பரிமேலழகர் பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். இவை பலரும் அறிந்த செய்தி. அத்துடன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை செய்துள்ளதாக ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது (அது இவருடையதன்று என்றும் சிலர் கூறுவர்). இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர். திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் பிற்பட்டவர் இவரே. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன. காலிங்கர், பரிதியார் காலம் 13ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், இவரது காலம் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளலாம் என்பது பொதுக் கருத்து. இவர் தமது உரையில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார். இவரது காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு என்பதை உறுதி செய்யத் தெளிவான சான்றுகள் உள்ளன. என்று தொண்டை மண்டல சதகம் பரிமேலழகரின் பெருமை கூறுகின்றது. தொண்டை மண்டல சதகம் 41ஆம் செய்யுள் இவர் காஞ்சிபுரத்தவர் என்று குறிப்பிடுகின்றது. அடியார்க்கு நல்லார் அடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார். இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் இசைத்தமிழுக்கு இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது. அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் கொங்கு மண்டலத்தில் உள்ள நிரம்பை என்னும் ஊர் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அரும்பத உரையாசிரியர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தனது உரைக்கு அடிப்படையாகக் கொண்ட உரை ஒன்று உள்ளது. இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனாலும், இவரது உரையில் அரும் பதங்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவரது பெயர் அரும்பத உரையாசிரியர் என வழங்கப்பட்டு வருகிறது. பட்டிமன்றம் தமிழர் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்கங்ளை உடைய கருத்துக்களை விபரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. வன்முறையற்ற, பண்புபட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சுத் திறனையும் முன்வைத்து, சிக்கலான பிரச்சினைகளை அலச பட்டிமன்றங்கள் உதவுகின்றன. பொதுவாக ஆங்கில அல்லது மேற்கத்தைய விவாதங்களின் போது ஒரு விடயத்தை இரு துருவங்களில் இருந்தே வாதிப்பர். அதாவது சார்பு, எதிர்ப்பு. தமிழ்ப்பட்டிமன்றங்களில் மும்முனை அல்லது பல்முனை விவாதங்கள் வழக்கமாக அமைகின்றன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்த் தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இப்பட்டிமன்றங்கள் பண்டிகை நாட்களுக்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப் பெற்று, ஒளிப்பதிவு செய்யப்பட்டு பண்டிகை நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கீழே குறிப்பிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் தலைமையிலான பட்டிமன்றங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம் பெறுகின்றனர். வேகசு நரம்பு அலையு நரம்பு அல்லது வேகசு நரம்பு என்பது மூளையில் இருந்து நேரடியாக புறப்பட்டு வரும் 12 இரட்டை நரம்புகளில், 10 ஆவது இரட்டை நரம்பு ஆகும். இவை குரல்வளை, இதயம், மூச்சுக் குழல், நுரையீரல், வயிறு ஆகிய பல உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கியமான நரம்பு. மூளையில் இருந்து புறப்படும் 12 இரட்டை நரம்புகளில் இந்த வேகசு நரம்புகள் மட்டுமே மூளையின் அடிப்பகுதியாகிய முகுளம் என்னும் இடத்தில் இருந்து புறப்படுவதாகும். முகுளத்தில் இருந்து புறப்பட்டு மண்டையோட்டின் காதுக்கு மேலே உள்ள சென்னி எலும்பின் துளைவழியே கீழிறங்கி வந்து இரைப்பை வரை செல்லும் நரம்புகளாகும். வேகசு என்னும் இடைக்கால இலத்தீன் மொழிச் சொல் "இங்கும் அங்கும் அலைவது" என்னும் பொருள்படுவது. இந்த வேகசு நரம்புகளை நுரையீரல்-வயிற்று நரம்புகள் (neumogastric nerves) என்றும் அழைப்பர். வேகசு நரம்புகள் உடலில் உள்ள பல உறுப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் தேவைப்படும் தானியங்கிக் குறிப்புகளைத் தரும் முக்கிய நரம்புகள் ஆகும். நரம்புத் தானியக்கத்தில் உள்ள மூன்று முக்கியப் பணிகளில் ஒன்றாகிய ஓய்வும்-செரிப்பும் என்று கூறப்படும் துணை ஒத்துழைப்புப் பணிகளில் இதயத்துடிப்பை மெதுவாக்குவது போன்ற ஆற்றல் சேமிக்கும் பணிகளுக்கு உதவும் குறிப்பலைகளைத் தாங்கிச் செல்வது இந்த வேகசு நரம்புகளில் பணிகளில் முக்கியமானதாகும். வேகசு நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும். மலேசியத் தமிழர் மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள். இன்று மலேசியாவில் ஏறத்தாழ 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் உண்டு. எடுத்துககாட்டாக 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் அரசேந்திர சோழனுடைய படையெடுப்பிற்குப் பின் தமிழர்களின் வளர்ச்சி மோலோங்கியது. மேலும் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களும் பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் ஆவார்கள். மலேசியத் தமிழர்களின் பல உரிமைகள் மலேசியாவில் மறுக்கப்படுவதாகக் கூறி மலேசிய இந்திய குடிவழித் தமிழர்கள் இண்ட்ராப் எனும் இயக்கத்தின்வழி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதற்கு பொ.வேதமூர்த்தி, பொ.உதயகுமார் எனும் இரு மனித உரிமை வழக்கறிஞர்கள் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கின்றனர். தற்சமயம் அவ்வியக்கத்தின் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார். சி. ஜெயபாரதி சி. ஜெயபாரதி (2 சூலை 1941 - 2 சூன் 2015) தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவந்த ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரச மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர். மலேசியாவின் தகவல் அமைச்சின் "உதயம்" இதழிலும் பின்னர் "இதயம்" மாத இதழிலும் இவர் பல ஆண்டுகள் சிறப்புக் கட்டுரைகளை எழுதிவந்தவர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களையும் தாம் தேடிப் பெற்ற அரிய சுவடிகளையும் தமது வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறார். உலக அளவில் பரந்து வாழும் தமிழர்களிடையே ஏற்படும் மொழி, இலக்கிய, சமய, சங்ககாலக் கலைகள் பற்றிய சந்தேகங்களுக்கு "அகத்தியர்" என்ற தமது இணைய மடலாடற்குழுவின் மூலம் தெளிவான விளக்கங்களை வழங்கி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் தாம் கற்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களுக்கு விரிவான விளக்கம் தந்து பாராட்டைப் பெற்றவர். மலேசியாவின் மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் 13 இயக்கங்களுடன் இணைந்து செப்டம்பர் 2, 2006 இல் "ஜேபி" என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயபாரதி அவர்களுக்கு சுங்கைப்பட்டாணியில் "கடாரத் தமிழ்ப் பேரறிஞர் எனும் விருது வழங்கிக் கௌரவித்தனர். இடையறாது தனது ஆய்வுத் தளங்களில் இயங்கி வந்த ஜெயபாரதி 02.06.2015 அன்று அதிகாலை மலேசிய மருத்துவமனை ஒன்றில் காலமானார். பலகை விளையாட்டு ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளையாடும் விளையாட்டுக்களை பலகை விளையாட்டு எனலாம். சாதாரண பலகை விளையாட்டுக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் சிறந்த பொழுதுபோக்காகும். பலகை விளையாட்டுக்களான சதுரங்கம், கோ (வெய்கி), ஷோகி முதலியவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளையாடப்படுகின்றன. பலகை விளையாட்டுக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றுள் சில, பலகை விளையாட்டுக்கள் பன்னெடுங்காலமாக விளையாடப்பட்டு வருவதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரிமா (பலகை விளையாட்டு) அரிமா என்பது மதியூகமும் தந்திரமும் கொண்ட இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இவ்விளையாட்டை சதுரங்கத்துக்கு பயன்படுத்தும் காய்களை கொண்டே விளையாடலாம். ஓமர் சயீத், ஒரு செயற்கை அறிவு வல்லுனர், அரிமாவை கண்டுபிடித்தார். சதுரங்கத்தின் முதல் நிலை ஆட்டக்காரர் கேரி கேஸ்பரோவ், சதுரங்கம் விளையாடும் கணிணி ஆழ் நீலத்திடம் தோல்வியடைந்த நிகழ்ச்சியினால் உந்தப்பட்டு, கணிணிகளுக்கு கடினமாகவும், மனிதர்களுக்கு இலகுவாகும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட விளையாட்டே அரிமாவாகும். பாததும்பறை பாததும்பறை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இது நிர்வாகம் சார்ந்த பிரிவாகும். பாததும்பரை என்பது சிங்கள மொழியில் "கீழ் புகைமண்டிய மலை" என பொருள்படும். பாததும்பறை வட்டச் செயலாளர் பிரிவு 52 ஊருழியர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வத்தேகாமாம் இப்பிரிவில் காணப்படும் முக்கிய நகரமாகும். வத்தேகாமம் நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. பாததும்பறை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 600-800 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. 2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: பாததும்பறை பிரதேசசபை மூலம்: சிங்கள இசை சிங்கள இசை பௌத்த, போர்த்துகீச, இந்திய இசைக் கூறுகளை உள்வாங்கிய ஒரு தனித்துவ பண்புடையது. கண்டி மேளம், கிற்ரர் போன்ற இசைக்கருவிகள் சிங்கள இசையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பாப் இசை, பெய்லா () ஆகியவை இலங்கையில் பிரபலமான இசைவடிவங்களாகும். சிங்களவர் சமையல் தமிழர் சமையல் போன்றே சிங்களவர் சமையலும் சோறும் கறிகளையும் முதன்மையாக கொண்ட, கடலுணவு வகைகளையும், சுவைப்பொருட்களையும் அதிகம் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான சமையல் ஆகும். ஆப்ப (அப்பம்), கிரிபத் (பால் சோறு), கெவுங் (பணியாரம்), மாலுமிரிஸ்(கறிமிளகாய், மாலு=கறி, மிரிஸ்=மிளகாய்), கொத்து ரொட்டி, பிட்டு, இடியப்ப (இடியப்பம்), சவ் கந்த (பாயசம்), முங்கற்ர கந்த (பயத்தங் கஞ்சி), கட்ட சம்பல் (தேங்காய்பூச் சேர்க்காத சம்பல் - தேங்காய் பூச் சேர்தால் விரைவில் பழுதடைந்துவிடுவதால் தேங்காய் பூ இல்லாமல் தயாரிக்கப்படுகின்றது), சீனி சம்பல், பருப்புவ (பருப்பு கறி), தெல் தாப்பு அள (எண்ணையில் வதக்கி எடுத்த உருளைக் கிழங்கு), பாண், ரொடி (கள்ளு) ஆகியவை சிங்கள உணவு வகைகளில் முக்கிய சில. பிரம்மம் பிரம்மம் என்ற சொல் இந்து சமயத்தில் முக்காலும் உண்மையான ஒரே மெய்ப்பொருளைக் குறிக்கும். அனைத்து உபநிடதங்களும் இதைப்பற்றியே பேசுகின்றன. வடமொழியிலிருந்து உருவான இச்சொல்லின் சரியான உருப்பெயர்ப்பு: ‘"ப்ரஹ்மம்"’. பிரம்மா, விஷ்ணு, சிவன் எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘பிரம்மா’ வேறு, பிரம்மம் வேறு. எது எது உள்ளதோ அவை யாவற்றிற்கும் பெயரோ, உருவமோ அல்லது இரண்டுமோ இருந்தே தீரும். தங்க ஆபரணங்களெல்லாம் தங்கத்தை ஆதார உண்மையாக உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட அவ்வளவும் மண்ணை அடிப்படை நிலையுண்மையைக் கொண்டன. திரைக்காட்சியில் தோன்றும் காட்சி அனைத்திற்கும் திரையே கடையுண்மை. அப்படியே உலகில் பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படை மெய்ப்பொருள் ஒன்று உள்ளது என்பது எல்லா உபநிடதங்களின் கூற்று. அது ‘பெயர்’ ‘உருவம்’ என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை ‘அது’ (வடமொழியில் ‘தத்’) என்று மட்டுமோ அல்லது ‘பிரம்மம்’ என்றோ உபநிடதங்கள் குறிக்கின்றன. ‘பிரம்மம்’ என்ற சொல் ‘வளர்தல்’ அல்லது ‘அதிகரித்தல்’ என்று பொருள்படும் ‘பிருஹ்’ என்ற வடமொழி வினைச்சொல்லிலிருந்து உருவானது. மாறுதலே இல்லாத கடையுண்மை என்பதை அடிக்கோடிடுவதற்காக அதை ‘பரப்பிரம்மம்’ என்றும் கூறுவதுண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கியதாய் இருக்கும் இப்பரம்பொருளைப் பற்றி ‘இருக்கிறது’ என்பதைத்தவிர வேறு ஒன்றும் பேசிவிடமுடியாது. வெறுமனே இருக்கும், அவ்வளவுதான். அது பேசாது, பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது – இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருளுடைத்த ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்லிவிடுகின்றன. ‘ஸத்’ என்றால் நிலை பெயராத உண்மை. பிரம்மத்தைப்பற்றி நாம் அறிவதாகக் கொள்வதெல்லாம் வேதங்கள் சொல்வதன் மூலமே. இவ்வறிவு ‘மறைமுக’ அறிவாகும். பிரம்மத்தைப் பற்றிய ‘நேர்முக’ அறிவை மெய்ஞ்ஞான உள்ளுணர்வு ஒன்றினாலேயே அடையமுடியும். வேறுவழியால் அடைவதல்ல அவ்வறிவு. அறிவதையெல்லாம் அறியச்செய்வதே அந்த மெய்யுணர்வுதான். அதை ஆங்கிலத்தில் ‘Consciousness’ என்றும் வடமொழியில் ‘ஜீவசைதன்யம்’ என்றும் ‘சித்’ என்றும் சொல்வர். மெய்யுணர்வைத்தாண்டி வேறு ஒரு உணர்வோ அறிவோ இருக்கமுடியாது. மெய்யுணர்வுதான் அத்தனை அறிவையும் அறிகிறது. ‘மெய்யுணர்வின்மை’ என்ற அறிவை அறியவும் மெய்யுணர்வு வேண்டும். இருட்டறையில் விளக்கைப் போட்டவுடன் தெரியும் பொருட்களை மட்டுமல்லாது, ஒரு பொருளும் இல்லாதபோது ஒன்றுமில்லை என்ற வெறுமையையும் காட்டிக்கொடுப்பது ஒரே வெளிச்சம் தான். இருட்டாக இருந்தபோது இருட்டைக் காண்பித்துக் கொடுத்ததும் ஒரு வெளிச்சம் தான். அந்த வெளிச்சம் தான் நம்முள்ளிருக்கும் மெய்யுணர்வு. இதுதான் வெளிச்சம் இருக்கும்போதும் வெளிச்சத்தையே நமக்கு விளக்கிவைக்கிறது. அறியப்படும் பொருள் எதையும் நம் அறிவுக்கு விளங்கச்செய்வது நம் மெய்யுணர்வே. ஆனால் மெய்யுணர்வை நமக்கு விளங்கச் செய்வதற்கு வேறு அறியும் திறனோ கருவியோ வேண்டியதில்லை. மெய்யுணர்வு என்பது அறியப்படும் பொருள் அல்ல. எரியும் விளக்கை விளங்கச் செய்வதற்கு வேறு விளக்கு தேவையில்லை. மேலும் தனக்கு அயலான பொருளை அறியும் அறிவானது மெய்யறிவுமல்ல. இவ்வுலகனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடு தான். எல்லாவற்றிற்கும் முழு முதற்காரணம் அதுவே. விளங்கிடும் பிரம்மத்தைச் சார்ந்துதான் இவ்வவனி யாவும் விளங்குகிறது. ஆனாலும் பிரம்மத்திற்கு காரண-காரியங்கள் சொல்லப்பட வில்லை. அதனாலேயே அது உலகத்தின் இன்ப-துன்பங்களையும், நல்லது-கெட்டதுகளையும் தொடக்க-முடிவுகளையும் தாண்டிய ஒன்று எனப்படுகிறது. அது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்டது. இப்படிச் சொல்வதால் பிரம்மம் [[புத்தம் சொல்லுவதுபோல் சூன்யம் என்றோ அறவே இல்லாத பொருளென்றோ கொள்ளலும் சரியல்ல. பிரம்மத்தை சம்பந்தப்படுத்திப் பேசப்படும் வினைதான் மறுக்கப்பட்டதே யொழிய பிரம்மத்தின் இருப்பு மறுக்கப்படவில்லை. எல்லா உயிர்களுக்குள்ளும் உயிருக்குயிராக இருக்கும் ([[ஆன்மா]] என்று சொல்லப்படும்) மெய்யுணர்வும், எங்கும் நிறைந்து முடிந்த முடிவான உண்மைப்பொருளாக உள்ள பிரம்மமும், ஒன்றே தான் என்பது [[ஆதி சங்கரர்]] போற்றிய அத்வைத வேதாந்தத்தின் முடிவு. குடத்துள்ளிருக்கும் வெட்டவெளிக்கும், குடமே இல்லாமலிருக்கும் பரந்த வெட்டவெளிக்கும் வித்தியாசமே இல்லை. வித்தியாசம் இருப்பதாகச் சொல்லப்பட்டால் அது குடம் என்ற ஒரு செயற்கை வரம்பு, ஒன்றை சிறியது போலவும் மற்றொன்றை பெரியது போலவும் பிரித்துக்காட்டுகிறது என்பதுதான். இது அத்வைதம் சொல்கிற சித்தாந்தம். [[இராமானுஜர்]] போற்றிய [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைத]] வேதாந்தத்தின் முடிவு இதிலிருந்து சிறிது வேறுபடுகிறது. ஒரு வெட்டவெளியை சிறியதாகவும் மற்றொன்றை பெரியதாகவும் பிரித்துக்காட்டும் குடத்தை இல்லை என்று மறுக்கமுடியாது. ஆதலால் ஆன்மாவை பரம்பொருளின் (அ-து பிரம்மத்தின்) ஒர் அம்சம் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறது அந்த சித்தாந்தம். பிரம்மத்திற்கு ஒரு செய்கையோ மாறுதலோ கிடையாது. அது ஏதோ செய்வதுபோல் தோன்றினால் அப்பொழுது அதை ‘பரமாத்மா’ என்கிறோம். [[குருக்ஷேத்திரத்]]தில் [[பகவத் கீதை|கீதை]]யைப்பேசும் பரமாத்மாவை [[கிருஷ்ணபரமாத்மா]] வென்றும், [[கைலாய]]த்தில் செயல்படும்போது அதை [[பரமேசுவரன்]] என்றும், [[வைகுண்ட]]த்தில் செயல்படும்போது அதை [[ஸ்ரீமந்நாராயணன்]] என்றும் [[ஸத்யலோக]]த்தில் படைத்தல் தொழிலில் ஈடுபடும்போது பிரமன் என்றும் சொல்கிறோம். இவர்களெல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகள். இவ்விதம் பரமாத்ம தத்துவத்தை (பரம்பொருளை) முதலில் சொல்லி அதனுடைய வெளிப்பாடுதான் பரமாத்மாவென்று பின்னால் சொல்வது அத்வைத வேதாந்தக் கொள்கை. மாறாக, பரமாத்மாவை அடிப்படையாக வைத்து அவருடைய தத்துவம் தான் பரமாத்ம தத்துவம் என்று சொல்வது விசிஷ்டாத்வைத வேதாந்தக் கொள்கை. பிரம்மம் குணங்களற்றது (‘[[நிர்க்குணம்]]’) என்று அத்வைதம் சொல்கிறது. விசிஷ்டாத்வைதம் இதை மறுக்கிறது. இது தைத்திரீய உபநிடத்திலிலுள்ள ([[தைத்திரீய உபநிஷத்]]) ஒர் முக்கியமான வாக்கியம். ‘பிரம்மம் என்பது உண்மை. பிரம்மம் என்பது மெய்யறிவு. பிரம்மம் என்பது வரையற்றது’. இது அத்வைத மரபில் இவ்வாக்கியத்திற்குச் சொல்லப்படும் பொருள். விசிஷ்டாத்வைத மரபில் உண்மை, அறிவு, வரையற்ற தன்மை இம்மூன்றும் பிரம்மமாகிற பரமாத்மாவின் குணங்கள் என்று கொள்ளப்படுகிறது. இதனாலேயே பிரம்மத்தை ‘[[ஸச்சிதானந்தம்]]’ என்று சொல்வதும் பொருந்தும். அதாவது, ‘ஸத்’ (ஸத்யம் என்ற உண்மை, இருப்பைக் குறிப்பதால்), ‘சித்’ (ஞானம் என்ற மெய்யறிவைக் குறிப்பதால்), மற்றும் ‘ஆனந்தம்’ (வரையற்றது என்றவுடனே குறையற்ற ஆனந்தமும் நிறைபெறுவதால்). “"யேனேதம் ஸர்வம் விஜானாதி தம் கேன விஜாநீயாத்"” [[பிருஹதாரண்யக உபநிஷத்]] 2 – 4 – 14 ‘எதைக்கொண்டு எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக்கொண்டு அறிவது?’ “"அணோரணீயாந் மஹதோ மஹீயாந்"” [[மஹாநாராயணோபநிஷத்]], அனுவாகம் 12 ‘அணுவுக்கணுவானது, பெரிதுக்கும் பெரிதானது’ “"யோ புத்தே: பரதஸ்து ஸ":” பகவத்கீதை: 3 – 43. ‘எது புத்திக்கும் அப்பாற்பட்டதோ'. “"ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோ’யமக்னி: / தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி"”// [[முண்டக உபநிஷத்]] 2 – 2 -10. ‘அங்கு ஆதவனோ சந்திரனோ தாரகைகளோ பிரகாசிப்பதில்லை. மின்னல் கொடிகள் விளங்குவதில்லை. விளங்கிடும் அவனைச்சார்ந்து எல்லாம் விளங்குகின்றன. அவனுடைய் பிரகாசத்தால் இந்த எல்லாமே பிரகாசிக்கின்றன’. “"யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மனஸா ஸஹ"” தைத்திரீயோபநிஷத்: 2 – 1 - 9 ‘(பிரம்மத்தினிடமிருந்து) அதை அடையமுடியாமல் மனதுடன் கூட சொற்கள் பின்வாங்குகின்றன’. வேதாந்த நூல்களில் நான்கு வேதங்களிலுள்ள உபநிஷத்துகளிலிருந்து பிரும்மத்தைப் பற்றிய நான்கு வாக்கியங்கள் கடைந்தெடுத்த ஸாரமாகக் கருதப்படுகின்றன. அவையாவன : “"பிரஞ்ஞானம் பிரம்ம"” ([[ஐதரேய உபநிடதம்]] – [[ரிக் வேதம்]]) ‘மெய்யுணர்வே பிரம்மம்’ “"அஹம் பிரம்ம அஸ்மி"” ([[பிருஹதாரண்யக உபநிடதம்]] - [[யசுர் வேதம்|யஜுர் வேதம்]]) ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’ “"[[தத்துவமஸி என்ற மகாவாக்கியம்|தத் த்வம் அஸி]]"” ([[சாந்தோக்ய உபநிடதம்]] – [[சாம வேதம்|ஸாம வேதம்]]) ‘அதுவாகவே நீ இருக்கிறாய்’. “"அயமாத்மா பிரம்ம"” ([[மாண்டூக்ய உபநிடதம்]] – [[அதர்வ வேதம்]]) ‘இந்த ஆன்மா பிரம்மமே’ பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன. அவைகளில் முக்கியமானவை: ‘பிரம்மஞ்ஞானி’: பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர். இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத-வாக்கியம். ‘பிரம்மஞ்ஞானம்’: பிரம்மத்தைப்பற்றிய நேர்முக அறிவு. ‘பிரம்ம-நிர்வாணம்’: பிரம்மமாகவே ஆகிவிடல். ‘பிரம்மச்சாரி’: பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றே குறியாயிருப்பவன். ‘பிரம்மார்ப்பண்ம்’: பிரம்மத்திற்கு அர்ப்பணம். ‘பிரம்மானுபவம்’: பிரம்மத்தை நேர்முகமாகக்கண்ட அனுபவம். ‘பிரம்மபாவம்’: பிரம்மமாகவே பார்க்கும் நிலை. ‘பிரம்மோபதேசம்’: பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல். ‘[[பிரம்ம சூத்திரம்]]’ : பிரம்மத்தைப்பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல். [[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]] ஆல்பிரட் ஹிட்ச்காக் ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் (ஆகஸ்ட் 13, 1899 - ஏப்ரல் 29. 1980) பிரபல ஆங்கிலத் திரைப்பட இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். சுமார் 60 வருடங்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்ட இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். ஊமைத் திரைப்படங்கள் தொடங்கி, கறுப்பு - வெள்ளை திரைப்படங்கள், வண்ணத் திரைப்படங்கள் என பலவித திரைப்படங்களை உருவாக்கினார். தொடந்து பல வெற்றி படங்களை இயக்கி, தனது காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இயக்குனராகத் திகழ்ந்தார். பல மர்மப் படங்களை இயக்கிய இவர், தனது சிறந்த இயக்கும் பாணிக்காக இன்றும் பேசப்படுகிறார். ஆல்பிரட் ஹிட்ச்காக் 13 ஆகத்து 1899 ஆம் ஆண்டில் லேடன்ஸ்டோன் என்னும் இடத்தில் பிறந்தார் அப்போது லேடன்ஸ்டோன் எசக்ஸ்சின் ஒரு பகுதியாக இருந்தது ஆனால் இப்போது லண்டனின் ஒரு பகுதியாக உள்ளது. இவர் உடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன் வில்லியம் ஹிட்ச்காக் (1862–1914) மற்றும் ஒரு அக்கா எம்மா ஜேன் ஹிட்ச்காக் (1863–1942). ஆல்பிரட் ஹிட்ச்காக் தான் கடைக்குட்டி. தந்தையின் சகோதரரின் பெயர்தான் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறுவனாக இருந்தபோது ஒரு ரோமன் கதோலிக்கராக வளர்க்கப்பட்டார் மற்றும் சாலிசியன் கல்லூரிக்கும் மற்றும் லண்டன் ஸ்டான்போர்டு ஹில்லில் உள்ள புனிதர் இக்னீசியஸ் கல்லூரிக்கும் படிப்பதற்க்காக அனுப்பப்பட்டார். இவரது பெற்றோரின் மூதாதையர் ஆங்கிலேயர் மற்றும் ஐரிஸ் வழிவந்தவர்களாக இருந்தனர். அவரின் குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் காரணமாக பெரும்பாலும் விட்டிற்குள் அடைப்பட்டிருந்தாக விவரிக்கிறார். ஹிட்ச்காக்கின் ஐந்தாம் அகவையில் தனது மோசமான நடத்தைக்கு அவரது தந்தை இவருக்கு பாடம் புகட்ட அவரது கைகளில் ஒரு கடிதம் தந்து அதை அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் கொடுக்கும் படி அனுப்பிவைத்தார். அதில் ஹிட்ச்காக்கிற்கு தண்டனையாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவரை சிறையில் பூட்டி விடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் ஹிட்ச்காக் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் காவல்துறையினர் பற்றிய அச்சம் கொள்ள வைத்தது, மற்றும் அவரது திரைப்படங்களில் இத்தகைய கடுமையான சிகிச்சை மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் அடிக்கடி கருப்பொருள்களாக உள்ளன. ஹிட்ச்காக் அவரது இளம் வயதிலேயே திரைப்பட ரசிகராக இருந்தார், மேலும் 1919 ஆம் ஆண்டில் இருபது வயதில் அவரது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார், ஐலிங்டன் ஸ்டுடியோவில் இருந்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமான Famous Players-Lasky லண்டன் கிளையின் தலைப்பு அட்டை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். 1922 ஆம் ஆண்டில் லண்டனில் Famous Players-Lasky வெளியேற்றப்பட்ட பின்னர், ஹிட்ச்காக் ஸ்டூடியோ ஊழியர்களின் ஒருவராகத் தொடர்ந்து வந்தார். 1923 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "எப்போதும் மனைவியிடம் கூறுங்கள்" என்ற குறும் படத்தில் பணிபுரிந்த மைக்கேல் பால்கன் மற்றும் பிறர் தொடங்கிய ஒரு புதிய நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டார். காலப்போக்கில் பால்கனின் கம்பெனி Gainsborough Pictures என்ற பெயரைப் பெற்றது. ஹிட்ச்காக் தலைப்பு அட்டை வடிவமைப்பாளர் பணியில் இருந்து இயக்குநராக மாற ஐந்தாண்டுகள் ஆனது. மேலும் பால்கன் மற்றும் இயக்குநர் கிரஹாம் கட்ஸ் ஆகியோரிடம் திரைக்கதை, கலை மற்றும் இணை இயக்குநராகத் தொடர்ந்து ஐந்து படங்களுக்குப் பணியாற்றினார். ஹிட்ச்காக் தன்னுடைய பத்தாவது படமான பிளாக்மெயில்க்கான (Blackmail) (1929) வேலைகளைத் துவங்கினார், அதன் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் (BIP) அதன் எல்ஸ்டி வசதிகளை ஒலியுடன் கூடிய படமாக மாற்றுவதற்கும், பிளாக்மெயில் படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் முடிவெடுத்தது. இது முதன் முதலாக வெளிவந்த "பேசும்" (talkie) என்ற திரைப்படம் ஆகும், இது திரைப்பட வரலாற்று ஆசிரியர்களால் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படமாக மேற்கோள் காட்டப்பட்டது, மேலும் பெரும்பாலும் இதுவே முதல் பிரிட்டிஷ் பேசும் திரைப்படமாக கருதப்படுகிறது. " பிளாக்மெயில் " மூலம் ஹிட்ச்காக் தனது படைப்புகளின் வரிசையில் கதையில் மர்மங்கள் நிறைந்த பின்புலமாக பிரபலமான அடையாளச்சின்னங்களைப் பயன்படுத்தும் பாரம்பரிய பாணியை தொடங்கினார், அவரது பெரும்பாலான திரைப்படங்களின் உச்சக்கட்டம் என்று அழைக்கப்படும் கதையின் முடிவு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் குவிமாடம் பகுதியில் தான் எடுக்கப்பட்டது. மேலும் அவரது படங்களில் லண்டன் நகரத்து சுரங்கப்பாதையில் தனியாக புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் ஒரு நீண்ட நெடிய காட்சிகள் இலக்கிய தரத்தில் இருக்கும். அவரது PBS வரிசை படங்களில் "திரைப்படங்களை தாயாரித்த மனிதன் (The Men Who Made The Movies)", ஹிட்ஸ்காக், ஆரம்பகால ஒலிப்பதிவு எப்படி திரைப்படத்தின் ஒரு சிறப்பு அம்சமாக பயன்படுத்தினார் என்று விளக்கினார், கொலையாளி என்று சந்தேகம் கொண்ட பெண்ணுடன் ஒரு உரையாடலில் "கத்தி" என்ற வார்த்தையை வலியுறுத்தினார். இந்த காலகட்டத்தில், ஹிட்ச்காக் BIP நிறுவனம் தயாரித்த இசைத்தொகுப்பின் சில பகுதிகள் இயக்கிக்கொடுத்தார மேலும் இரண்டு குறும் படங்களை இயக்கி ஒரு வார இதழ் வழங்கிய உதவித்தொகையை " ஒரு மீள் விவகாரம் " (1930) என்ற தலைப்பு கொண்ட தொகுப்பிற்க்காக வென்றார். டேவிட் ஓ. செல்ஸ்நிக் உடன் ஏழு வருட ஒப்பந்தத்தில் ஹிட்ச்காக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த் ஒப்பந்தம் மார்ச் 1939 இல் தொடங்கி, 1946 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன் மூலம் ஹிட்ச்காக் ஹாலிவுட்டிற்குள் நுழைந்தார். அவரது திரைப்படங்களில் ஹிட்ச்காக்கின் வர்த்தக முத்திரையாக மாறிய மர்மம் மற்றும் தூக்கு மேடை நகைச்சுவை காட்சிகள் அவரது அமெரிக்க தயாரிப்புகளிலும் தோன்றியது. செல்ஸ்னிக் உடனான பணி ஏற்பாடுகள் சிறந்த விட குறைவாக இருந்தன. செல்ஸ்னிக் தொடர்ந்து நிதி சிக்கல்களை சந்தித்தார், ஹிட்ச்காக் அவரது படங்களில் செல்ஸ்னிக்கின் படைப்புக் கட்டுப்பாட்டோடு அடிக்கடி கோபமடைந்தார். செல்ஸ்நிக் உடனான பணி ஏற்பாடுகள் அவர் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. செல்ஸ்நிக் தொடர்ந்து நிதி சிக்கல்களை ஏற்படுத்தினார், மேலும் செல்ஸ்நிக் ஹிட்ச்காக்கிற்கு அவரது படங்களில் பல படைப்புக் கட்டுப்பாடுகளை ஏற்ப்படுத்தியதால் அடிக்கடி கோபமடைந்தார். ஒரு பிந்தைய நேர்காணலில், ஹிட்ச்காக் குறிப்பிட்டதாவது, "பெரிய தயாரிப்பாளர் ஆவார் ... தயாரிப்பாளர் என்பதைவிட ராஜாவாக இருந்தார், திரு. செல்ஸ்நிக் எப்பொழுதும் என்னைப் பற்றி இப்படிச் சொன்னார், நீங்கள் தான் எனது 'ஒரே நம்பிக்கைகுறிய இயக்குனர்". ஹிட்ச்காக் திரைப்படங்கள் 1940 களில் பல களங்களில் இருந்தது, காதலில் ஆரம்பித்து திரு & திருமதி சுமித் (1941) , நீதிமன்றக் நாடகமான சொர்கத்தின் வழக்கு (1947) வரை, இருண்ட படமான சந்தேகத்தின் நிழல் (1943) வரை மாறுபட்டிருந்தது. செப்டம்பர் 1940 இல், ஹிட்ச்காக் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கார்ன்வால் ராஞ்ச், ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கு அருகே சாண்டா க்ரூஸ் மலைப் பகுதியில் வாங்கினார். பின்னாளில் இந்த பண்ணை வீடு ஹிட்ச்காக்கின் விடுமுறை இல்லமாக மாறியது. 1942 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட பெல் ஏரில் ஒரு ஆங்கில பாணி வீடாக அவர்களின் முதன்மை குடியிருப்பு இருந்தது. ஹிட்ச்காக் தனது முதல் சொந்த தயாரிப்பாகவும் இயக்குனராகவும் உருவாக்கிய படம் சந்தேகம் (1941). இது இங்கிலாந்தில் பின்புலத்தை கொண்டதாக அமைக்கப்பட்டது, மற்றும் ஹிட்ச்காக், ஆங்கிலேய கடற்கரையோர பின்புலத்திற்கு சாண்டா க்ரூஸ், கலிபோர்னியாவின் வட கரையோரத்தைப் பயன்படுத்தினார். இந்தப் படம் கேரி கிராண்ட் ஹிட்ச்காக் உடன் பணிபுரிந்த நான்கு படங்களில் இது முதல் படம், மேலும் கிராண்ட் ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்த அரிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும். ஜோன் போண்டேன் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வென்றார். கிராண்ட் ஒரு முட்டாள்தனமான நேர்மையற்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட-கலைஞராக நடித்துள்ளார், அவரின் செயல்களால் அவரது கூச்ச சுபாவமுள்ள இளம் ஆங்கில மனைவியான போண்டேனுக்கு சந்தேகத்தையும் கவலையும் எழுப்புகின்றது. ஒரு காட்சியில் ஹிட்ச்காக் ஒரு ஒளி விளக்கை பயன்படுத்தி கிராண்ட் அவரது மனைவிக்கு குடிப்பதற்க்காக வழங்கும் விசமுள்ள ஒரு அபாயகரமான பால் தருவதை விவரிப்பார். இந்த திரைப்படம் ஒரு பத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது அதில் திரைப்படத்தில் கிராண்ட் நடிக்கும் பாத்திரம் ஒரு கொலைகாரனாக சித்தரிக்ப்பட்டிருக்கும். அதனால் ஹிட்ச்காக் படத்தின் முடிவை சிறிது மாற்றம் செய்தார். 1943 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1944 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையிலும் ஹிட்ச்காக் இங்கிலாந்திற்குத் திரும்பினார். அங்கு அவர் பிரிட்டிஸ் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்காகப் பிரஞ்சு மொழியில் பான் வாயேஜ் மற்றும் அவென்சர் மால்கே என்ற இரண்டு குறும் படங்களை இயக்கினார். சுதந்திர பிரஞ்சு தேசம் உருவாக்க பிரிட்டிஸ் அமைச்சகத்திற்காக ஹிட்ச்காக் பிரஞ்சு மொழியில் எடுத்த முதலும் கடைசியுமான படம். வழக்கம் போல இந்தப் படத்திலும் அவரது பாணிகளைப் பயன்படுத்திருப்பார். திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அவரது நோக்கத்தை ஹிட்ச்காக் பின்வருமாறு குறிப்பிட்டார்: "யுத்த முயற்சிகளுக்கு ஒரு சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்; மேலும் இராணுவ சேவைக்கு தேவைபடக்கூடிய வயதும் உடல் திறனும் தனக்கு இல்லை போன்ற காரணங்களும் இருந்தன. இதை நான் செய்யாமல் இருந்திருந்தால் மீதமுள்ள வாழ்நாள் முமுவதும் வருத்தப்பட்டிருப்பேன்". முஸ்லிம் தமிழ் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் (குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான தொகுப்புகள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் பெரும்பாலானர்வர்கள் தமிழையே தாய்மொழியாக்கொண்டுள்ளதோடு இவற்றில் பெரும்பாலனாவற்றைப் பாவிக்கின்றனர். இதில் சில வார்த்தைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு உரியவைகளாகும், அதாவது அப்படிப்பட்ட வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். அவை பெரும்பாலும் அரபி மொழி உச்சரிப்பை கொண்டிருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில் பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே தலைகீழாய் கூட இருக்கும். ஸஹீஹ் முஸ்லிம் 6 புத்தகம் அன்புடன் குழுமத்தில் ஒரு உரையாடல் உயிர்ப்போலி உயிர்ப்போலி என்பது பேச்சொலி வகைகளுள் ஒன்றாகும். இது உயிரொலிக்கும், மெய்யொலிக்கும் இடைப்பட்டது எனலாம். நெஞ்சுப் பகுதியிலிருந்து பிறக்கும் காற்று, எவ்வித தடையுமின்றி வாய்வழியாக வெளியேறும்போது உயிரொலிகள் பிறக்கின்றன. வாய்ப்பகுதி ஊடாகக் காற்று வெளியேறும்போது ஏதாவதொரு வகையில் தடைப்பட்டு வெளியேறுமானால் மெய்யொலிகள் உண்டாகின்றன. நாக்கைச் சிறிது மேலுயர்த்திக் காற்றை அதிக தடையின்றி வெளியேற்றும்போது உயிர்ப்போலிகள் உருவாகின்றன. தமிழில் ய், வ் ஆகியன உயிர்ப்போலிகள் ஆகும். இதில் வ், மேற் பல் வரிசையையும், கீழ் உதட்டையும் பயன்படுத்திக் காற்றுப்பாதையைச் சுருக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஆங்கிலத்தில், l, j, w என்பன உயிர்ப்போலிகள் ஆகும். மெய்யொலி பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி ("Consonant") என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் நாடக வரலாறு தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது. இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலில் உள்ள முதலாம் நெறியாகும் இப்பாடல் வரிகள். பண்ணை எனக்குறிக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆகும். உள்ளத்தில் உவகையூட்டுதலின் காரணத்தினால் நாடகம் பண்ணையென அழைக்கப்பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய 'நச்சினார்க்கினியர்' கூறும் பின்வரும் உரை விளக்கத்தினால் 'பண்ணை' என்னும் சொல்லின் மெய்ப்பொருளினை அறியலாம். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்: எனத் தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் 'பாடல் சார்ந்த' எனப் பொருள்படும் 'பாடல் சான்ற' எனக் கூறுகின்றார். இவ்வரியில் குறிப்பிட்டதனை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்ததும் என்பதனை அறியலாம். நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் கூறும் நூற்பாவானது நாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலென விளக்குகின்றது இவ்வரிகள்.மேலும் இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும். இப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி,வடிவம் உணர்த்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும்.இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை:காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை,பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது.இம்மெய்ப்பாடானது கண்ணீர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும்.இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும்,அனைத்து மொழி நாடகம்,திரைப்படம் போன்ற கலை வடிவங்களிலும் கருதப்படுகின்றன.மேலும் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றித் தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகின்றன. அரங்கம் அளக்கப்பயன்படும் கோள்|கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்.அதுவே அக்கால அளவு கோலாகும். எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள். எட்டு தேர்ந்துகள் கொண்டது ஒரு இம்மி. எட்டு இம்மிகள் கொண்டது ஒரு எள். எட்டு எள் கொண்டது ஒரு நெல். எட்டு நெல் கொண்டது ஒரு பெருவிரல். இவ்வகை அளவு முறையினையே பண்டைக்காலத் தமிழர் பயன்படுத்தினர்.சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும். நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்துத் தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர். மூன்று வகையான திரைகள் பண்டைக்காலந்தொட்டு உபயோகத்திலிருந்து வந்தன. அவையாவன: (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 106-113 வரிகள்) எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இடைக்காலத்தில் தோற்றம் பெற்ற 'பெருங்கதை' என்னும் நூலில் அரங்கத்தில் தொங்க விடப்படும் ஏனைய திரைச்சீலைகளைப் பற்றி இவ்வாறு விளக்கம் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என உஞ்சைக்காண்ட வரிகளான 63 - 65 ஆகியனவற்றில் விளக்கங்கள் உள்ளன. திரைச்சீலைகளினைத் தொடர்ந்து பண்டைத்தமிழர் சித்திர விதானம் விரித்து முத்து மாலைகள், பூமாலைகளினை வளைவாகத் தொங்கவிட்டு நாடக அரங்கத்தினை அலங்கரித்தனர். இன்று காணப்படும் நாடக மேடைகளில், காட்சி ஒன்றில் நாடக நடிகர் வீட்டின் 'உள்ளே' செல்லுவதற்கு மேடையின் வலது புறம் மூலமாகவும் 'வெளியே' செல்வதென்றால் மேடையின் இடதுபுறத்திலும் செல்வதுவேண்டும். இவ்வகை விதியினை சிலப்பதிகாரத்தில் உள்ள இப்பாடல் வரிகளில் காணலாம். என வரும் இப்பாடல் வரிகள் குயிலுவர் (யாழ் , குழல், இடக்கினி போன்ற கருவிகளினை வாசிப்பவர்கள்) நிலையிடம் ஒரு கோல் என்ற ஒழுங்குப்படி தொழிலாளர் நின்றனர். அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி வலக்காலை முன் வைத்துப் பொருமுக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள். ஒருமுக எழினியுள்ள இடத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற ஆடி மூத்தவர்; நாட்டியத்திற்குத் துணை செய்பவர், மாதலி வந்தேறியபடியே வலக்காலை முன் வைத்தேறி வந்து நின்றனர்" என இப்பாடல் வரிகள் விளக்குகின்றன. இப்பாடல் வரிகளின் பொருட்களாவன பின்வருமாறு: கூத்துவகை இருவகைப்படும். அவையாவன 1- அகக்கூத்து - அரசருக்காக ஆடப்படும் 'வேத்'தியலை அகக்கூத்து என்றழைப்பர். 2- புறக்கூத்து - பிறருக்காக ஆடும் பொதுவியலை புறக்கூத்து என்றழைப்பர். நாடகம் - நாட்டியம் ஆகிய இரண்டும் 'கூத்து' என்றே அழைக்கவும் பெற்றது. அகக்கூத்து இருவகையினைக் கொண்டிருந்தது சாந்திக்கூத்து மற்றும் விநோதக்கூத்து அவ்விருவகைகளாகும். சாந்திக்கூத்து நால்வகைப்படும் அவையாவன: விநோதக்கூத்து பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது. விநோதக்கூத்து ஏழுவகைப்படும் அவையாவன: வென்றிக் கூத்து - மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உயர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக்கூடிய கூத்தாகும். வசைக்கூத்து, விநோதக்கூத்து ஆகிய கூத்துக்கள் பாட்டின் உறுப்புகளிற்கேற்ப பாவனைகள் எடுத்தாளப்படும் கூத்துக்களாகும். இவ்வுறுப்புகள் விலக்குறுப்புக்களென அழைக்கப்படும். விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும் அவையாவன: 'கடையம், அயிராணி மரக்கால்விந்தை, கந்தன், குடை, துடிமால், அல்லியமல், கும்பம் - சுடர்விழியால் பட்டமதன் பேடுதிருப் பாவை அரண் பாண்டரங்கம் கொட்டியிவை காண்பதினோர் கூத்து' ஆடல்வகை பதினொரு வகையாகும் அவையாவன: இவ்வடல் வகைகள் சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவனவாகும். பிண்டி மற்றும் பிணையல் இரண்டும் புறத்திற்குரியன. எழிற்கை மற்றும் தொழிற்கை இரண்டும் அகத்திற்குரியன மேலும் அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழில் மற்றும் இரட்டையிற் செய்யும் கைத்தொழில் போன்றனவை முரண்படாமல் இருத்தல் அவசியமாகும். ஆடும் பொழுது அபிநயம் இருத்தல் கூடாது, அபிநயிக்கும்பொழுது ஆடல் கூடாது. குரவைக்கூத்திற்கும், வரிக்கூத்திற்கும் உரியபடி கால்களை எடுத்து வைத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரக் கதை நடைபெற்ற காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கி வந்திருப்பது வரலாறு. இசைக்கருவிகளின் பயன்பாடானது இலக்கண எல்லைக்குள் நின்று, ஏந்திழையாளின் இனிய நடன அரங்கேற்றத்திற்கு இனிமையான சத்தத்தினால் இசைக்கப்பெற்றது. அவளும், நாட்டிய இலக்கணங்களை நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் தன் திறமெனப் பின்வரும் பாடல் வரிகள் விளக்குகின்றன. "குழல் வழி நின்றது யாழே; யாழ்வழித் என்ற கபிலரின் அகநாநூற்றுப்பாடல் வரிகளான (82) 9-10 வரிகள் 'மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன்' என விளக்குகின்றது இப்பாடல் வரிகள். திருப்பரங்குன்றத்தில் பாணரும், கூத்தரும், விழாக்கள் கொண்டாடி ஆடல்பாடல் நிகழ்த்தியதற்குச்ச் சான்றாக என்ற பரிபாடல் 16:12 - 13 வரிகளில் ஆடல் அரங்குகள்பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.கடைச்சங்க காலத்தில் தமிழ் நாடகம் செழுமைபெற்று விளங்கியதும் குறிப்பிடத்தக்கது. கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஜந்தாம் நூற்றாண்டின் பின்காஞ்சி|காஞ்சியில் புத்த, சமண சமயங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த 'நாடகக்கலை சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது' என்ற கருத்தினை வலியுறுத்தி நடைபெற்றன. மேலும் இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள், வடமொழி நூல்களினைப் போற்றி பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இக்காலகட்டத்திலேயே தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் அற இலக்கியங்கள், இந்நூல்களிலில் நாடகக்கலையின் சிறப்புகள்பற்றித் தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் செல்வம்|செல்வத்தின் இயல்புகளைக் குறிப்பிடும் பின்வரும் பாடல் வரியானது கூத்தாட்டு அவையினை உவமையாகக் கூறுகின்றார் திருவள்ளுவர். நாடகம் சிற்றின்ப நாட்டத்தினைத் தரும் காரணத்தினால் ஒதுக்கப்பட வேண்டுமெனப் புத்த மதத்தினர் புத்தரின் கொள்கையினைப் பரப்பும் பொழுது மக்களுக்குத் தெரிவித்தனர். புத்தர் தனது சீடர்களிற்கு உரைத்த பத்து விதிகளில் ஒன்றான நுண் கலைகளில் நாட்டம் கொள்ளக் கூடாது என்பதன் காரணத்தினால் புத்த மதத்தினர் இவ்வாறான நாடகக்கலையினை பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு எடுத்துரைத்தனர். மணிமேகலையின் சிறைசெய்காதையின் 43 மற்றும் 65 ஆம் வரிகளில் இவ்வாறு அமைந்துள்ள இப்பாடல் வரிகளானது மருதி என்ற அந்தணர் குலத்தைச் சார்ந்த பெண் காவிரி ஆற்றில் நீராடிவிட்டுச் செல்லும் வழியில் 'ககந்தன்' என்ற அந்நாட்டு இளவரசன் அவளழகில் மையல் கொண்டு காதல் மொழி பேசுகின்றான். மருதியோ அவனிடமிருந்து தப்பியோடி சதுக்கப்பூதம்|சதுக்கப்பூதத்தினிடம் முறையிட்டு நீதி வேண்டுகின்றாள். சதுக்கப்பூதம் அவளைக் குற்றமற்றவள் என்று கூறி அப்பெண்ணிற்குத் தண்டனை எதுவும் வழங்காது நின்ற வேளை மருதியும் 'மழை வளத்தைத் தரும் பத்தினிப் பெண்களாய் இருப்பவர் மாற்றான் மனதிற்கு மயக்கம் தரும் மங்கையராவதில்லை. ஆனால் நானோ இவ்விளவரசன் உள்ளம் புகுந்தேன். கொண்டவனுக்கு யாதொரும் குற்றமும் செய்யவில்லை. நான் செய்ததவறு இன்னதென்று எனக்கே புலப்படவில்லை' எனச் சதுக்கப்பூதத்திடம் எடுத்துரைத்தாள். சதுக்கப்பூதமோ 'பொய்க்கதைகளினையும், நகையை விளைவிக்கும் மொழிகளையும் பிறர் வாய்மொழிகளையும் கேட்டு, நடனம், பாடல், தாளக்கருவிகள் முழங்கும் விழாக்களை விரும்பித் தெய்வங்களை வழிபடும் நியமத்தை மேற்கொண்டிருந்தாய், ஆதலில் உன் ஏவலால் மேகம் மழையைப் பெய்யாது; உத்தம பத்தினிப் பெண்டிரைப் போலப் பிறருடைய மனத்தைச் சுடுந்தன்மையும் உனக்கு இல்லாது போயிற்று' - எனக் கூறியது சதுக்கப்பூதம். இக்கதையின் மூலம் தமிழர் நாடகக்கலை இக்காலகாட்டத்தில் பிரசித்திபெற்றிருக்கவில்லை என்பதனை அறியலாம். கி. பி. ஏழாம் நூற்றாண்டுன் காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைகொண்டிருந்த சமயம் நாடகக்கலை சிறப்புப்பெறாமலேயே இருந்தது. வடமொழியில் பற்றுக்கொண்ட பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வடமொழி நாடகத்தினை எழுதினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கி. பி. 900 முதல் கி. பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கி. பி. 846 ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது. கி. பி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றனவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின. இன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர் கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் 'தெருக்கூத்து' என்ற நாடக வடிவம் தோற்றம் பெற்றது. தெருக்கூத்தென அழைக்கப்பட்டிருந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கோவிந்தசாமி ராவ் விளங்குகின்றார். நாடகத்தின் நேர அமைப்பினை இக்காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவரும் ஆவார் கோவிந்தசாமி ராவ். கி. பி. 1891 ஆம் ஆண்டளவில் பயின்முறை நாடகக்குழுவினைத் தோற்றுவித்த 'நாடகத் தந்தை' என அழைக்கப்பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையினுள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்மூலம் நாடக மேடைகளில் அமைக்கப்பெற்ற கட்டடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் மேலும், கீழும் ஏறுவதும் இறங்குவதுமான புதிய யுக்திகளினை அறிமுகமும் செய்தார் பம்மல் சம்பந்த முதலியார். கி. பி. 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆம் அகவையில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடித்திக்கொண்டு 'தமிழ் நாடகத் தந்தை' 'தமிழ்நாடகத் தலைமையாசிரியர்' போன்ற பட்டங்களினைப் பெற்ற சிறப்பினை உடையவர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள். கி. பி. 1872 ஆம் ஆண்டு பிறந்தவரான சி. கன்னையா தமது பதினேழாவது வயதில் 'இந்து வினோத சபா' என்ற நாடகக் குழுவொன்றில் சேர்ந்து தனது 26 ஆம் வயதில் 'ஸ்ரீகிருஷ்ணவினோத சபா' என்ற நாடகக்குழுவொன்றினை தோற்றுவித்தார். மின் விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய வடிவங்களினை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக அமைப்பாளர் என்ற பெருமையினை உடையவர். மேலும் இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்கினங்களை நடிக்க வைத்துப் புதுமை நிகழ்த்தினார். சி. கன்னையாவிற்கு முற்பட்ட நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்தன இதனை மாற்றி முக்கோண கனபரிமாண அமைப்புமூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும்வேளை அடுத்த அரங்கில் அடுத்த காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கும் இவரது நாடகங்களில். நாடகங்களின் காட்சியமைப்புக்களின் வழிகாட்டி சி. கன்னையா எனப் பலராலும் கருதப்படுகின்றவர். 'நவாப் ராஜமாணிக்கம்' என அழைக்கப்பெற்ற டி. எஸ். இராசமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால் அழைக்கப்பெற்றது. மேலும் இவர் தமது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையினை உடையவர். நவாப் ராஜமாணிக்கத்தின் அனைத்து நாடகங்களும் ஏறத்தாழ எட்டாயிரம் முறைகள் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஜம்பதாண்டு காலம் தமிழ் நாடகக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர்கள் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி,தி. க. சண்முகம், தி. க. பகவதி ஆகிய தி. க. சண்முகம் சகோதரர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் ஜம்பது ஆண்டுகள் தமிழ்மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபொழுது தி. கெ. சண்முகத்தின் இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும், 'நாடகக் காவலர்' என அழைக்கப்பெற்ற ஆர். எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக்கலை மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. கூத்தநூல் கூத்தநூல் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று 'கூத்தநூலார்' என்னும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படும் கூத்தநூல். மற்றொன்று பிற்காலச் சாத்தனார் செய்த கூத்தநூல். தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் தாம் மேற்கோள் காட்டும் பாடல்கள் கூத்தநூலார் பாடல்கள் என்கின்றனர். கூத்த்தூலார் பாடல்களைக் ‘கூத்தநூல்’ பாடல்கள் என நாம் எடுத்துக்கொள்கிறோம். இசைநூலும், கூத்தநூலும் பிறன்கோள் கூறின – இது பேராசிரியர் கூற்று. குழல்வழி யாழ் எழீஇத் தண்ணுமைப் பின்னர் முழவியம்பல் ஆமந்திரிகை – இது அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டு. இவற்றால் நாம் அறிவது ‘கூத்தநூல்’ என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது. ‘பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக’ – இந்த அடி கொண்ட பாடலைக் கூத்தநூலார் பாடியது என ஓரிடத்திலும், மதிவாணனார் நாடகத்தமிழ்நூலில் உள்ளது என மற்றோரிடத்திலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். இதனால் கூத்தநூல் என்பதும், மதிவாணனார் நாடகத்தமிழ் என்பதும் ஒன்று என அறிஞர்கள் கருதுகின்றனர். கூத்தநூல் என்னும் கூத்து இலக்கண நூலை சங்க காலத்தினைத் சேர்ந்தது என்கின்றனர். இதன் ஆசிரியர் சாத்தனார் என்னும் புலவர். இந்தச் சாத்தனார் சங்ககாலச் சாத்தனார் அல்லர். இந்நூலானது பாயிரம், சுவை நூல், தொகை நூல் என் முப்பிரிவுகளைக் கொண்டதாகும். பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது. 'சுவை நூல்' 156 நூற்பாக்களினைக் கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் பரிணாமத்தினைப் பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. கவிஞர். பால பாரதி சு. து. சு. யோகியார் என்பவரால் கூத்தநூல் வெளியிடப்பெற்றது. கடம்பர் கடம்பர் () சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கடம்பின் பெருவாயில் பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் கதம்பர் என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர். கடம்பர் கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன. பாணன் பறையன் துடியன் கடம்பன் எனும் நால் வகை குடிகளில் ஒன்றாக கடம்ப இனம் சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட மக்களோடு போரிட்டான். அவர்களை வென்றான். அவர்களது கடம்பு-மரத்தை வெட்டிக் கொண்டுவந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான். கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு. மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடக சபைகளின் பட்டியல் பண்டைக்காலந்தொட்டு இன்று வரை இருந்துவந்த இருக்கின்ற தமிழ் நாடக சபைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. எல்சிங்கி எல்சிங்கி ("Helsinki", ஹெல்சிங்கி), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி). ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர். ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி "தலைநகர்ப் பகுதி" ஆகும். ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரஷ்யா, எஸ்தோனியா, சுவீடன், சோமாலியா, செர்பியா, சீனா, ஈராக், ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. நோர்டிக் நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" ("Helsingin Sanomat") இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது. ஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ் மேடை நாடகங்களின் பட்டியல் தமிழில் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரை மேடையேற்றப்பட்டு வந்த வருகின்ற மேடை நாடகங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல். சபரி (திரைப்படம்) சபரி மார்ச் 20, 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை சுரேஷ் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களாக விஜயகாந்த், ஜோதிர்மயி, மாளவிகா, மகாதேவன், ராஜஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். காவல்துறையின் தேடுதல் வேட்டை ஒன்றின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகித் தப்பி வரும் குற்றவாளி ஒருவனுக்கு அவசர சிகிச்சை செய்கிறார் மருத்துவர் சபரி ("விஜயகாந்த்"). அதன் பின்னர், குற்றவாளியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறார். இதனால் கோபமுற்ற குற்றவாளியின் கும்பல், சபரியை பழி தீர்க்க ஆயத்தமாகிறது. அதன்பின், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் போரே திரைக்கதையாகும். இப் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார். பாடுவார் முத்தப்பர் பாடுவார் முத்தப்பச் செட்டியார் (1767 - 1829) தமிழ்நாட்டு சிற்றிலக்கியப் புலவர் வரிசையில் புகழ் பெற்றவர். முத்தப்பர், தமிழ் நாடு செட்டி நாட்டில், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைக்கருகில் இருக்கும் கீழச்சிவல்பட்டியில் நகரத்தார் மரபில் அழகப்ப செட்டியார், லெட்சுமி ஆச்சி ஆகியோரின் புதல்வராய் 1767 இல் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்று தமிழின் இலக்கிய இலக்கணங்களை மிதிலைப்பட்டியில் வாழ்ந்த காவிராயர்களிடம் கற்றுணர்ந்தார். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர் குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. இதனால் அவர் "பாடுவார் முத்தப்பர்" என அழைக்கப்பட்டார். செயங்கொண்டார் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை இணைத்துள்ளார். தன்னுடைய நகர வாழ்த்து பனுவலில் நாட்டுக் கோட்டை நகரத்தாரின் பழக்க வழக்கங்களையும், திருமண நெறிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூல் ‘சமூகக் கொடை’ என்ற சிறப்பினைப் பெற்றது. மேலும் நகரத்தார் மரபில் உதித்த முதல் புலவராகக் கருதபட்டவர். "பாட்டறப் புலவர்", "பைந்தமிழ்ப் பாவலர்" என்று புகழப்பட்ட முத்தப்பர் தன்னுடைய இறப்பைக் கூட முன்னரே நயம்படத் தமிழ்க் கவிதையாக்கி வழங்கியிருந்தார். உடாபலாத்தை உடாபலாத்தை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இது நிர்வாகம் சார்ந்த பிரிவாகும். இப்பிரிவில் கம்பளை முக்கிய நகரமாகும். கம்பளை நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி உடாபல்லாத்தை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக உடாபலாத்தை பிரதேச செயலர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்டத் தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை இப்பிரிவின் உடாகப் பாய்கிறது. உடாபலாத்தை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 567- 800 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 20-23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 3000-4500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இலங்கையின் தேயிலை பெருந்தொட்டங்கள் பெருவாரியாக அமைந்துள்ள பகுதிகளுக்கான பிரதான அணுகு பாதையில் மைந்துள்ளப்படியால் இங்கு தேயிலை சார்ந்த வணிகம் முக்கிய இடத்தை பெறுகிறது. நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் நடைபெற்றாலும் , மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. 2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கம்பளை நகரசபை மூலம்: 2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: உடாபாலாத்தை பிரதேசசபை மூலம்: கந்தகம் கந்தகம் () (Sulphur) ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு S. இத்தனிமத்தின் அணு எண் 16. இது புவியில் மிகுந்து கிடைக்கும் சுவையற்ற அலோகம் ஆகும். கந்தகம் இயற்கையில் மஞ்சள் நிறப் படிகமாகக் கிடைக்கிறது. அழுகிய மணம் கொண்டது. இது இயற்கையில் தனிமம் ஆகவும் பல தனிமங்களோடு சேர்வதால் சல்பைடு, சல்பேட்டு கனிமங்களாகவும் கிடைக்கிறது. சாதாரண நிலையில் கந்தகம், S எனும் வேதி வாய்பாட்டையுடைய எண்ணணு வளைய சேர்மத்தை உண்டாக்குகிறது. கந்தகம் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. அமினோ அமிலங்களிலும் இது காணப்படுகிறது. கந்தகம் தனிமமாக எரிமலைக் குழம்பு உறைந்த பாறைகளில் கிடைக்கிறது. வியாழனின் துணைக் கோளான அயோ(Io)வில் எரிமலையிலிருந்து வெளியேறிய கந்தகப் பொருட்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை உறைந்துள்ளது. அதனால் அது பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திட்டுக்களைப் பெற்றுள்ளது. வெப்ப நீர் ஊற்றுக்களில் கந்தகம் சேர்ந்திருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரி வளிமத்தோடு கலந்திருக்கிறது. இது வணிக நோக்கில், உரம், வெடிமருந்து, தீக்குச்சி, பூச்சிக் கொல்லி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. கந்தகம் தனித்தும், சேர்மமாகவும் பூமியில் கிடைப்பதால் இதை வேதித் தனிமமாக அறிவதற்கு வெகு காலம் முன்பே மக்கள் இதைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தனர். கிரேக்கர்களும், ரோமர்களும் கந்தகத்தை புகை உண்டாக்கப் பயன்படுத்தினார்கள். வீட்டில் தொற்று நோய்க் கிருமிகளைக் கொல்ல இப்புகையை எழுப்பினார்கள். கார்பன் போல் வான வேடிக்கைப் பொருட்களில் இதைப் பயன்படுத்தியுள்ளனர். கந்தகம், கரித்தூள், சால்ட்பீட்டர்(Pottasium Nitrate) இவற்றை 1 :2 :6 என்ற விகிதத்தில் கலந்து துப்பாகிகளில் வெடிமருந்தாகப் பயன்படுத்தினர். இது இன்றைய சேர்மான விகிதத்திலிருந்து சிறிதே மாறுபட்டதாகும். கந்தகத்தின் தனித் தன்மையை அந்துவான் இலவாசியே தெரியப்படுத்தினார். சல்பர் என்ற பெயரின் மூலம் ‘சுல்வாரி’ என்ற வடமொழிச் சொல்லாகும். செம்பையும் கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தும் போது செம்பு அழிகின்ற காரணத்தால் இதற்குச் 'செம்பின் எதிரி ' என்று பெயர் வைத்தனர். இது லத்தீன் மொழியில் ‘சல்பூரியம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. கந்தகம் , வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட, மணமற்ற, எளிதில் உடைந்து நொருங்கக் கூடிய திண்மமாகும். இது நீரில் கரைவதில்லை என்றாலும் கார்பன் டை சல்பைடில் கரைகிறது. S என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கந்தகத்தின் அணு எண் 16; அணு நிறை 32.06;அடர்த்தி 2070 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 386 K(113°C), 717.8 K(445°C) ஆகும். கந்தகம் மின்சாரத்தையும், வெப்பத்தையும் மிகக் குறைவாகக் கடத்துகிறது. இது காற்று வெளியில் நீல நிற சுவாலையுடனும் ஆக்சிஜன் வெளியில் அவுரி நீல நிற சுவாலையுடனும் எரிந்து கந்தக டை ஆக்சைடு, கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற வளிமங்களை வெளியேற்றுகின்றது சூடு படுத்தினால் தங்கம், பிளாட்டினம் மற்றும் இருடியம் தவிர்த்த பிற உலோகங்களுடன் இணைகிறது. செம்பு, இரும்புடன் சேரும்போது சுடரொளி வீசுகிறது. திண்ம, நீர்ம மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது. இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது. சாய் சதுரமுகி அல்லது எண்முகி (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள். இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8°C உருகு நிலையும் கொண்டிருக்கிறது. இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது. ஒற்றைச் சாய்வுடைய (monoclinic) அறுங்கோணமுகி (Prismatic) அல்லது பீட்டா கந்தகம் என்ற கந்தகத்தை அதன் உருகு நிலையில் உருக்கி புறப்பரப்பு உறையுமாறு குளிர்வித்து திண்மமாய் உறைந்த பகுதியில் ஒரு சிறிய துளையிட அதன் வழியாக வெளியேறுபடி செய்வார்கள். இது கொள்கலனின் சுவர்களில் ஊசிப் படிவுகளாகப் படியும். இதன் நிறம் சற்று அழுத்தமான மஞ்சளாக உள்ளது. அடர்த்தி சற்று குறைந்து 1960 கிகி/கமீ ஆகவும், உருகு நிலை சற்று அதிகரித்து 119.25°C ஆகவும் உள்ளது. நெகிழ்மக் கந்தகம் அல்லது காமாக் கந்தகம் இரப்பர் போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ. இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை. நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகாத, உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது. நெகிழ்மக் கந்தகம் கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள். படிக உருவமற்றவை(amorphous), மிதமக்கந்தகம்(colloidal) எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர். கந்தகம் பொதுவாக -2 முதல் +6 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. மந்த வாயுக்களைத் தவிர மற்ற அனைத்து தனிமங்களுடனும் கந்தகம் நிலையான சேர்மங்களைக் கொடுக்கிறது. இலேசான ஆக்சிசனேற்றும் முகவர்கள் முன்னிலையில் கந்தகம் வலிமையான அமிலக் கரைசல்களுடன் வினைபுரிந்து பல கந்தக நேர்மின் அயனிகளை உற்பத்தி செய்கிறது. கந்தகத்தை ஒலியம் எனப்படும் புகையும் கந்தக அமிலத்தில் கரைத்தால் வண்ணக் கரைசல்கள் தோன்றுவதை 1804 ஆம் ஆண்டில் சி.எப். புச்சோல் கண்டறிந்து கூறினார். ஆனால் 1960 களின் பிற்பகுதியில் மட்டுமே சம்பந்தப்பட்ட பாலி கந்தக நேர்மின் அயனிகளின் நிறத்திற்கான காரணம் மற்றும் கட்டமைப்பு போன்றவை தீர்மானிக்கப்பட்டன. S82 + ஆழ்ந்த நீலம் என்றும் S42 + மஞ்சள் மற்றும் S162 + சிவப்பு என்றும் இறுதியாக்கப்பட்டன. கந்தகத்துடன் ஐதரசனை சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரசன் சல்பைடு தோன்றுகிறது. இது சற்று அமிலத்தன்மையை வெளிப்படுத்துகிறது. ஐதரசன் சல்பைடு வாயுவும் ஐதரோசல்பைடு எதிர் மின்னயனியும் பாலூட்டிகளுக்கு அதிக நச்சுத்தன்மையை அளிப்பனவாக உள்ளன. ஏனெனில் இவை ஈமோகுளோபினின் ஆக்சிசன் கொண்டு செல்லும் திறனை தடை செய்கின்றன. இதே போல சயனைடுகளும் அசைடுகளும் சைட்டோகுரோம்களைத் தடை செய்கின்றன. தனிமநிலை கந்தகத்தை ஒடுக்குவதன் மூலம் பாலிசல்பைடுகள் உருவாகின்றன. இவை S− மையங்கள் நீக்கப்பட்ட கந்தக அணுக்களின் சங்கிலிகளைக் கொண்டுள்ளன. இவ்வினை கந்தகத்தின் தனிச் சிறப்புப் பண்பான தனக்குள் இணைந்து சங்கிலியாகும் பண்பை வெளிப்படுத்துகிறது. இப்பாலி சல்பைடுகளை புரோட்டானேற்றம் செய்வதால் பாலிசல்பேன்கள் தோன்றுகின்றன. H2Sx என்ற வாய்ப்பாடு கொண்ட இவற்றில் x = 2, 3, மற்றும் 4 என்ற மதிப்புகளைக் குறிக்கும். இறுதியில் கந்தகம் ஒடுக்கும் வினை மூலமாக சல்பைடு உப்புகளைக் கொடுக்கிறது. இந்த இனங்களின் இடையே நிகழும் இம்மாற்றம் சோடியம்-கந்தகம் மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. கந்தகத்தை எரிப்பதால் முக்கியமான கந்தக ஆக்சைடுகள் தோன்றுகின்றன. கந்தகத்தின் பல ஆக்சைடுகள் அறியப்படுகின்றன. கந்தக மோனாக்சைடு, இருகந்தக மோனாக்சைடு, இருகந்தக ஈராக்சைடு மற்றும் உயர் ஆக்சைடுகளைக் கொண்டுள்ள பெராக்சோ குழுக்கள் உள்ளிட்டவை கந்தகத்தை மிகுதியாகக் கொண்ட ஆக்சைடுகள் ஆகும். கந்தக ஆக்சோ அமிலங்களாகவும் கந்தகம் உருவாகிறது. இவற்றில் சில அமிலங்களை தனித்துப் பிரிக்க இயலவில்லை. அவற்றை உப்புகளின் வழியாக மட்டுமே அறியமுடிகிறது. கந்தக டை ஆக்சைடும் சல்பேட்டுகளும் (SO2−3) கந்தச அமிலத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. கந்தக டிரை ஆக்சைடும் சல்பேட்டுகளும் (SO2−4) கந்தக அமிலத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. SO3 உடன் கந்தக அமிலம் சேர்ந்து ஒலியம் என்ப்படும் புகையிம் கந்தக அமிலம் உருவாகிறது. இது கந்தக அமிலத்தில் பைரோகந்தக அமிலம் (H2S2O7) கலந்த கரைசலாகும். கந்தகம் இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படும் தயோ சல்பேட்டு உப்புகள் சில சமயங்களில் ஐப்போசல்பைட்டுகள் எனப்படுகின்றன. இவை புகைப்படத் தொழிலில் நிலைநிறுத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சோடியம்டைதயோனேட்டில் (Na2S2O4) அதிகமாக ஒடுக்குகின்ற டை தயோனைட்டு (S2O2−4) எதிர்மின் அயனி இடம்பெற்றுள்ளது. நவீன தொழிற்சாலைகளுக்கு கந்தக ஆலைடுகள் முக்கியமானவையாக உள்ளன. உயர் அழுத்த மின்மாற்றிகளில் கந்தக எக்சாபுளோரைடு மின்கடத்தா வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அழுத்தக் கொள்கலன்களிலும் இது வினைபுரியாப் பொருளாகவும் நச்சுத் தன்மை அற்ற உந்துபொருளாகவும் பயன்படுகிறது. கந்தக டெட்ரா புளோரைடு எனப்படும் உயர் நச்சு அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரிம முகவராகும். கந்தக டை குளோரைடும் இருகந்தக இருகுளோரைடும் முக்கியமான தொழிற்சாலை வேதிப் பொருட்களாகும். சல்பியூரைல் குளோரைடும் குளோரோகந்தக அமிலமும் கந்தக அமிலத்தினுடைய வழிப்பொருட்களாகும். தயோனைல் குளோரைடு (SOCl2) கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பொது முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான S–N சேர்மங்களில் ஒன்று டெட்ராகந்தக டெட்ரா நைட்ரைடு (S4N4) ஆகும். இச்சேர்மத்தை சூடாக்குவதால் கந்தக நைட்ரைடு ((SN)x) பலபடி தோன்றுகிறது. எந்த உலோக அணுக்களையும் கொண்டிருக்காவிட்டாலும் கூட இது உலோகப் பண்புகளைக் கொண்டுள்ளது. தயோசயனேட்டுகள் SCN− குழுவைக் கொண்டுள்ளன. தயோசயனேட்டை ஆக்சிசனேற்றம் செய்தால் NCS-SCN இணைப்புடனான தயோசயனோசன் (SCN)2 உருவாகிறது. பாசுபரசு சல்பைடுகளும் எண்ணற்ற அளவில் காணப்படுகின்றன. P4S10 மற்றும் P4S3 என்பவை இரண்டும் வணிக முக்கியத்துவம் கொண்டவையாகும். கந்தகம் துப்பாக்கி வெடி மருந்தாகவும், இயற்க்கை இரப்பரைக் கடினப்படுத்தும் வலி முறையில் ஒரு வேதிப் பொருளாகவும், புகைப் படலத்தை ஏற்படுத்தி போராட்டக் கும்பலைக் கலைக்கவும் பயன் படுகின்றது. கந்தக அமிலம், சல்பேட் உரங்கள் தயாரிப்பில் கந்தகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வறண்ட பழங்களை வெண்மையூட்டுவதற்கும், வானவேடிக்கைக்கான வெடி பொருட்களைத் தயாரிப்பதற்கும், தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது. கால்சியம் பை சல்பைட்டை மரக் கூழ்களை வெண்மையூட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். பூஞ்சனம் படர்வதை கந்தகம் மட்டுப்படுத்துகிறது. அதனால் மருந்து தயாரிக்கும் வழி முறையில் இது பெரிதும் நன்மை பயக்கிறது. மரத்தாலான பொருட்களைப் பாதுகாக்க மலிவான சாயங்களை கந்தகத்தைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துகிறார்கள். கந்தகம் உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்குத் தேவையானதாக உள்ளது. ஒவ்வொரு உயிர்ச் செல்லிலும் குறிப்பாக தோல், நகம் மற்றும் முடிகளில் கந்தகம் உள்ளது சைஸ்டைன்(cysteine)மற்றும் மெத்தியோனைன் (Methionine)போன்ற கந்தகம் அடங்கிய அமினோ அமிலங்கள் மூலமாக புரத உணவுப் பொருட்களிலிருந்து கந்தகத்தை உடல் பெறுகிறது. பி வைட்டமின்களில் (தையமின், பண்டோதினிக் மற்றும் பயோட்டின்) கந்தகம் உள்ளடங்கி இருக்கிறது. வெங்காயம், வெள்ளைப் பூண்டில் கந்தகம் ஓரளவு அடங்கி இருக்கிறது. கந்தகத்தின் முக்கியமானதொரு வர்த்தகப் பயன் இரப்பரை வலுவூட்டுவதாகும் (vulcanization ). இரப்பர் மூலக்கூறுகள் கந்தக அணுக்களைக் கவரும் தன்மை கொண்டன. இரப்பரின் கடினத் தன்மை அதில் சேர்க்கப்படும் கந்தகத்தின் அளவைப் பொறுத்தது. கூடுதல் வலிமையுடைய இரப்பர் மீள்திறன் மிக்கதாக இருப்பதால் பேருந்து, மகிழுந்து, விமானம், இராணுவ வண்டிகள், கனரக வண்டிகள் இவற்றிற்கான சக்கரங்கள் செய்யப் பயன்படுகிறது . இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆவார். கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல். இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி. உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு. போர், வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற சூழல்களில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தேசிய அவசரநிலையை வெளியிடுகிறார். அதிகபட்சமாக மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 முறையும், பிகார், பஞ்சாப் மாநிலங்களில் தலா 8 முறையும், புதுச்சேரி, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 6 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.அசாமில் 4, டெல்லி 1, கோவா 5, ஹரியாணா 3, ஹிமாச்சல பிரதேசம் 2, ஜம்மு & காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 3, கேரளா 5, மத்திய பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 2, மிஜோரம் 3, நாகாலாந்து 4, ராஜஸ்தான் 4, சிக்கிம் 2, திரிபுரா 3, தமி­­ழ்நாடு 4, மேற்கு வங்கம் 4 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநிலங்களின் கீழ்ச்சபைகளின் உறுப்பினர்களால் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்தியா ஜனவரி 26, 1950ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன. இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவினால் (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்படும். 1952 தேர்தல் சட்டம் 1974 மற்றும் 1977ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் குழு வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இந்தியக் குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால் குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர் குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர். வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல் தெரிவாகத் தேர்ந்தெடுத்திருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தேர்தல் குறித்த மேல் முறையீடுகளை நேரடியாக உச்ச நீதி மன்றத்தில் முறையிட வேண்டும். பிறப்பொலியியல் பிறப்பொலியியல் (articulatory phonetics) என்பது, ஒலிப்பியலின் (phonetics) துணைத்துறை ஆகும். ஒலிப்புப் பற்றி ஆய்வு செய்யும்போது, ஒலிப்பியலாளர்கள், எவ்வாறு மனிதர்கள் உயிரொலிகள், மெய்யொலிகள் முதலிய ஒலிகளை உருவாக்குகிறார்கள் என்பதை அறிய முயல்கிறார்கள். அதாவது, பிறப்பொலியியல், குரல்வளை, நாக்கு, உதடு, தாடை, அண்ணம், பல் முதலிய ஒலிப்புறுப்புக்கள் வெவ்வேறு வகையில் இயங்கி எவ்வாறு காற்றைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட ஒலிகளை உருவாக்குகின்றன என ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றது. நியான் நியான் (இலங்கை வழக்கு: நியோன்) என்பது ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு "Ne". அணு எண் 10. அண்டத்தில் பொதுவாகக் காணப்படும் தனிமம் இதுவே. ஆனாலும் புவியில் அரிதாகவே கிடைக்கிறது. இது ஒரு மந்த வளியாகும். நியான் விளக்குகளில் வெற்றிடத்தில் இதனைச் சூடேற்றும் போது சிவந்த நிறத்துடன் ஒளிர்கிறது. இது பொதுவாக காற்றில் இருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. மந்த வளிமமான நியான் வளிமண்டலக் காற்றில் 65000 ல் ஒரு பங்கே உள்ளது.. ஹீலியம், கிரிப்பிடான்,செனான் போன்ற வளிமங்களின் செழுமை இதை விடக் குறைவு. வளி மண்டலக் காற்றை நீர்மமாக்கி, பகுதிக் காய்ச்சி வடித்தல் மூலம் அதிலுள்ள கூறுகளைத் தனித்துப் பிரித்தெடுத்து விடுகின்றனர். இந்த வழிமுறையை வெற்றிகரமாகச் செய்து 1898 இல் நியான், ஆர்கன், கிரிப்ட்டான், செனான் போன்ற மந்த வளிமங்களை அடுத்தடுத்துக் கண்டுபிடித்தவர்கள் சர் வில்லியம் ராம்சே (Sir William Ramsay:1852–1916) மோரிஸ் டபிள்யூ டிராவர்ஸ் (Morris W. Travers:1872–1961) என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர்களாவர். கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதிய என்று பொருள். அச் சொல்லே இதற்குப் பெயர் தந்தது. நியான் என்ற வார்த்தை ஆண்பால், பெண்பால் வேறுபாடு அற்ற வடிவம் என பொருட்படும் νέος என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். பிரிட்டிஷ் வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சே (1852-1916) மற்றும் மோரிஸ் டபிள்யூ டிராவேர்ஸ் (1872-1961) மூலம் 1898 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அது காற்று ஒரு திரவமாக மாறும் வரை ராம்சே கருவியில் குளிர்வித்து பின் திரவம் வெப்பமடையும் வரை கொதிக்கவைத்து நியான் பிரித்தெடுக்கப்பட்டது. நியானின் நிலையான ஐசோடோப்புகள் நட்சத்திரங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.Ne ஹீலியம் மற்றும் ஆக்சிஜனை ஆல்பா செயல்முறை-ல் உருக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது.இதற்க்கு 100 மெகா கெல்வின் வெப்பம் தேவைப்படும்.ஆனால் இது சூரியனை விட 3 மடங்கு அதிக வெப்பநிலை ஆகும். நியான் உலகளாவிய அளவில் வாயுமண்டலத்தில் ஏராளமாக இருக்கிறது; இது, ஹைட்ரஜன்,ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பனுக்கு அடுத்து பிரபஞ்சத்தில் அதிகமாக உள்ள ஐந்தாவது தனிமம் ஆகும். பூமியில் அதன் உறவினர் செய்வார்கள், ஹீலியம் போன்ற, இதன் விளைவாக வாயு மற்றும் தூசி மேகங்களில் இருந்து உயர் ஆவி அழுத்தம்,மிக குறைந்த வெப்பநிலை மற்றும் இரசாயன செயலற்றநிலையின் மூலம் பூமி போன்ற சிறிய வெப்பமான திட கோள்கள் உருவாக்கத்தின் போது தங்குகிறது. Ne என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய நியானின் அணுவெண் 10,அணு எடை 20.18, அடர்த்தி 0.839கிகி/கமீ. இதன் உறை நிலையும், கொதி நிலையும் முறையே 24.55 K, 27.05 K ஆகும். மேலும் இதன் அடர்த்தி ஒரு வளிமண்டல அழுத்தத்தில் 0.89990 g/litre ஆகும்.இது மந்த வளிமம் என்றும் வேதிவினைகளில் ஈடுபடாது என்றும் சொல்லப்பட்டாலும் புளூரினுடன் சேர்ந்து கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை சோதனைக் கூடத்தில் மெய்ப்பித்துள்ளனர். நிலையற்ற ஹைட்ரேட்டுக்களை நியான் உண்டாகுகிறது. Ne2+, (NeAr)+, (NeH)+ மற்றும்(NeHe)+ போன்ற அயனிகளை நிற மற்றும் நிறமாலை மானிகளின் ஆய்வில் அறிந்துள்ளனர். மேலும் இதன் ஏலக்ட்ரான் அமைப்பு 1s,2s,2p ஆகும். நியான் சாதாரண மின்னழுத்தத்தில் மற்றும் அனைத்து மந்த வாயுக்களிளும் ஆழ்ந்த பிளாஸ்மா ஒளி கசிவு ஏற்படுகிறது.மனித கண்ணிற்க்கு இந்த ஒளி பல கோடுகள் கொண்ட சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது.ஒளிக்கதிர் ஆய்வு கருவி மூலம் நோக்கினால் இது மறைத்து இது ஒரு வலுவான பச்சை கோடு போன்ற தோற்றத்தில் உள்ளது. நியான் விளக்கில் பொதுவான இரண்டு வகையான பயன்பாட்டில் உள்ளன. நியான் ஒளி விளக்குகள் 100-250 பற்றி வோல்ட் மிகவும் இயக்க கூடியதாக உள்ளன. அவை பரவலாக அதிகாரபூர்வ சுற்று-சோதனை கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஒளிவீச்சு டயோடுகள் (LED) இப்போது அத்தகைய பயன்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த எளிய நியான் சாதனங்கள் ஒளிகாட்சிகள் சாதனங்களின் முன்னோடிகளில் மற்றும் பிளாஸ்மா தொலைக்காட்சி திரைகளில் பயன்பட்டது. அதிக மின்னழுத்தம் நியான் குழாய்கள் (2-15 kilovolts) நீண்டவை.இவை கண்ணாடி குழாயில் அடைக்கப்பட்டு மாறும் வடிவங்கள்,விளம்பரம்,கட்டடக்கலை மற்றும் கலை பயன்பாடுகளுக்கு எழுத்துக்களை உருவாக்கலாம். வெற்றிட மின்னிறக்க குழாயில், சிவப்பு-ஆரஞ்சு கலந்த ஒளியைத் தருகிறது. மந்த வளிமங்களில் நியான் வழி செய்யப்படும் மின்னிறக்கமே சாதாரண மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட நிலையில் செறிவு மிக்க ஒளியைத் தருகிறது. இதனால் இது விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்த ஏற்புடையதாய் இருக்கிறது. இடிதாங்கி, உயர் மின்னழுத்தம் காட்டி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல சாதனங்களில் நியான் வழி மின்னிறக்கம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. நியானும் ஹீலியமும் சேர்ந்த வளிம நிலை ஊடகம் லேசராகப் பயன்தருகிறது. இதில் நியானும் ஹீலியமும் 1:10 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும். முதலில் ஹீலியம் மின்னிறக்கக் குழாயில் வெளிப்படும் ஏலக்ட்ரான்களோடு மோதி கிளர்ச்சியுறுகிறது. இது பின்னர் மீட்சியிலா மோதலினால் நியானுக்குக் கிளர்ச்சியாற்றலை பரிமாற்றம் செய்கிறது. நியானின் கிளர்ச்சியாற்றலும், ஹீலியத்தின் கிளர்ச்சியாற்றலும் மிக நெருக்கமாகச் சமமாக இருப்பதால், ஆற்றல் பரிமாற்றம் முழுமையானதாக இருக்கிறது. வெளியீட்டுத்திறன் அதிகமாக இருப்பதால் இது திறந்த வெளியில் செய்திப் பரிமாற்றத்திற்கும், முப்பரிமான ஒளிப்படப்பதிவுகளுக்கும்(holograms) பயன்படுகிறது. நீர்ம நிலையில் பொருளாதாரச் சிக்கனமிக்க மிகச் சிறந்த குளிரூட்டியாக உள்ளது. நியானின் குளிரூட்டும் திறன் ஹீலியத்தை விட 40 மடங்கு அதிகமாகவும், ஹைட்ரஜனை விட 3 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது. ஓரணு உடைய நியான் பூமியின் வளிமண்டலத்தின் இரட்டை நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளை காட்டிலும் இலகுவானதாக உள்ளது.எனவே நியான் நிரப்பப்பட்ட ஒரு பலூன் மிகவும் ஹீலியம் பலூன் விட மிக மெதுவாக காற்றில் உயரும். வாங்கரி மாத்தாய் வாங்கரி மாத்தாய் ("Wangari Maathai", ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். கென்யாவில் நையேரி மாவட்டத்தில் உள்ள இகிதி என்னும் சிற்றூரில் பிறந்தார். ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார். 1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. மாற்றத்திற்கான பெண்கள் என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார்.பெண்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.அவர்களுக்காகச் சட்டங்களை உருவாக்கினார்.பெண் கல்வியைப் பரவச் செய்தார். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட உழைத்தார். 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளு மன்றத்துக்கு மாத்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2003 ஆம் ஆண்டில் அமைந்த கூட்டணி ஆட்சியில் இணை அமைச்சராக ஆனார். இவருக்குப் பிடித்தமான சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் பாதுகாப்புத் துறையைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார். இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு. சிங்களவர் உடை சிங்களவரின் உடை நோக்கிய அழகியல், தத்துவம், நெசவுத் தொழில்நுட்பம், மரபுரீதியாக உடுக்கப்பட்ட உடைகள், இன்றைய உடைகள் ஆகியவை சிங்களவர் உடை என்ற இக்கட்டுரையின் கருப்பொருள்கள் ஆகின்றன. சிங்களவர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்து சிங்களவர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லாவிடினும் மரபுரீதியான சில உடைகள் உண்டு. பெரும்பாலான நகர்வாழ் சிங்கள ஆண்கள் ஜீன்ஸ் போன்ற கீழாடையும் மேற்சட்டையும் உடுத்தும் வழக்கம் உடையவர்கள். பெண்களும் அவ்வாறு உடுத்தும் வழக்கம் பரவி வருகின்றது. ஆண்களுக்கு வேட்டி அல்லது சாரமும் மேல்சட்டையும், பெண்களுக்கு சேலையும் மேல்சட்டையும் சிங்களவர் மரபு உடைகள் எனலாம். பெண்கள் சேலை அணியும் முறை தமிழர்கள் அணியும் முறையிலும் வேறுபட்டது. தமிழர்கள் போலவே பழங்காலத்தில் சிங்கள ஆண்களோ பெண்களோ மேலாடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆட்சியாளர்களும் போர்வீரர்களுமே பாதுகாப்பு கவசங்கள் அணியும் சிறப்புரிமை பெற்றிருந்தனர். 16 ம் நூற்றாண்டில் போர்த்துகீசர் வருகையுடன் சிங்களவர் உடை மரபில் பாரிய மாற்றங்கள் வந்தது. ஆண்கள் மேற்சட்டை (சேட்] அணியும் வழக்கமும், பெண்கள் இடையின் மேல் மேலாடை அணியும் வழக்கும் போர்த்துகீசர் வரவின் பின் நடந்தது. யெஸ்ப்பூ யெஸ்ப்பூ அல்லது எஸ்ப்பூ ("Espoo"), பின்லாந்தின் தெற்குக் கடற்கரை நகராகும். பின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமும் இதுவே. இது ஹெல்சின்கி பெருநகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்தப் பரப்பளவு 528 கிமீ² ஆகும், இதில் 312 கிமீ² நிலப்பரப்பாகும். தற்போதய மக்கட்தொகை சுமார் 234,466 (31 அக்டோபர் 2006 இன் படி), இது பின்லாந்தில் ஹெல்சின்கியை அடுத்து அதிக மக்கட்தொகை உள்ள நகராகும். நெஸ்டி ஆயில் நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு வாழும் மக்கள் பின்லாந்தின் இரு ஆட்சிமொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையினர் பின்னிய மொழியைத் தாய்மொழியாகவும், சிறுபான்மையினர் சுவீடிய மொழியைத் தாய்மொழியாகவும் பேசுகின்றனர். கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாகும். தேசியப் பூங்கா ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. சிங்கள இலக்கியம் சிங்கள மொழியில், சூழமைவில் எழுதப்பட்ட இலக்கியத்தை சிங்கள இலக்கியம் எனலாம். சிங்கள இலக்கியம் தொன்மமும் தொடச்சியும் தனித்துவமும் கொண்டது. செய்யுளும் உரைநடையும் சிங்கள இலக்கியத்தில் பழங்காலம் முதற்கொண்டே வளர்ச்சி பெற்ற வடிவங்களாகும். சிங்கள இலக்கியத்தில், வரலாற்றில் மகாவம்சத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. கிமு 3 அல்லது 2 ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிங்கள கல்வெட்டுக்கள் உண்டு. எனினும் குறிப்பிடத்தக்க, இன்றும் எமக்கு கிடைத்த சிங்கள இலக்கியங்கள் கிபி 9 ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 9 ம் நூற்றாண்டின் Siyabaslakara இன்று கிடைக்கும் மிக முந்திய சிங்கள இலக்கியம் ஆகும். சிங்கள இலக்கியத்தின் பெரும் பகுதி பெளத்த சமய நூல்கள் ஆகும். இனக்குழுக்களின் பட்டியல்
வத்தேகாமம் வத்தேகாமாம் அல்லது வத்தேகமை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் பாததும்பறை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரசபையாகும். வத்தேகாமம் வட்டச் செயலாளர் பிரிவில் காணப்ப்டும் முக்கிய நகரமும் வியாபார மையமுமாகும். வத்தேகாமம் நகரின் அரசியல் உள்ளூராட்சி நகரசபையாலும் நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகளின் அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது. வத்தேகாமம் மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. அணுக்கரு இயற்பியல் அனைத்து பொருட்களும் அணுக்களால்(Atom) ஆனது. அணுவானது எலக்ட்ரான் , புரோட்டான் மற்றும் நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது .  இவற்றில் புரோட்டான்கள்  மற்றும் நியூட்ரான்கள் formula_1m அளவுள்ள மிக சிறிய பரப்பில் செறிந்து காணப்படுகின்றது . இதையே அணுக்கரு என்கிறோம் . எலக்ட்ரான் அணுக்கருவை சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.அணுக்கரு இயற்பியல் "(Nuclear physics)" அணுக்கருக்களின் உட்கூறுகளைப் படிக்கும் இயற்பியல் புலமாகும். அணுக்கரு இயற்பியலின் முதன்மையான பயன்பாடு அணுக்கரு மின்னாக்கமே என்றாலும், இத்துறை பல தரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. அணுக்கரு மருத்துவம், காந்த ஒத்திசைவுப் படமமாக்கம், அணுக்கரு ஆயுதங்கள், பொருள் பொறியியலில் மின்னணு பொதித்தல், தொல்லியலிலும் புவியியலிலும், கதிரியக்கக் கரிமக்காலகணிப்பு, ஆகியன சிலவாகும். கெய்கர்  மற்றும் மார்ஸ்டென் சோதனை 1909இல் கெய்கர்  மற்றும் மார்ஸ்டென் மேற்கொண்ட ஆய்வு [ H. Geiger and E. Marsden, Proc. Roy. Soc., 82, 495 1 ] அணுக்கரு இயற்பியல் தொடங்க வழி வகுத்தது . அதிவேக α -துகளை உலோக தகட்டின் மீது மோதும் போது சில α -துகள்கள் formula_2கோணத்தில் சிதறடிக்கப்பட்டன . அதாவது துகள் சென்ற பாதையிலேயே மீண்டும் சிதறல் (back scattering) அடைந்தன. வெவ்வேறு அணுஎண்  கொண்ட உலோக தகடு வைத்து சோதனை மேற்கண்ட செய்யப்பட்டது. அதாவது ஆல்பா துகளுக்கும் , அணு நிறைக்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டது . விளக்கமாக கூறவேண்டும் எனில் வெவ்வேறு  உலோக தடிமனுக்கும், சிதறதல் ஆன  ஆல்பா துகளுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. மேற்கண்ட சோதனையின் மூலம் 8000இல் 1 பங்கு ஆல்பா துகள் மட்டுமே சிதறடிக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது. அதாவது 7999 ஆல்பா துகள் உலோக தகட்டை கடந்து செல்கிறது 1 மட்டும் மிக அதிக கோணத்தில் சிதறடிக்கப்படுகிறது. ஆனால் கெய்கர்  மற்றும் மார்ஸ்டென் அறிஞர்களால் இதற்கான தெளிவான காரணத்தை விளக்க முடியவில்லை. ரூதர்போர்ட்  சோதனை 1911இல்  ரூதர்போர்ட் கொடுத்த விளக்கம் தாம்சன் அணுமாதிரியை கேள்விக்குறியாக்கியது. ரூதர்போர்ட்  கெய்கர்  மற்றும் மார்ஸ்டென் மேற்கொண்ட ஆய்வு தரவுகளை வைத்து செய்த ஆய்வு அணு இயற்பியலில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது. தாம்சன் அணு மாதிரியில் எலக்ட்ரான் மற்றும் ப்ரோட்டான்கள் கோளத்தில் சீராக அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைந்திருத்தல் கனமான ஆல்பா துகள் ஊடுருவி சென்றிருக்க வேண்டும் . ஆனால் ஆல்பா துகள் மிக அதிக கோணத்தில் சிதறடிக்கப்படுவதால் நேர் மின்னுட்டம் கொண்ட கோளம் மிக சிறிய பரப்பில் செறிந்திருக்க வேண்டும் என ரூதர்போர்ட் கண்டறிந்தார்.மேற்கண்ட சோதனையிலிருந்து சில முடிவுகளை வெளியிட்டார். அணு என்பது formula_3m விட்டம் கொண்ட கோளம். ஆனால் நேர் மின்னூட்டம் அனைத்தும் சுமார் formula_1m விட்டம் உடைய சிறிய பரப்பில் செறிந்திருக்க வேண்டும் . எலக்ட்ரோன்கள் அணுக்கருவை சுற்றி வெளியில் சுற்றி வர வேண்டும் எலக்ட்ரான் எண்ணிக்கையும் புரோட்டான் எண்ணிக்கையும் சமம். எனவே அணு நடுநிலையானது . யட்டிநுவரை யட்டிநுவரை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும்.கடுகண்ணாவை பிலிமத்தலாவை, பேராதனை என்பன இப்பிரிவில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. யட்டிநுவரை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 303 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. கடுகண்ணாவை கடுகண்ணாவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் ஒரு நகரம் ஆகும். இது யட்டிநுவரை வட்டச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் மலைநாட்டுக்கு நுழையும் கணவாய் கடுகண்ணாவையில் அமைந்துள்ளது. இந்நகரம் கண்டி இராச்சியத்தின் காலத்தில் முக்கிய நுழவாயிலாகவும் பாதுகாப்பு கோட்டையாகவும் விளங்கியது. மிகவும் கடினமான புவியியல் அமைப்பைக் கொண்ட இப்பகுதியூடாக இரயில் மற்றும் பெருந்தெருவை அமைத்த ஆங்கிலேய பொறியியலாளர் டாவ்சன் என்பவரை கௌரவிக்கும் வகையில் இங்கு ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கடுகண்ணாவை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 303 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரமாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இது கொழும்பு - கண்டி பெருந்தெருவில் கேகாலைக்கும் பிலிமத்தலாவை நகருக்கும் இடையில் கொழுபில் இருந்து 101 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு - பேராதனை - பதுளை பாதையில் பலனை, பிலிமத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. இந்நகரை உடரட்ட மெனிக்கே, பொடி மெனிக்கே தொடருந்துகள் மூலம் அடையலாம். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. திருமணச் சடங்கு ஐராவதம் மகாதேவன் ஐராவதம் மகாதேவன் (அக்டோபர் 2, 1930 - நவம்பர் 26, 2018) பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் அக்டோபர் 2, 1930இல் திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். 1966 ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார். கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார். 1970-ஆம் ஆண்டு புகழ்பெற்ற சவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது மகாதேவனின் கருத்து.. சூலை 8, 2001 அன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் இடெட்ராட்டு நகரில் நடைபெற்ற ஆண்டு நாளன்று, ஐராவதத்திற்கு பேரவையின் "மாட்சிமைப்பரிசு" சிந்து நதி சமவெளி நாகரீகம் தமிழர்களுடையதுதான் என்பதனை ஆதாரப்பூர்வமாக நிறுவியதற்காக அளிக்கப்பட்டது. அவர் கிருமகன் இவருடைய சார்பில் பரிசைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. பதிப்புரிமை பதிப்புரிமை ("Copyright") என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம். இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது. இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும். இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்புத்தர வலியுறுத்துகிறது. இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக "தேசிய நடத்துமுறை"யைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும். அறிவுசார் சொத்துரிமை வணிகச் சின்னம் புவிசார் குறியீடு விஜயகுமார் விஜயகுமார் (பிறப்பு: ஆகத்து 29, 1943) தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர். சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னால் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார். வியாசர் வியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் "வேத வியாசர்" என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், "கிருஷ்ண த்வைபாயனர்" என்ற பெயராயிற்று. வியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதியபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. வியாசர் என்பவர் தனியொருவரா? இல்லை பீடத்தின் பெயரா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிகிறது. வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன: புராணங்கள் https://venmurasu.in/ இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) இடும்பன் மகாபாரதக் கதையில் வருபவன். இடும்பியின் உடன்பிறந்தவன். காட்டுவாசியான இவன் ஓர் இராட்சதன். இடும்பனும் அவனது சகோதரியான இடும்பியும் பாண்டவர்களைக் கொன்று உண்ண விரும்பினர். ஆயினும் இடும்பன் வீமனுடன் சண்டையிட்டு மாண்டான். இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் சில இடும்பன் கோயில்கள் உள்ளன. இடும்பி இடும்பி மகாபாரதக் கதையில் வருபவள். இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன். பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகான பெண்ணாக மாறி பீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் பீமனைக் கொல்ல வருகிறான். பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் பீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை. ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடும்பியை வழிபடுவோர் உள்ளனர். கடோற்கஜன் கடோற்கஜன் மகாபாரதக் கதையில் வரும் ஒரு பாத்திரம் ஆவான். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான். இடப் பெயர் தமிழ் இலக்கணத்தில், இடப் பெயர் என்பது பெயர்ச்சொற்களின் ஒரு வகையாகும். இவை இடத்தைச் சுட்டுகின்ற பெயர்கள் ஆகும். "கோயில், ஊர், இலங்கை, சென்னை, வண்டலூர்" என்பன இடப் பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள். இவற்றுள் கோயில், ஊர் என்பன குறிப்பிட்ட இட வகைகளுக்கான பொதுவான பெயராக அமைந்துள்ளன. அதாவது கோயில் எனும்போது அது கோயில்களில் எதையும் குறிக்கலாம். இது போலவே ஊர் என்பதும் பல இலட்சக்கணக்கான ஊர்களில் எதாவது ஒன்றைக் குறிக்கக்கூடும். இதனால் இவ்வகை இடப்பெயர்கள் "பொது இடப் பெயர்கள்" எனப்படுகின்றன. இலங்கை, சென்னை போன்றவை குறிப்பாக ஒரு இடத்தை மட்டுமே குறிக்கச் சிறப்பாக அமைந்தவை. இதனால் இத்தகையவை "சிறப்பு இடப் பெயர்கள்" எனப்படுகின்றன. அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் "கு" உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன. காலப் பெயர் தமிழ் இலக்கணத்தில் காலப் பெயர் என்பது ஒரு வகைப் பெயர்ச்சொல் ஆகும். இது, "பொதுக் காலப் பெயர், சிறப்புக் காலப் பெயர்" என இரண்டு வகைப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்காமல் காலத்தைப் பொதுவாகக் குறிக்கும் சொற்கள் பொதுக் காலப் பெயர்கள் எனப்படுகின்றன. "ஆண்டு, விநாடி, கிழமை, காலம்" போன்ற சொற்கள் பொதுக் காலப் பெயருக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். குறிப்பிட்ட காலத்தைச் சிறப்பாகக் குறிக்கும் சொற்களான "மாசி, பங்குனி, இளவேனில்" போன்றவை சிறப்புக் காலப் பெயர்களாகும். காலப் பெயர்களுக்கான பதில் சொற்களாக, இப்போது, எப்போது, அப்போது போன்ற சொற்கள் பயன்படுகின்றன. பண்புப் பெயர் பண்புப் பெயர் அல்லது குணப்பெயர் என்பது தமிழ் இலக்கணத்தில், ஒரு பொருளின் பண்பைக் குறித்து நிற்கும் பெயர்ச்சொல்லைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக "நீலம்" என்பது நிறமாகிய பண்பைக் குறிப்பதால், அது ஒரு பண்புப் பெயர் ஆகும். இவ்வாறே, "நீளம், மென்மை, புளிப்பு" போன்ற சொற்களும் பண்புப் பெயர்களாகும். சில சமயங்களில், பண்புப் பெயரை, நிறம், வடிவம், அளவு, சுவை என்பன போன்ற அடிப்படைகளில் வகைப்படுத்துவதும் உண்டு. பண்புப்பெயரைக் குணப்பெயர் என்றும் வழங்குவர். தமிழில், "இப்படி, அப்படி, எப்படி" போன்ற சொற்கள் பண்புப் பெயர்களுக்கான மாற்றுச் சொற்களாகப் பயன்படுகின்றன. பண்புப் பெயர்கள் பெரும்பாலும் மை விகுதி பெற்று அமையும். சாங் சீயீ சாங் சீயீ (சீனம்:章子怡) (பிறப்பு:பெப்ரவரி 9, 1979 பீஜிங், சீனா) நன்கு அறியப்பட்ட சீன திரைப்பட நடிகையாவார். இவர் தற்சமயம் பல சீன, பன்னாட்டு திரைப்படங்களில் நடித்துவருகின்றார். சீனாவின் பீஜிங் நகரில் பிறந்த சாங் 11 வயதீல் பீஜிங் நாட்டிய அகடமியில் இணைந்தார். 15 வயதில் சீனாவின் பிரசித்தமான மத்திய நாடக அகடமியில் இணைந்தார். 19 வயதில் உலகப் புகழ் பெற்ற இயக்குனரான சாங் யிமோவுவின் த ரோட் ஓம் திரைப்படத்தில் நடிப்புத் துறையை ஆரம்பித்தார். இத்திரைப்படத்துக்கு இவருக்கு 2000 ஆம் ஆண்டு பர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருது வழங்கப்பட்டது. குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் திரைப்படத்தில் சாங்கின் நடிப்புக் காரணமாக புகழ்பெற்றார். இத்திரைப்படத்துக்காக டொறன்டோ திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார். ரஷ் அவர் 2 இவரது முதல் அமெரிக்கத் திரைப்படமாகும். இதன் போது இவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது. பதிலிடு பெயர் பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. "நான், நீ, அவன், அவள்" போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம். மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். துச்சலை துச்சலை திருதராஷ்டிரன் காந்தாரி தம்பதிகளுக்குப் பிறந்த மகளாவார். இத்தம்பதிகளுக்கு பிறந்த ஒரே பெண் இவர். மற்றவர்கள் நூறு ஆண் மகன்களாவர். அந்நூறு பேரும் கௌரவர் என்று அழைக்கப்பெறுகின்றனர். துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான். அகிலாவதி அகிலாவதி மகாபாரதக் காதாபாத்திரங்களில் ஒருவராவார். இவள் ஒரு நாக கன்னிகை. பீமனின் மகனான கடோற்கஜனைத் திருமணம் செய்தாள். அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தே அவளைக் கடோற்கஜன் மணம் புரிந்தான். அகிலாவதியின் மகனே பார்பரிகா. பார்பரிகாவுக்கு இவள் தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள். பார்பரிகா பாரதப்போரின் பதினான்காம் நாளில் கௌரவருடன் இணைந்து போரிடத் தொடங்கி பீமன், காடோற்கஜன், அருச்சுனன் ஆகியோரையும் வென்றான். கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். உத்தரை உத்தரை மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. விராடனின் மகள். உத்தரனின் சகோதரி. அர்ச்சுனன்- சுபத்திரை ஆகியவர்களின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தையான பரீட்சித்து பின்னர் அஸ்தினாபுர அரசனானான். வேர்ச் சொல் வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும். எடுத்துக் காட்டாக "வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம்" போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச் சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும். வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன. மார்லன் பிராண்டோ மார்லன் பிராண்டோ (பிறப்பு: ஏப்ரல்-3-1924- மறைவு: ஜூலை-1-2004) த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த திரைப்பட நடிகர். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார். ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் 1950 ஆம் ஆண்டுக்கு முன் நடித்த திரைப்பட கதாநாயகர்கள் சிறந்த கதாநாயகர்களில் நான்காவது மிக பெரிய கதாநாயகன் என்ற இடத்தை அடைந்தார் .அமெரிக்க திரைபடத்தின் மிக முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவர் .1999ஆம் ஆண்டு டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட நூற்றாண்டின் சிறந்த மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்ற திரைத்துறையினர் சார்லி சாப்ளின் ,மர்லின் மன்றோ ,மற்றும் மார்லன் பிராண்டோ ஆகும் .அதில் மார்லன் பிராண்டோ மட்டும் தான் நடிப்பு துறையில் வெகு ஆண்டுகாலம் உள்ளவர் . 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தார். அவர் இறக்கும் போது ஒரு எஸ்டேட்டை விட்டுச் சென்றார். அதன் மதிப்பு 21.6 மில்லியன் டாலராகும் .பிராண்டோவின் அந்த எஸ்டேட் இன்றும் வருடத்திற்கு 9 மில்லியன் டாலர் அவருக்குப் பெற்று தருகிறது என்று போர்பஸ் நிறுவனம் திரட்டிய தரவில் உள்ளது .இறந்த பிறகும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர் ஆவார்.இன்றும் அமெரிக்காவின் திரையுலகில் மார்லன் பிராண்டோ ஒரு கலாச்சார உருவமாக கருதப்படுகிறார்.மேலும் பலருடைய திரை வாழ்க்கை .திரை வாழ்க்கை பற்றிய ஒரு அளவுகோல் .திரைவாழ்க்கை பிரண்டோவிற்கு முன் பிரண்டோவிற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். நடிகர் ஜாக் நிகோல்சொன் இவரை பற்றி குறிப்பிடுகையில் பிராண்டோ இறந்த பின்பு தான் எல்லோரும் முதல் இடத்திற்கு வர முடியும் என்று குறிப்பிட்டார் மார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவழி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் "போலச் செய்வதில்" சிறந்தவராக இருந்தார். பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் " பிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார் 1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது . 1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் . ஆஸ்கார் விருது என்பது திரபடதுரையில் கிடைக்கும் ஒரு மிக உயர்ரிய விருது .இந்த விருது இவருக்கு 1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு பரிந்துரைகபட்டது.ஆஸ்கார் விருதுக்கு இவர் தேர்வானதும் அதை அறிவிக்கும் நிகழ்வின் பொது அதை ஏற்க மறுத்து விட்டார் அதற்கு அவர்கொடுத்த காரணம் அன்றைய அமெரிக்க இந்தியர்கள்(செவிந்தியர்கள்) நடத்தப்படும் முறை தனக்கு பிடிக்கவில்லை என்பதே. 1954ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மாலுமிகள் மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வழக்கை மற்றும் அவர்களின் சங்கம் அதில் நடைபெரும் வன்முறைகள் பற்றிய படம் ஆகும்.இந்த படம் 12 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைகபட்டது அதில் 8 விருதுகளை வென்றது .1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் 8ஆம் இடத்தை பிடித்தது .இந்த படம் 36 நாட்களில் படம் ஆகபெற்றது .ஹோபோகேன் நியூ ஜெர்சி மாகாணத்தில் பல இடங்களில் படமாக்கபட்டது.தேசிய திரைப்பட பதிவேட்டில் பதிவு செய்ய இந்த படம் அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் பரிந்துரைத்தது .வாடிகனில் 1995 ஆம் ஆண்டு தேர்வு செய்ய பட்ட சிறந்த 45 படங்களிலும் இது ஒன்றாக கருத படுகிறது சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இவருக்கு இந்த படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தனிமனிதனுடைய வழக்கை பற்றிய படம் இந்த கதியின் நாயகனாக பிராண்டோ நடித்தார் .இந்த கதையில் இவர் ஒரு சாதாரண ஏழை விவசாயி முதல் எப்படி வல்லமை பொருந்திய ஒருவராக மெச்சிய புரட்சியாளர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தப் படம் ஒரு கற்பனை கலந்த மெச்சிய புரட்சியாளர் பற்றியது ஆகும் .இந்த படம் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்படவிருது போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் சில விருதுகளையும் பெற்றனர் இந்தப் படம் கொலராடோ,டேசேஸ் ,நியூ மேக்சிகோ போன்ற இடங்களில் படம் எடுக்கபட்டது. 1980ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு கச்சா எண்ணெய் விலைஉயர்வை அடைந்து அதனால் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்தது மற்றும் படிம எரிபொருட்களை விலையும் உயர்ந்து அதனால் சர்வதேச நிதி சந்தை குலைந்து விட்டது இதனைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் .மிக மோசமான நடிகருக்கான கோல்டன் ராச்ப்பெர்ரி விருது இந்தப் படத்திற்காக பிரண்டோவிற்கு வழங்கப்பட்டது . அல் பசீனோ அல் பசீனோ (Al Pacino, பி.ஏப்ரல் 25, 1940) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். 