழ்த் தேசியக் கருத்தியலின் முளைகளாகும். அதாவது தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அடையாளப்படுத்துதல், தனிநபர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துதல், தமிழ் மொழியை தங்களின் இணைப்புக்குரிய கருவியாகப் பார்த்தல் ஆகியவை தமிழ்த்தேசியத்தின் தொடக்ககாலக் கூறுகளாக இருந்தன. இவற்றுள் சாதி மதங்களைக் கடந்து இன ஓர்மை பெறுவதன் தேவையும் உணரப்பட்டிருந்தது. கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க அவதானிப்புகள் தமிழகத்தில் எழுந்தன. அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும் திராவிடத்தேசியத்தையும் மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது. நீதிக்கட்சி பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோ கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடல்களுள் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது. பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்று இந்தித்திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் பெரியாரும் 1938இல் அறப்போர் தொடுத்ததும் இந்தியத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிதொடங்கி முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுள் கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, ம.பொ.சி ஆகியோர் அடங்குவர். ம.பொ.சி 1946 மே 1 ஆம் நாள் தமிழ் முரசு எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் தமிழரசுக் கழகம் அமைப்பினை ம.பொ.சி தொடங்கினார். அந்த அமைப்பின் குறிக்கோளாக 1950களுக்குப்பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனார், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத் தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1980 தொடங்கி தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. திராவிடம், தலித்தியம், இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும். சாதிக் கட்டமைப்பு என்பது ஒருங்கிணைந்த ஒன்று. இதில் ஒரு பகுதியை மட்டும் மாற்ற முடியாது. அது ஒருமைப்பட்ட முழுமை (integral whole). அதனைப் பகுதிபகுதியாக அழிக்கவோ மாற்றவோ முடியாது. அடியோடு அழித்தால்தான் உண்டு. அறவே ஒழித்தால்தான் உண்டு. எல்லா உறுப்புகளையும் கழற்றிப் போட்டு மாற்றிப் பூட்டியாக வேண்டும். அதுதான் சாதி ஒழிப்பு. தமிழ்த்தேசியப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக சமத்துவ சமூக அமைப்புத் திட்டம் உள்ளது. தமிழகத்தின் சாதியொழிப்பு அரசியலில் தமிழ்த்தேசியம் தீர்மானகரமான பங்காற்றியுள்ளது. தமிழ்த்தேசிய ஆளுமைகளுள் முதன்மையானவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவர் தான் நடத்தி வந்த தென்மொழி இதழில் சாதி ஒழிப்புக்கான ஒரு திட்டத்தை வகுத்து வெளியிட்டார். திட்டவட்ட சாதியொழிப்பு அரசியல் மற்றும் தமிழ்நாடு விடுதலை எனும் தமிழ்த்தேசிய அரசியலோடு இணைத்து தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி நிறுவனர் தமிழரசன் அவர்களால் கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையே தமிழ்த்தேசியத்திற்கும் சாதியொழிப்புக்குமான உறவினைத் தெளிவுபடுத்தும் முதன்மையான வரலாற்று ஆவணமாக உள்ளது. இவ்வறிக்கை 1985இல் மீன்சுருட்டி எனும் ஊரில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவை தொடர்ச்சியாக சாதியொழிப்பை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அரசியலை நடைமுறையில் செய்துவந்தன. தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் எதுவும் சனாதன தர்மம் எனும் சாதிய அடிப்படையிலான சமூகப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ இல்லை. சாதியையும் மதத்தையும் கடந்து தமிழர்கள் இன ஓர்மை பெறவேண்டும் என்பதே அவ்வியக்கங்கள் முன்வைக்கும் கருதுகோள் ஆகும். சாதிதோன்றிய காலம் மிகத்தொன்மைக் காலமாகும். அதுமுதல் தமிழின் எழுதப்பட்ட வரலாற்றில் சாதியொழிப்புக் கருத்தோட்டங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த சாதியொழிப்பு மரபினைப் பல தமிழ்த்தேசிய இயக்கங்கள் தம் மரபாகக் கருதுகின்றன. திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கூற்றும், சித்தர் மரபுகளும் , வள்ளலார் , பாரதியார், பாரதிதாசன் என சாதியொழிப்பு மற்றும் சாதியெதிர்ப்பு வழித்தடமே தமிழ்த்தேசியக் கருத்தியலின் சாதியொழிப்புப் பார்வையின் சாரமாக உள்ளது. தமிழ்த்தேசியம் இருபெரும் தேசியப் பிரிவுகளைக்கொண்டுள்ளது. தமிழகத் தமிழ்த்தேசியம் மற்றும் தமிழீழத் தமிழ்த்தேசியம் ஆகியவையே அவை. தமிழகத்தைப்பொறுத்து 1956 உருவான மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு நிலவும் தமிழ்நாடு எல்லைகளே பெரும்பாலான தமிழ்த்தேசிய இயக்கங்கள் (சிறுசிறு வேறுபாடுகளோடு) ஏற்றுக்கொண்ட நிலப்பரப்பாக உள்ளது. தமிழீழ எல்லை வரையறைகள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் வரையறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், தமிழ்த்தேசியம் பேசுவோரில் சி. பா. ஆதித்தனார் தமிழக மாநிலமும் தமிழக மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டதாக தமிழர்கள் கருதும் தமிழகத்தின் அண்டை மாநில நிலப்பகுதிகளையும் தமிழீழத்தையும் இணைத்து தனி தேசமாக தமிழ் தேசம் அமைய வேண்டும் என்று விரும்பினார். இதுபோன்ற கருத்தியல்கள் பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரை அகண்ட தமிழ்நாடு அமையப் போராடியவர்களாக சித்தரிக்க முயன்ற இந்திய அரசால் பரப்பப்பட்டன. எந்த ஒரு இயக்கமும் அமைப்பும் தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்த ஒரு தேசத்தைப் படைக்கவேண்டும் என்ற இயங்குவதாக வெளிப்படையாக அறிவித்ததில்லை என்பதே இன்றைய நிலையாகும். தமிழ்த் தேசியம் எதை நோக்கி அமைகின்றது என்று மேலே சுட்டப்பட்டாலும், அதைப் பல்வேறு வழிகளில் வெவ்வேறு நபர்கள் வரையறை செய்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு கீழே: தமிழ்த்தேசியத்தின் புறப்பகையாக இருப்பது இந்தியத் தேசியம் என்ற பெயரிலான தில்லி ஏகாதிபத்தியம். அகப்பகையாக இருப்பது சாதியம். இந்தியத் தேசியம் வெவ்வேறுபட்ட பல தேசிய இனங்களின் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. ஆனால், தமிழ்த்தேசியம் அப்படி அல்ல. இது வெவ்வேறு தேசிய இனங்களில் உள்ள வேறுபாடுகளை அல்ல, மாறாக ஒரே தேசிய இனத்திற்குள் இருக்கும் சாதிய வேற்றுமைகளை ஒழிக்கக் கோருகிறது. தேசம் எனப்படுவது ஒரு பொது மொழி, தொடர்ச்சியான நிலப்பகுதி, பொதுவான பொருளியல் வாழ்க்கை, வரலாற்றுப் பூர்வமான உளவியல் உருவாக்கம் இவற்றைக்கொண்டு அமைவது என்பது பொதுவான சமூக அறிவியல் நோக்கு. இந்நோக்கில் இந்தியா ஒரு தேசமல்ல என்பதும், அது பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதும், சமூக ஆய்வாளர்களது கருத்து. இந்திய தேசிய இனம் பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு முன் இருந்ததில்லை. ஆயினும், இந்தியப் பொதுவுடமை இயக்க அகரமுதலியில் தேசியம் என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்பதுதான் பொருள். இந்திய விடுதலை இயக்கத்தைத் தேசிய இயக்கம் என்றுதான் காங்கிரஸ்காரர்களும் பேசினார்கள். பொதுவுடமையாளர்களும் வழிமொழிந்தார்கள். இந்தியா ஒரு தேசம் என்பதுதான் மறுக்கப்படாத விதியாக இருந்தது. ஆனால், தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்திலிருந்து கோட்பாட்டு வரையறைகளின் அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டது ஆகும். இந்தியத் தேசியம் பிரிட்டிசு குடியேற்றக் காலத்தில் உருவான அரசியல் கருத்தாக்கமாகும். தமிழ்த்தேசியம் அதே குடியேற்றக் காலத்தில் உருவானதாக இருப்பினும் அடிப்படையில் மொழியினச் சமூக அடிப்படையில் உருவானதாகும். இந்தியத்தேசியம் பிரிட்டிசு எதிர்ப்பில் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களின் கூட்டிணைவின் விளைவாக உருப்பெற்றது. பிரிட்டிசு ஆட்சிக்குப் பின் இந்தியத்தேசியம் பிரிட்டிசு இந்தியாவை பல மாறுதல்களுடன் தனதாக்கிக்கொண்டது. வரையறைகள் ஏதுமற்று, தமது குடியேற்ற நலனுக்கும் சுரண்டல் வசதிக்கும் ஏற்ப பல்தேசிய மக்களை வலுக்கட்டாயமாக இணைத்து பிரிட்டிசார் இந்தியா எனும் அரசுக்கட்டமைப்பை உருவாக்கினர். அதனூடாக வளர்ந்த இந்தியத் தேசியம் தன் பெயர் உட்பட அனைத்திற்கும் பிரிட்டிசாரையே சார்ந்து நின்றது. பாகிஸ்தானும் பங்களாதேசும் இலங்கையும் பர்மாவும் பிரிட்டீசு இந்தியாவில் உள்ளடங்கியிருந்தன. அவை தனித்தனியே பிரிந்துசென்றுவிட்ட போதிலும் இந்தியா எனும் கட்டமைப்பு தொடர்கிறது. இதுவே , வரையறையற்ற, கற்பிதமான இந்தியத்தேசியக் கருத்தாக்கத்தின் தன்மைக்கான சான்றாக உள்ளது. தமிழ்த்தேசியம் என்பது மொழியினம் மற்றும் நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதால் நிலமும் மொழியும் இதன் அடிப்படைகளாக அமைகின்றன. இவ்விரு வரையறைகளை நீக்கிவிட்டால் தமிழ்த்தேசியம் இல்லை. அதற்கு மாறாக இந்தியத்தேசியத்திற்கு நிலமும் மொழியும் வரையறையாக இல்லை. அரசுக் கட்டமைப்பே அதன் இருத்தலுக்கான ஆதாரமாக உள்ளது. அதாவது, இந்தியத்தேசியம் இந்திய அரசுத்தேசியம் என்ற அளவிலேயே அமைகிறது. பிரிட்டிசு அரசு தோற்றங்கொண்டபிறகே இந்தியா எனும் தேசியக் கட்டமைப்புக்கான கருத்தியலுக்கான வரையறைகள் தோற்றங்கொண்டன. தமிழ்த்தேசியத்தின் சாரமான வரையறைகள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உருவாகி நிலைபெற்றவையாகும். தொல்காப்பியரின் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் எனும் வரையறுப்பு தொடங்கி தமிழர் சமூகம் தன் நிலத்தையும் மொழியையும் தன் சமூக அறிந்துணர்வில் (பிரக்ஞையில்) தொடர்ச்சியாகப் பெற்றுவந்துள்ளது. இதுகுறித்து ஏற்படும் புரிதலை வைத்து இந்திய தேசியம் வலியுறுத்தும் “வேற்றுமையில் ஒற்றுமையையும், தமிழ்த்தேசியம் வலியுறுத்தும் “ சாதியம் களைந்த ஒற்றுமையையும்” பெருமளவு விளங்கிக்கொள்ளலாம். திராவிடத்தேசியம் என்று ஒன்று கிடையாது. நேரடியாக அதற்கு அப்படி ஒரு வரையறுப்பும் முன் வைக்கப்பட்டதாகவும் சொல்ல முடியாது. எந்த வரையறுப்பும் இல்லாமலேயே, திராவிட நாடு, திராவிடத் தேசியம் என்னும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. மேட்டிமைச் சக்திகளாக இருக்கும் பிராமணர்களைத் தவிர்த்து பிற தென்னிந்தியர்களின் சமூக மேம்பாடு ஆகும். நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் புலே ஆகியோர் உருவாக்கிய இயக்கங்கள் ஆகியவறிற்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. இந்தியச் சமூக முரண்பாட்டை, அடிப்படையில் சாதிய வடிவில் அமைந்துள்ளதாகப் பார்ப்பதே இந்தப் பொதுப்பண்பு. திராவிடத்தேசியம் 1956க்கு முற்பட்ட சென்னை மாகாண அரசியலாகத் தோற்றம் கண்டது. கோட்பாட்டளவில் தென்னிந்தியர் அனைவரையும் திராவிடர் எனக் கூறினாலும் நடைமுறையில் சென்னை மாகாண மக்கள் நடுவில் மட்டுமே இக்கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்தியது. திராவிடத்தை முன்னெடுத்த இயக்கங்கள் ஆரியத்தை மொழியடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் சிலவகையில் எதிர்த்துப்பேசினாலும் ஆரியத்தின் அரசியல் அதிகாரக் கருவான இந்தியத்தை வீழ்த்துவற்கான செயல் திட்டமின்றி, அந்த இந்தியத்திற்கு அடிபணியவே செய்தன. இனத்தால் திராவிடன் நாட்டால் இந்தியன் என மயங்கின, தமிழர்களை மயக்கின. திராவிட நாடு என்பதற்கு திட்டவட்ட வரையறைகள் கிடையாது. இந்தியத்தேசியத்தின் உடன்விளைவாகத் தோன்றிய திராவிடத்தேசியம் தமிழ்த்தேசியம் போன்று நிலத்தையும் மொழியையும் வரம்பெல்லைகளாகக் கொண்டிருக்கவில்லை. திராவிடத்தேசியம் பிரிட்டீசு ஆட்சியின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் எனும் நில எல்லைக்குள் பிராமணர்களின் மேலாதிக்கத்தின் எதிர்ப்பரசியலாகத் தோன்றி வளர்ந்தது. இது உள்ளீட்டில் பல்தேசிய இனத்தன்மை கொண்டும், நிலம் குறித்த அறிதலற்றும் முதன்மையாகச் சமூகச்சிக்கல்களைக் கொண்டும் இருந்தது. இதன் தொடக்கக் கட்டம் தமிழ்த்தேசியத்துடன் தீவிர முரண்களை எட்டியது. இதற்கு திராவிடர் கழகம் பெயர்சூட்டல் விவகாரம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆனால், திராவிடர் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த்தேசிய உள்ளீட்டினைப் பெற்று வளர்ந்தது. தமிழர் வரலாற்றுப் பெருமைகள், தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழர் என்ற அடையாளப்படுத்தல் போன்றவற்றை திமுக பல்வேறு கட்டங்களில் தனதாக்கி வளர்த்தது. இவ்வாறாக திராவிடத் தேசியம் தொடக்கத்தில் முரண்பட்டும் பிறகு இணக்கமாகவும் தமிழ்த்தேசியத்துடன் உறவு கொண்டிருந்தது. திராவிடர் இயக்கத்தின் செல்வாக்கு மங்கத்தொடங்கிய 1990களில் தமிழ்த்தேசியம் மீள் உயிர் பெற்றது. தமிழ்த்தேசியத்திற்கும் திராவிடத்தேசியத்திற்கும் இடையேயான முதன்மையான வேறுபாடு இந்தியத் தேசியத்தோடு அவை கொண்டுள்ள உறவிலேயே தங்கியுள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடத்தேசியம் இந்தியத்தேசியத்தோடு நட்புமுரணாகவும் தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்தோடு பகைமுரணாகவும் உறவுகொண்டுள்ளன. இரண்டாம் வேறுபாடு நில இறையாண்மை குறித்த நிலைப்பாடு சார்ந்தது. அதாவது திராவிட இயக்கத்தின் கோட்பாட்டில் வாழும் நிலத்தின் மீது மக்கள் சமூகத்திற்கு இருக்கவேண்டிய இறையாண்மைக்கு இடமில்லை. ஆனால், தமிழ்த்தேசியத்திற்கு நிலம் இன்றியமையாத கூறாக உள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப்போராட்டக் காலமான 1950களில் தமிழ்த்தேசிய அக்கறை கொண்டிருந்த தமிழரசுக்கட்சி போன்ற கட்சிகள் தமிழர் நில உரிமைக்கு முன்னுரிமை கொடுத்தன. ஆனால், திராவிட இயக்கம் இதுகுறித்த அறிந்துணர்வற்று (பிரக்ஞையற்று) இருந்தது. இவ்வாறாக வாழும் நிலம் குறித்த நிலைப்பாடு திராவிடத்தேசியம் மற்றும் தமிழ்த்தேசியம் ஆகியவற்றுக்கும் இடையேயான இரண்டாவது வேற்றுமையாகும். இன்னமும் பல்வேறு வேற்றுமைகள் முரண்கள் இவ்விரு மெய்யியல் போக்குகளுக்கு இடையே நிலவுகின்றன. தலித்தியம் என்ற பெயரில் ஒரு கோட்பாட்டை அம்பேத்கர் அறிவிக்கவில்லை என்றாலும், இன்றைய தலித்தியம் அம்பேத்கரியக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. தலித்தியம் என்ற கோட்பாட்டின் சாரம், இந்திமயமாதலும், இந்தியத் தேசியத்தை ஏற்றலும் தமிழர் அடையாளங்களைக் கைவிடலும் என்று தமிழ்த்தேசியவாதிகள் கருதுகின்றனர். மேலும், தலித்தியத்தின் பிரிக்கமுடியாத கூறு இந்தியத் தேசியமும் மொழிவழித் தேசிய இன மறுப்பும் ஆகும் என்றும் தமிழ்த்தேசியவாதிகள் எண்ணுகின்றனர். இந்தியாவில் தலித்திய அரசியல் அம்பேத்கருக்கு சற்று முன்னே அரசியல் வடிவம் பெற்றது. சாதியச் சமூகத்தில் ஒரு தாராளவாத அரசுசார்ந்த சீர்திருத்தங்களைத் தன் அரசியல் இலக்குகளாகக் கொண்டு தலித்தியத்தின் குறிக்கோள்கள் அமைகின்றன. தலித் எனும் சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர் என்று பொருள் ஆகும். தலித்தியம் என்றால் ஒடுக்கப்பட்டவர் மெய்யியல் என்று பொருள்படுத்தலாம். ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தலித்தியம் என்றால் சாதியால் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையே நடைமுறையில் குறிக்கிறது தலித் என்பவர் தீண்டாமைக் கொடுமையால் பாதிப்புற்றவர் என்பதே பொருளாகக் கருதப்படுகிறது. தலித்தியம் இந்தியச் சமூகத்தை சாதிய அடிப்படைக் கட்டமைப்பாக அணுகுகிறது. இந்தியாவில் சாதிகள்தான் உள்ளன. தேசிய இனங்கள், மொழியினங்கள் போன்ற எந்த வகைப்பாடும் வெளித்தோற்றமே. உள்ளீடு சாதியக் கட்டமைப்பைத் தவிர வேறில்லை என்பது இதன் கருதுகோளாக உள்ளது. தலித்தியத்திற்கு மொழி ஒரு பொருட்டில்லை. சாதியால் தாழ்த்தப்பட்டோர் அனைவரும சமூக உரிமையால் தலித்துகளாக உள்ளனர். ஆகவே, தலித்தியம் சாதியொழிப்புக் கருத்தியலாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. தலித்தியம் ஒரு கோட்பாடாக எழுச்சி பெற்ற 1990களில் (அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சிக் காலம்) ஓர் அடையாள அரசியலாய் வீறுடன் எழுந்தது. சாதியொழிப்பு குறித்த அக்கறையையும் தேவையையும் முன்வைத்த தலித்தியம் தமிழ்த்தேசியத்துடன் நெருக்கமாக இருந்திட அதன் அகில இந்திய தலித்தியத் தலைவர்களின் இந்தியச்சார்பு அனுமதிக்கவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் அடையாளங்களை தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் கைவிடவேண்டும் என்றும் தமிழ்ப்பண்பாடு இந்தியப்பண்பாட்டுடன் தொடர்புடையது என்றும் இந்தியத் தலித் தலைவர்கள் கூறுகின்றனர். ஆயினும், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்த்தேசியத்தையும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை அரசியலையும் ஒருங்கே முன்வைக்கும் கட்சியாக விளங்குகிறது. மேலும், “இந்து ராச்சியத்தை எதிர்த்தும், பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும் தமிழனையும் தமிழையும் பாதுகாக்க மூரிக்கிளர்ந் தெழுந்த முதற்குரல் தமிழ்த்தேசியத் தலித்தியக்குரல்தான் என்று அயோத்திதாசரை அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழ்த்தேசியம் பின்வரும் கூறுகளை நேர்நிலைத் திறனாய்வுகளாகக்கொண்டு விளங்குகின்றது. பல்வேறு தளங்களில் இருந்து தமிழ்த் தேசியம் நோக்கி விமர்சனங்கள் உண்டு. அவற்றின் தொகுப்பு கீழே: பேராசிரியர் சி. சிவசேகரம் கிரேக்கம் (நாடு) கிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: "எல்லிநீக்கி டீமொக்ராத்தியா"; ஆங்கிலம்: "Hellenic Republic" (Ελληνική Δημοκρατία, என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ-யூரோ மக்கள் கி.மு.2000 ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200ஆம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ-யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது. கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, 2 ஆம் பிலிப் மற்றும் அவரது மகன் ஆகியோர் மசிடோனியாவின் மகா ஆலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460 இல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821 இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1827 இல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மனியின் பிடியில் சிக்கியது. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974 இல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இற்குப் பின்னர் குடியரசானது. கிரேக்கத்தில் ஆரம்பத்தில் பாரம்பரிய கிரேக்க கலாச்சாரம் நிலவியபோதும், பிற்காலத்தில் பரிசுத்த உரோமானியப் பேரரசின் தாக்கமும் பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கும் கிரேக்க நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயித்தன. பின்னர் கிரேக்கத்தின் கலாச்சாரத்தில் ஒட்டோமன் பேரரசு, வெனீஷியக் குடியரசு, ஜெனோயிஸ் குடியரசு, பிரித்தானியக் குடியரசு என்பன நவீன கிரேக்க நாகரிகத்தில் செல்வாக்குச் செலுத்தின. எனினும், சுதந்திரத்திற்கான கிரேக்க யுத்தமானது அவர்களின் பன்முக கலாச்சாரத்தைப் பின்தள்ளிப் பாரமரிய கலாச்சாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியது. கிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். மிதமானதும் உலர்ந்ததும் பிரகாசமான சூரியஒளியும் கொண்டதாகக் கோடைகாலம் காணப்படுகின்றது. மாரிகாலம் குளிர் நிறைந்ததாகவும் மெல்டிமி என்ற காற்றின் செல்வாக்கால் சிறிது மழை வீழ்ச்சியும் காணப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த நாடு வாங்கிய கடனை 2015 ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று திருப்பிச்செலுத்த முடியவில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. அதனால் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது. 1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியும் மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று. 30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. கிரேக்கம் கிரேக்கம் என்பது கீழ்க்கண்டவற்றில் ஒன்றை குறிப்பிடலாம், சுழற்சிக் காலம் வானியலில், சுழற்சிக் காலம் என்பது ஒரு விண்பொருள் தன் அச்சில் தன்னைத்தானே சுற்ற ஆகும் கால அளவாகும். இது அப்பொருளின் விண்மீன் பின்னணியை சார்ந்து அளக்கப்படுகின்றது. பூமியை பொறுத்தவரை இதுவே அதன் மெய் நாளாகும், இது சூரியனை சார்ந்து, சூரியன் பூமியின் முதல்நெடுவரையை கடக்கவாகும் காலளவாய், அளக்கப்படும் பகலவ நாளிலிருந்து மாறுபடும். பொதுவில் (ஆனால், முறையற்றதாய்), சுழற்சிக் காலம் என்பதை அவ்விண்பொருளில் உணரப்படும் நாள்பொழுதாகக் கருதலாம் (எடுத்துக்காட்டாய், சூரியனை சுற்றிவரும் ஒரு கோளின் சூரிய நாள்பொழுது). திடப் (விண்)பொருள்களுக்கு, பாறையாலான கோள்கள் மற்றும் விண்கற்கள் போன்றவற்றிர்க்கு, சுழற்சிக் காலம் என்பது மாறா மதிப்பைத்தான் பெற்றிருக்கும். வளிம/பாய்மக் கூற்றினாலான பொருள்களின், விண்மீன்கள் பெரும் வாயுக்கோள்கள் போன்றவற்றின், சுழற்சிக் காலம் முனையிடையிலிருந்து நடுவரை வரை இடதிற்கிடம் மாறுபடும், இம்மாற்றம் வகையீட்டுச் சுழற்சியென்ற தோற்றப்பாட்டின் வினையாகும். வழக்கில், ஒரு பெரும் வாயுக்கோளின் (எ-டு., வியாழன்) சுழற்சிக் காலம் எனத்தரப்படும் மதிப்பு அதன் அகச்சுழற்சிக் காலமாகும், அஃதாவது, அக்கோளின் காந்தக் களத்தின் சுழற்சிக் காலமாகும். பொதுவில், சமச்சீர் கோளவடிவம் பெற்றிராத (விண்)பொருள்களின் சுழற்சிக் காலம், ஈர்ப்பு மற்றும் பேரலை விசைகள் இல்லாதிருப்பினும், நிலையான மதிப்புடையதல்ல. இதன் காரணம், அப்பொருளின் சுழற்சி அச்சு (அண்ட)வெளியில் நிலைப்பெற்றிருந்தாலும் (கோண உந்தக் காப்பாண்மைக்கு படிந்து), அப்பொருளோடே நிலைப் பெற்றிருக்க வேண்டிய கட்டாயமின்மையே யாகும். இதனால், சுழற்சி அச்சை சுற்றிலும் அப்பொருளின் நிலைமாறு உந்தமும் அதனால் அப்பொருளின் சுழற்சி வீதமும் மாறுபடலாம் (காரணம், நிலைமாறு உந்தம் மற்றும் சுழற்சி வீதம் இவற்றின் பெருக்கலே கோண உந்தமாகும், இஃது நிலையானது). ஹைப்பெரியன் என்ற சனிக்கிரகத்தின் துணைக்கோள் இத்திகழ்வை கொண்டுள்ளது, அதனின் அதன் சுழற்சிக் காலம் ஒழுங்கிலி எனக் கூறப்பெற்றது. சுழற்சிக் காலம் என்பது, ஒரு விண்பொருள் பிறிதொரு (பெரிய) விண்பொருளை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலளவான சுற்றுக்காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆதலின், பூமி தன் சுழற்சிக் காலமாய் 24 மணி நேரத்தையும்(ஒரு நாள்), தன் சுற்றுக்காலமாய் 365 நாட்களையும் கொண்டுள்ளது. மற்றொருபுரம், பூமியின் துணைக்கோளான நிலவின் சுழற்சிக்காலம் அது பூமியை சுற்றிவர ஆகும் காலமான சுற்றுக்காலத்தை துள்ளியமாய் ஒத்திருக்கின்றது, நிலவின் ஒரேப் பக்கம்தான் பூமியை எப்பொழுதும் நோக்கியிருகின்றது என்பதனால் இவ்வாறு அமைந்துள்ளது. இஃது ஒத்தகால சுழற்சியென அழைக்கப்படுகின்றது. இவ்வியக்கங்களின் கணிப்பும் பதிவும் நாட்காட்டிகளின் பயன்பாட்டால் எளிமையடைந்தன. ஒரு பூமியாண்டில் (பூமியின் சுற்றுக்காலம்) உள்ள பூமிநாட்களின் (பூமியின் சுழற்சிக் காலம்) எண்னிக்கை முழுவெண் அல்ல, தோராயமாய் 365.24 நாட்கள். பெருமளவில் பயன்பாட்டில் இருக்கும் கிரெகோரியன் காலவரையீட்டில் இம்முரன்பாட்டை ஈடுசெய்ய எச்ச நொடிகள், எச்ச ஆண்டுகள், எச்ச நூற்றாண்டுகள் (400 ஆண்டிற்க்கு ஒருமுறை தோன்றும் எச்ச ஆண்டு) தேவைப்படுகின்றன. பிற காலவரையீடுகள் வேறுமாதிரியான முறைகளைக் கொண்டு இதை ஈடுசெய்தோ அல்லது இம்முரன்பாட்டை கருத்தில் கொள்ளாமலோ விடுகின்றன. மால்ட்டா மால்ட்டா அல்லது மோல்ட்டா ("Malta") தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும். உடப்பு உடப்பூர் அல்லது உடப்பு ("Udappu") என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இக்கிராம மக்கள் திரௌபதியைத்தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுகின்றார்கள். நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத்திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி வருகின்றனர். உலக அமைதி நாள் உலக அமைதி நாள் ("International Day of Peace") ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. பல்காரியா பல்கேரியா அல்லது பல்காரியா என்னும் நாடு (, "Bălgariya", ஒலிப்பு/பலுக்கல்: ), முறைப்படி பல்கேரியக் குடியரசு (, "Republika Bălgariya", ஒலிப்பு/பலுக்கல்: ) ஐரோப்பாவின் தென் கிழக்கே அமைந்துள்ளது. இன்றைய பல்கேரியா ஐந்து நாடுகளுடன் எல்லை கொண்டுள்ளது.: வடக்கே டானூப் ஆற்றை ஒட்டி ருமேனியா, மேற்கே செர்பியாவும் மசிடோனியாவும், தெற்கே கிரீசும் துருக்கியும் கருங்கடலும். முற்காலத்தில் பல்கேரியாவில் திரேசியம் என்னும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிய திராசியர் வாழ்திருந்தனர். அதன் பின்னர் பழம் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இங்கு வாழ்ந்தனர். அதன் பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பலம்பொருந்திய பல்கேரியப் பேரரசு இங்கு நிறுவப்பட்டது. இதன் பயனாய் இலக்கியம் கலைப் பண்பாடுளின் தாக்கம் பால்க்கன் பகுதியின் பெரும்பான்மையான இடங்களிலும், கிழக்கு ஐரோப்பாவின் சிலாவிக் மக்கள் இடையேயும் பரவியது. இரண்டாவது பல்காரியப் பேரரசின் வீழ்ச்சியின் பிறகு, பல்காரியா 5 நூற்றாண்டுகளுக்கு ஒட்டோமான் பேரரசுக்குக் கீழ் இருந்தது. பின்னர் 1878ல் பல்காரியா மேண்டும் அரசியல்சட்ட முடியாட்சியுடன் மீண்டும் நிறுவப்பட்டது. இதுவே மூன்றாவது பல்காரியப் பேரரசின் துவக்கம் என்று கூறப்படுகின்றது. இன்று பல்காரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள ஒரு மக்களாட்சிப்படி அரசியல் சட்டக் குடியரசாக ஆளப்படும் ஒருங்கிணைந்த நாடு. இது நேட்டோ (NATO) கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று. சொற்பிறப்பு பல்கேரியா என்ற பெயர் பல்கேரியர்களிடமிருந்து பெறப்பட்டது, இது துருக்கிய தோற்றத்தின் ஒரு பழங்குடி நாடாகும். 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே, அவர்களின் பெயர் முழுமையாக அறியப்படவில்லை, கடினமாகவும் இல்லை, ஆனால் அது ப்ரோடோ-துர்க்கிக் வார்த்தையான புஷ்கா ("கலந்து", "ஷேக்", "கிளர்") மற்றும் அதன் வழித்தோன்றல் புல்காக் (" கிளர்ச்சி "," கோளாறு "). அர்த்தம் மேலும் "கிளர்ச்சி", "தூண்டுதல்" அல்லது "கோளாறு நிலையை உருவாக்குதல்" ஆகியவற்றிற்கு மேலும் நீட்டிக்கப்படலாம், அதாவது "தொந்தரவுகள்". 4 ஆம் நூற்றாண்டின் போது பண்டைய சீனாவில் "ஐந்து பார்பாரியன்" குழுக்களின் ஒரு பகுதியாக இருந்த புளுலோஜி "கலப்பு இனம்" மற்றும் "சிக்கல்களை உருவாக்கியவர்கள்" என சித்தரிக்கப்பட்டது, . போட்சுவானா போட்ஸ்வானாக் குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு (), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "பாட்ஸ்வானர்" என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ல் விடுதலை பெற்றபின் "போட்ஸ்வானா" என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன. ஆரக்கிள் தரவுத்தளம் ஆரக்கிள் தரவுத்தளம் அல்லது ஒரக்கிள்(Oracle) தரவுத்தளம் ஆனது ஆரக்கிள் காப்ரேசன் இனால் உருவாக்கப்பட்ட சார்பான ஓர் தரவுத்தள முகாமைத்துவ மென்பொருளாகும் (RDBMS). பல முறை பெயர்மாற்றப்பட்ட இம்மென்பொருளை ஆரக்கிள் தரவுத்தளம் என்றவாறோ அல்லது பொதுவாக ஆரக்கிள் அல்லது ஒராக்கிள் என்றவாறோ அழைக்கின்றனர். 1977 இல் லாரி எரிசனும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஓர் மென்பொருள் விருத்திக்கான ஆலோசனை வழங்கும் ஓர் நிறுவனத்தை ஆரம்பித்தனர் (சாப்ட்வேர் டெவலப்மெண்ட் லாப் - SDL). இவ்வாய்வு கூடத்திலேயே ஆரக்கிள் மென்பொருளின் விருத்தி ஆரம்பித்தது. மத்திய புலனாய்வு முகவர்கள் என்றழைக்கப்படும் சீஐஏ (CIA) இனால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஓர் திட்டத்தின் இரகசியப் பெயராக ஆரகிள் தரப்படிருந்தது. இப்பெயரையே தமது நிறுவனத்தின் தரவுத்தளத்திற்கும் பெயரிட்டனர். பெரும்பாலான கணினி இயங்குதளங்கள் ஆரக்கிள் இயங்குதளத்தைப் பாவிக்க முன்வந்துள்ளன. வளைவுந்தம் மாறாக் கொள்கை ஒரு கட்டுற்ற மன்டலத்தில் கோண உந்தம் மாறிலியாகும், இக்கொள்கையே கோண உந்தக் காப்பாண்மை விதி அல்லது வளைவுந்தம் மாறாக் கொள்கை ("Conservation of Angular Momentum") எனவறியப்படும். இக்காப்பாண்மை விதி வெளியின் தொடர்த் திசைச் சமச்சீர்ப் பண்பின் (வெளியின் எந்தவொரு திசையும் மற்ற திசையைவிட மாறுபட்டதல்ல) தொடர்வாகும். கோண உந்ததின் காலவகையீடு கோண விசை எனப்படும்: ஆதலின், கட்டுற்ற மன்டலம் எனவிங்கே குறிக்கப்படுவது பிற(புறத்தேயிருந்து) கோண விசைகள் எதுவும் இல்லாதிருப்பதயே: இங்கு, formula_3 என்பது துகள் மன்டலத்தின் மேல் செலுத்தப் பெற்ற எந்தவொரு கோண விசையையும் குறிக்கும். சுற்றுப்பாதைகளில், (மொத்தக்)கோண உந்தம் அக்கோளின் சுழற்க் கோண உந்தம் மற்றும் அச்சுற்றுப்பாதையின் கோண உந்தம் எனப்பகிரப் பட்டிருக்கும்: ஒரு கோள் கணிக்கப்பட்ட அளவைவிட மெதுவாய் சுழன்றால் அதனுடன் துணைக்கோள் (ஒன்றோ அல்லது பலவோ) இணையப் பெற்றிருப்பதை உணர்ந்தறியலாம், காரணம், மொத்தக் கோண உந்தத்தை மாறிலியாய் காக்க அக்கோளும் அதன் துணைக்கோளும் தங்களுக்குள் (கோண உந்தத்தை) பகிர்ந்து பெற்றிருப்பதே யாகும். கோண உந்தக் காப்பான்மை "மையநோக்கு விசை இயக்கங்களை" அலசியாய்வதில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. ஒருப் பொருளின் மீதான நிகர விசைகள் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியையே (இப்புள்ளி அவ்வியக்கத்தின் "மையம்" எனவறியப்படும்) நோக்கியிருப்பின், அவ்வமைப்பே "மைய நோக்கு விசையியக்கம்" என்பதாகும். இம்மையப்புள்ளியை பொருத்தவரை அப்பொருளின் மீது எந்த கோண விசையும் இயங்கவில்லை, ஆதலின் இவ்வியக்கத்தின் கோண உந்தம் மாறுபடாது. கோள்கள் மற்றும் துணைக்கோள்கள் போன்றவற்றின் சுற்றுப்பாதை இயக்கங்களை ஆராய்வதிலும், போர் மாதிரியில் அணுவின் இயக்கங்களை ஆராய்வதிலும் மாறாக் கோண உந்தம் பெரிதும் துணைபுரிகின்றது. ஒரு பனிச்சறுக்கு வீரர் தான் சுழலும் பொழுது தன் கைகளை மார்போடு அனைத்தால் சுழற்சி வேகம் அதிகரிப்பதையும், அவரே தன் கைகளை அகலவிரித்தால் அவரின் சுழற்சி வேகம் குறைவதையும் காணலாம், இத்திகழ்வை கோண உந்தக் காப்பாண்மையால் விளக்கலாம், அதன்படி, அவ்வீரர் தன் கைகளை மார்பொடு அனைக்கையில் அவரது உடலின் திணிவுகள் சுழற்சி அச்சுக்கருகில் குவிவதனால் அவரது நிலைமாறு உந்தம் குறைகின்றது, கோண உந்தத்தை மாறாமல் காக்கும்பொருட்டு அவரின் கோணத் திசைவேகம்(சுழற்சி வேகம்) அதிகரிக்கின்றது. இதே தோற்றப்பாடுதான் பெரிய (மெதுவாய் சுழலும்) விண்மீனிலிருந்து உருவாகும் சிறிய விண்மீன்களின் அதிவேக சுழற்சியை விளக்குகின்றது (பார்க்கப் போனால், ஒருப் பொருளின் அளவை 10 மடங்கு குறைப்பதனால் அதன் சுழற்சி வேகம் 10 மடங்கு அதிகரிக்கின்றது). பூமி-நிலா மன்டலத்தில், கோணக் காபான்மைக் காரணமாய் பூமியின் கோண உந்தம் சிறுகச்சிறுக நிலவுக்கு மாற்றப்ப்பெறுகின்றது, இதன் விளைவாய் பூமியின் சுழற்சி வீதம் குறைவதும் (ஏறத்தாழ 42 நூணநொடிகள்/நாள்) நிலவின் சுற்றுப்பாதை விரிவடைவதும் (சுற்றுப்பாதையின் ஆரம் ~4.5செ.மீ/ஆண்டு என்ற வீதத்தில் அதிகரிக்கின்றது) நிகழ்கின்றன. தமிழ் எண்ணிம நூலகம் தமிழ் எண்ணிம நூலகம் அல்லது மின்னூலகம் என்பது எண்ணிம வடிவில் ஆக்கங்களைக் சேகரிக்து கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு வசதிகள் செய்யும் நூலகம் ஆகும். கணிகளில் நேரடியாகவோ, உள்ளக பிணையம் ஊடாகவோ, இணையம் ஊடாகவே இவை அணுகப்படத்தக்கவாறு வசதிகள் செய்யப்படலாம். முழுக்க முழுக்க தமிழ் அல்லது தமிழர் தொடர்பான ஆக்கங்களைக் கொண்ட எண்ணிம நூலகங்கள் தமிழ் எண்ணிம நூலகங்கள் எனப்படுகின்றன. தமிழிலும் ஆக்கங்கள் கொண்ட பல்வேறு எண்ணிம நூலகங்களும் உள்ளன. சுற்றுப்பாதையின் நிலைத் திசையன் வான் இயக்கவியலில் சுற்றுப்பாதை நிலைத் திசையன்கள் ("Orbital state vectors") (நிலைத் திசையன்கள் எனவும் அறியப்படும்) என அறியப்படுபவை சுற்றுப்பாதையில் செல்லும் ஒரு விண்பொருளின் இடநிலை(formula_1) மற்றும் திசைவேகம்(formula_2) ஆகியவற்றின் திசையன்களேயாகும். இவை இவற்றை அளக்கும் கால அளவோடு(formula_3) சேர்ந்து அப்பொருளின் (சுற்றுப்பாதை) நிலையை துல்லியமாய் வரையறுக்க வல்லவை. ஒரு செயற்கைத் துணைக் கோளை ஏவுதற்கு முன்பே, நிலைத் திசையன்களைக் கொண்டும் (ஏவுதற்கான காலத்திலிருந்து அளக்கப்படும்) காலத்தைக் கொண்டும், அச்செயற்கைத் துணைக் கோளின் (செய்மதியின்) சுற்றுப்பாதை இயல்புகளை கணித்தறியலாம். இஃது நிலைத் திசையன்களை காலச் சார்பற்றதாய் ஆதலின் பொதுவில் அச்சுற்றுப்பாதையை கணிக்க உதவுகின்றது. நிலைத் திசையன்கள் ஒரு குறிப்பிட்ட அசையா ஒப்புச்சட்டத்தில் கொள்ளப்பட வேன்டும். வான் இயக்கவியலில், செயல்வழக்கில் இஃது பின்வரும் பண்புகளைக் கொண்டதாய் கொள்ளப்படும்: சுற்றுப்பாதை இடநிலைத் திசையன் formula_1 என்பது ஒரு கார்ட்டீசியத் திசையனாகும், இஃது அச்சுற்றுப்பாதையில் (ஒப்புச்சட்டத்தை சார்ந்து) அப்பொருளின் இடத்தை வரையருக்கும். சுற்றுப்பாதை திசைவேகத் திசையன் formula_2 என்பது ஒரு கார்ட்டீசியத் திசையனாகும், இஃது அச்சுற்றுப்பாதையில் (ஒப்புச்சட்டத்தை சார்ந்து) அப்பொருளின் திசைவேகத்தை வரையருக்கும். (அண்ட)வளியினூடே பயனிக்கும் எந்தவொரு (விண்)பொருளுக்கும் அதன் திசைவேகத் திசையன் என்பது அப்பொருள் பயனிக்கும் நிலைப்பாதையின் தொடுகோடாகும். formula_6 என்பது நிலைப்பாதையின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தொடுக்கோடாய் அமைந்த அலகு திசையன் என்றால், சுற்றுப்பாதை திசைவேகத் திசையனை formula_8, சுற்றுப்பாதை இடநிலைத் திசையனிலிருந்து formula_9 அதன் காலம் சார்ந்த வகையீடு என வரையலாம், சுற்றுப்பாதை நிலைத் திசையன்கள் சுற்றுப்பாதை கூறுகளுக்கு (கெப்லரியன் கூறுகள்) நிகரானவை, மேலும் ஒன்றைக்கொண்டு மற்றதையறியலாம் (மற்றும் சுற்றுப்பாதையின் பிற கூறுகளையும் வரையலாம்). பயன்பாட்டு அனுகூலங்களில் சுற்றுப்பாதை நிலைத் திசையன், சுற்றுப்பாதை கூறுகள் இரன்டுமே ஒன்றிற்க்கொன்று சளைத்தவையல்ல. முன்கூட்டியே கணிக்கப்படுவதால் சுற்றுப்பாதை கணிப்பில் நிலைத் திசையன்கள் பெரிதும் உதவுகின்றன. வானியக்கவியலில், நிலைத் திசையன்கள் (formula_1 மற்றும் formula_2) பின்வரும் துணைத் திசையனோடு சேர்ந்து பயன்படுத்தப்பெறும்: வீதச் சார்பு கோண உந்தம்த் திசையன், formula_13 இதனோடு நிலைத் திசையன்களையும் கொண்டு பின்வரும் சுற்றுப்பாதை கூறுகளை (கெப்லரியன் கூறுகள்) கணிக்கலாம். காலத்தோடு(formula_3) அவற்றைக் கொண்டு பின்வரும் சுற்றுப்பாதையின் பிற கூறுகளையும் கணிக்கலாம். மாலி மாலி ("Mali", மாலிக் குடியரசு, பிரெஞ்சு மொழி: République du Mali), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். இதன் எல்லைகளாக வடக்கே அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புர்கினா பாசோ, மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியனவும், தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மற்றும் மௌரித்தானியா ஆகியனவும் அமைந்துள்ளன. மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது. அதேவேளை மக்கள் அதிகம் வாழும் இதன் தெற்கெல்லை நைஜர் மற்றும் செனெகல் ஆற்றுப் படுகை வரை நீண்டுள்ளது. பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது. இப்பெயர் நீர்யானையின் பம்பாரா மொழிப் பெயரடியில் இருந்து மருவியது. மாலியின் தலைநகரம் பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் "முதலைகளின் இடம்" என்ற பொருள் கொண்டது். 1980இல் மாலி பிரான்சின் முற்றுகைக்குள்ளாகி அதன் குடியேற்ற நாடாகியது. இது பிரெஞ்சு சூடான் அல்லது சூடானியக் குடியரசு என அழைக்கப்பட்டது. 1959இன் துவக்கத்தில், மாலி, செனெகல் ஆகியன மாலிக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டமைப்பு ஜூன் 20, 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. சில மாதங்களில் இக்கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியது. மாலிக் குடியரசு, மொடீபோ கெயிட்டா தலைமையில் செப்டம்பர் 22, 1960இல் பிரான்சிடம் இருந்து விலகியது. 1968இல் இடம்பெற்ற இராணுவப் (படைத்துறைப்) புரட்சியில் மொடீபோ கெயிட்டா சிறைப்பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் "மவுசா ட்ர்றோரே" என்பவர் 1991 வரை ஆட்சியில் இருந்தார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1991இல் மீண்டும் இராணுவப் (படைமுகப்) புரட்சி இடம்பெற்றது. 1992இல் "அல்ஃபா ஔமார் கொனாரே" என்பவர் மாலியின் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். 1997இல் மீண்டும் இவர் அதிபரானார் (தலைவரானார்). 2002இல் இடம்பெற்ற தேர்தலில் அமடூ டுமானி டவுரே அதிபராகி இன்று வரை ஆட்சியில் உள்ளார். இன்று மாலி ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான ஆட்சியுள்ள நாடாகத் திகழ்கிறது. மாண்டே (Mande) 50% (பம்பாரா, மாலின்கே, சோனின்கே), பெயூல் (Peul) 17%, வோல்ட்டாயிக் (Voltaic) 12%, சொங்காய் (Songhai) 6%, டுவாரெக் மற்றும் மூர் (Moor) 10%, ஏனையோர் 5% இஸ்லாம் 90%, பழங்குடிகளின் மதம் 9%, கிறிஸ்தவம் 1% "மாலி" நாட்டின் பொருளாதார விவகாரங்களை மத்திய மேற்கு ஆப்பிரிக்க வங்கியும், மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமும் ஒன்றாக இணைந்து கவனித்துக் கொள்ளுகின்றன. உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது. ஒரு தொழிலாளியின் ஆண்டு வரிமானம் 97,500 ரூபாய் ($ 1,500 டாலர்கள்) மட்டுமே. இந்நாட்டின் முக்கிய தொழிலே விவசாயம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தியானது மேற்க்கத்திய நாடுகளான செனகல், ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் மட்டும் 620,000 டன் பருத்தி உற்ப்பத்தி செய்யப்பட்டது, ஆனாலும் 2003 ஆம் ஆண்டில் விலையில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் வீழ்ச்சியையே சந்தித்தது. பருத்தியைத் தவிர்த்து நெல், பருப்பு வகைகள், மக்காச்சோழம், காய்கறிகள், மரச்சாமான்கள், தங்கம், விலங்கினங்கள் என்பனவையும் சேர்த்து 80% அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இங்கு 80% மக்கள் விவசாயத்தையே நம்பி வாழுகிறார்கள். மேலும் 15% மக்கள் தான் வேறு பொது பணியில் ஈடுபடுகிறார்கள். இது போக மேலும் உள்ளவர்கள் வேலையற்றவர்களாக ஏதும் கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு வாழுகிறார்கள். மாலி பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும் சரியான விலை கிடைக்கதற்க்கு அமெரிக்காவின் கொள்கையும் ஒரு காரணம் ஆகும். அமெரிக்கா அவர்களின் பருத்தி விவசாயிகளுக்கு அதிகமான மானியம் வளங்குகிறது. இதனால் உலக சந்தையில் மாலி நாட்டு பருத்திக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் விலை விழ்ச்சியை சந்திக்க வேண்டியுள்ளது. 