டயலொக் டயலொக் அக்சியாடா (Dialog Axiata) இலங்கையில் 750க்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்டுள்ள மிகவும் நெரிசலான வலையமைப்பாகும். ஆறு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள டயலொக் நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் 10 பில்லியன் இலங்கை ரூபாய்களை இலாபமீட்டிய ஒரு வர்த்தக நிறுவனமாகும். டயலாக் இலங்கையில் குழுக் குறுஞ்செய்திகளை இணையமூடாக வழங்குகின்றது. எனினும், இதனைப் பாவிப்பதற்கு அனைவரும் டயலொக் இணைப்பை வைத்திருத்தல் வேண்டும். இதன் முதன்மைப் போட்டியாளராக மோபிட்டல் விளங்குகின்றது. டயலொக் 2007 ஆம் ஆண்டு மாதாந்த வாடகையூடான செய்மதித் தொலைக்காட்சிச் சேவையினை தொடங்கியபோதும் இந்திய நிறுவனங்களின் இலவச சேவைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் வெற்றியடையவில்லை. செய்மதி இணைப்புக்களுக்கு தூரயா உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டயலொக்கின் போட்டி நிறுவனங்களாக மொபிடல், எட்டிசலட், எயார்டெல் போன்ற நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஜூன், 2010 நிலவரப்படி டயலொக் நிறுவனத்திற்கு 6.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இலங்கையின் மொத்த நகர்பேசி வாடிக்கையாளர்களில் 46% என்பதையும் குறிப்பிடவேண்டும். 2007 ஆண்டு இந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தமது சேவையினை முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் அட்டை (prepaid card) மூலம் பெற்றுக்கொள்வோரில் அரைப்பங்கினர் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள என தெரிவித்துள்ளது. முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்திற்கு 2009இல் டயலொக் நிறுவனம் தனது சேவைகளை வழங்கத் தொடங்கியது. இதன் படி கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற வன்னிப் பிரதேசங்களுக்கு முதலில் நகர்பேசி இணைப்புகளை வழங்கிய பெருமையை டயலொக் பெற்றுக்கொள்கின்றது. வடக்கு கிழக்குப் பகுதிகளிறுக் விஸ்தரிப்பு முதலிய காரணங்களால் நீண்டகாலம் நஷ்டத்தில் இயங்கிய டயலொக் நிறுவனம் 2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலாபத்தைக் குறித்துள்ளது. அகன்ற அலை அல்லது அகலப்பட்டை (Broadband) இணைப்புக்களை டயலாக் டெலிகாம் வழங்கி வருகின்றது. இவை வைமாக்ஸ் (WiMax) தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றன. சோதனை முயற்சியில் ஆரம்பத்தில் கொழும்பு, அம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் குருநாகலில் பொலநறுவை ஆகிய இடங்களில் ஆரம்பமான இச்சேவையை அடுத்து நாடு ரீதீயாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா நகரப்பகுதிகளில் இச்சேவையானது கிடைக்கின்றது. 3ஜி தொழில்நுட்பம் மூலம் டயலொக் நிறுவனம் நகர் அகலப்பட்டை இணைப்பை வழங்கிவருகின்றது. ஆரம்பத்தில் 7.2 Mbps வேகம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டாலும் இணைப்பைப் பெறும் இடத்தைப் பொறுத்து இந்த இணைய வேகம் மாறுபடக்கூடியது. ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேகம் கிடைக்கவில்லை என்று பல பயனர்கள் முறையிட்டதை அடுத்து டயலொக் நிறுவனம் தனது நகர் அலப்பட்டை இணைப்பு வேகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக அறிவித்தது. டயலொக் நிறுவனம் தெரிவு செய்யபட்ட சில இடங்களில் வை-பை அகலப்பட்டை சேவையை வழங்குகின்றது. விமான நிலையம், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் இந்த சேவையை வழங்குகின்றது . வாடிக்கையாளர்கள் தமது கடன் அட்டை அல்லது முட்கொடுப்பனவு அட்டை மூலம் பணத்தை செலுத்தி இந்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் . டயலொக் நிறுவனம் நான்காந் தலைமுறை இணையத் தொழினுட்பத்தை தென்னாசியாவில் முதன்முறையாக இலங்கையில் பரீட்சித்து, தற்போது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் சில பாகங்களில் மட்டும் பொதுமக்கள் பாவனைக்கு விட்டுள்ளது. கொழும்பில் தமிழர் ஒருவர் நடத்தி வந்த சீபிஎன் சாட் (CBN SAT) செய்மதித் தொலைக்காட்சி சேவையை தமிழர் என்பதைக் காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சினால் ஒளிபரப்பும் உரிமை மறுக்கப்பட்டது. பின்னர் இலங்கை உயர் நீதிமன்றத் தீர்புக்கு அமைவாக அடிமட்ட விலைக்கு டயலாக் நிறுவனத்திடம் விற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டதற்கு அமைய இத்தொலைக்காட்சி சேவையானது டயலாக் டெலிகாமினால் பலாத்காரமாக வாங்கப்பட்டு ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் பலபகுதிகளில் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்திற்கு மேலாக சீடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் தொலைபேசி இணைப்புக்களை வழங்கி வருகின்றது. பேஸ்புக், ட்விட்டர், கூகிள் கலண்டர் போன்ற சமூகவலைப்பின்னல் சேவைகளை டயலொக் ஆதரிக்கின்றது. நிகழ் நிலையில் சமூக வலைப்பின்னல் நிகழ்வுகளை குறுஞ்செய்தி அறிவிப்பு மூலம் டயலொக் வலையமைப்பில் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையில் இணைய வழி பொருட்களை விற்பனைசெய்யும் இந்த தளத்தை டயலொக் நிறுவனம் நடாத்தி வருகின்றது. பூக்கள் மூதல் கணனி உதிரிப்பாகங்கள் வரை இந்த வலைமலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தளம் டயலொக் நிறுவனத்தினால் நிர்வாகிக்கப்பட்டாலும் மூன்றாம் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தமது பொருட்களையும் இங்கே விற்பனை செய்யலாம். டயலொக் நிறுவனமானது இந்த தளம் மூலம் இலங்கையருக்கு உலகத்தரத்திலான இணைய வணிக அனுபவத்தை வழங்க விழைவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 5 சுந்தரப்பெருமாள் கோவில் சுந்தரப்பெருமாள் கோவில் (Sundaraperumal kovil) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம் ஆகும். இது கும்பகோணத்திலிருந்து - தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளதால் முதலில் அடையாளத்துக்காக‌ செளந்தராஜ பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் மருவி சுந்தரப்பெருமாள் கோவிலாக ஆகியிருக்க கூடும் என்றும் கருதப்படுகிறது. சோழர் காலத்தில் சுந்தர சோழ விண்ணகரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இப்போது மருவி சுந்தர பெருமாள் கோவில் என்று வழங்கப்படுகிறது. இந்த பெயர் மருவி வந்ததற்கு இவ்வூர் கோவிலின் பெயரும் காரணமாக இருக்கலாம். மேலும் சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் 8 கி. மீ தொலைவிலுள்ளது. இது இந்த கருத்தை வலுவூட்டுவதாக உள்ளது. இவ்வூரில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். குறிப்பாக ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, சம்பங்கி, காக்கரட்டான் போன்ற‌ மலர்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. மேலும் நெல் உற்பத்தியும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. இந்த ஊரை சுற்றிலும் காவிரியின் கிளை ஆறுகளான குடமுருட்டி, முடிகொண்டான், திருமலைராஜன், அரசலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாய்வதால் மிகவும் வளமாக காணப்படுகிறது. கோடைகாலத்தில் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்காத அளவுக்கு பசுமையான ஊராக உள்ளது. இந்த ஊரில் அரசு மருத்துவமனை, அரசு நூலகம், இரண்டு தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, தபால் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி, கைத்தறி கூட்டுறவுச் சங்கம் திருமண மண்டபம், கால்நடை மருத்துவமனை, வாகன வசதி, பேருந்து, புகைவண்டி நிலையம் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஏப்ரல் 6 ஆய்வுகூடக் கருவி ஆய்வுக்கூடக் கருவி என்பது ஆய்வுகூடமொன்றில் அறிவியலாளர்கள் அல்லது அறிவியல் மாணவர்கள் ஆய்வுகளுக்காகப் பயன்படுத்துகின்ற கருவிகள் அல்லது சாதனங்களைக் குறிக்கும். இவற்றுள், பாடசாலை ஆய்வுகூடங்களில் பயன்படும் எளிமையான கருவிகளிலிருந்து உயர்நிலை ஆய்வுகள் நடத்தப்படுகின்ற பெரிய ஆய்வுகூடங்களில் காணப்படும் சிக்கல்தன்மை கொண்ட சாதனங்கள் வரை உள்ளடங்குகின்றன. பன்சன் சுடரடுப்பு, நுண்நோக்கி, கலோரிமானி போன்றன பொதுவாக ஆய்வுகூடங்களில் காணப்படக்கூடிய கருவிகளாகும். முகவை முகவை (beaker) என்பது, ஆய்வுகூடங்களில், நீர்மங்களை (திரவங்களை) வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலம் ஆகும். முகவையின் அடிப்படைத் தேவையானது தான் கொள்ளும் நீர்மத்தால் தாக்குறலாகாது (வேதியியல் வழியோ மற்றும் வேறுவழிகளிலோ கரைத்தல், அரித்தல் முதலியன நிகழாமல் இருத்தல் வேண்டும்). முகவையானது எந்தவிதமான உருளை வடிவம் கொண்டதாக இருந்தாலும் இதன் அடி தட்டையானது (பெரும்பாலானவை). முகவைகள், சில மில்லிலீட்டர்கள் கொள்ளளவிலிருந்து, பல லீட்டர்கள் வரை கொள்ளக்கூடியதாகப் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை கண்ணாடியாலோ, பிளாஸ்ட்டிக்கினாலோ செய்யப்படலாம். கண்ணாடி முகவைகள் பெரும்பாலும் "பைரெக்ஸ்" கண்ணாடியினாலேயே செய்யப்படுகின்றன. அமிலம் போன்ற அரிக்கக்கூடிய திரவங்களை வைப்பதற்கான முகவைகள் டெஃப்லான் என்னும் பொருளினால் அல்லது அரிபடாத் தன்மை கொண்ட வேறு பொருட்களினால் ஆக்கப்படுகின்றன. உள்ளேயுள்ள நீர்மங்கள் மாசடைவதைத் தடுப்பதற்கும், ஆவியாதல் மூலமான இழப்பைத் தடுப்பதற்கும், முகவைகள் மணிக்கூட்டுக் கண்ணாடிகளால் மூடி வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் முகவைகளில் அளவு குறிக்கப்படுகின்றது. முகவையின் வெளிப்புறத்தில் இடப்படும் அமர புயங்கன் அமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய நாட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான். அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவனது தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீவல்லப பாண்டியன் சீவல்லப பாண்டியன் கி.பி. 945 முதல் 955 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டாம் இராசேந்திர சோழன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த சமயம் சோழ மன்னனிற்குத் திறை செலுத்தி வந்த காரணத்தினால் விடுதலை பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.கி.பி. 1054 ஆம் ஆண்டளவில் சீவல்லப பாண்டியனின் பட்டத்தரசியால் சோழ நாட்டுத் திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கப்பட்டது. சடையவர்மன் சீவல்லபன் சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் 'திருமடந்தையும் சயமடந்தையும்' எனத்துவங்குவது குறிப்பிடத்தக்கது. இவனைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள கல்வெட்டுக்கள் பல நெய்வேலி,மதுரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன. பராக்கிரம பாண்டியன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1150 முதல் 1160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த இவன் திருபுவனச் சக்கரவர்த்தி எனப்பட்டம் பெற்றிருந்தான். மாறவர்மன் என்னும் அடைமொழியினையும் பெற்றிருந்தான்.'திருமகள் புணர' என இவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.முதலாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டினை 40 ஆம் ஆண்டு ஆட்சி செய்த வேளை பராக்கிரம பாண்டியன் 23 ஆம் ஆண்டு ஆட்சியினை மேற்கொண்டிருந்தான். சடையவர்மன் பராந்தக பாண்டியன் சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இவனது மெய்க்கீர்த்தி "திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர" என இருக்கும்.சேர மன்னனொருவனை வென்று அவனிடம் திறை வசூலித்து,காந்தளூர்ச் சாலையில் களம் அறுத்து.விழிஞத்தைக் கைப்பற்றி தென் கலிங்க நாட்டில் தெலுங்கு வீமனை வென்று திருவனந்தபுரத்தில் திருமாலிற்கு மணிவிளக்குகளும் அளித்த பெருமையினை உடையவனுமாவான்.கூபகத்தரசன் மகளை மணம் செய்து கொண்ட இவன் அளப்பன,நிறுப்பன ஆகிய கருவிகளுக்கு அரச முத்திரை இட வைத்தான்.அதுவே கயல் முத்திரையாகும்.பாண்டியர்களின் குலதெய்வமான கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடத்தி அடியார்களுக்கு உணவிட்ட பெருமையையும் உடையவன் சடையவர்மன் பராந்தக பாண்டியன். மாறவர்மன் சீவல்லபன் மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் "பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப" எனத் தொடங்கும்.திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான்.மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சடையவர்மன் குலசேகர பாண்டியன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகனான இம்மன்னன் கி.பி. 1162 ஆம் ஆண்டளவில் முடிசூடிக்கொண்டான்.இவனது மெய்க்கீர்த்திகள் 'பூதலமடந்தை' எனத் தொடங்கும்.நெல்லையிலிருந்து பாண்டிய நாட்டில் இவன் ஆட்சி புரிந்தவேளை பராக்கிரம பாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி செய்தான்.பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்ய வேண்டுமென்ற போட்டி இருவரிடத்திலும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவாவினால் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டு பராக்கிரம பாண்டியனைப் போருக்கு அழைத்தான். பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடம் படையுதவிகள் வழங்குமாறு கேட்டதன் பொருட்டு தண்ட நாயகன் என்றவன் தலைமையில் பெரும்படையினை அனுப்பி வைத்தான். அப்படை மதுரையினை வந்தடைவதற்குள் பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று மதுரையினைக் கைப்பற்றியிருந்தான் சடையவர்மன் குலசேகர பாண்டியன்.இதனால் கோபமுற்ற தண்ட நாயகன் இராமேச்சுரம்,குந்துகாலம் போன்ற ஊர்களை மீட்டு வெற்றி பெற்றான்.இலங்கைப் படை அடிக்கடி போர் செய்தது இப்போர்களில் பாண்டிராசன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் தோற்றனர்.ஆளவந்தான் என்ற படைத்தலைவன் ஒருவனும் இறந்தான்.தண்ட நாயகன் போரில் வெற்றி பெற்றான்.கொங்கு நாட்டு மன்னனான தனது மாமனிடம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் படை உதவி கேட்டுப்பெற்றான்.இரு படைகளுடன் தண்ட நாயகனை எதிர்த்துப் போரிட்டான் இப்போரில் தண்ட நாயகன் வெற்றி பெற்றான்.மதுரையைக் கைப்பற்றினான். பராக்கிரம பாண்டியன்|பராக்கிரம பாண்டியனின் இறுதி மகனான சடையவர்மன் வீரபாண்டியன் மலை நாடு|மலை நாட்டில் மறைந்து வாழ்ந்தான் இவனை அழைத்து மதுரை ஆட்சிப் பொறுப்பினை அளித்தான் தண்ட நாயகன். மேலும் கீழை மங்கலம் மேலை மங்கலம் ஆகிய ஊர்களை கண்ட தேவ மழவராயனிடம் வழங்கி ஆட்சி செய்யச் சொன்னான். தொண்டி,கருத்தங்குடி,திருவேகம்பம் ஆகிய ஊர்களின் ஆட்சிப் பொறுப்பினை மழவச்சக்ரவர்த்திக்கு அளித்தான். சடையவர்மன் குலசேகர பாண்டியன் மீண்டும் ஒருமுறை படை திரட்டியதை அறிந்த சடையவர்மன் வீரபாண்டியன்மழவச்சக்ரவர்த்தி, மற்றும் கண்ட தேவ மழவராயன் மூவரும் தண்ட நாயகனுடன் சேர்ந்து சடையவர்மன் குலசேகர பாண்டியனை மதுரையை விட்டுத் துரத்தினர்.பராக்கிரம பாகுவிடம் படையுதவியைப் பெற்ற தண்ட நாயகன் சகத்விசய தண்டநாயகன் தலைமையில் பெரும்படையினைப் பெற்றான்.இப்படை வலிமையுடன் சடையவர்மன் குலசேகர பாண்டியனை வென்று மீண்டும் சடையவர்மன் வீரபாண்டியனிற்கு மதுரையை ஆளும் பொறுப்பினைக் கொடுத்தான் தண்ட நாயகன்.இப்போரின் பின்னர் சீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற போரிலும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தோல்வியைத் தழுவி நெல்லிக்குச் சென்று தங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1167 ஆம் ஆண்டளவில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இராசாதிராசனிடம் உதவி பெற்று திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படையினைப் பெற்று சிங்களப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். தொண்டி,பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்று இலங்கைப் படையே வெற்றியினை ஈட்டியது.காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டின்படி சோழ மண்டலம்,கொங்கு மண்டலம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் அச்சம் அடைந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இராசாதிராசன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் போர் உதவியாக தனது படைத் தலைவனான பெருமான் நம்பிப் பல்லவராயன் மூலம் சிங்களப் படைகளை அழித்தான்.சிங்களப் படைத்தலைவர்கள் இருவரையும் கொன்று தலைகளை மதுரைக்கோட்டை வாயிலில் வைத்ததாகக் கருதப்படுகின்றது.இதன் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் ஆட்சி நடைபெற்றது.இவற்றினை அறிந்த சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கோபம்கொண்டு சோழனையும்,பாண்டியனையும் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.சடையவர்மன் குலசேகர பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ள பரிசு பல அனுப்பி அவனது நட்பைப்பெற்றான்.சோழனது உதவியை மறந்து சிங்கள மன்னனுடன் நட்புக் கொண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் அவனுடன் மணத் தொடர்பு கொள்ளவும் செய்து,சோழனுக்கு பிடிக்காத செயல்களையும் செய்யத் தொடங்கினான்.சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன்,இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான்.இவற்றை அறிந்த சோழன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனைத் தண்டிக்க நினைத்து பராக்கிரம பாண்டியன் மகனான் வீரபாண்டியனுக்கு மதுரையினை அளிக்க நினைத்து தன் அமைச்சன் வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் ஆகியோருக்கு ஆணையிட்டான்.இம்மூவரின் பெரும்படையின் தாக்குதல்களால் சடையவர்மன் குலசேக பாண்டியன் போரில் தோற்று மறைந்து வாழ்ந்தான்.கி.பி. 1168 ஆம் ஆண்டளவில் ஆட்சியினை ஏற்ற சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1175 ஆம் ஆண்டளவில் நன்றி கெட்டதனால் ஆட்சியினை இழந்தான். சடையவர்மன் வீரபாண்டியன் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பராக்கிரம பாண்டியனின் மகனான இவனது மெய்க்கீர்த்திகள் 'பூமடந்தையும்,சயமடந்தையும்' எனத் தொடங்கும். இலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை இழந்தான்.பின்னர் சோழ படைத்தலைவரின் உதவியினால் சேர நாட்டிலிருந்து வந்து மதுரையினை ஆட்சி செய்தான்.கி.பி. 1180 வரை வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் போன்றவர்களினால் மதுரையினை ஆட்சி செய்தான்.பாண்டிய நாட்டினை 1178 ஆம் ஆண்டளவில் இராசாதிராசன் தனது ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினை கி.பி. 1178 ஆம் ஆண்டளவில் பெற்று சடையவர்மன் வீரபாண்டியனுக்கு பாண்டிய நாட்டினை ஆளும் பொறுப்பினையும் கொடுத்தான்.நன்றி மறந்த சடையவர்மன் வீரபாண்டியன் சிங்கள மன்னருடன் நட்புக் கொண்டான்.வீரபாண்டியனுடன் 1180 ஆம் ஆண்டில் மூன்றாங்குலோத்துங்கன் போர் செய்தான்.இப்போரில் சடையவர்மன் வீரபாண்டியனின் மகனொருவன் இறந்தான் என்பது கருத்து.ஏழகப்படைகளும்,மறவர் படைகளும் ஈழப் படையும் தோற்றனர்.போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன்னிடம் அடைக்கலம் கொண்டவிக்கிரம் பாண்டியனிடம் ஆட்சிப் பொறுப்பினை அளித்தான்.போரில் தோற்ற சடையவர்மன் வீரபாண்டியன் சேர மன்னனிடம் அடைக்கலம் கொண்டான் அச்சேர மன்னனும் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் இவனிடம் பகை கொள்வான் என்ற காரணத்தினால் சடையவர்மன் வீரபாண்டியனை மூன்றாம் குலோத்துங்கனிடம் அழைத்துச் சென்று மதுரையில் ஒரு பகுதியை அவனின் ஆட்சிக்கு கீழ் கொடுக்க வைத்தான்.சடையவர்மன் வீரபாண்டியனது மகன்களான வீரகேரளன்,பருதி குலபதி இருவருக்கும் தன் பக்கம் இருந்து விருந்துண்ணும் சிறப்பினை அளித்தான் மூன்றாம் குலோத்துங்கன்.இரு நிதி,பரிச்சட்டம்,இலங்கு மணிக்கலன் போன்றனவற்றினையும் 1180 காலப்பகுதியில் அளித்தான் என திருவக்கரை திட்சைக் குடிக் கல்வெட்டு குறிப்பிடும். அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில் அரியாலை சித்திவிநாயகர் கோயில் யாழ்ப்பாணம் அரியாலையில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் (A9) சுமார் 100 மீட்டர் மேற்காக அமைந்துள்ளது. இதன் மூல விக்கிரமானது காசியில் இருந்து கச்சிக் கணேசையரால் கொண்டுவரப்பட்டதாகக் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. 1918 ஆம் ஆண்டு அட்வகேட் அருளம்பலம் இந்த ஆலயத்தை விரிவாக்க உதவினார். இந்த ஆலயம் அரியாலை சிவன் கோயில் உடன் அமைந்துள்ளது. இக்கோயிலை மகாத்மா காந்தி, யோகர் சுவாமிகள், குன்றக்குடி அடிகள் போன்ற பெரியார்கள் தரிசனம் செய்திருக்கின்றார்கள். இந்த ஆலயத்திற்குச் சொந்தமான வயல், தென்னந்தோப்புக்கள் ஆகியன உள்ளபோதிலும் தற்போதைய உள்நாட்டுப் பிரச்சினையால் இவை உள்ள கிழக்கு அரியாலைப் பகுதியை அணுகமுடியாமல் உள்ளது. இந்த ஆலயக் காணியிலேயே அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை, அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம், பொது அங்காடி (சந்தை), கமத்தொழில் நிலையம், சித்த ஆயுள்வேதநிலையம், தற்போது இயங்கா நிலையில் உள்ள பாலர் பாடசாலை, பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், நெசவு ஆலை ஆகியவை அமைந்துள்ளன. இராஜேஸ்வரி சண்முகம் இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும், மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது மகன் சந்திரமோகன் ஒரு மெல்லிசைப் பாடகர். இளம் வயதிலேயே இறந்து விட்டார். சந்திரகாந்தன் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக உள்ளார். மகள் வசந்தி சண்முகம் வானொலி, மேடை நாடகங்களில் நடித்தவர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வருகிறார். நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற அகில இலங்கை மாவட்டப் பாடசாலைகள் நாடகப்போட்டியில் கண்ணகி பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். "கண்ணகி" நாடகத்தைப் பார்த்த வானொலி நாடகத் தயாரிப்பாளர் சானா (சண்முகநாதன்) இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார். சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி. விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். 1952, டிசம்பர் 26 இல் வானொலிக் கலைஞராக அறிமுகமானார். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். சில்லையூர் செல்வராசனின் "சிலம்பின் ஒலி" தொடர் நாடகத்தில் பாண்டிமாதேவியாக நடித்தார். 1952 முதல் 1969 வரை வானொலியில் நாடகம், மாதர் நிகழ்ச்சி, மற்றும் உரைச்சித்திரங்களில் நடித்து வந்தார். அசட்டு லட்சுமியாக இவர் நடித்த சி. சண்முகம் எழுதிய "நெஞ்சில் நிறைந்தவள்" நகைச்சுவை நாடகம் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் 52 வாரங்கள் ஒலிபரப்பாயின. 1969 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஆரம்பத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக அறிமுகமானார். 1971இல் மாதர், மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராக உயர்ந்தார். இறக்கும் வரை இவர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். வானொலியில் இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி, கவிதைசெண்டு என பல சுவையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல், கொழும்பு சர்வதேச ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சிகளில் ஈரடிக் கவிதை கொண்டு திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கி வந்தது இராஜேவரி சண்முகத்தின் தனிப்பாணியாகும். இராஜேசுவரி சண்முகத்தின் நேர்காணல்கள் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தினமலர், தினகரன், ராணி, மங்கை, தேவி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மூத்த செய்தி வாசிப்பாளராக ராஜேஸ்வரி பணியாற்றியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்பில் தனக்கென தனிச் சிறப்பை கொண்டிருந்த ராஜேஸ்வரி ஏனைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் வல்லவர். தனது இறுதி காலம் வரை செய்தி வாசிப்பாளராக இவர் சேவையாற்றினார். இலங்கை இயக்குனர் லெனின் மொராயஸ் இயக்கிய "நெஞ்சுக்குத் தெரியும்" தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் தாயாக நடித்தார் இராஜேசுவரி சண்முகம். இலங்கையில் தயாரிக்கப்பட்ட நான் உங்கள் தோழன் திரைப்படத்தில் ருக்மணி தேவிக்கும், குத்துவிளக்கு திரைப்படத்தில் சாந்திலேகாவுக்கும் பின்னணிக் குரல் வழ்ங்கினார். இராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2012, மார்ச்சு 23 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். விக்கிரம பாண்டியன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1180 முதல் 1190 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான இவன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றான்.மூன்றாம் குலோத்துங்கனுடன் மிகுந்த மரியாதையுடனும்,பண்பினையும் உடையவனாகத் திகழ்ந்த விக்கிரம பாண்டியன் கி.பி. 1190 ஆம் ஆண்டளவில் இவ்வுலக வாழ்வை நீத்தான் என்பது வரலாறு. எடுவர்டு பூக்னர் எடுவர்டு பூக்னர் ("Eduard Buchner", மே 20, 1860 – ஆகஸ்ட் 13, 1917) ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும் நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார். இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். எடுவர்டு பூக்னர் ஜெர்மனியில் மியூனிக் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் மருத்துவராகவும் குற்றவியலில் துப்பு கண்டுபிடிக்கும் மருத்துவராகவும் இருந்தார். எடுவர்டு பூக்னர் அவர்கள் 1884ல் மியூனிக் நகரில் அடால்ஃப் வான் பேயரிடம் (Adolf von Baeyer ) வேதியியலும் பேராசிரியர் சி. வான் நேகெலி (C. von Naegeli) அவர்களிடம் தாவரவியலும் பயிலத் தொடங்கினார். இவர் 1888ல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். லூயி பாஸ்ச்சர் லூயி பாஸ்ச்சர் ("Louis Pasteur", டிசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துக்கொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார். தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாஸ்ச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர். நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது. அவரது கண்டுபிடிப்பு அன்றிலிருந்து பல உயிர்களைக் காத்து வருகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய தொற்றுகளினால் ஏற்படும் இறப்பு வீதத்தைக் குறைத்ததுடன், வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார். அவரது மருத்துவக் கண்டுபிடிப்புகள் நோய்க் கிருமிக் கோட்பாட்டை (germ theory) நேரடியாக ஆதரிப்பதுடன், இந்தக் கோட்பாட்டின் மருத்துவத் துறைப் பயன்பாட்டுக்கும் உதவின. பால் மற்றும் வைன் ஆகியவற்றில் பாக்டீரியா கலப்படத்தைத் தவிர்ப்பதற்கான இவரது கண்டுபிடிப்பு பாஸ்ச்சர் முறை (pasteurization) என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர். லூயிசு பாஸ்ச்சர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் டிசம்பர் 27, 1822 இல் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக இருந்தார். இவரது குடும்பம் 1826 ஆம் ஆண்டில் மார்ன்சு க்கும் 1827 ஆம் ஆண்டில் அர்பாய்சு க்கும் இடம்பெயர்ந்தது. பாஸ்டியர் 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார். ஆரம்ப பள்ளி காலங்களில் பாசுச்சரின் ஆர்வம் மீன் பிடித்தல், வரைதல் போன்றவற்றில் இருந்ததுடன், அவர் ஒரு சராசரி மாணவராக இருந்தார். அவர் பல வண்ணங்களில் தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் உருவப்படங்களை வரைந்திருந்தார். டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். 1838 ஆம் ஆண்டு அக்டோபரில், பென்சியன் போர்பட்டுவில் இணைவதற்காக பாரிசை விட்டு சென்றார். ஆனால் வீட்டை பிரிந்த துயரத்தினால் மீண்டும் நவம்பரில் திரும்பினார். 1839 ஆம் ஆண்டில், அவர் மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்றார். அத்துடன் தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ல் பெற்றார். சிறப்புப் பாடமாகக் கணிதவியலைக் கொண்ட அறிவியல் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்ந்த வேளையில் அவர் பெசன்கான் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றினார். 1841 இல் தனது முதல் தேர்வில் தோல்வியடைந்த அவர், பின்னர் 1842 ல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் வேதியியலில் சாதாரண தகுதியையே பெற்றார். பின்னர் 1842 இல், பாஸ்டியர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எடுத்தார். அவர் முதலாவது சோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரது தரவரிசை குறைவாக இருந்ததனால், பாஸ்டியர் தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வதில்லை என முடிவெடுத்தார். அவர் சோதனைக்காகத் தயார் செய்வதற்காக மீண்டும் பென்சியன் பார்பெட் சென்றார். அவர் லைசி செயிண்ட்-லூயிஸ் இல் வகுப்புகளுக்கு சென்றதுடன், சோபோர்னில் உள்ள ஜீன்-பாப்டிஸ்ட் டுமாஸ் இல் விரிவுரைகளுக்கும் சென்றார். 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர். 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார். 1846 இல் அவர் Ardèche யிலுள்ள, கல்லூரி டி டோர்னனில் (தற்போது அக்கல்லூரி Lycée Gabriel-Faure (fr) என்றழைக்கப்படுகிறது) இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் வேதியியலாளர் அண்டோனே ஜெரோம் பாலார்ட், பாய்ச்சர் மீண்டும் Ecole Normale Supérieure க்கு ஒரு பட்டதாரி ஆய்வக உதவியாளராக வரவேண்டும் என்று விரும்பினார். அவர் Balard உடன் இணைந்துகொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார் டிஜோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக சேவை முடிந்த பின், 1848 ல், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் கடமையாற்றினார். அங்கு பல்கலைக்கழகத்தின் இயக்குநரின் மகளான மேரி லாரண்ட் ஐச் சந்தித்து திருமண ஒப்பன்ந்தம் செய்து கொண்டார். அவர்களிருவரும் 1849 மே 29 அன்று திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மூவர் குடற்காய்ச்சலினால் இறந்துவிட, இருவர் மட்டுமே வளர்ந்து பெரியவர்களானார்கள். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும், வைனும் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினால் கெட்டுப்போகின்றன. அப்படிக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக லூயி பாஸ்ச்சர் முன்வைத்த முறை இன்று பாச்சர்முறை என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளின் பெரும்பகுதியைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. கிருமியழித்தலில் போன்று, இங்கு அனைத்து நோய்க்காரணிகளும் அழிக்கப்படுவதில்லை. பதிலாக, அவற்றின் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாடான அளவிற்குக் கொண்டு வரப்படுவதனால், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம். இம்முறையில் பாலானது 60 and 100 °C வெப்பநிலை வரைக் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரை மணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது. நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர். தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார். கலப்படமில்லாமல் நுண்ணுயிரிகள் உருவாக முடியாது என்பதை இவரது சோதனைகள் உணர்த்தின. "பிரெஞ்சு அறிவியல் அகாடெமி"யின் துணைகொண்டு இவர், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட (sterilized) மற்றும் உறையிடப்பட்ட (sealed) குடுவைகளில் எதுவும் உருவாக இல்லை எனவும், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட ஆனால் திறந்த குடுவைகளில் நுண்ணுயிரி வளர முடியும் என நிரூபித்தார். கிருமிக் கோட்பாட்டை (germ theory) இவர் முன்மொழியா விட்டாலும், அவரது சோதனைகள் அதன் உண்மைத்தன்மையைக் குறிப்பிட்டு, பெரும்பாலான ஐரோப்பாவுக்கு அது உண்மை என உணர்த்தின. இன்று அவரும் "கிருமிக் கோட்பாட்டின்" தந்தை என வழங்கப்படுகிறார். பாஸ்ச்சர் வேதியியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமைவின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன்முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது. கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது. பாஸ்ச்சருக்கு முன்னரே வேறு விஞ்ஞானிகள் நொதித்தல் பற்றி ஆய்ந்து அறிந்திருந்தனர். 1830 ஆம் ஆண்டில், சார்லசு காக்னியர்டு-லாட்டூர் (Charles Cagniard de la Tour), பிரெடெரிக் டிராகாட் குட்சிங் (Friedrich Traugott Kützing), தியோடர் சுவான் (Theodor Schwann) ஆகியோர் நுண்ணோக்கி மூலம் மதுவத்தை (yeast) ஆராய்ந்து, அவை வாழும் உயிரினங்கள் என்று கூறியுள்ளனர். 1839 இல், ஜசுடசு வான் லீபிக் (Justus von Liebig), பிரெடெரிக் வோக்லர் (Friedrich Wöhler) மற்றும் சோன்ஸ் சேக்கப் பெர்சிலியசு (Jöns Jacob Berzelius) ஆகியோர் மதுவம் ஒரு உயிரினம் இல்லை என்றும் அவை தாவர சாறுகள் காற்றுடன் செயல்படும் போது உருவாகின்றன என்றும் அறிக்கைவிட்டனர். 1855 இல் மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஆண்டனி பிசாம்ப் (Antoine Béchamp), சுக்ரோசு கரைசலில் பரிசோதனைகளை மேற்கொண்டு நீர், நொதித்தலுக்குப் காரணியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் 1858 இல், அவர் தனது முடிவை மாற்றி, நொதித்தலுக்குக் காரணம் Mould என்னும் ஒரு வகை பூஞ்சையே என்றும், அவற்றின் வளர்ச்சிக்கு காற்று தேவைப்படுகிறது என்றும் கூறினார். நொதித்தலில் நுண்ணுயிர்களின் பங்கினை முதலாவதாக எடுத்து காண்பித்தவர் தானே என்று இவர் கூறினார். பாஸ்ச்சர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார். ஆனால் பிசாம்ப் இனுடைய ஆய்வறிக்கை ஜனவரியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. இருந்தாலும், பாஸ்சரின் 1857 ஆம் ஆண்டு ஆரம்ப ஆய்வுகளைப்பற்றி பிசாம்ப் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரினதும் முரண்பாடுகள் அவர்களது வாழ்வுக்காலம் முழுமைக்கும் நீண்டது. பி.பி.சியின் உலகின் சிறந்த பத்துப் பாடல்கள் பிபிசி செய்தி நிறுவனத்தின் 70 ஆம் ஆண்டு சேவையின் போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றின்படி உலகின் பத்துப் பாடல்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இப்பட்டியலில் வந்தே மாதரம் பாடல் இரண்டாவது இடத்திலும், இளையராஜாவின் இசையில் வெளிவந்த தளபதி திரைப்படப் பாடலான 'ராக்கம்மா கையத் தட்டு" பாடல் நான்காவது இடத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளினைப் பற்றிய திரைப்படமான 'முகங்கள்' படத்திலிருந்து பாடல் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றன. 150,000 மக்கள் தேர்தலில் பங்குபெற்று வாக்களித்தனர். ஷாமினி ஸ்ரோரர் ஷாமினி ஸ்ரோரர் (இயற்பெயர்: ஷாமினி ஜெயசிங்கம்) இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். அங்கும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். "தணியாத தாகம்" வானொலி தொடர் நாடகத்தில், முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்தவர். இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தொலைக்காட்சி நாடகமான 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தை எழுதிய மருத்துவக் கலாநிதி ஜெ. ஜெயமோகன் இவரது உடன்பிறந்தவர் ஆவார். அங்கையன் கைலாசநாதன் அங்கையன் கைலாசநாதன் (ஆகத்து 14, 1942 - ஏப்ரல் 5, 1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்து நாவல் இவரது "கடல் காற்று" (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். 1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்த அங்கையன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி ஆகியோரின் வழிகாட்டலில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதராலயத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய போது, 1967 இல் இராஜலட்சுமி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இராசலட்சுமி இலங்கைத் தமிழ்க் கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே அங்கையன் தன்னையொரு படைப்பாளியாக வெளிக்காட்டிக் கொண்டார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை எழுதினார். 2000 ஆம் ஆண்டின் பின் அங்கையன் சிறுகதைத் தொகுப்பு, நாவல் பிரசுரமாகின. பிரபல திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் அங்கையன் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார். 2000, 2001 இல் வடகிழக்கு மாகாண சபை அவரது சிறுகதைத் தொகுப்புக்கும் "சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும்' என்ற நாவலுக்கும் பரிசு கொடுத்துக் கௌரவித்தது. 4 ஆண்டுகளாக அங்கையன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். ஈழத்தின் மெல்லிசைப் பாடல் முன்னோடி அங்கையன். "மணிக்குரல் ஒலித்தது' என்ற புகழ் பெற்ற பாடல் உட்பட 9 மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். அங்கையனின் "சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும்" 1974 இலும் "செந்தணல்" 1968 இலும் கடல் காற்று 1962 இலும் பிரசுரமாகின. "சொர்க்கமும் நரகமும்" அவர் எழுதிய நான்காவது நாவல். செந்தணல் 1968 இல் படைக்கப்பட்ட பிரதேச நாவல். இது கொழும்பு நகர வாழ்வைச் சித்திரிப்பது. மித்திரன் இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது. கடல்சார் மக்களின் கதையே "கடல்காற்று' என்ற நாவல். அங்கையன் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தது. 1962 இல் பல்கலைக்கழகப் போட்டியில் பரிசுபெற்ற 94 பக்கங்களையுடைய நாவல். இரண்டாவது பதிப்பையும் கண்டது. விவசாயிகளின் ஆதிக்கத்தை விவரிக்கிறது. வீரகேசரியில் "கேட்டிருப்பாய் காற்றே' என்ற நாவலை வெளியிட்டார். வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார். சிங்கள நாவலொன்றையும், தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சிறந்த சஞ்சிகை ஆசிரியர் "சமூக தீபம்' என்ற சஞ்சிகையை வெளியிட்டவர். வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பதினைந்து ஆண்டுகள் தரமான பல ஆக்க இலக்கியங்களைப் படைத்த அங்கையன் கைலாசநாதன் 1976 ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கி, தமது முப்பத்தி மூன்றாவது வயதில் காலமானார். அளவி அளவி (burette) என்பது, கண்ணாடியால் செய்யப்பட்ட ஆய்வுகூடக் கருவிகளில் ஒன்று. நீண்ட குழாய் வடிவமான இதன் ஒரு முனை திறந்தும், கூம்பிச் செல்லும் மறுமுனை நீர்மங்கள் (திரவம்) குறைந்த அளவில் வெளியேறக்கூடியதாக குறுகிய துளை ஒன்றைக் கொண்டிருக்கும். இத் துளைவழியூடாக வெளியேறும் நீர்மத்தின் அளவைத் துல்லியமாகக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இத் துளையைத் திறந்து மூடக்கூடிய ஏற்பாடு உள்ளது. இதன் உடற்பகுதியில் அளவுக் குறிகள் இடப்பட்டிருக்கும். இந்த அளவீடுகள் அளவியின் உள்ளே வைக்கப்படுகின்ற நீர்மத்தின் கன அளவைக் குறிக்கும். இதைப் பயன்படுத்தும்போது, குறுகலான துளை கீழிருக்கும்படி நிலைக்குத்தாகத் தாங்கியொன்றில் பொருத்தப்படுகின்றது. இந்த நிலையில், மேலே பூச்சியத்தில் தொடங்கி கீழ்நோக்கி அதிகரித்துச் செல்லும் வகையிலேயே அளவிடப்படுகின்றன. இதனால், நீர்மம் வெளியேறும் போது வெளியேறும் அளவை நேரடியாகவே அறியமுடிகின்றது. உயர்தரமான அளவிகள், நீர்ம வெளியேற்றத்தை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்த வல்லன. "A" வகுப்பைச் சேர்ந்த அளவிகள் ±0.05 அளவுக்குத் துல்லியம் கொண்டவை. அளவிகள், சோதனைகளின் போதோ அல்லது வேறு தேவைகளுக்கோ, துல்லியமான அளவில் நீர்மங்களை அளந்து எடுக்க வேண்டியிருக்கும் போது பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கரைசல்களின் வலுவறிதல் (titration) சோதனைகளில், அளவியின் பங்கு இன்றியமையாதது. ஏப்ரல் 7 ஏப்ரல் 8 [[பகுப்பு:ஏப்ரல்]] [[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] ஏப்ரல் 9 ஏப்ரல் 10 ஏப்ரல் 11 வீரகேசரி (மன்னன்) வீரகேசரி கி.பி. 1065 முதல் 1070 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இவன் சோழ மன்னனான வீரராசேந்திரனுடன் 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரியின் இறப்பிற்குப் பின்னர் வீரராசேந்திரன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவன் மகனான அதிராசேந்திரனும் ஆட்சி செய்து வருகையில் கி.பி. 1070 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த காரணத்தினால் பாண்டிய நாட்டில் ஆட்சிகள் சீராக அமைக்கப்படவில்லை. கி.பி. 1081 வரை பாண்டிய மன்னர் சிலர் ஆண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குழாயி குழாயி அல்லது உறிஞ்சுக் குழாய், குமிழ்கூர்குழாய் என்பது குறிப்பிட்ட கனவளவு கொண்ட நீர்மத்தை (திரவம்) ஓரிடத்திலிருந்து எடுத்து இன்னோரிடத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் ஆய்வுகூடக் கருவியாகும். குழாயிகள், வேதியியல், மூலக்கூற்று உயிரியல், உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகள் சார்ந்த ஆய்வுகூடங்களிலும், மருத்துவச் சோதனைகளிலும் பயன்படுகின்றன. குழாயிகள் பல்வேறு தேவைகளுக்காக, வெவ்வேறு வடிவமைப்புக்களில் கிடைக்கின்றன. பல மட்டங்களிலான துல்லியங்களுடன்கூடிய இவை, தனியொரு கண்ணாடிக் குழாய் வடிவிலிருந்து, சிக்கலான அமைப்புக்களுடன்கூடிய மற்றும் மின்னணுக் குழாயிகள் வரை உள்ளன. நீர்மம் கொள்ளும் இடத்துக்கு மேல் வெற்றிடத்தை உருவாக்குவதன் மூலம் நீர்மத்தை உள்ளே இழுத்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளியை உள்ளே விடுவதன்மூலம் தேவையான அளவு நீர்மம் எடுப்பதே குழாயியின் செயற்பாட்டின் அடிப்படையாகும். 0.2 தொடக்கம் 1000 மைக்குரோ லீட்டர் வரை அளவுள்ள நீர்மங்களைக் கையாளுவதற்கான குழாயிகள் நுண்குழாயிகள் (micropipettes) எனப்படுகின்றன. ஆரம்பத்தில் குழாயிகள் கண்ணாடியாலேயே செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் வேதியியல் ஆய்வுகூடங்களில் நீர்க் கரைசல்களைக் கையாளுவதற்கே பயன்பட்டன. இத்தகைய குழாயிகள் இரண்டு வகையாக உள்ளன. ஒரு வகை நீண்ட மெல்லிய கண்ணாடிக் குழாயின் இடையில் ஒரு பெரிய குமிழ் போன்ற பகுதியைக் கொண்டது. நீளமான குழாய் போன்ற அமைப்பை உடைய மற்றவகைக் குழாயியில் அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். முதல் வகை ஒரு குறிப்பிட்ட நிலையான அளவு கொண்ட நீர்மங்களை எடுப்பதற்கே பயன்படுகின்றன. பொதுவாக 10, 25, 50 மில்லி லீட்டர் ஆகிய கொள்ளளவுகளை உடையனவாகச் செய்யப்படுகின்றன. இரண்டாவது வகைக் குழாயிகளை வெவ்வேறு அளவுகளில் நீர்மங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தமுடியும். எனினும் ஒற்றைக் கனவளவுக் குழாயிகள் கூடிய துல்லியம் கொண்டவையாகும். கோகிலம் சுப்பையா கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே தமிழ் அறிஞரான பேராசிரியர் "Kamil Zvelebil" அவர்களைச் ச்ந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது "தூரத்து பச்சை" நாவலை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். 1965 இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், "Mirage" என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இறைச்சி, ஊன்தசை இறைச்சி ("meat") என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குத் திசுக்களைக் குறிக்கும். விலங்குகளின் தசைகள், மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்குகள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்கள் அனைத்துமுண்ணி என்பதால் இதனை உணவாக உட்கொள்கின்றனர்., இறைச்சி என்பது நீர், புரதம், மற்றும் கொழுமிய மூலக்கூறுகளால் ஆனது. முன்பு இது பச்சையாக உண்ணக்கூடியதாக இருந்தாலும் பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் சமைத்த பின்னரோ அல்லது பதப்படுத்தியோ உண்ணப்படுகிறது. சமைக்கப்படாத இறைச்சியானது சில மணி நேரத்தில் கெட்டு அல்லது அழுகி விடும். சில நாட்களாயின் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை இறைச்சியில் பெருகி அதை அழித்துவிடும். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கொழுப்பு மற்றும் மற்ற தசைகளைக் குறிக்கும். ஆனாலும் உண்ணக்கூடிய எலும்பு சாராத ஊணுறுப்புகளையும் இச்சொல் குறிக்கிறது. பொதுவாக இறைச்சி என்ற சொல் பாலூட்டி வகை விலங்குகளின் (பன்றி, கால்நடை விலங்குகள், ஆடு) இறைச்சியை மனித இனம் நுகர்வுக்காக பயன்படுத்துவதை குறிப்பதாகக் கருதப்பட்டாலும் மீன், மற்ற கடல் உணவுகள், கோழியினங்கள் மற்றும் மற்ற விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்தே இறைச்சி என அழைக்கப்படுகிறது. முந்தைய மனிதர்களின் உணவில் கணிசமான விகிதத்தை இறைச்சி கொண்டிருந்ததாக தொல்லுயிரியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. பண்டைய வேட்டையாடிகள் மற்றும் இறைச்சி சேகரிப்பாளர்கள் அமைப்பு ரீதியான வேட்டையாடும் முறைகளைக் கொண்டு பெரிய விலங்குகளான காட்டெருது மற்றும் மான் போன்றவற்றை இறைச்சிக்காக நம்பியிருந்தனர். பனியுகத்தின் கடைசிக்கட்டங்களில் (கி.மு 10,000) விலங்குகளை மனித இனம் பழக்கப்படுத்துதல் செயல் நிகழ்ந்ததற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கின்றன. திட்டமிடப்பட்ட அமைப்பியல் ரீதியான இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக விலங்குகளை வளர்த்தல் மற்றும் அவற்றைப் பெருக்குதல் போன்ற செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஆரம்பகால நாகரிகங்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த முறைகளே தற்பொழுதும் மனித இனம் இறைச்சிக்காக நம்பி இருக்கும் மூல ஆதாரமாகும். இது தவிர பிற விலங்குகளும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன. இறைச்சி நுகர்வானது கலாச்சாரம், பாரம்பரியம், விலங்குகளின் கிடைக்கக்கூடிய தன்மை போன்ற காரணிகளால் வேறுபடுகின்றன. மேலும் வருமானம் போன்ற காரணிகளும் இறைச்சி நுகர்வு நாட்டிற்கு நாடு வேறுபடுவதற்கான காரணிகளாக விளங்குகின்றன. ஜப்பான், அலாஸ்கா, சைபீரியா, கனடா, பரோயே தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, புனித வின்சென்ட்டு மற்றும் கிரெனடீன்கள் தீவு மற்றும் இந்தோனேசியாவில் உள்ள இரண்டு சிறிய சமூகங்கள் ஆகியவற்றில், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள், அவற்றின் ஒரு பகுதி சதைகளுக்காக வேட்டையாடுகின்றன. இறைச்சி நுகர்வு உலகளவில் மாறுபடுகிறது. மேலும் கலாச்சார அல்லது மத முன்னுரிமைகள், பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றைப் பொறுத்தும் இறைச்சி நுகர்வு அளவுகள் மாறுபடுகிறது. பொருளாதார, சுற்றுச்சூழல், சமய அல்லது உடல்நலக் கூறுகள் காரணமாக சைய உணவை உட்கொள்பவர்கள் போன்ற காரணிகள் இறைச்சி உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுகளின் படி, 1990 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெள்ளை மாமிசத்தின் ஒட்டுமொத்த நுகர்வு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கு 76.6% மற்றும் பன்றி இறைச்சி 19.7% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், மாறாக, மாட்டு இறைச்சி 1990 ல் 10.4 கிலோகிராமில் (23 பவுண்டு) இருந்து 2009 ஆம் ஆண்டில் 9.6 கிலோகிராம் (21 பவுண்டு) ஆக குறைந்துள்ளது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு எல்லாத் தசைத் திசுக்களும் புரதச் சத்து மிக்கவை. மேலும் இன்றியமையாத அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன. இத்திசுக்கள் குறைந்த காபோவைதறேற்றுக்களையே கொண்டுள்ளன. இவற்றில் உள்ள கொழுப்புச்சத்தானது எந்த விலங்கின் இறைச்சி என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது. பிரி புனல் பிரி புனல் என்பது, ஒன்றுடன் ஒன்று முழுமையாகக் கலக்கும் இயல்பில்லாத, வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்ட இரண்டு நீர்மங்களில் கலவையிலிருந்து அவற்றைப் பிரிப்பதற்கான ஆய்வுகூடக் கருவியாகும். இது பொதுவாக போரோசிலிக்கேட்டுக் கண்ணாடியால் செய்யப்படுகின்றது. பொதுவாக ஒரு நீர்மம் நீராக இருக்கும். மற்றது, ஈதர், குளோரோபாம் அல்லது எண்ணெய் போன்ற ஒரு கரிமக் கரைப்பானாக (organic solvent) இருக்கலாம். கூம்பொன்றின் மேல் அரைக்கோளம் ஒன்று கவிழ்க்கப்பட்டது போன்ற வடிவம் கொண்ட இதன், மேல்பகுதியில் ஒரு மூடியும், கீழ்ப்பகுதியில் stopcock ஒன்றும் இருக்கும். இரு நீர்மங்களின் கலவை, மேற்பகுதியிலுள்ள வாய்வழியாக புனலுள் ஊற்றப்படும். அடுத்துப் புனலைத் தலைகீழாகக் கவிழ்த்துக் குலுக்கப்படும். stopcock ஐத் திறந்து மேலதிகமாக இருக்ககூடிய அமுக்கத்தை விடுவித்தபின்னர், மீண்டும் அதனை மூடி நேரான நிலைக்குக் கொண்டுவந்து நீர்மங்கள் அடைய விடப்படும். அடர்த்தி கூடிய திரவம் கீழ்ப் பகுதியில் தங்க, அடர்த்தி குறைந்தது அதன்மேல் மிதக்கும். இன்நிலையில் கீழுள்ள stopcock ஐத் திறந்து கீழ்ப் பகுதியில் அடைந்துள்ள நீர்மத்தைத் தனியாக வெளியில் எடுக்க முடியும். இந் நீர்மம் முற்றாக வெளியேறியதும், மற்ற நீர்மத்தைத் தனியாக எடுக்கலாம். இந்தியாவில் இரயில் போக்குவரத்து இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப் படுகிறது. இரயில் போக்குவரத்தானது இந்திய இரயில்வே என்ற அரசு நிறுவனத்தினால் ஆளப்படுகிறது. இரயில் பாதைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. இதன் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்கள் ஆகும்.இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும். இது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது. இந்தியாவில் இருப்புப்பாதைக்கான திட்டம் 1832ஆம் ஆண்டில் வரையப்பட்டது. 1836 இல் முதல் இருப்புப் பாதை தற்போதைய சென்னையின் "சிந்தாதரிப் பேட்டை பாலம்" அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது. 1837இல் செங்குன்றம் ஏரிக்கும் செயின்ட்.தாமசு மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே தொலைவிற்கு நிறுவப்பட்டது. 1844இல் அப்போதைய கவர்னர் ஜெனரல் என்றி ஆர்டிஞ்ச் தனியார்த்துறையினரும் இருப்புப் பாதைகள் அமைக்க அனுமதித்தார். தொடர்வண்டியானது இந்தியாவில் முதலில் போர்பந்தர் மும்பை- தாணே இடையே 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-இல் நாடு விடுதலை அடைந்த போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னர் 1951-இல் இது நாட்டுடமையாக்கப்பட்ட போது இது உலகின் பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது. இடச்சு மொழி இடச்சு ('; நெதர்லாந்து மொழி) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். இடச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது. யாழ்ப்பாணத்து நாட்டுக் கூத்து பல்வேறு பண்பாட்டினரிடையே நிலவி வந்ததைப் போலவே நாட்டுக்கூத்து, யாழ்ப்பாணத்துமக்களுடைய முக்கியமான பொழுது போக்குகளுள் ஒன்றாக விளங்கியது. ஒரு காலத்தில் பல நாடுகளிலும், கூத்தும் அதையொத்த கலை வடிவங்களும் வலிமைவாய்ந்த ஊடகங்களாக விளங்கியிருக்கின்றன. யாழ்ப்பாணமும் இதற்கு விதிவிலக்கல்ல. இவை பொழுது போக்குக்காக மட்டுமன்றி அறிவூட்டல், பிரச்சாரம் போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்பட்டன. இன்று பல்வேறு புதிய ஊடகங்களின், முக்கியமாகத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றின், அறிமுகமும், பல்வேறு புதிய வகை நாடக வகைகளின் அறிமுகமும் மரபுவழியான நாட்டுக் கூத்துகளின் செல்வாக்கைக் குறைத்துவிட்டன. யாழ்ப்பாணத்துக் கூத்து மரபுகளின் அடிப்படைகள் பொதுவாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்தவையே. நாட்டுக்கூத்துகள் நாடகம், விலாசம் என இரண்டு வகையாக இருந்ததாகப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். நாடகங்கள் தமிழ் நாட்டில் பழமையான வடிவங்கள் என்றும், சோழர் காலத்தில் கோயில்களில் நாடகங்கள் நடிக்கப்பட்டன என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். விலாசம் என்னும் கூத்து வடிவம் விஜய நகரக் காலத்திலேயே எழுந்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. நாடகங்கள் தமிழ் மரபு சார்ந்தவையாக இருக்க, விலாசங்களில் வடநாட்டு அம்சங்கள் கலந்திருந்தன எனக் கூறும் அவர் பிற்காலத்தில் இவற்றுக்கிடையே அதிக வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டதாகவும் குறிப்பிடுகின்றார். பெப்ரவரி 29 பெப்ரவரி 29 ("February 29" அல்லது "leap day", லீப் நாள்) கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. பெப்ரவரி 29 வரும் ஒரு ஆண்டு "நெட்டாண்டு" என அழைக்கப்படுகிறது. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான பெரும்பாலான ஆண்டுகளில் மட்டுமே (எடுத்துக்காட்டு: 2000, 2004, 2008 என்பன) வருகிறது. எனினும், நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளான 1900, 2100 போன்றவை நெட்டாண்டுகளல்ல. அநேகமான இன்றைய நாட்காட்டிகள் 365 நாட்களைக் கொண்டிருந்தாலும், பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிவருவதற்கு (சூரிய ஆண்டு) கிட்டத்தட்ட 365 நாட்களும் 6 மணித்தியாலங்களும் எடுக்கின்றது. மேலதிகமான இந்த 24 மணித்தியாலங்கள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டு, மேலதிக ஒரு முழுமையான நாள் சூரியனின் தோற்றநிலைக்கு ஏதுவாக நாட்காட்டிகளில் சேர்க்கப்படுகிறது. எனினும், சூரிய ஆண்டு உண்மையில் 365 நாட்கள் 6 மணித்தியாலங்களை விட சிறிது குறைவாகும். குறிப்பாக, அல்போன்சிய அட்டவணையின் படி, பூமி சூரியனை முழுமையாகச் சுற்றி வர 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் (365.2425 நாட்கள்) எடுக்கிறது. இதனால், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு மேலதிக நாளை சேர்ப்பதால் நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள் மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்களாகும். இந்தக் குறைபாட்டை சமப்படுத்த, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் மூன்று லீப் நாட்கள் கைவிடப்பட வேண்டும். பொது விதிக்கு விதிவிலக்காக கிரெகொரியின் நாட்காட்டி குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் படி, 100 ஆல் வகுக்கப்படும் ஒரு ஆண்டு நெட்டாண்டாக இராது. ஆனால் அந்த ஆண்டு 400 ஆல் வகுக்கப்பட்டால் அந்த ஆண்டு நெட்டாண்டாக இருக்கும். அதாவது, 1600, 2000, 2400, 2800 ஆகியவை நெட்டாண்டுகளாக இருக்கும். அதே வேளையில் நானூறால் வகுக்கப்படாத ஆனால் நூறால் வகுக்கப்படும் 1700, 1800, 1900, 2100, 2200, 2300 போன்றவை நெட்டாண்டுகளாக இராது. உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார். அருள் சுப்பிரமணியம் அருள் சுப்பிரமணியம் ஈழத்தின் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். "அக்கரைகள் பச்சையில்லை" (வீரகேசரி பிரசுரம்), "அவர்களுக்கு வயது வந்துவிட்டது" போன்ற நாவல்களை எழுதியவர். ஆனந்த விகடன் இதழில் "சூரசம்ஹாரம்" என்ற தொடர்கதையை எழுதினார். இராஜ அரியரத்தினம் இராஜ அரியரத்தினம் (15 சனவரி 1916 - 28 மே 1998) ஈழத்தின் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர். ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர். ஆரம்பத்தில் இவர் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது முதல் சிறுகதை "வயலுக்குப் போட்டார்" ஈழகேசரி பத்திரிகையில் 1945 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதே கதை சிற்பி சரவணபவன் தொகுத்து வெளியிட்ட தொகுப்பில் "வெள்ளம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இராஜ அரியரத்தினம் 1941 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டில் அப்பத்திரிகை மூடப்படும் வரையில் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களின் ஆரம்பத்தில் தங்கப்பூச்சி என்ற பெயரில் ஈழகேசரியில் ஒரு தொடர் புதினத்தையும் எழுதினார். செருமானிய எழுத்தாளர் தோமசு மான் எழுதிய எழுதிய புதினம் ஒன்றை இவர் "மனவிகாரம்" என்ற தலைப்பில் சோனாசலம் என்ற புனைபெயரில் ஈழகேசரியில் எழுதினார். "அரியம்", அரியரத்தினம் சோனாசலம் போன்ற புனைபெயர்களிலும் இவர் எழுதினார். சோனாசலக் கவிராயர் என்ர பெயரில் கவிதைகளும் இவர் எழுதியுள்ளார். ஈழகேசரி பத்திரிகை மூலமாக கல்கி, பெரியசாமி தூரன் போன்றோர் இவருக்கு நண்பர்களாயினர். "கல்கி பிறந்தார்" என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். ஈழகேசரி மூடப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையில் இரண்டாண்டுகள் பணியாற்றி 1960 ஆம் ஆண்டில் கொழும்புக்கு இடம் பெயர்ந்தார். அங்கு சுயாதீனப் பத்திரிகை நிறுவனம் நடத்திய தினபதி நாளேட்டின் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அக்கால அரசியல் நெருக்கடியால் இப்பத்திரிகைக் காரியாலயம் அப்போதைய அரசால் மூடப்பட்டதை அடுத்து சிந்தாமணி பத்திரிகையும் நிறுத்தப்பட்டது. இராஜ அரியரத்தினம் தமிழ்நாடு சென்றிருந்தபோது 1998 மே 28 இல் தனது 82வது அகவையில் சென்னையில் காலமானார். தமிழியல் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் தமிழியல் ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களைப் பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம். தமிழும் தமிழரும் பிற மொழிகளுடனும் இனங்களுடனும் உறவுகளை வரையறை செய்யும் துறையாக தமிழியல் இருக்கின்றது. பிற மொழிகளையும் இனங்களையும் தமிழர்கள் அறியும், ஆயும் ஒரு துறையாகவும் இவ் இயலை பார்க்க வேண்டும். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழர்களுக்கு தமிழியல் முக்கிய இயலாக பரிணமித்துள்ளது. தமிழியல் கல்வித்துறை தமிழை பாரம்பரியமாக ஆய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் மரபில் இருந்தோ அல்லது தமிழை தினசரி வாழ்வுக்கு பயன்படுத்தும் தமிழ் மக்களிடம் இருந்தோ தோன்றாமல் மேற்கத்தைய இன-மொழி ஆய்வு துறையின் ஒரு பகுதியாக தோற்றம் கண்டது. மேற்கத்தைய Oriental Studies - இந்தியவியல் (Indology) பின்புலத்தில் இருந்து தோன்றியது. இதன் நோக்கம் தமிழ் மொழியையோ தமிழர் சார் விடயங்களையோ மேம்படுத்துவது என்று சொல்ல முடியாது. மாற்றாக தமிழ் மொழியையும் தமிழர் சார் விடயங்களையும் ஆய்ந்து தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வதே ஆகும். காலனித்துவ நிர்வாகம், மத மாற்றம், தங்களது மேலாண்மையை நிறுவுவது ஆகியவை இந்நோக்கங்களுக்குள் அடங்கும். இன்று இத்துறை South Asian Studies என்று மருவியுள்ளது; ஆனால் இன்று இவற்றின் நோக்கங்கள் சற்று ஆரோக்கியமான மாற்றங்களுக்கும் உட்பட்டு நிற்கின்றன. எனினும் இன்றும் நாடுகளின் (எ.கா ஐக்கிய அமெரிக்கா) இராணுவ வெளிவிவகார நடவடிக்கைகளுக்கு இந்தத் துறைகளின் ஆய்வுகள் முக்கியமானவை; இத்துறைசார் புலமையாளர்களும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றார்கள். ஆரம்ப தமிழியல் ஆய்வாளர்கள் தமிழையும் தமிழரையும் கருப்பொருளாக நிறுத்தி, தம்மை சற்று உயரநிறுத்தி, ஊடறுத்து ஆய்ந்தார்கள். இவர்களில் காலனித்துவ ஜெர்மனிய, பிரெஞ்சு, போர்த்துக்கீச, ஒல்லாந்த (டச்சு), ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகள் பின்னாளில் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அறிந்து கொள்ள பெரிதும் பயன்பட்டன. இதுவரை பிறர் தமிழையும் தமிழரையும் ஆயும் ஒரு துறையாக தமிழியல் முதன்மையாக இருந்ததனால், இதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆக்கங்கள் பெரும்பாலானவை பிற மொழிகளிலேயே இருக்கின்றன. இன்று அனேக தமிழியல் ஆய்வுகளும் மாநாடுகளும் ஆங்கிலத்தில்தான் அமைகின்றன. தமிழ்நாட்டில் இடம்பெறும் தமிழர்களே பிரதானமாக பங்குகொள்ளும் களங்களும் ஆங்கிலத்தில் அமைகின்றன. தமிழியலை மேற்கத்தைய ஆய்வாளார்களின் பிரதான ஆளுமைக்குள் இருந்து மீட்டெடுத்து தமிழர்களின் ஆளுமைக்குள் உட்படுத்தியதில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளும், தனிநாயகம் அடிகள் ஆரம்பித்த "Tamil Culture" ஆராய்ச்சி ஏடும் முக்கியப் பங்கு வகித்தன. அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் பிரிவு 1995 ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான ஜார்ஜ் எல் ஹார்ட் இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று தமிழியல் மாநாடுகள் இங்கு நடைபெற்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது. ஜெர்மன் கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை 1960 களில் இருந்து சிறப்பாக செயற்பட்டு வந்து, 2004 ஆண்டளவில் மூடப்பட இருந்து, 2008 மீண்டும் வீச்சுடன் செயற்படுகின்றது. கோலம் என்ற தமிழியல் கல்வி ஏடு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மொழி என மூன்று மொழிகளிலும் இத்துறையால் முன்னர் வெளியிடப்பட்டது. கனடா ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006, 2007 ஆண்டுகளில் தமிழியல் மாநாடுகள் இவர்களால் ஒழுங்கமைப்பட்டது. 2008 க்கான மாநாடு மே 15-17 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது. சிங்கப்பூரில் தமிழ் ஒரு அரசு அலுவல் மொழியாகும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை (http://www.nustls.org/) கல்வி, கலை, சமூக சேவை என குழு ஒற்றுமைச் செயற்பாட்டு திறன் வாய்த ஒரு அமைப்பு ஆகும். மாத்தளை முத்துமாரியம்மன் கோயில் மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவில் ஆகும். இது கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து தேர்களைக் கொண்டுள்ளது, தவிர இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரமும் அமைந்துள்ளது. கொடியேற்றத்தை அடுத்து இரதோற்சவம் 21ஆம் நாள் அன்று நடைபெறும். இரதோற்சவம் அன்று முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர் ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து வீதியூடாகப் பவனிவருவார். இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்துள்ளன. பின்னர், படிப்படியாக திருவிழாக்களும் சப்பரத்தேர் எடுக்கும் வழக்கமும் தோன்றின. 1934 ஆம் ஆண்டளவில் சப்பரத்தை மாற்றி விநாயகரையும் சிவனம்பாள், முருகன் இரதோற்சவமும் நடைபெற்றன. 1955 ஆம் ஆண்டு இராஜகோபுரம் உட்பட பல ஆலய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தில் மகா மண்டபம் உட்பட முருகன் கோயில், வசந்த மண்டபம், விஷ்ணு கோயில், நாயன்மார் கோயில், மீனாட்சி, சிவன் கோயில் என்பன திருப்பணி செய்யப்பட்டன. 1977 ஆம் ஆண்டு அம்பாளுக்கு சித்திரத்தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய இரதங்களும் எரியூட்டப்பட்டதுடன் கல்யாண மண்டபம் உட்பட பல பகுதிகள் சேதமாக்கப்பட்டு பெரு அழிவுகள் ஏற்படுத்தப்பட்டமையால் ஆலயவளர்ச்சி குன்றியது. 1992 ஆம் ஆண்டில் சித்திரத் தேரையும் ஏனைய இரதங்களையும் அமைக்கும் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இவ்வாலயத்தில் அமைந்துள்ள 108 அடியைக் கொண்ட இராஜகோபுரம் இந்து சமய மக்களின் ஒற்றுமையையும் இந்து சமய திருப்பணியின் வளர்ச்சியையும் உயர்த்தி நிற்கும் அற்புதக் கோபுரமாகும். சண்டிலிப்பாய் விசுவநாதீசுவரர் கோயில் இது யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் அமைந்துள்ள 200 ஆண்டுகளிற்கு மேற்பட்ட ஆலயம். மூலமூர்த்தியாக ஸ்ரீ விஸ்வநாதப் பெருமாள் வீற்றிருக்கின்றார். பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், சனீஸ்வரன், வைரவர் ஆகிய மூர்த்திகள் உள்ளனர். நாளும் இருகாலப் பூசைகள் நடைபெறுகின்றது. அலங்கார உற்சவம் பங்குனியில் பத்துத் நாட்களுக்கு நடைபெறுகின்றது. சிறீ பார்வதி சமேத பரமேசுவரன் ஆலயம் இது சேர் பொன் இராமநாதானால் 1921 இல் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரிச் (இன்றைய யாழ் பல்கலைக்கழகம்) சூழலில் உருவாக்கப்பட்டதாகும். 1926 இல் இதற்கான அத்திவாரம் இடப்பட்டு 1928 இல் திருக்கோயில் பெருமளவு முற்றுப் பெற்று தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலிற்கு லிங்கமும், அம்மன், பிள்ளையார், முருகன், நவக்கிரகங்கள், நந்தி முதலியவற்றிற்கான கற்சிலைகள் இந்தியாவில் கொண்டுவரப்பட்டன. இதில் நவக்கிரம் தவிர ஏனையவை தொடக்கத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரி சேர் பொன் இராமநாதனால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்களுக்கான பாடசாலையாகும். இது இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுவில் பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் வடக்குமருதனார்மடம் சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளுள் ஒன்றாகும். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேசிய எழுச்சியின் விளைவாக யாழ்ப்பாணத்தில் இந்துப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை அமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இந்துக் கல்லூரிகள் தொடங்கின. அக் காலத்தில் இலங்கைச் சட்டநிரூபண சபையில் உறுப்பினராக இருந்த சேர். பொன். இராமநாதன், தேசியப் பள்ளிகளுக்கு ஆதரவாகச் சட்ட நிரூபண சபையிலும், வெளியிலும் செயற்பட்டு வந்தார். யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட இந்துப் பாடசாலைகள் ஆண்பிள்ளைகளுக்கான பாடசாலைகளாகவே இருந்தன. சைவப் பெண் பிள்ளைகள் கல்வி பெறாத நிலையையும் அதற்கான பாடசாலைகள் இல்லாத நிலையையும் மாற்றும் நோக்குடன் இராமநாதன் இந்தப் பெண்கள் கல்லூரியை அமைக்க முன்வந்தார். கணையம் கணையம் (() (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது.. அத்துடன் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இன்சுலின், குளூக்கொகான் (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றது. இதனால் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஒரு அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஒரு அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம், Chyme)பொன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன. நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும் பொழுது சாயம் ஏற்றிய கணையத்தின் இழையம் (திசு) இரு வேறு வகையானவையாகக் காணப்படுகின்றன மெலிதாகச் நிறச்சாயம் ஏற்று இருக்கும் உயிரணுக்குழுமங்கள் இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் (islets of Langerhans) என்றும், அடர்த்தியாக நிறமேற்று இருக்கும் பகுதிகள் குலை (குறும்பழங்கள் நிறைந்த குலை போல் காட்சியளுக்கும், ஆங்கிலத்தில் acinii (ஒருமை acinus))) என்றும் பெயர். இலாங்கர்ஃகான்சு திட்டு உயிரணுக்கள் நாளமில்லாச் சுரபித் தொகுதியின் செயல்களுக்கு உதவுகின்றன. குலை உயிரணுக்கள் நாளச்சுரபியின் செயற்பாட்டுக்கு உதவுகின்றன, குறிப்பாக செரிமான நொதியங்களைச் சுரந்து குழாய்வழி செலுத்த உதவுகின்றன. குளூக்கொகான் குளூக்கொகான் (Glucagon) என்பது மாவுப் பொருள்களை மாற்றி உடலுக்குத் தேவையானவாறு ஆற்றலைப் பெற பயன்படும் ஓர் உயிர்வேதியியல் வினைக்குறிப்பேந்தி (அல்லது வினைக்குறிப்பூட்டி) ஆகும். இந்த குளூக்கொகான் கணையத்தில் உருவாகின்றது. இரத்தத்தில் குளுக்கோசு மட்டம் குறைந்துவிட்டால், குளூக்கொகான் வெளிப்படுகின்றது. இதனால் கல்லீரலில் சேமித்து வைத்திருக்கும் கிளைக்கோசனை குளுக்கோசாக மாற்றி அரத்த ஓட்டத்தில் கலக்க குறிப்பு தந்து உதவி செய்கின்றது. எனவே குளூக்கொகானின் பணி இன்சுலினின் பணியில் இருந்து நேர்மாறானது. இன்சுலின் பணியானது உடலில் குளூக்கோசு மட்டம் உயர்ந்தால் செல்களுக்குக் குறிப்பு தந்து இரத்தத்தில் இருந்து குளூக்கோசை உள்வாங்கி நீக்க உதவுகின்றது. குளூக்கொகான் 29 அமினோக் காடிகள் கொண்ட பல்புரதக்கூறாகும். இதன் மூலக்கூறு எடை 3485 டால்ட்டன்கள் என்று கண்டறிந்துள்ளனர். மாந்தர்களின் உடலில் உள்ள குளூக்கொகானின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது: NH-His-Ser-Gln-Gly-Thr-Phe-Thr-Ser-Asp-Tyr-Ser-Lys-Tyr-Leu-Asp-Ser-Arg- Arg-Ala-Gln-Asp-Phe-Val-Gln-Trp-Leu-Met-Asn-Thr-COOH. இப்பொருளை முதன்முதலாக 1923ல் கிம்பல் (Kimball) என்பாரும் மர்லின் (Murlin) என்பாரும் கண்டுபிடித்தனர். இவர்கள் கணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை ஆய்ந்த பொழுது அதிக சக்கரைப் பொருள் (இனியப் பொருள் தங்கும் தன்மையுடைய பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர், 1950களின் பிற்பகுதியில் இதன் அமைப்பை உறுதிசெய்தனர். 1970களில் உடலியங்கியலில் இதன் பங்கை அறியத் தொடங்கினர். செரைன் செரைன் (Serine, சுருக்கக் குறியீடு Ser அல்லது S) என்பது ஓர் அமினோ காடி (அமினோ அமிலம்). இது இயற்கையில் உயிரினினங்களில் காணப்படும் புரதப்பொருளில் உள்ள 20 வகையான அமினோ காடிகளில் ஒன்றாகும். இதன் வேதியியல் வாய்பாடு HOCCH(NH)CHOH. இந்தச் செரைன் புரதப்பொருள்களை உருவாக்க முற்பொருள்களுள் ஒன்று என்பதால் இதனை புரதத்தோற்றிய அமினோக் காடி (Proteinogenic amino acids) என்றும் கருதுவர். மரபணுத்தொகையத்தில் இதன் மரபணுக்கூறின் குறியீடு UCU, UCC, UCA, UCG, AGU, AGC. ஐதராக்சைல் (-OH) வேதியியல் வினைக்குழு இருப்பதால் இதனை "முனைய அமினோக் காடி" (polar amino acid) என்னும் வகையில் அடக்குவர். திரு. வி. க. விருது திரு. வி. க. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் திரு. வி. க. நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை நிலைஎண்: 1657 நாள்: 03-09-1979 மூலம்1979 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பு மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும், தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அலவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. குறிப்பு பாவேந்தர் பாரதிதாசன் விருது பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை (பலவகை) எண். 1609, பொதுத் (செய்தி, மக்கள் தொடர்பு - விளம்பரம் -2) துறை, நாள்: 28-08-1978 மூலம் 1978 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. குறிப்புகள் திருவள்ளுவர் விருது திருவள்ளுவர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் திருக்குறள் நெறி பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். 1986 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1999 இலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. பாரதியார் விருது பாரதியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் ஆண்டுதோறும் பாரதியார் நெறி பரப்பும் தகமையாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து வழங்கப்படும் விருதாகும். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறை அரசாணை எண்.32, நாஅள் 08-12-1997 மூலம் 1997 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டில் ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. குறிப்பு பெரியார் விருது பெரியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது பெரியார் ஈ. வெ. ராமசாமி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துக்களைப் பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. அம்பேத்கார் விருது அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபார் 100,000 பணமுடிப்பும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. சற்சொரூபவதி நாதன் சற்சொரூபவதி நாதன் (மார்ச் 6, 1937 - மே 4, 2017) இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர். ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று அறிவியல் பட்டதாரியானார். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றினார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். 1979 இல் முதலாம் தர செய்தி அறிவிப்பாளரானார். பின்னர் ஆங்கில சேவையின் பதில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும், செய்தி ஆசிரியராகவும், கல்விச் சேவையில் முறைசாராக் கல்வி நிகழ்ச்சிப் பொறுப்பாளராகவும் பல பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாடகத்துறை, பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, 'கலைக்கோலம்" சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். பல வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இருந்தார். சற்சொரூபவதி நாதன் மே 4, 2017 அன்று தனது 80 ஆவது அகவையில் காலமானார். கோழி வளர்ப்பு கோழி வளர்ப்பு கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கிறது. சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. இந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே ("Gallus gallus") இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனையப் பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது. இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர். இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை. இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி மிகுதியாகக் காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும். இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம். பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. இவ்வாறான கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன. 2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது. ஆஸ்திரியா 2004 ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது. கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவும் , 2ம் இடத்தில் சீனாவும், 3ம் இடத்தில் பிரேசிலும், 4ம் இடத்தில் மெக்சிகோவும், 5ம் இடத்தில் இந்தியாவும், 6ம் இடத்தில் பிரித்தானியாவும், 7ம் இடத்தில் தாய்லாந்தும் உள்ளன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் இலங்கைக்கும் (50%), வங்காள தேசத்திற்கும் (32.5%), நேபாளத்திற்கும் (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் குவைத்துக்கும் ஓமனுக்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது ஜப்பானுக்கும் போலந்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தின் நாமக்கல் மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது. குழாய்க் கிணறு குழாய்க் கிணறு என்பது 100 - 200 சதம மீட்டர்கள் வரை விட்டம் கொண்ட ஆழமான ஒரு வகைக் கிணறு ஆகும். இது நிலத்தடி நீரைப் பெற்றுப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு செலவு குறைந்த முறையாகும். பாரம்பரிய கிணறுகள் போல இவற்றின் நீர்மட்டத்தைக் காண முடியாது. நிலத்தில் ஆழமாகத் துளையிட்டு இரும்பு அல்லது நெகிழிக் (பிளாஸ்ட்டிக்குக்) குழாய் புகுத்தி இக்கிணறு உருவாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் அதிகளவில் உள்ள இடங்களிலேயே பயன்படும். குழாய்க் கிணற்றின் ஆழம், அது இருக்கும் இடத்தின் நிலக்கீழ் நீர் மட்ட அளவைப் பொறுத்து வேறுபடும். மிக ஆழமான நிலத்தடி நீரைப் பெறுவதற்கான வினைத்திறனுள்ள முறையாகும். இது குறைவான விட்டம் கொண்ட கிணறு என்பதால் மரபுவழிக் கிணறுகளைப் போல் வாளிகளைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுக்க முடியாது. இதனால் வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தியே இக்கிணற்றிலிருந்து நீரை எடுக்கலாம். ஆழம் குறைந்த கிணறுகளில் இருந்து நீரெடுப்பதற்குக் கைப்பம்பியையோ, இயந்திரங்களையோ பயன்படுத்துவது உண்டு. ஆழம் கூடிய கிணறுகளில் இருந்து இயந்திரங்களைப் பயன்படுத்தியே நீர் வெளியே எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீரெடுப்பது வசதிக் குறைவு என்பதால், நீரை நிரப்பிவைத்துத் தேவையானபோது பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தொட்டிகளைப் பயன்படுத்துவது உண்டு. ஏகலைவன் ஏகலைவன் மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன். மகத நாட்டைச் சேர்ந்த இவன் பிறப்பினால் ஒரு வேடன் (நிஷாதன்). அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. வில் வித்தையில் தேர்ந்தவனாக வர எண்ணினான். துரோணர் தான் சிறந்த குரு என்று தெரிந்து கொண்டு அவரிடம் சென்று தனக்கு வில் வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். தான் சத்திரியர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுப்பதால், அதை வெளிக்காட்டாமல், ஏராளமான சீடர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் தனக்கு நேரமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு நான் எப்படி இதைக் கற்றுக்கொள்வது என்று துரோணரிடமே கேட்டான். "உனக்கு என்மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வாய்" என்று அனுப்பிவிட்டார். ஏகலைவன் அவர் வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு திரும்பித் துரோணரைப் போல ஒரு சிலையை செய்தான், அந்தச் சிலையை குருவாகக் கருதிக்கொண்டு பயிற்சியை மேற்கொண்டான். ஒரு நாள் பயிற்சியில் ஏகலைவன் துரோணரின் சிலைக்கு முன்பாக மிகவும் சிரத்தையோடு வில் வித்தை கற்றுக்கொண்டிருந்தான், அப்போது ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அவன் கவனம் சிதறியது, குரைப்புச் சத்தம் வந்த திக்கை நோக்கி அம்புகளை எய்தான், அம்புகள் எல்லாம் நாயின் வாயைச் சுற்றித் தைத்து குரைக்க முடியாதபடி செய்தது. நாய் அருச்சுனனை நோக்கி ஓடியது. நாயைக் கண்ட அருச்சுனன் அதை இழுத்துக் கொண்டு போய் துரோணரிடம் காண்பித்து "உலகிலேயே மிகச் சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றீர்கள், இந்த அற்புதத்தைச் செய்தவன் நிச்சயம் என்னைவிடச் சிறந்தவனாக இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்" என்று துரோணரிடம் அருச்சுனன் கேட்டான். துரோணருக்கு ஒரே அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து இது எப்படி சாத்தியம் குழம்பிப்போய் பாண்டவர்களுடன், ஏகலைவன் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கே தன்னைப் போல் ஒரு சிலை இருப்பதைக் கண்டார், அதற்கு எதிரே ஏகலைவன் வில்லுடன் நிற்பதைக் கண்டார். துரோணரைக் கண்டதும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினான். துரோணர் நாயைக்காட்டி "இதை யார் உனக்கு கற்றுத் தந்தது" என்று கடு கடுப்புடன் கேட்டார். "நீங்கள் தான் ஆனால் நேரில் வந்து கற்றுத்தரவில்லை என்றாலும், ஆசி வழங்கி என்னுள் இருந்து கற்றுத் தந்தீர்கள்" என்றான் ஏகலைவன். துரோணர் அருச்சுனனைப் பார்த்தார், அவனை உலகிலேயே மிகச் சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்று சொல்லியது நினைவுக்கு வந்தது. உடனே ஏகலைவன் பக்கம் திரும்பி "என்னால் வில் வித்தைக் கற்றுக்கொண்டதால் எனக்கு குருதட்சிணை தந்தாக வேண்டும்" என்றார் குரூரமாக. தலை வணங்கிய ஏகலைவன் "நீங்கள் எதைக்கேட்டாலும் அதைத் தருகிறேன்" என்றான். ஒருவன் சம நிலையில் இருப்பதற்கும், நிமிர்ந்து நிற்பதற்கும் வில் ஒரு சின்னமாக சொல்லப்படுகிறது. வில் வித்தையில் ஒருவன் பயிற்சி பெறவேண்டுமானால், அவனது பெருவிரல் (கட்டைவிரல்) தான் மிக முக்கியமானது. மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு எனபதை அறிந்து அருச்சுனன் மட்டுமே மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் ஏகலைவன் வில்லைத் தொடக்கூடாது எனத் தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவு செய்தார் துரோணர். ஏகலைவனை நோக்கி "உனது வலதுகைக் கட்டைவிரலைத் தா" என்றார். ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கத்தியை எடுத்தான் தனது வலதுகைக் கட்டைவிரலை வெட்டி எடுத்து துரோணரின் காலடியில் வைத்தான். ஒருவன் வலது கைக் கட்டைவிரல் இல்லாமல் வில் எய்ய முடியாது, அருச்சுனன் தன் குருவின் கொடூர எண்ணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். தான் மட்டுமே வில்லாளன் என்ற எண்ணம் மேலோங்கி நின்றான். ஏகலைவன் ஒரு வேடுவன் என்றும், தாழ்ந்த குலத்தினன் என்றுமே பலரால் நம்பப்படுகிறது. அவன் வேடுவ இனம்தான் என்றாலும் அவன் மகத நாட்டைச் சேர்ந்த ஒரு காட்டுக்குத் தலைவன். அவன் ஒரு நிஷாத மன்னன். நிஷாத மன்னன் என்றால் ஒடுக்கப்பட்டவர்களின் மன்னன் என நம்பப்படுகிறது. ஆனால், மகாபாரதத்தால் கொண்டாடப்படும் மன்னன் நளனும் ஒரு நிஷாத மன்னன் என்பதைக் கவனிக்க. ஏகலைவன் - ஒரு மறுவாசிப்பு தாள் அளவு ஆவணங்களுக்கும், வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய தாள் அளவுகள், தொடர்பான சீர்தரங்கள், நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. ஆனால் இன்று, முக்கியமாக இரண்டு வகையான சீர்தரங்களே அனைத்துலக அளவில் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று, அனைத்துலக சீர்தர நிறுவனத்தின் அளவுகள், மற்றது வட அமெரிக்க அளவுகள். அனைத்துலகத் தாள் அளவுச் சீர்தரமான, ஐஎஸ்ஓ 216, தாள் அளவுகளுக்கான ஜெர்மானியச் சீர்தரமான டிஐஎன் 476 ஐ அடிப்படையாகக் கொண்டது. மீட்டர் அளவை முறையில் அமைந்த இது, ஒரு சதுரமீட்டர் பரப்பளவையும், 1 : 1.4142 என்ற அளவு விகிதத்தையும் கொண்ட தாளை அடிப்படை அளவாகக் கொண்டது. இந்த அடிப்படையான தாள் அளவு A0 எனப்படுகின்றது. இந்த A வரிசைத் தாள் அளவு முறையில் A0 என்பதே மிகப் பெரிய அளவாகும். குறைந்து செல்லும் ஏனைய அளவுகள் A1, A2, A3, A4, ... எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொன்றும், அதற்கு முன்னுள்ளதைக் குறுக்குவாட்டில் மடித்து வரும் பாதி அளவாகும். மிகப் பரவலாகப் பயன்படும் தாள் அளவு A4 (210 x 297 மிமீ) ஆகும். இந்த அளவு முறை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகியவை தவிர்ந்த உலகின் எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையை, மெக்சிக்கோ, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அமெரிக்க முறை இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. ஐஎஸ்ஓ தாள் அளவுகள் 1 : 2 இன் வர்க்கமூலம் (அண்ணளவாக 1 : 1.4142) என்னும் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த விகிதத்தின் நன்மைகள் குறித்து, 1768 ஆம் ஆண்டிலேயே, ஜெர்மானிய அறிவியலாளரான ஜோர்ஜ் லிச்டென்பர்க் (Georg Lichtenberg) என்பவர் குறிப்பிட்டிருந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், டாக்டர் வால்ட்டர் போர்ஸ்ட்மான் (Walter Porstmann) என்பவர் லிச்டென்பர்க்கின் எண்ணக்கருவை பல்வேறு தாள் அளவுகளைக் கொண்ட முறைமையாக உருவாக்கினார். போர்ஸ்ட்மான் முறை 1922 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் டிஐஎன் சீர்தரமாக (டிஐஎன் 476) அறிமுகப்படுத்தப்பட்டது. இச் சீர்தர அளவுகள் மிக விரைவாக மற்ற நாடுகளுக்கும் பரவியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இது பெல்ஜியம் (1924), நெதர்லாந்து (1925), நார்வே (1926), சுவிட்சர்லாந்து (1929), சுவீடன் (1930), சோவியத் ஒன்றியம் (1934), ஹங்கேரி (1938), இத்தாலி (1939) ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. போர்க் காலத்திலேயே உருகுவே (1942), ஆர்ஜெண்டீனா (1943), பிரேசில் (1943) ஆகிய நாடுகளுக்கும் இம்முறை பரவியது. 1975 ஆம் ஆண்டளவில் இவ்வளவு நாடுகள் ஜேர்மன் முறையைப் பின்பற்றியதன் காரணமாக ஐஎஸ்ஓ சீர்தரமாக ஆக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்களுக்கும் இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1977 ஆம் ஆண்டளவில், 148 நாடுகளில் 88 நாடுகளில் A4 அளவே கடிதங்களுக்குப் பயன்பட்டது. இன்று அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் மட்டுமே இம்முறையைக் கைக்கொள்ளவில்லை. ஏப்ரல் 12 ஏப்ரல் 13 ஏப்ரல் 14 ஏப்ரல் 15 ஏப்ரல் 16 ஜோர்ஜ் சந்திரசேகரன் ஜோர்ஜ் சந்திரசேகரன் (1940 - ஜூன் 6, 2008) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் பணி புரிந்தவர். கொழும்பில் பிறந்த இவர் கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ட் கல்லூரியில் பயின்றவர். 1968ல் இருந்து 1996ல் ஓய்வு பெறும் வரை அறிவிப்பாளராக செயற்பட்டார். வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் நடித்தவர். நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இலங்கை வானொலி தேசிய சேவையில் "உரைச்சித்திரம்" என்ற வாராந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். தினகரன், வீரகேசரி, செய்தி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியவர். சஞ்சிகைகளில், ஓவியங்கள், கார்ட்டூன் தொடர்கள் வரைந்தவர். மேனாட்டு இலக்கியங்களில் மிகுந்த புலமை உள்ளவர். மிக நீண்ட நேரமாக அதாவது 35 நிமிடங்கள் இடைவிடாது தொடர்ச்சியாக செய்தி அறிக்கையை வாசித்த சாதனைக்குரியவராகவும் ஜோர்ஜ் சந்திரசேகரன் விளங்கினார். ஜோர்ஜ் சந்திரசேகரன் தனது 68-வது அகவையில் 2008-ஆம் ஆண்டு ஜூன் 6ந் திகதி வெள்ளிக்கிழமையன்று கொழும்பில் காலமானார். தமிழர் வேளாண்மை அறிவியல் தமிழ்ச் சமூகம் வேளாண் சார் சமூகமாகவே நெடுங்காலம் இருந்துவந்துள்ளது. இன்றும் பெரும்பான்மையானவர்கள் வேளாண் தொழிலியே ஈடுபட்டுள்ளார்கள். தொன்று தொட்டு தமிழர்களிடம், சிறப்பாக மருதத் தமிழரிடம் வேளாண்மை சார்ந்த அறிவு இருக்கின்றது. இன்று தமிழர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தையும் தகுந்த முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்த முயலுகின்றார்கள். இன்று தமிழர் மேற்கொள்ளும் அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மையையும், இதில் தமிழரின் தொன்றுதொட்ட அறிவையும் தமிழர் வேளாண்மை அறிவியல் எனப்படுகின்றது. கே. ஏ. ஜவாஹர் கொழும்பில் வாழ்ந்த சிறந்த மேடை, திரைப்பட நடிகர். நீண்ட காலம் கலைத்துறையில் பணியாற்றிய இவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடற்குரியது. முதலாவது மேடை நாடகம் - 1964ல் புரட்சிமணி இயக்கிய "ஒருத்தி சொன்னாள்". தொடர்ந்து பல மேடை நாடக்ங்களில் நடித்துள்ளார். 1969ல் தினகரன் நாடகவிழாவில் "வாடகைக்கு அறை", "மனிததர்மம்" ஆகிய நாடகங்களில் நடித்து சிறந்த துணைநடிகருக்கான விருதினைப் பெற்றார். 1974ல் தேசியநாடகவிழாவில் சுஹேர் ஹமீட்டின் இயக்கத்தில் " பிள்ளை பெற்ற ராசா ஒரு நாயை வளர்த்தார் " என்ற நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருதினைப் பெற்றவர். இலங்கை வானொலியில் முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களில் நடித்தவர். "அபூநானா" என்ற பாத்திரத்தில் இவர் நடித்த ஐந்து நகைசுவை நாடகங்கள் ஒலிநாடாக்களாக வெளிவந்துள்ளன. இவரது முதலாவது திரைப்படம் வி.பி.கணேசன் தயாரித்த 'புதியகாற்று' என்ற திரைப்படமாகும். தொடர்ந்து 'வாடைக்காற்று' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்து பாராட்டு பெற்றவர். 'கோமாளிகள்', 'நான் உங்கள் தோழன்', 'ஏமாளிகள்', 'தென்றலும் புயலும்', 'தெய்வம் தந்த வீடு', , 'ஷர்மிளாவின் இதய ராகம்' போன்ற பல படங்களில் நடித்தவர். சீனி சீனி (இந்திய வழக்கில் சர்க்கரை) சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருளாகும். சீனி பல பொருட்களில் இருந்து வருவிக்கப்படுகின்றது.சீனியானது கரும்பு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இது இந்தியா, பாக்கிஸ்தான், சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது. இலங்கையில் திருகோணமலை, கந்தளாய் பகுதியில் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. பின்னர் மூடப்பட்டன. இது பொதுவாக சுக்குரோசு ("Sucrose") எனப்படும் கார்போஹைட்ரேட்டு ஆகும். எளிய சர்க்கரைகள் ஒற்றைச்சர்க்கரைகளையும் ("monosaccharides") குளுக்கோஸ் காலக்டோஸ் மற்றும் புருக்டோசையும் ("fructose") கொண்டவை. தானிய சர்க்கரை பாரம்பரியமாக பயன் படுத்தப்பட்டு வருவதாகும். இதில் இரட்டைச்சர்க்கரையான சுக்குரோசு காணப்படுகின்றது. இரட்டைச்சர்கரைகளில் லாக்டோசு ("Lactose") மற்றும் மால்டோசு ("Maltose") போன்றவையும் அடங்கும். சர்க்கரையின் நீண்ட தொகுப்புக்கள் ஒலிகோசர்க்கரைகள் ("Oligosaccharide") என அழைக்கப்படுகின்றன. வேறு சில இரசாயனப் பொருட்களும் சீனியின் இனிப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். எனினும் அவற்றை சீனியாகப் பாகுபடுத்த முடியாது. சில இரசாயனப் பொருட்கள் குறைந்த கலோரியைக் கொண்ட உணவு மாற்றுக்களாகப் பயன்படுகின்றன, அவற்றை சர்க்கரைப் பதிலீடு என அழைப்பர். சீனியானது பல்வேறு தரப்பட்ட தாவரங்களின் இழையத்தில் காணப்படுகின்றது. எனினும் கரும்பு மற்றும் பீற்றூட் போன்றவற்றிலேயே கூடிய செறிவுடனான இலகுவாகப் பிரித்தெடுக்கக்கூடிய சீனி வகை காணப்படுகின்றது. கரும்பானது பாரிய ஒரு புல் வகைத் தாவரம் ஆகும். வெப்பமண்டல காலநிலைகளில் இதனை அறுவடை செய்யலாம். இது உலகத்தின் கிழக்குப்பிரதேசத்தில் பண்டைக்காலம் தொட்டே பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. 18 ஆம் நூற்றாண்டிலே கரும்பு பாரிய விளைச்சலைப்பெற்றதோடு மட்டுமன்றி அதன் மூலம் பாரிய அளவு சீனியும் அதாவது சர்க்கரையும் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வறு நிகழ்ந்தது மேற்கு இந்தியா மற்றும் அமெரிக்காப் பிரதேசங்களிலேயே ஆகும். இதுவே பொது மக்களும் கரும்பின் மூலம் சீனியைப்பயன்படுத்திய முதல் தடவையாகும். இதற்கு முன் தேன் போன்றவையே இனிப்புத் தேவைக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பீட்ரூட் ஒரு வகையான வேர்ப்பயிர் ஆகும். இது குளிர்மையான காலநிலைகளில் பயிரிடக்கூடியதாகும். அத்துடன் 19 ஆம் நூற்றான்டில் சீனிக்குப்பயன் படுத்தக்கூடிய பிரதான வளமாக மாறியதுடன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலைமையை அடைந்தது. வர்த்தகமும் சீனி உற்பத்தியும் பலவழிகளில் மனித வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இடைக் காலங்களில் சர்க்கரை இந்திய துணைக் கண்டத்தில் உற்பத்தி செய்தனர். இக்காலக்கட்டங்களில் சர்க்கரை ஆனது மிகவும் மலிவான விலையில் கிடைக்கப் பெற்ற பொருளாகும். இதே சமயத்தில் தேனின் பயன்பாடானது அறிதற்குரிய ஒரு பொருளாக இருந்தது. இதன் பயன்பாடானது உலகெங்கிலும் மிகவும் குறைவாகவே இருந்தது. சீனி உற்பத்தியாகும் தாவரம் ஆங்கிலத்தில் சுகர் கேன் என்று அழைப்பார்கள். சுகர் கேன் உடைய பிறப்பிடம் வடக்கு ஆசியா மற்றும் வட மேற்கு ஆசியாவாகும். கி.மு.500க்கு முன்னரே இத்தாவரம் இந்தியாவில் பயிரடப்பட்டு வேளாண்மை செய்யப்பட்டு இருந்தது. சுகர் கேன் எனப்படும் கரும்புச் செடியிலிருந்து சர்க்கரையை பிரிக்க இதனை கூழ்மாக மாற்றி மிகப் பெரிய கொப்பரைகளில் கொட்டி அதனை படிக அமைப்பாக மாற்றுகின்றனர். இந்த படிகம் இந்திய மொழியில் கந்தா என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே கேன்டி ("candy") என்ற வார்த்தை பிறந்தது. அறியல்பூர்வமாக சீனி என்பது ஒற்றைச்சர்க்கரைகள், இரட்டைச்சர்க்கரைகள் மற்றும் கூட்டுச்சர்க்கரைகள் அடங்கிய கார்போவைதரேட்டுகளை குறிக்கிறது. மோனோசேக்கரைடுகள் "எளிய சர்க்கரை" என்றும் அழைக்கப்படுகின்றன, இதி்ல் குளுக்கோசு முக்கியமானது ஆகும்.ஒற்றைச்சர்க்கரைகள் பொதுவாக என்ற அமைப்பியல் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். இதில் n என்பது கரிம அணுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். இது 3 முதல் 7 வரையிலான எண்களை கொண்டிருக்கம். குளுக்கோசுவின் மூலக்கூறு வாய்ப்பாடு ஆகும். ஒற்றைச்சர்க்கரைகளும், இரட்டைச்சர்க்கரைகளும் சீனி அல்லது சர்க்கரை என பொது வழக்கில் அழைக்கப்படுகின்றன. அடிப்படையான காபோவைதரேட்டு அலகுகள் ஒற்றைச்சர்க்கரைகள் எனப்படுகின்றன. காபோவைதரேட்டு என்பது பொதுவாக சர்க்கரை அல்லது சர்க்கரைட்டுக்களுக்கு உயிர்வேதியியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதமாகும். இவை காபோவைதரேட்டுக்களின் மிக எளிய மூலக்கூறுகளும், அடிப்படை மூலக்கூறுகளுமான ஒற்றைச்சர்க்கரைகள், இரட்டைச்சர்க்கரைகள், சிலசர்க்கரைகள் (Oligosaccharides), கூட்டுச்சர்க்கரைகள் (பல்சர்க்கரைகள்) என்னும் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. ஒற்றைச்சர்க்கரைகளில் குளுக்கோசு, ஃப்ரக்டோசு (Fructose), காலக்டோசு, சைலோசு (Xylose), ரைபோசு என்னும் வகைகளும், இரட்டைச்சர்க்கரைகளில் மால்ட்டோசு (Maltose), சுக்குரோசு (Sucrose), லாக்டோசு (Lactose) என்னும் வகைகளும், கூட்டுச்சக்கரைகளில் மாப்பொருள், கிளைக்கோசன், செலுலோசு, கைட்டின் போன்றனவும் அடங்குகின்றன. ஒற்றைச்சர்க்கரைகள் எண்ணற்ற வழிகளில் இணைந்து கூட்டுச்சர்க்கரைகள் உருவாகின்றன. பொதுவாக 10 க்கு உட்பட்ட எளிய ஒற்றைச்சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டிருக்கையில் அவை சிலசர்க்கரைகள் அல்லது ஒலிகோசர்க்கரைகள் என அழைக்கப்படுகின்றன. சர்க்கரையின் உயிர்பலபடிச் சேர்மம் பொதுவாக இயற்கையில் அமைந்துள்ளன.ஒளிச்சேர்க்கை மூலமாக தாவரங்கள் கிளிசரால்டிகைடு முப்பாசுப்பேட்டை (glyceraldehyde-3-phosphate (G3P)) தயாரிக்கின்றன. 3 கரிம அணுக்களைக் கொண்ட பாசுபேட்டேற்றம் செய்யப்பட்ட சர்க்கரையைக் கொண்டு பச்சய செல்களானது குளுக்கோசு () அல்லது கரும்பு மற்றும் கிழங்குகளில் உள்ள சுக்ரோசு () போன்ற ஒற்றைச்சர்க்கரைகள் உருவாக்கப்படுகின்றன.இந்த ஒற்றைச்சர்க்கரைகள் மேலும் மாற்றப்பட்டு அமைப்பு பல்கூட்டுச்சர்க்கரைகளாக செலுலோசு , பெக்டின் போன்ற அணுச்சுவர் கட்டமைப்பாகவோ அல்லது ஆற்றல் சேமிப்பு வடிவங்களான மாச்சத்து தரசமாகவோ ("Starch") அல்லது இனுலின் ("Inulin") ஆகவோ மாற்றப்படுகின்றன. ஒற்றைச்சர்க்கரைகள் ("Monosaccharide") என்பன தனித்த மூலக்கூறினாலான, அத்தியாவசியமான காபோவைதரேட்டு எனப்படும் ஊட்டக்கூறின் எளிய அடிப்படை அலகாகும். இவற்றிலுள்ள கரிம (carbon) எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், டிரையோஸ், டெட்ராஸ், பென்டோஸ், ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் ("Trioses", C3H6O3) வளர்சிதைமாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பென்டோசுகளில் ("Pentoses", C5H10O5) முக்கியமானவை கரு அமிலங்களின் கூறுகளான, ரைபோஸ் ("Ribose"), டியாக்சிரைபோஸ் ("Deoxyribose") போன்றவை. இவை ஆர்.என்.ஏ, டி.என்.ஏ மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்களாகும். ஹெக்சோசுகள் ("Hexoses", C6H12O6) குளுக்கோசு (Glucose), ஃப்ரக்டோசு ("Fructose"), காலக்டோசு ("Galactose") எனும் பொருட்களாக உணவில் உள்ளன. காபோவைதரேட்டுகள் உயிரணுக்களில் சக்தி தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான வளர்சிதைமாற்றம் சித்திரிக்கமில சுழற்சியினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP ("Adenosine triphosphate") மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும். இரட்டைச்சர்க்கரைகள் ("Disaccharide") இரண்டு ஒற்றைச்சர்க்கரைகளின் இணைப்பால் ஆனவை. இச்சர்க்கரைகள் சினியில் உள்ளன. மூன்று வகை இரட்டைச்சர்க்கரைகள் உண்டு. அவை, மால்ட்டோசு ("Maltose") இரண்டு குளுக்கோசு மூலக்கூறுகளின் இணைப்பால் ஆனது. இவை முளைத்த தானியங்களில் காணப்படும். சுக்குரோசு என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு புருக்டோசு மூலக்கூறும் இணைந்து உருவாவதாகும். இது கரும்புச் சாற்றில் காணப்படும். லாக்டோசு என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு காலக்டோசு மூலக்கூறும் இணைந்து உருவாவது ஆகும். இது அனைத்து வகைப் பாலிலும் காணப்படும். நாம் உண்ணும் பழங்கள், சில மரக்கறிகள் (பீட்ரூட்) ஆகியவற்றில் சீனி இயற்கையாகவே இருக்கிறது. அவற்றைப் பற்றிய விரிவான விளக்க அட்டவணை கீழே: 2011 ஆம் ஆண்டில் சீனியை உற்பத்திசிய பாரியநாடுகளில் முதல் 05 இடங்களையும் பெற்ற நாடுகள் முறையே பிரேசில், இந்தியா ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் தாய்லாந்து போன்றவையாகும். அதே வருடத்தில் பாரிய அளவிலான சீனியை ஏற்றுமதி செய்தநாடும் பிரேசிலே ஆகும். அதனைத் தொடர்ந்து தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்றநாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களைப் பிடித்தன. பாரிய அளவிலான சீனியை இறக்குமதி செய்தநாடுகல் முறையே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளாகும். தனிநபர் சராசரி விகிதப்படி சீனியை நுகரும் நாடுகள் முறையே பின்வருமாறு பிரேசில், ஆஸ்திரேலியா, தாய்லாந்து. சீனி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பானது உலக அளவில் மேலோங்கியே காணப்படுகிறது. உலக அளவில் சீனி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனி உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டுக்கு சுமார் 250 இலட்சம் டன் சீனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய சீனி உற்பத்தியில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் குஜராத். நாட்டின் மொத்த உற்பத்தியில் 24% உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிடைக்கின்றது. சர்க்கரை சர்க்கரை என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்: லடிஸ் வீரமணி லடிஸ் வீரமணி (இறப்பு: மே 5, 1995) இலங்கையில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் 'சலோமியின் சபதம்', 'மதமாற்றம்' என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார். கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி நடிகவேள் லடிஸ் வீரமணி ஆவார். 1945 இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார். 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக "நடிகவேள்" என்ற பட்டத்தை வழங்கினார் என். எஸ். கே. ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி. அ. ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி மகாகவியிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார். 83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ‘கண்மணியாள்காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார். கிளாம்வின் கிளாம்வின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கான ஓர் இலவச திறந்த நச்சுநிரல் மென்பொருளாகும். இது காம் ஆண்டிவைரஸிற்கு வரைகலை இடைமுகத்தை வழங்குகின்றது. கிளாம்வின் இலவச ஆண்டிவைரஸ் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம். பொதுவான் நச்சுநிரல்கள் போன்றல்லாது வின்காமில் நிகழ்நிலையில் கோப்புக்களைப் பாதுகாக்கும் வசதியில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி ஏற்கனவே ஒரு நிகழ்நிலை நச்சுநிரற் தடுப்பி உள்ள கணினியில் கிளாம்வின் நச்சுநிரற் தடுப்பியை நிறுவிப் பாதுகாக்கவியலும். வின்பூச் என்கின்ற மென்பொருளூடாக இதனைச் செய்யலாமெனினும் வின்பூச் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 உடன் நீலத்திரையுடன் இறப்பை உண்டுபண்ணுவதுடன் இதன் விருத்தியும் கைவிடப்பட்டுவிட்டது. சுப்புலட்சுமி காசிநாதன் இலங்கையின் கலைஉலகில் மேடை, வானொலி, திரைப்படங்கள் என்பனவற்றில் புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த நடிகை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார். கனடாவிலும் தன்னுடைய கலைப்பணியைத் தொடர்கிறார். இலங்கை வானொலியில் 'சானா'வின் காலத்தில் இருந்து, பி. விக்னேஸ்வரன் காலம் வரை ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்தவர். வானொலியில் ஒலிபரப்பான நாடகக்கலைஞர் வி.வி. வைரமுத்து அவர்களின் இசைநாடகங்களில் பாடி நடித்துமிருக்கிறார். தினகரன் நாடக விழாவில் கே. எம். வாசகரின் 'சுமதி' நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றவர். சு. வேலுப்பிள்ளை சு.வே என அழைக்கப்படும் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை (மே 24, 1921 - சூன் 22, 2007) இலங்கையின் சிறப்புமிக்க உருவகக்கதை எழுத்தாளரும் நாடகாசிரியரும் தமிழ்ப் பண்டிதரும் ஆவார். வேலுப்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம்]], நாவற்குழியில் சுப்பிரமணியம், தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தவர். சு.வேயின் முதல் சிறுகதை 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999 இல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன. 1965 இல் இலங்கை கலைக்கழகம் நடாத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற் முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது. 1960 இல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது 'மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968 இல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார். செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ஈழகேசரி சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இவருடைய சிறுகதைகள் சில இடம்பெற்றுள்ளன. நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் என்பது, நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருக்கின்ற கோட்பாடுகள் ஆகும். ஒரு காலத்தில், நாட்டுப்புறவியலில் ஆர்வமுள்ளவர்கள் கோட்பாடுகளைப்பற்றி அக்கறை கொள்ளாதவர்களாக இருந்தார்கள். பிரித்தானியாவின் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் கோட்பாடுகளில் அதிகம் கவனமெடுக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் 80கள் வரையான பிரித்தானிய நாட்டுப்புறவியல் ஆய்வில் இத்தகைய போக்கே காணப்பட்டது. எனினும், அமெரிக்காவில் இது தொடர்பான முன் முயற்சிகள் எடுக்கப்பட்டன. நாட்டுப் புறவியலின் பல்வேறு கூறுகளிலுமான ஆய்வுத்துறை விரிவடைந்து வருகின்ற இக்காலத்தில் ஆய்வாளர்கள், நாட்டுப் புறவியல் ஆய்வில் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார்கள். இதன் காரணமாக நாட்டுப்புறவியல் ஆய்வு தொடர்பாகப் பல்வேறு கோட்பாடுகள் உருவாகியுள்ளன. 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆய்வாளரான ரிச்சர்ட் எம். டார்சன் (Richard M. Dorson) என்பவர் பரவலாகப் புழக்கத்தில் உள்ள 12 வகையான ஆய்வுக் கோட்பாடுகளைப் பற்றித் தனது, நாட்டுப்புறவியலும், நாட்டுப்புற வாழ்க்கையும் (Folklore and Folklife) என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார். இக் கோட்பாடுகளாவன: பழமொழி பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும். பழமொழிகள் நாடுகள் வாரியாகவும், மொழிகள் வாரியாகவும் பகுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள பழமொழிகள் தமிழ்ப் பழமொழிகள் என வகைப்படுத்தலாம். விளக்கம் : கர்ணன் பாண்டவர்களோடு இருந்தால் ஆறிலும் சாவு அதேபோல் கெளரவர்களோடு இருந்தால் நூறிலும் சாவு. மலர் மலர் அல்லது பூ என்பது மலரும் தாவரங்களில் காணப்படும் இனப்பெருக்க அமைப்பு ஆகும். மலர்கள், தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டுள்ளன. மலர்களின் பணி விதைகளை உருவாக்குவது ஆகும். உயர்நிலைத் தாவரங்களுக்கு விதைகளே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. தாவரங்களின் மலர்கள் இனப்பெருக்க அமைப்பாக இருப்பதுடன் அவற்றின் மணம், அழகு ஆகியவற்றுக்காக பன்னெடுங்காலமாக மனிதர்களால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகின்றன. சில மலர்கள் உணவாகவும் பயன்படுவது உண்டு. பூக்கும் தாவரங்களின் ஒரு இனப்பெருக்க உறுப்பாக சேவையாற்றுவதோடு, பூக்கள் மனிதர்களால் நெடுங்காலமாக போற்றப்பட்டு முக்கியமாக தங்கள் சுற்றுச்சூழலை அழகுப்படுத்தவும், அதோடு மட்டுமல்லாமல் உணவு ஆதாராமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பூக்கும் தாவரங்கள் தங்களின் மகரந்தங்களின் மாற்றத்தைச் சிறப்பாக ஆற்றல்படுத்துவதற்காக வழக்கமாக ஒரு தேர்ந்தெடுப்பிற்கான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன, மற்றும் இது பூக்களின் உருவவியல் வகை மாற்றத்திற்கு பொருத்தமாக இருக்கின்றன. மகரந்தங்கள் தாவரங்களுக்கிடையே பல்வேறு வகையாக 'எடுத்துச்செல்பவைகளால்' மாற்றப்படுகின்றன. சில தாவரங்கள் காற்று (அனிமாஃபில்லி அல்லது காற்றுவழி மகரந்தச் சேர்க்கை) அல்லது மிகக் குறைந்த அளவு பொதுவாக, நீர் ( ஹைட்ரோஃபில்லி அல்லது நீர்வழி மகரந்தச் சேர்க்கை) மற்றவை பூச்சிகள் (என்டமோஃபிலி அல்லது பூச்சிவழி மகரந்தச் சேர்க்கை), பறவைகள் (ஆர்னிதோஃபிலி அல்லது பறவை வழி மகரந்தச் சேர்க்கை) வெளவால்கள் (சிரோப்டெரோஃபிலி அல்லது வெளவால் வழி மகரந்தச் சேர்க்கை) மற்றும் பிற விலங்குகள் உள்ளிட்ட எடுத்துச்செல்லும் உயிர்களைப் பயன்படுத்துகின்றன. சில தாவரங்கள் பல்வேறு எடுத்துச்செல்பவைகளைப் பயன்படுத்துகின்றன, ஆனால் அவற்றில் பல உயர்ந்த சிறப்புடையனவாகும். அலரா நிலைப்புணர்ச்சிப் பூக்கள் சுய மகரந்தச் சேர்க்கையை உடையவை, அதற்குப் பின்னர் அவை திறக்கலாம் அல்லது திறக்காமலும் போகலாம். பல வாய்லா மற்றும் சில சால்வியா தாவரவகைகள் இவ் வகையானப் பூக்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. மகரந்தங்களை எடுத்துச்செல்லும் உயிர்களைப் பயன்படுத்தும் சிலத் தாவரங்கள் பொதுவாக விலங்குகள் மலர்களுக்கு வருகைத் தருவதற்கான ஒரு ஊக்கமாக விளங்கக்கூடிய தேன்சுரப்பிகள் கொண்டிருக்கின்றன. தேனை எங்கே அறிவது என்பதை மகரந்தசேர்ப்பிக்களுக்கு காட்டும் தேன் வழிகாட்டிகள் எனும் முன்மாதிரிகளை சிலத் தாவரங்கள் கொண்டிருக்கின்றன. வாசனை மற்றும் நிறங்களால் மகரந்தசேர்ப்பிக்களை மலர்கள் கவர்கின்றன. அதேநேரம் மகரந்தசேர்ப்பிக்களை கவர்வதற்காக ஒப்புப்போலிப் பண்பினைப் பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, சில ஆர்ச்சிட்டுகளின் தாவரவகைகள் நிறம், வடிவம் மற்றும் வாசனையால் பெண் தேனிக்களை ஈர்க்கக்கூடியப் பூக்களை உற்பத்தி செய்கின்றன. மலர்கள் வடிவத்திலும் சிறப்பானைவை மற்றும் மகரந்தசேர்ப்பிகள் தம்முடைய கவர்பவைகளைத் (தேன், மகரந்தம் அல்லது ஒரு இணை) தேடி இறங்கும் போது அவற்றின் உடலில் மகரந்தத் துகள்கள் மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கான மலரிழைகளின் வரிசையைக் கொண்டுள்ளது. ஒரே வகையைச் சார்ந்த பல மலர்களிலிருந்து இந்தக் கவர்பவைகளை பின்தொடர்ந்து செல்வதன் மூலம், தாம் செல்லும் மலர்கள் அனைத்திலும் - துல்லியமாக சமமாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் சூலக முகட்டிற்கு மகரந்தங்களை மகரந்தசேர்ப்பிகள் மாற்றுகின்றன. அனிமோஃபிலஸ் மலர்கள் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு மகரந்தங்களை மாற்றுவதற்கு காற்றைப் பயன்படுத்துகின்றன. புற்கள், பூர்ச்ச மரங்கள், ராக்வீட் மற்றும் மேபில்ஸ் ஆகியவற்றை உதாரணங்களில் உள்ளடக்கலாம். அவற்றிற்கு மகரந்தசேர்ப்பிக்களை கவரவேண்டியதில்லை என்பதால், அவை “பகட்டான” மலர்களாக இருக்க முயற்சிப்பதில்லை. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் பொதுவாக தனித்தனி மலர்களில் காணப்படுகின்றன, பல நீண்ட இழைகளைக் கொண்டு உள்ளே முடிவடையும் ஆண்மலர்கள் மலரிழைகளுக்கு வெளிப்படுகின்றன மற்றும் நீண்ட இறகு போன்ற சூலக முகடுகளைக் கொண்டிருக்கும். அதே சமயம், விலங்குகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட மலர்களின் மகரந்தங்கள், அதிக துகள் உள்ளவையாகவும், ஒட்டிக்கொள்பவையாகவும், புரத வளம் (மகரந்தசேர்ப்பிக்களுக்கான மற்றொரு “பரிசு”) கொண்டவையாக இருக்கும், அனேமோஃபிலிஸ் மலரின் மகரந்தம் வழக்கமாக சிறு துகள்களாகவும், மிகவும் லேசானதாகவும், விலங்குகளுக்கு குறைந்த ஊட்டசத்து மதிப்பைக் கொண்டதாகவும் இருக்கும். பூக்கும் தாவரங்கள் "ஹெட்ரோஸ்போரான்ஜியேட்" (பல்லினவித்துள்ளவை) ஆகும், அவை இரண்டு வகையான இனப்பெருக்க வித்துகளை உற்பத்தி செய்யும். மகரந்தங்கள் (ஆண் வித்துகள்) மற்றும் சூல்வித்துக்கள் (பெண் வித்துகள்) வெவ்வேறு உறுப்புகளால் உருவாக்கப்படுகின்றன, ஆனால் இது போன்ற மலர்கள் இரண்டு உறுப்புகளையும் கொண்டிருப்பதால் இவை "பைஸ்பொரான்ஜியேட் ஸ்ட்ரோபிலஸ்" ஆகும். ஒரு மலரானது குறுக்கப்பட்ட கணுவிடைகள் மற்றும் இலையுடனான மாறுதல் செய்யப்பட்ட தாவரத் தண்டு ஆகும், அதன் கணுக்களில் உள்ள அமைப்புகள் இலைகளாக மிகவும் மாற்றமடைந்துள்ளன. சுருங்கச்சொன்னால், ஒரு மலரின் கட்டமைப்பு மாறுதல் செய்யப்பட்டத் தளிர்களில் உருவாகிறது அல்லது தொடர்ந்து வளராத (வளர்ச்சி "தீர்மானிக்கப்பட்டது") நுனி ஆக்குத்திசுவுடனான "ஊடுவரை" ஆகும். மலர்கள் தாவரத்துடன் சில வழிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். மலர் தண்டினைக் கொண்டிருக்காமல் இலைக் காம்புக்கவட்டில் உருவாகுமானால், அது செஸைல் (காம்பில்லாத பூ) என்றழைக்கப்படும். ஒரு மலர் உருவாக்கப்படும்போது, அந்த மலரை பற்றிக்கொண்டிருக்கும் தண்டு பெடங்கிள் (மஞ்சரித் தண்டு) என்றழைக்கப்படும். பெடங்கிள் மலர்களின் தொகுதியுடன் முடியுமானால், ஒவ்வொரு மலரையும் பற்றிக்கொண்டிருக்கும் தண்டு பெடிக்கிள் (சிறு காம்பு) என்றழைக்கப்படும். பூக்கும் தண்டு ஒரு இறுதி முனையை உருவாக்குகிறது, அது "டோரஸ்" (பொருமல்) அல்லது மஞ்சரித்தளம் என்று அழைக்கப்படும். மலரின் பாகங்கள் டோரஸின் சுருள்களாக அமைக்கப்பட்டிருக்கும். நான்கு முக்கிய பாகங்கள் அல்லது சுருள்கள் (மலரின் அடிப்பகுதியில் அல்லது கீழ்க்கணுவில் தொடங்கி மேல்நோக்கி பார்ப்பது) பின்வருமாறு: மேலே விவரிக்கப்பட்ட மலரமைப்பு ஒரு “உதாரண" அமைப்புத் திட்டமாக இருந்தாலும், தாவரவகைகள் இந்தத் திட்டத்திலிருந்து பரந்த அளவிலான மாற்றங்களைக் காட்டுகின்றன. இந்த மாற்றங்கள் பூக்கும் தாவரங்களின் வளர்ச்சியில் தனிச்சிறப்பானது மற்றும் தாவரவியலாளர்களாலும் தாவர வகைகளில் உறவுமுறையை ஏற்படுத்துவதற்காக விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒவ்வொரு சுருளிலிலும் இருக்கும் பூக்கும் உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து, இரண்டு துணைப் பிரிவுகள் பிரிக்கப்படலாம்: டைகோடிலேடான்ஸ் (இருவித்துள்ள இலையி), உதாரணமாக ஒவ்வொரு சுருளிலும் 4 அல்லது 5 உறுப்புகளைக் கொண்டிருக்கும் மற்றும் மோனோகாட்டிலைடன்ஸ் (ஒருவித்துள்ள இலையி) மூன்று அல்லது சில மும்மடங்குகளைக் கொண்டிருக்கும். ஒரு கூட்டுச் சூலகத்தில் இருக்கும் சூலக இலையின் எண்ணிக்கை இரண்டாக மட்டுமே இருக்கும் அல்லது மற்றபடி ஒரு வித்து இலையிக்கள் அல்லது இருவித்து இலையிக்களுக்கான பொதுவிதிக்குத் தொடர்புடையதாக இருக்காது. பெரும்பான்மையான தாவர வகைகளில் தனிப்பட்ட மலர்கள் மேலே விவரிக்கப்பட்டவாறு சூலகத்தையும் மகரந்தத்தாள்களையும் கொண்டிருக்கும். இந்த மலர்கள் தாவரவியலாளர்களால் "முழுமையான", "இருபாலான" அல்லது "ஹெர்மாஃப்ரோடைட்" (இருபாலானவை) என்று அழைக்கப்படுகிறது. எனினும் சில வகைத் தாவரங்களில் "முழுமையற்றவையாக" அல்லது "ஒரு பாலாக": ஆணாகவோ (மகரந்தத் தாளாகவோ) பெண்ணாகவோ (சூலகமாகவோ) இருக்கும். முந்தைய நிகழ்வில், ஒரு தனிப்பட்ட தாவரம் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருந்தால் அந்த வகை "டையோசியஸாக" (இருபால் செடி) என கருதப்படும். எனினும், ஒரு பால் ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் தோன்றும் போது, அந்த வகை "மோனோசியஸ்" (ஒரு பால் செடியாக) கருதப்படும். அடிப்படைத் திட்டத்திலிருந்தான பூக்கும் மாறுதல்கள் குறித்த கூடுதல் விவாதங்கள் மலரின் ஒவ்வொரு அடிப்படை பாகங்கள் மீதான கட்டுரைகளில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஊடுவரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டிருக்கும் தாவரவகைகளை "காம்போஸிட் ஃப்ளவர்ஸ்" (கூட்டு மலர்கள்) என்றழைக்கப்படும் - மலர்களின் தொகுதி " இன்ஃப்ளாரசன்ஸ்" (பூத்திரள் அல்லது மஞ்சரி) எனப்படும்; இந்தச் சொல் தண்டில் ஒரு குறிப்பிட்ட மலர்வரிசையையும் குறிக்கும். இது தொடர்பாக, ஒரு "மலர்” என்பது என்ன என்பதை கருதுவதற்கு அக்கறை செலுத்தப்படவேண்டும். தாவரயியல் பயனீட்டுச் சொல்படி, உதாரணத்திற்கு ஒரு ஒற்றை டெய்ஸி அல்லது சூரியகாந்திப்பூ ஒரு மலரல்ல ஆனால் ஒரு மலர் "தலை" யாகும் – ஒரு இன்ஃப்ளாரசன்ஸ் பல்வேறு சிறு சிறு மலர்களின் (சில சமயங்களில் சிறு பூ என்றும் அழைக்கப்படும்) தொகுப்பினைக் கொண்டது. இந்த மலர்களில் ஒவ்வொன்றும் உள்ளமைப்புப்படி மேற்குறிப்பிட்டவாறு இருக்கலாம். பல மலர்கள் சமச்சீரைக் கொண்டிருக்கும், இதழ்வட்டமானது ஒத்த இருபகுதிகளாக ஊடுவரையின் மூலம் எந்தவொருப் புள்ளியிலிருந்தாவது பிரிக்கப்பட்டால், சமச்சீர் அரைவட்டம் உருவாக்கப்படும் - மலர் வழக்கமானது அல்லது அக்டினோமார்ஃபிக் (ஆரை சமச்சீரானது) என்று அழைக்கப்படும், எ.கா: ரோஜா அல்லது ட்ரில்லியம். மலர்கள் இருபகுதிகளாகப் பிரிக்கப்படும்போது ஒரே ஒரு கோடு ஒரு சமச்சீர் அரைவட்டத்தை உருவாக்குமானால் அந்த மலர் ஒழுங்கற்றது அல்லது ஸைகோமாரஃபிக் (இருபக்க சமச்சீரானது) எனப்படும். எ.கா: ஸ்னாப்டிராகன் அல்லது அனேக ஆர்ச்சிட்கள். ஒரு "பூச்சூத்திரம்" என்பது ஒரு மலரின் அமைப்பை குறிப்பிட்ட எழுத்துக்கள், எண்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி உருவகப்படுத்துவதாகும். உதாரணமாக, ஒரு பொதுவான சூத்திரம் ஒரு குறிப்பிட்ட தாவர இனத்தைக் காட்டிலும் ஒரு தாவரக் குடும்பத்தின் மலரமைப்பை உருவகப்படுத்துவதாகும். அதற்கு பின்வரும் உருவகப்படுத்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன: Ca = காலிக்ஸ் (புல்லிவட்டம்) (புற இதழ் சுருள்; எ.கா., Ca = 5 புறஇதழ்கள்) Co = கரோலா (அகவிதழ் சுருள்; எ.கா., Co = அகவிதழ்கள் மூன்றின் மடங்கில் )     Z = "ஸைகோமார்ஃபிக்" (இருபக்க சமச்சீரானது) சேர்க்கவும் (எ.கா., CoZ = ஸைகோமார்ஃபிக் (இருபக்க சமச்சீரானது) 6 அகவிதழ்களுடன்) A = "ஆண்டிரிசியம்" (மகரந்தத்தாள் வட்டம்) (whorl of stamens; எ.கா., A = பல மகரந்தத் தாள்கள்) G = "சூலக வட்டம்" (சூல்வித்திலை அல்லது சூல்வித்திலைகள்; எ.கா: G = மோனோகார்பஸ் (ஒரு சூல்வித்திலையுள்ளது)) "x" : ஒரு “மாறியல் எண்ணை" சுட்டுவதற்காக ∞: “பல” என்பதை சுட்டுவதற்காக ஒரு பூச்சூத்திரம் என்பது இதுபோன்று இருக்கும்: பல கூடுதல் சின்னங்களும் சில நேரங்களில் பயன்படுத்தப்படும் (பார்க்கவும் பூச்சூத்திரங்களுக்கான விடைக் குறிப்புகள்). மலர்வதற்கான இடைமாறுதல் என்பது ஒரு தாவரம் அதன் வாழ்க்கை சுழற்சியில் செய்யும் ஒரு முக்கியமான மாற்றமாகும். கருவுறுதலுக்கும், விதை உருவாக்கத்திற்கும் சாதகமான ஒரு காலத்தில் இந்த இடைமாறுதல் இடம்பெறவேண்டும், அதனால் அதிகபட்ச இனப்பெருக்க வெற்றி உறுதி செய்யப்படும். இந்த வெற்றியை சந்திப்பதற்கு தாவர ஹார்மோன்கள் அளவிலான மாற்றங்கள் பருவகால வெப்பநிலை மற்றும் ஒளிக்கால மாற்றங்கள் போன்ற முக்கியமாக அகத்தில் தோன்றக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் பின்னல்களை தாவரம் இடையீடு செய்யவேண்டியிருக்கும். பல பல்லாண்டுத் தாவரங்கள் மற்றும் அனேக இருபருவத் தாவரங்களுக்கு மலர்களின் வசந்தகால நிலைப்படுத்தல் தேவைப்படுகிறது. இந்த சமிகைகைளின் மூலக்கூறு இடையீடு, கான்ஸ்டன்ஸ், ஃப்ளவரிங் லோகஸ் சி மற்றும் ஃப்ளவரிங் லோகஸ் டி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு ஜீன்களை உள்ளிடுகின்றன, இது சிக்கலான சமிக்ஞைகள் என்று அறியப்படும் ஃப்ளோரிஜென்கள் மூலமாக செய்யப்படுகிறது. ஃப்ளோரிஜென் இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சூழ்நிலைகளில் இலைகளில் உருவாக்கப்பட்டு மொட்டுக்களிலும், வளரும் முனைகளிலும் பல்வேறு வாழ்வியல் மற்றும் உருவவியல் மாற்றங்களை ஏற்படுத்துவுதற்கு ஃப்ளோரிஜென் உற்பத்தி செய்யப்படுகிறது. பதிய முறையான தண்டு முன்தோன்றலை பூ முன்தோன்றலுக்கு மாற்றுவது முதல் படியாகும். இது ஒரு உயிர் வேதியியல் மாற்றமாக இலை, மொட்டு மற்றும் தண்டு திசுக்களின் உயிரணு மாறுபாட்டை இனப்பெருக்க உறுப்புகளாக வளரக்கூடிய திசுக்களாக மாற்றுவதற்காக நடக்கிறது. தண்டு முனையின் நடுப்பகுதியின் வளர்ச்சி நின்றுவிடுகிறது அல்லது தட்டையாகிறது மற்றும் பக்கங்கள் புடைப்புகளாக வட்டமாக அல்லது சுரண்ட வகையில் தண்டு முனையின் வெளிப்புறப் பகுதியில் உருவாக்குகின்றது. இந்தப் புடைப்புகள் புல்லிகள், அல்லிகள், மகரந்தத் தாள்கள் மற்றும் சூலகமாக உருவாகின்றன. இந்த செயல்முறைத் துவங்கியதும், அனேக தாவரங்களில் இதை மீண்டும் திருப்ப முடியாது மேலும் தண்டு மலர்களை உருவாக்குகிறது, மலர் உருவாக்க நிகழ்வின் துவக்கத்தின் ஆரம்ப நிலையிலும் அது சில சுற்றுச்சூழல் பின்னலைச் சார்ந்துள்ளது. செயல்முறை துவங்கியதும், பின்னல் நீக்கப்பட்டாலும் தண்டு, மலர்களின் உருவாக்கத்தைத் தொடர்ந்து செய்யும். மலர் உறுப்பு அடையாளத்தை தீர்மானித்தலின் மூலக்கூறு கட்டுப்பாடு நல்லமுறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒரு எளிய வடிவத்தில், பூவுக்குரிய ஆக்கு திசுவினுள் உறுப்பு முன்தோன்றல் அடையாளங்களைத் தீர்மானிப்பதற்காக மூன்று ஜீன் நடவடிக்கைகள் ஒன்றுடன் ஒன்று கலவையான முறையில் செயல்படுகின்றன. இந்த ஜீன் இயக்கங்கள் A, B மற்றும் C ஜீன் செயல்பாடுகள் என்று அழைக்கப்படும். முதல் பூவுக்குரிய வட்டத்தில், புல்லிகளை முன்னிலைப்படுத்தி A-ஜீன்கள் மட்டும் வெளிப்படுத்தப்படும். இரண்டாம் வட்டத்தில், அல்லிகளின் உருவாக்கத்தை முன்னிலைப்படுத்தி A மற்றும் B ஜீன்கள் வெளிப்படுத்தப்படும். மூன்றாம் வட்டத்தில், B மற்றும் C ஜீன்கள் மகரந்தகோசத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படுகின்றன மற்றும் மலரின் நடுப்பகுதியில் C-ஜீன்கள் மட்டும் சூலகவித்திலைகளை உருவாக்கச் செய்கின்றன. இந்த மாதிரி வடிவம் "அரபிடோப்சிஸ் தாலியானா" வில் ஹோமியோடிக் விகாரிகள் மற்றும் ஸ்னாப் ட்ராகன், "ஆன்ட்ரினம் மாஜஸ்" ஆகியவற்றின் ஆய்வுகளின் அடிப்படையிலானதானகும். உதாரணத்திற்கு B-ஜீன் இயக்கத்தில் இழப்பு ஏற்படும் போது, விகாரி மலர்கள் புல்லிகளுடன் முதல் வட்டத்தில் வழக்கம் போல் உருவாக்கப்படும், ஆனால் இரண்டாவது வட்டத்திலும் சாதாரணமான அல்லி உருவாக்கத்திற்கு பதிலாக வழக்கமாக உருவாக்கப்படும். மூன்றாம் வட்டத்தில் B-ஜீனின் இயக்கத்தின் குறைபாடு காரணமாக ஆனால் C-ஜீன் இயக்கத்தின் நாலாவது வட்டத்தை ஒப்புப் போலியாக்குகிறது, அது சூலகத்தை மூன்றாவது வட்டத்தில் உருவாக்குதவற்கு வழிவகுக்கிறது. மலர் உருவாக்கத்தின் ABC வடிவத்தையும் பார்க்கவும். இந்த மாதிரியில் மையப்படுத்தப்பட்டிருக்கும் அனேக ஜீன்கள் MADS-பாக்ஸ் ஜீன்களைக்கு உரியதாக இருக்கிறது மற்றும் படியெடுத்தல் காரணிகளாக ஒவ்வொரு மலருக்குரிய உறுப்புக்கான ஜீன் சார்ந்த வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு மலரின் முதன்மை நோக்கம் இனப்பெருக்கமாகும். மலர்கள் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக இருப்பதால், அவை மகரந்தத்திலிருக்கும் விந்துக்களை, சூல்பையிலிருக்கும் சூல்வித்துடன் இணைப்பதன் மூலம் இடையீடு செய்கின்றன. மகரந்தச் சேர்க்கை என்பது மகரந்தப் பையிலிருந்து சூலகமுடிக்கு மகரந்தங்கள் நகர்வதாகும். சூல்வித்துக்களுடன் மகரந்தங்கள் சேர்வதே கருவுறுதலாகும். சாதாரணமாக, மகரந்தம் ஒரு தாவரத்திலிருந்து மற்றொன்றுக்கு நகரும், ஆனால் பல தாவரங்களால் சுய மகரந்தச் சேர்க்கையை செய்யமுடிகிறது. கருவுற்ற சூல்கள் அடுத்த தலைமுறை விதைகளை உருவாக்க முடிகிறது. பாலியல் சம்பந்தப்பட்ட இனப்பெருக்க மரபு முதலில் தனித்துவமான மரபினை, மாற்றியமைத்துக்கொள்ள அனுமதிப்பதற்காக உருவாக்குகிறது. மலர்களுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பு இருக்கும், அவை மகரந்தத்தை ஒரு தாவரத்திலிருந்து அதே வகையான மற்றொரு தாவரத்திற்கு மகரந்தத்தை மாற்ற ஊக்குவிக்கின்றன. காற்று மற்றும் விலங்குகளை உள்ளிட்டு, பல தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு வெளிப்புற காரணிகளைச் சார்ந்திருக்கின்றன, அதுவும் குறிப்பாக பூச்சிகளைச் சார்ந்திருக்கின்றன. பறவைகள், வெளவால்கள் மற்றும் பிக்மி போஸம் போன்ற பெரிய விலங்குகளும் ஈடுபடுத்தப்படலாம். இந்த செயல்முறை நடைபெறும் காலம் (மலர் முழுவதுமாக விரிந்து இயங்கக்கூடியதாக இருப்பது) "ஆன்தேசிஸ்" (அரும்பவிழ்தல்) என்று அழைக்கப்படுகிறது. தாவரங்கள் ஒரு இடஅமைவிலிருந்து மற்றொன்றுக்கு நகர முடியாது, அதனால் மகரந்தங்களை தனிப்பட்டவற்றிக்கிடையே பரவலான வகையில் மாற்றுவதற்கு விலங்குகளைக் கவர்வதற்காக மலர்கள் அலர்விக்கப் படுகின்றன. பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை பெறும் மலர்கள் "என்டமோஃபிலஸ்" (பூச்சிநாட்டமுள்ளவை) என்று அழைக்கப்படுகின்றன. சரியாக சொல்லவேண்டுமென்றால், இலத்தீனில் "பூச்சிகள் விரும்பி” என்பதாகும். அவை மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளுடன் இணையாக சிறந்து வருவதன் மூலம் உயர்ந்த அளவில் மாற்றியமைக்கப்படுகின்றன. பூக்கள் பொதுவாக "தன்சுரப்பிகள்" எனும் சுரப்பிக்களை பல்வேறு பாகங்களில் கொண்டிருக்கின்றன, அவை ஊட்டம் மிக்க தேனை தேடிவரும் விலங்குகளைக் கவரும். பறவைகள் மற்றும் வண்டுகளுக்கு நிறப் பார்வை உள்ளதால், அவற்றால் “வண்ணம் நிறைந்த" மலர்களைப் பார்க்க முடியும். சில மலர்கள் "தேன் வழிகாட்டிகள்" எனும் முன் மாதிரிக்களைக் கொண்டிருக்கும், அவை மகரந்த சேர்ப்பிக்களுக்கு தேன் எங்கிருக்கிறது என்பதைக் காட்டும்; அவை புறஊதா ஒளியில் பார்க்கக்கூடியதாக, வண்டுகளுக்கும் இதர சில பூச்சிகளுக்கும் தெரிவதாக இருக்கும். மகரந்த சேர்ப்பிக்களை நறுமணம் மூலமாகவும் மலர்கள் கவருகின்றன மற்றும் சில நறுமணங்கள் நமக்கு இனிமையானவையாக இருக்கின்றன. அனைத்து மலர்களின் நறுமணமும் மனிதர்களுக்கு இனிமையானவையாக இருப்பதில்லை, அழுகிப்போன சதையினால் கவரப்படக்கூடிய பூச்சிகளால் பல்வேறு மலர்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன மற்றும் இந்த மலர்கள் செத்த விலங்குகள் போன்ற வாடையை உடையவை, அவை "ரஃப்ளேசியா" , டைடன் ஆரம் மற்றும் வட அமெரிக்க பாவ்பாவ் ("அஸ்மினா ட்ரிலோபா") உள்ளிட்ட கேரியன் மலர்கள் என்றழைக்கப்படுகின்றன. வெளவால்கள் மற்றும் அந்துப்பூச்சிகள் உள்ளிட்ட, இரவு வருகையாளர்களால் பூக்கள் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன, அவை மகரந்தச் சேர்ப்பிக்களைக் கவருவதற்கு வாசனையில் செறிவாக இருக்கின்றன மற்றும் அத்தகைய மலர்களில் அனேகமானவை வெள்ளையாக இருக்கும். இன்னும் பிற மலர்கள் மகரந்தச் சேர்ப்பிகளைக் கவர்வதற்காக ஒப்புப்போலிகளை பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, சில ஆர்ச்சிட் மலர்களின் வகைகள், நிறம், வடிவம் மற்றும் வாசனையில் பெண் வண்டுகளை ஒத்திருக்கும் மலர்களை உருவாக்குகின்றன. ஒரு இணையைத் தேடி அத்தகைய மலர்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஆண் வண்டுகள் செல்லும். மகரந்தச் சேர்க்கைத் தொழில்நுட்பம் என்ன வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து மகரந்தச் சேர்க்கை நுட்பம் ஈடுபடுத்தப்படும். அனேக மலர்களில் மகரந்தச் சேர்க்கை முறைகள் இரண்டு பெரும் குழுக்களாக பிரிக்கப்படுகின்றன: "என்டோமோஃபிலஸ்": பூச்சிகள், வெளவால்கள், பறவைகள் அல்லது பிற விலங்குளை மலர்கள் கவர்ந்து மகரந்தங்களை ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு எடுத்துச்செல்வதற்கு பயன்படுத்துகின்றன. அனேக நேரங்களில் அவை வடிவத்தில் சிறப்பானவையாகவும், மகரந்தசேர்ப்பிகள் அதன் ஈர்ப்பினைத் (தேன், மகரந்தம் அல்லது இணை) தேடி வரும்போது அதன் உடலில் மகரந்த தூள்கள் மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மகரந்தகோசங்களை வரிசையாக கொண்டிருக்கும். இந்த ஈர்ப்பிக்களை ஒரே வகையான தாவரங்களின் பல்வேறு மலர்களில் பின்தொடர்வதில், அது வருகைத் தரும் அனைத்து மலர்களிலும் - வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் சூலக முகட்டில் மகரந்தங்களை மாற்றுகின்றன. மகரந்தச்சேர்க்கையை உறுதி செய்வதற்காக மலர் பாகங்களிடையே எளிய இடவகை அண்மையை பல மலர்கள் நம்பியிருக்கின்றன. மற்றவைகள், "சாராசேனியா" அல்லது லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட் மலர்கள் போன்றவை, சுய மகரந்தச் சேர்க்கையை தவிர்க்கும்போது மகரந்தச் சேர்க்கையை உறுதி செய்வதற்காக நுட்பமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. "அனேமோஃபிலஸ்:" மலர்கள் மகரந்தங்களை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நகர்த்துவதற்கு காற்றைப் பயன்படுத்துகின்றன, உதாரணங்களில் உள்ளடங்குவன புற்கள் (போவேசியா), பிர்ச் மரங்கள், ராக்வீட் மற்றும் மேபிள்ஸ். அவைகளுக்கு மகரந்தசேர்ப்பிகளைக் கவரவேண்டியத் தேவையில்லை, எனவே அவைகள் “ஆடம்பர” மலர்களைக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. அதே சமயம் என்டமோஃபிலஸ் மலர்களின் மகரந்தம் பெரிய துகள்களாகவும், ஒட்டக்கூடியதாகவும் புரத வளம் நிறைந்ததாகவும் (மகரந்தச் சேர்ப்பிகளுக்கு மற்றுமொரு “பரிசு”) இருக்கும், அனேமோஃபிலஸ் மலர் மகரந்தங்கள் பொதுவாக சிறிய துகள்களாகவும், மிகவும் லேசானதாகவும், பூச்சிகளுக்கு குறைந்த ஊட்டமிக்கதாகவும், பஞ்சகாலங்களில் மட்டும் கிடைப்பதாகவும் இருக்கின்றன. தேனீக்களும், பெரியவகை வண்டுகளும் அனேமோஃபிலஸ் கதிர்மணி (மக்காச்சோளம்) மகரந்தங்களை, அவைகளுக்கு அவை குறைந்த மதிப்பினதாக இருந்தாலும், ஆற்றலுடன் சேகரிக்கின்றன். சில மலர்கள் சுய மகரந்தச் சேர்க்கை செய்பவை மற்றும் ஒருபோதும் திறவாத மலர்களைப் பயன்படுத்துகிறது அல்லது மலர்கள் திறக்கும் முன்பே மகரந்தச் சேர்க்கை முடிந்துவிடும். இந்த மலர்கள் க்ளேயிஸ்டோகாமஸ் என்று அழைக்கப்படுகின்றன. பல வயோலா தாவர வகைகள் மற்றும் சில சால்வியாக்கள் இந்த வகை மலர்களைக் கொண்டிருக்கும். பல மலர்கள் ஒன்று அல்லது ஒரு சில குறிப்பிட்ட மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிர்களுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, சில மலர்கள் ஒரே ஒரு குறிப்பிட்ட பூச்சிவகைகளை கவர்கின்றன, எனவே வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்கு அந்தப் பூச்சியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மலர் மற்றும் மகரந்தபரப்பி இரண்டும், ஒரு நீண்ட காலத்தில் ஒன்றுக்கொன்றின் தேவைகளை எதிர்கொண்டு ஒன்றாக வளர்ச்சியடையவதாகக் கருதப்படுவதால், இந்த நெருக்கமான உறவுமுறை இணைமலர்தலுக்கான ஒரு உதாரணமாக அடிக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த நெருக்கமான உறவுமுறை மரபழிவின் எதிர்மறை விளைவுகளை ஒன்று சேர்க்கிறது. இத்தகைய உறவுகளில் எந்த ஒரு உறுப்பினரின் அழிவும் ஏறக்குறைய மற்ற உறுப்பினரின் அழிவும் உறுதியாகிறது. அழிவிலிருக்கும் சில தாவர வகைகள் அவ்வாறு ஏற்படுவதற்கு சுருங்கிவரும் மகரந்த சேர்ப்பிகளின் தொகைகளே காரணமாகும். சில மலர்களில் மகரந்தகோசங்கள் மற்றும் யோனி சுயக் கருத்தரித்தலுக்கான திறனுடன் இருக்கும். அது விதைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கச் செய்கிறது, ஆனால் மரபு மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. சுயக்கருத்தரித்தலின் அதிகபட்ச நிகழ்வு எப்போதும் சுயக்கருத்தரித்தல் உண்டாகும் மலர்களில் நிகழ்கிறது, பல டான்டேலியன்கள் போன்றவை. சொல்லப்போனால், சுயகருத்தரித்தலைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கொண்டிருக்கின்றன. ஒற்றைப் பால் ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் தோன்றாமலோ அல்லது ஒரே நேரத்தில் முதிர்ச்சியடையாமலோ இருக்கலாம், அல்லது ஒரே தாவரத்திலிருந்தான மகரந்தம் அதன் சூல்வித்தை கருத்தரிக்கச் செய்ய இயலாமல் போகும். முந்தைய வகைகள், தங்களின் சொந்த மகரந்தங்களை பெற்றிருக்க இரசாயன தடைகளைக் கொண்டிருக்கும், அவை சுய-மலடு அல்லது சுய-திறனற்றவை என்றும் குறிக்கப்படுகிறது. (தாவரப் பாலியலைப் பார்க்கவும்). 425 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாவரங்கள் இருந்தபோது, முதலாமானவைகள் தங்களின் நீர்சார் இணைகளான வித்துகளிடமிருந்து ஒரு எளிமையான ஏற்பின் மூலம் அதாவது வித்து மூலம் இனப்பெருக்கம் செய்தன. கடலில், தாவரங்கள் -- மற்றும் சில விலங்குகள் -- தங்களின் மரபு குளோன்களை சிதறச் செய்து அவை மிதந்து வேறு எங்காவது வளரச் செய்ய முடியும். இவ்வாறு தான் ஆதி கால தாவரங்கள் வளர்ந்தன. இந்தப் பிரதிகள் காய்ந்துவிடுவதை மற்றும் கடலை விட நிலத்தில் அதிகம் நிகழக்கூடிய பிற கேடுகளை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு முறைகளை தோற்றுவித்தன. அது மலராகத் தோன்றாவிட்டாலும், அந்தப் பாதுகாப்பே வித்து ஆனது. ஆரம்ப கால விதைத் தாவரங்கள் ஜின்க்கோ மற்றும் கூம்புத் தாவரங்கள் ஆகியவற்றை உள்ளிடுகின்றன, ஆரம்பகால மலர் தாவரங்களின் புதைப்படிவமானது, 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, ஆர்கேஃப்ரக்டஸ் லியானின்ஜெனிசிஸ் ஆகும்[13]. மரபழிந்த மூடாவித்துத் தாவரங்களின் (எக்ஸ்டின்க்ட் ஜிம்னோஸ்பேர்ம்ஸ்) பல்வேறு குழுக்கள், குறிப்பாக விதை பன்னங்கள் (சீடு ஃபெர்ன்கள்), மலர் தாவரங்களின் முன்னோடிகளாக முன்வைக்கப்படுகின்றன, ஆனால் எவ்வாறு மலர் தோன்றியது என்பதைக் காட்டுவதற்கான தொடர்ச்சியான புதைப்படிவங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. மரபழிந்த மூடாவித்துத் தாவரங்களின் (எக்ஸ்டின்க்ட் ஜிம்னோஸ்பேர்ம்ஸ்) பல்வேறு குழுக்கள், குறிப்பாக விதை பன்னங்கள் (சீடு ஃபெர்ன்கள்), மலர் தாவரங்களின் முன்னோடிகளாக முன்வைக்கப்படுகின்றன, ஆனால் எவ்வாறு மலர் தோன்றியது என்பதைக் காட்டுவதற்கான தொடர்ச்சியான புதைப்படிவங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. புதைப்படிவப் பதிவுகளில் தொடர்புடைய நவீன மலர்களின் திடீரென்று வெளிப்பட்ட தோற்றமானது, தோற்ற பரிணாமத்திற்கான கோட்பாட்டிற்கே பெரும் சிக்கலை உண்டாக்கி அதை சார்லஸ் டார்வின் "அருவருப்பான புதிர்" என்று கூறும் அளவுக்குச் சிக்கலானது. சமீபத்தில் கண்டறியப்பட்ட "ஆர்கியோஃப்ரக்டஸ்" போன்ற மலர் தாவரங்களின் புதைப்படிவம், மூடாத்தாவரப் புதைப்படிவங்களுக்கான மேற்கொண்ட கண்டுபிடிப்புகளுடன், மலர்தாவரங்களின் குணநலன்களை எவ்வாறு தொடர்ச்சியான படிப்படியான வளர்ச்சியை பெற்றிருக்கக்கூடும் என்பதை கருத்துரைக்கின்றன. சமீபத்திய டிஎன்ஏ பகுப்பாய்வுகள் (மூலக்கூறு முறைப்படுத்தல்கள்) பசிபிக் தீவுகளின் நியூ காலடோனியாவில் காணப்படும் “அம்போரெல்லா டிரிக்கோபோடா”, மற்ற இதர மலர் தாவரங்களின் துணைக் குழு என்று காட்டுகின்றன. மேலும் தாவர வடிவமைப்பியல் அது முந்தைய தாவர மலர்களின் குணநலன்களாக இருப்பவற்றிற்கான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்று கருத்துரைக்கின்றன. ஆரம்பம் முதலே, மலர்களின் செயல்பாடு என்பது பிற விலங்குகளை இனப்பெருக்க செயல்முறைகளில் ஈடுபடுத்துவது என்ற பொதுவான ஊகமாகும். மகரந்த தூள்கள் பளிச்சென்ற நிறங்கள் மற்றும் நிச்சயமான வடிவம் இன்றி பரப்பப்படலாம், தாவரத்தின் வளங்களை பயன்படுத்துவதன் மூலம், அவை மற்ற சில பலன்களை தராதபட்சத்தில், அது மற்றுமொரு கடப்பாடாக இருக்கக்கூடும். மலர்களின் இந்த திடீரென்ற முழுமையான வளர்ச்சிபெற்றத் தோற்றத்திற்கு முன்வைக்கப்படும் காரணம், அவை ஒரு தீவு அல்லது தீவுகளின் சங்கிலித் தொடர்போன்ற அமைப்புகளில் தோன்றியது என்பதாகும், அவ்விடங்களில் அவற்றைக் கொண்டிருக்கும் தாவரங்கள் மிகவும் சிறப்பான உறவினை சில குறிப்பிட்ட விலங்குகளுடன் (உதாரணத்திற்கு குளவி) உருவாக்கிக்கொள்கின்றன, இந்த வழியில் பல தீவுத் தாவர இனங்கள் இன்றும் வளர்கின்றன. இந்த இணைவாழ்வுத் திடமான உறவுமுறை, குளவியினால் ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படும் ஃபிக் குளவிகள் இன்று செய்வது, இரண்டு தாவரங்களிலும் மற்றும் அதன் கூட்டாளிகளிலும் உயர் அளவிலான சிறப்பினை உருவாக்கியிருக்கக்கூடும். தாவர வகைப்படுத்தலுக்கான பொதுவான ஆதாரமாக தீவு மரபியல் நம்பப்படுகிறது, குறிப்பாக அடிப்படை ஏற்புகள் என்று வரும்போது தாழ்வான இடைமாறுபாட்டு மாற்றங்களைக் கொண்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. குளவி உதாரணம், தற்செயலானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்; இணைவாழ்வுத் திறன் உறவுமுறைளுக்காக குறிப்பாகத் தெளிவுடன் தோன்றியவை வண்டுகள்; அவை குளவிகளின் மரபுவழித் தோன்றல்களாகும். அதேபோன்று, தாவர இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் அனேகப் பழங்கள் பூக்களின் பாகங்களின் பெரிதாக்கப்படுதலில் இருந்து வருவதாகும். அதை உண்ணவிரும்பும் விலங்குகளைப் பொருத்து அந்தப்பழம் அடுக்கு நிகழ்வுக் கருவியாகிது, மற்றும் அது கொண்டிருக்கும் பழங்கள் அவ்வாறே பரவச் செய்யப்படுகின்றன. அத்தகைய பல இணைவாழ்வுத் திறமான உறவுகள் முக்கிய நில விலங்குகளுடன் வாழ்வதற்கான போட்டியிலும் பரவுவதிலும் மிகவும் வலுவற்றதாக இருப்பதால், மலர்கள் அசாதாரணமான வகையில் இனப்பெருக்கத்திற்கும், நிலத் தாவர வாழ்வில் முனைப்பானவையாக ஆவதற்காக பரவுவதற்கும் (அவற்றின் அசல் தோற்றம் எதுவாக இருந்தாலும்) ஆற்றல்மிக்கவைகளாக நிரூபணமாயின. அத்தகைய மலர்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்ததற்கு மிகவும் அரிதான ஆதாரங்கள் இருக்கும்போது, அவை 250 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்ததற்கு சில சூழ்நிலை சார்ந்த ஆதாரங்களும் இருக்கின்றன. கைகான்டோபெட்ரிட்ஸ்ஸை உள்ளிட்டு, தங்கள் மலர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, ஓலியனேன் என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் தாவரம் புதைப்படிவத்தில் அறியப்பட்டுள்ளன, அதே சமயத்தில் வளர்ச்சியடைந்த மற்றும் மலரும் தாவரங்களின் நவீன தனிக்கூறுகளைக் கொண்டிருக்கும் அவை, தாமாகவே மலரும் தாவரங்களாக அறியப்படவில்லை, ஏனென்றால் அவற்றின் தண்டுகள் மற்றும் சிறுமுட்கட்கள் மட்டுமே விவரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது; கல்லாகச்சமைதலின் உதாரணங்களில் ஒன்றாகும். இலை மற்றும் தண்டு அமைப்பிலிருக்கும் ஒத்த தன்மை மிகவும் முக்கியமானது, ஏனென்றால் மரபியல்படி பூக்கள் ஒரு தாவரத்தின் சாதாரண இலை மற்றும் தண்டுக்கூறுகளின் தழுவலாகும், ஒரு புதிய இளந்தளிர் கொம்பின் உருவாக்கத்திற்கு மரபணுக்களின் கலவை பொறுப்பாகிறது. மிகவும் முற்பட்டக் காலத்திய மலர்கள் பலவேறு மாறுபட்ட மலர்களின் பாகங்களைக் கொண்டிருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது, அவை அடிக்கடி ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தனியாக இருக்கும் (ஆனால் தொடர்பிலிருக்கும்). இருபால் வகையாக இருப்பதற்கு (தாவரங்களில், இது ஒரே மலரில் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இருப்பதாகப் பொருள்படும்) மற்றும் கருவகத்தால் விஞ்சப்பட்டிருப்பதற்கு (பெண் பாகம்), மலர்கள் சுருள் வகையாக வளர்வதற்கு எண்ணப்படுகிறது. மலர்கள் மேலும் நவீனமாக வளர்வதால், மேலும் அதிகமான குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் வடிவத்துடன், ஒரு மலருக்கு அல்லது ஒரு தாவரத்திற்கு, ஏதேனும் ஒரு பாலுடனோ அல்லது குறைந்தது “தாழ்வான கருவகத்துடனோ" சில மாற்றங்களுடனான பாகங்கள் ஒன்றிணைந்திருக்கும். மலர் வளர்ச்சி தொடர்ந்து இன்றுவரை இருக்கிறது; நவீன மலர்கள் முழுமையான ஆற்றலுடன் மனிதர்களால் தாக்கமடையச் செய்யப்படுவதால் இயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்யமுடிவதில்லை. வீடுகளில் வளர்க்கப்படும் பல நவீன மலர்கள் வெறும் களைகளாக இருந்தன, நிலத்தை களையும்போது மட்டுமே அவை தழைத்தன. அவற்றில் சில மனிதப் பயிர்களுடன் வளர முயற்சித்தன மற்றும் அவற்றில் மிகவும் அழகாக இருந்தவை அவற்றின் அழகுக் காரணமாக, சார்புத்தன்மையை ஏற்படுத்தி மனித பாசத்தை தழுவிக்கொள்வதால் பறிக்கப்படுவதில்லை. பல மலர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் முக்கியக் குறியீட்டு பொருள்களைக் கொண்டுள்ளன. மலர்களுக்கு பொருள் தரும் நடைமுறைக்கு ஃப்ளோரியோகிராஃபி என்று பெயர். மிகவும் பொதுவான உதாரணங்களில் உள்ளடங்கும் சில: ஜியார்ஜிய ஓ’கேஃப்பே, ஈமோஜென் கன்னிங்ஹாம், வெரோனிகா ரூயிஸ் டி வெலாஸ்கோ மற்றும் ஜூடி சிகாகோ போன்ற கலைஞர்களின் படைப்புகளிலும், இன்னும் ஆசிய மேற்கத்திய கலை ஓவியங்களிலும் காணப்படுவதுபோல், மலர்கள் கலையிலும் பெண்ணுறுப்புகளின் அம்சமாக சித்தரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் பல்வேறு கலாச்சாரங்கள் பெண்மையுடன் தொடர்புடையதாக மலர்களைக் குறித்துள்ளன. பல்வேறு கவிஞர்களின் படைப்புகள், குறிப்பாக 18-19 ஆம் நூற்றண்டின் காதல் காலத்தில், பெரிய அளவிலான மற்றும் அழகான மலர்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. பிரபலமான உதாரணங்களில் உள்ளடங்குவன, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் "ஐ வாண்டர்ட் லோன்லி ஆஸ் எ க்ளௌட்" மற்றும் வில்லியம் ப்ளேக்கின் "ஆ! சன்ஃப்ளவர்" அவற்றின் மாறுபட்ட மற்றும் வண்ணமயமானத் தோற்றம் காரணமாக, மலர்கள் காட்சிச் சார்ந்த கலைஞர்களின் விருப்ப விஷயமாக பல காலமாக இருந்து வருகிறது. வான் காகின் சூரியகாந்தி மலர் வரிசை அல்லது மோனட்டின் நீர் அல்லிகள் போன்ற நன்கு அறியப்பட்ட ஓவியர்களின் பிரபலமான ஓவியங்கள் மலர்களுடனானவை. முப்பரிமான மலர் ஓவியங்களை உருவாக்குவதற்காக, மலர்கள் உலரவைக்கப்படுகின்றன, உறைய வைக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன மற்றும் அழுத்தப்படுகின்றன. மலர்கள், பூந்தோட்டங்கள் மற்றும் வசந்த காலத்திற்கான ரோமனிய பெண் கடவுள் ஃப்ளோரா. வசந்த காலம், மலர்கள் மற்றும் இயற்கைக்கான கிரேக்க பெண் கடவுள் க்ளோரிஸ். இந்து மதப் புராணங்களில், மலர்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பிருக்கிறது. இந்து அமைப்பின் மூன்று கடவுள்களில் ஒருவரான விஷ்ணு, எப்போதும் தாமரை மலர் மீது நேராக நின்றிருப்பது போன்று சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவுடன் உள்ளத் தொடர்பு தவிர, இந்து பாரம்பரியம் தாமரையை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதுகிறது. உதாரணத்திற்கு, உருவாக்கத்திற்கான இந்து மதக் கதைகளில் அது சித்தரிக்கப்படுகிறது. நவீன காலங்களில், அவற்றின் ஏற்கத்தக்க தோற்றம் மற்றும் மணம் காரணமாக, ஓரளவு மக்கள் பூக்களை அல்லது மொட்டுக்களை விளைவிக்கவும், வாங்கவும், அணிந்துகொள்ளவும் அல்லது ஏதோ ஒரு வகையில் மலர்களைச் சுற்றியிருக்கவும் விரும்புகிறார்கள். உலகெங்கிலும், மக்கள் மலர்களை பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு பயன்படுத்துகிறார்கள், இது ஒட்டுமொத்தமாக ஒருவரின் வாழ்வினை சூழ்ந்திருக்கிறது: எனவே மலர்களை மக்கள் வீட்டைச் சுற்றி வளர்க்கிறார்கள், தங்களின் வாழ்விடம் முழுவதையும் மலர் தோட்டத்திற்காக அர்பணிக்கிறார்கள், காட்டுப்பூக்களைப் பறிக்கிறார்கள் அல்லது மொத்த வர்த்தக மலர் வளர்ப்பவர்கள் மற்றும் அவர்களின் வணிகத்திற்கு உதவும் அனுப்புபவர்களை சார்ந்திருக்கும் மலர் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவார்கள். தாவரத்தின் மற்ற பாகங்களைவிட (விதைகள், பழங்கள், வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகள்) குறைவான உணவையே அளிக்கிறது, ஆனால் அவை பல்வேறு முக்கிய உணவுகளையும் நறுமணப் பொருட்களையும் அளிக்கின்றன. ப்ரக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஆர்டிசோக் உள்ளிட்டவை மலர்காய்கள். மிகவும் விலைமதிப்புமிக்க நறுமணப்பொருள், குங்குமப்பூ, க்ராகஸின் காயவைக்கப்பட்ட சூலகங்களைக் கொண்டிருக்கும். பிற மலர் நறுமணப்பொருட்களாவன கிராம்பு மற்றும் கேப்பர். ஹாப்ஸ் மலர்கள் பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய, முட்டையின் மஞ்சள் கரு பொன்நிற மஞ்சளாக இருப்பதற்காக மாரிகோல்டு மலர்கள் கோழிகளுக்குக் கொடுக்கப்படுகினறன. டேன்டேலியன் மலர்கள் ஒயினாக தயாரிக்கப்படுகின்றன. ஆரோக்கியமான உணவாகக் கருதப்படும் சிலரால் தேனீக்களால் சேகரிக்கப்படும் மகரந்தங்கள். தேன் தேனீக்கள் சேகரித்த மலர்த் தேனைக் கொண்டிருக்கும் மற்றும் இது மலரின் வகையைப் பொருத்து பெயரிடப்படுகிறது, எ.கா. ஆரஞ்சு மலர்தேன், டுபேலோ தேன். நூற்றுக்கணக்கான மலர்கள் சாப்பிடக்கூடியவையாக இருந்தாலும், மிகக் குறைவானவையே விரிவாக சந்தைப்படுத்தப்படுகின்றன. அவை அடிக்கடி சாலாட்களில் நிறம் மற்றும் சுவையை சேர்க்கப் பயன்படுத்துகின்றன. ஸ்குவாஷ் மலர்கள் பிரட் தூள்களில் நனைக்கப்பட்டு வறுக்கப்படுகின்றன. சாப்பிடக்கூடிய மலர்களில் உள்ளடங்குவன நாஸ்டுர்டியம், கிரிஸான்தமம், கார்னேஷன், காட்டெயில், ஹனிசக்கிள், சிக்கரி, கார்ன்ஃப்ளவர், கன்னா மற்றும் சூரியகாந்தி. சில நேரங்களில் சில சாப்பிடக்கூடிய மலர்களில் டெய்ஸி மற்றும் ரோஜா போன்றவை சர்க்கரைப்பாகினைக் கொண்டிருக்கும் (நீங்கள் சக்கரைப்பாகுள்ள பான்ஸிக்களைப் பார்த்திருக்கலாம்) மலர்கள் மூலிகை தேனீராகவும் தயாரிக்கப்படலாம். உலரவைக்கப்பட்ட க்ரிஸான்தமம், ரோஜா, ஜாஸ்மின், கமோமைல் தேனீரில் மணத்திற்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் ஊறவைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவை கூடுதல் மணத்திற்காக தேயிலையுடன் கலக்கப்படுகின்றன. பொம்மை பொம்மை ("doll"), ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். பொதுவாக, பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் பெரியவர்களும் வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகளும் கூட பொம்மைகளுடன் விளையாடுவதைக் காணலாம். பொம்மையாக பயன்படுத்துவதற்காகவே பல விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்றாலும், வேறு முதன்மைப் பயன்பாடு உடைய பொருட்களும் பொம்மை போல் பயன்படுத்தப்படுவதை காணலாம். சில பொம்மைகள், பொம்மை விரும்பிகளால் சேகரிப்பதற்காக மட்டுமே இருக்கின்றன. அவற்றை விளையாடப் பயன்படுத்துவது இல்லை. எனினும் சிலர் விளையாடுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர். உலகை அறிந்து கொள்ளவும் வளர்ச்சி அடையவும் விளையாட்டுகளும் பொம்மைகளும் உதவுகின்றன. குழந்தைகள், பொம்மைகளைக் கொண்டு உலகை அறிந்து கொள்ளவும், தங்கள் உடல் வலுவைக் கூட்டவும், வினை - விளைகளை அறியவும், தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், பெரியவர்களாக வளரும் போது தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். பெரியவர்கள், சமூகத் தொடர்புகளை பெருக்கிக் கொள்ளவும், குழந்தைகளுக்குக் கற்றுத் தரவும், தங்கள் சிறுவயதில் கற்ற பாடங்களை நினைவூட்டிக் கொள்ளவும், மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கவும், அன்றாடம் பயன்படுத்தாமல் போகக் கூடிய திறன்களில் பயிற்சி எடுக்கவும், தங்கள் வாழிடத்தை அழகூட்டவும் பொம்மைகளைப் பயன்படுத்துகின்றனர். வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றைத் தாண்டி, பொம்மைகளும் அவை பயன்படுத்தப்படும் முறைகளும் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை உருவாக்குகின்றன. பொம்மைகள் களிமண், நெகிழி, காகிதம், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. பொம்மைகள், முன் வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் சுமார் 4000 வருட பழமையான கல் பொம்மை இத்தாலியத் தீவுகளுள் ஒன்றான பான்தலேரியா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இருப்பினும் இது விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதா?, என்பதற்கான சான்றுகள் இல்லை. குழந்தைகளின் விருப்பப் பொருளான பொம்மைகள், உலகின் கலை, பண்பாடு, அறிவியல், சமூகம் மற்றும் காலம் சார்ந்து பல ஆண்டுகளாக மேம்பாடடைந்துள்ளது. பொம்மைகளின் வரலாறு மிகச்சரியாகக் கணிக்க இயலாவிடினும் பல்வேறு மாற்றம், படிமங்கள் சார்ந்து அவற்றின் கால அளவைகளைக் கண்டறியலாம். பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கு மட்டுமின்றி கற்றல், மாயம், ஆன்மிகம், சடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொம்மைகள் சிறார்களின் விளையாட்டு சாதானமாக மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகிறது. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவைகளைக் கணிக்க இயலும். பொம்மைகள் சிறார்களைக் கவருவதோடு அவர்களின் விடாமுயற்சி, ஆர்வம், ஊக்கம், வெற்றி, பெருமிதம், தன்னிறைவு உள்ளிட்ட பண்புகளை செப்பனிடுவதாகவும் உள்ளன. குழந்தைகள் விளையாட்டு மூலம் பல திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தொடர்பறி கற்றல் முறைமை எளிதாக நினைவில் கொள்ள உதவுகிறது. பொம்மைகள் குழந்தைகளின் கணிதம், வரலாறு, சமூக அறிவியல் ஆகியவற்றின் கற்றல் முறையை எளிமையாக்குகின்றன. பொம்மைகளுக்கு பாலின வேறுபாடுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தும் சிறார்களின் (சிறுவர், சிறுமியரின்) பயன்பாடுகள் கொண்டும், பொம்மைகளின் உருவ அமைப்புகளின் படியும் பாலின வேறுபாட்டை அறிய இயலும். சிறார்களின் பொம்மைகள் அவர்களின் விருப்பத் தேர்வு, அனைவராலும் அறியப்பட்ட பிரபலம், நவீன சந்தைப்படுத்தல் (அ) புதுவரவு, கையிருப்பு போன்ற காரணிகளால் மிகப்பெரும் பொருளாதாரச் சந்தையினையும் அதிகம் உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயத்தையும் கொணர்கிறது. பார்பி பொம்மை (Barbie dall), டெடி கரடிக்குட்டி பொம்மைகள் உலகப் பிரசித்தி பெற்றன. இவற்றின் சந்தை மதிப்பு இன்றளவும் பல மாதிரிகளுள் வேறுபடும். ஒவ்வொரு நாடு மற்றும் இனத்தின் பண்பாட்டைக் கொண்டு இப்பொம்மைகளின் அலங்காரங்கள் மாறுபடும். கொலு என்பது இந்து சமயத்தில் தெய்வ மற்றும் சான்றோர்களின் சிறிய பொம்மைகளை படிப்படியாக வைத்து ஒன்பது இரவுகளுக்கு நவசக்தி விழாவில் வழிபாடு நடத்துவதாகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் நவராத்திரியின் போது தெய்வ சிற்றுருக்கள் வரிசையாக முறைப்படுத்தப் பட்டிருக்கும். மகளிரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக பொம்மைகளின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் இருக்கும். புராணகால கதைமாந்தர்களை சித்தரிக்கும் வகையில் பொம்மைகள் இருக்கும், குறிப்பாக தசாவதார பொம்மைகள் (திருமாலின் பத்து அவதாரங்கள்), முப்பெருந்தேவியர் (கலைமகள்,மலைமகள்,திருமகள்), விநாயகர், சிவன், பிரம்மா, முருகன் உள்ளிட்ட கடவுள்களின் சிற்றுருக்கள் முறைப்படி அடுக்கப்பட்டிருக்கும். இத்தோடு மரப்பாச்சி பொம்மைகள், தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகளும் இக்கொலுவில் இடம் பெறும். கொலுவானது இந்தியாவின் பல இடங்களிலுள்ள பொம்மைகளை ஒருசேர அடுக்கி அதன் பெருமைகளை உரைக்கும் விழா ஆகும். பொதுவாக, எட்டிகொபக்கா (ஆந்திரா), கொண்டபல்லி (ஆந்திரா), கின்னல் (கர்நாடகா), சன்ன பட்டினம் (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு) போன்ற பல்வேறு இடங்களிலுருந்து மர மற்றும் களிமண் பொம்மைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப் படுகின்றன. இந்திய நடனக் கலைகளைப் பறைசாற்றும் விதமாக பரதம், கதகளி, தாண்டியா, ஒடிசி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, போன்ற நடன அமைப்பைக் கொண்ட நடன பொம்மைகளும் இடம் பெறும். சமூக மாதிரி வடிவங்களாக சிறுசிறு பொம்மைகள் பல்வேறு விழாக்கள், அலுவலகங்கள், சமூகக் கூடங்கள், தொழில் நிலையங்கள் போன்றவற்றின் மாதிரிகளாகவும் இடம் பெற்றிருக்கும். தஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலை நுட்பம் மற்றும் கலை வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும். மண்ணில் செய்யப்பட்டு பலவகை வண்ணம் பூசப்பட்ட இவ்வகைப் பொம்மைகளின் தலை சிறிய கம்பியினால் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டு ஆடிய வண்ணம் இருக்கும். இதனால் இக்காரணப்பெயர் பெற்றது. உடலின் அடிப்பாகம் சம்மணமிடப்பட்டு அல்லது சமதளத்தில் தலை மட்டும் உச்சியில் தணித்து ஆடிய வண்ணம் இருக்கும். சான்றாக செட்டியார், செட்டிச்சி பொம்மைகள் சம்மணமிட்டு சிரித்த வண்ணம் தலையை அசைத்த வண்ணமிருக்கும். தலை, உடல் ஆகியன ஒன்றிணைத்து கூம்பு வடிவில் சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் அடிப்பாகம் அரைக்கோள வடிவிலிருக்கும். மேலும் இதனுள் அதிக எடையுள்ள சிறிய கோலிக்குண்டு ஒன்றும் உள்ளது. மேற்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் ஆடும் நிலைப்பாட்டுடன் எவ்வாறு அசைத்தாலும் அசைந்தாடும். புவியீர்ப்பு விசையின் காரணமாக இறுதியில் நேர் செங்குத்தாக நிலை நிறுத்தப்படும். தலை, உடல் ஆகியன தனித்தனி கம்பிகளால் தனித்துவிடப்பட்டு சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் தலைப்பாகம் தனிக்கம்பியுடனும், அடிப்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் இவை அசைந்தாடும். தலை, உடல், பாதம் என அனைத்தும் தனிதிருக்கும் நடன மங்கை பொம்மை வகை கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம் போன்ற இடங்களிலிருந்து தருவிக்கப் படுகிறது. இந்திய அரசால் 2008-09ஆம் ஆண்டு தலையாட்டி பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது. மரப்பாச்சி பொம்மைகள், இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தமிழகத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மருத்துவ குணம் கொண்ட பொம்மைகளாகும். இப்பொம்மைகள் பல்வேறு குடும்ப உறவுகளை விளக்கும் விதமாகவும், கடவுளின் சிற்றுருவாகவும் அமைந்திருக்கும். வண்ண சாயம் பூசப்பட்டும், வண்ணம் அற்றும் இரு வகைகளில் உள்ளன. மேலும் பல்வேறு அலங்கார ஆபரணமிட்டு சிறுமியர் விளையாடி மகிழ்வர். இம்மரப்பாச்சி பொம்மைகளில் திருமண மணமகன், மணமகள் பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றன. கர்நாடக மாநிலத்தின் சன்னபட்டின கிராமத்தில் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பொம்மைகள் சன்னபட்டின பொம்மைகள் ஆகும். இவை பலவகை வண்ணங்களுடன் யானை மரம் (அ) தந்த மரம், நூக்க மரம், மற்றும் சந்தன மரத்தால் (அரிதாக) செய்யப்படுபவை. பாவாஸ் மியான் சன்னப்பட்டின பொம்மைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் தாம் கற்றுணர்ந்த சப்பானிய தொழில்நுட்பப் மூலம் பொம்மைகளைத் தயாரித்தார். பின்னர் இந்திய கலை மற்றும் ரசனைகளுக்கேற்ப உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியால் பொம்மைகளை உருவாக்கினார். கட்டிட வடிவிலான ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படும் பொம்மைகள் இவ்வகையிலானவை. சிறுசிறு அச்சுகள் ஒன்று சேர்ந்து ஒரு உருவ அமைப்பைத் தாங்குதல் போன்று வடிவம் பெறும். மனித, விலங்கு, கற்பனைக் கதாபாத்திரம், போன்றனவற்றின் சிற்றுருக்கள் அல்லது சிறிய கையடக்கப் பாவைகள் இவ்வகையின. சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஓரிடத்திலிருந்து சிறு வடத்தின் மூலம் இழுத்துச்செல்ல இயலும் வண்டிகள் மற்றும் சிறிய தேர்வகைப் பொருத்தப்பட்ட பொம்மைகள். பொதுவாக ஆண் சிறார்களால் அதிகம் விரும்பப்படுவதும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிறுத்தேர் விளையாட்டுடன் இப்பொம்மைகள் ஒப்பு நோக்கப்படுகின்றன. உரோபட்டுகள் எனப்படும் எந்திர தானியங்கிகள் மின்கல மின்னூட்டம் மூலம் பொம்மைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அசைவு சமிக்ஞைகள், சிறு ஒளி விளக்குகள், ஒலிப்பான்கள் மூலம் குழந்தைகளைக் கவருகின்றன. தானாக அசையும் படியான எந்திர பொம்மைகள் சாவிகள் மூலமாக எந்திர சக்கரம் அல்லது சுருள்களினால் சுழற்றப்படுகின்றன. இதனால் இவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடல், தாவல், சுழலுதல், உருளுதல் போன்ற முறைகள் மூலம் அசைகின்றன. காட்டில் வாழும் விலங்குகளை மாதிரியாக வைத்து பல்வேறு பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் காடுகளின் மாதிரிகளை எளிதில் உருவாக்க இயலும். குழந்தைகளுக்கும் தொடர்புபடுத்தி கற்றல் முறை மூலம் காட்டு சூல்நிலை மண்டலத்தை எடுத்துக்காட்டாக விளக்க இயலும். மரபுத்தொடர் ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழிவழியாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை மரபுத்தொடர் அல்லது மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது இலக்கணைத் தொடர் அல்லது சொலவடை என்பர். பிறர் அல்லது முன்னோர் ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது கருத்தை தெரிவிக்கப் பயன்படுத்திய சொற்தொடரை வழிவந்தோரும் பயன்படுத்துவதால் மரபுத்தொடர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். பொதுவாக வழங்கும் தொடர்களும், வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆக தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்கள் உள்ளன. ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம். சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான்.கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன.திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாறு. தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது. அப்பாடலில் என இவனைப் பாடப்பட்டுள்ளது.தமிழ்பற்றும்,வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம். இவன் தன் வழிவந்தவனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனிடம் 1267ல் ஆட்சியை ஒப்படைத்து விட்டு கி.பி. 1271 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தான் எனபது வரலாறு. இவனது ஆட்சியில் 7 விதமான பெயர்களுடன் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை, இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று பெயர் பொறித்த நாணயங்கள் நாணயவியல் தந்தை வால்டர் எலியட் என்பவரால் அவரது நூலில் 145ஆவது படமாக வெளியிடப்பட்டுள்ளது.. பொ.பி. 1260 - 1365க்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்ட இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று மூன்று வரிகளில் எழுதப்பட்டுளன. மற்றொரு வகைக்காசில் இரு கயல்களுக்கிடையில் சு என்னும் எழுத்தும் காணப்படுகின்றது. அடுத்து எல்லாம் தலையாயன் என்று பெயர் பொறித்த ஐந்து வகைக்காசுகள் கிடைத்துளன. இப்படி கிடைத்ததை கொண்டு அதிகளவு காசுகளின் வேறுபாடு அறிவதற்காக வேண்டுமென்றே இதைப்போல காசுகள் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம். அடுத்து கோதண்டராமன் என்று பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்துளன. கோதண்டராமன் நாண்யங்கள் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும் இம்மன்னனின் கல்வெட்டுகளில் இவன் பட்டப்பெயர் கோதண்டராமன் என்றிருப்பதைக் கொண்டு இவை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம். இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் தம்பியான இவன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவனாவான். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவனது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு,கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டான் இம்மன்னன்.விசயகண்ட கோபாலனின் சோழ நாடு மற்றும் ஈழ நாடு,கொங்கு நாடு போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவனும் ஆவான். பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை வென்று கப்பம் கட்ட வைத்து தில்லையில் வீராபிடேகம் மற்றும் விசயாபிடேகம் போன்றனவற்றினையும் செய்தான்.கொடுவடுகு வல்லான் என்பவனைவும் வென்று தில்லையில் உள்ள சிவகாமக் கோட்டத்தின் தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தான். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது. ஈழ நாட்டில் போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். திருகோணமலை,திருகூடமலை போன்ற இடங்களில் கயற்கொடி பொறித்தான்.காவிக்களத்தில் சோழனுடன் போர் செய்தான். இவன் தனது தந்தையான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது 23 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு புதுக்கோட்டையிலும் 28 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு நெல்லையில் உள்ள கல்லிடைக்குறிச்சியிலும் உள்ளன.கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் வீரமரணம் அடைந்தான் என்பது வரலாறு. தற்போதைய தாய்லாந்து பகுதியை சேர்ந்த சந்திரபானு என்னும் அரசன் ஈழத்தின் மீது படையெடுத்து அதில் இருந்த தமிழர்களின் வடபகுதியை 1255 ஆம் ஆண்டு வென்றான். அவன் ஈழத்தின் தென்பகுதியை கவரும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இக்காலத்தில் சந்திரபானுவின் மகனான சாவகன் மைந்தன் தாய்லாந்து நாட்டின் தாமிரலிங்க பகுதியை ஆண்டு வந்தான். 1255 ஆம் ஆண்டு வீரபாண்டியனின் அண்ணனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஈழத்தின் மீது படையெடுத்து சந்திரபானு அரசனை தோற்கடித்தான். ஆண்டுக்கு வரியாக பல விலை உயர்ந்த ஆபரணங்களையும் யானைகளையும் பெற்றது பாண்டிய அரசு. மீண்டும் சந்திரபானுவுக்கும் பாண்டியர்களுக்கும் போர் ஏற்பட வீரபாண்டியன் தலைமையில் 1262 ஆம் ஆண்டு முதல் 1264 ஆம் ஆண்டு வரை போர் போர் நடந்தது. அதில் சந்திரபானு கொல்லப்பட்டான். வெற்றியின் நினைவாக வீரபாண்டியன் பாண்டியர் சின்னத்தை திரிகூடகிரியிலும் திரிகோணமலையினும் பொறித்தான். குடுமியான்மலை கல்வெட்டு பாண்டியர் பெற்ற இந்த போர் வெற்றியில் கொண்டுவந்த செல்வங்களை கூறுகிறது. சாவகன் மைந்தன் யாழ்ப்பாணப்பகுதியில் போரிட்டு பாண்டியர்களை எதிர்த்தாலும் போரில் தோற்றதால் பாண்டியர் ஆட்சிக்கு அடிபணிந்தான். பாண்டியர் அரசு சாவகன் மைந்தனை சுந்தரபாண்டியனின் மதுரை அரசின் கீழ் அட்சி செய்ய அனுமதித்தது. சாவகன் மைந்தன் ஆண்ட வடக்கு ஈழப்பகுதி விலை உயர்ந்த கற்கள் கிடைத்தாலும் பாண்டியர் அரசுக்கு செலுத்தி வந்த வரியை சில ஆண்டுகளில் நிறுத்தினான். 1270 ஆம் ஆண்டு சாவகன் மைந்தன் மீண்டும் ஈழத்தின் தெற்குப்பகுதியை படையெடுக்க முயல முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கீழ் பாண்டியர் படை ஈழத்தின் மீது படையெடுத்து சாவகன் மைந்தனை தோற்கடித்தது. மேலும் ஈழத்தின் வடபகுதியை ஆள குலசேகர சிங்கையாரியன் என்பவனை ஆட்சியில் வைத்தது. பாண்டியர்களின் ஆட்சி 1311 ஆம் ஆண்டு மதுரையில் வீழ்ந்த பிறகும் 1619 ஆம் ஆண்டு வரை குலசேகர சிங்கையாரியன் வழி வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் ஈழத்தின் வடபகுதியை ஆண்டனர். வீரபாண்டியன் அரசேற்ற போது அதில் கங்கம் கவுடம் கடாரம் காசிபம் கொங்கம் குதிரம் கோசலம் மாளுவம் அருமனம் சோனகம் சீனம் வந்தி திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் பெபனம் தண்டகம் பண்டரம் முதலிய நாடுகளில் இருந்து அரசர்கள் வந்ததாக மெய்கீர்த்தி கூறுகிறது. ஈழத்தை வென்ற போது அங்கிருந்து வரியாக யானையும் பலப்பைப்புரவியும் கண்மணித்தேரும் சீன வடமரும் நாகத்தோடும் நவமணிக்குவையும் ஆடகத்திரியும் அரியாசனமும் முடியும் கடகமும் முழுமணி யாரமும் கொடியும் குடையும் குளிர்வெண்கவரியும் முரசும் சங்கமும் தனமும் கொண்டு வந்ததாகவும் கூறுகிறது. குடுமியான்மலை சிக்கந்தநாதர் கோயில் கல்வெட்டுகளில் வீரபாண்டியனின் பதினோறாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. அதில் வீரபாண்டியனின் அமைச்சனான காலிங்கராயன் திருநழுக்குன்றம் உடைய நாயனான் கோயிலுக்கும் அதிலுள்ள திருக்காமக்கோட்ட நாச்சியாருக்கும் மேலமநல்லூர் சிற்றூரையும் அதில் கிடைக்கப்பெறும் வரிகளையும் தானமாக அளித்ததை குறிப்பிடுகிறது. இந்த திருக்காமக்கோட்ட நாச்சியார் துர்க்கையாண்டாள் நாச்சியாரின் மகள் என்றும் கல்வெட்டில் உள்ளது. முறப்பநாட்டு வேத நாராயண பெருமாள் கோவிலில் காணப்படும் வீரபாண்டியன் கல்வெட்டு 1266 ஆம் ஆண்டு போசளவீர சோமிதேவ-சதுர்வேதிமங்கலம் மகாசபையினர் நரசிம்ம பரம்சாமி கடவுளுக்கு நிலங்களை தானம் கொடுத்ததை குறிப்பிடுகிறது. அதில் வீரபாண்டியனின் பதினோறாம் ஆட்சியாண்டில் வீரபாண்டியனால் பூந்தோட்டத்துக்காக கொடுக்கப்பட்ட இரண்டு இடங்களும் இறைவனறையூர் ஸ்ரீகிருஷ்ண பட்டனால் கொடுக்கப்பட்ட ஒர் இடமும் வீரபாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் இறையிலியாக கொடுக்கப்பட்ட ஒர் இடமும் அடக்கம். இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான்.முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சி செய்தான் என திருத்தாங்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது. நருமதை நருமதை ஆறு அல்லது நர்மதா ஆறு (Narmada River) இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து நர்மதா மாவட்டம் வழியாக அரபிக் கடலில் கலக்கின்றது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு தபதி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. தென்னாட்டில் கிரி வலம் (பரிக்ரமா) பிரபலமாக இருப்பதைப் போன்றே, வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலம். நர்மதை மிகவும் புனிதமான நதியாதலால், நதியைக் காலணி அணியாமல் வலம் வர வேண்டும். பரிக்ரமாவின் போது பணம் வைத்துக் கொள்ளக் கூடாது,பிச்சையேற்றே உணவு உண்ண வேண்டும். புராணத்தின்படி நர்மதை சிவபெருமானின் உடலிலிருந்து தோன்றியதால் நர்மதை ஜடாசங்கரி என்றும் அழைக்கப்படுகிறது. நர்மதா பரிக்ரமாவை முதலில் ஆரம்பித்தவர் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமர், பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மஹாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் நர்மதை நதியைச் சுற்றி வந்து பரிக்ரமா செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். சபரிமலை யாத்திரையைப் போன்றே, இந்தப் புனித யாத்திரை காலங்காலமாக முனிவர்களாலும், சாதுக்களாலும், ஆன்மீகச் சாதகர்களாலும், நர்மதைக் கரையில் வாழும் கிராம மக்களாலும் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்று. பொதுவாகப் பரிக்ரமாவை 3 வருடம், 3 மாதம், 13 நாட்களில் நிறைவு செய்வது மரபு. நர்மதை நதியின் கரையில் இந்து மதத்தினரின் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் மற்றும் பல தலங்களும், சமணர்களுக்கு பர்வானியும், இஸ்லாமியருக்கு மாண்டவும் உள்ளன. தபதி ஆறு தபதி ஆறு (குசராத்|તાપ્તી, இந்தி ताप्ती ) , பழைய பெயர் தாபி ஆறு (செங்கிருதம்|तापी), மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பேதுல் பகுதியில் தோன்றி குசராத் மாநிலத்தின் வழியே அரபிக் கடலில் கலக்கிறது. தீபகற்ப இந்தியாவில் ஓடும் முக்கிய நதிகளில் 724 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஒன்றாகும்.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்றே நதிகளில் இதுவும் ஒன்றாகும்.மற்றவை நர்மதா ஆறு மற்றும் மாகி ஆறு. மத்தியப் பிரதேசம்மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு சாத்புரா மலைத்தொடரில் தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, மகாராட்டிரத்தின் காந்தேஷ் மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தின் வழியே சென்று காம்பத் வளைகுடா(முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் அரபிக் கடலில்கலக்கிறது. தக்காண பீடபூமியின்முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது. தபதி நதி பேதுல் மாவட்டத்தில் மூல்தாய் என்றவிடத்தில் தொடங்குகிறது. இது மூல்தாபி என்பதிலிருந்து திரிந்தது.தாபியின் மூலம் அல்லது தாபியின் ஆரம்பம் என பொருள் கொள்ளலாம். இந்து தொன்மவியல்படி தபதி கதிரவன் சூரியனின் மகளாவாள். மேலதிக தகவலாக தாய்லாந்து நாட்டில் ஓடும் யின் பெயர் ஆக.1915இல் இந்தியாவில் ஓடும் இந்நதியின் பெயரிலேயே வைக்கப்பட்டுள்ளது. தபதி ஆற்றுப் படுகை 65,145 கிமீ² பரப்புடையது. இதில் மகாராட்டிரத்தில் 51,504 கிமீ², மத்தியப் பிரதேசத்தில் 9,804 km² மற்றும் குசராத்தில் 3,837 கிமீ²ஆகும். பாசன மாவட்டங்கள்: பெரிய துணையாறுகள்: பூர்ணா, கிர்னா,பான்சரா,வாகுர்,போரி நதி,அனேர் நதி நதியின் வழிவரும் முக்கிய இடங்கள்: மத்தியப் பிரதேசத்தில் மூல்தாய் (பேதுல்), பர்ஹான்பூர், மகாராட்டிரத்தில் புசாவல், குசராத்தில் சூரத். மகாராட்டிரத்தில் ஜல்காவ்ன் மாவட்டத்தில் ஹத்னூர் அணையும் குசராத் சோனாகாத்தில் உகை அணையும் குறிப்பிடத்தக்கவை. அமராவதி மாவட்டத்தில் மேல்காட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பர்ஹான்பூரில் அசீர்கர் கோட்டை,ஜல்காவ்ன் சங்க்தேவ்மகராஜ் ஆலயமும் காணத்தக்கவை. தாமோதர் நதி தாமோதர் ஆறு இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 530 கி.மீ நீளமானது. இது ஜார்கண்ட் மாநிலத்தின் சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் பலாமூ மாவட்டத்தின் "சந்த்வா" எனுமிடத்தில் தோன்றி, இறுதியாகஹூக்லி ஆற்றில் கலக்கிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இவனது மெய்க்கீர்த்தி "பூமலர்த்திருவும்,பொருசய மடந்தையும்" எனத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.போசாள அரசனான் வீரசோமேச்சுரன் இவனது மாமன் முறையினனும் கொங்கு நாட்டு விக்கிரம சோழன் இவனது மைத்துனனும் ஆவான். மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை வெற்றி கொண்டான்.ஆனால் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மாமனான வீரசோமேச்சுரன் பாண்டிய நாட்டினை மீட்டெடுத்துக் கொடுத்தான். தனது சகோதரியின் மகன் என்ற காரணத்தினால் பாண்டிய நாட்டின் மீது கவனம் செலுத்தி வந்தான் வீரசோமேச்சுரன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவன் மதுரையில் உள்ள சிங்காசனத்திற்கு மழவராயன்,பல்லவராயன் எனப் பெயரிட்டிருந்தான்.இவனது பட்டத்தரசி உலக முழுதுடையாள் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் உலோகத் தொழில்நுட்பம் இரும்பு, பொன், வெண்கலம், பித்தளை, வெள்ளி முதலிய உலோகங்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை உலோகத் தொழிநுட்பம் அல்லது உலோகக்கலை எனலாம். தமிழர்களால் இத்துறையில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களும் கருவிகளும் முறைவழிகளும் தமிழர் உலோகத் தொழில்நுட்பம் எனலாம். சங்ககாலம் முதற்கொண்டே தமிழர்கள் இத்துறையில் இயங்கி வருகின்றார்கள். "தமிழகத்தில் கி.மு 700 - கி.பி 200 வரை இரம்புக்காலம் எனப்படுகின்றது." இத்துறைசார் வல்லுனர்கள் கொல்லர்கள் எனப்படுகின்றார்கள். ரினிக்லிங் ரினிக்லிங் அல்லது தினிக்குலிங்கு ("Tinikling") என்பது பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதான நாட்டார் ஆடற்கலையாகும். இந்த ஆடற்கலை ரினிக்லிங் என்ற பறவை மூங்கில் பொறிகளை தத்தி தத்தி தப்பித்தை ஒத்தி உருவானது. இருவர் ஒரேபோக்காக கிடையான இரு மூங்கில் தடிகளை தூக்கி நிலத்தோடு தாளமாகத் தட்டுவர். ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரோ அந்த மூங்கில் தடிகளுக்கு மேலாக தத்தித் தத்தி ஆடுவார். அவ்வப்போது தாளத்துக்கமைய மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று தட்டப்படும். மருதாணி பண்டைய இந்தியாவின் உடற்கலையில் ஒரு வடிவமே மருதாணி. அதன் அலங்கார வடிவங்கள் மனித உடலில் வரையப்பட்டன. காய்ந்த மருதாணி இலைகள் மூலம் ஆக்கப்பட்ட பசையினால் மருதாணியின் அலங்கார வடிவங்கள் மனித உடலில் வரையப்பட்டன. பண்டைய காலத்திலிருந்தே இந்தியா துணைக்கண்டம், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களிடம் பிரசித்தி பெற்ற உடற்கலையே மருதாணி எனப்படுகின்றது. மெஹெந்திகா என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து மெஹந்தி என்ற சொல் பெறப்பட்டது. மெஹந்தி மற்றும் மஞ்சள் தூளின் பயன்பாடு பற்றி முன்னைய இந்து மத வேத சடங்கு புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெண்களின் உள்ளங்கைகளிலே மருதாணி போடப்பட்டாலும் சில வேளைகளில் ஆண்களும் பயன்படுத்தினர். என்றாலும் காலப்போக்கில் பொதுவாக ஆண்களும் பயன்படுத்தும் பொருளாக மருதாணி மாறியது. ஹல்தி (மஞ்சள் பசை பூசுதல்) போன்று மருதாணியும் வேத சடங்குகளுள் ஒன்றாகும். இது உள் மற்றும் வெளி சூரியனை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. வேத சடங்குகள் "உள்  ஒளி விழிப்பு" எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளன. பாரம்பரிய இந்திய அலங்காரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளங்கையில் சூரியன் என இங்கு குறிப்பிடுவது கை மற்றும் கால்களை நோக்கமாகக் கொண்டாகும். உள்ளங்கையில் சூரியன் வடிவம் இடுவது இந்தியாவின் பாரம்பரிய அலங்காரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மருதாணி அலங்காரத்தில் பல வேறுபாடுகள் மற்றும் வகைகள் உள்ளன. இவற்றுள் பிரதானமாக அராபிய மருதாணி வடிவம், இந்திய மருதாணி வடிவம் மற்றும் பாகிஸ்தானிய மருதாணி வடிவம் போன்றவற்றைக் குறிப்பிடாலாம். பெண்கள் தமது கைகள் மற்றும் கால்களுக்கு பல்வேறு விதமான மருதாணி அலங்கார வடிவங்களை இடுவார்கள்.  நிறமூட்டியாகப் பயன்படும் மருதாணியின் தோற்றத்திலும் பயன்பாட்டிலும் முரண்பாடுகள் காணப்பட்டாலும் எகிப்திய மம்மிக்கள் முடி மற்றும் நகங்கள் செங்கபில நிறமாக மருதாணி நிற சாயலில் காணப்பட்டது,  ஆரம்ப காலத்தில் உடலில் மருதாணி இடப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். கி.பி.700 இலிருந்து இன்றுவரை கை, கால்களை அலங்கரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மருதாணித்தாவரம் எகிப்தில் தோன்றி இந்தியாவிற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தாவரவியலாளர்களால் நம்பப்படுகின்றது. வரலாற்று ரீதியாக மருதாணி மருத்துவ நோக்கங்களுக்காகவும், தலைமுடி, தோல் மற்றும் துணிகளுக்குச் சாயமூட்டுவதற்காகவும் குதிரையின் பிடரிமயிர் மற்றும் விலங்குகளின் மென்மை மயிருக்கு நிறமூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. மருதாணி என்பது தோலினை அலங்காரப்படுத்துவதற்காக உபயோகிக்கின்ற ஒரு தற்காலிக வடிவமாகும். பிரதானமாக இது இந்தியாவின் துணைக் கண்டத்தில் நடைமுறையில் உள்ளது. இது இந்திய சினிமா மற்றும் பொழுதுபோக்குத் தொழிற்துறை என்பவற்றில் மேற்கில் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருக்கின்றது. நோபல், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளில் உள்ள மக்கள் கூட மருதாணியைப் பயன்படுதுகின்றார்கள். 1990களிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் மேற்குலகில் மருதாணி அலங்காரங்கள் நவநாகரீகமான ஒன்றாக மாறியிருந்தது. அவர்கள் இதனை ஹெனா டட்டூஸ் (பச்சை குத்துதல்) என அழைத்தனர். இந்தியர்களினுடைய பாரம்பரியமான மருதாணியானது விசேடமாக இந்து திருமண வைபவங்களின் போது இந்துக்களினுடைய திரு விழாக்களின் போதும் வழமையாகவே உபயோகப்படுத்தப்படுகின்றது. ஹிந்து திருமணங்கள், பூரணை தினங்கள், தீபாவளி மற்றும் பாய் துஜ், தீஜ் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்துக்களினுடைய திருவிழாக்களில், அதிகமான பெண்கள் தங்களுடைய கைகள், பாதங்கள் மற்றும் சில வேளைகளில் தங்களுடைய தோற் பட்டைகளிலும் கூட ஹெனா மருதாணியை உபயோகிக்ன்றர்கள். ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் இவ் மருதாணியைத் தங்களது புஜங்கள், கால்கள், கழுத்தில் இருந்து தண்டெலும்பின் கீழ் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் உபயோகிக்கின்றனர். பெண்களுக்கு மருதாணி அலங்காரம் வழமையாக கையின் உட்புறம், வெளிப்புறங்களில் இடப்படுகின்றது. வெண்மையான பெண்களுக்கு மருதாணி அலங்காரம் மிகவும் தெளிவாக இருக்கும். இயற்கையிலே, மருதாணியில் மெலனின் அளவு குறைவாக இருக்கின்றது. இந்திய துணைக் கண்டத்தில் இருக்கின்ற சில முஸ்லிம்களும் ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா போன்ற இஸ்லாமியப் பெருநாளில் மருதாணி அலங்காரம் போடுகின்றார்கள். நவீன காலத்தில் மருதாணியை வழங்கக்கூடிய வரையறுக்கப்பட்ட பாரம்பரிய மருதாணிக் கலைஞர்கள் இருந்த போதிலும் கூட வழமையாகவே மக்கள் உடனடித் தயாரிப்புக்களான ஹெனா மருதாணியை கொள்ளவனவு செய்கின்றனர். இவை பாவிப்பதற்கு இலகுவனவையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் உடன் பறித்த ஹெனா இலைகளுடன் எண்ணெய் சேர்த்து அம்மியிலரைத்து பயன்படுத்துவர். அனால் இது தொழில் முறைசார்ந்து தயாரிக்கப்படும் ஹெனா மருதானியைப்போல் நவநாகரீகமாய், மிகுதியான தெளிந்த வார்ணத்தினுடைய தன்மையை அடைவதில்லை. ஹெனா பச்சைகுத்துதல் என்ற பதமானது உருவவியல் சார்ந்தது. ஏனெனில் உண்மையில் முறையான பசைகுத்துதல்கள் தோலினுடைய உட்புறத்தில் அறுவை சிகிச்சை மூலம் உட்செலுதப்பட்டு போடப்படுவதால் அவை நிரந்தரமானவை. அல்ட்டா (Alta), அலட்டா (Alata) அல்லது மஹூர் (Mahur) போன்ற சிவப்பு நிற சாயமானது பொதுவாக ஹெனாவிற்கு பயன்படுத்தப்பட்டு குறிப்பாக இந்தியாவின் சில பிராந்தியங்களில் இவை மணப்பெண்ணின் பாதங்களை அலங்காரப்படுத்த பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக வங்காளத்தை குறிப்பிடலாம். கறுப்பு வர்ணத்தில் பச்சை குத்துவதால் ஏற்பட்ட ஆசை காரணமாக செயற்கையான வர்ணத்தினை (PPD) ஹெனா மருதாணியில் கலந்து பயன்படுத்தியதால் ஒவ்வாமை ஏற்படுவதுடன் 2006இல் பதிவுகள் அவ்வாண்டிற்கான ஒவ்வாமை அமெரிக்க ஒவ்வாமை ஸ்தாபனத்தால் வாக்களிக்கப்பட்டு தெரிவாகியுள்ளது. மெஹந்தி என்பது பண்டைய இந்திய துணை கண்டத்தில் உருவான சடங்கு கலை வடிவமாகும். இது பொதுவாக திருமணங்களின் போது மணப்பெண்ணிற்காக பயன்படுத்தப்படுகிறது. ராஜஸ்தானில் மாப்பிள்ளையால் மணப்பெண்ணிற்கு நுட்பமாக செய்யப்பட்ட அலங்கார வடிவமைப்புக்கள் இதற்காக வழங்கப்படுகின்றன. அஸாமில் இது திருமணம் தவிர பரந்த அளவில் திருமணமாகாத பெண்கள் மூலம் "ரொங்காலி பிகு" என்னும் வைபவத்தின் போதும் பயன்படுத்தப்படுகிறது.    ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் கூட வயது வந்ததற்கான அறிகுறியாகவும் இதை பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் பெண்கள் தங்கள் நகங்கள் மற்றும் கால்விரல் நகங்கள் மற்றும் அவர்களில் கைகளிலும் மருதாணி இடும் பழக்கம் பொதுவாக காணப்படுகிறது.  மருதாணி பேஸ்டை வழக்கமாக தோலில் இடும் போது ஒரு பிளாஸ்டிக் கூம்பு, ஒரு பெயின்ட் தூரிகை அல்லது ஒரு குச்சி பயன்படுத்துகிறது. 15-20 நிமிடங்கள் கழித்து அது காய தொடங்கும் நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை சர்க்கரை கலவையை மருதாணி வடிவமைப்ப மீது பயன்படுத்தும் போது மருதாணியை மேலும் இருண்டதாக பெற முடியும். வர்ணப் பகுதியை திசு(Tissue) பிளாஸ்டிக் அல்லது மருத்துவ டேப்பை பயன்படுத்தி உறையிட்டால் உடல் வெப்பம் பூட்டப்பட்டு தோலில் இன்னும் தீவிர நிறம் உருவாகி இருக்கம். இது ஒரு பாரம்பரிய முறையாகும். சில நேரங்களில் இதனை ஒரே இரவில் அல்லது இரண்டு முதல் ஆறு மணி நேரம் அணிந்திருந்து பின்னர் நீக்கிக் கொள்ளலாம். முதலில் நீக்கப்பட் போது இதன் நிறம் வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்ட பின்னர் படிப்படியாக 24 முதல் 72 மணி நேர காலத்தில் இரசாயனத் தாக்கம்  காரணமாக கறுக்கும். இறுதி நிறமானது செம்மண்ணிறமாகக் காணப்படும். இவ்வாறான மருதாணி இட்டுக் கொள்ள அந்த கலவையின் தரம் மற்றும் வகையைப் பொறுத்து இதனை ஒரு மூன்று வாரம் வரை நீடித்துக் கொள்ள முடியும். அத்துடன் இதனை உடலில் இடும் போது தடிப்பான தோல்; மெல்லிய தோலை விட கருமையான நிறத்தை நீண்ட காலத்திற்கு கொண்டிருக்கும். மேலும் ஆலிவ்,  எள் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் மூலமாக ஈரப்பதன் அளிக்கும் போது கறைக்கான வாழ்நாளை நீடிக்க முடியாது. அத்துடன் தோல் உரிதல் மருதாணியை மங்கவும் வைக்கின்றது. இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்கள் அநேகமாக மத சடங்குகளாலும் முன் திருமண பின் திருமண நிகழ்கவுளாலும் நீண்ட நாட்களுக்கு நடைபெறும். வெவ்வேறு நாட்களும் நாட்டிலுள்ள பிராந்தியங்களும் அவற்றின் திருமண நிகழ்வுகளை வெவ்வெறு மத சம்பிரதாய கலாசார பழக்கவழக்கங்களின் பின்னனியில் வெவ்வேறு முறையில் கொண்டாடுகின்றன.  இந்த மத வழக்கின் படி இந்த மருதாணி விருந்து நிகழ்வு மணப்பெண் வீட்டிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ நடைபெறும். இது திருமணத்திற்கு முந்திய இரவோ அல்லது சில தினங்களுக்கு முன்னரோ நடைபெறலாம். பொதுவாக மணமக்கள் இருவரும் இந்த நிகழ்வுக்கு ஒன்றாக பங்கேற்பதுடன் கைதேர்ந்த கலைஞராலோ அல்லது உறவினர்களாலோ மணமகளின் கைகள் மற்றும் கால்களில் மருதானி பூசப்படுகிறது. மருதாணி அலங்காரம் அனேகமாக சிக்கலானதாக மணமகனின் பெயரோ முன்னெழுத்துக்களோ அதற்குள் மறைந்திருக்கும் படி வரையப்படும். இந்நிகழ்வு ஒரு கலகலப்பான கொண்டாட்டமாக நடைபெறுவதில் பெண்களின் நடனமும் பாரம்பரிய பாடல்களும் இளம்பெண்கள் அணிந்திருக்கும் இளஞ்சிவப்பு மஞ்சள் போன்ற கண்கவர் நிற ஆடைகளும் முக்கிய பங்களிக்கிறது. மணப்பெண் விரும்பினால் மணமகனை கிண்டலுக்காக ஊதா நிற ஆடைகளை அணிய செய்யலாம். இதன்போது மணமகன் மேலைத்தேய பாதணிகளை விடுத்து “ஜூட்டி” எனப்படும் பாதணியை அணிவார்.       பாகிஸ்தான் மருதாணி விருந்து என்பது மணமகளில் குடும்பத்தால் கொண்டாடப்படும் முன் திருமண நிகழ்வூகளில் மிக முக்கியமானது. பங்களாதேசில் சம்பிரதாய பூர்வமாக மருதாணி இரு நிகழ்வூகளாக நடைபெறும். ஒரு நிகழ்வு மணமகள் வீட்டாலும் மற்றையது மணமகனின் வீட்டாலும் நடைபெறும். தெற்காசியாவில் இந்தியாவை தவிர பாகிஸ்தான்இ பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இந்த மருதாணி நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் “பர்மின்ங்ஹம்” எனும் இடம் மருதாணி நிகழ்வூகள் ஏராளமாக நடக்கும் இடமாக கருதப்படுகிறது. மருதாணி முதன்முதலில் எகிப்தியர்களால் சேறுகளை அலங்காரமாக பூசிக் கொள்வதில் இருந்து தொடங்கப்பட்டது.  தமிழ் 99 தமிழ் 99 (Tamil99) என்பது தமிழ் மொழி எழுத்துக்களையும், துணை எழுத்துக் குறிகளையும் கணினியில் உள்ளிடுவதற்கென விசைப்பலகையில் அவற்றின் இடங்களைத் தீர்மானித்துச் சீர்தரம் செய்த விசைப்பலகை அமைப்பாகும். தமிழ்த் தட்டச்சுப் பொறியில் எழுத்துக்களும் துணையெழுத்துக் குறிகளும் அமைந்துள்ள விசைப்பலகையின் அமைப்பு கணினியில் புழங்கத் திறன் மிக்கதாக இருக்கவில்லை. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய பல விசைப்பலகை அமைப்புகளைப் புழங்கி வந்தனர். இவ்வாறு இருந்த ஏராளமான விசைப்பலகை அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கெனச் சீர்தரம் செய்யப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை அமைப்பு தேவை என்று உணரப்பட்டது. அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த பல விசைப்பலகை அமைப்புகளை ஆராயவும் பொருத்தமான விசைப்பலகை அமைப்பைப் பரிந்துரைக்கவும் 1997இல் தமிழக அரசு ஒரு குழுவை அமர்த்தியது. இக்குழுவின் உறுப்பினர்கள்: இக்குழு மூன்று விசைப்பலகை அமைப்புகளைத் தரப்படுத்துவதற்கென பரிந்துரைத்தது. இப்பரிந்துரைகள் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ்நெட் 97 மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. அவையாவன: பரிந்துரையின் மீதான கருத்துக்களை வரவேற்பதாகவும் அக்குழு அறிவித்தது. தமிழக அரசு இப்பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதான அறிவிப்பை வெளியிடவில்லை. மேற்கண்ட விசைப்பலகை அமைப்புகளில் ஒலியன் சார்ந்த அமைப்பின் தத்துவம் தமிழ்99 விசைப்பலகையை ஒத்ததாகும். எனினும், இப்பலகையில் விசைகளின் அமைப்பு தமிழ்99-இன் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தது. இவ்வமைப்பு தொடக்கப் பரிந்துரையாகவே இருந்தபோதிலும் சில தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இதனைத் தமிழ்நெட்97 என்ற பெயரில் அவர்களது மென்பொருட்களில் வழங்கத் தொடங்கினர். தடித்த எழுத்துக்கள் 1999இல் சென்னையில் நடந்த தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ்99 விசைப்பலகை அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இரு எழுத்துருத் தரங்களும் (TNM மற்றும் TNB) அறிவிக்கப்பட்டன. புதிய எழுத்துரு தரங்களின் மீதான சூடான விவாதத்தில், தமிழ்நெட்97 பரிந்துரை கைவிடப்பட்டதும் புதிய தரம் பரிந்துரைக்கப்பட்டதும் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை. தமிழ்நெட்97 அவ்வளவாக பரவலாக அறியப்படாதிருந்தும் தமிழ்99 தரம் சற்று பழகுவதற்கு எளிதாக இருந்ததும் இத்தரம் நிலைபெற உதவிற்று. மென்பொருள் தயாரிப்பாளர்களும், கணினி சார்ந்த சேவைகளை, பண்டங்களை வழங்குபவர்களும் இந்த சீர்தரம் செய்த விசைப்பலகை அமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். தயாரிக்கும் மென்பொருட்களிலும் வழங்கும் சேவைகளிலும் இவ்விசைப்பலகை தளக்கோலம் மட்டும்தான் அமையவேண்டும் என்றில்லை. ஆனால் கொடுக்கப்படும் தளக்கோலத் தெரிவுகளில் தமிழ்99 தளக்கோலமும் ஒன்றாக இருக்கவேண்டும். இதன் விளைவாக எந்த மென்பொருளிலும் தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம் கட்டாயம் கிடைப்பில் இருக்கும். எனினும் இன்றுவரை எந்த இயக்கு தளத்திலும் தமிழ்99 விசைப்பலகை தானாக நிறுவப்படவில்லை. பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப தாமே நிறுவிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. "எடுத்துக்காட்டாக, க + (புள்ளி) = க் " "எடுத்துக்காட்டாக, க + ஆ = கா" "எடுத்துக்காட்டாக, க + க = க்க" "எடுத்துக்காட்டாக, க + க + க = க்கக" "எடுத்துக்காட்டாக, க + க +க +க = க்கக்க" "எடுத்துக்காட்டாக, க + அ + இ = கஇ" "எடுத்துக்காட்டாக, க + அ + க = கக" "எடுத்துக்காட்டாக, க + அ + க + க = கக்க" "எடுத்துக்காட்டாக, ங + க = ங்க ந + த + த = ந்தத ந + த + த + த = ந்தத்த ந + அ + த = நத ந + அ + த + த = நத்த" "எடுத்துக்காட்டாக, ^ + 7 = இடப்புற ஒற்றை மேற்கோள் காட்டி ^ + 8 = வலப்புற ஒற்றை மேற்கோள் காட்டி ^ + 9 = இடப்புற இரட்டை மேற்கோள் காட்டி ^ + 0 = வலப்புற இரட்டை மேற்கோள் காட்டி ^ + S = உடைபடாத வெளி" தமிழ்99 விசைப்பலகை அமைப்பில் பல நற்பண்புகள் இருந்தபோதும் இவற்றில் சில குறைகளும் உள்ளன. பொதுவாக இக்குறைகள் அனைத்தும் இவ்வமைப்பின் அறிவுசார் இயல்பினால் ஏற்பட்டவையே. பொதுவாக இருவிதமாக குறைகள் ஏற்படுகின்றன. ஒன்று அறிவுசார் இயல்பின் உள்ளார்ந்த பண்பின் அமைந்த குறை. மற்றது இயல்பு விதிகளை கணிச் செயல்படுத்துவதில் ஏற்படும் குறை. கணிச்செயல்படுத்தும் போது ஏற்படும் குறைகள் சில சமயம் விதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துவதால் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் செயலாக்க கருவிகளின் குறையினாலோ இயக்குதளத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டு வேறுபாடுகளாலோ ஏற்படுவதும் உண்டு. இக்குறைகளின் பட்டியல் பின்வருமாறு: உள்ளார்ந்த குறைகள் செயலாக்க பிழைகள் பராக்கிரம குலசேகரன் பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்வேலி மாறன் நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன்,குலசேகர பாண்டியன்,பொன்னின் பாண்டியன்,தர்மப் பெருமாள்,அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வரதுங்கராம பாண்டியன் வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான். மேலும் பார்க்கலாம் வரகுணராம பாண்டியன் வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப்பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என தன்னை வரகுணராம பாண்டியன் பெயரினையும் தனது சிறப்புப்பெயரினையும் இணைத்து வைத்துக்கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர்.மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். சாரல்நாடன் சாரல்நாடன் என்ற பெயரில் எழுதிய கருப்பையா நல்லையா (இறப்பு: சூலை 31, 2014) இலங்கையின் மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டவர். சிறுகதை, புதினம், மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியவர். தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்தவர். சாரல்நாடன் நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா, வீரம்மா ஆகியோருக்கு 1944 மே 9 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் நல்லையா. தந்தை தோட்டக் கணக்கப்பிள்ளையாகப் பணியாற்றியவர். அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் ஆசிரியத் தொழிலை விட்டு பல்வேறு தொழில்களும் மேற்கொண்டு இறுதியில் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் "டீ மேக்கர்" என்ற பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அட்டனில் படித்த போது பாடசாலை இதழ்களில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மலைமுரசு, வீரகேசரி, தினகரன் இதழ்களில் எழுதத் தொடங்கினார். 1962 இல் வீரகேசரி நடத்திய மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவருடைய "கால ஓட்டம்" என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. புனைவுகளை விட இவரது ஆய்வு நூல்களே இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. மலையகத்தை மையமாக வைத்து இவர் 14 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்'", "பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்" ஆகிய இரு நூல்களும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றன. வீரகேசரி பத்திரிகை நடத்திய மலைநாட்டு எழுத்தாளர்களுக்கான முதலாவது சிறுகதைப் போட்டியில் இவரது "கால ஓட்டம்" என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது. சி. கணேசையர் சி. கணேசையர் (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். "மகாவித்துவான்" என அழைக்கப்பட்டவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார். யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் வேளாண்மைக் கிராமத்தில் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேவஸ்தான ஸ்தாபக பரம்பரை அந்தணர் வழிவந்த சின்னையா என்னும் அந்தணப் பெரியாருக்கும், அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவருக்கும் ஒரே மகனாகவும் ஐந்தாவது பிள்ளையாகவும் 1878 ஈசுர ஆண்டு பங்குனி மாதம் 15ம் நாள் (ஏப்ரல் 1) பிற்பகல் 1 மணி 20 நிமிடமளவில் பூராடம் 3ம் காலில் பிறந்தார் கணேச ஐயர். கணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தை (கதிர்காம ஐயர்) அவர்களால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்த வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பல பிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார். பொன்னம்பலப்பிள்ளையவர்கள் இறந்தபின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார். தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியான அன்னலட்சுமியைத் திருமணஞ் செய்தார். அன்னலட்சுமியும் வடமொழி, மற்றும் தமிழறிவு பெற்றவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மனைவியார் இறந்தபின் கணேசையர் மனைவியின் நினைவாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபம்" எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை நன்கொடையாக அளித்தார். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உள்ளது. கணேசையர் தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். ஈழகேசரி நா. பொன்னையா அதன் பதிப்பாசிரியராக இருந்தார்<. எழுத்ததிகாரம் (1937), சொல்லதிகாரம் (1938), பொருளதிகாரம் இரண்டாம் பகுதி (1943), பொருளதிகாரம் முற்பகுதி (1948) ஆகியன வெளிவந்தன. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் கணேசையர் புகழப்பட்டார். கணேசையர் தனது 25வது வயதிலே அக்காலத்தில் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் இவரால் எழுதப்பட்டு ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தன<. கணேசையர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘மதுரை செந்தமிழ்’ ஈழகேசரி பத்திரிகை’ மற்றும் அக்காலத்தில் வெளிவந்த சிறப்பு மலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பெற்றன. இலக்கணத்தில் சிக்கலான பகுதிகளைத் தேர்வுசெய்து அது சம்பந்தமான கட்டுரைகளையே அதிகமாக எழுதியுள்ளார்கள். மேலும் சமயம் சார்ந்த அல்லது சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. கணேசையர் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் அரசன் சண்முகனாருடனான விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள். மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் புகழ் பெற்றது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். கணேசையர் மரபுக்கவிபாடும் வல்லமையையும் கொண்டிருந்தார். ஈழத்தின் சிறந்த புலவர்களுள் ஒருவரான குமாரசாமிப் புலவர் ‘கவிபாடும் புலமைக்கோனே’ எனப் பாராட்டியிருந்தார் ‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’ ‘மருதடி விநாயகர் அந்தாதி’ ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’ ‘ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞசல்’, ‘திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை’ போன்றன இவரது படைப்புக்களுள் சிலவாகும். மேலும், அக்காலப் பத்திரிகைகளிலும் நினைவு மலர்களிலும் ஐயரால் இயற்றப்பட்ட பாக்கள் - இரங்கல் பாக்கள் வெளிவந்துள்ளன. கணேசையர் மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். வண்ணார்பண்ணையில் ஆரம்பமான அவரது ஆசிரியப்பணி விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பதற்குரிய ‘ஆசிரிய தராதரப் பத்திரத்தையும்’ பெற்றிருந்தார். ஈழ நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியப் பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்க நிறுவனர் சதாசிவ ஐயரால் நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை 1921 ஆம் ஆண்டில் கணேசைர் ஏற்று 1932 வரை செயற்பட்டார். இக்காலத்தில் இவர் ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன. இப்பாடசாலையை விட்டு நீங்கியபின் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபட்டார். வருத்தலை விளானில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தார். கணேசையர் ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைத் ஒரு தனி நூல்களாக எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கே தனித்துவமான ‘புராணப்படிப்பு’ கலாசாரம் இவரையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார். தமிழிற்கு தொண்டாற்றிவந்த கணேசையருக்கு யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களால் பொற்கிழியொன்று பரிசளிக்கும் வைபவம் 1938 ஆம் ஆண்டு ஐப்பசி 5ம் நாள் இவரது பவள விழாவையொட்டி நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறிஞர்கள் மத்தியில் சு. நடேசபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சுவாமி விபுலாநந்தர் உட்படப் பலர் பங்கேற்றிருந்தனர். விழாவில் ஈராயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட பொற்கிழி ஒன்று பரிசிலாக வழங்கப்பட்டது. இவ்விழாவின் பின்னரும் கணேசையர் தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்தார். ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது. நாட்டுக்குப் பெருமை சேர்த்த அறுவருக்கு கொழும்பு கம்பன் கழகம் ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த விருதுகளில் ஒன்று 'வித்துவ சிரோமணி கணேசையர் விருது' ஆகும். கணேசையர் தனது வாழ்நாளின் இறுதிப் பத்தாண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் உள்ள மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார். இறுதிக் காலத்தில் வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் ஈழகேசரி நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் இவருக்கு உதவி வந்தனர். இறுதியாக 03-11-1958 அன்று காலமானார்கள். பற்பசை பற்பசை என்பது பற்களையும் வாயையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கப் பயன்படும் பசையாகும். பற்தூரிகை கொண்டு இது பயன்படுத்தப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பற்பசை பயன்படுத்துகிறார்கள். பற்பசை பயன்படுத்தாமல் இயற்கை முறைகளைப் பயன்படுத்தியும் பல் துலக்கலாம். பல் துலக்குதல் பற்களிடையே தேங்கும் உணவுப் பகுதிகளை நீக்குவதற்கும் ஈறுகளில் கிருமித் தொற்று ஏற்படாதிருக்கவும் பயன்படுகிறது. பொதுவாக பற்துலக்கியால் தேய்க்கும் போதே பெரும்பாலும் பல் சுத்தம் செய்யப்படுகிறது. வெறும் பற்பசையால் மட்டும் சுத்தம் செய்யப்படுவதில்லை. வணிகரீதியான பற்பசைகளில் பெரும்பாலும் உப்பு, சலவை சோடா எனப்படும் சோடியம் பை கார்பனைட் என்ற வேதிப்பொருளுமே பயன்படுத்தப்படுகிறது. பற்பசையை விழுங்குதல் கூடாது. ஆனாலும் சிறிதளவு பற்பசையை விழுங்குவதனால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. முதலில் குருமணலை பல் துலக்குவதற்காக பயன்படுத்திய இவர்கள் பிறகு எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்கும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர். கெளதம புத்தர் காலத்தில் வேப்பமரக் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இந்தியர்கள் கருவேலங்குச்சி, ஆலங்குச்சி, வேப்பமரத்துக் குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்துள்ளனர். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்ற தமிழர் பழமொழியால் இதனை அறியலாம். பின்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டுகளில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீனா மற்றும் எகிப்திய மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை அறிந்து பல்துலக்க தனியாகப் பொடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, உப்பு, புதினா இலை, ஐரிஸ் மலர், மிளகு ஆகியவற்றுடன் இருபது வகையான தானியங்களைச் சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் உலகின் முதல் பற்பொடியை தயாரிப்பதில் எகிப்தியர்கள் வெற்றியடைந்திருந்தனர். அரச வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டன. அவற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அறிந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற்பசையின் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. எகிப்தியர்கள் பாப்பிரசு தாள்களில் குறிப்பிட்டிருந்த பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பெர்சியாவை சேர்ந்த இஸ்லாமிய பல்துறை வல்லுனரான ஷிர்யாப் (Ziryab) என்பவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் புதிய முறையில் அதிக அளவில் பற்பொடி தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். ஷிர்யாப் தனது பற்பொடியைத் தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை ரகசியமாக வைத்திருந்ததால் இறுதிவரை அவர் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி அந்த பற்பொடியை தயாரித்தார் என்பது வெளியுலகிற்கு தெரியாமலேயே போனது. சுவைமிக்கதாகவும், நறுமணமிக்கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொடியைப்போல பல்துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்தியது. உலகின் முதல் பற்பொடி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரது பற்பொடி அக்காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ்ந்த மக்களின் முதன்மையான பற்பொடியாகச் சாம்பல் இருந்தது. பற்பொடி தயாரிக்கும் தொழிலும் குடிசை தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டதால் பற்பொடி எல்லை கடந்து செல்லும் வாய்ப்பைப் பெறவில்லை, ஆகையால் 1950 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் சாம்பல் தான் பற்பொடியாகப் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு மக்களிடையே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை கி.பி.18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பல்துலக்கும் பழக்கம் இங்கிலாந்தில் ஏற்பட ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடையேயும் பல் துலக்கும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள் நாளடைவில் உப்பு, படிகாரம், லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து கி.பி.1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பியாபாடி (Dr. Peabody) என்ற பல் மருத்துவரால் பற்பொடி தயாரிக்க பயன்படுத்தும் ஏனைய மூலப்பொருட்களுடன் சோப்பையும் சேர்த்து பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris) என்ற மற்றுமொறு பல் மருத்துவரால் மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் சேர்க்கப் பரிந்துரை செய்யப்பட்டது. நியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783 – 1857) என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி, பற்பொடியின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்து இறுதியில் உப்பு, படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை கொண்டு வணிகரீதியான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ என்ற பெயரில் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதுவரையிலும் குடிசை தொழிலாக இருந்துவந்த பற்பொடி தயாரிக்கும் தொழில், அதன்பிறகு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டங்களில் தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம். சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடிகள் சில நாட்களிலேயே மனிதர்களில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த துவங்கியது, இதனால் மனிதர்களின் கவனம் மீண்டும் சாம்பலை நோக்கி திரும்பிய அந்த நேரத்தில் வரலாற்றில் முக்கிய திருப்பமாக "வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு" (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பல் மருத்துவர் இயற்கையாகக் கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளைக் கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1892 ஆம் ஆண்டு கண்டறிந்தார். தொடர்ந்து பற்பசையை அடைத்து விற்பதற்காக மடக்கு குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப்பில்டு தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் பற்பசையும், பற்பசையை அடைத்து விற்க பயன்படுத்தும் மடக்குகுழாய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பற்பசை உற்பத்தி சூடுபிடிக்க ஆரம்பித்த சமயத்தில் திடீர் திருப்பமாக 1937 ஆம் ஆண்டு, புளோரைடு பற்பசைகள் பற்களுக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க பல் சங்கம் (American Dental Association) தடை செய்ய முன்வந்தது. பெறும் சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு வில்லியம் ப்ரோக்டர் (William Procter) மற்றும் ஜேம்ஸ் கேம்பல் (James Gamble) என்ற இரு அமெரிக்கர்களால் 1837 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த ப்ரோக்டர் & கேம்பல் (Procter & Gamble) என்ற நிறுவனம் ஜோசப் முஹ்லர் (Dr. Joseph Muhler) என்பவரைத் தலைமையாகக் கொண்டு மருத்துவக்குழு ஒன்றை அமைத்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட இக்குழு 1955 ஆம் ஆண்டு வாக்கில் புளோரைடு பற்பசைகளின் நம்பகத்தன்மை மற்றும் பின்விளைவுகள் பற்றிய தங்களது விரிவான அறிக்கையை அமெரிக்க பல் சங்கத்திடம் (ADA) சமர்பித்தது. அறிக்கையை ஆய்வு செய்த ADA 1960 ஆம் ஆண்டு புளோரைடு பற்பசைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது, அதாவது பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 1000ppm-க்கு (PPM – Parts Per Million), மிகாமலும் சிறியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 500ppm – க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பிறகு தான் பற்பசை உற்பத்தி அதிகரித்து புதிய பரிணாமத்தை அடைய துவங்கியது. இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றே மூன்று புளோரைடுகள் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சோடியம் புளோரைடு (Sodium Fluoride, NaF), ஸ்டன்னஸ் புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம் மோனோபுளோரோபாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசை தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து பயன்படுத்தப்படும் புளோரைடும் மாறுபாடடைகிறது. பெரும்பாலான நிறுவனங்களால் சோடியம் புளோரைடு மற்றும் சோடியம் மோனோ-புளோரோபாஸ்பேட் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது ஈறுகளைத்(Enamel) தாக்கும் தன்மை கொண்டவை. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ஸ்டன்னஸ் புளோரைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பசைகளே சிறந்தவை. இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவற்றை பயன்படுத்துவதே பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது. மேடை ஒளியமைப்பு மேடை ஒளியமைப்பு என்பது. மேடையில் நடைபெறக்கூடிய நாடகம், நடனம் போன்ற நிகழ்த்து கலைகளின் தேவைக்காக அமைக்கப்படும் ஒளியமைப்பைக் குறிக்கும். இதற்காகப் பலவகையான செயற்கை ஒளிமுதல்களும், கருவிகளும் புழக்கத்தில் உள்ளன. ஒளியமைப்புத் திட்டமொன்றின் கொள்கை அல்லது நோக்கங்களை அடைவதற்காக ஒளியியலாளர்கள் இவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்புச் செய்கிறார்கள். மேடை ஒளியமைப்பில் பல பொதுவான குறிக்கோள்கள் உள்ளன. அழகியல் ஒரு முக்கிய நோக்கமாக இருப்பினும் அதனை அடைவதற்கு இது தான் வழி என்ற நிலை கிடையாது. மேடை ஒளியமைப்பின் சில குறிக்கோள்களாவன: மேற்படி குறிக்கோள்களை அடைவதில் நான்கு பண்புகள் முக்கியமானவை. பற்தூரிகை பற்தூரிகை என்பது பல் துலக்கப் பயன்படும் உபகரணமாகும். சிறு தூரிகையையும் கைப்பிடியையும் கொண்டதாக அமைந்திருக்கும். பற்தூரிகையில் பற்பசை சேர்த்துப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானதாகும். பெரும்பாலும் செயற்கைப் பொருட்களாலேயே பற்தூரிகைகள் உருவாக்கப்படுகின்றன. இயற்கைப் பொருட்களால் உருவாக்கப்படும் தூரிகைகளும் உண்டு. வேப்பங்குச்சி போன்றனவற்றைப் பல்துலக்கப் பயன்படுத்தும் வழக்கமும் தமிழர் மத்தியில் உண்டு.("ஆலும் வேலும் பல்லுக்குறுதி." என்ற கூற்று. )பற்தூரிகைகள், தூரிகையின் கடினத்தன்மையில் வேறுபடுகின்றன. பல் மருத்துவர்கள் மென்மையான தூரிகையுள்ள பற்தூரிகைப் பயன்பாடே பற்சுகாதாரத்துக்குப் பொருத்தமானது என்கிறார்கள். மின்சாரத்தில் இயங்கும் பற்தூரிகை முதன்முதலில் 1939 இல் உருவாக்கப்பட்டது. ஆயினும் 1960களிலேயே பரவலான விற்பனைக்கு வந்தது. இடப்பெயர் ஆய்வு இடப்பெயர் ஆய்வு என்பது, இடங்களின் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொருள், பயன்பாடு, வகைப்பாடு என்பவை பற்றி ஆய்வு செய்யும் துறையாகும். இது பொதுவான எல்லா வகையான பெயர்களையும் பற்றி ஆராயும் பெயராய்வுத் துறையின் ஒரு பகுதியாகும். இடப்பெயர் என்பது ஒரு ஊர், பிரதேசம், புவி மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதி அல்லது ஒரு செயற்கை அம்சத்தைக் குறிக்கக்கூடும். ஒரு நிலப்பகுதியை இன்னொரு பகுதியிலிருந்து வேறுபடுத்துவதற்காகவே இடப்பெயர்கள் உருவானதாகக் கருதப்படுகின்றது. சில பண்பாடுகளில், இத்தகைய இடப்பெயர்கள், பெரும்பாலான அல்லது எல்லாப் பெயர்களும் உள்ளூர் மொழியில் ஒரு பொருளைக் கொண்டிருக்கும். இத்தகைய பொருள் பொதிந்த பெயர்கள், அவ்விடங்களோடு தொடர்புடைய மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்குகின்ற தன்மை வாய்ந்தவை. இதனால், இடப்பெயர் ஆய்வானது, வரலாறு, மொழியியல், தொல்லியல் போன்ற துறைகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இடப்பெயர்கள் ஒரு பகுதியின் வரலாற்றுப் புவியியல் குறித்துப் பெறுமதி வாய்ந்த விளக்கங்களைத் தர வல்லவை. 1954ல் எஃப். எம். போவிக்கே என்பார், இடப்பெயர் ஆய்வு குறித்துக் கூறியபோது, இவ்வாய்வுகள் தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த கண்டுபிடிப்புக்களையும் மொழியியல் விதிகளையும் பயன்படுத்துவதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும் உதவுகின்றன என்றார். இடப்பெயர்கள் இனக்குழுக்களின் குடியேற்றங்களின் பரம்பற் கோலங்களைக் காட்டுவதோடு நில்லாது புலப் பெயர்வுகளின் காலத்தை அறிந்துகொள்வதிலும் உதவுகின்றன. புலவர்களும், புராணக்கதை எழுதியோரும் பல இடப்பெயர்களைத் தொடர்பு படுத்தித் தங்கள் கதைகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இதனால், இவர்கள் ஒருவகையில் இடப்பெயர் ஆய்வுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர் எனலாம். ஆனாலும் இவை அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அல்ல என்பதால், இவற்றை முறையான இடப்பெயர் ஆய்வாகக் கொள்ள முடியாது. சில சமயங்களில் இடப்பெயரை மையமாகக் கொண்டே இத்தகைய கதைகள் எழுவதும் உண்டு. இடப் பெயர்களின் அமைப்பு, உச்சரிப்பு ஒலி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அப்பெயர்களுக்குப் போலியான பொருள் கூறப்படுவதையும் காணலாம். இடப்பெயர் ஆய்வைப்பற்றி 1768 இல் முதலில் குறிப்பிட்டவர், வில்லியம் லெய்ப்னிஷ் என்பவராவார். எக்லி, அடால்பர்க், சிமித், ஸ்டீவார்ட், கார்டினர், உட்லி, டிரையே போன்றவர்கள் இடப்பெயர் ஆய்வுகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். ஊர்ப்பெயர் அமைப்பு பொதுவாக ஊர்ப்பெயர்களின் அமைப்பு ஒரு ஒழுங்கு முறையில் இருப்பதை அவதானிக்கலாம். பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளன (எ.கா: மாமல்ல-புரம், மட்டக்-களப்பு). சென்னை, மாந்தை, முசிரி போன்று ஒற்றைச் சொல்லிலான ஊர்ப்பெயர்களும் உள்ளன. இரண்டு பகுதிகளைக் கொண்ட ஊர்ப்பெயர்களில், இறுதியில் வருவது "பொதுக் கூறு" எனவும், மற்றப்பகுதி "சிறப்புக் கூறு" எனவும் குறிப்பிடப்படுகின்றது. பொதுக்கூறு, குளம், மலை, ஆறு, பட்டி, பேட்டை, வலசு, பாளையம், பட்டினம், ஊர் என்பன போன்ற பொதுவான இடப்பெயர்களாகும். இப் பொதுக் கூறுகள் ஏராளமான இடப்பெயர்களிலே அமைந்திருக்கின்றன. இப் பகுதி ஊர்களின் பொதுப் பண்பைக் குறிக்கப் பயன்படுகிறது எனலாம். முதற்பகுதியான சிறப்புக்கூறு, இறுதியில் வரும் பொதுக் கூறுகளுக்கு அடைமொழியாக வருவதைக் காணலாம். இவை பொதுவான இடப்பெயர்களுக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன எனலாம். மார்ச் 2007 மார்ச் 2007 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக் கிழமை ஆரம்பமாகி 31 நாட்களின் பின்னர் ஒரு சனிக் கிழமை முடிவடையும். நீலகிரி நீலகிரி (ஆங்கிலம்:Neelagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இது ஒரு நகரியம் ஆகும். நீலகிரி சங்ககாலத்தில் இரணியமுட்டம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. கண்டீரம், தோட்டி என்னும் பெயர்களும் சங்ககாலத்தில் அதன் முகடுகளுக்கு வழங்கப்பட்டன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,046 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீலகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலகிரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரியின் இயற்கை வளம் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு காலகட்டத்தில் மரங்கள் செறிந்திருந்தன. மரங்கள் குறைந்த அளவே வெட்டப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பின்னர் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு இறுதியில் நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. எஸ். பி. மயில்வாகனம் எஸ். பி. மயில்வாகனம் (இறப்பு: 1983) இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் முன்னோடி என்று கருதப்படுபவர். உலக ரீதியாக பலராலும் அறியப்பட்ட தமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார். தென்னிந்தியாவில் பொதுமக்கள் மத்தியிலும், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கியவர். மயில்வாகனத்தின் மனைவி செந்தில்மணி இலங்கை வானொலியின் முதலாவது பெண் வானொலி செய்தி அறிவிப்பாளராக இருந்தவர். அவர் மூலமாகவே மயில்வாகனமும் இலங்கை வானொலியில் 1954 ஆம் ஆண்டில் இணைந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளிபோர்ட் டொட் என்பவர் கொழும்புத் திட்டம் மூலம் இலங்கை வானொலியில் பணியாற்றிய போது அவரிடம் பயிற்சி பெற்றார் மயில்வாகனம். இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது தயாரிப்பாளர்கள் அழைப்பின் பேரில் காலை கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து பாட்டுகளைப் பெற்றுக்கொண்டு மாலை மீண்டும் கொழும்பு திரும்புவார். வலையொலி இணையம் மூலம் குறிப்பாக செய்தியோடைகள் மூலம் பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை வலையொலி எனலாம். வலையொலிபரப்பு என்ற சொல்லும் Podcasting என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக பயனில் இருக்கின்றது. பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் (transmitters) ஊடாக இவை ஒலிபரப்பப் படுவதில்லை. வலையொலிப் பதிவுகள் சேமிக்கப்பட்டு பயனர்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்கப்படக் கூடியவை. இன்று பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளும் வலையொலிகளாக கிடைக்கின்றன. சுந்தா சுந்தரலிங்கம் சுந்தா சுந்தரலிங்கம் (வீரசிங்கம் சுந்தரலிங்கம், இறப்பு: அக்டோபர் 29, 2001) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். பின்னர் பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சந்திரனில் இறங்கிய அப்பல்லோ விண்வெளி யாத்திரை பற்றிய நேர்முகவர்ணனை செய்தவர் என்பதினால் 'அப்பலோ' சுந்தா என்று அழைக்கப்பட்டவர். ஒளிப்படக் கலையிலும் தேர்ச்சி மிக்கவர். இலங்கை கணக்காய்வாளர் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து, அமெரிக்காவிலும், இந்தியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர். இலங்கை வானொலியில் செய்திகள், நேர்முக வர்ணனை என்பனவற்றோடு பஞ்சபாணம், விவேகச்சக்கரம் முதலான போட்டி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சியில் "சுந்தா சுந்தரலிங்கம்" என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தவர். படைப்பு இலக்கியத் துறையில் இவர் தீவிரமாக ஈடுபடாத போதிலும் தனது வானொலி அனுபவங்களை 1999 இல் "மன ஓசை" என்னும் பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார். தனது இறுதிக் காலங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே வானலைகளில் தமது குரலைப் பதிவு செய்தவர். இவரது மனைவி பராசக்தி சுந்தரலிங்கம் ஒரு இலக்கிய விமரிசகர். கொல்லி மலை கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400மீ) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாவது வட்டமாக அக்டோபர், 2012 அன்று தொடங்கப்பட்டது. நாமக்கல் வட்டத்தில் இருந்த ஊராட்சிகள் வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு ஆகியவையும் இராசிபுரம் வட்டத்தின் ஊராட்சிகள் ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகியவை இவ்வட்டத்துடன் இணைக்கப்பட்டன. உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு "கொல்லி மலை" என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. பழந்தமிழ் நூல்களான "சிலப்பதிகாரம்", "மணிமேகலை", "புறநானூறு", "ஐங்குறுநூறு" முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன. அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர். காந்தள் போல் கூந்தல் மணம் யானை மூங்கில் சூர்மகள் கொல்லிப்பாவை மடப்பத்தன்மை கொல்லிமலையில் வீற்றிருக்கும் திராவிடர்களின் தெய்வம் இந்த பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். அவையாவன மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்றவைகள் ஆகும். கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும் இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும் வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். 