1940 இல் பிறந்தவர். தி காட்ஃபாதர் திரைப்படங்களில் மைக்கேல் கோர்லியோனாக நடித்தவர். ஆஸ்கார் விருது, எம்மி விருது பெற்றவர். ரொபேர்ட் டி நீரோ ரொபேர்ட் அந்தோனி டி நீரோ (Robert Anthony De Niro Jr) (; பிறப்பு: ஆகத்து 17, 1943) ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். டி நீரோ 1974 ஆம் ஆண்டில் தி காட்பாதர் பாகம் II திரைப்படத்தில் விதோ கோர்லியோன் எனும் கதாப்பத்திரத்தில் (சிறு வயது கதாப்பத்திரம்) நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதைப் பெற்றார். இவர் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கத்தில் 1980 இல் நடித்த ஜேக் லமோத்தா கதாப்பாத்திரத்தில் ரேகிங் புல் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்றார். டி நீரோவுக்கு 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. கோல்டன் குளோப் செசில் பி. தெ மில்லே விருது 2010 இல் வழங்கப்பட்டது. 2016 இல் அன்றைய ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை டி நீரோவுக்கு வழங்கினார். டி நீரோஸ் பேங் தெ டிரம் ஸ்லோவ்லி எனும் நாடகத் திரைப்படத்தில் முதன் முறையாக முக்கியக் கதாப்பத்திரத்தில் 1973 இல் நடித்தார். பின் மார்ட்டின் ஸ்கோர்செசி 1973 இல் இயக்கிய மீன் ஸ்ட்ரீட்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்தார்.1976 இல் உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான தேக்சி டிரைவர் மற்றும் கேப் ஃபியர் எனும் திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் மார்ட்டின் ஸ்கோர்செசியால் இயக்கப்பட்டது. இந்தத் திரைப்படங்கள் அகாதமி விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 1978 இல் மைக்கேல் சிமினோ, வியட்நாம் போரினை அடிப்படையாக வைத்து இயக்கிய தெ டீர் ஹன்டர் எனும் திரைப்படத்திற்காக கூடுதல் அகாதமி விருதிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டார். ஸ்கோர் செசி இயக்கிய குட்பெலாஸ் திரைப்படத்தில் ஜிம்மி கான்வே எனும் தொகுதி வேலையாட்கள் கதாப்பத்திரத்தில் நடித்தார். 1983 இல் தெ கிங் ஆஃப் காமெடி எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளைப் பெற்றார். ரொபேர்ட் அந்தோனி டி நீரோ ஆகத்து 17, 1943 இல் மன்ஹாட்டன், நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரின் தந்தை ராபர்ட் டி நிரோ , அமெரிக்க நடிகர் , தாய் விர்ஜீனியா அட்மைரல். இவரின் தந்தை அயர்லாந்து மற்றும் இத்தாலி வம்சாவளியைச் சர்ந்தவர். இவரின் தாய் டச்சு, இலண்டன், பிரெஞ்சு, ஜெர்மன் மரபினைச் சார்ந்தவர். டி நீரோ தனது இருபதாம் வயதில் முதல் திரைப்படத்தில் நடித்தார். பிரையன் டி பல்மா 1963 இல் இயக்கிய தெ வெட்டிங் பார்ட்டி எனும் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்தத் திரைப்படம் 1969 வரை வெளியாகவில்லை. பின்பு ரீஜர் கார்மெனின் பிளெடி மம்மா எனும் திரைப்படத்தில் 1970 இல் நடித்தார். 1973 இல் பேங் தெ ட்ரம் ஸ்லோவ்லி திரைப்படத்தில் பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்ட வீரராக நடித்ததில் இருந்து பரவலாக அறியப்படுகிறார். பின் மார்ட்டின் ஸ்கோர்செசியுடன் இணைந்து மீன் ஸ்ட்ரீட்ஸ் எனும் திரைப்படத்தில் 1973 இல் நடித்தார். ரொபேர்ட் டி நீரோ நடித்த திரைப்படங்களில் சில: கிளின்ட் ஈஸ்ட்வுட் கிளின்டன் "கிளின்ட்" ஈஸ்ட்வுட், ஜூனியர் ("Clint Eastwood", பி. மே 31, 1930) ஒரு அமெரிக்க நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பியானோ வாசிப்பாளர், தொழிலதிபர், முதலீட்டாளர், மற்றும் அரசியல்வாதி ஆவார். ஈஸ்ட்வுட் முதலில் ராஹைடு(1959-1966) என்ற டிவி தொடரில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார்.அவர் 1960களின் பிற்பகுதியில் செர்ஜியோ லியோனின் டாலர்கள் முப்படத்தில் (எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964),ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965) மற்றும் தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966)) பெயரில்லாத கதாநாயகனாகவும் மற்றும் டர்ட்டி ஹாரி படங்களில் (டர்ட்டி ஹாரி, மேக்னம் ஃபோர்ஸ், தி என்ஃபோர்ஸர், சடன் இம்பேக்ட், மற்றும் தி டெட் பூல்) ஹாரி கலஹனாகவும் (1970 மற்றும் 1980 முழுவதும்) முரட்டுத்தனமான வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.இந்த பாத்திரங்கள், அவரை ஒரு பண்பாட்டு சின்னமாக புகழ்பெறச்செய்தன.அவரது அன்பர்கிவன் (1992) மற்றும் மில்லியன் டாலர் பேபி (2004),படங்களுக்காக ஈஸ்ட்வுட் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த தயாரிப்பாளருக்கான அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.மொத்தம் ஐந்து தடவைகள் அக்கடமி விருதினைப் பெற்ற இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த இவர் 1950 களின் நடுப்பகுதியில் திரைப்படத்துறையில் நடிகராக நுழைந்தார். 1958 இல் "றோகைட்" எனும் தொகைக்காட்சித் தொடரில் 'ரௌடி யேற்'சாக நடித்துப் புகழ் பெற்றார். 1959 சனவரி முதல் ஏழு ஆண்டுகள் அத்தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானது. அத்தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்தார்.1960 களில் தொடங்கி 1980 களின் தொடக்கம் வரை வெஸ்டர்ன் என அழைக்கப்படும் சாகசத் திரைப்படங்களில் இவர் நடித்தமை குறிப்பிடத்தக்கது. 1971 இலிருந்து திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். ஈஸ்ட்வுட் சான் பிரான்சிஸ்கோ,கலிபோர்னியாவில் கிளின்டன் ஈஸ்ட்வுட், சீனியர் (1906-70), ஒரு எஃகு தொழிலாளி,மற்றும் மார்கரெட் ரூத் (ரன்னர்) ஈஸ்ட்வுட் (1909-2006), ஒரு தொழிற்சாலை தொழிலாளி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.அவர் பிறந்தபோது 11 பவுண்டுகள் 6 அவுன்ஸ் (5.2 கிலோ) எடையிருந்த்தால் மருத்துவமனை செவிலியர்களால் "சாம்சன்" என செல்லப்பெயரிடப்பட்டார்.ஈஸ்ட்வுட் ஆங்கிலம், ஐரிஷ், ஸ்காட்டிஷ் மற்றும் டச்சு வம்சாவளியை சேர்ந்தவர் மற்றும் அவரது இளைய சகோதரி, ஜீன் (1934 இல் பிறந்தவர்) உடன் வளர்க்கப்பட்டார்.அவரது தந்தை வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் வேலை தேடியதால் அவரது குடும்பத்தினர் அடிக்கடி புலம்பெயர்ந்தனர்.குடும்ப இறுதியாக பிட்மான்ட், கலிபோர்னியாவில் வசித்தபோது ஈஸ்ட்வுட் பிட்மான்ட் ஜூனியர் உயர்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்டார்.அவர் பிட்மான்ட் உயர்நிலை பள்ளியில் சேருவதன் முன்பு,பைக்கை பள்ளி விளையாட்டு துறை மைதானத்தில் ஓட்டி சேதாப்படுத்தினார்,இதன் காரணமாக பள்ளியில் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.அதற்கு பதிலாக, அவர் ஓக்லாண்ட் தொழில்நுட்ப உயர்நிலை பள்ளியில் படித்தார் அங்கு நாடக ஆசிரியர்கள் அவரை பள்ளி நாடகங்களில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார். எனினும், ஈஸ்ட்வுட் ஆர்வமாக இல்லை.அவர் மெய்க்காப்பாளர், மளிகை எழுத்தர், வன தீயணைக்கும் பணியாளர்,செய்தித்தாள் அளிப்பவர் மற்றும் கோல்ஃப் காடியாகவும் பணியாற்றினார்.1951 ல் கொரிய போரின் போது, ஈஸ்ட்வுட் அமெரிக்க இராணுவத்தில் ஒரு மெய்க்காப்பாளராக கலிபோர்னியாவில் உள்ள ஃபோர்ட் ஓர்டில் பணியாற்றினார்.1951 ஆம் ஆண்டு விடுப்பின்போது, அவர் பயணித்த ராணுவ விமானம் எரிபொருளின்றி கடலில் விழுந்து நொறுங்கியது,மூழ்கிய விமானத்தில் இருந்து தப்பிய, அவர் மற்றும் பைலட் 3 மைல் (5 கிமீ) நீந்தி கரைசேர்ந்தனர். சிபிஎஸ் செய்தி வெளியீட்டின் படி,ஃபோர்ட் ஓர்டில் படப்பிடிப்பு நடந்தபோது ஈஸ்ட்வுட் ஒரு உதவி இயக்குனரால் அடையாளம் காணப்பட்டார்.ஏப்ரல் 1954 இல் அவரது ஆரம்ப ஒப்பந்தம் வாரத்திற்கு $ 100 (2013ன் படி $869) அமெரிக்க டாலர்கள்.ஒப்பந்தமான பிறகு, ஈஸ்ட்வுட் ஓர கண்ணால் பார்த்தல் போன்ற அம்சங்களால் விமர்சிக்கப்பட்டார்,பின்னாளில் இவையே அவரது ஸ்டைலாக மாறின. ஈஸ்ட்வுட் முதல் கதாபாத்திரம் ஒரு ஆய்வக உதவியாளராக 1955ம் ஆண்டு திரைப்படமான ரிவென்ச் ஆஃப் த க்ரியேச்சரில் கிடைத்தது.அடுத்த மூன்று ஆண்டுகளில், அவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.1959 ஆம் ஆண்டில் நட்புக்காக "மேவ்ரிக்" படத்தில்,பணத்துக்காக ஒரு பணக்கார பெண்ணை திருமணம் செய்யும் ஒரு கோழைத்தனமான வில்லனாக நடித்தார்.ஈஸ்ட்வுட் பிரஞ்சு படமான "லஃபாயெட்டெ எஸ்காட்ரில்லெ"வில் ஒரு ஓட்டுநரான சிறு வேடத்தில் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப்பின், ஈஸ்ட்வுட் 1958ல் சிபிஎஸின் வெஸ்டர்ன் தொடரான ராஹைடில் ரவுடி யேட்ஸ் என்ற துணை பாத்திரத்தில் நடித்தார்."ராஹைடு" ஆண்டுகள் (1959-65) ஈஸ்ட்வுட் வாழ்க்கையில் மிகவும் கடினமானவையாக இருந்தன, அவர் பெரும்பாலும் ஒரு நாள் சராசரியாக பன்னிரெண்டு மணி நேரமும், ஒரு வாரத்திற்கு ஆறு நாட்களும் நடித்தார்,எனினும் சில இயக்குனர்கள் கடினமாக உழைக்கவில்லை என அவரை விமர்சித்தனர். 1963 இறுதியில் ராஹைடு தொடரின் புகழ் குறைந்தது.அவர் தனது முதல் இயக்குனர் முயற்சியாக பல டிரைலர்களை இத்தொடரில் படமாக்கினார்,எனினும் தயாரிப்பாளர்களை அவரால் திருப்திபடுத்த முடியவில்லை.நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் ஈஸ்ட்வுட் ஒரு எபிசோடுக்கு $ 750(2013ல் $ 6,068) அமெரிக்க டாலர்கள் மற்றும் இத்தொடர் இரத்து நேரத்தில், அவர் இழப்பீடாக $119,000(2013ல் $881,505) அமெரிக்க டாலர்கள் பெற்றார். 1963ம் ஆண்டு இறுதியில், ஈஸ்ட்வுட்டின் "ராஹைடு" இணை நட்சத்திரம், எரிக் பிளெமிங்,செர்ஜியோ லியோன் மூலம் ஸ்பெயினின் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் எடுக்கப்படும்,எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் என்ற ஒரு வெஸ்டர்ன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தார்.ரிச்சர்ட் ஹாரிசன் என்பவர் ஈஸ்ட்வுட்டிற்கு இப்படத்தில் நடிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.அவருக்கு பதினோரு வார வேலை ஊதியத்தியமாக $15,000 (2013ல் $112,902) மற்றும் படப்பிடிப்பின் முடிவில் போனஸாக ஒரு மெர்சிடிஸ் கார் என நிர்ணயிக்கப்பட்டது.ஈஸ்ட்வுட் பின்னர் வெஸ்டர்ன் தொடரான "ராஹைடிலிருந்து" எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸில் நடிக்கும் மாற்றம் பற்றி பேசும்போது:"நான் ராஹைடில் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் ஹீரோவாக நடித்து சோர்வடைந்தேன், எனவே இத்தருணம் ஒரு எதிர்ப்பு ஹீரோவகும் முடிவெடுத்தென்" என்றார்.ஈஸ்ட்வுட் பெயரில்லாத கதாநாயகனின் தனித்துவமான பாணியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் லியோனின் வெஸ்டெர்ன் படங்களில், ஒரு மைல்கல் என நிரூபித்தது.படத்தின் வெற்றி ஈஸ்ட்வுட்டை இத்தாலியில் ஒரு பெரிய நட்சத்திரமாக மாற்றியது. ஆர்னோல்டு சுவார்செனேகர் அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார். மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை உடற்கட்டு கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார். அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக உலக ஆணழகன் படத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் திரு.ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர். ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலி போட்டியிட்ட அர்னால்ட் அக்டோபர் 7,2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார். அர்னால்டும் அவரது மனைவி மரியா ஸ்ரிவர்-உம் 25 ஆண்டுகளாக இணை பிரியாத மணவாழ்க்கையில் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். ஸ்வார்சுநேகர் ஆஸ்திரியாவில் உள்ள தாள் என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். ஸ்வார்சுநேகர் ஆஸ்திரிய ராணுவத்தில் பணியாற்றி ஒரு வருடம் பணி நிறைவு செய்தவர். இவர் ராணுவத்தில் பணியாற்றிய பொழுது ஜூனியர்.திரு.ஐரோப்பா என்கிற ஆணழகன் பட்டதை வென்றவரும் ஆவார். அர்னால்ட் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக 1966 இல் லண்டன் நகருக்கு சென்றார். அப்பொழுது அவர் இரண்டாம் இடம் மட்டுமே பெற முடிந்தது. அந்த போட்டியில் நடுவராக இருந்த சார்லஸ் பென்னெட் என்பவர் அர்னால்டின் திறமைகளை கண்டு வியந்து அவராகவே அர்னால்டிற்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். அதன் பின்னர் அர்னால்டின் வெற்றிகளின் வாயிலாக படி படியாக முன்னேறி உச்சத்தினை அடைந்தார். டோட்டல் ரீகால், ட்ரூ லைஸ் பிரடேட்டர் டெர்மினேட்டர் 1, 2, 3 கமாண்டோ ரசல் குரோவ் ரசல் குரோவ் (பி. 1964) நியூசிலாந்தில் பிறந்த நடிகர் ஆவார். ஆஸ்கார் விருது வென்றவர். "The Insider", "Gladiator", "A Beautiful Mind" ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோ லியோனார்டோ டிகாப்ரியோ ("Leonardo Wilhelm DiCaprio", பிறப்பு: நவம்பர் 11, 1974) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார். லியோனார்டோ வில்ஹெல்ம் டிகாப்ரியோ நவம்பர் 11, 1974 அன்று லாஸ் ஏஞ்சலீசு, கலிபோர்னியாவில் பிறந்தார், தாயார் இர்மெலின் டிகாப்ரியோ செருமானிய உருசியக் கலப்பில் பிறந்தவர் .தந்தை சித்திரக்கதைக் கலைஞரான ஜார்ஜ் டிகாப்ரியோ. இத்தாலிய-செருமானியக் கலப்பில் பிறந்தவர். இவர்களின் ஒரே குழந்தை லியோனார்தோ. இவருடைய பெயரின் நடுப்பகுதி வில்ஹெல்ம், தாய் வழியில் வந்த பாட்டனாரின் குடும்ப பெயர். டிகாப்ரியோ "லெனி வில்லியம்ஸ்" என்ற பெயரில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்விலும் தோன்றினார். டிகாப்ரியோ ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் நடித்தும், குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களிலும் நடித்து வந்துள்ளார். ரோமியோ ஜூலியட் (1996) திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகரானார். டைட்டானிக் (1997) மூலம் உலகப் புகழ் பெற்றார். அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் அவரை கதாநாயகன் அந்தஸ்தை உறுதிப்படுத்தின. டிகாப்ரியோவின் காதல் உறவுகள் பரவலாக ஊடகங்களில் பரவி வருகின்றன. 90 களின் பிற்பகுதியில் நடிகை பிஜோ ஃபிலிப்ஸ், மாடல் அழகி கிறிஸ்டன் சாங்க் மற்றும் பிரித்தானிய அழகி சமூக எம்ம மில்லர் மூவரையும் காதலித்தார். 2000 ஆம் ஆண்டில் அவர் பிரேசில் அழகி கீசெல் பஞ்சன் மீது தீராத காதல் கொண்டார். இந்த காதல் 2005 வரை சுவைத்தது. 2005 முதல் 2011 வரை இசுரேலிய அழகி பார் ரெஃப்பீலிடன் காதல் கொண்டிருந்தார், ரெஃப்தீலியின் சொந்த ஊரான ஹாட் ஹேர்ரோனுக்கு சென்றார். டிஸ்கபிரியோ லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு இல்லத்தையும், நியூயார்க்கிலுள்ள பேட்டரி பார்க் சிட்டி யில் ஒரு வீட்டையும் வாங்கினார். 2009 ஆம் ஆண்டில், பெலீசில் இருந்து ஒரு தீவை வாங்கினார், அதில் அவர் ஒரு சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலா மையத்தை உருவாக்க திட்டமிட்டார். 2014 ஆம் ஆண்டில், கலிபோர்னியா, பாம் ஸ்பிரிங்ஸில் நூற்றாண்டின் நவீன கட்டிடக்கலைஞர் டோனால்ட் வேக்ஸ்லெரால் வடிவமைக்கப்பட்ட அசல் டினா ஷோ குடியிருப்பு ஒன்றையும் வாங்கியுள்ளார் 2005 ஆம் ஆண்டில், காப்ரியோவின் முகம் கடுமையாக காயமுற்றது, ​​மாடல் ஆர்த்தா வில்சன் அவரை உடைந்த சீசாவினால் தாக்கினார். இதனால் காதுப்பகுதியில் பதினேழு தையல் போடப்பட்டது. மாடல் ஆர்த்தா வில்சன் 2010 ல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். அரசியலில் 2004 அதிபர் தேர்தலில் ஜான் கேரிக்கு ஆதரவு அளித்தார், 2008 மற்றும் 2012 தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாய் பிரசாரம் மேற்கொண்டார். சிட்டிசன் சிட்டிசன் 2001 ஆம் ஆண்டில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது கே. குஞ்சுமோனின் தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் தேவா உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் ("அஜித்") என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி ("நக்மா") இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் சிட்டிசன் 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது. தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. பாடகர் திப்பு பாடிய "மேற்கே உதிக்கும் சூரியனே" எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும். கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவடத்தில் இருந்தனர் கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் 2009 ஆண்டு பெப்ரவரியில் முழுமையாக மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2009 ஒக்டோபர் மாதம் தொடக்கம் மீண்டும் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாந்தா மொனிக்கா சாந்தா மொனிக்கா (ஆங்கிலம்: Santa Monica) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு நகரம் ஆகும். சாந்தா மொனிக்காவின் மேற்குப் பக்கத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது. தவிர மற்றைய அனைத்துப் பக்கங்களிலும் லாஸ் ஏஞ்சலஸ் சுற்றி இருக்கிறது. சாந்தா மொனிக்கா நவம்பர் 30, 1886ல் நகரமாக அறிவிக்கப்பட்டது. சாந்தா மொனிக்கா நகரத்தின் பரப்பளவு 21.4 கி.மீ² (8.3 ச.மை). 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 96,500 மக்கள் வாழ்கிறார்கள். துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் டி. ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரண்டை, தமிழ்நாடு) அல்லது "துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்" இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார். ஜெபகோபுரம் என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். துரைசாமி, எப்சிபா தம்பதிகளுக்கு ஒரே மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தினகரன் பிறந்தார். இவரது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர் ஆவர், தாய் எப்சிபா வீட்டுமனைவியாக இருந்தார். குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தாயார் குணப்படுத்தப்பட முடியாத நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு வந்தார். வாலிபராயிருந்தபோது வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் காரணமாக 1955 பெப்ரவரி 11 அன்று தற்கொலை எண்ணத்துடன் தொடருந்துப் பாதைக்கு சென்றார். செல்லும் வழியில் காவல்துறையில் வேலை செய்த தனது சித்தப்பாவை சந்தித்தார். கடவுள் பக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், தினகரனுடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார். நீண்ட நேரம் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டவர் தினகரன். இதனால் இவரது மூட்டுகள் பாதிக்கப்பட்டன. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு சளித் தொல்லை மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2008 பெப்ரவரி தொடக்கத்தில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் தினகரனுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. சிகிச்சை பலனின்றி 20.2.2008 அன்று காலை 6 மணிக்கு தனது 73வது அகவையில் தினகரன் மரணம் அடைந்தார். உடுநுவரை உடுநுவரை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 வட்டச் செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். கெலிஒயா இப்பிரிவில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது. உடுநுவரை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 568 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு வட்டச் செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. சிலிக்கான் சிலிக்கான் அல்லது மண்ணியம் (இலங்கை வழக்கு: சிலிக்கன்; ஆங்கிலம்: "Silicon") ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Si. அணு எண் 14. இது அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமம் ஆகும். புவி ஓட்டில் ஆக்ஸிஜனுக்கு அடுத்து அதிகம் கிடைப்பது சிலிக்கான் ஆகும். இது தூய தனிமமாக அரிதாகவே கிடைக்கிறது. சிலிக்கான் ஒரு அலோகம். பூமியின் புறவோட்டுப் பகுதியில் 28 விழுக்காடு இருப்பினும் இது காலங்கடந்தே கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் அதன் ஆக்சைடிலிருந்து ஆக்சிஜநீக்கம் செய்து சிலிகானைத் தனித்துப் பிரிப்பதில் உள்ள இடர்பாடுகளே ஆகும். சிலிகான் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை. ஆக்சைடாகவும், சிலிகேட்டாகவும் உள்ளது. மணல், குவார்ட்ஸ் பாறைப் படிகங்கள், அகேட் மற்றும் சில வகையான இரத்தினக் கற்களில் ஆக்சைடாகவும், கிரானைட், அஸ்பெஸ்டோஸ், களிமண், மைக்கா போன்றவற்றில் சிலிகேட்டாகவும் சிலிகான் உள்ளது. ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக பூமியில் அதிகமாகச் செழுமையுற்றிருக்கும் தனிமம் சிலிகான் ஆகும். மண்ணியத்தை ஒரு வேதித் தனிமமாக அறிவதற்கு முன்பே அதன் சேர்மங்களைப் பற்றி பழங்காலத்திலிருந்தே தெரிந்து வைத்திருந்தார்கள். கண்ணாடி என்பது சிலிகேட்டாகும்.இதை வெகு காலமாக மக்கள் கண்ணாடியாலான பொருட்கள் செய்வதற்கும், கட்டடங்களிHyன் அழகை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பொருளாக்கப் பயன்படுத்துவதற்கும் அறிந்திருந்தார்கள் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணல்மத்தில் (சிலிக்கா – "silica") ஒரு வேதித் தனிமம் இருக்கக் கூடும் என்று நம்பினார்கள். சர் ஹம்பிரி டேவி, மின்சாரத்தின் மூலம் மணல்மத்தைப் பகுக்க முயற்சி செய்தார். இந்த வழிமுறையால் பல கார உலோகங்கள் இனமறியப்பட்டன என்றாலும் மணல்மத்தில் இது பயன் தரவில்லை. சிலிகான் ஆக்சைடை பழுக்கக் காய்ச்சி, அதன் மீது உலோகப் பொட்டாசிய ஆவியை பீய்ச்சிச் செய்த முயற்சியும் பலிக்கவில்லை. 1811-ல் கே லூசாக் ("L. J. Gay Lussac") மற்றும் தெனார்டு ("L. Thenard") ஆகியோர் சிலிகான் டெட்ரா புளுரைடு மற்றும் உலோகப் பொட்டாசியம் இவற்றிற்கிடையே தீவிரமான வேதி வினையை ஏற்படுத்தி செம்பழுப்பு நிறத்தில் ஒரு விளைபொருளைப் பெற்றனர். அதில் படிக உருவற்ற மண்ணியம்(சிலிகான்) இருப்பதாகத் தெரிவித்தனர். 1823 ல் சுவீடன் நாட்டு வேதியியலாரான பெர்சிலியஸ் ("J. Berzelius") சிலிகான் ஆக்சைடு (மண்), இரும்பு மற்றும் கரித்தூள் இவற்றைக் கலந்து உயர் வெப்ப நிலைக்குச் சூடுபடுத்தி, இரும்பும் சிலிகானும் சேர்ந்த ஒரு கலப்பு உலோகத்தைப் பெற்றார். பின்னர் கே லூசாக் மற்றும் தென்னார்டின் வழிமுறையைப் பின்பற்றி பழுப்புநிறப் பொருளைப் பெற்றார். நீரோடு செயல்படச் செய்து ஹைட்ரஜன் குமிழ்களை வெளியேற்றி, படிக உருவற்ற மண்ணியத்தை கரும்பழுப்பு நிறத்தில் நீரில் கரையாத ஒரு விளை பொருளாகப் பெற்றார். இதில் பொட்டாசியம் சிலிகோ புளுரைடு வேற்றுப் பொருளாக இருந்தது. இதை மீண்டும் மீண்டும் நீரில் கழுவித் தூய்மைப்படுத்தி தூய மண்ணியத்தைப் பெற்றார். டிவில்லி (de Villi), 1854 ல் படிக உருவ சிலிகானை உருவாக்கிக் காட்டினார். வணிக ரீதியில் சிலிகாவையும் கார்பனையும் மின்னுலையில், கார்பன் மின் வாய்களின் துணை கொண்டு சூடுபடுத்தி உற்பத்தி செய்கின்றார்கள். This method, known as early as 1854 இலத்தீன் மொழிச் சொல்லான சிலிசியம்(Silicium) என்பதிலிருந்தே சிலிக்கான் என்ற பெயர் வந்தது. இது கடினமிக்க கல் என்ற பொருள்படும் சிலக்ஸ் ("Silex") என்ற சொல்லிலிருந்து உருவானது. அறை வெப்பநிலையில் ஒப்பீட்டளவில் சிலிக்கானின் உருகு நிலை மற்றும் கொதிநிலை முறையே சுமார் 1,400 மற்றும் 2,800 டிகிரி செல்சியஸ் ஆகும். சிலிகான் சூரியன் மற்றும் பல விண்மீன்களில் காணப்படுகிறது. எரோலைட் ("aerolites") போன்ற எரிகற்களில் ஒரு முக்கியச் சேர்மானப் பொருளாக உள்ளது. படிக உருவற்ற சிலிகான் பழுப்பு நிறப் பொடியாக இருக்கிறது. இதை உருக்கி ஆவியாக்க முடியும். படிக உருக்கொண்ட சிலிகான் உலோகப் பொலிவும் சாம்பல் நிறமும் கொண்டது. சிலிகானை ஒற்றைப் படிகமாக, படிக வளர்ச்சி முறைகள் மூலம் பெறுகின்றார்கள். ஹைட்ரஜன் வளிம வெளியில் தூய ட்ரை குளோரோசிலேனை வெப்பப் பகுப்பிற்கு உள்ளாக்கி மிகவும் தூய்மையான சிலிகான் படிகத்தைப் பெறுகின்றார்கள். இது குறைக் கடத்தியாலான சாதனங்களின் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளாக விளங்குகிறது. தூய சிலிகான் உள்ளியல்பான அல்லது அகவியல்பான ("Intrinsic") குறைக் கடத்தியாகும். இதன் கடத்து திறனை ஒரு சில குறிப்பிட்ட வேற்றுப் பொருட்களை உட்புகுத்தி புறக் காரணியொன்றால் கட்டுப்படுத்த முடியுமாறு மாற்றிக் கொள்ள முடியும். அப்படிப் பெறப்பட்ட குறைக்கடத்தியை "புறவியல்பான குறைக்கடத்தி" ("extrinsic") என்பர். சிலிகானின் பிணைதிறன் 4. எனவே ஒவ்வொரு சிலிகான் அணுவும் புறச் சுற்றுப் பாதையில் நான்கு எலெக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் அருகாமையில் உள்ள நான்கு சிலிகான் அணுக்களுடன் பிணைந்து இணைகின்றன. இதில் 5 பிணை திறன் கொண்ட பாஸ்பரஸ், ஆர்செனிக், ஆண்டிமோனி, பிஸ்மத் போன்ற தனிமங்களில் ஏதாவதொன்றைச் சேர்க்க அதில் கட்டற்ற எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதனால் இதை 'எதிர்மின் வகைக் குறைக்கடத்தி' ("N-type semiconductor") என்பர் 3 பிணை திறன் கொண்ட போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் இவற்றைச் சேர்க்க அதில் கட்டற்ற நேர் மின் துளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதனால் இதை 'நேர் மின் வகைக் குறைக் கடத்தி' ("P-type semiconductor") என்பர். இன்றைக்கு குறைக் கடத்தி மின்னணுவியல் துறையில் வியத்தகு மாற்றங்கள் செய்து வருகிறது. அலை பெருக்கி ("amplifier"), அலையியற்றி ("Oscillator") அலைப்பண்பேற்றி ("Modulator"), அலைப்பண்பிறக்கி ("detector"), அலைபரப்பி ("transmitter"), அலைத்திருத்தி ("rectifier"), வானொலி, தொலைகாட்சி, கைபேசி போன்ற சாதனங்களால் தொழில், போக்குவரத்து, செய்திப் பரிமாற்றம், விண்வெளி ஆய்வு போன்ற பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சூரிய மின் சில்லுகளை குறைக் கடத்திகளைக் கொண்டு உற்பத்தி செய்துள்ளனர். சிலிகான் ஓரளவு மந்தமாக வினைபுரியக் கூடியது எனினும் இது ஹாலஜன்களாலும் நீர்த்த காரங்களினாலும் பாதிக்கப் படக்கூடியது. ஹைட்ரோ புளூரிக் அமிலம் தவிர்த்த பிற அமிலங்கள் சிலிகானைப் பாதிப்பதில்லை. சிலிகான் குறைக் கடத்தியாலான மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. சிலிகான் தரும் மற்றொரு உற்பத்திப் பொருள் சிலிகோன்களாகும். இதன் பொதுவான வேதிக் குறியீடு R2SiO ஆகும். இதில் R என்பது ஹைட்ரோ கார்பன்களால் ஆன பகுதி மூலக்கூறைக் குறிக்கும். பல்மயமாக்கப் பட்ட பல்ம ("polymer") சிலிகோன்களை (R2SiO)n என்று குறிப்பிடுவர். சிலிகோன் குடும்பத்தில் இன்றைக்கு நூற்றுக்கணக்கான சிலிகோன்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றார்கள். இவை நீர்த்த நீர்மத்திலிருந்து பாகு போன்ற பாய்மங்கள் பசை போன்ற மசகு, மென்மையான திண்மம் போன்ற கூழ்மம்(Colloid), ரப்பர் போன்ற நெகிழ்மம், பிசின்கள் என நீண்ட நெடுக்கைக்கு உட்பட்டிருக்கிறது. இவற்றின் தனிச்சிறப்புகளினால், வழக்கமாகப் பயன்படுத்தப் பட்டு வந்த பல கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களுக்கு மாற்றுப் பொருளாக இவை பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக சிலிகோன்கள் தேய்ந்து மெலிவதில்லை. தீவிரமான பருவ மாற்றங்களைத் தாக்குப் பிடிக்கின்றது. நீரை விலக்கித் தள்ளுவதால் நீர் ஒட்டுவதில்லை. செயற்கைக் கோள், போக்குவரத்து ஊர்திகளுக்கான உடல் பாகங்கள், மருத்துவக் கருவிகள், மின்னேமம் ("electrical insulator") ஒட்டு நாடாக்கள், ஒலி மற்றும் ஒளிப் பதிவு நாடாக்கள், வண்ணப் பூச்சு, மெருகூட்டு எண்ணெய்கள், அடைப்பு வளையங்கள் ("gasket"), தரை விரிப்புகள், குடைத் துணிகள், தார்ப்பாய்கள் என சிலிக்கோன்கள் பயன்படும் துறைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. சிலிகோன்கள் பொதுவாக அகச் சிவப்புக் கதிர்களின் பெரும்பகுதியை 95 விழுக்காடு வரை கடந்து செல்ல அனுமதிக்கின்றன. அதனால் இவை அகச் சிவப்புக் கதிர்களை ஆராயும் கருவிகளில் பயன்படுகின்றன. மணல் மற்றும் களிமண் வடிவில் சிலிகோன், செங்கல் தயாரிக்கப் பயன்படுகின்றது. இது கட்டுமானப் பொருளாகவும், வெப்ப உலைகளின் உட்சுவருக்கு உகந்த பொருளாகவும் பயன்தருகிறது. சிலிகேட்டுகள் மட்பாண்டங்கள், எனாமல் உற்பத்தி முறையிலும், சிலிகா கண்ணாடி உற்பத்தி முறையிலும் பயன்படுகின்றன. எளிதாகக் கிடைக்கின்ற, விலை மலிவான கண்ணாடியின் இயந்திர, ஒளியியல், வெப்பவியல் மற்றும் மின்னியல் பண்புகள் மிகவும் ஏற்புடையதாய் இருக்கின்றன. ஜன்னல் கதவுகள், விளக்குகள், குப்பிகள், மின்கடத்தாப் பொருள் எனக் கண்ணாடி பல பயன்களைத் தருகின்றது. சிலிகான் கார்பைடு மிகவும் கடினத் தன்மை மிக்க ஒரு பொருள். இது தேய்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. லேசர் கருவிகளில் 4560 A ஓரியல் ("Monocromatic") ஒளியை ஏற்படுத்த இது பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. ஏஞ்சல் அருவி ஏஞ்சல் அருவி என்பது வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். உலகின் மிக உயரமான தடையின்றி வீழும் அருவியான இது 979 மீட்டர் (3,212 அடி) உயரமும் 07 மீட்டர் (2,648 அடி) வீழ்ச்சியும் கொண்டுள்ளது. இது வெனிசுவேலா நாட்டின் பொலிவர் மாநிலத்தில் உள்ள கனைமா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள "ஆயன்-டெபுய்" என்ற மலையின் விளிம்பில் இருந்து வீழ்கிறது.. இந்த அருவியின் முன்பு முதன்முதலில் பறந்தவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த "ஜிம்மி ஏஞ்சல்" என்பவர் ஆவார். ஆகவே அவரது நினைவாக இது "ஏஞ்சல் அருவி" என்ற பெயர் பெற்றது. மேலும் அவரது அஸ்தி ஏஞ்சல் அருவியில் கரைக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன் மைக்கேல் சில்வெஸ்டர் கார்டேன்சியோ ஸ்டாலோன்(; ஜூலை மாதம் 6 ஆம் தேதி 1946 ஆம் வருடம் பிறந்த இவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் என பொதுவாக அழைக்கப்படுகிறார் மற்றும் Sly Stallone என்று புனைப்பெயரிட்டும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு அமேரிக்க திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர்,திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் அவ்வப்போது ஓவியமும் வரைவார். ஸ்டாலோன் ஹாலிவுட் திரைப்படங்களில் தனித்து அதிரடி ஆக்ஸன் கதாபதிரங்களினால் வெகுவாக அறியப்படுகிறார். இரண்டு குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களை இவர் செய்துள்ளார். அவை குத்துசண்டை வீரர் ராக்கி பல்பா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஜான் ராம்போ ஆகியவை ஆகும். தி ராக்கி மற்றும் ராம்போ திரைபடங்களினுடன் மேலும் சில திரைப்படங்கள் அவரை ஒரு நடிகராக வலுவடைய செய்ததுடன் அவரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் வலுவடைந்தது. ஸ்டாலோன் ராக்கி திரைப்படம் நேஷனல் பிலிம் ரிஜிஸ்டரியில் பதியவைக்க பட்டது. அத்துடன் இத்திரைப்பட முட்டுகள் சுமித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தின் முகப்பு நுழைவு வாயிலில் ஸ்டாலோன் இன் ராக்கி திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில் ராக்கி ஸ்டெப்ஸ் என்று புனைபெயரிடபட்டது. பிலடெல்பியா அருங்காட்சியகம் ஆனது அவரின் ராக்கி கதாப்பாத்திரத்தின் சிலையானது நிரந்தரமாக அருங்காட்சியகத்தின் அருகில்,வலது பக்கத்தில் படிகளுக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ளது. இது 2010 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன் நியூயார்க் நகரத்தில் பிராங்க் ஸ்டேல்லன், Sr இற்கு மூத்த மகனாக பிறந்தார். நடிகர் மற்றும் இசையபைப்பாளர் பிராங்க் ஸ்டேல்லன் இவருக்கு இளைய சகோதரர் ஆவார். ஸ்டாலோனின் தந்தை இத்தாலியின்,அபுலியா,Gioia del Colle இல் பிறந்தார். அவரது குழந்தை பருவத்திலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார். ஸ்டாலோனின் தாயார் அரை ரஷியன் யூத மற்றும் அரை பிரஞ்சு வம்சாவளியை சேர்த்தவர் ஆவார். இவர் பிறக்கும் போதே அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவரது முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு இவரது முகத்தில் சில பாகங்களில் செயலற்று போனது. இதனால் இவரது முகத்தில் இடது அடி பாகமான உதடு, தொண்டை, முகவாய்கட்டை பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பினால் இவரது பார்வை மற்றும் பேச்சும் பாதிக்கப்பட்டது. இவரது தந்தை ஒரு அழகுக்கலை நிபுணர் ஆவார். அவர் தன் குடும்பத்தை வாஷிங்டன் டி.சி க்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு அழகு கலை பள்ளியை தொடங்கினார். இவரது தாய் பெண்களுக்கு ஜிம்னாஸ்டிக் பள்ளியை 1954ல் தொடங்கினார். இவரது 9வது வயதில் இவரது தாய் தந்தையர் சட்டப்படி பிரிந்தனர். அதன் பின் இவர் தாயுடன் வாழ்ந்தார். ஜான் ரேம்போ றம்போ அல்லது ரேம்போ ("Rambo") ஒரு பிரபல திரைப்படக் கதாபாத்திரம். டேவிட் மோரெல் (David Morrell) எழுதிய பர்ஸ்ட் பிளட் (First Blood) புதினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். றம்போ திரைப்படத் தொடரில் First Blood (1982), Rambo: First Blood Part II (1985), Rambo III (1988) ஆகிய மூன்று இதுவரை வெளிவந்துள்ளன. நான்காவதான ஜோன் றம்போ (John Rambo) ஆனது 2008 இல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. றம்போ பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சில்வெஸ்ரர் ஸ்ரலோன் ஆவார். ஜான் குளோட் வான் டாம் ஜான் குளோட் வான் டாம் ("Jean-Claude Van Damme") சண்டைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகர். 1960 இல் பெல்ஜியத்தில் பிறந்தார். இவர் பிறந்தது பிரசல்ஸ் நகரம் என்பதாலும், இவரது சண்டைப்படங்கள் கரணமாகவும் இவர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்" என்ற புணைப்பெயரைப் பெற்றிருக்கிறார். பியர்ஸ் புரோஸ்னன் பியர்ஸ் புரோஸ்னன் (Pierce Brendan Brosnan, பி. 1953) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். பிறப்பால் ஐரிஷ் நாட்டவர். ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் 1995 - 2002 காலத்தில் நான்கு படங்கள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சான் கானரி சர் தாமஸ் சான் கானரி (Sir Thomas Sean Connery (பிறப்பு. ஆகத்து 25, 1930) ஸ்கொட்லாந்தில் பிறந்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார். இவர் அகாதமி விருது மற்றும் இரண்டு முறை பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று முறை கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார். இவர்தான் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1962 முதல் 1983 வரை ஏழு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தெ அன்டச்சபிள்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் துணைக் கதாப்பத்திரத்திற்கான அகாதமி விருது பெற்றார். டிராகன் ஹார்ட், மரைன், தெ நேம் ஆஃப் தெ ரோஸ், தெ லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மென், இன்டியானா ஜோன்ஸ் அண்டு தெ லாஸ்ட் க்ருசேட், தெ ராக் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இசுக்கொட்லாந்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறந்த மனிதர் மற்றும் இசுக்கெட்லாந்தின் வாழ்ந்துகொண்டிருக்கும் பொக்கிஷம் ஆகியனவற்றிற்கு நடத்திய வாக்கெடுப்பில் இவர் தேவெற்றி பெற்றார். 1989 ஆம் ஆண்டில் பீப்பிள் எனும் அமெரிக்க இதழ் சிறந்த ஆணழகனாக இவரைத் தேர்வு செய்தது ,மேலும் 1999 இல் நடத்திய வாக்கெடுப்பில் நூற்றாண்டின் சிறந்த ஆணழகனாக இவர் தேர்வானார். தாமஸ் சான் கானரி ஆகத்து 25, 1930 இல் பவுண்டைன்பிரிட்ஜ், எடின்பரோவில் பிறந்தார். தாமஸ் சான் கானரி எனும் பெயரானது இவரின் தாத்தாவின் பெயரானதாமஸ் என்பதுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவரின் தந்தை ஜோசப் கானரி ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தார் மேலும் சுமையுந்து ஓட்டுநராகவும் பணிபுரிந்துள்ளார். இவரின் தாய் யுபேமியா மெக்பைன் எஃபீ ஒரு துப்புரவுத் தொழிலாளி. இவரின் மூதாதையர்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் இருந்து இசுக்கொட்லாந்துக்கு இடம்பெயர்ந்தனர். இவரின் தந்தை கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர். ஆனால் இவரின் தாய் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர். இவருக்கு நீல் எனும் சகோதரர் உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் வரை தனது பெயரின் மத்தியப் பகுதியான சான் என்றே அழக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தனது இளமைப் பருவத்தில் டாமி என அழக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆரம்பப பள்ளியில் பயிலும் போது குட்டையாக இருந்ததாகவும் தனது பதினெட்டாம் வயதிலேயே 6 அடி 2 அங்குலம் வளர்ந்துவிட்டத்தாகவும் கூறினார். சான் கானர் முதலில் இசுக்கொட்லாந்து, எடின்பரோவில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் பால்காரராக வேலை பார்த்தார். 2009 ஆம் ஆண்டில் ஒரு வாடகையுந்து ஓட்டுநருடன் நடந்த உரையாடலைப் பின்வருமாறு கூறுகிறார். எடின்பரோ திரைப்படத் திருவிழாவில் பங்கேற்பதற்காக நான் ஒரு வாடகையுந்தில் சென்றேன். அப்போது நாங்கள் கடந்து சென்ற அனைத்துத் தெருக்களின் பெயர்களையும் நான் கூறுவதைக் கேட்ட ஓட்டுநர் எவ்வாறு உங்களுக்கு இந்தத் தெருக்களின் பெயர்கள் தெரிகிறது? எனக் கேட்டார். அதற்கு நான் இங்கு பால்காரராக வேலை பார்த்துள்ளேன் எனக் கூறினேன். அதற்கு அவர் ,அப்படியானால் தற்போது நீங்கள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? எனக் கேட்டார். என்னால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை எனத் தெரிவித்தார். மெல் கிப்சன் மெல் கிப்சன் (Mel Gibson, பி. ஜனவரி 3, 1956) அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து பின் இயக்குனராகி ஆஸ்கார் விருது வென்ற ஆறாவது நடிகராவார். "த பேசன் ஆப் த கிறிஸ்ட்" படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார். இராசேந்திர பிரசாத் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர். இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மகாவீர சாகி பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ந்திருந்தார். இவரது தாயார் கமலேசுவரி தேவி சமயப் பற்றுள்ள ஒரு மாது ஆவார். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார். இராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதானபோது ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் (tutelage of a Moulavi) பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க இவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.சாப்ரா மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் டி. கே கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் ரூ.30 உதவித் தொகைப் பெற்று தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார் இராசேந்திர பிரசாத். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் செயலாற்றியுள்ளார். பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார்.தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார். 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார். 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் என எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார். வி. வி. கிரி வி. வி. கிரி என்றழைக்கப்பெற்ற வராககிரி வேங்கட கிரி (10 ஆகஸ்ட் 1894 - 23 ஜூன் 1980)இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார். முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி .இன்னகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல். 1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் உள்ள உநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார்.ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்து -இல் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஈடுபட்டால் அவருக்கு எமன் தே வலேரா , மைகேல் கோல்லின்ஸ்,பாட்றிக் பியர்ஸ் , தேச்மொண்டு பித்ச்கரல்து ,எஒஇன் மச்நேஇல் ,ஜேம்ஸ் காங்நோல்லி மற்றும் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தாயகம் திரும்பியதும் , அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார். கிரி பேரரசுக்குரிய சட்டபேரவையில் 1934-ஆம் ஆண்டு உறுப்பினரானார். 1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் , கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார். மதராஸ் பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது. இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் , அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . அதன் பின் 1952- ஆம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார். உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார். 1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார். அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார். இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி. கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார். முகம்மது இதயத்துல்லா முகம்மது இதயத்துல்லா ஓபிஈ ("Mohammad Hidayatullah", , ) (திசம்பர் 17, 1905 – செப்டம்பர் 18, 1992) பெப்ரவரி 25, 1968 முதல் திசம்பர் 16, 1970 வரை பதினோராவது இந்தியத் தலைமை நீதிபதியாகவும் ஆகத்து 20, 1979 முதல் ஆகத்து 20, 1984 வரை ஆறாவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் பொறுப்பாற்றியவர். இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 20, 1969 முதல் ஆகத்து 24, 1969 வரை இந்தியக் குடியரசுத் தலைவராக தற்காலிகப் பொறுப்பில் இருந்துள்ளார். இவரைப் பெருமைப்படுத்தும் வண்ணம், சத்தீசுகர் மாநிலத்திலுள்ள இவரது பிறந்த ஊரான ராய்ப்பூரில் 2003ஆம் ஆண்டில் இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பக்ருதின் அலி அகமது பக்ருதின் அலி அகமது ("Fakhruddin Ali Ahmed", , 13 மே 1905–11 பெப்ரவரி 1977) இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1974 முதல் 1977 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.. பக்ருதின் அலி அகமது பழைய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் 1905, மே 13 தேதி பிறந்தார். இவர் நன்கு அறியப்பட்ட அசாமிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை உத்திர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் அரசு உயர் நிலைப்பள்ளியில் தொடங்கினார். தனது மெட்ரிகுலேஷன் படிப்பை டெல்லி அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் 1923 ஆம் ஆண்டு புனித கேத்தரின் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1928 ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்தார். 1925 ஆம் ஆண்டு இலண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் தீவிரமாக பணியாற்றினார்.1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக 3 1/2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் 1952 முதல் 1953 ராஜ்ய சபாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் அசாம் அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார். 1936 முதல் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகவும், 1947 முதல் 1974 வரை பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் கோபிநாத் போர்டோலாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,வருவாய் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இரண்டு முறை (1957–1962) மற்றும் (1962–1967) ஆகிய ஆண்டுகளில் அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மக்களவைக்காக அசாமின் பார்பெட்டா தொகுதியிலிருந்து 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு , தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். அசாம் கால்பந்து சங்கம் , மட்டைப்பந்து சங்கம் ஆகியவற்றின் தலைவராக பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அசாம் விளையாட்டு குழுவின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1967 ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்துசங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 முதல் இவர் தில்லி கால்ப் கிளப் மற்றும் தில்லி ஜிம்கானா கிளப் ஆகியவற்றில் உறுப்பினராகவும் இருந்தார். 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பக்ருதின் அலி அகமது 1977-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். 1975 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா சென்ற போது அங்குள்ள கொசோவோ நகரின் பிரிஸ்டினியா பல்கலைகழகத்தினர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர். நீலம் சஞ்சீவ ரெட்டி நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 19, 1913 – சூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார். ஜெயில் சிங் கியானி ஜெயில் சிங் (பஞ்சாபி:ਜ਼ੈਲ ਸਿੰਘ,மே 5, 1916 – டிசம்பர் 25, 1994) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் எனப் பல பதவிகளில் இருந்து செயல்பட்டவர். தந்தையார் ஒரு தச்சுத் தொழிலாளி. செயில் சிங் தம் தாயை தம் இளம் அகவையிலேயே இழந்தார்.சின்னம்மா கவனிப்பில் வளர்ந்தார். சீக்கிய சமயத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த காரணத்தால் குரு கிரந்த சாகிப் என்னும் நூலைக் கற்றுத் தேர்ந்தார். சீக்கிய மதத்தின் கோட்பாடுகளையும் வரலாற்றையும் கற்றார். சமயக் கல்லூரியில் சேர்ந்து பணி செய்தமையால் செயில் சிங் சொற்பொழிவு ஆற்றுவதில் திறமை பெற்றார். கியானி என்னும் சொல் சமயக் கோட்பாட்டில் தேர்ந்தவர் என்று பொருள். கியானி செயில் சிங் நடுவணரசின் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகச் செயல்பட்டார். சீக்கிய மதப் புனிதக் கோயிலான பொற்கோயிலில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளின் வன் செயல்களை ஒடுக்கும் நோக்கத்தில் பொற் கோயிலுக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. சில மணி நேரத்தில் அங்கு இருந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இதனால் பொற்கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று சீக்கிய மதத்தினர் கண்டித்தனர்.கியானி செயில் சிங்கை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். ஆனால் செயில் சிங் பதவி விலகவில்லை. ஆனால் பிற் காலத்தில் அந்நிகழ்வுகளுக்கு சீக்கியர்களிடம் மன்னிப்புக் கோரினார். தம் சீக்கியப் பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப் பட்டபோது தில்லியில் பெரிய வன்முறை சீக்கியர்கள் மீது நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் அவ்வன்முறையில் மாண்டார்கள். இந்திரா காந்தி மறைவுக்குப் பின் இராசீவ் காந்தி பிரதமர் பதவி ஏற்றார். ஆனால் கியானி செயில் சிங் பிரதமர் இராசீவ் காந்தியுடன் இணக்கமாக இல்லை. சில நடவடிக்கைகளில் கருத்து வேறுபட்டார்.. 1994 ஆம் ஆண்டில் புனிதப் பயணம் செய்யும்போது சாலையில் விபத்து ஏற்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் இறந்தார். ரா. வெங்கட்ராமன் இரா. வெங்கட்ராமன் ("Ramaswamy Venkataraman"), (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார். இவர் 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.மேலும் உயர் படிப்பிற்க்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளர். தொழிலாளர் சட்டத்தில் புலமை பெற்றவர். தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர். இவர் விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டவர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள்,உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கம் அமைத்தவர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டவர். 1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. 2009 சனவரி 12இல், வெங்கட்ராமன் உடல் திசுக்களில் சிறுநீர் கசிவு பிரச்சினையின் காரணமாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 சனவரி 2009 அன்று குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் ஈ.கோலை பாக்டீரியத் தொற்றினால் அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசு நாளுக்கு மறுநாள் 2009 சனவரி 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் தனது 98ஆவது அகவையில் புது தில்லி இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் காலமானார். இவரது மரணத்தின் காரணமாக, முன்பே திட்டமிடப்பட்டிருந்த இந்தியக் குடியரசு நாளுக்கான சில கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இவரது உடல் ராஜ்காட்டிற்கு அருகில் ஏக்தா சிதாலில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சங்கர் தயாள் சர்மா சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999)இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். எண்ணுறுமையும் எண்ணுறாமையும் எண்ணுறு (countable) கணங்களும் எண்ணுறா (uncountable) கணங்களும் முதன் முதலில் கியார்கு கேன்ட்டர் என்ற கணிதவியலரால் 1874 இலிருந்து 1897 வரையில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அறிமுகப் படுத்தப்பட்டன. அக்கட்டுரைகள் கணித உலகின் அடித்தளத்தில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு மட்டுமல்லாமல் இருபதாவது நூற்றாண்டின் கணிதத்திற் கெல்லாம் ஒரு தவிர்க்க முடியாத அடித்தளமாக அமைந்தன. இயல்பெண்களின் (அதாவது, நேர்ம முழு எண்களின்) கணத்தை N என்று கொள்வோம்: N = {1, 2, 3, 4, 5, ... }. இது ஒரு முடிவிலாத கணம். ஒரு முடிவிலாத கணத்திலிருந்து பல (ஏன் இன்னும் சொல்லபோனால், முடிவிலா) உறுப்புகளை எடுத்துவிட்டபின்பும் அதன் முடிவிலாமையின் எண்ணிக்கை அளவை (Cardinal number) அப்படியே இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக, N இலிருந்து எல்லா ஒற்றைப்படை எண்களையும் எடுத்துவிட்டபின், மீதமுள்ளதை E = {2, 4, 6, 8, 10, ...