90% வீதமானோர் சுன்னி இஸ்லாமியப் பிரிவைப் பின்பற்றுகின்றனர். 1908 1908 (MCMVIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. எஸ். எம். எஸ் எம்டன் (1906) எஸ்.எம்.எஸ் "எம்டன்" என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் போலந்து நாட்டின் "டான்ஜிக்" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும். 'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. 1914 ஆகஸ்ட் இறுதியில் 'எம்டன்' சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது. 1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன. அவன் சரியான எம்டனாக இருக்கான் அதாவது வருவதும் போவதும் தெரியாமல் இருக்கான் என்று பொருள் பட கூறுவார்கள். இச்சொற்றொடர் சென்னையை அடுத்து எம்டன் நாசகாரிக் கப்பல் திடீர் திடீர் என்று தோன்றி ஆங்கிலேயருக்கு போக்கு காட்டியதால் ஏற்பட்டது. எம்டன் (இடாய்ச்சுலாந்து) எம்டன் (Emden) இடாய்ச்சுலாந்தின் வடமேற்காக அமைந்துள்ள துறைமுக நகரம். 2006 முதல் கிழக்கு பிரழ்சியா வின் முக்கிய நகரமாயிற்று, இதன் மொத்த மக்கட்தொகை 51,692 ஆகும். இந்நகரம் நிறுவப்பட்ட ஆண்டுகள் சரியாக கணிக்கமுடியவில்லை. "8 வது நூற்றாண்டுகளில்" இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் பழமைப் பெயர்களாக "அமுதான், எம்டா, எம்டன்" என்றுக் கூறப்படுகிறது. 1495 ல் முதலாம் மாக்சுமிலன் காலத்தில் இது நகர ஏற்புப்பெற்றது. "17 ம் நூற்றாண்டுகளில்" டச்சுக்காரர்களின் குடியேற்றத்தால் இது மிகவும் செல்வ செழிப்புமிக்க நாகரமாக விளங்கியது. அப்போது புராட்டசுத்தாந்து மதம் பரவியிருந்ததோடு விவிலியத்தின் முதல் டச்சு மொழியாக்கம் வெளியிடப்பட்டது. பிரான்சிய நெப்போலியன் காலத்தில் கிழக்கு பிரழ்சியா அதனை சுற்றியுள்ள நகரங்கள் ஒல்லாந்து இராச்சியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. 1870 களில் இந்நகரில் தொழிற்புரட்சிகள் ஏற்பட்டன. "19 நூற்றாண்டுகளில்" மிகப்பெரியக் கால்வாய்த்திட்டமான டார்ட்மன்ட் எம்சு கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எம்டன் மற்றும் ரக்ர் பகுதிகளை இணைத்தன. இதனால் 1970 வரை எம்டன் துறைமுக நகரமாக இருக்கக் காரணமாயிற்று. 1903 ஆம் தொடங்கப்பட்ட கப்பல் கட்டும் துறைமுகம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இதன் முக்கிய அழகிய எழில் மிக்க கட்டடங்கள் இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் முற்றிலும் அழிந்தன. மிகவும் மோசமானத் தாக்குதல் செப்டம்பர் 6, 1944 அன்று நடந்தது. 80 விழுக்காடு வீடுகளும் நகர சொத்துக்களும் அழிந்தன. ஏறத்தாழ "18 ஆண்டுகளுக்குப்" பிறகு இந்நகரம் செப்டம்பர் 6, 1962, ல் மீண்டும் செப்பனிடப்பட்டது. இந்நகரின் முக்கியத் தொழில்களாக "கப்பல் கட்டும்" தொழிலும், "மோட்டார் வண்டிகள்" தயாரிப்புகளும் இருக்கின்றன. 1973 ல் "பயன்பாட்டு அறிவியல்" பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்பொழுது "3500" மாணவர்கள் ஆண்டுதோறும் கல்வியறிவு பெறுகின்றனர். முக்கிய விளையாட்டு கால்பந்தாட்டம். நிறைய பேர் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபாடுகொண்டுள்ளனர். இங்கு பல கால்பந்தாட்டக் குழுக்கள் உள்ளன. நிறைய பேர் கால்பந்தாட்ட விளையாட்டை ரசிக்கின்றனர். ஒரேநேரத்தில் "12000 பேர்" கண்டு களிக்கும் அளவுக்கு இங்கு அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவும் செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995 நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வைக் குறிக்கும். இலங்கை அரசு இக்குற்றச்சாட்டை மறுத்தது. தாக்குதல் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் ஊடகத் தணிக்கை நடைமுறையில் இருந்ததாக ஊடகவியலாளர்களும், மனித உரிமைகள் அமைப்புகளும் தெரிவித்தன. அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் "புக்காரா" விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.. கனாவுஜி மொழி கனாவுஜி மொழி இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பொதுவாக மேற்கு ஹிந்தியின் கிளை மொழியாகவும் கருதப்படுவதுண்டு. இம் மொழியிலும், திர்ஹாரி, மாறுநிலைக் கனாவுஜி முதலிய கிளைமொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழியினர் தங்கள் மொழியைப் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்த போதிலும், தற்காலத்தில் இவர்கள் மத்தியில் ஹிந்தி மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. அழிந்து போகக்கூடிய வாய்ப்புள்ள இம் மொழியைக் காப்பாற்றுவதிலும் இவர்களில் ஒரு பகுதியினர் அக்கறை காட்டி வருகின்றனர். கனாவுஜி என்னும் பெயரை ஆய்வாளர்களே இம்மொழிக்கு வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இம்மொழி பேசுபவர்கள் தங்கள் மொழியை ஹிந்தி என்றே குறிப்பிடுகின்றனர். அவதி மொழி அவதி மொழி இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அவத் பகுதியிலேயே பேசப்படினும், மத்தியப் பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள்; டெல்லி, நேபாளம் ஆகிய இடங்களிலும் இம் மொழி பேசுவோரைக் காணமுடியும். தற்காலத்தில் இது ஹிந்தியின் ஒரு கிளை மொழியாகவே கருதப்பட்டு வரினும், அண்மையில் ஹிந்தி மொழி தரப்படுத்தப்படுவதற்கு முன், அவதி மொழியே இந்துஸ்தானியின் கிளைமொழிகளுள் இரண்டாவது முக்கிய இலக்கிய மொழியாகத் திகழ்ந்தது. துளசிதாசின் "ராம்சரித்மானஸ்", மாலிக் முகம்மத் ஜெய்சியின் "பத்மாவத்" என்பன இம்மொழியிலுள்ள முக்கிய இலக்கியங்களாகும். அவதி, இப்பகுதியின் மிகப் பழைய மொழியான பிராஜ் பாஷாவிலிருந்து தோன்றியது. மகதி மொழியின் தாக்கமும் இம்மொழியில் காணப்படுகின்றது. நவீன ஹிந்தி மொழியின் உருவாக்கத்தில் அவதி மொழிக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒசாக்கா ஒசாகா ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் யோடோ ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியில் ஒசாகா என்றால் 'பெரிய குன்று' என அர்த்தம். ஜப்பான் நாட்டின் தொழில் தலைநகரமாகக் கருதப்படும் ஒசாகா ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்குள்ள சுரங்க இரயில்கள் மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. நாகர்கோவில் (இலங்கை) நாகர்கோவில் ("Nagarkovil", நாகர்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சிப் பிரிவில் பருத்தித்துறைக்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 10,000 ஆகும். இங்கு கடற்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இவ்வூர் மக்களில் 99 வீதமானோரும் இந்துக்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள். இது கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. 1995 இல் போர் அனர்த்தம் காரணம் 26 மாணவர்களைக் காவு கொண்ட பின்னர் பாடசாலைகள் இங்கு 12 ஆண்டுகளின் பின் மீண்டும் இயங்குகின்றன. பாசுபரசு பாஸ்பரஸ் (Phosphorus, IPA:[ˈfɒsfərəs]) என்னும் வேதியியல் தனிமம் சில வகையான பாறைகளில் கிடைக்கும் ஒரு பொருள். இத் தனிமம் நைட்ரஜன் நெடுங்குழுவைச் சேர்ந்த மாழையிலி வகையைச் சேர்ந்தது. அணுவெண் 15 கொண்ட இத்தனிமத்தின் வேதியியல் குறி P ஆகும். இத் தனிமத்தின் வேதியியல் வினையில் பங்கு கொள்ளும் எதிர்மின்னிகளைக் கொண்டு இது பல் இயைனித் தனிமம் எனப்படுகின்றது. மிகுந்த விறுவிறுப்புடன் வேதியியல் வினைப் படுவதால், பாஸ்பரஸ் தூய, கலப்பில்லாத தனிமமாக இயற்கையில் கிடப்பதில்லை. வெண்மையான நிறம் கொண்ட ஒரு வகையான பாஸ்பரஸ் ஆக்ஸிஜனுடன் கலக்கும்பொழுது மங்கலாக வெண்னிற ஒளி உமிழ்கின்றது. இதனாலேயே இதன் கிரேக்க மொழிப் பெயர் "ஒளி பெற்றிருக்கும்" பொருள் என்பதாகும் பாஸ்பரஸ், வேளாண்மையில் பயிர்களுக்கு இடப்படும் உரத்தில் ஒரு முக்கிய ஊட்டம்தரும் பொருளாகப் பயன்படுகின்றது. உயிரினங்களில் டி.என்.ஏ என்னும் உயிர்ச்சுருளிழையில் உள்ள ஒரு முக்கியப் பொருளாகவும் செல்கள் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. தீக்குச்சிகளிலும், மத்தாப்பு வாணவேடிக்கை முதலியவற்றிலும், வெடிப்பொருள்களிலும் "மருந்தாகப்" பயன்படுகின்றது. இது தவிர பூச்சிக் கொல்லிகளிலும், பற்பசை, மற்றும் அழுக்குநீக்கிப் படிகாரங்களிலும் பயன்படுகின்றது. பாஸ்பரசைக் கண்டறிந்த பெருமைக்குரியவர் ஜெர்மனியிலுள்ள ஒரு வணிகரான ஹென்னிக் பிராண்ட் (Hennig Brand) என்பவராவார். 1669 -ல் அவர் உலோகங்களைத் தங்கமாக்கும் ஞானக்கல் (Philosopher's stone) இருப்பதாக நம்பினார். அந்த நம்பிக்கையில் மனிதர்களின் சிறுநீரை ஆவியாக்கி ஒரு தெவிட்டிய பாகுநிலை மிக்க நீர்மத்தைப் பெற்றார். அதை காய்ச்சி வடித்து செந்நிறத்தில் ஒரு நீர்மத்தை உண்டாக்கினார். அதை அவர் சிறுநீர் எண்ணெய் என அழைத்தார்.அதை மீண்டும் காய்ச்சி வடிக்க, கொள்கலனின் அடியில் கருப்பு நிற வீழ்படிவு தங்கியிருப்பதைக் கண்டார். அதை நெடு நேரம் கால்சிய ஊட்டம் செய்ய, வீழ்படிவு வெண்ணிறத்தில் பிரகாசிக்கும் ஒரு பொருளாகக் கொள்கலனின் சுவரில் படிந்திருந்தன. இதை பிராண்ட் இரகசியமாகச் சில காலம் வைத்திருந்தார். ஆனால் அதைக் கொண்டு உலோகங்களைத் தங்கமாக்க முடியாது போனதால் அதைப் பின்னர் வெளியிட்டார். 1771 ல் ஷீலே, எலும்பின் சாம்பலிலிருந்து பாஸ்பரஸ்ஸை தனித்துப் பிரித்தெடுத்தார். பாஸ்பரோஸ் (Phosphoros) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'ஒளியைக் கொண்டிருக்கின்ற' என்று பொருள்.இச் சொல் உண்மையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் தோன்றுகின்ற வெள்ளி என்ற கோளைக் குறிக்கின்றது. இச் சொல்லே 34 டிகிரி C வெப்ப நிலையில் காற்றில் தானாக எரியும் இத்தனிமத்திற்குப் பெயரானது பாஸ்பரஸ் இயற்கையில் சிறிதும் தனித்துக் காணப்படவில்லை. விலங்குகள் மற்றும் காய்கறிகளின் திசுக்களில் குறிப்பாக விதைகளிலும் முட்டையின் மஞ்சள் கருவிலும், விலங்கினங்களின் எலும்புகளிலும் பாஸ்பரஸ் எதோ ஒரு வகையில் சேர்ந்திருக்கிறது. மனித எலும்புக் கூட்டில் ஏறக்குறைய 2 கிலோ பாஸ்பரஸ் இருக்கின்றது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் பாஸ்பரஸ் வெண்மையாகவும், ஓரளவு ஒளி கசிந்து வெளியேறக் கூடியதாகவும், மெழுகு போன்றதாகவும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் மனம் கொண்டிருக்கும் இது ஒளிரும் போது மஞ்சள் நிறமடைவதால் அதை மஞ்சள் பாஸ்பரஸ் என்பர். மிகத் தூய்மையான பாஸ்பரஸ் நிறமற்றதாகவும் கண்ணாடி போன்று ஒளி உட்புகக் கூடியதாகவும் இருக்கும் இது நீரில் கரைவதில்லை. ஆனால் கார்பன் டை சல்பைடில் கரைகிறது. காற்றில் தானாக எரிந்து பென்டாக்சைடு வளிமத்தை உண்டாக்குகின்றது. அதனால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள். எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதைக் கையால் கையாளுவது ஆபத்தாகும். வெள்ளை பாஸ்பரஸ் நச்சுத் தன்மை கொண்டது. P என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய பாஸ்பரஸ்சின் அணு எண் 15. அணு எடை 30.97 அடர்த்தி 1820 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 40 °C (317.3 k), 300 °C (552.2 K) ஆகும். மஞ்சள் பாஸ்பரஸ்சின் மூலக்கூறு எடை 123.88. இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டது. 0.1 கிராம் அளவுகூட மரணத்தை அளிக்கக் கூடியது பாஸ்பரஸ் மிகவும் தீவிரமாக வினைகளில் ஈடுபடக் கூடியது. உடனடியாக ஹாலஜன்களுடன் இணைந்து தீ சுவாலையை உண்டாக்குகின்றது. குளிர் நிலையில் ஆக்சிஜனுடன் மெதுவாக இணைகிறது. கந்தகம் மற்றும் பெரும்பாலான உலோகங்களுடன் சூடுபடுத்தும் போது இணைந்து பாஸ்பைடுகளை உண்டாகுகின்றது. இது வலுவான ஆக்சிஜன் நீக்கம் செய்யும் வேதிப் பொருளாக உள்ளது. கந்தக அமிலத்தை கந்தக டை ஆக்சைடாகவும், நைட்ரிக் அமிலத்தை நைட்ரஜன் பெராக்சைடாகவும் சுருக்குகின்றது. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிந்து பாஸ்பீன்(phosphine -PH3) என்ற நச்சு வளிமத்தை உண்டாக்குகின்றது . உலகெங்கிலும் காணப்படும் பாசுபரசு சேர்மங்கள் அனைத்தும் நான்முக பாசுப்பேட்டு அயனி (PO43−) யின் வழிப்பொருள்களாகும். பாசுபாரிக் அமிலத்தின் இணை காரம் பாசுப்பேட்டு ஆகும். உரங்கள் தயாரிப்பில் இது பேரளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பாசுபாரிக் அமிலத்தால் மூன்று புரோட்டான்களை கொடையளிக்க முடியும் என்பதால் படிப்படியாக மூன்று இணை காரங்களாக மாறுகிறது. P-O-P பிணைப்புகள் மூலம் பாசுப்பேட்டு சங்கிலிகளாகவும் வளையங்களாகவும் உருவாகும் தன்மையைக் கொண்டுள்ளது. அடினோசின் டிரை பாசுப்பேட்டு உள்ளிட்ட பல பாசுப்பேட்டுகள் அறியப்படுகின்றன. HPO42− மற்றும் H2PO4− போன்ற ஐதரசன் பாசுப்பேட்டுகளை நீர்நீக்கம் செய்வதன் மூலம் பாலிபாசுப்பேட்டுகள் தோன்றுகின்றன. உதாரணமாக வணிக முக்கியத்துவம் வாய்ந்த சோடியம்டிரைபாலிபாசுப்பேட்டு எனப்படும் டிரை சோடியம் டிரைபாசுப்பேட்டு தொழில் முறையில் இத்தகைய ஒடுக்கவினை மூலமே பல இல்ட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாசுபாரிக் அமிலத்தினுடைய அமில நீரிலி பாசுபரசு பெண்டாக்சைடு ஆகும். இவ்விரண்டுக்கும் இடையில் பல இடைநிலைகள் அறியப்படுகின்றன. வெண்மையான மெழுகு போன்ற இத்திண்மம் தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது. உலோக நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து பாசுப்பேட்டு பல்வேறு வகையான உப்புகளை உருவாக்குகிறது. P-O-M இணைப்புகளுடன் இவை பலபடி தோற்றங்களாக உருவாகின்றன. உலோக நேர் மின்னயனியகள் 2+ அல்லது 3+ மின்சுமைகளைக் கொண்டிருக்கையில் உப்புகள் பொதுவாக கரையா தன்மையைப் பெற்றுள்ளன. எனவே பொது கனிமங்களாக இவை காணப்படுகின்றன. பல பாசுப்பேட்டு உப்புகள் ஐதரசன் பாசுப்பேட்டிலிருந்து (HPO42−) வருவிக்கப்படுகின்றன. PCl5 மற்றும் PF5 போன்ற சேர்மங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. PF5 ஒரு நிறமற்ற வாயுவாகும். இதனுடைய மூலக்கூறுகள் முக்கோண இருபட்டக வடிவத்தைக் கொண்டுள்ளன. PCl5 ஒரு நிறமற்ற திண்மமாகும். இதுவும் உருகிய நிலையில் அல்லது ஆவிநிலையில் முக்கோண இருபட்டக வடிவத்தினை ஏற்கிறது. PBr5 நிலைப்புத் தன்மை அற்ற ஒரு திண்மமாகும். PBr4+Br− அயனிகள் சேர்ந்து இது உருவாகிறது. PI5 சேர்மம் அறியப்படவில்லை. பெண்டாகுளோரைடும் பெண்டாபுளோரைடும் இலூயிசு அமிலங்களாகும். பெண்டாபுளோரைடு புளோரினுடன் சேர்ந்து SF6 உடன் சமஎலக்ட்ரான் அயனியை ஒத்த PF6− உருவாகிறது. பாசுபரசு ஆக்சி குளோரைடு மிகமுக்கியமான ஒரு ஆக்சி குளோரைடு ஆகும். இது கிட்டத்தட்ட நான்முகி வடிவில் காணப்படுகிறது. விரிவான கணிப்பொறி கணக்கீடுகள் சாத்தியமாவதற்கு முன்னர் பாசுபரசு(V) சேர்மங்களின் பிணைப்புகள் டி ஆர்பிட்டால்களில் நிகழ்வதாக கருதப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கணிப்பொறியுடன் தொடர்புடைய மூலக்கூற்று ஆர்பிட்டால் கோட்பாடு இப்பிணைப்புகளில் எசு மற்றும் பி ஆர்பிட்டால்கள் பங்கேற்பதாக தெரிவித்தன. பாசுபரசு(III) இன் சீர்மையான டிரை ஆலைடுகள் நான்கும் நன்கு அறியப்படுகின்றன. வாயுநிலை PF3, மஞ்சள் நிற நீர்மங்களான PCl3 மற்றும் PBr3 , திண்மநிலை PI3 போன்றவை அந்த டிரை ஆலைடுகள் ஆகும். ஈரப்பத உணரிகளான இவை நீராற்பகுப்படைந்து பாசுபரசு அமிலத்தைக் கொடுக்கின்றன. வெண் பாசுபரசை குளோரினேற்றம் செய்வதன் மூலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் முகவரான பாசுபரசு டிரை குளோரைடு கிடைக்கிறது. பாசுபரசு டிரை குளோரைடில் இருந்து ஆலைடு பரிமாற்ற வினையின் மூலம் பாசுபரசு டிரைபுளோரைடு (PF3) தயாரிக்கப்படுகிறது. இது நச்சுத்தன்மை கொண்டதாகும். டெட்ராபாசுபரசு எக்சாக்சைடு என்று அழைக்கப்படும் பாசுபரசு(III) ஆக்சைடு (P4O6) பாசுபாரிக் அமிலத்தின் வடிவ மாற்றியமான P(OH)3 சேர்மத்தின் நீரிலியாகும். P4O6 இன் கட்டமைப்பு விளிம்புநிலை ஆக்சைடு குழுக்கள் இடம்பெறாத P4O10 இன் கட்டமைப்பை ஒத்ததாகும். P-P பிணைப்புகள் இத்தகைய சேர்மங்களை உருவாக்குகின்றன. பாசுபீன்களும் கரிம பாசுபீன்களும் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும். P=P இரட்டைப் பிணைப்புகள் கொண்ட சேர்மங்களும் அறியப்படுகின்றன. ஆனால் அவை அரிதானவையாக உள்ளன. பாஸ்பரஸ் நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட வேற்றுருக்களைக் கொண்டுள்ளது. இதை வெள்ளை, சிவப்பு, கருப்பு, ஊதா(வைலெட்) பாஸ்பரஸ் என்று கூறுகின்றனர்.வெள்ளை பாஸ்பரஸ்ஸை பாஸ்பரஸ் ஆவியில் 230 டிகிரி C வெப்ப நிலையில் சூடு படுத்த சிவப்பு பாஸ்பரஸ்ஸாக மாறுகிறது. இதை நீருக்குள் பொடி செய்து மாறாத வெள்ளைப் பாஸ்பரஸ்ஸை நீக்க காஸ்டிக் சோடாவில் கொதிக்க வைத்து சூடான நீரில் கழுவி நீராவியால் காய வைத்து உற்பத்தி செய்வார்கள். இது சாக்லேட் -சிவப்பு நிறம் கொண்டது வெள்ளை பாஸ்பரஸ்ஸை விட அடர்த்தி மிக்கது. இதன் அடர்த்தி 2140 கிகி/கமீ ஆகும். இது தானாக ஒளிர்வதில்லை, மணத்தையும் இழந்து விடுகிறது. நச்சுத் தன்மையும் கொண்டிருப்பதில்லை. இதன் உருகு நிலை 773ºK(500 °C) - 873ºK (600 °C) ஆக உயர்ந்து விடுகிறது. மேலும் இது 256 டிகிரி C வெப்ப நிலையில் பற்றி எரிகிறது. கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை. குளோரின் வளிமத்தில்சூடு படுத்தும் போது பற்றி எரிகிறது. எனினும் இந்த வேற்றுருவையும் கவனமாகக் கையாளவேண்டும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் சிவப்பு பாஸ்பரஸ் வெள்ளை பாஸ்பரஸ்ஸாக மாறிவிடுகிறது. சிவப்பு பாஸ்பரஸ் தீக்குச்சி செய்யப் பயன்படுகிறது. சிவப்பு பாஸ்பரஸ்ஸை உலோக ஈயத்துடன் சேர்த்து அடைக்கப்பட்ட வெளியில் 500 டிகிரி C வெப்ப நிலையில் சூடு படுத்த பாஸ்பரஸ் அதில் கரைந்து விடுகிறது. இதை குளிர்வித்து உறைய வைக்க கரைந்த பாஸ்பரஸ் பளபளப்புடன் கூடிய அவுரி நிறத்தில் படிகமாக மாறுகிறது. இதன் அடர்த்தி 2340 கிகி/கமீ. இதன் உருகு நிலை ஏறக்குறைய 873ºK (600 °C). வெள்ளை பாஸ்பரஸ்ஸை 200 °C வெப்ப நிலையில் உயர் அழுத்தத்திற்கு உட்படுத்த கருப்பு பாஸ்பரஸ் தோன்றுகிறது. இதன் பண்புகள் ஏறக்குறைய ஊதா பாஸ்பரஸ் போல இருந்தாலும் இது மிகவும் சிறப்பாக வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்துகிறது. பாஸ்பேட் உரங்களின் உற்பத்திக்கு பாஸ்பரஸ் ஒரு மூலப் பொருளாக விளங்குகிறது. பாஸ்பேட் உரங்கள் மண்ணில் பாஸ்பரஸ் சத்தை மேம்படுத்துகிறது. பாஸ்பரஸ் சோடிய ஆவி விளக்கு போன்ற சிறப்புப் பயன்களுக்கான கண்ணாடியை உற்பத்தி செய்யவும், வெண்கல உற்பத்தி முறையிலும் பயன்படுகின்றது எலிகளைக் கொல்லும் நஞ்சாகவும்,மருந்துகள் உற்பத்தித் துறையிலும் பாஸ்பரஸ்ஸைப் பயன்படுத்துகின்றார்கள். புகை எழுப்பும் பாஸ்பரஸ் அடங்கிய குண்டுகள் கலவரத்தை அடக்கவும், எதிரிகளின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. தீக்குச்சிகளில் வெள்ளைப் பாஸ்பரஸ்ஸை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாஸ்பரஸ் சல்பைடை இதற்காகப் பயன்படுத்துகின்றார்கள். இது வெள்ளைப் பாஸ்பரஸ் போன்று பயன்பட்டாலும் நச்சுத் தன்மை கொண்டதில்லை. எப்பரப்பிலும் தேய்த்து எரியச்செய்யும் தீக்குச்சிகளில் ஸ்கார்லெட் பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரேட், செவ்வீயம் போன்றவை பயன்படுகின்றன. பாதுகாப்பான தீக்குச்சிகளில் இதே சேர்மானம் இருப்பினும் பாஸ்பரஸ் மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இதை சொரசொரப்பான வேதிப் பொருள் பூசப்பட்ட தளத்தில் எரியச் செய்ய வேண்டும். தீப்பெட்டிகளின் பக்கங்களில் இப்பரப்பு, சிவப்பு பாஸ்பரஸ், ஆண்டிமணி டிரை சல்பைடு, பொடி செய்யப்பட்ட கண்ணாடித் தூள் போன்றவற்றால் ஆனதாக இருக்கும். வான வேடிக்கைக்கான வெடி பொருட்களில் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறாது. டிரை சோடியம் பாஸ்பேட் நீரை மென்மைப் படுத்தி கொதிகலனின் உட்சுவரில் படியும் காரைகளைத் தவிர்க்கிறது. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் பாஸ்பரஸ் உறுதுணையாக விளங்குகிறது. உடல் நலத்திற்கு இரத்தத்திலுள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்தின் அளவு காக்கப்படவேண்டும். பாஸ்பரஸ்சின் செறிவு அதிகமாகும் போது அது கால்சியத்தை வெளியேற்றி விடுகின்றது. இது இறுதியாக எலும்பு சம்பந்தமான நோய்களைத் தருகிறது. குளோரின் குளோரின் (Chlorine) என்பது Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் அணு எண் 17ஐயும் கொண்ட ஓரு தனிம வேதிப் பொருள் ஆகும். இது ஒரு ஆலசன் வகை தனிமமாகும், ஆவர்த்தன அட்டவணையில் நெடுங்குழு 17 இல் (முன்னர் VIIa அல்லது VIIb) அடக்கப்பட்டுள்ளது. குளோரின் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. ஆனால் பெருமளவு குளோரைடு உப்புக்களாக உறைந்துள்ளது. பாறை உப்புக்களிலும் கடல் நீரிலும் சோடியம் குளோரைடு பெருமளவு உள்ளது. சுவீடன் நாட்டு விஞ்ஞானியான காரல் வில்ஹெம் ஷீலே(Carl Wilhelm Scheele) 1774 ஆம் ஆண்டில் பைரோலுசைட் என்ற கனிமத்தை ஆராய்ந்த போது குளோரினைக் கண்டுபிடித்தார். ஆனால் அப்போது இது தவறுதலாக ஆக்சிஜன் சேர்ந்த ஒரு சேர்மம் என இனமறியப்பட்டது. 1810 ல் சர் ஹம்பிரி டேவி இந்த வளிமத்தின் தனித் தன்மையை நிறுவினார். இதற்கு குளோரின் என்று பெயர் சூட்டியவரும் இவரே. கிரேக்க மொழியில் 'குளோரோஸ்' என்றால் 'மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய' என்று பொருள். ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற ஆக்சிஜனூட்டி மூலம் ஆக்சிஜனேற்றம் செய்து குளோரினைப் பெறலாம். சோடியம் குளோரைடு, மாங்கனீஸ் டை ஆக்சைடு மற்றும் 50 விழுக்காடு கந்தக அமிலம் இவற்றின் கலவையைக் கொண்டும் குளோரினை உற்பத்தி செய்யலாம். வெளுப்புக் காரத்தில் (Bleaching powder) தெவிட்டிய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டும், அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும், பொட்டாசியம் பெர் மாங்கனேட்டையும் வினைபுரியச் செய்தும், கரித் தண்டுகளாலான மின்முனை வாய்களை அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வைத்து மின்னார் பகுப்பு செய்தும் குளோரின் வளிமத்தைப் பெறலாம். Cl என்ற வேதிக் குறியீட்டைக் கொண்டுள்ள குளோரினின் அணு வெண் 17, அணு நிறை 35.45. வளிம நிலையில் இதன் அடர்த்தி 3.21 கிகி/கமீ. இது ஈரணு மூலக்கூறுகளால் ஆனது. நச்சுத் தன்மை கொண்டது. இதன் உறை நிலை 172.2 K, கொதி நிலை 239.1 K ஆகும். முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கின்றது. குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குகின்றது. 3.5 ppm (மில்லியனில் ஒரு பகுதி) இருந்தால் குளோரினின் நமச்சலூட்டும் மணத்தை உணரலாம். 1000 ppm இருந்தால் ஒரு சில சுவாசித்தலில் இறக்க நேரிடும். காற்றில் அனுமதிக்கப் பட்ட இதன் அளவு 1 ppm ஆகும். குளோரின் ஹாலஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வளிமம். இது ஆக்சிஜன் போல தீவிரமாக வினை புரிய வல்லது. ஆனால் வறண்ட குளோரின் மந்தமானது. பெரும்பாலான உலோகங்களுடன் இணைந்து குளோரைடுகளைத் தோற்று விக்கின்றது. பாஸ்பரஸ், கந்தகம், சோடியம் ஆகியவை குளோரினில் பிரகாசமாய் எரிகின்றன. பொடி செய்யப்பட்டு சூடுபடுத்தப் பட்ட ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணிப் பொடியை இவ் வளிமத்தில் தூவ நெருப்புப் பொறி மழை போலப் பொழிகிறது. செம்பு இழை இக்குளோரின் வளிமத்தில் எரிகின்றது. ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் போன்ற உலோகமற்றவைகளுடனும் குளோரின் வினை புரிகின்றது. ஹைட்ரஜனுடன் கலந்து சூரிய ஒளியில் வைத்தால் சத்தத்துடன் வெடிக்கின்றது. ஹைட்ரஜன் வளிமத்தை குளோரின் வளிமத்தில் பீய்ச்சினாலோ அல்லது குளோரின் வளிமத்தை ஹைட்ரஜன் வளிமத்தில் பீய்ச்சினாலோ எரிகின்றது, ஹைட்ரஜன் மீது குளோரின் கொண்டுள்ள நாட்டம் அளவில்லாதது. அதனால் ஹைட்ரஜனீக்கம் செய்ய குளோரின் பயன்படுகிறது. தண்ணீர், ஹைட்ரஜன் சல்பைடு, டர்பன்டைன் போன்றவற்றிலுள்ள ஹைட்ரஜனை எளிதாக அகற்றி விடுகிறது. குளோரின் வெளியில் எரியும் மெழுகுவர்த்திப் புகையை எழுப்புகிறது. நீரில் குளோரின் கரைகிறது இந்நீர் குளோரின் நீர் எனப்படும். நீரைக் கொதிக்க வைத்தால் அதிலுள்ள குளோரின் வெளியேறிவிடுகிறது. சூரிய ஒளியில் குளோரின் நீர் ஹைட்ரோ குளோரைடாக மாறுகிறது. அப்போது நீரிலுள்ள ஆக்சிஜன் வெளியேறுகின்றது. நீரில் உள்ள நோய்க் கிருமிகள், தீமை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றைப் பேரளவில் அழிக்க குளோரின் வளிமம் பயன்படுகின்றது. இதனால் குடி நீர் விநியோக முறையிலும், நீச்சல் குளத்திலுள்ள நீரைத் தூய்மையூட்டுவதிலும் குளோரினைப் பயன்படுத்துகின்றார்கள். குளோரின் நுண்ணுயிரிகளை ஓரளவு விரைவாக அழிக்கும் மலிவான பொருளாகும். எனினும் வைரஸ் எனப்படும் சில நச்சுயிரிகளை குளோரினால் அழிக்க முடிவதில்லை. மேலும் நீரிலுள்ள சில கரிமப் பொருட்களுடன் வினை புரிந்து, புற்று நோய்க் காரணிகளுள் ஒன்றாகக் கருதப் படுகின்ற டிரைகுளோரோ மீத்தேனை உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் குளோரின் தூயகுடி நீருக்கு முழுமையான வழி முறை எனக் கூற முடியாது. மேலும் குளோரினால் நீரின் இயல்பான சுவை குன்றிப் போகிறது. இதனால் இன்றைக்கு குளோரினுக்குப் பதிலாக ஓசோனைப் பயன்படுத்துகின்றார்கள் குளோரின் வெளுப்பூட்டியாகச் செயல்படுகின்றது பயனுறுதிறன் மிக்க வெளுபூட்டியின் வளர்ச்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் குளோரின் நீரே இதற்குப் பயன்படுத்தப் பட்டது. ஆனால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பருத்தி, லினன் ஆடைகளைப் பாதிக்கின்றது. இன்றைக்கு வீடுகளில் பயன்படுத்தப் படும் நீர்ம வெளுபூட்டி சோடியம் ஹைபோ குளோரைட்டின் மென் கரைசலாகும். குளோரின் வளிமம் காகிதம், அட்டை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வெளுப்பூட்டியாகப் பயன்படுகிறது. பாலி வினைல் குளோரைடு(PVC) போன்ற நெகிழ்மங்களை உற்பத்தி செய்யும் முறையில் குளோரின் ஒரு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. அரிமானத்திற்கு உட்படாததாலும், எடை குறைந்ததாக இருப்பதால் கையாளுவதற்கு எளிதாக இருப்பதாலும், நீர் மற்றும் நீர்மங்களை எடுத்துச் செல்லும் குழாயாக இரும்பிற்குப் பதிலாக இன்றைக்கு நெகிழ்மக் குழாய்கள் பயனில் உள்ளன. கண்ணாடி போன்று நிறமற்ற நெகிழ்மங்கள் நீர்மங்களை வைத்திருக்கும் கொள்கலனாகப் பயன்படுகின்றன. பல்வேறு பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரின் பயன்படுத்தப்படுகின்றது. சாயங்கள், துணிகள், பெட்ரோலியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நஞ்சுத் தடை மருந்துகள், பூச்சி கொல்லி மருந்துகள், உணவுப் பண்டங்கள், கரைப்பான்கள், வண்ணப் பூச்சுகள் எனப் பலதரப்பட்ட மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரினின் முக்கியம் உணரப்பட்டுள்ளது. பயன்களைத் தரும் வேறு பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு குளோரின் ஒரு மூலப் பொருளாகவும் உள்ளது. இவற்றுள் கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோபாம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எண்ணெய் மற்றும் மசகுப் பொருட்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு கரைப்பானாக உள்ளது. துணிகளை நீரில் நனைக்காமலேயே சலவை செய்ய இந்தக் கரைப்பான் பயன்படுகிறது. எனினும் ஈரலுக்கு மிகவும் நஞ்சானது என்பதால் இப்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குளோரோபாம் எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம். இது அறுவைச் சிகிச்சையின் போது மயக்கமூட்டும் மருந்தாக 1847 முதல் பயன்படுத்தப்படுகின்றது. இது ஈரல் மற்றும் சிறுநீரகங்களைத் தீவிரமாகப் பாதிக்கின்றது என்பதால் இதைக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகும். குளிர் சாதனங்களில் உறைபதனப் பொருளாக குளோரோ புளுரோ கார்பன் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது குளோரினின் தனிக் கூறுகளை வெளியிட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்குகளில் தங்கி பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஓசோன் படலத்தைச் சிதைத்து அழிக்கின்றது என்பதால் இப்பயன்பாடு இன்றைக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புந்தேலி மொழி புந்தேலி மொழி (बुन्देली) ஒரு மேற்கு இந்தி மொழியாகும். இது பொதுவாக, இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் ததியா, சாகர், தமோ, பன்னா, டிக்கம்கர், அசோக்நகர், சத்தர்பூர் மாவட்டங்களிலும்; உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, லலித்பூர், சித்திரக்கூட மாவட்டம், பந்தா மாவட்டங்களிலும் பேசப்படுகிறது. இம் மொழி 19 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் இலக்கிய மொழியாக விளங்கிய பிராஜ் பாஷாவுடன் நெருங்கிய தொடர்புடையது. பாகேலி மொழி பாகேலி என்பது மத்திய இந்தியாவின் பாகேல்காந்த் பகுதிகளில் பேசப்பட்டுவரும் ஒரு மொழியாகும். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளில் இது ஹிந்தி மொழியின் ஒரு கிளைமொழியாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது (1991). பாகேலி பேசுபவர்கள், பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா, சந்தா, சிதி, ஷாஹ்தோல், உமாரியா, அனூப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், உத்தரப் பிரதேசத்தின், அலகாபாத், மிர்சாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளனர். சத்திசுகரி மொழி சத்திசுகரி மொழி (छत्तिसगढ़ी) பெரும்பாலும் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இம் மொழி பேசுவோர் அயல் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பீஹார் ஆகியவற்றிலும் காணப்படுகின்றனர். 1920 முதலே, சத்திசுகர்கீ அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் கூடுதல் தன்னாட்சிக்கான நடவடிக்கைகளை அடுத்து 2000 ஆவது ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் 16 மாநிலங்களைப் பிரித்துத் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. சத்திசுகரி, பாகேலி மொழி, அவதி மொழி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளது. இந்திய அரசாங்க அறிக்கைகளின்படி இம் மொழியை ஹிந்தியின் கிழக்கத்திய கிளைமொழிகளில் ஒன்றாகவே கருதினர். எனினும் ஆய்வாளர்கள், ஒரு தனி மொழியாகக் கருதப்படுமளவுக்கு ஹிந்தியிலிருந்து இது வேறுபடுவதாகக் காட்டியுள்ளனர். இதற்கும், பைகானி, பூலியா, பிஞ்ச்வாரி, கலங்கா, காவர்தி, கைராகரி, சாத்ரி கோர்வா, சுர்கூஜியா போன்ற பல கிளைமொழிகள் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இது பல்வேறு வட இந்திய மொழிகளைப் போலவே தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது. தன்வார் மொழி இது பெரும்பாலும் நேபாளத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது "ராய்" சமுதாயத்தினரின் மொழியாகும். இது தனுவர் ராய், தெனுவர் போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசுவோர் நேபாளி மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழர் அடையாளம் தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு அல்லது தமிழர் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர். தமிழர் அடையாளம் தொடர்பான வரையறைகள் வெவ்வேறு பார்வைகளுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டு நிற்பவை. தமிழர் அடையாளம் நிரந்தர வரையறையற்றது, இயங்கியல் தன்மை கொண்டது. பல்வேறு தளங்களில் வெவ்வேறு வரையறைகளை அல்லது வெளிப்படுத்தல்களை கொண்டது. http://www.1911encyclopedia.org/Tamils தமிழன் tamiḻaṉ , n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். தமிழ் லெக்சிக்கன் தமிழர் அடையாளம் சமயம் சார்பற்றது, தேவையற்றது. இன்று ஏராளமான தமிழர் இந்துக்கள் ஆயினும், தமிழர் அடையாளம் சமயம் சார்ந்து அமையவில்லை. தமிழர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், சிறுதெய்வ வழிபாடுகள் போன்ற பல்வேறு சமய பிரிவுகளை பின்பற்றுவதால் தமிழர் அடையாளம் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்து இருக்க இயலாது. சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் தாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவு தமிழர் சமயம் அற்று இருப்பதினாலும் தமிழர் என்ற அடையாளத்தை சமயத்துடன் தொடர்பு படுத்த முடியாது. மேலும், தமிழர் சங்க மரபில் சமயத்தின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் இங்கு குறிப்படத்தக்கது. தமிழ்நாடு (இந்தியா), தமிழீழம் (இலங்கை), சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர் என்பதற்கு சட்ட அரசியல் வரையறையும் உரிமைகளும் உண்டு. தமிழ் மொழியை கற்க, தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாத்து வளர்க்க தமிழர்களுக்கு இந்த நாடுகளில் சட்ட அரசியல் உரிமைகள் உண்டு. - ஆதவன் தீட்சண்யா தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா நேர்காணல்: மினர்வா & நந்தன் தமிழர் அடையாளம் ஒரு வெளி ஆதிக்க எதிர்ப்பு அடையாளமாகவே வரையப்படுகின்றது. காலனித்துவ எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு இவற்றுக்கு எடுத்துக்காட்டு. இருப்பினும் சமூகத்துனுள்ளேயே இருக்கும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலைத் தடுப்பதையோ, அல்லது தாழத்தப்பட்டோர் சமத்துவத்தை வேண்டுவதையோ எந்த அளவுக்கு இந்த அடையாளம் உந்தியது என்பது கேள்விக்குரியதே. சோழரின் 'ஆண்ட பரம்ப்பரை' என்ற கோசம், வெளி ஆதிக்க எதிர்ப்புக்காக பயன்படுத்தப்படுவதும், அதுவே உள் அதிகாரச் செலுத்தலுக்கான வழியாக அமைவதும் இந்த அடையாளப்படுத்தலில் இருக்கும் ஒரு முரண். "முதன்மைக் கட்டுரை: தமிழர் குறியீடுகள்" தமிழர் பண்பாட்டோடு ஆழமான நெருக்கமுடைய அடையாளக்கூறுகளாகும். இவை பொருட்கள், விளையாட்டுகள், கருவிகள் போன்ற இன்னோரன்ன அடையாளங்களாக இருக்கலாம். ஆர்கான் ஆர்கான் (இலங்கை வழக்கு: ஆகன்) () என்பது ஒரு வேதியியல் தனிமம், இது Ar என்னும் குறியீடு மூலம் வழங்கப்படுகிறது. ஆர்கானின் அணு எண் 18, மேலும் இது தனிம அட்டவணையின் தொகுதி 18 இல் மூன்றாவது தனிமம் (அரிய வாயுக்கள்). ஆர்கான் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களில் 0.93% த்தில் ஆர்கான் தான் மிகப் பொதுவாக இருக்கக்கூடிய மூன்றாவது வாயு -- கரியமில வாயுவைக் காட்டிலும் மிகவும் பொதுவாக இருக்கக்கூடிய வாயுவாகும். அரிய வாயுக்களிலேயே மிகுதியாகக் கிடைக்கக்கூடியதும் மிக அவ்வப்போது பயன்படுத்தக்கூடிய மூன்றாவது வாயுவுமாகும். ஆர்கானின் முழுமையான வெளிப்புற கூடு, அதை நிலையாக வைத்திருக்கிறது மற்றும் இதர தனிமங்களுடன் இணைவதைத் தடுக்கிறது. அதன் மும்மைநிலை தட்பவெப்பமான 83.8058 கெல்வின் உடன் அது, 1990 ஆம் ஆண்டு சர்வதேச தட்பவெப்பநிலை அளவில் ஒரு வரையறுக்கப்பட்ட நிலையான புள்ளியாக இருக்கிறது. ஆர்கானின் தண்ணீரில் கரைதிறன் கிட்டத்தட்ட பிராணவாயு போன்றே இருக்கிறது, மேலும் நைட்ரஜன் வாயுவைக் காட்டிலும் 2.5 அளவு அதிகமான தண்ணீரில் கரையும்திறனைக் கொண்டிருக்கிறது. ஆர்கான் ஒரு திடப்பொருளாக, திரவமாக அல்லது வாயுவாக, நிறமற்ற, மணமற்ற மற்றும் நச்சுத்தன்மையற்றதாக இருக்கிறது. ஆர்கான் பெரும்பாலான நிலைமைகளில் செயல்திறனற்றதாகவே இருக்கிறது மேலும் அறை வெப்பநிலையில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட நிலையான கலவைகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆர்கான் அரிய வாயுவாக இருந்தபோதிலும், அவை சில கலவைகளை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஃபுளோரின் மற்றும் ஹைட்ரஜன் உடன் சற்றே நிலையான ஆர்கான் கலவையான ஆர்கான் ஃபுளோரோஹைட்ரைடு (HArF) உருவாக்கம், 2000 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆர்கானின் வேதிய கலவையின் சார்பற்ற உண்மைநிலை HArF உடன் வரையறுக்கப்பட்டிருந்த போதிலும், ஆர்கான் அதனுடைய அணுக்கள் நீர் அணு பின்னல்வலையில் சிக்கிக்கொள்ளும்போது நீர் உடன் க்ளேத்ரேட்களை உருவாக்க முடியும். மேலும் ஆர்கானைக் கொண்டிருக்கும் அயனிகள் மற்றும் கிளர்ச்சியுற்ற நிலை உயர்வுகள், முறையே மற்றும் ArF போன்றவை இருப்பதாக அறியப்படுகிறது. கற்பிதமான கணக்கியல்கள் நிலையாக இருக்கவேண்டிய பல்வேறு ஆர்கான் கலவைகளை ஊகிக்கின்றன, ஆனால் அவற்றுக்கான கூட்டிணைப்பு வழிகள் தற்போது கண்டறியப்படவில்லை. "ஆர்கான்" (αργος, கிரேக்கப் பொருள் "செயலற்றது", அதன் வேதியியல் செயலற்ற தன்மையைக் குறிப்பிட்டு) காற்றில் இருப்பதாக ஹென்றி கேவென்டிஷ் அவர்களால் 1785 ஆம் ஆண்டில் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் அது 1894 ஆம் ஆண்டு வரையில் தனிமைப்படுத்தப்படவில்லை, அப்போது ஸ்காட்லாந்தில் ஒரு பரிசோதனையின் போது லார்ட் ரேய்லீய் மற்றும் சர் வில்லியம் ராம்சே ஒரு சுத்தமான காற்று மாதிரியிலிருந்து எல்லா பிராணவாயு, கரியமிலவாயு, நீர் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றை நீக்கினர். வேதியியல் கலவைகளால் தயாரிக்கப்படும் நைட்ரஜன் வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜனைக் காட்டிலும் ஒரு அரை சதவிகிதம் இலேசாக இருப்பதாக முடிவுசெய்திருந்தனர். அந்த வேறுபாடு முக்கியமில்லாததாகக் காணப்பட்டபோதிலும் பல மாதங்களுக்கு அவர்களுடைய ஆர்வத்தைக் கவர்வதற்குப் போதிய முக்கியத்துவம் பெற்றிருந்தது. காற்றில் நைட்ரஜனுடன் வேறு ஒரு வாயு கலந்திருப்பதாக அவர்கள் முடிவு செய்தனர். ஹெச். எஃப். நெவால் மற்றும் டபள்யூ. என். ஹார்ட்லே ஆகியோரின் தனிப்பட்ட ஆராய்ச்சி மூலமும் 1882 ஆம் ஆண்டில் ஆர்கான் எதிர்பட்டது. ஒவ்வொருவரும் காற்றின் வண்ண நிறமாலையில் புதிய கோடுகளைக் கண்டனர், ஆனால் அந்தக் கோடுகள் ஏற்படுவதற்கான தனிமத்தை அடையாளங்காண முடிந்திருக்கவில்லை. கண்டறியப்பட்ட அரிய வாயுக்களில் முதல் உறுப்பினராக ஆனது ஆர்கான். இப்போது ஆர்கானின் குறியீடு Ar , ஆனால் 1957 ஆம் ஆண்டு வரையில் அது A ஆக இருந்தது. ஆர்கான் கனஅளவில் 0.934% த்தையும் பூமியின் வளிமண்டலத்தில் 1,29% திரளையும் கொண்டிருக்கிறது, மேலும் சுத்திகரிக்கப்பட்ட ஆர்கான் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்குத் தொழிற்துறைகள் காற்றைத் தான் முதன்மை மூலப் பொருளாகப் பயன்படுத்துகின்றன. ஆர்கான, காற்றிலிருந்து பின்னப்படுத்துதல் மூலம் தனிமைப்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் தாழ்வெப்ப நிலையின் பகுதியாக வடித்தல் மூலம் செய்யப்படுகிறது, இது சுத்தம்செய்யப்பட்ட நைட்ரஜன், பிராணவாயு, நியான், கிரிப்டான் மற்றும் செனான் போன்றவற்றைத் தயாரிப்பதற்குமான ஒரு செயல்முறை. பூமியில் காணப்படும் ஆர்கானின் முக்கிய ஓரிடத் தனிமங்களாவன (99.6%), Ar (0.34%), மற்றும் Ar (0.06%). இயற்கையாக நிகழக்கூடிய அரை-வாழ்நாளான 1.25 ஆண்டுகளில், மின்னணு கைப்பற்றுதல் மற்றும் நேர் மின்னணு வெளியேற்றம் மூலம் தேய்வுறுவதலிருந்து தொடர்ந்து நீடிக்கும்(11.2%), மேலும் பீட்டா தேய்வுறுதல் மூலம் தொடர்ந்து நீடிக்கும் (88.8%). இந்த இயல்புகள் மற்றும் விகிதங்கள் பாறைகளின் வயதை நிர்ணயிக்க உதவுகின்றன. பூமியின் வளிமண்டலத்தில் காஸ்மிக் கதிர் செயல்பாடுகளால் செய்யப்படுகிறது, முதன்மையாக உடன் செய்யப்படுகிறது. வெளிப்பரப்பின் கீழ் சூழலில், அது நியூட்ரான் கைப்பற்றல் மூலமும் அது ஆல் தயாரிக்கப்படுகிறது அல்லது கால்சியம்- ஆல் ஆல்பா வெளியேற்றம் தயாரிக்கப்படுகிறது. Ar, வெளிப்பரப்பின் கீழே உட்கரு வெடிப்புகள் காரணமாக இன் சிம்புகளாய் உடைந்த நியூட்ரானால் உருவாக்கப்படுகிறது. அது 35 நாட்களைக் கொண்ட அரை-வாழ்வைக் கொண்டிருக்கிறது. ஆர்கான், சூரிய மண்டலத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கிடையில் அதன் ஓரகத் தனிம கலவை வெகுவாக வேறுபடுவதில் மிகவும் கவனிக்கத்தக்கது. இங்கு ஆர்கானின் மிகப் பெரிய உருவாக்கம் பாறைகளில் உள்ள பொட்டாசியம்-40 இன் தேய்வுறுதலால் ஏற்படுகிறது, ஆர்கான்-40 பூமியில் இருப்பது போலவே, விஞ்சிநிற்கிற ஓரகத் தன்மை கொண்டதாகவே இருக்கும். அதற்கு நேர்மாறாக, ஸ்டெல்லர் நியூக்ளியோசிந்தசிஸ் மூலம் நேரடியாக தயாராகும் ஆர்கான், ஆல்பா செயல்முறை நியூக்லைட், ஆர்கான்-36 ஆல் மேலோங்கி நிற்கிறது. அதற்கு ஏற்றவகையில், சூரியக் காற்று அளவீடுகளை ஆதாரமாகக் கொண்டு சூரிய ஆர்கான் 84.6% ஆர்கான்-36 ஐக் கொண்டிருக்கிறது. ரேடியோஜெனிக் ஆர்கான்-40 இன் மேலோங்கிய நிலை தான், நிலவுலகஞ்சார்ந்த ஆர்கானின் நிர்ணயிக்கப்பட்ட அணு எடை அடுத்த தனிமமான பொட்டாசியத்தை விட மிக மிக அதிகமாக இருக்கிறது என்னும் நிதர்சனத்துக்குப் பொறுப்பாகிறது. ஆர்கான் கண்டுபிடிக்கப்பட்டபோது இது குழப்பமாகவே இருந்தது, ஏனெனில் மெண்டலீவ் தனிமங்களை தன்னுடைய தனிம அட்டவணையில் அணு எடையின் வரிசைப்படி வைத்திருந்தார், இவ்வளவுக்கும், ஆர்கானின் மந்தத்தன்மை அது எதிர்விளைவுக்குரிய அல்கலி மெட்டல் பொட்டாசியத்திற்கு முந்தி வைக்கப்படவேண்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தபோதிலும் அவர் இவ்வாறு செய்திருந்தார். தனிம அட்டவணை உண்மையிலேயே அணு எண் வரிசையில் அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டி ஹென்றி மோஸ்லே பின்னர் இந்தச் சிக்கலைத் தீர்த்தார். (தனிம அட்டவணை வரலாற்றைப் பார்க்கவும்). மார்டியன் வளிமண்டலம் 1.6% ஆர்கான்-40 மற்றும் 5 ppm ஆர்கான்-36 ஐக் கொண்டிருக்கிறது. 