2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குடவரை (கொல்லிமலை) சீமைக்காரை சீமைக்காரை ("cement", சிமெந்து) என்பது, முக்கியமான ஒரு கட்டிடப் பொருள் ஆகும். இது ஒரு சிறந்த இணைபொருள் (binder). தூள் வடிவில் உள்ள இது நீருடன் கலக்கும்போது, இறுகிக் கடினமாவதுடன், ஏனைய பொருட்களையும் இணைக்கும் தன்மையைப் பெறுகிறது. பழங்காலத்திலேயே உரோமர் எரிமலைச் சாம்பல், செங்கல் துண்டுகள், சுடப்பட்ட சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒருவகைச் சீமைக்காரையைச் செய்து பயன்படுத்தினர். தற்காலத்தில் சீமைக்காரையின் மிக முக்கியமான பயன்பாடு, பைஞ்சுதை மற்றும் சீமைக்காரைச் சாந்து தயாரிப்பு ஆகும். இயற்கையாகக் கிடைக்கின்ற அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்படும் சேர்பொருட்களைச் சீமைக்காரையுடன் கலந்து செய்யப்படும் இப்பொருட்கள் பொதுவான சூழல் நிலைமைகளில் நீடித்து உழைக்கக்கூடிய கட்டடப்பொருளாகும். சீமைக்காரை நீரியற் சீமைக்காரை (Hydraulic cement), நீரியலில் சீமைக்காரை (non-hydraulic cement) என இருவகைப்படும். நீரியற் சீமைக்காரைகள் என்பன, நீருடன் கலக்கும்போது வேதியியல் தாக்கமுற்று இறுகிக் கடினமாகும் தன்மையுள்ள சீமைக்காரைகளாகும். இவை, இவ்வாறு இறுகிக் கடினமான பின்னர் நீருக்கு அடியிலும்கூட வலுவை இழப்பதில்லை. நீருடன் தாக்கமுறும்போது உடனடியாகவே உருவாகும் ஐதரேட்டுக்கள் (hydrates) நீரில் கரையாத் தன்மை கொண்டனவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான சீமைக்காரைகள் நீரியற் சீமைக்காரைகளாகும். அத்துடன் இவை, சுண்ணக்கல், களிமண், ஜிப்சம் போன்றவற்றை மூலப்பொருள்களாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் "போட்லண்ட் சீமைக்காரை" வகையைச் சேர்ந்தவை. நீரியலில் சீமைக்காரைகள், நீரற்ற சுண்ணாம்பு, ஜிப்சம் சாந்து போன்றவற்றை உள்ளடக்கியவை. இவை வலுப் பெறுவதற்கு உலர்வாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆக்சிக்குளோரைட்டு சீமைக்காரைகள் நீர்மக் கூறுகளைக் கொண்டவை. சுண்ணாம்புச் சாந்து நீரியற் சீமைக்காரைகள் போல் நீருடனான வேதியியற் தாக்கத்தினால் இறுகிக் கடினமாவதில்லை. உலர்வதன் மூலமே கடினத்தன்மை பெறுவதுடன், மிகமெதுவாகவே வளியிலுள்ள காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து கல்சியம் காபனேட்டை (கல்சியம் காபனேற்று) உருவாக்குவதன்மூலம் பலம் பெறுகிறது. இந்தியாவில் பல வகையான சீமைக்காரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படுகின்றன. சீமைக்காரைகளின் சிலவகைகளும், அதற்கு இந்திய தரநிர்ணய அமைவனம்(BUREAU OF INDIAN STANDARDS)வழங்கியுள்ள எண்களும் கீழ்கண்டவாறு. இது இரும்பு தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் சிலாக் (slag) என்னும் பொருளுடன் சேர்த்து தயாரிக்கப் படுவதாகும். இது சிறப்புத்தன்பூகள்வாய்ந்தது. குளோரைட் மற்றும் சல்பேட் தாக்குதலில் இருந்து கான்கீட்டை பாதுகாக்கும் தன்மைவாய்ந்தது. கடலில் கட்டப்படும் கட்டுமானங்கள்,கடல்சார்ந்த பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்கள ஆகியவற்றுக்கு பொருத்தமானது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானங்கள், இரசாயன தொழிற்சாலை கட்டுமானங்கள்,நிலத்தடியில் சல்பேட் உப்பு அதிகம் இருக்கக்கூடிய இடங்கலில் உள்ள நிலத்திற்கு கீழ் கட்டப்படும் கட்டுமாணங்கள் போன்றவற்றில் பயன்படுகிறது. குலோரைட் தாக்குதலில் இருந்து இரும்புக் கம்பிகளை பாதுக்க்கும் தன்மை இந்த சிமெண்டுக்கு கிடையாது என்பதால் ,நிலத்திலோ,நிலத்தடி நீரிலோ குலோரைட் கலந்திருக்கும் இடங்களில் இந்த சிமெண்டை பயன்படுத்த உகந்ததல்ல இது விரைவாக கடினமாகி அதிக வலுவை விரைவில் அடையக்கூடிய தன்மைவாய்ந்தது.மிக விரைவாக சீர்செய்யவேண்டிய பழுதுகள், அவசரகால கட்டுமானங்கள், விமான ஓடுபாதையில் ஏற்படும் சேதங்கள் போன்றவற்றை சீர்செய்வது போன்றவற்றிக்கு பயன்படுகிறது. இந்த சிமெண்ட் அதிக வலிமை, நீடித்த உழைப்பு, விரிசல்களில் இருந்து பாதுகாப்பு, சல்பேட் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, கசிவு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு போன்ற சிறப்புத் தன்மைகள் வாய்ந்ததாக கூறப்படுகிறது. வீடுகள்,வணிக கட்டடங்கள் பெரும்பாலும் இந்த சிமெண்ட் கொண்டே கட்டப்படுகிறது, இது விரைவாக வலிமையை ஈட்டக்கூடியது என்றாலும் போர்ட்லேண்ட்,பொசலோனா சிமெண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த சிமெண்ட்டை பயன்படுத்து கட்டப்படும் கட்டுமானங்கள் நீடித்து உழைக்கும் தன்மை குறைவு எனக் குறப்படுகிறது. கார்பனீராக்சைடு கார்பனீராக்சைடு "(Carbon dioxide)" என்பது CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். காபனீரொக்சைட்டு, கார்பன்-டை-ஆக்சைடு, கரியமிலவாயு என்று பல்வேறு பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். கார்பனீராக்சைடு உலர் காற்றைக் காட்டிலும் 60% அடர்த்தி மிகுந்ததாகும். ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிசன் அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் இரட்டைப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறு உருவாகிறது. நடைமுறையில் இவ்வாயு புவியின் வளிமண்டலத்தில் 0.04 சதவீதம் என்ற குறைந்த சுவடு அளவில் உள்ளது. கன அளவில் இந்த அளவு மில்லியனுக்கு 410 பகுதிகள் ஆகும். தொழிற்புரட்சிக்கு முன்னால் இந்த அளவு மில்லியனுக்கு 280 பகுதிகள் மட்டுமே இருந்தது. எரிமலைகள், சூடான நீரூற்றுகள், வெந்நீர் உற்றுகள் போன்றவை கார்பனீராக்சைடின் இயற்கை மூலங்களில் சிலவாகும். நீர் மற்றும் அமிலங்களின் செயல்பாடுகளால் கார்பனேட்டு பாறைகளில் இருந்து இது விடுவிக்கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு தண்ணீரில் கரையக்கூடியதாக இருப்பதால், அது நிலத்தடி நீரில், ஆறுகள் மற்றும் ஏரிகள், பனிக்கட்டி, பனிப்பாறைகள் மற்றும் கடல்நீர் ஆகியவற்றில் இயல்பாகவே கலந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிலும் கார்பன் டை ஆக்சைடு கலந்துள்ளது. சாதாரணமாகக் காணக்கூடிய அடர்த்தி நிலைகளில் இது நெடியற்றுக் காணப்படுகிறது. இருப்பினும், அதிகமான செறிவுகளில் கூர்மையான அமிலத் தன்மையான நெடியைக் கொண்டதாக உள்ளது . கார்பன் டை ஆக்சைடுக்கு கார்பன் சுழற்சியில் கிடைக்கக்கூடிய கார்பன் ஆதாரமாக இருக்கின்றது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு பூமியிலுள்ள உயிர்களுக்கான முதன்மை கார்பன் ஆதாரமாக இருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் இருந்த கார்பன்-டை-ஆக்சைடின் அடர்த்தி உயிரினங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் புவியியல் நிகழ்வுகள் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாக்கள் ஒளி ஆற்றலின் உதவியோடு கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன. இவை இவ்வினையின் கழிவுப் பொருளாக ஆக்சிசனை வெளிவிடுகின்றன . காற்றைச் சுவாசித்து வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. கார்போவைதரேட்டுகளையும் லிப்பிடுகளையும் சுவாசித்தல் மூலம் வளர்ச்சிதை மாற்றமடையச் செய்து ஆற்றலை இவை உற்பத்தி செய்கின்றன . மனிதன் உட்பட காற்றைச் சுவாசிக்கும் அனைத்து உயிர்னங்களும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கச் செய்கின்றன. மீனின் செதிள்களில் இருந்து இவ்வாயு தண்ணீரில் விடப்படுகிறது. கரிம வேதியியல் பொருட்கள் சிதைவடையும் போதும், ரொட்டி, பீர் மற்றும் மதுபானங்கள் தயாரிக்கையில் சர்க்கரையை நொதிக்கச் செய்யும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், புதைப்படிவுகள், நிலக்கரி, மரம் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில் எரியும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. பேரளவில் நிகழ்த்தப்படும் ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் விரும்பத்தகாத உடன் விளைபொருளாக கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. உதாரணமாக அக்ரைலிக் அமிலம் தயாரிப்பில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உடன் விளை பொருளாக உருவாகிறது . பற்றவைத்தல் மற்றும் தீ அணைப்பு கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்று துப்பாக்கிகள் மற்றும் எண்ணெய் மீட்பு கருவி ஆகியவற்றில் அழுத்தமளிக்கும் வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் இரசாயன மூலப்பொருளாகவும் மற்றும் காபியில் உள்ள காபீனை நீக்க உதவும் திரவ கரைப்பான் ஆகவும், மீ உலர்த்தியாகவும் கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது . குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலும் பொங்குதலுக்காக கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. குளிரூட்டிகளில் பயன்படும் உலர் பனிக்கட்டியாகவும் திட கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 99.4% CO உமிழ்வு என பிரதிநிதித்துவப்படுத்துகிறது . பூமியின் வளிமண்டலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்டகால பைங்குடில் வாயுவாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. தொழில்துறை புரட்சி, மானுடவியல் உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, காடுகள் அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு வேகமாக அதிகரித்து புவி வெப்பமடைவதற்கு வழிவகுத்தது. தண்ணீரில் கரைந்து கார்போனிக் அமிலமாக உருவாகும் என்பதால் கடல் நீரை இது அமிலமாக்கியும் வருகிறது. தனித்தியங்கும் ஒரு பொருளாக முதன்முதலில் விவரிக்கப்பட்ட வாயு கார்பன் டை ஆக்சைடு ஆகும். 1640 ஆம் ஆண்டில் யான் பாப்டிசுட்டு வான் எல்மோண்ட் என்ற வேதியியலாளர் ஒரு மூடிய கலனுக்குள் கல்கரியை எரித்து பரிசோதித்தார். அது எரிந்து முடிந்தபின் கிடைத்த சாம்பல் பயன்படுத்திய கல்கரியைக் காட்டிலும் எடை குறைவாக இருந்தது. குறைவான எடை ஒரு வாயுவாக வெளியிருக்கலாம் என்று அவர் முடிவு செய்தார். இசுக்காட்லாந்திய வேதியியலர் யோசப் பிளாக் கார்பன் டை ஆக்சைடின் பண்புகளை மேலும் ஆராய்ச்சி செய்தார். கால்சியம் கார்பனேட்டு எனப்படும் சுண்னாம்புக் கல்லை அமிலங்களுடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகும் எனக் கண்டறிந்தார். இவ்வாயு காற்றை விட கனமானது என்று கூறினார். சுண்ணாம்பு நீர் வழியாக இதை ஊதும் போது கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது என்பதையும் அறிந்தார். விலங்குகளின் சுவாசத்தாலும் நுண்ணுயிர்களின் நொதித்தலாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது என்பதை நிருபித்தார். 1772 ஆம் ஆண்டில் ஆங்கில நாட்டு வேதியியலாளர் யோசப் பிரீசுட்லி என்பவர் சுண்ணாம்புக் கல் மற்றும் கந்தக அமிலம் மூலம் இதை செயற்கை முறையில் உருவாக்கினார். 1823 இல் அம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரால் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு உயர்ந்த அழுத்தங்களில் திரவமாக்கப்பட்டது. 1835 இல் திரவ கார்பன் டை ஆக்சைடு ஒரு அழுத்த கொள்கலன் மூலம் குறைந்த வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்றப்பட்டது. அதுவே திடப்பனி என்று அழைக்கப்பட்டது. காபனீரொக்சைட்டு நிறமற்ற வாயுவாகும். குறைந்த செறிவில் மணமற்றது. அதிக செறிவில் அமிலங்களுக்குரிய மணத்தைக் கொண்டிருக்கும். சாதாரண வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், காபனீரொக்சைட்டு 1.98 kg/m அடர்த்தியைக் கொண்டிருக்கும். இவ்வடர்த்தியானது வளியின் அடர்த்தியின் 1.67 மடங்காகும். (வளியை விட அடர்த்தி கூடியது) சாதாரண வளிமண்டல அமுக்கத்தில் காபனீரொக்சைட்டுக்கு திரவ நிலை கிடையாது. -78.5°C (−109.3 °F; 194.7 K) வெப்பநிலையில் இது நேரடியாக திண்ம நிலையை அடைந்து விடும். திண்ம காபனீரொக்சைட்டும் இவ்வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகி விடும். திண்ம காபனீரொக்சைட்டை உலர் பனிக்கட்டி என அழைப்பர். வளிமண்டல அமுக்கத்தை விட 5.1 மடங்கு அமுக்கத்திலேயே காபனீரொக்சைட்டின் திரவ நிலையை அவதானிக்க முடியும். நான்கு பிரதான கைத்தொழில்களின் (சுவட்டு எரிபொருள், ஐதரசன் உற்பத்தி, அமோனியா உற்பத்தி, நொதித்தல்) பக்க விளைபொருளாக காபனீரொக்சைட்டு விளங்குகின்றது. வளியை வடிக்கட்டல் மூலம் இதனை உற்பத்தி செய்தல் நட்டத்துக்குரியதாகும். ஐதரோகார்பன்களை எரிக்கும் போது காபனீரொக்சைட்டு விளைபொருளாகக் கிடைக்கின்றது. சுண்ணக்கல்லை 850°C வெப்பநிலையில் சூடாக்கி நீறாத சுண்ணாம்பை உற்பத்தி செய்யும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது. இரும்பு உற்பத்தியில் இரும்பின் ஒக்சைட்டுகளை காபன்மொனொக்சைட்டு அல்லது கார்பனால் தாழ்த்தும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது. அற்கஹோல் உற்பத்தியில் காபனீரொக்சைட்டும் அற்கஹோலும் மதுவத்தால் சீனி நொதிக்கப்பட்ட பின் கிடைக்கின்றன. உலோக கார்பனேட்டுகளும் அனேகமான அமிலங்களும் தாக்கமடையும் போது காபனீரொக்சைட்டு வெளிப்படுகின்றது. உதாரணமாக கால்சியம் கார்பனேட்டு (முட்டைக்கோது, சிப்பியோட்டில் பெறலாம்) மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் தாக்கமடையும் தாக்கமானது கால்சியம் குளோரைட்டு மற்றும் காபனீரொக்சைட்டு ஆகியவற்றை விளைவுகளாகத் தோற்றுவிக்கும். காபனீரொக்சைட்டைத் தனியாக உற்பத்தி செய்வதை விட பக்கவிளைபொருளாகப் பெறுவதே இலாபம் ஈட்டித் தரக்கூடியதாகும். எனவே காபனீரொக்சைட்டை பக்கவிளைபொருளாகத் தோற்றுவிக்கும் தொழிற்சாலைகளில் இது உற்பத்தி செய்யப்படு திண்ம உலர் பனியாகவோ அல்லது அமுக்கப்பட்ட வாயுவாகவோ விற்பனை செய்யப்படுகின்றது. தீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது. பொதுவாக 1% க்குக் குறைந்த அளவில் காபனீரொக்சைட்டு நச்சுத்தன்மை அற்றது. (சாதாராண வளியில் 0.036% தொடக்கம் 0.039% வரை வேறுபடும்). ஒக்சிசன் போதியளவில் காணப்பட்டாலும் காபனீரொக்சைட்டு செறிவு 7% - 10% இடையில் காணப்படுமானால் கண் பார்வை குறைதல், மயக்கத் தன்மை, தலை நோ என்பன ஏற்படும். ஏனெனில் இரத்தத்தில் ஒக்சிசனின் இடத்தை காபனீரொக்சைட்டு பிடித்துக்கொள்வதலாகும். இதயம் இதயம் () அல்லது இருதயம் () அல்லது உயிர்முதல் ("அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று") (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது. முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்சு) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்சு) எடை கொண்டுள்ளது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது "பெரிகார்டியம்" எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது. இதயத்தின் அமைப்பு பல்வேறு விலங்குகளுக்கு இடையில் வேறுபடுகின்றது, தலைகாலிகளில் இரண்டு "செவுள் இதயமும்" (gill hearts) ஒரு "தொகுதி இதயமும்" அமைந்துள்ளது. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும். நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் ஐந்தும் எட்டும் உள்ள மட்டத்தில் நடு மார்பிடையப் பகுதியில் (middle mediastinum) இரட்டை மென்சவ்வாலான ஒரு பாதுகாப்புப் பையினுள் மனித இதயம் அமைந்துள்ளது. இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். வெளியுறைப்பை மார்பிடையத்துடன் ஒட்டிக் காணப்படும்.இரண்டு அடுக்காக இருக்கும் இதய வெளியுறைப்பையுள் நீர்மம் காணப்படும். இந்த நீர்மமானது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும். மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயத்தின் பிற்புறப்பகுதி முள்ளந்தண்டெலும்புகளின் முன்பாக அமைந்துள்ளது. இதயத்தின் முற்பகுதி மார்புப்பட்டை மற்றும் விலாக் கசியிழையங்களின் பின்னே அமைந்துள்ளது. இதயத்தின் மேற்பகுதியில் பெரு நாடிகளும் நாளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது விலா என்புக் கசியிழைய மட்டத்தில் இதய மேற்பகுதி அமைந்துள்ளது. இதயம் கூம்பு வடிவானது. இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்துள்ளது. இதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது (உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலது புறம் அமைந்திருக்கும்). நுரையீரல் தவிர்ந்த உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது. இதயம் இடது, வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது. இதயமானது இதயத்தசை என்னும் தன்விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக்கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளது. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம் (Coronary sulcus) எனும் வெட்டாகத் தென்படுகின்றது. இடது மற்றும் வலது இதய மேலறைகளில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும், இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோணை எனப்படும். இடது மேல் மற்றும் கீழ் இதயவறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகின்றது, இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளது. மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவாகும். இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன , இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் இரண்டு நுண்காம்புத்தசை மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. இதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை. இதய வெளியுறைப்பையால் இதயம் சூழப்பட்டுள்ளது. இது இரண்டு படை மென்சவ்வுகளை உடையது. வெளியில் அமைந்துள்ள நார்ச்சவ்வுப்படை, நார்ச்சவ்வு வெளியுறை எனப்படும். உட்புறத்தே அமைந்துள்ள நீர்ச்சவ்வுப் படை மேல் இதயவுறைப் படை எனப்படும். இவை இரண்டிற்குமிடையே வெளியுறை நீர்மம் உள்ளது. வெளியில் மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), நடுவில் இதயத்தசைப் படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய மூன்று படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதய அகவுறைப்படை எளிய செதிண்மேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இது இதய அறைகளையும் அடைப்பிதழ்களையும் மூடிக் காணப்படுகின்றது. இது நாடி மற்றும் நாளங்களின் அகவணிக் கலங்களாகத் தொடர்ச்சி பெறுகின்றது. மேலும் மெல்லிய படை தொடுப்பிழையம் மூலம் இதயத்தசைப் படையுடன் இணைகின்றது. என்டோதீலின் அல்லது அகவணியன் எனப்படும் புரதக்கூறு அகவணிக் கலம் மூலம் சுரக்கப்படுகின்றது. இதயத்தின் சுருங்கி விரிதலைக் கட்டுப்படுத்துவதில் இவையும் ஒரு அங்கம் வகிக்கின்றன. நடு இதயத்தசைப் படையை ஆக்கும் இதயத்தசை இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயத்தசை இரண்டுவிதமான கலங்களைக் கொண்டுள்ளது, சுருங்கும் தொழிலைச் செய்யும் தசைக் கலங்கள் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியத்துக்குரிய துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ( pacemaker cells). இவற்றுள் இதயத்தசை பெரும்பான்மையானது (99%), மீதியுள்ளவை (1%) துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ஆகும். தசை உட்பட்ட இதயத்தின் பகுதிகள் உயிர்வளியையும் ஊட்டக்கூறுகளையும் பெற்று கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உதவுகின்றது. நாடிகள், நாளங்கள், நிணநீர்க் குழல்கள் இதில் அடங்குகின்றது. இதயத்தசைக்கு உயிர்வளி செறிந்த குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். முடியுருத்தமனிகள் இடது, வலது என இரண்டாக உள்ளது, இவை பெருநாடியில் இருந்து தோன்றுகின்றன. இவற்றில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை ஏற்படுத்துகின்றது. துணைப்பரிவு இயக்கத்தைக் கொண்ட அலையு நரம்பு மூலமும் பரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்புகளை நீள்வளையமையவிழையம் கட்டுப்படுத்துகின்றது. இந்த நரம்புகளின் தொழிற்பாட்டினால் இதயத்துடிப்பு வீதம் மாறுபடுகின்றது. உடற்பயிற்சி, மன அழுத்தம், குருதியிழப்பு, உடல் வறட்சி ஆகியனவற்றின் போது பரிவு நரம்புத்தொகுதி செயற்படுத்தப்படுகின்றது. இது இதயத் துடிப்பை அதிகரிக்கவைக்கின்றது. இதற்கு மாறாக துணைப்பரிவு நரம்பு செயற்படுத்தப்பட்டால் இதயத் துடிப்பு குறைகின்றது. இந்த நரம்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பின்னலை ஏற்படுத்துகின்றது, இது இதய நரம்புப்பின்னல் எனப்படும். துணைப்பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. குருதியின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயற்படுகின்றது. தொகுதிச் சுற்றோட்டம் மற்றும் நுரையீரற் சுற்றோட்டம் என்று இருவகையாக இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் ஓட்டம் வகைப்படுத்தப்படுகின்றது. இடது இதயக் கீழறையில் இருந்து உடலின் அனைத்துப் பாகங்களில் உள்ள உயிரணுக்களுக்கு நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் உயிர்வளியும் செறிந்த குருதி கொண்டு செல்லப்படுகின்றது. அங்கிருந்து நாளங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் உயிர்வளி நீங்கிய குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. வலது இதயக் கீழறையில் இருந்து உயிர்வளி நீங்கிய குருதி நுரையீரலை அடைந்து அங்கு சுத்திகரிக்கப்பட்டு உயிர்வளி செறிந்த குருதியாக இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது. ஒவ்வொரு இதயத் துடிப்பின் போது இதயம் சுருங்கி விரிதலும் அதன்போது உண்டாகும் மின்னிய நிகழ்வுகளும் இதய வட்டம் எனப்படும். இதில் இதயம் சுருங்கும் அவத்தை இதயச்சுருக்கம் (systole) எனவும் இதயம் விரியும் அவத்தை இதயவிரிவு (இதயவிரிவு) எனவும் அழைக்கப்படுகின்றது. நிமிடமொன்றிற்கு இதய சுருக்கத்தின் போது இடது, வலது கீழ் இதயவறைகளினால் வெளியேற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு இதய வெளியேற்றக் கொள்ளளவு எனப்படுகின்றது. பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டராகக் கருதப்படுகிறது. துடிப்புக்கொள்ளளவு என்பது ஒரு தடவை இதயம் சுருங்கும் போது இடது கீழ் இதயவறையால் வெளியற்றப்படும் குருதியின் கொள்ளளவு. இது ஒரு ஆரோக்கியமான 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனுக்கு 70 மில்லிலீட்டர் ஆகும். சிரைப்பைச் சீர்த்துடிப்பு (Sinus rhythm) என்பது இதயத்தின் துடிப்புச்சீராக்கியாகிய சிரைப்பைச்சோணைக் கணுவில் தொடங்கும் சீரான பழுதற்ற இதயத்துடிப்பு. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கு இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்படல் அவசியமாகின்றது. சிரைப்பைச்சோணைக் கணு, மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் ஒன்று சேர்ந்து இதய மின்கடத்துகை ஒருங்கியம் என அழைக்கப்படுகின்றது. வலது மேலிதயவறையின் மேற்பகுதியில் மேற்பெருநாளத்தின் அருகாமையில் சிரைப்பைச்சோணைக் கணு அமைந்துள்ளது. இதயத்துடிப்பு வீதம் என்பது நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு. பொதுவாக, வளர்ந்தோரில் 60 தொடக்கம் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது. சிரைப்பைச்சோணைக் கணுவில் உள்ள உயிரணுக்கள் அவற்றின் மென்சவ்வில் மறை ஏற்றத்தைக் கொண்டுள்ளன. சோடியம் விரைவாக உயிரணுக்குள் உட்செல்லும்போது அவை நேர் ஏற்றத்தைப் பெறுகின்றது. இது முனைவுநீக்கம் எனப்படுகின்றது, இது தொடர்ச்சியாக சீராக நிகழ்ந்து கொண்டிருக்கும். உயிரணு போதிய ஏற்றம் பெற்றபின்னர் சோடியம் உள்ளே வருவதற்கு உதவிய வழி மூடப்பட்டுவிடும். இதன் பின்னர் பொட்டாசியம் வெளியேறும் கணத்தில் கால்சியம் உள்ளெடுக்கப்படும். துரப்போனின் C எனும் புரதத்துடன் சேர்ந்துகொண்ட கல்சியம் இதயத்தசையின் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றது. துரப்போனின் பிணைவு நீங்கும் போது இதயம் விரிவடைகின்றது. பரிவு மற்றும் துணைப்பரிவு நரம்பு வழியாக மூளையில் உள்ள இதயக்குழலிய மையத்தால் இதயத்துடிப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது. குருதிக் குழாய்களில் அழுத்த உணர்விகள் எனும் அமைப்பு காணப்படுகின்றது. குருதிக்குழாய் சுருங்கும் போது அல்லது விரிவடையும் போது இவை இழுவையடைந்து தூண்டப்படுகின்றன. இது இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கப்படுகின்றது. இதனால் குருதி அழுத்தம் சீரான நிலையில் பேணப்படுகின்றது. குருதி அழுத்தம் குறைகையில் அழுத்த உணர்விகள் இழுவையடைவது குறைகின்றது. அழுத்த உணர்விகள் மூளைக்கு தகவல் அனுப்பும் வீதம் குறைகின்றது, இதனால் இதயக்குழலிய மையம் பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரித்து துணைப்பரிவு நரம்பு செயற்பாட்டைக் குறைக்கின்றது. எடுத்துக்காட்டாக, காயமடைந்த நபர் ஒருவருக்கு ஏற்படும் குருதிப்பெருக்கால் குருதி அழுத்தம் குறைகின்றது. அழுத்த உணர்விகள் இதனை உணர்ந்து தூண்டப்பட்டு தகவலை இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கின்றன. மூளை பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் இதயத்தின் துடிப்பு கூடுகின்றது. உடற்பயிற்சி, வயது, உடல் வெப்பநிலை, அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம், மனோநிலை போன்றன இதயத் துடிப்பை மாற்றவல்ல காரணிகள் ஆகும். எபிநெப்ரின் (அதிரினலின்) , நார்எபிநெப்ரின், கேடயச் சுரப்பி இயக்குநீர்கள் ஆகியனவற்றின் மிகைப்பாடு இதயத்துடிப்பை அதிகரிக்கவல்லது. கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியன இதயத்துடிப்பை சீராகப் பேணுவதில் முக்கியமான தனிமங்கள் ஆகும். பொதுவாக ஆரோக்கியமான இதயத்தில் இருவகை இதய ஒலிகளைக் கேட்கலாம். இவற்றின் ஒலிகள் பொதுவாக "லப்-டப்" என்று விவரிக்கப்படுகின்றது. இவை முதலாம் (S1), இரண்டாம் (S2) இதய ஒலிப்புகள் என அழைக்கபப்டுகின்றன. லப் எனப்படும் முதலாம் இதய ஒலிப்பு இருகூர் அடைப்பிதழ் மற்றும் முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவை மூடும் போது ஏற்படும் ஒலியாகும். டப் என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது. இரண்டாம் இதய ஒலிப்பு இயல்பான நிலையில் உட்சுவாசத்தின் போது பிரிகையடையும். எனினும் இவற்றின் ஒலிப்பிரிகைக்கு இடையேயான இடைவெளி கூடுமாயின் அது நோய்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். இவை தவிர மூன்றாம் (S3, லப்-டப்-டா), நான்காம் (S4, ட-லப்-டப்) இதய ஒலிப்புகள் உள்ளன. இவை பொதுவாக நாற்கால் பாயச்சலோட்டம் (gallop rhythm) என அழைக்கப்படுகின்றன. குதிரை ஒன்று ஓடும் போது ஏற்படக்கூடிய ட-ட-ட எனும் சந்தம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது. மூன்றாம் இதய ஒலிப்பு இளவயதினர், விளையாட்டு வீரர், சிலவேளைகளில் கர்ப்பிணிகள் ஆகியோரில் இயல்பாகக் காணப்படலாம். ஆனால் பிந்தைய காலப் பகுதியில் மீண்டும் இவ்வொலிப்பு தோன்றினால் அது இதயச் செயலிழப்பின் காரணமாக இருக்கக்கூடும். உயர் குருதியழுத்தம், இதயத்தசை மிகை வளர்ச்சியில் முதலாம் இதய ஒலிப்பின் சற்று முன்னர் கேட்கக்கூடிய ஒலி நான்காம் இதய ஒலிப்பாகும். பிறவியில் ஏற்படக்கூடிய கோளாறுகள், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள், இதயத் தசைகளில் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் மற்றும் இதயத்துடன் நேரடி இணைப்பைக் கொண்ட குருதிக் குழாய்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் குருதியூட்டக்குறை இதய நோய் அல்லது முடியுருநாடி இதய நோய் ஏற்படுகின்றது. குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் இந்நோயின் இடர்ப்பாடு அதிகரிக்கின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு, மாரடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு ("Myocardial infarction") ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும். காதலா்களின் சின்னம் உடலின் முக்கியமான உறுப்பு என்பதால் இதயம் உடலின் மத்தியில் அமைந்துள்ளது என்று நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. உயிரின் ஆதாரம், உள்ளத்தின் இருப்பிடம், உணர்வுகளின் மையம் என்று இதயம் கருதப்படுகின்றது. இதனால் காதல் அல்லது அன்பு என்பதன் சின்னமும் இதயமாக உள்ளது. மதங்களிலும் இதயத்தின் சின்னம் உபயோகிக்கப்படுகின்றது. மனிதாபிமானம் அற்றவர்களை "இதயமே இல்லாதவர்" என்று விவரிப்பது சமூகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றனவற்றின் இதயம் பரவலாக உணவாக உட்கொள்ளப்படுகின்றது. இவை தசை உறுப்பு என்பதால் புரதம் செறிந்த உணவாகும். சுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இருதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது. பூச்சியினங்களில் வழமையாக "முதுகுக் குழாய்" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் "குருதி" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சில கணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின் செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது. வலது இதயம் இதயத்தில் உள்ள வலது ஆரிக்கிளும் வலது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து வலது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்டிரிக்கிள், பல்மோனரி டிரங்க் ஆகிய மூன்றும் சேர்த்து வலது இதயம் என்று குறிக்கப்படுவது உண்டு. கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதியானது உடலின் பல பகுதிகளில் இருந்தும் வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது மூவிதழ் வால்வு வழியாக வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப் படுகிறது. வலது வெண்ட்டிரிக்கிள் பல்மோனரி வால்வு வழியாக குருதியை பல்மோனரி தமனிக்குள் செலுத்துகிறது. இடது இதயம் இதயத்தில் உள்ள இடது ஆரிக்கிளும் இடது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து இடது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இடது ஆரிக்கிள், இடது வெண்ட்டிரிக்கிள், மகாதமனி ஆகிய மூன்றும் சேர்த்து இடது இதயம் என்று குறிக்கப்படுவதும் உண்டு. இடது ஆரிக்கிள் நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை பல்மோனரி சிரைகளின் வழியாகப்பெறுகிறது. பின் குருதி மிட்ரல் வால்வு வழியாய் இடது வெண்ட்டிரிக்களுக்கு அனுப்பப்படுகிறது. இடது வெண்ட்டிரிக்கிள் மகாதமனி வால்வு வழியாக இரத்தத்தை மகாதமனிக்குள் செலுத்துகிறது. ஜிப்சம் ஜிப்சம் என்பது, இரு நீர்மூலக்கூறுகளால் நீரேற்றப்பட்ட மிக மென்மையான ஒரு கனிமம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு, CaSO·2HO ஆகும். ஜிப்சத்தை, 100°C க்கும் 150°C (302°F) க்கும் இடையில் வெப்பமாக்கும்போது, அதிலுள்ள 75% நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரகற்றப்பட்ட ஜிப்சம், பொது வழக்கில் பாரிசுச் சாந்து (plaster of Paris) (CaSO·½HO) எனப்படுகின்றது. நீரகற்றல் பொதுவாக 80°C (176°F) இல் தொடங்கிவிடுகிறது. உலர்ந்த வளியில் ஒரு பகுதி நீரகற்றல் 50°C யிலேயே ஓரளவுக்குத் தொடங்கிவிடும். இதன்போது வெளிவிடப்படும் வெப்பம், நீரை ஆவியாக்கி வெளியேற்றுவதிலேயே பயன்படுவதால் ஜிப்சத்தின் வெப்பநிலை மிக மெதுவாகவே உயர்கின்றது. நீர் போனபின் வெப்பநிலை வேகமாக உயரும். இருமுனையி இரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் "மின் இருமுனை" (இருமுனையி அல்லது துருவ இரட்டைகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மின் இருமுனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.  நீர் மூலக்கூறின் இந்தப் பண்பே Microwave Oven இல் பயன்படுத்தப்படுகிறது.  பொதுவாக, இருமுனையி ஒரே அளவு வீச்சுடன், சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்ட இரு முனைகளை கொண்டிருக்கும். இரு முனைகளும் எதிர் எதிர் முனைப்பு பண்புகளைக் கொண்டிருக்கும். ஆய்வுகூடம் ஆய்வுகூடம் () என்பது, அறிவியல் ஆய்வு, சோதனை, அளவீடு ஆகிய செயற்பாடுகளுக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை வழங்கும் இடம் ஆகும். அறிவியல் ஆய்வுகூடங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், இராணுவ நிலையங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வுகூடம், அதன் அளவையும், தேவைகளையும் பொறுத்து, ஒன்று தொடக்கம் பல பேர்கள் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையலாம். அறிவியலின் எந்தத்துறைக்கான அறிவியல் ஆய்வுகளுக்கான ஆய்வுகூடங்கள் பல விதமாக அமையக்கூடும். மின் பொருள் குறி மின் பொருள் குறி ("Electronic Product Code") என்பது பொருட்களை வானலை அடையாளம் மூலம் அடையாளப்படுத்த ஒரு சீர்தரம் ஆகும். இது அனேக தொழில்நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அனைத்துலக சீர்தரம் ஆகும். இது பல துறைகளில் தற்போதைய UPC பதிலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னுறுப்பு மின்னுறுப்பு என்பது மின் சுற்றை ஆராய உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கணித மாதிரியாகும். சில பொதுவான மின்னுறுப்புகள் ஒரு மின்சுற்று செயல்படும் முறையை அறிய, அதில் உள்ள அனைத்து மின்கூறுகளையும், அதற்கு ஈடான மின்னுறுப்புகளுள்ள, மின்சுற்றாக மாற்ற வேண்டும். (எ-க): ஒரு மின்சுற்றில் டிரான்சிஸ்டர் மின்கூறின், செயல்பாட்டை அறிய அதற்கு ஈடான, மின்னுறுப்புகள் மட்டுமே உள்ள மாதிரி-மின்சுற்றை உருவாக்க வேண்டும் பதங்கமாதல் பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை (compound), திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் (திரவ நிலை) செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் (வாயு நிலை) செல்வதாகும். இது, முந்நிலைப் புள்ளி (?) (triple point) க்குக் குறைந்த வெப்பநிலையிலும், அமுக்கத்திலும் நிகழ்கிறது. வழமையான அமுக்க நிலைகளில், பெரும்பாலான சேர்வைகளும், தனிமங்களும் மூன்று வேறுவேறான வெப்பநிலைகளில், மூன்று வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானவற்றில், திண்மநிலையில் இருந்து வளிம நிலைக்கான மாற்றம், இடைப்பட்ட நீர்ம நிலையூடாகவே நிகழ வேண்டியிருக்கிறது. ஆனால், சில பொருட்களைப் பொறுத்தவரை சில அமுக்க நிலைகளில், திண்மத்திலிருந்து, வளிம நிலைக்கு நேரடியான நிலை மாற்றம் நிகழ்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அமுக்கம் பதார்த்தத்தின் (substance)ஆவியமுக்கம் ஆகும். பதங்கமாதலுக்குள்ளாகும் பொருட்கள்: கற்பூரம் அயோடின் முதலானவை. ஆவியமுக்கம் ஆவியமுக்கம் அல்லது ஆவியழுத்தம் (Vapor Pressure) என்பது ஒரு நீர்மத்தின் ஆவியாகும் தன்மையைக் குறிக்கும் அளவீடு ஆகும். இது, திண்ம அல்லது நீர்ம மூலக்கூறுகள் அந்நிலையிலிருந்து தப்பிச் செல்வதற்கான போக்கைக் குறிக்கின்றது. ஒரு மூடிய கட்டகத்தில் (closed system) நீர்மத்துடன் (அல்லது திண்மத்துடன்) சமநிலையில் இருக்கும் அதன் ஆவியான வளிமத்தின் அழுத்தமே ஆவி அழுத்தம் அல்லது ஆவியமுக்கம் என்று வழங்கப் படுகிறது. எல்லாத் திண்மங்களும், நீர்மங்களும், வளிமநிலைக்கு மாறுவதற்கான குணத்தையும், எல்லா வளிமங்களும் மீண்டும் ஒடுங்கி நீர்மம் மற்றும் திண்மமாவதற்கான குணத்தையும் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், திண்ம, நீர்ம நிலைகளுடன் சமநிலையிலுள்ள வளிம நிலையினால் ஏற்படும் பகுதி அமுக்கம் ஒன்று உண்டு. இதுவே அவ்வெப்பநிலையில், அப்பதார்த்தத்தின் ஆவியமுக்கம் ஆகும். காலநிலையியலில், என்பது வளியிலுள்ள நீராவியினால் ஏற்படுத்தப்படும் பகுதி அமுக்கம் ஆகும். ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, அதன் ஆவி அழுத்தமும் அதிகரிக்கும். அதே போல, வெப்பநிலை குறையக் குறைய, ஆவி அழுத்தமும் குறையும். வளிமத்தோடு தொடர்பு கொள்ள இருக்கும் பரப்பளவு ஆவியழுத்தத்தை நிர்ணயிப்பதில்லை. அதனால் எந்த மாற்றமும் இராது. ஆனால் நீர்மத்தின் மூலக்கூறுகள் ஆவி அழுத்தத்தைத் தீர்மானிக்கின்றன. இடை-மூலக்கூறு விசை அதிகமாக இருக்கும் நீர்மத்தில் ஆவி அழுத்தம் குறைவாகவும், இடை-மூலக்கூறு விசை குறைவாக இருக்கும் ஒரு நீர்மத்தில் ஆவி அழுத்தம் அதிகமாகவும் இருப்பது இயல்பு. வீடமைப்பு வீடமைப்பு என்பது, மக்கள் குடியிருப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இருப்பிடங்கள் அமைப்பதைக் குறிக்கும். தொழிற் புரட்சிக்கு முற்பட்ட காலங்களில், உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்கள் நாட்டுப்புறங்களிலேயே வாழ்ந்து வந்தனர். அக்காலங்களிலே வீடுகள் பெரும்பாலும் சூழலில் கிடைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டே அமைக்கப்பட்டன. அத்துடன், நிலக்கிழாரிய அமைப்பின் கீழ், வேளாண்மைத் தொழிலாளர்களுக்கான இருப்பிடங்களை வழங்குவது நிலக்கிழார்களின் பொறுப்பாகவும் இருந்தது. அக்காலத்துச் சாதாரண மக்கள் வசதியான வீடுகளில் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாதெனினும், வீடமைப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக முன்னிறுத்தப்படவில்லை. மக்கள் நாட்டுப்புறங்களிலே ஐதாக வாழ்ந்தார்கள். இதனால், வீடமைப்புக்கான நிலம், நீர் வசதி, கழிவகற்றல், போன்றவை பெரிய பிரச்சினைகளாகக் கருதப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில், தொழிற்புரட்சி நகராக்கத்தை ஊக்குவித்ததுடன், பெருமளவு மக்கள் நாட்டுப்புறத்தில் இருந்து நகரங்களில் குவிந்தார்கள். இது இருப்பிடங்களுக்கான தேவைகளை அதிகரித்ததுடன், கட்டுப்படியாகக்கூடிய செலவில் இருப்பிடங்களை வழங்குவதில் பிரச்சினைகளையும் எதிர் நோக்கவேண்டியிருந்தது. தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் எதிர்கொள்ளப்பட்ட இப்பிரச்சினை பின்னர் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவியது. இன்று பொருளாதார அடிப்படையில் வளர்ந்த நாடுகளாக உள்ள ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகள் இப் பிரச்சினையைப் பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பினும், வறிய வளர்ந்துவரும் நாடுகளில் இப்பிரச்சினையும் வளர்ந்து வருகிறது. இத்தகைய நாடுகளின் நகரப்பகுதிகளில், அளவுமீறிய குடியிருப்பு அடர்த்தி கொண்ட இடங்களில், பாழடைந்துவரும் பழைய கட்டிடங்களிலும், நகரத்தின் அழுக்கான பகுதிகளில், சேரிகளிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இருப்பிடங்கள் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்குவதற்கான தீர்வுகள் பலவகையாக உள்ளன. வசதி படைத்த, மற்றும் மத்திய தர மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்காக ஓரளவு நிதியைத் தங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கான வீடமைப்புப் பிரச்சினைகளைக் கையாளுவதுபோல் வறிய மக்களின் வீடமைப்புப் பிரச்சினைகளைக் கையாள முடியாது. இவர்களுக்காக அரசுகளே பெருமளவில் நிதி ஒதுக்கி இருப்பிடங்களைக் கட்டிக்கொடுக்கவேண்டிய நிலை உள்ளது. இது வறிய நாடுகளைப் பொறுத்தவரை பெரும் பொருளாதாரச் சுமையாகும். இதானால் இந்நாடுகள் இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளின் நிதியுதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டியும் உள்ளது. நிதி வசதி குறைந்தவர்களுக்கான இருப்பிடங்களைக் கட்டுவதற்குப் பலவிதமான திட்டங்கள் உள்ளன. அடிப்படையில் வீடமைப்புக்கான செலவுகளைக் குறைப்பதே இத்தகைய திட்டங்களின் முக்கியமான நோக்கமாகும். இவற்றுட் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இவர்களுக்கான வீடமைப்பில் அரசு பெருமளவுக்குத் தலையிட வேண்டியதில்லை. எனினும் பல சந்தர்ப்பங்களில், அரசின் பங்களிப்புத் தேவைப்படுவது உண்டு. இவை பெரும்பாலும், நிலம் ஒதுக்குதல், உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தல், சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க உதவுதல் போன்ற வகையில் அமைந்திருக்கும். நாட்டார் கட்டிடக்கலை நாட்டார் கட்டிடக்கலை என்பது, உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அவ்விடத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையாகும். மக்களின் தேவைகளையொட்டி வேண்டிய மாற்றங்களை உள்வாங்கி நீண்டகாலம் படிப்படியாக வளர்ந்துவருகின்ற காரணத்தினால், இக் கட்டிடங்கள் அப்பகுதியின், சூழல், பண்பாடு மற்றும் வரலாற்று சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன. ஒரு காலத்தில், திருத்தமற்ற, மேம்பாடு அடையாத கட்டிடங்களாக ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்று பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. கட்டிடக்கலை வரலாற்றில், உயர் பண்பாட்டுக்குரிய கட்டிடக்கலை மற்றும் பிற நாட்டார் கட்டடக்கலை அல்லாத வடிவங்களில் இருந்து நாட்டார் கட்டிடக்கலையை இலகுவில் வேறுபடுத்தி வரையறுக்க முடியும். உயர் பண்பாட்டுக்குரிய கட்டிடக்கலை மக்களின் தேவைகளையும் அவர்கள் பண்பாட்டையும் நேரடியாக வெளிப்படுத்துவதில்லை. பொதுவாகக் கட்டுவிப்பவரின் வளத்தையும் வலுவையும் எடுத்துக்காட்டுவது அல்லது, வடிவமைப்பாளருடைய திறமையைக் காட்டுவதே அவ்வாறான கட்டிடக்கலையில் முக்கிய நோக்கமாக இருக்கும். இங்கே பரந்த மக்கள் கூட்டத்தின் பண்பாடு வெளிப்படுவதில்லை. மாறாக நாட்டுப்புறக் கட்டிடக்கலை நேரடியான மக்கள் பண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கிறது. இது மக்களுடைய தேவைகள், கனவுகள், பண்பாட்டுப் பெறுமானங்கள், வாழ்க்கை முறைகள், உலக நோக்கு என்பவற்றுக்குக் கொடுக்கப்பட்ட பொருண்ம (physical) உருவம் ஆகும். நாட்டார் கட்டிடக்கலை பெரும்பாலும் வீடுகளையும் அவற்றோடொத்த கட்டிடங்களையுமே உள்ளடக்குகிறது. பெரிய கோயில்கள், அரண்மனைகள் போன்றவற்றையும் உள்ளடக்கும் மரபுவழிக் கட்டிடக்கலை இதனிலும் வேறுபட்டது. கதவு கதவு () என்பது, கட்டிடமொன்றினுள் அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதியான அறையொன்றினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது பொதுவாகக் கட்டிடத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையேயுள்ள சுவரில் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்படும் துவாரம் ஒன்றை மூடி அமைக்கப்பட்டிருக்கும். கதவுகள் கட்டிடங்களில் மட்டுமன்றி, ஊர்திகள், அலுமாரிகள், கூண்டுகள் போன்றவற்றிலும் காணப்படும். கதவுகள் பலவகையான நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. இவற்றுட் சில செயற்பாடு சார்ந்தவை. வேறுசில அழகியல் மற்றும் வேறு அம்சங்கள் சார்பானவை. கிளமிடமொனாசு கிளமிடமொனாசு (Chlamydomonas) எளிய ஒரு கலத்தாலான பச்சை அல்காத் தாவரமாகும். இந்த அல்கா நிலையான நன்னீரிலும் குளங்களிலும் ஈரமண்ணிலும் காணப்படும். சவுக்குமுளைகளைப் பயன்படுத்தி தானாக நீந்திச் செல்லும் ஆற்றலுள்ளது. ஒளியால் கட்டுப்படுத்தக்கூடிய அயன்களைப் பம்பும் முறை இவற்றிலுள்ள ஒரு சிறப்பான அமைப்பாகும். கிளமிடமொனாசு அமோனியம் உப்பு உள்ள இடங்களில் அதிகமாக வளரும். இவை இலிங்க மற்றும் இலிங்கமில் முறைகளால் இனப்பெருக்கமடையும். கூடுதலான கிளமிடமொனாசுகள் தனியே ஒளித்தொகுப்பால் மாத்திரம் உணவுத் தெவையைப் பூர்த்தி செய்து கொள்ளும். எனினும் "C. dysosmos" மற்றும் "C. reinhardtii" ஆகியவை இரு முறைகளில் தெவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்: ஒளியுள்ள போது ஒளித்தொகுப்பாலும், ஒளியற்ற போது அசிடேட் மூலமும். தாவரப் பாகுபாடு தாவரப் பாகுபாடு என்பது தாவர வகைப்பிரித்தல், தாவரங்களை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், மற்றும் பெயரிடல் என்று தாவரவியல் தொடர்பான கல்வியை இலகுபடுத்துவதாக அமைவதுமாகும். எனவே இது வகைப்பாட்டு அறிவியல் எனப்படுகிறது. தாவர வகைபிரித்தல் என்பது தாவரங்களுக்கிடையேயான நெருக்கமான தொடர்பை அறிவதும், மற்றும் தாவரங்களுக்கு இடையேயுள்ள கூர்மையான எல்லையை நிர்ணயிப்பதும் ஆகும். பொதுவாக, "தாவர அமைப்பு முறைமைப்படுத்தல்" தாவர மாதிரிகளின் உண்மையான கையாளும் "தாவர வகைபிரித்தல்" ஒப்பந்தங்கள் அதேசமயம், குறிப்பாக அதிக அளவில், தாவரங்கள் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி இடையே உள்ள உறவு அடங்கும். வகைப்பாடு மற்றும் முறைகள் இடையே துல்லியமான உறவு, எனினும், வேலை இலட்சியங்கள் மற்றும் முறைகளை சேர்த்து மாறிவிட்டது. தாவர வகைபிரித்தல் பாரம்பரியமாக கட்டுப்படுத்தல் மற்றும் நெருக்கமான உடன்பாடு அறியப்படுகிறது. தாவர வகைபிரித்தல் அமைப்புகள் பட்டியலில் பார்க்க. தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகள்: தலோபீற்றா தலோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். அல்காக்கள், பங்கசுக்கள், பக்ரீறியங்கள், வைரசுக்கள் தலோபீற்றாக்களாகும். இவற்றில் தாவர உடல், வேர், தண்டு, இலை என்பவை காணப்படாது. கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் மலட்டுக் கலங்களாலான சுவரைக் கொண்டிருக்காது. பிரயோபைற்று பிரயோபைட்டா ("bryophyte") தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை ஈரூடக வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம் சந்ததிப் பரிவிருத்தி (Alteration of Generations) அடைகின்றன. இத்தொகுதித் தாவரங்களில் கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால்(Non-vascular plant) சூழப்பட்டும் இருக்கும். பிரயோபைற்றுக்கள் பூக்களையோ வித்துக்களையோ தோற்றுவிக்காது. இவை தோற்றுவிக்கும் இனப்பெருக்க அமைப்புகள் "வித்திகள்" (Spores) எனப்படும். எ.கா: மாக்கந்தியா, Riccia, "Pogonatum" பிரயோபைட்டா மூன்று வகைப்படும். அவை ஈரலுருத் தாவரம், கொம்புருத் தாவரம், பாசித் தாவரம் என்பனவாகும். கலனிழையத்தைக் கொண்டிராத நிலத்தாவரங்கள் அனைத்தும் பிரியோபைற்றுக்களென பாகுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் இப்பாகுபாடு ஓரளவுக்கு செயற்கையானதாகும். இப்பாகுபாட்டுக்குள் மூன்று கணங்கள் உள்ளன. ஈரலுருத் தாவரங்கள் (" Marchantiophyta"), கொம்புருத் தாவரங்கள் ("Anthocerotophyta") மற்றும் பாசி ("Bryophyta") என்பனவாகும். பிரையோபைற்றுக்களின் வகைப்பாட்டில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. சில ஆராய்ச்சி முடிவுகள் மேற்படி வகைப்பாடை ஆதரித்தாலும், சில இதற்கு முரண்பாடான முடிவுகளைத் தருகின்றன. பாசித்தாவரங்களான மொஸ்களில் வேறு வகையான கடத்தும் இழையங்கள் விருத்தியடைந்திருந்தாலும், அவற்றின் கட்டமைப்பு வேறுபட்டிருப்பதாலும், அக்கலனிழையத்தில் லிக்னின் காணப்படாடதாலும், அவை கலனிழையத்தாவரங்களுக்குள் வகைப்படுத்தப்படுவதில்லை. இன அழிவுக்கு உட்பட்ட சில இனங்களையும் வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மேற்படி வகைப்பாடு மேலும் சிக்கலான வடிவை அடையும். இவ்வகைப்பாட்டின் படி ஈரலுருத் தாவரங்களே மிகப் பழைமையான நிலத்தாவரங்களாகும். இவ்வகைப்பாட்டில் "கோர்னியோடைட்டுக்கள்" எனப்படும் அழிவடைந்த இனம் கொம்புருத்தாவரங்களுக்கும் கலனிழையத் தாவரங்களுக்கும் இடையே உள்ளன. பிரையோபைற்றுக்களைப் போல கோர்னியோபைட்டுக்களிலும் உண்மையான கலனிழையம் இல்லாவிட்டாலும், சில பண்புகளால் அவை கலனிழையத் தாவரங்களைப் போலுள்ளன. ஏனைய நிலத்தாவரங்களைப் போலவே பிரையோபைற்றுக்களும் சந்ததிப் பரிவிருத்தியைக் காண்பிக்கின்றன. கலங்களில் அரைவாசி நிறமூர்த்தங்களைக் (ஹப்லொய்ட்) கொண்ட புணரித்தாவரத்திலிருந்து முழுமையான நிறமூர்த்தங்களைக் கொண்ட (டிப்லொய்ட்) வித்தித்தாவரம் உருவாவதே இச்சந்ததிப் பருவிருத்தியின் அடிப்படையாகும். புணரித்தாவரம் விந்துக்களையும், முட்டைக் கலங்களையும் உருவாக்கும். இவை ஒன்றிணைந்து வித்தித் தாவரத்தை உருவாக்குகின்றது. வித்தித்தாவரம் வளர்ச்சியடைந்து வித்திகளை உருவாக்கும். வித்திகள் பின்னர் புணரித்தாவரங்களாக மாறுகின்றன. பிரையோபைற்றுக்களில் புணரித்தாவரமே ஆட்சியுடையதாகும். இதுவே தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் பெரும் பகுதியை ஆக்கின்றது. பிரையோபைற்றுக்கள் இனம்பெருக நீர் அவசியமாகும். இதனாலேயே இவை ஈரலிப்பான பிரதேசங்களில் வளர்கின்றன (விதிவிலக்குகள் உண்டு). கலன்றாவரம் கலன்றாவரம், கலன் தாவரம் (Vascular plant) அல்லது திரக்கேயோபீற்றா அல்லது உயர் தாவரங்கள் எனப்படுபவை தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை நன்றாக விருத்தியடைந்த கலனிழையம் உள்ள தாவரங்கள். இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால் சூழப்பட்டும் இருக்கும். அவுஸ்திரேலிய டொலர் அவுஸ்திரேலிய டொலர் (ஆஸ்திரேலிய டாலர், "Australian Dollar") 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது (பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே அமெரிக்க டொலர்(அமெரிக்கா), யூரோ (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்), யென் (ஜப்பான்), ஸ்டேர்லிங் பவுண்ட் (பிரித்தானியா), சுவிஸ் பிராங் (சுவிஸர்லாந்து) என்பன உள்ளன. முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் (இது பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்டிலிருந்து வேறுபட்டது) பதிலாக 1966ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாணயத்திற்குப் பெயராக "த அவுஸ்திரல்", "த ஒஸ்", "தெ பூமர்", "த ரூ", "த கங்கா", "த ஈமு", "த டிகர்", "த க்விட்" மற்றும் "மிங்" (மென்ஸீசின் செல்லப்பெயர்)என்பன பரிந்துரைக்கப்பட்ட வேளையில், அப்போதைய முதலமைச்சர் ரொபேர்ட் மென்ஸீஸ் "த ரோயல்" எனும் பெயரைத் தன் சார்பில் முன்வைத்தார். மென்ஸீசின் செல்வாக்கால் 'த ரோயல்'எனும் பெயர் வைக்கப்பட்டு முதற்கட்ட வடிவமைப்புகளும் ஆயத்தப்படுத்தப்பட்டு அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் அச்சிடற் பிரிவால் பணமும் அச்சிடப்பட்டது. வழமையற்ற இப்பெயர் பிரபலமாகாததால் 'டொலர்' என்பதைப் பாவிக்கும் முகமாக 'த ரோயல்' எனும் பெயர் கை விடப்பட்டது. அறிமுகப்படுத்தப்ப்ட்ட போது அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது: 2 அவுஸ்திரேலிய டொலர் = 1 பவுண்ட் 1 அவுஸ்திரேலிய டொலர் = 10 ஷிலிங். 1967ம் ஆண்டு ஸ்டெர்லிங் முறையை விட்டு அவுஸ்திரேலிய டொலர் விலகியது. அதனால் அமெரிக்க டொலருக்கெதிரான ஸ்டேர்லிங்கின் பெறுமதி குறைந்த போது அவுஸ்திரேலிய டொலர் பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க டொலருக்கெதிரான தனது மாறா பணமாற்று வீதத்தை அது பேணியது. 5, 10, 20, 50 சதங்களும், 1 மற்றும் 2 டொலர்களும் நாணயமாக அச்சிடப்படுகின்றன. ஞாபகார்த்த நாணயங்களுக்காக 50 சத நாணயமே நீண்டகாலமாகத் தெரிவில் உள்ளது. இந்நாணயத்தில் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள்: 1970 - தலைமை மாலுமி குக் அவுஸ்திரேலியக் கிழக்குக் கடற்கரையில் இடம் கண்டடைந்தமை 1977 - எலிசபெத் அரசியின் முடிசூட்டலின் வெள்ளிவிழா 1981 - சார்ள்ஸ்-டயானா திருமணம் 1982 - பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி 1988 - அவுஸ்திரேலிய இருநூற்றாண்டு ஞாபகார்த்த நாணய வழக்கம் தற்போது 20சத மற்றும் 1 டொலர் நாணயங்களிலும் தொடரப்படுகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்காக பல்வித மாழைகளில் வெவ்வேறு பெறுமதியுடைய நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. செல்லுபடியாகும் பணமெனினும் இவை பொதுவில் பாவிக்கப்படுவதில்லை குறிப்பு: 1990 - 1991ம் ஆண்டிலிருந்து 1, 2 சத நாணயங்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. பொருள்/சேவைகளுக்காக பணமாகக் கட்டணம் செலுத்தும் போது அவ் விலை அருகாமையிலுள்ள 5சதப் பெறுமதிக்கு நகர்த்தப்படும். (5சதம் அல்லது நிறுவன முடிவு) உதாரணமாக: $6.92 என்பது $6.90 ஆகும், $23.78 என்பது $23.80 ஆகும். $5, $10, $20, $50 மற்றும் $100 பெறுமதியான வங்கித்தாள்கள் அச்சிடப்படுகின்றன. $1( 10/- (10 ஷிலிங்)), $2(£1), $10(£5), $20(£10) போன்று ஐந்து டொலருக்கு மாறா மாற்றுவீதம் பவுண்டுடன் இருக்காததால் $5 வங்கித்தாள் 1967ம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. மக்கள் டொலரின் தசம முறைக்குப் பழக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது. $1 தாள் 1984 இலும் $2 தாள் 1988இலும் நாணயமாக்கப்பட்டன. பணவீக்கம் காரணமாக அதிக பெறுமதியுள்ள பணம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து $50, $100 டொலர் வங்கித்தாள்கள் முறையே 1973ம், 1984ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. பலமங்களால் ஆன வங்கித்தாள் புழக்கம் நோட்பிரிண்டிங் அச்சகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலமங்களாலான (Polymer) வங்கித்தாள்கள் (polymer banknotes) அவுஸ்திரேலியாவில் வெள்ளையர் குடியேற்றத்தின் இருநூற்றாண்டைச் சிறப்பிக்கும் முகமாகஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியால் 1988ம் ஆண்டு முதல் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன. இவ்வகைத் தாள்கள் தொடர்ந்த பாவனையால் ஏனைய காகித வங்கித்தாள் போன்று பாதிப்படைவதில்லை. பாதுகாப்பானவையும் கூட. இவை அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியாலும் பொதுநலவாய அறிவியல் மற்றும் துறைசார் ஆராய்ச்சி நிறுவனத்தினாலும் உருவாக்கப்பட்டு நோட்பிரிண்டிங்கினரால் அச்சிடப்படுகின்றன. இவ்வகை வங்கித்தாள்களைப் பாவித்த முதல் நாடு அவுஸ்திரேலியாவாகும். தற்போது சகல அவுஸ்திரேலிய வங்கித்தாள்களும் இவ்வகையானவை. ஆஸ்திரேலியாவே உலகில் உள்ள நாடுகளில் தான் வெளியிட்ட காசுகள் அனைத்தையும் பிளாசுடிக்கில் முதலில் வெளியிட்டது. இந்த முறையால் ஆஸ்திரேலியாவில் கள்ள நாணயம் அடித்தலும் கள்ள நோட்டு அடித்தலும் பெருமளவு இல்லாமல் போனது. மேலும் இது தாள் நோட்டுகளை விட சுத்தமாகவும் அதிக நாள் உபயோகிக்கக் கூடியதாவும் எளிதில் மறுசுழற்சி முறையில் பயன்படுதத் தக்கதாகவும் இருந்தது. இந்த முறையை செய்த ஆஸ்திரேலிய இரிசர்வ் வங்கியின் பிரிவான "பணத்தை அச்சடிக்கும் ஆஸ்திரேலியா" என்னும் அமைப்பு பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கு இதைப் போன்ற பணத்தாள்களை அச்சடித்துக் கொடுத்தது. அவற்றில் வங்காளதேசம், புரூணை, சிலி, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மெக்சிக்கோ, நேபாளம், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உருமேனியா, சமோவா, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளும் அடங்கும். பிற்பாடு வேற்று நாடுகளும் தங்களுக்கான பணத்தை இதே முறையில் அச்சிட அதிக ஆர்வம் காட்டின. அல்ஃபா சிதைவு அல்ஃபா சிதைவு ("alpha decay") என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இதன் போது கதிர்வீசும் தனிமம் ஒன்றின் அணுக்கரு சிதைந்து அல்ஃபா துணிக்கையை வெளியேற்றி ஒரு புதிய தனிமம் உண்டாகின்றது. இதனால் தனிமத்தின் அணுவெண்ணில் 2 உம் அணுத்திணிவில் 4 உம் குறைகிறது. எடுத்துக்காட்டாக, formula_1 சிதைவுறும் போது formula_2 துகளை உமிழ்ந்து தோரியமாக மாறுகிறது. இது பொதுவாக இவ்வாறு எழுதப்படும்: அல்பாத் துணிக்கை என்பது ஹீலியம் அணுக்கருவாகும். அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோயில் அரியாலை பிரப்பங்குளம்மா மகாமாரி அம்ம்பமன் கோவில் மாம்பழம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஒவ்வொருஆண்டும் ஆடிப்பூரத்தில் தீர்த்தம் வருமாறு 15 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கள் 1983ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் இருந்த கட்டுத்தேரிற்குப் பதிலாக 2010 ஆம் ஆண்டில் இருந்து மரத்தாற் தேர் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் ஒவ்வொருநாளும் சிவாகம முறைப்படி 4 வேளை பூசைகள் நடைபெறுகின்றது. ஆரம்பத்தில் ஒருவரின் கீழ் இருந்த இந்த ஆலயம் பின்னர் அரியாலை அடியார்களாற் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பங்குனி மாதமும் பூச நட்சத்திரத்தில் முடிவடையக்கூடியதாக ஆண்டு அம்மன் அபிஷேகம் நடைபெறுகின்றது. மாதச் சதுர்த்தியும் இவ்வாலயத்தில் நடைபெறுகின்றது.