} என்ற கணமாக எழுதலாம். இப்பொழுது வியப்பு என்னவென்றால் N –ம் E –ம் ஒரே எண் அளவைகளைக் கொண்டுள்ளன! எப்படி? ஒரு தாய்க்கணமும் அதற்குள் உள்ளடங்கிய உட்கணமும் ஒரே எண் அளவையுள்ளதாக எப்படி இருக்கமுடியும்? முடியும், கணங்கள் முடிவிலாதவையாக இருந்தால். எப்படி என்று பார்ப்போம். இரு கணங்கள், A, B, என்போம், ஒன்றுக்கொன்றான இயைபு பெற்றுள்ளன என்றால், அவைகளின் உறுப்புகளை ஒன்றுக்கொன்றாக இரட்டை (ஜோடி) சேர்க்கமுடியும் என்று பொருள். அதாவது, A இன் உறுப்புகள் ஒவ்வொன்றுடன் B இன் உறுப்புகள் ஒவ்வொன்றுடன் இரட்டை சேர்த்தல். இதை ‘இருவழிக்கோப்பு முறை’ என்றும் சொல்வதுண்டு. இப்பொழுது மேலே உள்ள கணங்கள் N, E இரண்டிற்கும் ஒன்றுக்கொன்றான இயைபு உண்டாக்குவோம். கீழே பார்க்கவும். 1 ↔ 2, 2 ↔ 4, 3 ↔ 6, 4 ↔ 8 … இந்த பரிமாற்ற முறையினால் ஒவ்வொரு இயல்பெண்ணுக்கும் (அ-து N இன் உறுப்புக்கும்) தனித்துவம் கொண்ட ஒரு இரட்டைப்படை எண்ணும் (E இன் உறுப்பு), ஒவ்வொரு இரட்டைப்படை எண்ணுக்கும் (அ-து E இன் உறுப்புக்கும்) ஒரு தனித்துவம் கொண்ட இயல்பெண்ணும் (N இன் உறுப்பு), கோர்க்கப்பட்டு இருவழிக்கோப்பு உண்டாக்கப்பட்டுவிட்டது. இதனால் நாம் அறிவது: அவ்விரண்டு கணங்களும் ஒரே எண்ணிக்கை அளவையுள்ளன என்பதே. N என்ற இயல்பெண்களின் கணத்தினுடைய எண் அளவைக்கு (அதனால் E –உடைய எண்ணிக்கை அளவைக்கும்) கணித உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துக்குறிப்பு : אo. இதை ‘ஆலப்ஃ-சுழி’ என்று பலுக்குவார்கள் (உச்சரிப்பார்கள்)). இந்த ஆலஃப் (א) எழுத்து ஹிப்ரூ அகரவரிசையில் முதல் எழுத்தாகும். எந்தெந்த கணங்களுக்கு N–உடன் ஒன்றுக்கொன்றான இயைபு அமையுமோ அந்த கணங்கள் எல்லாவற்றிற்கும் எண்ணிக்கை அளவை இதே ஆலப்ஃ-சுழி தான். இந்த கணங்களெல்லாம் ‘எண்ணுறு கணங்கள்’ (countable sets) என்ற, அல்லது ‘எண்ணுறு முடிவிலிக் கணங்கள்’ (countably infinite sets) என்ற வகையில் சேர்வன. மேலெழுந்தவாறு பார்த்தால் Q+ இல் N-ஐவிட பற்பல உருப்படிகள் அதிகப்படியாக உள்ளன. இந்த அதிகப்படியே ஒரு முடிவிலாத அளவு. அப்படியிருந்தும் இரண்டிற்கும் ஒரே எண்ணிக்கை அளவை தான் என்கிறார் கேண்டர். இதை நிறுவ வேண்டுமென்றால் நாம் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். Q+ இலுள்ள உறுப்புகளை 1, 2, 3, ... என்று வரிசைப் படுத்திவிட வேண்டும். அப்படி வரிசைப்படுத்திவிட்டால் Q+ க்கும் N க்கும் ஒரு இருவழிக்கோப்பு உண்டாகிவிடும். இதோ அந்த வரிசை கேண்டரின் கோணல்கோட்டு முறை என்ற செய்முறையால் செய்யப்படுகிறது. எல்லா விகிதமுறு நேர்ம எண்களையும் பல நிரை (row) களில் நிரப்புவதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு விகிதமுறு எண் p/q வுக்கும் p என்ற தொகுதியும் q என்ற பகுதியும் இருக்கும். முழு எண்ணாக இருந்தாலும் p/q என்று எழுத முடியும். நாம் முதல் நிரையில் பகுதி 1 உள்ள எல்லா விகிதமுறு எண்களையும், இரண்டாவது நிரையில் பகுதி 2 உள்ளவை களையும், மூன்றாவது நிரையில் பகுதி 3 உள்ளவைகள், நான்காவது நிரையில் பகுதி 4 உள்ளவைகள், ... இப்படி எழுதிக்கொண்டே போவோம். ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் இந்தப் பட்டியலில் எங்கோ ஒரு இடத்தில் நிச்சயமாக அமைந்து விடுகிறது, ஒன்றும் விட்டுப்படவில்லை, என்பதில் சந்தேகமில்லை. இம்முறையில் ஒரே விகிதமுறு எண் பல முறை வர்லாம். உதாரணமாக 2/1, 4/2 ஆகவும் வரும். வரட்டும், அதை நாம் எப்படி சரிக்கட்டுகிறோம் என்பது போகப்போகத் தெரியும். இப்பொழுது படத்தைப்பார். அம்புக்குறிகளுடைய போக்கு தான் நாம் எதிர்பார்க்கும் வரிசை. முதலில் 1/1. பிறகு 2/1, அதாவது 2. பிறகு 1/2, பிறகு 1/3 அடுத்து வரும் 2/2 ஐ ஒதுக்கிவிடுவோம்; ஏனென்றால் அது 1 = 1/1 ஆக ஏற்கனவே வரிசையில் சேர்க்கப்பட்டுவிட்டது. பிறகு 3/1, பிறகு 4/1, அடுத்து, 3/2, 2/3, பிறகு 1/4, பிறகு 1/5 ... இப்படிப்போகிறது வரிசை. இதனால் நமக்குத் தெரிவதென்னவென்றால் Q+ ம் N ம் சம எண் அளவையை உடையவை. எப்பொழுதெல்லாம் ஒரு முடிவிலாத கணத்தின் உறுப்புகளை 1, 2, 3, ... என வரிசைப்படுத்திவிட முடியுமோ அப்பொழுதெல்லாம் அந்த கணத்தின் எண் அளவை אo என்று கண்டுகொள்ளலாம். இப்படிப்பட்ட கணங்கள் எல்லாம் எண்ணுறு கணங்கள் எனப் பெயர் பெறுகின்றன. ஆக, N, E, Q+, மற்றும் இவைகளுடைய உட்கணங்கள், அவை முடிவிலாததாக இருக்கும் பட்சத்தில், இவை எல்லாம் எண்ணுறு கணங்களே. அப்படியென்றால் எல்லா முடிவிலா கணங்களும் எண்ணுறு கணங்கள் தானா? இல்லை. இது கேண்டர் கண்டுபிடித்த அடுத்த ஆச்சரியமான விஷயம். எப்பொழுதெல்லாம் ஒரு முடிவிலாத கணத்தின் உறுப்புகளை 1, 2, 3, ... என்று வரிசைப்படுத்தமுடியாது என்று நிறுவப்பட்டதோ அப்படிப்பட்ட கணத்தை எண்ணுறா கணம் என்பர். ‘எண்ணவியலா கணம்’ என்றும் கூறலாம். இம்மாதிரி கணம் ஒன்று, -- ஒன்றென்ன, பல, ஏன், முடிவில்லாமல் பல—இருக்கமுடியும் என்பதுதான் கேண்ட்டரின் அடுத்த எதிர்பாராத கண்டுபிடிப்பு. A என்ற ஒரு முடிவிலா கணத்திலிருந்து அதனுடைய உட்கணங்கள் (A என்ற கணம் உட்பட) எல்லாவற்றினுடைய திரள் (aggregate) ஒரு புது கணம் ஆகிறது. இப்படி படைக்கப்பட்ட கணம் ,formula_2 என்று குறிக்கப்படும். அதற்கு A இன் அடுக்கு கணம் (Power set of A) என்று பெயர். இப்பொழுது கேண்ட்டரின் முதல் முக்கிய தேற்றம் “A இன் அடுக்குக்கணத்தின் எண் அளவை A இனுடையதை விட கண்டிப்பான பெரிது” என்பதாம். இத்தேற்றத்தின் நிறுவலில்தான் கேண்ட்டரின் கோணல் கோடு நிறுவல் முறை வெகு நேர்த்தியாகப் பயன்படுகிறது. நிறுவலைத்தாண்டி தேற்றத்தின் விளைவுகளைப்பார்ப்போம். "முதல் விளைவு": A ஒரு எண்ணுறு கணமானால், அதன் அடுக்குக்கணம் ஒரு எண்ணுறா கணமாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் formula_2 யும் A யும் ஒன்றுக்கொன்றான இயைபு கொண்டிருக்காது. "இரண்டாவது விளைவு": N இன் அடுக்குக்கணம் ஒரு எண்ணுறா கணம். அதன் எண் அளவை N இன் எண் அளவையைவிடப் பெரியது. formula_4 இன் எண் அளவையை 2^אo என்ற குறியீட்டால் குறிப்பிட்டால், நமக்கு אo ஐ விட ஒரு பெரிய எண் அளவை கிடைக்கிறது. "மூன்றாவது விளைவு": இப்பொழுது formula_4 இன் அடுக்குக் கணத்திற்குப் போனோமானால் அதனுடைய எண் அளவை 2^אo ஐ விட இன்னும் பெரியதாக இருக்கும். இப்படி போய்க்கொண்டே இருக்கலாம். இதற்கு முடிவே கிடையாது. விளைவு: எண் அளவைகளின் கணம் ஒரு முடிவிலா கணம். கேண்டரின் பல தேற்றங்களில் இன்னொருமுக்யமான ஒன்றைச்சொல்லாமல் இக்கட்டுரை முடிவு பெறாது. N இன் அடுக்குக்கணம் formula_4 . இதனுடைய எண் அளவை 2^אo. இது ஒரு எண்ணுறா முடிவிலி. இதுதான் மெய்யெண்களின் கணத்தினுடைய எண் அளவை என்பது அந்த முக்யமான தேற்றம். இந்த எண் அளவைக்கு c என்று இன்னொரு குறியீடு உண்டு. ஆக, 2^אo = c. இந்த இடத்தில் தான் கேண்டர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பினார். אo ஒரு எண்ணுறு முடிவிலி. c அதைவிடப் பெரிய முடிவிலி, மற்றும் எண்ணுறாதது. இரண்டிற்கும் இடையில், அவையிரண்டையும் விட வித்தியாசமாய் வேறு ஒரு முடிவிலி உள்ளதா, இல்லையா? வேறு விதமாகச்சொன்னால், எந்த முடிவிலா கணத்திற்கு எண் அளவை אo ஐவிட பெரியதாகவும் c ஐவிட சிறியதாகவும் இருக்கும்? அப்படியொரு கணம் இருக்கிறதா இல்லையா? இருக்க நியாயமில்லை என்று நினைத்தார் கேண்டர். ஆனால் அவரிடம் அதற்கு நிறுவல் இல்லை. அவருடைய நினைப்பு சரி என்று வைத்துக்கொள்வதுதான் தொடரகக்கருதுகோள். இதை ‘CH’ என்று கணித உலகில் சுருக்கமாகச் சொல்வார்கள். CH உண்மையா இல்லையா? இது தான் கேள்வி. இது இருபதாவது நூற்றாண்டில் கணித உலகில் ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1900 இல் பாரிஸ் நகரில் நடந்த அகில உலகக்கணிதவியலர்கள் மகாநாட்டில் டேவிட் ஹில்பர்ட் இருபதாவது நூற்றாண்டில் கணித உலகிற்கு சவாலாக இருக்கப்போகின்றன என்று 23 கணித பிரச்சினைகளை பட்டியலிட்டார். அப்பட்டியலில் முதலிடம் வகுத்தது இந்த CH தான். 1938 இல் கர்ட் கோடெல் ஒரு ஆழமான தேற்றத்தை தோற்றுவித்தார். அது, CH உண்மையாகவே இருப்பதாக வைத்துக்கொள்வதால் கணிதவியலில் ஒரு புது முரண்பாடும் ஏற்பட்டுவிடாது என்பதுதான். இதையே வேறுவிதமாகச்சொன்னால் CH உண்மையல்ல என்பதை கணிதத்தர்க்க ரீதியில் நிறுவமுடியாது என்பது கோடெல்லின் தேற்றம். 1963 இல் பால் கோஹென் இப்பிரச்சினையின் மறுபக்க விளைவை நிறுவினார். அதாவது, CH உண்மை என்பதையும் கணிதத்தர்க்க ரீதியில் நிறுவமுடியாது. இவ்விரண்டு தேற்றங்களினால் கணித உலகு முதன்முதலாக, உண்மையா இல்லையா என்று எந்தப்பக்கமும் நிறுவமுடியாத கணிதப் பிரச்சினைகள் இருந்துதான் தீரும் என்று அறிந்துகொண்டது. அருவி அருவி () என்பது, ஆறு போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும். நீர்வீழ்ச்சி எனும் சொல் Waterfalls எனும் ஆங்கில சொல்லை தவறாக மொழிபெயர்த்து செயற்கையாக இக்காலத்தில் உண்டாக்கிய சொல்லாகும்.எனவே அருவி என்பதே சரி. சில அருவிகள் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உருவாகின்றன. இதனால், ஆற்றின் நீரோட்டப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுச் சடுதியான, கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில், அருவிகள் உருவாகாமல், நிலச்சரிவு, நிலவெடிப்பு, எரிமலைச் செயற்பாடுகள் போன்ற சடுதியான நிலவியல் விளைவுகள் ஏற்படுகின்றன. அருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை பூங்காக்கள், நிலத்தோற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு. ஜூரோங் அருவி ஜுரோங் அருவி, தொடர்ச்சியாக விழும், செயற்கை அருவிகளுள், உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும். 30 மீட்டர்கள் (98 அடி) உயரம் கொண்ட இது சிங்கப்பூரில் ஜூரோங் பறவைகள் பூங்காவில் உள்ளது. இந்த அருவியில் வினாடிக்கு 140 லிட்டர்கள் நீர் பாய்கிறது. இந்த நீரானது மறுசுழற்சி செய்யப்படுகிறது. இலங்கை அருவிகளின் பட்டியல் பெரும்பாலான இலங்கையின் அருவிகள் அல்லது நீர்வீழ்ச்சிகள் மத்திய மலைநாட்டிலும் அதன் எல்லைகளிலும் காணப்படுகின்றன. இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயரத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல அருவிகளை உருவாக்குகின்றன. இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் பல முக்கிய அருவி கொண்டிருக்கின்றன. கூடுதலான அருவிகள் முக்கிய பெருந்தெருக்களில் இருந்து தொலைவில் காணப்படுகின்றன. பாதையோரம் காணப்படும் அருவிகள் முக்கிய உல்லாசப்பிரயாண மையங்களாக விளங்குகின்றன. "இலங்கை அருவி அவை" (Lanka Council on Waterfalls) அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கையில் 382 அருவிகளை பதிவு செய்திருக்கிறது. மூலம்: மாயச் சதுரம் மாயச் சதுரம் (வினோதச் சட்டகம்) என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒரு எண் அமைப்பு. இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுரம் ஆகும். எந்தப் பக்கமாகக் கூட்டினாலும் (அதாவது நிரல், வரிசை) மூலைவிட்டங்களாகக் கூட்டினாலும் ஒரே எண் கூட்டுத்தொகையாக வரும். n = 3, 4, 5, …, ஆக வரும் எண்களில் மாய எண்ணானாது 15, 34, 65, 111, 175, 260, … (தொடராக A006003 in OEIS) ஆகாயகங்கை அருவி ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலாத் துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலைப் பகுதியை அடைகிறது. இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன. ஒகேனக்கல் அருவி ஒகேனக்கல் அருவி, ("Hogenakal Falls") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (வழி NH7) கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. "ஹொகேனேகல்" என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர். தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன். ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட சேமன் சண்டை என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, "நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன்" எனப் பாடும் சாமியாரைப் பார்த்து ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர். 1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு உகுநீர்க்கல் உயிர்காவிரி எனத் தரப்பட்டுள்ளது. உகுநீர்க்கல் உயிர்காவேரி மிகுதானியம் தகவாய்வினை பகுத்துண்பவர் எவராயினும் மிகுநீர் அருள் மகவாய்க்கொள் கொளினே உயிராய்ப் போற்றுவர் உயர்பண் பாடுவர் தூயர்நீர் தெய்வத் தாய்நீ எனவே என்பது இத்தலைப்பிலுள்ள முதற்பாடல். உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்து விட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம். ஊதுபத்தி ஊதுபத்தி அல்லது அகர்பத்தி என்பது மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள். பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும். எரிக்கும் பொது நறுமணப்புகை வெளிப்படுவதற்காக செய்யப்படுவதாகும். வாசனைப் பொருட்கள் பல கிறிஸ்தவ சபைகளில் வழிபாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக உரோமன் கத்தோலிக்கம், கிழக்க்கு மரபுவழித் திருச்சபை அங்கிலிக்கன், லூதரன் திருச்சபைகளில் இப்பயன்பாட்டைக் காணலாம். வாசனை பொருட்கள் நற்கருணை வழிபாட்டின் போதும் வெஸ்பர்ஸ் வழிபாட்டின் போதும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மூடிய சாடியுள் வைத்து வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சாடியுள் அனல் காணப்படும் அதனுள் தூள் படுத்திய வாசனைப் பெருளை இடுவதன் மூலம் நறுமணம் பெறப்படுக்கிறது. பின்னர் இச்சாடி பலிப்பீடம் நோக்கியோ வாசனைக் காட்டப்படும் நபர் நோக்கியோ மெதுவாக அசைக்கப்படும்.நேரடியாக எரிக்கப்படும் வாசனைப் பொருட்களை தவிர உயிர்த்த ஞாயிறு மெழுகுவர்த்திகளிலிலும் வாசனைப் பெருட்கள் கலக்கப்பட்டிருக்க்கும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சப்பைகளில் வாசனைப் பொருட்களால் எழும் புகை விசுவாசிகளில் செபமாக கொள்ளப்படுகிறது. விவிலியத்தின் கடைசி நூலான வெளிப்படுத்தல் நூலில் புனிதர்களின் செபங்கள் பாரிய பொன் வாசனைப் பொருட்கள் எரிக்கப்படும் பாரிய பொன் பாத்திரத்துக்கு ஒப்பிடப்படுகிறது(வெளி 5:8,வெளி 8:3). ரைன் அருவி ரைன் அருவி (Rhine Falls) ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய சமவெளி அருவியாகும். இது ஜெர்மனியின் எல்லையை அண்டியுள்ள வடக்கு சுவிர்சர்லாந்தின் ஸ்கஃப்ஹோசென் (Schaffhausen) நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது 150 மீட்டர் (450 அடி) அகலமும், 23 மீட்டர் (75 அடி) உயரமும் கொண்டது. மாரி காலத்தில் சராசரி நீர்ப் பாய்ச்சல் 250 மீ³/செக் ஆகவும், கோடையில் இது 600 மீ³/செக் ஆகவும் உள்ளது. இகுவாசு அருவி இகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி ("Iguazu Falls") இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் 20%, ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் ("Misiones") 80% ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை. அப்பே அருவி அப்பே அருவி (கன்னடம்:ಅಬ್ಬೆ ಜಲಪಾತ / ಅಬ್ಬೆ ಫಾಲ್ಸ್) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் உள்ளது. இது மடிக்கேரி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பர்க்கானா அருவி பர்க்கானா அருவி (கன்னடம்:ಬರ್ಕಣ ಜಲಪಾತ), இந்தியாவிலுள்ள உயரமான பத்து அருவிகளுள் ஒன்றாகும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ளது. இது சீதா ஆற்றினால் உருவாக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் முதன்மை நீர்மின் உற்பத்தித் திட்டத்துக்கு இந்த அருவியே மூலவளமாக உள்ளது. ஐஸ்வர்யா ராய் (நடிகை) ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார். ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார். ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார். 2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது. இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார். அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சன் , (1976 ஆம் வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் பிறந்தவர்) இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரது மகனுமாவார். இவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யைத் திருமணம் செய்துள்ளார். ஜெ.பி.தத்தாவின் "ரேப்புஜி" (2000)-த்தில் பச்சன் முதன்முதலில் தோற்றமளித்தார். 2004 ஆம் ஆண்டில் வெளி வந்த "தூம்" மற்றும் "யுவா" படங்களில் நடித்தார். யுவா படத்தில் இவரது நடிப்புக்காக பல விருதுகளைப் பெற்றார், அதில் மிகச் சிறந்த துணை நடிகர் வகைக்காக இவர் வாங்கிய இவருடைய முதல் பிலிம்பேர் விருதாகும். அபிஷேக் பச்சன் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகனாவார்; இவருடைய மூத்த சகோதரி சுவேதாபச்சன்-நந்தா ஆவார் (பி.1974). இவருடைய பாட்டனார், ஹரிவன்ஷ் ராய் பச்சன் நன்கு அறிமுகமான இந்தி இலக்கியங்களின் கவிஞர் ஆவார். இவருடைய குடும்பத்தின் கடைசி பெயர் ஸ்ரீவஸ்தவ் ஆக இருந்தது. பச்சன் என்பது இவரது பாட்டனார் பயன்படுத்திய புனைப்பெயராகும். எனினும் இவருடைய தகப்பனார், அமிதாப் திரைப்படத்துக்கு நுழையும்பொழுது, இவர் தன்னுடைய தகப்பனாரின் புனைப்பெயரையே பயன்படுத்தினார். தன்னுடைய பாட்டியின் புறத்திலிருந்து சீக்கிய,பஞ்சாபி கலாச்சாரத்தினை உடையவராகவும் அதேவேளையில் தன்னுடைய தாய் ஜெயா பாதுரியின் புறத்திலிருந்து கூலின் பிராமின்,பெங்காளி கலாச்சாரத்தை உடையவராகவும் பச்சன் இருக்கிறார். பச்சன் வாசிப்பு இடர்ப்பாடு உள்ள குழந்தையைப் போல் இருந்தார். இவர் மும்பையில் உள்ள ஜம்ணபை நர்சி பள்ளி மற்றும் பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்தார். புது டெல்லியில் உள்ள வசந்த் விஹார், மாடர்ன் பள்ளி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஐக்லோன் கல்லூரியிலும் படித்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இவருடைய படிப்பை தொடருவதற்கு அமெரிக்காவுக்குச் சென்றார், ஆனால் தன்னுடைய தகப்பனாரின் ஏபிசிஎல் நிறுவனம் பிரச்சினையை சந்தித்த காரணத்தினால், தன்னுடைய படிப்பை பாதியில் விட்டு தன்னை நடிப்பு தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டார். ஜெ.பி.தத்தாவின் "அகதி" 2000 த்தோடு பச்சன் தன்னுடைய நடிப்புத் தொழிலை ஆரம்பித்தார். பின்னர் பச்சன் மற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அதில் குச் நா கஹோ, பஸ் இத்னா ச க்ஹ்வாப் ஹே போன்ற நன்றாக வெற்றி பெறாத படங்களும் அடங்கும். மெயின் பிரேம் கி டிவனி ஹூன் (2003) மற்றும் 2004-ஆம் ஆண்டில் மணி ரத்தினத்தின் "யுவா" ஆகியவற்றில் இவருடைய நடிப்புத் திறமையானது இவரை ஒரு நடிகர் என மெய்ப்பித்துக் காட்டியது. அதே வருடத்தில் அவர் நடித்த "தூம்" திரைப்படம் வியாபார ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. 2005-ஆம் ஆண்டில், பண்டி ஆர் பாப்லி, "சர்கார்" , "தஸ்" , மற்றும் "பிளப்மாஸ்டர்" என தொடர்ச்சியாக நான்கு பெரும் வெற்றிப் படங்களின் புகழோடு பச்சன் திரைப்படங்களில் நடித்திருந்தார். "சர்கார்" திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான இவருடைய இரண்டாவது பிலிம்பேர் விருதினை இவர் பெற்றார். மேலும் பச்சன் சிறந்த நடிகர் விருதுக்காக முதன் முதலில் பிலிம்பேர் விருதில் முன்மொழியப்பட்டார். 2006- ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய முதல் திரைப்படமான, "கபி அல்விதா நா கெஹ்னா" , அந்த வருடத்தில் வெளிவந்த இந்திய திரைப்படங்களிலேயே அதிக வருவாய் ஈட்டிய படமாக அமைந்தது. மணிரத்தினத்தின் மேடைக் காட்சிகளான "நேற்று, இன்று, நாளை" -யில் மற்ற பல தோழமை நடிகர்களோடு இவரும் ஒருவராக இருந்திருக்கிறார்.பச்சனுடைய அவ்வருடத்தின் இரண்டாவது படமான "உம்ராவ் ஜான்" வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவியது, ஆனால் இவருடைய அந்த வருடத்தின் மூன்றாவது திரைப்படமான, "தூம்- 2", முதல் "தூம்"-ன் பின்தொடர்ச்சியாக வந்த இது நல்ல வசூல் ஈட்டியது,எனினும் முதல் "தூம்" போலவே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஹிருத்திக் ரோஷன் அவர்களுக்கே விமர்சகர்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. 2007-ஆம் ஆண்டில், பச்சன் "குரு" -வில் நடித்தது, இவருடைய நடிப்புத் திறனுக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது, மற்றும் இந்தத் திரைப்படம் இவருடைய தனிப்பட்ட வெற்றியை வெளிப்படுத்தியது. 2007-ஆம் ஆண்டு மே-ல் வெளிவந்து வெற்றி பெற்ற "சூட் அவுட் அட் லோகன்ட்வாலா" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜூன் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இவருடைய அடுத்த படமான "ஜூம் பராபர் ஜூம்" , இந்தியாவில் தோல்வியைத் தழுவியது ஆனால் வெளிநாட்டில் குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் நன்றாக ஓடியது. அதேவேளையில் இந்தப் படம் ஒரு கலப்பு விமர்சனத்தைப் பெற்றது, பச்சன் இவருடைய நடிப்புத் திறமைக்காக பாராட்டைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில், பச்சன், இவருடைய மனைவி, தகப்பனார் மற்றும் தோழமை நடிகர்களான ப்ரீத்தி ஜிந்தா, ரிதேஷ் தேஷ்முக், மற்றும் மாதுரி தீட்சித் ஆகியவர்களுடன் நடத்திய உலகச் சுற்றுலா மேடை நிகழ்ச்சி மறக்கமுடியாததாகும்.அதில் முதல் சுற்று அமெரிக்கா, கனடா, டிரினிடாட் மற்றும் லண்டன், இங்கிலாந்து ஆகியவற்றை உட்கொண்டிருந்தது. மேலும் பச்சன் தன்னுடைய தகப்பனாரின் ஏபிசிஎல் நிறுவனத்தில், செயலாக்கம் மற்றும் நிர்வாகச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார், பின்னர் ஏபிசிஎல் நிறுவனம் ஏ.பி.கார்ப்.லிட். ஆக மறுப்பெயரிடப்பட்டது. அந்த நிறுவனம் விஸ்கிராப்ட் இன்டர்நேஷனல் என்டேர்டைன்மென்ட் பிரைவேட் லிட். உடன் சேர்ந்து மறக்கமுடியாத திரைப்படங்களை தயாரித்தார்கள். 2008 ல் வெளிவந்த பச்சன் படங்களில் "சர்கார் ராஜ்" மற்றும் "தோஸ்தானா". ஆகியவையும் அடங்கும். தற்பொழுது அபிஷேக்கும், தயாரிப்பாளர்களாக மாறிய பாலிவுட் நடிகர்களின் பட்டியலில் "பா" என்கிற ஹிந்தி படத்தை தனது குடும்ப நிறுவனமான ஏ.பி.கார்ப்.லிட். காக தயாரித்ததின் மூலம் இணைந்துள்ளார். அபிஷேக் அத்திரைப்பட்டத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல், படத்தின் வரவு செலவு, சந்தை படுத்துவது, மற்றும் படத்தின் மொத்த தயாரிப்புகளிலும் பங்கு கொண்டார். அபிஷேக் தற்பொழுது கலர்ஸ் தொலைகாட்சியில், "நேஷனல் பின்கோ நைட்". என்கிற ஒரு புத்தம் புது விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், இது ஜனவரி 23,2010 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி கலர்ஸ் தொலைகாட்சியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நிகழ்வு முதலே, தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் மற்ற அனைத்து பிரபலமான தொலைக்காட்சி தொடர்களையும் பின்னுக்கு தள்ளியது. இதனால் இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வே டி.வீ.ஆர் படிநிலையில் 3.5-ஆகா உயர்ந்தது..பச்சன் 2010 -ல் வெளியான திரைப்படங்களில், ராவன் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் தமிழ் நடிகர் விக்ரம் உடன் நடித்துள்ளார். அக்டோபர் 2002 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சனுடைய 60 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், அபிஷேக் பச்சன் மற்றும் கரிஸ்மா கபூர் தங்களுடைய நிச்சயதார்த்தைப் பற்றி அறிவித்தார்கள். ஜனவரி 2003- ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் முறிந்து போனது. 2006- ஆம் ஆண்டில் யு.கேவின் ஈஸ்டர்ன் ஐ என்கிற இதழ் அபிஷேக் பச்சனை ஆசியாவிலேயே கவர்ச்சிகரமான ஆண்மகன் என்று குறிப்பிட்டது.."டைம்ஸ் ஆப் இந்திய" இவரை இந்தியாவில் தகுதிவாய்ந்த மணமாகாத ஆண்களில் ஒருவரென பாராட்டியது. அத்தருணத்தில் தான் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயை மணந்தார். பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இவர்களின் நிச்சயதார்த்தம், 14 ஜனவரி 2007 அன்று அறிவிக்கப்பட்டது. ராய் சார்ந்திருக்கும் தென்னிந்திய பன்ட் இனத்தின் ஹிந்து சடங்கு சம்பிராயத்தின் வழக்க முறைப்படி தம்பதியர்கள் இருவரும் 20 ஏப்ரல் 2007 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் வடஇந்திய அடையாளமாக பெங்காலி சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. மும்பை, ஜுஹுவில் இருக்கும் பச்சனின் பிரதீக்ஷா வீட்டில் திருமணம் மற்றும் சடங்குகள் நிகழ்ந்தன, ஆனால் இது கேளிக்கை ஊடகங்களால் பெரிதும் கவரப்பட்டிருந்தது. சிறுபக்கச் செய்திதாள்கள் இந்த ஜோடியை இருவரின் பெயர்கலவையான "அபிஐஸ்" என்றே வர்ணிக்கிறது (ஆதலால் அபி[ஷேக்] மற்றும் ஐஸ்[வர்யா]). 2007 டிசம்பர் 21 ம் தேதி பச்சனுடைய தந்தைவழி பாட்டியான தேஜி பச்சன் மரணமடைந்தார்..2009 செப்டம்பர் 28, திங்கட்கிழமை அபிஷேக் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் உலக புகழ் பெற்ற "தி ஒப்ராஹ் வின்பிரே ஷோ" நிகழ்ச்சியில் தோன்றினர். அமிதாப் பச்சன் அமிதாப் பச்சன் (பிறப்பு:அக்டோபர் 11, 1942) [2] இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் 'பிக் பீ' மற்றும் 'ஷாஹேந்ஷா' என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் 'கோபக் கனல் வாலிபன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார். பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளுக்கு ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான ஐஸ்வர்யராயை மணந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக்குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். அவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக்கவிஞர் ஆவார். அவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான், அன்றைய பைஸாலாபாத்தை சேர்ந்த ஒரு சீக்கியப்பெண்மணி ஆவார். ஆரம்ப காலத்தில் பச்சன் 'இன்குலாப்' என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ' அணையவே அணையாத சுடரொளி' என்பதாகும்.ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மருவி விட்டது. அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் மேடைநாடகங்களில் நடித்துள்ளார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணிவாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் பெறுவதையே வலியுறுத்தி வந்தார். ஆரம்பக்கல்வியை அலகாபாத் ஞான பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.அதன்பின் டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த 'பேர்ட் அண்ட் கோ' கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். தணியாத தாகம் நடிப்பின்மேல் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார். 1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை ஜெயபாதுரியை, வங்காளத்திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் பிறந்தனர் . மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள். 1969ல் வெளிவந்த "சாட்ஹிந்துஸ்தானி" அவரது 'முதல்' திரைப்படமாகும்! ஏழு முக்கிய பாத்திரங்களுள் ஒருவராக அவர் திரையில் முதன்முதல் தோன்றினார்! க்வாஜா அஹ்மத் அப்பாஸ் இயக்கத்தில் உட்பல் தத், மது, ஜலால் ஆகா ஆகியோர் நடிப்பில் வந்த சாட் ஹிந்துஸ்தானி படம் வருவாயில் வெற்றி பெறவில்லை. ஆயினும் பச்சனுக்கு "சிறந்த புதுமுகம்" என்ற தேசியத்திரைப்பட விருது கிட்டியது. 1971ல் வெளிவந்த "'ஆனந்த்'" விமர்சனம் பாராட்டுதலும், வியாபார வெற்றியும் பெற்றது. அதில் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து நடித்தார். பச்சனின் வேடம் வாழ்க்கையை வெறுக்கும் சிடுசிடுப்பான டாக்டர் வேடமாகும். அது பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருதுவாங்கித் தந்தது. அதேவருடம் "பர்வானா" படத்தில் மோகத்தில் லயிக்கும் காதலனாக, வில்லனாக, சிறப்பாக நடித்தார் உடன் நடித்தது நவீன் நிக்ஸல், யோகீதாபாலி, மற்றும் ஓம்பிரகாஷ்,ஆவர். பல படங்கள் தொடர்ந்தன "ரேஷ்மா அவுர் ஷேரா" உள்பட பல வந்தாலும், வசூலில் வெற்றி பெறவில்லை! அடுத்து "'குட்டி'" படம் வந்தது. அதில் கௌரவ வேடம் ஏற்றார். அப்படத்தில் அவரது வருங்கால மனைவி ஜெயாபாதுரி தர்மேந்திராவுடன் நடித்தார். ஏற்றஇறக்கம் செய்யும் குரலுச்சரிப்பு வளம் கொண்டிருந்த அமிதாப்பச்சன் அதை "'பர்வார்சி'யில்" வெளிப்படுத்தினார். அடுத்து எஸ் ராமநாதன் இயக்கத்தில் வந்த சாலை விபத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப்படம்" 'பாம்பே டு கோவா'" வில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் . அருணா இராணி, மெஹ்மூத், அன்வர் அலி, மற்றும் நஸீர் ஹூசேன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். 1973 பச்சனுக்கு முக்கிய வளர்ச்சி வாய்ந்த வருடமாக அமைந்தது, இயக்குநர் பிரகாஷ்மெஹ்ரா தனது "'ஜன்ஜீர்' " படத்தில் முதன்மைப்பாத்திரம் வழங்கினார். அதில் இன்ஸ்பெக்டர் விஜய்கன்னாவாக அற்புதமாக நடித்தார்! முந்தைய காதல் தீவிர முனைப்புமிக்க திரைப்படங்ளைவிட மாறுபட்டதாக அது அமைந்தது. மேலும் அவருக்கு 'கோபக்கனல் மிக்க வாலிபன்'என பாலிவுட்சினிமாவில புதிய கீர்த்தி பெற்றுத் தந்தது. அதையே தொடர்ந்து பிறபடங்களிலும் பின்பற்றினார். அது அவருக்குத் தொழில்ரீதியாக, பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற ஏதுவாகி, 73ல் பிலிம்பேர் மிகச்சிறந்த நடிகர் விருதுக்காக பெயர் முன்மொழியப்பட்டது. அதேவருடத்தில் அவர் ஜெய பாதுரியைத் திருமணம் புரிந்துகொண்டார். இருவரும் இணைந்து "ஜன்ஜீர்" , "அபிமான்" போல பலபடங்களைத் தந்தனர். பின்னாளில் பச்சன் "நமக் ஹராம்" படத்தில் விக்ரம் வேடத்தில் நடித்தார். அந்த சமூக சித்திரம் ரிஷிகேஷ் முகர்ஜீ இயக்க, பிரெஷ் சட்டேர்ஜீ நட்பின் பொருளில் ஸ்கிரிப்ட் பணி செய்து முடித்தார். ராஜேஷ் கன்னா, ரேகாவுடன் இதில் அவர் துணைவேடம் ஏற்று நடித்தது பாராட்டுதல்கள் பெறவைத்தது. பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருது அதனால் பெற்றார். 1974ல் பச்சன் பல கௌரவவேடங்களில் நடித்தார். "'கன்வாரா பாப்'" மற்றும் "'தோஸ்து'" அதில் குறிப்பிடத் தக்கதாகும். துணைவேடங்கள் தாங்கிய பிறகு பெற்ற அந்நிலை அந்த வருடம் அவரை வெகுஜன அந்தஸ்து பெறவைத்தது, "'ரொட்டி கபடா அவுர் மக்கான்'" திரைப்படம் ஆகும். மனோஜ் குமார் எழுதி இயக்கிய அப்படம் நிலைகுலையாத நேர்மை வறுமையில் செம்மை குணாதிசயங்களை வெகுவாகச் சித்திரித்துக் காட்டியதால் விமர்சனம் வியாபாரரீதியில் வெற்றி பெற்றது. சசிகபூர், ஜீனத் அமன், மற்றும் குமாருடன் அமிதாப் போட்டி போட்டு நடிப்பில் வெளுத்துக் கட்டினார். 1976 டிசம்பர் 6 ஆம்நாள் வெளிவந்த "'மஜ்பூர்'" முதன்மை வேடம் ஏற்று நடித்தார் ஜார்ஜ்கென்னடி நடித்த ஹாலிவுட் "ஜிக்ஜாக்" ஆங்கிலப்படத்தின் ஹிந்தி மறுவடிவப்படமாகும். அது பாக்ஸ் ஆபீஸ் சுமாரான வெற்றியைத்தான் தந்தது. 1975ல் மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தார். "'சுப்கே சுப்கே' " நகைச்சுவைப் படம், "'பரரர்'" குற்றவியல் படம், "'மிலி'" காதல்களிப்புப் படம் முக்கியமானவையாகும். அவைகளைத் தொடர்ந்து வந்த இருபடங்கள் இந்தித் திரைப்பட வரலாற்றில் அவரைப் புகழேணியின் உச்சியில் கொண்டுபோய்ச் சேர்த்தது. "'தீவார்'" படம் யாஷ்சோப்ரா இயக்கத்தில் சசிகபூர், நிருபாராய், நீட்டுசிங் உடன் அவர் நடித்தார். 75ல் மிகப்பெரும் வெற்றிப் படமாக அது அமைந்து, மிகச்சிறந்த நடிக்கருக்கான பிலிம்பேர் விருதை அவருக்கு ஈட்டித்தந்தது. தரவரிசையில் எண் 4 பெற்றது. "இன்டியாடைம்மூவிஸ்" டாப் 25' "தீவார்" படம் பட்டியலில் கண்டிப்பாக பார்க்கத்தகுந்த பாலிவுட் படங்கள்" அத்தரவரிசை கொடுத்தது. இரண்டாவதாக 1975 ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினம் அன்று வந்த "ஷோலே" (பொருள்: தீப்பிழம்புகள்) இந்தியாவிலேயே அதிக மொத்த வசூல் அள்ளிக் குவித்த பெருமைபெற்றதாகும். ரூ 2,36,45,00,000 தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 60 மில்லியன்களாகும். பணவீக்கம்" சரிக்கட்டக் கூடிய அளவிற்கு அமைந்தது. திரைப்படத் துறையில் மிகப்பெரும் நடிகர்களான தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, அம்ஜத்கான் ஆகியோருடன் பச்சன் ஜெயதேவ் பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தார் பணவீக்கம் 1999ல் பிரிட்டிஷ் ஒலிபரப்பு கார்பரேஷன் ஆயிரம் ஆண்டுகளில் மிகச்சிறந்த படமெனப் பாராட்டுதல்கள் தெரிவித்தது. "தீவாரைப்" போல் "இண்டியாடைம்ஸ்மூவீஸ்" 'கண்டிப்பாகக் காணவேண்டிய பாலிவுட் படங்கள்'"டாப்25"' பட்டியலில் இடம் நல்கியது. அதேவருடம் ஐம்பதாதவது பிலிம்பேர் வருடாந்திரவிழாவில் 50 ஆண்டுகளில் இல்லா தனிச்சிறப்புப் பெற்ற படம் என்ற பெருமையை வழங்கியது. "ஷோலே" படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பச்சன் தொழில்துறையில் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டமையும் , 1976 முதல் 1984 வரைக்கும் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதுகளும், பரிந்துரைகளும் ஏராளமாகப் பெற்றார். ஷோலே போன்ற படம் அவரது தகுதியைப் பாலிவுட்டின் மேம்பட்ட ஆக்க்ஷன் நாயகன் என்ற புகழ்உச்சிக்குக் கொண்டு சென்றது. பிறவகை வேடங்களையும் அவர் இலகுவாகக் கையாளமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 1976ல்"'கபிகபி'" படத்தில் காதல் வயப்படுபவராகவும், 1977ல் "'அமர்அக்பர்அந்தோணி'யில்" நேரத்திற்கேற்ற நகைச்சுவையாளராகவும், அதேபோல் 75ல் "'சுப்கே சுப்கே'வில் " சிரிப்பு வேடத்திலும் சோபித்துக் காட்டினார். 1976ல் இயக்குநர் யாஷ்சோப்ராவின் இரண்டாவது படமான "'கபி கபி' " காதல்படத்தில் அமிட்மல்ஹோத்ராவாகப் பூஜா என்ற ஓர் அழகான இளம்பெண் மேல் ஆழ்ந்த காதலில் விழுந்தவராக நடிகை ராக்கி குல்ஜாருடன் கவர்ச்சிகரமாக நடித்தார். உணர்வு பூர்வமான உரையாடல்கள் மிருதுவான கதைப்போக்கு அவரை கோப தாபம் மிக்க முந்தைய வீர வேடங்களைக் காட்டிலும் மாறுபடுத்திக் காட்டியது. மறுபடியும் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது! மறுபடியும் பாக்ஸ்ஆபீஸ் பெரும்வெற்றி! 1977ல் 'அமர் அக்பர் அந்தோணி' படத்துக்கான சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது கிடைத்தது. அதே "அமர் அக்பர் அந்தோணி " படத்தில் வினோத்கன்னா மற்றும் ரிஷிகபூருடன் அந்தோணிகான்சால்வ்ஸ் பாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தார். 1978ஆம் ஆண்டு அவரை வெற்றிவிழா நாயகராக மேல்நிலையில் உயர்த்தியது. அந்தவருடம் இந்தியாவிலேயே அதிகபட்சம் நடித்த பெருமை பெற்றார். தொடர்ந்து படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்துத் தன்திறமையை வெளிப்படுத்தினார். "'காஸ்மே வாடே'" யில் அமிட்-ஷங்கராக நடித்தார் "'டான்'" படத்தில் தலைமறைந்து வாழும் நிலவறைத் தாதாவாகவும், அவரைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட விஜய் பாத்திரமாகவும் நடித்தார். அந்த நடிப்பாற்றல் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது பெறவைத்தது. அதேபோல் "'திரிசூல்'" "'முக்தார் கா சிக்கந்தர்'" படங்கள் இன்னும் பல விருதுகள் பெறவைத்தது. முன்எவரும் செய்யாத சாதனை, பெறாத வெற்றி அவர்பெற்ற காரணத்தால் பிரெஞ்சு இயக்குநர் பிரான்காயிஸ்ட்ரூப் அவரை 'ஒருநபர் தொழிற்சாலை' என வியந்து பாராட்டினார். 1979ல் "மிஸ்டர் நட்வர்லால் " படத்தில் அவரது குரல் இசைக்குரலாக ஒலித்தது. ரேகாவுடன் இணைந்து அதில் நடித்தார். அந்தப்படத்தால் அவர் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுடன் சிறந்த ஆண்பாடகருக்கான விருதும் உடன்பெற்றார். அதே வருடம் வெளிவந்த "'காலா பாத்தர்' " படத்துக்கான சிறந்த நடிகர்விருது பெற்றார். மறுவருடம் ராஜ்கோஸ்லா இயக்கிய "'தோஸ்தானா'" படத்துக்காகவும் விருதுக்கு முன்மொழியப்பட்டார்! அப்படத்தில் சத்ருகன்சின்ஹா, ஜீனத்அமனுடன் சேர்ந்து நடித்தார். "தோஸ்தானா" அதிக மொத்த வசூல்பெற்ற பெருமை அந்தவருடம்1980 தந்தது. 1981ல் இசைஇன்ப மயமான யாஷ்சோப்ராவின் படம் "'ஸில்ஸில்'" மனைவி ஜெயாவுடனும் கிசுகிசுக்கப்பட்ட காதலி ரேகாவுடன் நடித்தார். 1980 முதல் 1982 வரை வெளிவந்த பிறபடங்கள்," 'ராம்பல்ராம்'" , "'ஷான்', " "'லாவாரிஸ்'" "'ஷக்தி'" ஆகிய யாவும் ஈடில்லாத நடிகர் திலீப்குமாருடன் ஈடுகொடுத்து நடித்தார். 1982ல் "கூலிப்" படத்தில் நடிக்கும் பொழுது சண்டைக் காட்சியில் புனீட்இஸ்ஸாருடன மோதும் போது, உணவுக்குழாய் பாதிக்கும் வண்ணம் காயமடைந்தார். பச்சன் எப்போதும் சண்டைக் காட்சியில் அபாயகரம் எனினும் சுயமாகவே நடிப்பார் ஒருகாட்சியில் மேஜையில் விழுந்து தரையில் விழவேண்டும். மேஜை மூலையின் கூர்முனை அவரது அடிவயிற்றை ஊடுருவியது. அதிக அளவு குருதியும் கொட்டியது மண்ணீரல் முறிவு உடனடியாக மருத்துவமனையில் அவசரச்சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தது உயிருக்கும் ஊசலாடும் நிலை! பல மாதங்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம்! அவர் நலம் விரும்பும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் மருத்துவ மனையில் நின்றிருந்தனர். இழந்த வலுமீண்டும் பெற வேண்டினர் மாதக்கணக்கில் அவர் குணமடைய வேண்டி யிருந்தது. ஓர்ஆண்டு உடல்நலம் சீராகும் காலம் ஆனது. பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப்பின் 1983ல் வெளிவந்த படம் அந்த விபத்தையே விளம்பரமாகப் பயன்படுத்தியதால் மிகப்பெரிய பாக்ஸ்ஆபீஸ)வெற்றி பெற்றது இயக்குநர் மன்மோகன் தேசாய் பச்சனின் விபத்திற்குப்பின் "கூலி " படத்தின் இறுதி முடிவை மாற்றினார். முதலில் இருந்தது போலவே சாகடிக்கப்பட்டால் அது கொஞ்சம் கூடப் பொருத்த மற்றிருக்கும் என்று இயக்குநர் கருதினார். நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரண மடைந்திருந்தால்அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார். படவெளியீட்டில் சண்டைக் காட்சிகள் அபாயக் கட்டத்தில் உறைந்து விடுவது போலக் காட்டினார். அந்தக் காட்சியில் முகப்புரை சேர்த்தார் அதன்படி நடிகர் அடிபட்ட நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தமையால் அந்த விபத்து அதிகவிளம்பரம் கொடுத்தது. நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரணமடைந்திருந்தால் அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார். பின்னாளில் அவருக்கு தசைநார்கள் பலவீன முற்ற நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. எனவே திரைப்படத்துறையை விட்டு விலகி விட்டு அரசியலில் நுழைய முடிவுசெய்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு அவநம்பிக்கை உணர்வு மேலோங்கியது. எனவே புதிய திரைப்படம் எப்படி வரவேற்கப்படுமோ என்ற மனக்கவலையை வெளிப்படுத்தினார். ஒவ்வொருபட வெளியீட்டின்போது அவர் எதிர்மறையாகவே சொல்லுவார்: 'ஹே!இந்தப் படம் தள்ளாடி வீழ்ச்சிபெறும்'(படம் தோல்வி காணும்) 1984ல் அமிதாப் நடிப்புத்துறையில் இருந்து விலகிக்கொண்டு அரசியல் துறையில் குறுகிய காலத்திற்குள் நுழைந்தார் அவருடைய குடும்ப நண்பர் ராஜிவ்காந்தியின் ஆதரவே அதற்குரிய காரணமாகும். அலகாபாத் தொகுதியில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் எதிர்த்துப் போட்டியிட்டார். அப்பொதுத் தேர்தலில் எச்.என்.பகுகுணாவை அதிக பட்ச வாக்குகள் வித்தியாசம் காட்டி (68.2 சதவீதம் வாக்குகள் வென்றார். ஆனாலும் அவரது அரசியல் வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை! மூன்றே ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அரசியலே ஒரு குட்டை என்று சொல்ல நேர்ந்தது. அதன்காரணமாவது அவரும் அவரது சகோதரரும் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என்று வெளிவந்த பத்திரிகைச்செய்தி அவரை நீதிமன்றம் போகச்செய்து குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியே அவர் பதவி விலகினார். அவரின் பழைய நண்பர் அமர்சிங் அவரின் ஏபிசிஎல் கம்பெனி நஷ்டமுற்று பணநெருக்கடி ஏற்பட்டதால் உதவிசெய்தார். அதன்விளைவாக அமிதாப் நண்பரின் அரசியல் கட்சியை ஆதரித்தார் அந்த சமாஜ்வாடி கட்சியில் மனைவி ஜெயா சேர்ந்து பிறகு ராஜ்யசபா உறுப்பினரானார். மனைவிக்காக பச்சன் அவர் சேர்ந்துள்ள கட்சிக்கு அதாவது சமாஜ்வாடிக்கயாக பல உதவிகள் செய்யலானார். விளம்பரங்கள் அளித்தல், அரசியல் போராட்டக்கூட்டங்கள் நடத்துதல் அதில் அடங்கும் இத்தகைய நடவடிக்கைகள் அவரை தொல்லையில் வலுக்கட்டாயமாக ஆழ்த்தியது. அதன்விளைவாக, நீதிமன்றங்கள் செல்ல வேண்டியதாயிற்று. பச்சன் தன்னை ஒரு விவசாயி என்று கூறி, சட்டப்பூர்வமான எழுத்துப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் அது உண்மையல்ல என்று அவரை வழக்கில் சிக்கவைத்த சம்பவம் அவரை அலைக்கழித்தது. பச்சனுக்கு எதிராகப் பத்திரிகைச்செய்தித்தடை அவர் படத்துறையில் உச்சத்தில் இருந்தவருடங்களில் கொணரப்பட்டது. அதுவும் ஓரு 15 ஆண்டுக்காலமாக அதுநிர்ணயிக்கப்பட்டு இருந்தது." 'ஸ்டார்டஸ்ட்' " போன்ற திரைப்பட சம்பந்தப்பட்ட ஒருசில பத்திரிகைகள் அதற்கான காரணமாயின. தனது சுயகாப்பிற்காகவே 1989 இறுதி வரை அவரது படப்பிடிப்புத் தளங்களுக்குப் பத்திரிகையாளர்கள் வரக்கூடாதெனத் தடுத்திருந்ததாக பச்சன் தரப்பில் சொல்லப்பட்டது. 1988ல் பச்சன் மீண்டும் திரையுலகம் திரும்பினார். "'ஷாஹேன்ஷா'" என்னும் பெயர்கொண்ட திரைப்படத்திற்காக அவர் பிரவேசித்தார். படத்திற்குப் பாக்ஸ்ஆபீஸ் வெற்றி கிடைத்தது. ஏனெனில் பச்சனின் மீள்வருகை பற்றிய செய்தி பிரசித்தியே காரணமாகும்! ஆனால் இவ்வெற்றியோ அவருக்குத்தொடர்ந்து கிடைக்கவில்லை. அடுத்து வந்த படங்கள் தோல்வியைத்தழுவின. எனவே அவரது நட்சத்திரப்புகழ் ஒளிமங்கலானது என்றாலும் 1991ல் "'ஹம்'" என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அது அன்றைய சரிவைச் சரிக்கட்டுவதாக தோற்றப்பொலிவு கொடுத்தாலும், சொற்ப காலத்திற்குப்பின் மந்தகதி தொடர்ந்தது. பெருவெற்றிப்படங்கள் தராத நிலை நீடித்தாலும், ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும். இரண்டாம் தடவையாக பச்சன் தேசிய விருது வாங்கினார் அதுவும் இந்தக் காலகட்டத்தில்! 1990ல் வெளிவந்த "'அக்னிபாத்'" என்ற மாபியாதாதா படத்திற்காக அது தரப்பட்டது!! இந்த வருடங்களே அவர் திரையில் தோன்றிய கடைசி வருடங்களே ஆகும். 1992ல் வந்த "'குடாகாவா" ' படத்திற்குப்பின் பச்சன் ஐந்தாண்டு ஓய்வைச் சுயமாகவே விரும்பி மேற்கொண்டார். 1994ல் தாமதம் தடங்கல்பட்டு வெளிவந்த "'இன்ஸானியாத்'" படம் பாக்ஸ்ஆபீஸ் தோல்விப்படமாகவே அமைந்தது. பச்சன் தாற்காலிக ஓய்வுகாலத்தில் படத்தயாரிப்பாளராக மாறினார். ஆங்கில அகரவரிசைப்படி ஏபிசி லிமிடெட் கம்பெனி 1996ல் தொடங்கினார்.(அமிதாப் பச்சன் கார்பரேஷன் கம்பெனி) அவரது தொலைதூர நோக்கத்தின் படி 10 பில்லியன் (கிட்டத்தட்ட 250 அமெரிக்க டாலர்கள்) 2000 வருடத்திற்குள் குவிய வேண்டும். ஏபீஸீஎல் வரைமுறைத்திட்டத்தின் படி, இந்தியதேசக் கேளிக்கைத் தொழிற்சாலை உற்பத்திகள் சேவைப் பணிகள் உள்பட தேசிய அளவில் விஸ்தாரம் ஆக்கப் படவேண்டும். முக்கியநீரோட்டமான இயக்கங்கள்படி, வர்த்தகத் திரைப்படங்கள் தயாரித்தல், விநியோகம் செய்தல், ஆடியோ ஒலிநாடக்கள், வீடியோ குறுந்தகடுகள் உற்பத்தி செய்தல், தொலைக்காட்சி மென்பொருள்கள் சந்தைக்குக கொண்டு வருதல், நிகழ்ச்சி மேலாண்மை, மற்றும் பிரபலஸ்தர்கள் பங்கு பெறவேண்டும் என்ற பற்பல செயல்திட்டங்கள் கொண்டு 1996ல் கம்பெனி உருவாக்கப்பட்டது. உருவான உடனுக்குடன் கம்பெனியின் முதல்திரைப்படம் வந்தது. அதன் முதல்படம் "'தேரே மேரே சப்னே'" வசூல்வெற்றி பெறவில்லை! ஆயினும் அர்ஷாத் வார்சி மற்றும் தென்னாட்டில் சிம்ரன் போன்ற நட்சத்திரங்கள் உதயமாக அது வழிவகுத்தது. பின்னரும் அவர் கம்பெனி ஒருசில படங்கள் தயாரித்தும் அதில் ஒன்று கூட உருப்படியான பலன்தரவில்லை. ஏபிசிஎல் தயாரிப்புகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமையவில்லை. 1997ல் தனது கம்பெனியால் தயாரிக்கப்பட்ட படம் "'மிரிட்யூதத்தா" ' மூலமாக பச்சன் மறுவருகை செய்தார் "மிரிட்யூதத்தா" அவரது ஏற்கனவே செய்யப்பட்ட சாதனைகளுக்கான அங்கீகாரம் அளிப்பினும் அவரை அதிரடி நாயகன் என்று ஏற்றுக்கொண்டாலும் அப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியே தந்தது. "1996ல்" முக்கியப்பொறுப்பேற்று பெங்களுரில் நிகழ்த்திய உலகப்பேரழகியர் அணிவரிசை அரங்கம் பலமில்லியன் பேரிழப்பை பச்சனுக்குத் தந்தது! நிதிநெருக்கடிகள் உடன் வழக்கு விவகாரங்கள் பற்பல நிறுவனத்தைச் சூழ்ந்து கொண்டன! அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு பலபுகார்கள் வந்தன. முக்கியமாக உயர்மட்ட மேலாளர்களுக்காக மிகஅதிகப்பட்சம் பணம் 1977ல் வழங்கப்பட்டது கம்பெனியில் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பதே ஆகும். மேலும் இந்தியத் தொழில்களின் கழகம் அதை ஓரு தோல்வி நிறுவனமாகவே அறிவித்தது. கம்பெனி நிர்வாகமும் அதற்குரிய காரணமாயிற்று. 1999ல் பச்சன் அவரது மும்பை பங்களாவையே(பிராக்தீட்ஷா) விற்க முனைந்தபோது பாம்பே உயர்நீதிமன்றம் அதற்குக்கட்டுப்பாடு விதித்தது. ஏற்கனவே கனராவங்கியிடம் பெறப்பட்ட கடன்கள் நிலுவையில் இருப்பதும் அதற்குரிய காரணமாக அமைந்தது. எனினும் பச்சன் தனது பங்களாவை விற்காது சஹாரா இந்திய நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் மன்றாடினார். அதுகூட அவர் கம்பெனி நிதிநிலை மேம்படவே அவ்வாறு செய்திருப்பதாக முறையிட்டார். பச்சன் நடிப்புத்தொழில் வாழ்க்கையைப் புதுப்பிக்க வேண்டி துறையில் மும்முரமானார். 1988ல் வெளிவந்த அவர்படம் "'பேடே மியான் சோடே மியான்'" சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதேபோல் 1999ல் வெளிவந்த "'சூர்யவன்சம்' " நேர்முகமான மதிப்புரைகளே ஈட்டியது. அதே வருடத்தில் வெளியிடப்பட்ட "'லால் பாட்ஷா'" மற்றும் "'ஹிந்துஸ்தான் கி கஸம்' " போன்ற படங்கள் பாக்ஸ்ஆபீஸ் தோல்வியே கண்டன. 2000ம் ஆண்டில் பச்சன் பிரபல பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஆட்டமான "'யார் மில்லியனராக விரும்புவது?'" என்பதன் இந்தி 'கவுன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சி அதன் உபசரனையாளராக நடத்த முன் வந்தார். பிறநாடுகளைப்போலவே "(கவுன் பனேக க்ரோர்பதி) " அந்நிகழ்ச்சி எடுத்தவுடனேயே இமாலய வெற்றிகண்டது. நவம்பர் 2000ல் கனரா வங்கி அவருக்கு எதிராக தொடுத்த சட்டபூர்வமான வழக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. கனரா வங்கியால் பச்சனுக்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் அவரே வழங்குநர் ஆகி 2005 நவம்பர் நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்.அந்த வெற்றி அவருக்குரித்தான சினிமாப்புகழை மறுபடி தந்தது. 2009ல் வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்'(ஸ்லம்டாக் மில்லியனர்) படம் ஆஸ்கார் விருதுவென்றது அனைவரும் அறிந்ததே! அந்த வார்த்தை விளையாட்டில் எழுப்பப்பட்ட துவக்கவினா: "யார் கோட்டீஸ்வரன் ஆவது?" 'ஜன்ஜீர் படத்தின் நாயகன் யார்?' என்பதேயாகும். அந்த வினாவிற்குரிய சரியான விடை அமிதாப்பச்சன்!! பெரோஸ்கான் ; அமிதாப்பச்சனாக ஒருகாட்சித்தோற்றமளித்தார். அனில்கபூரோ போட்டியின் உபசரிப்பாளராகத் தோன்றினார் விக்கி 2000 மே மாதம் 7ஆம் தேதி பச்சனின் தோற்றத்தோடு வெளிவந்த யாஷ் சோப்ராவின் ஹிட் படம் "'மொஹாபத்தீன்'" ஆதித்யா சோப்ரா இயக்கினார். நடிகர் ஷத்ருகன் சின்ஹாவிற்கு நடிப்பில் போட்டியாக பச்சன்அப்படத்தில் ஓருவயதான கண்டிப்பானவராக செவ்வனே அந்தப் பாத்திரத்தைச் சித்திரித்துக்காட்டினார். பச்சன் குலபதியாக அதாவது குடும்ப முதல்வனாக நடித்து வெற்றிபெற்ற பிற ஹிட் படங்களாவன: "" , தி பாண்ட் ஆப் லவ் (2001), "கபி குஷி கபி காம் " (2001), "பாக்பன் (2003) " நடிகராகத் தொடர்ந்து பல்வேறுபட்ட பாத்திரங்களில் அவர்தோன்றியமையால் வெகுவானப் பாராட்டுதல்கள் பெறலாயினார்." அக்ஸ்" (2001), "ஆங்கன் " (2002), "காக்கி" (2004),"தேவ்" மற்றும் "பிளாக் " (2005) போன்ற படங்கள் அவ்வரிசையில் இடம்பெற்றன. இந்தப் புத்தெழுச்சியின் பலாபலனாக அமிதாப் பலதரப்பட்ட தயாரிப்புகள்,சேவைகளில் தொலைக்காட்சி மற்றும் விளம்பர ஒளிப்பலகைகள் சம்பந்தப்பட்டதில் மும்முரமாக ஈடுபட்டார். 2005 மற்றும் 2006ல் அவர் தன்மைந்தன் அபிஷேக்குடன் பல ஹிட் படங்கள் சேர்ந்தளித்தார், அவையாவன: "பண்ட்டி அவுர் பப்லி" (2005), "தி காட்பாதர் " போன்ற" சர்க்கார்" (2005)," கபி அல்விடா நா கெஹ்னா " (2006) எல்லாமே பாக்ஸ்ஆபீஸ் வெற்றிப்படங்களாகும். அவரது அடுத்த வெளியீடுகள் 2006. 2007 வருடங்கள்:"பாபுல் " (2006)"ஏக்லவ்யா" "நிஷாப்த்" (2007) போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லையாயினும் அவரது நடிப்பாற்றல் அப்படங்களில் நன்கு வெளிப்பட்டதாக விமர்சனதாரிகள் கருத்து அபிப்பிராயங்கள் கூறினார். மேலும் கன்னடப்படமான "அம்ருத்ததாரே" படத்தில் கௌரவத்தோற்றம் அளித்தார். அப்படம் நாகத்திஹல்லி சந்திரசேகரால் இயக்கப்பட்டதாகும். அவரது மற்ற இருதிரைப் படங்களான "சீனி காம்" உடன் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்த திரைப்படம் "ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா " 2007 மே மாதம் வெளிவந்தன. இரண்டாம் படம் "ஷூட்அவுட் அட் லோகண்ட்வாளா " பாக்ஸ் ஆபிஸில் வசூலில் நன்றாகப் போய் வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டது. முதலாம் திரைப் படம் "சீனி காம்" தாமதாகத் தொடங்கிய பிறகு ஈடு கட்டவே மொத்தத்தில் சராசரி வெற்றி திரைப்படம் என்றே அறிவிக்கப் பட்டது. 