1973 ஆம் ஆண்டில் புதன் கோள் மீது விரைவாக மேற்கொள்ளப்பட்ட மேரினர் விண்வெளி ஆராய்ச்சி, புதன் 70% ஆர்கானுடன் மிக மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தது, இது கோளில் உள்ள கதிரியக்கப் பொருட்களின் ஒரு தேய்வுறும் பொருளாக வாயுக்களை வெளியேற்றியதன் விளைவு என்று நம்பப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில், "ஹுய்ஜென்ஸ்" ஆராய்ச்சி சனி கோளின் மிகப் பெரிய சந்திரனான டைட்டானில் ஆர்கான்-40 இன் இருப்பையும் கூட கண்டறிந்தது. ஆர்கானின் முழுமையான எட்டுத்தொகுதி எலக்ட்ரான்கள் முழுமையான s மற்றும் p சப்ஷெல்களைக் குறிக்கிறது. இந்த முழுமையான வெளிப்புற ஆற்றல் நிலைகள் ஆர்கானை மிகவும் நிலையுள்ளதாகவும் இதர தனிமங்களுடன் இணைவதில் தீவிரமான எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது. 1962 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஆர்கான் மற்றும் இதர மந்த வாயுக்கள் இரசாயன முறையில் உயிரற்றவைகளாகவும் சேர்மங்களை ஏற்படுத்த இயலாதவைகளாகவும் கருதப்பட்டன; எனினும், கனமான மந்த வாயுக்களின் சேர்மங்கள் அது முதல் தொகுத்துக் காணப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில், முதல் ஆர்கான் சேர்மங்கள், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. சிறிய அளவேயான ஹைட்ரஜன் ஃபுளோரைடுகளைக் கொண்ட உறைநீராக இருக்கும் ஆர்கான் மீது அல்ட்ராவைலட் லைட்களை ஒளிபாய்ச்சுவதன் மூலம் ஆர்கான் ஃப்ளோரோஹைட்ரைடு (HArF) உருவாக்கப்பட்டது. அது 40 கெல்வின் (−233 °C) வரையில் நிலையாக இருக்கிறது. ஆர்கான், தொழிற்துறை முறையில் திரவக் காற்றை பகுதி வடித்து இறக்கல் மூலம் தயாரிக்கப்படுகிறது, இந்தச் செயல்முறையாக்கம், 77.3 K வில் கொதிக்கும் திரவ நைட்ரஜனை 87.3 K வில் கொதித்துக்கொண்டிருக்கும் ஆர்கான் மற்றும் 90.2 K வில் கொதித்துக்கொண்டிருக்கும் பிராணவாயுவிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 700,000 டன் ஆர்கான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆர்கானின் மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஓரிடத் தனிமமான AR, எலக்ட்ரான் கைப்பற்றல் அல்லது பாஸிட்ரான் வெளியேற்றம் மூலம், அரை வாழ்நாளான 1.25 ஆண்டுகளுடன் K இன் தேய்வுறுதலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, இது பாறைகளின் வயதை நிர்ணயிக்க பொட்டாசியம்-ஆர்கான் தேதிக்குறித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பயன்பாடுகளில் ஆர்கான் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன: பெரும்பாலான இந்தப் பயன்பாடுகளில் இதர மந்த வாயுக்களும் கூட வேலை செய்யலாம், ஆனால் ஆர்கான் தான் இருப்பதிலேயே மலிவானது. ஆர்கான் மிக மலிவாக இருப்பதற்குக் காரணம், அது திரவு பிராணவாயு மற்றும் திரவ நைட்ரஜன் உற்பத்தியின் ஒரு உபபொருளாக இருக்கிறது, இவை இரண்டும் மிகப் பெரிய அளவில் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதர மந்த வாயுக்கள் கூட (ஹீலியம் தவிர) இதே முறையில் தயாரிக்கப்படுகின்றது, ஆனால் ஆர்கான் தான் மிக அதிகமாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது, ஏனெனில் வளிமண்டலத்தில் அதுதான் அதிக வீரியத்தைக் கொண்டிருக்கிறது. அது மந்தமாக இருப்பதாலும் அதே வேளையில் மிக மலிவாக இருப்பதாலும் ஆர்கான் பயன்பாடுகளின் அதிகரித்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆர்கான் சில உயர்-அழுத்த தொழில்துறை சார்ந்த செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது, இங்குச் சாதாரண எதிர்ச்செயல் புரிதலற்ற பொருட்கள் மீண்டும் செயல்புரியக்கூடியவைகளாக ஆகிவிடுகின்றன. உதாரணத்திற்கு, கிராஃபைட் மின்சார உலைகலன்களில் கிராஃபைட்கள் எரிந்துவிடாமல் தடுப்பதற்கு ஒரு ஆர்கான் வளிமண்டலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சில செயல்முறைகளுக்கு, பொருட்களின் உள்ளே நைட்ரஜன் அல்லது பிராணவாயுக்களின் இருப்பு குறைபாடினை உண்டாக்கும். டைட்டானியம் மற்றும் இதர எதிர்செயல்புரியும் தனிமங்களின் செயல்முறைகளில் உட்பட, டங்க்ஸ்டன் மந்த வாயு வெல்டிங் போன்ற, பல்வேறு வகையான உலோக மந்த வாயு வெல்டிங்கில் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஆர்கான் வளிமண்டலம் சிலிக்கான் மற்றும் ஜெர்மேனியம் கிரிஸ்டல்களை உருவாக்கவும் கூட பயன்படுத்தப்படுகிறது. கோழிவளர்ப்புத் தொழில்துறையில் ஆர்கான் ஒரு மூச்சுத்தடையாக பயன்படுகிறது, அது திடீர்த் தொற்றுநோய்கள் உண்டாவதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக நீக்குவதற்கு அல்லது மின்சாரக் குளியலுக்குப் பதிலாக ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவற்றைக் கொல்வதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானின் ஒப்பீட்டளவில் உயர்ந்த அடர்த்தி காரணமாக அது வாயுவுடன் செயல்படும்போது தரைக்கு அருகிலேயே இருக்கும்படி செய்கிறது. அதன் எதிர்செயல்புரிதலற்ற பண்பு உணவு தயாரிப்பில் பொருந்திவருகிறது, மேலும் இறந்துபோன பறவைக்குள் அது பிராணவாயுவுக்குப் பதிலாக இடம்பிடிப்பதால், ஆர்கான் கெடாதிருக்கும் தன்மையை அதிகரிக்கிறது. ஆர்கான் சில நேரங்களில், சாதனங்களில் சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, தீயை அணைப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது (புகைப்படத்தைப் பார்க்கவும்). பாக்கேஜிங் பொருட்களில், அதன் உள்ளடங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு, பிராணவாயு மற்றும் ஈரப்பதம் கொண்டிருக்கும் காற்றினை மாற்றியிடுவதற்கும் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. பொருட்களின் தரத்தை அழிக்கும் ஏரியல் ஆக்சிடேஷன், ஹைட்ரோலிசிஸ் மற்றும் இதர இரசாயன எதிர்செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகிறது அல்லது முழுவதுமாக தடுக்கப்படுகிறது. உயர்ந்த சுத்தமான இரசாயன பாட்டில்கள் மற்றும் சீல்செய்யப்பட்ட பாட்டில்கள் அல்லது ஆம்பொல்களில் கிடைக்கக்கூடிய சில குறிப்பிட்ட மருத்துவத் தயாரிப்புகள், ஆர்கானில் பாக் செய்யப்படுகிறது. வைன் தயாரிப்பில், அவற்றின் மூப்பு செயல்முறைகளின் போது எத்தனால், அசெடிக் அமிலமாக ஏரியல் ஆக்சிடேஷன் ஆவதைத் தடுப்பதற்குப் பாரல்களின் மேல் புறத்தில் நிரப்பப்படுவதற்கு ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கான் ஏரோசால்-வகை கான்களிலும் கூட கிடைக்கப்பெறுகிறது, இவை வார்னிஷ், பாலியுரேதேன், பெயிண்ட், முதலானவைகளின் சேர்மங்களைத் திறந்த பிறகும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படுத்தப்படலாம். 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம், சுதந்திர பிரகடனம் மற்றும் அரசியலமைப்பு போன்ற முக்கிய தேசிய ஆவணங்களை அவற்றின் சீர்கேட்டினை தாமதப்படுத்துவதற்கு ஆர்கான் நிரப்பப்பட்ட அடுக்குகளில் சேமிக்கிறது. முந்தைய ஐம்பதாண்டுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீலியத்துடன் ஒப்பிடுகையில் ஆர்கானைப் பயன்படுத்துதல் வாயுக் கசிவைக் குறைக்கிறது. ஸ்ச்லெங்க் லைன்கள் மற்றும் க்ளோவ்பெட்டிகளுக்குள் ஆர்கான் ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படலாம். நைட்ரஜன் எதிர்ச்செயல் புரியும் இடங்களில் ஒப்பீட்டளவில் மலிந்த டைநைட்ரஜனைக் காட்டிலும் ஆர்கானைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது. வாயு க்ரோமாடோகிராபியில் ஒரு கொண்டுசெல்லும் வாயுவாகவும் மற்றும் எலக்ட்ரோஸ்ப்ரே ஐயோனைசேஷன் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரியிலும் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது, ஐசிபி ஸ்பெக்ட்ரோஸ்கோபியில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்மாவிற்கு அதுதான் விரும்பப்படும் வாயுவாக இருக்கிறது. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி ஸ்கானிங்கிற்கான வகைமாதிரிகளின் ஸ்பட்டர் கோட்டிங்கிற்கு ஆர்கான் விருப்பத்தேர்வாக இருக்கிறது. ஆர்கான் மின்மயத் துகள்கள் மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸில் ஸ்பட்டரிங் செய்வதற்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. க்ரையோப்ளேஷன் போன்ற க்ரையோ அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்காக திரவமாக்கப்பட்ட ஆர்கானைப் பயன்படுத்துகின்றன. அறுவை சிகிச்சையில் இது "ஆர்கான் மேம்படுத்தப்பட்ட உறைதல்" என்னும் ஒரு நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது, இது ஒருவகையான ஆர்கான் ப்ளாஸ்மா பீம் எலக்ட்ரோ அறுவை சிகிச்சை. இந்த நடைமுறை நோயாளிகளிடத்தில் வாயு எம்போலிசம் உருவாவதற்கான இடர்ப்பாட்டினைக் கொண்டிருக்கிறது மேலும் இவ்வகையான விபத்து மூலம் ஒரு நபர் இறந்தபோன நிகழ்வும் இருக்கிறது. தமனிகளை இணைப்பதற்கும், வீக்கங்களை அழிப்பதற்கும், கண் பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்வதற்குமான அறுவை சிகிச்சைகளில் நீல ஆர்கான் லேசர்கள் பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்திலிருந்து கரைந்துவிட்ட நைட்ரஜனின் நீக்கத்தை விரைவுபடுத்துவதற்கு, டிகம்பரஷன் கலவை அல்லது சுவாசிப்பில் நைட்ரஜனை மாற்றி இடுவதற்கும் கூட அது பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆர்காக்ஸ் (சுவாசிக்கும் வாயு) பார்க்கவும். வெப்பத்தோடு ஒளிவீசுகிற விளக்குகள், உயர் தட்பவெப்பநிலையில் இருக்கும் ஃபிலமெண்ட்கள் ஆக்சிடேஷன் ஆகாமல் பாதுகாப்பதற்காக ஆர்கானால் நிரப்பப்படுகிறது. ப்ளாஸ்மா க்ளோப்கள் மற்றும் பரிசோதனைக்குரிய பார்டிகல் பிசிக்சில் காலரோமெட்ரி போன்றவற்றில் அவை ஐயோனைஸ் செய்யும் முறை மற்றும் ஒளியை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கானால் நிரப்பப்பட்ட வாயு-வெளியேற்ற விளக்குகள் நீல ஒளியை வழங்குகின்றன. நீல லேசர் விளக்குகளை உருவாக்குவதற்கும் கூட ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப ஆற்றல் தகுதிபடைத்த சன்னல்களில் அது வெப்ப தணித்தல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப ஸ்கூபா டைவிங்கில், உலர்ந்த ஆடையை உப்பச் செய்வதற்கும் கூட ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில், அது செயல்திறனற்றும், குறைந்த வெப்பநிலை ஊடுகடத்தும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது. AIM-9 சைட்வைண்டர் ஏவுகணைகள் மற்றும் குளிர்படுத்தப்பட்ட வெப்பநிலை தேடு முனைகளைப் பயன்படுத்தும் இதர ஏவுகணைகளின் தேடு முனைகளை குளிர்விக்க அழுத்தப்பட்ட ஆர்கான் விரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வாயு உயர் அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது. ஆர்கான்-39, அரை-வாழ்வான 269 ஆண்டுகளுடன், பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, முதன்மையாக உறைநீர் உள்மையப்பகுதி மற்றும் நிலத்தடி நீர் காலக்கணிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு, எரிகிற பாறைகளின் காலக்கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆர்கான் நச்சுத்தன்மையற்றதாக இருந்தபோதிலும், அது உடலுக்குத் தேவையான பிராணவாயுவை நிறைவுசெய்வதில்லை அதனால் அது ஒரு மூச்சுத் திணறச் செய்யும் பொருள். ஆர்கான், காற்றை விட 25% கூடுதல் அடர்த்தியைக் கொண்டிருக்கிறது மேலும் அது நெருக்கமான பகுதிகளில் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. அது நிறமற்றதாக, மணமற்றதாக மற்றும் சுவையற்றதாக இருப்பதால் அதைக் கண்டறிவதும் கூட கடினமாக இருக்கிறது. வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில், மூச்சுத்தடைக் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் மரணம் ஏற்பட்ட நிகழ்வினால், வரையறுக்கப்பட்ட இடைவெளியில் ஆர்கான் டாங்க் ஒழுகுதல் அபாயத்தன்மையை வெளிப்படுத்துகிறது மேலும் அதன் சரியான பயன்பாடு, பாதுகாத்தல் மற்றும் கையாளுதலின் தேவையை வலியுறுத்துகிறது. 1932 1932 (MCMXXXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். இசுக்காண்டியம் இசுக்காண்டியம் (ஆங்கிலம்:"Scandium") என்பது இசுக்காண்டினேவியாவில் கிடைக்கும் சில கனிமங்களில் இருந்து பிரிதெடுக்கப்படும் வெள்ளி போன்ற வெண்மையான நிறமுடைய திண்மநிலையில் இருக்கும் மாழைப் பண்புள்ள தனிமம். இது Sc என்னும் அணுக் குறியெழுத்து கொண்டது இதன் அணுவெண் 21. இது லாந்த்தனைடுகள், ஆக்டினைடுகள், மற்றும் இயிற்றியம் போன்று நில உலகில் கனிமங்களில் இருந்து அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமமாகும். ஸ்காண்டியம் பூமியில் மிகக் குறைவாகவே செழுமையுற்றிருந்தாலும் சூரியனிலும் ஒரு சில விண்மீன்களிலும் ஓரளவு செழிப்புற்றிருக்கின்றது. செழுமை வரிசையில் ஸ்காண்டியம் சூரியனில் 23 ஆவதாகவும் பூமியில் 50 ஆவதாகவும் உள்ளது. இது பூமியின் மேலோட்டுப் பகுதியில் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. மென்டலீவ் என்பவர் தனிம அட்டவனையை நிறுவும் போது போரான் தொகுதியில் ஒரு நிரப்பப்படாத கட்டத்தில் இருக்க வேண்டிய இன்னும் கண்டுபிடிக்கப்படாத தனிமத்தின் பெயரை 'ஏக போரான்' என்றும் அதன் அணு நிறை கால்சியம் 40 க்கும் டைட்டானியம் 48 க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என 1869 இல் முன்கூட்டியே அறிவித்தார். 1876 ல் ஸ்வீடன் நாட்டு வேதியலாளரான பிரெடரிக் நில்சன் (Lars Fredrik Nilson]) என்பார் ஸ்காண்டிநேவியா என்ற பகுதியில் கிடைக்கும் கடோலினைட் போன்ற சில குறிப்பிட்ட கனிமங்களிலிருந்து ஸ்காண்டியத்தைக் கண்டுபிடித்தார். எனினும் நெல்சனின் பல ஆய்வு முடிவுகள் பிழையாக இருந்தன. மூன்று பிணைதிறன் (Valency ) கொண்ட ஸ்காண்டியத்திற்கு பிணைதிறன் 4 என்று மதிப்பிட்டு அதன் ஆக்சைடை ScO2 என்று தவறாகக் குறிப்பிட்டார். இதன் அணு நிறையைச் சரியாக மதிப்பிடாமல் 160 -180 க்குள் இருக்கும் என நெடுக்கை அளவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது டின்னுக்கும், தோரியத்திற்கும் இடைப்பட்டது என்று அறிவித்தார். இதன் பிறகு அதே நாட்டைச் சேர்ந்த கிளிவ் (P.Cleve) என்ற விஞ்ஞானி இதை முழுமையாக ஆராய்ந்து அதன் ஆக்சைடு Sc2O3 என்று கண்டுபிடித்ததோடு அது மென்டலீவ் தெரிவித்த ஏக போரான் என்றும் தெளிவு படுத்தினார். இதனால் இந்த உலோகத்தின் கண்டுபிடிப்பில் இவருடைய பெயரும் இணைந்தது. உலோக நிலையில் தூய ஸ்காண்டியத்தை 1937 ல் பிஷர், பிருங்கர், கிரினெய்சென் (Fischer, Brunger and Grieneisen) போன்ற விஞ்ஞானிகள் ஸ்காண்டியம் குளோரைடுடன் 700 -800°C வெப்ப நிலையில் பொட்டாசியம் ,லித்தியம் இவற்றைக் கலந்து உருக்கி மின்னாற் பகுப்பு மூலம் உற்பத்தி செய்தனர். டங்ஸ்டன் கம்பியும் உருகிய துத்தநாகக் குழம்பும் கிராபைட் குப்பியில் மின்வாய்களாகப் பயன்படுத்தப்பட்டன. தூய புதிய இசுக்காண்டியம் வெள்ளி போன்ற வெண்ணிறப் பளபளப்புக் கொண்டது.இது மென்மையான எடை குறைந்த திண்ம நிலையில் உள்ள மாழை. காற்று படும் இடத்தில் இருந்தால் சிறிதளவு மஞ்சள் நிறம் அல்லது வெளிறிய இளஞ்சிவப்பு நிறம் பெறுகின்றது. அருமன் உலோகங்களைப் போலவும், எட்ரியம் போலவும் இன்னும் அதிகமாக அலுமினியம் அல்லது டைட்டானியம் போலவும் இருக்கிறது. இது லேசான உலோகமாக இருப்பினும் அலுமினியத்தை விட அதிக உருகு நிலையைப் பெற்றிருக்கிறது ஸ்காண்டியத்தின் அணு எண் 21 ,அணு எ டை 44.96 .இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1812 K,3000 K உள்ளது; அடர்த்தி 3000 கிகி /கமீ. 1:1 (ஒன்றுக்கு ஒன்று என்னும் விகிதத்தில்) சேர்ந்த கடும் காடிக் கலவையாகிய நைட்ரிக் காடியும் (HNO) ஐதரோ-புளோரிக் காடியும் H,F இந்த இசுக்காண்டியத்தைத் தாக்குவதில்லை. இசுக்காண்டியமும் அலுமினியமும் சேர்ந்த உலோகக் கலவை சில விளையாட்டுக் கருவிகள் மற்றும் மிதிவண்டிகளின் பாகங்கள் செய்யப் பயன்படுகிறது. இசுக்காண்டியம் அலுமினியம் அல்லது டைட்டானியம் போல பயன்மிக்கது. இது விண்கலங்களின் கட்டமைப்பு, விண்வெளி ஆய்கருவிகளில் பயன்படுகிறது. இசுக்காண்டியம், 1 :1 விகிதத்தில் கலப்புள்ள அடர் நைட்ரிக் அமிலம் மற்றும் 48விழுக்காடு ஹைட்ரஜன் புளூரைடு கரைசலால் பாதிக்கப்படுவதில்லை. இசுக்காண்டியத்தில் உள்ள டான்டலத்தைக் கரைப்பதற்கு இக்கரைசல் பயன்தருகிறது. பல்மருத்துவத்தில் ஸ்காண்டிய ஒளிக்கற்றைப் பயன்படுத்தப்படுகிறது. பாதரச ஆவி விளக்குகளில் பயன்படுத்தப்படும் இசுக்காண்டிய அயோடைடு மற்றும் சோடியம் அயோடைடு இணைந்த கலவை வேறொரு மாற்று விகிதத்தில் சேர்க்கப்பட்டு அவை உலோக ஹாலைடு விளக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது தொலைக்காட்சிப் படஒளிப்பதிவுக்கருவிகளில் சூரிய ஒளி போன்ற ஒரு வெள்ளொளி மூலத்தைச் சேர்க்க உதவுகிறது. Sc என்ற கதிரியக்க ஓரிடத்தான்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பெர்லியம் சிலிகேட் என்ற பெரைலில் சிறப்பு நிறமூட்ட இசுக்காண்டியம் பயன்படுகிறது. பெரைலினின் நீல நிறத்திற்கு ஸ்காண்டியம் காரணமாக இருக்கிறது. பெர்மாவின் சிறிய தேற்றம் ஃபெர்மாவின் சிறிய தேற்றம் (Fermat's Little Theorem) என்பது கணிதத்தில் எண்கோட்பாட்டுப்பிரிவில் அடிப்படையான முதல் தேற்றம். மற்ற பல பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுவது. அது என்ன சொல்கிறதென்றால், எ.கா. ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் என்று வரலாற்றுப் புகழ் பெற்ற தேற்றம், வேறு ஒன்று. அதனிலிருந்து பிரித்துக் காட்டுவதற்குத்தான் மேலேயுள்ள தேற்றம் "சிறிய" தேற்றம் என வழங்குகிறது. சிறிய தேற்றம் என்று பெயரிருந்தாலும் இதன் கீர்த்தி பெரிதாகையால் இதற்கு மூன்று வித நிறுவல்களைக் கீழே பார்க்கலாம். இந்நிறுவல் உய்த்தறிதல் முறையில் செல்லும். formula_8 என்பது தேற்றம். formula_9 க்கு நிச்சயமாக இது உண்மை; ஏனென்றால்,formula_10 ஆல் வகுபடுகிறது. இப்பொழுது formula_8 என்பது உண்மையானால் என்று காட்டவேண்டும். இது formula_2 ஆல் வகுபடுகிறது; ஏனென்றால், உய்த்தறிதல் கருதுகோளினால் formula_16 ஆல் வகுபடுகிறது; மற்றும், ஒவ்வொரு formula_17 ம் formula_2 ஆல் வகுபடுகிறது. இந்நிறுவல் எண்களின் சமான உறவுக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறது.முதலில் உ.பொ.கா(n,p) = 1 என்று கொள்வோம். இப்பொழுது, என்ற தொடரைப் பார். இதனில் எந்த இரண்டு உறுப்புகளும் மாடுலோ formula_2 சமானமல்ல; ஏனென்றால், இதனால் (*) இலுள்ள ஒவ்வொரு எண்ணும் formula_24 இல் வெவ்வேறு எண்களுக்கு, அதுவும் ஒரே ஒரு எண்ணுக்கு சமானமாக இருக்கும். இந்த சமானங்களின் பெருக்குத்தொகை இந்நிறுவல் சேர்வியல் கருத்துக்களைப் பயன்படுத்துவது. formula_2 மணிகள் கொண்ட மணிமாலைகளைக்கணக்கிடுவோம். ஒவ்வொரு மணியும் formula_1 நிறங்களில் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இவைகளைக்கொண்டு நாம் formula_32 மாலைகள் உண்டாக்கலாம். அவைகளில் எல்லா மணிகளும் ஒரே நிறமாக உள்ள மாலைகளின் எண்ணிக்கை formula_1. மீதமுள்ள formula_3 மாலைகளைப் பார்ப்போம். இவைகளில் ஒவ்வொன்றும் அவைகளைப் போலவே உள்ள மற்ற சில மாலைகளின் சுழல்மாற்றம் தான். சுழல்மாற்றத்தின் மூலம் ஒன்றுக்கொன்று சமானமாக இருக்கக்கூடிய மாலைகளின் எண்ணிக்கை formula_2. இதனால்(சுழல் சமான மில்லாத) தனித்துவம் வாய்ந்த மாலைகளின் எண்ணிக்கை இது ஒரு முழு எண்ணாதலால் formula_37 ஆல் சரியாக வகுபடுகிறது. இத்தேற்றத்தின் மறுதலை உண்மையல்ல என்பதற்கு ஒரு மாற்றுக்காட்டு: formula_38 இதனால் formula_39 ஐ 341 சரியாக வகுக்கிறது. ஆனாலும் 341 ஒரு பகா எண்ணல்ல; ஏனென்றால், formula_40 சமான உறவு தைட்டானியம் தைட்டானியம் அல்லது டைட்டேனியம்‎ (ஆங்கிலம்:Titanium, (IPA: ) என்னும் வேதிப்பொருள் தனிம அட்டவணையில் அணுவெண் 22 கொண்ட, Ti என்னும் குறியீடு கொண்ட தனிமம். இது வெள்ளி போன்ற வெண்மையான பளப்பளப்பான பிறழ்வரிசை மாழை. இது அதிக கனம் இலாத, வலுவான, அரிப்பெதிர்ப்பு (அதிகம் வேதியியல் அரிப்புகள் உறாமல்) உள்ள திண்மம். குளோரின் மற்றும் கடலில் உள்ள உப்புநீர் போன்றவற்றிலிருந்தும் அதிகம் அரிப்புறாப் பொருள். பூமியில் அதிக அளவில் கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் இது 9 வது இடத்தைப் பெறுகிறது. செம்பு , துத்தநாகம், ஈயம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மாலிப்பிடினம், டங்க்ஸ்டன், நிக்கல், டின் (வெள்ளீயம் ) இவற்றை விட பூமியின் புறவோட்டில் தைட்டானியம் அதிகமாகக் கிடைக்கிறது. அதைப் பிரித்தெடுக்கும் கடிய வழிமுறைகளினால் அது இன்றைக்கும் ஓர் அரிய உலோகமாகவே கருதப்படுகிறது . தைட்டானியம் அதிக அளவில் ஆஸ்திரேலியாவிலும் அடுத்தபடியாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது. 1791 ல் இங்கிலாந்து நாட்டின் மத போதகரான கிரேகோர் வில்லியம் கிரிகோர் (William Gregor) என்னும் ஆங்கிலேயர் 1791ல் கண்டுபிடித்தார். இவர் அந்நாட்டின் மெனாக்சின்(Menaccin) கணவாய்ப் பகுதியிலிருந்து கிடைத்த ஒரு வகையான கருப்பு மணலை பகுத்தாராய்ந்து அதில் ஒரு புதிய தனிமம் இருப்பதை அறிவித்தார். இப் புதிய தனிமத்திற்கு மெனாக்சின் என்றும் கனிமத்திற்கு மெனாக்கொனைட்டு என்றும் பெயர் சூட்டினார். இன்றைக்கு அக் கனிமத்தை இல்மனைட்டு (ilmanite) என்றும் தனிமத்தை தைட்டானியம் என்றும் அழைக்கின்றார்கள். மார்ட்டின் கலாப்ரோத்து என்ற இடாய்ச்சுலாந்திய (செருமன்) வேதியியல் அறிஞர் 1795 ல் அங்கேரி நாட்டிலிருந்து பெற்ற (உ)ரூட்டைல் என்ற கனிமத்திலிருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுத்தார். தைட்டான் என்பது பூமியைக் குறிப்பிடும் காயியா (Gaea) என்ற கடவுளின் மகனாகும். இப்பொருள் வலிமையாக இருப்பதால், கிரேக்கத் தொல்கதைகளில் வரும் வலிமை மிக்க டைட்டன் என்பதன் அடிப்படையில் தைட்டானியம் எனப் பெயர் சூட்டினார். சில ஆண்டுகளுக்குப் பிறகே கலாப்ரோத்தும் கிரேகோரும் கண்டுபிடித்தது ஒரே தனிமம் எனத் தெரிய வந்தது. 1895 ல் பிரான்சு நாட்டின் வேதியியல் அறிஞர் என்றி மோய்சன் மின்வில் உலை (arc furnace) மூலம் தைட்டானியம் ஆக்சைடை ஐதரசனால் ஆக்சிசனிறக்கம் செய்து ஏறக்குறைய தூய தைடானியத்தைப் பெற்றார். இதன் வேதியியல் குறியீடு Ti ,அணுவெண் 22 ,அணு எடை 47.9 அடர்த்தி 4540 கிகி /கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1953 K(1679,85 °C) ,3573 K(3299,85 °C) ஆகும். தைட்டானியம் மிகச் சொற்ப அளவு தூய்மையற்று இருந்தாலும் அது உடைந்து நொறுங்கிப் பட்டறைப் பயன்களுக்கு உபயோகமாய் இருப்பதில்லை. தூய தைட்டானியம் குறைந்த அடர்த்தியும் மிகுந்த வலிமையையும் கொண்ட பளபளப்பான வெண்ணிற மாழையாகும் (உலோகமாகும்). தைட்டானியத்தின் இரண்டு வேற்றுருக்களும் ஐந்து ஓரிடத்தான்களும் அறியப்பட்டுள்ளது. தைட்டானியம் குறிபிட்ட எடைக்குத் தரும் வலு அதிகமான பொருள். எடை குறைவாகவும், அடர்த்தி குறைவாகவும், வலிமை அதிகமாகவும் உள்ள மாழை இது பிறதனிமங்களோடு ஒப்பிடும்பொழுது, அதிக வெப்பநிலையில் உருகும் பொருளாகும். இதன் உருகு வெப்பநிலை(1922,15 K) 1,649 °C or 3,000 °F க்கும் அதிகம். இதனால் தைட்டானியம் வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் பயன்படுத்தும் சுட்டாங்கல் மாழைப் (refractory metal) பொருளாகப் பயன்படுகின்றது. விற்பனைத்தொழில் சந்தையில் கிடைக்கும் 99.2% தூய்மை கொண்ட டைட்டேனியத்தின் இறுதி நீட்சி வலு (tensile strength) 63,000  சதுர அங்குலத்திற்கான பவுண்டு (psi) ஆகும் - இது எஃகுக் கலவைகளுக்கான நீட்சி வலுவுக்கு ஈடானது, ஆனால் 45% எடை குறைவானது. தைட்டானியம் அலுமினியத்தை விட 60% கனமானது ஆனால் அலுமினியத்தை விட 2 பங்குக்கும் கூடிய வலிமை கொண்டது. உயர் வெப்பநிலையிலும் தைட்டானியம் ஆக்சைடு நிலைப்புத் தன்மை மிக்கதாக இருக்கும் (உருகு நிலை 1800 C ). மெதுவாக வேதி வினைகளில் ஈடுபடுவதற்குக் காரணம் நான்கு இணைதிறன் கொண்ட தைட்டானியம் அயனி இரண்டு இணைதிறன் கொண்ட ஆக்சிசனுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதுதான். தைட்டானியம் ஆக்சைடு அடர் கந்தகக் காடி, அடர் ஐதரோகுளோரிக் காடி, காரக் கரைசல்கள், கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை. ஆனால் தைட்டானியம் மென் அரிப்பு மூலங்களை மட்டுமே எதிர்க்கிறது. அலுமினியம் போல ஒரு ஆக்சைடு படலத்தை காற்று வெளியில் ஏற்படுத்திக் கொள்வதே இதன் காரணம் பூமியை விடச் சந்திரனில் தைட்டானியம் ஆக்சைடு அதிகமாய் உள்ளது. உயர் வெப்ப நிலையில் தைட்டானியம், ஆக்சிசன், நைட்ரசன், குளோரின் மற்றும் பிற மாழையிலிகளுடன் (அலோகங்களுடன்) வினையாற்றுகிறது. நீர்த்த காடிகளில் கூட கரைந்து விடுகிறது தைட்டானியம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆதிக்கம் செலுத்துகிறது . எனினும் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் சேர்மங்கள் காணப்படுகின்றன . பொதுவாக தைட்டானியத்தின் அணைவுச் சேர்மங்கள் எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்தை ஏற்கின்றன. ஆனால் விதிவிலக்காக நான்முக TiCl4 அதனுடைய உயர் ஆக்சிசனேற்ற நிலை காரணமாக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தைட்டானியம்(IV) சேர்மங்கள் சகப்பிணைப்பு கொண்ட சேர்மங்களாகக் காணப்படுகின்றன. பிற இடைநிலை தனிமங்கள் போல இல்லாமல் தைட்டானியத்திற்கு எளிய அக்குவா Ti(IV) அணைவுகள் அறியப்படுகின்றன. தைட்டானியத்தின் ஆக்சைடுகளில் முக்கியமானது TiO2 ஆகும். அனாடேசு, புரூக்கைட்டு, ரூட்டைல் என்ற மூன்று பல்லுருத் தோற்றங்களில் இது காணப்படுகிறது. இம் மூன்று வகைகளும் வெண்மை நிறத்துடன் அபரகாந்தத் தன்மை கொண்டவையாக உள்ளன. என்றாலும் கனிம மாதிரிகள் அடர் நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்பகுதிய கட்டமைப்பை ஏற்கின்றன. இதில் தைட்டானியம் வேறு தைட்டானியம் மையத்துடன் இணைக்கப்பட்ட ஆறு ஆக்சைடு ஈனிகளால் சூழப்பட்டுள்ளது. தைட்டானியம்(IV) சேர்மங்கள் பொதுவாக தைட்டனேட்டுகள் எனப்படுகின்றன. உதாரணமாக பேரியம் தைட்டனேட்டைக் குறிப்பிடலாம். இது பெரோவ்சிகைட்டு கட்டமைப்புடன் காணப்படுகிறது. மின் அழுத்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறது. ஒலியியல் மற்றும் மின்னியல் இடையிலான மாற்றத்திற்கு ஓர் ஆற்றல் மாற்றியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். பல கனிமங்கள் தைட்டனேட்டுகளாக உள்ளன. இல்மனைட்டு (FeTiO3), பெரோவ்சிகைட்டு என்பன இதற்கு உதாரணங்களாகும். விண்மீன் தோற்ற நீல மாணிக்கமும், மாணிக்கமும் அவற்றிற்கான பிரகாச ஒளியை அவற்றில் இடம்பெற்றுள்ள தைட்டானியம் டை ஆக்சைடு மாசுக்களில் இருந்தே பெறுகின்றன. தைட்டானியத்தின் பல்வேறு வகையான ஒடுக்கப்பட்ட ஆக்சைடுகளும் அறியப்படுகின்றன. Ti(IV)-Ti(III) இனமாக விவரிக்கப்படும் Ti3O5 ஊதாநிற குறைக் கடத்தியாகும். TiO2 சேர்மத்துடன் ஐதரசன் வாயுவை உயர் வெப்பநிலைகளில் சேர்க்கும் போது Ti3O5 உருவாகிறது. எங்கெல்லாம் ஆவிப்படிவாக தைட்டானியம் டை ஆக்சைடு பூச்சு தேவைப்படுகிறதோ அத்தொழிற்சாலைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இது தூய்மையான தைட்டானியம் ஆக்சைடாக ஆவியாகிறது. அதேநேரத்தில் TiO2 ஆக்சைடுகளின் கலவையாக ஆவியாகிறது. இதன் மேற்பூச்சுகள் வெவ்வேறு ஒளிவிலகல் எண்களுடன் காணப்படுகின்றன . குருந்தம் கட்டமைப்புடன் TiO2 சேர்மமும், பாறை உப்பு கட்டமைப்பில் TiO சேர்மமும் பெரும்பாலும் விகிதவியல் அளவுகளின்றி காணப்படுவதையும் அறியமுடிகிறது . தைட்டானியம்(IV) இன் ஆல்காக்சைடுகள் TiCl4உடன் ஆல்ககால்கள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இவை நிறமற்ற சேர்மங்களாகும். இவற்றை நீருடன் வினைபுரியச் செய்தால் டையாக்சைடாக மாற்றலாம். திண்மநிலை TiO2 சேர்மத்தை சோல்-கெல் செயல்முறை வழியாக படியச்செய்ய இவை பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. சமச்சீர் கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்ய தைட்டானியம் ஐசோபுரோப்பாக்சைடு பயன்படுகிறது. தைட்டானியம் பல்வேறு சல்பைடுகளாக உருவாகிறது ஆனால் TiS2 மட்டுமே கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. அடுக்குக் கட்டமைப்பில் காணப்படும் இது இலித்தியம் மின்கலன்களில் எதிர்மின் வாயாகப் பயன்படுகின்றன. ஏனெனில் Ti(IV) ஒரு கடின நேர்மின் அயனி என்பதால் தைட்டானியத்தின் சல்பைடுகள் நிலைப்புத் தன்மை இல்லாமல் இருக்கின்றன. ஆக்சைடாக நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் சல்பைடை விடுவிக்கின்றன. வெப்பமிழக்காத இடைநிலை உலோக நைட்ரைடுகள் குடும்பத்தில் தைட்டானியம் நைட்ரைடும் (TiN) ஒரு உறுப்பினராகும். வெப்பவியல் நிலைத்தன்மை, கடினத்தன்மை, வெப்பக் கடத்தல், மிக்கடத்தல், உயர் உருகுநிலை உள்ளிட்ட இரண்டு தனிமங்களின் ஒரேமாதிரியான சகப்பிணைப்பு பண்புகளையும் இவை வெளிப்படுத்துகின்றன . டைட்டானியத்திலிருந்து பெறப்படும் தைட்டானியம் ஆக்சைடு வெள்ளை நிறமியாகும். இது ஈய வெள்ளையைக் காட்டிலும் சிறப்பானது. நச்சுத் தன்மை கொண்டதில்லை. கடல் நீரினால் ஏற்படும் உலோக அரிப்பை தைட்டானியம் பூச்சு தவிர்க்கிறது. இது தோல் மற்றும் துணிகளுக்குச் சாய மிடுதலிலும், கண்ணாடி, பீங்கான், செயற்கை ரத்தினங்கள் (போலி) இவற்றின் உற்பத்தி முறையிலும் பயன்படுகிறது. பற்பசையில் இருந்து, வீட்டுச் சுவர், மற்றும் மேசை நாற்காலி போன்றவற்றுக்குப் பூசும் நிறச்சாயம் முதல், வெள்ளைத்தாள், நெகிழி போன்ற பல பொருட்களுக்குப் பயன்படும் வெண்ணிற நிறமியாகப் பயன்படுகின்றது. தைட்டானியம், இரும்பு, அலுமினியம், வனேடியம், மாலிப்டினம் போன்ற பிற மாழைகளுடன் சேர்ந்து கனம் குறைந்த ஆனால் வலுவான மாழைக்கலவைகள் உண்டாக்கப் பயன்படுகின்றது. இவை வானூர்தி, விண்கலங்கள் போன்ற துறைகளிலும், படைத்துறை (இராணுவம்), மற்றும் பல்வேறு தொழிலங்களில் பயன்படும் செய்முறைவினைகளுக்குப் பயன்படுகின்றது. (ஐதரோ-கார்பன் தொழிற்சாலைகளில்), உப்புநீக்குநன்னீர் ஆலைகளிலும், மரக்கூழ் தாள் உற்பத்தி ஆலைகளிலும் (வெண்ணிறம் தர தைட்டானியம் ஆக்ஸைடு), தானுந்து உற்பத்தித் தொழிலகங்களிலும், மருத்துவத்தில் செயற்கை இடுப்பு, கை-கால் துணைக்கருவிகளிலும், வேளாண்மைத் துறைகளிலும், பல்மருத்துவத்தில் புதுப்பல் புதைநிறுவல்களிலும் பயன்படுகின்றது. தைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது. தைட்டானியம் டை ஆக்சைடு பெரும்பாலும் வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் தைட்டானியம் டை ஆக்சைடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் தைட்டானியம் - டை - ஆக்சைடு நிறமிக்கு உரித்தானவை. இரப்பர் தொழில், நெகிழி (பிளாஸ்டிக்கு) தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சிர்கோனியா மற்றும் இசுட்ரான்சியம் தைட்டானேட்டு போலி வைரங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இசுட்ரான்சியம் தைட்டானேட்டின் ஒளி பகுப்புத் திறன் அதிகமாக இருப்பதால் பட்டை தீட்டப் பட்ட இசுட்ரான்சியம் தைட்டானேட்டு அதிகமாக ஒளிர்கின்றது. தைட்டானியம் தெட்ரா குளோரைடு அடர்த்தியான புகையை உண்டாக்கி காட்சியை மறைக்கின்றது. இது கலவரக் கூட்டத்தைக் கலைக்க அல்லது அது முன்னேற முடியாமல் தடுக்கப் பயன்படுகிறது. தைட்டானியம், ஆக்சிசனுடன் தீவிரமாக வினை புரிவதால் இப்பண்பை இரும்பு ஆக்சைடிலிருந்து ஆக்சிசனை அகற்றப் பயன்படுத்திக் கொள்ளகின்றார்கள். இப் பண்புடைய சிலிக்கானை விட தைட்டானியம் 10 மடங்கு மேலானது. எஃகை வளிம வெளியேற்றத்திற்கு (degassing) உட்படுத்தினால் அதன் அரிமான எதிர்ப்பு அதிகரிப்பதுடன் பட்டறைப் பயன்படும் மேம்படுகின்றது. தைட்டானியம் அலுமினியத்தைவிட 12 மடங்கும் இரும்பை விட 4 மடங்கும் கடினத் தன்மை மிக்கது. இதனால் தைட்டானியத்தால் செய்யப்பட்ட இயந்திர உறுப்புகள் அதிகம் தேய்மானத்திற்கு ஆளாவதில்லை. தைட்டானியம் மின்சாரத்தைக் கடத்துவதில்லை என்பதால் மின் காப்புச் சாதனங்கள் மற்றும் பீங்கான் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது. அலுமினியத்தைப் போல வெப்பங் கடத்தாததால் உயர் வேகத்தில் விமானம் பறக்கும் போது உராய்வினால் உண்டாகும் வெப்பம் உட்பகுதிகளுக்குக் கடத்தப்படுவதில்லை. ஒலியின் வேகத்தையும் விஞ்சிய வேகத்தில் இயங்கும் விமானங்களைக் கட்டமைக்க தைட்டானியம் துணை நிற்கிறது . விண்வெளிப் பயணம் டைட்டானியத்தின் துணையின்றி பெரிதாக வளர்ந்து விட முடியாது. தைட்டானியத்தால் ஆன கலங்கள் நீர்ம எரிமங்களான நீர்ம ஐதரசன், நீர்ம ஆக்சிசன் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. மிகத் தாழ்ந்த வெப்ப நிலையில் தைட்டானியம் சிதைவதில்லை. மாறாகத் தன் வலிமையை அதிகரித்துக் கொள்கிறது. இதனால் பீற்று வளி விமானங்கள் (Jet), ஏவூர்திகளின் கட்டமைப்பில் தைட்டானியம் பங்கேற்றுள்ளது. வெற்றிட வெளியில் டைட்டானியத்தை எளிதாக வெட்டவும், பற்றவைத்துப் பிணைக்கவும் முடிகிறது டைட்டானியமும் நிக்கலும் சேர்ந்து உருவாக்கப் பட்ட ஒரு கலப்பு உலோகம் நிட்டினால் (Nitinol ) ஆகும். இது தன் பழைய உருவத் தோற்றத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. உருவமாற்றத்திற்கு உட்பட்ட பின்பு, மீண்டும் பழைய தோற்றத்தை அதே சூழலில் இருக்கும் நிலையில் அடையப் பெறுகிறது. இதை நினைவு உலோகம் (memory metal ) அல்லது வடிவம் மறவா உலோகம் (shape memory metal ) என்பர். 1962 -ல் வில்லியம் ஜெ.