ஆலய புனருத்தாரண வேலைகள் பாரிய அளவில் இடம்பெற்று கும்பாபிஷேகம் 19 ஜூலை 2011 இல் இனிதே நிறைவேறியது. அரியாலை பிரப்பங்குளத்தை அடுத்து மேட்டுநிலம், பிரப்பங்குளத்தின் தென்பக்க நிலப்பகுதியில் மருத மரங்கள், வில்வ மரங்கள், நெல்லி மரங்கள் போன்ற தல விருட்சங்களுடன் தென்னை, பலா, கமுகு போன்ற மரங்களும் ஆங்காங்கு காணப்பட்டன. குளத்தின் அருகே பிரம்பு மூங்கில், விளாத்தி, கொண்டல், தர்ப்பைப் புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இவ் ஊார் மக்கள் வயலில் நெல், சிறுதானியமும் தோட்டத்தில் புகையிலை, வாழை, மரவள்ளி போன்ற பயிர் வகைகளை விளைவித்து தமது சீவியத்தை நடாத்தினர். கடவுள் வழிபாட்டிலும் சைவ சமய அனுட்டானத்திலும் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட வாழ்க்கை நெறியைப் பின்பற்றினார்கள். இக்கோயிலின் வரலாறு பற்றி ஓர் கர்ணபரம்பரைக்கதை தொன்றுதொட்டு செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாக இவ் ஊார் மக்களால் பேசப்பட்டு வருகின்றது. பிரப்பங்குளத்தை அண்டிய மேட்டு நிலத்தில் சிறுவர் சிறுமியர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவர்கள் களைப்படைந்ததால் இளறீர் குடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கிழவி பொல்லை ஊன்றிக்கொண்டு வந்து ”மக்களே எனக்குத் தாகமாக இருக்கிறது இளநீர் தாருங்கள்” என்று கேட்க, சிறுவர்கள் இளநியினை ஆச்சியிடம் கொடுத்துவிட்டுத் தமது மாடுகளைப் பார்க்கச் சென்று விட்டார்கள். பிறகு வந்து பார்த்த போது கிழவியைக் காணவில்லை. ”நாச்சி” ”நாச்சி” ”நாச்சி” என்று மூன்று தரம் கேட்டது. சிறுவர்கள் திகைத்து விட்டனர். இன்னும் ஒரு தினத்தில் சிறுவர்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு அழகான பெண் தலைவிரி கோலமாக வந்து நிற்பதைப் பார்த்து சிறுவர்கள் அவரைப் பார்த்து பயத்துடன் உங்களுக்கு என்ன என்று கேட்டார்கள். வந்தவர்களுக்கு தலையைக் காட்டினார். சிறுவர்கள் ஆவலோடு பார்த்தார்கள். தலையெல்லாம் கண்கள் இருக்கக்கண்டு திகைத்தனர். பயந்தனர். வந்த பெண் நாச்சியார் ஆலயம் எனக்கூறிக்கொண்டு மறைந்து விட்டார். இச்சம்பவம் காட்டுத்தீபோல் ஊரெல்லாம் பரவியது. ஊரவர் கூடி ஆலோசித்து பனையோலையால் வேயப்பட்ட ஆலயம் ஒன்றை சின்னத்தம்பி உமையாச்சிக்கு சொந்தமான காணியில் 1824ம் ஆண்டு பங்குனி மாதம் புச நட்சத்திரமன்று அம்மன் விக்கிரகம் வைத்து நாச்சியார் கோவில் என்று அழைத்து வழிபாட்டிற்குரிய தலமாக்கினர். 1924இல் ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் இக்கோவில் கற்கோவிலாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஜ்துாபி, மூலஜ்தானம், மண்டபம், மடப்பள்ளி, கிணறு ஆகியன அமைக்கப்பட்டது. புன்னை மரத்தடியில் வைரவர் சூலம் நாட்டப்பட்டு வழிபடப்பட்டது. கருங்கல்லில் அம்பாளுக்கு சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு சகல ஆகமக் கிரியைகளுடன் 1924ம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. அன்றிலிருந்து நாச்சிமார் ஆலயம் என வழங்கலாயிற்று. திருவாளர் சின்னையா – சின்னத்தம்பி திருமதி சின்னத்தம்பி உமையாச்சி பராமரித்த பின்னர் அவர்களின் பிள்ளைகள் திரு. சி. அருணாசலம், திருமதி சி. இராமநாதன் ஆகியோர் 1965ம் ஆண்டு வரை ஊர் மக்களின் ஒத்துளைப்புடன் பராமரித்தனர். திரு. சி. அருணாசலம் அவர்களே கோயில் முகாமையாளராக செயற்பட்டார்.  வழிபடுவோரின் வேண்டுகோளுக்கிணங்க திரு. சி. அருணாசலம் அவர்கள் 30.07.1965இல் அமைப்புரீதியாக பரிபாலனசபை ஒன்றை உருவாக்கினார். இதில் திரு வீரசிங்கம் கதிரவேலு செயலாளராகவும், திரு நாகமணி நடராசா பொருளாளராகவும் செயற்பட்டார்கள். இந் நிகழ்வு கோயில் நிர்வாக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஓர் மைல் கல்லாகும். நிர்வாக சபை விஸ்தரிப்பு, நிர்வாக சபை சட்டவிதிகளை ஆக்கியமை வழிபடுவோரால் நிர்வாகசபை தெரிவு செய்தல் போன்ற ஜனநாயக் பண்புகள் வளர்ச்சியடையலாயிற்று. ஆலய சட்டவலுவாக்க நிர்வாக வளர்ச்சியில் அதன் தலைவராக இருந்த முன்னாள் யாழ் நபர முதல்வரும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியுமான திரு.சு.செ மனாதேவா அவர்களின் காத்திரமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். வழிபடுவோரால் தெரிவு செய்யப்படும் தலைவர் நிர்வாக முகாமையாளராக செயற்பட்டமை கோயில் வளர்ச்சியில் வழிபடுவோரின் பங்களிப்பை மேலும் உற்சாகப்படுத்தியது. இதல் பயனாக பரிவார மூர்த்திகளின் பிரதிஷ்டைகள் இடம்பெற்றன. வைரவ சுவாமி கோயில், மணிக்கூட்டுக் கோபுரம் முதலியன அமைக்கப்பட்டன. வசந்த மண்டபம், பிரகாரங்கள், கூரைகள் திருத்தியமைக்கப்பட்டன. நாளடைவில் இவ்வாலயம் ”அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலயம்” என வழங்கலாயிற்று. 1966இல் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. 1976 சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டதோடு தற்போது மூல மூர்த்தியாக அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மகாமாரி அம்மன் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகமும் நிறைவேறியது. 1984 இல் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு பெரு வளர்ச்சி கண்டது. 1988இல் திருக்கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அம்பாள் திருவருளால் இனிது நிறைவேறியுள்ளது. இவ் இராஜ கோபுரத்திற்கு 05.04.1999 திங்கள் காலை 09.15 – 10.30 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் நிறைவேறியது. இந்து சமயக் கலை மரபுகள் திருக்கோயில்களில் பெருமளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் எனப் பல்வேறு வடிவங்களில் கலையின் அம்சங்களைத் திருக்கோவில்களில் கண்டு நாம் மகிழ்கின்றோம். திருக்கோவில்கள் வழிபாட்டிற்குரிய இடம் மாத்திரமன்றி கலைத்திறன்களை வளர்க்கும் பொது இடமாகவும் விளங்கி சவருகின்றன. கோவில்களால் கலைகள் வளர்ந்ததாகவும், கலைகளால் கோவில்கள் வளர்ந்ததாகவும் ஒரு பொதுவான முடிவை நாம் ஏற்க முடியும். கோவில் வழிபாட்டிற்கு மிகவும் பிரதானமானது இறைவனின் திருவுருவங்களாகும். இத்திருவுருவங்களை அமைக்கும் கலை விக்கிரகக் கலை எனப்படும். இத்திருவுருவங்களை நிறுவுவதற்கு தேவைப்படும் ஆலயத்தை அமைக்கும் கலை கட்டடக்கலை எனப்படும். கட்டடக்கலையில் அதிகமான உயரத்தை பிடித்திருப்பது கோபுரம் கட்டும் கலையாகும். மூலாலயத்தில் உள்ள திருவுருவம் முதல் திருக்கோபுரம் வரையுள்ள அனைத்திடங்களும் கலை வடிவமாக இருப்பது தான் இச்சமயத்தின் தனிச்சிறப்பாகும். கோயில்களில் நடைபெறும் கிரியைகள், அங்கு ஓதப்படும் வேத மந்திரங்கள், திருமுறைகள், முழங்கும் மங்கள வாத்தியங்கள், மணியோசைகள் முதலிய யாவும் இசைக்கலை, நடனக்கலைக்கு ஆதாரமாக இருப்பவை என்பது தெளிவாகும். இவ்வாறு இறைவனும் கோவிலும் கலை வடிவமாக இருப்பதை உணரலாம். திருக்கோவிலில் காணப்படும் கட்டடங்களும் மணிக்கூட்டுக் கோபுரம், விமானம், இராஸகோபுரம் என்பன உயரமானவையாகக் காணப்படும். இவற்றைவிட ஈலயத்தின் நடுவில் காணப்படும் கொடிமரமும் உயரமாக இருக்கும். எங்கும் பரவியுள்ள இறைவனின் திருவருளை ஆலயத்திற்குள் வரவழைக்கும் பணியில் இவ் உயர்ந்த கட்டடங்களுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு. இவ் உயர்ந்த கட்டடங்கள் வெறும் கட்டடங்களாக மாத்திரம் காட்சியளிக்கப் பயன்படவில்லை. சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்து நிற்கின்றன. இறைவனை  நோக்கி எமது மனம் உயரவேண்டும் என்ற அரும்பெரும் தத்துவத்தைக் கோபுர தரிசனம் எடுத்துக் காட்டுகிறது. அடியில் அகலமாக இருந்து படிப்படியாக ஒடுங்கிக் கொண்டு போவது கோபுர அமைப்பில் காணப்படும் பொதுவான அம்சமாகும். அதி உயரத்திலிருந்து விமானத்தையோ, கோபுரத்தையோ எவர் பார்த்தவுடன் வணங்குகின்றானோ அவனுக்கு பாம்பானது தனது செட்டையிலிருந்து விடுபடுவதுபோல சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் எனச் சுப்பிரபேதாகமம் கூறுகின்றது. எமது இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக் கோபுர அமைப்பிற்கு ஒத்ததாக அவ் அமைப்பு இருப்பதைப் பொதுவாகக் காணலாம். எமது சக்திக்கு மேற்பட்டவன் இறைவன் என்பதையும், அவனை அடைவதற்கு எமது புலன் ஒடுக்கம் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுவது திருக்கோபுர ஒடுக்கமாகும். ஓர் ஆலயத்தின் கோபுரமும், விமானமும் எவ்வளவு துாரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவு துாரமும் கைலாசப் பிரதேசம் எனப் போற்றப்படும். இதனால் தென்னாட்டில் பல மன்னர்கள் திருக்கோயில்களில் மிக உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள். ”கோபுர தர்சனம் கோடி புண்ணியம்”, ”கோபுர தர்சனம் பாப விமோசனம்” போன்ற வசனங்கள் கோபுர தர்சனத்தால் எமது ஆண்மா பெறும் புனிதத் தன்மையைப் புலப்படுத்துகிறது. கோபுரத்தை கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்ற செய்தியைப் பெரிய புராண பாடல் வரி ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ” நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி…………… எனவே கோபுர தர்சனம் ஒவ்வொரு மனிதனும் கண்டு வணங்க வேண்டியது அவசியமாகும். கோவில் இல்லாத ஊர் அடவி காடு என அப்பர் சுவாமிகள் எடுத்துரைத்தார். திருக்கோவில் இல்லாத ஊர் எவ்வளவு செல்வம் பொருந்திய ஊராக இருந்தாலும் திருவில் ஊரே எனவும் அப்பர் சுவாமிகள் மேலும் கூறினார். ஊருக்கு அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும் என்ற நிலையில் பல ஆலயங்களில் கோபுரம் அமைக்கும் பணி பரவி வருவதைக்  காணலாம். …….. கோலக் கோபுரக் கோகரணஞ் ஞழா கால்களாற் பயனென் ” எனவும் அப்பர் சுவாமிகள் கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார். ”கோலக் கோபுரம்” என அப்பர் சுவாமிகள் குறிப்பிடுவதிலிருந்து கலை அம்சம் பொருந்திய சிறப்பினை நாம் கோபுர தர்சனத்தில் காணலாம். கோபுரங்களில் 3, 5, 7, 9, 11 என்ற வகையில“ மாடங்கள் இருக்கும். இதகால் கோபுரங்களை நெடுமாடம் எனவும் அழைக்கலாம். வானலாவிய உயர்ந்த மாடம் உடைய திருமருகல் தலத்தைப் பற்றிச் சம்பந்த சுவாமிகள் தமது திருமுறை ஒன்றில் குறிப்பிடுகின்றார். …………………மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்…………..” என வரும் பாடலில் சந்திரனைத் தொடக்கூடிய அளவிற்கு உயரமுடைய மாடம் என்பது அவரது வர்ணணையாகும். கோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமுமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நுால்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தன்த்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நுால் அறிவுறுத்துகிறது. பொதுவாக ஒரு சில கோவில்களைத் தவிர இலங்கையில் உள்ள கோவில்கள் யாவும் இரண்டு வீதிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மூன்று முதல் ஏழு வரையான வீதிகள் உள்ளன. ஒரு கோவிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. தென்னிந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோணில், சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன. 1) சித்திரை மாதம் சங்கிராந்தி தீர்த்தம் - அபிஷேகமும் வெளிவீதித் திருவிழாவும் புரணை - அபிஷேகமும் உள்வீதித் திருவிழாவும் சதுர்த்தி - அபிஷேகம் கார்த்திகை - அபிஷேகம் சித்திரைக் கதை - அபிஷேகமும் கதை படிப்பும் 2) வைகாசி மாதம் சங்கிராந்தி - அபிஷேகம் புரணை - அபிஷேகமும் உள்வீதித் திருவிழாவும் சதுர்த்தி - அபிஷேகம் கார்த்திகை - அபிஷேகம் வைகாசி விசாகம் - அம்மனுக்கு அபிஷேகம் 3) ஆனி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - உத்தரம் - இலட்சார்ச்சனை - 4) ஆடி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - வருடாந்த மஹோற்சவம் - ஆடிப்புர விழா - 5) ஆவணிமாதம் சங்கிராந்தி - புரணை - விநாயகர் சதுர்த்தி - கார்த்திகை - வரலட்சுமி புசை - 6) புரட்டாதி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - நவராத்திரி - விஜயதசமி - நவசக்தி அர்ச்சனை - 7) ஐப்பசி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - தீபாவளி - கற்தசஷ்டி - ஐப்பசி வெள்ளி - கேதாரகொரி விரதம் - 8) கார்த்திகை மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - கார்த்திகை - சர்வாலய தீபம் - கார்த்திகைத்திங்கள் - 9) மார்கழி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - ஆங்கில வருடப்பிறப்பு - திருவெம்பாவை - விநாயகர்ஷட்டி - 10) தை மாதம் சங்கிராந்தி தீர்த்தம் - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - தைப்பொங்கல் - குளிர்த்தி - தைப்புசம் - அபிராமிப்பட்டர் விழா - 1008 சங்காபிஷேகம் - 11) மாசி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - மகா சிவராத்திரி - மாசி மகம் - 12) பங்குனி மாதம் சங்கிராந்தி - புரணை - சதுர்த்தி - கார்த்திகை - உத்தரம் - பங்குனித்திங்கள் - பங்குனித்திங்கள் - பங்குனி அபிஷேகம் - 108 சங்காபிஷேகம் - குளிர்த்தி - அடுக்குமாடி வீட்டுத்தொகுதி அடுக்குமாடி வீட்டுத்தொகுதி என்பது பல இருப்பிட அலகுகளைக் கொண்ட மாடிக் கட்டிடங்கள் ஆகும். இவை இரண்டு மாடிக் கட்டிடங்கள் முதல் பல மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடங்கள் வரை இருக்கலாம். இவற்றில் உள்ள இருப்பிட அலகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன அல்லது தனித்தனியாக விற்கப்படுகின்றன. வாடகைக்கு விடப்படும் வீட்டுத் தொகுதிகள் ஒரு உரிமையாளரைக் கொண்டிருக்கும். தனித்தனியாக விற்கப்படும் வீட்டுத்தொகுதிகள் பல உரிமையாளர்களைக் கொண்டிருப்பதால் கூட்டாக நிர்வகிக்கப்படுகின்றது. இத்தகைய வீட்டுத்தொகுதிகள் கூட்டுரிமைச் சொத்துக்கள் (condominiums) ஆகும். வாடகை இல்லாவிடினும், கட்டிடத்தின் பொதுப் பகுதிகளைப் பேணுவதற்காக மாதத்துக்கு அல்லது ஆண்டொன்றுக்குக் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு உரிமையாளரும் செலுத்தவேண்டியிருக்கும். அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகள் பொதுவாக நகரப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. கட்டிடங்களுக்குரிய நிலத்தின் விலை இப்பகுதிகளில் அதிகமாக இருப்பதால் இப் பகுதிகளில் நிலம் வாங்கி தனித்தனி வீடுகள் கட்டுவது பொருளாதார ரீதியில் உசிதமானது அல்ல. அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளில், நிலத்தின் விலை பல வீட்டு அலகுகளிடையே பகிரப்படுகிறது. மணிக்கூட்டுக் கோபுரம் மணிக்கூட்டுக் கோபுரம் அல்லது மணிக்கூண்டு என்பது, பொதுவாக நான்கு திசைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். மணிக்கூட்டுக் கோபுரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின், அல்லது நகர மண்டபங்களின் பகுதியாக இருக்கக்கூடும். பல மணிக்கூட்டுக் கோபுரங்கள் இதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கோபுரங்களாகவும் உள்ளன. உகந்த தொழில்நுட்பம் உகந்த தொழில்நுட்பம் என்பது, குறிப்பிட்டதொரு தேவையின், சூழல், பண்பாடு, பொருளாதார நிலை என்பவற்றுக்குப் பொருத்தமான தொழில்நுட்பத்தைக் குறிக்கும். இந்த அடிப்படையில் ஒரு உகந்த தொழில்நுட்பம், குறைந்த வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த செலவையும், சூழலில் குறைவான தாக்கத்தையும் கொண்டதாக இருத்தல் வேண்டும். இது பொதுவாக, உயர் தொழில் நுட்பங்களைப் இயக்குவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் உரிய நிதி வளமும், நிபுணத்துவமும் கிடைத்தற்கு அரியதாக உள்ள வளரும் நாடுகளிலும், தொழில்வள நாடுகளின் வளர்ச்சி குன்றிய நாட்டுப் புறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. முதலீட்டுச் செறிவு கொண்ட தீர்வுகளிலும், உழைப்புச் செறிவு கொண்ட தீர்வுகளே விரும்பப்படுகின்றன. எனினும், முதலீட்டு மற்றும் பேணற் செலவுகளை அதிகரிக்காதவரை கூலிக்குரிய செலவுகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. செயல்முறையில், குறிப்பிட்ட இடத்தில், விரும்பிய நோக்கத்தை அடைவதற்காக, எளிமையான, உயர்ந்த பயன் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப் படுவதே உகந்த தொழில் நுட்பம் எனலாம். இதன் சொற்பயன்பாடு துல்லியமாக இல்லை. வளர்ந்த செல்வந்த நாடுகளின் வளர்ச்சி குறைவான பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்தும் அதே வேளை, வளரும் நாடுகளில் பெருநகரப் பகுதிகளில் வளர்ந்த நாடுகளின் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே உகந்ததாக இருக்கக்கூடும். அதிக விலை கொடுக்கவும், அதனைப் பேணவும் கூடிய வளங்களைக் கொண்டிருப்பதன் காரணமாக விலை உயர்ந்த தொழில் நுட்பமே செல்வந்த நாடுகளுக்கு உகந்ததாக இருக்கக்கூடும். எந்தவொரு குறிப்பிட்ட விடயத்திலும், உகந்த தொழில்நுட்பம் எதைக் குறிக்கிறது என்பது வாதத்துக்கு உரியதாக இருப்பினும், கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கத்துடன் தொடர்புடைய, உயர் தொழில் நுட்பம் அல்லது அளவுமீறிய இயந்திரமயமாக்கம், மனித இடப்பெயர்வுகள், வளங்கள் குறைந்து செல்லல், சூழல் மாசடைதலின் அதிகரிப்புப் பற்றிய கேள்விகளை எழுப்புவதற்கு இதனைக் கோட்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிரை சிரைகள் ("Veins") அல்லது நாளங்கள் இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன. சிரைகள் குழாய்கள் போன்று உடல் முழுவதும் அமைந்து இருதயத்திற்கு மீண்டும் குருதியை எடுத்துச்செல்கின்றன. சிரைகள் பல வழிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. நுரையீரல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜன் நிறைந்த குருதியை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது மேலறைக்கு கொண்டு செல்கின்றன. பின் இது இடது கீழறைக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த குருதி ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது. இயந்திரமயமாக்கம் இயந்திரமயமாக்கம் என்பது, மனித உடலுழைப்புக்கும் விலங்குகளுக்கும் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். தொழிலாளருக்கு அவர்களது வேலையில் உதவுவதற்கான இயந்திரங்களின் பயன்பாடும் இதற்குள் அடங்கும். ஆனால் கைக்கருவிகளின் பயன்பாடு இயந்திர மயமாக்கத்துள் அடங்குவதில்லை. இச்சொல் பெரும்பாலும் தொழில் துறையிலேயே பயன்படுத்தப்படுகின்றது. நீராவி ஆற்றலில் இயங்கும் "லேத்" இயந்திரத்தின் அறிமுகம், பல்வேறு வேலைகளைச் செய்வதற்கான நேரத்தைப் பெருமளவு குறைத்ததுடன், உற்பத்தியையும் அதிகரித்தது. பெருமளவு மனித வளத்தையும், அதிகரித்துவரும் வேலையின்மைப் பிரச்சினையையும் கொண்ட வளரும் நாடுகளில் இயந்திரமயமாக்கம் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இயந்திரங்கள், மனித உடலுழைப்பை மாற்றீடு செய்வதால் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் எனப் பலர் நம்புகிறார்கள். இதனால் வேலையின்மைப் பிரச்சினை சிக்கலடையும் என்பது அவர்கள் கருத்து. இதனால் வளரும் நாடுகளின் அரசுகள் இயந்திரமயமாக்கத்தை அதிகம் ஊக்கப்படுத்துவதில்லை. மலையாளத் தமிழியல் மலையாளத் தமிழியல் தமிழ் மொழிக்கும் தமிழில் இருந்து பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு தனித்துவம் கொண்ட ஒரு மொழியாக மருபிய மலையாள மொழிக்கும் இருக்கும் தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல். மலையாள மக்களும் தமிழ் மக்களின் அடித்தோன்றல்களே. அந்த நோக்கில் தமிழர்களுக்கும் மலையாள மக்களுக்கும் இருக்கும் இணைப்பு மிகவும் நெருக்கமானது. தமிழ்நாட்டோடு ஒன்றியிருக்கும் மாநிலம் என்ற நோக்கில் மட்டுமல்லாமல் பண்பாட்டு நிலையிலும் இரண்டற கலந்த ஒரு சமூகம் ஆகும். மொழி, இலக்கிய, பண்பாட்டு, பொருளாதார தொடர்புகளும் பரிமாறுதல்களும் தமிழ்நாட்டோடு அதிகமாக நிகழுவதால் மலையாளத் தமிழியல் தமிழியல் புலத்தில் ஒரு முக்கிய முனையாகும். கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. "பாட்டு" என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் மத்தியில் "மணிப்பிரவாள நடை" பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், "பாட்டு" மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், சமஸ்கிருதச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் சமஸ்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமஸ்கிருதம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் "வைசிக தந்திரம்" என்பதாகும். கடை கடை () என்பது ஒரு குறிப்பிட்ட நிலையான இடத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சிறிய நிறுவனத்தைக் குறிக்கும். கடைகள் மக்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாக அவர்களுக்கு விற்பனை செய்கின்றன. கடைகளில் பொருட்களை விற்பது மட்டுமன்றி வாடிக்கையாளருக்கு அவர்கள் வாங்கும் பொருட்களை அவர்கள் வீடுகளிலேயே விநியோகிக்கும் சேவைகளையும் செய்வதுண்டு. கடைக்காரர்கள் பொருட்களை, உற்பத்தியாளரிடம் இருந்தோ, இறக்குமதியாளரிடம் இருந்தோ நேரடியாக வாங்குவர், அல்லது மொத்த வணிகர்களிடமிருந்து வாங்கி சிறிய அளவில் வாடிக்கையாளருக்கு விற்பர். உற்பத்திப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் சில்லறை வணிக நிலையங்களான கடைகளே கடைசிப்படியில் உள்ளன. உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவோர், தங்களுடைய விநியோக உத்திகளில் சில்லறை வணிகத்தையும், அதனை நடைமுறைப்படுத்தும் கடைகளையும் இன்றியமையாத ஒரு பகுதியாக நோக்குவதால், உற்பத்தியாளர்கள் கடைக்காரர்களை ஊக்குவிப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுக்கின்றனர். பொருட்களைக் கடைகளுக்கே கொண்டுவந்து விநியோகம் செய்தல், கடன் வசதிகள், விளம்பரத்துக்குரிய பரிசுப் பொருட்கள் வழங்குதல் என்பவை இவற்றுள் அடக்கம். தெலுங்குத் தமிழியல் தமிழ்நாட்டில் விஜய நகர ஆட்சியாளர்களை முன்னிறுத்தி ஆண்ட நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் (1564 - 16??) தெலுங்கு மொழியுடனும், தெலுங்கர்களுடனுமான அரசியல், பண்பாட்டு, பொருளாதார, மொழித் தொடர்புகள் வலுப்பெற்றன. தெலுங்கு மொழிக்கும் தெலுங்கர்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் இத்தகைய இறுகிய உறவையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயலை தெலுங்குத் தமிழியல் எனலாம். நாயக்கர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் ஆதரவு பெற்று தமிழும் அதன் பரிமாறுதல்களை உள்வாங்கியது. தமிழிசை பாடல்களில் தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்ற காலமாகவும் நாயக்கர் காலத்தை கருதலாம். தமிழ் --- தெலுங்கு (கிடையாது, முடியாது ஆகிய பொருட்க‌ளிலும் ‘காது’ - பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து) (ம‌ர‌ங்க‌ள் அட‌ர்ந்து காண‌ப்ப‌டுவ‌தால் அட‌வி என்றொரு பெய‌ர் காட்டுக்கு உண்டு. திருநெல்வேலி மாவ‌ட்ட‌த்தில் அட‌விந‌யினார்குள‌ம் என்றொரு ஊர் உள்ள‌து.) (எவ்வளவு என்பது எந்த + அளவு எனப்பிரியும். அதன் முன் பாதியான 'எந்த' என்பது 'எந்தா' எனத் தெலுங்கில் வழங்கப்படுகிறது) தமிழ் - தெலுங்கு மராத்திய தமிழியல் மராத்திய தமிழியல் என்பது மராத்தி மொழிக்கும், மராத்திய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். "மராத்திய சரபோஜி மன்னர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டார்கள். மராத்திச் சொற்கள் சில தமிழ்ப் பேச்சில் கலந்தன." "தமிழகத்தின் தென்பகுதியான தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளை கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் மராட்டிய மன்னர்கள் ஆவார்கள்." அன்று தமிழ்நாட்டை ஆண்ட நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகள் காரணமாக ஏகோஜியே தஞ்சையின் முதலாம் மன்னராக 1676 ஆம் ஆண்டு முடிசூட்டிக்கொண்டார். இவரை 'ஏகராஜ மகாராஜ' என்றும் குறிப்பிடுவதுண்டு. "இம்மன்னர் காலம் முதல் தமிழகத்தில் தமிழ், வடமொழி, தெலுங்கு மொழிகளுடன் மராட்டியும் வளம்பெறத் தொடங்கியது. எகோஜியும் வடமொழி, தெலுங்கு, தமிழ், மராட்டி ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்." இவரைத் தொடர்ந்து வந்த சகஜி (1684-1712) மன்னரும் தமிழ், தெலுங்கு, மராட்டி, வடமொழி, இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்று இருந்தார். இவரது அவையில் பல தமிழ்ப் புலவர்களும் இருந்தார்கள். எப்படி இருப்பினும், தமிழகத்தில் மராட்டிய ஆட்சி தமிழுக்கு ஒரு வறட்சியான கால கட்டமாகவே கருதமுடியும். தமிழுக்குக் கிடைத்திருக்க கூடிய பல வளங்கள் சிதறடிக்கப்பட்டன, அல்லது தடைப்பட்டன. தமிழைப் பொறுத்தவரை இதை ஒரு அன்னிய ஆட்சியாவே கருதலாம். கன்னடத் தமிழியல் தமிழ் போன்று முக்கிய திராவிட மொழிகளின் ஒன்றாகிய கன்னட மொழிக்கும், தமிழ்நாட்டுக்கு ஓர் எல்லை மாநிலமான கர்நாடகத்தில் வசிக்கும் கர்நாடகர்களுக்கும் இருக்கும் தொன்மையான நெருக்கமான மொழி, பண்பாட்டு, அரசியல், பொருளாதார தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் கன்னடத் தமிழியல் ஆகும். தமிழ் மற்றும் கன்னடம் இரண்டுக்கும் திராவிட மொழி என்ற அடிப்படையில் மிக நெருங்கிய ஒற்றுமை உண்டு தமிழில் வழக்கில் இல்லாத பல பழங்காலத்தை சேர்ந்த பல சொற்கள் இன்னும் கன்னடத்தில் பேச்சு மொழியாக இருப்பதைக் காணலாம் உதாரணத்திற்கு ஆந்தை(கூகை) கன்னடத்தில் கூபே, அங்காடி(கடை) கன்னடத்தில் அங்காடி, அழை (கரை) கன்னடத்தில் கரை, குளிர் (தண்) கன்னடத்தில் தண், கிணறு (வாவி) கன்னடத்தில் (B)பாவி, காது (செவி) கன்னடத்தில் கிவி, எழுது (வரை) கன்னடத்தில் (B)பரை, படி (ஓது) கன்னடத்தில் ஓது, பயம் (அஞ்சுவது) கன்னடத்தில் அஞ்சு, உடல் (மெய்) கன்னடத்தில் மெய், சோறு (அன்னம்) கன்னடத்தில் அன்னம், இந்தித் தமிழியல் இந்தி, இந்தி பேசும் மக்களுக்கும் தமிழ், தமிழர்களுக்கும் இருக்கும் நெருக்கமான மொழி, பண்பாட்டு, அரசியல், பொருளாதார தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் இந்தித் தமிழியல் ஆகும். இந்தியில் உள்ள பல சொற்கள் தமிழ்ச்சொற்களை மூலச்சொற்களாகக் கொண்டவை. இந்தியை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் சேய்மைத் திராவிடமொழிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். சில சொற்கள் இந்தியில் பயன்படுத்தப்படும் 'கோ' என்னும் வேற்றுமை உருபு தமிழ் வேற்றுமை உருபான 'கு' என்பதன் மருவிய வடிவமாகும். சாவி சடையவர்மன் சீவல்லப பாண்டியன் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகனானான இம்மன்னன் பாண்டியராச்சிய தாபனாசாரியன், இறந்த காலமெடுத்தான் போன்ற பட்டங்களினை உடையவனும் ஆவான். திருவாங்கூர் நாட்டில் உதயமார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் ஆட்சி செய்து வந்தான் அவன் தென்பாண்டிய நாட்டினை கைப்பற்றினான் இச்சேர மன்னனைப் பற்றிய கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு போன்ற ஊர்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென்பாண்டி நாட்டினை சேர மன்னனிடம் தோற்ற சடையவர்மன் சீவல்லப பாண்டியன் விஜயநகரப் பேரரசனான அச்சுததேவராயரிடம் முறையிட்டான் அவனும் பாண்டிய நாட்டினை மீட்டுக் கொடுத்தான். உதயமார்த்தாண்டவர்மன் விஜயநகரப் பேரரசிடம் கப்பம் கட்டாதிருந்த காரணத்தினாலும் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கேட்டுக் கொண்டதற்கிணையவும் அச்சுததேவராயர் இவனுடன் போர் செய்து வெற்றி கொண்டார். தென்பாண்டிய நாட்டினை மீட்டுக்கொடுத்த காரணத்தினால் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் தனது மகளை அச்சுததேவராயனுக்கு மணம் முடித்து வைத்தான் என்பது வரலாறு. அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவார். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவர் காலத்திலேயே குலசேகர பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன். கொல்லங்கொண்டான் (பாண்டிய அரசன்) கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் 'கொல்லங்கொண்ட பாண்டியன்' என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப்பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல இம்மன்னனும் "எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர பாண்டியன்" என சிறப்பிக்கப்பட்டான். தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான். போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டுவித்தான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங்கொண்டான் ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இம்மன்னனின் அரண்மனை சிதிலமடைந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் மகன் வீரபாண்டியனின் கி.பி 963 ல் பாறையில் செதுக்கப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு உள்ள கிராம ஆளுமையான குடும்பர்கள் வசிக்கும் நக்கனேரி கிராமத்தின் மேற்கில் உள்ளது. INDIAN ARCHAEOLOGY 1988-89-A REVIEW TAMIL NADU 11. Pandya inscription, Nakkaneri, District Kamarajar.—This inscription, in Tamil language and Vatteluttu characters, is engraved on a rocky outcrop in the village. It is dated in the fifteenth year (AD 960-61) of the reign of the Pandya king Solan-talaikonda-Vira Pandya. It registers a gift of seventy-five sheep for a perpetual lamp to the deity Narayanasvami in the temple (srikoyil) named Chulamani-vinnagar on the hill at the north of Sridevi-ammacha-chaturvedimangalam, a devadana- brahmadeya in Andanadu, by Tennavan Uttaramantri alias Chulamani-kilavan. Ulagankurralam, an army chief of Ammadevi-chaturvedimangalam, is stated to have received the gift and undertaken to maintain the lamp (pl. L B மாறவர்மன் விக்கிரம பாண்டியன் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இராக்கள் நாயகன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என திருவெண்ணெய் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 'திருமகள் செயமகள்','திருமலர் மாது' என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். தை மாதம் அஸ்த நாளில் பிறந்த இம்மன்னனது கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு போன்ற பகுதிகளில் காணலாம். சிவன், திருமால் கோயில்களிற்கு நாள் வழிபாடுகள் நடைபெற இறையிலி நிலங்களினை அளித்து தென்னார்க்காடு, திருநறுங் கொண்டையில் அமண்பள்ளி ஒன்றும் அமைத்தான். இப்பள்ளி நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி என்ற பெயரினைப் பெற்றிருந்தது. தனது பிறந்த நாளில் தைத் திங்கள் திருநாளினை நடத்த இறையிலி நிலம் அளித்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276 முதல் 1293 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தான். சேலம், கடப்பை, தென்னார்க்காடு போன்ற பகுதிகளினையும் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மணப்பாறையையடுத்த பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் இரண்டாம் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டில் இவர் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய வரலாறுகுறிப்பிடப்பட்டுள்ளது. மாறவர்மன் வீரபாண்டியன் மாறவர்மன் வீரபாண்டியன் பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான். தென்னாற்காடு, சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் ஆகிய ஊர்களில் இவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்) ஆரியச் சக்கரவர்த்தி முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலத்தில் அமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் இருந்தான். மதிதுங்கன் தனி நின்று வென்ற பெருமாள் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்த இவன் ஈழ நாட்டுப் படையெடுப்பினை நடத்தி செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி எனவும் அழைக்கப்பட்டான். நல்லூர் இவன் வாழ்ந்த ஊரென்பதும் குறிப்பிடத்தக்கது. நகரத் திட்டமிடல் நகரத் திட்டமிடல் ("urban planning") என்பது, நகர்ப்புற நிலப் பயன்பாடு, நகர்ப்புறச் சூழல் வடிவமைப்பு ஆகியவற்றைக் கவனத்திற் கொள்ளும் ஒரு தொழில்நுட்ப, அரசியல் நடைமுறை ஆகும். இது, வளி, நீர், நகர்ப்புறத்துக்கு உள்வருவதும் வெளிச் செல்வதுமான போக்குவரத்து மற்றும் விநியோக வலையமைப்புக்களை உள்ளடக்கிய உட்கட்டுமானங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. நகர்ப்புறக் குடியிருப்புக்கள், நகர்ப்புறங்களுக்குப் போக்குவரத்துச் செய்வனவும் அவற்றோடு வளங்களைப் பகிர்ந்து கொள்வனவுமான துணைச் சமுதாயங்கள் போன்றவற்றின் ஒழுங்கான வளர்ச்சியை நகர்ப்புறத் திட்டமிடல் உறுதி செய்கிறது. ஆய்வுகள், உத்திசார் சிந்தனை, கட்டிடக்கலை, நகர்ப்புற வடிவமைப்பு, பொதுமக்கள் கருத்தறிதல், கொள்கை தொடர்பான பரிந்துரைகள், செயற்படுத்தல், மேலாண்மை போன்றவற்றை இது கவனத்தில் கொள்கிறது. கட்டிடக்கலை, நிலத்தோற்றக் கலை, நகர்ப்புற வடிவமைப்பு, என்பன கட்டிடச் சூழலின் சிறிய பகுதிகளை மேலும் கூடிய விபரமாகக் கையாளுகின்றன. பிரதேசத் திட்டமிடல் நகரத்திட்டமிடல் துறை கையாள்வதிலும் பெரிய பகுதிகளின் திட்டமிடலைக் குறைந்த விபரங்களுடன் கையாளும் ஒரு துறையாகும். இதன் கீழான திட்டங்கள் பல்வேறு வடிவங்களில் அமைகின்றன. இவற்றுள் உத்திசார் திட்டங்கள், முழுமையான திட்டங்கள், முறைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு உத்திகள், வரலாற்றுப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவை அடங்குகின்றன. திட்டமிடப்பட்ட அல்லது மேலாண்மை செய்யப்பட்ட நகரங்களுக்கான எடுத்துக்காட்டுகள் மிகப்பழைய காலங்களில் இருந்தே கிடைக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடல், புதிதாக முறைப்படுத்தப்பட்ட கட்டிடக்கலை, குடிசார் பொறியியல் ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு, நகரப் பிரச்சினைகளுக்குப் பௌதீக வடிவமைப்புமூலம் தீர்வு காண்பதற்கான அணுகுமுறைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தது. 1960 ஆண்டிற்குப் பின், நகரத் திட்டமிடல் துறை, பொருளியல் வளர்ச்சித் திட்டமிடல், சமுதாய சமூகத் திட்டமிடல், சூழல்சார் திட்டமிடல் என்பவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. 20 ஆம் நூற்றாண்டில், நகரத் திட்டமிடலுக்குரிய பணியின் ஒரு பகுதியாக நகரப் புத்தமைப்பு போன்றவை மூலம், ஏற்கனவே இருக்கின்ற நகரங்களுக்கு நகரத்திட்டமிடல் முறைகளைப் பயன்படுத்துவதும் அமைந்தது. தனுஷ்கோடி தனுஷ்கோடி (Dhanushkodi) தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ளது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது. தற்போது புதிய தனுஷ்கோடி உருவாக்கப்படுகிறது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டது. ரயில் தண்டவாளம், பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது. 9.5 கி.மீ நீளமுள்ள சாலையில் தேசிய நெடுஞ்சாலை - முகுந்தாரையர் சாதிரமிலிருந்து தனுஷ்கோடி வரையான 5 கி.மீ., மற்றும் தனுஷ்கோடிக்கு அரிச்சமுனைக்கு 4.5 கி.மீ. சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனம் மூலம் செல்லலாம் அது அசோகாவின் தூண்களில் முடிவடையும். இந்தியாவின் பிரதான மண்டபத்தை தனுஷ்கோடிக்கு இணைக்கும் ஒரு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை மீட்டர்-கேஜ் கிளை கோடு அழிக்கப்பட்டபோது, சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை Boat Mail எக்ஸ்பிரஸ் ஓடியது. 2003 ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 16 கிலோமீட்டர் (9.9 மைல்) ரயில் பாதையை மீண்டும் அமைப்பதற்கு இரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரெயில்வே திட்டம் ஒன்றை அனுப்பியது. 2010 ல் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய இரயில் பாதை சாத்தியமாவதற்கு திட்டமிடல் கமிஷன் முயன்றது. 2016 வரை, தனுஷ்கோடி கடற்கரை செல்வதற்க்கு கடற்கரை ஓரம் நடந்தோ அல்லது ஜீப்பிலோ செல்வார்கள் . 2016 ஆம் ஆண்டில், முகுந்தாராயர் சாதிராம் கிராமத்திலிருந்து தனுஷ்கோடி கடற்கரை ஒரு சாலை அமைக்கபட்டது. ராமேஸ்வரம் தீவையும் இந்தியாவையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவில் ஒரு பொறியியல் அதிசயமாக இருக்கிறது. மும்பையில் முடிக்கப்பட்ட பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்புக்குப் பிறகு இது இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடல்-பாலம் ஆகும். இந்த பாலத்தின் குறுக்கே உள்ள ரயில் பயணம் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை அளிக்கிறது. மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இழிவான சூறாவளியில் சேதமடைந்த பாலம் 48 நாட்களுக்குள் மறுகட்டமைக்கபட்டது ஒரு சாதனை என்று கருதப்படுகிறது. தனுஷ்கோடி கடற்கரை (முகுந்தா ரயர் சாத்ரம் @ மூண்டிரம் சத்திரம்) கடற்கரை 15 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முகுந்தர்யார் சத்திரம் என்றழைக்கப்படும் உயர் அலை கடல்கரை விளையாடுவதற்க்கு பாதுகாப்பான பகுதி. கடல் அலைகள் மிக அதிகமாக இருப்பதால் (அதிகபட்ச உயரம் 12 அடி என பதிவு செய்யப்பட்டுள்ளது) இது நீச்சல் தெரியாதவர்களுக்கு ஏற்றது அல்ல. இந்த கடற்கரையில் கடற்கரை பைக் சவாரி பரபரப்பான அனுபவமாக உள்ளது. அரிச்சல் முனை இரண்டு கடல்களின் (வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்) ஒன்றிணைவு மற்றும் ராமேசுவரம் முடிவடைவிடமே ஆகும், தனுஷ்கோடியில் உள்ள இந்த இடம் இந்தியா மற்றும் இலங்கையின் நில எல்லை ஆகும், இங்கிருந்து இலங்கை சுமார் 15 கி.மீ. இரு கடல்களின் இணைப்புப் புள்ளி அரிச்சல் முனை நீச்சல் அல்லது குளிப்பதற்கு ஆபத்து என்று கருதப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் கோதண்டராமர் கோயில் உள்ளது. அச்சுதக் களப்பாளன் அச்சுதக் களப்பாளன் களப்பிர மன்னர்களுள் ஒருவனாவான். மூவேந்தர்களையும் சிறை வைத்தவனெனக் கருதப்படுபவன் இவனாவான். தமிழ் நாவலர் சரிதை கூறுவது போன்று பாண்டிய நாடு இவனது ஆட்சிக்குக்கீழ் வந்தது. அமிர்தசாகரர், மற்றும் புத்ததத்தர் இருவரும் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர். புத்ததத்தர் அச்சுதக் களப்பாளன் தமிழகத்தினை ஆண்டதனால் உலகினை ஆட்சி செய்தான் எனப் புகழ்ந்தும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. புத்த சமயப் புலவர்களையும், புத்த மடங்களையும் இவன் ஆதரித்தான். மூர்த்தி நாயனார் அச்சுத களப்பாளன் காலத்தில் வாழ்ந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை காலத்துப் பூதமங்கலம் பௌத்தர்களுடையது கி.பி. 660 ஆம் ஆண்டளவில் புத்த மதத்தினர் சம்பந்தருடன் வாதிட்டுத் தோற்றுப் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'புத்தர் விஹாரம்' களப்பிர மன்னனான அச்சுத களப்பாளனால் செய்யப்பட்டது. யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. வில்லை (ஒளியியல்) வில்லை ("lens") என்பது ஒளிக் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவிக்கவோ அல்லது விரியவோ செய்யவல்ல ஓர் எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காட்ட வல்லது. பொதுவாக ஒற்றை வில்லைகள் கண்ணாடி அல்லது நெகிழி போன்ற ஒளி ஊடுருவும் பொருளால் செய்யப்பட்டது. இரட்டை வில்லை, மும்மை வில்லை போன்றவை பல ஒற்றை வில்லைகளை ஒரே அச்சில் அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் பொழுது ஏற்படும் ஒளிவிலகல் பண்பே வில்லையின் அடிப்படைப் பண்பாகும். இதன் அடிப்படையிலேயே வெவ்வேறு வளைவுகளைக் கொண்ட வில்லையின் பரப்புகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வில்லையின் புறப் பரப்புகள் சீரான குழியாகவோ, குவிந்தோ அல்லது சமதளமாகவோ இருக்கும். வெளிநோக்கி வளைந்து குவிந்து இருந்தால் "குவிப் பரப்பு" என்றும், உள்நோக்கி வளைந்து குழிந்து இருந்தால் "குழிப் பரப்பு" என்றும், நேரான சமதளமாக இருந்தால் "சமதளப் பரப்பு" என்றும் குறிக்கப்படும். ஒருபுறம் ஒளி நுழைந்து மறுபுறம் ஒளி வெளி வருமாகையால் வில்லைக்கு இரு பரப்புகளும் முக்கியமானவை. பட்டகம், ஒரு ஒளிக் கதிரை விலகலடைய மட்டுமே செய்யும், ஆனால் வில்லைகள் ஒளியை விலகலடையச் செய்வதோடு, அவற்றை குவித்து பிம்பங்களையும் உருவாக்க வல்லது. நுண்ணலைகளை குவிக்கும் வில்லைகள் மற்றும் இலத்திரன்களை குவிக்கும் வில்லைகள் என கண்ணுக்குப் புலனாகாத கதிர்களையும் குவிக்கும் வில்லைகளும் உள்ளன. வில்லை என்பது பெரும்பாலும் திண்மப் பொருட்களால் ஆனது என்றாலும், தாமரை இலையின் மீது உள்ள நீரும், பனித்துளியும் திரண்டு புறப் பரப்பு குவிந்து இருப்பதால் அவைகளும் வில்லையின் பணியையே செய்கின்றது. மெல்லிய அட்டை போன்ற ஒரு தட்டையான ஒளியூடுருவு பொருளும் குறிப்பிட்ட சில வழிகளில் கீறப்பட்டோ வடிவமைக்கப்பட்டோ இருந்தால் அவைகளும் வில்லை போல இயங்க வல்லன (பார்க்க ஃவிரெனெல் வில்லை). ஒளிப்படக்கருவி, நுண்நோக்கி போன்ற பல அன்றாடக் கருவிகளிலும் அறிவியல் ஆய்வுக் கருவிகளிலும் வில்லை பரவலாக பயன்படுகின்றது. (வில்லை) lens என்ற ஆங்கிலச் சொல், இலத்தீன் மொழியில் lentil (மைசூர்ப் பருப்பு) என்ற சொல்லிருந்து பெறப்பட்டது. இருபக்க குவிவில்லை பருப்புகளைப் போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் இப் பெயர் பெற்றது. புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள், வில்லைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்கின்றனர். 7வது நூற்றாண்டிலேயே பாறைப்பளிங்குகளைக் (rock crystal) கொண்டு நிம்ரூட் வில்லைகள் (Nimrud lens) உருவாக்கபட்டதாகவும், அவைப் பொருளை உருப்பெருக்கவோ அல்லது ஒளியைக் குவித்து ஒரு பொருளை எரிக்கவோ பயன்படுத்தாகவும் சான்றுகள் கூறுகின்றன. கி பி 424 ல் அரிஸ்டாஃபனீஸ் எழுதிய மேகங்கள் (The Clouds) என்ற நாடகத்தில் எரிக்கும் வில்லைகளைப் பற்றி கூறியுள்ளார். மூத்த பிளினி எழுதிய இயற்கை வரலாறு நூலில் ("The Natural History") (trans. John Bostock) Book XXXVII, Chap. 10. வரும் நீரோ என்ற கதாபத்திரம் மரகதக் கல்லைக் கொண்டு, தனது கிட்டப்பார்வையை சரி செய்ததாக எழுதியுள்ளார். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலெமி ஒளியியல் தொடர்பான புத்தகம் எழுதியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை கோளக கண்ணாடிகளை வெட்டி, படிக்கும் கண்ணாடிகளை உருவாக்கினர். 12 ஆம் நூற்றாண்டில் பாறைபளிங்குகளை பயன்படுத்தி எரிக்கும் வில்லைகளை உருவாக்கினர். 13 ஆம் நூற்றாண்டில் பாறைப்பளிங்குகளை பயன்படுத்தி தண்ணாடிகள் தயாரிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் வெனிசு மற்றும் புளோரன்சு நகரங்களில் கண்ணாடிகளை அரைத்து, பளபளப்பாக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. பின்னர் நெதர்லாந்து மற்றும் செர்மனியில் மூக்குக் கண்ணாடிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. வில்லைகள் பொதுவாக கோள வடிவமானது. அவையனைத்தும் கோளத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. "இருகுவி" வில்லை என்பது இருபரப்பும் குவிந்திருக்கும் வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் "இருகுழி" வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் "குவிசமதள" வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் "குழிசமதள" வில்லை எனப்படும். ஒருபரப்பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் "குவிகுழி" வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை "இணை குவிகுழி" வில்லை என்பர்.. கோளக-உருளை வில்லைகள் (Toric lens) என்பவை வெவ்வேறு அச்சுகளில் வெவ்வேறு குவியத்திறனைப் (focal power) பெற்றிருக்கும். இவ்வகை வில்லைகள் சிதறல் பார்வையைச் சரிசெய்ய உதவுகிறது. கோளவுருவில்லாத வில்லைகள் (aspheric lens) கோள வடிவமோ அல்லது உருளை வடிவமோ கொண்டிருப்பதில்லை. இவை ஒளிப்பிறழ்ச்சிகளைக் (Optical aberration) களைய பயன்படுகிறது. பொதுவாக வில்லையின் (லென்ஸ்) புறப்பரப்பின் வளைவானது குவிந்து இருந்தாலும், குழிந்து இருந்தாலும் உருண்டை உருவின் புறப் பரப்பை ஒத்து இருக்கும். வில்லையின் இரு பரப்புகளும் எவ்வகையானது என்பதைப் பொருத்து, ஒளிக்கதிர்களை அது திசை திருப்பும் பண்பு அமையும். "இருகுவி" வில்லை என்பது இருபரப்பும் குவிந்திருக்கும் வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் "இருகுழி" வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் "குவிசமதள" வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் "குழிசமதள" வில்லை எனப்படும். ஒருபரப்பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் "குவிகுழி" வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை "இணை குவிகுழி" வில்லை என்பர். இவ்வகைகளைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம் இருகுவி அல்லது குவிசமதள வில்லைகளின் மீது படும் இணைகதிர் கற்றை, வில்லைகளை ஊடுறுவிச் சென்று முக்கிய குவியத்தில் குவிக்கப்படும். இவ்வகை வில்லைகள் நேர்மறை அல்லது குவிக்கும் வில்லைகள் எனப்படுகிறது. இதில் "f" என்பது குவியத் தூரம் ஆகும். வில்லை இருகுழி வில்லையாகவோ அல்லது சமதள குழி வில்லையாகவோ இருந்தால், இணையாக வரும் ஒளிக்கற்றை வில்லைகளை கடந்த பின் பிரிந்து செல்லும். பாதி ஒளிக்கற்றைகள் வில்லைகளுக்கு முன்னரே ஒரு இடத்தினில் குவிக்கப்படும். அப்படி குவிக்கப்பட்டால் அவை எதிர்மறை அல்லது விரிக்கும் குழிவில்லை எனப்படும். வில்லைக்கும் குவிப் புள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் குவியத்தொலைவு (focal length) எனப்படும். பொதுவாக 'இருபுற குவிவுவில்லை' என்பதனை குவிவுவில்லை என்றே குறிப்பிடலாம். குவிவுவில்லை மையங்களில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும். காற்று ஊடகத்தில் வில்லையின் குவியத்தூரம் காண ஒளிவில்லையாளரின் சமன்பாடு ஆகும்: இதில் "f" என்பது குவிக்கும் வில்லைக்கு நேர்மறையாகவும், விரிக்கும் வில்லைக்கு எதிர்மறையாகவும் இருக்கும். குவியத்தூரத்தின் பெருக்கல் நேர்மாறு 1/"f" என்பது வில்லையின் குவியத்திறன் ஆகும். குவியத்தூரம் என்பது மீட்டரில் அளக்கப்படுகிறது. குவியத்திறன் என்பது டையாப்ட்டரில் அளக்கப்படுகிறது வில்லைகளின் குவியத்தூரம், வில்லை வழியாக ஒளிச் செல்லும் பாதையைப் பொறுத்து மாறுவதில்லை. ஆனால் ஒளியின் மற்ற பண்புகள் ஒளிச் செல்லும் பாதையைப் பொறுத்து மாறுபடும். வளைவு ஆரங்களின் குறியீடு, அவை குவி வில்லையா அல்லது குழி வில்லையா என்பதை நிர்ணயிக்கும். குறியீட்டு மரபு (sign convention) இதை நிர்ணயிக்கப் பயன்படுகிறது. ஒளி செல்லும் திசையில் வளைவு ஆரம் "R" இருந்தால், அதாவது இனி மேல் தான் பரப்பின் வளைவு மையத்தைக் கடக்கும் எனில், அது நேர்மறை குறியீட்டைப் பெறும். பரப்பின் வளைவு மையத்தைக் கடந்து மறுபக்கத்தை ஒளி அடைந்திருந்தால், அந்த பரப்பின் வளைவு ஆரம் "R" எதிர்மறை குறியீட்டைப் பெறும். இதன் படி குவிந்த பக்கங்கள் நேர்மறை குறியீட்டையும் மற்றும் குழிந்த பக்கங்கள் எதிர்மறை குறியீட்டையும் பெறும். சமதள பக்கங்களின் ஆரம் முடிவிலியாக இருக்கும். "R" மற்றும் "R" ஒப்பிடும் போது "d" மிகச் சிறியதாக இருந்தால் அதை மென்வில்லை என்கிறோம். காற்று ஊடகத்தில் அதன் "f" மதிப்பு மேலே குறிப்பிட்ட படி, காற்று ஊடகத்தில் நேர்மறை அல்லது குவிக்கும் வில்லை வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், ஒளி விலகலுக்குப் பின், மைய அச்சிலுள்ள "f" என்ற முக்கிய குவியத்தில் குவியும். இதற்கு மாறாக முக்கிய குவியத்தில் ஒளி மூலத்தை வைக்கும் போது, ஒளி விலகலுக்குப் பின் இணை கற்றைகளை உருவாக்கும். இந்த நிலையில் குவியத்தூரம் முடிவிலியாக இருக்கும். "S" என்பது பொருளிலிருந்து வில்லை வரை உள்ள தூரம், "S" என்பது பிம்பத்திலிருந்து வில்லை வரை உள்ள தூரம் ஆகும். மென்வில்லை சமன்பாடு: அதே சமன்பாடு நியூட்டனின் அமைப்பில்: இதில் formula_10 மற்றும் formula_11. பொருளை என்ற தூரத்தில் வைக்கும் போது, வில்லையின் மறுபக்கத்தில் "S" என்ற தூரத்தில் மெய்ப் பிம்பத்தைப் பெறலாம். இது திரையில் பெறக் கூடிய பிம்பம் ஆகும். மனிதக் கண்ணும் புகைப்படக்கருவியும் ஒரே தத்துவத்தில் செயல்படுகிறது. குழி வில்லைகளில் "S" என்பது எதிர்மறை தூரமாக உள்ளது. இதில் பிம்பமானது, குவியத்திலிருந்து விரிந்து வருவது போல் தோற்றமளிக்கும். இவ்வகை பிம்பங்கள் திரையில் பிடிக்க இயலாத மாய பிம்பங்களாக இருக்கும். உருப்பெருக்கும் கண்ணாடி இத் தத்துவத்திலே செயல்படுகிறது. குழி வில்லை உருவாக்கும் மாய பிம்பத்தை மீண்டும் மெய் பிம்பமாக மாற்ற பர்லோ வில்லை (Barlow lens) பயன்படுகிறது. மென் வில்லைகளில் இதே போன்ற ("S" மற்றும் "S") தூர அளவீடுகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கூட்டு வில்லைகளில் தூர அளவீடுகள் எளிமையாக இருப்பதில்லை. ஒற்றை வில்லைகளின் "உருப்பெருக்கம்" காணும் சமன்பாடு: இதில் "M" என்பது உருப்பெருக்கம். இது பிம்பத்தின் அளவையும் பொருளின் அளவையும் வகுக்க கிடைக்கிறது. குறியீட்டு மரபின் படி, தலை கீழ் அல்லது மெய் பிம்பங்களுக்கு, "M" நேர்மறையாகவும், நேரான அல்லது மாய பிம்பங்களுக்கு, "M" எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வில்லைகள் சரியான படங்களை உருவாக்குவதில்லை. அவற்றில் சில இடங்களில் விலகல் மற்றும் பிறழ்ச்சிகள் ஏற்படுகின்றன. வில்லைகளை சரியாக தயாரிப்பதன் மூலமே இதனை ஒரளவிற்கு சரி செய்ய இயலும். பிறழ்ச்சியில் பல வகைகள் உள்ளன. வில்லைகளில் கோள அமைப்பு மாறுபடுவதால் இவ்வகை பிறழ்ச்சி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குவி வில்லையில் ஏற்படக்கூடிய பிறழ்ச்சி ஆகும். இவ்வகை பிறழ்ச்சியால் பிம்பங்கள் முதன்மை அச்சை விட்டு விலகி குவி்க்கப்படும். அதனால் பிம்பங்கள் தெளிவாக அமைவதில்லை. கோளவுருவில்லாத வில்லைகளே ("aspheric" lens) இதற்குக் காரணம். வளைவு பரப்புகளை சரியாக அமைப்பதன் மூலம் கோளப் பிறழ்ச்சியை சரி செய்யலாம் இதுவும் குவி வில்லையில் ஏற்படுகின்ற ஒரு பிறழ்ச்சியே ஆகும். இப்பிறழ்ச்சியினால் ஏற்படும் பிம்பம், வால்வெள்ளியின் வடிவத்தில் இருப்பதனால் இதற்கு கோமா பிறழ்ச்சி என்று பொயர் ஏற்பட்டது. இவ்வகை பிறழ்ச்சியால் ஒளிக் கதிர்கள் வெவ்வேறு புள்ளிகளில் குவிக்கப்படுகிறது. முதன்மை அச்சுக்கு தொலைவில் குவிக்கப்பட்டால் அது நேர்மறை கோமா எனவும், அருகில் குவிக்கப்பட்டால் எதிர்மறை கோமா எனவும் அழைக்கப்படுகிறது. வளைவு பரப்புகளை சரியாக அமைப்பதன் மூலம் கோமா பிறழ்ச்சியை சரி செய்யலாம் வெவ்வேறு ஒளிவிலகல் குறிப்பெண்கள் கொண்ட ஒளிக்கதிர்கள் வெவ்வேறு அளவில் நிறப்பிரிகை