2007 ஆகஸ்டில் இமாலய வெற்றி பெற்ற "'ஷோலே'" வின் மறுபதிப்பு "'ராம் கோபால் வர்மா கி ஆக்' " பாக்ஸ் ஆபீஸில் பாதாளச்சரிவாக படுதோல்வி கண்டதால் விமர்சனதாரிகளின் பார்வையிலும் பரிதாபகரமே தென்பட்டது. அவரின் முதலாவது ஆஙகிலப்படம் ரீட்டுபர்னோ கோஷின் "'தி லாஸ்ட் லியர்' " 2007 செப்டம்பர் 9 அன்று டோரன்டோவில் நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் முதல்வெளியீட்டுக் காட்சியின் பொழுது நேர்முகப்பாராட்டுதல்கள் விமர்சனதாரிகளிடமிருந்து பெற்றார். அப்படம் அவரது பிளாக் படத்திற்குப்பின் நடிப்பில் மிகச்சிறந்ததென்று உயர்த்திக் கூறினர். பச்சன் அவரது முதல் உலகளாவிய திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்தார். "'ஷாந்தாராம்'" என்ற அந்தப் படத்தை மீரா நாயர் இயக்க, ஹாலிவுட் பிரபலநடிகர் ஜானி டெப்ப் முக்கியப்பாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பு 2008 பிப்ரவரியில் தொடங்கவேண்டியது ஹாலிவுட் கதை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் செப்டெம்பரில் நிகழ தள்ளிப் போடப்பட்டது. "'பூத்நாத்' " என்ற படத்தில் தலைப்பிற்கேற்ற பேய் வேடத்தில் அவரே நடித்தார். 2008 மே 9 அன்று அதுவெளியானது. ஜூன் 2008ல்" 'சர்க்கார் ராஜ்'" படம் அவரின் 2005 "'சர்க்கார்" ' படக்கதையின் பின்தொடர் கதையாக அமைந்தது. அது பாக்ஸ்ஆபீஸில் நேர்முக ஆதரவுபெற்றது. "2008 டிசம்பர் 8 அன்று பெற்ற நேரடி 'எர்த்'" "லைவ் எர்த்" ஜோன் போன் சோவியுடன் உபசரனையாளர் என பங்கு கொண்டார். பம்பாயில் அது நடைபெற்றது. 2009 ஜனவரி, 26ல் மும்பை அந்தேரியில் திறக்கப்பட்ட கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரி விழாநாளில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பெருமைப் படுத்தினார் 2005 நவம்பரில் அமிதாப் பச்சன் லீலாவதி மருத்துவமனையில் உடனடி அவசரச்சிகிச்கைப்பிரிவில் சேர்க்கப் பட்டார். ஏனெனில்சிறுகுடலில் குருட்டுஅடைப்பு காண நேர்ந்தது. வெகுநாட்களுக்கு முன் வலிஅதிகம் என்று குறைபட்டுக்கொண்டிருந்தது காரணமாகும். அவர் உடல்நலம் மீளப்பெறவேண்டிய காலகட்டத்தில் பல திட்டங்கள் அப்படியே நிறுத்தவேண்டியதாயிற்று. அதில் முக்கியமாகக்குறிப்பிட வேண்டியது, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "'கவுன் பனேகா குரோர்பதியும் " அடங்கும்! 2006 மார்ச்சில் அந்தப் பணிநோக்கி அமிதாப் மீண்டும் திரும்பினார். பச்சன் தனது ஆழ்ந்த ஏற்றஇறக்கம் காட்டும் குரல்வளத்திற்குச் சொந்தக்காரர் ஆவார். அந்தநேர்த்தியான குரலால் கதைசொல்பவர், பின்ணணிப்பாடகர், நிகழ்ச்சி வழங்குநர் ஆகிய பலபணிகளை மேற்கொண்டார். புகழ்பெற்ற வங்க இயக்குநர் சத்யஜித்ரே அவரது அபாரக்குரல்அழகால் அதன்மேல் நல்அபிப்பிராயம் கொண்டிருந்ததால், தன் "'ஷத்ரன்ஜ் கி கிலாடி'" படத்திற்காக விளக்கஉரையாளராகப் பயன்படுத்திக்கொண்டதும் பெருமைதரும் சம்பவமாகும். அப்படத்தில் அமிதாப்பிற்கேற்ற வேடம் அமைந்தது. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் பச்சன் திரைபடத்துறைக்கு வருமுன் அகிலஇந்தியவானொலி அறிவிப்பாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டதும் காரணம் ஆகும் 2007ல் ஆட்சிப்பிடிக்க உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத்தேர்தலில் பச்சன் முலாயம் அரசின் அருஞ்சாதனைகளை விளக்கி ஒருதிரைப்படம் உருவாக்கினார். எனினும் அத்தேர்தலில் சமாஜ்வாடிக்கட்சி தோல்விகண்டு மாயாவதி பதவிக்கு வரநேர்ந்தது. நிலமற்ற தலீத் விவசாயிகள் வசமிருந்த பயிர்நிலத்தை அமிதாப் வாங்கியுள்ளார் என்ற காரணத்தால், 2007 ஜூன் 2ல் பைஸாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . போலி ஆவணம் தயாரித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்படும் என்ற வதந்தியும் கிளம்பியது. அவர் தன்னை ஒரு விவசாயி என்று கூறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2007 ஜூலை 19ல் அவதூறு கிளம்பியதால் அமிதாப் உத்தரபிரதேசம் பாரபங்கி மற்றும் புனே நிலன்களை திருப்பி அளித்தார்.. அதுமட்டுமின்றி மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு பூனாவில் உள்ள தனது நிலங்களை தானமாக வழங்கிவிட கடிதம் எழுதி அனுப்பினார். ஆயினும் லக்னோ நீதிமன்றம் தடைஆணை பிறப்பித்து நிலநன்கொடையை நிறுத்தச் செய்தது. ஏற்கனவே இருந்த நிலையையே மறுபடி நிலைநிறுத்த ஆணை பிறப்பித்தது. 2007 அக்டோபர் 12ல் பச்சன் பாராபங்கி ஜில்லா தவுலத்புர் கிராமத்தில் உள்ள நிலத்தின்மேல் இருந்த உரிமையைக் கைவிட்டார். 2007 டிசம்பர் 11ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்சு அவரை வில்லங்கமற்றவர் என்று ஒப்புக்கொண்டு பாராபங்கி ஜில்லாவில் பச்சனுக்கு முறைகேடாக நிலம் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்தது. லக்னோ ஒற்றை நீதிபதி கொண்ட பெஞ்சு தெரிவித்த கருத்தின்படி, பச்சன் மீது எந்த முகாந்திரமும் இல்லை வருமானத்துறைப் பத்திரங்கள் போலியாகவும் தயாரிக்கப் படவில்லை எனவும் அவர் அத்தகைய ஆவணங்களில் ரகசியமாக எதையும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தது (85) பாரபங்கி நிலசம்பந்தாக நல்ல சாதககமான தீர்ப்பு வந்ததும் அமிதாப் பச்சன் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு மறுபடி கடிதம் எழுதினார் அதன்படி பூனா ஜில்லா மாவல் தேசில் இடத்தில் உள்ள தனது நிலத்தை ஒப்படைக்க விரும்பவில்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார். 2008 ஜனவரியில் அரசியல்பேரணி ஒன்றில் ராஜ்தாக்ரே தன் நவநிர்மாண சேனா ஆதரவாளர்கள் முன்னிலையில் அமிதாப்பை குறிவைத்து கண்டனக்கணை தொடுத்தார்! 'வசிப்பதோ மகாராஷ்டிரம் ஆனால் வளர்ப்பதோ சொந்தமாநிலம்' என்று சாடினார்! உத்திரப் பிரதேசத்தில் பாராபங்கியில் ஒருபள்ளிக் கூடம் தன்மருமகள் நடிகை ஐஸ்வர்ராயின் பேரில் தொடங்கியது அவருக்கு எரிச்சலூட்டியது. மகாராஷ்டிரத்தில் இல்லாமல் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கியது அவருக்குப் பிடிக்கவில்லை! ஆனால் அதற்கு அடிப்படை காரணம் உண்டு அதாவது, தன்மகன் அபிஷேக் ஐஸ்வர்யாராயின் திருமணத்திற்கு பால்தாக்கரே மற்றும் உத்தவ்விற்கு அழைப்பிதழ் தந்துவிட்டு ராஜ்தாக்ரேவுக்கு கொடுக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் ஆனது. ராஜ்தாக்ரேயின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டி, பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தாங்கள் மும்பையிலும் பள்ளி தொடங்கத்தயார் எனவும் அதற்கு உரிய நிலம் ராஜ்தாக்ரே அளித்துதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 'நான் கேள்விப்பட்டுள்ளேன் ராஜ்தாக்ரேவிற்கு மும்பையில் அதிக உடைமைகள் உள்ளது கோகினூர்மில்கள் உள்பட!' 'எனவே அவர் விரும்பினால் நிலம் நன்கொடையாக வழங்கினால் ஐஸ்வர்ராயின் பேரில் பள்ளி தொடங்குவோம் இங்கே' மனைவியின் இந்தப் பதில் பற்றி அமிதாப் விளக்கம் ஏதும்சொல்லாமல் நழுவிவிட்டார். இதற்கு உடனடிப் பதிலடியாக பால் தாக்ரே மறுத்துப் பேசினார்: ' அமிதாப் பச்சன் ஒரு திறந்தமனதுடைய சிறந்தமனிதர் ஆவார். அவருக்கு மகாராஷ்டிரா மீது: அதிக அன்புண்டு. பலநிகழ்ச்சிகள் வாயிலாக அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி அவரே மகாராஷ்ட்ரா அதுவும் மும்பைதான் அவருக்கு புகழும் அன்பும் கொடுத்துள்ளது. அவரே சொன்னதாவது 'நான் இன்றிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் மும்பை மக்கள் சொரிந்த அன்புப்பெருக்கே ஆகும்' எனவே மும்பைவாசிகள் அவரை ஓரு கலைஞனாகவே காண்கின்றனர். எனவே அவர்மீது குறுகிய நோககம்கொண்ட குற்றச்சாட்டுக்கள் அள்ளிவீசுதல் மடைமையேயாகும். மேலும் அவர் அகிலஉலகம் அளாவிய சூப்பர்ஸ்டாராவார். புவியெங்கும் மக்கள் அவர்மீது மதிப்புமரியாதை வைத்துள்ளனர். இது யாராலும் மறுக்காத ஒன்றாகும். அமிதாப் இப்படிப்பட்ட அற்பக்குற்றச்சாட்டுக்கெல்லாம் பாதிக்கப்படாத வண்ணம் தனது நடிப்பின் மீது பெரும் அக்கறையைத் தொடர்ந்து செலுத்தவேண்டும்' 2008 மார்ச் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தபின்னேரே ராஜ்ஜின் கண்டனத்திற்கு இறுதியில் அமிதாப் பதில் அளித்தார். உள்ஊர் செய்தி நிறுவனத்திற்கு தந்த பேட்டியின் போது சொன்னதாவது: அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லும் குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, நிச்சயம் நீங்கள் விரும்பும் அன்பான கவனத்திற்கு உகந்ததாக இருக்காது. அகில உலக இந்திய பிலிம் அகாடமி செய்தியாளர் கூட்டத்தில் வேறு மாநிலம் குடிபுகும் பிரச்சினை பற்றி கேட்ட போது அமிதாப் சொன்னார்: அது ஒவ்வொருவருடைய ஜீவாதர உரிமையாகும் அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம் அவர் மேலும் சொன்னார்: ராஜ்ஜின் விமரிசனங்கள் அவரை பாதிப்படைய வைக்கவில்லை சாருக் கான் சாருக் கான் (Sharukh Khan; இந்தி: शाहरुख़ ख़ान; உருது: شاہ رخ خان: பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது. ஜான் ஆபிரகாம் (நடிகர்) ஜோன் ஆபிரகாம் ("John Abraham") (பி. டிசம்பர் 17, 1972, மும்பை) ஒரு இந்திய நடிகர். இவர் ஒரு முன்னாள் மாடல் நடிகரும் ஆவார். மும்பையில் வசிக்கிறார். 2003 இலிருந்து நடித்து வருகிறார். தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டி இந்திய அரசிற்கு கடிதம் எழுதினார். ஆமிர் கான் அமீர் கான் ("Aamir Khan", இந்தி: आमिर ख़ान, ஆமிர் உசைன் கான், பிறப்பு: மார்ச் 14, 1965), இவர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். மேலும் அவர் அமீர் கான் புரொடக்சன்சின் நிறுவனரும் உரிமையாளரும் ஆவார். அமீரின் மாமா நசீர் ஹூசைனின் "யாதோன் கி பாரத்" (1973) திரைப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அவரது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அதன் பின்னர் கான் பதினொறு ஆண்டுகள் கழித்து "ஹோலி" (1984) திரைப்படத்தின் மூலம் அவரது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது முதல் வணிக ரீதியான வெற்றியானது அவரது உறவினர் மன்சூர் கானின் "குயாமத் செ குயாமத் டக்" (1988) படத்தின் மூலம் கிடைத்தது, அந்த படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார். 1980கள் மற்றும் 1990களில் முந்தைய ஏழு விருதுப் பரிந்துரைகளுக்குப் பிறகு, கான் அவரது முதல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை, வசூல் சாதனை புரிந்த "ராஜா இந்துஸ்தானி" (1996) திரைப்படத்தில் நடித்தமைக்காகப் பெற்றார். 2001 இல், அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட "லகான்" படத்தின் மூலம் அவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அந்தப் படத்தில் கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் அவரது நடிப்பிற்காக தனது இரண்டாவது சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதினைப் பெற்றார். நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கானின் மறுபிரவேசம் கேட்டன் மேத்தாவின் "மங்கள் பண்டே: தி ரய்சிங்" (2005) திரைப்படத்தின் மூலம் அமைந்தது, பின்னர் "ரங் தே பசந்தி" யில் (2006) அவரது பாத்திரத்திற்காக சிறந்த நடிப்புக்கான ஃபிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருதை வென்றார். 2007 இல், "தாரே ஜமீன் பர்" ("லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த்" ) படத்தின் மூலம் அவர் ஒரு இயக்குநராகவும் அறிமுகமானார், அந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் பேர் விருதினைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து "கஜினி" (2008) திரைப்படம் வெளிவந்தது, அது பணவீக்கத்தினால் எந்த பாதிப்பும் அடையாமல் அப்படம் எல்லாக் காலத்திலும் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்தது. கான் இந்தியாவில் உள்ள மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார், அவரது குடும்பம் பலதலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பங்களித்து வருகிறது. அவரது தந்தை தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், அவரது மாமா மறைந்த நசீர் ஹூசைனும் ஒரு தயாரிப்பாளராகவும், அத்துடன் அவர் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தவர். கான் முஸ்லீம் அறிஞர் மற்றும் அரசியல்வாதி மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர், மேலும் முன்னாள் மக்களவைத் தலைவராக இருந்த டாக்டர் நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ஆவார். கான் அவரது திரைப்பட வாழ்க்கையை அவரது குடும்பத் தயாரிப்பான நசீர் ஹூசைனால் உருவாக்கப்பட்ட "யாடோன் கி பாரத்" (1973) மற்றும் "மத்தோஷ்" (1974) ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தொடங்கினார். பதினொறு ஆண்டுகள் கழித்து, வாலிபனான பின் அவரது நடிப்பு அறிமுகம் கேட்டன் மேத்தாவின் "ஹோலி" (1984) திரைப்படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாத்திரத்தின் மூலம் தொடங்கியது. கானின் கவனிக்கத் தகுந்த முக்கிய பாத்திரம், 1988 இல் வெளிவந்த திரைப்படமான "குயாமத் சே குயாமத் டக்" கில் நடித்ததன் மூலம் அமைந்தது, அப்படத்தை அவரது உறவினர் நசீர் ஹூசைனின் மகன் மன்சூர் கான் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்தது, அதன் விளைவாக கான் திரைப்படத் துறையில் ஒரு முன்னணி நடிகரானார். 'சாக்லேட் ஹீரோ' மாதிரியான தோற்றம் கொண்டிருந்ததால் அவர் இளம் கனவு நட்சத்திரமாகக் கருதப்பட்டார். மேலும் அவர், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட "ராக்" திரைப்படத்தில் நடித்தார், அந்த படத்திற்காக கான் அவரது முதல் தேசிய விருதை சிறப்பு ஜூரி விருது பிரிவில் பெற்றார். அதன் பிறகு, 80 களின் பிற்பகுதியில் மற்றும் 90 களின் முற்பகுதிகளில் அவர், அந்த ஆண்டில் மிகவும் அதிகமாக வசூலித்த திரைப்படமான "தில்" (1990), "தில் ஹாய் கி மன்டா நஹின்" (1991), "ஜோ ஜீடா ஓஹி சிக்கந்தர்" (1992), "ஹம் ஹெயின் ரஹி பியார் கே" (1993) (அதில் அவர் திரைக்கதையும் எழுதியிருந்தார்) மற்றும் "ரங்கீலா" (1995) போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் பெரும்பாலானவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவை. சல்மான் கானுடன் இணைந்து நடித்த "அன்டாஸ் அப்னா அப்னா" உள்ளிட்ட பிற படங்களும் வெற்றி பெற்றன. அந்த திரைப்படம் வெளியிடப்பட்ட நேரத்தில் விமர்சகர்களால் சாதகமாக விமர்சிக்கப்படவில்லை, ஆனால் ஆண்டுகள் கடந்த பிறகு திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. கான் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார், இது இந்தி திரைப்பட நடிகர்களின் வழக்கத்திற்கு மாறான குறிப்பிடத்தக்க பண்பாகும். 1996 இல் வெளிவந்த அவரது ஒரே திரைப்படம், தர்மேஸ் தர்ஷன் இயக்கிய வணிக ரீதியிலான பிளாக்பஸ்ட்டர் திரைப்படமான "ராஜா இந்துஸ்தானி" ஆகும், அதில் அவர் கரிஸ்மா கபூருடன் இணைந்து நடித்திருந்தார். அந்த திரைப்படம் முந்தைய ஏழு விருதுப் பரிந்துரைகளுக்குப் பிறகு அவரது முதல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது, மேலும் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, அத்துடன் 1990களில் அதிகமாக வசூலித்த படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த நேரத்தில் கான் திரைப்படத் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தார், அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் வெளிவந்த அவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஓரளவிற்கே வெற்றி பெற்றன. 1997 இல், அவர் அஜய் தேவ்கானுடன் இணைந்தும், ஜூகி சாவ்லாவுடன் ஜோடியாகவும் நடித்த "இஷ்க்" பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. 1998 இல், கான் ஒரளவுக்கு வெற்றி பெற்ற "குலாம்" திரைப்படத்தில் நடித்தார், மேலும் அந்த திரைப்படத்தில் பின்னணிப் பாடலும் பாடியிருந்தார். 1999 இல் கானின் முதல் வெளியீடு ஜான் மேத்யூ மத்தனின் "சர்ஃபரோஸ்" (1999) ஆகும், அத்திரைப்படமும் ஓரளவிற்கு வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் சராசரிக்கும் சற்று அதிகமான வெற்றி என்ற நிலையை எட்டியது, எனினும் அந்தத் திரைப்படம் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது, மேலும் அதில் கானின் பாத்திரமான எல்லைத் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் அர்ப்பணிப்புள்ள, நேர்மையான மற்றும் களங்கமில்லாத காவல் துறை அதிகாரி பாத்திரம் தீபா மேத்தாவின் கலைத்திரைப்படமான "எர்த்தின்" பாத்திரத்தைப் போல நல்ல வரவேற்பைப் பெற்றது. புதிய சகத்திராண்டில் அவரது முதல் வெளியீடாக "மேளா" வெளியானது, அதில் அவரது சகோதரர் ஃபைசல் கானுடன் அவர் நடித்திருந்தார், அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. 2001 இல் அவர் "லகான்" திரைப்படத்தில் தோன்றினார். அந்த திரைப்படம் பெரியளவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் 71 ஆவது அகாடெமி விருதுகளில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்துக்கான பரிந்துரையைப் பெற்றது. கூடுதலாக, அந்தத் திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த இந்திய விருதுகளையும் வென்றது. கான் தனது இரண்டாவது சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார். "லகானின்" வெற்றியைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் அக்‌ஷய் கண்ணா மற்றும் சைஃப் அலி கான் ஆகியோருடன் இணைந்து "தில் சாத்தா ஹை" படத்தில் நடித்தார், அத்திரைப்படத்தில் பிரீத்தி ஜிந்தா அவரைக் காதலிப்பவராக நடித்தார். அந்தத் திரைப்படம் புதியவரான ஃபாரான் அக்தரால் எழுதி இயக்கப்பட்டது. விமர்சகர்களின் கருத்துப்படி, அந்தத் திரைப்படம் இந்திய நகரங்களிலுள்ள இளைஞர்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. அந்த திரைப்படத்தில் நவீன, நற்பண்புள்ள மற்றும் பொது நோக்குடைய பாத்திரங்கள் விளக்கப்பட்டிருந்தன. அந்தத் திரைப்படம் ஓரளவிற்கு நன்மதிப்பைப் பெற்றது, மேலும் பெரும்பாலும் நகரங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு கான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டார், பின்னர் 2005 இல் அவரது மறுபிரவேசமாக கேட்டன் மேத்தாவின் "" திரைப்படத்தில் 1857 இந்தியக் கிளர்ச்சி அல்லது 'இந்திய சுதந்திரத்திற்கான முதல் போருக்கு' உதவி செய்யும் ஒரு இயல்பு வாழ்க்கை வாழும் சிப்பாய் மற்றும் தியாகியாக தலைப்புப் பாத்திரத்தில் நடித்தார். 2006 இல் கானின் முதல் வெளியீடு ராகேஷ் ஓம்பிரகாஷ் மிஸ்ராவின் விருது வென்ற "ரங் தே பசந்தி" திரைப்படமாகும். அதில் அவரது பாத்திரம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் அத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிப்புக்கான ஃபிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருதையும் "சிறந்த நடிகருக்கான" பல்வேறு பரிந்துரைகளையும் பெற்றார். அந்தத் திரைப்படம் அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது, மேலும் "ஆஸ்கார் செல்வதற்குத் தகுதியான இந்தியாவின் அதிகாரப்பூர்வமான திரைப்படமாகத்" தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும் அத்திரைப்படம் பரிந்துரைப்பட்டியலில் இடம்பெறவில்லை, அத்திரைப்படம் இங்கிலாந்தில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான BAFTA விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. கானின் அடுத்த படமான "ஃபனாவிலும்" (2006) அவரது நடிப்பு பாராட்டப்பட்டது, மேலும் அந்த திரைப்படம் 2006 இல் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது. 2007 இல் அவரே தயாரித்திருந்த அவரது திரைப்படம் "தாரே ஜமீன் பர்" ஆகும், மேலும் அந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த திரைப்படம், "அமீர் கான் புரொடக்சன்ஸ்" தயாரிப்பில் வெளிவந்த இரண்டாவது தயாரிப்பாகும், அந்த திரைப்படத்தில் கான் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் நண்பராகவும் உதவி செய்பவராகவும் உள்ள ஆசிரியராக வரும் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. கானின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது, எனினும் குறிப்பாக அவரது இயக்கத்துக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். 2008 இல், கான் "கஜினி" திரைப்படத்தில் தோன்றினார். அந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் அந்த திரைப்படம் எந்த பாதிப்புமின்றி (அதாவது பணவீக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல்) அதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படமானது. அந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்புக்காக, கான் பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் "சிறந்த நடிகருக்கான" பரிந்துரைகள் பலவற்றைப் பெற்றார், அதேபோன்று அவரது பதினைந்தாவது சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் பரிந்துரையையும் பெற்றார். 2001 இல் "அமீர்கான் புரொடக்சன்ஸ்" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கான் நிறுவினார். அவரது முதல் தயாரிப்பு "லகான்" திரைப்படமாகும். அந்த திரைப்படம் 2001 இல் வெளிவந்தது, அதில் நடித்ததன் மூலம் கான் முன்னணி நடிகரானார். அந்த திரைப்படம் சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவில் 74 ஆவது அகாடெமி விருதுகளுக்கு செல்வதற்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படம் முடிவாக அந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட இருந்தது, ஆனால் "நோ மேன்'ஸ் லேண்ட்" திரைப்படமே அந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் ஃபிலிம்பேர் மற்றும் IIFA போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் குறிப்பிடத்தகுந்த விருதுகளை வென்றது, மேலும் மிகவும் பிரபலமான திரைப்படத்துக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றது, அந்த விருது கானுக்கும் அந்த படத்தின் இயக்குநர் ஆஷுதோஷ் கோவாரிகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பின்னர் "லகான்" திரைப்படம் ஆஸ்கார் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து தோற்றதைப் பற்றி கான் பின்வருமாறு குறிப்பிட்டார்: "நிச்சயமாக நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஆனால் உண்மையில் நம் நாட்டினர் அனைவருமே எங்களது பின்னால் உள்ளார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு தைரியமளித்தது". 2007 இல் அவர் தயாரித்த நாடகவகைத் திரைப்படமான "தாரே ஜமீன் பர்" படத்தில் ஒரு இயக்குநராகவும் அறிமுகமானார். கான் அந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தர்ஷீல் சபாரியுடன் ஒரு துணைப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முதலில், அமோல் குப்தே மற்றும் தீபா பாட்டியா ஆகிய கணவன் மனைவி குழுவின் கற்பனையில் உருவாக்கப்பட்டது. அந்த திரைப்படம், கற்றல் குறைபாடு அவனுக்கு இருக்கிறது என்பதை ஆசிரியர் கண்டுபிடிக்கும் வரை பள்ளியில் சிரமப்பட்டு வந்த இளம் சிறுவனைப் பற்றிய கதையாகும். அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. "தாரே ஜமீன் பர்" 2008 இன் ஃபிலிம்பேர் சிறந்த திரைப்பட விருதை வென்றது, அத்துடன் இதர ஃபிலிம்பேர் மற்றும் ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் பலவற்றை வென்றது. கானின் பணிகளுக்காக அவர் ஃபிலிம்பேரில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார், இதனால் பாலிவுட்டில் அவரைத் தரம் வாய்ந்த திரைப்படம் உருவாக்குபவராக நிலைநிறுத்தியுள்ளது. 2008 இல், கான் அவரது தயாரிப்பில் வெளிவந்த "ஜானே டு யா ஜானே நா" திரைப்படத்தில் அவரது உறவினர் இம்ரான் கானை அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது, முடிவாக அத்திரைப்படம் கானுக்கு சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் விருதுப் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது. "குயாமத் செ குயாமத் டக்" வெளிவந்த காலகட்டத்தில், ரீனா தத்தாவை கான் மணந்தார். அவர்களுக்கு ஜூனெயிட் என்ற மகனும் இரா என்ற மகளும் உள்ளனர். ரீனா "லகான்" திரைப்படத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றியதன் மூலம் கானின் திரைப்பட வாழ்க்கையில் சிறிதளவு ஈடுபட்டுள்ளார். டிசம்பர் 2002 இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார், இதனால் கான் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முடிவுற்று, அவரது குழந்தைகள் ரீனாவின் பொறுப்பில் சென்றனர். டிசம்பர் 28, 2005 இல் கான் "லகான்" திரைப்படம் எடுக்கப்பட்ட போது அதன் இயக்குநர் ஆஷூதோஷ் கொவாரிகரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரண் ராவை மணந்தார். பலமுறை பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும், கான் இதுவரை எந்தவொரு இந்திய விருது விழாவிலும் பங்கு பெறவில்லை, அதுபற்றி அவர் குறிப்பிடும்போது "இந்திய திரைப்பட விருதுகளில் நம்பகத்தன்மை குறைந்து விட்டது" என்றார். 2007 இல், கான் அவரது தந்தை தாஹிர் ஹூசைன் தொடர்பாக ஏற்பட்ட பொறுப்புத் தகராறில் அவரது இளைய சகோதரர் ஃபைசலிடம் தோற்றார். 2007 இல் கான் லண்டனில் உள்ள மேடமி துஸ்ஸவுட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுச்சிலையைத் திறந்து வைக்க அழைக்கப்பட்டார். எனினும், கான் அதனை மறுத்து, "இது எனக்கு முக்கியமல்ல... மக்கள் வேண்டுமென்றால் எனது திரைப்படத்தைப் பார்க்கட்டும். மேலும், என்னால் பலவற்றை மேற்கொள்ள முடியாது, என்னால் முடிந்த அளவிற்கு மட்டுமே செய்ய இயலும்" என்றார். 2009 இல் ஒரு பேட்டியில், கான் திரைப்பட உருவாக்க உலகத்தில் தான் சுதந்திரமான அணுகுமுறையுடன் இருக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார், மேலும் அவர், "வித்தியாசமான செயல்களை செய்வதில்லை; நான் வித்தியாசமான முறையில் செய்யவே முயற்சிக்கிறேன். என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு நபரும் அவரது கனவைப் பின் தொடர வேண்டும், பின்னர் நடைமுறைக்கு ஏற்றவாறு அதனை அடைவதற்கு தேவையான சாத்தியமுள்ள ஆற்றலை உருவாக்க வேண்டும்" என்றார். மேலும் அவர், படத்தின் இறுதி முடிவை விடவும் படத்தை உருவாக்கும் செயல்முறைகளிலேயே பெரிதும் ஆர்வமுடையவராக இருப்பதாகக் குறிப்பிட்டு: "எனக்கு, செயல்முறை மிகவும் முக்கியம், அவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளன. நான் செயல்முறையின் முதல் படியிலிருந்தும் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார். அவரது முன்மாதிரியைப் பற்றி கேட்கப்பட்ட போது, "காந்திஜி என்னைக் கவர்ந்த மனிதர்!" என்று குறிப்பிட்டார். சல்மான் கான் சல்மான் கான் ("Salman Khan", , பிறப்பு: டிசம்பர் 27, 1965) ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார். "பீவி ஹோ தோ ஐசி" (1988) என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற "மைனே பியார் கியா" (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். "சாஜன்" (1991), "ஹம் ஆப்கே ஹே கோன்" (1994), "பீவி நம்பர் 1" (1999) போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றி படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன. 1999ல், "குச் குச் ஹோதா ஹே" (1998) திரைப்படத்தில் தம் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்ற கான், அப்போதிருந்து "ஹம் தில் தே சுக்கே சனம்" (1999), "தேரே நாம்" (2003), "நோ என்ட்ரி" (2005) மற்றும் "பார்ட்னர்" (2007) உள்பட பல சிறந்த மற்றும் வர்த்தகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிகள் சல்மான் கானை இந்தி சினிமாவின் மிக புகழ்வாய்ந்த முன்னனி நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது. சல்மான் கான், 1988ல் "பீவி ஹோ தோ ஐசி" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான "மைனே பியார் கியா" (1989) திரைப்படத்தில் தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது. 1990ல், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான நக்மாவுடன் அவர் இணைந்து நடித்த "பாக்ஹி|பாக்ஹி" என்ற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டில், "பத்தர் கே பூல்" , "சனம் பேவஃபா" மற்றும் "சாஜன்" ஆகிய மூன்று வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார். இந்த மாபெரும் ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் இருந்த போதினும், அவரின் 1992-1993-ல் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தன. 1994ல், மாதுரி தீட்சித்துடன் அவர் இணைந்து நடித்த "ஹம் ஆப்கே ஹே கோன்" திரைப்படத்தில் (சூரஜ் பர்ஜத்யாவுடனான அவரின் இரண்டாவது கூட்டணியில்) மீண்டும் வெற்றி நாயனாக மாறினார். அந்த படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அதுவரை பாலிவுட்டின் மிகப் பெரிய வசூல் சாதனை அளித்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அது மாறியது. அதுவரையிலான காலத்தில், மிக அதிக வசூல் அளித்த திரைப்படங்களில் இந்த படம் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஒரு வர்த்தகரீதியான வெற்றிப்படமாக மட்டுமில்லாமல், சல்மான்கான் அவரின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். இது "சிறந்த நடிகருக்கான" பிலிம்பேர் விருது பரிந்துரையிலும் அவரை இரண்டாவது முறையாக கொண்டு சேர்த்தது. கான் நடித்த மூன்று திரைப்படங்கள் அந்த ஆண்டிலேயே வெளியாயின. ஆனால் அவரின் முந்தைய படங்களைப் போன்று அவற்றில் ஒன்று கூட பாக்ஸ் ஆபீசில் வெற்றியைக் காட்டவில்லை. எவ்வாறிருப்பினும், அமீர்கானுடன் அவர் இணைந்து நடித்த "அண்தாஜ் அப்னா அப்னா" திரைப்படத்தில் அவர் நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார். 1995ல், அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, ராகேஷ் ரோஷனின் "கரண் அர்ஜூன்" வெற்றிப்படத்தில் மீண்டும் தம்மை நிலைநிறுத்தி கொண்டார். அந்த திரைப்படம் அவ்வாண்டின் இரண்டாவது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கரண் என்ற அவரின் கதாபாத்திரம் அவரை மீண்டும் ஒருமுறை "சிறந்த நடிகருக்கான" பிலிம்பேர் விருது பரிந்துரைக்கு கொண்டு சென்றது. ஆனால் தவிர்க்க முடியாமல் "கரண் அர்ஜீனில்" அவருடன் இணைந்து நடித்த ஷாருக்கான் அம்முறை விருதை வென்றார். 1996-ஆம் ஆண்டு சல்மான் கானின் இரண்டு படங்கள் வெளியாயின. ஒன்று, அறிமுக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியால் இயக்கப்பட்டு மனிஷா கொய்ராலா, நானா பாட்டேக்கர் மற்றும் சீமா பிஸ்வாஸ் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த "காமோஷி: தி மியூசிக்கல்" என்ற படமாகும். பாக்ஸ் ஆபீஸ் அளவில் இது தோல்விப்படமாக இருந்த போதினும், இந்த படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது. அடுத்ததாக அவரும், சன்னி தியோல் மற்றும் கரிஷ்மா கபூரும் இணைந்து நடித்த ராஜ் கன்வரின் அதிரடி படமான "ஜீத்" வெளியாகி இருந்தது. 1997ல், "ஜூடுவா" மற்றும் "அவ்ஜார்" ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. முந்தையது கரிஷ்மா கபூருடன் இணைந்து, டேவிட் தாவனினால் இயக்கப்பட்ட நகைச்சுவை படம். இதில் அவர் பிறந்த போதே பிரிக்கப்பட்ட இரட்டையர்களின் கதாபாத்திரத்தை ஏற்று இரட்டை வேடத்தில் நடித்தார். அப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இரண்டாவது படம் பெயரளவிற்கே பிரபலப்பட்டது. 1998-ஆம் ஆண்டு சல்மான் கான் நடித்த ஐந்து வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாயின. கஜோலுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை படமான "பியார் கியா தோ டர்னா கியா" திரைப்படம் அவருக்கு அவ்வாண்டின் முதல் படமாக அமைந்தது. அது அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இதை தொடர்ந்து வெளியான "ஜப் பியார் கிசிசே ஹோதா ஹே]]" திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கானின் நடிப்பு அவருக்கு பல நல்ல பாராட்டுக்களைப் பெற்று தந்தது என்பதுடன் விமர்சகர்களிடம் இருந்தும் ஆதரவான விமர்சனங்களை அளித்தது. அவர் அதே ஆண்டில் அறிமுக இயக்குனரான கரண் ஜோகரின் "குச் குச் ஹோதா ஹே" திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஷாருக்கான் மற்றும் கஜோலுடன் இணைந்து நடத்த இப்படத்தில், அவர் அமன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் பின்பகுதியில் சிறிய காட்சியில் மட்டுமே தோன்றி இருந்தார். எவ்வாறிருப்பினும், அதுவும் அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது. 1999ல், கான் மூன்று வெற்றிப்படங்களில் நடித்தார்: "ஹம் சாத் சாத் ஹே: வீ ஸ்டேண்ட் யுனெடட்" என்ற படம் சூரஜ் பர்ஜத்யாவுடன் அவரை மூன்றாவது முறையாக அணி சேர்த்தது; "பீவி நம்பர் 1", இது அந்த ஆண்டில் அதிக வசூலீட்டிய திரைப்படமாக அமைந்தது; "ஹம் தில் தே சுக்கே சனம்", இது ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன், அவரை மற்றொரு முறை மீண்டும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கான பரிந்துரையிலும் கொண்டு வந்து சேர்த்தது. 2000-ஆம் ஆண்டு, கான் ஆறு படங்களில் நடித்திருந்தார். இவற்றில் சுமாரான வெற்றியைப் பெற்ற "ஹர் தில் ஜோ பியார் கரேன்கா" மற்றும் "சோரி சோரி சுப்கே சுப்கே" ஆகிய இரண்டு படங்களைத் தவிர பெரும்பாலானவை படுமோசமாகவும், வர்த்தகரீதியாகவும் தோல்வி அடைந்தன. அந்த இரண்டு படங்களிலும் முறையே ராணி முகர்ஜி மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். 2001 வரை தாமதமாகி வெளியான "சோரி சோரி சுப்கே சுப்கே" திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் கான் ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தைக் கையாண்டிருந்தார். 2002-ஆம் ஆண்டு வெளியான "ஹம் தும்ஹாரே ஹே சனம்" படத்திலும் இவர் நடித்திருந்தார். இது பாக்ஸ் ஆபிஸில் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. 2003-ஆம் ஆண்டு வெளியான "தேரே நாம்" படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்யும் வரை கானின் தொடர்ச்சியான படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தன. இந்த படம் நல்ல வசூலை எட்டியது. அத்துடன் அவரின் நடிப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. "சல்மான் கான் அந்த T கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக பொருந்துகிறார். சிரமமான காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார்." என்று திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து "முஜ்சே ஷாதி கரோகி" (2004) மற்றும் "நோ என்ட்ரி" "(2005)" ஆகிய நகைச்சுவை படங்களுடன் பாக்ஸ் ஆபீசில் தமது வெற்றியைத் தொடர்ந்தார். "ஜானே மன்" மற்றும் "பாபுல்" ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் சரியாக வெற்றியடையாததால் 2006ஆம் ஆண்டு அவருக்கு ஒரு தோல்விகரமான ஆண்டாக அமைந்தது. 2007ஆம் ஆண்டை, சல்மான் கான் "சலாம் ஈ இஸ்க்" படத்துடன் தொடங்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியைக் காட்டவில்லை. அவரின் அடுத்த படமான "பார்ட்னர்" பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றது, அடுத்ததாக அவர் தம் முதல் ஹாலிவுட் திரைப்படமான "மேரிகோல்டு: அட்வன்சர் இன் இந்தியா" என்ற படத்தில் அமெரிக்க நடிகை அலி லார்டெருடன் நடித்தார். ஓர் இந்திய ஆணுக்கும், ஓர் அமெரிக்க பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொல்லும் இப்படம் வர்த்தகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. 2008 முழுவதும் கான் மூன்று படங்களில் நடித்தார், அவை அனைத்துமே தோல்வி அடைந்தன. ஜிம் கேரியின் ஹாலிவுட் வெற்றிப்படமான புரூஸ் ஆல்மைட்டி என்பதை தழுவி காட் துஸ்சே கிரேட் ஹோ என்ற படம் என்பது உருவாக்கப்பட்டது. இந்த படம் படுமோசமான தோல்வியைத் தழுவியது. அந்த ஆண்டின் இரண்டாவது படமான "ஹீரோஸ்", விமர்சகர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை என்று கூறப்பட்டது. கான், புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான சலீம் கான் மற்றும் அவர் முதல் மனைவி சல்மா கானுக்கு (மணமாவதற்கு முன்னிருந்த பெயர் சுசீலா சரக்) பிறந்த மூத்த மகனாவார். சல்மான் கானுக்கு, அர்பாஜ் கான் மற்றும் சோஹேல் கான் என்ற இரண்டு சகோதரர்களும், அல்விரா மற்றும் அர்பிதா எனும் இரண்டு சகோதரிகளும் உண்டு. தீவிர உடற்பயிற்சி செய்வதில் சல்மான் கான் மிகவும் ஆர்வம் கொண்டவர். 2004ல், உலகின் அழகான ஆண்களில் 7வது இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் "பீப்பிள்" இதழாலும் இந்தியாவில் அழகான ஆண்மகன் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சல்மான் கான் பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஐஸ்வர்யா ராய், சோமி அலி மற்றும் சங்கீதா பிஜ்லானி போன்ற நடிகைகளுடன் சல்மான் கான் தொடர்புபடுத்தப்பட்டார். 2003-ஆம் ஆண்டு டேட்டிங் மாடல் மற்றும் நடிகையான கேத்ரீனா கெய்ப் உடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டார். 2007, அக்டோபர் 11ல், இலண்டனில் உள்ள மேடம் துஷ்சாட்ஸ் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அவரின் மெழுகு பொம்மையை வைக்க சல்மான் கான் சம்மதம் தெரிவித்தார். அந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட நான்காவது இந்திய திரைப்பட கலைஞரின் மெழுகு பொம்மை என்ற பெருமையுடன், 2008, ஜனவரி 15ல், இறுதியாக அவரின் ஆள் உயர மெழுகு பொம்மை அங்கு நிறுவப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 2002, செப்டம்பர் 28ல், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காக சல்மான் கைது செய்யப்பட்டார். அவர் கார் மும்பையில் உள்ள ஒரு பேக்கரியின் மீது மோதியது; பேக்கரியின் வெளியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ஒருவர் அதில் இறந்தார் என்பதுடன் அந்த சம்பவத்தில் மேலும் மூன்று நபர்கள் காயப்பட்டார்கள். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டன. எவ்வாறிருப்பினும், அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அவர் தொடர்ந்து வழக்குகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. 2006, பிப்ரவரி 17ல், அழிந்து வரும் உயிரினமான சின்காராவை வேட்டையாடியதற்காக கான் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை மேல்முறையீடின் போது உயர் நீதி மன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. 2006, ஏப்ரல் 10ல், அழிந்து வரும் சின்காராவை வேட்டை ஆடியதற்காக சல்மானுக்கு ஐந்தாண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிணையம் வழங்கப்படும் வரை அவர் அங்கு ஏப்ரல் 13 வரை சிறையில் இருந்தார். 2007, ஆகஸ்டு 24ல், சின்காரா வேட்டையாடிய வழக்கில், அவரின் மேல்முறையீட்டின் 2006 தீர்ப்பிற்கு எதிராக, ஜோத்பூர் வரைவு நீதிமன்றம் அவரை ஐந்து ஆண்டு கால சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டது. அப்போது, அவர் வேறெங்கோ படப்பிடிப்பில் இருந்தார் என்பதால் அவர் சகோதரி அந்த வழக்குகளில் நேரில் ஆஜரானார். அதற்கடுத்த நாள், வேட்டையாடியதற்காக அவருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் ஜோத்பூரில் போலீஸ் காவலின் கீழ் வைக்கப்பட்டார். 2007, ஆகஸ்ட் 31ல், ஆறு நாட்கள் சிறையில் கழித்த பின்னர், ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கான் விடுவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராயுடனான அவரின் நெருங்கிய உறவு இந்திய ஊடகத்தில் அதிகமாக வெளியான ஒரு விஷயமாகும். மேலும் அது தொடர்ந்து வதந்திகளை எழுப்பி வந்தது. 2002 மார்ச்சில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர், தம்மை அவர் தொந்தரவு செய்வதாக ராய் குற்றஞ்சாட்டினார். தங்களின் உறவு முறிவு குறித்த விஷயத்தில் சல்மான் கான் உடன்படாமல், தன்னை தொடர்ந்து துரத்திக் கொண்டிருப்பதாக ராய் அறிவித்தார்; ராயின் பெற்றோர்கள் கானுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்கள். 2001-ஆம் ஆண்டு, மும்பை போலீஸால் இரகசியமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் அழைப்பு என்று கூறப்பட்டதை 2005ல் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. மும்பை சட்டவிரோத பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்படும் சமூக நிகழ்வுகளில் தோன்ற ராயைக் கட்டாயப்படுத்தும் ஒரு முயற்சியில், அவர் ஐஸ்வர்யா ராயை அச்சுறுத்த செய்யப்பட்ட அழைப்பாக அது தோன்றியது. இந்த அழைப்பு, பிற நடிகர்களின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் தீய கருத்துக்களுடனான தொடர்புகளையும் எடுத்துக்காட்டியது. எவ்வாறிருப்பினும், சண்டிகர்|சண்டிகரில் உள்ள இந்திய அரசின் தடயவியல் ஆய்வகத்தில் அந்த சந்தேகத்திற்கிடமான ஒலிநாடா பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அது போலியானது என்று தீர்மானிக்கப்பட்டது. 2007, செப்டம்பரில், ஒரு விநாயகர் பூஜையில் கலந்து கொண்டதற்காக கானுக்கு எதிராக ஒரு முஸ்லீம் அமைப்ப பாத்வாவை வெளியிட்டது. உருவ வழிபாடு இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, கான் கல்மாஸ் (சத்தியம் பிரகடனம்) படித்தால் ஒழிய, அவர் மீண்டும் ஒரு முஸ்லீமாக சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அந்த அமைப்பு அறிவித்தது. ஆனால், பாந்த்ராவில் கான் அவர் குடும்பத்துடன் விநாயகர் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த விழாவில் நடனம் ஆடியவர்களில் கானும் ஒருவராக இருந்தார். அவர் தந்தை, சல்மான் எதுவும் தவறாக செய்துவிடவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். கான் தமது உருவ மெழுகு பொம்மையை உருவாக்க இலண்டனின் மேடம் துஷ்சாஷ்ட்ஸிற்கு அனுமதி அளித்ததற்காக, இந்தியாவின் ஒரு முஸ்லீம் பிரிவான முப்தி சலீம் அஹ்மத் காஸ்மியால் மற்றொரு பாத்வா அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த பொம்மை சட்டவிரோதமானது என்று முப்தி குறிப்பிட்டது. அதே அருங்காட்சியகத்தில் ஷாருக்கானின் மெழுகு பொம்மை வைக்கப்பட்டிருக்கும் போது, உடன் முஸ்லீமான அவருக்கு எதிராக எவ்வித பாத்வாவும் வெளியிடாத நிலையில், இது பத்திரிக்கைகளில் பல்வேறு ஊகங்களை எதிரொலித்தது. "இந்த பாத்வாக்கள் ஒரு நகைச்சுவை விஷயமாகி வருகின்றன" என்று சல்மான் கான் கூறினார். விநாயக சதுர்த்தி கான் தம் வீட்டில் அவர்தம் குடும்பத்துடன் கொண்டாடியதற்காக, செப்டம்பர் 2008ல் மீண்டும் சல்மான் கான் மீது பாத்வா எழுப்பப்பட்டது. புது டெல்லியில் உள்ள ஆலோசனை குழு உறுப்பினரால் அந்த பாத்வா எழுப்பப்பட்டது. அந்த விழாவில், அவர் தந்தை சலீம் மீண்டும் பாத்வா மீது கேள்வி எழுப்பினார், அத்துடன் அதை எழுப்பியவர்களையும் விமர்சித்தார். கிருத்திக் ரோஷன் கிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் (ஹிந்தி: ऋतिक रोशन ; பிறப்பு:10 ஜனவரி 1974) பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார். 1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, "கஹோ நா... பியார் ஹே" (2000) என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இவரது நடிப்பிற்காக அதிக பாராட்டுகளைப்பெற்ற சில படங்கள் "கோயி..." "மில் கயா" (2003), "க்ரிஷ்" (2006), "தூம் 2" (2006) மற்றும் "ஜோதா அக்பர்" (2008) ஆகியவைகள் ஆகும். இதில் ஜோதா அக்பர் இது வரை வெளிவந்த திரைபடங்களில் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் இந்த படத்திற்காக அவருக்கு பல்வேறு "சிறந்த நடிகர்" விருதுகளும் வழங்கபட்டன. 2008 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் அவரது "ஜோதா அக்பர்" திரைபடத்திற்காக ரஷ்யாவின் கஸானில் நடைபெற்ற கோல்டன் மின்பார் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அவரது முதல் சர்வதேச விருதினை வென்றார். ஹிரித்திக் அவர்கள் தன்னை ஒரு முன்னணி பாலிவுட் நடிகராக நிலைபடுத்திக் கொண்டுள்ளார். 1980 ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக "ஆஷா" என்னும் திரைபடத்தில் வரும் ஒரு நடனக் காட்சியில், ஒரு துணை நடிகர் கதாபாத்திரமாக ரித்திக் அவர்களின் சினிமா வாழ்க்கை துவங்கியது. "ஆப் கி தீவானோ" (1980) மற்றும் "பகவான் தாதா" (1986) ஆகிய இரு திரைபடங்களில் ரித்திக் அவர்கள் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். இவ்விரண்டு படங்களிலும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பின்னர் அவர் அவரது தந்தையின் தயாரிப்புகளான "கரண் அர்ஜுன்" (1995) மற்றும் "கோய்லா" (1997) ஆகிய படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றினார். 2000 ம் ஆண்டில் ரித்திக் அவர்கள் முதன் முதலில் கதாநாயகனாக "கஹோ நா..." "பியார் ஹே" எனும் படத்தில் தோன்றினார். இப்படத்தில் அவரது நாயகி மற்றொரு புதிய அறிமுகமான அமீஷா படேல் ஆவார். இவரது தந்தை இயக்கி ரித்திக் அவர்கள் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் மிக வெற்றிகரமான திரைப்படமாக ஓடியதுடன் 2000 ம் ஆண்டின் சிறந்த வசூல் குவித்த வெற்றிப்படமாகவும் விளங்கியது மற்றும் ஃபிலிம்பேரின் மிகச்சிறந்த படத்திற்கான விருதுவென்றது. இதில் ரோஷனின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டதுடன், விரைவில் மிகப்பெரிய நட்சத்திரமாகவும் அவர் வளர்ந்தார். இப்படத்தில் அவர் நடிப்பிற்காக ஃபிலிம் ஃபேரின் மிகச்சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான மற்றும் ஃபிலிம் ஃபேர் மிகச்சிறந்த நடிகர் ஆகிய விருதுகள் அவருக்கு ஒரே சமயத்தில் வழங்கப்பட்டது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் மட்டும் 102 விருதுகளைப் பெற்று, அதிக விருதுகள் வென்ற சாதனைக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. பின்னர் அவர் அந்த ஆண்டிலேயே காலித் மொஹம்மது அவர்களின் "ஃபிஸா" என்னும் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் அவரது நடிப்பிற்காக பரவலாக பாராட்டினை பெற்றது, அதுமட்டுமின்றி ஃபிலிம்ஃபேர் விழாவில் அவருக்கு மற்றுமொரு "சிறந்த நடிகர் விருதினை"யும் பெற்றுத்தந்தது. "இந்தியா எஃப்எம்" ஐ சேர்ந்த தரண் ஆதர்ஷ் அவர்கள் "திரைப்படத்தின் முக்கிய தூண் சந்தேகமின்றி ரோஷன் மட்டுமே" என்று கூறினார்.அவரது உடல் மொழி, அர்பணிப்புணர்வு, வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், மற்றும் அவரது ஒட்டுமொத்த நடிப்பும் மிகுந்த பாராட்டிற்கு உரியதாகும். இத்திரைபடத்தின் வழியாக, தான் வெறும் ஃபேஷனான, மற்றும் ஒரு கவர்ச்சி நாயகன் மட்டும் இல்லை என்பதை ரோஷன் அவர்கள் நிரூபித்தார். அவரது திறமை பல காட்சிகளில் வெளிப்பட்டது. குறிப்பாக கரிஷ்மா உடனான காட்சிகளில். எவ்வாறாக இருப்பினும் "பிஸாவினை" இயன்ற அளவு காப்பாற்றிய பெருமை ரித்திக்கையே சாரும். சந்தேகமின்றி அது ஒரு அற்புதமான நடிப்பே!" அந்த ஆண்டின் ரித்திக் அவர்களின் கடைசி திரைப்படம் "மிஷன் காஷ்மீர்" ஆகும். இது அந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். இவரது நடிப்பு மீண்டும் ஒரு முறை பலதரப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது. ஒரு விமர்சகர், "தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கிய ஒரு இளைஞராக ரித்திக் அற்புதமாக நடித்துள்ளார்” என பாராட்டினார். இத்திரைபடத்தின் துவக்கத்தில் அவர் அரசாங்க விரோதியாக தோன்றியிருப்பார். ஒரு வளர்ந்து வரும் நடிகர் கூட நடிக்க விரும்பாத பாத்திரத்தை அவர் அந்த திரைபடத்தில் ஏற்றுக்கொண்டார்." இவரது இத்தகைய சாதனைகள் அவரை சினிமாதுறையின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக நிலைநிறுத்தியது. சுபாஷ் கய் அவர்களின் "யாதீன்" திரைப்படம் 2001 ம் ஆண்டில் ரோஷனின் முதல் திரைப்படமாகும். அதைத்தொடர்ந்துகரன் ஜோஹர் அவர்களின் குடும்பச் சித்திரமாக "கபி குஷி கபி கம்" வெளிவந்தது. இது வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் 2001 ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மற்றும் வெளிநாடுகளில் பெரும் வெற்றி பெற்ற படமாகவும் திகழ்ந்தது. ரோஷனின் நடிப்பு அதிக பாராட்டுதல்களைப் பெற்றதுடன் "மிகச்சிறந்த துணை நடிகர்" என பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்தது. 2002 ம் ஆண்டு ரோஷனுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. - "முஜே தோஸ்தி கரோகி!" , "நாம் தும் ஜானோ நா ஹம்" மற்றும் "ஆப் முஜே அச்சே லக்னே லகே" - ஆகிய மூன்று படங்களுடன் சரியான வரவேற்பினை பெறாததால் அவைகள் தோல்வி படங்கள் என அறிவிக்கப்பட்டது. 2003 ம் ஆண்டில் அறிவியல் புனைவு திரைப்படமான "கோயி..." "மில் கயா" , என்னும் திரைபடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்தார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்ததோடு மட்டுமின்றி அவருக்கு இரண்டாவதாக ஃபிலிம்ஃபேரின் மிகச்சிறந்த நடிகருக்கான விருது மற்றும் முதலாவது ஃபிலிம்ஃபேரின் மிகச்சிறந்த நடிகர் (விமர்சன) விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்தது. தரன் ஆதர்ஷ் அவர்கள் "ஒட்டுமொத்தத் திரைபடத்திலும் ஆதிக்கம் செலுத்துவது ரோஷன் அவர்களின் நடிப்பாலே. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கதாபாத்திரம் அத்தனை சுலபமானது கிடையாது. ஆனால் ரித்திக் அவர்கள் அதை மீன் தண்ணீரில் நீந்துவது போன்று எளிதாகச் செய்துள்ளார். ஜீரோவிலிருந்து ஹீரோவாகும் வழக்கத்தினை அவர் மிகச் சிறப்பாக மேற்கொண்டார். ஒரு நடிகராக, இதன் மூலம் அவர் பல்வேறு புதிய உயரங்களைத் தொட்டார்." 