பக்லர் என்ற அமெரிக்கப் பொறிஞரால் இது கண்டு பிடிக்கப்பட்டது. இப்பண்பு தொழில் நுட்பத் துறைகளில் பல புதிய பயன்களைத் தந்துள்ளது. மின் கடத்தப் பொருட்களில் வலிமை குறைந்த புற மின் புலத்தில் மின் முனைவாக்கத் தூண்டலைப் பெறுவதுடன் அதைப் புற மின் புலம் நீங்கிய நிலையிலும் தக்க வைத்துக் கொள்கிறது. இம் முனைவாக்கம் (Polarization ) வெப்ப நிலையைச் சார்ந்திருக்கிறது என்பதால் வெப்ப நிலை மாற்றங்கள் முனைவாக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதை வெப்ப மின் முனைவாக்க விளைவு (Pyro electeric effect ) என்பர். இவ் விளைவை ஏற்படுத்தும் படிகங்களை வெப்ப முனைவாகுப் படிகம் என்றும், பெரோ மின் படிகம் என்றும் கூறுவர். இவற்றில் செறிவு மிக்க புற மின் புலத்தைத் தோற்றுவித்து இரு மின் முனைகளின் முனைவாகுத் திசையை 180 பாகை கூடத் திருப்பலாம். பேரியம் தைட்டானேட்(BaTiO3 ) இத் தன்மையது. இவை வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் மாற்றிகளில் பயன்படுகின்றன. தைட்டானியக் கலப்புள்ள வேறு சில படிகங்களும் -லித்தியம் சிர்க்கோனியம் தைட்டனேட்டு, கால்சியம் பேரியம் தைட்டனேட்டு போன்றவைகளும்- இரும்பிய (பெரோ) மின் படிகங்களாகும்(Ferro electric crystals) இப்படிகங்கள் அமுக்க-மின் விளைவுக்கு (piezo electric effect )உட்படுகின்றன. இப் படிகங்களில் ஒரு திசை அச்சு வழியாக அழுத்தம் கொடுக்க ,அதற்குச் செங்குத்தான வேறொரு திசை அச்சு வழியில் குறுக்கிடும் பக்கப் பரப்பில் மின்னூட்டம் செறிவுறுகின்றன. இதன் மறுதலையாக ஒரு திசை அச்சு வழியாக மாறு மின் புலம் செயல்படுமாறு செய்ய அதற்குச் செங்குத்தான வேறொரு திசை அச்சு வழியில் குறுக்கிடும் பக்கங்கள் அதிர்வுக்குள்ளாகின்றன. இந்த அதிர்வு கேளா ஒளியை (ultasonic) எழுப்புகின்றன என்பதால் பேரியம் தைட்டனேட்டு கேளா ஒலி உற்பத்தி செய்யும் கருவிகளில் பயன் படுகின்றது. வனேடியம் வனேடியம் (ஆங்கிலம்: Vanadium, (IPA: ) என்னும் வெண்-சாம்பல் நிற வேதிப்பொருள் உலகில் அதிக அளவில் காணப்படாத, மென்மையான, வளையக்கூடிய, தகடாககூடிய மாழை ஆகும். இத் தனிமத்தின் அணுவெண் 23 ஆகும். இது இயற்கையில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் இருந்து பிரிக்கப்படுவது. வனேடியம் பெரும்பாலான உயிரினங்களில் இருக்கும் 26 தனிமங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பிற மாழைகளுடன் கலந்து மாழைக்கலவையாகப் பயன்படுகின்றது. வனேடியம், கார்னோடைட், ரோச்கோலைட், வனாடினைட், பாட்ரோனைட், போன்று 65 வகையான தாதுக்களில் கிடைக்கின்றது. பாஸ்பேட் பாறை மற்றும் ஒரு சில இரும்புத் தாதுக்களிலும் காணப்படுகின்றது. கச்சா எண்ணெயில் கனிம -கரிம மூலக் கூறுகளாகவும் உள்ளது. வனேடியத் தாதுக்கள் அமெரிக்கா, ரஷ்யா,பின்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வாடா ரொடீசியா, பெரு, வெனிசுலா, பிரான்சு போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது. மக்னீசியம் அல்லது மக்னீசியம்- சோடியக் கலவையால் வனேடியம் ட்ரை குளோரைடை ஆக்ஸிஜனீக்க வினைக்கு உட்படுத்தி, தூய வனேடியத்தைப் பெறலாம். இயற்கையில் காணப்படும் வனேடியத்தில், ௦.24 விழுக்காடு வனேடியம்-50 ம் , 99.76 விழுக்காடு வனேடியம்-51ம் உள்ளன. இதில் வனேடியம்-50 கதிரியக்கமுடையது. இதன் அரை வாழ்வு 6 x 1015 ஆண்டுகள். பூமியின் புறவோட்டுப் பகுதியில் இதன் செழுமை ௦.02 விழுக்காடாகும். இது ஈயத்தின் செழுமையை விட 15 மடங்கும் வெள்ளியின் செழுமையை விட 2000 மடங்கும் அதிகமானது. எரிகற்களில் வனேடியத்தின் செழுமை அதிகமுள்ளது. முதிர்ந்த உறுதியான மரங்களின் அடிப்பகுதிகளில் வனேடிய உப்புகள் உள்ளன. கடல் தாவர இனங்களிலும், கடல் வாழ் உயிரினகளின் உடலிலும் வனேடியம் அதிகம் இருக்கின்றது. வனேடியம் உயிரினகளின் வளர் சிதை மாற்ற வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகின்றது. ஜப்பான் நாட்டில் அசிடியா (ascidia) என்ற கடல் வாழ் சிற்றுயிரியின் பண்ணைகளை அமைந்து அதன் உடலில் செறிவுற்றுள்ள 18.5 சதவீதம் வனேடியத்தைப் பிரித்தெடுக்க முயன்று வருகின்றார்கள். மரப் பிசின்களின் உதவியுடன் அயனிப் பரிமாற்ற வினை வழி வனேடியத்தைப் பிரித்தெடுக்கும் நவீன முறையை அமெரிக்கர்கள் கையாளுகின்றார்கள் வனேடியத்தின் வேதிக் குறியீடு V ஆகும். இதன் அணுவெண் 23; அணு எடை 50 94; ,அடர்த்தி 5960 கிகி /கமீ; உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 2193 K , 3673 K ஆக உள்ளன. தூய வனேடியம் பளபளப்புடன் கூடிய சாம்பல் நிற உலோகமாகும். இது மென்மையானது, கம்பியாகவும் இழுக்கக் கூடியது. வனேடியம் பலவகையான காரக் கரைசல்கள் மற்றும் கந்தக அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், உப்பு நீர் முதலியவற்றால் தாக்குறாது (அரிப்பு ஏற்படாமல்) இருக்கின்றது. ஆனால் 930 K க்கு மேல் உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. உயர் வெப்ப நிலையில் அலோகங்களுடன் வினை புரிகிறது. நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற தனிமங்கள் சிறிதளவே சேர்ந்த போதும், வனேடியம் ஒரு கடினப் பொருளாகி எளிதில் உடையக் கூடியதாகி விடுகின்றது. இது மாழை வகையைச் சேர்ந்ததாயினும் குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்று இதன் ஆக்ஸைடுகள் காடித் தன்மை உடையன. வனேடியத்தின் பொதுவான ஆக்ஸைடு நிலைகளில் +2, +3, +4, +5 ஆகியனவும் அடங்கும். அமோனியம் வனடடேட் NHVO ஐக் கொண்டு செய்து காட்டப்படும் ஒரு சோதனையில், துத்தநாகத்தால் சிதைவுற்று வனேடியத்தின் நான்கு ஆக்ஸைடு நிலைகளையும் வெவேறு நிறம் தருவதால் காட்டமுடியும். பொதுவாக +1 ஆக்ஸைடு நிலை நிகழ்வது அரிது. 1801 ஆம் ஆண்டில் மெக்சிகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்டரஸ் மானுவெல் டெல்ரியோ அந்நாட்டில் கிடைத்த ஒரு கனிமப் பொருளை பகுத்தாராய்ந்து அதில் ஒரு புதிய தனிமம் இருபதைக் கண்டுபிடித்தார். வேதி வினைகளின் போது இது பன்னிற வேதிச் சேர்மங்களை ஏற்படுத்தியதால் அதைப் பான்குரோமியம் என அப்போது குறிப்பிட்டார். இச் சொல் பன்னிறங்களைச் சுட்டும் கிரேக்க மொழிச் சொல்லாகும். அதன் பிறகு அவரே சிவப்பு என்ற பொருள் தரக்கூடிய கிரேக்க மொழிச் சொல்லான எரித்ரோனியம்(erytronium) என்ற சொல்லைத் தேர்வு செய்தார். இப் புதிய உலோகத்தின் பல வேதிச் சேர்மங்கள் சூடுபடுத்தும் போது சிவப்பாகி விடுகிறது என்ற கண்டுபிடிப்பே இப் பெயரைச் சூட்டுமாறு தூண்டியது. ஆனால் ”வோலர்” என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இது தூய்மையற்ற குரோமியம் என்று தெரிவித்தார். அதன் பிறகு 1830 ல் இதே தனிமம் வனேடியம் என்ற புதிய பெயருடன் "நில்ஸ் செப் ஸ்ட்ரோம்" என்பாரால் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது. வனாடிஸ் என்பது ஸ்காண்டிநேவியர்களின் பெண் கடவுள். 1867 ல் இங்கிலாந்து நாட்டு வேதியியலார் ஹென்றி ரோஸ்கோ தூய வனேடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். ஹைட்ரஜன் மூலம் குளோரைடுகளை அகற்றி 99.8 விழுக்காடு தூய்மையான வனேடியத்தைப் பெற்றார். உறுமி மேளம் உறுமி மேளம் ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி மேளக் குழுக்கள் உள்ளன. உறுமி மேளை இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். மாங்கனீசு மாங்கனீசு (ஆங்கிலம்: Manganese, (IPA: ) என்பது Mn என்னும் வேதியியல் குறியீடு கொண்ட பிறழ்வரிசை மாழை வகையைச் சேர்ந்த ஒரு தனிமம். இதன் அணுவெண் 25. இத்தனிமம் பெரும்பாலும் இரும்பு உள்ள கனிமங்களோடு சேர்ந்து இயற்கையில் கிடைப்பது. இம் மாழை பார்ப்பதற்கு வெண் சாம்பல் நிறத்தில், இரும்பு போலத் தோற்றம் அளிக்கும் கெட்டியான பொருள். இம் மாழை பெரும்பாலும் இரும்பு போன்ற மாழைகளுடன் சேர்ந்து பல்வேறு எஃகு, மற்றும் மாழைக்கலவைகளாக தொழிலகங்களில் பயன்படுகின்றது. எஃகு உற்பத்தியில் ஆக்சிசனை நீக்குவதற்கும் கந்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. மாங்கனீசு மின்மவணுக்கள் (ions) பல்வேறு நிறங்கள் ஊட்டவல்லன, எனவே அவை நிறமிகளாகப் பயன்படுகின்றன. மாங்கனீசு (II) மின்மவணுக்கள் பல நொதியங்களில் கூட்டுடன்கரணிகளாகப் (cofactors) பயன்படுவதால், இவை அறியப்பட்ட எல்லா உயிரினங்களிலும் அடிப்படைத்தேவையான இம்மியப் பொருளாக (மிகச்சிறிதே காணப்படும்/தேவைப்படும் பொருளாக (trace elements)) உள்ளது. மாங்கனீசு இரும்பைப் போன்ற தோற்றம் அளிக்கும் வெண்-சாம்பல் நிற மாழை. இது கெட்டியான ஆனால் உடையத்தக்க (brittle) (குறைந்த தகடாக்குந்தன்மை கொண்ட) மாழை. எளிதாக ஆக்சைடாக வல்லது. மாங்கனீசு மாழையும் அதன் மின்மவணுக்களும் (ions) நிலைக்கா மென்காந்தத் தன்மை (paramagnetic) கொண்டது. அதாவது புறக் காந்தப்புலத்தில் இருக்கும் பொழுதுமட்டும் சிறிதளவு காந்தத்தன்மை கொள்ளும் தன்மை உடையது. புறக் காந்தப்புலம் நீங்கியவுடன் மாங்கனீசு நிலையான காந்தத்தன்மை ஏதும் கொள்ளாத பொருள். மிகவும் பரவலாகக் காணப்படும் மாங்கனீசின் ஆக்சைடு நிலைகள் 2, +3, +4, +6 , +7, என்பதாகும். ஆனால் +1 முதல் +7 வரையிலான ஆக்சைடு நிலைகளும் அறியப்பட்டுள்ளது. Mn என்னும் மின்மவணு மக்னீசிய மின்மவணுவாகிய Mg உடன் உயிரியல் முறை இயக்கங்களில போட்டியிடுகின்றது. ஆக்சைடு நிலை +7ல் உள்ள மாங்கனீசு வலிமையான ஆக்சைடாக்கியாகும். மாங்கனீசு, இரும்பு எஃகு உற்பத்தியில் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு பொருள். எஃகு உற்பத்தியில் ஆக்சிசனை நீக்கவும், கந்தகத்தை கட்டுப்படுத்தவும் மாங்கனீசு பயன்படுகின்றது. மாங்கனீசு உற்பத்தியில் 85%-90% பங்கு இரும்பு-எஃகு உற்பத்திக்கே செல்வாகின்றது. பிற பயன்பாடுகளில் விலைக் குறந்த துருப்பிடிக்கா எஃகுக் கலவைகள் செய்யவும் சிலவகையான அலுமினியக் கலவைகள் செய்யவும் பயன்படுகின்றது. இம் மாழை மிகச் சில நேரங்களில் நாணயம் செய்யவும் பயன்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 1942-1945 காலப்பகுதியில் செய்ய்ப்பட்ட "போர்க்கால" 5 செண்ட் ("நிக்கல்") நாணயத்திலும், 2000 ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க தாலர் நாணயத்திலும் மாங்கனீசு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 1 மற்றும் 2 யூரோக்களில் பயன்படுத்தப்படுகின்றது. சில மாங்கனீசுச் சேர்மங்கள் ஊர்திகளில் பயன்படுத்தப்படும் எரியெண்ணயில் (பெட்ரோல்/காசோலின்) சேர்க்கப்படுகின்றது. இதனால் உள் எரி பொறிகளில் பயன்படும் எரியெண்ணெயின் ஆக்டேன் மதிப்பு கூடுகின்றது(சீராக முழுதுமாக எண்ணெய் எரிந்து உந்தம் தருகின்றது). கரிம வேதியியலில் பென்சைலிக்குச் சாராயம் (benzylic alcohols) முதலியவற்றை ஆக்சைடாக்க மாங்கனீசு பயன்படுகின்றது. கண்ணாடி செய்யும் பொழுது ஏற்படும் சிறிதளவு இரும்பு இருப்பதால் பச்சை நிறத்தை தோன்றுவதை நீக்க மாங்கனீசு பயன்படுகின்றது. மாங்கனீசின் அளவு கூடினால், இளம் சென்னீலம் (சிவப்பு-நீலம்) நிறம் இளம் கத்தரிப்பூ நிறம் (அமெத்திசிட்டு-நிறம் amethyst-colour) தரவல்லது. மாங்கனீசு ஆக்சைடு பழுப்பு நிறமியாகவும் பயன்படுகின்றது (சில வகையான களிமண்ணின் பழுப்பு நிறம் இதனால்தான்). இந்த பழுப்பு நிறமிகள் நீர்மநிறப் பூச்சுகளில் (பெயிண்ட்டுகளில்) பயன்படுகின்றது. பொட்டாசியம்-பெர்மாங்கனேட்டு (Potassium permanganate) என்னும் வேதியியல் பொருள் திறமான ஆக்சைடாக்கி. இதனை வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் நோய்த்தடுப்பு தூய்மைப்படுத்திகளாகப் பயன்படுத்துகின்றனர். மாங்கனீசு பாசுபேட்டாக்குதல் என்னும் முறை இரும்பு-எஃகுப் பொருட்களை துருப்பிடிக்காமல் இருக்கச் செய்யும் ஒரு முறையாகும். மாங்கனீசு (IV) ஆக்சைடு (மாங்கனீசு ஆக்சைடு) உலர்வகை மின்கலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதுவே கை மின்விளக்குகளில் (flashlight) பயன்படும் கரிம-துத்தநாக வகை மின்கலங்களை உடைத்து பிரித்து பார்த்தால் கறுப்பாக தெரியும் பொருள். இன்று இது கார மின்கலங்களில் வேறு வகையான மின்கரைசல்கள் வழி வேதியியல் வினைப்படும் முறையில் பயன்படுகின்றது. மாங்கனீசு என்னும் சொல்லின் பெயர் வரலாறு சற்று குழப்பம் தருவது. பழங்காலத்தில் இன்றைய கிரீசு நாட்டில் உள்ள மக்னேசியா என்னும் இடத்தில் இருந்து "இரண்டு" கரிய நிற கனிமங்கள் கிடைத்தன. இரண்டையுமே "மக்னேசு" ("magnes") என்றே அழைத்தனர். ஆனால் இவை இரண்டில் ஒன்று ஆண்பால் என்றும் ஒன்று பெண்பால் வகை என்றும் நினைத்தனர். ஆண்பால் வகையான மக்னேசு இரும்பை ஈர்த்தது (இதுதான் இன்று உலோடுசுட்டோன் (loadstone) எனப்படும் காந்தக்கல் அல்லது மாக்னட்டைட்டு (magnetite) ). பெண்பால் மக்னேசு கனிமம் இரும்பை ஈர்க்கவில்லை, ஆனால் கண்ணாடிகளில் (இரும்பு இருந்ததால்) தோன்றும் பச்சை நிறத்தை நீக்கப் பயன்பட்டது. இந்தப் பெண்பால் மக்னேசு பின்னர் "மக்னேசியா" ("magnesia") என்று அழைக்கப்பட்டது. இதுவே தற்காலத்தில் பைரோலூசைட்டு (pyrolusite) என்று அழைக்கப்படும் மாங்கனீசு ஆக்சைடு உள்ள கனிமம். இக்கனிமம் காந்தத்தன்மை ஏதும் இல்லாதது, ஆனால் அதில் உள்ள மாங்கனீசு நிலைக்காத மென்காந்தத் தன்மை உடையது. 16 ஆவது நூற்றாண்டில் கண்ணாடி வினைஞர்கள் இதனை மாங்கனேசம் (manganesum) என்று அழைத்தனர். பின்னர் மெதுவாக கண்ணாடி வினைஞர்களும், ஆல்கெமிசிட்டு எனப்பட்ட முற்கால வேதியியலாளர்களும் இரு வேறு பொருள்களையும் வேறுபடுத்தினர். ஒன்றை "கறுப்பு மக்னேசியா" (மக்னேசியா நேக்ரா "magnesia negra") என்றும், மக்னேசியா என்னும் அதே இடத்தில் இருந்து பெற்ற மூன்றாவதொரு கனிமத்தை "வெள்ளை மக்னேசியா" (மக்னேசியா ஆல்பா, magnesia alba) என்றும் அழைத்த்னர். இந்த வெள்ளை மக்னேசியாவும் கண்ணாடி செய்வதில் பயன்பட்டது. மெர்க்காட்டி என்பார் கறுப்பு மக்னேசியாவை மாங்கனேசா ("Manganesa", ) என்று அழைத்தார். இதிலிருந்து மாங்கனீசு பிரித்தெடுக்கப்பட்டது. (இடாய்ச்சு (செர்மன்) மொழியில் "மாங்கன்" (Mangan) ). பின்னர் மக்னேசியா என்னும் பெயர் மாங்கனீசு ஆக்சைடு கொண்ட வெள்ளைக் கனிமத்தைக் குறிக்கப் பயன்பட்டது. மக்னீசிசியம் என்னும் தனிமத்தின் பெயர் பின்னர் அது பிரித்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட்டது மாங்கனீசுச் சேர்மங்கள் 17,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலங்களிலேயே பயன்பட்டிருந்தது என்பதை நிறம் தீட்டப்பட்ட பொருள்களில் நிறமிகளாக இருந்துள்ளதில் இருந்து அறிய முடிகின்றது. எகிப்தியரும் உரோமானியரும் கண்ணாடி செய்யும் தொழிலில் குறிப்பிட்ட சில நிறங்கள் ஊட்டுவதற்கும், சில நிறங்களை நீக்குவதற்கும் பயன்படுத்தினர். எசுப்பார்ட்டன் என்போர் பயன்படுத்திய படைக்கருவிகளின் மிகு வலிமையும், தற்செயலாய்ச் சேர்ந்த இந்த மாங்கனீசு-இரும்புக் கலவைகளால் இருக்கும் என்று கருதுகின்றனர். 17 ஆவது நூற்றாண்டில் யோகான் கிளவுபர் (Johann Glauber) என்னும் இடாய்ச்சுலாந்து (செருமானிய) வேதியியலாளர் முதன்முதலாக பெர்மாங்கனேட்டு என்னும் சேர்மத்தை உருவாக்கினார் (சிலர் இதனை 1770ல் இக்னைட்டெசு கைம் என்பார் கண்டுபிடித்தார் என்பர்). 18 ஆவது நூற்றாண்டில் மாங்கனீசு ஆக்சைடு (மாங்கனீசு (IV) ஆக்சைடு), குளோரின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. (ஐதரோ குளோரிக்குக் காடியுடன் மாங்கனீசு ஆக்சைடைக் கலப்பதால் தோன்றுவது) சுவீடன் நாட்டு வேதியியலாளர் கார்ல் வில்லெம் சீல் (Carl Wilhelm Scheele) என்பார்தான் முதன்முதலாக மாங்கனீசு என்பது ஒரு தனிமம் என்று உணர்தார், ஆனால் 1774ல் அவரின் உடன்வேதியலாளர் யோகான் காட்லீபுக் கான் (Johan Gottlieb Gahn) என்பார் மாங்கனீசு தனிமத்தை, மாங்கனீசு டை-ஆக்சைடை கரிமத்தால் ஆக்சிசனை நீக்கிப் பிரித்தெடுத்தார். 19 ஆம் ஆண்டு துவக்கத்தில் எஃகு உருவாக்குவதில் மாங்கனீசின் பயன்பாடு பற்றி அறிவியலாலர்கள் அறியத் தொடங்கினர். இது பற்றிய புதுமுறைக்கான காப்புரிமங்கள் அப்பொழுதே வழங்கப்பட்டது. 1816ல், இரும்புடன் சிறிதளவு மாங்கனீசு கலந்தால் இரும்பானது வளையும் தன்மையுடன் வலிமை மிக்கதாக இருபதைக் கண்டறிந்தனர். 1837ல் பிரித்தானிய கல்வியாளர், "சேம்சுக் கூப்பர்" (James Couper]) என்பார், மாங்கனீசைத் தோண்டி எடுக்கும் சுரங்கங்களில் அதிக அளவு மாங்கனீசுடன் நேரடியாக வேலை செய்யும்பொழுது தொடர்பு இருப்பதையும் அவர்களில் சிலருக்கு ஒருவகையான பார்க்கின்சன் நோய் வருவதையும் கண்டறிந்தார். 1912,ல் கைத்துப்பாக்கி முதலிய பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்கவும் தேய்மானத்தைக் குறைக்கவும் மின்வேதியியல் முறைப்படி ஒருவகையான பூச்சு கொடுப்பதைப்பற்றிய மாங்கனீசு பாசுபேட்டாக்குதல் என்னும் முறைக்கான காப்புரிமம் ஒன்று வழங்கப்பட்டது. அதிலிருந்து இம்முறை பரவலாக வரவேற்பு பெற்றுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் உலர் மின்கலங்களிலும், இருவகையான (சாதாரண கரிம-துத்தநாக மின்கல வகை, கார மின்கல வகை), மின்கலங்களிலும், எதிர்மின்மங்களை ஈர்க்கும் அல்லது நேர்மின்மங்களை உமிழும் (நேர்மின்மங்களின் வாய்) காத்தோடு (= நேர்மவாய்) ஆக மாங்கனீசு-டை-ஆக்சைடு பெருமளவில் பயன்படுகின்றது. மாங்கனீசு உயிரினங்கள் பலவற்றிலும் இன்றியமையாது இருக்க வேண்டிய இணுக்கூண்டு (மிகச் சிறிய அளவு) இம்மிய ஊட்டப்பொருள். பரந்த்துபட்ட பல வகையான நொதியங்களில் மாங்கனீசு இணைகாரணிகளாக (cofactors) உள்ளன. அவற்றுள் ஆக்சிடோரிடக்டரேசுகள் (oxidoreductases), திரான்சுவெரேசுகள் (transferases), ஐதரோலேசுகள் (hydrolases), லையேசுகள் (lyases), ஐசோமெரேசுகள் (isomerases), இலிகேசுகள் (ligases) இலெக்டின்சுகள் (lectins), இன்ட்டெகிரின்சுகள் (integrins) ஆகியவற்றை சுட்டலாம். மாங்கனீசு உள்ள பாலிப்பெப்டைடுகளில் (polypeptides) நன்கு அறிந்தவை ஆர்கினேசு (arginase), டிப்தீரியா நச்சுனி (diphtheria toxin), யூக்கார்யோடிக் மைட்டோகோன்றியாவில் உள்ள நொதிமத்திலும் பிற பாக்டீரியாவிலும் உள்ள மாங்கனீசு இருக்கும் "டைமியூட்டேசு சூப்பராக்சைடு" (superoxide dismutase, (Mn-SOD)) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த மாங்-சூ-ஆ-டை (Mn-SOD) நொதியம் ஏறத்தாழ எல்லா உயிரினங்களிலும் உள்ள மிகப்பழைய பொருள். ஏனெனில் இது ஆக்சிசன் சூழலில் வாழும் எல்லா உயிரினன்ங்களும் ஈரணு ஆக்சிசனின் ஒரு எதிர்மின்னி இழப்பால் ஏற்படும் ஏற்படும் சுப்பராக்ஃசைடின் நச்சுத் தன்மையை எதிர்கொள்ள உதவுகின்றது. மாங்கனீசு பெரும்பாலும் பைரொலூசைட்டாகக் (pyrolusite) (MnO) கிடைக்கின்றது. சிறுபான்மை ரோடோகுரோசைட்டு (rhodochrosite) (MnCO) ஆகக் கிடைக்கின்றது. நிலத்தடியில் உள்ள இருப்பு அதிகம், ஆனால் அதன் பரவல் சீராக இல்லை. உலகின் கிடப்பிருப்பு மாங்கனீசில் பெரும்பான்மையான அளவு (80%) தென் ஆப்பிரிக்காவிலும் உக்ரைனிலும் உள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க இருப்புகள் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில்,காபோன், இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ளன. ஐக்கிய அமெரிக்க இறக்குமதி (1998-2001): மாங்கனீசுக் கனிமங்கள்: காபான், 70%; தென் ஆப்பிரிக்கா 10%; ஆத்திரேலியா, 9%; மெக்சிகோ, 5%; மற்றநாடுகள், 6%. இரும்பு-மாங்கனீசு (Ferromanganese): தென் ஆப்பிரிக்கா, 47%; பிரான்ஸ், 22%; மெக்சிகோ, 8%; ஆத்திரேலியா, 8%; மற்ற இடங்கள், 15%. இறக்குமதியாகும் கனிமங்களில் உள்ள மாங்கனீசு: தென் ஆப்பிரிக்கா, 31%; காபான், 21%; ஆத்திரேலியா, 13%; மெக்சிகோ, 8%; மற்ற இடங்கள், 27%. மாங்கனீசு ஆப்பிரிக்காவில் பர்க்கினா ஃபாசோ என்னும் நாட்டிலுள்ள சுரங்கத்திலும் காபான் (Gabon) நாட்டில் உள்ள சுரங்கத்தில் இருந்தும் எடுக்கப்படுகின்றது. கடலுக்கடியில் மாங்கனீசு உள்ள மாங்கனீசு கட்டிகளில் பெரிய அளவில் மாங்கனீசு உள்ளதென்று அறிந்துள்ளனர். ஆனால் செலவு-குறைவான முறைகளில் அவற்றை சேகரித்து அதிலிருந்து மாங்கனீசை எடுப்பதை 1970-களில் கைவிட்டனர். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு என்னும் மாங்கனீசுச் சேர்மம் ஒரு நல்ல ஆக்சைடாக்கி இதனை "காண்டியின் படிகம்" (Condy's crystals) என்றும் கூறுவர். இது வேதிச் செய்முறைச் சாலைகளிலும், தொழிலகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. நிலைப்புத் தன்மை அதிகம் கொண்ட மாங்கனீசின் ஆக்சைடு நிலை +2. பல மாங்க்னீசு (II) சேர்மங்கள் அறியபப்டுகின்றன, எடுத்துக்காட்டாக மாங்கீசு (II) சல்பேட்டு (MnSO), மாங்கீசு (II) குளோரைடு (MnCl). இந்த ஆக்சைடு நிலையை கனிம ரோடொகுரோசைட்டிலும் (rhodochrosite) (மாங்கனீசு(II) கார்போனேட்டு). ஆக்சைடு நிலை +3 என்பதும் அறியப்பட்டுளது, எடுத்துக்காட்டாக மாங்கனீசு (III) அசிட்டேட்டு, ஆனால் இவை மிகவும் வலிமையான ஆக்சைடாக்கி (ரெடாக்ஃசு (Redox)). மாங்கனீசுச் சேர்மங்கள் இரும்பு, நிக்கல், செப்பு போன்ற மற்ற மாழைகளை ஒப்பிட்டுப் பார்கையில் பெரும்பாலும் அதிகம் நச்சுத்தன்மை கொண்டதல்ல. என்றாலும் மாங்கனீசு கலந்த தூசி, புகை, வளிமங்கள் போன்றவற்றுடன் அதிகம் நேரடியாக சிறிது நேரமே தாக்குற்றாலும் கெடுதல். அதிக அளவாக ஒரு கன மீட்டர் (பரும மீட்டர்) இடத்தில் 5 மில்லி கிராம் (5 mg/m) மட்டுமே இருக்கலாம். குழந்தைகளுக்குக் குறிப்பாக கெடுதல் வாய்ப்பு அதிகம், ஏனென்றால் CH-7 ஈர்ப்பிகளுடன் (CH-7 receptors.) இணையும் தன்மை அதிகம். அதிகம் மாங்கனீசுத் தாக்கம் இருந்தால் உடல் புற உறுப்பகளின் அசைவைக் கட்டுறுத்தும் திறமைகளும், வேறுபாடுகளை உணரும் திறங்களும் பழுதடைவதாகக் கண்டுள்ளனர். காடிய பெர்மாங்கனேட்டுக் கரைசல்கள் ஏறத்தாழ எல்லா கரிமவேதியப் பொருள்களையும் ஆக்சைடாக்கும் வல்லமை கொண்டது. ஆக்சைடாக்கும் நிகழ்ச்சியில் வெளிப்படும் வெப்பத்தால் சில கரிமவேதியியற் பொருள்கள் தீப்ப்பற்றவும் கூடும். 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வின் ப,டி மாங்கனீசை உள்மூச்சால் உள்வாங்கும்பொழுது நரம்பு மண்டலத்தின் நடுத் தொகுதியில் நச்சுத்தன்மை எலிகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்று அறிகின்றோம். குளிக்கையில் நீர்த்தூவியின் வழி வரும் நீரில் இயற்கையில் காணப்படும் மாங்கனீசால் நெடுநாளைய தாக்கத்தால் 8.7 அமெரிக்கர்களுக்கு தீவாய்ப்பு ஏற்படக்கூடும் என்னும் ஒரு கருதுகோள் உள்ளது பார்க்கின்சன் நடுக்குவாதம் போன்ற ஒரு நரம்பிய சீர்குலைவு "மாங்கனிசம்" ("Manganism") என்னும் பெயரில் அறியபப்டுகின்றது. இது 19-ஆம் நூற்றாண்டில் மாங்கனீசச் சுரங்ங்களில் பணியாற்றிய பனியாட்களுக்கும் மாங்கனீச உருக்காலைகளில் பணியாற்றியவர்களுக்கும் இருந்ததாகக் கருதப்பட்டது. பற்றவைப்புத் தொழில் செய்வோருக்கும் இப்படியான மாங்கனீசத்ட் தாக்கம் இருக்கக்கூடும் என்று நினைக்கின்றார்கள். பாங்கனீசத்தோடு தொடர்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பரிந்துரைச் சட்டங்களும் உண்டு . செக் குடியரசு செக் குடியரசு (செக் மொழி: Česká republika) நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடானது 78,866 சதுர கிலோமீட்டர்கள் (30,450 சதுர மைல்கள்) பரப்பளவு உடையது.  பிராக் என்னும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு விளங்குகிறது.  இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஆக இருக்கின்றது.  மேலும் லிபரக், பெர்னோ, ஒஸ்த்ரவா மற்றும் பில்சன் என்னும் நகரங்கள் உள்ளன.  இது ஒரு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கின்றனது. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது. செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும். மங்கோலியா மொங்கோலியா அல்லது மங்கோலியா ("Mongolia") உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். மொங்கோலியா ஆனது பற்பல நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி 1206 ஆம் ஆண்டில் "செங்கிஸ் கான்" கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் மங்கோலியப் பேரரசு உருவாகும் வரையே நீடித்தது. யுவான் அரச மரபின் ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்த போது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. அவர்களுக்கு சோவியத் யூனியன் மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921 ஆம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். மங்கோலிய செஞ்சிலுவை சங்கம் 1939 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் உலான் பத்தூரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பின் பின்பு ரஷ்ய நாட்டின் மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது சீனாவும் தென் கொரியாவுமே மங்கோலியாவின் வர்த்தக மற்றும் அரசியல் பங்காளி நாடுகளாக உள்ளனர். மங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். இங்கு சனவரி காலத்தில் வெப்பநிலை −30 °C (−22 °F) ஆகக் குறைகிறது. மங்கோலிய நாடு 21 மாகாணங்களாக அதாவது மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணங்களும் அல்லது மாநிலங்களும் 329 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. "அவையாவன" 2010 இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 53 வீதமானோர் பௌத்தர்கள் ஆவார்கள். அதுமட்டுமன்றி அங்கு சமய ஈடுபாடு இல்லாதவர்கள் 39% வீதமானோர் உள்ளார்கள். மங்கோலியாவின் உத்தியோகபூர்வ மொழி மங்கோலியன் ஆகும். இது அங்குள்ள 95 வீதமான மக்களால் பேசப்படுகின்றது. இங்கு மங்கோலியன் சிரில்லிக் எழுத்துக்களே எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 2002 ஆம் ஆண்டில், முப்பது வீதமான வீடுகளில் கால்நடை வளர்ப்பே அடிப்படையாக அமைந்திருந்தது. மங்கோலியாவில் உள்ள பல மேய்ப்பவர்களும் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். 2009 மற்றும் 2010 போன்ற ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான குளிரால் மங்கோலியா 96.7 மில்லியன் விலங்குகளை இழந்தது. சிலோவாக்கியா ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும். கினி-பிசாவு கினி-பிசாவு குடியரசு ("Republic of Guinea-Bissau", [ˈgɪni bɪˈsaʊ]; போர்த்துக்கீச மொழி: "República da Guiné-Bissau", [ʁɛ'publikɐ dɐ gi'nɛ bi'sau]), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது. இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது. 1841 1841 (MDCCCXLIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1799 1799 (MDCCXCIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. பறை (இசைக்கருவி) பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது."பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார். தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்கபட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது. இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான். தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி 'சிம்புக்குச்சி' அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும். சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர். அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும். குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. பறை என்பது 'பேசு' அல்லது 'சொல்' என்ற பொருள் தரும். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட தமிழகப் பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன. என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம். பறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும். பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம். அதிலிருந்துதான் பறையாட்டம் பிறந்தது. பறை இசையில் பல வகை அடிகள் உண்டு. இவ்வாறு அடித்தலால் ஏற்படும் பறை இசைக்கேற்ப நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என ஆடும் கலை பறையாட்டம் எனப்படுகிறது பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;- பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு. எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்காலத்தில் பறை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியாக உள்ளது. பறையர்கள் சாம்பவார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விசைக்கருவியை இசைக்கிறார்கள். இதற்கு தப்பு என்ற பெயரும் உண்டு கோயில் திருவிழாக்கள், மதச் சடங்குகளின்போது பறை இசைக்கப்படும். இதுதவிர, இறுதி ஊர்வலத்தின் போதும் பறை இசைக்கப்படுகிறது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தற்காலத்தில் தலித் மக்களின் பண்பாட்டு அடையாளமாகவும், சமூக விடுதலையின் அடையாளமாகவும் பறையை முன்னிறுத்தி தலித் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழாக்கள், நிகழ்ச்சிகளில் பறை முக்கிய இடம்பெற்று வருகிறது. கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர். வேதியியல் மாற்றியங்களின் கணிதக் கணிப்பு வேதியியல் மாற்றியங்களின் கணிதக்கணிப்பு (Mathematical Enumeration of Chemical Isomers) 1875 இல் முதன் முதல் கெய்லி என்னும் கணிதவியலாளர் வேதியியலைச் சார்ந்த மாற்றியங்களை எண்ணும் முறைகளைத் தொடங்கி வைத்தார். ஒரு குறிப்பிட்ட கரிமத்தைச் சார்ந்த ஓர் அல்கேனின் (Alkane) மாற்றியங்களின் எண்ணிக்கை அதைவிட ஒரு கரிமம் குறைவாகவுள்ள ஒர் அல்கேனின் மாற்றியங்களைப்பொருத்தது என்று கண்டுகொண்டார். இந்த உண்மையையும், கணிதத்தைச் சேர்ந்த கோலநூலைக்கொண்டும், 13 கரிமங்கள் வரை உள்ள அல்கேன்களின் மாற்றியங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டார். ஆனால் அவர் கணிப்பில் formula_1 இரண்டினுடைய கணிப்புக்கள் தவறானவையாக இருந்தன. ஐந்தாண்டுகளுக்குப்பிறகு ஹெர்மன் என்பவர் அவைகளைத் திருத்தினார். ஆனால் அவருடைய கணிப்புகளும் அதற்குமேல் எண்ணிக்கையுள்ள கரிமங்களைச் சார்ந்த அல்கேன்களின் மாற்றியங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட உதவவில்லை. 1890 களில் லொஸானிட்ச் என்பவர் சேர்வியல் முறைகளைப்பயன்படுத்தி இக்கணிப்பை formula_2 வரையில் கொண்டு சென்றார். அவருடைய கணிப்பிலும் formula_3 இரண்டும் தவறானவையாக முடிந்தன. 1930களில் போல்யா என்ற கணிதவியலர் ஒரு அற்புதமான தேற்றத்தை உருவாக்கினார்.அவருடைய தேற்றத்தைப் பயன்படுத்தி பலபன் என்பவர் formula_4 வரையில் அல்கேன்களுடைய சமதானிகளைக் கணக்கிட்டார். போல்யாவின் தேற்றம் இன்றும் சேர்வியலில் ஒரு மிகவும் பயனுள்ள முக்கியமான தேற்றமாகத் (போல்யா எண்ணெடுப்புத் தேற்றம்) திகழ்கிறது. மயில் ஆட்டம் மயில் ஆட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர். மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. கோபால்ட்டு கோபால்ட்டு ( அல்லது ) என்பது குறியீடு Co என்பதையும் அணுவெண் 27 இனையும் கொண்ட மூலகமாகும். இது இயற்கையில் வேதியியல் இணைந்த வடிவத்தில் மட்டுமே கிடைக்கிறது. கோபால்ட் பூமியில் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம் ஆகும். எரிகற்களில் கோபால்டின் சேர்மானம் அதிகமுள்ளது, பொதுவாக ஆர்செனிக். கந்தகம், செம்பு, பிஸ்மத் போன்ற தனிமங்களோடு கோபால்ட் சேர்ந்து காணப்படும். பூமியின் புறவோட்டில் இதன் செழிப்பு 0.003 % மட்டுமேஉள்ளது. ஜெர்மன் மொழியில் 'கோபால்ட்-kobold' என்றால் தீங்கிழைக்கும் ஒரு கெட்ட ஆவி என்று பொருள். கோபால்ட் சுரங்கங்களில் நிகழும் விபத்துகளுக்கு இக்கெட்ட ஆவியே காரணம் என்று முன்னோர்கள் நம்பியதால் இப்பெயர் நிலைபெற்றது. 1735 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலார் கியார்க்பிராண்ட் (Georg Brandt) என்பவர் கோபால்ட் தாதுவைப் பகுப்பாய்வு செய்து கோபால்ட்டைத் தனியே பிரித்தெடுத்தார்.கோபால்ட்டும் நிக்கலும் இயற்கையில் இணைந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தனித்துப் பிரிக்கும் ஒரு வழிமுறையை 1834 ல் சார்லஸ் ஆஸ்கின் என்பவர் கண்டுபிடித்தார் .குளோரின் ஊட்டப்பட்ட சுண்ணாம்பு நீரில், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆக்சைடுகள் இரண்டுமே சேர்ந்து வீழ்படிவாகின்றன. இதில் பாதியளவு நீர்மத்தை எடுத்துக் கொண்டால் கோபால்ட் ஆக்சைடு மட்டுமே வீழ்படிவாகின்றது. போதிய கரைப்பான் இல்லாததால் நிக்கல் அப்படியே கரைசலில் தங்கி விடுகின்றது. வேதியியல் வினையால் ஒத்த இரு தனிமங்களைப் பிரித்தெடுக்க இவ் வழிமுறையையே இன்றைக்கும் பின்பற்றுகின்றார்கள் . கோபால்ட்டைட்டு, எரித்திரைட்டு, கிளௌக்கோடாட்டு, சுக்குட்டெருடைட்டு என்பன கோபால்ட்டின் முக்கிய தாதுக்கள் ஆகும். இயற்கையில் கோபால்ட் தனித்துக் கிடைப்பதில்லை. இந்த தாதுக்கள் எப்போதும் இரும்பு, நிக்கல், தாமிரம், வெள்ளி போன்ற தனிமங்களுடன் கலந்தே கிடைக்கின்றன. எனவே பெரும்பாலான கோபால்ட்டு மேற்கண்ட தனிமங்களை தயாரிக்கும் போது உருவாகும் கோபால்ட்டு உடன் விளைபொருட்களை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுகின்றன . கோபால்ட்டு பொதுவாக ஒரு உடன் விளை பொருளாகவே தயாரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதால், சந்தைக்கு கோபால்ட்டு வழங்கல் என்பது செப்பு மற்றும் நிக்கல் சுரங்கத்தின் பொருளாதார சாத்தியக்கூறைப் பொறுத்து அமைகிறது. கோபால்ட்டின் தேவை கோரிக்கை ஆண்டுக்காண்டு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . கோபால்ட்டின் செறிவு மற்றும் பயன்படுத்தப்படும் தாதுவின் சரியான இயைபு ஆகியவற்றைப் பொறுத்து தாமிரம் மற்றும் நிக்கல் ஆகியவற்றிலிருந்து கோபால்ட்டைப் பிரிக்க பல்வேறு முறைகள் உள்ளன. தாது நுரைமிதப்பு முறையினால் அடர்ப்பிக்கப்பட்டு நன்கு தூளாக்கப்படுகிறது. இதனை காற்றில் வறுக்கும் போது தாதுவில் இருக்கும் கந்தகம், ஆர்சனிக் போன்றவை ஆவியாதல் மூலமாக நீங்குகின்றன. வறுக்கப்பட்ட தாதுவுடன் சுண்ணாம்புக் கல், மணல் ஆகியன் கலக்கப்பட்டு ஒரு சிறிய ஊது உலையில் உருக்கப்படுகின்றன. தாதுவுடன் கலந்திருந்த இரும்பு பெரசு சிலிக்கேட்டாக மாறி நீக்கப்படுகிறது. மீதமுள்ள உலோகங்கள் இரண்டு அடுக்குகளாக மிதக்கின்றன. மேல் அடுக்கில் இரும்பு, கோபால்ட்டு, நிக்கல், தாமிரம் உலோகங்கள் ஆர்சனேட்டுகளாக உள்ளன. கீழடுக்கில் வெள்ளி உள்ளது. கோபால்ட்டு உள்ள மேல் அடுக்குடன் சோடியம் குளோரைடு சேர்க்கப்பட்டு எதிர்மின் உலையில் வற்றுக்கப்படுகிறது. கந்தகம் மற்றும் ஆர்சனிக் போன்றவை நீங்குகின்றன. உலோகங்கள் அவற்ரின் குளோரைடுகளாக மாற்றப்படுகின்றன. வறுக்கப்பட்ட தாதுவை நீரிலிட்டு சாறு எடுத்து அதனுடன் சோடியம் கார்பனேட்டைச் சேர்க்க வேண்டும். தாமிரம் கார்பனேட்டு உப்பாக வீழ்படிவாகி நீக்கப்படுகிறது. கரைசலில் கோபால்ட்டு மற்றும் நிக்கல் குளோரைடுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். இக்கரைசலில் சுண்ணாம்பு மற்றும் சலவைத்தூள் சேர்க்கும் போது கோபால்ட்டு ஐதராக்சைடாக மாற்றப்படுகிறது. நிக்கல் கரைசலில் எஞ்சி நிற்கும். இதை வடிகட்டி உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் கோபால்ட்டு ஆக்சைடு உருவாகிறது. கோபால்ட்டு ஆக்சைடை அலுமினோ வெப்ப ஒடுக்கமுறைக்கு உட்படுத்தினால் கோபால்ட்டு தனித்துக் கிடைக்கிறது. கோபால்ட்டு மின்னாற்பகுப்பு முறையில் தூய்மை செய்யப்படுகிறது. தூய கோபால்ட் நாடாவை எதிர்மின் முனையாகவும், மாசு நீக்கப்படாத கோபால்ட்டை நேர்மின் முனையாகவும் வைத்து கோபால்ட்டு அமோனியம் சல்பேட்டுக் கரைசல் மின்பகுளியாக செயல்பட கரைசல் வழியாக மின்சாரம் செலுத்தப்படுகிறது. நேர்மின் முனையில் உள்ள உலோகம் மெல்ல மெல்ல கரைந்து எதிர்மின் முனையில் படிந்து சேகரமாகிறது. கோபால்ட்டு உலோகத்தின் உலக சேமிப்பு இருப்பு 7,100,000 மெட்ரிக் டன்கள் என மதிப்பீடு செய்து அமெரிக்க நில அளவையியல் நிறுவனம் தெரிவிக்கிறது . உலக கோபால்ட்டு உற்பத்தி அளவில் 63 சதவீதம் கோபால்ட்டை காங்கோ சனநாயகக் குடியரசு தயாரிக்கிறது. சுரங்கத் தயாரிப்பாளர்களால் திட்டமிடப்பட்ட முறையான விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டால் கோபால்ட்டு சந்தையில் காங்கோ குடியரசின் பங்கு 2025 ஆம் ஆண்டில் 73% ஆக உயரும். ஆனால் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒப்பிட்டால் 2030 க்குள் உலகளாவிய தேவை 47 மடங்கு அதிகமாக இருக்கலாம் எனக் கணக்கிடப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் காங்கோ சுரங்கங்களில் ஏற்படுத்திய புதிய மாற்றங்களால் காங்கோ நாட்டின் செம்பு மற்றும் கோபால்ட்டு திட்டங்களில் முதலீடுகள் அதிகரித்து உற்பத்தி பெருக திட்டமிடப்பட்டுள்ளது. தூய கோபால்ட் பிரகாசமான நீலங்கலந்த வெண்மையுடன் கூடிய பளபளப்பானது .இதன் வேதிக் குறியீடு Co ஆகும். இதன் அணுஎண் 27, அணு நிறை 58.93 அடர்த்தி 8900 கிகி/கமீ. உருகுநிலையும், கொதிலையும் முறையே 1765 K,3173 K ஆகும். கண்ணாடி யோடு சிறிதளவு கோபால்ட் சேர்க்கும் போது கண்ணாடி இளம் நீல நிறம் பெறுகின்றது. இதைக் கோபால்ட் கண்ணாடி என்றே அழைப்பர். கோபால்ட் கூட்டுப் பொருட்கள் இன்றைக்கு வர்ணங்களின் உற்பத்தி வழிமுறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. காந்த முடுக்க எண் 1.6-1.7 போர் மேக்னெட்டான் ஆகும். இது வெப்பபடுதினாலும் கூட ஹைட்ரஜன் வாயு (H2) மற்றும் நைட்ரஜன் வாயுடன் (N2)வினைபுரிவது இல்லை ஆனால் இது ஆக்சிசனுடன் வினைபுரிகிறது. சாதாரண வெப்பநிலையில் அது கனிம அமிலங்களுடன் ஈரப்பதம் மிகுந்த சூழ்நிலையில் மிகவும் மெதுவாக வினைபுரிகிறது. 1 முதல் 12 % கோபால்ட் கலந்துள்ள எஃகு அரிமானத் திற்கு எதிரான தடையையும், உயர் வெப்ப நிலையில் வலிமையையும் கொண்டுள்ளது. கோபால்ட், குரோமியம், டங்க்ஸ்டன், மாலிப்பிடினம், இரும்பு இவை ஒன்றறக் கலந்த இத்தகைய பண்புடைய கலப்பு உலோகமான ஸ்டெல்லைட் (Stellite) (விண்மீன் என்ற பொருள் தரும் ஸ்டெல்லா என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது) உயர் வேகத் தமரூசி(துளையிடும் தண்டு-drilling bit) சக்கர இரம்பங்கள், வெட்டுங் கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றது. உயர் வெப்பத்தைத் தாங்கவல்ல இக்லப்பு உலோகம் விமான இயந்திரங்கள், சுழலியின் தகடுகள், உயரழுத்தக் கொதிகலன்கள், விரைவான வேகத்தில் தொடந்து இயங்கும் இயந்திரப் பாகங்கள் போன்றவற்றின் பயன்படும் காலத்தை அதிகரிக்கின்றது. கோபால்ட்டும் குரோமியமும் சேர்ந்த ஒரு வகைக் கலப்பு உலோகம் பல்லிடுக்குகளை அடைக்கப் பயன்படுகின்றது. இது தங்கத்திற்கு இணையான தோற்றமும் கூடுதல் வலிமையும் கொண்டது. கோபால்ட் விலை மதிப்பு மிக்க பிளாட்டினத்திற்கு ஒரு மாற்றுப் பொருளாகும். இரும்பு, கோபால்ட், நிக்கல் இவை மூன்று மட்டும் பெரோ காந்தப் பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் கோபால்ட்டின் உயரளவு கியூரி வெப்பநிலை(Curie Temperature) 1115 °C ஆகும். ஒரு கியூரி வெப்ப நிலை என்பது எந்த உயர் வெப்ப நிலையில் அது தன் காந்த்தத் தன்மையை இழக்கின்றதோ அவ் வெப்ப நிலையாகும். நிக்கலுக்கு இவ்வுயர் வெப்பநிலை 630 K, இரும்புக்கு 1040 K, கோபால்ட்டுக்கு 1400K ஆகும். கோபால்ட் மிக அதிகமாக அகக் காந்தப் புலத்தை(internal field)பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகும். அகக் காந்தப் புலம் திண்மத்தின் உள்ளே உள்ள காந்த அணுக்களை ஒருமுனைப் படுத்த காந்தத் தன்மை கொண்ட வட்டாரங்கள்(domains) தோன்றுகின்றன. இதனால் கோபால்ட்டை மிக எளிதாகக் காந்தமாக்கம் செய்ய செய்ய முடிவதோடு, அதன் காந்தத் தன்மையை உயர் வெப்ப நிலையிலும் கூட வலிமை மிக்க நிலைக்காந்தங்களை உருவாக்க 'அல்நிகோ' என்ற கோபால்ட் கலப்பு உலோகம் பயன்படுகிறது. கோபால்ட் -60 ஒரு கதிரியக்க அணு எண்மமாகும் (Isotope ).இது மின்னூட்டமற்ற காமாக் கதிரை உமிழ்ந்து 5.26 ஆண்டுகள் என்ற அரை வாழ்வுக் காலத்தில் பாதியாகக் குறைகின்றது. .இது புற்று நோய்ச் சிகிச்சை முறையில் பயன்தருகின்றது. அழிவாக்க மற்ற சோதனை முறையில் (Non -destructive testing) கோபால்ட்-60 பயன்படுகின்றது. உற்பத்திப் பொருட்களைச் சிறிதும் சிதைக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு அவற்றின் தகுதிப்பாட்டை அறியும் முறையே அழிவாக்க மற்ற சோதனை முறையாகும். விரைவில் கெட்டுப் போய்விடக் கூடிய உணவுப் பண்டங்களைப் பாதுகாத்து ஓரளவு நீண்ட காலத்திற்குச் சேமித்து வைக்கும் முறையிலும் கோபால்ட் -60 ன் கதிர் வீச்சு பயன்தருகின்றது. கோபால்ட் -60 ஒரு தடங்காட்டியாகப் பயன்படுத்தி நீண்ட நெடிய குழாய்களில் ஏற்படும் கசிவு போன்ற குறைபாடுகளை இனமறிந்து கொள்கின்றனர். வைரங்களுக்குச் செயற்கை நிறமூட்ட கோபால்ட் -60 பயன்படுகின்றது .