அடைவதால், இப்பிறழ்ச்சிகள் ஏற்படுகின்றன. இப்பிறழ்ச்சியினால் வெவ்வேறு நிறங்களின் குவி புள்ளி வெவ்வேறு இடங்களில் இருக்கும். இதனால் நிறங்கள் பிரிக்கப்படுகின்றன. நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வகை பிறழ்ச்சிகள் சரி செய்யப்படுகின்றன. அதிக அபி எண் கொண்ட புளோரைட் படிகங்களால் ஆன வில்லைகளும் இவ்வகை பிறழ்ச்சிகள் குறைக்கின்றன. பிறழ்ச்சிகளைத் தவிர்க்க கூட்டு வில்லைகள் ("compound lens") பயன்படுகிறது. ஒரே அச்சில் அமையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வில்லைகளால் இவை உருவாக்கப்படுகின்றன. நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் ("land-use planning") என்பது, நிலப் பயன்பாட்டைச் செயல் திறனுள்ள வகையில், ஒழுங்கு படுத்தி முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பல்வேறு துறைகளையும் தழுவிய, ஒரு பொதுக் கொள்கை ஆகும். கனேடியத் திட்டமிடலாளர் நிறுவனம், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலைப் பின்வருவாறு வரையறுத்துள்ளது: மிகவும் அடிப்படையான முறையில், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலானது, வலயப்படுத்தல், போக்குவரத்து சார்ந்த உள்ளகக் கட்டமைப்பு என்பவற்றில் ஈடுபடுகின்றது. பொரும்பாலான வளர்ந்த நாடுகளில், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலானது, சமூகக் கொள்கையின் முக்கிய பகுதியாக உள்ளது. இது, மக்களினதும், பரந்த பொருளாதாரத்தினதும் நன்மைக்காகவும், சூழல் பாதுகாப்புக்காகவும், செயல்திறன் கொண்டவகையில் நிலம் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் பின்வரும் துறைகளையும் தழுவியுள்ளது. கட்டிடக்கலை, நகர்ப்புற வடிவமைப்பு, நிலத்தோற்றக் கலை, நகர்ப்புறப் புத்தாக்கம் என்பன, பௌதீக அமைப்பு, வளர்ச்சித் திட்டத்தின் அளவு, அழகியல், மாற்றுத் திட்டங்களுக்கான செலவின ஒப்பீடு, கட்டிடப் பொருட்கள் போன்றவை தொடர்பில் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலுடன் தொடர்புபடுகின்றன. சூழல்சார் திட்டமிடலானது, சூழலில் வளர்ச்சித் திட்டத் தீர்மானங்களின் தாக்கங்களை அறிவதற்கும் அளவிடுவதற்கும் உதவுகிறது. சாலைச் சத்த (roadway noise) மாதிரியமைப்பு, சாலை வளிப்பரவல் மாதிரியமைப்பு ( roadway air dispersion models), சாலை நீர்வடிதல் (surface runoff) மாதிரியமைப்பு போன்ற கணினி மாதிரியமைப்புக்கள் தொடர்பில் இத்துறை பங்களிப்புச் செய்கிறது. இவ்வாறு பல துறைகளும் தொடர்பு பட்டிருப்பதனால், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலாளர், கணினி மாதிரியமைப்புகள் (computer model), புவியியல் தகவல் முறைமை போன்றவற்றைப் பெருமளவுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இவை, பகுப்பாய்வுக்கும், தீர்மானங்களை எடுப்பதற்கும் இவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. இடஞ்சார் திட்டமிடல் இடஞ்சார் திட்டமிடல் (Spatial planning) என்பது, பல்வேறு அளவுகளைக் கொண்ட இடங்களில், மக்களதும், நடவடிக்கைகளதும் பரவல் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன், பொதுத் துறையால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளைக் குறிக்கும். இடஞ்சார் திட்டமிடல், எல்லா மட்டங்களிலுமான, நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலை உள்ளடக்கியுள்ளது. இது, நகர்ப்புறத் திட்டமிடல், பிரதேசத் திட்டமிடல், தேசிய இடஞ்சார் திட்டங்கள் போன்றவற்றைத் தன்னுள் அடக்கும். இடஞ்சார் திட்டமிடலுக்குப் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. ஐரோப்பிய பிரதேச/இடஞ்சார் திட்டப் பட்டயம் (European Regional/Spatial Planning Charter) பின்வருமாறு கூறுகிறது: வலயப்படுத்தல் வலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் "வலயங்கள்" எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை எவ்வகையான பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்பது வலயப் படுத்தலின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றது. ஒன்றுக்கொன்று ஒத்துவராதவை என்று கருதப்படும் பயன்பாடுகளை வேறுபடுத்துவதே வலயப்படுத்தலின் முதன்மையான நோக்கமாகும். ஏற்கனவே உள்ள, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்று காணப்படும் பயன்பாடுகள் அத்தகைய இடங்களில் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சிகள் வலயப்படுத்தல் விதிகளைப் பயன்படுத்துகின்றன. வலயப்படுத்தல் பொதுவாக மாநகரசபைகளைப் போன்ற உள்ளூராட்சிகளினால் கண்காணித்துக் கட்டுப்படுத்தபடுகின்றன. குறிப்பிட்ட நிலத் துண்டுகளில், திறந்த வெளி, குடியிருப்பு, வேளாண்மை, வணிகம், தொழிற்சாலை முதலியவற்றில் எத்தகைய நடவடிக்கைகள் அல்லது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் வலயப்படுத்தலில் அடங்குகின்றன. அத்துடன் இவ்வலயங்களில் உள்ள நிலங்களின் பயன்பாடு தொடர்பில் பின்வரும் அம்சங்களும் வலயப்படுத்தலில் அடங்கும். சூழல் தாக்க மதிப்பாய்வு சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) என்பது, மனிதனுடைய சூழல்சார் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், வாழ்சூழல் நலம் (ecological health) மற்றும் இயற்கையின் சேவைகளில் (nature's services) ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட திட்டம் கொண்டிருக்கக்கூடிய தாக்கங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகும். திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்குமுன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதற்கு உதவுமுகமாகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி அறிவதற்கு, செல்வழிப் பகுப்பாய்வு (pathway analysis) முறையைப் பயன்படுத்துவதில், ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை (US Environmental Protection Agency) முன்னோடியாக இருந்தது. இந்தப் பகுப்பாய்வுக்கான தொழில்நுட்பம், சூழல் அறிவியல் (environmental science) எனப்பட்டது. முன்னணித் தோற்றப்பாடுகள் அல்லது தாக்கம் ஏற்படுவதற்கான வழிகள்: வழிப் பகுப்பாய்வும், "த நச்சுரல் ஸ்டெப்" (The Natural Step) அமைப்பின் வரைவிலக்கணங்களும், பின்னர், சூழல் மேலாண்மைச் சீர்தர வரிசைகளான ஐஎஸ்ஓ 14000 இற்கும், ஐஎஸ்ஓ 19011 இற்கும் அடிப்படையாக அமைந்தன. சூழல் தாக்க மதிப்பாய்வுக்குப் பின்னர், ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான பொறுப்பு அல்லது காப்புறுதி நிபந்தனைகளை விதிப்பதற்கு, முன்னெச்சரிக்கைக் கொள்கை, மாசுபடுத்துவோர் ஈடுசெய்தல் கொள்கை என்பவற்றைப் பயன்படுத்த முடியும். சூழல் தாக்க மதிப்பாய்வு சில சமயங்களில் சர்ச்சைக்கு உரியதாக அமைவதுண்டு. சமூகத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சமூகத் தாக்க மதிப்பாய்வு மூலமும், வணிகத்துறைத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சூழ்நிலைப் பகுப்பாய்வு மூலமும், வடிவமைப்புத் தாக்கங்கள் தொடர்பான மதிப்பாய்வு சூழ்நிலைக் கோட்பாட்டின் மூலமும் செய்யப்படுகின்றன. செல்வழிப் பகுப்பாய்வு செல்வழிப் பகுப்பாய்வு என்பது, நச்சுப் பொருட்களும், கதிரியக்கப் பொருட்களும், அவை உற்பத்தி செய்யப்படுகின்ற, பயன்படுத்தப்படுகின்ற, களஞ்சியப் படுத்தப்படுகின்ற, அல்லது வளி, நீர், மண், உணவுச் சங்கிலி, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இவற்றின் கூட்டு வழியூடாக எறியப்படுகின்ற, தொழிற்சாலைகள், இடங்கள், அல்லது வழிமுறைகளிலிருந்து மனிதனைச் சென்றடையக்கூடிய வழிகள் பற்றிப் பகுத்தாய்வதைக் குறிக்கும். ஷேன் வோர்ன் ஷேன் கெய்த் வோர்ன் ("ஷேன்" வோர்ன், "Shane Warne") (பிறப்பு. செப்டம்பர் 13, 1969) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் அணித்தலைவர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார். மேலும் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் விசுடன் சர்வதேச முன்னணி துடுப்பாட்ட வீரராக ஷேன் வோர்னை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. 2000 இல் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் பன்னாட்டுத் துடுப்பாடப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீராராகவும் உள்ளார். அனைத்துவிதமான துடுப்பாட்ட வடிவங்களில் இருந்தும் சூலை, 2013 இல் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஷேன் வோர்ன் செப்டம்பர் 13, 1969 இல் விக்டோரியா ஆஸ்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பிரிட்ஜெட் தாய் கெய்த் வோர்ன் . வோர்ன் ஏழு முதல் ஒண்பதாம் வகுப்பு (தரநிலை) வரை ஹாம்ப்டன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின் இவரின் விளையாட்டுப் புலமையினால் இவருக்கு மெண்டோன் கிராமர் பள்ளியில் இடம் கிடைத்தது. வோர்ன் தனது பள்ளிப்படிப்பின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் மெண்டோன் பள்ளியில் கழித்தார். 16 வயதிற்குட்பட்டோருக்கான டௌலிங் கேடயப் போட்டியில் மெல்பேர்ண் துடுப்பாட்ட சங்க பலகலைக்கழக அணியை வழிநடத்தும் வாய்ப்பினை 1983, 1984 இல் பெற்றார். இவரின் முதல் சர்வதேச போட்டியானது சனவரி, 1992 இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் ஆகும். இந்தப் போட்டியில் 45 ஓவர்கள் வீசிய வோர்ன் ஒரு இலக்கினை மட்டுமே கைப்பற்றினார். இவர் ரவி சாஸ்திரியின் இலக்கை 150 ஓட்டங்கள் கொடுத்து கைப்பற்றினார். அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 78 ஓட்டங்கள் கொடுத்தார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. எனவே அந்தத் தொடரின் இவரின் ஒட்டுமொட்த்த பந்து வீச்சானது 228 ஓட்டங்களுக்கு 1 இலக்கு என்று இருந்தது. இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போட்டிகளிலும் இவரின் மோசமான பந்துவீச்சு 0/ 107 எனத் தொடர்ந்தது. இவ்வாறாக இருந்தபோதிலும் ஆகஸ்டு 22, 1992 இல் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் இறுதி மூன்று இலக்குகளை எடுத்தார். இதன் மூலம் ஆத்திரேலிய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. இதனைப் பற்றி அர்ஜுன றணதுங்க கூறுகையில் 300 க்கும் அதிகமான பந்துவீச்சு சராசரி உள்ள ஒரு வீர்ர் எங்களின் வெற்றியை எங்கள் கைகளில் இருந்து பறித்துச் சென்றுவிட்டார் எனக் கூறினார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை $450,000 மதிப்பில் தேர்வு செய்தது. ஷேன் வோர்ன் இந்த அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரின் தலைமையில் முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் நான்கு பருவங்களுக்கு அணித் தலைவராக இருந்தார். ஷேன் வோர்னுடைய இலக்குகள் பட்டியல் இயற்கையின் சேவைகள் இயற்கையின் சேவைகள் என்பது, சிறப்பாகப் பொருளாதார ரீதியில் அளவிடப்படக்கூடிய, இயற்கை மனிதனுக்குச் செய்யும் நன்மைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். ராபர்ட் கொஸ்டான்சா (Robert Costanza) என்பவரும், வேறு இயற்கை மூலதனம் (natural capital) தொடர்பான கோட்பாட்டாளர்களும், 1990 களில், இயற்கையினால் மனிதனுக்கான இயற்கையின் சேவைகள் பற்றி விரிவான பொருளியல் பகுப்பாய்வுகளை நடத்தினர். இவற்றுள் 17 விடயங்களின் பொருளாதாரப் பங்களிப்பு ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணிக்கப்பட்டது. இது 25 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணிக்கப்பட்ட, மனிதர்களுக்கிடையேயான பொருளியல் நடவடிக்கைகளின் பெறுமானத்திலும் அதிகமாகும். இயற்கையின் சேவைகளின் பெறுமானம், அச் சேவைகளை மனிதரின் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான செலவினம் என்ற அடிப்படையில் கணிப்பிட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு, இயற்கை முதலீடு, புவியின் பெறுமானம் (value of Earth), உயிரின் பெறுமானம் (value of life) போன்றவை தொடர்பான வாதங்களில் பெருமளவுக்கு மேற்கோள் காட்டப்பட்டது. இது மனித வளர்ச்சிக் கோட்பாடு, இயற்கை முதலீட்டுவாதம் ஆகியவற்றின் முக்கிய திருப்பு முனையாகும். கருத்தடை உறை கருத்தடை உறை ("Condom") என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும். விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் கருத்தடை உறைகள் பயன்படுகின்றன. கருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன. ஆணுறைகள் ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும்போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது. மிகச் சரியான முறையிலும், ஒவ்வொரு பாலுறவின்போதும் ஆணுறை பயன்படுத்தப்படுமாயின் ஆண்டொன்றுக்கு 2% கருத்தரிப்பு நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளை வழக்கமான பயன்பாட்டின் அடிப்படையில் பார்க்கையில், கருத்தரிப்பு வீதமானது ஆண்டொன்றுக்கு 18% மாக இருக்கிறது. ஆனாலும், உறைப் பயன்பாடானது, [[கொணோறியா], [[கிளமிடியா]], [[:en:trichomoniasis]], [[:en:hepatitis B]], [[எயிட்சு]] போன்ற பால்வினை நோய்கள் ஏற்படும் அபாயத்தை மிகவும் அதிகளவில் கட்டுப்படுத்துவதுடன், [[அக்கிக் கொப்பளங்கள்]], [[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]], [[சிபிலிசு]] போன்ற [[தொற்று நோய்]]கள் ஏற்படும் அபாயத்தையும் ஓரளவு கட்டுப்படுத்துகிறது. [[File:CondomUse2 alternative.jpg|thumb|ஆணுறையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற விளக்கப்படம்]] 1564 முதல் கருத்தடை உறைகள், பால்வினை நோய்களின் தாக்கத்திலிருந்து தடுக்கப்படுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. [[இரப்பர்|இரப்பரால்]] செய்யப்பட்ட உறைகள் 1855 இலும், latex ஆல் செய்யப்பட்ட உறைகள் 1920 இலும் பயன்பாட்டுக்கு வந்தன. இவை [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]], அத்தியாவசிய [[மருத்துவம்|மருத்துவப்]] பொருட்களின் பட்டியலில், மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான சுகாதார முறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகளவில் [[குடும்பக் கட்டுப்பாடு|குடும்பக் கட்டுப்பாட்டுக்கான]] முறையாக 10% மானோர் இந்த உறைகளைப் பயன்படுத்தியதாக 2012 இல் வந்த ஒரு அறிக்கை கூறுகின்றது. இந்த உறைகளின் பயன்பாடு [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடு]]களில் அதிகமாக உள்ளது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] குடும்பக் கட்டுப்பாட்டுக்கான இரண்டாவது பொதுவான முறையாகவும் (22%), [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மூன்றாவது பொதுவான முறையாகவும் (15%) இந்த உறைகளின் பயன்பாடு இருக்கின்றது அண்ணளவாக, ஆண்டொன்றுக்கு 6-9 பில்லியன் உறைகள் விற்பனை செய்யப்படுகின்றன. [[20-ஆம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின் இறுதியில்]] பெண்ணுறைகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் விற்பனை [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடு]]களில் குறைவாகவே உள்ளது. ஆனால், [[வளர்ந்துவரும் நாடுகள்|வளர்ந்துவரும் நாடு]]களில் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், [[எயிட்சு]] தடுப்புத் திட்டங்கள் இருந்தாலும் கூட, அங்கே இந்த பெண்ணுறைப் பயன்பாடு அவற்றை ஈடுசெய்வதுபோல் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. பெண்ணுறைகளை அணிந்துகொள்ள சாமர்த்தியம் தேவைப்படுவதனாலும், அவற்றின் விலை ஆணுறைகளைவிடவும் அதிகமாக இருப்பதனாலும், அவற்றைப் பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியமான சூழ்நிலையாலும், இவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நாடுகளில், 6-9 பில்லியன் ஆணுறைகளும், 12 மில்லியன் பெண்னுறைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெண்கள் தாமாகவே திட்டமிட்டு, எயிட்சு [[நோய்|நோயிலிருந்து]] பாதுகாப்பைப் பெறுவதற்காக எடுக்கக்கூடிய முன்முயற்சியாக பெண்ணுறைகளின் பயன்பாடு இருப்பதனால், இவற்றின் விநியோகத்தை நோயுள்ள நாடுகளில் அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அவற்றின் உயர் விலை காரணமாக இம்முயற்சி பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. பொதுவாக ஆணுறைகள் இறப்பர் மரப்பாலைப் பயன்படுத்தியே தயார் செய்யப்படுகின்றன எனினும், குறைந்தளவில் பொலியூரத்தீன் அல்லது இளம் [[செம்மறியாடு|செம்மறியாட்டின்]] [[சிறுகுடல்]] போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ஆணுறைகள் இலகுவான பயன்பாடு, இலகுவில் கிடைக்கும் தன்மை, மற்றும் குறைந்தளவு பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் சாதகமானதாக இருக்கின்றன. இறப்பர் மரப்பாலுக்கு [[ஒவ்வாமை]] உள்ளவர்கள், பொலியூரத்தீன் அல்லது வேறு செயற்கைத் தயாரிப்புக்களைப் பயன்படுத்தலாம். ஆணுறைகள் ஒரு தடைவை மட்டுமே பயன்படுத்தப்படும். [[படிமம்:Female Condom.png|thumb|left|100px|பெண்ணுறையில் படம்]] [[படிமம்:ReddyFc.png|thumb|right||80px|பெண்ணுறையில் படம்]] பெண்ணுறைகள் பொதுவாக Polyurethane கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. ஆணுறைகளினால் ஏற்படும் தொற்றுநோய்ப் பாதுகாப்பின் அளவைவிட, பெண்ணுறைப் பயன்பாடு குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது [[20-ஆம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின் இறுதியில்]] உருவாக்கப்பட்ட இந்த பெண்ணுறைகள், முதலாவது காரணமாக ஆண்கள் ஆணுறைகள் பயன்படுத்த தயாரில்லாத சூழ்நிலைகளிலும், இரண்டாவதாக காரணமாக ஆண்களிடமிருந்து பால்வினை நோய்கள் பெறப்படுவதிலிருந்து தடுக்கும் நோக்குடனும் பயன்படுத்தப்படுகின்றன. Latex க்கு ஒவ்வாமை கொண்டவர்களில், [[தோல்]] நமைச்சல் போன்ற [[ஒவ்வாமை]] அறிகுறிகள் தோன்றும். ஒவ்வாமைத் தன்மை அதிகம் கொண்டவர்களாயின், மிகவும் அபாயமான சூழ்நிலையையும் கொடுக்கக்கூடும். Latex உறைகளின் தொடர்ந்த பயன்பாடு, ஒவ்வாமைத் தன்மையை சிலரில் அதிகரிக்கச் செய்யக்கூடும். [[விந்தணு]]க்களைக் கொல்லக்கூடிய சில பதார்த்தங்கள் இத்தகைய உறைகளில் இருந்தால் அவையும், இப்படியான ஒவ்வாமைத் தன்மைக்குக் காரணமாகலாம். [[பகுப்பு:கருத்தடை]] சு. ஸ்ரீகந்தராசா சு. ஸ்ரீகந்தராசா (பிறப்பு: அக்டோபர் 1, 1953) ஒரு சட்டத்தரணியும், எழுத்தாளரும் ஆவார். இவரது 25க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 1991 முதல் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராகவும், விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். பேச்சாளர், நாடக நடிகர். பாடும் மீன், செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்களை பெற்றவர். சுப்பையா ஸ்ரீகந்தராசா இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனாக 1953 ஒக்ரோபர் 1-ஆம் திகதி பிறந்தார். தனது பதினெட்டாவது வயதில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்த அவர், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய இடங்களில் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். அரசாங்க சேவையில் இருந்தபோதே கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாகச் சட்டம் படித்து, பட்டம் பெற்று, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை. கொழும்பு நீதிமன்றங்களில் சட்டத்தரணியாகப் பணியாற்றினார். அவர் களுவாஞ்சிக்குடியின் முதலாவது சட்டப்பட்டதாரியாவார். சுதந்திரன் இதழ் நடத்திய கவிஞர் நீலாவணன் நினைவு வெண்பாப் போட்டியில் (1975) முதல் பரிசு பெற்றார். தமது 24 வயதிலேயே மட்டக்களப்பில் சிறந்த பேச்சாளருக்கான சொல்லின் செல்வர்' என்ற பட்டமும் பெற்றார். அவுஸ்திரேலியாவில் "எல்லாளன்" நாடகத்தை எழுதி இயக்கி மேடையேற்றினார். எஸ்.பொ.வின் "வலை" நாடகத்தையும் இயக்கியிருக்கிறார். 1. செயலாளர், எம்.ஜி.ஆர் மன்றம். களுவாஞ்சிகுடி(1970 இலிருந்து) 2. இயக்குனர், இளம் நாடக மன்றம்;. களுவாஞ்சிகுடி(1971 இலிருந்து) 3. செயலாளர், இளைஞர் மறுமலர்ச்சி மன்றம்;. களுவாஞ்சிகுடி (1972) 4. அம்பாறை மாவட்டச் செயலர், அரசாங்க எழுதுவினைஞர்சங்கம்.(1974-75) 5. செயற்குழு உறுப்பினர், அகில இலங்கை அரசாங்க எழுதுவினைஞர்சங்கம். (1974-75) 6. ம.தெ.எ.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபை உறுப்பினர் (1973-74) 7. செயலாளர், பட்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்(1974 – 77) 8. செயலாளர், களுவாஞ்சிகுடி புனர் வாழ்வுக்கழகம் (1977- சூறாவளிக்குப்பின்) 9. தலைவர், பட்டிருப்புத் தொகுதி கலைஞர் ஒன்றியம் (1982 இலிருந்து) 10. செயலாளர், களுவாஞ்சிகுடி வரியிறுப்பாளர் சங்கம் (1987-1988) 11. செயலாளர், களுவாஞ்சிகுடி சைவமகாசபை (1986-88) 12. இணைச்செயலாளர், களுவாஞ்சிகுடி பிரதேச பிரஜைகள் குழு (1988-91) 1. செயற்குழு உறுப்பினர், இலங்கைத் தமிழ் சங்கம் 1992 – 1999) 2. முத்தமிழ் விழாக்குழுத் தலைவர், (1993-2002) 3. தலைவர், இலங்கைத்தமிழ்ச்சங்கம் (ஈழத்தமிழ்ச்சங்கம்) (1999 – 2001) 4. தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம் (1993-1994) 5. ஆசிரியர், “தமிழ் உலகம் – ” (இரு மொழிப் பத்திரிகை) 1994-1995 6. தலைவர், விற்றல்ஸீ தமிழ்ச்சங்கம் (2005-2010 வரை). 7. அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும். “வானமுதம்” தமிழ் ஒலிபரப்புச் சேவை (2005 இதுவரை) 8. தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் (2011 – 2013) 9. பொதுச்செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் -அவுஸ்திரேலியா (தற்பொழுது) மனித வளர்ச்சிக் கோட்பாடு மனித வளர்ச்சிக் கோட்பாடு என்பது, வாழ்சூழற் பொருளியல், பேண்தகு வளர்ச்சி, சமூகநலப் பொருளியல், பெண்ணியப் பொருளியல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட எண்ணக்கருக்களை இணைத்துக்கொண்ட ஒரு பொருளியற் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு, வாழ்சூழலியல், பொருளியல், மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையிலும், உலகமயமாதற் பின்னணியில் செயற்படுவதன் மூலமுமே நியாயப் படுத்தப்படுகின்றது. கி. இலட்சுமண ஐயர் கி. இலட்சுமண ஐயர் (இ. ஏப்ரல் 4, 1990) கட்டுரை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கையில் கல்வி அமைச்சில் வித்தியாவதியாகப் பணியாற்றியவர். தமிழ்த் தேசியப் பத்திரிகைகள் நல்ல தமிழில் வெளிவரவேண்டும் என்ற ஆவலுடன் ஆலோசனைகள் வழங்கியவர். "இந்தியத் தத்துவ ஞானம்" என்ற கட்டுரைத் தொகுப்பை 1960 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். இதன் நான்காவது பதிப்பு 1987 இல் வெளிவந்தது. இந்நூலுக்கு இலங்கையில் சாகித்திய விருதும், தமிழ்நாடு அரசின் பரிசும் கிடைத்தது. ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சிட்னியில் வாழ்ந்த இவர் 1990 இல் காலமானார். ஆசிய யானை ஆசிய யானை (அறிவியற் பெயர்: எலிஃவாஸ் மேக்சிமஸ்) யானையினத்தில் எஞ்சியுள்ள மூன்று சிற்றினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் இந்தியா, இலங்கை, இந்தியசீனத் தீபகற்பம் போன்றவற்றின் பெரும்பகுதிகளிலும் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட உருவத்தில் சிறியவை. இவற்றின் காதுகளும் ஆப்பிரிக்க யானைகளை விடச் சிறியதாகவே இருக்கின்றன. வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும். ஆசிய யானைகள் ஏழில் இருந்து 12 அடி உயரம் வரை வளர்கின்றன. 3000 – 5000 கிலோகிராம் வரை எடை கொண்டவையாக உள்ளன. யானையின் தனிச்சிறப்பான தும்பிக்கையானது அதன் மேலுதடும் மூக்கும் நீண்டு உருவானது. தும்பிக்கையின் நீளம் 1.5 முதல் 2 மீட்டர் GT வேலைகளுக்கும் தும்பிக்கை பயன்படுகிறது. யானையின் தும்பிக்கை ஏறத்தாழ 4 லிட்டர் நீர் கொள்ளும். துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஆசிய யானைகள் தந்தத்துக்காகப் பெருமளவில் கொல்லப்பட்டன. இதைக் கவனித்த பிரித்தானிய அரசு 1871லேயே மதராஸ் ராஜதானியில் யானைகளை, பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. ஆசிய யானைகள் ஒரு காலத்தில் ஆசியப்பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் வசித்தாலும் தற்போது 13 நாடுகளில் மட்டுமே வாழுகிறது. தமிழகத்தில் அகத்தியமலைத் தொடர் மற்றும் பெரியாறு மலைத் தொடர் போன்றவற்றில் உயிரியற் பல்வகைமை உள்ளதால் இங்கு கொஞ்சம் இவ்வகை யானைகளைப்பார்க்க முடிகிறது. பல அச்சுறுத்தல்களின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டுள்ளது. யாகூ! செய்திகள் யாஹூ! செய்திகள் யாஹூ! இன் செய்திச் சேவையாகும். இதன் ஆங்கிலச் செய்திகள் CNN, USA Today போன்றவற்றில் இருந்து வருவதாகும். தமிழ்ச் செய்திகள் பெரும்பாலும் வெப்தூனியாவில் இருந்து வருவதாகும். இந்திய மொழிகளில் இதன் சேவை தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய 7 இந்திய மொழிகளில் உள்ளது. மாதவி மாதவி, தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நாட்டியம் ஆடிவந்தார். கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. அவளிடம் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற மகள் பிறந்தாள். சிறிது காலத்தில் கோவலனின் செல்வம் அனைத்தும் கரைந்து போன பின், மனம் திருந்திய அவன் மீண்டும் கண்ணகியிடம் சென்றான். கோவலன் மற்றும் கண்ணகியின் மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் முனைவர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: பெப்ரவரி 22, 1951) இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் ஆவார். இவர் கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார். மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர். இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார் என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் தெரிவித்தனர். துணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்க்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர். பிறவினை (இலக்கணம்) பிறவினை என்பது தான் செய்யாமல் பிறர் அல்லது பிறவற்றின் துணையுடன் செய்யும் வினை வடிவம். எடுத்துக்காட்டாக செய் என்பது வினை. செய்வி என்பது பிறரால் செய்வதைக் குறிக்கும் வினை. பிறவினை விகுதிகளாக எட்டு இகர உகர உயிர்மெய் எழுத்துக்கள் பயன்படுகின்றன. அவையாவன: வி, பி, கு, சு, டு, து, பு, று. இவற்றில் ஆறு வல்லின உகரங்களும் பயன்படுகின்றன என்பது நினைவில் கொள்ளத்தக்கன. இவ்வல்லினங்கள் ஒற்று மிகுந்து வருதல் நோக்கத்தக்கது. உதட்டொலி இகரங்களாகிய வி, பி ஆகிய இரண்டும் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்: குடும்பக் கட்டுப்பாடு குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும் ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புக்களின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். பெண் கருத்தடை மாத்திரை உட்கொள்வது குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிறது. வாய்வழிப் பாலுறவு வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (ஆங்கிலம்:Oral sex) என்பது வாய், நாக்கு என்பவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்னரான அல்லது பின்னரான பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். வாய்வழிப் புணர்ச்சியில் விந்துப் பாய்மம் அல்லது யோனிப் பாய்மம் உள்ளெடுக்கப்படுவது ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு உள்ளெடுப்பது மட்டும் வாய்வழிப் பாலுறவாகக் கருதப்படுவதில்லை. வாய்வழிப் பாலுறவினைப் புணர்ச்சி அல்லது முழுமையான பாலுறவாகப் பலரும் கருதுவதில்லை. சமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கர்ப்பமடைய வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. ஆயினும் இது பாதுகாப்பான பாலுறவு அல்ல. வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது. குதவழிப் பாலுறவு குதவழிப் பாலுறவு என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். ஆண்குறியை குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால் இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும். சமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் குதவழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. பால்வினை நோய்கள் விரைவாகப் பரவும் வாய்ப்புக்களும் உண்டு. பாதுகாப்பான பாலுறவு பாதுகாப்பான பாலுறவு என்பது எய்ட்சு போன்ற பால்வினை நோய்கள், மனிதர்களிடையே நிகழும் பாலுறவுச் செயற்பாடுகளால் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன், முன்னெச்சரிக்கையுடன், செய்யப்படக் கூடிய பாதுகாப்பான முறையிலான பாலுறவு ஆகும். இது முக்கியமாக கருத்தடை உறைகள் பயன்பாட்டை குறிக்கும். இத்தகைய பாதுகாப்பான உடலுறவு நோய்த் தொற்றுக்களின் அளவைக் குறைக்குமே தவிர, முழுமையான பாதுகாப்பை வழங்குமெனத் தீர்மானிக்க முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 1980 ஆம் ஆண்டுகளில் நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு எனும் எய்ட்ஸ் நோய் பரவத் தொடங்கிய பின்னர் பாதுகாப்பான பாலுறவு தொடர்பான பரவலான கவனம் ஏற்பட்டது. பாலியற் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இந்த பாதுகாப்பான பாலுறவும் உள்ளது. தீங்கைக் குறைக்கும் ஒரு உத்தியாக இந்த பாதுகாப்பான பாலுறவு என்ற விடயம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தீங்கு குறைத்தல் என்பதை அறுதியிட முடியாது. எ.கா. எச்.ஐ.வி எனப்படும் எய்ட்சு நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணியைக் கொண்ட ஒருவர், ஆணுறை பயன்படுத்தாமல் பாலுறவு கொள்ளும்போதும், ஆணுறை பயன்படுத்தி பாலுறவு கொள்ளும்போதும் குறையக்கூடிய நோயின் சூழிடர், ஐந்தில் நான்கு பங்காக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையிலான பாலுறவு மட்டுமே சரியான பாதுகாப்பு என்பது வலியுறுத்தப்பட்டது. தவிர்க்க முடியாத சில வேளைகளில் பிற பெண்களிடம் பாலுறவு கொள்ள விரும்பும் ஆண்கள் பாலுறவின் போது ஆணுறை அணிதல் அவசியம் என்பது குறித்த கருத்தும் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் பாதுகாப்பான பாலுறவுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு எனும் எய்ட்ஸ் நோய் வராமல் தவிர்ப்பதற்கும் ஆலோசனைகளை வழங்கிட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் வழியாகப் பல நிதியுதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான பாலுறவு சில சமயம் குடும்பக் கட்டுப்பாடு வழிமுறைகளான கருத்தடை வழிகளில் ஒன்றாகவும் இருக்கலாம் எனினும், அநேகமான கருத்தடை முறைகள் நோய்ப் பாதுகாப்பை முழுமையாக வழங்குவதில்லை. பரவலர் பண்பாடு ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பரவலர் பண்பாட்டை மேட்டுக்குடி பண்பாட்டோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தலாம். தமிழ்ச் சூழலில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு என்று சில ஆண்டுகள் முன் குறிப்பிட்டிருக்கலாம். இன்று நகரமயமாக்கல், திரைப்படம், உலகமயமாதல் தமிழர் பரவலர் பண்பாட்டுச் சூழலை கட்டமைக்கும் முக்கிய காரணிகளாக தோற்றம் கொண்டுள்ளன. மேற்கத்திய மற்றும் வெளித் தாக்கங்களை உள்வாங்கினாலும், தமிழர் பரவலர் பண்பாடு தனித்துவங்களுடனும் உள்ளூர்த் தன்மையுடனுமே வெளிப்படுகின்றது . கட்டற்ற இசை தமிழ் மொழியைப் போல, தமிழ் விக்கிபீடியாவைப் போல, கட்டற்ற மென்பொருட்கள் போல ஆக்க, ரசிக்க, பகிர, உருக்க அளிப்புரிமை பெற்ற இசையை கட்டற்ற இசை எனலாம். எப்படி கலைஞர்கள் முன்னோடிகளின் ஆக்கங்களை பயன்படுத்தி இசையை ஆக்குகின்றார்களோ, அப்படியே பிறரும் செய்ய கட்டற்ற இசை வழிசெய்கின்றது. கட்டற்ற ஒளி, நீர், காற்று இயற்கையில் அனைவருக்கும் பொதுவாக கிடைக்கும் ஒளி, நீர், காற்று ஆகியவை தொடர்ந்து கட்டணமற்ற, கட்டற்ற முறையில் கிடைக்கவேண்டும் என்ற கருத்துருவை கட்டற்ற ஒளி, நீர், காற்று என்ற சொற்தொடர் முன்னிறுத்துகின்றது. கட்டற்ற நிலையில் இயற்கை கூறுகளான ஒளி, நீர், காற்று தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் இந்த கருத்துரு வலியுறுத்துகின்றது. இது அடிப்படை மனித உரிமையாகவும் முன்வைக்கப்படுகின்றது. நீர் வளங்களை வர்த்தமயப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கட்டற்ற கட்டணமற்ற என்ற கொள்கை எழுகின்றது. மங்கள சமரவீர மங்கள சமரவீர ("Mangala Pinsiri Samaraweera", ; பிறப்பு: ஏப்ரல் 21, 1956), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 141/5, கல்கனுவ ரோட், கொரக்கன, மொரட்டுவையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், இவர் 2005-2007 வரை இலங்கை வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினார். இவர் முன்னாள் இலங்கை அமைச்சரான மாகாநாம சமரவீரவின் மகனாவர். ஜூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்டு மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டார். இத்தேர்தல் வெற்றிக்காக மகிந்த ராஜப்பக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல் செய்தாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கிரேக்க நாடக வரலாறு கிரேக்க நாட்டில் நாடகம் கி.மு 534 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்றது.கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில் 'டயோனிசஸ்' என அழைக்கப்பட்ட வசந்தம் மற்றும் வளம் போன்றவற்றின் அடையாளமான கிரேக்க தெய்வத்தின் வழிபாடு நடைபெற்றது. கி.மு. ஏழாம் - எட்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் அத்தெய்வத்திற்குத் திருவிழா கொண்டாடப்படும் வேளை அத்தெய்வத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக குழு நடனங்களின் போட்டி நடைபெறும். அந்நடனங்கள் நடைபெறும் சமயம் தமிழ் நாட்டில் நடைபெறும் வெறியாட்டுப் பாட்டு போன்று, பக்திப் பரவசத்தினால் பக்திப் பாடல்கள் பாடப்படும். இவ்வாடல்-பாடல்களிலிருந்தே நாடகம் பிறந்தது என கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். 'டயோனிசஸ்' தெய்வத்திற்கு ஆண்டுக்கு மூன்று திருவிழாக்கள் நடைபெறும். டிசம்பர், ஜனவரி, மார்ச், மாதங்களில் கொண்டாடப்படும் இத்திருவிழாக்களில் மார்ச் திங்கள் நடைபெறும் திருவிழா 'குழு நடனங்களின் போட்டி' என்பதற்குப் பதிலாக, துயரக் காட்சிகளின் போட்டி' என மாற்றியமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இக்காலத்தில் வாழ்ந்துவந்த நாடக நடிகர்களில் 'தெஸ்பிஸ்' என்பவரின் பெயர் மட்டும் சான்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நடிகரே முதன் முதலில் நடைபெற்ற சிறந்த துயரக் காட்சியின் போட்டியில் வெற்றிபெற்றவராவார். கிரேக்கர்கள் அறிந்த முதல் நடிகருமான இவரின் பெயராலேயே கிரேக்கக் கலைஞர்கள் இன்றளவிலும் 'தெஸ்பியன்ஸ்' என அழைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. தெஸ்பிஸ் நடத்திய முதல் நாடகத்தில் அவரே ஒரு நடிகராகவிருந்து மாற்றி மாற்றி முகமூடியணிந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். ஒப்பனை மாற்றத்திற்கு அவர் எடுத்த நேரத்தினை பாடும் குழுவினர் நாடகத்தின் இடைவெளியினை நிரப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கி.மு. 525 முதல் 456 காலப்பகுதியில் வாழ்ந்த 'எஸ்கைலஸ்' என்பவரினால் 'தெஸ்பிஸ்' அறிமுகப்படுத்திய ஒரு கதாபாத்திரமே நடிக்கும் அவலச்சுவை நாடக வடிவத்திற்குப் பதிலாக இரு கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார்.இவரின் பின் கி.மு. 496 முதல் 406 காலப்பகுதியில் வாழ்ந்த 'சோபகிள்ஸ்' என்பவரால் மூன்று கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'டயோனிசஸ்' தெய்வத் திருவிழாக் காலங்களில் அத்தெய்வத்தின் கோயில்களின் மேற்பகுதியில் கோட்டை போன்ற அமைப்பின் சரிவான பகுதிகள் நாடக அரங்குகளாகப் பயன்படுத்தப்பட்டது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் பார்வையாளர்கள் மலைச்சரிவுகளில் இருக்க அச்சரிவுகளின் அடிவாரத்தில் நாடக நடிகர்களின் அரங்கம் இருந்தது. காட்சிக்கான பின்னணி (திரைச்சீலை) அக்காலகட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. கி.மு. ஜந்து - நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடனமாடும் இடம் என அழைக்கப்பெற்ற 'காட்சி வீடு' போன்ற அமைப்பிலான அரங்கம் பார்வையாளர்கள் அமருவதற்கு வசதியாக மலைகளில் கற்களால் கட்டப்பெற்றன. வட்ட வடிவமான தளத்தினைச் சுற்றி வளைவாகக் கட்டப்பெற்ற இவ்வரங்கத்தின் குறுக்களவு 65 அடிகளாகவும் 14,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கட்டவும் பெற்றது.இக்காட்சி வீடானது ஆரம்ப காலங்களில் நடிகர்கள் உடைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நாடகக் காட்சிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 'மன்னர் இடிஃபஸ்' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்ட வேளை இருபுறம் அமைந்த செவ்வக வடிவத்தினை உடைய கட்டிடம் பின்னணியாக அமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பே பின்னாட்களில் அனைத்து நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டதென்பது பல அறிஞர்கள் கருத்தாகும். ஆனாலும் சிலரது கருத்தின் படி இவ்வரங்கேற்றத் தளமானது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாடகத்திற்கேற்றாற்போல மாற்றி அமைக்கப்பட்டதெனவும் கருத்து நிலவுகின்றது. பெரும்பாலான கிரேக்க நாடகங்கள் திறந்த வெளியிலேயே நடந்தவைகளாகக் கருத்து நிலவுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக நாடகங்களில் வரும் 'மரணக் காட்சிகள்' மேடைக்குப் பின்னால் நிகழ்த்தப்பட்டு, இறந்தவர்களினைப் போன்று அமைக்கப்பெற்ற கதாபாத்திர உடல்கள் இறுதியில் மேடைக்குக் கொண்டுவரப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கின்றது என அமெரிக்க நாட்டு நாடக நூலாசிரியரான 'ஆஸ்கார் ஜி.பிராக்கெட்' தனது "தி எசென்ஷியல் தியேட்டர்" என்னும் நூலில் இயல் -2 இல் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'சோபகிள்ஸ்' என்பவர் படைத்த நாடகமொன்றில் மூன்று ஆண்கள் மட்டுமே பங்குபெற்று நடித்தனர். இவர்களில் சிலர் பெண் வேடமிட்டும் நடித்தனர். எவ்வித வரையறையின்றி அவர்கள் நடித்ததன் காரணம் அந்நாடக முறையே அம்முறையானது 'அழுவது-ஓடுவது-தரையில் வீழ்வது, போன்ற எளிமையான பாணியை உடைத்தனவாய் விளங்கியதே இதற்குக் காரணம் என ஆஸ்கார் ஜி. பிராக்கெட் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமானியப் பேரரசன் மாவீரன் அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்க நாடகம் பெரு வீழ்ச்சியினை அடைந்தது. கி.மு. 200 ஆம் ஆண்டளவில் கிரேக்க நாடகம் முற்றிலுமாக மறைந்ததென்பது குறிப்பிடத்தக்கது. வசீம் அக்ரம் வசீம் அக்ரம் (Wasim Akram (; பிறப்பு 3 சூன், 1966) என்பவர் முன்னாள் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி பந்து வீச்சாளர் ,துடுப்பாட்ட வர்ணனையாளார் மற்றும் தொலைக்காட்சி பிரபலர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் இவர் இடதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களை தலைமையேற்று நடத்தினார். அக்டோபர், 2013 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பின் 150 ஆண்டையொட்டி வெளியிட்ட தேர்வுத் துடுப்பாட்ட உலக லெவன் அணியில் இடம் பெற்ற ஒரே பாக்கித்தான் வீரர் இவர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றின் விரைவு வீச்சாளர்களில் குறிப்பிடத் தகுந்தவராகக் கருதப்படுகிறார். பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளை எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 881 இலக்குகளை எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளார். ஊஞ்சலாடும் வகையிலான பந்து வீச்சு முறையினை அறிமுகம் செய்தவர் என்றும் அதனை சிறப்பான முறையில் வீசுபவர் எனவும் பரவலாக அறியப்படுகிறார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டியின் போது 500 இலக்குகள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அனைத்துக் காலத்திற்குமான துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளர்களில் இவருக்கு 1223.5 புள்ளிகள் கிடைத்தது. இவருக்கு முன்னதாக அலன் டொனால்ட், இம்ரான் கான்,வக்கார் யூனிசு, ஜேயல் கார்னர், கிளென் மெக்ரா, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் உள்ளனர். இவர் மொத்தம் 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 23 முறைகள் 4 இலக்குகளைப் பெற்றுள்ளார். செப்டம்பர் 30, 2009 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் "ஹால் ஆஃப் ஃபேமாக" அறிவிக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றினார். கராச்சியில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது பருவகாலத்தில் பங்கேற்கவில்லை. வசீம் அக்ரம் சூன் 3, 1996 இல் லாகூரில் முஸ்லிம் பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவர் அரசு இஸ்லாமிய கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் படித்த காலகட்டத்தில் கல்லூரித் துடுப்பாட்ட அணியில் துவக்க மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளராக செயல்பட்டார். இவரின் தந்தை சௌத்ரி முகமது அக்ரம் , இவர் அமிருதசரசு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்தார். பின் இந்தியப் பிரிப்பின் போது குடும்பத்தினருடன் இவர் பஞ்சாப், பாக்கித்தானுக்கு இடம்பெயர்ந்தார். வசீம் 30 வயதாக இருக்கும் போது நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளானர். இதனைப் பற்றிக் கூறும் போது இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது .ஏனெனில் நான் ஒரு ஆரோக்கியமான விளையாட்டு வீரர். எனது குடும்பத்தினர் யாருக்கும் நீரிழுவு நோய் இருந்தது இல்லை. எனக்கு இந்த நோய் வரும் என்று நான் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது.எனக் கூறினார். இதன் பின் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டார். இம்ரான் கான் இம்ரான் கான் நியாசி (Imran Khan Niazi, , பிறப்பு: நவம்பர் 25, 1952) பாக்கித்தானின் 19வது பிரதமர் , 22ஆவது தலைமை அமைச்சர் மற்றும் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் பாக்கித்தான் அமைச்சரவையில் இருந்துள்ளார்.இவர் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் இருபது ஆண்டுகாலம் இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணி சார்பாக ஆடிய இம்ரான் கான் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர். துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் லாகூரில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை அமைத்துள்ளார். இம்ரான் கான் பஷ்தூன் மரபைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நவம்பர் 25, 1952 இல் லாகூர், பஞ்சாபில் பிறந்தார். இவர் வோர்செஸ்டர் மற்றும் ஆக்சுபோர்டில் உள்ள கெப்ளி கல்லூரியிலும் பயின்றார். தனது 13 ஆம் வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். முதலில் தனது கல்லூரி அணிக்காக விளையாடி இவர் பின் வோர்செஸ்டர்ஷயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். 1971 ஆம் ஆண்டில் பிர்மின்ஹாமில் நடைபெற்ற போட்டியில் தனது 18 ஆம் வயதில் பாக்கித்தான் அணிக்காக விளையாடினார். ஆக்சுபோர்டுவில் பயின்றபிறகு இவர் 1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய அணியில் இடம்பிடித்தார்.இவர் 1982 முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் தலைவராக இருந்துள்ளார். 1992 இல் பாகிஸ்தான் உலகக் கிண்ணம் வென்றபோது அணித் தலைவராக இருந்தார். இவர் 1992 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 362 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையடி இவர் 3,807 ஓட்டங்கள் எடுத்தார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2010 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் "ஹால் ஆஃப் ஃபேமாக" தெரிந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டில் லாகூரில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தனது தாயின் நினைவாக புற்றுநோயியல் மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார். பின் பெசாவரில் இரண்டாவது மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார். தனது ஓய்விற்குப் பிறகு பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் , வள்ளலாகவும், துடுப்பாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார். 1971 ஆம் ஆண்டில் எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் "புரூடென்சியல் கோப்பைத்" தொடரில் இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். ஆக்சுபோர்டுவில் பயின்றபிறகு இவர் 1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய அணியில் நிலையான இடம்பிடித்தார். 1976-1977 ஆம் ஆண்டுகளில் இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக இம்ரான் கான் திகழ்கிறார் என பிபிசி தெரிவித்தது. ஈஎஸ்பிஎன் நிறுவனத்தின் தரவரிசையில் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களின் வரிசையில் சோபர்ஸ்க்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த யூதரான ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை மதம் மாற்றி, 1995இல் திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான். இந்த அணையருக்கு சுலைமான், காசிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் ஒன்பது வருட மணவாழ்வு மணமிறிவில் முடிந்தது. இதன்பிறகு பி.பி.சி.யில் பணியாற்றிய பிரித்தானிய – பாகிஸ்தானிய வம்சாவளியில் பிறந்த ரேஹம் கான் என்பவரை இரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமனம் ஒரு ஆண்டுக்குள்ளேயே மணமுறிவில் முடிந்தது. பின்னர் 2008 பெப்பரவரியில் தனது ஆன்மிக குரு என்று அதுவரை கூறிக் கொண்டிருந்த புஷ்ரா மணிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம்) என்ற அமைப்பை இம்ரான் கான் 1996இல் தொடங்கினார். இது முதலில் ஒரு சமூக அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. 1999இல் இது அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. 2002 தேர்தலில் மியான்வாலி தொகுதிக்கு இம்ரான் கான் நாடாளுமன்ற உறுப்பினரானார். 2002 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைப் பிடித்த இம்ரானின் கட்சி 2008 தேர்தலை புறக்கணித்தது. 2013இல் நடந்த தேர்தலில் 75 லட்சம் வாக்குகளைப் பெற்றது. 2018 ஆண்டு நடந்த பாக்கித்தான் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக இவரது கட்சி உருவெடுத்தது. இதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 176 வாக்குகளை இம்ரான் கான் பெற்று, பாக்கித்தான் பிரதமராக பொறுப்பேற்றார். கிளென் மெக்ரா கிளென் டொனால்ட் மெக்ரா Glenn Donald McGrath (; பிறப்பு: பெப்ரவரி 9, 1970) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மித விரைவு வீச்சாளர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். அனைத்துக்காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1990 முதல் 2000 ஆகிய ஆண்டுகளில் துடுப்பாட்டங்களில் ஆத்திரேலியா ஆதிக்கம் செலுத்தியதற்கு இவரும் முக்கியக் காரணமாக இருந்துள்ளார். நிலையான வேகத்திலும் துல்லியமான பந்துவீச்சிற்காகவும் ,சிக்கனமாகப் பந்து வீசி இலக்குகளை வீழ்த்துவதற்காகவும் இவர் பரவலாக அறியபடுகிறார். இவரின் காலகட்டத்தில் அபாயகரமான பந்துவீச்சளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளை வீழ்த்திய விரைவு வீச்சாளர்களில் முதல் இடத்திலும் அனைத்துப் பந்துவீச்சளர்களின் வரிசையில் முத்தையா முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளே ஆகியோர்க்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார். மேற்கூறிய அனைத்துப் பந்துவீச்சளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 381 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளார். மேலும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் எனும் சாதனையைப் படைத்துள்ளார். டிசம்பர் 23, 2006 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சனவரி,2007 இல் நடைபெற்ற ஐந்தாவது ஆஷஸ் தொடரோடு இவர் ஓய்வு பெற்றார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தோடு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதினைப் பெற்று ஆத்திரேலிய அணிவெற்றி பெற மிக முக்கியமான நபர்களில் ஒருவராக விளங்கினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் மிகச் சிக்கனமாகப் பந்து விசியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால் இரண்டாவது பருவகாலங்களில் இருந்து அவர் விளையாடவில்லை. மெட்ராசு இறப்பர் பேக்டரி "பேஸ் பவுண்டேசன்" நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கு முன்பாக டென்னீஸ் லில்லீ என்பவர் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இயக்குநராக இருந்தார். இவர் தற்போது மெக்றா "பவுண்டேசனுடைய" துனை இயக்குநராக இருந்து வருகிறார். இவரின் முதல் மனைவி ஜேன் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். மெக்ரா பெப்ரவரி 9, 1970 டப்போவில் பிறந்தார். இவரின் பெற்றோர் பிவர்லி மற்றும் கெவின் மெக்ரா ஆவர். இவர் நியூ சவுத் வேல்ஸ்சில் வளர்ந்து வந்தார். இங்கு துடுப்பாட்டம் விளையாடி வந்த போது இவரின் திறமையை டக் வால்டர்ஸ் என்பவர் கண்டறிந்தார். பின் சதர்ன்லேண்ட் அணிக்காக முதல் துடுப்பாட்டங்களில் விளையாடினார். பின் 1992- 1993 ஆம் ஆண்டுகளில் நியூ சவுத்து வேல்சு புளூசு அணிக்காக விளையாடினார். எட்டு முதல் தரத் துடுப்பாட்டங்களில் விளையாடிய பிறகு இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார். நா. சொக்கன் நா. சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17) என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. இவரது நூல்கள் சில ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எஸ். எஸ். கணேசபிள்ளை எஸ். எஸ். கணேசபிள்ளை (சூன் 28, 1937 - ஆகத்து 30, 1995) வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகாசிரியருமாவார். யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை 'வரணியூரான்' என்று வைத்துக்கொண்டார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார். இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர். இவர் எழுதி நடித்த புளுகர் பொன்னையா, விளம்பர நிகழ்ச்சியாக ஒருவருடம் ஒளிபரப்பான ‘இரைதேடும் பறவைகள்’ நாடகம் ஆகியன பலரது அபிமானத்தைப் பெற்றது. இரைதேடும் பறவைகள் நாடகம் பின்னாட்களில் புத்தக வடிவில் வெளிவந்தது. 1995 இல் நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு ‘தாத்தாவின் ஆசை’ என்ற நாடகத்தைக் கனடாவில் பல பாகங்களிலும் நடத்தினார். கணேசபிள்ளை 1995 இல் கொழும்பில் காலமானார். "வரணியூரான்" என்ற பெயரில் சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற தேசிய தினசரிகளில் எழுதியிருக்கிறார். இவரது கலைத்திறமையைப் பாராட்டி கமலாலயம் அமைப்பு ‘கலைத்தென்றல்’ பட்டத்தை வழங்கி கெளரவித்தது. வசந்தா வைத்தியநாதன் வசந்தா வைத்தியநாதன் (1937 - மார்ச் 14, 2018) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகர். இவர் வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்தவர். ஆலயத் திருவிழாக்களின் நேரடி வானொலி வர்ணனைகளிலும் பங்குபற்றியவர். ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் நூலாசிரியராகப் பணியாற்றியவர். வசந்தா வைத்தியநாதன் தமிழ்நாடு, மயிலாடுதுறையில் பிறந்தவர். யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதசர்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். வசந்தா வைத்தியநாதன் 2018 மார்ச் 14 அன்று காலையில் தனது 80வது அகவையில் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி (7 ஜனவரி, 1925 – ஜூன் 15, 2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்துச் சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தார். "சிவத்தமிழ்செல்வி" என்று அழைக்கப்பட்டு வந்தார். ஜனவரி 7, 1925 இல் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார். தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார். யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு முதன்மையான பங்குண்டு. "பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் தொடங்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார். ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவுக்காக "சிவத்தமிழ்ச் செல்வி" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் "திருவாசகக் கொண்டல்", "செஞ்சொற் செம்மணி", "சிவஞான வித்தகி", "துர்க்கா புரந்தரி" போன்ற பதினைந்திற்கும் மேற்பட்ட பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார். தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன. தெல்லிப்பழையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டதோடு சித்திரத் தேரும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. அவை மட்டுமன்றி மண்டபங்களும், அறச்சாலைகளும், நந்தவனமும், தீர்த்தத் தடாகமும் என சிறந்த அமைப்புக்களோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணியின் நிறுவனமாகவும் உருவாக்கினார். ஆலய வளாகத்தில் ஆதரவற்ற சிறுமிகளுக்கென "துர்க்காபுரம் மகளிர் இல்லம்" என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவிச் சேவையாற்றி வந்தார். பசித்துவரும் ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்க்கவும், தொண்டர்தம் பசியாற்றவும் "அன்னபூரணி அன்னதான மண்டபம்" அமைத்தார். அத்துடன் கல்யாண மண்டபம் ஒன்றை நிறுவிக் குறைந்த செலவில் திருமணங்களைச் செய்ய உதவினார். ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதியர்களுக்குக் கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்துத் தொண்டாற்றினார். திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி சில வாரங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15, 2008 நண்பகல் 12.15 மணியளவில் காலமானார். 16 ஜூன் மாலை 4:00 மணிக்குத் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்கு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி இரங்கல் தெரிவித்திருந்தார். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் ஆதிகோணநாயகர் கோயில் அல்லது ஆதிகோணேஸ்வரம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிமீ தொலைவில் உள்ள தம்பலகாமத்தில் உள்ள கோயில். வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும், இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அது மிகையாகாது. போர்த்துக்கீசர் காலத்தில் திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் போத்துக்கேயர் அழித்தபோது அங்கிருந்த சில விக்கிரகங்களைக் காப்பாற்றுதவற்காக குருமார் மீட்டு எடுத்தனர். பின்னர் இந்த விக்கிரகங்களை தம்பலகாமத்தில் பிரதிட்டை பண்ணியதன் மூலம் உருவாக்கப்பட்டதே இந்தக் கோவிலாகும். குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கிபி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும், காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையில் ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர். இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார். மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது. பரீட்சை மீதி "ஐ'பரீட்சை மீதி (trial balance) என்னும் இருப்பாய்வு"' என்பது கணக்குப் பதிவியல் செய்முறையில் ஒரு வேலைத்தாள் ஆகும்.இப் பரீட்சை மீதியானது குறிப்பிட்ட காலத்தில் வியாபார நிறுவனமொன்றால் பாரமரிக்கப்படும் சகல கணக்கியல் பேரேடுகளின் நிதி நி‌லைமையினை ஒரே பார்வையில் விளம்பும் சாரமாக காணப்படும். ஒவ்வொரு நிதிக்காலதின் முடிவின் பொழுதும்,நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் முன்பாகவும்,கணக்கியல் பதிவுகளின் பிழையின்மையினை உறுதிப்படுத்தவும் பரீட்சை மீதி தயாரிக்கப்படும். =ஆ=பரீட்சை மீதி மாதிரி== பரீட்சை மீதில் கணக்கியல் பேரேடுகளில் மீதி வரவாக இருப்பவை வரவு நிரலிலும்,மீதிகள் செலவாக இருப்பவை செலவுப் நிரலிலும் பதியப்படும். முடிவில் வரவு செலவு இவற்றின் மொத்த கூட்டுத்தொகையும் சமப்படும்,அவ்வாறு சமப்படாவிட்டால் பேரேட்டு பதிவுகளில் வழுக்கள் இருப்பதாக கொள்ளப்படும்.இத்தகைய தன்மையால் பரீட்சை மீதியானது ஏடுகளின் துல்லியத்தன்மையினை உணர்த்தும் ஒர் குறிகாட்டியாக அமைகின்றது.பரீட்சை மீதி சமப்படுவதை மாத்திரம் கருத்தில் கொண்டு பேரேடுகளின் வழுவற்றதன்மை கொண்டதாக உறுதியாக கூறமுடியாது.எடுத்துக்காட்டாக, இடம்பெறும் வியாபார ஊடுசெயலொன்றினை பதியும் போது வரவினை செலவாகவும்,செலவினை வரவாகவும் பதிந்தால் இங்கு பரீட்சை மீதி சமப்படும் எனினும் இங்கு பதிவுமுறை பிழையாகும். திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில் திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோவில் சுமார் 350 வருடம் பழமை வாய்ந்தது. இவ்வாலயம் திருகோனமலைப் பட்டினத்தில் சிவபுரி என்னுமிடத்தில் திருஞானசம்பந்தர் வீதிக்கருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆலய்த்தில் காசியில் இருந்து திருகோணமலை வந்த சந்நியாசி ஒருவர் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த்தால் காசி விஸ்வநாதர் (சிவன்) என்ற பெயரைப் பெற்றது. இவ்வாலயத்தின் திருக்குடமுழுக்கு வைபவங்கள் 1890, 1898, 1957 ஆண்டுகளில் நடைபெற்றது. 1939 இல் நடைபெற்ற இரண்டாம் உலகமகாயுத்ததில் ஜப்பானியரின் குண்டுவீச்சினை அடுத்து இந்த ஆலயம் கவனிப்பாரற்றுப் பூட்டிக்கிடந்தது. பின்னர் மீண்டும் இந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திருப்பணிக்கு சிவன் கோயில் ஸ்ரீ நடராஜர் சபையினர் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்துச் செவ்வனே நிறைவேற்றினார்கள். இப்புராதன கோயிலானது 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டபோதும் புனருத்தாரணம் 1985 1990 களில் மீளவும் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் காலதமாகியது. இக்கோயில் முழுமையாக மீள் புனருத்தாரணம் செய்யப்பட்டு 6 ஜூன், 1999 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தை கட்டிக் காத்தவர்கள் நித்திய நைமித்திய கருமங்கள் எதுவித குறைபாடுகளும் இன்றி நடைபெறுவதற்காகக் காணிகளை மானியமாக வழங்கியுள்ளனர். இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம் ஆகிய மண்டபங்களை உடையதாக அமைந்திருக்கின்றது. மகாமண்டபத்தில் பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரர், பிரதோஷமூர்த்தி போன்ற உற்சவத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இவ்வாலய்த்தில் ஆறுகால நித்திய பூசையும், ஆனி மாதத்தில் உத்தரத் திதியைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்றுவருகின்றது. நவராத்திரி, சிவராத்திரி, கௌரிநோன்பு, சோமவாரத் திருவிழா, திருவெம்பாவை, பிரதோஷத் திருவிழாக்கள், நடேசரபிஷேகங்கள், வருடப்பிறப்பு முதலிய நித்திய பூசைவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. திருவெம்பாவை காலத்தில் திருவாதவூரடிகள் புராணம் படித்து பயன்சொல்லும் வழமையானது. மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பு வாவி ("Batticaloa lagoon") இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாவியாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன. சண்டேசுவர நாயனார் சண்டேசுவர நாயனார் என்பவர் சிவபெருமானின் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு லிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார். அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேசுவர் என்றும் அழைக்கின்றனர். சோழநாட்டின் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் எனும் ஊரில் அந்தணரான எச்சத்தன் - பவித்திரை தம்பதிகளின் மகனாக பிறந்தார். அவரை விசாரசருமா என்று அழைத்தனர். அவருக்கு ஏழாம் வயதில் உபநயனம் செய்யப்பட்டது. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என வழிபட்டார். திடலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் விசாரசருமர். அப்போது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையர், பசுக்களை கொம்பால் அடித்தார். அதனால் கோபம் கொண்ட விசாரசருமர் அதனை தடுத்தார். தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை ஏற்றார். நன்கு மேய்க்கும் வல்லமை பெற்றார். அதனால் பசுக்கள் அதிக பாலை தந்தது. அந்த பாலை மணலினால் ஆன சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தார். அதனால் பால் குறைந்தது பசுக்களின் சொந்தக்காரரர்கள் விசாரசருமர் செய்யும் செயலை வீண் என்று நினைத்தனர். விசாரசருமரின் தந்தையிடம் சென்று மணலில் பாலினை ஊற்றி வீணாக்குகிறான் என்று புகார் தந்தனர். தந்தையார் எச்சத்தன் அனைவரிடமும் மன்னிப்புக் கோரி, தன்னுடைய மகனை கண்டிக்க சென்றார். விசாரசருமர் மணலில் இலிங்கம் செய்து அதற்கு பூக்களை சூடி பாலால் அபிசேகம் செய்து கொண்டிருந்தை கண்டார். எச்சத்தன் விசாரசருமரை அழைத்தும் பலனில்லாமல் போக கோபத்தில் அபிசேக பாற்குடத்தினை எட்டி உதைத்தார். சிவபெருமானுக்கு அபிசேகம் செய்த வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவாபாராதம் செய்ததை விசாரசருமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே கையில் கிடைத்த எடுத்து தந்தையின் கால்களை நோக்கி வீசினார். சிவனருளால் அது மழுவாக மாறி எச்சத்தனின் கால்களை வெட்டியது. அதனை கண்டுகொள்ளாமல் விசாரசர்மர் சிவபூஜை செய்யத் தொடங்கினார். அவரின் செயலால் சிவபெருமான் உமையோடு தோன்றினார். விசாரசர்மர் அவர்களை வணங்கினார். விசாரசர்மரை தன்னுடைய கணங்களின் தலைவராக்கினார். அத்துடன் சண்டீசன் எனும் பதவியான சிவபெருமானின் ஆடைக்கும், பூசை பொருட்களுக்கும் உரியவரானாக நியமித்தார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்று அவர் தான்சூடியிருந்த கொன்றை மலர்மாலையை விசாரசருமருக்கு சூட்டினார். எச்சத்தனும் உயிர்ப்பெற்று சிவபெருமானை அடைந்தார். சண்டேசுவர நாயனாருக்கு தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குருபூசை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் சண்டிகேசுவரர் சன்னதி, கற்பக கிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது. பொதுவாக கோமுகிக்கும், கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இந்த சண்டிகேசுவரர் சன்னதியை சுத்திவருதல் கூடாது என்பதற்காக சில சிவாலயங்களில் சன்னதியை யாரும் சுற்றாத வண்ணம் சிறு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. விசாரசருமருக்கு சண்டீசர் பதவியை தருகின்ற சிவபெருமான் சிற்பம் கங்கை கொண்ட சோழேசுவரம் சிவாலயத்தில் உள்ளது. இதில் சண்டீசர் கீழே அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு உமையாளுடன் இருக்கும் சிவபெருமான் தன்னுடைய கொன்றை மாலையை சூடுவதாகவும் அமைந்துள்ளது. கொன்றை மாலை சிவபெருமானுக்கு உரியதாகும். சிவபெருமான் சண்டீசர் பதவியை தரும்போது தன்னுடைய மலர்மாலை சூட்டி, தன்னுடைய பூசைப் பொருளுக்கு உரியவன் என்று கூறுகிறார். கருவறைக்குச் செல்லும் வடக்கு வாயில் படியில் இந்த சிற்பம் உள்ளது. இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் சண்டீசர் வரலாறு நான்கு வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது. ரோமானிய நாடக வரலாறு ரோம் நகரில் கி.பி. 240 ஆம் ஆண்டு முதல் சீரான நாடகங்கள் நடைபெற்றன. நாடகப் பின்னணிக் காட்சியமைப்பு எதுவுமின்றி தளத்தின் பின்னணியிலிருந்து சுவற்றில், சிலைகள் போன்று வரையப்பெற்று நாடகங்கள் நடிக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு காலத்து நடிப்புக்கலை வடிவங்களினைப் பற்றிய குறிப்புகள் இல்லாததும் குறிப்பிடத்தக்கது. ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளிற்கு மேலாக ரோமானிய நாடகங்கள் மறைந்திருந்தன. இக்காலத்தின் பின்னர் நானூறு ஆண்டுகள் கழித்து கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் காலத்தில் கிறித்துவ சபைகள் ரோமானிய நாடக அரங்குகளினைப் பயன்படுத்தியதனால் அரங்கச் செயற்பாடுகள் வளர்ந்தன. ரோமானிய நாடகங்கள் புத்துயிர் பெற்றன. மேசை மேசை கணினி குறிக்கலாம்: நாற்காலி நாற்காலி (Chair) என்பது அமர்வதற்காக உருவாக்கப்பட்டது.பொதுவாக, ஓர் இருக்கையும், சாய்வதற்கேற்ற பின்பகுதியையும், நான்கு கால்களையும் கொண்டிதாக அமைக்கப்பட்டிருக்கும். கைபிடிகளையும் கொண்டிருக்கலாம். சாயும் பின்பகுதியற்றவை புட்டுவம் என்றும் இலங்கையில் அழைப்பர். உடல் இயக்கவியல் அறிவியல் தத்துவம் பல கொண்டு, தற்காலத்தில் இவை உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், அதிக நேரம் இருக்கையில் அமர்வோருக்கு, பின்னாளில் பல்வேறு உடலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முதுகு தண்டிலும், வயிற்றிலும் நோய்கள் உருவாகின்றன. அவரவர் உடலுக்கு ஏற்றவாறு, பணிக்கு தகுந்த படி நாற்காலியை பயன்படுத்துதல் சிறந்த மருத்துவ ஆலோசனையாகக் கூறப்படுகிறது. கட்டில் கட்டில் (Bed) என்பது நித்திரை கொள்வதற்கான அல்லது ஓய்வெடுப்பதற்கான ஒரு தளபாடம் ஆகும். கட்டில்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகின்றன. கட்டில்கள் சொகுசாக இருப்பதற்காக மெத்தைகள் பயன்படுகின்றன. கட்டிலின் சமதளமான பகுதியானது கயிற்றினாலோ, மரத்தினாலோ, அல்லது இரும்பினாலோ செய்யப் பட்டு இருக்கலாம். தலையணை தலையணை ("Pillow") என்பது தலையை ஓய்வாக வைத்திருப்பதற்குப் பயன்படும் சிறு சாதனமாகும். வழமையாக மென்மையானது. பொதுவாகக் கட்டிலில் தூங்கும் போது தலைக்கு அணையாகப் பயன்படுகிறது. தலையணையின் உள்ளே ஆரம்ப காலத்தில் வைக்கோல் பயன்பட்டது. இப்போது பஞ்சு போன்றவை பயன்படுகின்றன. இவற்றை உள்ளே வைத்துத் துணி அல்லது பட்டினால் ஆன உறையினால் மூடியதாக தலையணை இருக்கும். கரண்டி கரண்டி ("Spoon") என்பது சாப்பிடவும் சமையலிலும் பயன்படும் ஓர் கருவி. கரண்டிகள் அவற்றின் தேவைக்கேற்ப பல அளவுகளிலும் உள்ளன. நீர்ம உணவுகள், குளிர்களி ("Ice Cream") போன்றவற்றை உண்பதற்குக் கரண்டிகள் அவசியமானவை. தேக்கரண்டியும் மேசைக்கரண்டியும் சமையல், மருந்துத் தேவைகளில் அளவு கருவிகளாகவும் பயன்படுகின்றன. மருந்துகளை அளக்க, அளவுக்கரண்டிகள் தனியாக துல்லியமாக செய்யப்படுகின்றன. தேக்கரண்டி (teaspoon) என்பது 5 மில்லிலிட்டர் (mL) அளவாகும். கத்தி கத்தி () (Knife) என்பது வெட்டுவதற்குப் பயன்படும் கருவி அகும். வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்டதாகக் கத்திகள் அமைந்திருக்கும். கற்காலத்திலிருந்து கத்திகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகிறது. நவீன கருவிகளின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. தேவைகளைப் பொறுத்துப் பல அளவுகளிலும் கத்திகள் தயாரிக்கப்படுகின்றன. கத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. முற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது. மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள கத்தியில் கத்தியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சாதாரணமானது. மற்றொன்று மடிக்கக் கூடிய வகையைச் சார்ந்தது. கைப்பிடிக்கும் வெட்டும் பகுதிக்கும் இடையில், பாதுகாப்பான வளைவும் இருக்கும். இது கை நழுவி கூர்முனையில் படாமல் இருக்க உதவுகிறது. பிளேடுகளை விதவிதமான பொருட்களில் செய்யலாம். கார்பன் ஸ்டீலில் செய்தால் மிகக் கூர்மையாகவும், கூர்ப்படுத்த எளிதாகவும் இருக்கும். ஆனால், விரைவில் துரு பிடிக்கக் கூடியது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், குறைந்தளவு கூர்மையானதாக இருந்தாலும், துரு பிடிப்பதில்லை. இவை இரண்டையும் கலந்து செய்யப்படும் பிளேடுகளும் உண்டு. தைட்டானியம் பிளேடுகள் எடை குறைந்தவை, எளிதில் வளையும் தன்மை கொண்டவை. எனினும், குறைந்தளவு கூர்மை கொண்டவை. பீங்கான் பிளேடுகள் குறைந்த எடையுடன், அதிக கூர்மையும் கொண்டவை, ஆனால், கீழே விழுந்தால் உடைந்துவிடக் கூடியன. பிளாஸ்டிக் பிளேடுகள் குறைந்தளவு கூர்மையைக் கொண்டவை. இவற்றை எளிதில் அகற்றிவிடலாம். நிலையான கத்தியில், பிடிமானம் பலமானதாக இருக்கும். பிளேடு நகர முடியாதபடி பிணைக்கப்பட்டிருக்கும். மடிக்கக் கூடிய கத்தியில், பிளேடு உள்ளே மறைத்து வைக்கும்படி அமைப்பிருக்கும். இவற்றைத் தவறுதலாக கையாண்டால், பிளேடால் ஆபத்து நேரும் என்பதால், பிளேடை வெளியில் எடுக்க உத்திகள் இருக்கும். இவற்றில் சில: கைப்பிடிகள் வெவ்வேறு மூலப் பொருள்களில் இருந்து செய்யப்படுகின்றன. இறுக்கமான பிடிமானத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகின்றன. கல், யானை தந்தம், விலங்குகளின் கொம்பு, ஆகியவற்றில் இருந்து கைப்பிடி செய்யப்படுவதுண்டு. கத்தி, ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. கத்திச் சண்டையில் முக்கியமான ஆயுதம் இதுவே. சமையலுக்காக, பொருட்களை அருக்க கத்தி பயன்படும். கத்தி, கருவிகளுள் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.\ மூடநம்பிக்கையிலும், சடங்குகளிலும் கத்திக்கு முக்கியத்துவம் உள்ளது. குழந்தை பிறக்கும்போது கட்டிலுக்கு அடியில் கத்தியை வைத்தால், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலி குறையும் என நம்புகின்றனர். . கத்தியை படுக்கைக்கு அருகில் வைத்தால் பேய், பிசாசு அண்டாது என நம்புவோரும் உளர். விலங்குகளை பலுகொடுக்கும்போதும், கத்தியை வைத்து வணங்குவர். கிரேக்கத்தில், கத்தியை தலையணைக்கு அருகில் வைத்தால், கெட்ட கனவுகள் தவிர்க்கப்படும் என்றும் நம்புகின்றனர். . இரும்பால ஆன கத்தியை பிடித்தால், தற்காலிகமாக வாதம் நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உடலில் கத்தியால் கீறிக் கொண்டால், கடவுளின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கத்தியைப் பயன்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள் சட்டங்களைக் கொண்டுள்ளன. கத்தியின் சில பயன்பாட்டிற்கு தடையும், மீறினால் தண்டனையும் வழங்கப்படும். கனடாவில், சில வகை கத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பயங்கர ஆயுதங்களுக்கு தடை உண்டு. போலந்தில் கத்திகள் மீது தடை இல்லை. கத்திகளை, வாங்கவும், விற்கவும், பொதுவெளியில் கொண்டு செல்லவும் உரிமை உண்டு. கோடரி கோடரி ("Axe") (மாற்று வழக்குகள்: கோடாரி, கோடாலி) பன்னெடுங்காலமாகப் பயன்பட்டுவரும் ஒரு கருவியாகும். மரத்தை வெட்ட, பிளக்க, செதுக்க கோடரி பயன்படுகிறது. முற்காலத்தில் போர்களங்களில் ஒரு முக்கிய ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரிய வெட்டும் பகுதியையும் கொண்டிருக்கும். வெட்டும் பகுதி இரு சாய்தளங்கள் கூடியவாறு இருந்து ஓர் ஆப்பு அல்லது முளை போல் பயன்படுவதால் இது ஓர் எளிய இயந்திரம் ஆகும். தொன்முது காலங்களில் (~ கி.மு 6000) கோடரிகள் மரக் கைப்பிடியும் கற்தலையும் கொண்டிருந்தன. இப்போது இரும்பு, எஃகுப் போன்ற உலோகங்கள் (மாழைகள்) கோடரி உற்பத்தியிற் பயன்படுகின்றன. மண்வெட்டி மண்வெட்டி என்பது மண்ணை வெட்டப் பயன்படும் ஓர் வேளாளர் கருவி ஆகும். இது சற்றே வளைந்த செவ்வகமான வடிவில் மாழையால் (உலோகத்தால்) செய்த வெட்டும் தகடுடன் (அல்லது அலகு) கைப்பிடி பொருத்திய கருவி ஆகும். இதனைப் பயன்படுத்த கைப்பிடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, கால்களை சற்று விரித்து வைத்துக்கொண்டு குனிந்து வெட்ட வேண்டும். பெரும்பாலும் மண்வெட்டி நீர் பாய தாழ்வான கால்வாய்கள் போன்றவற்றையும் சிறு குழிகளையும் வெட்டவும், களை மிகுந்த பகுதிகளை வெட்டவும் பயன்படும். கட்டிட வேலைகளில், பைஞ்சுதை (சிமென்ட்டு), மணல் இவைகளை சேர்ந்து கலக்கி மருக்கவும் பயன்படுகின்றது. மண்ணை அள்ளிப் போட்டு குழியை நிரப்பவும் பயன்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மண்வெட்டி இன்றும் பரவலாக பயன்படுகிறது. இந்நாடுகளில் தோட்டச் செய்கையில் இதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் புகழ்பெற்ற மண்வெட்டிகள் தயாரிக்கும் இடங்களில் கீரமங்கலமும் ஒன்றாகும். மண்வெட்டிகளின் பயன்பாட்டைப் பொறுத்து அவற்றின் வடிவமைப்புக்களிலும் வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக வெட்டும் தகடு, கைப்பிடி என்பவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பின்பகுதி அகன்றும், குறுகலான முன்பகுதி வளைவாகவும் அமைந்த வெட்டும் தகடுகளுடன் கூடிய மண்வெட்டிகள் வாய்க்கால்கள் வெட்டுவது, நீர் பாய்ச்சுவது போன்ற தோட்ட வேலைகளுக்கு ஏற்றது. பொதுவாக இதன் கைப்பிடி நீளமாக அமைந்திருக்கும். செவ்வக வடிவாகவும் நேரான முன்பகுதியுடனும் கூடிய வெட்டும் தகடுகள் கொண்ட மண்வெட்டிகள் கட்டிட வேலைகளிலும், சாலை அமைப்பு வேலைகளிலும் பயன்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் முதல் வகை மண்வெட்டியைத் தோட்ட மண்வெட்டி என்றும், மற்றதைத் தெருவேலை மண்வெட்டி என்றும் அழைப்பார்கள். வெட்டும் தகட்டைக் கைப்பிடியுடன் பொருத்தும் விதத்திலும் மண்வெட்டிகளிடையே வேறுபாடுகள் உள்ளன. சிலவகை மண்வெட்டிகளில் வெட்டும் தகட்டின் பின்பகுதியில் உருளை வடிவான துவாரம் கொண்ட அமைப்பு இருக்கும். இதனுள் கீழ் முனை அகன்றும் மேல் முனை ஒடுங்கியும் உள்ள கைப்பிடி செலுத்தப்பட்டு இறுக்கப்படும். வேறு சில வகைகளில், வெட்டும் தகட்டுடன் பொருத்தப்பட்டுள்ள வளைந்த இரும்புக் கம்பியொன்று கைப்பிடியின் கீழ் முனையில் உள்ள துவாரம் ஒன்றினூடு செலுத்தப்பட்டுப் பொருத்தப்படும், கைப்பிடி நெடுக்கு வாக்கில் பிளவுபடுவதைத் தடுப்பதற்காக கைப்பிடியில் பொருத்தும் இடத்திற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு இரும்புப் பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும். மண்வெட்டி தயாரிக்கும் தொழிலின் அடிப்படைக் கூறுகள் குறுங்கொல்லு (இரும்பை சிறிது சிறிதாக அடித்து நீட்டுவது) மற்றும் நெடுந்தச்சு (மண்வெட்டிக்குத் தேவைப்படும் மரத்தின் நீளத்தை சற்று கூடுதலாகவே வைத்து, தச்சு வேலை செய்வது) ஆகும். செங்கல் செங்கல் ("Brick") என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது. கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்களை மெசப டோமியாவில் (தற்போதைய ஈராக்) கி.மு 4000 - ம் வாக்கில் உருவம் பெற்றது. செங்கல்லின் நியம அளவு = 65mm x 102.5mm x 215mm செங்கல்லின் தோற்ற அளவு = 75mm x 112.5mm x 225mm பொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது. 1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை
2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை
3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை
4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை
5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக பொருத்தமான களித் துணிக்கைகள் 0.075 mm அளவை விட குறைவாக இருக்க வேண்டும். களியுடன் இயற்கையாகவே சேர்ந்து இருக்கக்கூடிய மணலை இது குறிக்கும். களியுடன் சேர்ந்து இருக்கக் கூடிய மணல் 20%-30% ஆக காணப்பட வேண்டும்.
துண்டு துண்டு (இலங்கை வழக்கு - துவாய்) (Towel) என்பது துடைக்கவும் உலர்த்தவும் பயன்படும் துணியாலான பொருளாகும். அது ஈரத்தன்மையை உறிஞ்ச வல்லது. குளித்த பின் உடல் துவட்டுவதில் துண்டு நாளாந்தம் பயன்படுகின்றது. கை கழுவிய பின் துடைக்கச் சிறு துண்டுகள் பயன்படுகின்றன. சாளரம் சாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம். மெத்தை மெத்தை என்பது படுக்கப் பயன்படும் மென்மையான பொருளாகும். பொதுவாக கட்டில்களில் பயன்படுகிறது. பல அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கிறது. பஞ்சு போன்ற இயற்கைப் பொருட்கள் அல்லது செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லி பூச்சி கொல்லி அல்லது பூச்சி நாசினி என்பது, மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பதார்த்தத்தையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பதார்த்தங்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் குடம்பிகளையோ அழிக்கவல்லவை. பூச்சிக் கொல்லிகள் வேளாண்மை, மருத்துவம், தொழில்துறை ஆகியவற்றிலும், வீடுகளிலும் பயன்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் வேளாண்மை உற்பத்தியின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய காரணம் இதன் பயன்பாடே என நம்பப்படுகின்றது. ஏறத்தாழ எல்லாப் பூச்சிக்கொல்லிகளுமே வாழ்சூழல் முறைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கக் கூடியவை. கரிம பூச்சிக் கொல்லிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பிஎச்சி என்பதே முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லியாகும். ஆனால் இம்மருந்துகளையும் எதிர்த்து பூச்சிகள் வாழ் முற்பட்டன. அத்துடன் இம்மருந்துகள் நிலத்தில் தங்கி நீர்நிலைகளில் சேரத்தொடங்கின. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டிடிரி பெரும்பாலும் மலேரியாவைக் கட்டுப்படுத்தவும் பயிர்த்தொழிலில் கேடு விளைவிக்கும் உயிரினங்களைக் கொல்லவும் பயன்படுத்தப்பட்டது. பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் பொருள்களாகும். இவை சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் பிரச்சினையையும் கிளப்பியிருக்கிறது. சில வேதிப் பொருள்கள் காய்கறிகளிலுள்ள திசுக்களில் சேர்ந்து மனிதரையும் பாதிக்கக்கூடிய அளவு நச்சுத்தன்மையை அடைகின்றன. இவ்வாறான நச்சுப்பொருள்கள், உணவுச் சங்கிலியில் செறிவடைந்து வருகின்றன. மேலும் சில பூச்சி மருந்துகள் இரண்டாம் நிலப் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடுகின்றன. உணவுச் சங்கிலி உணவுச் சங்கிலி என்பது, ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. தாவரங்கள் அவற்றின் உயிரணுக்களில் இருக்கும் பச்சையத்தின் உதவியால், ஒளித்தொகுப்பு என்னும் செயல்முறை மூலம் காற்றில் உள்ள கார்பனீரொக்சைட்டை எடுத்துக் கொண்டு நிலத்திலிருந்து தண்ணிரையும், சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயரிக்கின்றன. அதனால் இவை முதன்மை உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தோ அல்லது வேறு வழியில் உணவைப் பெறும் உயிரினங்கள் நுகர்வோர் ஆகின்றன. நுகர்வோர்கள் உணவை எடுத்துக் கொள்ளும் முறையில் மூன்றுவகையாக பிரிக்கலாம். அவை: இவ்வாறு தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவானது அல்லது ஆற்றலானது ஒரு மட்டத்திலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வதே உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது. உணவுச் சங்கிலியானது ஒரு நேர்கோட்டில் இருக்கும் உணவுத் தொடர்பைக் குறிக்கும். இவ்வாறான பல்வேறு உணவுச் சங்கிலிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகளை உள்ளடக்கியதே உணவு வலை () எனப்படும். எ.கா: புல்--->மான்--->சிங்கம் ரி. ராஜேஸ்வரன் ரி. ராஜேஸ்வரன் மேடை, வானொலி, திரைப்பட நடிகர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றியவர். இலங்கையில் தயாரான 'டாக்சி டிறைவர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர். சானாவின் தயாரிப்பில் வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்தவர். வேளாண் கருவிகள் வேளாண் கருவிகள் கருவிகள் எனப்படுபவை வேளாண்மையை இலகுவாக்கப் பயன்படும் கருவிகளாகும். மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு வகையான கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளான். செ. சண்முகநாதன் சானா என்று அழைக்கப்படும் எஸ். சண்முகநாதன் (சனவரி 11, 1911 - 1979) இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர். சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார். சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். "சிலோன் சண்முகநாதன்" என்ற பெயரிலேயே நடித்திருந்தார். தேவகி என்ற திரைப்படத்தில் நட்டுவனார் வேடத்தில் நடித்தார். பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை ('Transmission Control Protocol') இணைய விதிமுறைகளை மட்டும் பயன்படுத்தி தரவுகளை பரப்புவதை (transmit) சீர்படுத்தும் முறை. இணைய விதிமுறைகள் மூலம் பரப்பு செய்யும் பொழுது சில இலக்க உறை தரவுகள் துலைந்தும், சில கால காலதாமதமும் பெறப்பட்டன. இதனால் எழும் தவறுகளை சீர் செய்வதற்கு பரப்புகை கட்டுப்பாடு விதிமுறைகள் (Transmission Control Protocol) ஏற்றுக்கொள்ளப்பட்டன. பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை தகுந்த கால கட்டுப்பாட்டுக்குள், தரவுகளைத் துலைகாமல், தேவையற்ற மீள் பரப்பு செய்யாமல் தகவல்களை பரப்புவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. பரப்புகை கட்டுப்பாடு விதிமுறை அடிப்படையில் இணைய விதிமுறைகளை பயன்படுத்தியே தகவலை பரப்பு செய்யும். பரப்புகை கட்டுப்பாடு விதிமுறை தரவு இணைய விதிமுறை (Internet Protocol) தரவுகளின் தகவலாக பரப்பு செய்யப்படும் (data). ஒரு முனையில் இருந்து மற்று முனைக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்பு, இ.வி (IP) தகவலை கொடுக்கும். பொதுவாக இணைய விதிமுறைக்களும் (Internet Protocol) பரப்புகை கட்டுப்பாடு விதிமுறைகளும் இணைந்தே இணையத்தில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் திசைவித்தல் திசைவித்தல் ("routing") எனப்படுவது இணையத்தில் தகவல் பொதிகள் எந்த திசையில் வலைப் பாதைகள் உடாக பயனிக்கவேண்டும் என்று நெறிப்படுத்தல் ஆகும். திசைவித்தல் திசைவியின் மென்பொருட்களால் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு. குறுகிய, வேகமான, சிறந்த பாதையை கண்டுபிடித்து அந்த திசையில் பொதியை திசைவித்தல் வேண்டும். இரண்டு வகையான திசைவித்தல் வழிமுறைகள் உண்டு. அவை static மற்றும் dynamic ஆகும். வேறு அடிப்படைகளிலும் திசைவித்தல் முறைகளை வகைப்படுத்தலாம்; எ.கா and . திசைவி மிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல் கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல் திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல் ("Open Systems Interconnection model", OSI model) என்பது வலைப்பின்னலின் போது மென்பொருள் வன்பொருட்களின் வரையறையில் தங்கியிருக்காது ஏதாவது ஒரு வித்தியாசமான தளங்களில் இருந்து தொடர்பாடலுக்கு இடமளிக்கும் முறைமை ஆகும். இது பன்னாட்டு வணிகத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் வடிவமைப்பாகும். முக்காலங்களில் தொடர்பாடல் பாரிய கணனிகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. அக்கணனிகளுடன் வேறு பல உபகரணங்கள் பல இணைக்கப்பட்டன.வலைப்பியன்னலின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக அச்செயற்பாடுகளை பகுதிகளாக பிரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. முக்காலத்தில் கணனி வலை முறைமைகளின் தொடர்பாடல் வன்பொருட்களின் வரையறையில் தங்கியிருந்தது போலவே அரச சார்பிலோ/ தனியார் கணனி விற்பனையாளர்களாலோ பரவலாக அளவில் வலையமைப்பு செய்யப்பட்டது. இவ்வலைகளில் தொடர்பாடலில் பிரச்சினை எழுந்ததால் பாெது வலைப்படுத்தலில் முக்கியத்துவம் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக ஜெனீவாவின் சர்வதேச தர நிர்ணயத்தின் மூலம் திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வடிவமைப்பு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணனியு் வேறொரு வலையமைப்பில் உள்ள கணனியுடன் தொடர்புபட்டு தகவல்களை பரிமாற்றும் முறை இச் சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் வடிவமைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது. இது 07 அடுக்குகளினாலான ஒப்பீட்டு வடிவமைப்பு ஆகும். 'தடித்த எழுத்துக்கள்'தடித்த எழுத்துக்கள் திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வடிவமைப்பு வலையமைப்பின் 07 அடுக்குகள்: தொடர்பாடலின் போது இரு முறைமைகளிற்கிடையில் இடைமுகத்தொடர்பு அடுக்குகள் காணப்படும். அனுப்புபவர் பெறுபவருக்கு தரவுகளை அனுப்பும் போது அனுப்பும் முனையில் இருந்து தரவுகள் ஏறுவரிசையாக செல்லும். அதாவது பிரயோக அடுக்கில் இருந்து பெளதிக நிலை அடுக்கிற்கு செல்லும். பெறுபவருக்கு தரவுகள் கிடைக்கும் போது அவை இறங்கு வரிசையில் செல்லும். அதாவது பெளதீக நிலை அடுக்கில் இருந்து பிரயோக அடுக்கிற்கு செல்லும். பயன்முறை அடுக்கு ("application layer 7") என்பது OSI MODEL ல் மேல்மட்டத்தில் உள்ளது. பிரயோக மென்பொருட்கள் வலையுடன் இடைத்தொடர்பை ஏற்படுத்தும் விதத்தை காட்டும். இது சேவையின் தரம் , தொடர்பாடல் சோடி என்பவற்றை அறிந்து கொண்டு பயனரின் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும். பயனரின் அடையாளம் , தனித்துவம் மற்றும் தரவுகள் அமைந்திருக்கு்ம் முறை என்பவற்றை கருத்திற் கொண்டு இயங்குகின்ற இவ்வடுக்கு பிரயோகத்திற்கு விசேடமானது. கோவை பரிமாற்ற சேவைகள், மின்னஞசல் போன்ற சேவைகள் இவ்வடுக்கில் அடங்கும். இவ்வடுக்கில் சேரும் நெறிமுறைகள் : தரவுக் குறிப்பீட்டு அடுக்கு ("Presentation Layer 6") தரவு சார்பான முன்வைப்புகள், பரிவர்த்தனைகள், குறியீடுகள் போன்றவற்றை செய்யும் முறையினை இவ்வடுக்கில் காட்டும். இவ்வடுக்கில் பயன்படும் நெறிமுறைகள் : பிரயோகங்களிற்கிடையே தொடர்பை ஏற்படுத்துவது தொடர்ச்சியாக கொண்டு செல்வது நிறைவு செய்வது இவ்வடுக்கிலாகும். இங்கு பயன்படும் நெறிமுறைகள் : உபசரிப்பாளருக்கும் (host) தொடர்பாடல் முனைக்கும் இடையில் தரவுகளை பரிமாற்ற் செய்யும். இதில் பயன்படும் நெறிமுறைகள் : தொடர்பாடல் வலைப்பின்னல்களிற்கு இடையில் மாறுவது அதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பது , ஓர் தொடர்பாடல் இலக்கிலிருந்து இன்னுமொரு இலக்கிற்கு தரவுகளை ஊடுகடத்தல் என்பன இதில் விபரிக்கப்படும். பாதையமைத்தல் , தரவுகளை செலுத்துதல் போன்றவற்றிற்கான முகவரி தயாரித்தல் , தடைகளை பரிகாலித்தல் , தரவுப் பொதிகளை முறையாக தயாரித்தல் போன்றவை விபரிக்கப்படும். நெறிமுறைகள் : இதில் தரவுகள் Bit களாக குறியீடு செய்யப்படும். பாய்ச்சல் கட்டுப்பாடு இதன் மூலம் விபரிக்கப்படும். நெறிமுறைகள் : இவ்வடுக்கிலேயே ஊடகம் ஒன்றின் மூலம் தரவுகள் ஊடுகடத்தல் செய்யப்படும். அதாவது ஊடகம் தரவுகளின் வேகம் , ஊடுகடத்தலின் வகை, ஊடுகடத்தல் முறை என்பன விளக்கப்படும். படைப்பாக்கப் பொதுமங்கள் படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்சு - Creative Commons) என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் என்பவரால் தொடங்கப்பட்டது. இது ஆக்கர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. படைப்பாக்கப் பொதுவெளி உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் என்ற தெரிவு ஆக்கர்களிடமே விடப்படுகிறது. கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும், முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாத தீர்வாகப் பார்க்கப்படுகிறது. தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதுமங்கள் உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார். இவ்வமையமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் ஆக்கர்களை அவர்கள் தெரிந்தெடுக்கும் அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிட ஏதுவாக்கின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்ள் உருவாக்கப்பட்டுள்ளன. படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பும் அதன் உரிம ஒப்பந்தங்களும் பல்வேறு தரப்பினரால் எதிர்நிலையாக விமர்சிக்கப்படுகின்றன. கட்டற்ற மென்பொருள் அமையத்தின் உருவாக்குனரும், கட்டற்ற புலமைச்சொத்து தொடர்பான தத்துவம், இயங்குகை ஆகிவற்றுக்காக நன்று அறியப்பட்டவருமான ரிச்சர்ட் ஸ்டால்மன், ஒரு அமைப்பு என்ற ரீதியில் தான் படைப்பாக்கப் பொதுமங்களுக்கு இற்கு இனியும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற பொருள்பட கருத்து வெளியிட்டுள்ளார். வி. கே. பஞ்சமூர்த்தி வி. கே. பஞ்சமூர்த்தி (பி. நவம்பர் 26 1948) ஈழத்தின் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர் ஆவார். வி. கே. பஞ்சமூர்த்தி பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தார். இவரின் ஆரம்ப குரு பேரனார் மூளாய் ஆறுமுகம்பிள்ளை, இணுவில் கந்தசாமிப்பிள்ளை, தந்தை அமரர் கோதண்டபாணி. அதன் பின் தமிழகம் சென்று ஆண்டார்கோயில் ஏ. வி. செல்வரத்தினம்பிள்ளை, அமரர் குளிக்கரை பிச்சையப்பாபிள்ளை ஆகியோரிடம் இவர்களிடம் குருவாசம் பெற்று நாதஸ்வரக் கலையை முறையாகப் பயின்று நாடு திரும்பினார். இவரின் தமையனார் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தி. இவர்கள் இருவரும் 33 ஆண்டுகள் இரட்டையர்களாக நாதசுவரம் வாசித்தவர்கள். இவர்கள் இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் சென்று பாராட்டும், புகழும் பெற்றவர்கள் ஆவர். மார்ச் 23, 1989 இவர்கள் இருவரும் நாதஸ்வர இசைத்துறையில் பிரவேசித்த வெள்ளிவிழாவை கம்பன் கழகம், யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதி அரங்கில் விழாவாக நடத்தியது. இவர்கள் பல்லாண்டுகளாக பல சைவ ஆலயங்கள், திருமணச் சடங்குகள் என இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்து பெரும் விருதுகள், பாராட்டுகள், கௌரவங்கள் என பெற்றார்கள். இன்றைய தவில் வித்துவான்கள் திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, மன்னார்க்குடி வாசுதேவன், திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி போன்ற பலருடன் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாசித்து வருகிறார்கள். பஞ்சமூர்த்தியின் பாரியார் ஜெயராணி மறைந்த நாதஸ்வர மேதை அப்புலிங்கம் பிள்ளையின் மகள். மகன் குமரேஸ் (பி. ஆகஸ்ட் 14, 1984. இவரும் ஒரு சிறந்த நாதசுரக் கலைஞர். சவர்க்காரம் சவர்க்காரம் ("Soap", சோப்பு) என்பது அழுக்கைக் கழுவுவதற்கு நீருடன் சேர்த்து உபயோகமாகும் பொருளாகும். பொதுவாகக் கட்டிகளாகக் கிடைக்கிறது. தடித்த திரவச்சோப்புக்களும் உள்ளன. கி. மு 2800 ஆம் ஆண்டளவில் இருந்து சோப்புப் பயன்படுவதாகத் தெரிகிறது. சவர்க்காரம் கிமு 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனியர்களும், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் நடுத்தர வயதினர் இதனைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும், 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆலிவ் எண்ணெய்யை மூலப் பொருளாகக் கொண்ட சவர்க்காரங்கள் விற்பனைக்கு வந்த பிறகு அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வந்தது. ஆங்கில ஆதிக்கத்தின் கீழிருந்த அமெரிக்க மக்கள் தங்கள் வீடுகளிலேயே சவர்க்காரங்களைச் செய்து பயன்படுத்தி கொண்டனர். ஆங்கில ஆதிக்கம் முடிவுக்கு வந்த போது சிறு முதலீடுகளில் செய்து கொண்டிருந்தவர்கள் அதை தொழிற்சாலையாக மாற்றி உற்பத்தியை பெருக்கினர். இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக துணி துவைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திய பணக்காரர்கள் கூட இந்த சவர்க்காரங்களை வாங்க நேரிட்டது. இந்த காலகட்டத்தில் இதன் விற்பனை அதிகரித்தது. சோப்பானது சில வேதிப் பொருட்களின் முக்கிய கலவையாகும். முக்கியமாக சோப்பின் ஒவ்வொரு மூலக்கூறும் ஹைட்ரோகார்பன் சங்கிலி மற்றும் கொழுப்பு அமிலங்களின் கலவையாக உள்ளது. இவைதான் துணிகளின் அழுக்கை போக்குவதில் பிரதான வேலை செய்கின்றன. நீரில் நேரடியாக கரையும் கொழுப்பு அமிலங்கள் ஹைட்ரோகார்பன் துணையுடன் துணியிலுள்ள அழுக்கை நீக்க நேரடியாக நீக்குகின்றன. மூலக்கூறுகள் தங்கள் வேலையை செய்தாலும் துணியை நீரில் அலசுவது அவசியமாகிறது. சோப்பை பயன்படுத்தி துணி துவைப்பதன் கஷ்டத்தை ,நாம் கடின நீர் பயன்படுத்தும்போது உணர முடியும். கடின நீரில் உள்ள கால்சியம். மாங்கனீஸ், மெக்னீசியம். இரும்பு போன்ற தாது பொருட்கள் சோப்பின் மூலக்கூறுடன் வேதி வினை புரிந்து, எளிதில் நீரில் கரையாத ப்ரிசிபிடேட் என்னும் தயிர் போன்ற பொருளை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே துணிகளில் அழுக்கை போக்குவது சிரமமாகிறது. சோப்பின் மூலப் பொருட்களில் ஹைட்ரோகார்பன் தாவரம் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்பட்டாலும், டிடர்ஜன்ட் போன்ற மற்ற சில பொருட்கள் கச்சா எண்ணையிலிருந்து எடுக்கப்படுகிறது. சல்பூரிக் அமிலமானது ஹைட்ரோகார்பன் உடன் மூலக்கூறுகளை உருவாக்க போதுமான அளவு சேர்க்க படுகிறது. பெரிய அளவிலான நிறுவனங்களில் தொடர் உற்பத்திக்காக கொழுப்பை தொடர்ந்து போதுமான சேர்க்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் இரு தொழில் நிறுவனங்களோ பாரம்பரியமான பேட்ச் முறைப்படி உற்பத்தி செய்கின்றன. இதில் கோல்டு ப்ராசெஸ், செமி பாயில்டு ஹாட் ப்ராசெஸ், புல்லி பாயில்டு ஹாட் ப்ராசெஸ் என மூன்று முறைகளில் சோப்பானது உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில் சோப் செய்யக்கூட நமக்கு அடிப்படையில் வெப்பம் தேவைப்படுகிறது .இந்த வெப்பம் கூட போதுமான அளவு சேர்க்கப்படும் கொழுப்பை உருக வைக்க பயன்படுகிறது. இவ்வாறு உருக வைக்க படும் கொழுப்பு சிறிது நேரம் வேத்வேதுப்பாக வைக்கப்பட்டு பின் அதனுடன் ஹைட்ராக்சைடு சேர்த்து சோப் செய்யப்படுகிறது. 12-48 மணி நேரத்திற்கு பிறகு இந்த சோபை பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் இவை பல வாரங்கள் வைத்து பயன்படுத்த உகந்தவை அல்ல. இம்முறையில் மூலப்பொருட்கள் அளவீடு மற்றும் விகிதங்கள் மிகச் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மூலப்பொருட்களின் அளவீடுகள் சில வரை படங்களின் உதவியுடன் உற்பத்தியின் போது கண்காணிக்கப்படுகிறது. ஒருவேளை இவற்றின் அளவீடுகள் ஏற்படும் மாற்றங்கள் பயனரின் தோல் எரிச்சல் அல்லது பிசுபிசுப்பு தன்மை போன்றவை ஏற்படும். இம்முறையில் சோப்பானது வெப்பத்திற்கு எதிராக எதிர்வினை கொடுப்பதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது .இங்கு கோல்டு ப்ராசெஸ் போலல்லாமல் சோப் ஆயிலானது ப்ராசெஸ் முடியும் தருவாயில் முழுமையாக சோப்பாக மாறுகிறது. ஹைட்ராக்சைடு மற்றும் கொழுப்புகள் 80 முதல் 100 டிகிரி வெப்ப நிலையில், சோப் நிலை வரும் வரை கொதிக்க வைக்க படுகின்றது. பின்னர் மூலக்கூறுகளின் சரிவிகித கலவைகள் சரி பார்த்த பின் சோப்பாக தயார் ஆகிறது. புல்லி பாயில்டு ஹாட் ப்ராசெஸ் முறையில் சோப் தயாரிப்பது என்பது ஹைட்ராக்சைடு மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றின் சரிவிகித கலவையை சோதனை செய்து உறுதி செய்த பின்னரே ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கலவை 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொதிக்க வைக்கப் பட்டு பின்னர் போதுமான அளவு உப்பு சேர்க்கப் படுகிறது. இந்த உப்பானது ஒப்பின் அதிகப்படியாக உள்ள திரவத்தை, மாசுப் பொருட்கள், கிளிசெரின் போன்ற தேவையற்ற பொருட்களுடன் வடிக்கட்டி வெளியேற்றுகிறது. பொதுவாக நிறுவனங்கள் சிலிகான் மற்றும் பிளாஸ்டிக் அச்சுகளை பயன்படுத்தி சோப்பிற்கு வடிவம் கொடுக்கின்றன .சிறு தொழில் செய்வோர் பிளாஸ்டிக் பிலிம் ஒட்டப்பட்ட அட்டை பெட்டிகளை கொண்டு தயார் செய்கின்றனர். அனால் இவ்விருவகை தொழில் முனைவோரும் சோப்பை நீண்ட பார்களாக எடுத்து பின் குறிப்பிட்ட அளவிற்கு வெட்டி கொள்கின்றனர். நாம் முன்னரே கூறியபடியே உப்பை சேர்ப்பதன் மூலம் சோப்பின் அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான மூலக்கூறுகளின் அளவறிந்து அவற்றை நீக்குவதன் மூலம் தூய்மைப்படுத்தலாம். இந்நிலையில் சோப் அதிகமான நீரைக் கொன்டிருந்தால் ஸ்ப்ரே ட்ரையர் மற்றும் வேக்குவம் ட்ரையர் முறையில் இந்த நீரானது அகற்றப்படுகின்றது. உலர்ந்த நிலையில், 6 முதல் 12 சதவிகித ஈரப்பதத்தில் சிறு சிறு துகள்களாக சுருக்கப்பட்டு பின்னர் பார் வடிவத்திற்கு கொண்டு செல்லப் பயன்படுகிறது. இவ்வாறு செல்லும் வழியில் இத்துடன் வாசனை திரவியங்கள் மற்றும் சில பொருட்களும் சேர்க்க படுகின்றன. பின் ரிபைனர் மெஷினுக்கும் அங்கிருந்து ரோலர் மில்லுக்கு எடுத்து செல்லப்பட்டு அரை திரவ நிலைக்கு மாற்றப்படுகிறது. பின் மற்றுமொரு ரிபைனர் வழியாக வேக்குவம் சேம்பருக்கு செலுத்தப்பட்டு தேவையற்ற வாயுக்கள் பிரிக்கப்படுகின்றன. பின்னர் நீண்ட பார்களாக வெளி இழுக்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளில் வெட்டி எடுக்கப படுகின்றன. சில சமயம் மண் மற்றும் படிகக்கல் ஆகியவை சோப்புடன் சேர்க்கப் படுவது உண்டு. இவை கடினமான கரைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை சோப்புகள் "exfoliation" சோப்புகள் என்றழைக்கபடுகின்றன. "Nanascopic" எனப்படும் உலோகங்கள் சோப்பின் நிறம் மற்றும் ஆண்டி – பாக்டிரியல் குணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில வகை சோப்புகளில் சேர்க்கப்படும். "Titanium" பவுடர் வெள்ளை துணிகளை வெளுக்க பயன்படும் சோப்புகளில் சேர்க்கபடுகின்றன. இதிலுள்ள நிக்கல், அலுமினியம், மற்றும் சில்வர் போன்ற உலோகங்கள் துணியிலுள்ள பாக்டிரியாக்களை தங்களின் "electron robbing" குணத்தால் நீக்கி அழித்துவிடுகின்றன .துணி வெளுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு பாக்டிரியாக்கள் பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீப்பு சீப்பு (Comb) என்பது தலை வாரவும், தலை முடியை அழகு படுத்தவும், சுத்தப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும். பல் போன்ற அமைப்பு உள்ளதாக இருக்கும். இது மிகப் பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டுவரும் கருவிகளில் ஒன்றாகும். தொல்லியல் ஆய்வுகளின்போது கிடைத்துவரும் மிகவும் பழமையான பொருட்களுள் சீப்பும் ஒன்றாகக் காணப்படுகிறது. பாரசீகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடியிருப்பு ஒன்றில் செய்யப்பட்ட அகழ்வாய்வின் போது திருந்திய வடிவத்தோடு கூடிய சீப்பு கண்டிபிடிக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்து தற்காலம் வரை சீப்பு மனித நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்புள்ள முக்கியமான கருவிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. சீப்பு, பட்டை போல அமைந்துள்ள உடற் பகுதியையும், அதற்குச் செங்குத்தாக அத்துடன் இணைந்த பற்கள் போன்ற அமைப்பையும் கொண்டது. செயற்பாட்டுத் தேவையை மட்டும் நோக்கமாகக் கொண்ட சீப்புக்கள் பொதுவாக அலங்காரம் எதுவுமின்றி எளிமையாகவே செய்யப்படுகின்றன. ஆனால் முற்காலத்தில் சீப்புக்கள் அழகுணர்ச்சியுடனும், கலை நுட்பத்துடனும் செய்யப்பட்டது உண்டு. முற்காலத்தில் சீப்புகள் விலங்குகளின் எலும்பு, மரம், உலோகம், ஆமையோடு, யானைத் தந்தம் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்டன. இப்பொழுதும் மரம் பயன்படுத்தப்படுவது உண்டு ஆயினும், தற்காலத்தில் பல்வேறு வகையான நெகிழிகளே (பிளாத்திக்கு) சீப்புச் செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுகின்றன. சீப்பு பவ்வேறு தரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக தலை மயிரை அழகு படுத்தவும் ஒரே இடத்தில் நீளமான தலை மயிர்களை குவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது எனலாம். இது பொதுவாக முடியில் உள்ள இணைப்புக்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இதை சிலர் முடியிலும் அணிந்திருப்பர். இவ்வகையான சீப்புக்கள் பேரியல் ஒட்டுண்ணிகளான பேன் போன்றவற்றை அகற்றவும் அல்லது சீப்பினால் சீவுவதனால் பேன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அவற்றை இறக்கச் செய்யவும் பயன்படுகின்றது. இதில் உள்ள பற்கள் நீளமாகவும் அதேவேளை கூரியதாகவும் உள்ளதால் சில சமயங்களில் இதை "நற்-பல்லுடைய சீப்பு" (fine-toothed comb) எனவும் அழைக்கின்றனர். குடை குடை ("Umbrella" அல்லது "parasol") என்பது மழை, அல்லது வெயிலிலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியாகும். ஒரு கம்பிக் கட்டின் மேல் அமைந்த விரிப்பும் ஒரு பிடியும் கொண்டதாக இது அமைந்திருக்கும். ஒரு தனி மனிதனை மழை மற்றும் வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய கையடக்கக் கருவி குடைகளே ஆகும். அனைவரும், தனிப்பட்ட முறையிலேயே குடைகளைப் பயன்படுத்தலாம். தற்காலத்தில், பருமனில் பெரிய குடைகள் பொதுவாக உள்-முற்ற மேசைகளுடனும் வெளிப்புறத் தளபாடங்களுடனும் அல்லது சூரிய ஒளி மிக்க கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆசனங்களுடனும் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்க அல்லது மடிக்கக்கூடிய குடைகள் முதன் முதலில் சீனாவிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்துடன் அவ்வகை சீனக்குடைகள், இன்றைய குடைகள் போலவே நெகிழும் நெம்புகோல்|நெம்பு]]களைக் கொண்டிருந்தன. குடையானது வானிலை அறிவித்தலில் பயன்படுகின்றது; அதாவது மழையைக் குறித்துக்காட்டும் சின்னமாகப் பயன்படுத்தப்படுகின்றது. உட்பக்கம் பிரதிபலிக்கக் கூடிய குடைகள் சில புகைப்படக்காரர்களால் செயற்கை ஒளியைப் பரப்பக்கூடிய பரவல் சாதனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. கண்டுபிடிப்புகளின் கதை: குடை குடையாம் காரணமாம் தொப்பி தொப்பி (Hat) என்பது தலையில் அணியும் ஓர் அணியாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. வட்டம், நீள்வட்டம் என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும், தொப்பிகள் பயன்படுகின்றன. சடங்குகள், சமயத் தேவைகளுக்கும் தொப்பிகள் பயன்படுவது உண்டு. படைத்துறையில், நாட்டினம், சேவைப் பிரிவு, தரநிலை, படைப்பிரிவு என்பவற்றைத் தொப்பிகள் குறித்துக் காட்டுவது உண்டு. தொப்பியைக் காட்டும் மிகப் பழைய படங்களில் ஒன்று தேப்சுக் கல்லறையில் உள்ள ஓவியம் ஒன்றில் காணப்படுகிறது. ஒரு மனிதன் வைக்கோல் தொப்பியொன்றை அணிந்திருப்பதை இப் படம் காட்டுகிறது. எளிமையான கூம்புவடிவத் தொப்பியான பிலெயசு, பண்டைக் கிரேக்கத்திலும், ரோமிலும் விடுதலையான அடிமைகள் அணியும் பிரிகியன் தொப்பி என்பனவும் மிகவும் பழைமையான தொப்பிகளுள் அடங்குவன. கிரேக்கத்தின் பெட்டாசோசு எனப்படும் தொப்பியே இதுவரை அறியப்பட்டவைகளுள் விளிம்புடன் கூடிய முதல் தொப்பி ஆகும். பழைய காலத்தில் பெண்கள், முகத்திரை, முக்காடு போன்றவற்றை அணிந்தனர். 16 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களும் ஆண்கள் அணிவதுபோன்று செய்யப்பட்ட தொப்பிகளை அணியத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பெண்கள் பொன்னெட் என்னும் ஒருவகைத் தொப்பியை அணிந்தனர். இது படிப்படியாக அளவில் பெரிதாகியதுடன், துணிப் பட்டிகள், பூக்கள், இறகுகள், சல்லடைத் துணிகள் போன்றவற்றால் அழகுபடுத்தப்பட்டன. அந்நூற்றாண்டில் இறுதியில் மேலும் பல பாணிகளில் தொப்பிகள் அறிமுகமாயின. 1930 களின் நடுப்பகுதியில் பெண்கள் தமது கூந்தலைக் குட்டையாக வெட்டத் தொடங்கினர். அதன் பின் அவர்கள் தலையை முற்றாக மூடும் தலைக் கவசம் போன்ற தொப்பிகளையும் அணிந்தனர். தொப்பியொன்று நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கலாம். இவற்றைவிட முடியின் அடிப்பகுதியைச் சுற்றி உட்புறமாக தோலால் அல்லது துணிபோன்ற வேறு பொருளால் ஆன பட்டியொன்று பொருத்தப்பட்டிருக்கலாம். இது வியர்வையால் தொப்பி பழுதாகாமல் இருக்கப் பயன்படுகிறது. இது "வியர்வைப்பட்டி" எனப்படும். சில தொப்பிகளில் பட்டுப் போன்ற துணிகளால் தொப்பியின் உட்புறம் "அகவுறை" இருக்கும். தொப்பியின் அளவு ஒருவருடைய தலையின் சுற்றளவைக் கண்களுக்கு மேல் 1/2 அங்குல (1.3 சமீ) தூரத்தில் அளப்பதன் மூலம் பெறப்படும். உற்பத்தியாளரைப் பொறுத்து இது அங்குலத்தில் அல்லது சதம மீட்டரில் குறிக்கப்படும். உர்ரொம அட்டைத் தொப்பிகளை இழுத்து அணிய முடியும். கடினத் தொப்பிகள், அடிப்பந்துத் தொப்பிகள் போன்றவற்றைத் தேவையான அளவுக்குச் சரி செய்து கொள்ளலாம். சில மலிவான தொப்பிகள், சிறியவை, இடைத்தரமானவை, பெரியவை என மூன்று அளவுகளில் கிடைக்கும். முன்பக்கத்திலிருந்து பின்பக்கத்துக்கும், ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கும் இடையிலான தூரங்களை அங்குலத்தில் அளந்து அவற்றை இரண்டால் வகுப்பதன் மூலம் பாரம்பரியத் தொப்பிகளின் அளவுகள் குறிக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தொப்பி அளவுகள் அதே அளவுடைய அமெரிக்கத் தொப்பிகளிலும் 1/8 அங்குலம் சிறியவை. தளவாடி தளவாடி அல்லது சமதளயாடி ("Plane Mirror") என்பது விம்பத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் ஆடியாகும். இதன் முக்கிய பயன்பாடு தனிநபர் சுகாதாரமாகும். தளவாடியில் சமாந்தர ஒளிக்கற்றைகளால் விம்பம்/பிம்பம் உருவாகிறது. ஆரம்பகாலத் தளவாடிகள் வெள்ளி அல்லது செப்பு உலோகத் தகடுகள் நன்கு மினுக்கப்பட்டு உருவானவை ஆகும். இப்போதைய தளவாடிகள் கண்ணாடியின் ஒரு மேற்பகுதியில் அலுமினிய முலாம் பூசப்பட்டு உருவாக்கப்படுகின்றன. (அ) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், ஆடியிலிருந்து பொருள் இருக்கும் அதே தொலைவில் ஆடிக்குப் பின்புறம் தோன்றுகிறது. ஆடியினுள் தோன்றும் பிம்பம், எப்பொழுதும் மாயப்பிம்பம் ஆகும். (ஆ) உருவாகும் பிம்பம் இடவல மாற்றம் அடைந்ததாகும். (இ) பொருளின் முழு பிம்பம் தெரிய வேண்டுமெனில், ஆடியின் அளவு பொருளின் அளவில் பாதியாவது இருக்க வேண்டும். இரண்டு தளவாடிகள் வெவ்வேறு கோணங்களில் பிடிக்கப்படும்போது பெறப்படும் விம்பங்களின் எண்ணிக்கையும் மாறுபடும். இது பின்வரும் சமன்பாட்டினால் அறியப்படும். இங்கு; இதன்படி: செங்கோணத்தில் வைக்கப்பட்ட இரு தளவாடிகளுகிடையில் பொருள் வைக்கப்பட்டால் தோன்றும் விம்பங்களின் எண்ணிக்கை 3 ஆகும்.