2004 ம் ஆண்டில் ஃபர்ஹான் கான் அவர்களின் "லஷ்யா" மட்டுமே ரோஷனின் ஒரே ஒரு திரைப்படமாக வெளிவந்தது. அது வெற்றிபெறவில்லை. எனினும் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சூப்பர் ஹீரோ திரைப்படமான "கிரிஷ்" படத்தில் நடிக்க தயார் செய்துகொள்வதற்காக ரித்திக் அவர்கள் இரண்டு ஆண்டுகள் நடிப்பில் இடைவெளி விட்டு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இது 2003 ஆம் ஆண்டு வெளிவந்த "கோயி... " "மல் கயா" திரைபடத்தின் தொடர்ச்சியாக ஜுன் 2006 ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன் 2006 ஆம் ஆண்டின் உச்சபட்ச வசூலினையும் பெற்றது. இத்திரைபடத்தில் ஒரு சூப்பர் ஹீரோவாக இவரது நடிப்பு பலத்த பாராட்டினைப் பெற்றதுடன் அவருக்கு பல்வேறு "சிறந்த நடிகர் " விருதுகளையும் பெற்றுத்தந்தது. இதில் ஸ்டார் ஸ்கிரீன் மற்றும் இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் விழாக்களும் அடக்கம்."இந்தியா எஃப்எம்" பின்வருமாறு எழுதியது. ""கிரிஷ்" திரைபடத்தின் ஆத்மா ரித்திக் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நடிகர் "கோயி... " "மில் கயா" , திரைபடத்திற்காக பெற்ற விருதுகள் "கிரிஷ் " வழியாக இரட்டிப்பாகும். அப்லாம்ப் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக நீங்கள் வேறு எந்த நடிகரையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவரது முகமூடியும், ஆடைகளும் மற்றும் ஒப்பனை, நடை மற்றும் தனிப்பழக்கங்கள் மற்றும் வயதான தந்தை பாத்திரம் ஆகியவைகளினால் ரித்திக் அவர்கள் இந்திய திரைப்பட உலகின் மிக முக்கிய திறமைசாலிகளில் ஒருவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். அவரது சாதனை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் "கிரிஷ்" ஆகும். அதே வருடத்தில் அவரது அடுத்த படம் 2004 ம் ஆண்டு வெளியான "தூம்" திரைப்படத்தின் இரண்டாம் பாகமான "தூம் 2" ஆகும். ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடன் நடித்த ரித்திக் அவர்களின் நடிப்பு விமர்சகர்களின் பரவலான பாராட்டினைப் பெற்றது மட்டுமல்லாமல் அவருக்கு முன்றாவது முறையாக ஃபிலம்ஃபேர் மிகச்சிறந்த நடிகர் விருதினையும்பெற்றுத்தந்தது. இத்திரைப்படம் 2006 ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக விளங்கியதுடன் பாலிவுட் வரலாற்றின் வெற்றிகரமான படங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்தது. 2008 ம் ஆண்டில், அஷுடோஷ் கோவரிகர் அவர்களின் "ஜோதா அக்பர்" திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராய் பச்சனுடன் இவர் நடித்தார். இவர் நடித்தது அக்பர் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரத்தில். இந்தியா மற்றும் வெளிநாடு ஆகிய இரு பகுதிகளிலும் இத்திரைப்படம் வர்த்தக ரீதியில் பெறும் வெற்றியை பெற்றது. இத்திரைபடத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், இவருக்கு நான்காவது முறையாக ஃபிலிம் ஃபேர் மிகச்சிறந்த நடிகர் விருதும் மற்றும் ரஷ்யாவிலுள்ள கஜானில் நடைபெற்ற கோல்டர் மினபார் சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முதலாக மிகச்சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதும் கிடைத்தது. ரித்திக் அவர்கள் சமீபத்திய ஜோயா அக்தர் அவர்களின் "லக் பை சான்ஸ்" என்னும் திரைபடத்தில் கெரளவத் தோற்றத்தில் தோன்றினார். இவர் தற்போது அனுராக் பாசு அவர்களின் "கைட்ஸ்" படத்தில் மெக்ஸிகன் நடிகை பார்பரா மோரி மற்றும் கங்கனா ரெனாவத் அவர்களுடன் நடித்துவருகிறார். மேலும் ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடன் சஞ்ஜய் லீலா பன்சாலி அவர்கள் இயக்கும் குஜாரிஷ் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார். சினிமா பிரபலங்கள் அடங்கிய பஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் மும்பையில் ரித்திக் அவர்கள் பிறந்தார். இவரது தந்தை திரைப்பட இயக்குனரான ராகேஷ் ரித்திக் அவர்கள் இசையமைப்பாளர் ரோஷன் அவர்களின் மகனாவார். தாய் பிங்கி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் அவர்களின் மகளாவார். அவரது மாமா ராஜேஷ் ரித்திக் ஒரு பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். சிறுவனாக இருந்த போது ரித்திக் அவர்கள் படித்தது பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில். பின்னர் அவர் சிடென்ஹாம் கல்லூரியில் சேர்ந்து வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். "சுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன்" உரிமையாளர் மற்றும் சஞ்சய் கான் அவர்களின் மகள் சுசேன் கான் அவர்களை ரித்திக் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹிரேஹன் 2006 இலும் மற்றும் ஹ்ரிதான் 2008 இலும் பிறந்தனர். ரோஷனுக்கு அவரது வலது கையில் இரண்டு கட்டை விரல்கள் உள்ளன கோவிந்தா கோவிந்தா (Govind Arun Ahuja) ஒரு பிரபல இந்திய நடிகர். 1963 டிசம்பர் 21 ல் பிறந்தார். மும்பையில் வசிக்கிறார். 1985 இல் இருந்து நடித்து வருகிறார். 140க்கு மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இறுதியாக, 2009-இல் லைப் பார்ட்னர் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவர் பிலிம்பேர் விருது, சீ சினி விருது உள்ளிட்ட விருதுகளைப் பல முறை பெற்றவர். இவற்றில், 2000 ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்டி நம்பர் 1, ஜோடி நம்பர் 1, பேட்டி நம்பர் 1, ராவண், சாண்ட்விச், ஜெண்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை உண்டு. நிக்கல் நிக்கல் ஒரு தனிமம் ஆகும். இது ஓர் உலோகம். இதன் குறியீடு Ni. அணு எண் 28. இது மிகவும் அரிய தனிமம். ஏனெனில் பூமியின் மேலோட்டுப் பகுதியில் இது 0.008 % செழுமையுடன் காணப்படுகின்றது. அதாவது பூமியின் மேற்பரப்பில் 1015 டன் நிக்கல் உள்ளது எனலாம். ஆஸ்திரேலியாவும் நியூ கலிடோனியாவும் நிக்கல் வளமிக்க நாடாகவுள்ளன.உலக அளவில் 45% நிக்கல் இங்கிருந்தே பெறப்படுகிறது. பூமியின் உள்ளகத்திலும், பூமி போன்ற வேறு பல கோள்களின் உள்ளகத்திலும் நிக்கல் பதிவு அதிகமாக இருக்கவேண்டும் என விண் இயற்பியலார் தெரிவித்துள்ளனர். பூமியில் 1200 கிமீ ஆரம் கொண்ட கோள வடிவ உள்ளகத்தில் 4000°C வெப்பநிலையில் திண்மநிலை இரும்பும் நிக்கலும் உள்ளன. உயரழுத்தத்தினால் அவை உருகுவதில்லை. இதை அடுத்த பகுதி 2300 கிமீ தடிமனானது. உள்ளகத்திலிருந்து கடத்தப் பட்டு வரும் வெப்பத்தினால் இப்பகுதியில் உருகிய நிலையில் இரும்பும் நிக்கலும் உள்ளன. சலன மண்டலத்தில் உருகிய இரும்பும் நிக்கலும் ஆழ்கடல் நீரோட்டம் போலப் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றன. பூமி ஒரு காந்தப் புலத்தைப் பெற்றிருப்பதும் மிதவலான கண்டங்கள் மெள்ள இடம்பெயர்வதும் இதனால்தான். புவி காந்தப் புலம் மிகவும் வலிமை குன்றியது என்றாலும் இப்புலம் பூமியைச் சுற்றி நெடுந்தொலைவு வரை விரிந்து செயல்படுகின்றது. சூரிய மின்ம(Plasma) வீச்சின் போது பூமியை நோக்கி வரும் தீங்கிழைக்க வல்ல ஆற்றல் மிக்க மின்னூட்டத் துகள்களை விலக்கி வேறு திசையில் செல்லுமாறு இப்புலம் செய்து விடுகின்றது. துருவங்களில் ஊடுருவ அனுமதித்து துருவ ஒளியைத் தோற்றுவிக்கிறது. அண்டக் கதிர்களை(Cosmic rays) விலக்கி உயிரினங்களைக் காக்கும் புவி காந்தப்புலத்திற்குக் காரணமாக இருப்பது பூமியில் உள்ள உருகிய குழம்பாக இருக்கும் இரும்பும் நிக்கலும் ஆகும். நிக்கல்தாது முதலில் வெள்ளியின் தாது எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நிக்கலுக்கான ஒரு தாதுப் பொருள் கிடைத்ததும் அதிலிருந்து நிக்கலைப் பிரித்தெடுக்கத் தெரியாத தொடக்க காலத்தில் அதைச் செம்பின் தாது என்று நினைத்து அதைக் கூப்பர் நிக்கல் எனப் பெயரிட்டனர். நிக்கல் என்பது ஜெர்மன் மொழியில் சனியைக் குறிக்கும் சொல்லாகும். கூப்பர் நிக்கல் என்பது சனியின் செம்பு எனலாம். பிரித்தெடுப்பதில் வெற்றி பெற முடியாததால் ,அது 'நிக் ' என்ற பேயின் வேலை என்று கருதியதால் அதுவே நிக்கலுக்கு மூலமானது. 1751-ல் சுவீடன் நாட்டுக் கனிம வேதியியலாரான பிரெடரிக் குரோன்ஸ்டெட் என்பார் நிக்கலைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். இன்றைக்கு கூப்பர் நிக்கல் என்பது நிக்கல் ஆர்சினைடு என்று கண்டு பிடித்துள்ளனர். நிக்கல் வெள்ளி போன்ற பளபளப்பான ஒரு வெண்ணிற உலோகம் ஆகும். இது உலோக கலவைகளில் உபயோகிக்க படுகிறது. இது காந்தத்தால் ஈர்க்கப்படும். இதன் வேதிக் குறியீடு Ni ஆகும். இதன் அணு வெண் 28 அணு நிறை 58.71; அடர்த்தி 8900 கிகி/கமீ; உருகு நிலை 1726 K; கொதி நிலை 3073 K ஆகும். நிக்கல் வெள்ளி போன்று பளபளப்பான உலோகம். இது முக்கியமாகக் கந்தகத்துடன் கலந்து கூட்டுப் பொருள் வடிவில் மில்லரைட் (Millerite)என்ற தாதுவாகக் கிடைக்கின்றது. உலக நிக்கல் உற்பத்தியில் 46 விழுக்காடு நிக்கலிரும்பு செய்யவும், 34 விழுக்காடு சிறப்பு கலப்பு உலோகங்கள் மற்றும் இரும்பற்ற கலப்பு உலோகங்கள் செய்யவும், 14 விழுக்காடு மின்பொருட்கள் செய்யவும் 6 விழுக்காடு மற்றவற்றுக்காகவும் பயன்படுகிறது. இரும்புடன் 18 விழுக்காடு குரோமியம் 8 விழுக்காடு நிக்கல் சேர்ந்த அரிக்கப்படாத மற்றும் கறை படாத எஃகை உற்பத்தி செய்து இராணுவக் கவசஉடை, டாங்கிகள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தினார்கள். நாணயங்கள் செய்ய, வெள்ளி போன்றது என்று பொருள் படும் அர்ஜென்டைன் என்ற நிக்கல் கலப்பு உலோகமும், புதிய வெள்ளி என்று பொருள் படும் நூசில்வர் என்ற நிக்கல் கலப்பு உலோகமும் பயன் தருகின்றன.60-70விழுக்காடு நிக்கலும்,25-35விழுக்காடு செம்பு, இரும்பு, மாங்கனீஸ், சிலிகான், கார்பன் ஆகியவையும் கலந்த மோனல் என்ற கலப்பு உலோகம் கடினத் தன்மையும், அமில அரிப்புக்கு எதிர்ப்புக் காட்டும் தன்மையும் கொண்டது. இது வேதியியல் பொருள் உற்பத்தி ஆலைகளிலும், கப்பல் சார்ந்த கட்டுமானங்களிலும் பயன் தருகிறது. தூய நிக்கலே அரிப்புக்கு எதிர்ப்புத் தரும். அதனால் ஆக்சிஜனேற்றம் அடையும் உலோகங்களின் பரப்பைக் காக்க அதனுடன் சிரிதளவு நிக்கலைச் சேர்ப்பர். நிக்கல் முலாம் பூச்சும் இதற்குப் பயனுள்ளது. சிறப்புப் பயன்பாட்டிற்கென நிக்கல் பல கலப்பு உலோகங்களைத் தந்துள்ளது. நிக்கல்-குரோமியக் கலப்பு உலோகம் நிக்ரோம் எனப்படும். இதன் மின் தடையெண் டங்க்ஸ்டனை விடக் குறைவு. குறைந்த உருகு நிலை கொண்டது என்பதால் மின்னிழை விளக்குகளில் இது அதிகம் பயன்படுவதில்லை. எனினும் மின்னடுப்பு, மின்னுலைகளுக்கு நிக்ரோம் உகந்தது. இன்வார் எனப்படும் கலப்பு உலோகததில் நிக்கல், இரும்பு கார்பன் முறையே 63.8%, 36 %, 0.2 % ஆக உள்ளன. இதன் வெப்ப விரிவாக்கம் மிகவும் குறைவு என்பதால் ஈடு செய்யப்பட்ட ஊசல்களில் இது பயன்படுகிறது. எலின்வரில் நிக்கல், குரோமியம் 36:12 என்ற விகிதத்தில் எஃகுடன் கலந்துள்ளன. இதன் மீள் திறன் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை என்பதால் கைக் கடிகாரங்களுக்குத் தேவையான நுண்ணிய மயிரிழைச் சுருள் வில்கள் செய்யப்படுகின்றன. மிசிமா (Mishima), அல்நிகோ (Alnico), அல்நி (Alni)போன்ற கலப்பு உலோகங்கள் உயரளவு காந்தப் பண்பைக் கொண்டுள்ளன. இவை நிலைக் காந்தங்கள், மின் மாற்றிகளின் உள்ளகம், தொலைபேசியின் அதிர்வுத் தகடு, சோக்கு போன்றவைகளில் பயன்படுகின்றன. மின் காந்தங்களுக்கு உகந்த பொருளாக பெர்மலாய் (Permalloy)(இரும்பு: நிக்கல் = 22:78) என்ற கலப்பு உலோகம் பயன்படுகின்றது. இதன் காந்த உட்புகு திறன் மிகவும் அதிகம். இதை ஒரு மெல்லிய புற காந்தப் புலத்தைக் கொண்டே காந்தமாக்கம் செய்யவும், காந்த நீக்கம் செய்யவும் முடியும். நிகோசி(nicosi) என்ற கலப்பு உலோகம் (நிக்கல்:கோபால்ட்:சிலிகான்=94:4:2) ஆற்றல் மிக்க கேளா ஒலி மூலங்களை(Ultrasonic source) உருவாக்கப் பயன்படுகின்றது. நிக்கலும் டைட்டானியமும் சேர்ந்து நிட்டினால் என்ற வடிவம் மறவா உலோகத்தை தருகின்றன. இதன் பயன்பாட்டின் காரணமாக பல துறைகளிலும் புதிய தொழில் நுட்பத்தைத் தந்து பல புதுமைகளை விளைவித்து வருகிறது. ஹைட்ரஜனூட்டம் செய்து எண்ணெய்ப் பொருட்களைக் கெட்டிப் படுத்தும் வழிமுறையில் நிக்கல் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது. நிக்கல் இரு வகையான மின் சேமக்கலன்களில் பயன் தருகிறது. நிக்கல்-இரும்பு மின்சேமக்கலம் 1.35 வோல்ட் மின்னழுத்தமும், நிக்கல்-காட்மியம் மின்சேமக்கலம் 1.5 வோல்ட் மின்னழுத்தமும் தருகின்றன. நிக்கல்-காட்மியம் செல்களைக் கசிவின்றி முத்திரையிட முடிவதால் இவை கணக்கிடும் கருவிகள், மின்னணுச் சாதனங்கள், கைகடிகாரங்கள் போன்றவற்றில் பயன்படுகின்றன. நிக்கல் நுகர்ப்பொருள் உற்பத்தி ஆலைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுகிறது. துருப்பிடிக்காத இரும்பு, அல்நிக்கோ காந்தம், நாணயங்கள், மென்சேமிப்புக் கலன்கள், நரம்பிசைக்கருவிகளின் (மின் கிதார்)கம்பிகள் ஆகியவை செய்ய நிக்கல் பேரளவில் பயன்தருகிறது. நசிருதீன் உமாயூன் நசிருதீன் உமாயூன் ("Nasir-ud-Din Muḥammad", பாரசீக மொழி: نصيرالدين همايون) நசிருதீன் ) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். இவரது தந்தையான பாபர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவர் பதவியேற்கும் பொது முகலாயப் பேரரசு பல இடர்களுக்குள் சிக்கியிருந்தது. பஞ்சாப்பும் அதற்கு கிழக்கே உள்ள சில பகுதிகளும் மட்டுமே இவர் ஆட்சியேற்ற போது முகலாயப் பேரரசின் கீழ் இருந்தன. வங்காளத்தில் முகமது லோடியும் செர்கானும் தங்கள் ஆப்கானிய இனத்தின் வல்லமையை அதிகப்படுத்தி இருந்தனர். குஜராத், மாளவம் போன்ற நாடுகளை ஆண்ட பகதூர் சா தில்லியை தாக்க தருணம் பார்த்திருந்தார். இராசபுத்திரபுத்திர மன்னர்களும் முகலாயப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தினர். மேலும் உமாயூனின் சகோதரரான கம்ரான் காபூலை கவர்ந்ததால் பஞ்சாப் பகுதியையும் உமாயூன் தன் சகோதரருக்கே கொடுத்து விட்டார். துரோகம் செய்த இளைய சகோதரர்களுக்கே ஆட்சியை கொடுத்ததாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாலும் இவரால் இவர் தந்தையான பாபர் போல் ஆட்சியை திறம்பட நடத்தவில்லை. உமாயூன் செர்கானுடன் நட்புறவு செய்து கொண்டு முகமது லோடியை முதலில் தோற்கடித்தார். பகதூர் சாவை வென்று குஜராத்தையும் மாளுவத்தையும் கைப்பற்றினார். ஆனால் பகதூர் சா சில நாட்களுக்குப் பின் இப்பகுதிகளை மீண்டும் பிடித்துக் கொண்டார். செர்கான் அக்காலத்தில் பீகாரையும் வங்காளத்தையும் ஆண்டு வந்தார். அவருடன் முரண்பட்ட உமாயூன் அவரைத் தாக்கி சூனார் என்னும் கோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். ஆனால் அதை சரிவர நிர்வகிக்காதலால் செர்கான் உமாயூன் மீது படை எடுத்தார். பீகார், காசி, சூணார்க்கு கோட்டை போன்ற முக்கிய நாடுகளையும் கோட்டைகளையும் செர்கான் கைப்பற்றினார். மேலும் சௌன்சாவிலும் கனோச்சியிலும் நடந்த போர்களில் செர்கான் உமாயூனை தோற்கடித்தார். அதனால் உமாயூன் ஆக்ராவுக்கு சென்று அங்கிருந்து இலாகூருக்கு தப்பினார். செர்கான் செர்சா என்ற புனைப் பெயருடன் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளை ஆண்டார். உமாயூனுக்கும் மனைவிகள் பலர் இருந்தனர். அதில் அமீதா பேகம் முக்கியமானவர். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார். 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் அக்பரை பெற்றெடுத்தார். செர்சா சில ஆண்டுகள் வட இந்தியாவை திறம்பட ஆட்சி செய்தார். காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் செர்சா இறந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் கீழ் பத்து ஆண்டுகளே வட இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அப்போது நடந்த குழப்பங்களை பயன்படுத்திக் கொண்ட உமாயூன் பாரசீகத்தில் படைபலத்தை பெருக்கிக் கொண்டு மீண்டும் செர்சா அரசின் மீது படையெடுத்து பழைய ஆட்சிப் பகுதிகளை பிடித்தார். செர்சா அரசின் கடைசி மன்னனான சிகந்தரை தோற்கடித்து மீண்டும் பேரரசர் ஆனார். இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். உமாயூனின் சமாதி பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஓங்கில் ஓங்கில் அல்லது டால்பின் (ஆங்கிலம்: "Dolphin") என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி இனம் ஆகும். இவை திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில், சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள் உள்ளன. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன. டால்பின்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவை மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. ஓங்கில்கள் திமிங்கலங்கள் மற்றும் பாலூட்டிகளின் இடைப்பட்ட இனமாகும்.கால்களில் இரட்டைப்படை விரல்கள் உடைய பாலூட்டிகளின் மூதாதையர் ஆகும்.தற்கால டால்பின்களின் மூதாதையர்கள் இயோசீன் கேம் பகுதியில் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் நுழைந்தது. இதன் வால் அருகே சிறிய மூட்டு மொட்டுகள் (ஹிந்த் மூட்டு மொட்டுகள்) போன்ற கரு வளர்ச்சியின் ஐந்தாவது வாரத்தில் காணப்படும். .இது தோராயமாக 2.5 செமீ (1.0) நீளமாக உள்ளது. நவீன டால்பின் எலும்புக்கூடுகளில் இரண்டு இடுப்பு எலும்பு பகுதியில் சிறிய கம்பி வடிவ பயனற்ற ஹிந்த் மூட்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. அக்டோபர் 2006 ல், ஒரு அசாதாரண குப்பி வடிவ மூக்குடைய டால்பின் ஜப்பான் பிடிக்கப்பட்டது. டால்பின்கள் வேகமாக நீச்ச அடிக்கும் வண்ணம் நெறிப்படுத்தப்பட்ட நீள் வடிவ உடலை கொண்டிருக்கின்றன.வால் பிரிவில் உள்ள பெக்டோரல் துடுப்புகள் திசை கட்டுப்பாடு திறனையும் வால் துடுப்பு முற்செலுத்தம் திறனையும் கொண்டிருக்கும்.நீந்தும் போது முதுகு துடுப்பு ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.இனங்கள் வேறுபட்டவையாக இருப்பினும் பெரும்பாலும் கோடுகள் மற்றும் இணைப்புகளை கொண்டு சாம்பல் வண்ணங்களை கொண்டவையாக உள்ளன . சில இனங்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும்.டால்பின்கள் தங்கள் தலைக்கு மேல் உள்ள ஒரு உறிஞ்சும் துளை மூலம் மூச்சுவிடும் அதன் மூச்சு குழல் மூளைக்கு முன்புறமாக உள்ளது. டால்பின் பெரிய மற்றும் மிகவும் சிக்கலாக மூளையை கொண்டது. பெரும்பாலான பாலூட்டிகள் போலன்றி , டால்பின்கள் அவர்கள் பிறப்பதற்கு முன்னர் அல்லது பின்னர் அலகு சுற்றியுள்ள ஒரு சில முடிகள் தவிர வேறு முடி ஏதும் இன்றி காணப்படும். டால்பின்கள் ' இனப்பெருக்க உறுப்புக்கள் உடலின் கீழ்புறமாக அமைந்துள்ளது. ஆண்களுக்கு மலத்துவாரம் பின்னால் இரண்டு பிளவுகளுக்குள் ஆண்குறி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.பெண்ணுக்கு யோனி மற்றும் ஆசனவாய் பிளவுடன் ஒரு பிறப்புறுப்பு பிளவு உள்ளது. அமெரிக்க தேசிய கடல் பாலூட்டி அறக்கட்டளையின் ஒரு ஆய்வு டால்பின்கள், மனிதர்களை போலவே வகை 2 நீரிழிவு குறைபாடை அடைகின்றன என கண்டறிந்தது.மனிதர்கள் மற்றும் டால்பின்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான நோய் மற்றும் சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுத்தது. பெரும்பாலான டால்பின்கள் நீரின் அடியில் மற்றும் வெளியே இருபகுதியிலும் தீவிர கண்பார்வை கொண்டவை.அவைகள் மனித விட பத்து மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வெண்களை கேட்க முடியும்.நேருக்கு அடியில் கேட்க அவை பிரத்தியேகமாக கீழ் தாடை எலும்பு ஒரு கொழுப்பு நிறைந்த குழி வழியாக நடுச்செவி ஒலி கடத்துகிறது.டால்பின் பற்கள் எதிரொலியை உணர்ந்து ஒரு பொருளின் சரியான இடத்தை அறிவதாக நம்பப்படுகிறது.இந்திய சிந்து டால்பின் பார்வைக்குறைபாடு உடையது. அவைகள் மீன் மற்றும் சில வகையான உணவுகளை கண்டறிய நுகர்வு திறனை பயன்படுத்துகின்றது. 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆற்று ஓங்கில் அக்டோபர் 5,2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இவை ஒர்டன்டரி துணை வகுப்பை சேர்ந்த பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய திமிங்கலங்கள் என வகை படுத்தப்படுகிறது. கடல் டால்பின்கள்,குடும்பம்:டெல்பிநிடே நீண்ட மூக்கு பொது டால்பின், குறுகிய மூக்கு பொது டால்பின், பொதுவான குப்பிமூக்கு டால்பின், இந்திய பசிபிக் குப்பிமூக்கு டால்பின், புர்றான் டால்பின் , டுர்சயொப்ஸ் ஆஸ்திரியளியஸ், செப்டம்பர் 2011 ல் மெல்போர்னில் கடலில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இனங்கள் ஆகும். வடக்கு திமிங்கில டால்பின், தெற்கு திமிங்கிலடால்பின், இந்திய பசிபிக் கூன்முதுகு டால்பின், சீன வெள்ளை டால்பின், அட்லாண்டிக் கூன்முதுகு டால்பின், அட்லாண்டிக் புள்ளி டால்பின், புள்ளிகளுடைய டால்பின், ஸ்பின்னர் டால்பின், கோடிட்ட டால்பின், கூரிய பற்களுடைய டால்பின் சிலி டால்பின் ஹெக்டரின் டால்பின் திமிங்கிலம் கிரீசியஸ் ஃப்ராஸரின் டால்பின் அட்லாண்டிக் வெள்ளை தலை டால்பின், மங்கலான டால்பின், பசிபிக் வெள்ளை தலை டால்பின், பாலே நாட்டின் டால்பின், வெள்ளை மூக்கு டால்பின் , ஆஸ்திரேலிய டால்பின் முலாம்பழம் , தலை திமிங்கிலம் , கொலையாளி திமிங்கிலம், குள்ளர் கொலையாளி திமிங்கிலம், தவறான கொலையாளி திமிங்கிலம், நீண்ட விமானி திமிங்கிலம், குறுகிய விமானி திமிங்கிலம், ஆஸ்ற்றோலோதேல்பிஸ் மைருஸ், கங்கை நதி டால்பின், சிந்து நதி டால்பின், அமேசான் நதி டால்பின், சீன ஆற்று டால்பின் , லா பிளாட்டா டால்பின், இதன் ஆறு இனங்கள் பொதுவாக திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன முலாம்பழ தலை திமிங்கிலம், கொலையாளி திமிங்கிலம் , குள்ளர் கொலையாளி திமிங்கிலம் , ஹவாயில் கடல் வாழ்க்கை பூங்கா ,திமிங்கிலம் தவறான கொலையாளி திமிங்கிலம், நீண்ட விமானி திமிங்கிலம், குறுகிய விமானி திமிங்கிலம், ஆன்மா (இந்து சமயம்) இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா அல்லது ஆத்மா எனப்படுகிறது. "ஆன்மா" என்ற சமசுகிருத மொழி சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன. இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘நான்’ "தத் த்வம் அஸி" என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. இம்மகாவாக்கியம் சாந்தோக்கிய உபநிடதத்தில் 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் உரையாடலில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது. ஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம். "அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா" "நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம்". பிரகதாரண்யக உபநிடதம் 3 – 7 – 23. பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு. "ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:" பிரகதாரண்யக உபநிடதம் 2 – 4- 5. ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது. "ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம்" "அஸக்தம் ஸர்வபிருச்சைவ நிர்க்குணம் குணபோக்த்ரு ச." பகவத் கீதை 13-14. எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது. குற்றப்பத்திரிகை (திரைப்படம்) குற்றப் பத்திரிகை கன்னடத்தில் சயனைட் என வெளிவந்த திரைப்படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.. ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய ஒற்றைக் கண் சிவராசா, சுபா ஆகிய பாத்திரங்கள் தொடர்பான இந்தத் திரைபடம் பல்வேறு தடைகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. கர்நாடகத்தில் வெற்றிகண்ட கன்னடத்திரைப்படம் தமிழில் ஆர். கே. செல்வமணியின் இயக்கத்தில் ராம்கி, ரகுமான், ரம்யா கிருஷ்ணன், ரோஜா, விஜயகுமார் மற்றும் பல நடிக/நடிகைகளின் நடிப்பில் வெளிவந்துள்ளது. விவேக் ஒபரோய் விவேக் ஒபரோய் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். பிறப்பு செப்டம்பர் 3, 1976. இவர் நடிகரான சுரேஷ் ஒபரோயின் மகன். 2002 இலிருந்து நடித்து வருகிறார். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுனில் தத் சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 - 2005 காலத்தில் ஒரு அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அனில் கபூர் அனில் கபூர் (பிறப்பு டிசம்பர் 24, 1959) ஒரு பிரபல இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார் . இவரது தகப்பன் சுரீந்தர் கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். சகோதரனான போனி கபூரும் ஒரு தயாரிப்பாளர். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூரும், மகள் சோனம் கபூரும் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.அனில் கபூர் 1979 இல் இருந்து நடித்து வருகிறார். துகேலா அருவி துகேலா அருவி அல்லது துகேலா நீர்வீழ்ச்சி (Tugela Falls) உலகின் இரண்டாவது உயரமான அருவி (நீர்வீழ்ச்சி) ஆகும். ஐந்து படிகளாக விழுகின்ற இதன் மொத்த உயரம் 3110 அடிகள் (947 மீட்டர்கள்) ஆகும். இது தென்னாபிரிக்காவின் குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் டிராக்கன்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ரோயல் நேட்டால் தேசியப் பூங்காவில் உள்ளது. இராவணன் அருவி இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும். சி. அகிலேஸ்வரசர்மா சி. அகிலேஸ்வரசர்மா ஈழத்துச் சிற்றிலக்கியப் புலவர்களிலே சிறப்பாகக் கூறப்படுபவர். சோதிட வல்லுநர். இவர் யாழ்ப்பாணம் மண்டைதீவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர். ஜீவா ஜீவா என்னும் பெயர் பின்வருபவர்களைக் குறிக்கலாம்: ஜீவா (திரைப்பட இயக்குநர்) ஜீவா, (பிறப்பு 21 செப்டம்பர் 1963, இறப்பு 25 ஜூன் 2007)இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஆவார். இவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர். ஷாம், ஆர்யா, வினய், அசின், தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார் (12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே). இவர் ரஷ்யாவில் மாரடைப்பினால் 44 ஆவது வயதில் மரணமடைந்தார். டெவோன் அருவி டெவோன் நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் A7 பெருந்தெருவில் கொட்டகலை - தலவாக்கலை நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாரான டெவன் ஆற்றில் அமைந்துள்ளது. மொத்தம் 97 மீட்டர் (318 அடி) உயரத்தை பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - பதுளை பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கு அருகாமையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. நீர் வீழ்ச்சியில் உச்சியை நாவலப்பிட்டி- தலவாக்கலை பெருந்தெருவின் மூலம் இலகுவாக அடையலாம் மேலும் உச்சியின் அருகே மக்கள் குடியேற்றம் ஒன்றும் உள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் பலதற்கொலைகள் இந்நீர்வீழ்ச்சியில் நடைபெற்றுள்ளன. சதா சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும். சிரேயா சரன் சிரேயா சரன் (ஆங்கலம்: Shreya Saran) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு "இசுதாம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு "சந்தோசம்" என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். கல்வெட்டியல் கல்வெட்டியல் அல்லது சாசனவியல் (Epigraphy) என்பது, கல் அல்லது வேறு பொருட்களில் வெட்டப்பட்ட அல்லது உலோகங்களில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுத்துறை ஆகும். இத்துறை பண்பாடு மற்றும் கால அடிப்படையில் கல்வெட்டுக்களை வகைப்படுத்துவதையும், அவற்றை வாசித்து விளக்குதல், அவற்றிலிருந்து முடிவுகளைப் பெற முயல்தல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. கல்வெட்டியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் கல்வெட்டியலாளர் எனப்படுகிறார்கள். கல்வெட்டியல், தொல்லியலில் பெருமளவு பயன்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நூலகச் சங்கம் (US Library of Congress), கல்வெட்டியலை, வரலாற்றுத் துறையின் துணைத் துறைகளில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது. கல்வெட்டியலின் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும் எழுதும் முறை பற்றிய விடயம், தனியாக ஆராயப்படுகின்ற, கல்வெட்டில் எழுதப்பட்ட உரையின் இயல்பிலிருந்து வேறுபட்டதாகும். பொதுவாகக் கல்வெட்டுக்கள் பொது மக்களின் பார்வைக்காக வெட்டப்படுவனவாகும். எல்லாக் கல்வெட்டுக்களுமே இவ்வாறு இருக்கவேண்டும் என்பதில்லை. சில பண்பாடுகளில் இவை கடவுளின் பார்வைக்கு எனக் கருதியும் வெட்டப்படுகின்றன. மைசீனியப் பண்பாட்டைச் சேர்ந்த "லீனியர் பி" ("Linear B") என்று அழைக்கப்படும் கல்வெட்டு, பொருளாதார மற்றும் நிர்வாகம் தொடர்பான பதிவுகள் என்று கண்டறியப் பட்டுள்ளது. கல்வெட்டியல் துறை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதியான வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வெட்டியலின் கொள்கைகள் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டுள்ளன. ஐரோப்பியக் கல்வெட்டியல் தொடக்கத்தில், இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தியது. ஜார்ஜ் ஃபப்ரிசியஸ் (Georg Fabricius) - (1516–1571); ஆகஸ்ட் வில்ஹெல்ம் சம்ப்ட் (August Wilhelm Zumpt) - (1815–1877); தியோடோர் மாம்சென் (Theodor Mommsen) - (1817–1903); எமில் ஹியூப்னெர் (Emil Hübner) - (1834–1901); பிரான்ஸ் கியுமொண்ட் (Franz Cumont) - (1868–1947); லூயிஸ் ராபர்ட் (Louis Robert) - (1904–1985) போன்றவர்கள் இத்துறையில் தனிப்பட்ட பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். மாம்சென்னினால் 1863 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டட, "கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் லட்டினரம்" என்னும் இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பான தொகுப்பு, போர்க்கால இடையீடுகளைத் தவிர்த்து, இன்றுவரை பெர்லினில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலான மிகப் பெரியதும், விரிவானதுமான தொகுப்பு இதுவேயாகும். கிரேக்கக் கல்வெட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் வேறொரு குழுவினால் எடுக்கப்பட்டன. 1825 தொடக்கம் 1877 வரையான காலப்பகுதியில், கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் கிரீசாரம் (Corpus Inscriptionum Graecarum) என்னும் தொகுப்பும் ஜெர்மனியிலிருந்தே வெளியிடப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட நவீன தொகுப்புக்களினால் இதைப் பலர் தற்போது பயன்படுத்துவதில்லை. செயிண்ட் கிளையார் அருவி செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் A7 பெருந்தெருவில் கொட்டகலை - தலவாக்கலை நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - பதுளை பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. போபத் அருவி போபத் நீர்வீழ்ச்சி சபரகாமுவாகா மாகாணத்தில் குருவிட்டை நகருக்கு அண்மையில் கொழும்பு - இரத்தினபுரி பெருந்தெருவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. களுகங்கையின் முக்கிய கிளையாறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி மொத்தம் 30 மீட்டர் (100 அடி) பாய்கிறது. இதன் பெயர் இதன் வடிவத்தைக் கொண்டு வருவதாகும் (போபத் என்பது சிங்கள மொழியில் அரசமர இலை என்பதைக் குறிக்கும்). இந்நீர்வீழ்ச்சியை குருவிட்டை நகரில் இருந்து தெவிபாகலை கிராமத்துக்குச் செல்லும் பாதையூடாக அணுகலாம். நீர்வீழ்ச்சிக்கருகே உல்லாசப் பிரயாணிகளுக்கான வசதிகள் காணப்படுகின்றன. கொழும்பில் இருந்து 2 மணித்தியாலத்துக்குள் இந்நீர்வீழ்ச்சியை அடையலாம் என்பதால் உள்நாட்டு உல்லாசப்பிரயானிகளிடையே பிரசித்தமான இடமாக காணப்படுகிறது. சுவான் ஆறு சுவான் ஆறு மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் பேர்த் நகரை ஊடறுத்துப் பாயும் ஆறு ஆகும். இது டச்சு நாடுகாண் பயணியான வில்லியம் டி விளெமிங் என்பவரால் 1697 இல் பெயரிடப்பட்டது. பதினெட்டுப் பாலங்கள் இந்த ஆற்றினைக் கடக்கின்றன. ரொசெட்டாக் கல் ரொசெட்டா கல் (Rosetta Stone) என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை பட எழுத்தையும் (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது ஐந்தாம் தொலெமியினால் வெளியிடப்பட்டது. இந்தக்கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 சதமமீட்டர் அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது கிரனோடியொரைட்டு (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் மாகாணத்தில் உள்ள பாக்ராம் நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது. பெஹிஸ்ட்டன் கல்வெட்டு பெஹிஸ்ட்டன் கல்வெட்டு மூன்று வெவ்வேறுவிதமான ஆப்பெழுத்து (cuneiform) முறைகளில் பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். படஎழுத்து முறைக்கு ரொசெட்டா கல்வெட்டு எப்படியோ, அப்படியே ஆப்பெழுத்துக்கு இக் கல்வெட்டு ஆகும். ஆப்பெழுத்துக்களை வாசித்து அறிவதில் இக்கல்வெட்டுப் பெரும் பங்காற்றியது. இது ஈரானில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ளது. பிரித்தானிய இராணுவ அலுவலரான சர் ஹென்றி ரோலின்சன் (Sir Henry Rawlinson) என்பவர், 1835, 1843 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பகுதிகளாக இக் கல்வெட்டை எழுத்துப்பெயர்ப்புச் செய்வித்தார். 1838 ஆம் ஆண்டில், பழைய பாரசீக மொழிப் பகுதியை ரோலின்சனால் மொழிபெயர்க்க முடிந்தது. எலமைட்டு மற்றும் பபிலோனிய மொழிப் பகுதிகள் 1843 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரோலின்சனாலும், மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. பபிலோனிய மொழி அக்காடிய மொழியின் பிற்கால வடிவம் ஆகும். இரண்டுமே செமிட்டிக் மொழிகள். ஆபெர்சியஸ் கல்வெட்டு ஆபெர்சியஸ் கல்வெட்டு (Inscription of Abercius), சமயப் புனிதர்கள் வரலாறு சார்ந்த கல்வெட்டு ஆகும். ஃபிரீஜியாவைச் சேர்ந்த ஹையரோபோலிஸ் பிஷொப் ஆபெர்சியஸ் ரோம் நகருக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் சிரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளூடாகப் பயணம் செய்த அவருக்குப் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹையரோபோலிஸ் திரும்பிய சிறிது காலத்திலேயே அவர் காலமானார். எனினும், அதற்கு முன்னரே அவர் தனது கல்லறை வாசகத்தை எழுதி முடித்துவிட்டார். இவ் வாசகத்தின் மூலம் அவர் தான் ரோமில் வாழ்ந்த காலத்தில் பெற்ற அனுபவங்களின் மனப்பதிவுகளை வெளிப்படுத்தினார். இறம்பொடை அருவி இறம்பொடை நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி- நுவரெலியா பெருந்தெருவில் இறம்பொடை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான இறம்பொடை ஆற்றில் அமைந்துள்ளது. மொத்தம் 109 மீட்டர் (358 அடி) உயரத்தில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்து பார்வையிட முடியும். மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வரண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. நீர் வீழ்ச்சி கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. லகுனா செப்பேடு லகுனா செப்பேடு, 1989 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிலுள்ள லகுனா டி பே ஏரிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 900 ஏப்ரல் 21 ஆம் தேதிக்குச் சரியான, சக ஆண்டு 822 ஐச் சேர்ந்த ஒரு தேதியும் பொறிக்கப்பட்டுள்ள இச் செப்பேடு சமஸ்கிருதம், ஜாவா மொழி, மலே மொழி, பழைய தகாலாக் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இச் செப்பேடு இதை வைத்திருப்பவரான நம்வாரன் என்பவரை அவர் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆவணம் ஆகும். இது, மணிலா குடா, இந்தோனீசியாவிலுள்ள மெடான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொண்டோ, பிலா, புலிலான் ஆகிய இடங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இது அக்காலத்தில் தகாலாக் மொழி பேசிய மக்களுக்கும், ஜாவாவின் ஸ்ரீ விஜயப் பேரரசுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருந்ததைக் காட்டுகிறது. இச் செப்பேடு இப்பொழுது பிலிப்பைன்ஸ் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. அன்னமாச்சாரியார் தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை. அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். "சுபத்ரா கல்யாணம்" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’திம்மக்கா" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார். அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார். இவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை (சங்கீர்த்தனைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் இராமானுசரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் இராமானுசர் மீதும் (உ.ம் கதுலன்னி கிலமைனா..., உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (உ.ம்: வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்களை இயற்றியுள்ளார். சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் "ப்ரஹ்மம் ஒக்கடே" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு. வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்து உள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்து உள்ளது. திவிபர்த ராமாயணா, சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன. அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு "அன்னமய்யா" என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இவரது பாடல்களை பல தெலுங்கு திரைப்படங்களில் எடுத்தாண்டுள்ளனர். இடும்பன் இடும்பன் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒன்றாவான். "இடும்பன் கவசம்" என்ற கவசமும் காணப்படுகிறது. இடும்பனின் வரலாறு பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான் முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வானவாசஞ் சென்றான். அவ்வழியால் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை அடைவாய் எனக் கூறினார். இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார். இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர். முருகபக்தனான இடும்பனுக்கு முருகன் கோயில்களில் சிறப்பிடம் அளித்தனர். இடும்பன் பூசை பல கோயில்களில் மகோற்சவத்தை அடுத்து நடைபெறுதல் வழக்கம். இலங்கையில் கொழும்பு,யாழ்ப்பானத்தில் பண்டத்தரிப்பு(காலையடி) இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லாந்தை மற்றும் மட்டக்களப்பின் சில பாகங்களிலும் இடும்பன் பரிவார தெய்வமாகத் தனிக் கோயில் பெற்று விளங்குவதைக் காணலாம். திரிகோணமலையில் பறையன்குளம் எல்லையிலுள்ள காளி கோயிற் பகுதியில் "இடும்பன்மலை" எனக் குன்று ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இடும்பாவனம் மற்றும் திருக்கன்றாப்பூர் போன்ற இடங்களில் இடும்பன் சிவனைப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, குன்றக்குடி போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். திருப்பூர் அருகில் இடுவம்பாளையம் என்னும் இடத்தில் இடும்பன் கோவில் உள்ளது. (இடும்பனுக்கு தனி கோவில் உண்டு) தஞ்சை மாவட்டம், காடுவெட்டிவிடுதியில் இடும்பனுக்கு தனிசன்னதி உள்ளது. சிங்களப் புத்தாண்டு சிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடி வரும் புத்தாண்டு கொண்டாட்ட முறையாகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறையே ஆகும். அதனாலேயே இலங்கையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர். தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் (பிரபவ – அட்சய) கணக்கிடப்படும். சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 15) ஆண்டு தொடக்கம் நிகழும். அதுவே தமிழரின் புத்தாண்டாகும். அதனையே சிங்களவரும் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். சிங்கள மொழியில் (அழுத் = புதிய, அவுருது = ஆண்டு) அழுத் அவுருது என்றழைக்கப்படுகின்றது. இலைதுளிர் காலத்தின் அரும்பில் இந்த புத்தாண்டு தொடங்குகின்றது. காலையில் எழுந்து நீராடி, புதிய வெள்ளை ஆடை அணிந்து, பௌத்த விகாரைகளுக்கு சிங்களவர் சென்று வழிபடுவர். கிரிபத், "(வெண் பொங்கல்)" மற்றும் பிற பலகாரங்கள் செய்து, உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு களிப்பர். பெரியோரை மதித்து கை விசேடம் பெறுவர். சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்வர். இலங்கையில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை எத்தனையாம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது என்பதை அருதியிட்டு கூறமுடியாதுள்ளது. அதேவேளை இலங்கையில் பௌத்தம் அறிமுகமாகும் முன்னர் இருந்தே இந்த புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கிறது. கி.மு. 3ம் நூற்றாண்டுகளில் தேவநம்பியதீசன் ஆட்சி காலத்திலேயெ பௌத்தம் இலங்கையில் நிலைப்பெற்றதாக மகாவம்சம் நூல் கூறுகிறது. இலங்கையில் பௌத்தம் நிலைப்பெற்றதன் பின்னர், தேவநம்பியதீசனால் மகாவிகாரை ஒன்று கட்டப்படுகின்றது. அந்த மகாவிகாரையில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்து பௌத்தக் குறிப்புகளையும், பௌத்தம் இந்தியாவில் தோன்றி இலங்கையில் நிலைப்பெற்ற வரலாற்றையும் பாளி மொழியில் செய்யுள் வடிவில் தொகுத்து வைக்கத்தொடங்கினர். இந்த தொகுப்புகளின் காலவரிசை எந்த காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைவாக காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன என்றால், பௌத்த நாட்காட்டிக்கு அமைவாகக் குறிக்கப்பட்டன என்று கொள்ளமுடியாது. காரணம், அந்த தொகுப்புகள் பௌத்தம் தோன்றுவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரான (கி.மு. 6ம் நூற்றாண்டு) கதைகளையும் கொண்டுள்ளது. இன்னும் கூறுவதானால் புத்தர் பிறப்பதற்கு முன்னரான கதைகளும் அதில் உள்ளன. எனவே பௌத்த நாட்காட்டி அப்போது பயன்பாட்டில் இல்லை. பயன்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை. சூரியசந்திர நாட்காட்டி முறைக்கு அமைவாக எடுத்துக்கொண்டு பார்த்தால், குறிக்கப்பட்டிருக்கும் மாதங்களின் பெயர்கள் பாளியில் உள்ளன. இந்த பாளியில் உள்ள மாதப் பெயர்களும், ஆண்டு தொடக்கமும், தமிழ் பெயர்களுக்கு இடப்பட்ட மாற்று பெயராகவே உள்ளன. எடுத்துக்காட்டாக: பௌத்தர் நிர்வாணம் அடைந்த மாதம் விசாக மாதம் எனப்படுகின்றது. இந்த "விசாக" எனும் சொல், தமிழின் "வைகாசி" மாதத்தின் பெயரை ஒத்துள்ளது. தமிழரின் ஆண்டு பிறப்பு சித்திரை 14 அல்லது 15ல் தொடங்குகிறது. அதற்கமைவாகவே மகாவசம் நூலின் குறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு தொடக்கமும் அதே நாளை குறிக்கிறது. இங்கே சித்திரை 14 அல்லது 15ம் திகதியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளும் முறை தமிழர்களுடையது என்பதை தெளிவாக்கிக்கொள்ளலாம். தமிழில் இருந்து அன்மையில் பிரிந்து சென்று மலையாளத்திலும் இதே முறை உள்ளது. வேறு வடயிந்திய ஆண்டு கணிப்பு முறைகளின் ஆண்டு தொடக்கம், ஏப்ரல் 14, 15 களில் நிகழ்வதில்லை. எனவே மகாவம்சம் காலத்தில் காலத்தை கணிப்பிட்டு குறித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையையே ஆகும். அதற்கமைவாக தமிழ் ஆண்டு தொடக்கம் சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது 15) புத்தாண்டு கொண்டாடப் படுகின்றது. தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை ஆரம்பம் முதலே சிங்களவர்கள் பயன்படுத்தி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் இலங்கை சிங்களவர்கள், தமிழ் புத்தாண்டை, தமிழ் சிங்களப் புத்தாண்டு எனக் கொண்டாடுகின்றனர். இப்புத்தாண்டுக்கு சிங்களவர் கொடுக்கும் விளக்கம் "சூரியன் மேச இராசியில் பயணத்தை தொடரும் நாள்" என்பதாகும். சிலர் இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தால் உருவானதாகக் கூறுவோரும் உளர். இதைத் தவிர வேறு விளக்கங்களோ, காரணங்களோ இலங்கை சிங்களவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. புத்தாண்டு என்பது பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி, மீண்டும் அடுத்தச் சுற்றில் பிரவேசிக்கும் தொடக்க நாளாகும். உலகில் மக்கள் வளர்ச்சியடைந்த சமுதாயங்களாக தோற்றம் பெற்ற பல சமுதாயக் கட்டமைப்புகளில், நாடுகளில் காலத்தை கணக்கிட பல்வேறு காலக் கணிப்பீட்டு முறைகள் இருந்துள்ளன. இவற்றில் பல இன்று செல்வாக்கிழந்து அழிந்துப் போயின. ஒன்றின் செல்வாக்கு மிகுதியால் இன்னொன்றின் செல்வாக்கு இழக்கப்பட்டு அதன் வரலாற்றுத் தடங்கள் மறைகின்றன. இன்னும் சில வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன. இலங்கையில் தமிழ் ஆண்டு தொடக்க நாளான புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான காரணமும் மறைக்கப்பட்ட நிலையில், அதே நாளில் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் மட்டும் சிங்களவர்கள் மத்தியில் மறையாமல் உள்ளன. கிறித்தவ காலக் கணிப்பீட்டு முறை தமிழர்களிடையே என்று தொடக்கம் புழக்கத்திற்கு வந்தது என்று பார்ப்போமானால், குறிப்பிட்டுக் கூறுவதற்கு சரியான சான்றுகள் இல்லை. ஆனால் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு பிறகு என்று சிலரும், அதற்கு சில காலத்திற்கு முன்பே வெளியுறவு, வணிகத் தொடர்புகள் போன்றவற்றால் புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என்று சிலரும்; இரண்டு வெவ்வேறு கருத்துக்களை வைக்கின்றனர். இக்கருத்துக்கள் என்னவாகினும் இலங்கையில் போத்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் பொன்றோரில் ஆட்சிக்கு பின்னரே, கிறித்துவ காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று உணரக் கூடியதாக உள்ளது. அப்படியானால், அதற்கு முன்பு இலங்கையில் உள்ளோர் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறை என்ன எனும் கேள்வி எல்லோரிடமும் எழுகின்றது. பௌத்தரின் தோற்றத்தின் பின்னர் அதன்படி புத்த ஆண்டுப் பிறப்பு மே மாதம் பௌரணமி இரவில் ஆரம்பிப்பதாகக் கூறப்படுகின்றது. அந் நாளை இலங்கை பௌத்தர்கள், மென்கடதாசி கூடுகள் அமைத்து அதற்குள் மெழுகுவர்த்தி அல்லது மின் விளக்குகள் ஒளிரச் செய்து, தோரணங்கள் கட்டி வெசாக் பண்டிகை என இரவில் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனை புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் சிங்களவர்களிடம் இல்லை. இதன் அடிப்படையில் இலங்கையில் புத்த காலக் கணிப்பீட்டு முறை நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் எதுவுமில்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறு இருந்திருக்குமானால் புத்தர் பிறந்த நாளாகிய மே மாத பௌரணமி நாளையே சிங்களப் புத்தாண்டாக, சிங்களவர்கள் கொண்டாடி இருப்பர். இலங்கையில் புத்த மதம் அறிமுகமான காலப் பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் பெயர்களைப் பார்த்தால்: Bak, Vesak, Poson, Æsala, Nikini, Binara, Wap, Il, Undhuvap, Dhuruthu, Navam, Mædhin. இதன் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான; 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும் (பிரபவ – அட்சய) காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் இருந்துள்ளதை அறியலாம். இதைத் தவிர பழந்தமிழர்களிடம் பிரமிக்க வைக்கும் கணக்கியல், கூட்டல் எண்கள், அளவைகள் போன்றவைகளும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. எனவே இதனடிப்படையில் பழந்தமிழர் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறையே இலங்கையில் இருந்தாகக் கொள்ளலாம். இதனை சான்றுகளுடன் நிரூபிக்க கூடிய தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும், யாரும் மறைக்க முடியாத சான்றாகவே, இன்றும் இலங்கை சிங்களவர்களிடம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்வதை உணரக்கூடியதாக உள்ளது. தமிழர் காலக்கணிப்பீட்டு முறைகள் இன்று பல தமிழ் இணையத்தளங்கள், செய்தித் தாள்கள், திருமண அழைப்பிதல்கள், கோயில் உட்சவங்கள், பஞ்சாங்கம் பார்த்தல், நேரம் குறித்தல் போன்றவற்றில் பயன்படுவதைக் காணலாம். சில கிராமங்களில் தமிழ் மாதப்பெயரிகளிலே தை, மாசி, பங்குனி என காலங்களை குறித்துப் பேசுவோரும் உளர். இலங்கை சிங்கள பௌத்தப் பிக்குகள் நேரம் குறித்தல், பஞ்சாங்கம் கணித்தல் போன்றவற்றில் நமது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை பயன்படுத்துவதை சிற்சில இடங்களில் காணலாம். ஆனால் சிங்களவரது பயன்பாட்டில் இல்லை. இவை முற்றிலுமாக மறைந்து விட்டன. அல்லது மறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் காலத்தால் மறைக்க முற்பட்டாலும், மறைக்க முடியாத சான்றாகவே காலம் காலமாக பழங்காலம் தொட்டு கொண்டாடிவரும் தமிழர் புத்தாண்டு இன்றும் இவர்களின் கொண்டாட்டமாக இருக்கின்றது. இன்றும் இத் தமிழ் ஆண்டுப் பிறப்பை, சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என கொண்டாடி வருகின்றனர். இப்புத்தாண்டை பௌத்த சிங்களவர்கள் மட்டுமன்றி; அதிகளவிளான சிங்கள கிருத்தவர்களாலும் கொண்டாடப்படுகின்றது. இலங்கை சிங்களவர்களின் கொண்டாட்டங்களில் பிரதான கொண்டாட்டமாக, இத் தமிழ் சிங்களப் புத்தாண்டே விழங்குகின்றது. இலங்கை அரசு உத்தியோகப் பூர்வமாக இரண்டு நாற்கள் பொது விடுமுறை வழங்குகின்றது. ஆனால் அதிகமானோர் இதனை சில வாரங்களிற்கான விடுமுறையாக எடுத்துக்கொள்வர். இதன் காரணமாக இலங்கையின் கொழும்பு உற்பட பெரு நகரங்களின் அனைத்து வர்த்தக நிலையங்கள் சில வாரங்களுக்கு மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கும். பல வர்த்தகக் நிலையங்கள் இரண்டு மூன்று வாரங்களின் பின்பே திறக்கப்படும். இப்புத்தாண்டு ஆரம்பிக்கும் முதல் நாள் தொடக்கம் ஒவ்வொரு நிகழ்வுகளும் பஞ்சாங்கத்தின் குறிக்கப்படும் நேரங்களின் அடிப்படையிலேயே தொடங்கப்படும். எனவே இப் பஞ்சாங்க நேரம் குறித்தலின் படி புத்தாண்டு நாளில் இருந்து (ஏப்ரல் 14) சில நாட்களுக்கு பின்பே வேலை மற்றும் பணி நிமித்தம் வெளிக்கிளம்பும் நாள் குறிக்கப்பட்டிருக்கும். அந்நாளிலேயே அதிகமானோர் தத்தமது பணிக்கு மீள்வர். ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால், அவ்வீட்டார் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அவ்வீட்டாரை "தீட்டு வீடு" என்பதுப் போல், சிங்களவர்கள் "கிலி கே" (கிலி - தீட்டு, கே - வீடு) என்கின்றனர். அப்பொழுது அயலவர்களும் உறவினர்களும் இவ்வீட்டாருக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கும் பழக்கமும் சிங்களவர்களிடம் உள்ளது. இதுவும் தமிழர்களிடம் காணப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். சிங்களவரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழரின் பண்பாட்டில் இருந்தே தோன்றியது என்றாலும், சிற்சில வேறுபாடுகளும் உண்டு; அவ்வேறுபாடுகளைப் பார்ப்போம். தமிழர்களின் புத்தாண்டில் முக்கியமாக பணியாரம் மற்றும் பாசிப்பயறு பணியாரம் இருக்கும். சிங்களவர்களிடமும் அப்படியே. சிங்களவர்கள் தயாரிக்கும் கொண்டைப் பணியாரம் தமிழரின் பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் கொண்டைப் பணியாரம் என்பது தமிழர்கள் தயாரிக்கும் சாதாரணப் பணியாரம் போன்றே சுவை ஒன்று தான். வேறுப்பாடு அதன் வடிவமைப்பில் தான். பெண்களின் கொண்டைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். (இங்கே "கொண்டை" எனும் தமிழ் சொல்லே "கொண்டே" எனப்படுவதையும் அவதானிக்கலாம்.) தமிழர்களிடம், குறிப்பாக ஈழத்தமிழர்கள் தயாரிக்கும், பனங்காய் பணியாரம் இவர்கள் தயாரிப்பதில்லை. பாசிப்பயறு பணியாரம் தமிழர்களது போன்றே சிங்களவர்களும் தயாரிக்கின்றனர். இதன் சுவையிலோ தோற்றத்திலோ வேறுப்பாடுகள் இல்லை. இதைத் தவிர கொக்கிஸ், அலுவா, வெளித்தலப்பா, பானிவலயல் போன்றத் தின்பண்டங்களும் சிங்களவர்களின் புத்தாண்டில் காணப்படுகின்றது. புத்தாண்டு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பஞ்சாங்கக் கணிப்பீட்டின் படியே நடைப்பெறும். எடுத்துக்காட்டாக கடந்த புத்தாண்டு நேரக் கணிப்பை இந்த சிங்கள இணையத்தளத்தில் காணலாம். ஒரு எடுத்துக்காட்டிற்காக கீழே நேரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்நேரக் கணிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் வேறுப்படும் என்பதை உணர்க. புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைப்பெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக்கொள்வர். இப்புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்களில் சில: இவ்வாறு சிங்களப் புத்தாண்டு தமிழரின் கொண்டாட்டங்களில் இருந்து சில வேறுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இவை தமிழரின் பண்பாட்டு பழக்கவழக்கங்களில் இருந்தே தோன்றியவை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலமாக தமிழ் புத்தாண்டையே சிங்களவர்களும் கொண்டாடி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் அவர்கள் தமிழ் புத்தாண்டை "தமிழ் சிங்களப் புத்தாண்டு" என கொண்டாடி வருகின்றனர். இது வரலாற்று ரீதியாக தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் இலங்கை தீவெங்கும் வியாபித்து இருந்ததற்கான ஒரு சான்றாகும். "குறிப்பு: இக்கட்டுரை சிங்களப் புத்தாண்டு குறித்தே எழுதப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழக அரசின் உத்தியோகப்பூர்வ அறிவித்தலின் படி தமிழரின் புத்தாண்டின் தொடக்கம் தை மாதத்திலா? சித்திரை மாதத்திலா? என்பது பற்றி இங்கே பேசப்படவில்லை என்பதை கருத்தில் கொள்க." தமிழ்ச் செப்பேடுகள் தமிழ்ச் செப்பேடுகள், பல்வேறு தென்னிந்திய அரச மரபினரால், தனிப்பட்டவர்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட, ஊர்கள், வேளாண்மை நிலங்கள் மற்றும் வேறு கொடைகள் குறித்த பதிவுகள் ஆகும். தமிழ் நாட்டின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதில் இச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை ஆகும். தமிழ்ச் செப்பேடுகள் தொடர்பான கொடைகள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், சாளுக்கியர், சோழர், விஜயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்தவை. மத்தியகாலத் தென்னிந்தியாவின் சமூக நிலை பற்றி அறிவதற்கு உதவுவதால் இவை கல்வெட்டியல் தொடர்பில் மிகப் பெறுமதியானவை. அத்துடன், தென்னிந்திய அரச மரபினர் தொடர்பான வரலாற்றில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புவதிலும் இவை பெரிதும் துணை புரிகின்றன. பெரும்பாலான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் தமிழிலேயே வெட்டப்பட்டுள்ளன. ஆனால் 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியிலும் உள்ளன. சில இரு மொழியிலும் உள்ளன. கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஈ. ஹல்ட்ஸ்ச் (E. Hultzsch), மதராஸ் அரசின் கல்வெட்டியலாளராக பணியேற்றதன்பின், 1886 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென்னிந்தியக் கல்வெட்டுக்களை முறையாகச் சேகரிக்கத் தொடங்கினார். மிகப் பழைய செப்பேடு கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லேடன் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு, சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு, வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு, என்பவை கண்டுபிடித்து வெளியிடப்பட்டவற்றுள் அடங்குவனவாகும். வைசாகம் புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) ("Wesak") மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது. இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது. இது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். "வெசாக்" மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈக்கிள் குச்சிகளால் கூடுகள் செய்யப்பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத் தொங்கவிடுவர். இவை இலங்கையில் “வெசாக் கூடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர். இதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக்காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதேசங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர். பிரதான சந்திகளில் மாபெரும் மின்னலங்காரத் தோரணங்கள் பல இலட்சங்கள் செலவில் கட்டப்படும். அத்தோரணங்களில் பௌத்த வரலாற்று கதைகளை ஓவியமாக வரைந்து அதற்கு ஒலிபெருக்கியில் விளக்கங்கள் கவிதை வடிவிலும் பேச்சு வடிவிலும் கொடுக்கப்படும். இதனால் இந்தத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு பெருந்திரலான மக்கள் கூட்டம் பெருகும் சிலப்பகுதிகள் வாகனங்கள் போகமுடியாத அளவிற்கு சனக்கூட்டம் பெருகுவதால் பாதைகள் மூடப்படும். கொழும்பில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணங்கள் கட்டப்படும் இடங்கள் புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிரான்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி போன்றவற்றைக் குறிப்பிடலாம். புத்தர் பிறந்த நாள் எனக் கருதப்படும் கிமு 563 இல் இருந்து பௌத்த காலக் கணிப்பீட்டு முறை ஒன்றும் நடைமுறையில் உள்ளது. பம்பரக்கந்தை அருவி பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். 263 மீட்டர் பாய்ச்சலை உடைய பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலங்கையின் மிக உயரமான நீர் வீழ்ச்சியாகும். கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் குறைவாகவே வருகை தருகின்றனர். அஜய் தேவ்கான் அஜய் தேவ்கான் () (பிறப்பு: ஏப்ரல் 2, 1969) ஒரு பிரபல இந்தி நடிகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவர் தில்லியில் வசித்த பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் அம்ரித்சர் ஆகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை திரைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். அஜய் தேவ்கான் 1999 ஆம் ஆண்டு பிப்பிரவரி 24 ஆம் திகதியில் கஜோலைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். முக்கேஷ் கண்ணா முக்கேஷ் கண்ணா ஒரு பிரபல இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர். இந்தியாவில் மிகவும் பிரபலமான சக்திமான் தொடரில் நடிக்கிறார். பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காவற்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அக்சய் கண்ணா அக்சய் கண்ணா (பிறப்பு ஏப்ரல் 4, 1975) ஒரு பிரபல இந்தி நடிகர். தயாரிப்பாளரும் நடிகருமான வினோத் கண்ணாவின் மகன். 1997 இல் கதாநாயகனாகத் தனது தந்தை தயாரித்த திரைப்படத்தில் அறிமுகமானார். தியலும அருவி தியலும நீர்வீழ்ச்சி ("Diyaluma Falls") இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் கிளையாறான புங்கள ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.இது மொத்தம் 220 மீட்டர் பாய்ச்சலைக் கொண்டது. இது கொழும்பு - கல்முனை பெருந்தெருவில் கொஸ்லந்தைக்கும் வெல்லவாயவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனைக் காணலாம். இலங்கையின் இரண்டாவது உயரமான இந்நீர்வீழ்ச்சி சில வேளைகளில் இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி என தரப்படுத்தப்படுவதும் உண்டு. உலர் வலயத்தில் அமைந்திருந்தாலும் இதன் நீரூற்றுகள் இலங்கையின் ஈரவலயத்தில் இருந்தே தோன்றுவதால் ஆண்டு முழுவதும் நீர் பாய்கிறது. பூனாகலை ஆற்று வழியாக வரும் அருவியே நீர்வீழ்ச்சியாகப் பாய்கிறது. இந்தியப் பிரதமர் இந்தியப் பிரதமர்: (ஆங்கிலம்: Prime Minister Of India) இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி ஆவார். பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் . பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார். பிரதமர் அலுவலக முகவரி: இந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் "சவுத் பிளாக்"கும் ஒன்று, மற்றொன்று "நார்த் பிளாக்". பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது. 1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் "பிரதமரின் தேசிய நிவாரண நிதி". தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக "பிரதமரின் தேசிய இரானுவ நிதி" உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார். இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்மணம் தமிழ்மணம், தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் முன்னணித் திரட்டிகளில் ஒன்று. தொடக்கத்தில் http://tamilblogs.blogspot.com/ தளத்தை தொகுத்தவர்களில் ஒருவரான காசி ஆறுமுகத்தால் தொழில்நுட்ப நேர்த்தியுடன் தமிழ் வலைப்பதிவுகளுக்காகத் தொடங்கப்பட்ட முதல் திரட்டி தமிழ்மணம் ஆகும். தற்போது Tamil Media International LLC நிறுவனம் தமிழ்மணத்தை நிர்வகித்து வருகின்றது. இன்றிருக்கும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளில் தமிழ்மணமே அதிக பயனர்களை ஈர்த்து வைத்துள்ளது. கணித மரபு கணிதவியலுக்கென்று தனித்துவம் வாய்ந்த சில கணித மரபுகள் உண்டு. எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று. கணிதவியலின் இன்றைய வெளிப்பாடுகளில் இவையெல்லாம் ஒரு கடுகத்தனை பாகம் தான். கணிதம் எண்களில் தொடங்கியதும், எண்களிலும் வடிவங்களிலும் சிறந்த மேதாவிகள் புகுந்து விளையாடின ஈடுபாடுகளினால் பெரிய மரமாக வளர்ந்ததும் உண்மைதான். ஆனால் அத்துடன் அது நிற்கவே இல்லை. இன்று ஒரு அரிய தத்துவ இயலாக, வானளாவிய மரங்கள் கொண்ட பரந்த, செழித்த காடாகவே விசுவரூபம் எடுத்து இன்னும் வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. கணிதமில்லாமல் இன்று வேறு எந்தத் துறையுமே முன்னேற முடியாது என்று சொல்லும் அளவிற்கு, கணிதம் எல்லாத் துறைகளிலும் உள்ளார்ந்து படர்ந்திருக்கிறது. கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம் ‘கணித்தல்’. இது யாவரும் அறிந்ததே. ஆனால் கணிதத்திலோ கணிதத்தைக் கற்பிக்கும் துறையிலோ ஆழமான நோக்குடையவர்கள் கணிதத்திற்கு இதைத்தவிர இன்னும் ஐந்து அங்கங்கள் இருப்பதை அறிவார்கள். இந்த ஆறு அங்கங்களையும் கணித விசுவரூபத்தின் ஆறு ‘முகங்கள்’ என்றே சொல்லலாம். அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். துல்லியம் என்ற கருத்து கணிதத்தின் மூச்சேயாகும். கணித உலகில் ஒரு சொல்லிற்கோ, வாக்கியத்திற்கோ வாக்கு மூலத்திற்கோ, சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத தனிப்பட்ட பொருள் தான் உண்டு. இரு பொருட்கள் தரக் கூடியதாகவோ அல்லது ‘வழ வழா, கொழ கொழா’ போன்ற பேச்சுக்கோ இடமிருக்கவே கூடாது. ஆரம்பப் பள்ளியின் அடிமட்ட நிலையிலிருந்து ஆராய்ச்சி நிலை வரையில் கணிதத்தில் எந்தப் படியிலும், எந்த வாசகத்திற்கும் உள்ள பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். ‘இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம்’ போன்ற வாசகங்கள் கணிதத்தின் கலாச்சாரத்திற்கு எதிர்மறையானவை. இவ்விதமான பயிற்சியில் ஊறிப்போவதால் தான், கணிதத்தைக் கற்றறிந்தவர்கள், அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலும், பேச்சிலும், செய்கையிலும் துல்லியத்தைக் காட்டுகின்றனர் கணிதத்தின் ஒரே வழிமுறை தர்க்க நியாயம். தர்க்க ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத எதையும் கணிதம் ஒப்புக்கொள்ளாது. அவை கணிதமே இல்லை என்று ஒதுக்கப்படும். இதுவே கணிதத்தின் முக்கிய மரபு. மற்ற அறிவுத் துறைகளில் எவ்வளவுக் கெவ்வளவு இம்மரபு ஒரு துறையினுள் ஊடுருவிச் செல்லுமோ அவ்வளவுக் கவ்வளவு அத்துறையில் கணிதமே ஊடுருவி விடும். கணிதம் மற்ற துறைகளில் படர்வதற்கு இது முக்கிய காரணமாகும். இதை சற்று விளக்கியாக வேண்டும். வாழ்க்கையில் ஒரு பிரச்சினையாகட்டும், கணித உலகில் ஒரு கணக்காகட்டும், அதை அணுகும்போது, அடிப்படைப் பிரச்சினை என்ன என்பதே மறந்துபோய், வேறு உருப்படிகள் வந்து அலை மோதி, உண்மைப் பிரச்சினை குழம்பிவிடும் வாய்ப்பு உண்டு. கணிதப் பாடங்களில் எல்லா நிலைகளிலும் முக்கியமாகக் கற்றுக் கொடுப்பது, கொடுக்கப்பட வேண்டியது, பிரச்சினையின் கிளைகளையும் பிரச்சினை சம்பந்தப்படாத காளான்களையும் ஒதுக்கிவிட்டு, பிரச்சினையின் ஆணிவேர் என்ன என்று பார்க்கும் திறன் தான். இவ்விதம் அடிப்படைக் கூறுகளை, அதாவது முக்கிய நாடிகளை, கண்டுபிடித்து அவை வாயிலாக பிரச்சினையை எதிர்நோக்குவது கணிதத்தின் இன்னொரு முகம். தத்துவப்படுத்தல், அல்லது பண்பியல் என்று கூறக்கூடிய இக்கருத்தைப் புரிந்துகொள்ள நாம் அன்றாடம் கையாளும் 1, 2, 3, ... என்ற எண்களையே எடுத்துக் கொள்வோம். ‘இரண்டு’ என்ற சொல், அல்லது அந்த சொல்லுக்குரிய எண், எதைக் குறிக்கிறது என்று துல்லியமாக்ச் சொல்ல முடியுமா? சற்று சிந்தித்துப் பார்த்தால் “இதென்ன கேள்வி? ‘இரண்டு’ என்ற சொல் ‘2’ என்ற எண்ணைக் குறிக்கிறது” என்ற பதில் சரியான பதில் அல்ல என்று புரியும். ‘2’ என்பது ‘இரண்டு’ எதைக் குறிக்கிறதோ அதற்கு ஒரு குறியீடு. அவ்வளவுதான். அதே ‘இரண்டு’ என்ற சொல்லின் பொருளுக்கு வெவ்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டு. அதனால் ‘இரண்டு’ என்பது எதைக் குறிக்கிறது என்ற கேள்விக்கு இவை விடையாகா. ‘இரண்டு பழங்கள்’, ‘இரண்டு விரல்கள்’, ‘இரண்டு நபர்கள்’ என்று சொல்லும்போது நன்றாகவே புரிகிறது. அப்படியானால் ‘இரண்டு’ என்பதுதான் என்ன? ‘இரண்டு’ என்பது ஒரு தத்துவம் (abstraction). "எந்த கணங்கள் எல்லாம் A = {1, 2} என்ற கணத்துடன் ஒன்றுக்கொன்றான இயைபு (பார்க்கவும்: எண்ணுறுமையும் எண்ணுறாமையும்)பெற்றிருக்கின்றனவோ அந்த கணங்களுக்கெல்லாம் பொதுவான ஒரே தத்துவம் தான் ‘இரண்டு’". ‘இரண்டு’ என்ற ஒரு எளிமையான பொருளைச் சொல்ல இவ்வளவு சிக்கல் வேண்டுமா என்று கேட்கலாம். ‘எண்’ என்ற தத்துவம் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டுமானால் இப்படி தத்துவப்படுத்தித் தான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. தத்துவப்படுத்தல் அல்லது பண்பியல் என்ற செயற்பாங்கிற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதுவரை கொடுத்தது பொருட்பண்பு (Object Abstraction). இப்பொழுது கொடுக்கப்பட இருப்பது செயற்பண்பு (Process Abstraction). இரண்டும் மூன்றும் ஐந்து . மூன்றும் இரண்டும் ஐந்து . இவ்விரண்டு வாக்கியங்களும் ஒரே பொருளைச் சொன்னாலும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. நாம் வழக்கமாகக் காலுறையைப் போட்ட பிறகு தான் காலணி அணிகிறோம். மாறாகக் காலணியை முதலில் போட்டுவிட்டுப் பிறகு காலுறையைப் போட முடியாது. சுருங்கச் சொன்னால் காலுறை போடுவதும் காலணி போடுவதும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தான் செய்யப்படவேண்டும். மாற்று வரிசையில் செய்யப்பட முடியாது. இரண்டும் மூன்றும் ஐந்து என்று சொல்லும்போது இரண்டையும் மூன்றையும் கூட்டுவது என்ற செய்கையை ஒரு குறிப்பிட்ட வரிசையில் செய்கிறோம். இதையே மாற்று வரிசையில் செய்தால் மூன்றையும் இரண்டையும் கூட்டுவது என்ற செய்கையாகும். ஆனால் இம்மாற்று வரிசைக் கூட்டலும் அதே விடையைத்தான் கொடுக்கிறது. எந்த இரண்டு எண்களை எடுத்துக் கூட்டினாலும் நேர்வரிசை, மாற்றுவரிசை இரண்டிலும் ஒரே விடைதான் வரும். "நேர் வரிசையிலும் மாற்று வரிசையிலும் செய்யப்படும் ஒரு செயற்பாங்கிற்கு இரண்டிலும் ஒரே பயன் கிட்டினால் அச்செயற்பாங்கு ‘பரிமாற்று’ச்செயற்பாங்கு (commutative process, operation ) எனப்படும்". இதனால் காலுறை அணிந்து காலணி போட்டுக்கொள்வது என்பது ஒரு பரிமாற்றாச்செயற்பாங்கு. எண்களைக் கூட்டல் என்பது ஒரு பரிமாற்றுச்செயற்பாங்கு. கழித்தல் என்பது பரிமாற்றக்கூடாதது (non-commutative). ஆக, பண்பியலுக்குள்ள இரண்டு பரிமாணங்களையும் பார்த்தோம். இவ்விதம் தத்துவப்படுத்தி ஆழ நுழைந்து ஆராய்வதால் பலவித பொதுவிதிகளின் உண்மைகள் வெளிப்படும். புதுவிதப் பொதுவிதிகளும் உருவாகும். தத்துவப்படுத்துதல், பொதுவிதி உருவாக்கல், கருத்தியல் வழிகாணல், பண்பியல், எல்லாமே கணிதத்தில் வழக்கமாகச் செய்யப்படும் இயல்பான வழிமுறைகள். இதுதான் கணிதத்தை மற்ற எல்லாத் துறைகளிலிருந்தும் தனிப்படுத்திக் காட்டும் முகம். உருவகம் கணிதத்துறையின் வணிக உரிமைக்குறி (Trademark). எந்தப் பிரச்சினையை ஆராய்ந்தாலும் அது பளிச்சென்று தெரியும்படி உருவகப்படுத்துவது, பிர்ச்சினையின் வெவ்வேறு உருப்படிகளை சின்னங்கள் மூலம் எளிமையான தோற்றத்தில் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவது, அவைகளுக்குள் இருக்கும் பல்வேறு தொடர்புகளை நாம் மறந்தாலும் அவை மறக்காமல் வெளிக்காட்டச் செய்வது – இதுதான் கணிதத் துறையின் முதல் வேலை. கணித உலகில் நுழையும் அல்லது நுழைக்கப்படும் எந்தப் பிரச்சினையும் அனாவசியமன பெயர்களையும் சந்தர்ப்பங்களையும் கூடவே கொண்டு வந்து நம்மை கலக்கிவிடாமல் நமக்கு அடித்தளப் பிரச்சினையை எடுத்துக்காட்டுவது இந்த சின்னங்களும் குறியீடுகளும் தான். துல்லியமாகவும் தர்க்கரீதியாகவும் அலசி ஆராய்ந்து, வேண்டாத காளான்களை பிரச்சினையிலிருந்து விலக்கி, சின்னங்களைப் பயன் படுத்தி, அடித்தளத்தில் புதைந்து கிடக்கும் உயிர்நாடியைப் பிடித்தவுடன் கண்ணுக்கு முன் எஞ்சி நிற்பது சின்னங்களுக்குள் ஒன்றுக்கொன்று பிணைந்திருக்கும் தொடர்புகள் தான். தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் இத்தொடர்புகளை வெளிக்கொணர்ந்து பிரச்சினையின் சிக்கலை விடுவிப்பதைத்தான் கணித்தல் என்று சொல்கிறார்கள். இந்த ஒரு முகமே பெரிதுபடுத்தப்பட்டு இதுதான் கணிதம் என்று தவறாக எண்ணப்பட்டு விடுகிறது. கணிதம் என்று பேசப்படும் போதெல்லாம், தவறுதலாக கணித்தல் என்ற இவ்வொரே அங்கத்தைத்தான் சொல்கிறார்கள் பாமரர்கள். ஆக இந்த ஆறு முகங்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் கணிதம். கணிதப் பாடங்கள் கற்கும் மாணவர்களும் சரி, அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களும் சரி, கணிதத்தின் இந்த ஆறு முகங்களையும் நினைவுகொண்டு செயல்பட்டால் கணிதம் உருப்போடும் ஒரு பளுவாக இல்லாமல் வேண்டத்தக்க நண்பனாகிவிடும். கேயுபுண்டு கே மேசைத் தள பணிச்சூழலை அடிப்படையாகக் கொண்ட, கட்டற்ற இயக்குதளம், கேயுபுண்டு ஆகும். இது உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டது. வருடத்திற்கு இரு முறை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு வெளியீட்டுக்கும் குறைந்தது பதினெட்டு மாதங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான மேம்பாட்டு பொதிகளை இலவசமாக வழங்குகின்றது. இதன் காரணமாக பயனர் ஒருவர் எதிர்பார்க்கக் கூடிய பாதுகாப்பான மற்றும் நிலையானதொரு கணினிப் பணிச்சூழலை தருகின்றது. இதன் சமூகம் சார்ந்த உருவாக்க முறையும் எவ்விடத்தும் கிடைக்கக் கூடிய தன்மையும் "அனைவருக்கும் மானுடம்" என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது. கேயுபுண்டுவின் சமூகம் இல்லையெனில் கேயுபுண்டுவே இல்லையெனச் சொல்லலாம். ஏனெனில் பன்முகத்தன்மை வாய்ந்த பயனர்களைக் கொண்ட இச்சமூகமே இதனை நிர்மாணித்து உருவாக்கி செயல்படுத்தவும் செய்கின்றது. தனி நபர்களும் குழுக்களும் இதற்கான நிரல்களையும் கலைப் பொருட்களையும் ஆவணங்களையும் தொழில்நுட்ப உதவியினையும் வழங்குவதோடு நில்லாது கேயுபுண்டுவினை பலதரப் பட்ட மக்களிடையே கொண்டுச் சேர்க்கவும் செய்கிறார்கள். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பினால் கேயுபுண்டு பங்களிப்புகள் பக்கத்தின் உதவியினை நாடவும். கேயுபுண்டு மற்றும் உபுண்டு திட்டங்களுக்கான ஆதரவினை வழங்கும் நிறுவனம் கனோனிகல் ஆகும். இந்நிறுவனம் குனு/ லினக்ஸ் மென்பொருட்களை விநியோகிப்பதில் உலகளவில் முன்னணி வகிக்கின்றது. உபுண்டு மற்றும் கேயுபுண்டுவிற்கான முழுமையான வர்த்தக ரீதியான ஆதரவினையும் கனோனிகல் நிறுவனம் நல்குகிறது. * கேமெனுவிலிருந்து -> உதவி யினை தேர்வு செய்வதன் மூலம் கேயுபுண்டுவிற்கான உதவிப் பக்கங்களை அடையலாம். கேயுபுண்டுவினை நிறுவ ஒன்றன் பின் ஒன்றாகக் கீழ்காணும் பக்கங்களின் துணையினை நாடவும்... கேயுபுண்டுவில் தமிழ் உள்ளீட்டு வசதிகள் கிடைக்கப் பெற... கேயுபுண்டு எட்ஜியினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாவணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. கிழுமத்தூர் கிழுமத்தூர் என்பது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். கடலூர் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு எல்லையான வெள்ளாற்றிக்கும் மற்றும் சின்னாற்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வளமான கிராமங்களில் குறிப்பிடத்தக்க ஊர் கிழுமத்தூர் ஆகும். 1.கிழுமத்தூர். 2.கிழுமத்தூர்.குடிக்காடு. 3.கைப்பெரம்பலுார். 4.கோவிந்தராஜப்பட்டிணம். அலுபொல அருவி அலுபொல நீர்வீழ்ச்சி இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரி நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அருகாமையில் உள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. அலுபொல நீர்வீழ்ச்சி வளவை ஆற்றின் கிளையாறான வேவல் ஆற்றில் அமைந்துள்ளது இது பதுருகல மலையின் தெற்குச் சாய்வில் உள்ள களுகல்தோவ என்னும் இடத்தில் இருந்து ஊற்றெடுக்கிறது. உலர் பருவத்திலும் நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்கிறது. இந்நீர்வீழ்ச்சியை மறித்து கட்டப்ப்பட்டுள்ள சிறிய அணைக்கட்டு ஒன்றின் மூலம் அருகிலுள்ள வேவல் தேயிலைப் பெருந்தோட்டத்துக்கான மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அணைக்கட்டில் இருந்தான நீர் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கருகாமையில் இரத்தினக்கல் அகழ்வுகள் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது. நீர் வீழ்ச்சியில் ஏற்படும் திடீர் நீரோட்டங்களால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. நீர் வீழ்ச்சிக்கு மேற்பகுதியில் சாம்பர் மான், மரை, பன்றி மற்றும் ஊர்வன போன்றன வசிக்கின்றன நீர் வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் அட்டைகள் செறிந்து வாழ்கின்றன். நீர் வீழ்ச்சியின் கீழ்ப் பகுதியில் சிறிய நீர்வீழ்ச்சியான அல்கெட்டிய நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சி சிவனொளிபாதமலைக் காட்டின் எல்லையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள முக்கிய நகரம் இரத்தினபுரி நகரமாகும். இரத்தினபுரி நகரில் இருந்து பம்பரகொட்டுவ அல்லது வேவல் தோட்டத்துக்கான பேருந்தில் அல்வத்துர வரைச் சென்று அங்கிருந்து சந்தியில் இடதுபக்க பாதையில் செல்வதன் மூலம் நீர் வீழ்ச்சியை அடையலாம். சிவயோக சுவாமி சிவயோக சுவாமிகள் (பொ.பி 1872–1964) ஈழத்தில் வாழ்ந்த சைவத் துறவியும் திருக்கயிலாய பரம்பரையில் நந்திநாத சம்பிரதாயத்தில் வந்த குருபரம்பரையின் 161ஆவது சற்குருவும் ஆவார். யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில், அம்பலவாணர் - சின்னாச்சியம்மை தம்பதிக்கு, மே 29 1872இல் (தமிழ் நாட்காட்டியில்:ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திர நாலாம் பாதத்தில்) ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் "சதாசிவம்". இளம்வயதிலேயே தாய் இறந்துவிட, தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையாரால் வளர்க்கப்பட்டார். கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார். கல்வி முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார். 1905இல் நல்லூர்த் தேரடியில், முதன்முதலாக செல்லப்பா சுவாமியைக் கண்ட நாளிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. சதாசிவத்தை ஆழமான கண்களால் ஊடுருவி, "யாரடா நீ ?" என்று கேட்டு, "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என்ற வார்த்தைகளை செல்லப்பா சுவாமிகள் உதிர்த்த கணம், சதாசிவத்தின் மனம் லௌகிக வாழ்க்கையை உதறியதாகச் சொல்லப்படுகின்றது. பின் ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்த சதாசிவம், செல்லப்பரால் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட, கொழும்புத்துறையில் ஒரு இலுப்பை மரத்தடியில் அவர் யோகசாதனைகளில் திளைத்ததாகச் சொல்லப்படுகின்றது. செல்லப்பா சுவாமிகள் சமாதியடையச் சில நாள் முன்வரை, யோகர் சுவாமிகள் அவரை மீண்டும் சந்திக்கவில்லை. பின் அங்கேயே ஆச்சிரமமொன்றமைத்த அவர், இலங்கையெங்கணும் யாத்திரை செல்வதும், நற்சிந்தனைகளை வழங்குவதுமாக இருந்தார். 1940இல் இந்தியப் பயணம் மேற்கொண்ட அவர், திருவண்ணாமலையில் இரமண முனிவரையும் சந்தித்தார். 1934 டிசம்பரில், அவரால் துவக்கப்பட்ட சிவதொண்டன் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது. மார்ச் 1964ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார். செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். யோகசுவாமியின் அடியார்களால் "மகாவாக்கியங்கள்" என்று கூறப்படும் அவை வருமாறு:: யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருண்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள்,சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, தமிழில் "நற்சிந்தனை" எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் "The Words of Our Master" என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன. யோகர் சுவாமிகளின் நேரடிச் சீடர்களாக, மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் சொல்லப்படுகின்றனர். இவர்களில் சந்தசுவாமி, இலங்கையின் கடைசி ஆங்கிலேய ஆளுநர் சோல்பரி பிரபுவின் மகன் ஆவார். ஹவாய் சைவ ஆதீனத்தில் 162ஆவது நந்திநாத பரம்பரை சற்குருவாக அமர்ந்திருந்த சிவாய சுப்ரமணியசுவாமியும் யோகர் சுவாமிகளது சீடரே! இவர்களைவிட, கௌரிபாலா (யேர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலியா) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் ஆவர். லால் பகதூர் சாஸ்திரி லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார். லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் . மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர் .. லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் . 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார் . நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார். மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் . சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் . 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது . பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார். பின் அவ்வமைப்பின் தலைவரானார். 1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் . அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் . அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குத் திரும்பினார். 1937 ல் உத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிக்கமர்ந்தார் . 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார் . 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார். சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார். இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் . 1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும். 1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை . 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் . அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார். 1957 ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார் . ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது. மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார். இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது. இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் . ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர். இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் . சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த சாற்றுதலுக்குப் பின் அதனை அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும். அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர். ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்தார். சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள். எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார். காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. குல்சாரிலால் நந்தா குல்சாரிலால் நந்தா (ஜூலை 4, 1898 - ஜனவரி 15, 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார். இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது. நந்தா ஜீலை 4, 1898 ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். சியால்கோட் தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் நகரங்களில் படித்தார். மொரார்ஜி தேசாய் மொரார்சி ரன்சோதிசி தேசாய் (இந்தி; मोरारजी रणछोडजी देसाई குசராத்தி: મોરારજી રણછોડજી દેસાઈ) (பிறப்பு 29 பிப்ரவரி 1896 - இறப்பு 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சரண் சிங் சவுதாரி சரண் சிங் (Chaudhary Charan Singh, 23 டிசம்பர் 1902–29 மே 1987). இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. சரண் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் ஒரு ஜாட் குடும்பத்தில் 1902 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் பிறந்தார்.இந்தியாவில் உள்ள இன்றைய ஹரியானாவில் இருந்த பல்லப்கர் என்ற சமஸ்தானத்தின் மன்னராக இருந்த ராஜா நகாரின் சிங் இருந்தார்.அப்போது சரண்சிங்கின் மூதாதையரான தாத்தா முக்கியமானவராக அந்த அரசில் இருந்தார். மகாராஜா நகாரின் சிங் 1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்க் கலகத்தில் கலந்துகொண்டு தோல்வியை சந்தித்தபின் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்; பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க பொருட்டு மகாராஜாவைப் பின் தொடர்பவர்கள் மற்றும் சரண்சிங்கின் மூதாதையர் உட்பட சாந்தினி சவுக் , தில்லி எல்லாம் திரிந்து முடிவில் உத்தர பிரதேசத்தில் மாவட்டத்தில் புலன்சாகர் எனும் இடத்தில் வாழ்க்கையை நடத்திச் சென்றனர். அவர் ஒரு நல்ல மாணவர்; ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1925 மற்றும் 1926 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். 1928-ல் அவர் ஒரு சிவில் வழக்கறிஞராக காஸியாபாதில் செயல்படத் துவங்கினார். சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு அவர்,1950 ல், ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் collectivist நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில் இந்திய விவசாயிகளின் பொருட்டு,நாடு முழுவதும் விவசாய சமூகங்கள் குறிப்பாக தனது சொந்த மாநிலத்திற்கும் மாற்றம் பெறுவதற்கான போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சரண் சிங் தொடர்ந்து மகாத்மா காந்தியின் தலைமையில் ஈடுபட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.1930 இல் அவர் உப்பு சட்டங்களை மீறியதன் மூலம் 6 மாதங்கள் சிறையில் அனுப்பப்பட்டார். அவர் தனிநபர் சத்யாகிரகம் செய்ததன் பொருட்டு நவம்பர் 1940 ல் ஒரு வருடம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் மாதம் அவர் DIR கீழ் பிரிட்டிஷ் சட்டத்தின் மூலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1937 -ல் பிப்ரவரியில் அவர் 34 வயதில் உத்தர பிரதேச சட்டமன்றத்தில், ( ஐக்கிய மாகாணத்துடன் சேர்ந்த)பாக்பத் மாவட்டத்தின் சப்ரோலி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விவசாயிகளுக்கு எதிரான வியாபாரிகளின் செயல்களை தில்லி மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 31 – 3 – 1938 ல் அவரால் வியாபாரிகளின் தவறான செயல்களுக்கு எதிராக விவசாயிகள் நலன்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவசாய விளைபொருட்களை சந்தை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கப்பட்டது.1940-ல் இவ்வாறு செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பஞ்சாப் அடைந்தது. ஜவகர்லால் நேருவின் சோவியத் பாணி பொருளாதார சீர்திருத்தத்தை சரண் சிங் எதிர்த்தார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண் சிங் கருத்து தெரிவித்தார். விவசாயிகள் அனைவரின் உரிமையும் மிக முக்கியம் என்றார் அவர். நேருவின் பொருளாதார கொள்கையின் மீதான தனது திறந்த விமர்சனம் காரணமாக சரண் சிங்கின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சரண்சிங் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,பாரதீய கிரந்தி தள் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆதரவுடன் அவர் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வர் ஆனார். பின்னர் 1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவசரகால நிலையின்போது பிரதமர் இந்திரா, சரண்சிங்கையும் அனைத்து அவரது அரசியல் எதிரிகளையும் சிறையில் அடைத்தார். அதனால் கோபமுற்ற சரண்சிங் தனது போட்டி நேரு மகள்தான் என்று அறிவித்தார். பாரதிய லோக் தள் கட்சியின் தலைவரான சரண்சிங், ஒரு முக்கிய அரசியல் நெருக்கடிக் காலத்தில் ஜனதா என்ற பெயரில் கூட்டணியில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றார். 1977 மக்களவை தேர்தலில்,பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாகப் பரிமளித்துப் போட்டியிட்டாலும், தனது முந்தைய கட்சியான பாரதீய லோக் தளத்தின் சின்னமான ஏர் உழவன் சின்னத்தையே, புதிய ஜனதாவின் சின்னமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சாதித்தார்.அதன் மூலம் 1977 ல் பிரதம மந்திரி ஆக விரும்பிய தனது லட்சியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்தவர் ஏமாற்றம் அடைந்ததார்; காரணம், அன்றைய கூட்டமைப்புத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிரதமர் தேர்வு மொரார்ஜி தேசாயாக இருந்ததே! அவருக்கு கெளரவ பதவியாக இந்திய துணை பிரதம மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 1967ல் முதல்வர் பதவியில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த சரண்சிங்குக்கு பிரதமர் பதவியின் ஈர்ப்பின் காரணமாகவும், அவருக்குப் பலவிதங்களில் உதவி புரிந்துவந்த ராஜ்நாராயண் முயற்சியினாலும் காலம் கனிந்தது; உட்கட்சிக் குழப்பங்களால் நன்றாக நடைபெற்றுவந்த மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், மொரார்ஜியவர்களே முன்வந்து பதவி விலகினார்; ஜனதாக்கட்சி என்ற பெயரில் பழைய ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்களைப் போலவே ஜனசங்கமும் அதிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதாக்கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதே 1979 ஆண்டில் முன்னாள் லோக் தள் கட்சியானது, சரண்சிங்கின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது;அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க வாக்குறுதியளித்த பின்னர் பிரதம மந்திரி ஆனார்.சரண் சிங் உறுதியளித்தபடி தனது சீடர் ராஜ்நாராயணுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்!(இவர் மொரார்ஜியின் ஜனதா கட்சி ஆட்சியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்). சரண் சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.இந்திய தேசிய காங்கிரஸ் தனது பாரதிய லோக் தள் அரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்ட நாள்தான் மக்களவையை முதல் முறையாக சந்திக்கும் நாளாக சரண்சிங்குக்கு அமைந்ததது. மற்ற ஆதரவு ஏதுமில்லாத, காங்கிரசின் சூழ்ச்சியால் சவுத்ரி சரண் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.புதிய தேர்தல்கள் ஆறு மாதங்களுக்கு பின்னர் நடத்தப்பட்டன. அவரது மரணம் வரை அவர் தனது லோக் தள் கட்சியின் தலைவராக நீடித்துவந்தார்.உத்தர பிரதேசம், லக்னோவில் உள்ள அமௌசி விமான நிலையம், அவரது மரணத்துக்குப் பின் சவுதாரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படுகிறது.உத்தர பிரதேசம், மீரட் பல்கலைக்கழகம்,சவுதாரி சரண் சிங் பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டது. வடக்கில் விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக புது தில்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கிசான் காட் பெயரிடப்பட்டுள்ளது. (ஆம் ஹிந்தியில் கிசான் என்பது விவசாயியைக் குறிப்பிடும் வார்த்தை). அவரது மகன் அஜித் சிங் கட்சித் தலைவராக 1987 முதல் வெற்றி தொடர்ந்து இருந்து வருகிறார். சரண் சிங் 29 மே 1987 அன்று மரணமடைந்தார். அவர் மனைவி காயத்ரி தேவி மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் அஜித் சிங் தற்போது தனது பாரதிய லோக் தள் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அஜித் சிங்குக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது பேரன் ஜெயந்த் சவுத்தரி மதுரா தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வி. பி. சிங் விஸ்வநாத் பிரதாப் சிங் (ஜூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 10 ஆவது பிரதமர் ஆவார்(எட்டாம் நபர் ). இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். 1931 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி. பி. சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி. பி. சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங். வி. பி. சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி. எஸ். சியும் படித்தார். அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி. பி. சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். 1950இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம். எஸ். சி. படிப்பை முடித்த வி. பி. சிங், தீவிர அரசியலில் இறங்கினார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தை அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார். 1969 ஆம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971இல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார். இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார். பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 இல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார். இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 இல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். 1984ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்கக் கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியைக் குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்கக் கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சரானதும் பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார். மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 இல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி. பி. சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது. இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி. பி. சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னணி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னணி அரசை ஆதரிப்பதாக கூறின. இராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஐனதா தளத்தில் வி.பி.சிங்கிற்கு போட்டியாளராக விளங்கிய சந்திர சேகருக்கு தேவிலால் பிரதமர் பதவியை மறுத்தது ஆச்சரியத்ததைக் கொடுத்தது. ஏனென்றால் கருத்தொருமித்த வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. வி.பி.சிங் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார், அமைச்சரவையில் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு. டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார். பதவியேற்ற சில நாட்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபந்தனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார். பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னாள் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜியை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார். இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக் கொண்டார். தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு மகத்தான வெற்றியாகும்' என்று வி.பி.சிங் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். 1989 இல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 இல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு & தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது. வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது. வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார். வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். சந்திரசேகர் சந்திர சேகர் சிங் 1927ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டத்தில் இப்ராஹிம்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். பட்டம் பெற்ற பிறகு, அவர் சோசலிச அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் தூஜாதேவியை திருமணம் செய்து கொண்டார். அவர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டிற்குள், உத்தர பிரதேச மாநில இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955-56 ல், அவர் மாநில பொது செயலாளராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு "இளம் துருக்கியர்" என்றழைக்கக்கப்பட்டார். சந்திரசேகர் ஒரு முக்கியசோசலிஸ்டுகள் தலைவராக இருந்தார். அவர் 1964 ல் காங்கிரசில் சேர்ந்தார். 1962 இலிருந்து 1967 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் . காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினராக, அவர் கடுமையாக தன் நடவடிக்கைகள் இந்திரா காந்தி விமர்சித்தார். இந்த 1975 ஆம் ஆண்டு காங்கிரசில் ஒரு பிளவு ஏற்பட்டது. சந்திரசேகர் அவசரநிலையின் போது கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவசரநிலை பின்னர், பாராளுமன்ற தேர்தலில், ஜனதா கட்சி மிகவும் நன்றாக மற்றும் மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது மொரார்ஜி தேசாய் . 1988 ஆம் ஆண்டில், அவரது கட்சி பிற கட்சிகள் இணைந்து மற்றும் தலைமையின் கீழ் அரசு அமைத்தது வி.பி. சிங் . மீண்டும் கூட்டணி தனது உறவை மோசமடைந்ததால் அவர் மற்றொரு கட்சி, ஜனதா தளம், சோசலிச பிரிவு உருவாக்கப்பட்டது. தலைமையில் காங்கிரஸ் (நான்) ஆதரவுடன் ராஜீவ் காந்தி , அவர் மாற்றப்பட்டார் வி.பி. சிங் நவம்பர் 1990 இல் இந்திய பிரதமர் என்று. அவரது முன்னோடி பின்னர் வி.பி. சிங் பதவி விலகினார், ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) உருவாக்கி இவர் 1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார். காங்கிரஸ் தனது அரசாங்கத்திற்கு வெளியே ஆதரவை நீட்டிக்க முடிவு. காங்கிரஸ் கட்சி வேவு அவரை குற்றம் என உறவு, விரைவாக தகர்த்தெறியப்பட்ட ராஜீவ் காந்தி அந்த நேரத்தில், தங்கள் தலைவர். காங்கிரஸ் கட்சி பிறகு பாராளுமன்ற புறக்கணித்தனர் மற்றும் சேகர் இன் பிரிவு மட்டும் 64 எம்.பி. இருந்ததால், அவர் 6 ம் தேதி தேசிய தொலைக்காட்சியில் முகவரியை பதவி விலகினார் மார்ச் 1991. தேசிய தேர்தல்களில் அந்த ஆண்டின் பின்னர் நடைபெற்ற முடியும் வரை அவர் பதவியில் இருந்தார். சேகர் பாராளுமன்ற மரபுகளை அனுசரித்து நடந்ததால் சிறந்த 1995 இல் பாராளுமன்ற உறுப்பினர் விருதினை பெற்று கவுரவிக்கப்பட்டார். சேகர் மக்களவை, இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினராக இருந்தார். அவர் சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்ட்ரிய), (சோசலிச மக்கள் கட்சி (தேசிய)) வழிவகுத்தது. 1977 ஆம் ஆண்டில் தொடங்கி, அவர் மக்களவை எட்டு முறை தேர்தலில் வெற்றி Ballia கிழக்கு உள்ள தொகுதியில் உத்தர பிரதேசம் . அவர் இழந்தது மட்டுமே தேர்தலில் காங்கிரஸ் Jagganath சவுதாரி (நான்) எதிராக 1984 ஆம் ஆண்டில் இருந்தது. சந்திர சேகர் அவதிப்பட்டார் பல்கிய , பிளாஸ்மா செல் புற்றுநோய் ஒரு வடிவம். அவர் ஜூலை 8, 2007 புது தில்லி, 80 வயது, அவரது மரணத்தின் தேதி மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் இரண்டு மகன்கள் இருந்தனர். அவற்றில் ஒன்று, நீரஜ் சேகர் போட்டியிட்ட அவரது தந்தை மரணம் மூலம் காலி இது Ballia மக்களவை வென்றது. அவரது மூத்த மகன் பங்கஜ் சேகர் நன்கு பொது எண்ணிக்கை அறியப்பட்ட மற்றும் பேரன் சஷாங் சேகர் லண்டனில் பயிற்சி ஒரு முக்கிய வழக்கறிஞர் உள்ளது. பங்கஜ் நரேந்திர மோடி, பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மூடப்பட்டது யார் நபர்கள் ஒன்றாக அறியப்படும் பங்கஜ் சேகர் சமீபத்தில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாரதிய Janta கட்சி சேர்ந்தார். தேவ கௌடா ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா (Haradanahalli Doddegowda Deve Gowda, ) (பிறப்பு மே 18,1933) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார். விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா, 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கௌடா 1970களில் ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க முடியாதநிலையில் புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார். 1999இல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்றளவும் உள்ளார். ஐ. கே. குஜரால் இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012) இந்தியாவின் 15வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 12, 1975 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அப்போதய பிரதமர் இந்திரா காந்தி 1971 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது முறைகேடு உள்ளது என கூறி அவரது வெற்றியை செல்லாதது என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி பக்கத்து மாநிலமான உத்திரப்பிரதேசத்திலிருந்து வாகனங்களில் மக்களை அழைத்து வந்து டெல்லியில் பேரணிகளை நடத்தினார். அப்பேரணிகளை அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து காட்டுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான இந்திர குமார் குஜ்ராலை கேட்டுக்கொண்டார், ஆனால் குஜரால் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலயே குஜரால் நீக்கப்பட்டு வித்யா சரண் சுக்லா தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என பலர் கருதுகின்றனர். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரவையிலிருந்து இவர் திட்டதுறை அமைச்சராக மாற்றப்பட்டார். பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார். குஜ்ரால் 1980 களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989 தேர்தலில் ஜலந்தர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். 1989 ம் ஆண்டு முப்தி முகமது சயதுவின் மகள் ருபயா சயத் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்டவர்களுடன் பேசி ருபயாவை மீட்க வி.பி.