இதன் மூலம் வெண்ணிற வைரங்களை நீலங் கலந்த பச்சை நிறமூட்ட முடியும் . மின்னல் என்பது இரு மேகங்களுக்கிடையே அல்லது மேகத்திற்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னிறக்கமாகும். அப்போது வெளிப்படும் அளவற்ற ஆற்றல் பெரும்பாலும் பயனுக்கு எட்டுவதில்லை. கோபால்ட் -60 மூலம் இதைச் செய்ய முடியும் என்று செய்து காட்டியிருக்கின்றார்கள். இடி தாங்கியின் முனையில் சிறிதளவு கோபால்ட்-60 யை இட்டு வைத்தால் அதிலிருந்து வெளிப்படும் காமாக் கதிர் அதன் அருகாமையிலுள்ள காற்று வெளியை அயனியாக்கத்திற்கு உட்படுத்தி விடும். இதனால் மின்னிறக்கம் ஏற்படும் போது ஊடகத்தின் மின்தடை குறைவு காரணமாக கதிரியக்கம் ஊட்டப்பட்ட இடி தாங்கி வழியாக ஏற்படுகின்றது. இது பல நூறு மீட்டர் ஆரமுள்ள வட்டப் பரப்பில் ஏற்படும் மின்னல்களை உறிஞ்சுகிறது. சுப்பு ஆறுமுகம் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் (பி. 1928, சத்திர புதுக்குளம், திருநெல்வேலி) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வருகிறார். 1928ல் சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். சங்கீத அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது. தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைதொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார். சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள். கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் ஏறக்குறைய அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதிக்கொடுத்தார். இவர் எழுதிய சின்னஞ்சிறு உலகம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது. 'மனிதர்கள் ஜாக்கிரதை' என்று ஒரு நாடகம் இவரால் எழுதப்பெற்று புத்தகமாக வெளியிடப்பெற்று பின் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்று ஒரு வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு கணிசமாக உண்டு. காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து வருடங்களாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்து வருகிறார்கள். துத்தநாகம் துத்தநாகம் (இலங்கை வழக்கு: நாகம்) ஒரு தனிமம். இது நீலம் கலந்த வெண்ணிறமுடைய வேதி உலோகம். இதன் வேதிக்குறியீடு Zn இதன் அணு எண் 30. ஆசியா, ஆத்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் இது அதிகம் கிடைக்கிறது. உலகம் முழுவதும் 1. 9 கோடி டன்கள் அளவில் துத்தநாகம் காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். இது பூஞ்சைகளைக் கொல்ல வல்லது. வேதியியல் ஆய்வகங்களில் வேதி வினைகளை செயல்முறை செய்து காட்ட இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. துத்தநாகத்தின் தாதுக்களுள் ஒன்று துத்தநாக கார்பனேட் அடங்கிய காலமைன் ஆகும். கால்சியனேற்றம் செய்து இதிலிருந்து துத்தநாக ஆக்சைடைப் பெறலாம். இது கண் நோய்களுக்குப் பழங்காலத்திலிருந்தே ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. துத்தநாக ஆக்சைடு குளிர்ச்சியாக இருக்கும் போது வெண்மையாகவும் சூடாக இருக்கும் போது மஞ்சளாகவும் இருக்கின்றது. இதை வெள்ளை நிறமியாகப் பயன்படுத்துகின்றார்கள். துத்தநாகக் கனிமம் பித்தளை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.துத்தநாகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக உற்ற தனிமம் ஆகும். வளரும் நாடுகளில் உள்ள ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் துத்தநாகக் குறைபாட்டு நோயினால் பாதிப்படைந்துள்ளனர். இக்குறைபாட்டால் ஏற்படும் நோயினால் வயிற்றுப் போக்கு அதிகரித்து உலகம் முழுவதும் சுமார் 800,000 குழந்தைகள் இறந்துள்ளனர். துத்தநாகக் கனிமத்தை வறுக்க ஆக்சைடுகள் கிடைக்கின்றன. இதைக் கரித்தூளுடன் உயர் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி ஆக்சிஜனீக்கம் செய்து வெளியேறும் துத்தநாக ஆவியைச் சுருக்கி துத்தநாக உலோகத்தைப் பெறலாம். Zn என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய துத்தநாகத்தின் அணுவெண் 30, அணு நிறை 65.37, அடர்த்தி 7140 கிகி /கமீ. இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 692.7, 1180 K ஆகும். துத்தநாகம் உலோகப் பொலிவும், நீலம் கலந்த வெண்ணிறமும் கொண்டது. சாதாரண வெப்பநிலையில் உடைந்து நொறுங்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் 100-150 டிகிரி C வெப்பநிலை நெடுக்கையில் தகடாக அடிக்கலாம். இது மின்சாரத்தை ஓரளவு சிறப்பாகக் கடத்துகின்றது. காற்று வெளியில் பழுக்கக் காய்ச்சினால் வெண்புகையை உமிழ்ந்து எரிகின்றது. புவியில் இதன் செறிவு 0.0075% ஆகும். புவி மேலோட்டில் கிடைக்கும் கனிமங்களில் இது 24 ஆவது இடத்தில் உள்ளது. துத்தநாகம் பொதுவாக செம்பு மற்றும் ஈயத் தாதுக்களுடன் கலந்தே காணப்படுகிறது. துத்தநாகம் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களைத் தருகின்றது. பித்தளையில் செம்பு 60-40 %, துத்தநாகம் 40-10 % வரையும் கலந்திருக்கும். இவை தவிர மிக நுண்ணிய அளவில் டின், மாங்கனீசு, அலுமினியம், இரும்பு, ஆண்டிமணி, பிஸ்மத், கோபால்ட்,தங்கம், நிக்கல், டெல்லுரியம், சோடியம் ஈயம் போன்ற உலோகங்களையும் சிறப்புப் பயன்பாடு கருதிச்சேர்ப்பார்கள். பித்தளையின் பட்டறைப் பயன் செம்பைக் காட்டிலும் மேன்மையானது. மேலும் இதன் உருகுநிலை அதில் கலந்துள்ள செம்பு மற்றும் துத்தநாகத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. தங்கம் போன்று தோற்றம் தருகின்ற 'போலி' நகைகளைச் செய்வதற்கு பிரஞ்சுத் தங்கம் பயன்படுகின்றது. இதில் 90:10 என்ற விகிதத்தில் செம்பும், துத்தநாகமும் சேர்ந்திருக்கின்றது. இது செம்பைவிடக் கடினத் தன்மை மிக்கது. சிலைகள் வடிக்க ஆணி, திருகு, மரைகள், பட்டறைக் கருவிகள், கைப்பிடிகள், பெயர்ப் பலகைகள், நகைகள் செய்ய இது பயன்படுகின்றது. நிக்கல் வெள்ளி, ஜெர்மன்வெள்ளி, அலுமினியப் பற்றாசு ("Solder"), மென் பற்றாசு போன்றவை துத்தநாகக் கலப்பு உலோகங்களில் முக்கியமான சிலவாகும். பெருமளவு துத்தநாகம் துருப்பிடிக்காத கூரைத் தகடுகள் செய்யவும், வார்ப்பச்சுகள் தயாரிக்கவும், போக்குவரத்து வாகனங்கள், மின் துறையில் பயன்படும் பல விதமான சாதனங்கள் மற்றும் கனரகப் பொருட்கள் தயாரிக்கவும் பயன் தருகின்றன. பிரஸ்டல் ("Prestal") என்ற கலப்பு உலோகம் 78 % துத்தநாகமும் 22 % அலுமினியமும் கொண்டது. இது எஃகைப் போல உறுதி கொண்டது. நெகிழ்மத்தைப் போல் வார்ப்படம் செய்யவும் முடிகின்றது. இது மிகை நெகிழ்மத்தன்மையை ("Super plasticity") வெளிப்படுத்துகின்றது. இரும்பு துருப் பிடிப்பதைத் தவிர்க்க எதிர் மின் முனைமக் காப்பு ("Cathodic protection") மூலம் துத்தநாகத்தைப் பயன்படுத்துகின்றார்கள். கப்பல்களில் மரத்துண்டுகள் உப்பு நீரால் அரிக்கப்பட்டு சிதைந்துபோய்விடாமல் இருக்கப் பயன்படுத்தும் செம்புத்தகடுகளுக்குத் துத்தநாகப் பூச்சிட்டால் செம்புத் தகடுகள் கடலுப்பின் அரிப்பிலிருந்து தடுக்கப்படுகின்றது. துத்தநாகப் பூச்சிட்ட இரும்பைக் கால்வனைஸ்டு இரும்பு என்பர். சிர்கோனியமும், துத்தநாகமும் பெரோகாந்தப் பண்பற்றவை. ஆனால் சிர்கோனிய துத்தநாகம் 35 டிகிரி K வெப்பநிலைக்குக் கீழே பெரோகாந்தப் பண்பைக் கொண்டுள்ளது. தொழில் துறைகளில் துத்தநாகச் சேர்மங்களின் பயன்பாடு விரிவடைந்து கொண்டே வருகின்றது. துத்தநாக ஆக்சைடானது நிலைமின் நகலியில்(Xerox) உணர்தாளில் பயன்படுகின்றது. இது வர்ணங்கள், இரப்பர் பொருட்கள், அச்சிட உதவும் மைகள், சோப்புகள், சேம மின்கலங்கள், நெசவுத் துணிகள், மின்னியல் சாதனங்கள் போன்ற பலதரப்பட்ட உற்பத்திப் பொருட்களில் பயன் தருகின்றது. துத்தநாக சல்பைடு ஒரு நிறமியாகக் கொள்ளப்படுகின்றது. இது அணு ஆய்வுக் கருவிகளில் ஒளிர்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. கதிர்வீச்சு இதில் விழும் போது உடனொளிர்வும் ("Fluorescence") நின்றொளிர்வும் ("phosphorescence") ஏற்படுவதால் கதிர்வீச்சின் தன்மையை ஆராய முடிகின்றது. உயிரினகளுக்கு துத்தநாகம் முக்கியச் சத்தாகும். வளரூக்கிகள், நொதிமங்கள் வினையாற்றும் வழிமுறைகளில் முக்கியப் பங்கேற்றுள்ளன. துத்தநாகச் சத்து குறையும் போது வளர்ச்சி குன்றிப் போவதோடு தோலுக்குப் பாதுகாப்பான மயிரின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது. சுவை மற்றும் மணமறி உணர்வான்களையும் சேதப்படுத்தி விடுகின்றது. சராசரி மனிதனின் உடலில் 1.5 லிருந்து 2.5 கிராம் துத்தநாகம் காணப்படுகின்றது. இதில் 20 % தோலில் படிந்திருக்கின்றது. எலும்பும்,பல்லும் குறிப்பிட்ட அளவு துத்தநாகத்தைப் பெற்றிருக்கின்றன. இன்சுலின் மூலக்கூறுகளுக்கு துத்தநாகம் இன்றியமையாத கட்டமைப்புக் கூறாக உள்ளது. வைட்டமின் A இன் வளர்சிதை மாற்றத்தில் துத்தநாகம் தொடர்புடையதாக இருக்கின்றது. உடலில் ஏற்பாடும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதில் துத்தநாகத்திற்குப் பங்குள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். துத்தநாக சல்பேட் குடல் புண்களை ஆற்றுகின்றது இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம் இலகுராஞ்சியின் (லாக்ராஞ்சியின்) நான்கு இருமடியெண் தேற்றம் (Lagrange's Four-square Theorem): எ.கா.: formula_1 இது முதலில் ஃபெர்மா நிறுவலில்லாமல் முன்மொழிந்தார், பின்னர் 1770 இல் இலகுராஞ்சி இதனை நிறுவினார். இத்தேற்றம் எண்கோட்பாட்டில் பல பொதுமையாக்கங்களுக்கு அடிப்படையாகவுள்ளது. எடுவர்டு வாரிங்கு என்பவர் 1772 இல் ஒரு உய்மானத்தை (ஒருயூகத்தை)க் கணித உலகின் முன் வைத்தார்: ஜி.ஹெச்.ஹார்டி, formula_3 என்ற ஒரு எண்ணை உண்டாக்கினார். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக "எல்லா" முழு எண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை formula_3யாகும். இதன்படி வாரிங்கு யூகத்தை formula_5 என்று சொல்லலாம். இவைகளில் formula_6 ஐப்பற்றிய யூகத்தை என்பதாலும், இலகுராஞ்சியின் தேற்றத்தாலும், formula_7 என்றே திட்டவட்டமாகச் சொல்லமுடியும் பிரச்சினை: formula_8 முழு எண்களாகவும்,formula_9 ஒரு நேர்ம முழு எண்ணாகவும் கொண்டால் formula_11 முழு எண்களாக இருக்கும்படி எப்பொழுதும் தீர்வு செய்யமுடியுமா? formula_12 என்ற நிலைதான் இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம். மற்ற எல்லா நிலைகளுக்கும் இராமானுசன் கொடுத்த தீர்வு: எல்லா formula_13-மதிப்புகளுக்கும் தீர்வு கிடைக்க formula_14 என்ற கணத்திற்கு 54 விதங்களில் மதிப்பு கொடுக்கமுடியும். 55வது விதமும் இராமானுசனால் சொல்லப்பட்டது. ஆனால் அது formula_15 என்ற ஒரு formula_13-மதிப்பிற்கு ஒத்து வரவில்லை. ஆர்சனிக் ஆர்சனிக் "(Arsenic)" என்பது As என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அணு எண் 33 மற்றும் அணு எடை 74.92 கொண்ட இத்தனிமம் ஓர் உலோகப் போலியாகும். பல கனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனிக் காணப்படுகிறது. பொதுவாக கந்தகம் மற்றும் தனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனிக் காணப்படுகிறது. தூய நிலையில் படிகங்களாகவும் ஆர்சனிக் கிடைக்கிறது. பல்வேறு புற வேற்றுமை வடிவங்களிலும் ஆர்சனிக் காணப்படுகிறது. ஆனால் சாம்பல்நிற ஆர்சனிக் மட்டுமே தொழிரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. படைத்தளவாடங்களிலும் கார்களில் பயன்படும் மின்கலன்களிலும் ஆர்சனிக் – ஈயம் கலப்புலோகங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஒளிமின்னியல் சேர்மமான காலியம் ஆர்சனைடுதான் சிலிக்கானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொதுவான குறைக்கடத்தி மாசுப்பொருளாகும். ஆர்சனிக்கும் அதன் சேர்மங்களும் குறிப்பாக டிரையாக்சைடுகள் பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இப்பயன்பாடுகள் தற்காலத்தில் குறைந்து வருகின்றன . சில வகை பாக்டீரியாக்கள் ஆர்சனிக் சேர்மங்களை வளர்சிதை மாற்ற சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன. எலிகள், வெள்ளெலிகள், ஆடுகள், கோழிகள் மற்றும் சில இனங்களுக்கு ஆர்சனிக்கு சுவடு அளவுகளில் உணவுக் கூட்டுப்பொருளாக அவசியம் தேவைப்படுகிறது. இருப்பினும் தேவைக்கு அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது ஆர்சனிக்கு ஒரு நஞ்சாக பாதிப்புகளை உண்டாக்குகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நிலத்தடி நீரில் கலக்கும் ஆர்சனிக்கால் பெரும் இடர்பாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், அனைத்து வகையான ஆர்சனிக்குகளும் மனித ஆரோக்கியத்திற்கு ஓர் ஆபத்து என்று கூறுகிறது. நச்சுத்தன்மை மற்றும் நோய் பதிவிற்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் தீங்கிழைக்கும் பொருட்களுக்கான முன்னுரிமை பட்டியலில் ஆர்சனிக்கை தனது தளத்தில் முதலிடத்தில் பட்டியலிட்டுள்ளது. புற்றுநோய உருவாக்கும் பொருட்களின் பட்டியலில் ஆர்சனிக்கு ஏ வகைப் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சாம்பல் நிற உலோக ஆர்சனிக்கு, மஞ்சள் ஆர்சனிக்கு, கருப்பு ஆர்சனிக்கு என்ற மூன்று புறவேற்றுமை வடிவங்களில் ஆர்சனிக்கு காணப்படுகிறது. இவற்றில் சாம்பல்நிற ஆர்சனிக்கு பொதுவாகக் காணப்படுகிறது . தனிமநிலை ஆர்சனிக்கு இரட்டையடுக்கு படிக அமைப்பை (இடக்குழு ஆர்3எம் எண் 166) ஏற்றுக்கொள்கிறது, இவ்வமைப்பில் அடுக்குகள் இணைக்கப்பட்டும் சுருங்கியும் உள்ள ஆறு உறுப்பு வளையங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன. அடுக்குகளுக்கு இடையிலான பலவீனமான பிணைப்பு ஆர்சனிக்கு தனிமத்திற்கு குறைந்த கடினத்தன்மையையும் நொறுங்கும் தன்மையையும் கொடுக்கிறது. இதனுடைய மோவின் கடினத்தன்மை மதிப்பு 3.5 ஆகும். இவற்றுக்கு அடுத்தும் அடுத்தடுத்தும் உள்ள இரட்டை அடுக்குகள் ஒவ்வொன்றிலும் மூன்று அணுக்கள் அடுத்துள்ள மூன்று அணுக்களை விட நெருக்கமாக அமைந்து ஒழுங்கற்ற எண்முக வடிவ அணைவாக உருவாகின்றன. ஒப்பீட்டளவில் நெருங்கிய இப்பொதிவு 5.73 கிராம் / செ.மீ 3 என்ற அதிக அடர்த்தியைக் கொடுக்கிறது. சாம்பல் ஆர்சனிக்கு ஒரு குறை உலோகம் என்றாலும் அதை படிக உருவமற்றதாக்கினால் 1.2–1.4 ஏலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் கொண்ட குறைக்கடத்தியாக மாற்றலாம். சாம்பல் ஆர்சனிக் மிகவும் நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு வடிவமாகும். மஞ்சள் ஆர்சனிக் மென்மையானதும் மெழுகுத்தன்மை கொண்டதுமாகும். டெட்ராபாசுப்பரசை ஒத்த வடிவமைப்பில் இது காணப்படுகிறது. இரண்டிலும் நான்கு அணுக்கள் ஒரு நான்முகி அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணுவும் ஒற்றை பிணைப்பு மூலம் மற்ற மூன்று அணுக்களில் ஒவ்வொன்றுடனும் பிணைக்கப்பட்டுள்ளன. நிலைப்புத்தன்மை அற்ற புறவேற்றுமை வடிவ ஆர்சனிக்கு எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், அடர்த்தி குறைந்தும் அதிக நச்சுத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஆர்சனிக் ஆவியை குளிர்விப்பதன் மூலம் மஞ்சள் ஆர்சனிக்கை தயாரிக்க இயலும். இதனுடைய அடர்த்தி 1.97 கிராம்/செ.மீ3 ஆகும். ஒளியின் மூலம் இதை சாம்பல் ஆர்சனிக்காக மாற்ற இயலும். கருப்பு பாசுபரசின் வடிவத்தையே கருப்பு ஆர்சனிக்கும் பெற்றுள்ளது ஆர்சனிக்கு ஆவியை 100-220° செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்வித்தால் கருப்பு ஆர்சனிக்கு கிடைக்கிறது. இது கண்ணாடியைப் போன்று பளபளப்பாகவும் நொறுங்கக் கூடியதாகவும் உள்ளது. மின்சாரத்தை குறைவாகவே கடத்தும். கிரிப்டான் கிரிப்டான் "(Krypton)" என்பது Kr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமத்தின் அணு எண் 36 ஆகும். மந்த வளிமங்கள் என அழைக்கப்படும் 18 ஆவது தொகுதி தனிமங்களில் இத்தனிமமும் ஓர் உறுப்பினராகக் கருதப்படுகிறது. புவியின் வளிமண்டலத்தில் கிரிப்டான் மிகமிகச் சிறிதளவே உள்ளது. நிறமில்லாத, சுவையில்லாத, மணமில்லாத ஒரு வளிமமாக இது காணப்படுகிறது. பெரும்பாலும் ஒளிர்விளக்குகளில் மற்ற மந்த வாயுக்களுடன் சேர்த்து இதையும் பயன்படுத்துகிறார்கள். விதிவிலக்காக மிகவும் அரிதாக கிரிப்டான் வேதியியல் ரிதியாகவும் ஒரு மந்தவாயுவாகக் கருதப்படுகிறது. 1898 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர். காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின் கொதி நிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி, பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் இச்செயல் முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு. நீர்மக் காற்றிலுள்ள அனைத்து பகுதிக்கூறுகளும் ஆவியானபிறகு எஞ்சும் கசடிலிருந்து இவ்வாயுவை இவர்கள் கண்டறிந்தனர். ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் இவர்களே இதே செயல்முறை மூலம் நியான் வாயுவையும் கண்டறிந்தனர் . நியான், செனான், கிரிப்டான் உள்ளிட்ட பல மந்த வாயுக்களை கண்டுபிடித்தற்காக வேதியியலுக்கான நோபல் பரிசு 1904 ஆம் ஆண்டு வில்லியம் ராம்சேவுக்கு வழங்கப்பட்டது. கிரேக்க மொழியில் நியோசு என்றால் புதியது என்றும் கிரபிடோசு என்றால் மறைந்துள்ளது என்றும், செனான் என்றால் புதியது என்றும் பொருள் ஆகும். 1960 ஆம் ஆண்டில் நடைபெற்ற எடை மற்றும் அளவீடுகள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கிரிப்டான் -86 ஐசோடோப்பு மூலம் உமிழப்பட்ட 1,650,763.73 அலைநீள ஒளியே மீட்டர் என வரைறை வழங்கப்பட்டது . இந்த உடன்படிக்கை பாரிசில் அமைக்கப்பட்ட 1889 சர்வதேச முன்மாதிரி மீட்டரால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது. இம்முன் மாதிரி மீட்டர் பிளாட்டினம் இரிடியம் தண்டினால் ஆனதாகும். 1927 ஆம் ஆண்டு வழக்கத்திலிருந்த சிவப்பு காட்மியம் நிறமாலை வரியின் மீதிருந்த ஆங்சுடிராம் அடிப்படையிலான வரையறையையும் 1 Å = 10−10 மீட்டர் என கிரிப்டான் 86 வரையறை இடப்பெயர்ச்சி செய்தது . கிரிப்டான் -86 வரைய்றை 1983 அக்டோபரில் மாநாடு நடைபெறும் வரையில் வழக்கத்தில் இருந்தது. பின்னர் இது 1/299,792,458 அலை நீளங்களில் ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர் என வரையறை செய்யப்பட்டது. பல்வேறு கூர்மையான உமிழ்வு நிறமாலை வரிகளால் கிரிப்டான் அடையாளப்படுத்தப்படுகிறது. பச்சை மற்றும் மஞ்சள் இவற்றில் வலிமையானதாகும். யுரேனியம் பிளக்கப்படும் போது உருவாகும் விளைபொருள்களில் ஒன்று கிரிப்டானாகும். திண்மநிலை கிரிப்டான் வெண்மை நிறத்தில் முகமைய்ய கனசதுர படிகக் கட்டமைப்பில் காணப்படுகிறது. ஈலியத்தைத் தவிர மற்ற மந்த வாயுக்கள் அனைத்திருக்கும் இப்பண்பு பொருந்து, அறுகோண மூடியபொதிவு படிகக் கட்டமைப்பை ஈலியம் கொண்டுள்ளது. மற்ற மந்த வாயுக்கள் போல கிரிப்டானும் ஒளியூட்டலிலும் புகைப்படத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. கிரிப்டான் விளக்கில் பல நிறமாலை வரிகள் காணப்படுகின்றன. கிரிப்டான் அயனி மற்றும் எக்சைமர் சீரொளி போன்ற பிரகாசமான, உயர் ஆற்றல் வாய்ந்த வாயு சீரொளிகளில் கிரிப்டான் பிளாசுமா பயன்படுத்தப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒற்றை நிறமாலை வரியை பிரதிபலிக்கும் மற்றும் அதிகப்படுத்தும். கிரிப்டான் புளோரைடும் ஒரு பயனுள்ள சீரொளியாகப் பயன்படுகிறது. 1960 ஆம் ஆண்டு முதல் 1983 வரையான காலப்பகுதியில் ஒரு மீட்டர் என்பதன் அதிகாரப்பூர்வ நீளம் கிரிப்டான் -86 ஆரஞ்சு நிறமாலை வரிசையின் 605 நானோ மீட்டர் அலைநீளம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிரிப்டான் இறக்க குழாய்களின் அதிக சக்தி மற்றும் செயல்பாடு இதற்கு காரணமாகும். பூமியின் வளிமண்டலத்தில் இயற்கையாகத் தோன்றும் கிரிப்டன் நிலைப்புத்தன்மை கொண்ட ஐந்து ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றைத் தவிர 9.2×1021 ஆண்டுகள் என்ற நீண்ட அரை ஆயுள் கொண்ட ஒரு ஐசோடோப்பும் (78Kr) நிலைப்புத்தன்மை கொண்டது எனக் கருதும் நிலையில் உள்ளது. இந்த ஐசோடோப்பு நீண்ட அரை ஆயுள் காலம் காணப்பட்ட அனைத்து ஐசோடோப்புகளிலும் இரண்டாவது நீண்ட அரை ஆயுள் கொண்டதாகக் கருதப்படுகிறது. இரட்டை எலக்ட்ரான் பிடிப்புச் செயல்முறையின் மூலம் இது 78Se ஆக மாற்றமடைகிறது. இவை நீங்கலாக 30 நிலைப்புத்தன்மை அற்ற ஐசோடோப்புகளும் மாற்றியங்களும் கிரிப்டானுக்கு உண்டு. 81Kr ஐசோடோப்பு இயற்கையாகத் தோன்றுவதுடன், 80Kr ஐசோடோப்பு அண்டக்கதிர்களை உமிழ்வதாலும் உண்டாகிறது. கதிரியக்க ஐசோடோப்பான இதன் அரை ஆயுள் 230000 ஆண்டுகளாகும். கிரிப்டான் எளிதில் ஆவியாகும். கரைசலில் நீண்ட நேரம் இருக்காமல் ஆவியாகும். ஆனால் 81Kr ஐசோடோப்பு 50000 முதல் 800000 ஆண்டுகள் வரையிலான பழமையான நிலத்தடி நீரின் காலக் கணிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ருபீடியம் ருபீடியம் (ஆங்கிலம்: Rubidium (IPA: ) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 37; இதன் அணுக்கருவில் 48 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Rb. இது ஒரு கார மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது மென்மையான ஒரு மாழை, பார்ப்பதற்கு வெள்ளி போன்ற வெண்மையான தோற்றம் அளிப்பது. தனிம அட்டவணையில் நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்களை ஒத்த பண்புடையது. விரைவில் ஆக்ஸிஜனாக்கம் நிகழும் ஒரு தனிமம். ருபீடியம் கார மாழைகளிலேயே 2 ஆவதாக அதிக எதிர்மின்னி ஈர்ப்புடைய ("நேர்மின்மத்திறன்" கொண்ட) மாழை. உயர்ந்த வெப்பநிலையாகிய 39.3 °C (= 102.7 °F) ல் நீர்மமாக மாறுகின்றது. மற்ற நெடுங்குழு 1 தனிமங்கள் போல நீருடன் பரபரப்பாக இயைந்த் வேதியல் வினைப்படுகின்றது. பிரம்மகுப்தர் முற்றொருமை இயற்கணிதத்தில், பிரம்மகுப்தர்-ஃபிபனாச்சி முற்றொருமை அல்லது ஃபிபனாச்சி முற்றொருமை ("Brahmagupta–Fibonacci identity", "Fibonacci's identity") என்பது இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகைகள் இரண்டின் பெருக்குத்தொகையும் இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக இருக்கும் என்பதுதான். அதாவது இரு வர்க்கங்களின் கூடுதலாக அமையும் முழு எண்களின் கணம் பெருக்கல் செயலைப் பொறுத்து அடைவுப் பண்புடையது. இந்த முற்றொருமை, லெக்ராஞ்சியின் முற்றொருமையின் சிறப்புவகையாக ("n" = 2) உள்ளது. கணிதவியலாளர் டையோபண்டசால் இம் முற்றொருமை கண்டுபிடிக்கப்பட்டது. பிரம்மகுப்தர் அதனை நிரூபித்து அதற்குச் சமானமான, அதைவிடப் பொதுமையான முற்றொருமையைப் பயன்படுத்தினார். இதிலிருந்து, formula_2 வடிவிலமையும் எண்களின் கணம் பெருக்கலைப் பொறுத்து அடைவுப் பண்புடையதாக இருப்பதைக் காணலாம். (1), (2) சமன்பாடுகளை அவற்றின் இருபுறமுள்ள பல்லுறுப்புக்கோவைகளை விரிவுபடுத்தி சுருக்குவதன் மூலம் சரிபார்க்கலாம். மேலும் இரு சமன்பாடுகளிலும் "b" க்குப் பதில்  −"b" ஐப் பதிலிடுவதன் மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பெறலாம். இந்த முற்றொருமை முழு எண்களின் வளையத்திலும், விகிதமுறு எண்கள் வளையத்திலும் உண்மையாகும். மேலும் பொதுவாக எந்தவொரு பரிமாற்று வளையத்திலும் இந்த முற்றொருமை உண்மையாக இருக்கும். கிபி மூன்றாம் நூற்றாண்டு வெளியீடான டயபாண்டசின் அரித்மெட்டிக்காவில் ((III, 19) இந்த முற்றொருமை முதன்முதலாக காணப்பட்டது. பின் இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தரால் (598–668) மீண்டும் கண்டறியப்பட்டது. அவர் இந்த முற்றொருமையை மேலும் பொதுமைப்படுத்தி அதனைத் தன் ஆய்விற்குப் (தற்போது பெல்லின் சமன்பாடு) பயன்படுத்தினார். அவரது ’பிரம்மஸ்புடசித்தாந்தம்’ சமசுகிருதத்திலிருந்து அரபுமொழியில் மொகமது அல்-ஃபசாரியால் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பின்னர் 1126 இல் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது 1225 இல் ஃபிபனாச்சி யின் ’புக் ஆஃப் ஸ்கொயர்ஸ்’ (Book of Squares) இல் இடம் பெற்றது. ஃபிபனாச்சியின் நூலினால் தான் இது மேற்கத்திய கணித உலகத்திற்கு அறிமுகமானதால் ஃபிபனாச்சி முற்றொருமை என்று வழங்கப் பெற்றது. "a", "b", "c", "d" மெய்யெண்கள் எனில்: இருபுறமும் வர்க்கப்படுத்த: தனி மதிப்பின் வரையறைப்படி: விகிதமுறு எண்களின் களத்தை formula_7 என்றும் அத்துடன் formula_8 என்ற உறுப்பை சேர்த்து களத்தை விரிவாக்கினால் ஏற்படும் விரிவாக்கப்பட்ட களத்திற்ற்கு formula_9 என்றும் குறிப்பது வழக்கம். formula_9 இலுள்ள ஒவ்வொரு உறுப்பு formula_11 க்கும் ஒரு நெறிமம் உளது. அதாவது இப்பொழுது பிரம்மகுப்தர் முற்றொருமையை கீழே கண்டபடி உருவகப்படுத்தலாம்: பிரம்மகுப்தர் தான் கண்டறிந்த முற்றொருமையைப் பெல்லின் சமன்பாட்டைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தினார்: இந்த முற்றொருமையைப் பயன்படுத்தி பெல்லின் சமன்பாட்டின் தீர்வாக அமையும் ("x", "y", "k") மும்மைகளை உருவாக்கி அதன் மூலம் formula_18 என்ற புது மும்மையையும் அவர் உருவாக்கினார். இது பெல்லின் சமன்பாட்டிற்கு முடிவிலா எண்ணிக்கையிலான தீர்வுகளைக் காண வழிவகுத்தது. 1150 இல் இரண்டாம் பாஸ்கரரால் கண்டறியப்பட்ட பெல்லின் சமன்பாட்டின் தீர்வு காணும்முறையும் இந்த முற்றொருமையை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. பிரம்மகுப்தர் பிரம்மகுப்தர் "(Brahmagupta )" 598 முதல் 668 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த ஓர் இந்தியக் கணிதவியலாளர் மற்றும் வானியல் வல்லுநர் ஆவார். கணிதவியல் மற்றும் வானியல் பற்றிய இரண்டு பண்டைய படைப்புகளின் ஆசிரியராக அவர் விளங்கினார். பிரம்மசுபுட சித்தாந்தம் (628) என்ற கோட்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரையும் மற்றும் கண்டகாத்யகம் (665) என்ற தத்துவார்த்த நூலும் அவரால் இயற்றப்பட்டு சிறப்பு பெற்ற நூல்களாகும். இராசத்தான் மாநிலத்திலுள்ள பின்மாலில் பிரம்மகுப்தர் பிறந்ததாக அறியப்படுகிறது . பிரம்மகுப்தர் முதலில் பூச்சியத்தைக் கணக்கிடுவதற்கான விதிகளை வழங்கினார். பிரம்மகுப்தரால் இயற்றப்பட்ட நூல்கள் சமசுகிருதத்தில் நீள்சதுர வசனத்தில் இயற்றப்பட்டன. இந்திய கணிதத்தில் இவ்வாறு பயன்படுத்துவது ஒரு பொதுவான பழக்கமாக இருந்தது. எந்த ஓர் ஆதாரமும் வழங்கப்படாததால், பிரம்மகுப்தரின் முடிவுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது அறியப்படவில்லை. 598-ல் தான் பிறந்ததாக பிரம்மகுப்தர் தனது சொந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். வடக்கு குசராத்தில் ஆட்சி செய்த சாபா வம்ச ஆட்சியாளரான வியாக்ரகாமுக்கா காலத்தில் பிரம்மகுப்தர் பின்மாலில் வாழ்ந்தார். யிசுனுகுப்தாவின் மகனான இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார் . பிரம்மகுப்தர் பில்லாமாலாவில் பிறந்தார் என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதினாலும் அதற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லை. எனினும், அவரது வாழ்க்கை ஒரு நல்ல பகுதியாக அங்கு வேலை செய்து வாழ்ந்தார். பிருதுதகா சுவாமின் என்ற பிற்கால வர்ணனையாளர், பில்லாமாலாவிலிருந்து வந்த ஆசிரியர் என்ற பொருளில் பில்லாமாலாச்சாரியா என்று பிரம்மகுப்தரை அழைத்தார் . முல்தான் அல்லது அபு பிராந்தியத்திலிருந்து பிரம்மகுப்தர் வந்தவராக இருக்கலாமென்று சமூகவியலாளரான கி.எசு. கர்யி கருதுகிறார் . புகழ்பெற்ற சீன மதகுருவும் கல்வியாளருமான யுவான்சுவாங் பில்லாமாலாவை பிலோமோலோ என்று குறிப்பிடுகிறார். மேற்கிந்தியாவின் இரண்டாவது பெரிய அரசமரபான கூர்சரதேசத்தின் தலைநகரமாக பில்லாமாலா இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நவீனைந்தியாவிலுள்ள தெற்கு இராசத்தானும் வடக்கு குசராத்தும் சேர்ந்த பகுதியே பண்டைய கூர்சர தேசமாகும். இத்தலைநகரம் கணிதம் மற்றும் வானியலுக்கான ஒரு கற்றல் மையமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான நான்கு வானியல் பள்ளிக்கூடங்களில் ஒன்றாக இருந்த பிரம்மபக்சா பள்ளியில் படித்து பிரம்மகுப்தர் ஒரு வானியல் வல்லுநராக வெளிவந்தார். இந்திய வானியலின் ஐந்து பாரம்பரிய சித்தாந்தங்களையும் பிரம்மகுப்தர் ஆய்வு செய்தார். மேலும், இந்திய வானியல் வல்லுநர்களான ஆர்யபட்டா I, லதாதேவா, பிரடையூம்னா, வராகமிகிரா, சிம்கா, சிரிசேனா, விஜயநந்தன் மற்றும் விசுணுசந்த்ரா போன்ற மற்ற வானியலாளர்களின் படைப்புகளையும் பிரம்மகுப்தர் ஆய்வு செய்தார் . 628 ஆம் ஆண்டில் பிரம்மகுப்தருக்கு 30 வயதாக இருந்தபோது பிரம்மசுபுட சித்தாந்தம் என்ற நூலை உருவாக்கினார். பிரம்மபக்சா பள்ளியில் இவர் பெற்ற சித்தாந்தத்தின் திருத்தப்பட்ட பதிப்பு இந்நூல் என்று நம்பப்படுகிறது. தனது நூலில் பிரம்மகுப்தர் அசல் தன்மையை இணைத்துள்ளதாகவும், கணிசமான அளவு புதிய பொருளைச் சேர்த்துள்ளதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நூலில் ஆர்யா மீட்டரில் 1008 வசனங்கள் கொண்ட 24 அத்தியாயங்கள் உள்ளன. வானியலுக்கான ஒரு சிறந்த நூலாக இது கருதப்படுகிறது. ஆனால் இதில் கணிதத்தின் முக்கிய அத்தியாயங்களான இயற்கணிதம், வடிவியல், முக்கோணவியல், படிமுறைத்தீர்வு போன்ற முக்கியப் பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. பிரம்மகுப்தரின் புதிய கருத்துக்கள் இப்பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது . பின்னர், பிரம்மகுப்தர் உச்சயினிக்குச் சென்றார். இந்நகரமும் வானியலுக்கு ஒரு முக்கிய மையமாக இருந்தது. 67 ஆவது வயதில் இந்திய மாணவர்களின் நடைமுறை கையேடான கண்டகாத்யகம் என்ற தனது அடுத்த புகழ்பெற்ற படைப்பை உருவாக்கினார் . பிரம்மகுப்தர் விஞ்ஞான வானியலாளர்களின் போக்கைக் குறித்து ஒரு பெரும் விமர்சனத்தை முன்வைத்தார். அவருடைய பிரம்மசுபுட சித்தாந்தம் இந்திய கணிதவியலாளர்களுக்கிடையில் மிகத் துல்லியமான சீர்திருத்தங்களைக் காட்டுகிறது. கணிதம் கணிதவியலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வியாபார உலகில் பயன்படுத்தப்படுவது உலகில் முதன்மையாக இருந்தது. பிரம்மகுப்தாவின் கணிதம் இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு உட்படாமல் வானியல் அளவுருக்கள் மற்றும் கோட்பாடுகளை விளக்கியது . போட்டியாளர்களின் கோட்பாடுகளின் முதல் பத்து வானியல் அத்தியாயங்கள் முழுவதும் பிரதிபலிக்கின்றன. பதினோராவது அத்தியாயம் முற்றிலுமாக இந்த கோட்பாடுகளை விமர்சிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பனிரெண்டு மற்றும் பதினெட்டாம் அத்தியாயங்களில் எந்தவொரு விமர்சனமும் செய்யப்படவில்லை . பிரம்மகுப்தர் அவரது இனத்தின் மிகப் பெரிய அறிவியலாளர்களில் ஒருவர் என்றும் அவரது காலத்தின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவர்" என்றும் அறிவியல் வரலாற்றாசியரான சியார்ச்சு சார்டன் குறிப்பிட்டார் . பிரம்மகுப்தரின் கணித முன்னேற்றங்களை உச்சயனியில் தொடர்ந்து கொண்டு சென்ற வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் பாசுகரா, பிரம்மகுப்தரை கணிதவியலாளர்களின் வட்டத்தில் இவர் ஒரு மாணிக்கம் என்ற பொருளில் கன்னிகா-சக்ரா-சுடமணி என்று விவரித்துள்ளார். சதுர்வேத பிரிதுடுகா சுவாமி பிரம்மகுப்தரின் சிறந்த இரு படைப்புகளுக்கும் விளக்க உரை எழுதினார். எளிமையான மொழியில் கடினமான வசனங்களை விளக்கி கூடுதலாக விளக்கப்படங்களைச் சேர்த்தார். 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த லல்லா மற்றும் பட்டோபாலா ஆகியோர் கண்டகாத்யகம் நூலுக்கு விளக்க உரை எழுதினர் . 12 ஆம் நூற்றாண்டில் மேலும் விரிவுரைகள் தொடர்ந்து எழுதப்பட்டன . பிரம்மகுப்தா இறந்த சில பத்தாண்டுகளுக்குப் பின்னர் 712 ம் ஆண்டில் சிந்து மாகாணம் அரபு கலிபாத்து ஆட்சியின் கீழ் வந்தது. கூர்சர தேசத்திற்கு பயணக்குழுக்கள் அனுப்பப்பட்டன. பில்லாமாலா பேரரசு அழிக்கப்பட்டதாக தெரிகிறது, ஆனால் உச்சயினியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. காலிபாவின் அல்-மன்சூர் அரசாங்கத்திற்கு சிந்துவிலிருந்து ஒரு தூதரகம் கிடைக்கப் பெற்றது, இதில் இடம்பெற்றிருந்த கனகா என்ற சோதிடர் பிரம்மகுப்தர் பிரம்மகுதரின் வானவியல் நூல்களின் சாரம்சத்தைக் கொண்டு வந்தார் (ஒருவேளை மனப்பாடம் செய்து கொண்டு வந்ததாகவும் இருக்கலாம்). பிரம்மகுப்தரின் நூல்கள் அல்-மன்சூரின் அரசவையிலிருந்த ஒரு வானியலாளரான முகம்மத் அல்-பாசாரி என்பவரால் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. உடனடியாக நூல்களில் பயன்படுத்தப்பட்டிருந்த தசம எண் முறை பரவலாக்கப்பட்டது. கணிதவியலாளர் அல்-குர்விசுமி என்பவர் இந்தியக் கணிதவியலில் கூட்டல் கழித்தல் என்ற எழுதினார். இது 13 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூல்களின் மூலம் தசம எண் முறை மற்றும் பிரம்மகுப்தரின் வழிமுறைகளும் கணிதத்திற்காக உலகம் முழுவதும் பரவின. அல் பாசாரியின் பதிப்பிலிருந்து உள்வாங்கி அல்-குவாரிமியும் தனது சொந்த பதிப்பை எழுதினார், தாலமிக் கூறுகளை நுலில் இணைத்தார். இந்திய வானியல் கருத்துகள் நூற்றாண்டுகள் கடந்து உலகில் வலம் வந்தன. இடைக்கால இலத்தீன் நூல்களிலும் இக்கருத்துகள் இடம்பெற்றன . கணிதத்தில் இயற்கணிதச் சமன்பாடான ஒருபடிச் சமன்பாடு அல்லது நேரியல் சமன்பாட்டிற்கு உரிய ஒரு தீர்வை பிரம்மகுப்தர் பிரம்மசுபுட சித்தாந்தம் என்ற நூலின் பதினெட்டவது அத்தியாயத்தில் கொடுத்துள்ளார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற நான்கு அடிப்படைக் கணித நடவடிக்கைகள் பிரம்மகுப்தருக்கு முன்பே பல கலாச்சாரங்களில் அறியப்பட்டுள்ளது. இந்த தற்போதைய அமைப்பு இந்து அரபு எண் முறைமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிரம்மகுப்தரின் பிரம்மசுபுடு சித்தாந்தத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நூலில் பெருக்கல் செயல்பாடு கோமுத்திர்க்கா என்ற பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. நூலின் பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில் கணக்கீடுகள், பின்னங்கள் போன்ற விவரங்களை பிரம்மகுப்தர் விளக்கியுள்ளார். அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர் வர்க்கமூலம் கண்டறியும் வழியையும் பிரம்மகுப்தர் விளக்கியுள்ளார். மேலும் கணம் மற்றும் கணமூலம் கண்டறிவதற்கான விதிமுறைகளையும் விவரிக்கின்றார். பின்னங்களை இணைப்பது தொடர்பான ஐந்து வகை விதிகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.; ; ; ; மற்றும் . பிரம்மகுப்தர் பின்னர் முதல் சில முழு எண்களீன் வர்கங்கள் மற்றும் கணங்களின் கூடுதல் தொகையைக் கொடுக்கிறார். பூச்சியம் தொடர்பான கருத்துகளை முறைப்படுத்தியவர்களில் முதலானவர் பிரம்மகுப்தர் என்கிறார்கள். நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களுடன் பூச்சியம் தொடர்பான விதிகளை இவர் கூறியுள்ளார். ஒரு நேர்மறை எண்ணுடன் பூச்சியத்தைக் கூட்டினால் விடை நேர்மறையாகவே இருக்கும் என்றும், ஒரு எதிர்மறை எண்ணுடன் பூச்சியத்தைக் கூட்டினால் விடை எதிர்மறை எண்ணாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். பாபிலோனியர்கள் போல இடநிரப்பியாகவோ, ஒரு எண்ணுக்கு பதிலாக பிரதியிடும் குறியீடாகவோ புச்சியத்தைக் கருதாமல் அதை ஒரு எண்ணாகக் கருதவேண்டும் என்று முதன்முதலாக பிரம்மசுபிடு சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. நூலின் பதினெட்டாம் அத்தியாயத்தில், பிரம்மகுப்தர் எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல் பற்றி விவரிக்கிறார் . பூச்சியத்தின் பெருக்கல் கணக்கீடுகள் பற்றியும் பிரம்மகுப்தரின் நூலில் காணப்படுகிறது . பூச்சியத்தின் வகுத்தல் கணக்கீடுகள் பற்றிய பிரம்மகுப்தரின் வழிமுறைகள் நவீன வகுத்தல் முறைகளில் இருந்து மாறுபடுகின்றன. வடிவவியலில், ஒரு வட்ட நாற்கரத்தின் மூலைவிட்டங்கள் செங்குத்தாக வெட்டினால், அந்த நாற்கரத்தின் பக்கத்தின் செங்குத்துக்கோடு மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி வழியாகச் சென்றால், அக்கோடு அந்த நாற்கரத்தின் எதிர்ப்பக்கத்தை இரு சரிபாதியாக வெட்டும் . பிரம்மகுப்தர் கண்டறிந்த காரணத்தால் இத்தேற்றம் பிரம்மகுப்தர் தேற்றம் எனப்படுகிறது . 1846 1846 (MDCCCXLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. விஜயன் (நடிகர்) விஜயன் (இறப்பு: செப்டம்பர் 21, 2007) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகர். கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலம் 1980களில் தமிழ்ப் பட உலகில் அறிமுகமானார். உதிரிப்பூக்கள் படம் அவருக்கு மிகவும் புகழைத் தேடித் தந்தது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் எனப் பல படங்களில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சிறிதுகாலம் படவுலகில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். செப்டம்பர் 21 2007 இல் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வட பழனியில் மரணம் அடைந்தார். இசிரோ மிசுகி இசிரோ மிசுகி (水木 一郎 "Mizuki Ichirou", பிறப்பு: ஜனவரி 7, 1948 இல் டோக்கியோ) ஜப்பான் பாடகர், இயற்றுநர், நடிகர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற "JAM Project" இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இசுட்ரோன்சியம் இசுட்ரோன்சியம் அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium (IPA: ) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 38; இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Sr. இது ஒரு காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த வெள்ளி போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் செலஸ்டைன் மற்றும் இசுட்ரோன்சியனைட் என்னும் கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது கால்சியத்தைவிட மென்மையான (மெதுமையான) பொருள், நீருடன் வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடும் ஐதரசனும் உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லையாதலால், அறைவெப்பநிலையில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க மண்ணெணெய் (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை வானவேடிக்கை காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர். இற்றியம் இட்ரியம் ("Yttrium", ஐபிஏ: /ɪˈtriəm/) என்னும் தனிமம் Y என்னும் வேதியியல் குறியீடு கொண்ட வெள்ளி போன்ற நிறம் கொண்ட தாண்டல் உலோகம் ஆகும். இதன் அணுவெண் 39. இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் சுவீடன் நாட்டில் உள்ள இட்டெர்பி (Ytterby,) என்னும் ஊரில் உள்ள ஒரு கனிமத்தில் இருந்து, 1794 ஆம் ஆண்டில் யோகான் கடோலின் என்பவர் பெற்றதால் இதற்கு இட்ரியம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இட்ரியம் அரிதாகக் கிடைக்கும் தனிமங்களில் எப்போதும் இலந்தனைடுகளுடன் சேர்ந்தே காணப்படும். இவை இயற்கையில் சுயாதீனமான தனிமமாக எப்போதும் காணப்படுவதில்லை. இதன் Y என்ற நிலையான ஓரிடத்தான் மட்டுமே இதன் இயற்கையாக உருவாகும் ஓரிடத்தான் ஆகும். 