சிங் இவரை அனுப்பினார். குவைத் மீது ஈராக் படையெடுத்து ஆக்கிரமித்ததும் அதன் விளைவாக 1991ல் ஏற்பட்ட முதலாம் வளைகுடா போரும் இவர் வெளியுறவு துறை அமைச்சராக கையாண்ட பெரிய செயல். அச்சமயம் ஈராக் அதிபர் சதாம் உசேனை நேராக சந்தித்து பேசினார். 1991 நடுவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாட்னா தொகுதியில் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை எதிர்த்து போட்டியிட்டார். எனினும் அதிக அளவு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததைத்தொடர்ந்து இத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது. 1992 ஆம் ஆண்டு குஜ்ரால் இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 தேர்தல் முடிந்து தேவ கௌடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசமைந்த பொழுது இரண்டாம் முறையாக வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். அப்போது இவர் குஜ்ரால் திட்டம் என்பதனை முன்மொழிந்தார், இத் திட்டம் அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்தை பேணுவதாகும். ஏப்ரல் 1997 ல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார். காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னணிக்கும் கசப்புணர்வு இருந்த போதிலும் குஜ்ரால் காங்கிரஸுடன் நல்லுறவை பேணிவந்தார். பதவியேற்ற சில வாரங்களில் ஜனதா தளத்தினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய புலனாய்வு துறை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு தொடர பீகாரின் ஆளுனர் ஏ.ஆர்.கிட்வாலிடம் அனுமதி கோரியது. ஆளுனர் வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் ஐக்கிய முன்னணியை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரினர். ஆனால் யாதவ் அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. பிரதமர் குஜ்ராலும் யாதவை பதவி விலகுமாறு வற்புருத்தினார், ஆனால் யாதவின் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாதவ் மீதான வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை தலைவர் ஜோகிந்தர் சிங் மாற்றப்பட்ட போது அது யாதவை பாதுகாக்க குஜ்ரால் மேற்கொண்ட முயற்சியாக பலர் கருதினர். ஜனதாதளத்தில் தனது செல்வாக்கு குறைந்து விட்டதாக கருதிய யாதவ் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து இராஷ்டிரிய ஜனதாதளத்தை 1997 ஜூலை 3-ல் தொடங்கினார். மக்களவையின் 45 ஜனதாதள உறுப்பினர்களில் 17 பேர் யாதவை ஆதரித்தனர். அவர்கள் வெளியிலிருந்து குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியதால் அரசு கவிழும் சூழலில் இருந்து தப்பியது. 21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் கே. ஆர். நாராயணன் அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது. 1997 நவம்பர் மாத தொடக்கத்தில் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிசனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. இராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமாக கருதப்படும் விடுதலை புலிகளுக்கு திமுக ஆதரவு வழங்கி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஐக்கிய முன்னனியில் ஒரு அங்கமாக இருந்ததுடன் அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்தது. காங்கிரஸ் ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்ற அவையில் வெளியிடுமாறு கோரியதால் 1997 நவம்பர் 19 அன்று அரசு ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. இதில் திமுக வை விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஜெயின் கமிசன் தொடர்பு படுத்தி இருந்தது உறுதியாகியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், திமுக அமைச்சர்களை அரசைவிட்டு நீக்குமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் பிரதமர் குஜ்ராலும் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். எனினும் குஜ்ரால் காங்கிரஸின் இந்த நெருக்குதலை ஏற்கமறுத்து விட்டார். 1997 நவம்பர் 23 அன்று கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று சூசகமாக தெரிவித்தார். 1997 நவம்பர் 28 காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து குஜ்ரால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மற்ற கட்சிகளால் மாற்று அரசு அமைக்க முடியாமல் போனதால் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குஜ்ரால் இடைக்கால பிரதமராக நீடித்தார். இடைக்கால பிரதமராக இருந்த 3 மாதங்களையும் சேர்த்து குஜ்ரால் 11 மாதங்கள் பிரதமராக பதவியில் இருந்தார். 1998 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜ்ரால் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தொகுதியில் அகாலி தளம் ஆதரவோடு போட்டியிட்டார். பிரதமராக இருந்தபொழுது 1980 மற்றும் 1990 தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான செலவுகளை பஞ்சாப் அரசுடன் இந்திய நடுவண் அரசும் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவித்தார். இது பஞ்சாப் மீதான பொருளாதார அழுத்தத்தை பெருமளவு குறைத்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அகாலி தளம் குஜ்ராலை ஆதரித்தது. அத்தேர்தலில் குஜ்ரால் காங்கிரஸின் உம்ராவ் சிங்கை விட 131,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்த 12வது மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை தீவிரமாக எதிர்த்தார். பொக்ரானில் நடந்த அணு வெடிப்புச் சோதனையின் எதிர் விளைவுகளை 1998 மே 29 ல் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் எடுத்துக்கூறினார். பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டதையும் எதிர்த்தார். எனினும் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் லாகூர் பயணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் உடனான லாகூர் அறிக்கையையும் ஆதரித்தார். சோடியம் சோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்குத் தேவையான ஒரு முக்கியக் கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியமாகும். இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாகப் பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுக்களிலும் கூடச் சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது. 1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். தெவிட்டிய கரைசலில் நீர், உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கிச் சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று, அதிலிருந்து மின்னாற் பகுப்புமூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார். சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 விழுக்காடு கால்சியம் குளோரைடையும் சேர்த்து, செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னாற்பகுப்புமூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகுநிலை 1077 K (804 °C),கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K (580 °C) வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது. இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது. இதன் வேதிக் குறியீடு Na ஆகும். சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும், மெழுகு போன்ற தோற்றமும், வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது. சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி செ. வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது. சோடியம், நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை. இதற்கு உலர் உப்புத் தூள், உலர் சோடா, உலர் கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள். சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும். இதன் வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாகப் பயன்படுத்த ஏற்புடையதாயிருக்கிறது. இதன் அணு எண் 11, அணு நிறை 22.99, அடர்த்தி 970 கிகி /கமீ. உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K (98 °C), 1156 K (883 °C) ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன் 1 ஆக உள்ளது. கரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது. சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும். சோடிய ஒளி ஒற்றை நிறங்கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி, காற்றின் ஈரத்தாலும், மூடுபனியாலும் குறைவாகவே உள்ளுறிஞ்சப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது. இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனிமழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில் ஒருபடித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால், இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன்படுகிறது. சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை ஆக்சிஜனிறக்க ஊக்கியாகப் பயன்படுகிறது. இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு டைட்டானியம், ஸிர்கோனியம் போன்றவற்றை அவற்றின் டெட்ரா குளோரைடுகளிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது. சோடியத்தின் பல கூட்டுப்பொருள்கள் பலவிதங்களில் பயன்படுகின்றன. மஞ்சள் நிறங்கொண்ட சோடியம் பெராக்சைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்ற ஊக்கியாகும். ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்த இதன் கரைசல் துணிகளுக்கு வெளுப்பூட்டும் முறையில் பயன்படுத்தப் படுகிறது. கார்பன்டைஆக்சைடை உட்கவர்ந்து ஆக்சிஜனை விடுவிக்கிறது என்பதால் நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் அடைத்த ஆய்வறைகளில் உள்ள காற்றை தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு, காகிதம், ஒளிப்படச் சுருள், ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது. இதன் அடர் கரைசல் தோலை அரித்தெடுத்துவிடும். பாசம் பிடித்த தரை, கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன்படுத்துகிறார்கள். சோடியம் சயனைடு மிகவும் நஞ்சானது. இது தங்கம்,வெள்ளியைப் பிரித்தெடுக்கும் வழி முறையிலும், மின் முலாம் பூச்சுத் தொழிலிலும் பயன்படுகிறது. சமையலில் பயன்படுத்தும் உப்பு என்பது சோடியம் குளோரைடு ஆகும். உப்பினால் நமக்குக் கிடைக்கும் சோடியம் நம் உடலில் உள்ள நீர்மங்களில் ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக உள்ளது. இதுவே நம் உடலில் இருக்கும் நீரின் மொத்த அளவைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பொட்டசியத்துடன் இணைந்து உடலில் உள்ள நீர்மங்களின் சமனிலையைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கக் உதவுகிறது. உபரியாகச் சோடியம் உடலில் சேரும் போது சிறு நீர்ப் போக்குத் தடைப்பட்டு உடலில் நீர் அதிகமாகிறது. கால்சியத்தின் வெளியேற்றத்தை வலிமையாகத் தூண்டி விடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழக்கின்றன. இதயமும், சிறு நீரகமும் பாதிக்கப்படுகின்றன. சோடியம் அசைடு, சோடியம் குளோரேட், சோடியம் நைட்ரேட் போன்றவை வெடி பொருட்களின் தயாரிப்பிலும், சோடியம் பாஸ்பேட் உர உற்பத்தியிலும், காகிதங்களுக்கு வெளுப்பூட்டுவதிலும், சோடியம் பென்சோயேட் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதிலும் பயன்படுகின்றன. சோடியம் புளூரைடு பூச்சி கொல்லி மருந்தாகவும்,சோடியம் சிலிகேட் தீப்பற்றிக் கொள்ளாத ஆடை உற்பத்தியிலும், சோடியம் தயோ சல்பேட் ஒளிப் படப்பதிவு முறையிலும், சோடியம் பை கார்பனேட் தீயணைப்புக் கருவியிலும், அமில நீக்கி மருந்தாகவும் பயன்தருகின்றன. அகச் சிவப்புக் கதிர்களைச் சிதறலுக்கு உட்படுத்தி ஆராய சோடியம் குளோரைடு படிகம் பயன் படுகிறது. கதிர் வீச்சுகளுக்கு உடனொளிர்வு (Floroscence ) தரக்கூடிய பொருளாகத் தாலியம் சேர்ந்த சோடியம் அயோடைடு படிகம் அணுக்கதிர் ஆய்வுக் கருவிகளில் பயன் தருகிறது . அணு உலைகளில் சோடியம் ஒரு வெப்பப் பரிமாற்று ஊடகமாகக் கொள்ளப்பட்டுள்ளது. நீர், கன நீருக்கு அடுத்தபடியாக ஏற்புமிக்க குளிர்விப்பானாக இருப்பது உருகிய சோடியம். இதிலுள்ள முக்கியக் குறைபாடு, சோடியம், காற்று மற்றும் நீரோடு எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சோடியம்-24 என்ற அணு எண்மம் தடங்காட்டியாகப்(tracer) பயன்படுகிறது. இதனால் உடலில் உள்ள உறுப்புகளின் பாதிப்பை அறிய முடிகிறது. சோடியம்-24 ன் அரை வாழ்வு 15 மணிகள் மட்டுமே. எனவே கதிரியக்கப் பொருள் உடலுக்குள் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. மனிதர்களுக்கு சோடியம் ஓர் இன்றியமையாத கனிமமாகக் கருதப்படுகிறது. இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இரத்தத்தின் சவ்வூடுபரவல் சமநிலை, இரத்தத்தின் pH ஆகியனவற்றை ஒழுங்குபடுத்தும் அத்தியாவசியமான கனிமம் சோடியமே ஆகும். மனிதனுக்கு சோடியத்தின் உடலியல் தேவை அளவு ஒரு நாளைக்கு 500 மில்லிகிராம் ஆகும் . உணவில் மனிதன் எடுத்துக் கொள்ளும் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பே சோடியத்திற்கான ஆதார மூலமாகும். தவிர உணவை மெண்மையாக்கவும் பாதுகாக்கவும் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவிலிருந்தே சோடியம் கிடைக்கிறது. சில உணவுப் பொருள்களில் இயற்கையிலேயே சோடியம் கலந்திருருக்கிறது. அவற்றை உண்பதாலும் மனிதனுக்கு சோடியம் கிடைக்கிறது. மோனோசோடியம் குளூட்டாமேட்டு, சோடியம் நைட்ரைட்டு, சோடியம் சாக்கரின், சோடியம் பை கார்பனேட்டு, சோடியம் பென்சோயேட்டு போன்ற சேர்க்கைப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன . இவற்ரிலிருந்தும் சோடியம் மனிதனுக்குக் கிடைகிறது. அமெரிக்க மருந்து நிறுவனம் ஒரு நாளைக்கு 2.3 கிராம் அளவு வரைக்கும் நாம் சோடியத்தை எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கிறது. ஆனால் ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு 3.4 கிராம் சோடியத்தை எடுத்துக் கொள்வதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 2 கிராமுக்குக் குறைவான அளவு சோடியம் எடுத்துக் கொள்பவர்களுக்கு 2 முதல் 4 மில்லிமீட்டர் பாதரசம் அளவுக்கு சிசுடாலிக் இரத்த அழுத்தக் குறைவு உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு குறைவான சோடியம் எடுத்துக் கொள்பவர்களில் 17 சதவிதத்தினர் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் 7.6 மில்லியன் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. உப்பில் 39.3 சதவீதம் மட்டுமே சோடியம் உள்ளது. எஞ்சியிருப்பது குளோரினும் சுவடு அளவு தனிமங்களும் ஆகும். அதனால் 2.3 கிராம் சோடியம் என்பது 5.9 கிராம் உப்புக்கு சமம் அல்லது 2.7 மில்லி உப்புக் கரைசலுக்குச் சமம் என்பதை கணக்கீடு உணர்த்துகிறது. அதேவேளையில் அமெரிக்க இதய நிறுவனம் ஒரு நாளைக்கு 1.5 கிராம் சோடியமே போதுமானது என பரிந்துரைக்கிறது. மனிதர்களில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள் எவராக இருந்தாலும் தங்கள் சிறுநீரில் ஒரு நாளைக்கு மூன்று கிராம் சோடியத்திற்கு குறைவாக வெளியேற்றுபவர்கள் மரணம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயத்தில் இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தங்கள் சிறுநீரில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிராம் சோடியத்தை வெளிய்ற்றுபவர்களுக்கு இந்த அபாயம் அவர்களைவிடக் குறைவாகும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் நாள் ஒன்றுக்கு 7 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட சோடியத்தை தங்கள் சிறுநீரில் வெளியேற்றினால் அவர்கள் உயர் இறப்பு வீதமும் இருதய நோயுடன் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு இது உண்மையாக இருக்கவில்லை. உயர் இரத்த அழுத்தம் கொண்ட முதியவர்கள் மற்றும் அதற்கு அருகில் இருப்பவர்கள் தினசரி உட்கொள்ளும் சோடியத்தின் அளவை 1.5 கிராம் அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் கூறுகிறது. நம் உடலிலுள்ள ரெனின்-ஆஞ்சியோடென்சின் எனப்படும் இயக்குநீர் அமைப்பு உடலில் திரவம் மற்றும் சோடியம் செறிவு அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் சிறுநீரகத்தில் சோடியம் செறிவைக் குறைப்பதும் ரெனின் உற்பத்தியை விளைவிக்கும், இது அல்டோசுடிரோன் மற்றும் ஆஞ்சியோடென்சினை உற்பத்தி செய்கிறது, சிறுநீரில் சோடியத்தை தக்கவைக்கிறது. சோடியத்தின் அடர்த்தி அதிகமானால் ரெனின் உற்பத்தி குறையும். சோடியத்தின் அடர்த்தி மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும். நியூரானின் செயல்பாட்டில் சோடியம் அயனி முக்கியமான மின்பகுபொருளாக செயல்படுகிறது. செல்களுக்கும் அணுபுற நீர்மத்துக்கும் இடையிலான சவ்வூடுபரவலை சோடியம் முறைப்படுத்துகிறது. மனிதர்களில் வழக்கத்திற்கு மாறாகக் காணப்படும் குறைந்த அல்லது உயர் சோடியம் அளவுகள் ஐப்போநேட்ரிமியா மற்றும் ஐப்பர்நேட்ரிமியா என மருத்துவம் அங்கீகரிக்கிறது. இந்த நிலை மரபணு காரணிகள், வயது அல்லது நீண்டகால வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படலாம். மருத்துவ புள்ளியியல் தனிமனிதர்களினதும் சமூகத்தினதம் உடல் உள நலத்தைப் பேண உதவும் புள்ளியியல் விபரங்களை மருத்துவ புள்ளியியல் எனலாம். பல கூறுகள் ஒரு தனிமனிதரின் சமூகத்தின் நலத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றை நான்கு பெரும்வகையாகப் பிரிக்கலாம். காடைக்கண்ணி காடைக்கண்ணி "(oat)" ("அவினா சட்டைவா-Avena sativa") என்பது கூலப் பயிராகும். இது மாந்தருக்குக் கூழாகவோ கஞ்சியாகவோ பயன்பட்டாலும் இதன் முதன்மையான பயன் கால்நடைகளுக்கான தீனியாகவே அமைகிறது. இது ஊட்டச் சத்து மிக்க குருதிக்கொழுப்பு குறைவான தொடர்ந்து உண்னத்தக்க உணவாகும். கோதுமையில் உள்ள கிளியாடினை ஒத்த காடைக்கண்ணியின் உட்கூறான அவெனின் குறிப்பிட்ட சிலருக்கு உடற்குழிநோயை உருவாக்க வல்லதாகும். மேலும் ,இதில் மாப்பிசின் உள்ள மற்ற கூலங்கள் விரவியே கிடைக்கிறது; குறிப்பாக கோதுமையும் பார்லியும் கலந்தே கிடைக்கிறது. "அ. சட்டைவா", அதன் மிக நெருக்கமான சிறுபயிரான "அ. பைசாந்தினா" ஆகிய இரண்டின் அண்மிய மூதாதைப் பயிராகப் பல்குறுமவக/ஆறுகுறுமவகக் காட்டுப் பயிரான "அ. இசுடெரிலிசு" அமைகிறது. இதன் முந்தைய வடிவங்கள் நடுவண் கிழக்குப் பகுதியின் செம்பிறையில் தோன்றி வளர்ந்துள்ளன என்பதை மரபியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், காடைக்கண்ணிப் பயிர் மிகப் பிந்தைய காலத்தில், அதாவது செம்பிறைக்கு நெடுந்தொலைவில் அமைந்த ஐரோப்பாவில், அதுவும் பின்னதன் வெண்கலக் காலத்திலேயே தோன்றியுள்ளது. காடைக்கண்ணியும் புல்லரிசியும் கோதுமை, பார்லி ஆகிய முதன்மைப் பயிர்களின் களைப்பயிர்களில் இருந்து தோன்றிய இரண்டாம் தரப்பயிர்களாகவே கருதப்படுகின்றன. இக்கூலங்கள் மேற்காக குளிர்ந்த ஈரமான பகுதிகளில் பரவியபோது, அவற்றின் காடைக்கண்ணிக் களைப்பயிர் மிகவும் விருமபத் தக்கதாக மாறி பயிரிடப் பட்டிருக்கலாம். காடைக்கண்ணிப் பயிர் மித வெப்ப மன்டலப் பகுதிகளில் ந்ன்றாக விளைகிறது. இதற்குக் குறைவான கோடைக்கால வெப்பமே போதும். கோதுமை, பார்லி, புல்லரிசியை விட நன்றாக மழையைத் தாங்குதிறம் பெற்றுள்ளது. எனவே, இது வடகிழக்கு ஐரோப்பா, ஐசுலாந்து போன்ற குளிர்ந்த ஈரப்பத கோடை நிலவும் பகுதிகளில் நன்றாகப் பயிராகும். இது ஆன்டு முழுவதும் விளையக்கூடிய பயிராகும். இதை, இலையுதிர்காலத்தில் நட்டு கோடைக்காலத்தில் அறுவடை செய்யலாம் அல்லது இளவேனிற்காலத்தில் நட்டு முன் இலையுதிர்காலத்தில் அறுவடை செய்யலாம். உலகளாவிய 2014 ஆம் ஆன்டின் காடைக்கண்னி பயிர்விளைச்சல் 22.7 மில்லியன் டன்களாகும். இதில் உருசியா முன்னிலையில் அமைந்து 5.3 மில்லியன் டன்கள் விளைவித்துள்ளது. இது உலக மொத்த விளைச்சலில் 23% ஆகும் (பட்டியல்).தைதற்கு அடுத்து பேரள்வில் காடைக்கண்ணிப் பயிர் விளைவிக்கும் நாடுகள்கனடாவும் போலந்தும் ஆத்திரேலியாவும் ஆகும். காடைக்கண்ணி உணவுகளில் பலவகைகளில் பயன்படுகிறது; மிகப் பொதுவாக, சுருளடைகளாகவோ குறுணையாக்கிக் கஞ்சியாகவோ/கூழாகவோ பொடியாக்கி மாவாகவோ உணவில் பயன்படுகிறது. காடைக்கண்ணி கஞ்சியாக மட்டுமன்றி, மெத்தப்பம் (oatcake),உரொட்டி (bread). ஈரட்டிகள் (cookies போன்ற அடுமனைப் பலகாரங்களாகவும் சில குளிர்வகைக் கூலங்களில் உட்கூற்றுப் பொருளாகவும் பயன்படுகிறது. காடைக்கண்ணி தொடர்பான நோக்கு அல்லது மனப்பான்மை தொடர்ந்து மாறிக்கொன்டே வந்துள்ளது. முதலில் இது பிரித்தானியாவில் வெதுப்பி செய்யப் பயன்பட்டுள்ளது; இங்கு முதல் காடைக்கண்னி உரொட்டித் தொழிலகம் 1899 இல் அமைக்கப்பட்டது. இசுகாட்லாந்தில், இது முதன்மை உணவாக உள்ளதால் முன்பு போலவே இன்றும் உரொட்டித் தொழிலகங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. சீனாவில், குறிப்பாக மேற்கு மங்கோலிய உட்பகுதியிலும் சாங்சி மாநிலத்திலும், யவுமியான் எனப்படும் "அவினா நூதா (Avena nuda)" என்ற காடைக்கண்ணி வகை மாவில் குழலுணவுகளும் சுருளடைகளும் செய்து முதன்மை உணவாக உண்ணப்படுகின்றன. பல ஊட்டச்சத்துகளை காடைக்கண்ணி செறிவாகப் பெற்றுள்ளதால் இது பொதுவாக நலவாழ்வுதரும் நல்ல உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (பட்டியல்). இதன் 100 கிராம் உணவு 389 கலோரிகளை தருகிறது; 20% அன்றாடத் தேவைப் புரதத்தையும் 34% அன்றாடத் தேவை நாரிழையையும் 44% அன்றாடத் தேவை B உயிர்ச்சத்துகளையும் பல உணவுசார் கனிமங்களையும் குறிப்பாக மங்கனீசையும் (233 % அ.தே) தருகிறது (பட்டியல்).இதில் 66% கரிமநீரகிகளும் 11% நாரிழையும் 4% பீட்டா குளூக்கானும், 7% கொழுப்பும் 17% புரதமும் உள்ளன (பட்டியல்). நிறுவப்பட்டுள்ள இதன் கொழுப்பைக் குறைக்கும் விளைவுகளால், நலவாழ்வுதரும் நல்ல உணவாக காடைக்கண்ணி ஏற்கப்பட்டுள்ளது. தீட்டப்படாத காடைக்கண்ணியின் மேல்புரையை நாளும் உண்டுவந்தால் சில வாரங்களிலேயே தாழடர்த்திக் கொழுமியக் கொழுப்பையும் (தீயவிளைவுக் கொழுப்பையும்) மொத்தக் கொழுப்பளவையும் குறைத்து இதயநோய் வரும்வாய்ப்பைக் குறைக்கிறது. காடைக்கண்ணியின் பீட்டா குளூக்கான் எனும் கரையும் நாரிழையினது கொழுப்பைக் குறைக்கும் திறம் நிறுவப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்குப் பிறகு காடைக்கண்ணி, மற்ற எந்த கூலத்தையும் விட உயர்கொழுப்பு உள்ளடக்கத்தைப் பெற்றுள்ளது; சில காடைக்கண்ணிப் பயிர்கள் 10 % அளவுக்கும் மேல் கூடுதலாகவும் சில மக்காச்சோளப் பயிர்கள் 17 % அளவுக்கும் மேல் கூடுதலாகவும் கொழுப்பைப் பெற்றுள்ளன; கோதுமையிலும் மற்ற கூலங்களிலும் ஏறத்தாழ 2–3% அளவு கொழுப்பே அமைந்துள்ளது. The polar lipid content of oats (about 8–17% glycolipid and 10–20% phospholipid or a total of about 33%) is greater than that of other cereals, since much of the lipid fraction is contained within the endosperm. அவெனாலின் எனும் குளோபுலின் அல்லது பருப்புவகைப் புரதம் 80% அளவுக்கு அமைந்துள்ள ஒரே கூலமணி காடைக்கண்னி மட்டுமே. இது மாப்பிசின், சீன், புரொலாமின் போன்ற மற்ற கூலமணிப் புரதங்களைப் போலல்லாமல், நீர்த்த உப்புநீர்மத்திலேயே கரையும் திறம் பெற்றுள்ளது.றைதில் சிற்றளவில் கல்ந்துள்ள புரொலாமின் அவெனின் மட்டுமேயாகும். இதன் புரதம் தரத்தில் சோயாவின் புரதத்துக்குச் சமமானதாகும் சோயா புரதமோ இறைச்சி, பால், முட்டை ஆகியவற்றின் புரதத்துக்குச் சமனானதென உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. உமிநீக்கிய காடைக்கண்ணி அரிசியின் புரத உள்ளடக்கம், மற்ற கூலங்களைவிட 12% முதல் 24%வரை கூடுதலாக உள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் 1% மக்கள்தொகை மாப்பிசின் ஒவ்வாமையால் உடற்குழி நோய்கட்கு ஆட்படுகின்றனர். மாப்பிசின் (Gluten) கோதுமை, பார்லி, காடைக்கண்ணி, புல்லரிசி ஆகியவற்றிலும் ஒத்த இனவகைக் கூலமணிகளிலும் அமைந்துள்ளது மாப்பிசினில் புரொலாமின்கள் உயரளவில் அமைந்த நூற்றுக்கும் மேலான புரதங்கள் உள்ளன. அவெனின் எனும் காடைக்கண்ணி புரொலாமின்களும் கோதுமையில் உள்ள கிளியாடின் எனும் புரொலாமின்களும் புல்லரிசியில் உள்ள செகாலின் எனும் புரொலாமின்களும் பார்லியில் உள்ள கோர்டீன் எனும் புரொலாமின்களும் ஒட்டுமொத்தமாக மாப்பிசின் என அழைக்கப்படுகின்றன. மண் பண்படுத்தப்பட்டதும், குளிர்பகுதிகளில் காடைக்கண்ணி இளவேனிற் காலத்தில் விதைக்கப்படுகிறது. முன்பாக விதைத்தல் நல்ல கணுபடி பெற வழிவகுக்கும். ஏனெனில், கோடை வெப்பத்தில் காடைக்கண்னிப் பயிர் உறக்கத்தில் ஆழ வாய்ப்புள்ளது. மிதவெப்பப் பகுதிகளில், முது வேனிற் கலத்திலோ இலையுதிர்காலத் தொடக்கத்திலோ விதைக்கப்படுகிறயது. காடைக்கண்ணி குளிர்தாங்குதிறம் கொன்டுள்ளதால் பின்பனியாலோ, பனிப்பொழிவாலோ தக்கமேதும் அடையாது. வழக்கமாக, ஓர் எக்டேருக்கு ஏறத்தாழ 125 முதல் 175 கிகி விதைகள் அல்லது ஓர் ஏக்கருக்கு 2.75 முதல் 3.25 பெருங்கூடை விதைகள் தூவியோ துளையிட்டோ விதைக்கப்படும்மூடுபயிராக பருப்புவகைகல் அமையும்போது குறைவான அளவு விதைகளே விதைக்கப்படும். வளமான மண்ணிலும் களையெடுப்பு மிகுந்த இடங்களிலும் உயர்விதைப்பு வீதம் பயன்படுத்தப்படும். தேவையற்ற உயர்விதைப்பு வீதம் பயிர்விளைய இடம்போதாமையால் கணுபடி குறைய வாய்ப்புள்ளது. காடைக்கண்ணி பதப்படுத்தல் மிக எளிய செயல்முறையாகும்: அரைவை ஆலைக்குக் கொண்டுசெல்லும் முன்பு காடைக்கண்ணியில் இருந்து பதரும் கற்களும் பிறவகைக் கலப்புக் கூலங்களும்போன்ற அயற்பொருட்கள் நீக்கப்படும். இறுதிப் பதப்படுத்தல் மும்முறைகளில் செய்யப்படுகிறது: உமிநீக்கிய காடைக்கண்ணியை வீட்டில் சிற்றளவில் எந்திர உருளைகளில் இட்டு குறுணையாகவோ மாவாகவோ பதப்படுத்தப்படும். இசுகாட்லாந்து ஆங்கிலத்தில் காடைக்கண்ணி வெறுமனே கூலம் என்றே அழைக்கப்படுகிறது. (ஆங்கில மொழியிலும் முதன்மை உணவாகப் பயன்படும் களப்பகுதிகளில் கூலம் எனும் பொதுப்பெயரே வழங்குகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில், இந்தியாவைப் பின்பற்றி, கூலம் எனும் பொதுச் சொல் மக்காச்சோளத்துக்கே வழங்குகிறது.) சிக்காகோ தொழில்வணிக வாரியத்தால் காடைக்கண்ணியின் எதிர்காலமும் வழங்கலும் கட்டுபடுத்தப்படுகிறது. அதன் விற்பனை வெளிய்யீடுகள் மார்ச்சு, மே, ஜூலை, செப்டம்பர், திசம்பர் மாதங்களில் அமைகிறது. தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல் தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியலில்கீழ்வரும் நாடுகளில் உள்ள பங்கு பரிவர்த்தனை நிலையங்களின் விவரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவை தவிர: என்பனவு்ம் இந்தியாவில் பல பங்குச் சந்தைகள் காணப்படுகின்றன இவற்றில் மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange-(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange - NSE) என்பன தேசிய மட்டதிலான சந்தையாக வகைப்படுத்தப்படுகின்றது, இதுதவிர 21 பிராந்திய மட்டத்திலான சந்தைகளும் காணப்படுகின்றன. இலங்கை தனக்கென ஒரே ஒரு பங்குபரி்வர்த்தனை நிலையத்தினை கொண்டுள்ளது. குறிப்பு :- இங்கு பங்குச்சந்தை(Share Market) எனவும் பங்கு பரிவர்த்தனை நிலையம் ( Stock Exchange) என குறிஉப்பிடப்படுவதும் ஒரே விடயத்தினையே. அஜித் அகர்கர் அஜித் அகர்கர் (Ajit Agarkar (பிறப்பு:டிசம்பர் 4, 1977 - மும்பை) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்திய அணிக்காக 200 சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் ஆடத் துவங்கிய காலத்தில் மிக வேகமாக 50 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் காலத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவர் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை தொடரில் மும்பை துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்தார். அந்தத் தொடரில் இவரின் தலமையிலான் அணி கோப்பையை வென்றது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 1998 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும், 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது ஓய்விற்குப் பிறகு துடுப்பாட்ட பகுப்பாய்நராக உள்ளார். ஏப்ரல் 1, 1998 இல் கொச்சியில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்அறிமுகமானார். இந்தப் போட்டியில் அடம் கில்கிறிஸ்ற் இலக்கை வீழ்த்தினார். பின் கொக்கக் கோலா வாகையாளர் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தனது 20 ஆவது வயதில் விளையாடினார். அந்தப் போட்டியில் முக்கியமான மூன்று இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 98 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கச் செய்து வீழ்த்த உதவினார். இவரின் துவக்க காலத்தில் ஜவகல் ஸ்ரீநாத் உடன் இணைந்து பந்துவீசினார். பின் ஆசீஷ் நேரா 1999 ஆம் ஆண்டிலும், 2000 ஆம் ஆண்டில் ஜாகிர் கான் ஆகியோரின் வருகைக்குப் பின் அணியில் இடம் கிடைப்பதில் சற்று சிக்கல் இருந்தது. இருந்தபோதிலும் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால் இவருக்கு அடிக்கடி ஏற்பட்ட காயங்களினாலும் 2004 ஆம் ஆண்டில் இர்பான் பதானின் வருகைக்குப் பிறகும் இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. அகர்க்கர் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் பந்துவீச்சாளராகவும், மட்டையாளராகவும் பல சிறப்பான பங்களிப்பை அணிக்காக அளித்துள்ளார். மட்டையாளராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். குறிப்பாக 2002 ஆம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல்109* ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றபோதிலும் இவரின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் அமைந்தது. 2000 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 25 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் இவர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்தபடியாக இருந்தார். 2009-2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் கருநாடக அணிக்கு எதிரான போட்டியில் 5 இலக்குகள் வீழ்த்தினார். அஜித் அகர்க்கர் - குறிப்புகள் பாதரசம் பாதரசம் "(Mercury)" என்பது Hg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 80 ஆகும். முற்காலத்தில் இதை ஐதராகிரம் என்று அழைத்தார்கள் . பாதரசம் ஒரு கனமான உலோகமாகும். , வெள்ளியைப் போன்ற நிறம் கொண்ட டி- தொகுதியைச் சேர்ந்த தனிமமும் ஆகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் என்பது இதன் சிறப்பாகும். இதே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள அலோகம் புரோமின் ஆகும். அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று உயர்ந்த வெப்பநிலையில் சீசியம், காலியம், ருபீடியம் உள்ளிட்ட உலோகங்கள் உருகத் தொடங்கி விடும். பாதரசம் உலகம் முழுவதும் சின்னபார் என்ற சல்பைடு தாதுவின் வைப்பிலிருந்துதான் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் சின்னபார் தாதுவை அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாதச சல்பைடை அரைத்து வெர்மிலியான் என்ற சிவப்பு நிறமி தயாரிக்கப்படுகிறது. வெப்பமானிகள், அழுத்தமானிகள், காற்றழுத்தமானிகள், நாடியழுத்தமானிகள், மிதவை அடைப்பான்கள், பாதரச மின்விசைக் குமிழ்கள், பாதரச சுற்றுகள், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பாதரசத்தின் நச்சுத்தன்மை பற்றிய கவலைகளால் பெரும்பாலும் மருத்துவ சூழல்களில் பயன்படுத்தப்படும் பாதரச வெப்பமானிகள் மற்றும் நாடித்துடிப்புமானிகளில் ஆல்ககால்கள் அல்லது திரவக் கலப்புலோகமான கேலின்சுடன் நிறப்பப்பட்ட கண்ணாடி வெப்பமானிகள் மற்றும் தெர்மிசுடார் அல்லது அகச்சிவப்பு சார்ந்த மின்னணு கருவிகள் படிப்படியாக பாதரசத்துக்கு மாற்றாக பயன்படத் தொடங்கியுள்ளன. இதேபோல் இயந்திர அழுத்த அளவிகள் மற்றும் மின்னணு திரிபு அளவி உணரிகள் உள்ளிட்ட கருவிகள் பாதரச நாடியழுத்தமானிகளை இடப்பெயர்ச்சி செய்து விட்டன. அறிவியல் ஆய்வு பயன்பாடுகளிலும் பல் மருத்துவத்திலும் மட்டும் பாதரசம் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒளிரும் விளக்கில் உள்ள பாதரச ஆவி வழியாக மின்சாரம் பாயும்போது குறுகிய-அலை நீளமுள்ள புறஊதா ஒளி உருவாகிறது, இவ்வொளி குழாயிலுள்ள பாசுபர் ஒளிர்ந்து வெளிச்சம் உண்டாகிறது. பாதரச குளோரைடு அல்லது மெத்தில் மெர்க்குரி போன்ற நீரில் கரையும் பாதரச உப்புகள் வெளிப்படுவதாலும், பாதரச ஆவியை சுவாசிக்க நேர்வதாலும், ஏதாவது ஒரு வடிவத்தில் பாதரசம் உட்செலுத்தப்பட்டாலும் பாதரச நச்சுத்தன்மை நமக்குத் தோன்றுகிறது. பாதரசம் ஒரு கனமான வெள்ளியைப் போன்ற –வெணமை நிறம் கொண்ட திரவ உலோகமாகும். மற்ற உலோகங்கள் ஒப்பிடும்போது இது வெப்பத்தை சரியாகக் கடத்துவதில்லை. ஆனால் மின்சாரத்தை சுமாராகக் கடத்துகிறது. பாதரசத்தின் உறைநிலை −38.83 °செல்சியசு வெப்பநிலையாகும். மற்றும் இதன் கொதிநிலை 356.73 °செல்சியசு வெப்பநிலையாகும் . வேறு எந்த நிலையான உலோகத்தின் உறைநிலை மற்றும் கொதிநிலையைக் காட்டிலும் இது குறைவனதாகும். கோப்பர்நீசியம் மற்றும் பிளரோவியம் போன்ற தனிமங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கோப்பர்நீசியத்தின் கொதிநிலை பாதரசத்தை விடக் குறைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தனிம வரிசை அட்டவனையின் ஆவர்த்தனப் போக்குகள் இதையே காட்டுகின்றன. உறையும் போது பாதரசத்தின் கன அளவு 3.59% அளவுக்குக் குறைகிறது. அடர்த்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது. நீர்ம நிலையில் இருக்கும் போது 13.69 கி/செ.மீ3 ஆக இருக்கும் பாதசத்தின் அடர்த்தி திண்ம நிலைக்கு மாறும் போது 14.184 கி/செ.மீ3 ஆக மாறுகிறது. வெப்பநிலை விரிவு குணகம் 0 °செல்சியசு வெப்பநிலையில் 181.59 × 10−6 ஆகவும், 20 °செல்சியசு வெப்பநிலையில் 181.71 × 10−6 ஆகவும், 100 °செல்சியசு வெப்பநிலையில் 182.50 × 10−6 ஆகவும் உள்ளது. திண்ம பாதரசத்தை கம்பியாக நீட்டலாம். தகடாக அடிக்கலாம். கத்தியால் வெட்டலாம் . பாதரசத்தின் அதிவேக விரிவடைவு செயல்திறன் பற்றிய ஒரு முழுமையான விளக்கம் குவாண்டம் இயற்பியலின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் அதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: பாதரசம் ஒரு தனித்த எலக்ட்ரான் ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கிறது, இதில் எலக்ட்ரான்கள் கிடைக்கக்கூடிய அனைத்து 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s , 4p, 4d, 4f, 5s, 5p, 5d மற்றும் 6s துணைக்கூடுகளிலும் நிரம்பியுள்ளன. இந்த கட்டமைப்பு ஓர் எலக்ட்ரான் அகற்றப்படுவதை கடுமையாக எதிர்க்கிறது. பாதரசம் மந்தவாயுக்கள் போலவே செயல்படுகிறது, அதனால் பலவீனமான பிணைப்பை உருவாக்குகிறது, குறைந்த வெப்பநிலையில் உருகுகிறது. பாதரசம் மிகவும் குறைந்த உருகுநிலை யைக் கொண்டது. இதன் உருகுநிலையில்(−38.86 °C) பாதரசத்தின் அடர்த்தி 13.534 g/cm3 ஆக இருக்கும். உலகிலேயே மிக மோசமான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா சபையால் பட்டியல் இடப்பட்டுள்ளது. பாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன இதள்மாற்றியம் என்ற தனித்தமிழ் சொல் இரசவாதம் என்று வடமொழியில் குறிக்கப்படும். சித்தர் இதளினால்(பாதரசம்) தாழ்ந்த மாழைகளை பொன்னாக மாற்றினர் என்று கூறப்படும். இப் பொன்னாக்கம் ஆங்கிலத்தில் alchemy எனப்படும். இதனை அடியாகக் கொண்டே வேதியியலை குறிக்கும் chemistry எனும் சொல் பிறந்தது.. சௌந்தர்யா சௌந்தர்யா (சூலை 18, 1971 - ஏப்ரல் 17, 2004) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சீன வலை சீன வலை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் ஒரு சிறப்பான வலை ஆகும். இந்த வலை கரையில் இருந்து இயக்கப்படும் ஒரு நிலையான அமைப்பு ஆகும். ஒவ்வோர் அமைப்பையும் இயக்க ஆறு மீனவர்கள் தேவை. கர்னக் கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது. கர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசா பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும். இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் ஒன்று மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு, கர்னக் என்பது இந்த அமொன் ரே வளாகம் மட்டுமே. ஏனைய மூன்று பகுதிகளுக்கு உள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது. மேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், ஸ்ஃபிங்ஸ் எனப்படும் உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப் பாதைகள், மூத் வளாகம் (Precinct of Mut), அமொன் ரே வளாகம், லக்சோர் கோயில் என்பவற்றை இணைக்கின்றன. கர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப் பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 ஃபாரோக்கள் (pharaohs) இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது. முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் ("Mullaitivu District") இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முல்லைத்தீவு நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 6 பிரதேச செயலர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெரும்பகுதியையும், மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு 1978 இல் உருவாக்கப்பட்ட புது மாவட்டமாகும். வன்னி இராச்சியம் என்று அழைக்கப்பட்ட பெரும்பகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட ஒரு மாவட்டமாகும். சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாக முல்லைத்தீவு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கூறலாம். உலர் வலயத்தில் அமைந்துள்ளதால் மிதமான வெப்ப நிலை காணப்படும். வடகீழ் பருவக்காற்றின் மூலம் அதிகளவிலும், தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் குறைந்தளவிலும் மழைகிடைப்பதால், ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலம், வெப்பநிலை குறைவாக காணப்படும். பொதுவாக வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் - 39.3 பாகை செல்சியஸ்என்ற வீச்சில் அமைந்திருக்கும்.சராசரி வருடாந்தம் மழைவீழ்ச்சி 1300மிமீ- 2416மிமீ ஆக இருக்கும். இங்கு நிலம் பரவலாக செங்கபில மண்ணும், செம்மஞ்சள் லற்றசோல் வகை மண்ணும் கொண்டதாக காணப்படுகின்றது. ஆனால், கடற்கரைகள் இல்மனைற் கலந்த மணல்மண் பரம்பல் கொண்டதாக அமைந்துள்ளன. மேற்கே புல்மோட்டையின் இல்மனைற் படிவுகளின் தொடர்ச்சிகள் முல்லைத்தீவு கடற்கரைகளில் காணக்கூடியதாக இருக்கும். இங்கு 4 பிரதான குளங்களும், 15 நடுத்தர குளங்களும், 192 சிறிய குளங்களுமாக 211 குளங்கள் காணப்படுகின்றன. மக்கள் பிரதானமாக விவசாயத்தை தொழிலாக கொண்டதால் மழை நீரைக்கொண்டு 3,893 ஹெக்ரெயரில் பெரும்போகத்தையும், குளத்து நீரைக்கொண்டு 455.5 சிறுபோகத்தையும் ஹெக்ரெயரில் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். கிழக்கு கடற்கரை 70கி.மீ நீண்டுள்ளது.இதில் கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல், மாத்தளன் ஆகிய கடனீரேரிகளில் இறால், நண்டு, மீன்பிடி மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையிலேயே நிலப்பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில், வைரமரங்களான, முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட பனைகளும், தென்னைகளும் கொண்ட தோப்புக்கள் நிறைய உள்ளன. தேக்கு மரங்கள் நாட்டப்பட்ட செயற்கை காடுகள் இங்கு நிறைய காணலாம். இன ரீதியாக தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் அதிகப்படியாக தமிழர் வாழ்கின்றனர்.சிங்களவர்கள் மணலாறு பிரதசத்திலுள்ள கொக்கிளாய் , கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களிலும், முஸ்லிம்கள் கரைதுறைப்ப்பற்று பிரதேசத்திலும் வாழ்கின்றனர். மதரீதியாக சைவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்கள், கிறீஸ்தவர்கள் என வாழ்கின்றனர். ஏனைய மாவட்டங்கள் போல் மாவட்ட செயலர் (அரச அதிபர்) அவர்களால் நிர்வகிக்கப்படும்.மேலும், முல்லைத்தீவு மாவட்டம் 6 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு பிரதேச செயலர்களால் (உதவி அரச அதிபர்) துணை நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்த ஆறு பிரதேசங்களும் மேலும் 136 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கிராம அலுவலர்களால் நிருவகிக்கப்படுகின்றன. உள்ளூராட்சி நிர்வாக அலகுகளான நகரசபை, பட்டின சபை ஆகியவை முல்லைத்தீவில் இல்லை. இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள பிரதேச சபைகள் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் உள்ளன. பிரதேச சபைகள் அரசியல் கட்சி சார்ந்த தலைவராலும், அரச பிரதிநிதியான செயலாளராலும் நிர்வகிக்கப்படும். தற்போதய நிலையில், உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறாததால் செயலாளர் மட்டுமே நிர்வகிக்கின்றார். முல்லைத்தீவு மாவட்டம் கல்வி நிர்வாகத்திற்காக துணுக்காய், முல்லைத்தீவு என 2 கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கென 5 கல்விக்கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அரச புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையின்படி இங்கு 104 அரச பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 1AB தரத்தில் 6 பாடசாலைகளும், 1C தரத்தில் 12 பாடசாலைகளும், வகை 2 இல் 39 உம், வகை 3 இல் 47 உம் என அவை உள்ளன. இவற்றுள், தேசியபாடசாலை தரத்தில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 209 பதிவு பெற்ற இந்துக்கோயில்கள் உள்ளன. மன்னார் மாவட்டம் மன்னார் மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கைத்தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டமும், வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே வவுனியா மாவட்டமும், தென்கிழக்கே அனுராதபுர மாவட்டமும், தெற்கே புத்தளம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே மன்னார் குடாக்கடல் எல்லையாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மன்னார் நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 5 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கி.பி. 1650 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுத்து வரும் வரை மன்னார் பிரதேசம் சகல வளங்களும் பொருந்தியதாக யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது. கிமு 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயன் உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக மாதோட்டத் துறைமுகம் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது. இவற்றை விட தலைமன்னார், மன்னார், நானாட்டான், உப்புக்குளம் திருவானைக் கூடம், பாலம்பிட்டி, பேசாலை, சின்னக்கரிசல் சிறுநாவற்குளம், பறப்பாங்கண்டல், முள்ளிப்பள்ளம், எழுந்தூர், ஆலடி, கீரி, மாந்தை, உயிலங்குளம், தாராபுரம், வண்ணாமோட்டை, சின்னப் பண்டிவிரிச்சான், பூம்புகார், முள்ளிக்குளம், பெரிய பண்டிவிரிச்சான், இரணை இலுப்பைக் குளம், தட்சணா மருதமடு, ஆவரங்குளம், கல்மடு, முருங்கன், செம்மண்தீவு, கட்டுக்கரை, கட்டையடம்பன், விடத்தல் தீவு, ஆத்திமோட்டை, சீது விநாயகர் குளம் உட்பட பல இடங்களில் இந்துக் கோயில்கள் அமைந்துள்ளன. வவுனியா மாவட்டம் வவுனியா மாவட்டம் ("Vavuniya District") இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் வவுனியா நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 4 வட்டச்செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நட்பு நட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நந்தினி கம்பகா மாவட்டம் கம்பகா மாவட்டம் ("Gampaha District", "கம்பஹ மாவட்டம்") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. கம்பகா நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 13 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1177 கிராமசேவகர் பிரிவுகளையும், 13 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. கம்பகா மாவட்டம் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1,387 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டமும், கிழக்கில் கேகாலை மாவட்டமும், தெற்கே கொழும்பு மாவட்டமும், மேற்கில் இந்து சமுத்திரமும் காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டம் களுத்துறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. களுத்துறை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 762 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. கண்டி மாவட்டம் கண்டி மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்தியு மாகாணத்தில் அமைந்துள்ளது. கண்டி நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1188 கிராமசேவகர் பிரிவுகளையும் 20 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மாத்தளை மாவட்டம் மாத்தளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்தியு மாகாணத்தில் அமைந்துள்ளது. மாத்தளை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 4 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 545 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. வடக்கே மாத்தளை மாவட்டமும், கிழக்கே பதுளை மாவட்டமும் தெற்கே இரத்தினபுரி மாவட்டமும் மேற்கே கேகாலை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. நுவரெலியா நகரம் மாவட்டத்தின் தலைநகரமும் அதில் அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துக்கு பிரசித்தமான பகுதிகளில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி தொடக்கம் 8000 வரை உயரத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்திலேயே இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகாலையும் அமைந்துள்ளது. சிவனொளிபாத மலை அமைந்துள்ள சமனல மலைத்தொடரின் பெரும்பகுதியும் நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. நுவரெலியா இலங்கையில் மொத்தப் பரப்பளவில் 2.7% இடத்தை அடைக்கிறது. மாவட்டத்தில் காணப்படும் முக்கிய மலைகளின் உயரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நுவரெலியாவை "சிறிய இங்கிலாந்து" என அழைத்தனர். இவர்களின் ஆட்சியின் போது நுவரெலியா உல்லாசப் பிரயாண, வர்த்தக மையமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, இராமாயணத்துடனும் இப்பகுதி தொடர்புடையது என்பதும், குவேனி துரத்தப்பட்டப் பின்னர் தனது இரு குழந்தைகளுடன் இங்கே வசித்தார் என்பது தொன்நம்பிக்கையாகும். துட்டகைமுனு தனது இளமைக்காலத்தில் கொத்மலையில் வசித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இம்மாவட்டம் நுவரெலியா-மசுகெலியா, கொத்மலை, அங்குரன்கெத்தை, வலப்பனை ஆகிய நான்கு பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நிர்வாக பிரிவுகளைக் கருதும் போது, நுவரெலியா, கொத்மலை, அங்குரன்கெதை, வலப்பனை, அம்பகமுவா ஆகிய ஐந்து வட்டாரச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்வட்டாரச் செயலளார் பிரிவுகள் மேலும் 491 ஊருழியர் பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.மாவட்டத்தின் நிர்வாக, உள்ளூராட்சி அமைப்பு கீழ் வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. உள்ளூராட்சியை கருத்திற் கொள்ளும் போது நுவரெலியா மாநகரசபையும் அட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துலை நகரசபை ஆகிய இரண்டு நகரசபைகளும் நுவரெலியா, கொத்மலை, அங்குரன்கெதை, வலப்பனை, அம்பகமுவா ஆகிய ஐந்து பிரதேச சபைகளும் காணப்படுகின்றன. மாவட்ட மக்கள் தொகையில் 57.1% தமிழர்களாவர் (இலங்கைத் தமிழர் 6.5%, இந்தியத் தமிழர் 50.6%) இவர்களில் 93.1 சதவீதமான மக்கள் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கின்றனர். மாவட்ட தமிழர்களில் 77 சதவீதத்தினர் தேயிலை தோட்டங்கள் பெரும்பான்மையாக காணப்படும் நுவரெலியா, அம்பகமுவா பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் 40.2 சதவீததினர் சிங்களவராவர். இவர்களில் 85 சதவீதத்தினர் கிராமத்தில் வசிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் பல முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. அவை இங்கே பட்டியலிடப்படுகின்றன. காலி மாவட்டம் காலி மாவட்டம் ("Galle district") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. காலி நகரம் இதன் தலைநகரமாகும். காலி மாவட்டம் 10 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 896 கிராமசேவகர் பிரிவுகளையும் 18 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மாத்தறை மாவட்டம் மாத்தறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மாத்தறை நகரம் இதன் தலைநகரமாகும். மாத்தறை மாவட்டம் 7 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 650 கிராமசேவகர் பிரிவுகளையும் 16 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. வெலிகம, அக்குரஸ்ஸ போன்ற பிரதான நகரங்களும் இம்மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டம் "அம்பாந்தோட்டை மாவட்டம்"' இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாந்தோட்டை நகரம் இதன் தலைநகரமாகும். அம்பாந்தோட்டை மாவட்டம் 4 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 576 கிராமசேவகர் பிரிவுகளையும் 12 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. கேகாலை மாவட்டம் கேகாலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ளது. கேகாலை நகரம் இதன் தலைநகரமாகும். கேகாலை மாவட்டம் 9 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 573 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.