1787 ஆம் ஆண்டில் கார்ல் ஏக்செல் அரேனியசு என்பவர் சுவீடனின் இட்டர்பி என்ற இடத்தில் புதிய கனிமம் கண்டுபிடித்து அதற்கு இட்டர்பைட்டு எனப் பெயரிட்டார். யோகான் கடோலின் என்பவர் 1789 இல் அரேனியசின் மாதிரியில் இருந்து இட்ரியத்தின் ஆகசைடைக் கண்டுபிடித்தார். ஆன்டர்சு எக்கெபெர்க் என்பவர் புதிய ஆக்சைடுக்கு இட்ரியா எனப் பெயரிட்டார். 1828 ஆம் ஆண்டில் பிரீட்ரிக் வோகலர் என்பவர் இட்ரியம் தனிமத்த முதன் முதலாகப் பிரித்தெடுத்தார். இட்ரியம் முக்கியமாக பொசுபர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் எதிர்மின் கதிர் குழாய் திரைகளிலும், ஒளி உமிழ் இருமுனையங்களிலும் சிவப்பாக ஒளிரும் ஒரு பொருளாக ஒளிரியம் (பொசுபர்) பயன்படுகின்றது. அத்துடன் மின்வாயிகள், மின்பகுபொருட்கள், சீரொளிகள், மீக்கடத்திகள் தயாரிப்பிலும், மருத்துவம் போன்றவற்றிலும் பயன்படுகிறது. இட்ரியம் உயிரினச் செயல்பாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இட்ரியம் சேர்மங்கள் உடலில் பட நேர்ந்தால் நுரையீரல் நோய்கள் தோன்றுகின்றன. இட்ரியம்-90 என்ற கதிரியக்க ஐசோடோப்பு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்துகள் புற்று நோய்கள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன, இட்ரியம் சிறிய அளவுகளில் (0.1 முதல் 0.2%) குரோமியம், மாலிப்டினம், தைட்டானியம் மற்றும் சிர்க்கோனியம் போன்ற மணிகளின் அளவுகளை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் மற்றும் மெக்னீசியம் உலோகக் கலவைகளின் வலிமையை அதிகரிக்க இட்ரியம் பயன்படுகிறது. உலோகக் கலவைகளுடன் இட்ரியம் சேர்ப்பதால் அவற்றின் உயர் வெப்ப படிகமாதால், உயர் வெப்ப ஆக்சிசனேற்றம் போன்றவை தடுக்கப்படுகின்றன. இட்ரியம், பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்திகளில் இட்ரியம் ஒரு பகுதிப் பொருளாகக் காணப்படுகிறது. இட்ரியம் ஒரு மென்மையான வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்ட ஒரு தனிமமாகும். நெடுங்குழு 3 இல் உள்ள தனிமங்களில் உயர் படிகத்தன்மை கொண்டு பளபளப்புடன் காணப்படுகிறது. ஆவர்த்தனப் போக்குகளின்படி இதன் முன்னோடியான இதே குழுவைச் சேர்ந்த இசுக்காண்டியத்தைக் காட்டிலும் மின்னெதிர் தன்மை குறைவாகவும், 5 ஆவது தொடரில் உள்ள அடுத்த தனிமமான சிர்க்கோனியத்தைக் காட்டிலும் குறைவான மின்னெதிர்தன்மை தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. மேலும் இதே குழுவைச் சேர்ந்த இதன் அடுத்த தனிமமான இலந்தனத்தைக் காட்டிலும் அதிக மின்னெதிர் தன்மை கொண்டும் இருக்கிறது. லாந்தனைடு குறுக்கம் காரணமாக மற்ற லாந்தனைடுகளுடன் மின்னெதிர் தன்மையில் நெருக்கமாக உள்ளது. டி தொகுதியைச் சேர்ந்த முதலாவது 5 ஆவது தொடர் தனிமம் இட்ரியம் ஆகும். Y2O3 என்ற பாதுகாப்பு அடுக்கு உருவாதல் காரணமாக தூய்மையான இட்ரியம் நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இப்பாதுகாப்பு அடுக்கைச் 750 பாகை செல்சியசு வெப்ப நிலைக்குச் சூடாக்கும் போது இப்படலம் 10 µm அளவை அடைகிறது. பொதுவாக இறுதியாகப் பிரித்தெடுக்கப்படும் இட்ரியம் காற்றில் நிலைப்புத் தன்மை அற்றதாகவும், இதன் துருவல்கள் அல்லது சீவல்கள் 400 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தும் போது தீப்பற்றி எரிகிறது. நைட்ரசனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இட்ரியம் நைட்ரைடு தோன்றுகிறது. இட்ரியம் மற்றும் லாந்தனைடுகளுக்கு இடையில் ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுவதால் இதையும் அரு மண் உலோகம் என்ற வகைப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். இயற்கையில் அருமண் கனிமங்களுடன் எப்போதும் கலந்த நிலையில் இட்ரியமும் கிடைக்கிறது. இசுக்காண்டியத்தின் வேதிப் பண்புகளுடன் இதன் பண்புகளும் ஒத்ததாக உள்ளது. இதன் இரசாயன வினைத்திறனில் டெர்பியம் மற்றும் டிசிப்ரோசியத்தை ஒத்த வினை வரிசையில் இட்ரியமும் காணப்படுகிறது. இட்ரியம் குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் உருவ அளவுடன் இது ஒத்துள்ளது. அணு ஆரத்துடன் உள்ள ஒற்றுமை காரணமாக லாந்தனைடு குறுக்கம் தோன்றுகிறது. இட்ரியம் மற்றும் லந்தானைடுகள் ஆகியவற்றின் வேதியியல் பண்புகளுக்கு இடையே காணப்படும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்று இட்ரியத்தின் மூவிணைதிறன் பண்பும் ஒன்றாகும். அதேசமயம் லந்தானைடுகளில் பாதிக்கு மேற்பட்டவை மூன்றை தவிர்த்த வேறுபட்ட இணைதிறன் மதிப்புகளை கொண்டிருக்கின்றன. ஆயினும், பதினைந்து லந்தானைடுகளில் நான்கு மட்டுமே நீர்த்த கரைசலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இட்ரியம் பெரும்பாலும் அருமண் கனிமங்களுடன் சேர்ந்தே காணப்படுகிறது. சில யுரேனியம் தாதுக்களுடன் சேர்ந்தும் இது காணப்படுகிறது. ஆனால் புவியின் பரப்பில் எப்போதும் இட்ரியம் தனித்து உலோகமாக கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட புவியில் மில்லியனுக்கு 31 பங்கு இட்ரியமாக உள்ளது. புவியில் அதிகமாகக் காணப்படும் தனிமங்களின் வரிசையில் இட்ரியம் 28 ஆவது இடத்தைப் பிடிக்கிறது.இது வெள்ளி தனிமத்தைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். மண்ணில் இதன் அடர்த்தியின் அளவு மில்லியனுக்கு 10 முதல் 150 பகுதிகளாகும். கடல் நீரில் இதன் அளவு மில்லியனுக்கு 9 பகுதிகள் ஆகும். அப்போலோ திட்டத்தில் நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் அதிக அளவு இட் ரியம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. நையோபியம் நையோபியம் "( Niobium)" என்பது Nb என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். முன்னதாக இத்தனிமம் கொலம்பியம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அப்போது அதன் குறியீடு Cb ஆகும். இதனுடைய அணு எண் 41 ஆகும். இதன் அணுக்கருவில் 52 நியூட்ரான்கள் உள்ளன. இடைநிலைத் தனிமமான இது மென்மையானது. சாம்பல் நிறத்தில் படிகத்தன்மை கொண்டதாக உள்ளது. பெரும்பாலும் பைரோகுளோர், கொலம்பைட்டு என்ற கனிமங்களுடன் சேர்ந்து நையோபியம் காணப்படுகிறது. கொலம்பைட்டில் இருந்து தயாரிக்கப்பட்டதால் முன்னதாக இது கொலம்பியம் என்ற பெயரைப் பெற்றது. கிரேக்க தொன்மவியலில் டாண்ட்டலம் என்ற பெயருக்கு காரணமான டாண்டலசின் மகள் நையோப் நினைவாக இத்தனிமம் நையோபியம் எனப்பட்டது. பெயர்களின் ஒற்றுமையைப் போலவே இவ்விரண்டு தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளும் ஒரேமாதியாகக் காணப்படுகின்றன. இதனால் இவற்றை வேறுபடுத்தி அறிவதும் கடினமாகவே இருக்கிறது . ஆங்கில வேதியியலாளர் சார்லசு அட்செட் 1801 ஆம் ஆண்டில் டாண்ட்டலம் தனிமத்தைப் போல ஒரு புதிய தனிமத்தைக் கண்டறிந்து வெளியிட்டார் , அதற்கு கொலம்பியம் என்று பெயரிட்டார். 1809 ஆம் ஆண்டில் மற்றொரு ஆங்கில வேதியியலாளரான வில்லியம் அய்டு ஒல்லாசுடன் தவறுதலாக கொலம்பியமும் நையோபியமும் ஒன்றே என முடிவெடுத்தார். டாண்ட்டலத்தின் தாதுக்களில் இரண்டாவது தனிமம் ஒன்று உள்ளது என 1846 ஆம் ஆண்டில் செருமன் வேதியியலாளர் எயின்ரிச் ரோசு என்பவர் தீர்மானித்தார். அதற்கு அவர் நையோபியம் என்று பெயரிட்டார். 1864 மற்றும் 1865 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளின் விளைவாக நையோபியமும் கொலம்பியமும் ஒரே தனிமங்கள் என்பதும் அவை டாண்ட்டலத்திலிருந்து வேறுபட்டவை என்றும் தெளிவுபடுத்தப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கு மேல் இவ்விரண்டு பெயர்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1949 ஆம் ஆண்டில் அலுவல்முறையாக நையோபியம் என்ற பெயர் அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் அமெரிக்காவின் உலோகவியல் துறையில் இன்றும் கொலம்பியம் என்ற பெயர் பயன்பாட்டில் உள்ளது என அறியப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நையோபியம் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டது. நையோபியம் உற்பத்தியில் பிரேசில் முன்னணி நாடாகத் திகழ்கிறது. அதேபோல நையோபியத்தின் கலப்புலோகமான 60–70% நையோபியம், இரும்பு கலந்த பெர்ரோநையோபியம் உற்பத்தியிலும் இந்நாடே முன்னணியில் உள்ளது. நையோபியம் பெரும்பாலும் உலோகக் கலவைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் அதிகமாக வாயு செலுத்துக் குழாய்கள் செய்ய உதவும் சிறப்பு எஃகு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கலப்புலோகங்களில் சேர்க்கப்படும் சிறிய அளவு 0.1%, நையோபியமே எஃகின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது. நையோபியம் கலந்துள்ள கலப்புலோகங்களின் வெப்பநிலைப்புத் தன்மையும் இராக்கெட் இயந்திரங்களின் பொறிகளில் முக்கியத்துவம் பெறுகிறது. நையோபியம் பல்வேறு மீக்கடத்தும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இம்மீக்கடத்தும் உலோக கலவைகள் தைட்டானியம். வெள்ளீயம் போன்ற உலோகங்கலையும் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் காந்த அதிர்வு அலை வரைவுகளில் மீக்கடத்தும் காந்தங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர பற்றவைத்தல், அணுக்கரு தொழில், மின்னணுவியல், ஒளியியல், நாணயவியல் மற்றும் அணிகலன் என பல்வேறு துறைப் பயன்பாடுகளையும் நையோபியம் கொண்டுள்ளது. இதனுடைய குறைந்த நச்சுத்தன்மை அணிகலன் மற்றும் நாணயவியலுக்கு மிகவும் ஏற்கத்தக்க பண்புகள் ஆகும். தனிம வரிசை அட்டவணையின் 5 ஆவது குழுமத்தில் நையோபியம் இடம்பெற்றுள்ளது. இது மென்மையானதாய் சாம்பல் நிறத்தில் படிகத்தன்மை கொண்டதாக உள்ளது. மிகத்தூய்மையான நிலையில் நையோபியம் மென்மையானதனிமமாக உள்ளது. ஆனால் மாசுக்கள் சேர்ந்தால் இது கடினத்தன்மையைப் பெறுகிறது. பாரா காந்தத்தன்மை கொண்டதாகவும் கம்பியாக நீட்ட இயலும் தனிமமாகவும் உள்ளது. எலக்ட்ரான் ஒழுங்கமைவில் வெளிக்கூட்டில் 5 ஆவது குழுவிற்கு உகந்த 5 எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது. அறை வெப்பநிலையில் காற்றில் வெளிப்படும் போது நையோபியம் உலோகமானது நீல நிறத்தை எடுத்துக்கொள்கிறது . தனிமநிலை நையோபியம் அதிக உருகு நிலையைக் கொண்டிருந்தாலும் இது மற்ற தனிமங்களைக் காட்டிலும் குறைந்த அடர்த்தியையே பெற்றுள்ளது. அரிப்புத் தடுப்பியாகவும் மீக்கடத்தும் பண்பையும் இது பெற்றுள்ளது. டாண்ட்டலத்தின் வேதிப்பண்புகளைப் போன்றே நையோபியத்தின் வேதிப்பண்புகளும் உள்ளன. அறை வெப்பநிலையில் காற்றில் வெளிப்படும் போது நையோபியம் உலோகமானது நீல நிறத்தை எடுத்துக்கொள்கிறது . தனிமநிலை நையோபியம் அதிக உருகு நிலையைக் கொண்டிருந்தாலும் இது மற்ற தனிமங்களைக் காட்டிலும் குறைந்த அடர்த்தியையே பெற்றுள்ளது. அரிப்புத் தடுப்பியாகவும் மீக்கடத்தும் பண்பையும் இது பெற்றுள்ளது. டாண்ட்டலத்தின் வேதிப்பண்புகளைப் போன்றே நையோபியத்தின் வேதிப்பண்புகளும் உள்ளன. மாலிப்டினம் மாலிப்டினம் "( Molybdenum)" என்பது Mo என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் அணு எண் 42 ஆகும். மாலிப்டினத்தின் அணுக்கருவில் 54 நியூட்ரான்கள் உள்ளன. பண்டைய கிரேக்க மொழியில் ஈயம் போன்றது என்ற பொருள் கொண்ட மாலிப்டாசு என்ற சொல்லிலிருந்து மாலிப்டினம் என்ற பெயர் தோன்றியது. மாலிப்டினத்தின் தாதுக்களும் ஈயத்தின் தாதுக்களும் ஒரே மாதிரியாக இருந்து குழப்பத்தை உண்டாக்கும் தன்மையுடயவையாகும். மாலிப்டினத்தின் தாதுக்கள் நீண்ட நெடுங்காலமாக அறியப்பட்டாலும் மாலிப்டினம் 1778 ஆம் ஆண்டு கார்ல் வில்லெம் சீலே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1781 ஆம் ஆண்டு முதன்முதலாக பீட்டர் யாக்கோபு எயெல்ம் என்பவரால் தனிமமாகத் தனித்துப் பிரித்து எடுக்கப்பட்டது. மாலிப்டினம் தனித்த நிலையில் ஒருபோதும் இயற்கையில் கிடைப்பதில்லை. பல்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில் கனிமங்களில் இது காணப்படுகிறது. தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகும். பொதுவாகத் தூள் நிலையில் இது கிடைக்கிறது. எளிதில் இதை தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். எஃகை விட மிருதுவானதாக காணப்படுகிறது. தூய நிலையில் உள்ளபோது இதை பளபளப்பாக மாற்றமுடியும். வலிமையான இவ்வுலோகம் பாரா காந்தத்தன்மை கொண்டதாக உள்ளது. அனைத்து தனிமங்களிலும் இது ஆறாவது உயர்ந்த உருகுநிலையைக் கொண்ட தனிமமாக உள்ளது. மாலிப்டினம் உடனடியாக கடினமான மற்றும் நிலைப்புத் தன்மை கொண்ட கார்பைடுகளாக மாறி கலப்புலோகங்களை உருவாக்குகிறது, இந்த காரணத்திற்காக உலகின் உற்பத்தியாகும் பெரும்பாலான மாலிப்டினத்தின் சுமார் 80% எஃகு உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இக்கலப்புலோகங்களில் அதிக வலிமை கொண்ட உலோகக்கலவைகளும் மீவுயர் கலப்புலோகங்களும் அடங்கும். பெரும்பாலான மாலிப்டினம் சேர்மங்கள் தண்ணீரில் குறைந்த அளவே கரையக்கூடியனவாக உள்ளன. ஆனால் மாலிப்டினத்தை தாங்கியிருக்கும் தாதுக்கள் ஆக்சிசன் மற்றும் தண்ணீரைத் தொடர்பு கொள்ளும்போது உருவாகும் மாலிப்டேட்டு அயனி MoO2-4 மிகவும் நன்றாக கரையக்கூடியதாக உள்ளது. தொழிற்துறையில், உலக மாலிப்டினம் உற்பத்தியில் சுமார் 14% மாலிப்டினம் சேர்மங்கள் உயர் அழுத்த மற்றும் உயர் வெப்பநிலை பயன்பாடுகளில் நிறமிகள் மற்றும் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உயிரியலில் நைட்ரசன் நிலைநிறுத்தும் செயல்பாட்டில் வளிமண்டல மூலக்கூற்று நைட்ரசனில் இருக்கும் வேதிப் பிணைப்பை உடைப்பதற்கான மிகப்பொதுவான பாக்டீரியா வினையூக்கிகளுக்கு மாலிப்டினம் தாங்கும் நொதிகள் காரணமாக உள்ளன. குறைந்தபட்சம் 50 மாலிப்டினம் நொதிகள் இப்போது பாக்டீரியா, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் அறியப்படுகின்றன, இருப்பினும் பாக்டீரியா மற்றும் சயனோபாக்டீரியல் நொதிகள் நைட்ரசன் நிலை நிறுத்தலில் ஈடுபடுகின்றன. இந்த நைட்ரசனேசு நொதிகளைப் தன் வடிவத்தில் பெற்றிருக்கும் மாலிப்டினம் மற்ற மாலிப்டினம் நொதிகளிலிருந்து மாறுபட்டவையாக இருக்கின்றன. இவை அனைத்தும் மாலிப்டினம் இணைகாரணிகளில் முழுமையாக ஆக்சிசனேற்றப்பட்ட மாலிப்டினத்தைக் கொண்டிருக்கின்றன. மாலிப்டினம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை. பூமியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் பட்டியலில் 54 வது இடத்தைப் பிடிக்கிறது. அதே போல கடல்களில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் 25 வது இடத்தையும் மாலிடினம் பிடிக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாக சராசரியாக பில்லியனுக்கு 10 பகுதிகள் என்ற அளவில் பூமியில் மாலிப்டினம் கிடைக்கிறது. பிரபஞ்சத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் என்ற வரிசையில் வகைப்படுத்தினால் மாலிப்டினத்திற்கு 42 ஆவது இடமாகும். உருசியாவின் லூனா 24 விண்கலத் திட்டத்தில் நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட பைராக்சின் துண்டில் மாலிப்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புவியில் மாலிப்டினம் மாலிப்டினைடு (MoS2), உல்பினைட்டு (PbMoO4)ம் பாவெலைட்டு (CaMoO4), மாலிப்டைட்டு (Fe2O3.MoO3.2H2O) என்ற தாதுக்கள் வடிவில் கிடைக்கிறது. பொதுவாக மாலிப்டினைட்டு என்ற தாதுவிலிருந்து மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் உலக மாலிப்டினம் உற்பத்தி 250000 டன்கள் ஆகும். சீனா (94000 டன்), அமெரிக்கா (64000டன்), சிலி (38000 டன்), பெரு (18000 டன்) மெக்சிகோ (12000 டன்) ஆகியவை மாலிப்டினத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 10 மில்லியன் டன் மாலிப்டினம் உலகில் இருப்பு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்விருப்பு சீனா (4.3 மில்லியன் டன்) அமெரிக்கா (2.7 மில்லியன் டன்), சிலி (1.2 மில்லியன் டன்) போன்ற நாடுகளில் காணப்படுகிறது. 93% மாலிப்டினம் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி மாலிப்டினத்தை ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்கள் தயாரிக்கின்றன. மாலிப்டினத் தாது நுண்ணிய தூளாக அரைக்கப்பட்டு நுரை மிதப்பு மிறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அடர்ப்பிக்கப்பட்ட தாது காற்றில் 700° செல்சியசு வெப்பநிலையில் நன்கு வறுக்கப்படுகிறது. மாலிப்டினம்(VI) ஆக்சைடும் வாயுநிலையில் உள்ள கந்தக டை ஆக்சைடும் உருவாகின்றன. மாசுடன் கூடிய மாலிப்டினம்(VI) ஆக்சைடு அமோனியாவில் கலக்கப்பட்டு அமோனியம் மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது. படிகமாக்கல் முறையில் அமோனியம் மாலிப்டேட்டு தூய்மை செய்யப்படுகிறது. இப்படிகங்களை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி தூய்மையான மாலிப்டினம்(VI) ஆக்சைடு தயார் செய்யப்படுகிறது. மாலிப்டினைட்டு தாதுவுடன் கலந்துள்ள தாமிரம் அமோனியாவில் சிறிதளவே கரையும். முற்றிலுமாக அதை நீக்க தாதுவானது ஐதரசன் சல்பைடுடன் சேர்க்கப்பட்டு வீழ்படிவாக்கப்பட வேண்டும். அமோனியம் மாலிப்டேட்டு அமோனியம் டைமாலிப்டேட்டாக மாறுகிறது. இதைத் தனித்துப் பிரித்து வெப்பப்படுத்தினால் தூய்மையான மாலிப்டினம் டிரை ஆக்சைடு கிடைக்கிறது. இந்த மாலிப்டினம் டிரை ஆக்சைடு 1100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. மாலிப்டினம் டிரை ஆக்சைடு பதங்கமாதலுக்கு உள்ளாகி மேலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. இதை ஒடுக்குதலுக்கு உட்படுத்தி தூமையான மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. ஒடுக்கும் முகவர்களாக ஐதரசன், கார்பன்ம் அலுமினியம், கால்சியம், துத்தநாகம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. MoO + 3 C → Mo + 3 CO மேற்கூறப்பட்ட முறைகளில் தயாரிக்கப்படும் மாலிப்டினம் தூளாகக் கிடைக்கும். இதை ஐதரசன் வாயுச் சூழலில் அழுத்தத்திற்கு உட்படுத்தி சூடாக்கினால் திண்ம மாலிப்டினம் கிடைக்கும். எஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான மாலிப்டினத்தை, இதனுடன் இரும்பைச் சேர்த்து அலுமினோவெப்பச் சிதைவு வினையின் மூலம் பெர்ரோமாலிப்டினமாகத் தயாரிக்கிறார்கள். பெர்ரோ மாலிப்டினத்தில் 60% மாலிப்டினம் கலந்துள்ளது. தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகக் காணப்படுகிறது. மாலிப்டினத்தின் மோவின் கடினத்தன்மை எண் 5.5 ஆகும். இதனுடைய உருகுநிலை 2623° செல்சியசு ஆகும். இயற்லையாகத் தோன்றும் தனிமங்களில் தங்குதன், ஒசுமியம், இரேனியம், டாண்ட்டலம் மற்றும் கார்பன் போன்ற தனிமங்கள் மட்டுமே உயர்ந்த உருகுநிலை கொண்டவையாகும். மாலிப்டினத்தின் பலவீனமான ஆக்சிசனேற்றம் 300 ° செல்சியசு வெப்பநிலையில் தொடங்குகிறது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் உலோகங்கள் மத்தியில் வெப்ப விரிவாக்க குணகங்களில் குறைவான குணகம் கொண்டவற்றில் இதுவும் ஒன்றாகும் . மாலிப்டினம் கம்பிகளின் விட்டம் ~ 50-100 நானோமீட்டர் முதல் 10 நானோமீட்டர் வரை குறையும் போது அவற்றின் இழுவிசை வலிமை 10 முதல் 30 கிகாபாசுக்கல் வரை சுமார் 3 மடங்கு அதிகரிக்கிறது , வாரிங் தேற்றம் இப்படி எல்லா முழு எண்களையும் முப்படியங்களின் கூட்டுத்தொகையாகச் சொல்லமுடியுமா? முடியும் என்றும் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒன்பது முப்படியங்களுக்குமேல் வேண்டியிருக்காது என்றும் வாரிங் என்பவர் யூகித்தார். கணிதத்தில் எண்கோட்பாட்டுப்பிரிவில் வாரிங் தேற்றம் என்பது முதலில் "வாரிங் யூகங்களாக" அறிமுகமானது. இருபதாம் நூற்றாண்டில் இது எண் கோட்பாட்டில் பல பயனுள்ள ஆய்வுகளை ஊக்குவித்தது. லாக்ராஞ்சியின் நான்கு-வர்க்கத்தேற்றத்தினால் உந்தப்பட்டு வாரிங் இந்த யூகத்தை கணித உலகின் முன் வைத்தார்: எ.கா. formula_4 வாரிங் யூகத்தைப்பின்பற்றி ஹில்பர்ட் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விடையும் அளித்தார். ஒவ்வொரு முழு எண் formula_7 க்கும் அதனுடன் உறவுபடுத்தக்கூடிய ஒரு எண் formula_8 வாரிங் யூகத்தில் சொல்லிய பண்புடன் , அதாவது, என்ற பண்புடன், இருக்குமா? இருக்கும் என்று அவர் நிறுவிக் காட்டினார். (இது வெகு கடினமான நிறுவல்). இத்தேற்றத்திற்கு ஹில்ப்ர்ட்-வாரிங் தேற்றம் என்று பெயர். இதன் தொடர்ச்சியாக ஹில்பர்ட் formula_11 என்ற ஒரு எண்ணை உண்டாக்கினார். அவருடைய தேற்றத்தின்படி 'இருக்கும்' என்று நிறுவப்பட்ட எல்லா formula_12 இலும் மீச்சிறு எண்ணுக்கு formula_11 என்று பெயர் கொடுத்தார். இதன்படி லாக்ராஞ்சியின் நான்கு வர்க்கத்தேற்றத்தை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்: மேலும், 7 = 4 + 1 + 1 + 1 என்ற எடுத்துக்காட்டைப் பார்த்தால், மீச்சிறு எண் என்ற பண்பையுடைய formula_15) நான்குக்கும் குறைந்து இருக்கமுடியாது என்று தெரிகிறது. அதனால், formula_16. formula_17 என்பது வாரிங் யூகம். ஆனால் 23 க்கு 9 முப்படியங்கள் தேவைப்படுவதால், எல்லா எண்களுக்கும் பொதுவான மீச்சிறு எண்ணான g(3) ஒன்பதுக்குக் குறைந்து இருக்கமுடியாது. அது ஒன்பது தானா என்பதுதான் யூகம். அது ஒன்பதுதான் என்று 1910 இல் நிறுவப்பட்டது. ஆக g(3) = 9. ஹில்பர்ட் தேற்றத்தை ஒட்டி g(k) இனுடைய மதிப்புகளை திட்டவட்டமாகக் கண்டுபிடிப்பும் ஆய்வு சூடுபட்டது. formula_18 என்ற எல்லா k க்கும் பிள்ளையும் டிக்ஸனும் தனித்தனியாக ஏறக்குறைய ஒரே சமயத்தில் g(k) ஐக்கணித்தார்கள். g(6) = 73 என்று 1940 இல் பிள்ளையும், g(5) = 37 என்று 1964 இல் சென் ஜிங் ரன் னும் கண்டுபிடித்தனர். g(4) மாத்திரம் கணிதவியலாளர்களுக்குப் பல ஆண்டுகள் பிடிபடாமலே இருந்து கடைசியில் 1986 இல் டெஷோல்லர்ஸ், டிரஸ், பாலசுப்ரமணியன் மூவரும் சேர்ந்து கூட்டாக அதைத் தீர்மானித்தனர். formula_19 ஐ விடப்பெரிய எல்லா முழு எண்களும் 19 4-அடுக்குகளின் கூட்டுத்தொகை என்று முதலில் நிறுவிக் காட்டினர். பிறகு கணினியின் உதவியால் formula_19 க்குக்கீழுள்ள எல்லா எண்களும் 19 4-அடுக்குகளின் கூட்டுத்தொகைதான் என்று உறுதிப்படுத்திக்கொண்டனர். ஆக, g(4) = 19 என்பது உறுதியானது. வாரிங் யூகங்கள் எல்லாம் உண்மை என்று முடிவாயின. formula_11 ஐ விட இன்னும் ஒரு சுவையான எண் உண்டாக்கப்பட்டது. ஒவ்வொரு எண்ணும் முப்படியங்களின் கூட்டுத்தொகை என்ற பிரச்சினையை மறுபடியும் பார். ஒவ்வொரு எண்ணும் 9 அல்லது அதற்குக் குறைவான முப்படியங்களின் கூட்டுத்தொகை எனக் கண்டோம். ஆனால் ஆழ்ந்து பார்த்தால், 23, 239 (= formula_22) என்ற இரண்டே இரண்டு எண்களைத் தவிர மீதமுள்ள எல்லா எண்களுக்கும் எட்டு முப்படியங்களே போதுமானது என்று கண்டு கொள்ளலாம். இன்னும் ஆழ்ந்து சோதித்தால், இன்னும் ஒரு 15 எண்கள் -- 15, 22, 50, 114, 167, 175, 186, 212, 213, 238, 303, 364, 420, 428, மற்றும் 454 -- தான் எட்டு முப்படியங்களின் கூட்டுத்தொகை யாக உள்ளன. இதர எண்களுக்கெல்லாம், அதாவது 455 இலிருந்து "எல்லா" எண்களுக்கும் ஏழு முப்படியங்களே போதுமானதாக உள்ளன என்று தெரியவருகிறது. இன்னும் 7 முப்படியங்கள் தேவைப்படும் எண்களைப் பட்டியலிட்டால் அவைகளில் மீப்பெரும் எண் 8042 என்று தெரிய வருகிறது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இந்த முப்படியங்களின் கூட்டுத்தொகை என்ற வாரிங் பிர்ச்சினையில் 9 என்ற எண் அவ்வளவு முக்கியமல்ல. பல்லாயிரக்கணக்கான் எண்கள் இருக்கும் போது, இரண்டே இரண்டு எண்களுக்குத்தான் 9 முப்படியங்கள் தேவைப்படுகின்றன, இன்னும் ஒரு பதினைந்தே எண்களுக்குத்தான் எட்டு முப்படியங்கள் தேவைப்படுகின்றன ... என்றெல்லாம் அறியும்போது, இந்த குறிப்பிட்ட எண்களின் சில தற்செயலான பண்புகளைப் பொருத்ததுதான் இந்த 9, 8 முதலியவை. முடிவுறு எண்ணிக்கையிலுள்ள இந்த சில விதிவிலக்குகளை ஒதுக்கிவிட்டுப் பிரச்சினையை அணுகுவதுதான் தலையாய பிரச்சினை என்று கணிதவியலர்கள் தீர்மானித்தார்கள். இதனால் G(k) என்ற ஒரு எண்ணை உண்டாக்கினார்கள்.அதாவது மேலே விவரிக்கப்பட்ட முப்படியங்கள் பிரச்சினையில், எல்லா 'பெரிய' எண்களுக்கும் (8042 க்கு மேலுள்ள எல்லா எண்களுக்கும்) 7 முப்படியங்கள் போதுமானது என்று தெரிய வருவதால், இப்பெரிய எண்களைப் பற்றினவரையில் வாரிங் பிரச்சினைக்குகந்த எண் 7க்கு மிகையாகாது என்று சொல்லலாம். இவ்வெண்ணை G(3) என்று குறிப்பிட்டார்கள். ஆக, G(k) இன் வரையறை பின்வருமாறு: அப்படியும் G(2) = 4, G(4) = 16 என்ற இரண்டு எண்கள் தான் திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. formula_26 என்பதுதான் G(3)ஐப் பற்றித் தெரிந்த விஷயம். எட்வர்ட் வாரிங் எட்வர்ட் வாரிங் (1736 - 1798) ஒரு இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலர். தன் 23 வது வயதில் கேம்பிரிட்ஜில் லுகேசியன் பேராசிரியரானார். 1762 இல் அவருடைய Miscellania Analytica பிரசுரமாகியது. இதனில், சமன்பாட்டுக் கோட்பாடு, எண் கோட்பாடு, வடிவவியல் முதலியவைகளைப் பற்றிய கட்டுரைகளும் விபரங்களும் இருந்தன. இந்நூல் பலமுறை திருத்தி எழுதப்பட்டு இன்னும் பலவும் சேர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய நடை எல்லோருக்கும் எளிதில் புரிகிறபடி இல்லாததால் அவருடைய நூல்களை மற்றவர்கள் படித்தார்களா என்று அவரே ஐயப்பட்டதுண்டு. 1763 இல் ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோ ஆனார். 1784 இல் அதனுடைய சிறப்புப்பரிசான கோப்லி மெடலைப் பெற்றார். 1795 இல் ஏழ்மை என்ற காரணம் காட்டி ராயல் சொஸைட்டியிலிருந்து ராஜினாமா செய்தார். 1767 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். எண் கோட்பாட்டில் அவருடைய பெயருடன் புகழடைந்த தேற்றம் முதலில் அவருடைய நூலில் ஒரு யூகமாக அறிவிக்கப் பட்டது. இருபதாவது நூற்றாண்டில் இது எண் கோட்பாட்டில் பல பயனுள்ள ஆய்வுகளை ஊக்குவித்தது. குமுதம் குமுதம் என்பது ஆம்பல் மலரினைக் குறிக்கும் சொல்லாகும். தமிழ் அகரமுதலியில் இதற்கான பொருளாக வெள்ளாம்பல், செவ்வாம்பல், அட்டதிக்கு ஆனைகளில் தென்மேற்கு திசை யானை, படையின் ஒருதொகை, மிகுதி, கட்டிடத்தின் எழுதக வகை, கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய், அடுப்பு, பேரொலி, தருப்பை மற்றும் கருப்பூரம் என கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் இதே பெயருடைய கீழ்வரும் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன: தேசிக விநாயகம் பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார். நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார். தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய "மலரும் மாலையும்" தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று. எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.. 24 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.. 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது. பிஷ்ணுப்ரியா மணிப்புரீ மொழி பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். உள்ளூரில் இதனை "இமார்தர்" என அழைக்கின்றனர். இம் மொழி இந்தியாவில் மணிப்பூரிலும், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இவை தவிர வங்காளதேசம், மியன்மார் ஆகிய நாடுகளிலும் இம் மொழி பேசுவோர் குறைந்த அளவில் வாழ்கின்றனர். இது, வங்காள மொழி. அஸ்ஸாமிய மொழி, ஒரியா போன்ற பல இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்தும் பெருமளவுக்கு வேறுபடுகின்றது. இம்மொழி மணிப்பூரிலேயே தோற்றம் பெற்று வளர்ந்தது. தொடக்க காலங்களில் இம்மொழி லொக்டாக் ஏரியை அண்டிய பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்ததாகத் தெரிகிறது. இம் மொழி பற்றிய குறிப்புக்கள் 18 ஆம் நூற்றாண்டையும், அதற்குப் பிற்பட்ட காலத்து மூலங்களிலேயே கிடைக்கின்றன. தற்போது இம்மொழி புழங்கும் முக்கியமான பகுதிகள், கங்காபொக், ஹீரொக், மயாங் யம்பால், பிஷ்ணுபூர், குனான், நிங்தான்கோங், ஙய்கோங், தம்னாபொக்ஸ்பி என்பனவாகும். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது ("Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology") ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு "அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சில்" (CSIR) இனால் வழங்கப்படும் விருதாகும். இந்திய ரூபாயில் இரண்டு லட்சம் பணமுடிப்பு பரிசாக இந்திய பிரதமரால் வழங்கப்படுகிறது.இந்த விருது 45 வயதிற்குட்பட்டோருக்கு வழங்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான கணிதத்திற்கான இவ்விருது கான்பூர் ஐ.ஐ.டியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற, ’ரப்பர் ஷீட் ஜியோமெட்ரி’ எனும் கணிதப்பிரிவில் ஆய்வு செய்த பேலூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த பல்கலைக் கழகத்தின் கணிதத்துறை தலைவர் மஹான் மகராஜின் கணித ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. இந்திய புள்ளியியல் மையத்தைச் சேர்ந்த பலாஷ் சர்க்கார் என்ற விஞ்ஞானியுடன் இந்த விருது பகிர்ந்துகொள்ளப்பட்டது. http://ssbprize.gov.in/ சி. எஸ். சேஷாத்ரி சி. எஸ். சேஷாத்ரி ஒரு சிறந்த இந்திய கணிதவியலாளர் ஆவார். அல்ஜீப்ரா ஜியோமிதி ஆய்வில் ஈடுபட்டு வருபவர் ஆவார். சென்னை கணிதவியல் கழகத்தின் இயக்குனர். இவ்வாய்வகம் தொடங்கப்படுவதற்கு அவரே காரணமாகவும் இருந்தவர். இயற்கணித வடிவவியலில் பல ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருக்கிறார். அவர் பெயரில் கணிதத்தில் சேஷாத்ரி மாறிலி என்ற ஒரு நிலைப்பி உள்ளது. காஞ்சிபுறத்தில் பிறந்தவரான இவர் படித்தது செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி, சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டமும், மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆய்வகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். காலியம் காலியம் (ஆங்கிலம்: Gallium (அ.ப.அ: ) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ga. இதன் அணுவெண் 31 மற்றும் இதன் அணுக்கருவில் 39 நொதுமிகளும் உள்ளன. பார்ப்பதற்கு இது வெண்சாம்பல் அல்லது வெள்ளிய வெண்மை நிறத்தில் உள்ள மாழையிலி வகையைச் சேர்ந்த தனிமம். இது அறைவெப்பநிலையில் திண்மமாக உள்ளது, ஆனால் எளிதில் உடையும் பண்பு (முரியல் பண்பு அல்லது நொறுநொறுப்புத் தன்மை) உடையது. இது அளவில் மிகவும் குறைவாகவே உலகில் கிடக்கும் ஒரு தனிமம். காலியமானது ஆர்சனிக் என்னும் மற்றுமொரு தனிமத்துடன் சேர்ந்து காலியம்-ஆர்சினைடு என்னும் சேர்மம் உண்டாகின்றது. இது சிலிக்கானுக்கு அடுத்த முக்கியமான குறைக்கடத்தியாகும். காலியம்-ஆர்சினைடுதனில் எதிர்மின்னிகள் சிலிக்கானில் உள்ள எதிர்மின்னிகளைக்காட்டில் அதிக நகர்மியம் கொண்டது, ஆகையால் விரைவாக இயங்கும் நுண்மின் கருவிகள் செய்யலாம். காலியம்-ஆர்சினைடுதனைப் பயன்படுத்தி ஒளிவிடும் இருமுனையக் கருவிகள் (LED) செய்யலாம் (சிலிக்கானில் இப்படிச் செய்வது இயலாது இருந்தது, இப்பொழுதும் செய்வது மிகக் கடினம்). காலியம் நைட்ரஜனுடன் சேர்ந்து காலியம்-நைட்ரைடு என்னும் சேர்மம் உண்டாகின்றது. இது நீல நிற ஒளிவிடும் இருமுனையங்களைச் செய்யப் பயன்படுகின்றது. புவியில் இதன் செழுமை ஈயத்தின் செழுமைக்குச் சமமானது. பாதரசத்தின் செழுமையை விட 30 மடங்கு அதிகமானது. இயற்கையில் துத்தநாகம், ஜெர்மானியம், அலுமினியம் போன்றவற்றுடன் சேர்ந்தே காலியம் காணப்படுகின்றது. தனிம அட்டவனையை நிறுவிய மென்டலீவ் என்பார் அலுமினியத்திற்கும் (அணுவெண் 13) இன்டியத்திற்கும் (அணுவெண் 49) இடையில் அவற்றின் பண்புகளை ஒத்த ஒரு தனிமம் இருக்க வேண்டும் என்றும் அதை "ஏக அலுமினியம்" என்று அழைக்கலாம் என்றும் கூறினார். இந்த ஏக அலுமினியமே பாய்ஸ் பௌட்ரனின் கண்டு பிடிப்பிற்குப் பின்னர் காலியம் ஆனது. 1875 ல் பிரான்சு நாட்டின் பால் எமில் பௌத்ரன்(Paul Emile Lecoq de Boisbaudran) என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டது. தனிம அட்டவணையில் மூன்றாம் வரிசையில் உள்ள போரான், அலுமினியம், இன்டியம் போன்ற தனிமங்களின் நிறமாலைகளுக்கிடையேயுள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்த போது கிடைத்த வீழ்படிவு ஆக்ஸி -ஹைட்ரஜன் சுவாலையில் ஊதா முனையில் இரு புதிய வரிகளை ஏற்படுத்தியது. பாய்ஸ் பௌத்ரன் காலியத்தைக் கண்டுபிடித்தார். இந்த வீழ்படிவு புதிய உலோகமாகக் காலியமானது. பிரான்சு நாட்டிற்கு இலத்தீன் மொழியில் காலியா என்று பெயர். தன் நாட்டைக் கௌரவிக்கும் வகையில் இப் புதிய தனிமத்திற்கு காலியம் எனப் பெயரிட்டார். இதன் வேதிக் குறியீடு Ga, அணுவெண் 31, அணுநிறை 69.72, அடர்த்தி 5950 கிகி /கமீ, உறை நிலையும், கொதி நிலையும் முறையே 29.78 பாகை செல்சியசு, 2403 பாகை செல்சியசு. அறை வெப்ப நிலைக்கு அருகாமையில் நீர்ம நிலையில் இருக்கும் உலோகங்களுள் பாதரசம், சீசியம் மற்றும் ருபீடியம் தவிர்த்து காலியமும் ஒன்றாகும். இவ்வியல்பால் காலியம் உயர் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுகின்றது. எல்லா உலோகங்களிலும் இதுவே நீண்ட வெப்ப நிலை நெடுக்கையில் நீர்மமாக இருக்கின்றது. உயர் வெப்பநிலையிலும் இதன் ஆவி அழுத்தம் மிகவும் குறைவு. நீர்மக் காலியம் திண்மமாக உறையும் போது 3.2 % பருமப் பெருக்கம் அடைகின்றது. இது போன்ற பண்பை ஆண்டிமணி, பிஸ்மத் மற்றும் ஜெர்மானியம் போன்ற தனிமங்கள் மட்டுமே பெற்றிருக்கின்றன. காலியம் அணித் தளங்களில் மிக எளிதாக ஊடு பரவுவதால் பெரும்பாலான உலோகங்களை அரித்தெடுத்து விடுகின்றது. பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களைத் தருகின்றது. தாழ்ந்த உருகு நிலை உடைய சில கலப்பு உலோகங்கள், தாழ்ந்த வெப்ப நிலையில் பற்றவைப்புக்குப் பயன்படுகின்றன. காலியம் பிற உலோகங்களின் இயற்பியல் பண்புகளை குறிப்பிடும் படியாக மாற்றி விடுகின்றது. காலியம் தோய்த்த அலுமினியம் மிக எளிதில் உடைந்து நொறுங்கி விடுகின்றது. இதனால் காலியத்தை வானவூர்திகளில் ஏற்றிச் செல்வதில்லை. வேதியியல் வினையால் காலியம் ஏறக்குறைய துத்தநாகத்தை ஒத்திருக்கிறது. அலுமினியத்தை விடச் சற்று குறைந்த அளவு வேதி வினைகளில் ஈடுபடும் தன்மை கொண்டது. அலுமினியத்தைப் போல காலியமும் ஒரு மெல்லிய ஆக்சைடு படலத்தைப் புறப்பரப்பில் ஏற்படுத்திக் கொள்கிறது. இப் படலம் காலியம் வளி மண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் வினையாற்றுவதைத் தடுக்கின்றது. பொதுவாக காலியம் மட்டும் செறிந்துள்ள கனிமங்கள் அதிகம் காணப்படுவதில்லை. அலுமினியத்தின் கனிமமான பாக்சைட்டில் காலியம் 0.001 முதல் 0.008 சதவீதம் என்ற என்ற அளவில் காணப்படுகின்றது. இன்றைக்குப் பெருமளவு காலியம் அலுமினியச் சுத்திகரிப்பு வழிமுறையிலிருந்தே பெறப்படுகின்றது. டெக்னீசியம் பசகன் (ஆங்கிலம்: Technetium (IPA: ) ஒரு வேதியியல் தனிமம். நிலையான ஓரிடத்தான்கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு Tc. இதன் அணுவெண் 43 மற்றும் இதன் அணுக்கருவில் 55 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை "செயற்கையாக செய்யப்பட்டது" என்னும் பொருள்பட கிரேக்க மொழியில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் "கொலம்பைட்" என்னும் கனிமத்தின் மீது எதிர்மின்னிகளை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட பிறழ்வரிசை மாழை. இதன் வேதியியல் பண்புகள் ரேனியத்திற்கும் மாங்கனீசுக்கும் இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய Tc (technetium-99m)டெக்னீசியம்-99 என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. பசகனின் சேர்மமாகிய பெர்-டெக்னெட்டேட்இன் மின்மவணு ((TcO), எஃகுக்கு எதிர்மின்ம மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது. இத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, தனிம அட்டவணையில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி டிமிற்றி மெண்டெலீவ் கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை ""எக்காசெவ்விரும்பு" ("ekamanganese") எனப் பெயர் சூட்டியிருந்தார். ருத்தேனியம் ருத்தேனியம் "(Ruthenium)" என்பது Ru என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணுஎண் 44 ஆகும். ருத்தேனியத்தின் அணுக்கருவில் 57 நியூட்ரான்கள் உள்ளன. தனிமவரிசை அட்டவணையில் பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த இடைநிலைத் தனிமங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த இதர உலோகங்களைப் போல அரிய உலோகமான ருத்தேனியமும் பெரும்பாலான வேதிச் சேர்மங்களுடன் மந்தத்தன்மையையே வெளிப்படுத்துகிறது. பால்டிக் செருமன் வழியில் வந்தவரும் உருசியாவில் பிறந்தவருமான காரல் எர்னசுட்டு கிளாசு 1844 ஆம் ஆண்டு ருத்தேனியத்தைக் கண்டுபிடித்தார். உருசிய அகாதெமியில் உறுப்பினரான இவர் உருசியாவிலுள்ள கசான் மாநில பல்கலைக்கழகத்தில் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். தன்னுடைய தாய்நாட்டின் நினைவாக இத்தனிமத்திற்கு ருத்தேனியம் என தன்நாட்டினைக் குறிக்கும் இலத்தீன் மொழிப்பெயரை இதற்கு சூட்டினார். பிளாட்டினத்தின் தாதுக்களில் ருத்தேனியம் சிறிய அளவில் கலந்துள்ளது. ருத்தேனியம் ஆண்டுக்கு 20 டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மின்காப்பு உறைகள் மற்றும் தடிப்பு படலத்தடையம் போன்றவற்றை தயாரிக்க பெரும் அளவிளான ருத்தேனியம் பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் இதுபிளாட்டினம் உலோகக்கலவையிலும் வேதியியல் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. புறஊதா ஒளிமறைப்புக்குப் பயன்படுத்தப்படும் தடுப்பு உறைகள் தயாரிக்க ருத்தேனியத்தைப் பயன்படுத்துவது இதன் புதிய பயன்பாடாகும். ஒரு பல் இணைதிற, கடின, வெண்மையான உலோகமான ருத்தேனியம் பிளாட்டினம் குழு தனிமங்களில் ஓர் உறுப்பினர் ஆகும். தனிமவரிசைஅட்டவணையின் எட்டாவது குழுவில் இவை இடம்பெற்றுள்ளன. எட்டாவது குழுவிலுள்ள தனிமங்கள் அனைத்தும் சுற்றுப்பாதையின் வெளிக்கூட்டில் 2 எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. ருத்தேனியத்தின் அணுக்கருவில் மட்டும் வெளிக்கூட்டில் ஒரே ஒரு எலக்ட்ரான் மட்டுமே உள்ளது. இந்தமாறுபாடு அண்டையிலுள்ள நையோபியம், மாலிப்டினம், ரோடியம் போன்ற பிற தனிமங்களிலும் உணரப்படுகிறது. ருத்தேனியம் நான்கு படிக மாற்றங்களைக் கொண்டிருக்கிறது, அதிக வெப்பநிலைக்கு உட்பட்டால் மட்டுமே இது நிறம் மங்குகிறது. ருத்தேனியம் காரங்களுடன் கலந்து ருத்தேனேட்டுகளைக் (RuO2−4) கொடுக்கிறது. அமிலங்களால் ருத்தேனியம் பாதிக்கப்படுவதில்லை. இராசதிராவகத்தால் கூட இதற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் உயர் வெப்பநிலையில் ஆலசன்களா இது தாக்கப்படுகிறது. ஆக்சிசனேற்ற முகவர்களால் ருத்தேனியம் பாதிக்கப்படுகிறது. பிளாட்டினம் மற்றும் பல்லேடியத்துடன் சிறிய அளவு ருத்தேனியத்தைச் சேர்த்தாலேயே அவற்றின் கடினத்தன்மை அதிகரிக்கிறது. இதேபோல சிறிய அளவு ருத்தேனியத்தை தட்டானியத்துடன் சேர்த்தால் அதன் அரிப்பு எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது. வெப்பச் சிதைவு மற்றும் மின்முலாம் பூசுதல் மூலம் ருத்தேனியத்தை மேல்பூச்சாக பிற உலோகங்கள் மீது பூசமுடியும். ருத்தேனியம்-மாலிப்டினம் கலப்புலோகம் 10.6 கெல்வின் வெப்பநிலைக்கு கீழாகவும் ஒரு மீக்கடத்தியாக செயல்படுகிறது. 4d இடைநிலைத் தனிமங்களில்ருத்தேனியம் கடைசி தனிமம் ஆகும். இதனுடைய ஆக்சிசனேற்ற நிலையை +8 என கணித்துக் கொள்ளலாம். ஒசுமியத்தைக் காட்டிலும் ருத்தேனியம் நிலைப்புத் தன்மை குறைந்தது ஆகும். தனிமவரிசை அட்டவணையின் இடது புறத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள உலோகங்கள் அவற்றின் வேதிப்பண்புகளில் அதிக வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இரும்பைப் போலவும் ஒசுமியத்தை போலில்லாமலும் ருத்தேனியம் தாழ் ஆக்சிசனேற்ற நிலைகளான +2 மற்றும் +3.நிலைகளீல் நீரிய நேர்மின் அயனிகளாக உருவாகின்றன. 4d இடைநிலைத் தனிமங்களில் கொதிநிலை, உருகுநிலை மற்றும் நுண்துகளாக்கும் என்தால்பி மாற்றம் ஆகிய பண்புகளில் இறங்குமுகம் ருத்தேனியத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மாலிப்டினத்திற்கு அடுத்ததாகத்தான் உலோகங்கள் இப்பண்புகளில் அதிகபட்சமாக உள்ளது. ஏனெனில் 4d துணைக்கூடுகள் பாதிக்கு மேல் நிரம்பியும் எலக்ட்ரான்கள் உலோகப் பிணைப்புக்கு குறைந்த அளவிலும் பங்களிப்பு செய்கின்றன. ருத்தேனியத்திற்கு முன் தனிமமான டெக்னீசியம் விதிவிலக்காக குறைந்த மதிப்பை பெற்றுள்ளது. [Kr]4d55s2 என்ற பாதிநிரம்பிய எலக்ட்ரான் ஒழுங்கலைவு இதற்கு காரணமாகும். [Kr]4d65s1 என்ற எலக்ட்ரான் ஒழுங்கமைவுக்குத் தூண்ட குறைந்த அளவு ஆற்றலே போதுமென்றாலும் இந்நிலை தனிமவரிசை அட்டவணையின் 4d போக்குக்கு 3d இடைநிலைத் தனிம வரிசையிலுள்ள மாங்கனீசு போல வெகுதொலைவில் இல்லை.அறை வெப்பநிலையில் ருத்தேனியம் இரும்பைப் போல பாரா காந்தத்தன்மையுடனும் கியுரி வெப்பநிலைக்கு மேலான அளவையும் கொண்டுள்ளது. உள்ளது. நீரிய அமிலக் கரைசலில் சில பொதுவான ருத்தேனிய அயனிகளுக்கான குறைப்புத் திறன் மதிப்பைக் கீழே காணலாம்: டைட்டேனியத்துடன் 0.1% ருத்தேனியம் சேர்த்தால் அதன் அரிப்பு எதிர்ப்பு நூறுமடங்கு கூடுகின்றது. வானூர்திகளில் பயனாகும் பீய்ச்சுந்துகளில் உள்ள சுழலித் தகடுகளில் பயன்படுத்தப்படும் உயர்-வெப்பநிலையில் தாக்குப்பிடிக்கும் படிகவடிவு கொண்ட மீசிறப்பு மாழைக்கலவைகளில் (superalloys) பயன்படுகின்றது. இயற்கணித வடிவவியல் இயற்கணித வடிவவியல் (Algebraic Geometry) தற்காலக்கணித உலகில் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. இது வடிவியலிலுள்ள எண்ணக் கருத்துக்களையும் இயற்கணித வழிமுறைகளையும், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் கணித மறுமலர்ச்சியில் மலர்ந்த ஒரு பிரிவான பரிமாற்று இயற்கணிதத்தின் எண்ணக் கருத்துக்களையும் வழிமுறைகளையும் ஒன்றுபடுத்தி ஒரு தனிப்பட்ட பாதையை வகுத்துக்கொண்டது. பல மாறிலிகள் கொண்ட பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதோடு முடிந்துவிடுகிறது இயற்கணிதத்தின் வேலை. ஆனால் அங்குதான் தொடங்குகிறது இயற்கணித வடிவவியல். இங்கு பேசப்படும் பொருள்கள் "இயற்கணித வெரைட்டிகள்" என்று கூறப்படுகின்றன. இவை பல்லுறுப்புச் சமன்பாடுகளால் ஒரு விதமாக வரையறுக்கப்பட்ட கணங்கள். இடவியல், சிக்கலெண் பகுவியல், எண் கோட்பாடு இம்மூன்றுடனும் கருத்தளவில் ஆழமான இணைப்புகள் கொண்ட துறை இயற்கணித வடிவவியல். இதனில் பற்பல வளைவரைகளின் சார்பு நிலைகளும் பற்பல சமன்பாடுகளினால் வரையறுக்கப்படும் வளைவரைகளுக்குள் உள்ள தொடர்புகளும் அடிப்படைக் கேள்விகளாக அமைகின்றன. அராபியக் கணிதத்தில் தான் இயற்கணித வடிவவியல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு இடமுண்டு. ஒமார் காயம்(1048 - 1131) ஒரு வட்டமும் ஒரு பரவளைவும் சந்திக்கும் நிலைகளைப் பயன்படுத்தி முப்படியங்களை எப்படிப் படிய வைக்கலாம் என்பதற்கு ஒரு வழியை முன்மொழிந்தார். முக்கோணவியலையும் சார்புகள் மூலம் தோராயக்கணிப்பையும் பயன்படுத்தி வடிவவியல் முறைகளில் இயற்கணிதச் சமன்பாடுகளை விடுவிப்பது போன்ற ஒரு வழி அவ்வழி. இயற்கணிதவடிவவியலை நோக்கி எடுக்கப்பட்ட இரண்டாவது படி டெகார்த்தே(1596 - 1650) தொடங்கி வைத்த இயற்கணித வளைவரைகள். 19வது நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியக்கணிதவியலர்கள் சில ஆய்வுகளைத்தொடங்கிவைத்தனர். குறிப்பாக பெஜௌ தேற்றம்: formula_1 தரமுள்ள இரண்டு plane projective இயற்கணித வளைவரைகளுக்கு, மடங்கெண்களையும் கணக்கிட்டால், formula_2 வெட்டுப்புள்ளிகள் இருக்கும் என்று சொல்கிறது. இவையெல்லாம் பிற்கால இயற்கணித வடிவவியலுக்கு விதைகளாயின. 1930க்குப்பிறகு, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜாரிஸ்கி, மம்ஃப்மொர்ட் ஆகியவர்களும், பிரான்ஸிலிருந்து வைல், சாம்யூல், செவாலி, ஸேர், ஆகியவர்களும் பரிமாற்றுக்களங்களில் இயற்கணித வெரைட்டிகளை ஆய்வு செய்தனர். நுண்புல இயற்கணிதத்திலிருந்து வளையக்கோட்பாட்டை வெகுவாகப் பயன்படுத்தினர். ஸேர், கிரோதெண்டிக் ஆகியவர்களுடைய பிரம்மாண்டமான ஆய்வு முடிவுகளால் sheaves, schemes என்ற புதிய கருத்துக்களும் கோட்பாடுகளும் இயற்கணித வடிவவியலுக்கு அடிப்படைக் கரணங்கள் ஆயின. இந்திய வானில் இயற்கணித வடிவவியலை அறிமுகப்படுத்தி சாதனைகள் புரிந்தவர்கள் எம். எஸ், நரசிம்மன், சி. எஸ். சேஷாத்ரி முதலியோர். அன்றாட வாழ்வியல் அன்றாட செயற்பாடுகள், பழக்கங்கள், பொருள் - உளவியல் தேவைகள், பொழுது போக்குகள், உறவாடல்கள், வேலை குடும்ப சுழற்சிகள் என வாழ்க்கையின் நாளாந்த வாழ்வியல் அம்சங்களை அன்றாடல் வாழ்வியல் குறிக்கின்றது. பொருளாதாரம், சூழமைவு, தனிமனித நிலைகளைக் கடந்து அன்றாடம் ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயற்பாடுகள் பல உள. நித்திரை செய்தல், துயிலெழுதல், கழிவு அகற்றுதல், குளித்தல், உணவு உட்கொள்ளுதல் என பல்வேறு செயற்பாடுகள் உண்டு. இவை அன்றாட வாழ்வியல் ஆய்வின் கருப்பொருள்கள் ஆகின்றன. அன்றாடம் மனிதர்கள் தமது நேரத்தை எந்த எந்த விதத்தில் செலவு செய்கின்றார்கள் என்பது வாழ்வியல் பற்றியும், சமூகங்கள் பற்றியும், சமூக மாற்றங்கள் பற்றியும் பல தகவல்களை தரக்கூடியது. அன்றாடம் சில சமூகங்களில் பலர் தமது நேரத்தை தொலைக் காட்சியில் செலவு செய்கின்றார்கள். வேறு சில சமூகங்களில் கணினி முக்கியத்துவம் பெறுகின்றது. வேறு சில சமூகங்களில் தொலைக் காட்சியோ, கணினியோ இல்லை, ஆனால் அவர்களுக்கு ஆறு சென்று தண்ணீர் எடுத்து வருவதற்கு பல மணித்துளிகள் தேவையாகின்றது. இப்படி அன்றாட வாழ்வில் எவ்வாறு நேரம் செலவு செய்யப்படுகின்றது என்பதை வைத்து பல அலசல்களை மேற்கொள்ளலாம். குற்றால அருவிகள் குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" (ஆரோக்கிய நீருற்று) என்றழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. இது தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது. குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன. 1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது. 2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது. 3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும். தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. 6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன. 7. புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது. 8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. 9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 10. கண்ணுப்புளி மெட்டு - இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது. 1811 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியினர் ஒரு மருத்துவக்குழு அமைத்து இந்த அருவியின் பெருமைகளையும் மருத்துவச் சிறப்புகளையும் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது திருக்குற்றால குற்றாலநாதர் திருக்கோயில் தலவரலாறு மூலம் தெரியவருகின்றது. ரோடியம் ரோடியம் "(Rhodium)" என்பது Rh என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணுஎண் 45 ஆகும். அரியவகை உலோகமான இது வெள்ளி தனிமத்தைப் போல வெண்மையான தோற்றமளிக்கிறது. கடினத்தன்மை கொண்ட ரோடியம் அரிப்புத் தடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. வேதியியல் ரீதியாகப் பார்க்கையில் இது மந்தமாக வினைபுரியும் இடைநிலைத் தனிமமாகக் கருதப்படுகிறது. பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினரான இது மதிப்புலோகம் என்று வகைப்படுத்தப்படுகிறது. இயற்கையில் ரோடியத்திற்கு ஒரே ஒரு ஐசோடோப்பு (103Rh) உள்ளது. இயற்கையில் இது தனித்த நிலையிலும் ஒத்த தனிமங்களுடன் சேர்ந்த கலப்புலோகமாகவும், அரிதாக வேதிச் சேர்மங்களுடன் சேர்ந்து கனிமமாகவும் தோன்றுகிறது. போவியைட்டு, ரோடுபிளம்சைட்டு என்பன ரோடியத்தின் கனிமங்களாகும். மிகவும் அரிதான இத்தனிமம் மதிப்பு மிக்க உலோகமாகக் கருதப்படுகிறது. பிளாட்டினம் அல்லது நிக்கல் தாதுக்களுடன் கலந்து ரோடியம் மற்ற பிளாட்டினம் தொகுதி தனிமங்களுடன் கானப்படுகிறது. இதைப்போன்ற ஒரு தாதுவிலிருந்து 1803 ஆம் ஆண்டு வில்லியம் அய்டு ஒல்லாசுடன் என்பவரால் ரோடியம் கண்டறியப்பட்டது. வலிமைமிக்க அமிலக் கலவையான இராச திராவகத்துடன் இது வினைபுரிந்து உருவாகும் குளோரின் சேர்மம் ரோசா நிறத்தில் இருந்ததால் இதற்கு ரோடியம் என பெயரிடப்பட்டது. உலக ரோடியம் உற்பத்தியில் 80 சதவீதம் ரோடியம் பெரும்பாலும் இயங்கு வாகனங்களில் உள்ள மூவழி வினைத்திற மாற்றிகளில் வினைவேக மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ரோடியம் உலோகம் அரிப்புக்கும் , தீவிர வினைபுரியும் வேதிப்பொருட்களுக்கும் எதிர்ப்பைக் கொடுக்கிறது. இந்த அரிய பண்பின் காரணமாக ரோடியமானது பிளாட்டினம் அல்லது பல்லேடியம் போன்ற உலோகங்களுடன் கலக்கப்பட்டு கலப்புலோகமாக உருவாக்கப்படுகிறது. உயர்வெப்ப நிலைகளில் பயன்படுத்தப்படும் கலன்களுக்கு அரிப்பைத்தடுக்கும் அரிப்புத்தடுப்பியாக மேற்பூச்சாக இக்கலப்புலோகம் பூசப்படுகிறது. வெண் தங்கத்தின் தோற்றத்தை மேலும் மேம்படுத்தவும் மெல்லிய ஓர் அடுக்காக ரோடியம் பூசப்படுகிறது. தூய வெள்ளியின் தோற்றத்தை மங்கச் செய்யவும் மேற்பூச்சாக ரோடியத்தைப் பூசுகிறார்கள். ரோடியத்தைக் கண்டறியும் சாதனங்கள் அணுக்கரு உலைகளில் நியூட்ரான் மாறுபாடு அளவுகளை அளவிட பயன்படுத்தப்படுகிறது. ரோசா நிறம் என்ற பொருள் கொண்ட ரோடான் என்ற கிரேக்க சொல்லில் இருந்து ரோடியம் என்ற பெயர் இத்தனிமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பல்லேடியம் தனிமத்தைக் கண்டறிந்த சிறிது காலத்திற்குப் பின்னர் வில்லியம் அய்டு ஒல்லாசுடன் ரோடியத்தைக் கண்டறிந்தார் . தென் அமெரிக்காவில் கிடைத்த மாசு நீக்கப்படாத பிளாட்டினத் தாதுவை இதற்காக இவர் பயன்படுத்தினார். முதலில் இத்தாதுவை இராசதிராவகத்தில் கரைத்து கிடைத்த அமிலக் கரைசலை சோடியம் ஐதராக்சைடு மூலம் நடுநிலையாக்கம் செய்வதாக இவருடைய செயல்முறை அமைந்திருந்தது. நடுநிலையாக்கப்பட்ட கரைசலுடன் அமோனியம் குளோரைடு சேர்த்து அமோனியம் குளோரோபிளாட்டினேட்டு வீழ்படிவாக்கப்படுகிறது. தாமிரம், ஈயம், பல்லேடியம், ரோடியம் போன்றவை துத்தநாகத்துடன் சேர்ந்து வீழ்படிவாகின்றன. நீர்த்த நைட்ரிக் அமிலம் பல்லேடியம் மற்றும் ரோடியத்தைத் தவிர மற்ற எல்லா தனிமங்களையும் கரைத்துவிடுகிறது. கரையாத இரண்டில் பல்லேடியம் இராசதிராவகத்தில் கரைந்து விடும். ஆனாலும் ரோடியம் இதிலும் கரையாது . கடைசியாக எஞ்சும் விளைபொருளுடன் சோடியம் குளோரைடு சேர்க்கப்படுகிறது. இதனால் Na3[RhCl6]•nH2O வீழ்படிவாகிறது. வீழ்படிவை எத்தனாலில் கழுவி பின்னர் துத்துநாகத்துடன் வினைபுரியச் செய்தால் ரோடியம் தனித்த உலோகமாகக் கிடைக்கிறது . இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ரோடியம் சிறிதளவு பயன்பாடுகளையே கொண்டிருந்தது. அந்நூற்றாண்டிற்குப் பின்னரே 1800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையை அளவிட ரோடியம் தனிமத்தைக் கொண்ட வெப்ப மின்னிரைட்டகள் பயன்படுத்தப்பட்டன . மின்முலாம் பூசுவதிலும் அரிப்புத்தடுப்பியாகப் பயன்படுத்துவது ரோடியத்தின் முக்கியப் பயன்பாடுகளாயின . 1976 ஆம் ஆண்டு இயங்கு வாகனங்களில் பயன்படுத்தப்படும் மூவழி வினைத்திற மாற்றிகளில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர் இதனுடைய தேவை அதிகரித்தது. முன்னதாக இப்பயன்பாட்டிற்கு பிளாட்டினம் அல்லது பல்லேடியம் பயன்படுத்தப்பட்டு வந்தது. வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள NOx போன்ற நச்சு வாயுக்களின் நச்சுத்தன்மையைக் குறைக்க மூவழி வினைத்திற மாற்றிகள் பயன்படுத்தப்பட்டன . ரோடியம் வெள்ளி தனிமத்தைப் போன்ற தோற்றமும் கடினத்தன்மையும் கொண்ட ஒரு தனிமமாகும். ரோடியம் பொதுவாக காற்றுடன் சேர்ந்து சூடுபடுத்தினாலும் கூட ஆக்சைடாக உருவாவதில்லை. அது உருகுநிலையை அடையும்போது மட்டும் சிறிதளவு வளிமண்டல ஆக்சிசனை ஈர்த்துக் கொள்கிறது. ஆனால் திண்மமாக மாறும் போது அது மீண்டும் ஆக்சிசனை வெளிவிடுகிறது. பிளாட்டினத்தை விட ரோடியம் உயர்ந்த உருகுநிலையையும் குறைந்த அடர்த்தியையும் கொண்டுள்ளது. அமிலங்களால் ரோடியம் தாக்கப்படுவதில்லை. நைட்ரிக் அமிலத்தில் கரையாத ரோடியம் சிறிதளவு இராசதிராவகத்தில் கரைகிறது. இதன் முதன்மையான பயன்பாடு, பிளாட்டினம், பல்லேடியம் ஆகிய மாழைகளுக்கு உறுதி கூட்டும் கலவைப்பொருளாக இருத்தல். இம்மாழைக் கலவைகள் வெப்ப உலைகளில் மின்சுற்றுகளிலும், சில கண்ணாடி நார்ப்பொருள்களிலும், வெப்பநிலையை அளக்கும் வெப்ப இரிழைமுடிச்சுகளிலும் (thermocouple), வானூர்தியில் சில மின்முனைகளுக்கும், தானுந்து போன்ற ஊர்திகளில் உள் எரி பொறியில் தீப்பொறியூட்டிகளிலும் (spark plug) பயன்படுகின்றது முறுக்கு விசை இயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் கூறலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு). இஃது, நேர்விசை மற்றும் ஒரு ஆரத்தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும். முறுக்கு விசையின் SIஅலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை "τ"(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது. முறுக்கு விசையென்ற கருத்துரு நெம்புகோல்கள் மீதான ஆர்க்கிமிடீசின் ஆய்விலிருந்து தொன்றியது. விசை, திணிவு மற்றும் முடுக்கம் முதலியவற்றின் சுழற்சி ஒப்புமைகள் முறையே முறுக்கு விசை, நிலைமாறு உந்தம் மற்றும் கோண உந்தம் ஆகியவையே. ஒரு நெம்புகோலின் மேல் அளிக்கப்பட்ட விசை மற்றும் அக்கோலின் இயங்குபுள்ளியிலிருந்தான அதன் தொலைவு இவற்றின் பெருக்கலே முறுக்கு விசையாகும். எடுத்துக்காட்டாய், ஒரு நெம்புகோலின் இயங்குபுள்ளியிலிருந்து 2 மீ தொலைவில் இயங்கும் 3 நியூட்டன் விசையும், 6 மீ தொலைவில் இயங்கும் 1 நியூட்டன் விசையும் ஒரே முறுக்கு விசையைதான் விளைவிக்கும். (இங்கு, விசை நெம்புகோலின் நீளத்திற்க்கு செங்குத்தாய் இயங்குவதாய் கொள்ளப்பட்டது.) முறுக்கு விசையின் திசையை வலக்கை விதி மூலம் அறியலாம்: வலக்கை விரல்களை சுழற்சி திசையில் வளைத்து, பெருவிரல் அச்சுக்கு இணையாக இருக்கும்படி பிடித்தால், பெருவிரல் நோக்கும் திசையே முறுக்கு விசையின் (முறுக்கு விசைத் திசையனின்) திசையாகும். கணிதக்கூற்றில், (குறிப்பிட்ட ஒரு ஒப்புச்சட்டதில், r என்ற இடநிலைத் திசையன் கொண்ட) ஒருப் துகளின் மீதான முறுக்கு விசையை பின்வரும் நெறிமப் பெருக்கலின் மூலம் காணலாம்: இங்கே, அஃதில், பொதுவில், முறுக்கு விசை என்பதை கோண உந்ததின் காலவகையீடாகக் கொள்ளலாம். (கவனிக்க: நேர் மற்றும் சுழற்சி இயக்கங்களின் ஒப்புமை. விசை என்பது நேர் உந்ததின் காலவகையீடு) இங்கே, இவ்வரையறைகளின் தொடர்வாய் முறுக்கு விசை என்பது ஒரு திசையன் எனவறியலாம், இஃது தன் இயக்கத்தால் விளையப்போகும் சுழற்சியின் அச்சை நோக்கியிருக்கும் (வலக்கை சுழற்சி). முறுக்கு விசையின் அலகு, விசைxநீளம் என்பதாகும். இதன் SI அலகு நியூட்டன்.மீட்டர் எனவழங்கப்படும். கணித மரபுப்படி நியூட்டன்.மீட்டர் அல்லது மீட்டர்.நியூட்டன் என வழங்குவதில் முரணில்லை என்றாலும், எடைகள் மற்றும் அளவுகளுக்கான அனைத்துலகக் குழு நியூட்டன்.மீட்டர் என்றுதான் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஜூல், ஆற்றல் அல்லது (இயக்க) வேலை ஆகியவற்றின் SI அலகு, என்பதும் ஒரு N.m என்றே வரையறுக்கப் பட்டிருந்தாலும், இதை முறுக்கு விசையின் அலகாய்ப் பயன்படுத்த இயலாது. ஆற்றல், விசை மற்றும் தொலைவின் பெருக்கல் என்பதால், இஃது எப்பொழுதும் ஓர் அளவெண்ணாகவே இருக்கும், ஆனால் முறுக்கு விசை, விசை மற்றும் தொலைவின் நெறிமப் பெருக்கல் பயனாதலின் அஃது (கள்ள)நெறிம மதிப்புப் பெற்றதாகும். ஆனால் இவையிரண்டும் ஒரே பரிமாணம் பெற்றிருப்பது தற்செயலன்று, ஒரு N.m மதிப்புக் முறுக்கு விசையை ஒரு முழுசுழற்சியில் இயக்க சரியாய் 2 பை ஜூல் ஆற்றல் தேவை. கணிதக்கூற்றில், இங்கே, இஃது மிகப்பயனுள்ள ஒரு வாய்ப்பாடு, பலசமயங்களில் (இயற்பியல் விடுத்து பிற துறைகளில்) முறுக்கு விசையின் வரையறையாகவும் வழங்கப்படும் இது பின்வருமாறு, முன்னர் குறிக்கப்பட்ட r மற்றும் F திசையன்களுடன் சேர்த்து, திருப்புக் கரத்தின் அமைப்பு படத்தில் காட்டப்பெற்றுள்ளது. இவ்வரையறையிலுள்ள குறைபாடு, முறுக்கு விசையின் பரும அளவை மட்டுமே இதன் மூலம் அறியமுடியும் திசையை அல்ல, ஆதலின் இதை முப்பரிமாண அமைப்பில் பயன்படுத்த இயலாது. விசை நெறிமன் பெயர்வு நெறிமனுக்கு செங்குத்தாய் இருந்தால் பின் திருப்புக் கரம் என்பது (இயக்க) மையத்திலிருந்தான தொலைவேயாகும், மேலும் முறுக்கு விசை குறிப்பிட்ட அவ்விசைக்கான அதிகபட்சமாகும். ஒரு செங்குத்து விசையால் விளையும் முறுக்கு விசையின் பருமையை காண்பதற்க்காண வாய்ப்பாடு பின்வருமாறு, எடுத்துக்காட்டாக, 10 நியூட்டன் விசையை ஒரு நபர் 0.5 மீட்டர் நீளமுள்ள ஒரு மறைதிருகியின் முனையில் செயல்படுத்தினால் (அத்திருகியின் மறுமுனையில்) விளையும் முறுக்கு விசையின் பருமை 5 நியூட்டன்.மீட்டர் ஆகும். இங்கு, அந்த நபர் அவ்விசையை மறைதிருகியில் (அதன் நீளத்திற்க்கு) செங்குத்தாய் செயல்படுத்துவதாய் கருதிக் கொள்ளப்பட்டுள்ளது. "F" என்ற பருமைக் கொண்ட விசை ஒன்று "r" நீளம்கொண்ட பெயர்ப்புத்தொலைவுக் கரத்திற்க்கு θ என்ற கோணத்தில் (சுழற்சி அச்சிற்க்கு கிடைத்தளத்தில்) வினை புரிந்தால் விளையும் முறுக்கு விசையானது, குறுக்குப் பெருக்கலின் வரையரைப்படி, பின்வரும் வாய்ப்பாட்டினால் தரப்படும்: எந்தவொரு பொருளும் நிலை சமநிலையில் இருக்க வேண்டுமானால், (அதன் மீது இயங்கும்) அனைத்து விசைகளின் கூட்டல் மட்டுமல்ல, எந்தவொரு புள்ளியின் மீதன அனைத்து முறுக்கு விசைகளின் கூட்டல் மதிப்பும் சூன்யமாக இருத்தல் வேண்டும். கிடை மற்றும் நெடு விசைகளைக் (மட்டுமே) கொண்ட இருபரிமாண அமைப்பில், விசைகளின் கூட்டலுக்கான நிபந்தனை இரண்டு சமன்பாடுகள்: Σ"H" = 0 மற்றும் Σ"V" = 0, மேலும் முறுக்கு விசைக்கு மூன்றாவதாய்: Σ"τ" = 0 என்ற சமன்பாடு. ஆக, நிலை இயக்கத்தில் கண்டறியக்கூடிய சமநிலை பிரச்சினைகளைத் தீர்க்க நாம் மூன்று சமன்பாடுகளை பயன்படுத்த வேண்டும். விசை நேர் உந்தத்தின் காலவகையீடு என்பதைப் போல், முறுக்கு விசை கோண உந்தத்தின் காலவகையீடு: இங்கு, திடமான ஒருப் பொருளின் கோண உந்தத்தை அதன் நிலைமாறு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம் இவற்றின் சார்பாய் கூறலாம்: ஆதலின், formula_10 மாறிலியானால், இங்கே α என்பது கோண வேகவளர்ச்சி, பொதுவில் இம்மதிப்பு ஆரயன்கள்/நொடி என்ற அலகில் அளக்கப்படும். ஒரு இயந்திரப்பொறியின் அடிப்படை குறிப்புத்தரவுகளில் ஒன்று முறுக்கு விசையாகும்: இயந்திரப்பொறியின் சக்தி வெளியீடு அதன் முறுக்கு விசை மற்றும் சுழற்சி வெகம் இவற்றின் பெருக்கலாக தரப்படும். உள் எரி பொறிகள் பயனுள்ள முறுக்கு விசையை ஒரு குறிப்பிட்ட சுழல் வேக சரகத்திற்குள்தான் (பொதுவில், ஒரு சிறிய தானுந்து வண்டிக்கு இச்சரகம் 1000 முதல் 6000 சுயற்சி/மணித்துளி வரையிலாகும்) வெளியிடுகின்றன. இச்சரகத்திலான மாறு முறுக்கு விசை வெளியீட்டை ஒரு இயக்கமாணி கொண்டு அளக்கலாம், மேலும் அவ்வாறு அளக்கப்பட்ட மதிப்புகளை ஒரு முறுக்கு விசை வளைவியாகவும் தரலாம். இம்முறுக்கு விசை வளைவியின் உச்சி, பொதுவாய், ஒட்டுமொத்த ஆற்றல் (வளைவியின்) உச்சிக்கு சற்றே தாழ்ந்திருக்கும். முறுக்கு விசை (வளைவியின்) உச்சி, அதன் வரையருவிற்க்கு உட்பட்டு, ஆற்றல் (வளைவியின்) உச்சதைவிட அதிக சுழற்சி/மணித்துளி மதிப்பில் தோண்றாது. முறுக்கு vவிசை, சக்தி மற்றும் பொறியின் (சுயற்சி) வேகம் ஆகியவற்றிர்கு இடையிலான தொடர்பை புரிந்து கொள்ளுதல் தானியங்கிப் பொறியியலில் உயிர்நாடியாகும், பொறியிலிருந்து இயக்கத் தொடரிகள் மூலமாய் சக்தியை சக்கரங்களுக்கு கடத்துவதைப் போன்றே இஃதும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வழக்கில், சக்தியென்பது முறுக்கு விசை மற்றும் பொறி (சுயற்சி) வேகத்தின் சார்பு. இயக்கத் தொடரிகளின் பற்சக்கர அமைப்பை பொருத்தமாய் தேர்ந்தெடுப்பதன் மூலம் பொறியின் முறுக்கு விசைப் பண்புகளை திறம்பட அமைக்கலாம். நீராவிப் பொறிகளும், மின்சார சுழலிகளும் சுழற்சி/மணித்துளி சூன்ய மதிப்பு அருகையில் அதிகபட்ச முறுக்கு விசை உருவாக்கும், அப்பொறிகளின் சுழற்சி வேகம் ஏற ஏற (உராய்வு மற்றும் பிறத்தடைகளினால்) அதன் முறுக்கு விசை வெளியீடு மங்கும். ஆகையினால், இவ்வகை பொறிகளின் இயக்கத் தொடரி அமைப்பு உள் எரி பொறிகளின் இயக்கத் தொடரி யிலிருந்து வேறுபட்டு இருக்கும். அனைத்து எளிய இயந்திரங்களின் இயக்க அனுகூலத்தை விளக்க முறுக்கு விசை ஒரு இலகுவான வழியாகும். ஒரு விசையை குறிப்பிட்ட தொலைவு இயங்கச் செய்தால் அது இயந்திர வேலை புரியும். அதேபோல், ஒரு முறுக்கு விசையை குறிப்பிட்ட கொண தொலைவு இயங்கச் செய்தால் அது வேலை புரியும். சக்தி என்பது ஒரு அலகு காலத்தில் (அஃதாவது பொதுவில், ஒரு நொடியில்) செய்யப்படும் வேலையாகும். எனினும், காலமும் கோணத் தொலைவும் கோண வேகம் மூலம் தொடர்புடையன, இங்கு, ஒவ்வொரு சுழற்சியும் முறுக்கு விசையை உண்டாக்கும் விசைகளை சுற்றளவு முழுமையும் பயனப்பட வைக்கின்றது. இதன் பொருள், கோண வேகத்தை வளரச்செய்யும் முறுக்கு விசையானது வேலை புரிகின்றது என்பதாகும், அதனால் உருவாக்கப்பெற்ற சக்தியை பின்வருமாறு கணக்கிடலாம்: சமன்பாட்டின் வலக்கை பக்கம் இருப்பது இரண்டு நெறிமங்களின் புள்ளிப்பெருக்கல் இஃது இடக்கை பக்கமுள்ள அளவெண் மதிப்பை ஈணும். கணிதவியல்படி, இச்சமன்பாட்டை மாற்றியமைத்து, தரப்பட்ட சக்தி வெளியீட்டிற்க்கான முறுக்கு விசையை கண்டறியப் பயன்படுத்தலாம், ஆயினும் நடைமுறையில், சக்தி வெளியீட்டை நேரிடையாய் அளக்கவியலாது, ஆனால், முறுக்கு விசை மற்றும் கோண வேகம் ஆகியவற்றை நேரிடையாய் அளப்பது எளிது. முறையான அலகுகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். மெட்ரிக் SI முறையில், சக்தியின் அலகு வாட்டுகள், முறுக்கு விசை நியூட்டன்.மீட்டரிலும், கோண வேகம் ஆரையன்கள்/நொடி என்ற அலகிலும் அளக்கப்பட வேண்டும் (சுழற்சிகள்/நொடி அலகில் அல்ல). மேலும், நியூட்டன்.மீட்டர் என்ற அலகு ஆற்றலுக்குறிய அலகான ஜூல்-ஐ பரிமாணத்தில் ஒத்திருந்தாலும், ஆற்றலை பொறுத்தவரை இவ்வலகு அளவெண் மதிப்பிற்கும், முறுக்கு விசையை பொறுத்தவரை நெறிமன் மதிப்பிற்கும் கொள்ளப்படுகிறது. ஆற்றல், முறுக்கு விசை மற்றும் கோண வேகம் முதலியவற்றின் வெவ்வேறு அலகுகளுக்கு அவற்றிர்கேற்ற மாற்று காரனிகளை மேற்குறிப்பிட்ட சமன்பாட்டில் சேர்க்க வேண்டும். மேலும், கோண வேகத்திற்க்கு (ஆரயன்கள்/காலம்) பதிலாய் சுழற்சி வேகம் (சுழற்சி/காலம்) பயன்படுத்தப்பெற்றால் அதற்க்குறிய மாற்று காரணியாய் formula_13 சேர்க்கப்பட வேண்டும், ஏனெனில், ஒரு முழூசுழற்சியில் formula_13 ஆரயன்கள் அடங்கியுள்ளன: இங்கு, சுழற்சி வேகம் என்பது ஒரு அலகு காலத்தில் நிறைவுப்பெற்ற சுழற்சிகள். SI அலகுகளில் உபயோகமான வாய்ப்பாடு: இதில், 60,000 என்பது, நிமிடத்திற்க்கு 60 நொடிகள் மற்றும் கிலோவாட்டுக்கு 1000 வாட்டுகள் என்பதையடுத்து இடம்பெற்றது. சிலசமயங்களில் (அமெரிக்க பொறியியலாளர் வழக்கில்), ஆற்றலை குதிரைசக்தியை கொண்டும், முறுக்கு விசையை அடி-பவுன்டுகளிலும், கோண வேகத்தை சுழற்சி/நிமிடம் கொண்டும் அளக்கையில், பின்வருமாறு சமன்பாடு மாற்றப்பெறும்: இதிலுள்ள மாற்றுக் காரணி தோராயமானதே காரணம் அதில் இடம்பெற்ற π என்ற விஞ்சிய எண்னேயாகும். சற்றே துல்லியமான மதிப்பை 33,000 (அடி•பவுன்டு./நிமிடம்) / 2π (ஆரையன்கள்/சுழற்சி) என்பதிலிருந்து கணிக்கலாம், அஃது 5252.113 122 032 55... எனவரும். இதேபோல் பிற அலகுகளை பயன்படுதினால் அவற்றிர்க்கேற்ற மாற்றுக் காரணிகளை பயன்படுத்த வேண்டும். சுழலும் ஒரு பொருளுக்கு, அதன் சுற்றளவில் ஒரு ஆரையன் சுற்றில் கடக்கப்பட்ட (நேர்) தொலைவு என்பது அதன் ஆரம் மற்றும் கோண வேகத்தின் பெருக்கல் ஆகும். அஃதாவது, (நேர்) வேகம் = ஆரம் x கோண வேகம். வரையருப்படி, (நேர்) தொலைவு = (நேர்) வேகம் x காலம் = ஆரம் x கோண வேகம் x காலம். முறுக்கு விசையின் வரையருவின்படி: முறுக்கு விசை = விசை x ஆரம். இதை மற்றியமைப்பதன் மூலம் நாம் விசைக்கான சமன்பட்டை பெறலாம்: விசை = முறுக்கு விசை/ஆரம். இவற்றை சக்தியின் வரையரு சமன்பாடில் பயன்படுத்தினால்: என்று பெறலாம். இதில், நேர் மற்றும் கோண வேகங்களுக்கு இடையே (தொடக்கத்தில்) கொள்ளப்பட்ட நேரடித் தொடர்பின் காரணமாய், கோண வேகம் ஆரையன்களில் (ஆரையன்கள்/காலம்) இருக்க வேண்டியது அவசியமாகிறது. உலக சுற்றுலா நாள் உலக சுற்றுலா நாள் ("World Tourism Day") உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" ("Tourism opens doors for women"). தாண்டகம் தாண்டகம் என்பது தமிழ்ச் செய்யுள் வகையில் ஒன்று. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த இலக்கியங்களிலே இச்செய்யுள் வகையைக் காணலாம். அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் ஆடவரையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்). அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது. பல்காயனார், மாபூதனார், சீத்தலையார் என்போரும் இக் கருத்தினையே ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்விருவகை தாண்டகச் செய்யுள்களும் பிற்காலத்துப்பெருகிய அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பனவற்றிற்கு முன்மாதிரிகள் என மொழியலாம். சக்மா மொழி சக்மா மொழி ஒரு இந்தோ ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் வங்காளதேசத்திலும், ஏனையோர் இந்தியாவிலும், சிலர் மியன்மாரிலும் வாழ்கின்றனர். வங்காளதேசத்தில் இம்மொழி பேசுவோர் சுமார் 312,000 வரை இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தியாவில், முக்கியமாக மிசோரம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 80,000, 50,000, 100,000 ஆகிய எண்ணிக்கயில் காணப்படுகின்றனர். மியன்மாரிலும் இவர்கள் 20,000 வரை உள்ளனர். அண்மைக் காலங்களில் இம் மொழி பேசுவோர் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். இம் மொழி தொடக்கத்தில் திபெத்தோ-பர்மிய மொழிக்குடும்பத்துக்கு நெருங்கியதாக இருந்ததாகவும், பின்னர், அருகில் உள்ள, வங்காள மொழிக்கு நெருங்கிய, கிழக்கு இந்தோ-ஆரிய மொழியான சிட்டகோனிய மொழியின் தாக்கத்தினால் பெருமளவு மாற்றமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் இது தற்கால மொழியியலாளர்களால், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துட் சேர்க்கப்பட்டுள்ளது. வீ. ஏ. கபூர் மர்ஹூம் வீ. ஏ. கபூர் - கிழக்கு மாகாணத்தில் தோப்பூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த வானொலி அறிவிப்பாளர். ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளர், நிகழ்ச்சித்தயாரிப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர் என்ற பதவிகளை வகித்தவர். 1953ல் இலங்கை வானொலி அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவரே முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளராவர். தமிழ் தேசிய சேவையிலும் பின்னர் முஸ்லீம் சேவையிலும் பணியாற்றிய இவர் முஸ்லீம் சேவையில் பல நாடகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார். கல்லடி உப்போடையிலுள்ள சிவானந்த வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1949ல் இடை நிலை, உயர் கல்வி பெறுவதற்காக கொழும்பு சாகிராக் கல்லூரியில் சேர்ந்தார். சிறந்த கல்விமான் ஆன ஏ. எம். ஏ. அஸீஸ் அப்போது ஷாகிராக் கல்லூரியில் அதிபராகவும், பேராசிரியர் கா. சிவத்தம்பி, தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த ஆர். சிவகுருநாதன் இவரது சக மாணவர்களாகவும் இருந்தார்கள். ஒலிபரப்புத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞனான வீ. ஏ. கபூர் தனது கல்லூரி அதிபர் அஸீஸ் அவர்களின் உதவியினால், வானொலியில் நடைபெற்ற 'எங்களூர்' என்ற நிகழ்ச்சியில் தனது ஊரான 'தோப்பூர்' பற்றிய தனது பிரதியை வாசித்து வானொலிக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பெப்ரவரி 20, 1953ல் செய்திகள் வாசிப்பவராக, அறிவிப்பாளராக அறிமுகமானார். '20 கேள்விகள்', 'குறுக்கெழுத்துப் போட்டி', மலயகக் கலைஞர்கள் பங்பற்றிய 'குதூகலம்' போன்ற பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர். வானொலியில் நேர்முகவர்ணனை செய்வதில் புகழ்பெற்ற வி. ஏ. கபூர், அணிசேரா நாடுகளின் மகாநாடு, சுதந்திர தின விழாக்கள் என்பவனற்றில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றினார். 1967க்குப் பின்னர் முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவில் இணைந்து கொண்ட இவர் கட்டுப்பாட்டாளராகவும், பணிப்பாளராகவும் சேவையாற்றினார். வீரவநல்லூர் வீரவநல்லூர் (ஆங்கிலம்:Veeravanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான திருப்புடைமருதூர் - சேரன்மகாதேவி இடையில் வீரவநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 39 கிமீ; தென்காசியிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; களக்காட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. 9.13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 19585 மக்கள்தொகையும் கொண்டது. வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். இந்தக் கோயிலுக்கு நெல்லை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம். வீரவநல்லூரில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது. திரொபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பலேடியம் பலேடியம் ("Palladium") என்பது அரிதாகக் கிடைக்கும் வெள்ளி போன்ற நிறமுடைய ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு Pd என்பதாகும். இதன் அணுவெண் 46 மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன. பலேடியத்தின்வேதியியல் இயல்பில் பிளாட்டினத்தின் வேதியியலை ஒத்திருக்கின்றது. இத்தனிமத்தை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய வேதியியலாளர் வில்லியம் அய்டு வொல்லாசுடன் கண்டுபிடித்தார். கிரேக்கர்களின் அறிவுக் கடவுளாகக் கருதப்படும் பல்லாசு என்னும் தெய்வத்தின் நினைவாகவும், சிறுகோள் பல்லாசு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இத்தனிமத்திற்கு பலேடியம் என்ற பெயரைச் சூட்டினார். பலேடியம், பிளாட்டினம், ரோடியம், ருத்தேனியம், இரிடியம் மற்றும் ஒசுமியம் போன்ற தனிமங்கள் ஒன்றாகச்சேர்ந்து பிளாட்டினம் குழுதனிமங்களை உருவாக்குகின்றன. இவையனைத்தும் ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் பலேடியம் மட்டும் குறைவானஉருகுநிலையும் அடர்த்தியும் கொண்டதனிமமாக உள்ளது. பலேடியமும் மற்றும் அதனைப் பின்தொடரும் பிளாட்டினமும் மோட்டார் வாகன இயந்திரங்களில் வினைத்திறன் மாற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகையில் காணப்படும் நச்சு வாயுக்களான கார்பனோராக்சைடு, நைட்ரசன்டைஆக்சைடு மற்றும் நச்சுப்பொருள்களான ஐதரோகார்பன்கள் போன்றவற்றை 90% அளவிற்கு நச்சு நீக்கப்பட்ட வேதிப்பொருட்களாக மாற்றி வெளியிட இத்தனிமங்கள்உதவுகின்றன. மேலும் பலேடியம் மின்னணுவியல், பல் மருத்துவம், மருத்துவம், ஐதரசன் சுத்திகரிப்பு, இரசாயனபயன்பாடுகள், நிலத்தடி நீர் சிகிச்சை மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றிலும் பல்லேடியம் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரம், வெப்பம், நீர் ஆகியவற்றை உற்பத்திசெய்வதற்கு பயன்படும் எரிபொருள் மின்கலன்களில் இது ஆக்சிசன் மற்றும் ஐதரசனுடன் வினைபுரியும் முக்கிய வேதிப்பொருளாகப்பயன்படுகிறது. பலேடியம் மற்றும் பிளாட்டினம் தொகுதி தனிமங்களின் தாதுக்கள் மிகவும் அரிதானவையாகும். விரிவான கனிமப்படிவுகள் தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா உருசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. வாகனங்களில் பயன்படுத்தப்படும் வினைத்திறன் மாற்றிகளை மறுசுழற்சி செய்து பல்லேடியம் தயாரிப்பதும் ஒர் ஆதார மூலமாகும். அதிகத் தேவையும் குறைவான விநியோகமும் முதலீட்டுத் துறையில் முக்கியத்துவத்தை உருவாக்கிவிட்டது. அண்மையில் (2007ல்) பல்லேடியம் ஓர் அரிய மாழை அல்லது உயர்மதிப்பு மாழையாக சந்தைகளில் (Exchange-traded fund(ETF)) வாங்கி விற்கப்படுகின்றது பலேடியம் தனிம வரிசை அட்டவணையின் பத்தாவது குழுவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் வெளிவட்டப் பாதையில் உள்ள எலக்ட்ரான் கூட்டில் நிரம்பியுள்ள எலக்ட்ரான் ஒழுங்கமைவு 10 ஆவது தொகுதியின் எலக்ட்ரான் ஒழுங்கமைவுக்கு மாறுபட்டுள்ளது. நையோபியம், ருத்தேனியம், ரோடியம் ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் ஒழுங்கமைவைஇதனுடன் ஒப்பிட்டுக் காணலாம். மற்ற தனிமங்களைக் காட்டிலும் குறைவான எலக்ட்ரான் கூடுகளே பலேடியத்திற்கு நிரம்பியுள்ளன. இப்பண்பு பலேடியத்தின் தனிப்பண்பாகும். பலேடியத்தின் இணைதிறன் கூட்டில் 18 எலக்ட்ரான்கள் உள்ளன. நியானுக்கு அடுத்துள்ள மந்தவாயுக்களின் இணைதிறன் கூட்டில் உள்ள எட்டு எலக்ட்ரான்களைக் காட்டிலும் இதில் பத்து எலக்ட்ரான்கள் அதிகமாகும். பலேடியம் பிளாட்டினத்தை ஒத்திருக்கும் ஒரு மென்மையான வெள்ளி போன்ற வெள்ளை நிறமான உலோகமாகும். பிளாட்டினம் தொகுதி தனிமங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அடர்த்தியும் குறைவான உருகுநிலையும் கொண்டதாகும். காய்ச்சிப் பதனிடும்போது இது மென்மையாகவும் இழுத்து நீட்டும் தன்மையும் பெற்றுள்ளது. குளிர்விக்கும்போது இது கடினமாகிறது. நைட்ரிக் அமிலம், அடர்கந்தக அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம் போன்றவற்றுடன் பல்லேடியத்தைச் சேர்த்து சூடாக்கினால் சிறிதளவு கரைகிறது. இராச திராவகத்தில் மட்டும் அறைவெப்ப நிலையிலேயே நன்றாகக் கரைகிறது. சாதாரண திட்ட வெப்பநிலையில் பல்லேடியம் ஆக்சிசனுடன் வினைபுரிவதில்லை. எனவே இது காற்றில் ஒளிமங்குவதில்லை. பல்லேடியத்தை 800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் பலேடியம்(II) ஆக்சைடு (PdO) அடுக்கு உருவாகிறது. பலேடியம் சேர்மங்களில் பலேடியம் பொதுவாக 0 மற்றும் +2 ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. இதைவிட குறைவான பொது ஆக்சிசனேற்ற நிலைகளும் அறியப்படுகின்றன. பலேடியம் சேர்மங்கள் அனைத்தும் பிளாட்டினம் சேர்மங்களை ஒத்திருக்கின்றன. மற்ற பிளாட்டினம்-குழு உலோகங்களைப் போலவே மொத்தமாக பலேடியமும் மந்தவினை தனிமமாக இருந்தாலும் தோல் நோய்களுக்கு காரணமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலேடியம் கலந்துள்ள கலப்புலோகங்கள் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் போது ஒவ்வாமையை உண்டாக்குவதாகவும் கூறப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது . வெள்ளி (தனிமம்) வெள்ளி (ஜெர்மன்: Silber, பிரெஞ்சு: Argent, ஸ்பானிஷ்: Plata, ஆங்கிலம்: Silver, சில்வர் (IPA: ) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ag என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் இலத்தீன் மொழிப் பெயராகிய "ஆர்கெண்ட்டம்" (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் அணுவெண் 47, மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன.மேலும் இதன் அணு நிறை 107.86 amu ஆகும் வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பட்டு வருகிறது. இது பொதுவாக தங்கதிற்க்கு அடுத்து இரண்டாவது மடிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது.மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகத் தோன்றும் வெள்ளியில் Ag மற்றும் Ag, 109Ag என்ற இரண்டு நிலையான ஐசோடோப்கள் உள்ளன. Ag ஐசோடோப்பு இயற்கையில் சற்று அதிகமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட தனிமவரிசை அட்டவணையில் அரிதாகவே இந்த அளவுக்கு அதிகமாக இயற்கையில் கிடைக்கும் ஐசோடோப்புகள் உள்ளன. இதன் அணு எடை 107.8682(2) அணுநிறை அலகுகளாகும். வெள்ளி சேர்மங்களில் இந்த அளவு மிகமுக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ஆலைடுகளின் எடையறி பகுப்பாய்வில் இந்த அளவு முக்கியமாகக் கருதப்படுகிறது. இரண்டு ஐசோடோப்புகளும் விண்மீன்களில் எசு-செயல்முறையிலும் மீயொளிர் விண்மீன்களில் ஆர்-செயல்முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளி தனிமத்தைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 28 வகையான கதிரியக்க ஐசோடோப்புகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றில் 41.29 நாட்களை அரைவாழ்வுக்காலமாகக் கொண்டுள்ள Ag ஐசோடோப்பு அதிக நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. Ag ஐசோடோப்பு 7.45 நாட்களும் Ag 3.13 மணி நேரமும் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளன. மேலும், வெள்ளி தனிமமானது எண்ணற்ற உட்கரு மாற்றியன்களைப் பெற்றுள்ளது. இவற்றில் Ag 418 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலமும், Ag 249.79 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் Ag 8.28 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் கொண்டுள்ளன. எஞ்சியிருக்கும் பிற கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தை மட்டுமே கொண்டுள்ளன. இதிலும் பெரும்பாலானவை 3 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டவையாக உள்ளன . வெள்ளி ஐசோடோப்புகள் ஒப்பீட்டு அணுநிறை அளவு 92.950 Ag முதல் அணுநிறை அளவு 129.950 Ag வரை காணப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிகுந்த Ag ஐசோடோப்புக்கு முன்னர் உள்ளவை எலக்ட்ரான் பிடிப்பு முறை சிதைவை முதன்மையாகக் கொண்டும், இதற்கு பின்னர் உள்ளவை பீட்டா சிதைவு முறையை முதன்மையாகக் கொண்டும் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் Ag ஐசோடோப்புக்கு முன்னரான சிதைவு விளைபொருட்கள் பல்லேடியம் (தனிமம் 46) மற்றும் பின்னரான சிதைவு விளைபொருட்கள் காட்மியம் ( தனிமம் 48) ஐசோடோப்புகளாகும். பலேடியம் ஐசோடோப்பான Pd யானது Ag ஐசோடோப்பின் பீட்டா சிதைவால் உருவாகிறது. இதன் அரைவாழ்வுக் காலம் 6.5 மில்லியன் ஆண்டுகளாகும். இரும்பு விண்கற்களில் மட்டுமே போதுமான அளவுக்கு இந்த பலேடியம் வெள்ளி ஐசோடோப்பு விகிதங்கள் காணப்படுகின்றன. கதிரியக்கச் சிதைவு Ag சாண்டா கிளாரா விண்வீழ் கல்லில் 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. வெள்ளியின் அங்கிலப்பெயரான சில்வர் ஆங்கில மொழியில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றாகும்.இது மதிப்புமிக்கதானதால் உலகம் முழுவதும் வெள்ளி நாணயங்கள் மற்றும் பார்கள் கடைகளில் வாங்கி விற்கப்படும். இத்தனிமம் மிகஅதிகமான தகடாக்க தன்மை கொண்ட ஒரு உலோகம்.வெள்ளியில் செய்த குவளை, உணவுத் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்களைப் பலரும் பார்த்திருப்பதால் இது நன்கு அறியப்பட்ட, நன்கு தட்டி கொட்டி, தகடாக்க வல்ல ஒரு மாழையாகும் வெள்ளியின் +1 மற்றும் +2 சேர்மங்கள்: வெள்ளியின் சேர்மங்களில் +1 அதிகம் உள்ளது.ஒரு சில கலவைகள் +2 நிலையில் உள்ளது எனினும் இவை மிகுந்த விஷத்தன்மை வாய்ந்ததாகும் மேலும் அவை மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன. வெள்ளியின் சேர்மங்கள், பழுப்பு கருப்பு, மஞ்சள், சாம்பல், அல்லது நிறமற்றதாக இருக்கலாம்.பொதுவாக வெள்ளி சேர்மங்கள் கிருமிநாசினிகளாக உள்ளன. வெள்ளி (|) சேர்மங்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன.அவை மிகவும் விலை உயர்ந்தவை.அவை வெள்ளி (||) சேர்மங்களும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற முகவர்களாகும் மற்றும் அரிதானவை ஆகும். வெள்ளி (||) ஃப்ளோரைடு, வெள்ளை அல்லது சாம்பல் நிற மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற முகவராகும். வெள்ளி தனிமம் செம்பு, தங்கம், துத்தநாகம் போன்ற தனிமங்களுடன் சேர்ந்து உலோகக் கலைவைகளை உருவாக்குகிறது. பூமியின் மேற்பரப்பில் வெள்ளி ஒரு லட்சத்திற்கு 0.08 பாகங்களாகக் காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட பாதரசத்தின் அளவைப் போலவே உள்ளது. பெரும்பாலும் சல்பைட் தாதுக்களில் வெள்ளி காணப்படுகிறது. அகாண்டைட்டு மற்றும் அர்ச்செண்டைட்டு போன்றவை முக்கியமான வெள்ளியின் தாதுக்களாகும். இயற்கையாக வெள்ளி தங்கத்துடன் உலோகக்கலவையாகவும் மற்றும் ஆர்சனிக், கந்தகம், அந்திமனி அல்லது குளோரின் போன்றவற்றுடன் கலந்த தாதுப்பொருளாகவும் கிடைக்கின்றது. அர்சென்டைட், குளொரார்கைரைட் மற்றும் பைரார்கைரைட் போன்றவை வெள்ளியின் தாதுக்கள். வெள்ளி சேர்மங்கள் பல கிருமிநாசினிகளாக உள்ளன. இது பாக்டீரியா கொல்லவும் மற்றும் மற்ற சில பயனுகாவும் பயன்படுகிறது. இது மின்சேமிப்பு களங்களில் வெள்ளி ஆக்சைடாக பயன்படுத்தப்படுகிறது.அவைகள் புகைப்படம் எடுக்கும் இழைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் ஆடையில் வாசனை குறைக்க பயன்படுகிறது. சில வெள்ளி கலவைகள் தீக்காயங்கள் ஆற உதவும் என்று கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இயற்கையில் தனியாகவும் ஆர்செண்ட்டைட், குளோரார்கைரைட் ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக மின்கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் கொண்ட தனிமம் (தனிம மாழை). செப்பு, தங்கம், ஈயம், துத்தநாகம் முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது. வெள்ளியினால் மனிதர்களுக்கு ஒரு பெரிய ஆபத்து ஏதும் இல்லை.எனினும் வெள்ளி கலவைகள் நச்சு தன்மை வாய்ந்தது.இதனால் பாதிக்கப்பட்டவரின் தோல் நீல நிறமாக மாறும்.ஆனால் கூழ்மவெள்ளி, மிகக்குறைந்த அளவில் ஒரு பொதுவான ஹோமியோபதி மருந்தாக பயன்படுகிறது. வெள்ளி உண்மையில் தங்கத்தை விட அதிக பயன்கொண்டதாகும். மேலும் 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோண்டி எடுக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே உலகில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெள்ளி வேகமாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. வெள்ளி விற்கும் நிறுவனங்களிடம் இருந்து அதை பயன் படுத்தும் நிறுவனங்கள் அதன் விலைகளை செயற்கையாக குறைந்து பெறுகிறது. இதுவே மறைவற்ற குறைவான விற்பனை என அழைக்கப்படுகிறது. உலகின் வெள்ளி சேமிக்கப்படும் அனைத்து வெள்ளியும் காலியான பின் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கள் பங்கு வெள்ளியை கேட்க தொடங்கும் போது வெள்ளி விலை மிக அதிகமாக உயரும். வெள்ளியின் விலை ஜூன் 2010 ல் அவுன்ஸ் ஒன்றிற்கு 18 அமெரிக்க டாலர்கள் வரை ஆகும். வெள்ளியின் விலை டிசம்பர் 2010 ல் அவுன்ஸ் ஒன்றிற்கு 28 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது. 99.9% தூய்மையான வெள்ளி தனிமம் வர்த்தக ரீதியாகக் கிடைக்கிரது. 2014 ஆம் ஆண்டில் மெக்சிகோ உலக வெள்ளி தனிமம் உற்பத்தியில் 5000 டன் வெள்ளியை உற்பத்தி செய்து முதலிடம் பிடித்தது. இந்நாட்டைத் தொடர்ந்து சீனா 4060 டன்களும் பெரு 3780 டன்களும் உற்பத்தி செய்தன . http://www.britannica.com/EBchecked/topic/544756/silver-Ag திருக்கூடலூர் திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த கோயிலுக்கு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆறு கிமீ தொலைவில் அய்யம்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அதே பெயர் தான். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும். தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. நந்தக முனிவரின் மகளான உஷை, தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் 'கூடலூர்' என்ற பெயர் பெற்றதாகவும் மற்றொரு பழங்கதை சொல்கிறது. காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது. இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார். (நாலாயிரத்திவ்ய பிரபந்தம்‎ - பெரிய திருமொழி (1358-67) பாசுரங்கள்) எஸ். புண்ணியமூர்த்தி எஸ். புண்ணியமூர்த்தி (இறப்பு: ஏப்ரல் 15, 2006) இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளருமாவார். தனது திறமையினால் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றார். வானொலி அஞ்சல், நேர்முக வர்ணனையில் புகழ் பெற்றவர். புண்ணியமூர்த்தி யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்றுறை, கரம்பொன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை வானொலியில் 1952 சூலை 17 இல் பகுதிநேர அறிவிப்பாளராக சேர்ந்து கொண்டார். பின்னர் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டார். ஓர் அரச திணைக்களமாக விருந்த இலங்கை வானொலி 1967 இல் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்ட பின்னர், முதலாம் தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1971 இல் செய்திப் பிரிவு மறுசீரமைக்கப்பட்ட சமயம் தமிழ்ப் பகுதி தனிப்பகுதியாக்கப்பட்டது. இப்பகுதியின் முதலாவது தலைவராக புண்ணியமூர்த்தி பதவியுயர்வு பெற்றார். அவர் 1987 இல் ஓய்வுபெறும்வரை இப்பதவியை வகித்து வந்தார். கண்டதும் கேட்டதும் செய்திச்சுருள், வளரும் பயிர், எமது அதிதி, சுழலும் ஒலிவாங்கி, நாளைய சந்ததி, இசைச் சங்கமம், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். புண்ணியமூர்த்தி மேற்கு `ஜேர்மன் அரசின் புலமைப்பரிசில் பெற்று 1973 இல் செருமனி சென்று ஒலிபரப்புத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இதுதவிர, 1975 இல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வானொலியின் வகிபாகம்' என்பது பற்றிய ஒருமாத கால கருத்தரங்கிலும் அவர் பங்குபற்றினார். புண்ணியமூர்த்தி 1974 இல் இலண்டன் பி.பி.சி. சென்று செய்தித் துறையில் ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சியும் பெற்றார். 1981 ஆம் ஆண்டில் புதுடில்லியில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிராந்திய மாநாட்டில் இலங்கையிலிருந்து அறிக்கை செய்வதற்கு அங்கு சென்ற குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். புண்ணியமூர்த்திக்கு கனடாவில் ரொரன்டோ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற `தமிழர் தகவல்' மாதாந்த சஞ்சிகையின் 15 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் "நான்கு தசாப்த வானலை வித்தகர்" என்ற விருது வழங்கப்பட்டது அவருக்குக் கிடைத்த பெருங்கௌரவமாகும் தனது வானொலி அனுபவங்களை " "செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி"" என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். பந்துப் பரிமாற்றம் துடுப்பாட்டத்தில் ஒரு பந்துப் பரிமாற்றம் (ஓவர், "over") என்பது ஆறு அடுத்தடுத்த பந்து வீசல்களைக் குறிக்கும். வழக்கமாக ஒரு பந்து வீச்சாளரே ஒரு முழுமையான பந்துப் பரிமாற்றத்தில் பந்து வீசுவார். எனினும், அந்தப் பந்து வீச்சாளர் அந்தப் பரிமாற்றத்தில் காயமடைந்து பந்து வீச முடியாமல் போகுமிடத்து அவ்வணியின் வேறு ஒருவர் பந்து வீச அனுமதிக்கப்படுவார். 1795 1795 (MDCCXCV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது. பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள் பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள் (Burnside-Frobenius Lemma) என்பது கணிதத்தில் சேர்வியலில் உள்ள ஓர் அடிப்படையான கொற்கோள். இக் கொற்கோளை விளங்கிக்கொள்ள சில அடிப்படையான கேள்விகளைக் கேட்கலாம். ஒருவர் அணியும் முத்துமாலையில், ஒரு குறிப்பிட்ட எண்ணிகையான பல நிற முத்துக்கள் இருந்தால், இருக்கும் நிறமுத்துக்களை வேறுவேறு அடுக்கில் கோத்து எத்தனை வேறு வேறு மாலைகள் உருவாக்க முடியும்? மாலையின் சுழற்சியால் ஒன்றுக்கொன்றாய் மாற்றக்கூடிய மாலைகள் வேறாகக் கருதப்படுவதில்லை. ஒரு கனசதுரத்தின் பக்கங்களை n நிறங்களால் எத்தனை விதமாக நிறப்படுத்தலாம்? நிறப்படுத்தப்பட்ட கனசதுரங்கள் சுழற்சியாலோ அல்லது எதிர்வுகளினாலோ அல்லது இவைகளின் கலவையினாலோ மாற்றக்கூடியதாக இருந்தால அவை வேறாகக் கருதப்படுவதில்லை. ஆறு கரிம அணுக்கள் கொண்ட பென்சீன் மூலக்கூறுகள் எத்தனை இருக்கமுடியும்? சமச்சீர் இருக்குமிடத்திலெல்லாம் இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளை சேர்வியலில் அலசி ஆராய்ந்து பல வழிமுறைகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அம்முறைகளுக்கெல்லாம் தலையாயத் தேற்றமாக இருந்தது குலக்கோட்பாட்டில் ஃப்ரொபீனியஸ் (1849 - 1917) கண்டுபிடித்த ஒரு சுவையான தேற்றம். இது முதன் முதலில் பர்ன்ஸைட் (1852 - 1927) எழுதிய கணித நூலில் பிரபலமானது. இதனால் இதற்கு பர்ன்ஸைட் கொற்கோள் என்றோ பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள் (Burnside-Frobenius Lemma) என்றோ பெயர் வழங்குகிறது. formula_1 என்றொரு குலத்தை எடுத்துக்கொள்வோம். இது formula_2 என்றொரு கணத்தின்மேல் வரிசைமாற்றுக்குலமாக செயல்படுகிறதாகக் கொள்வோம். அதாவது formula_1 யிலுள்ள ஒவ்வொரு formula_4 யும் formula_2 இலுள்ள ஒவ்வொரு formula_6 ஐ formula_1 யிலுள்ள formula_8 என்றொரு உறுப்புக்கு எடுத்துச்செல்கிறது என்று பொருள். இதை வைத்துக்கோண்டு formula_2 இல் உள்ள உறுப்புகளுக்குள் ஒரு உறவு (' formula_10 ') ஏற்படுத்தமுடியும். அதாவது, இந்த உறவு ஒரு சமான உறவு. அதனால் formula_2 பற்பல சமானப் பகுதிகளாகப்பிரிகிறது. இச்சமானப்பகுதிகளை formula_1-சுற்றுப்பாதைகள் என்றோ அல்லது (formula_1 என்ற குலத்தைச் சுட்டிக்காட்ட அவசியமில்லாதபோது) சுற்றுப்பாதைகள் (Orbits) என்று மட்டுமோ அழைப்போம். ஒவ்வொரு formula_1-சுற்றுப்பாதையையும் என்று குறிக்கலாம். formula_2 இலுள்ள ஒவ்வொரு formula_6 க்கும் formula_24 என்ற கணம் formula_6 இன் நிலையாக்கி (Stabilizer) எனப்பெயர் பெறும். அதாவது அதிலுள்ள எல்லா formula_4 யும் formula_6 ஐ நிலைபெறுத்துகிறது. இது formula_1 இன் ஒரு உட்கணம்தான் என்று உடனே நிறுவிவிடலாம். இதை formula_29 என்றும் குறிப்பதுண்டு. இதிலுள்ள formula_4 க்களின் எண்ணிக்கையை formula_31 என்ற குறியீட்டால் குறிப்போம். formula_1 இலுள்ள ஒவ்வொரு formula_4 க்கும் formula_34 என்ற கணம் formula_4 இனால் மாற்றமுறாத கணம் எனப்படும். இதில் உள்ள ஒவ்வொரு formula_6 ம் formula_4 க்கு ஒரு மாறாமி (Invariance). formula_4 இனுடைய மாறாமிகளின் எண்ணிக்கை formula_39 இதை formula_40 என்ற குறியீட்டால் குறிப்போம். G என்பது வெற்றில்லாத கணம் S ஒன்றின்மேல் வரிசைமாற்றுக் குலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு முடிவுறு குலம் என்றால், G-சுற்றுப்பாதைகளின் எண்ணிக்கை = கீழேயுள்ள formula_42 என்ற கணத்தைப்பார். formula_42 யின் எண்ணளவையை இரண்டுவிதமாக எண்ணலாம். முதலில் formula_1 இலுள்ள ஒவ்வொரு formula_4 க்கும் formula_47 என்ற பண்புடன் கூடிய formula_6 ஐக்கணக்கிடு. இவ்வெண்ணிக்கை = formula_49 இதனால் இரண்டாவதாக formula_2 இலுள்ள ஒவ்வொரு formula_6 க்கும் formula_53 என்ற பண்புடன் கூடிய formula_4 ஐக் கணக்கிடு. இவ்வெண்ணிக்கை = formula_55 இதனால் இவ்விரண்டும் சமமானதால், நாம் (*) ஐ நிறுவிக் காட்டுவதற்குப் பதில் formula_57 என்று காண்பித்துவிட்டால் போதும்; பர்ன்ஸைட் கொற்கோள் நிறுவப்பட்டதாய்விடும். formula_58 என்றொரு formula_1-சுற்றுப்பாதையை எடுத்துக் கொள்வோம். இதில் formula_60 உறுப்புகள் இருப்பதாகவும் கொள்வோம். அவைகளை formula_61 என்று பெயரிடு. அவைகளில் ஏதாவதொன்றை formula_6 என்ற குறியீட்டால் குறிப்போம். formula_63 . formula_64 இல் formula_4 என்றொரு உறுப்பு formula_66 என்ற பண்புடன் உள்ளது. இந்த formula_6 இனுடைய நிலையாக்கி formula_1 இல் இருக்கும். அதில் formula_69 உறுப்புகள் இருப்பதாகக் கொண்டால், அவைகளை இப்பொழுது, formula_71 என்ற கணத்தைப்பார். இதிலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறான உறுப்பு. ஏனென்றால், formula_72 யாக இருந்தால், formula_73 இரண்டும் ஒன்றாகிவிடும். formula_74 என்பது formula_75 ஐ formula_6 க்கே கொண்டு செல்கிறது. formula_4 என்பது formula_75 ஐ formula_79 க்குக்கொண்டு செல்கிறது. ஆக formula_80 என்பது formula_81 ஐ formula_79 க்குக்கொண்டு செல்கிறது. அதாவது, formula_83 எல்லாம் formula_6 ஐ formula_79 க்குக்கொண்டு செல்கிறது. formula_6 ஐ formula_79 க்கு இழுத்துச் செல்லும் formula_88 இன் உறுப்புகள் இவ்வளவேதான்; ஏனென்றால், formula_89 என்றொரு உறுப்பு formula_1 இல் இருந்துகொண்டு formula_6 ஐ formula_79 க்கு இழுத்துச் செல்லுமானால், அதை formula_93 என்று எழுதலாம். இங்கு formula_94 என்பது formula_6 ஐ நிலைபெறச் செய்யும். அதனால் அது formula_74 இல் ஏதாவதொன்றே.அதனால் formula_89 ம் formula_80 என்ற உருவத்தில்தான் இருக்கிறது. அதாவது அது B இல் ஓருறுப்பு. ஆக, B இல் உள்ள formula_31 உறுப்புகள்தான் formula_6 ஐ formula_79 க்குக்கொண்டு செல்பவை. மேலேயுள்ள வாதத்தைல் formula_79 இன் இடத்தில், formula_103 ஆகியவற்றில் எதையும் சொல்லியிருக்கலாம். ஆகையால், G இல், formula_6 ஐ formula_79 க்குக்கொண்டு செல்லும் உறுப்புகளின் எண்ணிக்கை formula_31 ; formula_6 ஐ formula_108 க்குக்கொண்டு செல்லும் உறுப்புகளின் எண்ணிக்கை formula_31 ; formula_6 ஐ formula_111 க்குக்கொண்டு செல்லும் உறுப்புகளின் எண்ணிக்கை formula_31 ; formula_1 இன் உறுப்புகள் formula_6 ஐ வேறு எதற்கும் கொண்டு செல்ல முடியாது; ஏனென்றால் formula_115-சுற்றுப் பாதை formula_116 ஆகையால், formula_117 இதையே வேறுவிதமாகச் சொன்னால், formula_6 இன் சமானப் பகுதி formula_58 இல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை = k = formula_121 formula_122-சுற்றுப்பாதைகளின் எண்ணிக்கை formula_123 யானால், formula_124 இதிலிருந்து formula_57. Q.E.D. பயன்பாடுகளுக்கு தனிக்கட்டுரைகளைப்பார்க்கவும்: ஜோக்கிம் பெர்னாண்டோ ஜோக்கிம் பெர்னாண்டோ கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை வானொலியில் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். வர்த்தகசேவையில் நடிகராக தனது வானொலிப்பிரவேசத்தை 1959ம் ஆண்டில் ஆரம்பித்தார். கொட்டாஞ்சேனை சாந்த. பெனடிக்ற் கல்லூரியில் படித்தவர். பல வானொலி நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். முழுநேர அறிவிப்பாளராக வருவதற்கு முதல் இலங்கை வங்கியில் பணியாற்றியவர். கே. எம். வாசகர், ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோரின் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ஸ்மார்த்தம் ஸ்மார்த்தம் என்பது இந்துசமயத்தின் ஒரு பிரிவாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் விருப்ப(இஷ்ட) தெய்வங்களாக வணங்குகின்றனர். ஸ்மார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து. தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும். முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டியதுதான். முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும். ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம். இவை தவிர அமாவாசைத் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வதும் இவர்கள் வழக்கம். வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி , புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் 1. ஸத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி, Merging with Siva, Hinduism's Contemprory MetaPhysics, Himalayan Academy, 1999 மயில்வாகனம் சர்வானந்தா மயில்வாகனம் சர்வானந்தா இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களில் ஒருவர். வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் அவ்வப்போது நடித்து வருபவர். இலங்கை வானொலி வர்த்தகசேவையின் முன்னோடி என்று கருதப்படும் எஸ். பி. மயில்வாகனனின் உறவினர் அல்லர். கொழும்பிலிருந்து வெளிவரும் "இருக்கிறம்" சஞ்சிகையில், தொடராக தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களைப் பற்றி எழுதி வருகிறார். காட்மியம் காட்மியம் "(Cadmium)" என்பது Cd என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 48 ஆகும். நீலம் கலந்த வெண்மை நிறமுடைய மென்மையான இவ்வுலோகம் 12 ஆவது தொகுதியில் காணப்படும் நிலைப்புத்தன்மை கொண்ட மற்ற இரண்டு தனிமங்களான துத்தநாகம், பாதரசம் போன்ற தனிமங்களின் வேதியியல் பண்புகளை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது. துத்தநாகம் போlல காட்மியமும் இதன் சேர்மங்கள் பெரும்பாலானவற்றில் ஆக்சிசனேற்ற நிலை +2 இல் உள்ளது. மற்றும் பாதரசம் போல 3 முதல் 11 வரையான குழுக்களில் உள்ள இடைநிலைத் தனிமங்களைக் காட்டிலும் இது குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. காட்மியம் மற்றும் குழு 12 இல் உள்ள அதன் பிற இணைத்தனிமங்களும் பெரும்பாலும் இடைநிலைத் தனிமங்களாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை d அல்லது f எலக்ட்ரான் கூட்டில் பகுதியாக நிரம்பிய எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதில்லை. பூமியின் மேற்புறத்தில் காட்மியத்தின் சராசரி செறிவு மில்லியனுக்கு 0.1 மற்றும் 0.5 பகுதிகள் ஆக உள்ளது. 1817 ஆம் ஆண்டு செருமனியில் சிட்ரோமேயர் மற்றும் எர்மான் ஆகியோரால் துத்தநாக கார்பனேட்டில் உள்ள ஒரு மாசாகக் கண்டறியப்பட்டது. பெரும்பாலான துத்தநாக தாதுகளில் காட்மியம் ஒரு சிறிய பகுதியாகத் தோன்றுகிறது. துத்தநாக உற்பத்தியின் போது ஓர் உடன் விளைபொருளாக காட்மியமும் உருவாகிறது. எஃகின் மீது முலாம் பூசுகையில் அசிப்புத் தடுப்பியாக காட்மியம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வண்ண கண்ணாடி, மற்றும் நெகிழி உறுதிப்படுத்துதலில் காட்மியம் சேர்மங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, நச்சுத்தன்மையின் காரணமாக காட்மியத்தின் பயன்பாடு பொதுவாக குறைந்து வருகிறது. அபாயகரமான பொருட்களுக்கான ஐரோப்பிய கட்டுப்பாட்டு அமைப்பு காட்மியத்தை அபாயகரமான பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. நிக்கல்-காட்மியம் மின்கலன்கள் தற்காலத்தில் நிக்கல்-உலோக ஐதரைடு மற்றும் இலித்தியம் -இரும்பு மின்கலன்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன. காட்மியம் தெலூரைடு சூரிய மின் பலகைகளில் பயன்படுவது தற்போதைய புதிய பயன்பாடாகும். உயிரினங்களில் காட்மியத்தின் பயன்பாடு ஏதும் அறியப்படவில்லை என்றாலும், காடிமியம் சார்ந்த கார்போனிக் அன் ஐதரேசு நொதியாக கடல்வாழ் இருகலப்பாசிகளில் காணப்படுகிறது. காட்மியம் என்பது ஒரு மென்மையான தகடாகவும் கம்பியாகவும் மாற்றிக் கொள்ளக்கூடிய நீல நிறம் கொண்ட இரட்டை இணைதிற உலோகமாகும். காட்மியம் பல விதங்களில் துத்தநாகத்தை ஒத்திருக்கிறது, ஆனால் அணைவுச் சேர்மங்களை இது உருவாக்குகிறது . மற்ற உலோகங்களைப் போலல்லாமல் காட்மியம் அரிப்பை எதிர்க்கும் உலோகமாக பயன்படுகிறது. பிற உலோகங்கள் மீது ஒரு பாதுகாப்புத் தகடாகப் பயன்படுத்தப்படுகிறது. மொத்த உலோகமாக, காட்மியம் தண்ணீரில் கரைவதில்லை. எளிதில் தீப்பற்றி எரியக்கூடியதும் அல்ல. இருப்பினும், இதன் தூள் வடிவம் எரிந்து நச்சு வாயுக்களை வெளி விடுகிறது காட்மியம் பொதுவாக +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்தினாலும் +1 என்ற ஆக்சிசனேற்ற நிலையையும் வெளிப்படுத்துகிறது. காட்மியமும் குழு 12 இல் உள்ள அதன் பிற இணைத்தனிமங்களும் தனிமநிலை அல்லது பொதுவான ஆக்சிசனேற்ற நிலையில் d அல்லது f எலக்ட்ரான் கூட்டில் பகுதியாக நிரம்பிய எலக்ட்ரான்களைப் பெற்றிருக்காததால் பெரும்பாலும் இடைநிலைத் தனிமங்களாகக் கருதப்படுவதில்லை. காட்மியம் காற்றில் எரிந்து படிக உருவமற்ற பழுப்பு நிறமான காட்மியம் ஆக்சைடு (CdO) உருவாகிறது. இச்சேர்மத்தின் படிக வடிவம் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது இதன் நிறம் துத்தநாக ஆக்சைடைப் போல நிற மாற்றமடைகிறது. காட்மியம், ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து காட்மியம் குளோரைடு (CdCl2) ஆகவும், கந்தக அமிலத்தில் கரைந்து காட்மியம் சல்பேட்டு (CdSO4) ஆகவும், நைட்ரிக் அமிலத்தில் கரைந்து காட்மியம் நைட்ரேட்டு (Cd(NO3)2) ஆகவும் உருவாகிறது. காட்மியத்தை காட்மியம் குளோரைடு மற்றும் அலுமினியம் குளோரைடு கலந்த கலவையில் கரைத்தால் Cd22+ நேர்மின் அயனி உருவாகிறது. இதில் காட்மியம் +1 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.இது Hg22+ நேர்மின் அயனி பாதரச(I) குளோரைடில் இருப்பதைப் போன்றது ஆகும் நியூக்ளியோ காரங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றுடன் கூடிய பல காட்மிய அணைவுச் சேர்மங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையாகத் தோன்றும் காட்மியம் 8 ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு கதிரியக்க ஐசோடோப்புகளாகும். மூன்று ஐசோடோப்புகள் சிதைவு அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவற்றை ஆய்வகச் சூழ்நிலையில் அவ்வாறு நிகழவில்லை. 113Cd மற்றும் 116Cd எனப்படும் இரண்டும் இயற்கை கதிரியக்க ஐசோடோப்புகளாகும். 113Cd ஐசோடோப்பு பீட்டா சிதைவு அடைந்து 7.7 × 1015 ஆண்டுகளை அரைவாழ்வுக் காலமாகப் பெற்றுள்ளது. 116Cd ஐசோடோப்பு இரண்டு நியூட்ரினோ இரட்டைப் பீட்டா சிதைவை அடைந்து 2.9 × 1019 ஆண்டுகளை அரைவாழ்வுக் காலமாகப் பெற்றுள்ளது. இரட்டை எலக்ட்ரான் பிடிப்பு தன்மை கொண்ட 106Cd, 108Cd ஐசோடோப்புகள் இரண்டும் இரட்டை பீட்டா சிதைவு கொண்ட 114Cd ஐசோடோப்பும் இதர காட்மியம் ஐசோடோப்புகளாகும். இம்மூன்றின் அரைவாழ்வுக் காலம் மிகக்குறைந்த அளவுகளாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் – 110Cd, 111Cd, மற்றும் 112Cd – ஐசோடோப்புகள் நிலைப்புத் தன்மை கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இயற்கையாகத் தோன்றாத காட்மியத்தின் இதர ஐசோடோப்புகளில் 462.6 நாட்களை அரைவாழ்வுக் காலமாகக் கொண்ட 109Cd ஐசோடோப்பும் 53.46 மணிநேரத்தை அரைவாழ்வுக் காலமாகக் கொண்ட 115Cd ஐசோடோப்பும் மிக அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்புகளாகக் கருதப்படுகின்றன. காட்மியத்தின் இதர கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் 2.5 மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைப் பெற்றவையாக உள்ளன. இவற்றிலும் பல ஐசோடோப்புகள் 5 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைப் பெற்றவையாக உள்ளன. காட்மியத்தின் சிற்றுறுதி ஐசோடோப்புகளாக 8 ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன. 113mCd (t1⁄2 = 14.1 ஆண்டுகள்), 115mCd (t1⁄2 = 44.6 நாட்கள்), மற்றும் 117mCd (t1⁄2 = 3.36 மணிகள்) போன்ற சிற்றுறுதி ஐசோடோப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன அணு நிறை 94.950 u (95Cd) to 131.946 u (132Cd) கொண்ட காட்மியத்தின் ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன. 112 u நிறையை விட குறைவான நிறை கொண்ட ஐசோடோப்புகள் எலக்ட்ரான் பிடிப்பு என்ற முதன்மை சிதைவு நிலையைக் கொண்டுள்ளன. அணு எண் 47 (வெள்ளி) சிதைவு விளைபொருள் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. கன ஐசோடோப்புகள் பீட்டா உமிழ்வு மூலமாக அணு எண் 49 (இண்டியம்) விளைபொருளாக உருவாகிறது . காட்மியத்தின் 113Cd என்ற ஒரு ஐசோடோப்பு அதிக தேர்ந்தெடுக்கும் திறனுடனும் நியூட்ரான்களை ஈர்க்கிறது. அதிக சாத்தியக் கூறுகளுடன் காட்மியம் துண்டிப்பைக் காட்டிலும் குறைவான ஆற்றல் கொண்ட நியூட்ரான்களும் ஈர்க்கப்படலாம். காட்மியம் துண்டிப்பைக் காட்டிலும் அதிகமான ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் கடத்தப்படுகின்றன. 0.5 எலக்ட்ரான் வோல்ட்டு காட்மியம் துண்டிப்பும் அதைவிடக் குறைவான அளவு கொண்ட நியூட்ரான்களும் மெதுவான நியூட்ரான்களாக கருதப்படுகின்றன. இவை வேகமான நியூட்ரான்கள் மற்றும் இடைநிலை நியூட்ரான்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவையாகும் . 0.6 முதல் 10 சூரிய நிறை கொண்ட குறைவு மற்றும் இடைநிலை நிறை கொண்ட விண்மீன்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எசு செயல்முறை மூலம் காட்மியம் உருவாக்கப்படுகிறது. இச்செயல் முறையில் ஒரு வெள்ளி அணு நியூட்ரானை ஈர்த்து பின்னர் பீட்டா சிதைவுக்கு உள்ளாகிறது . காட்மியம் பெரும்பாலும் துத்தநாகம் உள்ள கனிமங்களில் கலந்த வேற்றுப்பொருளாக உள்ளது. எனவே துத்தநாகம் எடுக்கும் தொழில்முறையில் இது துணை விளைபொருளாகப் பெறப்படுகின்றது. துத்தநாக சல்பைடு என்னும் மாழைமண் (கனிமம்) ஆக்ஸிஜனுடன் சேர்த்து சூடு செய்து துத்தநாக சல்பைடுதனை துத்தநாக ஆக்ஸைடு ஆக மாற்றப்படுகின்றது. பிறகு கரிமத்துடன் சேர்த்து உலையில் இட்டாலோ, அல்லது கந்தகக் காடியில் மின்வேதியியல் கரைசல் முறையில் துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. காட்மியத்தை (தூய்மையற்ற) துத்தநாகத்தில் இருந்து எடுக்க, காட்மியம் கலந்த துத்தநாகத்தை வெற்றிடப் படிவு செய்து அதில் இருந்து காட்மியம் பெறப்படுகின்றது. மின்வேதியியல் கரைசல் முறையில், காட்மியம் சல்பேட்டு பிரிவுற்று தங்கி விடுகின்றது. உலகில் பிரித்தெடுக்கும் காட்மியத்தில் முக்கால் பங்கு நிக்கல்-காட்மியம் மின்கலங்கள் செய்வதற்கும், மீதி கால் பங்கு நிறமிகளாக பல்வேறு பூச்சுகளுக்குப் பயன்படுகின்றது. நெகிழிகளில் நிலைப்படுத்திகளாகவும் (stabilizers) பயன்படுகின்றது. பிற பயன்பாடுகள்: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார். இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது. சங்ககாலத்தில் மோகூர் நம்மாழ்வார் பாசுரம் இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது. கருதுகோள் கருதுகோள் ("hypothesis") என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் ஊகம் ஆகும். இது, ஒரு தோற்றப்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். அறிவியல் வழிமுறைகளின்படி ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னைய கவனிப்புகளிலிருந்தோ இருந்தோ, அறிவியற் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில், கருதுகோள் என்பது ஆய்வுசெய்து நிறுவ வேண்டி எடுத்துக்கொண்ட ஒரு எண்ணக்கருவாகவே கருதப்படுகிறது. ஒரு கருதுகோள் பற்றிய முறையான மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்கு, அதனை முன்வைத்தவர் அதன் அடிப்படைகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். ஒரு கருதுகோளை உண்மை என நிறுவ அல்லது பிழை என மறுக்க கூடுதல் வேலை செய்யவேண்டும். சிட்டகோனிய மொழி சிட்டகோனிய மொழி வங்காளதேசத்தின் சிட்டகொங்கிலும், அந் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகளிலும் இம் மொழி பேசப்படுகிறது. இது வங்காள மொழிக்கு மிகவும் நெருங்கியது எனினும், மொழியியலாளர்கள் இதை வங்காளத்தின் ஒரு கிளைமொழியாக அன்றி ஒரு தனி மொழியாகவே கருதுகின்றனர். வங்காளதேசத்திலும், ஐக்கிய இராச்சியம் உட்பட்ட பல பிற நாடுகளிலும் இம் மொழி பேசுவோர் சிமார் 14 மில்லியன்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிட்டகோனிய மொழி, பரந்த இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைப் பிரிவான, இந்திய-ஆரிய மொழிகளின் கிழக்கத்திய மொழிக்குழுவுள் அடங்கிய, வங்காள-அஸ்ஸாமிய துணைப் பிரிவைச் சேர்ந்ததாகும். சில்ஹெட்டி மொழி, வங்காள மொழி, அஸ்ஸாமிய மொழி, ஒரியா, பீஹாரி மொழி போன்றவற்றுடன் சிட்டகோனிய மொழி ஒரு பொது மூலத்திலிருந்து தோன்றியதாகும். வங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் சிட்டகாங் பிரிவு முழுவதிலும் பரவலாகப் பேசப்படும் இம்மொழி, சிட்டகாங் மாவட்டத்திலும், கொக்ஸ் பசார் மாவட்டத்திலுமே செறிந்து காணப்படுகின்றது. இதற்கு எவ்வித அதிகாரநிலைத் தகுதியும் கிடையாது என்பதுடன், பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுவது இல்லை. பெரும்பாலான சிட்டகோனியர்கள் உட்படப் பலர் இதனை வங்காள மொழியின் ஒரு திருந்தாத வடிவமாகவே கருதி வருவதால், சிட்டகோனியர்களின் கல்வி மொழியாக வங்காள மொழியே இருந்து வருகிறது. சிட்டகோனிய மொழிக்கு ஒரு பொது வடிவம் கிடையாது. இது, கிழக்கு-மேற்காக அமைவிடம் சார்ந்தும், முஸ்லிம், இந்து போன்ற சமயம் சார்ந்தும் உள்ள பல கிளைமொழிகளின் தொடரியமாகவே காணப்படுகிறது. முஸ்லிம், இந்து சமயங்கள் சார்ந்த கிளைமொழிகள் இடையேயான வேற்றுமை சிறப்பாக சொற்கள் தொடர்பானவை. ஆனால், புவியியல் அமைவிடம் சார்ந்த வேறுபாடுகள் சொற்கள் சாந்தவையாக மட்டுமன்றி இலக்கணம் சார்ந்தவையாகவும் உள்ளன. சிட்டகோனிய மொழிக்குத் தனியான எழுத்து வடிவம் கிடையாது. பெரும்பாலான படித்த சிட்டகோனியர்கள், இம் மொழியை வங்காள எழுத்துக்களில் எழுதி வருகிறார்கள். முற்காலத்தில் இம்மொழி அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டு வந்தது. சிட்டகோனிய மொழியின் ரொஹிங்யா கிளைமொழி சில சமயங்களில் ரோம எழுத்துக்களிலும் எழுதப்படுவது உண்டு. தாய்வான் தாய்வான் ("Taiwan", (தாய்வானிய மொழி: Tâi-oân) கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். "தாய்வான்" என்பது சீனக் குடியரசு நிர்வகிக்கும் பகுதிகளையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கமாகும். தீவுக் கூட்டங்களான தாய்வான் மற்றும் பெங்கு (Penghu) (தாய்பெய், காவோசியுங் மாநகராட்சிகள் தவிர்த்து) ஆகியன சீனக் குடியரசின் தாய்வான் மாகாணம் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. தாய்வான் தீவு, கிழக்காசியாவில் சீனாவின் தென்கிழக்கே, ஜப்பானின் முக்கிய தீஇவுகளுக்கு தென்மேற்கே, பிலிப்பீன்சுக்கு வட-வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. தாய்வான் போர்மோசா (Formosa) எனவும் அழைக்கப்படுறது. போர்மோசா என்பது போர்த்துகீச மொழியில் "அழகான (தீவு)" எனப் பொருள்படும். இது பசிபிக் கடலின் கிழக்கே, தென் சீனக் கடல் மற்றும் லூசோன் நீரிணை ஆகியவற்றுக்குத் தெற்கே, தாய்வான் நீரிணைக்கு மேற்கே, கிழக்கு சீனக் கடலுக்கு வடக்கேஎயும் அமைந்துள்ளது. இத்தீவு 394 கிமீ நீளமும் 144 கிமீ அகலமும் கொண்டது. தாய்வானில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் மனித இனம் தோன்றியதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் தாய்வானின் தற்போதய ஆதிகுடிகளின் முன்னோர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாக அறியப்படுகிறது. இவர்கள் மலே, மற்றும் போலினேசியர்களுடன் தொடர்புடையவர்களெனக் கண்டறியப்பட்டுள்ளது. 1544இல் போர்த்துக்கேயர் இங்கு வந்தனர். ஆயினும் இவர்களுக்கு இங்கு குடியேறும் நோக்கமிருக்கவில்லை. 1624இல் டச்சுக்காரர் வந்திறங்கினர். இவர்கள் பியூஜியன் மற்றும் பெங்கு போன்ற இடங்களிலிருந்து கூலிகளைக் குடியேற்றி தாய்வானை வர்த்தக மையமாக்கினர். உவமையணி தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது. சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: "பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" திருக்குறள் உள்ள ஒரு குறளும் உவமை அணியை எடுத்து காட்டுவன. இத்தொடரில் வரும் உவமை உருபு அற்றே. "இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்" உவமையணி 24 வகைப்படும். அவையாவன: என்பனவாகும். இவையன்றி எனப் பலவகையுண்டு உதாரணம்: "முத்துப்பல், பவளவாய், கயல்விழி பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு." உதாரணம்: "புலிமறவன், குரங்குமனம் செயலை விளக்குவது புலியின் வீரம், தாவும் மனம்." உதாரணம்: "மழைக்கை மழை போல பொழியும்(கொடுக்கும்) கை" உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும். ஒப்பிடக் கொண்டு வந்த பொருள் ஒப்பிட எம்மிடமுள்ள பொருள் ஒப்புவமைப்படுத்துவதற்காக போன்ற என்று பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். உதாரணம்: "போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே" உவம உருபு - தொடர் இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை) சான்று: "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" இங்கு, உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம் உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் உவமை உருபு: போல வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது. உதாரணம்: "கயல்விழி - கயல் போல் விழி இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது." இதே போல இன்னொரு உதாரணம்: "மதிமுகம் - மதி போன்ற முகம் உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது." உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன: 1- எடுத்துக்காட்டு உவமையணி 2- இல்பொருள் உவமையணி இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வதுஇதில் உவைமை உருபுகள் வெளிப்ப்ட வருவதில்லை.உவமை,உவமேயம் தனித்தனித் தொடர்களக வருகின்றன. உதாரணம்: தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு "மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்." "அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்." இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது. உதாரணம்:அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும். நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுற, அழகாக, இயல்பாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளன. ஓரிரு உதாரணங்கள் வருமாறு ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா? பாசிப் பழத்தழகி பக்கத்தில் நான் வந்திடுவேன்.
ஆப்பிரிக்க யானை ஆபிரிக்க யானை தரையில் வாழக்கூடிய விலங்கினங்களில் மிகப் பெரிய விலங்காகும். இது ஆசிய யானைகளைவிட அளவில் பெரியவையாக காணப்படுகின்றன. ஆபிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகளமும் உடையது. ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது. ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின் விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும், ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குலம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல், சிகப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது. சூறாவளி ஜுவான் சூறாவளி ஜுவான் ("Hurricane Juan") என்பது கனடாவின் தெற்குப் பகுதியை செப்டம்பர் 2003இல் தாக்கிய மிகவும் முக்கியமானதொரு சூறாவளி ஆகும். ஜுவான் பெர்முடாவின் தென்கிழக்கில் செப்டம்பர் 24, 2003இல் உருவாகியது. இது பின்னர் படிப்படியாக உக்கிரமடைந்து செப்டம்பர் 27இல் இரண்டாம் வகை செறிவை அடைந்து வடக்கு நோக்கித் தொடர்ந்து நகர்ந்தது. நோவா ஸ்கோஷியாக் கரையை அடையும் போது இதன் கதி மணிக்கு 165 கிமீ ஆகவிருந்தது. ஆனாலும் நீரின் குளிர்மை காரணமாக இதன் செறிவு சிறீது குறைந்திருந்தது. ஹாலிபாக்ஸ் நகராட்சியை இது செப்டம்பர் 29இல் தாக்கும் போது இது இரண்டாம் வகை செறிவாகவே இருந்தது. இப்புயல் மத்திய நோவா ஸ்கோஷியா, ஹாலிபாக்ஸ், மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு ஆகியவற்றில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மொத்தம் $200 மில்லியன் பொருட்சேதத்தை உண்டுபண்ணியது.